Powered By Blogger

Thursday, August 30, 2018

ஒல்லிகளின் மாதமிது !!

நண்பர்களே,

வணக்கம். 'ஆகஸ்டில் செப்டெம்பர்" என்று அதே மொக்கையான தலைப்பை இந்தப் பதிவுக்கும் இட மனதில்லை ; so இன்றைக்கு பகலில் உங்களது கூரியர்கள் சகலமும் கிளம்பிவிட்ட போதிலும் - தலைப்பை மட்டும் வேறு விதமாக்கியுள்ளேன் !! So 31 காலையில் கூரியர் ஆபீஸ் படையெடுப்பை நீங்கள் துவக்கிடலாம் - சற்றே ஒல்லிப்பிச்சானான டப்பாக்களை சேகரித்துக் கொள்ள !! 'தல' வண்ண மறுபதிப்பு நீங்கலாய் பாக்கி இதழ்கள்  எல்லாமே 50 ; 64 பக்கங்கள் என்றிருப்பதால் இம்முறை loads of breezy reads என்பேன் !! "இரத்தப் படலம்" எனும் பகாசுரனுக்கும் ; "டைனமைட் ஸ்பெஷல்" எனும் பயில்வானுக்கும் மத்தியில் இந்த lightweights எனக்குக் கொஞ்சம் மூச்சு வீட்டுக் கொள்ள அவகாசம் தருகிறார்கள் என்பதால் - இம்மாத இதழ்களை வாஞ்சையோடு பார்க்கின்றேன் !! நீங்களுமே இவர்களை குஷியாய் வரவேற்று ஏற்றுக் கொள்ளின் - சூப்பர் தான் !! 

And இதோ - ஜம்போ சந்தாதாரர்கள் பட்டியல் ! இன்னமும் ஜம்போவின் சந்தாக்கள் open என்பதால்  இதுவரையிலும் அந்தத் தடத்தில் பயணிக்க உத்தேசித்திரா நண்பர்கள் இந்தத் தருணத்தில் கூட ஜோதியில் ஐக்கியமாகிடலாம் !!  ஓரிரு நண்பர்கள் முகவரி தராது இன்னமும் உள்ளனர் என்பதால் அவர்களுக்கு புக் அனுப்பிட இயலவில்லை ! தவிர விடுதல்கள் ஏதேனும் இருப்பின், அதையும் சுட்டிக் காட்டிடுங்களேன் ப்ளீஸ் ! 


செப்டெம்பர் இதழ்கள் பற்றிய உங்களது அலசல்களை எப்போதும் போலவே ஆவலோடு எதிர்நோக்கியிருப்போம் !! Happy Reading folks !!!

பி.கு. நாளை முதல் மதுரைப் புத்தக விழாவும் துவங்குகிறது !! 

201 comments:

  1. நானும் வந்துட்டேன்.

    ReplyDelete
  2. Dear sir Rathapadalam i need one set, stock available sir.please advice. thanks . Dass

    ReplyDelete
  3. வணக்கம் எடிட்டர் சார்...!
    வணக்கம் நண்ர்களே.....!

    ReplyDelete
  4. சிவகாசியில் வாசகர் சந்திப்பு டபுள்ஓகே....STV

    ReplyDelete
    Replies
    1. நானும் இந்த ஐடியாவை வரவேற்க்கிறேன்

      Delete
    2. சிவகாசி சந்திப்பா..ஆஹா.. நல்ல யோசனை இது..

      Delete
  5. நமது நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர்கள் உடன் ஒரு சந்திப்பு அவர்களுக்கு நம் சார்பாக ஒரு நினைவுபரிசு அவர்களது குடும்பத்தில் காண்பித்து மகிழ்ச்சியடையுமாறு .....
    முடிந்தால் அவர்களது குடும்பத்தையும் வரவழைத்தால் இன்னும் சிறப்பு உதாரணமாக மைதீன் சார் ராதா அண்ணாச்சி .....இன்னும் நாம் பார்த்திராத நண்பர்கள் ......

    ReplyDelete
  6. Replies
    1. கீறேம்பா..அக்காங்.

      Delete
    2. கிட்சன்ல நீங்க இருப்பதுதான் எங்களுக்கு தெரியுமே மாம்ஸ்!

      Delete
  7. ஒல்லிகளின் மாதமென்றாலும்...இது எங்கள் இளவரசியின் மாதமென்பதால் ஆர்வமுடன் காத்திருக்கிறேன். கூடவே "தல" டைனோசர்களுடன் மோதும் சாகஸத்தை வண்ணத்தில் காண ஆவல் மேலோங்குகிறது.

    ReplyDelete
    Replies
    1. இளவரசியை தரிசிக்க பேராவலாய் நானும் உள்ளேன் சரவணகுமார் ஜி

      Delete
    2. வரவேற்பு மட்டுமே பத்தாது படா சோக்கா ஒரு விமர்சனமும் போடுங்க நண்பரே JSK !

      Delete
    3. நானும் ஆவலுடன்...:-)

      Delete
  8. ////இம்மாத இதழ்களை வாஞ்சையோடு பார்க்கின்றேன் !! நீங்களுமே இவர்களை குஷியாய் வரவேற்று ஏற்றுக் கொள்ளின் - சூப்பர் தான் !! ///

    என்ன சார் இப்புடி சொல்லிட்டீங்க?!! ஏதாவது காமிக்ஸ் கிடைக்காதான்னு ஏங்கிப் போய் கிடக்கிறோமாக்கும்!!

    ReplyDelete
    Replies
    1. // ஏதாவது காமிக்ஸ் கிடைக்காதான்னு ஏங்கிப் போய் கிடக்கிறோமாக்கும்!! //

      Delete
    2. ஏதாவது காமிக்ஸ் கிடைக்காதான்னு ஏங்கிப் போய் கிடக்கிறோமாக்கும்

      Delete
  9. ///நாளை முதல் மதுரைப் புத்தக விழாவும் துவங்குகிறது !! ////

    விற்பனை சிறக்க வாழ்த்துகள் சார்!

    ReplyDelete
    Replies
    1. மதுரையில் மணக்க என்னுடைய வாழ்த்துகளும்....:-)

      Delete
  10. இரத்த படலம் முதல் இரண்டு புத்தகங்களை படித்து முடித்து விட்டேன்.

    மூன்றாவது புத்தகத்தில் அத்தியாயம் 13 படிக்க ஆரம்பித்து உள்ளேன்.

    ReplyDelete
  11. செப்டம்பர் மாத புத்தகங்களில் முதலில் படிக்க விரும்புவது ஷெர்லாக் ஹோம்ஸ்.

    உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எல்லா கதை நாயகர்களும் பிடித்தவர்கள், அனைவரையும் ஒரே நாளில் படித்து முடிக்க ஆசை.

    ReplyDelete
    Replies
    1. //செப்டம்பர் மாத புத்தகங்களில் முதலில் படிக்க விரும்புவது ஷெர்லாக் ஹோம்ஸ்.//

      ஹெர்லக் ஷோம்ஸ்....ஷெர்லக் ஹோம்ஸ் -ன்னு சொல்லிபுடாதீங்க ...

      ஆர்தர் கானன் டாயில் எஸ்டேட் அட்டர்னி & கோ ரொம்ப கவனமா பாத்துகிட்டே இருக்காங்க ..சமீபத்தில் அமெரிக்காவில் வெளியான மிஸ்டர் ஹோம்ஸ் சினிமாவுக்காக மிரமாக்ஸ் மேல காப்பிரைட் கேஸ் போட்டுட்டாங்க

      Delete
    2. :-) என்னக் கொடுமையிது :-)

      Delete
  12. Replies
    1. ஐ பார் இரும்புக் கை..

      Delete
  13. நண்பர்களே வணக்கம் நீண்ட நாட்களாக மௌன வாசகனாக இருந்த நான்,இரத்தபடலம் தொகுப்பை பார்த்தபின் தொடர்ந்து இங்கே விமர்சனங்களை பதிவிட எண்ணுகிறேன்.ஒரு சுய அறிமுகம் பெயர்:R Verner Readinger.வயது:36.காமிக்ஸ் படிப்பது 1991 முதல்(காமிக்ஸை அறிமுகப்படுத்தியது என் தந்தை)இரத்த படலம் விமர்சனம்:XIII மற்றும் ஆசிரியர்(Mr.Vijayan) என் வாழ்வின் மறக்க முடியாத அங்கங்களாகி விட்டனர்.நான் டெக்ஸின் தீவிர ரசிகன்.

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு நண்பரே!

      Delete
    2. நன்றி நண்பர்களே

      Delete
    3. வருக நண்பரே,தொடர்ந்து உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

      Delete
    4. வெல்கம் சகோதரரே...💐💐💐
      டெக்ஸ் ரசிகரா..சூப்பர்

      Delete
    5. வருக நண்பரே.... இனி தொடர்ந்து கலக்குங்கள்..:-)

      Delete
    6. Warm welcome! Verner Readinger - May I know how to write your name in tamil?

      Delete
  14. ஈரோட்டில் கனமழை - கொரியர் ஆபீஸுக்குச் செல்ல முடியாமல் காமிக்ஸ் ரசிகர்கள் தவிப்பு!

    ReplyDelete
    Replies
    1. சேலத்தில் சிறுமழை!
      ரசிகர்கள் உற்சாகத்தோடு கொரியர் அலுவலகங்களை முற்றுகை!

      Delete
    2. கோவையிலும் மோடம்,,,அதால ரசிகர்க படிக்க வாய்ப்பு

      Delete
    3. தாரையில் சிறுமழையா ,பெருமழையா தெரியவில்லை..காரணம் அலுவலகத்தில்...:-)

      எனவே மாலையே கொரியர் படையெடுப்பு...!

      Delete
  15. //6004 Mr.கார்த்திகேயன். - ஊர் பெயர் தெரியவில்லை//

    என்ன கொடும சார் இது!? :( அது நான்தான் சார். P.கார்த்திகேயன், பாண்டிச்சேரி

    அதான் ஃபர்ஸ்ட் ஜம்போ வெளியான போது ஒரு வாரம் அலையவிட்டிங்களா? அப்போ இந்த மாதமும் அதேதானா...

    ReplyDelete
    Replies
    1. இப்போதுதான் புத்தகப் பார்சல் வந்தது. ஆச்சரியம்... “ஷோம்ஸ்” பந்தாவாக பார்சலில் இருக்கிறார். நன்றி.

      Delete
  16. எல்லாருக்கும் நமஸ்காரம்.

    ReplyDelete
  17. My name is missing from the list.☹️
    S.A.Ramesh from Oman

    ReplyDelete
  18. இந்த தளம் ஆரம்பித்ததில் இருந்து ஆசிரியரின் அனைத்து பதிவுகள் மற்றும் விமர்சனங்களை படித்து விடுவேன்.ஆசிரியரின் எழுத்து நடை மிகவும் பிடிக்கும்.நண்பர் திரு.பெங்களுர் பரணி அவர்களின் பொருமையான நடுநிலையான விமர்சனம் பிடிக்கும்.நண்பர் திரு.ஈரோடு விஜய் அவர்களின் நகைச்சுவை மிகவும் பிடிக்கும்.நண்பர் திரு.டெக்ஸ் விஜயராகவன் அவர்களின் டெக்ஸை பற்றிய அலசல்கள் பிடிக்கும்.நண்பர் திரு.பரணீதரன்(தலீவர்)அவர்களின் எளிய விமர்சனங்கள் பிடிக்கும்.நண்பர் திரு.கிட் ஆர்டின் கண்ணன் அவர்களின் விமர்சனங்களை படிக்கும்போது கிட் ஆர்டினே நினைவுக்கு வருகிறது.திரு செல்வம் அபிராமி அவர்களின் வரலாற்றுடன் கலந்த விமர்சனங்கள் பலருக்கும் பயனுள்ளதாக உள்ளது.மேலும் தளத்தில் வரும் அனைத்து நண்பர்களின் விமர்சனமும் நன்றாக இருக்கிறது.புத்தகங்கள் இன்றே கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி.ஆசிரியருக்கு நன்றி.நண்பர்களை நேரில் சந்திக்க ஆசை.விரைவில் சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. @ verner readinger

      உங்களின் அன்புக்குப் பாத்திரமாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே!

      பிழைகளின்றி அழகாக எழுதுகிறீர்கள்!

      Delete
    2. தேங்ஸ் ஃபார் யுவர் கைன்ட் வேர்ட்ஸ் verner. இதைப்போன்ற அங்கீகாரங்கள் தான் இன்னும் பலதேடலுக்கு தூண்டும்.
      நீங்கள் குறிப்பிட்ட நண்பர்கள் அத்துனை பேரின் ஆர்வங்களின் ஆதாரமாக இருப்பது அன்பின் ஆசிரியர் சார். உங்களின் அத்தனை பாராட்டுக்களும் அவருக்கு உரிது. அவரின் வார்த்தைகளே எங்களுக்கு இன்ஸ்பிரேசன்....!!!

      Delete
    3. தங்களின் அன்புக்கு ஆயிரம் நன்றிகள் நண்பரே...:-)

      Delete
    4. // பிழைகளின்றி அழகாக எழுதுகிறீர்கள்!//
      ஈ.வி அவர் எழுதுல,டைப்பியிருக்காரு,
      ஹிஹிஹி,நாங்களும் அப்பப்ப ஜோக்"கடி"ப்போமுல்ல.

      Delete
    5. Verner readinger@

      நேக்கு வெக்க வெக்கமா வர்ரது..!!:-)

      Delete
  19. Replies
    1. ஆமா ஸ்டீல் ஆமா, அதிர்வேட்டுத்தான், ஒவ்வொன்றும்...!!!

      Delete
  20. சர் ஜம்போன்னா வித்தியாசம் தெரியும்னு சொன்னீங்களே, இதுல என்னடா வித்தியாசம் இருக்கப் போவுதுன்னு புத்தகத்த எடுத்தா .....கதை பக்கம் அற்புதமா வந்த அட்டை படத்த பாராட்டுவதா அல்லது வித்தியசமா உள்ள. சொர சொரப்ப அதாவது அந்த புள்ளி போல அல்லாது செவ்வகத்த பாரட்ட வாழ்த்தயே இல்லாம பக்கங்கள புரட்ட...நில்லுங்க ....நில்லுங்க....கைய உரசிய மடஸ்டியோட கோடு போட்ட....சாரி....சாரி...உள்ள புரட்ன பக்கங்க கார்ட்டூன் கதைகளிலே ஓவியத்லயும், வண்ணச்சேர்க்கையிலும் இதான் பெஸ்ட்னு சட சடக்க....அடப்பாவி மடஸ்டிய சீக்கிரமா பாருடான்ன குரல கேட்டு அட்டய பாத்தா உடைகள்ளதான் கோடு போடுவீங்கன்னு பாத்தா அட்டையிலும் கோடு அருமை. நமும ஓவியரோட அட்டய திருப்புனா நேரில் சும்மா அள்ளுது, குலுக்குது மனச ...சார் மாடஸ்டி அட்ட எதிர்பாரா விருந்து. மடிப்பாக்கம் துள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. சார் சைதுதான் சாம்ராஜ்யம் வழக்கம் போல வண்ணமயம் தூள் தூள் ...அட்டைபழமையை காட்டுது, ,,,அட்டகசம்....கருப்பு வெள்ளைல தெளிவில்லாம தொலைந்த சித்திரங்க இதில் அருமை .போன முறை வண்ணமிழநுத டிரெண்ட் இந்த மொற வண்ண வானவில்லாய் அழகு,,,மினி டெக்ஸ் அசத்த ,,....குண்டில்லண்ணலும் வண்ணஙுகள், ஓவியங்கள், எதிர்பார்ப்பை விஞ்சிய அட்டைப்பட வடிவமைப்புகள் சுவை கூட்டியது அருமை,,,,இனி இத போல இதயம் ,,நட்சத்திரம்னு சொரசொரப்ப கூட்டுவீங்கன்னு பட்சி சொல்லுது!

      Delete
    2. ////மினி டெக்ஸ் அசத்த ,,....குண்டில்லண்ணலும் வண்ணஙுகள்////

      ஹிக்!!!

      அதாவது 'குண்டா இல்லேன்னாலும்' - அதானுங்களே ஸ்டீல்? :P

      Delete
    3. சொல்ல மறந்த கதை....பார்சல் பாக்ஸ் கூட லேண்ட்ஸ்கேப்புப்பூஊஊஊஊ..

      Delete
    4. பூவும் புய்ப்பமும் ஒண்ணுதானுங்களே

      Delete
    5. நம்ம கவிஞருக்குள்ளே ஒரு சாரு நிவேதிதா ஒளிஞ்சிருக்குறது தெரியாம போயிடிச்சே விஜய் :-)

      Delete
  21. என்னுடைய பெயர் ஜம்போ list ல் இல்லை. (நான் போன மாதம்தான் பணம் கட்டேனேன். அதனால்தான் என் பெயர் வரவில்லையோ).

    ReplyDelete
  22. பொஸ்தகங்கள் வந்து சேர்ந்தன

    மிக்க நன்றிகள் விஜயன் சார் ..
    மாத தொடக்கங்களின் முன்பே தருவதற்க்கு .. 😍😍

    ReplyDelete
  23. ஷெர்லக் ஷோம்ஸ் ன்

    அட்டைபடம் இதுவரை வந்த அட்டைகளிலேயே வித்யாசமாய் , டிபரண்டாய் , கலக்கலாய் உள்ளது ..

    இதுபோல டெக்ஸ் கதைகள் எதிலாவது போடுங்கள் எடி சார் ..

    Tex போஸ் கொடுப்பதை மட்டும் பார்த்து பார்த்து அலுத்துப்போச்சுங்க சார் ..

    ReplyDelete
    Replies

    1. அட்டைபடம் இதுவரை வந்த அட்டைகளிலேயே #வித்யாசமாய் , #டிபரண்டாய் , #கலக்கலாய் , #தெளிவாய் , #எளிமையாய் உள்ளது ..

      டாப் எழுத்துக்களின் டிசைன்ஸ் <3

      ஷெர்லக் துப்பாக்கியை நீட்டுவது 3D எபக்ஷன்

      Delete
    2. ///ஷெர்லக் துப்பாக்கியை நீட்டுவது 3D எபக்ஷன்///

      மீ டூ...

      Delete
  24. நேற்று இந்த பக்கம் வரமுடிய வில்லை.சிறிது நிமிடங்களுக்கு முன் கொரியர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தவுடன் ஆச்சர்ய சந்தோஷம்.என்னடா இது புக் வருவது பற்றி ஆசிரியர் தகவலே ஏதும் சொல்ல வில்லை .பார்சல் வந்து விட்டதே என்று .பின்பு அவசரமாக இங்கே வந்தால் பதிவு ..

    மகிழ்ச்சி சார்....படித்து விட்டு வருகிறேன்..:-)

    ReplyDelete
  25. ஜம்போ சந்தாவில் என் பெயர் இல்லை.
    பிருந்தாபன் காந்தகுமார் - U.S.A

    ReplyDelete
  26. சார் முதலில் படிக்க எண்ணியது ஷெர்லக்...உங்க ஹாட்லைன படிச்சதும் டிரண்ட மாத்திட்டேன். வாழ்த்துகள் காபா

    ReplyDelete
    Replies
    1. ட்ரெண்ட் டிரெண்டை மாத்திப்புட்டா சரி தான் !!

      Delete
    2. @steelclaw

      என்னன்னு சொல்லிட்டு வாழ்த்து சொல்லுங்கய்யா.. கெதக்குன்னு இருக்குதுல்ல.. நான் இன்னும் புத்தகங்களைப் பார்க்கலை..

      Delete
    3. சார் ட்ரெண்ட மாத்திடுவார் .என்ன வருடல் !நண்பரே வேற ஒன்னுமில்ல , உங்க மொழி பெயர்ப்பில் அந்த கவிதை வாங்க ஆசை ! இது வரை காசு கொடுத்து கவிதை வாங்கியதில்லை, காரணம் ட்ரெண்ட். சரிதனே ஆசிரியரே!

      Delete
    4. கவிஞர் சொல்லிப்புட்டா அதுக்கு அப்பீல் உண்டா ?

      ஆமா...ஆமா...!!

      Delete
  27. சிணுங்கள் மழையில் சிலிர்த்து கொண்டே போய்,
    பாஆஆஆஆஆர்சலைக் கைப்பற்றி யாச்சேஏஏஏஏஏஏ!

    ஓப்பன் பண்ணவே கொஞ்சம் முழிக்க வேண்டியதாகிட்டது. பிறகு தான் அட டா சைடு ஓபனிங்கா என சொல்லி கொண்டே ஓப்பன் பண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!!!!!!!!


    வாயெல்லாம் பல்லாக அதிர்ச்சி!

    யம்மாடி, ஆத்தாடினு குத்தாட்டம் போடத் தோணுது...

    ஒன்றும் சொல்வதற்கு இல்லை சார்,
    தரம் வேறு வேறு லெவல்....!!!

    தரம் அதுவே நிரந்தரம்...!!!👏😀😀😀😀👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    ReplyDelete
  28. // வாயெல்லாம் பல்லாக அதிர்ச்சி! //
    அச்சச்சோ.

    ReplyDelete
  29. பரபரவென மாடஸ்தி பிளைசி பின்னட்டையை தான் பார்த்தேன்.
    அட அட அட டா!!

    அற்புதமான பினிஜிங்ல கிளுகிளுக்குது.

    தளத்தில் போட்டோவாக பார்த்ததற்கும் பிரிண்ட்ல வெளியாகி இருப்பதற்கும் அத்தனை வித்தியாசம் குவாலிடி ல காட்டுது.

    இளம் மாடஸ்தியின் கண்தான் அத்தனை மேட்சிங்காக வரையப்பட்டுள்ளது. அதற்குள் ஆர்ப்பாட்டம் பண்ணி அத்துனையும் இப்ப வேஸ்ட். பிரிண்ட்ல பட்டையை கிளப்பிட்டாங்க....!!!


    அப்புறம், ஹி..ஹி... இளமையான மாடஸ்தி மனசு சும்மா அள்ளுது...!!!

    ReplyDelete
    Replies
    1. சட்டுபுட்டுண்ணு கற்சிப்பால தொடசுக்குங்க சார்.வீட்ல பார்த்துட போறாங்க.

      Delete
    2. நல்லவேளை ஓவியர் வன்கா, பிக்கஸோ எல்லாம் பின் அட்டைபடம் பின்னாடி தான் சொல்லாம விட்டிங்களே.

      Delete
  30. அட்டைப்படங்கள் பினிஷிங்லாம் ஒவ்வொன்றும் எகிறி அடிக்கிது.

    மாடஸ்தி யே ஸ்டன்னிங்.

    அடுத்து சைத்தான் சாம்ராஜ்யம் அட்டை சும்மா நச்;

    சை"---யிலயே பாம்பு வம்புக்கு இழுக்குது.

    பின்னாடி அட்டை எக்ஸலன்ட்.சின்ன சின்ன ஓவியங்கள் இணைந்து அழகை மேலும் அழகாக்குது.

    மாஷையும் கவருகிறாள்.

    மாடஸ்தி & டெக்ஸ் அட்டைகள் இரண்டும் லைன் லைனாக பினிஷிங் பண்ணியிருப்பது அருமை. கையில் தடவையில் ஃபீலிங் செம..

    3ம் இடத்தை டெக்ஸூம் மாடஸ்தியும் பகிர்ந்து கொள்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. நர...நர...நர...

      பார்சல் கைக்கு வரட்டும்.அதுவரைக்கும்,

      நர...நர..நர...

      Delete
    2. ////அட்டைப்படங்கள் பினிஷிங்லாம் ஒவ்வொன்றும் எகிறி அடிக்கிது////

      மீ டூ...

      Delete
  31. ஜம்போ இன்று வந்து விடுமா....மகிழ்ச்சி :) :) :)
    எப்போதும் மதியம் ஒரு மணிக்கு வந்து விடும்
    காத்திருக்கிறேன் :D :D :D

    ReplyDelete
  32. களவும் கற்று மற- மீண்டும் மேட் பினிஷிங்.

    ஆரஞ்சு வர்ணப் பின்னணியில் கறுப்பு குதிரையில் ஆரோகனிக்கும் ட்ரெண்ட். அற்புதமான காட்சி; உள்ளத்தை கொள்ளை கொள்ளுது!

    மரத்தை சார்ந்து கவிதை சொல்லும் இளைஞன் அள்ளுகிறான் மதிப்பெண்களை...!!!!

    அடுத்து ஜம்போவை பார்த்தால் லாங் ஷாட் & ஷார்ட் சைட் இரண்டிலும் நச்சனு இருக்கு ஒரு குரங்கு வேட்டை.

    மஞ்சள் நிறம் ஒரு சுற்று கூடுதலான அம்சம்.

    எக்ஸ்ட்ரா வலு வலு ஸ்கொயர் பினிஷிங் இன்னும் தூக்கது.

    வெள்ளியை ட்ரெண்ட் கைப்பற்ற,
    குரங்கு வேட்டைக்கு வந்த ஹெர்லக் தங்கத்தை அள்ளுகிறார்.

    சிம்பாலிக் காக மஞ்சள் நிறம் 🏆யை குறிக்கிறதோ...!!!!

    கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு உள்பக்கங்கள்...!

    ReplyDelete
  33. இந்த மாசம் பூராக் காசும் அட்டைக்கே சரியாப்போச்சு ...அம்புட்டுதான் பஞ்சாயத்து முடிஞ்சுது ..!!

    ReplyDelete
    Replies
    1. சொம்பை வெச்சிட்டு போங்க,அடுத்த மாச பஞ்சாயத்துக்கு வேணும்.

      Delete
    2. சொம்பை டிசம்பரில் எடுங்கப்பா!

      அக்டோபரில் டெக்ஸ் 70,
      நம்பரில் டெக்ஸ் தீவாளி மலர்
      வருதாக்கும்....

      பஞ்சாயத்து க்கு டெக்ஸ் ரெடியாம்.

      Delete
  34. ஹெர்லாக் ஷோம்ஸ் - அட்டையிலயே காமிக்ஸ் அள்ளுது..!!

    ReplyDelete
  35. ஹைய்யா!! புக்கு வந்திடுச்சாம் - வீட்ல சொன்னாங்க! ஆத்தா மகமாயி...

    (கூழுதானே..? பொறு ஆத்தா.. உன்ர புள்ள நான் எங்க போயிடப் போறேன்?!)

    ReplyDelete
    Replies
    1. கூழுதானே..? பொறு ஆத்தா.. உன்ர புள்ள நான் எங்க போயிடப் போறேன்?!

      பாத்து .. ரொம்ப கூழ் பாக்கி வெச்சு தெய்வக்குத்தம் ஆச்சுதுன்னா .. "சரிடா ராசா .. நான் ஆத்தாதானே .. என்கிட்டயே வந்துரு .. கூழுக்கு பதிலா நீ ஒரு தங்கம் போதும்டா செல்லம்"னு கனவுல வந்து சொல்ல போவுது ! :-)

      Delete
    2. ///
      (கூழுதானே..? பொறு ஆத்தா.. உன்ர புள்ள நான் எங்க போயிடப் போறேன்?!)///

      பாவம் ஆத்தா ...! :-)

      Delete
    3. ///"சரிடா ராசா .. நான் ஆத்தாதானே .. என்கிட்டயே வந்துரு .. கூழுக்கு பதிலா நீ ஒரு தங்கம் போதும்டா செல்லம்"னு கனவுல வந்து சொல்ல போவுது ! ///


      என்னியப் பத்தி ஆத்தாவுக்கு நல்லாத் தெரியும்றதால கனவுல கூட ஆத்தா என்னைப் பக்கத்தில் வச்சுக்கும் தப்பைச் செய்யத்துணியாது!

      அப்படிக்கிப்படி என்னியத் தூக்கறதுன்னு ஆத்தா முடிவு பண்ணிடுச்சுன்னா, மிஸ்டர் யமதர்மாவின் கைல கால்ல விழுந்தாவது எனக்கு அங்கேதான் ஒரு சீட் கன்பார்ம் பண்ணிடும்!!

      கூழூத்தற செலவு மிச்சம்ன்னு கிளம்பிப் போய்க்கிட்டேஏஏ இருப்பேனாக்கும்!! க்ர்ரா... உர்ர்ர்...

      Delete
    4. // கூழுதானே..? பொறு ஆத்தா.. உன்ர புள்ள நான் எங்க போயிடப் போறேன்?!) //
      இப்படியே போனா ஆத்தாவுக்கு கண்டெயினர்லதான் கூழு கொண்டு போகனும்.

      Delete
    5. இப்டியே ஏமாத்திட்டு இருக்கீங்க, ஒருநாள் கூல் பானையை தூக்கும் நபர் வராம போக போறாரு, அவ்வழியே தற்செயலாக செயலர் போகும்படி நடக்க வைத்து; அங்கிருப்பவர்களுக்கு- இந்த தம்பி நல்லா சொமக்கும்னு சட்டுனு தோண வைத்து, சலார்னு மஞ்சள் தண்ணி ஊத்தி, வேப்பிலை ஆடை அணிவித்து , நீங்கள் சொல்வீங்களே உலு...உலு...உலு..வை உரக்கச் சொல்லி கூல் பானையை தூக்க வைக்கும்படி செய்ய போகுது ஆத்தா!

      பக்தியோட நாங்கள்லாம் கூல் வாங்கி அருந்தும் கூட்டத்தில் இருப்போம்...!!!

      முன்னிலையில் எடிட்டர் சார்,பொருளர் ஜியோடு இருப்பது உறுதி....

      Delete
  36. டியர் எடிட்டர்

    நமது மறுவரவிலேயே சிறந்த பிரின்டிங் தரம் கொண்டதாய் நான் கருதுவது LMS இத்தாலிய கதைகள் கொண்ட குண்டு புக்.
    அதே சைசில் வரும் Dynamite ஸ்பெஷல் - அதே தரத்தினில் வரும் என்பது எதிர்பார்ப்பு. Fingers crossed !

    ReplyDelete
  37. சேப்பு பனியனும் புளூ சீன்சும் பாடிஸோடி கொண்டையுமா மாடசட்டியக்கா பின்னால அது ..பின்னட்டைல நல்லாதான சாமீ இருக்குது..!?

    கவனிக்க : அட்டையில யக்கா நல்லாருக்குன்னுதான் சொல்லியிருக்கேன். .! நாங்க கொள்கை மாறமாட்டோம்ல ..!:-)

    ReplyDelete
    Replies
    1. பாடிஸோடி ன்னா இன்னான்னு புரியாம யோசிக்கிறவாளுக்கு மட்டும்...:-

      போக்கிரில வடிவேலு பேர் பாடிஸோடா . அதே மாதிரி மாடச்ச்ட்டி கொண்டை வெச்சிருக்கிறதால பாடிஸோடாவோட பெண்பால் பாடிஸோடி ...தட்ஸ் ஆல் ..!!

      Delete
    2. ஆண்ட்டினு சொன்னவங்களையே 'யக்கா 'னு சொல்ல வச்சிட்டோம்.

      யக்கா 'னு சொல்றவங்களை 'ஆஹா 'னு சொல்ல வைக்கிறதா கஷ்டம்?
      😏😏😏

      Delete
    3. //ஆண்ட்டினு சொன்னவங்களையே 'யக்கா 'னு சொல்ல வச்சிட்டோம்.

      யக்கா 'னு சொல்றவங்களை 'ஆஹா 'னு சொல்ல வைக்கிறதா கஷ்டம்?
      😏😏😏//

      +9

      Delete
    4. Gp உண்மய சொன்னா மாடஸ்டிய உடனே படிக்கணும்னு முதல் பக்கம் ஆர்வத்த கிளப்புது! ஆஹா!!!!!!

      Delete
    5. ///Gp உண்மய சொன்னா மாடஸ்டிய உடனே படிக்கணும்னு முதல் பக்கம் ஆர்வத்த கிளப்புது! ஆஹா!!!!!!///

      பாத்தீங்களா, மாடஸ்டி பத்தி எழுதுறப்ப தெளிவா எழுதுறீங்க.அதெல்லாம் மாடஸ்டியோட மகிமை சார்.😉😉😉😉😉

      Delete
  38. சார் எமனின் திசை மேற்குக்கு பின்னர் எனைப் புரட்டிய, உலுக்கிய கதை!
    காலனின் கவிபாடும் ஒற்றைக்கரத் தூக்கு மேடையிலே..அரங்கேறுது பாரு போரளிகளின் சதிராட்டமே !உயிரைப் போக்கும் உயிரான வரிகள் சொல்வது விரக்தியையா அல்லது கொலையை கூட கலையாய் காட்டும் வரிகளையா என வியந்த படி பயணித்தால் பாதைஎங்கும் இற்கையின் கரங்கள் வரைந்த கவிதைகள் ஓவியமாய்.....

    ReplyDelete
    Replies
    1. நீள்.....ள்ள்ள்ள்வது ஓவியரும் கவிஞரே என கூறினால், ,,அடங்கொய்யால கதையும் கவிதைதான் உணர்வுகளை புரிய வைக்க முன்றும், முடியமலும் தளும்பித் திகைத்தபடி தெளிந்த நீர் போல போல விரையும் கதையும் கவிதையே !

      Delete
    2. செத்துப் போன ஹீரோவை விட உயிரோடிருக்கும் சாமான்யன் வேஷம் மீது எனக்கு நாட்டம் அதிகம் பையா என ட்ரெண்ட் உரைக்க , கவனிக்க...குற்றம்
      சாட்டப்பட்டவர்ர்ர்....ஆளுக்கொரு விதமான சித்தாந்தம் !அதில் உடன் பாடில்லை என்றாலும் அதன் பலன்களை மறுப்பதற்கில்லைதான் எனும் வரிகள் நையாண்டியின் அற்புதங்கள் நையாண்டிக்கு நையாண்டியாய் கார்சன நினைவு படுத்துனா ....டெக்ஸ் இல்லைன்னு நினைக்கக் கூடாதேன்னு தூக்கிலிட்டவன பதம் பாக்கும் ட்ரெண்டின் முட்டிகள் நானும் குத்தட்டுமா என கேட்கும் நம்ம வலிமையையும் பாதியா வாங்கிய படி குத்து இறங்கயில டெக்சோட குத்துகள விஞ்சுறார், ,,என்ன அடி!

      Delete
    3. கவிதை அவன் படிக்கும் கவிதைகளில் மட்டுமல்ல. அவன் என்னிடமிருந்து கழன்று தபுபியோடிப் போனது ஒருவகையில் ஆறுதலாக இருந்தது எனக்கு! என எண்ணியவுடன் முரணாய் வரும் அடுத்த வரிகளிலும். ...ஆனால் அந்த. ஆறுதல் மறுகணமே இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது, அவனை மறுபடியும் தேடிப் பிடிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறதே !என நினைத்து பரிதவிக்கும் ட்ரேண்டின் வரிகளிலும் மொழி பெயர்ப்பும் கவிதையாய்....காபா சாத்தானின் கவிதைகள் அதாவது நரகத்திலொரு வசந்தகாலம் இந்தப் புத்தகம் அவ்ளோதான். சார் அட்டகாசம் ட்ரெண்ட யாரும் மறுக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

      Delete
    4. சார் காபா எதேச்சயாதான் இங்க நுழைந்தாரா...அவரின் கவிதை புத்தகத்த வாங்கிட்டீங்களா...

      Delete
    5. ///பாடிஸோடி ///

      ஹிஹிஹி! பொருத்தமான பெயர்!! :)))

      Delete
    6. அய்யோ அய்யோ??!!

      Delete
    7. கோவைக் கவி full form லே இருப்பது தெரிகிறது !!

      Delete
  39. ஆஹா...!சூப்பர்...!!அட்டைபடங்கள் சும்மா அதிருது...!!!
    என்றெல்லாம் பதிவிட ஆசைதான்.
    ஆனால்
    S.T. கூரியர் ஆபீஸ் திறப்பதற்கு முன்பே ஆஜராகி ஒருவழியாய் 9.00 மணிக்கு மேல் வேனும் வர "ஆஹா!பொட்டி வந்திருச்சு டோய்" என்று கத்திக்கொண்டே (மனசுக்குள்தான்!) ஓடிப்போய் சும்மா வேட்டை நாய் கணக்கா காத்திருந்தா வந்த பார்சல்கள் வேனிலிருந்து சும்மா ராக்கெட் கணக்கா விர்..விர்ர்ர்...ரென பறந்து பறந்து வர ஊழியர்கள் பல சாகஸங்கள் புரிந்து ஒவ்வொரு பார்சல்களையும் கேட்ச் பண்ண நம் அலுவலக பார்சல்கள் சில ஒரு பக்கமாய் அடுக்கி வைக்கப்பட நானும் தேர்வு எழுதப்போகும் மாணவன் கணக்காய் கையில் பேனாவும், நெஞ்சில் படபடப்புமாய் காத்திருந்தால்.....!!
    எனது பார்சலை தவிர மற்றவை மட்டும் வந்திருக்கிறது!?!?
    கூரியர் நண்பர் ஏதோ நல்ல சேதி சொல்பவரைபோல் வாயெல்லாம் பல்லாக "சார்.உங்கள் பார்சல் வரவில்லை சார்!" என்கிறார். கர்ர்ர்.....!
    மனசு விடவில்லை! "டேய் கைப்புள்ள...போட்றா ஃபோனை அலுவலகத்துக்கு" என்று ஆலோசனை சொல்ல அலுவலகத்தில் கேட்டால் "சார் நேற்றே எல்லா பார்சலையும் அனுப்பி விட்டோம்!" என்று கூற....
    "ம்..ம்ம்..நாளைய பொழுதாவது நல்லதாய் விடியும்" என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு நடையைக் கட்டினேன்.
    "சை! எனக்கு இந்த S.T.கூரியரே பிடிக்காது!!"

    ReplyDelete
    Replies
    1. ////"சை! எனக்கு இந்த S.T.கூரியரே பிடிக்காது!!"////

      ஹாஹாஹா!

      Delete
  40. //From the post
    Sunday, August 06, 2017

    வந்தனம் ஈரோடு !
    முன்பதிவு செய்திடும் முதல் 200 நண்பர்களுக்கு "Codename மின்னல்" என்றதொரு பேட்ஜ் + wristband உண்டு !//

    Editor Confirmed that this will be dispatched with september month books but the same was missing in my courier box.

    Did anybody received it?

    ReplyDelete
    Replies
    1. ////"சை! எனக்கு இந்த S.T.கூரியரே பிடிக்காது!!"////

      ஹாஹாஹா!!

      Delete
    2. சாாி! மாத்தி பேஸ்ட் பண்ணிட்டேன்!

      Delete
    3. பேட்ஜ்களை டெக்ஸ் 70டு அனுப்பலாம்னு ரிசர்வ் பண்ணிட்டாங்க போல...!!!

      பேஜ் வர்ல...!!

      Delete
    4. No ....அடுத்த வாரம் சின்னதொரு கவரில் முதல் 200 நண்பர்களுக்கு மாத்திரம் அந்த பேட்ஜ்கள் தபாலில் அனுப்புவதாக உள்ளோம் !

      சந்தா A ; சந்தா B ; சந்தா D ; ஜம்போ சந்தா என இந்த நால்வகையினரைப் பிரித்து இம்மாத டெஸ்பாட்ச் செய்வதே பெரும் பிரயத்தனமாக இருக்க - இவர்களுள் யாரெல்லாம் இரத்தப் படல முன்பதிவு 200 -ல் உள்ளனர் என்றும் தேடிப் பிடிப்பதற்குள் குளறுபடிகளே மேலோங்குமென்று பட்டது !!

      So தனியாய் தபாலில் !

      Delete
    5. ///தனியாய் தபாலில்!///----

      எக்ஸ்ட்ரா செலவுகள் தான்.
      இருப்பினும் புத்தகத்தோடு அனுப்பும்போது நசுங்க வாய்புள்ளது.
      தனியாக அனுப்புவதை வரவேற்கிறேன் சார்.

      Delete
  41. போட்டி தாள்கள் வந்தாச்சா??

    ReplyDelete
    Replies
    1. மாறு வேஷ பை மட்டும் கெடச்சாக்க, ஒரு தபா நம்ம "எடிட்டா் குல்லா"வும் போட்டு பாத்திட வேண்டியது தான்!!

      Delete
    2. எப்பனு சொல்லுங்க இன்னொரு முகம் எனக்கு இருக்கு, அதோடு சந்திக்க நானும் வர்றேன்!

      Delete
  42. இலவச டெக்ஸ்

    முன்பு வந்த மூன்று கதகளை போல் இது இல்லை

    மூன்றாவது & 16 பக்கத்தை படிக்கும்போதே க்ளைமேக்ஸ் கண்ணுக்குள்ளே வந்து விடுகிறது ..

    ஆர்பாட்டமில்லாத கதை ..
    இம்முறை கொஞ்சம் ஏமாற்றி விட்டது.
    இருந்தாலும் கலர் & ஓவியங்கள் வெகு சிறப்பு ..

    கார்சன் இளமை & புதுமை யும் கலந்நந அட்டகாஷ் ..

    ReplyDelete
  43. ஏஏஏஏஏ
    ஆத்தா கண்ண தொறந்திட்டாஆஆஆ
    என் சார்பா ஈ வி கூழ் ஊத்துவாரூஊஊ

    ReplyDelete
  44. படு அட்டகாசமான படைப்புகளுடன் செப்டம்பர்.
    புத்தக தரம்
    வேற லெவெல் சார்...!!

    ReplyDelete
  45. ஷொ்லாக் ஷோம்ஸ்!!

    அந்த மாறுவேஷ பை மட்டும் நம்ம கையிலே கெடைச்சுன்னாக்க,மொத வேளையா ??🤔🤔🤔

    'அய்யய்யோ என்ன கெட்டப் போடரதுனு தொியலியே'

    நம்ம வீட்டு பொடியன் சூா்யா கெட்டப் போட்டு, அவன்ட்டேயே ஷொ்லாக் ஷோம்ஸ் கதைய படிச்சுக் காட்ட வேண்டியது தான்!

    அப்புறமா அவனுக்கு ஸ்மா்ப் கெட்டப்பும், நம்மள்கி மதியில்லா மந்திாி கெட்டப்பும் போட்டு பாத்துர வேண்டியது தான்!

    ஒரு தபா நம்ம நீதிபாிபாலன அதிகாாி "டாக்புல்" கெட்டப்ல ஒரு நாள் முழுக்க அங்சிட்டில உலா வருணும்பா!! (அட, 'அங்சிட்டி'ங்கறது எங்க ஊா்தாம்பா)

    அதோட ஒரு நாள் நம்ம பேவரட் "லக்கி" கெட்டப் போட்டு துப்பாக்கிய எடுத்து ரோல் பண்ணிட்டே "தனிமையே என் துணைவன்" பாடணும்!!

    எடிட்டா் சாா்!

    புக் பொட்டியோடு சோ்த்து அந்த "மாறு வேஷ பை" ஒன்றையும் அனுப்பிருந்தீங்கனா கண ஜோரா இருந்திருக்கும்!! அய்யோ! அய்யோ!!

    அமா்களம் போங்க!!

    "ஷோம்ஸ்" + "வேஸ்ட்சன்" கூட்டணிக்கு
    100 க்கு 1000, 10000, 100000 மாா்க் போட்டாலும் தகும்!!

    ReplyDelete
    Replies
    1. "இந்த படம் ஹிட் ஆகலைனா நான் சினிமாவை விட்டே விலகிடுறேன்"னு சாா்ளி சாப்ளின் ஒரு முறை சொன்னது போல,

      நம்ம "ஷோ்லக் ஷோம்ஸ்" மட்டும் ஹிட் ஆவுலேனா நான் காமிக்ஸ் படிப்பதையே நிறுத்திடுவேன்!!

      (ஹி! ஹி! காமிக்ஸ தான் நிறுத்துவேனாக்கும்!! காா்ட்டூன இல்லை!!)

      Delete
    2. "வேஸ்ட்சன்" பேர பாத்தாவே சிாிப்ப அடக்க முடியல 😂😂😂

      Delete
    3. நான் ரொம்பவே ரசித்துப் பணியாற்றிய சமீப இதழ்களுள் ஒன்று நம்மள் ஹெர்லக் ஷோம்ஸின் "குரங்குச் சேட்டை !" And அதன் மேக்கிங்குமே அழகாய் அமைந்து போனது ஒரு போனஸ் !! இனி நம்மவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் - ஆயாள் மேல் பிரேமம் வைக்கிறதா - இல்லையா என்று !!

      Delete
    4. ////மேக்கிங்குமே அழகாய் அமைந்து போனது ஒரு போனஸ் !!////

      நிஜம் சாா்!!

      Delete
  46. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அழைப்பு ஒன்று சற்றுமுன்தான் வீட்டிலிருந்து வந்தது.

    அதுதான்... அதேதான்.. புத்தகப் பார்சல் வந்து விட்டது.

    ReplyDelete
  47. ஒரு குரங்கு வேட்டை,
    உட்பக்கங்கள் புரட்டலில் ஜம்போ புரட்டி போடுது. பிரிண்ட் வேறு லெவலையும் தாண்டிய லெவல்ல இருக்கு.

    அதச்சலான பிரிண்டிங். நேரில் பார்ப்பது போன்ற குவாலிடி. இது வழக்கமான பிரிண்ட் போல இல்லாமல் வேறு மாதிரி இருக்கும் ரகசியம் என்ன சார்???

    2வது கதையான மேற்கே ஒரு மேதாவி இன்னும் அசத்துது. செவ்விந்தியர் குடியிருப்புகள் ஸ்டன்னிங்...!

    ReplyDelete
    Replies
    1. ஜம்போவின் முதல் இதழ் வெளியான சமயத்தில், இத்தொடர் முழுவதும் இதேபோல் அசத்தல் தொடரும் என்றீர்கள். அதை மேலும் ஒருபடி உயர்த்தி வழங்கிட்டீர்கள்.

      பார்ப்போம், அடுத்த ஜம்போவில் என்ன புதுமைனு????

      Delete
  48. ட்ரெண்ட்:-

    13ம்பக்க லாங் ஷாட் காட்சி சான்சே இல்லை சார் , செம.

    அடுத்த பக்கமே மனிடோபா ஏரிக்காட்சி ஊய்...ஊய்...ஊய்...!!

    15ம்பக்கம் எதிர்கரையில் தென்படும் சிறு நகரம், அட்றா சக்கை, மாஸ்.

    16பக்க சர்ச், இருபக்கமும் ஆரஞ்சு இலையாகவும் மலராகும் அமைந்த மரங்கள், தூரத்து மலைத்தொடர்,
    காட்சி அமைப்பு அற்புதம். ஓவியர் காட்சிக்கு காட்சி மிரளவைக்கிறார்.

    பக்கங்கள் 22&23தான் ஹைலைட்டான காட்சியமைப்பு,

    மனிடோபா ஏரியை தாண்டிய பனிப்பிரதேம். நாயும் குதிரையும் ஏற்படுத்தி செல்லும் பனித்தடங்கள்,
    பச்சை மரங்களின் மீது போர்த்தப்பட்ட வெண்பனி போர்வை, முயலும் கூட பனிப்போர்வையில், கண்ணை நகர்த்தவே முடியாத காதல் சொறியும் ஓவியங்கள் என நினைக்கையிலேயே, காதல் ஊற்றெடுத்துப் பளீரிடுது;

    அங்கே தோன்றும் அக்னெஸின் முகம்; காதலின் ரம்மியத்தில் திளைப்பது ட்ரெண்ட்;
    காட்சியில் முழ்கித் திளைப்பது நாம்.


    அடுத்த பக்கத்தை திருப்பிய உடன் கண்ணில் அடிக்கும் அதீத பச்சையும் பிரவுனும் கலந்த காட்டின் தோற்றம்.

    வெள்ளையில் இருந்து ஒரே காட்சியில் பளீரிடும் பச்சை; தூரிகை ஜாலம்.

    தொடரும் பக்கங்களில் காதலில் திளைப்பதில் ட்ரெண்ட்&அக்னெஸ்க்கு சவால்விடும் எமைல்&லாரா...!!! மேக கூட்டத்தில் மிதப்பது அவர்களோடு நாமுமே.

    43,44ம் பக்கங்களில் ஒரு நொடி நின்று பயணிப்பது எமைல் மட்டுமல்ல...!!

    ட்ரெண்ட் தொடரை எதற்கு தொடர்கிறோமோ இல்லையோ, இதைப்போன்ற ஓவிய உன்னதங்களிலே மூழ்க அவசியம் தொடரத்தான் வேணும் சார்!

    ReplyDelete
  49. வாவ்.....

    கொரியர் பாக்சை திறந்தவுடன் கலந்து வந்த இதழ்களை பார்த்தவுடன் மனதில் தோன்றிய வார்த்தை இதுவே...

    தாங்கள் சொன்னது போல ஒல்லி மாதமே...ஆனால் உசத்தியான மாதம் இது என்பதில் அனைத்து இதழ்களின் அட்டைப்படங்களுமே சொல்லி விட்டன.மாடஸ்தியின் முன் அட்டை படத்திற்கு சுற்றி போட சொல்ல வேண்டுமா ..ட்ரெண்ட் அட்டைபடத்திற்கு சுற்றி போட வேண்டுமா ..இல்லை ஷெர்லக் ஹோம்ஸ் அட்டை படத்திற்கு சுற்றி போட வேண்டுமா என சொல்ல தெரியவில்லை...குண்டு புத்தகம் இல்லை என்ற குறை நான்கு புத்தகங்களாக கொட்டிய காரணத்தாலும் ,இணைப்பாக மினி டெக்ஸ்ம் வந்த காரணத்தாலும் அந்த குறை மனதில் தோன்றவே இல்லை என்பது மறுக்க முடியா நிஜம்.நான் முதலில் படிக்க நினைத்தது ஒன்று .ஆனால் அனைத்து இதழ்களையும் இப்பொழுது கண்டவுடன் அதன் அட்டகாச தரங்களால் எதை முதலில் படிப்பது என்று மகா குழப்பத்தில் தவிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இங்கி பிங்கி பாங்கிக்கு வேலை வந்துட்டது தலீவரே!

      இங்கும் அதே கதை தான்.

      நீங்களே அந்த மந்திரத்தை பிரயோகித்து முடிவை அறிவியுங்ங்கள். நாங்களும் பிறகு மந்திரத்தை பிரயோகிக்கிறோம்.

      Delete
    2. முதலில் கார்டூன். (ஜம்போ)

      Delete
  50. உங்கள் கடையில் கஸ்டமர்கள் இருந்தனர். ஆனாலும் காமிக்ஸ் வாசிக்க (ரசிக்க) முடிகிறது?

    ReplyDelete
    Replies
    1. கஸ்டமர் வரவுக்கு நடுவே ரசிக்க போதிய அவகாசம் இருக்கு இளா!

      இன்று வெறும் புரட்டல், ரசிப்பு மட்டுமே. நாளை தான் ட்ரெண்ட் வாசிக்கனும். அடுத்து மினிடெக்ஸ்; ஜம்போ; மாடஸ்தி; சைத்தான் சாம்ராஜ்யம்.

      Delete
  51. நானும் ஒவ்வொரு புக்கையும் செங்கோணம் ,குறுங்கோணம்னு 360டிகிரி கோணத்திலேயும் திருப்பி, திருப்பி பாத்தேன்.
    நேராகவும் ,பக்கவாட்டிலேயும் ,படுக்கை வசமாகவும், அவ்வளவு ஏன் தலைகீழாகவும் கூட பார்த்தேன்.

    எப்படி பாத்தாலுமே குறையில்லாமல் அழகாகவே ஜொலிக்கிறது.

    சத்தமின்றி ஷோம்ஸ் மூன்றாம் இடத்திற்கு (அட்டைப்படத்தில் ) நகர்ந்துக் கொள்ள, மாடஸ்டிக்கும், ட்ரெண்டுக்குமான கடுமையான போட்டியில், சிக்கென்ற சைஸிலும், சிங்காரப் பார்வையிலும் மாடஸ்டியே வாகை சூடுகிறார்.

    மூன்றிலும் மமஞ்சள் வண்ணமே முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.அதுவும் ட்ரெண்டின் அடர் மஞ்சள் பிண்ணணி, அடடா.. கைதட்டலின் ஸ்ருதி அதிகமாகிறது.

    மூன்று அட்டைப்பபடத்திற்கும் மூன்று வித வேறுபாடுகாட்டியிருப்பது தனித்து மின்னுகிறது.

    ReplyDelete
  52. நக்கீர பார்வை ............

    ஹெர்லக் ஷோம்ஸ்

    ஒரு குரங்கு சேட்டை -யில்

    கதை -JULES

    சித்திரம் - FURTINGER

    என நான்காம் பக்கத்தில் உள்ளது ..

    நிஜத்தில்

    கதை ...FURTINGER( ஸ்லோவேனியன் -பழைய யூகேஸ்லேவியாவின் பகுதி)

    சித்திரம் ...JULES(குரேஷியன் )

    ReplyDelete
    Replies
    1. மூன்றாம் பக்கத்திலும் கதாசிரியர் JULES என குறிப்பிடப்பட்டுள்ளது ..

      நக்கீரப்பார்வையை அணைத்துவிட்டு காதல் பார்வையுடன் கதைக்குள் நுழைகிறேன்

      Delete
    2. தமிழ் காமிக்ஸ் சமுதாயத்தின் ஹெர்லக் ஷோம்ஸ் அவர்களே...

      Delete
    3. //தமிழ் காமிக்ஸ் சமுதாயத்தின் ஹெர்லக் ஷோம்ஸ் அவர்களே...//

      ஜம்போ...பக்கம் 24

      ஹெர்லக்: நானே இந்த குரங்கை போல வேஷம் போட்டுக்கிட்டு அந்த போக்கிரிகளுக்கு எதிராக சாட்சியங்களை சேகரிச்சாகணும்...

      வேஸ்ட்சன் : அதுக்கு மாறுவேஷம் கூட அவசியப்படாதுன்னு நினைக்கிறேன்..


      ஒ..ஒ.ஒருவேளை கதைய படிச்சுட்டு இ.இதை நெனைச்சுதான் அப்படி சொல்லிட்டீங்களா ஈவி??

      Delete
    4. ஹா ஹா ஹா!! இன்னும் படிக்க ஆரம்பிக்கலை செனாஅனா ஜி!!

      ஆனா இப்பவே படிக்கணும்போல ஆவல் எழுகிறது!!

      கதையைப் படிக்கும்போது அந்தக் கதாபாத்திரத்தை (ஹெர்லக் ஷோம்ஸ் தான்) நீங்கன்னே நினைச்சுட்டுப் படிக்கிறேன்... செம எஃபெக்டா இருக்கும்! :)))))))

      Delete
  53. Jumbo சந்தாதார்களில் என் பெயர் மிஸ்ஸிங் சார்...!!
    ஆவன செய்யவும்.

    ReplyDelete
  54. ஜம்போ காமிக்ஸ் - பிரின்ட்டிங் தரத்திலும், வண்ண ஜாலங்களிலும் பின்னிப் பெடலெடுக்கிறது!! ஒரு இதழை இதைவிடவும் அழகாககப் படைத்துவிட முடியாது என்பதை ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போது - மூச்சை இழுத்துப் பிடித்தபடியே - உணரமுடிகிறது!!

    இம்மாதத்தின் உச்சபட்ச அசத்தல்!!!

    ReplyDelete
    Replies
    1. Agreed totally though Tamil Comics is also becoming an expensive affair !

      Delete
  55. நான் நேத்து தான்மர்மக் கத்தி படிச்சு முடிச்சேன். அதுக்கு விமர்சனம் எழுதுன புதுசா புக்கு கிடைச்சிருக்கிற கூட்டம் என்ன விளையாடறியான்னு என்னை மொத்து மொத்துன்னு மொத்திடும். 9/10 ன்னு மார்க் போட்டுட்டு செனா அனா இதோட க்ளைமாக்ஸ் பத்தி எழுதின கட்டுரையை தேடறேன்.யாருக்காவது லிங்க் கைக்கருகே இருந்தா இங்கே போடுங்க. 🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. கதாசிரியர் எதை நினைச்சு எழுதினாரோ வாசகனுக்கு தன்னோட பார்வையில ஒரு கோனார் நோட்ஸ் போட உரிமையிருக்கு ..அப்படி எழுதப்பட்டதுதான் அது ..சிறப்பா ஒண்ணுமில்ல ..மீறி படிக்குனுமின்னா இங்க தொடுங்க

      Delete
    2. எங்கே தொட்டாலும் bloggerகாரவுஹ இங்கிலீசுல ஏதோ வையுறாங்க செனா அனா ஜி! நீங்கதான் இதுக்கு ஒரு பைசல் பண்ணோணும்!

      Delete
    3. ///எங்கே தொட்டாலும் bloggerகாரவுஹ இங்கிலீசுல ஏதோ வையுறாங்க//

      அப்படியா ! ரொம்ப கற்புள்ள லின்கா இருக்கும் போல இருக்கு ..நான் தொட்டா ஓப்பன் ஆகுது ..

      புது புத்தகங்கள் இருப்பதால இங்க பழைய பதிவை போட யோசிச்சேன் ..

      இதோ ஷெரிப் -க்காக

      மர்ம கத்தி ...
      ஏற்கனவே சொன்னது போல் கதை முழுதுமே கனவே ..
      இது விஞ்ஞான கதை அல்ல ...
      என்னை பொறுத்தவரை மெட்டாபிசிக்ஸ் கதையை நடத்துகிறது ..
      கனவுலகினை இக்கதை ஒரு இணை பிரபஞ்சமாக கையாள்கிறது ...(parallel universe ). உறக்கம் அதற்கான போர்ட்டல் .
      நமது பிரபஞ்சத்தில் காலம் என்பது ஒரு மாயை..அது சார்புடையது ...
      ஐன்ஸ்டீனின் ஸ்பெஷல் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி/ஜெனரல் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி காலத்தில் முன்னோக்கி /பின்னோக்கி பயணிப்பது பற்றி வழிவகைகள் இருப்பது பற்றி சொன்னாலும் அவற்றை செயலாக்கம் செய்வது நடைமுறையில் இயலாத காரியம் ..
      நமது கதையில் உள்ள கனவுலகான இணை பிரபஞ்சத்தில்
      காலத்தின் பின்னோக்கி செல்ல
      ஒளியின் வேகத்தினை விட அதிக வேகத்தில் பயணிக்கவேண்டும்
      காலத்தினை கிராவிடேஷனல் விசையை பயன்படுத்தி லூப்களாக மடக்கி பின் செல்லவேண்டும்
      போன்ற சாத்தியமேயில்லாத கட்டுப்பாடுகள் இல்லை ..
      மெட்டாபிசிக்ஸ் –ன் மனம்,உடல் பற்றிய கிளை சித்தாந்தங்களை அடியொற்றி எழுதப்பட்ட இக்கதை இருமனிதர்கள் பருப்பொருளாகவே காலத்தின் பின்னோக்கி பயணிப்பதாக அதாவது கனவுலக பிரஜைகளாக இருப்பினும் வர்ணனை செய்கிறது ....
      இது கனவுலகம் என்பது ஒரு இணை பிரபஞ்சம் என்றால் மட்டுமே சாத்தியம் ...
      இவர்கள் போட்டு சென்ற ஆடையை விட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன் அணிந்த ஆடையை திரும்பி அணிந்து வருவதும் .
      ரோலனின் கத்தி ரோஜரின் கூடவே பயணிப்பதும் இக்காரணத்தினால்தான்..
      காலத்தில் பின்னோக்கி/முன்னோக்கி பயணிக்க ஒளியின் வேகத்தில் பயணிக்கவேண்டும் ..
      உதாரணமாக ரோலனின் கத்தியும் ஒளியின் வேகத்தில் முன்னோக்கி பயணிக்குமாயின் நிறை –சக்தி கோட்பாட்டின்படி கத்தியின் நிறை முடிவிலி (infinite ) என அதிகரிக்கும் ...இக்கத்தியை நகர்த்துவதற்கான சக்தியின் அளவும் முடிவிலி என அதிகரிக்கும் ...இது நடைமுறைக்கு ஒவ்வாதது ..
      இதெல்லாம் நமது பிரபஞ்சத்தில் ..
      கனவுநிலையில் உணர்நிலையில் உள்ளதாக காண்பிக்கப்படும் நமது ரோஜர் மற்றும் பில்லுக்கு இக்கோட்பாடுகள் இணை பிரபஞ்சவாசிகள் என்பதால் பொருந்தாது..
      ரோஜர் மற்றும் பில் காலத்தில் பின்னோக்கி செல்ல கால இயந்திரம் தேவையில்லை என்பது கதை உணர்த்தும் செய்தி ..
      இருபதாம் நூற்றாண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் உறங்க துவங்கும் அவர்கள் மறுபடியும் கனவுலகின் வாயிலாகவே இருபதாம் நூற்றாண்டை முன்னோக்கி பயணித்து வந்தடைகிறார்கள் ..
      பலசமயங்களில் விஞ்ஞானம் தனது எல்லையை தொட்டு நிற்பதை தாண்டி விளக்கமளிக்க மெட்டாபிசிக்ஸ் முயன்று இருக்கிறது ...
      நவீன விஞ்ஞானம் மெட்டாபிசிக்ஸ்-தத்துவத்தை வறட்டு வேதாந்தம் என்றே அழைக்க முற்படுகிறது ....

      நாமும் உறங்கி முயற்சி செய்து பார்ப்போம் ..
      கனவுலகின் பிரஜைகளானால் காலத்தின் முன்னோக்கி சென்று இரத்தப்படலம் வண்ண இதழ்களை ,டைனமைட் இதழ்களை எடிட்டர் அச்சிட்டு முதல் பிரதியை ரசித்து கொண்டு இருக்கும்போது நாமும் அருகில் போய் ரசிக்கலாம் ...
      காலையில் எழும்போது படுக்கையின் கீழ் டைனமைட் இதழின் டஸ்ட் கவர் கிடைக்குமாயின் அதிசயிக்க வேண்டாம் ...

      பின் குறிப்பு : வேறுவித சிந்தனைகள் நண்பர்கள் யாருக்கும் இருக்குமாயின் முன்வைக்கலாம் ...

      Delete
    4. நம்ம அதிவிருப்பப் பாடமான Physicsல, அதிலும் நான் மிக விரும்பும் ஆல்பா்ட் ஐன்ஸ்டீன் தொடா்பான விவாதத்தில் கலந்துக்க ஆவலோடு இருக்கேன்!
      வேலை முடிஞ்சதும் களத்தில் குதிச்சர வேண்டியது தான்!

      Delete
    5. அடடே! இதென்னது மெட்டா பிஷிக்ஸ், தத்துவம் அது, இது எல்லாம் உள்ளே வந்திருச்சே!

      Delete
    6. ///நம்ம அதிவிருப்பப் பாடமான Physicsல, அதிலும் நான் மிக விரும்பும் ஆல்பா்ட் ஐன்ஸ்டீன் தொடா்பான விவாதத்தில் கலந்துக்க ஆவலோடு இருக்கேன்!///

      நானும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் தீவிர ரசிகனே..!

      Delete
    7. காலம் மானுடத்தின் கணக்கு விதிகளுக்குள் கட்டப்பட்டதாக புரியப் பட்டது. ஒளியுனுடைய ஆற்றலில்,மனதையும்,ஆன்மாவையும் பயன்படுத்த பழக்கப்பட்டால் வெல்ல கூடிய மாயையாக இருக்கும்.
      இயற்பியல் புலமையோ,மெத்த படித்த மேதா விலாசமோ இல்லாவிடினும் இதை ஓரளவு உணர்ந்ததாகவே அறிகிறேன்.முழுக்கவுமே தற்சார்பு சித்தாந்தம் எனும் போது ஐன்ஸ்டீன்,நியூட்டனை வம்பிழுக்கும் அறிவு புலம் முழுக்கவே குறைவே.
      மனதினுடைய ஒளியாற்றல் பற்றி உதாரணப்படுத்த ஒரு சிறு அனுமானம்.
      செப்டம்பரில் ஆசிரியர் அறிவிக்க இருக்கும் ஓர் செய்தி தொடர்பானது.
      இந்த தளத்தில் பதியப்பட்ட சில காமிக்ஸ் விமர்சனங்களை மொழிமாற்றம் செய்து, ஐரோப்பாவில் உள்ள ஏதோவொரு காமிக்ஸ் அமைப்பபின் கவனத்துக்கு அனுப்பப்பட்டு,அதற்கு அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை அடைந்திருக்கலாம்.உண்மைக்கு வெகு நெருக்கமாக கூட ,தெளிவாக குறிப்பிடாமல் அனுமானத்தின் அடிப்படையில் கருதுவதால் ஆசிரியருடைய அறிவிப்புக்காக காத்திருப்போம்.
      மனம் ஆற்றல் வாய்ந்த வலிமையுடைய மனித குலத்துக்கு கிடைத்த வரம்.
      ஆன்மா இறப்புக்குப் பின்பும் சாகா வடிவமுடைய வல்லமையுடையதாகவும் இருக்கும்.பாரத தேசத்தில் இது மிகப் பெரிய ஞானிகளால் அடையப்பட்ட இலக்கு.காலம் நீர் குமிழ் போல் உடைந்து கொண்டிருந்தாலும் காலத்தை கடந்தும் வாழ்வதற்கு வழிமுறைகள் உள்ளது.இது குறித்து மேலும் அணுக போதிய நிரூபணம் ஏற்படுத்த இயலாது எனும் போது அர்த்தமற்றதாக இருக்கும்.
      இறுதியாகவும் மனம் காலத்தை கடந்தும் பயணிக்கும் வலிமையுடையது.மனித ஆன்மா காலம் கடந்தும் அழிவில்லாத தாக்குதல் உணர்ந்ததால் இதை பதிவிடுகிறேன்.

      Delete
    8. களை கட்டுது, இன்னும் Physics majorகளம் இறங்குங்க...!!

      நாங்க பக்கத்து வீடு Chemistry , கைகட்டி வேடிக்கை பார்க்கிறோம். அவ்வப்போது விசில் அடிச்சி உற்சாக படுத்துவோம்...

      கமான்....கமான்...!!!

      Delete
    9. நன்றி செனா. படிச்சுட்டு வரேன்.🙏🙏🙏🙏

      Delete
    10. இரண்டு வாரத்துக்கு புது இதழ்களின் மேல் கவனம் /லைம்லைட் இருக்கட்டும் நண்பர்களே...இதைப் பற்றிய விவாதத்தை அதற்குப் பிறகு துவக்கலாம்.

      Delete
    11. காலைல இருந்து போடாத புதிய இதழ் விமர்சனங்கள் இப்ப கொஞ்ச நேரத்தில் போடவாபோறாங்க ஜி!

      எல்லோரும் புதிய பதிவுக்காக வெயிட்டிங். அதில் தான் சுடச்சுட விமர்சனங்கள் வரும்.

      இது பழைய பதிவாகிட்டு, பழைய மேட்டரை விவாதிக்கலாம். இரவு வரை மட்டுமே.!

      Delete
  56. Dear Editor

    Herlock Sholmes was a simplistic and refreshing read in a long time. பலவிடங்களில் சிரிக்க வைத்தது.

    என்னதான் காமெடி என்றாலும் 1890 கதைக்களத்தில் டாஸ்மாக் போன்ற பதங்கள் - seem out of place.

    உலகளாவிய காமிக்ஸ் நிலவரத்தைப் போன்றே தமிழ் காமிக்ஸ்சும் ஒரு அதிக விலைப் பொழுதுபோக்காகி வருவது கணிக்க முடிகிறது. if only we had a choice ...!

    ReplyDelete
  57. கதாசிரியர் எதை நினைச்சு எழுதினாரோ வாசகனுக்கு தன்னோட பார்வையில ஒரு கோனார் நோட்ஸ் போட உரிமையிருக்கு ..அப்படி எழுதப்பட்டதுதான் அது ..சிறப்பா ஒண்ணுமில்ல ..மீறி படிக்குனுமின்னா இங்க தொடுங்க

    link said " you do not have permission"

    ReplyDelete
    Replies
    1. சிரமத்துக்கு வருந்துகிறேன் சார் !

      மேலே அப்பதிவு உள்ளது ...

      Delete
  58. சென்ற மாதம் போல், இந்த முறையும் jumbo missing. இரண்டு முறை லயன் office-கு call செய்து சொல்லியிருக்கிறேன். புத்தகம் எப்பொழுது கிடைக்கும் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  59. ஹெர்லாக் ஷோம்ஸ் - நேத்து படிச்சி இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன் ..!!
    😂😂😂😂😂😂😂😂😂

    ReplyDelete
  60. அன்பின் ஆசிரியருக்கு,

    வணக்கம். ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ததும்பி வழியும் மற்றுமொரு தருணம். வாழ்க்கை என்பது தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பு என்கிற என்னுடைய நம்பிக்கை மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. ரைம்போவை மொழிபெயர்த்த சங்கதியை ஏன் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் அதே சமயத்தில் நீங்கள் ட்ரெண்டின் இரண்டாவது கதையை வெளியிட வேண்டும்? நாம் நினைப்பதைக் காட்டிலும் இந்த வாழ்க்கை அபாரமான ஆச்சரியங்களைக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ரைம்போ பற்றிய குறிப்பை நம் இதழில் வெளியிட்டு மீண்டும் ஒரு முறை என்னை கௌரவப்படுத்தி இருக்கிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    பிரியமுடன்,
    கார்த்திகைப் பாண்டியன்

    ReplyDelete
  61. ரைம்போவின் வாழ்க்கையைப் புரிந்து கொண்டால் நம் நண்பர்களுக்கு ட்ரெண்ட் கதையின் எதிர்நாயகனின் குணவார்ப்பையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். எனவே ரைம்போ பற்றி நான் எழுதிய ஒரு அறிமுகக்குறிப்பை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன் மக்களே..

    நரகத்தின் நுழைவாயில் (1)

    ஒரு புராணக்கதையை ஒத்தது ஆர்தர் ரைம்போவின் வாழ்க்கை, ரொம்பவே குறுகிய, ஆனால் தீவிரம் நிரம்பிய வாழ்க்கை. தன்னை ஒரு சாகசக்காரன் என்றே அவர் நம்பினார், எளிமையான பாதைகளைப் புறக்கணித்து விளிம்புகளில் பயணிப்பதையே பெரிதும் தேர்ந்தெடுத்தார். சமரசம் செய்து கொள்ளாத மனத்திடம்; புலன்களின் சிதைவு; போதை மருந்துகள்; ஒருபால் புணர்ச்சி; ஆயுதக்கடத்தல்; வெவ்வேறு நிலங்களினூடான பயணம்; எல்லாவற்றுக்கும் மேலாக, இருபத்து ஒன்றாம் வயதுக்குள் எழுதிய கவிதைகளின் நம்பவியலாத முதிர்ச்சி; அதனைத் தொடர்ந்து தன்னுடைய கவிதைகளைக் கைவிட்டுப் பிறகு ஒருநாளும் அவற்றைப் பற்றி உரையாடாத பிடிவாதம் – இவையெல்லாம் சேர்ந்து ஒரு இதிகாச நாயகனின் பிம்பத்தை வரலாற்றில் ரைம்போவுக்குத் தருகின்றன, ஆனால் உயிரோடு இருந்திருந்தால் இதையும் அவர் மறுத்திருக்கவே செய்வார் எனத் தோன்றுகிறது.

    பெரும்பாலான எழுத்தாளர்களின் வாழ்க்கை, விவரித்துச் சொல்வதற்கான சுவையான சம்பவங்களின்றி, மிகவும் அயர்ச்சியூட்டக்கூடியதாக இருக்கும். ஆனால் ரைம்போ முற்றிலும் வேறு வகையிலானதொரு மனிதர். அவர் மீது பல குற்றச்சாட்டுகள் உண்டு, அவருடைய குணநலன்களும் வாழ்க்கை முறையும் பலரால் விமர்சனத்துக்கு உள்ளாயின. “பாரிசின் தேநீர் விடுதிகளில் அமர்ந்து மேசைகளின் மீது ரைம்போ கவிதைகளை எழுதுவார், எழுதுகோலால் அல்ல, மாறாகத் தன் மலத்தைக் கொண்டு. யாரும் எதிர்பாராத தருணங்களில் கால்சராய்களைக் கழற்றி விட்டு பொதுவிடங்களில் சுய-இன்பச் செயல்பாடுகளில் ஈடுபடுவார். உடன்படித்த மாணவர்களைப் பாலியல்ரீதியாக அணுகக்கூடியவர். இலக்குகளற்று வீதிகளில் போதையில் அலைந்தவர். தன்னைக் காட்டிலும் மூத்த கவிஞரொருவரை மனைவியிடமிருந்து பிரித்துத் தனக்குப் பின்னால் அலைய வைத்தவர்.” எண்ணிக்கையிலடங்காக் குற்றச்சாட்டுகள். ஆனால் தான் செய்யும் குற்றங்களை இன்னதென்று ரைம்போ அறிந்திருந்தார் அல்லது விரும்பியே அவற்றை அவர் செய்திருக்கக்கூடும்.

    ரைம்போ தன் பதினான்காம் வயதில் முதல் முறையாக பாரிசுக்கு ஓடிப்போனார் - யுத்தகால பிரான்சில் தன்னந்தனியாக அலைந்து திரிந்தார்; பிழைப்புக்காகத் திருட்டு வேலைகளில் ஈடுபட்டார்; ஆனால் இவையனைத்தையும், நண்பர்களாக அடைய நினைத்த சக கவிஞர்களைச் சந்திப்பதற்காகவே அவர் செய்தார். காதலில் ஈடுபட்டார், ஆனால் தான் மிக நேசித்த கவிஞரால் கையில் சுடப்பட்டார். வெகு விமரிசையானதொரு விருந்தில் சட்டென்று பாதியில் கிளம்பிப் போவதைப்போல கவிதைகள் எழுதுவதை நிறுத்திக் கொண்ட பிறகும், அறிந்திராத பிரதேசங்களுக்கான பயணங்களின் வழியே தன் சாகசங்களைத் தொடர்ந்தார். சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டார். முப்பத்தியேழு வயதில், அறுவை சிகிச்சையால் ஒரு கால் நீக்கப்பட்ட பிறகு, புற்றுநோய் உடலெங்கும் பரவிட, துயரமானதொரு மரணத்தைச் சந்தித்தார். அவருடைய வாழ்வின் கறுப்புப்புள்ளிகள் எல்லாமே, ரைம்போவின் மனக்கொந்தளிப்புகளை விளக்க முற்படுவதோடு, மனித வாழ்வின் சராசரித்தன்மையை அவர் எத்தனை வெறுத்தார் என்பதையும் சொல்கின்றன.

    ReplyDelete
  62. நரகத்தின் நுழைவாயில் (2)

    பிரான்சின் ஒதுக்குப்புறமானதொரு கிராமத்தில் கழிந்த ரைம்போவின் சலிப்பூட்டுகிற பால்யத்தை நாம் இப்படிச் சொல்லலாம்: ஒரு சிறுவன், வெவ்வேறு நாற்காலிகளில் அமர்ந்தபடி, வாசித்துக் கொண்டிருக்கிறான்; அல்லது ஒரு சிறுவன், வெவ்வேறு மேசைகளில் அமர்ந்தபடி, எழுதிக் கொண்டிருக்கிறான். அந்த அயர்ச்சியூட்டும் வாழ்க்கையை, அதன் ஒற்றைப் பரிமாணத்தை, முழுமுற்றாக ரைம்போ வெறுத்தார். பொதுவாழ்வின் ஒழுக்கநெறிகளை மீறுவதன் மூலம் தன்னை அதன் தளைகளிலிருந்து அவர் விடுவித்துக் கொண்டார். 1873-ஆம் வருடம் மே மாதத்தில், லண்டனிலிருந்து திரும்பிய பிறகு, தன்னுடைய நண்பனான எர்னெஸ்ட் டெல்ஹயிக்கு எழுதிய கடிதமொன்றில் கிராமப்புற வாழ்க்கையைப் பற்றி ரைம்போ சொல்கிறார்: “குதத்தில் இருக்கும் வலியைப் போன்றது அது, இந்தக் குடியானவர்களெல்லாம் எத்தனை பெரிய அப்பாவிகளாக இருக்கிறார்கள்.” மேலும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிடுகிறார், “நான் தற்போது சில உரைநடைக் கவிதைகளை எழுதி வருகிறேன், மதநம்பிக்கையின்மையின் புத்தகம் அல்லது கருப்புப் புத்தகம் என்கிற தலைப்பில்.” தன்னுடைய விதி அந்தப் புத்தகத்தின் வாயிலாகத் தீர்மானிக்கப்படும் என ரைம்போ தீவிரமாக நம்பினார்; பின்னாட்களில் அது உண்மையாகவும் மாறியது. அந்தக் காலகட்டத்தில் அவர் எழுதியது “நரகத்தில் ஒரு பருவகாலம்” என்பதை நம்மால் தீர்மானமாகச் சொல்ல முடியும், ஏனெனில், புத்தகத்தின் முதல் பதிப்பில், அதனுடைய இறுதிப்பக்கத்தில் ஒரு குறிப்பு நமக்கு காணக்கிடைக்கிறது: ஏப்ரல் – ஆகஸ்ட், 1873.

    தொடர்ச்சியாக ஐந்து மாதங்களுக்குள் எழுதப்பட்டதாக “நரகத்தில் ஒரு பருவகாலம்” பற்றிய குறிப்பு சொல்கிறது, என்றாலும், அதன் உள்ளடக்கத்தில் எந்தவொரு தொடர்ச்சியையும் நம்மால் அடையாளம் காண முடிவதில்லை. செப்டம்பர் 1872 முதல் ரைம்போ வெர்லைனோடு லண்டனில் வாழ்ந்து வந்தார். வெர்லைனின் அம்மா அனுப்பிய பண உதவிகளைப் பெற்றுக்கொண்டு, இருவரும் தங்களுடைய ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள, பிரிட்டிஷ் நூலகத்தில் வாசித்துக் கொண்டிருந்தார்கள். முரண்பட்ட உறவுமுறைக்காகவும் நாடு கடத்தப்பட்ட புரட்சியாளர்களோடு கொண்டிருந்த தொடர்புகளுக்காகவும் அவர்களிருவரின் மீது காவல்துறை சந்தேகம் கொண்டிருந்தது. ஏப்ரல் 4, 1873 அன்று வெர்லைனின் மனைவி தொடர்ந்த வழக்கின் காரணமாக அவர் பிரான்சை விட்டு வெளியேறிட, ரைம்போவும் ரோச் நகரிலிருந்த குடும்பத்தின் பண்ணை வீட்டுக்குத் திரும்பினார். அங்குதான் “நரகத்தில் ஒரு பருவகாலத்தின்” முதல் வரிகளை ரைம்போ எழுதத் தொடங்கினார்.

    பால்யகால நண்பனான எர்னெஸ்ட் டெல்ஹயிக்கு அவர் எழுதினார்: “இந்தக் கதைகள்.. முட்டாள்தனமும் குற்றமின்மையும் கொண்டவை. ஓ குற்றமின்மையே! குற்றமின்மை, குற்றமின்மை, குற்ற – நாசமாய்ப் போகட்டும்!.. என்னுடைய விதி இந்த புத்தகத்தின் பாற்பட்டே அமைந்திடும், இதற்கென குறைந்தது இன்னும் அரை டஜன் கதைகளையாவது நான் கண்டுபிடித்தாக வேண்டும். எதையும் நான் உனக்கு இப்போது அனுப்பப் போவதில்லை, ஏற்கனவே மூன்று கதைகளை எழுதி விட்டேன், ஆனால் இவற்றை அனுப்ப நிறைய செலவாகும்!” அந்தப் புத்தகத்தை எழுதி முடிக்கும்வரை தான் தேர்ந்தெடுத்த வடிவத்திற்கு நேர்மையாயிருந்தார் ரைம்போ. “தீய ரத்தம்” மற்றும் போதையின் ஆதிக்கத்தில் எழுதப்பட்ட “நரகத்தின் இரவு” ஆகிய பகுதிகள் அந்த சமயத்தில் முடிந்திருந்தன.

    ReplyDelete
  63. நரகத்தின் நுழைவாயில் (3)

    மே மாத இறுதியில் காதலர்கள் இருவரும் மீண்டும் லண்டனுக்கு வந்தார்கள். வசிப்பிட வாடகை மற்றும் புதிதாகப் பழகியிருந்த ஓப்பியம் சார்ந்த செலவுகளை மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடங்கள் சொல்லிக் கொடுப்பதன் வழியாகச் சமாளித்தார்கள். அந்த ஜூன் மாதம் மதிமயக்கத்தின் நீண்ட இரு பகுதிகளையும் ரைம்போ எழுதி முடித்தார். மதிமயக்கத்தின் முதல் பகுதியில் முட்டாள் கன்னிப்பெண்ணாக வெர்லைனையும் தெய்வீக மணமகனாகத் தன்னையும் அவர் உருவகித்திருந்தார். ஆனால் இருவருக்குமிடையே நிகழ்ந்த சண்டையின் காரணமாக வெர்லைன் ரைம்போவைப் பிரிந்து ப்ரூசெல்ஸ் நகருக்குக் கிளம்பிச் சென்றார். அவரைத் தொடர்ந்து, ஜூலை நான்காம் தேதி, ரைம்போவும் ப்ரூசெல்ஸை வந்தடைந்தார். மூன்று நாட்கள் கழித்து, காதலர்களுக்குள் சண்டை மறுபடியும் நிகழ, வெர்லைன் தன்னுடைய ரிவால்வரால் ரைம்போவின் கையில் சுட்டார். பிறகு தன்னைத்தானே சுட்டுக்கொள்வதாகவும் ரைம்போவை அச்சுறுத்தினார். ஆனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பதினெட்டு மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். ஜூலை மாதத்தின் பெரும்பாலான நாட்களை ரைம்போ மருத்துவமனையில் கழித்தார். ஆகஸ்ட் மாதம் ரோச் நகருக்குத் திரும்பி நரகத்தின் கடைசி நான்கு பகுதிகளையும் எழுதி முடித்தார். அதற்கான முன்னுரையும் இந்த காலகட்டத்தில்தான் எழுதப்பட்டது.

    அக்டோபர் 1873, ப்ரூசெல்ஸ் நகரத்தில் “நரகத்தில் ஒரு பருவகாலத்தின்” முதல் பிரதி அச்சிடப்பட்டது. புத்தகத்தை அச்சிடுவதற்கான மொத்தச் செலவுகளையும் ரைம்போவின் அம்மா ஏற்றுக்கொண்டார், ஆனால் அதிலிருக்கும் எதுவும் தனக்குப் புரியவில்லை என்று அவர் அறிவித்தார். அதற்கான ரைம்போவின் பதில்: “இந்தப் புத்தகம் இலக்கியரீதியாக அத்தனை அர்த்தப்புலன்களோடும் வாசிக்கப்பட வேண்டியதாகும்.” ரைம்போவின் பத்தொன்பதாவது பிறந்தநாள் முடிந்த இரு தினங்களுக்குப் பிறகு, சிறையிலிருக்கும் வெர்லைனுக்கு ஒரு பிரதியை அனுப்பச் சொல்லி விட்டு, தனக்கென பன்னிரண்டு பிரதிகளை மட்டும் எடுத்துக்கொண்டு ரைம்போ பாரிசுக்குக் கிளம்பினார். ஆனால் பாரிசின் இலக்கியவாதிகளுக்குத் தன்னுடைய அறிவின் மீதோ படைப்பின் மீதோ நம்பிக்கையில்லை என்பதைப் புரிந்து கொண்டதால், ரைம்போ மீண்டும் ரோச்சுக்குத் திரும்பினார். மீதமிருந்த பிரதிகளோடு தன்னுடைய கையெழுத்துப் பிரதிகளையும் சேர்த்து நெருப்பிலிட்டுக் கொளுத்தினார். அன்று அச்சகத்தில் அவர் விட்டு வந்த பிரதிகள் யாராலும் கண்டுபிடிக்கப்படாமலே இருந்தன, ரைம்போ இறந்து பத்து ஆண்டுகள் கழித்து 1901 ஆம் ஆண்டில், அவை மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தன.

    ReplyDelete
  64. நரகத்தின் நுழைவாயில் (4)

    வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடியலைந்த பலரையும் போலவே, ரைம்போவும், தன்னைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த உலகாய சங்கதிகளிடமிருந்து விடைபெற எண்ணினார். பொதுவான நம்பிக்கைகளைச் சிதறடித்து, மனிதனின் ஆழ்மனதில் உறங்கிக் கிடக்கும் விருப்பங்களைப் பேசும் வடிவமாக “நரகத்தில் ஒரு பருவகாலத்தை” ரைம்போ எழுதிப் பார்த்திருக்கிறார். அதன் பின்னரும் ரைம்போவின் சில கவிதைகள் வெளியாயின, “ஒளிச்சிதறல்கள்” (Illuminations) என்றழைக்கப்பட்ட கவிதைகள், எழுதுவதற்கான மனதையும் நேரத்தையும் மெல்ல மெல்ல தொலைத்துக் கொண்டிருந்த ஒரு அற்புதமான கவிஞனின் இறுதி மூச்சுக்காற்றென அக்கவிதைகளைச் சொல்லலாம்.

    எழுத்துகளின் மாய உலகை விட்டு ரைம்போ முழு விருப்பத்தோடு விலகினாரா அல்லது அந்தச் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாரா என்பதை ஒருபோதும் நாம் அறிந்து கொள்ள முடியாது. ஆனால், “நரகத்தில் ஒரு பருவகாலத்தை” ரைம்போவின் ஆகச்சிறந்த படைப்பு என்று நாம் அறுதியிட்டுச் சொல்லலாம்.

    ReplyDelete
    Replies
    1. ///ரைம்போவின் வாழ்க்கையைப் புரிந்து கொண்டால் நம் நண்பர்களுக்கு ட்ரெண்ட் கதையின் எதிர்நாயகனின் குணவார்ப்பையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். ///

      நன்றி திரு கார்த்திகை பாண்டியன் அவர்களே.!
      ட்ரெண்ட் கதையை இன்றிரவு படிக்க நினைத்திருந்தேன். தங்களுடைய அறிமுகக்குறிப்பு நிரம்ப உபயோகமாக இருக்கிறது.

      Delete
    2. அருமை! அற்புதம் நண்பரே!!!

      ஏனோ மனம் நம் மகாகவி பாரதியோடு அவரை ஓப்பீடு செய்கிறது!

      இன்றுமே பாரதியை அவா் எழுதிய சில சுதந்திர வேட்கை மற்றும் சமூக பாடல்களுக்காக புகழ்கிறாா்களே தவிர அவரையும், அவரது உலகம், பிரபஞ்சம், மனிதம், ஞானம், உண்மை பற்றிய வெளிப்பாடுகளை முற்றிலுமாய், உணா்ந்து சிலாகிப்பவா்கள் அாிது என்பதே எனதெண்ணம்!!

      கூடவே, ஜொ்மானிய தத்துவவாதி ஜராதுஷ்ட்ராவும் கூட ரைம்போவின் வாழ்க்கைப்பாடுகளை ஒத்த வாழ்க்கையை தான் வாழ்ந்திருக்கிறாா்!

      Delete
    3. ///ஜராதுஷ்ட்ராவும்///

      சாாி! பிரடொிக் நீட்ஸே எனப் படிக்கவும்!!

      ஜராதுஸ்ட்ரா ஒரு வரலாற்று கதாபாத்திரம்!!

      Delete
    4. மிதுன் சார்,நீங்க நீட்ஸேவின் "ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்" நூலை வாசித்திருப்பீர்கள் போல???

      Delete
  65. எடிட்டரின் புத்தம் புதிய பதிவு தயார் நண்பர்களே.

    ReplyDelete