நண்பர்களே,
வணக்கம். புலர்ந்திருக்கும் 2018 நம் அனைவருக்கும் நலமும், வளமும் தந்திடும் ஒரு அற்புதப் பொழுதாய் அமைய வேண்டிக் கொள்வோம் ! வாளி நிறைய சூப்பைப் பார்த்த ரின்டின் கேனின் சந்தோஷம் இந்தப் புது வருஷத்தில் ஒவ்வொரு நாளிலும் நமதாகட்டுமே !
ஜனவரியின் இதழ்களைப் புரட்டப் / படிக்க, தொடரும் நாட்களில் நேரம் எடுத்துக் கொள்வீர்களெனில், நமது தளம் அதிரப் போவது உறுதி ! ஒரே மாதத்தில் 2 ஹார்ட் கவர் இதழ்கள் தலைகாட்டுவதோ ; 936 பக்கங்களை படிக்கவொரு வாய்ப்புக் கிட்டுவதோ அடிக்கடியான நிகழ்வுகள் அல்ல தானே ?!! So பணிகளுக்கும், அன்றாடங்களுக்கும் இடையினில் இவற்றிற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்களேன் ?
And ஏற்கனவே நான் எழுதியிருந்தது போல, சந்தாக்களின் சகல பிரிவுகளுக்கும் 'ஜே' போட்டுள்ளோரே அநேகம் இதுவரையிலும் !! A + B + C + D - கிட்டத்தட்ட 96 % ஆதரவு கண்டு அமோக முன்னணியில் நிற்கின்றது ! அந்த அணியில் இன்றே புது வரவுகளும் இணைந்திடத் தீர்மானித்தால் சூப்பராக இருக்கும் !!
புலர்ந்துள்ளது நமது முதன்மை நாயகரின் 70 -வது ஆண்டுமே என்பதால் - அவ்வப்போது அவர் சார்ந்த செய்திகள் நம் பதிவுகளில் இடம்பிடித்திடும் !
இதோ - ஒரு சமீப கிராபிக் நாவல் TEX-ன் அட்டைப்படம் !! ஓவியர் Mastantuono நமக்குப் பரிச்சயமானவரே (நில்,,கவனி..சுடு..!)
கதை மட்டும் நாம் எதிர்பார்த்திடும் பாணியினில் அமைந்திடின் - 2019-ன் அட்டவணையில் இதனைப் பார்த்திடும் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் !
கௌபாய் உலகின் சிலாகிப்புகள் ஒரு பக்கமெனில், புத்தாண்டை நமக்கு அதிரடியாய்த் துவக்கித் தந்துள்ள தோர்கல் பற்றியும் பேசிடுவோமா ? "கடவுளரின் தேசம்" இதழினை முழுவதுமாய்ப் படிக்க உங்களுக்கு அவகாசம் கிட்டியதா என்று தெரியவில்லை ; ஆனால் அதனைப் படித்திருப்பின், இந்த fantasy நாயகர் மீதான அபிமானம் பன்மடங்காகிடுவது உறுதி ! வைக்கிங் காலத்தையும், விண்கலக் காலத்தையும் முடிச்சுப் போடுவதென்பது ஒரு ஜாம்பவானுக்கு மாத்திரமே சாத்தியப்படும் & கதாசிரியர் வான் ஹாம்மே அதனை அசாத்திய நயத்தோடு செய்வதை உலகெங்கும் ரசிக்கும் கும்பலில் நாமும் தீவிரமாய் இடம்பிடித்திடலாம் ! பற்றாக்குறைக்கு "இளம் தோர்கல்" என்ற தொடருமே பிரெஞ்சில் 2013 முதல் சக்கை போடு போட்டு வருகிறது ! முற்றிலும் புதுப் படைப்பாளிகளின் பொறுப்பில் தடதடக்கும் இந்தத் தொடரின் ஒரு குட்டிப் பார்வை இதோ !!
ரசிக்க மட்டும் நமக்கு நேரமும், ஆர்வமும், காதலும் இருப்பின் - காத்திருக்கும் விருந்தின் பிரம்மாண்டம் அசாத்தியம் என்று மட்டும் சொல்லுவேன் !!
And இதோ - இம்மாத கிராபிக் நாவலான "நிஜங்களின் நிசப்தம்" ஆல்பத்தின் ஓவியர் இம்மானுவேல் லார்செனேட் ! ஐம்பதைக் கூட இன்னமும் தொட்டிருக்கா இவர் தான் இந்தச் சித்திர அதகளத்தின் கர்த்தா !
And இதோ - இம்மாத கிராபிக் நாவலான "நிஜங்களின் நிசப்தம்" ஆல்பத்தின் ஓவியர் இம்மானுவேல் லார்செனேட் ! ஐம்பதைக் கூட இன்னமும் தொட்டிருக்கா இவர் தான் இந்தச் சித்திர அதகளத்தின் கர்த்தா !
அப்புறம் "இரத்தப் படல" முன்பதிவு நம்பர் 350-ஐத் தொட்டுள்ளது ! தொடரும் நாட்களில் நமது இலக்கை எட்டிப் பிடிக்க அதிக சிரமமிராது என்ற நம்பிக்கையோடு PROJECT XIII-க்கு துவக்கம் கொடுத்து விட்டோம் ! Wish us luck guys !!!
And சென்னைப் புத்தக விழாவின் ஏற்பாடுகள் ஜரூராய் நடந்து வருகின்றன ! இம்முறையும் நம்பிக்கையோடு டபுள் ஸ்டால் கோரியுள்ளோம் - குட்டியான ஒற்றை ஸ்டாலுக்குள் நமது 200+ title-களை அடைத்து வைக்க வேண்டாமே என்ற ஆசையில் ! Fingers crossed !
1 st
ReplyDeleteஎதிர் பாரா பதிவு...
ReplyDeleteமகிழ்ச்சி சார்...:-)
ஒரு சூப்பர்ஸ்டாரின் திரைப்படத்தை பார்க்கும்பொழுதோ..இயக்குனர் ஹரி போன்றவர்களின் திரைப்படத்தை பார்க்கும் பொழுதோ கதையோ...அதன் முடிவையோ அறிந்தே இருந்தாலும் கூட படம் பரபர,விறுவிறுவென நகர்ந்து செல்வதுடன் என்னடா அதற்குள்ளாகவா இடைவேளை வந்துவிட்டது எனும் படி வேகத்தில் மிஞ்சி செல்லும் .அப்படி தான் இந்த மாத டெக்ஸ் வில்லரின் "ஒரு கணவாய் யுத்தம்". ஆரம்பித்திலியே மிக அதிரடியான ,அட்டகாசமான வில்லனின் என்டரி...பிறகு டெக்ஸ் ,கார்சன் உள் நுழைதல் ,பிறகு வழக்கமான அட்டகாச பஞ்ச்..அதிரடியான தாக்குதல்கள் என கதை ரெக்கை கட்டி கொண்டு பறந்தது. மேலும் பல இடங்களில் டெக்ஸின் அலட்டலான வசனங்களை இம்முறை கார்சனும் பின்பற்றுவதால் வேகம் இன்னும் அதிகம்.
ReplyDeleteசரியாக இரண்டரை மணி நேர திரைப்படத்தை போலவே இந்த சாகஸமும் நேரத்தை எடுத்து கொண்டது இடைவேளை இல்லாமலே...ஆனால் முடிந்தவுடன் என்ன அதற்குள் முடிந்து விட்டதா என்ற எண்ணமும் .....முன் பின் அட்டைபடங்களுக்கு நியாயம் செய்தவாறு அதே அதிரடிகள் .
ஒரே வார்த்தையில் சொல்வது எனில் " பட்டாசாக " பறக்கிறது ஒரு கணவாய் யுத்தம்.புத்தாண்டின் முதல் டெக்ஸ் ன் அதிரடி சரவெடி...
சூப்பர்...,சூப்பர்...சூப்பர்...
Paranitharan K : //ஒரு கணவாய் யுத்தம்.புத்தாண்டின் முதல் டெக்ஸ் ன் அதிரடி சரவெடி...//
Deleteஇன்னும் நிறையக் காத்துள்ளன தலீவரே !!
காத்து கொண்டே இருக்கிறேன் சார்.."தல" யின் தாண்டவத்திற்கு மாதா மாதமும்...:-)
Deleteஅதுவும் இம்முறை "க்ளைமேக்ஸ் " செம சார்...
DeleteHi
ReplyDeleteஉள்ளேன் ஐயா ..!
ReplyDelete///கடவுளரின் தேசம்" இதழினை முழுவதுமாய்ப் படிக்க உங்களுக்கு அவகாசம் கிட்டியதா என்று தெரியவில்லை ; ///
ReplyDeleteஆரம்பமே அட்டகாசம் ..!
கிறிஸின் அறிமுகமே அதிரிபுதிரியாக இருக்கிறது ..!
ஜோலனையும் மரக்காலனையும் கிட்நா பண்ணி வெச்சிகிட்டு, தோர்கலையும் ஜாலையும் மிரட்டி (ஆரிசியாவும் ஒட்டிக்கொள்வது சிறப்பு ;) பறக்கும் கப்பலில் அழைத்துச்செல்வது வரை வந்திருக்கிறேன். .!
இன்றுதான் தொடரவேண்டும்.., வான்ஹாமே நிச்சயம் அற்புத வாசிப்பானுபவத்தை தருவார் ..!
KiD ஆர்டின் KannaN : //கிறிஸின் அறிமுகமே அதிரிபுதிரியாக இருக்கிறது ..!//
Deleteஇந்தத் தொடரின் முழுமைக்கும் இந்த அழகான ராட்சசி ஒரு இன்றியமையா அங்கம் ! அட்டகாசமான வில்லியாகத் தொடர்கிறாள் !
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆசானே.. சனிக் கிழமையே சந்தா கட்டிட்டேன்..
ReplyDeleteமு.பாபு,கெங்கவல்லி,சேலம் மாவட்டம்..
உள்ளேன் ஐயா ..!
ReplyDeleteHappy New Year Sir _/|\_
.
ஹா ஹா! மேலே லக்கிலூக் குழுவினரின் சந்தாவுக்கான கேப்ஷன் - செம!
ReplyDeleteஇளம் கி.நா டெக்ஸ் அந்த அட்டைப்படத்தில் - செம ஸ்டைல்!
டெக்ஸுடன் லிலித் ரொமான்ஸ் - ம்ச்ர்ரப்ர்ஸ்க்!
ஓவியர் லாருசனேட் - இவரை எங்கயோ.... அட! நிஜங்களின் நிசப்தத்தில் வரும் - ப்ரோடெக்!
ஈரோடு விஜய் : //ஓவியர் லாருசனேட் - இவரை எங்கயோ.... அட! நிஜங்களின் நிசப்தத்தில் வரும் - ப்ரோடெக்! //
Deleteஹி...ஹி...!
நிஜங்களின் நிசப்தம்!
ReplyDeleteகருவாச்சி காவியம் போல வந்துள்ள கரு'மை' காவியம்!
முதல் 20 பக்க வாசிப்பிலேயே இந்த கதை மாமூல் ரகமல்ல என்று உறைக்க அசுவாரசியத்தை உதறிப்போட்டு சற்றே ஈடுபாட்டுடன் படிக்க ஆரம்பித்தேன்!
கதை நடக்கும் நாட்டை பற்றியோ,அதன் காலம் பற்றியோ,அது நடந்தேறும் அந்த பனிமண்டல மலை கிராமத்தவர்களின் இனம் பற்றியோ எந்த ஒரு தகவலையும் கதாசிரியர் நமக்கு நேரடியாக தெரிவிக்கவில்லை. எனினும் ஓரளவுக்கு, இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலகட்டத்தில் ஒரு ஸ்காண்டிநேவிய நாட்டின் ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்தில் நடப்பதாக நாமே யூகித்துக் கொள்ளலாம்!
கதையின் நாயகன் ப்ரோடெக் முதல் உலகப் போரில் அழிக்கப்பட்ட ஒரு கிராமத்திலிருந்து காய்கறி விற்கும் மூதாட்டியால் காப்பாற்றப்பட்டு,அவளது வளர்ப்பு மகனாக வளர்கிறான்.கிராமத்தில் நடக்கும் சம்பவங்களையும்,வன உயிரினங்கள் பற்றிய தகவல்களையும் அரசுக்கு அறிக்கையாக அனுப்பி அதன் மூலமாக கிடைக்கும் சொற்ப ஊதியத்தில் வாழும் அவனது வாழ்க்கையில் ஒரு நாள் இரவு இடியாக இறங்குகிறது ஒரு கொலை சம்பவம்!
கிராம மக்கள் அனைவரும் செய்த கொலை.கொலையுண்டவனோ ஆன்டெரர் (வந்தேறி) என அழைக்கப்படும் ஒரு அனாமதேய அறிவுஜீவி!
அந்த கொலை சம்பவத்தை ஒரு அறிக்கையாக தயாரிக்க கிராமவாசிகள் கும்பல் ப்ரோடெக்கை நிர்பந்தம் செய்ய வேறு வழியின்றி அதை ஏற்கும் அவனது அறிக்கை தயாரிப்பு பணியே இந்த கதையின் மையம்!
ஃபிலிப் கிளாடெல் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய நாவலை தனது தூரிகையால் உயிர் கொடுத்திருக்கிறார் ஓவியர் இம்மானுவேல் லார்செனெட்!
இந்த இருண்ட கதைக்கு அடர் கருப்பு மையை கொண்டு அதகளம் செய்திருக்கும் ஓவியர் இம்மானுவேல் அடிப்படையில் ஒரு கார்ட்டூனிஸ்ட்டாம்!
மனிதர்களின் இருண்ட மறுபக்கத்தை சித்தரிக்க ஓவியர் உச்சமாக மெனக்கெட்டிருக்கிறார்.ஒவ்வொரு ஃபிரேமும் நம்மை மிரள வைக்கிறது!
ரொம்பவும் சிரத்தையாக ப்ரோடெக்கால் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை இறுதியாக என்ன கதியை அடையும் என்பதை ப்ரோடெக்கை போலவே நாமும் கச்சிதமாக யூகித்து விடுகிறோம். காரணம், நாமுமே ஒரு வகையில் ப்ரோடெக் வகையறா தான். அனைத்துக்கும் ஒரு மௌன சாட்சியாக இருந்தோம்.இருக்கிறோம்.இருப்போம்!
"நிஜங்களின் நிசப்தம்"
குற்றவுணர்வு என்ற சுறுக்குக் கயிற்றை சதா காலமும் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டபடி வலம் வர, வரம் வாங்கி வந்தவர்களுக்கான ஒரு வரலாற்று ஆவணம்!!!
சூப்பர்!!
Deleteஅருமை
Deleteஇந்த விமர்சனமே கதையை படிக்க வேண்டிய ஆவலை தூண்டிவிட்டது.
Deletesaint satan : அழகான அலசல் சார்..! கதையின் களம் சார்ந்த யூகத்தில் மட்டுமே லேசான மாற்றுக் கருத்து ! இது அரங்கேறுவது ஜெர்மனியோடு எல்லையைப் பகிர்ந்திடும் வொஜெஸ் பிரெஞ்சு மலைப் பிராந்தியத்தில் என்பது எனது எண்ணம் !
Deleteஅரே சாத்தான் ஜி... நிம்பள் விமர்சனத்துக்கு நம்பள் பேஷ் பேஷ் சொல்றான்!
Delete///
Deleteமனிதர்களின் இருண்ட மறுபக்கத்தை சித்தரிக்க ஓவியர் உச்சமாக மெனக்கெட்டிருக்கிறார்.ஒவ்வொரு ஃபிரேமும் நம்மை மிரள வைக்கிறது!///
+1
சாத்தான் அவர்களே .. நல்ல வேதம் (விமர்சனம்) ஓதியிருக்கிறீர் ..!;
சாத் ஜி செம,செம.
Deleteசங்கத்தில் ஏதோ கசா -முசா என்று வதந்தி உலவுறான் !
Deleteதலீவர் லேட்டஸ்ட் கி-நா-வை படித்து விட்டு பேதி மாத்திரை ஒரு கிலோ வாங்கிய செலவில் மிரண்டு போய் செயலாளர் ஜார்கண்ட் பக்கமாய் ஜாகையை மாற்றியதாய் கேள்வி !
பொருளாளர் வேறே கண்ணில் படறார் இல்லை !! அர்ரே பாய் !!
பச்சக் குழந்தை சார் எங்க தலீவர்... இன்னிக்கு வெளியாகும் கி.நா'வை இன்னும் இருபது வருசம் கழிச்சுத்தான் புரிஞ்சுக்குவார்!
Deleteதலீவர் வளரட்டுமேன்னு சங்கத்துச் செலவில் காம்ப்ளான் வாங்கி வாங்கிக் கொடுத்துப் பார்த்தோம்... காம்ப்ளான் கம்பெனி வளர்ந்ததுதான் மிச்சம்!
எங்கே வளர்ந்து பெரிசாகிட்டா காம்ப்ளான் கிடைக்காமப் போயிடுமோன்றதுக்காகவே இன்னும் வளராம இருக்காருன்னா பார்த்துக்கோங்களேன்!
Deleteஅந்தமட்டுக்கு நல்லது என்பேன்....!! ஒற்றை வேப்பிலை அவதாரம் வேறு காத்திருக்கும் போது மனுஷன் வளராது இருப்பதே தேவலாமே !!
Deleteஙே...:-(
Delete///அந்தமட்டுக்கு நல்லது என்பேன்....!! ஒற்றை வேப்பிலை அவதாரம் வேறு காத்திருக்கும் போது மனுஷன் வளராது இருப்பதே தேவலாமே !!///
Delete:))))))))
10வது
ReplyDelete11
ReplyDeleteSpdersuper
ReplyDeleteவந்தாச்சி.
ReplyDeleteஇந்தமாத இதழ்களில் எல்லாமே சூப்பர் ஒன்றுக்கொன்று எதுவும் சளைத்ததில்லை,முதலிடத்திற்கு தோர்கலா இல்லை நிஜங்களின் நிசப்தமா? ஒரே குழப்பமா கீது.
ReplyDeleteஆனால் ஒன்று மட்டும் நிஜம் நி.நிசப்தம் வேற லெவல் ஜோனர்.
Arivarasu @ Ravi //ஒன்று மட்டும் நிஜம் நி.நிசப்தம் வேற லெவல் ஜோனர்.//
Deleteநம் பயணத்தின் இன்னொரு அத்தியாயம் சார் !
சேற்றுக்குள் சடுகுடு:
ReplyDeleteசிப்பாய் ஜானை (உண்மையில் ஒரு பெண்) கேப்டனிடம் அறிமுகபடுத்தும் இடத்தில் உள்ள ஒரு வசனம் போதும் இந்த கதை தொடரின் மைய கருவை பற்றி தெரிந்து கொள்ள;
“ஓவ்ஒருத்தனோட பேரையும், பூர்விகத்தையும் தெரிசுகிட்டு நான் என்னத்தைக் கிழிக்கப் போகிறேன்? வந்தோமா.. சண்டையைப் போட்டோமா.. மண்டையைப் போட்டோமான்னு இருக்கிற பசங்களைத்தான் ரொம்பப் பிடிக்கும்”
ஜார்ச்ஜ் (கவுண்டமணி) மற்றும் ஸ்கூபி (செந்தில்) ரோந்து செல்வதில் ஆரம்பிக்கும் கதை, வழியில் தற்செயலாக ஒரு பெண்ணை பார்க்க அவள் சொல்லும் கதையை நம்பி ஜார்ச்ஜ் அவளை இராணுவ முகாமிற்கு அழைத்து சென்று அவள் முலம் நடக்கும் விபரீதம்களை நகைச்சுவையுடன் சொல்வதுதான் கதை.
இந்த முறை நகைச்சுவைக்கு வாய்ப்புகள் அதிகம், அதனை நமது எடிட்டர் நன்றாக கையாண்டு உள்ளார். பல இடம்களில் வாய்விட்டு சிரித்தேன்!
அதுவும் சேற்றுக்குள் நடக்கும் சண்டை, யார் யாரை அடிகிறார்கள் என தெரியாமல் சண்டை போடுவது.
ஜானை தனது முதல் தாக்குதல் என்பதால் கலங்கி விட்டான் என்பதை சரி செய்ய ஒரு வழி இருப்பதாக சொல்லும் கேப்டன், “இன்னொரு தபா தாக்குதலை ஆரம்பிச்சிட்டா போச்சு” என மீண்டும் போருக்கு செல்வது!
ஸ்கூபி போரில் அடிபடாமல் தப்பிக்க பயன்படுத்தும் வழி முறை, அதனை ராணுவத்தில் உள்ள பிறருக்கும் சொல்லி கொடுப்பது
ஜானை பார்க்க நாகரிகம் கருதி ஜார்ச்ஜ் உடம்பில் உள்ள சேற்றை கழுவி செல்லும் போது ஸ்கூபி கல் எறிந்து மீண்டும் ஜார்ச் உடம்பில் சேற்றை வாரி இறைப்பது (பார்க்க பக்கம் 19 கடைசி இரண்டு படங்கள்)
பல இடங்களில் ஜார்ச்ஜ் செய்யும் செயல்கள் பிடிக்காமல் ஸ்கூபி நமது ஸ்மர்ப் வசனத்தை பேசுவது “சே எனக்கு செத்து போன ஹீரோவே பிடிக்காது”
மிகவும் ரசித்தது, கேப்டனுக்கு தொண்டை கட்டிவிடதால் பேச முடியாத இடத்தில் வசனத்திற்கு பதில் வெறும் கோடு மட்டும் போட்டு உள்ள இடத்தில், சிப்பாய்கள் அவர் என்ன பேசுகிறார் என கண்டுபிடிக்கும் இடத்தில் பேசும் வசனங்கள்.
மொத்தத்தில் இராணுவத்தில் நடக்கும் சீரியசான விசயத்தை கவுண்டமணி செந்தில் கொண்டு நகைச்சுவையுடன் சொல்லி சிரிக்க வைத்துவிட்டார்கள்.
நிறை: கண்களில் ஒற்றி கொள்ளலாம் போல் உள்ள அச்சுதரம்.
தோர்கலும், கிராபிக் நாவலும் முதல் சுற்றில் முன்னணியில் நிற்க, இந்த ப்ளூகோட் ஆசாமிகளுக்கு டெபாசிட்டாவது மிஞ்சுமா ? என்ற கவலை லேசாக எட்டிப் பார்த்தது ! உங்களின் வி-ரி-வா-ன விமர்சனம் அந்தக் குறையைப் போக்கிவிட்டது !
Deleteகிராபிக் நாவல் TEX-ன் - என்னாது மீண்டுமா.. அராஜகம் அன்லிமிட் கதையே நேற்று தான் படித்து முடித்தேன்... அதுவே இன்னும் ஜீரணம் ஆகவில்லை... நான் வரவில்லை சாமி இந்த ஆட்டத்திற்கு
ReplyDelete///அதுவே இன்னும் ஜீரணம் ஆகவில்லை... ///
Deleteஆர்ட் பேப்பர் கொஞ்சம் மெதுவாத்தான் ஜீரணமாகும்! சிலபல ஏப்பம்கள் விட்டீர்களானால் வயிற்றின் உப்புசம்கள் குறையும்! :P
(ஹிஹி! எல்லாம் அனுபவம்கள் தான்!) ;)
குருநாயரே :)))))
DeletePresent.
ReplyDeleteரெண்டு நாளாக தோர்கலோடு க்வா பிரதேசத்தைச் சுற்றிய பிரமிப்பு மறையாமல் உள்ளது.
ReplyDeleteசிக்கலான விதிகளைக் கூட எளிமையாக புரிய வைத்து, அதை பிரம்மாண்டமான ஆடுகளத்தில் பரிமாறுவது திரு. வான் ஹாமே அவர்களுக்கு கை வந்த கலை என நிரூபித்து விட்டார்.
அந்த வகையில் அவருக்கு மிகப் பெரிய சல்யூட்.
ஆரம்ப சாகஸத்தில் தடுமாறினாலும், விடாப்பிடியாக நம்மை சிக்க வைத்து, பின் அந்த மாயாஜால விநோத உலகை தரிசிக்க வைத்து, மெய்மறக்கச் செய்த ஆசிரியருக்கு ஏகப்பட்ட சல்யூட்.
நமது (காமிக்ஸ்) வாசிப்பின் எல்லைகள் விரிவடைவது எப்போதுமே மகிழ்வுக்குரிய விஷயம் சார் ! Fantasy என்ற சாலையின் பக்கமாகவும் நமது கலம் இனி ஒதுங்கத் தயங்காது என்ற ஊர்ஜிதம் - மண்டைக்குள் இன்னமும் பற்பல புது பல்புகளை எரியச் செய்கிறது !
Deleteகடலளவுத் தொடர்கள் காத்துள்ளன இந்த ஜானரில்....பொறுமையாய் பயணிப்போம் !
ஏலே ஸ்டீலு / பழனிவேல் மக்கா,
ReplyDelete"இரத்தப் படல" முன்பதிவு நம்பர் 350-ஐத் தொட்டுள்ளது! இப்ப சந்தொசாமலே? அடுத்த முறை ஈரோடு வரும்போது என்ன நல்லா "கவனிங்கலே" :-)
புத்தாண்டில் புது சாதனைகளை படைக்க முத்துக்கும் சிங்கத்துக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete70ஆம் ஆண்டிலும் பட்டைய கிளப்பும் தலக்கும் சிறப்பு வாழ்த்துகள்.
நன்றிகள் சார் !!
Deleteஅன்புள்ள விஜயன் சார் அவர்களுக்கு, தோர்கலின் கதையை மட்டுமே நான் இதுவரை படித்துள்ளேன். பிரமாதமாக இருந்தது. இப்படிப்பட்ட ஒரு கதையை படித்து பரவசமடைய, நான் போன பிறவியில் ஏதோ ஒரு புண்ணியம் செய்திருக்க வேண்டும். இப்போது 'டெக்ஸ்'சின் கதையை கையில் எடுத்திருக்கிறேன். தோர்கல் கதையை முடித்துவிட்டு டெக்ஸ் வில்லர் புத்தகத்தின் முதல் பக்கத்தை பார்த்ததும், நூறு ஆண்டுகளாக மாயலோகமெல்லாம் சுற்றி பார்த்துவிட்டு சொந்த ஊருக்குள் காலடி வைத்தது போல, தானாக மனதுக்கு ஒரு உற்சாகம் கிடைத்தது. 'நிஜங்களின் நிசப்தம்' புத்தகம் இன்னும் கையில் எடுக்கவில்லை. வேலை நேரங்களில் படித்தால் அப்படிப்பட்ட கதையில் முழுமையாக ஈடுபாடு கிடைக்காது. அடுத்த வாரம் ஒருநாள் எனக்கு லீவு உண்டு. அப்போதுதான் படிக்க வேண்டும்.
ReplyDeleteஇன்னொரு விஷயம் சார்,
இம்மாத கூரியரில் எனக்கு 'நிஜங்களின் நிசப்தம்' புத்தகம் இரண்டு வந்திருந்தது. ஆனால், அந்த இரண்டாவது புத்தகத்தை திருப்பி உங்களுக்கு அனுப்ப முடியாத நிலையில் இப்போது நான் இருக்கிறேன். வரும் திங்கட்கிழமைக்கு மேல் எனக்கு ஒருநாள் விடுமுறை கொடுப்பதாக எனது மேனேஜர் அறிவித்து இருக்கிறார். அந்த விடுமுறை நாளில் அந்த புத்தகத்தை உங்கள் அலுவலகத்திற்கு கூரியர் செய்துவிடுகிறேன். மிக்க நன்றி!
என் புத்தகத்தை உங்க டப்பால வச்சுட்டாங்க போல..😭😭😭
Deleteவணக்கம் ஆசிரியரே &நண்பர்களே.
ReplyDeleteநிஜங்களின் நிசப்தம் :
ReplyDeleteஎப்படி ஆரம்பிப்பது, எதைச் சொல்வது, எதை விடுவது என்றே தெரியாத மனநிலை .... எத்தனை எழுதினாலும் இக்கதை ஏற்படுத்திய தாக்கத்தை முழுதாக வெளிப்படுத்திட முடியுமாவென தெரியவில்லை. ..!
முதல் பாராட்டுகள் இந்த Landscape design க்கு .. ஒரிஜினல் சாதரணமாக இருந்திருக்கக்கூடும்., அதை வித்தியாசப்படுத்தி கவனத்தை ஈர்க்கும் வகையில் கொடுத்திருப்பது தூள் ஐடியா..!
"பனிபொழிவு அதிகமாக இருந்த பின்னிரவு நேரம் ... மங்கலான நிலவொளி ...ஒதுக்குப்புறத்திலிருக்கும் என்னுடைய வீட்டிலிருந்து தொலைவில் அமைதியாக தோற்றமளித்த கிராமத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன் ..!
அங்கே நிலவியிருந்த அசாதாரண சூழல் என்னை திகைப்புள்ளாக்கியது ..ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்குமென யூகிக்க முடிந்தது .. ஒவ்வொரு முகமும் என்னையும் என் வருகையையும் ரசிக்கவில்லை என்பது குரோதம் நிறைந்த பார்வைகளில் தெரிந்துகொள்ள முடிந்தது ..! அவர்கள் இடைக்கச்சையில் சொருகியிருந்த கத்திகளும் என்னை மிரட்டும் தொணியில் இருப்பதாகவே பட்டது.. "
இப்படி காட்சிகளின் சூழ்நிலை விளக்கமோ, கதாப்பாத்திரங்களின் தன்னிலை விளக்கமோ எதுவுமே எழுத்துகளில் கொடுக்கப்படாமல் சித்திரங்களின் வாயிலாக விவரிக்கட்டுள்ளது அற்புதம்.! நமக்கு முற்றிலும் மாறுபட்ட பாணி ..அதேசமயம் விரும்பத்தக்க வரவேற்க்கத்தக்க பாணியும் கூட..!
இன்னும் பல இடங்களில் வரிகளில் ஒரு சம்பவமும் சித்திரங்களில் வேறு சம்பவமும் ஒரே சமயத்தில் சொல்லப்பட்டு இருப்பது சுவாரஸ்யமான யுக்தியாக தோன்றுகிறது .. உதாரணத்திற்கு பனிப்படலம் மூடிய ஏரியில் பனியை உடைத்து ப்ரோடெக் மீன் பிடிக்கும் சம்பவம் சித்திரங்கள் வாயிலாகவும் அதே கட்டங்களில் அந்த ஊருக்கு புதியவனான ஆண்டெரர் பற்றிய விசயங்களை எழுத்துகள் மூலமாகவும் சொல்லியிருப்பது..!
இந்த கதைக்கு வசனங்களும், மொழிபெயர்ப்பும் மிகவும் பாந்தமாக பொருந்தி வந்திருப்பது கூடுதல் சிறப்பு .. பல இடங்களில் வாவ் சொல்லத் தோன்றியது .. உதாரணமாக மேயர் ஆர்ஷ்யர் தன்னுடைய பன்றி மந்தையின் வாழ்க்கைமுறையை சொல்லி மறைமுகமாக ப்ரோடெக்குக்கு தங்களுடைய வாழ்வியலின் கட்டாயத்தை வெளிப்படுத்தி அவனை மிரட்டும் இடத்தை சொல்லலாம். .மேலும் ப்ரொடெக் தன்னுடைய குழந்தையிடம் பேசும் வசனம் .. அப்புறம் கமாண்டர் சொல்லும் பட்டாம்பூச்சி கதை .. ..(இன்றைய சமுதாயத்தின் நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது இந்த பட்டாம்பூச்சி கதை .. கதாசிரியருக்கு சபாஷ்) .. மேயருக்கும் ஆண்டெரருக்கும் இடையே நடக்கும் உரையாடல் ... இதைப்போல இன்னும் நிறைய இடங்கள்., எல்லாவற்றையும் சொல்ல வேண்டுமெனில் முழுக்கதையையும் இங்கே எழுதவேண்டியதாகிவிடும்.
ப்ரோடெக்கின் வாயிலாக அதாவது அவனுடைய எண்ணங்களாக சொல்லப்பட்டு இருக்கும் இக்கதையில் அவனுடைய கனவில் வரும் அந்த திறந்தவெளி சிறைக்காவலர்கள் மற்றும் கிராமத்தை ஆக்கிரமித்த சிப்பாய்களின் முகம் அகோரமாக மனிதமுகம் போலல்லாமல் கழுகினைப் போன்று வரையப்பட்டு இருக்கும். (பின்னனியில் பிணந்தின்னி கழுகளும் இடம்பெற்று இருக்கும்) ..அதாவது அக்கொடூரர்களுக்கு மனிதகுணங்களே இல்லையென ப்ரோடெக் நினைத்திருக்கக்கூடும் எனவே அவனுடைய கனவிலும் எண்ணங்களிலும் அவர்கள் அகோரமாக சோம்பிக்களைப் போல உருவகப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ..பாராட்டத்தக்க அம்சங்களில் இதுவும் ஒன்று.!
ப்ரோடெக்கின் மனைவி எமேலியா .. ..யாருடனும் பேசாமல் எப்போதும் ஒரே பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் அந்நிலைக்கான காரணம் தெரியவரும்போது கிராமத்தினர் மேல் ஆத்திரம் வரும். . ஆனால் ஓரிடத்தில் அவர்கள் தங்கள் இயலாமையையும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தையும் விவரிக்கும்போது பரிதாபமே மிஞ்சுகிறது ..!
ஊர்மக்களுக்கு பாவன்னிப்பு வழங்கும் பாதிரியாரின் மனநிலையும், ப்ரோடொக்கின் நண்பன் டயோடேமின் குற்ற உணர்ச்சிகளும், விடுதி காப்பாளரின் மனக்குமுறலும் அக்கிராமத்தினரின் அவல வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றன!
--தொடர்கிறது --
அடுத்து ஆண்டெரர் .. ..புதிதாக ஊருக்குள் நுழையும் ஆசாமி ..தான் யாரென்றும் .. வருகையின் நோக்கம் என்னவென்றும் தெரிவிக்காமலும்...பெயரைக்கூட சொல்லாமலும் அடுத்தடுத்து செய்யும் காரியங்களால் ஊராரின் கோவத்துக்கு ஆளாகி மடிந்தும் போகிறான் ..! போதாக்குறைக்கு, உர்ராங் உட்டான்களைப்போல முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு திரியும் ஊராருக்கு மத்தியில், எப்போதும் புன்னகை தவழும் முகத்துடனும், குதிரைகளிடம் கூட நட்பு பாராட்டி பாட்டுப்பாடிக்கொண்டே மகிழ்ச்சியாக இருக்கும் ஆண்டெரரைப் பார்த்து கடுப்பாகியிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது..! அதனாலேயே முதலில் அவனுடைய குதிரைகளை கொன்று வன்மத்தை காட்டுகிறார்கள்.!
Deleteஎன்னுடைய கணிப்புப்படி ஆண்டெரர் அந்த சிப்பாய்களுக்கு இரையாக்கப்பட்ட இளம்பெண்களில் ஒருத்தியின் உறவினனாக இருக்கலாம்.! அல்லது அந்த சிப்பாய்கூட்டத்தில் ஒருவனாக கூட இருக்கலாம். .
ஏனெனில் ஊராருக்கு ஆண்டெரார் காட்டும் ஓவியக் கண்காட்சியில் குற்றவாளிகளுடன் ஒரு இளம்பெண்ணின் ஓவியமும் இடம்பெற்று இருக்கும்..பழைய நிகழ்வுகள் சிலதும் இருக்கும். . அதன் பின்னரே ஆண்டெரர் ஊராரின் கடும்கோபத்திற்கு ஆளாகிறான். . இவனை விட்டுவைப்பது ஆபத்து என்றே அவனை முடித்துவிடுகிறார்கள். .!
இக்கதையை படித்து முடிக்க ஆறுமணி நேரம் ஆயிற்று எனக்கு ..!
இக்கதை ஏற்ப்படுத்திய உணர்வுகளில் பத்து சதவீதத்தைக்கூட விமர்சனமாக எழுதமுடியவில்லை என்பதே நிஜம் ..!
பொதுவாக யுத்தம் என்றாலே வெற்றி தோல்வி மட்டுமே பேசப்படும்.! வியட்நாம் போரையே நிறுத்த முக்கிய காரணமாக இருந்தது ஒரு பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம்தான் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.! அதைப்போல போரால் ஏழைஎளிய மக்களுக்கு ஏற்படும் இன்னல்களும் வாழ்க்கைத்ததர மாற்றங்களும் பெரும்பாலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.. அப்படியொரு கையாலாகாத மக்களின் கையறு நிலையை அருமையானதொரு மாறுட்டதொரு உணர்வுக்குவியலோடு சொல்லியிருப்பதே நிஜங்களின் நிசப்தம் ..!
நிஜங்களின் நிசப்தம் - இயலாமைகளின் மௌணம்.
ரேட்டிங் 10 / 10
நச் விமர்சனம்,அசத்திட்டிங்க.
Delete@ KOK
Deleteஅருமையான விமர்சனம்! செம்ம!!
///இக்கதை ஏற்ப்படுத்திய உணர்வுகளில் பத்து சதவீதத்தைக்கூட விமர்சனமாக எழுதமுடியவில்லை என்பதே நிஜம் ..! ///
Deleteஎழுதியிருக்கும் அந்த 10 சதவீதமேகூட மிக அழகாக வந்திருக்கிறது! ப்ரோடெக்கின் அறிக்கையைப் போல!
அட்டகாசமாக எழுதியுள்ளீர்கள்.
Deleteவாழ்த்துக்கள்.
KiD ஆர்டின் KannaN : சிரத்தையானதொரு அலசல் !!
Deleteவண்ணத்துப் பூச்சிக் கூட்டத்தின் உயர்பிழைக்கும் அந்த யுக்தியினை கதையோட்டத்தோடு இணைந்திருந்த கதாசிரியரின் லாவகம், மொழிபெயர்ப்பின் போதே 'அடடே !!" போடச் செய்தது ! ஆனால் ஒரு மெகா நீள நெடும் கதை எனும் போது, இது போன்ற சிற்சிறு விஷயங்கள் கவனிக்கப்படுமா ? என்ற மெல்லிய சந்தேகமும் என்னுள் இருந்தது ! So கதைக்கு நேரடித் தொடர்பிலா பகுதிகளில் ஜாஸ்தி மெனக்கெடல் இன்றி, ஒப்பேற்றி விடும் சபலம் லேசாய் எட்டிப் பார்க்கவே செய்தது - நேரமின்மை காரணமாய் ! ஆனால் இந்த ஆல்பத்தின் ஒவ்வொரு இண்டும் ,இடுக்கும் நிச்சயமாய் அலசப்படும் என்றொரு உள்ளுணர்வு அப்போதே ஒலிக்க - பாரபட்சமின்றி முழு நாவலுக்கும் ஒரே ரகக் கவனத்தைத் தந்திடத் தீர்மானித்தேன் ! அன்றைக்கு சோம்பலை எதிர்க்க முடிந்தமைக்கு இன்று சந்தோஷப்படுகிறேன் !
// எனவே அவனுடைய கனவிலும் எண்ணங்களிலும் அவர்கள் அகோரமாக சோம்பிக்களைப் போல உருவகப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். //
Deleteஇல்லை கண்ணன் சார் !!!
சோம்பிகள் குருதி வழிந்தோடும் நிஜமான முகம் கொண்டவர்கள்.ஹாலிவுட் படங்கள் நாஜிகளை சோம்பிகளாக மட்டுமே காட்டின.ஆனால் இந்த கதையில் ஓவியர் படைவீரர்களை ( ஐ மீன் நாஜிகளை ! ) அசல் பிசாசுகளாகவே வரைந்திருக்கிறார்.அவர்களை மட்டுமல்ல,அவர்கள் வளர்க்கும் நாய்களை கூட பிசாசு உருவங்களாகவே ஓவியர் வரைந்திருப்பது நாஜிகள் மீதான ஓவியரின் வெறுப்பையும்,துவேசத்தையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.இந்த ஒரு காரணத்திற்காகவே ஓவியர் இம்மானுவேல் மீது மரியாதை அதிகரிக்கிறது !!!
///.அவர்களை மட்டுமல்ல,அவர்கள் வளர்க்கும் நாய்களை கூட பிசாசு உருவங்களாகவே ஓவியர் வரைந்திருப்பது நாஜிகள் மீதான ஓவியரின் வெறுப்பையும்,துவேசத்தையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது ///
Deleteஉண்மைதான் சாத்தான் அவர்களே ..!!
ஆனாக்கா ..
சாத்தான் பிசாசுக்கு நெருங்குன சொந்தம்னு சொல்வாங்களே ..
கீ கீ கீ!!!
///பாரபட்சமின்றி முழு நாவலுக்கும் ஒரே ரகக் கவனத்தைத் தந்திடத் தீர்மானித்தேன் ! அன்றைக்கு சோம்பலை எதிர்க்க முடிந்தமைக்கு இன்று சந்தோஷப்படுகிறேன் !///
Deleteஉங்களுடைய அந்த ஈடுபாட்டால்தான் இன்று நாங்களும் சந்தோசப்படுகிறோம் சார்.!!
சிலரது முகங்களில் தென்படும் அந்தச் சலனமிலா
ReplyDeleteஒளியினை நாம் பல நேரங்களில் திமிரின்
வெளிப்பாடாகவோ, பரிகாசத்தின் அடையாளமாகவோ
பார்த்திடுவது வாடிக்கை தான்!
அந்தத் தவறான புரிதல்கள்
தலைக்குள் உஷ்ணத்தை உண்டாக்க,
மோசமான செயல்கள் பலனாகிப் போகின்றன!
நல்லவர்களும், அமைதியை நாடுவோரும்
தியாகிகளாய் உருமாறி
ஆறடிப் பள்ளங்களில் துயில்வது
அதன் விளைவாகத் தானோ?
- நிஜங்களின் நிசப்தம் - பக் : 76
நி.நி யில் வார்த்தைகளும் நச்,ஓவியங்களும் நச்.
Deleteஇந்த மாத இதழ்கள் ரேட்டிங்,
ReplyDelete1.நிஜங்களின் நிசப்தம்-10/10,
2.கடவுளரின் தேசம்(தோர்கல்)-10/10,
3.ஒரு கணவாய் யுத்தம்-9/10
4.சேற்றுக்குள் சடுகுடு-9/10
5.விசித்திர சவால்-8/10
அதுக்குள்ளவா?!! செம ஸ்பீடுங்க நீங்க!
Deleteஎதாவது டிப்ஸ் கொடுங்க எனக்கு வேகமா படிக்க.எந்திரன் ரஜினி போல் அல்லவா படித்திருக்கிறீர்.
Deleteக்கும்...நீங்க வேற ...இந்த மாசம் அவர் கொஞ்சம் லேட்டுன்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்..:-(
Deleteதல என்றால் எங்கள் தலைக்கனம் பிடித்த ஸ்பைடர் மட்டுமே என்பதை தெளிவு படுத்த விரும்புகிறோம்..
ReplyDeletesaran brte : வானவில்லின் இரு முனைகள் !!
Deleteஹி...ஹி...நீங்களே சொல்லுங்க சார் பழைய லயன் காமிக்ஸ்ல் கொலைப்படை என்ன விலைக்கு போகிறது..தலைவாங்கி குரங்கு பழைய புக் என்ன விலைக்கு போகுதுனு..எங்க ஸ்பைடர..5000₹ கொடுத்து வாங்க தமிழ் நாடே தவமிருக்கிறது...ஆனா தலைவாங்கி பழைய புக் 1000 தாண்டல இப்ப சொல்லுங்க ஆசிரியர் மற்றும் நண்பர்களே தன்னிகரில்லா தல யாருனு....
Deleteஎன்ன சார் பன்ன இந்த ஸ்பைடர் கதைய படிச்சாவே நாமலும் தலைகணத்தோடதான் எழுத வேண்டி இருக்கு ரொம்ப..ரொம்ப கெட்ட பையன் சார் இந்த ஸ்பைடர்...
இந்த வருடம் நான் சந்தாவில் முதன்முறையாக இணைந்துள்ளேன்.முன்பணம் செலுத்தி முதல்முறை சந்தாவில் இணைய காரணமாக இருந்த அனாமதேய நண்பருக்கு மீண்டும் என் நன்றிகள்.
ReplyDeleteஇரு நாட்களிளேயே அனைத்து கதைகளையும் படித்து கருத்து எழுதும் நண்பர்களே,அடேயப்பா எண்ண்ண்ணாணா வேகம்.
1016 போல் தோர்கலுடன் தொடங்குவது எனக்கு மிக்க மகிழ்ச்சி ஏடி,ஸார்.
@ JK
Deleteமுதன் முறையாக சந்தாவில் இணைந்திருப்பதற்கு வாழ்த்துகளும், மகிழ்ச்சிகளும்!
Jaya Kumar : சூப்பர் சார் !!
Delete///இந்த வருடம் நான் சந்தாவில் முதன்முறையாக இணைந்துள்ளேன்.முன்பணம் செலுத்தி முதல்முறை சந்தாவில் இணைய காரணமாக இருந்த அனாமதேய நண்பருக்கு மீண்டும் என் நன்றிகள்.///
Delete"சந்தாவில் ஐக்கியமான கந்தா வே
வருக வருக "
(நாலேநாலு பக்கம் ஸ்பைடர் கதையை புரட்டினேனா .. அதான் லாட் ஆஃப் கன்ப்யூசஸ்) :-)
வாழ்த்துகள் நண்பரே .....காமிக்ஸ் உலகில் ....மூல்கி முத்தெடுங்கள்....
Delete2016 போல்-
ReplyDeleteநிஜங்களின் நிசப்தம்,
ReplyDeleteஇந்த கி.நா வை படித்து முடித்தவுடன் எனக்குள் தோன்றியது இதுதான்,நான் கி.நா வுக்கெல்லாம் ஹெட்மாஸ்டராக்கும்.
இதில் வரும் கதைப்பாத்திரங்கள் அனைத்தும் நமது அன்றாட வாழ்வில் ஏதோ ஒரு வகையில் நாம் பார்த்தவையாகவோ,கேள்விப்பட்டவையாகவோ,அல்லது நம்மை பாதித்தவையாகவோ இருப்பதுதான் வியப்பு,
பக்கம் தான் இச்சம்பவத்தை நமக்குள் கடத்தும் மைய கடத்தியாக செயல்படுகிறான்,இறந்த காலச் சம்பவங்கள் அவன் படிமமாக படிந்து தீக்கனவுகளாக விரிவதை காண முடிகிறது,விரக்தி மனோபாவம்,கையறு நிலை,மென் சோகம் படிந்த நிலையில் உலாவி வருவது நம்மையும் உலுக்கி பார்க்கிறது,
ஆன்டெரர் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிர் மனிதன்,ஆளுமைத் திறனும்,பிறரை ஈர்க்கும் திறனும் எளிதில் அவனுக்கு வசப்படுகிறது,அதுவே அவனை பிரச்னைக்கும் உள்ளாக்குகிறது,
எமேலியாவும் நம்முள் தாக்கத்தை ஏற்படுத்துகிறாள்,கோப்லர் போன்ற ஒரு பாத்திரம் தனது வாழ்வே பெரிது என்ற சுயநலப்போக்கை கொண்ட ஒருவனின் மனநலப் போக்கை பிரதிபலிக்கிறது.
பக்கம் - 34 சரியான வார்த்தைகள் காந்தத்தை தேடித் பறக்கும் இரும்பு துகள்களைப் போல் எப்போதாவதுதான் எனக்குள் உதயமாவதுண்டு.
பக்கம்-39 வாழ்க்கைப் பாதையை நிர்ணயப்பதில் சின்ன சின்ன விசயங்களுக்குமே பங்குண்டு.
பக்கம்-115 நான் முன்னேறிக் கொண்டிருக்கிறேன் என்ற திருப்தி விலை மதிப்பற்றது.
பக்கம்-171 ஒரு வறண்ட ஜீவனிலா பூமியின் திருப்பத்தில் சடாரென நிலப்பரப்பே மாற்றம் கண்டு அழகானதொரு பள்ளத்தாக்கு கண் முன்னே அற்புதக் காட்சியாய் விரிவது போல அவனுக்குள் பதுங்கிக் கிடந்த நிஜ ரூபத்தை ஓரிரு கணங்களுக்கு பார்க்க முடிந்தது எனக்கு.
-இவை எல்லாம் என் மனதை கவர்ந்த வசனங்கள்,மொழிபெயர்ப்புக்காக ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிங்க சார்,
ஓவிய பாணியில்,
பக்கம்-182 குதிரையிடம் நேசபாவத்தை வெளிபடுத்தும் கடைசி பேனல்,
பக்கம்-191 பாதைகளும் மனிதர்களைப் போலத்தான் ஒருநாள் செத்துவிடும்,
பக்கம்-248 ரெக்ஸ் ப்ளேம்பர் என்ற பட்டாம்பூச்சி இனத்தை பற்றிய நுட்பமான விளக்கவுரை.அதை தனக்கு சாதகமாக இருக்க விளக்கம் கூறும் கேப்டன்,
பக்கம்-298 & 299 ஓவியங்களை கிராம மக்கள் அடித்து நொறுக்கும் காட்சி,
பக்கம்-320 முதல் பேனலில் ப்ரோடெக் தனது குடும்பத்துடன் இடம் பெயரும் காட்சி,அடுத்த பேனலில் ஆகாயத்தில் பறவைகள் வலசை (இடம் பெயரும்) போகும் காட்சி.
-இவையெல்லாம் என் மனதைக் கொள்ளையடித்தன,ஒரு பக்கம் ஓவியத்திலும் ஜாலம்.இன்னொரு பக்கம் வார்த்தைகளில் ஜாலம்,
இப்படைப்பின் ஓவியர் மனு லார்செனடுக்கு எனது பணிவான வணக்கங்கள்.
சொல்ல நினைத்ததில் சிறிதளவு மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது என்பதையும் சொல்லி கொள்கிறேன்.
நீங்கள் ஒவ்வொருவரும் எழுப்பி வரும் LIC கட்டிடங்களை பார்த்தால் - எனது மெனக்கெடல்கள் இன்னமும் கூட ஜாஸ்தியாக இருந்திருக்கலாமோ ? என்ற எண்ணமும் தோன்றுகிறது சார் !
Deleteகண்ணில் பார்த்திரா ஒரு காலத்தின், வலிச் சுவடுகளைக் கூட நம்மால் வாஞ்சையோடு (வாசிப்பில்) ஏற்றுக் கொள்ள முடிகிறதென்பது ஒரு மெகா விஷயம் !!
ஸ்பைடர் பாக்கெட் சைசில் எதிர்பாரா சர்ப்ரைஸ். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது மறுபதிப்புகளை இப்படியே தொடருங்கள் எடிட்டர் ஸார்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇம்மாத கிராபிக் நாவலுக்கு அந்த இதழின் பக்கத்தை விட அதிகமாக ஒவ்வொருவரும் விரிவாக விமர்சனம் எழுதுவதை பார்க்கும் பொழுது இவ்வளவு பெரிய ரசனையாளர்களின் நண்பராகவும் இருக்கிறோமே என்று பெருமையாகவும் உள்ளது ...கொஞ்சம் பயந்தும் வருது...:-)
ReplyDeleteதலைவரே ஹா,ஹா,ஹா.
Deleteஇந்த கி.நா வை பொறுமையுடன் வாசித்தல் மிக அவசியம்,நம் கண்முன்னே விரிந்து கிடக்கும் வானவில்லை தரிசிக்காமல் வேகமாக கடந்து சென்றோமானால் அதன் உள்ளார்ந்த ஆழம் புரியாது.தரிசனத்திற்கு பொறுமை அவசியம்.
ReplyDeleteசூப்பரா, அழகா சொன்னீங்க ரவி அவர்களே!
Deleteஇந்த கி.நா எனும் வைரக் குவியலில் அவ்வப்போது நி.நி போன்ற மிகச்சிறந்த வைரத்தை எடுத்து எங்களுக்கு தாருங்கள் சார்.
ReplyDeleteArivarasu @ Ravi : எதற்கும் தலீவரிடம் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்வோமா சார் ?
Delete'ஜம்போ காமிக்ஸ்' போடும்போது தலீவரிடம் கேட்டுக்கலாம் சார்! :D
Deleteகூடவே தலைவருக்கு டெக்ஸ் வில்லர் சாகஸம் ஒன்றை கொடுத்துடுவோம் சார் எதுவும் சொல்ல மாட்டார்.ஹி,ஹி.
Deleteநிறைய வைரத்தை தாருங்கள் சார்..ஆனா இதுக்கு முன்னாடி நல்லா சுத்தபடுத்தி கொடுத்தீங்களே அதே மாதிரி கொடுங்க சார்.:-)
Deleteநல்ல வாசனையான பினாயில் ஆர்டர் பண்ணியிருக்கு தலீவரே !!
Delete///நல்ல வாசனையான பினாயில் ஆர்டர் பண்ணியிருக்கு தலீவரே !///
Delete:)))))))
நல்ல வாசனையான பினாயில் ஆர்டர் பண்ணியிருக்கு தலீவரே
Delete######
ஙே....:-(
எடிட்டர் சார் மற்றும் நம் காமிக்ஸ் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteடெக்ஸ் 70 : சும்மா அதிருதில்ல என்ற வகையில் இந்த 2018 ல் இருக்கும் என்று நம்புகிறேன்! :-)
தோர்கல்
ReplyDeleteசொல்ல வார்த்தைகள் இல்லை சார் .... படிக்க ஆரம்பித்தால் நான்கு பாகத்தையும் படித்து விட்டே கீழே வைக்க வேண்டி இருக்கும் ...
கடந்த இரண்டு நாட்களாக கிடைத்த கேப்பில் எல்லாம் படித்து முடித்தாயிற்று.
தோர்கல் - 100 / 100
சிறிய வேண்டுகோள் சார் : இனி வரும் தோர்கல் கதைகளையும் இது போலவே குண்டு புத்தகமாக வெளியிட முயற்சி செய்யுங்கள் ....
____/\_____
Editor sir thank you very much for giving painful experiences of people in graphic novel. After reading graphic novel we have to conclude the pathetic situation of the village people &product. 😮😮😔😔😭😭
ReplyDeleteகடவுளரின் தேசம் ..!
ReplyDeleteஇரண்டு பாகங்கள் படித்தாகிவிட்டது .. பொறுமையில்லாமல் இங்கே ஓடிவந்து சொல்லவேண்டியதாகிவிட்டது..!!
சத்தியமாக சொல்கிறேன்., வான்ஹாமேவிற்கு சராசரி மனிதர்களைவிட மூளையின் எடையும் திறனும் சிலமடங்கேனும் அதிகமாக இருக்கக்கூடும்.!
அப்பப்பா .. கற்பனையின் உச்சத்தை அதுவும் இத்தனை விறுவிறுப்போடு சொல்ல சாத்தியப்படுகிறதென்றால் ....
க்வா க்ரகத்தை அத்தனை அழகாக காட்டியிருக்கும் ஓவியருக்கும் .. கை விரல்களுக்கு ஏதாவது போட்டே ஆக வேண்டும் ..!
(நம்ம வசதிக்கு சொடக்கு வேணும்னா போட்டுவிடலாம்) ;
///(நம்ம வசதிக்கு சொடக்கு வேணும்னா போட்டுவிடலாம்) ///
DeleteLOL :))))))
தோர்கல் பல திருப்புமுனைகளும்,அசாத்திய கற்பனைகளும் கொண்டதொரு களம்,அந்த பறக்கும் ஓடத்தை பார்க்கும் பொழுது,பாகுபலி இரண்டாம் பாகத்தில் ஒரே ஒரு ஊரில்,ஒரே ஒரு ராஜா என்னும் பாடலில் வரும் கற்பனைக் கப்பல் தான் நினைவுக்கு வந்தது,மனித மனத்தின் கற்பனைக்கும்,பிரம்மாண்டத்திற்கும் எல்லைதான் ஏது.
Delete//(நம்ம வசதிக்கு சொடக்கு வேணும்னா போட்டுவிடலாம்) //
Deleteநமக்கு அந்த வசதி கூட இல்லை :-)
ஹா...சூப்பர்..ஸ்பைபடர முதல் நாளேமுடித்து விட்டேன்...ஸ்பைடரின் மிகச் சிறந்த கதைகளுள் இதும் ஒன்று....விறுவிறுப்பு...படிக்க எளிதாக , இனிதான வடிவமைப்பு..இனி வரும் மறுபதிப்பை இந்த சைசில்.. இதே அளவு எழுத்தில் விட்டால் விற்பனை கூட ுதவலாமோ...மூன்று முக்கியஸ்தர்கள காட்டினாலும் நம்ம கிறிஸ்துமஸ் தாத்தா எப்படா வருவார்னு இருக்கு...முடிந்தால் முன்னரே வெளிவிடலாமே சார் ஆகஸ்டு எட்டு மாத தொலைவில் அல்லவா உள்ளது..
ReplyDeleteபுத்தகங்கள் நேற்று இரவு கிடைக்கப்பெற்றன. அனைத்து புத்தகங்களும் பார்க்க நன்றாக இருந்தது.
ReplyDeleteமுதலில் படிக்க நினைத்தது ஸ்பைடரின் மறுபதிப்பே. புது முயற்சி நன்றாக இருந்தாலும் நடை முறைக்கு சரி இல்லை என்பது எனது கருத்து. நான் இது வரை படிக்காத கதை என்பதால் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்த பொழுது எழுத்துக்கள் படிக்க மிக கஷ்டமாக இருந்தது.
நமது வழக்கமான பாணி அளவு பழைய நினைவுகளுக்காக மட்டும் அல்லாது இப்பொழுது படிக்க நினைப்பவர்களுக்கும் சரியான அளவாக இருந்தது.
முடிந்தால் இனிவரும் கதைகள் பழைய அளவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
அந்த எழுத்துரு,ஏற்கனவே மறுமதிப்பில் இருந்த எழுத்துருவின் அளவேதான் சார்.
Deleteஅப்படியா நேற்றிரவு படிக்க ரொம்ப கஷ்டமாகவே இருந்தது ஏனென்று தெரியவில்லை சார்.
Deleteமீண்டும் முயற்சி செய்து பார்க்கிறேன்.
90th
ReplyDeleteநிஜங்களின் நிசப்தம் இன்னும் கைக்கு கிடைக்கவில்லை. இவ்வளவு தாமதமானதில்லை.
ReplyDeleteமதியில்லா மந்திரி எப்ப சார் களத்தில் இறங்குவார்?!
ReplyDeleteஎன் அன்புக்கு இனிய ஆசிரியர் அவர்களுக்கு,சென்ற 03.12.17 அன்று என் மன குமறல்களை இந்த மேடையில் வெளிபடுத்தி
ReplyDeleteஇருந்தேன்.ஆனால் எனக்கான எந்த பதிலையும் அப்போது தாங்கள் அளிக்கவில்லை.இந்த மன குறையில் இந்த வருட புத்தாண்டு கூட எனக்கு சந்தோஷம் அளிக்கவில்லை.இன்று காலை வழக்க போல் வரும் கூரியர் பாய்,காமிக்ஸ் பார்ஷல் ஒன்று என்னிடம் கொடுக்க,எனக்கு ஒன்றும் புரியவில்லை.ஏன்னென்றால்,
தவிர்க்க முடியாத சில காரணங்களால் என்னால்,இதுவரைக்கும் இந்த வருட சந்தாவை புதிப்பிக்க இயலவில்லை.
பார்ஷலை,அவசர, அவசரமாக பிரித்து பார்த்த போது,எனக்கு மிகவும் சந்தோஷத்தில்,என் கண்கள் மிகவும் கலங்கிவிட்டது.பேசுவதற்கூட வார்த்தைகள் வரவில்லை,எனது குடும்பத்தாரின் புகைபடம் + தங்கள் கைபட கையொப்பமிட்ட காமிக்ஸ் சான்றிதழ், இல்லை என்ற ஏக்கத்தினால், டிசம்பர் மாத அனைத்து காமிக்ஸ் புத்தகங்களையும்,தங்கள் அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பி இருந்தேன்.
ஆனால், தாங்கள் எனக்கான எந்த பதிலையும்,அளிக்காமல், தங்களுக்கு இருக்கும் எத்தனையோ அவசர அலுவலக வேளையிலும், என்னையும்,தாங்கள் நினைவில்கொண்டு, Super 6 யில், எனது குடும்பதினரின் புகைபடம் ,என் ஒருவனுக்காக தனியாகபிரிண்ட் செய்து, எனது மனக்குறையை,இன்று புத்தகம் பார்த்த ஒரு நிமிடத்தில், நீக்கியதற்கு, எனது பலகோடி,நன்றியையும்,விசுவாசத்தையும் ,தங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
தாங்கள் எங்களை போன்ற,ஒவ்வொரு காமிக்ஸ் அன்பர்களின் உணர்வுக்கும், எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்,என்பதை நினைக்கும் போது,தங்களை நினைத்து நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் நன்றி மறவாத, தீவிர காமிக்ஸ் ரசிகன்.
பி.கு.சான்றிதல்?
அன்பான ஒரு மெனக்கெடல்.
Deleteஆசிரியருக்கு பாராட்டுகள்...
Deleteதங்களுக்கு வாழ்த்துகள்..;-)
sures suriya : சார்...'தல'யாக நான் இருந்தாலுமே, பணியாற்றும் கரங்கள் நமது பணியாளர்களதே ! தவறுகள் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் போது அவற்றைக் களைய அவர்களை ஊக்குவிக்க முடியுமே தவிர்த்து, எனது கோபங்களை அவர்களிடம் இறக்கி வைத்திட இயலாது !
Deleteகாலை முதல் மாலை வரை அந்தப் பெண்பிள்ளைகள் பணியில் காட்டும் ஈடுபாட்டின் முன்னே கோபங்கள் பறந்தே போய் விடும்.
நீங்கள் உளைச்சலோடு பதிவிட்டிருந்த சமயம் அதனை நம்மவர்கள் முன்வைத்ததோடு நான் வேறேதும் சொல்லவில்லை - அவர்களாகவே தவறை சரி செய்யட்டுமே என்று ! And இதோ அவர்களே பரிகாரத்தையும் தேடி விட்டார்கள் !
"கறை நல்லதே !!" என்பது போல் - "பிழைகளும் நல்லதே" என்று எடுத்துக் கொள்கிறேன் சார் - மீண்டும் தவறுகள் தொடர்ந்திடக் கூடாதே என்ற கூடுதல் கவனத்தை நம்மவர்களுக்கு கற்றுத் தந்திருக்கும் என்ற விதத்தில் !
மனநெகிழ்வுடன்,ஆசிரியர் தங்களுக்கும்,
Deleteதங்கள் அலுவலக களம்பணியாற்றும் எனது அன்பு சகோதிரி&சகோதரர்களுக்கும்
மனமார்ந்த நன்றி!
புத்தகங்கள் கிடைத்து நான்கு நாட்களாகியும், கிடைக்கும் கேப்பில் எல்லாம் இப்போதுவரை நிஜங்களின் நிசப்தத்தை மட்டும்தான் புரட்டிக்கொண்டிருக்கிறேன்! படிக்க இன்னும் லட்டு லட்டாய் நான்கு இதழ்கள் மீதமிருத்தும் கூட (அதுல ஒரு லட்டு ரொம்பப் பழைய லட்டு), மனசு கி.நா'வை விட்டு நகரவே மாட்டேன் என்கிறது. இதுவும்கூட இதுவரை ஏற்பட்டிராத ஒரு புது மாதிரியான அனுபவமே!
ReplyDeleteஎன்னமோ போடா ஈனாவினா!
சோக ரசத்துக்கு ஒரு சுவையுண்டு தான் ; அதற்காக தக்காளி ரசம், மிளகு ரசம் இத்யாதிகளை புறக்கணிப்பானேன் ?
Deleteஒருவழியா மனசைத் தேத்திக்கிட்டு(!) இப்பத்தான் மிளகு ரசத்தை (ஒரு கணவாய் யுத்தம்) உறிஞ்ச ஆரம்பிச்சுருக்கேன் எடிட்டர் சார்!
Deleteவரிசையா எல்லா ரசத்தையும் உறிஞ்சினதுக்கப்புறம் பாதரசத்தை (இஸ்பைடர்) கடைசியா உறிஞ்சிக்கிடலாம்னு இருக்கேன்! :D
வேண்டாம் ...செயலரே...போதும் அழுதுருவேன்..:-(
Deleteஎடுத்த எடுப்பிலேயே பாதரசத்தை உறிஞ்சினா அப்படித்தான் இருக்கும் தலீவரே!
Deleteஎன்னே வலைமன்னனுக்கு வந்த சோதனை..:-)
Deleteதோர்கல் ..வண்ணமயமான மாயாஜால இதழ்..விட்டலாச்சார்யாவின் படங்களை மறுபடியும் நம் கண்முன் கொண்டு வந்து வாய் பிளக்க வைத்துவிட்டது.இளமை முதுமை ஆவதும் மறுபடியும் இளமை கிடைப்பதும் நோக்கப்படி புகுந்து விளையாடி இருக்கிறார் கதாசிரியர் ..இந்த நான்கு பாகங்களையும் மொத்தமாய்க் கொடுத்த நம் எடி க்கு நன்றி..அடுத்த பாகத்திற்காக காத்திருக்கத் தேவையில்லாது.மொத்த கதையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடிந்தது ..தோர்கலி ன் அடுத்த சாகசம் எப்போ சார் ?
ReplyDelete2019 -ல் !
Deleteசேற்றுக்குள் சடுகுடு...
ReplyDeleteமீண்டும் ஏமாற்றத காமெடி படை பட்டாளம் .ஆரம்பத்தில் இருந்தே அதாவது சக படைவீரனுக்கும் தனது போர் தந்திரத்தை கற்று தந்த ஸ்கூபி யின் இடத்தில் இருந்தே நகைச்சுவை பின்னி பெடலெடுக்கிறது.அழகான சித்திரங்களும்,அசத்தலான அச்சு தரமும் இதழுக்கு சிறப்பு சேர்க்கிறது.போர் வருகிறதோ இல்லையோ இவர்கள் எப்பொழுது வந்தாலும் வரவேற்க நான் தயார்..
நன்று...:-)
தோர்கல்
ReplyDeleteஇனிமேல் தான் ஆரம்பம்....( சூப்பர்ஸ்டார் ன் அருணாசலம் பாணியில் படிக்கவும் ..:-))
கைப்புள்ளை கிளம்பியாச்சு.....இன்னிக்கு எத்தனே தலை உருள போதோ ???
DeleteTex willerன் ஒரு கணவாய் யுத்தம் படித்து வருகிறேன்!
ReplyDeleteநிஜங்களின் நிசப்தம்!!
ReplyDelete✍✍✍💌💌💌
👌👌👌👌👌👌
Le rapport de Brodeck
Deleteப்ரோடெக்கின் அறிக்கை
French டைட்டிலைக் காட்டிலும் இக்கதைக்குப் மிகப் பொருத்தமான, ஆழமான, அழுத்தமான, அற்புதமான தலைப்பை வழங்கிய நமது எடிட்டா் சாருக்கு ஒரு பிரத்யேக சல்யூட்!
Deleteபால்யக் காலத்து காமிக்ஸ் கதைகளிலிருந்து, நாம் வளர வளர, குழந்தையை கையைப் பிடித்துக் கூட்டிச் செல்லும் ஒரு தந்தையைப் போல நமது ரசனையையும் மெல்ல மெல்ல வளா்த்துக் கொண்டே வருகிறாா் நமது எடிட்டா் சாா்!
மொத்தத்தில் கி.நி. பைனல் டச் சூப்பா் ஹிட்!!
இதுவரை முதலிடத்தில் இருந்த "வெட்டியானை" கீழிறக்கி, "ப்ரோடெக்" முதலிடத்தைப் பிடிக்கிறாா்!
///பால்யக் காலத்து காமிக்ஸ் கதைகளிலிருந்து, நாம் வளர வளர, குழந்தையை கையைப் பிடித்துக் கூட்டிச் செல்லும் ஒரு தந்தையைப் போல நமது ரசனையையும் மெல்ல மெல்ல வளா்த்துக் கொண்டே வருகிறாா் நமது எடிட்டா் சாா்!///
Deleteசெம & உண்ம!
எடிட்டா் சாா்!
Deleteஇப்டியே பண்ணீட்டிருந்தீங்கன்னா அப்புறம் நாங்க காா்ட்டூனில் இருந்து கி.நா.வுக்கு தாவிருவோமாக்கு!
அவசியமிருக்காது நண்பரே! அடுத்து 'கார்ட்டூன் கி.நா'னு ஒன்னு வந்தாலும் வரும்! இன்னும் கொஞ்ச வருசங்களுக்குப் பிறகு தமிழ் காமிக்ஸை கி.நா'க்கள் தான் ஆளும்னு புனுகுப்பூனை ஆருடத்துல சொல்லியிருக்கு!
Deleteஇந்த 'ஆன்மீக அரசியல்' மாதிரி 'ஆன்மீக கி.நா'னு ஏதாச்சும் வந்தாத் தேவலை! அதாவது உண்மையான, நேர்மையான கி.நா! ;)
🤘🤘🤘🤘
DeleteMithun Chakravarthi : ஒன்றே கால் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தக் கதையினை டிக் செய்து, 2017 -ன் அட்டவணையைத் தயாரிக்கத் தயார் ஆன போது என்னிடமிருந்தது இந்தக் கதை சார்ந்த ஆராய்ச்சி மட்டுமே சார் ! கதையின் மையமே மண்ணின் நிசப்தமும் , மக்களின் நிசப்தமும் தான் என்பது புரிந்த கணமே இந்தத் தலைப்பு தலைக்குள் துளிர்விட்டது !
Deleteஆனால் பணிக்குள் டிசம்பரில் இறங்கிடும் வரையிலும் தலைப்பின் பொருத்தம் பற்றி எனக்குள் 100% நிறைவு இருக்கவில்லை ! மொத்த ஆல்பமும் நிறைவுற்று நின்ற போது தான் பெயரும் பாந்தமாய் இருப்பதாய்த் தோன்றியது !
ஆன்டெரா் :
Deleteகுழந்தைகளுக்கு சாக்லேட் கொடுப்பதும், சிாித்த முகத்தோடே இருப்பதுமான அவரது செயல்பாடுகளை கண்டுபோதே, Laughing Buddha ஜென் துறவிகளின் நினைவுபடுத்துகிறதே என்று நினைத்தேன்.
ஐரோப்பாவில் ஜென் துறவியைப் போல் ஒரு நபரா? என்ற சந்தேகம் இருந்தது.
கடைசியில் ஆன்டெராின் ஓவியங்களில் புத்தா் படத்தை வைத்து அதற்கும் நியாயம் செய்துவிட்டாா் கதாசிாியா்! கிரேட்
நம் வட்டத்தின் வாசிப்புப் பன்முகத்தன்மை தான் ஊரறிந்த விஷயமாச்சே சார் !! இலக்கியமோ, அரசியலோ , சமகாலச் சிந்தனைகளோ ; பொது அறிவோ ; வேற்று மொழி ஆக்கங்களோ - எதையும் விட்டு வைக்காது சகலத்திலும் வீடு கட்டி அடிக்கும் சகலகலா வல்லவர்கள் நம் மத்தியில் உண்டல்லவா ?!! அவ்விதமிருக்கும் போதுநாம் கொஞ்சமேனும் variety காட்ட முனையாது - "பா-பா-பிளாக் ஷீப் !" என்று பாடிக் கொண்டே திரிந்தால் சுகப்படாதே ?! So மாற்றங்களைக் கோரி நீங்களாய் குரல் தரும் முன்பாய் நான் முந்திக் கொண்டேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! அவ்வளவே !
Deleteஇன்னொரு விஷயத்தையும் இங்கே highlight செய்திட விழைகிறேன் ! கிராபிக் நாவலின் வெற்றி ஒரு பக்கமெனில், ஜனவரியின் "தோர்கல்" ஏகோபித்த அபிமானத்தை ஈட்டி வருவதுமே என்னைப் பொறுத்தவரை ஒரு significant step !
இன்றைக்கு ஒரு புது வருஷத்தை, ஹார்ட் கவர் அட்டையோடு - 4 பாக ஆல்பத்தில் ஆஜராகித் துவக்கித் தருமளவிற்கு "ராஜா-ராணி-மந்திரவாதி" ரகக் கதையின் fantasy நாயகர் ஒருவர் முன்னேறியுள்ளாரெனில், அதுவுமே நமது ரசனையின் வட்டம் விசாலமாவதன் ஊர்ஜிதம் தானே ?
கவ்பாய் ; டிடெக்டிவ் ; கார்ட்டூன் என்ற காலூன்றியுள்ள ஜானர்களோடு இப்போது fantasy ; கிராபிக் நாவல்கள் என புதிதாய் ரகங்கள் சேர்ந்துள்ளது 2018 -ன் சந்தோஷப் புள்ளி !
////மாற்றங்களைக் கோரி நீங்களாய் குரல் தரும் முன்பாய் நான் முந்திக் கொண்டேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! அவ்வளவே !///
Delete👏👏👏
//இன்றைக்கு ஒரு புது வருஷத்தை, ஹார்ட் கவர் அட்டையோடு - 4 பாக ஆல்பத்தில் ஆஜராகித் துவக்கித் தருமளவிற்கு "ராஜா-ராணி-மந்திரவாதி" ரகக் கதையின் fantasy நாயகர் ஒருவர் முன்னேறியுள்ளாரெனில், அதுவுமே நமது ரசனையின் வட்டம் விசாலமாவதன் ஊர்ஜிதம் தானே ? //
Deleteசில தொடர்களில் சில கதைகள் சற்றே 'டல்'லடிப்பதாகத் தோன்றுவது வழமை. நீண்டதொரு தொடரை தனித்தனிப் புத்தகங்களாக வெளியிடும்போது வாசகருக்கும் நிறையவே பொறுமை அவசியப்படுகிறது. இடையில் ஒன்றோ இரண்டோ கதைகள் சற்றே மந்தமான வீச்சைத் தரும்போது ஒட்டுமொத்த தொடருமே பிசிறடிக்கப்போகிறதோ? என்ற பயம் வாசகருக்கு ஏற்படுவது இயல்பு. எனவே, இப்போதுதான் இத்தகைய கதைகளின்பால் கவனத்தை செலுத்த ஆரம்பிக்கும் ஒரு வாசகர், 'போதுண்டா சாமி' என்று முடிவெடுத்து முழுமையாகவே அந்தத் தொடரை கைவிடும் நிலையும் உருவாகிறது. நீங்கள் இவ்வாறு 4 கதைகள் கொண்ட ஒரு தொகுதியாகத் தரும்போது இடையில் ஒரு கதை சற்றே தொய்ந்துபோனாலும் மற்றவை இழுத்துப்பிடித்துக் கொண்டு கரை சேர்த்துவிடுகின்றன. ஏதாவதொரு தொடருக்கு 'தற்காலிக ஓய்வு' என்று நீங்கள் அறிவித்தபோதெல்லாம் 3- 4 கதைகளை சேர்த்து வெளியிட்டு ஒரு வாய்ப்புக்கொடுங்கள் என்று பின்னூட்டங்களில் கதறியிருக்கிறோம் சார்.
அஸ்ஸலாமு அலைகும் ஆசிரியரே..!!
ReplyDeleteவழக்கம் போல் இந்த வருட ஆட்டமும் சிக்ஸருடன் ஆரம்பமாகியுள்ளது..
சென்ற வருடம் ஜெரமியா என்கிற சூறாவளியை கொண்டு ஆட்டத்தை ஆரம்பித்த தாங்கள் இம்முறை தோர்கலின் மாய உலகில் எங்களை சுழல விட்டுள்ளீர்கள். இம்முறை ஐந்து இதழ்கள் வெவ்வேறு சைஸ்களில். அருமையான வண்ணங்கள் மற்றும் கருப்பு/வெள்ளையென ஒவ்வொன்றும் படுநேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
தோர்கல் வாசித்து லயிக்கும் உலகமென்றால்,
ஸ்பைடர் இதழோ கைகளில் ஏந்தி பார்த்து
பார்த்து ரசிக்கும் ஓர் அழகான பொக்கிஷ படைப்பு. நமது கலெக்ஷ்னில் இன்னமொரு வைரம் ஸ்பைடர் இதழ்.
அற்புதமான/வழக்கமான சித்திரங்களுடன் "நிஜங்களின் நிசப்தம் ".
(கிராஃபிக் என்கிற அடைமொழி ஏன் என்று புரியவில்லை. வழக்கமான சித்திரக்கதை கதை தானே இதுவும்....????).
"சேற்றுக்குள் சடுகுடு" ஒரு வர்ண ஜால மேளா.
ஒரு கணவாய் யுத்தமும் வண்ணத்தில்/ஹார்ட்பவுண்டில் வந்திருக்க வேண்டிய படைப்பு.
அனைவருக்கும் ஜனவரி முதல் தேதியோடு புது வருட கொண்டாட்டம் முடிந்துவிடும்.நமது காமிக்ஸ் குடும்பத்தினருக்கு இன்னமும் தொடர்கிறது.......!!!
///அனைவருக்கும் ஜனவரி முதல் தேதியோடு புது வருட கொண்டாட்டம் முடிந்துவிடும்.நமது காமிக்ஸ் குடும்பத்தினருக்கு இன்னமும் தொடர்கிறது.......!///
Deleteசெம & உண்ம!
செம பாட்ஷா ஜி
Deleteஒரு கணவாயின் யுத்தம் தஞ்சைக்கு அருகில் நிகழ்ந்த கீழ் வெண்மணி சம்பவத்தை நினைவுபடித்தியது!டெக்ஸ்ன் அதிரடி அபாரம்.
ReplyDeleteரைட்டு சைத்தான் குதிரையிலே சவாரி போகுது ...இந்த மாதிரி வசனத்தைப் படித்து விட்டு யாராவது சிரிக்காமல் இருக்க முடியுமா?சேற்றுக்குள் சடுகுடு வழக்கம்போல் நமது காமெடி ஜோடி அதகளம் பண்ணிவிட்டது. நான் 5 புத்தகங்களில் முதலில் படித்ததே சே ற்றுக்குள் சடுகுடு தான் ..இந்த முறை தாய்க்குலத்தின் இள கிய மனசையும் கதையில் கண்டு மகிழ்கிறோம்.குரல் வெளியே வராத கேப்டன்
ReplyDeleteசார்ஜ் சொல்ல முடியாமல் தவிப்பது காமெடியின் உச்சம்
+1
Deleteகடந்த ஆறுமாச காலமா விதம்விதமான கி.நா'க்களைப் படிச்சு ருசி கண்ட பூனையாகிட்டோம். நம்மையும் அறியாம கி.நா'க்கள் மேல ஆசை வச்சுப் பாசத்தை கொட்டிப்புட்டோம்...
ReplyDeleteஅ..ஆனா... இன்னும் 6 மாச காலத்துக்கு கி.நா'வே கிடையாதுன்றதை நினைக்கும்போது துக்கம் துக்கமா வருது!
ஆசையே துன்பத்திற்குக் காரணம்'னு அன்னிக்கு புத்தர் சொன்னப்பவே நான் கேட்டிருக்கணும்...
**** ஒரு கணவாய் யுத்தம் *****
ReplyDelete* ஒரு அஃமார்க் டெக்ஸ் சாகஸம்!
* சில முக்கிய முடிச்சுகளை கடைசிவரை அவிழ்க்காமல் சஸ்பென்ஸாகக் கொண்டு சென்றிருப்பது கதையின் விறுவிறுப்பான கதைநகர்வுக்கு மேலும் வலுச்சேர்க்கிறது!
* தொழில்முறைக் கொலையாளி மாண்டெகோவின் கதாபாத்திரம் மனதில் நிற்கிறது. குறிப்பாக அவனுடைய அறிமுகப் பக்கங்களில் - அனல் தெறிக்கிறது!
* கிளைமாக்ஸ் - மிகமிகப் பொருத்தம், அட்டகாசம்!
* கார்ஸனின் பங்களிப்பு வழக்கத்தைக் காட்டிலும் அதிகம் - வசனங்களிலும், ஆக்ஸனிலும் - செம!
* சித்திரங்கள் டெக்ஸையோ, கார்ஸனையோ அந்நியப் படுத்தாமல் - பிரமாதம்!
* டெக்ஸ் - கார்ஸன் வசனங்கள் வழக்கம்போலவே கலகல!
க்ளைமாக்ஸில் அந்த 'ஒற்றைக்கு ஒற்றை'யின் முடிவில் ஒரு வசனம் வருகிறது - "மரண தேவன் தீர்மானிக்கிறார்... இறுதி நொடியில் யார் விரல்களுக்கு வேகமும், வீரியமும் அதிகமென்பதை!" - ப்பா!! புல்லரிச்சுடுச்சு போங்க!
என்னுடைய ரேட்டிங் : 9.75 / 10
// 'ஒற்றைக்கு ஒற்றை'யின் முடிவில் ஒரு வசனம் வருகிறது - "மரண தேவன் தீர்மானிக்கிறார்... இறுதி நொடியில் யார் விரல்களுக்கு வேகமும், வீரியமும் அதிகமென்பதை! //
Deleteநான் மிகவும் ரசித்த வசனம் இது!
விஜய் @ 9.75 சரி; அந்த 0.25 ஏன் கொடுக்கவில்லை?
Delete@ PfB
Delete///விஜய் @ 9.75 சரி; அந்த 0.25 ஏன் கொடுக்கவில்லை///
ஆங்! இதுவொரு சிந்திக்கவைத்திடும் கேள்வி(!!).
காரணங்கள் :
* முன்னட்டையைவிட பின்னட்டை கூடுதல் வசீகரமாக இருந்தது! swap செய்திருக்கலாம் என்று தோன்றியது!
* கதை அதன் மத்தியப் பகுதியில் (மட்டும்) கொஞ்சம் விறுவிறுப்புக் குறைவாய் தோன்றியது. வித்தியாசமான யுக்திகளைப் பயன்படுத்திப் போட்டுதள்ளும் தொழில்முறைக் கொலையாளி மான்டெகோவுக்கு இன்னும் சற்று அதிக வாய்ப்பளித்திருந்தால் கதையின் பரபரப்பு உச்சத்தைத் தொட்டிருக்கும். ஒரு நல்ல கதாபாத்திரம் - குறைவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது!
கிளைமாக்ஸ் பன்ச் என்பதால் அங்கே அழுத்தம் மாதிரமன்றி கொஞ்சம் யதார்த்தமும் மேலோங்க நின்றால் நன்றாக இருக்குமென்று நினைத்தேன் !
ReplyDeleteமரணம் தீண்டா ஹீரோ என்றாலுமே லேசானதொரு human touch தப்பில்லை தானே ?
////மரணம் தீண்டா ஹீரோ என்றாலுமே லேசானதொரு human touch தப்பில்லை தானே ?////
Deleteதப்பில்லே சார்... நாலு நல்ல டயலாக் கிடைக்கும்னா எதுவுமே தப்பில்லே! :)
jokes apartment, ரொம்பவே யதார்த்தமான வசனமது சார்... பலராலும் ரசிக்கப்படப்போவது உறுதி!
தோர்கல்
ReplyDeleteஎன்ன சொல்வது என்றே தெரியவில்லை.... படைப்பின் அசாத்தியமான உயரம் என்று கூட இதை கூறலாம்.
இந்த மாத புத்தகங்களில் முதலில் படிக்க எடுத்தது தோர்கலையே... தினமும் இரவு கொஞ்சம் கொஞ்சமாக படிக்கலாம் என நினைத்து ஆரம்பித்தது ... இரண்டு நாட்களில் முழுவதும் படித்து முடித்து விட்டே கீழே வைத்தேன் ...
தோர்கல் – வந்த புதிதில் பிடிக்காது என்பது ஆச்சரியமில்லை, இப்பொழுது பிடிக்கவில்லை என யாரவது கூறினால்தான் ஆச்சரியம்
இதை போலவே அனைத்து வருடங்களும் நான்கு அல்லது ஐந்து பாகங்கள் கொண்ட (குண்டு) புத்தகமாக தோர்கல் வெளி வர வேண்டும் என்பது எனது ஆசை.
திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்
கடவுளரின் தேசம் :
ReplyDeleteஆரிசியா, கிறிஸ் ஆப் வால்நார் இருவருடனும் (தோர்கலும் ஜாலும் கூட இருந்தார்கள்தான்) நாமும் க்வா கிரகத்தில் உழன்று வந்ததான பிரமையை ஏற்படுத்திவிட்டது. !
க்வா கிரகத்தையும் ஓகோடையின் மாயாஜால் கோட்டையையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம்போல .. அத்தணை அழகு.!
எங்கெங்கோ கொண்டு போய் இறுதியில் ஜார்கோஸ், வார்த், தோர்கல், ஜோலன் என ஒரே பரம்பரையோடு அத்தணை சம்பவங்களையும் முடிச்சு போட்டிருக்கும் வான்ஹாமேவின் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.!
கிறிஸ் ஆப் வால்நாரின் கொள்கைப் பிடிப்பைப் பார்த்து வாய் பிளந்துவிட்டேன். !
உதவிக்கு வந்த தோர்கலையும் ஆரிசியாவையும் சாவின் பிடியில் விட்டுவிட்டு ஜாலை மயக்கி இழுத்துக்கொண்டு போவதும், ஓகோடையினால் தள்ளாத கிழவியாய் மாற்றப்பட்ட பின்னரும்கூட தங்கத்தின் மீதான வெறியை கொஞ்சம் கூட விடாமலும், உதவி செய்த ஜோலனையே பிணையாக பிடித்து வைத்துக்கொண்டு தப்ப முயல்வதும், பாலைனத்தில் தனியாக மாட்டிக்கொண்ட பின்னரும் கூட தங்கத்தை இழுத்துக்கொண்டே திரிவதும் .. .. ஆத்தாடி! இப்படி ஒரு வில்லியை இதுவரைக்கும் பார்த்ததே இல்லையடிம்மா ..!
பெருந்தேவன் ஓகோடையின் கதை முடிந்தது, இனிமேல் பிரச்சினை இருக்காதுன்னு பார்த்தால், ஜோலனை பயண்படுத்தி இன்னொரு ஓகோடையாக மாற நினைக்கிறான் இன்னொருவன்.!
பலப்பபல எதிர்பாராத திருப்புமுனைகளுடன் ஜோலனையும் மீட்டுக்கொண்டு தோர்கல் தாயகம் திரும்புகிறார். ஜாலின் முடிவு சற்றே வருத்தமாக இருக்கிறது. ! கிறிஸ் ஆப் வால்நார் தன்னந்தனியாக பாலைவனத்தில் நடந்துபோகும் காலடித்தடங்கள் மட்டுமே காட்டப்படுகிறது .. எனவே மீண்டும் கிறிஸ் தலைகாட்டுவாள் என நம்பலாம்.!
எல்லையற்ற கற்பனையை கதையிலும் க்வா கிரகத்தின் அழகை சித்திரங்களிலும் ஒருசேர ரசிக்கலாம்.!
கடவுளரின் தேசம் - கற்பனையின் உச்சம்.
ரேட்டிங் 10/10
//கிறிஸ் ஆப் வால்நார் தன்னந்தனியாக பாலைவனத்தில் நடந்துபோகும் காலடித்தடங்கள் மட்டுமே காட்டப்படுகிறது .. எனவே மீண்டும் கிறிஸ் தலைகாட்டுவாள் என நம்பலாம்.!//
Deleteதொடரில் அம்மணி ஒரு இன்றியமையா அங்கம் !
///தொடரில் அம்மணி ஒரு இன்றியமையா அங்கம் !///
Deleteஇருக்கு .. .. நமக்கு ஃபுல் என்ட்டெர்டெய்ன்மென்ட் இருக்கு ..!;
விசித்திர சவால் :
ReplyDeleteசட்டைப் பாக்கெட்டிலேயே வைத்துக்கொள்ளும் அளவுக்கு குட்டியான (குட்டி யானை அல்ல) க்யூட்டான மேக்கிங்கே வெற்றியை பறைசாற்றிவிட்டது.!
உள்ளேயும் தெளிவான மிகத் தெளிவான சித்திரங்களும் திருத்தமான அச்சுக்கோர்ப்பும் சபாஷ் போட வைத்தன. !
"பாசு பாசு ஒரு நிமிசம், புக்கோட அழகைப்பத்தி மட்டுமே பேசிட்டு இருக்கீங்களே .., கதையைப் பத்தியும் சொல்லுங்களேன்? "
"அது வந்து .. . கதை .. .ஆமா .. கதை வந்து .. அட .. அதைவிடுங்க பாசு. "
"தோர்கல் மாதிரியே ஸ்பைடரும் Fantasy ஹீரோதானே பாசு. ."
" என்னாது ..?? ? "
"ஆமா பாசு, தோர்கலின் கற்பனைகளை கொண்டாடுறிங்க .., ஆனா ஸ்பைடரோட கற்பனைகளை மட்டும் ஏன் கிண்டல் பண்றிங்க? "
" நியாயந்தான் பாசு ..! எனக்கும் புரியத்தான் செய்யுது.! இருந்தாலும் என்ன பண்றது., தோர்கலைப் படிக்கறச்சே பிரமிப்பா இருக்கு .. ஸ்பைடரை பாக்கறச்சயே புர்ர்ர்ர்ருன்னு சிரிப்பு வந்திடுதே ..!
சரி .. ஸ்பைடர்தான் இப்படின்னா, வில்லன்கள் அதுக்குமேல இருக்கானுகளே ..! "
"உங்களுக்கு ஸ்பைடர் கதைகளை ரசிக்கத் தெரியலை பாசு "
"யார் சொன்னது ..! சந்தா C யில் வரும் காமெடிக் கதைகளைவிட, சந்தா D யில் வரும் ஸ்பைடரைப் படிச்சிதான் அதிகமா சிரிச்சிருக்கேனாக்கும்.! அந்த வகையில பாத்தா ஸ்பைடரை எனக்கும் ரொம்ப பிடிக்கும் பாசு ..வரட்டுமா பாசு ..பைபை ஸுயூ ..!!"
ஹா ஹா. விமர்சனம் அருமை.
Delete// ஸ்பைடரைப் படிச்சிதான் அதிகமா சிரிச்சிருக்கேனாக்கும்.! //
எங்கள் தலைவரை இப்படி கலாய்த்தால் உங்களை நோக்கி வாயு துப்பாக்கியை உபயோகிக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
///உங்களை நோக்கி வாயு துப்பாக்கியை உபயோகிக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.///
Deleteஸ்பைடருக்கு ஏதாவது வாயுத்தொல்லையா பரணி?
ஓமத்திரவம் சாப்பிடச் சொல்லுங்க!:-)
///உங்களை நோக்கி வாயு துப்பாக்கியை உபயோகிக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.///
Deleteஸ்பைடருக்கு ஏதாவது வாயுத்தொல்லையா பரணி?
ஓமத்திரவம் சாப்பிடச் சொல்லுங்க!:-)
திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் has left a new comment on the post "வணக்கம் 2018 !!!":
ReplyDeleteதோர்கல்
என்ன சொல்வது என்றே தெரியவில்லை.... படைப்பின் அசாத்தியமான உயரம் என்று கூட இதை கூறலாம்.
இந்த மாத புத்தகங்களில் முதலில் படிக்க எடுத்தது தோர்கலையே... தினமும் இரவு கொஞ்சம் கொஞ்சமாக படிக்கலாம் என நினைத்து ஆரம்பித்தது ... இரண்டு நாட்களில் முழுவதும் படித்து முடித்து விட்டே கீழே வைத்தேன் ...
தோர்கல் – வந்த புதிதில் பிடிக்காது என்பது ஆச்சரியமில்லை, இப்பொழுது பிடிக்கவில்லை என யாரவது கூறினால்தான் ஆச்சரியம்
இதை போலவே அனைத்து வருடங்களும் நான்கு அல்லது ஐந்து பாகங்கள் கொண்ட (குண்டு) புத்தகமாக தோர்கல் வெளி வர வேண்டும் என்பது எனது ஆசை.
திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்
நண்பர் புளூபெர்ரியின் பின்னூட்டங்கள் ஏதோவொரு அயல்நாட்டுச் சதி காரணமாக இங்கே காணால்போவதால் - மேற்கண்ட காப்பி-பேஸ்ட் ஏற்பாடு!
Delete+1
Delete///...அனைத்து வருடங்களும் நான்கு அல்லது ஐந்து பாகங்கள் கொண்ட (குண்டு) புத்தகமாக தோர்கல் வெளி வர வேண்டும் என்பது எனது ஆசை. ..///
Delete+1
அயல்நாட்டுச் சதி காரணமாக இங்கே காணால்போவதால்
Delete####₹
அயல்நாட்டு சதின்னா கண்டிப்பா மேட்டுபாளையமா தான் இருக்கும்..:-)
தோர்கல் - கடவுளின் தேசம்
ReplyDeleteஎப்படி விவரிப்பது ..எப்படி பதிவது என தெரியாமல் விழிக்கிறேன்.உண்மையை சொல்ல வேண்டுமானால் புத்தாண்டின் முதல் இதழாகவும்..,நான்கு பாக தொகுப்பாகவும் முக்கியமாக முத்துகாமிக்ஸ்ன் ஆண்டுமலராகவும் இந்த இதழின் அறிவிப்பு என்னை பொறுத்தவரை ஏமாற்றமாக தான் இருந்தது. காரணம் ஆரம்ப தோர்கல் சாகஸங்கள் சுமாராக தோன்றியது.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மனதை கவர்ந்ததும் உண்மையே.ஆனால் இப்படி சிறப்பான ஆண்டுமலருக்கும்..,ஒட்டுமொத்த தொகுப்பிற்கும் ஈடு செய்ய இது இரத்த படல பாகங்களா...இல்லை கேப்டன் டைகரின் சாகஸங்களா ..ஒரு மாயமந்திர கதையை ஆசிரியர் அறிவித்து உள்ளாரே என்று வெளியே காட்டி கொள்ளாவிட்டாலும் மனதில் தோன்றியது உண்மை.( பெங்களூர் பரணி சார் திட்டுவாரோ ன்னு கூட அமைதியாகி இருக்கலாம் ..மூச்..)ஆனால்....
இதழை படித்து முடித்தவுடன் ....முடித்தவுடன் என்ன படிக்க படிக்க நான் இந்த நிதர்சன உலகத்தை விட்டு அந்த மாயமந்திர தேசத்தில் முழுதாக நுழைந்து விட்டேன் என்பது நான்கு பாகங்களையும் ஒட்டுமொத்தமாக ஒரே சமயத்தி்ல் படித்து முடித்து தான் கீழே வைத்தேன் என்பதிலியே உணர்ந்து கொள்ளலாம்.வாவ்...என்ன ஒரு வர்ணஜாலம் .என்னவொரு மாய உலகம்..ஆனால் அந்த உலகத்திலும் நிஜம் என்றே உணரவைத்து நம்மையும் அதற்குள் உலவ விட்டாரே ஓவிய ஆசிரியரும்..கதை ஆசிரியரும்..,மொழிஆக்க ஆசிரியரும்.அங்கே தான் இவர்களின் பன்மடங்கு ஆற்றலை உணரமுடிகிறது.இங்கே கதையையோ...பாத்திரங்களையோ....அது சொல்லும் விதத்தையோ பகிரபோவதில்லை.ஆனால் ஒரே ஒரு நிகழ்வை சொல்ல பிரியபடுகிறேன் .தோர்கலின் மகனை அத்தீவு மக்கள் கடவுளாக ஏற்று "ஹீருகோ..ஹீருகோ" என பலத்த குரலில் வரவேற்க இங்கே நானும் உதடுகள் பிரிக்காமல் மெளனமாகவே ஹீருகோ.ஹீருகோ...என ஒலி எழுப்புகிறேன் .அதே இடத்தில் அவன் கண்கள் ஈரமாகும் இடத்திலும் என் கண்களிலும் ஈரம்.இப்படி இன்னும் சொல்ல ஏராளம் இருக்கிறது.ஆனால் சொல்ல ஆரம்பித்தால் ஆசிரியரின் பதிவை விட நீளமாகிவிடும்.இப்பொழுது சொல்கிறேன் சார் இந்த புத்தாண்டில் முதல் துவக்கத்திலியே எங்களை வேறு உலகத்தில் அழைத்து சென்றீர்களே ஒரே தொகுப்பில் ஒரே சமயத்தில் இதை விட சிறந்த ஆண்டுமலர் முத்துவிற்கு கிடைப்பது வெகு சிரமம் சார்.
இந்த இதழுக்கு மதிப்பெண் அளிக்க வேண்டுமென்றால் எண்களாலும்...எழுத்தாலும் இட முடியாது..பறக்கும் படகில் சென்று கடினபட்டு ,சிரம்பட்டு வேறு உலகில் காணப்படும் அந்த தங்க குவியல்களை இரு எருதுவண்டிகள் நிறைய அள்ளி எடுத்து வந்து கொட்டினாலும் குறைவாக தான் தோன்றும்.
நிசப்தமே எனது ஆதர்சமாக இருப்பினும் இந்த நிசப்த உலகில் புக வெகு கடினமாக இருக்கிறது என்றால் இந்த மாய உலகிலோ உலவ மட்டுமல்ல வெளியே வரவும் விருப்பமில்லை தோர்கலின் மகனை போலவே...
//இந்த இதழுக்கு மதிப்பெண் அளிக்க வேண்டுமென்றால் எண்களாலும்...எழுத்தாலும் இட முடியாது..பறக்கும் படகில் சென்று கடினபட்டு ,சிரம்பட்டு வேறு உலகில் காணப்படும் அந்த தங்க குவியல்களை இரு எருதுவண்டிகள் நிறைய அள்ளி எடுத்து வந்து கொட்டினாலும் குறைவாக தான் தோன்றும்.//
Deleteதலீவரே....ரெண்டு வண்டியா இல்லாட்டியும் no problem ; ஒரேயொரு வண்டியாச்சும் கொண்டு வந்து இறக்குனீங்கன்னா தாரமங்கலத்திலே உங்களுக்கு ஒரு 80 அடி உயர கட்-அவுட் வைச்சுப்புடலாம் !!
// நிசப்தமே எனது ஆதர்சமாக இருப்பினும் இந்த நிசப்த உலகில் புக வெகு கடினமாக இருக்கிறது என்றால் இந்த மாய உலகிலோ உலவ மட்டுமல்ல வெளியே வரவும் விருப்பமில்லை தோர்கலின் மகனை போலவே. //
Deleteசெம! இது தோர்கலின் எல்லா கதைகளுக்கும் பொருந்தும்!
///தோர்கலின் மகனை அத்தீவு மக்கள் கடவுளாக ஏற்று "ஹீருகோ..ஹீருகோ" என பலத்த குரலில் வரவேற்க இங்கே நானும் உதடுகள் பிரிக்காமல் மெளனமாகவே ஹீருகோ.ஹீருகோ...என ஒலி எழுப்புகிறேன் .அதே இடத்தில் அவன் கண்கள் ஈரமாகும் இடத்திலும் என் கண்களிலும் ஈரம்.இப்படி இன்னும் சொல்ல ஏராளம் இருக்கிறது///
Deleteதலீவரே... கதையில் 'எசகுபிசகான' காட்சிகள் ஏதாவது வந்திருக்குமே...?!! அப்ப நீங்களும்... :P
ஆசிரியர் ## கட்அவுட வைக்க இப்பொழுது அனுமதி இல்லை சார்:-)
Deleteபரணிசார் ### உண்மை.:-)
செயலர் ## என்ன சொல்றதுன்னு தெரியலை ன்னு சொல்லலாமா புரியலைன்னு சொல்லலாமா ...
:-)
வர,வர பிளாக்க படிக்கவே தனி சந்தா செலுத்தும் அளவுக்கு சுவையோடும்,மிளிரும் ரசனையும் சொட்ட நண்பர்கள் பதிவிடுகிறார்கள் கதைகளை பிரித்து மேய்ந்த(விமரி(ரஸித்த))நண்பர்களுக்கு எனது நன்றி யுடன் கூடிய வாழ்த்துக்கள்.😇😂 கிட்ஆர்டின் சார் நம்அரை டவுசர் காலம் வலை மன்னனின் மயக்கதிலிருந்து மீளவேயில்லயே! தோர்கலின் எடிட்டர் மனம்வைத்தால் ஸ்பைடரும் சயின்ஸ்ஃப்க்ஸன் ஹீரோவாய் காலம் கடந்தும் ஜொலிப்பார்.
ReplyDeleteDr.Saminathan : வான் ஹாம்மேவின் கையில் ஸ்பைடர் ?!!! அல்லது ஸ்பைடர் கையில் வான் ஹாம்மே ?!! ஐயகோ !!!
Delete// தோர்கலின் எடிட்டர் மனம்வைத்தால் ஸ்பைடரும் சயின்ஸ்ஃப்க்ஸன் ஹீரோவாய் காலம் கடந்தும் ஜொலிப்பார். //
Delete+1
நம்ப ஸ்பைடர் ஏற்கனவே காலம் கடந்தும் ஜொலித்துக்கொண்டு இருக்கிறார்!
/// நம்அரை டவுசர் காலம் வலை மன்னனின் மயக்கதிலிருந்து மீளவேயில்லயே ///
DeleteSaminathan sir,
அரை டவுசர் காலத்திலிருந்து முழு டவுசர் காலத்துக்கு வந்துட்டாலுமே கூட, நண்பர்களோடு எங்காவது டூர் செல்லும்போது மீண்டும் அரை டவுசரை போட்டுகிட்டுதானே திரிகிறோம்.!
அதைப்போலத்தான் ஸ்பைடர் கதைகளும்., ஜாலியாக படிக்க ஏதுவானவை!
எல்லா கதைகளுமே நல்லா இருக்கும்போது .. .நான் யாரைத்தான் கலாய்ப்பதாம்!?
டச் விட்டுப் போயிடக்கூடாது பாருங்க ..ஹிஹி ..!! :-)
எடிட்டர் சார்,
Deleteநீண்ட நாட்களாக சொல்ல வேண்டும் என்று இருந்தேன். வான் ஹாம்மே (Van Hamme) என்பதை வான் ஹாம் என்று உச்சரிப்பதே சரியாக இருக்கும்.
பிரெஞ்சில் வார்த்தையின் கடைசியில் E வந்தால் அது சைலன்ட். அப்படி E யை உச்சரிக்க வேண்டுமென்றால் é அக்ஸ்ன்ட் ஆக இருக்க வேண்டும்.
////வான் ஹாம்மே (Van Hamme) என்பதை வான் ஹாம் என்று உச்சரிப்பதே சரியாக இருக்கும்.////
Deleteமீ டூ ....
இன்னும் கூட "வான்அம்" என்பதே சாியாக இருக்கும் இல்லையா நண்பரே?
H ம் சைலன்ட தானே!!
DeleteH கூட சைலண்ட் தானே நண்பரே.
Delete"போஷுர், ஜொவானெம்" என்று இந்த வீடியோவில் native frenchல் போட்டு தாக்குகிறார்களே..
https://m.youtube.com/watch?v=F28L7Nc95Es
Delete"ஜொன்"ல் வரும் "ன்" மற்றும் "ஹெம்மே"ல் வரும் "ஹ" & "மே" எல்லாத்தையும் விழுங்கி விட்டு, "ஜொவானெம்" என்கிறார்கள்...
DeleteJan Van Hamme
Deleteஜொ "ன்" - nasal sound
Van Hamme - வ்வ-னம்
இப்படி ஒவ்வொரு எழுத்தா சைலண்ட் ஆகிட்டேஏஏ போனா கடைசில "வா ஹா"னு தான் கூப்பிடணும் போலிருக்கே..?
Delete'வாஹா' - ஆஹா!
வாஹா ன்னு எப்படி கூப்டுவிங்க குருநாயரே ..! அதான் H சைலண்ட் ஆச்சே.!
Deleteஅதனால "வா " ன்னு மட்டும் கூப்பிடுவோம்.!
வா ன்னு கூப்பிட்டா வந்துடுவாரில்லையா?
அதிலும் சிக்கல்னா பேசாமே சைகையில கூப்பிட்டுக்குவோம்.! :-)
(டமாஷ் டமாஷ்)
அந்த "வானம்(Van Hamme)" அழுதா தான், இந்த பூமியே சிரிக்கும் ...
Delete:-)
'பிரிச்சி மேஞ்சிட்டாங்க 'னு சொல்றது இதுதானோ?
Delete24 for iron given
ReplyDeleteஒரு கணவாயின் கதை.. அட்டகாசமான அதிரடி.
அமர்க்களமாக க்ளின்ட் ஈஸ்ட்வுட் படம் ஆரம்பம் போல ஆரம்பித்து பரபர ஆக்சன் கதை முழுவதும்.
டெக்ஸ் கார்சன் வசனங்களில் நகைச்சுவை தெறிக்கிறது. பல இடங்களில் சத்தமாக சிரித்தேன்.
வழவழ க்ளைமாக்ஸ் மட்டும் தான் குறை, அந்த குறை மட்டும் இல்லாவிட்டால் டெக்ஸ் டாப் கதைகளின் பட்டியலில் இடம்
பிடித்திருக்கும்.
Krishna VV : எனக்கு இந்தக் கதையின் முதுகெலும்பாய்ப் பட்டது ரொம்பவே pleasant ஆன அந்தச் சித்திர பாணி !! அழகான நாயகர்களை மட்டுமன்றி, பின்னணிகள் ; துணைப் பாத்திரங்கள், என எல்லோரையுமே கண்ணுக்கு இதமாய் வரைந்திருப்பதாய் நினைத்தேன் !
Deleteமுற்றிலும் உண்மை சார் நாம் பார்த்து பழகிய ஓவிய பாணி கதையில் ஒன்ற செய்தது. சரியான விளக்கம் இல்லாமல் அவசரமாக முடித்தது போல இருந்தது மட்டும் தான். உங்களது வசனங்கள் மிக அருமை சார்.
Delete// டெக்ஸ் கார்சன் வசனங்களில் நகைச்சுவை தெறிக்கிறது. பல இடங்களில் சத்தமாக சிரித்தேன். //
Deleteநீங்கதானா அது! கொஞ்சம் மெதுவாக சிரிங்க... இங்க வரை கேட்குது ஜி!
@ Krishna VV
Deleteஇதுபோலவே அவ்வப்போது உங்கள் விமர்சனங்களை எழுதுங்கள் நண்பா!
'ஒரு கணவாய் யுத்தம்' கதையில் ஒரு காட்சி :
ReplyDeleteதொழில்முறை கொலையாளி மான்டெகோவிடமிருந்து ரயில்வே கம்பேனி முதலாளியம்மாவைக் காப்பாற்றுகிறார்கள் டெக்ஸும், கார்ஸனும்! (சரி....) சற்று தொலைவில் நின்றிருக்கும் அந்தப் பெண்ணை நோக்கி சாவகாசமாய் பேசியபடியே நடைபோடுவார்கள் டெக்ஸும், கார்ஸனும்! (சரி....) அதுவரை நிதான நடைபோட்டுவந்த தல; பக்கத்தில் நெருங்கியதுமே கார்ஸனை விட்டுவிட்டு, ஓடிச் சென்று அந்தப் பெண்ணைக் கட்டியணைத்துக் கொள்வார்! (பார்டா!! தல'யா அப்படிப் பண்ணியது?!!) இதை சற்றும் எதிர்பாராத கார்ஸனுக்கோ 'வடை போச்சே...' ஃபீலிங்! (இருக்காதா பின்னே? பாவம்ல!)
ஆனாலும் தல அப்படி செஞ்சிருக்கக்கூடாது. அதுவும் கன்னிப்பையன் கார்ஸனின் கண்ணெதிரிலேயே! :P
ஆமா சார். டெக்ஸ் ஏதாச்சும் இப்டி பண்ணுவாருன்னுதான் அதுக்கு முந்தின பக்கத்திலே 'நாம முந்திக்கணும்னு ' கார்ஷன் ஓட ஆரம்பிப்பாரு.ஆனா டெக்ஸ் அவர விட வேகமா ஓடி காரியத்தை சாதிச்சுக்கிட்டாரு.
Deleteஎன்னதான் இருந்தாலும், வயசுல பெரியவரை ஓவர்டேக் பண்ணாம இருந்திருக்கலாம். ம்..
விசித்திர சவால் படித்துமுடித்துவிட்டேன். அதன் கதையை நினைத்தாலே தலை சுற்றுகிறது. இந்த கதைக்கு பதில் சதுரங்க வெறியன் வெளியிட்டு இருக்கலாம்.
ReplyDeleteஇங்கே கிறுகிறுப்பில் வட்டமாகச் சுற்றிய தலை அங்கே சதுரமாய்ச் சுற்றியிருக்கும் சார் ; வேறென்ன ?
Deleteஹா ஹா ஹா! :)))))
Deleteதப்பு பண்ணிட்டீங்க சார். தப்பு பண்ணிட்டீங்க.
Deleteஸ்பைடரோட மகிமை புரியாம போச்சே. சாயங்காலம் படிச்ச கதைய காலைல படிச்சிருந்தா, தலைசுத்தல்ல ஒரு நாள் ஆபிஸுக்கு லீவு போட்டிருக்கலாம். மிஸ் பண்ணிட்டீங்களே.
மதிற்ப்பிக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு , நான் தங்களின் நாற்பது ஆண்டு கால வாசகன் . அடுத்த மாதம் முதல் காமிக்ஸ் வாங்குவதை நிறுத்திவிடலாம் என்று நினைக்கிறேன் . சமீப காலமாக தாங்கள் சொல்வது ஒன்றாகவும் , செய்வது ஒன்றாகவும் உள்ளது . நீங்கள் எமுதும் மற்றும கூறும் பில்ட்ப்களை நம்பி என்னைப் போன்றவர்கள் ஏமாந்தது போதும் . நாங்கள் பார்த்த பழைய விஜயன் சார் நீங்கள் இல்லை. இப்போது தமிழ் காமிக்ஸில் தனி ஒருவராக நீங்கள் இருப்பதால் எந்த டப்பா கதையப் போட்டாலும் விற்றுவிடும் என நினைத்து , அதை செய்து கொண்டு இருக்கறீர்கள் . இந்த ஜனவரி மாத்த்தில் வெளியாகிய க்ராபிக் நாவல் சாரி க்ராபிக் கதை , இல்லை க்ராபிக் ஓவிய தொகுப்பு , என்ன பேர் வச்சாலும் , இதைய ஒரு காமிக்ஸ் அப்டினு ஜீர்னிக்க முடியலை. இது என்ன கதைனு நினைச்சு அதுவும் 250 விலை வச்சு போட்டீங்க. நம்ப வாசகர்கள் காமிக்ஸ் அப்டீனு எதைப்ப போட்டாலும் வாங்கிருவானுக அப்படீங்கற தப்பான நினைப்பு தான சார் உங்களுக்கு. இந்த மாதிரி கதை புக் வாங்கி வேஸ்ட் பண்ற பணத்தில கம்னு தான தர்மம் பண்ணலாமனு தோனுது, சார் , உங்களால நல்ல கதை குடுக்க முடியலைனாலும் பரவாயில்ல . தயவு செய்து பில்டப் குடுத்து எங்களை ஒரு வழி பண்ணீராதீங்க. அப்பிறம் நீங்க என்ன செஞ்சாலும் சப்போர்ட் பண்ணற கூட்டம் கண்டிப்பா என்னைத் திட்டும் . அதுவும் எனக்குத் தெரியும் . இவன் ஏன் தனிப்பட்ட மெயிலுக்கு அனுப்பாம , இப்படி ப்ளாக்ல போடறனே , அப்படீனு நெனுச்சுக்காதீங்க . என் நினைப்பு பல பேர்க்கு இருக்கு, இதை அந்த மாதிரி நபர்கனோட ஒட்டு மொத்த கருத்தாவும் எடுத்துக்கலாம் .
ReplyDeleteசார் ...பணமும் உங்களது ; ரசனையும் உங்களது ; அதை வெளிப்படுத்தும் உரிமையும் உங்களது சார் ! அதைத் தவறென்று யார் சொல்லப் போகிறார்கள் ? எனக்குப் பிடித்ததெல்லாம் உங்களுக்கும் பிடிக்க வேண்டும் என்பதோ ; vice versa-வோ நிஜமாகிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிச்சயமாக எனக்குக் கிடையாது !
Deleteஅதே நேரம் எனது பதிவை முழுசுமாய்ப் படிக்க பொறுமை கொண்டிருப்பின் - உங்கள் பணமும் ,பொழுதும் விரயமாகியிராது ! தெள்ளத் தெளிவாய்க் குறிப்பிட்டு இருந்தேன் - இந்த கிராஃபிக் நாவல் சிலருக்கு ரசிக்கக் கூடும் ; சிலருக்கு ஜவ்வு மிட்டாயை நினைவுப்படுத்தக் கூடுமென்று ! நீங்கள் குறிப்பிடும் அதே "பில்டப்"பில் தான் இந்த "ஜாக்கிரதை"பலகையும் தொங்கிக் கொண்டுள்ளது ! உங்களின் உளைச்சல் மட்டுப்படும் எதோவொரு தருணத்தில் அந்த பதிவை சரி பார்த்திட்டால் புரியும் - இங்கே நான் எதையும மறைக்கவில்லை என்று ! அது மட்டுமன்றி, இது வெளியாகும் தனித் தடமே "வித்தியாசமான ரசனைகளுக்கு" மாத்திரமே என்ற அறிவிப்போடே ! இதற்கு மேலும் செய்திடல் என்னவாக இருக்க முடியுமோ ?
உங்களுக்கு இந்தக் கதை பிடிக்காது போனது குறித்து வருந்துகிறேன் சார் ; ஆனால் ரசனை சார்ந்த விஷயங்களில் நானல்ல - ஆண்டவனே வந்தாலும் சகலரையும் திருப்தி கொள்ளச் செய்ய இயலாதென்பதுமே ஒரு நூறு தடவைகள் இந்தப் பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கும் சேதியே ! அதனை நூற்றியோராவது முறை சொல்ல மட்டுமே சாத்தியம் எனக்கு !
அப்புறம் "இது அவர்கள் எண்ணங்களும் ; இவர்கள் அபிப்பிராயங்களும் " என்ற ரீதியிலான ஒட்டு மொத்த வாக்குச் சீட்டுக்கள் எந்தத் தேர்தலிலுமே செல்லுபவையல்ல தானே ?! அவரவர் பணத்தில் வாங்குவதும், படிப்பதும் , நிகழும் போது - அதனைப் போற்றுவதும் , தூற்றுவதுமே அவரவர் முயற்சிகளில் அரங்கேறிக் கொள்ளும் சார் !
Deleteசில நேரங்களில் நாம் மிகவும் ரசித்த ஒன்றை மற்றவா்கள் தூற்றும் போது என்ன செய்வதென்று தொிவதில்லை!
ReplyDeleteLife is never stop teaching
எது எப்படியோ என்னை பொருத்தவரை இந்த வருடத்தின் நெ.1 இதழ் "நிஜங்களின் நிசப்தம்"
Deleteரசனைகளில் என்றைக்குமே ஒரு ஒட்டுமொத்த உடன்பாட்டுப் புள்ளி கிடையாது என்பதை மீண்டுமொருமுறை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ள வேண்டியது தான் சார் !
Deleteசாா்,
Deleteநி.நி. பிரெஞ்சில் வண்ணத்தில் வெளியானதா? அல்லது கருப்பு வெள்ளையில் தானா??
கருப்பு வெள்ளையில் !
DeleteTex story super
ReplyDeleteவிஜயன் சார்,
ReplyDeleteManu Larcenet-ன் graphic version of Le rapport de brodeck க்கே கொஞ்சம் நண்பர்கள் "முடியல சார்" என்று சொல்றாங்களே..
Manuவின் BLAST நாலு பகுதியும் இறக்கி விட்டிங்கன்னா என்ன நடக்கும்னு நெனச்சி பாருங்கள்...
ஆர்வம் கொண்ட நண்பர்களுக்கு..
Deletehttps://fr.m.wikipedia.org/wiki/Blast_(bande_dessinée)