Powered By Blogger

Friday, December 29, 2017

936 !!

நண்பர்களே,

ஜிலீரென்ற வட இந்தியாவிலிருந்து வணக்கம். ஆளாளுக்கு கோட்டும், ஸ்வெட்டரும், மப்ளரும் மாட்டிக் கொண்டு நவீன பூச்சாண்டிகள் போல் உலாற்றித் திரியும் ஒரு பனிக்காலத்து அதிகாலையை ஹோட்டல் அறையின் கண்ணாடிக்குப் பின்னிருந்து ரசிப்பது சுகம்மாகத் தானிருக்கிறது ! "அட.. 25 வருஷங்களுக்கு முன்னாடி கல்யாணத்துக்கு வாங்கின கோட்டு-சூட்டை  அந்து உருண்டைகளிலிருந்து காப்பாற்றி கையோடு  கொண்டு வந்திருக்கலாமோ ? இது தோணாமப் போச்சே....!!" என்று மண்டையில் ரோசனை ஓடும் நேரமே ஊரிலிருந்து போன் - நமது ஆல்-இன்-ஆல் மைதீனிடமிருந்து !! "கிராபிக் நாவல் முழுசும் நைட்டே பேக்கிங் செஞ்சாச்சு ! ; மற்ற புக்குகள் காலையில் ரெடியாகிடும் !" என்று ! Oh yes....டிசம்பரின் கடைசிப் பணிநாளுக்கே, ஜனவரியின் இதழ்கள் உங்கள் கைகளில் இருந்திடும் ! இன்று 2018 -ன் சந்தாதாரர்கள் அனைவருக்குமே புத்தாண்டின் இதழ்கள் புறப்பட்டு விட்டன !

"டிசம்பரில் ஜனவரி" என்றோ ; "17-ல் '18" என்றோ ; "மார்கழியில் தை" என்றோ இந்தப் பதிவுக்குத் தலைப்பு வைக்கலாம் தான் ! ஆனால் மெய்யாகவே பொருத்தமானதலைப்பெனில் - "ஒரு குட்டி அணியின் விஸ்வரூபம்" என்பதாகவே இருக்கும் ! நிறைய மெகா projects களில் நம்மவர்கள் பணியாற்றியுள்ளனர் தான் ; மின்னும் மரணங்களும் ; LMS-களும் ; க்யூபா படலங்களும் ; இரத்தக் கோட்டைகளும்  just  like that தாண்டிச் சென்ற அனுபவங்களாகியுள்ளன தான் ! ஆனால் இம்முறையோ ஒட்டு மொத்தமாயொரு புத்தம் புது அனுபவம் எங்கள் சகலருக்குமே !  On track இருக்கும் போது நித்தமும் தலைக்குள் ஒரு ரேடார் ஓடிக் கொண்டேயிருக்கும் : "பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருக்கு 2019-ன் jobs போயாச்சா ?" (ஹி..ஹி..நம்புங்கள் ; நிஜமே !! 2019-ன் பாதித் தொலைவில் உள்ளோம்  -பிரெஞ்சு to ஆங்கில மொழிபெயர்ப்புகளில் !) ; "கருணையானந்தம் அவர்களுக்கு என்ன வேலை அனுப்பி இருக்கிறோம் ?" ; "மாலையப்பன் என்ன பெயிண்டிங் போட்டுக் கொண்டிருக்கிறார் ?" ; உள்ளே DTP-ல்  என்ன வேலைகள் ஓடிக் கொண்டுள்ளன ? "அட்டைப்படம் டிசைன்கள் என்ன பாக்கி உள்ளன ?" என்ற ரீதியில் ! யாரும் சும்மா இருந்து விடக் கூடாதே என்பதில் ரொம்பவே கவனமாய் இருந்திடுவேன் ! ஆனால் - திருமணப் பணிகள் வேகமெடுத்த நாள் முதலாய் - "ஏதாச்சும் பண்ணிக்கோங்கப்பா  ; நானே இங்கே தெரு தெருவாச் சுத்திட்டு இருக்கேன் !" என்றபடிக்கு இந்த ரேடார் குப்புறக் கவிழ்ந்து விட்டது ! மீண்டும் தண்டவாளம் ஏற வேண்டிய நேரத்தில் நிச்சயமாய் ஒரு தள்ளாட்டம் காத்துள்ளது என்பது மண்டைக்கு எட்டியிருந்தாலும், "அந்நேரம் பார்த்துக் கொள்ளலாம்" என்ற அசட்டுத் தைரியம் இல்லாதில்லை ! ஒரு மாதிரியாய் back to routine என்ற பொழுதும் புலர்ந்த போது தான் - "தொடர்ச்சி" ; "கோர்வை" இத்யாதிகளின் மகிமை என்னவெனப் புரிந்தது !

அட்டைப்படங்கள் ஒட்டு மொத்தமாய் தயாராகிட வேண்டியிருந்தன என்றான போது அதற்குள் தான் முதல் தொபுக்கடீர் ! பிரின்டிங் சென்றிட குறைந்த பட்சம் 4 + 4 ராப்பர் டிசைன்கள் தேவை என்பதால் நடப்பு மாதத்து இதழ்கள் மட்டுமன்றி, அடுத்த மாதத்து டிசைன்களையுமே ஏக் தம்மில் தயார் செய்ய வேண்டியிருந்தது ! 'பச்சையாக்கு ; சிவப்பாக்கு ; கறுப்பாக்கு !" என்று நல்ல நாளுக்கே அட்டைப்படங்களில்  ஓராயிரம் குரங்குக் கூத்தடிப்பவன் நான் ; இப்போதோ புத்தாண்டின் முதலிரு மாதத்து இதழ்களின் ராப்பர்களெனும் பொழுது - கூடுதலாய் பயம் தொற்றிக் கொண்டது ! டெக்சின் ராப்பர்கள் ஒரிஜினல்களே என்பதால் அவற்றுள் ஜாஸ்தி மெனக்கெடல் அவசியமாகிடவில்லை ! அதே போல மறுபதிப்புக்குமே மாலயப்பனின் ஸ்பைடர் பெயிண்டிங் + பிப்ரவரியின் மறுபதிப்பான "மர்மக் கத்தி"-க்கு ஒரிஜினல் டிசைன் என்றானதால் அங்கேயும் smooth sailing ! பாக்கி ராப்பர்கள் அனைத்துக்கும் போட்ட லடாய் ஏகப்பட்ட work hours காலை விழுங்கி விட்டது !

கதைகளுக்குள் புகுந்தால் தோர்கல் வேறொரு கியரில் பயணிக்கும் 4 பாக ஆல்பம் இம்முறை  எனும் பொழுது அதன் தயாரிப்பு + எடிட்டிங்கில் தாவு தீர்ந்து விட்டது ! Sheer intensity -க்கு சமீப இதழ்களுள் இதுவொரு செம அடையாளம் என்பேன் ! So அதனைக் கரை சேர்த்த கையோடு TEX சாகசத்தினுள் புகுந்தால் - "ஆரம்பத்திலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம்!" பஞ்சாயத்து !! தருவிக்கப்படா அந்தத் துவக்க 41 பக்கங்களை வாங்கி, இத்தாலியில் கிருஸ்துமஸ் விடுமுறையில் இருந்த நமது மொழிபெயர்ப்பாளரை ஜுனியர் எடிட்டர் வாயிலாக அணுகி - "அம்மணி.....நீங்கள் மனசு வைக்காட்டி நாங்க அம்பேல்..புலீஸ் ஹெல்ப்பு !!" என்று கதற - ஒற்றை இரவில் 41 பக்க மொழிபெயர்ப்பைத் தாக்கி எடுத்தார் அவர் ! அவற்றை அடித்துப் புடித்து தமிழாக்கி - டைப்செட்டிங் செய்ய நினைத்தால் நம்மவர்கள் மொத்தமாய் கிராபிக் நாவலின் பணிகளுக்குள் புதைந்து கிடப்பது உதைத்தது ! 312 பக்கங்கள் எனும் பொழுது, தலையில் துண்டைக் காயப் போட்டுத் திரியும் ஷேக்குகளின் தேசங்களில், தோண்டத்  தோண்ட கொப்பளித்துக் கொண்டேயிருக்கும் எண்ணையைப் போல கி.நா.வின் பணிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன ! நமது ஆத்திர - அவசர வெளிப் பணியாட்களும் ஆண்டின் இறுதி என்பதால் ஏதேதோ காலெண்டர் வேலைகளில் பிசியாக இருக்க - கையைப் பிசைந்து கொண்டிருப்பதைத் தாண்டி எதுவும் செய்திட இயலவில்லை எனக்கு ! அதற்காக கி-நா.வை அவசரம் அவசரமாய் ஒப்பேற்றவும் மனசு ஒப்பவில்லை ; தவணை தவணையை மாற்றி எழுதிய ஸ்க்ரிப்டை ஒட்டு மொத்தமாய் வாசிக்கும் போது நிச்சயம் நிறைய பட்டி-டிங்கரிங் அவசியமாகிடும் என்ற எனது யூகம் பொய்க்கவில்லை ; 2 பாகங்களையும் ஒன்றிணைத்து ஒட்டு மொத்தமாய்ப் படிக்கும் போது ஒரு வண்டி திருத்தங்கள் தேவைப்படுவது புரிந்தது ! விடாதே-பிடி- என சென்ற ஞாயிறும் முழு நாள் வேலை செய்து ஒரு மாதிரியாய் செவ்வாய்க்கிழமை  கி.நா-வை அச்சுக்குத் தயாராக்கினோம் ! அச்சுக் கூடத்திலோ  ஆண்டின் இறுதியெனும் rush ; ஆனால் நானோ, "எல்லாத்தையும் ஓரங்கட்டிப்புட்டு இதை முதலில் அடிச்சுக்க கொடுங்கப்பா !" என்று நான் கூப்பாடு போட - மாமூலாய் பணிகள் தரும் வெளிப் பார்ட்டிகள் கடுப்ஸ் ஆப் இந்தியா ! நானோ 'அலெர்ட் ஆறுமுகம்' போல முறைப்பாய் முகத்தை  வைத்துக் கொண்டே உள்ளே போவதும், வெளியே வருவதுமாயிருக்க, யாரும் ஏதும் வாயைத் திறக்கவேயில்லை ! 'தப்பிச்சேன்டா சாமி !" என்றபடிக்கு டெக்சின் DTP பணிகள் அரங்கேறுவதை பராக்குப் பார்த்துக் கொண்டே - சுடச் சுட எடிட்டிங் வேலைகளையும் செய்ய முனைந்தேன் ! கிருஸ்துமஸ் தினத்துக்கு கூட விடுமுறை எடுத்துக் கொள்ளாது DTP இவாஞ்செலின் பணியாற்ற - ஒரு மாதிரியாய் புதனிரவு டெக்ஸ் அச்சுக்கு ரெடி !! மறுபடியும் அதே முறைப்போடு அச்சுக்கூடத்துக்குள் நான் ஆஜராக - 'இவனோடு ஒரே ரோதனையாய் போச்சே !!' என்ற மாதிரியான பார்வைகள் துளைப்பதை உணர முடிந்தது ! ஆனால் எனக்கு வேலை ஆகணும் ஷாமியோவ்....என்ற முனைப்பில் எதையும் பெரிது படுத்திக் கொள்ளவில்லை நான் ! இதற்கு மத்தியில் ப்ளூகோட் பட்டாளத்தின் மொழிபெயர்ப்பு ; தயாரிப்பு ; அச்சு - என சகலமும் ஜிலோவென்று துளி டென்ஷனுமின்றி அரங்கேறியிருந்தது தான் highlight !!

So வியாழன் காலையில் பைண்டிங்கில் படை பரிவாரங்களோடு போய் காவடியெடுத்தால் - குளிர் நேரத்தின் பொருட்டு கருப்பு மசி உணராது கழுத்தை அறுப்பது புரிந்தது !! பேப்பர்களை மடிக்க folding machine -ல் ஏற்றினால் - சாணியாய் மை ரோலர்களில் ஏறிக் கொண்டு படுத்தி எடுத்தது ! என்ன கொடுமை இரவுக் கழுகு சார் - என்றபடிக்கே நமது பைண்டரை "இம்முறை மட்டும் ஆட்களைக் கொண்டே கையால் மடித்து விடுங்களேன்" என்று உசிரை வாங்க - அவர் அதற்கும் சளைக்காது சம்மதித்தார் ! (இன்று) வெள்ளி காலையில் சீக்கிரமே பணிகளைத் துவக்கி, நண்பகலுக்குள் சந்தாப் பிரதிகளுக்கான தேவைக்கு புத்தகங்களை வழங்கி அசத்தி விட்டார் ! இந்தக் கூத்துக்கு மத்தியில் நானோ புதன் இரவே - "சலோ சப்பாத்தி தப்ப !!" என்று வடநாடு புறப்பட்டிருக்க, மைதீன் மட்டும்இங்கே ஒற்றை ஆளாய் சூறாவளியாய் சுற்றி வந்து கொண்டே இருந்தான் ! நானோ மணிக்கொரு முறை கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு "மைக் 1 ...மைக் 2 ....ஓவர்...ஓவர்  !" என்று குடைந்து கொண்டேயிருக்க, இன்று பகலில் ஒட்டு மொத்த ஆபீசுக்குமே என் போனைப் பார்க்கும் போதெல்லாம் பேதி எடுத்திருப்பது உறுதி ! அத்தனை பேருமாக  பேக்கிங்கில் பர பரத்து பணியாற்றியதால் பலனாக 4 மணிக்கெல்லாம் மொத்தமாய் டெஸ்பாட்ச் done & dusted !! புதன் மாலை வரைக்கும் டெக்ஸ் வில்லர் அச்சுக் கோர்ப்பில் துவண்டு நிற்க, எனக்குள் கலக்கமே - நிச்சயமாய் வெள்ளி அட்டவணை சொதப்பப் போகிறதென்று ! அதே போல பைண்டிங்கில் ஒரே நேரத்தில் அத்தனையையும் ஒப்படைத்துவிட்டு அவர் தலை மீது குடியிருப்பதும் நமக்குத் புதிதல்ல தான் என்றாலும், இது ஆண்டின் இறுதி rush தருணம் என்ற வகையில் என்ன எதிர்பார்ப்பது என்றும் தெரியவில்லை ! ஆனால் all 's well that ends well !

192 + 264 + 48 + 112 + 320 = 936 என்பதே  இம்மாதத்து இதழ்களின் ஒட்டு மொத்த பக்க எண்ணிக்கை ! இவற்றை effective ஆக கடந்த 18 நாட்களில் நிறைவு செய்துள்ளது நமது டீம் !! இதழ்களை உங்களிடம் ஒப்படைத்து விட்ட திருப்தியும், அதனில் கிட்டக் கூடிய பாராட்டுக்களையும் - 'நாந்தேன்...நாந்தேன்' என்றபடிக்கு வாங்கி கொள்ள நான் நிற்கலாம் ; ஆனால் முகாமிலா அந்தப் பின்னணி டீம்  ஓசையின்றி அடுத்த மாதப் பணிகளுக்குள் புகுந்திருக்கும் !

"உயரங்கள் தாண்டப்படுவதற்கே" என்பதில் எனக்கு ஐயமில்லை ; ஆனால் சில தருணங்களில் நான் அபத்தமாய் நிர்ணயம் செய்திடும் அசாத்திய உயரங்களையும் கூட நம்மவர்கள் சலனங்களின்றித் தாண்டிடப் பழகி விட்டுள்ளதே பிரமிப்பைக் கொணர்கிறது !! பாதி மறையோடு நான் சுற்றி வருவதெல்லாமே இப்போது இயல்பானதொரு நிகழ்வே - அவர்களைப் பொறுத்தமட்டில் !  இந்த "பொம்மை புக்குகளை" அவர்கள் படிப்பதில்லை ; ஆனால் இவற்றின் பின்னே நமக்கெல்லாம் உள்ள தீராக் காதலின் பரிமாணம் எத்தகையது என்பதை உணர்ந்துள்ளனர் ! நான் ராவில் முழித்திருந்து செய்யும் பணிகளை கரைசேர்க்க இவர்கள் பகலில் முனைப்புக் காட்டிடாவிட்டால் - 'பிம்பிலிகா பிலாக்கி' கூட முடிந்திடாது !!  ஆண்டின் இறுதியினை நிறைவு செய்திட இதை விடவும் அழகானதொரு மார்க்கம் இருந்திடாது !!

Take a bow my team !! 
சந்தா செலுத்தியிருக்கா நண்பர்களே - time now to rush ப்ளீஸ் !!!

And காத்திருக்கும் ஞாயிறை இனி எண்ணங்களாலும், அலசல்களாலும் அலங்கரிக்கும் பொறுப்பு உங்களது folks ! ஒன்றுக்கு ஐந்தாக இதழ்கள் உங்கள் கைகளில் எனும் போது - time for us to take the backseat ! Bye all !

337 comments:

  1. Hi ! Tex Vijay ! E V ! Dr. Sundar ! Mayavi ! wake up all !

    ReplyDelete
    Replies
    1. @ JOY RAJESH

      வந்திட்டேன்... வந்திட்டேன்! நீங்க கூப்பிட்டு வராம இருக்கமுடியுங்களா? :)

      Delete
    2. Pleasure is mine to welcome you all ! Heartiest wishes for A Very HAPPY NEW YEAR !

      Delete
  2. Wishes for A Happy New Year in Advance every body !

    Wishes to Maideen, Stella ,Vasuki , Annachi !

    ReplyDelete
  3. 10 க்கு உள்ளே வாந்துடேன்

    ReplyDelete
  4. நானும் வந்திட்டேன்.

    ReplyDelete
  5. நானும் வந்திட்டேன்.

    ReplyDelete
  6. நானும் வந்திட்டேன்.

    ReplyDelete
  7. Hi all சந்தோசத்துடன் 2017 விடை கொடுத்து மகிழ்சியாக 2018 வரவேற்ப்போம்
    HAPPY NEW YEAR TO MY ALL FRIENDS
    HAPPY NEW YEAR TO OUR EDITOR & HIS FAMILY

    ReplyDelete
  8. கடைசிப் போஸ்ட்ல பத்துக்குள்ள வந்தாச்சு..!

    ReplyDelete
  9. Wow Super Sir,

    Thanks for your & Your teams efforts sir _/\_
    .

    .

    ReplyDelete
  10. அனைவருக்கும் வந்தனம்

    ReplyDelete
  11. புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்!!!

    ReplyDelete
  12. மாலை வணக்கம் நண்பர்களே.
    ஆசிரியரே.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அருமையான செய்தி சார் .... நாளை காலை கொண்டாட்டமே ....

    ReplyDelete
  14. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்......
    புக்கு.... நாளைக்கு வந்துடுமா.....சார் .........

    ReplyDelete
  15. கடும் உழைப்பை நல்கிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் சார். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைத்து நல்லுள்ளங்கொண்டோருக்கும்.

    ReplyDelete
  16. அன்பு எடிட்டர் பே கமிஷன் அரியர் கிடைத்த கையோடு இன்றுதான் சந்தா கட்ட முடிந்தது (சம்பளத்துல கேட்கமாட்டேன் என்று வீராப்பு பேசியதன் விளைவு) எனக்கு ஜனவரி புத்தகங்கள் எப்பொது கிடைக்கும் என்று சொல்லமுடியுமா ப்ளீஸ்

    ReplyDelete
  17. Dear Edi,

    Wish you and your team a Happy New Year. So happy to see that the commitment of delivering a month set well in advance, was maintained all through the year. Kudos to your team. Here is wishing for a bright 2018, for all of us.

    ReplyDelete
  18. 936 பக்கங்களா?!!!! ஆஹா.. ஆஹா... நாளுக்கு 30 பக்கங்கள்னு வச்சு வச்சு படிச்சாலே மாசம் முழுசுக்கும் படிச்சுக் கிடக்கலாமே!!! இதை எங்களுக்கான புத்தாண்டு/பொங்கல் பரிசா எடுத்துக்கறோமே எடிட்டர் சார்...?

    மைதீன், ஸ்டெல்லா உள்ளிட்ட மொத்த டீமுக்கும் எங்களது வாழ்த்துகளையும், நன்றிகளையும் சொல்லிடுங்க எடிட்டர் சார். அவங்க பம்பரமா இறங்கி வேலை செய்யலேன்னா இத்தனை பக்கங்களைத் தாங்கிய குண்டு பார்சல் இவ்வளவு சீக்கிரமா எங்களுக்குக் கிடைச்சிருக்காது!

    பற்பல சுபகாரியப் பணிகளின் நடுவிலும் இரவுபகலாகப் பணியாற்றி, பணியாற்ற வைத்து டயத்துக்குள்ள டான்'னு புத்தகங்களை எங்களிடம் கொண்டு சேர்த்த உங்களுக்கும், இத்தாலி மொழிபெயர்பாளரிடம் பேசி காரியம் சாதித்த ஜூ.எடிக்கும், காமிக்ஸின் எதிர்காலம் குறித்துப் பல ஆக்கப்பூர்வ சிந்தனைகளைத் தாங்கி இன்னும் ஒரு இளைஞனாகவே வலம் வரும் மதிப்பிற்குரிய சீனியர் எடிட்டருக்கும் நமது நன்றிகளும், வணக்கம்களும்! _/\_

    ReplyDelete
  19. அலுவலக நண்பர்களுக்கு பொனஸ் நள்றியும் ஆசிரியருக்கு அட்வான்ஸ் நள்றிகளும்

    ReplyDelete
  20. Thanks Editor Sir & Team,

    Hope the books will be delivered by tomorrow

    ReplyDelete
  21. 320 பக்கம்களில் ஒரு கி.நா வா?!!! 30 பக்கத்துல ஒரு கி.நா படிச்சாலே வேற ஒரு உலகத்துக்குள்ள புகுந்து வந்தாப்ல ஒரு ஃபீலிங் இருக்கும்! இதுல 320 பக்கம்களையும் படிச்சு முடிக்கும்போது நானே ஒரு வேற்றுக்கிரகவாசி மாதிரி ஆயிடுவேனோன்னு கொஞ்சம் பயந்து வருது! படிக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே ஒரு பத்துப்பதினஞ்சு தாயத்துகளை உடம்பில் கட்டிக்கிட்டு, விபூதிய அள்ளி உடம்பெல்லாம் பூசிக்கிடணும்!

    ReplyDelete
  22. மாலை வணக்கம் நண்பர்களே.
    ஆசிரியரே.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. Wish you and your team a Happy New Year sir. Happy to have 2018jan issues well in advance, please convey my wishes to all those who worked hard to achieve this with you. Great job!!!!!

    ReplyDelete
  24. அலுவலக நண்பர்களுக்கு நன்றிகளும் புத்தாண்டு வாழ்த்துகளும் உரிதாகுக !!!

    ReplyDelete
    Replies
    1. வரவு நல்வரவு ஆகட்டும். தொடர்ந்து பதிவிடுங்கள்.

      Delete
  25. ///"பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருக்கு 2019-ன் jobs போயாச்சா ?" (ஹி..ஹி..நம்புங்கள் ; நிஜமே !! 2019-ன் பாதித் தொலைவில் உள்ளோம் -பிரெஞ்சு to ஆங்கில மொழிபெயர்ப்புகளில் !)///

    !!!!!!!!

    பின்றீங்க எடிட்டர் சார்!!!!

    ReplyDelete
  26. //சந்தா செலுத்தியிருக்கா நண்பர்களே - time now to rush//
    சற்று முன்னர் செலுத்தினேன். அடுத்த மாத கிரெடிட் கார்ட் அலசல் படலத்தின் போது உயரப் போகவிருக்கும் என் மனைவியின் புருவங்களுக்கு, "இது ABCD மட்டும் தான், இன்னும் சில எழுத்துக்கள் பாக்கி இருக்கு " என்ற அதிர்ச்சி பதிலை தயார் நிலையில் வைத்துள்ளேன்... புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சந்தாத் தொகையைவிட ஒரே ஒரு ரூபாய் அதிகம் போட்டு வாங்கிய ஒரு பட்டுப்புடவைக்கான பில்லையும் உங்க கிரெடிட் கார்டு கணக்கில் சேர்த்துடுங்க கார்த்திக்! சாதா அதிர்ச்சி இன்ப-அதிர்ச்சியா மாறிட வாய்ப்பிருக்கு! :)

      புத்தாண்டு வாழ்த்துகள்!

      Delete
    2. "புடவையை நான் கட்டறேன், பில்ல நீங்க கட்டுங்க" என்று சமாதானம் செய்து கொள்ள அவர் ஒன்றும் அந்த காலப் பெண்மணி இல்லீங்களே?! :) சரி விடுங்க, கைவசம் பல கார்டுகள் உள்ளன.. சில கார்டு விட்டு கார்டு பாயும் வேலைகளை களமிறக்க வேண்டியது தான் :P

      Delete
    3. பாத்து
      மறந்துபோய்
      விசிட்டிங்கார்டையோ
      போஸ்ட்கார்டையோ
      களமிறக்கிறப்போறீங்க😜😜😜😜😜

      Delete
    4. Karthik Somalinga : க்ரெடிட் கார்ட் சமாளிபிகேஷன் படலத்தோடே, "காமிக்ஸ் வாசிக்கவொரு அவகாசம்" என்ற ஆப்பரேஷனையும் கையில் எடுக்கப் பாருங்களேன் கார்த்திக் !

      Delete
    5. @கார்த்திக் சோமலிங்கா...ஹிஹி...இந்தமுறை எனது சந்தாக்களும் இப்படியான ஒரு சின்ன வீடு மன்னிக்கவும் சின்ன கார்டு முறையிலேயே பைசல் செய்யப்பட்டன. "ஊரு உலகத்துல 10-12 கார்டு வெச்சிருக்கவன் எல்லாம் சந்தோசமா இருக்கான்...(வீட்டுக்குத் தெரியாம) ஒரே ஒரு கார்ட வெச்சிக்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே...அய்யோயோய்யோய்" மொமெண்ட்... :-( :-)
      அதிலும் இக்கால வீட்டுக்கார பெண் லயன்களுக்கு 'on line' தகிடுதத்தங்களும் அத்துப்படி என்பதால், நம்மால் ஆண் லயனாய் மாறவே முடியமாட்டேன்கிறது...'அது ஏன்கிறேன்'.

      Delete
  27. ! நானோ மணிக்கொரு முறை கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு "மைக் 1 ...மைக் 2 ....ஓவர்...ஓவர் !
    அப்ப நம்ம அடுத்த ஆப்ரேஷன்? ???

    ReplyDelete
  28. கிரெடிட் கார்ட் அலசல் படலத்தின் போது உயரப் போகவிருக்கும் என் மனைவியின் புருவங்களுக்கு, "இது ABCD மட்டும் தான், இன்னும் சில எழுத்துக்கள் பாக்கி இருக்கு " என்ற அதிர்ச்சி பதிலை தயார் நிலையில் வைத்துள்ளேன்.
    சூப்பரப்பு.

    ReplyDelete
  29. அடுத்த மாத கிரெடிட் கார்ட் அலசல் படலத்தின் போது உயரப் போகவிருக்கும் என் மனைவியின் புருவங்களுக்கு, "இது ABCD மட்டும் தான், இன்னும் சில எழுத்துக்கள் பாக்கி இருக்கு " என்ற அதிர்ச்சி பதிலை தயார் நிலையில் வைத்துள்ளேன்.
    சூப்பர் நண்பரே.

    ReplyDelete
  30. // மேற்கிலிருந்து ம. ராஜவேல்.29 December 2017 at 15:44:00 GMT+5:30
    வணக்கம் சார், நிசப்தத்தை பற்றி உரக்க மட்டுமல்ல 'உறைக்கும்'படியாகவும் உள்ளது இந்த பதிவு. என்னதான் ABCD என்று எத்தனை தடம்களில் இதழ்கள் வந்தாலும் தற்போது என்னைக் கவர்ந்தது, சற்றே ஈ ஓட்டிக்கொண்டிருக்கும் வகையறாவான 'E'-யே. தடம் 'E', சற்றேறக்குறைய நம் வாழ்க்கையையொத்த யூகிக்க முடியாத திருப்பங்களுடன் உள்ளதாலோ என்னவோ (ஒரு சில ஏழரைகளை கடந்து விட்டதால் வந்த ஞானம்...but still Youth-ஆம்) . மாமியார் மருமகள் சண்டையின் இடையே கணவனானவன் எவ்வளவு கவனத்துடன் வார்த்தைகளை கையாள்கிறானோ, அதே லாவகத்துடன் தடம் 'E'-ன் ஒவ்வொரு panel-களையும் கடக்க வேண்டியுள்ளது. இதற்கு சற்றே அருகில் வருவது தடம் 'C'-யே. மற்ற கதைகளில் MGR படங்களைப் போல் 'என்ன ஆனாலும் சரி' இவர்தான் ஜெயிப்பார் என்ற ஒரு template உள்ளதால் (எதிரி சுட எத்தனித்த நேரத்தில் 'துப்பாக்கி' பளிச்சிட்டது; எதிரியின் தோட்டாவை சற்றே குனிந்து தப்பினார்) சற்று அயர்ச்சியே ஏற்படுகிறது. அதனாலேயே 2017-ல் டுராங்கோ என்னைக் கவர்ந்தது.

    பதிவில் சொல்லியிருப்பது போன்று 30 பக்கமானாலும், 300 பக்கமானாலும் உங்களின் மீது நம்பிக்கை வைத்து இதனைப் போன்ற கதைகளை எதிர்பார்க்கிறேன். நீங்கள் பேய்கள் விழிக்கும் வேளைவரை சிரமத்துடன் தேர்ந்தெடுத்த கதைகளை, அவைகள் உறங்கச்செல்லும் வேளைகளில் விழித்துப் படிக்கவும் தயாரே.

    அதற்காக 2018-ற்கான சந்தாக்களை (இரத்தப் படலம் உள்ளடங்கிய) செலுத்தியுள்ளேன். 2018 இன்னும் பல மைல் கற்களை ஏற்படுத்தும் ஆண்டாக பெரும்தேவன் மண்டைல'ஷொட்டு'-வின் அருளாலே அமையட்டும்.//

    தற்போது அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது சந்தா கிடைக்கப் பெற்றதாக கூறினார்கள். இம்மாத பிரதிகளும் அதற்குள்ளாக பெட்டிகளுக்குள் தஞ்சம் புகுந்து விட்டதாம். என்னுடைய பிரதிகளுக்காக waiting. ஆனால் அவைகளை நான் கையில் ஏந்தும் பொழுது 'கருவாடு' ஆகியிருக்கும். அதனாலென்ன இப்பொழுதுதான் 'கேப்டன் பிரின்ஸ்' ஸ்பெஷலை ஊறவைத்து மீனாக்கி கொண்டிருக்கிறேன்.

    2018 'சார்ந்தோர்' அனைவருக்கும் நல்லாண்டாக அமைய மீண்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. @ மேற்கிலிருந்து ம. ராஜவேல்.

      செம!

      Delete
    2. ///மாமியார் மருமகள் சண்டையின் இடையே கணவனானவன் எவ்வளவு கவனத்துடன் வார்த்தைகளை கையாள்கிறானோ, அதே லாவகத்துடன் தடம் 'E'-ன் ஒவ்வொரு panel-களையும் கடக்க வேண்டியுள்ளது///

      என்னவொரு
      இலகுவான,
      லாவகமான ,

      சாமார்த்தியமா,
      சத்தியமான,

      நயமான,
      நாசுக்கான,

      ரசனையான,
      ரகளையான,

      எளிமையான,
      வலிமையான,
      அழகான
      உதாரணம்.

      சிலிர்க்க வைத்து விட்டீர்கள் போங்கள்

      Delete
    3. என்ன ராஜவேல் ரொம்ப நாளாக ஆளையே காணோம். அப்ப அப்ப வந்து நம்ப காமிக்ஸ் பற்றி ஏதாவது எழுதுங்கள்.

      Delete
    4. நம்ப ஊர் பக்கம் வரவில்லை என்றாலும் நமது தளத்தின் பக்கமாவது அடிக்கடி தலைகாட்ட முயற்சி செய்யுங்கள்.

      Delete
    5. பதிலுரைக்கு நன்றிகள் நண்பர்களே...நிச்சயமாய் உங்களின் கூத்துக்களில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்...மாதத்தின் முதல் வாரம் மட்டுமே சற்றே வெறுமையானது... நண்பர்கள் இதழ்களை கையில் ஏந்திக்கொண்டு 'குட்டும் ஷொட்டும்', ஆசிரியருக்கு வழங்கிக்கொண்டிருக்கையில்...நான் விட்டதைப்பார்த்து கொட்டாவி மட்டுமே விட முடிகிறது. அதனாலேயே சற்றே தள்ளி நின்றே வேடிக்கைப் பார்க்கும், 'மௌனச்சாமி'களினூடே ஒரு 'மொக்கச்சாமி'யாய் இருப்பதும் தவிர்க்க முடியாததாகிறது.

      Delete
  31. நானோ மணிக்கொரு முறை கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு "மைக் 1 ...மைக் 2 ....ஓவர்...ஓவர் !"
    அப்ப நம்ம அடுத்த ஆப்பரேசன்.

    ReplyDelete
  32. Februaryயில் marma கத்தி release ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  33. International தங்கத்துக்கு 916.
    நமது லயன் தங்கமோ 936.
    ஐசாலக்கடி கிரி கிரி
    சைதாப்பேட்ட வடகரி.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா ஆகஸ்ட் ல்
      850+700+48+122= சுமார் 1500
      சொக்கா அத்தனையும் எனக்கா ?

      Delete
  34. // 192 + 264 + 48 + 112 + 320 = 936 என்பதே இம்மாதத்து இதழ்களின் ஒட்டு மொத்த பக்க எண்ணிக்கை ! இவற்றை effective ஆக கடந்த 18 நாட்களில் நிறைவு செய்துள்ளது நமது டீம் !! //

    Royal salute to our team. Kudoooood to them. கைதட்டிக்கொண்டே இருக்கும் படங்கள் 2018

    ReplyDelete
  35. காமிக்ஸை கொண்டாடாடும் அனைவருக்கும் இனிய வாசிப்பு வாழ்த்து க்கள், கொடுத்த எடிட்டருக்கு நனறிகள்.

    ReplyDelete
  36. காமிக்ஸ் புத்தாண்டாக 2018 மலர வைத்ததற்கு உங்களுக்கும் உங்கள் டீம் மெம்பர்கள் அனைவர்க்கும் special thanks!

    ReplyDelete
  37. அசாத்தியமான உழைப்பு, அபரிமிதமான சுறுசுறுப்பு, அளவிட இயலாத ஆற்றல், எதிர்பார்ப்பை விஞ்சிய செயல்வேகம். இவை அத்தனையும் ஒருங்கே பெற்றவர்கள் நம் அலுவலக பணியாளர்கள்.

    அவர்களின் ஒருமித்த கூட்டுறவால் ஜனவரியின் இதழ்கள், நிழலைக் காட்டியும் வேகமாக செயல்படும் 'லக்கி 'யையும் பின்னுக்குத் தள்ளி விட்டு படு வேகமாக முன்கூட்டியே வர சாத்தியமானது.

    Hats off.

    ReplyDelete
    Replies
    1. // அசாத்தியமான உழைப்பு, அபரிமிதமான சுறுசுறுப்பு, அளவிட இயலாத ஆற்றல், எதிர்பார்ப்பை விஞ்சிய செயல்வேகம். இவை அத்தனையும் ஒருங்கே பெற்றவர்கள் நம் அலுவலக பணியாளர்கள் //

      +1

      Delete
  38. இன்று என் பிறந்தநாள் அகவை 30 முடிவுற்றது. அன்பு நண்பர்களே!உங்கள் அனைவரின் ஆசிகளும் கிடைக்கப்பெற்றால் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. @ Navaneetha krishnan

      இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே! வாழ்க காமிக்ஸுடன்! :)

      Delete
    2. Navaneetha Krishnan : வாழ்த்துக்கள் நண்பரே ! காத்திருக்கும் ஆண்டு உங்களுக்கு அற்புதமாய் அமையட்டும் !!

      Delete
    3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
      நவநீத கிருஷ்ணன்

      Delete
    4. @Navaneetha krishnan

      நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

      Delete
    5. உங்கள் அன்பான வாழ்த்துக்கள் என் தினத்தை இன்னும் அழகாக மாற்றியது.என்னை இன்னும் சிறுவனாக உணரச் செய்வதில் சரி பாதி பங்கு நம் காமிக்ஸ் மீதான காதலே.

      Delete
    6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே...

      இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ இனிதே வாழ்த்துக்கள்..

      Delete
    7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.

      Delete
    8. வாழ்த்துக்கள்

      எனக்கு 16 முடிஞ்சி 15 ஆக போகுது.

      Delete
  39. Navaneetha krishnan Wish you Happy Birthday. 🎂🎂🎂🎂🍩🍩🍨🍨🍨🍧🍧🍧🍭🍭🍭🌺🌺🌹🌹🌻🌻🌷🌷🍰🍰🍰

    ReplyDelete
  40. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் அனைவரின் சார்பாக மகிஜீ...

      Delete
  41. // பாதி மறையோடு நான் சுற்றி வருவதெல்லாமே இப்போது இயல்பானதொரு நிகழ்வே - அவர்களைப் பொறுத்தமட்டில் //


    ஹா ஹா. முழுசாக மறை கழறாத வரை பிரச்சினை இல்லை சார்.

    ReplyDelete
    Replies
    1. அட.... அதையும் சீக்கிரமே கழற்றி பார்த்திட மாட்டோமா - என்ன ?

      Delete
    2. பழைய்ய... இரும்பு.. ஈயம்... பித்தளைக்கு பேரிச்சம்பழோய்... :D

      Delete
    3. // அட.... அதையும் சீக்கிரமே கழற்றி பார்த்திட மாட்டோமா - என்ன? //

      அவங்க என்ன பாவம் செய்தார்கள்... விட்டு விடுங்கள் சார் :-)

      Delete
  42. வணக்கம் நண்பர்களே மீண்டும் சந்தாவிற்குள் நுழைந்து விட்டேன் .

    ReplyDelete
  43. Wish you a very Happy new year 2018🎅🎅🎂🎂🍰🍰🍩🍩🍮🍮🎇🎇🎆🎆😆😆😄😄🍨🍨🍧

    ReplyDelete
  44. நேற்று அதிகாலை குளு குளு என்று இருக்கும் ஒரு மலை பிரதேசத்தில் சூடான காபியை சுவைத்துக்கொண்டே பிரின்ஸின் கொலைகாரக்கானகம் படித்து முடித்தேன்.

    என்ன ஒரு அற்புதமான கதை. இந்த கதையின் கதாபாத்திரங்கள் மற்றும் வசனங்கள் உணர்ச்சி பூர்வமாக இருந்தன.

    ReplyDelete
  45. அடடடா.. அப்பப்பா... 936 பக்கங்களா.. சொக்கா... சொக்கா... சீக்கிரமா கைக்கு கிடைக்க செய்யுப்பா... இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் வணக்கத்துடன் கை தட்டும் படங்கள் 1000...

    ReplyDelete
  46. இன்று நிறைய நண்பர்கள் (கார்த்திக் சோமலிங்கா, செந்தில் மாதேஷ், மேற்கிலிருந்து ராஜவேல், செந்தில்குமார்) சந்தாச் செலுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

    மற்ற நண்பர்களும் விரைவில் செலுத்தி, வீடுதேடி வரும் காமிக்ஸ் இன்பத்தை அடைந்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. சில மனக்குழப்பங்கள்,கஷ்டங்கள் காரணமாக சந்தா செலுத்த தாமதமகிவிட்டது.ஆனால் விஜய் இந்த குழப்பம்,கஷ்டங்களுக்கு கண் கண்ட மருந்தே நம்ம காமிக்ஸ்தானே

      Delete
    2. உண்மை உண்மை!

      நமக்கே நமக்கான, ஒரு தனித்துவமான கவலை நீக்கும் மருந்து!

      கட்டிய சந்தா கவலை தீர்க்கும்
      தக்க சமயத்தில் சந்தோசம் தரும்

      Delete
  47. விஜயன் சார், இந்த மாதம் சந்தாதாரர்களுக்கு சர்ப்ரைஸ் எதுவும் உண்டா? காமிக்ஸ் காலண்டர்? டெக்ஸ் குட்டிக்கதைகள் இப்படி ஏதாவது?

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : No, டெக்ஸ் கலர் (இலவச)இதழையும் இணைப்பின் - இன்றைக்கு டெஸ்பாட்ச் சாத்தியப்பட்டிராது ! அது பிப்ரவரிக்கு !

      Delete
  48. ஹ..ஹ..ஹா...அட்ஆசமான பதிவு...நகைச்சுவை சற்று தூக்கல்..936தலைப்பை பா்த்ததும் சந்தா முன் பதிவோ என அசந்தேன்....ஆனா பக்கங்கள குறுகிய காலத்தில் முடித்த நம்ம டீமுக்கு மெகா சல்யூட்....இந்த புத்தாண்ட சந்தோசமா துவக்கித் தந்த அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள் நண்பர்களே

    ReplyDelete
  49. தோர்கள் அட்டைப்படம் அஉமை..கிநவகண்ல காட்டலியே...

    ReplyDelete
    Replies
    1. அந்தக் குறையைப் போக்கத் தான் கி. நா.பாணியில் உங்கள் பின்னூட்டம் உள்ளதே ?

      Delete
  50. 936 - 9+3+6 = 18 = 8 + 1 = 9 இந்த எண்ணை பார்த்தால் நமது 2018 சூப்பராக இருக்கும் போல் தெரிகிறது. வரும் புதிய வருடம் நமக்கு எல்லா வகையிலும் சிறந்த அனுபவத்தை கொடுக்கும் வருடமாக அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  51. சார் ஆகஸ்ட் ல்
    850+700+48+122= சுமார் 1700
    சொக்கா அத்தனையும் எனக்கா ?

    ReplyDelete
  52. Sir
    எனக்கு சந்தா இருக்கா சார்???
    Advance happy new year

    ReplyDelete
  53. Replies
    1. Wowwwww spider book Hard binding small size

      Delete
    2. பாத்தீங்களா!!! ஸ்பைடருக்கு அடிச்ச யோகத்தை!!

      Delete
    3. என்னது ...ஸ்பைடர் ஹார்ட் பைண்டிங் அன்ட் பாக்கெட் சைஸா...

      இது தான் மிஸ்டர் மர்மத்தின் பெருமை...சூப்பர் சார்..!

      Delete
  54. எடிட்டர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.இயன்ற வரை பரிசீலனை செய்ய வேண்டும். நமது ஸ்மர்ப்ஸ் உள்ளிட்ட குழந்தைகள் ஜானர் காமிக்ஸ்களை சற்றே பெரிய எழுத்துருக்களை கொண்டு அச்சிடப்பட்டால், குழந்தைகள் படிப்பதற்கு இலகுவாக இருக்கும். என் மகளுக்கு நம் காமிக்ஸ் படிக்க தரும் கணங்களில் எல்லாம் அவள் குறையாகச் சொல்லும் ஒரே காரணம் "இது குட்டி குட்டியா இருக்குபா" என்பதாகும்.

    ReplyDelete
    Replies
    1. என்னை போன்ற குழந்தைகளுக்கும் அவ்வபோது இந்த பிரச்சனை தலைதூக்கி விடுகிறது.

      வழிமொழிகிறேன் நண்பரே..:-)

      Delete
    2. ஐயாம் ஆல்ஸோ வழிமொழிஞ்சிங்!

      பெரிய சைஸ் புக், பெரிய எழுத்துகள், குறைவான வசனங்கள் என்பதே குழந்தைகளுக்கான ஃபார்மூலாவாக இருந்திடும்!

      'ஜம்போ காமிக்ஸ்' என்ன சொல்லப் போகுதுன்னு பார்ப்போம்!

      Delete
    3. எழுத்துரு அவர்கள் சொல்லும் அளவில் அது இந்த குட்டி மனிதர்களின் படங்களை மறைக்காத மாதிரி வரவேண்டும் என ஆசிரியர் சொன்னதாக ஞாபகம்.

      Delete
  55. புத்தாண்டில் புன்னைகை பூக்க வைக்கும் காமிக்ஸ் பூங்கொத்துகளை சரியான நேரத்தில் வழங்கிய நமது நிறுவனத்தின் நண்பர்கள் அனைவருக்கும் மிக மிக பெரிய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்..


    இன்றே பூங்கொத்து பொக்கே கைக்கு கிடைத்து விடுமா...அலைபேசி ஒலிக்காக காதுகள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறது...

    ReplyDelete
  56. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எடிட்டர் சார் மற்றும் நமது காமிக்ஸ் நண்பர்களுக்கும்...

    இந்த மாதம் காமிக்ஸ் நமது உணிர்ச்சிகளின் தொகுப்பு..

    வீரம் & நேர்மை - Tex 🔫,
    பயம் - கி.நாவல் 😣,
    நகைசுவை - bluecoat 😂,
    திமிர் & திறமை - Spider 🤨,
    கற்பனை - Thorgal 🤔.....


    ReplyDelete
  57. ஹைய்யா...அலைபேசி அழைப்பு அழைத்து விட்டது...

    நான் அப்புறமா வரேன் சார்..


    கைப்புள்ள வண்டியை எடுங்க...:-)

    ReplyDelete
  58. தோர்கல் hard binding? யாராவது உறுதி படுத்துங்கள். ப்ளீஸ்.

    ReplyDelete
  59. என்னாது .. .. இஸ்பைடருக்கு ஹார்டுபவுண்டா..??

    ReplyDelete
  60. அன்புள்ள அநாமதேயருக்கு ஆயிரம் கோடி நன்றிகள்...🙏🙏🙏

    என்றோ தூரத்துநாளில் உலாவப்போகும் வைகுண்ட சொர்க்க விசாவை அரங்கன் சந்நதிகளில் முன்கூட்டியே வாங்கும் நன்னாளில்,
    பூலோக சொர்க்கமான காமிக்ஸ் கனவுலகில் 2018முழுமைக்கும் சஞ்சரிக்கும் விசாவைப் பெற்றுத்தந்த அந்த அன்புள்ளம் கொண்ட நண்பருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்...

    புத்தாண்டின் பார்சலைப் பெற்றுக்கொண்ட நொடியில் நெஞ்சத்தில் கொப்பளித்த குதூகலம்,
    2018ன் முதல் மாத பார்சலின் கணத்திற்கு எல்லா வகையிலும் ஈடானதே...!!!!🎉🎉🎉🎉🎉

    ReplyDelete
  61. இந்தாண்டு ஜனவரி புக் பேரில் கொத்தாக நம் இதழ்களை வாங்கும் முதல் முறை - அனுபவத்துக்கு waiting ! கடந்த 2012 முதல் சந்தா கட்டிவிட்டு எல்லா புக்கும் வீட்டுக்கு வந்த அப்புறம் கண்காட்சியில் போய் நின்னு எல்லாரும் வாங்குறத பாத்து ஏங்கி (ஒண்ணு புக்ஸ படிச்சிருப்போம் இல்லேன்னா நம்ம ராசிக்கு வந்திருக்காது !) - எப்படியும் ஒரு வருஷம் இப்படி கண்காட்சிக்கு போய் கை நிறைய அள்ளணும்டா சாமி என்று பிளான் போட்டு .. இந்த வருடம் finally !

    [நான் அனுப்பிய முன் பணத்துக்கு அடுத்த மாதம் முதல் நம் ஆபீஸ் staffக்கு புக் லிஸ்ட் அனுப்புவேன் !]

    ReplyDelete
    Replies
    1. எப்படியெல்லாம் யோசிக்கறாங்க பாருங்க மக்களே! :)

      Delete
    2. பின்னே .. அவரவர் 10-20-30-50 என்று புக்ஸ் அள்ளிக்கிட்டு போக நமக்கு அங்க போய் Tex மார்க்கர் அது இதுன்னு எதையாச்சும் வாங்கணும். இந்த வாட்டி சும்மா ஆறு புக்கு அள்ளுவோம்லே !

      Delete
    3. CBF வர எனக்குக் கொஞ்சூண்டு வாய்ப்பிருக்கு ராகவன் ஜி! ஏதாவதொரு வார இறுதியில் சந்திப்போம்! மிளகாய் பச்சி சாப்பிட்டுக்கிட்டே 'தமிழ் காமிக்ஸ் தேறுமா? தேறாதா?'னு அலசுவோம்! ன்னான்றீங்க? ;)

      Delete
  62. புத்தகங்கள் வராதது வருத்தமில்லை...தானைத்தலைவர ஹார்டு பௌண்ட்ல விட்ட சேதி கேட்டதும்..உடனே பாக்க முடிலயேன்னு லேசா மனச ெறும்பு கடிச்ச மாதிர இருந்தது..ஆனா நேரமாக ஆக சுளுக்கையா தோணுதே....

    ReplyDelete
  63. இதழ்களை கைப்பற்றியாச்சி,ஸ்பைடரின் மறுபதிப்பு ஹார்ட் பைண்டிங்கில் மற்றும் வித்தியாசமான சைஸில்,அருமை,அருமை.
    தோர்கல் சாகஸமும் கெட்டி அட்டையில் அருமை, அருமை.
    நிசப்தங்களின் நிசப்தம் கி.நா வித்தியாசமான சைஸில் அசத்துகிறது.
    டெக்ஸின் கணவாய் யுத்தம் அதிக பக்கங்களில் சந்தாதாரர்களுக்கான் கிப்ட்.
    முதல் புரட்டலில் அனைத்தும் அட்டகாசம்.
    வருடத்தின் முதல் மாதமே கலக்கலான் துவக்கம் அருமை,அருமை.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : //வருடத்தின் முதல் மாதமே கலக்கலான் துவக்கம் அருமை,அருமை.//

      இந்த 2 வாரங்களாக - தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தது இந்தத் திருப்தி ஆண்டின் துவக்கத்திலேயே நமக்கு கிட்டிட வேண்டுமென்பதற்கே !

      மறுபதிப்பில் கூட "மர்மக் கத்தி" தான் எனது துவக்கத்து ஜனவரித் தேர்வாக இருந்தது ! ஆனால் அதை விடவும் ஸ்பைடரை இந்த மாறுபட்ட பாணியில் கண்ணில் காட்டுவதன் effect ஜாஸ்தியாக இருக்கக்கூடும் என்று பட்டது ! அதே நேரத்தில், "இக்கிளியூண்டா இருக்கே ?!!" என்ற விசனங்கள் தலைதூக்கக் கூடுமோ என்ற பயமும் இல்லாதில்லை ! ஆனாலும் நாமெல்லாம் ரிஸ்க்கை ரஸ்க் போலப் பார்ப்பவரின் ரசிகர்கள் எனும் பொழுது - here we are !

      Delete
  64. எம்மாம் பெரிய மனுஷன் நம்ப ஸ்பைடரு, அவர இம்மாதூண்டு புக்குக்குள போட்டு அடச்சு,கெட்டி அட்டை ஒட்டி சும்மா கையில எடுக்க சொல ஒரே குஜாலாகீதுமா......

    ReplyDelete
    Replies
    1. Navaneetha krishnan : இன்னா இருந்தாலும் அந்த ஜோபிக்குள்ளாற சொருகிக்கிற தம்மாத்துண்டு பொஸ்தவம்னா நமக்கு எப்போவுமே கொள்ளை இஷ்டம்னு தெரியும் தான் ; ஆனாலும்காட்டி முன்னக்கூடிய பீட்டர் விட்டுப்புட்டு,அப்பாலிக்கா - 'இப்டி கீதுமோ ? அப்டி கீதுமோ ? " ண்ணுகேள்விய கெளப்ப வாணாமேண்ணு தோணுச்சு ! அதுனாலே தான் இஸ்பைடரு வாத்தியாரு மேட்டரு பத்தி வாயே தொறக்கலே !

      Delete
    2. ஸ்பைடர் செம சர்ப்ரைஸ் சார்,கையில் ஏந்தி பார்க்க அற்புதமாய் உள்ளது.மொதோ வாசிப்பா முடிச்சாச்சி,படிக்காத கதை,முதல் வாசிப்பில் ஏக குதூகலம்,வண்டி,வண்டியாய் பூச்சரங்கள் இருந்தாலும்,வாசிக்க குஷியாகத்தான் உள்ளது.

      Delete
  65. Advance happy new year to all
    இன்று வந்த 2018 ஜனவரி புத்தகங்கள் மீது எனது பார்வை
    Top no 1 ஸ்பைடர் வடிவமைப்பில் சூப்பர் 10க்கு 10
    Top no 2 வழக்கம் போல Tex 10க்கு 9
    Top no 3 கிராபிஃக் நாவல் 10 க்கு 9
    Top no 4 தோர்கல் 10 க்கு 8
    Top no 5 நீல சட்டை பட்டாளம் 10 க்கு 8
    ஒரே ஒரு குறை கிராபிஃக்ஜையும் கடின அட்டை போட்டிருந்தா (எடி மூளை சத்தம்--இஇவர் எவ்வளவு செய்தாலும் பத்தாது) இந்த ஒரே மாதத்தில் முன்று கடின அட்டை புத்தகங்கள் கிடைத்திருக்கும்(வட போச்சே) எப்படியிருந்தாலும் 2018 ஆரம்பமே அட்டகாசம்.தொடர வாழ்த்துக்கள்
    திருப்பவும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நம்ம ஆசிரியர் குடும்த்தாருக்கும் அவர் தாம் குழுமத்திற்கும் எனது காமிக்ஸ் நண்பர்களுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. SURESH CHAND H : நானுமே கிராபிக் நாவல் hardcover பற்றி யோசிக்காதில்லை சார் ; ஆனால் ஏற்கனவே எகிறும் பட்ஜெட்டிற்குள் இதையும் நுழைக்க திராணியில்லை !

      தோர்கல் நார்மலான பைண்டிங்கே - நமது திட்டமிடலிலும், அட்டவணையிலும் ! ஆனால் ஆண்டின் முதல் மாதத்தையே - "இது அப்டி இருந்திருக்கலாமே ?" என்ற ஆதங்கத்தோடு துவங்கிட வேண்டாமே என்று மனசில் ஒரு எண்ணம் ! So செலவைப் பார்க்காது அங்கே hardcover டிக் அடித்தேன் !

      கி.நா.வைப் பொறுத்தவரையிலும் - substance over style தானே பிரதானம் ?!

      Delete
  66. Books received..
    1) கிராபிக் நாவல் எழுத்து வருகின்ற இடங்களில் அடுத்த பக்கங்களில் எழுத்துக்கள் தெரிகின்றன...
    2) தோர்கல் அத்தியாயம் ஒன்று என்று எதுவும் இல்லை 6 பக்கத்தில் தலையங்கம் 7ம் பக்கத்தில் கதை ஆரம்பிக்கிறது

    ReplyDelete
  67. Happy received the books on 2017 itself

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வோர் புத்தகமும் ஒவ்வோர் அளவில் அருமையாக உள்ளது..

      Delete
  68. மலைப் பிரதேசத்தில் இருந்து பெங்களூர் கிளம்பி விட்டோம். இன்று இரவு புத்தகங்களை புரட்ட ஆர்வத்துடன் உள்ளேன். என்னை விட எனது மனைவி தோர்கலை புரட்ட மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்.

    ReplyDelete
  69. இன்னாது நம்ப ஸ்பைடர் பாக்கெட் சைஸிலா :-) ஸ்பைடரா கொக்கா பழைய டயலாக்... நம்ப காமிக்ஸ் சும்மா அதிருது.

    ReplyDelete
  70. புத்தக பார்சலை வாங்கியாச்சு சார் ... அருமை ...

    தோர்கல் - 10/10
    கி.நா - 10/10
    டெக்ஸ் - 09/10
    ப்ளூ - 09/10
    ஸ்பைடர் - 09/10

    புத்தகங்களை இன்னும் படிக்கவில்லை சார், இது முதல் பார்வைக்கான மார்க் :)




    ReplyDelete
    Replies
    1. அப்படியே அந்த தோர்கல் புத்தகம் அத்தியாயம் ஒன்று இல்லாமல் தான் வந்துருக்கான்னு சொல்லி டுங்களேன்

      Delete
  71. நிஜங்களின் நிசப்தம் புத்தகம் எனக்கான courier pack இல் இல்லை. 2018 ஜனவரி மாத புத்தகங்கள் மட்டுமே இருந்தது. ஆவலுடன் எதிர்பார்த்த கி.நா. இல்லாதது ஏமாற்றமே...

    ReplyDelete
  72. 'சி.சி.வ' வந்திருக்கான்னு யாராச்சும் கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்களேன்?

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போலதான்.ஹி,ஹி.

      Delete
    2. இரும்பு மனம் கொண்டதல்ல நம் சங்கம்! எதிர்தரப்புக்கு கல்யாண வேலைகள் நிறைய இருந்த காரணத்தால் இந்த முறை பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது!

      பிப்ரவரி மாதத்திலும் இந்த 'கல்தா கொடுக்கும் படலம்' தொடருமானால் சிவகாசி ஆபீஸ் முன்பு அரை நிர்வாணப் போராட்டம் ஆரம்பிக்கப்படும்!

      தலீவர் ஒற்றை இலையை மட்டும் கட்டிக்கொண்டு களத்தில் குதிக்க இருக்கிறார்! அதுவும் வேப்ப இலை!

      Delete
    3. செயலர் அவர்களே இந்த பதிவை படிக்கும் முன்னரே சி்சி வயதில் பற்றி தங்களிடம் முறையிடலாம் என இருந்தேன்.நீங்களே கேட்டி விட்டீர்கள் நலம்.


      நாமும் எத்தனை முறை போராடினாலும் ..இந்த முறை ஐந்து இதழ்கள்...இந்த முறை இரண்டு குண்டு இதழ்கள்..,இந்த முறை அவர் வெளிநாட்டு பயணத்தில்..,இந்த முறை பக்க பற்றாகுறை ...இந்த முறை அவரின் தனிப்பட்ட வேலைப்பளு என ஆசிரியர் காரணம் சொல் கிறாரோ இல்லையோ நாமே இதனை சொல்லி கொண்டு சமாதானம் ஆகி கொண்டே சென்று கொண்டு இருக்கிறோம் சமார் ஒரு வருடத்திற்கும் அதிகமாக...

      சரி 2018 புத்தாண்டு முதல் தவறாமல் வெளிவந்து விடும் என நம் சங்கத்து உறுப்பினர்கள் ஆறுதல் படுத்தி கொண்டு இருந்தார்கள்.அதுவும் இப்பொழுது புஷ் ..

      எவ்வளவு போராடினாலும் தோற்று கொண்டே இருந்தாலும் பதவியில் ஒட்டி கொண்டே இருப்பது அரசியல்வாதிகளுக்கு அழகு.எனக்கு அல்ல..

      எனவே எனது தோல்வியை ஒப்பு கொண்டு எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.இனி நீங்களே தலீவர்..செயலர் என இரு பதவிகளையும் ஏற்று போராட வேண்டுகிறேன் .இனி உங்களின் அடிமட்ட தொண்டனாக இருந்து உங்களின் போராட்டத்திற்கு துனை நிற்பேன் என்றும் உறுதி அளிக்கிறேன.

      ஆனால் நீங்களும் இதே போல் அடுத்த மாதம் ,அடுத்த மாதம் என போராட்டத்தை தள்ளி வைத்து கொண்டு இருந்தால் உங்களின் இரு பதவியையும் பொருளாளர் ஏற்று கொள்ளும் சூழலும் ஏற்படலாம்.

      கவனம்...:-(

      Delete
    4. அ.ஆனா தலீவரே... இந்தத் தலீவர் பதவியில அப்படியொன்னும் ப்ராஃபிட் இல்லேன்னுதான் நீங்க பதவியக் கைவிடறதா ஊருக்குள்ள பேசிக்கறாங்களே...

      Delete
    5. அத்தோட சங்க கணக்கு-வழக்கு பொஸ்தவத்தையும் காணோமாமே..?

      Delete
    6. அப்படியொன்னும் ப்ராஃபிட் இல்லேன்னுதான் நீங்க பதவியக் கைவிடறதா ஊருக்குள்ள பேசிக்கறாங்களே.


      #####₹

      க்கும்...



      ********
      அத்தோட சங்க கணக்கு-வழக்கு பொஸ்தவத்தையும் காணோமாமே..?

      #######


      அந்த வெறும் பால் பேப்பர் பொஸ்தவத்தை வச்சு நான் என்ன செய்ய போறேன் சார்..சங்க மெம்பர் யாராவது அவங்க வாரிசுக்கு பொம்மை வரைய எடுத்து கொடுத்து இருப்பாங்க..:-(

      Delete
  73. உண்மையிலேயே மிகமிக மகிழ்வான ,சந்தோசமான ,கூதுகுலிக்க வைக்கும் தொடக்கம்.ஒரு மணி நேரமாக ஐந்து இதழ்களையும் புரட்டி ,புரட்டி ரசித்து பார்க்கிறேன்.இன்றே ஏதாவது இதழை வாசிக்கலாம் என்று யோசித்தால் குழப்பமே வருகிறது.


    மறுபதிப்பு ஸ்பைடர் இதழ் அவ்வளவு அழகு.அந்த குட்டியூண்டு புத்தகத்திற்கு கொண்டு வந்ந அந்த ஹார்ட் பைண்டிங்கும்..வடிவமைப்பும் பார்க்கும் பொழுது சிறு பெண் குழந்தை பாவாடை தாவணி உடையில் அழகாக நடை போடுமே அந்த அழகு ஸ்பைடர் இதழ்.எனவே இதை முதலில் படிக்கலாம் என்றால் ...

    ம்ஹீம்..சட்டை பாக்கெட்டில் போட்டு கொண்டு நாளை பஸ் பயணத்தில் படித்து கொண்டு போகலாமே என்ற எண்ணமும் ஏற்படுவதால் அடுத்த இதழை தான் கைகளில் எடுக்க ஆசைபடுகிறது.


    சரி என எது மாதிரியும் இல்லாத புது மாதிரி சைஸில் இந்த முறை காணப்பட்ட கிராபிக் நாவலை ரசித்து எடுத்தால் அட்டகாசமான சித்திர தரங்களும்..,பல மெளன பக்கங்களும் இந்த இதழை ஓர் அமைதியான நிசப்த இரவில் படித்தால் தான் இந்த வாழ்க்கை பயணத்தில் ஒன்றி ரசித்து ,ஊடுறவி போக முடியும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

    சரி என நம்ம கெளபாய் சூப்பர் ஸ்டார் டெக்ஸ் வில்லர் இதழை கைகளில் எடுத்தால் செம அட்டகாசமாக அமைந்த முன் ,பின் அட்டைப்படங்களும்.உள்ளே காணப்படும் டெக்ஸின் ஸ்டைலான சித்திர தரங்களும் .அந்த 266 பக்க குண்டு அளவும் ஆஹா...நம்ம தலைவரை புத்தாண்டின் முதல் தேதியில் படித்தால் வருடம் முழுவதும் இப்படி அட்டகாச அதகளம் தொடங்குமே என்ற எண்ணம் ஏற்படுகிறது.


    சரி என நம்ம காமெடி பட்டாளத்தை கைகளில் எடுத்தால் ..

    ஏற்கனவே நகைச்சுவையில் பட்டையை கிளப்புவார்கள் என்னை பொறுத்தவரை இவர்கள். இப்பொழுது எல்லாம் வெறுப்பும்..,டென்சனும் அடிக்கடி ஏற்படுகிறதே.அந்த சமயத்தில் நம்ம பட்டாளத்துடன் நாமும் ஜோடி சேர்ந்தால் அதை எல்லாம் தன்னால் குறைப்பார்களே என்ற எண்ணம் ஏற்படுகிறது.


    என்னடா இது சோதனை....சரி இன்னிக்கு புரட்டி ரசிப்பதிலியே பொழுதை கழித்து விடுவோம் :-)

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் (முன்னாள்) தலீவருக்குத் தான் எத்தனை எத்தனை கஷ்டங்கள் !!

      Delete
    2. எல்லாம் " உங்கள் " செயல் ...:-)

      Delete
  74. ஸ்பைடர் பாக்கெட் சைஸ் என்பது நல்ல ஐடியா. இன்னும் புத்தகத்தை பார்க்கவில்லை ஆனால் மேற்கொண்டு மூன்று புத்தகங்கள் ஆர்டர் செய்து விட்டேன். இதனை நண்பர்களுக்கு பரிசாக கொடுத்து அவர்களை நமது சந்தாவில் இணைக்க முடியுமா என முயற்சிக்க போகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. செமயா இருக்குங்க பரணி சார்...

      Delete
    2. வாழ்த்துக்கள் பாராட்டுகள் பரணி சார்...:-)

      Delete
    3. நீங்கள் ரொம்ப ஆர்வத்தை கிளப்புறிங்க ஜி. இன்னும் 3 மணி நேரம் ஆகும் வீட்டுக்கு போக :-)

      Delete
  75. 😁😁😁...புத்தகம் வந்தாச்சாம்...நீதிக்காவலன் ஸ்பைடரா மாறிட்டமுல்ல...

    ReplyDelete
  76. என் புக்க பாக்க போறேன்.....பாத்த சேதி பேச போறேன்...என் கண்ணுக்குள்ள வைக்கப் போறேன்..

    ReplyDelete
    Replies
    1. சின்னத் தம்பி பாட ஆரம்பிச்சுட்டாரு... இனிமே நம்ம காமிக்ஸ் பசியெல்லாம் தீர்ந்துடும்.

      அவ்வளவு ஏன்... நாமே தீர்ந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லே! :P

      Delete
    2. உப பதிவை உடனே ரெடி பண்ணனும் போலிருக்கே !!

      Delete
    3. பெரிய பதிவாவே தேவைப்படும்சார்..புது வருசத்திற்கு....:-)

      Delete
  77. Color tex nanbargal yarukavadu vandu ullada ..

    ReplyDelete
  78. புக்கு வாங்கியாச்சேய்... :) :) :)

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள அனாமதேயாவின் அன்புப் பரிசு இச்சந்தா! கையில் ஏந்தியிருக்கும் இந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் - அன்பின் மறுவடிவங்களாய் காட்சியளிக்கின்றன!

      என்ன தவம் செய்தனை!!

      மீண்டும் என் நன்றிகள் அன்புள்ள அனாமதேயா! _/\_

      Delete
  79. வாங்கிட்டமுல்ல...முருகனுக்கு காட்டிய பின் பிரிக்க...

    ReplyDelete
  80. @ ALL : தளமே இப்போது தான் களை கட்டித் தெரிகிறது !! Carry on guys !!

    அப்புறம் நேற்றிலிருந்தே சந்தாக்களின் வேகம் சர்ர்ர்ர்...!!

    ReplyDelete
    Replies
    1. அந்த கூட்டத்துல நானும் ஒருத்தன்னு நெனைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு ஆசிரியரே... ;-)

      Delete
    2. மிக்க மகிழ்ச்சி சார்...:-)

      Delete
  81. All books looking gud.
    Different sizes
    Spider book design rocks
    Edit kku oru j podunga!

    ReplyDelete
  82. This comment has been removed by the author.

    ReplyDelete
  83. ***** புத்தகங்கள் - முதல் பார்வையில் *****

    ***** முதலாமிடம் *****
    பெரிசாய், குண்ண்டாய், பளபளப்பான & வண்ணமயமான அட்டைப்படத்துடன் ஹார்டு பவுண்டில் வெளியாகி மூச்சை இழுத்துப் பிடிக்க வைத்திடும் 'தோர்கல் - கடவுளரின் தேசம்'!
    உள்பக்கங்களில் கண்ணுக்கு இதமான, அழகான வண்ணங்கள்! நிச்சயமாய் ஒரு பெரிய விருந்து காத்திருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்ல முடிகிறது!
    இந்த நான்கு பாகங்களையும் படித்துமுடிக்கும்போது பிரம்மிப்பானதொரு மாயாஜால உலகிலிருந்து வெளியேவரத் தெரியாமல்/விரும்பாமல் அதிலேயே மனம் கட்டுண்டு கிடக்கக்கூடும்! எச்சரிக்கை!!

    குறை: முத்து காமிக்ஸின் 46வது ஆண்டு மலரான இந்த மைல்கல் இதழிலும் சீனியர் எடிட்டர் அவர்களின் கட்டுரை இடம்பெறவில்லை! (சில விசயங்களில் ஏன்தான் இப்படி பிடிவாதமாய் இருக்கீங்களோ தெரியலை, எடிட்டர் சார்!)

    ReplyDelete
  84. சார் தமிழ்க் கடவுள் அருளால் கடவுளர் தேசத்தப் பார்த்தேன்..சும்மா அனைத்து வண்ணங்களயும் ஆங்காங்கே தெளித்து அற்புதத்தை கண்ணில் ஒட்டியுள்ளீர்கள் என்றால் மிகை அல்ல..ிது வரை வந்த அட்டைபடங்களிலே இதுதான் முதலிடம்...அந்தப் பெண் முகமும்..பின்னணி வண்ணக்கலவைகளும் மனதை அள்ளுது....ஸ்பைடர் முதலில் பார்த்திருந்தால் ஆடியிருப்பேன் என நினைக்கிறேன்...ஆனாலும் மிகச் சிறிய மைக்ரோ சைசும் ,ஹார்டு அட்டயும் அட்டகாசமாய் அசத்தினாலும் தோர்கள் அட்டை மெஸ்மெரிசம் செய்து விட்டது....சான்சே இல்ல...ிரண்டு அட்டைகளும் இரண்டு கண்ணாய் மாறிட...அந்த பக்கவாட்டு கிநாவும் ...சேற்றுக்குள் சடுகுடுவும் சாதாரணமாய் போய் விட்டாலும்..ஒவ்வொன்றும் வித்தாயாசம் காட்டி நிற்க..டெக்ச பிரிச்சா மேலிருந்து இரும்புக்குதிரய பார்க்கும் டெக்சின் அந்த காட்சி விசிலடிக்கச் செய்கிறது...அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் மனம் கவர்கிறது...புத்தாண்டு பரிசு மனம் கவர் விருந்து...

    ReplyDelete
  85. விஜயன் சார், உ.பதிவுக்கு அவசரம் இல்லை. நாளை இரவு போடுங்கள், புதிய வருடத்திற்கு பதிவு போட்டு தாக்கியது போல் இருக்கும்.

    ReplyDelete
  86. 2018

    வந்தனை 2018 வந்தெனை யணைத்தனை

    தந்தனை மகிழ்ச்சி பந்தெனை திளைத்தனை

    சிந்தனை பூக்களவை நிகழ்ந்தவைதனை
    விளைத்தனை

    தவந்தனை காமிக்ஸ் தந்தென்னை
    காதலுந்தனை

    ஆட்கொண்டனை கவலை களைந்தனை
    வாழ்வுந்தன்னை

    வாழ்த்துந்தனை 2018 வருடந்தனை
    தேனுந்திணை என வாழ்ந்துனை

    கசிந்துனை நினைத்தனை சௌந்தரா
    விஜயா விக்ரமரவிந்தனை

    சிந்தைகளுந்தனை நெஞ்சே கனத்தனை
    கனத்தனை கனத்தனை!!!!!!!

    காமிக்ஸ் வாழ்த்துக்கவி 2018
    அன்பன்
    J


    ReplyDelete
    Replies
    1. @ j

      அம்மாடியோவ்தனை!!! செமந்தனை!!
      அட்டகாசம் பண்ணினை!!!
      பின்னிப்பெடலெடுத்தனை!!!!

      Delete
    2. ஈ வி
      எடிட்டரோட உழைப்ப விடவா இது பெருசு

      Delete
  87. எல்லாரும் சொல்றதை வச்சி பாக்குறப்ப, எனக்கே ஸ்பைடரை (ரொம்ப வருஷம் கழிச்சி) பார்க்கணும்னு (படிக்கனும்னு) தோணுதே.

    புது வருடத்தின் வெளியீடுகளின் சர்ப்ரைஸ்கள் திக்குமுக்காட வைக்கின்றன.

    ReplyDelete
  88. அன்புள்ள அனாமதேயா அவர்களின் அன்பளிப்பை எண்ணி ஆனந்தமுடன் கூரியர் அலுவலகம் சென்றால் பார்சல் வரவில்லை என்ற பதில் கேட்டு ஏமாற்றத்துடன் 2018 க்கான புத்தகங்கள் தான் வரவில்லை சரி நிஜங்களின் நிசப்தம் 2017 க்கான புத்தகம் தானே அதுவாவது வந்துள்ளதா என பார்த்தால் அதுவும் கிடையாது. சரி அலுவலகத்தில் விசாரிக்கலாமென தொடர்பு கொண்டால் 2018 சந்தா பட்டியலில் என் பெயர் கிடையாது, நிஜங்களின் நிசப்தம் புத்தகமும் அனுப்பவில்லை என்ற பதில் கிடைத்தது. நான் ஆசிரியர் தன் பதிவில் அனாமதேயா அவர்களின் அன்பளிப்பை பற்றி குறிப்பிட்டுள்ள நாளை குறிப்பிட்டு விசாரித்தபின் ஆசிரியர் வெளியே சென்றுள்ளார்.அவர் வந்த பின் கேட்டு அனுப்புகிறோம் என்றார்கள்.
    சார் 2018 சந்தா பட்டியலில் எனது பெயர் உள்ளதா எனவும், நிஜங்களின் நிசப்தம் புத்தகம் அனுப்பப்படுமா என்று தெரிவித்தால் நலமாய் இருக்கும்.நன்றி.

    ReplyDelete
  89. அடுத்த மாதம் கூடுதல் சந்தோசமாய் ஷெல்டன் வருவக...நீண்ட நாளாய் படிச்சனா இல்லயா என தெரியாம ஏக எதிர்பார்ப்ப கிளப்பிய மர்மகத்தி ரோஜர் வருவாக....ரின்டின்...பெரியவக டெக்ஸ் வருவாக...சூப்பர்..லார்கோவ சீக்கிரம் காட்டுங்க..

    ReplyDelete