Powered By Blogger

Tuesday, April 17, 2018

ஐப்பசி பிறந்தால் 20 !!

நண்பர்களே,

வணக்கம். மார்ட்டின் நம்மிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை இன்னமுமொரு முறை அழுந்தப் பதிவிட்டமைக்கு நன்றிகள் guys ! மார்ட்டினைக் கையாளும் ஒவ்வொரு தருணத்திலுமே எங்களுக்குக் கிட்டிடுவதொரு complex அனுபவமாக இருந்தாலும், இதழாகிய பின்னே உங்களுக்குக் கிட்டுவதொரு செம அனுபவம் எனும் போது  நாங்கள் கொஞ்சம் மெனக்கெடுவதில் நிச்சயம் தவறில்லை தான் ! ஆனால் ஒன்று நிச்சயம் guys - "மெல்லத் திறந்தது கதவு" வெளியான பின்பாக இங்கொரு அலசல் அருவியை பார்க்க முடியுமென்று பட்சி சொல்கிறது ! 

On the flip side - இன்னமுமொரு படு சுவாரஸ்யமான / வெற்றிகரமான  போனெல்லி தொடரினை நாம் அயர்ச்சியோடு பார்த்திடும் காரணம் தான் புரிய மாட்டேன்கிறது ! இந்த ஐப்பசி பிறந்தால் அகவை 20-ஐத் தொடவிருக்கும் பென்சில் இடையழகி   ஜூலியவை இத்தாலியில் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் ! அதற்குள் 235 ஆல்பங்கள் வெளியாகியுள்ளன இவரது தொடரில் !! எழுபது ஆண்டுகளாய் சாகசம் செய்துவரும் நமது இரவுக் கழுகார் கூட இந்த வேகத்தினைத் தொட்டுப் பிடித்ததில்லை எனும் போது - இந்த கிரிமினாலஜிஸ்ட் அம்மணியிடம் சரக்கு இல்லாமலா இத்தனை சிலாகிப்பு சாத்தியமாகிடும் ? 
  • ஜூலியா மீதான நமது தீர்ப்பு கொஞ்சம் அவசர கதியோ ? 
  • அல்லது மெய்யாகவே அவரது கதைகளை நம்மால் ரசிக்க முடியவில்லை என்ற யதார்த்தத்தினை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டுமோ ? 
  • இவரொரு குற்றவியல் நிபுணரே தவிர்த்து ஆக்ஷன் அதிரடியில் இறங்கக்கூட்டிய டிடெக்டிவ் அல்ல என்பதை நாம் ஒருக்கால் மறந்து விட்டு - "இந்த அக்கா ஏன் பேசிட்டே இருக்கு ?" என்ற கேள்விகளை எழுப்பிக்கொள்கிறோமா ? 
  • நிஜ சம்பவங்களை  உந்துகோலாய் கொண்டு உருவாக்கப்படும் இவற்றில் நாம் கரம் மசாலாவை எதிர்பார்ப்பது தான் சிக்கலின் அடிப்படையோ ? 
  • ஜூலியா - இன்னொரு வாய்ப்புக்கு அருகதையானவரா ? 
  • அல்லது - சாத்திய கதவு சாத்தியதாகவே இருக்கட்டுமா ? 


உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ் ? 

Bye guys for now ! Back to Martin for me..!!

309 comments:

  1. Replies
    1. ஜூலியா- சாத்திய கதவு சாத்தியதாகவே இருக்கட்டும்!!!!

      Delete

    2. Maran Mani17 April 2018 at 16:25:00 GMT+5:30
      ஜூலியா- சாத்திய கதவு சாத்தியதாகவே இருக்கட்டும்!!
      சேலம் Tex விஜயராகவன்17 April 2018 at 16:52:00 GMT+5:30
      உலகத்தில் நான் வேணாம்னு சொல்லும் ஒரே கதை நாயகி- ஜூலியா தான் சார்.

      சாத்திய கதவுக்கு பூட்டும் போட்டு விட்டுடுங்க.

      சேலம் சுசீ17 April 2018 at 16:55:00 GMT+5:30
      ஜீலியாவுக்கு தடை சரியே❗


      Paranitharan K17 April 2018 at 17:42:00 GMT+5:30
      ஒரு முறை கலக்குனாரு..


      ஒரு முறை கலங்க வச்சாரு..


      திரும்ப கலக்குவாரா ,கலங்குவாரா..


      முடிவு ஜீலியா கையில் அல்ல ஆசிரியர் கையில்...:-)



      rajendran A.T.17 April 2018 at 18:14:00 GMT+5:30
      எடிட்டர் சார்
      நம் காமிக்ஸ்களில் மாடஸ்டிக்கு பிறகு அதிரடியான ஆக்‌ஷன் நாயகிகளின் கதைகள் இல்லாமல் போரடிக்கிறது. எனவே ஜூலியாவை மறந்து விட்டு வேறு யாராவது அதிரடி நாயகிகள் கதைகள் இருக்குமாயின் அவர்களை களமிறக்கலாம்.
      இதுக்கு மேலே காப்பி ஆத்த முடியாத காரணத்தால் திரு blue Berry please continue.....

      Delete
    3. தனியொருவன்17 April 2018 at 22:10:00 GMT+5:30
      ஜூலியா வேண்டாம்

      Delete
    4. ///இவரொரு குற்றவியல் நிபுணரே தவிர்த்து ஆக்ஷன் அதிரடியில் இறங்கக்கூடிய டிடெக்டிவ் அல்ல///---கதையை கையில் எடுக்கும் போதே இப்படி சாம்பார்னு தெரிஞ்சி போன பின்னாடி எப்படி ரசிக்க முடியும்.

      Delete
  2. பதிவுக்கு நன்றி ஆசிரியரே

    ReplyDelete
  3. ஜீலியா இன்னொரு வாய்ப்புக்கு தகுதியானவரே

    ReplyDelete
  4. ஜீலியாவின் மீதான தீர்ப்பு அவசர கதியே மீண்டும் ஒரு வாய்ப்புக்கு அருகதையானவரே இந்த பென்சில் இடையழகி

    ReplyDelete
  5. வந்தாச்சி! மதிய வணக்கம்.

    ReplyDelete
  6. உலகத்தில் நான் வேணாம்னு சொல்லும் ஒரே கதை நாயகி- ஜூலியா தான் சார்.

    சாத்திய கதவுக்கு பூட்டும் போட்டு விட்டுடுங்க...!!!

    ReplyDelete
    Replies
    1. சாத்திய கதவுக்கு திண்டுக்கல் பூட்டு ப்ளீஸ்..

      Delete
    2. +765432

      ஜூலியா வேண்டாம்

      Delete
    3. என்னவோ ஜூலியா எனக்கும் பிடிக்கவில்லை

      Delete
  7. ஜீலியாவுக்கு தடை சரியே❗

    ReplyDelete
  8. ////ஜூலியா மீதான நமது தீர்ப்பு கொஞ்சம் அவசர கதியோ ?
    அல்லது மெய்யாகவே அவரது கதைகளை நம்மால் ரசிக்க முடியவில்லை என்ற யதார்த்தத்தினை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டுமோ ? ////

    அவசர கதியே! ஜூலியா ஒரு அதிரடி நாயகி அல்ல என்பதை மட்டும் புரிந்துகொண்டு கதையைப் படித்தோமானால் நிச்சயம் ரசிக்கலாம்!

    ///இவரொரு குற்றவியல் நிபுணரே தவிர்த்து ஆக்ஷன் அதிரடியில் இறங்கக்கூட்டிய டிடெக்டிவ் அல்ல என்பதை நாம் ஒருக்கால் மறந்து விட்டு - "இந்த அக்கா ஏன் பேசிட்டே இருக்கு ?" என்ற கேள்விகளை எழுப்பிக்கொள்கிறோமா ?
    நிஜ சம்பவங்களை உந்துகோலாய் கொண்டு உருவாக்கப்படும் இவற்றில் நாம் கரம் மசாலாவை எதிர்பார்ப்பது தான் சிக்கலின் அடிப்படையோ ? ///

    சரியாகச் சொல்லிவிட்டீர்கள். மேற்கொண்டு சொல்ல ஏதுமில்லை!! நம்மைப்பொருத்தவரை 'டிடெக்டிவ்' என்றாலே விசுக் விசுக் என்று துப்பாக்கியை உருவத் தெரிந்திருக்க வேண்டும்!

    ///ஜூலியா - இன்னொரு வாய்ப்புக்கு அருகதையானவரா ?
    அல்லது - சாத்திய கதவு சாத்தியதாகவே இருக்கட்டுமா ? ////

    இன்னொரு வாய்ப்புக்கு அருகதையானவரே! சாத்திய கதவை வெடி வைத்து உடைத்துவிடுங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. // அவசர கதியே! ஜூலியா ஒரு அதிரடி நாயகி அல்ல என்பதை மட்டும் புரிந்துகொண்டு கதையைப் படித்தோமானால் நிச்சயம் ரசிக்கலாம்! //

      எனது எண்ணமும் இதுவே! கடந்த வருடம் வந்த பௌர்ணமியில் காலன் வருவான் மிகவும் ரசித்தேன்; இவரது கதைவரிசையில் டாப் நின்று போன நிமிடங்கள்! செம கிளாஸ் கதை!

      என்னை பொறுத்தவரை லேடி S கதைகளை விட ஜூலியா கதைகளை நான் மிகவும் ரசிக்கிறேன்!

      Delete
    2. ///என்னை பொறுத்தவரை லேடி S கதைகளை விட ஜூலியா கதைகளை நான் மிகவும் ரசிக்கிறேன்!///

      +1

      Delete
    3. துரதிர்ஷ்டவசமாக ஜூலியா பேரவையின் ஆயுட்கால உறுப்பினர்களின் எண்ணிக்கையை ரெண்டு கைகளின் விரல்களுக்குள் அடக்கி விடலாம் போலுமே ?!!

      Delete
    4. We are outnumbered - unfortunately !!

      Delete
    5. எனக்கென்னவோ காமிக்ஸாக இல்லாமல் நாவலாகப் படித்தால் ஜூலியா நல்லாயிருக்கும்னு தோணுது.

      Delete
    6. கோவிந்தராஜ் பெருமாள் அவர்களின் கருத்தில் எனக்கும் உடன்பாடே.ஜூலியாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கலாம்.

      Delete
    7. /////என்னை பொறுத்தவரை லேடி S கதைகளை விட ஜூலியா கதைகளை நான் மிகவும் ரசிக்கிறேன்!///

      -111 👎👎👎


      மாடஸ்திய விட ஜுலியா பெட்டா்

      Delete
  9. விழிகள் மேடையாம்
    இமைகள் திரைகளாம்
    விழிகள் மேடையாம்
    இமைகள் திரைகளாம்
    பார்வை நாடகம்
    அரங்கில் ஏறுதாம்
    ஓ ஓ ஓ ஓ ஓ.......
    ஜூலி ஐ லவ் யூ
    ஹ.......
    ஜூலி ஐ லவ் யூ
    ஹ.......
    பபப் பபப் பபப் பபப்
    ஜூலி ஐ லவ் யூ
    ஹோ…..
    பபப் பபப் பபப் பபப்
    ஜூலி ஐ லவ் யூ.....///---

    நான் கல்லூரி பயின்ற காலத்தில் இந்த தேன் பாடல் ரொம்பவே பிரசித்தம்.

    இதில் வரும் "ஜூலி"---என்ற வரிகளுக்காகவே பலநூறு முறை கேட்டு ரசித்தோம்.

    ஜூலியான்ன உடனே இந்த ஜூலி பாடல் தான் ஞாபகம் வந்தது. கதைல பார்த்த உடன் ஸ்அப்பாடா னு பீஸ் போயிடிச்சி சார்.
    இப்ப ஜூலினாவே ஒரு காத தூரம் ஓட வேண்டியதாக இருக்கிறது.
    எனவே ஜூலியா நம்மை பொறுத்து முற்றும் போட்டதாகவே இருக்கட்டும்.

    ReplyDelete
  10. ///அல்லது - சாத்திய கதவு சாத்தியதாகவே இருக்கட்டுமா ? ////

    'மெல்லத் திறந்தது கதவு' அட்டைப் படத்தில் நிற்கும் அந்த ஒல்லிப் பிச்சான் பேய் என் கண்ணுக்கு ஜூலியாவாகவும், கதவை மெல்லத் திறந்த மார்ட்டின் என் கண்ணுக்கு எடிட்டர் சமூகமாகவுமே தெரிந்தனர்!!

    நம்பினால் நம்புங்கள்!

    ReplyDelete
    Replies
    1. "கதவுலே கைய வைச்சா முத டெட் பாடி நீ தான் !!" கோரஸா எனக்கு கேட்பது உங்களுக்கு கேட்கலியா ஈரோட்க்கார் ?

      Delete
    2. அதெல்லாம் ஒன்னியுங் தொரக்க வேனா பூட்னது புடிய்யே இருக்கட்டும் அப்பாலிக்க எடிட்டராண்ட இன்னாதுக்கு சுலியாவ இஷ்துக்னு வந்திங்கனு சண்ட போடவா.

      Delete
  11. ஜூலியாவுக்கு லாக்கா??? யார் அங்கே..??

    ReplyDelete
    Replies
    1. புலன் விசாரணை செய்யுங்கள்..


      அப்டீன்னு தானே சொல்ல வர்ரீக ...:-)

      Delete
  12. ஜூலியாவிற்கு மீண்டும் ஒ௫ வாய்ப்பு வழங்கலாம்.
    இவரின் "நின்று போன நிமிடங்கள்" நன்றாகவே இ௫ந்தது. லயன் 300 இல் வந்த கதையும் வெகு நன்றாகத் தானே இ௫ந்தது.!
    கதைத் தேர்வில் கொஞ்சம் கவனம் தேவை என்பது என் க௫த்து..!

    ReplyDelete
  13. ஜூலியாவுக்கு நான் தாராளமாக ஓட்டு போடுவேன்.

    ReplyDelete
  14. ஜூலியாவுக்கு தாராளமாக வாய்ப்பு தரலாம்..

    ம்..ம்..ம்..

    தந்தால் நல்லது..

    ம்.ம்.ம்..

    கண்டிப்பாக தந்தே ஆகனும்...:-)

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்... புரியுது... புரியுது..

      Delete
  15. ஜூலியா ...


    என்ன சொல்றதுன்னு தெரியலையே.( நாயகன் பீலிங்..)

    ReplyDelete
    Replies
    1. இந்த நேரத்துக்கு நீங்கள் குட் நைட் சொல்லலாம் தலீவரே !

      Delete
  16. ஜூலியாவுக்கு வாய்ப்பு கண்டிப்பாக வேண்டும்
    என்னது 235 ஆஆஆ....செம்ம
    இதில் இருந்து வருடத்திற்கு மூன்று கதைகள் அல்லது நான்கு கதைகள் வெளியிடலாம்

    ReplyDelete
    Replies
    1. மூணு இல்லைன்னா நாலா...

      மகளிர் கொடி ரெடியாயிருமோ..!?

      Delete
    2. //மகளிர் கொடி ரெடியாயிருமோ..!?//

      கண்டிப்பாக தலீவரே

      Delete
    3. உங்கள் பேரவை "அந்தப் புதுக் கட்சி" அம்மணியின் பேரவையை விட ரொம்பவே வீக்காகத் தெரிகிறதே ரம்யா ?

      Delete
  17. ஒரு முறை கலக்குனாரு..


    ஒரு முறை கலங்க வச்சாரு..


    திரும்ப கலக்குவாரா ,கலங்குவாரா..


    முடிவு ஜீலியா கையில் அல்ல ஆசிரியர் கையில்...:-)



    எனவே ஒரு முறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்...

    ReplyDelete
  18. எடிட்டர் சார்
    நம் காமிக்ஸ்களில் மாடஸ்டிக்கு பிறகு அதிரடியான ஆக்‌ஷன் நாயகிகளின் கதைகள் இல்லாமல் போரடிக்கிறது. எனவே ஜூலியாவை மறந்து விட்டு வேறு யாராவது அதிரடி நாயகிகள் கதைகள் இருக்குமாயின் அவர்களை களமிறக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. இதையே தான் நானும் வலியுறுத்தி சொல்கிறேன் ஜூலியா வேண்டவே வேண்டாம் சார் ...அதற்கு பதில் வேறு அதிரடி நாயகி இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்..

      Delete
    2. அதிரடி நாயகியர் இருக்கிறார்கள் தான் ; ஆனால் ரொம்பவே காற்றோட்டத்தை விரும்புவர்களாக இருப்பது தான் பிரச்சனையே !

      Delete
    3. எடிட்டர் சார்
      உங்கள் கைவசம் பட்டாபட்டி இருக்கையில் இந்த கவலை தேவையில்லாத ஒன்றுதானே? சும்மா டிசைன் டிசைனாக மாட்டி அழகு பார்க்க மாட்டீர்களா?

      Delete
    4. கருப்பு வெள்ளையில் வெளியிட்டால் விரசம் தெரியாது

      Delete
    5. // ரொம்பவே காற்றோட்டத்தை விரும்புவர்களாக இருப்பது தான் பிரச்சனையே ! //

      அப்ப வேண்டவே வேண்டாம்.

      Delete
    6. எடிட்டர் சார்
      பட்டாபட்டி அல்லது வசனங்கள் அடங்கிய பலூன்களை பெரிதாக்கியாச்சும் அதிரடி நாயகிகளை களமிறக்கலாமே சார்.நம் காமிக்ஸில் சரியான அதிரடி நாயகிகள் தற்போது யாரும் இல்லையென்பது உண்மைதானே சார்..நம் காமிக்ஸின் தற்போதைய தரத்தில் விதவிதமான அதிரடி நாயகிகள் களம் புகுந்தால்....! நினைத்தாலே இனிக்கிறதே. அடுத்த ஆண்டு பட்டியலில் இதனை பரிசீலிக்க வாய்ப்புள்ளதாவென பாருங்கள் சார்.

      Delete
    7. கொளுத்தர வெயிலுக்கு காற்றோட்டம் ரொம்ப நல்லதாச்சே சார் ..ஹி ஹி.. ;-)

      Delete
  19. ஜுலியாவிற்கு மற்றொரு வாய்ப்பு தரலாம்.அவர் ஒரு criminologist என்பதை நினைவில் கொண்டு படித்தால் யதார்த்தமான கதைகளே. இவருடைய சிறந்த கதைகளை வெளியிட முயற்சிக்கலாம்!

    ReplyDelete
  20. முத்து காமிக்ஸ் :- 415
    LADY S கதை வரிசையில் நான்காவதாய் வந்திருக்கும் ஆல்பம்..
    பூமிக்கொரு போலீஸ்காரன்
    அதுவொரு ஐரோப்பிய அமைப்பு. center என்று ஆரம்பித்து நீளமாய் முடியும் பெயர்.சுருக்கமாக CATRIG.ஐரோப்பாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எந த அளவுக்கு நிலவுகிறது என்று தகவல் சேகரிக்கும் ஒரு முறைசாரா ஐரோப்பிய நிறுவனம்.உலக போலீஸ்காரன் (பூமிக்கொரு போலீஸ்காரன்) அமெரிக்க CIA வின் ஏஜெண்ட்டுகள் கூட அவ்வப்போது அதிகாரப்பூர்வமற்ற முறையில் அவர்களோடு தொடர்பு கொண்டு தகவல்களைப்பெறுவதுண்டு.ஆனால் அதன் தலைமையகம் எங்கே..? அதன் சீஃப் யார்...? யாரெல்லாம் ஏஜெண்ட்டுகள்...? நிதியுதவி எப்படி கிடைக்கிறது...? அதன் நோக்கம்..செயல்பாடுகள் என்ன...? என்பதெல்லாம் பரம ரகசியம்.தன்னுடை
    ய அங்கீகாரமின்றி கேட்ரிக் செயல்படுவதை சி.ஐ.ஏ.வினால் சகித்துக்கொள்ள முடியாமல்.....அந்த அமைப்பைப்பற்றிய முழு விபரம் சேகரிக்க லேடி எஸ்ஸை தூண்டில் புழுவாக பயன் படுத்த முடிவு செய்கிறது சி.ஐ.ஏ.
    15 நாள் ஓய்வில் கோட்டே டி அஸூர் வரும் ஷானியாவும்...அவளது தந்தை பிட்ஸராயும் ... பயங்கரவாதத்தின் விளைவால் ஒரு நெருக்கடியில் சிக்கினால் ..ஷானியா தன் மேலதிகாரியை சந்திக்க ஓடுவாள்.அப்போது கேட்ரிக்கின் ரகசியங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்பது ப்ளான்.
    ஷானியாவின் தந்தை கடத்தப்படுகிறார்.
    அப்போது ஓட ஆரம்பிக்கும் ஷானியா எனும் சூஸன் எனும் லேடி எஸ் கதை முழுக்க ஓடிக்கொண்டேயிரு
    க்கிறாள்.
    லேடி எஸ்ஸிற்கு பெரிதாய் சாகஸங்கள் ஏதும் இக்கதையில் இல்லாதது பெரும் குறை. ஒரு இலக்கிலிருந்து மற்றொரு இலக்கிற்கு பயணமாகும் போது கூட...கேட்ரிக்கின் முகமறிய உறுப்பினர்கள்தான் அவளை வழி நடத்துகிறார்கள்.
    மிதமான...கண்ணுக்கு இதமான வண்ணக்கலவைகள்....அற்புதமான ஓவியங்கள்....சரளமான மொழி பெயர்ப்பு...இந்த ஆல்பத்தின் பெரும் பலம்.வேகமும் விறுவிறுப்பும் கொஞ்சம் குறைச்சலாகவே தோன்றுகிறது.
    மோசமென்று சொல்ல முடியாது.கதை நன்றாய்தானிருக்
    கிறது.
    இருந்தாலும் ஷானியா மேம்....!
    நாங்க உங்க கிட்டயிருந்து இன்னும் பெட்டர் பெர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கிறோம்..!
    அடுத்த தடவை ..ஏதோ பாத்து நல்லா செய்யுங்க...!!!
    Better luck next time...!
    இந்தக்கதையில் கேட்ரிக்கின் தலைவராக வரும் நபர் தன் பெயரை centaur எனச்சொல்லுகிறார்.( பாதி குதிரை...பாதி மனித உடலுமான புராணத்தில் குறிப்பிடப்படும் விலங்கு ).
    இந்த செண்டார் வீரர்களுடன்..தா
    னைத்தலைவர் ஸ்பைடர் போராடும் சாகஸம் ஒன்றுள்ளது.அந்தக்கதையின் பெயர் என்ன.?

    ReplyDelete
  21. ஜூலியா அதிரடி ஆக்சன் நாயகி கிடையாது என்பதே ஒரு ப்ளஸ் பாயிண்ட்.
    ஆக்சன் கதைகளால் களைப்படையும் கண்களுக்கு அமைதியான, ஆரவாரமில்லாத ஜூலியாவின் பாணி ரொம்பவே பிடிக்கும்.

    ஆக்சன் விரும்பிகளுக்கு ஆழமான கதையமைப்பு, நிச்சயம் வித்தியாசமாகவே இருக்கும்.

    அதனால ஜூலியாவிற்கு ஒரு வாய்ப்பு வழங்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமாத்தான் இல்லையே...

      சோதனை போதும் சாமி...!!!

      நிஜமாவே மிடில...

      நின்று போனது நிமிடங்கள் அல்ல; ஜூலியாவின் நேரமும் தான்.

      பரிசோதனை முயற்சிகளில் எல்லாம் ஸ்லாட் வீண் செய்யும் காலகட்டத்தை தாண்டியாச்சு.

      இனி ஒன்லி,

      ஹார்ஸஸ் ஃபார் த ரேஸ்....!!!

      Delete
    2. நின்று போனது நிமிடங்கள் அல்ல; ஜூலியாவின் நேரமும் தான்.
      Likes.23455667788990

      Delete
  22. ஜூலியாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கலாம் சார்...!

    ReplyDelete
  23. சாத்திய கதவு சாத்தியதாகவே இருக்கட்டும்.

    ReplyDelete
  24. ஜூலியா ....லேடி s அளவுக்கு இல்லீங்க ....தயவு செய்து ஜூலியாவுக்கு இன்னொரு வாய்ப்பு வேண்டவே வேண்டாம்.....நன்றி சார்

    ReplyDelete
  25. ஜூலியாவுக்கு இன்னொரு வாய்ப்பு தரலாம் தவறில்லை.
    ஆவரேஜ் ரகமாக இருந்தாலும் இரசிக்கும் வகையில்தான் உள்ளது,
    இன்னொரு வாய்ப்பில் அவர் சாதிக்க இயலவில்லை எனில் பிறகு யோசிக்கலாம்.

    ReplyDelete
  26. இப்ப இருக்கிற நிலைமையிலே டைபாலிக் அண்ணனுக்கு ஓட்டெடுப்பு நடத்தினாலுமே பிச்சுக்கும்...

    ReplyDelete
    Replies
    1. Bro
      Doabolik veeriyan irrukkan bro
      #waiting for Italy legend(Doabolik thaaa)

      Delete
  27. ஜீலியா மார்ட்டின் மாதிரி முழு ஆதரவு பெறலை...முடிவு மாறி மாறி வருது...ஓட்டெடுப்பு நடத்துனா பிரின்ஸ் ஜானி மாதிரி ஆனாலும் ஆயிறும்..


    என்ன தான் பன்றது ..விடுங்க சார்..பெண்ணின் இடத்தை பறிப்பது தவறு எனவே ஜூலியா வர்ற இடத்துல என்றும் எங்கள் தானை தலைவி ,நிரந்தர மகளிர் அணி தலைவி மாடஸ்தியவே கொண்டு வந்துருங்க..:-)))

    ReplyDelete
    Replies
    1. +1 the best and only lady super star Modesty!!

      Delete
    2. ஐயோ கொடுமையே வேண்டவே வேண்டாம்

      Delete
  28. ஜூலியாவுக்கு இன்னொரு வாய்ப்பு தரலாம் தவறில்லை.

    ReplyDelete
  29. ஆக மொத்தம் மகளிர் அணியினர் யாருமே பெருசாய் நம்மைக் கவரவில்லை என்றாகிறது ! டைம் for ரோசனை !!

    ReplyDelete
    Replies
    1. பேசாமல் ஆரிசியாவைக் கொண்டொரு தொடரை உருவாக்கச் சொல்லணும் போல் தெரிகிறதே !!

      Delete
    2. Lady s ம் அவ்வளவு கவரவில்லை சார்.
      ஆரம்பத்தில் லார்கோ போல் இருந்தாலும் வர வர ரசிக்கவில்லை சார்.

      Delete
    3. இன்னொரு உபபதிவு வராமலா போய் விடும் சார் ?

      Delete
    4. Sir
      Modesty thaa Mokka
      Lady S,Julia are well good in there jobs
      Simply superb
      But
      Modesty is worst I have ever seen before like this!!!

      Delete
    5. 33 சதவீத இட ஒதுக்கீட்டில் கூடவா ஜூளியாவுக்கு இடமில்லை?

      Delete
    6. No Sir..
      the best and only lady super star Modesty!!

      Delete
    7. ///Sir
      Modesty thaa Mokka
      Lady S,Julia are well good in there jobs
      Simply superb
      But
      Modesty is worst I have ever seen before like this!!!///

      Yes! 100 % true!

      +111 👏👏👏

      Delete
  30. ///On the flip side - இன்னமுமொரு படு சுவாரஸ்யமான / வெற்றிகரமான போனெல்லி தொடரினை நாம் அயர்ச்சியோடு பார்த்திடும் காரணம் தான் புரிய மாட்டேன்கிறது ! இந்த ஐப்பசி பிறந்தால் அகவை 20-ஐத் தொடவிருக்கும் பென்சில் இடையழகி ஜூலியவை இத்தாலியில் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் ! அதற்குள் 235 ஆல்பங்கள் வெளியாகியுள்ளன இவரது தொடரில் !! எழுபது ஆண்டுகளாய் சாகசம் செய்துவரும் நமது இரவுக் கழுகார் கூட இந்த வேகத்தினைத் தொட்டுப் பிடித்ததில்லை எனும் போது - இந்த கிரிமினாலஜிஸ்ட் அம்மணியிடம் சரக்கு இல்லாமலா இத்தனை சிலாகிப்பு சாத்தியமாகிடும் ? ///

    ஜூலியா வாசகிகளால் தாங்கி பிடிக்கப்படுபவர் என்பது முக்கிய காரணமாக இருக்கலாம் ...

    பௌர்ணமி இரவில் காலன் வருவானில் ரொமான்ஸ் பார்ட் தூக்கி நிறுத்தப்பட்டு இருக்கும் ...

    ஜூலியா தான் காதலிப்பவனால் ஏமாற்றப்படுவதை வாசகர்கள் ஜூலியாவின் பலகீனமாக கருத முற்படுவர் ..

    வாசகிகள் மட்டுமே ஜூலியாவின் மனநிலையை புரிந்து கொள்ளமுடியும் ..


    ஒரு க்ரைம் பிக்ஷன் கதை தொடருக்கு இவ்வளவு பெண்கள் ஆதரவு தருவார்கள் என்றால் நாயகி கிரிமினாலஜிஸ்ட் என்பதையும் தாண்டி ஒரு சராசரி பெண்ணாக சித்தரிக்கப்பட்டு இருப்பின் மட்டுமே சாத்தியம் ..

    ReplyDelete
  31. லேடி S -யும் தவிர்த்திடலாம். நன்றாக இல்லை.

    ReplyDelete
    Replies
    1. Ena bro sollriga van hamme story line pidikalaiya??!
      So
      Lady S super bro

      Delete
    2. // லேடி S -யும் தவிர்த்திடலாம். நன்றாக இல்லை //

      +1

      Delete
    3. ///லேடி S -யும் தவிர்த்திடலாம். நன்றாக இல்லை //

      -111 👎👎👎

      Delete
  32. Sir
    Really Julia os one of the legend In Italy
    She is pretty good too
    Please sir give her one more chance

    ReplyDelete
  33. Sir அடுத்த ஜம்போ ஜூலியா spl போடுங்க

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete

  35. சார் வந்ததே மூனு கதைதான் ஜூலியாவது , அதுல 2 கதைகள் நன்றாகவே இருந்தது சார்.......கண்டிப்பாக ஜூலியாவுக்கு வருடத்திற்கு ஒரு வாய்ப்பு தாராளமாக தரலாம் சார்....

    ReplyDelete
    Replies
    1. //சார் வந்ததே மூனு கதைதான் ஜூலியாவது , அதுல 2 கதைகள் நன்றாகவே இருந்தது சார்.//
      +1234567890

      Delete
  36. அதிரடிகளே இனிமை இங்கே.
    மறந்து விடாதீர்கள் ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. அதிரடி சரவெடி.
      கும், சத்,சலோர்,டுமில், டமால்...

      Delete
    2. அப்ப அந்த நிஜங்களின் நிசப்தம். .. .. .

      Delete
    3. ///அப்ப அந்த நிஜங்களின் நிசப்தம். .. ///

      அப்படி கேளுங்க கண்ணன்.

      Delete
    4. இன்னும் கேளுங்க யுவா

      Delete
  37. Dear Editor,

    To solve this issue - publish one Julia Gundu book in Jumbo comics series 2 - 5 stories enough - 550 pages trial !! :-) I am gonna lap up all Julia volumes you are ever going to publish.

    ReplyDelete
    Replies
    1. யார் வாங்குவார்கள்? கிடங்கில் தூங்குவதற்கு... போடாமல் இருப்பது மேல்...

      Delete
    2. //..யார் வாங்குவார்கள்? கிடங்கில் தூங்குவதற்கு... போடாமல் இருப்பது மேல்...//

      +32145.

      Well said.

      Delete
  38. இது வரை ஜூலியாவுக்கு ஆதரவாகவும்... எதிராகவும்... சரி சமமாக ஒட்டு விழந்து இருப்பதால்... ஆசிரியர் தான் முடிவு செய்ய வேண்டும்!!! ஜூலியா இல்லை என்றால் ஜாலி....

    ReplyDelete
  39. //ஜூலியா - இன்னொரு வாய்ப்புக்கு அருகதையானவரா ?// .. தாராளமாக தரலாம் சார் .. ஆனால் கதை "நின்று போன நிமிடங்கள் " மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் ..

    ReplyDelete
  40. Sir please give a chance for julia 🙆🙆🙆🙆🙆🙆🙆

    ReplyDelete
  41. All Julia stories are very nice. I like the style and always enjoy reading it. I would suggest we can try in Colour. It adds more variety to our comics

    ReplyDelete
  42. ஜூலியா வேண்டுமா?வேண்டாமா என்பதை புத்தக விற்பனை சொல்வது படி செய்யலாமே????

    ReplyDelete
    Replies
    1. விற்பனை ஆகவில்லை அதனால் தான் ஜி நம்மிடம் வேணுமா ? வேண்டாமா ?என்ற கேள்வி எடிட்டர் கேட்டுள்ளார்.

      Delete
  43. "நின்று போன நிமிடங்கள் " மாதிரியான கதைகளாக பார்த்து வெளியிட்டால் சில வேளை நண்பர்களின் மனம் மாற கூடும் . ஜூலியா க்கு ஒரு இடம் ஒதுக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து .

    ReplyDelete
  44. இன்று இம்மாத இதழ்கள் பதிவு தபாலில் வந்து கிடைத்தன . அருமை. மிக்க நன்றி .

    ReplyDelete
    Replies
    1. வேட்டை இருக்கு, என்சாய் பண்ணுங்க ஜி

      Delete
  45. you can bring best stories of julia .give one more chance.

    ReplyDelete
  46. "கதவுலே கைய வைச்சா முத டெட் பாடி நீ தான் !!" கோரஸா எனக்கு கேட்பது உங்களுக்கு கேட்கலியா ஈரோட்க்கார் ?

    ₹₹₹₹₹₹₹#######



    காலையிலேயே வாய்விட்டு சிரித்தேன்

    :-))))))

    ReplyDelete
  47. Replies
    1. ஜூலியா கிட்ட இருந்து எங்களுக்கு மொதல்ல பாதுகாப்பு வேணும் அகிக்.

      Delete
  48. ஜூலியா - தாராளமாக வாய்ப்புகள் வழங்கலாம். மகளிர் அணியில் லேடி Sஐ விட ஜூலியாவை எனக்குப் பிடித்திருக்கிறது. 'நின்று போன நிமிடங்கள்' க்ளாஸான கதை.

    200 சொச்சம் கதைகளில் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டால் ஜூலியா கண்டிப்பாக வெற்றி பெறுவார்.

    ReplyDelete
    Replies
    1. +9

      200 சொச்சம் கதைகளில் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டால் ஜூலியா கண்டிப்பாக வெற்றி பெறுவார்.
      Fact fact
      There are 200+ stories in julia there are some good stories please try that
      We take lots of in graphic novels then why we don't take risk in julia
      Please give one more chance to julia
      #justice for julia

      Delete
  49. ஜூலியா - இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் சார் ....

    ReplyDelete
  50. ஜூலியா தேவையா இல்லையா ?இன்னும் ஒரு சான்ஸ் ?எதற்கு ரிஸ்க்...வேண்டாம் என்பதே என் கருத்து .

    ReplyDelete
  51. ஜூலியாவின் கொடுமைக்கு Tex கொடுமை எவ்வளவோ பரவாயில்லை.

    ReplyDelete
  52. ஜூலியாஆஆஆஆவா ?


    அடிக்கிற வெயிலுக்கு பீ(பே)திய கிளப்பி விடாதீங்க சார்

    கூலா டெக்ஸ் 70 ன்னா என்னன்னு சொல்லுவீங்களா
    அதவுட்டுப்போட்டு பசங்கள காலி (ரொம்ப காற்றோட்டம்) பண்றதிலயே குறியா இருக்கீங்க எடி சார்

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. Hai sir...

    ஜீலியா கண்டிப்பாக வேண்டும் சார்...

    ஆக்சன் கதைகள் என்றாலே நேரடியாக களத்தில் டமால் டுமீல் செய்பவை...

    துப்பறியும் கதைகள் ஒன்று அல்லது சில குற்றங்கள்,பி்ன் குற்றவாளியை தேடிய புலனாய்வு என நீளும்..

    ஜீலியா குற்றங்களுக்கான பிண்ணனியை தேடும் ரகம்...குற்றம் செய்தவர்களி்ன் மனவோட்டங்களை படிப்பவள்..

    இந்த புதுமையும் அழகாய்தானே சார் இருக்கிறது.ஜீலியாவுக்கு என் வரவேற்பும் உண்டு சார்...

    ReplyDelete
    Replies
    1. ///துப்பறியும் கதைகள் ஒன்று அல்லது சில குற்றங்கள்,பி்ன் குற்றவாளியை தேடிய புலனாய்வு என நீளும்..

      ஜீலியா குற்றங்களுக்கான பிண்ணனியை தேடும் ரகம்...குற்றம் செய்தவர்களி்ன் மனவோட்டங்களை படிப்பவள்..

      இந்த புதுமையும் அழகாய்தானே சார் இருக்கிறது.ஜீலியாவுக்கு என் வரவேற்பும் உண்டு சார்...////


      நச் போயிண்ட்!!

      Delete
    2. சேல்ஸ் இல்லைங்கிறது தானே விசயமே...!!!

      சேல்ஸ் நல்லாயிருந்து இருந்தா இந்த பதிவே தேவையில்லையே. விற்பனை ஆகலனா யாராயினும்(டெக்ஸாக இருந்தாலும்) அடிச்சி வெச்சி அழகா பார்க்க முடியும்.
      ஒவ்வொரு புத்தக திருவிழாவிலும் ஜூலியாவின் ப்ராகிரஸ் கவலையளிப்பதால் தானே ஆசிரியர் சார் இந்த கேள்வியையே கேட்டுள்ளார். விற்பனையும் வரவேற்பும் இல்லீனா ஆசிரியர் சார் தான் என்ன செய்ய இயலும். வாய்ப்பும் 3கொடுத்தாச்சி, தட்ஸ்ஆல்.
      இதற்கு மேலும் பதம் பார்த்து முடிவு செய்ய 50ஸ்லாட்கள் இல்லை. இருக்கும் ஸ்லாட்களில் டாப் நாயகர்களுக்கு ஒதுக்குவதே சிறப்பு.

      Best batsmen's of a team must face most ball, otherwise teams performance would be in danger. That's all. Over to editor sir.
      ---------------++++--------

      Delete
    3. // ஜீலியா குற்றங்களுக்கான பிண்ணனியை தேடும் ரகம்...குற்றம் செய்தவர்களி்ன் மனவோட்டங்களை படிப்பவள்.. //

      +1
      அருமையாக சொன்னீங்க.

      Delete
    4. //;சேல்ஸ் இல்லைங்கிறது தானே விசயமே...!!!///

      இருக்கலாம் சார். இந்தப் பதிவின் நோக்கமே. சந்தாவில் இடம் கொடுக்கலாமா? அல்லது இதயத்தில் இடம் கொடுக்கலாமா? என்பது பற்றியே.

      சுமாரான விற்பனை தருகிறார் ஜூலியா என்பது வெளிப்படை. இருந்தாலுமே பெரும்பான்மை வாசகர்கள் ஏற்றுக் கொண்டால், இன்னொரு வாய்ப்பு தரலாம் என்பதே ஆசிரியரின் எண்ணம்.

      ஏனென்றால் ஜூலியாவை யாரும் வலிந்து கேட்கவில்லை. சந்தா அறிவிப்பின் போதும், சலனம் இல்லையே.

      ஆசிரியரின் அறிவிப்புக்கு பின்னேதான் ஜூலியாவுக்கு ஆதரவு பெருகுகிறது.அதனால் ஒரு வாய்ப்பு தருவதால் ஏதும் பாதகம் நேராது என்றே எண்ணுகிறேன்.

      விற்பனையில் சிணுங்கும் கமான்சே மற்றும் டைலன் டாக் பற்றி ஆசிரியர் கேள்வி கேட்கவில்லை என ஞாபகப்படுத்துகிறேன்.

      அதனால் ஜூலியாவிற்கு வாய்ப்பிருக்கு. அதற்கு அனைவருமே ஏக மனதாக ஏற்றுக் கொண்டால் சாத்தியமாகும்.

      Delete
    5. இதயத்தில் இடமே போதுமானது.
      ஓரிரு எதிர் கருத்து எனில் பரிசீலிக்கலாம்.

      மெஜாரிட்டியான கருத்து வேணாம்னு இருக்கும் போது, ரியாலிட்டியை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

      நமக்கு பிடிக்கிறது என்பதை விட, விற்பனை முனையே இனி வரும் காலங்களில் முடிவு செய்யும் காரணியாக இருக்கப்போகிறது.

      ஆசிரியர் சாரின் சுமையை கூட்டும் என தெரிந்துவிட்ட பின், முடிவும் அவருடையதாகவே இருக்கட்டும்.

      Delete
  55. சார் கேப்சன் போட்டியை எல்லாரும் மறந்துட்டிங்களா...

    ReplyDelete
  56. சார் தயவு செய்து ஜூலியா வேண்டாம்.

    ReplyDelete
  57. sir, sendra varam kooda ' nindur pona nimidangal"ai maurpadi padithaen. Interesting aagathaan irundhadhu. Special bookil vandhan storyum Suspense aagaavae irundhathu. loveruden bedai share pannum scenes thaan Avar mel verupai undaki irukkum endru ninikeiren sir. Otherwise, that story is super. Annalum Sales padhikkamal parthu decide seiyungal.

    ReplyDelete
  58. ஜூலியாவின் கதைகளை நான் வரவேற்கிறேன்.
    2018-ன் அட்டவணையை நான் முதன்முதலில் பார்த்தப்போது, அதில் ஜூலியாவின் கதையும், கமான்சேயின் கதையும் இல்லையே என்று வருந்தினேன். கமான்சே கதை வராததற்கு ஒரு விளக்கம் தந்தீர்கள். ஆனால் ஜூலியா கதை வராததற்கு எந்த ஒரு விளக்கமும் நான் பார்க்கவில்லை. நன்றாக இருந்த இவரது கதையை ஏன் நிறுத்திவிட்டீர்களோ புரியவில்லை.
    Magnum Spl'லில் வந்த இவருடைய முதல் கதை 'விண்வெளியில் விபரீதம்' மிக பாராட்டப்படவேண்டிய ஒன்று. அந்த குண்டு புத்தகத்தில் பெரிய பெரிய நட்சத்திரங்களோடு இணைந்து வந்ததால் இந்த புதிய நட்சத்திரத்தின் ஒளி மங்கலாகிவிட்டது. அந்த கதை மட்டும் தனி புத்தகமாக வந்திருந்தால் நிறைய பாராட்டுக்களை பெற்றிருக்கும். குற்றவாளிகளின் மனநிலையை தன் பேச்சாற்றலாலேயே நாசூக்காக கையாளும் இவரது ஸ்டைல் அந்த கதையில் சுவாரசியமாக ஆரம்பம் ஆகிறது. ஜூலியா ஒரு விமானத்தில் பயணம் செய்யும்போது, அந்த விமானத்து பணிப்பெண் ஒருத்தி ஒரு டிவி நடிகையை துப்பாக்கி முனையில் இருத்தி விமானத்தை ஹை-ஜாக் செய்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிரபராதியான தன் காதலனுக்காக போராட - அதே விமானத்தில் தீவிரவாதி இளைஞன் ஒருவனின் பயணம் அமைகிறது. ஜூலியா அந்த பணிப்பெண்ணை சமரசம் செய்து அவளது மனம் மாறும் வேளை அந்த தீவிரவாதி செயலில் இறங்க - க்ளைமாக்சில் விமானத்தை ஹை-ஜாக் செய்த அந்த பணிப்பெண்ணே தீவிரவாதியை கொன்று விமானத்தையும் மக்களையும் காப்பாற்றுகிறாள். மனிதர்களில் எத்தனை வகைகளோ, அத்தனை வகை மனிதர்களும் விமானத்தில் உயிர் பயத்தில் நடுநடுங்கிக்கொண்டு தங்களிடையே பரிமாறிக்கொள்ளும் உணர்வுபூர்வமான வசனங்கள் உள்ளத்தை தொடுகின்றன. கதையை படித்தது முடித்ததும் நானே அந்த அபாயத்தில் சிக்கிக் கொண்டு விடுபட்டதுபோல ஒரு நிம்மதி ஏற்பட்டது. இவருடைய கதைகளை வேண்டாம் என மறுப்பவர்கள் மீண்டும் ஒருமுறை இந்த கதையை படித்துவிட்டு முடிவெடுங்களேன்.
    பிற ஹீரோக்களின் கதைகளில் குற்றவாளிகளுக்கு தண்டனையே கிடைத்தாலும், இதுவரை வந்த இவர் கதைகளில் குற்றவாளிகளின் மனதை படித்தறிந்து அவர்களை மாற்ற முயல்வதாகவே சம்பவங்கள் அமைந்துள்ளது. அது சுவாரசியமாகவும் உள்ளது. இவரது மற்ற கதைகள் 'நின்று போன நிமிடங்கள்' மற்றும் 'பௌர்ணமியிரவில் காலன் வருவான்' கதைகளும் நன்றாக இருந்தன. ஆனால் அந்த பௌ.கா.வ. கதை மட்டுமே 1-ம் வகுப்பு பாட புத்தகத்தில் வரும் Fancy story மாதிரி அமைந்து ஏமாற்றிவிட்டது. இவரது கதைகளில் அயல்நாட்டு டீன் ஏஜ்களின் கும்மாளங்களை அனுபவ பூர்வமாக விவரிக்கிறார் இதன் ஆசிரியர். அதுவும் நன்றாகவும் இருக்கிறது. ஜெரேமியாவுக்கு வாய்ப்பு கொடுத்ததைப்போல, இவருக்கும் சிறிது வாய்ப்புகளை நீங்கள் கொடுத்திருக்கலாம் சார்! 2019'ல் இவருக்கு வாய்ப்பு கொடுங்கள்.

    ஜூலியா, ஷானியா, மாடஸ்தி, கமான்சே என்று மகளிரணி கதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. மாடஸ்தி கதைகள் ஒரு காலத்தில் படிக்க நன்றாக இருந்தது. அதே ஸ்டைல் இப்போது படிக்க சுவாரசியமாய் இருப்பதில்லை. XIII & ஜேம்ஸ் பாண்ட் 007 இவர்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸ் புதிய கதைகள் வண்ணத்தில் வந்துள்ளது போல, மாடஸ்திக்கும் 2'வது இன்னிங்ஸாக வண்ணத்தில் புதிய கதைகள் வந்தால் நல்லது. சக்கைப்போடு போடும்.

    ReplyDelete
    Replies
    1. என்னவொரு தெளிவான கருத்துக்கள்!! இதைப் படித்ததற்குப் பிறகும் ஜூலியாவுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் விட்டுடுவார்னு நினைக்கறீங்களா நண்பர்களே?!!

      அவர் ஒன்றும் இரக்கமனம் இல்லாதவர் அல்லவே?!!

      Delete
    2. 2019'ல் இவருக்கு வாய்ப்பு கொடுங்கள்.
      +9
      #justice for julia

      Delete
    3. இரக்கம் பார்த்து சுமையை ஏற்றிக் கொண்டே போகமுடியாதே...!!!

      Delete
    4. ///மாடஸ்தி கதைகள் ஒரு காலத்தில் படிக்க நன்றாக இருந்தது. அதே ஸ்டைல் இப்போது படிக்க சுவாரசியமாய் இருப்பதில்லை///

      +111

      Delete
  59. இந்தாண்டு சந்தாவில் 36ஸ்லாட்கள் உள்ளன.100%உதவும் திருப்தி படுத்தாது. அட்லீஸ்ட் 90%பேருக்கு திருப்தினா ஓகே. இதுவரை கொஞ்சம் முனுமனுப்பை கிளறியிருப்பவை மாதவாரியாக,

    ஜனவரி-ப்ளூகோட்(கொஞ்சமா) & நிஜங்களின் நிசப்தம்(பலமா)

    பிப்ரவரி-ரின்டின்கேன்(பலமா)& ஷல்டன்(கொஞ்சமா)

    மார்ச்-ஸ்மர்ஃப்(பலமா)& ஜில்ஜோர்டன்(ஜோரா)

    ஏப்ரல்-லேடிS....

    இவைகள் பார்த்துப்பார்த்து ஆசிரியர் சார் செலக்ட் செய்தவை. இரண்டு, மூன்று மாத கடினமான தேர்வில் தேறியவையே இந்த சலசலப்பை கொண்டுவந்தன.

    ஏற்கெனவே டயபாலிக்,மேசிக்வின்ட்,கமான்சே,ஜூலியா போன்றவை ஆகாதுனு கழட்டிவிடப்பட்டவை. கவனமாக பார்த்து செய்தவைகளுக்கு மத்தியில், கழட்டிவிடப்பட்டவை எத்தகைய சலசலப்பை கொணரும் என்பதில் ஐயமில்லை.

    இரண்டு மாதமாக எடிட்டர் சாரின் கேள்விகள் உணர்த்துபவை எதிர்வரும் காலங்களில் ஸ்லாட்கள் குறையும்; பெஸ்டானவை மட்டுமே தரணும் என்ற வேட்கை.
    இந்நிலையில் ஆகாதவற்றை கழட்டிவிடப்பட்டவை யாகவே இருக்கட்டும்.

    ரீப்பிளேஸ்மென்ட்க்கு கொத்தாக நாயகர்கள் காத்திருக்கும் வேளையில், பரிசோதனைகள் என்ற வகையில் ஸ்லாட்கள் வீண்டிப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது; மேலும் நீண்ட காலநோக்கிற்கு நல்லதும் அல்ல.

    ஓப்பனா சொன்னா கம்பேக் ஆகி 6ஆண்டுகள் ஆகிட்டது. இனியும் பரிசோதனை முயற்சிகளில் வாய்ப்புகள் வீணாவதை ஜீரணிக்க இயலாது.

    இரண்டு மாதமாக தளத்திலும், நேரடியாகவும் வந்துள்ள பதில்கள் நீட் ஆஃப் த ஹவரை தெளவு படுத்தியிருக்கும்.

    காலனின் கானகம் தள்ளிப்போனதும், சீக்ரெட் ஏஜெண்ட் ஸ்பெசல் தள்ளிப்போடப் பட்டதற்கும், நம்முடைய ரசனைகளே சாட்சி.

    இருக்கும் 36 அல்லது 40ல் தெரிந்தே நான்கைந்தை ரிஸ்க் எடுக்க முடியாது. முக்கியமாக அந்த கட்டத்தை தாண்டி பயணித்து விட்டோம்.


    ReplyDelete
    Replies

    1. ஏற்கெனவே டயபாலிக்,மேசிக்வின்ட்,கமான்சே,ஜூலியா போன்றவை ஆகாதுனு கழட்டிவிடப்பட்டவை. கவனமாக பார்த்து செய்தவைகளுக்கு மத்தியில், கழட்டிவிடப்பட்டவை எத்தகைய சலசலப்பை கொணரும் என்பதில் ஐயமில்லை.
      But we gave chance to all heroes because some one may able to hit on their come-back albums...don't decide an hero by one or two failures.. ..Example for best come-back MARTIN MYSTERY

      Delete
    2. அகிக்@ மார்டின் டேஞ்சர் ஜோனுக்கே போகாத ஹீரோ. ஒவ்வொரு கதையிலும் இம்ப்ரூவ் கொடுத்தார்.

      மிக மிக முக்கியமாக கம்பேக்கிற்கு முன்பே தன்னை நிலைநிறுத்தி கொண்டவர். இன்று அனைவராலும் சிலாகிக்கப் படுபவர். எக்ஸ்ட்ரா ஸ்லாட்டை ஏர்ன் பண்ணியவர்.

      மார்டினோடு இவர்களை கம்பேர் செய்வதே பொருத்தாது.

      திஸ் ஈஸ் த ரைட் டைம் டு செபரேட் மென்ஸ் ஃப்ரம் பாய்ஸ்....!!!

      ஓடுற குதிரைமேல் தான் பந்தயம் வைக்க முடியும்.

      இவுங்க 4பேரும் தேறாதவர்கள்னு தெரிந்து கொண்டபின், நோ அதர் கோ.

      ரியாலிட்டி என்னான்னா, ஸ்லாட்கள் குறைவாகவே இருக்கின்றன. ரிஸ்க் எடுக்கும் நேரம் கடந்துட்டது.

      Delete
    3. But
      Julia is not detective she is criminologist
      She is not heroic heroine
      She is just like a ordinary woman with wonderful mind

      Delete
  60. ஜூலியா மீதான நமது தீர்ப்பு கொஞ்சம் அவசர கதியோ ?
    அல்லது மெய்யாகவே அவரது கதைகளை நம்மால் ரசிக்க முடியவில்லை என்ற யதார்த்தத்தினை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டுமோ ?
    இவரொரு குற்றவியல் நிபுணரே தவிர்த்து ஆக்ஷன் அதிரடியில் இறங்கக்கூட்டிய டிடெக்டிவ் அல்ல என்பதை நாம் ஒருக்கால் மறந்து விட்டு - "இந்த அக்கா ஏன் பேசிட்டே இருக்கு ?" என்ற கேள்விகளை எழுப்பிக்கொள்கிறோமா ?
    நிஜ சம்பவங்களை உந்துகோலாய் கொண்டு உருவாக்கப்படும் இவற்றில் நாம் கரம் மசாலாவை எதிர்பார்ப்பது தான் சிக்கலின் அடிப்படையோ ?
    ஜூலியா - இன்னொரு வாய்ப்புக்கு அருகதையானவரா ?
    அல்லது - சாத்திய கதவு சாத்தியதாகவே இருக்கட்டுமா ?
    நண்பர்கள் வசதிக்காக ஆசிரியரின் கேள்விகள் பின்னூட்டம்.

    ReplyDelete
  61. ஜூலியா மீதான நமது தீர்ப்பு கொஞ்சம் அவசர கதியோ ?

    இல்லை.
    அல்லது மெய்யாகவே அவரது கதைகளை நம்மால் ரசிக்க முடியவில்லை என்ற யதார்த்தத்தினை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டுமோ ?

    ஆம்.

    இவரொரு குற்றவியல் நிபுணரே தவிர்த்து ஆக்ஷன் அதிரடியில் இறங்கக்கூட்டிய டிடெக்டிவ் அல்ல என்பதை நாம் ஒருக்கால் மறந்து விட்டு - "இந்த அக்கா ஏன் பேசிட்டே இருக்கு ?" என்ற கேள்விகளை எழுப்பிக்கொள்கிறோமா ?

    இதற்கும் ஆம் என்பதே என் பதில்.
    நிஜ சம்பவங்களை உந்துகோலாய் கொண்டு உருவாக்கப்படும் இவற்றில் நாம் கரம் மசாலாவை எதிர்பார்ப்பது தான் சிக்கலின் அடிப்படையோ ?

    ஆமாம் சார்.நாவலாக படிக்க சிறந்தது.
    காமிக்ஸாக மிடியல.

    ஜூலியா - இன்னொரு வாய்ப்புக்கு அருகதையானவரா ?
    இல்லவே இல்லை
    அல்லது - சாத்திய கதவு சாத்தியதாகவே இருக்கட்டுமா ?
    அப்படியே இருக்கட்டும் சார்.

    ReplyDelete

  62. சூலியா கடைசியா சூலி மாதிரி குழப்புறாங்களே...

    வேணுமா வேண்டாமா ..

    வேண்டாமா வேணுமா..


    நமக்கெதுக்கு வம்பு..


    நம்ப நடுவால போலாம்...


    யார் எங்கே அதிகமாக இழுக்குறாங்களோ நாம அங்கே போயிரலாம் ..


    அதான் காமிக்ஸ் ஆச்சில சேப்ட்டி...:-)

    ReplyDelete
  63. பரணி சார் சூதானமா தான் இருக்கீக.

    ReplyDelete
  64. ஜூலியாவின் 20வது பிறந்தநாளை முன்னிட்டு...
    'ஜம்போ காமிக்ஸ்' மாதிரியே 'ஜூலியா காமிக்ஸ்'னு ஏதாச்சும் ஆரம்பிக்கிற ஐடியா இருந்தா அதுக்கான சந்தாதாரர் லிஸ்ட்ல என்னோட பேரை முதலில் எழுதிக்கோங்க எடிட்டர் சார்!

    ஜூலியாவுக்கு ஆதரவு தரும் ஐந்துபேர்களுக்கு தலா ஒரு 'சந்தா-J' பரிசளித்திடவும் உத்தேசித்துள்ளேன்!!

    ஹாப்பி பர்த்டே ஜூலியா!!

    ReplyDelete
  65. ஆர்ப்பாட்டமில்லாத அழகான க்ரைம் கதைகளின் நாயகி ஜூலியா கெண்டல் வந்தால் எனக்கு மகிழ்ச்சியே ..!!

    எப்பவும் சில்லுமூக்குகளை பெயர்ப்பதை மட்டுமே படித்துக்கொண்டிருக்க முடியாதுதான்.!

    நான் என்னதான் டெக்ஸ் வில்லரின் அதிதீவிர ரசிகன் என்றாலும் ட்ராகன் நகரம், அராஜகம் அன்லிமிட்டேட் போன்ற கதைகளை ரசிக்க முடியவில்லை. காரணம் காப்பியா டீயா டெக்ஸ் னு கேட்டாக்கூட... என்னைப்பாத்து ஏண்டா அந்தக் கேள்வியக் கேட்டன்னு மூஞ்சிலயே குத்துவார் டெக்ஸ்.!

    எனவே நின்றுபோன நிமிடங்கள் மாதிரியான கதைகள் வந்தால் ஜூலியாவுக்கு எதிர்காலம் நன்றாகவே இருக்கும் என்பது சினியேனின் எளிய கருத்து..!!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார்.

      200+ கதைக் குவியலில் அதற்கான வாய்ப்பு நிறையவே கொட்டிக் கிடைக்கும்.அஅதை ஏன் மிஸ் செய்ய வேண்டும்?

      Delete
    2. நான் என்னதான் டெக்ஸ் வில்லரின் அதிதீவிர ரசிகன் என்றாலும் ட்ராகன் நகரம், அராஜகம் அன்லிமிட்டேட் போன்ற கதைகளை ரசிக்க முடியவில்லை. ////


      கூடவே அந்த பவளச்சிலை மர்மத்தையும சேர்த்துக்கோங்க சாமி.....சத்தியமா மிடியல....சுடுறாரு ...சுடுறாரு சுட்டுக்கிட்டே இருக்காரு சாமி.....110 பக்க கதைல 109 பக்கமும் சுட்டுக்கிட்டே இருந்தா என்னதான் நாம பன்றது ...

      Delete
    3. எனக்கும் ஈ பெண்குட்டியின் கதைகளுக்கு நோ சொல்வதில் குறைச்ச வருத்தமே ! பட்சே நண்பர்களின் வல்லிய கோரசுக்கு செவி சாய்க்கும் கடமை உண்டல்லோ ?

      Delete
    4. //110 பக்க கதைல 109 பக்கமும் சுட்டுக்கிட்டே இருந்தா என்னதான் நாம பன்றது ...//

      காலனின் கானகம் !!! same பீலிங் யுவா !

      Delete
    5. காலனின் கானகத்தை ப சி ம போல மிட்டாய் கலரில் கொடுத்து பாருங்கள் சார். டுமில் டுமில் டமால் எவ்வளவு ரசிக்கிறோம் என்று சிறு வயதில் ரசித்தது வயது ஆகிவிட்டது ரசிப்பு மாறவில்லை.

      Delete
  66. எடிட்டர் சார் சீக்கிரம் ஜூலியா மேலாண்மை வாரியம் அமைத்துவிடுங்கள்.

    ReplyDelete
  67. This comment has been removed by the author.

    ReplyDelete
  68. Don't want Julia again...very bore ...not interesting...we can give more 2 lady s....

    ReplyDelete
    Replies
    1. அங்கேயுமே டப்பா நடனம் ஆடுகிறதே சார் !

      Delete
    2. ஆமா...ஆமாம்...ப்ளஸ்ஸோ ப்ளஸ்கள்...

      Delete
  69. போன பதிவிலும் சரி ; இந்த உபபதிவிலும் சரி, எனக்கிங்கே வேலையே இல்லாது செய்து விட்டீர்கள் guys ! ஜமுக்காள வாடகை ; சொம்பைக் கழுவும் வேலை என்ற மட்டும் மிச்சம் !!

    ஒரு நாயகரைக் கழற்றி விடலா -மா ? என்ற கேள்வியெழுப்பி வாய் மூடும் முன்பாகவே பொளேரென பதில் கிட்டுகிறதெனில் அவர் danger zone பக்கமாய் தலைவைக்கும் பார்ட்டியே அல்ல என்றாகிறது !

    சரி, அதே flow -ல் ஜூலியாவைப் பற்றியும் கேட்டு வைப்போம், இரக்கம் காட்டாது போவார்களா நம்மவர்கள் ? என்ற நினைப்பில் வந்தால் மீண்டும் பொளேர் ; but இது வேறு மாதிரி பொளேர் !!

    சரி...ஆனது ஆச்சு....ஆலமரத்தடியில் ஒரு சிறு அணியாது கூடியிருப்பின் , "ஒரு ஊரிலே ஒரு கிரிமினாலஜிஸ்ட் அக்கா இருந்தாங்களாம் " என்று ஈரோட்க்காரை வைத்துக் கதை சொல்ல வேண்டியது தான் போலும் !

    ReplyDelete
    Replies
    1. And இங்கே நான் கவனித்த highlight என்னவெனில் :

      மார்டினுக்கும் ஒரே ஸ்லாட் !
      ஜுலியாவுக்கும் ஸ்லாட் ஒன்றே !

      ஆனால் அந்த ஒற்றை ஸ்லாட் ஒருத்தருக்கு இத்தனை அபிமானத்தையும், அடுத்தவருக்கு இத்தனை சுவாரஸ்யமின்மையையும் கொணர்ந்துள்ளதென்பதிலேயே பஞ்சாயத்து முடிந்த மாதிரித் தானே ?

      Delete
    2. ஹா..ஹா...
      ஹாஸ்யத்திலேயே முடிவையும் சொல்லி விட்டீர்கள், நன்றிகள் சார்.
      அனைத்து காமிக்ஸ் ரசிகர்களும் நிம்மதியாக தூங்குவோம்🙏🙏🙏

      Delete
    3. ஹா..ஹா...
      ஹாஸ்யத்திலேயே முடிவையும் சொல்லி விட்டீர்கள், நன்றிகள் சார்.
      அனைத்து ஜூலியா ரசிகர்களும் நிம்மதியாக தூங்குவோம் (ஆலமரத்தடியில் தான்)🙏🙏🙏

      Delete
    4. சாா்

      மாா்ட்டினையும் ஜுலியாயும் ஒப்பிடுவது சாிதானா??

      Delete
    5. தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தமே - மிஸ்.ஜூலியாவை மிஸ் செய்வதில் ! ஆனால் உங்கள் பணத்தில் ஒடும் வண்டியை உங்கள் இசைவுடன் ஓட்டுவதே நியாயம் அல்லவா ?

      நிறையவே கல்தாக்கள் காத்துள்ளன பத்தொன்பதில் !!

      Delete
    6. Quantityமுக்கியம் அல்ல;
      Quality தான் முக்கியம் சார்...

      Delete
    7. வேண்டுமானால் டெக்ஸோடு மாா்ட்டினை கம்ப்போ் பண்ணி ஒரு முடிவுக்கு வாருங்கள்

      Delete
    8. //மாா்ட்டினையும் ஜுலியாயும் ஒப்பிடுவது சாிதானா??//

      இருவருமே ஆட்டக்காரர்கள் சார் ; நாளின் இறுதியில் அவர்களது பெயர்களுக்கு நேராய் பொறிக்கப்பட்டிருக்கும் ரன்களே டீமில் அவரகளது எதிர்காலங்களைத் தீர்மானிக்கும் ! Genre வேறு ; பாணி வேறு தான் - ஆனால் வாசக அபிமானம் என்ற அளவுகோல் மாறிடாதே !

      Delete
    9. ///உங்கள் பணத்தில் ஒடும் வண்டியை உங்கள் இசைவுடன் ஓட்டுவதே நியாயம் அல்லவா ? ///

      சார், வண்டியை கொஞ்சம் ஜூலியா வீட்டுப் பக்கம் திருப்புங்க ப்ளீஸ்!

      Delete
    10. ///நாளின் இறுதியில் அவர்களது பெயர்களுக்கு நேராய் பொறிக்கப்பட்டிருக்கும் ரன்களே டீமில் அவரகளது எதிர்காலங்களைத் தீர்மானிக்கும்///

      👍 😥😥

      சற்றே வருத்தத்துடன்

      Delete
    11. //வேண்டுமானால் டெக்ஸோடு மாா்ட்டினை கம்ப்போ் பண்ணி ஒரு முடிவுக்கு வாருங்கள்//

      Of course - ஒப்பீடு இல்லாமலா ஒருத்தருக்கு ஒற்றை ஸ்லாட் ; இன்னொருத்தருக்கு ஒரு டஜன் என்ற நிர்ணயம் சார் ?

      Delete
    12. ///
      நிறையவே கல்தாக்கள் காத்துள்ளன பத்தொன்பதில் !!////---புரிந்து கொள்ள முடிகிறது சார், சற்றே கனத்த மனசுடன்....👍👍👍

      Delete
    13. சாா்

      பேரு ஜுலியா நல்லா ஞாபகத்தில் வைச்சுக்கோங்க

      எங்கேயாவது "சானியா" ன்னு மாத்தி படிச்சராதீங்க

      ஈரோட்காா் அப்புறம் வேணா சும்மா இருக்கமாட்டாரு!

      Delete
    14. //சார், வண்டியை கொஞ்சம் ஜூலியா வீட்டுப் பக்கம் திருப்புங்க ப்ளீஸ்!//

      பஞ்சாயத்துக்குப் போக கெத்தாக இருக்குமே என்று சொல்லி வைத்திருந்த ஒரு தொத்தல் சாரட் வண்டியை இப்போது தான் திருப்பி அனுப்பிச்சேன் ; அந்த வண்டியைத் தான் ஜூலியா வீட்டை நோக்கி விடணும் போலும் ! எப்படியும் ஒரு ௬ மாசத்திலே போய்ச் சேர்ந்துடும் !

      Delete
  70. சரி போம்மா ஜூலியா... போய் எங்காவது ஆஸ்திரேலியா, ஜப்பான் பக்கம் போய் பிழைச்சுக்க! உன்னைய மாதிரி ஒல்லிப்பிச்சான் உடம்போடும், இயல்பான மனித குணங்களோடும் ஒரு டிடெக்டிவை நாங்க ஏத்துக்கிடறதா இல்லை! டிடெக்டிவ்னா எப்படி இருக்கணும் தெரியுமா...? நல்லா வெய்ட்டான பிஸ்டலை 'சரக் சரக்'னு சர்ட்டு பாக்கெட்லேர்ந்து உருவத் தெரியணும்... பல்டியடிக்கத் தெரியணும்... பஞ்ச் டையலாக் பேசத் தெரியணும்... அநீதியக் கண்டா பொங்கணும்... ரொம்ப முக்கியமா கடேசி பக்கத்துல "இதையெல்லாம் நான் முன்பே யூகித்துவிட்டேனாக்கும்" என்று சவடால் பேசத் தெரியணும்!

    இதெல்லாம் உனக்கு செட் ஆவாதும்மா... ஓடிப்போய்டு இங்கேர்ந்து!
    ந்தாம்மா... நான் சொல்றது காதுல விழலை? ஐ ஸே யூ கெட் அவுட்! ராசுகோல்!!

    ReplyDelete
  71. போய் வா நதியலையே...!

    (வருத்தத்துடன்)

    ReplyDelete
  72. கல்தா தரப்பட்டுள்ள இன்னொரு நாயகரின் புது அமெரிக்க - ஆங்கில ஆல்பத்தையும் சமீபத்தில் பார்த்தேன் !! அட்டகாசமாகப் பட்டது கதை !! பெருமூச்சு மட்டும் விட்டுக் கொண்டேன் அந்த மந்திரத் தென்றலை பார்த்து !!

    ReplyDelete
    Replies
    1. சார், ஜூலியாவைப் போலவே இதற்கு முன்பு நம்மால் துரத்தியடிக்கப்பட்ட யதார்த்த டிடெக்டிவ் 'ஜெரோம்' இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

      Delete
  73. ஜூலியாவுக்கு நேர்ந்த அநீதீயைக் கண்டித்து, நாளை ஒரு நாள் முழுதும் உண்ணா விரதம் மேற்கொள்கிறேன்.

    மதியம் 1-2 உணவு விடுமுறை.

    விருப்பமுள்ள ரசிகர்கள் விரதத்தில் இணையலாம்.

    ReplyDelete