Powered By Blogger

Saturday, April 28, 2018

ஒரு அமெரிக்க முக்கோணம் !

நண்பர்களே,

வணக்கம். டிக்கெட் எடுக்கத் தேவை இருப்பதில்லை ; விசாவும் வேண்டியதில்லை....அட..மூட்டை, முடிச்சுகளைக் கட்டக் கூட வேணாம் - ஆனால் கண்டம் விட்டு கண்டம் பயணிக்க முடிகிறது - படு சுலபமாய் !! ஜலதோஷத்துக்காக டாக்டர் தந்த மாத்திரைகளின் புண்ணியத்தில் ஒரு அசுர தூக்கம் வருது பாருங்களேன் - சும்மா  பாயிண்ட் to பாயிண்ட் பஸ் போல தேசம் விட்டு தேசம் ; பிரபஞ்சம் to பிரபஞ்சம் கூடப் பறக்க சாத்தியமாகிறது ! அவ்வப்போது அடிக்கும் செல்போன் மணிச்சத்தம் மட்டும் கேட்கவில்லையெனில் ஒரு வாரமாச்சும் தூங்கலாம் போலும் !! But தலைக்குள்ளிருக்கும் அந்த "சனிக்கிழமை இரவுப் பதிவு" அலாரம் எப்போதும் ஓயாது என்பதால் - இதோ ஆஜர் !! 

மே பிறக்க இன்னமும் சில நாட்கள் இருக்கும் போதே இதழ்கள் உங்கள் கைகளில் எனும் போது -  தொடரும் நாட்களை சுவாரஸ்யமாக்கிடும் பொறுப்பு உங்கள் விமர்சனங்கள் + அலசல்களுக்குத்  தான் என்பேன் ! So மெக்சிகோவில் ட்யுராங்கோவோடு பயணமோ ; சிகாகோவில் மேக் & ஜாக் உடன் லூட்டியோ  ; அல்லது அமெரிக்காவின் நியூ ஹாம்ஷயரில் மார்டினோடு யாத்திரையோ - ஏதோவொன்றை மேற்கொள்ள நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்களேன் guys ! 

பெர்சனலாய் எனக்கு சிகாகோ தான் # 1 - simply becos ஒரு கார்ட்டூன் தொடருக்கு (நம்மளவிலாவது) இந்தக் களம் ரொம்பவே புதுசு ! பொதுவாய் ஜில்லார் போல  ; க்ளிப்டன் போல ஒரு சிரிப்புப் போலீஸ் பாத்திரத்தைப் பார்த்திருப்போம் ; ஆனால் இந்த மேக் & ஜாக் ஜோடியைப் போலவொரு பாடிகார்ட் கூட்டணியை நாம் பார்த்ததில்லை தானே ?! ஊரே பார்த்து மிரளும் ஒரு தாதாவுக்கும் கூட பாடிகார்டாகச் சம்மதிக்கும் போதே இந்த கொரில்லாக்கள்  - "நீதிடா.. நேர்மைடா... நாயம்டா..." என்ற நாட்டாமை டயலாக்கை விடப் போவதில்லை என்பதுமே அப்பட்டமாகிறது ! நிறைய விதங்களில் இந்த நெட்டை + குட்டை நாயகர்கள் என்ற template ப்ளூகோட் பட்டாள  ஸ்கூபி + ரூபி யோடு ஒத்துச் செல்வதைக் கவனிக்க முடியும் ! பேனா பிடித்த கை ஒன்றே (Raol Cauvin) எனும் போது அந்த ஒற்றுமையைப் புரிந்து கொள்வதில் சிரமமிராது தான் ! அப்புறம் சமீபமாய் ஒரு கார்ட்டூன் கதையைப் படித்துவிட்டு நான் விழுந்து, புரண்டு சிரிச்சதாய்ப் பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம் - அது இந்த மேக் & ஜாக் தொடரின் இன்னொரு ஆல்பமே என்பது கொசுறுச் சேதி ! 2019-க்கு இந்தப் புதியவர்கள் வேண்டுமென்று நீங்கள் தீர்மானிக்கும் பட்சம் அந்த ஆல்பத்தை அடுத்தாண்டில் நிச்சயம் களமிறக்கலாம் ! தற்சமயம் நமது கார்ட்டூன் அணிவகுப்பானது மும்பை இந்தியன்ஸ் போல தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில் - இவர்கள் கொஞ்சம் கை கொடுப்பார்களெனில் - கார்ட்டூன் டீம் நிச்சயம்  நிம்மதிப் பெருமூச்சு விடும் ! ஏதோ பார்த்து செய்யுங்களேன் guys !! 
சிகாகோவிலிருந்து சோத்தாங்கை பக்கமாய் பயணித்தால் இம்மாத மார்ட்டின் வலம் வரும் நியூ இங்கிலாந்துப் பிராந்தியங்கள் உங்களை வரவேற்கக் காத்திருக்கும் ! இந்த ஆல்பம் முழுக்கவே இருண்டதொரு களமே என்பதாலோ என்னவோ - ஏகமாய் grey areas இங்குமங்கும் !  கதாசிரியரைத் தவிர்த்து - இந்தக் கதை சார்ந்த அலசல்களை  யாருமே முழுமையாக்கிட இயலாதென்பது எனது அபிப்பிராயம் ! Simply becos - கதையின் போக்கில் நிறைய சமாச்சாரங்களை "இப்படியும் எடுத்துக்கலாம் ; அப்படியும் எடுத்துக்கலாம்" என்று முடிச்சுப் போடாது திறந்தே விட்டுள்ளார் ! So படைத்தவர் மனதில் நின்றிருந்தது என்னவென்பதை அவர் வாயால் கேட்டறிய முடிந்தால் சூப்பராக இருக்குமே என்று நமக்குத் தெரிந்த கூகுள் translator-ல் ஒரு இத்தாலியக் கடிதத்தை டைப் செய்து கதாசிரியருக்கே அனுப்பியிருந்தேன். ஆனால் அவர்களது செம பிசி அட்டவணைகளின் மத்தியில் பதில் சொல்ல நிச்சயம் அவகாசங்களிராது என்பதும் புரிந்தது ! So "மெல்லத் திறந்த கதவு" இட்டுச் செல்லக்கூடிய பாதைகள் ஏராளமாய் இருக்கக்கூடும் எனும் போது - நாம் infer செய்திடும் பாதை எதுவென்று பார்த்திட செம ஆவலாய் காத்திருப்பேன் ! வரும் நாட்களில், இந்தக் கதையில் மௌன வரைவுகளாய்த் தொடர்ந்திடும் சித்திரங்கள் சொல்லும் செய்திகள் பற்றியொரு அலசலும்  நம்மிடையே நடந்திட்டால் இந்த ஆக்கத்தின் முழுப் பரிமாணமும் வெளிப்படுமென்பேன் ! Are you ready folks ?

மார்டினுக்கு விடை கொடுத்துவிட்டு அப்டியே வண்டியைக் கீழே விட்டால் அமெரிக்காவின் எல்லையோடு உரசியோடும் மெக்சிகோவின் தகிக்கும் மண்ணுக்கு ஹலோ சொல்லிடலாம் - ட்யுராங்கோ துணை நிற்க ! அதிலும் அந்தக் கதை # 3 எனக்கு ரொம்பவே பிரமாதமாய்ப்பட்டது - 2 காரணங்களுக்காக !! ஒரு தக்கனூண்டு கருவைக் கொண்டுமே தூள் கிளப்ப முடியுமென்பதைக் காட்டியது ஒருபக்கமெனில் ; பழி வாங்கிட ரொம்பவே மாறுபட்டதொரு  காரணத்தை வில்லன் கும்பலின் முகமூடித் தலைவனுக்குத் தந்தது காரணம் # 2  என்பேன் ! தொடரும் பாகங்களில் ஆர்ட்ஒர்க் & கலரிங் தரம் இன்னமும் ஒருபடி மேலே போய் விடுவதைப் பார்க்க முடிகிறது ! So ஆர்ப்பாட்டங்களின்றிப் பயணிக்கும்  இந்த மனுஷனை இன்னும் அழகாய் ரசிக்க வாய்ப்புள்ளதென்பேன் !  

So இந்த அமெரிக்க முக்கோணத்தினுள் எந்தப் புள்ளியில் நீங்கள் பயணத்தைத் துவக்கினாலும், அது பற்றிய பயணக் கட்டுரையினை இங்கே பதிவிட மறவாதீர்கள் - ப்ளீஸ் ! 

Moving on, ஜம்போ காமிக்ஸ் பணிகளின் ஓட்டம்  பற்றி ! (இளம்) டெக்ஸ் அதிரடியாய் பயணம் செய்யத் தயாராகி வருகிறார் - அதன் முதல் இதழில்  ! முதல் சுற்றில் "காற்றுக்கென்ன வேலி ?"இடம்பிடிக்கிறதெனில், தொடரக்கூடிய காலங்களில் இளம் டெக்ஸ் வில்லர் மட்டுமன்றி, அவரது அண்ணாவான ஸாம் வில்லரையும் இந்த வரிசையில் பார்த்திட வாய்ப்புள்ளது ! டெக்சின் புதுக் கதைகளின் பயணம் ஒருபக்கம் எப்போதும் போல நடந்திட - இளம் டெக்ஸை ஒரு அட்டகாசப் பரிமாணத்தில் காட்டவும் போனெல்லி மெனக்கெட்டு வருவது புரிகிறது ! சமீபமாய் வெளியாகியுள்ள இந்த வண்ண இரு பாக சாகஸத்தைப் பாருங்களேன் : 

அப்பா கென் வில்லரை தீர்த்துக் கட்டிய கும்பலை நிர்மூலமாக்க வில்லர் சகோதரர்கள் ஒன்றிணைவது மட்டுமன்றி - இன்னமும் அதிரடியாய் ஏதேதோ ஆச்சர்யங்களை போனெல்லி கைவசம் வைத்துள்ளனராம் ; அது மாத்திரமின்றி, Tex-ன் துணைவி லிலித் சார்ந்த flashback ஒன்றுமே திட்டமிடலில் உள்ளதாம் !! செப்டெம்பரில் டெக்சின் 70-வது பிறந்தநாள் கேக் வெட்டும் சமயம் தான் சகலத்தையும் வெளிப்படுத்தவிருக்கிறார்கள் !  ஆக நமது ஆதர்ஷ ரேஞ்சரின் உலகமறியா பக்கத்தினை சீக்கிரமே பார்க்கவுள்ளோம் நாம் !  எது எப்படியோ - இந்த "கௌபாய் சிங்கத்தின் சிறு வயதில்" ஜம்போவில் தொடர்ந்திடும் ! 

அது சரி....சின்ன சிங்கத்துக்கு இடமிருக்கும் போது - சின்ன புலிக்கு இடம் நஹியா ? என்று சில கண்கள் சிவக்கும் முன்பே இன்னமும் ஒரு இளம் புயலுமே ஜம்போவில் தலைகாட்ட வாய்ப்புகள் உள்ளதென்பதைச் சொல்ல நினைக்கிறேன்  ! அது நமது "இளம் தோர்கல்" தான் ! 2011-ல் துவங்கி, ஆண்டுக்கொரு ஆல்பமென வெளியாகி இதுவரை 7 ஆல்பங்கள்  உண்டு இத்தொடரில் ! Maybe பெரிய தோர்கலுக்கு இணையாய் இவரையும் ஓடவிட்டுப் பார்க்கலாமா ? அல்லது பெரியவர் சாதிக்கட்டுமென அவகாசம் தந்து விட்டு நிற்கலாமா ? 
அப்புறம் ரொம்ப காலம் கழித்து ஒரு அட்டைப்பட டிசைனிங் போட்டியுமே ! காத்திருக்கும் புது நாயகர் TRENT-ன் துவக்க ஆல்பத்துக்கு முன்னட்டை அமைக்க ஆர்வம் கொண்டுள்ள நண்பர்கள் விண்ணப்பிக்கலாம் ! Please note guys : ஆர்வமென்பதை விடவும், டிசைனிங்கில் அனுபவமும், ஞானமும் இந்தப் பணிக்கு முக்கிய தேவைகள் என்பது நினைவிலிருக்கட்டுமே ப்ளீஸ் ? So விண்ணப்பிக்க விரும்பும் நண்பர்கள் இங்கே கை தூக்கிய கையோடு நமக்கொரு மின்னஞ்சல் அனுப்பிட வேண்டியதும்  அவசியம் ! 

ஜம்போ லோகோ தயாரிப்புக்கென நண்பர்களில் சிலர் அனுப்பியிருந்த ஆக்கங்கள் தொடர்கின்றன : 
Mahesh Tiruppur





Jagatkumar, Salem



Karthik Somalinga, Bangalore

Sridharan, Kumbakonam
Podiyan, Colombo
இன்னமும் ஒன்றிரண்டு லோகோக்களை  கடந்த பதிவில் நண்பர்கள் லிங்க்கில் அனுப்பியிருந்ததும் நினைவுள்ளது ! அவற்றையும் ஒப்பிட்டு ஒரு தேர்வுக்கு வருவோமா guys ?

விடாது உசிரை வாங்கி வரும் வறட்டு இருமலைச் சமாளிக்கவும், சில நாட்களாய் தொங்கலில் விட்டு விட்ட பணிகளைக் கவனிக்கவும் கிளம்புகிறேன் !! மே விமர்சனங்கள் மென்மேலும் வரட்டுமே ? Bye now ...Happy weekend !!

பி.கு.

1 .மே இதழ்கள் ஆன்லைன் லிஸ்டிங் செய்து விட்டோம் ! லிங்க் இதோ : http://lioncomics.in/latest-releases/501-vidhi-eludhiya-thiraikadhai.html

2. ஜம்போ காமிக்ஸுக்கு இன்னமும் சந்தா செலுத்தியிராதிருப்பின் - இதோ அதற்குமான லிங்க் : http://lioncomics.in/advance-booking/498-pre-booking-for-jumbo-comics-within-tamil-nadu.html

251 comments:

  1. Replies
    1. க என்பது தானே சரி.
      வாழ்த்துக்கள்.

      Delete
  2. வணக்கம் சார்🙏
    ஹாய் நட்பூஸ்😊

    ReplyDelete
  3. என்னளவில், அந்தக் கடைசி இரு லோகோங்கள் - செம்ம!! அதிலும் குறிப்பாக, அந்தக் கடைசி லோகோ ( சேலம் ஜெகத்?) ஆஸம் ஊஸம்!!

    ReplyDelete
    Replies
    1. Sorry, முயற்சி செய்த நண்பர்களை குறை சொல்லவில்லை.

      Delete
    2. ஒருவேளை, 'ஜம்போ' கெளபாய் இதழ்களுக்கானது மட்டுமே என்றிருந்தால் மேலே அந்த முதலாவது லோகோவும், 'சிறுவர்களுக்கான இதழ் மட்டுமே' என்றிருந்தால் இரண்டாவது லோகோவும் பொருத்தமாய் இருக்கும்!!

      'தவழும் வயதுள்ள குழந்தைகளுக்கானது மட்டும்' என்றிருந்தால் அந்த மூன்றாவது லோகோ - செம்ம!!

      'பூந்தளிர்' போல கலவையான சங்கதிகள் கொண்ட இதழென்றால் அந்த நான்காவது லோகோ அழகாகப் பொருந்தும்!

      Delete
    3. போன பதிவில் நண்பர்கள் சொன்னது போல I prefer மினி லயன் brand and logo.

      Delete
    4. Referring to dictionary..
      "jumbo"
      informal
      noun
      noun: jumbo; plural noun: jumbos
      1.
      a very large person or thing.
      a very large airliner (originally and specifically a Boeing 747).
      noun: jumbo jet; plural noun: jumbo jets
      adjective
      adjective: jumbo
      1.
      very large.
      "a jumbo pad"

      Delete
  4. ஜம்போ காமிக்ஸ் லோகோ முதல் லோகோவே நல்லாயிருக்கு சார். மார்ட்டின் அட்டைப்படம் செம கலக்கல்! இளம் டெக்ஸ். வழக்கமான டெக்ஸ், ப்ரீ டெக்ஸ் புத்தகங்கள்னு ஒரு சேர போட்டுத் தாக்குவதற்கு பதிலாக அடுத்த மாதம் இளம் டெக்ஸ் & ப்ரி டெக்ஸ் புத்தகங்களை மட்டும் வெளியிடலாமே? வழக்கமான டெக்ஸை இருப்பு வைத்து டெக்ஸ் கதை வெளிவராத மாதங்களில் வெளியிட முயற்சிக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கைகளில் இப்போதுள்ள மேக் & ஜாக் எங்களிடத்தில் தயாரானது பிப்ரவரியில் இறுதியில் என்று சொன்னால் நம்பும்படியாகவா உள்ளது சார் ? ஆனால் நிஜம் அதுவே ! So "நடமாடும் நரகம்" அடுத்த வெளியீடென குறிப்பிட்டது அந்நேரத்துத் திட்டமிடலின்படி !

      ஜம்போவின் இடைச்செருகலாக இளம் டெக்ஸ் உட்புகும் நிலை உருவானது பின்னாட்களில் !!

      Delete
    2. Sir,
      ஒரு சி.சி.வ கேள்வி.
      Our favorite, unbeatable, incomparable, the best "lion comics" logo எப்படி, எப்போது, யார் உருவாக்கியது?

      Delete
    3. அதுவும்.. லயன் தன் வாலை ஆட்டும் movement effect.. Unique!!!
      என் அரை டிராயர் வயதில் எத்தனை முறை அதை வரைய முயன்றிருப்பேன்..

      Delete
  5. வந்தாச்சி 10 க்குள்.(அப்பப்பா எவ்வளவு கஷ்டம்)😜😜😜😜

    ReplyDelete
  6. செம ஜாலி .....ஜாலி.....ஜாலி..!


    ஜூனில் இரண்டு தல டெக்ஸ் கதைகள்...!!!!




    போடு குத்தாட்டம்........


    ஆ அப்படிப் போடு.....

    அசத்திப் போடு....!.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும்....மூன்று டெகஸ் கதைகள்.
      1.இளம் டெக்ஸ்.
      2.மினி டெக்ஸ்.
      3.ரெகுலர் டெக்ஸ்.

      Delete
  7. வணக்கம் ஆசிரியரே உடல்நிலை பரவாயில்லையா

    ReplyDelete
    Replies
    1. வறக்...வறக் இருமல் தான் பிராணனை வாங்கி வருகிறது சத்யா...! மற்றபடிக்கு ஓ.கே தான் !!

      Delete
  8. முதல் லோகோ அருமையாக உள்ளது ஆசிரியரே

    ReplyDelete
  9. ஆசிரியரே சூப்பர் சிக்ஸ் அறிவிப்பொன்று பேலன்ஸ் உள்ளது அதனை ஓரக் கண்ணால் பார்க்க முடியுமா

    ReplyDelete
    Replies
    1. இ.ப. + டை-ஸ்பெ நிறைவாகட்டுமே முதலில் !

      Delete
    2. நீங்கள் சொன்னால் மறுப்பேது சார்

      Delete
  10. இரவு வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  11. சின்ன சிங்கம் டெக்ஸ்-னா,
    சின்ன புலி டைகர் தானே வரணும்!!!
    ஹி ஹி ஹி 😀😀😇

    ReplyDelete
    Replies
    1. அதானே.. என்னதான் தோர்கால் நம்ம தோஸ்தா இருந்தாலும், இது டைகர் ரசிகர்களின் பட்டா பிரச்சனை. அவ்வளவு சீக்கிரமாக விட்டுக்கொடுக்க முடியாது.

      Delete
    2. Editor sir ,நண்பர்களின் விருப்பத்தை ஏற்று "tiger jack" இளம் பிராயத்து சாகசத்தை "Jumbo" வில் இணைக்க ஆவண செய்யவும்.

      Delete
    3. ஒரு 007போதும் சார, அந்த2வது 007ன் கதைக்கு மாற்றாக இந்த சுற்றிலேயே இளம் டைகரின் அடுத்த இரு கதைகள் போடுலாமே...!!!

      டைகரை பார்த்தும் ரொம்ப நாள் ஆச்சுது...

      Delete
    4. இல்லை, மன்னிக்கவும்.கண்டிப்பாக இரண்டு 007 கதைகள் வேண்டும்.இதில் மாற்றம் ஏதும் செய்ய வேண்டாம்.

      Delete
    5. சும்மா கேட்டு வைத்தோம் சரவணன்.
      அறிவிக்கப்பட்டு உள்ள கதைகளில் மாற்றங்கள் 99.9999999%இருக்காது...

      டபுள் 007 நிச்சயம் வரும்...

      இப்போ கேட்டால், 2019ல வரு வாய்ப்பு இருக்கும், அதற்காக...!!!

      Delete
    6. அட்டவணையில் மாற்றங்கள் இராது ! No fears !

      Delete
  12. இளம் தோர்கல்//

    வரட்டுமே. இளம் புலி ன்னதும் ஒரு வேளை டைகரோன்னு நினைத்தேன். டைகரின் மீதத்தையைம் ஒட்டு மொத்தமா போட்டு முடிச்சிட்டா இந்த டைகர் ரசிகர்களின் இம்சை தீரும் 😜

    ReplyDelete
    Replies
    1. "போட்ருவோமா ? போட்ருவோமா ?"

      எனக்கே இது ஏதோ தெலுங்குப் பட வில்லன் பேசும் டயலாக் மாதிரித் தெரியுது சாமி !!

      Delete
  13. மே இதழ்களை புரட்டி மட்டுமே பார்த்த என்னை போன்றோருக்கு அருமையான trailers!

    ReplyDelete
  14. இளம் டெக்ஸ் வண்ண இருபாக ட்ரைலர் செம சார் அதிலும் முதல் ப்ரேம் சும்மா நச்சென்று இருக்கிறது சார்.

    ReplyDelete
  15. காலை வணக்கம் விஜயன் சார் மற்றும் நண்பர்களே _/|\_
    .

    ReplyDelete
  16. Dear sir I think 'kodai malar' will be better if consists of more than one story. Pages may be the same but different stories satisfy more

    ReplyDelete
  17. ஒரு சிறிய திருத்தம் ..

    மெல்ல திறந்தது கதவு

    பக்கம் 15 கடைசி பேனல்..

    வடக்கு ஐரோப்பாவில் YGGDRASIL (இலவம்பஞ்சு மரங்களையும் )
    யுகாடனில் மாயா இனத்தவர் YAXCHE (மாயா மரம் ) மரங்களையும் தெய்வங்களாகவே வணங்கி பூஜித்து வந்தனர்
    என்ற வாக்கிய பிரயோகம் இடம் பெற்றுள்ளது .


    உண்மையில்

    YAXCHE என்பதுதான் இலவம்பஞ்சு மரம் ...


    ஜீவ விருட்சம் (TREE OF LIFE) என்பது பல கலாச்சாரங்களில் உண்டு ..

    மாயா இனத்தவர் இலவம்பஞ்சு மரத்தினை ஜீவ விருட்சத்தின் அடையாளமாக கருதினர் ...

    இதன்
    ஆங்கிலப்பெயர் ..KAPOK

    தாவரவியல் பெயர் ..CEIBA PENTANDRA

    யுகாடன் பகுதி மெக்சிகோவில் உள்ளது ...

    இலவம்பஞ்சு மரங்கள் மெக்சிகோ ,மத்திய அமெரிக்கா, கரீபியன் , தெற்கு அமெரிக்கா( வட பகுதி) மேற்கு ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளை தமது இயல்பான வாழிடங்களாக கொண்டவை ..

    உயரம் குறைவான மரங்கள் தெற்கு ஆசியாவிலும் , ஈஸ்ட் இண்டீஸ் பகுதிகளிலும் உண்டு ...

    இதில் வடக்கு ஐரோப்பா வரவில்லை ..

    தமது பகுதியை தாயகமாக கொண்டிராத ஒரு மரத்தை வடக்கு ஐரோப்பாவினர் ஒரு புனித அடையாளமாக ஏற்று கொண்டிருக்கமுடியாதல்லவா ???


    மாறாக ,
    YGGDRASIL என்பது ASH TREE –ஐ குறிப்பிடுகிறது ..

    தாவரவியலில்

    FRAXINUS என்று அழைக்கப்படும் இவ்வகை ‘’ஆஷ் ‘’ மரங்களில் ஒன்றான
    FRAXINUS EXCELSIOR என்ற EUROPEAN ASH வகை மரமே YGGDRASIL புனித மரத்தின் அடையாளமாக கருதப்படுகிறது ..

    ஸ்காண்டிநேவிய ( வடக்கு ஐரோப்பிய ) பகுதிகளில் மட்டுமல்லாமல் ஐரோப்பா முழுதும் இவை காணக் கிடைக்கும் ..

    { உண்மையில் ஸ்காண்டிநேவிய –NORSE MYTHOLOGY –யில் கூறப்படும்
    YGGDRASIL -ASH TREE அல்ல . அது EUROPEAN YEW TREE –ஐ குறிக்கும் என தற்போது புதிதாக வாதம் எழும்பியுள்ளது )

    எப்படி இருப்பினும் YGGDRASIL என்பது ஸ்காண்டிநேவிய ஜீவ விருட்சத்தின் அடையாளமாக

    EUROPEAN ASH TREE
    OR
    EUROPEAN YEW TREE இரண்டில் ஒன்றை மட்டுமே குறிக்கும் ..

    கண்டிப்பாக இலவம்பஞ்சு மரத்தை அல்ல ..


    முன் அட்டை முதல் பின் அட்டை வரை மரங்கள் வியாபித்து இருப்பதால்
    மரங்களை பற்றி தகவல் பிழை இருக்கலாகாது என்ற ஆர்வத்தில் இது எழுதப்பட்டது

    பின் குறிப்பு : ASH TREE என்பதில் வரும் ஆஷ் சாம்பலை குறிப்பது அல்ல .

    ஸ்காண்டிநேவிய புராணங்களில் வரும் ODIN ( ஆம் ..நமக்கு பரிச்சயமான ..அவரேதான் ) தனது நெஞ்சில் பாய்ச்சி கொண்ட ஈட்டியை (SPEAR) குறிக்கும்

    லத்தீன் ,ஓல்ட் இங்க்லீஷ் மூலங்கள் அப்படித்தான் சொல்கின்றன ..

    ReplyDelete
    Replies
    1. உண்மை
      கற்பக விருட்சங்கள்.

      Delete
    2. இந்த மாசம் பூரா கொண்டாட்டம் தான்... ஐ ஜாலி ஜாலி...

      Delete
    3. செனா அனா ஜி நோண்டி நொங்கு எடுத்து விட்டீர்கள்.
      எப்படி இவ்வள்வு தகவல்களை திரட்டுகீறீர்கள்.முழு காமிக்ஸ் அர்பணிப்பு நம் எடிட்டர் சமூகம் போலவே. வாழ்த்துக்கள் ஜி.

      Delete
    4. Really Good info sir... by Boopathi

      Delete
  18. நான் அனுப்பியுள்ள டிஸைன் ரொம்பவே மொக்கையாகத் தோன்றுகிறது, நேரம் கிடைத்தால் வேறொன்றை அனுப்பி வைக்கிறேன். We need a better and contemporary logo please - even if that means you need to employ a professional designer for this task.

    ReplyDelete
    Replies
    1. போன முறை ஒரு professional designer ஐ பயன்படுத்தி ஆறாயிரமோ, ஏழாயிரமோ செலவழித்து, இறுதியில் ஏதோவொரு அமெரிக்க லோகோவை சுட்டுத் தந்தது தான் மிச்சமாகியது நினைவுள்ளது கார்த்திக் ! அதான் சூடு கண்ட பூனை !

      Delete
  19. நண்பர்கள் அனுப்பி இருக்கும் லோகோக்கள் அனைத்தும் பட்டையை கிளப்புகிறது.அனைத்து நண்பர்களுக்குமே மனமார்ந்த வாழ்த்துகளும் ,பாராட்டுகளும் .

    *********


    ஆஹா ..டெக்ஸ்வில்லர் அண்ணார் பற்றிய சாகஸம் ..கேட்கவே மிக மிக இனிமையாக உள்ளது .ஒரு நெருங்கிய தோழரின் உடன் பிறப்புகளை பற்றியும் ,அவர்களின் குடும்ப வரலாறுகளை பற்றியும் அறிவது எவ்வளவு சந்தோசமான விசயம்.அது டெக்ஸ் வில்லரை பற்றியது என்றால் இன்னும் எத்தனை சந்தோசமான செய்தி .

    போட்டு தாக்குங்கள் சார்..:-)

    ReplyDelete
  20. மெல்ல திறந்தது கதவு....


    உண்மையை சொல்ல போனால் இந்த சாகஸத்தை எப்படி விமர்சனம் செய்வது என்றே தெரியவில்லை.அதுவும் தொடரும் ஆரம்ப பக்கங்களை தொடர ,தொடர இது நி்நி போன்ற கிராபிக் நாவல் வரையறா போல என்ற நினைக்க தோன்றவும், பல வருடங்களுக்கு முன் மர்ம மனிதன் மார்ட்டின் என்றால் தலை தெறிக்க ஓடும் சூழல் அந்த வயதில் ஏற்பட்டதே அதே சூழல் மீண்டும் என்பது போலவும் , பின் இது காமிக்ஸ் இதழா அல்லது மரங்களை பற்றிய வரலாறு புத்தகமா என்ற குழப்பமும் ஏற்பட்டது என்னவோ நிஜமோ நிஜம்.அதுமட்டுமல்லாமல் மர்ம மனிதன் மார்ட்டின் என்ற நாயகருக்கு இப்பொழுது தானே அழுத்தமாக வாக்கை பதிவு செய்தோம் .ஆனால் தேர்ந்தெடுப்பதற்கு முன் சிறந்த தலைவனாக தோன்றியவன் பின் ஏமாற்றம் அளிக்கும் அரசியல்வாதி போல் இந்த மர்ம மனிதரும் கீழே சருக்குகிறாரே என்ற எண்ணமும் தொடர ,தொடர ஏற்பட ஒரு வித குழப்ப மனநிலை. ஆனால் சிலருக்கு புரிபடாத சில கிராபிக் நாவலை கொண்டாடுவோருக்கு ஆரம்பித்திலியே இது ஒரு மிக சிறந்த படைப்பாக உணர செய்யும் என்பதும் மனதில் ஒரு ஓரத்தில் தோன்றியதும் உண்மை.

    ஆனாலும் அமைதியான காலை பொழுதில் மீண்டும் கதவை மெல்ல திறந்து உட்புகுந்தேன்.ஆழ்ந்த அமைதியில் மரங்கள் மட்டும் சூழ்ந்திருக்கும் ஓர் இடத்தில் மெல்ல மெல்ல நடக்கும் சூழலும் கொஞ்சம் இனிமையாக தான் காணப்பட்டது.இதழில் ஒரு வசனம் வரும் " தனிமை ..மனித நடமாட்டமில்லாத காடுகள் போன்ற இடங்களில் வாழும் கண்றாவியான அனுபவங்கள் மனதை பேதலிக்க செய்யும் " என்று ஆனால் இருகால் மிருகங்கள் நம்மை சுற்றி நிறைய நிறைந்திருக்கும் இந்த நகர வாழ்விலும் , நாம் திருப்தி அடைகிறோமோ ,மகிழ்ச்சியாக இருக்கிறமோ என்றே தெரியாமல் ஒரு கட்டுபெட்டி கடமைக்குள் உழன்று சுழன்று உழைத்து கொண்டே இருந்தும் மனதில் கொஞ்சம் கூட திருப்தி ஏதும் ஏற்படாத இந்த வாழ்வில் அந்த தனிமையும் ,மனிதர்கள் ஏதும் இல்லா அந்த அந்த மரங்கள் மட்டும் சூழ்ந்திருக்கும் காடுகள் போன்ற இடம் நமக்கு கிடைக் காதா என்ற ஏக்கத்தையே பலருக்கு இந்த வாழ்வில் ஏற்படும் எண்ணமாக இருக்குமே .இப்படியாக ஏதோதோ எண்ணங்கள் இந்த பயண பாதையில் செல்ல செல்ல தோன்றியவாறே பயணத்தை தொடர்ந்து கொண்டே இருந்தேன்.

    கண்டிப்பாக இது போன்ற வித்தியாச கதை களத்திற்கு நண்பர்களுக்கு அலுப்பு ஏற்படாமல் பயணத்தை தொடர்ந்து செல்ல அதன் வார்த்தை வீரியங்களுக்கு மொழி ஆக்கம் செய்பவர் எவ்வளவு கடினபட்டு இருப்பார் ,எந்த அளவு உழைத்து இருப்பார் என்பதையும் நிஜமாக உணர முடிகிறது. இறுதியில் பயணத்தை முடித்த பொழுது கதையின் நாயகிக்கு ஏற்பட்ட அந்த பரிதாப நிலைமைக்கு ஏற்பட்ட காரணமும் ,முடிவும் மனதில் மிகுந்த பாரத்தை ஏற்படுத்தியது நிஜம்.

    வழக்கமான "மார்ட் டின் " கதையை தேடும் நண்பர்கள் ஆரம்பத்தில் என்னை போலவே கொஞ்சம் ஏமாற்றம் அடைவது போல தோன்றினாலும் ..கொஞ்சம் பொறுமையுடன் தொடந்து சென்றால் மெல்ல திறந்த கதவினால் முகத்தில் வீசுவது பலத்த காற்று அல்ல தென்றல் என உணர முடியும்.

    ReplyDelete
    Replies
    1. //வழக்கமான "மார்ட் டின் " கதையை தேடும் நண்பர்கள் ஆரம்பத்தில் என்னை போலவே கொஞ்சம் ஏமாற்றம் அடைவது போல தோன்றினாலும் ..கொஞ்சம் பொறுமையுடன் தொடந்து சென்றால் மெல்ல திறந்த கதவினால் முகத்தில் வீசுவது பலத்த காற்று அல்ல தென்றல் என உணர முடியும்.//
      +1

      //தென்றல் என உணர முடியும்//
      வீசுவதென்னவோ தென்றல் தான் ஆனால் அதன் வீரியம் புயலுக்கானது...

      Delete
  21. ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள்..

    போன பதிவில் சேலம் டெக்ஸ் விஜயராகவன் சொன்னது போல டெக்ஸ் முழுநீள சாகஸம் இல்லா மாதங்களில் அந்த மினி டெக்ஸ் வருகை தருமாயின் ஒரு சின்ன ஏமாற்றம் நண்பர்களுக்கு குறையுமே..ஆவண செய்யுங்கள் சார்..ப்ளீஸ்..

    ReplyDelete
    Replies
    1. போன பதிவிலேயே பதிலும் போட்டிருந்தேனே தலீவரே....பார்க்கலியா ?

      நிழலின் குளுமையை உணர்த்தவாவது வெயில் தேவை தானே ?

      Delete
  22. விஜயன் சார், முதல் லோகோ நன்றாக உள்ளது (மகேஷ் திருப்பூர்). Simple and best.

    கார்த்திக் அனுப்பி உள்ளது ஓகே.

    மற்றவை சுமார்.

    இதில் பங்கு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    புதிய பெயர் & லோகோ விருப்பம் இல்லை கடந்த ஞாயிறு பதில் தெரிவித்தது போல்.
    மினி லயன் பெயர் மற்றும் லோகோவில் ஜம்போ கதைகளை வெளியிட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  23. உண்மை.
    மாயன்களின் நாகரீகத்தில் கூறப்படும் அந்த மரம் உண்டு.
    எமது சதுரகிரி அனுபவம்.
    ஒரு முப்பது வருடங்களுக்கு முன் நானும் நண்பரும் சதுரகிரி சென்றிருந்தோம்.மகாலிங்கசாமியை தரிசித்து விட்டு ஒரு பளிய இளைஞனுடன் மேலே மலைகளுக்குள் செல்ல ஆரம்பித்தோம்.
    மிகவும் சிரமப்பட்டு சென்றதன் பலன் அந்த மரத்தை கண்டோம்.
    எருமைகணச்சான்.

    மரத்தினை செதுக்கியதில் பால் வடிந்தது.புளியோதரை கொண்டுபோயிருந்த பெரிய தூக்குவாளியில் பிடித்தோம்.

    மூன்று மணி நேரமாகிவிட்டது.
    முக்கால் தூக்குவாளி நிறைய பால்.
    குடித்து விட்டோம். கெட்டியாக பச்சைவாசனையோடு இருந்தது.

    ஓரேமயக்கமாகிவிட்டது எனக்கு.
    அரைமணி நேரம் அங்கேயே அரை மயக்கத்தில் கிடந்தேன்.

    எழுந்தபின் அயர்ச்சி தளர்ச்சி போய் புத்துணர்ச்சி வந்திருந்தது.
    அப்படியே நேர் செங்குத்தாக பாறைகளை பற்றி இறங்க ஆரம்பித்தோம்.மனதில் இம்மிகூட பயமில்லை.

    மார்பு சிராய்ப்புகள் மட்டுமே.

    அன்றிரவு இரவு ஏழு மணிக்கே அடிவாரம் வந்துவிட்டோம்.

    அந்த மரம் சாமிமரம் என்று பளியன் கூறியதோடு நாங்கள் கொடுத்த மிக்சர் பொட்டலத்தை மட்டும் பெற்றுக்கொண்டு இருளில் மறுபடியும் மலையேறி சென்றுவிட்டான்.

    இதன்பலன்கள் அளவிட முடியாதன.
    இதுவரை எமக்கு சர்க்கரை கிடையாது.
    சளி தொந்தரவுகள் கிடையாது.
    பவர்கிளாஸ் அணிவதை நிறுத்திவிட்டேன்.
    உணர்ச்சி வசப்படுவது அடியோடு தொலைந்தது.

    அந்த மரம் சித்தர்களின் இரகசியமான மறைப்பு ,ராஜகாயகல்ப விருட்சமான , "எருமை கணச்சான்."

    இது போன்றதே சார் கூறிய மாயன்களின் வழிபாட்டு மரங்கள்.

    இன்னமும் உண்டு அனுபவங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அந்த மரத்தை கீறுவதற்குமுன் அதனிடம் பணிந்து வணங்கி அனுமதி பெற்றான் அந்த பளியன்.
      நமது நண்பரோ அதற்கு மஞ்சள் கயிறு கட்டி , மஞ்சள் பூசி சந்தனம் சார்த்தி திலகமிட்டு பூஜைகள் செய்து முடித்தார்.
      காற்றில் ஒரு வினோத சப்தம் கேட்டது.
      எங்கும் நிசப்தம் நண்பர்களே.

      எருமை , புஷ் புஷ் என்று மூச்சுவிட்டு ஃபுக்ர் என்று கனைக்கும் சத்தம்.
      காற்று மரத்தை ஊடுருவியதாலா
      கிளைகள் அசைந்ததாலா
      ஆனால் சத்தம் மட்டும் உண்மை.

      இன்றும் பசுமையாக நினைவுள்ளது.

      Delete
  24. டாப் லோகோ நல்லாயிருக்கு சார்...

    குதிரைகள் 2ம் கம்பீரமா டெக்ஸையும், டைகரையும் குறிக்கிறது.
    மற்றவை குழந்தை புள்ளைக புத்தகங்களின் லோவோ போல இருக்கு.

    புது பேனர்தான் வழினா டாப் லோகோவுக்கே என் ஓட்டு...

    ஜம்போங்கிற வார்த்தையை விட்டுட்டு லோகோ முயற்சி பண்ணுங்க நண்பர்களே...!!!

    ஜம்போவுக்கு நேர் எதிர் திசையிலான கதைகள்னு தெரிஞ்ச பிறகும், யானையை வைத்து கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை...

    கெளபாய் & 007(என்றும் இளமை&வேகம்)& பழமைய சித்தரிக்கும் வண்ணம் லோகோ போடுங்க...

    ReplyDelete
  25. முதல் லோகோ மிகப் பிரமாதமாக உள்ளது.ஜம்போவில் வெளிவர இ௫க்கும் கதைகளுக்கு இந்த லோகோ தான் மிகப் பொ௫த்தம் என்பது என் க௫த்து.மற்ற நண்பர்களின் படைப்புகளும் மிகப் பிரமாதம்.

    ReplyDelete
  26. விஜயன் சார், கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவில் பல நண்பர்கள் ஜம்போ பற்றி பதிவிட்டு இருந்தார்கள். நேரம் கிடைக்கும் போது முடிந்தால் அது பற்றி உங்கள் எண்ணங்களை பகிருங்கள்.

    ReplyDelete
  27. First logo is very good ... M போன்று உள்ளதால் முத்து காமிக்ஸ் என்றும் எடுத்துக் கொள்ளலாம் :)

    ReplyDelete
  28. இளம் தோர்கல் இப்போது வேண்டாம் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  29. இளம் டெக்ஸ் கூட, ஒரு வகையில் டெக்ஸ் overdoze ஆகிவிடக்கூடாதென்ற கவலை உள்ளது

    ReplyDelete
  30. வாடகைக்கு கொரில்லாக்கள்...


    புதுவகையான பாணி கார்ட்டூன் சித்திரங்கள்..வித்தியாசமான கதை அமைப்பு ...எடுப்பான மொழி பெயர்ப்பு ...கார்ட்டூன் பாணியில் துப்பறியும் கதையாக ,அல்லது துப்பறியும் கதை கார்ட்டூன் பாணியாக ( ரெண்டும் ஒண்ணுதானே...)
    இருக்கும் பொழுது இதுவரை வந்த சாகஸங்கள் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.ஆனால் இந்த மேக் அன்ட் ஜாக் கார்ட்டூன் ரசிகர்களையும் , டிடெக்டிவ் கதை ரசிகர்களையும் ஒரு சேர கவர்வார் என்பது இந்த முதல் சாகஸத்திலியே தெரிந்து விட்டது.நகைச்சுவைக்கும் பஞ்சம் வைக்கா நாயகர்கள் .இந்த அறிமுக நாயகர்களை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க தயார்.அதிரடி நாயகர்களின் மீள் வருகைக்கு ஆவலுடன் காத்திருக்க வைப்பது போல இவர்களும் ஆவலுடன் காத்திருக்க வைத்துவிட்டார்கள்.ஒரு அதிரிபுதிரி கார்ட்டூன் நாயகர்கள் வெற்றிகரமாக நமக்கு கிடைத்து விட்டார்கள் என்பது மறுக்க முடியா உண்மை.



    மேக் & ஜாக்


    கிங் & கிங்.....!

    ReplyDelete
  31. மேக் ,&ஜாக் அருமை. ரசிக்ககூடிய கதை

    ReplyDelete
  32. அடுத்த மாசம் லார்கோ...


    அடி தூளு...

    ReplyDelete
    Replies
    1. லார்கோ ..

      உஷாருங்கோ !!

      மேற்கொண்டு..

      ஜுனில் சொல்றேனுங்கோ !

      Delete
  33. அன்பின் ஆசிரியருக்கு,

    வணக்கம். 1) மே மாத இதழ்கள் இன்னும் வந்து சேரவில்லை. கோவையைப் பொறுத்தவரை எஸ்டி குரியரில் வந்த மட்டும் புத்தகங்கள் அதிகக் காலத்தாமதமின்றி வந்து சேர்ந்தன. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக DTDC மிகத் தாமதமாகவே புத்தகங்களைக் கொண்டு வந்து தருகிறார்கள் நான் இருக்கும் கோவையின் புறநகர்ப்பகுதியில் அவர்களுடைய அலுவலகம் இல்லை என்பது காரணமாக இருக்கலாம். எனவே எனக்கான புத்தகங்களை மறுபடியும் எஸ்டி குரியரின் மூலம் அனுப்பினால் மகிழ்வேன். 2) உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். பிப்ரவரியில் இது போன்ற இருமலால் கிட்டத்தட்ட 20 நாட்கள் அவதிப்பட்டேன். நீரில் உப்பு போட்டு ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு முறை கொப்பளியுங்கள். சற்றே நன்றாக இருக்கும். 3) புலனாய்வு மொ.பெ வாசித்தீர்களா? உங்களுடைய feedback-ஐத் தெரிந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறேன். நன்றி.

    பிரியமுடன்,
    கார்த்திகைப் பாண்டியன்

    ReplyDelete
    Replies
    1. "புலன் விசாரணை " சார்ந்த பணிகளுக்குள் இறங்கிடும் முன்பாய் "இ.ப." ரெகுலர் பாகங்களின் பணிகளை முழுமையடையச் செய்ய வேண்டியுள்ளது சார் ! அவற்றை அச்சுக்குத் தயார் செய்த பின்னே தான் மற்ற எல்லாமே !! மே மூன்றாம் வாரம் சுமாருக்கு என்று இப்போதைக்கு அட்டவணை சொல்கிறது ; பார்க்கலாமே ! அதுவரையிலும் பொறுத்திட வேண்டுகிறேன் சார் !

      Delete
  34. சார் டைலன் டாக்கிற்கு ஒரு வாய்ப்பு கொடுங்களேன்...இல்லனா திகில் காமிக்ஸ் திரும்ப வர வாய்ப்பிருந்தால் நல்லது..

    ReplyDelete
    Replies
    1. பரவலாய் இவர் அபிமானத்தை ஈட்டினால் பார்க்கலாம் சார் !

      Delete
  35. மார்ட்டின் கதையில் அமெரிக்க சாகஸத்தில் " எங்கள் சேலம் " வந்தது தான் கொஞ்சம் ஒட்டாத ஒன்று போல தோன்றி விட்டது சார்..:-)

    ஆனால அமெரிக்காவிலும் சேலம் உண்டு என்பதை நண்பர்களின் பதிவை படித்ததும் தான் தெரிகிறது..:-)

    ReplyDelete
    Replies
    1. தலீவரே....XIII இரண்டாம் சுற்றுக் கதையில் (பாகம் 20 ??) அந்த மேபிளவர் கப்பல் அமெரிக்காவில் கரை சேர்வதாய் சொல்லப்பட்டிருக்கும் பிரதேசத்துக்கு மிக அருகாமையில் தான் "அந்த அமெரிக்க சேலம்" இருக்கிறது.

      அங்கே 1600 களின் இறுதிப் பகுதிகளில் அரங்கேறிய "சூன்யக்காரிகள் வேட்டை" வரலாற்றிலொரு கரும்புள்ளி ! அது பற்றி தொடரும் நாட்களில் இங்கே விரிவாய் நண்பர்கள் பதிவிடக்கூடும் என்பதால், சுவாரஸ்யமான கூடுதல் தகவல்களை நாம் அறிந்திட வாய்ப்புண்டு !

      எது எப்படியோ - 'நம்ம சேலம்' தான் first !! வெள்ளைக்காரர்களின் சேலம் 1626 வாக்கில் தான் உருவாகியுள்ளது !

      Delete
    2. எது எப்படியோ - 'நம்ம சேலம்' தான் first !! வெள்ளைக்காரர்களின் சேலம் 1626 வாக்கில் தான் உருவாகியுள்ளது !

      #######

      :-)

      Delete
  36. ட்யுராங்கோ - ஆகா & ஓகோ !!! *** 10/10
    மேக் & ஜாக் - மிகச் சிறப்பு!!! ** 9/10
    மார்ட்டின் - தலை சுத்துது!!! 8/10 சித்திரங்களுக்காக!!

    ReplyDelete
  37. ஜம்போவுக்கு ஜம்ப்பியாச்சு. (சந்தா அனுப்பியாச் கொஞ்சம் லேட்)

    ReplyDelete
    Replies
    1. ஜம்போவான் ஆகி விட்டீர்கள் சார் !

      Delete
  38. சார் ஜம்போ ட்ரைலர்கள் ஏதேனும் சற்று கண்ணில் காட்டலாம்.
    குறிப்பாக இளம் டெக்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவில்...! இப்போதைக்கு மே இதழ்கள் மீதே கவனம் லயித்திடுவது அவசியம் சார் !

      Delete
  39. மே இதழ்கள் முழுமையான திருப்தியை தந்தனவா? அறிமுக கார்ட்டூன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?நிறைய பில்டப் கொடுக்கப்பட்ட மார்ட்டின் சதம் அடித்தாரா?டூராங்கோ இரண்டாவது ஆல்பம் வெற்றி நடை போடுகின்றதா? என்னை பொறுத்தவரை நான்கு கேள்விகளில் மேக் அண்ட் ஜேக் வெற்றிக்கோட்டை தொட்டுவிட்டனர் என்றே சொல்லவேண்டும்.பிணத்திற்கு பாடிகார்ட் ஆக ஆரம்பிக்கும் முதல் பக்கத்தில் இருந்து நட்டு ஜெர்ரியா குள்ளன் மேக்கா யார் உயிருடன் இருப்பது என்ற கேள்வியோடு முடியும் கடைசி பக்கம் வரை ஒரே கிச்சுகிச்சு தான் ..நல்லகதை ..நல்ல அறிமுகம் ..மீண்டும் இவர்களுக்கு நிறைய வாய்ப்பு குடுக்கலாம் .

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கதைக்கு நான் நினைத்திருந்த முதல் தலைப்பு : "பிணத்துக்கொரு பாடிகார்ட்" என்பதே !!

      ஆனால் அந்தக் கவுச்சி மணத்தில், கார்ட்டூன் கதை என்ற flavor அடிபட்டு விடக்கூடடுமென்று பட்டது ! அப்புறமே இந்தப் பெயர் !!

      இதுவரையிலும் "மேக் & ஜாக்" ஓ.கே என்பதில் செம ஹேப்பி !!

      Delete
    2. மேக் அன்ட் ஜாக் இனியும் ஓகே தான் என என் மனபட்சி சொல் கிறது சார்..:-)

      Delete
  40. நம்ம ஜம்போ டிசைனும் போஸ்ட் ஆகியிருக்கு மேலே. நன்றி சாா்.

    ReplyDelete
    Replies
    1. கடைசி லோகோ மிக நன்றாக உள்ளது.

      Delete
  41. டூராங்கோ... சண்டை பிரியர்களுக்கு ஏற்ற படம் என்று அந்தக்கால ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களுக்கு விமர்சனம் சொல்வார்கள்.அதைஞாபகப்படுத்திய கதை.மூச்சு விடக்கூட இடம் கொடுக்காமல் ஒரே அதிரடிதான்..முதல் இரண்டு பாகங்களிலேயே கதை முடிந்துவிட ஒரு ராஜகுமாரனின் கதை தனிஆவர்த்தனம் வாசிக்கின்றது.ரோஜாவை எந்தப் பெயரில் அழைத்தால் என்ன ?நமக்குத்தேவை நல்லதொரு என்டர்டைன்மெண்ட் தான் ..அதை தாராளமாக அள்ளி வழங்கிய வகையில் . டூராங்கோ நூற்றுக்கு நூறு வாங்கி விடுகிறார் ..மார்ட்டின்?

    ReplyDelete
  42. வாடகைக்கு கொரில்லாக்கள் அட்டகாசம். சூப்பர் அறிமுகம்.

    நேரம் கிடைக்கும் போது விரிவான விமர்சனம் எழுதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கொடைக்கானலில் சீசனை அனுபவியுங்கள் சார் !!

      Delete
    2. பெங்களூர் திரும்பிக் கொண்டு இருக்கிறேன் சார். நேற்று செம மழை.

      Delete
  43. மார்ட்டின் இந்தமுறை சற்றே ஓவர்டோஸ் குடுத்து விட்டார்..பேந்த பேந்த முழி த்துக்கொண்டு இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. இதன் நிஜ ஆழம் புலனாக கதாசிரியரின் சகாயம் அவசியம் என்று நான் சொன்னது இந்த முழிப்பைத் தொடர்ந்தே சார் ! மறுபடியும் படித்துப் பாருங்கள் - இன்னும் சில புதுத் தகவல்கள் தென்படும் !

      Delete
  44. // ஜம்போ லோகோ தயாரிப்புக்கென நண்பர்களில் சிலர் அனுப்பியிருந்த ஆக்கங்கள் //
    முதல் லோகோ நல்லாயிருக்கு சார்.

    ReplyDelete
  45. // Maybe பெரிய தோர்கலுக்கு இணையாய் இவரையும் ஓடவிட்டுப் பார்க்கலாமா ? அல்லது பெரியவர் சாதிக்கட்டுமென அவகாசம் தந்து விட்டு நிற்கலாமா ? //
    இருக்கறவங்களுக்கே ஸ்லாட்இழுத்துக்கோ,புடிச்சிக்கோன்னு இருப்பதால் கொஞ்சம் வெயிட் பண்ணட்டும் சார்.

    ReplyDelete
  46. ஜம்போ லோகோ அனைத்து கற்பனைகளும் அருமை..தோழர்களின் உழைப்பு தெரிகிறது.திருப்பூர்,கும்பகோணம் இரண்டு தோழர்களும் முன்னணியில் நிற்கின்றார்கள்

    ReplyDelete
  47. விஜயன் சார்,

    // "இளம் தோர்கல்" தான் ! 2011-ல் துவங்கி, ஆண்டுக்கொரு ஆல்பமென வெளியாகி இதுவரை 7 ஆல்பங்கள் உண்டு இத்தொடரில் ! Maybe பெரிய தோர்கலுக்கு இணையாய் இவரையும் ஓடவிட்டுப் பார்க்கலாமா ? //

    இப்போது வேண்டாம் சார்.இன்னும் இரண்டு வருடங்கள் சென்றபின் பார்க்கலாம். இந்த இடத்தில் வேறு சில புதிய நாயகர்களை முயற்சி செய்து பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. தோர்கலின் தீவிர ரசிகரே சொல்லி விட்டார் இளம் தோர்கலை சற்று ஒத்தி வைப்போமே ஆசிரியரே

      Delete
  48. வாடகைக்கு gorilakkal அருமை,

    ReplyDelete
  49. ட்யூராங்கோ....பிரமிப்பான படைப்பு.
    சமீபத்திய அட்டகாச தயாரிப்புகளில் இதுவொரு கிரீடமாய் திகழ்கிறது.
    அந்த காலத்தில் நாமே வாழ்ந்தது போன்ற மனநிலைக்கு கொண்டுசெல்லும் கதைக்களமும்,அற்புத சித்திரங்களும் மெய்மறக்கச்செய்யும் ஒரு காவியம் இது.
    காமிக்ஸ் வாசிப்பை சற்றே சோர்வாக உணர ஆரம்பித்த நான், மீண்டும் புத்துணர்ச்சியை உணருகிறேன்.
    சமீபத்திய இதழ்கள் அனைத்தும் உலக தரம் வாய்ந்தவை.
    நன்றி ஆசிரியரே...!!!

    ReplyDelete
    Replies
    1. ஓவராய்ப் போட்டுத் தாக்கும் போது லேசான அயர்ச்சி எழுவது இயல்பே சார் ! அதைச் சுட்டிக் காட்டிடுவதும் அவசியமே !

      Delete
  50. வாடகைக்கு gorilakkal விறுவிறுப்பான காமெடி galatta. மேக் அண்ட் ஜாக் pass mark வாங்கி விட்டார்கள்

    ReplyDelete
    Replies
    1. வெறும் பாஸ் மார்க் தானா சார் ?

      Delete
  51. மெளனமாயொரு இடி முழக்கம் ..


    முதலில் அட்டை பட ஓவியத்திற்கும் ,அதன் 3 D பாணி ஓவியத்திற்கும் ஒரு பலமான விசில் சார்.அட்டகாசம் .முன்பக்கமும் சரி பின் பக்கமும் சரி இரண்டுமே பட்டையை கிளப்புகிறது.

    ஆசிரியரின் முன் கூட்டிய அறிவிப்பால் ட்யூராங்கோவின் முதல் சாகஸ தொகுப்பை மீண்டுமொருமுறை சமீபமாக படித்து முடித்தமையால் அதன் தொடர்ச்சியாக செல்லும் முதல் இரண்டு பாகங்களும் அதே அதி வேகம் .சித்திரங்களும் ,மொழி ஆக்கமும் நாமும் அந்த காலகட்டத்தில் ஒன்றி போவதை உணர முடிகிறது.அருமை.ஆனால் அதன் இறுதி முடிவு கொஞ்சம் மனது வலிக்க தான் செய்கிறது.

    மூன்றாம் பாகத்தில் தொடரும் " ராஜகுமாரனின் கதை " யும் அட்டகாசமான அதிரடி சாகஸம்.இறுதியில் " இளவரசியே " எனக்கு கதை பிடிக்காது என்று வெறுத்து செல்வது புன்வறுவலையும் வரவழைக்கிறது ...,சிறிது வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

    மொத்தத்தில் இரண்டாம் தொகுப்பிலும் ட்யூராங்கோ அடித்த பந்து மைதானத்தை தாண்டி பறந்து சென்று வெற்றி கோப்பையை தட்டி பறித்து வருகிறது.டெக்ஸ் வில்லர் இல்லாத குறையை இம்முறை ட்யூராங்கோ தனது கோடை மலர் மூலம் மறக்கடித்து விட்டது உண்மையோ உண்மை.

    அடுத்த ட்யூராங்கோ சாகஸம் 2019 ல் தானா சார்...?! இன்னும் ஆறு மாதத்திற்கு மேல் உள்ளதே ..ஹீம்..:-(


    மெளனமாயொரு இடி முழக்கம் - பளீர் மின்னல்

    ReplyDelete
  52. வியாழன் ,வெள்ளி இதழ்கள் வந்தாலே மக்கள் அனைவரும் சனி ,ஞாயிறு புத்தகத்தில் ஆழ்ந்து விடுவதால் நண்பர்கள் தான் இங்கே வரமுடிய வில்லை எனில் ஆசிரியரும் வர மாட்டேங்கிறாரே..:-(

    ReplyDelete
  53. ஆசிரியரிடம் ஒரே ஒரு வினா ..இதற்கு மட்டுமாவது பதில் சொல்ல வருமாறு ஆசிரியரை வேண்டுகிறேன்..



    இன்னும் மே மாசம் வரலை...ஆனா மே மாத இதழ்கள் வந்து ..படித்து ...மூன்று இதழ்களையும் விமர்சித்தும் ஆயிற்று..


    இனி நான் மே மாசத்துக்கு என்ன செய்ய..


    சொல்லுங்க சார் சொல்லுங்க...:-)

    ReplyDelete
    Replies

    1. ///இனி நான் மே மாசத்துக்கு என்ன செய்ய..///

      மார்டினை இன்னொரு தபா படிங்க தலைவரே, வித்தியாசமான ஃபீலிங் வேறொரு கோணத்துல கிடைக்கும். மிஸ் பண்ணிடாதீங்க.

      Delete
    2. இனி மாசா மாசம் 5ம் தேதிக்கு மேல் புக் அனுப்ப சொல்லிடலாம்...😉😉😉
      ப்ராப்ளம் சால்வ்டு😎😎😎

      Delete
  54. ஆசிரியர் வந்துட்டு தான் இருந்தாரா...

    இது தெரியாம அய்யோ பரணி..:-(

    ReplyDelete
  55. ஏப்ரல் மாதத்துக்குள் மே இதழ்கள் படிச்சு முடிச்சாச்சு
    வரும் ஆண்டுகளில் சோதனைமுயற்சி யாக 1 ந் தேதி ஒரு
    பார்சல் 15 ந் தேதி மற்றொருபார்சல் ஆக அனுப்பி வைக்கவும்
    மாதம் முழுவதும் காமிக்ஸ், ,,,,!!!!!!

    ReplyDelete
    Replies
    1. கூரியர்காரர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள் சார் !

      Delete
    2. நாங்களும் தான்

      Delete
    3. Monthly twice comics wow awesome .....
      Kanna rentu lattu thinna asaiya. ....
      Enakke enakka ....

      Delete
  56. என்னதான் யானை ஆஜானுபாகுவாக, பாகுபலியின் முன்னோராக வலம் வந்தாலும், குதிரையோட கம்பீரமே தனிதானே.அதனால முதல் லோகோவே சிலிர்க்க வைக்கிறது.

    தோர்கலே இன்னும் எட்டிப் பிடிக்க வேண்டிய தொலைவு ஏகமாக இருக்கும்போது, ஜூனியர் தோர்கல் இப்போதைக்கு வேண்டாம்.

    ReplyDelete
  57. டியர் சார் லர்கோவின் கடைசி இரண்டு ஆல்பங்கலையும் ஜூனில் வெளியிட்ட பின் அவரது இடத்தை பிடிக்கப் போவது யார் சார்.

    ReplyDelete
    Replies
    1. லார்கோ ஒரு ongoing தொடர் என்பதால் இரண்டாண்டுகளுக்கு ஒரு முழு ஆல்பம் நமக்கு சாத்தியமாகிடும் ! So பார்ப்போமே சார் !

      Delete
    2. நன்றி ஆசிரியர் அவர்களே.

      Delete
  58. என்னோட லோகவக் காணோமே எடிட்டர் சார்
    Photos_lion@ yahoo.com மற்றும்
    lioncomic@yahoo.com க்கு அனுப்பினேனே.மற்றும் ஸ்டெல்லா விடமும் கூறியிருந்தேனே.
    வரவில்லையா சார்.

    ReplyDelete
    Replies
    1. வந்தது சார்....ஆனால் அதனை அப்படியே இங்கே வலையேற்றம் செய்வது சரியாக இராது என்பது என் அபிப்பிராயம். Needs to be developed a bit more...!

      Delete
    2. சரிங்க சார்.

      Delete
  59. இந்த மார்டின என்ன பண்றதுன்னே தெரியல

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நிதானமா படிக்காட்டி.....


      வெவ்வெவ்வெ காட்டிடுவாரு போலருக்கு.

      Delete
  60. மேக் மற்றும் ஜாக்.....

    நம்ப புளூகோட் நெட்டை குட்டையோட ரீமேக் மாதிரி இருக்குறது எனக்கு ஏற்படுற பிரமையோ....
    தெர்லயே||||||||☺

    ReplyDelete
  61. Thanks to my cold and fever I was able to read 1-7 durango stories yesterday and today. Waiting for the next part of stories in this series,

    Vijayan sir, why the book size had been reduced for this album?

    ReplyDelete
  62. Comments on some recent reads:

    ThOtta Thalainagaram: Real Blueberry classic - loved it

    Tex One Shot (100 pager - forgot title) - Was a breezy detective genre except we come to know who the villain is the moment we see him. Loved it nevertheless.

    Mac and Jack - Not a bad start - some pages were rib-tickling - others were normal fare

    Martin Mysterie - Mella Thiranthathu Kathavu - awesome finish .. actually struggled with the first 100 pages - முதல் நூறு பக்கங்கள் கடக்கும் முன் 3 மணிநேரங்கள் தூங்கி எழுந்து .. மறுபடி படிக்க ஆரம்பித்தால் .. 100வது பக்கத்திற்கு பின் கதை விறுவிறுப்பு ... இது போன்ற வித்யாசமான கதைகள் வரவேற்க வேண்டியவை

    ReplyDelete
  63. Sir, am not getting any reply for my mails. At least if any of your office person reply, will be ok.
    Today also I sent a revised logo for Jumbo comics. Please just confirm the receipt. Later you can write to me if you like or don't.

    The revision of logo is based on some of the comments above. Thanks all, for their comments.

    ReplyDelete
  64. சார், தயவுசெய்து மார்டின் கதைகள் ஜம்போ போல் ஸ்பெஷலா வேனுங்கரவங்க வாங்கர மாதிரி தனியா போடுங்கள் என்னால் படிக்க முடியல.

    ReplyDelete
  65. "மெளனமாயொரு இடிமுழக்கம்...!!!& நரகத்திற்கு நேர்பாதை"

    *மெக்ஸிகோ- டெக்ஸ், கேப்டன் டைகர், டியூராங்கோ& பல கெளபாய் கதைகளிலும் இந்த வார்த்தை அடிக்கடி இடறும். மெக்ஸிக மண்ணில் கால் வைக்காமல் ஒரு சாகசமும் பரபரப்பான கட்டத்தை எட்டாது. யாருடைய கதைகளிலாவது லேசான தொய்வு வருவது போல தோன்றினால் மெக்ஸிகோவுக்கு ஒரு நடை போய் வந்தால் பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.

    *19ம் நூற்றாண்டு முழுதும் நீடித்த உள்நாடடு யுத்தம், அவ்வப்போது தோன்றும் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள், மண்ணின் மைந்தர்கள் பூர்வகுடிகள் செவ்விந்தியர்கள், ஆயுதங்களை விற்கும் அரசியல் செல்வாக்கு படைத்த உள்ளூர் பிரமுகர்கள். இத்தனை கலவையான சூழல் கிட்டியவுடன் படைப்பாளிகள் பின்னிப்பெடல் எடுத்து விட்டனர்.

    *அவ்வளவு ஏன் உலகப்புகழ்பெற்ற இரத்தப்படலம் தொடரே மெக்ஸிகோவின் அட்டகாசமான இயற்கையில் ஒரு பாகத்தை தன்னுள் இணைத்துக் கொண்டது.

    *மெக்ஸிகோ-அமெரிக்க யுத்தங்கள்; மெக்ஸிகோ உள்நாட்டு கிளர்ச்சிகள்; மெக்ஸிகோ பெடரல் vs கன்சர்வேட்டிவ் மோதல்கள் என 19ஆம் நூற்றாண்டு முழுதும் மெக்ஸிகோவை உலகின் பார்வையில் வைத்து இருந்தன. போதாக்குறைக்கு நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற பிரென்ச்- மெக்ஸிகோ 2வது யுத்தம் உச்சகட்ட பரபரப்பைக் கொணர்ந்தது. மழை விட்டாலும் தூறல் விடாது கணக்கா, 20ம் நூற்றாண்டிலும் கூட புரட்சிகள் தொடர்ந்தன.

    *தங்களுக்கு தரவேண்டிய முந்தைய கடனை வட்டியோடு வசூலிக்க ஸ்பெயின், பிரிட்டன் & பிரென்ச் கூட்டுப்படைகள் 1861ல் மெக்ஸிகோ வந்தன. வந்தமா அடிச்சமா, கொஞ்சம் ஆட்டைய போட்டமா கிளம்பிடனும்னு பிரிட்டனும், ஸ்பெயினும் வர; அங்கயே ஒரு பஞ்சாயத்து பண்ணி ஆட்சியை புடிக்கும் எண்ணத்தோடு பிரான்சு, மாக்ஸிமிலியன் என்ற ஆஸ்திரிய இளவரசனை அல்லைக்கையாக கொண்டு வந்தது.

    *இதை அறிந்தவுடன் பிரிட்டனும், ஸ்பெயினும் ஜெகா வாங்க, விடாத பிரான்சு மாக்ஸிமிலியனை பொம்மை அரசனாக்கியது. விடுவார்களா அமெரிக்கர்கள் தங்களின் உள்நாட்டு போருக்கு நடுவேயும் முன்னாள் மெக்ஸிகோ பிரசிடென்ட் ஜூவாரெஸ்க்கு உதவ, பிரான்சும் பின்வாங்க, மாட்டிக்கொள்ளும் மேக்ஸிமிலியன் தூக்கில் தொங்கவிடப்படுகிறார்.

    *இந்த மாக்ஸிமிலியன் அமுக்கி வைத்த தங்கப்புதையலை தேடித்தான் நம்மாளு ஜேசன் ஃப்ளை மெக்ஸிகோ வர்றாரு. அது நமக்கெலாம் மனப்பாடமா தெரியும்.

    *சரி நிஜ மாக்ஸிமிலியனுக்குத்தான் மெக்ஸிகோ ராசியில்லை; கதையில் வரும் கற்பனை மாக்ஸிமிலியனுக்காச்சும் மெக்ஸிகோ ஆதாயம் தருமா என டியூராங்கோவோடு எட்டிப் பார்ப்போம் வாருங்கள்.....

    *ஜெர்மனியில் பிறந்து காதல் தோல்வியாலும், எதையும் சாதிக்க முடியா வெத்து வேட்டு எனப் பெயர் எடுத்த மாக்ஸிமிலியன் வான் ரூஹென் பெர்க் எனும் மேல்தட்டு இளைஞன் எதையாவது சாதிக்கனும் என மெக்ஸிகோ வருகிறான்.

    *மெக்ஸிகோ புரட்சிகளை நேரில் பார்த்து அந்த அனுபவங்களை கொண்டு ஒரு புத்தகம் எழுதும் கனவோடு புரட்சிகளின் மூலகமான வட மெக்ஸிகோ வந்து சேருகிறான். இதை சாதித்து விட்டால் கன்சர்வேடிவ் மியூனிக்கின் தெருக்கள் தன் புகழ்பாடும் என்பது அவனது அவா!தன் காதலும் வெல்லும் என அசறாத நம்பிக்கை.

    .......தொடரும்.....

    ReplyDelete
    Replies
    1. மெக்சிகோ பற்றி என்ன ஒரு அலசல். சூப்பர்

      Delete
  66. கட்டியாச்சு கட்டியாச்சு .........ஜம்போ காமிக்ஸ் சந்தா கட்டியாச்சு கட்டியாச்சு
    டபுள் குதிரை லோகோ சூப்பர்

    ..

    ReplyDelete
  67. இரட்டை சிங்கம்
    மகேஷ் சார் வச்சு லோகோ போடலாம்ல

    ReplyDelete
  68. Karthik Somalinga, Bangalore........நல்லா இருக்கு .....லோகோ வண்ண மயமா இருந்தால் ஈர்க்கும்

    ReplyDelete
  69. ஆசிரியர் மற்றும் நமது அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  70. விஜயன் சார், நமது அச்சுத்தரம் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது; நம்ப அச்சு நண்பர்கள் புகுந்து விளையாடுகிறார்கள். ஹார்ட் பௌண்ட் அட்டை எல்லாம் அசரடிக்கிறது.

    இந்த சாதனை பற்றி சொல்ல முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. "சாதனை" என்றெல்லாம் சொல்ல மாட்டேன் சார் ; பொதுவாய் அச்சுத் துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் சிறிதளவேனுமாவது நம்மிடமும் பிரதிபலிக்கின்றன என்று வேண்டுமானால் சொல்லுவேன் ! இன்றைக்கு சந்தையில் கிடைக்கும் printing inks சர்வதேசத் தரத்திலானவை ; ப்ராசஸிங்கில் நிகழ்ந்து வரும் jumps அசாத்தியமானவை ; அச்சு இயந்திரங்களில் மனிதத் தவறுகளைக் குறைக்கும் automations நிறையவே தலைதூக்கியுள்ளன ; உட்பொருட்களின் தரங்கள் கூடியுள்ளன !

      இப்போதெல்லாம் அச்சாகும் போதே, தானே ஸ்கேன் செய்து அச்சுத் தரத்தை தானே ரேட்டிங் செய்யும் தொழில் நுட்பங்களெல்லாம் வளர்ந்து விட்டன ! நம்மிடம் அத்தனை கூடுதல் நுட்பங்களெல்லாம் இல்லையென்ற போதிலும், முந்தைய நாட்களுக்கு இப்போது தேவலாமென்பேன் !

      Delete
    2. நன்றி விஜயன் சார். நம்மை பொறுத்தவரை அச்சுத் தரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம்.

      Delete
  71. விஜயன் சார், கடந்த வருடம் ப்ரின்ஸ் ஸ்பெஷலில் நமது வாசகர்கள் படத்தை அச்சிட்டு அமர்க்களப்படுத்தி இருந்தீர்கள். அதற்கு முந்தைய டெக்ஸ் கதையில் அச்சிட்டு பல குழப்பங்கள். இதனை எப்படி சரிசெய்து அனைவரையும் ப்ரின்ஸ் ஸ்பெஷலில் சந்தோசப்படுத்த முடிந்தது? முடிந்தால் இந்த அனுபவத்தை பகிருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவே சிம்பிள் சார் ! And ஏற்கனவே விளக்கி இருந்ததும் தான் !

      போட்டோ அச்சிட்டுத் தருவதாய் வாக்குறுதி தந்திருந்த தருணத்தில் நான் நினைத்திருந்தது நார்மலான லேசர் பிரிண்டரில் black & white -ல் போட்டோக்களை அச்சிட்டு முதல் பக்கத்தில் பைண்ட் செய்வதென்று ! அதில் பெரிய சிரமும் இருந்திராது ; செலவும் இருந்திராது ! ஆனால் நண்பர்கள் சரமாரியாக அனுப்பத் தொடங்கிய போட்டோக்கள் எல்லாமே high resolution வண்ணத்தில் இருக்கத் தொடங்க, அவற்றை black & white பிரிண்ட்களாக்கிப் பார்க்கும் போது பின்னணிகள் & முகத்தில் விழும் நிழல்கள் என்று ஏகத்துக்கு கரேர் - கரேர் என்று வந்தன ! குடும்பத்தாரோடு ஆசை ஆசையாய் கலரில் அனுப்பியுள்ள போட்டோக்களை பூச்சாண்டி ஜாடைகளில் அச்சிடுவதற்குப் பதிலாய் வண்ணத்தில் டிஜிட்டலில் அச்சிட்டு ஸ்டிக்கராக ஒட்டிவிடல் தேவலாமென்று தோன்றியது ! ஜுனியரின் திருமணப் பத்திரிக்கை விநியோகத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த நேரமது என்பதால் ஆபீசில் அந்நேரம் நானும் இல்லை ! So ஸ்டிக்கர் செய்து டிராகன் நகரில் ஒட்டினோம் !

      அந்த இதழில் டெக்ஸ் சிக்குவோர் சில்லுமூக்கை ஒன்று பாக்கியில்லாமல் சிதறடிப்பது போல நண்பர்களும் ஒருசேர என்னை நாடுவது தொடர்ந்தது - நடுமூக்கில் 'பொளக்' என்று குத்தும் பொருட்டு ! ஜனரஞ்சகமான விளக்குமாற்றுச் சாத்துக்களும் ;பத்தி பத்தியாய், பக்கம் பக்கமாய் அர்ச்சனைகளும், சாபங்களும் இங்கும், இன்ன பிற தளங்களிலும் தொடர்ந்தன !

      "சரி...நான் அறிவித்தது இதைத் தானே ? Here you go !! " என்று black & white பூச்சாண்டி பாணியிலான லேசர் பிரிண்ட்களைப் போட்டு மறு இதழான பிரின்ஸ் ஆல்பத்தில் தரும் சபலம் ஒரேயொரு கணம் எழாது போகவில்லை தான் எனக்கு ! ஆனால் புரிதல்களில் நேர்ந்த குளறுபடிக்கு யாரை நோவானேன் ? என்றும் மறு கணமே தோன்றியது ! அப்புறமென்ன - முழுவண்ண முழுப்பக்க போட்டோக்கள் தொடர்ந்தன ; எல்லோரும் ஹேப்பி அண்ணாச்சி !

      Delete
    2. எமது ஆசிரியர் விஜயன் எடுத்த காரியங்கள் எல்லாம் ஜெயமே

      Delete
  72. ஆசிரியர் மற்றும் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் ஊழியர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  73. காமிக்ஸ் சொந்தங்களுக்கு மே தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  74. இரசவாதம்

    நம்புவீர்களா நண்பர்களே.

    யாம் சிறு குழந்தையாக இருந்தபோது நடந்தது பின்வரும் சம்பவம்.

    எமர்ஜென்சி காலகட்டம் அது.
    தேரடிமுட்டியில் நாங்கள் விளையாடுவோம்.அங்கு ஒரு அழுக்கு சாமியார் ஒருவர் இருப்பார்.பையா! என்று என்னை ஒருநாள் அழைத்தார்.நீ பள்ள பிடிக்கிற ஆள்ல வரமாட்டேன் போ.பையங்க வந்துடுவாங்கே நா பம்பரம் வெளையாடப்போகணும் என்றேன்.
    இன்னிக்கி யாரும் வெளையாட வரமாட்டாங்கே வா நாம குண்டு வெளயாடலாம் என்று 5,10 ஆட ஆரம்பித்தோம்.
    சிறுவனின் சந்தோசத்தோடு குக்கரக்காலில் எப்டிதான் விளையாடினாரோ அந்த வயதில் என்று இப்போது நினைத்தால் ஆச்சரியம்.
    அவர் சொன்னது போல ஒருபயலும் வரவில்லை.ஒரு மணி நேரமான பிறகு போதும்டா, இந்தா போயி கடல மிட்டாயி வாங்கிட்டு வா என்றுக் கூறி 2பைசா, 3 பைசா குடுத்தார். 2 கடலை மிட்டாயி 5 பைசாக்கு வாங்கிட்டு வந்து குடுத்தேன்.
    வியர்வையில் பிசபிசுவென்று இருந்தது. ஒன்றை எனக்கு தந்துவிட்டார்.
    தின்னுட்டு தண்ணிகுடிச்சிட்டு வா வேற வெளெயாட்டு ஆடலாம் னாரு.




    ReplyDelete
    Replies
    1. தொடர்கிறேன்
      தண்ணீர் குடித்து விட்டு வந்த போது மண்ணில் துருத்தியை புதைத்து வைத்து கரிகளை நிரப்பி அதில் பொற்கொல்லர்கள் தங்கத்தை உருக்கும் குகை வைத்து ஊதிக்கொண்டிருந்தார்.வாடா துருத்திய அடிச்சக்கிட்டே இரு என்றார்.
      குகைக்குள் சிறிது பாதரசத்தை ஊற்றினார். ரசம் கொதித்து ஆடிக்கொண்டிருந்தது."இந்த பக்கமா மாறி உக்காந்துக்க.இப்ப ஊத்த வாடையடிக்கும், காத்தடிக்கிற பக்கமா போயிடும்.மோந்து பாக்காத என்ன , என்று கூறியதோடு கரி நெருப்பில் வித்தியாசமான மரத்துண்டுகள் பலவற்றை அழுக்கு ஜோல்னா பைக்குள்ளிருந்து எடுத்து போட்டார்.
      இப்ப பாரு என்று கூறி விபூதி பையிலிருந்து வெள்ளையாய் ஒரு பொடியை சிட்டிகை அளவு எடுத்து கொதிக்கும் பாத ரசத்தில போட்டார்.
      புஸ் என்று சத்தத்தோடு மஞ்சள்சிகப்பாய் ஒரு புகை வெளியேறியது.
      மூக்க மூடிக்க பேராண்டி என்று அவரும் மூடிக்கொண்டார்." மோந்து பாத்தம்னா பைத்தியமாயிடுவோம்ல 👌 அதனால தான் சொன்னேன் என்று சொன்னது" இன்றும் பசுமையாக நினைவிலுள்ளது.

      தொடரும்
      J

      Delete
    2. தொடர்கிறேன்.
      போதும்பா என்றார்
      எனக்கு வேர்வை ஆறா ஓடுது.

      அழுக்குத்துண்டுல குகைய எடுத்து, "கைய நீட்டு" என்றார்.சுடப்போகுதுன்னு கத்தினேன்.
      சுடாது இப்ப பாரு என்று அவரது உள்ளங்கையில் ஊற்றினார்.கெட்டியாக மஞ்சள் கலரில் விழுந்தது.
      மினு மினுத்தது.
      தங்கம்டா இந்தா கைல வாங்கிப்பாரு என்று குடுத்தார்.
      சுண்டைக்காயளவு தங்கம்.சுடவில்லை ஆச்சரியம்.11வயசு பையனுக்கு தங்கத்த பத்தி என்ன தெரியும்!!!!

      Delete
    3. தொடர்கிறேன்.
      சத்தியமா யார்ட்டயும் சொல்லக்கூடாது என்று கூறினார்.அம்மாட்ட கூடவா என்றேன்.நீ சொன்னாலும் யாரும் நம்பமாட்டாங்க என்றார்.அந்த வெள்ளைப்பொடிய எடுத்து என் நெற்றியில் பூசிவிட்டு ஞானம் கிடைக்கும் என்று ஆசீர்வதித்தார்.

      மறுநாள் பார்த்த போது புலி படம் போட்ட ரெண்டு ரூபாய என் கையில திணிச்சாரு.போயி உனக்கு பிடிச்ச கத புஸ்த்தகம் வாங்கி படிச்சக்க என்றார்.

      வான் வெளிக்கொள்ளையரும் , காற்றில் கரைந்த கப்பல்களும் வாங்கினேன்.
      காச கண்டெடுத்தா வீட்ல கொண்டாந்து குடுக்காம கதபுஸ்த்தகமா கேக்குதுன்னு அம்மாவிடம் அடி வாங்கியது தனிக்கதை.

      இன்னமும் இருக்காரு.எத்தனயோ தடவ கேட்டும் அந்த ரசவாத வித்தையை ,"ஆட்கொல்லிடா",என்று தர மறுத்துவிட்டார்.


      Delete
    4. "குவிந்திருக்க வேணுமடா மலை போல் தங்கம்
      கொண்ட பெண்டாட்டியர்க்கோ இல்லை கூத்தியருக்கோ
      தவத்தை அனுசரிப்பார்க்கு சொன்ன வித்தை" என்று எச்சரித்ததோடு அந்த தங்கம் தங்காதுடா என்று கூறிவிட்டார்.

      எத்தனையோ பேரு அந்த ரசவாத வாயுக்காத்த தெரியாம மோந்து பாத்து பைத்தியமாயிட்டாங்கடா மறந்துடாத என்ன , வேணாம் போடா எனறு பல தடவை தடுத்தள்ளார்.

      ஒரு முறை கொடைக்கானலுக்கு கூட வந்தார்.குழந்த முருகன பாப்பம்டா என்று கூறி பேரிஜம் ஏரி போற வழியிலருந்து பிரிந்து செல்லும் பூம்பாறை கிராமத்துக்கு அழைத்துச்சென்றார். போகர்மெட்டுக்கு போகப்போறோம் என்று முதல்நாளே என்னிடம் கூறியிருந்தார்.
      உள்ளூர் பெருசு ஒருவரை துணைக் கொண்டு நடக்கத் தொடங்கினோம்.
      வழியில சிறு ஆறு குறுக்கிட அதன் கரையிலேயே நடந்தோம்

      முதல்நாளே பழையகால நீட்டுகுடை ரேண்டு வாங்கி தயாராக என்னிடம் தந்திருந்தார்.
      இறுதியில் போகர் மெட்டை அடைந்தோம்.
      இங்கன தாண்டா நம்மாளு போகரு நவபாஷாண முருகன செஞ்சிருக்கான்னாரு.

      பல இடங்களில் குழிகள்.ஆற்றினுள் காணப்பட்டன.

      "ஓரே பனிமூட்டமா இருந்துச்சி அந்த சூழ்நிலை".

      இந்த மரங்கள் தாண்டா அந்த பாஷாண காத்துகள கடத்துனதுக.
      இந்த குளுந்த எடத்துல தான் அந்த ஆளு பாஷாணத்த கட்டி முடிச்சிருக்காரு.
      மொதல்ல செஞ்ச தச உப்பு சில தான் காலைல நாம பாத்தது அது மூத்தது.
      இளையது நவ விஷம் சேத்துக்கட்டுன பழனி முருகன் தெரிஞ்சுக்க.வருஷந்தவறாம பூம்பாற முருகன பாத்துட்டே வா என்று கூறினார்.

      நடந்ததாலோ அலுப்பாலோ வித்தியாசமான அந்த இடத்தோட ஈரவாடையாலோ எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
      பத்தி கொளுத்தி நற்றேங்காயுடைத்து பூஜை முடித்தார்.

      Delete
    5. தொடரகிறேன்
      ஆசிரியரின் கேள்வியான இரசவாத தொடர்புக்கு வருவோம்

      ரசவாத சேர்க்கை chemical processன் byproducts தான் மூளையை ஸ்கிஸோப்ரினியா என்ற பித்து நிலைக்கு ஆளாக்கும் வாயு முகர்வுகள்.

      எமக்கு போகர்மெட்டு இடத்தில் எற்பட்ட மயக்க நிலைக்கு இன்னமும் அங்கு தேங்கியிருக்கும் மிச்ச பாஷாணங்களின் தாக்கமாக கூட இருக்க வாய்ப்புள்ளது.

      பூஜை முடித்த கையோடு பெருசு கெளம்பு ரெம்ப நேரம் இங்க இரூக்க உத்தரவு கிடையாது."இதுக்கு பேரே மதி கெட்டாஞ்சோலை", என்று அடித்து விரட்டாத குறையாக கடத்திவிட்டார்.

      எடிட்டர் சார்,

      இரச வாதம்

      பனிபடர்ந்த குளிர்ச்சி,

      அடர்ந்த காடு

      அமானுஷ்யமான ஏகாந்தம்

      பலகாலம் கழிந்தும் அங்குள்ள வானுயர்ந்த ஐந்தாறுபேர் கட்டி கைகோர்க்கும் அகண்ட மரங்கள்

      ஐந்து நிமிடம் கூட கடந்திராத அந்த காட்டின் வாடை நுகர்வு எமக்கு ஏற்படுத்திய மயக்கம்.

      உடனே அங்கிருந்து கிளம்பிவிட்ட எதிலும் நிதானம்காட்டும் பெரியவர்.

      நடந்ததெல்லாம் இன்னும் கனவு போல.

      ஓகேவா சார்.

      இப்போது மெ தி கவுக்கு வருவோம்.

      கதை நாயகி பிச்சியாகி விட உரக்கம்பெனி கெமிக்கலோ

      இல்லை ரசவாத சைட் எபக்டுகளோ காரணமாயிருந்திருக்கவும் வாய்ப்புண்டு.

      வன்புணர்வுக்கு ஆளானதாலோ

      அதை வெளிப்படுத்திட முடியாத தாக்கமோ

      இதையணர்ந்த தாயின் துர்மரணமோ

      அது கொணர்ந்த அதிர்ச்சியோ

      இருளா ஒளியா அறிந்திடா மன இறுக்கத்தில் காதலனை கொலை செய்தமையாலோ

      பலமுறை அந்த இறுக்க சூழல் இடத்திற்கு சென்று வந்ததாலோ

      கதைநாயகிக்கு ஸ்கிஸோப்ரினியா அதீத மனபிராந்தியாலோ

      அல்லது இதையெல்லாம் மனரீதியில் தாங்கும் உடல்வலிமை குறைவாலோ

      எதை வேண்டுமானாலும் இங்கே பொருத்திக்கொள்ளலாம்.

      மெல்ல திறந்த கதவிற்கு அப்பால் பல வழித்தடங்கள் எதார்த்தம்தானே.

      J


      Delete
  75. அனைத்து உழைப்பாளிகளுக்கும் மேதின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  76. மே தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  77. அன்பின் ஆசிரியருக்கு,

    வணக்கம். வெகு காலத்துக்குப் பிறகு நேற்றிரவு தீக்கனவுகள். உபயம் - திருவாளர் மார்ட்டினின் மெல்லத் திறந்தது கதவு. கடந்த சில ஆண்டுகளில் ஒரு பிரதியை வாசித்து முடித்து முதுகுத்தண்டு ஜில்லிட மறுகணமே மீண்டும் ஒரு முறை வாசித்து முடித்த புத்தகம் இதுதான். நம் காமிக்ஸில் வெளியாகியுள்ள திகில் கதைகளில் முதன்மையான கதை மெல்லத் திறந்தது கதவுதான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். இத்தனை பிரமாதமானதொரு கதைக்களனை உருவாக்கிய கதை ஆசிரியருக்கும் அதியற்புதமான ஓவியங்களின் வெளியே உயிர் தந்திருக்கும் ஓவியருக்கும் எனதன்பு. மிகக்குறிப்பாக ஓவியங்கள். எத்தனைதான் வண்ணத்தில் புத்தகங்கள் வந்தாலும் கறுப்பு வெள்ளை நமக்குள் உருவாக்கும் உணர்வுகளின் ஆதிக்கம் வேறு என்பதைத் தெளிவாய்ச் சொல்லும் ஓவியங்கள். கார்ல் ஜங், டி ஆம்பர்லே, டயானா, விக்கான்... எல்லாவற்றுக்கும் மேல் Schizophrenia எனப் பல்வேறு தளங்களில் பயணிக்கும் கதை ஒற்றைப்புள்ளியில் வந்து இணையும் தருணம் நம்மை ஆச்சரியமும் அதிர்ச்சியும் கொள்ளச்செய்கிறது. கதையின் ஓட்டம் நெடுகிலும் கிளாரிஸின் நிலைமை பற்றிய குறிப்புகளை வெவ்வேறு மனிதர்களின் வாயிலாக சொல்லிக் கொண்டு வருகிறார் கதாசிரியர். ஆனால் அவற்றை அறிந்திட நாம் வெகு கவனமாகக் கதையைப் பின்தொடர வேண்டி இருக்கிறது என்பதே நிதர்சனம். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதிய தகவல்கள் கிளம்பி வருகின்றன - தத்துவரீதியாகவும். இயற்கை மற்றும் இரசவாதம் பற்றிய நிறைய தகவல்கள். பிரமிப்பாகத்தான் இருக்கிறது. இது வரையிலான மார்ட்டின் கதைகளில் உலவி வந்த அமானுஷ்யச் சங்கதிகள் ஒரு வகையினில் அறிவியலும் மனச்சிதைவும் இயற்கையும் இணைந்து இந்தக்கதை வேறொரு தளத்தில் இயங்குகிறது. மனித மனத்தின் இருண்ட பக்கங்களை அதன் துயரங்களை எளிதில் பேசத் துணிந்திடாத விகாரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் மெல்லத் திறந்தது கதவு நம் பயணத்தில் மற்றுமோர் மகுடம்.

    பிரியமுடன்,
    கார்த்திகைப் பாண்டியன்

    ReplyDelete
    Replies
    1. அன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள் சார் ! சென்றாண்டின் மத்தியில் இந்தக் கதையைத் தேர்வு செய்த சமயம் - மார்ட்டின் வரிசையிலும் இதுவொரு மாறுபட்ட ஆக்கமே என்று எனக்கு எப்படியோ பட்டது ; ஒரு வேகத்தில் டிக் அடிக்கவும் செய்தேன் ! ஆனால் இத்தனை பரிமாணங்களைத் தன்னுள் அடக்கிய சாகசமாய் இந்தப் படைப்பு இருந்திடுமென்று சத்தியமாய் நான் எதிர்பார்த்திடவில்லை தான் !

      ஏகமாய் தலையைப் பிய்க்கச் செய்த பணியென்ற போதிலும், இது தந்த அனுபவப் பாடங்கள் ஒரு யுகத்துக்கு நினைவிலிருக்கும் ! கிளாரிஸ் வரைந்த ஓவியங்களை செல்போனில் மார்ட்டின் பதிவு செய்து இருப்பதை கதையின் இறுதியில் காண்கிறோம் (பக்கங்கள் 148 & 149 ) ! அந்த ஓவியங்கள் ஒவ்வொன்றையும் நேரம் எடுத்துக் கொண்டு பாருங்களேன் - குறிப்பாய் அந்த இறுதி ஓவியத்தை !! அது சொல்லும் சேதி என்னவென்று புரிந்திட இணையத்தில் ஒரு நீண்ட அலசலை வாசிக்க இயன்றதே உதவியது !! அந்த அலசலில் சொல்லப்பட்டிருந்த இன்ன பிற பளிச் கருத்துக்கள் :

      பொதுவாய் இது போன்ற பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சிறுமிகளை victim களாக ; நம் அனுதாபங்களுக்கு உகந்தோராய்க் காட்ட முற்படுவதே சராசரியான கதைக்களங்களின் வாடிக்கை ! ஆனால் இங்கோ, அந்தக் கறையைத் தாங்கி கொண்டே வளரும் பெண்ணானவள்,by contrast ஒரு executioner ஆகுகிறாள் ! விக்கான் மத நம்பிக்கை கொண்டதொரு நவீன சூன்யக்காரியாய் வளர்ந்து, தவறிழைத்திருக்கும் பாதிரிக்குமே தண்டனை வழங்குகிறாள் !

      இருண்டு கிடக்கும் அவள் வாழ்க்கைக்கு வெளிச்சம் தேட சுற்றியிருப்போர் முயற்சிக்க, தனக்கு இருளே ஏகாந்தமெனவும் தீர்மானிக்கிறாள் கிளாரிஸ் ! மனநோய்களின் கொடூரம் எத்தகையது என்பதை உணர்த்திட, கதாசிரியர் எடுத்திருக்கும் பிரயத்தனங்கள் அசாத்தியமென்பேன் !

      Delete
    2. சூப்பர் தோழா. இந்த வார இறுதியில் வாசிக்க விரும்புகிறேன். அருமையான விமர்சனம்.

      Delete
    3. அன்பின் ஆசிரியருக்கு,

      மீண்டும் மண்ணை நோக்கி வளைந்திடும் மரம்?!!! அதற்கான விளக்கத்தை அலீனாவின் வாயிலாக இரண்டு இடங்களில் நீங்கள் சொல்ல முயன்றிருக்கிறீர்கள் இல்லையா? அந்த விளக்கங்கள் இல்லையெனில் கதையின் அடிநாதத்தைப் புரிந்து கொள்ளவியலாமல் வேறு திசைகளில் வாசகர்கள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம். மொழிபெயர்ப்பில் உங்களுக்கு இருந்திருக்கக்கூடிய சவாலை உணர முடிகிறது. நல்லதொரு ஆக்கம். ஓவியங்கள் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். மாய உருவங்களாக மரங்கள் மாறும் தருணங்கள், கிளாரிஸ் தூக்கில் தொங்கும் காட்சி, மார்ட்டின் காட்டுக்குள் நுழையுமிடம், இறுதியில் அந்தப் புகைப்படங்கள்.. இன்னும் இதுபோன்ற நல்ல காமிக்ஸ்களை தமிழுக்குக் கொண்டு வர வாழ்த்துகள்.

      பிரியமுடன்,
      கார்த்திகைப் பாண்டியன்

      Delete
    4. /////பொதுவாய் இது போன்ற பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சிறுமிகளை victim களாக ; நம் அனுதாபங்களுக்கு உகந்தோராய்க் காட்ட முற்படுவதே சராசரியான கதைக்களங்களின் வாடிக்கை ! ஆனால் இங்கோ, அந்தக் கறையைத் தாங்கி கொண்டே வளரும் பெண்ணானவள்,by contrast ஒரு executioner ஆகுகிறாள் ! விக்கான் மத நம்பிக்கை கொண்டதொரு நவீன சூன்யக்காரியாய் வளர்ந்து, தவறிழைத்திருக்கும் பாதிரிக்குமே தண்டனை வழங்குகிறாள் !

      இருண்டு கிடக்கும் அவள் வாழ்க்கைக்கு வெளிச்சம் தேட சுற்றியிருப்போர் முயற்சிக்க, தனக்கு இருளே ஏகாந்தமெனவும் தீர்மானிக்கிறாள் கிளாரிஸ் ! மனநோய்களின் கொடூரம் எத்தகையது என்பதை உணர்த்திட, கதாசிரியர் எடுத்திருக்கும் பிரயத்தனங்கள் அசாத்தியமென்பேன் ! //////


      இது தான் அர்த்தமா சார் .....
      மீண்டும் வாசித்துவிட்டு வர்ரேன் ......

      Delete
    5. கிளாரைஸ் நார்மனின் கடைசி படம் intriguing one தான் ..

      கதை நடக்கும் நியூ இங்கிலாந்து பகுதியில் ( நியூ ஹாம்ப்ஷையர் இதில் அடங்கும் ) ...பிர்ச் மரங்கள் நிறைய உண்டு ..

      பனிக்காலத்தில் இதன் மேல் பனி படருமாயின் இளைய மரங்கள் வளைந்து மண்ணை தொடும் ..

      சிறு குழந்தைகள் இதன் கிளையை பிடித்து ஊஞ்சலாடினால் கிளையின் நுனி மண்ணைதொடும்..

      நியூ ஹாம்ப்ஷையர் பகுதியில் இது சாதரணமான காட்சி ...
      கதையில் கிளாரைஸ் நார்மன் செடியை வளைப்பதை

      புலிட்சர் விருது ராபர்ட் ப்ராஸ்ட் மூலம் நான் இப்படி புரிந்து கொள்ள
      நேர்ந்தது .
      Frost's writing of this poem was inspired by another similar poem "Swinging on a Birch-tree" by American poet Lucy Larcom and his own experience of swinging birch trees at his childhood.[2] Frost once said "it was almost sacrilegious climbing a birch tree till it bent, till it gave and swooped to the ground, but that's what boys did in those days".[3] Written in 1913-1914, "Birches" first appeared in Atlantic Monthly in the August issue of 1915 and was later collected in Frost's third book Mountain Interval (1916).[2][4]
      Text[edit]
      Birches
      When I see birches bend to left and right
      Across the lines of straighter darker trees,
      I like to think some boy's been swinging them.
      But swinging doesn't bend them down to stay
      As ice-storms do. Often you must have seen them
      Loaded with ice a sunny winter morning
      After a rain. They click upon themselves
      As the breeze rises, and turn many-colored
      As the stir cracks and crazes their enamel.
      Soon the sun's warmth makes them shed crystal shells
      Shattering and avalanching on the snow-crust—
      Such heaps of broken glass to sweep away
      You'd think the inner dome of heaven had fallen.
      They are dragged to the withered bracken by the load,
      And they seem not to break; though once they are bowed
      So low for long, they never right themselves:
      You may see their trunks arching in the woods
      Years afterwards, trailing their leaves on the ground
      Like girls on hands and knees that throw their hair
      Before them over their heads to dry in the sun.
      But I was going to say when Truth broke in
      With all her matter-of-fact about the ice-storm
      I should prefer to have some boy bend them
      As he went out and in to fetch the cows—
      Some boy too far from town to learn baseball,
      Whose only play was what he found himself,
      Summer or winter, and could play alone.
      One by one he subdued his father's trees
      By riding them down over and over again
      Until he took the stiffness out of them,
      And not one but hung limp, not one was left
      For him to conquer. He learned all there was
      To learn about not launching out too soon
      And so not carrying the tree away
      Clear to the ground. He always kept his poise
      To the top branches, climbing carefully
      With the same pains you use to fill a cup
      Up to the brim, and even above the brim.
      Then he flung outward, feet first, with a swish,
      Kicking his way down through the air to the ground.
      So was I once myself a swinger of birches.
      And so I dream of going back to be.
      It's when I'm weary of considerations,
      And life is too much like a pathless wood
      Where your face burns and tickles with the cobwebs
      Broken across it, and one eye is weeping
      From a twig's having lashed across it open.
      I'd like to get away from earth awhile
      And then come back to it and begin over.
      May no fate willfully misunderstand me
      And half grant what I wish and snatch me away
      Not to return. Earth's the right place for love:
      I don't know where it's likely to go better.
      I'd like to go by climbing a birch tree,
      And climb black branches up a snow-white trunk
      Toward heaven, till the tree could bear no more,
      But dipped its top and set me down again.
      That would be good both going and coming back.
      One could do worse than be a swinger of birches.

      Delete
    6. Summary[edit]
      When the speaker (the poet himself) sees a row of bent birches in contrast to straight trees, he likes to think that some boy has been swinging them. He then realizes that it was not a boy, rather the ice storms that had bent the birches. On a winter morning, freezing rain covers the branches with ice, which then cracks and falls to the snow-covered ground. The sunlight refracts on the ice crystals, making a brilliant display.
      When the truth strikes the speaker, he still prefers his imagination of a boy swinging and bending the birches. The speaker says he also was a swinger of birches when he was a boy and wishes to be so now. When he becomes weary of this world, and life becomes confused, he would like to go toward heaven by climbing a birch tree and then coming back again, because earth is the right place for love.

      Delete
    7. Analysis[edit]
      This poem is written in blank verse, with a particular emphasis on the “sound of sense.” For example, when Frost describes the cracking of the ice on the branches, his selections of syllables create a visceral sense of the action taking place: “Soon the sun’s warmth makes them shed crystal shells / Shattering and avalanching on the snow crust — / Such heaps of broken glass to sweep away…”
      Originally, this poem was called “Swinging Birches,” a title that perhaps provides a more accurate depiction of the subject. In writing this poem, Frost was inspired by his childhood experience with swinging on birches, which was a popular game for children in rural areas of New England during the time. Frost’s own children were avid “birch swingers,” as demonstrated by a selection from his daughter Lesley’s journal: “On the way home, i climbed up a high birch and came down with it and i stopped in the air about three feet and pap cout me.”
      In the poem, the act of swinging on birches is presented as a way to escape the hard rationality or “Truth” of the adult world, if only for a moment. As the boy climbs up the tree, he is climbing toward “heaven” and a place where his imagination can be free. The narrator explains that climbing a birch is an opportunity to “get away from earth awhile / And then come back to it and begin over.” A swinger is still grounded in the earth through the roots of the tree as he climbs, but he is able to reach beyond his normal life on the earth and reach for a higher plane of existence.
      Frost highlights the narrator’s regret that he can no longer find this peace of mind from swinging on birches. Because he is an adult, he is unable to leave his responsibilities behind and climb toward heaven until he can start fresh on the earth. In fact, the narrator is not even able to enjoy the imagined view of a boy swinging in the birches. In the fourth line of the poem, he is forced to acknowledge the “Truth” of the birches: the bends are caused by winter storms, not by a boy swinging on them.
      Significantly, the narrator’s desire to escape from the rational world is inconclusive. He wants to escape as a boy climbing toward heaven, but he also wants to return to the earth: both “going and coming back.” The freedom of imagination is appealing and wondrous, but the narrator still cannot avoid returning to “Truth” and his responsibilities on the ground; the escape is only a temporary one. The poem is full of ambiguity and it has got a very aesthetic sense to it.
      Overview[edit]

      Delete
    8. Overview[edit]
      Written in conversational language, the poem constantly moves between imagination and fact, from reverie to reflection. In the opening, the speaker employs an explanation for how the birch trees were bent. He is pleased to think that some boys were swinging them when he is suddenly reminded that it is actually the ice-storm that bends the trees. Thus, the poem makes some shift of thought in its description. An abrupt shift occurs when the speaker yearns to leave this earth because of its confusion and make a heaven-ward journey. But the speaker does not want to die by leaving earth forever. He wants to come back to this earth, because to the speaker, the earth is, though not perfect, a better place for going on. The speaker is not one who is ready to wait for the promise of afterlife. The love expressed here is for life and himself. This shows Frost's agnostic side where heaven is a fragile concept to him.[5] This becomes clear when he says the inner dome of heaven had fallen.
      Rich metaphoric thinking and imagery abound in the poem, where Frost presents some sharp descriptions of natural phenomena.[4]

      Delete
    9. Themes[edit]
      The poem centers on various themes of balance, youth, spirituality, and the natural world. It deals with the issue of how to reconcile between impulse and caution, between spontaneity and structure. This act of balancing remains a crucial theme in Frost's thought, and his typical suggestion for this is to execute things in a way that requires control and skill – be it a question of climbing and swinging a Birch tree or an act of writing or any other issue of real life. Each of us is disillusioned in life. There are so many problems and troubles that fill us with anxiety and tension. Sometimes we feel highly burdened. So we want an escape from our woes. We want to do something to reach a place of calm and exhilaration. The poet's desire to rise up on the branch of a birch is symptomatic of our desire to escape from the world of harsh realities. But he does not want to remain in the world of fancy forever. He wants a momentary escape from the troubles of the earth, only to return to it to enjoy all the charms it provides.[4] Youth also comes as a theme in this poem as the speaker imagines some boy despite coming across one.[6]

      Delete
    10. வளைந்து மண்ணைத் தொடும் மரத்தை கிளாரிஸ் இங்கே வரைவது தான் இளவயதில் அனுபவித்த கொடூரங்களின் வெளிப்பாடாக சார் !

      தாயுடன் இணைந்து தன்னை உருவாக்கியவரே, பின்னாட்களில் தன்னை நோக்கிக் காமத்தை திருப்புவது, ஜனித்த பூமியையே நோக்கி மரம் மீண்டும் திரும்புவது போல என்று கதாசிரியர் கருதுகிறார் ! மண்ணில் புதைந்து கிடக்கு வேர்களை நாடி அதன் கிளைகள் வளைந்து தேடுவது இயற்கைக்கு முரணாய் !

      Delete
    11. பின்னாட்களில் schizophrenia-வின் தாக்கத்தில், தன் காதலனை க்ளாரிஸ் கொலை செய்வதுமே இந்த வளைந்த மர கோட்பாட்டின் வெளிப்பாடு தான் !

      தனக்கு நல்லது செய்ய விரும்பும் காதலனை தீர்த்துக் கட்டி விட்டு, தன் வாழ்க்கையை தானே இருளில் ஆழ்த்திக் கொள்கிறாள் ! மண்ணை விட்டு வெளியேறி, வெளிச்சத்தை நோக்கி ; வானத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய வாழ்க்கையை மீண்டும் காரிருளுக்குள்ளேயே ஆழ்த்திக் கொள்ள வழி தேடுகிறது நோய் கண்ட அவளது மனது !

      Delete
    12. இப்போதுதான் மெல்ல மெல்ல கதை புரியத் தொடங்குகிறது.

      ஒவ்வொரு முறையும் படிக்கும் போதும், நுட்பமான பல விசயங்கள் புரிகிறது.
      ஆனால், அதை நீட்டி முழக்கி எப்படி விளக்குவது என்று தடுமாற்றமாகவே இருக்கிறது.

      அந்த தடுமாற்றம் படிக்கும் எழவே இல்லை என்பதே ஆச்சர்யம்.எனவேதான் மீண்டும் மீண்டும் படிக்கும் எண்ணத்தை நிறுத்த முடியவில்லை.

      வழக்கமான மார்டின் கதைகளைப் படித்திருப்போம்.
      இது

      அதுக்கும் மேல...

      Delete
    13. மார்ட்டின் விசாரணை சூப்பராக இருக்கும் போல் தெரிகிறது. இந்த வாரம் எப்படியாவது படித்து விடவேண்டும்.

      Delete
  78. மீண்டும் மண்ணை நோக்கி வளைந்திடும் மரம்?!!! அதற்கான விளக்கத்தை அலீனாவின் வாயிலாக இரண்டு இடங்களில் நீங்கள் சொல்ல முயன்றிருக்கிறீர்கள் இல்லையா? அந்த விளக்கங்கள் இல்லையெனில் கதையின் அடிநாதத்தைப் புரிந்து கொள்ளவியலாமல் வேறு திசைகளில் வாசகர்கள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம்.


    #######₹#


    உண்மை சார்...அந்த விளக்கங்களும் இல்லையெனில் என்னை போன்ற பாலகர்கள் புரிந்து கொள்வது கடினமே..:-)

    ReplyDelete

  79. உண்மை சார்...அந்த விளக்கங்களும் இல்லையெனில் என்னை போன்ற பாலகர்கள் புரிந்து கொள்வது கடினமே..:-)


    மீ ட்டூ....கெக் கெக் ....

    ReplyDelete
    Replies
    1. ///வளைந்து மண்ணைத் தொடும் மரத்தை கிளாரிஸ் இங்கே வரைவது தான் இளவயதில் அனுபவித்த கொடூரங்களின் வெளிப்பாடாக சார் !

      தாயுடன் இணைந்து தன்னை உருவாக்கியவரே, பின்னாட்களில் தன்னை நோக்கிக் காமத்தை திருப்புவது, ஜனித்த பூமியையே நோக்கி மரம் மீண்டும் திரும்புவது போல என்று கதாசிரியர் கருதுகிறார் ! மண்ணில் புதைந்து கிடக்கு வேர்களை நாடி அதன் கிளைகள் வளைந்து தேடுவது இயற்கைக்கு முரணாய் !//

      உண்மைதான் சார் !!

      அலீனாவின் வார்த்தைகள் மூலம் அது தெளிவாக புரிகிறது..

      மார்க் பெண்ட்லே -வை கொன்றதை சித்தரிக்கும் படத்தின் பின் இது கடைசியாக வருவதால் வேறு தத்துவார்த்த அர்த்தம் இருக்குமோ என்ற எண்ணத்தின் விளைவே அப்பதிவு


      Delete
    2. செல்வம் அபிராமி சார்.

      அப்படியே மேலே இருக்கிற எட்டுப்பக்க நோட்ஸையும் தமிழ்ப்படுத்தியிருக்கலாமே.!
      நானும்முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்.மூணு வரியைக்கூட தாண்ட முடியல.

      எனக்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை ஆங்கிலம்.

      Delete
    3. @ GP SIR!

      அவ்வளவையும் தமிழ்ப்படுத்த முயன்றால்

      கிளார்க்ஸ் கார்னர் வனப்பகுதியின் மூடு பனி உதவியில்லாமலே

      schizophrenic -ஆக மாறிவிடுவேன் :D

      சுருக்கமான பொருள் இதுவே ..

      இவ்வுலகின் கஷ்டங்களை எண்ணி அதிலிருந்து விடுபட நினைத்து

      மரத்தின் மேல் ஏறுகிறோம் ..

      ஆனால் உண்மையான சந்தோஷம் மண்ணில்தான் உள்ளது என்பது

      புரிந்து கிளை வழியாக கிளை மண்ணைத்தொடும் வண்ணம் வளைத்து

      கீழே இறங்கி இந்நிலையை உணர்ந்து நிற்கிறோம் ...

      Delete
  80. ஐசெர்ஜில் ஒரு psychic ????

    அவளுடைய psychic vibrations சித்திரங்களாக channelise ஆகின்றன ??

    ReplyDelete
  81. ///பின்னாட்களில் schizophrenia-வின் தாக்கத்தில், தன் காதலனை க்ளாரிஸ் கொலை செய்வதுமே இந்த வளைந்த மர கோட்பாட்டின் வெளிப்பாடு தான் !

    தனக்கு நல்லது செய்ய விரும்பும் காதலனை தீர்த்துக் கட்டி விட்டு, தன் வாழ்க்கையை தானே இருளில் ஆழ்த்திக் கொள்கிறாள் ! மண்ணை விட்டு வெளியேறி, வெளிச்சத்தை நோக்கி ; வானத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய வாழ்க்கையை மீண்டும் காரிருளுக்குள்ளேயே ஆழ்த்திக் கொள்ள வழி தேடுகிறது நோய் கண்ட அவளது மனது !///


    FANTASTIC....

    இந்த பாயின்ட் இதுவரைக்கும் தோணவே இல்லையே ....

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கதையின் ஒரிஜினல் பெயர் "தத்துவம் சொல்லும் மரம்" என்பதான பொருள் கொண்டது சார் ! So இந்தக் கதையின் அடிநாதத்தில் மரங்கள் இருந்திடல் அவசியம் என்ற மட்டுக்கு எனக்குப் புரிந்தது ! அப்புறம் கதையின் ஓட்டத்தில், கிளாரிஸ் இளவயதில் சந்திக்கும் அந்த incestual paedophilia பற்றி ரொம்ப ரொம்ப மெலிதானதொரு இழையை மாத்திரமே கதாசிரியர் இட்டிருக்க - எனக்குப் புரிந்தது போலவும், புரியாதது போலவும் இருந்தது ! இத்தனை மையமானதொரு விஷயத்தை நானொரு யூகமாய் எழுதித் தொலைத்து விடக்கூடாதேயென்று இங்கும் அங்குமாய் நிறைய துளாவிய போது சிக்கிய வெவ்வேறு அலசல்களை ஒன்றிணைத்த போதே லேசாய்ப் புரிந்தது !

      காதலன் மார்க் பென்டலே விஷயத்தில் பின்னணி புரிவது கொஞ்சம் சுலபமாயிருந்தது - simply becos கிளாரிசின் வாழ்வில் அன்பு காட்டி, ஆதரவுக் கரம் நீட்ட முனையும் முதல் ஆண்மகன் அவன் தானே ? அதாவது - தந்தைக்குப் பின்பாய் !! ஆனால் சகல நாசங்களின் துவக்கமுமே அந்த father figure தான் எனும் போது, கிளாரிசின் பேதலித்த மனமானது ரௌத்திரம் கண்டதில் வியப்பில்லை தானே ? And இருளே என் பாதை என்று கிளாரிஸ் தீர்மானிப்பதும் அதன் நீட்சியாய் !

      இந்த இடத்தில மத சார்ந்ததொரு உவமையையும் நானொரு அலசலில் வாசித்தது நினைவுக்கு வருகிறது ! சாத்தானுக்கு, / இருளின் மைந்தனுக்கு ஆங்கிலத்தில் Lucifer என்றுமொரு பெயருண்டு ! Lucifer என்றாலே "ஒளியின் வருகை" என்பது போலொரு பொருளுண்டு லத்தீன் மொழியில் ! இந்த Lucifer-ன் சித்திரங்களாய் வரையப்பட்டிருக்கும் எல்லா படங்களிலும் அவரது கையிலொரு தீப்பந்தம் இருப்பது போலவே இருக்கும் ! So இருளை நீக்க வந்தவரே, இறுதியில் இருளின் மைந்தராகிப் போவது நியதிகளின் முரண் ! இங்கும் கிளாரிஸ் தன் வாழ்க்கையை வாழ நினைப்பது மேலோட்டமாய் இருப்பினும், தன்னையே முற்றிலுமாய் இருளில் தொலைத்துக் கொள்வதே அவளது அலை பாயும் ஆழ்மனதின் இலட்சியம் !

      ஜில்லிடச் செய்யும் உணர்வுகளாய் நமக்குத் தோன்றினாலும், அந்த நோய்வாய்ப்பட்ட மனங்களின் torment தான் எத்தகையது ?!!

      Delete
    2. இந்தக் கதையின் uniqueness கதையின் கிளைகளை வித விதமாய் நாம் புரிந்து கொள்ளமுடியும் என்பதே என்பேன் ! So இது எனது புரிதல் சார்ந்த விளக்கம் மட்டுமே !!

      இன்னமும் இந்த இரசவாதி டி ஆம்பேர்லே சார்ந்த ஆராய்வுத் தகவல்கள் கதையோடு இணைந்திடும் புள்ளி பற்றி என்னுள் தெளிவில்லை !! Maybe இன்னும் அவகாசம் இருந்திருப்பின், மேற்கொண்டு ஆழமாய் தோண்ட முடிந்திருக்குமோ - என்னவோ !

      Delete
    3. ///இந்தக் கதையின் uniqueness கதையின் கிளைகளை வித விதமாய் நாம் புரிந்து கொள்ளமுடியும் என்பதே என்பேன் ! //

      AFFIRMATIVE SIR !

      //இன்னமும் இந்த இரசவாதி டி ஆம்பேர்லே சார்ந்த ஆராய்வுத் தகவல்கள் கதையோடு இணைந்திடும் புள்ளி பற்றி என்னுள் தெளிவில்லை///

      GUSTAVE DE AMBERLEY என கொடுத்து இரண்டு நாள்களாக தேடுகிறேன் சார்

      பொருத்தமான ரிசல்ட் இணையத்தில் வரவில்லை ..

      ஸ்காண்டிநேவியன் நார்ஸ் மித்தாலஜி

      WICCA

      பேரின்ப ரசவாதம் (HERMETIC TRANSMUTATION)

      பெஞ்சமின் பிராங்க்ளின்

      இன்னபிற குறித்தும் படிக்க முயல்கிறேன்

      கதாசிரியரின் பல ஆண்டுகள் உழைப்பினை சில நாட்களில் அறிய முற்படுவது இயலாத காரியம் என தோன்றுகிறது ..

      கதை மிகவும் காம்ப்ளக்ஸ் ஆனது ...

      அதனாலேயே ஆர்வம் இதன்மேல் பீறிடுகிறது ..

      ஒருவேளை இப்போது படித்துகொண்டிருக்கும் நண்பர்களும் பதிவிட துவங்குவார்காளாயின் இன்னமமும் உண்மைகள் புலனாகலாம் ..


      Delete
    4. Lucifer என்றாலே எனக்கு நினைவு வருவது lucifer matches .....stike any where matches தான்.........

      ரஜினி எப்பொருள் மீதும் தீக்குச்சியை தேய்த்து பத்த வைப்பாரே......

      ///Lucifer என்றாலே "ஒளியின் வருகை" என்பது////.......


      ....... பெயர் கரணம் பொருந்தி வருகிறது ......சார்



      Delete
    5. சார் ...குஸ்டாவ் டி அம்பர்லே கூட கிளாரிசின் ஹைப்பர் ஆக்டிவ் மனதின் கற்பனையோ - என்ற கோணத்திலும் சிந்தித்துப் பாருங்களேன் ?

      Delete
  82. அன்பின் ஆசிரியருக்கு,

    //குஸ்டாவ் டி அம்பர்லே கூட கிளாரிசின் ஹைப்பர் ஆக்டிவ் மனதின் கற்பனையோ - என்ற கோணத்திலும் சிந்தித்துப் பாருங்களேன் ?//

    உண்மை அதுதான். அப்படி ஒரு மனிதர் உண்மையில் இல்லை. அவருடைய இரசவாதத் தத்துவம் மனிதன் மகத்துவத்தையும் உன்னதத்தையும் அடைய நினைப்பதாக இருப்பது கூட கிளாரிஸின் மன விருப்பமே. ஆனால் கதை ஓட்டத்தில் ஒரேயோரு panel மட்டுமே இந்தப் பார்வையை மறுக்கும்படியாக உள்ளது. பக்கம்:103. மார்ட்டின் மற்றும் ஆலினாவின் உரையாடல். பொலோனியா (Bologna?!) நகரின் வாயில் பொறிக்கப்பட்டுள்ள டி ஆம்பர்லேவின் ஏலியா கிறிஸ்பிஸ் பற்றி மார்ட்டின் சொல்லுகையில் தானும் அதை வாசித்திருப்பதாக ஆலினா சொல்கிறாள். ஒருவேளை அவ்வாறு உண்மையில் இருக்கும் ஒரு வாசகத்தை ஆம்பர்லேதான் எழுதியதாக கிளாரிஸ் கற்பனையாகக் குறிப்பிட்டிருந்தாளா? இருக்கலாம். ஆக மரம் போல வெவ்வேறு திசைகளில் கிளை விரித்துச் செல்வதே இந்தக்கதையின் மிகப்பெரிய பலம்.

    பிரியமுடன்,
    கார்த்திகைப் பாண்டியன்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார்.

      பக். 145ல் மார்டின் அதைத்தான் குறிப்பிடுகிறார்.

      அலீனா அதை வண்மையாக மறுக்கிறாள்.எனக்கென்னமோ அலீனாதான் அடுத்த க்ளாரிஸோ எஎன எண்ணத் தோன்றுகிறது.காரணம் கடைசி பேனல் 'பாதையை 'ஒத்திருக்கிறது.

      Delete
  83. நண்பர்களின் கவனத்துக்கு.. கதாசிரியரின் பேட்டி..

    http://www.sergiobonelli.it/gallery/39017/L-albero-filosofico.html

    ReplyDelete
  84. மெல்ல திறந்தது கனவு... இதன் முடிவை பற்றி இங்கு விவாதிக்கலாமா....

    SPOILERS AHEAD...

    கதையின் முடிவில், அமானுஷ்யமான சங்கதிகள் ஒன்றும் இல்லை... அனைத்தும் மனசிதைவினால் தன் கற்பனைகளை நிஜமாக கொண்டு கிளாரிஸ் நடத்திய கோர தாண்டவமே என்று கூறி முடிக்கிறார்கள்... ஆனால், சிறுவயதில் அவளுக்கு நேர்ந்த கொடுமையை கொண்டே அவள் குழந்தை பதிம வயது குறித்தான ஆய்வை மேற்கொள்வதாகவும், அதன் காரணமாகவே சமூக கோட்பாடுகளை மீறி நடந்ததாகவும் குறிப்பிடுகிறார், மார்டின். ஆனால், கடைசி வரை அவருக்கு நடந்தது என்ன, தன் நண்பர்களுக்கு கூட சொல்லாத எந்த விஷயத்தை அலீனாவிடம் கூறினால் என்று தெரிவிக்கவில்லை.

    என் அனுமானம், அவர் தந்தை இழைத்த பாலியல் கொடுமையே என்று தோன்றுகிறது... அதன் காரணமாக தான் அவள் இப்படி புத்தி பேதலித்து போனால், என்ற விஷயம் தெரிந்த பின்னே, அவர் தாயும், தந்தையும் தூக்கிலிட்டி கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    கூடவே, அந்த இடத்தில் அதிகம் வசிப்பவர்களுக்கு, முன் கூட்டியே நடக்க போகும் விஷயங்களை படமாக வரையும் தன்மை இருப்பது, மார்டினின் காரை அவர் வரும் முன்பே, ஐசர்ஜில் வரைவது, கிளாரிஸ் போல அவருக்கும் ஒரு தொலைநோக்கும் சக்தி இருப்பதாக கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. //அதன் காரணமாகவே சமூக கோட்பாடுகளை மீறி நடந்ததாகவும் குறிப்பிடுகிறார், மார்டின். ஆனால், கடைசி வரை அவருக்கு நடந்தது என்ன, தன் நண்பர்களுக்கு கூட சொல்லாத எந்த விஷயத்தை அலீனாவிடம் கூறினால் என்று தெரிவிக்கவில்லை.//

      பக்கம் 127-ல் மார்டினுக்கும் அலீனாவுக்கும் இடையே நடக்கும் உரையாடலில் பூடகமாகவும்

      பக்கம் 150 -ல் அலினா மூலம் நேரடியாகவும் இவ்விஷயம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது

      Delete
    2. // தன் நண்பர்களுக்கு கூட சொல்லாத எந்த விஷயத்தை //

      தனது தோழி சாரா எல்லிசனிடம் சொல்லியிருக்கிறாள்

      ஆனால் மறைமுகமாக

      ''ஒருநாள் அது மீண்டும் நிகழ்ந்தது..ஊஹூம் ! என்னால் இனியும் அதை சகித்து கொள்ள முடியாது என்றாள்..

      நான் அதை புரிந்துகொண்டேன் ..

      சாராவுக்கு இது அப்போதே தெரியும் ..

      தான் எதுவும் அதை தடுக்க ,தனது தோழி மனச்சிதைவை நோக்கி செல்வதை தடுத்து நிறுத்த எதுவும் செய்யவில்லை என்ற குற்றவுணர்ச்சி சாராவை துன்புறுத்துகிறது .

      Delete
    3. அலீனாவிடம் இவ்விஷயம் பற்றி நேரடியாக கிளாரிஸ் சொல்வதற்கு
      காரணம் அலீனா ஒரு ''சக விக்கா (WICCA) என்பதால் இருக்கலாம்

      Delete
    4. //கூடவே, அந்த இடத்தில் அதிகம் வசிப்பவர்களுக்கு, முன் கூட்டியே நடக்க போகும் விஷயங்களை படமாக வரையும் தன்மை இருப்பது, மார்டினின் காரை அவர் வரும் முன்பே, ஐசர்ஜில் வரைவது, கிளாரிஸ் போல அவருக்கும் ஒரு தொலைநோக்கும் சக்தி இருப்பதாக கொள்ளலாம்.///

      கிளாரிசின் ஓவியங்கள் அவளுக்கு நேர்ந்த துன்பவியல் சம்பவத்தின் வடிகால்கள் ..

      சிலசமயம் தான் செய்யப்போவதையும் அவள் வரைந்துஇருக்கிறாள் .

      தூக்கில் தொங்கி மரணத்தை எட்டி பார்ப்பது

      மார்க்கை கொலை செய்வது போன்ற சித்திரங்கள் அவள் செய்யப்போவதை குறிப்பவை ..

      மற்ற படங்கள் அவளுடைய கடந்தகாலத்தவை ...

      கிளாரிசின் படங்கள் அவளை பற்றியது மட்டுமே ..

      ஆனால்

      ஐசெர்ஜில் வரைவது

      பிறரை பற்றியது ...இதற்கு தொலைநோக்கு சக்தி அவசியம்தான் ..

      அப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் இச்சக்தி பெற்றவர்கள் அல்ல ..

      ஐசெர்ஜில் ஒரு விக்காவாக இருக்க வேண்டும் ..

      ஆனால் அலீனாவை விட கீழ்மட்ட கட்டத்தில்

      ஒரு கட்டத்தை அடைந்தவர்களே விக்கா அடையாளத்தை தங்கள் மார்பில் ,கையில் அணியமுடியும்

      விக்கா -வினரின் WHITE MAGIC வொயிட் மேஜிக் சக்தி அனைவரும் அறிந்ததே .

      தனது சக்தியை சரியாக சேனல் செய்ய முடியாமல் ஐசெர்ஜில் தடுமாறுவது கதையில் தெரிகிறது ..

      மார்ட்டின் வருகையை அலீனா எதிர்பார்த்து இருப்பதும் இச்சக்தியினால்தான் ..

      அப்பகுதியில் வசிப்பதால் அல்ல ..

      இருவரும் விக்கா என்பதால் இருக்கக்கூடும்

      Delete
    5. பக்கம் ௧௨௮ லேயே அதைப் பற்றி பேசுகிறார்கள் பாருங்கள் சார் !

      Delete
  85. நண்பர்கள் அனுப்பிய லோகோ 4 & 6 இதற்கு முன் எங்கோ பார்த்தது போல உள்ளது. ஆனால் எங்கு என ஞாபகத்துக்கு வரமாட்டேன் என்கிறது.

    ReplyDelete
  86. //குஸ்டாவ் டி அம்பர்லே கூட கிளாரிசின் ஹைப்பர் ஆக்டிவ் மனதின் கற்பனையோ - என்ற கோணத்திலும் சிந்தித்துப் பாருங்களேன் ?//


    ///உண்மை அதுதான். அப்படி ஒரு மனிதர் உண்மையில் இல்லை///


    பக்கம் 125
    மார்ட்டின் '' டி அம்பர்லே பற்றிய ஆராய்ச்சியும் கிளாரிசின் கற்பனையின் ஒரு பக்கமா '' என அலீனாவிடம் கேட்கிறார் ..


    அதற்கு அலீனா கூறுவது '' நிஜமானதொரு கதாப்பாத்திரத்தோடு துவங்கிய அவளது ஆய்வினில் போகப் போக அவளது மனச்சிதைவின் பலனாக கற்பனைகளும் கலந்துவிட்டன ...

    நான் எடுத்து கொண்டது என்னவென்றால்

    டி அம்பர்லே என்ற கதாப்பாத்திரம் நிஜம்

    ஆனால் அவர் பற்றிய கட்டுரையில் கிளாரிசின் கற்பனைகள் ஊடுருவிவிட்டன என்பதே .

    கதையின் இறுதியிலும்

    மார்ட்டின்

    டி அம்பர்லே பற்றிய கட்டுரை கற்பனை,அவர் வாழ்ந்ததாக சொல்லப்படும் வீடு கற்பனை என்கிறாரே தவிர அப்படி ஒரு நபரே இல்லை என கூறவில்லை

    ReplyDelete