Powered By Blogger

Monday, April 09, 2018

பார்த்ததும்....பார்க்காததும் !

நண்பர்களே,

வணக்கம். நீங்களெல்லாம் பரபரப்பாய் இன்னொரு திங்களைச் சமாளித்து வரும் வேளையில், நாங்களோ இங்கே ரெஸ்ட் எடுத்து tired ஆகி, மறுக்கா ரெஸ்ட் எடுத்து வருகிறோம் ! ஆபீசுக்கு லீவு ; சிவகாசிக்கே லீவு எனும் போது, ரொம்ப நாள் கழித்து ஒரு மதியத் தூக்கம் ; IPL மேட்ச் பார்க்க நேரம் என்ற சொகுசுகளெல்லாம் சாத்தியமாகிறது ! ஆனாலும் கொஞ்ச நேரத்திலேயே மனசானது - 'மார்டினின் எடிட்டிங் காத்துக்கிடக்கு...' ; "லக்கி லூக்கை இந்த நேரத்துக்கு முடித்திருக்கலாம் "  ; "பு.வி.லோடு வந்திறங்கும் முன்பாய் மற்ற பணிகளை முடித்து வைத்தால் க்ஷேமம் !" என்று செக்கு மாட்டு routine-ஐ நினைவுபடுத்திடத் தவறிடவில்லை ! அதையும் மீறி லாத்தலாய் கொஞ்ச நேரத்தைச் செலவிடக் கிட்டிய போது சும்மாவேனும் நமது மின்னஞ்சலின் உள்பெட்டியை (அது தான் INBOX-ங்கோ) நோண்டிக் கொண்டிருந்தேன் ! அப்போது கண்ணில் பட்ட சில சமாச்சாரங்களையே இந்த உபபதிவுக்கு மேட்டராக உருமாற்றம் செய்திடத் தோன்றியது !

அட்டைப்பட உருவாக்கத்துக்கு நாம் அடிக்கும் கூத்துக்களில் இரகசியங்கள் கிடையாது தான் ; ஆனால் அந்த process-ல் நாம் முயற்சிக்கும் எல்லாமே உங்கள் பார்வைகளுக்கு வந்திராதென்று நினைக்கிறேன் ! இதோ அவற்றுள் சில ! சகல டிசைன்களுமே உபயம் - நம் டிசைனர் பொன்னன் ! இவற்றைப் பார்க்கும் போது "சி.ம.வ." ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை !! 






இன்னமும் இதுபோல் நிறைய உள்ளன தான் ; ஆனால் இன்னும் சில பல சோம்பல் நாட்களின் உபபதிவுகளுக்கென அவற்றை ரிசர்வில் வைத்திருப்போம் ! மேற்படிப் படங்களைப் பார்க்கும் போது - இந்த உலகம் பார்த்திரா டிசைன்கள் தேவலாமா ? - அல்லது அந்தந்த இதழ்களுக்கு நாம் பயன்படுத்தத் தீர்மானித்த டிசைன்களே better ஆ என்று சொல்லுங்களேன் ? 

அப்புறம் நேற்றைய ட்யுராங்கோ பாகம் 3-ன் ஆரம்ப பிரேமின் வரிகளை எழுதிய வகையில் பாராட்டுக்கள் ஈரோட்க்காருக்கும் ; அதற்கான பரிசு அவர் உபயத்தில் நண்பர்கள் யாருக்கேனும் செல்கிறது ! இதே போட்டிக்கு  "100 பொற்காசுகள் பரிசு" என்று அறிவித்திருப்பின் parcel redirect எப்படியிருந்திருக்கும் என்ற யோசனையோடு கிளம்புகிறேன் ; டால்டன்கள் கோடீஸ்வரர்களாகத் தூள் பறத்திக் கொண்டிருக்கும் ரகளையில் ஐக்கியமாகிடும் ஜாலி காத்துள்ளது ! அப்பறம் ட்யுராங்கோ - டைகர்-ஜிம்மி- caption போட்டி இன்னமும் தொடர்கிறது ! Keep writing !!  Bye all !! 

255 comments:

  1. Replies
    1. எஸ் .... நீங்கள்தான் முதல் .... மறக்காமல் ஈ.பு.தி - ல் இதற்க்கு ஒரு கிடா வெட்டு :)

      Delete
    2. :-)

      வர வர கிடாவெட்டு லிஸ்ட் கூடிகிட்டே போகுதே.

      (இ.ப. தலைப்புக்கு பொருத்தமா அங்கங்க இரத்தகளரியா இருக்கபோகுது.)

      Delete
  2. அருமை சார் .... பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள் ....

    ReplyDelete
  3. ஒரு சிப்பாயின் சுவடுகளில் இரண்டாம் டிசைன் நன்றாக உள்ளது.
    (கதைதான் சரியில்லையென மக்கள் சொல்லிட்டாங்க. அட்லீஸ்ட் இந்த மாதிரி டிசைன் மேக்கப்பாவது போட்டிருக்கலாமே?)

    ReplyDelete
    Replies
    1. //ஒரு சிப்பாயின் சுவடுகளில் இரண்டாம் டிசைன் நன்றாக உள்ளது.//
      Same feel +1

      Delete
  4. வாழ்த்துகள் ஈரோட்கார்!!:)

    ReplyDelete
  5. //மர்மக் கத்தி - இது நான் முதல் முறையாக படிக்கும் கதை. கதை எனக்கு பிடித்த மாதிரி சயின்ஸ் பிக்ஷன் கலந்த கதை. ஆனால் முடிவில் ஒரு குழப்பம்.

    ரோஜரும் பில்லும் கால இயந்திரம் இன்றி எப்படி மறுபடி 20 ஆம் நூற்றாண்டுக்கு வந்தனர்? எப்படி வாளும் அவர்களுடன் திரும்ப வந்தது? இதற்க்கு யாரவது பதில் சொல்லுங்களேன்?//

    எனக்கும் அதே குழப்பம்
    ஆசிரியர் அல்லது யாரேனும் நண்பர்கள் இக்குழப்பத்தை தீர்த்து வைப்பீராக.

    ReplyDelete
    Replies
    1. திருநாவுக்கரசு சார் !!!

      கதை முழுதுமே கனவு ....

      ‘’சரி ..உருப்படியாய் ஒரு வேலை பார்ப்போம்...போய் தூங்குவோம் ‘’’
      என்று ரோஜர் சொல்வதில் இருந்து கனவு துவங்குகிறது ...

      பக்கம் நான்கில் இந்த வார்த்தைகளை ரோஜர் சொல்லும்போது ரோஜர் மற்றும் பில் அணிந்துள்ள ஆடைகளை பார்த்து வைத்து கொள்ளுங்கள் .

      பின் பக்கம் 48-ல் ரோஜர் தூக்கத்தில் இருந்து எழும்போது அணிந்துள்ள ஆடையினை கவனியுங்கள் ..கனவு இதோடு முடிகிறது ...பக்கம் 49 –ல் பில் உறக்கம் கலைந்து வரும்போது அணிந்துள்ள ஆடையினையும் கவனித்து வைத்து கொள்ளுங்கள் ...
      ஏன் இந்த ஆடை மாற்றம் /
      கனவாக இருக்குமாயின் அந்த வாள் எப்படி வந்தது ?
      என்ற கேள்விகளுக்கு நான் இணையத்தில் கதையை படித்துமுடித்தபோது வாசித்ததை வைத்து யூகிக்க முயன்றுள்ளேன் ..
      இன்று இரவு விரிவாக பதில் அளிக்கிறேன் ..

      Delete
    2. செல்வம் அபிராமி @ அருமையான கண்டுபிடிப்பு. உங்களின் விரிவான பதிலுக்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

      Delete
    3. Selvam Sir

      Thank u very much. Waiting for your brief explanation.

      Delete
    4. செனா அனா ஜீ சூப்பர் ..உங்கள் விரிவான பதிலுக்கு பிறகு மீண்டும் இதழை புரட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்.

      வருக..

      Delete
    5. ஆட்டம் களைகட்டுது...சூப்பரே

      Delete
    6. மர்ம கத்தி ...
      ஏற்கனவே சொன்னது போல் கதை முழுதுமே கனவே ..
      இது விஞ்ஞான கதை அல்ல ...
      என்னை பொறுத்தவரை மெட்டாபிசிக்ஸ் கதையை நடத்துகிறது ..
      கனவுலகினை இக்கதை ஒரு இணை பிரபஞ்சமாக கையாள்கிறது ...(parallel universe )
      நமது பிரபஞ்சத்தில் காலம் என்பது ஒரு மாயை..அது சார்புடையது ...
      ஐன்ஸ்டீனின் ஸ்பெஷல் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி/ஜெனரல் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி காலத்தில் முன்னோக்கி /பின்னோக்கி பயணிப்பது பற்றி வழிவகைகள் இருப்பது பற்றி சொன்னாலும் அவற்றை செயலாக்கம் செய்வது நடைமுறையில் இயலாத காரியம் ..
      நமது கதையில் உள்ள கனவுலகான இணை பிரபஞ்சத்தில்
      காலத்தின் பின்னோக்கி செல்ல
      ஒளியின் வேகத்தினை விட அதிக வேகத்தில் பயணிக்கவேண்டும்
      காலத்தினை கிராவிடேஷனல் விசையை பயன்படுத்தி லூப்களாக மடக்கி பின் செல்லவேண்டும்
      போன்ற சாத்தியமேயில்லாத கட்டுப்பாடுகள் இல்லை ..
      மெட்டாபிசிக்ஸ் –ன் மனம்,உடல் பற்றிய கிளை சித்தாந்தங்களை அடியொற்றி எழுதப்பட்ட இக்கதை இருமனிதர்கள் பருப்பொருளாகவே காலத்தின் பின்னோக்கி பயணிப்பதாக அதாவது கனவுலக பிரஜைகளாக இருப்பினும் வர்ணனை செய்கிறது ....
      இது கனவுலகம் என்பது ஒரு இணை பிரபஞ்சம் என்றால் மட்டுமே சாத்தியம் ...
      இவர்கள் போட்டு சென்ற ஆடையை விட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன் அணிந்த ஆடையை திரும்பி அணிந்து வருவதும் .
      ரோலனின் கத்தி ரோஜரின் கூடவே பயணிப்பதும் இக்காரணத்தினால்தான்..
      காலத்தில் பின்னோக்கி/முன்னோக்கி பயணிக்க ஒளியின் வேகத்தில் பயணிக்கவேண்டும் ..
      உதாரணமாக ரோலனின் கத்தியும் ஒளியின் வேகத்தில் முன்னோக்கி பயணிக்குமாயின் நிறை –சக்தி கோட்பாட்டின்படி கத்தியின் நிறை முடிவிலி (infinite ) என அதிகரிக்கும் ...இக்கத்தியை நகர்த்துவதற்கான சக்தியின் அளவும் முடிவிலி என அதிகரிக்கும் ...இது நடைமுறைக்கு ஒவ்வாதது ..
      இதெல்லாம் நமது பிரபஞ்சத்தில் ..
      கனவுநிலையில் உணர்நிலையில் உள்ளதாக காண்பிக்கப்படும் நமது ரோஜர் மற்றும் பில்லுக்கு இக்கோட்பாடுகள் இணை பிரபஞ்சவாசிகள் என்பதால் பொருந்தாது..
      ரோஜர் மற்றும் பில் காலத்தில் பின்னோக்கி செல்ல கால இயந்திரம் தேவையில்லை என்பது கதை உணர்த்தும் செய்தி ..
      இருபதாம் நூற்றாண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் உறங்க துவங்கும் அவர்கள் மறுபடியும் கனவுலகின் வாயிலாகவே இருபதாம் நூற்றாண்டை முன்னோக்கி பயணித்து வந்தடைகிறார்கள் ..
      பலசமயங்களில் விஞ்ஞானம் தனது எல்லையை தொட்டு நிற்பதை தாண்டி விளக்கமளிக்க மெட்டாபிசிக்ஸ் முயன்று இருக்கிறது ...
      நவீன விஞ்ஞானம் மெட்டாபிசிக்ஸ்-தத்துவத்தை வறட்டு வேதாந்தம் என்றே அழைக்க முற்படுகிறது ....

      நாமும் உறங்கி முயற்சி செய்து பார்ப்போம் ..
      கனவுலகின் பிரஜைகளானால் காலத்தின் முன்னோக்கி சென்று இரத்தப்படலம் வண்ண இதழ்களை ,டைனமைட் இதழ்களை எடிட்டர் அச்சிட்டு முதல் பிரதியை ரசித்து கொண்டு இருக்கும்போது நாமும் அருகில் போய் ரசிக்கலாம் ...
      காலையில் எழும்போது படுக்கையின் கீழ் டைனமைட் இதழின் டஸ்ட் கவர் கிடைக்குமாயின் அதிசயிக்க வேண்டாம் ...

      பின் குறிப்பு : வேறுவித சிந்தனைகள் நண்பர்கள் யாருக்கும் இருக்குமாயின் முன்வைக்கலாம் ...

      Delete
    7. ///நாமும் உறங்கி முயற்சி செய்து பார்ப்போம் ..
      கனவுலகின் பிரஜைகளானால் காலத்தின் முன்னோக்கி சென்று இரத்தப்படலம் வண்ண இதழ்களை ,டைனமைட் இதழ்களை எடிட்டர் அச்சிட்டு முதல் பிரதியை ரசித்து கொண்டு இருக்கும்போது நாமும் அருகில் போய் ரசிக்கலாம் ...
      காலையில் எழும்போது படுக்கையின் கீழ் டைனமைட் இதழின் டஸ்ட் கவர் கிடைக்குமாயின் அதிசயிக்க வேண்டாம் ... ///

      படுக்கையின் கீழ் ஜடப்பொருட்கள் மட்டும்தான் சாத்தியமா, செனாஅனா அவர்களே? :D

      Delete
    8. @ ஈவி
      நான் நினைப்பதைத்தான் நீங்கள் எழுதியுள்ளீர்கள் என்றால்

      கீழே உள்ள சமன்பாடு உங்களுக்குக்காகத்தான்
      E= mv
      E ….effect on head ..தலையில் ஏற்படும் புடைப்பின் அளவு
      m= பூரிக்கட்டையின் எடை
      v= பூரிக்கட்டை வீசப்படும் வேகம்
      :))

      Delete
    9. சார், இணை பிரபஞ்சம் என்பது நமது பிரபஞ்சத்திற்கு நேரெதிர் குணமுடையதாகத் தானே இருக்கும்?

      Delete
    10. அருமையான விளக்கங்கள் பொருளர் ஜி.

      எனக்கும் அந்த கனவுலகில் தூங்கி போனெல்லி பதிப்பகம் போயிட்டு, மீண்டும் எங்க வூட்ல எழனும்.
      கட்டிலுக்கு அடியில் டெக்ஸ் 70டைனமைட் ஸ்பெசல் பாக்ஸ் இருக்கும் என்பதே இனிக்கிறது.

      Delete
    11. பொருளர் ஜி@ கோவிந்துக்கு இருக்கும் அதே சந்தேகம் எனக்கும் இருக்கு.

      பிரபஞ்சம்-அபிரபஞ்சம்...

      அபிரபஞ்சத்தில் ஒளியின் வேகத்திற்கு அதிகமாக தான் பிரயாணம் செய்ய இயலும்னு படித்த ஞாபகம். அப்படி இருக்கும் போது சண்டை போடுவது, காதல்வயப்படுவதுலாம் எப்படினு எட்டல...

      இன்னும் கொஞ்சம் விரிவான விளக்கம் ப்ளீஸ்...

      செரன்கோவ் விளைவுனு கூட படித்ததாக நினைவுக்கு வருகிறது.

      ஏற்கெனவே மான்ட்ரேக் கதையில் கூட கண்ணாடி உலகில் "அந்த" மான்ட்ரேக் கெட்ட பயலா இருப்பாரே...!!!

      Delete
    12. //
      கீழே உள்ள சமன்பாடு உங்களுக்குக்காகத்தான்
      E= mv
      E ….effect on head ..தலையில் ஏற்படும் புடைப்பின் அளவு
      m= பூரிக்கட்டையின் எடை
      v= பூரிக்கட்டை வீசப்படும் வே//

      செனா அனா. அப்படியே ஒரே எடை இருந்தாலும் மரத்தினாலான ஆன பூரிக்கட்டைக்கும் SSஆல் ஆன பூரிக்கட்டைக்கும் இடையே அடி வாங்கும் போது வேறுபாடு உண்டா என்பதையும் அறிவியல் அல்லது அனுபவத்தின் மூலம் அறிந்த தகவல்களை கொண்டு விளக்கவும்.

      Delete
    13. மகிஜி... நல்லா கேட்டீங்க கேள்விய.. ஆன இத டெக்ஸ்கிட்டதான் கேட்டு இருக்கோனும்..

      Delete
    14. //அனுபவத்தின் மூலம் அறிந்த தகவல்களை //

      :-)))

      Delete
    15. அங்கே அமெரிக்கால பூரிக்கட்டைகளே கிடையாதுங்களா MP அவர்களே?!!!

      புலன்விசாரணை சைஸ்ல ஒரு புக்கு போடுற அளவுக்கு அனுபவங்களைக் கைவசம் வச்சுக்கிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி நீங்க கேட்குற கேள்வி - ஆனாலும் கொஞ்சம் ஓவர் தான்!

      Delete
    16. //சார், இணை பிரபஞ்சம் என்பது நமது பிரபஞ்சத்திற்கு நேரெதிர் குணமுடையதாகத் தானே இருக்கும்?//

      //இன்னும் கொஞ்சம் விரிவான விளக்கம் ப்ளீஸ்.//

      @ GP SIR & @ TEX VIJAY ..

      PARALLEL UNIVERSE /MULTIVERSE/MULTIWORLDS -பற்றி விரிவாக எழுத ஆசை நிறைய உண்டு ...

      ஆனால் நீண்ட அப்பதிவை படிக்கபோகும் வாசகர்களின் மனநிலையை எண்ணினால் மனம் கலக்கமுறுகிறது...:- ))

      இன்னும் ஓரிரு மாதங்களில் புலன்விசாரணை வேறு படிக்கவேண்டும் ...
      ஒரே நேரத்தில் இரு பெரிய இடிகளை மென்மையான வாசக நெஞ்சங்கள் எப்படி தாங்கும் என்பதெண்ணி இணை பிரபஞ்சம் பற்றி எழுதும் முயற்சியை கைவிட்டுவிட்டேன் :- ))


      ஈரோட்டில் முடிந்தால் இதுபற்றி நேரில் பேசலாமே ....

      Delete
    17. @ செனாஅனா

      ///ஈரோட்டில் முடிந்தால் இதுபற்றி நேரில் பேசலாமே ....///

      ம்க்கும்!! அப்படியே நீங்க வாயைத் திறந்து சொற்பொழிவு ஆத்திட்டாலும்...!!
      போனதபா EBFல நாலே நாலு தடவை மட்டும்தான் வாயைத் திறந்தீங்க. நாலுமே கொட்டாவி விடறதுக்காகத்தான்! ( அந்த நாலுமே நான் மைக்ல பேசும்போதுதான்றது கொசுறு சேதி!)

      சரி, தனியாத் தள்ளிக்கிட்டு போயாவது எதையாவது பேச வைக்கலாமேன்னு கூட்டிக்கிட்டுப்போய் பேசினா, குலுங்கி குலுங்கி சிரிப்பு மட்டும்தான் வருது உங்ககிட்டேர்ந்து! அதுவும் சைலன்ட் மோடு சிரிப்புத்தான்!!

      நண்பர்கள்ட்டயே சைலன்ட் மோடுன்னா... வீட்ல சுவிட்ச் ஆஃப் மோடுலேல்ல இருப்பீங்க?!! :D

      Delete
    18. ///ஈரோட்டில் முடிந்தால் இதுபற்றி நேரில் பேசலாமே ....////----

      சனிக்கிழமை இரவு நம்மோடு தங்குவதாக வாக்களித்தால் ஒப்புக் கொள்கிறேன் பொருளர் ஜி.😉😉😉

      Delete
    19. டெக்ஸ்..!!! போனமுறை சரியான திட்டமிடல் இல்லாது சொதப்பியாகி விட்டது..இந்த முறை அப்படி செய்வதாக இல்லை...

      பக்கா பிளானோடு வருவதாக உத்தேசம்..

      ரத்தப்படலம்+ டெக்ஸ் கொண்டாட்டங்களோடு நண்பர்களோடும் நேரம் செலவழிக்க ஆவல்..ஜமாய்க்கலாம்..

      @ ஈவி..///நண்பர்கள்ட்டயே சைலன்ட் மோடுன்னா..///

      ஈவி..இந்த புக்பேருக்கு அப்புறம் என்னை பாத்தாலே தெறிச்சு ஓடற அளவுக்கு உங்க காதுல ரத்தம் வரப்போகுது..:-)

      எடிட்டர் கிட்ட மட்டும்தான் பேச நினைச்சா நாக்கு உள்ற போயிடுது..

      Delete
    20. //பக்கா பிளானோடு வருவதாக உத்தேசம்..///👌👌👌👌👏👏👏சூப்பர் ஜி. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் களை கட்டப்போகுது...

      ///எடிட்டர் கிட்ட மட்டும்தான் பேச நினைச்சா நாக்கு உள்ற போயிடுது..///---ஹா...ஹா...இதை நானும் முதல் சில முறை கடந்து வந்துள்ளேன் ஜி. 2012பெங்களூரு காமிக்கானில் எடிட்டர் சாரிடம் பேச வாய் வராம உளறிக் கொட்டியதை, இன்னமும் என் வீட்டுக்காரி சொல்லி சொல்லி சிரிப்பா...ஹூம்...
      அதற்காகவேனும், இம்முறை குடும்பத்தோடு ஈரோடு வந்து எடிட்டர் சாரிடம் தைரியமாக பேசி காண்பித்து விடனும்....!!

      Delete
  6. மதிய வணக்கங்கள் :)

    ReplyDelete
  7. ஈரோட்கார் குர்நாய்ர்கார்க்கு வாழ்த்துகள்..!!

    ReplyDelete
  8. @ஈரோடு விஜய்
    வாழ்த்துக்கள் சகோதரரே

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் EV நண்பரே.

      Delete
  9. Caption contest

    Entry 1
    Tiger:எந்த பாருக்கு போனாலும், சரக்கடிச்சிட்டு, போக்கர்ல நாலு பேரை மொட்டையாக்கிட்டு, அப்புறம் பன்னிங்களோட போய் படுத்துடுவேன்.
    Jimmy(Mindvoice):இந்தாளு கிளாஸ் கிளாஸா தான் அடிப்பாரு. நாம பாட்டிலோட தான். பிளஸ் என் செல்ல கழுதைக்கும் ஊத்தி விட்ருவேன்.
    Jeranimo(Mindvoice): டாய் சி.னா.பா. பயர் வாட்டர் எங்க பூர்விக சொத்துடா.
    Durango(Mindvoice):ஹ்ம்ம். கர்மம் பிடிச்ச பயலுகள். சைலண்ட்டா ஊத்திக்கிட்டு குப்புற படுத்து தூங்குற சொகம் தெரியாத பசங்க.

    Entry 2
    Tiger: நான் குளிச்சு ஒரு மாசமாச்சு. மேலதிகாரிகளோட பொண்ணுங்கள பாக்கப் போகும் போது தான் குளிப்பேன்.
    Durango(Mind voice): குளியல்னா தண்ணிய மேல ஊத்தி பண்றது தான? குளிருமே?
    Jimmy(Mind voice): எப்பலாம் டைகர் என்ன பாக்க வரானோ, அப்ப நான் தண்ணி போட்ருப்பேன். அவனே தூக்கி என்ன தண்ணில போட்ருவான். அது தான் நம்ம குளியல்
    ஜெரானிமோ(Mind voice): ஒரு தபா டைகர் என் மேல் பான்சதுல, தண்ணில விழுந்து புரண்டோம். அதான் மொதோ தபா. அப்புறம் ஜல்பு புடிச்சு, அதை சரி செய்யத் தான் நெருப்பு மருந்து சாப்பிட வந்துருக்கேன்.

    Entry 3:
    Tiger: நாம எல்லோரும் ஒரு டீம். நான் தான் கேப்டன். இப்போ நாம டோலாரஸ் ஜெயிலை தகர்க்க போறோம்.
    Durango(Mind voice): சைலண்டா வெடிக்க ஏதாவது ஒரு ஐடியா பண்ணனும். ஒண்ணு டமால்னு குண்டு வைக்கிறான். இல்ல பீச்சாங்கையால நாராசமா குழல் ஊதுறான்
    Jimmy (Mind voice): நைசா கொல்லைப் பக்கமா நழுவிடுவோமா?
    Cochise (Mind voice) : சி.நா.பா ஒரு உண்மை செவ்விந்தியர். என் குலத்துக்காக ஜெயிலையே உடைக்கப் போறார். நான் உண்மையான தலைவனாக இங்கேயே இருந்து ஆர்டர் தர்றேன். சரக்கும் இங்க நல்லாருக்கு.

    Entry 4:
    Tiger: ஒரு செவ்விந்தியன் நம்மளோட சேர்ந்து பாரில் குடிக்க சுதந்திர அமெரிக்காவில் விதியுண்டு. நீ குடி வெள்ளைக் கரடி.
    Durango (Mind voice): என்ன வேணாலும் செய். ஆனா கத்தாத.
    Jimmy(Mind voice): அப்ப என் கழுதையை நாளைக்கு பாருக்கு கூட்டியாறேன்.
    Jeranimo(Mind voice): டாய். என் மவளை எமாத்திட்ட. என்னையும் அரெஸ்ட் பண்ணி போற வழில தாக சாந்தி பண்ணுற. இதுல பீத்தல் வேற.

    Entry 5:
    Tiger : நான் சூப்பரா ப்யூகிள் ஊதுவேன்
    Jimmy(Mind voice): நான் சூப்பரா சுருட்டு ஊதுவேன்
    Durango(Mind voice): நான் சூப்பரா தம் ஊதுவேன்
    Jeronimo(Mind voice): பேட் பாய்ஸ். மீ ஒன்லி கஞ்சா ஹூக்கா. வோ.

    Entry 6
    Tiger: எனக்கு இன்னொரு பேரும் இருக்கு. சி.நா.பா
    Durango: மூக்குல குத்து வாங்கி உடைச்சிக்கிட்டு பீற்றல பாரு
    Jimmy (Mind voice): டைகர்ட்ட அடி வாங்கி டுராங்கோ வாயை கிழிச்சுகிட்டு தான் அலையப் போறான்.
    கோசிஸ்(Mind voice): இவனுக்கு வேற பேரு வெச்சிருக்கணும். போரடிக்கும் கழுதைப் புலினு

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் செயலரே...:-)

    ReplyDelete
    Replies
    1. பரிசு நூறு பொற்காசுகளாக இருந்தால் எனக்கு அனுப்புங்கள் .எல்எம்எஸ் ஆக இருந்தால் வேண்டியவருக்கு அனுப்புங்கள் செயலரே..:-)

      Delete
    2. மின்னும் மரணத்திலிருந்து பொற்காசு அப்படீன்னால மனசு தானா ஈயக்காசுவா உருவப்பபடுத்தவதால, பொற்காசுன்னால பயந்து வருது சார்.!!

      Delete
  11. அமர்க்களப்படுத்தி விட்டீர் ஈ.வி சார்.வாழ்த்துகள்.!

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சார், அப்படியே கேப்சன் போட்டிக்கும் சட்டுபுட்டுனு முடிவு சொன்னீங்கன்னா, நாங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்.

      இந்த LMS கண்ணு முன்னாடி வந்து பாடா படுத்துது.

      Delete
    2. என்னுடைய வாழ்த்துக்களும் செயலர்👌👌👌

      ஆசிரியர்கள் சார்@ பட்டி பார்க்கப்பட்ட லைன் இங்கே போடப்படுமா???

      Delete
    3. வாழ்த்துக்கள் ஈ.வி....சார்..

      Delete
  12. பார்க்காத பல அட்டைப்படங்கள் பட்டையை கிளப்புகிறதே...:-)

    ReplyDelete
  13. வேட்டை நகரம் வெனிஸ் முதல் அட்டை டாப்

    ReplyDelete
  14. சிப்பாயின் சுவடுகளில் முதல் அட்டைப்படம் கலக்கல்..

    ReplyDelete
  15. வந்தாச்சி ...வந்தாச்சி...ஸ் அப்படி கொளுத்தி எடுக்குதே கோடை...

    மெக்ஸிகோ கதையில் தான் நல்லாயிருக்கும் போல...!!!
    நிஜத்தில்...???

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ஈரோடு விஜய்.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. விஜயன் சார்,
      // ஆபீசுக்கு லீவு ; சிவகாசிக்கே லீவு எனும் போது, ரொம்ப நாள் கழித்து ஒரு மதியத் தூக்கம் ; IPL மேட்ச் பார்க்க நேரம் //

      இதை எல்லாம் படிக்கும் போது நீங்கள் ரொம்ப ப்ரீயாக இருப்பது போல் தெரிகிறது. நம்ப தாரை பரணிக்காக
      இந்த நேரத்தில் சி.சி.வ தயார் செய்யலாமே? ஓவர் டூ தாரை பரணி

      Delete
    2. பரணி அண்ணா தேங்க்ஸ்னா..உங்களை இப்பவே கட்டி பிடிச்சு பாராட்டுனும் போல இருக்கு..:-)

      Delete
    3. ஆனா ஆசரியர் சி்பெ்வ ங்கிறார் சிமவ ங்கிறார் சிசிவ பத்தி மட்டும் உதாரணத்துக்கு கூட பேசறது இல்ல.

      வெரி பேடு..:-(

      Delete
    4. ///ஆனா ஆசரியர் சி்பெ்வ ங்கிறார் சிமவ ங்கிறார் சிசிவ பத்தி மட்டும் உதாரணத்துக்கு கூட பேசறது இல்ல.

      வெரி பேடு..:-(///

      நெவர் மைண்ட் தலைவரே,

      என்னதான் சி.பெ.வ, சி.ப.வ ன்னு குழப்பி அடிச்சாலும், மீ.சி.ம., மீ.பெ.வ போட்டு பாத்ததுல. சி.சி.வ வர்றது கன்பர்ம் ஆகுது சார்.

      Delete
    5. சி.ப.வ வை சி.ம.வ எனப் படிக்க வேண்டுகிறேன்.

      Delete
    6. ஆனா ஆசரியர் சி்பெ்வ ங்கிறார் சிமவ ங்கிறார் சிசிவ பத்தி மட்டும் உதாரணத்துக்கு கூட பேசறது இல்ல.

      வெரி பேடு..:-(

      Delete
    7. பரணி அண்ணா தேங்க்ஸ்னா..உங்களை இப்பவே கட்டி பிடிச்சு பாராட்டுனும் போல இருக்கு..:-)

      Delete
  18. வாழ்த்துக்கள் ஈ.வி.

    ReplyDelete
  19. வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் ஈவியின் நன்றிகள்! _/\_

    தேர்வு செய்த எடிட்டர் சமூகத்திற்கும் நன்றிகள்! _/\_

    கிடைத்த பரிசை யாருக்கு திருப்பிவிடுவது என்பதில் கொஞ்சூண்டு குழப்பம் நிலவுகிறது. நம்ம 'கேப்ஷன்' சரவணன் "பரிசை எனக்கு கொடுத்திடுங்க ஈவி" என்று சென்ற பதிவிலேயே சொன்னதில் 'ச்சும்மாக்காட்டி' எதுவும் இல்லையென்றால், முதலில் துண்டுபோட்டு வைத்த அவருக்கே பரிசு வழங்கப்படும்!

    இல்லாவிட்டால் LMS இல்லாத வேறு நண்பர் யாருக்காவது கொடுக்கலாம்!!

    சொல்லுங்க சரவணன்... சொல்லுங்க!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் ரைட்டு LMS னா என்னன்னு சொல்லுங்க!

      Delete
    2. விஜய் நண்பா நான் கேப்சன் சரவணன் இல்லை, சாதா சரவணன் தான்.LMS எனக்கே கொடுத்தால் சந்தோசம் தான்.
      அதிலும் அந்தப் புத்தகத்தில் எடிட்டர் சாரின் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாக இ௫க்கும்.!!!!!

      Delete
    3. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நம் நண்பர் சாதா சரவணன் அவர்களுக்கு LMS பரிசை (ஆட்டோகிராஃபுடன்) அனுப்பிவைக்க ஆவணஞ்செய்யுமாறு எடிட்டர் சமூகத்தைக் கேட்டுக்கொள்கிறேன்!!

      ஹாப்பி ரீடிங் சாதா சரவணன்! :)

      Delete
    4. சாதா சரவணன் இன்றுமுதல் LMS சரவணனாக அறியப்பபடூவீராக..!!

      Delete
    5. LMS சரவணன்- டெக்ஸின் அதி தீவிர ரசிகர்களில் ஒருவர்.
      LMSஐ போற்றிப் பாதுகாப்பவரிடம் தான் சென்று சேர்கிறது.
      வாழ்த்துகள் சரவணன் & பாராட்டுகள் செயலரே.👌👌👌👌


      தனக்கு கிடைக்கும் பரிசுகளை முகமறியா நட்புகளுக்கு அளித்து ஆனந்தம் கொள்ளும் ஈவி என் நண்பர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
      இதுபோன்ற நல்ல விசயங்கள் நடைபெற எத்தனை போட்டி வைத்தாலும் அத்தனையிலும் ஜெயம் காண வாழ்த்துகள் ஈவி.

      Delete
    6. LMS சரவணன் @ அந்த புத்தகம் உங்களை வந்து சேர்ந்த உடன் அதில் உள்ள டெக்ஸ் கதையான சட்டம் அறிந்திரா சமவெளியின் பிரிண்டிங் தரத்தையும், இம்மாத பவளச்சிலை மர்மத்தின் பிரிண்டிங் தரத்தையும் ஒப்பிட்டு பாருங்க; ஆச்சர்யம் காத்திருக்கு உங்களுக்கு....!!!

      Delete
    7. நன்றிகள் சேலம் டெக்ஸ் விஜய்!!!

      Delete
    8. அன்புக்கும், ஆசிகளுக்கும் நன்றிகள் பல டெக்ஸ் விஜய் _/\_

      Delete
    9. செயலரே@ சாச்சி புட்டீங்களே பாடார்னு...!!!

      ஆசிவழங்கும் அளவு இன்னும் 50ஐ கிராஸ் செய்யல...ஹி...ஹி...
      உங்களை விட ஓரிரு மாதங்கள் தான் மூத்தவன். நம்ம எல்லோருக்கும் ஆசி வழங்கத்தான் நம்ம ஆசிரியர் சார், நம்ம ATR sir, நம்ம M.V.sir, லாம் இருக்காங்களே...

      Delete
    10. ஷெரீப் அய்யாவும் கூட ஆசி வழங்குவதில் அனுபவஸ்தராமே...!!!

      Delete
    11. @விஜி. ஙே. நானும்உங்களை விட சில மாதங்களே மூத்தவன் 😡😡😡😡

      Delete
    12. மஹி ஜி@ ஹா..ஹா...😃😃😃
      ஆசிரியர் சாரும் இப்ப வந்து,
      "நானும் உங்களைவிட சில மாதங்களே மூத்தவன் MP சார்"--னு சொல்லப் போறார்...

      Delete
    13. பரிசை பெற்றவருக்கும் ,அந்த பரிசை பெறுபவருக்கும் எனது மனமார்ந்த (மீண்டும் ) வாழ்த்துக்கள்..

      Delete
  20. ///நீங்களெல்லாம் பரபரப்பாய் இன்னொரு திங்களைச் சமாளித்து வரும் வேளையில், நாங்களோ இங்கே ரெஸ்ட் எடுத்து tired ஆகி, மறுக்கா ரெஸ்ட் எடுத்து வருகிறோம் ! ///

    ஹா ஹா ஹா!! செம்ம!! :))))))))

    ReplyDelete
  21. என்னது டியுராங்கோ போட்டி முடிஞ்சு போச்சா..வாழ்த்துக்கள் ஈவி..

    ஒரு வாரம் வரைக்கும் அனுப்பலானு எழுதி வச்சதெல்லாம் வேஸ்ட்டா...நிறைய எழுதி மொத்தமா போடுவதே என் வழக்கம்..

    பரவாயில்லை...கஷ்டபட்டு யோசிச்சத அனுப்பிடுவோம்..just for fun friends...

    ReplyDelete
    Replies
    1. எழுதியதை இங்கே போடுங்க நண்பரே! எடிட்டரிடம் நிறைய LMS இருப்பதாகக் கேள்வி! தவிர, சிவகாசில 'இரக்க சிந்தையுள்ள இளவரசன்'னு கேட்டாலே நம்ம எடிட்டரின் வீட்டைத்தான் எல்லாரும் காட்டுறாங்களாம்!!

      Delete
    2. நன்றி சார்...சந்தாவில் ஒன்று..கேப்சனில் வெற்றி பெற்று ஒன்று என இரண்டு உள்ளது.சார் கையெழுத்து ஐடியா முன்பே வராமல்
      விட்டது

      Delete
  22. 1.வெண்பனியின் குளிர்ச்சியையும் தாண்டி வெம்மை படர்ந்த மனது..தனிமையே துணையாய்...

    2.புதைந்து கிடக்கும் மனங்களுக்கிடையே புழுங்கிய மனதுடன் ஒர் உயிர்...

    3.மௌனமாய் ஒரு கண்ணீர்துளி..
    இழந்து போன பாத சுவடுகளும் இவளைப் போலவே அனாதையாய்..

    4.சிலுவைகள் சுமக்கும் பூமியில் நினைவை சுமந்தபடி ஒற்றை உயிர்...

    5.துடிப்பை இழந்து உறங்கும் இதயங்களுக்கிடையில் துடிக்க மறந்து
    ஒரு இதயம்..

    6.கல்லறை அருகே நினைவு கருவறை சுமந்தவள்...

    7.உறையாத பனிதுளிகளில் உயிர்ப்புடன் ஒரு துளி...கல்லறையின் பிம்பத்தை துளி கண்ணீரில் சுமந்தபடி...

    8.உயிருடன் ஒரு கல்லறைக் கவிதை..

    ReplyDelete
  23. கேப்சன் போட்டிக்காக:

    கேப்சன்:1
    B.சிலுக்கு என்னை பார்த்து சிரிச்சுட்டாளே..அதுக்குதான் இந்த பார்ட்டி...

    A.(அவ என்னைதான் பார்த்து சிரிச்சா..தன்னை பார்த்து சிரிச்சதா நினைச்சிகிட்டிருக்கான்...
    செம காமெடி)

    C.(அவ என்னைதான் பார்த்து சிரிச்சா..தன்னை பார்த்து சிரிச்சதா நினைச்சிகிட்டிருக்கான்...
    செம காமெடி)

    D.(அடப்பாவி..அவ என் பொண்டாட்டிடா..)


    கேப்சன்2:
    A.(தலையே சுத்துது...ஸ்ட்ராங் பா...)

    C.(செம சரக்கு போல...)

    B.இன்னும் கொஞ்சம் தரேன். குடிச்சுட்டு போய் ஒரு கலக்கு கலக்கிடுவோம்..

    D.(ம்க்கூம்..சரக்குனு நினைச்சு பச்சை தண்ணிய குடிக்கறப்பவே இவ்ளோவா...)


    கேப்சன்3:
    A.(ஓசுல குடிச்சுட்டு "பரலோக பாதை" வழியா "சைத்தான் துறைமுகம்" போயிட வேண்டியதுதான்..)

    B.(நட்ப பார்க்காம "மனதில் உறுதி"யோட "ரௌத்திரம் பழகி" "தடை பல தகர்த்து" சரக்க முழுக்க நான் ஒருத்தனே குடிச்சுட வேண்டியதுதான்)

    C.மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டிங்கணா..அப்படி பண்ணினா இந்த "வேங்கை சீறிடும்"."என் பெயர் டைகராக்கும்"

    D.மெண்டல் ஆஸ்பத்திரில இருந்து மூணு பேர் தப்பிச்சதா நியூஸ்ல வந்தது இவனுங்கள பத்திதானோ


    கேப்சன்4:
    A ஓய்...நான் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்துகாரனாக்கும்...

    B.நான் மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலம் தம்பி

    C.நான் மட்டும் என்ன..மணலும் மணல் சார்ந்த பாலை நிலத்துகாரன்பா..

    D.இவனுங்க கூட ஓசுல குடிக்க வந்ததுக்கு இதெல்லாம் கேட்க வேண்டியிருக்கு.எனக்கு இன்னும் வேணும்...

    கேப்சன்5:
    B.இந்த பேச்சுலர்ஸ் பார்ட்டிய நல்லா என்ஜாய் பண்ணுங்க நண்பர்களே

    A.(பேசிகிட்டே இருக்கானே தவிர ஊத்த மாட்டாங்கிறானே)

    C.(டேய் நாலு மணி நேரமா இததானேடா சொல்லிகிட்டே இருக்க..)

    D.பேச்சுலர் பார்ட்டிங்கறது கல்யாணம் ஆக போறவன் தரது..
    எப்பவும் கல்யாணமே ஆக வாய்ப்பேயில்லாத மூணு பேர் கொண்டாடறது பேச்சுலர் பார்ட்டியாடா...

    கேப்சன்6:
    A.(கொஞ்சமா குடிச்சதுக்கே ஏதோ வரி வரியா ஓடுதே)

    B.(ம்ம்ம்...)

    C.அது ஏதோ "ஸ்கோரிலிங்காம்...குடி நாட்டுக்கு வீட்டுக்கு கேடுனு ஓடுதாம்

    D.பார்ல சீன் வந்தாலே இப்படி மெசேஜ் போடனும்னு கவர்மெண்ட் ஆர்டர் தம்பிங்களா

    கேப்சன்7:
    A.கொஞ்சம் கெட்டவனா பிரின்சோட கடல் வாழ்க்கை என்னுது...

    B.நல்லவனா கெட்டவனானு யாருக்கும் தெரியாது.எனக்கும் தெரியாது.இதான் என் லைஃப்

    C.ரொம்ப நல்லவன்னு சொல்லியே செய்வாங்க...

    D.அப்ப வாழ்க்கைல எப்படியா இருந்தாலும் திருப்தி பட முடியாது போல...


    கேப்சன்8:
    A.வாழ்க்கையெனும் ஓடம்..வழங்குகின்ற பாடம்

    B.நான் ஆண்டவனா..தாய் தந்தைதான் எனக்கில்லையே

    C.ஊருக்குள்ள சக்கரவர்த்தி...ஆனா உண்மையில மெழுகுவர்த்தி

    D.மாட்டிக்கிட்டேன்...மாட்டிக்கிட்டேன்...


    கேப்சன்9:
    A.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட்டமாம்...சீக்கிரம் ஊத்திக் கொடுப்பா..தெம்பா போகணும்

    B.ஸ்டெர்லைட் போராட்டம் நடக்குதாமே..நியாயமான போராட்டம்...நான் அதுக்கு போறேன்

    C.மீனவர்கள் பிரச்சனையும் பெருசா இருக்கு.நான் அதுக்கு போறேன்பா

    D.(தமிழன்)பீச்சாண்ட கட்சி மீட்டிங்காம்...கட்டிங்கும் பிரியாணியும் கன்பார்ம்....சீக்கிரம் போவணும்...

    ReplyDelete
  24. ////இதே போட்டிக்கு "100 பொற்காசுகள் பரிசு" என்று அறிவித்திருப்பின் parcel redirect எப்படியிருந்திருக்கும் என்ற யோசனையோடு கிளம்புகிறேன் ////

    ஐடியா #1 :

    பொற்காசுகள் பரிசாகக் கிடைத்திருந்தால், அதை பரம ஏழையான என் மனைவிக்கு அனுப்பச் சொல்லியிருப்பேன். அதைப் பெற்றுக்கொண்ட என் மனைவி (அதாவது, இப்போது பணக்கார மனைவி) பசியால் வாடும் ஏழையாகிய எனக்கு அதில் பாதியைக் கொடுத்து உதவியிருப்பார்! இப்படி பரஸ்பரம் உதவிசெய்து எங்கள் கஷ்ட ஜீவனத்தைத் தொடர்ந்திருப்போம்!

    ஐடியா #2

    "உங்களுக்கு எதுக்கு சார் வீண் கொரியர் செலவு...? நானே நேர்ல வந்து பொற்கிழியை வாங்கிக்கறேன்" என்று சொல்லி, உடனே நான்கு செக்யூரிட்டி கார்டுகள் (அல்லது என் ஒரே ஒரு மனைவி) சகிதம் சிவகாசி வந்து இறங்கியிருப்பேன்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி!! எல்லா ஐடியாக்களுமே நம்ம காமிக்ஸ்லேர்ந்து கத்துக்கிட்டதுதான்!

      Delete
    2. வாழ்த்துகிறேன் ஈ வி

      Delete
  25. ஜிம்மி . வராத விருந்தாளிங்கல்லாம் வர போறாங்க நீயும் வா ஜிம்மின்னு நம்ப ஆளு கூப்பிட்டதை நம்பி வந்தா இங்கே கூலிக்கு கொலை பண்ற கொலைகார பய நிக்கிறான் ..அவனாவது பரவாயில்லே கடைசியிலே நிக்கிற பய காக்கா கண்ணனாட்டம் இருக்கிறான் நடுவில் நிக்கிற தாடிக்காரன் யாருன்னே தெரியலே அவன் எதிரிலே நிறுத்தி வச்சி இருக்கிற மகுடியை பார்த்தா பாம்பாட்டிப்பய மாதிரி தெரியுது .. கஞ்சப்பிசுநாரி நம்மஆளு அவனே செலவு பண்ணும்போது நம்மளும் தாராளமா இருக்கிற மாதிரிகா ட்டிக்குவோம் ..பிரண்ட்ஸ் சைடு டிஷ் செலவு என்னோடது இந்தாப்பா ஜாக்கு குடுகுடுன்னு ஓடிப்போயி மூக்கு கடையிலே அஞ்சி பாக்கட் ஊறுகா வாங்கிட்டு வந்திடு

    ஜாக் .- வோ ..மாங்காஊறுகாயா எலுமிச்சை ஊறுகாயா
    டுரங்கோ .- இவன் ஒருத்தன் குடிக்கிறதுக்கு முன்னாடியே வோவொன்னு வாந்தி எடுத்துக்கிட்டு ..ஏதாவது வாங்கிட்டு வாங்கப்பா வெய்யில் ஆளைக்கொல்லுது ..
    டைகர் .- சாரி பிரண்ட்ஸ் இது தண்ணி பார்ட்டின்னுநினைச்சீங் களா ..கோடைவெயிலுக்கு சுத்தமான நன்னாரிசர்பத் குளுகுளுன்னு ஐஸ்போட்டு வச்சிருக்கேன் கூச்சப்படாம கேட்டுவா ங்கிசாப்பிடுங்

    ReplyDelete
  26. மாறுபட்ட wrapperகளின் தொகுப்பு அருமை !Well done Mr.Ponnan!

    ReplyDelete
  27. C : யாரப்பா அது?
    B : யாரு அப்பாவும் இல்லைங்க எனக்கு கல்யாணம் ஆகலைங்க.
    A : எம் பக்கத்த வீட்டுக்காரன் பேரு கல்யாணம்.
    D : உங்க பொண்டாட்டிங்க வர்றாங்க பாருங்க

    ReplyDelete
  28. பவளச்சிலை மர்மம்.

    முதல் பக்கத்திலே திரி பற்றிக் கொண்ட டைனமைட்டாக பொறி பறக்கும் கதை, கடைசி வரை பரபரப்பை குறையாமல் தக்க வைத்து வெற்றியையும் கூடவே தக்க வைத்துக் கொண்டது.

    60பக்கத்தில் தொடங்கும் விரட்டல் படலம் ஏறக்குறைய ஐம்பது பக்கத்திற்கு நீள்கிறது.
    ஆச்சர்யம் தான்,
    ஆனால் துளியும் அலுப்பின்றி சோர்வின்றி
    தடதடவென நகர்த்தி காட்சிப்படுத்திய விதம் 'அட 'போடவைக்கிறது.
    பளிங்கு போன்ற மொழிபெயர்ப்பு, கதையை மேலும் மெருகூட்டுகிறது.



    சுருக்கமாகச் சொன்னால்,
    வில்லரின் பளிங்கு மகுடத்தில், தங்கத்தால் ஆன பவளக்கல்.

    ReplyDelete
    Replies
    1. பழி வாங்கும் பாவை மற்றும் பழிக்குப் பழி மற்றும் இரத்த முத்திரை இவைகளும் இன்னும் சூப்பராக இ௫க்கும். இவைகள் வண்ண மறுபதிப்புகளாக வந்தால் படு அசத்தலாக இ௫க்கும்.

      Delete
    2. 👌👌👌👌 அருமை பெருமாள்

      Delete
    3. கோவிந்த்@ பளிங்கு போல பளீரான விமர்சனம்.

      LMSசரவணன் @3ம் மாஸா இருக்கும்...

      Delete
    4. // வில்லரின் பளிங்கு மகுடத்தில், தங்கத்தால் ஆன பவளக்கல்.//
      +11111
      நச்.

      Delete
    5. உண்மை நண்பரே..பளிங்கு சிலை மர்மம் எனக்கும் பரபர வே...:-)

      Delete
    6. எல்லாமே வரத் தான் போகிறது பாருங்களேன்..

      Delete
  29. A: ஜிம்மி: இந்த புது பையன் எனக்கு ஒரு ரவுண்டு ஊத்துவானா???.. ( மனசுக்குள்)
    B:ட்யூராங்கோ : நம்ம வலது கை மேட்டரை இவனுக கண்டு புடிச்சிருவானுகளோ ??( மனசுக்குள்)..
    C: தங்க தலைவன் : ட்யுராங்கோ ... உனக்கு வலது கை பங்சாராச்சே... ( சத்தமாகவே)
    D: டைகர் ( அப்பிடின்னே வெச்சுக்குவோம் ): யப்பா... பத்து வருசம் புக்கு வரலைனாலும் டைகர் புத்தி மழுங்காதுப்பா.. ( மனசுக்குள்ளே தான் )

    ReplyDelete
  30. வேட்டை நகரம் வெனிஸ்.. முதல் அட்டை அட்டகாசம்... இந்த கதை ஆரம்பிப்பதே என்னுடைய மற்றும் மஹிஜியின் பிறந்த நாளில் என்ற வகையில் ... மனசுக்கு நெருக்கமான கதை..

    ReplyDelete
  31. போட்டி முடிந்தாலும்..:
    இது தான் இறுதி நிம்மதி என்று பலர் உறங்கினாலும்... வாழும் வரை நிம்மதி என்பதே இல்லை என்பதற்கு சான்றாக அந்த அமைதியையும் குலைத்து கொண்டிருந்தது அவளின் கண்களின் புலம்பல்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரம்மி. அருமை. செம. சூப்பர்.

      Delete
    2. சூப்பர் ரம்மி👌👌👌👌

      ஆறுதல் பரிசாக ஒரு ஆப்பிள் ஜீஸ் வாங்கி தந்துடலாம்...

      Delete
    3. புளிக்க வைச்சதா இருக்கனும் :)

      Delete
    4. ரம்மியே தானா...!?

      ;-))

      Delete
  32. சார் வே.ந.வெ அந்த அட்டை சுமார் . இங்க காட்டிய இரண்டட்யயும் பாக்கயில...

    ReplyDelete
    Replies
    1. சார் மேக்னம் எல்லா அட்டயும் போட்ருக்கோணும்...டைகரும் இதில் அசத்தல்

      Delete
  33. Replies
    1. //விதைத்தவை விருட்சங்களாகவும், புதைத்தவை சிலுவைகளாகவும் எழும்பியிருந்த அந்த பனி படர்ந்த பிரதேசத்தின் கனத்த அமைதியை கொஞ்சமேனும் குலைக்க முயன்று, அதில் ஓரளவு வெற்றியும் ஈட்டிக்கொண்டிருந்தன - ஒரு இளம் பெண்ணின் விசும்பல்கள்! //

      Delete
  34. ஜிம்மி .- இப்படி என்னோட கிளாஸ் காலியா இருக்குறது தெரிஞ்சும் எனக்கு ஊத்தாம வேறே கிளாஸை நிரப்புறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை இப்படியே நீடிச்சா எனக்கு இந்த நாட்டை விட்டு போறதை தவிர்த்து வேற வழி தெரியலே ..
    டுராங்கோ .- கண்ணா கடவுள் குடிக்க கொடுக்கிறத தடுக்க முடியாது . தடுக்க நினைக்கிறத குடிக்க முடியாது ..இது எப்படி இருக்கு ?
    டைகரஜாக் .- எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ..என்னை இப்படி உங்களோட கோத்து விட்ட புண்ணியவான் யாரு ?எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ....
    டைகர் .- ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் ..ஆளாளுக்கு வசனம் பேசிகிட்டு சின்னபிள்ளைத்தனமாயில்லேயிருக்கு ..ஒண்ணை மட்டும் தெரிஞ்சுக்குங்க ..மனித உணர்வு கொள்ள இது மனிதநட்புயில்லை ..அதையும்தாண்டி புனிதமான காமிக்ஸ்நட்பு ..

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள் ஈ.வி.

    ReplyDelete
  36. இன்று பிறந்த நாள் காணும் ஜேடர்பாளையம் சரவணன் சார் மற்றும் சுரேஷ் சந்த் அய்யா அவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்பைடரின் அதி தீவிர ரசிகர் JSK jiக்கும்,

      மரியாதைக்குரிய நண்பர் சுரேஷ் சந்த் சாருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்🍰💖🎈🍦🍫🍭🍨

      Delete
    2. @ JSK

      இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே!! என்றும் தொடரட்டும் இந்த இனிமையான காமிக்ஸ் பயணம்!

      @ சுரேஷ் சந்த்

      இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார்!! என்றும் தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் சேவைகள்!

      Delete
    3. எனது இனிய மனமார்ந்த வாழ்த்துகளும் மனம் நிறைய...:-)

      Delete
    4. தாமதமான நம் வாழ்த்துக்களும் சார் !

      Delete
    5. எனது இனிய மனமார்ந்த வாழ்த்துகளும் உரித்தாகட்டும் சார் _/|\_
      .

      Delete
  37. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    ஜேடர்பாளையம் சரவணகுமார் ஜி

    ReplyDelete
  38. இன்று பிறந்த நாள் காணும் சுரேஷ் சந்த் சாருக்கும், ஜேடர்பாளையம் சரவணன் நண்பருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. @ஜேடர்பாளையம் சரவணகுமார் ஜி

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரரே :)

    ReplyDelete
  40. "ஒரு சிப்பாயின் சுவடுகள்" இரண்டு அட்டை படங்களும் அருமை

    ReplyDelete
  41. எடிட்டர் சார்! இம்மாதம் டெக்ஸ் வில்லரின் "காலனின் கானகம்" கதைக்கு பதிலாக "பவளச்சிலை மர்மம்" வெளியிட்டிருந்தீர்கள். மிக்க நன்றி! அதே நேரம், அந்த காலனின் கானகத்திற்கு பதிலாக வேறு ஏதேனும் ஒரு டெக்ஸ் கதையை வெளியிடப்போவதாக அறிவித்தீர்கள். வேறு கதை எதுவும் வேண்டாம் சார். அந்த வேறொரு கதையை தேர்வு செய்வதற்கு பதிலாக இந்த ஆண்டின் தீபாவளி மலரை முழு வண்ணத்தில் வெளியிட்டுவிடுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. ஆகா!!!!அ௫மையான ஐடியா!!!!
      குறித்துக் கொள்ளுங்கள் ஆசிரியர் சார்!!!!!

      Delete
    2. ஆஹா...அற்புதமான யோசனை ஆசிரியரே...செயல் படுத்த முடிந்தால் தயவு செய்து கொடுங்கள் முழு வண்ணத்தில்...

      Delete
    3. என்னை வைத்துக் காமெடி-கீமடி ஏதும் பண்ணலியே நண்பர்களே ?

      Delete
  42. editor sir ,

    innoru competition vachu NBS gift kudutha nalla irukum ... i missed the edition :)

    ReplyDelete
    Replies
    1. Tiger : ennapa sezhipha iruka pola

      Durango : (vadivel mind voice) Dangerous fellow ..ivana pathu deal pannanum

      Jimmy : eppadi iruntha boss ippadi ayitar

      Redindian : Motha kavali pasangalaum inga tan irukanunga ... innaiku climax thanada

      Delete
    2. நானும் சார்..பார்த்தது கூட இல்ல

      Delete
  43. இப்பொழுது கைகளில் ட்யூராங்கோ ..

    மீண்டும் பார்த்து பார்த்து ரசிக்கிறேன்.நாளை மீண்டும் அவருடன் பயணமாக

    ReplyDelete
  44. ஹாய், வில்லர்!

    ஐயாம் GP.

    நான் இதை.. சொல்லியே ஆகணும்.

    பவளச்சிலை மர்மம் அவ்ளோ அழகு.

    இங்க யாரும் காமிக்ஸ்ல, இத்தனை அழகை, இத்தனை அழகா பாத்திருக்கவே மாட்டாங்க.

    ஐயாம் வெரி ஃப்ரவ்டு ஆஃப் யூ.

    முன்தினம் பார்த்தேனே

    பார்த்ததும் வியந்தேனே.....

    ReplyDelete
    Replies
    1. படித்ததும் சிலிர்த்தேனே...!!!👏👏👏

      ரம்மிக்கி ஆப்பிள் ஜூஸ்,
      கோவிந்த்துக்கு ஆரஞ்சு ஜூஸ்...🍹🍹

      Delete
  45. கேப்சன் போட்டிக்காக:

    கேப்சன்:1
    B.சிலுக்கு என்னை பார்த்து சிரிச்சுட்டா..அதுக்குதான் இந்த பார்ட்டி...
    A.(அவ என்னைதான் பார்த்து சிரிச்சா..தன்னை பார்த்து சிரிச்சதா நினைச்சிகிட்டிருக்கான்...
    செம காமெடி)
    C.(அவ என்னைதான் பார்த்து சிரிச்சா..தன்னை பார்த்து சிரிச்சதா நினைச்சிகிட்டிருக்கான்...
    செம காமெடி)
    D.(அடப்பாவி..அவ என் பொண்டாட்டிடா..)


    கேப்சன்2:
    A.(தலையே சுத்துது...ஸ்ட்ராங் பா...)
    C.(செம சரக்கு போல...)
    B.இன்னும் கொஞ்சம் தரேன். குடிச்சுட்டு போய் ஒரு கலக்கு கலக்கிடுவோம்..
    D.(ம்க்கூம்..சரக்குனு நினைச்சு பச்சை தண்ணிய குடிக்கறப்பவே இவ்ளோவா...)

    கேப்சன்3:
    A.(ஓசுல குடிச்சுட்டு "பரலோக பாதை" வழியா "சைத்தான் துறைமுகம்" போயிட வேண்டியதுதான்..)
    B.(நட்ப பார்க்காம "மனதில் உறுதி"யோட "ரௌத்திரம் பழகி" "தடை பல தகர்த்து" சரக்க முழுக்க நான் ஒருத்தனே குடிச்சுட வேண்டியதுதான்)
    C.மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டிங்கணா..அப்படி பண்ணினா இந்த "வேங்கை சீறிடும்"."என் பெயர் டைகராக்கும்"
    D.மெண்டல் ஆஸ்பத்திரில இருந்து மூணு பேர் தப்பிச்சதா நியூஸ்ல வந்தது இவனுங்கள பத்திதானோ


    கேப்சன்4:
    A ஓய்...நான் காடும் காடு சார்ந்த மருத நிலத்துகாரனாக்கும்...
    B.நான் மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலம் தம்பி
    C.நான் மட்டும் என்ன..மணலும் மணல் சார்ந்த பாலை நிலத்துகாரன்பா..
    D.இவனுங்க கூட ஓசுல குடிக்க வந்ததுக்கு இதெல்லாம் கேட்க வேண்டியிருக்கு.எனக்கு இன்னும் வேணும்...


    கேப்சன்5:
    B.இந்த பேச்சுலர்ஸ் பார்ட்டிய நல்லா என்ஜாய் பண்ணுங்க நண்பர்களே
    A.(பேசிகிட்டே இருக்கானே தவிர ஊத்த மாட்டாங்கிறானே)
    C.(டேய் நாலு மணி நேரமா இததானேடா சொல்லிகிட்டே இருக்க..)
    D.பேச்சுலர் பார்ட்டிங்கறது கல்யாணம் ஆக போறவன் தரது..
    எப்பவும் கல்யாணமே ஆக வாய்ப்பேயில்லாத மூணு பேர் கொண்டாடறது பேச்சுலர் பார்ட்டியாடா...


    கேப்சன்6:
    A.(கொஞ்சமா குடிச்சதுக்கே ஏதோ வரி வரியா ஓடுதே)
    B.(ம்ம்ம்...)
    C.அது ஏதோ "ஸ்கோரிலிங்காம்...குடி நாட்டுக்கு வீட்டுக்கு கேடுனு ஓடுதாம்
    D.பார்ல சீன் வந்தாலே இப்படி மெசேஜ் போடனும்னு கவர்மெண்ட் ஆர்டர் தம்பிங்களா


    கேப்சன்7:
    A.கொஞ்சம் கெட்டவனா வாழ்ந்த வாழ்க்கை என்னுது...
    B.நல்லவனா கெட்டவனானு யாருக்கும் தெரியாது.எனக்கும் தெரியாது.இதான் என் லைஃப்
    C.ரொம்ப நல்லவன்...இப்படி சொல்லி சொல்லியே என்னை செய்வாங்க...
    D.அப்ப வாழ்க்கைல எப்படியா இருந்தாலும் திருப்தி பட முடியாது போல...


    கேப்சன்8:
    A.வாழ்க்கையெனும் ஓடம்..வழங்குகின்ற பாடம்
    B.நான் ஆண்டவனா..தாய் தந்தைதான் எனக்கில்லையே
    C.ஊருக்குள்ள சக்கரவர்த்தி...ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
    D.மாட்டிக்கிட்டேன்...மாட்டிக்கிட்டேன்...


    கேப்சன்9:
    A.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட்டமாம்...சீக்கிரம் ஊத்திக் கொடுப்பா..தெம்பா போகணும்
    B.ஸ்டெர்லைட் போராட்டம் நடக்குதாமே..நியாயமான போராட்டம்...நான் அதுக்கு போறேன்
    C.மீனவர்கள் பிரச்சனையும் பெருசா இருக்கு.நான் அதுக்கு போறேன்பா
    D.(தமிழன்) பீச்சாண்ட கட்சி மீட்டிங்காம்...கட்டிங்கும் பிரியாணியும் கன்பார்ம்....சீக்கிரம் போவணும்...


    கேப்சன்10:
    A.ஓய் நீ யாருப்பா..நான் ஜிம்மி...நாம இங்க எப்படி வந்தோம் டைகர்?
    B.நான் தான் டியூராங்கோ...நானும் இங்க எப்படி வந்தேனே தெரியலயே..
    C.நான் டைகர்...சரக்கு போடறதுக்கு முன்னாடியே ஹேங்க் ஆயிடுச்சோ
    D.நீங்க எல்லாம் காமிக்சால இணைஞ்ச சொந்தங்கள்...யாரு கண்டா..
    உங்கள ஒண்ணா சேர்த்து எடிட்டர் குண்டு புக் போட போறததான் இப்படி சிம்பாலிக்கா கேப்சன் மூலம் கோடு போட்டு காட்றாரோ என்னவோ...

    (எடிட்டர் மைண்ட் வாய்ஸ்)
    அவனுங்களா நீங்க...எஸ்கேப்...

    ReplyDelete
  46. Tex sampath sir please refer comicology . com for uyiraithedi. The original name is survival.

    ReplyDelete
  47. ஜிம்மி.- ஏம்பா பாடாவதி கடையா இருக்கே சீர் அப் கேர்ள்ஸ் லாம் கண்ணிலே படக்காணோம் ..சரக்காவது நல்லா இருக்குமா .. தம்பி உன் முன்னாடி இருக்கிற அந்த நாலு கிளாஸ் மட்டும் எனக்கு ஊத்தி கொடுத்திடு அதுக்குமேல குடிக்க சொல்லி கம்பெல் பண்ணுனீங்க எனக்கு கேட்ட கோபம் வந்திடும் ..ஏன்னா நான் இன்னிக்கு டயட்லே இருக்கேன் ..
    டுரங்கோ .- பெருசு நம்மாலே என்ன பண்ண முடியுமோ அதை மட்டும்தான் பண்ணனும் .உன் வயசுக்கு சீர் அப் கேர்ள்ஸ் கேட்குதோ ?
    டைகர் ஜாக் .- தண்ணிஊத்தாதே தண்ணி ஊத்தாதே ..சரக்குலே தண்ணி ஊத்தாதே ..ஆகா ஊத்திட்டானே சரக்கு வீணாய் போச்சே ..
    டைகர் .-..நம்மளை மாதிரி நாலு பேர் இருந்தாதான் கடைக்காரன் பொழைக்க முடியும் .தண்ணி போட வந்துட்டு தத்துவமா பேசமுடியும்?ஜாலியாகுடிங்க சந்தோசமா இருங்க ..ஜிம்மி உன்னோட இந்தியா பிரண்ட் இன்னிக்கு பாடிட்டுயிருந்தானே அந்தபாட்டைப்பாடு
    ஜிம்மி .-..ஆகோ ஐயாகோ கம்புக்குத்தி கவரக்குத்தி வேல் வேல்வேலாயுதம்
    எல்லோரும் .- ஆகோஐயாகோ

    ReplyDelete
  48. C : சொடக்கு மேல சொடக்கு போடுது
    என் சிலுக்கு வந்து தெருவுல
    இழுத்து விட்டு....
    நடு தெருவுல நின்னு.....

    D : அட்றட்ரா மூக்கு நாக்கா
    மூக்கு நாக்கா
    மூக்கு நாக்கா
    மூக்கு நாக்கா
    மூக்கு நாக்கா
    அட்றட்ரா மூக்கு நாக்கா

    A : இறைவா உன் மாளிகையில்
    எத்தனையோ கிறுக்கிருக்கு
    தலைவா உன் கையடியில் °°°
    என் வாய் நனைக்கும்
    கிளாஸிருக்கு

    D : ஓண்ணுமே புரியல உலகத்திலே
    என்னமோ நடக்குது மர்மமா
    இருக்குது.....

    ReplyDelete
  49. C : டெக்வில்லா போட்டேண்டி கிக்
    கொஞ்சம் ஏறுதடி
    கிக் கொஞ்சம் ஏறயில புத்தி
    கொஞ்சம் மாறுதடி
    அடி சிகுவாகுவா சிலுக்கே
    எம் போர்பான் கிறுக்கே

    A : (பாட்டு பாட்ற நேரத்துல சரக்க
    ஆட்டய போட்டா என்ன பண்றது.
    மனசுக்குள்ளபாடித்தொலைப்போம்)

    ஊத்திகிட்டு பாடிக்கலாம்.....
    பாடிகிட்டும் ஊத்திக்கலாம்.....

    ஊத்து ஊத்து அமுக்கி ஊத்து
    அமுக்கி அமுக்கி ஊத்து ஊத்து...

    A : (நான் பேசவே மாட்டேன் ..ஹும்ம்
    பாடவைக்கிறாங்களே...உள்ளேயே
    பாடுவோம்...

    ஆரே ஆரே ஆரே ஆரே ஆரே ஆரே
    தேவூடா தேவூடா டியூராங்கோ
    தேவடா...
    சூடுடா சூடுடா நாஞ்சுட்டா பாலுடா..

    D : (ஓ...மை மானிடோ...
    உங்கள் மந்தையிலிருந்த மூன்று
    எங்கிருந்தோ வந்து இங்கு
    குடித்துக் கொண்டிருக்கின்றன...
    மூன்றும் தெளியும் போது....
    குப்புற படுத்துக்கிட்டிருக்கும்...)



    ReplyDelete
  50. C : ஜிம்மி ... அந்த Jio
    ரைஃபிளக் குடு

    D :( ஜிய்யா போட அம்பானிட்டியே
    திரும்ப அடகு வச்சது இவனுக்கு
    எப்டி தெரிஞ்சது....சரி நம்மட்ட இருக்குற ஓட்டபோன்-vodofone பிஸ்டல குடுப்போம் )

    B : (நம்பள்ட்ட Airtel போஸ்ட்பெய்ட்
    ரைஃபிள்ல
    இருக்கு....நமக்கென்ன கவல..)

    D:. (ஹும்ப்...நாம வைச்சிருக்கிறது
    BSNL லேண்ட்லைன் பலூன் சுட்ற
    துப்ப்ப்பாக்கி.....வோ...)

    ReplyDelete
  51. அன்பின் ஆசிரியருக்கு,

    வணக்கம். XIII மர்மம் - ஒரு புலனாய்வு இதழின் மொழியாக்கப் பணிகள் நிறைவுபெற்றன. மீண்டும் ஒரு முறை XIII-னோடு இணைந்து பயணித்த உணர்வு. சற்றே அலுப்பைத் தந்தாலும் நிறைவாகச் செய்திருப்பதாகவே உணர்கிறேன். ஆசிரியரின் பழக்கப்பட்ட நடையில் இருந்து சற்றே விலகிய நடையை இந்த மொழிபெயர்ப்பு கொண்டிருக்கலாம் ஆனால் அது நம் வாசக நண்பர்களுக்குப் பிடித்தமான ஒன்றாக அமைந்தால் மகிழ்ச்சியே. வாய்ப்பு தந்த உங்களுக்கும், “நீங்கள் இதைச் செய்யலாமே நண்பா” என்று ஊக்கம் தந்த நண்பர் பெங்களூர் பரணிக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இரண்டு நாட்களில் மறுபடியும் ஒரு முறை மொத்தமாக வாசித்துத் திருத்தங்கள் ஏதும் தேவைப்படின் செய்து அனுப்பி விடுகிறேன்.இறுதியாக ஒரு சந்தேகம் சார். உங்களுக்கு நான் soft copy அனுப்பினால் போதுமானதா அல்லது இந்த மொழிபெயர்ப்பினை print செய்து உங்களுக்கு அனுப்ப வேண்டுமா? தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும். மீண்டும் நன்றி.

    பிரியமுடன்,
    கார்த்திகைப் பாண்டியன்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் கா.பா அவர்களே!!

      எத்தனை கடினமான பணி அதுவென்பதை இங்கே நிறைய நண்பர்கள் அறிவார்கள்!! கடமையே கண்ணாக, குறித்த நேரத்திற்குள் அதை செய்து முடித்திருப்பது பாராட்டுக்குரியது! ( நண்பர் J வும் தன் மொழிபெயர்ப்பு பணியை முழுவதுமாக முடித்துவிட்டார் என்பது இன்று காலையில் கிடைத்த தகவல்! அவருக்கும் நம் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்!)

      ///உங்களுக்கு நான் soft copy அனுப்பினால் போதுமானதா அல்லது இந்த மொழிபெயர்ப்பினை print செய்து உங்களுக்கு அனுப்ப வேண்டுமா?///

      அடடே!! soft copy யாகவே தயார் செய்துவிட்டீர்களா?!! அபார உழைப்புத்தான்!! மீண்டும் எனது வாழ்த்துகள்!

      Delete
    2. வாழ்த்துக்கள் கார்த்திகை பாண்டியன் & ஜனார்த்தனன் ஜி

      Delete
    3. கார்த்திகை பாண்டியன் சார் அன்ட் ஜே சார் இருவரின் உழைப்பிற்கும் மனமார்ந்த பாராட்டுகள் சார்...

      Delete
    4. நன்றிகள் சார் ; இந்த உழைப்பு நிச்சயமாய் நண்பர்களுக்குப் பிடிக்காது போகாது என்பது உறுதி ! Soft copy அனுப்பினால் போதுமானது !

      Delete
    5. முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சான்று நீங்களும் திரு ஜெ அவர்களும்.மிகுந்த நன்றிகள்.

      Delete
    6. நன்றி ஶ்ரீதர்

      Delete
  52. நண்பர்களே
    புலன் விசாரணை திருப்திகரமாக முடிவுற்றது. நாளை எடிட்டரின் கைகளில் தவழும்.
    இறுதியாக XIII யார் என்று தெரியவரும் போது , பணம் - பதவி - அதிகாரம் - ரௌடியிஸம் என்னவெல்லாம் செய்யும் என்று மனம் நொந்து போக வேண்டியதான்.

    மிக கடினமான இந்த பணியை செவ்வனே செய்து முடித்துள்ளோம்.
    நண்பர்களே எமக்கு பிரதானம்.
    நீங்கள் தந்த ஊக்கத்திற்கு நன்றி.

    மற்றவை

    ஜெய் "விஜயா" பவ.

    J

    ReplyDelete
    Replies
    1. இங்கே ஏற்கனவே மர்ம மனிதன் மார்ட்டின் புண்ணியத்தில் நாக்காரைக் காணவில்லை என்று போஸ்டர் அடித்து ஒட்டாத குறை தான் ; துணைக்கு பு.வி. x 3 மொழிபெயர்ப்புகள் காத்துள்ளன பரிசீலிக்க !!! ஆத்தாடியோவ் !!

      Delete
    2. @ஆசிரியர், நன்றி சார். நாளை மாலை அனுப்பி விடுகிறேன்.

      வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

      பிரியமுடன்,
      கார்த்திகைப் பாண்டியன்

      Delete
    3. K P நீங்களும் முடிச்சிட்டீங்களா
      அப்பாடன்னு இருக்கு சாமி

      Delete
    4. கருணையே உருவான ஆசிரியருக்கு நன்றி.

      Delete
    5. சும்மாவே மார்டின் சுத்துல விடுவாரே சார்

      Delete
  53. J ji@ & நண்பர் கார்த்திகைப் பாண்டியன் @

    உங்கள் இருவரின் உழைப்புக்கு பணிவான வணக்கங்களும், நிறைவான பாராட்டுக்களும்👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

    இருவரும் செய்து இருப்பது அசாத்திய பணி; சாதனை என்று சொன்னாலும் நிச்சயமாக மிகையல்ல.

    இருவரில் யாருடைய பணிக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் சரி, உங்களின் அபாரமான பணிக்கு எங்களின் மனதில் உரிய அங்கீகாரம் இப்போதே கிட்டிவிட்டது இருவருக்குமே.

    இருவருக்குமே முன்கூட்டிய வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. டெ வி உங்கள் அன்பான பாராட்டுகளுக்கு நன்றி.
      கடின உழைப்பிற்கு இந்த அன்பான வார்த்தைகள் இதமாக உள்ளன ஐயா

      Delete
    2. என்னுடைய அனுபவத்தில்
      இந்த நண்பர்களின் பாராட்டு போல இதமான உற்சாகமூட்டும் வலிமை வேறு எதற்கும் இல்லை ஜி.

      நாம் எத்துணை பெரிய வல்லமை வாய்க்கப் பெற்றாலும், நம் நெஞ்சுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து கிட்டும் அங்கீகாரம் மிக மெல்லியதாக இருந்தாலும் அது கொணரும் உத்வேகம் வேறு லெவல் ஜி.
      எல்லா மனமும் ஏங்குவது இதற்கே (அரிதாக சிலர் விதி விலக்காக இருக்கலாம்).

      ஓரிரு நாட்கள் பலவற்றையும் புரட்டி எழுதப்படும் விமர்சனத்திற்கோ அல்லது நினைவு கூறலுக்கோ கூட இதான் விதி எனும் போது, ஒரு மாதம் சளைக்காமல் பணி செய்து சோர்ந்துள்ள இதயத்திற்கு புத்துணர்வு ஊட்டும் வல்லமை நண்பர்களின் அங்கீகாரத்திற்கே உண்டு என புரிந்து கொள்ள முடிகிறது ஜி.

      Delete
    3. நமது பிரயத்திற்குரிய எடிட்டரை நினைத்துப் பார்க்கிறேன் சார்.
      இத்தனை வருடங்களாக சளைக்காமல் ஒரு மனிதர் காமிக்ஸ் என்ற காதலை மட்டுமே கொண்டு விடாப்பிடியாக.....

      உண்மையில் நாமெல்லாம் குடுத்து வைத்தவர்களே.

      Delete
    4. ஆசிரியர் ஒரு காமிக்ஸ் (கடவுள்) காதலர் என்பதால் மட்டுமே இது சாத்தியம்

      Delete
    5. ஆம்.உண்மை தான்.காமிக்ஸ் கடவுள் விஜயன் சார்க்கு ஓ௫ ராயல் சல்யூட்.

      Delete
  54. J sir& karthigai pandiyan sir well done. Great job👏👏👏👏👌👌👌

    ReplyDelete
  55. பதவி என்ற வறட்டு கௌரவம்,
    அதிகாரம் என்ற போதை,
    மகஸ்துதியின் விளைவான மமதை,
    பணம் தரும் வெறி,
    இன்னபிற....

    இவைகளினிடையே அகப்படும் பெண்களின் கையாலாகாத பந்தாட்டம்

    வாழ்க்கை என்பது அனுபவிக்கப்பட வேண்டிய ஒன்று.

    நம் இதழ்களின் புன்னகை சக மனிதர்களின் வலி நிவாரணம்.

    இந்த புன்னகைக்கான நம் கைச்செலவு பூஜ்யமே.

    மனிதம் ஜீவித்திருந்தால் மட்டுமே பகை , போர், பூசல்கள் ஜுவித்திருக்கா.

    XIII ன் தொடர் அவலங்களை படித்து , இரத்தபபடலமாக நம் மனம் அவருடன் துயர் பயணத்தில் தொடரந்து பங்கேற்கும் தருணத்தில (முதன்முதலாக கைகளில் பெற்றுப் படிக்கப் போகும் நண்பர்களே - நீங்கள் பாக்கியவான்கள அதுவும் கலரில்)
    நீங்கள் இவற்றை அனுபவித்துணரலாம்.

    இந்ந உலகத்தில் சகலமும் நமக்கு இணை இணைப்பே.

    பணம் - ஏழ்மை
    ஆசை - நிராசை
    வேகம் - நிதானம்
    பதவி - வேலையின்மை.
    இன்னபிற...

    சொல்லிக்கொண்டே போகலாம்.

    எல்லாமே நமக்கு காமிக்ஸ் வடிவில் ஈரோட்டில் வழங்கப்பட உள்ள இரத்தப்படலத்தில் ஐயம் திரிபுற தெளிவுறும்

    J


    ReplyDelete
  56. நம் நெஞ்சுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து கிட்டும் அங்கீகாரம் / வேறு லெவல்.

    ReplyDelete
  57. நாளை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளிவரும் ஆசிரியரின் புது பதிவு எதை மையமாக கொண்டு இருக்கும்...!?

    ReplyDelete
  58. இந்த வாரம்...

    * XIII போலவே தோளில் பச்சை குத்தப்பட்டவர்கள் மொத்தம் எத்தனை பேர்..?
    * அதை கண்டுபிடித்த கிருஷ்ணா பரமாத்மா யார்..?
    * கர்னல் அமோஸ் ஒரு விரிவான அலசல்...

    விடைகளுக்கு...http://xiiiorupulanaayvu.blogspot.in/2018/04/xiii-21-to-25.html

    ReplyDelete
  59. C: ஏம்பா ஜிம்மி ட்யூராங்கோ தம்பி ஏன் 4 கிளாஸ்ல ஊத்தாம பேயறஞ்ச மாதிரி நின்னுகிட்டே இருக்காரு.
    A : மனசுக்குள் ( ஆமா உங்கிட்ட குடுத்திருந்தா தெரியும் சங்கதி - பய அமைதிய இருக்கிறத பாத்த எடிட்டரு , பு வி மொழி பெயர்ப்பு மூணும் பத்தாத குறைக்கி மார்டினயும் பாக்க சொல்லிருக்காரு - கேட்டதுமே ஸ்டன்னாயி நின்ன பய தான் இன்னமும் கிளால்லயே ஊத்தல.)
    B: (பதிமூணு பதிமுணு பதிமூணு பதிமூணு மார்டின் மார்டின் மார்டன் மார்டின் எடிட்டரு எடிட்டரு எடிட்டாரூ.. .)
    D: முழி பெயர்ப்புன்னா என்னாதுன்னு புரியலியே... மண்டதொலிய உரிக்கிற சமாச்சார மாத்தான் இருக்கும்....வோஓ.....

    ReplyDelete
  60. நண்பர்கள் J மற்றும் கார்த்திகைப் பாண்டியன் இ௫வ௫க்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
    நன்றி.வணக்கம்.

    ReplyDelete
  61. C டைகர் : என்ன கொடுமையான உலகமப்பா,
    அகில உலக பேமஸ் ஆண்டியப்பன் சேய் அகில உலக பேமஸ் டைகரான எனக்கே 17 வருஷம் கழிச்சிதான் கலரில் சான்சு கொடுத்தாரு
    இப்ப வந்த உனக்கு 3 கதைகள் வரிசையா ஹார்ட் பைண்ட்ல போட்டு தாக்குறாரு நம்ம விஜயன் சாரு

    B ட்யுராங்கோ : ஆரம்பத்திலேயே கேட்ட போடுறாரே
    (கண்ணா எப்ப வந்தோம்கிறது முக்கியமில்ல எப்படி வந்தோம் அப்படீங்கிறதுதான் முக்கியம் )
    இத்த நானு சொன்னா மனுஷன் என்னாவாறு

    A ஜிம்மி : ஆஹா நம்மாளு பொலம்ப ஆரம்பிச்சிட்டாரு, இவரு பொலம்பறதோட நிறுத்திட்டா பரவால்ல
    இல்லாங்காட்டி கைக்கு எட்டிய தண்ணி வாய்க்கு எட்டாம பண்ணிடுவாரே


    D : அய்யோ அய்யோ, இதுக்கே இப்படி அலம்பல் விடுறாரே
    நம்ம தலயோட 700 பக்க டைனமைட் ஸ்பெஷல் புக்கு வந்தபின்னாடி மனுஷன் மனுசனா இருப்பாரா

    ReplyDelete
  62. // நேற்றைய ட்யுராங்கோ பாகம் 3-ன் ஆரம்ப பிரேமின் வரிகளை எழுதிய வகையில் பாராட்டுக்கள் ஈரோட்க்காருக்கும் ; அதற்கான பரிசு அவர் உபயத்தில் நண்பர்கள் யாருக்கேனும் செல்கிறது ! //

    வாவ் என்னே ஒரு பெரிய மனது

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் _/|\_
    .


    ReplyDelete
    Replies
    1. சிபி.ஜி. அருமையான கேப்ஷன் செம்ம

      Delete
  63. XIII-ன் புலன் விசாரணை பாகத்து மொழிபெயர்ப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்த கார்த்திகை பாண்டியன் சாருக்கும், J சார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.!!

    ReplyDelete
  64. அன்பின் ஆசிரியருக்கு,

    “XIII மர்மம் - ஒரு புலனாய்வு” இதழின் மொழிபெயர்ப்பினை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி விட்டேன். கிடைத்ததை உறுதி செய்தால் மகிழ்வேன். நன்றி.

    பிரியமுடன்,
    கார்த்திகைப் பாண்டியன்

    ReplyDelete
    Replies
    1. ஓரே பட்டன தட்டுனாப் போதும்

      Delete
    2. அடியேன் பேப்பர் பேப்பரா எழுதி தள்ளியிருக்கேன்.

      Delete
  65. திரு கார்த்திகைப் பாண்டியன் அவர்களுக்கும்,

    திரு J அஅவர்களுக்கும் மனமுவந்த பாராட்டுகள்.

    'எண்ணித் துணிக கர்மம் ' என்ற வள்ளுவர் வாக்குக்கேற்ப, எடுத்த செயலை சிறந்தமுறையில் நடாத்தி விட்டீர்கள்.🙏🙏🙏🙏

    ReplyDelete
  66. பதவி என்ற வறட்டு கௌரவம்¸
    அதிகாரம் என்ற போதை¸
    முகஸ்துதியின் விளைவான மமதை.


    Super.

    ReplyDelete
  67. காமிக்சை விரும்பும் நம் போன்ற நண்பர்களுக்காக தங்களது பொன்னன நேரத்தை செலவு செய்து,புலன்விசாரணை பணியை ஏற்று,சிறப்பாக செய்து முடித்த நண்பர்கள், திரு J.,மற்றும்திருகார்த்திகை பாண்டியன் அவர்களுக்கும் நமது காமிக்ஸ் நண்பர்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்..

    ReplyDelete
  68. ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவ௫க்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  69. விடுமுறை நாள் ( அதான் சித்திரை ஒன்னு ) புது பதிவு இல்லியா??

    ReplyDelete
  70. ஏதாவது மஞ்சக் கொடி ( உயிர் வரின் உக்குறள் மெய் விட்டோடும்.. சரிதானே செனா ஆனாஜி...) காட்டினாத்தான் செரிப்பட்டு வரும்னா அதுக்கும் தாயார்...

    ReplyDelete
    Replies
    1. இரவுங்கிறதனாலே புணர்ச்சி விதியை பயன்படுத்த வேண்டியாயிருச்சு...

      Delete