நண்பர்களே,
வணக்கம். ஞாயிறு பகலில் மார்டினோடும், இங்கே பதிவின் ஆரம்பப் பின்னூட்டங்களோடும் செலவிட்ட போதே தொண்டையில் லேசான கிச் கிச் தென்பட- அன்றைக்கு மாலை முதலே ஜல்ப்பு ஜலதரங்கம் செய்யத் துவங்கிவிட்டது ! "ச்சை....எனக்கு சளி பிடித்தாலே புடிக்காது " என்று புலம்பாத குறையாக கைக்குச் சிக்கிய மாத்திரைகளை விழுங்கியபடிக்கே ஆபீஸுக்கும் போய்க் கொண்டுதானிருந்தேன் ! ஆனால் பருப்பு வேகக்காணோம் என்பதால் இன்றைக்கு ஒழுங்காய், மரியாதையாய் டாக்டர் smurf க்கொரு விசிட் அடித்து விட்டு, அக்கடாவென வீட்டில் கட்டையை நீட்டி விட்டேன் ! சுடு தண்ணீர் ; ரசச் சாதம் ; கஷாயம் என்று குடிக்க வேண்டிய வேளையில் தான் ஊரிலுள்ள தர்பூசணிகள் முழுசும் ஜில்லென்று கண்முன்னே ஒரு குத்தாட்டம் போட்டு விலகுகின்றன !! வேறு நேரம் காலமே இல்லாது, இப்போது தான் குல்பி ஐஸ்வண்டியின் மணியோசை தேவகானமாய்க் கேட்கிறது ! ச்சை !!! ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகுமென்ற ஆராய்ச்சியை யாராச்சும் செய்யுங்களேன் விஞ்ஞானீஸ் ! உம்மணாம்மூஞ்சி smurf இப்போதெல்லாம் என் ஆதர்ஷ நாயகனாகிவிட்டான் என்றால் பாருங்களேன் ! !!
ஆனால் நான் இருந்தாலும் சரி, கிட் ஆர்டினைப் போல பண்ணையார் ஆகிடும் பொருட்டு எங்கேனும் மாடு மேய்க்கக் கிளம்பியிருந்தாலும் சரி, பணிச்சக்கரங்கள் ரிமோட்டில் இயங்கிடக் கற்றுக் கொண்டுவிட்டனவே - நம் டீமின் கைவண்ணத்தில் !! So மே மாதத்து 3 இதழ்களும் இன்றே கூரியரில் கிளம்பி விட்டன !
நாளைக்கு (வெள்ளி) அனுப்பிடும் பட்சத்தில் பாதிப் பேருக்குக் கிடைத்து, மீதிப் பேருக்கு திங்கள் வரைக்கும் கடுப்பை மட்டுமே வழங்கிடும் நோவு உள்ளதால் - இன்றைக்கே அடித்துப், பிடித்து கூரியர்களை அனுப்பி விட்டோம் ! So இந்த ஞாயிறுக்கும் சரி, காத்திருக்கும் மே தின விடுமுறைக்கும் சரி, நமது மூவர் கூட்டணி உங்களுக்குத் துணையிருக்கும் !! Happy reading all & குட் லக் with மார்ட்டின் !! Bye for now !
பி.கு. கொஞ்சம் உடம்புக்குத் தேவலாமென்ற உடனேயே கடந்த பதிவில் பதில் தர வேண்டிய கேள்விகளையெல்லாம் புதியதொரு பதிவுக்கு carry forward செய்து பதிலும் அளித்திடுவேன்!
ஹைய்யா பர்ஸ்ட்.
ReplyDeleteஅடடே...! வாழ்த்துகள் ரவி ..!!
Deleteடாங்ஸ்பா.
Deleteஇந்த மாதம் டெக்ஸ் கிடையாதா? ஏன்?
ReplyDeleteஇந்தாண்டின் அட்டவணையில் சந்தா ரகம் ஒவ்வொன்றிலும் மொத்தமே 9 இதழ்கள் தானென்பதை நினைவூட்டுகிறேன் சார் !
DeleteSo தொடரும் மாதங்களிலும் இது உண்டு ; அது இல்லை என்பன நடைமுறையில் இருப்பதைத் தவிர்க்க வழியிராது ! !
மாதம்தோறும் நான்கு புத்தகங்கள் படித்து பழகியதால் எழுந்த கேள்வி சார் :-)
Deleteபுத்தகம் எங்களை வந்தடையும்முன் உங்கள் உடல் பூரண குணம் பெறும் என்று நம்புகிறேன் சார்.
DeleteHi!
ReplyDeleteHi... Have u ever come across the serial Mind your language??? I hope we will enjoy once you write about it Doctor..
Deletei am big fan of that serial Rummi..!!
DeleteWatched so many times ..!!
என்ன சீரியல் நண்பர்களே?
DeleteMind your language... யூடுய்பிலே தேடுங்க..
Delete1977ல் தொடங்கி இங்கிலாந்தில் ஒரு சில லருடங்கள் கலக்கிய தொலைக்காட்சித் தொடர் அது.!
Deleteஆங்கிலம் தெரியாத வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த சில மக்கு ப்ளாஸ்திரிகளுக்கு (கதைப்படி) ஈவ்னிங் க்ளாஸில் ஆங்கிலம் கத்துக்கொடுப்பார் ஒரு புரொபசர்.!
அரங்கேறும் காமெடி கூத்துகள் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.!!
யூ ட்யுபில் கிடைக்கும் பரணி ..!
சிரிச்சி மாளாது.....
Deleteநெம்ப வருத்தமா இருக்குறப்ப பாருங்க உற்சாகம் பிச்சிக்கும்...
ஊலலலல்லலலலலா..........
இப்போதுதான் கேள்விப்படுகிறேன் ரம்மி
Deleteநகைச்சுவை உணர்வு மிக்க கண்ணனும் நீங்களும் எழுதலாமே..
செனா அனா..!
Deleteபொசுக்குன்னு இப்படி எம்மேல சாச்சிப்புட்டீங்களே ..!
லிங் அனுப்பியிருக்கேன் பாருங்க.!!லக்கிலூக் கதையை ரசிப்பது போலவே (காமிக்ஸ் பேசியிருக்கோம்)
கண்டீப்பா ரசி(சிரி)ப்பிங்க..!
ட்யூராங்கோவுக்காக வெயிட்டிங்கில் இருக்கச்சே டைப்பியது ..! (காமிக்ஸ்க்கு சம்மந்தமில்லாம பேசிக்கிறாங்கன்னு யாரும் குற்றம் சொல்லக்கூடாது பாருங்க ..ஹிஹி..)
Thanks Kanna & Rummi!
Deleteமறுப்பதிப்பு கதைகள் இந்த மாதம் கிடையாதா சார்?
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteசூப்பர்.புத்தகங்களை இவ்வளவு விரைவாக ராக்கெட் வேகத்தில் தயார் செய்து அனுப்பிய நமது அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
DeleteThis comment has been removed by the author.
Deleteசூப்பர் சார்,நினைச்ச மாதிரியே புக் அனுப்பிட்டு பதிவு.அருமை,அருமை.
ReplyDeleteஅறிவு சார்.....
Deleteஇப்டி இருக்குற நம்ம ஆசிரியரப்போயி.........
புவி கேக்குறாங்களே......
முடியல சார்
ஜெ சார்,அதெல்லாம் அப்படித்தான்.
Deleteஉள்ளேன் அய்யா...!!!
ReplyDeleteINSTEAD OF TEX Mr.MARTIN COME
ReplyDeleteஹய்யா....புக்..வருதே... ஜாலி ஜாலி...
ReplyDeleteவந்துட்டேன்...
ReplyDeleteவில்லரின் விஸ்வரூபங்கள்....
ReplyDeleteகோடைமலர் 12...
*1997ன் சம்மர் லயனின் வரலாற்றில் ஒரு திருப்பு முறையான மாதம். அதுவரை அவ்வப்போது சாகசங்களில் கணிசமான பங்கோடு, ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து நிலவி வந்தாலும் கூட, டாப் நாயகராக டெக்ஸை ஒரு குறிப்பிட்ட சராசரி நண்பர்கள் ஏற்றுக் கொள்வதாயில்லை. இப்போதும் கூட ஒருசிலர் அப்படித்தான் என்றாலும் அது குறிப்பிடத்தக்க அளவில் இல்லை எனலாம்.
*இந்த 12வது கோடைமலர் அந்த குறிப்பிட்ட சதவீத நண்பர்களையும் வசீகரித்து, டெக்ஸ் என்றால் ஒரு பெஞ்ச் மார்க் ஷெட்டராக, ஒரு டிரெண்ட் ஷெட்டராக தன் முத்திரையை பதித்தது. அதுவரை டெக்ஸ் என்றால் தெறித்து ஓடிய நண்பர்களும், தங்கள் எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.
*த ஒன் அன் ஒன்லி இன்கம்பாஆஆஆஆஆஆஆஆஆரபுள், மாஸ்டர்பீஈஈஈஈஈஈஈஸ் ஆஃப் டெக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......
"" கார்சனின் கடந்த காலம் ""
--- நான் ஏதும் இதைப்பற்றி கூற இருப்பதாகத் தெரியல.
*இந்த கோடைமலர் 1997ன் இன்னொரு சிறப்பு, ஒரே சம்மரில் இரு கோடைமலர்கள்.
---சம்மர் ஸ்பெசல் 1- கா.க.கா. பாகம்-1
---சம்மர் ஸ்பெசல் 2- கா.க.கா. பாகம்-2
விற்பனை கொஞ்சம் டல் அடித்த காரணமாக எடிட்டர் சார் அடித்த ஸ்டண்ட்களில் இதுவும் ஒன்று என ஹாட்லைனில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
*மிக நீஈஈண்ட கதையாக இருந்த காரணமாக ஸ்பிலிட்டிங் டெக்னிக் வியாபாரத்துக்கு உதவியிருக்கும்; அதே சமயம் இந்த "தொடரும்" யுக்தியும் மாஸாக வேலை செய்தது. அதுவரை தொடர் கதைனா மருந்துக்கு கூட அறியா பல நண்பர்களையும் நகம் கடிக்க வைத்தது காத்திருப்பு.
*தலா ரூபாய் 12விலையில் இரு புத்தகங்களும் ஏப்ரலில் ஒன்றும் மே முதல் வாரத்தில்(இந்த இதழ் வெளியாகும் மாதம் மட்டும் சேலத்தில் வெளிவந்ததை வைத்து போட்டுள்ளேன், சில சமயம் மாறுபடலாம்) ஒன்றுமாக வெளிவந்தன. அட்டைப்படங்கள் 2ம் சராசரி ரகம்தான். ஹூம்.
*முதல் புத்தகம் 148பக்கங்களில்
கா.க.கா.ல் பாதியும், ஹலோ சூப்பர் மேன் தொடரும், வாசகர் ஸ்பாட் லைட் பகுதியில், ஜல்லிப்பட்டி நண்பர் B.மணியின் 5பக்க உட் சிடி கோமாளிகளின் கதையும், 6பக்க ஆர்ச்சி சிறுகதை "விசித்திர விஞ்ஞானி"யையும் கொண்டு இருந்தது.
*கதை ரயிலின் ஓட்டம் போல மெதுவாக ஆரம்பித்து தடதடக்கும் முக்கிய கட்டத்தில் தொடரும் போடப்பட்டு இருக்கும். இப்போதாயிருந்தா எடிட்டர் சாரின் நிலையை எண்ணிப் பார்க்கவே முடியாது.
*இன்னொரு கலாட்டா சம்பவம். அப்போது மீண்டும் புக் மார்க்கெட் பகுதியை ஆரம்பித்து இருந்தார்கள். பல்வேறு டெக்ஸ் கதைகளையும், மற்ற சில கதைகளையும் தேடி வந்த நான் ஒரு 6 டெக்ஸ் கதைகளை விற்பனைக்கு என எழுதி அனுப்பினேன். புத்தகத்தில் பெயர் வரும் அல்ப ஆசையில்... ஹி...ஹி.. எதிர் பார்த்தது போலவே மொத பெயரா வந்திருந்தது. அதில் பாதி கதைகளை அப்போது நான் பார்த்தது கூட இல்லை. எப்பூடி!!!!.(இதற்கெலாம் அடிக்க வராப்படாது,ஓகே)
*பார்ட்2-140 பக்கங்களில் அதிரும் க்ளைமாக்ஸ் பகுதியை கொண்டு வந்திருந்தது.
---பன்னாக், அப்பாவிகள், தங்கம், ரே க்ளம்மன்ஸ், பேரழகி பாடகி லினா, இளம் கார்சன், பூன், வாகோ டோலன், பில்லி க்ரைம்ஸ், மாறுகன் லேரி, ரோஜா லாவல், ஜானி லேம், ஸ்கின்னர், ட்ரேடிங் போஸ்ட்.....போன்ற பெயர்களைப் படிக்குப் போதே நம் கண்முன்னே காட்சிகள் ஓடும். நாமும் மாண்டனாவின் பன்னாக்கில் குறுக்கும், நெடுக்குமாக பயணிப்போம்.
"வென்றவனுக்கே எல்லாம் சொந்தம்"
"நல்ல நட்பு தங்கத்தைவிட மதிப்ப வாய்ந்தது"
---போன்றவற்றை பார்க்கும்போது கதையின் தாக்கம் எடிட்டர் சாரின் எழுத்துக்களிலும் எதிரொலிக்கும்.
*இந்த கார்சனின் கடந்த காலத்தைப் பற்றிய கிட் ஆர்டின் அவர்களின் நிறைவான கதை சுருக்கம் இந்த லிங்கில் காணலாம்.
http://salemtex.blogspot.in/2015/07/250.html?m=1
*2014ல் முதல் டெக்ஸ் வண்ண மறுபதிப்பாக ரூ125க்கு ஒரே தொகுப்பில் கா.க.கா. மலர்ந்தது.
கோடைமலர் 13...
Delete*ஓராண்டு பிரேக்கிற்கு பிறகு 1999ல் வெளிவந்த 13வது கோடைமலர் லயனின் 150வது இதழும் கூட. 1999 மே மாதம் ரூபாய் 15விலையில் 196பக்கங்களில் "மந்திர மண்டலம்" ரெகுலர் சைஸில் வெளியானது. அட்டை படம் இம்முறை நச்.
*மரண முள் வரிசையில் இது ஒரு வித்தியாசமான சாகசமாக அமைந்தது. போனெல்லியில் சக்க போடு போடும் மந்திர தந்திர வகையில் நாம் பார்க்கும் முதல் கதை இதுவே. கால வரிசையில் பவளச்சிலை மர்மத்திற்கு முன்பே இத்தாலியில் வெளியானது. நாம் பவளச்சிலை வெளியாகி 13வருடங்களுக்கு பிறகு பார்க்கிறோம்.
*டெக்ஸின் பழைய எதிரிகளில் ஒருவனான மந்திரவாதி மெபிஸ்டோ டெக்ஸை பழிவாங்க திட்டம் போடுகிறான். மான் வேட்டைக்கு வந்த கிட் வில்லரை ஹூவால்பைகளின் துணை கொண்டு கடத்துகிறான். டெக்ஸ்+கார்சன்& டைகரும் நவஹோக்களோடு தேடுதல் வேட்டையில் இறங்க, ஆட்டம் சூடு பிடிக்கிறது.
*மறைந்திருந்து தாக்கும் ஹூவால்பைகளின் வியூகத்தில் டைகர் மயங்கி விழ, நவஹோக்கள் பலியாக, கார்சனையும் கடத்திச் செல்கிறார்கள். ஹூவால்பைகளின் மலை முகடுகளின் இடையே உள்ள பாறை முகட்டில் உள்ள இரண்டு கூண்டுகளில் கார்சனும், கிட்டும் தொங்க விடப் படுகிறார்கள். (பவளச்சிலை மர்மத்தில் கிட்டிடம் இதைச் சுட்டிக் காட்டுவார் கார்சன்; இதற்கும் சேர்த்து ஹூவால்பைகளை தண்டிக்கனும் என்பார், கிட்-பார்க்க ப.சி.ம.பக்கம்15)
*தன்னுடைய ஹிப்னாடிச சக்தியால் இருவரையும் அடிமைகளாக்கி, பேங் கொள்ளை, வழிப்பறிகளில் ஈடுபட வைத்து ஆபத்தான சட்டம் தேடும் குற்றவாளிகளாக்குறான் மெபிஸ்டோ. டெக்ஸின் தேடலும் பலமுறை தொடர்கிறது.
*பாலைவனத்தில் இருவரையும் அம்போவென தண்ணீர் இல்லாமல் விட்டு விட்டு எஸ்கேப் ஆகிறான் மெபிஸ்டோ. கற்றாழையை பிழிந்து ஜீவிக்கும் இருவரும் தப்பினார்களா? சட்டம் கைது செய்ததா? மெபிஸ்டோ என்ன ஆனான்? டெக்ஸின் வேட்டை பலித்ததா? என்ற கேள்விகளுக்கு 186பக்கங்களில் நீஈஈஈளும் அதகள சாகசம் விருந்தாகிறது.
கோடைமலர் 14...
Delete*இன்டர்நெட்டின் பூம், வாசிப்பு துறையை கணிசமாக பதம் பார்த்த புதிய மில்லேனியத்தின் துவக்க ஆண்டுகளில் லயன் காமிக்ஸ்ஸூம் தள்ளாட்டத்தை சந்தித்தது. வருடம் 6வெளியீடுகள் மட்டுமே லயனில் வந்தன. 10ரூபாய் டெக்ஸ் வெளியீடுகள் இந்த 3ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்தின.
*3ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2003ல் தான் அடுத்த கோடைமலருக்கு வழி பிறந்தது. 2003ஜீனில் ரூபாய் 20விலையில் ரெகுலர் சைஸில் 228பக்கங்களில் கோடைமலர் 14 வெளியானது.
*216பக்கங்களில் நீஈஈண்ட டெக்ஸ் சாகசம் "இருளின் மைந்தர்கள்" இடம்பெற்றது. நீண்ட நாட்களாக விளம்பரங்களில் பயமுறுத்தி வந்த அமானுஸ்ய சாகசம், இருளில் தன் ஆளுமையை நிரூபிக்க உலா புறப்பட்டது. தொடர்ந்து 2வது கோடைமலரிலும் இதே கான்செப்ட். இம்முறை ரியாலிட்டி முன்னைவிட அதிகம்.
*இதே காலகட்டத்தில் எகிப்திய மம்மியை ரிக் ஓ கானலும், ஈவ்லினும் இரண்டு படங்களில் துரத்தி துரத்தி வேட்டையாடி இருந்தனர். குறிப்பாக பார்ட் 1 தி மம்மியில் ஈவ்லின், இமோடெப்பின் மம்மியை உயிர்ப்பிக்கும் காட்சி பிரசித்தம் அப்போது. அதே காட்சியமைப்புகள் நம்முடைய டெக்ஸ் சாகசத்தில் எனும்போது திகைப்பு பன்மடங்கு கூடியது.
*தொல்பொருள் ஆராய்ச்சி புரஃபஸர் ஒருவர் தன் மகள் குளோரியா மற்றும் பிரிஸ்காட்& ஜிம் இருவரின் உதவியோடு அரிசோனா-மெக்ஸிகோ எல்லையில் உள்ள தி கிரேட் டெஸர்ட்டினுள் ஆராய புகுகிறார். புகழ்பெற்ற அஸ்டெக்குகளின் உயிர்தரும் புலிகோவிலை கண்டறிவதே பயண நோக்கம்.
*பல்வேறு இடைஞ்சல்களுக்கு இடையே புலி கோவிலை கண்டுபிடித்து, பாதாள அறையில் உள்ள அஸ்டெக் தலைமை பூசாரியின் அறைக்கு வருகின்றனர். அங்கே மேலும் 12மம்மிகள் இருக்கின்றன.
ஒரு பேழையில் கிடைக்கும் எருமைத்தோளில் இருக்கும் வாசகத்தை வாசிக்கிறார் புரஃபஸர். தலைமை பூசாரி உயிர் பெறுகிறான்.
*தொடர்ந்து மற்ற மம்மிகளும் உயிர்பெற, ஆராய்ச்சி குழு அடிமைப் படுத்தப்படுகிறது. அஸ்டெக்குகளின் நாகதேவன் சாம்ராஜ்யத்தை உயிர்பிக்கிறான் தலைமைப் பூசாரி. சுற்றியுள்ள கிராம மக்கள் அமானுஸ்யத்திற்கு அடிபணிகின்றனர். பழங்குடியினரான யாகி இனத்தினரை கொண்டு தங்கள் படையை அமைக்கிறான் பூசாரி.
*ஆராய்ச்சி குழுவை தேடி வரும் டெக்ஸூம், கார்சனும் நீண்ட தேடலின் முடிவில் காரணத்தை கண்டறிந்து, மம்மிகளில் ஒன்றான சூரிய குமாரனோடு மோதுகின்றனர். சிரிகாகுவா மற்றும் ஹோபி இனத்தவர் இரவு கழுகின் பின்னே அணி சேர்கின்றனர். கிட்டும், டைகரும் நவஹோக்களோடு வந்துசேர்கின்றனர்.
*மோதல் திட்டம் வெற்றிகரமாக நடந்தேறியதா? டெக்ஸின் வியூகம் என்ன? மம்மிகளை வீழ்த்துவதெப்படி? ஆராய்ச்சி குழு என்ன ஆனது? அழகி குளோரியாவின் கதியென்ன??. பரபரப்பான க்ளைமாக்ஸ் காத்திருக்கும், 216பக்கங்களில் பரபரவென பறப்பதே தெரியாது.
*கோடைமலர்களின் அடுத்த பரிணாமம் என்ன? சுவாயஸ்மான பிரம்மாண்டமான மலர்கள் காத்திருக்கு அடுத்த பதிவில்....!!!
இதுவரை இந்த இதழ்களின் படங்கள் பார்க்காத நண்பர்கள் இங்கே சிலவற்றை ரசிக்கலாம்....
Deletehttps://m.facebook.com/groups/1723924691198965?view=permalink&id=2041818576076240&mds=%2Fsharer-dialog.php%3Ffs%3D8%26fr%26sid%3D2041818576076240%26_ft_%3Dtop_level_post_id.2041818576076240%26internal_preview_image_id&mdf=1
இப்படி படபடவென டைப் பண்ணா எப்படி?
Deleteபாக்கறதுக்கே மூச்சு வாங்குதே!
ஆனாலும் உங்களோட உற்சாகமான வர்ணனைகள் அனைவரையும் குதூகலப்படுத்தி விடுகிறது.
ஹி..ஹி... இதுவரை நிதானமாகத்தான் டைப்பினேன்.
Deleteஎடிட்டர் சார் திடீர்னு அறிவிப்பு தரவும், கடேசி பகுதியை படபடவென டைப்பிட்டு இருக்கேன். பேக் இன் 60மினிட்ஸ்...பை...பை...
+1111
Delete👌👌👌👌👌👌👌👌
DeleteWow 😍😍😍
ReplyDeleteWish you a speedy recovery sir!!
ReplyDeleteவிஜயன் சார்,
ReplyDelete// சுடு தண்ணீர் ; ரசச் சாதம் ; கஷாயம் என்று குடிக்க வேண்டிய வேளையில் //
இது கூடவே சிக்கன் சூப் மற்றும் பெப்பர் அதிகமாக போட்ட ஆம்லெட் சேர்த்துக் கொள்ளவும்.
இல்லை உங்களுக்கு ச்சே நான்-veg பிடிக்காது என்றால் பெப்பர் மிளகு சால்ட் கடும் டீயை குடித்து பாருங்கள்.
இரண்டு மூணு மிளகோட தூதுவளை துவையல் செய்து சாப்பிட்டால் சளி,தடிமன்,இருமல் போயே போச்....
Deleteஆசிரயர் அவர்களே உடல்நிலை எப்படி உள்ளது...ஞாயிறு வருகிறது கறி சாப்பாடு சாப்பிட வேண்டும் சீக்கிரம் குணமடைந்து எழுந்து வாருங்கள். ...இல்லையேல் வீட்டில் உள்ளோர் விருந்தும் உங்களுக்கு கஞ்சியும் கொடுத்து விடுவார்கள்😄😄😄😄😄
ReplyDelete///உம்மணாம்மூஞ்சி smurf இப்போதெல்லாம் என் ஆதர்ஷ நாயகனாகிவிட்டான் என்றால் பாருங்களேன் ! !!///
ReplyDeleteஎனக்குந்தான்!!
சாா்,
Deleteஅப்ப மெய்யாலுமே நாளைக்கு புக் வந்துடுமா??
அதில் சந்தேகமென்ன.....
Deleteபொழுது விடிந்ததும்......
நம் பாட்டுக்கு இந்த கொரியர்காரங்க...அடிமையப்பா....
அப்பாடா!!
ReplyDeleteஒரு வழியாக பதிவும் வந்திடுத்து.
புக்கும் வந்திடுத்து.
ஜலதோசத்து கவலைப்படாதீங்க சார்.
மாத்திரை சாப்டா ஒரு வாரத்துல சரியாயிடும்.
மாத்திரை சாப்டலைன்னா ஏழே நாள்ல சரியாயிடும்
(சந்திரமுகி டயலாக்)
///ஒரு வழியாக பதிவும் வந்திடுத்து.
Deleteபுக்கும் வந்திடுத்து.///
அதுக்குள்ள உங்களுக்கு மட்டும் எப்டிங்க புக் வந்திடுத்து.
///அதுக்குள்ள உங்களுக்கு மட்டும் எப்டிங்க புக் வந்திடுத்து.///
Deleteநாமும் கொஞ்சம் அட்வான்ஸா திங்க் பண்ணலாமேனு....ஹி....ஹிஹி..
வயித்தெரிச்சலை கிளப்பாதீரும் ஓய்.., ஏற்கனவே அடிக்கிற வெயில்ல முடியல.
Deleteசந்திரமுகி படத்துக்கு முன்பாக ஊட்டி வரை உறவு படத்தில் நாகேஷ் டாக்டராக வந்து பேசும் டயலாக் அது.
Deleteபுத்தக எண்ணிக்கையில 'டயட் 'ல இருந்தாலும்,
ReplyDeleteபக்க எண்ணிக்கையில 'புஷ்டி 'யாத்தான் இருக்கின்றன.
டெக்ஸ் இல்லாத வெறுமை இருந்தாலும் 'டியூராங்கோ ' அந்தக் குறை தெரியாமல் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை பலமாக உண்டு.
37
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteட்யூராங்கோ கிளம்பிட்டாராமாம்...!!
ReplyDelete😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
ஆமாமா
Deleteபொட்ட வரல... பொட்டி வரல....
பொட்டி வரல...
பொட்டி
பொட்டி
பொட்டி...
யம்ஹும்ம்ம்....
Take care pl
ReplyDeleteGet well soon sir... தலைவர் சந்திரமுகிலே சொன்ன மாதிரி... ஜலதோசம் ரொம்ப மோசமான வியாதி... மருந்து சாப்பிடலைனா ஒரு வாரத்திலே சரியாயிடும்... மருந்து சாப்பிட்டா 7 நாள் ஆகும் சரியாக...
ReplyDelete+1
DeleteWaiting for the summer treat
ReplyDeletePlease take care editor sir😶
ReplyDeleteகோடைமலர் 15....
ReplyDelete*2ரூபாய்க்கு ஆரம்பித்த லயன் காமிக்ஸின் வளர்ச்சி 3ரூபாய், 4ரூபாய், 5ரூபாய், 6ரூபாய், 10ரூபாய், 15ரூபாய், 20ரூபாய், 25ரூபாய் என படிப்படியாக வளர்ந்து 3இலக்க எண்ணை முதன் முதலாக எட்டிப் பிடித்தது. இதற்கு ஆன காலம் 20ஆண்டுகள்.
*1984ல் 2ரூபாய்க்கு ஆரம்பித்த லயனின் பயணம் 2004ல் ரூபாய் 100 என்ற 3இலக்க விலைக்கு பரிணமித்தது. ரூபாய் 100க்கு காமிக்ஸா??? என பலரது புருவங்கள் உயர்ந்தன. இதையும் சாதித்துக் காட்டினார் எடிட்டர் சார்.
*கோடைமலர்15 -"மெகா ட்ரீம் ஸ்பெசல்" லாக ரூபாய் 100க்கு பெரிய்ய்ய்ய சைசில் 420பக்கங்களில் மே2004ல் வெளியானது. இரண்டு அட்டைகளும் அத்தனை தத்ரூபம்.
---வண்ணத்தில் லக்கியின் "லக்கி லூக்கிற்கு கல்யாணம்"- செம ரகளையான சிரிப்பு வெடி.
---டெக்ஸின் " சிகப்பாய் ஒரு சிலுவை"- நீஈஈஈண்ட மாறுபட்ட களத்தில் நிகழும் சாகசம். அரிசோனா,மெக்ஸிகோ வில் இருந்து விடுதலை. இனவெறியை மையமாகக் கொண்ட கதை என நகர்ந்து, எதிர்பாரா திருப்பத்தில் திகைக்கச் செய்கிறது.
---இரும்புக்கையாரின் மிக நீண்ட்டட சாகசம் " பூமியிலோர் படையெடுப்பு ". சைத்தான் சிறுவர்களின் விடுபட்ட பக்கங்களோடு முழுமையாக.
---மதியில்லா மந்திரியின் " பாக்தாத்தில் தேர்தல் "-அக்மார்க் மந்திரி ரகளை.
---மின்னும் மரணத்தின் பாகங்கள் 6,7&8 இணைந்த மற்றொரு மகா சாகசம், கேப்டன் டைகரின் " காற்றில் கரைந்த கூட்டம் "...நமக்கு மனப்பாடமானதொரு தொடர்.
---விச்சு- கிச்சு, வாசகர் ஸ்பாட் லைட், இலவச போஸ்டர் - என அதகளம் புரிந்த அட்டகாச இதழ்.
கோடைமலர் 16....
*மீண்டும் ஓராண்டு பிரேக்கிற்குப் பிறகு, லயனின் கோடைமலர் 16 அடுத்த அதிரடி இதழாக ரூபாய் 100க்கு மே2006ல் பெரிய சைசில் 360பக்கங்களில் ஒரு இதழும், லக்கி லூக்கின் கதை வண்ணத்தில் தனியாகவும் என இரு புத்தகங்களாக வெளியானது.
---டெக்ஸின் மற்றொரு வேறுபட்ட கதைக்களனில் " கானகக் கோட்டை" என்ற நீஈஈண்ட சாகசம். பெரிய சைசிலேயே 113பக்கங்கள்.
---எடிட்டர் சாரின் ஆதர்ஷ நாயகன் ரிப்பின் "தேவதையைத் தேடி" கதை2.
---மார்டின் தோன்றும் அதகள ஹிட் சாகசம்- பழி வாங்கும் ரா. மார்டினுக்கு பெயர் சொல்லும் கதை.
---மாடஸ்தி & வில்லி கார்வின் "மரண மாமா". பரபரப்பான த்ரில்லர். மாடஸ்தியின் அழகு இதில் இன்னும் ஒரு படி அதிகரித்து இருக்கும்.
---சாகச வீரர் ரோஜரின் கறுப்புக் கதிரவன். அட்டகாசமான சித்திரங்கள் கண்ணைப் பறிக்கும்.
---மற்றொரு குழப்ப வாதி ஜானியின் "மரண எச்சரிக்கை". அத்தனை அம்சங்களை கொண்டு வழக்கம் போல சொய்ங் நிலைதான்.
---தனித்த இணைப்பாக லக்கியின் "தாயில்லாமல் டால்டனில்லை"- முழு வண்ணத்தில் டால்டன்களின் அதகளம், அவர்களின் தாயாரோடு இணைந்து.
*முந்தைய 100ரூபாய் இதழைவிட ரசிக்க வெரைட்டியான அதிகப்படியான ஹீரோக்களுடன் இன்றளவும் மறக்க இயலா இதழாக அமைந்தது.
கோடைமலர் 17....
Delete*கதம்ப ஹாட்ரிக் இதழ்களில் 3வதாக கோடைமலர் 17- மே2007ல் "லயன் கெளபாய் ஸ்பெசல்" என்ற பெயரில் ரூபாய் 100க்கு 388பெரிய பக்கங்களில் ரிலீசானது. ஒருபக்கம் தல டெக்ஸ், மறுபக்கம் டைகர் என அசத்தலான அட்டைகளோடு.
*3கதம்ப இதழ்களில் இதுவே டாப் என்னைப் பொறுத்து. அத்தனையும் கெளபாய்களோடு அமைந்த ஒரே கதம்ப இதழ் இதுவே என்பதே இதன் தனித்துவம்.
*முதல் பக்கத்தில் அசத்தலான இரத்தப்படலம் ஜம்போவின் விளம்பரம் மாஸான கலரில்...
---லக்கியின் முழு வண்ண கதை- "தலைக்கு ஒரு விலை" நச் காமெடி.
---அடுத்து சூப்பர் கெளபாய் டெக்ஸின் மற்றொரு வித்தியாசமான களத்தில் நிகழும் நீஈஈளமான சாகசம்-"பனிக்கடல் படலம்". பனி என்ற உடன் கனடாவை நினைக்க வேணாம்; குளிர்கால மசாசூசெட்ஸ் மாகாணத்தின் பாஸ்டன் தான் அந்த பனிக்களம்.
---பாஸ்டன் என்றவுடன் பள்ளியில் படித்த பாஸ்டன் தேநீர் விருந்து ஒருநொடி ஞாபகம் வந்து போகும். இங்கேயும் விருந்து உண்டு; ஆனால் கொடுப்பது டெக்ஸின் இரும்புக்கரம். சிவிடெல்லியின் அசாத்திய சித்திர விருந்து.
---அடுத்து வரும் கெளபாய் ரெம்ப பழைய ஆளு; சிஸ்கோவும் பாஞ்சோவும் கலக்கும் "பரலோகப் பயணம்". 11யே பக்க மினியானாலும் பரபரப்பான சாகசம்.
---4வது குதிரை பையன் ஆக்சன் பையன் ஸ்டீவ் கதை- "காதலிக்க நேரமில்லை". இதுவும் சிறியதே அளவில் மட்டுமே. அசாத்திய தரத்திலான சித்திரங்கள்.
---லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்; ஜாம்பவானின் சின்ன வயசுல நடக்கும் சிலபல காதல்களும், அசாத்திய இராணுவ சாகசமும் இணைந்த மெகா தொடரின் முதல் 3பகுதிகள் இணைந்த கதை தான் "இளமையில் கொல்". யங் டைகரின் அட்டகாசமான படைப்பு.
---டைகரின் பிதாமகர்கள் சார்லியர்&ஜிரோவ் கூட்டணியில் வந்த இளம் டைகரின் 3பாகங்கள் இது மட்டுமே. கதையும் சித்திரமும் போட்டி போடும் இடங்கள் பலப்பல. ஹாரியட்டை இன்று நினைத்தாலும் தூக்கம் தொலைந்திடும்.
---அடுத்த வண்ண மறுபதிப்பாக 2019ல் வரவேண்டிய கதை " இளமையில் கொல்".
---இத்துனை கெளபாய்கள் இடம் பெற்ற பிறகும் இதன் வெற்றியில் சந்தேகம் ஏது...!!!
-------------------######-------------------
*இத்தனை பகுதிகளையும் பொறுமையாக படித்த நண்பர்களுக்கு ஒரு ஸ்பெசல் வணக்கம்.
*2012ல் அறிமுகமான மரியாதைக்குரிய மூத்த நண்பரும் காமிக்ஸ் ஆர்வலரும், ஈரோட்டில் நம் காமிக்ஸ் ஸ்டாலுக்கும், விழாவுக்கும் துவக்கத்தை தந்தவரும் தான் திரு ஸ்டாலின். அப்போதெலாம் அவரோடு மணிக்கணக்கில் உரையாடுவதும், விவாதிப்பதும் தான் எனக்கு காமிக்ஸ் படிப்பதை அடுத்து குஷியான வேலை. அப்போது ஒரு முறை,
"என்னங்க இவ்ளோ விசயங்கள் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள் அதை சும்மா விடாதீங்க, உபயோகமாக பதிவாக எழுதுங்க" என்றார்.
"நானெல்லாம் பதிவு எழுத வந்தா உதைப்பாங்களே ஜி" என்றேன்.
"அட தைரியமாக எழுதுங்க, போகப்போக இம்ப்ரூவ் ஆகிடும்" என உற்சாகப் படுத்தினார்.
அத்தோடு விடாமல், அவருடைய வலைதளத்தில் எழுதவும் வைத்து விட்டார். இந்த கத்துக் குட்டியும் பதிவரானுது இப்படித்தான்.
*இன்று என்னாலும் கூட, ஒரு சிலராவது ரசிக்கும்படி(அந்த கொடுமை எங்களுக்குத் தானே தெரியும் என நீங்கள் புலம்புவது புரிகிறது நண்பர்களே) விமர்சனம் எழுத முடிகிறது என்றால் அதற்கு காரணம் திரு ஸ்டாலினே. என்னுடைய குருநாதர் அவரே. இந்தப் பதிவின் வாயிலாக அவருக்கு நெகிழ்ச்சியான நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.
*இத்தனை உற்சாகமாக வரவேற்பை நல்கிய நீங்கள் இல்லையெனில் நான் இல்லை நண்பர்களே. உங்கள் அத்துனை பேருக்கும் பணிவான நன்றிகள். மீண்டும் ஒரு நல்ல தொடரில் சந்திப்போம்.
*நாளை மலரப்போகும் லயன்-முத்து கோடைமலர் 18ஐ வரவேற்க உங்களுடன் ஆவலோடு நானும் காத்திருக்கிறேன். கம்பேக்கிற்கு முன்பு தான் லயன், முத்து, திகில், மினிலயன் எல்லாம். இப்போது அனைத்தும் இணைந்த லயன்-முத்து.
இதுவரை கலக்கலான 3மலர்களையும் காணாத நண்பர்கள் இங்கே வாருங்கள்...
Deletehttps://m.facebook.com/groups/1723924691198965?view=permalink&id=2042354716022626
சூப்பர் ஜி. கலக்கிட்டீங்க . அருமையாக நிறைவு செய்துள்ளீர்கள் . பாராட்ட வார்த்தைகள் இல்லை .
Deleteகுஷி.....
Deleteடெக்ஸ் ஜி செம அருமையான & ரசிக்கும்படியான எழுத்துநடை...சூப்பர் ஜி...
Deleteஅதுக்குள்ளே முடிஞ்சிருச்சா!!!
Deleteஇருப்பில் உள்ள புத்தகங்களை தேட வைத்தும், இருப்பில் இல்லாத புத்தகங்களை நினைத்து ஏங்க வைத்தும்....
கலவையான அனுபவங்கள் உங்கள் பதிவுகள் மூலம் கிடைத்தது டெக்ஸ் விஜயராகவன்.
ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகரும் பாதுகாக்க வேண்டிய பதிவுகள். சமயத்தில் ஆசிரியருக்கேகூட உதவலாம்.
உங்கள் கடுமையான உழைப்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.வாழ்க வளமுடன்.
சூப்பர் டெக்ஸ்ஜி.... அருமை
Deleteடெக்ஸ் ஜி! சூப்பர் பின்னி பெடலெடுத்துட்டீங்க ! அட்டகாஷ்!
Deleteவாழ்த்திய முத்த நண்பர் ATR sirக்கும்,
Deleteபாராட்டிய அத்தனை அன்புள்ளங்களுக்கும் பணிவான நன்றிகள்.... மகிழ்ச்சி நண்பர்களே🙏🙏🙏🙏🙏
Congrats tex Vijay. It's really great & hard work. Keep rocking..
Deleteஅருமை நண்பரே
Deleteடெக்ஸ் விஜய்
Deleteநானும் யூத்துதான் என்று கதற வேண்டும் போல் உள்ளது.
இப்போது பாருங்கள்...!?
மூத்த நண்பர் முத்த நண்பராகி கிடக்கிறார்.எனவே ATR மட்டும் போதுமே.
ஹசன்@ செந்தில் சத்யா@ நன்றிகள் நண்பர்களே👍
DeleteATR@ ஹா...ஹா.... இந்த செல்லினம் தட்டச்சின் ஆட்டோ கரக்டரால் இப்படி ஆகிறது. நாம ஒன்று டைப் செய்தா அது ஒன்று டைப்புது.
கூல்...நாமெல்லாம் ஆல்வேஸ் யூத் தான்... வேறெந்த வாசிப்பு துறை யில் உள்ள ஒருவராலும் தன் 15வயசு நினைவுகளில் மூழ்கி லயிக்க முடியாது.
ஆனா நாம, ஒரேயொரு பெயர் போதும் ட்ராகன் நகரம் ன உடன் அந்த நாட்களுக்கே போய் விடுகிறோம். அப்போது நாம் பழகிய நண்பர் வட்டம், சாப்பிட்ட நொறுக்குகள், சைக்கிள்ள பறந்தது, புத்தகங்கள் தேடி தேடி ஓடியது,அவ்வப்போது பழைய புத்தக கடையில் பெட்டி பெட்டியா பழங்காமிஸ் அள்ளும் கனவு.....சான்ஸே இல்லை...
என்றும் பதினாறு, வயது பதினாறுனு குதூகலிக்கும் குழந்தை மனசுதான் நமக்கெலாம்....
+10000
Deleteவாவ்!அருமை!,டெக்ஸ் விஜய ராகவன்.!
Deleteஅடேயப்பா!ஆர்ச்சியின் கால எந்திரத்தில் ஒரு விசிட் அடிச்ச மாதிரி மனதில் ஒரு குதூகலம்.!!
ஹூம்!.,அது ஒரு கனாக்காலம்.!
தேங்யூ M.V. sir....🙏
Deleteயெஸ் அது ஒரு கனாக்காலம்;
நிஜமாவே எனக்கும் கால யந்திரத்தில் பயணித்து 1980களில் ஒர் மினி ரவுண்ட் வர ஆசையோ ஆசை சார்....
அடடே!! 26ம் தேதியே புத்தகங்கள் கிளம்பிடுச்சே!!! சிவகாசிகாரவுஹ உழைப்புக்கு தொப்பி தூக்கி தலைவணங்குகிறேன்!
ReplyDeleteஇந்தமாத 3 புத்தகங்களுமே ஒவ்வொரு விதத்தில் எதிர்பார்ப்பை எகிற வைத்திருப்பவைதான்!
1. ட்யூராங்கோ - படு ஸ்டைலான கதை + சித்திரம் + கலரிங் பாணியால் நம்மில் பலரையும் அசத்தியிருப்பவர். 'கோடை மலர்' என்ற அடையாளம் தாங்கி குண்ண்ண்டாய் வருவது கூடுதல் சிறப்பு என்பதால்!!
2. மார்ட்டின் : எடிட்டரையும், கருணையானந்தம் அவர்களையும் பல இரவுகள் தூங்கவிடாமல் செய்த - இதுவரை கண்டிராத புதூஊஊ கதைக்களம் - என்பதாலும், கதை வெளியான பின்னே இங்கே தளத்தில் நம் நண்பர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பட்டையைக் கிளப்பப் போகின்றன - என்பதால்!
3. மேக் & ஜாக் : காமெடியில் கலக்கயிருக்கும் புதூஊஊ கூட்டணி என்பதால்!
ஆத்தா... மகமாயி!!!
Tex Vijay semma
Deleteஇவுரு ஈரோடு விஜய்ல
Deleteஎப்ப டெக்ஸ் விஜய்யா
ஆராஞ்சுருவோம்.....
DeleteI 57😊
ReplyDeleteஆஹா😍😍😍 லார்கோவக் காணமே
ReplyDelete👌👌👏
Deleteஆஹா!!!!!
Delete60 வது
ReplyDeleteஆசிரியரே உடல்நிலையை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் கனமான பணிகள் காத்திருக்கிறது நன்றாக ஓய்வெடுத்து விட்டு சும்மா புகுந்து விளையாடுங்கள்
ReplyDeleteஆமாமா
Deleteஎடிட்டர் சார் , விரைவினில் குணம் பெற வேண்டுகிறேன் . இதில் ஒரு சுயநலமும் உள்ளது . நீங்கள் நல்லாய் இருந்தால்தானே , நாங்களும் நல்லாய் இருப்போம் . உடம்பை பார்த்துக்கோங்க சார் .
ReplyDeleteட்யூராங்கோ durable
ReplyDeleteலீவூ.... லீவு... லீவு....
Deleteமார்டின்...மார்டின்... மார்டின்....
ட்யூ... ராங்கோ...ராங்கோ... ராங்கோ...
மனுசனோட காந்த கண்ணுக்கே சிட்டுக .....ஹும்ம்ம்
ReplyDeleteஅசத்திருக்கான்யா....
இளைய மகன் மேனியினை இயற்கை தாலாட்ட...ஓஹ்ஹோஹோஹோஒஹ்ஹோ
Deleteஓராயிரம் ......
உம்மணாம்மூஞ்சி ஸ்மர்ஃபா இருந்து ட்யூராங்கோ படிக்கப்போறேன்.....
Deleteமெட்ராஸ சுத்திப்பாக்கப்போறேன்ன்ன்........
இன்ப அதிர்ச்சி!! அட்டகாசம் சார்!! 2018-ல் இப்படி ஒரு அற்புதமான செய்தியை எப்பவுமே நான் கேட்கலை, படிக்கலை... ஒரு கடல் நிறைய பன்னீர் அலைகள் சுனாமி மாதிரி வந்து என்னை தூக்கி போட்ட மாதிரி சந்தோஷமா இருக்கு சார்!.................................!!!!!
ReplyDeleteஏ அஜக்.....
Deleteஏ ....அஜக்...
ஏ..அஜக்....
பார்றா. ..
ReplyDeleteநம்பள் வாழ்த்து சொல்றான்
Dtcலருந்து அழைப்பு.....வந்தாச்சாம்....சரியான சேவைக்கு ....நாடுவீர் dtc
ReplyDeleteநம்ப DTDC...மூணுநாளானுலும்
Delete.....
ம்ஹும்...
☹☺
Deleteகாலை வணக்கம் நண்பர்களே....
ReplyDeleteஆசிரியர் சார் விரைவில் குணம் பெற வாழ்த்துகின்றேன்.
மே இதழ்கள் இவ்வளவு விரைவாகவா....... ..!!!!!!!!!
ஆசிரிய௫க்கும் அவரது குழுவுக்கும் வாழ்த்துக்களும்........பாராட்டுக்களும்.....!.
புக் வந்தாச்சு!!
ReplyDelete👍👍👍
கொரியர் தகவல் வந்தாச்சசு....:-))
ReplyDeleteஆஹா....இந்த மாசம் சைத்தான் சாம்ராஜ்யம் இல்லையா சார்..
ReplyDeleteஇந்த மாச இதழ் என்றே நினைத்து இருந்தேன்...
மே டெக்ஸ் இல்லா மாசமா...:-(
சார் கோடை மலரை முகர்ந்து...பார்த்து கொண்டிருக்கிறேன் . வடிவமைப்பு நச் . அட்டைபடம் கோடை என்பதாலோ என்னவோ நிறவறட்சி...மே என்பகதால் எல்லாம் சிவப்போ....பின்னட்டை அருமை . பெஸ்ட் அட்டை வாடகைக்கு கொரில்லாக்கள் . அருமை ...
ReplyDeleteஇந்த வாரம்,
ReplyDeleteவான் ஹாமே படைத்த 12-3/4 நுழைவாயில்...
படைப்பாளி நினைத்ததும் நடந்ததும்...
புறம்தள்ளப்பட்ட படைப்பும், நாம் புரிந்துகொள்ள வேண்டியதும்...
பின்தொடர...http://xiiiorupulanaayvu.blogspot.in/2018/04/xiii-page-32-to-36.html
பார்சலை அமுக்கியாச்சே..!!
ReplyDeleteட்யூராங்கோ அட்டைப்படம் செம்ம..! அட்டையிலிருந்து வெளியேத்தாவத் துடிப்பது போன்ற அந்த குதிரையின் வடிவமைப்பு அட்டகாஷ்...!
இந்த வருடத்தின் டாப் 3 அட்டைப்படங்களில் ட்யூராங்கோ இடம்பிடிக்கப்போவது உறுதி!
மேலோட்டாமான புரட்டலில் வண்ணங்கள் கண்ணைப்பறிக்கின்றன..!
மேக் அண்ட் ஜாக் ...படித்துவிட்டு சொல்கிறேன்.! ஏன்னா ..கார்ட்டூன் என்பதால் நான் ஒருதலைபட்சமாக பேசுவதாக ஆகிவிடும்,! (இருந்தாலும் கடலைமுத்து ரொம்ப ஸ்ட்ரிட்டுப்பா) ..!
மார்ட்டின் மிஸ்ட்ரீ ... ரொம்ப பேசவைக்கும்னு தோண்றது ..!!
102nd
ReplyDelete103
ReplyDeleteபார்சல் வந்துட்டது...
ReplyDeleteகோடையின் தாகம் தீர்க்கும் அருமருந்தாம் கோடைமலர் 2018 வந்து கிடைத்தது... வந்து கிடைத்தது...வந்து கிடைத்தது...!
அட்டைப்படங்களில் அழகோ அழகோடு கோடைமலர் 2018 பளீரிடுகிறுது.
முன்அட்டை....
டாப்பில் இரத்தச் சிவப்பில் டைட்டில்;
தகிக்கும் மெக்ஸிகோ பாலையில் விரையும் குதிரைகள்- புழுதி பரப்பில் மங்கலான வெளிர்நிறத்தில் ஆஸம்..ஆஸம்.
கீழே அரக்கு வண்ண பார்டரில் உள் பக்க காட்சியும், மல்டி கலரில் "டியூராங்கோ அதிரடி" என்ற வர்ணனையும் தெறிக்கும் காட்சி...
பின் அட்டை...
இயந்திர துப்பாக்கி ஏந்திய டியூராங்கோ,
"மெளனமே இவர் ஆயுதம்"
மீண்டும் அதகளம் அட்டையில்...
2ம் இடத்தை மேக்&ஜாக்கும்,
3ம் இடத்தை மார்டினும் பெறுகிறார்கள்...
//அட்டைப்படங்களில் அழகோ அழகோடு கோடைமலர் 2018 பளீரிடுகிறுது.//
Deleteஉண்மை,கோடைமலர்,
முன்னட்டையும் சரி,பின்னட்டையும் சரி அழகோ அழகு,அட்டகாசமா இருக்கு.
இரண்டு எதிரெதிர் வார்த்தைகள் இணைந்து ஒரு அர்த்தத்தை தருவதை ஆங்கிலத்தில் ஆக்ஸிமெரோன் என்கின்றனர். Only choice, true lies, happily married...சில மாதிரிகள்.
ReplyDeleteஇங்கேயும் அப்படி ஒரு சொல்லாடலை கையாண்டுள்ளார் எடிட்டர் சார்....
மெளனம்-அமைதியாக இருத்தல்...
முழக்கம்-ஓசை எழுப்புதல்...
எதிரெதிர் வார்த்தைகளான இவைகள் இணைந்து "மெளனமாயொரு முழக்கம்"---என்ற ஒரு வார்த்தையை அமைத்து, கூடவே ஒரு உருவகம் தரும் பெயர்ச்சொல்லையும் சேர்த்து,
"மெளனமாயொரு இடிமுழக்கம்"
---என்ற அசாத்திய பெயரை சூட்டியிருக்கிறார்.
ஸ்டன்னிங்கான பெயர்...
உள்ளே உறைந்து உள்ள கதையோட்டத்திற்கு உன்னதமான பெயர்.
Super
Deleteபுக் வந்தாச்சு ஜாலி
ReplyDelete*கதையை படிக்காதவர்கள் தாண்டிச் செல்லவும்*
ReplyDeleteவாடகைக்கு கொரில்லாக்கள்,
1920 களின் காலத்தில் நடக்கும் கதை ஜில்லாரின் சாகஸ காலத்தையும்,பாணியையும் சற்றே நினைவுபடுத்துகிறது,
ஊதியம் பெற்றுக் கொண்டு வாடகை பாதுகாவலர் பணியில் ஈடுபடும் நம் கதை நாயகர்கள் மேக் & ஜாக்,
மேக்கின் நினைவில் சுழலும் கதையில் நாமும் பின் செல்கிறோம்,
பணத்திற்காக ஒரு பிணத்தை பாதுகாக்கும் பணி ஜாக்கிடம் ஒப்படைக்கப்படுகிறது.பிணத்தின் பெயர் நட்டு ஜெர்ரி,.
ஜாக்கிடம் பிணத்தைப் பற்றி குசலம் விசாரிக்க வருகிறார் நம் காமெடி வில்லன் அல் கபோன்.நட்டு ஜெர்ரி என்னோட எதிரியாக்கும்,ஒரு முட்டுச் சந்தில் நட்டு ஜெர்ரியின் நட்டை கழற்றியது நானும்,எனது கொரில்லா பாய்ஸும்தான் என கெக்கலிக்கும் அல் கபோன்.எதிரி ஒழிந்தான் என்று சந்தோஷமாக கிளம்ப,ஜாக்கை காணவரும் காவல்துறை அதிகாரி எலியட்டும் நட்டுவை பற்றி ஜாக்கிடம் பிட்டு பிட்டு வைக்கிறார்.
மறுநாள் நட்டுவின் சடலத்தை புதைக்கின்றனர்,சில நாட்கள் கழித்து ஒரு மருத்துவமனையில் இருந்து ஜாக்கிற்கு தொலைபேசி வரும் அவசர அழைப்பில் ஜாக் மருத்துவமனை செல்ல அங்கு படுக்கையில் இருக்கும் ஒற்றைக் கண்ணன் ஒருவனின் தகவலால் புதைக்கப்பட்ட நட்டு சவப்பெட்டியில் இருந்து எஸ்ஸாகி விட்டதை அறிகின்றார்,நட்டு இறந்தது போல் டிராமா செய்து பின்னர் எஸ்ஸாகி விட்டதை மேக்கிற்கு விளக்கும் ஜாக்,பின்னர் நட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மாறுவேஷத்துடன் அலைவதையும்,இதை அறிந்தது அந்த நட்டுவின் ஒற்றைக்கண் சகா மாத்திரமே,மாறுவேஷத்துக்கான சாட்சிகளை கொல்ல நட்டு முயலும்போது ஒற்றைக் கண்ணன் தப்பிப்பிழைத்ததை கூறுகின்றார்.
நட்டு தப்பி மாறுவேஷத்துடன் அலையும் தகவலை அல்கபோனிடம் ஜாக் கூற,பயந்து நடுங்கும் அல்கபோன் நிறைய பணம் தருகிறேன்,என்னை எப்படியாவது காப்பாற்று என்று ஜாக்கிடம் கெஞ்ச,அதை ஏற்கிறார் ஜாக்.
1.ஜாக் அல்கபோனை எப்படி காப்பாற்றுகிறார்?
2.மாறு வேஷத்தில் சுற்றும் நட்டு யாருடைய வேடத்தில் இருக்கிறான் என்பதை தனது சாமார்த்தியத்தாலும்,சில பல ட்விஸ்டுகளுடனும்,கிச்சு கிச்சு மூட்டும் நகைச்சுவையுடனும் கதையில் காணலாம்.
தெளிவான சித்திரங்கள்,
ரசிக்கும்படியான களம்,
கண்ணை உறுத்தாத கலரிங் பாணி மொத்தத்தில் சந்தோஷமாக வரவேற்கலாம் மேக் & ஜாக்கை
எனது ரேட்டிங்-9/10.
ரவி@ இன்னும் அழகு பார்த்தே முடிக்கல நானு...அதற்குள் விமர்சனமா...செம ஸ்பீடு...!!!
Deleteமுதல் புரட்டலில்,
ReplyDeleteடியூராங்கோ பாகம்1- "சத்தமின்றி யுத்தம் செய்" +
பாகம்2-"மெளனமாயொரு இடிமுழக்கம்"
----
இரண்டையும் அருகருகே வைத்து ஒப்பிட்டு பார்க்கிறேன்.
அம்மாடி... அசாத்திய சித்திரங்கள் அப்படியே தொடர்கிறது.
பாலைவனங்கள், மெக்ஸிகோ ஸ்டைல் கட்டுமானங்கள், கற்றாழையும் சப்பாத்தி கள்ளியும், மலைமுகடுகள்....மீண்டும் ஒரு சித்திர விருந்து...
பாகம்1 பனியில் ஆரம்பித்து தகிக்கும் மணலில் நிறைவுறுகிறது.
பாகம்2 நேர்மாறாக தகிக்கும் மணலில் ஆரம்பித்து குளிரும் பனியில் முடிவடைகிறது.
இன்னமும் இப்படி ஓப்பீடுகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
முதல் புரட்டலில் கண்ணில் படும் காட்சிகள் மிரட்சியினை கொண்டுவருகின்றன.
டயலாக்லாம் அசத்துது,
"குஞ்சு பொறிக்கும் முன்பாய் குழம்பு வைக்கத் தயாராவானேன்?"--சாம்பிள் மட்டுமே...
டியூராங்கோ வின் காதலி...ஹூம்..நெஞ்சே அடைக்கிறது. வேணாம் அழுதுடுவேன்...!!!
இனியும் காத்திருக்காமல் டியூராங்கோ வோடு பயணிக்க வேண்டியதுதான்....
*திருஷ்டிப் பொட்டு:பக்கம் 70&99 லேசான கலங்கல்கள்....
🍰🍫🎈💐🍧🍦
ReplyDeleteஆங்...லாஸ்ட் பட் நாட் லிஸ்ட்:-
எ பிக் கன்கிராட்ஸ் டூ நம்ம J ji.
அவர் எழுதிய டியூராங்கோ பாகம்1ன் கதைசுருக்கம் தான் கோடைமலர் 2018ல் இடம்பெற்றுள்ளது.
வாழ்த்துகள் ஜி🍦🍧💐🎈🍫🍰
நிஜமாகவா
Deleteநன்றிகள் கோடி உங்கனைவருக்கும்.
Deleteகை கூப்பி வணங்குகிறேன் எடிட்டர் சார்.
J
யெஸ் ஜி....
Delete///j5 April 2018 at 08:32:00 GMT+5:30
ட்யூரங்கோ
மு க சுருக்கம்
சில்வர்ப்ரிஜ் சுரங்கங்கள் நிறைந்த ஊர்.ஆலன்,டீல் என்று இரண்டு சுரங்க உரிமையாளர்கள் நண்பர்களாக வாழ்கின்றனர்.ஆலன் மக்களுக்கு நன்மைகள் செய்து பிரபலமாகிறார்.டீலோ பேராசைக்காரர்.
பணம்,பதவி தான் அவரது குறி.இந்நிலையில் நகர மேயர் பதவிக்கு தேர்தல் வருகிறது.
ஆலனுக்கு டீலின் கள்ள ஆயுத வியாபாரம்தெரிந்துவிடுகிறது.இதனால்
டீல் எதையும் செய்ய துணியலாம் என்பதை எதிர்பார்த்து, ட்யூரங்கோ என்ற கூலிக் கொலையாளியை தன் பாதுகாப்பிற்காக இரகசியமாக பணியமர்த்துகிறார்.
இதை அறிந்த டீல், ஆலன், அவரது உதவியாளர் ஹார்வி இருவரையும் கொல்வதோடு பழியை ட்யூரங்கோ மீதே சுமத்திவிடுகிறான்.
சில்வர்ப்ரிஜின் ஷெரீப் ஜெங்கின்ஸ் டீலின் உள்கை.
ஊருக்குள் நுழைந்தவுடன் தூக்கில் போடப்படும் நிலைக்காளான ட்யூரங்கோ,தப்பித் தலைமறைவாகிறான். அப்பொழுது இந்த கொடூரத்தில் மூன்றாவதாக சில்வர்ப்ரிஜையே கபளீகரம் செய்ய துணியும்
பெயர் தெரியாச் சுரங்கமொன்றினால் அமர்த்தப்பட்டு அனைத்தையும் சிதைக்கநினைக்கும் திட்டம் ட்யூரங்கோவிற்கு தெளிவாகிறது.
ஆலனின் விதவை சித்ரவதை செய்யப்படுவதை துப்பாக்கி முனையில் தடுத்து, சுரங்க உரிமை பத்திரங்களை மீட்டு அவளிடமே ஒப்படைத்து விட்டு ஊரைவிட்டு டயூரங்கோ காயத்துடன்
வெளியேறுகிறான்.///----இது தாங்கள் எழுதிய சுருக்கத்தின் முதல் பார்ட். அப்படியே மெளனமாயொரு இடிமுழக்கம் ல பிரிண்டிங்ல உள்ளது ஜி....
கண்கள் கலங்குகின்றன.
Deleteகமான் ஜி... 🍦
Deleteரியல் பிக் ஒன் மைட் பி கம்.
எடிட்டர் சாரின் அறிவிப்பு இப்படி இருந்தால்,
"கா.பா.sir& J sir இருவரின் ஒர்க்கும் சம அளவில் இருக்கின்றன. இரண்டிலும் இருந்தும் செலக்ட் பண்ணி பிரிண்டிங்கிற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. பரிசை இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். இருவரும் வின்னர்களே...வாழ்த்துகள் சார் இருவருக்கும்"....
ஒரே குதூகலம் தானே...!!!
இந்த ரிசல்ட்டையும் ரூல்ட் அவுட் செய்ய முடியாதே....
ஆமாம் சார்
Deleteவெளியூர் சென்று விட்டு இப்பொழுது தான் வீடு திரும்பினேன்.
புத்தகப் பார்சல் என் டேபிளின் மேல்.
அருகில் புன்முறுவலுடன் என் இல்லாள்.
ஆமாம் ஆமாம் ஆமாம்
நீண்ட நாட்களுக்கு பின் பேனா பிடித்தேன்.
ஹும்ம்ம் 17 வருடங்கள்.....
படையப்பா திரைக்கதைக்காக யாம் வஞ்சிக்கப்பட்ட போதும் , எனது படைப்பை அட்சரம் பிசகாகல் திரையில் பார்த்த போது......
எனது கற்பனை படைப்புகள்..
படையப்பா..
நீலாம்பரி
கிரானைட் மலை.
எல்லாமே வெறுத்துப்போய்...
பிறகு பெரும் போராட்டத்திற்குப்பின் எமக்கு கூலி வழங்கப்பட்ட் போது படம் வெள்ளி விழா கண்டு முடித்திருந்தது.
அது ஒரு காலம்...
அதிலிருந்து எழுதுவதில்லை.
பு வி மொழி பெயர்ப்பு பணிக்கிடையில் இதை ஏழுதியது கூட மறந்து விட்டேன்
J
வாழ்த்துக்கள் ஜி
Deleteஉங்களின் உழைப்பு என்றுமே வீண் போகாது
வாழ்த்துக்கள் ஜி !
Deleteநன்றி திருச்செலவம்,செந்தில்
Deleteவாழ்த்துகள் J sir.!!
Delete💐💐💐💐💐💐💐💐💐💐
வாழ்த்துக்கள் J சார்.
Deleteவாழ்த்துகள் J சார்.
Delete👏👏👏👏👏
J ji!!
Deleteமிகப் பெரிய வெற்றிகள் மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகே சாத்தியமாகின்றன - என்பதை உங்கள் 'படையப்பா' அனுபவம் மீண்டும் உணர்த்துகிறது!
அந்த வெற்றிக்குப் பிறகு ஏன் எழுதுவதை நிறுத்தினீர்கள் என்ற ஐயமும் எழுகிறது!
போவட்டும்! மேற்படி நண்பர்களின் வாழ்த்துகளோடு என்னுடையதையும் இணைத்துக் கொள்ளுங்கள்!
இதோ உங்களோடு இணைந்து உற்சாகம் பீரிட எழுத ஆரம்பித்து விட்டேனே.
Deleteநன்றி கிட்,G P,ஈ வி,அறிவு சார்களே.,
எழுதுவதற்கு ஊக்கத்தை விட உற்சாகம் முக்கியம் ஈ வி,
Deleteடெக்ஸ் விஜயராகவன் அவர்களுக்கு..
ReplyDeleteஉங்களின் கோடைமலர் பதிவு (கள்) காலையிலேயே கண்டாலும் இவ்ளோ பெரிய இனிப்பு மாத்திரையை பொறுமையாக தான் படிக்க வேண்டும் என்று தள்ளி போட்டு இப்போது சில நிமிடங்களுக்கு முன் தான் படித்து முடித்தேன்.
அவ்ளோ பெரிய மாத்திரைக்கு ஒரு சின்ன மூடி மாதிரி சுருக்கமா சொல்லிவிடுகிறேனே ஒரே வார்த்தைல ..
சூசூசூசூசூசூப்பரு.....!
டாங்ஸ் தல👍
Deleteஇம்மாத இதழை நாளை தான் கண்களால் பார்க்க முடியும்..
ReplyDeleteகாத்திருக்கிறேன்..:-(
ஆசிரியர் சார்@
ReplyDeleteசிறு வேண்டுகோள்.
இம்மாதம் டெக்ஸ் கதை இல்லை.
அடுத்த மாசம் 2டெக்ஸ் கதைகளாக வருது.
ரெகுலர் கதை+ மினி இணைப்பு
இம்மாதம் மாதிரி ரெகுலர் டெக்ஸ் இல்லா மாதங்களில் அந்த இலவச மினி டெக்ஸை தந்து எங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்...ப்ளீஸ்...
ஷட்யூலில் சின்ன அட்ஜெஸ் செய்தால் எல்லா மாதமும் டெக்ஸ் இருக்கும் சார்...
இந்தாண்டு மொத்தம் 7+1+1 ரெகுலர்+மறுபதிப்புகள்.
இலவச மினி =6...என மொத்தம் 15கதைகள் இருக்கு. இருக்கும் மீதி 7மாதங்களும் மீதியுள்ள டெக்ஸ் கதைகள் வரும்படி அமையுங்கள் சார்...
நல்ல கோரிக்கை.
Deleteநிழலின் அருமையை நமக்கு நினைவூட்டவாவது வெயில் வேண்டும் தானே ?
Deleteவிஜயன் சார், புத்தகங்கள் கிடைத்து விட்டது. நன்றி.
ReplyDeleteபுத்தகங்களுடன் மலைப் பிரதேசம் நோக்கி பயணம் இன்று இரவு. மே 2 முதல் கதை விமர்சனங்கள் ஏதிர்பார்க்கலாம்.
மலை பிரதேசத்துக்கா
Deleteகுடுத்து வைச்ச மனுசர்...
அதும் காமிக்ஸோட....
அடடடடா....
உலு உலு உலு உலு.... (குலவை)
ReplyDeleteஆத்தாவுக்கு!
புக்கு கிடைச்சிடுச்சு!
பி.கு : வெயில் காலம் முடிந்த பிறகு கூழ் பற்றி ஆத்தாவுடன் ஆலோசனை செய்யப்படும்!
குளூகளூன்னு இருக்கணும்னு ஆத்தா சொல்றாப்ல.....
Deleteமெல்ல திறந்தது கதவு:
ReplyDeleteமரம் என்று ஆரம்பித்து, பின் உரம் என்று ஆராய்ந்து, இறுதியில் மிக துயரமான ஒரு அலசலோடு கதை நிறைவு பெறும் மறு கணமே "கிளாரிஸ்" குறித்து கனத்த இதயத்துடன் யோசிக்க ஆரம்பித்து விடுகிறது மனம்.
நிறைய இடங்களில் படங்கள் தான் கதை சொல்கிறது, கிளைமாக்ஸ் உட்பட..
ஆனால், ஐஸெர்ஜில் கதை நெடுகே வரைந்து கொண்டே இருப்பதின் மூலம் கதாசிரியர் என்ன உணர்த்த வரார் என்பது புரிந்தும் புரியாதது போலவே உள்ளது.....
இந்தக் கதையில் சொன்னது நூறென்றால் - சொல்லாதது ஆயிரம் ! அந்த ஆயிரத்தையும் அலசி ஆராய கூகுள் மட்டுமல்ல ; இன்னும் நிறையவே தகவல் களஞ்சியங்கள் நமக்குத் தேவையென்பேன் !!
Deleteவாடகைக்கு கொரில்லாக்கள்- முதல் முறையாக என் 8வயது மகளும் 4 வயது மகனும் முழுக்க ரசித்த கதை. ஸ்மர்ப்ஸ் படித்து கான்பிக்கையில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை ஓடிவிடுவார்கள். இந்தக் கதை அவர்களுக்கு பிடிக்கக் காரணம் என்ன என்று தெரியவில்லை... May be few unmasked action scenes. Graphical details இல்லாமல் ஆனால் வன்முறையோடு இணைந்து இருக்கும் கதைக்கரு காரணமாக இருக்கலாம்.
ReplyDeleteWhatever I am happy. Personally, for me, the story line is good one. முதியோர் இல்லம் பற்றிய என் மகளின் கேள்விகளுக்கு விடை தந்தது சிறப்பாக அமைந்தது.
சூப்பர். அப்படி என்றால் என் குழந்தைக்கு இந்த கதையை வரும் நாட்களில் சொல்லி விடுகிறேன்.
Delete//வாடகைக்கு கொரில்லாக்கள்- முதல் முறையாக என் 8வயது மகளும் 4 வயது மகனும் முழுக்க ரசித்த கதை//
Deleteஆச்சர்ய சேதியே !! And இங்கே நமக்கொரு குறிப்பும் இருப்பதாய் உணர்கிறேன் !
எங்களுக்கான குறிப்பு :
"இது தான் சிறுவர் ரசனை" என்று எதையும் stereo type செய்திடல் இனி வரும் காலங்களில் தவறு போலும் !
உங்களுக்கான குறிப்பு :
"இது தான் சிறுவர் ரசனை" என்று எதையும் stereo type செய்திடாது -(சந்தா C -ன்) எல்லாக் கதைகளையும் இனி வீட்டின் குட்டீஸ்களுக்குச் சொல்லிடணும் போலும் !!
வாடகைக்கு கொரில்லாக்கள்:
ReplyDeleteஅறிமுக கதையே அட்டகாசம்..
கலரிங் அட்டகாசம்...
குறிப்பாக அடர் வண்ணங்கள் கண்களை கொள்ளை கொள்கிறது..
மொத்தத்தில் 10/10
"வாடகைக்கு கொரில்லாக்கள்" ..
ReplyDeleteவித்தியாசமான கார்ட்டூன் கதை .. அறிமுக கதையே அமர்க்களம் .. It was a light and breezy read .. ஒரு ஜாலியான அனுபவமாக இருந்தது ...
வாடகை கொரில்லா- இன்ஸ்டன்ட் ஹிட்டா??? அடி தூள்....
Delete//அறிமுக கதையே அமர்க்களம்//
Delete40 கதைகள் கொண்ட தொடரிலிருந்து இந்த ஆல்பத்தைத் தேர்வு செய்திட உதவியது ஜூனியர் எடிட்டரின் கண்டுபிடிப்பான பெல்ஜியத்து நூலகம் ஒன்றின் நிர்வாகியே ! ஒரு சன்னமான சன்மானத்தை மட்டும், பெயரளவுக்கான ஊதியமாய் வாங்கிக் கொண்டு, நான் கேட்கும் ஒரு நூறு கேள்விகளுக்கும் சளைக்காது பதில் சொல்லும் பொறுமையான பெண்மணி அவர் ! அவரது பரிந்துரையில் தேர்வான கதையிது !
Super சார் .. ஒவ்வொரு கதை selection க்கும் நீங்கள் எடுக்கும் effort புரிகிறது ..
Deletewhere is tex ? :(
ReplyDeleteTex vijay 100000 super
ReplyDeleteநன்றிகள்🙏🙏🙏
Deleteமார்டின்.
ReplyDeleteமனித பேராசையின் மௌன விளைவு.
வளர்ச்சி, வருமானம் என்ற வெளிச்சமான பக்கத்தின், மறைக்க முடியாத இருண்ட பக்கம்.
சமகால கதை என்றவகையில், முக்கியத்துவம் வாய்ந்த சம கால நிகழ்வின் பேசு பொருளை உள்ளடக்கியது.
மெல்லத் திறந்த கதவு என் மனதை என்னவோ செய்கிறது.
மார்ட்டினை இனிதான் தரிசிக்க வேண்டும்.
Deleteஅதற்குள்ளாக படித்து விட்டீர்களா சார் ? கதையின் ஓட்டம் சீராக இருந்ததா ? முன்னும், பின்னுமாய் ஓடும் கதை ; பற்றாக்குறைக்கு தவணை தவணையாய் தலையைப் பிய்த்துக் கொண்டு செய்த எடிட்டிங் என்பதால் - கதையில் lag ஏதும் தெரிந்திடக் கூடாதே என்று ரொம்பவே ஆதங்கம் கொள்ளச் செய்தது !
Deleteமார்டினை எப்போதுமே கொஞ்சம் ஆவலுடன் எதிர்பார்ப்பேன். இம்முறையே படபடப்பு அதிகமாகவே கூடியது.
Deleteமார்டின் கதைகளை முழுமையாக உள்வாங்க நல்ல சூழல் அமைய வேண்டும். அந்த சூழல் எனக்கு இன்று அமைந்தது.
வேலைப்பளு குறைவாக இருந்ததால் மார்டினுடன் களம் புகுந்தேன். மெதுவாக நகரும் கதை மெல்ல மெல்ல திகிலுடன் வேகமாகவே பயணிக்க, நானும் அவசரமில்லாமல் பின்தொடர்ந்தேன்.
க்ளாரஸின் தோழி லாராவவின் ப்ளாஷ்பேக்கில் தூக்கில் தொங்கியபடி க்ளாரஸ் மெதுவாகத் திரும்பும் கட்டத்தில் நிஜமாகவே திடுக்கிட்டு விட்டேன்.
ட்யுராங்கோவை படிச்சி முடிச்சாச்சி,
ReplyDeleteஅட்டகாசமான கதை பாணி,அற்புதமான கலரிங் பாணி,அருமையான ஓவிய பாணி,கலக்கலான அட்டைப் படம்,
ஆஸம்,ஆஸம்,ஆஸம்.
எனது ரேட்டிங்-10/10.
நெடிய கதையும்,நிறைய கதை மாந்தர்களுமாக இருப்பதால்,விமர்சனத்தை சற்றே பொறுமையாகத்தான் போட வேண்டும்.
நிறைய வசனங்கள் தேர்ந்தெடுத்த சொற்களாக ஜொலிக்கின்றன.
Deleteஇங்கே பன்ச் டயலாக் அமைக்க முகாந்தரங்களில்லை ; so டயலாக்கில் பன்ச் இருந்தால் தான் ரசிக்குமென்று பட்டது சார் !
Deleteஅனைத்தையும் படித்துவிட்டேன். இம்மாத வரிசை
ReplyDelete1. மார்ட்டின்
2. மேக் ஜாக்
3. டிராங்கோ
மார்டினினில் கடைசி பக்க சஸ்பென்ஸ் மிக அருமை.
This comment has been removed by the author.
ReplyDeleteஅமெரிக்காவில் ஒரு சேலம்.!! முதல்முறையாக இப்போதுதான் காமிக்ஸில் பார்க்கிறேன். 8-ம் வகுப்பு படிக்கும்போது oxford atlas புத்தகத்தில் சேலத்தின் lattitude &longitude-களை தெரிந்துக்கொள்ளலாம் என்று அந்த அட்லசின் கடைசி பக்கத்தில் சேலத்தை தேடியபோதுதான் சேலம் என்று உலகில் இரண்டு நகரங்கள் இருப்பதை தெரிந்துக்கொண்டேன். ஒன்று இங்கே, இன்னொன்று அமெரிக்காவில். அந்த சிறு வயதில் ஹாஸ்டல் பையங்களிடம் "அமெரிக்காவுல எங்க ஊரு இருக்குடா... உங்க ஊரு இருக்காடா?" என்று சொல்வேன். சமீபத்தில் கூட ஒருமுறை அந்த சேலத்தின் ஞாபகம் வந்தபோது... 'அமெரிக்காவில் உள்ள எல்லா நகரங்களும் காமிக்ஸில் வருகிறது. ஆனால் அந்த சேலம் மட்டும் வரவில்லையே' என்று நினைத்தேன். இதோ வந்துவிட்டது! மார்ட்டின் கதையில் 143ம் பக்கத்தில்.
Deleteஆனாலும், கொடுத்து வைத்த நகரம்தான் அந்த சேலம். கடல் கூட இருக்கிறது அங்கே.
நேற்று மாலை 5:30'க்கு கூரியர் வந்து சேர்ந்தது. இன்னும் ஒரு கதையையும் படித்து முடிக்கவில்லை. முதலில் ட்யூராங்கோதான் படிக்கவேண்டும் என நினைத்தேன். ஆனால், நேற்றைய இரவின் சூழ்நிலைக்கு மர்ம மனிதனின் கதைதான் படிக்க மூட் வந்தது. இப்போதுதான் முடிக்க போகிறேன்.
ReplyDeleteஎடிட்டர் சார்.!
ReplyDeleteஎனது போனில் இணையதள சேவை இரண்டு வாரங்களாக சரிவர வேலை செய்யாததால் இன்றுதான் முந்தைய பதிவில் எனக்கு ஜம்போ சந்தா ஒரு நண்பர் அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்று தெரிந்தது.!
அதை பார்த்ததும் ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு.என்னையும் ஒரு மனுஷனா நினைத்து அன்பளிப்பு வழங்கிய நண்பரை நினைத்து எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன்.! வலது கை கொடுப்பதை இடதுகை க்கு தெரியக்கூடாது என்று நினைக்கும் நல்ல உள்ளம் கொண்ட வள்ளல் முகமறிய நண்பரை இருகரம் கூப்பி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.! இந்த நன்றிகடனை தீர்க்க நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.!நன்றி! ______/|\______!!!!!!.
எடிட்டரின் புதிய பதிவு ரெடி...priyatels!
ReplyDelete