நண்பர்களே,
வணக்கம். செக்கு மாட்டைப் போல அனுதினமும் செய்து வந்த வேலைகள் தான்; ஆனால் ஒரு குட்டியான பிரேக்குக்குப் பிற்பாடு அதையே மறுபடியும் செய்யத் தொடங்கும் போது வண்டி என்னமாய் தடுமாறுகிறது என்பதைக் கடந்த வாரம் எனக்குக் காட்டி வருகிறது! திருமண ஜரூரில் முதல் 20 பக்கங்களுக்கு அப்பால் எழுத சாத்தியப்படவில்லை – “நிஜங்களின் நிசப்தம்” கிராபிக் நாவலுக்கு ! So என்னால் லேட்டாகக் கூடாதே என்ற நினைப்பில் அதனை நமது கருணையானந்தம் அவர்களிடம் ஒப்படைந்திருந்தேன் ! அவரும் எழுதியனுப்ப, டைப்செட்டிங் பணிகள் செய்து என் முன்னே மொத்தமாய் 300+ பக்கங்கள் குவிந்து கிடக்கின்றன ! அதன் எடிட்டிங்கிற்குள் நுழைந்தால் மெலிதான நெருடல் ஆங்காங்கு வசன பாணிகளில் ! கதை நடக்கும் காலகட்டத்துக்கும், அதனில் உலவிடும் மாந்தர்களுக்கும் இன்னும் லேசான கரடுமுரட்டுத்தனம் வசனங்களில் தென்பட்டால் தேவலாமென்று பட்டது ! So அதைச் செய்திட ‘லடாய்‘ ஓடிக் கொண்டுள்ளது ஒரு பக்கம் !
இன்னொருபுறமோ – மாமூலாய் நான் எழுதும் ப்ளுகோட் பட்டாளத்தின் மொழிபெயர்ப்பபு காத்திருக்க – காதில் செவிட்டு மிஷின் ஜாடைக்கு இயர் ஃபோன்களைச் செருகிக் கொண்டு, நட்ட நடு ராத்திரிகளில் கட்டபொம்மன் பாணியில் வசனங்களைப் பேசித் திரிகிறேன் !
மூன்றாவது தரப்பிலோ போட்டுத் தாக்குகிறார் தோர்கல் ! And இம்முறை ஒரே ஆல்பத்தில் 4 பாகங்கள் அடங்கியதொரு மெகா சாகஸம் என்பதால் சீனியர் எடிட்டர் வசம் அந்தக் கத்தையை ஒப்படைக்க மனம் ஒப்பவில்லை ! நமது கருணையானந்தம் அவர்களின் classical நடை – இந்த classical பாணிக் கதைக்கு அட்சர சுத்தமாய்ப் பொருந்தும் என்பதால் திருமண வேலைகளின் பளு என்னை அழுத்தத் துவங்கும் சமயமே இதையும் அவரிடம் ஒப்படைத்திருந்தேன் ! இம்முறை எடிட்டிங்கில் பெரிதாய் நோவுகளில்லை எனக்கு – ஆனால் இந்த மெகா சாகஸத்தின் sheer intensity அசாத்தியமானதொன்று என்பதை உணர முடிந்தது ! இது மாயாஜாலக் கதையா ? எதிர்காலக் கதையா ? ஒரு ஆற்றலாளனின் கதையா ? அல்லது மனித பலங்களும், பலவீனங்களும் தொடர்பானதொரு சித்தரிப்பா ? பதில் காண்பதற்குள் திக்குமுக்காடிப் போவீர்களென்பது உறுதி ! ஒன்று மட்டும் நிச்சயம் – வான் ஹாம்மே எனும் கற்பனையின் உச்ச விருட்சத்தின் நிழலில் குளிர் காய நாம் நிச்சயமாய் ஏதோ வரம் பெற்று வந்திருக்க வேண்டும் ! தோர்கலும், குழுவோடும் நாமும் மேற்கொள்ளவிருக்கும் இந்த அசாத்தியப் பயணத்தின் நிறைவில் நம்முள் பிரவாகமெடுக்கவிருக்கும் உணர்வுகளைப பட்டியலிட இப்போதே ஒரு பெரிய A4 பேப்பரையும், பேனாவையும் எடுத்து வைத்துக் கொள்ளல் நலமென்பேன் ! கற்கனைகளின் எல்லைகளை இதற்கு மேலும் நயமாய், நளினமாய், சுவாரஸ்யமாய் நீட்டிட வேறு யாருக்கும் சாத்தியமாகுமா – தெரியவில்லை !!
தோர்கலோடு பொழுதுகளைக் கழித்த கையோடு – நமது ‘தல‘ பக்கம் தலை வைத்துப் படுக்கலாமென்று புறப்பட்டால் நம்மவர்கள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள் – ‘கதை ஆரம்பம் சரியாக இருக்கக் காணோமே சார் !‘ என்றபடிக்கு! இது என்னடா புதுக் கூத்து ? என்றபடிக்கே போனெல்லியிலிருந்து வந்திருந்த டிஜிட்டல் கோப்புகளுக்குள் புகுந்த பார்த்தால் – வயிற்றைக் கலக்கும் உணர்வோடு – நம்மவர்களின் கூற்று சரியே என்று புரிந்தது. சரியாக 110 + 110 பக்கங்கள் கொண்டதொரு சாகஸம் ; 224 பக்க இதழாக வெளியிட கச்சிதமாக இருக்குமென்ற நினைப்பில் தான் இதனைத் தேர்வு செய்திருந்தேன் ! ஆனால் போனெல்லி படைப்புகளின் நதிமூலங்களும், ரிஷிமூலங்களும் அவர்களது கிராபிக் நாவல்களை விடவும் மர்மமானவை என்பதை மீண்டுமொரு முறை அனுபவத்தில் உணர்ந்திட முடிந்தது ! அந்த 110 + 110 பக்கங்களுக்கு முன்பாக இன்னொரு 41 பக்கங்களும் உண்டென்பதை போனெல்லியிடம் அவதி அவதியாய்க் கேட்டுத் தெரிந்து கொண்டேன் இரண்டே நாட்களுக்கு முன்பாய் ! “அட… ஆமாம் ! நாங்களுமே கவனிக்கலை!” என்றபடிக்கு விடுதல் பக்கங்களை நேற்று அவர்கள் அனுப்பித் தர – ‘ஙே‘ என்ற முழியோடு அதனை இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்ற நமது மொழிபெயர்ப்பாளர்களைக் குடலை உருவத் தயாராகி நிற்கிறேன் ! கிருஸ்துமஸ் நெருங்கும் சமயம் முக்கால்வாசிப் பேர் விடுமுறையில் இருக்க - தெய்வமோ ; கூகுள் மொழிபெயர்ப்பு மென்பொருளோ தான் நம்மைக் காப்பாற்றியாக வேண்டும் !
சரி, கொஞ்சம் 'டமாசான பார்ட்டியின்' புக்குக்குள் புகுந்திடலாமென்று ஸ்பைடர்காருவின் “விசித்திர சவால்” கதைக்குள் நுழைந்தால் – தலீவரின் சராமாரியான கடுதாசிகளைப் படித்தது போல் தாரை தாரையாய் கண்ணீர் ஓடத் தொடங்கியது தான் மிச்சம் ! இந்தக் கதையை ‘ஸ்பைடர் மேனியா‘ உச்சத்தில் இருந்த சமயமே ஜீரணிக்க எனக்கு டப்பா டப்பாவாய் ஜெலுசில் அவசியப்பட்டது நினைவில் உள்ளது ! பூக்கூடைகள்; பூமாலைகள்; பூச்சரங்கள் என்ற ரேஞ்சை தொட்டுக் கூடப் பார்க்காது – நேராக பூந்தோட்டத்தையே காதுகளில் மாத்திரமின்றி மூக்குகளில், வாயில், என திறந்து கிடக்கும் அத்தனை இலக்குகளிலும் கோர்த்து விட கதாசிரியர் அரும்பாடு பட்டிருப்பதைப் பார்த்திட முடிந்தது ! “ஐயா…. என்னை விட்டுடுங்கோ!” என்று கெஞ்சுவது கூர்மண்டையரின் எதிரிகள் மட்டுமல்ல என்பதில் ஏது ரகசியம் ? But இந்த டகாட்டிப் படலத்தையுமே சுவாரஸ்யமாக்கிட சின்னதாயொரு யுக்தியைத் திட்டமிட்டுள்ளேன் ! ஜனவரியில் பார்க்கலாமே – யுக்திக்குப் பரிசு முதுகில் மத்தளமா ? விரலுக்கு மோதிரமா ? என்று!
So கதை விட்டு கதை,பாய்ந்து கூத்தடித்து வரும் இந்த அனுபவத்தின் மத்தியில் கிராபிக் நாவலைத் தயார் செய்திட இன்னுமொரு நாலைந்து நாட்கள் ஓடிவிடுமென்று படுகிறது. So 25-ம் தேதி வாக்கில் இதனை மட்டும் ஒரு தனிக் கூரியரில் போடுவதற்குப் பதிலாய் ஜனவரி முதல் தேதிக்கு சகலத்தையும் pack பண்ணி விட்டால் எனக்கும் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்ள லேசாய் அவகாசம் கிடைக்குமென்று படுகிறது ! What say folks ? இந்தக் கூத்துக்கள் சகலத்துக்கும் மத்தியில் இந்தோனேஷியப் பயணம் என்றும் அவசியமாகிட, நித்தமும் ‘பாண்டியராஜன் முழியை‘ இரவல் வாங்கித் திரிகிறேன் !
And இடைப்பட்ட நாட்களில் ஒரு சந்தோஷ சேதியும் கிட்டியது – சென்னைப் புத்தக விழா 2018-ன் அறிவிப்பென்ற ரூபத்தில் ! எப்போதுமே ஜனவரியின் முதல் வெள்ளியன்று துவங்கும் புத்தக விழா இம்முறை இரண்டாம் புதனன்று துவக்கம் காண்கிறது ! சென்றாண்டைப் போலவே இம்முறையும் டபுள் ஸ்டால் எடுக்கும் ஆசை பிடரியிலேறி உலுக்க; கட்டணங்களோ தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் கொணர – ‘என்னமோ போடா மாதவா‘ moments aplenty ! ஒரு மாதிரியாய் பணத்தைப் புரட்டியனுப்பிய கையோடு நம்பிக்கையோடு காத்துக் கிடக்கிறோம் !
இம்முறை விழா ஆரம்பிப்பது ஜனவரி 10-ம் தேதி (புதன்) என்பதால் மாமூலான நமது முதல் வார இறுதியின் (வாசக) சந்திப்பில் சிரமமிருக்கக் கூடும் – simply becos அந்த சனி & ஞாயிறு பொங்கல் விடுமுறைகளோடு ஐக்கியம் ஆகிடுபவை ! So முதல் வாரயிறுதியினை அவரவர் குடும்பங்களுக்கு ஒதுக்கிட அவசியப்படும் தானே ? விழா ஆரம்பிக்கும் 10-ம் தேதிக்கே சந்திப்பைத் திட்டமிடுவதில் “வார நாட்கள்” என்ற சிரமமும் இருக்கக் கூடும் ; ஊர் திரும்பும் சமயம் பொங்கல் rush-ல் சிக்கி டிக்கெட்டுகள் கிடைக்காது திண்டாடும் சிரமங்களும் இருக்கலாம் ! What say guys ? இரண்டாவது வார இறுதியே தேவலாமா ? துவக்க நாட்களா ?
எதிர்காலத்து ஆலோசனையிலிருந்து ஒரே ஜம்பாய் கடந்த காலத்து அலசலுக்குள் இனி புகுந்திட வேண்டியது தான் ! போன வாரமே 2017-ன் highlights பற்றிய அலசலின் போது – 2017-ன் lowpoints பற்றியும் பேசிடலாமென்று promise பண்ணியிருந்தேன் ! சந்தேகமின்றி 2017-ன் மிதமான கணங்கள் – நமது ‘தல‘ கதைகள் சார்ந்த தருணங்களே என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது ! ஒவ்வொரு வருஷமுமே டெக்ஸ் கதைகளெனும் களஞ்சியத்தினுள் புகுந்து வெளியேறுவதென்பது ஒரு மூச்சிரைக்கச் செய்யும் பணியே ! நிறைய இன்டர்நெட் உருட்டல்கள் ; இத்தாலிய ரசிகர்களின் வாய்களைப் பிடுங்குவது ; கிட்டிய மாதிரிகளைப் பரிசீலிப்பது – என்று இயன்ற அத்தனை மார்க்கங்களையும் நாம் பயன்படுத்திடத் தயங்குவதில்லை ! ஆனால் சில தருணங்களில், பெருசாய், ரொம்பப் பெருசாய் மஸ்கோத்து அல்வா வாய் நிறையக் கிடைப்பதும் உண்டு தான் – 2017-ன் பல வேளைகளைப் போல! ‘Golden Tex’ என்று சொல்லப்படும் 1-200 வரையிலான கதைகளுள் நாம் அள்ளியுள்ள முத்துக்கள் ஏராளம் என்பதால் – அங்கிருந்து வலைவீசத் தொடங்குவோமே என்ற உந்துதல் இம்முறை கொஞ்சம் ஜாஸ்தி ! அதிலும் ஜுன் 2016-ல் மிலானிலிருந்த காமிக்ஸ் மியூசியத்தில் ஒரு ஞாயிறு மதியத்தைச் செலவிட்ட போது – அங்கே கண்ணில் பட்ட டெக்ஸ் இதழ்களின் பெரும்பான்மை ஆரம்ப நாட்களது சாகஸங்களே ! So “அராஜகம் அன்லிமிடெட்” & ”கடல் குதிரையின் முத்திரை” தேர்வானதெல்லாம் அந்த மதிய ஆராய்ச்சியின் பலனாய் ! அதிலும் ‘GILAS’ என்ற பெயருடனான ‘அராஜகம் அன்லிமிடெட்‘ கதைக்கு – இன்டர்நெட்டில் கண்ணில் பட்ட பில்டப்பெல்லாம் தெறிக்கும் ரகத்தில் இருக்க – பிளாஸ்திரி போட்ட சல்மான்கான் பாணியில் நம்மவரும் காட்சி தர, ‘அடிச்சேன்டா லக்கி ப்ரைஸ்‘ என்று மனம் கூவியது. ஆனால் ஆறு மாதம் கழித்து, கதையும் கிடைக்கப் பெற்று, english மொழிபெயர்ப்பும் தயாராகி நின்ற போது – “ச்சை… எனக்கு பில்டப்பே பொடிக்காது” என்று தான் சொல்லத் தோன்றியது. எவனோ சாகஸமாயொரு வில்லன் எதிர்ப்படுவான்; ‘தல‘ டிராகன் நகர பாணியில் பந்தாடுமென்று காத்திருந்தால் – திருவிழாவில் பஞ்சுமிட்டாய் திருடித் தின்னும் ரகத்திலானதொரு குண்டுப் பையன் வந்து கிச்சு கிச்சு மூட்டிச் சென்றதை ரசிக்கவே முடியலை ! அதே போல “வெறியனின் தடத்தில்” கதைக்குமே “வித்தியாசம்” என்ற முத்திரை சாத்தியமானதே தவிர – “விறுவிறுப்பு” அல்ல ! மாறுபட்ட களங்களைத் தேடுவோமே என மனம் அலைபாயும் போது இது போன்ற 'பிம்பிலிக்கா பிலாக்கிகளும்' எதிர்ப்படும் போது திகைக்க மட்டுமே முடிகிறது!
But சகலத்திற்கும் சிகரம் – தீபாவளி மலரின் disappointment என்பது தான் சோகமே ! மெகா சைஸ் ; வண்ணத்தில் – கிராபிக் நாவல் பாணியில் என்று ஏதேதோ நானாய் உரு ஏற்றி விட்டு பணிகளுக்குள் புகுந்தால் – ஒரு புதுமுக டைரக்டரின் குறும்படத்தைப் பார்த்த உணர்வே மேலோங்கியது ! “ஒரு தலைவன்…. ஒரு சகாப்தம்” – ஏதோ ஒரு மார்க்கமாய் டெக்ஸ் - கார்சன் - போனெல்லியின் முடிச்சுக்கான கற்பனையாக அமைந்திருந்தாலும் – கதை # 2 பாடாய் படுத்தி விட்டது அப்பட்டம் ! சித்திர பாணியும் செம average எனும் போது – “நான் சரியாத் தான் படிச்சிட்டிருக்கேனா? என்று நாமெல்லாமே சிண்டைப் பிய்த்தது நினைத்து ரொம்பவே சங்கடமாயுள்ளது! “மாற்றங்கள்” பெயரளவிற்கே என்றிராது – ரசனைக்குரிய மாற்றங்களாய் இருந்தால் மாத்திரமே அந்த பக்கமாய் கால்பதிப்பது என்று சூடு கண்ட பூனையாகத் தீர்மானித்துள்ளேன் ! தொடரும் நாட்களில் ‘பன்முக டெக்ஸைக் கண்ணில் காட்டுகிறேன் பேர்வழி‘ என்று ரிஸ்க் எடுப்பதை விடவும் – தெறிக்கச் செய்யும் ஆக்ஷன் களங்களையே, அவை சற்றே வாடிக்கையானதாய்த் தெரிந்தாலுமே தெரிவு செய்வதென்ற ஞானம் பிறந்துள்ளது ! அதற்காக இந்த ‘யானைப் பால்‘ குடித்தவுடனே நம் தேர்வுகள் சகலமும் இதிகாச ரகங்களுக்கு மாறிடுமென்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை ; மாறாக – ‘தாங்கலியே‘ என்றிராது என்ற மட்டிற்கும் நிச்சயம் !
And இதோ – ஆண்டின் முதல் ‘தல‘ தாண்டவத்தின் அட்டைப்பட முதல் பார்வை ! ஒரிஜினல் ஆர்ட் ஒர்க்; லேசான பின்னணி வர்ண மாற்றங்களோடு மட்டுமே ! 2018-ன் முதல் quarter-க்கு TEX ராப்பர்கள் சகலமுமே ஒரிஜினல்களாகவே இருந்திடவுள்ளன என்பது கொசுறு சேதி ! அதன் சாதக-பாதகங்களைப் பார்த்த கையோடு – தொடரும் மாதங்களுக்கான திட்டமிடல்கள் அமைந்திடும் ! முதல் பார்வைகள் சொல்லும் சேதிகள் என்னவோ guys ?
2017-ன் பாதாளத்தைப் பார்வையிட்ட பிற்பாடு – காத்திருப்பது இன்னொரு உச்சம் நோக்கிய அலசல் ! And அது “சூப்பர் 6” என்பதை நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா ? தொடரும் வாரத்தில் இந்த smash hit ஆறு இதழ்கள் பற்றிய review !
அப்புறம் நமது இரத்தப் படல முன்பதிவு நிலவரம் : இதுவரையிலும் தொட்டுள்ள எண்ணிக்கை : 313 ! ஆரம்ப நாட்களது முன்பதிவுத் துரிதம் எப்போதுமே பின்நாட்களில் தொடர்வதில்லை என்ற போதிலும் – நமது லட்சியத்தை எட்டிப் பிடிக்க தூரம் அதிகமில்லை இப்போது ! இன்னமும் முன்பதிவு செய்திருக்கா நண்பர்கள் - இனியும் தாமதம் வேண்டாமே - ப்ளீஸ் ?
சந்தாக்களைப் பொறுத்த வரையிலும் இரட்டைச் சதமே அடித்துள்ளோம் இதுவரைக்கும் ! So தொடரும் நாட்களில் இங்குமே சற்றே வேகம் எடுப்பின் – நமது பணிகளுக்குத் தொய்விலா ஊக்கம் கிடைத்தது போலிருக்கும் ! இதுவரையிலான highlight ஒன்றைக் குறிப்பிட்டே தீர வேண்டும் ! A+B+C+D என எல்லா ரகச் சந்தாக்களின் சதவிகிதம் 96% இம்முறை !!! “கார்ட்டூன் வேணாமே” என்போர் 2% ; ‘டெக்ஸ்க்கு நோ' & 'மறுபதிப்பு டவுண்‘ என்போர் தலா 1% மட்டுமே !!! ரொம்பவே சந்தோஷம் கொள்ளச் செய்த stat இது ! எஞ்சியிருக்கும் நண்பர்களும் விறுவிறுப்பாய் சந்தாக்களை செலுத்திட முனைந்திடலாமே - ப்ளீஸ் ?
மீண்டும் சந்திப்போம் guys ! Have a lovely weekend !
P.S : ஒரு ஜாலியான கேப்ஷன் போட்டி ! வெற்றி பெறுவோருக்கு ஒரு A + B + C + D சந்தா நம் அன்பளிப்பு ! அதனை அவரே பயன்படுத்திக் கொள்ளலாம் ; அல்லது யாருக்கேனும் அன்பளிப்பாகவும் transfer செய்திடலாம் ! So தயாரா ?
1st
ReplyDeleteHi
ReplyDelete2nd ஆஹா
ReplyDeleteலந்துட்டேன்
ReplyDeleteஇரவு வணக்கம் நண்பர்களே....
ReplyDeleteHi to all
ReplyDeleteI am 5 th
6th... 😊
ReplyDeleteHi
ReplyDeleteHi
Hi
Hi
Friends ..........
சார் உங்கள் முடிவைச்சொல்லுங்களேன்.இங்கத்த நெலவரம் சபரிமலைப்பயணம் ஜனவரி 6-10 விஷேச நாட்களில் விடுமுறை அனுமதி இல்லை ஆலையில்13-14-15 தேதிகளில் .@#$%^&&
ReplyDeleteஎன்ன பண்ணலாம் ஒரே குழப்பம் சார் அதனால நீங்க சொல்லுங்க .
Good morning .......
ReplyDeleteHai 8th.
ReplyDeleteவிஜயன் சார், தோர்கல் hard boundல் வந்தால் நன்றாக இருக்கும். இது பற்றி உங்கள் பதில் அறிய ஆவல்.
ReplyDeleteமாடஸ்டி பிளைசி
ReplyDeleteவாழ்க.! வாழ்க.!
Deleteவாழ்க! வாழ்க!
Deleteவாழ்க! வாழ்க!
Deleteஎப்போதும் வாழ்க
Deleteஇப்படை தோற்கின் , எப்படை வெல்லும்...??????
Deleteஇப்படை தோற்க்கின் எப்படை வெல்லும்....????
Deleteஇப்படை தோற்க்கின் எப்படை வெல்லும்....????
Deleteஅட மறந்து போச்சே நம்ம ஜூனியர்க்கு தலைபொங்கல் அவரும் வர முடியாது நம்ம வீட்டுக்குதான் விருந்தாளிகள் வருவாங்க எனக்கென்னமோ நீங்களும் இரண்டாவது வாரம் போல தெரியுது ஐயா
ReplyDeleteகொளுத்தி போட்டாச்சு
சென்னை புத்தக திருவிழா வெற்றிபெற வாழ்த்துக்கள். சென்னைக்கு இந்த முறையும் நோ!
ReplyDeleteB: டெக்ஸ் நம்மளை யாராவது கண்டுபிடிச்சுட போறாங்க
ReplyDeleteA: நீ கவலைப் படாதே. நான் தீபாவளி டெக்ஸ்னு சொல்லிடுறேன்
என்னாது தீபாவளி டெக்ஸா... நான் வரலை சாமி.
Deleteடெக்ஸ் அட்டைப்படம் அருமை. இந்த முறை அட்டையின் பின் பக்கத்தில் டெக்ஸ் பற்றிய பஞ்ச் டயலாக் மிஸ்ஸிங். ஏன் சார்?
ReplyDeleteடெக்ஸ் பின் அட்டையில் உள்ள ஒற்றைக்கு ஒற்றை படம் இதற்கு முன் நமது காமிக்ஸ் அட்டையில் வந்ததாக ஞாபகம்.
Deleteஅதே போல் முன் அட்டை சர்வமும் நானே அட்டை படத்தை நினைவு படுத்துகிறது.
Hi well come to all
ReplyDeleteநிஜங்களின் நிசப்தம் - உங்கள் விருப்பம் போல் அனுப்பி வையுங்கள் சார்.
ReplyDeleteYes sir send along with January books...
Deleteவிஜயன் சார், தோர்கல் டீசர் பக்கங்கள் நன்றாக உள்ளது. அதே போல் ஒவ்வொரு அத்தியாயத்தின் முதல் பக்கங்களும் அருமை.
ReplyDeleteகடந்த வருடம் 2017ன் அட்டவணை அறிவித்த போது வருடத்தின் முதல் கதை தோர்கலாக வந்தால் நன்றாக இருக்கும் என ஆசைப்பட்டேன். அது 2018 நிறைவேற போகிறது. சந்தோஷமாக உள்ளது.
என்னாது .....?
Delete✋
ReplyDeleteஸ்பைடர் கதையை பூ சுற்றல் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ReplyDeleteசிறுவயதில் வலை துப்பாக்கியின் செயல் திறன் கண்டு மிரண்டு இருக்கிறேன்.
---இதே வலையை கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்பைடர் மேன் சினிமாவை வாய்திறந்து பார்க்கிறோம்.
ஒரு கதையில் துளையிட்டு செல்லும் மிஷின் முலம் வில்லன் ஒரு இடத்தில் இருந்து மறு இடத்திற்கு செல்வான்.
--- அது போன்ற இயந்திரம் மூலம்தான் சென்னையில் ரயில் செல்ல தரைக்கு கீழே குகை தோன்டி இருக்கிறார்கள்.
ஸ்பைடர் மினி வெடிகுண்டு பல கதைகளில் உபயோகபடுத்தி இருக்கிறான்.
--- ஆனால் இன்று நடைமுறையில் அதைவிட சிறிய வெடிகுண்டுகள் பல உள்ளன.
இவனின் உடை நமக்கு இன்று வேடிக்கையாக தோன்றும்.
--- ஆனால் இன்று ரோட்டில் செல்லும் மனிதர்களை கவனியுங்கள்; தலையில் பெரிய ஹெட்போன், இடுப்பில் அல்லது கைபட்டையில் பெரிய மொபைலை சொருகி கொண்டு செல்கிறார்கள்.
ஆர்ச்சி யின் கோட்டை என்ற கற்பனைக்கு உருவம் கொடுத்து பல ஆங்கில படங்கள் வந்து வெற்றி பெற்று உள்ளன, அதையெல்லாம் விட தமிழில் வந்த ஒரு படம் மெகா ஹிட்.
ஆர்ச்சி மற்றும் ஸ்பைடர் கதைகளில் உள்ள பொருள் பல கண்டுபிடிப்புகளின் முன்னோடி. இவர்களின் கதைகள் பல புதிய விஞ்ஞான அனுபவங்களை கொடுத்தவை என்றால் மிகையில்லை.
எனவே ஸ்பைடர் மேன் மற்றும் ஆர்ச்சி கதைகளை பூ சுற்றல் என்று கூற வேண்டாம்.
நம்ம இஸ்பைடர் கண்டிப்பா ஒரு தீர்க்கதரிசியாத்தான் இருந்திருக்கணும்! இல்லேன்னா இன்னிக்குப் பொழுதுல மிரட்டிக்கிட்டிருக்கும் பலப்பல விஞ்ஞான கருவிகளை அன்னிக்கே கண்டுபிடிச்சுப் பயன்படுத்தியிருக்க முடியுமா?!!
Deleteஸ்பைடர் நாமம் வாழ்க!
பரணி சூப்பர் அருமையாக சொன்னிங்க
Delete+1
Deleteரோபோ: சிட்டி ரோபோ தனது எதிரிகளின் கைகளில் உள்ள ஆயூதங்களை காந்த சக்தி மூலம் பிடுங்கிய உடன் அதன் உடல் முழுவதும் ஒட்டி கொள்ளும். ஆனால் இதை எல்லாம் 25 வருடங்களுக்கு முன் ஆர்ச்சி மூலம் தெரிந்து கொண்டோம்.
Deleteஇன்று ரெய்க்கி சிகிச்சையில் distance healing கொடுக்கிறார்கள்... நமது ஸ்பைடரின் சிராசன எஸ்.எம்.எஸ்ஸை இப்போது யோசித்துப் பாருங்கள் நண்பர்களே.
Deleteபரணி அற்புதமாக சொன்னீர்கள். இதை நான் வழி மொழிகிறேன்.
Deleteஎடிட்டர் சார், இனிமேலும் ஸ்பைடர் கதைகளில் பூ சுற்றுகிறார்கள், பூ மாலை கோர்க்கிறார்கள் என்று சொல்லி கொண்டு இருக்க வேண்டாம். ஏனென்றால் ஸ்பைடர் தான் பூ உற்பத்தி செய்யும் தொழிற்சாலையே. இது நம்ம மக்கள் எல்லோருக்கும் தெரியும். அது தான் எங்களுக்கு வேணும்.
முதலில் மாயாவி, அப்புறம் ஸ்பைடர், ஆர்ச்சி. நான்(கள்) சிறு வயதிலிருக்கும்போது இந்த மூவரின் சாகசத்திற்காக ஏங்கியவர்கள். ஸ்பைடர் கதை இல்லாத மாதம்.. ச்ச்ச்சோ ஸ்பைடர் இல்லையா என்று வேறு வழி இல்லாமல் மற்ற கதைகள் படித்தவன்.
காமிக்ஸ் என்றாலே பூ சுற்றல் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் அதற்கு பதில் நியூஸ் பேப்பர் வாசிச்சிட்டு போலாமே.
எனக்கு புடிச்ச ஹீரோக்கள் யார் எனில், மர்ம மனிதன் மார்ட்டின், தோர்கள், டிலான் டாக், ஜேசன் பிரைஸ் ஆகியோர்.
டெக்ஸ் எல்லாம் ரெண்டாம் பட்சம் தான்.
SUPERB!!!
Delete24th
ReplyDeleteB: தீபாவளிக்கு வடை சுடனும் டெக்ஸ்
ReplyDeleteA: கவலை படாதே என் துப்பாக்கியால் ஒரே நேரத்தில் 100 உளுந்ந வடை சுட்டு தருகிறேன்.
B: (மனதிற்குள்) குருவி கொக்கு சுடுகிறவர்கிட்டே வடை சுடுவது பற்றி தெரியாமல் கேட்டு விட்டேன்.
25 வது.
ReplyDeleteநண்பர்களுக்கு இரவு வணக்கம்.
டெக்ஸ் அட்டைப்படம் - பட்டையைக் கிளப்புகிறது! தலைக்குமேல் பாறைகள் தடதடத்து, தாண்டிக் குதித்துத் தப்பிக்கும் இக்கட்டான தருணத்திலும் கார்ஸனின் கடைக்கண் பார்வை தன் நண்பனின் மேல் விழுந்திருப்பதுபோல வரைந்திருப்பது - படைப்பாளிகளின் சாமர்த்தியம்!
ReplyDeleteபின்னட்டையில் தல - ஸ்டைலு!
41 பக்கங்கள் கூடுதலாகக் கிடைக்கவிருப்பது "வாரே வாஹ்" சொல்லவைக்கிறது!
B: எங்க தீபாவளிக்கு வடை சுடனும் கொஞ்சம் உதவி செய்யுங்கள்.
ReplyDeleteA: மனுஷனை சுடனுமா சொல்லு செல்லம். எத்தனை பேர நாளும் சுடறேன். ஆனால் நோ வடை பிளீஸ் செல்லம். விட்டு விடு.
B: (மனதிற்குள்) கொக்கு சுடுகிற துப்பாக்கிய வைச்சுகிட்டு இவர் கொடுக்கிற அலப்பறை தாங்க முடியவில்லை.
ஆண்: நான் அப்பவே சொன்னேனே புள்ள. இந்த டெக்ஸ் ஸ்டைலுக்கு நீ மயங்கிகிருவன்னு.
ReplyDeleteபெண் : பாவி மனுஷா! ஏதோ டெக்ஸ்டைல் கடைக்கு ஷாப்பிங் கூட்டிகிட்டு போறேன்னுல என் காதுல விழுந்துச்சு??
HA HA HA:-))
DeleteCaption: டெக்ஸ்: யாரோ வர்ர மாதிரி இருக்கு, அநேகமா அது கார்ஸனாதான் இருக்கும்... பெண் (மனதுள்): வந்திருச்சா கரடி...
ReplyDeleteCaption: டெக்ஸ்: பயப்படாதே நம்ம உதவிக்கு கார்ஸன் வந்தாச்சு... பெண் (மனதுள்): என் பயமே அந்த ஆள் வர்ரதப்பத்திதானே.....
ReplyDelete2018 Jan இதழ்கள் Jan 1 அன்று எங்கள் கைகளில் இருக்கும்படி delivery செய்துவிட்டால் happy அண்ணாச்சி! எங்களுக்கும் புத்தாண்டு பரிசாக இருக்கும் நமது இதழ்கள் இருக்கும்.
ReplyDeleteடெக்ஸ் வில்லரின் முன் அட்டைப்படம் பின் அட்டைப்படம் இரண்டுமே கலக்கலாக வந்திருக்கிறது 2016 ல் காட்டிய வேகத்தை
ReplyDelete( 2017 ல் 50-50 தான்) இந்த வருடம் காட்டுவாரென்று அட்டைப்படமே உறுதி கூறுகிறது
38😊
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete39வது
ReplyDeleteகேப்ஷன் போட்டி
ReplyDeleteA.ராஜஸ்தான்ல நம்ம சக தோழன துரோகம் செஞ்சு சுட்டுடாங்க..இப்பவே போய் பழி தீர்க்கணும் அம்மணி...
B.(கண்ணு கலங்குது..போய் வா டெக்ஸ்..அதிகாரம் ஒண்ணு...)
கேப்ஷன் போட்டி:
ReplyDeleteA.நியூஇயர் வரதால எதையோ ஷீட் பண்ணனுமாம்..ஆந்தை விழியார் கூப்பிட்டிருக்காப்புல...
B.(அடப்பாவி மனுசா..அவரு புது வருஷ காலண்டர்ல போட போட்டோ ஷீட்டுக்கு கூப்பிட்டத இப்படி தப்பா புரிஞ்சுகிட்டு துப்பாக்கியோட கிளம்பிட்டியே...முடியல...)
This comment has been removed by the author.
ReplyDeleteகேப்சன்:
ReplyDeleteA.நான் ஒரு ரேஞ்சர் இருக்கேனு தெரிஞ்சும் உன்ன காயப்படுத்துவன உயிரோட விட மாட்டேன்..
B."பஞ்ச்"லாம்அப்புறம் பேசலாம் டெக்ஸ்..என் விரல போட்டு நசுக்கிகிட்டு இருக்கற காலை முதல்ல எடு..வலிலயே உயிர் போயிடும் போல..
அசத்தல் பதிவு.
ReplyDeleteA:Tex: இன்னும் சில நிமிடங்களில் சகோ. கார்சன் வந்து விடுவான் பெண்ணே. அது வரை பொறுமையாக இரு.
ReplyDeleteB: ம்ம்ம்(மனதுக்குள்)-இப்படியே இப்படியே இருந்து விடக் கூடாதா,உன் நெஞ்சில் எந்தன் முகம் பொருந்தி விடக் கூடாதா!
//
ReplyDeleteசந்தாக்களைப் பொறுத்த வரையிலும் இரட்டைச் சதமே அடித்துள்ளோம் இதுவரைக்கும் //
நமது காமிக்ஸ் பயணத்திற்கு மிகவும் முக்கியமானது நமது சந்தா. இன்னும் சந்தா செலுத்தாத நண்பர்கள் விரைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும். நண்பர்களே ப்ளீஸ்.
// 2017-ன் மிதமான கணங்கள் – நமது ‘தல‘ கதைகள் சார்ந்த தருணங்களே என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது //
ReplyDeleteவிற்பனையில் இந்த வருடம் டெக்ஸ் சாதித்தாரா இல்லையா?
இந்த வருடம் விற்பனையில் முதல் மூன்று இடங்களை பிடிப்பது யார் என தெரிந்து கொள்ள ஆசை.
சந்தேகமென்ன ப்ரோ டெக்ஸுக்கு ஓர் இடமுண்டு.
Deleteஆண்டவனின் நகரில்: அடிபட்ட ஆர்சியாவை தோர்கல் தாங்கிக் கொண்டு இருக்கும் தோர்கலின் பின்புறம் உள்ள தேவதையின் உருவம். வித்தியாசமான ஓவியம். அதே போல் background வண்ணமான (கிளி) பச்சை அந்த சூழ்நிலை சந்தோஷமாக மாறப்போகிறது என்பதை குறிக்கும் வகையில் உள்ளது.
ReplyDelete// இரத்தப் படல முன்பதிவு நிலவரம் : இதுவரையிலும் தொட்டுள்ள எண்ணிக்கை : 313 ! //
ReplyDeleteஇந்த மெகா ப்ராஜெக்ட்டை தொடங்க இன்னும் 87 பேர் முன்பதிவு செய்தால் நன்றாக இருக்கும். நண்பர்களே விரைந்து முன்பதிவு செய்யுங்களேன்.
Present Sir
ReplyDeleteக்ராபிக் நாவல் இந்த மாதம் கிடையாதா?
ReplyDeleteடெக்ஸ் : உன்னை துரத்திட்டு வந்தவங்களை விரட்டியாச்சு. இன்னும் யாராவது உன்னை பின்தொடர்ராங்களான்னு பார்த்திடலாம்..
ReplyDeleteஅந்த பெண்: துரத்தினவங்க ஓடிபோய் வெகுநேரமாச்சு.இன்னும் யாராவது வர்ராங்களான்னு பார்க்கலாம்னு ரொம்ப நேரமா தடவிட்டு இருக்காரே...இவர்கிட்டேயிருந்து என்னை யாராவது காப்பாத்தனும் போலிருக்கே....
சூப்பர் சார்.
Deleteடெக்ஸ் வில்லரையும் உங்களை மாதிரியே நினைச்சுட்டீங்ளே சுந்தர்..!! :)
DeleteCaption 1
ReplyDeleteA : கவலையை விட்டொழி பெண்ணே! உன்னை காதலித்து ஏமாற்றிய கயவன் யாராயிருந்தாலும் தேடிப்பிடித்து உன்னுடன் சேர்த்து வைக்கிறேன்.!
B : (மைண்ட் வாய்ஸ்) அந்தக் கயவன் கிட் கார்சன்தான் என்று தெரியவரும்போது, டெக்ஸ் இதே உறுதியோடு இருப்பாரா கடவுளே ..!
Caption 2
ReplyDeleteA : ஒரு ஊரே கொலைவெறியோடு உன்னைத் துரத்திட்டு வர்ரங்களா? நானிருக்கும் வரை உன்மேல் ஒரு தூசிகூட படவிடமாட்டேன் ..கவலைப்படாதே.!
B : (மைண்ட் வாய்ஸ்) நான் சமைச்ச விருந்தை சாப்பிட்டுட்டு முப்பதுபேர் முடியாம கிடக்குறாங்க.. பத்துபேத்துக்கு பேதியாயிடுச்சி , இதையெல்லாம் எப்படி இவர்கிட்ட சொல்றதுன்னு தெரியலையே ! அதைவிட பெரிய சங்கடம் என்னன்னா, இவரும் அதே விருந்தைத்தான் சாப்பிட்டிருக்காரு .. எப்போ எந்திரிச்சி ஓடப்போறாரோ!
எதுக்கு எந்திரிச்சு ஓடணும்றேன்?!! :D
Delete///எதுக்கு எந்திரிச்சு ஓடணும்றேன்?!!///
Deleteஅந்த பத்துபேத்துக்கு 'பின்னாடி ' பதினோறாவது ஆளா சேந்துக்கத்தான்..!! :)
எங்களின் தீபாவளி டெக்ஸ் ஏமாற்றத்தை தெளிவாக்கி விட்டீர்கள் சார்..
ReplyDeleteஅப்படியே இரண்டாவது ஏமாற்றமான சி்சி்வயதில் பற்றி...!
வாவ்...கேப்ஷன் போட்டிக்கு பரிசு ஒரு வருட சந்தாவா ..
ReplyDeleteசூப்பர் சார்..
சொக்கா ..சீக்கிரம் ஏதாவது எழுதிட்டு எங்கிட்ட வா....
மாத்தியோசி-257
ReplyDeleteSooper Mayavi sir...
Deleteமாத்தியோசி-258
Deleteமாத்தியோசி-259
Deleteமாத்தியோசி-260
Deleteபோட்டிகாண்டி..
ReplyDeleteம்....சொல்லு..யார் தடுத்தாலும் நீ விரும்பியவனையே கட்டி வைக்கிறேன் லலித்..
லலித் இறந்து இத்தனை வருடமாகியும் அவளை மறக்காம இருக்காரே இவரை கட்ட தான் ஆசைப்படுறேன்னு எப்படி சொல்லுவேன் ஆண்டவா..இவர் வீர புருஷர் மட்டுமல்ல உத்தம்புருஷரும் கூட
இது சீரியஸ் வசனுத்துகான்டி...
Deleteகாலை வணக்கம்
ReplyDeleteடெக்ஸ் :
ReplyDeleteபயப்படாதே கார்லா
கார்சனிடம் இருந்து நான் உன்னை
காப்பாற்றுகிறேன்.
கார்லா : கார்சனைக்கண்டு பயமில்லை
ஆனால் அவருக்கு வறுத்தகறி சமைத்தே
எனக்கு வயசாவதை நினைசாத்தான்
பயமாஇருக்கு.
ம்...சொல்லு யாரு தடுத்தாலும் நீ விரும்பியவனையை கட்டி வைக்கிறேன் லலித்
ReplyDeleteலலித் இறந்து இத்தனை வருசமாகியும் இன்னும் மறக்காம இருக்காரே ..இவரை கட்ட தான் ஆசைப்படுறேன்னு எப்படி சொல்லுவேன் ஆண்டவா..
இவர் வீர புருஷர் மட்டுமல்ல என் புருஷன் மாதிரியே உத்தம்புருஷனும் கூட...
இது காமெடி வசனத்துக்கான்டி..:-)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇல்லத்தரசிகளின் விருப்பமாக உள்ள தோர்கல் கதையில் சென்சார் கவனம் தேவை சார்...அத்தியாயம் 2 அட்டை படத்தில் சென்சார் குறைபாடு உள்ளது..இதை பார்த்தால் புத்தக விழாவில் வாங்குவதற்கு தயங்குவார்கள்..
ReplyDeleteமேலும் தோர்கல் பற்றி ஒரு தவறான கண்ணோட்டம் உருவாக வழிவகுத்து விடும் பிரிண்ட் செய்யும் போது இது சரிசெய்ய பட்டுவிடும் என்று நம்புகிறேன்..
///அத்தியாயம் 2 அட்டை படத்தில் சென்சார் குறைபாடு உள்ளது///
Deleteதகவலுக்கு நன்றி ஜி! :D
This comment has been removed by the author.
Deleteதலையில்லா போராளி சைஸானது, உண்மையிலே அதற்கு மட்டுமே முழு அளவில் நியாயம் செய்தது.
ReplyDeleteஓவியரின் நேர்த்தியான, உயிரோட்டமான, சித்திரங்கள் அந்த சைஸிற்கு மேலும் மெருகூட்டியது.
ஓவியங்களையும் தாண்டி கதையும் திகில், சஸ்பென்ஸ், த்ரில்லர் , ஆக்ஷன் என சரிவிகித பாணியில் அமைந்து அஅதை மறக்க இயலா ஓரு Master piece ஆக உருமாற்றியது.
சுமாரான சித்திரங்களை இந்த சைஸிற்கு வருங்காலங்களில் வடிவமைக்காமல் இருப்பதே தலையில்லா போராளிக்கு சைஸிக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்.
+1
Deleteசெம & உண்ம!
பெருமாள் அருமையான கருத்து
Deleteஇந்த கதை சித்திரம் மற்றும் கதையில் டாப். ஆனால் புத்தக அளவில் எனக்கு உடன்பாடு இல்லை.
Delete1. இது போன்ற அளவில் வரும் புத்தகங்களை பராமரிப்பது கடினம். இல்லை என்றால் hard boundல் தர வேண்டும்.
2. இந்த கதை நமது லார்கோ மற்றும் ஷெல்டன் கதை புத்தகம் அளவில் வந்தால் சித்திரங்கள் இன்னும் சிறப்பாக ரசிக்கும்படி இருந்து இருக்கும்.
3. நமது புத்தகங்கள் பல அளவில் வருவதற்கு பதில், குறிப்பிட்ட இரண்டு அல்லது மூன்று அளவில் மட்டும் வருவது நன்றாக இருக்கும். உதாரணமாக கருப்பு வெள்ளை கதைகளுக்கு ஒரு அளவு, வண்ணத்தில் வரும் கதைகளுக்கு ஒரு அளவு.
கேப்சன்4:
ReplyDeleteA.எதிரி கண்ல மண்ண தூவி பதுங்கி போய் உயிர பட்டுவாடா எடுக்கறதுல எங்க டீம்தான் உலகத்துலயே பெஸ்ட்டாக்கும்...
B.ம்க்கூம்...இவரு ஆர்கே நகர் பக்கம் போனதில்ல போல..
எதிர்ல வர்ற எட்டு பேத்தையும் என் துப்பாக்கில இருக்குற ரெண்டு குண்டால சுடனும் ம்ன்னு சொல்லு ...
ReplyDeleteநீ ஒத்த குண்டை வச்சு எட்னூறு பேரை சுட்டு சீன் போட்டாலும் கார்சனை தவிர வேறு யாரையும் மனசால கூட நினைக்க மாட்டேன் டெக்ஸ்.தெரிஞ்சுக்கோ
டெக்ஸ் உங்களுக்கு என்னிக்குமே அழிவில்லை...
ReplyDeleteஎப்படி சொல்ற ப்ரோ..
க்கும்...வருசகணக்காகியும் உங்க துப்பாக்கில இருக்குற தோட்டாவுக்கே இன்னும் அழிவு வரலை உங்களுக்கு எப்படி வரும்
டெக்ஸ் :
ReplyDeleteபயப்படாதே கார்லா
கார்சனிடம் இருந்து நான் உன்னை
காப்பாற்றுகிறேன்.
கார்லா : கார்சனைக்கண்டு பயமில்லை
ஆனால் அவருக்கு வறுத்தகறி சமைத்தே
எனக்கு வயசாவதை நினைசாத்தான்
பயமாஇருக்கு.
கேப்சன்5:
ReplyDeleteA.அடிபட்டு கிடக்கற உன்ன கூட கவனிக்காம இந்த கார்சனும் கிட்டும் எங்கதான் போனாங்களோ?
B.(தல பொங்கலுக்கு போனா பொங்க சோறு தான் கிடைக்கும்னு தெரியாம வறுத்தகறி பீன்ஸ்க்கு ஆசப்பட்டு சிவகாசி பக்கம் போய்டாங்கனு எப்படி சொல்லுவேன்...)
///A+B+C+D என எல்லா ரகச் சந்தாக்களின் சதவிகிதம் 96% இம்முறை !!! “கார்ட்டூன் வேணாமே” என்போர் 2% ; ‘டெக்ஸ்க்கு நோ' & 'மறுபதிப்பு டவுண்‘ என்போர் தலா 1% மட்டுமே !!! ரொம்பவே சந்தோஷம் கொள்ளச் செய்த stat இது !///
ReplyDeleteஅட்டகாஷ் ..!!
அந்த ரெண்டு பர்சண்ட்டும் ஜீரோ ஆயிடுச்சின்னா ரொம்ப சந்தோஷ் ..! :)
கேப்சன்6:
ReplyDeleteA.70 வருஷமா நிறைய கதைல வந்ததால இந்த சீன்ல என்ன பேசுனோம்னு மறந்தே போச்சு...உனக்கு ஞாபகம் இருந்தா சீக்கிரம் சொல்லு..ஏதோ கேப்சன் போட்டியாம்..ஜெயிச்சா ஒரு வருச சந்தாவாம்..எழுதி அனுப்பனும்..
B.(அடப்பாவி மனுசா...)
அதோ அங்கே தூரத்துல வர்றவன் தான் உன் எதிரியா பெண்ணே...?
ReplyDeleteஇவ்வளவு பக்கத்துல இருந்தும் நீயே டெக்ஸா டெக்ஸ்மாதிரியான்னு தெரில..அவ்ளோ தூரத்துல இருக்குறவனை நான் என்ன சொல்றது.
ஆ....என்ன உன்னை துரத்திட்டு வர்றது கார்ஸனா நம்பவே முடியலையே..!!!
ReplyDeleteஇன்னுமும் அவருக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைக்கலைன்னா "பாட்டிம்மா" க்களை கூட துரத்திட்டு போவாரு ஜாக்கிரதை டெக்ஸ்..
வாவ் 2018 முதல் ரிலீஸ் தோர்கள், ஸ்பைடர் கதைகளை.. சூப்பர். டெக்சின் அட்டைப்படம் பிசிறு கிளப்புகிறது.
ReplyDeleteபழையது:
பனியில் ஒரு நாடகம் - ரிப் கிர்பி சாகசம். ரிப்பின் தோழியின் அம்மா ஒரு கிளெப்டோமேனியக். பிடித்த பொருளை திருடி செல்லும் மன நோய். அவள் ஒரு கோட்டை திருடி விட. கோட்டுக்குள் இருக்கும் நவரத்தின மாலையை தேடி கயவன் வர, அம்மாவை தேடி பிடிக்க ரிப் வர ... இது அனைத்தும் நடப்பது ஒரு பனி புயலில் என்று இந்த இதழ் சிக்ஸர் அடித்து இருக்கிறது.
ஊரே திரண்டு வந்தாலும் உன் மேல அவங்க நிழல் கூட படாது பயப்படாதே பெண்ணே...
ReplyDeleteஊர்ல இருக்குற எல்லோர் வீட்டு பெட்டகத்தையும் நான் தொட்டதால தான் துரத்திட்டு வரானாகன்னு இவருக்கு தெரியுறதுகுள்ள எஸ்கேப் ஆகனுமே...ஆண்டவா..
இந்த முறை சென்னை புத்தக கண்காட்சி attend பண்ண try பண்றேன். But friends ‘ meeting date இன்னும் confirm ஆகாத காரணத்தால் லீவுக்கு ministery approval கிடைப்பது சந்தேகமே ( 1 month for processing). பார்ப்போம்! இல்லாவிடின் ஈரோட் புத்தக கண்காட்சிதான்!
ReplyDeleteதளத்திற்க்கு நல்வரவு அருமைத்தம்பி
Deleteபிரசன்னா.
தளத்திற்க்கு நல்வரவு அருமைதம்பி
Deleteபிரசன்னா. 🌺🌺🌺🌺🌺🎂🎂🎂🍰🍰🍰
தளத்திற்க்கு நல்வரவு அருமைதம்பி
Deleteபிரசன்னா. 🌺🌺🌺🌺🌺🌺
🎂🎂🎂🎂🍰🍰🍰🍰🍎🍎🍎🍎🍉🍉🍉🍉
நல் வரவு பிரசன்னா ஜி
Delete@ Prashenna R Madhu
Deleteநல்வரவு நண்பரே! கே.வி.கணேஷ் ஜி உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருக்கிறார். ஒருவேளை CBFல் சந்திக்க வாய்ப்பில்லையெனில், EBFல் உங்களைச் சந்திக்க ஆவலாய் இருந்திடுவோம்!
நன்றி நண்பர்களே!
Deleteநிச்சயம் ஈரோட் விஜய். நானும் தான் அனைவரையும் சந்திக்க ஆவலாய் உள்ளேன். இங்கு ஏதேனும் friends meet date 2 or 3 நாளில் confirm ஆனால் எனக்கும் இலகுவாக இருக்கும். பார்ப்போம்!
Caption'னில் இருப்பவர் முகம் டெக்ஸ் வில்லரை போல இல்லையே... புருவங்கள் சற்று அடர்த்தியாகவும், நெருக்கமாகவும் இருக்கின்றனவே... யார் அவர்?
ReplyDeleteஒருவர் அல்ல பலநூறு பேர் வந்தாலும் குதிரையில் வந்தாலும்..,புகைவண்டியில் வந்தாலும் திட்டம் போட்டு உன்னை கடத்த வந்தாலும் ,அதற்கு எங்கள் கூட்டத்தில் உள்ளவர்களே யாராவது "ஸ்லீப்பர் செல்" லாக மாறினாலும்...
ReplyDeleteஸ்டாப்...ஸ்டாப்...எதிரிக வந்தாங்களா பட்டுன்னு ரிவால்ரை எடுத்துட்டு பொட்டுன்னு சுட்டுட்டு வழக்கம் போல போயிட்டே இருங்க ..இப்படி கிராபிக் வசனம் பேசிட்டு இருந்தா உங்களையும் டைகர் மாதிரி மறுபதிப்புல தான் பாக்கனும் .பி கேர் புல் ..
ஆமா ..ஆமா ...அதுவும் உண்மை தான் ..போன தீபாவளிக்கே தெரிஞ்சது மறந்துட்..
*டுமீல்*
(சுட்டது டெக்ஸா எதிரியா பார்வையாளர்களின் முடிவுபடி ..
இதாங்க லேட்டஸ்ட் பார்முலா ..என்ன பன்றது)
A - நாந்தான் டெக்ஸ் வில்லர்.இனிமே நீ கவலபட தேவையில்லை.
ReplyDeleteB - அதான என் கவலையே. இதுவரைக்கும் உங்கள மாதிரியே தொப்பி வச்சு டிரஸ் போட்டு துப்பாக்கி பிலிம் காட்ன பத்து பேர பாத்துட்டேன்.
பத்து பேரை பாத்த பத்மினி வாழ்க
Deleteகணேஷ். அந்த அர்தத்தில சொல்லல.
Deleteஒரே ஒரு டெக்ஸ் தான். ஆனாக்க ஓவியர்கள் பத்து மாதிரியா வரைஞ்சு😢 ஆறு வித்தியாசம்☺ பாக்க வச்சிட்றாங்க.
கேப்சன்7:
ReplyDeleteB.(என்ன ஓடுறவங்கள சுடாம யோசிச்சுகிட்டே இருக்கறாரு)..டெக்ஸ்!
A.கொஞ்சம் இரும்மா..போனல்லி இன்னும் ரெடி,ஆக்சன் சொல்லல...
Caption 3
ReplyDeleteA : நீ குளிக்கும்போது கதவை திறந்து எட்டிப்பார்த்தது யாருண்ணு சொல்லு .. அது யாரா இருந்தாலும் சுட்டுப் பொசுக்கிடுறேன் .. வருத்தப்படாதே ..!
B : கார்சன்தான் எட்டிப்பாத்தாரு ..! எனக்கு அதுகூட வருத்தமில்லீங்க .. முகத்தை அப்பாவிமாதிரி வெச்சிக்கிட்டு .. இந்த வழியாப்போனா கலிபோர்னியா வருமான்னு கேட்டாரு பாருங்க .., அதைத்தான் தாங்கமுடியலே ..!!
செம்ம கிட் ஆர்ட்டின்
Deleteஎன்ன பண்றது.
Deleteஅந்த லட்சணத்தில இருந்திருக்கும்.
😜😜😜😜😜😜
நான் யாரு...
ReplyDeleteநான் யாரு....
கொய்யால நான் யாரு...
நான் யாரு....
அதானே எனக்கு வந்த சந்தேகம் தான் உனக்குமா ...அப்ப நீ டெக்ஸ் இல்லையா...
B - என்னதான் மயங்கி விழுகிற மாதிரி நடிச்சாலும், பாக்கெட்ல இருந்து பணத்த எடுத்து என் பேர்ல தனிச் சந்தா கட்ட மாட்டாங்குறாரே மனுசன், சே A - நானே சந்தா கட்ட எவனயாச்சும் வழிப்பறி செய்யலாம்னு பார்த்தா, இவ வேற மயங்கி விழுந்து உயிரை வாங்குறாளே,
ReplyDeleteகேப்சன் : 1
ReplyDeleteA : கவலைப்படாதே கண்ணே! நான் உன்னோடு இருக்கும்வரை உனக்கு தீங்கும் நேராது!
B : ஆஹா! இவரது அருகாமையே எனக்கு எத்தனை பாதுகாப்பு உணா்வைத் தருகிறது!
சின்ன பிழை திருத்தம்
Delete///கேப்சன் : 1
A : கவலைப்படாதே கண்ணே! நான் உன்னோடு இருக்கும்வரை உனக்கு ஒரு தீங்கும் நேராது!
B : ஆஹா! இவரது அருகாமையே எனக்கு எத்தனை பாதுகாப்பு உணா்வைத் தருகிறது!///
என்னையே புடிச்சுட்டு இருக்கிறதை விட்டுட்டு எதிரியை துரத்தி போய் சுடுங்க டெக்ஸ்..
ReplyDeleteகண்ணா ச்சே கண்ணி ..
எதிரிக தான் நம்மளை தேடி வரணும் .,நாம எதிரிகளை தேடி போ க கூடாது..
ஓ...நீங்களும் ஹாலிவுட் படத்தை பாக்குறதை விட்டுட்டு தமிழ்படம் பாக்க ஆரம்பிச்சுட்டீங்களா..
எதிர்ல வர்ற எட்டு பேத்தையும் என் துப்பாக்கில இருக்குற ரெண்டு குண்டால சுடனும் ம்ன்னு சொல்லு ...
ReplyDeleteநீ ஒத்த குண்டை வச்சு எட்னூறு பேரை சுட்டு சீன் போட்டாலும் கார்சனை தவிர வேறு யாரையும் மனசால கூட நினைக்க மாட்டேன் டெக்ஸ்.தெரிஞ்சுக்கோ
டெக்ஸ்; கவலைப்படாதே பெண்ணே அவர்களை விரட்டிவிட்டேன்.உன் மானம் காப்பாற்றப்பட்டுவிட்டது.தர்மம் ஜெயிக்கும்.
ReplyDeleteB(பெண்); இப்படியே டயலாக் பேசிக்கொண்டு நீயே என் மானத்தை வாங்கி விடாதே.என் கீழாடை தளர்ந்துள்ளது முதலில் விடு என்னை.
கேப்சன்;
ReplyDeleteA:கவலைப்படாதே டியர் எமனே வந்தாலும் உன்னை நெருங்க விடமாட்டேன் நான் எமனுக்கு எமன்!
B:(மனதில்)எப்படி நெருங்குவான் அடிக்கிற கப்புல மயக்கமே வருதே.குளிச்சு எத்தன மாசன்டா ஆச்சு?
கேப்சன் மாடர்ன் டைப்:
ReplyDeleteமாடர்ன் டெக்ஸ் A - இந்தப் பொண்ணு ஆதார் கார்டை எடுத்தது யாரு?. ஒழுங்கா குடுத்துட்டா நல்லது.இல்லைன்னா கேஸ் சிலிண்டர் மானியம் அடுத்த பிறவியில வாங்குற மாதிரியாயிடும்.கார்சன் 🍗 இவங்க செல்போன் எல்லாத்தையும் பிடுங்கி ஜியோ ல இருந்து Airtel க்கு மாத்திடு.
கர்லா B : டெக்ஸ் கொஞ்சம் பொறுங்க.சுப்ரீம் கோர்ட்டே ஆதார்கார்டை கட்டாயப்படுத்தி கேக்ககூடாதுன்னு சொல்லிருக்கு டெக்ஸ்.அப்புறம் UIDAI- Airtel bank க்கு தடை போட்டுட்டாங்க.
மாடர்ன் டெக்ஸ் A : அப்படீன்னா எல்லாரும் நடங்க. ஆர் கே நகர் தேர்தல் ஆபீசர்- முத்துசாமி ரேஞ்சர்ட்ட உங்கள ஒப்படச்சிட்டா போச்சு.உங்கள சுயேச்சையா போட்டியிட வச்சிடலாம். இவங்க வேட்புமனு ஏற்பு-இல்லை-மறுபடியும் ஏற்பு-இல்லை ன்னு சொல்லியே இவங்களை கொன்னுடுவாரு.
B - டெக்ஸ் இப்ப சொன்னீங்களே அது அது சூப்பர்.செத்தாங்கே அப்ரசண்டிங்க எல்லாரும்.
A - எலக்சன்ல உன்னை கள்ள ஓட்டு போடச்சொல்லி கட்டாயப்படுத்தின அந்த வெளிமாவட்டத்து ஆள் யாரு!!!!
ReplyDeleteB - என் பேரு போலி வாக்களர் பட்டியல்ல சேர்த்து கவுத்துட்டாங்க டெக்ஸ்.
A - கவர்னர் இவங்க ரேசன் கடையை ஆய்வு நடத்த வர்றார்னு சொன்னது யாரு.
ReplyDeleteB - அதுமட்டுமில்லாம , கிலோ 180/- ரூபாய் செலவுபண்ணி நான் வாங்கி வச்சிருந்த சின்ன வெங்காயத்தையும் களவாண்டுட்டாங்க டெக்ஸ்! விடாதீங்க.
A- ஙே! ஙேங்கங்ஙே!!!!!!
A - மூச்சில்லயே..சுப்பல்லோலோ ஆஸ்பத்திரியில சேத்தா போதும்.காப்பாத்திடுவாங்க!!!!!
ReplyDeleteB: (அரை மயக்கம்) -அப்ப 75 நாள் தான் உயிரோடிருப்பேனா டெக்ஸ்.
ஹா...ஹா...
Deleteஜணார்த்தனன் சார் சூப்பர்
DeleteA:மிஸ், கேப்சன் போட்டியில A+B+C+D பரிசுக்கு நீங்க தான் செலக்டட்.
ReplyDeleteB: அதனால தான் மயக்கமாயிட்டேன் டெக்ஸ். உங்க கதைகள டொக்ஸ் ஆக்காம இருந்தா போதும்.
A - மிஸ்.என் கதைகள் அப்டி இப்டி எப்டி இருந்தா என்ன.12 வெரைட்டிய வெரட்டி வெரட்டி போட்ருவோம்
B - மறுபடியும் முதல்லருந்தா*******
A - குண்டூ புக்ஸ் தனி சந்தா F னு சொன்னதும் மயக்கமாயிட்டா.
ReplyDeleteB - எடிட்டர் உறுதியா சொல்லட்டும்
A - அவரு எப்ப சொன்னோம்னு யோசனை பண்ணீட்டே இருக்காரு.
B - எலக்சன் ஸ்பெசல்ன்னு பேர் வைக்க சொல்லிடலாம் டெக்ஸ்.
A - பிள்ளை பிறக்கிறதுக்கு முன்னே எப்டி பேர் வைக்கிறது.சந்தா பட்ஜெட் இடிக்கும் .
B - Think it of guys ன்னு சொல்லி கேட்டா போச்சு.
A - அரிசோனா வெயில் அப்டிதான். அபாச்சே மாதிரி பிடிவாதமா நட.
ReplyDeleteB - செல்லூர் சயின்டிஸ்ட் அரிசோனா பாலைவனம் முழுசும் மழை மேகங்கள செல்லோடேப் ஒட்டி நிறுத்தி , ஓகி புயல டேபிள் பேன் வச்சு ஊதி இங்க டேமேஜ் பண்றதா உறுதி பண்ணியிருக்காராம்.
A - இப்டி செலவு பண்ற பணத்தில எல்லா லைப்ரரிக்கும் லயன் முத்து சந்தா கட்டிடலாமே.
B - மக்கும். கார்சன் கூட வறுத்த கறி வேணாம்பாரு.இது நடக்குற காரியமா.
A; பார்த்தியா கேப்ஷன் போட்டி என்றாலே என் படத்தை போட்டு தான் எழுத சொல்வார் நம்ப எடிட்டர்.
ReplyDeleteB: அட மங்குனி மாமா நம்ப காமிக்ஸ் நாயகர்களில் உன்னை மட்டும்தான் எப்ப வேணும்னாலும் எப்படி வேண்டுமானாலும் கலாய்க்க கூடிய காமெடி பீஸ் நீங்கதான் என்று இன்னுமா தெரியவில்லை?
கேப்ஷன் போட்டி
ReplyDeleteA:-GUN னும் என்னதுதான்
பொண்ணும் என்னதுதான்
B:-தெய்வமே!
Matrimonial ல விண்ணப்பித்த
கார்ஸன் என்பவர்
இவராகத்தான் இருக்கணும்.
அருமை.
Deleteஅருமை.
Deleteசெம
DeleteB. அன்பே ரோஹித் சர்மா திருமண நாள் பரிசாக 200 ரன் அடித்து அமர்களப்படுத்தினாரே . நீங்க எனக்கு என்ன தரப்போறீங்க
ReplyDeleteA. ஒரு 200 பேரை சுட்டு அவுங்க பாடியை அடுக்கி வைக்கிறேன். அடடா மயங்கிட்டாளே.
B. அன்பே ரோஹித் சர்மா திருமண நாள் பரிசாக 200 ரன் அடித்து அமர்களப்படுத்தினாரே . நீங்க எனக்கு என்ன தரப்போறீங்க
ReplyDeleteA. ஒரு 200 பேரை சுட்டு அவுங்க பாடியை அடுக்கி வைக்கிறேன். அடடா மயங்கிட்டாளே.
Super
Deleteஅருமை
Deleteசந்தா எண்ணிக்கை வருத்தம்! ஆனால் % பேக்ட் சின்ன ஆச்சரியம்! அடுத்த வருடம் ஏபிசிடினு விளையாடாம, ஒரு சேஞ்சுக்கு ஒரே சந்தாவா போட்டுடலாமோ? :-))
ReplyDeleteதோர்கல் ரேப்பர் (அத்:3) ஒரு கிளாஸிக் ரேப்பராக அமையும் போலிருக்கிறது. அட்டகாசம்!
இரத்தப்படலம் விரைவில் நனவாகவிருக்கும் சேதி, நம் பயணத்தின் இன்னொரு அத்தியாயம்!
ரீபிரிண்ட் சந்தாவ காக்டெயில் ஆக்கினால் வேற வழி இல்லாம கட்ட வேண்டியதா போய்டுச்சு சாரே... மீண்டும் மும்மூர்த்தி மட்டுமே என்றிருந்திருந்தால் எஸ்கேப் ஆகியிருந்திருப்பேன்.... என்னைப் போல் எத்தனை பேரோ :-)
DeleteA..தூரத்துல கார்சன் குதிரையோட வர்ர மாதிரி தெரியுது அன்பே ..கிளம்பலாம் ரெடியாகு..........B..என்னது கரடி குதிரைல வருதா ..சிறுசுக சந்தோசமா இருந்தா பிடிக்காதே கெழத்துக்கு
ReplyDeleteA :
ReplyDeleteசக்ஸஸ்!!! சக்ஸஸ்!!! .
எதிர்பாத்த மாதிரியே, எடிட்டர் உட்பட எல்லாரும் நான்தான் 'டெக்ஸ் 'னு நம்பிட்டாங்க.
இது போதுமே. ரேஞ்சர்ஸ் ஆபிஸ்ல இதயே ஆதாரமா வச்சாக்கா மாச மாசம் ரேஞ்சர்க்கான பென்ஷன் பணம் வந்திடும்.கூடவே ரெண்டு குதிரையும் இனாம தருவாங்க. அது போக ரயில்ல, கப்பல்ல ஓசில பிரயாணம் பண்ணிக்கலாம். அதுவுமில்லாம எந்த ஊருக்குப் போனாலும், அந்த ஊரு ஷெரீப்கிட்ட கைச்செலவுக்கு பணமும் வாங்கிக்கலாம்.ஓட்டல்ல, பார்ல நமக்கு எல்லாமே இலவசம்தான். காந்தக் கண்ணழகி! இனிமே நமக்கு ராஜவாழ்க்கைதான்.
'ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி!
கோடை மழை மேகத்தைக் கண்டு,
ஆடும் மயிலே வா! '
B :
ஆஹா... சின்னத்தம்பி பாட ஆரம்பிச்சிட்டாரே.மயக்கம் வர்ற வரைக்கும் நிறுத்த மாட்டாரே. கடவுளே!!
புது வருடத்தின் முதல் கதையே அருமையான தேர்வாக அமைந்தது பாராட்டுக்குரியது.
ReplyDeleteதோர்கலின் ஒவ்வொரு அட்டைப்படமும், நேர்த்தியோடும், ஜீவனோடும், கலைநயத்துடன் ஆயிரம் செய்திகளை உள்ளடக்கி, உற்சாகத்தை எகிற வைக்கிறது.
டெக்ஸின் அட்டைப்படமோ பொறி பறக்கிறது, ஒரிஜினல் அட்டைப்பபடம் எனும் போது, அதன் வீரியம் இன்னும் அதிகரிக்கிறது.
முதல் மாதத்தின் அட்டைப்படங்களிலேயே ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது.
உண்மை....
Delete(A)TEX : "இந்த ப்ளாக்'லே வந்திருக்குற எல்லா கேப்ஷனையும் படிச்சிப்புட்டு அந்த லயன் காமிக்ஸ் ஓனர் 2019'லே கார்ட்டூன் சந்தாவுலே என் கதையை போட்டுட்டார்னா பெரிய வம்பா போயிடும்... கொஞ்சம் இரும்மா! இந்த ப்ளாக்லே கேப்ஷன் போட்ட அத்தனை பயலையும் போய் சுட்டு தள்ளிட்டு வந்துடுறேன்... இனி கேப்ஷன் போடுறதுக்கு எவனும் இருக்க கூடாது."
ReplyDelete(B)LADY: "ம்ஹூம்!! 'அடிக்கிற கைதான் அணைக்கும்'ங்குற பழமொழி கௌபாய் மூளைக்கு எங்கே புரிய போகுது!!"
ஆக யாருமே புத்தக திருவிழா பயணத்திட்டத்தை சொல்ல மாட்டிங்க ...?
ReplyDeleteபுரியுது
அப்பாடா! அப்போ பெரிய அளவில் யாரும் சொல்லலானாலும் atleast இப்போவாவது நம் சகோக்கள் Tex தீபாவளி மலர் சரி இல்லனு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி! நன்றி! நன்றி!
ReplyDeleteநான் முன்னமே நம்ம விஜயன் பாஸ்கிட்ட சொன்ன மாதிரி எனெக்கெல்லாம் அந்த ரெண்டாவது கதையை படிக்கும்போது...ஐஐயோ.... என்னடா இது நம்ம தல "புலி" வேஷம் போட்டுட்டு வந்துருக்காருனு ஒரே கருக்குனு ஆயிப்போச்சு !
சோ மறுபடியும் நான் அப்போவே சொன்ன மாதிரி தீபாவளிக்கு மட்டுமாவது கண்டிப்பாக ஒவ்வொரு முறையும் ஒரு "சர்வமும் நானே" range கதைதான் வேணும்!
On the positive side ..... "ஒரு தலைவன் ஒரு சகாப்தம்" கதை ஆவேரேஜ் ஆக இருந்தாலும் கார்சன் பாணில சொன்ன மாதிரி வந்தது கொஞ்சம் வித்யாசமாக இருந்தது! அதுவும் ஒரு டாக்டர் கார்சன் ஏதோ வயசாகி ஒளர்ராரு...எல்லாம் அவர் கற்பனைன்னு சொன்னப்போ.....கொஞ்சம் 'சுருக்னு' ஆகி போச்சு.....இது ஏற்கனவே தெரிஞ்சது தான் என்றாலும், இந்த காட்சியை படிக்கும் போது..... 'என்னது.....tex கார்சன் எல்லாம் கற்பனையா ? அப்போ அவங்க எல்லாம் நிஜம் இல்லையானு' மனசுல ஒரு சோகம் வந்தது எனக்கு மட்டும்தானா....இல்ல நம் சகோக்கள் சிலருக்கும் இந்த ஏமாற்றம் ஏற்பட்டதான்னு தெரியல......
அப்புறம் இன்னைக்கு வரைக்கும் ஏன் "மரணத்தின் நிறம் பச்சை" மறுபதிப்பிருக்கு அவ்வளவு ஆதரவுனு புரியல.
அனேகமாக பெரும்பாலான நண்பர்கள் இந்த கதையை முன்னால படிச்சிருக்க மாட்டாங்கன்னு நினைக்கறேன்.
நான் மொத தபா படிக்கும்போதே "நானும் டெக்ஸ் வேற்று கிரக வாசிகளை இப்போ லாடம் கட்ட போரரரு அப்புறம் லாடம் கட்ட போறாருனு நெனைச்சு ஏமாந்துதான் மிச்சம் .....ஏப்பா...இதுக்கு எதுக்குப்பா டெக்ஸ்! அந்த ஊர் லோக்கல் ஷெரிப் போதுமேனு நெனச்சேன்....." அநேகமா இப்போ மொத முறையாக படிக்கும் நண்பர்களுக்கும் 'Y பிளட் same பிளட்' பீலிங் இருத்துருக்கும்னு நினைக்கறேன்!
தலைவன் ஒரு சகாப்தம் கதையின்
Delete( மாஸ் )சித்திரத்தை மறந்து ரசிக்க வைத்தது ஆனால் அழகாய் ஒரு அராஜகம் டெக்ஸ் வில்லரின் ஓப்பனிங்கை தவிர்த்து கதை தளர்வாக சென்றது மரணத்தின் நிறம் பச்சை! அந்தளவுக்கு திருப்தி இல்லை என்பது உண்மையே
///"நானும் டெக்ஸ் வேற்று கிரக வாசிகளை இப்போ லாடம் கட்ட போரரரு அப்புறம் லாடம் கட்ட போறாருனு நெனைச்சு ஏமாந்துதான் மிச்சம் .....ஏப்பா...இதுக்கு எதுக்குப்பா டெக்ஸ்! அந்த ஊர் லோக்கல் ஷெரிப் போதுமேனு நெனச்சேன்.....///
Delete:)))))))))
///"நானும் டெக்ஸ் வேற்று கிரக வாசிகளை இப்போ லாடம் கட்ட போரரரு அப்புறம் லாடம் கட்ட போறாருனு நெனைச்சு ஏமாந்துதான் மிச்சம் .....ஏப்பா...இதுக்கு எதுக்குப்பா டெக்ஸ்! அந்த ஊர் லோக்கல் ஷெரிப் போதுமேனு நெனச்சேன்.....///
DeleteSame feel..same blood..
:-)
DeleteCaption:1
ReplyDelete(A) கவலைப்படாதே கண்ணு ! மாமா நான் இருக்கேன் !
(B)(அரை மயக்கத்தில்)
என்னது மாமாவா! ஆஹா! இவரு இந்த இறுக்கு இறுக்கறப்பவே நெனெச்சேன்....இது கண்டிப்பா தாடி இல்லாம வந்த கார்சன் ஆகத்தான் இருக்கும்!
Caption: 2
(B) யார் நீங்க…?
(A) நான் டெக்ஸ் வில்லர்!
(B) ஐஐஐஐஐஐஐ…..யோ….அம்மா….இதுவா டெக்ஸ் உஉஉஉ ……….(மயங்கி விழுகிறார்)
Caption: 3
(A): பாஞ்ச் வா பான்ஜோ ! ! !
(B): அடடே…!
கிட் வில்லர்ன்னு நெனச்சு....சிஸ்கோ கிட் மடியிலயா கெடக்கேன்!
Caption: 4
(B): ஐயோ டெக்ஸ்….என்ன காப்பாத்துங்க….
(வாழ்க்கையில் மொத தபா இப்படி பட்ட படு பயங்கரமான சூழ்நிலையில் கட்டுண்ட காரணத்தால் ??!!!!)
டெக்ஸ்:
ஐயோ!
கடவுளே....கடவுளே...கடவுளே......
கார்சன்....கார்சன்....
யாரவது என்ன காப்பாத்துங்க!
Caption: 5
(B) ஐயோ...என்ன காப்பாத்துங்க....
(A) (யார் இந்த கவ்பாய்...?):
அப்பாடா ……………அந்த கோஷ்டி…இந்த கோஸ்டினு எந்த கோஷ்டியும் பக்கத்துல இல்ல …..
நீ கவலைப்படாதே செல்லா குட்டி…மாமா நான் இருக்கேன்…
நீ அடிக்கடி இப்டி மயங்கி மயங்கி விழுவியாம்!.நான் உன்ன இப்டியே காப்பாத்திக்கிட்டே இருப்பேனாம்!
ஐயோ பாவம்…செல்லத்துக்கு பயத்தை விட…..என்அழக பார்த்து பார்த்து அடிக்கடி மயக்கம் வருது போல…….
Caption:6
(A) ஒரு கத சொல்லட்டா டோனா!
முன்ன ஒரு முறை உன்ன மாதிரியே ஒரு பொண்ண காப்பாத்துன கத!
(B) ஐ …ஐ …யோ...! இவரு மறுபடியும் “அழகாய் ஒரு அராஜகம்“னு ஆரம்பிக்கறாரே…பேசாம மயங்கிருவோம்!
Caption:7
(A)
ஹே சில்க்! நா இருக்கேன்! don’t worry dear!
(B) அடடே…இது அவ்ரு இல்ல ….சேவ் பண்ணாலும் குளிக்க மாட்டார் போல….அந்த வீச்சுக்கு பயந்து இப்போ இந்த வீச்சுல சாகப்ப்ப் ……..(மயங்கி சரிக்கிறார் )
சரவணார் களம் இறங்கிட்டாரு
Delete@ saravanan R
Deleteசூப்பர் சார். பட்டய கிளப்புறீங்க.
@ saravanan R
Deleteசூப்பர் சார். பட்டய கிளப்புறீங்க.
This comment has been removed by the author.
Deleteநன்றி நண்பர்களே!
Deleteஅந்த கவ்பாய் யாரோ எவரோ தெரியல பாஸ்! நம்ம டெக்ஸ், கிட், சிஸ்கோ, டைகர், பேர் தெரியாத கவ்பாய் னு நமக்கு தெரிஞ்ச பேர்ல எல்லாம் கேப்சன் போட்டாச்சு!
இப்போ அவரு பாணில சொன்னா........
"ஹெலோ....கவ்பாய்ஸ் யாராவது.....எங்காவது சந்து பொந்து...இண்டு இடுக்குல இருந்தா வந்து கேப்சன் போட்டில இருக்கறது நீங்கதானான்னு சொல்லி போட்டு போயிருங்க....அப்பறம் சரவணன் கேப்ஷன்ல எங்களுக்கு மரியாத செய்யலைனு எம் மேல கோச்சிக்ககாத்திங்........!"
@ saravanan R
Deleteஹா...ஹா...
கலக்குறீங்களே.
///ஹெலோ....கவ்பாய்ஸ் யாராவது.....எங்காவது சந்து பொந்து...இண்டு இடுக்குல இருந்தா வந்து கேப்சன் போட்டில இருக்கறது நீங்கதானான்னு சொல்லி போட்டு போயிருங்க....அப்பறம் சரவணன் கேப்ஷன்ல எங்களுக்கு மரியாத செய்யலைனு எம் மேல கோச்சிக்ககாத்திங்........////
Delete:))))) பின்றீங்க கே.ச!
வெளியூர் நண்பர்கள் தங்கள் கருத்தை
ReplyDeleteசொன்னாலே போதும். சென்னையில் உள்ள நான் உள்பட மற்றவர்கள்
வருகை பிரச்சனையில்லை.
ஆசிரியரின் முடிவே இறுதியானது.
அதே அதே
Deleteசார் அந் கிநாஜனவரிக்கே வரட்டுமே...சிறந்ததை தர இயன்றவரை துடிக்கும் உங்களுக்கு நிகர் தாங்களே...தோர்கள் எப்பவுமே கலக்கல்தான் எனும் போது ...தங்கள் வரிகள் அதன் பலத்தை மேலும் அதிகரித்த போதிலும் தாங்கள் காட்டியுள்ள முதலட்டை சான்சே இல்லை....என்னதான் கதாசிரியர் பின்னிப் பெடலெடுத்தாலும் அவர் கற்பனையை மேலும் மெருகூட்டும் ஓவியர் என்பது அரிதே.....அதும் மாயாஜாலமெனும் போது....அந்த வகையில் வான்ஹாம்மே வாங்கிய வரம் நம் மேலும் பாய்வது கூடுதல் இன்பம்.....ஓவியங்கள ரசிப்பத விட கதையை ரசிக்கும் என் ஒரு கண்ணை இரு கண்ணாக்கி விட்டார் ஓவியர் என்பது மிகை அல்லவே...அட்டை அனைத்தும் அட்டகாசம்....முதன் முறயா ஹார்டு அட்டைல..இந்த அற்புதமான அட்டை தாங்கி வர உள்ள தோர்கள் வடிவமைப்பிலும் பிரம்மிக்கச் செய்யப் போகும் நாளுக்காககூடுதல் சந்தோச எதிர்காத்திருப்பில் நாம்..சந்தோசம் அது என்னடா அவை காணும் வழி சொல்லடா எனும் குரல் இறைவனுக்கு எட்டியதால் உங்களை அனுப்பி வைத்துள்ளார் போலும் எங்ளுக்கான படைப்பை தேடித் திரிய....தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசி இருக்கும்...தேடுங்கள்....நாங்க காத்திருக்கிறம்....ஒரு வழியா இந்த வருடம் மாபெரும் தேடல் கண் முன்னே வெளிப்பட போகும் சந்தோசம் இருந்தாலும் மாபெரும் குறையாய் உறுத்துவது புலன் விசாரணை இல்லை என்பதே .....அதனையும் விலையை அதிகரித்து , எண்ணிக்கையை குறைத்து குறை நேராவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்....சார் டெக்ச பொறுத்தவரை அட்டகாசமே..வெறியனின் தடத்திலும் சரி...அந்தசல்மான் ஒற்றை கட்ணனும் அருமை...தீபாளி மலரை இப்பதான் படித்துக் கொண்டிருந்தேன்.....முதல் கதை அட்டகாசம்....கார்சன் டெக்ச புகழ்ந்து தள்ளுவது மட்டும் நெருடலாய்..பீற்றலாய் பட...ஓவியமும் சரி..கதை வண்ணமும் சரி ....டாப்....புரட்டும் போதே இன்பம் மிகையல்ல....டெக்ஸ் அ்ட்டைபடம் அருமை...
ReplyDeleteயாருப்பா அது ஸ்டீலா ?
Deleteமாபெரும் குறையாய் உறுத்துவது புலன் விசாரணை இல்லை என்பதே
Deleteஅவரு எப்ப சொன்னார் பிறகு பார்க்கலாம்னு சொன்னார் கண்டீப்பா நம்மை ஏமாற்ற மாட்டார் மலிவு பதிப்பாகவோ கருப்பு வெள்ளையிலோ சின்ன சைசிலோ கண்டீப்பா நமக்காக போடுவார் ஸ்டீஸ் மனம் தளர வேண்டாம் கொஞ்ச நாள் முன் இரத்தப்படலம் வரமா வராதா என இருந்தது இப்போ அதேமாதிரிதான்
👍🏼
Delete👌👌👌👌👌👌👌👌👌👌
Delete🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Delete🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Deleteபோன ஆண்டு ட்யூராங்கோ புத்தாண்டு துவக்கத்தை அதிரடியாய் கலக்கலாய் தந்தாரென்றால் இவ்வாண்டு தோர்கல். மாயாலோகத்தில் கற்பனையின் உச்சத்தில் திளைக்க...
ReplyDelete+1
Deleteதிரு.ஸ்டீல் தோர்கல் ஹார்ட் கவர் அட்டையென ஆசிரியர் கூறியதாக நினைவில் இல்லையே!
Deleteநீங்கள் //முதன் முறயா ஹார்ட் அட்டை //என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்!!
நான் சரியாத்தான் பேசுறனா?
அல்லது என் ஞாபக மறதியா தெரியவில்லை!!!
எடிட்டர் சார்...
ReplyDeleteகேப்ஷன் போட்டி வச்சதுக்குப் பதிலா "இப்படத்தில் சற்றே மாறுகண்ணுடனும், வலக்கையில் கன்னுடனும், இடக்கையில் பெண்ணுடனும், கடைவாயில் பன்னுடனும் காட்சியளிக்கும் இந்த நாயகர் நாமெல்லாம் நன்கு அறிந்தவரே! அவர் யாரென்று மிகச் சரியாகக் கணிப்பவர்களுக்கு A,B,C,D சந்தாப் பரிசாக அளிக்கப்படும்"னு நீங்க போட்டியை அறிவிச்சுருக்கலாம்! ;)
ரொம்பக் கஷ்டமா இருக்கு சார்... நேத்துக் காலைலேர்ந்து யோசிச்சு... இப்பவரைக்கும் அவரு யார்னே கண்டுபிடிக்க முடியலை! :P
இதுக்குத் தான் நம்மல மாதிாி பொதுவா எல்லாத்துக்கும் பொருந்தர மாதிாி கேப்சன் போடணும்ங்கிறது!!
Delete😁😁😁
கேப்சன்8:
ReplyDeleteA.எல்லோரும் என்னை கலாய்க்கனும்னே கேப்சன் போட்டி நடத்தறாங்களோ...என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலயே..
B.(எவ்ளோ அடிச்சாலும் தாங்கறியே டெக்ஸ்..நீ ரொம்ப நல்லவம்பா
ஏற்கனவே டெங்கு காய்ச்சல் வந்த மாதிரி நடுங்கும் பெண்ணை மேலும் நசுக்கிக் கொண்டு இருப்பவர் டெக்ஸ் என்று ஆசிரியர் கூறவேயில்லை.ஆனால் கேப்ஷன் முழுக்க டெக்ஸை மையப்படுத்தியே வருகிறது!
ReplyDeleteடுமிலிசை மாதிரி இவர் வேறு யாரோ டுமீல் மன்னனோ என சந்தேகமாக இருக்கிறது.
கை நீண்ட கதர் சட்டை போட்டவரெல்லாம் காமராஜர் ஆக முடியாது.
தாடி வைத்தவர் எல்லாம் பெரியார் ஆக முடியாது.
பெரிய மீசை வைத்தவரெல்லாம் ம.பொ.சி.ஆக முடியாது.
நடனத்தில் "பிச்சி உதறிய"!!! சாம் ஆன்டர்சனை பிரபு தேவா என்பது போல் இருக்கிறது.
கையில் துப்பாக்கி பிடித்தவரெல்லாம் டெக்ஸ் ஆக முடியாது.
எதற்கும் முன்னைச்சரிக்கைக்காக "சத்தியமாக இது கேப்ஷன் அல்ல" என்று தெரிவித்து விடுகிறேன்.
மீண்டும் போட்டிகாண்டி...
ReplyDeleteஆ...நீங்க டெக்ஸ் இல்லையா ..டெக்ஸ்னு நினைச்சு தானே காப்பாத்துவீங்கன்னு உங்ககிட்ட ஓடி வந்தேன்.
ஆமா..உங்கிட்ட நான் டெக்ஸ்ன்னு சொன்னேனா ..தொப்பி போட்டாவே நீ டெக்ஸ்ன்னு நினைச்சா நான் என்ன பன்றது. டைகர்..ரெட்...ட்யூராங்கோ...ஏன் சிக்பில்லா கூட இருக்கலாம்ன்னு நினைக்க மாட்டீயா அதுவும் தெரிலைன்னா பேசாம கெளபாய் வீரரே ன்னு கூப்பிட வேண்டியது தானே..ஆபத்துன்னா டெக்ஸ் தான் காப்பாத்துவாரா...நாங்க எல்லாம் காப்பாத்த மாட்டாமோ...நாங்களும் ஹீரோதாம்மா..
கேப்சன்9:
ReplyDeleteB.(என்ன சுடாமயே இருக்கறாரு)..டெக்ஸ்!
A.போகட்டும்..எனிமிஸ் போட்டோஸ பேஸ்புக்,வாட்ஸ்அப்ல சேர் பண்ணிட்டேன்..போற பாதைய கூகுள் மேப்ல ட்ரேக் பண்ணிடலாம்..
உனக்கு அப்பல்லோவுல அப்பாயின்மெண்ட் பிக்ஸ் பண்ணிட்டேன்..
நான் டெக்ஸ் 2.0 அப்டேடட் மா..
வா ஒரு செல்பி எடுத்துக்கலாம்..
கேப்ஷன் போட்டி படத்தில் இருப்பவர் டெக்ஸ் தான். ஆதாரம் https://stef125.deviantart.com/art/tex-willer-fan-art-355940492
ReplyDeleteநன்றி நண்பரே.
Deleteநாலு நாள் மண்டை குடைச்சலை தீர்த்து வைத்ததற்கு.
மெகா டெக்ஸ் இதழில் டெக்ஸ் முகத்தை பார்த்ததிலிருந்து நம்ம டெக்ஸ் முகமே மறந்து விட்டது.இனி டெக்ஸ் யாரென்று தெரிந்து கொள்ள ஆதார் கார்ட் தேவைப்படும் போலிருக்கிறது.
அச்சு அசலாக டெக்ஸைப் போலவே(!) வரைந்திருக்கும் இத்தாலி வாசக ஓவியர் Stef125க்கு நமது ஒட்டுமொத்த தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் சார்பாக வாழ்த்துகள்!
Deleteபி.கு : நீங்கள் வரைந்த படத்தால் பரிசுபெறும் நமது தமிழ் வாசக நண்பர், பிரதியுபகாரமாக உங்களுக்கு ஒரு பவுனில் மோதிரம் செய்து இத்தாலிக்கு அனுப்பி வைக்க இருக்கிறார். கூச்சப்படாமல் பெற்றுக்கொள்ளவும்!
@ எடிட்டர் சார்
போட்டி முடிவை எப்ப அறிவிக்கப்போறீங்க சார்? :)
அட அது செரி ஈ.வி.....
Deleteமுன்ன எல்லாம் செயலர் கேப்சன் போடுவாரு....தலீவர் கண்டுக்கவே மாட்டாரு....
இப்போ....தலீவர் பின்னி பெடல் எடுக்கறாரு....
செயலர் ஏதோ ஒரு கொள்கைக்காக(?!) கேப்சன் போடலானாலும் அட் லீஸ்ட் குறுக்கால மறுகால மத்த கேப்சன் நடுவிலயாவது போய்கிட்டு வந்துட்டு இருப்பாரு........
ஆனா இப்போ அது கூட பண்றதில்ல!
உண்மைய சொல்லுங்க.....
போன வாரம்....
என்னாச்சு............!
என்னாச்சு............!
என்னாச்சு............!
ரெண்டு பேரும் சேந்தம்பட்டில.....
என்ன பண்ணீங்க......?
என்ன பண்ணீங்க......?
என்ன பண்ணீங்க......?
மட்டன் லெக் பிஸுக்கு மத்தியானதுல மொறச்சிக்கிட்டிங்கனு ஜூ.வில வந்தது....
உண்மையா....
உண்மையா .....
உண்மையா.....?
எதிரிங்க நெருங்கி வந்துட்டாங்க சுடாம என்ன பண்றீங்க
ReplyDeleteகொஞ்சம் பொறு..இதே போஸ்லே ஒரு செல்பி எடுத்து கார்சனுக்கு அனுப்புறேன் கிழவன் பொறாமையிலே சாகட்டும்.
Super. Good one
Deleteசரி சரி எதுக்கும் நாலு எட்டு தள்ளியே நில்லு தூரத்திலே என் மகன் கிட் வர்றான்
ReplyDeleteஅட கண்ராவியே..நீ கிட் இல்லியா..யார்யா உன்னை மஞ்ச சட்டையை கழட்ட சொன்னது ..
எங்க அப்பாருக்கு இத்தனை நாள் நம்பிக்கையே இல்லே இன்னிக்குதான் என்னை உங்களை நம்பி கூட அனுப்பி வச்சிருக்காரு
ReplyDeleteஇன்னிக்கு என்ன அப்படி திடீர் நம்பிக்கை
எவ்வளவு கலாய்ச்சாலும் தாங்குறாரு இவரு ரொம்ப நல்லவரும்மா ன்னாரு
கொஞ்சம் தம் கட்டி அந்த குடிசை வரைக்கும் நடந்து வர பாரு
ReplyDeleteஅய்யய்யோ குடிசைக்கு எதுக்கு
பித்த வெடிப்பு மருந்து அங்கேதான் இருக்கு..உன் கால்ல தடவி விட்டா நீயா நடந்துக்குவே பாரு
எங்க அப்பாருக்கு இதனை நாளா உங்க மேலே நம்பிக்கையே இல்லே இன்னிக்குதான் உங்களை நம்பி என்னை உங்க கூட அனுப்பி வச்சாரு
ReplyDeleteஇன்னிக்கு என்ன ஸ்பெஷல்
எவ்வளவு கலாய்ச்சாலும் தாங்குறாரு இவரு ரொம்ப நல்லவரும்மான்னாரு
ரொம்ப நேரமா என் முகத்தையே பார்த்துகிட்டு இருக்கியே என்ன தோணுது
ReplyDeleteஉங்களுக்கு இரவுக்கழுகு ன்னு பேரு வச்சதுக்கு பதிலா ஆந்தை கண்ணன் னு வச்சிருக்கலாம்
நீ என்ன வேணும் னாலும் சொல்லு ஆந்தைக்கண்ணன்னு மட்டும் சொல்லாதே.சிவகாசியிலே ஒருத்தர் கோச்சிக்கப் போறாரு
எங்க நானும் பார்த்துகிட்டே இருக்கேன் நான் தள்ளி இருந்தா எதிரியோட தலையைப் பார்த்து சுடுறீங்க..பக்கத்தில் வந்துட்டா காலை க்குறி வைக்கிறீங்க ஏன்?
ReplyDeleteநீ இவ்வளவு நெருக்கமா இருக்கும்போது எனக்கு தலைகால் புரியமாட்டேன்குது கண்ணே
டெக்ஸ்: பெண்ணே ஏன் கலவரமடைகிறாய் நான்தான் டெக்ஸ் வில்லர்
Deleteபெண்: அப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஆட்டுத்தாடி வைச்சிகிட்டு நான்தான் டெக்ஸ் வில்லர்ன்னு சொல்லிகிட்டு எனக்கு லிப் டு லிப் கிஸ் குடுத்துட்டு போனாரே அவர் யாரு (மயக்கம்)
டெக்ஸ் : மனதினுள் அடப்பாவி கார்ஸா