Sunday, August 19, 2018

ம.ப. & கி.நா..!!

நண்பர்களே,

வணக்கம். மேலுலகில் தலைவர்களுக்குத் திடீர் தட்டுப்பாடு போலும் – இங்கிருந்து ஒவ்வொரு மூத்தவரையாக இட்டுச் சென்ற வண்ணமுள்ளனர் ! முன்னாள் பிரதமரும், அப்பழுக்கற்ற அரசியல் தலைவருமான திரு.வாஜ்பே அவர்கள் இந்த வலையின் லேட்டஸ்ட் catch ஆகியிருப்பது நமக்கெல்லாம் ஈடு செய்ய இயலாவொரு இழப்பே! மலர்ந்த முகத்தோடு பலருக்கும் இவர் என்றென்றும் அழியா நினைவாய்த் தொடர்ந்திடுவார் என்பது நிச்சயம் ! RIP சார் ! அவருக்கு சற்றே முன்பாய் இன்னொரு பழுத்த அரசியல் தலைவரும், மக்களவை ஸ்பீக்கருமான  ; கறையே அண்டிராதவருமான  திரு.சோம்நாத் சட்டர்ஜியும் விண்ணுக்குக் கிளம்பியிருக்க - இழப்பின் பட்டியல் நீள்கிறது ! அவருக்கும் நமது மரியாதைகள் & அஞ்சலிகள் ! 
2018-ன் ஈரோட்டுப் புத்தக விழாவும் – சில தினங்களுக்கு முன்பாய் நினைவுப் பேழைகளுக்குள் இன்னுமொரு அத்தியாயமாய் மாறிப் போயிருக்க – நானோ அதற்கு முன்பாகவே பையைத் தூக்கிக் கொண்டு இன்னொரு திக்கில் பயணமாகிப் போனேன் ! வேலைகளைப் பார்க்க முடிகிறதோ – இல்லையோ, பைக்குள் சட்டை, துணிகளை அமுக்குவதற்கு முன்பாகவே அம்மாதத்து எடிட்டிங் வேலைகள் எஞ்சி நிற்கும் பக்கங்களை எடுத்து அடுக்கி விடும் வாடிக்கை இம்முறையும் தொடர்ந்தது ! அதன் பலனாய் – அவர் அடிக்கடி உலவிய அதே கலிபோர்னிய மண்ணில் “டைனமைட் டெக்ஸ்” கடந்த சில நாட்களாக மறுபடியும் சுற்றி வருகிறார்! காத்திருக்கும் ஒவ்வொரு விமான நிலையத்திலும், டெக்ஸோடு தான் எனது பொழுதுகள் நகர்கின்றன ! And இதோ – வாரயிறுதி நெருங்குகிறதென்ற அலாரம் தலைக்குள் ஒலிக்க – ஊர் திரும்பும் முன்பாய் பதிவுக்கென அமர்ந்தாயிற்று !

ஒரு விதத்தில் – ஈரோட்டுப் பக்கமாய் நமது கவனங்கள் திரும்பிய முன்பாக நான் வாராவாரம் எழுதி வந்த சமாச்சாரத்தின் நீட்சியே இது ! 2019 அட்டவணையின் ஆக்ஷன் கதைவரிசைகள் பற்றி ; டெக்ஸ் பற்றி ; கார்ட்டூன்கள் பற்றி என்று அலசி விட்டோம் ! உங்கள் எண்ணங்களை எனது ப்ளுப்ரிண்டோடு ஒத்துப் பார்க்கும் வேலைகளும் சரி; மெலிதான பட்டி டிங்கரிங் வேலைகள் செய்வதும் சரி – நடந்து வருகிறது ! இந்த நொடியில் எஞ்சி நிற்பன இரு தனித்தனி தடங்கள் மீதான பார்வைகளே ! And அவை இரண்டுமே தத்தம் விதங்களில் உங்களிடையே ஏராளமான வீரியமான சிந்தனைகளை விளைவிக்க வல்லவை என்பதிலும் no secrets! So பசுபிக் சமுத்திரத்தின் அசாத்திய பிரம்மாண்டம் என் முன்னிருக்கும் கண்ணாடி ஜன்னல் வழியே விரிய – மறுபதிப்புகளெனும் கடலின் பக்கமாயும்; கிராபிக் நாவல்கள் எனும் சமுத்திரம் மீதாயும் பார்வைகளை ஓடவிடுகிறேன்........

இன்னமுமே அந்த நாள் ஞாபகமுள்ளது ! 2015-ன் துவக்கம் முதலாய் மாயாவிகாரு & அவரது கூட்டாளிகள் நம்மிடையே மறுவருகை செய்யவுள்ளனர் என்ற சேதியை அறிவித்ததொரு ஞாயிறு காலைப் பதிவு அது ! அந்த நாள் நிறைவுறும் முன்பாய் 360 பின்னூட்டங்களைப் போட்டு அதகளம் செய்து முடித்திருந்தீர்கள்! And ஜனவரியில் சென்னைப் புத்தக விழாவில் “நயாகராவில் மாயாவி” ரிலீஸான சமயம், தற்போதைய “இரத்தப் படல” உற்சாகத்திற்குச் சிறிதும் குறையிலா reception கிட்டியதும் ஞாபகத்தை விட்டு அகலவில்லை! தினமும் சுமார் எண்பது பிரதிகள் சென்னை ஸ்டாலில் மட்டுமே விற்பனையாகிட; ஒவ்வொரு மாலையிலும் “நயாகராவில் மாயாவி” பஸ்ஸில் பயணமாகினார் சிவகாசி to சென்னைக்கு ! தொடர்ந்த மாதங்களில் / ஆண்டுகளில் மும்மூர்த்தியர் + இஷ்பைடர் சார் என்று மாதாமாதம் ரவுண்ட் கட்ட – வெகு சீக்கிரமே நம்மிடம் ஒரு golden oldies தொகுப்பானது சேர்ந்து விட்டது. ஒவ்வொரு தொடரும் புத்தக விழாவிலும் – ”ஆஆஆ... மாயாவியாாா?... லாரன்ஸ் டேவிட்டாாா? ஜானி நீரோவாாாா?” என்ற அகன்ற விழிகளோடும்; ஜலம் வடியும் வாய்களொடும் இவற்றை நெஞ்சோடு வாரியணைத்துக் கொண்ட மூத்த வாசகர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது !

இத்தருணத்தில் இரண்டு பேரை இதன் பொருட்டு “மறுக்கா” நினைவு கூர்ந்திடல் அவசியம் என்பேன் ! முதலாமவர் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவரும், ஈரோட்டுப் புத்தக விழாத் தலைவருமான திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களே ! 2013-ல் நம்மிடமிருந்த சொற்பமான title கையிருப்பைப் பார்த்தவர் – “சீக்கிரமே உங்களது புத்தக எண்ணிக்கைகளைப் பன்மடங்காக்க முயற்சிக்கா விட்டால் – வரும் ஆண்டுகளில் ஈரோட்டுப் புத்தக விழாவின் கதவுகள் உங்களுக்குத் திறப்பது கடினமே!” என்று சுட்டிக் காட்டியிருந்தார்! ஆங்கில காமிக்ஸ் இதழ்களை வாங்கி ஸ்டால் முழுக்க அடுக்கி, எண்ணிக்கை மிகுந்திருக்கும் உணர்வை ஏற்படுத்த 2014-ல் மாத்திரம் பெருந்தன்மையோடு அனுமதித்திருந்தார்கள் என்ற போதிலும் – அதே பருப்பு மறு ஆண்டும் செல்லாது என்பது புரிந்தது ! சட்டுப் புட்டென்று title-களின் எண்ணிக்கைகளை அதிகமாக்கிட ஒரே சுலப வழி – மறுபதிப்புகள் பக்கமாய்ப் பிடிவாதமாய் பார்வைகளைப் பதிக்க மறுத்து வந்த எனது மனதை மாற்றிக் கொள்வதே என்பதும் புரிந்தது ! அதற்கு முன்பாகவே என்னைப் பார்க்கும் போதெல்லாம், மறுபதிப்புகளைக் கொண்டு வந்தால் – அதன் மூலமாய் புதுசுகளுக்கும் ஆர்வங்களை வடிகாலாக்கிட முடியுமென்று சிங்கப்பூர் நண்பர் தயாளனும் சொல்லிக் கொண்டேயிருப்பார் ! (ஆனால் நடைமுறையில்  பழசை வாங்கினோர் - பழசைத் தவிர்த்து வேறு எதையும் ஏறெடுத்துப் பார்க்கக் கூட முனையவில்லை என்பது வேறொரு விஷயம் !!) எனக்கோ காலாவதியாகிப் போய்விட்ட இனிப்பை மறுக்காவும் கடைவிரிக்கத் தான் வேண்டுமா ? என்றதொரு எண்ணம் ! இறுதியில் title-களின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்திடும் அவசியத்தின் முன்னே எனது பிடிவாதம் அடிபணிய – சரமாரியான மறுபதிப்பு மேளா தொடர்ந்தது நமது வரலாறு (!!!) இவற்றிற்கேவென ஒரு பிரத்யேக சந்தாத் தடம் – தனியாக புத்தக விழாக்களில் ஒரு மூலை என்றெல்லாம் அமர்க்களப்பட்டதுமே வரலாற்றின் இன்னொரு பக்கம் ! கோவையில் ஒரு ஆரம்ப நாட்களது முகவர் – மாதாமாதம் மறுபதிப்புகளை மட்டுமே வாங்குவார் - புதுசு எதையும் திரும்பிக் கூடப் பார்க்காது ! And மாதா மாதம் – நடப்பு இதழ்கள் போணியாகின்றனவோ - இல்லையோ; "5 மாயாவி; 2 இஷ்பைடர்; 2 நீரோ" என்ற ரீதியில் ஆர்டர்கள் கிட்டி வந்தன !

ஆனால் – விற்பனையில் தெரிந்த உத்வேகம் – உங்களது அலசல்களில் வேறு மாதிரியாய் தெறிக்கத் துவங்கின நடுவாக்கில் ! தலைகீழ் சிரசாசன SMS-கள்; நியூயார்க்கைத் தர தரவென இழுத்துப் போகும் தில் ; ஜானி நீரோவின் பெர்முடாக்கள் ; ஜுடோ டேவிட்டின் கராட்டே வெட்டுக்கள் என்று முன்பொரு சமயம் நம்மை வாய்பிளக்கச் செய்த சமாச்சாரங்கள் எல்லாமே மறுபடியும் வாய்பிளக்கச்  செய்தன தான் – ஆனால் 'கெக்கே பிக்கே' சிரிப்புகளில் ! அந்த நாட்களில், அந்த அகவைகளில் ரசித்த சமாச்சாரங்களை, இன்றைக்கு மீண்டும் அரவணைக்க முயலும் போதுமே, அதே ரீதியிலான தாக்கங்கள் நம்முள் நிச்சயம் நிகழுமென்று ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்த நம்பிக்கையுடனான எதிர்பார்ப்புகள் தான் சிக்கலின் நதிமூலம் என்பேன் ! அது நிகழாது போகும் போது நம்மை நாமே லேசாய்ப் பதம் பார்த்துக் கொள்ள முனைந்தோம் – எள்ளல்கள் வாயிலாய் ! நாட்கள் நகர நகர, "சுவாரஸ்யமாய் வாசிக்க" என்ற நிலை மாற்றம் கண்டு – ”வாஞ்சையாய் சேகரிக்க” என்ற நிலை பிறந்துள்ளது கடந்த சிலபல மாதங்களாய் ! சரி, நமது பதிவுகளில், அலசல்களில் தான் லேசாய் போரடித்து விட்டது போலும் என்று பார்த்தால் – புத்தக விழாக்களிலும், ஆன்லைன் ஆர்டர்களிலுமே அந்த முதலிரண்டு ஆண்டுகளின் பரபரப்பும், வேகமும் சிறுகச் சிறுக மறைந்து வருகின்றன! முகவர்களுமே இப்போது – “டெக்ஸில் எல்லாத்திலேயும் 2; கிராபிக் நாவல்லே 2” என்று பரிணாம வளர்ச்சி கண்டுள்ளனர் !

இத்தருணத்தில் எனது பிரதம கேள்வி: ”கிடைக்காதிருந்த வரை அலையடித்த ஆர்வமானது – சரளமாய்க் கிடைக்கத் துவங்கிய பின்பாக வடியத் துவங்கி விட்டதா?” என்பதே! இது நாள் வரை கடைகளில்; ஆன்லைனில் வாங்கி வந்த இந்தப் பழமைவிரும்பிகள் கூட சிறுகச் சிறுக காணாது போய் வருவதே இங்கே என்னைச் சலனம் கொள்ளச் செய்யும் விஷயம் ! சகல ஜானர்களையும் வாசிக்கும் இன்றைய current வாசகர்களுக்கு இந்த மறுபதிப்புகளின் புராதன நெடி நெருடலாகியிருக்கும் பட்சத்தில், அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது! ஆனால் “காமிக்ஸ் என்றாலே மாயாவி & கோ மாத்திரமே !!" என்ற ரீதியிலானோர் அரூபமாகத் துவங்கி வருவதே எனக்கு ஆதங்கத்தைத் தரும் விஷயம் !

So where do we go from here on reprints ? ஓ... யெஸ்... அன்றைக்கு கறுப்பு-வெள்ளையில் நாம் பார்த்த / ரசித்த கேப்டன் பிரின்ஸ்... ரிப்போர்ட்டர் ஜானி... லக்கி லூக்... சிக் பில்... டெக்ஸ் வில்லர் ஆகியோரை இன்றைக்கு வண்ணத்தில் உயர்தரத்தில் பார்ப்பது பாகுபாடின்றி வரவேற்புப் பெற்றுள்ளது ! So அவை தொடரும் ஆண்டிலும் தொடர்ந்திட நாம் ஏகமனதாய் ‘யெஸ்‘ சொல்வோமென்ற நம்பிக்கை எனக்குள் நிறையவே உள்ளது ! அவை நீங்கலாய் – “மறுக்கா ரிப் கிர்பி... காரிகன்... விங் கமாண்டர் ஜார்ஜ் ப்ளீஸ்!” என்ற கோரிக்கைகள் சிதறலாய் ஈரோட்டில் ஒலித்தன தான்! And PHANTOM ?? என்ற கேள்வி இம்முறையுமே உரக்க ஒலிக்காதில்லை !! வேதாளரை மறுபடியும் கொணர வேண்டுமெனில் அதற்கென நாம் எவ்விதம் தயாராகிக் கொள்ள வேண்டுமென்பதைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறேன் ! That still holds good ! So “இரத்தப் படலம்” எனும் மறுபதிப்புகளிலான இறுதி எல்லையைக் கடந்தான பின்னே பெருசாய் பழசின் பக்கமாய்க் காதல் பார்வைகளை பாய்ச்ச இனி முகாந்திரங்களில்லை என்பதே எனது புரிதல் ! மெயின் நாற்வழிச்சாலையில் புதுக் கதைகள் வெவ்வேறு பாணிகளில் இனி பயணிக்க, ஓரமான சர்வீஸ் லேனில் லக்கி லூக்; டெக்ஸ்; பிரின்ஸ் & கோ.வின் மறுபதிப்புகள் மட்டும் வண்ணத்தில் தொடர்ந்திடுவது யாருக்கும் நெருடலிலா சங்கதியாய் அமைந்திடலாமென்பது எனது அபிப்பிராயம் ! கொஞ்சமோ – நிறையவோ; காசு கொடுத்து வாங்கும் (மறுபதிப்புப்) பிரதிகளை நாலு தபா ஆசையாய்த் தடவிக் கொடுத்து விட்டு பீரோவுக்குள் தஞ்சமாகச் செய்வதை விடவும், அவற்றை பிரியத்தோடு வாசிக்க ஒரு வழி பிறப்பின் – உங்களுக்கும், எங்களுக்கும் மகிழ்ச்சியாகிடாதா ? So ஆசை தீர; திளைக்கத் திளைக்க மறுபதிப்புகளை ருசித்து விட்ட திருப்தியோடு – இனி புதுப் பாதைகளை நோக்கிக் குதிரைகளை விடலாமா? Maybe இன்னமும் ஒரு நூறு மாயாவிகளும் ; வேதாளர்களும் ; லாரன்ஸ்-டேவிட்களும் நாம் பார்த்திரா மூலைமுடுக்குகளில் இருக்கக்  கூடுமோ – என்னவோ ? அவர்களைத் தேடிப் புறப்பட முழு மனசாய் நாம் சகலரும்  முனைந்தால் அந்த வேட்டையே சுவாரஸ்யமாகிடும் தானே?

சின்னதொரு stat மட்டும் இங்கே :

Post 2015 - கிட்டத்தட்ட இது வரையிலும் ரூ.6500 செலவிட்டிருப்போம் – மறுபதிப்புகளெனும் தடத்தில் ஏதேதோ நாயகர்களோடு சவாரி செய்திட ! மனநிறைவோடே அந்தப் பணத்தை நீங்கள் நம்மிடம் ஒப்படைக்கச் செய்துள்ளீர்கள்! நாங்களும் எங்களால் இயன்ற நியாயங்களைச் செய்ய முனைந்துள்ளோம்! ஆனால் இந்தத் தொகையானது ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் 2 முழு வருடங்களது ஆண்டுச் சந்தாத் தொகைக்கு ஈடானதாக இருந்து வந்துள்ளதெனும் போது – முழுசாய் 2 வருடங்களைப் பழசின் பயணத்துக்கெனச் செலவிட்டுள்ளோம் என்றாகிறதல்லவா ? The best years of a career are still ahead of me என்ற நம்பிக்கையோடு - உத்வேகத்தைத் தக்க வைத்து வருகிறேன் – எஞ்சியிருக்கும் அடுத்த சில ஆண்டுகளிலான எனது ஓட்டத்துக்கு ! ஆனால் பயணத்தின் பாதி நேரம் ரிவர்ஸ் கியரையே போட்டுப் போட்டு வண்டியை ஓட்டுவதனால் – கடக்கக் கூடிய தூரம் அதிகமாய் இராதன்றோ ? இனிமேல் மறுபதிப்புகளைப் பயணத்தின் நொறுக்குத்தீனியாக மாத்திரமே பார்த்துப் பழகுவோமே guys? அதையே சாப்பாடாக்கினால் என்னாகுமென்று தெரியாதவர்களா நீங்கள் ? Full steam ahead!! என்று கூக்குரல் தந்து தான் பாருங்களேன் – கப்பல் எத்தனை சுளுவாய் அலைகளைச் சவாரி செய்கிறதென்று !

ஷப்பா…!! ஏற்கனவே நாடோடி போல காலையொரு ஊர்; மாலையொரு ஊர் என்று திரிந்து வருபவனுக்கு - பயணம்; கப்பல்; ரிவர்ஸ் கியர்; ரயில்; சவாரி; என்று படிக்கப் படிக்க இன்னும் கொஞசம் தலை கிறுகிறுக்கிறது! அந்தக் கிறுகிறுப்போடே – சில கிறக்கம் தரும் சமாச்சாரங்கள் பக்கமாய் பார்வைகளைப் பாய்ச்சுவோமா?

”கி.நா”!! திரும்பிப் பார்க்கையில் ஒற்றை விஷயம் புரிகிறது! இந்த “எதுமாதிரியுமிலாதப் புதுமாதிரி” கதைத் தேடல்களைப் பொறுத்தமட்டில் – எல்லாத் தருணங்களிலும் நாம் எல்லோருமே ஒரே பக்கத்தில், ஒரே ரசனையோடிருப்பதென்பது அதிசயத்திலும் அதிசயம் என்பதே அது! எனக்கு மெலிதான சோகம் பிடித்தால் – அது உங்களுக்கும் பிடித்திருக்குமென்ற எதிர்பார்ப்பு எல்லாத் தருணங்களிலும் நிஜமாகிடாது ! எனக்கு வரலாற்றுப் பரிசோதனைகள் சுவாரஸ்யமானதாய்த் தோன்றலாம் – ஆனால் அதுவே உங்களது வாசிப்புகளுக்கு இசைவானதாய் அமையும் வாய்ப்புகள் 50-50 தான்! தனிமையைப் பிரதிபலிக்கும் களங்கள் என்னளவிற்கு ஓ.கே.யாகிடலாம்; ஆனால் அதுவே உங்களிடமும் thumbs up பெற்றிடுமா ? என்பது கேள்விக்குறியே ! இது வரையிலான ஒவ்வொரு கிராபிக் நாவல் முயற்சியும் உங்களிடையே உற்பத்தி செய்துள்ளவை வானவில்லின் ஒவ்வொரு பரிமாணத்திலுமான, பல்விதமான reaction-களையே எனும் போது எனது மேற்படி statement வலு காண்கிறது ! இங்கொரு முக்கிய இடைச்செருகல் அவசியம் என்பேன் ! நானிங்கு குறிப்பிடுவது “அண்டர்டேக்கர்” போன்றோ – “இரத்தப் படலம்” போன்றோ கொஞ்சமாகவேணும் கமர்ஷியல் சமாச்சாரங்களின் கலப்பிலா hardcore கதைகளைப் பற்றி மாத்திரமே ! இங்கும் கூட - "அண்டர்டேக்கரில் " ஏது commercial சமாச்சாரங்கள் என்று நண்பர்களுள் மாற்றுக் கருத்துக்கள் இருந்திடலாம் ! எனது தற்போதைய கி.நா.சார்ந்த கேள்வியான இதுவே :

2019 -ல் நாம் தனித்தடத்தில் கிராபிக் நாவல்களோடு மீண்டும் பயணிக்க என்னயிருப்பதில் நிச்சயம் பெரியதொரு சிதம்பர ரகசியமெல்லாம் கிடையாது தான் ! அதனில் லேசான commercial பூச்சுடனான ; ஓரளவுக்கேனும் அனைவரும் தலைநுழைக்கக் கூடிய கதைகளாகத் தேர்வு செய்வதா ? அல்லது - கதைகளின் அடர்த்திகளும், ஆழங்களும் மாத்திரமே தேர்வுகளின் காரணிகளாக இருந்து விடட்டுமா ? பின்னது தான் உங்கள் பதிலாக இருக்குமெனில் :

** ஒரு முடியா இரவு...
** என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்
** கனவுகளின் கதையிது
** நிஜங்கள் நிசப்தம்

போன்ற கதைகளை நோக்கியே நான் தூண்டில்களை வீசிட வேண்டி வரும் ! அதே சமயம் - "ஓவராய்க் கடுங்காப்பி வேண்டாமே ; லேசாய்ச் சக்கரையும் போட்டுக்குவோமே ?" என்று நீங்கள் அபிப்பிராயப்பட்டால் -

** அண்டர்டேக்கர்
** பௌன்சர்
** இரவே..இருளே..கொள்ளாதே !

போன்ற பயணிகளுக்கு நான் 'ஜே' பொட்டாக வேண்டும் ! இரு ரகங்களிலுமே கதைகளை shortlist செய்து வைத்துள்ளேன் என்பதால் - எந்தப் பக்கமாய்ச் சாய்தல் தேவலாம் ? என்ற கேள்வி மட்டுமே உங்கள் முன்னே இப்போது ! 

அதே போல எனது கேள்வி # 2 – How much is too much? & how much is too little ? என்பதே! நம்மிடமுள்ள பட்ஜெட் அதுவே தான் எனும் போது – அதற்குள்ளாகவே பஞ்சுமிட்டாய்களையும் வாங்கித் தந்திட வேண்டும்; ராட்டினத்திலும் ஏற்றிக் காட்டிட வேண்டும்; டெல்லி அப்பளத்தையும் சுவைக்கச் செய்திட வேண்டும்; கடைகளில் கண்ணில் படும் புது பொம்மைகளையும் வாங்கித் தந்திட வேண்டுமே என்ற பட்ஜெட் பத்மநாப நைனாவைப் போலொரு அங்கலாய்ப்பு எனக்குள் ! So இந்த “கிராபிக் நாவல்” எனும் ஜானருக்கென நாம் ஒதுக்கக் கூடிய slots எத்தகைளாய் இருத்தல் நலம் ? என்ற கேள்வியும் எனக்குள்ளே ! ஈரோட்டில் இம்முறை “கி.நா.”வுக்கு 'ஜே' போட்ட நண்பர்கள கணிசமே ! +2 மாணவனான அகில் கூட இதன் ரசிகன் என்பதை ஆச்சர்யத்தோடு பார்த்தேன்! So 2019-ன் பட்ஜெட் பங்கீட்டில் கி.நா. slots பற்றிய மகாசிந்தனைகளும் புலிக்கேசி ஸ்டைலில் கழிவு அறைகளில் கூடத் தொடர்ந்து வருகின்றன இப்போதெல்லாம் ! Your take on this folks ?

இங்கே சின்னதொரு கருத்துச் சிதறலையும் நினைவில் இருத்திட விழைகிறேன்! ”ஐயா... நான் சராசரியான ரசிகன் தான். எனக்கு அறிவுஜீவிக் குல்லாக்கள் சேருவதில்லை! நாலு சில்லுமூக்குச் சிதறும் அலப்பரைகளும்; நாலு ரவுண்ட் தோட்டாக்கள் தெறிக்கும் அலம்பல்களுமே, காமிக்ஸ் படித்த திருப்தியைத் தரும் ! So இருட்டுக்குள்ளாற 'நொய்-நொய்னு' பக்கம் பக்கமா ; பத்தி பத்தியாப் பேசும் பாணிகள்லாம் சரிப்படாது! அக்காங்... சொல்லிப்புட்டேன்!” என்று சொல்லும் நண்பர்களுமே நம்மிடையே கணிசம் ! So – தனித்தடமே என்றாலும் மெயின்ஸ்ட்ரீம் காமிக்ஸ் ரசிகர்களை ரொம்பவும் அந்நியப்படுத்திடாது இந்தப் பரீட்சார்த்தக் களங்களில் கால்பதிக்கும் அவசியம் நமக்குள்ளது !

”பல நேரங்களில் வாசகர்களிடம் நிறைய தீர்மானம் சார்ந்த கேள்விகளை முன்வைக்கிறீர்களே... இது பலமா? பலவீனமா? என்று நண்பர் ஆதிதாமிரா ஈரோட்டில் என்னிடம் கேட்டது இங்கே நினைவுக்கு வருகிறது ! "பிள்ளையையும் கிள்ளி விட்டுக்கிறான்... தொட்டிலையும் ஆட்டி விட்டுக் கொள்கிறான்!" என்றுமே நண்பர்கள் நிறையத் தருணங்களில் என்னைப் பற்றி அபிப்பிராயப்படுவதுண்டு என்பதை அறியாதவனல்ல நான் ! இதோ இங்கேயே – “கிராபிக் நாவல்கள் நிறையப் போடலாமா?” என்று கேட்ட கையோடே – “மித அணுகுமுறை” பற்றியும் எழுதியுள்ளேன்! இவையெல்லாமே சிந்தனையில் தெளிவின்மையாகவோ; முரண்களின் சங்கமமாகவோ தோன்றிடலாம் தான்! ஆனால் எந்தவொரு முக்கியத் தீர்மானம் சார்ந்த கேள்வியையும் அணுகும் போது எனக்குள் பூரண தெளிவு இருப்பதுண்டு ! அந்தத் தெளிவை நானே உரக்கப் பரிசோதித்துப் பார்க்க யத்தனிப்பதன் பிரதிபலிப்புகளே – பொதுவெளியில் இரு தரப்பு வாசகர்களின் இடங்களிலிருந்தும் அந்த விஷயத்தைக் கேள்விகளாக்கிப் பார்ப்பது!

முன்செல்லும் பயணத்தில் மாறுபட்ட ரசனைகளை சிறுகச் சிறுகத் தான் நுழைத்திட முடியுமென்பது எனக்குப் புரிகிறது ! மாற்றங்களை துவேஷத்தோடு பார்ப்பதே இயல்பு ; moreso ஒருவிதப் பழக்கதோஷத்தில் ஊறிப்போன காமிக்ஸ் வாசிப்புகளில், மாற்றங்கள் சார்ந்த முயற்சிகளுக்கு மெதுமெதுவாய்த் தான் அங்கீகாரம் கிடைக்குமென்பதும் புரிகிறது ! அதே போல நமது தம்மாத்துண்டு வாசக வட்டத்தை – இந்த அடர்த்தியான ரசனையின் காரணமாய் சிதறிட அனுமதிக்கவும் ஆகாது என்பது தலையாய முக்கியத்துவம் பெறுவதும் புரிகிறது ! பல்லாயிரம் சர்குலேஷன் கொண்டதொரு பத்திரிகையின் தலைமைப் பொறுப்பில் குந்தியிருப்பின், விற்பனை நம்பர்களின் ஏற்றங்களையோ – இறக்கங்களையோ வைத்து எடிட்டோரியல் தேர்வு செய்து வரும் மார்க்கமானது சரியா? தப்பா? என்று எடைபோட்டிட முடியலாம் ! ஆனால் நம் கதையோ வேறல்லவா ? ஒரு மரத்தில் கூடு கட்ட வரும் பறவைகளின் எண்ணிக்கையே நமது வட்டமும் எனும் போது – இயன்றமட்டிலும் ஒவ்வொரு பறவையின் கீச்சுக் குரலையும் கேட்டுணர முயற்சிக்க நினைக்கிறேன் ! Of course – எல்லாக் கோரிக்கைகளையும் நிஜமாக்கும் ஆற்றலெல்லாம் யாருக்கும் சாத்தியமல்ல என்பது ஸ்பஷ்டமாகவே புரிகிறது! ஆனால் வார்த்தைக்கு முச்சூடு – “இது ஊர்கூடி இழுக்கும் தேர்” என்று சொல்லி விட்டு திருவிழா நெருங்கும் போது நானாகத் தரத்தரவென இழுக்க முனைவது நியாயமாகாதே?! ”ஏதோவொரு ரூபத்தில் என் நிலைப்பாட்டிலிருந்தும் முட்டைக்கண்ணன் யோசிக்க முனைகிறானே” என்ற திருப்தி நண்பர்கள் மனதில் ஒரு கணமாவது, சன்னமாகவாவது, துளிர்விட விரும்புவதால் தான் – எல்லாத் தடவைகளுமே இரு பக்கங்களின் சார்பாகவும் குரல் தர நானே முயற்சிக்கிறேன்! So என்னைப் பொறுத்தவரையிலும் இந்தச் சமையலில் உப்பையும், மிளகையும், மசாலையும் அளவு பார்த்து குண்டாச்சட்டியில் போடும் சமையல் சங்கரபாண்டி ultimate ஆக நானே ; ஆனால் அவற்றைத் தத்தம் கைகளால் கொஞ்சமாகவாவது எடுத்துத் தரும் வாய்ப்பை வாசகர்களுக்கும் தருவதும் ஒரு ஜாலி தானே ? உப்பு கூடுதலாய்த் தோன்றினால் சத்தமில்லாமல் அதில் ஆளாக்கை யாரும் பார்க்காத வண்ணம் கீழே வீசி விடலாம்; காரம் ஓவரானால் மிளகாயைப் போடுவது போல பாவ்லா காட்டிவிட்டு பைக்குள் அவற்றைத் திணித்துக் கொள்ளலாமல்லவா? Of course – இதற்கொரு flipside-ம் உண்டென்று புரியாதில்லை ! ”நான் தந்த உப்பை கீழே கடாசிட்டான் தடிப்பயல்!” என்று விசனங்கள் எழுவது சாத்தியமே ! ஆனால் பந்தி பரிமாறும் வாய்ப்பு ஒவ்வொரு 30 நாட்களுக்குமே இந்தச் சமையல் சங்கரபாண்டிக்கு வாய்த்திடும் போது – சாப்பாட்டைச் சூடாய், சுவையாய்ப்  பரிமாறிடும் கணமே அந்த வருத்தங்கள் காணாமல் போய்விடுமே ! என்ற நம்பிக்கையும் இருப்பதால் தான், பிள்ளையைக் கிள்ளவும் துணிகிறேன்!

பக்கத்து சீட்டிலிருக்கும் வெள்ளைக்காரர் என்னையும், கோழி கூச்சியது போலான எனது கையெழுத்தையும் விநோதமாய் பராக்குப் பார்ப்பது ஒரு மாதிரி இருப்பதால் இப்போதைக்குக் கிளம்புகிறேன் folks ! ஆங்காங்கே நான் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் தந்திட முனைந்தால் மகிழ்ச்சி ! அப்புறம் சின்னதாயொரு update:

இரத்தப் படலம்” பாகம் 2-ன் பைண்டிங்கில் குளறுபடிகள் அரங்கேறியுள்ளது புரிகிறது! பைண்டிங் செய்திடும் நமது காண்டிராக்டருமே இந்தப் பிழைகளுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கத் தெரியாது தடுமாறி வருகிறார்! வரிசைக்கிரமமான பக்கங்களை லைனாக அடுக்கி வைத்துக் கொண்டு ஒன்றுக்குள் ஒன்றை இணைத்துத் தைப்பது தான் process. அதனில் நேர்ந்துள்ள பிசகு தான் சகலத்துக்கும் மையம் என்பது புரிகிறது ! இதைத் தவிர்க்க foolproof வழியொன்று கண்டுபிடிப்பதே தற்போதைய தலையாய அவசியம் என்று உணர்கிறேன்! சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள் guys – இது தொடர்கதையாகிடாதிருக்க நிச்சயம் ஆனமட்டிலும் முயற்சிப்போம் ! பிழையான பிரதிகளை கேள்விகளின்றி மாற்றித் தந்திடுவோம்; So தயை கூர்ந்து பொறுமை காத்திடக் கோருகிறோம் !

And கையிருப்பு நிலவரம் இது :  மொத்தமே 100 பிரதிகளுக்குள் தான் stock இருக்கும். அவற்றுள் பாகம் 2-ஐ முழுமையாகச் சரிபார்த்த பின்பே இனி விற்பனை செய்திடப் போகிறோம் என்பதால் தற்காலிகமாய் ஆன்லைன் புக்கிங்கை நிறுத்தியுள்ளோம் ! அதே போல ஏஜெண்ட்கள் வாயிலாக வாங்கிட முயற்சிக்கும் நண்பர்களும் சற்றே பொறுத்திட வேண்டி வரலாம்! So வரும் வியாழன் வரைக்கும் இரத்தப் படல dispatch இராது! அதன் பொருட்டு நமது ஆபீஸ் பெண்மணிகளைக் காய்ச்சிட வேண்டாமே – ப்ளீஸ்! பிழை அவர்களல்லது அல்ல!

And சின்னதொரு கோரிக்கையுமே all! மீதமிருப்பது சொற்பப் பிரதிகளே என்பதால் இதுவரையிலும் வாங்கியிருக்கா நண்பர்களுக்கு வாய்ப்புத் தரும் விதமாய் – "ஒன்று படிக்க – மீதம் சேகரிக்க” என்ற பாலிஸியை இம்முறை மட்டுமாவது விட்டுத் தரக் கோருகிறேன் !

அப்புறம் இன்னொரு சந்தோஷ update கூட :

நம் நண்பர் கார்திகைப் பாண்டியன் அவர்களுக்கு - ஆர்தர் ரைம்போவின் “நரகத்தில் ஒரு பருவகாலம்” என்கிற கவிதைத் தொகுப்பினை மொழிபெயர்த்தமைக்கு -  கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது வழங்கப்பட்டிருக்கிறது. !! Awesome news !! வாழ்த்துக்கள் நண்பரே !! And உங்களுக்கோர் ஆச்சர்யம் காத்துள்ளது விரைவில் என்று மட்டும் சொல்லி வைக்கிறேன் இப்போதைக்கு !
Bye for now folks…. See you around!! Have an awesome Sunday !!

309 comments:

  1. வணக்கம் காமிக்ஸ் நண்பர்களே...

    ReplyDelete
  2. வணக்கம் சார்...
    வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே..

    ReplyDelete
  4. வந்துட்டாருய்யா எடிட்டர்

    ReplyDelete
    Replies
    1. கேரளா போயி மாட்டிகிட்டாரோன்னு பயந்துட்டேன்....

      Delete
  5. // And கையிருப்பு நிலவரம் இது : மொத்தமே 100 பிரதிகளுக்குள் தான் stock இருக்கும்.//
    காலையில் ஒரு நல்ல செய்தி,மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. 100க்குள் தான் இருக்கு எனில் வெளியான மாதமே விற்றுத் தீர்ந்த சாதனையையும் இரத்தப்படலம் சொந்தமாக்கிக் கொள்ள போகிறது... அட்டகாசம்..!!!


      வேறு எதுவும் அப்படி விற்றிருக்கா என்ன??

      Delete
    2. வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

      Delete
    3. ஜனவரிக்கு முன் காலி அருமை நண்பர்களே

      Delete
    4. ///வேறு எதுவும் அப்படி விற்றிருக்கா என்ன??///

      நி.நி. வெளியான சனவாியிலேயே காலி!!

      Delete
    5. மிதுன்

      மிடீல

      Delete
    6. Fastest sales ever - என்ற பெருமை கி.நா.வின் உச்சப் பிரதிநிதியான நி.நி-குத் தான் !!

      Delete
  6. // ஆர்தர் ரைம்போவின் “நரகத்தில் ஒரு பருவகாலம்” என்கிற கவிதைத் தொகுப்பினை மொழிபெயர்த்தமைக்கு - கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது வழங்கப்பட்டிருக்கிறது. ! //
    அருமை,அருமை,வாழ்த்துகள் கார்த்திகை பாண்டியன் சார்.

    ReplyDelete
  7. ///நம் நண்பர் கார்திகைப் பாண்டியன் அவர்களுக்கு - ஆர்தர் ரைம்போவின் “நரகத்தில் ஒரு பருவகாலம்” என்கிற கவிதைத் தொகுப்பினை மொழிபெயர்த்தமைக்கு - கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது வழங்கப்பட்டிருக்கிறது.///---

    ---வாழ்த்துகள் நண்பரே கா.பா.👏👏👏👏👏🎈🎈🎈🎈🎈🎈💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌

    ReplyDelete
  8. // இத்தருணத்தில் எனது பிரதம கேள்வி: ”கிடைக்காதிருந்த வரை அலையடித்த ஆர்வமானது – சரளமாய்க் கிடைக்கத் துவங்கிய பின்பாக வடியத் துவங்கி விட்டதா?” //
    எதிர்பார்த்தது கிடைத்து விட்டது,இனி என்ன அவ்வளவுதானே என்ற எண்ணமாகவும் இருக்கலாம்,எல்லோருக்கும் புதிய தேடலும்,தொடர்ந்த தேடலும் சார்ந்த எண்ணம் இருக்க வாய்ப்பில்லை,எனவே இத்துடன் போதும் என்ற எண்ணத்தாலும் இருக்கலாம்.

    ReplyDelete
  9. காலை வணக்கம் அனைவருக்கும்

    ReplyDelete
    Replies
    1. நண்பர் கார்த்திகை பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

      Delete
  10. Still I have not reached rathapadalam

    ReplyDelete
  11. // "ஓவராய்க் கடுங்காப்பி வேண்டாமே ; லேசாய்ச் சக்கரையும் போட்டுக்குவோமே ?" என்று நீங்கள் அபிப்பிராயப்பட்டால் - //
    எனது எண்ணமும் இதுவே சார்,ஒரு நி.நி க்கே தலைவர் மற்றும் சில நண்பர்கள் பின்னங்கால் பிடறி தெறிக்க ஓடுகிறார்கள்,முழுமையான கடுங்காப்பியோ, commercial பூச்சு இல்லாத கி.நா வோ ஓவர் டோஸ் ஆனால் சற்றேனும் அயர்ச்சியையோ அல்லது சற்றேனும் வறட்சியான ஒரு தோற்றத்தையோ ஏற்படுத்த வாய்ப்புள்ளது,எனவே கலவையான ஒரு காம்போ பேக்கில் தருவது நலம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நானாவது சொல்லிருறேன்..பாதி பேரு சொல்லாமவே மனசுகுள்ளேயே வச்சுகுறாங்க ரவி சார்...;-(

      Delete
    2. தலீவரே! உங்களை திருப்திப்படுத்த பல நூறு கதைதள் வந்துவிட்டன! தொடா்ந்து வரவும் போகின்றன!

      என் போன்ற நி.நி. விரும்பிகளுக்கு ஆசிாியா் வழங்கியிருக்கும் இதழ் இது ஒன்று தான் என்பேன்!

      "அண்டா்டெக்கா்" ம் கூட கி.நா.சந்தாவில் வந்தாலும் அதுவும் ஒரு எண்டா்டெய்ன் வாிசைக் கதை தான்!

      என்னளவில்,
      1. நிஜங்களின் நிசப்தம்
      2. தேவ ரகசியம் தேடலுக்கல்ல
      3. இரவே இருளே கொல்லாதே

      இவை போன்றவை தான் நிஜமான கி.நா.க்கள்!

      வருடத்திற்கு வரும் 40 + இதழ்களில் ஒன்று இதுபோல் வந்தால் என்ன பிரச்சனை!

      மாடஸ்டியை எல்லாம் நாங்கள் பொறுத்துக் கொள்வதில்லையா?

      அதுபோல கடந்து செல்லுங்களேன்!

      Delete
  12. கிராபிக் நாவல் ...
    1. இரண்டு விதமாகவும் முயற்சி பண்ணலாம் சார் ..

    கேள்வி # 2 – How much is too much? & how much is too little ? என்பதே!

    வருடத்திற்கு 6 கிராபிக் நாவல் இதழ்கள் சரியாக இருக்கும் என்று நினைக்கிறன் சார்..
    மறுபதிப்பு ..
    1.“மறுக்கா ரிப் கிர்பி... காரிகன்... விங் கமாண்டர் ஜார்ஜ் ப்ளீஸ்!"
    அவர்களின் பெஸ்ட் கதைகளை ஒன்று அல்லது இரண்டு முயற்சி பண்ணலாம் சார்..
    2 .My personal request sir .. அடுத்த வருட சந்தாவில் Tiger இல்லை என்றால் "இளமையில் கொல்" Tiger கதையை வண்ணத்தில் மறுபதிப்பு செய்ய முடியுமா சார் .. Tiger இல்லாத குறையை அது இல்லாமல் செய்யும் ..

    3.வன ரேஞ்சர் ஜோ வின் மூன்று சாகசங்களையும் வண்ணத்தில் வெளியிட முடியுமா சார் .. just my request ..

    ReplyDelete
  13. /// லேசான commercial பூச்சுடனான ; ஓரளவுக்கேனும் அனைவரும் தலைநுழைக்கக் கூடிய கதைகளாகத் தேர்வு செய்வதா ? அல்லது - கதைகளின் அடர்த்திகளும், ஆழங்களும் மாத்திரமே தேர்வுகளின் காரணிகளாக இருந்து விடட்டுமா ///

    கமர்ஷியல் பூச்சு உள்ளவைகளை தேர்வு செய்யலாம் ..

    ஆரம்பத்தில் அதுதான் நல்லது ...


    ///அதே போல எனது கேள்வி # 2 – How much is too much? & how much is too little ? என்பதே! //

    தனிப்பட்ட முறையில் பட்ஜெட் வரையறை ஏதுமில்லை ..

    எல்லா தரப்பினரின் கருத்துகளின் அடிப்படையில் முடிவெடுக்கலாம் .

    ReplyDelete
  14. ///நம் நண்பர் கார்திகைப் பாண்டியன் அவர்களுக்கு - ஆர்தர் ரைம்போவின் “நரகத்தில் ஒரு பருவகாலம்” என்கிற கவிதைத் தொகுப்பினை மொழிபெயர்த்தமைக்கு - கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது வழங்கப்பட்டிருக்கிறது.///---

    பாராட்டுகள் தோழரே !

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் கார்த்திகை பாண்டியன் சார் ..

      Delete
  15. சார் டெக்ஸ் கதைகள் இதுவரை கிட்டத்தட்ட 95 இதழ்களுக்கு அருகமையில் வந்துவிட்டது,இந்த வருடமே நூறை தொட வாய்ப்புள்ளது,ஆனாலும் டெக்ஸ் நூறு ஸ்பெஷல் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை,அதற்கு டெக்ஸ் 70 யும் ஒரு காரணமாக இருக்கலாம்.எனினும் டெக்ஸ் 100 வது ஸ்பெஷல் இருந்தால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும்,இந்த குறையை தீர்க்க வரும் 2019 ஜனவரியில் வெளியாகும் 3 மில்லியன் ஸ்பெஷலை டெக்ஸ் 100 வது ஸ்பெஷல் என அறிவித்து வெளியிட வாய்ப்பு இருந்தால் ஆவண செய்யுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. ///இந்த குறையை தீர்க்க வரும் 2019 ஜனவரியில் வெளியாகும் 3 மில்லியன் ஸ்பெஷலை டெக்ஸ் 100 வது ஸ்பெஷல் என அறிவித்து வெளியிட வாய்ப்பு இருந்தால் ஆவண செய்யுங்கள் சார்.///

      ப்ளஸ்ஸோ ப்ளஸ்கள்...

      Delete
    2. வழிமொழிகிறேன்...

      Delete
    3. சார்,
      நீங்கள் இதை மறந்தது எப்படியோ?!
      100th டெக்ஸ் க்கு +11111

      Delete
    4. இதோ எனது ஆதரவும்.

      Delete
  16. // So இந்த “கிராபிக் நாவல்” எனும் ஜானருக்கென நாம் ஒதுக்கக் கூடிய slots எத்தகைளாய் இருத்தல் நலம் ? //
    6 கி.நா சரியாக இருக்கலாம்,இதற்கு குறைவாக இருந்தாலும் நன்றாக இருக்காது,இந்த தடத்தின் விற்பனையையும்,வரவேற்பையும்,விமர்சனங்களையும் கொண்டு 2020 ற்கான கி.நா ஸ்லாட்டை தீர்மானிக்கலாம்.

    ReplyDelete
  17. எல்லாருக்கும் நமஸ்காரம்..

    ReplyDelete
  18. கேள்வி 1.

    கீழ்கண்டவைக்கு ஜே மட்டும் இல்லை. ஜே..ஜே...

    ஒரு முடியா இரவு...
    என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்
    கனவுகளின் கதையிது
    அண்டர்டேக்கர்
    இரவே..இருளே..கொள்ளாதே !

    ReplyDelete
    Replies
    1. வோட்டு போடச் சொன்னால் - எல்லா பட்டன்களையும் அமுக்கினால் எப்படி சார் ?

      Delete
  19. வணக்கம் சார் .வணக்கம் தொழர்களே

    ReplyDelete
  20. கமர்ஷியல்ல பாதி, கடுங்காப்பியில பாதி வெளியிடலாம் சார்.

    ReplyDelete
    Replies
    1. 6 + 6 ன்னு சொல்லுங்க!! 😂😂

      Delete

  21. // ஆர்தர் ரைம்போவின் “நரகத்தில் ஒரு பருவகாலம்” என்கிற கவிதைத் தொகுப்பினை மொழிபெயர்த்தமைக்கு - கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது வழங்கப்பட்டிருக்கிறது. ! //
    அருமை,அருமை,வாழ்த்துகள் கார்த்திகை பாண்டியன் சார்.

    ReplyDelete
  22. KP வாழ்த்துக்கள் ஐயா.
    தொடருங்கள் உங்கள் உத்வேகத்தை.
    தணியாத் தமிழ் தாகம் கொண்டு....

    ReplyDelete
  23. Replies
    1. எல்லாம் சரியாகிடும் சகோ ! நம்புங்கள் !!

      Delete
    2. ஆசிரியரின் அன்புக்கு நன்றி.

      Delete
  24. //காமிக்ஸ் என்றாலே மாயாவி & கோ மாத்திரமே !!" என்ற ரீதியிலானோர் அரூபமாகத் துவங்கி வருவதே எனக்கு ஆதங்கத்தைத் தரும் விஷயம் !// இல்லாதபோது வேண்டும் என்று சட்டையை பிடிப்பதும், இருக்கும்போது சீண்டாமல் போவதும் நம்மவர் இயல்பு. இதைத்தான் ஆரம்பமுதலே சொன்னோம் சாா். இந்த 6000+ தொகைக்கு புதுக்கதைகள் பலவற்றை அள்ளித்தந்திருப்பீர்களே என்ற ஆதங்கத்தை யாரிடம் போய்ச் சொல்வது? மறுபதிப்பு கேட்டு நச்சரித்தவர்கள் அவற்றின் விற்பனைக்கும் உதவிடலாமே? இந்த லட்சணத்தில் இப்போது ஆர்ச்சி என்றுவேறு பரபரக்கிறார்கள் மறு பதிப்புகளை பிரிண்ட் ஆன் டிமாண்ட் அடிப்படையில் கொண்டுவாருங்கள் சாா்.அதுதான் பாதுகாப்பானது.

    ReplyDelete
    Replies
    1. //இந்த 6000+ தொகைக்கு புதுக்கதைகள் பலவற்றை அள்ளித்தந்திருப்பீர்களே என்ற ஆதங்கத்தை யாரிடம் போய்ச் சொல்வது? //

      //மறு பதிப்புகளை பிரிண்ட் ஆன் டிமாண்ட் அடிப்படையில் கொண்டுவாருங்கள் சாா்.அதுதான் பாதுகாப்பானது.//

      பாதுகாப்பாய் இருக்கலாம் தான் சார் ; ஆனால் ஒவ்வொரு இதழும் கோரும் நேரமும், உழைப்பும், கவனமும் எக்கச்சக்கம் தானே ? அதை ஒட்டுமொத்தமாய் புதுசின்பால் செலுத்தும் போது கிடைக்கும் ஒரு திருப்தி - அந்த print on demand - அல்லது ஏதோவொரு பாணியிலான மறுபதிப்பு முயற்சிகளில் missing !! என்னளவிற்காவது !!

      Delete
  25. நம் நண்பர் கார்திகைப் பாண்டியன் அவர்களுக்கு - ஆர்தர் ரைம்போவின் “நரகத்தில் ஒரு பருவகாலம்” என்கிற கவிதைத் தொகுப்பினை மொழிபெயர்த்தமைக்கு - கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது வழங்கப்பட்டிருக்கிறது. !! Awesome news !! வாழ்த்துக்கள் நண்பரே !! And உங்களுக்கோர் ஆச்சர்யம் காத்துள்ளது விரைவில் என்று மட்டும் சொல்லி வைக்கிறேன் இப்போதைக்கு !

    #######


    எனது மனமார்ந்த வாழ்த்துகள் சார்..

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்...டைப்பிங் மிஸ்டேக்..:-(

      Delete
    2. டைப் பண்ணது எங்கே?? காணலியே??

      Delete
  27. ///அதனில் லேசான commercial பூச்சுடனான ; ஓரளவுக்கேனும் அனைவரும் தலைநுழைக்கக் கூடிய கதைகளாகத் தேர்வு செய்வதா ? அல்லது - கதைகளின் அடர்த்திகளும், ஆழங்களும் மாத்திரமே தேர்வுகளின் காரணிகளாக இருந்து விடட்டுமா ? ///

    எதுக்கு சார் வம்பு.... இதுல பாதி... அதுல பாதி..

    ///So இந்த “கிராபிக் நாவல்” எனும் ஜானருக்கென நாம் ஒதுக்கக் கூடிய slots எத்தகைளாய் இருத்தல் நலம் ? ///

    8


    நண்பர் கார்த்திகை பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. //எதுக்கு சார் வம்பு.... இதுல பாதி... அதுல பாதி..//

      பூவை - "பூ"ன்னு ஒருவாட்டியும் ; "புய்ப்பம்" என்று இன்னொருவாட்டியும் சொல்லிக்கலாம் என்கிறீர்கள் !!

      Delete
  28. கிராபிக் நாவல்..

    அண்டர்டேக்கர்..,பெளன்சர் போன்ற கிராபிக் (?) இதழ்களை கேட்கவே வேண்டாம் சார்..பட்டையை கிளப்புங்கள் .

    ஒரு முடியா இரவு ,என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் போன்ற கதைகளும் அருமை சார் .அது போன்ற கதைகளும் ஓகே..


    ஆனால் நி.நி.போன்ற இதழ்களை பொறுத்தவரை .....


    இன்னும் படிக்க முடியா நிலையில் உள்ள அந்த இதழை பற்றி நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது என்றே நினைக்கிறேன்..:-)


    ReplyDelete
  29. இரத்தப்படலம்


    மறுதட பயணம் ஆகவே இருந்தாலும் நேற்றுடன் பதிமூன்றுடன் இனிதே பயணம் முடிந்தது. அவருடன் பயணித்த பதினெட்டு பாகங்களும் பதினெட்டு மைல் கல்கள்.ஏற்கனவே தொடராக சிறிது ,பிறகு கறுப்பு வெள்ளையில் முழுதொகுப்பாக என பயணம் செய்த இதழாகவே இருப்பினும் இந்த வண்ண பயணத்தில் இன்னும் அதிக ஈடுபாட்டுடனே பயணம் செய்ய இயன்றது.அதுவும் மூன்றாம் தொகுப்பில் பல பக்கங்கள் மனதில் கனத்தையும் ,நெகிழ்வுகளையும் இப்பொழுதும் ஏற்படுத்தியது .உதாரணமாக கர்னல் ஆமோஸ் மரணம் ,காரிங்கடன் தோழர் சார்லியின் மரணம் ,பதிமூன்றை தேடிவரும் வயதான தம்பதியரின் சொத்துடமை என சொல்லி கொண்டே போகலாம்.இந்த பத்து நாட்களில் பதிமூன்றுடன் தான் பயணத்தை அதிகம் செலவிட்டு உள்ளேன். படித்த இதழாகவே இருப்பினும் ஒரு பாகம் முடிந்தவுடன் அடுத்த பாகம் செல்ல மனம் பரபரவென துடித்தது உண்மை.மறுபதிப்பு இதழ்களை பொறுத்தவரை அதுவும் இரத்த படலத்தை பொறுத்தவரை மீண்டும் மறுவாசிப்பாக படிக்க வேண்டுமெனில் ஆசை இருப்பினும் நேரம் ,கால சூழல் ,பணி ஓய்வு என கிடைத்தாலுமே கூட மீண்டும் பயணிக்க முடியுமா என்ற சந்தேகம் இருப்பது உண்டு .ஆனால் இந்த வண்ண மறுபதிப்பால் மீண்டும் பதிமூன்றுடன் பயணம் செல்ல வாயப்பு கிடைத்தது மிக பெரிய வரமே.கறுப்பு வெள்ளையில் முதல் முறை படித்த பொழுது இறுதி முடிவில் இதழை படித்து பொழுது ஏற்பட்ட அனுபவங்களும் ,ஒரு வித அனுதாப நிம்மதியும் ,மனதில் ஏதோ ஓர் உணர்வுடன் கண்களில் ஏற்பட்ட ஈரகசிவும் கொஞ்சம் கூட மாறவில்லை இப்பொழுதும்.படைப்பாளர்களையும் ,தமிழில் படைத்த தங்களையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை சார்.

    என்னை பொறுத்தவரை அன்று சொன்னதை இன்றும் சொல்கிறேன்.இரத்த படலம் காவியமே ஆனால் இந்த பதினெட்டு பாக முடிவுடன் இருந்தால் மட்டுமே இது காவியம்.இதற்கு மேலும் ,இந்த அழகான முடிவிற்கு மேலும் இரத்த படலத்தை நீட்டித்து செல்வது வியாபாரத்திற்கு சிறப்பு சேர்க்கலாம்.ஆனால் கண்டிப்பாக படைப்பிற்கு கிடையாது என்பது எனது தனிப்பட்ட எண்ணம்.

    என் இனிய நண்பா பதிமூன்று ....நீ ஆலனா ,ஜேஸன் ப்ளையா ,கெல்லி ப்ரைய்னா ,ஸ்டீவ் ராலாண்டா ,ஓ நீலா, ராஸ் டான்னரா இல்லை இன்னும் வேறு நபரா என உனக்கே நினைவாற்றல் வந்தாலும் கூட உன் நிம்மதியை குலைக்க படைப்பாளர்களும் ,ரசிகர்களும் துடிப்பார்கள் அவர்கள் கவலை அவர்களுக்கு .ஏன் உனக்கு கூட மீண்டும் அவர்களுடன் பயணம் செய்ய துடிக்கலாம் தான். ஆனால் என்னை பொறுத்த வரை நீ எனக்கு ஜேஸன் மக்லேன் ஆகவே இதே நிம்மதியுடன் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே என் ஆசை மட்டுமல்ல வேண்டுதலும் கூட .அந்த வயதான தம்பதியரின் இந்த அழகிய கடற்கரை பிரதேசத்திலியே உன் நிம்மதி நிலைக்க இறைவனை வேண்டுகிறேன்.

    குட்லக் X111....

    ReplyDelete
    Replies
    1. // என்னை பொறுத்தவரை அன்று சொன்னதை இன்றும் சொல்கிறேன்.இரத்த படலம் காவியமே ஆனால் இந்த பதினெட்டு பாக முடிவுடன் இருந்தால் மட்டுமே இது காவியம். //
      நச்னு சொன்னிங்க தலைவரே,எனது கருத்தும் இதுவே.

      Delete
    2. ஆத்மார்த்தமான கருத்துக்கள் ஜி இதை நானும் ஆமோதிக்கிறேன் மற்றும் ஆராதிக்கிறேன்.

      Delete
    3. என்னைக் கேட்டால் - XIII - பாகம் பதின்மூன்றோடே மங்களம் பாடும் விதமாய் அமைந்திருப்பின் வீரியத்தின் உச்சங்களைத் தொட்டிருக்கும் என்பேன் ! ஒரிஜினல் திட்டமிடலும் அதுவே ; ஆனால் விற்பனையில் கிட்டிய செம வரவேற்பைக் கருத்தில் கொண்டு நீளத்தை அதிகமாக்கினர் படைப்பாளிகள் ! கதாசிரியர் வான் ஹாம் பதினெட்டாம் பாகத்தோடு விடைபெற்றதும் இதன் காரணமாகவே !

      Delete
  30. கார்த்திகை பாண்டியன் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    நம்மிடையே இருக்கும் அமைதியான சாதனையாளர்களை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ///நம்மிடையே இருக்கும் அமைதியான சாதனையாளர்களை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது.///

      உண்மை!!

      Delete
    2. // நம்மிடையே இருக்கும் அமைதியான சாதனையாளர்களை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. //
      உண்மை,சிறு வட்டமாய் இருப்பினும் திறன்மிக்கவர்கள் மிகுந்த வட்டமிது.

      Delete
    3. பு.வி மொழிபெயர்ப்பு அட்டகாசம் மிகவும் ரசித்து படித்தேன்.
      இரத்த படலம் மறுவாசிப்பு மற்றும் முதன்முதலாக படிப்பவர்கள் புலன் விசாரணை முழுவதுமாக படித்துவிட்டு பின்னர் இ.ப. தொடரவும்.
      கா.பா. மற்றும் ஜே,ஆசிரியர் உழைப்பு அபாரம்.

      Delete
    4. ///நம்மிடையே இருக்கும் அமைதியான சாதனையாளர்களை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது.///

      +11111

      Delete
  31. அன்பின் கா.பா'வுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!

    இந்த விருதை மட்டுமன்றி வேறு பல விருதுகளையும், உயரங்களையும் தொட்டிட எம் வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும் உங்களுக்காக என்றென்றும்!!

    பி.கு : நீங்க 'புலன் விசாரணை'யை மொழிபெயர்த்த விசயம் இந்த ஊர் உலகுக்கு சரியாத் தெரியலை போலிருக்கு.. இல்லேன்னா, உலகத்துலயே பெரிய மொழிபெயர்ப்புக்கான விருதை நிச்சயமா உங்களுக்கே கொடுத்திருப்பாங்க! (பரிசுத் தொகையான பதினஞ்சு மில்லியன் டாலரில் - 9 மில்லியன் உங்களுக்கு - 6 மில்லியன் நம்ம J சாருக்கு!) :)

    ReplyDelete
    Replies
    1. அந்த ஒன்பது மில்லியனையும் கேரளா வெள்ள நிவாரணத்தின் பொருட்டு முதலமைச்சரின் நிதிக்காக அனுப்பியுள்ளார் நண்பர் !!

      Delete
    2. Hats off கார்த்திகைப்பாண்டியன்சார்.மிகவும் பெருமையாக உள்ளது.

      Delete
    3. ////அந்த ஒன்பது மில்லியனையும் கேரளா வெள்ள நிவாரணத்தின் பொருட்டு முதலமைச்சரின் நிதிக்காக அனுப்பியுள்ளார் நண்பர் !!///

      வாவ்!! ( எழுந்து நின்று கைதட்டும் படங்கள் -பத்து!)

      Delete
  32. ////ஆனால் – விற்பனையில் தெரிந்த உத்வேகம் – உங்களது அலசல்களில் வேறு மாதிரியாய் தெறிக்கத் துவங்கின நடுவாக்கில் ! தலைகீழ் சிரசாசன SMS-கள்; நியூயார்க்கைத் தர தரவென இழுத்துப் போகும் தில் ; ஜானி நீரோவின் பெர்முடாக்கள் ; ஜுடோ டேவிட்டின் கராட்டே வெட்டுக்கள் என்று முன்பொரு சமயம் நம்மை வாய்பிளக்கச் செய்த சமாச்சாரங்கள் எல்லாமே மறுபடியும் வாய்பிளக்கச் செய்தன தான் – ஆனால் 'கெக்கே பிக்கே' சிரிப்புகளில் ! ////

    மன்னிச்சுக்கோங்க எடிட்டர் சார்.. கொஞ்சம் ஓவரா கலாய்ச்சுட்டோம் போலிருக்கு! அ..ஆனா... அவங்களைவிட்டா விட்டா எங்களுக்கு வேறு யாரு இருக்கா?

    ReplyDelete
    Replies
    1. அட... "கலாய்க்காது ஒரு நாளும் இருக்க வேண்டாம் !!" என்று ஆத்திச்சூடியையே இன்றைய நம் சமூகத்துக்காக நவீனமாய் மாற்றப் போகிறார்களாம் சார் !! இங்கே நாம் கலாய்ப்பதெல்லாம் ஒரு மேட்டரா ?

      Delete
  33. கேள்வி 2.
    கி. நா. தனித் தடத்திலும் குறைந்த எண்ணிக்கை பதிப்புகளிலும் முன் பதிவுக்கு மட்டுமென வருவது நலமாக இருக்கும் எ. எ. க.

    ReplyDelete
  34. காலை வணக்கம் விஜயன் சார்,மற்றும்
    நண்பர்களே
    குறைந்த எண்ணிக்கையில் வந்தாலும்
    நிறைந்த மகிழ்வை தந்த இரத்தப்படலம்
    இன்னும் பல தகர்க்க இயலா சாதனைகளை
    நிகழ்த்தும்.

    ReplyDelete

  35. // இத்தருணத்தில் எனது பிரதம கேள்வி: ”கிடைக்காதிருந்த வரை அலையடித்த ஆர்வமானது – சரளமாய்க் கிடைக்கத் துவங்கிய பின்பாக வடியத் துவங்கி விட்டதா?” //

    #உண்மை அதுதான் போல சார்.
    சுடும் நிஜத்தோடு ஒப்புக் கொள்கிறோம்.

    இதுவரை வந்த மும்மூர்த்தி காலத்திய மறுபதிப்புகளை ஓருசிலர் தான் வாசித்து இருப்பார்கள் போல...!! கலக்சன்க்காக மட்டுமே அநேகர் வாங்குறோம் என்பதே நிதர்சனம்.

    மற்ற வண்ண மறுப்பதிப்புகள் எல்லோரும் வாசிக்கிறோம்.

    மின்னும் மரணம், இரத்தகோட்டை, இரத்தப்படலம் & டெக்ஸ் வண்ண மறுபதிப்புகள், லக்கி & சிக்பில் க்ளாசிக்ஸ் & பிரின்ஸ்-ஜானிகள் எல்லாம் ரசிக்கிறோம்.

    ஒரேயடியாக மறுபதிப்புகளை நிறுத்தாமல், வண்ணத்தில் தொடரலாம் சார்.

    ReplyDelete
    Replies
    1. மைன்ட் வாய்ஸ்: அப்பவே கொரில்லா சாம்ராஜ்யம் கலரில் போட்டு இருக்கலாம். ஹூம். இப்படி நல்லா தொடங்கியது நொண்டுதே...!!!

      Delete
    2. அப்படி இல்லை டெக்ஸ்
      நம் ஆசிரியர் கொரில்லா சாம்ராஜ்யம்
      கொள்ளையர் பிசாசு & யார் இந்த மாயாவி
      மூன்றையும் வண்ணத்தில் தருவார்.

      Delete
    3. கணேஷ் சார்@3ம் வந்தா நல்லாத்தான் இருக்கும். கலரில் நிச்சயமாக படித்துவிட முடியும். ஒரே புக்கா போட்டு அவுங்களை வழியனிப்பி வைத்து கூட போதுமே...!!!

      Delete
    4. அதன் 3 கூடவே கொலைகார குள்ளநரி சேர்த்து கொண்டால் சூப்பர்

      Delete
  36. மறு பதிப்புகள் எங்கள் பால்யத்தை
    மீட்டு எடுக்கின்றது என்பதில் யாருக்கும்
    ஐயமில்லை.
    ஆதலால் ஆசிரியர் ஆவன செய்யுமாறு
    அன்புடன் கோபத்துடன் மிரட்டலுடன்
    கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

    ReplyDelete
    Replies
    1. பிள்ளைகளின் பால்யங்களுக்கு சிறிதேனும் இனி விதைக்க முனைந்திடுவோம் சார் !! அவர்களின் கனாக்களை நிஜமாக்கி அழகு பார்க்க வேண்டிய தருணங்களில், நாமே கனாக் காணும் பாலகர்களாய் காலமெல்லாம் அரை நிஜார்களோடு நிற்க நினைத்தால் பொருத்தமாக இருக்குமா ?

      Delete
    2. சார் தற்போதய குழந்தைகள்
      ஸ்மார்ட்போன் தவிர வேறு எதையும்
      தொடமறுக்கும்போது அவர்களுக்கும்
      சேர்த்து எங்களுக்கே .ஹிஹிஹிஹி

      Delete
  37. கி.நா. கமர்ஷியல்

    ReplyDelete
  38. ///இத்தருணத்தில் எனது பிரதம கேள்வி: ”கிடைக்காதிருந்த வரை அலையடித்த ஆர்வமானது – சரளமாய்க் கிடைக்கத் துவங்கிய பின்பாக வடியத் துவங்கி விட்டதா?” என்பதே! ///


    இப்போதெல்லாம் புத்தகத் திருவிழாக்களில் கூட பெரும்பாலும் 2 அல்லது 3 மறுபதிப்புகளே வாங்கப்படுகின்றன! அவையும்கூட, தன் nostalgic நினைவுகளை தக்கணூண்டு தட்டியெழுப்பிடவும், பேரன்-பேத்திகளிடம் காட்டி "இதையெல்லாம் படிச்சுத்தான் நான் தமிழே கத்துக்கிட்டேனாக்கும்" என்று பெருமையடித்துக் கொள்ளவுமே! ( இதில் பலர் அந்தப் புத்தகங்களிலுள்ள வசனங்களை வரிக்கு வரி ஞாமகம் வைத்திருப்பதும் - ஆச்சரியமே!)

    60 வயதைத் தொட்ட/கடந்த நம் மூத்த வாசகர்களுக்குத் தன் பிள்ளைகளைக் கல்யாணம் செய்து வைக்கவும், ஏற்கனவே அந்தக் கடமையை முடித்துவிட்டவர்கள் ஆன்மீகப் பாதையில் கோயில்- குளங்களுக்குப் பயணம் செல்லவுமே ஆர்வம் காட்டுகின்றனர் போல தெரிகிறது!

    மும்மூர்த்திகளின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்பது கசப்பான உண்மை!!

    ReplyDelete
    Replies
    1. ////மும்மூர்த்திகளின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்பது கசப்பான உண்மை!!///

      கசப்பான உண்மை...!!!

      Delete
    2. //60 வயதைத் தொட்ட/கடந்த நம் மூத்த வாசகர்களுக்குத் தன் பிள்ளைகளைக் கல்யாணம் செய்து வைக்கவும், ஏற்கனவே அந்தக் கடமையை முடித்துவிட்டவர்கள் ஆன்மீகப் பாதையில் கோயில்- குளங்களுக்குப் பயணம் செல்லவுமே ஆர்வம் காட்டுகின்றனர் போல தெரிகிறது!//

      நிச்சயமாய்த் தவறில்லை ; ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ற தேடல் இருப்பது இயல்பே !!

      ஆனால் காமிக்ஸ் என்று வந்துவிட்டால் மட்டும் - நாமெல்லாம் சாயச் சட்டிக்குள் மண்டையை அப்டிக்கா ஒரு முக்கு முக்கியெடுத்த கையோடு - யூத்தாகிப் போய் விடுகிறோம் !!

      Is a medical miracle !!

      Delete
    3. // நாமெல்லாம் சாயச் சட்டிக்குள் மண்டையை அப்டிக்கா ஒரு முக்கு முக்கியெடுத்த கையோடு - யூத்தாகிப் போய் விடுகிறோம் !!

      Is a medical miracle !! //
      சார்,சிரிச்சி மாளலை சார்,முடியல சார் முடியல.

      Delete
  39. GMT+5:30
    /// லேசான commercial பூச்சுடனான ; ஓரளவுக்கேனும் அனைவரும் தலைநுழைக்கக் கூடிய கதைகளாகத் தேர்வு செய்வதா ? அல்லது - கதைகளின் அடர்த்திகளும், ஆழங்களும் மாத்திரமே தேர்வுகளின் காரணிகளாக இருந்து விடட்டுமா ///

    கமர்ஷியல் தான் எல்லோரும் லைக் பண்றாங்க எனும்போது.....அதையே போட்டுத் தள்ளுங்க!!!!

    (மனசே இல்லை தான், என்னசெய்ய!!! நட்புகளின் விருப்பத்தை மதிக்கனும்& வரவேற்பு இருக்கனுமே)


    ///அதே போல எனது கேள்வி # 2 – How much is too much? & how much is too little ? என்பதே! //

    6போதுமானது சார்.

    ஆல்டர்நேடிவ் மாதம் வரட்டும்.

    கதை நீளங்களில் யோசிக்கவே வேணாம்.

    அண்டர்டேக்கர் ஒன்னு போச்சுனா 5தான் இருக்கும்...!!!


    முடிந்தவரை பெரிய கதைகளாக இருக்கட்டும் சார்.

    கதைலதான் கனம் வேணாம்னுட்டாங்க.

    கதை நீளத்தில் கனம் இருந்தா குஷியாவாங்க...!!!

    ReplyDelete
    Replies
    1. /கதைலதான் கனம் வேணாம்னுட்டாங்க.

      கதை நீளத்தில் கனம் இருந்தா குஷியாவாங்க...!!!//

      இது வேறேயா ? :-)

      Delete
  40. ///ஆனால் 'காமிக்ஸ் என்றாலே மாயாவி & கோ மாத்திரமே !!' என்ற ரீதியிலானோர் அரூபமாகத் துவங்கி வருவதே எனக்கு ஆதங்கத்தைத் தரும் விஷயம் !///


    காமிக்ஸ் என்றாலே மாயாவி என்ற நிலை இருந்தது உண்மை தான். ஆனால், இன்று லயன்-முத்து புண்ணியத்தில் நூற்றுக்கணக்கில், பல்வேறு கலவைகளில் ஹீரோக்களையும், கதைகளையே ஹீரோக்களாக கொண்ட காமிக்ஸ்களையும் வெளியிட்டு பெறும் போது, எங்களுடைய இரசனைகளும் கூட நிகழ்காலத்திற்கு பயணம் செய்கின்றன. இதனை மாயாவி அல்லது ஸ்பைடர் போன்ற பழைய ஜாம்பவான்களின் மீதான ஆர்வத்தில் ஏற்பட்ட தொய்வாக கருதாமல், புதிய ஹீரோக்களின், புதிய கதைகளின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் பரிணாம வளர்ச்சியாகவே கருத முடியும்.

    இறுதியான அளவுகோல் விற்பனை எண்ணிக்கை மட்டுமே என்பது நிதர்சனமான உண்மையாயினும், பல்வேறு சூழல்களில் சாகசங்கள் மட்டுமல்லாமல், நிகழ்காலத்திற்கு ஏற்ற வகையில் பாத்திரத்தை ஏற்றுள்ள நாயகர்களின் மீதான மையல் கொஞ்சம் கொஞ்சமாக உயரும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. யதார்த்தம் தெறிக்கும் கருத்து சார் !! I fully agree....

      Delete
  41. விஜயன் சார், மும்மூர்த்திகளின் மறுபதிப்பு செய்திடாத கதைகளை மறுபதிப்பு செய்திட முன்னுரிமை கொடுங்கள். இந்த வருடம் ஏற்கனவே மும்மூர்த்திகளின் கதைகளை குறைத்து விட்டீர்கள்.

    நீங்கள் ஏற்கனவே கூறியபடி மும்மூர்த்திகளின் கதைகள் முழுவதை மறுபதிப்பு செய்யாவிட்டாலும் இதுவரை மறுபதிப்பு காணாத அல்லது அதிகம் மறுபதிப்பு செய்யாத கதைகளை மட்டுமாவது வரும் ஆண்டில் இருந்து வெளியீட வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மாட்டு வண்டிகளுக்கு ரேடியல் டயர் என்பதில் என்ன ஆதாயம் காணப் போகிறோமோ தெரியலியே சார் ? அதே மாடுகள் ; அதே வேகத்தில் ; அதே செக்கைத் தானே சுற்றி வரப்போகின்றன ?

      Delete
    2. அவைகளை கண்ணில் பார்க்காத படிக்காத என் போன்றோரின் சந்தோஷம் ஒரு ஆதாயம் தானே சார்.:-)

      Delete
    3. நீங்கள் மட்டுமன்றி, யாருமே பார்க்காத-படிக்காத கதைகளைக் கண்ணில் காட்டும் போது கிட்டக் கூடிய ஆதாயங்களின் பரிமாணங்களையும் எடை போட்டுப் பாருங்களேன் ?

      Delete
    4. மாட்டு வண்டியில் வருடத்துக்கு 4-6
      டிரிப்பாவது அடிக்கலாமே. ப்ளீஸ் சார்.

      Delete
  42. கிராபிக் நாவல்களே, வித்தியாச ரசனைக்காகவே! அவற்றில் மசாலா தூவல் வேண்டாமே!! பிறகு, அதுவே தொடர் கதையாகிடும்.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சாி நண்பரே!

      எனது கருத்தும் அதுவே!!

      Delete
    2. @ MITHUNAN : இந்தப் பின்னூட்டத்துக்கு உங்களின் display படம் செம பொருத்தம் சார் !!

      Delete
  43. மொழி பெயர்ப்பு என்பது ரசனைக்குரிய கலை. அபரிமித வாசிப்பும் ஆற்றலும் தேவைப்படும். அதில் விருது பெறுவதென்பது பெரும் சாதனையே! வாழ்த்துகள் திரு கார்த்திகைப் பாண்டியன்.

    ReplyDelete
  44. Replies
    1. ஹை !! நீங்களாச்சும் சொன்னீர்களே சார் !!

      Delete
  45. Sir really I can't get it. What is the point...yes or no to reprints..? I d like to see our old Vijayan sir with plain language. And it is simple sir...If commercially a failure, just say no to reprints. Our publication must prosper.

    ReplyDelete
    Replies
    1. Once more படித்துப் பாருங்கள் சார் - கேள்விகளுக்குள்ளே பதில்களும் உள்ளன !

      Delete
  46. விஜயன் சார்,
    // கிடைக்காதிருந்த வரை அலையடித்த ஆர்வமானது – சரளமாய்க் கிடைக்கத் துவங்கிய பின்பாக வடியத் துவங்கி விட்டதா?”//

    என்னை பொறுத்தவரை வரை மும்மூர்த்திகளின் மறுபதிப்பு ஆரம்பித்த போது நண்பர்கள் பலரின் வேண்டுதல் மறுபதிப்பு காணாத அல்லது அதிகம் மறுபதிப்பு காணாத கதைகளை வேண்டும் என கேட்டனர். ஆனால் நீங்கள் எல்லாம் அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் வந்து விடும்.

    எனது வேண்டுகோள் இதுவே: மும்மூர்த்திகள் மற்றும் வேறு எந்த பழைய கதையானாலும் மறுபதிப்பு காணாத அல்லது அதிக முறை மறுபதிப்பு காணாத கதைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

    ஆர்ச்சியின் கதைகளை மறுபதிப்பு செய்வதாக இருந்தால் இதுவரை மறுபதிப்பு ஆகாத கதைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. ஆர்ச்சியா ? இதென்ன புதுக் கூத்துடா சாமி ? Phew !!!

      Delete
    2. என்ன விஜயன் சார். நீங்கள் தான் கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள் ஆர்ச்சியை (பார்க்கலாம் சார்) கண்ணில் காட்டுகிறேன் என்று சொன்னீர்கள். இப்போது"இது என்னடா புதுக் கூத்து" என்கிறீர்கள்.

      Delete
    3. சார்....மாயாவியே தாளம் போட்டு வரும் நாட்களிவை !! யார்தான் எதிர்பார்த்தது இப்படியொரு காலம் - இத்தனை சீக்கிரமே புலருமென்று ?

      Delete
    4. கண்டிப்பாக நீங்கள்தான் சொன்னீர்கள் ஆசிரியரே ஆர்ச்சி வந்தாலும் ஆச்சரியமில்லை என்று

      Delete
    5. Appuram.... Archie pudhu koothu illai sir pazhaya koothu!

      Delete
  47. Tex கதைக்கு Beneventoவின் சித்திரங்கள்... வாவ்.. அந்தப் பின்னணியும் கலரிங்கும்... கிறங்கடிக்குது..!

    ReplyDelete
  48. விஜயன் சார், வண்ணத்தில் மறுபதிப்பு: சூப்பர் டூப்பர் ஹிட் கதைகளுக்கு மட்டும் வண்ண மறுபதிப்புகளுக்கு முன்னுரிமை தர வேண்டுகிறேன்.

    டெக்ஸ் வண்ண மறுபதிப்பு 2019 பின்னர் வேண்டாம்.‌ ஏன்: இவரின் புதிய கதைகள் பல நூறு இருக்கும் போது பழையவற்றில் நேரம் மற்றும் பணத்தை செலவிட வேண்டாம் என்பதே.

    ReplyDelete
  49. விஜயன் சார், அடுத்த வருட மறுபதிப்பில் வைரஸ் X வர வாய்ப்பு உள்ளதா? இதுவரை இந்த கதையை நான் படித்தது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. "வைரஸ் X- பழைய கதை எனவே அதில் பணம் மற்றும் நேரத்தை செலவிட வேணாமே"---என அதை படித்து விட்ட நண்பர்கள் கேட்க கூடுமல்லவா பரணி???

      ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கதை படித்து இருக்க மாட்டோம் தான்.

      Delete
    2. டெக்ஸ் பற்றி நான் எழுதிய பின்னூட்டத்தில் இரண்டாம் பகுதியில் சொன்ன விஷயத்தை கவனித்தீர்களா ஜி. வைரஸ் x கதாநாயகனின் புதிய கதைகள் இன்றும் நமது காமிக்ஸில் வந்தால் நான் இந்த "ஒரு கதையை மட்டும் மறுபதிப்பாக" கேட்டு இருக்கமாட்டேன் ஜி.

      Delete
    3. கழுகுவேட்டை,
      பழிக்குப்பழி,
      இரத்த முத்திரை,
      மரணமுள்,
      நள்ளிரவு வேட்டை,
      இரத்த நகரம்,
      மெக்சிக்கோ படலம்,
      எல்லையில் ஒரு யுத்தம்,
      சிவப்பாய் ஒரு சிலுவை,

      -----போன்றவை இன்னும் நிறையபேர் படிக்கனும்;
      இவைகள் கலரில் கண்ணைப்பறிக்கும்.
      2019டு போதும் எனில் இதைப்போன்ற க்ளாசிக் கதைகள் பலர் படிக்காமலே போக கூடும்....

      வருடம் ஒரு டெக்ஸ் மறுபதிப்பு வரட்டும் நண்பரே...!!!

      வைரஸ்X, கொரில்லா சாம்ராஜ்யம் போன்ற கோஹினூர்களும் எல்லோரும் தரிசிக்க வேண்டியவை.

      போனெல்லியில் இதுவரை 800டெக்ஸ் கதைகளுக்கு மேலே ஓடிக்கொண்டு இருக்கிறது.

      அங்கேயும் தவிர்க்க முடியாத தடம் எதுனா??????

      """" மறுபதிப்புகள் தான்""""

      மறுபதில மட்டுமே 3பிரத்யேக தடங்கள் ஓடுது போல....!!!

      Delete
    4. டெக்ஸுக்கு பின்புலமாயிருப்பது 70 வருடப் பாரம்பர்யம் எனும் போது, அதனுள் மூன்றுக்கும் மேற்பட்ட தலைமுறைகள் அடங்கிடுவது கண்கூடு ! So அவர்கள் மறுபதிப்புகளை மெருகூட்டித் தாக்கித் தள்ளுவதில் வியப்பில்லை ! ஆனால் இங்கே யதார்த்தத்தைப் பாருங்கள் சார் - ஒற்றைத் தலைமுறையைத் தாண்டிடவில்லை வாசக வட்டத்தில் ! பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் ரசிக்கும் அகவையிலுள்ள நாம் தான் - "பால்ய நாட்களை" நினைவு கூர்ந்து சப்புக் கொட்டி வருகிறோம் !

      இத்தாலியிலிருப்பதோ - தொடரும் புதிய தலைமுறைகளுக்கு பழமையின் பெருமைகளைக் கண்ணில் காட்டும் முயற்சி ! இங்கேயோ - "பழசும்-நானே ; புதுசும் நானே" என்று சுயம்பாய் எழுந்து நிற்கும் தலைமுறையின் கனாக் காணும் காலங்கள் !!

      Delete
  50. விஜயன் சார், மும்மூர்த்திகள் தவிர பிற கருப்பு வெள்ளை நாயகர்களின் சூப்பர் ஹிட் கதைகளை வருடம் ஒருமுறை 2-4 கதைகளை இணைத்து ஒரு தொகுப்பாக அவ்வப்போது தர முடியுமா? அல்லது ஜம்போவில்?

    ReplyDelete
    Replies
    1. சார்.... மாட்டு வண்டிகளுக்கு ரேடியல் டயர்களைப் போட்டுப் பார்ப்பதில், காசையும், உழைப்பையு,ம் விரயம் செய்வதை விட்டுக் கொஞ்சம் விலகிட தான் முனைவோமே ?

      Delete
    2. எல புதுசா மயாவிகளும், ஸ்பைடர்களும் லாரன்சுகளும் வருவாங்கங்றாருள்ள !அந்த கொலை படை , விண்வெளி பிசாசு , சின்ன சைசுல யார் அந்த மினி ஸ்பைடர், நீதிக்காவலன் ஸ்பைடர மட்டும் கேப்பம்ல !இவரு சொல்ரத பாத்தா அதிரடிக்கு பஞ்சமில்ல போல,,,

      Delete
  51. புலன்விசாரணையும் மொழிபெயர்ப்பும் சில சிந்தனைகளும்
    (நன்றி : இணையதள மூதறிஞர் மக்கள் )    புலன்விசாரணை மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட தோழர்கள் கா.பா மற்றும் ஜனார்த்தனன் ஆகியோருக்கு நயமிக்க படைப்பை அளித்தமைக்கு முதலில் மனப்பூர்வமான பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்.


    மொழிபெயர்ப்பு பணி என்பது மிகவும் சிக்கலான பணி .
    எப்படைப்பை எம்மொழியில் இருந்து எம்மொழிக்கு மொழிபெயர்க்கிறோமோ
    அவ்விருமொழி ஞானம் மற்றும் சொல்லாட்சி புலமை மிக குறைந்த பட்சமாக தேவைப்படும்.

    ''சரியான மொழிபெயர்ப்பு'' என்பது ஒரு மொழியில் சொல்லப்படும் கருத்துகளைப் பொருட்சிதைவு பிறழாத வகையிலும், மொழியின் அமைப்பு, சமுதாயச் சூழல், பண்பாட்டு நிலை இவற்றிற்கு ஏற்பவும் மிகப் பொருத்தமாகக் கூட்டாமலும் குறைக்காமலும் எழுதும் நிலையாகும்.
    எனச்சொல்கிறார் முனைவர் ஜோசபின் டோரதி ...

    வீணையடி நீ எனக்கு; மேவும் விரல் நானுனக்கு
    என்னும் மகாகவி பாரதியின் கவிதையை,
    Thou to me the harp of god And I to thee the finger bold
    என ஒருவர் மொழிபெயர்த்துள்ளார் ...மொழிபெயர்த்தவரும் அனைவர்க்கும் அறிமுகமானவர்தான் ...அவர் பெயரை பதிவின் இறுதியில் அறிக .
    ///மூலமொழி நூலின் கருத்துகளை விட அதிகமான செய்திகளை, பெயர்ப்பு நூலிற்கு ஏற்றவாறு கூறுவதைத்தான்விரிவான மொழி பெயர்ப்பு என்கிறோம். இது ஒருவகையான மொழிபெயர்ப்பு..
    வி.எஸ்.வி. இராகவன் அவர்கள் எழுதிய மெகஸ்தனீஸ் என்னும் மொழிபெயர்ப்பு நூலில் கூட ''இந்நூலில் வரும் வரலாற்றுத் தொடர்பான பகுதிகளுக்கு வரலாற்றில் புகழ்மிக்க பலருடைய நூல்களிலிருந்து ஆங்காங்கே மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியங்களிலிருந்தும் ஆங்காங்கே பொருத்தமான ஒப்புமைப் பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன'' என்ற பதிப்புரையின் படி நோக்குங்கால் இது ஒரு விரிவான மொழிபெயர்ப்புக்குச் சான்று என்று தெரியலாம்.///
    - முனைவர் ஜோசபின் டோரதி

    எடிட்டர் பௌன்சர் இறுதியில் எழுதிய யாரோ ? யார் அறிவாரோ வாசகர் சிலர் மத்தியில் ஏற்படுத்திய சலசலப்பாகட்டும்: இப்போது ஈவி ட்யூராங்கோ –வின் தனிக்கதையில் வெற்றிடத்தை நிரப்ப ஆசிரியர் சொல்லி அற்புதமாக எழுதிய புதைத்தவை ,விதைத்தவை –யாகட்டும் இவ்வகையில் ஏற்புடையவையே.

    மற்றுமோர் பார்வை எடிட்டர் ஏன் மூலத்தில் இல்லாத ஒன்றை கூட்டுகிறார் என்பது பற்றியது ..
    லட்சுமண கோடு என்பது பற்றி தமிழ் அறிந்த யாவரும் அறிவர் ..
    ஆனால் மூலமான வால்மீகி ராமாயணத்தில் இவ்விஷயம் இல்லை .
    மொழி தழுவுதல் என்ற மொழிபெயர்ப்பு வகையில் வரும் மிக பிரபலமான கம்ப ராமாயணத்திலும் இது இல்லை
    துளசிதாசர் ராமாயணத்திலும் இது இல்லை ..

    அருணகிரிநாதரும் சொல்லவில்லை .
    ஆனால் ஆனந்த ராமாயணத்தில் உள்ளது ...அதிக பிரபல்யம் இல்லாத இவ்வகை ராமாயணத்தில் சொல்லப்பட்ட மூலத்தில் இல்லாத ஒரு விஷயம் இவ்வளவு புகழ் பெற்றதன் காரணம் யாதாய் இருக்கக்கூடும் ..? மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதே .

    எப்படியோ எனக்கும் கம்பனுக்கும் தொடர்பு உண்டு,
    செப்புவதெல்லாம் செந்தமிழாய் வருவதாலே,
    ஒருவேளை அக்காலம் கம்பன் வீட்டில் கணக்கெழுதி வாழ்ந்தேனோ?
    கம்பனிடம் சொல், சந்தம் கடன் கேட்டேன். ஏதொன்றும் வட்டியில்லை

    என கம்பன் மேல் அளவிலா வாஞ்சையுள்ள கண்ணதாசன் கூட
    அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தில் (மறைந்த)ஜெயலட்சுமி பாடுவதாக வரும்
    "படாஃபட்;
    என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் என்ற பாடலில்
    கோடு போட்டு நிற்க சொன்னான்
    சீதை நிற்கவில்லையே
    சீதை அன்று நின்றிருந்தால்
    ராமன் கதை இல்லையே என்று லட்சுமணன் கோடு பற்றி எழுதியிருக்கிறார் .
    இலக்கியங்கள் ,சமுதாய கோட்பாடுகள் ,சட்டநூல்கள் வரலாறு ,போன்றவற்றில் உள்ளது உள்ளபடி என்ற மொழிபெயர்ப்பு ( –கூட்டுதல் குறைத்தல் இல்லாதபடி) - –இலக்கணம் பொருந்தும்...
    ஆனால் சித்திரக்கதைகள் போன்ற மனமகிழ்வு கலைகளில் மொழிபெயர்ப்பில் கொஞ்சம் தளர்வுபோக்கை ஆசிரியர் கடைப்பிடிப்பது குறித்து மூன்றாம் கண்ணை திறக்க வேண்டிய அவசியமில்லை ..
    இவ்வகையில் மொழிபெயர்ப்பில் ஆசிரியர் லட்சுமண கோட்டை தாண்டக் கூடாது என அறிவுறுத்த அவசியமில்லை என்பதற்கு இலக்கிய சாட்சியாக லட்சுமண கோடே ஒரு உதாரணம் ...

    ReplyDelete
    Replies
    1. //மூல மொழியிலுள்ள சொல்லுக்கு இணையான மாற்றுமொழிச் சொல்லால் பெயர்க்கும் முறையைத்தான்சொல்லுக்குச் சொல் பெயர்த்தல் என்கிறோம். ஆனால் இம்முறையில் அமையும் மொழிபெயர்ப்பு சிறப்பானதாய் அமையப் பெரும்பாலும் வழி இல்லை. ///

      - முனைவர் ஜோசபின் டோரதி      நண்பர் கா பா-வின் சொல்லாட்சி மிகவும் அருமையானது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது ...சொல்லுக்கு சொல் மொழிபெயர்த்தலில் சில சங்கடங்கள் உண்டு .
      அட்மிரல் ஹைடெகரின் விசாரணைக்கு நன்றி ( ஆவணத்தொகுப்பு என் 3-ஐப் பார்க்கவும் ) ,XX-ன் கூட்டுச் சதியில் வாக்ஸுக்கும் பங்கு உண்டு என்பது எங்களுக்கு தெரியவந்தது ..(காற்புள்ளியை கவனிக்க)
      ------பக்கம் 2௦ -கால்வின் .எல். வாக்ஸ்
      THANKS TO ERODE VIJAY I GOT SALEM TEX VIJAYARAGAVAN’S MOBILE NUMBER
      இதனை
      சேலம் டெக்ஸ் விஜயராகவன் கைப்பேசி எண்ணை அறிய ஈரோடு விஜய் உதவினார் என்றோ
      அல்லது
      சேலம் டெக்ஸ் விஜயராகவன் கைப்பேசி எண்ணை அறிய உதவிய ஈரோடு விஜய்க்கு நான் நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன்
      என்றோ மொழிபெயர்க்கலாம்
      ,XX-ன் கூட்டுச் சதியில் வாக்ஸுக்கும் பங்கு உண்டு என்பதனை அறிய அட்மிரல் ஹைடெகரின் விசாரணை எங்களுக்கு உதவியது
      அல்லது ..
      ,XX-ன் கூட்டுச் சதியில் வாக்ஸுக்கும் பங்கு உண்டு என்பதனை அறிய உதவிய அட்மிரல் ஹைடெகரின் விசாரணைக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டு இருக்கிறோம்
      என்றோ மொழிபெயர்க்கலாம்.

      மொழிபெயர்ப்பு பற்றி மேதாவிலாசம் அல்ல சாதாவிலாசம் கூட எனக்கு இல்லை ..
      தனது எழுத்துகளில் இவ்வகை சிறு உறுத்தல்கள் கூட இருப்பதற்கு ஆசிரியர் அனுமதியார் என்பதை சுட்டி காட்ட மட்டுமே இதனை எழுதியிருக்கிறேன் .
      .

      இடக்கரடக்கல்
      பக்கம் 35 ஜோன்ஸ்
      சிகாகோவின் வாட்ஸ் சேரிப்பகுதியை சேர்ந்தவள் ஜோன்ஸ்.
      சேரி என்ற வார்த்தையை தவிர்த்து இருக்கலாம் ..
      தொடர்ந்து வரும் வரிகளில் உள்ள அழுக்கான குடிசைப்பகுதி என்பதே சர்ச்சைகளை விலக்கி வைக்கும்.
      .SLUM CLEARANCE BOARD என்பது குடிசை மாற்று வாரியம் என்றுதானே அழைக்கப்படுகிறது.

      பக்கம் 86 டான் விடாலி காஸ்டலென்னா
      மெடிட்டரேனியன் தீவுகளின் என்று உள்ளது
      மத்திய தரைக்கடல் தீவுகளின் என அழகு தமிழில் எழுதலாமே ..
      விரல்விட்டு எண்ணும் அளவே குறைகள்
      கா பா –வின் பொதுவான நடையழகும் சொல்லாட்சியை கையாண்டவிதமும் அருமை ..
      புலன் விசாரணை வைபவத்தில் கட்டுரை பகுதியில் மூலவரை(எடிட்டரை ) காண இயலவில்லை எனினும் உற்சவ மூர்த்தியும் அழகுதானே !!!!

      Delete
    2. எடிட்டர் பக்கம் உள்ள குறைகள் :
      ஆவணக்குறிப்புகள் முழுமையாக அச்சிடப்படாமல் அச்சில் விடுபட்டுவிட்டன
      பக்கம் 99 பெப்பே கெரோரோ
      பக்கம் 59 பால் மெர்ரில்
      பக்கம் 57 எமிலியானோ கால்வெஸ்
      பக்கம் 93 மார்டன் முர்டோக் & ஈத்தல் முர்டோக்
      முன் அட்டை வளைகிறது ( தானம் கொடுத்த மாட்டை பல் பிடித்து பார்க்கும் பழக்கம் தொடர்கிறது ...ஹி ..ஹி )

      ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    3. கண்ணதாசனும் விஜயதாசனும்
      ஒரு சேதியை ஒரு மொழியினரின் எல்லா பிரிவினர்க்கும் சென்றடைய செய்வது சிரமமான பணி ...
      சமூகத்தின் பலநிலைகளிலும் உள்ளவர்க்கு சென்றடையும் வகையில் தனது எழுத்துநடையை எளிமையாக கையாளும் பக்குவம் பெற்று இருப்பவர் எடிட்டர் .


      நான் நோக்குங்காலை நிலம் நோக்கும் நோக்காக்கால்
      தான் நோக்கி மெல்ல நகும்

      -வள்ளுவர்

      உன்னை நான் பார்க்கும்போது
      மண்ணை நீ பார்க்கின்றாயே
      விண்ணை நான் பார்க்கும்போது
      என்னை நீ பார்க்கின்றாயே
      ------------------கண்ணதாசன்
      இரண்டும் தமிழ் கவிதை வடிவம் ;பின்னது எளிமையாய்


      அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக
      மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இரு
      கைத்தலை மேல்வைத்து அழும் மைந்தரும் சுடு காடு மட்டே!
      பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!

      ------------------பட்டினத்தார்

      ஆடிய ஆட்டமென்ன தேடிய செல்வமென்ன
      திரண்டதோர் சுற்றமென்ன
      கூடு விட்டு ஆவி போனால்
      கூடவே வருவதென்ன
      வீடு வரை உறவு
      வீதிவரை மனைவி
      காடுவரை பிள்ளை
      கடைசிவரை யாரோ

      ----கண்ணதாசன்

      பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை
      ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
      மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை
      மாகத் தோள் வீர பெற்றாலெங்கனம் வைத்து வாழ்தி”

      –சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம், கம்பராமாயணம்

      பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான்
      அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
      பால்கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தான்
      ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில் வைத்தான்
      யாரம்மா அது நானம்மா
      யாரம்மா அது நானம்மா
      (பாலக்காடு..)
      படம்: வியட்னாம் வீடு
      இசை: KV மகாதேவன்

      ----கண்ணதாசன்
      அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
      உற்றுழித் தீர்வா ருறவல்லர் – அக்குளத்தில்
      கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
      ஒட்டி யுறுவார் உறவு.


      ---- ஔவையாரின் மூதுரை      குளத்தில தண்ணியில்ல கொக்குமில்ல மீனுமில்ல
      பெட்டியில பணமில்லே பெத்த புள்ள சொந்தமில்ல

      பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
      சோதனைய பங்கு வச்சா சொந்தமில்ல பந்தமில்ல

      ---கண்ணதாசன்
      ன் மூதுரை


      நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
      பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
      மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
      விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான்.

      ------------------------------கம்பன்

      நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
      நதி செய்த குற்றமில்லை
      விதி செய்த குற்றமன்றி
      வேறு யாரம்மா ?
      -----------------கண்ணதாசன்

      நிஜங்களின் நிசப்தம் ,கடைசியாக வந்த மார்ட்டின் ,போன்றவற்றில் ஆசிரியரின் மொழிபெயர்ப்பு இலக்கியத்தரம் வாய்ந்தது...
      இவை உதாரணங்களே ...
      இன்னும் பலவற்றை குறிப்பிடமுடியும் ..அவை பலமுறை தளத்தில் பதிவிடப்பட்டுவிட்டபடியால் மீள் கருத்தாய் அமையும் நோக்கில் விலக்கி வைத்தேன்
      தேன்தமிழே ,தென்றலே என சொல்லாமல்
      நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம்தென்றலே
      வளர்பொதிகை மலை தோன்றி மதுரைநகர் கண்டு
      பொலிந்த தமிழ் மன்றமே என்று எழுதிய கண்ணதாசன்தான்
      கொக்குமில்ல மீனுமில்ல என்று எளிய மனங்களில் உய்ர்நத கருத்தை சேர்த்தார்
      டெக்ஸ்-ன் கும் –நங் மடார் மட்டும் வைத்து எடிட்டரை எடை போடாதீர்கள் ...
      தங்கள் மனச்சாட்சியின் உறுத்தலை இந்த தயாளத்தால் கொஞ்சமேனும் மட்டுப்படுத்தினால் தங்களால் சலனமின்றித் தூங்க முடியுமென்ற அபத்தமான சிந்தனைதான் அது.
      நி.நி-லில் இருந்து
      குழப்பமின்றி எளியமுறையில் மொழிபெயர்ப்பினை வழங்கும் காமிக்ஸ் கண்ணதாசனை கூட்டல் கழித்தல் என கணக்காசானாய் மாறி நிறுத்து பார்க்க வேண்டாமே !
      இப்படிக்கு
      மொழிபெயர்ப்பை பொறுத்தவரை

      விஜயதாசன்

      பின் குறிப்பு

      அந்த மொழிபெயர்ப்பை செய்தவர் மகா கவி பாரதியார்தான்
      Delete
    4. கேட்டு கேட்டு சலிச்சு போச்சி
      இருந்தாலும் வேற வழியே இல்ல
      நீங்க யாரு
      இதுக்கு முன்னாடி பம்பாயில என்ன பண்ணிட்டு இருந்தீங்க
      சொல்லுங்கய்யா சொல்லுங்க _/|\_
      .

      Delete
    5. சூப்பரா சொல்லியிருக்கீங்க...செம..

      Delete
    6. செனா அனா! செனா அனா! செனா அனா!
      வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறார் !!!

      Delete
    7. // சமூகத்தின் பலநிலைகளிலும் உள்ளவர்க்கு சென்றடையும் வகையில் தனது எழுத்துநடையை எளிமையாக கையாளும் பக்குவம் பெற்று இருப்பவர் எடிட்டர் .//
      கலப்பில்லாத உண்மை,ஓய்வு நேரங்களில் 4,5 வருடங்களுக்கு முன்பான இதழ்களை வாசிக்க நேரிடும்போது ஆசிரியரின் எழுத்து நடை பார்க்கும்போது வியப்பு மேலிடும்,கதைக் களத்தின் மதிப்பை உணர பல நேரங்களில் அவை துணை நின்றுள்ளன.

      Delete
    8. @ செனாஅனா

      ப்பா!!

      நீங்க ஒரு கி.நா'வை மொழிபெயர்த்தா எப்படியிருக்கும்னு யோசிச்சேன்...

      ப்பா!!!!

      Delete
    9. ////நிஜங்களின் நிசப்தம் ,கடைசியாக வந்த மார்ட்டின் ,போன்றவற்றில் ஆசிரியரின் மொழிபெயர்ப்பு இலக்கியத்தரம் வாய்ந்தது...////

      +111 👏👏👏

      Delete
    10. ///நீங்க ஒரு கி.நா'வை மொழிபெயர்த்தா எப்படியிருக்கும்னு யோசிச்சேன்...///

      சங்க இலக்கியத்தை கொண்டாந்து ஐரோப்பாவோடு சோ்த்திடுவாரு!

      Delete
    11. அப்புறம் அமொிக்க உள்நாட்டு போாில் கலிங்கப்பரணி பாடும் காட்சியை காணலாம்!

      Delete
    12. அடிச்சி தள்ளிட்டீங்க பொருளாளர் ஜி...👌👌👌👌👌

      செமத்தியான ஆராய்ச்சி...!!!

      உங்கள் நடையில் ஒரு நீண்ட கி.நா. படிக்க பேராவல்...!!!

      Delete
    13. பொருளாளரின் இந்த அட்டகாச அகழ்வாராய்ச்சியின் பின்னணி context பற்றி எனக்குத் தெரியாதென்றாலும் - படிக்கப் படிக்க கொஞ்சமாகவேனும் யூகிக்க முடிகிறது ! இது சர்ச்சைக்கான (dunno if there 's one in the first place !!) பதில் என்பதை விடவும், ஒரு உரத்த சிந்தனைப் பகிர்வாகப் பார்த்திடலாமென்பேன் !!

      (காமிக்ஸ்) மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரையிலும் எனது take ரொம்பவே சிம்பிள் நண்பர்களே ! "இது தான் இதன் உச்சம் " என்றோ - "இவை தான் வரையறைகள்" என்றோ மொழிபெயர்ப்பிற்கு tram lines போடல் ஒருக்காலும் சாத்தியமாகாது ! So இல்லாததொரு "பிசகற்ற மொழியாக்கம்" என்ற தேடலில் எனது சுயத்தை இழக்க விரும்பிடாது - நான் நானாகவே இருக்க விழைந்து வந்துள்ளேன் ஒவ்வொரு பணியிலும் !

      ஒவ்வொரு முறையும் கதாப்பாத்திரங்களை நான் எனக்குள்ளே உருவகப்படுத்திடும் விதத்தைப் பொறுத்தே அவர்களின் வரிகள் என் பேனாவின் வாயிலாய் துளிர் விடுகின்றன ! எனது ஆண்டெரர் அந்தச் சூழலில் ஒரு குறிப்பிட்ட பாணியில் பேசுகிறானெனில் - அது அவன் பற்றிய என் சித்தரிப்பின் பிரதிபலிப்பே ! டால்டன்களோ, ஜாலி ஜம்பரோ ; தோர்களோ ; லார்கோவோ ; டாக் புல்லோ வேறொரு விதமாய்ப் பேசுகிறார்களெனில் அங்குமே நிலவரம் இதுவே ! Of course - கதை மாந்தர்களை உள்வாங்கும் இந்த விதங்கள் ஆளுக்காள் மாறுபடலாம் ; so அதன் பலனாய் அங்கே இடம்பிடித்து நிற்கும் எனது வரிகள் பொருத்தமாகவோ-நெருடலாகவோ தோன்றிடலாம் !

      இது தான் யதார்த்தம் எனும் போது - எனது மொழியாக்கம் சார்ந்த சர்ச்சைகளுக்குள் புகுந்து -"இன்ன மாரி...இன்ன மாரி காரணங்களால் தான் இங்கே இன்ன மாரி..இன்ன மாரி வார்த்தைப் பிரயோகங்கள் செஞ்சேன்னுங்க ஆபீசர் !!" என்று விளக்கி நிற்க முனைதல் வியர்த்தமாகிடும் தானே ? So "எனது மொழிபெயர்ப்பில் என்ன குற்றம் கண்டீர் ?" என்று கேட்பதற்குப் பதிலாய் - இது "விஜயனின் பார்வையிலான ..விஜயனின் மொழிபெயர்ப்பு ; period" என்று சிம்பிளாக முடித்துக் கொள்ளவே விரும்பிடுவேன் !

      அதே போல காலம் காலமாய் என்னிடம் கேட்கப்பட்டு வரும் அந்த -"எக்ஸ்ட்ரா நம்பர் போடச் சொல்லிக் கேட்டேனா ?" கேள்வியை நான் ஜாலியாகவே தான் பார்த்திடுகிறேன் ! ஒரிஜினலுக்கு இக்கிளியூண்டேனும் மெருகூட்டுவதாய் எனக்குத் தோன்றும் எந்தவொரு முயற்சியினையும், முக்கண்களுக்காகவோ ; முப்பது கண்களுக்காகவோ அடியேன் விட்டுத் தரப் போவதில்லை - simply becos நம்பள்கிட்டே இருக்கும் ஒரு ஜோடிக் கண்களே - அப்பாலிக்கா இருக்கக்கூடிய மூன்று கண்களை விடவும் பெரிதாயிற்றே ? பின்னே பின்வாங்குவானேன் ?

      சுருக்கமாய்ச் சொல்வதாயின் - "இது அப்பழுக்கற்ற மொழியாக்கமா - இல்லையா ?" என்று பார்ப்பதை விடவும், இது தான் எனக்குச் சாத்தியமான பெஸ்ட்டா ? என்பதில் மாத்திரமே எனது கவனமிருக்கும் ! அதில் எனக்குத் திருப்தி கிட்டின் - நான் ஹேப்பி அண்ணாச்சி ! அங்கே என்றைக்கு எனக்கே நெருடுகிறதோ - அன்றைக்கு தயக்கமின்றி பேனாவுக்கு டாட்டா சொல்லி விடுவேன் !

      Delete
    14. செல்வம் அபிராமி சார் : எழுந்து நின்று கரகோஷம் தர blogger -ல் ஏதேனும் வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் - இங்கே நம் தளத்தின் முதல் standing ovation யாருக்கென்பதில் ஏது இரகசியம் ?

      As always - mind boggling !!

      Delete
    15. செல்வம் அபிராமி சார்..

      உங்களுடைய கருத்துகளுடன் உடன்படுகிறேன். ஒரு சில தவறுகள் இருக்கத்தான் செய்கின்றன. மொழிபெயர்ப்பைப் பொறுத்தமட்டில் ஒருபோதும் நான் திருப்தி கொள்வதில்லை. அச்சுக்குப் போகும் முந்தைய கணம் மட்டும் திருத்தங்கள் கண்களுக்குத் தட்டுப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். என்னுடைய மொழிபெயர்ப்பு காமிக்ஸ் பக்கங்களுக்குச் சரியாகப் பொருந்தக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் இலக்கியத்தைப் பொருத்தவரை, எழுதியவரின் வார்த்தைகளையோ வடிவத்தையோ மாற்றியப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் காமிக்ஸ் மொழிபெயர்ப்பு அப்படியல்ல என்பதை ஆசிரியர் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறார். இயன்ற மட்டும் ஜனரஞ்சகமாக அனைவருக்கும் புரியும் மொழியைத்தான் புலன்விசாரணையில் முயன்றிருக்கிறேன். எனினும் அவ்வப்போது உள்ளிருக்கும் இலக்கியச் சாத்தான் எட்டிப் பார்த்திருக்கிறான் என்பது நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பகுதியில் இருந்து புரிகிறது. வார்த்தைப் பிரயோகங்களிலும் நிச்சயம் கவனமாயிருப்பேன். இத்தனை சிரத்தையோடு வாசித்து பிரதியில் தென்பட்ட பிழைகளைச் சுட்டிக் காட்டியுள்ள உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      பிரியமுடன்,
      கா.பா

      Delete
    16. ////சிரத்தையோடு வாசித்து பிரதியில் தென்பட்ட பிழைகளைச் சுட்டிக் காட்டியுள்ள உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.////

      விமா்சனங்களை எதிா்கொள்ளும் விதம் உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது நண்பரே!

      Delete
    17. selvam abirami19 August 2018 at 12:32:00 GMT+5:30
      எடிட்டர் பக்கம் உள்ள குறைகள் :
      ஆவணக்குறிப்புகள் முழுமையாக அச்சிடப்படாமல் அச்சில் விடுபட்டுவிட்டன
      பக்கம் 99 பெப்பே கெரோரோ
      பக்கம் 59 பால் மெர்ரில்
      பக்கம் 57 எமிலியானோ கால்வெஸ்
      பக்கம் 93 மார்டன் முர்டோக் & ஈத்தல் முர்டோக்
      முன் அட்டை வளைகிறது ( தானம் கொடுத்த மாட்டை பல் பிடித்து பார்க்கும் பழக்கம் தொடர்கிறது ...ஹி ..ஹி )
      இதை நானும் கவனித்தேன் சார்.ஆனால் அந்த பாத்திரங்களுக்கு அதுவே போதும். இதில் முதல் அத்தியாயத்தில் கடைசி பிரேமில் வரும் எர்லி பாத்திரத்தையும் குறிப்பிட்டுள்ளனர். எர்லிக்கான பெயர் காரணமும் சூப்பர்.
      அளப்பரிய சிந்தனை.
      ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள் இ.ப வில் உள்ள சிறந்த ஸ்பின் ஆப் கதைகள் வெளியிடலாமா சார்.

      Delete
    18. யாராவது பெருந்தலைவர் அப்பீட்டாகி அடுத்த நாள் கெவுர்மெண்டு லீவு வந்தா நம்ம சேனா ஆனா அடிக்கிற கும்மாளங்கள் ..யப்பா சாமீ ! எதுக்கும் இருக்கட்டும்னு மன்மோகன் சிங் வயசை விக்கீல பாத்துட்டு வந்தேன். 85 தான் .. இன்னும் ஒரு 10 வர்ஷம் கீது ... அடுத்த வாரம் பொழைச்சோம் :-D


      PS : வழக்கம் போல பின்னியெடுத்து பீஸ் மசாலா போடுங்க டாக்டர் ! படிச்சப்புறம்தான் லந்து பண்ணுவேன் ...

      Delete
  52. ”ஐயா... நான் சராசரியான ரசிகன் தான். எனக்கு அறிவுஜீவிக் குல்லாக்கள் சேருவதில்லை! நாலு சில்லுமூக்குச் சிதறும் அலப்பரைகளும்; நாலு ரவுண்ட் தோட்டாக்கள் தெறிக்கும் அலம்பல்களுமே, காமிக்ஸ் படித்த திருப்தியைத் தரும் ! So இருட்டுக்குள்ளாற 'நொய்-நொய்னு' பக்கம் பக்கமா ; பத்தி பத்தியாப் பேசும் பாணிகள்லாம் சரிப்படாது! அக்காங்... சொல்லிப்புட்டேன்!”

    He He !!

    ReplyDelete
  53. விஜயன் சார், கி.நா: மெல்ல திறந்தது கதவு மற்றும் நிஜங்களின் நிசப்தம் இரண்டையும் முழுமையாக படிக்க வில்லை. 1. நேரம் கிடைக்கவில்லை இது போன்ற கதைகளை ஒரு மனதோடு படிக்க நேரம் தேவை.
    2. கமர்சியல் குறைவாக இருக்கலாம்.

    ஆனால் இது போன்ற கதைகள் மற்றும் படங்களை மிகவும் விரும்புவேன். தற்போதைய சூழலில் நேரம் காரணமாக முழு ஈடுபாட்டுடன் படிக்க முடியவில்லை.

    வரும் ஆண்டுகளில் கி.நா. கமர்சியல் 4 பிற 2 என்பது எனது நிலைப்பாடு.

    ReplyDelete
    Replies
    1. பரவலான பல சிக்கல்களுக்குக் காரணமே இன்றைய non stop ஓட்டங்கள் தான் சார் ! முன்போல எல்லோருக்கும் சித்தே relaxed ஆகப் பயணிக்கும் சலுகைகள் இருப்பின் - நிறைய இதழ்களை இன்னும் ரசனையோடு வாசிக்க இயன்றிருக்கலாம் !

      Delete
  54. // முகவர்களுமே இப்போது – “டெக்ஸில் எல்லாத்திலேயும் 2; கிராபிக் நாவல்லே 2” என்று பரிணாம வளர்ச்சி கண்டுள்ளனர் ! //
    டெக்ஸின் தாக்கம் அப்படி சார் ( கி நா வும் தான் )
    அதற்கான உங்களின் தேடல் மற்றும் உழைப்புதான் இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது _/|\_
    .

    ReplyDelete
  55. // So where do we go from here on reprints ? ஓ... யெஸ்... அன்றைக்கு கறுப்பு-வெள்ளையில் நாம் பார்த்த / ரசித்த கேப்டன் பிரின்ஸ்... ரிப்போர்ட்டர் ஜானி... லக்கி லூக்... சிக் பில்... டெக்ஸ் வில்லர் ஆகியோரை இன்றைக்கு வண்ணத்தில் உயர்தரத்தில் பார்ப்பது பாகுபாடின்றி வரவேற்புப் பெற்றுள்ளது ! So அவை தொடரும் ஆண்டிலும் தொடர்ந்திட நாம் ஏகமனதாய் ‘யெஸ்‘ சொல்வோமென்ற நம்பிக்கை எனக்குள் நிறையவே உள்ளது ! //

    அதே அதே அதேதான் சார்

    கொரில்லா சாம்ராஜ்யம்
    கொள்ளைக்கார மாயாவி
    யார் அந்த மாயாவி
    ( மேலும் மாடஸ்டியின் கழுகு மலை கோட்டைக்கு கிடைத்த வரவேற்பை கொஞ்சம் நினைவு படுத்தி பாருங்கள் சார் )

    ஆகையால் கருப்பு வெள்ளையில் வந்த ரீபிரிண்ட் ஏதுவாக இருந்தாலும் கலரில் வந்தால் அதற்கு கிடைத்திடும் வரவேற்பே தனிதான்

    அதனால் அதற்கு ஆவண செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஆனர் _ /|\_
    .

    ReplyDelete
  56. // "ஓவராய்க் கடுங்காப்பி வேண்டாமே ; லேசாய்ச் சக்கரையும் போட்டுக்குவோமே ?" என்று நீங்கள் அபிப்பிராயப்பட்டால் - //

    சில நேரங்களில்
    சில சமயங்களில்
    கடுங்காப்பி உடலுக்கு நல்லது

    மற்ற எல்லா நேரமும் வழமை போல போட்டு தாக்குங்கள் சார்
    .

    ReplyDelete
    Replies
    1. அப்படீங்கிறீங்களா ? தாக்கிடுவோமா ?

      Delete
  57. // நம் நண்பர் கார்திகைப் பாண்டியன் அவர்களுக்கு - ஆர்தர் ரைம்போவின் “நரகத்தில் ஒரு பருவகாலம்” என்கிற கவிதைத் தொகுப்பினை மொழிபெயர்த்தமைக்கு - கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது வழங்கப்பட்டிருக்கிறது. !! Awesome news !! வாழ்த்துக்கள் நண்பரே !! And உங்களுக்கோர் ஆச்சர்யம் காத்துள்ளது விரைவில் என்று மட்டும் சொல்லி வைக்கிறேன் இப்போதைக்கு ! //

    வாவ் சூப்பர்
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நண்பரே _/|\_
    மென்மேலும் பல உயரங்களை தொட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் _/|\_
    .

    ReplyDelete
  58. டியர் எடிட்டர்

    டாலர் இருக்குற நிலைமைக்கு நாம தாத்தா கால கதைகளில் முன்பணங்களை வேஸ்ட் செய்ய வேண்டாமே !

    A B C D ட்ராக்களை - மசாலா , போன்னேல்லி, கார்ட்டூன், மறுபதிப்பு என்று பிரிக்காமல் - just have two tracks.

    P - Popular - action , detective , cartoon , Tex and some popular reprints
    H - Heavy Metal - Off the beaten track (மார்ட்டின் அழுவாச்சி, ஜூலியா, கவிதைகள் சொட்டும் கதைகள் இவைகளுக்கு

    மாதப் புத்தகங்களின் எண்ணிக்கைகளுக்கும் trackகளுக்கும் சம்பந்தப் படுத்தாதீர்கள்

    Track P has a price including having optional deliveries
    Track H has a different price including having optional deliveries

    பிளஸ் ரைட்ல இண்டிகேட்டர் போட்டு லெப்ட்ல கை அசைத்து ஸ்ட்ரெயிட்டா போகத்தான் ஜம்போ இருக்கே உங்களுக்கு - maintain that at 6 books for 1000/-

    ReplyDelete
    Replies
    1. டாலர் செப்டெம்பர் இறுதிக்குள்ளாகரூ.72 -ஐத் தொட்டு நிற்கும் என்கிறார்கள் !! இப்போதே ஜெலுசில் பாட்டில் பாட்டிலாய்க்
      குடித்து வருகிறோம் சார் !!

      Delete
  59. நண்பர் கார்த்திகை பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  60. Graphic novel with a commercial touch is my piece of cake... Pls do not go for sad stories ... It really kills the Josh of comic reading...

    ReplyDelete
    Replies
    1. Point taken senthil....but equating Comics with Josh alone could in some ways be an injustice to the many facets that COMICS truly possesses !!

      It's just that we have grown used to the 'feel good' range in comics...!!

      Delete
  61. சார்,
    கடுங்காபி கொஞ்சம்
    சார்கரையோடு கொஞ்சம் போடுங்கள் சார்
    இரவே இருளை கொல்லாதே மிகவும் நல்ல கதை
    அனைவராலும் படிக்க முடியும் என்ற கதை

    மறுபதிப்புகளை போறுத்த வரை
    லக்கி,டெக்ஸ்,சிக் பில்,பிரின்ஸ்,ஜானி
    மற்றும் மறக்காமல் ரோஜர்(நடக்கும் சிலை மர்மம்)
    போடுங்க சார்

    ReplyDelete
  62. வாழ்த்துக்கள்
    கார்த்திக் பாண்டியன் அண்ணா<3<3

    ReplyDelete
  63. ம.ப. :

    1 மறுபதிப்பு என்றால், இதுவரை மும்மூர்த்திகளின், ஒரு முறை கூட மறுபதிப்பில் வராத கதைகள் மட்டுமே போடுங்கள்.

    2 மாயாவி ஒரு முறை 3 கதைகள் கலரில் ஸ்பெஷலாக வெளியிடுங்கள்
    a ) கொரில்லா சாம்ராஜ்யம்
    b ) கொலைகார குள்ளநரி
    c ) யார் இந்த மாயாவி

    3 ) ரிப் கிர்பி , காரிகன் , புஸ் சாயர் இவர்களது கதைகள் ஒன்று வெளியிட்டு பாருங்கள்.

    இது என்னுடைய சாய்ஸ்.

    2019 அப்புறம் இந்த மும்மூர்த்திகளை விட்டு விட்டு புதிய நாயகர்களை நோக்கி போகலாம்.


    கி.நா :

    1 ) வருடத்திற்கு 6 போதும்.
    2 ) 4 commercial அண்ட் 2 intellectual அல்லது 3 X 3 என்ற விகிதம் சரியாக வரும்.


    பழையது:
    பறக்கும் பலூனில் டெக்ஸ் : நேர்கோட்டில் செல்லும் கதை, ஆரம்பித்ததில் இருந்து முடிகின்ற வரையில் விறுவிறுப்பு குறையவே இல்லை. சித்திரங்கள் மிக நேர்த்தி.

    புதியது:

    இன்ஸ்பெக்டர் விக்ரம் : அந்த கால கதை, அந்த கால கதை போலவே இருந்தது. பெரிசாக சொல்ல ஒன்றும் இல்லை.

    XIII : 5 பாகம் முடித்து விட்டேன், இந்த வாரம் புக் நம்பர் 1 முடித்து விடுவேன். எனக்கு சின்ன வயசில் ஒரு 5 பாகம் தான் படித்து இருப்பேன். அதனால் எனக்கு இப்பொழுது படிக்கும் போது கதை பத்தி எதுவும் ஞாபகம் இல்லை. அதனால் எனக்கு புது கதையை படிப்பது போல் தான் இருக்கிறது, அதுவும் கலரில். எத்தனை ட்விஸ்ட். அப்பப்பா செம

    ReplyDelete
    Replies
    1. //இப்பொழுது படிக்கும் போது கதை பத்தி எதுவும் ஞாபகம் இல்லை//

      XIII -ஐத் தூக்கிக் கொண்டு உட்காரும் ஒவ்வொரு தருணத்திலுமே எனக்கு same பீலிங் தான் !!

      Delete
    2. // ம.ப. :

      1 மறுபதிப்பு என்றால், இதுவரை மும்மூர்த்திகளின், ஒரு முறை கூட மறுபதிப்பில் வராத கதைகள் மட்டுமே போடுங்கள்.

      2 மாயாவி ஒரு முறை 3 கதைகள் கலரில் ஸ்பெஷலாக வெளியிடுங்கள்
      a ) கொரில்லா சாம்ராஜ்யம்
      b ) கொலைகார குள்ளநரி
      c ) யார் இந்த மாயாவி

      3 ) ரிப் கிர்பி , காரிகன் , புஸ் சாயர் இவர்களது கதைகள் ஒன்று வெளியிட்டு பாருங்கள். //

      சரியான கருத்து.
      +1

      Delete

  64. நிஜங்களின் நிசப்தம்...(கி.நா.அல்ல...)

    சில நிஜங்கள் எப்போதும் நிசப்தமாகவே சாதிக்கும்....!!!

    கல்கி அவர்களின் நாவல்களில் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் & பார்த்தீபன் கனவு பற்றித்தான் நாம் சிலாகிக்கித்தோம்.

    அவரின் சிறந்த படைப்பு இம்மூன்றில் ஏதேனும் ஒன்றுதானே??? என்றால் நிஜம் வேறானது.

    சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய பரிசு சாகித்ய அகாதமி விருது. இதுவரை 52தமிழ் நூல்கள் இந்த விருதை பெற்றுள்ளன.

    கல்கி அவர்களின் சிறந்த படைப்பாக, 1956ல் சாகித்ய அகாடமி பெற்றது அவரின், "அலை ஓசை" -என்ற படைப்பே.

    சுதந்திர போராட்டம்& பிரிவினை காலத்தில் நம்மை கொண்டு போய் நிறுத்தி விடும்.

    கல்கி அய்யா அந்த நாவலின் முன்னுரையில் சொல்லி இருப்பது,
    "இன்னும் 200,400ஆண்டுகள் கடந்தும் என் பெயர் சொல்லப்போவது இந்த அலை ஓசை தான்"....

    நம்ம தமிழ் காமிக்ஸ்ல....!!!
    வேதாளரும், மும்மூர்த்திகளும் நேற்று கோலோச்சினர்.

    இன்று டெக்ஸ் அதகளப்படுத்துகிறார்.

    நாளை வேறு யாரோவாக இருக்கும்.

    எடிட்டர் விஜயன் சாரின் சாதனையாக இவைகள் என்றும் பார்க்கப்படாது.
    வெறும் எண்ணிக்கை என்ற அளவில் மட்டுமே இவைகள் பார்க்கப்படும்.
    "நிஜங்களின் நிசப்தம்" &
    "தேவ ரகசியம் தேடலுக்கல்ல"---போன்ற படைப்புகளை வெளியிட்டதே அவரின் நிசப்தமான நிஜம்.....

    இன்னும் சில நிஜங்களின் நிசப்தம் வர வழி செய்வோம் நண்பர்களே...!!

    தமிழ் காமிக்ஸ்க்கு நம் தலைமுறையின் பங்களிப்பாக அவை இருக்கட்டும்...!!!

    ReplyDelete
    Replies
    1. ///இன்னும் சில நிஜங்களின் நிசப்தம் வர வழி செய்வோம் நண்பர்களே...!!

      தமிழ் காமிக்ஸ்க்கு நம் தலைமுறையின் பங்களிப்பாக அவை இருக்கட்டும்...!!!///

      பெருமிதம் கொள்வோம்!

      +111 👏👏👏

      Delete
  65. வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.

    பிரியமுடன்,
    கா.பா

    ReplyDelete
  66. அன்பின் ஆசிரியருக்கு,

    //நம் நண்பர் கார்திகைப் பாண்டியன் அவர்களுக்கு - ஆர்தர் ரைம்போவின் “நரகத்தில் ஒரு பருவகாலம்” என்கிற கவிதைத் தொகுப்பினை மொழிபெயர்த்தமைக்கு - கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது வழங்கப்பட்டிருக்கிறது. !! Awesome news !! வாழ்த்துக்கள் நண்பரே !! And உங்களுக்கோர் ஆச்சர்யம் காத்துள்ளது விரைவில் என்று மட்டும் சொல்லி வைக்கிறேன் இப்போதைக்கு !//

    வணக்கம். உங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி சார். அந்த ஆச்சரியம் என்னவென்பதை அறிந்து கொள்ளவும் ஆர்வமாயிருக்கிறேன்.

    மறுபதிப்புகள் பற்றி நாம் நிறையவே பேசி விட்டோம். 2000-க்கு முன்பு வந்த புத்தகங்களைத் தேடியலையும் காமிக்ஸ் நண்பர்களைக் குறி வைத்து இயங்கி வந்த கள்ள மார்க்கட் பேர்வழிகளை ஓரம் கட்டவும் நம்முடைய இதழ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மறுபதிப்புகள் உதவின என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் பெரும்பாலான மக்கள் அவற்றை வாசிக்கிறார்களா அல்லது வெறுமனே நாஸ்டால்ஜியாவுக்காக வாங்குகிறார்களா எனில் அதற்கான பதில் இப்போது நமக்குத் தெளிவாக விளங்கக்கூடும். எனவே இதுவரை மறுபதிப்பு காணாத (மும்மூர்த்திகளல்லாத) நல்ல கதைகள் ஏதேனும் இருப்பின் - வைரஸ் X போல - அவற்றை மட்டும் நாம் வெளியிடலாம்.

    கிராபிக் நாவல்களைப் பொறுத்தவரை - அவையே நம் எதிர்கால பயணத்தடத்தைத் தீர்மானிக்கும் என்று நான் தீவிரமாக நம்புகிறேன். இதில் hardcore / light என்றெல்லாம் பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. அனைத்து வாசகர்களையும் திருப்திபடுத்தும்படியான கதைகளை நீங்களே தேர்ந்தெடுப்பீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனக்குத் தெரிந்து இதுவரை வெளியான கிராபிக் நாவல்களில் ஒரே சொதப்பல் என்றால் விடுதலையே உன் விலையென்ன மட்டும்தான் என நினைக்கிறேன். ஆக கிராஃபிக் நாவல்களுக்கான உங்களுடைய எந்த முடிவும் எனக்குச் சம்மதமே. எண்ணிக்கை மட்டும் ஆறுக்குக் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மீண்டும் நன்றி.

    பிரியமுடன்,
    கா.பா

    ReplyDelete
    Replies
    1. ///கிராபிக் நாவல்களைப் பொறுத்தவரை - அவையே நம் எதிர்கால பயணத்தடத்தைத் தீர்மானிக்கும் என்று நான் தீவிரமாக நம்புகிறேன். இதில் hardcore / light என்றெல்லாம் பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை.///

      +111

      Delete
    2. ////கிராபிக் நாவல்களைப் பொறுத்தவரை - அவையே நம் எதிர்கால பயணத்தடத்தைத் தீர்மானிக்கும் என்று நான் தீவிரமாக நம்புகிறேன். இதில் hardcore / light என்றெல்லாம் பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை.///

      செம & உண்ம!

      ///
      உங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி சார். அந்த ஆச்சரியம் என்னவென்பதை அறிந்து கொள்ளவும் ஆர்வமாயிருக்கிறேன்.///

      எனக்கென்னவோ புலன்விசாரணை மாதிரியே மறுபடியும் ஒன்னைக் கொடுத்து மொழிபெயர்க்கச் சொல்லப்போறார்னு நினைக்கிறேன்! :D

      Delete
    3. // மறுபதிப்புகள் பற்றி நாம் நிறையவே பேசி விட்டோம். 2000-க்கு முன்பு வந்த புத்தகங்களைத் தேடியலையும் காமிக்ஸ் நண்பர்களைக் குறி வைத்து இயங்கி வந்த கள்ள மார்க்கட் பேர்வழிகளை ஓரம் கட்டவும் நம்முடைய இதழ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மறுபதிப்புகள் உதவின என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. //

      +1

      Delete
    4. மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் !!!

      Delete
  67. WE ARE EXPECTING REPRINTS GOLDEN ISSUES LIKE IRUMBUKAI MAYAAVI,PAATHAALA NAGARAM, KATRIL KARAINTHA KAPAPLGAL, KOLAIKAARA KALAIGNAN,VINNIL MARAINTHA VIMAANANGAL,KADATHAL MUTHALAIGAL,KADATHAL RAGASIYAM,JOHNNY IN LONDON,JOHNNY IN JAPAN,GORRILLA SAMRAJYAM,MIRO ALAIVARISAI AS SOON AS POSSIBLE

    ReplyDelete
  68. மேலே 'மண்ணில் துயிலும் நட்சத்திரம்' முதல் ஃப்ரேமே படு அமர்க்களமாய் இருக்கிறது! குறிப்பாய் அந்தக் கலரிங் பாணி - ப்பா!!! அட்டகாசம்!!!

    ReplyDelete
    Replies
    1. குறிப்பாய் அந்தக் கலரிங் பாணி - ப்பா!!! அட்டகாசம்!!!

      ஆம். ப.சி.ம கலரிங்.

      Delete
  69. கி.நா வை பொறுத்தவரை COMMERCIAL சார்த்த நாவல்கள் 2, COMMERCIAL சாராத நாவல் களுக்கு 2 என இடம் பெறலாம். COMMERICALசாராத நாவல் களின் விலை அதிகம் இல்லாமல் பார்த்துகொள்ளவும். ஏனெனில் நிஜங்கள் நிசப்தம் contentக்கு விலை சற்று அதிகம்.

    ReplyDelete
  70. எடிட்டர் சார்,

    அடுத்த வருடக் கி.நா கோட்டாவில்

    * 6க்கு குறைந்தால் செனாஅனா காணாத மிகப் பெரிய போராட்டங்கள் வெடிக்கும்! ( செனாஅனா'ன்னாலே 'வரலாறு' தானுங்களே!)

    * 9 இருந்தால் இக்ளியூண்டு மகிழ்வாய் உணரப்படும்!

    * 12 இருந்தால் கொண்டாடப்படும்; குதூகலிக்கப்படும்; கொக்கரிக்கப்படும்!

    முடிஞ்சவரைக்கும் நாங்க கொ - கு - கொ மாதிரி பார்த்துக்கோங்க!

    ReplyDelete
    Replies
    1. ஈ வி உங்கள் பக்கத்தில் எனக்கு ஒரு
      துண்டு போட்டு சீட் ரிசர்வ் பண்ணவும்.

      Delete
  71. கார்த்திகை பாண்டியன் @ நண்பா வாழ்த்துக்கள். இது போன்று மேலும் பல சாதனைகள் மற்றும் விருதுகள் பெற வாழ்த்துகிறேன். உங்கள் இலக்கிய உலகில் மேலும் பல உயரங்களை தொட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  72. No picture and tribite to Hon. Speaker Sri Somnath Chaterjee ? Was an honest statesman and a friend of all as well ...

    ReplyDelete
  73. கார்த்திகை பாண்டியன் வாழ்த்துகள் . இப புலன் விசாரணையும் பின்னிட்டீங்க. சார் கிநா இதுல பாதி, அதுல பாதி.

    ReplyDelete
  74. மண்ணில் துயிலும் நட்சத்திரம், முதல் கட்டம், யப்பா!!!!!!

    ReplyDelete
  75. அற்புதமான மனிதர் வாஜ்பாய் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

    ReplyDelete
  76. கி.நா என்னும் மாத்திரையை தலீவர் மற்றும் தலீவரின் விழுதுகளாகிய என்னை போன்றோருக்கும் ஆக்சன் அல்லது அட்வென்சர் போன்ற தேனில் குழைத்து கொடுத்தால் விழுங்க கொஞ்சம் வசதியாக இருக்கும். போகப் போக மாத்திரை சைஸ் கொஞ்சம் பெரிதாகவும், தேனின் அளவை குறைத்தாலும் கி.நா வை பழகிக்கலாம்..

    ReplyDelete
  77. ////என்னைக் கேட்டால் - XIII - பாகம் பதின்மூன்றோடே மங்களம் பாடும் விதமாய் அமைந்திருப்பின் வீரியத்தின் உச்சங்களைத் தொட்டிருக்கும் என்பேன் ! ஒரிஜினல் திட்டமிடலும் அதுவே ; ஆனால் விற்பனையில் கிட்டிய செம வரவேற்பைக் கருத்தில் கொண்டு நீளத்தை அதிகமாக்கினர் படைப்பாளிகள் ! கதாசிரியர் வான் ஹாம் பதினெட்டாம் பாகத்தோடு விடைபெற்றதும் இதன் காரணமாகவே !////

    மிகச் சாி சாா்!

    12 பாகங்களை படித்த உடனே கதை நிறைவடைந்த உணா்வு உண்டாகி விடுகிறது! கூடுதலாக தோன்றும் கேள்விகளுக்கு புலன் விசாரணை பதில் சொல்லி விடுகிறது!!

    அதனால் இன்னும் 3ஆம் பாகத்தை கையில் தொடாமலே ஒரு நல்ல விடுமுறை நாளுக்காக காத்திருக்கிறேன்!!

    கூடவே ஈரோடு புக் போ்ல வாங்கிய மூன்று பௌன்சா்கள் + விடுதலையே உன் விடையென்ன? + Hot & Cool ஸ்பெசல் எல்லாம் வெயிட்டிங்!!

    ReplyDelete