Powered By Blogger

Sunday, May 27, 2018

எஞ்சிய அரை டஜன்....!

நண்பர்களே,

வணக்கம். தோட்டாச் சத்தங்கள் கேட்கக் கூடிய அருகாமையே நமக்கு! அந்தக் கரும் புகை திரண்டு எழுவதை முகர முடியாத குறை தான் ! கதைகளில், படங்களில், காமிக்ஸ்களில் ‘டுமீல்‘ ‘டுமீல்‘ சத்தங்களும், காக்காய்-குருவி போல எதிராளிகள் சரிந்து விழுவதும் நமக்குக் கொட்டாவியை ஏற்படுத்தும் சம்பவங்களே ! ஆனால் நிஜத்தில், அதுவும் மிக அருகிலுள்ள மண்ணில் துப்பாக்கி முழக்கங்கள் கேட்பதும், ஜனங்கள் சுருண்டு விழுவதும் வயிற்றைப் பிசையும் போது தான் எமதர்மனின் ஆதர்ஷ ஆயுதத்தின் வலிமை புலனாகிறது ! கண்ணில்படும் ஊடகங்கள் சகலத்திலும் இந்த மரண தாண்டவமே அலசப்படுகிறது ; ஏகமாய் உயரும் குரல்களில் ஏகப்பட்டோர் பேசுகின்றனர் ; ஆனால கண் செருகி மண்ணில் வீழ்ந்து கிடக்கும் மக்களின் அந்த ஒற்றைப் புகைப்படம் ஏற்படுத்தும் கலக்கத்துக்கு மருந்து யாரிடமும் இருப்பதாய்த் தோன்றவில்லை! இந்தச் சாவுகளுக்கு ஒரு அர்த்தமில்லாது போய்விடக் கூடாதென்று மட்டும் உள்ளுக்குள் படுகிறது! RIP the fallen ones !! 

போன வாரத்துக் கனமான நிகழ்வுகளா ? திருமண நிகழ்வுகள்… கிரகப் பிரவேசங்கள் என்ற பிசியா ? அல்லது IPL மேட்ச்களின் மும்முரமா ?; அல்லது பொதுவானதொரு அயர்ச்சியா ? என்று சொல்லத் தெரியவில்லை - ஆனால் கடந்த பதிவினில் நண்பர்களின் வருகைப் பதிவேட்டில் பெரும்பாலுமே ‘absent’ என்ற வாசகமே தென்பட்டது ! மாதா மாதம் ஒரு "நிஜங்களின் நிசப்தமோ" ; ஒரு "மெல்லத் திறந்தது கதவோ" வெளியிட்டால் அதனில் சேதமாகும் கேசத்தைப் பற்றிப் புகார் சொல்லவோ ; அவற்றை அகழ்வாராய்ச்சி செய்திடும் முனைப்பிலோ - நண்பர்கள் இங்கே அணிதிரள்வது நிகழ்ந்திடும் போலும் ! So இதுக்காகவேணும் மண்டையைப் பதம் பார்க்கும் சில பல ஆல்பங்களைத் தேடிப் பிடித்தாக வேண்டுமோ ?

Anyways – இதோ காத்திருக்கும் ஜுன் மாத இதழ்களின் பட்டியல் & updates : 

- லார்கோ : அச்சாகி முடிந்துள்ளது; பைண்டிங் பணிகள் பாக்கி.
- டெக்ஸ் - நடமாடும் நரகம் : ditto
- மாயாவி – நடுநிசிக் கள்வன் : ditto
- இரவுக்கழுகாரின் நிழலில் – Color டெக்ஸ் : ditto

அப்புறம் ஜம்போ காமிக்ஸின் முதல் இதழில் Young Tex – ஜுன் 15-ல் தனியாகக் களமிறங்கவுள்ளார் ! கூரியர் செலவுகள் மறுக்கா இதற்கென அவசியமாகிடும் என்பது புரிந்தாலும் – முதல் தேதிக்கே அதனையும் அனுப்பி வைத்து டெக்ஸ் overkill ஆகிட வேண்டாமே என்று பார்த்தேன் ! So இந்த மாதத்தின் மையத்திலும்  இதழொன்று உண்டு இம்முறை !  அப்புறம் இதுவரையிலும் வெளியாகியுள்ள 3 Color Tex இலவச இணைப்புகளின் தொகுப்பானது ஜுலை மாதம் பொது விற்பனைக்குத் தயாராகி விடும். சந்தாவில் இல்லாத நண்பர்கள் அடுத்த மாதம் அதனை வாங்கிக் கொள்ளலாம்.

இரத்தப் படலம்” பணிகளும் ஒருவழியாக வேகமெடுத்து விட்டன ! புக் # 1 முழுமையாய் அச்சாகி முடிந்து விட்டுள்ளது ! புக் # 2 நேற்றைக்கு அச்சுக்குச் சென்றுள்ளதெனும் போது – அடுத்த சில நாட்களில் that should be done too ! புக் # 3 பின்னேயே தொடர்ந்திடுமென்பதால் ஜுன் முதல் வாரத்துக்குள் மொத்தமாய் பைண்டிங்குக்கு அனுப்பி விட்டு, அந்த slip-case பணிகளுக்குள் புகுந்திட வேண்டியது தான் ! 
So அடுத்த operation – அந்த டெக்ஸ் டைனமைட் மீதே! வேலையோடு வேலைகளாய் இதனையும் கரை சேர்த்து விட்டால் அப்புறம் ஆண்டின் இறுதி வரைக்கும் கையை வீசிக் கொண்டு லாத்தலாய் இருக்கலாமென்ற நினைப்பே எங்கள் கால்களுக்கு சக்கரங்களை வழங்குகின்றன ! Wish us luck guys! ஆகஸ்டையே இலக்காகக் கொண்டு முடிந்தமட்டுக்கு 'தம்' பிடித்துப் பணியாற்றுவோம் ; எங்கேனும் வண்டி தடுமாறிடும் பட்சத்தில் - செப்டம்பர் for sure!

அப்புறம் போன பதிவில் எனது Recent Top 12 பற்றி எழுதத் துவங்கியிருந்தேன்! முதல் அரை டஜனை விவரித்திருக்க – இதோ எனது எஞ்சிடும் அரை டஜன்!

க்ரீன் மேனர்:

Cinebook ஆங்கிலப் பதிப்பில் இந்த ஆல்பங்கள் வெளிவந்திருக்கா பட்சத்தில் நாம் இந்த திசைப் பக்கமாய் தலை வைத்தே படுத்திருக்க மாட்டோமென்பது நிச்சயம்! அவர்களது அட்டகாசமான மொழிபெயர்ப்பில் இந்தக் கதைகளைப் படித்த முதல் நொடியில் எனக்குப் பட்டதெல்லாம் – ‘தமிழில் இதனை முயற்சித்தால் நம்மவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?‘ என்பதே ! எனது தயக்கங்களுக்கு 3 காரணங்கள் இருந்தன! அப்போதெல்லாம் கிராபிக் நாவல்களுக்குள்ளே புகுந்து முத்துக்குளிக்கும் அனுபவங்களெல்லாம் நமக்கு அவ்வளவாய்க் கிடையாதென்பதால் – இந்த பாணிக்கு நமது வரவேற்பு எவ்விதமிருக்குமோ என்று சொல்லத் தெரியவில்லை! சிக்கல் # 2 ஆக நான் பார்த்தது அந்தக் குட்டிக்குட்டிக் கதை பாணிகள்! இது போன்ற சிறுகதைத் தொகுப்புகளை வெளியிடும் போதெல்லாமே 1986-ல் நமது முதல் 3 திகில் இதழ்களுக்குக் கிட்டிய “பிச்சைக்காரன் வாந்தியெடுத்தது போல” என்ற விமர்சனமே ஞாபகத்துக்கு வந்திடுவது வழக்கம் ! So ஒரே கதையாக இல்லாத, ஹீரோவே இல்லாத துண்டு + துக்கடா கதைக்கு சாத்து விழுமா ? சந்தன மாலை விழுமா ? என்று கணிக்கத் தெரிந்திருக்கவில்லை. பிரச்சனை # 3 ஆகத் தென்பட்டது அந்தக் கார்ட்டூன் சித்திர ஸ்டைல்களே! சீரியஸான கதைக்களத்துக்கு செம கார்ட்டூன் பாணியில் சித்திரங்கள் என்பதை எவ்விதம் எடுத்துக் கொள்வீர்களோ என்ற தயக்கம் நிரம்பவே! 

ஆனால் எது எப்படியானாலும், இதனை வெளியிடாது விட்டால் தலைக்குள் குடியேறியிருந்த ஆர்வம் சீக்கிரத்தில் வெளியேறாது என்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது! அப்புறம் தொடர்ந்த சமாச்சாரங்கள் தான் நீங்கள் அறிந்ததே! நான் மிரண்டு நின்ற கார்ட்டூன் சித்திர பாணிகளே இந்த ஆல்பத்தை இன்னொரு லெவலுக்கு இட்டுச் செல்லும் காரணியாக அமைந்தது! அந்தச் சிறுகதை பாணியே ஒரு அசாத்திய variety-க்குக் களம் அமைத்துத் தந்திருந்தது! நான் தயக்கம் காட்டிய புது genre ரசிப்பு சார்ந்த கேள்விக்குறி – ஒரு ஆச்சர்யக்குறியாக உருமாறியிருந்தது ! Without an iota of doubt - க்ரீன் மேனர் – நம் பயணத்தின் ஒரு மறக்க இயலா ஸ்டாப்!

நிலவொளியில் நரபலி !

Comic Con 2013 (2012 ??)-ன் சமயம் அடித்துப் பிடித்துத் தயார் செய்த இந்த இதழ் எனது favourites பட்டியலில் எப்போதுமே இடம்பிடிக்குமொரு சமாச்சாரம்! Maybe அந்த சைஸும் ஒரு கூடுதல் காரணமா என்று சொல்லத் தெரியவில்லை; ஆனால் பட்டாசாய்ப் பொரிந்து தள்ளும் அந்த 110 பக்க Tex சாகஸம் வண்ணத்தில், அந்த 'சிக்' சைசில் ரொம்பவே பிரமாதமாய்த் தோன்றியது  எனக்கு ! ஒரே ஞாயிறில் மொழிபெயர்ப்பு ; தொடர்ந்த 2 நாட்களில் டைப்செட்டிங்; பிராசஸிங்; அதன் மறுநாள் அச்சு என்று எல்லாமே இதனில் எக்ஸ்பிரஸ் வேகமே ! டெக்ஸைக் கலரில் தரிசிப்பதெல்லாம் அந்நாட்களில் குதிரைக் கொம்பெனும் போது, மினுமினுக்கும் மஞ்சள் சட்டைகள் வசீகரித்தன ! இந்தக் கதைக்குத் தலைப்பு தேர்வு செய்யத் தான் ரொம்பவே திணறியதாய் ஞாபகம் – simply becos 5 விதமான பெயர்கள் தலையில் முளைத்திருந்தன! அவற்றுள் எதைத் தேர்வு செய்வதென்று தான் மொக்கை போட நேர்ந்தது! விற்பனையிலும் அதகளம் செய்ததொரு இதழிது! Wish you liked this size too guys ! 

இரவே... இருளே... கொல்லாதே!

இந்த இதழ் வெளியான போது பரவலாய்க் கிடைத்தது சாத்துக்களே என்பது நினைவில் உள்ளது! “தீபாவளி நெருங்கும் வேளையில் bright ஆகவொரு ஆல்பத்தை வெளியிடாது – இது மாதிரியொரு இருண்ட சாகஸத்தைப் போடச் சொல்லிக் கேட்டோமா?” என்றே சாத்துக்களுக்கொரு முகாந்திரமும்! ஆனால் நாட்கள் நகர, நகர – இந்தத் த்ரில்லரைப் படிக்கப் படிக்க, நிறையவே சிலாகிப்புகள் நம்மைத் தேடி வந்தன! என்னைப் பொறுத்தவரை, இது மாதிரியான cinematic கதைக் களங்கள் வெற்றி பெறாது போகாது என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது! 3 ஆல்பங்கள்; இவற்றைத் தொகுப்பாக்கிப் போடுவதா? அல்லது ஜேஸன் ப்ரைஸ் பாணியில் பிரித்துப் போடுவதா? என்ற கேள்வி மட்டுமே என்னுள் அப்போது ! ஆனால் பிரித்துப் போட்டால் அந்த த்ரில் element சிதைந்திடக் கூடுமென்றுபட்டதால் ஒரே ஆல்பமாக்கிடத் தீர்மானம் செய்தேன்! பொதுவாய் இது மாதிரிக் கதைகளை நாம் சினிமாக்களில் மட்டுமே பார்த்திருப்போம் – நமது காமிக்ஸுக்கு இது புதிதே என்பதால் – உங்கள் மீது நம்பிக்கை வைத்த கையோடு களமிறங்கினோம்! தாமதமாக என்றாலும், பிரமாதமாய் தோள் கொடுத்தீர்கள் ! P.S : அந்த ஹாலோவீன் பண்டிகை சார்ந்த "கவிதைகளை" நினைவுள்ளதா guys ? 😅😄😂

என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் :

அது ஏனோ தெரியவில்லை – ஆனால் இந்த noir ரக இருண்ட கதைகள் மீது எனக்கு மையல் ஜாஸ்தியே ! அதிலும் உலகப் போர்ப்பின்னணியோடு பின்னிப் பிணைந்த கதையெனும் போது சொல்லவா வேண்டும் ? எனது ஆர்வ மீட்டர் படுசூடானது ! 2016-ல் இந்தக் கதையைப் பரிசீலனை செய்த போது – இத்தாலிய பாஷையிலிருந்த வரிகளை கூகுள் உதவியோடு மொழிபெயர்த்துப் படிப்பதே கூட ஒரு கி.நா. அனுபவம் போலவே இருந்தது தான்! மேலோட்டமாய்ப் புரிந்து கொள்ளவே ஏகப்பட்ட பிரயத்தனம் தேவைப்பட்டது! “இதழ் வெளிவர வேண்டிய சமயம் பார்த்துக் கொள்ளலாம்” என்று அப்போதைக்குத் தாண்டிச் சென்று விட்டிருந்தாலும், அதனை வெளியிடும் தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தேன் ! கதைநெடுக சோகமே அடித்தளம் என்ற போதிலும், அந்நாட்களின் வாழ்க்கையின் பிரதிபலிப்பே என்ற புரிதல் இந்தக் கதைக்கு ஒரு கூடுதல் பரிமாணத்தை நல்கியது போலிருந்தது ! இதனில் பணி செய்த 10 நாட்களுமே எனக்கும் அதன் தாக்கம் இருந்தது! A book to remember !! At least for me!!

Never Before Special:

இந்த இதழைப் பையில் தூக்கி வைத்துப் பேக் பண்ண ஒரு நூறு காரணங்கள் சொல்லலாம்! நமது இரண்டாவது இன்னிங்ஸின் பயணத்துக்கு ஒரு வேகத்தை மட்டுமன்றி ஒரு நம்பகத்தன்மையையும் தந்த இதழிது என்பது என் அபிப்பிராயம் ! இந்தப் புது மாப்பிள்ளை ஜோரெல்லாம் ஆறு மாசம் தாங்குமா?” என்று என்னிடமே கேட்ட நண்பர்கள் உண்டு ! Maybe அவர்களையுமே “நம்புவோர் பட்டியலுக்கு” மாறச் செய்த இதழ் இது என்றும் சொல்லலாம் ! திரும்பி பார்க்கையில் இன்றைக்கு இந்த NBS பட்ஜெட் ஒரு சிகர உச்சியாய்த் தெரியாது போகலாம் தான்; ஆனால் அந்தத் தருணத்தில் அதுவொரு massive – massive ப்ராஜெக்டே! அதனில் வெற்றி காணச் செய்த உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மலர்க்கொத்து உரித்தாக்கிட வேண்டும்! எல்லாவற்றையும் விடப் பெரும் அனுபவம் – இதன் ரிலீஸின் தருணத்தில் சென்னைப் புத்தகவிழாவில் நாம் செய்த அதகளங்கள் தான்! கண்ணில்பட்ட இதர ஸ்டால் உரிமையாளர்கள் அத்தனை பேரின் ரௌத்திரங்களையும் அன்று சம்பாதித்த துரதிர்ஷ்டத்தை மட்டும் கால இயந்திரத்தில் பின்சென்று அழித்திட முடியுமெனில் முதல் ஆளாக நான் காத்திருப்பேன் ! Phew!!!

LMS:

இன்னுமொரு மெகா ப்ராஜெக்ட்; இன்னுமொரு மைல்கல் இதழ்! And உங்கள் புண்ணியத்தில் இன்னுமொரு runway hit! என்னைப் பொறுத்தவரையிலும், இந்த இதழின் highlight அந்த வண்ணத்திலான டைலன் டாக் சாகஸமே! அந்தக் கதைக்களமும் செம மிரட்டலானதொன்று எனும் போது, வண்ணத்தில் அதை ரசிப்பது ஒரு சூப்பர் அனுபவமாக இருந்தது! அந்த மெகா டெக்ஸ் சாகஸம் ; b&w கிராபிக் நாவல்; ரின்டின் கேன் அறிமுகக் கதை என்று ரசிக்க ஏகமாய் சமாச்சாரங்கள் இந்த இதழில் இருந்ததாய் நினைவு ! இப்போதும் இதைக் கையில் தூக்கிப் புரட்டும் போது, இதன் டெஸ்பாட்ச் சமயம் ஆபீசே திருவிழா போல் காட்சி தந்தது தான் ஞாபகத்துக்கு வருகிறது ! In many many ways - மறக்க இயலா இதழ் ! And வாரா வாரம் ஞாயிறன்று ஒரு பதிவு - என்ற routine-ஐத் தெரிந்தோ – தெரியாமலோ ஏற்படுத்தித் தந்த இதழும் இது! 4 ஆண்டுகள் ஓடிவிட்டன இதன் வெளியீட்டுச் சமயத்திலிருந்து என்பதை நம்பவா முடிகிறது ?!!

And that winds up my list of my recent top 12 !! இன்னும் கொஞ்ச காலம் போன பின்னே இந்தப் பட்டியலிலுள்ள சில இதழ்கள் காணாது போயிருக்கலாம் ; சில புதுசுகள் இடம் பிடித்திருக்கவும் செய்யலாம் ! ஆனால் தற்போதைக்கு எனது லிஸ்ட் இதுவே ! உலகைப் புரட்டிப் போடக்கூடிய இந்தச் சேதியைச் சொன்ன கையோடு நான் நடையைக் கட்டுகிறேன் guys - காத்திருக்கும் "டைனமைட் ஸ்பெஷல்" பணிகளுக்குள் புகுந்திட !! 

புதனன்று உங்களது கூரியர்கள் புறப்படும் ! Have an awesome Sunday ! Bye for now ! See you around!

152 comments:

  1. Replies
    1. இரவு வணக்கம் நண்பர்களே!!!

      Delete
  2. அதிகாலை வாங்கக் 🙏

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. 10 க்குள் வந்தாச்சு சொக்கா...டண்டணக்க டக்கா....

    ReplyDelete
  5. இரவு வணக்கம் சார் _/|\_
    .

    ReplyDelete
  6. க்ரீன் மேனர்:

    Cinebook ஆங்கிலப் பதிப்பில் இந்த ஆல்பங்கள் வெளிவந்திருக்கா பட்சத்தில் நாம் இந்த திசைப் பக்கமாய் தலை வைத்தே படுத்திருக்க மாட்டோமென்பது நிச்சயம்! அவர்களது அட்டகாசமான மொழிபெயர்ப்பில் இந்தக் கதைகளைப் படித்த முதல் நொடியில் எனக்குப் பட்டதெல்லாம் – ‘தமிழில் இதனை முயற்சித்தால் நம்மவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?‘ என்பதே ! எனது தயக்கங்களுக்கு 3 காரணங்கள் இருந்தன! அப்போதெல்லாம் கிராபிக் நாவல்களுக்குள்ளே புகுந்து முத்துக்குளிக்கும் அனுபவங்களெல்லாம் நமக்கு அவ்வளவாய்க் கிடையாதென்பதால் – இந்த பாணிக்கு நமது வரவேற்பு எவ்விதமிருக்குமோ என்று சொல்லத் தெரியவில்லை! சிக்கல்..


    எனக்குமே பக்கத்தில் இருக்கும் யாரையாவது ஒரு பஸ்ஸிலோ அல்லது ஓடும் ரயிலிலோ தள்ளி விட்டாலென்ன ஒரு Impulse ஐ தூண்டி விட்ட புத்தகம்... இன்று வரை மறு வாசிப்புக்கு பயந்து பதுக்கி வைத்திருக்கும் புத்தகம் க்ரீன் மேணரே..அதிர்ஷ்ட வசமாக இதன் முடிவு பக்கம் என்னுடைய பிரதியில் இல்லை.. அதுவும் ஒரு வகையில் சந்தோசமே... பட்லரின் முடிவை தெரிந்து கொள்ள இப்ப வரையிலுமே பயம் தான்.... So dark..

    ReplyDelete
    Replies
    1. அந்த பெல்ஜியத்து சஞ்சய் ராமசாமி தான் நமக்கு safe போலும் ! Phew !!

      Delete
  7. Replies
    1. விஜயராகவன், உங்களை காண்டாக்ட் பண்ண முடியவில்லை, உங்கள் போன் எப்பொழுதும் பிஸி என்றே வருகிறது. தயவு செய்து எனக்கு கூப்பிடுங்கள். உங்கள் ஈமெயில் ஐடி தெரிவியுங்கள். என் நம்பர் 9900262905

      Delete
  8. விடுமுறை நாள் வணக்கம் ஆசிரியரே

    ReplyDelete
  9. டைலன் டாக்கின் அந்தி மண்டலம் மற்றும் மார்ட்டின் கலக்கும் புதிர் அரங்கம் பற்றிய கதை இரண்டுமே வித்தியாசமானவை.

    ReplyDelete
  10. உங்களின் பதிவு இல்லையென்றால்தான் அயர்ச்சி உங்கள் பதிவுதான் எங்களின் மலர்ச்சி

    ReplyDelete
  11. LMS போல் ஒரு குண்டு இதழ் மீண்டும் வருமா சார்?

    ReplyDelete
  12. நடு நிசி வணக்கம் சாரே

    ReplyDelete
  13. நான் 22வது ஆள்

    ReplyDelete
  14. இந்த வாரம் உங்களின் இரண்டாவது ஆறு கதைகள்
    எனது இரண்டாவது பன்னிரண்டு கதைகள்

    1. ட்யூராங்கோ

    2. சிக்பில் கிளாசிக்.2

    3. சர்வமும் நானே

    4. துரத்தும் தலைவிதி

    5. எஞ்சி நின்றவனின் கதை

    6. காலனின் கைக்கூலி

    7. ரிப்போர்ட்டர் ஜானி ஸ்பெஷல்

    8. லக்கி லூக் கிளாசிக்.1

    9. சாகாவரத்தின் சாவி

    10. ஜேசன் ப்ரைஸ்

    11. இனி எல்லாம் மரணமே

    12. திகில் நகரில் டெக்ஸ்

    ReplyDelete
  15. ட்யுராங்கோ - 26.5.2018 தமிழ் இந்து நாளிதழின் 9-ம் பக்கத்தினை பார்க்கவும்

    ReplyDelete
  16. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  17. One of the episode in the green manor was copied in A.R.Murugados's spider tamil/telugu movie such as Mountain murder scene ...

    ReplyDelete
    Replies
    1. அடடே...அப்படியா ?

      Delete
    2. ஆமா
      ஆனா புரியாத மாதிரி

      Delete
    3. வெளியத் தெரியாம....
      அந்த மனுசனுக்கு கற்பனை வறட்சி ஜாஸ்தி...
      ஏழாம் அறிவு கூட சுட்டது தான்

      Delete
  18. // So அடுத்த operation – அந்த டெக்ஸ் டைனமைட் மீதே! வேலையோடு வேலைகளாய் இதனையும் கரை சேர்த்து விட்டால் அப்புறம் ஆண்டின் இறுதி வரைக்கும் கையை வீசிக் கொண்டு லாத்தலாய் இருக்கலாமென்ற நினைப்பே எங்கள் கால்களுக்கு சக்கரங்களை வழங்குகின்றன ! Wish us luck guys! //

    Good luck and all the very best.

    ReplyDelete
  19. ஜம்போ காமிக்ஸின் முதல் இதழில் Young // Tex – ஜுன் 15-ல் தனியாகக் களமிறங்கவுள்ளார் ! So இந்த மாதத்தின் மையத்திலும் இதழொன்று உண்டு இம்முறை //

    நன்றி. அட்டகாசம்.

    ReplyDelete
  20. // ஒற்றைப் புகைப்படம் ஏற்படுத்தும் கலக்கத்துக்கு மருந்து யாரிடமும் இருப்பதாய்த் தோன்றவில்லை! இந்தச் சாவுகளுக்கு ஒரு அர்த்தமில்லாது போய்விடக் கூடாதென்று மட்டும் உள்ளுக்குள் படுகிறது! //

    கண்டிப்பாக அர்த்தம் கிடைக்கும்.

    இவை நடந்த இரணடு இடங்களும் எனது வீட்டில் இருந்து 10 நிமிட நடை தூரமே.:-(

    ReplyDelete
    Replies
    1. துப்பாக்கி சுடு நடந்த பிறகு கடந்த சில நாட்களாக இரவில் எனக்கு இரவெல்லாம் தூக்கம் வர மாட்டேங்குது.

      Delete
    2. கணேஷ் @ பெரும்பாலான நண்பர்கள் நிலை உங்களைப் போன்றதுதான்.

      Delete
    3. அருகில் இருந்து பார்த்த என் நிலை என்னவென்று சொல்வேன் ..

      லாரியில் பனியன் பார்சல் ட்ரிப் போனபோது கண்முன்னே

      கதையில் வரும் டெக்ஸ் கூட அப்படி சுட்டிருக்க மாட்டார்

      உள்ளே (tuticorin) நிறைய ரகசியங்கள்
      இங்கே இதை பற்றி பேச வேண்டாமென்று நினைக்கிறேன்

      ஆனாலும் அந்த இரண்டு நான் என் காதுக்குள்ளே டுமீல் டுமீல் சப்தம்தான் கேட்டுக்கொண்டே இருந்தது

      Delete
  21. அயர்ச்சி அல்ல சார்...


    துயரமே...:-(

    ReplyDelete
  22. மண்டையைப் பதம் பார்க்கும் சில பல ஆல்பங்களைத் தேடிப் பிடித்தாக வேண்டுமோ ?


    ######


    ஙே...:-(

    ReplyDelete
  23. இந்த வார உங்கள் பெரும்பாலான "சிக்‌ஸ் " என்னையும் குறுங்கடிதத்தில் இருந்து பெருங்கடிதமாக மாற்ற வைத்த பெருமையும் உண்டு சார்..:-)

    ReplyDelete
  24. நிலவொளியில் நரபலி இது போன்ற டெக்ஸ் கதை இருந்தால் வருடம் ஒருமுறையாவது வெளியீடுங்களேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. "பவளச் சிலை மர்மம்" கூட இந்த சைசில் ; அதே பக்க அளவில் வர இருந்த இதழ் தானே ? நண்பர்கள் ஒட்டு மொத்தமாய் வழக்கமான பெரிய சைசுக்கே 'ஜே' போட்டதால் மாற்ற வேண்டிப் போனது !

      Delete
    2. விஜயன் சார், சைஸ் பற்றி சொல்லவில்லை. கதையைப் பற்றி சொன்னேன். நி.ந.ப கதையை படித்த போது மனது திக் திக் என்று இருந்தது, அந்த வண்ணம் அதற்கு பக்கத் துணையாக இருந்தது.

      Delete
    3. அந்த கதையின் மொழிபெயர்ப்பு இன்னும் ஒரு ப்ளஸ்.

      Delete
  25. // கிரகப் பிரவேசங்கள் என்ற பிசியா ? //
    அதேதான் சார்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் அரசு. என் விட்டிற்க்கும் இந்த வாரம் கிரக பிரவேசம்.(துப்பாக்கி சுடு ஏற்படுத்திய சோகத்தில் இருந்து மீண்டு விடுவேன் என்று நம்புகிறேன்.)

      Delete
    2. மேலே கூறியது எனது வீட்டு நிகழ்வல்ல.
      அருமை சகோதரர் போஸ்டல் பீனிக்ஸ் மயிலை இராஜா சக்ரவர்த்தி அவர்களின் வீட்டு புதுமனை புகு விழாவையே அப்படி குறிப்பிட்டிருந்தேன்.
      தங்களது புதுமனை புகுவிழாவிற்கு முன்கூட்டிய வாழ்த்துகள் கணேஷ் ஜி.

      Delete
    3. கணேஷ் @ // என் விட்டிற்க்கும் இந்த வாரம் கிரக பிரவேசம்.//

      வாழ்த்துக்கள். என்றும் சந்தோஷம் மற்றும் ஆரோக்கியத்துடன் புதிய வீட்டில் குடும்பத்துடன் வாழ வாழ்த்துக்கள்.

      Delete
    4. கணேஷ் @ // என் விட்டிற்க்கும் இந்த வாரம் கிரக பிரவேசம்.//

      வாழ்த்துக்கள். என்றும் சந்தோஷம் மற்றும் ஆரோக்கியத்துடன் புதிய வீட்டில் குடும்பத்துடன் வாழ வாழ்த்துக்கள்.

      Delete
    5. முன்கூட்டிய வாழ்த்துகள் கணேஷ் சார்..:-)

      Delete
    6. அடடே..வாழ்த்துக்கள் கணேஷ்குமார் சார் !

      Delete
    7. சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் சொந்த வீடு அந்த சந்தோஷத்தை விரைவில் அனுபவிக்க போகும் நண்பர் கணேஷ் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

      Delete
    8. வாழ்த்துக்கள் கூறிய ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் நன்றி.
      மேலும் மயிலை இராஜ சக்கரவர்த்தி க்கு என் வாழ்த்துக்கள்.

      Delete
    9. திரு ராஜா மயிலை,
      திரு கணேஷ் குமார்@

      புதுவீட்டில் என்றும் மகிழ்ச்சியோடு ஆனந்தமாக வாழ வாழ்த்துக்கள் சார்ஸ்...!!!💐💐💐💐💐🎈🎈🎈🎈🎈🎂🍫🍧🍦🍨🎁

      Delete
    10. வாழ்த்துக்கள் கணேஷ் குமார்🌷🌷🌷🌷என்றும் சந்தோஷம் மற்றும் ஆரோக்கியத்துடன் புதிய வீட்டில் குடும்பத்துடன் வாழ வாழ்த்துக்கள்.

      Delete
    11. திரு . ராஜா மயிலை ஜி , கணேஷ்குமார் ஜி , இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

      Delete
  26. ஏபரல் இதழ்கள் மூன்றாம் அல்லது நான்காவது...?
    நண்பர்கள் தயவு செய்து தெளிவுபடுத்தவும்.....

    ReplyDelete
    Replies
    1. 4 சார்...இந்த லிங்க்கில் பாருங்களேன் : http://lioncomics.in/monthly-packs/493-april-2018-pack.html

      Delete
  27. ஏப்ரல் இதழ்கள் மூன்றா அல்லது நான்கா....?
    நண்பர்கள் தயவு செய்து தெரியபடுத்தவும்

    ReplyDelete
  28. பழையது:
    தூங்கி போன டைம் பாம் - கார்ட்டூன் கதை. ஜில் ஜோர்டான் கதைகளை போல் கதை அம்சம் சீரியஸ் ஆனால் கார்ட்டூன் வடிவத்தில். போர் அடிக்கும் கதை
    ஒரு பழைய கணக்கு - வெஸ் ஸ்லேட் ஒரு நிரபராதியை காப்பாற்ற ஒரு ஊரின் பெரிய டான் எதிர்கொள்ளும் கதை. கதை என்னவோ டெக்ஸ் வில்லர் கதை போல இருந்தாலும், டிரீட்மெண்டும் சித்திரங்களும் வெகு வித்தியாசம்

    புதியது

    சிக் பில் கிளாஸ்சிக்ஸ் 2 - சிக் பில் கிளாஸ்சிக்ஸ் 1 ஐ தூக்கி சாப்பிட்டு விட்டது. நான் இதில் எந்த கதையும் முன்பு படித்தது இல்லை. 3 கதைகளும் செம. ரின் டின் கேன், ப்ளூ கோட்ஸ் வெறும் புன்முறுவலை ஏற்படுத்தும் ஆனால் சிக் பில் கதைகளில் தான் சிரிப்பு தானாக வரும். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்கும்போது வீட்டிலிருப்பவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாப் புகழும் "அம்மாஞ்சி" ஆர்டினாருக்கு !!

      Delete
  29. ஒரு "மெல்லத் திறந்தது கதவோ" வெளியிட்டால் அதனில் சேதமாகும் கேசத்தைப் பற்றிப் புகார் சொல்லவோ ; அவற்றை அகழ்வாராய்ச்சி செய்திடும் முனைப்பிலோ - நண்பர்கள் இங்கே அணிதிரள்வது நிகழ்ந்திடும் போலும் !

    அந்த பீதியில் தான் யாருமே தலைகாட்ட வில்லையோ என்னமோ.
    அதிலும் அந்த மெ.தி.க அகழ்வாய்வு ரொம்பவும் படுத்தி விட்டது போலும்.

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு கிராபிக் நாவலைப் போட்டட்டே தீரணும் போலும் !!

      Delete
  30. ஒரு காமிக்ஸ் குடும்பம்...

    இதை பகிரலாமா என தெரியவில்லை .ஆனால் இதற்கு மிக முக்கிய காரணமானவர் இவர் என்பதால் பகிர்வதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன்.

    இத்தளத்தில் " போஸ்டல் பீனிக்ஸ் " என அறியப்படும் மயிலை ராஜா அவர்களின் புதுமனைபுகுவிழா மற்றும் இனிய பிரான்ஸ் நண்பர் ஹசன் அவர்களின் ரம்ஜான் அழைப்பு என இருவரின் அன்பான அழைப்பு மற்றும் அருகருகே அமைந்த அவர்களின் வசிப்பிடங்கள் ஒருங்கே அமைய காமிக்ஸ் நண்பர்களின் குடும்ப சுற்றுலா இனிதே ஆரம்பித்தது.பெரும்பாலான நண்பர்கள் இல்லதரசி,வாரிசுகளுடன் என குடும்பத்துடன் வருகை தந்தது தான் மிக சிறப்பு .முதல் நாள் நண்பர் ஹசன் அவர்களின் இல்லத்திற்கு சென்றதும் அங்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர் ஹசன் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்ததில் நண்பர்களுக்கு மிக மகிழ்ச்சி எனில் ஹசன் அவர்களின் குடும்பத்தினருக்கோ அளவில்லா ஆனந்தம் என்பதில் அவர்கள் வரவேற்பிலும் ,உபசரிப்பிலுமே அறிய முடிந்தது. பின் இரு மணி நேரங்கள் அறிமுகங்கள் ,நலம் விசாரிப்புகள் ,காமிக்ஸ் உரையாடல்கள் ,காமிக்ஸ் இதழ்களின் பரிசளிப்புகள் என நேரம் போவதே தெரியாமல் ஓர் இனிய சந்திப்பு நிறைவேற பின் பல காமிக்ஸ் நண்பர்களின் வாரிசுகளின் இனிய ஆசைகளினாலும் ,என்னை போன்ற சிறுவர்களின் அழைப்பினர்கிணங்கவும் "தரங்கம்பாடி பீச் " என்ற அழகான கடலலைகளுடன் இரவு முழுவதும் கும்மாளம் இட்டதில் அங்கும் நேரம் போவதே தெரியாமல் வானத்தில் விண்மீன்கள் கண்டவுடன் தான் இரவு ஆனதே அறிய முடிந்தது.

    பின் அடுத்த நாள் காலை மயிலை ராஜா அவர்களின் புதுமனை புகு விழாவிற்கு நண்பர்கள் குடும்பத்தினர் என அனைவரும் அவ்வளவு பெரிய்ய்ய பேருந்தில் இறங்க ஏதோ அருகில் மாநாடா என பிறர் விசாரிக்கும் அளவிற்கு சென்றது ஒரு சிறிய நிகழ்வே.பின்னர் அவ்விழாவில் அனைவரும் மதியம் வரை கலந்து கொண்டு மகிழ்ந்து உறவினர்களோடு உறவினர்களாய் காமிக்ஸ் நண்பர்களும் குடும்பத்தினரும் இணைந்தது மிக மிக மகிழ்வான ஒன்றாக அமைந்ததை மயிலை ராஜா அவர்களின் முகத்தில் அறிய முடிந்தது.


    காமிக்ஸ் இதழ்கள் மூலம் அறிமுக நட்பாகி ,பின் நண்பர்கள் குழாம் நெருங்க ,அதன் பின் நண்பர்களின் இல்லத்தரசிகளும் ஒருவருக்கொருவர் நட்பாக ,பின் அவர்களும் ஒரு குழுவாக இணைய ,பின் அனைவரும் இணைந்த ஓர் உறவாக இந்த காமிக்ஸ் குடும்பம் இணைய ,பின் அனைத்து விசேஷங்களுக்கும் உறவினர்களை அழைத்தாலும் ,அழையவிட்டாலும் இந்த காமிக்ஸ் நட்புகள் ,காமிக்ஸ் உறவுகளாய் பகிர்ந்து பின் இப்பொழுது ஒரே காமிக்ஸ் அன்பு குடும்பமாய் இணைய முழுமுதற்காரணமான

    *எங்கள் ஆசிரியருக்கு*


    எங்களின் மனமார்ந்ந நன்றிகளை ஆனந்த மகிழ்வுடன் சமர்பிக்கிறோம் .

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் நண்பர்களும் குடும்பத்தினரும் இணைந்தது மிக ///
      // மிக மகிழ்வான ஒன்றாக அமைந்ததை மயிலை ராஜா அவர்களின் முகத்தில் அறிய முடிந்தது.//
      +111111111

      Delete
    2. நன்றி தலைவரே... 🙏🙏🙏

      Delete
    3. சூப்பர். அருமையான நிகழ்வு. இவை என்றும் நமது காமிக்ஸ் குடும்பத்தில் தொடரட்டும்.

      இதில் நான் இல்லை என்பது கொஞ்சம் வருத்தமாக உள்ளது.

      ராஜா மற்றும் ஹசன் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

      Delete
    4. சேந்தம்பட்டி குடும்பம் என்பதை ஏன் விட்டு விட்டீர் தலீவரே

      Delete
    5. // இந்த காமிக்ஸ் நட்புகள் ,காமிக்ஸ் உறவுகளாய் பகிர்ந்து பின் இப்பொழுது ஒரே காமிக்ஸ் அன்பு குடும்பமாய் இணைய முழுமுதற்காரணமான

      எங்கள் ஆசிரியருக்கு
      //

      வழிமொழிகிறேன் _/|\_
      .

      Delete
    6. சேந்தம்பட்டி குடும்பம் என்பதை ஏன் விட்டு விட்டீர் தலீவரே..


      " சொன்னால் தான் தெரியுமா #

      நண்பரே..:-)

      Delete
    7. தலீவரே...நட்பெனும் பாலங்களைக் கட்டும் இன்ஜினியர்கள் நீங்கள் ஒவ்வொருவருமே !! ஒத்த ரசனை என்பதே இதற்கான சிமெண்ட் ! எதிர்பார்ப்பிலா நேசமே இங்கே ஸ்டீல் கம்பிகள் !

      பாலத்தின் மேல் நின்றபடிக்கே இந்தக் கட்டுமானத்தைக் கண்டு ரசிக்குமொரு கைகாட்டி மாத்திரமே அடியேன் !!

      Delete
    8. வாழ்த்துக்கள் நண்பர்களே

      Delete
    9. சூப்பர் சார்!

      ///தலீவரே...நட்பெனும் பாலங்களைக் கட்டும் இன்ஜினியர்கள் நீங்கள் ஒவ்வொருவருமே ///

      பாத்தீங்களா தலீவரே... என்னிக்காச்சும் ஒருநாள் நீங்க பெரிய இன்ஜினியரா வருவீங்கன்னு நான் அடிக்கடி சொல்வேனில்லே?

      இன்ஜினியர் தலீவருக்கு வாழ்த்துகள்!

      இப்படிக்கி தங்கள் உண்மையுள்ள,
      இன்ஜினியர் செயலர்

      Delete
    10. ம்.... சேந்தம்பட்டி மூலமாக இன்ஜீனியர் ஆயாச்சு..

      அப்புறமா பீச்சை பாத்தாச்சு...


      அப்புறமா ரயிலை பாத்தாச்சு ..


      இன்னும் ஒண்ணு பாக்கி இருக்கு..


      ஏரோப்ளைனை பாக்கனும் ...



      எல்லாம் " சேந்தம்பட்டி " செயல் :-)

      Delete
    11. இதில் நான் இல்லை என்பது கொஞ்சம் வருத்தமாக உள்ளது.//
      எனக்கும். வட்டியும் முதலுமாக ஆகஸ்டடில் கொண்டாடிடுவோம் பரணி.

      Delete
    12. ஏரோப்ளைனை பாக்கனும் ...//
      அவ்வளவு தானே தலீவரே ...பஸ்ஸுன்னு தான் வசதிப்படாது. ப்ளைட்டு சீப்பு தான். ரெண்டு வாரம் லீவு போடுங்க. வூட்ல பர்மிசன் வாங்குங்க. மீதிய நாங்க பாத்துக்கறோம்

      Delete
    13. // எனக்கும். வட்டியும் முதலுமாக ஆகஸ்டடில் கொண்டாடிடுவோம் பரணி. //

      கண்டிப்பாக மகேந்திரன். கலக்குவோம்.

      Delete
    14. சீஃப் இன்ஜினீரூ பாலத்து மேல தா நிக்கோணும்.
      கீழ நின்னா அவுரு பேரு சூப்புறவைசரு.

      நாங்கள்ளா அப்பரசண்டிங்களாவே இருந்துக்கறோம்.

      Delete
    15. சூப்பர் ! தலைவரே

      Delete
  31. சார்! கர்னல் க்ளிப்டனின் "யார் அந்த மிஸ்டர் X?" எப்போது வரும்?

    ReplyDelete
  32. கிரின் மேனர் மாதிரியான கதைகளை மீண்டும் வெளியிடவும்...

    ReplyDelete
    Replies
    1. அந்தத் தொடரில் வேறு கதைகள் லேது சார் ! But மாறுபட்ட கதை வரிசையில் நிறையவே variety உள்ளது !

      அவற்றில் நாம் இன்னொரு க்ரீன் மேனரைத் தேடக் கூடாது என்பதே முக்கிய விஷயம் !

      Delete
    2. போடுங்க வேணாம்னா சொல்லப்போறோம்....

      என்ன திட்டீட்டு நிதானமா ரசிப்பமாக்கும்....
      அக்காங்....

      Delete
    3. ///போடுங்க வேணாம்னா சொல்லப்போறோம்....

      என்ன திட்டீட்டு நிதானமா ரசிப்பமாக்கும்....
      அக்காங்....////

      ஹா ஹா ஹா!! தலைமுறை தலைமுறையா இப்படியே பழகிட்டோம்... இனிமே மாத்திக்கிட முடியாதாக்கும்!

      Delete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. மாச கடோசியிலத்தான் புஸ்த்தகம் வருமா😢

    ReplyDelete
    Replies
    1. டீசல் வெல ஏறுனா என்ன.அதுக்காக புஸ்த்தகங்களையுமா

      Delete
    2. எப்படா நம்ப புளு ஜீன்ஸ் எளவட்டத்த பாப்பம்னு இருக்கு

      Delete
    3. வியாழன் வரைக் காத்திருங்கள் !

      Delete
    4. அடுத்த மாசந்தாப் போலருக்கு

      Delete
  35. எடிட்டரு சாமி
    அந்த ட்யுரங்கோ மு க சு வுக்கு நம்பள்க்கி ஏதாச்சும் பிக்ஸட் டெபாசிட் உண்டுங்களா சாமியோவ்

    ReplyDelete
    Replies
    1. அந்த கேப்சன் போட்டி சாமி
      ரிசல்ட் ப்புளீஸ்

      Delete
    2. நம்பள் இன்னமும் ஜம்போக்கு ட்ரை பண்றோம் சாமி...
      ஆரூரா... தியாகேசா.....

      Delete
  36. இங்கன கதிராமங்கலத்துல என்ன நடக்க போகுதோ புரியல

    ReplyDelete
    Replies
    1. இந்த வருடம் இன்னும் பல அதிர்ச்சி தரும் விஷயங்களை நாம் கேள்விப்படக் கூடும்......

      Delete
  37. சார்
    நீங்கள் எவ்வளவு தான் முயன்றாலும் அடுத்த வருஷம் சந்தா எக்கசக்கமா கூட்டுனாத்தான் தாங்க முடியும் போலருக்கே.

    ReplyDelete
    Replies
    1. எதப்பாத்தாலும் ஏறிட்டே இருக்கு.... பிரஷரும் வெலையும்.....

      Delete
    2. தேங்காய் 30 ரூபாய்க்கு விக்குது.
      வெலய கேட்டா நமக்கு விக்குது....

      Delete
    3. ஆகவே பெரியோர்களே தாய்மார்களே

      எப்பூடி நிப்பா வைரஸ நம்பளால நிப்பாட்ட முடியாதோ அதுமாதிரி வெல ஏத்தத்தையுந் தவிர்க்க முடியாது போல...

      Delete
  38. இரத்தப்படலம், ஜம்போ காமிகஸ் subscribe பண்ணியாச்சி..
    20 புதிய கதைகளை படிக்கலாமே, இரத்தப்படலம் collectors special few years முன்னாடிதானே வந்தது என இரத்தப்படலம் reprintக்கு பல மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருந்தேன். நமது ஆசிரியரின் இமலாய முயற்சிக்கும், மறைந்த வான்ஸ்க்கும் தலைவணங்கும் விதமாக subscribe பண்ணியாச்சு.

    அடிக்கடி வாசிக்கும் இதழ்கள்:
    நள்ளிரவு வேட்டை
    பழி வாங்கும் புயல்
    நில் கவனி சுடு
    தங்க கல்லறை
    மின்னும் மரணம்
    கார்சனின் கடந்த காலம்
    கிரீன்மேனர்
    லக்கிலூக் கிளாசிக்ஸ் இதழ்கள்
    சிக்பில் கிளாசிக்ஸ்
    வேய்ன் ஷெல்டன் இதழ்கள்
    மார்டின் இதழ்கள்

    Color Tex promo page looks stunning!!

    ReplyDelete
  39. அன்புள்ள விஜயன் சார் அவர்களுக்கு, கடந்த 4 நாட்களாக என் அம்மாவின் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக கார்வார் சென்றிருந்தேன். அவர்கள் குடும்பமும் ஒரு காமிக்ஸ் குடும்பம்தான். ஆனால் அவர்களிடம் இருந்தது அனைத்தும் ஆங்கில காமிக்ஸ்கள்தான். தமிழ் படிக்கத் தெரியாது. அங்கே சென்றதால் நான்கு காமிக்ஸ்களை படிக்க நேர்ந்தது. அவை நீங்கள் வெளியிடுவதாக அறிவித்து இன்னும் வெளியிடாமல் இருக்கும் கதைகள்.

    (1) The man who shot lucky luke,
    (2) Chinaman 1- Gold Mountain,
    (3) Chinaman 2- Brothers in law,
    (4) Chinaman 3- For Rose.
    (Chinaman 4-வது பாகமான Rust eaters பாதியிலேயே முடித்துக்கொண்டு மனசில்லாமல் கிளம்பி வந்துவிட்டேன்.)

    அத்தனையும் அட்டகாசமான கதைகள். சைனாமேன் தொடர் வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும். பாவப்பட்ட அந்த மனிதன் போகும் அமெரிக்க நகரிலெல்லாம் சந்திக்கும் அவமானங்களும், பிறகு தன்னை அவமதித்த வெள்ளையர்களின் மனதிலேயே இடம் பிடிப்பதும், அட்டகாசமான ஓவியங்களும், இயற்கை காட்சிகளும், புயல் வேக சண்டைக் காட்சிகளும், etc.. அந்த சைனாமேனின் கதையை படிக்க படிக்க இதை ஏன் நீங்கள் வெளியிடாமல் விளம்பரத்தோடு நிறுத்திக் கொண்டீர்களோ என்று நினைத்து தவித்துப்போனேன். இவர் கதைகள் இதுவரை நீங்கள் வெளியிடாத Formula. இரத்தப்படலம், டைனமைட் Spl இவைகளை முடித்துவிட்டு ஒருமுறை சைனாமேனின் கதைகளின் மேல் ஒரு பார்வையை விடுங்கள் சார்.

    ReplyDelete
  40. ///க்ரீன் மேனர் ///

    என்னைத் திகைக்க வைத்த/வைத்துக் கொண்டிருக்கும் கதை வரிசைகளில் ஒன்று! என் மறுவாசிப்புப் பட்டியலில் தவறாமல் இடம் பிடிக்கும் இதழ்!

    ///நிலவொளியில் நரபலி ///

    முதன்முதலாக 'தல' யை வண்ணத்தில் ரசித்த த்ரில்லிங் அனுபவம் ஒருபுறமென்றால், தூரத்தில் மலைகளினூடே சில வெளிச்சப் புள்ளிகள் அணிவகுக்கும்போதெல்லாம் நம்மையும் அறியாமல் ஏற்பட்ட அந்த திகிலான அனுபவம் மறுபுறம்!! ப்பா - செம!!

    ///இரவே... இருளே... கொல்லாதே! ///

    வித்தியாசமான பல அனுபவங்களைக் கொடுத்த ஒரு மறக்கமுடியாத இதழ்! நம் வெளியீடுகளில் மிகச் சிறந்த ஒன்றும்கூட! தீபாவளியன்று நள்ளிரவில் இந்தக் கதையை தனிமையில் படித்தபோது - இது கொடுத்த வாசிப்பு அனுபவம் அலாதியானது!!

    ///என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் ///

    பெர்லின் சுவர்பற்றிய பின்னணியை, அதன் பயங்கரங்களை, அதன் சோகங்களை ஓரளவுக்கேனும் உணரவைத்த ஒரு அக்மார்க் கி.நா!!


    ///Never Before Special ///

    பெரிய்ய சைஸில் குண்ண்டாய் வெளியான இப்புத்தகத்தை கொரியர் அலுவலகத்தில் அதிகாலையில் காத்திருந்து கையில் ஏந்திய அந்தக் கணங்களும் சரி, கனம் பார்த்துத் தடவித் தடவி பெருமிதத்துடன் புரட்டிப் பார்த்த கணங்களும் சரி - மறக்க இயலாத உற்சாக அனுபவங்களைக் கொடுத்தவை!

    /// LMS ///

    சொற்கத்திற்கும், நரகத்திற்கும் இடைப்பட்ட 'அந்தி மண்டலத்தில்' நாமும் உலவியதான பிரம்மையை ஏற்படுத்தும் டைலன்டாக்கின் கதையும், 'தொப்ளா செல்லம்' ரின்டின்கேனின் ரகளையான அறிமுகமும், பிரம்மிக்கச் செய்யும் கதைக்களம் + கதை நகர்வினால் மனதை என்னவோ செய்த 'இறந்தகாலம் இறப்பதில்லை' கி.நா'வும், இன்ப அதிர்ச்சியளித்த ஹார்டுகவரும், அதன் வடிவமைப்பும் - நிச்சயம் இதனை ஒரு மறக்க இயலா இதழாக்கியிருப்பது உண்மையிலும் உண்மை!!


    இந்த வரிசையில் இன்னும் நிறைய நிறைய இதழ்கள்!!

    1980களில் காமிக்ஸின் பொற்காலம்னு சொல்லிக்கிடறாங்க... அப்போ நான் டவுசர் போட்ட அறியாத வயசுல இருந்தேன்றதால அவங்க சொல்றதெல்லாம் எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியாது! எனக்குத் தெரிந்த காமிக்ஸ் பொற்காலமெல்லாம் - 2012க்கு பிந்தைய - தற்போதைய காலகட்டமே! வேறு வழியில்லாமல் சந்தாத் தொகையிலும் நாம் பல உச்சங்களைத் தொட்டிருந்தாலுமேகூட, தயாரிப்புத் தரத்திலும் சரி; பல வித்தியாசமான கதைக் களங்களைக் கண்ட வகையிலும் சரி; ஒவ்வொரு மாதமும் குறித்த நேரத்திற்கு முன்பே புத்தகங்களை அனுப்பிவைத்து "எப்பவும் லேட் தாம்ப்பா" என்ற முணுமுணுப்புகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திருப்பதிலும் சரி; பல அருமையான நண்பர்களை அடையாளம் காண வைத்த இந்த வலைப்பூ நிகழ்வுகளாலும் சரி - 'காமிக்ஸின் பொற்காலம்' - இன்றைய காலகட்டமே என்பேன் - என்னளவிலாவது!

    ReplyDelete
    Replies
    1. // நண்பர்களை அடையாளம் காண வைத்த இந்த வலைப்பூ //
      மறுக்க முடியாத உண்மை.
      +1111111111

      Delete
  41. விஜயன் சார்!

    Soleil comics-ன் Bad Lands என்ற 3 பாக வெஸ்டர்ன் திரில்லரின் ஸ்கான்லேஸனை பார்த்தேன்.இது கிரீன்மேனர்,ஜேஸன் பிரைஸ் போல் ஹிட்டாகும் என தோன்றுகிறது.அப்புறம் Europe comics-ன் Sisco என்ற தொடர் கூட லார்கோவுக்கு மாற்றாக அமையலாம்!வாய்ப்புள்ளதா சார்?


    ReplyDelete
    Replies
    1. இவையெல்லாமே ஏற்கனவே பரிசீலனை செய்து ஓரமும் கட்டப்பட்ட தொடர்கள் சார் ! Badlands -ல் வரும் நிர்வாணக் காட்சிகளைக் கத்திரியும் போட இயலாது ; கவுன் தைத்து மாட்டவும் இயலாது என்பது தான் பிரச்சனையே ! பற்றாக்குறைக்கு இதுவொரு fantasy -ம் கலந்த தொடர் ! வெஸ்டர்ன் + fantasy என்பது ஒரு தினுசான கலவை !

      Delete
  42. ///fantasy -ம் கலந்த தொடர் ! வெஸ்டர்ன் + fantasy என்பது ஒரு தினுசான கலவை !///

    வித்தியாசமான கலவையாத்தான் இருக்குது. ஆனா சில சமயங்களில் நீங்கள் 'ஆஹா.. ஓஹோ.. 'னு சொல்ற கதையே ஓவராக கண்ணீரை வரவைக்கும்போது, 'போ..போ.. ஒதுங்கிப் போ.. 'னு ஓரம் கட்டுற கதைகளைப் பத்தி வருத்ததமே கிடையாது சார்.

    ReplyDelete
  43. ட்யூராங்கோவின் அதிரடி சாகசம் பற்றி கடந்த சனிக்கிழமை வந்த விமர்சனம். நண்பர் Jegang குறிப்பிட்டது இதைத்தான்! இதனை படிக்காத நண்பர்களுக்காக இதனை இங்கு பகிர்கிறேன்!


    http://tamil.thehindu.com/general/literature/article23997225.ece

    காமிக்ஸ் கதையில்

    கார்ல் மார்க்ஸ்!

    தமிழ் காமிக்ஸ் வாசகப் பரப்புக்குப் புதிய வரவான ட்யூராங்கோவின் அதிரடி சாகசம் இந்தப் புத்தகம். ட்யூராங்கோவைப் பிரதான பாத்திரமாகக் கொண்டு கடந்த ஆண்டு வெளியான கதையின் தொடர்ச்சி இக்கதை. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் நடக்கும் சம்பவங்கள்தான் கதைக்களம். கூலிக் கொலையாளியாக அறிமுகமான ட்யூராங்கோ அடிப்படையில் முரட்டுத்தனமானவன் என்றாலும் ஈரம் கசியும் மனது. மெக்ஸிகோ எல்லையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ட்யூராங்கோவுக்குத் தூக்குத் தண்டனை காத்திருக்கிறது. அந்தத் தருணத்தில் அவரை விடுவிக்கும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள், மெக்ஸிகோவிலும் அமெரிக்க எல்லைப் பகுதிகளிலும் ஆமோஸ் ராட்ரிகெஸ் எனும் புரட்சியாளனின் தலைமையில் இயங்கிவரும் குழுவை ஒழிக்க ட்யூராங்கோவைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். ட்யூராங்கோவை அழைத்துச்செல்லும் அமெரிக்க அதிகாரிகளைக் கொன்று, அவனை ஆமோஸிடம் அழைத்துச்செல்கிறது புரட்சிக் குழு. இருவரும் முன்பே அறிமுகமானவர்கள். ஆமோஸின் புரட்சிக் குழுவின் லட்சியத்தை உணர்ந்து அவர்களுக்கு உதவுகிறான் ட்யூராங்கோ.

    வறண்ட, பரந்த நிலப்பரப்பு, கொலைக்கு அஞ்சாத கொடூரக் கும்பல்கள், அமெரிக்க, மெக்ஸிக ராணுவ அதிகாரிகளின் சூழ்ச்சிகள், ஏழை மக்களின் தியாகம், துப்பாக்கி முழக்கங்கள், தகர்க்கப்படும் கோட்டைகள் என்று வன்மேற்குத் திரைப்படத்துக்குரிய விறுவிறுப்புடன் நகர்கிறது கதை. ஜெர்மானியனான மாக்ஸ்மில்லன் ரூஹென்பெர்க்கின் பாத்திரம் இந்தக் கதைக்குப் புதிய பரிமாணம் சேர்க்கிறது. கார்ல் மார்க்ஸின் கம்யூனிஸ சித்தாந்தங்களால் கவரப்பட்ட மாக்ஸ்மில்லன், மக்கள் புரட்சி நடந்துகொண்டிருக்கும் மெக்ஸிகோவுக்கு வந்து கார்ல் மார்க்ஸின் சிந்தனைகளைப் பரப்பும் பணியில் ஈடுபடு பவன். கார்ல் மார்க்ஸ் தொடர்பாக அவனுக்கும் ஆமோஸுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் சுவாரஸ்யமானது!

    - சந்தனார்

    ReplyDelete
  44. கடந்த இரண்டு நாட்களாக கியூபா படலம் ரீ ரீடிங். கதை நன்றாகத்தான் உள்ளது.எல்லா கதைகளும் படிக்க படிக்கத்தான் பிடிக்கும் போல.

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் கதைக்கு கியரண்டி உண்டு ப்ரோ.!

      Delete
  45. ஈரோடு நண்பர்களே, இன்னும் மூன்று மாதத்திற்கும் குறைவான நாட்களே ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு உள்ளன. புத்தகத் திருவிழா நடைபெறும் தேதி தெரிந்தால் உடனே தெரிவிக்கவும், ரயிலில் முன்பதிவு செய்ய வேண்டும்; அனேகமாக இந்த முறை இரண்டு நாட்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவு செய்ய வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

    விஜயன் சார், காமிக்ஸ் வாசகர்கள் சந்திப்பு மற்றும் இ.ப. புத்தக வெளியீடு விழா நடத்த ஹோட்டல் முன்பதிவு செய்து விட்டீர்களா? இல்லை ஏன்றால் ஈரோடு நண்பர்களிடம் தெரிவிக்கவும். என்னால் முடிந்த உதவியை செய்யத் தயாராக உள்ளேன்.

    இ.ப. வெளியீட்டை முடிந்த அளவு பெரிய விழாவாக கொண்டாட வேண்டும். இது நமது காமிக்ஸை பலரிடம் சென்று சேர்க்க உதவும்.

    அப்புறம் சில பதிவுகளுக்கு முன் நண்பர் ஜெகன் சொன்னது போல் இ.ப. வெளீயிட்டுக்கு ஈரோடு முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டினால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. ஆகஸ்ட் 3 முதல் 14 வரை சார்.

      Delete
    2. அப்ப வாசகர் சந்திப்பு ஆகஸ்ட் 4 & 5? விஜயன் சார் இதனை உறுதிப்படுத்த முடியமா? என்னை போன்றவர்கள் ரயிலில் முன்பதிவு செய்ய உதவியாக இருக்கும்!

      Delete
    3. சார்...ஸ்டால் கிடைப்பது முதலில் உறுதியாகிட வேண்டுமல்லவா ? சாமி வரம் தந்த பிற்பாடு மற்ற எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வோமே !

      Delete
    4. இன்னும் கால அவகாசம் நிறைய உள்ளது B.b சார்...

      :-)

      Delete
    5. Paranitharan K @ கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைப்பது கடினம் என்பதால் இந்த கேள்வி!

      விஜயன் சார்,

      // ஸ்டால் கிடைப்பது முதலில் உறுதியாகிட வேண்டுமல்லவா //

      கண்டிப்பாக கிடைக்கும்! கவலை வேண்டாம்!

      Delete
  46. மார்டின் கதையை படி படின்னு படிச்சாலும் 20 பக்கம் இன்னும் தாண்டல.......

    காமிக்ஸ் படிச்சா........

    இரும்பை கவரும் காந்தம் மாதிரி....



    பிரியாணியை கண்டு வாயில அதுவா எச்சில் ஊறுனமாதிரி......

    அழகான பெண்ணை கண்டால் நம்மை அறியாமலே பார்க்கும் கண்ணைப்போல்.......

    அதுவா இயல்பா நடக்கனும்.!

    மார்ட்டின் கதையை படிக்க பிளாஸ்க்ல டீ போட்டு வைத்து கண்விழிச்சு படிக்கனும் போல இருக்கு.!

    --இது எனது தனிப்பட்ட ரசணை சார்ந்த கருத்து.!

    ReplyDelete
    Replies
    1. மாடஸ்டியாரே. ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்துருக்கீங்க. உங்களுக்கு யாரோ ஜம்போ காமிக்ஸ் பரிசளிச்சது தெரியுமா?

      Delete
    2. மாடஸ்தியாரே ..

      உண்மை...இந்த முறை மார்ட்டின் ஆரம்ப பயணத்தை கொஞ்சம் கிராபிக் பாணியில் செலுத்தியதில் முதலில் தடத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது உண்மையே..:-)

      Delete
    3. மகேந்திரன் சார்.!

      நீங்களா......????

      Delete
    4. மகேந்திரன் சார்.!

      பொடி எழத்துக்கள் கண்ணுக்கு தெரிவதில்லை.கண்ணாடி உதவியில்லாமல் காமிக்ஸ் படிக்கமுடியவில்லை.ஆகாவே கண்ணாடி துழாவுவதிலே பாதி நேரம் போய்விடுகிறது.
      (அலுவல் சம்மந்தப்பட்டவை சற்று பெரிய எழத்துக்களாக இருப்பதால் அதற்கு கண்ணாடி தேவைப்படுவதில்லை.ஆகவே தொடர்ச்சியாக கண்ணாடி அணிவதில்லை.இப்பிரச்சனையால் காமிக்ஸ் வாசிப்பு பெருமளவு குறைந்துவிட்டது.அதுவும் மாடஸ்டி கதைகள் படித்தே பலமாதங்கள் ஆகிவிட்டது.

      Delete
  47. டாப் 12

    இரவே இருளே கொல்லாதே.அது சரி.!

    ReplyDelete
  48. விஜயன் சார், செப்டம்பர் மாதம் வரவுள்ள டெக்ஸ் 70 புத்தக வெளியீட்டையும் சிறப்பாக நடத்த வேண்டும். முடிந்தால் மதுரை அல்லது கோயம்புத்தூரில் ஏதாவது ஒரு ஹோட்டலில் நடத்தலாம். இதற்கும் நாம் டெக்ஸ் போஸ்டரை ஊர் முழுவதும் ஒட்ட வேண்டும்; முடிந்தால் லோக்கல் கேபிள் டிவிகளில் இதனை பற்றி இரண்டு மூன்று நாட்கள் விளம்பரம் கொடுக்க வேண்டும்.

    இது போன்ற மெகா புத்தக வெளியீட்டை நம்மால் முடிந்த அளவு விளம்பரம் செய்ய வேண்டும்.

    முடிந்தால் யாராவது ஒரு பிரபலத்தை கொண்டு இதனை வெளியிட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சார்....உங்கள் ஒவ்வொருவரையும் விடவுமா :பிரபலங்கள்" நமக்குப் பெருமை சேர்க்கப் போகிறார்கள் ? எப்போதும் போலவே நமது சந்திப்புகளில், புத்தக ரிலீஸ்களில் நம் அச்சாணிகளான வாசகர்களே நமக்கு VIP க்கள் !

      Delete
    2. மிக மிக நன்றி ஆசிரியரே

      Delete
    3. அது சரிதான்! வாசகர்கள் தான் ஆச்சானிகள்!

      தற்போதைய நிலையில் எல்லாவற்றிக்கும் பிரபலங்களை வைத்து விளம்பரம் செய்வது முக்கியமானது, வியாபாரத்திற்கு! நாமும் நம்மால் முடிந்ததை செய்வோமே சார்? புதிய மற்றும் பழைய வாசகர்கள் ஏன் இன்னும் நமது புத்தகம் வருவது தெரியாமல் இருபவர்களை நமது காமிக்ஸ் பக்கம் திருப்ப உதவுமே?

      Delete
  49. லார்கோவோடு பயணம் தூள்கிளப்புகிறது...


    ஆதலால் அதகளம் " வரை பயணம் நிறைவடைந்து உள்ளது.


    புதிய லார்கோ வரும் வரைக்குள் மற்ற பயணங்களை முடிக்க ஆவலுடன் பறந்து கொண்டு இருக்கிறேன்.



    இதுவரை பயணம் ச்ச்சும்மா சர்ர்ர்ர்....

    ReplyDelete
    Replies
    1. அதுவும் " துரத்தும் பங்கு மார்க்கெட் " சாகஸம் அப்பொழுது படித்த பொழுது கொஞ்சம் புரிபடாத போலும் ,லார்கோவின் வேகத்தை மட்டுபடுத்துவது போலவும் தோன்றியது.ஆனால் இப்போதைய மறுவாசிப்பில் பரபரப்பிறகு கொஞ்சம் கூட குறையே வைக்க வில்லை..

      Delete
    2. தலைவரே.!

      மாடஸ்டி,டெக்ஸ்,லார்கோ, போன்ற கதைகள் சோடை போனதே இல்லை.!

      இனிவரும் லார்கோ எப்படி இருக்குமோ என்று கலக்கம் தற்போது வந்துள்ளது.!

      லார்கோ ,மாடஸ்டி கதைகள், ஹீரோ என்று கோடுபோட்டு அதற்குண்டான எல்லையில் வரும் ஹீரோக்கள் கிடையாது.! ரவுடிதனத்துதிற்கும் துணிச்சலுக்கும்,இரக்கத்திற்கும் ஏமாளிதனத்திற்கும்,சிக்கனத்திற்கும் கருமிதனத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் போல் நுண்ணிய வித்யாசம் கொண்டது.அதை பராமரிப்பது பொறுத்து லார்கோவின் வெற்றி உள்ளது.!!!லார்கோ கதையை ஒவ்வொரு பிரேமையும் ரசித்து ருசித்து படிப்பேன்.அதனால் இந்த கலக்கம்.!

      Delete
  50. அல்லாரும் சொகமா இருக்கீயளா ஸ்ஸாமீமீமீ...!!!

    ReplyDelete
  51. மினி டெக்ஸ் முதல் பக்கத்தில் உள்ள நபர் ஜோக்கர் போல் தெரிகிறார், பயத்துடன் தனது எதிரியை வெளிவர சொல்வது போல் தெரிகிறது. மொத்தத்தில் இவர் அநியாயமாக பலியாகப் போவது போல தெரிகிறது

    படித்த பின்னர் எனது அனுமானம் சரியா எனத் தெரியும்.

    எனது அனுமானம் சரி. உண்மையான டீயும் பன்னும் பெட்... :-)

    ReplyDelete
    Replies
    1. //இவர் அநியாயமாக பலியாகப் போவது போல தெரிகிறது//

      டெக்ஸ் கதை என்றாலே அவர்(களை) தவிர அனைவரும் பலியாடுகள் தானே :)


      //உண்மையான டீயும் பன்னும் பெட்... :-)//

      நீங்க தூங்கிகிட்டு இருக்கிற ஒரு பூனையை தட்டி எழுப்பி பிரச்சனை செய்யலாமுன்னு முடிவு பன்னீட்டீங்க பரணி .....

      Delete
  52. NADUNISI KALVAN IS MY FAVOURITE MAYAAVI NOVEL

    ReplyDelete
  53. சார்! புத்தகங்களை அனுப்பிவிட்டீர்களா சார்? பதிவு ஒன்று வருமென்று நான்கு மணியிலிருந்து தளத்தின் மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  54. சாா்,
    நடுநிசி கள்வன் பாக்கெட் சைஸா?

    ReplyDelete
  55. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete