Powered By Blogger

Saturday, April 14, 2018

ஒரு காமிக்ஸ் கடமை !

நண்பர்களே,

வணக்கம். புலர்ந்திருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நம் எல்லோருக்கும் நலமும், வளமும் தந்திடும் அட்சயப் பாத்திரமாய் விளங்கிடப் பிரார்த்திப்போம் ! ஆங்கில புது வருஷம் பிறந்ததே இப்போது தான் போலிருக்க அதற்குள் அடுத்த மைல்கல்லின் நிழலில் நிற்கிறோம்! ஒரு காலத்தில் இந்த ஏப்ரல் & மே மாதங்களுக்காக வருஷம் முழுவதும் தவம் கிடப்போம்! “மாமூலான 25% ஏஜெண்ட் கமிஷன் என்னுமிடத்தில் 5% கூடுதலாக – 30% கமிஷன் உண்டுங்கோ!” என்றொரு சுற்றறிக்கையை ஏஜெண்டுகளுக்கு அனுப்பினாலே போதும் – அந்த வாரத்தின் இறுதிக்குள் புஷ்டியான கவர்கள் வங்கிக் காசோலைகளுடன் தபாலில் வந்து குவியும்! பற்றாக்குறைக்கு நாம் 'சம்மர் ஸ்பெஷல்'… 'அக்னி நட்சத்திர ஸ்பெஷல்' என்று எதையாச்சும் வெளியிட்டு ரகளை பண்ண – இந்த 2 மாதங்களுமே ஆபீஸ் களைகட்டி நிற்கும் ! ஐந்து ரூபாய்களுக்கும், பத்து ரூபாய்களுக்கும் அன்றைக்கு சாத்தியமான இதழ்களைப் பார்த்து இப்போது பெருமூச்சு தான் விட முடிகிறது! Of course – சாணித் தாள் நாட்களே அவை ; ஆனால் அவற்றின் விலைகளாவது ஏதோவொரு கட்டுக்குள் கிடந்தன! இப்போதோ நிலவரமே உல்டா! உள்ளுர் ஆர்ட் பேப்பரை விட, சீன இறக்குமதிகள் விலை குறைச்சலாகக் கிடைக்கிறதுடா சாமி… என்று திடு திடு ஓட்டமாய் அந்தத் திக்கில் படையெடுத்தால் – ‘நாங்களுமே அல்வா தருவோமே!‘ என்று அவர்களும் ஒரு விலையேற்றத்தைக் கொண்டு செவியோடு சாத்துகிறார்கள் ! என்ன ஒரே ஆறுதல் – இரத்தப் படலத்துக்கு ஏற்கனவே தாள் வாங்கி இருப்பில் வைத்து விட்டோம்! So அதன் பொருட்டு அந்த நேரம் காவடி தூக்கித் திரிய வேண்டி வராது – பேப்பர் ஸ்டோர்களின் பின்னால்!

இரத்தப் படலம்” பற்றிய தலைப்பில் உள்ள போதே “புலன் விசாரணை“ பற்றிய updates தந்து விடுகிறேனே?! சொல்லி வைத்தாற் போல நேற்றைய தினம் :
  • - கூரியரில் நண்பர் குடந்தை J-வின் முழு ஸ்கிரிப்ட் !
  • - மின்னஞ்சலில் நண்பர் கார்த்திகை பாண்டியனின் முழு ஸ்கிரிப்ட் !
  • - மின்னஞ்சலில் நண்பர் கணேஷ்குமாரின் பகுதி ஸ்கிரிப்ட் !
என்று ஒட்டுமொத்தமாய் வந்திறங்கின! இங்கே ஏற்கனவே நான் மர்ம மனிதன் மார்டினின் உபயத்தில் கண்முழி பிதுங்கிப் போயிருப்பதால் மேற்படி 3 ஸ்கிரிப்ட்களுக்குள் இன்னமும் புகுந்திட முடியவில்லை! ஆனால் மேலோட்டமான பார்வையில் இந்த உழைப்புகளின் பரிமாணம் மூச்சிரைக்கச் செய்கிறது ! End of the day – இவற்றை நம்மில் எத்தனை பேர் முழுமையாக வாசிக்கப் போகிறார்களோ - தெரியவில்லை ; ஆனால் இந்த உழைப்பை கௌரவப்படுத்தவாவது எல்லோருமே நேரம் எடுத்துக் கொள்வது ஒரு “காமிக்ஸ் கடமை” என்பேன்! "ஜெனரல் பென் காரிங்டன் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அத்தனையாம் ஆண்டு பிறந்தார்; அவரது தாத்தா ஆயிரத்து எண்ணூற்று இத்தனையாவது ஆண்டில் காலமானார்” என்ற ரீதியில் பத்தி பத்தியாய் கோனார் நோட்ஸ் சாயலில் ஓடும் ஸ்கிரிப்ட்களை வாசிக்கும் போதே என் மனக்கண்ணில் நிழலாடுவது மூவருமே இதற்கென எடுத்திருக்கும் அசாதாரண முயற்சிகளும், நோவுகளுமே! Phewwwwww!! And இவற்றை பரிசீலிப்பது என் பொறுப்பு என்பதை நினைத்துப் பார்க்கும் போதே கண்ணைக் கட்டுகிறது ! யாரது ஸ்கிரிப்ட் தேர்வானாலும் – இங்கே வெற்றி மூவரின் மனதிடத்திற்கும், விடாமுயற்சிக்கும் சமபங்கில் உரித்து என்பேன்! A round of standing applause please all ! அப்புறம் காத்திருக்கும் இவை சார்ந்த பரிசீலனைப் படலத்தின் இறுதியில் நண்பர் XIII-ஐப் போல ‘ஙே‘ முழியோடு நிற்காது – ஸ்மர்ஃபியைப் பார்த்த கவிஞர் ஸ்மர்ஃப் போல நான் நின்றிட என் சார்பில் ஒரு தபா வேண்டிக் கொள்ளுங்களேன் ப்ளீஸ்! More updates on பு.வி.- once I get into them soon !! 

மெல்லத் திறந்தது கதவு!“ சென்றாண்டின் இறுதியில் மார்டின் கதைவரிசையினில் ஏதேனுமொன்றைத் தேர்வு செய்ய இன்டர்நெட்டில் ஏகமாய் உருட்டிக் கொண்டிருந்த சமயம் கண்ணில் பட்ட கதையிது! படங்களைப் பரபரவென்று பார்வையிட்ட போது வழக்கமானதொரு மார்டின் த்ரில்லர் என்பது புரிந்தது. இங்கும் அங்குமாய் இது பற்றிய விமர்சனங்களைத் திரட்ட முயன்ற போது பெரிதாய் எதுவும் சிக்கவில்லை – at least எனக்காவது! So நமக்கு 2 வருடங்களாக இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து தரும் ரோம்நகரவாசியான அந்த அம்மணியிடமே கேட்டு வைத்தேன்! “A normal MM (மார்டின் மிஸ்ட்ரி) story” என்று அவரிடமிருந்து பதிலும் கிடைத்திட – டக்கென்று அடித்தேன் டிக்! அப்புறம் கதைகள் வந்து சேர்ந்திட இது பற்றி மறந்தே போய்விட்டிருந்தேன் ! அட்டவணையில் இதனை மே மாதத்துக்கென slot பண்ணிய பிற்பாடு – மார்ச் ஆரம்பத்தில் சாவகாசமாய் ஆங்கில ஸ்கிரிப்டைத் தூக்கி வைத்து ”எழுதலாமா? வேண்டாமா?” என்று யோசனையில் ஆழ்ந்தேன்! லார்கோ பாதியில் தொங்கிக் கொண்டும்; “ஹெர்லக் ஷோம்ஸ்“ & “மேக் & ஜாக்” இன்னொரு பக்கம் மேஜையை ஆக்ரமித்துக் கொண்டும் கிடக்க – மார்டினின் இஞ்சிமுட்டாய் பாணியையும் சேர்த்துக் கொள்வது சுகப்படாதென்று பட்டது! அந்த ஆங்கில ஸ்கிரிப்டின் பிரிண்ட்-அவுட்கள் 55 பக்கம் பிடித்து நின்றதும் கவனத்தைத் தப்பவில்லை! So நல்ல பிள்ளையாக இதை நமது கருணையானந்தம் அவர்களுக்குப் பார்சல் பண்ணச் சொல்லி விட்டேன்!

15 நாட்களுக்குப் பின்பாக ஒரு மாலைப் பொழுதில் ஃபோன் செய்தவர் ஜாவாவின் முதலாளி பாடாய்ப் படுத்தி எடுத்த கதையைச் சொன்ன போது “ஆஹா… மார்டின் வழக்கம் போல வேலையைக் காட்டுகிறார் போலும்!” என்று யூகித்துக் கொண்டேன்! “கதையின் நடுநடுவே சுமார் 23 பக்கங்கள் சுத்தமாய் தலையும் புரியலை; வாலும் புரியலை! அவை கதைக்கு அவசியமென்று எனக்குத் தெரியலை… அதை எழுதாமல் அப்படியே விட்டிருக்கிறேன்! நீ பார்த்துக்கோ!“ என்றார்! என் மண்டை பரபரவென்று பின்நோக்கி ஓடியது!  வேற்று கிரகவாசிகள் ஆஸ்திரேலியாவில் வந்திறங்கி ஒரு வகை தாது மணல்துகள்களைத் தேடும் கதையில் இரண்டோ, மூன்றோ ஆண்டுகளுக்கு முன்பாய் சட்டையைக் கிழித்த நாட்கள் முதலாவதாக நினைவில் நிழலாடியது ! அப்புறமாய் அந்த எலிகள்; தேனீக்கள் என்று கும்பல் கும்பலாய், நியூயார்க்கை அதகளம் செய்த “இனியெல்லாம் மரணமே” நினைவுக்கு வந்தது! இந்த 2 கதைகளிலும் பணி செய்த ராத்திரிகளை சாமான்யத்துக்குள் மறக்க இயலாது! நாலு பக்கத்திற்கொரு தபா கூகுளில் தகவல் தேடுவது; அவற்றைக் கதையோடு படைப்பாளிகள் பொருத்தியிருக்கும் லாவகத்துக்கு நியாயம் செய்ய முயற்சிப்பதென்று சொல்லி மாளா மணிநேரங்கள் செலவாயின! So அந்த ஞாபகங்களெல்லாம் சேர்ந்து கொண்டு ‘ஜிங்கு ஜிங்கென்று‘ ஆட – அப்போதைக்கு ஃபோனில் ”நான் பார்த்துக் கொள்கிறேன் அங்கிள்!” என்று சொல்லி வைத்தேன்! அதன் பின்னர் நம்மவர்கள் டைப்செட்டிங் செய்து முடித்து என்னிடம் ஒப்படைக்க, ”ஆங்... பார்த்துக்கலாம்! பார்த்துக்கலாம்!” என்று நாட்களை நகர்த்தினேன்! டியுராங்கோவுமே முன்கதைச் சுருக்கம் ; intense ஆன கதைக்களமென்று நாட்களை விழுங்கி வைக்க – அதனை நிறைவு செய்த கையோடு 3 நாட்களுக்கு முன்பாக “மெல்லத் திறந்தது கதவு” பக்கமாய் லேசாக கவனத்தைத் திருப்பினேன்! அப்போது சுற்ற ஆரம்பித்த தலையானது – ஒரு டஜன் அவாமின் மாத்திரைகளையோ; அரை லிட்டர் இஞ்சிக் கஷாயத்தையோ குடித்தும் தீர்ந்தபாடில்லை! 

ஸ்கிஸோஃப்ரெனியா” எனும் மனச்சிதைவு நோய் தான் இந்தக் கதையின் மையம்! அதனை அசாத்திய ஆழத்தில் ஆராய முற்படுவதோடு – கதையோடு பின்னியும் கொண்டு செல்கின்றனர்! 154 பக்கங்கள் கொண்ட இந்த ஆல்பத்தில் நான் இன்னும் பக்கம் 58-ஐ தாண்டின பாடில்லை; ஆனால் இதற்கே 3 நாட்கள் பிடித்துள்ளது! “புரியவில்லை” என்று கருணையானந்தம் அவர்கள் எழுதாமல் விட்டுள்ள பக்கங்களில் மூன்றில் ஒரு பங்கைக் கடந்து விட்டேன் தான்; ஆனால் மேலோட்டமான புரட்டலில் – காத்துக் கிடக்கும் மற்ற blank பக்கங்களை அர்த்தம் பண்ணி எழுதுவதற்குள் 'புலன் விசாரணையே' தேவலாம் என்றாகி விடும் போலுள்ளது! எந்த முடிச்சுக்கு எங்கே சம்பந்தம் ஏற்படுத்தியிருப்பார்களோ என்பது தெரியாது, பக்கங்களைக் காலி பண்ணவும் தைரியம் எழவில்லை ; என்ன சொல்ல வருகிறார்களென்பதை புரிந்து கொள்வதும் பிராணன் போகும் பிரயத்தனமாயுள்ளது ! இப்போதே சொல்லி விடுகிறேன் guys – “மார்டின் பாணி” என்பது நமக்குப் புதிதல்ல தான்! ஆனால் இதுவோ வேறொரு லெவல்! So நல்ல நாளைக்கே மார்டின் கதைகள் உங்கள் கண்களை வேர்க்கச் செய்திடுமெனில் – இந்த இதழானது குற்றாலத்தைக் கொணரக் கூடும்! Classic Martin ! இன்னமும் பாக்கியிருக்கும் 90 சுமார் பக்கங்களைத் தாண்ட ஞாயிறு நிச்சயம் போதாது; so தொடரும் வாரத் துவக்கத்தில் இதை முடித்த கையோடு பு.வி.ப. ஆரம்பமாகிடும்! அதற்குள் சந்நியாசம் வாங்காதிருக்க பெரும் தேவன் மனிடோ தான் அருள் புரிய வேண்டும் சாமீ !! 

And இதோ மார்டினின் சாகஸத்துக்கான அட்டைப்பட முதல் பார்வை! இது நமது ஓவியரின் அதகளக் கைவண்ணம் – ஒரிஜினல் டிசைனை மாதிரியாக வைத்துக் கொண்டு! சமீப மார்டின் அட்டைப்படங்கள் எல்லாமே மொக்கையோ மொக்கையாக அமைந்திருந்ததால் – அதற்குப் பரிகாரம் தேடிக் கொள்வது அவசியமென்று நினைத்தேன்! And அதில் நம் ஓவியருக்கு வெற்றியே என்று நினைக்கத் தோன்றுகிறது! What say folks?

இங்கே ஒரு கேள்வியுமே! சமீப வாரங்களில் உங்களிடம் நான் முன்வைத்திருந்த கேள்விகளுக்கு நீங்கள் சொல்லி வந்த பதில்களைக் கொண்டு 2019-ன் அட்டவணைக்குத் தேவையான ஒட்டுக்கள் எவை? வெட்டுக்கள் எவை? என்பதை நிர்ணயம் செய்ய பெருமளவு முடிந்திருக்கிறது! அதன் நீட்சியாய் மார்டின் பற்றியுமே : இவரது களங்கள் எப்போதுமே செம complex என்பது அப்பட்டம்! இவற்றுள் சுலபக் கதைகளென்பது அத்திபூத்தாற் போல் நிகழும் சமாச்சாரம் ! So யதார்த்தம் இதுவே எனும் போது இவருடனான பயணம் ஓ.கே. தானா? முன்பெல்லாம் கோழிமுட்டை போலொரு முரட்டு மிட்டாய் கிடைத்து வரும்; அவற்றைக் கடித்துச் சாப்பிடுவதெல்லாம் சாத்தியமாகாது. வாய்க்குள் போட்டுக் கொண்டு மெதுமெதுவாய் சப்பித் தான் சுவைத்திட வேண்டிவரும்! In many ways – மார்டினின் கதைகள் கூட அந்த ரகமே! 'பிரித்தோம் – படித்தோம் – பயணித்தோம்' என்ற பருப்பெல்லாம் இங்கே நிச்சயமாய் வேகாது தான்! ஆனாலும் இந்த குண்டு மிட்டாய் ஓ.கே. தானா ? Of course இதே கேள்வியை மே இறுதியிலும் ஒரு முறை repeat செய்திடுவதே பொருத்தமாகயிருக்கும் தான்; ஆனால் இப்போதைக்கும் சொல்லுங்களேன் ப்ளீஸ்?

Moving on, ஒரு மாற்றம் குறித்த சேதி! ஏப்ரலின் “பவளச்சிலை மர்மம்” சமீபத்தைய இதழ்களுள் ஒரு அதிரடியிடத்தைத் தனதாக்கியுள்ள இதழ் என்பது அப்பட்டமாய்த் தெரிகிறது! இப்போதெல்லாம் கிட்டங்கியில் இடம் பற்றாக்குறை என்பதால் நாம் அச்சிடுவது மிகக் குறைவான பிரதிகளையே! அப்படியிருந்துமே பல நாயகர்களின் இதழ்கள் கைவசம் இருப்பது தொடர்கதையே! ஆனால் இம்முறையோ surprise... surprise!! “பவளச் சிலை மர்மம்” மட்டுமாவது ஏஜெண்ட்களின் மறுஆர்டர்களுக்கும்; ஆன்லைனில் பரபரப்பான விற்பனைக்கும் ஆளாகியுள்ளது! நிச்சயமாய் சில மாதங்களிலாவது இது தீர்ந்தே விடக்கூடுமென்ற நம்பிக்கை எழுந்துள்ளது ! Tex ; அதுவும் வண்ணத்தில்,என்ற கூட்டணியோடு nostalgia என்றதொரு சமாச்சாரமும் இணையும் போது இந்த மேஜிக் சாத்தியமோ?! வண்டி வண்டியாய் ஸ்டாக்கைச் சுமந்து கொண்டு பல்லைக் கடித்தபடிக்கே வண்டியை ஓட்டும் நமக்கு – இது போன்ற அதிசயத் தருணங்கள் silver lining ஆகத் தென்படுகின்றன! So- இந்தாண்டின் சந்தா D-ல் சின்னதொரு மாற்றம் folks! CID லாரன்ஸ்; டேவிட் & ஜானி நீரோ இணைந்து வரவிருந்த SECRET AGENT ஸ்பெஷலின் இடத்தில் – TEX-ன் “சைத்தான் சாம்ராஜ்யம்” முழுவண்ணத்தில் வெளிவரவுள்ளது! ஆண்டின் இறுதியில் அட்டவணையின் டெக்ஸ் இதழ்கள் எல்லாமே தீர்ந்து போயிருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதென்பதால் இந்த addition அந்தக் குறையை நிவர்த்திக்கக் கூடும்! So “சைத்தான் சாம்ராஜ்யம்” நடப்பாண்டிலேயே & “வைக்கிங் தீவு மர்மமோ” உங்களது வேறு தேர்வு எதுவுமோ 2019-க்கென இருந்திடும்! Hope this is an o.k. change guys!

நீண்டு கொண்டே போகும் பதிவுக்கு ‘சுபம்‘ போட்டு விட்டு மார்டினோடு மனோதத்துவ ஆராய்ச்சிக்குள் புகுந்திடப் புறப்படுகிறேன்! நமது பொருளாளரோ; இங்குள்ள மருத்துவ நண்பர்களில் எவரோ செய்ய வேண்டிய பணியை நான் செய்ய முயன்று வருகிறேன்! Wish me luck guys! இதழ் வெளியான பின்னே நான் உங்களுக்கு luck wish பண்ணுகிறேன்! நிச்சயமாகஉங்களுக்கு அது அவசியப்படுமென்பேன் ! 😊

 இப்போதைக்கு bye all ! Have a cool weekend !

299 comments:

  1. Replies
    1. அப்படி போடுங்க!!!

      Delete
    2. **அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்**

      1. மார்ட்டின் கதை வருடத்திற்கு இரண்டு வேண்டும்
      2. சைத்தான் சாம்ராஜ்யம் - டபுள் ஓ.கே.
      3. மார்ட்டின் அட்டைப்படம் பிரமாதம்

      Delete
  2. அட இது என்ன புதுசா காமிக்ஸ் கடமை:-) படிச்சு முடிச்சிட்டு வர்ரேன்.

    ReplyDelete
  3. மார்ட்டின் கதையின் அட்டை படம் மற்றும் அதன் மாதிரி பக்கங்கள் ஆர்வத்தை கிளப்புகிறது.

    ReplyDelete
  4. // “பவளச் சிலை மர்மம்” மட்டுமாவது ஏஜெண்ட்களின் மறுஆர்டர்களுக்கும்; ஆன்லைனில் பரபரப்பான விற்பனைக்கும் ஆளாகியுள்ளது! //

    அட சூப்பர்.இதே போல் மற்ற கதைப் புத்தகங்கள் விற்பனையானால் இன்னும் சந்தோசம். விரைவில் இது நடக்க ஆசைப்படுகிறேன்.

    ReplyDelete
  5. // மார்டின் பற்றியுமே களங்கள் எப்போதுமே செம complex என்பது அப்பட்டம்! இவற்றுள் சுலபக் கதைகளென்பது அத்தி பூத்தாற் போல் நிகழும் சமாச்சாரங்கள்! So இதுவே யதார்த்தம் எனும் போது இவருடனான பயணம் ஓ.கே. தானா? //

    இவர் வேண்டும். டபுள்ஸ் ஓகே.

    ReplyDelete
    Replies
    1. மார்ட்டின் கதை வருடத்திற்கு இரண்டு வேண்டும் எனப் பலமுறை நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் இவர் வேண்டுமா என்ற கேள்வியே தேவையில்லாத ஒன்று என்னைப் பொறுத்தவரை.

      Delete
    2. வேண்டும் வேண்டும் மார்ட்டின் வேண்டும்

      Delete
    3. +1 குண்டு மிட்டாய் டபுள் ஓ.கே.

      Delete
    4. மார்ட்டின் கண்டிப்பாக வேண்டும்..

      Delete
    5. மார்ட்டின் அவசியமான தேவை இதில் எந்த மாற்றமும் மாற்று கருத்தும் இல்லை.

      Delete
  6. // - கூரியரில் நண்பர் குடந்தை J-வின் முழு ஸ்கிரிப்ட் !
    - மின்னஞ்சலில் நண்பர் கார்த்திகை பாண்டியனின் முழு ஸ்கிரிப்ட் !
    - மின்னஞ்சலில் நண்பர் கணேஷ்குமாரின் பகுதி ஸ்கிரிப்ட் ! //

    சூப்பர். வாழ்த்துக்கள் நண்பர்களே. மனம் நிறைந்த பாராட்டுக்கள் உங்கள் உழைப்பிற்கு.

    ReplyDelete
  7. /// CID லாரன்ஸ்; டேவிட் & ஜானி நீரோ இணைந்து வரவிருந்த SECRET AGENT ஸ்பெஷலின் இடத்தில் – TEX ன் “சைத்தான் சாம்ராஜ்யம்” முழுவண்ணத்தில் வெளிவரவுள்ளது! ///

    போடு தகிட தகிட ...!;-)

    ReplyDelete
  8. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. மார்ட்டின் வேண்டும், டெக்ஸ் டபுள் ஓகே

    ReplyDelete
  10. //இந்த மிட்டாய் ஓ.கே. தானா?//
    மார்ட்டின் கண்டிப்பாக வேண்டும்

    ReplyDelete
  11. //Hope this is an o.k. change guys!//
    -1

    ReplyDelete
  12. // CID லாரன்ஸ்; டேவிட் & ஜானி நீரோ இணைந்து வரவிருந்த SECRET AGENT ஸ்பெஷலின் இடத்தில் – TEX ன் “சைத்தான் சாம்ராஜ்யம்” முழுவண்ணத்தில் வெளிவரவுள்ளது! //

    சந்தோஷமாக உள்ளது சார். ஆனால் இதற்காக "SECRET AGENT ஸ்பெஷல்லை" காவு கொடுத்தது வருத்தமாக உள்ளது. இவை எப்போது வரும் என்ற விவரத்தையும் சொன்னால் இந்த "Secret AGENT ஸ்பெஷல்" இதழை எதிர்பார்த்த என் போன்றவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. பரணி சொல்வது சரியே சைத்தான் சாம்ராஜ்யம் வருவது சந்தோஷமே ஆனால் SECRET AGENT SPECIAL எப்போது வருமென்று தெரிவித்தால் நலம்

      Delete
    2. அந்த சீக்ரெட் ஸ்பெஷல் சிசி யில் ஏற்கனவே வந்த கதை தானே சார்..


      பின் என்ன அருமையான மாற்றம் கொண்டாடுவோம்...:-)

      Delete
  13. //;“மார்டின் பாணி” என்பது நமக்குப் புதிதல்ல தான்! ஆனால் இதுவோ வேறொரு லெவல்///

    சூப்பர் சார். இதை.. இதைத்தான் ரொம்பவே எதிர்பார்த்தேன்.

    என்னைப் பொருத்தவரையில் மார்டினோடு பயணிப்பதே படு சுவாரஸ்யமானது.
    So மார்டினுக்கு கல்தா என்ற எண்ணம் கூட உங்கள் மனதில் எழாமலிருக்க வேண்டும் என வேண்டுகிறேன்..

    ReplyDelete
  14. காமிக்ஸ் நண்பர்களுக்கும் எடிட்டர் மற்றும் அவர் குடும்பத்தினருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! மெல்ல திறந்தது கதவு அட்டைப்படம் அருமை! Designerக்கு பாராட்டுக்கள்! Colour combination மிக அருமை !

    ReplyDelete
  15. ///CID லாரன்ஸ்; டேவிட் & ஜானி நீரோ இணைந்து வரவிருந்த SECRET AGENT ஸ்பெஷலின் இடத்தில் – TEX-ன் “சைத்தான் சாம்ராஜ்யம்” முழுவண்ணத்தில் வெளிவரவுள்ளது! ///

    அஅப்படியே உங்கள் திருவாயில் நாட்டுச் சக்கரையா போட்டுக்குங்க எடிட்டர் சார்.

    சின்னதொரு மாற்றம் எப்படியொரு உற்சாகத்தைக் கிளப்புகிறது பாருங்கள்.

    பலே!! எடிட்டர் சார். பலே!!

    ReplyDelete
    Replies
    1. மார்டின் அட்டைப்படம், வித்தியாசமான முறையில் ஒருபடி தூக்கலாகத் தெரிகிறது.

      Delete
  16. முடிஞ்சா மார்ட்டின்க்கு இன்னும் இரண்டு வாய்ப்பு சேர்த்தி வேணா கொடுங்கள் சார்....ஆனா தயவுசெய்து மார்ட்டினுக்கு கல்த்தா மட்டும் கொடுத்துடாதீங்க சார்......இப்பொழுது வருகின்றன கதைகளிலேயே வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை தருவது மார்டின் கதைகள் மட்டுமே சார்..

    ReplyDelete
    Replies
    1. +987654321

      மார்ட்டின் தொடர வேண்டும்

      Delete
    2. //முடிஞ்சா மார்ட்டின்க்கு இன்னும் இரண்டு வாய்ப்பு சேர்த்தி வேணா கொடுங்கள் சார்//
      +123456789

      Delete
    3. நோ கல்தா...
      வருடம் ஒன்றுக்கு என் வாக்கு...!!!

      Delete
    4. \\ முடிஞ்சா மார்ட்டின்க்கு இன்னும் இரண்டு வாய்ப்பு சேர்த்தி வேணா கொடுங்கள் சார் //
      +10000000

      Delete
  17. From old post:
    //‘காலனின் கானகத்தை‘த் தற்காகலிகமாவது ஒத்திப் போடுகிறோம் !

    அதன் இடத்தில் “பவளச் சிலை மர்மம்” வண்ண TEX மறுபதிப்பு இடம்பிடித்திடவுள்ளது இம்மாதத்து கூரியர் டப்பாவுக்குள் ! Sorry guys – ஆனால் இரவுக் கழுகாருக்கென நம் மனங்களில் நாம் எழுப்பி வைத்துள்ள கோட்டைகளை – மத்திமமான எனது கதைத் தேர்வுகளின் பொருட்டு கோட்டைவிட என் மனம் ஒப்பவில்லை ! அட்டவணையில் இந்த ரூ.65/- ஸ்லாட்டை நிச்சயமாய் வேறொரு TEX அதிரடியைக் கொண்டு நிரப்பிடுவோம் !//

    காலனின் கானகம் கு மாற்று புத்தகம் என்ன சார்...

    ReplyDelete
    Replies
    1. காலனின் கான்கமே தான் சார் மாற்று தான் பவள் சிலை மர்மம்.

      Delete
    2. ///
      காலனின் கானகம் கு மாற்று புத்தகம் என்ன சார்...///

      உங்கள் கேள்வி பாதிதான் சரி ஜி. காலனின் கானகம் தள்ளி வரும் என்று தான் அறிவித்து உள்ளார்.
      எனவே அதற்கு மாற்று வராது.
      பவளசிலை சந்தா Dல் இருந்த ஒன்றே, முன்கூட்டியே வெளிவந்தது அவ்வளவே.

      காலனின் கானகத்திற்கு மாற்றாக சீக்ரெட் ஏஜெண்ட் ஸ்பெசல் கேட்கலாம் ஜி.

      Delete
    3. //அட்டவணையில் இந்த ரூ.65/- ஸ்லாட்டை நிச்சயமாய் வேறொரு TEX அதிரடியைக் கொண்டு நிரப்பிடுவோம் !//

      என் கேள்வியில் தவறேதும் இல்லை என்றே நான் நினைக்கிறன். ஏன் என்றால், ஆசிரியரின் மேற்கொண்ட வரிகளாலேயே நான் அவ்வாறு கேள்வி எழுப்பினேன்...

      Delete

    4. //அட்டவணையில் இந்த ரூ.65/- ஸ்லாட்டை நிச்சயமாய் வேறொரு TEX அதிரடியைக் கொண்டு நிரப்பிடுவோம் !///...
      இன்னும் கொஞ்சம் கருத்து பரிமாற்றங்கள் மேற்கண்ட பதிலுக்கு பிறகு நடந்தது ஜி. அப்போது ஆசிரியர் சார் தெரிவித்தது,

      "பணி முழமையடைந்த காலனின் கானகம் ட்ராப் ஆகவில்லை; ஒத்தி மட்டுமே வைக்க பட்டுள்ளது; அதற்கான சமயத்தில் உறுதியாக வெளிவரும்"---என்றே முற்றுப்புள்ளி வைத்தார். அந்த குறிப்பிட்ட பதிவில் நீங்கள் காண்லாம். எனவே தான் காலனின் கானகத்திற்கு மாற்று வராது என்பதை வைத்தே குறிப்பிட்டுள்ளேன் ஜி.

      Delete
  18. // ‘சுபம்‘ போட்டு விட்டு மார்டினோடு மனோதத்துவ ஆராய்ச்சிக்குள் புகுந்திடப் புறப்படுகிறேன்! //

    Good luck and best of luck.

    ReplyDelete
  19. மார்ட்டின் கதையின் பின் அட்டையில் மரத்தின் முன் பகுதியில் பெண் உருவம் போன்று வரைந்த ஓவியம் அருமை.

    ReplyDelete
  20. உண்மைலியியே நான் லார்கோ வுக்கு எ தான் வெயிட்டிங் ...

    ReplyDelete
  21. //- கூரியரில் நண்பர் குடந்தை J-வின் முழு ஸ்கிரிப்ட் !
    - மின்னஞ்சலில் நண்பர் கார்த்திகை பாண்டியனின் முழு ஸ்கிரிப்ட் !
    - மின்னஞ்சலில் நண்பர் கணேஷ்குமாரின் பகுதி ஸ்கிரிப்ட் !//
    உங்கள் உழைப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் நண்பர்களே .

    "மெல்ல திறந்த கதவு " அட்டை படம் அருமை . ஓவியருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .

    ReplyDelete
  22. நான் வெகு காலமாக ஏங்கி கிடந்த XIII The Complete collection book, நண்பர் கலீல் மூலமாக இந்த வாரம் கிடைத்தது.. என் வாழ்வில் மிக பெரிய சந்தோஷம் இது. மேலும் காமிக்ஸ் நண்பர் ஒருவரை முதல் முறையாக சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி

    கூடவே சில பழைய புத்தகங்களும் கிடைத்தது So நான் இப்போது 1997 to 2000 கால கட்டத்தில் சஞ்சரித்து வருகிறேன். பழைய நினைவுகளில் மிதந்து கொண்டு இருக்கிறேன்..

    இவ்வற்றுள் பல புத்தகங்கள் என்னிடம் இருந்தது என்பதை ஒவ்வொரு புத்தகமா படிக்கும் பொது தான் உணர முடிந்தது ஆனால் ஆனால் அந்த புத்தகங்கள் எங்கே என்ற கேள்விக்கு என்னிடம் விடை இல்லை. எப்படி என் கையை விட்டு சென்றது என்று சுத்தமாக நினைவில் இல்லை.

    என் பால்யத்தின் நாட்களில் மீண்டும் என்னை உலா வர செய்த நண்பர் கலீல் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் பாலா ஜி...
      பாராட்டுகள் கலீல் ஜி...

      Delete
  23. நமஸ்காரம் விஜயன் சாரே சுகந்தன்னே

    ReplyDelete
    Replies
    1. ஓ நிங்களொண்ணு விஷமிக்க வேணாம் அவர பரம சுகம்

      Delete
  24. வித்தியாசமான கதைக் களங்களுக்குச் சொந்தக்காரரான "மர்ம மனிதன் மார்ட்டின் " கதைகள் கண்டிப்பாக வேண்டும் சார். தயவு செய்து இவ௫க்குக் கல்தா கொடுத்து விடாதீர்கள்.!!!!!

    ReplyDelete
  25. தயவு செய்து "SECRET AGENT SPL " நிறுத்த வேண்டாம் சார. இரண்டு கதைகளையும் நான் படித்தது இல்லை.மும்மூர்த்திகளுக்கு ஏற்கனவே இந்த வ௫டம் குறைவான சீட்கள் தான் கொடுக்கப்பட்டு உள்ளன.அதிலும் கை வைத்தால் எப்படி சார்?..

    ReplyDelete
  26. தோர்கல் கதைகளை மீண்டும் படித்தேன் அட்டகாசம்... குண்டு தோர்கல் கண்டிப்பாக வேண்டும்.. வருடத்திற்கு இரண்டு முறைகளாவது

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலேயே தோர்கல் பட்டயக் கிளப்புகிறது.இத் தொடரின் ஆரம்ப பாகங்களைக் கண்டு மனம் நொந்தி௫ந்தேன்.
      ஆசிரியர் ஓவர் பில்டப் தந்து கடுப்பைக் கிளப்பி விட்டாரே என்று அவர் மேல் கோபம் கூட கொண்டி௫ந்தேன்.ஆனால் அடுத்தடுத்த இரட்டை ஆல்பங்கள் வெளிவந்து என்னை தோர்கல் மேல் மிகப் பெ௫ம் காதலை உண்டு பண்ணி விட்டன.ஆசிரியர் மேல் கோபப் பட்டதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று இ௫க்கின்றேன்.sorry sir.

      Delete
    2. ஒரு தொடரின் ஆயுட்காலம் நிறைய நேரங்களில் அதன் தரத்துக்கு சான்றாக அமைவதுண்டு ! 1977 -ல் ஆரம்பித்து இன்னமும் தொடரும் தொடர்- தோர்கல் ! 41 ஆண்டுகளாகியும் வீரியத்தோடு தொடர்கிறதெனும் போதே அதில் ஏதோ விசேஷமாய் இருக்காது போகாது என்று நம்பத் தொடங்கினாலே பிரச்சனை தீர்ந்ததே !

      Delete
  27. சீக்ரெட் ஏஜண்ட்ஸ்பெஷல்+சைத்தான் சாம்ராஐயம் இரண்டும் வரட்டுமே.!!
    நாங்கள் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகின்றோம்.!!!

    ReplyDelete
  28. பவளச்சிலை மர்மம் நிச்சயமாக சாதிக்கும் சார்...அவ்வளவு தரமான கதை மற்றும் கலரிங் வேற லெவல்...

    ReplyDelete
  29. பவள சிலை மர்மத்தின் முன்பே உறுதி செய்யப்பட்ட ஒன்று. குறித்து கொள்ளுங்கள் சை.சாம்ராஜ்யமும் பதிக்கும் இது போன்ற வெற்றியை. .....

    ReplyDelete
  30. மார்ட்டின் கதைகளில் கத்திரியை வைத்து விடாதீர்கள். வேண்டும் என்றால் இன்னொரு slot எடுத்து கொள்ளுங்கள். ...

    ReplyDelete
  31. மார்ட்டினுக்கு டபுள்ஸ் ஓகே சார் எனவே டபுள் ரைட்

    ReplyDelete
  32. மார்ட்டின் அட்டைப்படம் மிகப் பிரமாதம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அருமையாக உள்ளது

      (அதிலும் அந்த நடிகை ஜெனிலியா
      ) ஹி ஹி ஹி 😉😉

      Delete
  33. மார்ட்டின் அட்டைப் படம் செம கலக்கல்.!!!!!
    உள் பக்கச் சித்திரங்கள் அதை விட நன்றாக உள்ளன.
    அ௫மையான கதைக்கு அட்டகாசமான சித்திரங்கள் அமைந்தி௫ப்பதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி உள்ளது.
    அற்புமான அட்டைப் படம் தந்த பொன்னன் அவர்களுக்கு எங்களின் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  34. பவளச் சிலை மர்மம் விற்பனையில் சாதித்து வ௫வது மகிழ்ச்சி த௫கிறது.தல தல தான்!@!!

    ReplyDelete
  35. நண்பர்கள் நிறையப் பேரைக் காணாமே?
    ஈ வி, டெக்ஸ் விஜய், பரணிதரன் சார் என்ன ஆச்சு?

    ReplyDelete
    Replies
    1. ஒரு சாமக்கோடாங்கி மனம் திருந்தி முன்னிரவுகோடாங்கியாக அவதாரம் எடுக்கவிருப்பதாக வந்த வதந்தியை நம்பி இரவு 11 மணிவரை காத்திருந்தேன் நண்பரே!! அப்புறம், என்னையறியாமல் தூங்கிவிட்டேன்!!
      சுமார் 12 மணியளவில் திடும் என்று கண்விழித்து, அரைத் தூக்கத்தில், மசமச கண்களோடு பதிவைப் படித்த பிறகுதான் மறுபடி தூங்கினேன்!

      இனி எந்தக் கோடாங்கியின் உறுதிமொழியையும் நம்புவதாக இல்லை!!

      Delete
    2. சரவணன் சார்...ஆசிரியர் இரவு பதிவு போட்டாலே நமக்கு பயம் அதுவும் நடுசாம பதிவு என்றால் சொல்லவா வேண்டும் ..:-))

      Delete
    3. நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்

      Delete
    4. வயசாகி விட்டதல்லவா நண்பரே ? தூக்கம் சுழற்ற ஆரம்பித்து விடுகிறது நம்மாட்களை !!

      Delete
    5. போட்டு தள்ளீட்டீங்களே ஆசிரியர் சார்....ஹா...ஹா...

      போன பதிவில் உங்களை ஆசீர்வாதம் செய்யும் அளவுக்கு மூத்தவர் என குறிப்பிட்டதற்கு, இந்த பதிவில் வாரி விட்டீர்களே...😭😭😭😭😭😭

      அவ்வளவு ஊஊஊ வயசா ஆச்சி வெறும் 43தானே...!!!😎😎😎😎

      ஆனாலும் ஒரே பதிவில் இப்படி நிலைமாறும் என சற்றும் நினைக்கல...ஹி...ஹி...
      (மண்ணு ஒட்டவே இல்லை, நிஜமா ஒட்டலை, வேறு எப்படி சமாளிக்க)

      Delete
  36. அனைவருக்கும் வணக்கம். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். மார்ட்டின் கண்டிப்பாக வேண்டும். புத்தாண்டு அறிவிப்பாக சை. சா அமைந்தது அருமை.

    ReplyDelete
  37. தமிழ் புத்தாண்டு அறிவிப்பாக 1000 பக்கத்தில் ஸ்பெசல் இதழ் வெளிவரும் என்று எடிட்டர் கூறுவதுபோல் கனவு கண்டேன். கனவ பலிக்குமா சார்?

    ReplyDelete
  38. புவி மீண்டும் நண்பர்கள் மூவருக்கும் வாழ்த்து கலந்த நன்றிகள் ....


    சார் மார்டினுக்கு எப்பவும் போலவே சிவப்பு கம்பள வரவேற்பே . அட்டையும் சொல்லாம சொல்லுதே . அட்டைபடம் அசத்தலோ அசத்தல் . லார்கோன்னு எழுதுனாலே பரபரப்பு தாளல . இது கடைசி இதழ் என்பது ஏக்கத்தை தருது .செனவோடு இனிய பயணம் மார்டினோடு காத்துள்ளது...தங்களின் கூடுதல் பயண உழைப்போடும்தான் . சார் புவிய அட்டகாசமா தயாரிக்க போகிறீர்கள் . பசிம வெற்றி தொடரட்டும் புத்தாண்டு பரிசாய் சைசா வண்ணத்தில் அள்ளுமென்பது உறுதி ...உங்கள் அற்புத அதிரடிகளில் இதற்க்கே முதலிடம் .இப கூட பசிம போல உங்கள மலைக்க வைப்பதுறுதி...கனலெல்லாம் வாழ்த்துகளுடன் ஆசிரியர் மற்றும் நண்பர்களே

    ReplyDelete
  39. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  40. அன்பு எடிட்டர், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. மார்ட்டினுக்கு இரண்டு ஸ்லாட் தரலாம்

    ReplyDelete
  42. ////Wish me luck guys! இதழ் வெளியான பின்னே நான் உங்களுக்கு luck wish பண்ணுகிறேன்! நிச்சயமாகஉங்களுக்கு அது அவசியப்படுமென்பேன் ! 😊///

    ஹா ஹா ஹா! :)))))))

    ReplyDelete
  43. ஏற்கனவே சினிமா வட்டாரத்தில் செம ஹிட்டான 'மெல்லத் திறந்தது கதவு' என்ற தலைப்பைத் தாங்கி வருவதாலும், அட்டகாசமான அட்டைப்பட டிசைனாலும் ரொம்பவே உள்ளம் கவர்கிறார் மார்ட்டின்!! மனச்சிதைவு நோய் குறித்த கதை என்பதும் ஆர்வத்தை அதிகரிக்கிறது!! ஆனால் எடிட்டரை இந்த அளவுக்கு பயமுறுத்தி வைத்திருப்பதால், கூடவே கொஞ்சூண்டு பயமும் தொற்றிக்கொள்கிறது!!

    மார்டினுக்கு தனி சந்தா கேட்டு போராட வேண்டிய இத் தருணத்தில் "மார்ட்டின் கதைகள் வேண்டுமா? வேண்டாமா?" என்ற கேள்வி நகைமுரணாய் இருக்கிறது!

    'சைத்தான் சாம்ராஜ்யம்' இந்த வருடமே வரயிருப்பது ஒரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!! லேசாய் ஒரு குத்தாட்டம் போடவேண்டும்போல ஒரு உற்சாகம் பீறிடுகிறது!! இவ்வாண்டின் மகத்தான மாற்றங்களில் இதுவும் ஒன்று!

    ReplyDelete
    Replies
    1. ///சைத்தான் சாம்ராஜ்யம்' இந்த வருடமே வரயிருப்பது ஒரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!! லேசாய் ஒரு குத்தாட்டம் போடவேண்டும்போல ஒரு உற்சாகம் பீறிடுகிறது!! இவ்வாண்டின் மகத்தான மாற்றங்களில் இதுவும் ஒன்று!/// யெஸ்...+1000

      Delete
    2. //மார்டினுக்கு தனி சந்தா கேட்டு போராட வேண்டிய இத் தருணத்தில் "மார்ட்டின் கதைகள் வேண்டுமா? வேண்டாமா?" என்ற கேள்வி நகைமுரணாய் இருக்கிறது! //
      +1

      Delete
  44. Yentha vakku Martin nu ke .
    ..Johnny in Japan is one of my favorite... Will it be included in next year slot ...

    ReplyDelete
    Replies
    1. // மார்டினுக்கு தனி சந்தா கேட்டு போராட வேண்டிய இத் தருணத்தில் "மார்ட்டின் கதைகள் வேண்டுமா? வேண்டாமா?" என்ற கேள்வி நகைமுரணாய் இருக்கிறது! //
      ம்க்கும்,இங்க ரெண்டுக்கே வழியில்லையாம்,ஏற்கனேவே நான் கூறியது போல் ரி.ஜானியாகட்டும்,மர்ம மனிதன் மார்ட்டினாகட்டும் வாசிப்பில் ஒரு வித்தியாசமான அனுபவத்தையும்,சிந்திக்க தூண்டும் களத்தையும் கொண்டுள்ளனர்,இது போன்ற மாறுபட்ட களங்களை போட யோசித்தால் வாசிப்பில் சற்றே ஒரு வறட்சி தோன்றினாலும் வியப்பில்லை.ஆனானப்பட்ட கி.நா.நிஜங்களின் நிசப்தத்தையே ஒரு கை பார்த்துட்டோம்.நம்ம மார்ட்டின் எம்மாத்திரம்.

      Delete
    2. ///.ஆனானப்பட்ட கி.நா.நிஜங்களின் நிசப்தத்தையே ஒரு கை பார்த்துட்டோம்.நம்ம மார்ட்டின் எம்மாத்திரம்.///----அதானே...!!!

      Delete
    3. \\கி.நா.நிஜங்களின் நிசப்தத்தையே ஒரு கை பார்த்துட்டோம்.நம்ம மார்ட்டின் எம்மாத்திரம்\\

      Sir ... Martin kadaigal avvalu kulzhapamaga irukathu...

      நிஜங்களின் நிசப்தத்தை is a legend ... it has no match for another ... :)

      Delete
    4. மே மாதம் - இதோ,கூப்பாடு தொலைவில்....சாரி...சாரி... கூப்பிடு தொலைவில் தானே உள்ளது நண்பர்களே !! உங்களுக்காச்சு ; மார்டினுக்காச்சு !!

      Delete
  45. அப்படி...சைத்தான் சாம்ராஜியம்....வாவ்......


    ஜானி நீரோவை கழட்டி விட்டால் நலம்....

    இரட்டை வேட்டயர் வர்ணத்தில் இருக்கா பாருங்கோ....

    சும்மா பிச்சுகினு போகும்....

    ReplyDelete
    Replies
    1. வண்ணம் நஹி ஜி !

      Delete
    2. வண்ணத்தில் இல்லையென்றாலும் கருப்பு வெள்ளையிலாவது கிடைக்குமா

      Delete
  46. மார்ட்டின் கதை மொழிபெயர்ப்புப் பணி, புலன்விசாரணை X 3 படித்துப் பார்க்கும் பணி - ஆகியவற்றொடு எடிட்டருக்கு இன்னுமொரு கடினமான பணியும் பாக்கியிருக்கிறது! கடந்த இரு பதிவுகளிலும் நம் நண்பர்கள் கேப்ஷன் போட்டிக்காக எழுதிக் குவித்திருக்கும் ரகளையான வசனங்களைப் படித்துப் பார்த்து தீர்ப்புச் சொல்ல வேண்டுமென்பதே அது!

    ReplyDelete
  47. /// CID லாரன்ஸ்; டேவிட் & ஜானி நீரோ இணைந்து வரவிருந்த SECRET AGENT ஸ்பெஷலின் இடத்தில் – TEX ன் “சைத்தான் சாம்ராஜ்யம்” முழுவண்ணத்தில் வெளிவரவுள்ளது
    நல்லதொரு மாற்றமே சார்! இந்த ஸ்லாட்டை அடுத்த வருட சந்தா D யில் இணைத்து கொள்ளலாம்.மாஷையையும், புதிர் விலங்குகளையும் காண காத்திருக்கிறேன்.
    மார்ட்டீன் கதைகள் தேவையா என்று மட்டும் கேட்காதீர்கள். வருடத்திற்கு ஒரு கதம்ப ஸ்பெஷலா(மார்ட்டீன் ஸ்பெஷல்) போட்டு தாக்க முயற்சி செய்யுங்கள். மெல்ல திறந்தது கதவு அட்டைப்படம் அசத்தலாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. //மாஷையையும், புதிர் விலங்குகளையும் காண காத்திருக்கிறேன். //

      நானுமே !!

      Delete
  48. சைத்தான் சாம்ராஜ்யம் மாற்றம்...


    மகிழ்ச்சியோ மகிழ்ச்சி...



    சூப்பர்..சூப்பர்...சூப்பர்...:-)))

    ReplyDelete
  49. //
    “ஸ்கிஸோஃப்ரெனியா” எனும் மனச்சிதைவு நோய் தான் இந்தக் கதையின் மையம்! அதனை அசாத்திய ஆழத்தில் ஆராய முற்படுவதோடு – கதையோடு பின்னியும் கொண்டு செல்கின்றனர்!//
    சபாஷ் சரியான தீனி காத்திருக்கிறது என்று செல்லுங்கள் சார்.
    மர்ம மனிதன் மார்டின் முதல் கதையை மற்க்கவே முடியாது அதுபோல இதுவும் வெற்றி தான்.

    ReplyDelete
    Replies
    1. அந்த poltergeist கதை தானே சார் ? அதன் பின்னணி கிரெடிட் செல்ல வேண்டியது அமெரிக்க Dark Horse நிறுவனத்துக்கே சார் ! அவர்கள் மட்டும் அதனை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கா பட்சத்தில் மார்ட்டின் நமக்கு அத்தனை சுலபமாய்ப் புரிபட்டிருக்க மாட்டார் !

      Delete
  50. மெல்ல திறந்தது கதவு...


    இம்முறை மார்ட்டின் அட்டைப்படத்திலும் அழகு...:-)



    மார்ட்டினை கண்டு பயந்த காலமும் உண்டு தான் ..முதன்முறையாக ஜாவோ வை பார்க்கும் நபர் போல...ஆனால் ஜாவோ வை நன்கு பழகி இப்பொழுது அவரை நண்பராக பெற்றவர்கள் எப்படி விரும்புவார்களோ அப்படி விரும்புகிறோம் மர்ம மனிதனை...:-)

    ReplyDelete
    Replies
    1. தலீவரே

      மார்ட்டின் டீசரை பார்க்கும்போது அட்டைப்படத்தில் இருப்பது மார்ட்டின் இல்லை என்பது என் எண்ணம் :-)

      Delete
    2. ராட்ஜா தி பாஸ் சார்...

      மார்ட்டின் எப்பவுமே கொஞ்சம் வயசான சுமார் மூஞ்சி குமாரு தான்..:-))

      Delete
    3. மார்ட்டின் அழகாய் மிளிர்வதும், சு.மூ.கு.வாகத் தோற்றம் தருவதும் ஓவியர்களின் புண்ணியத்தில் தான் ! "இனியெல்லாம் மரணமே "சும்மா கலக்கல் ஓவியத் தரமல்லவா ?

      Delete
  51. All the best sir,
    Enjoy the weekend with martin

    ReplyDelete
  52. மெல்ல திறந்தது கதவு

    கதையினை பற்றி படித்தவுடன்

    உள்ளே நுழையத் துடித்தது மனசு..


    ///மார்ட்டின் கதைகள் வேண்டுமா?///


    மார்ட்டின் கதைகளுக்கான நுழைவாயில் கதவுகளை அகல திறந்து வைக்கவும்..

    தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க என்ற மெ.தி.கதவு பாடல் வரியினையும் மார்ட்டின் கதைகள் வேண்டுமா ? என்னும் கேள்விக்கு பதிலாக எடுத்து கொள்ளலாம்....

    ReplyDelete
    Replies
    1. செனா அனா ..!

      அடுத்த வரிகள்

      சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
      வெறும் மாயம் ஆனதோ

      அப்படீன்னு பாடுற மாதிரி ஆயிடப்போகுது.!

      அதனால் மார்ட்டினை

      மீண்டும் மீண்டும் வா
      வேண்டும் வேண்டும் வா

      ன்னு கூப்பிடுவோம்.!

      (இந்த பாட்டில் வரும் அடுத்தவரிகளை கண்டுக்க வேணாமே ஹிஹி ..)

      Delete
    2. //இந்த பாட்டில் வரும் அடுத்தவரிகளை கண்டுக்க வேணாமே ஹிஹி ..)//

      :-))

      Delete
    3. என்னா அப்படி அந்த பாட்டு...???
      தோ, கூகுள் பண்றேன்

      Delete
  53. Want Martin Special like jumbo special

    ReplyDelete
    Replies
    1. பு.வி. பாணியில் நண்பர்களை இந்தப் பணியினுள் இறக்கி விடுவதாயின் எனக்கு ஓ.கே. தான் !!

      Delete
    2. // நண்பர்களை இந்தப் பணியினுள் இறக்கி விடுவதாயின் எனக்கு ஓ.கே. தான் !! //

      நாங்கள் எப்போதும் தயார்.

      Delete
  54. மார்டின் @ வருடம் ஒன்று வரட்டும் சார். வெரைட்டி வேணும்+ வித்தியாசமான கதைக்களம்.

    ReplyDelete
  55. // மார்டினின் கதைகள் கூட அந்த ரகமே! 'பிரித்தோம் – படித்தோம் – பயணித்தோம்' என்ற பருப்பெல்லாம் இங்கே நிச்சயமாய் வேகாது தான்! ஆனாலும் இந்த குண்டு மிட்டாய் ஓ.கே. தானா ? //
    இந்தக் கேள்வியே தேவையில்லை சார்,நியாயமா மார்ட்டின் எத்தனை வேணும்தான் நீங்க கேட்கனும்,வருஷத்துக்கு ரெண்டு ஸ்லாட் அவசியம் என்பது என் கோரிக்கை,இது அகில உலக ஜானி & மார்ட்டின் பேரவையின் கோரிக்கையும் இதுவே.

    ReplyDelete
  56. ///// சந்தா D-ல் சின்னதொரு மாற்றம் folks! CID லாரன்ஸ்; டேவிட் & ஜானி நீரோ இணைந்து வரவிருந்த SECRET AGENT ஸ்பெஷலின் இடத்தில் – TEX-ன் “சைத்தான் சாம்ராஜ்யம்” முழுவண்ணத்தில் வெளிவரவுள்ளது!////-----வாவ்.... 👌👌👌👌👌
    ரகளையான மாற்றம் சார்....
    சைத்தான் சாம்ராஜ்யம் வெளி வரும் போதும் உங்களிடம் இருந்து இதுபோன்ற ரிசல்ட் அறிவிப்பு வருவது திண்ணம்.

    தானை தலைவர் ஸ்பைடரின் வில்லன் போல, நான்கு கைகளையும் தட்டி வரவேற்கிறேன் சார்.

    ஆனால், வரவேற்பை மட்டுமே நல்கினால் சுயநலமியாகிடுவேன். எனவே,

    இந்த சீக்ரெட் ஏஜெண்ட் ஸ்பெசலை எதிர்பார்த்து இருக்கும் நண்பர்களை ஏமாற்ற வேணாம் சார். அவர்களுக்கு அதை தந்து விடுங்கள்.

    ஏற்கெனவே பவளச்சிலை மர்மம் சந்தா Dயில் இருந்து முன்கூட்டியே வெளிவந்தது.
    ரெகுலர் டெக்ஸ் இதழாக அறிவிப்பு செய்யப்பட்ட "காலனின் கானகத்தை" ட்ராப் செய்து விடுங்கள் சார். பேலன்ஸ் ஆகி விடும்....இதுவே உங்கள் முன் நான் வைக்கும் வேண்டுகோள்🙏🙏🙏🙏

    நம்முடைய ரசனை அளவுகோலுக்கு ஒருமாற்று குறைவாக இருப்பதாக ஏற்கெனவே நீங்கள் அறிவித்து இருந்தீர்கள்.

    இந்த சைத்தான் சாம்ராஜ்யம் அறிவிப்பை நீங்கள் வேறு விதமாக வெளயிட்டிருந்தால், இந்த குழப்பமே வந்திராது.
    ///காலனின் கானகத்தின் இடத்தில் சைத்தான் சாம்ராஜ்யம் வரும்..////--- என போட்டு இருந்தீர்கள் எனில் யாருக்கும் சங்கடங்கள் இல்லை.

    "அடுத்த நாயகரது இடத்தை தட்டிப் பறிக்கிறார் டெக்ஸ் " என்ற பழி வேணாம் சார்.🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. கை தட்டும் படங்கள் பல சேலம் டெக்ஸ் விஜய் ராகவன் அவர்களுக்கு......!!!!!

      Delete
    2. // ரெகுலர் டெக்ஸ் இதழாக அறிவிப்பு செய்யப்பட்ட "காலனின் கானகத்தை" ட்ராப் செய்து விடுங்கள் சார். பேலன்ஸ் ஆகி விடும்..//

      +1
      அருமையான யோசனை.

      Delete
    3. காலனின் கானகம் 65 ரூபாய்.
      சை.சா.125 ரூபாய்.
      சரி வருமா ..?

      Delete
    4. பண விசயங்களை நாம் எப்போதும் தலைக்குள் நுழைப்பது கிடையாது JSK ஜி. இதற்கு மாற்று இதுனு போகும் போது, டெக்ஸ் மற்றவரின் இடத்தை அபகரிக்கிறார் என்ற அவச்சொல் வரும். அதை தவிர்க்கும் வழி மட்டுமே நான் சொல்லியிருப்பது.

      எக்ஸ்ட்ரா 60ரூபாய்னு கூட நாம டிஸைட் செய்ய முடியாது. பவளச்சிலை மர்மம் 125ரூபாய்னா, சைத்தான் சாம்ராஜ்யம் அதே விலை இருக்கும் என சொல்ல முடியாதே.
      காரணம் சைத்தான் சாம்ராஜ்யம் 128பக்கங்கள், பவளச்சிலை மர்மம் 110பக்கங்கள் தான். எனவே விலை சார்ந்த முடிவுகள் எடிட்டர் சார் தான் தெரிவிக்கனும்.

      ஒரு இதழை அறிவித்து விட்டு அதை இல்லை எனும் போது அதன் ரசிகர்கள் அடையும் சங்கடத்தையும் கணக்கில் கொள்ள வேணும்.

      உதாரணமாக மார்டின்; அதற்கான குரல்களை காலை முதல் பார்த்து வருகிறோமே.

      Delete
    5. ///ஒரு இதழை அறிவித்து விட்டு அதை இல்லை எனும் போது அதன் ரசிகர்கள் அடையும் சங்கடத்தையும் கணக்கில் கொள்ள வேணும்///

      நல்லதொரு சிந்தனை!!!

      Delete
    6. சை.சா - Secret agent ஸ்பெஷலின் அதே விலையே - Rs 125 !

      ரெகுலர் இதழ்களில் எதையேனும் கத்திரி போடுவதெனில் நிறையவே யோசித்திருப்பேன் ; but இவை மும்மூர்த்திகளின் மறு மறுபதிப்பே என்பதால் தான் இந்த தைரியம் ! இப்போதெல்லாம் புத்தக விழாக்கள் நீங்கலாய் வேறெங்கும் நம் மும்மூர்த்திகளின் மறுபதிப்புகள் self எடுக்கமாட்டேன்கின்றன ! ஏஜெண்ட்களும் கூட மாயாவியைத் தவிர்த்து மற்ற இதழ்களை அசுவாரஸ்யத்தோடே பார்க்க ஆரம்பித்துள்ளனர் !

      Delete
  57. // CID லாரன்ஸ்; டேவிட் & ஜானி நீரோ இணைந்து வரவிருந்த SECRET AGENT ஸ்பெஷலின் இடத்தில் – TEX-ன் “சைத்தான் சாம்ராஜ்யம்” முழுவண்ணத்தில் வெளிவரவுள்ளது //
    எதிர்பாராத சர்ப்ரைஸ் சார்,மகிழ்ச்சி.

    ReplyDelete
  58. // “மார்டின் பாணி” என்பது நமக்குப் புதிதல்ல தான்! ஆனால் இதுவோ வேறொரு லெவல்! So நல்ல நாளைக்கே மார்டின் கதைகள் உங்கள் கண்களை வேர்க்கச் செய்திடுமெனில் – இந்த இதழானது குற்றாலத்தைக் கொணரக் கூடும்!//
    மார்ட்டின் இதழுக்கு படைப்பாளிகள் ரொம்பவும் மெனக்கெடுகிறார்கள் போல,உங்களின் திறனுக்கும் மார்ட்டின் ரொம்பவே சவால் விடுவார் என்பதால் எளிதில் மார்ட்டினை உங்களால் மறக்க இயலாது,எது எப்படி இருந்தாலும் நீங்கள் சாதித்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது சார்.

    ReplyDelete
    Replies
    1. இங்கே முதல் சல்யூட் இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றம் செய்து தந்த பெண்மணிக்கு !! மிரட்டும் ஆங்கிலச் சொற்பிரயோகங்கள் !!

      இரண்டாம் சல்யூட் - நமது கருணையானந்தம் அவர்களுக்கு ! அவர் நினைத்திருந்தால் சுலபமாய் இதை எனக்கே திருப்பி அனுப்பி விட்டிருக்கலாம் தான் ! வைராக்கியமாய் இயன்ற முயற்சிகளை செய்துள்ளார் - மார்டினோடு மல்யுத்தம் செய்வதில் !

      Delete
    2. மேற்கூறியவர்கள் சிரமேற்கொண்டு செய்யும் பணியை நம் வாசகர்களின் பாராட்டு ஈடு செய்து விடும் சார்.

      Delete
  59. சார் சை சாவோடு பழிக்குப் பழி அல்லது எல்லையில் ஒரு யுத்தம் வரலாமா.

    ReplyDelete
  60. தமிழ் புத்தாண்டு அறிவிப்பாக 1000 பக்கத்தில் ஸ்பெசல் இதழ் வெளிவரும் என்று எடிட்டர் கூறுவதுபோல் கனவு கண்டேன். கனவ பலிக்குமா சார்?

    ReplyDelete
    Replies
    1. இரத்தப் படலமெனும் இமயத்தைத் தாண்டி விடலாம் சார் முதலில் !!

      Delete
    2. ஆமா சார் அந்த மலைய நகர்த்திட்டா போதும்,மத்த சாதனையெல்லாம் எளிதில் சாத்தியமாகும்.பல
      குண்டு ஸ்பெஷல்,கதம்ப ஸ்பெஷல்,ஹார்ட் பைண்ட் ஸ்பெஷலா போட்டுத் தாக்கலாம்.

      Delete
  61. மர்ம மனிதன் மார்ட்டின் வேண்டுமா என்ற கேள்விக்கே இடமில்லை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சான்ஸ் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் .மெல்லத்திறந்தது கதவு ..இவ்வளவு அழகான பெண் வெளியில் நின்றால் வேகமாகவே கதவு திறக்கலாம் அட்டைப்படம் அழகோ அழகு !சைத்தான்சாம்ராஜ்யம் வருவது மகிழ்ச்சி ..முன்பின் அட்டைப் படங்கள் இல்லாமல் அந்த கதைப்புத்தகம் நெடுங்காலத்திற்கு முன் என் கைவசம் இருந்தது ..மறுபடியும் கலரில்..சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்கும் .

    ReplyDelete
    Replies
    1. பார்க்கலாம் சார் ; செப்டெம்பரில் நுழைக்க முடிகிறதாவென்று ? !

      Delete
  62. புலன்விசாரணை தமிழாக்கம் செய்த மூன்று நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  63. கவித்துவமான சினிமா படத் தலைப்பாகவே இருந்தாலும், மார்டின் கதை என்ற வகையில் அது கொணரும் உணர்வுகளும், உட்பொருளும் வேற லெவல் என்பதே உண்மை.

    மார்டின் கதைகள் என்றுமே வித்தியாசமான வாசிப்புக்கு உத்திரவாதம் அளிப்பவை என்ற வகையில் 'மெல்லத் திறந்தது கதவை 'பரபரப்போடு எதிர்நோக்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. // அது கொணரும் உணர்வுகளும், உட்பொருளும் வேற லெவல் என்பதே உண்மை.//
      உண்மையோ உண்மை.

      Delete
    2. ஆம் கோவிந்த்; கடேசியாக வந்த பனியும் ஒரு புதிர்ப்பெண்ணும் எனக்கு இந்த உணர்வை தந்தது. அதை இருமுறை படித்து விட்டேன்.

      அதே இதழில் வந்த முதல் கதை உடான்ஸ் ஸின் உச்சம்; எனவே அது அவ்வளவாக கவரவில்லை.

      இந்த மெல்ல திறந்தது கதவும் ஆழ் மனதின் மெல்லிய உட்பொருளை உணர்வு பூர்வமாக திறக்குமோ....!!!

      Delete
    3. ஒவ்வொரு மார்ட்டின் கதையின் பின்னேயும் படைப்பாளிகளுக்கு அவசியப்படும் ஆராய்ச்சிகளின் பரிமாணத்தை யோசித்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது ! ஒரு மொழிமாற்றத்துக்கே நமக்கிந்தப் பாடென்றால் - முழு உருவாக்கம் எத்தனை mammoth task ?

      Delete
  64. Undoubtedly, for me, Martin is one among the top stars of Lion comics in terms of story quality. ( Sales I don't know)

    ReplyDelete
  65. we want martin with RED CARPET 💝💝💝💝

    ReplyDelete
    Replies
    1. அட....அழகான display இமேஜ் !!

      Delete
  66. வேண்டும் வேண்டும் மார்டின் வேண்டும்

    ReplyDelete
  67. சைத்தான் சாம்ராஜ்யம் மகிழ்ச்சி

    ReplyDelete
  68. ஹைய்யா, சூப்பர் சைத்தான் சாம்ராஜ்யம் ....வர்ரதில் மிகவும் மகிழ்ச்சி.

    மார்ட்டின் கதைகள் கண்டிப்பாக வேண்டும் அய்யா....ஆண்டிற்கிருமுறையாவது..

    ReplyDelete
    Replies
    1. ஒன்றே செய்வோம் ; நன்றே செய்வோமே !

      Delete
  69. மார்ட்டினின் மெல்லத் திறந்தது கதவு வெளியான உடன் தளத்தில் சுவாரஸ்யமான விவாதங்கள் களைகட்டும் என்பது உறுதி.

    ReplyDelete
    Replies
    1. அண்டர்டேக்கர் அளவு போகாது இருந்தா போதும்😭😭😭😭

      Delete
    2. நிறையவே சுவாரஸ்யம் காத்துள்ளது என்ற மட்டுக்கு நிச்சயம் folks !!

      Delete

  70. மார்ட்டின் கதைகள் கண்டிப்பாக வேண்டும்
    வருடத்திற்கு இரண்டு நிச்சயம் வேண்டும் .

    ReplyDelete
  71. சைத்தான் சாம்ராஜ்யம் - டபுள் ஓ.கே.

    ReplyDelete
  72. This comment has been removed by the author.

    ReplyDelete
  73. 'மார்ட்டின் மேலாண்மை வாரியம்' அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் நேர்ந்திருக்கிறது!

    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் தங்கள் பக்கத்து வீட்டுக்காரர்க்கு ஒரு பழைய மார்ட்டின் புத்தகத்தை படிக்கக் கொடுத்து, அதை செல்ஃபி எடுத்து இங்கே போடுமாறு கண்ணீரும் கம்பலையுமாகக் கேட்டுக்கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஆனா செயலரே காமிக்ஸ் படிக்காத பக்கத்து வீட்டு கார நண்பரிடம் எடுத்தவுடன் மார்ட்டின் கதையை கொடுத்தா அவரு புகைப.படமே கண்ணீரும் கம்பலையுகமாக ஆகி விடுமே என பார்க்கிறேன்.:-)

      Delete
    2. புட்டியும் குட்டியுமாக.. சாரி...சாரி
      புட்டியும் கெட்டியுமாக அதை வழி மொழிகிறேன்.

      Delete
    3. // மார்ட்டின் மேலாண்மை வாரியம்' அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் நேர்ந்திருக்கிறது! //
      இதை அகில உலக ஜானி & மார்ட்டின் பேரவை சார்பாக வழிமொழிகிறேன்.

      Delete
    4. மார்ட்டினுக்கு கிடைத்துள்ள வரவேற்பு உற்சாகம் கொள்ள வைக்கிறது.

      Delete
    5. // மார்ட்டின் மேலாண்மை வாரியம்' அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் நேர்ந்திருக்கிறது! //

      ஹா..ஹா..ஹா..தமிழ்நாட்டில் உள்ள கொசுக்கள் நீங்கலாக அனைவரும் ஆதரவு தெரிவித்து இருப்பதாக காண்கிறது.. வாரியம் அமைக்க தேவையில்லை என்பது போல் தோன்றுகின்றது...

      Delete
    6. வாரியம் அமைக்க என்ன மாதிரியான "ஸ்கீம்" தேவைப்படுமோ ? - குழப்பமாயுள்ளதே !!

      Delete
    7. ///'மார்ட்டின் மேலாண்மை வாரியம்' அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் நேர்ந்திருக்கிறது!///

      அப்படீன்னா நான் இன்னிக்கு ஐபிஎல் பார்க்கக்கூடாதா குருநாயரே!?
      பனியன் எல்லாம் துவைத்து போடப்பட்டுள்ளதால் (ஆமா ஆமா நான்தான் செஞ்சேன்...) வேறுவழியில்லாம CSK டீசர்ட் போட்டிருக்கேன்.!
      இப்போ நான் என்ன செய்ய ..!?!?

      Delete
    8. @ KOK

      ////ஆமா நான்தான் செஞ்சேன்...) வேறுவழியில்லாம CSK டீசர்ட் போட்டிருக்கேன்.!
      இப்போ நான் என்ன செய்ய ..!?!?///

      டீ-ஷர்ட்டை கழட்டி போட்டுட்டு பைக்ல அப்படியே ஒரு ரவுண்டுபோய், ஏதாச்சும் மீடியாவுக்கு ஆவேசமா பேட்டி குடுத்துட்டு வாங்க கிட்!

      ஆனா இருட்டானதுக்கப்புறம் இப்படியாப்பட்ட முயற்சி எதுவும் செய்ய வேணாம். ஆளில்லாத பைக் தானா தெருவுல ஓடிக்கிட்டிருக்குன்னு பொதுமக்கள் பீதியடைய வாய்ப்பிருக்கு! :D

      Delete


    9. ///இருட்டானதுக்கப்புறம் இப்படியாப்பட்ட முயற்சி எதுவும் செய்ய வேணாம். ஆளில்லாத பைக் தானா தெருவுல ஓடிக்கிட்டிருக்குன்னு ///

      இதே மாதிரி போய் ட்ராபிக் போலிசுக்கு டிமிக்கி குடுத்திடலாம் போலிருக்கே ..நல்ல யோசனை குருநாயரே!

      Delete
  74. Editor sir,

    மார்ட்டின் அட்டைப்படம் செம கலக்கல் !

    மார்ட்டின் கதைகள் வருடத்திற்கு இரண்டுக்குமேல் வந்தால் நன்றாக இருக்கும்.

    அப்புறம் பவளச் சிலை மர்மம் கிடைக்கப்பெற்றேன்.
    கையை கொடுங்கள் சார், அச்சுத் தரம் கொள்ளை அழகு. ஒவ்வொரு முறையும் நமது தரம் கூடிக்கொண்டே போவது தங்களின் டீமின் கடின உழைப்பை பறை சாற்றுகிறது . Excellent Sir!!!

    ReplyDelete
    Replies
    1. கதைத் தேர்வுகளில் தான் மார்டினில் சிக்கல்கள் எழுகின்றன சார் ! டெக்ஸ் ; டயபாலிக் ரசிகர்களை போல "ம.ம.மா." ரசிகர்களும் active ஆக கதைத் தரவரிசைகளை ஆங்காங்கே உருவாக்கியிருப்பின், தேர்வு செய்யும் பணியானது கொஞ்சம் இலகுவாகிடும் !

      Delete
  75. ஸிஸோப்பிரினியா என்பதே சரியென்று நினைக்கிறேன்.
    இந்த அடி மன ஆழ்மனச்சிதைவு நோயாளர்கள் எதிர்நடக்கவிருப்பதை தனக்குத் தெரியாமலேயே சொல்வதுண்டு .

    ReplyDelete
    Replies
    1. போசெல்லி பதிப்பகத்தில், டெக்ஸோட சகலைல்ல இவரு.
      உட்ற மாட்டாங்க.

      Delete
    2. மார்டின் சார்டில் உண்டு

      Delete
    3. No சார் ; இதுவொரு மனச் சிதைவு நோய் ! குணமே கிடையாது இதற்கு ; இதனைச் சமாளித்து வாழ உதவிட மாத்திரமே மருத்துவத்துக்கு ஆற்றலுண்டு !

      And இதன் உச்சரிப்பு ஸ்-கி-ட்-சோ-ப்-ரெ-நியா என்பதே !

      Delete
    4. வேகமாய் உச்சரிக்கும் போது அந்த "ட் " லேசாக விழுங்கப்படுகிறது !!

      Delete
    5. ப்ளைன் ராக் - கேஸ்களில் இதுவும் உண்டு சார்.

      Delete
    6. எண்டமூரி வீரேந்திர நாத் அவர்களின் துளசி தளம் நாவலும் ஸ்கிசோஃப்ரினியாவை அடிப்படையாக கொண்டதே.

      Delete
  76. மார்டின் அவசியம் வேண்டும். ரெண்டு கதை அதிகமாவே கொடுங்கள் சார். லீனியர் கதைகள் மட்டுமே பட்டியலில் இடம்பிடித்தால் தகாது!

    ReplyDelete
    Replies
    1. நான்-லீனியர் கதைகளுக்கொரு புது விளக்கம் தரக் காத்துள்ளது மெ.தி.க. !!

      Delete
  77. பேஸ்தடிச்சு என்ற சுத்த தமிழ் வார்த்தையின் அர்த்தம் தேடி பார்த்த பொழுது கூகுள் ஆண்டவர் அருளியது..

    இரத்தப் படலம்” பற்றிய தலைப்பில் உள்ள போதே “புலன் விசாரணை“ பற்றிய updates தந்து விடுகிறேனே?! சொல்லி வைத்தாற் போல நேற்றைய தினம் :
    - கூரியரில் நண்பர் குடந்தை J-வின் முழு ஸ்கிரிப்ட் !
    - மின்னஞ்சலில் நண்பர் கார்த்திகை பாண்டியனின் முழு ஸ்கிரிப்ட் !
    - மின்னஞ்சலில் நண்பர் கணேஷ்குமாரின் பகுதி ஸ்கிரிப்ட் !
    என்று ஒட்டுமொத்தமாய் வந்திறங்கின! இங்கே ஏற்கனவே நான் மர்ம மனிதன் மார்டினின் உபயத்தில் கண்முழி பிதுங்கிப் போயிருப்பதால் மேற்படி 3 ஸ்கிரிப்ட்களுக்குள் இன்னமும் புகுந்திட முடியவில்லை! ஆனால் மேலோட்டமான பார்வையில் இந்த உழைப்புகளின் பரிமாணம் மூச்சிரைக்கச் செய்கிறது ! End of the day – இவற்றை நம்மில் எத்தனை பேர் முழுமையாக வாசிக்கப் போகிறார்களோ - தெரியவில்லை ; ஆனால் இந்த உழைப்பை கௌரவப்படுத்தவாவது எல்லோருமே நேரம் எடுத்துக் கொள்வது ஒரு “காமிக்ஸ் கடமை” என்பேன்! "ஜெனரல் பென் காரிங்டன் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அத்தனையாம் ஆண்டு பிறந்தார்; அவரது தாத்தா ஆயிரத்து எண்ணூற்று இத்தனையாவது ஆண்டில் காலமானார்” என்ற ரீதியில் பத்தி பத்தியாய் கோனார் நோட்ஸ் சாயலில் ஓடும் ஸ்கிரிப்ட்களை வாசிக்கும் போதே என் மனக்கண்ணில் நிழலாடுவது மூவருமே இதற்கென எடுத்திருக்கும் அசாதாரண முயற்சிகளும், நோவுகளுமே! Phewwwwww!! And இவற்றை பரிசீலிப்பது என் பொறுப்பு என்பதை நினைத்துப் பார்க்கும் போதே கண்ணைக் கட்டுகிறது ! யாரது ஸ்கிரிப்ட் தேர்வானாலும் – இங்கே வெற்றி மூவரின் மனதிடத்திற்கும், விடாமுயற்சிக்கும் சமபங்கில் உரித்து என்பேன்! A round of standing applause please all ! அப்புறம் காத்திருக்கும் இவை சார்ந்த பரிசீலனைப் படலத்தின் இறுதியில் நண்பர் XIII-ஐப் போல ‘ஙே‘ முழியோடு நிற்காது – ஸ்மர்ஃபியைப் பார்த்த கவிஞர் ஸ்மர்ஃப் போல நான் நின்றிட என் சார்பில் ஒரு தபா வேண்டிக் கொள்ளுங்களேன் ப்ளீஸ்! More updates on பு.வி.- once I get into them soon !!

    “மெல்லத் திறந்தது கதவு!“ சென்றாண்டின் இறுதியில் மார்டின் கதைவரிசையினில் ஏதேனுமொன்றைத் தேர்வு செய்ய இன்டர்நெட்டில் ஏகமாய் உருட்டிக் கொண்டிருந்த சமயம் கண்ணில் பட்ட கதையிது! படங்களைப் பரபரவென்று பார்வையிட்ட போது வழக்கமானதொரு மார்டின் த்ரில்லர் என்பது புரிந்தது. இங்கும் அங்குமாய் இது பற்றிய விமர்சனங்களைத் திரட்ட முயன்ற போது பெரிதாய் எதுவும் சிக்கவில்லை – at least எனக்காவது! So நமக்கு 2 வருடங்களாக இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து தரும் ரோம்நகரவாசியான அந்த அம்மணியிடமே கேட்டு வைத்தேன்! “A normal MM (மார்-muthucomics.blogspot.com/2018/04/blog-post_14.html



    ReplyDelete
    Replies
    1. இது பேஸ்து மட்டுமல்ல ; ப்ரஷ்....தண்ணீர் மக் என்று சகலமும் அடிக்கும் அனுபவம் !!

      Delete
  78. மார்ட்டின் அட்டை படம் கலக்கல் சார்...

    ReplyDelete
    Replies
    1. கடந்த இரண்டாண்டு சொதப்பல்களுக்கு ஈடு செய்யும் முயற்சி சார் !

      Delete
  79. மார்டின் கதைகள் படிக்க ரொம்பவே சுவாரசியமானவை. மற்றவற்றைப்போல அல்லாது சற்று கவனமாக படிக்க வேண்டும், அவ்வளவுதான். ஆனால் அவற்றை மொழிபெயர்ப்பது நீங்கள் சொல்வது போல மிக மிக கடினமான பணியாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. அந்த முட்டாயின் பெயர் 'கல்கோனா'! சரியா?

    நைஸாக நீங்கள் ஒன்று பண்ணலாம்.. மார்டின் கதைகளை மொழிபெயர்க்க நம் பொருளாளரிடம் தள்ளிவிட்டுவிடலாம். ஆள் ரோடு ரோலர் மனசுக்காரர். எத்தனைக் கல்கோனாக்களையும் தாங்குவார் என்று தோன்றுகிறது! :-))

    ReplyDelete
    Replies
    1. செயலாளர் & தலீவரின் ஒன்றிணைந்த கோரிக்கையாகயிருப்பின்- பொருளாளர் லாக் ஆகிவிடுவார் என்று தோன்றுகிறது ! So போராட்டக் குழுவுக்கு எதிராய் ஒரு போராட்டம் ஆரம்பிக்கணும் போலுள்ளதே !!

      Delete
  80. மார்டின் கதை கண்டிப்பாக வேண்டும் சார். ...
    சைத்தான் சாம்ராஜ்யம் கலரில் வருவது ரொம்ப சந்தோசம் சார். ....
    அப்படியே வைகிங் தீவு மர்மம் கலரில் வந்தால் இன்னும் சிறப்பு......
    கருனை காட்டுங்க எடிட்டர் சார்.....

    ReplyDelete
  81. 'மெல்லத் திறந்தது கதவு' அட்டைப்படத்தில் மார்ட்டினின் தலைக்கு மேலே, அந்த மரத்தின் பின்னாலிருந்து ஒரு உருவம் எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன்! அந்த முகம் சற்றே பழக்கப்பட்டதாகத் தோன்றியால், கொஞ்சம் ஜூம் செய்து பார்த்தேன்!

    அப்புறம்தான் தெரிந்தது - அட நம்ம ஸ்பைடரு!!

    அட்டைப்படத்தில் - 'ஸ்பைடர் (மரத்திற்குப் பின்னால்) தோன்றும்'னு எழுதியிருந்தீங்கன்னா சேல்ஸ்ல பிச்சுக்கிட்டு ஓடுயிருக்கும்ல சார்? :P

    ReplyDelete
    Replies
    1. ///அப்புறம்தான் தெரிந்தது - அட நம்ம ஸ்பைடரு!! ///

      அட ..அது நம்ம ஸ்பைடரா? நான் மேக்கப் இல்லாத டயானான்னு நினைச்சிட்டேன்.!

      அதுசரி குருநாயரே., ஸ்பைடருக்கு மேலே தொங்கிட்டு இருப்பது யார் ..பேட்மேனா!?

      Delete
    2. ///ஸ்பைடருக்கு மேலே தொங்கிட்டு இருப்பது யார் ..பேட்மேனா!?///
      விட்டா கதவுக்கு அந்தண்டை நின்னுக்கிட்டிருப்பது மாடஸ்டி அக்கான்னு சொல்லுவீங்க போலிருக்கே? :P

      Delete
  82. மார்ட்டின் நிச்சயமாக வேண்டும்.

    ReplyDelete
  83. விஜயன் சார்,
    SECRET AGENT SPECIAL எப்போது வருமென்று தெரிவித்தால் நலம்.

    ReplyDelete