நண்பர்களே,
வணக்கம். எங்கிருந்து ஆரம்பிப்பது ? ; எங்கே முடிப்பது ? எதைச் சொல்லுவது ? ; எதைச் சொல்லாதிருப்பது ? ; எதை சிலாகிப்பது ? எதைக் கண்டு வியப்பது ? எதைக் கண்டு திகைப்பது ? என்று சுத்தமாய் புரியா ஒரு மோன நிலையில் மோட்டைப் பார்த்துக் கொண்டே கட்டையைக் கிடத்திக் கிடக்கிறேன் ! தலைக்குள்ளோ ஒரு நூறு ஞாபகங்கள் ; சிரித்த முகங்கள் ; அலையடிக்கும் நினைவுகள் என்று ஆர்ப்பரிப்பது - அலைகடலின் ஓசையாய் எனக்குக் காதில் கேட்காத குறை தான் ! ஒவ்வொரு ஆண்டுமே நமக்கு ஆகஸ்டின் ஈரோட்டுப் புத்தக விழாக்கள் ஒரு சந்தோஷத் திருவிழாவின் அடையாளமாய் மாறிப் போய் ஆண்டுகள் ஐந்துக்கு மேலாகி விட்டன ! நண்பர் ஈரோடு ஸ்டாலினின் முயற்சிகள் 2012-ல் நம்மை ஈரோட்டுக்கு முதன்முறையாக இட்டு வந்திருக்க - தொடர்ந்த விழாக்களில் LMS ரிலீஸ் ; மின்னும் மரணம் அறிவிப்பு ; ஈரோட்டில் இத்தாலி ரிலீஸ் ; இரத்தக் கோட்டை ரிலீஸ் என்று ஏதேதோ கொண்டாட்டங்களை நிஜமாக்கிட - நமக்கு இந்த மண் ஒரு அதிர்ஷ்ட பூமியாக அமைந்துள்ளது ! And இதோ - நமது காமிக்ஸ் பயணத்தின் ஒரு மறக்கவியலா மைல்கல்லான "இரத்தப் படலம்" முழுவண்ணத் தொகுப்பின் முதல் பிரதியும் உங்களை சந்தித்துள்ளது இந்த மஞ்சள் மாநகரின் மண்ணில் தான் !! Coincidences ?? No way!!
"இரத்தப் படலம்" ........!! அநேகமாய் "இரும்புக்கை மாயாவி " ; "டெக்ஸ் வில்லர்" என்பதற்கு அப்புறமாய் தமிழ் காமிக்ஸ் உலகினில் அதிகம் உச்சரிக்கப்பட்டிருக்கும் பெயர் இதுவாகத் தானிருக்கும் என்று நினைக்கிறேன் !! இந்த பெயரை உச்சரித்துப் பார்க்கும் போது எனக்குள் எழுந்த முதல் கேள்வி - "என்ன நினைச்சிட்டு இந்தக் கதைக்கு இந்தப் பேர் வைச்சோம் - 32 வருஷங்களுக்கு முன்னாடி ?" என்பதே !! நாயகனின் நினைவுக் கேந்திரத்தை சூழ்ந்து, படர்ந்து கிடக்கும் குருதியைக் குறிப்பிட்டது போலவுமிருக்கும் ; தன் தேடலில், அவன் போகும் பாதையெல்லாம் தெறிக்கும் அதகளங்களையும், சொட்டும் இரத்தத்தையும் குறிப்பிட்டது போலவுமிருக்கும் என்று இந்த இளம் தொழிலதிப எடிட்டருக்கு அந்நாட்களில் பட்டது ! இந்தத் தொடர் இத்தனை நீளம் காணுமென்றோ ; இத்தனை உயரங்கள் எட்டுமென்றோ அன்றைக்கு சத்தியமாய் யாருக்கும் தெரியாது தான் ; least of all me !!! ஆனாலும் முதல் இதழினில் இருந்ததொரு இனம்புரியா ஈர்ப்பானது - கதையின் ரொம்பவே புதிரான ஓட்டத்தையும் மீறி அப்போதைய அரை டிராயர் வாசகர்களான நம்மை வசீகரித்திருந்தது இன்னமும் நம் யாருக்கும் மறந்திராது ! And ஒரு நீண்ட அவகாசத்துக்குள் 18 பாகங்களும் வெளிவந்தது ; அப்புறமாய் அந்தப் பதினெட்டையும் ஒட்டு மொத்தமாய் கருப்பு-வெள்ளையில் ஒரே புக்காக்கி சிலாகித்தது என்பெதெல்லாமே நம் நண்பர் XIII-ன் cult status-க்கு ஒரு அழியா சான்று ! நமது இரண்டாம் வருகையின் தருணத்தோடு ; Cinebook ஆங்கிலப் பதிப்பினில் XIII தொடரானது சக்கை போடு போட்டதும் கரம் கோர்க்க - "நீ குட்டிக் கரணம் அடிப்பியோ - குரங்கு பல்டி அடிப்பியோ ; அதெல்லாம் தெரியாது ; ஆனால் XIII மாமாவை கலரிலே போட்டே தீரணும் !!" என்ற கோரிக்கை ஒலிக்கத் துவங்கியது ! மாயாவி மறுபதிப்புகள் : டிக் அடிச்சாச்சு ; "மின்னும் மரணம்" - மெகா டிக் அடிச்சாச்சு ; இரத்தக் கோட்டை - "உள்ளேன் ஐயா" என்றான பின்னே, எஞ்சி நின்ற ஒரே மெகா கோரிக்கையான "XIII ஆடலும்-பாடலும் நிகழ்ச்சி" ஒரு தவிர்க்க இயலா கட்டாயம் என்ற நிலையை எட்டியது ! ஓராண்டின் காமிக்ஸ் பட்ஜெட்டின் பாதித் தொகைக்கு ஈடான தொகையை ஒரு மறுபதிப்புக்கென செலவிடத் தான் வேணுமா ? என்ற தயக்கம் எனக்குள் நிறையவே இருந்தாலும் - பயணப் பெட்டிகளே எஞ்சினை உந்திக் கொண்டு தட தடப்பது போல், ஆளும், பேருமாய்ச் சேர்ந்து நம்மை இந்த பிராஜெக்ட்டினுள் புகுத்தியது சுமார் ஒன்றேகால் ஆண்டுக்கு முன்பாய் !
அதே வேகத்தில் முன்பதிவுகளும் துவங்கிட - முதல் ஆறு மாதங்களுக்குள் நமக்கொரு உறுதி கிட்டியது - இது நிச்சயமாய் take-off ஆகிடவிருக்கும் முயற்சியே என்று !! ஏதோவொரு துரதிர்ஷ்ட சம்பவமாய் - மறுபதிப்பு இலக்கை தொட்டுப் பிடிக்க நமக்கு சாத்தியமாகிடாது போயின் அதுவரையிலான முன்பதிவுப் பணங்களைத் திருப்பித் தந்தாக வேண்டுமேயென்ற உறுத்தல் நிறையவே குடியிருக்க - தேங்காயைக் கவ்வித் திரியும் நாய்க்குட்டியைப் போல "இ.ப."வின் - "மு.ப."வை பத்திரப்படுத்தியே வந்தேன் !
இலக்கை எட்டிட..மெது மெதுவாய்ப் பணிகளும் துவங்கிட.....எனக்குள் ஒரு இனம்புரியா பயம் ! கதை மாஸ் ஹிட்டானதொன்று என்பதில் no secrets ; ஆளாளுக்கு இதனை மனப்பாடம் செய்யாக் குறை தான் என்பதிலும் சந்தேகங்கள் லேது ! So இந்த இதழில் ஏதாவது செய்து உங்கள் கவனங்களை ஈர்க்க வேண்டுமெனில் - அது இந்த புக்கின் மேக்கிங்கில் நாம் காட்டிடக்கூடிய தரத்திலும் , பிரமாண்டத்திலும் மாத்திரமே சாத்தியம் என்று தெரிந்தது ! இதழ்களைக் கையில் ஏந்தும் தருணம் உங்களுக்கோர் மறக்கவியலா moment ஆக உருமாறிட வேண்டுமென்ற வேட்கை நாளாசரியாய் ஒரு obsession ஆகவே மாறிப் போனது !! சிக்கும் அவகாசங்களிலெல்லாம், வெவ்வேறு மொழிகளில் XIII ஆல்பங்கள் வெளியிடப்பட்டிருக்கும் விதம் பற்றி ; இங்கே நம்மூரில் பைண்டிங்கில் ; அட்டைப்பட நகாசு வேலைகளில் உட்புகுந்திருக்கும் புது யுக்திகள் பற்றி - என்று எதையேனும் குடைந்து கொண்டே இருக்கத் தான் தோன்றும் !! அதுவும் 3 ஆல்பங்களிலான தொகுப்பு எனும் போது - ஒன்றுக்கு மூன்றாய்ச் சவால்கள் முன்னிற்க - சொதப்பிடும் பட்சத்தில் முதுகில் கட்டப்படும் டின்னின் வீரியமும் மும்மடங்காய் இருக்கக்கூடும் என்ற புரிதல் கடந்த ஆறு மாதங்களாகவே என்னோடு 'வித்தவுட்டில்' சவாரி செய்யும் ஒரு ஓசிப் பயணியாகிப் போனது !!
இலக்கை எட்டிட..மெது மெதுவாய்ப் பணிகளும் துவங்கிட.....எனக்குள் ஒரு இனம்புரியா பயம் ! கதை மாஸ் ஹிட்டானதொன்று என்பதில் no secrets ; ஆளாளுக்கு இதனை மனப்பாடம் செய்யாக் குறை தான் என்பதிலும் சந்தேகங்கள் லேது ! So இந்த இதழில் ஏதாவது செய்து உங்கள் கவனங்களை ஈர்க்க வேண்டுமெனில் - அது இந்த புக்கின் மேக்கிங்கில் நாம் காட்டிடக்கூடிய தரத்திலும் , பிரமாண்டத்திலும் மாத்திரமே சாத்தியம் என்று தெரிந்தது ! இதழ்களைக் கையில் ஏந்தும் தருணம் உங்களுக்கோர் மறக்கவியலா moment ஆக உருமாறிட வேண்டுமென்ற வேட்கை நாளாசரியாய் ஒரு obsession ஆகவே மாறிப் போனது !! சிக்கும் அவகாசங்களிலெல்லாம், வெவ்வேறு மொழிகளில் XIII ஆல்பங்கள் வெளியிடப்பட்டிருக்கும் விதம் பற்றி ; இங்கே நம்மூரில் பைண்டிங்கில் ; அட்டைப்பட நகாசு வேலைகளில் உட்புகுந்திருக்கும் புது யுக்திகள் பற்றி - என்று எதையேனும் குடைந்து கொண்டே இருக்கத் தான் தோன்றும் !! அதுவும் 3 ஆல்பங்களிலான தொகுப்பு எனும் போது - ஒன்றுக்கு மூன்றாய்ச் சவால்கள் முன்னிற்க - சொதப்பிடும் பட்சத்தில் முதுகில் கட்டப்படும் டின்னின் வீரியமும் மும்மடங்காய் இருக்கக்கூடும் என்ற புரிதல் கடந்த ஆறு மாதங்களாகவே என்னோடு 'வித்தவுட்டில்' சவாரி செய்யும் ஒரு ஓசிப் பயணியாகிப் போனது !!
இங்கே முழு credit செல்ல வேண்டியது நமது டிசைனர் பொன்னனுக்கே ! "ஒரிஜினல் கவர்கள் ; ஆனால் இயன்ற நகாசு வேலைகளோடு" என்பதே எனது instructions ! துவக்கத்தில் மனுஷன் பின்னணி வர்ணங்களை மாற்றி ; XIII என்ற டிசைனை ஏதேதோ பாணிகளில் போட்டு மாதிரிகளை உருவாக்கிக் கொண்டே இருந்தார் ! ஒவ்வொன்றையும் பார்த்து விட்டு என் முகரை அஷ்டகோணலாக - "சாமி....இது காமிக்ஸ் சித்திர உலகின் ஒரு அசுரரின் படைப்பு ; so அவரது தூரிகையின் effects துளியும் சேதமாகிடப்படாது ; ஆனால் அதையும் மீறி ராப்பரில் ஒரு glitz தெரிந்தாக வேண்டுமென்று" சொல்லி வைத்தேன் ! இந்த 3 ஆல்பங்களின் மூன்று ராப்பர்களுக்கு நாங்கள் வண்ணத்தில் போட்டுப் பார்த்து ; நிராகரித்து ; இதைக் கூட்டி ; அதைக் கழித்து என்று கூத்தடித்த டிஜிட்டல் பிரிண்ட்களின் எண்ணிக்கை ஒரு நூறைத் தொட்டிருக்கும் தாராளமாய் !! நமது ஓவியர் சிகாமணி எழுதித் தந்த "இரத்தப் படலம்" டைப்பையும் "இப்டிக்கா மாத்துங்கோ ; அப்டிக்கா மாத்துங்கோ" என்று நச்சரித்த நாட்களும் அநேகம் ! ஒரு மாதிரியாய் டிசைன்கள் தயார் என்றான பின்னே - அட்டைப்பட special effects-க்கு என்ன செய்யலாமென்று மண்டையில் இல்லாத கேசத்தைப் பிய்க்கும் படலம் துவங்கியது ! Without getting into the techicalities - இம்முறை ராப்பரில் நாம் செய்துள்ள நகாசு வேலைகளுக்கு மாத்திரமே 4 வெவ்வேறு process அவசியப்பட்டுள்ளது !! அவற்றிற்கென ஆட்களைத் தேடிப் பிடிக்கவும் பொன்னன் உதவிட, இந்த அட்டைப்பட அதகளம் சார்ந்த பரபரப்பு ஒருமாதிரியாக எனக்குள் மெது மெதுவாய் அடங்கியது ! ஒழுங்காய் பிரிண்ட் செய்து ; அப்புறமாக ஜிகினா மேட்டர்களை பத்திரமாய்ச் செய்து முடித்தால் end result நிச்சயம் லயிக்கச் செய்யுமென்ற நம்பிக்கை புலர்ந்தது ! இது ஒருபுறமிருக்க - உட்பக்கங்களை அச்சிட 2 வாரங்கள் நாக்குத் தொங்கிப் போனது !!
ஒருமாதிரியாக சகலத்தையும் முடித்து புக்காக்கிப் பார்த்த போது அதுவரையிலும் என் தோளில் தொற்றித் திரிந்த பயமெனும் வேதாளம் டீ குடிக்கக் கிளம்பிப் போய் விட்டது போல் பட்டது ! ஆனால் கிளம்பியது ஒரு வேதாளமெனில், புதிதாய்க் குடியேறியது இன்னொன்று !! இன்னமும் ஒன்றரை மாதங்கள் உள்ளன ஈரோட்டுக்கும் ; XIII ரிலீஸுக்கும் !! மண்டையை மறைத்தாலும், கொண்டையை மறைக்க மறந்த கதையாகிடக் கூடாதே ; வெளியிடும் தருணம் வரைக்கும் சகலத்தையும் under wraps வைத்திருக்க வேண்டுமே என்ற பய வேதாளம் தானது ! மூடாக்குப் போட்டு, கோஷாப் பெண்ணாய் நம் XIII-ஐ 45 நாட்களுக்கு ஆபீசில் பத்திரப்படுத்தி வைத்திருப்பது சுலபமாகவே இருக்கவில்லை ! பற்றாக்குறைக்கு இந்த பிராஜெக்டில் இலவச இணைப்பான "புலன் விசாரணை" பற்றி நம்மாட்களே உளறி வைத்து விடக்கூடாதே என்ற டரியலும் இன்னொரு பக்கம் !! "போனில் அடிச்சு கேட்டாலும் எதையும் சொல்லிடப்படாது !!" என்று நமது அலுவலகப் பெண்மணிகளுக்கு வாய்ப்பூட்டு போட்டது ஒரு பக்கமெனில், கோவை புத்தக விழாவிற்குச் சென்றிருந்த இராதாகிருஷ்ணன் அண்ணாச்சி & கோ. அங்கே எதையேனும் போட்டுடைத்து விடப்படாதே என்று பதறியதும் எனக்கு மட்டும் தான் தெரியும். Of course - இதனை யூகிப்பது நண்பர்களுக்கோர் கம்பு சுத்தும் பிரயத்தனமல்ல தான் என்றாலும் - நாமே போட்டுடைக்க வேண்டாமே ?!!" என்ற அவா அலையடித்தது !! So ஒரு மாதிரியாய் கண்ணில் எதையுமே காட்டாது, ஈரோட்டுக்கு இதழ்களைக் கொணர்ந்தது வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு நெருக்கமானதொரு நேரத்தில் !!
எங்களுக்கு ஈரோடு ஒரு வியாபார நிர்பந்தமுமே ; நண்பர்களை ; புது வாசகர்களை சந்திக்கவும் ஒரு வாய்ப்பே !! So ஈரோட்டின் தேதிகள் நெருங்க நெருங்க எங்களது வண்டி சூடு பிடிப்பதில் வியப்பில்லை !! ஆனால் "வாசக சந்திப்பு" ; "புத்தக ரிலீஸ்" என்ற நடைமுறைகள் காலூன்றத் துவங்கிய காலம் முதலே, எங்கெங்கிருந்தெல்லாமோ சங்கமிக்கும் காமிக்ஸ் பறவைகள் ஈரோட்டை ஒரு நவீன வேடந்தாங்கலாய் உருமாற்றி வருவது நமக்கு அளவிலா சந்தோஷத்தை வழங்கி வருகின்றது ! And இம்முறை ஒரு மெகாஆஆ இதழின் ரிலீஸ் தருணம் என்பதால் நண்பர்களின் உற்சாக மீட்டர்கள் தெறிக்கத் துவங்கியிருந்ததும் புரிந்தது ! அமெரிக்காவிலிருந்து ; பிரான்சிலிருந்து ; ஸ்ரீலங்காவிலிருந்து ; ஹை-டெக் சேந்தம்பட்டியிலிருந்து ; சென்னை ; பெங்களூரு ; கோவை ; திருப்பூர் ; பாண்டி ; கோபி ; குடந்தை ; நெல்லை ; கரூர் ; சேலம் ; திருச்சி ; தாராபுரம் ; நாகர்கோவில் ; காரைக்கால் plus இன்னும் எக்கச்சக்க நகர்களிருந்து நண்பர்கள் தனியாகவும் ; குடும்ப சகிதமாகவும் படையெடுத்து சனிக்கிழமை காலையே லே ஜார்டின் ஹோட்டலின் அரங்கில் திரளாய்க் குழுமியிருப்பதைக் கண்ட முதல் நொடியில் எனக்குள் தோன்றிய ஒரே எண்ணம் இதுவே !! "தெய்வமே.... எங்கிருந்தெல்லாமோ ; எவ்வளவோ சிரமங்களுக்கு ; பணிகளுக்கு ; பொறுப்புகளுக்கு மத்தியில் இங்கே காமிக்ஸ் காதல் + அன்பெனும் உத்வேகத்தில் ஒன்றிணைந்திருக்கும் இந்த நல்ல மனங்கள் சகலமும் இங்கிருந்து புறப்படும் சமயம் நிறைந்த மனதோடு ;இதே நேசத்தோடு கிளம்பும் வரம் மட்டும் வேண்டுமே !!" என்பதைத் தாண்டி வேறு எதுவும் தோன்றவில்லை ! இரும்புக்கை மாயாவி லூயி கிராண்டேல் மட்டும் அந்த அறைக்குள் அப்போது கால்பதித்திருப்பின், அங்கே விரவிக் கிடந்த மின்சார சூழலில் மனுஷன் அரூபமாகிப் போயிருக்கக்கூடுமென்பேன் - அப்படியொரு crackling air of expectations & happiness !!
ஆளுக்கொரு அடையாள tag இருந்தால் தேவலாம் ; நாம் ஒருவருக்கொருவர் அந்நியமாய்த் தெரியாதிருக்க உதவிடும் என்ற எண்ணத்தில் ஊரிலிருந்தே நிறைய கொண்டு வந்திருக்க - நண்பர்கள் வயது வித்தியாசம் பாராது - பஞ்சுமிட்டாய் வாங்க வரிசையில் கூடிடும் குழந்தைகள் போல் அணிவகுத்தது எனது ஆயுட்கால பொக்கிஷ நினைவுகளில் ஒன்றாகிடுமென்பது உறுதி !! நமது அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராய்க் கலந்து கொண்டிருந்த நமது கருணையானந்தம் அவர்களும், சீனியர் எடிட்டரும் உள்ளே புகுந்திட, அவர்களை அன்போடு சூழ்ந்து கொண்ட நண்பர் அணியை அரங்கின் பின்பகுதியிலிருந்தே ரசிக்க முடிந்தது எனக்கு ! நிச்சயமாய் சனி காலை அந்த அரங்கினை புதிதாய் யாரும் பார்வையிட்டிருந்தால் - அதுவொரு formal புத்தக வெளியீட்டு விழாவாய் காட்சி தந்திருக்க வாய்ப்பே இல்லை என்பேன் ! தம் வீட்டிலொரு விசேஷம் என்பது போல் ஆளாளுக்குப் பர பரத்துக்கு கொண்டிருந்தது ஒரு பக்கமெனில் ; "என் பொண்டாட்டி ஊர்லே இருக்கா....!!" என்ற ஜனகராஜ் உற்சாகத்தோடு நண்பர்கள் மறுக்கா bachelors ஆகிப் போனது போல் இன்னொரு பக்கம் அதகளம் செய்து கொண்டிருந்தார்கள் ! ஒரு மாதிரியாய் நண்பர்களின் வரவுகள் streamline ஆகிட - சீனியரையும் ; கருணையானந்தம் அவர்களையும் மேடைக்கு அழைத்த கையோடு - முதல் இதழை உங்கள் கண்களில் காட்டிடும் ஆர்வத்தின் பலனாய் எழுந்த நமைச்சலைக் கட்டுப்படுத்த இயலவில்லை - அதற்கு மேலாகவும் !! ஏற்கனவே இங்கே நான் வாக்குத் தந்திருந்தது போல முதல் இதழை பெற்றுக் கொள்வது நமது நண்பர் கரூர் ராஜசேகராகத் தானிருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், துணைவியாரோடு வந்திருந்தவரை மேடைக்கு அழைத்தேன் !! முதல் இதழை திரு கருணையானந்தம் அவர்கள் வெளியிட - நண்பர் ராஜசேகர் பெற்றுக் கொண்ட நொடியில் என் தோளில் தொற்றித் திரிந்த சில பல வேதாளங்கள் விடை பெற்றதை உணர முடிந்தது !! ஒரு தூரத்து மழைநாளில், ஓய்வின் குடைக்கடியில் அமர்ந்திருக்கும் தருணம் இந்த ஆகஸ்ட் 4 -ம் தேதியை நான் நினைவுகூரும் போது கண்கள் சன்னமாய் வேர்க்காது போகாது என்பது மட்டும் நிச்சயம் !
தொடர்ந்து முன்பதிவின் பிரதிகள் நண்பர்களுக்கு வழங்கப்பட - எனக்கோ ஒவ்வொரு முகத்திலும் தென்படக்கூடிய முதல் reaction என்னவென்று பார்த்திடும் ஆவல் ஆட்டியெடுத்தது ! அனைவரின் முகங்களிலும் LED பல்பின் பிராகாசம் தெரிய தெரிய - எனக்குள் ஒருவிதமான அமைதி குடி கொள்வது போலுணர்ந்தேன் ! ஏகமாய் எதிர்பார்ப்புகள் ; ஏகமாய் பணிகள் / பொறுப்புகள் என்றெல்லாம் சமீப மாதங்களில் சுமந்து திரிந்தவனுக்கு - அவை சகலமும் ஒற்றை நொடியில் காற்றில் கரைந்து போன போது மனமே நிச்சலனமானது போலிருந்தது ! தொடர்ந்து சீனியர் எடிட்டர் சுருக்கமாய்ப் பேசிட ; அதைத் தொடர்ந்து கருணையானந்தம் அவர்கள் நம் காமிக்ஸ் பயணத்துடனான தனது நினைவுகளை செம சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார் ! ஜூனியரின் திருமணத்துக்கு வருகை தந்திருந்த நண்பர்களுக்கு அவரை ஏற்கனவே தெரிந்திருக்க, இதர நண்பர்களுக்கு இதுவே முதல் பரிச்சயக் களம் !
அவர் பேசி முடிக்க - நண்பர்கள் அவரிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்கத் துவங்கினர் !! பிடித்த கதை ; பிடிக்காத கதை ; சுலபமான கதை ; சிரமமான கதை ; ஸ்பைடர் ; டெக்ஸ் வில்லர் ; கிராபிக் நாவல்கள் என்று கேள்விகளின் ரேன்ஜ் எங்கெங்கெல்லாமோ பயணித்தது !! அத்தனைக்கும் அசராது அவரும் பதில் சொல்ல, அரங்கமே சுவாரஸ்ய mode-ல் ஆழ்ந்து போனது. அதற்கு முன்பாய் புலன் விசாரணை இதழின் மொழிபெயர்ப்புக்கு அசாத்திய உழைப்பைத் தந்திருந்த நண்பர்கள் கார்த்திகை பாண்டியன் அவர்களையும், J என்ற ஜனார்த்தனன் அவர்களையும், கணேஷ்குமார் அவர்களையும் பற்றி பேசிய கையோடு - முதலிருவரையும் மேடைக்கு அழைத்து கௌரவப்படுத்தினோம் - அரங்கமே எழுந்து நின்று கரகோஷம் தந்து !! அவர்களுக்கான நமது சிறு சன்மானங்களையும் தந்த பின்னே நண்பர்கள் இருவரும் பேசியது இன்னொரு அழகுத தருணம் !!
ஒருவாறாக அடியேன் வசம் மைக் வந்து சேர, இரத்தப் படலம் சார்ந்த எனது நினைவுகளை கிளறத் துவங்கினேன் ! 32 ஆண்டுகளுக்கு முன்பான துவக்கப் புள்ளி பற்றி ; 10 ஆண்டுக்கு முன்பான black & white தொகுப்பு பற்றியெல்லாம் பேசிய போது ஆட்டோகிராப் சேரனின் சைக்கிள் சவாரியின் சுகம் என்னவென்று புரிந்தது ! XIII-ஐ சிலாகித்தது பற்றாதென்று - நண்பர்களின் XIII சார்ந்த ஞாபகங்களை பரிசோதிக்கும் பொருட்டு நான் ஊரிலிருந்து கொணர்ந்திருந்த கேள்வித் தாள்களை திடுமென்று நீட்ட - அரங்கமே பரீட்சை mode-க்கு மாறிப் போனது !! முன்ஜாக்கிரதையாய் பதில்களையும் ஊரிலிருந்தே கொண்டு வந்திருந்த கெத்தில் நான் பத்திரமாய் அமர்ந்திருக்க, பர பரவென பதிலெழுதும் நண்பர்களின் முகங்கள் தினுசு தினுசாய் போவதை பார்த்திட முடிந்தது !! 5 வாசகர்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு வாங்கியிருக்க - இப்படியும், அப்படியுமாய் மார்க் வாங்கியிருந்தனர் இதர நண்பர்கள் ! எல்லாமே ஜாலிக்காண்டி தான் என்பதால் அனைவருக்குமே ஒரு குட்டியான XIII போஸ்ட்கார்ட் தந்த கையோடு விழாவாய் நிறைவு செய்துவிட்டு மதிய உணவுக்கும், போட்டோ எடுக்கும் படலத்துக்கும் துவக்கம் கொடுக்கத் தீர்மானித்தோம் !! 4 மணி நேரத்தை கொண்டு செல்வது எவ்விதமோ ? என்ற பதட்டத்தோடு அரங்கிற்கு வந்தவனுக்கு மணி 2 ஆகிவிட்டதென்பதை நம்பவே முடியவில்லை !! பிரியமானவர்களின் அண்மையில் நேரத்துக்கு றெக்கைகள் முளைத்துவிடும் போலும் என்று நினைத்துக் கொண்டேன் !! விடைபெறும் நண்பர்கள் அத்தனை பேரின் கண்களிலும் ஒரு நிறைவு தென்படுகிறதா ? என்ற தேடலோடு நின்றவனுக்கு, அணிவகுத்த மலர்ந்த முகங்கள் சந்தோஷ விடை தந்திட - சாப்பிடாதுமே வயிறும், மனதும் நிறைந்த உணர்வு !!
இறுதியாய் பந்திப் பக்கம் போன சமயம், அரங்க அமைப்பாளர்களின் பணியாளர்கள் கடைசிப் பந்தியிலுமே பம்பரமாய்ச் சுழன்று கொண்டு பரிமாறியதை பார்க்க சந்தோஷமாகயிருந்தது ! நம் நண்பர்களுள் சிலருமே சாம்பார் வாளிகளையும், அன்னச் சட்டிகளையும் சுமந்து சுழலும் அட்டகாசங்களுக்கும் முறையிருக்கவில்லை ! Phew !!! ஒரு மாதிரியாய் அனைவரும் பசியாறி, விடைபெற்ற போது ஜூனியரும், நானும் மெதுநடை போட்டு ரூமுக்குத் திரும்பினோம் !!கால்களும், கைகளும் ஓய்ந்து போயிருப்பினும், மனதில் நிறைவு வியாபித்துக் கிடந்தது ! கொஞ்சமாய்க் கட்டையைக் கிடத்தியான பின்னே மாலை நான் மட்டும் நம் ஸ்டாலுக்குச் செல்ல, சற்றைக்கெல்லாம் நண்பர்களும் வருகை தர, நமக்கிப்போது வெகு பரிச்சயமாகிப் போய் விட்டுள்ள புத்தக விழாவின் பின்னுள்ள மரத்தடியைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டோம் ! எப்போதும் போலவே "அடுத்து என்ன ?" "குண்டு புக் ???" ; கி,நா உண்டா இல்லையா ?" மறுபதிப்பு digest உண்டா ? ; வேதாளன் உண்டா ? அடுத்த மெகா பிராஜெக்ட் எது ? டெக்ஸ் டைனமை ஸ்பெஷலில் என்ன ஸ்பெஷல் ? " இளம் டைகர் உண்டா ? " என்ற ரீதியில் கேள்விகள் சிறகடித்தன !! இம்முறை பெவிகால் பெரியசாமி அவதாரமே எடுக்க வேண்டிய நிர்பந்தம் - மறுபடியும் ஒரு பெரும் பட்ஜெட் காமிக்ஸ் ஆண்டை உங்கள் முன்னே வைத்திட வேண்டாமே என்ற ஆதங்கத்தில் ! So தட புட என அறிவிப்பை ஏதும் செய்யாது - 2019 அட்டவணையில் உங்கள் கேள்விகளுக்குப் பதிலிருக்கும் என்று மட்டும் சொல்லி வைத்தேன் !! நண்பர்களுக்கு இதன் பொருட்டு ஏமாற்றம் இருக்கும் என்பதில் ஐயமில்லை ; ஆனால் ஓராண்டின் திட்டமிடலை finetune செய்யும் தருணத்திலிருக்கும் எனக்கு - "இரத்தப் படல" பரபரப்பிலிருந்து விடுபட்டிருக்கும் இந்த நொடியிலேயே அடுத்த மெக் பிராஜெக்ட்டினுள் தொபுக்கடீர் எனக் குதிக்கும் தம் இல்லை என்பதே நிஜம் ! நிதானமாய் கதைகளை பரிசீலனை செய்து, 2019 -ன் அட்டவணையை இறுதி செய்வதே தற்போதைய முதல் priority எனும் போது அதனை செவ்வனே செய்து முடித்த கையோடு, நம் அடுத்த biggie project பக்கமாய்க் கவனத்தைத் திரும்புவேன் guys ! That 's a promise !!
And ஊருக்குத் திரும்பிய முதலே 'தல' வில்லரின் "டைனமைட் ஸ்பெஷல்" பணிகளில் மூழ்கிடும் அவசியமும் உள்ளதால் - லேசாய் முன்ஜாக்கிரதை முனிசாமியாகிப் போனேன் !!
கச்சேரியை முடித்த கையோடு இரவு அறைக்குத் திரும்பிய தருணத்தில் தூக்கம் சுழன்றடித்தது !! கனவில் வில்லரோடு அரிஸோனாவில் பயணிப்பது போலவும், XIII சகிதம் கோஸ்டா நெக்ராவில் பயணிப்பது போலவும் கனவுகள் ஆர்ப்பரித்தன !! திடீரென்று நாமெல்லோரும் இத்தாலியில் 'தல'யின் 75 வது பிறந்தநாளைக் கொண்டாடுவது போலொரு கனவும் எங்கிருந்தோ எட்டிப் பார்க்க - அடித்துப் பிடித்து எழுந்தேன் !! பார்த்தால் ஞாயிறு காலை புலர்ந்திருப்பதைக் குருவிகளும், காக்கைகளும் அறிவித்துக் கொண்டிருந்தன ! எனது அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் ஈரோட்டுப் புத்தக விழா அரங்கு அமைதியில் துயின்று கொண்டிருந்தது தெரிந்தது !! ஒரு பயணத்தின் பல சந்தோஷதருணங்களை நமக்கு நல்கித் தந்துள்ள அந்தப் புத்தகப் பூங்காவை லயித்துப் பார்த்துக் கொண்டேயிருந்த போது மனதுக்குள் எண்ணற்ற புதுப் புதுக் கனவுகள் சிறகு முளைப்பது போலுணர்ந்தேன் !! ஒரு கனவின் முற்றுப் புள்ளியில் இன்னொரு புதுக் கனவு துளிர் விடுவது இயல்பு தானோ ?!!!!
ஒருமாதிரியாக சகலத்தையும் முடித்து புக்காக்கிப் பார்த்த போது அதுவரையிலும் என் தோளில் தொற்றித் திரிந்த பயமெனும் வேதாளம் டீ குடிக்கக் கிளம்பிப் போய் விட்டது போல் பட்டது ! ஆனால் கிளம்பியது ஒரு வேதாளமெனில், புதிதாய்க் குடியேறியது இன்னொன்று !! இன்னமும் ஒன்றரை மாதங்கள் உள்ளன ஈரோட்டுக்கும் ; XIII ரிலீஸுக்கும் !! மண்டையை மறைத்தாலும், கொண்டையை மறைக்க மறந்த கதையாகிடக் கூடாதே ; வெளியிடும் தருணம் வரைக்கும் சகலத்தையும் under wraps வைத்திருக்க வேண்டுமே என்ற பய வேதாளம் தானது ! மூடாக்குப் போட்டு, கோஷாப் பெண்ணாய் நம் XIII-ஐ 45 நாட்களுக்கு ஆபீசில் பத்திரப்படுத்தி வைத்திருப்பது சுலபமாகவே இருக்கவில்லை ! பற்றாக்குறைக்கு இந்த பிராஜெக்டில் இலவச இணைப்பான "புலன் விசாரணை" பற்றி நம்மாட்களே உளறி வைத்து விடக்கூடாதே என்ற டரியலும் இன்னொரு பக்கம் !! "போனில் அடிச்சு கேட்டாலும் எதையும் சொல்லிடப்படாது !!" என்று நமது அலுவலகப் பெண்மணிகளுக்கு வாய்ப்பூட்டு போட்டது ஒரு பக்கமெனில், கோவை புத்தக விழாவிற்குச் சென்றிருந்த இராதாகிருஷ்ணன் அண்ணாச்சி & கோ. அங்கே எதையேனும் போட்டுடைத்து விடப்படாதே என்று பதறியதும் எனக்கு மட்டும் தான் தெரியும். Of course - இதனை யூகிப்பது நண்பர்களுக்கோர் கம்பு சுத்தும் பிரயத்தனமல்ல தான் என்றாலும் - நாமே போட்டுடைக்க வேண்டாமே ?!!" என்ற அவா அலையடித்தது !! So ஒரு மாதிரியாய் கண்ணில் எதையுமே காட்டாது, ஈரோட்டுக்கு இதழ்களைக் கொணர்ந்தது வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு நெருக்கமானதொரு நேரத்தில் !!
எங்களுக்கு ஈரோடு ஒரு வியாபார நிர்பந்தமுமே ; நண்பர்களை ; புது வாசகர்களை சந்திக்கவும் ஒரு வாய்ப்பே !! So ஈரோட்டின் தேதிகள் நெருங்க நெருங்க எங்களது வண்டி சூடு பிடிப்பதில் வியப்பில்லை !! ஆனால் "வாசக சந்திப்பு" ; "புத்தக ரிலீஸ்" என்ற நடைமுறைகள் காலூன்றத் துவங்கிய காலம் முதலே, எங்கெங்கிருந்தெல்லாமோ சங்கமிக்கும் காமிக்ஸ் பறவைகள் ஈரோட்டை ஒரு நவீன வேடந்தாங்கலாய் உருமாற்றி வருவது நமக்கு அளவிலா சந்தோஷத்தை வழங்கி வருகின்றது ! And இம்முறை ஒரு மெகாஆஆ இதழின் ரிலீஸ் தருணம் என்பதால் நண்பர்களின் உற்சாக மீட்டர்கள் தெறிக்கத் துவங்கியிருந்ததும் புரிந்தது ! அமெரிக்காவிலிருந்து ; பிரான்சிலிருந்து ; ஸ்ரீலங்காவிலிருந்து ; ஹை-டெக் சேந்தம்பட்டியிலிருந்து ; சென்னை ; பெங்களூரு ; கோவை ; திருப்பூர் ; பாண்டி ; கோபி ; குடந்தை ; நெல்லை ; கரூர் ; சேலம் ; திருச்சி ; தாராபுரம் ; நாகர்கோவில் ; காரைக்கால் plus இன்னும் எக்கச்சக்க நகர்களிருந்து நண்பர்கள் தனியாகவும் ; குடும்ப சகிதமாகவும் படையெடுத்து சனிக்கிழமை காலையே லே ஜார்டின் ஹோட்டலின் அரங்கில் திரளாய்க் குழுமியிருப்பதைக் கண்ட முதல் நொடியில் எனக்குள் தோன்றிய ஒரே எண்ணம் இதுவே !! "தெய்வமே.... எங்கிருந்தெல்லாமோ ; எவ்வளவோ சிரமங்களுக்கு ; பணிகளுக்கு ; பொறுப்புகளுக்கு மத்தியில் இங்கே காமிக்ஸ் காதல் + அன்பெனும் உத்வேகத்தில் ஒன்றிணைந்திருக்கும் இந்த நல்ல மனங்கள் சகலமும் இங்கிருந்து புறப்படும் சமயம் நிறைந்த மனதோடு ;இதே நேசத்தோடு கிளம்பும் வரம் மட்டும் வேண்டுமே !!" என்பதைத் தாண்டி வேறு எதுவும் தோன்றவில்லை ! இரும்புக்கை மாயாவி லூயி கிராண்டேல் மட்டும் அந்த அறைக்குள் அப்போது கால்பதித்திருப்பின், அங்கே விரவிக் கிடந்த மின்சார சூழலில் மனுஷன் அரூபமாகிப் போயிருக்கக்கூடுமென்பேன் - அப்படியொரு crackling air of expectations & happiness !!
ஆளுக்கொரு அடையாள tag இருந்தால் தேவலாம் ; நாம் ஒருவருக்கொருவர் அந்நியமாய்த் தெரியாதிருக்க உதவிடும் என்ற எண்ணத்தில் ஊரிலிருந்தே நிறைய கொண்டு வந்திருக்க - நண்பர்கள் வயது வித்தியாசம் பாராது - பஞ்சுமிட்டாய் வாங்க வரிசையில் கூடிடும் குழந்தைகள் போல் அணிவகுத்தது எனது ஆயுட்கால பொக்கிஷ நினைவுகளில் ஒன்றாகிடுமென்பது உறுதி !! நமது அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராய்க் கலந்து கொண்டிருந்த நமது கருணையானந்தம் அவர்களும், சீனியர் எடிட்டரும் உள்ளே புகுந்திட, அவர்களை அன்போடு சூழ்ந்து கொண்ட நண்பர் அணியை அரங்கின் பின்பகுதியிலிருந்தே ரசிக்க முடிந்தது எனக்கு ! நிச்சயமாய் சனி காலை அந்த அரங்கினை புதிதாய் யாரும் பார்வையிட்டிருந்தால் - அதுவொரு formal புத்தக வெளியீட்டு விழாவாய் காட்சி தந்திருக்க வாய்ப்பே இல்லை என்பேன் ! தம் வீட்டிலொரு விசேஷம் என்பது போல் ஆளாளுக்குப் பர பரத்துக்கு கொண்டிருந்தது ஒரு பக்கமெனில் ; "என் பொண்டாட்டி ஊர்லே இருக்கா....!!" என்ற ஜனகராஜ் உற்சாகத்தோடு நண்பர்கள் மறுக்கா bachelors ஆகிப் போனது போல் இன்னொரு பக்கம் அதகளம் செய்து கொண்டிருந்தார்கள் ! ஒரு மாதிரியாய் நண்பர்களின் வரவுகள் streamline ஆகிட - சீனியரையும் ; கருணையானந்தம் அவர்களையும் மேடைக்கு அழைத்த கையோடு - முதல் இதழை உங்கள் கண்களில் காட்டிடும் ஆர்வத்தின் பலனாய் எழுந்த நமைச்சலைக் கட்டுப்படுத்த இயலவில்லை - அதற்கு மேலாகவும் !! ஏற்கனவே இங்கே நான் வாக்குத் தந்திருந்தது போல முதல் இதழை பெற்றுக் கொள்வது நமது நண்பர் கரூர் ராஜசேகராகத் தானிருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், துணைவியாரோடு வந்திருந்தவரை மேடைக்கு அழைத்தேன் !! முதல் இதழை திரு கருணையானந்தம் அவர்கள் வெளியிட - நண்பர் ராஜசேகர் பெற்றுக் கொண்ட நொடியில் என் தோளில் தொற்றித் திரிந்த சில பல வேதாளங்கள் விடை பெற்றதை உணர முடிந்தது !! ஒரு தூரத்து மழைநாளில், ஓய்வின் குடைக்கடியில் அமர்ந்திருக்கும் தருணம் இந்த ஆகஸ்ட் 4 -ம் தேதியை நான் நினைவுகூரும் போது கண்கள் சன்னமாய் வேர்க்காது போகாது என்பது மட்டும் நிச்சயம் !
தொடர்ந்து முன்பதிவின் பிரதிகள் நண்பர்களுக்கு வழங்கப்பட - எனக்கோ ஒவ்வொரு முகத்திலும் தென்படக்கூடிய முதல் reaction என்னவென்று பார்த்திடும் ஆவல் ஆட்டியெடுத்தது ! அனைவரின் முகங்களிலும் LED பல்பின் பிராகாசம் தெரிய தெரிய - எனக்குள் ஒருவிதமான அமைதி குடி கொள்வது போலுணர்ந்தேன் ! ஏகமாய் எதிர்பார்ப்புகள் ; ஏகமாய் பணிகள் / பொறுப்புகள் என்றெல்லாம் சமீப மாதங்களில் சுமந்து திரிந்தவனுக்கு - அவை சகலமும் ஒற்றை நொடியில் காற்றில் கரைந்து போன போது மனமே நிச்சலனமானது போலிருந்தது ! தொடர்ந்து சீனியர் எடிட்டர் சுருக்கமாய்ப் பேசிட ; அதைத் தொடர்ந்து கருணையானந்தம் அவர்கள் நம் காமிக்ஸ் பயணத்துடனான தனது நினைவுகளை செம சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார் ! ஜூனியரின் திருமணத்துக்கு வருகை தந்திருந்த நண்பர்களுக்கு அவரை ஏற்கனவே தெரிந்திருக்க, இதர நண்பர்களுக்கு இதுவே முதல் பரிச்சயக் களம் !
அவர் பேசி முடிக்க - நண்பர்கள் அவரிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்கத் துவங்கினர் !! பிடித்த கதை ; பிடிக்காத கதை ; சுலபமான கதை ; சிரமமான கதை ; ஸ்பைடர் ; டெக்ஸ் வில்லர் ; கிராபிக் நாவல்கள் என்று கேள்விகளின் ரேன்ஜ் எங்கெங்கெல்லாமோ பயணித்தது !! அத்தனைக்கும் அசராது அவரும் பதில் சொல்ல, அரங்கமே சுவாரஸ்ய mode-ல் ஆழ்ந்து போனது. அதற்கு முன்பாய் புலன் விசாரணை இதழின் மொழிபெயர்ப்புக்கு அசாத்திய உழைப்பைத் தந்திருந்த நண்பர்கள் கார்த்திகை பாண்டியன் அவர்களையும், J என்ற ஜனார்த்தனன் அவர்களையும், கணேஷ்குமார் அவர்களையும் பற்றி பேசிய கையோடு - முதலிருவரையும் மேடைக்கு அழைத்து கௌரவப்படுத்தினோம் - அரங்கமே எழுந்து நின்று கரகோஷம் தந்து !! அவர்களுக்கான நமது சிறு சன்மானங்களையும் தந்த பின்னே நண்பர்கள் இருவரும் பேசியது இன்னொரு அழகுத தருணம் !!
ஒருவாறாக அடியேன் வசம் மைக் வந்து சேர, இரத்தப் படலம் சார்ந்த எனது நினைவுகளை கிளறத் துவங்கினேன் ! 32 ஆண்டுகளுக்கு முன்பான துவக்கப் புள்ளி பற்றி ; 10 ஆண்டுக்கு முன்பான black & white தொகுப்பு பற்றியெல்லாம் பேசிய போது ஆட்டோகிராப் சேரனின் சைக்கிள் சவாரியின் சுகம் என்னவென்று புரிந்தது ! XIII-ஐ சிலாகித்தது பற்றாதென்று - நண்பர்களின் XIII சார்ந்த ஞாபகங்களை பரிசோதிக்கும் பொருட்டு நான் ஊரிலிருந்து கொணர்ந்திருந்த கேள்வித் தாள்களை திடுமென்று நீட்ட - அரங்கமே பரீட்சை mode-க்கு மாறிப் போனது !! முன்ஜாக்கிரதையாய் பதில்களையும் ஊரிலிருந்தே கொண்டு வந்திருந்த கெத்தில் நான் பத்திரமாய் அமர்ந்திருக்க, பர பரவென பதிலெழுதும் நண்பர்களின் முகங்கள் தினுசு தினுசாய் போவதை பார்த்திட முடிந்தது !! 5 வாசகர்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு வாங்கியிருக்க - இப்படியும், அப்படியுமாய் மார்க் வாங்கியிருந்தனர் இதர நண்பர்கள் ! எல்லாமே ஜாலிக்காண்டி தான் என்பதால் அனைவருக்குமே ஒரு குட்டியான XIII போஸ்ட்கார்ட் தந்த கையோடு விழாவாய் நிறைவு செய்துவிட்டு மதிய உணவுக்கும், போட்டோ எடுக்கும் படலத்துக்கும் துவக்கம் கொடுக்கத் தீர்மானித்தோம் !! 4 மணி நேரத்தை கொண்டு செல்வது எவ்விதமோ ? என்ற பதட்டத்தோடு அரங்கிற்கு வந்தவனுக்கு மணி 2 ஆகிவிட்டதென்பதை நம்பவே முடியவில்லை !! பிரியமானவர்களின் அண்மையில் நேரத்துக்கு றெக்கைகள் முளைத்துவிடும் போலும் என்று நினைத்துக் கொண்டேன் !! விடைபெறும் நண்பர்கள் அத்தனை பேரின் கண்களிலும் ஒரு நிறைவு தென்படுகிறதா ? என்ற தேடலோடு நின்றவனுக்கு, அணிவகுத்த மலர்ந்த முகங்கள் சந்தோஷ விடை தந்திட - சாப்பிடாதுமே வயிறும், மனதும் நிறைந்த உணர்வு !!
இறுதியாய் பந்திப் பக்கம் போன சமயம், அரங்க அமைப்பாளர்களின் பணியாளர்கள் கடைசிப் பந்தியிலுமே பம்பரமாய்ச் சுழன்று கொண்டு பரிமாறியதை பார்க்க சந்தோஷமாகயிருந்தது ! நம் நண்பர்களுள் சிலருமே சாம்பார் வாளிகளையும், அன்னச் சட்டிகளையும் சுமந்து சுழலும் அட்டகாசங்களுக்கும் முறையிருக்கவில்லை ! Phew !!! ஒரு மாதிரியாய் அனைவரும் பசியாறி, விடைபெற்ற போது ஜூனியரும், நானும் மெதுநடை போட்டு ரூமுக்குத் திரும்பினோம் !!கால்களும், கைகளும் ஓய்ந்து போயிருப்பினும், மனதில் நிறைவு வியாபித்துக் கிடந்தது ! கொஞ்சமாய்க் கட்டையைக் கிடத்தியான பின்னே மாலை நான் மட்டும் நம் ஸ்டாலுக்குச் செல்ல, சற்றைக்கெல்லாம் நண்பர்களும் வருகை தர, நமக்கிப்போது வெகு பரிச்சயமாகிப் போய் விட்டுள்ள புத்தக விழாவின் பின்னுள்ள மரத்தடியைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டோம் ! எப்போதும் போலவே "அடுத்து என்ன ?" "குண்டு புக் ???" ; கி,நா உண்டா இல்லையா ?" மறுபதிப்பு digest உண்டா ? ; வேதாளன் உண்டா ? அடுத்த மெகா பிராஜெக்ட் எது ? டெக்ஸ் டைனமை ஸ்பெஷலில் என்ன ஸ்பெஷல் ? " இளம் டைகர் உண்டா ? " என்ற ரீதியில் கேள்விகள் சிறகடித்தன !! இம்முறை பெவிகால் பெரியசாமி அவதாரமே எடுக்க வேண்டிய நிர்பந்தம் - மறுபடியும் ஒரு பெரும் பட்ஜெட் காமிக்ஸ் ஆண்டை உங்கள் முன்னே வைத்திட வேண்டாமே என்ற ஆதங்கத்தில் ! So தட புட என அறிவிப்பை ஏதும் செய்யாது - 2019 அட்டவணையில் உங்கள் கேள்விகளுக்குப் பதிலிருக்கும் என்று மட்டும் சொல்லி வைத்தேன் !! நண்பர்களுக்கு இதன் பொருட்டு ஏமாற்றம் இருக்கும் என்பதில் ஐயமில்லை ; ஆனால் ஓராண்டின் திட்டமிடலை finetune செய்யும் தருணத்திலிருக்கும் எனக்கு - "இரத்தப் படல" பரபரப்பிலிருந்து விடுபட்டிருக்கும் இந்த நொடியிலேயே அடுத்த மெக் பிராஜெக்ட்டினுள் தொபுக்கடீர் எனக் குதிக்கும் தம் இல்லை என்பதே நிஜம் ! நிதானமாய் கதைகளை பரிசீலனை செய்து, 2019 -ன் அட்டவணையை இறுதி செய்வதே தற்போதைய முதல் priority எனும் போது அதனை செவ்வனே செய்து முடித்த கையோடு, நம் அடுத்த biggie project பக்கமாய்க் கவனத்தைத் திரும்புவேன் guys ! That 's a promise !!
And ஊருக்குத் திரும்பிய முதலே 'தல' வில்லரின் "டைனமைட் ஸ்பெஷல்" பணிகளில் மூழ்கிடும் அவசியமும் உள்ளதால் - லேசாய் முன்ஜாக்கிரதை முனிசாமியாகிப் போனேன் !!
கச்சேரியை முடித்த கையோடு இரவு அறைக்குத் திரும்பிய தருணத்தில் தூக்கம் சுழன்றடித்தது !! கனவில் வில்லரோடு அரிஸோனாவில் பயணிப்பது போலவும், XIII சகிதம் கோஸ்டா நெக்ராவில் பயணிப்பது போலவும் கனவுகள் ஆர்ப்பரித்தன !! திடீரென்று நாமெல்லோரும் இத்தாலியில் 'தல'யின் 75 வது பிறந்தநாளைக் கொண்டாடுவது போலொரு கனவும் எங்கிருந்தோ எட்டிப் பார்க்க - அடித்துப் பிடித்து எழுந்தேன் !! பார்த்தால் ஞாயிறு காலை புலர்ந்திருப்பதைக் குருவிகளும், காக்கைகளும் அறிவித்துக் கொண்டிருந்தன ! எனது அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் ஈரோட்டுப் புத்தக விழா அரங்கு அமைதியில் துயின்று கொண்டிருந்தது தெரிந்தது !! ஒரு பயணத்தின் பல சந்தோஷதருணங்களை நமக்கு நல்கித் தந்துள்ள அந்தப் புத்தகப் பூங்காவை லயித்துப் பார்த்துக் கொண்டேயிருந்த போது மனதுக்குள் எண்ணற்ற புதுப் புதுக் கனவுகள் சிறகு முளைப்பது போலுணர்ந்தேன் !! ஒரு கனவின் முற்றுப் புள்ளியில் இன்னொரு புதுக் கனவு துளிர் விடுவது இயல்பு தானோ ?!!!!
Bye all ! See you around !!! And thank you from the bottom of our hearts !! 😀
இரண்டாவது...
ReplyDeleteபடித்துவிட்டு வருகிறேன்...
ReplyDeleteமாலை வணக்கம் சார்... படித்து விட்டு வந்துடறேன்...
ReplyDelete6th
ReplyDeleteBook Monday vachum kidaichuduma
ReplyDeletephotos & videos share panniya anaivarukkum nandrigal...
ReplyDeleteபுத்தகம் வராதா வருத்தத்துடன், படித்துவிட்டு வருகிறேன்.
ReplyDeleteNiraya perukkum Varala..Saturday than anupunangalam..sat Courier poi bulb vaangittu vanthachuuu
Deleteவிழாவின் வெற்றியை பங்குபெறாமலே நேரலையாக நண்பர்கள் தயவால் கண்டு மகிழ்ந்தேன். ஒரே வருத்தம் புத்தகத்தை இன்னும் கையில் ஏந்தி மகிழ முடியவில்லையே என்று தான்.
Delete//விழாவின் வெற்றியை பங்குபெறாமலே நேரலையாக நண்பர்கள் தயவால் கண்டு மகிழ்ந்தேன். ஒரே வருத்தம் புத்தகத்தை இன்னும் கையில் ஏந்தி மகிழ முடியவில்லையே என்று தான்.//
Delete+1
நாளை உங்கள் கையில்
DeleteSir hats of you u and (o)ur team
ReplyDeleteஉள்ளேன் சார்
ReplyDeleteமிக்க சந்தோசத்துடன் _/|\_
.
வந்தாச்சி.
ReplyDeleteமறக்கமுடியாத விழா இனி இது போன்ற விழா சாத்தியமா என்பதை காலம் தான் முடிவு செய்யும்.
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteKatturai pathiyileye mudincha mathiri irukke...thodaruma thirumbavum innaikee
ReplyDeleteஎல்லாம் ஓகே.முன்பதிவு செய்தவர்களில் erode book fair வந்தவங்க முதல் பந்தி,மத்தவங்க எல்லாம் இரண்டாவது பந்தின்னு ஆக்கிட்டீங்களே, இது நியாயமா சார்? மின்னும் மரணம் சென்னை book fair அரங்கில் வெளியான அன்றே மற்றவர்களுக்கும் கிடைத்ததாக நினைவு.
ReplyDeleteஇங்க இருக்கவங்க எத்தனை தடவை XIII படிச்சங்களோ தெரியாது. ஆனா நான் இப்போதான் முதல் தடவையா படிக்கிறேன். இந்த கமெண்ட் போட்டு கொண்டிருக்கும் நேரம் 3 பாகங்கள் முடிந்து spads என்னும் 4ம் பாகத்திற்குள் நுழைந்திருக்கிறேன். அருமையான கதை, சித்திரங்கள். நீங்கள் ஹாட்லைனில் குறிப்பிட்டதுபோல "இதுவரை இந்த கதையை கருப்பு வெள்ளையில் படித்திராமல் முதல் தடவையாக கலரில் படிப்பவர் யாரவது இருந்தால் அவர் அதிர்ஷ்டசாலி". அந்த அதிர்ஷ்டம் எனக்கு வாய்த்ததில் மகிழ்ச்சி. நான் முதல்முறையாக முன்பதிவு செய்து நண்பர்கள் முன் பெற்றுக்கொள்ளும் இதழ் இது என்பது மறக்கவியலா ஒன்று.
ReplyDeleteசைட் குறிப்பு: இத்தனை நாள் மௌன வாசகராய் இருந்த நான் இப்போது கமெண்டியிருக்கேன்
மிக்க நன்றி சார் ❤❤❤❤
///இந்த கமெண்ட் போட்டு கொண்டிருக்கும் நேரம் 3 பாகங்கள் முடிந்து spads என்னும் 4ம் பாகத்திற்குள் நுழைந்திருக்கிறேன்///
Deleteநானும் அதே!!
எந்திரன் பட "சிட்டி" மாதிரியா!!!
DeletePrasanth Karthik @ முதல் கமெண்ட். தொடர்ந்து நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
Deleteவெல்கம்
Deleteநாலாம் பாகமா....
Deleteஅதுக்குள்ளேயா.....
என்ன வேகம்.....
கதையே செம வேகமாக போய்கொண்டிருக்கிறதே..
Deleteஉற்சாகப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்..💓💓
எல்லாம் ஓகே.முன்பதிவு செய்தவர்களில் erode book fair வந்தவங்க முதல் பந்தி,மத்தவங்க எல்லாம் இரண்டாவது பந்தின்னு ஆக்கிட்டீங்களே, இது நியாயமா சார்? மின்னும் மரணம் சென்னை book fair அரங்கில் வெளியான அன்றே மற்றவர்களுக்கும் கிடைத்ததாக நினைவு.
ReplyDeleteநாளையாவது புத்தகம் எங்களுக்கு கிடைக்குமா? இந்த பதிவில் அது குறித்து ஆசிரியர் சொல்வார் என்று நினைத்தேன் ஆனால்...
Delete//மின்னும் மரணம் சென்னை book fair அரங்கில் வெளியான அன்றே மற்றவர்களுக்கும் கிடைத்ததாக நினைவு.//
மின்னும் மரணமும், விழாவிற்கு வராதவர்களுக்கு தாமதாகவே கிடைத்தது நண்பரே. அந்த குறையை ஆசிரியர் இரத்த படலத்தில் நிவர்த்தி செய்வார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்..இப்போதும் ஏதும் தகவலில்லை...
45 நாட்களுக்கு முன்னே தயாரான புத்தகத்தை, ஏன் அனைவர்க்கும் ஒரே நேரத்தில் விநியோகிக்க முடியவில்லை என்றும், எப்படி அட்டை படத்தில் எழுத்து பிழையை கோட்டைவிட்டார் என்றும் விளங்கிக்கொள்ள முடியவில்லை...
திருஷ்டிப்பொட்டு "ராவல்"இருப்பது அட்டையில் அல்ல; ஸ்லிப் கேஸில் நண்பரே...!!!
Deleteவியாழன் அட்டைபெட்டிகள் வந்து ஒரே நாளில் அதை பேக் செய்து இரகசியமாக புலன் விசாரணையை உள்ளே திணித்து வெள்ளிக்கிழமை ஈரோடு கொண்டு வருவது என்பது அசாதாரண செயல் தான்.
Delete//திருஷ்டிப்பொட்டு "ராவல்"இருப்பது அட்டையில் அல்ல; ஸ்லிப் கேஸில் நண்பரே...!!! //
Deleteஉங்களுக்கு புத்தகம் கிடைத்ததால் சரியாக சொல்லிவிட்டிர்கள்..நமக்கு தான் இன்னும் புத்தகம் கைக்கு கிட்டவில்லையே....
//வியாழன் அட்டைபெட்டிகள் வந்து ஒரே நாளில் அதை பேக் செய்து இரகசியமாக புலன் விசாரணையை உள்ளே திணித்து வெள்ளிக்கிழமை ஈரோடு கொண்டு வருவது என்பது அசாதாரண செயல் தான்.//
Delete45 நாட்களுக்கு முன்பு தயாரான புத்தகத்துக்கு ஸ்லிப் கேஸ் அண்ட் அட்டைபொட்டி கடைசி ஒரு நாளில் தயார் செய்வது அசாதாரணம் தான் ஜி.
உங்களுக்கு புத்தகம் கிடைத்ததால் அது அசாதாரண முயற்சி, கிடைக்காதவர்களுக்கு இது அழுகுணி ஆட்டம், ஏமாற்றம்...
400 முன்பதிவுகள் இருந்தால் தான் இரத்த படலம் கனவு நிஜமாகும் என்று சொன்னவர், அனைவருக்கும் ஒரே சமயத்தில் கிடைக்கச்செய்ய எந்த முயற்சியும் செய்யவில்லை, அவ்வளவு ஏன், எங்களின் ஆதங்கத்திற்கு பதிலளிக்க கூட முயற்சி செய்யவில்லை. தாண்டி சென்று விட்டார்..
எதுக்கு சந்தா கட்டணும், எதுக்கு முன்பதிவு செய்யணும், எதுக்கு மனஉளைச்சலுக்கு ஆள் ஆகணும். 2019 முதல் கடையில் கிடைத்தால் பொறுமையாக வாங்குவோம், இல்லையேல் கிடைக்கும் போது வாங்கி கொள்ளவேண்டியது தான். கிடைக்கவே இல்லை என்றாலும் பரவாயில்லை என்று தாண்டி செல்ல வேண்டியது தான், ஆசிரியர் போலவே.
கடையில் வாங்குவோம் மன உளைச்சலை தவிர்ப்போம்..
நண்பரே அதற்கு ஆசிரியர் கூறியது , புத்க வெளியீட்டு விழாவுக்கு முன்னரே பார்சல வாங்குவதால் அந்த புத்தகம் வெளியீட்டுக்கு முன்னரே நண்பர்களால் பகிரப் படுவதால் சர்ப்ரைஸ் மிஸ்ஸிங்,,,,அந்த உற்சாகத்த பாக்கதான்,,,இந்த பதிவிலேயே குறிப்பிட்டிருக்கிறாரே, இரவுதான் புத்தகத்த வரவச்சோம்னு, ,,,எல்லாம் புலன் விசாரணை ஆச்சரியங்களே,,,புரிந்து கொள்ளுங்கள்,,,தவறெனில் மன்னியுங்கள்,,,,ஒன்னே கால் வருட காத்திருப்பு ஓரிரு நாட்களில் கலைவது ஆச்சரியமே,,,
Deleteகாரணங்கள் என்னவாக இருப்பினும்,courier catchers எல்லாம் RAC list ஆகிவிட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்.
Delete//காரணங்கள் என்னவாக இருப்பினும்,courier catchers எல்லாம் RAC list ஆகிவிட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்.//
Delete+1
On the way to home..
ReplyDeleteஅட்டைப்பட நகாசு வேலைகள் அற்புதம்!
ReplyDeleteபுத்தகங்களை கையில் வைத்துப் பாா்ப்பதும், பின் குப்புறப்படுத்துக் கொண்டு தலைமேட்டில் வைத்துப் பாா்ப்பதும், பிறகு இடப்பக்கமாக திருப்பிப் பாா்ப்பதும், வலப்பக்கமாகப் பாா்ப்பதும் இப்படியாகவே இரவு 1.30 மணியைத் தாண்டிவிட்டது!
மாலையே ஈரோட்டில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து, சும்மா கடகடவெனப் படித்து 2 நாளில் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை "அட்டைப்படங்களின் நகாசு வேலைகள்" தவிடுபொடியாக்கி நேரத்தை விழுங்கி ஏப்பமிட்டிவிட்டன!!
This comment has been removed by the author.
Deleteமற்றபடி உண்மையிலேயே அட்டைப்பட வடிவமைப்பு பிரமாதம்!!
Delete10 th
ReplyDeleteThanks for the புலன் விசாரணை book.
ReplyDeleteஎன்றோ ஒரு நாள் நான் பதிவிட்டிருந்தபடி (புலன் விசாரணை வந்தால் இன்னும் ஒரு இரத்தப்படலம் புத்தகம் வாங்குவேன்) நான் இப்போது மேலும் ஒரு இரத்தப்படலம் புத்தகம் வாங்க வேண்டும். Online payment செய்ய Link ஒன்றை நமது websiteல் எடிட்டர் போட்டால் உடனே பணம் கட்ட எனக்கு வசதியாக இருக்கும். அல்லது net transfer சரி என்றாலும் அதை தளத்தில எடிட்டர் தெரியப்படுத்தினால் நன்று.
இந்த முயற்சிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள் பல.
புத்தகங்களை கொரியரில் அனுப்பியச்சா சார்.நாளை கிடைக்குமா ,,
ReplyDeleteYes sir !!
Delete2014-LMS
ReplyDelete2015-கார்டூன் ஸ்பெசல்
2016-ஈரோட்டில் இத்தாலி
2017-இரத்தக் கோட்டை
2018-இரத்தப்படலம்
-----என இதுவரை ஈரோட்டில் நடந்த 5வெளியீட்டு விழாக்களிலும் கலந்து கொண்டுள்ளேன்...
பெஸ்ட் ஆஃப் தெம் ஆல் எதுனா அது நேற்றைய இரத்தப்படலம் வெளியீட்டு விழாதான்...!
அதென்னங்க காா்ட்டூன் ஸ்பெஷல்!?? 🤔🤔
Deleteமுத்து 350--
Deleteஸ்மர்ஃப், லியனார்டோ-அறிமுகம்
க்ளிப்டன்-மறுவருகை
எல்லாம் இதில் தான் மிதுனரே...!!!
லயன்-முத்து வின் முதல் ஸ்லிப் கேஸ் இதழும் இதான்...
Deleteஅடுத்த வருடத்திற்கான கோரிக்கை என்ன வைத்தீர்கள் ?
DeleteBarracuda , Long John Silver (டிடெக்டிவ் ஜான் சில்வர் அல்ல !) கேட்டுப் பார்க்கலாம் ...
எல்லாமே கேட்டோம் ராக்ஜி.
Deleteவிடைகளைக் காண 2019ன் அட்டவணை வரை காத்து இருக்க வேணும்...!!!
உங்கள் உழைப்பு மற்றும் காமிக்ஸ் காதலுக்கு தலை வணங்குகிறேன். ஆசம்.
ReplyDeleteஇந்த தரமான இதழுக்கு வேலை செய்த நமது அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் இருகரம் கூப்பி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
EBF 2018 meet fabulous moment.
ReplyDeleteNever forget in my life.
Hats of Vijayan sir and his team for this fàntastic book making.
My mom much impressed and start her travel with Jason.
Comics mom ,it seems.
DeleteHats off to your mamma
🙏🙏🙏🙏
ReplyDeleteHats off to XIII and Sivakasi Team....
ReplyDeleteவந்துட்டேன்....
ReplyDeleteஊருக்கும் வந்துட்டேன்....
Deleteஅனைவருக்கு இனிய மாலை வணக்கம்.
ReplyDeleteபுத்தகங்களை கொரியரில் அனுப்பியச்சா சார்? Any Update on this?
ReplyDeleteஎடிட்டர் சார் இங்கு என் மனக்குமறலை பகிர்ந்து கொள்ள வேண்டாமே என நினைத்திருந்தேன்...இருந்தாலும் என்னால் அதை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.......
ReplyDeleteசில வரிகள் மட்டுமே எழுதுகிறேன்...அது தவறு எனில் என்னை மன்னியுங்கள்...ஒவ்வொரு ஆண்டும் நான் ஈரோடு வருவது நான் வாங்கிய புக்கில் என் ஆத்ம ஆசான் திரு.விஜயன் சாரின் கையொப்பம் பெறாமல் இருந்ததே இல்லை...அதற்காகவே முன்பதிவு செய்வேன்...ஆனால் இந்தாண்டு முன்பதிவு செய்தும் ஈரோட்டில் அதை வாங்கிக் கொள்ள மின்னஞ்சல் அனுப்பியும் எனக்கு புக் ஈரோட்டிற்கு வரவில்லை...மற்ற நண்பர்கள் எல்லாரும் கையில் வைத்து அழகு பார்த்துக்கொண்டும் அவர்களுடைய சந்தோசத்தையும் வெளிபடுத்தி மகிழ்ந்தனர் ஆனால் நானோ எனது முன்பதிவு புக் வராததால் அனைத்தும் இழந்தது போல் அப்படியே நொந்து போய்விட்டேன்...மனது ரணமாய் வலிக்கிறது..
நீங்களோ நண்பர்களோ நினைக்கலாம் எனக்கு எப்படியும் கிடைத்து விடப்போகிறது என்று......ஆனால் நான் நேற்றில் இருந்து படும் மன உளைச்சலுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை....
இன்றோ நாளையோ எனக்கு கூரியரில் வரும் அந்த புக்கி உங்களுடைய கையெழுத்து இருக்காதே....
நான் திறந்து படிப்பதாக இல்லை அடுத்தாண்டு நீங்கள் ஈரோட்டில் எனது இரத்தப்படல புக்கில் கையொப்பம் இட்ட பிறகே படிப்பேன் அதுவரை நீங்கள் அனுப்பிய அந்த பார்சலைகூட திறக்க மாட்டேன் ....சாரி சார்....
என்னிடம் கேட்டு/சொல்லி இருக்கலாமே ப்ரோ ..
Deleteநான் கொடுத்திருப்பேனே !!
உங்களுக்கு வந்ததை எனக்கு அனுப்பி இருக்கலாமே ?
ஸாரி நண்பர்களே என்னால் ஆனமட்டும் முயன்றும் வர முடியவில்லை. எங்கள் ஊருக்கு பக்கத்திலேயே இவ்வளவு பெரிய விழாவில் பங்கேற்க முடியவில்லை!என்ன கொடுமை நண்பரகளே.
ReplyDeleteஎடிட்டர் சார், மற்றும் சீனியர் எடிட்டர் அவர்களையும், தோழர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteஅதுவும் சீனியர் எடிட்டர் அன்புடன் பேசியது என் வாழ்நாளில் மறக்க இயலா சந்தோஷம்.12 வயதிலிருந்து மனதளவில் கற்பனையில் நேசித்துவந்த மாமனிதரின் கரங்களை பிடிக்கையில் உள்ளுக்குள் ஒருவித சிலிர்ப்பு. முதன் முறை என்பதாலும்,அடுத்த நாளின் வாழ்க்கை சிக்கல்கள் வரிசை கட்டி நின்றதால் அதிக நேரம் செலவிட முடியவில்லை.இருந்தாலும் ஈ.வி,தலீவர்,மிதுனன்,கிட் ஆர்டின் கண்ணன்,ஸ்டீல் க்ளா,டெக்ஸ் விஜய்,அன்புள்ள அனாமதேயர்களில் முதன்மையானவர்,இவர்களையும் மற்ற தோழர்களையும் சந்தித்தது எனக்கு மனதளவில் ஒரு உற்சாகத்தை தந்தது நிஜம். இரண்டு நாள் தோழர்களுடன் செலவிட ஆசையிருந்தாலும் "எத்தனை மணிக்கு திரும்புவே? லேட் பண்ண வேண்டாம். நாளைக்காலை நான்கு மணிக்கு சென்னை போகவேண்டும்" என்று தொடர்ந்து நச்சரித்த செல்ஃபோன் அழைப்புகளும், இரவு முழுக்க நின்று கொண்டே நான்கு பஸ்களில் பயணம் செய்து வந்த சேர்ந்ததால் உண்டான முதுகு தண்டுவட வலியும் சேர்ந்து எரிச்சலூட்டி கிளம்ப வைத்துவிட்டது. அடுத்த ஆண்டாவது எந்த பிரச்னைகளும் இல்லாமல் இரண்டு நாள் கொண்டாட்டத்தில் கண்டிப்பாக இடம்பெற காலம் உதவும் என நம்புகிறேன்.
அங்கு குழுமியிருந்த அனைவர் முகத்திலும் எத்தனை சந்தோஷம்! பரவசம்! இதையெல்லாம் காண கண்கோடி வேண்டும்!
தங்களை சந்தித்தது மகிழ்ச்சி சார்...
Deleteமுதல் முறை விழா வரும் அனைவருக்கும் ஏற்படும் குதூகலம் தங்களையும் ஆட்கொண்டது நெகிழ்ச்சி...
உங்களை சந்தித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி சாா்!
Deleteகவலை எதற்கு.
Deleteஊக்கம் தர காமிக்ஸ் இருக்கு
டெக்ஸ் விஜய்
Deleteஉங்களிடம் ஒரு வார்த்தையாவது பேச வேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால் நீங்கள் குடும்பத்துடன் வந்திருந்த காரணத்தால் கொஞ்சம் தயக்கத்தில் இருந்துவிட்டேன்.மன்னிக்கவும்.
J சார்
Deleteபுலன் விசாரணையை மொழி பெயர்த்த உங்களின் அனுபவங்களை கேட்டபோதும், தலைசுற்ற வைக்கும் காரியத்தை திறமையாக கையாண்ட உங்களின் ஆற்றலுக்கும் எனது நன்றிகள்.
நன்றி சார்.
Deleteநன்றாக ஓய்வெடுங்கள்.
புலன் விசாரணையைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் பகிர வேண்டுகிறேன்.
J சார்
Deleteமுதன் முறையாக புத்தகவிழா வாசகர் சந்திப்பில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். ஆசிரியரின் கையொப்பம் பெற வேண்டும் என்ற கனவோடு முன்பதிவு செய்யாமல் நேரில் வாங்கி கொள்ளலாம் என்ற நினைப்போடு வந்து புத்தகம் வாங்க இயலாத சோகத்தில் உள்ளேன் சார்.எனக்கு ஒரு பிரதி கிடைக்க வாய்ப்பிருக்குமானால் கண்டிப்பாக புலன் விசாரணை பற்றிய எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் சார்.
நீங்கள் வந்து இருந்தீர்களா a t r? போட்டோஃ மற்றும் வீடியோ எடுப்பதில் கவனமாக இருந்தால் உங்களையும், புதிய மற்றும் ஏற்கனவே அறிமுகமான சில நண்பர்களுடன் அதிக நேரம் பேச முடியவில்லை.
Deleteஎனது நிலையும் அதே தான்.
Deleteபேச முடியவில்லையே நண்பர்களுடன் என்ற வருத்தம் இருந்தாலும் எல்லோரையும் பார்த்த ஆத்மார்த்தமான திருப்தி.
Pl mail to lion comics, don't worry
Deleteபரணிசார் நீங்கள் புகைப்படம் எடுப்பதில் கவனமாக இருந்தீர்கள்.தோழர் மிதுனன் அவர்கள்தான் உங்களை அடையாளம் காட்டினார்.
Deleteசொல்லாமலே கிளம்பிட்டீங்கக,,,புரிது உங்க நிலை,,,மீண்டும் சந்திப்போம்
DeleteA T R EBF வந்திருந்தீங்கன்னு நீங்க இங்க சொல்லித்தான் தெரிகிறது .. அறிமுகம் செய்திருக்கலாமே ? 😔😞
DeleteEdi 2016 ல் எல்லோரையும் தனக்குத்தானே அறிமுகம் செய்திட அனைவருக்கும் மைக்கை கொடுத்திருந்தார் .. இந்த முறையும் அதை செய்திருக்கலாம் .. பிளாக்கில்/முகநூலில்/வாட்ஸப்பில் கண்ட நண்பர்களை அடையாளம் காட்டிட ஒரு வாய்ப்பாய் அமைந்திருக்கும்
Deleteநேரம் குறைவாய் இருந்ததால் விட்டிருப்பார் போலும்
நான் பார்த்த வீடியோவில் நண்பர்கள் அறிமுக படலம் நடந்ததே சார். சிலர் விடுபட்டிருக்கலாம்.
Deleteதிரு ATR அவர்ளை முதன்முறையாகச் சந்தித்ததில் பெரு மகிழ்சி!
Deleteபடுத்தியெடுக்கும் முதுகுவழியின் பின்னணியிலும், ஈரோடு விழாவில் பங்கேற்கும் ஆவலுடன் பலமணிநேரப் பஸ் பயணத்தை மேற்கொண்டு, விழாவுக்கு சரியான நேரத்தில் வந்துசேர்ந்தது - பெருமையளிக்கும் சங்கதி!!
திரு.விஜய்
Deleteஉங்களது அன்பான வார்த்தைகளுக்கும், கனிவான உபசரிப்புக்கும் நானல்லவோ நன்றி தெரிவிக்க வேண்டும்.
சம்பத் சார்
Deleteநீங்கள் நம்புவீர்களாவென்று தெரியவில்லை. நேற்று நீங்கள் என் கண்ணில் படவேயில்லை. ஒருவேளை முன்பு புகைப்படத்தில் பார்த்ததற்கும்,நேரில் பார்த்ததற்கும் வித்தியாசம் இருந்திருக்குமா தெரியவில்லை.மன்னியுங்கள் சார்.
ஆசிரியரிடம் சென்று என்னை நான் அறிமுகப் படுத்திக் கொண்டபோது அவராலும் என்னை அடையாளம் காண இயலவில்லை.மீசை இல்லாதது ஒரு காரணம்.
Deleteஏற்கனவே நடந்த விபத்தின் போது தலையில் தையல் போட்ட இடங்களில் முடி சரியாக வளராமல் போனது.மருத்துவர் நாளடைவில் இது சரியாகிவிடும் என்று கூறியது முதல் தலையில் உள்ள தழும்பை மறைக்க குல்லாவை அணிந்ததும் ஒரு காரணம்.
இரத்தப் படலம் வெற்றிக்கு உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிக்.....
ReplyDeleteஇதனை சாத்தியமாக்கிய எடிட்டர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி கள் தனியே...
ஏனம்மா நீங்கள் வரவில்லை.
Deleteஆசிரியரிடம் ஒரு வேண்டுகோள்.
ReplyDeleteஇந்த தவறுக்கு நானே பொறுப்பு என்பதால் தயக்கத்துடனே இக்கோரிக்கையை வைக்கிறேன்.
கடந்த பல மாதங்களாக இரத்த படல முன்பதிவு இருந்து வந்தாலும் நான் முன் பதிவு இரண்டு தவணைகளாக செய்திருக்கலாம்தான்.ஆனால் அப்படி முன்பதிவு செய்தபின் புத்தகவிழாவில் கலந்து கொள்ள வருவதில் தடங்கல்கள் ஏதேனும் நேரும்போது சரி நாம்தான் முன் பதிவு செய்து விட்டோமே. அடுத்த ஆண்டு புத்தகவிழா வாசகர் சந்திப்பில் கலந்து கொள்ளலாம் என்று ஒருவித சமாதானம் எனக்குள் ஏற்பட்டு அமைதியாக இருந்து விடுவேன்.ஆனால் இந்த முறை முன் பதிவு செய்யாவிட்டால்தான் புத்தகம் வாங்குவதற்காகவாச்சும் கண்டிப்பாக போக வேண்டிய சூழல் உண்டாகும்.நேரிலே போய் புத்தகத்தை வாங்கி கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.ஆனால் நேற்று அங்கு வந்தபின்தான் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே புத்தகம் கொண்டு வந்திருப்பது தெரிந்தது. எக்ஸ்ட்ராவாக புத்தகங்கள் இருக்கும் என்று நம்பினேன்.அது இல்லையென்றவுடன் அதிர்ச்சியில் ஸ்டீல்க்ளாவிடம் கேட்டபோது அவர் இங்கு மட்டுமல்ல.ஸ்டாலில்கூட புத்தகம் இல்லை.ஆசிரியர் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே புத்தகம் கொண்டு வந்துள்ளார். அலுவலகத்தில் எக்ஸ்ட்ராவாக புத்தகம் இருந்தால்தான் கிடைக்கும் என்ற வெடிகுண்டை வீசியவுடன் என்ன செய்வதென புரியவில்லை. அங்கு வந்தவர்களில் நான் மட்டுமே புத்தகம் இல்லாமல் திரும்பியிருப்பேன் போலிருக்கிறது.எனவே ஆசிரியர் அவர்கள் தயவு செய்து ஒரு செட் புத்தகம் இருந்தால் அதனை வழங்க முடியுமா என்று தெரிவியுங்கள் Please.
எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்று கூறினால் மெர்கண்டைல் வங்கி கணக்கில் உடனே செலுத்திவிடுகிறேன்.புத்தகவிழாவில் நேரில் கேட்க தயக்கமாக இருந்ததால் இங்கு கேட்கிறேன்.தவறாக எண்ணவேண்டாம்.
Please send a mail to our office after transferring money. You will get. Don't qowor sir.
Deleteஈரொடு புத்தக விழாவிற்கு வந்து ஸ்டாலில் ஆசிரியரை சந்திக்க ஆசைபட்டேன்.
ReplyDeleteஆனால் உடல்நலம் சரியாக இல்லை. நான்கு மணி போல் ஸ்டாலுக்கு வந்து செந்தில் சத்யா மற்றும் கணேஷ் kv மட்டும்தான் சந்திக்க முடிந்தது. பத்து நீமிடத்திற்கு மேல் நிற்க முடியவில்லை. ஆசிரியரை இந்த வருடம் சந்திக்க முடியாமல் போனுது சற்று வருத்தமாக உள்ளது.
45 நாட்கள் முன்பே தயாரான புத்தகத்தை அனைவருக்கும் வெள்ளி அன்று கொரியர் அனுபாததன் காரணம் புரியவில்லை..
ReplyDeleteமீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டியதற்கு வாழ்த்துக்கள் சார்.
சமீப இதழ்களில் எனது கருத்து அனைத்து புத்தகங்கள் படிக்கும் பொழுதும் ஸ்மார்ப்ஸ் படிப்பது போலவே உள்ளதை தவிர்க்கலாம்.
மற்ற கதை பற்றிய மேற்கோள் இருக்கலாம் சமீப லக்கி கதையில் ஜாலி பேசாமல் பிளுகோட் கு குதிரையாக போயிருக்கலாம் என்பது ok. ஆனால் அனைவரும் சே எனக்கு இதுவே பிடிக்காது என பல இடங்களில் கூறுவது நெருடலாக இருக்கிறது.. டெக்ஸ் கதைகளிலும் இதே போல் வருகிறது.
ஆவலுடன் ரத்தப்படலத்தை எதிர்பார்த்து....
சார்,
Deleteஎனக்கும் புத்தகம் வரவில்லை என்ற வருத்தம் தான், அதற்க்கான காரணத்தை ஆசிரியர் அவர்கள் நண்பர்களுடனான கலந்துரையாடலில் பகிர்ந்துள்ளார். புத்தக வெளியிட்டிற்கு முன் நாளே அனுப்பிவைத்தாள் நண்பர்கள் காலை 6 மணிக்கே புத்தகத்தை கைப்பற்றி சஸ்பென்ஸை உடைத்துவிடிகிறார்கள் என்பதால் இந்த முறை புத்தக வெளியீட்டிற்கு பிறகு அனைவருக்கும் கிடைக்குமாறு செய்துவிட்டார், இது வார இறுதி என்பதால் நமக்கு ஒரு நாள் தாமதமாக திங்கள் அன்று கிடைக்கும், புலன் விசாரணை சர்ப்ரைசும் நம் கையில் புத்தகம் சீக்கிரம் கிடைக்காததற்கு ஒரு கூடுதல் காரணம்.
//அனைத்து புத்தகங்கள் படிக்கும் பொழுதும் ஸ்மார்ப்ஸ் படிப்பது போலவே உள்ளதை தவிர்க்கலாம்//
Delete//சே எனக்கு இதுவே பிடிக்காது என பல இடங்களில் கூறுவது நெருடலாக இருக்கிறது.//
+1 me too felt the same.
@mahesh நன்றி சார்
Deleteபுரிதலுக்கு நன்றி சார்.
Delete//அனைத்து புத்தகங்கள் படிக்கும் பொழுதும் ஸ்மார்ப்ஸ் படிப்பது போலவே உள்ளதை தவிர்க்கலாம்//
Delete//சே எனக்கு இதுவே பிடிக்காது என பல இடங்களில் கூறுவது நெருடலாக இருக்கிறது.//
+1 உண்மை... சமீபமாக இதனை படிக்கும் போது உணர்ந்தேன்..
எல்லா முகங்களிலும் தெரிந்த உற்சாகத்தைப் பாருங்கள்.
ReplyDeleteEBF 2018
ReplyDeleteXIII
💛💚❤💙💜
❤💙💜💛💚
💚❤💛💙💜.... 💘
நூல் விழாவில் உங்கள் அனைவருடன் இணைந்து கலந்துகொள்ள வாய்ப்பளித்த இறைவனுக்கு முதலில் நன்றி விளைகிறேன், ஆசிரியரின் speech வழக்கத்தைவிட அழகாய் இருந்தது, ஆசிரியரின் ஆசானிடமிருந்து இ ப XIII ஐ என் இளைய மகளுடன் பெற்றுக்கொண்ட நிழல் ஓவியம் blog ல் வரும் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை, நன்றிகள் ஓராயிரம் அனைவருக்கும், ராஜ்மோகன்-ஈரோடு.
ReplyDeleteஉங்க மகள் செம்ம க்யூட் ப்ரோ .. ❤
Deleteதேவதைங்க எப்பவுமே மஞ்சள்/வெள்ளைட்ரஸ் போட்டிட்டுட்டுத்தான் வருவாங்களாமே !!
Deleteஅப்படியா ப்ரோ !!??? ... 😉
ஆகஸ்ட் 4 ம் தேதியே அனைவருக்கும் கிடைக்கும்படி திட்டமிட்டிருக்கலாம்.ஈரோட்டில் நமது ஸ்டாலிலும் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கலாம்.முன்பதிவைத் தவிர கூடுதலாக மேலும் பிரதிகள் வாங்க நினைத்தவர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.மேலும் ஒரு நாள் ஈரோடு நோக்கி பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்.புத்தக விழாவில் நமது ஸ்டாலில் விற்பனைக்கு என்று (இரத்தபடலம்)வரும் உறுதிப்படுத்தினார் பயனுள்ளதாய் இருக்கும்.
ReplyDeleteவிஜயன் சார் மற்றும் நண்பர்களே, பெங்களூர் வந்து விட்டேன். நாங்கள் வீட்டுக்கு இன்னும் 15 நிமிடங்களில் சென்று விடுவோம்.
ReplyDeleteஎனது வீட்டில் ஆச்சரியப்பட்ட விஷயம், நண்பர்கள் கேட்ட கேள்வியை கேட்டாலும் அதற்கு பொறுமையாக ஆசிரியர் பதில் சொன்னது.
தண்ணீர் குடிக்க முடியாமல் ஆசிரியர் தொடர்ந்து பேசியது.. அவ்வாறு தண்ணீர் குடிக்காமல் ஆசிரியர் பேசிய ஆசிரியர் நலமாக இருக்க வேண்டும் என வேண்டியது.
இரண்டு நாட்களுக்கு முன் இதே நேரத்தில் உற்சாகத்துடன் கிளம்பி இன்று அதே நேரத்தில் அதே உற்சாகத்துடன் வீட்டிற்கு சென்று கொண்டு இருக்கிறோம்.
நமது உற்சாகம் குறைந்துவிடக்கூடாதில்லையா....
Deleteஅதில் மிக கவனமாக இருப்பார்.
எல புலன் விசாரணைய படில,,,ஜெ கலக்கிபுட்டீங்ஃக
DeleteSteel உங்க பாட்டை சரியாக கேட்கலை
Deleteஇன்னும் ஒரு முறை பாட முடியுமா ??
Sampath @
Delete// Steel உங்க பாட்டை சரியாக கேட்கலை
இன்னும் ஒரு முறை பாட முடியுமா ??//
Why this கொலைவெறி?:-)
Echo அதிகமாக இருந்ததால் அவர் என்ன பாடினார்னே தெரியவில்லை பரணி ப்ரோ 😃😃😃
Deleteநான் பேசும் போது மைக்கி நல்லாத்தாம்பா இருஞ்சி....!!!
DeleteSteel பாடுனதுக்கப்புறந்தேன் மைக் புட்டுகிச்சு
Delete😂😂😂😂😂
DeleteSampath @ விழாவில் நம்ப ஸ்டீல் பாடியதின் விளைவை நேரில் பார்த்த பின்னும் இதை கேட்பதில் இருந்து தெரிகிறது உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி என்று!!
Deleteமுதல் முறையா இரத்த படலம் கருப்பு வெள்ளை குண்டு புக் வாங்கிட்டு, முதல் 2 chapter படிச்ச உடனே, இது நிச்சயமா color ல வரும் அப்ப படிக்கலாம்னு புக்க மூடி வச்சுட்டு, ஒவ்வொரு வருஷமும் அறிவுக்கு வரும் அறிவிப்பு வரும்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். எடிட்டர் இரத்தப்படலம் அறிவிப்பு கொடுத்தப்ப பட்ட சந்தோஷத்துக்கு அளவேயில்லை. ஆனா கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக புத்தகத்துக்கு இன்னும் வெயிட்டிங். நாளைக்கு மட்டும் வரல, கொரியர் ஆபீஸ் வாசலில் டேரா போட வேண்டியது தான். கைக்கு வந்த உடனே படிச்சுட்டு வர்றேன்.
ReplyDeleteபுலன் விசாரணை இதழ் உண்மையிலேயே சர்ப்ரைஸ்தான் சார்! எதிர்பாராத ஒரு இதழ்! இதை சஸ்பென்ஸ்ஸாகவே வைத்திருந்தது சிறப்பு! கதையல்ல இது ஒரு காமிக்ஸ் காவியம்! இதற்கு பாடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
ReplyDelete@j சார்,
ReplyDeleteதங்களுடைய அனைத்து விடியோகளும் அருமை, நன்றிகள் பல சார்.
நன்றி மகேஷ்.
Deleteஉற்சாகம் பொங்கட்டும்...
ஆனா அவர் போட்டோ போட்டதில சில பல போட்டோக்கள் மிஸ்ஸிங் .. 😉😉
Deleteஹிஹ்ஹி
Deleteடேட்டா முடிஞ்சு போச்சா
நெறைய பதிவேத்த முடியல....
இரத்தப் படலம் கறுப்பு வெள்ளை இதழ் கைவிட்டு போன கதை...
ReplyDeleteமின்னும் மரணம் வெளியான வருடத்தில் ஒரு விடுமுறை நாளில் காலையில் அப்பாவியாக தோற்ற மளித்த இளைஞர் ஒருவர் எனது வீட்டுக்கு வந்தார்.வந்தவர் நமது கடந்த கால காமிக்ஸ் புத்தகத்தில் எனது புகைப்படம் முகவரியுடன் இருந்த பக்கத்தை கையில் வைத்திருந்தார்.அவர் காமிக்ஸ் பற்றி ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தார்.நமது blog பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்
பாண்டிச்சேரியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் எங்களூரில் எனது மனைவியின் உறவினர் ஒருவர் ஆசிரியராக இருக்கிறார்..அதே தெருவில் தானும் குடியிருப்பதாகவும், அங்கிருந்த ஒரு சிலர் பெயரையும் குறிப்பிட்டு சொல்ல நானும் அதனை நம்பி பேசிக் கொண்டிருந்தேன்.பின்பு அவரிடம் பக்கத்து தெருவில் கூல்ட்ரிங்ஸ் குடித்துவிட்டு வரலாம் என்று அழைத்து போனேன்.அங்கு அவர் கூல் ட்ரிங்ஸ் ஓப்பன் பண்ண வேண்டாம்.அப்படியே கொடுங்கள்.வீட்டில் எனது பிள்ளைக்கு கொடுப்பேன் என்று வாங்கி கொண்டவர் மறுபடி எனது வீட்டுக்கு வந்தவர் எதையோ சொல்ல தயங்க நானும் என்ன சொல்லுங்கள் என கேட்க பாக்கெட்டிலிருந்து 500 ரூபாய் நோட்டை எடுத்து இரத்தப்படலம் மற்றும் மின்னும் மரணம் இதழையும் கொடுங்கள். படித்துவிட்டு புத்தகத்தை தரும்போது பணத்தை வாங்கி கொள்கிறேன் என்று கூறினார்.நானும் பணமெல்லாம் வேண்டாம் இரத்தப்படலம் புத்தகம் மட்டும் கொண்டு போங்கள். படித்தபின் மின்னும் மரணம் இதழை தருகிறேன் என சந்தோஷத்துடன் அதனை வாங்கி அடுத்த ஞாயிறு இதே நேரம் புத்தகத்தை கொண்டு வருகிறேன் என்று கூறி வாங்கிப் போனார்.போனவர் இரண்டு வாரமாக வராததால் நான் அவர்இருப்பதாக குறிப்பிட்ட தெருவில் விசாரிக்க அவர்கள் அப்படி இங்கு யாரும் இல்லையே என்றுகூறினார்கள்.அந்த தெருவில் ஒரு டூவீலர் மெக்கானிக் இருக்கிறார். அவரது கடைக்குதான் பலர் வருவார்கள் என்ற பதில்தான் கிடைத்தது. மெக்கானிக்கை கேட்டால் நான் சொன்ன அடையாளம் எதுவும் புரியவில்லை. ஆனால் பாண்டிச்சேரியில் வேலை பார்ப்பவர்கள் யாரையும் எனக்கு தெரியாது என்று கூறிவிட்டார். பின்னர்தான் அவர் என்னை ஏமாற்றியது தெரிந்தது. கொஞ்சம் ஏமாந்திருந்தால் மின்னும் மரணம் இதழையும் இழந்திருப்பேன்.
இதில் இன்னொரு கேவலம்.அந்த நபர் கிளம்பி போனவர் வேறு பக்கமாக சுற்றி வந்து அந்த ஒரு லிட்டர் கூல்ட்ரிங்க் பாட்டிலை நான் திரும்ப கொடுத்ததாக அந்த கடையில் கொடுத்து அதற்கான பணத்தையும் வாங்கிப் போயிருக்கிறார்.அதுவும் பிற்பாடு எனக்கு தெரியவந்தது.
திரைப்படங்களில் வடிவேலுவை பலவிதமாக ஏமாற்றுபவர்களை போல என்னையும் ஏமாற்றியிருக்கிறார் அந்த மனிதர்!
இந்த வெளியீட்டு விழா கூட்டத்தில் அந்த முகம் தென்பட்டதா? ஐயா
Deleteஎங்கள் ஊரிலேயே தென்படவில்லை சார்.ஆனால் புத்தக வெளியீட்டு விழா கூட்டத்தில்
Deleteதென்பட்டதெல்லாம் எங்கேயோ எப்போதோ நம்முடன் நெருக்கமாக பழகிய உணர்வைத் தரக்கூடிய அன்புள்ளங்கள் சார்.
தான் யாரென காட்டிக் கொள்ளாமலேயே அடுத்தவருக்கு உதவும், அடுத்தவர் சந்தோஷத்தை கண்டு ஆனந்தமடையும் முகங்கள் சார்.
அந்த முகத்தை இங்கு தேடினால் என்னைப் போல அடிமுட்டாள் யாருமிருக்க முடியாது சார்!
உங்களுடைய மனதை புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள் ஐயா.
Delete//உங்களுடைய மனதை புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள் ஐயா//
Deleteசார் நீங்கள் தவறாக எதுவும் கூறவில்லையே!
உங்களுக்கு தோன்றியதை கேட்டீர்கள்.
என்றி மனதில் உள்ளதை பதிலாக்கினேன்.அவ்வளவுதான். இதில் மனது புண்பட ஒன்றுமேயில்லை.
ஆசிரியர் சார்@
ReplyDeleteசிவகாசியில் வந்திருந்த ரவுன்ட் பன் சுவையாக இருந்ததாகவும், விரும்பி சாப்பிட்டதாகவும், அதற்கு ஆசிரியர் சாருக்கு நன்றி தெரிவிக்கும் படி என் வீட்டில் தெரிவித்தார்கள் சார்.
ஒரு மணி நேரம் நம் ஆர்க்கிட் ஹாலில் இருந்துட்டு, 11மணிக்கு புத்தக அரங்கு செல்ல பிளானில் வந்திருந்த என் மனையாள், நம்முடைய ஆர்ப்பாட்டங்கள் & ஆரவாரங்கள்& ஆர்வம் கண்டு ஆடாமல் அசையாமல் அமர்ந்து விட்டாள்.
மரியாதைக்குரிய திரு கருணையானந்தம் அவர்களின் பேச்சும், அவரது பதிலும் காமிக்ஸ் பற்றி ஏதும் அறியா என் வீட்டம்மாவையே, கைதட்டி ரசிக்கும்படி செய்துட்டது....!!!
(லேடீஸ் நாவல்கள் வாங்க வேண்டியது பற்றி, கையில் ஒரு லிஸ்ட்டே வைத்து இருந்தாள்,என் பர்ஸ் தப்பி பிழைத்தது சாமிகளா...நன்றி...நன்றி...நன்றி)
J ji@ பன்னீர் ஜாங்கரிக்கும் ஸ்பெசல் தாங்ஸ் வாங்கிக் கொள்ளுங்கள். அதை தாங்கள் அனைவருக்கும் அளித்த பாங்கு பற்றித்தான் சிலாகித்தாள்...
Thanks டெ வி
Deleteஎனக்கு வரல ஜெ
Deleteஎனக்கும் J.!!!
Deleteஅட ஆண்டவனே!!!!
Deleteஅடுத்த வருஷம் உங்களுக்கு டபுளா குடுத்துட்றேன்...
சாரி நண்பர்களே வருந்துகிறேன்.
அப்பாடி கொளுந்தி போட்டாச்சுது....
Deleteஉடாதீங்கப்பா J ji யை...!!!
நிறைய மிச்சம் இருந்தது சாமிகளா.
Deleteநேற்று நைட் பெங்களூர் பிரபு மற்றும் பாஸ்கர் இருவருக்கும் கொடுத்தனுப்பினேன்.
இன்று காலை ஈ வி , தலீவர் மற்றும் ரூம் மேட்ஸ் எல்லோரும் ஜாங்கிரியில தான் பல்லே வெளக்கினோமாக்கும்...
சிவகாசி பன்ன உட்டுட்டீங்க...
Deleteஆளாளுக்கு 5 ன்னு கொண்டு போயே தீரணும்னு எடிட்டரு உத்தரவுக்காக காத்திருக்காம எல்லாரும் தள்ளிவிட்டோம்....
விடுங்க ATR....
ReplyDeleteபடித்து விட்டு தருகிறேன் என்று கூறியவர்களிடம் அடியேனின் காமிக்ஸ் புக்ஸ் நிறைய...... இருக்கின்றன.
Deleteநாமே தருவது சுகம் சார்.
Deleteஆனால்
நம்மை ஏமாற்றி பெறுவது சோகம் சார்.
மறந்து விடுங்கள்.
Deleteஇப்படி நினைத்துப்பார்த்தால் வெறுமைதான் மிஞ்சும்.
200 ரூபாய் பணமாக இருந்தால் மறந்திருப்பேன்.
Deleteஇழந்தது பொக்கிஷம் சார்.அதனால்தான் இப்படி.
97😃
ReplyDeleteசார் அருமை,,,,இப புத்தக முதல் எழுத்துரு தலலைப்பில் வழியும் இரத்தமும், பிற புத்தகங்களில் வழியும் தங்கமும் அருமை,,,,புலன் விசாரணை படிக்கிறேன், ,,அற்புதமாக உள்ளது ,,,நண்பர்கள் ஜெ,கா.பா, தங்களுக்கும் நன்றிகள்,,,,கருப்பு வெள்ளயாச்சும் தாருங்கள் என கேட்ட நண்பர்களுக்கும்
ReplyDeleteசேர்த்து வண்ணத்தில் அதே அளவில் தரத்தில், இலவசமாய் தந்த கலியுக கர்ணன்க்கு நன்றிகள், இலங்கை நணுபரிடம் கேட்ட போது, இது வரை அவர் பார்த்த பதிப்புகளிலே நம்மதுதான் பெஸ்ட் என. பளிச்சிட்டார், ,,,,,இது வரை இதழில்லை இது போல என வியக்கச் செய்வது உறுதி என நீங்க முழங்கிய போதே கலக்கிப்புடுவீங்கன்னு தெரியும்,,,,நிஜத்தில் அதுக்கும் மேல,,,,,சார் அடுத்த வருடம் இதே அளவில் ஒரு குண்டு புத்தகம், புத்தம் புதிய முழுக்கதயாய் ஈரோட்டு மண்ணில்,,,,
இந்த ஆபிஸர் ஏதோ சொல்ல வர்றாரு
Deleteஎன்னுடைய பார்சல் பழைய முகவரிக்கு சென்றுள்ளது. இதற்கும் நான்கு நாட்களுக்கு முன் ஆஃபீஸிற்கு போன் செய்து மாத சந்தா புத்தகம் அனுப்பும் புது முகவரிக்கு அனுப்ப சொல்லி இருந்தேன்.
ReplyDeleteநண்பர்கள் அனைவரயும் சந்தித்தது மகிழ்ச்சி,,,,
ReplyDeleteநன்றிகள் மற்றும் வாழ்த்துகள் சார்... எந்தவிதமான சலசலப்பும் இல்லாமல் இப்பேர்பட்ட விழாவினை நடத்தியதற்க்கு.. நான் தீவிர தங்க தலைவன் மற்றும் 13 ரசிகன்... இனி இதற்கு மேல் வேறு எந்த ஸ்பெசலுமே வேண்டாம்.. 2010ல் ஆழ்ந்த உறக்த்தில் கண்ட கருப்பு வெள்ளை கனவானது... இன்று வர்ணத்தில் பார்ப்பது அரை தூக்கத்தில் எழுந்து நாம் எங்கிருக்கிறோம் என்று தேட வைத்துள்ளது.. எதிர்பாரா திருப்பம் புலன்விசாரணை இலவச இணைப்பு... எல்லோரையும் வாயடைக்க செய்திருக்கும்..
ReplyDeleteஎனக்கும் எதுமே தேவையில்லை இனி கேட்க,,,தருவதை வாங்கிக்கலாம்,,,,எல்லாமே கிடைச்ச நிறைவு,,,
Deleteஎனக்கும் தான் க்ளா...!!
Deleteஇனிமேல் கேட்க எதுவும் ஒர்த்தில்லை...இளம் தங்க தலைவனின் முழு தொகுப்பு தவிர... ஒரு ஆறு ஆறு பாகமாக போட்டு அதையும் தீர்த்து விடலாமே சார்... ஏகப்பட்ட சிலீப்பர் செல் இருக்கு நம்ம ஊருக்குள்ளே டெக்சு ரசிகர்கிங்கிற பேருலே... யங் டெக்ஸ் வர்றதுக்கு முன்னாடியே யங் தங்க தலைவன் வந்திருச்சு தானே..
DeleteThis comment has been removed by the author.
Deleteடெக்ஸ் ரசிகனாக இருந்தாலும்கூட யங் டைகர் ஆறு, ஆறு பாகமாக போட்டு முடித்து விடுக் கேட்கும் ஐடியாவை கொடுத்த யங்டைகரின் ஸ்லீப்பர் செல் நானேதான் நண்பர்களே.... என்னுள் இருக்கும் கெளபாய் ரசிகனே அப்படி ஒரு ஐடியாவை தந்தது....
Deleteமற்றொரு ஐடியா, யங் டைகரின் கறுப்பு&வெள்ளையில் வந்துள்ள "இளமையில் கொல்" - 3பாகத்தையும் கலரில் மறுபதிப்பு+ 3யங் டைகரின் பாகங்கள் கொண்ட ஒரு புக் என கம்பைண்டு ஸ்பெசல் கேட்க சொன்னேன், அந்த தற்காலிக ஈரோடு விழாக குரூப்பில..
அங்கே தலையசைத்து விட்டு விழாவில் யாரும் கேட்கல; சரி நானே கேட்டு வைக்கிறேன், இதையும்...!
-இந்த புகைப்படங்களைப் பார்க்கும் போது அனைவரும் முகங்களிலும் எவ்வளவு மகிழ்ச்சி தென்படுகிறது.
ReplyDeleteகாமிக்ஸ் ஆல் இணைந்த இதயங்கள்
ReplyDeleteபின் வரிசைகளில் இளைஞர் கூட்டம் தென்பட்டது....
ReplyDeleteமனதில் மகிழ்ச்சி கரை புரண்டது....
உண்மைதான்! நான் அவ்வப்போது பின்வரிசையில் நின்றுகொண்டிருந்ததை நீங்கள் கவனித்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிந்தது!! ;)
Deleteயாருங்க அந்த பெருசு, முன்னால முன்னால வந்து நிற்கிறது.பின்னால போய் நில்லுங்க,மத்தவங்களுக்கு மறைக்குது.
Deleteஹா...ஹா..ஹா...பத்மநாபன்@
Deleteஈனாவினாவுக்கே எசப்பாட்டா?
சிரிச்சு முடியல..
Good to see you all enjoying.lets meet in chennai
ReplyDelete////ஒரு தூரத்து மழைநாளில், ஓய்வின் குடைக்கடியில் அமர்ந்திருக்கும் தருணம் இந்த ஆகஸ்ட் 4 -ம் தேதியை நான் நினைவுகூரும் போது கண்கள் சன்னமாய் வேர்க்காது போகாது என்பது மட்டும் நிச்சயம் !////
ReplyDeleteஇரத்தப் படலத்தின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்ட கரூர் ராஜசேகரின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிக் குவியலை நினைத்தால் எங்களுக்குமே கண்களில் சன்னமாய் சன்னமாய் வேர்க்காது போகாதே எடிட்டர் சார்!
மறுபிறவி கண்டதுபோல மீண்டெழுந்துவந்து இன்று இரத்தப்படலத்தை பெற்றுக்கொண்ட அவருக்கும், அவர் மீண்டெழ ஓடிவந்து உதவி செய்த நண்பர்களுக்கும், தங்களால் இயன்ற நிதியுதவிகளை நேரடியாகவும் பெயர் சொல்லாமலும் செய்து அசத்திய கருணையுள்ளம் கொண்ட நண்பர்களுக்கும், 'இரத்தப் படலத்தின் முதல்பிரதியை ஈரோடு விழாவில் பெற்றுக்கொள்ளப்போவது ராஜசேகர் தான். அவரிடம் தெரிவித்துவிடுங்கள்' என்று அறிவிப்புச் செய்து அவரின் மனோதிடத்தையும், நம்பிக்கையையும் மறைமுகமாகப் பன்மடங்கு உயர்த்திக் காட்டிய எடிட்டருக்கும் சிரம்தாழ்த்திய வணக்கங்கள்!
உண்மை தான்..
Delete🙏🙏🙏🙏
Delete@புத்தகம் கிடைக்கப்பெறா நண்பர்கள் கவனத்திற்கு
ReplyDeleteஇது மேலே type செய்த கமெண்ட் தான் அனைவரின் பார்வைக்கும் மறுமுறை.
\\சார்,
எனக்கும் புத்தகம் வரவில்லை என்ற வருத்தம் தான், அதற்க்கான காரணத்தை ஆசிரியர் அவர்கள் நண்பர்களுடனான கலந்துரையாடலில் பகிர்ந்துள்ளார். புத்தக வெளியிட்டிற்கு முன் நாளே அனுப்பிவைத்தாள் நண்பர்கள் காலை 6 மணிக்கே புத்தகத்தை கைப்பற்றி சஸ்பென்ஸை உடைத்துவிடிகிறார்கள் என்பதால் இந்த முறை புத்தக வெளியீட்டிற்கு பிறகு அனைவருக்கும் கிடைக்குமாறு செய்துவிட்டார், இது வார இறுதி என்பதால் நமக்கு ஒரு நாள் தாமதமாக திங்கள் அன்று கிடைக்கும், புலன் விசாரணை சர்ப்ரைசும் நம் கையில் புத்தகம் சீக்கிரம் கிடைக்காததற்கு ஒரு கூடுதல் காரணம்.\\
அழகான புரிதல்!!
Deleteதெளிவாகப் பதிவிட்டிருப்பது சற்றே கடுப்பாகியிருக்கும் சில நண்பர்கள் சாந்தமடைய உதவியாய் இருந்திடும்!
இந்த முறை தான் நான் முதல் முதலாக ஈரோடு காமிக்ஸ் வெளியிட்டு விழாவிற்கு வந்து இருக்கிறேன். சின்ன வயதில் இருந்து என்னுடைய பெரிய துணை முத்து, பிறகு லயன் காமிக்ஸ் தான். அதை உருவாக்கிய சிருஷ்டி கர்தாக்களை நேரில் பார்க்கும் பாக்கியம் கிட்டியது.
ReplyDeleteவிஜயன் சார் என்னுடைய இ மெயிலுக்கு பதில் அனுப்பியதே எனக்கு திக்கு தெரியாத சந்தோஷம். இந்த முறை நேரில் பார்த்ததில் எனக்கு ஒரு fan boy moment. பார்த்தவுடன், என்ன ஒரு கலர், என்ன ஒரு ஹைட் என்று ஒரு ஹீரோவை ரசிப்பதை போல் ரசித்து கொண்டு இருந்தேன்.
நிறைய பேச நினைத்து இருந்தேன், கூட்டம் அதிகம் இருந்ததாலும், நேரம் கம்மியாக இருந்ததாலும் அதிகம் உரையாட முடியவில்லை.
இனி நான் வருடா வருடம், ஈரோடு விழாவில் கலந்து கொள்வேன். நான் இப்பொழுது ருசி கண்ட புலி ஆகி விட்டேன்.
நாயகன் XIII : புத்தகங்களின் நகாசு வேலைகள் சான்ஸ் இல்லை. செம, இன்று காலை தான் எடுத்து வைத்து நல்ல வெளிச்சத்தில், என் மனைவிக்கும் காண்பித்து XIII , அட்டை படங்கள், நகாசு வேலைகள், XIII யாரு, விழா எப்படி இருந்தது.. என்று வீட்டு வேலை செய்ய விடாமல் நான் மட்டுமே பேசி கொண்டு இருந்தேன்.
என்னிடம் XIII பாகம் 2 , 3 , 5 , 6 , 7 மட்டும் தான் இருந்தது.இதுவும் படித்து 25 வருஷம் மேல் ஆகி இருந்ததால், நான் எடிட்டர் வைத்த பரிட்சையில் ௦/18 எடுத்தேன்.
விழாவிற்கு பின் விருந்து சாப்பிட்ட பிறகு, ஈரோடு கடையில் சென்று ஸ்பின் ஆப்'ஸ் வாங்க சென்றேன். எதை முதலில் படிக்க வேண்டும் என்று கேட்டதற்கு அப்புறம் தான் எனக்கு தெரிய வந்தது முதலில் 18 கலக்ஷன், பிறகு புலன் விசாரணை, பிறகு 20 டு 25 பாகம். (நான் இந்த பாகங்களும் 18 பாகத்தின் பகுதிகள் தான் என்று நினைத்து வாங்காமல் இருந்தேன் இதனை நாட்களாய்) இதன் பிறகு ஸ்பின் ஆப் என்று சொன்னார்கள்.
ஆக நான் படிக்க வேண்டிய பாகங்கள் 18 + PV + 20 to 24 + 3 . மொத்தம் 27 புத்தகங்கள் ஒன்றின் பின் ஒன்றாய். அதனால், இந்த XIII முதல் முறை படிக்கும் அனுபவம் போல் தான் எனக்கும் அதுவும் கலரில்.
இன்று மாலை கையில் கோப்பையில் டீ, டீபாயில் புத்தகம். திறந்து இரண்டு அத்தியாயம் முடித்து விட்டேன்.
மெதுவாக நிதானமாக ரசித்து ருசிக்க போகிறேன்.
நண்பர்கள்: சேலம் Tex விஜயராகவன், பாஸ்கர், J , பரணி, ஓவியர் காணிக்கைராஜ் இவர்களை சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சியை தந்தது. இது வரை ஒரு பெயர் அளவில் மட்டுமே தெரிந்தவர்கள் இப்பொழுது முகமும் தெரிந்ததால் மிக சந்தோஷம். அடுத்த வருடம், இன்னும் எல்லோரிடமும் நிறைய பேசி மற்ற நண்பர்களிடம் நெருக்கத்தை வளர்த்து கொள்ள ஆசை படுகிறேன்.
நான் தான் காமிக்ஸ் வெறியன் என்று நினைத்தேன், என்னை விட எக்கச்சக்கமான ரத்த வெறி பிடித்த காமிக்ஸ் ரசிகர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.
இன்னமும் கேராக தான் இருக்கிறது, XIII விழா ஹாங் ஓவரில் தான் இருக்கிறேன்.
சறுக்கல்கள்:
1 ராவல் - நாவல்
2 ஒரு நண்பருக்கு புக் மிஸ்ஸாகி போனது
3 காத்திருக்கும் நண்பர்களுக்கு இன்னும் புக் வராமல் இருப்பது.
4. மூன்றாவது பூக்கின் அட்டை படம் தவறாக தலைகீழாக அச்சிட பட்டதா இல்லை டிசைனே அப்படி தானா?
நண்பர்களே, சில சமயம் இப்படி நடப்பது உண்டு. வறுத்த பட வேண்டாம்.
காமிக்ஸ் என்றாலே சந்தோஷம், சீரியஸ் ஆக வேண்டாம்.
நானகாவது கேள்விக்கான பதில்.
Deleteடிசைனே அப்படித்தான் சார். அது தவறாக அச்சிடப்படவில்லை.
@ விஜயன் சார்,
ReplyDeleteஇன்று நம் முந்தைய வெளியீடுகளை எடுத்து பார்த்து கொண்டிருந்தேன். அதில் லயன் 250வது மலர் தென்பட்டது. 680 பக்கங்களில் முழு வண்ணத்தில் டெக்ஸ் கதைகள் உள்ளன, தற்பொழுது dynamite special இல் 777 பக்கங்கள் colour+ B/W.
ஒரு 1000 பக்கங்கள் இருந்திருந்தால் இன்னும் சற்று சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
It may be to late. But I just shared my thoughts. If possible please add a extra story in b/w to make it a one time special as tribute to 70 years of tex.
Prabhu@
ReplyDelete//சறுக்கல்கள்:
1 ராவல் - நாவல் ///
சமாளிப்பு சத்குருவின் விளக்கம் :
ஆதவ் கீர்த்தனாம்பரத்தில் எடிட்டரின் சம்ஸ்கிருத பாண்டித்யம் குறித்து லோகவாசிகள் அறியாதிருப்பது வியப்பூட்டும் விஷயமே .
Rawal (ராவல் ) என்னும் ராஜபுதன சொல் சம்ஸ்கிருத மொழியை அடிப்படையாக கொண்டு வந்தது..
ராவல் என்பதற்கு அரசன் என்பது பொருள்
கிராபிக் ராவல் என்பதை கிராபிக் நாவல்களின் அரசன் (king of graphic novels) என்பதாக பொருள் கொள்ளுக ..
ஹி ..ஹி...ஹி...
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
வாட்ஸ் அப் ஒளி நாடாக்களும் ,நிழற்பிம்பங்களும் வெளிக்காட்டிய பிரகாச வதனங்களும் குதூகல த்வனி ததும்பிய குரல்களும் இரு நாட்களை மிகவும் இன்பமுற செய்தன ...
// ராவல் என்பதற்கு அரசன் என்பது பொருள்
Deleteகிராபிக் ராவல் என்பதை கிராபிக் நாவல்களின் அரசன் (king of graphic novels) என்பதாக பொருள் கொள்ளுக //
செம
அற்புதமான தகவல்.
கிராபிக் ராவல் என்றால் ... "விடுதலையே உன் விலை என்ன?" என்றொரு சித்திரக் காவியம் போட்டார் எடிட்டர் ("பனிமலையில் ரயிலு போகுது டோய் .. நல்லாத்தேன் இருக்கும்" என்றெண்ணி !) - அதுதான் ..ஹி ஹி ஹி !!
Delete[ஏய் யார்றா இவன், கொண்டாட்டத்துக்கு நடூல கும்மி அடிக்கிறது ? ;-) :-D ]
///ராவல் என்பதற்கு அரசன் என்பது பொருள்
Deleteகிராபிக் ராவல் என்பதை கிராபிக் நாவல்களின் அரசன் (king of graphic novels) என்பதாக பொருள் கொள்ளுக ..
ஹி ..ஹி...ஹி...///
சமாளிப்பு சத்குருவே ....😝😝
மதிப்பிற்குரிய எடிட்டர் விஜயன் சார் அவர்களுக்கும் காமிக்ஸ் நட்புகளுக்கும் வணக்கங்கள்!
ReplyDeleteநேற்றைய நிகழ்வுகள் இன்னும் ஒரு கனவினைப்போலவே உள்ளது.அரங்கிற்கு சற்று தாமதமாக போனதினால் நிறைய நண்பர்களுடன் பேச இயலவில்லை என்ற வருத்தமும்,மாலை சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத வருத்தமும் உள்ளது.அடுத்த வருடமாவது விழாவினை முழுமையாக அனுபவிக்க ஆசைப்படுகிறேன்.
மகிழ்ச்சி எனில் மூத்த எடிட்டரின் கரங்களிலிருந்து ரத்தப்படல கலெக்சனை பெற்று கொண்டதும்,எடிட்டர் அதனுடன் சர்ப்ரைஸாக புலன்விசாரணையை வழங்கியதும்தான்!
நமது ஸ்டாலுக்கு எதிர்வரிசையில் உள்ள ஸ்டாலில் ஆங்கிலத்தில் உள்ள டின்டின் மூன்று கதைகள் கொண்ட ஹார்ட் பைண்டிங் புக்கின் விலை ரூ.999/-.இதே ரத்தப்படலம் ஆங்கிலத்தில் இருந்தால் விலை எப்படியேனும் ரூ.5000/-ஐ தொட்டிருக்கும். நமது எடிட்டர் அவர்கள் நினைத்திருந்தால் புலன்விசாரணைக்கு தனியே விலை வைத்திருக்கலாம்! ஆனால் இலவசமாக கொடுத்து எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்துவிட்டார்.
ஆயிரமாயிரம் கோடி நன்றிகள் எடிட்டர் சார்!
எடிட்டர் சார்! விழாவில் மறுபதிப்பு சார்ந்த கோரிக்கைகளை தெரிவிக்க இயலவில்லை.க்ளாசிக் காமிக்ஸ்களுக்கு வாய்ப்பில்லை என்பதால்…
Deleteமறுபதிப்பு கோரிக்கைகள்
1.டைகரின் இளமையில் கொல் (மூன்று பாக சாகசம்)
2.ப்ரின்ஸின் கலரில் வராத இதர கதைகள்.
3.ரிப்போர்ட்டர் ஜானியின் இரத்தக்காட்டேரி மர்மம்
மேலும் புதிய கதைகளில் கமான்சே மீதமுள்ள வாய்ப்பளித்து தொடரை நிறைவு செய்யுமாறும், யங் டைகரின் கதைகளில் காலின் வில்சன் வரைந்த கதைகள் சொதப்பியது.பாகம் எண் 21-லிருந்து பிளாங் – டுமாண்ட் வரைந்துள்ள கதைகளின் சித்திரங்கள் அருமையாக உள்ளது.
லேடி எஸ்,ட்ரெண்ட் போன்ற கதைகளை விட கமான்சேவும், டைகரும் மேல் என்பது எனது தனிப்பட்ட கருத்து!
இ.ப. ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் 12 அமெரிக்கா டாலர்கள். அப்படி என்றால் சுமார் 850 ரூபாய்கள். 18 புத்தகங்கள் 15300 ரூபாய்கள். கூரியர் செலவு உட்பட 16,000 ரூபாய்கள். யாம் 2013'ல் வாங்கும்போது 11000 ரூபாய்கள்.
Deleteஇப்புத்தகத்தை இந்த அளவு சகாய விலையில், இந்த தரத்தினில் வேறு யாராலும் அளிக்க இயலாது என்பது நிதர்சனம். (மி.ம.வை விட இப்பதிப்பு costly என்றாலும் கூட). இவ்விலையில் இத்தரத்திற்காகவே எடிட்டருக்கு பாராட்டுக்கள் !
இப்படி ஒரு இமாலய சாதனையை நிகழ்த்திவிட்டு நமது ஆசிரியர் ஒன்றுமே தெரியாத பாலகனைப்போல் அமர்ந்துகொண்டு இருந்ததை ஆச்சர்யத்துடன் உற்று கவனித்துக் கொண்டிருந்த நான் நண்பர்கள் பார்சலை பிரித்து பரவசமடைந்து கொண்டிருப்பதை ஆசிரியர் மௌனமாய் பார்த்து மனதுக்குள் பூரிப்படைவதை அவரது முகம் வெளிக்காட்டிக் கொண்டு இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை பெரிய உச்சத்தை தொட்ட பின்னும் தேர்வெழுதிய மாணவன் ரிசல்ட்டை எதிர் நோக்கி காத்திருப்பதைபோல் நமது ஆசிரியர் இருப்பது வியப்பாக இருந்தது.
ReplyDeleteஉணவு வேலையில் பந்தியில் உணவு பரிமாறிய நண்பர் ஜெகதீசன்: முதல் பந்தியில் இருந்து கடைசி பந்தி வரை சிரித்த முகத்துடன் பரிமாறியதை மறக்க முடியாது. நன்றி நண்பரே.
ReplyDeleteஅவரோடு சேர்ந்து பரிமாறிய நம்ம ஈ.வி.க்கும் வாழ்த்துகள்& நன்றிகள்...!!!
Deleteஜனா சாரின் பன்னீர் ஜாங்கிரி ,சிவகாசி பன் முதல் மற்றும் பந்தியில் பரிமாறப்பட்ட எந்த உணவுப்பொருள்களும் மீந்து போய் வீணாகாதவண்ணம் ‘’உள்ளே தள்ளி ‘’ பேருதவி புரிந்த மேச்சேரி நபரை பற்றி ஒருவார்த்தை கூட சொல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன்
Deleteவிஜயராகவன் @ விஜயின் பங்களிப்பு எல்லோருக்கும் தெரிந்தது.
Deleteஅவரை பற்றிச் சொல்ல வேறு ஒரு விஷயம் உள்ளது. குழந்தைகளுக்கு கோபி 65 பிடித்து இருந்தது ஆனால் காலியாகிவிட்டது. ஆனால் விஜய் அவர்களுக்காக பேபி கார்ன் 65 தயார் செய்து சுடச்சுட பரிமாறினார். நன்றி விஜய்.
@ PfB
Deleteஹோட்டல் நிர்வாகத்துக்கும், பந்தி பரிமாறிய பணியாளர்களுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்! கேட்டவுடன் இன்முகத்துடன் 'இதோ ஏற்பாடு செய்கிறோம் சார்' என்று சொல்லிச் சென்று சூடாகத் தயார் செய்து எடுத்துவந்து குழந்தைகளுக்குக் கொடுத்து அசத்திவிட்டார்கள்!
...
Deleteஇந்த பிளாக பாத்தாலே பசிக்கிதுப்பா இப்போவெல்லாம் ...
///எந்த உணவுப்பொருள்களும் மீந்து போய் வீணாகாதவண்ணம் ‘’உள்ளே தள்ளி ‘’ பேருதவி புரிந்த மேச்சேரி நபரை பற்றி ஒருவார்த்தை கூட சொல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன் ///
Deleteக்கும் ...எனக்கே கடைசீப் பந்தியில தக்குளூண்டுதான் கெடச்சுதாம்...!
ஆனா அது மேட்டர் இல்ல செனா....
இந்த J சாருக்கு எத்தனை ஞாபகமறதின்னு பாருங்களேன்.! ஞாயிறு நடுராத்திரி 7a.m க்கு அவர் கொண்டுவந்த ஒரு கிலோ ஜாங்கிரியில அரைகிலோவை அசால்டா படுக்கையிலேயே காலி பண்ணிட்டு மீண்டும் போர்வையில இழுத்துப் போர்த்திக்கிட்டூ தூங்கின என்னை குறிப்பிட மறந்துட்டாரே ..!!
ஓவிய ஆசிரியர் காணிக்கைராஜ் அவர்களிடம் சில மணித்துளிகள் மட்டுமே இந்த முறை பேச முடிந்தது. வருடம் தோறும் தனது மாணவர்களை இந்த விழாவிற்கு அழைத்து வரும் இவருக்கு எனது பாராட்டுக்கள். அதேநேரம் இவருடன் வரும் இந்த மாணவர்கள் அதிகரித்து வருவது சந்தோஷமான விஷயம்.
ReplyDeleteஇது ஓவியம் மற்றும் நமது காமிக்ஸ் மேல் இந்த இளைஞர்களின் ஈடுபாடு அதிகரிப்பதும் பாராட்ட கூடிய விஷயம்.
நண்பர் காணிக்கைராஜ் அவர்களின் ஓவியங்கள் பார்த்து ரசிக்க முடிந்தது, மகிழ்ச்சி...!!!
Deleteஅவர் அமைதியாக இளவாசகர் வட்டத்தை உருவாக்கி வருகிறார்.
Delete///நண்பர்களின் XIII சார்ந்த ஞாபகங்களை பரிசோதிக்கும் பொருட்டு நான் ஊரிலிருந்து கொணர்ந்திருந்த கேள்வித் தாள்களை திடுமென்று நீட்ட - அரங்கமே பரீட்சை mode-க்கு மாறிப் போனது !! முன்ஜாக்கிரதையாய் பதில்களையும் ஊரிலிருந்தே கொண்டு வந்திருந்த கெத்தில் நான் பத்திரமாய் அமர்ந்திருக்க, பர பரவென பதிலெழுதும் நண்பர்களின் முகங்கள் தினுசு தினுசாய் போவதை பார்த்திட முடிந்தது !! 5 வாசகர்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு வாங்கியிருக்க -----///
ReplyDelete-----இரத்தப்படலம் போட்டியில் 100/100 வாங்கி வெற்றி பெற்ற 5நண்பர்களில் நானும் ஒருவன் நண்பர்களே...!!!
வருசம் பூராவும் இரத்தப்படலம் பேன்ஸ்னு வாயால்வடை சுட்டு வரும் நம்ம நண்பர்கள்லாம் கூட 5மார்க்கு, 6மார்க் தான் வாங்கியிருந்தனர். கலர்லயாச்சும் நல்லா படிங்கய்யா...ஹி...ஹி...
டெக்ஸ் ரசிகர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என நிரூபனம் செய்த திருப்தி.என் வெற்றியை சக டெக்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்...!!!🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
டெக்ஸ் மட்டுமல்ல , கெளபாய் கதைகளுக்கு அடுத்த படியாக நான் விரும்பி படிப்பது இரத்தப்படலம் தான்...!!!
வெற்றி பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்💐💐💐💐💐
டெக்ஸ் நான் வாங்கிய மார்க் 18 க்கு 16
Deleteஎங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது என்றே தெரியவில்லை. நேற்றிரவு வீடு வந்து சேர்ந்த போது இன்னும் இரண்டு நாள் இருந்திருந்தா நல்லா இருந்துருக்கும்னு தோணுதுக்கு காரணம்ஆசிரியர் மற்றும்நண்பர்கள் சந்திப்பா அல்லது காமிக்ஸா, அல்லது ரெண்டு நாள் மொக்கிய கிடாகறி விருந்தா என்றே தெரியவில்லை.
ReplyDeleteஈபுவயில் முதலில் சந்தித்த முதல்புது (பழய) நண்பர் ஸ்டீல். தலீவர் பரணியைப் போன்ற இன்னொரு அன்பு கலந்த மனிதரை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ஒரே வித்யாசம். ஸ்டீல் உற்சாகமாக கலகலவென ஒரு கூட்டத்தில் புகுந்து வந்து விடக்கூடியவர். எனது நண்பன் பரணி அமைதியின் சிகரம். கோவையிலிருந்து செல்லும்முன் மற்றும் ஒரு முறை சந்தித்து விட வேண்டியது தான் இவரை.
பெங்களூர் பரணி. அதிகம் பேசியதில்லை. தளத்திலும் ஈபுவியிலும் சந்தித்து உள்ளோம். எனது மனதில் உயர்ந்த இடத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் நண்பர். அடுத்த தடவை இவர் கையில் இருக்கிற கேமராவை புடுங்கி வேற யாராவது இடம் ஒப்படைத்து விட்டு இவர் கூட அமர்ந்து நீண்ட நேரம் பேச வேண்டியது தான்.
அடுத்த இன்ப அதிர்ச்சி அண்ணன் ஏடிஆர் அவர்களை சந்தித்தது. நேர் பின் சீட்டில் அமர்நதிருந்தவரை அறிமிகப்படுத்திக்கொண்டோம்.
கரூர் குணாவை முன்னமே தெரியும். போன தடவை 2016ல்வந்திருந்த பொழுது சகோ கடல்யாழ் பேச ஆரம்பிக்கும்போது இவருக்கு போன் கால் வர இவர் போனில் பேசுவது தெரியாமல் கடல்யாழ் மற்றும் கூடியருந்த கூட்டம் குழம்பியதில் ஏற்பட்ட நகைச்சுவை நிகழ்வை நினைவு கூர்நது சிரித்துக் கொண்டோம். இவருடய அண்ணன் ஜேஎஸ்கே வை சந்தித்தது புதுசு. அமைதியான மனிதர். இரு சகோதர நண்பர்களின் காமிக்ஸ் நேசம் வாழ்க.
அடுத்த நண்பர் டெக்ஸ் சம்பத். வாட்ஸப் குழுக்களில் பழக்கம் இருந்தாலும் இப்பொழுது தான் நேரில் சந்தித்தேன். நானே அண்ணாந்து பேசும் உயரத்தில் இருந்தார்.
ரத்தபடல வெறிய நண்பர் பழனி வேல், கேவி கணேஸ், இலங்கை நண்பர் பிரசன்னா என பலரையும் சந்திக்க. வாய்பப்பு கிடைத்தது. இதில் நண்பர் மாரிமுத்து விசாலை சந்தித்தது எதிர்பாரா இன்ப அதிர்ச்சி.
இதில் சேந்தம்பட்டி குடும்ப நண்பர்களின் சந்திப்பு வேறு தொடர்ந்து இரண்டு நாட்களை உற்சாகப்படுத்தியிருந்தது. அவர்களுடன் அடித்த கூத்தை மறக்கவே முடியாது. அதையெல்லாம் எழுதினா தனியா ரத்தப்படலம் சைஸுல ஒரு புக் போடனும். மிகுந்த மெனக்கெடலில் நேற்றிரவு பஸ் ஏற்றி விட்ட நண்பர் சிபிஜி திருப்பூருக்கு குடும்பத்தோட வீட்டுக்கு வரலைன்னா நடப்பதே வேறன்ன மிரட்டி அனுப்பி வைத்தார்.
இன்னும் இருக்கு. மறுபடி வருவேன்.
யாரையாவது குறிப்பிடாமல்விட்டிருந்தால் மன்னிக்கவும்.
சனிக்கிழமை காலை ஈவி மற்றும் நண்பர்களுடன் டீ குடிக்க போன இடத்தில் நண்பர் ஜே வுடன் சந்திப்பு. கே வி கணேஸ் போல அலாதியான உற்சாகமான நண்பர். கேவி கணேஷ் அவர்களின் 250 வயதிலுமான உற்சாகம் பிரமிக்கத்தக்கது. நண்பர் ஜே மறுபடியும்சுவையான பால்கோவா வேறு அளித்தார். ஜாங்கிரி, பால்கோவா போன்றே இனிப்பான நண்பர்.
Deleteஇதில் குறிப்பிட வேண்டியது ஈவி யின் ஆளுமை மற்றும் பழகுதல் தன்மை. இந்த மாதிரியான விழாவை நடத்த தேவையான திறமைகளும் ஒருங்கே கொண்ட மனிதருக்கு அனைத்து களைப்புகளையும் போக்க வல்ல நகைச்சுவை டைமிங்கும் இருந்தால் எப்படி இருப்பாரோ்அவர் தான் ஈவி. இது என்னுடைய நண்பன் என்பதற்கான புகழ்ச்சி அல்ல. இந்த நிகழ்ச்சியில் அவரை சந்தித்த பெரும்பாலான நடுநிலையோர்உணர்ந்திருப்பார்கள். அது மட்டுமில்லாமல்பாடும்போது அவருடைய குரல் வளத்தைப் பற்றியும் கூற வேண்டும். அவர் சிஷ்யப் பிள்ளையின் குரல் வளத்தைப் பற்றி கூறவே வேண்டாம்.
இது போன்ற பல ஆகஸ்ட் கொண்டாட்டங்களை ஈவி நடத்த இறை அருள் இருக்கட்டும்.
அதே சமயம் இந்த விழாவை சிறப்புற நடைபெற உதவிய எனக்கு முகம், பெயர் தெரியாத அனைத்து நண்பர்களுக்கும் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.
இன்னும் இருக்கு.
Delete/// அவர் சிஷ்யப் பிள்ளையின் குரல் வளத்தைப் பற்றி கூறவே வேண்டாம். ///
Deleteதொண்டையில கீச் கீச்
தொண்டையில கீச் கீச்
Mahendran Paramasivam @
Delete// அடுத்த தடவை இவர் கையில் இருக்கிற கேமராவை புடுங்கி வேற யாராவது இடம் ஒப்படைத்து விட்டு இவர் கூட அமர்ந்து நீண்ட நேரம் பேச வேண்டியது தான். //
என்கையில் இருந்து கேமராவை பிடுங்குவது கொஞ்சம் கஷ்டம்!
எனக்கு சிறுவயதில் இருந்து போட்டோ எடுப்பது என்பது மிகவும் பிடித்த விஷயம்! 10ம் வகுப்பு படிக்கும் போது இருந்து போட்டோ எடுத்து வருகிறேன்! எனது அண்ணன் மற்றும் அக்கா திருமண விழாவின் நிகழ்வுகளை எல்லாம் படம் பிடித்தது நான்தான், அதுவும் சாதாரண YASIKA hotshot camera. அதே போல் எனது சொந்தக்காரர்களின் விட்டு விசேஷம் எல்லாவற்றுக்கும் நான் தான் போட்டோ கிராபர்! எனது திருமணத்திற்கு பின் நான் கேமரா கையில் எடுப்பது நமது புத்தக திருவிழா மட்டுமே! :-)
எனக்கும் உங்களை போன்ற பல நண்பர்களிடம் பேச முடியவில்லை என்பது வருத்தமே! அடுத்த வருடம் முடிந்தால் நண்பர்களுடன் சனிக்கிழமை இரவு தங்கி இருந்து அரட்டை அடிக்க முயற்சிக்கிறேன்!
நண்பர் கரூர் கரூர் ராஜசேகருக்கு அவருடய பேட்ஜை குடுத்து விட்டு அவருக்கும் அவர் மனைவிக்கும் வணக்கம் சொல்லி விட்டு வந்தேன். இந்த புத்தகத்தின் முதல் பிரதியை பெற்று அதை கம்பீரமாக உயர்த்தி பிடித்துக் காண்பித்தார். இந்த நிகழ்ச்சியையும்அந்த போட்டோவையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதை விட தன்னம்பிக்கை ஊட்டும் ஒரு சம்பவம் அமெரிக்க அதிபர் டெட்டி ரோசவெல்ட்டின் வாழ்ககையில் கூட கிடையாது.
Deleteமனிதம், நட்பு, மற்றும் தன்னம்பிக்கையின் வெற்றி என பல்வேறு விசயங்களுக்கு உதாரணம் கூற உதவும் சரியான நிகழ்ச்சி இது. எந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நண்பரின் உடல்நிலை பற்றி தெரிய வந்தது, அது தெரிந்த பின்எப்படி இந்த தளம் ரெஸ்பாண்ட் செய்தது என நமக்குத் தெரியும்.
ஆசிரியர் கரூர் ராஜசேகர் வருவார் மற்றும் முதல் பிரதியை பெற்றுக் கொள்வார் என அறிவித்த போது அதற்குள் சரியாகி விடுவாரா என்ற நினைப்பும் சரியாகி விட வேண்டும் என்ற பிரார்ததனையுமே மேலோங்கியது.
கடவுள் அருளால் அனைத்தும் நலம். என்னை நெகிழ வைத்த நிகழ்வு இது. என்னை மட்டுமல்ல என வீட்டில் இருப்பவர்களையும். 🙏🙏🙏🙏
இன்னும் இருக்கு.
இ.ப. ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் 12 அமெரிக்கா டாலர்கள். அப்படி என்றால் சுமார் 850 ரூபாய்கள். 18 புத்தகங்கள் 15300 ரூபாய்கள். கூரியர் செலவு உட்பட 16,000 ரூபாய்கள். யாம் 2013'ல் வாங்கும்போது 11000 ரூபாய்கள்.
ReplyDeleteஇப்புத்தகத்தை இந்த அளவு சகாய விலையில், இந்த தரத்தினில் வேறு யாராலும் அளிக்க இயலாது என்பது நிதர்சனம். (மி.ம.வை விட இப்பதிப்பு costly என்றாலும் கூட). இவ்விலையில் இத்தரத்திற்காகவே எடிட்டருக்கு பாராட்டுக்கள் !
+100000
Deleteபுலன் விசாரணை புத்தகத்தை விட்டுவிடீர்கள், அதுவும் இலவச இணைப்பாக.
DeleteRaghavan +1
DeleteMahesh +1
//இப்புத்தகத்தை இந்த அளவு சகாய விலையில், இந்த தரத்தினில் வேறு யாராலும் அளிக்க இயலாது என்பது நிதர்சனம்.//
Delete+1
///இப்புத்தகத்தை இந்த அளவு சகாய விலையில், இந்த தரத்தினில் வேறு யாராலும் அளிக்க இயலாது என்பது நிதர்சனம்.///
Deleteஅஃதே..!
விழாவின் சிறப்புகளில் முக்கியமான ஒன்று அய்யா கருணையானந்தம் அவர்களின் பேச்சு.
ReplyDeleteநம் சீனியர் எடிட்டருடனான நட்பில் துவங்கி ஆயுள் காப்பீட்டு கழகத்தில் பணியிலமர்ந்து ஞாயிறுகளில் சீனியர் எடிட்டருடன் செலவழித்தது பின்னர் முதன் முதலாக சதிகாரர் சங்கம் இதழில் ஆரம்பித்த மொழி பெயர்ப்பு பணியினை இன்று வரை தொடர்வதை அருமையாகவும், போரடிக்காமலும் விளக்கினார்.அவர் பேசுகையில் எல்லோர் முகத்திலும் புன்னகை குடியேறியிருந்தது. நகைச்சுவையான சம்பவங்களை நடுநடுவே அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார்.நேரப் பற்றாக்குறையின் காரணமாக பேச்சை முடித்துக் கொண்டது கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.
தோழர்கள் கேட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலும் அளித்தார்.நான் வந்த நாளில் அவர் வந்தது எனது அதிர்ஷ்டம்தான் என எண்ணிக் கொண்டேன்.
உங்களை சந்தித்து உரையாடியதில் ரொம்ப மகிழ்ச்சி ATR சார்.!
Deleteஇனி தொடர்ந்து வருவீர்கள் என்றும் நம்புகிறேன்.!
இரத்தப் படலம் மகா வெற்றி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
ReplyDeleteஎன்னாது .. இந்திரா காந்திய சுட்டுட்டாங்களா ? :-)
Delete+1. ஆசிரியரின் மற்றும் குழுவினரின் உழைப்பு, வாசகர்களின் தீராக் காதல். இது இரண்டும் இருந்தால் அனைத்து திட்டங்களையும் இதை விட பிரமாதமாக நடத்திக் காட்டும் வல்லமை பெற்றவர் ஆசிரியர்.
Deleteகல்லை பட்டை தீட்டறதுக்கு உரசனும். அதை விட்டு பட்டரையில அடிக்கற மாதிரி அடிக்கப்பட்கூடாது. சிறு சிறு குறைகளை சரியான முறையில் நியாயமாக சுட்டிக் காட்டி ஊக்கப்படுத்தினாலே தமிழ் காமிக்ஸை இன்னும் பல உயரங்களுக்கு இட்டு செல்வார் ஆசிரியர்.
+100
Deleteஈரோடு ஸ்டாலின்: அமைதியான ஆனால் செயல்திறன் அதிகம் உள்ள நண்பர்!
ReplyDeleteசில வருடங்களுக்கு முன் எனது அம்மா கால்வலி அதிகமாக இருந்த போது ஈரோட்டில் ஒரு மருத்துவமனை பற்றி விசாரித்த போது, உங்கள் அம்மாவின் போட்டோ அனுப்பி வையுங்கள் எங்களது ஹீலிங் சென்டரில் அவருக்காக சிறப்பு பிராத்தனை செய்கிறோம் என்ற இவரின் உள்ளதை பாராட்ட வார்த்தைகள் இல்லை! ஒரு முறைதான் இவரை சந்தித்து இருந்த போதும், மனிதர்கள் மேல் இவர் காட்டும் அன்பை என்ன சொல்ல!
ஒரு விழாவில் உணவு என்பது முக்கியம், அது சரியாக அமைந்து விட்டால்
விழா சந்தோசமாக அமைந்து விடும்! அதனை சரியாக புரிந்து கொண்டு அருமையான சாப்பாடு மற்றும் கடைசி பந்தி வரை எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் படி செய்து அனைவரது வயிற்றையும் குளுமை படுத்தி விட்டார்! நன்றி!!
அதே போல் அங்கு உணவு பரிமாறிய ஹோட்டல் உழியர்கள், சிரித்த முகத்துடன், தமது விட்டுக்கு வந்த விருந்தாளிகள் போல் கவனித்த அவர்களுக்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!
இரத்த படல ஈரோடு விழா...
ReplyDeleteமுதலில் இரத்த படல தொகுப்பின் அட்டகாச தரத்தையும்..,அசத்தலான படைப்பையும் பற்றி எழுதுவதா அல்ல ஈரோடு நண்பர்கள் மத்தியில் ...ஆசிரியர் மத்தியில் என கலந்து கட்டிய இருநாள் கொண்டாட்டத்தை பற்றி பகிர்வதா என மிகப்பெரிய அதிர்ச்சி.
..
*சனி அன்று காலை அவசர ,அவசரமாக ஈரோடு வந்து அடைய அன்று காலை முதல் ஞாயிறு மாலை வரை சேந்தம்பட்டி நண்பர்கள் என்னை "மலரை " போல் பாதுகாத்து கொண்டார்கள் எனில் அது மிகை அல்ல.
( உடனே மலர் டீச்சரை போலவான்னு கேக்க கூடாது..! )
*ஈரோடு ஸ்டாலின் மற்றும் சேந்தம்பட்டி நண்பர்கள் முயற்சியில் அன்று விடிகாலை முதலே அரங்கில் முன்நின்று அனைத்து ஏற்பாடுகளையும் செவ்வென முடித்து ஆசிரியர் ,நண்பர்கள் சந்திப்பிற்கு அரங்கத்தை தயாராக வைத்து இருந்தனர்...
(ஏன் நீ வரமாட்டியா என்ன தலீவர்ன்னு கெத்தா அப்டீன்னு யாரும் மிரட்ட கூடாது )
*அரங்கத்திற்கு நண்பர்கள் ஹசன் ,மகிஜீ மற்றும் சிபி யுடன் லீஜோர்டன் ஹோட்டலுக்கு உள்நுழைய வாசலிலேயே ஆசிரியரை ஜீனியர் ஆசிரியரை என சந்திக்க நேர்ந்தது இன்ப அதிர்ச்சி .
(ஹய்யா ஆசிரியரை நான்தான் பர்ஸ்ட் பாத்தேன் )
*அரங்கத்தில் பெரும்பாலான நண்பர்கள் அப்பொழுதே நிறைந்து இருந்தனர்.கோவை ஸ்டில் அப்பொழுத நண்பர்களுடன் கவி பாடி கொண்டு இருக்க ,பெங்களூர் பரணி குடும்பமாக வந்து இனிய அதிர்ச்சி அளித்து கொண்டிருந்தார்.
*ஏற்கனவே அறிந்த ,இதுவரை அறியாத என பல காமிக்ஸ் நெஞ்சங்களை அரங்கில் அழகுற பார்க்கவும் ,அறிமுக படுத்தவும் முடிந்தது.
*முதன்முறையாக நண்பர் ஏடிஆர் அவர்களை அடையாளம் தெரியாமலே உரையாடி கொண்டு பின்னரே அவரே ஏடிஆர் என அறிந்து கொண்டு மகிழ்ந்து உரையாற்றிது இனிது.
*பின்னர் ஆசிரியர் ,சீனியர் ஆசிரியர்,ஜீனியர் ஆசிரியர்,கருணையானந்தம் சார் என அனைவரும் உள்நுழைய ஒவ்வொரு நண்பராக ஆசிரியரே பெயரை நினைவில் கொண்டு அனைவரையும் நலம் விசாரித்தது அருமை ..
*பிரான்ஸ் ஹசன் அவர்கள் ,ஷெரீப் என அன்புடன் அழைக்கப்படும் மகேந்திரன் பரமசிவம் அவர்கள் ,அறிவரசு ரவி அவர்கள் ,உயர்ந்த மனிதர் யுவா அவர்கள் சீனியர் ஆசிரியர் ,கருணையானந்தம் சார் ,ஆசிரியர் ,ஜீனீயர் ஆசிரியர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பிக்க அரங்கம் அமர்களமாகியது.
*உடனடியாக விழா தொடங்க கருணையானந்தம் சார் முதல் இரத்தபடல தொகுப்பை வெளியிட ஆசிரியர் ஏற்கனவே அறிவித்து இருந்த படி நண்பர் ராஜசேகர் பெற்று கொண்டார்.
*அந்த பிரமாண்ட படைப்பை கைகளில் ஏந்தியதும் நண்பர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி பெருமித உணர்வையும்..அவர்களின் துணைவியார் ஆனந்த பெருக்கில் அதனை அலைபேசியில் புகைப்படம் எடுத்து கொண்டு இருந்ததையும் காண நேர்ந்த்து.
( ஓர் இனிய வாசகருக்கு அதனை அளித்து வாசகர்களை பெருமையடைய வைத்த ஆசிரியருக்கு இச்சமயத்தில் அனைத்து வாசகர்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..)
*பிறகு முன்பதிவு செய்து வந்திருந்த அனைத்து நண்பர்களும் அந்த பிரமாண்ட படைப்பை ஒவ்வொருவராக பெற்று கொள்ள அதன் தரத்தை நணபர்கள் அனைவரும் சிலாகிக்க அதனுடன் இலவச இணைப்பாக புலன்விசாரனையும் அட்டகாச தரத்தில் மின்னி கொண்டிருக்க அனைவருக்கும் இனிய இனிய அதிர்ச்சி.
( இச்சமயத்தில் அன்று பலமணி நேரங்களுக்கு பின் நடந்த உரையாடல் இடைசெறுகலாய் :
ஆசிரியரிடம் நண்பர்கள் சிலர் ..,சார் எப்பொழுதும் போல அனைத்து நண்பர்களுக்கும் சந்தாவில் இன்று கிடைக்குமாறு செய்து இருக்கலாமே என்றும் ,இன்றே ஸ்டாலில் இதழ்கள் கிடைக்குமாறு செய்து இருக்கலாமே வந்த நண்பர்கள் வாங்கி இருப்பார்களே சார் என்றும் வினவ..
ஆசிரியரின் பதில் :
சார்..இதுவரை அப்படி செய்த காரணத்தால் நண்பர்கள் இதழ்கள் கைகளுக்கு கிடைக்கும்முன்னரே இணையத்தில் அல்லது தபாலில் பெற்று தரிசித்து விடும் நிகழ்வுகள் ஏற்பட்டு வந்தது .அது தவறும் அல்ல.ஆனால் இவ்வளவு விலையில் ..இந்த தரத்தில் இந்த புத்தகத்தை நண்பர்கள் கைகளில் ஏந்தி அதை பிரித்து இதழ்களை பார்க்கும் பொழுது ஏற்படும் அந்த மகிழ்ச்சி ,வியப்பு ,திகைப்பு கண்டிப்பாக முழுமையாக அவர்கள் உணர்வார்கள்.எனவே தான் பதிவில் கூட நண்பர்கள் கைகளில் ஏந்தும் வரை கூட நான் எந்த புகைப்படத்திலும் வெளியிட வில்லை .அடுத்து புத்தக காட்சிகளில் அன்றே இதழ்களை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்திருத்தால் அந்த இலவச புலன்விசாரணை சஸ்பென்ஸ் ..ம் இதழ் வெளிவரும் முன்னரே புத்தக காட்சிகளில் நண்பர்களால் பகிர பட்டு அந்த சந்தோசமும் ..எதிர்பார்ப்பும் இதழ் கைகளில் இருக்கும் பொழுது குறைந்து இருக்கும்.அந்த மகிழ்ச்சியையும் அவர்கள் முழுதாக உணரவே திங்கள் முதல் ஸ்டாலில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்..
100 % உண்மை சார்...நீங்கள் குறிப்பிட்ட உணர்வுகளை இதழ்கள் கைகளில் பிரித்து பார்த்த அந்த நொடி முதலே உணர பட்டது.இதழ்கள் தாமதமாக பெறும் நண்பர்களும் இதனை கண்டிப்பாக உணர்வார்கள் இப்பொழுதும்..
Delete...நிகழ்வுகள் தொடரும்..
முன்பதிவு செய்தும் புத்தகம் சனிக்கிழமை கிடைக்காமல் திங்கட்காழமைதானே கிடைக்கிறது என்னும் நண்பர்களின் வருத்தத்தில் நியாயம் இல்லாமலில்லை.!
ReplyDeleteஎன்றாலுமே ....
நிறைய பேர் குறிப்பிட மறந்த ஒரு விசயம்....சனி ஞாயிறு இருநாட்களிலும் ஸ்டாலில் இரத்தப்படலம் கிடைக்கவில்லை என்பது.!
எடிட்டர் சாரிடம்., வாரயிறுதி நாட்களில் விற்பனைக்கு வைத்திருந்தால் நிறைய விற்றிருக்குமே என்று கேட்டதற்கு ..., அந்த விற்பனை குறைந்தாலும் பரவாயில்லை, முன்பதிவு செய்த அனைவருக்கும் முன்னுரிமையளித்து, அவர்களுக்கு புத்தகம் கிடைத்த பின்னரே ஸ்டாலில் விற்பனைக்கு வைப்போம் என்று கூறினார்.!
புத்தகத் திருவிழாக்களில் சனி ஞாயிறு, இரு நாட்களின் விற்பனை மற்ற ஐந்து நாட்களின் விற்பனையைவிட ரொம்பவே அதிகமாக இருக்கும்..! அந்த விற்பனை பாதித்தாலும் பரவாயில்லை ..முன்பதிவு செய்த நண்பர்களின் வருத்தத்தை மேலும் கூட்ட வேண்டாமென்று இந்த முடிவெடுத்ததாக தெரிவித்தார். .!
// எடிட்டர் சாரிடம்., வாரயிறுதி நாட்களில் விற்பனைக்கு வைத்திருந்தால் நிறைய விற்றிருக்குமே என்று கேட்டதற்கு ..., அந்த விற்பனை குறைந்தாலும் பரவாயில்லை, முன்பதிவு செய்த அனைவருக்கும் முன்னுரிமையளித்து, அவர்களுக்கு புத்தகம் கிடைத்த பின்னரே ஸ்டாலில் விற்பனைக்கு வைப்போம் என்று கூறினார்.! //
Deleteநமது வாசகர்கள் மேல் எடிட்டர் வைத்து இருக்கும் அன்பை கொஞ்சமாவது புரிந்து கொள்ளவாது முயற்சி செய்யுங்கள் நண்பர்களே!