நண்பர்களே,
வணக்கம். வண்டி வண்டியாய் கதைகளுக்குள் புகுந்து என்னென்னவோ கூத்துக்கள் அடித்துள்ளோம்! சில சிரிக்கச் செய்திருக்கின்றன ; சில சிந்திக்கச் செய்துள்ளன ; சில சிலாகிக்கச் செய்துள்ளன ; சிலவோ கொட்டாவி விடச் செய்துள்ளன ! “"தங்கக் கல்லறை"” போன்ற த்ரில்லர்கள் லக்னரோடு நம்மைக் கட்டிப் பிணைத்து ‘ஆளரவமற்ற அந்தப் பாலைபூமியில் உலாற்றச் செய்துள்ளன ; "ஆதலினால் அதகளம் செய்வீர்"” போன்ற ஆக்ஷன் அதிரடிகள், பர்மாவின் காட்டு வழியே நம்மையும் நடைபயிலச் செய்திருக்கின்றன ! “பிரளையத்தின் பிள்ளைகளும்”; “சிப்பாயின் சுவடுகளும்” மனத்தைக் கனக்கச் செய்துள்ளன ; “கார்சனின் கடந்த காலம்” வன்மேற்கிலும் மென்மையை சிலாகிக்கச் செய்துள்ளது! ஆனால் – பணியாற்றிய பின்பாய் மனம் முழுவதும் சன்னமாய் ஒரு வெறுமையை வியாபிக்கச் செய்த கதைகள் வெகு சொற்பம் ! கதை நெடுகிலும் விரவிக் கிடக்கும் அடர்பனியும், மொட்டை மரங்களும் போல உள்ளமெல்லாம் ஒரு சூன்யம் சூழச் செய்த கதைகள் சொற்பத்திலும் சொற்பம் ! கடந்த வாரமானது எனக்கு அந்த மாறுபட்ட அனுபவத்தைக் கண்ணில் காட்டியது "நிஜங்களின் நிசப்தம்" கிராபிக் நாவலின் வாயிலாக !
சந்தா E -யின் இறுதி இதழ் ; லயன் கிராபிக் நாவலின் debut ஆண்டின் அந்திம இதழ் என்பது மட்டுமன்றி இதுவரையிலான கி.நா.களுக்கெல்லாம் climax என்ற வகையில் இந்த இதழுக்கு நான் ரொம்பவே முக்கியத்துவம் தந்திருந்தேன் ! And in more ways than one – இது நமக்குமே ஒரு முரட்டு முயற்சி என்பதில் எனக்குச் சந்தேகமே இருந்திருக்கவில்லை ! ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே – ஒரு விருது பெற்ற பிரெஞ்சு நாவலானது மெர்செலாக்கும் கிராபிக் நாவலாக உருமாற்றம் கண்டுள்ளது என்ற சேதி நமக்குக் கிட்டியிருந்தது. அதன் மாதிரிகளைப் பார்த்த கணத்திலேயே கடியெறும்புப் புற்றின் மீது அமர்ந்தவனைப் போல இருப்புக் கொள்ளாது தவித்தேன் - "தேவுடா இதனை எப்படியாச்சும் நாம் வெளியிட முயற்சிக்கணுமே?!" என்று! சந்தா E என்பதெல்லாம் அந்நேரம் கனவாகக் கூட இருந்திருக்கவில்லை எனும் போது, – மொட்டையும், கட்டையுமாக இந்த ஆல்பத்தை எங்கே நுழைப்பது என்பது புரிபடவில்லை எனக்கு ! தவிர, 312 பக்க நீளத்துடன் இதுவொரு மெகா இதழ் எனும் போது – அதனில் பணியாற்ற வாகான திட்டமிடல் இல்லாங்காட்டி சிக்கலாகிப் போய் விடுமே ! என்ற பயமே எனக்குள் ! So அடக்கி வாசிப்போமே ! என்ற ரீதியில் அமைதி காக்க வேண்டிப் போனது ! இடைப்பட்ட தருணத்தில் பாரிஸில் இருந்ததொரு வேளையில் – என் கையில் ஒரு நுழைவுச் சீட்டைத் திணித்தார்கள் நமது பதிப்பக நிர்வாகத்தினர் ! என்னவென்று பார்த்தால் – “"நிஜங்களின் நிசப்தம்"” கிராபிக் நாவலின் சித்திரங்களை ஒரு கண்காட்சியாக அமைத்து, ஓவியரும் அங்கே தலைகாட்டவிருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடிந்தது ! பாஷை புரியுதோ இல்லியோ – பராக்குப் பார்க்கவாவது செய்யலாமே என்ற சபலம் அலைமோதியது. ஆனால் நான் வேறெங்கோ பயணம் செய்யும் திட்டமிடல் முன்கூட்டியே உறுதியாகி இருந்ததால் – அந்த ஓவியக் கண்காட்சிக்குச் சென்றிட இயலாது போனது ! 2017-ல் சந்தா E எனும் கிராபிக் நாவல் தனித்தடம் உறுதியான முதல் நொடி எனக்குள் பறந்த முதல் பொரி –இந்த ஆல்பம் சார்ந்ததே! And here we are - – சன்னமான (எனது) கனவு நனவாகும் தருணத்தில் !
கிராபிக் நாவல்களையும் சரி, கார்ட்டூன்களையும் சரி மடியிலேயே குரங்குக்குட்டிகளைப் போல பத்திரமாய் கட்டித் திரிந்தவனுக்கு இந்த ஆல்பத்தின் மொழியாக்கத்தையும் நானே செய்தி்ட வேண்டும் என்ற ஆசை எக்கச்சக்கம் ! ஆனால் கனகச்சிதமாய் இந்தப் பணியைக் கையில் எடுத்த நேரம் – திருமணம் சார்ந்த வேலைகள் சூடுபிடிக்கும் தருணம் என்பதால் அதனை நமது கருணையானந்தம் அவர்களிடம் தள்ளி விட வேண்டிய நிர்ப்பந்தம் ! ‘ஏகமாய் எதிர்ப்பார்ப்போடு இருந்த இதழைக் கடைசியில் எழுத முடியாது போச்சே!‘ என்ற நெருடல் எனக்குள்ளிருந்தது. ஆனால் கல்யாண வேலை மும்முரத்தில் அதை மறந்தே போயிருந்தேன் ! இந்தப் புதுயுக பாணிக்கதைகளையும் சரி ; மூக்கை முன்னூறு சுற்று சுற்றித் தொடும் ரகக் கதைகளையும் சரி எழுதிட நமது கருணையானந்தம் அவர்கள் அத்தனை பிரியப்படுவதில்லை ! “"இந்த கிராபிக் நாவல் சமாச்சாரம் அத்தனை ரசிக்க மாட்டேன்கிறது! திருப்பி அனுப்பி விடட்டுமா?”" என்று மைதீனிடம் கேட்டிருக்க, நான் சென்னையில் பத்திரிக்கை கொடுத்துக் கொண்டு நின்ற போது தகவல் வந்தது எனக்கு ! ‘முடிந்தமட்டிற்கு எழுதச் சொல்லுப்பா... அப்புறமாய் பார்த்துக் கொள்ளலாம்‘ என்று அப்போதைக்குச் சொல்லி வைத்தேன் ! அதன்படியே பணிகளும் நடந்தேறிட என் மேஜையில் ஒரு கத்தைப் பக்கங்கள் மிரட்டலாய் அமர்ந்திருந்தன !
சாவகாசமாய் போன ஞாயிறு இதனுள் புகுந்த போது வயிற்றை செமையாகவே கலக்கியது… டெக்ஸ் போன்ற 'பரபர' பாணிக் கதையாக இருந்தாலே,300+ பக்கங்கள் எனும் பொழுது திருத்தங்களைப் போட்டு, சரி செய்ய ஏகப்பட்ட அவகாசம் பிடிக்குமெனும் போது – இதுவொரு dark கிராபிக் நாவல் களம் ! And இதனில் பணிகள் நிச்சயமாய் ஒரு மெகா லோடு இருக்குமென்பது உறுதியாய்ப்பட்டது மனசுக்கு ! ‘சிவனே‘ என்று இந்த கிராபிக் நாவலை மட்டும் ஜனவரி 10-ன் புத்தக விழா ரிலீஸ் என்று சொல்லித் தள்ளி வைப்போமா? என்ற சபலம் அலையடித்தது. ஆனால் ஏற்கனவே தாமதமானதை மேற்கொண்டும் ஜவ்வாய் இழுக்க மனசு கேட்கவில்லை! சரி… மெதுமெதுவாய் ஆரம்பிப்போம்; ஒவ்வொரு 30 பக்கத்துக்கும் ஒரு பிரேக் எடுத்துக் கொள்வது ; ஓரிரு நாட்களுக்குள் முடிப்பது என்று பந்தாவாய்த் தீர்மானித்தேன்!Alas - எண்ணங்களெல்லாமே ஈடேறி விட்டால் தான் நாமெல்லாம் குடியிருப்பது வெள்ளை மாளிகையாக இருக்குமே ?!
எப்போதுமே இது போன்ற offbeat கதைகளுக்குள் நுழைந்திட நிரம்பபே ஸ்டார்ட்டிங் டிரபிள் இருப்பதுண்டு! இம்முறையும் அதற்கு விதிவிலக்கல்ல ! தயங்கித், தடுமாறி, திக்கித் திணறி, முதல் 10 பக்கங்களைக் கடப்பதற்குள் மூச்சிரைக்கத் தொடங்கியிருந்தது. ஆனால் பிடரியில் அறைந்தது போல இரு விஷயங்கள் புலப்படத் தொடங்கின!
விஷயம் # 1 : இதுவொரு எழுத்தாளனின் / மொழிபெயர்ப்பாளனின் சொர்க்க பூமி என்பது !
விஷயம் # 2 : இது பத்தோடு பதினொன்று ரகமல்ல - this seems to be far bigger than my dreams என்பது !
இங்கே ஒரு மெகா சல்யூட் வைத்திட வேண்டியது ஒரிஜினலின் கதாசிரியர் + ஸ்கிரிப்ட் writer-க்கு மாத்திரமின்றி, அதனை அசாத்திய தரத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்திருந்த நமது translator-க்குமே! ஒட்டுமொத்த 312 பக்கங்களுக்குமான அவரது ஆங்கில ஸ்கிரிப்ட்டை அப்படியே பழைய பேப்பர் கடையில் எடைக்குப் போட்டிருந்தாலே 2 கிலோ பேரீச்சம்பழம் தேறியிருக்கும் ! அத்தனை கனம் ; அத்தனை நீளம் ! And ஒற்றை அடித்தம், திருத்தம் கூட இல்லாது மணிமணியான கையெழுத்தில், அதகள ஆங்கிலத்தில் ஒட்டுமொத்தமாய் 2 பாகங்களையும் அவர் எழுதித் தந்திருந்த அழகுக்கு பாண்டிய நாட்டில் பாதியை அவர் பெயருக்குப் பட்டா போட்டுத் தந்திருப்பேன் - அது மட்டும் என் சொத்தாக இருந்திடும் பட்சத்தில் ! But பாண்டிய நாடெல்லாம் சாத்தியமில்லை ; வேண்டுமானால் பாண்டியன் ஹோட்டலில் நாளைக்குப் பணம் தருவதாய்ச் சொல்லி விட்டு நாலு பரோட்டா மட்டும் வாங்கித் தரலாம் என்பதே நமது நிதி நிலைமை என்பதால் மனசுக்குள் ஒரு மெகா வணக்கம் போட்டு வைத்தேன் - – நமது மொழிபெயர்ப்பாளர் வசிக்கும் கொங்கு தேசத்தை நோக்கி ! அசாத்தியத் திறன் ; அபரிமித எழுத்தார்வம் !!! And Truly stunning !
தமிழாக்கத்தினுள் புகுந்த சற்றைக்கெல்லாம் என் வாயெல்லாம் மொச்சைக் கொட்டைப் பல்லாகத் தொடங்கியது - simply becos இதற்கென பயன்படுத்தப்பட்டிருந்த நடையில் ஏகமாய் மாற்றங்கள் அவசியமாகிடும் என்பது எனக்கு அப்பட்டமாய் தெரியத் தொடங்கியது ! நிறையவே மாற்றங்கள் செய்யத் தேவைப்படும் என்பதை உணர்ந்த நொடியே எனக்குள் ஒரு பல்பு எரியத் தொடங்கியது - "ஆஹா…. கை நழுவிய வாய்ப்பு மறுக்கா நம்மளையே தேடி வந்தாச்சு !!"” என்று. எப்போதுமே முதல் படிவ correction & எடிட்டிங் தான் நமது பணிகளுள்ளேயே மொக்கையோ மொக்கையானது ! மொழிபெயர்ப்பில் கோர்வை ; பிழைகள் தேடல் ; எழுத்து பாணியினில் மாற்றங்கள் ; டமால்-டுமீல்கள்; சித்திர அமைப்புகளைச் சரிபார்த்தல் என்று ஒரே நேரத்தில் அரை டஜன் விஷயங்களைச் செய்திட வேண்டி வரும்! கொஞ்ச நேரத்தில் எனக்கே அந்தக் காகிதங்களிலுள்ள சிகப்புமசிக் களரி கிறுகிறுக்கச் செய்து விடவும் செய்யும் ! இம்முறையும் அதே பாடு தான் and 10 பக்கங்களைக் கடந்த போதே தீர்மானித்தேன் - – திருத்தங்களை யோசிப்பதை விடவும்,கிட்டத்தட்ட மொத்தமாய் மாற்றி எழுதி விடுவது சுலபமானதென்று !
கதையைப் பற்றிப் பேச வேண்டிய வேளை இனி ! எங்கே - எந்த மண்ணில் இது நடைபெறுகிறது ? என்றெல்லாம் கதாசிரியர் சொல்லிடப் பிரியப்படவில்லை ! வில்லன்களது அடையாளத்தை அறிவிப்பதிலும் அவர் நாட்டம் காட்டிடவில்லை ! In fact அவர்களுக்கு முகங்களே கிடையாது ! கதை நகரும் காலகட்டத்தைப் பற்றியும் குறிப்புகள் லேது ! இவை சகலத்தையும் வாசகர்களாகிய நாமே யூகித்தும், கிரகித்தும் கொள்ள வேண்டுமென்பது சுவாரஸ்யத்தைக் கிளறி விடும் முதல் யுக்தி ! And கதை நெடுக உலவிடும் ஆசாமிகள் அத்தனை பேருமே கிட்டத்தட்ட சம வயதுக்காரர்கள் ; ஒரே மாதிரியான தாடிகளும், மீசைகளும் சுமந்து திரியும் கரடுமுரடன்கள்; குளிருக்குத் தலை முதல் கால் வரை போர்த்தி அலையும் பார்ட்டிகள். So துல்லியமாய் கவனிக்காது போனால் - – "இது மாப்பிள்ளை மொக்கைச்சாமியா ? மாமா மாயாண்டியா ?" என்ற சந்தேகம் எழுந்து விடும் ! கதையின் ஒவ்வொரு பிரேமிலும் சிற்சிறு கொக்கிகளை கதாசிரியர் தெறிக்க வைத்திருப்பதை அகன்ற வாயோடும், விழிகளோடும் ரசித்தேன்! And கதையைப் பற்றி – என்ன சொல்வது? என்று சத்தியமாய்த் தெரியவில்லை எனக்கு! வரம் வாங்கி வரா ஒரு ஜனத்தின் வாழ்க்கையை நாமும் வாழ்ந்து பார்க்க ஒரு வாய்ப்பு இந்தப் பக்கங்களுள் விரவிக் கிடக்கிறது என்று மட்டும் சொல்வேன் !
And சித்திரங்களைப் பற்றிப் பேச நான் ரொம்பவெல்லாம் மெனக்கெடப் போவதில்லை! Simply becos – இந்த ஆல்பத்தைப் புரட்டி விட்டு கீழே வைக்கும் வேளையில் எவரது விழிகளிலும் ஒரு அசாத்திய மின்னல் எழாது போகாது என்பதை ரின்டின் கேன் கூட யூகித்திருக்கும்! இது வரை வான்ஸின் தூரிகையை சிலாகித்துள்ளோம்; ஹெர்மெனைக் கண்டு மெர்செலாகி இருக்கிறோம்; அய்மண்ட்; பிரான்சே போ; மோரிஸ் என்று ஜாம்பவான்கள் பலரின் ஓவியங்களை வாய்திறந்து ரசித்திருக்கிறோம்! ஆனால் இது முற்றிலும் வேறொரு லெவல்! இதழைப் புரட்டிய / படித்த பின்பாய் எனது பில்டப்கள் முகாந்திரமிலாது இல்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள் guys! அசாத்திய உழைப்பு ஓவியரது !!
இறுதியாய் அந்த எழுத்துநடை பற்றியும், ஒரிஜினல் ஸ்கிரிப்ட் பற்றியும் ! இந்தக் கதைக்கு சித்திரங்கள் ஒரு ஜீவநாடியெனில் – ஸ்கிரிப்ட் அதற்குச் சிறிதும் சளைத்ததல்ல ! நெற்றிப்பொட்டில் பிஸ்டலை வைத்துத் தெறிக்க விடும் பாணியில் ஒரிஜினலின் வரிகள் கதை நெடுக சாத்தி எடுக்கின்றன ! கதைக்கும், வரிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் பல இடங்களில் மண்டையைப் பிய்த்துக் கொண்டே யோசிக்கும் அவசியம் முதல்வாசிப்பினில் எழக் கூடும் தான் ; ஆனால் இறுதியில் சகலத்துக்குமொரு அர்த்தம் பொதிந்திருப்பதைப் புரிந்திடுவோம் ! அவகாசம் இருந்திருப்பின், இதனையொரு proffessional எழுத்தாளர் யாரிடமாவது ஒப்படைத்திருக்கலாமோ ? என்ற எண்ணமும் எனக்குள் தலைதூக்கத் தான் செய்தது ! கடந்த வாரத்தின் ஒவ்வொரு ராவிலும் இரண்டு மணி வரைக்கும் விழித்திருந்து முழுவதுமாய் மாற்றி எழுத பிரயாசைகள் எடுத்த தருணங்களில், வாட்ச்மேனின் குறட்டைச் சத்தம் தான் துணைக்கு இருந்தது ! வழக்கமாய் நமது DTP பெண்கள் வேலைகளை முடித்து விட்டுக் காத்திருக்க, நான் கிழட்டு ATM மிஷினைப் போல தட்டுத் தடுமாறி, மெதுமெதுவாக எடிட்டிங் முடித்த பக்கங்களை அவர்களிடம் கொடுப்பதுண்டு ! "அச்சுக்கு காத்திருக்கிறார்கள் !" என்று மைதீன் இன்னொரு பக்கம் குச்சியை வைத்துக் குத்திக் கொண்டேயிருந்தால்தான் நான் வேலைகளைக் கையிலெடுப்பது வழக்கம். ஆனால் முதன்முறையாக என் வேகத்துக்கு அவர்களால் ஈடு தர இயலா நிலை ! Wholesale மாற்றங்கள் என்றாலுமே அதனைச் செய்வதில் அயர்ச்சி தலைதூக்கவில்லை ! அதற்காக சாகித்ய விருது தரத்தில் இந்த ஸ்கிரிப்ட் இருக்கப் போகிறதென்றெல்லாம் நான் அள்ளிவிட மாட்டேன் ! நமக்கு சாத்தியமானதை முயற்சித்திருக்கிறோம் என்ற சன்னமான திருப்தி ! அவ்வளவே !
வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களுடனான கதைகளை மட்டுமே எதிர்பார்க்கும் நண்பர்களுக்கு சத்தியமாய் இங்கே லயிக்க அதிகமாய் சமாச்சாரங்கள் இருக்கப் போவதில்லை ! "ஊமைப்படம் பார்த்த மாதிரி இருக்கு !"”; “"ஙே…?”; “பேசியே கொல்றியே?" ”; “"என்ன தான் சொல்ல வர்றார் கதாசிரியர் ?"” என்று பலமாதிரியான பேஸ்தடித்த குரலிலான கேள்விகள் இந்த இதழுக்குப் பின்விளைவுகளாக இருக்கக் கூடும் என்பதும் எனக்குப் புரியாதில்லை ! அந்த வகையில் நிச்சயமாய் இதுவொரு மெகா ‘ரி்ஸ்க்‘ என்பதும் புரிகிறது – moreso ஆண்டின் துவக்கத்தில் எனும் போது ! ஆனால் அதே வேளையில், நமது 33+ ஆண்டுப் பயணத்தின் ஒரு "நிஜமான மாறுபட்ட முயற்சி"என்ற சிலாகிப்புமே இதற்கு சாத்தியம் என்ற நம்பிக்கையும் இக்ளியூண்டு இருக்கிறது ! So விளைவுகள் எவ்விதமிருப்பினும், இந்த ஒற்றை முறை மட்டும் "பலனை எதிர்பாராதே!"” என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்!
So "நிஜங்களின் நிசப்தம்" நிசப்தமாய் ‘க்ளிக்‘ ஆனால் சந்தோஷம் ; உரக்க ‘டக்‘ அவுட் ஆனாலுமே சத்தியமாய் வருத்தமில்லை! இந்த முறை மட்டும் நமது பார்முலா இது தான் ! இனி உங்களுக்காச்சு ; நி.நி-காச்சு !! ஓவர் பில்டப்பெல்லாம் உடம்புக்கு ஆகாது என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை ; so இந்தப் பதிவே அவசியம் தானா ? என்ற கேள்வியும் எனக்குள் ஒலிக்காது இருக்கவில்லை தான் ! பணி முடித்த வியாழன் இரவினில் எனது எண்ணங்களை எழுத்தாக்கினேன் ! வாராந்திர பதிவுக்குத் தயாராகிடும் சனிக்கிழமையின் இரவுமே இந்தக் கதை சார்ந்த உணர்வுகள் தலைக்குள் உயிரோட்டத்துடன் தொடர்ந்திடும் பட்சத்தில் - இதனை பதிவாக்கிடலாமென்று நினைத்தேன் ! And here we are !
அப்புறம் இதோ - நமது ஜனவரியின் சீருடை சிரிப்பு நாயகர்களின் அட்டைப்பட first look ! வழக்கம் போல ஒரிஜினல் டிசைன் - பின்னணி வர்ண மாற்றங்களோடு ! கதையைப் பொறுத்தவரை அதே ஸ்கூபி -ரூபி slapstick காமெடி ; இம்முறையே கொட்டும் மழைக்கு மதியிலானதொரு சேற்றுக் காட்டில் ! யுத்தம் என்பது களத்திலிருப்போர்க்கு எத்தனை கடினமானதென்பதை அந்த நகைச்சுவைக்கு மத்தியிலும் உணர்ந்திடச் செய்வதே கதாசிரியரின் நோக்கம் என்பதில் no doubts ! கிராபிக் நாவலின் பணிகளுக்குப் பின்பாய் ஒரே ஓட்டமாய் ஓடிய பணியிது !
And இதோ - நமது வலைமன்னனின் மறுபதிப்புக்கான அட்டைப்படம் ! இந்த இதழ் இதுவரையிலும் மறுபதிப்புக் காணாவொரு கதை என்பது போல் எனக்கொரு நினைப்பு ; correct me if I am wrong guys ! 1987 தீபாவளி சூப்பர் ஸ்பெஷலில் பிரெஷாக ஒரு லோடு புயப்பங்களோடு வெளிவந்த இந்தக் கதையை அப்போதே படித்தவர்கள் எத்தனை பேர் இருப்போம் ? என்றறிய ஆவல் !
And சந்தாக்களின் வேகம் சூடு பிடித்துள்ளது கடந்த வாரத்தினில் !! இன்னமும் பர பர வேகம் தொடர்ந்திட்டால் - நம் பயணம் வழக்கம் போல் தொடர்ந்திட உதவியாக இருக்கும் !
இன்னமும் சந்தாக்களை புதுப்பித்திருக்கா நண்பர்களே - இன்றே செயலில் இறங்கிடலாமே ப்ளீஸ் ?
&
இன்னமும் சந்தா அனுபவங்களை உணர்ந்திரா நண்பர்களே : இந்தாண்டு முயற்சித்துத் தான் பாருங்களேன் ?!
1. நமது வெட்டியான் தம்பியின் இரண்டாவது ஆல்பம் ஐரோப்பாவில் வெளியாகி வெளுத்துக் கட்டுகிற சேதி கிட்டியுள்ளது ! இம்முறையும் இருபாக சாகஸம் & முடிவு சுபமாய்த் தெரிகிறது ! கதைகளின் ஃபைல்கள் வந்து மொழிபெயர்ப்பு ஓடிக் கொண்டுள்ளது ! முதல் புரட்டலுக்கு அதே அதகள பிரம்மாண்டம் கதை நெடுகத் தென்படுகிறது! கதையும் அதே வீரியத்துடன் இருப்பின் awesome ! F & F சந்தாவே : முதல் குடித்தனக்காரர் தயார்!!
2. இன்னொரு offbeat கௌ-பாயுமே தயாராகி வருகிறார்! இவரோ the man we love to hate ! ஒற்றைக்கை பௌன்சரின் இன்னொரு ஆல்பம் சீக்கிரமே ரிலீஸ் ஆகவுள்ளது! பெருமூச்சோடு காத்திருக்கிறோம்‘
3.இரத்தப் படல முன்பதிவுகளுமே இன்னும் இக்கிளியூண்டு வேகம் கூடின - we would be there !!
மீண்டும் சந்திப்போம் guys! இன்னமும் ஒரு வண்டிப் பணிகள் காத்துக் கிடப்பதால் - இந்த ஞாயிறும் எங்களுக்கு முழுநேரப் பணி நாளே !
WISHING ALL A WONDERFUL CHRISTMAS !!!! HAVE A BALL ALL !! BYE FOR NOW !!
பி.கு : Caption போட்டியின் முடிவுகள் பற்றி :
கேப்ஷன் போட்டியில் நிறைய பேர், நிறைய போட்டுத் தாக்கியிருக்க, யாருக்கு பரிசு ? என்று தேர்வு செய்வதில் இல்லாத சிண்டையும் பிய்க்காத குறை தான் !
இப்படிச் செய்யலாமா ? ஒரே ஆளுக்கு 4 சந்தாக்களையும் பரிசாக்குவதற்குப் பதிலாய் 4 பேரைத் தேர்வு செய்து, ஆளுக்கொரு சந்தாப் பிரிவு ? What say ?
பி.பி.கு : நாலு பேருக்குப் பரிசைப் பிரித்து வழங்குவது சரியாக இராதென ராத்தூக்கத்தில் பெரும் தேவன் மண்டைலகொட்டோ சொல்லி வைக்க - பகல் வெளிச்சத்தில் அதனை ஆமோதிக்கவே தோன்றுகிறது ! நிறைய பேர் பங்கேற்றதன் பொருட்டு மெடல்களைப் பிய்த்துக் கொடுப்பதாகின் நம்மாட்கள் தான் ஒலிம்பிக்சிலிருந்து கூடை கூடையாய் காக்காய்க் கடி மெடல்களை அள்ளி வந்திடமாட்டார்களா ? ஒலிம்பிக்ஸ் போகும் அணிகளுள் அளவில் முரட்டுத்தனமானதல்லவா நம்மது ?
So - கீழ்கண்ட கேப்ஷனே பரிசு பெறுகிறது - எனது பார்வையில் :
rajasimman soma20 December 2017 at 11:24:00 GMT+5:30
"எங்க நானும் பார்த்துகிட்டே இருக்கேன் நான் தள்ளி இருந்தா எதிரியோட தலையைப் பார்த்து சுடுறீங்க..பக்கத்தில் வந்துட்டா காலை க்குறி வைக்கிறீங்க ஏன்?"
"நீ இவ்வளவு நெருக்கமா இருக்கும்போது எனக்கு தலைகால் புரியமாட்டேன்குது கண்ணே!"
வாழ்த்துக்கள் நண்பரே ! உங்களின் முகவரியினை மின்னஞ்சல் செய்திடுங்கள் நமக்கு !
And ரகளை செய்திருந்த மற்ற நண்பர்கள் அனைவருக்குமே congrats !! Great tries !!
பி.கு : Caption போட்டியின் முடிவுகள் பற்றி :
கேப்ஷன் போட்டியில் நிறைய பேர், நிறைய போட்டுத் தாக்கியிருக்க, யாருக்கு பரிசு ? என்று தேர்வு செய்வதில் இல்லாத சிண்டையும் பிய்க்காத குறை தான் !
இப்படிச் செய்யலாமா ? ஒரே ஆளுக்கு 4 சந்தாக்களையும் பரிசாக்குவதற்குப் பதிலாய் 4 பேரைத் தேர்வு செய்து, ஆளுக்கொரு சந்தாப் பிரிவு ? What say ?
பி.பி.கு : நாலு பேருக்குப் பரிசைப் பிரித்து வழங்குவது சரியாக இராதென ராத்தூக்கத்தில் பெரும் தேவன் மண்டைலகொட்டோ சொல்லி வைக்க - பகல் வெளிச்சத்தில் அதனை ஆமோதிக்கவே தோன்றுகிறது ! நிறைய பேர் பங்கேற்றதன் பொருட்டு மெடல்களைப் பிய்த்துக் கொடுப்பதாகின் நம்மாட்கள் தான் ஒலிம்பிக்சிலிருந்து கூடை கூடையாய் காக்காய்க் கடி மெடல்களை அள்ளி வந்திடமாட்டார்களா ? ஒலிம்பிக்ஸ் போகும் அணிகளுள் அளவில் முரட்டுத்தனமானதல்லவா நம்மது ?
So - கீழ்கண்ட கேப்ஷனே பரிசு பெறுகிறது - எனது பார்வையில் :
rajasimman soma20 December 2017 at 11:24:00 GMT+5:30
"எங்க நானும் பார்த்துகிட்டே இருக்கேன் நான் தள்ளி இருந்தா எதிரியோட தலையைப் பார்த்து சுடுறீங்க..பக்கத்தில் வந்துட்டா காலை க்குறி வைக்கிறீங்க ஏன்?"
"நீ இவ்வளவு நெருக்கமா இருக்கும்போது எனக்கு தலைகால் புரியமாட்டேன்குது கண்ணே!"
வாழ்த்துக்கள் நண்பரே ! உங்களின் முகவரியினை மின்னஞ்சல் செய்திடுங்கள் நமக்கு !
And ரகளை செய்திருந்த மற்ற நண்பர்கள் அனைவருக்குமே congrats !! Great tries !!
Hai 1ST.
ReplyDelete2nd ... 😊
ReplyDelete3rd
ReplyDeleteHi
ReplyDeleteவந்தாச்சி
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteமுதல் பத்துக்குள்ள.
ReplyDeleteவணக்கம்.
அண்ணா நானும்
Deleteஅனைவருக்கும் மாலை வணக்கம்
ReplyDeleteஇரத்தப் படல முன்பதிவுகளுமே இன்னும் இக்கிளியூண்டு வேகம் கூடின
ReplyDeleteஆகா மகிழ்ச்சியான செய்தி
XIII முன்பதிவு listஐ ஒருக்கா கண்ணில் காட்ட முடியுமெனில் மகிழ்ச்சி டபுள்!
ReplyDeleteஇம்மாத ப்ளூகோட் பட்டாளக் கதையின் அட்டை உட்பக்கங்களில் XIII -ன் முன்பதிவுப் பட்டியல் உள்ளது சார் !
Deleteசூப்பர் சார்
Deleteநன்றி நன்றி!
Deleteநன்றி சார்.
Deleteமருத்துவரய்யா வணக்கம்
Deleteவணக்கம் ஆசிரியர் & நண்பர்களே
ReplyDeleteஅய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.
ReplyDeleteபுதிய 13 முன் பதிவு பட்டியல்
போடுங்க சார்.
கிருஸ்துமஸ் பரிசாக நினைத்துகொள்கிறோம்.
விஜயன் சார்
ReplyDeleteதங்கள் கிருஸ்துமஸ் பரிசாக 13 ன்
முன்பதிவு பட்டியல் ப்ளீஸ்.
ஆவலுடன் காத்திருக்கும்
கணேஷ்KV.
தம்பிகள் பிரசன்னா & பழனி
ganesh kv : இம்மாத ப்ளூகோட் பட்டாளக் கதையின் அட்டை உட்பக்கங்களில் XIII -ன் முன்பதிவுப் பட்டியல் உள்ளது சார் !
DeleteSuper
Deleteமிக்க நன்றி சார்.
Delete13 முதல் பாகத்தில் நம் ஜேஸனை
ReplyDeleteஅடையாளம் கண்டுகொண்ட எதிரிகள்
ஜேஸனை குறிப்பிடும் சங்கேத வார்த்தை
கிருத்துமஸ் தாத்தா என்பதே.
ஆகவே யுவர் ஹானர் தங்களுக்கு
தெரியாத சட்டம் எதுவும் இல்லை ஆகவே
நல்ல தீர்ப்பாக பட்டியல் வெளியிடுமாறு
கேட்டுக்கொள்கிறேன்.
சாட்சாத் நம்ம கிருஸ்துமஸ் தாத்தா வேண்டும் தான்
ReplyDeleteமொழி பெயர்ப்பு செய்த எடிட்டரே இப்படின்னா.........
ReplyDeleteஎன்ற கதி......(
சார் சமீபத்தில் கண்ணில் பட்ட XIII spinoff மார்த்தா.கால்வின்வாக்ஸ்.ஜானதன் ஃப்ளை என்னமோ சொல்லவருது முடிந்தால் F&F ல் ஒரு ஸ்லாட் கிடைத்தால்
ReplyDeleteமகிழ்ச்சி சார் வாய்ப்பிருந்தால் .......?
👌
Deletepalanivel arumugam : அங்கே டவர் ரொம்ப சுமாராம் பழனிவேல்....அதனால் அவர்கள் சொல்ல வருவதை புறா காலில் கட்டித் தூது அனுப்புவது மட்டுமே தான் வழி ! அதையும் வழியில் யாராச்சும் வறுத்துத் தின்னாது விட்டால் தான் ! So அப்போதைக்குப் பார்த்துக் கொள்வோம் !
Deleteபழனிவேல் வாங்கினார் மீண்டும் ஒரு பல்ப் ஷோசேடு
Deleteபழனிவேல் வாங்கினார் மீண்டும் ஒரு பல்ப் ஷோசேடு
DeleteHello Editor sir&how are you my dear friends. Wish you happy Christmas. 🎂🎂🍮🍮🍰🍰🎂🎂
ReplyDeleteஒற்றைக்கை பௌன்சரின் இன்னொரு ஆல்பம் சீக்கிரமே ரிலீஸ் ஆகவுள்ளது! பெருமூச்சோடு காத்திருக்கிறோம்‘
ReplyDeleteஆசிரியரே புல் வெட்டும் கத்தரிக்கோல்
சாணை தீட்டி ரெடி பண்ணுங்கோ.??
அண்ணா கத்திரி பத்தாது ரப்பரும் வேணும்
Deleteவிரைவில் எனக்கு பிடித்த ப்ளூக்கோட்பட்டாளம் ஆஹா!தூள்.
ReplyDelete22😊
ReplyDeleteநண்பர்களுக்கு கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
ReplyDelete/// "நிஜங்களின் நிசப்தம்" நிசப்தமாய் ‘க்ளிக்‘ ஆனால் சந்தோஷம் ; உரக்க ‘டக்‘ அவுட் ஆனாலுமே சத்தியமாய் வருத்தமில்லை! இந்த முறை மட்டும் நமது பார்முலா இது தான் ! இனி உங்களுக்காச்சு ; நி.நி-காச்சு !!///
ReplyDeleteப்ரசர் ஏறுதே சொக்கா ..!!
I loveeee ஊமைப்படம். நீங்க ஓட்டுங்க சார் பார்க்க நாங்க ரெடி!
ReplyDeletesachin Kanmani : புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்து விடுவோம்லே !
Deleteஉள்ளேன் அய்யா _/|\_
ReplyDelete.
எவ்ளோ பெரிய பதிவு..
ReplyDeleteபடிச்சிட்டு வரேன்..
இரவு வணக்கம் நண்பர்களே....
ReplyDeleteஜனவரி இதழ்கள் எப்போது எதிர்பார்க்கலாம் எடி சார்
ReplyDeleteஆச்சர்ய பதிவு..
ReplyDeleteஆசிரியரின் விமர்சனம் இப்போதே நிஜங்களின் நிசப்தத்தை படிக்க தூண்டுகிறது
ReplyDeleteசார் ஸ்பைடரோட அட்டைக்கு முன்னால நீங்க சொன்ன அத்தனயும் காலி...stunning..நம்ம அட்டைப்பட வரலாற்றுலயே இத மிஞ்சிய அட்டை இருக்குமா...சூப்ப்ப்ப்பர்..
ReplyDeleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : ஸ்டீல்....நடப்பாண்டில் மட்டும் இதே வரிகளை ஒரு நாற்பத்திரண்டு இதழ்களுக்குப் பதிவு பண்ணி இருப்பீர்கள் என்று குத்துமதிப்பாய் ஒரு ஞாபகம் !
Delete///ஸ்டீல்....நடப்பாண்டில் மட்டும் இதே வரிகளை ஒரு நாற்பத்திரண்டு இதழ்களுக்குப் பதிவு பண்ணி இருப்பீர்கள் என்று குத்துமதிப்பாய் ஒரு ஞாபகம் !///
DeleteLOL :)))))))))))
விஜயன் சார், அது தான் ஸ்டீல்.
Deleteகாமிக்ஸ் என்று மட்டும் ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி கொடுங்கள் அதையும் ஆகா ஓகோ என்பார். அவர் ஒரு காமிக்ஸ் முரட்டு பக்தர்.
சார் அதுக்கு காரணம் நம்ம மாலையப்பன்.....பொன்னன்...நீங்க... எல்லாரும்தான்..அந்த வானத்து மேகத்து நிறம்..தலைவரோட பாய்ச்சல் ...அட்டகாசமா அமைஞ்சிருக்கு...ஸ்பைடர தவிர யாருக்கு இது பொருந்தும்....கலக்கிட்டீங்க... இப்படிமாதா மாதம் ஒனறை மிஞ்சும் வண்ணம் ஒன்ற பாத்தா புரோட்டா சாப்டட சூரி மாதிரி ஆயிருது எனது நிலம....கோட்ட அழிச்சிட்டு திரும்ப மொதல்ல ிருந்து....
Deleteஈவி lol இல்ல...மியாவ்😁
Deleteபரணி அப்றம் காகிதத்ல தோர்கல்னு படிக்க வேண்டிருக்கும்....பரவால்லயா
Deleteஏலே நான் உன் அளவிற்கு இன்னும் வளரவில்லை.. காம்பிளான் எல்லாம் கட்டுபிடியாகவில்லை :-)
Delete/////ஒற்றை அடித்தம், திருத்தம் கூட இல்லாது மணிமணியான கையெழுத்தில், அதகள ஆங்கிலத்தில் ஒட்டுமொத்தமாய் 2 பாகங்களையும் அவர் எழுதித் தந்திருந்த அழகுக்கு பாண்டிய நாட்டில் பாதியை அவர் பெயருக்குப் பட்டா போட்டுத் தந்திருப்பேன் - அது மட்டும் என் சொத்தாக இருந்திடும் பட்சத்தில் ! But பாண்டிய நாடெல்லாம் சாத்தியமில்லை ; வேண்டுமானால் பாண்டியன் ஹோட்டலில் நாளைக்குப் பணம் தருவதாய்ச் சொல்லி விட்டு நாலு பரோட்டா மட்டும் வாங்கித் தரலாம் என்பதே நமது நிதி நிலைமை என்பதால் மனசுக்குள் ஒரு மெகா வணக்கம் போட்டு வைத்தேன் -////
ReplyDeleteஹா ஹா ஹா! :)))))))
+ ))))
Delete///
ReplyDeleteபி.கு : Caption போட்டியின் முடிவுகள் இன்றிரவு ! ///
வெற்றி பெறப்போகும் நண்பருக்கு நம்பள் அட்வான்ஸ் வாழ்த்துகள் ஹே!
ஆனால் இந்த முறை போட்டி கடுமையாக இருந்தது, நிறைய நண்பர்கள் நன்றாக எழுதி இருந்தார்கள்.
Deleteஆசிரியர் சிறந்ததை தேர்ந்தெடுக்க ரொம்பவே தினறப்போகின்றார்.
///ஆசிரியர் சிறந்ததை தேர்ந்தெடுக்க ரொம்பவே தினறப்போகின்றார்.///
Deleteஉண்மைதான்!
எடிட்டர் பணி அவ்வளவு சுளுவானதில்லை!
GUYS : கேப்ஷன் போட்டியில் நிறைய பேர், நிறைய போட்டுத் தாக்கியிருக்க, யாருக்கு பரிசு ? என்று தேர்வு செய்வதில் இல்லாத சிண்டையும் பிய்க்காத குறை தான் !
Deleteஇப்படிச் செய்யலாமா ? ஒரே ஆளுக்கு 4 சந்தாக்களையும் பரிசாக்குவதற்குப் பதிலாய் 4 பேரைத் தேர்வு செய்து, ஆளுக்கொரு சந்தாப் பிரிவு ? what say ?
அருமையான ஐடியா சார் ஒரே கல்லுல 4 மாங்கா !
Deleteஅருமையான ஐடியா சார் ஒரே கல்லுல 4 மாங்கா !
Deleteஅருமையான ஐடியா சார்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவிஜயன் சார், இந்த பதிவு படித்த பின் எனது மனநிலை கிராபிக்ஸ் நாவல் படித்த மாதிரி இருக்கு :-). ஆமாம் நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிந்த மாதிரியும் இருக்கு அதேநேரம் புரியாத மாதிரியும் இருக்கு!
Deleteஅதே போல் ரொம்ப பில்டப் இந்த கதைக்கு நீங்கள் கொடுத்தாலும் எப்போதும் போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் படிக்க ஆவலுடன் உள்ளேன்.
//நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிந்த மாதிரியும் இருக்கு அதேநேரம் புரியாத மாதிரியும் இருக்கு! //
DeleteSuccess !! Success !!
///Success !! Success !! ///
DeleteLOL :))))))))))
ஆகா... நான் முடிய பிராண்டி கிட்டு இருப்பதுதான் வெற்றியா! ஏழுமலையானே என்ன காப்பாத்துங்க.
DeleteSuccess !! Success !!
Delete####
:-)))))
அன்டர்டேக்கரின் புதிய ஆல்ப அட்டைப்படம் அசத்தலாக இருக்கிறது. வரையப்பட்டிருக்கும் விதமே மனதுக்குள் ஏதோவொரு கனமான உணர்வை ஏற்படுத்துகிறது!
ReplyDeleteபொதுவாக யாருமே வெட்டியானின் வருகைக்காக ஏங்கிக் கிடப்பதில்லை. ஆனால் நம் விசயத்தில் அது நிகழ்வதும் ஒருவகையான விந்தைதான்!
ஈரோடு விஜய் : அசத்தலாய் இருப்பது அந்த ஆல்பத்தின் அட்டைப்படம் மட்டும் தானா ?
DeleteDear Edi,
ReplyDeleteEagerly looking forward for the Graphic Novel, hopefully it would justify your praise and work. So when is the package for Jan would be sent over this month?
Spider cover is real stunner... Once again.
Rafiq Raja : நமது டீமின் 3 அங்கங்கள் கிருஸ்துமஸ் கொண்டாடச் செல்லவிருக்கும் விஷயம் இப்போது தான் உரைக்கிறது !! டெக்ஸ் வில்லரின் பணிகள் மட்டுமே பாக்கி - அதனை முடிக்கும் வேகத்தைப் பொறுத்தே despatch அமைந்திடும் ! புதன்கிழமை update செய்திடுவேன் சார் !
Deleteஅன்டர்டேக்கரின் புதிய ஆல்ப அட்டைப்படம் அசத்தலாக இருக்கிறது. அடுத்த வருடம் கண்டிப்பாக எங்களுக்கு படிக்க கொடுத்து விடுங்கள் சார்.
ReplyDeleteபௌன்சர் அப்படியே இருக்கட்டும்.. இப்போது இவர் வேண்டாம். இன்னும் சில வருடங்கள் சென்ற பின் இவரை பார்த்து கொள்ளலாம்.
எங்கயோ பவுன்சரோட படத்தபாத்துட்டிங்க போல ...?
Deleteநமது இதழில் வெளிவந்த கதைகள் படிப்பதற்கு நன்றாக இருந்தாலும் படித்த முடித்த பின் மனதிற்கு கதையின் சில கதாபாத்திரங்கள் ஒவ்வாமை உணர்வைத் கொடுத்து. அதிலும் சில இடங்களில் வன்முறை அதிகமாக இருந்தது என்பதும் மற்றொரு காரணம்.
Deleteகுறிப்பு: தமிழ் காமிக்ஸ் தவிர வேறு மொழி காமிக்ஸ் படிப்பது இல்லை. ஆங்கிலத்தில் tinkle மற்றும் அமர் சித்திரக் கதைகள் தவிர வேறு எதுவும் படித்து இல்லை பழனிவேல்.
39th
ReplyDelete"நிஜங்களின் நிசப்தம்" எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
ReplyDeleteGUYS : கேப்ஷன் போட்டியில் நிறைய பேர், நிறைய போட்டுத் தாக்கியிருக்க, யாருக்கு பரிசு ? என்று தேர்வு செய்வதில் இல்லாத சிண்டையும் பிய்க்காத குறை தான் !
ReplyDeleteஇப்படிச் செய்யலாமா ? ஒரே ஆளுக்கு 4 சந்தாக்களையும் பரிசாக்குவதற்குப் பதிலாய் 4 பேரைத் தேர்வு செய்து, ஆளுக்கொரு சந்தாப் பிரிவு ? What say ?
அருமையான ஐடியா சார் ஒரே கல்லுல 4 மாங்கா !
Deleteஒரே கல்லுல 4 மாங்காவா ? அல்லது ஒரே மண்டையிலே பல கற்களா ? பொதுவான அபிப்பிராயம் தெரிந்த பின்னே தீர்மானம் செய்யலாம் !
Deleteஇல்லை சார் வென்றவர்கள் விரும்பும் பிரிவு எனும் போது நலமே சார்
Deleteஅதே அதே
Deleteவிஜயன் சார், நான்கு சந்தாவும் ஒரே ஆளுக்கு பரிசு என்று சொல்லி விட்டு மாற்றுவது பல/சிலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். எனவே உங்களின் இந்த புதிய பரிசு முறை அனைவரும் / பெரும்பான்மையானோர் ஆதரவளித்தால் மட்டும் நடைமுறை படுத்தலாம்.
Deleteஅல்லது முதல் பரிசு பெறுபவருக்கு மட்டும் அறிவித்தபடி நான்கு சந்தாவும் பரிசாகவும்; அடுத்த முன்று இடங்களில் உள்ளவர்களுக்கு சிறப்பு பரிசாக அவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு சந்தாவை மட்டும் கொடுக்கலாம். இது பல கற்களையும் பூங்கொத்தாக மாற்றும்.
PfB +1
Deleteஅல்லது இந்த ஐடியாவை கொஞ்சம் மாற்றி...
முதல் பரிசு - A,B,C,D
இரண்டாவது பரிசு - மொத்த சந்தாத் தொகையில் 25% டிஸ்கவுண்ட்
மூன்றாவது பரிசு - மொத்த சந்தாத் தொகையில் 20% டிஸ்கவுண்ட்
நான்காவது - மொ.ச.தொ 15% டிஸ்கவுண்ட்
ஐந்தாவது - மொ.ச.தொ 10% டிஸ்கவுண்ட்
பரிசு கொடுத்தமாதிரியும் ஆச்சு... சந்தா எண்ணிக்கையில் 4 கூடினாப்லயும் ஆச்சு! இன்னான்றீங்க எடிட்டர் சார்?
ஒரே மண்டையிலேயே நாலு கல்லையும் போட்டுவிடுங்கள் சார்..
Deleteநல்லா அனுபவிக்கட்டும்..:-))
கலந்துக்காத எனக்கும் ஒரு ஆறுதல் பரிசு......ஹீஹீ.....
Deleteஅப்படியே... அது டெக்ஸ் வில்லரேஏஏ தான்னு கண்டுபிடிச்சு லிங்க் கொடுத்த நண்பருக்கும் ஒரு சிறப்புப் பரிசு கொடுக்கலாம்!
Deleteஉங்களுக்கு ஆறுதல் பரிசா மொத்தப் பரிசையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்
Deleteகூடவே... மனசுக்குள் கற்பனை ஊற்றெடுத்தாலும், ஒரு கேப்ஷன் கூட எழுதாமல் தொடர்ந்து வீராப்பாய் மெளனம் சாதித்துவரும் நம் மெளனப்பார்வையாளர்களுக்கும் ஒரு சிறப்புப் பரிசை (சத்தம் காட்டாமல்) கொடுக்கலாம்...
Deleteஅல்லது... 'பரோட்டா சூரி'யாய் அவதாரம் எடுத்து கேப்ஷன் போட்டியை மொதல்லேர்ந்து நடத்தலாம் ( படத்துல அம்புக்குறி போட்டு 'இதான் டெக்ஸ் வில்லர்'னு காட்டவேண்டியது ரொம்பவே அவசியம்) :P
Deleteஅப்படியே சென்னை சந்திப்பு பற்றியும் சார்
ReplyDeleteதானைத் தலைவன் ஸ்பைடரின் அட்டைப்படம் மிக அருமை
ReplyDeleteசந்தா கட்ட முடிய வில்லையே என்று வயிறு எரிய வைக்கிறது ஜனவரியின் அட்டைப்படங்கள்
ஆசிரியர், ஜூ.எ., சீ.எ., குடும்பத்தினர், லயன் அலுவலக நண்பர்கள், வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்.
ReplyDelete65வது
ReplyDeleteSunday working day ? Oh! poor (our) staff team!
ReplyDeleteEditor sir Good morning. Please inform the release date of jumbo comics 🙏🙏🙏🙆🙆🙇🙇
ReplyDeleteவலை மன்னனின் விசித்திர சவால் படித்து போல் ஞாபகம் இல்லை. படிக்க என்றும் போல் ஆர்வமாக உள்ளேன். ஸ்பைடரா கொக்கா!
ReplyDeleteப்ளூ கோட் பட்டாளம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்; இந்த ஜோடி பல இடங்களில் நம்ப ஊர் கவுண்டமணி செந்தில் ஜோடியை நினைவுபடுத்தும் அதே நேரம் இராணுவத்தில் நடக்கும் விஷயங்களை நகைச்சுவையுடன் சொல்வது.
ReplyDeleteகிராபிக் நாவலின் உங்களின் முன்னோட்டம் ஆவலை அதிகரிக்கிறது சார்..புதுவருடத்தின் முதல் இதழாக இதனையே தேர்வு செய்துவிடலாம் என முடிவெடுத்து விட்டேன்.
ReplyDeleteகாத்திருக்கிறேன்..
விசித்திர சவால் அட்டைபடம் செம கலக்கல் சார்...இதுவரை மறுபதிப்பு காணாத இதழ் என்றே நினைக்கிறேன்
ReplyDeleteகேப்ஷன் போட்டி முடிவு பற்றி என்னுடைய கருத்து ..
ReplyDeleteசிறந்த கேப்ஷன் எழுதி வெற்றி பெற்ற நண்பர்க்கு ஒரு நபருக்கே என்றாலுமே முதலில் அறிவித்த படி முழு சந்தா பரிசை அளித்து விடுங்கள் சார்..அதுவே அவர்களுக்கு முழு மகிழ்ச்சியை கொடுக்கும்.
இரண்டாம் பரிசு ..மூன்றாம் பரிசு பற்றி தாங்கள் ஏதும் அறிவிக்காத காரணத்தால் நோ வருத்தமும்...:-)
( இனி அறிவித்தாலும் மகி்ழ்ச்சியே..)
மற்றபடி வெற்றி பெறும் நண்பருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும்..பாராட்டுதல்களையும் முன்கூட்டியே தெரிவித்து கொள்கிறேன்..:-)
Present Sir
ReplyDeleteமாத்தியோசி-264
ReplyDeleteமாத்தியோசி-265
Deleteகி.நா.பில்டப் ஓவரா இருக்கே......
ReplyDeleteகைக்கு வரும் வேளைக்காக காத்திருக்கிறேன்....
நண்பர்களுக்கு கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteபௌன்சர் பின்னர் பார்த்துக்கொள்ளளலாம்.
இந்தோனேஷியாதானே போயிருக்கீங்க எடிட்டர் சார்... அங்கே சீஸ்மோகிராஃப் கருவி சீப்பா கிடைச்சா ஒன்ன வாங்கிட்டுவந்துடுங்க. கேப்ஷன் போட்டிக்கான பரிசை தேர்வு செய்யும்போது அந்தக் கருவியின் சென்ஸார்களை உடம்பில் பொருத்திக்கிட்டீங்கன்னா... எந்தக் கேப்ஷனைப் படிக்கும்போது அதிக ரிக்டர் ஸ்கேல் காட்டுதோ... அதை வச்சு முதல் பரிசை சுளுவா முடிவு பண்ணிடலாம்! :)
ReplyDelete/// எந்தக் கேப்ஷனைப் படிக்கும்போது அதிக ரிக்டர் ஸ்கேல் காட்டுதோ... அதை வச்சு முதல் பரிசை சுளுவா முடிவு பண்ணிடலாம்! :)///
Deleteசீஸ்மோகிராஃப் ஜாம் ஆயிடும் பரால்லியா ..!!
அது ஜாம் ஆனாக்கூட பரவாயில்லை .. எடிட்டர் சாரோட நிலமையை நினைச்சுப்பாருங்க..;)
ReplyDelete1. நமது வெட்டியான் தம்பியின் இரண்டாவது ஆல்பம் ஐரோப்பாவில் வெளியாகி வெளுத்துக் கட்டுகிற சேதி கிட்டியுள்ளது//
ஆஹா சூப்பப் ஸார்.நாமும் தூள் கிளப்பி விடலாம்.
இன்னொரு offbeat கௌ-பாயுமே தயாராகி வருகிறார்! இவரோ the man we love to hate ! ஒற்றைக்கை பௌன்சரின் இன்னொரு ஆல்பம் சீக்கிரமே ரிலீஸ் ஆகவுள்ளது! பெருமூச்சோடு காத்திருக்கிறோம்.//
ReplyDeleteகத்தரிக்கோல் குறைவாக பயன்படுத்துங்கள் ஸார் ஏனென்றால் உங்களுக்கு கை வலிக்குமே.
நாங்களும் ஆவலோடு பௌண்சரை எதிர் நோக்குகிறோம்.
///கத்தரிக்கோல் குறைவாக பயன்படுத்துங்கள் ஸார் ஏனென்றால் உங்களுக்கு கை வலிக்குமே.///
Deleteநீங்க கூட புரொஃபைல் போட்டோவை மாத்தினா தேவலை ஜெயக்குமார் .. . உத்துஉத்துப் பார்த்து கண்ணுவலிக்குது ..!!;)
நாலு பேருக்குப் பரிசைப் பிரித்து வழங்குவது சரியாக இராதென ராத்தூக்கத்தில் பெரும் தேவன் மண்டைலகொட்டோ சொல்லி வைக்க - பகல் வெளிச்சத்தில் அதனை ஆமோதிக்கவே தோன்றுகிறது ! நிறைய பேர் பங்கேற்றதன் பொருட்டு மெடல்களைப் பிய்த்துக் கொடுப்பதாகின் நம்மாட்கள் தான் ஒலிம்பிக்சிலிருந்து கூடை கூடையாய் காக்காய்க் கடி மெடல்களை அள்ளி வந்திடமாட்டார்களா ? ஒலிம்பிக்ஸ் போகும் அணிகளுள் அளவில் முரட்டுத்தனமானதல்லவா நம்மது ?
ReplyDeleteSo - கீழ்கண்ட கேப்ஷனே பரிசு பெறுகிறது - எனது பார்வையில் :
rajasimman soma20 December 2017 at 11:24:00 GMT+5:30
"எங்க நானும் பார்த்துகிட்டே இருக்கேன் நான் தள்ளி இருந்தா எதிரியோட தலையைப் பார்த்து சுடுறீங்க..பக்கத்தில் வந்துட்டா காலை க்குறி வைக்கிறீங்க ஏன்?"
"நீ இவ்வளவு நெருக்கமா இருக்கும்போது எனக்கு தலைகால் புரியமாட்டேன்குது கண்ணே!"
வாழ்த்துக்கள் நண்பரே ! உங்களின் முகவரியினை மின்னஞ்சல் செய்திடுங்கள் நமக்கு !
And ரகளை செய்திருந்த மற்ற நண்பர்கள் அனைவருக்குமே congrats !! Great tries !!
அருமையாக எழுதி சந்தா A,B,C,D பரிசை தட்டிச் செல்லும் நண்பர் rajasimman soma20 (!)வுக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
Deleteதொடர்ந்து கலக்குங்கள் நண்பரே!
அருந
///And ரகளை செய்திருந்த மற்ற நண்பர்கள் அனைவருக்குமே congrats !! Great tries !!///
Deleteநிறையப்பேர் பின்னிப்பெடலெடுத்திருந்தனர்! நண்பர்கள் அனைவருக்குமே நமது வாழ்த்துகளும்!!
வாழ்த்துக்கள் ராஜ சிம்மன் நண்பரே
Deleterajasimman soma20 @
Deleteவாழ்த்துகள் நண்பரே 💐💐💐!!
rajasimman soma20 @
Deleteவாழ்த்துக்கள் நண்பரே.
மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே....
Deleteதொடர்ந்து கலக்குங்கங்கள்..)
நாட்டாமை சார், சரியான முடிவு.
Deleteவாழ்த்துகள் ராஜ சிம்மன் சார்.
Delete///நாலு பேருக்குப் பரிசைப் பிரித்து வழங்குவது சரியாக இராதென ராத்தூக்கத்தில் பெரும் தேவன் மண்டைலகொட்டோ சொல்லி வைக்க///
Delete@ PfB...
எனக்கென்னவோ எடிட்டர் உங்களைத்தான் 'பெரும் தேவன்'னு சொல்றாரோன்னு டவுட்டா இருக்கு!
ஏன்னா...
///Parani from Bangalore24 December 2017 at 05:47:00 GMT+5:30
விஜயன் சார், நான்கு சந்தாவும் ஒரே ஆளுக்கு பரிசு என்று சொல்லி விட்டு மாற்றுவது பல/சிலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம்.///
ஹிஹி! பெரும் தேவன் மனிடோவுக்கு என் வணக்கம்கள்!
This comment has been removed by the author.
Deleteஅப்படி எல்லாம் இல்லை விஜய். எனக்கு ஆசிரியர் சொன்னதை செய்ய வேண்டும் என்பதே எனது ஆவல்:
Deleteமொத்த பரிசையும் அசைத்து பார்க்கும்
Deleteஒரு கேப்ஷன் பார்க்க...இங்கே'கிளிக்'
[கண்ணடிக்கும் அண்டர்டேக்கர் படம் ஒன்று..ஹீ..ஹீ..]
மாயாவி சிவசிவா
Deleteஅதுல டெக்ஸூ நம்ப காலத்து பெல்ஸ் பேண்ட் போட்ருக்காரு பாருங்க.
மாயாவி சிவாவின் கேப்சனையே அசைத்து பார்க்கும் கேப்சன் இக்கட:
DeleteA : கார்சன் , டைகர் , கிட் - எல்லாரும் இங்க வந்து வியூகம் அமைச்சு நில்லுங்க.
B : யாராவது முதல்ல இவர் யாரருன்னு சொல்லுங்க !மேல் திசையில் கீர்த்தி வாய்ந்த டெக்ஸ் வில்லர் நான் தான்னு புளூகுறாரு.
//நாலு பேருக்குப் பரிசைப் பிரித்து வழங்குவது சரியாக இராதென ராத்தூக்கத்தில் பெரும் தேவன் மண்டைலகொட்டோ சொல்லி வைக்க - பகல் வெளிச்சத்தில் அதனை ஆமோதிக்கவே தோன்றுகிறது !//
ReplyDeleteசரியான தீர்வு..
rajasimman soma@ வாழ்த்துக்கள் நண்பரே
Congratulations soma
Deleteசர் அப்ப அட்டகஅசமான விருந்து நிசப்தமாய் காத்திருக்கிறது...சார் நீல சட்டையர்கள் அட்டைபடம் அட்டகசம்...கதை முழுக்க மழையில் நனைய ..களி மண் சேற்றில் கரைய களிப்புடன் காத்திருக்கிறேன்...சார் ஐன்ஸ்டீனின் கற்பனைய நிறைவேற்றிக் காட்டிய ஸ்பைடர் பூச்சுற்றலா....கரடி முகத்தானையும் , பன்றி முகத்தானையும் , ஆக்ரோவையும் , தானைத்தலைவனையும் மறக்க முடியுமா...சிவப்புத் தளபதிதான பெயர் மாறி வந்தது..படித்து முடித்ததும் கால ியந்திரத்தில்நாமும் ஒருநாள் ராஜ ராஜ சோழனை தரிசிக்கலாம் என மாபெரும் சந்தோசத்தில் திளைத்தது நினைவில்.....அட்டைபடம் புகை கக்கும் நிறம்...மேகமும் அருமை...வெட்டியான் அட்டைபடம் கலக்கல்...சோகம் போல... வான்சின் xiiiwoman பற்றி விரிவா சொல்லுங்க சார்...
ReplyDeleteகோயமுத்தூர்ல வெய்யில் கொஞ்சம்
ReplyDeleteஅதிகம்தான்.என்ன ஸ்டீலு அப்படித்தானே. இல்ல வரவேற்பு
பிட்டுபிட்டா வருது அதான்.
A.ஏய் கேப்சனுக்கு புதுசா ஒண்ணு யோசிச்சுருக்கேன் சொல்லட்டா...
ReplyDeleteB.அடசாமி டெக்ஸ்..போட்டி முடிஞ்சு இரண்டு மணி நேரம் ஆச்சு..
வா வாழ்த்திட்டு பொடி நடயா டெக்ஸாஸ் போய் சேர்வோம்...
சூப்பர்.
Deleteஇத்தனை நாள் எங்க இருந்தீர்கள் ஜி? பின்னுரிங்க.
Deletesuper
Deleteவாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல..போட்டிக்கு வந்த கேப்சன்கள் அனைத்துமே அருமை,ஒரு இளம் கவ் பாய் அவனுடைய அன்பு மனைவி இருவருக்கும் நடக்கும் சின்ன சின்ன சந்தோசங்கள் இதுதான் என்னுடைய கான்செப்ட் .வெற்றி பெற்றமைக்கு மகிழ்ச்சி .அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ராஜ சிம்மன் சார்.
Deleteவாழ்த்துக்கள் ராஜ சிம்மன் சார்.
Deleteவாழ்த்துக்கள்! கலக்கிடீங்க பாஸ்!
Deleteஅட கான்செப்ட் ரெடி பண்ணி எழுதுவது என்றால் நீங்கள் எழுத்தாளரா ஜி? மீண்டும் வாழ்த்துக்கள்.
Deleteஇன்று தனது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் நமது காமிக்ஸ் பிதாமகர் சௌந்திரபாண்டியன் சார் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteஅவர் இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏻🙏🏻🙏🏻
🎂🎂🎂🎂🎂
💐💐💐💐💐
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார்
Deleteஅய்யா செளந்திரபாண்டியன் அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.
Deleteசீனியர் எடிட்டர் அவர்களுக்கு ஈனாவினாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும், வணக்கங்களும்!
Deleteசீனியர் எடிட்டரின் பிறந்தநாள் ஜனவரி-9 என்பதாக நினைக்கிறேன்.! தகவல் சரிதானா..?!
Deleteசரியே சார் !
DeleteA+B+C+D போச்சே.
ReplyDeleteஅந்த பொண்ண நினச்சா பாவமா இருக்கு
டெக்ஸ வறுக்குறதா நெனச்சி கேப்சன் போட்டதுல அந்த பொண்ணு வாங்குன ஊமை அடி ஜாஸ்தி தான்.
நி.நி 😢 Physics பாடம் மாதிரி இல்லாம , நம்ப கூட Chemistry நல்லா ஒர்க் அவுட் ஆகுமா பாப்போம்.
அல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பொங்க வேற வந்துருச்சி.
ஆனா கரும்ப தான் ரோட்ல எங்கனயும் பாக்க முடியல.
சந்தோசம்.
J
போட்டி முடிஞ்ச கேப்சன்.
DeleteA : அப்பாட! எப்பிடியோ என்ன டெக்ஸ் தான் கண்டுபிடிச்சிட்டாங்கே.
B : அதனால தான் எனக்கு மயக்கமா வருது.என்னால கண்டுபிடிக்க முடியலியே.
எடிட்டர் எழுதிருக்கறத பாத்தா நி.நி Dark fantasy யா இருக்கும் போலருக்கு.
Deleteஜெ @ எப்படி இப்படி:-)
Deleteஅன்பின் திரு விஜயன் அவர்களுக்கு,
ReplyDeleteஇம்முறை சென்னையில் நண்பர்களுக்கான சந்திப்பு கொஞ்சம் குழப்பமானது என்பதை விட,கொஞ்சம் மாறுதலானது.
காரணங்கள்:
விழா வருடத்தின் ஆரம்ப நாட்கள் விழா துவங்குவதாக இல்லாமல், மாத நடுவில் முதல் சந்திப்புக்கான நாளாக அமைந்ததால்,முதல் வாரத்திலேயே புத்தகங்கள் அனுப்பவேண்டிய பழக்கத்தை மாற்றி தை திருநாள் அன்று வரை
தள்ளிவைப்பது ஆகாத காரியம். ஆகையால் புத்தக வெளியிடு என சின்னஞ்சிறு காரணம் கூட கிடைக்காத நிலை நண்பர்கள் குழுவாக வந்து கும்மாளம் அடிப்பது என்பது கடினமே.!
தைதிருநாளை குடும்பத்துடன் கொண்டாடுவதை தவிர்ப்பதும்,சென்னைக்கு டிக்கெட் பிடிப்பதும் இன்னுமும் கடினம்.! ஆனால் நண்பர்களுடன் சந்திப்பு என்பது தாண்டி ஒரு மெகா பிரம்மாண்டமான விற்பனை மையத்திற்கு உங்கள் வருகை மிக அவசியமாகிறது ஸார்.!
நான் பார்த்த வரையில் கண்மூடித்தனமாக வாசகர்களும்,விற்பனை உச்சங்களும் என கிறங்கடிக்கும் மெகா சந்தை சென்னை புத்தக திருவிழா.! பத்து நிமிடம் புத்தக பர்சேஸ்,இரண்டு நிமிடம் உங்களுடன் பேச்சு என சாரை சாரையாக வாசகர்கள் அங்கு தவிர வேறு எங்கும் பார்க்கவே முடியாது.!
மணி கணக்கில் சின்ன நண்பர்கள் வட்டமானது.... அரைத்ததையே அரைக்க உங்களின் தேவையை விட, கை நிறைய காமிக்ஸ்களுடன் குட்டியாய் உங்களுக்கு ஒரு ஹலோ சொல்லி கடந்து போகும் வண்டி வண்டியான வாசகர்களுக்கு நீங்கள் தேவையோ தேவை.
அரசின் பொருளாதார கொள்கைகள் கடுமையாக சத்தமில்லாமல் தாக்கும் இந்த சூழலில் இயல்பு வாழ்க்கை தட்டுதடுமாற....திக்குபிரமையில் விழிபிதுங்கி நிற்கிறோம். நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்லபோகிறது என்ற ஆருடம் அப்பட்டமானது என்பதே ஒப்புக்கொள்ள முடியாத கசப்பு.! இந்த இக்கட்டான சூழ்நிலையில்...
மந்தமாகி போன பண புழக்கத்தின் நடுவில்...
காமிக்ஸ் மேல் உள்ள காதலை கையில் பிடித்துக்கொண்டு கரை சேர்வது இந்த வருடம் நிச்சயம் சவாலே.! இந்த சோதனை வருடத்தை கடந்து செல்ல முக்கியமான மந்திரம் சென்னையில் சிலநிமிடமே நம் காமிக்ஸ் ஸ்டாலில் புகுந்து சூறையாடும் வாசகர்களின் அணிவகுப்பை கண்குளிர பார்ப்பதில் புதைந்திருப்பதாகவே நம்புகிறேன்.!
எனவே என் வேண்டுகோள்...
முதல் வாரமா..??? இரண்டாவது வாரமா..??? என நண்பர்களிடம் கேட்பதைவிட...இரண்டு வாரமும் தாங்கள் சென்னை விற்பனையில்,வாசகர்களின் வருகையை எதிர்கொள்ள வேண்டுகிறேன்.இந்த வேண்டுகோளுக்கு காரணமாக நான் முன்வைப்பது...
பத்து பேருக்கு உங்களை பார்ப்பதும் பேசுவதும் சுகமென்றால்,நூறு பேருக்கு உங்கள் படைப்புகளை வாங்குவதும், வாரியனைப்பதும் சுகம்.! அவர்களின் வருகை திட்டமிட்டதல்ல,உங்கள் வருகையின் திட்டமிடலும் அவர்கள் அறியாதவர்கள்.ஆனால் அவர்கள் வருகை மட்டும் உறுதியானது; காமிக்ஸ்களை சூறையாடும் சுகத்துடன் அவர்கள் உங்களை சந்திப்பது... உங்களுக்கும் அவர்களுக்கும் சுகமோ சுகம்.!
சென்னைவாசிகள் வருகை முதல் ஞாயிறும்,வெளியூர் வாசகர்கள் இரண்டாவது ஞாயிறும் என இருக்க வாய்ப்பிருப்பதால் இந்த சந்திப்புகளை தவற விடவேண்டாம் ஸார் ப்ளிஸ்.! பரபரப்பான பட்டிணத்தில் அந்த விற்பனை சுகத்தை பார்த்தவன் என்ற வகையில் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன்.!
அடுத்த இரண்டு வாரம் டிஜிட்டல் இந்தியாவின் மிக பெரிய பாலைவனத்திற்கு குடும்பத்துடன் கிளம்புவதால்...சென்னைக்கு இரண்டாவது ஞாயிறுகளில்[ஜனவரி-20,21] வர ஒரு திட்டமுள்ளது. ஏனோ காமிக்ஸ் ஸ்டாலில் வாசகர்கள் சூரையாட உதவும் கொண்டாட்டத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை....அவுக்...அவுக்..!
நட்புடன்
மாயாவி.சிவா
////அரசின் பொருளாதார கொள்கைகள் கடுமையாக சத்தமில்லாமல் தாக்கும் இந்த சூழலில் இயல்பு வாழ்க்கை தட்டுதடுமாற....திக்குபிரமையில் விழிபிதுங்கி நிற்கிறோம். நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்லபோகிறது என்ற ஆருடம் அப்பட்டமானது என்பதே ஒப்புக்கொள்ள முடியாத கசப்பு.! இந்த இக்கட்டான சூழ்நிலையில்...
Deleteமந்தமாகி போன பண புழக்கத்தின் நடுவில்...
காமிக்ஸ் மேல் உள்ள காதலை கையில் பிடித்துக்கொண்டு கரை சேர்வது இந்த வருடம் நிச்சயம் சவாலே.!////
100 % உண்மை!
நல்ல வேண்டுகோள் சிவா.
Delete// புத்தக வெளியிடு என சின்னஞ்சிறு காரணம் கூட கிடைக்காத நிலை நண்பர்கள் குழுவாக வந்து கும்மாளம் அடிப்பது என்பது கடினமே //
யார் சொன்னது... சத்தம் இல்லாமல் நமது ஜம்போ காமிக்ஸ் தயாராகி கொண்டுள்ளது. அதன் வெளியீடு சென்னை என்று "பட்சி" சொல்கிறது.
@ mayavi.siva : கிடைக்கும் வாய்ப்புகளில் சென்னையில் டேரா போட ஏற்கனவே திட்டமிட்டு விட்டேன் சார் ; simply becos - இம்முறை நமது முந்தைய பணியாட்கள் யாரும் ஸ்டாலில் இருந்திடப் போவதில்லை ! சங்கடமான காரணங்களின் பொருட்டு அவர்களைப் பணிநீக்கம் செய்திட அவசியமாகிப் போனதால் - புதுசாய் ஆட்கள் + இயன்றால் இராதாகிருஷ்ணன் அண்ணாச்சியும் என்பதே இந்தாண்டின் கட்டாயம். So சென்னையில் உடனிருக்கும் அவசியம் முன்னெப்போதையும் விடவும் கூடுதலாகிப் போகின்றது !
DeleteAnd yes - ஒளிரும் இந்தியா ஆளுக்கொரு விதத்தில் பியூஸ் பிடுங்கி விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் சென்னை போன்றதோர் mass விற்பனைக்களத்தை உதாசீனம் செய்திடல் தற்கொலைக்கு ஒப்பாகும் என்பதில் சந்தேகமே இல்லை !
So அட்டவணைகளின்றி, சிக்கும் தருணங்களை எல்லாம் ஸ்டாலில் உலவிக்கொண்டிருக்க உத்தேசித்துள்ளேன் இம்முறை ! பார்க்கலாமே !
@ ALL : எப்போதையும் விட இம்முறை சென்னை நண்பர்களின் ஒத்தாசை நமக்கு அதிகம் தேவை என்பேன் ! Please do chip in guys - if you can !!
Deleteஎன்னை போன்ற சில நண்பர்களும் இந்த முறை இந்த வெளிநாட்டு பயணத்தில் பங்கேற்க முடியா நிலை.
Deleteகணேஷ் சார் போன்ற சென்னை வாசகர்கள் சென்னை புத்தக திருவிழாவில் முழு அளவில் பங்கேற்றால் சிறப்பாக இருக்கும்...
தலீவரே நிச்சயமாக .
Deleteவிஜயன் சார், உங்களின் முடிவு சந்தோசத்தை தருகிறது.
Delete1. நீங்கள் ஸ்டாலில் அதிக நாட்கள் இருக்க போவது சரியான முடிவு.
2. இராதாகிருஷ்ணன் அண்ணாச்சியும் புதுவருடம் முதல் நமது ஸ்டாலில் மீண்டும் பணியாற்ற உள்ளது சூப்பர். இவரை விட பொறுப்பான மனிதரை காண்பது அரிது.
3. இந்த முறை சென்னை செல்லும் நண்பர்கள் ஆசிரியருடன் ஆன உரையாடலை இரண்டாம்பட்சமாக வைத்துக்கொண்டு நமது காமிக்ஸ் ஸ்டாலில் விற்பனையில் உதவ வேண்டுகிறேன். காமிக்ஸ் களப்பணி செய்ய தயாராகுங்கள் நண்பர்களே.
4. முழுநேரமும் நமது காமிக்ஸ் ஸ்டாலில் பணியாற்றும் நண்பர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக செய்து வருவது போல் சில பரிசுகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன்.
5. இது போன்ற நேரத்தில் உதவ ஆசை ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக கலந்து கொள்ள முடியாது.எனவே நமது காமிக்ஸ் ஸ்டாலில் இரண்டு நாட்கள் சிறப்பாக பணியாற்ற போகும் நண்பர் ஒருவருக்கு A அல்லது B அல்லது C அல்லது D அல்லது F & F ஏதாவது ஒரு சந்தாவை பரிசாக கொடுக்க விரும்புகிறேன்.
செந்தில் சத்யா, ரன்சித், ராஜ் முத்துகுமார், டெக்ஸ் கிட், மஞ்சள் சட்டை மாவீரன், மற்றும் ஜானி போன்ற சென்னை நண்பர்கள் உங்களால் முடிந்த நாட்களில் / நேரத்தில் நமது காமிக்ஸ் ஸ்டாலில் விற்பனைக்கு உதவி செய்ய வேண்டுகின்றேன்.ப்ளீஸ்.
Deleteஆகட்டும் பாப்போம்
Delete@ PfB
Deleteகுட் இனிஷியேடிவ்! சந்தோசம்கள்!! :)
ஆனாக்க நெறைய மாதவங்கள பாக்க முடியாது போலருக்கே.
Deleteஎன்னமோ போங்கப்பா மாதவங்களா.
☺ 1972 ல ஆரம்பிச்ச காமிக்ஸ்
infatuation காதலா மாறி கண்கள் கசிந்தருக நெஞ்சம் நிறைந்துள்ளது.
வாழ்க்கை வாழ்வதற்கே.
என்னோட இனிசியலா கேட்டீங்க ஈ வி
Deleteமிய்ய்யாவ்வ்வ்
J @ நீங்கள் இருப்பது சென்னை என்றால் உங்களால் முடிந்த நேரத்தில் காமிக்ஸ் களப்பணி செய்ய வேண்டுகிறேன்.
Deleteஜம்ப லக்கடி ஜிம்பா
Deleteஜம்போ ரிலீஸா
சொல்லவேயில்ல.
பெங்பகளூர் பரணி
Deleteநான் கும்பகோணம்.
சாரி பெங்களூரு பரணி
Deleteசரி j
DeleteThis comment has been removed by the author.
Deleteபரணீ நீவூ சென்னாங்கே ஹித்தரவா!
Deleteஅல்லி மழே, கிளைமேட் ஹேங்கே ஹித்தே.
ஓ நிங்களொண்டும் விஷமிக்க வேண்டா, ஞான் அவிட புக்பேர் செண்டு நிலவரம் பறயூம்
இல்லி கிளைமேட் சூப்பரா ஹித்தே.
Delete// ஓ நிங்களொண்டும் விஷமிக்க வேண்டா, ஞான் அவிட புக்பேர் செண்டு நிலவரம் பறயூம் //
ஓ சரி சேட்டா
@ j
Delete///ஆனாக்க நெறைய மாதவங்கள பாக்க முடியாது போலருக்கே.///
ஏற்கனவே அறிமுகமான மாதவங்களைக் கொஞ்சம் குறைவாகத்தான் பார்க்கமுடியும்னாலும், புதுசுபுதுசா மாதவங்களை நூத்துக்கணக்கில் பார்க்கலாம்! ஆனா காமிக்ஸ் படிக்கற மாதவங்க பலருக்கும் கூச்ச சுபாவம்ன்றதால, ஒரு நாலு வார்த்தை அவங்களைப் பேசவைக்க நெம்பவேச் சிரமப்படவேண்டியிருக்கும்! இத்தளத்தின் மெளனப் பார்வையாளர்கள் கூட பலபேர் வருவாங்க - ஆனா பாருங்க; அங்கேயும் மெளனமாவேதான் இருப்பாங்க! :P
விசித்திர சவால் இதழை இதுவரையிலும் படித்த நினைவு இல்லை! காத்துக் கொண்டிருக்கிறேன்...
ReplyDeleteசீனியர் ஆசிரியருக்கும்,ஆசிரியருக்கும்,அவர்தம் குடும்பத்தினருக்கும்,ஜூனியர் ஆசிரியருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் , அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் .
ReplyDeleteகிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
ReplyDeleteகாமிக்ஸ் அன்பர்களுக்கு என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅட்டை பெட்டி பாகுபலிக்கும் கிருத்துமஸ் வாழ்த்துக்கள்.
DeleteHappy Christmas for all
ReplyDeleteTop 3 book of the year
ReplyDelete1:டயுராங்க
2:லேடி
3:smurf 6
நண்பர்களே !
ReplyDeleteஓவ்வொரு முறை கமெண்ட் போடும் போதும் இமெயில் பாஸ்வோர்ட் கேட்குதே ?இதை தவிர்ப்பது எப்படி.? விவரம் தெரிந்தவர்கள் வழி சொல்லவும்.!
நண்பர்களே !
ReplyDeleteஓவ்வொரு முறை கமெண்ட் போடும் போதும் இமெயில் பாஸ்வோர்ட் கேட்குதே ?இதை தவிர்ப்பது எப்படி.? விவரம் தெரிந்தவர்கள் வழி சொல்லவும்.!
test
ReplyDeleteஹாய் நண்பர்களே...
ReplyDeleteவாரம் தவறாமல் எடிட்டரின் பதிவை மிஸ் பண்ணாத காமிக்ஸ் காதலன்தான் நானும்..
அவ்வப்போது பதிவிடும் பழக்கமும் உண்டு.
சிறு வயதில் ராணி காமிக்ஸில் மட்டும் வளர்ந்து இப்போது நமது காமிக்சுடன் வாழ்பவன்..
இரண்டு வருடமாக சந்தா கட்டி காமிக்ஸ் குடும்பத்தில் ஐக்கியமாகி இருக்கிறேன்...
இப்போதும் கட்டியாச்சு..
எல்லா முன்பதிவையும் தவறாமல் செய்து விடுவேன்...
காமிக்ஸ் கலெக்சனை லேட்டாய் தான் துவங்கி இருக்கிறேன்..
புத்தக விழாக்கள் எதையும் தவற விட்டதில்லை.ஆசிரியர் வரும் நாட்களில் வந்ததில்லை...நேரமின்மையும் காரணம்தான்...
கொஞ்சம் மௌன வாசகன்தான்..
கவிதை ஓவியம் வரும்...
விகடனில் கவிதை வந்துள்ளது...
கேப்சன் போட்டிக்கு தான் இவ்வளவு வெளி வந்துள்ளேன்..
பதினைந்து கேப்சன்கள் அனுப்பியும் தோற்றது சோகமில்லை...
முப்பத்து மூன்று வயதாகும் நான் கருரில் அரசு மருத்துவர்..
வாழ்த்துக்களுக்கு நன்றி பரணி&மிதுன்...
உங்களை பற்றிய தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள நேரம் ஒதுக்கியதற்கு நன்றி நண்பரே. கவிதை மற்றும் ஒவியத்தில் விருப்பம் உள்ள உங்களின் கேப்சன் எல்லாம் நன்றாக இருந்தது. இந்த கேப்சன் போட்டி முலம் உங்களின் மௌனம் கலைந்தது சந்தோசம்.
Deleteநமது காமிக்ஸ் பற்றி அவ்வப்போது பதிவிடுங்கள், முடிந்தால் ஓவியங்களை பற்றி பதிவிடுங்கள்.
கரூர் குணா மற்றும் சரவணனை தொடர்ந்து மற்றும் ஒரு கரூர் நண்பர். One more time welcoming you.
M. Vidya @
Deleteஉற்சாகமாய் வரவேற்கிறோம் சார்.!
@ M. Vidya
Deleteமகிழ்ச்சி நண்பரே! தொடர்ந்து கலக்குங்கள்! கலைத்திறன் கொண்டவர்களின் படைப்புகள் தனித்தன்மையோடிருக்கும்!
///நான் கருரில் அரசு மருத்துவர்..///
அ..அப்படீன்னா உங்களுக்கு வரலாறு நல்லாத் தெரியும்தானே? :P ;)
நன்றி நண்பர்களே..
Deleteஎன்ன வரலாறு..புரியவில்லை
நல்வரவு நண்பரே.
Deleteவரலாறு?
இன்னுமா புரியல.
நீங்க வைத்தியம் பாத்த வரலாருதேன்.
நல்வரவு நண்பரே.
Deleteவரலாறு?
நீங்க வைத்தியம் பாத்த வரலாறுதான்.
வரலாறு முக்கியம் அமைச்சரே.
Test
ReplyDeleteவைத்தியர்.வைத்யா,
ReplyDeleteஅடுத்த கேப்சன் இருக்கவே இருக்கு,கவலை படேல்.
காமிக்ஸ் ஜோதியில ஐக்கியமாகிட்டீங்கள்ல.
இனிமே எல்லாம் பிரகாசம் தான்.
why?
ReplyDeletewhy?
Deletewhat?
DeleteAlas!!
DeleteTest?
ReplyDeletetest?
ReplyDeleteEditor sir please inform about release date of Jumbo comics 🙏🙏🙆🙆🙇🙇😐😐🎅🎅🎅🎅🎅🎅🎅👀👀👂👂👂👂
ReplyDeleteomkumar : நடப்புச் சந்தாக்களில் ; புத்தாண்டின் இதழ்களில் முதலில் கவனம் செலுத்துவோம் சார் ! புதுவரவு - உரிய நேரத்தில் ...!
DeleteThank you sir🎅🎅🎅
ReplyDelete