Powered By Blogger

Saturday, May 05, 2018

கேள்விகள் முடிவதில்லை !!

நண்பர்களே,

வணக்கம். மே பிறந்து வெகு சொற்ப நாட்களே நகர்ந்துள்ளன ; ஆனால் அதற்குள் இதழ்கள் சகலத்தையும் நாம் படித்து ; விமர்சித்து ; அலசி ; கொடியில் காயப்போட்டு விட்டது போலொரு உணர்வு எனக்கு ! இன்னமும் 25 நாட்கள் உள்ளன - அடுத்த செட் இதழ்கள் தயாராக !! இடைப்பட்ட இந்த அவகாசத்தைக் கடத்திச் செல்ல என்ன செய்வதென்று தெரியாததொரு திரு திரு முழியோடு உங்கள் முன்னே ஆஜராகி நிற்கின்றேன் ! Of course - கூரியர் டப்பாக்களை உடைத்து, இதழ்களைத் தடவிப் பார்த்த கையோடு மறுக்கா அவற்றை உள்ளேயே திணித்து விட்டு - "ஆங்...ட்யுராங்கோ வாக்கும் ? இவர் ஓவரா சுடுவாரே !!  மார்ட்டினா ...? நல்ல நாளைக்கே நாக்குத் தொங்க வைப்பாரே ? ம்ம்ம்..இது யாரு ?   புது ஆசாமிகளாக்கும் ? சரி... பாத்துக்கலாம் ..பாத்துக்கலாம் !!" என்றபடிக்கே பீரோவுக்குள் போட்டு விட்டு "நீட்"தேர்வின் அக்கப்போரை அலசப் புறப்பட்டிருக்கும் நண்பர்களும் நிச்சயம் நிறையவே இருப்பர் என்பது புரிகிறது ! So  இந்த மாதத்தில் இன்னமும் எஞ்சியிருக்கும் நாட்கள், அவர்களுக்கு ஒரு சூப்பர் மேட்டராக இருந்திடலாம்  ! ஆனால் மாதத்தின் முதல் வாரத்துக்குள்ளாகவே "பொட்டியைப் பிரிச்சோமா ? தலைப்பு முதல் சுபம் வரை போட்டுத் தாக்கினோமா ?!" என்று அசுர வேக வாசிப்பில் லயிப்போரும் சம அளவில் இருப்பது நிஜம் எனும் போது - அடுத்த கூரியர் வரையிலான அவகாசம் அக்னீ நட்சத்திரத்துக்கு இணையான சங்கடமாக அவர்களுக்கு  இருக்கக்கூடும் தான் !  Oh yes - மே மாதத்து இதழ்களைக் கடைகளில் வாங்குவோருக்கு அவகாசம் தந்திடுவது முக்கியம் ;  முதல் வாரத்தில், ஆன்லைனில் ஆர்டர் செய்யும்  பழக்கம் கொண்டோரின் ஆர்வங்களைத் தக்க வைப்பதும் அவசியம்  எனும் போது, ஒளிவட்டம் வேறெங்கும் நகராது மே pack மீதே லயித்துத் தொடர்ந்திடும் அவசியமுள்ளது ! So போன பதிவை மார்டினின் high octane ஆல்ப அலசலில் செலவிட்டோமெனில், இந்த வாரத்தின் ஒரு பகுதியை ட்யுராங்கோ & கோ.வோடு ஓட்டிப் பார்ப்போமா ? போன பதிவினில் கொஞ்சமாய் இது சார்ந்த பின்னூட்டங்கள் பதிவாகியிருந்தன தான் ; ஆனால் மார்ட்டினின் ராட்டின அனுபவத்தினில் அவையெல்லாமே பின்சீட்டுக்குப் போனது போல் பட்டது எனக்கு ! So "மௌனமாயொரு இடிமுழக்கம்" பற்றி இன்னும் கொஞ்சம் in depth அலச நேரமெடுத்துக் கொள்ளலாமே folks ? அதன் நீட்சியாய் இம்மாதக் கார்ட்டூன் புது வரவுகளையும் சேர்த்துக் கொள்ளலாமா ?  

Moving on, இந்த சித்திரக் கதை வாசிப்பின் முரண்களை எண்ணி மலைக்காது இருக்க முடியவில்லை ! சின்னதாய் சில சம்பவங்களை விவரிக்கிறேன் - நான் சொல்ல வருவது புரிந்திடும் ! சமீப மாதங்களில், நமக்கு முகவர்கள் இல்லா Tier 2 நகரங்களில் விற்பனைக்கு வழிகள் ஏதேனும் உள்ளனவா ? என்று அலசிட நம்மவர்கள் சுற்றி வந்தனர் ! ஆங்காங்கே உள்ள புத்தகக் கடைகளையோ, பத்திரிகை ஏஜெண்ட்களையோ அணுகி, நமது இதழ்களை விற்பனை செய்திட முயன்று பார்க்குமாறு கோரிக்கை வைத்தனர் ! அவர்களும் நம்மவர்களின் நச்சரிப்புகளுக்கு காது கொடுத்து, ஒரு சின்னத் தொகைக்கு trial ஆர்டர் தந்திட முன்வந்தனர் ! பார்த்து, கவனமாய்த் தேர்வு செய்து - மாயாவி ; லக்கி லூக் ; டெக்ஸ் வில்லர் போன்ற bestseller இதழ்களை மட்டும் அனுப்பி வைத்தோம் - அதுவும் இயன்றமட்டுக்கு ரூ.50 அல்லது ரூ.60 விலைகளுக்கு மிகாது ! அங்கே கடைகளில் ஓட்ட ஸ்டிக்கர்கள் ; விளம்பரப்படுத்த மித சைசில் பிளெக்ஸ் பேன்னர்கள்  என்றும் அனுப்பியிருந்தோம் ! ஒரு மாதம் ; இரு மாதங்கள் ; அட...மூன்று மாதங்கள் கழித்து ஆங்காங்கே விற்பனை நிலவரம் என்னவென்று பார்ப்போமே என்று ரவுண்ட் அடித்தால் கிறு கிறுக்கிறது தலை !! "பத்திரமா அப்டியே இருக்கு !!" என்பதே பொதுவான பதில் ! கொடுமையின் உச்சமென்னவெனில் - ரூ.5000-க்கு சரக்கு வாங்கியிருந்தார் வட மாவட்டத்தின் தலைநகரொன்றில் ! அதனில் ஒரேயொரு ஐம்பது ரூபாய் புக் மாத்திரமே விற்றிருக்க, பாக்கி ரூ.4950- க்கான சரக்கை போன வாரம் திருப்பி அனுப்பியுள்ளார் !! இத்தனைக்கும் ஊருக்குள் ஒரு மையமான இடத்தில கடை வைத்துள்ளவர் தான் !  ஒன்றேகால் இலட்சம் ஜனத்தொகை கொண்ட அந்த ஊரில் ஒரு  90 நாள் அவகாசத்தில் ஐயாயிரம் ரூபாய்க்கான காமிக்ஸை இம்மி கூட விற்றிட முடியவில்லை என்பது என்ன மாதிரியான stat என்று இனம் சொல்லத் தெரியவில்லை எனக்கு ! இதே பாணியில் நெல்லை மண்ணின் ஒரு மித நகரில், 6 மாதங்களில் 75 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் நடந்துள்ளது - பஸ் ஸ்டாண்ட் கடைதனில் !! என்ன கொடுமை சார் ?! இன்னமும் இதே போல புதுப்புது நகர்களில் தேவுடு காத்து வரும் நமது இதழ்களின் பட்டியல் நீளமானது !! அதே வேளையில், பத்துக்கு-இரண்டு என்ற கதையாய் சிற்சில நகரங்களில் நமது பரிசோதனைகள் லேசான பலன் தருகின்றன தான் !  தேனியில் விற்கிறது ; பெரியகுளத்தில் சொதப்புகிறது ! தஞ்சையில் விற்கிறது ; புதுக்கோட்டையில் கவிழ்ந்தடித்துப் படுக்கிறது !! So வேகாத வெயிலிலும் சளைக்காது சுற்றிச் சுற்றி வர வேண்டியுள்ளது - இங்கே ஜெயம் கிட்டி விடாதா ? என்ற எதிர்பார்ப்பில் !! ஒருபக்கம் இத்தகைய பரவலான அசுவாரஸ்யம் கோலோச்ச - இன்னொருபக்கமோ, கண்ணுக்குத் தெரியும் காமிக்ஸையேல்லாம் படிக்கத் தயாராயொரு சின்னஞ்சிறு வட்டம் !! என்ன மாதிரியான முரண் இந்த comics வாசிப்பினில் தான் !! 

இந்தக் கள நிலவரத்தில் தான்- முன்னெப்போதையும் விட நான் உங்கள் குடல்களை ரொம்பவே உருவ முனைந்து வருகிறேன் - ரசனை சார்ந்த கேள்விகளோடு ! தொடரும் காலங்களில் "The Best" என்பதைத் தாண்டி வேறு எதையும் உங்கள் சிரங்களில் சுமத்தும் கூமுட்டைத்தனங்களை செய்திடலாகாது என்பது தெளிவாய்த் தெரிகிறதால் தான் - "ராமசாமி இருக்கட்டுமா ? குழந்தைசாமி போகட்டுமா ?" என்ற ரீதியில் on the fence நாயகர்கள் பற்றி ஓயாது கேட்டுக் கொண்டிருந்தேன் ! And மௌனமாய் தொடரும் வாசக நண்பர்களின் மௌன விரதங்களைக் கலைக்கவும் நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் காவடி எடுத்துத் திரிவது - அவர்களது ரசனைகளின் நிஜப் பரிமாணங்களை அவர்களிடமிருந்தே ஊர்ஜிதம் செய்து கொள்ளவே !! "இதுவே பரவலான அபிப்பிராயம் !" என்று நானாகவே எதையாச்சும் யூகித்துக் கொண்டு 2019 -ன் அட்டவணையை தயார் செய்து வைக்க  - "பேச்சியம்மாளுக்குக் கல்தா தந்தது ஏன் ? அய்யாப்பிள்ளையை அறிமுகம் செய்யச் சொல்லிக் கேட்டேனா ?" என்ற ரீதியில் கேள்விகள் எழுந்திடக் கூடாதல்லவா ? So அந்த வினவல் பட்டியலில் மிச்சம் மீதியிருக்கக்கூடிய நாயக / நாயகியரைப் பற்றி இந்த வாரம் கேட்டு வைத்து விடட்டுமா ? ஆண்டின் ஒரு பாதியைக் கடக்கும் வேளை நெருங்கி விட்டிருக்க,  உங்களின் தற்போதைய சிந்தைகளை சந்தேகங்களின்றித் தெரிந்து கொண்டால் தானே - யாரோடு பயணிப்பது ? யாருக்கு டாட்டா காட்டுவது ? என்ற இறுதித் தீர்மானங்கள் எடுக்க இயலும் ? So - please do take time to answer folks :

ஏற்கனவே மகளிரணியின் ஒரு பென்சில் இடைப் பெண்மணியோடு துவங்கிய  அலசலைத் தொடரவிருப்பது நமது ஆதர்ஷ இளவரசியோடு ! நமது துவக்க இதழ் நாயகி ; அந்நாட்களது லேடி ஜேம்ஸ் பாண்ட் ; black & white நாட்களில் கைக்கு அடக்கமான இதழ்களைத் தயாரிக்க உதவியவர் ; இன்றைக்கும் ஒரு சிறு அணியின் இறைவி இவர் !! ஆனால் ஆண்டுக்கொரு சின்ன விலையிலான slot மட்டுமே என்ற சூழலிலும், விற்பனையில் சரளம் missing என்பதே யதார்த்தம் ! ஒரேயடியாக கவ்பாய் ரசனைகள் நம்மை இது போன்ற த்ரில்லர் கதைகளிலிருந்து தூரப்படுத்தி விட்டனவா ? அல்லது கலர் ; ஆர்ட்பேப்பர் என்ற பாணிகளை பார்த்து விட்டு இந்த black & white சித்திரங்களிலான கதைகள் சுகப்பட மாட்டேன்கின்றனவா ? அல்லது - ஒரு குட்டி ரசிகர் மன்ற அணி இந்த நாயகியைத் தூக்கிச் சுமந்து கொண்டாடும் அலப்பறையில்  எஞ்சியுள்ளோரிடம்  ஒரு வித ஒவ்வாமை ஒட்டிக் கொள்கிறதா ? அந்த ஒவ்வாமை in turn மாடஸ்டி மீதே திரும்புகிறதா ? விடை சொல்ல முனைவீர்களா ப்ளீஸ் ? இங்கே மாடஸ்டி ரசிகர் அணியின் மனதை நோகச் செய்வது சத்தியமாய் என் எண்ணமல்ல ; in fact இளவரசியின் fan following-ல் நானும் ஒருவனே ! ஆனால் சில தருணங்களில் "மா.ர.ம."- தனது குறைச்சலான எண்ணிக்கையை ஈடு செய்திடும் பொருட்டு பிரச்சார வால்யூமை ஜாஸ்தி செய்வது - தம்மை அறியாது செய்திடும் ஆர்வங்களின் கோளாறோ  ? என்று எனக்குத் தோன்றியுள்ளது ! அது என் பிரமையாய் மட்டுமே இருப்பின், மகிழ்வேன் ! எது எப்படியோ - தொடரும் காலங்களில் மாடஸ்டியை எவ்விதம் பார்த்திடுவீர்களோ ? என்பதே இப்போதைய எனது கேள்வி !

A bit more down the line - நமது ரிப்போர்ட்டர் ஜானிக்கு ஆண்டுக்கொரு slot என்ற பார்முலா தொடர்ந்து வருகிறது ! வண்ணத்தில் ; அந்தப் பரிச்சயமான சித்திரங்களில் இவரது ஆல்பங்கள் ஒரு செம visual treat என்பதில் ஐயமே இருந்திட முடியாது ! ஆனால் எல்லாக் கதைகளுமே கிட்டத்தட்ட ஒரே template தானே ? என்ற கேள்வியும் இங்கே அவ்வப்போது எழுப்பப்டுகின்றன தான்! "அட...பரவாயில்லை ; அந்த template தான் எங்கள் ரசிப்பிற்குரியது !" என்று சொல்வீர்களா guys ? அல்லது - ஒரு மாற்றமாய் - ஜானியின் புது அவதாரை ; அந்த ஜானி 2.0-ஐ முயற்சித்துப் பார்க்கும் நேரமிது என்பீர்களா ? So இங்கே எனது கேள்வி - ஜானியின் எதிர்காலம் குறித்தல்ல ; ஜானியின் பாணியின் எதிர்காலம் எதுவென்பது பற்றியே ! இதில் ஏற்கனவே 3 ஆல்பங்கள் வந்து விட்டன என்பதால் - புது பாணிக்கு அங்கே வாசகர்கள் தம்ஸ்-அப் தந்துள்ளார்கள் என்றே எடுத்துக் கொள்ளலாம் ! பாருங்களேன் : 
கார்ட்டூன் ஜானரில் கேள்விகளை நான் எழுப்பப் போவதில்லை - simply becos ஏகப்பட்ட தருணங்களில் smurfs  ; ரின்டின் கேன் ; க்ளிப்டன் ; மந்திரியார் ; லியனார்டோ தாத்தா போன்றோரை danger zone-ல் வைக்கக் கோரி உங்கள் பரிந்துரைகள் என்னை நிறையவே எட்டியுள்ளன ! So அவற்றின் மீது தீர்மானிக்கும் முன்பாக  இந்தாண்டின் எஞ்சியுள்ள கார்ட்டூன் இதழ்களின் performance-களைப் பார்க்கும் அவசியமும் இருப்பதாய் உணர்கிறேன் ! 

And உள்ளதில் எதைத் தக்க வைப்பது ? எதற்குக் கல்தா கொடுப்பது ? என்ற அலசல் ஒரு பக்கமெனில் - நமது தற்போதைய டார்லிங்கான   கௌபாய் ஜானரில் ஒரு உச்ச வரம்பை எட்டிப் பிடித்து விட்டோமா ? அல்லது - இன்னமும் குதிரைப்பசங்களை வரவேற்கவே செய்வோமா ? என்ற கேள்வியையும் முன்வைக்கிறேன் ! கமான்சே தற்காலிக பிரேக் எடுக்கும் கையோடு ட்ரெண்ட் என்ற புது கௌபாய் களம் காண்கிறார் ! In fact - ஜூலையில் அவரது முதல் ஆல்பம் வரவுள்ளது & இது நிச்சயமாய் நம்மைக் கட்டுண்டு வைக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! So டெக்ஸ் ; டைகர் ; ட்யுரங்கோ ; ட்ரெண்ட் என்று ஓடும் இந்த கௌபாய் எக்ஸ்பிரஸில் இன்னமும் கூடுதலாய்ப் பெட்டிகளை இணைக்கலாமா ? அல்லது பிடுங்கியுள்ள ஆணிகளே போதுமானவை என்பீர்களா ? Thoughts ப்ளீஸ் ?
கிளம்பும் முன்பாய் - ஜூன் பற்றிய ஒரு குட்டி அட்வான்ஸ் சேதி ! காத்திருக்கும் லார்கோ ஆல்பம் - பல விதங்களில் பல surprises தரவுள்ளதொரு இதழ் ! வான் ஹாம் இந்தத் தொடரிலிருந்து ஒய்வு பெற்றுக் கொள்ளத் தீர்மானித்தது ஏனென்றும் இதனில் விடையிருக்கும் !!! 

அப்புறம் ஜம்போ logo டிசைனிங் இன்னமும் தொடர்கிறது - முழுத் திருப்தி தரும்விதமாய் எந்தவொரு ஆக்கமும்  இதுவரையிலும்  இல்லையென்பதால் ! So இன்னமும் எதையேனும் உருவாக்கிட நேரமிருப்பின், please do keep them coming !! 

Bye all ! See you around ! Have a cool weekend !!
P.S : திங்கள் & தொடரும் புதன் எங்கள் நகருக்கே விடுமுறை - சித்திரைப் பொங்கலை முன்னிட்டு ! So நம் அலுவலகமும் மேற்படி 2 நாட்களும் லீவிலிருக்கும் !

244 comments:

  1. Replies
    1. வாழ்த்துக்கள் பாலா சார்.

      Delete
    2. நன்றி ஸ்ரீதர்

      Delete
  2. விஜயன் சார், உங்கள் இருமல் எப்படி உள்ளது.?

    ReplyDelete
  3. // டெக்ஸ் ; டைகர் ; ட்யுரங்கோ ; ட்ரெண்ட் என்று ஓடும் இந்த கௌபாய் எக்ஸ்பிரஸில் இன்னமும் கூடுதலாய்ப் பெட்டிகளை இணைக்கலாமா ? அல்லது பிடுங்கியுள்ள ஆணிகளே போதுமானவை என்பீர்களா ? //

    பிடுங்கியுள்ள ஆணிகளே போதுமானவை சார்.

    ReplyDelete
  4. விஜயன் சார்,
    ஜானி 2.0-ஐ முயற்சித்துப் பார்க்கும் நேரமிது. முடிந்தால் மூன்று கதைகளை இணைத்து ஒரே புத்தகமாகத் தரளாமே?

    அல்லது

    ஜானி க்ளாஸிக் என்று இரண்டு பழைய மற்றும் ஒரு புதிய கதை என குண்டுப் புத்தகமாகத் தரளாமே? (சிக் பில் க்ளாசிக் போல்)

    ReplyDelete
  5. விஜயன் சார், ஆண்டுக்கு ஒரு இளவரசி கதையை வண்ணத்தில் பாக்கெட் சைஸில் அல்லது பழைய கிளாசிக் கதையை முயற்சிகளாமே?

    ReplyDelete
    Replies
    1. ####(ஆண்டுக்கு ஒரு இளவரசி கதையை வண்ணத்தில் பாக்கெட் சைஸில் அல்லது பழைய கிளாசிக் கதையை முயற்சிகளாமே?###

      +1 வரவேற்கிறேன்
      &

      புதிய கதைகள் இருந்தால் அவைகளையும் முயற்ச்சிக்கலாம்..

      Delete
    2. பாக்கெட் சைஸ் என்பதெல்லாம் நாம் ஓவியர்களைக் கொண்டு வெட்டி, ஒட்டி, ஓரஞ்சாரங்களை நீட்டி வந்த நாட்களின் சாத்தியங்கள் சார் ! அன்றைக்குமே மாடஸ்டியை பாக்கெட் சைசுக்கு மாற்றுவதென்பது பிராணன் போகும் பணி ! இன்றைக்கு அதனைச் செய்ய நினைப்பது வேலைக்கே ஆகாத முயற்சி !

      தவிர, ஒரு கதை நாயகி / தொடர் பிடித்திருப்பின் அவரை ரசிக்க இது போன்ற ஜிகினா வேலைகள் அவசியப்படுவானேன் ? நார்மலாய் வந்தாலே போதாதா ?

      Delete
    3. கடந்த வருடம் வந்த கழுகு மலைக் கோட்டை போன்று முயற்சி செய்யலாமே?

      Delete
  6. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  7. // டெக்ஸ் ; டைகர் ; ட்யுரங்கோ ; ட்ரெண்ட் என்று ஓடும் இந்த கௌபாய் எக்ஸ்பிரஸில் இன்னமும் கூடுதலாய்ப் பெட்டிகளை இணைக்கலாமா ? அல்லது பிடுங்கியுள்ள ஆணிகளே போதுமானவை என்பீர்களா ? //
    ட்ரெண்ட் எப்படி இருக்கிறார் என்று பார்த்து விட்டு பின்னர் இந்த கேள்வி கேட்டு இருக்கலாம்.சார்.

    ReplyDelete
  8. இளவரசி வேண்டும்

    ReplyDelete
  9. விஜயன் சார், லேடி S இது வரை வந்த கதைகள் அனைத்தும் சுமார் என்னைப் பொறுத்தவரை. நானும் இவர் கதை வரும் நாட்களில் சிறப்பாக இருக்கும் என நினைத்து ஏமாந்தது தான் மிச்சம். இவருக்கு சில வருடங்களுக்கு ரெஸ்ட் கொடுக்கலாம் சார்.

    இவர் கதையை விட பென்சில் அம்மணி கதை எவ்வளவோ மேல்.

    ReplyDelete
    Replies
    1. தலைவரே,
      கேள்வி மாடஸ்திய பத்தி தானே!!??

      Delete
    2. இந்த ரெண்டு புள்ளைகள் மீது மனம் ஒட்டவே இல்லை....

      Delete
    3. மாடஸ்டி ஆல்பம்் வரட்டும்....ட்டும்...டும்

      Delete
  10. பழைய ஜானி கதைகள் ஒரே டெம்லேட்டில் வருவது போர்.
    புதிய ஜானி முயற்சி செய்து பார்க்கலாம் சார்.

    ReplyDelete
  11. ட்ரெண்ட் அவர்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் சார் ...அவரை களம் காண செய்யுங்கள...

    ReplyDelete
  12. சரி சரி வந்துட்டோம்

    ReplyDelete
  13. மாடஸ்டி பழைய கதைகள் போல் புதியது இருந்தால் 100 விலையில் நான்கு அல்லது மூன்று கதைகள் முயற்சி செய்யலாம் சார். சில கதைகள் 35 பக்க வரிசை உள்ளடக்கியதாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் 3 அல்லது 4 கதைகள்.

    ReplyDelete
    Replies
    1. அட..ஒற்றை இதழுக்கே அடிப்பது லாட்டரியாக இருக்கும் போது, மூன்று, நான்கு என்று அடுக்கிப் போவதில் என்ன சார் சாதிக்கப் போகிறோம் ?

      Delete
    2. விற்பனை என்ற ஒன்றை அடிக்கடி நண்பர்கள் மறந்து விடுகிறீர்கள்.

      Delete
  14. இளவரசி - விற்பனையில் மந்தம் காட்ட (ஏற்கனவே நாம் அறிந்த) காரணங்கள் :

    1. பழைய, கீச்சல் பாணி, கருப்பு-வெள்ளை ஓவியங்கள்!


    2. பழைய, கீச்சல் பாணி, கருப்பு-வெள்ளை ஓவியங்கள்!


    3. பழைய, கீச்சல் பாணி, கருப்பு-வெள்ளை ஓவியங்கள்!

    மேற்கூறிய காரணங்களைத் தவிர, இளவரசிக்கு வேறு எதுவும் தடையில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஆனால் அந்த ஓவிய பாணிகள் தான் நாள் 1 முதலாகவே இருக்குமொரு விஷயம் தானே ?

      Delete
    2. சார்!! இப்பவும்கூட வருசத்துக்கு ஏழெட்டு காமிக்ஸ் புக்கு மட்டும்தான் வரும் என்ற நிலையிருந்தால் அந்த கீச்சல் பாணி ஓவியமெல்லாம்கூட ஒரு குறையாகவே தோன்றாதுதான்!!

      ஆனால் சமீப வருடங்களில், நம் தயாரிப்புத் தரம் ஒரு உச்சத்தைத் தொட்டான பின்னே, கீச்சல் பாணிகள் நமக்குக் கொஞ்சம் 'கசமுச கொசமுச' பாணியாகத் தெரிவதிலும் வியப்பில்லைதானே?!!

      Delete
    3. ////அல்லது கலர் ; ஆர்ட்பேப்பர் என்ற பாணிகளை பார்த்து விட்டு இந்த black & white சித்திரங்களிலான கதைகள் சுகப்பட மாட்டேன்கின்றனவா ? ////

      இதுவே உண்மை!!

      Delete
    4. ஒருவேளை, இதுபோன்ற கீச்சல் பாணி 'கசமுசா கொசமுசா' ஓவியங்களுடன் டெக்ஸ் கதைகள் வந்தாலுமே கூட, அவருக்கும் இதுவே கதி!

      Delete
    5. இன்னும் சுளுவா சொல்லணும்னா - survival of the fittest! தேர்வு செய்ய பளபளப்பா, வண்ணமயமா, டிஜிட்டல் பாணி ஓவியங்களோட புத்தகங்கள் நிறைஞ்சு கிடக்கும்போது இளவரசியின் இந்தமாதிரி 'கசமுசா கொசமுசா' பாணி புத்தகங்களைத் தேர்வு செய்திட (இளவரசியின் தீவிர ரசிகர்களைத் தவிர) வேறு யாருக்கு மனம் வந்திடும்?

      இதே மாடஸ்ட்டியின் சித்திரத்தரத்தை ( எப்படியாவது) மேம்படுத்தி, வண்ணம் பூசி, பளபளன்னு கொடுத்துப்பாருங்க - அக்கா விற்பனையில எப்படிப் பின்னுவாங்கன்னு!

      Delete
  15. Good comics nite every body!😎

    ReplyDelete
  16. மாடஸ்தியின்
    இது வரை வந்துள்ள கதைகளில் டாப் கதைகளை பாக்கெட் சைசில் தனிப்புத்தகமாக ( வருடத்திற்க்கு இரண்டு புத்தகங்கள் ) வெளியிடலாம்

    மாடஸ்தியை பிடிக்காம போனோர் முன் ஜென்மத்தில் மாடஸ்தியால் சாபம் பெற பட்டவர்களாவர்

    மற்றபடி நீங்க மாடஸ்தி யை வெளியிடலாம்ன்னு உங்களுக்கு தோணியிருக்கு அல்லது வெளியிடணும்ன்னு முடிவு பண்ணீட்டீங்க
    எடி சார்

    அப்புறமென்ன

    வாழ்த்துக்கள் நண்பர்களே

    ** மொக்க ஜூலியாக்கு மாடஸ்டி எவ்வளவோ மேல் **

    ReplyDelete
    Replies
    1. மொக்க ஜூலியா...

      சொதப்பல் சானியா...

      Delete
    2. ///மொக்க ஜூலியா...

      சொதப்பல் சானியா...///

      YES!

      Delete
    3. ஷானியா பெஸ்ட்!

      மாடஸ்டி வேஸ்ட்!!

      Delete
    4. சுஸ்கி விஸ்கி பெஸ்ட்
      ஸ்மர்ப் வேஸ்ட்

      Delete
  17. பழைய அவதாரோ, புதிய அவதாரோ - நாங்கள் ரிப்போர்ட்டர் ஜானியிடம் எதிர்பார்ப்பது ஒரு பரபரப்பான, அளவான இடியாப்பச் சிக்கல்களைக் கொண்ட நல்ல கதைகளையே!! ( உதாரணம் : நினைவுகளைத் துரத்துவோம்)

    புதிய அவதாரிடம் கொஞ்சம் ஹை-டெக் சமாச்சாரங்கள் தெரிந்தாலும்கூட, பழைய அவதாரின் அந்த அழகான ஹேர்-ஸ்டைலும், இளமையான முகமும் புது அவதாரில் மிஸ்ஸிங்!!

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. மாடஸ்டி வேணுமா???

    ஓ யெஸ்!!!


    ட்ரெண்ட் வேணுமா??

    கௌபாய் உலகம் எப்ப அலுப்பு தட்டியிருக்கு?? வரட்டும்..வரட்டும்..


    Quatrieme pouvoir ஆசாமி புது ஷோக்குல வேணுமா??

    ரிவர்டேல் ஆர்ச்சி கதைகள் மாதிரி காமிக்ஸ் களில் ஏற்பட்ட அனுபவங்களை வச்சு பாத்தா வேணாம்னுதான் தோணுது..

    ReplyDelete
  20. trent எவ்வகையில் மற்ற கவ்பாய் நாயகர்களில் இருந்து மாறுபடுகிறார என்பதில் உள்ளது அவரின் வெற்றி தோல்வி. ரிபோர்ட்டர் ஜானி 2.0 முயற்சித்து பார்க்கலாம். இளவரசியை பொறுத்தவரை படைப்பில் மாற்றம் வந்தால் மட்டுமே தாக்குபிடிபார் உதாரணமாக ஜேம்ஸ் பாண்ட் புது அவதாரமெடுத்தது போல. மே மாத இதழ்களை படிக்க நேரம் இன்னும் வாய்க்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. //இளவரசியை பொறுத்தவரை படைப்பில் மாற்றம் வந்தால் மட்டுமே தாக்குபிடிபார் உதாரணமாக ஜேம்ஸ் பாண்ட் புது அவதாரமெடுத்தது போல.//

      மாடஸ்டி கதாசிரியர் Peter O'Donnell 2015-ஆம் ஆண்டு இறந்து விட்டார்..

      அவரது இறுதி விருப்பம்

      மாடஸ்டி கதைகளை தனக்கு பிறகு யாரும் எழுத முயற்சிக்க கூடாது என்பதே..

      புதிய படைப்புகள் வர வாய்ப்பில்லை..

      Delete
    2. I think he even try to kill her in the last story, but publishers refused to accept it..

      Delete
  21. /* அதே வேளையில், பத்துக்கு-இரண்டு என்ற கதையாய் சிற்சில நகரங்களில் நமது பரிசோதனைகள் லேசான பலன் தருகின்றன தான் ! தேனியில் விற்கிறது ; பெரியகுளத்தில் சொதப்புகிறது ! தஞ்சையில் விற்கிறது ; புதுக்கோட்டையில் கவிழ்ந்தடித்துப் படுக்கிறது !! So வேகாத வெயிலிலும் சளைக்காது சுற்றிச் சுற்றி வர வேண்டியுள்ளது */

    It all boils down to ...

    நாமிருப்பது விளம்பர யுகத்தில். ஒன்றுமில்லாத காட்சிகள் கூட விளம்பரத்திற்காக பெரிய தொகைகள் செலவு செய்யும் காலம் இது. முறையான - தொடர்ச்சியான விளம்பரங்கள், marketing promotions, release review and ப்ரோமோஷன்ஸ் யாவும் இல்லாமல் சிறு - பெரு நகரங்களில் கணிசமான விற்பனைகளுக்கு சாத்தியங்கள் குறைவே !!

    நாம் நமது விளம்பரங்களை மேம்படுத்தாமல், என்பது-தொண்ணூறுகளிலேயே சுழன்றுகொண்டிருந்தால் விற்பனைகளும் 80-90களில் ரசித்த கூட்டத்தின் சொச்சமிருப்பவர்களிடையேதான் அதிகம் இருக்கும்.

    குறைந்த பட்சம் பெரிய வெளியீடுகளுக்கு (XIII , TEX 70, DURANGO ) ரிலீஸ் ப்ரோமோஷன் - ஒரு புத்தகக் கதையுடன் இணைந்து விழாவைப்போல் செய்ய வேண்டும். பலரும் இங்கே பலமுறை சொல்லியதுதானே ?

    நமது பாணி பழையபடியே இருக்கும் என்றால் நமது விற்பனைகளும் அவ்வாறே இருக்கும் !

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு நிறைய துட்டு வேணுமே பாஸ்.. ஒரு 40% விலையேற்றம் ஓக்கேவா?

      Delete
    2. இன்று நாம் வாங்கும் எல்லா பொருளுக்கும் 40% மேல் marketing cost தான். சில up to 80% வெறும் விளம்பரச் செலவுகளுக்கு கொடுத்து ஏமாறுகிறோம் :-(

      Delete
  22. இப்போதைக்கு லார்கோவிற்காக ரொரொரொரொரொம்ப்பப்பப்பப்பபவுமே வெயிட்டிங்...

    ReplyDelete
  23. இரவு வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
    Replies
    1. சித்திரை - வைகாசி வெளியீடு (மே):
      அ)மேக் & ஜாக்
      அட்டைப்படம்:
      அருமை
      சித்திரங்கள்:
      அருமை
      கதை:
      ஆள் மாறாட்டம் தான் என்றாலும்…கதை சொன்ன விதம்…இரசிக்கும்படி இருந்தது.
      விமர்சனம்:
      கார்ட்டூன் கதைகளை விமர்சனம் செய்வதைவிட இரசிப்பது சால சிறந்தது. முடியவில்லை என்றால் கடந்து செல்வது அதைவிட சிறந்தது. இன்னொரு முறை வாய்ப்பு கொடுக்கலாம்.

      ஆ)மார்ட்டின்
      அட்டைப்படம்:
      சுமார்
      சித்திரங்கள்:
      அருமை
      கதை:
      குழப்பமாக ஆரம்பிக்கும் கதை…கதை முடிவை நெருங்கும் போது புரிய தொடங்குகிறது. நிஜமாக கதாசிரியர் அசத்திவிட்டார் இறுதியில்…!!!
      விமர்சனம்:
      இந்த கதையை படித்த முடித்த பின்…ஏற்கனவே படித்த இரண்டு கதைகள் நினைவுக்கு வந்தன(ஒன்று – இரவே..இருளை கொல்லாதே, இரண்டு – ஜேசன் ப்ரைஸ் முதல் பாகம்). சிறுவயதில் ஏற்படும் பாலியல் பாதிப்பு…மூன்று பெண்களை எப்படி எல்லாம் யோசிக்க வைக்கிறது…எப்படி தனிமைப்பட்டு போகிறார்கள்…சமூக வாழ்க்கையை வெறுத்து…எப்படி சமூகத்தை பழிவாங்குகிறார்கள் என்பதை மூன்று கதாசிரியர்கள்…மூன்று விதமாக சொல்லி இருக்கிறார்கள்!!!!இன்னும் கூட சொல்லலாம்….போதும் என்று இத்துடன் முடித்து கொள்கிறேன்.

      இ)ட்யூராக்கோ
      அட்டைப்படம்:
      அருமை
      சித்திரங்கள்:
      அருமை
      கதை:
      வழக்கமான கதைதான். டெக்ஸ்க்கு பதில் ட்யூராக்கோ


      விமர்சனம்:
      எனக்கு ஒரே சந்தேகம் தான்…ஹீரோ பேசுவதே இல்லை…துப்பாக்கி எடுத்தால் அதிரடி தான். ஆனால், வில்லன்…ஹீரோவை கொல்ல வாய்ப்பு கிடைத்தாலும்…சுடுவதுவதைவிட பேச்சுக்கு வாய்ப்பு கொடுத்து அழிவதை தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை….!!!



      Delete
  24. //மௌனமாய் தொடரும் வாசக நண்பர்களின் மௌன விரதங்களைக் கலைக்கவும் நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் காவடி எடுத்துத் திரிவது - அவர்களது ரசனைகளின் நிஜப் பரிமாணங்களை அவர்களிடமிருந்தே ஊர்ஜிதம் செய்து கொள்ளவே !! "இதுவே பரவலான அபிப்பிராயம் !" என்று நானாகவே எதையாச்சும் யூகித்துக் கொண்டு 2019 -ன் அட்டவணையை தயார் செய்து வைக்க - "பேச்சியம்மாளுக்குக் கல்தா தந்தது ஏன் ? அய்யாப்பிள்ளையை அறிமுகம் செய்யச் சொல்லிக் கேட்டேனா ?" என்ற ரீதியில் கேள்விகள் எழுந்திடக் கூடாதல்லவா ?//
    தமிழில் மங்கா வர வேண்டும் என்பதே எனது கோரிக்கை... கல்லூரி மாணவர்கள் மங்கா படிப்பதையே விரும்புகிறார்கள்... எனக்கும் மங்கா மிக பிடித்திருக்கிறது... நமது காமிக்சின் நெடுநாள் வாசகன் நான்... ஒவ்வொரு மங்கா இதழ்கள் வரும்போதும் மாணவர்கள் அதை திருவிழா போல கொண்டாடுவோம்....
    முயற்சி செய்து பார்க்கலாம்... பிடிக்காமல் போனால் விட்டு விடலாம்..
    எனது பரிசீலனை...
    1. One Punch Man
    2. My Hero Academia
    3. Attack on Titan
    4. Death note
    5. Mob Psycho 100
    6. Tokyo Gohul
    இவை அனைத்தும் மிகவும் சிறப்பான தொடர்... காமெடி மற்றும் ஆக்ஷன் செமையா இருக்கும்... எல்லா வயதினருக்கும் ஏற்றது...
    என்னிடம் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது... தமிழில் நமது நண்பர்களுடன் படிக்க ஆசை... பார்ப்போம்...
    தமிழில் முதல் முறை டைப்புவதால் சரியாக கோர்வையாக சொல்ல வரவில்லை... தவறாக இருந்தால் மன்னிக்கவும்... :-)

    ReplyDelete
    Replies
    1. சாம்பிள் பார்க்கலாமே விஜயன்
      சார்

      Delete
    2. டெத் நோட் என்னிடம் அனிமேஷன் சீரீஸாக இல்லாது. இந்த கதை அதிரி புதிரி கதை. சீட் நுனியில் உக்கார்ந்து பார்த்தேன். இது காமிக்ஸ்க்காக உள்ளது இப்பொழுது தான் எனக்கு தெரியும்.

      முயற்சி பண்ணலாமே.

      Delete
    3. முதலில் மங்கவாக வந்து... பின்பு அணிம் ஆக எடுக்கப்பட்டது... மேலே இருக்கும் அனைத்தும் அணிம் ஆக உள்ளது..
      One Punch man Anime try panni paarunga 12 episodes than... Kandippa ungalukku pidikkum...
      My Hero Academia season 3 Ippo ongoing...

      Delete
  25. இளவரசி வாழ்க
    இளவரசி வேண்டும்

    ReplyDelete
  26. சார் ரிப்போர்ட்டர் ஜானி யின் வெளியிடப்படாத பழைய கதைகளில் செலக்டிவாக வெளியிட்டு விட்டு புதிய ஜானியை இரண்டு வருடம் கழித்து வெளியிட்டால் நலம்

    ReplyDelete
  27. கௌபாய் கதைகளுக்கு ஆல்வேஸ் வெல்கம்

    ReplyDelete
    Replies
    1. நம்ம காமிக்ஸ்ல லெப்ட் டே கிடையாது மிதுன்

      Delete
  28. விற்பனை முனையில் நீங்கள் சந்திக்கும் கஷ்டங்கள் மனதை கனக்க செய்கின்றன ஆசிரியரே

    ReplyDelete
  29. ரூபாய் 5000 விலை உள்ள புத்தக தொகுப்பில் ரூபாய் 5 க்கு ஒரு புத்தகம் விற்று உள்ளது என்பதை அறிந்த போது அந்த ஒரு புக் வாங்கிய முகமறியா அந்த வாசகருக்கு எழுந்து நின்று மரியாதை செய்கிறேன்...
    தவறு யாருடையது :
    1.20 ரூபாய் எடுத்துக் கொண்டு தினகரனின் வீட்டு வாசலை முற்றுகையிட்ட R.K.nagar மக்களை போன்றவர்களா ?????
    2.அரசியல்வாதி என்றால் என்னவென்று அகராதியில் தேடினால் கர்மவீரர் என்று இருக்கும் நாளை. ..அப்படிப் பட்டவரை தோற்கடித்த அவரது தொகுதி மக்களா...?????
    3.5 வருடங்களாக. சர்வாதிகார அரசியல் வாதிகளையும்,கையாலகாத அரசியல் வாதிகளையும் கண்டு மனதிற்குள் நெருப்பை வைத்துக் கொண்டு எலக்சன் வந்தவுடன் காசுக்கும் ,இலவசத்துக்கும் நாயை போல நாக்கை தொங்கப் போட்டு செல்லும் மக்களா? ?????
    4.7 கோடி தமிழ் மக்கள் உள்ள தமிழகத்தில் காசு கொடுத்து காமிகஸ் படிக்க ஒரு 1000 பேர் கூட இல்லை என்பதா??????
    `நிலைக்கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்
    நெஞ்சு பொறுக்குதில்லையே...´-என்ற பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
    புக் விற்காமல் போனாதை அறிந்த போது மனது வலிக்க தான் செய்கிறது. ..ஆனால் இதற்கு நீங்கள் தான் காரணம். ..வி்ற்பனையாளர்களை கலத்தில் இறக்கினால் இது போன்ற சிரமங்கள் இருப்பதால் தானே வாசகர்களை நேரடியாக சந்தாவில் சேர்ப்பது தான் இதற்கான ஒரே தீர்வு என்றீர்கள்...பிறகு ஏன் திரும்ப திரும்ப விற்பனையாளர்களுக்கு அனுப்பி மனது கஷ்டப் பட வேண்டும். .(ஏஜென்டுகள் மன்னிக்கவும். ..நம் தமிழ் மக்களுக்கு நல்லது உடனே புரியாது...காலம் சென்ற பிறகு அய்யோ நம்மிடம் அந்த புக் இல்லையே என்று புலம்புவது .)
    ஆசிரியர் பெருந்தகைக்கு சில வேண்டுக்கோள்.
    1.ஏஜண்டுகள் கேட்கும் புக்கில் முதலில் பாதி அனுப்பி வையுங்கள்..
    2.வாசகர்களின் விலை என்ற சுமையை குறைக்க எண்ணி தங்களின் சுமையை ஏற்றி குடோனை நிரப்ப வேண்டாம்.
    3.ஊர் கூடி இழுத்தால் தான் தேர் என்பது அந்த காலம். பெரிய வண்டி, ப்ரேக் வைத்தும் தேர் செல்லலாம் என்பது இந்த காலம்...
    4.காமிக்ஸ் என்ற இந்த அழகான குடும்பத்தில் இணைந்து இருக்கும் சின்ன தேன் கூட்டிற்கு எந்த பங்கமும் வராமல் தேனினை தர உங்களை தவிர வேறு யாருமில்லை என்ற உண்மையை நன்கு உணர வேண்டும். ...
    5.விலையை பற்றி கவலைப் படாமல் உங்கள் காமிக்ஸ் பயணத்தை தொடர வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டிக் கேட்டு கொள்கிறேன். ...நன்றி. .வணக்கம்..

    ReplyDelete
    Replies
    1. @ சரண் செல்வி
      நீங்கள் கூறியுள்ள முதல் மூன்று கருத்துகளுக்கும் பாரதியின் வரிகளுக்கும் தொடர்புண்டு ...
      ஆனால்
      காசு கொடுத்து காமிக்ஸ் வாங்கி படிக்காதவர்கள் ‘’ நிலை கெட்ட மாந்தர்கள்’’
      ஆக மாட்டார்கள் அல்லவா ??
      வாசிப்பது என்பதே ரசனை சம்பந்தப்பட்டது..
      அதிலும் காமிக்ஸ் வாசிப்பது என்பது சிறப்பு வகையின்பாற்படும் .
      I RESPECT YOUR BENEVOLENCE TOWARDS COMICS BUT DISAGREE WITH YOUR OPINION .

      Delete
    2. உண்மை தான் நண்பரே...2.30 மணி நேரமே ஓடக் கூடிய படத்திற்கு 2000,3000 செலவு செய்பவர்களை பார்க்கும் போது எழுகின்ற கோபமே தவிர வேறொன்றுமில்லை. ..

      Delete
    3. இதில் சில உண்மைகளும் இருக்கிறது. .சிறு வயதில் அம்மாவிடம் காசு திருடி வாங்கிய புக்கை ஆட்டையை போட்ட நண்பர்கள் ஏராளம். ..இதுக்கு என்ன சொல்றீங்க நண்பர அபிராமி அவர்களே...

      Delete
  30. சமீபத்தில் படித்த சில புத்தகக்களை பற்றி:
    1.கர்னல் கிளிப்டனனின் 7 நாட்களில் எமலோகம்,நில் ..சிரி...திருடு..படித்தவுடன் அடுத்த என்ன புக் வந்துள்ளது என்று கண்கள் தேடியது..
    2.பென்னி-கார்ட்டுன் என்றால் என் அகராதியில் இது போன்ற கதைகள் தான் சூப்பர்...
    3.நாளை மீதி ...இரவு வணக்கம்

    ReplyDelete
  31. இளவரசி எப்பவுமே ஓகே தானே..
    ஜானியை பொறுத்த வரையிலுமே classic மற்றும் 2.0 .. ரெண்டுமே ஓகே தான்..

    ReplyDelete
  32. அதிகாலை வணக்கங்கள் காமிக்ஸ் சொந்தங்களே..1
    ☺️☺️☺️

    ReplyDelete
  33. மாடஸ்தி

    2016 மீண்டும் நமது காமிக்ஸ்களை பாா்த்த பிறகு, நான் வாங்காதது "மாடஸ்தி" கதைகளை மட்டுமே!

    நல்ல வாசிப்பனுபத்தை மாடஸ்தி கதைகள் வழங்கியதே இல்லை!

    பொதுவாக நான் காமிக்ஸ்களில் எதையுமே ஒதுக்குவதில்லை!

    சூப்பா் - 6ல் வந்த கழுகு மலை கோட்டையும் எனது கருத்தை மாற்றிக் கொள்ள வகை செய்யவில்லை!

    நண்பா் ஈவி சொன்னது போல இந்த ஓவியப் பாணியில் டெக்ஸ் வந்தாலுமே சிரமம் தான்!!

    ReplyDelete
    Replies
    1. எனில் குறை மாடஸ்தி அல்ல ..அந்த சித்திரபாணியே ..


      ஆசிரியரின் கவனத்திறகு..:-)

      Delete
  34. அதிதீவிர "ஜானி" ரசிகனாய் இருந்த நான் இப்போது இந்த இடியாப்ப சிக்கல் கதைகளை ஏனோ ரசிக்க முடியவில்லை!

    2.0 முயற்சித்துப் பாா்க்கலாம்!!

    ReplyDelete
  35. Very sad to hear about poor sale sir. I met two people on different occasions . They re in their 50s and fans of Muthu comics. When heard about the availability of reprints they wanted to read them .....but not to buy them . I told them where they could get the books but they showed no interest in buying!!?. May be book exhibition in every town ll be helpful.

    ReplyDelete
  36. // தொடரும் காலங்களில் மாடஸ்டியை எவ்விதம் பார்த்திடுவீர்களோ //
    மாடஸ்டியை பொறுத்தவரை செலக்டிவான மறுமதிப்பு கதைகள் ஓகேதான்,ஆனாலும் இருக்கும் ஸ்லாட்களின் இடியப்ப சிக்கலில் வரலேன்னாலும் கவலைப்பட தேவையில்லைன்னுதான் தோணுது.

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை மாடஸ்டியின் மறுபதிப்புகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையெனில் நம்ம ரிப்போர்ட்டர் ஜானியோட முந்தைய இதழ்களில் உள்ள நல்ல கதைகளுக்கு மறுபதிப்பு வாய்ப்பு தரலாமே சார்.

      Delete
  37. // ஒரு மாற்றமாய் - ஜானியின் புது அவதாரை ; அந்த ஜானி 2.0-ஐ முயற்சித்துப் பார்க்கும் நேரமிது என்பீர்களா ? //
    ஏற்கனேவே இருப்பில் இருக்கும் பழைய வெளியீடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல கதைகளை முதலில் முடித்துவிட்டு பிறகு 2.0 வெர்ஷனுக்கு போகலாம் சார்.

    ReplyDelete
  38. கௌபாய் கதைகளில் புதிய அறிமுகங்களை trentஉடன் நிறுத்திக்கொள்ளலாம் ...சிறிது காலத்திற்காவது..... Comanche தொடர் எஞ்சியுள்ள கதைகளை 2 அல்லது 3 பாகம்களாக வெளயிட்டு முடிப்பது நல்லது.
    Comanche, ,தொடர் இப்போது இல்லையென்றாலும், பிற்பாடு நமக்கு வயதான காலத்தில் நமக்கு மிகவும் பிடித்த தொடர்களில் ஒன்றாகப் போவது உறுதி...

    ReplyDelete
    Replies
    1. ///Comanche, ,தொடர் இப்போது இல்லையென்றாலும், பிற்பாடு நமக்கு வயதான காலத்தில் நமக்கு மிகவும் பிடித்த தொடர்களில் ஒன்றாகப் போவது உறுதி...///

      +111

      Delete
  39. // இந்த கௌபாய் எக்ஸ்பிரஸில் இன்னமும் கூடுதலாய்ப் பெட்டிகளை இணைக்கலாமா ? //
    பெரும்பாலான குதிரை பசங்க நமக்கு நல்ல பொழுதுபோக்கர்களாத்தானே இருக்காங்க,அதனால் கமான்சே இடத்தில் வேறு புதிய குதிரை நாயகரை தாரளமாக முயற்சிக்கலாம்.

    ReplyDelete
  40. // காத்திருக்கும் லார்கோ ஆல்பம் - பல விதங்களில் பல surprises தரவுள்ளதொரு இதழ் ! //
    லார்கோவுக்காக ஆவலுடன்.

    ReplyDelete

  41. மாடஸ்டியை இப்பொழுது ஏன் ரசிக்க முடிவதில்லை?

    நான் சிறு வயதில் முதல் முதலாக கத்தி முனையில் மாடஸ்டி படித்து, அட அழகும் அறிவும் ஆற்றலும் உள்ள இந்த நாயகையை பார்த்து சொக்கி போனேன். ஸ்பைடர், ஆர்ச்சீ, மற்றும் மாடஸ்டி தான் அப்பொழுது

    என் ஆதர்ச நாயகர்கள்.
    இப்பொழுதும் என்னால் ஸ்பைடர், ஆர்ச்சீ கதைகள் பிடிக்கும். ஆனால் மாடஸ்டியை அதே அளவு சில சமயம் ரசிக்க முடிவதில்லை.
    காரணம்
    1 . பாதிக்கு பாதி சொதப்பல் கதைகள்.
    2. கீச்சு ஓவியமும் ஒரு காரணம்

    மாடஸ்டியின் மறு பதிப்புக்கு இந்த கதைகள் ரொம்ப பொருத்தமாக இருக்கும் என்பது என் கணிப்பு.

    1. கத்தி முனையில் மாடஸ்டி பிளைசி
    2. மாடஸ்டி இன் இஸ்தான்புல்
    3. மரண கோட்டை
    4. கானகத்தில் கண்ணாமூச்சி
    5. கற்கால வேட்டை

    ஜூலியா, லேடி ஸ்

    ஜூலியா கதைகள் போர் அடிப்பது உண்மையே. ஆனால் எனக்கு நள்ளிரவில் காலன் வருவான் மிகவும் பிடித்திருந்தது.

    லேடி ஸ் - முதலில் என்னடா அழகான நாயகியை காண்பித்து ஏமாத்தி விட்டார்களே என்று நினைத்தேன். ஆனால் 3 மற்றும் 4 இதழ்கள் மெதுவாக முன்னேறி வருவதாக படுகிறது.

    ரிப்போர்ட்டர் ஜானி - பழைய பாணி ஒரு கதை, புதிய பாணி ஒரு கதை என்று இரண்டையும் இணைத்து வருடத்திற்கு ஒன்று என்ற பாணியில் கொடுத்தால் என்ன?

    நாம் நமது விளம்பரங்களை மேம்படுத்தாமல், என்பது-தொண்ணூறுகளிலேயே சுழன்றுகொண்டிருந்தால் விற்பனைகளும் 80-90களில் ரசித்த கூட்டத்தின் சொச்சமிருப்பவர்களிடையேதான் அதிகம் இருக்கும்.

    குறைந்த பட்சம் பெரிய வெளியீடுகளுக்கு (XIII , TEX 70, DURANGO ) ரிலீஸ் ப்ரோமோஷன் - ஒரு புத்தகக் கதையுடன் இணைந்து விழாவைப்போல் செய்ய வேண்டும். பலரும் இங்கே பலமுறை சொல்லியதுதானே ?

    ராகவன் சொல்வது சரி. டிவி விளம்பரம் கண்டிப்பாக விற்பனைக்கு உதவும்.

    ReplyDelete
  42. புத்தக முகவர்கள் மூலம் நாம் விற்பனையில் சாதிக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது.

    வரும் வருடம் நமது சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகமாக வேண்டும். இந்த வருடம் சந்தா செலுத்தாத நண்பர்கள் அடுத்த வருடம் சந்தா செலுத்தி ஆசிரியரின் கையை பலப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நான் முதன் முறையாக XIII க்காக சந்தா கட்டி உள்ளேன் பரணி

      Delete

  43. புதியது:
    1. நண்பனுக்கு நாலுகால், நான் மானஸ்தன்.கடமை கண்ணியம் - கார்ட்டூன் காமிக்ஸின் மகுடம் இப்பொழுது சிக் பில் குழுவினர்க்கே என்று நான் கருதுகிறேன். இப்பொழுது எல்லாம் சிக் பில் கதைகள் பட்டையை

    கிளப்புகின்றன. லக்கி லுக் இப்பொழுது எல்லாம் அத்தனை சிறப்பாக இல்லாதது போல் இருக்கிறது. 3 கதைகளும் சிரிப்பை சிறப்பாய் வர வழைக்கின்றன.

    2. பூமிக்கோரு போலீஸ்காரன் - இதில் ஷானியாவை ஆட்டி வைக்கும் CATRIG நிறுவனம் என்ன, எதற்காக மற்றும் யார் அதை நிர்வகிக்கிறார்கள் என்ற விளக்கம் இனி வரும் லேடி S கதைகளை குழப்பமில்லாமல் ரசிக்க வழி செய்யும்.

    பழையது:

    1. அப்பல்லோ படலம் - அந்த காலத்தில் திகிலில் வந்த ஒரு பிளாக் பஸ்டர். புருனோ பிரேசிலின் பட்டாளத்தில் ப்ருனோவின் சகோதரன் டெக்சாஸ் இறந்து போய் விடுவான். எதிரி மற்றும் புருனோ பிரேசிலின் பட்டாளம் இரு பக்கமும் பயங்கர சேதம் இருக்கும். இதன் கூடவே விண்ணில் முளைத்த மண்டை ஓடு என்னும் ௨ பக்க தொடரும் உண்டு.

    2. மரணத்தின் பல முகங்கள் -
    a சிஸ்கோவின் அற்புதமான ட்ரைடெமார்க் சித்திரத்துடன் வந்த அற்புத கதை. ஒரு சிறு கிராமத்தில், அடுத்தடுத்து மாறுவேடத்தில் ஒருவன் கொள்ளை, கொலை செய்து வருகிறான். சிஸ்கோ அவனை பிடிப்பதே கதை.
    b பேட்மேனின் பழி வாங்கும் ஜோக்கர் - சிறையிலிருந்து தப்பிக்கும் ஜோக்கர் தன்னுடைய ௪ சகாக்களையும் ஒவ்வுருத்தராக கொலை செய்வதை பேட்மேன் தவிர்க்க முடிந்ததா என்பதே கதை.
    c இதனுடன் கருப்பு கிழவியின் கதையும், விண்ணில் முளைத்த மண்டை ஓடு தொடரும் உண்டு.

    3. கருப்பு கிழவி ஸ்பெஷல் - இதில் உள்ள எல்லா கதைகளுமே கருப்பு கிழவி சொல்லும் திகில் கதைகள் தான். இது போல தரமான கதைகளை பழைய கதைகளில் படித்து சந்தோஷ பட்டு கொள்ள வேண்டியது தான்.

    ReplyDelete
  44. //தொடரும் காலங்களில் மாடஸ்டியை எவ்விதம் பார்த்திடுவீர்களோ ?//
    வருடம் ஒன்று வரலாம் சார் ...

    //அந்த ஜானி 2.0-ஐ முயற்சித்துப் பார்க்கும் நேரமிது என்பீர்களா //
    தாராளமாக try பண்ணலாம் சார் ..

    // இந்த கௌபாய் எக்ஸ்பிரஸில் இன்னமும் கூடுதலாய்ப் பெட்டிகளை இணைக்கலாமா ? //
    இணைக்கலாம் சார்.. ஆனால் கமான்சே,டைகர் போன்ற பழைய தொடர்களை முதலில் முடித்து விட்டு இணைக்கலாம் சார் ..

    ReplyDelete
  45. மேக்&ஜாக்!
    கேரட் மீசைக்காரருக்கு கல்தா கொடுத்து விட்டு இந்த இரட்டையர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்லாம்..!
    முதல் சாகசமே கலக்கல்!
    நல்வரவு!

    ReplyDelete
  46. விளம்பரங்கள் கூட எதுவும் செய்ய முடியாத உலகம் காமிக்ஸ் உலகம்.சன் டிவி யில் ஒரு 50 செகண்ட் விளம்பரம் செய்ய ஆகும் செலவுக்கு நமது ஆசிரியர் போண்டியாகி விடுவார்.
    நான் fbல் டுயுராங்கோ விளம்பரம் செய்து இருந்ததை பார்த்த என் உற்வுக்காரர் இன்னும் நீ காமிக்ஸ் படிக்கிறியா ஏன் வேறு பொழப்பு இல்லையானு கேட்கிறார்.
    காமிக்ஸ்சை வாழவைப்பது நமது ஆசிரியர் போன்ற நல்ல உள்ளங்கள் மட்டுமே.
    மேலும் அவரை ஆதரிக்கும் காமிக்ஸ் வாசகர்கள் போன்றோர்களால் மட்டுமே.
    விளம்பரத்தால் காமிக்ஸ் வளரும் என்பது சாத்தியமுள்ள ஒன்று என்றால் இன்று ராணி காமிக்ஸ் நின்று பேசியிருக்கும்.அவர்கள் செய்யாத விளம்பர மா ?

    ReplyDelete
    Replies
    1. உண்மை..

      விளம்பர நிலைமைகளை பற்றி ஏற்கனவே ஆசிரியர் விளக்கியுள்ளார்.பெரிதான பொருட்செலவில் விளம்பரம் செய்து அதனால் ஒரு பலனும் இல்லையெனில் என்ன தான் செய்ய முடியும்..:-(

      Delete
  47. டியர் விஜயன் சார்,

    புதிய லோகோ வடிவமைக்க இன்று சற்று நேரம் கிட்டியது... வெஸ்டர்ன் கதைகளை சுவாரசியமாக்கும் இந்த செவ்விந்தியப் பெருந்தலை - ஜம்போ பெயருக்கு ஏற்றவர் தானே?!

    முறைக்கும் ஜம்போ! (மேலும் சில திருந்தங்கள் அவசியப் படலாம்)

    ReplyDelete
    Replies
    1. வாவ் சூப்பா்!!

      Delete
    2. நல்லாயிருக்கு கார்த்திக்; இன்னும் கொஞ்சம் மெருகூட்டுங்க. கடும் பணிசுமையின் நடுவேயும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யும் உங்களை நினைத்தா பெருமையாக இருக்கு...

      Delete
    3. நல்லாருக்கு சார்..:-)

      Delete
    4. Native Indian color scheme-ல், ஒரு அமெச்சூர் வண்ணமேற்றும் முயற்சி மேலும் சில திருத்தங்களுடன். Font-ல் திருப்தி இல்லை, இருந்தாலும் இதற்கு மேல் மண்டையை பிய்த்துக் கொள்வதாய் இல்லை! :)

      ஜம்போ காமிக்ஸ் - வண்ணத்தில்!

      Delete
  48. ///"மௌனமாயொரு இடிமுழக்கம்" பற்றி இன்னும் கொஞ்சம் in depth அலச நேரமெடுத்துக் கொள்ளலாமே folks?////------எடிட்டர் சார் சொன்னமாதிரி இன்னும் கொஞ்சம் இன்டெப்த் அந்த புத்தகத்தை அலசியபோது கிடைத்த புதிய செய்தி...!!!

    முன்கதை சுருக்கம் நண்பர் J ji எழுதியுள்ளார். இதில் மொத்தமுள்ள 9பேராகிராஃபில் அவர் எழுதிய பகுதிகளுக்கு நடுவே வேறு நண்பர்கள் எழுதிய பகுதிகளும் இருந்தன. அத யார் யார்துனு பார்க்க ஏப்ரல் முதல் வார பதிவுகளை ஆராய,

    J ji-5 பேராகிராஃப்....

    ஜெகத் குமார்-2 பேராகிராஃப்...

    சேலம் டெக்ஸ்-2 பேராகிராஃப்...(அட டே)

    🍫🍫🍫வாழ்த்துகள் ஜெகத்குமார்🍫🍫🍫

    ஒவ்வொரு நண்பருக்கும் அவருடைய எழுத்துக்களை பிரிண்டிங்ல பார்க்கும்போது கிடைக்கும் சந்தோசம் அளவிடமுடியாதது.

    ஜெகத்தின் எழுத்துகளும் உள்ளன என முன்பே கண்டறிய தவறியதற்கு சன்னமான மன்னிப்பு கோருகிறேன் ஜெகத்.🙏
    தாமதமானாலும் உங்களின் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரத்துக்கு மீண்டும் வாழ்த்துகள்.🎂🍰💐

    (என்னுடைய பெயர் புக்கில் வரனும்கிற அல்ப ஆசையில் புக் மார்க்கெட் பகுதிக்கு லிஸ்ட் அனுப்பியவன் நான்.ஹி...ஹி...)

    இப்ப என்னுடைய எழுத்துக்களும் பிரிண்டிங்ல பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு...😍😍😍

    J jiபோன்ற வல்லமை வாய்ந்த எழுத்தாளர்களுடன் எனக்கும் சிறு இடம் கிடைத்தது என்னுடைய பேறு...

    ReplyDelete
    Replies
    1. அடடே!! அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பர்களே!!

      @டெக்ஸ் விஜய்

      அலோ... நாங்க எழுதியதும் (அது ஒத்தை வரிதான்னாலும்) அதே புக்குல வந்திருக்குங்க! எங்களையும் லிஸ்ட்டுல சேர்த்துக்கோங்க!

      நாங்களும் அற்ப ஆசைக்காரவுஹ தான்! :D

      Delete
    2. அட ஆமால்ல...

      🎈🎈🎈செயலர் வாழ்த்துகள்🍫🍨🍦💐

      புதிய கதையிலேயே ஒரு வரி எழுதிட்டீங்க, சிறப்பு....
      நீங்களும் இனி படைப்பாளிதான்...👏👌

      இனிமே யாராவது படைப்பாளிகளை பற்றி தெரியாமல் கருத்து கூறாதீங்கனு வரட்டும், அப்ப வெச்சுக்கிறேன் கச்சேரியை...😄

      Delete
    3. நன்றிங்கோ!

      ///நீங்களும் இனி படைப்பாளிதான்...👏👌 ///

      ஹிஹி! ஆனாலும் ஏன்தான் இப்படி வெட்கம் பிடுங்கித் திண்றதோ தெரியலை!! :) ;)

      Delete
    4. ஈ விஜய்
      இனி
      ப விஜய் என அன்போடு அழைக்கப்படுவாா்!

      Delete
    5. இந்தப் படைப்பாளிங்க தொல்லை தாங்க முடிலேப்பா !!

      Delete
  49. டியூராங்கோ சும்மா பிச்சி உதறிட்டார். செம அதிரடி. டெக்ஸ் இல்லாத குறையை போக்கி விட்டார்.

    ReplyDelete
  50. SHANIA, MODESTY, JULIA GET OUT...

    MORE COW BOYS, PLEASE GET IN...

    MORE LARGO TYPE HEROS ARE EXPECTED
    ..

    ReplyDelete
  51. நண்பர் ஜகத்குமாரின் கனிவான கவனத்திற்கு
    ஐசெர்ஜில் பெண்ணா எனக் கேட்டு இருந்தீர்கள் அல்லவா ??

    அது ரஷ்ய பெயர் போல் தெரிகிறது .

    ரஷ்யாவின் உன்னதமான எழுத்தாளர்களுள் ஒருவரான மாக்ஸிம் கார்கியின்
    சிறந்த சிறுகதைகளுள் ஒன்றான

    THE OLD WOMAN IZERGIL –ல் வரும் வயதான பெண்மணியின் பெயர் IZERGIL ( ISERGIL எனவும் எழுதலாம் )

    https://www.goodreads.com/book/show/36053313-the-old-woman-izergil

    ReplyDelete
    Replies
    1. selvam abirami sir

      உண்மைய சொல்லுங்க!

      நீங்க வரலாற்று ஆசிாியா் தானே!!

      Delete
    2. @ மிதுன்
      வரலாற்று ஆசிரியன் அல்ல ..மாணவன் ! (எப்போதுமே )


      :)

      Delete
  52. BREAKING NEWS:
    smurfs ; ரின்டின் கேன் ; க்ளிப்டன் ; லியனார்டோ தாத்தா; அனைவரையும் நீட் தேர்வு எழுத சொந்த ஊருக்கே அனுப்ப ஆசிரியர் உத்தரவு.

    ReplyDelete
    Replies
    1. //smurfs ; ரின்டின் கேன் ;//

      மறந்தாப்டி இந்த பேரையும் சோ்த்தீட்டாரு போல!!

      Delete
    2. சை! எனக்கு இந்த நீட் தோ்வே புடிக்காது!!

      Delete
    3. BREAKING NEWS ம் புடிக்காது!

      Delete
    4. சார் புடிச்சாலும் புடிக்கலைன்னாலும் நீட் ல கண்டிப்பா எல்லாரும் எக்ஸாம் எழுதி தான் ஆகணும் அப்படி அந்த ரெண்டு பேர மட்டும் தனியா விட முடியாது

      Delete
    5. சென்ட்ரை ராஜஸ்தானுக்கே அனுப பினாலும் சரி...:-)

      Delete
  53. காலை எழுந்தவுடன் கௌபாய்

    பின்பு களிப்பு கொடுக்கும் நல்ல காா்ட்டூன்

    மாலை முழுதும் கி.நி.

    என்று வழக்கப்படுத்திக் கொள் பாப்பா

    எனும் மாகவியின் பாட்டிற்கிணங்க,

    ReplyDelete
    Replies
    1. ஒரு வாரம் முழுவதும் காமிக்ஸ்ஸோடே பயணம்!

      Delete
    2. இன்னும் ஒரு வாரம் இருக்கும் ஓய்வு நேரம் முழுவதும் காமிக்ஸ்க்கு என்ற ஒதுக்கியாகி விட்டது

      Delete
    3. எதிா்வரும் ஆகஸ்டுக்கு முன்பாக பாக்கியிருக்கும் சில டெக்ஸ் கதைகளையும் படித்து முடித்துவிட வேண்டும்!!

      Delete
    4. //ஒரு வாரம் முழுவதும் காமிக்ஸ்ஸோடே பயணம்!//

      ஹை !!

      Delete
  54. It is expected. You can not expect high level of retail dale at the level out comics are priced. At the high price the books are sold it is sustainable only by limited subscription route. To boost your retail sales you have to do some value engineering to reduce the prices so that the volume could pick up. Some of the avanga i feel to reduce the cost is to 1) to bring the size to AT instead of A. 2) use lower quality thoug paper instead of high glossy paper which is hard on your eyes to read, 3) avoid thick hard board binding, instead use only thicker board paper for binding. 4) avoid super size of sized format, which only satisfies the yes mens ego. 5) Follow a uniform size for all issues which will cut costs in the long run

    ReplyDelete
  55. Replies
    1. சார்...A4 ; A5 என்பனவெல்லாம் நமது பிரிண்டர்களுக்குக் கிடைக்கும் பேப்பர் சைஸ்கள் மட்டுமே !

      சந்தையில் கிடைப்பது மொத்தமே இரண்டே சைஸ்கள் தான் ; ஒன்று நமது ரெகுலர் சைஸ் ; மற்றது டெக்ஸ் வில்லர் சைஸ் !

      விலையினை நிஜமாகக் குறைக்க வேண்டுமெனில், தற்சமயம் பெரிய சைசில் வெளியாகி வரும் லார்கோ ; ஷெல்டன் ; XIII இத்யாதிகளை - டெக்ஸ் வில்லரின் (black & white ) சைசுக்கு கொணர வேண்டும் ! சின்னப் படங்கள் ; சின்ன எழுத்துக்கள் என்பன உங்களுக்கு இடரில்லையெனில் நிச்சயமாய் நமக்கதில் சிரமங்கள் கிடையாது !

      Delete
    2. எனக்கு அவ்வளவாக பெரிய சைஸில் ஆர்வம் இல்லை. ..டெகஸ் சைஸ் அழகான சைஸாக தோன்றுவது எனக்கு மட்டும் தானோ...

      Delete
  56. மேக் & ஜாக்
    வரவேற்கத்தக்க புதுவரவு ..
    பரோடி அல்லது ஸ்பூப் வகை காமிக்ஸ்களில் ஒரு சிறிய கஷ்டம் என்னவென்றால் மூலத்தை பற்றி நன்கு அறிந்து இருப்பின் மட்டுமே பரோடியை ரசிக்கமுடியும் ..
    எடிட்டர் அறிமுக குறிப்பு கொடுத்துள்ளார் என்றாலும்
    அல்கபோனை பற்றி நன்கு அறிந்து கொள்வது நல்லது ..
    பின் வரும் பல எபிசோடுகளிலும் அல்கபோன் வருவதாக தெரிகிறது
    கொஞ்சமே படித்து தெரிந்துகொண்டாலும் விஷுவலாக அல்கபோன் பற்றிய திரைப்படங்களில் ஏதேனும் ஒன்றை பார்த்து வைத்து கொள்ளலாம்..
    நான் பரிந்துரைப்பது-பலரும் பார்த்திருக்க கூடிய
    UNTOUCHABLES (1987)
    AL CAPONE - ஆக நமது ராபர்ட் டி நீரோ
    கதையில் வரும் எலியட் நெஸ் ஆக ..கெவின் காஸ்ட்னர்
    நெஸ் –க்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் நமது பழைய ஜேம்ஸ்பாண்ட் ஸீன் கானரி
    நடித்துள்ள படம் ..
    அமேசான் பிரைம் வீடியோவில் நல்ல பிரிண்ட்டில் கிடைக்கிறது .

    ஆக்ரோஷமான அல் கபோனை படத்தில் பார்த்துவிட்டு
    நமது வாடகைக்கு கொரில்லாக்கள் காமிக்ஸ் –ல்
    முதியோர் இல்லத்தில் பபூன் கணக்காய் பார்க்கையில் சிரிப்பு பொத்து கொண்டு வருகிறது ..
    என்னை பொறுத்தவரை இத்தொடர் வாசகர் மனங்களில் வரும் நாட்களில் சிறப்பிடம் பிடிக்க வாய்ப்புண்டு ..

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 48 மணி நேரமா???

      Delete
    2. //ஆக்ரோஷமான அல் கபோனை படத்தில் பார்த்துவிட்டு
      நமது வாடகைக்கு கொரில்லாக்கள் காமிக்ஸ் –ல்
      முதியோர் இல்லத்தில் பபூன் கணக்காய் பார்க்கையில் சிரிப்பு பொத்து கொண்டு வருகிறது ..//

      இதாவது பரவாயில்லை சார் ; அடுத்த ஆல்பத்தில் இன்னும் ஒரு படி நையாண்டி தூக்கல் !!

      Delete
  57. டியா் எடிட்டா் சாா்!

    டியுரங்கோ பற்றிய விமா்சனம் அதிகமாக காணோமே என்ற சந்தேகம் கொள்ள வேண்டாம்!

    என்ன சொல்வது? எப்படி சொல்வது?
    மானே தேனே ல்லாம் எங்கே போடுவது என்ற குழப்பத்தில் இருப்பதாலும், மொபைலில் டைப்புவதற்கு என்றே தனியாக லீவு எடுக்கவேண்டிய தேவை ஏற்படுவதாலும், வாரத்தில் ஒரே ஒருமுறை மட்டுமே வரும் ஞாயிறு-ன் கொடுமையாலும், வெளியிலே சென்றால் வாட்டிஎடுக்கும் நிஜ ஞாயிறு-ன் கோடையின் கோபத்தாலும், பல்வேறு அரசியல் சூழ்நிலையின் காரணமாக பணிகள் குறைந்துவிட்ட காரணத்தாலும்,

    ஆனாது ஆகட்டும், போனது போகட்டும் என்று 15 நாள் விடுப்பை தாமாகவே எடுத்துக் கொண்டு விட்டதால் பாக்கி காமிக்ஸ்களை படித்து முடிக்க இதுவே தக்க தருணமாய் இருப்பதாலும்,

    டியூராங்கோ பற்றிய விமா்சனம் ரத்தின சுருக்கமாக

    இனி கௌபாய் என்றால்,

    டெக்ஸ், டைகா், டியூராங்கோ சோ்த்தே சொல்ல வேண்டிய நிலையை உருவாக்கி விட்டாா் இந்த மௌனப்புயல்!

    ReplyDelete
  58. இளவரசி கதைகள் வருடம் ஒன்றாவது வேண்டும் சார்..!

    ReplyDelete
  59. விற்பனையில் ஏற்படும் சுணக்கங்கள் மற்றும் சறுக்கல்கள் ரொம்பவே வேதனையை உண்டாக்குகிறது.எதிர்வரும் காலத்தில் அந்தச் சுமை சிறுகச் சிறுக விலகும் என்ற நம்பிக்கை பலமாக உள்ளது.

    கேள்விக்கென்ன பதில்.

    மாடஸ்டி? : நம் குழுமத்தின் முதல் இளவரசி.அதனால் தாராளமாக வரலாம்.

    ஜானி? : எனக்கென்னமோ ஜானி வர, வர சுகப்படவில்லை என்றே தோன்றுகிறது.

    கௌபாய்? :இந்த ஜானர் போதும் என்றே நினைக்கிறேன் சார்.டெக்ஸும், டைகரும் தங்களுக்குண்டான பாதையில் தனி ஆவர்த்தனம் செய்தவர்கள்.
    யதார்த்த வன்மேற்கைச் சித்தரித்த 'கமான்சே ', வன்மேற்க்கின் கோடூர முகத்தை க்ளோஸ் அப் 'ல் காட்டிய பௌன்சர் இருவரும் காலவரையற்ற விடுப்பில் உள்ளனர்.
    டியூராங்கோ தனக்கென தனி பாணியை கையாளாமல் டெக்ஸ் மற்றும் டைகரின் கலவையாகவே இருப்பது கொஞ்சம் சலிப்பை உண்டாக்குகிறது.கதைக்களமும் இரவல் வாங்கியது போலவே இருக்கிறது. அதனால் மேற்குலகை விட்டு கொஞ்சம் வெளியே வரலாம் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //மேற்குலகை விட்டு கொஞ்சம் வெளியே வரலாம் என்றே நினைக்கிறேன்//

      வித்தியாசமான சிந்தனை தான் சார் !

      Delete
  60. அன்பின் ஆசிரியருக்கு,

    வணக்கம். விற்பனை குறித்து நீங்கள் பகிர்ந்துள்ள தகவல்கள் கவலை அளிக்கன்றனவே தவிர அதிர்ச்சியளிக்கவில்லை. கிட்டத்தட்டப் பதினைந்து வருடங்களாக ஆசிரியர் பணியில் இருக்கிறேன். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றி உள்ளேன். வகுப்பில் உள்ள மாணவர்களோடு வாசிப்பு சார்ந்து உரையாடும்போது வாசிக்கும் பழக்கம் உள்ளதாகச் சொல்பவர்கள் வெகு சொற்பமே. அப்படியே வாசித்தாலும் கூட அது ஆங்கிலப் புத்தகங்களோடு நின்று விடுகிறது. நம்முடைய இன்றைய வாசகர்களும் கூட பத்து பதினைந்து வருடங்கள் அல்லது அதற்கும் முன்பாக நமது வாசகர்களாக இருந்தவர்கள்தான் எனும்போது புதிய வாசகர்களை உருவாக்கிட முடியாமல் தத்தளிப்பதே விற்பனைகளின் பின்னிருக்கும் சிக்கலுக்கான காரணம் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆகவே புதிய வாசகர்களை உருவாக்குவதே நம் முன்னிருக்கும் தீர்வு இல்லையெனில் எப்போதும் போல சந்தாக்களை மட்டும் நம்பி நாம் ஓட வேண்டியிருக்கும். (உண்மையில் ஜம்போ காமிக்ஸ் அப்படியானதொரு குழந்தைகளுக்கான முயற்சியாக இருக்கும் என்றே நம்பினேன்). வரும் வருடங்களில் அதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ட்யூராங்கோ பற்றி.. முதல் கதை சற்றே நொண்டியடிப்பதாகப் பட்டது. ஒரு டைகர் கதையினை வாசிக்கும் உணர்வு. ஆனால் அந்தத் தொய்வை மற்ற இரண்டு கதைகளும் ஈடுகட்டி விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். சொல்லாமல் சொல்லப்படும் இரண்டு கதைகள்.. நாவல் எழுதி காதலியிடம் தன்னை நிரூபிக்க வரும் இளைஞனின் கதையும் ராஜகுமாரனுக்காகக் காலமெல்லாம் காத்திருக்கும் சிறுமியின் கதையும். ஓவியங்களுக்கான வண்ணச் சேர்க்கைகளும் ரகளை செய்கின்றன. ட்யூராங்கோவைக் காட்டிலும் அவருக்கென உயிர் விடும் பெண்களின் மீதே அதிகமாகப் பாவம் கொள்ளத் தோன்றுகிறது. சபிக்கப்பட்ட ஒரு மனிதனின் பொருட்டு தங்கள் உயிரை இழக்க நேரிடும் அபலைகளின் எண்ணிக்கை இன்னும் எத்தனையோ? ட்யூராங்கோவின் (எதிர்)காலம் தான் பதில் சொல்ல வேண்டும். கடைசியாக மேக் & ஜாக் எனக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை. க்ளிப்டன் கதைகளில் இருக்கும் மெல்லிய நகைச்சுவையோ அல்லது ப்ளூகோட் மக்களின் நையாண்டியோ இவர்களிடம் மிஸ்ஸிங். அடுத்தடுத்த சாகசங்களில் சோபிப்பார்கள் என நம்புகிறேன். நன்றி.

    பிரியமுடன்,
    கார்த்திகைப் பாண்டியன்

    ReplyDelete
    Replies
    1. மேக் அண்டு ஜேக் ஓகே ரகம்
      ஆனால் சூப்பர்ஹிட் கதையை முதலில் வெளிட்டு விட்டு....பிறகு சுமார்கதைகளை வெளியுடவும்.....

      Delete
    2. இன்றைக்கு ஒரு வலுவான விளம்பர பட்ஜெட் இன்றி பவுணையே உருக்கிப் பேப்பரில் இழையோட விட்டுப் பத்திரிகையாகத் தந்தாலும் வெற்றி காண்பது அரிதிலும் அரிது சார் ! இது தான் யதார்த்தம் !

      நம் பலம் விற்பனையில் அல்ல என்பதில் இரகசியம் கிடையாது ! அந்தக் களத்தில் சாதிக்கும் ஆற்றலும், வசதியும் கணிசமாய் இருந்தாலொழிய, சிறார் பத்திரிக்கை என்பதெல்லாமே ஒரு மழை நாளின் கனவாக மட்டுமே இருக்க முடியும் சார் !

      Delete
    3. மேக் அண்டு ஜேக் ஓகே ரகம்
      ஆனால் சூப்பர்ஹிட் கதையை முதலில் வெளிட்டு விட்டு....பிறகு சுமார்கதைகளை வெளியுடவும்.....

      Delete
  61. எந்த காமிக்ஸாக இருந்தாலும் சரி அதன் ஆணிவேரே வன்மேற்க்கும் அங்கே கையில் செல்போன் இல்லாமல் சுற்றித் திரியும் கௌபாய்களுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை.ஆகவே இது போதுமா திகட்டுமா என்ற பேச்சுக்கே இடமில்லை cowboys always welcome with red carpet

    ReplyDelete
  62. ஸ்பைடர் கதைகள் மிச்சம் இருப்பதை வெளியிடலாமே சார்......அந்த கொமுட்டி மூஞ்சி பார்த்து பல நாள் ஆச்சே.....

    ReplyDelete
    Replies
    1. அட..இந்த ஜனவரியில் தான் பாக்கெட் சைசில் பார்த்தீர்களே ?

      Delete
    2. இதுவரை வெளியிடாத ஸ்பைடர் கதை சார்.....மறுபதிப்பல்ல சார்....

      Delete
  63. மாதம் ஒரு டெக்ஸ் உடன் இனைந்து மாதம் ஒரு (மற்றொரு ) கெளபாய் அவர்களும் வந்தால் இன்னும் டபுள் கொண்டாட்டமே சார்..அதாவது புதியவரோ பழையவரோ அவரோட தொப்பியை ரயில் பெட்டியில் கோத்து விட்டால் ரொம்ப ரொம்ப சந்தோசம் சார்...

    *********

    மாடஸ்தி - இளவரசி மட்டுமல்ல இனிமையான அரசியும் கூட

    நண்பர்கள் பலர் மறுபதிப்பு மாடஸ்தி என்ற நோக்கில் கருத்து சொல்லியுள்ளார்கள் .தாங்கள் புதிய இளவரசி சாகஸத்தை தான் வினவுவதாக நான் நினைக்கிறேன்.எனவே உறுதியான ஆதரவு இளவரசிக்கு..

    *********

    ரிப்போர்ட்டர் ஜானி 2.0 வை விட முதல் பாகம் இருப்பின் அதை முதலில் கொண்டு வாருங்கள் சார்.அந்த ஜானி முடிந்தால் 2.0 ஜானியை ட்ரையலர் விட்டு பார்க்கலாம்..

    ReplyDelete
  64. மாடஸ்டியின் கதை
    இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதித்தருணம்...!
    கிரீஸிலுள்ள ஒரு அகதிகள் முகாம்.யத்தத்தின் கோர முகத்தால் அநாதையாகிப்போன பல்லாயிரக்கணக்கானோருள் 12 வயதேயான அந்த சிறுமியும் ஒருத்தி. எத் தனையோ பயங்கரங்களை நேருக்கு நேர் பார்த்த அதிர்ச்சியில் அவளுக்கு எல்லாமே மறந்து போய்விட்டிருக்கிறது.தன் பெயர் உட்பட...! அவளுடைய ஒரே லட்சியம் அந்த அகதிகள் முகாமிலிருந்து தப்பிச்செல்வது.
    வெளியேறுகிறாள்.கால் போன திசையில் நடக்கும் அவள்..இரவுப்பொழுதுகளை கானகத்தில் கழிக்க நேரிட்டபோதும் கலங்கவில்லை.போகும் வழியில் உள்ள சின்னச்சின்ன கிராமங்களில் தங்கினாள்.பசியைப்போக்கிட கடுமையாக உழைத்தாள்.முடிய
    ாதபோது பிச்சையெடுத்தாள
    ்.அச்சமும்,துயரமும் அவளை விட்டு விலகின.உயிரை தக்க வைக்கும் கலையில் தேர்ந்துவிட்டாள்.
    நெடுந்தூரம் பயணித்த அவள்...எல்லையை கடந்து பெர்ஸியாவினுள் நுழைந்தாள்.நகர வீதிக்கடைகளில் திருடினாள்.நாடோடி கும்பல்களோடு தங்கினாள்.அங்கே அவளைப்போல நாடிழந்தவர்களுக
    ்கான முகாம்கள் ஏராளமாய் இருந்தன.எந்த முகாமிலும் அவளால் நீடித்து இருக்க முடியவில்லை.அப்படிப்பட்ட ஒரு முகாமில்தான் ..புரபஸர் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் முதியவர் ஒருவரை சந்தித்தாள்.அவரிடமிருந்த உணவுப்பொருளை ஒருவன் திருட முயன்றபோது...அவனை அடித்து துரத்தி அந்த முதியவரை காப்பாற்றுகிறாள்.

    ReplyDelete
    Replies
    1. Jpsk சார் சூப்பர். இந்த ஆரம்ப மாடஸ்டி கதைகள் வெளியிட கேட்கலாம் ஆசிரியரிடம்.

      Delete
    2. எனக்கு இந்த கதை வேண்டும். பல முறை ஆசிரியரிடம் கேட்டு விட்டேன். மறுபதிப்பில் இதனைத்தரலாமே?

      Delete
  65. இருவரும் நட்பாயினர்.அந்த முதியவர் ஒரு மேதை.அவருக்கு எல்லாமே தெரிந்திருந்தது
    .தனக்கு தெரிந்ததையெல்லாம் அந்த சிறுமிக்கு கற்றுக்கொடுக்கத
    ்தொடங்கினார்.அவளுக்கு மாடஸ்டி என்று பெயர் சூட்டியதும் அவர்தான்.ஏராளமா
    ன புத்தகங்களை திருடிக்கொண்டு வந்து கொடுத்தாள்...நிறைய அவர் கற்றுக்கொடுப்பார் என்று...! மாடஸ்டியின் கற்றுக்கொள்ளும் வேகம் அவருக்கு பிரம்மிப்பூட்டி
    யது.ஒரு புத்தகத்தில் வந்த பிளைஸி என்ற பெயர் மாடஸ்டிக்கு பிடித்துப்போய்வ
    ிட...அதை தன் பெயருடன் சேர்த்துக்கொண்டு மாடஸ்டி பிளைஸி ஆனாள்..!
    அடுத்த நான்குஆண்டுகளுக்கு அவர்களிவரும் நாடோடிகள் போல் இடம் பெயர்ந்துகொண்டே
    யிருந்தார்கள்.வழியில் ஏற்பட்ட ஆபத்துகளையெல்லாம் மிக அலட்சியமாய் சாமாளித்தாள் மாடஸ்டி.
    மற்றவர்களைப்போல் தானும் வசதியாக வாழ வேண்டுமென்ற வெறி..அவளை நகரத்தின்பால் இழுத்தது.நகரை அடையும் சமயம் மூப்பின் காரணமாக அந்த முதியவர் இறந்து விட..அவரை அடக்கம் செய்த மாடஸ்டி...வாாழ்
    க்கையிலேயே முதன்முறையாக கதறி அழுதாள்.
    பின்பு ஹென்றி என்பவன் நடத்தி வந்த சூதாட்ட அரங்கில் பணிப்பெண்ணாக வேலைக்குச்சேர்ந்தாள் மாடஸ்டி.அடுதத் இரண்டு வருடங்களில் அங்கே அவள் கற்றுக்கொண்டது ஏராளம்.
    இரண்டு கும்பல்களுக்கிடையே நடந்த மோதலில் ஹென்றி கொல்லப்பட...அவன் இடத்துக்கு வந்தாள் மாடஸ்டி.திட்டங்களை வகுத்து...அதை மிகத்திறன்பட செயல்படுத்தினாள்.கும்பல் வலுப்பெற்றது.நாடுகள் தோறும் அவளது நெட்வொர்க்கின் கிளைகள் முளைத்தன.
    இருபதே வயதில் அவள் பெயர் உலகில் மூலைமுடுக்குகளி
    லெல்லாம் எதிரொலித்தன.ஆனா
    ல் குற்றங்களை நிரூபிக்கவே முடியவில்லை.மாடஸ்டியிடம் கெட்ட பழக்கங்கள் ஏற்படவேயில்லை.ம
    னிதனை ஈனப்படுத்தும் தீய பழக்கங்களை அறவே வெறுத்தாள்.
    சைகோனில் நடந்த ஒரு குத்துச்சண்டை போட்டியின் போதுதான் அவள் வில்லி கார்வினை முதன்முறையாக சந்தித்தாள்.சட்டத்திற்கு புறம்பான அந்த போட்டியில் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கார்வினை...எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல்.. சிறையிலிருந்து மீட்டாள் மாடஸ்டி..!
    திகைத்துப்போன கார்வினுக்கு மாடஸ்டி ஒரு இளவரசியாகவே தோன்றினாள்.
    மாடஸ்டியின் நட்பால்முரட்டு கார்வின் முற்றிலும் மாறிப்போனார்.வி
    ரைவிலேயே மாடஸ்டியின் வலது கரமாகிவிட்டார .

    ReplyDelete
  66. சேர்ந்து சண்டை போட்டார்கள.சேர்ந்தே திட்மிட்டார்கள்.சேர்ந்தே தப்பியோடினார்கள்.ஒருவருக்கு காயம் பட்டால் மற்றவர் அனுசரணையாய் கவனித்துக்கொண்டார்கள்.ஆறே ஆண்டுகளில் ஆயுசுக்கும் போதுமான செல்வத்தை குவித்துவிட்டார்கள்.
    பின்னர் தன் நெட்வொர்கை பல துண்டுகளாக்கி குழுத்தலைவர்கள் வசமே அவற்றை ஒப்படைத்துவிட்டு அந்த வாழ்க்கை்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள் மாடஸ்டி.
    லண்டனில் ஒரு மாளிகையை விலைக்கு வாங்கி அங்கே குடியேறினாள் மாடஸ்டி.வில்லி கார்வின் தேம்ஸ் நதியோரமிருந்த ரெஸ்டாரண்ட்டை வாங்கி விடுதி உரிமையாளரானார்.
    அமைதியான அந்த புது வாழ்வு அவர்களுக்கு அலுப்பூட்டியது.
    இதை மோப்பம் பிடித்த பிரிட்டிஷ் உளவுப்படையின் தலைவர் ஸர்.ஜெரால்டு டார்ரண்ட் ...அவர்களது திறமைகளை உளவுத்துறைக்கு பயன்படுத்திக்கொள்ள விரும்பினார்.மாடஸ்டி-கார்வின் வாழ்க்கையில் ஒரு புது அத்தியாயம் தொடங்கியது.முதன்முறையாக நீதிக்காக போராடத்துவங்கின
    ர்.ஆனாலும் அவர்கள் உளவுத்துறை ஊழியர்கள் அல்ல...! உழைப்புக்கு ஊதியம் பெற மறுத்தனர்...உத்தரவுகள் தங்களை கட்டுப்படுத்தவும் அனுமதிக்கவில்லை...!
    சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறினர்.ஆபத்து அவர்களை தேடி வந்த போது புது உற்சாகத்தோடு வரவேற்றனர்.
    மாடஸ்டி பிளைஸி-வில்லி கார்வினின் அதிரடி சாகஸங்கள் தொடர்ந்துகொண்டே
    யிருக்கின்றன.....!

    ReplyDelete
  67. ஆசிரியர் சார்,
    5000 ரூ விலையுள்ள புத்தகங்களில் ஒன்று மட்டுமே விற்று இருப்பதாக சொல்லி உள்ளீர்கள். அது எடக்ஸ் என்று உங்கள் நம்பிக்கையாக இருந்தால் அது விற்று போகவில்லை. தொலைந்து போய் விட்டதாக எனது நம்பிக்கை. ஒரு பதிப்பாசிரியருக்கு தன் படைப்பின் மீதான நம்பிக்கை குலையக் கூடாது. இதயத்தில் இடமுண்டு என்று சொல்லிக் கொண்டே கீச்சல் பாணி ஒவியம் கருப்பு வெள்ளை நிறம் நல்ல கதை முன்பு போல இல்லை. ஒன்றே விக்க மாட்டேங்குது இதில் இரண்டு மூணு சேர்த்துப் போட்டால் விளங்குமா? கலரில் கேட்டால் ஜிகினா இல்லாமல் நல்ல நாயகி ஜெயிக்க முடியாதா? மாடஸ்டி ஸ்பெஷல் கலரில் போட்டால் விற்குமா? என அவநம்பிக்கை குடோனில் இருப்பதில் அதிகம் இருப்பது மாடஸ்டி புக் என்றெல்லாம் நீங்களே ஒரு மாடஸ்டி மீதான நேர்மறை எண்ணத்தை மற்றவர்களிடம் உங்களை அறியாமலே ஏற்படுத்திவிட்டு விற்றால் எப்படி விற்கும் ?மாட்டுக்கார பசங்களை கொஞ்ச நாளாவது மாடு மேய்க்க விடவும் நகரம் சார்ந்த புதிய கதை களை வெளியிடவும்.டெக்ஸ் புக் என்பது பீட்சா மாதிரி பார்க்கவும், அதிக விலை ம்திப்புள்ளதாக தெரிந்தாலும் அதன் சுவை மாபஸ்பு எனும் பழைய சோற்றின் சுவையை ஒரு நாளும் முந்த முடியாது. 1 தொடரும்)

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...நீங்கள் வேறு மாதிரிப் பதிவிட்டிருந்தால் தான் ஆச்சர்யப்பட்டிருப்பேன் !

      டெக்ஸ் வில்லர் நமக்குப் பங்காளியுமல்ல ; மாடஸ்டி விரோதியுமல்ல ! ஒரு தொடரானது நாட்களின் ஓட்டத்துக்குத் தாக்குப் பிடிப்பதும், பிடிக்காதிருப்பதும் நிச்சயம் என் கைகளிலும் கிடையாது ! Survival of the fittest !

      அப்புறம் நம்பிக்கையை மட்டுமே கொண்டு வண்டி ஓட்டும் வித்தையினை இந்த பூமி கண்டுபிடிக்கவில்லையே இன்னமும் ; நானெல்லாம் எம்மாத்திரம் ?

      Delete
  68. எடி சார், விற்பனை உயர, தங்கள் மொழி பெயர்ப்பில் சமரசம் அவசியம். டோரேமாண், கரடிகள் சங்கம், shinchan போன்றோர் தமிழ் பேசி கேளுங்கள். காமிக்ஸ் படிக்க flow ah வரும் for kids.
    ஒவ்வொரு பத்தியிலும் வார்த்தைகளின் அர்த்தங்களில் சந்தேகம் வருவதால் அடுத்த தலைமுறை தாண்டி செல்கிறது. They have options and other distractions a plenty.
    When we were kids we didn't have so many options to learn or to be awed. FOr us Spider and Mayavi were our science teachers. They opened world of wonders. Our kids don't get pulled into these coz the exposure is such. Think in these lines.

    ReplyDelete
    Replies
    1. தப்பே இல்லை என்பேன் நண்பரே ; நல்ல தமிழ் பேசவும், எழுதவும் செய்வது விற்பனை விரிவாக்கத்துக்கொரு தடை எனில் - இந்தச் சின்ன வட்டமே சந்தோஷமாய்ப் போதுமென்பேன் !

      Might sound archaic ; ஆனால் இத்தனை காலத்து அடையாளத்தைத் தொலைத்து விட்டுத் தேடும் வெற்றி நமக்கு வேண்டாமே !

      Delete
    2. கார்ட்டுன் சானல்களின் 'டமில்' கொடுமை. அதிலும் கிட்டத்தட்ட கெட்ட வார்த்தைகளை சகஜமாகப் பயன்படுத்துகிறார்கள். அது அவர்கள் வசதி. நமக்கு இந்த ஆரோக்கியமான மொழி நடைதான் உயிர்நாடியே!

      Delete
    3. மொழிபெயர்ப்பு எந்தக் குறையுமின்றி நிறைவாகவே உள்ளது.

      Delete
    4. தற்சமயம் குழந்தைகள் தவறான வார்த்தைகளை கற்றுக்கொள்வதில் தமிழ் கார்டூன் சேனல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. விஜயன் சார்,
      தூத்தேறி போன்ற வார்த்தைகளை முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள். அது நல்ல தமிழில் படிக்கும் பொழுது சற்று உறுத்துகிறது.
      Like a pit hole in a nice road.

      Delete
    7. +1 மேலும் வடிவேலு "தமிளும்" கொஞ்சம் குறைக்கலாம்..
      E.g பிம்பிலிக்காபிலாபி...

      Delete
  69. We need short and entertaining stories like sort of IPL. Else, future for Tamil comics aids new and young readers look bleak

    ReplyDelete
  70. மௌனமாய்யொரு இடிமுழக்கம்:
    முன் அட்டைப்படம் அதன் பின்புறத்தை கொஞ்சம் உற்று பார்த்தால் மலை தெரிகிறது.

    அதேபோல் ட்யூராங்கோ அதிரடி என்ற பகுதியில் முதலில் ஓவியம் ஏதும் இல்லை என நினைத்தேன் சற்று உற்று நோக்கிய பின்னர் ஆச்சரியம்

    அட்டகாசமான அட்டைப்பட வடிவமைப்பு.

    ReplyDelete
  71. இந்த வாரம் எனது குழந்தைகள் டெக்ஸ் மற்றும் ட்யூராங்கோ கதைப் புத்தகங்களை புரட்டிப் பார்த்து அவர்களைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். இருவரையும் அவர்களுக்கு பிடித்து விட்டது, அவர்கள் கதையை சொல்லும்படி நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    இனி இவர்களின் கதையை அவர்களுக்கு பிடித்த மாதிரி சொல்லும் கடமை என்னுடையது.

    ReplyDelete
    Replies
    1. guys : பசங்களுக்கு கதை சொல்ல டெக்ஸ் சாகசத்தில் எதை suggest செய்வீர்கள் ?

      எனது choice - "சைத்தான் சாம்ராஜ்யம்" !

      Delete
    2. உங்கள் சாய்ஸே எனது சாய்ஸ் ஆனால் நான் என் மகளுக்கு
      தலையில்லாப் போராளி கதையினைத்தான் சொல்வேன்
      ஏனென்றால் எனது மகள் பேய் படங்களை அதாவது.சந்திரமுகி காஞ்சனா.அரண்மனை. போன்ற காமெடி கலந்த பேய் படங்களை விரும்புவாள் நான் தலையில்லாப் போராளி கதையினை கார்சனின் நகைச்சுவையோடு கலந்து சொல்லுவேன்

      Delete
    3. என்னோட சாய்ஸ் பவளச் சிலை மர்மமே.
      காரணம் எளிமையான கதை.பிள்ளைகளுக்கு எளிதில் புரியும்.ஓட்டப் பந்தயக் கதை எனும் போது இன்னும் ஈசியாக ஐக்கியமாகி விடலாம்.

      Delete
    4. இன்று நான் மரண முள் கதையை என் மகளுக்கும் மகனுக்கும் சொன்னேன் இருவருக்கும் பிடித்து விட்டது.

      Delete
  72. ////டெக்ஸ் ; டைகர் ; ட்யுரங்கோ ; ட்ரெண்ட் என்று ஓடும் இந்த கௌபாய் எக்ஸ்பிரஸில் இன்னமும் கூடுதலாய்ப் பெட்டிகளை இணைக்கலாமா ? அல்லது பிடுங்கியுள்ள ஆணிகளே போதுமானவை என்பீர்களா ? ////

    டைகா் ஓய்ந்துவிட்டாா்!
    டெக்ஸ் ஓவா்டோஸ்!! (எத்தனை பேச்சுக்களை வாங்கினாலும் என் நிலைபாடு இதுதான்)

    இந்நிலையில் டியுராங்கோ போன்ற அதிரடி நாயகா்கள் அவசியம் வேண்டும்!

    கௌபாய்ஸ் இல்லாத காமிக்ஸ் பயணம் என்பது சவக்குழியை நோக்கியதாகவே இருக்கும் என்பது என் எண்ணம்!

    நான் விரும்பும் காா்ட்டூன்கள், ஏன் நமது ஆசிாியரும் விரும்பும் காா்ட்டூன்களை நம்மில் பலா் ரசிப்பதில்லை என்பதும்,

    கி.நா.க்களுக்கும் இது சாலப் பொருந்தும்

    என்னும் போது நம் அனைவரையும் ஏதோ ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்கும் அரும்பணியை கௌபாய்களே செய்திருக்கிறாா்கள் என்பது மறுக்க முடியுமா என்ன?

    இன்றைய நவீன உலகையே நிா்மானித்த, நிா்மானிக்க அடித்தளமிட்ட

    19ஆம் நூற்றாண்டும்,
    வன்மேற்கும்,
    கௌபாய்களும் அது கொணா்ந்த தாக்கங்களுமே ஒரு மாயாஜாலக் கூட்டணியாகி நம்மை அவ்வுலகில் சஞ்சாிக்க வைக்கின்றன என்பதே என் எண்ணம்!!

    ReplyDelete
    Replies
    1. என் பெயா் டைகா் வாசகா் பகுதியில்,

      //தெளிவான அரசும், தெளிவான சட்டங்களும் இல்லாத காலகட்டத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறிய பேராசையும், சுயநலமும் கொண்ட சமூகத்தில் நீதிக்காக ஹீரோ துப்பாக்கிகளை முழக்கி நல்லவா்களைக் காப்பாற்றும் போது நாமும் மெய்மறந்து ரசிக்கின்றோம்!// என்ற

      மடிப்பாக்கம் வெங்கடேஷ்வரன்

      நண்பாின் வாா்த்தைகளை 100% சாியென்பேன்!

      Delete
    2. ///கௌபாய் எக்ஸ்பிரஸில் இன்னமும் கூடுதலாய்ப் பெட்டிகளை இணைக்கலாமா?///

      டெக்ஸ் பெட்டிகளை குறைத்து, புதிய கௌபாய்கள் வந்தால் நலம்!

      வருடத்தில் 12 டெக்ஸ் கதைகளை போட்டுதள்ளிவிட்டால், அதனால் ஏற்படும் அயா்ச்சியானது, டெக்ஸ் என்னும் மோகத்தினால் மறைந்து, இதர கௌபாய்கள் மேலேதான் பாயும்!

      Delete
  73. விஜயன் சார்,

    பழைய ஸ்டைல் ரிப்போர்ட்டர் ஜானி கதைகள் வண்ணத்தில் மிகவும் நன்றாக இருக்கின்றன மற்றும் சித்திரங்கள் மிகவும் நேர்த்தியாக உள்ளன.
    அவை ஆங்கிலத்தில் கிடைப்பதில்லை, அதனால் அதன் மதிப்பு மேலும் உயர்கின்றது.
    வருடத்திற்கு மூன்று கதைகளை ( reprints and new) பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    Ric Hochet (ரிப்போர்ட்டர் ஜானி) books looks like right size, right price and in color meant for new readers and existing readers.




    ReplyDelete
  74. 1. மாடஸ்டி ப்ளைசி

    கடைசியாக வந்த புதிய கதைகள் நன்றாகவே இருந்தது. ஆனால் சித்திரங்கள் மிகவும் சுமார் ரகம். எனது நிலை, வாய்ப்பு கொடுப்பதாயின் மாடஸ்டியைப் போல் விற்பனையில் சுனக்கம் கண்ட மேஜிக் விண்ட், டயபாலிக், கமான்சே, டைலன் போன்றோர்க்கும் இடம் ஒதுக்குங்கள், இல்லையென்றால் அவர்களோடு சேர்த்து மாடஸ்டியையும் நிருத்தி விடுங்கள். ஒருவர்க்கு மட்டும் பாரபட்சம் வேண்டாம்.

    2. ரிப்போர்டர் ஜானி பழையது, புதியது என இரண்டும் வரட்டுமே.

    3. தரமான கௌபாய் கதைகள் இருந்தால் தாராளமாக முயற்ச்க்கலாம்.


    ReplyDelete
  75. This comment has been removed by the author.

    ReplyDelete
  76. Chick Bill Classics 1 lion comics, Chick Bill Classics 2 Muthu Comics. No different track sir? I m simply asking this because once you said Muthu Comics is a gentleman and Lion is a youngster. Don't mistake me sir

    ReplyDelete
  77. டியர் எடிட்டர் சார்,

    விற்பனை பற்றி பலர் சொல்லி விட்டார்கள். அதன் நடைமுறை கடினங்கள் உங்களுக்கு மட்டுமே நன்றாக தெரியும். அதனால், நீங்கள் என்ன செய்தாலும் அது சிறப்பாகவே இருக்கும்.

    இப்பொழுது கௌபாய் கதைகளை விரும்பி படிப்பவர்களில் பெரும்பாலனவர் 30+ வயது முதிர்தவர்களே. அவர்கள் காமிக்ஸ் படிப்பது தன் கவலைகளை சற்றே மறக்க மற்றும் பழங்கால நினைவுகளில் சிறிது நேரம் நீந்துவதற்கே.

    கௌபாய் கதைகளின் காலம் பழம் காலம் மற்றும் நவீன சாதனங்கள் அற்ற கதைக்களம், படிப்பவர்களை மிக எளிதில் நிகழ்காலத்திலிருந்து விலக்கி அழைத்துச்செல்பவை.

    என்ன தான் லார்கோ, ஜானி கதைகள் இருந்தாலும், செல்போன் இல்லாத, கார் இல்லாத, குதிரைகள் நிறைந்த கதைகள் என்றும் நம் மனதினில் நிலைக்கும்.

    அகவே, தயவு செய்து கௌபாய் கதைகள் என்றும் நம் காமிக்ஸில் வெளிவரவேண்டும். நானும் படித்த டெக்ஸ் கதைகளை, படிக்கவில்லை என நினைத்து மறுபடியும் படிக்கும் கும்பல் தான். இருப்பினும் எனக்கு டெக்ஸ் பிடிக்கவில்லை என்றாலும், மற்றொரு கௌபாய் கண்டிப்பாக பிடிக்கும்.

    தோர்கல் கூட அதிக அளவில் பிடிப்பதற்கு அது நிகழ்காலத்தைச் சேர்ந்தவை இல்லை என்பதாலேயே என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  78. ட்யுராங்கோ...மௌனமாய் ஒரு இடிமுழக்கம்
    பகுதி ஒன்று + நரகத்தின் பாதையில்
    அதிவேகமாய் நகர்த்தப்படும் கதை
    True …it’s with a well orchestrated plot and fast paced..
    As a whole it’s fantastic to read and entertaining ..

    In page 38 one lieutenant is addressing the colonel as ‘’general’’..but this mistake was rectified on the following panels.
    Other hiccups in the plot
    To set free the german ‘’ maximillian ‘’ is irrational ..as his crime was high treason ..
    More than all the armed rebels against the government ‘’ max ‘’ is most dangerous …owing to the fact he is seeding antigovernment notions among the innocent Mexican peasants
    ‘’Max ‘’ need not be tortured but he should be presented to the military court ..
    Colonel’s decision regarding ‘’ max ‘’ is illogical and condemnable though the readers might have known ‘’max ‘’ is on good side.
    //////////////////////////////////////////////////////////////////////////////////////
    The colonel might have been soft natured and religious that does not necessarily mean he ought to have been a fool ..

    In the narrow mountain pass colonel ‘s decision to pursue the fleeing rebels despite the pass could pose as a ‘’ death trap’’ is astonishing one ..
    His cavalry has significant manpower ..more than hundred
    Theirs ‘ horses are well fed ,watered and rested ..unlike the rebels’horses.
    He need not have hurried …he could have waited ..
    By logic he could have sent a scout team to climb and reach the high grounds of the pass ..to assess the situation ..
    Though the rebels are retreating the potential of them to conquer a mini fort nearby and their’s daring to attack the DEL RIO FORT itself signifies the rebels’ manpower and firepower and these facts could never have been underestimated .
    Especially by an experienced colonel …

    (You can add the rebels’ tendency of ‘’ hurling dynamite bundles ‘’ to cause devastating effects .)

    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    Despite thev small flaws the story is an enjoyable one…

    ReplyDelete