Powered By Blogger

Sunday, January 28, 2018

அலசும் நேரமிது...!

நண்பர்களே,

வணக்கம். விடுமுறைகள் நிறைந்ததொரு மாதம் நிறைவை நோக்கி நகர, புத்தாண்டும், தைத்திருநாளும், குடியரசு தினமுமே ஏக்கப் பெருமூச்சுகளை வரவழைக்கும் நினைவுகளாய் மட்டுமே தங்கியுள்ளன ! And அதே கதை தான் - நடந்து முடிந்துள்ள சென்னைப் புத்தக விழாவிற்குமே !! வாசிப்பின் ஜீவன் இன்னமும் அணைந்திடவில்லை என்பதை அழுந்தப் பதிவு செய்திடும் அந்த ஜனத்திரளை எண்ணி நெடும் பெருமூச்சே வெளிப்படுகிறது ! நானங்கு இருந்தது என்னவோ ஒன்றரை நாட்களுக்கு மாத்திரமே என்றாலும், அந்தப் பரபரப்பை இன்று வரைக்கும் உணர்ந்திட முடிகிறது ! Back to the grind ; மீண்டும் பணிகள். பொறுப்புகள் என்று சக்கரம் சுழலத் துவங்கிவிட்டிருந்தாலுமே, புத்தக விழா சார்ந்த எண்ணங்கள் நிழலாடுவது மட்டுப்படவில்லை இன்னமுமே !! And சமீபத்து வழக்கப்படி புத்தக விழாவின் விற்பனைகள் ; சொதப்பல்கள் ; ,மிதங்கள்  ; உச்சங்கள் என்று சகலத்தையும் கணக்கெடுத்து ஒப்படைத்தனர் நம்மவர்கள் ! அதை பார்க்கும் போது புலப்பட்ட சுவாரஸ்யத் தகவல்களை உங்களோடு பகிர்ந்திடத் தோன்றியது ! So இந்த ஞாயிறின் அலசல் - சென்னை 2018-ன் விற்பனைகள் பற்றியே ! 

Of course - 200+ தலைப்புகளை நமது ஸ்டாலில் முதன்முறையாகப் பார்க்க நேரிடும்  ஒரு புது வரவுக்குள் ஓடக்கூடிய பரபரப்பையும், அந்நேரத்தில் தோன்றிடக் கூடிய impulsive buying பாணியையும் ரசனைகளின் வெளிப்பாடாய்ப் பார்த்திட முடியாது தான் ! அட்டைப்படமோ ; தலைப்போ ; முதல் புரட்டலில் ஈர்க்கும் ஏதோவொரு விஷயமோ ; விலையோ ; தயாரிப்புத் தரமோ ; நோஸ்டால்ஜியாவோ அவர்களது கொள்முதல்களுக்குக் க்ரியாவூக்கிகளாய் இருந்திடக்கூடும் தான் ! So தொடரும் 'ரமணா' பாணிப் புள்ளிவிபரங்களை ஒரு ஒட்டு மொத்த statement ஆக நான் வெளிப்படுத்த முனைந்திடவில்லை ! மாறாக - ஒரு மேலோட்டமான பார்வையாக மாத்திரமே !  Here goes :

புத்தக விழாவின் TOPSELLER-லிருந்து ஆரம்பிப்பது நலமென்பேன் & அந்த மெடலைத் தாங்கிக் கொள்ளும் நெஞ்சானது யாருடையது என்பதைக் கேட்டால் சில பல 'பணால்'கள் நேரிடலாம் ஆங்காங்கே  !! அது வேறு யாருமில்லீங்கோ - தலைகீழ் சிரசாசன SMS புகழ் இஸ்பய்டர் சாரே ! அவரது ஜனவரி இதழான "விசித்திரச் சவால்"   தான் இந்தப் புத்தக விழாவினில் நமது bestseller !! அந்த செம cute பாக்கெட் சைசின் பங்கு தான் இதன் பின்னணி என்று எனக்குப் பட்டாலும் - தானைத் தலைவரின் diehard fans நிச்சயமாய் மாற்றுக கருத்துக்கள் கொண்டிருப்பது உறுதி ! எது எப்படியோ - சின்னதொரு மார்ஜினில் மாயாவியாருக்கு டேக்கா கொடுத்து விட்டு முதலிடம் பிடிக்கிறார் நமது லயனின் big boss !!

இரண்டாமிட நாயகர் முதல் பெயரை "லூயி" என்றும் இரண்டாம் பெயரை "கிராண்டேல்" என்றும் கொண்டிருக்கும் ஆசாமி ! Oh yes - எண்ணிக்கையில் slot # 2 பிடித்து நிற்பது சமீப மறுபதிப்பான "மர்மத் தீவில் மாயாவி" தான் ! இதழ் புராதனத்திலானது என்றாலும், மறுபதிப்பாய் இது வெளியானது வெகு சமீபத்தில் என்ற விதத்தில் இதுவொரு recent இதழே என்பதாலோ என்னவோ, மக்கள் வாஞ்சையோடு வாங்கியுள்ளனர் ! இந்த இதழின் ராப்பருமே விற்பனைக்கு உதவிய முக்கிய விஷயம் என்று சொல்லத் தோன்றுகிறது ! தொடர்ந்த இடங்களில் வந்திருப்பது "நாச அலைகள்" & "பாம்புத் தீவு" ! மாயாவியின் விற்பனை ஒரு மைல் தொலைவில் எனில், ஜானி நீரர்  மூன்றாமிடத்திலும் ; லாரன்ஸார்  & டேவிடர் இறுதியிடத்திலும் உள்ளனர் - மறுபதிப்புத் தரவரிசையில் ! ""தங்கவிரல் மர்மம் "  & "தலை கேட்ட தங்கப் புதையல் " அவரவரது தொடர்களுள் அதிக விற்பனை கண்டுள்ள இதழ்கள் !!

இந்த "எழுபதுகளின் பிள்ளைகளை" இன்றைக்கும் முன்னணியில் நிற்கச் செய்யும் இந்த  'நோஸ்டால்ஜியா'வை எண்ணி வியாக்காது இருக்க இயலவில்லை ! நிறைய முறைகள் இந்த அலசல்களுக்குள் புகுந்து வெளியேறி இருக்கோம் என்பதால் - இன்னுமொரு repeat தேவையில்லை தானே ?  "மாமு....நீ கிராபிக் நாவலை போட்டுக்கோ ; விண்வெளிக்கு ராக்கெட் விட்டுக்கோ ; சிக்கின குதிரைப் பையன்களையும் அழைச்சுக்கோ - ஆனால் கில்லி நாங்க தான் !!" என்று இந்த நொடியில்  மும்மூர்த்திகள் என் திசையில்  பழிப்புக் காட்டுவது போலொரு பீலிங்கைத் தவிர்க்க இயலவில்லை ! கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே மறுபதிப்புகள் மெதுநடை தான் போட்டு வந்து கொண்டிருக்க - ஒரு மாதிரியாய் அந்த மோகம் மட்டுப்பட்டுவிட்டதாய்த் தான் நினைத்திருந்தேன் ! ஆனால் இந்தப் புத்தக விழாவில் தென்பட்டிருக்கும் வேகத்தை என்னவென்று classify செய்திடவோ - தெரியவில்லை ! அதற்காக 2015-ன் தொடக்கத்தில் அலையடித்த அதே விறுவிறுப்பு இப்போது மறுபிரவேசம் செய்துள்ளது என்றெல்லாம்  சொல்ல மாட்டேன் ; "நயாகராவில் மாயாவி" வெளியான அந்த ஜனவரியில் இருந்ததோ  முற்றிலுமாய் வேறொரு லெவெலிலான அதகள உத்வேகம் !! Nowhere close to that - but still beating the others !!

மறுபதிப்புகளின் மீதான லயிப்புக்குப் பின்னே அடுத்த "கவனக் கோரர்" நமது இரவுக் கழுகாரே !! கணிசமான இவரது titles  நம்மிடம் சேர்ந்து விட்டபடியால் - "TEX" என்று தேடி வருவோருக்கு நல்லதொரு சாய்ஸ் சாத்தியமாகிறது ! And இம்முறை முதலிடத்தில் நிற்பது "இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்" தான் !! கடந்த   2 ஆண்டுகளாய் விடாப்பிடியாய் முத்லிடத்தைத் தக்க வைத்திருந்த "நில்..கவனி..சுடு" இம்முறை காலி என்பதால் கையிருப்பில் கடைசி 25 பிக்குகளும் சென்னையில் தீர்ந்தே விட்டன ! And சென்னையில் 'டாடா - பை-பை' சொன்ன இன்னொரு TEX இதழானது "டிராகன் நகரம்" தான் ! இது SUPER 6 limited edition என்பதால் அச்சிடப்பட்டதே சொற்பப் பிரதிகள் ; and இதனில் "போட்டோ போட்டோம் ; கோட்டை விட்டோம்" என்று ஏதேதோ ரவுசுகள் அரங்கேறியதன் புண்ணியத்தில் அப்போதே online-ல் நிறைய விற்றுத் தீர்ந்திருந்தது ! எஞ்சியிருந்தவை புத்தக விழாவில் காலி !! And TEX ஷாப்பிங்கில் எப்போதும் போல "நிலவொளியில் நரபலி" அடித்து ஆடியிருந்தது என்பது கொசுறுச் சேதி !!
As usual - டெக்சின் வாலைப் பிடித்துக் கொண்டே அடுத்தயிடத்தில் நிற்பது நமது லக்கி லூக் ! அந்த மனுஷனுக்கும் டெக்ஸைப் போலவே ஆண்கள் / பெண்கள் ; சிறார் / பெரியோர் என அனைத்துத் தரப்போடும் ஒருவித chemistry நிலவுவது கண்கூடு !! இம்முறை முதலிடம் "ஒரு பட்டாப் போட்டி" இதழுக்கே ; followed  by  "ஒற்றைக்கைப் பகாசுரன்" !! 
இந்தப் புத்தக விழாவின் நிஜமான surprise என்று சொல்வதாயின் - அது நமது உடைந்த மூக்காரின் ஆல்பங்களின் விற்பனையில் தென்பட்டிருக்கும் ஒரு சுறுசுறுப்பு !! கடைசி 3 ஆண்டுகளாய் டைகரும் சரி ; கமான்சேவும் சரி, ஊர் ஊராய்ப் புத்தகவிழாக்களின் பெயரைச் சொல்லி சுற்றுப் பயணம் அடித்துவிட்டு பத்திரமாய் நமது கிட்டங்கிக்கே திரும்பிடும் வித்தைக்காரர்களாகவே இருந்து வந்தனர் ! ஆனால் இம்முறையோ - "இரத்தக் கோட்டை" தந்த boost-ன் காரணமாகவோ  , என்னவோ - கேப்டன் டைகரின் விற்பனை has not been bad at all !! வழக்கம் போல "தங்கக் கல்லறை"-க்கு நல்ல வரவேற்பு !
ஆச்சர்யங்கள் ஓய்ந்த பாடில்லை - இம்முறையோ நம்பரையே பெயராகக் கொண்ட  மனுஷனின் புண்ணியத்தில் ! புத்தக விழாக்களில் "இரத்தப் படலம்" பெரும்பாலும் நமக்கு "சோகப் படலங்களாக" மட்டுமே இருந்து வந்துள்ளன ! ஆனால் இம்முறை நண்பர் கணேஷ், கன்னத்தில் மருவை ஒட்டிக்கொண்டு வந்து   மொத்தமாய் வாங்கி யாருக்கேனும் விநியோகம் செய்தாரா என்று  தெரியவில்லை ; கொண்டு சென்ற XIII-ன் இதழ்களில் பெரிதாயொரு மிச்சம் இருக்கவில்லை ! And மொத்தம் 12 முன்பதிவுகள் சென்னையில் நடந்துள்ளதையும் சேர்த்தால் தற்போதைய "இரத்தப் படலம்" முன்பதிவு நம்பர் : 402 !!! We are  there guys !!! கதைகளின் (வண்ண) டிஜிட்டல் கோப்புகள் வந்துவிட்டன ; மாதாந்திரப் பணிகளுக்கு இடைஞ்சலின்றி வேலைகளை முடுக்கி விட வேண்டியது மட்டுமே பாக்கி !! அநேகமாய் ஏப்ரல் இறுதியில் வாசக proof reading டீமுக்கு வேலையிருக்கும் !! தயாராகிக் கொள்ளுங்கள் - சிகப்புப் பேனா சகிதம்  !!

அடுத்ததாய்ப் பார்வையில் தட்டுப்படுவோர் சிக் பில் & ப்ளூ கோட்ஸ்  & சுட்டிப்புயல் பென்னி !! இந்த மூன்று கார்ட்டூன் பிரதிநிதிகளுமே - ஓசையின்றி முத்திரை பதித்துள்ளது புரிகிறது - நம்பர்களை அலசிடும் போது ! அதிலும் பென்னி அடித்துள்ளது சிக்ஸர்கள் மட்டுமே - கொண்டு சென்ற 2 அல்பங்களுமே சுத்தமாய்த் தீர்ந்து போன வகையில் ! And "சிக் பில் ஸ்பெஷல்" - ஸ்பெஷலான கவனத்தை ஈர்த்துள்ளது என்பதில் நிச்சயம் நம்மில் யாருக்கும் வியப்பிராதென்று நினைக்கிறேன் ! Has done decent !!

அழகான விற்பனையில் இரு மாறுபட்ட நாயகர்களும் இடம்பிடிக்கின்றார் - "ஜேசன் பிரைஸ்" & "மர்ம மனிதன் மார்ட்டின்" ரூபத்தில் ! நானே நேரில் பார்த்தேன் - மார்டினின் கதைகளுக்கொரு niche வாசக அணி இருப்பதை ! And ஜேசன் ப்ரைஸ் மூன்று பாகங்களுமே சுவாரஸ்யமான விற்பனை கண்டது !! அதே போலவே LADY S ஆல்பங்களும் நிறைவாக விற்பனை கண்டுள்ளன ! அந்த மதிமுகம் செய்யும் வேலையோ ?

And நம்பினால் நம்புங்கள் ; இந்தாண்டின் பட்டியலில் உயரே நிற்பன - நமது கிராபிக் நாவல்களுமே !! அதிலும் குறிப்பாக ஜெரெமியா & "என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்" have been toppers !! நன்றிகள் ஓராயிரம் "குமுதம்" அரசு சார் !! உங்களின் 2 இதழ்களுக்குமான reviews நிச்சயம் இந்த விற்பனையின் பின்னணியில் உள்ளன !! But எல்லாவற்றையும் விட செம சேதியொன்று காத்துள்ளது guys : "நிஜங்களின் நிசப்தம்" சென்னை விற்பனையில் உச்சங்களோடு போட்டி போடும் இதழ் மட்டுமல்ல ; வெளியான அதே மாதத்திற்குள் விற்றுத் தீர்ந்த முதல் இதழும் கூட !!! Oh  yes - ஜனவரி 1-ல் ரிலீஸ் ஆன இந்த இதழ் ஜனவரி 22-ல் காலி !! சந்தா E சொற்ப பிரிண்ட்ரன் கொண்டதே & இது ரூ.250 விலையிலான இதழ் என்பதால் வழக்கத்தையும் விடக் குறைச்சலாகவே அச்சிட்டோம் !! But இங்கும் சரி, உங்களது whatsapp க்ரூப்களிலும் சரி - இந்த இதழ் சார்ந்த அலசல்கள் கொணர்ந்துள்ள curiosity காரணமாய் ஆன்லைனில் நல்ல விற்பனை !! So ஒரு செம dark கி.நா. தான் புது ரெக்கார்டை உருவாக்கும் அதிசயமும் கண்முன்னே நிகழ்கிறது !! என்ன கொடுமை இது தலீவரே ?!!

"உச்சமும் இல்லை ; உச்சா போகும் ரகத்திலும் இல்லை"  - என்பதே அடுத்த கண்ணோட்டத்தின் subjects !! கீழ்க்கண்ட நாயகர்கள் - இடுப்பில் துணியை இறுக்கமாய் இழுத்துப் பிடித்துக் கொள்ளும் சமயோசிதம் கொண்டிருப்பதால் - we are glad  for it !!

  • தோர்கல்
  • கேப்டன் பிரின்ஸ்
  • ரின்டின் கேன்
  • ரிப்போர்ட்டர் ஜானி  

தோர்கல் இப்போது தான் டாப்கியரைத் தொட்டிடும் தருணம் எனும் பொழுது - நிச்சயமாய் அடுத்த ஆண்டில் விற்பனை இதை விட தேவலாமென்றிருக்கும் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளது ! இந்தாண்டைப் பொறுத்தவரை just about ok !! அதே கதை தான் கேப்டன் பிரின்ஸ்ரின்டின் கேன் விஷயத்திலும் !! "மோசமில்லை ; நிச்சயம் மோசமில்லை" என்ற தீர்ப்பு எழுதலாம் ! 

தொடர்வோர் ஒரு பெரும் பட்டியலை உருவாக்கும் அவசியத்தை ஏற்படுத்துவது தான் கவலையளிக்கும் சமாச்சாரம் ! "உன் குத்தமா ? என் குத்தமா ? யாரை நான் சொல்ல  ?" என்று பாடிக் கொண்டே போடுகிறேன் இந்த லிஸ்டை !! அதனிலுள்ள சில பெயர்களை வாசிக்கும் போது ஆச்சர்யத்தில் புருவங்கள் உயரலாம் ; but இம்முறை இதுவே விற்பனைக் காற்று வீசியுள்ள திசை :
  • லார்கோ வின்ச்
  • வெய்ன் ஷெல்டன்
  • CID ராபின்
  • கமான்சே 
  • ஜில் ஜோர்டன்
  • கர்னல் க்ளிப்ட
  • மதியில்லா மந்திரி
  • SMURFS 
இந்த லிஸ்டில் இம்முறை லார்கோ தான் surprise package என்பேன் ! ரொம்பவே மித விற்பனை இந்தாண்டு ! And ஏனோ தெரியவில்லை -  நமது நீல பொடியர்களுமே இம்முறை விற்பனையில் கோட்டை விட்டுள்ளனர் !! மற்றவர்கள் வழக்கத்தை விட ஒரு மாற்று குறைவாய் இந்தாண்டினில் !  ஒண்ணுமே புரியலே...உலகத்திலே.....!

சரி, "ஒரு சுமாரான விற்பனைப் பட்டியல்" என்று லிஸ்டைப் போட்ட கையோடு கிளம்பலாம் என்று பார்த்தால் - "இன்னொரு பட்டியல் போட்டுட்டுப் போப்பா ஆந்தைக்கண்ணா !!" என்ற உரத்த குரல் கேட்கிறது !! திரும்பிப் பார்த்தால் நிற்கும் அணியானது மெய்யாகவே மூக்கில் குத்தும் ரௌத்திரத்தோடு காத்திருப்பது புரிகிறது ! வெளியே சொல்லச் சங்கடம் தரக்கூடிய விற்பனை கண்டுள்ள ஆல்பங்களின் நாயக / நாயகியர் இவர்கள் எல்லாமே  : 
  • பவுன்சர் 
  • மேஜிக் விண்ட்
  • டைலன் டாக்
  • டயபாலிக்
  • மாடஸ்டி 
  • ப்ருனோ பிரேசில்
  • சாகச வீரர் ரோஜர்
நிச்சயமாய் நமது ரசனை அளவுகோல்களின் முழுமையான பிரதிபலிப்புகளும் இவையல்ல தான் & இந்தத் தொடர்களின் வீரியம் மீதான விமர்சனமும் இது அல்லவே !! மேஜிக் விண்ட் ; டைலன் டாக் ; மாடஸ்டி ; ரோஜர் என personal ஆக எனக்குப் பிடித்த நாயக / நாயகியர் மேற்படிப் பட்டியலுக்குள்சிக்கியிருப்பதில் எனக்கு வருத்தமே ! But இது முழுக்க முழுக்க விற்பனை சொல்லும் கதைகள் மாத்திரமே !! So no offence meant !!

மற்ற one -shot கதைகள் ; நாயகர்கள் பற்றி நான் அதிகம் மெனெக்கெடப் போவதில்லை - simply becos அவற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ளக் கூடிய சமாச்சாரங்கள் சொற்பமே என்பதால் !! 

So ஒரு 12 நாள் திருவிழாவின் இறுதியில் விற்பனைக் கணக்குகள் ; செலவினங்கள் ; ஒட்டு மொத்த அனுபவங்கள் என்று அசை போட்டு வருகிறோம். ஒற்றை ஸ்டால் தான்  என்றாலும், இம்முறை 4 பணியாளர்களைக் கொண்டு செயல்படுவது என்று தீர்மானித்திருந்தோம் ! செலவுகள் அதன் பலனாய் எகிறினாலும், பல நடைமுறைச் சிக்கல்களை அது தவிர்த்துள்ளதென்பதில் சந்தோஷமே !! But ஒரு புரியாப் புதிர் இன்றளவும் தொடர்கிறது !! 2015 -ல் இப்போதிருப்பதில் சரி பாதி titles மட்டுமே இருந்த வேளைதனில் சாத்தியமான அதே விற்பனைத் தொகையினைத் தான் 200 + titles கொண்டிருக்கும் இப்போதும் ஈட்டிட முடிகிறது !! "இவ்ளோ தாண்டா உனக்கான கோட்டா ; அதுக்குள்ளாற வண்டியை ஓட்டிக்கோ"  என்று பெரும் தேவன் மணிடோ நிர்ணயம் செய்துவிட்டாரோ என்ற சந்தேகம் ஒவ்வொரு வருடமும் தலைதூக்குகிறது ! சென்னையில் மட்டும்தான் என்றில்லாது - ஈரோட்டில் ; கோவையில் ; மதுரையில் என சகல புத்தக விழாக்களிலுமே ஒரு குறிப்பிட்ட வசூல் வட்டத்துக்குள்ளேயே நாம் சவாரி செய்ய நேரிடுகிறது ! But இதுதான் பதிப்புலக நிதரிசனம் எனும் பொழுது, அரைப் பெடல் அடித்துக் கொண்டே வண்டியை ஓட்டும் கலையைக் கற்றுக் கொண்டே வருகிறோம் ! சென்னை கணேஷ் ; செந்தில் சத்யா ; பூனையார் ; மாயாவியார் போன்ற நண்பர்களின் எதிர்பாரா உதவிகள் கிட்டுவது - மல்லாக்க விழுந்து முழங்காலைச் சிராய்த்துக் கொள்ளும் ஆபத்திலிருந்து நம்மைக்  காப்பாற்றிடுகிறது !  Thanks guys & thanks to all those who dropped in !! And a SPECIAL THANKS to BAPASI too !!!

"ஒவ்வொரு தினமும் ஒரு புது அனுபவமே" என்பதற்கு இந்தப் 12 நாட்களை விடவும் பெரியதொரு சான்று இருந்திட முடியாது !! இந்தப் பர பரப்பை ; உற்சாகங்களை மீண்டும் உணர்ந்திடும் வரம் கோரி கை கூப்பிட மட்டுமே தோன்றுகிறது இந்த நொடிதனில் !! மீண்டும் சந்திப்போம் folks !! Happy Sunday !!

p.s : அந்த கர்னல் க்ளிப்டன் CAPTION போட்டியின் வெற்றியாளரை அறிவிக்க மறந்து விட்டேன் போன வாரம் ! ஞாயிறு (இன்று) பகலில் நிச்சயம் அறிவிப்புண்டு !
சுட்டி லக்கி - புது ஆல்பம் ! 

346 comments:

  1. தேதிய மட்டும் சொல்லுங்க சார் நான் ரெடி proof reading க்கு

    ReplyDelete
  2. வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே

    ReplyDelete
  3. February மாத இதழ்கள் எப்போது எதிர் பார்க்கலாம் எடி sir

    ReplyDelete
  4. Replies
    1. சிவா @ நமது காமிக்ஸ் பற்றி உங்கள் விமர்சனங்களை அவ்வப்போது எழுதலாமே?

      Delete
  5. பதிவப் படிச்ச சந்தோசத்தோட இப்பத் தூங்கப்போறேன்... இன்னும் சித்தநேரம்தான்.. விடிஞ்சுடும், அப்புறம் வர்றேன்...

    ReplyDelete
  6. //சகல புத்தக விழாக்களிலுமே ஒரு குறிப்பிட்ட வசூல் வட்டத்துக்குள்ளேயே நாம் சவாரி செய்ய நேரிடுகிறது ! But இதுதான் பதிப்புலக நிதரிசனம் எனும் பொழுது, அரைப் பெடல் அடித்துக் கொண்டே வண்டியை ஓட்டும் கலையைக் கற்றுக் கொண்டே வருகிறோம் ! // சென்னை புத்தக விழா பற்றி 'விகடகவி' இதழில் எழுதியிருந்தார்கள். பெரிய பதிப்பகங்களே புத்தகங்களை பிரின்ட் ஆன் டிமாண்ட் அடிப்படையில் 100 பிரதிகளே இப்போது அச்சிட்டு புத்தக விழாக்களுக்கு எடுத்துவருவதாகவும். அவற்றில் 10 புத்தகங்களை ராயல்ட்டிக்குப் பதிலாக எழுத்தாளர்களுக்கு கொடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்.

    ReplyDelete
  7. 2018 மட்டுமல்ல 2028 ஆம் ஆண்டு புக் fairலும் எங்க தல ஸ்பைடர் தான் டாப் ஹீரோ....Life time Hero.

    ReplyDelete
  8. கள நிலவரமே நிதர்சனம் !

    ReplyDelete
  9. அப்ப நான் 17வது வாசகன்....

    சரி வாசிச்சிட்டு வருவோம்

    ReplyDelete
  10. அருமையான அலசல். விற்பனை கடந்த வருடம்/2015 உள்ள அதே உயரத்தை தான் நாம் அடைந்துள்ளோம் என்பது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. அதேநேரத்தில் நமது சென்னை நமது காமிக்ஸ் வண்டிக்கு கொஞ்சம் பெட்ரோல் கொடுத்து தொடர்ந்து ஒட உத்வேகத்தை தந்துள்ளது.

    ReplyDelete
  11. பிப்ரவரி இதழ்களின் அட்டைப்படம் மற்றும் டீசர்களை கண்களில் காட்டலாமே சார்.
    இந்த பதிவில் படங்கள் எதுவும் இணைக்கப்படவில்லை.

    ReplyDelete
  12. கிராப்பிக் நாவல்களின் விற்பனையை பார்க்கும் போது நமது அலசல்களும் "பாஸிட்டிவ்வான" விமர்சனங்கள் எல்லா கதைகளுக்கும் தேவை. நண்பர்கள் இதனை மனதில் கொண்டு தொடர்ந்து தங்கள் விமர்சனங்கள் மற்றும் ஆராய்ச்சிகளை இங்கு பதிவிடல் அவசியம். ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நானும் தான் பரணிதரன். இந்த மாத கிராப்பிக் நாவல் பற்றி இன்னும் எழுத வில்லை.பாதி படிக்கும் முன்னே தூக்கம் வந்துவிட்டது.:-)

      பொறுமையாக ஒரு நாள் இரவில் ஒரே மூச்சில் படிக்க முடிவு செய்து இருக்கிறேன்.

      Delete
  13. சத்யா தம்பி எங்கே இருக்கிறீங்க? இங்கே வந்து கொஞ்சம் தலையைக் காட்டினால் சந்தோஷப்படுவேன்.

    ReplyDelete
    Replies
    1. போன வருடம் போல் தலையிலேயே சூப்ப கொட்டுற ஐடியா எதாவது உண்டா

      Delete
    2. @Parani from Bangalore:
      வணக்கம் பரணி நண்பரே🙏🙏🙏

      Delete
    3. சூப்பர் சத்யா. நன்றி.

      Delete
  14. வெட்டுக்கிளி வீரையன் @ எப்படி இருக்கிறீர்கள். பெங்களூர் குடியேற்றம் நல்லபடியாக நடந்து இருக்கும் என நம்புகிறேன். கன்னடம் பேச ஆரம்பித்து விட்டீர்களா?

    ReplyDelete
    Replies
    1. இனிய நண்பர் பரணி..என்ன மாதிரியான அன்புள்ளம் இது?அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பர் ..ஆனால் அன்பிற்கு நேரம் காலமே இல்லையா?நடுநிசி மூன்று மணி .அருப்புக்கோட்டை தை மாச குளிரையே தங்க முடியாமல் நடுங்கிக்கொண்டு இருக்கிறேன் .பெங்களூர் குளிரில் இந்நேரம் என் நினைவு எப்படி வந்தது ?நண்பர் சத்யா பற்றியும் நினைவு..நாடி நரம்பெல்லாம் காமிக்ஸ் காதல் ததும்பிக் கொண்டிருக்கும் ஒரு நல்ல உள்ளத்தில் இருந்து மட்டுமே இப்படிப்பட்ட கரிசனங்கள் உதிக்கும் .அனைத்து யோகங்களும் பெற்று நல் வாழ்வு வாழ மனதார வாழ்த்துகிறேன் .செல் நம்பர் ப்ளீஸ் ...

      Delete
    2. மாத்தாடு மாத்தாடு மல்லிகே...

      Delete
    3. 9900515000 உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கூப்பிடுங்கள் பேசுவோம்..

      Delete
    4. @ PfB

      உங்க மொபைல் நம்பர்ல பாதிக்குப் பாதி சைபரைக் கொடுத்து உங்களை யாரோ நல்லா ஏமாத்திட்டாங்களோன்னு தோனறது! :D

      Delete
    5. ///
      உங்க மொபைல் நம்பர்ல பாதிக்குப் பாதி சைபரைக் கொடுத்து உங்களை யாரோ நல்லா ஏமாத்திட்டாங்களோன்னு தோனறது! :D///

      ஆடித்தள்ளுபடியில வாங்கியிருப்பாரோ!!

      அஞ்சி நம்பர் வாங்கினா அஞ்சி நம்பர் இலவசம்னு சொல்லியிருப்பாங்க, நம்ம பரணியும் அடடேன்னு வாங்கியிருப்பாரு..!
      அஞ்சி நம்பராச்சும் இருக்கே ..!!;)

      Delete
  15. CBF வழக்கம் போல் உங்களுக்கு ஒரு பெரிய Energy tonic-ஐ கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்.

    அதிலும் குறிப்பாக XIII முன்பதிவு & மும்மூர்த்திகள் விற்பனை நீங்களே எதிர்பாராததாகவே இருந்திருக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள் சார்.

    ஆனாலும் அந்த ...

    "நிஜங்களின் நிசப்தம்"

    என்ன கொடுமை தலைவரே ???

    ReplyDelete
    Replies
    1. விதி செய்த சதியா ..

      இல்லை கணேஷ் சார் செய்த சதியா...

      என்னமோ போடா மாதவா...:-(

      Delete
  16. இனிய விடிய காலை வணக்கம்!!@@

    ReplyDelete
  17. // எது எப்படியோ - சின்னதொரு மார்ஜினில் மாயாவியாருக்கு டேக்கா கொடுத்து விட்டு முதலிடம் பிடிக்கிறார் நமது லயனின் big boss//
    வாவ்,சூப்பர், அப்படின்னா பாட்டில் பூதம் மாதிரியான இதழ்களை தாராளமாக மறுபதிப்பு செய்யலாம்,ஹைய்யா.

    ReplyDelete
    Replies
    1. அப்படியே திகில் தொடரில் வெளிவந்த " விண்வெளி பிசாசு" ம்...!

      Delete
    2. இதை நான் தலைகீழாக நின்று வரவேற்கிறேன். அடுத்த வருடம் இந்த கதைகளை சந்தாவில் இணைத்து விடுங்கள்.

      அப்படியே யார் அந்த மினி ஸ்பைடர் ப்ளீஸ்.

      Delete
  18. 500+pages in pocket size will also attract people.i think.

    ReplyDelete
  19. ஜனவரி இதழான "விசித்திரச் சவால்" தான் இந்தப் புத்தக விழாவினில் நமது bestseller

    *******
    So ஒரு செம dark கி.நா. தான் புது ரெக்கார்டை உருவாக்கும் அதிசயமும் கண்முன்னே நிகழ்கிறது...


    **"*"***


    இது யாருடைய சதியாக இருக்கும் என அலசி ஆராய அந்த மூம்மூர்த்திகளையே களம் இறக்க வேண்டும் போல...:)

    ReplyDelete
  20. Spider? First?!! .....why wonder?....I am laughing , laughing, laughing​...Dylan Dog....ha ha ha....!. But I can understand how the poor sale of these series affected you as a publisher sir. I'm just happy about Spider's leading.

    ReplyDelete
  21. அதிலும் நி.நி.காலின்னு நினைக்கிறப்ப ரொம்ப பயந்து வருது சார்..:-)

    ReplyDelete
  22. சென்னை கணேஷ் ; செந்தில் சத்யா ; பூனையார் ; மாயாவியார் போன்ற நண்பர்களின் எதிர்பாரா உதவிகள் கிட்டுவது - மல்லாக்க விழுந்து முழங்காலைச் சிராய்த்துக் கொள்ளும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிடுகிறது

    ********


    மனமார்ந்த பாராட்டுகள் நண்பர்களே..

    ReplyDelete
  23. சார்..,தேதி 28 ஆகி விட்டது ...வெளிவரும் இதழ்களை பற்றி எந்த சேதியும் காணவில்லையே ..:-(

    ReplyDelete
  24. இஸ்பைடரின் 'விசித்திரச் சவால்' தான் விற்பனையில் நம்பர்-1 ஆக இருக்கப்போகிறது என்று புத்தகத்திருவிழாவுக்கு முன்பே ஆரூடம் சொல்லிய அந்த நண்பர் யார் என்பதை மறந்துவிட்டேன்! மிகச் சரியான கணிப்பு!! வாழ்த்துகள்!!

    லார்கோ, ஷெல்டன் - விற்பனையில் சோபிக்காதது நிஜமான அதிர்ச்சி!!! ( இதைப் பற்றிய ஒரு அலசல் அவசியமாகிறது!)

    'நிஜங்களின் நிசப்தம்' காலியாகிவிட்டது ஒரு இன்ப அதிர்ச்சி!! 22 நாட்களில் விற்றுத் தீர்ந்து வரலாறு படைத்துள்ளது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!! இதை 'குப்பை', 'பூட்ட கேஸ்' என்றெல்லாம் வெளியே விமர்ச்சித்தாலும், இன்ச் பை இன்ச் படித்து ரசித்த நம் FB நண்பர்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இன்ச் பை இன்ச் " விமர்சித்த " என்ற வரியே சரியாக இருக்கும் என நினைக்கிறேன் ..:-)

      Delete
    2. // லார்கோ, ஷெல்டன் - விற்பனையில் சோபிக்காதது நிஜமான அதிர்ச்சி!!! //
      இரண்டுமே ப்ளே பாய் ரக கதாநாயகர்கள். எனக்கு இவர்களின் கதை பிடித்தாலும் இவர்கள் கதையில் பெண்களுடன் அடிக்கும் கூத்துக்கள் முகம் சுழிக்க செய்கிறது.

      Delete
    3. லார்கோ, ஷெல்டன் - விற்பனையில் சோபிக்காதது நிஜமான அதிர்ச்சி

      #####


      இந்த அதிரடி நாயகர்களின் தலைப்பு குறைவாகவும் இருப்பதும் காரணமாக இருக்கலாம் செயலரே..:-(

      Delete
    4. ///இன்ச் பை இன்ச் " விமர்சித்த " என்ற வரியே சரியாக இருக்கும் என நினைக்கிறேன் ..:-)///

      ஹா ஹா ஹா! சரியான வார்த்தைகள் தலீவரே!

      Delete
    5. // இன்ச் பை இன்ச் " விமர்சித்த " என்ற வரியே சரியாக இருக்கும் என நினைக்கிறேன் ..:-) //

      இது ஒரு வகையில் நன்மைக்கே. இல்லை என்றால் இது தெரியாமல் சில நண்பர்கள் இந்த புத்தகத்தை வாங்கி மன வருத்தத்தை கொடுத்து இருக்கலாம்.

      Delete
    6. அதன் வித்தியாசமான சைஸ் ,
      அமைப்பு கவர்ந்திழுத்திருப்பது உண்மை.

      Delete
  25. மாடஸ்டி வெங்கடேசன் @ எங்க இருக்கீங்க! இங்கே வந்து உங்கள் தலையைக்காட்டி செல்லவும்.

    ReplyDelete
    Replies
    1. மாடஸ்டி சிறுவயதில் ஒரு வேலித்தடுப்பை தாண்டி தப்பிப்பது போல் ஒரு கதை அதன் பெயர் தெரியவில்லை.

      அந்த கதையை ஆசிரியர் அவர்கள் அடுத்த வருடம் மறுபதிப்பாக கொடுத்தால் நன்றாக இருக்கும். இல்லை அது மிகவும் சிறிய கதை என்றால் இந்த வருடம் சந்தாதாரர்களுக்கு சஸ்பென்ஸ் இதழாக் கொடுக்கலாம்.

      Delete
    2. அது " மாடஸ்தியின் கதை " என்ற தலைப்பிலியே மர்ம எதிரி என்ற இதழில் வந்த கதை என்று நினைக்கறேன்.

      Delete
    3. நன்றி பரணிதரன். ஏன்னா ஒரு ஞாபகசக்தி.

      Delete
    4. மாடஸ்டியின் பழி வாங்கும் புயல்

      Delete
  26. // சென்னை கணேஷ் ; செந்தில் சத்யா ; பூனையார் ; மாயாவியார் போன்ற நண்பர்களின் எதிர்பாரா உதவிகள் கிட்டுவது - மல்லாக்க விழுந்து முழங்காலைச் சிராய்த்துக் கொள்ளும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிடுகிறது //


    நன்றி நண்பர்களே.
    அதே போல் இனிவரும் புத்தகத் திருவிழாக்களில் நண்பர்கள் அனைவரும் தங்களால் முடிந்த அளவு களப்பணி செய்து உதவ வேண்டுகிறேன்.

    ReplyDelete
  27. இந்த வாரம் "அலசும் நேரமிது...!" அப்படி என்றால் அடுத்த வாரம் "காயப்போடும் நேரமிது...!"

    :-)

    ReplyDelete
  28. 'பெளன்சர்' விற்பனையில் கடைசி இடத்தில் இருப்பது ஆச்சரியமான தகவல் இல்லை என்றாலும் கூட, CBFல் சிலரது தேர்வு இதுவாக இருந்தபோது நாம் வலியச் சென்று "சார்.. இது வன்மேற்கின் நிஜமுகத்தைக் காட்டும் அருமையான கதை தான்... ஆனால் இதில் அடல்ட்ஒன்லி சமாச்சாரங்களும் ஆங்காங்கே தலைகாட்டும், பர்ரால்லியா?" என்று கேட்டபோது நிறையப்பேர் அதைத் திரும்ப வைத்துவிட்டனர்! (எடிட்டரே கூட இதைச் செய்ததை ஸ்டாலில் பார்க்க முடிந்தது). சில சிறுவர்கள் இதைப் புரட்டிப்பார்க்க முயற்சித்தபோது 'இது உனக்கானது இல்லைடா கண்ணா' நாம் பதறியடித்து பிடுங்க வேண்டியிருந்தது!

    அதீத வன்முறையோ, ஆபாசங்களோ என்றுமே நம் காமிக்ஸுக்கு செட் ஆகாது என்று நாம் அவ்வப்போது போர் கொடி தூக்குவது இம்மாதிரியான காரணங்களால்தான்!

    ReplyDelete
    Replies
    1. அதீத ஆபாசங்களோ என்றுமே நம் காமிக்ஸுக்கு செட் ஆகாது.

      அதுவும் கடந்த வருடம் வந்த லேடி s கதையில் வில்லன் ஆபாசப் படம் பார்ப்பது போல் உள்ள படத்தில் எழுதிய வசனங்கள் அருவருக்கத்தக்கவை. இவைகளை இனி தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் லேடிS புத்தகத் திருவிழாவில் புறக்கணிக்கப்படலாம்.

      Delete
    2. நண்பரே பரணி

      லேடி S ல் கதை போக்கில் நாம் அதை கண்டு கொள்வதில்லை!

      நாம் அதை குறிப்பிட்டுச் சொல்லும்போது அது பூதகரமாக தோற்றமளிக்கத் தொடங்கிவிடும்!

      உண்மையில் அது என்னவென்று கூட
      எனக்கு நியாபகம் இல்லை!

      கடந்து செல்ல வேண்டிய விசயங்களை அடையாளப் படுத்திக் காட்டுவதினால் அது எதிா்மறை விளைவுகளையே உண்டாக்கக் கூடும்!

      ஒன்றை அடையாளப் படுத்துவதினால் அது கூடுதல் கவனம் பெறுமே ஒழிய புறக்கணிக்கப் படாது என்பது என் எண்ணம்!

      எல்லோா் வீட்டிலும் டிவி உள்ளது. அதில் வரும் சந்தானம் காமெடியையே குடும்பத்தோடு ரசிக்க பழகிவிட்டோம்!

      அதனால் இது ஒரு பொிய விசயம் இல்லை என்பது என் எண்ணம்!

      Delete
    3. அத ஊதி ஊதி பெருசாக்கிடக்கூடாது.
      எங்கப்பன் குதுருக்குள்ள இல்லங்குற மாதிரி நாமளே .......

      Delete
  29. நண்பர்கள் சிலர் இங்கே பதியும் பின்னூட்டங்கள் மெயில் சப்ஸ்கிரிப்ஸனில் மற்றவர்களுக்கு வந்துவிடுகிறது. ஆனால் இங்கே தளத்தில் பதிவாவதில்லை! என்னமாதிரியான பிரச்சினையோ தெரியவில்லையே... விசயம் தெரிந்த நண்பர்கள் தீர்வு சொல்லலாமே?!!

    ReplyDelete
  30. காலை வணக்கம் சார் & நண்பர்களே 🙏🏼

    ReplyDelete
  31. ////நண்பர்களின் எதிர்பாரா உதவிகள் கிட்டுவது - மல்லாக்க விழுந்து முழங்காலைச் சிராய்த்துக் கொள்ளும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிடுகிறது ! ////

    அ..ஆனால் எடிட்டர் சார்... மல்லாக்க விழுந்தால் முழங்காலில் எப்படி சிராய்ப்பு ஏற்படும்னேன்? 'குப்புற' என்பதுதானே சரி? ( ஹைய்யா! இரத்தப்படலம் புரூஃப் ரீடிங் பணிக்கு எடிட்டர் வச்ச டெஸ்ட்டுல நான் பாஸாகிட்டேன்!!) :P

    ReplyDelete
    Replies
    1. விஜய் @ அது ஜோக்கு. ஆராயக்கூடாது. சிரிக்க மட்டும் தான் செய்யனும்.

      Delete
    2. குப்புர - குல்லாக்க - குழங்கால் ன்னு போட்டா நல்லா இருக்காதுல்ல!

      அதனாலே

      மல்லாக்க முழங்கால்னு போட்டிருப்பாா்னு நெனைக்கறேன்

      Delete
  32. காலை வணக்கம்.
    ஆசிரியரே நண்பர்களே.
    புத்தக விழாவில் அதிகம் விற்பனையான
    கதைகள் வாசகரின் கையில் கொடுத்து
    பரிந்துரை செய்யப்பட்டது.ஈ வி
    இஸ்பைடர் பற்றி முன்கூட்டியே கணித்து
    1000-புத்தகங்களை கேட்டது அடியேன்.
    இரத்த படலம் டாப் கியர் எடுத்தது பற்றி
    மகிழ்ச்சி. ப்ரூஃப் ரீடிங் பணிகளை
    பற்றி முன்கூட்டி தெரிவிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ////.ஈ வி
      இஸ்பைடர் பற்றி முன்கூட்டியே கணித்து
      1000-புத்தகங்களை கேட்டது அடியேன்.////

      'விற்பனைப் புயல்'மட்டுமல்ல - நீங்கள் ஒரு 'ஆரூட அனகோண்டா'ன்னும் நிரூபிச்சுட்டீங்க ஜி! :)

      Delete
  33. // புத்தக விழாவின் TOPSELLER-லிருந்து ஆரம்பிப்பது நலமென்பேன் & அந்த மெடலைத் தாங்கிக் கொள்ளும் நெஞ்சானது யாருடையது என்பதைக் கேட்டால் சில பல 'பணால்'கள் நேரிடலாம் ஆங்காங்கே !! அது வேறு யாருமில்லீங்கோ - தலைகீழ் சிரசாசன SMS புகழ் இஸ்பய்டர் சாரே ! அவரது ஜனவரி இதழான "விசித்திரச் சவால்" தான் இந்தப் புத்தக விழாவினில் நமது bestseller !! //

    சார்இந்த இதழ் தனி இதழாக வந்ததில்லை (தீபாவளி மலராக வந்திருந்தது)
    ஆகையால் நிறைய நண்பர்களிடம் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு சார் 🙏🏼
    அதனாலும் இருக்கலாமோ 🤔😇

    ReplyDelete
    Replies
    1. உண்மை சிபி ஜி குண்டு புத்தகங்களில் இருந்து வரும் கதைகளுக்கு தனி மவுசுன்டு அதுவுமில்லாமல் பாக்கேட் சைஸ். ஹார்ட் பவுண்ட் என்பதால் விற்பனை பட்டையை கிளப்புகிறது

      Delete
  34. // இந்த "எழுபதுகளின் பிள்ளைகளை" இன்றைக்கும் முன்னணியில் நிற்கச் செய்யும் இந்த 'நோஸ்டால்ஜியா'வை எண்ணி வியாக்காது இருக்க இயலவில்லை ! //

    Old is Goldன்னு பெரியவங்க சும்மாவா சொல்லியிருக்காங்க சார்
    .

    ReplyDelete
  35. Spider....எப்போதுமே டாப் தான்......விண்வெளி பிசாசு.....பாக்கெட் சைஸ்....ப்ளீஷ்்.....

    ReplyDelete
    Replies
    1. தானைத் தலைவன் எப்பவுமே கிங் தான்

      Delete
  36. // இந்தப் புத்தக விழாவின் நிஜமான surprise என்று சொல்வதாயின் - அது நமது உடைந்த மூக்காரின் ஆல்பங்களின் விற்பனையில் தென்பட்டிருக்கும் ஒரு சுறுசுறுப்பு !! கடைசி 3 ஆண்டுகளாய் டைகரும் சரி ; கமான்சேவும் சரி, ஊர் ஊராய்ப் புத்தகவிழாக்களின் பெயரைச் சொல்லி சுற்றுப் பயணம் அடித்துவிட்டு பத்திரமாய் நமது கிட்டங்கிக்கே திரும்பிடும் வித்தைக்காரர்களாகவே இருந்து வந்தனர் ! ஆனால் இம்முறையோ - "இரத்தக் கோட்டை" தந்த boost-ன் காரணமாகவோ  , என்னவோ - கேப்டன் டைகரின் விற்பனை has not been bad at all !! வழக்கம் போல "தங்கக் கல்லறை"-க்கு நல்ல வரவேற்பு //

    இந்த ஒரு காரணம் போதுமே சார்

    அடுத்து எப்போ தங்க தலைவனின் அடுத்த புத்தகம் வரப்போகுதுன்னு டைகர் அபிமானிகள் ஆரம்பித்து விடுவார்களே 🤔

    ReplyDelete
  37. // இம்முறை நண்பர் கணேஷ், கன்னத்தில் மருவை ஒட்டிக்கொண்டு வந்து மொத்தமாய் வாங்கி யாருக்கேனும் விநியோகம் செய்தாரா என்று தெரியவில்லை ; கொண்டு சென்ற XIII-ன் இதழ்களில் பெரிதாயொரு மிச்சம் இருக்கவில்லை ! And மொத்தம் 12 முன்பதிவுகள் சென்னையில் நடந்துள்ளதையும் சேர்த்தால் தற்போதைய "இரத்தப் படலம்" முன்பதிவு நம்பர் : 402 !!! We are there guys !!! கதைகளின் (வண்ண) டிஜிட்டல் கோப்புகள் வந்துவிட்டன ; மாதாந்திரப் பணிகளுக்கு இடைஞ்சலின்றி வேலைகளை முடுக்கி விட வேண்டியது மட்டுமே பாக்கி !! அநேகமாய் ஏப்ரல் இறுதியில் வாசக proof reading டீமுக்கு வேலையிருக்கும் !! தயாராகிக் கொள்ளுங்கள் - சிகப்புப் பேனா சகிதம் !! //

    வாவ் அருமை சார்

    சார் அப்படியே சிங்கிள் புக்கு வேண்டுபவர்களுக்கு தர வாய்ப்பு இருக்கிறதுங்களா சார் _/|\_
    .

    ReplyDelete
  38. // அழகான விற்பனையில் இரு மாறுபட்ட நாயகர்களும் இடம்பிடிக்கின்றார் - "ஜேசன் பிரைஸ்" & "மர்ம மனிதன் மார்ட்டின்" ரூபத்தில் ! நானே நேரில் பார்த்தேன் - மார்டினின் கதைகளுக்கொரு niche வாசக அணி இருப்பதை ! //

    நிறைய முறை
    நிறைய நண்பர்கள் சொல்லியிருக்கிறாங்க சார்
    மார்ட்டினுக்கு கூடுதலாக இடம் ஒதுக்க சொல்லி
    இனியாவது பார்த்து ஏதாச்சும் போட்டு கொடுங்கசார் _/|\_
    .

    ReplyDelete
    Replies
    1. மார்ட்டின்,ரிப்போட்டர் ஜானி பேரவை சார்பாக
      +11111111111

      Delete
  39. அதிலும் நி.நி.காலின்னு நினைக்கிறப்ப ரொம்ப பயந்து வருது சார்..:-)

    ReplyDelete
  40. ,சார் அலசல்கள் அருமை....இப பிழை திருத்த என்னையும் சேத்துக்கோங்க... லார்கோ சரியான விளம்பரமில்லையோ.

    ReplyDelete
  41. அதிலும் நி.நி.காலின்னு நினைக்கிறப்ப ரொம்ப பயந்து வருது சார்..:-)

    ReplyDelete
    Replies
    1. என்ன தலைவரே மனசுக்குள்ள பேசறேன்னு நினைச்சிகிட்டு இங்கே திரும்ப,திரும்ப பேசறிங்களா?
      ரொம்ப எக்கோ அடிக்குதே.

      Delete
  42. // மர்ம மனிதன் மார்ட்டின்" ரூபத்தில் ! நானே நேரில் பார்த்தேன் - மார்டினின் கதைகளுக்கொரு niche வாசக அணி இருப்பதை !//
    அருமையான தகவல், 2019 ல் மார்ட்டினுக்கு ரெண்டு ஸ்லாட் பார்சல்.

    ReplyDelete
  43. லார்கோ,ஷெல்டன்,ஸ்மர்ப்ஸ், மதியில்லா மந்திரி போன்றவை விற்பனையில் சுணக்கம் என்பது வருத்தமாக உள்ளது,இதற்கான விடை என்ன? இவைகள் வாசிக்க சுவாரஸ்யமான களங்களை கொண்டவையே,எனினும் விற்பனையில் சுணக்கமும்,கிட்டங்கியில் தேங்கும் அபாயமும் இருப்பின்
    சற்றே இடைவெளி வேண்டுமானால் விட்டுப் பார்க்கலாம்.

    ReplyDelete
  44. // நிஜங்களின் நிசப்தம்" சென்னை விற்பனையில் உச்சங்களோடு போட்டி போடும் இதழ் மட்டுமல்ல ; வெளியான அதே மாதத்திற்குள் விற்றுத் தீர்ந்த முதல் இதழும் கூட !!!//
    மிக மகிழ்ச்சியான செய்தி,இங்கே வந்த பாஸிட்டிவ் விமர்சனங்களும்,அளவான பதிப்பும் காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
  45. Dear Editor,

    Similar levels of sales as to two years ago can be due to two things:

    a) You need publicity beyond this blog to reach out people - see below my take on Ponniyin Selvan publicity (Nila comics).

    b) At Book fairs, people have the need to divide their budget - no one comes specifically for comics shopping - very few impulsive spenders - hence if on an average they visit 5 stalls to pick up books - the average spend on comics stall remains the same.

    This year people also got diverted to PONNIYIN SELVAN comics. As pathetic as the quality of that book was, it carried superior publicity and marketing - at least with respect to the Arena. What plans can we implement in this regard?

    Note: My last 3 comments at the blog had been removed - they did reach my friends in e-mails though.

    ReplyDelete
    Replies
    1. Raghavan : //Note: My last 3 comments at the blog had been removed - they did reach my friends in e-mails though. //

      Huh ?? அதெப்படி சார் ? நான் blog பின்னூட்டங்களை இப்போதைக்குள் கைவைக்கவே இல்லையே ?? சொல்லப் போனால் ஒரு மாதத்துக்கும் மேலிருக்கும் நான் இங்கு பதில் போட முனைந்தே !!
      And in any case - காலி பண்ண அவசியம் ஏற்படுத்தும் பின்னூட்டங்களாகவும் உங்களது இருக்கப் போவதில்லையே ?

      இதே போல் தான் திருப்பூர் ப்ளூபெர்ரி & ஈ.வி. கூட ஏதோ சமீபத்தில் சொன்னது நினைவிற்கு வருகிறது !!! இது போன்ற glitches நேரக்கூடியதன் காரணங்கள் பற்றி யாருக்கேனும் எதுவும் தெரியுமா guys ? Any help would be appreciated !

      Delete
    2. I also had experienced some kickbacks but left it rather than to, too worried....

      Delete
    3. Raghavan : Publicity நிச்சயம் தேவை என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை சார் ; ஆனால் end of the day - வாசகர்களை நேரில் சென்றடையும் விற்பனை முயற்சிகள் நீங்கலாக இதர எல்லா மார்க்கங்களிலும் "கடன்" ; "நிலுவைச் சேதாரம்" என்ற அரக்கர்கள் வழிமறித்து நிற்கிறார்கள் !! கடைகள் வழியாகவே வாசகர்களை எட்டிப்பிடிக்க வேண்டியதொரு சூழலில் 2 இடர்கள் குறுக்கிடுகின்றன !

      முதலாவது அவர்கள் கோரும் 40 % கமிஷன் !! நார்மலான bookstore பாணியில் நம்மிடமும் இந்தத் தொகையை விற்பனையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள் ! ஆனால் நமது விலைகளோ தம்மாத்துண்டு மார்ஜினோடு மட்டுமே நிர்ணயிக்கப்படுபவை எனும் பொழுது அந்த கமிஷனுக்கு இசைவு சொல்ல சாத்தியப்படுவதில்லை !

      இரண்டாவது கடன் !! Of course இன்றைய சூழலில் ரொக்க வியாபாரம் என்பதெல்லாம் நம் போன்ற குட்டி பதிப்பகங்களுக்கு கனவாக மட்டுமே இருக்க முடியும் ! So கடன் தந்திட நாங்களும் தயாரே - முறையானதொரு அவகாசத்துக்குப் பின்பாய் bill to bill முடித்துவிட ஏஜெண்ட்கள் சம்மதிக்கும் பட்சங்களில் ! பத்துக்கு ஏழு பேர் நிறுத்தி வைக்கும் தொகைகள் - கிட்டத்தட்ட 6 முதல் 8 மாதத்து பில் தொகைகளை எனும் பொழுது வெறுத்தே போய் விடுகிறது ! இதனில் ஒட்டு மொத்தமாய் கோவிந்தா போட்டுச் சென்று விடும் நபர்களின் சித்திரவதைகள் இன்னொரு பக்கம் ! சேலம் & ஈரோடு நீங்கலாக தமிழகப் பெருநகரங்களுள் ஆண்டுக்கொரு ஏஜெண்டிடமாவது "மொத்தமாய் காலி" என்ற மொட்டையை நாம் வாங்காத ஊரே கிடையாது ! தற்சமயம் நாம் விற்பனை செய்து வரும் முகவர்கள் நம் சிரமங்கள் புரிந்து நாணயமாய் செயல்படுவோர் மாத்திரமே ! மூன்றோ, நாங்கோ மாதத்து நிலுவைகள் அவர்களிடம் தங்கியிருப்பினும் -
      வசூலுக்குச் செல்லும் தருணங்களில் தேதியிட்ட செக்குகளாகவாவது தந்து உதவிடுகின்றனர் !!

      வட்டத்தைப் பெரிதாக்க எங்களுக்கும் கொள்ளை ஆசை தான் சார் ; கடந்த 15 நாட்களாக ஒரு அட்டகாசமான complete book list அடங்கிய முழுவண்ண கேட்லாக்கை தயாரித்து கிட்டத்தட்ட 800 புத்தகக் கடைகளுக்கு அனுப்பியுள்ளோம் தமிழகமெங்கிலும் ! நம்பினால் நம்புங்கள் - வெறும் நூறு ரூபாய்க்கு கூட இன்று வரைக்கும் அதன் தொடர்ச்சியாய் வியாபாரம் நிகழ்ந்த பாட்டைக் காணோம் !! "வேணும்னா கடனுக்குத் தூக்கி விடு ; விற்ற பிறகு, வசதிப்படும் போது பணம் தர்றோம் ! இது சரிப்படாதா - நடையைக் கட்டு !" என்பதே இன்றைய மார்க்கெட் நிலவரம் சார் !

      எல்லாத் துறைகளிலும் இன்றைக்கு சிரமங்கள் மேலோங்கியே நிற்கின்றன ; "அத்தியாவசியம் அல்ல" என்ற பட்டியலுக்குள் அடைபடக்கூடிய சமாச்சாரங்களுக்கோ அந்தச் சிரமப் பட்டியல் extra large !! அவ்வளவே !!

      Delete
    4. Unscrupulous agents...how do other publishers manage such problem sir ? ...and I how do they sell their books at bookshops & newsstand? I thought there would be no problem in selling our books at newsstand because we are now regular in publishing but so sad to hear this sir......

      Delete
  46. One of the possible reasons for the successful sale of the black and white reprints is its price and more content reading.

    ReplyDelete
    Replies
    1. Absolutely .. Nilavoliyil Narabali and the REPEAT books are too catchy to ignore at the price tag of INR 50 :-) In 2018, even if it is INR 60, a book fair rebate will net it for INR 54.

      Delete
    2. Moreover my dear sirs
      That golden days of newspaper print repeats, isn't ?

      Delete
    3. Gopalakrishnan Thiagarajan : அதனால் தான் மறுபதிப்புகளின் விலையில் கைவைக்கவே தயங்குகிறோம் சார் !

      Delete
    4. வச்சுறாதீங்க
      வர்ற வயசுப் பார்ட்டிங்க , பழைய நெனப்புடா பேராண்டீன்னு கை வைக்கிறத கெடுத்திடக்கூடாதில்ல...

      Delete
  47. ஆசிரியர் விஜயன் சாருக்கு
    அன்பு கலந்த வணக்கங்கள்.
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு
    பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு
    பலருடைய வற்புறுத்தலுக்கு பிறகு
    தாங்கள் இரத்தபடலம் வண்ண
    மறுபதிப்பை வெளியிட முன்வந்தற்க்கு
    என் நன்றிகள்.முன்பதிவுகள் நீங்கள்
    எதிர்பார்த்த எண்ணிக்கையான 400ஐ
    எட்டிப்பிடித்தது மகிழ்ச்சி.
    தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் இதுவரை
    இப்படி ஒரு படைப்பு வந்ததில்லை
    வரப்போவதும் இல்லை.எங்கள்
    மனக்குறையெல்லாம் விடுபட்ட
    13புலன்விசாரணை பற்றி தாங்கள்
    அறிவிப்பு ஏதும் சொல்லாததே.
    புலன் விசாரணை புத்தகத்தை
    முன்பதிவு செய்தவர்களுக்கு
    முடிந்தால் இலவசமாக அளிக்க
    வேண்டுகிறேன்.அல்லது சிறப்பாக
    தற்போது வெளிவந்த A4 சைஸ் சிக்பில்
    ஹார்டு பவுண்டு இதழ் போல் 200/-
    விலையில் 800 இதழ்கள் மட்டும்
    பிரிண்ட் செய்து விற்பனை செய்தாலும்
    நல்லது. அல்லது முதல் 400 முன்பதிவு
    செய்த வாசகர்களுக்கு மட்டும் சலுகை
    விலையாக 100/- பிறகு புக் செய்யும்
    வாசகர்களுக்கு200/-விலையிலும்
    கொடுக்கலாம். புலன் விசாரணை புத்தகம்
    இன்றி 13ன் சகாப்தம் முழுமையடையாது.
    இது தாங்களும் அறிந்ததே.என்னுடைய
    என் நண்பர்களுடைய வேண்டுகோள் இது.
    எனது கோரிக்கையை வேண்டுகோளை
    அனுப்புகிறேன்.பிளாக்கில் உங்கள்
    அறிவிப்புக்காக காத்திருக்கும்
    என்றும் உங்கள் அன்பன் நண்பன்
    காமிக்ஸ் காதலன்
    GANESH.KV. CHENNAI.
    மீண்டும் ஒரு நினைவூட்டல்.
    இரத்த படலம் வெளிவரும்போதே
    புலன்விசாரணை வெளியிட்டால்
    கதையும் முழுமை பெறும்.விற்பனையும்
    சிறக்கும்.தாங்கள் கூறியபடி இலவசமாக
    கொடுத்தாலும் சிறப்பு. அல்லது G S T
    COURIER & PAPER கட்டண உயர்வுகளால்
    நான் கூறியபடி 100 /- OR 200 /- விலையில்
    வெளியிட்டாலும் நன்று.தயவு செய்து
    E B F ல் சிறப்பு வெளியீடாக புலன்விசாரணை
    புத்தகத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.தொடர்ச்சியாக
    13 ன்SPINOFF கதைகளை 2019 ல்
    வெளியிட்டால் வெற்றி உறுதி.
    நன்றி.
    13 ன் காதலர்கள் ஆர்வலர்கள் எனது
    வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்து
    ஒருமித்த குரல் கொடுக்குமாறு
    வேண்டுகிறேன்.

    ReplyDelete
  48. ஆசிரியர் விஜயன் சாருக்கு
    அன்பு கலந்த வணக்கங்கள்.
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு
    பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு
    பலருடைய வற்புறுத்தலுக்கு பிறகு
    தாங்கள் இரத்தபடலம் வண்ண
    மறுபதிப்பை வெளியிட முன்வந்தற்க்கு
    என் நன்றிகள்.முன்பதிவுகள் நீங்கள்
    எதிர்பார்த்த எண்ணிக்கையான 400ஐ
    எட்டிப்பிடித்தது மகிழ்ச்சி.
    தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் இதுவரை
    இப்படி ஒரு படைப்பு வந்ததில்லை
    வரப்போவதும் இல்லை.எங்கள்
    மனக்குறையெல்லாம் விடுபட்ட
    13புலன்விசாரணை பற்றி தாங்கள்
    அறிவிப்பு ஏதும் சொல்லாததே.
    புலன் விசாரணை புத்தகத்தை
    முன்பதிவு செய்தவர்களுக்கு
    முடிந்தால் இலவசமாக அளிக்க
    வேண்டுகிறேன்.அல்லது சிறப்பாக
    தற்போது வெளிவந்த A4 சைஸ் சிக்பில்
    ஹார்டு பவுண்டு இதழ் போல் 200/-
    விலையில் 800 இதழ்கள் மட்டும்
    பிரிண்ட் செய்து விற்பனை செய்தாலும்
    நல்லது. அல்லது முதல் 400 முன்பதிவு
    செய்த வாசகர்களுக்கு மட்டும் சலுகை
    விலையாக 100/- பிறகு புக் செய்யும்
    வாசகர்களுக்கு200/-விலையிலும்
    கொடுக்கலாம். புலன் விசாரணை புத்தகம்
    இன்றி 13ன் சகாப்தம் முழுமையடையாது.
    இது தாங்களும் அறிந்ததே.என்னுடைய
    என் நண்பர்களுடைய வேண்டுகோள் இது.
    எனது கோரிக்கையை வேண்டுகோளை
    அனுப்புகிறேன்.பிளாக்கில் உங்கள்
    அறிவிப்புக்காக காத்திருக்கும்
    என்றும் உங்கள் அன்பன் நண்பன்
    காமிக்ஸ் காதலன்
    GANESH.KV. CHENNAI.
    மீண்டும் ஒரு நினைவூட்டல்.
    இரத்த படலம் வெளிவரும்போதே
    புலன்விசாரணை வெளியிட்டால்
    கதையும் முழுமை பெறும்.விற்பனையும்
    சிறக்கும்.தாங்கள் கூறியபடி இலவசமாக
    கொடுத்தாலும் சிறப்பு. அல்லது G S T
    COURIER & PAPER கட்டண உயர்வுகளால்
    நான் கூறியபடி 100 /- OR 200 /- விலையில்
    வெளியிட்டாலும் நன்று.தயவு செய்து
    E B F ல் சிறப்பு வெளியீடாக புலன்விசாரணை
    புத்தகத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.தொடர்ச்சியாக
    13 ன்SPINOFF கதைகளை 2019 ல்
    வெளியிட்டால் வெற்றி உறுதி.
    நன்றி.
    13 ன் காதலர்கள் ஆர்வலர்கள் எனது
    வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்து
    ஒருமித்த குரல் கொடுக்குமாறு
    வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @ KVG ji

      புலன்விசாரணை பகுதி - மொழிபெயர்ப்புப் பணியில் முழியைப் பிதுக்கிவிடும். ஒரு முழுநீள ஆங்கில நாவலை மொழிபெயர்ப்பதற்குச் சமம்!

      தனிப்பட்ட முறையில் புலன்விசாரணைப் பகுதியை தமிழில் படித்துவிட எனக்கும் ஆசைதான்... ஆனால் வண்ணமயமான இ.ப இதழுடன் சேர்ந்து வெளியாகிடும்பட்சத்தில் - பத்தி பத்தியான எழுத்துக்களைக் கொண்ட இந்தப் புலன்விசாரணைப் பகுதி நண்பர்கள் பலராலும் ஏதாவது ஒரு மூலையில் முடக்கப்பட்டுவிடும் அபாயமிருக்கிறது. மாதக்கணக்கில் செய்த மொழிபெயர்ப்புப் பணியும், தயாரிப்புப் பணியும் வீணாகிவிடுமோ என்ற கவலை எழுகிறது!

      இரத்தப்படலமே ஒரு ஃபுல் மீல்ஸ் மாதிரியானதுதானே... கூட பரோட்டா எதற்கு?

      தகுந்த இடைவெளிவிட்டு அடுத்தவருடம் வெளியாகிடும்பட்சத்தில் புலன்விசாரணைக்குக் கூடுதல் வரவேற்புக் கிடைக்கும் என்பது என் தாழ்மையான கருத்து!

      இ.ப வெறியர்கள் மன்னிக்க! :)

      Delete
    2. 👍🏼🙏🏾👌 மிகமிக முக்கியமான மற்றும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட வேண்டுகோள் அண்ணா. நன்றி!
      XIII மற்றும் XIII Mystery தொடர்பில் தற்போதைய வாசகர்களுக்குடையிலுள்ள தெளிவற்ற நிலை மற்றும் XIII முதலாம் பாகம் வெளிவந்த காலம் முதல் தற்போதைய பாகங்களின் வருகைக்காக எடுத்துக்கொண்ட நீண்ட இடைவெளி (20 வருடங்கள்) என்பவற்றால் ஏற்பட்ட ஒரு pseudo disconnection மற்றும் original கதையில் 13ம் பாகத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சடுதியான பாகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு(14-18) போன்றன ஒருவித generation gap ஐ ஒத்த ஒரு நிகழ்வை ஏற்படுத்தி புதிய வாசகர்கள் மத்தியில் ஆர்வத்தில் ஒரு பின்னடைவை தோற்றுவித்தன.
      ஆனால் இன்றும் அதற்குரிய demand இல் குறைவில்லை என்பதை 400+ Booking எடுத்துக்காட்டுகிறது.
      முதலாம் இரண்டாம் seasonsஐ இணைக்கும் 13ம் பாகம் ( புலன்விசாரணை) பல வருட எதிர்பார்ப்பு.
      அதை இந்த colour combined edition உடன் இணைத்து வெளியிட்டாலோ அன்றி தனியாக இவ்வெளியீட்டுடன் வெளியிட்டாலோ அன்றி வேறொரு காலத்தில் வெளியிடுவதென்பது சாத்தியமற்றது மட்டுமன்றி பிரயோசனமுமற்றதாகிவிடும். இவை அனைத்தும் வெளியிட்டு முடித்தால் அதன்பின் நிச்சயமாக XIII Mystery கதைகளின் எஞ்சிய 9 கதைகள் விற்பனையில் சக்கைபோடுபோடும் என்பது மட்டுமன்றி வாசகர்களின் ஆர்வத்தையும் தூண்டிவிடும்.
      இனி வர இருக்கும் XIII இன் 25ம்பாகம் (season 4) இற்கு இவை அனைத்தும் நிச்சயமாக ஒரு ஸ்திரமான அத்திவாரத்தை இடும் சாத்தியம் அதிகம்.

      Delete
    3. தவறான கருத்து ஈ வி.
      13 உடன் புலன்விசாரணை வெளிவருவதே
      நன்று.13வரும்போது கூடவே 800 புலன்
      விசாரணையும் வந்தால் அல்லது அதிகம்
      வந்தாலும் இதுவரை XIIIவாங்கியுள்ள
      புதிதாய் புக் செய்துள்ள மேலும்
      வாங்கப்போகும் வாசகருக்கு முழுமையான
      கதையை படித்த அனுபவமும் இதற்குமுன்
      வந்த இனி வரப்போகும் SPINOFF கதைகள்
      சிறப்பாக விற்பனையாகும் என்பதில்
      மாற்று கருத்து இருக்கப்போவதில்லை.

      Delete
    4. கணேஷ் சார் உங்களுடைய கருத்தே என் கருத்தும் + 111111111111111

      Delete
    5. எல்லாம் இருக்கு பெட்டியில
      இலை கறி கடைய சட்டியில்ல

      Delete
    6. @ ALL : முன்பதிவு இலக்கை எட்டிய நொடியிலேயே எல்லா சிக்கல்களையும் கடந்து விட்டோம் ; இனி 6 வழிச் சாலையில் சறுக்கிக் கொண்டு வண்டியை விட வேண்டியது மட்டுமே பாக்கி என்பது போலான உங்கள் எதிர்பார்ப்புகள் - எங்கள் மீதான உங்கள் நம்பிக்கைகளின் அடையாளங்களாக இருக்கலாம் !! அதன் பொருட்டு எங்களது நன்றிகள் folks !! ஆனால் நானுமே அதே தைரியத்தில் திரிந்தால் அதைவிடப் பெரிய தவறு வேறெதுவும் இருக்க முடியாது !

      ஒற்றை ஒற்றை அடிகளாய் எடுத்து வைக்க வேண்டிய முயற்சி இது நண்பர்களே ; உணர்ச்சிப்பெருக்கில் எதையாவது செய்வதாய் தட தட வென்று வாக்குக் கொடுத்து விட்டு, அப்புறமாய் விழி பிதுங்கும் விளையாட்டுக்கு இது தருணமல்ல !

      848 பக்கங்களைத் தயாரித்து, மூன்று தனித் தனி ராப்பர்களை உருவாக்கி, ஒட்டுமொத்தத்தையும் அச்சிட்டு, மூன்று hardcover இதழ்களை பைண்டிங்கும் செய்து, குளறுபடிகளின்றி உங்களிடம் ஒப்படைப்பதே பிராணன் போகும் பணியாக இருக்கப் போவது நிச்சயம் ! எனது 100 % கவனமும் அங்கில்லாது போயின் சொதப்பிட ஒரு நூறு வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளன !

      பற்றாக்குறைக்கு - அதே மாதத்தில் TEX - Dynamite ஸ்பெஷல் எனும் அதிரடியும் காத்துள்ளது, மாமூலான இதழ்களோடும் !

      So first things first ! விருந்தை ஒழுங்காய் சமைப்பதே இந்த நொடியில் எனது அவாவும், ஆதங்கமும் !!! அந்தப் பொறுப்பை எனக்கு முழுத் திருப்தி தரும் விதமாய் நிறைவேற்றும் வரையிலும், பஜ்ஜி-சொஜ்ஜிகள் மீதோ ; ஜிகர்தண்டாக்கள் மீதோ கவனத்தை ஓட விடுவது முறையாகாது !! பயணமோ ஒரு சிரமமான சிகரத்தை நோக்கி எனும் பொழுது - ஒருமித்த கவனமே இந்த வேளையின் முதல் தேவையன்றோ ?

      So புலனாய்வு ; spin-offs சார்ந்த விவாதங்கள், யூகங்கள் இப்போதைக்கு வேண்டாமே - ப்ளீஸ் ?

      Delete
    7. அதத்தான நானுஞ் சொன்னேஞ்சாமி...

      Delete
    8. எடிட்டர் சார் .. நீங்கள் ஒவொன்றாக வெளி இடுவீர்கள் என்ற நம்பிக்கை எப்பொழுதும் எங்களுக்கு உண்டு 👍...

      ஆதலால் உங்கள் முடிவே இப்பொழுது எங்கள் முடுவு... காமிக்ஸ் காதலர்கள் இந்த முடிவை யர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்...

      Delete
    9. மொழிபெயர்ப்புப் பணியில் முழியைப் பிதுக்கிவிடும். ஒரு முழுநீள ஆங்கில நாவலை மொழிபெயர்ப்பதற்குச் சமம்!

      ஒரு பிரபல பிரெஞ்சு நாவலின் காமிக்ஸை மொழிபெயர்த்து படித்து முடித்து விற்று தீர்க்கும் அளவுக்கு ரசணையில் மூத்த நாம் இதனை ஏற்றுக்கொள்ள தயங்குவது ஏன் நட்பே

      மேலும் நாவல் போல் நாவல்போல்எஎனக்கூறுவதைத்தவிறுங்கள் நண்பரே

      Delete
    10. ஒருவேலை மொழிபெயற்த்து கொடுத்தால் நீங்கள் படித்துவிட்டு கருத்து கூருங்கள் நண்பரே இனி கேட்பதற்க்கு ஏதுமில்லை எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க வழிவிடுங்கள் நண்பர்களே

      Delete
  49. ////As usual - டெக்சின் வாலைப் பிடித்துக் கொண்டே அடுத்தயிடத்தில் நிற்பது நமது லக்கி லூக் ! அந்த மனுஷனுக்கும் டெக்ஸைப் போலவே ஆண்கள் / பெண்கள் ; சிறார் / பெரியோர் என அனைத்துத் தரப்போடும் ஒருவித chemistry நிலவுவது கண்கூடு !! இம்முறை முதலிடம் "ஒரு பட்டாப் போட்டி" இதழுக்கே ; followed by "ஒற்றைக்கைப் பகாசுரன்" !! ////

    ஜாலி ஜம்பா் : அதானே பாத்தேன்! எங்கடா நம்மால காணோமேன்னு!

    ReplyDelete
    Replies
    1. எடிட்டா் சாா்,
      நம்ம வீட்டு பொடியன் சுட்டி லக்கிலூக் புதுபுக் வந்திருச்சா ? வந்திருச்சா? ஒன்னரை வருசமா கேட்டுக்கிட்டே இருக்கான் சாா்!

      Delete
    2. Mithun Chakravarthi : ஒன்றரை மாதங்களுக்கு முன்பாய் இந்தத் தொடரின் லேட்டஸ்ட் ஆல்பம் வந்திருக்கு சார் ; அதன் ராப்பரை மேலே, பதிவின் இறுதியில் இணைத்துள்ளேன் !

      இதற்கு முன்பான ஆல்பங்கள் ஒற்றைப் பக்க gags களின் தொகுப்புகளாக மட்டுமே இருந்து வந்ததால் அவற்றின் மீது அவ்வளவாய் நாம் ஆர்வம் காட்டிடவில்லை ! இப்போது வந்திருப்பது முழுநீளக் கதையே என்பதால் - கேட்டுள்ளோம் இதன் பக்கங்களை ! மொழிபெயர்த்துப் பார்த்த பின்னே ஓ.கே. என்று தோன்றினால் திட்டமிடுவோம் 2019 க்கு !

      Delete
    3. ஹா ஹா ஹா! கிட்லக்கியின் அந்த அட்டைப்படமே பயங்கர காமெடியா இருக்கு! பின்புறத்தில் அம்பு குத்திய நிலையில் கிட்லக்கியை விரலால் சுரண்டிக் கூப்பிடும் அந்த கரடியின் முகபாவத்தைக் கவனியுங்களேன்! ஹா ஹா ஹா! செம்ம! :))))

      Delete
    4. இந்த ஆல்பத்தில் நம்மாளின் சின்ன வயசு 'டாவு' பற்றியும் கதையோட்டம் உண்டாம் !!

      Delete
    5. அடங்கொக்காமக்கா
      அந்த வயசலயே டாவா
      பார்றா.........

      Delete
    6. /////அடங்கொக்காமக்கா
      அந்த வயசலயே டாவா
      பார்றா....////

      j ji... அதைவிடவும் இக்ளியூண்டு வயசிலேயே டாவடிச்சவங்களும் கூட இங்கே உண்டு! ஹிஹி! ;)

      Delete
    7. அஞ்சாப்பு .....ருக்கு ...நெல்லிக்கா......காக்காக்கடி...

      Delete
    8. @ KOK

      என்னாவொரு ஞாபக சக்தி!!!

      உங்களை மாதிரியே ருக்குவுக்கும் ( பேரச் சொல்லும்போதே 'குக்கூ' கூவறாப்ல இல்ல?) ஞாபக சக்தியிருந்தா நல்லா இருக்கும்! ;)

      Delete
    9. ருக்கு - குக்கூ

      அடடா அடடா .. ..!!

      ஆனா குருநாயரே ... இப்போ ருக்கு ரோஜா படத்துல ருக்குமணி ருக்குமணி அக்கம்பக்கம் என்னசத்தம்னு பாடுற பாட்டிக ரேஞ்சுக்கு இருக்குமே .. (உங்க க்ளாஸ்மேட் அப்படிங்கறச்சே ..) ;-)

      Delete
  50. ஸ்பைடரோட விண்வெளிப்பிசாசு , கொலைப்படை பிரம்மாண்டமாய் வரும்நாாளை எதிர் பார்த்து...

    ReplyDelete
  51. எடிட்டர் சாரே....
    இப்ப சாயங்காலமயிடிச்சி.....
    4.30 லிருந்து 6 , ராகு காலம்

    அதனால கிளிப்டன போட்டு உடைங்க....

    ReplyDelete
  52. பிப்ரவரி இதழ்கள்?

    ReplyDelete
  53. @ ALL : மீசைக்காரக் கர்னல் கேப்ஷன் போட்டியில் சான்ஸே இல்லாது பரிசை தட்டிச் செல்வது நண்பர் வித்யா தான் !! கீழ்கண்ட நாலுக்குள் எதை வேண்டுமானாலும் வெற்றி பெற்ற caption ஆக எடுத்துக் கொள்வோமே :

    ----------------------------------------------------------------------------------
    M. Vidya10 January 2018 at 21:47:00 GMT+5:30
    கேப்சன்1:
    A.(நாம வச்ச ஆளு இவள கண்டிப்பா காலி பண்ணிருவான்...ஹையா...)

    B.(நாம வச்ச ஆளு இவன கண்டிப்பா காலி பண்ணிருவான்...ஹையா....)


    கேப்சன்2:-
    A.நம்ம மேரேஜ் முடிஞ்சத கொண்டாட என்ன பிலிம்க்கு போகலாம் டார்லிங்...

    B."என்னை நோக்கி பாயும் தோட்டா!"


    கேப்சன்3:
    A.போட்டோ ஷீட்னு தானே சொன்னானுங்க...ஒருவேள நாமதான் தப்பா புரிஞ்சுகிட்டமோ?

    B.ஆமா..மா..ம்..


    கேப்சன்4:-
    B.உங்களதான் சுட எய்ம் பண்றாங்க டியர்...

    A.மூளை கெட்டவனுங்க...தற்கொலையை கொலையா மாத்தி என்னத்த சாதிக்க போறானுங்களோ..
    ------------------------------------------------------------------------------

    Congrats !! LMS குண்டு புக் பரிசு உங்களுக்கே நண்பரே !!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் வைத்யா!!பட்டையைக் கிளப்பிவிட்டீர்கள்! குறிப்பாக அந்தக் கடைசி கேப்ஷன் - செம்ம! :))))

      நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு! தொடர்ந்து கலக்குங்கள்!!

      Delete
    2. ///B.உங்களதான் சுட எய்ம் பண்றாங்க டியர்...

      A.மூளை கெட்டவனுங்க...தற்கொலையை கொலையா மாத்தி என்னத்த சாதிக்க போறானுங்களோ..///

      ஹாஹாஹா!!!

      வாழ்த்துகள் சார். 👏👏👏

      Delete
    3. வாழ்த்துக்கள் பாஸ்!
      கடைசி caption சான்சே இல்ல! கலக்கிடீங்க போங்க :-)

      Delete
  54. அச்சச்சோ... டிராகன் நகரம் புக் முடிந்து விட்டதா? நான் இன்னும் வாங்கலியே.. நிஜங்கள் நிசப்தமும் முடிஞ்சு போச்சா அதுக்குள்ளேயா !!!???!!!
    போச்சு ரெண்டும் எனக்கு இன்னும் கிடைக்கலே..

    XIII இன்னும் புக் பண்ணவில்லை. இது கடைகளிலும் கிடைக்குமா அல்லது சந்தாதார்களுக்கு மட்டும் தானா? தயவு செய்து யாரவது சொல்லவும்.

    என்னோட தல ஸ்பைடரின் "விசித்திரச் சவால்" பட்டைய கிளப்பியதில் சந்தோசம் தான் என்றாலும் அந்த சிறிய சைஸ் படிப்பதிற்கு கஷ்டமாக இருந்தது உண்மை. ரெகுலர் சைஸ் தான் பெஸ்ட்.

    புது கதைகள்:
    1 சிக் பில் கிளாசிக் - அட்டகாசம்.. இந்த ரெண்டு கதைகளும் நான் முதல் முறையாக படிக்கிறேன். விண்ணில் ஒரு எலி அட்டகாசம். 3 கதைகளும் அட்டகாசம்

    பழைய கதைகள்:

    1 சாகச வீரன் பிரின்ஸ் - இரண்டு சிறு கதைகளின் தொகுப்பு. இந்த கதைகளை லயன் 32 ஆண்டு மலரில் மறுபதிப்பு செய்யப்பட்டது.

    2 விசித்திர போட்டி - ரிப்போர்ட்டர் ஜானியின் துப்பறியும் கதை. 5 விளையாட்டு வீரர்களை கண்டு பிடிக்கும் வேலை கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆளையும் நெருங்குமுன் அவர்கள் மாயமாக மறைந்து விடுகிறார்கள். இதற்கு யார் சூத்ரதாரி என்று கண்டு பிடிப்பதே கதை.

    ReplyDelete
  55. என்னுடைய கருத்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்..ரதப்படலாம் கலர் எடிஷனுடன் 13 புலன்விசாரணை book இணைப்பாக வரும் என்று பதிவில் படித்ததாக ஞாபகம்.

    ReplyDelete
    Replies
    1. Padmanaban Ramadurai : இல்லை சார் ; இறுதி செய்யப்பட இரத்தப் படல விளம்பரங்கள் சகலத்தையும் பாருங்களேன் - "புலனாய்வு" பற்றி எவ்விதக் குறிப்பும் இராது ! ஆறு பாகங்கள் வீதம் 3 ஆல்பங்கள் என்றே இருக்கும் !

      Delete
  56. @ ALL : நண்பர்களே, ஏனென்று தெரியவில்லை ; ஆனால் உங்களது பல பின்னூட்டங்கள் SPAM -ல் கிடக்கின்றன !! இப்போது தான் கவனித்தேன் !! Settings களை துளியும் நோண்டாதுமே இது எவ்விதமென்று புரியவில்லை !!

    So உங்கள் பின்னூட்டங்கள் பிரசுரமாகாது போயின் - எனக்கொரு மெயிலைத் தட்டி விடுங்களேன் ப்ளீஸ் ! இந்தக் குளறுபடியைச் சரி செய்ய நானும் முயற்சிக்கிறேன் !

    SPAM-ல் கிடந்த சில பல பின்னூட்டங்கள் :

    Raghavan :
    அதாகப்பட்டது .. எடிட்டர் சொன்னது போல புத்தக கண்காட்சியில் 1. Tex 2. நால்வரணி - அதிலும் மாயாவி மாமா தான் முதலில் - ஸ்பைடர் காருவுக்கும் மவுசு அதிகம் - இன்னொரு பக்கம் லக்கி லுக் விற்கிறது. மாக்ஸிமம் சேல்ஸ் என்றால் இவைதான். மற்றதெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றும் தான். அடுத்தாண்டு முதல் சந்தா A மற்றும் C யை லிமிடெட் எடிஷன் ஆக்கிவிட்டு B மற்றும் D அதிக எண்ணிக்கை கொண்டுதான் கண்காட்சியை எதிர்நோக்குதல் நலம். நுழையும் போதே இரும்புக்கை மாயாவி இருக்கா என்று கேட்டு அத்தனையும் அள்ளிக்கொள்பவர் அதிகம். ஒரு பக்கம் tex அடுக்கடுக்காக அள்ளிச்செல்வோர் உண்டு. மற்ற நாயகர்கள் மிதமோ மீதம். இன்று ஓரிருமணி நேரங்கள் நண்பர்களை சந்திக்க முடிந்தது மகிழ்வு! ஆங் .. அப்புறம் சாந்த ஒசத்த இன்னொரு வழி : ஒரு வருட சந்தா காட்டினால் நமது புதிய கலரிங் புக் இலவசமா குடுக்கலாம் .. சூப்பர்லே ?! (ஹி ஹி .. அதாங்க நிஜங்களின் நிசப்தம் ;-) )

    ----------------------------------------------------------------------------------
    Prabhu :
    நான் போன வருடம், கோடிசியாவில் நடந்த கோவை புத்தக விழாவிற்கு வந்து இருந்தேன், ஆனால் விஜயன் சார் வரவில்லை. லயனின் come back அப்புறம் நான் புத்தகம் பிரசுரித்த மாதமே படித்த முதல் கதை விசித்திர சவால் தான். ஏக் தம்மில் படித்து முடித்தேன். இந்த கதை நான் படிப்பது இது தான் முதல் முறை. அட்டகாசமான வழக்கமான ஸ்பைடர் கதை. எனக்கு பிடிக்காதது அந்த பாக்கெட் சைஸ். தயவு செய்து வழக்கமாக வெளியிடும் பெரிய சைஸிலேயே வெளியிடுங்கள். இது படிக்க கஷ்டமாக இருந்தது. சித்திரங்கள் நன்றாக இருந்தும், சிறியதாக இருந்ததினால், ரசிக்க முடியவில்லை. புதியது: 1 விசித்திர சவால் - ஸ்பைடரின் அட்டகாசமான சாகசம் 2 கடல் குதிரையின் முத்திரை - பழைய கதை, அதே டெக்ஸ் டெம்ப்ளட். சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. பழையது: 1 ஒரு நாணய போராட்டம் - ஸ்க்ரூஜின் டக் மற்றும் டொனால்ட் டக் பட்டாளம் ஒரு அதிர்ஷ்ட நாணயத்தை மேஜிக்கா சூன்யக்காரியிடமிருந்து காப்பாற்ற போராடும் கதை. மிகவும் ரசித்தேன். இது கூடவே, பரட்டை தலை ராஜா, குண்டன் பில்லி, விச்சு கிச்சு, ஜோக்கர் மற்றும் பல கதைகள் 2 பயங்கர பலம் - அண்ணாத்தே லக்கி லூக்கின் கதை. ஒரு மரம் வெட்டும் ஆள்
    ----------------------------------------------------------------------------------
    அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் : நேற்று புத்தகக் காட்சியில் நமது ஸ்டாலில் மிகக் குறைந்த நேரமே செலவிட முடிந்தது. நாட்கணக்கில் செலவிட்ட நண்பர்களின் அர்ப்பணிப்பு மகத்தானது. நேற்றைய நிகழ்வில் ஆசிரிருடன், இராதகிருஷ்ணன் அண்ணாச்சி, ஈரோடு விஜய், மாயாவி ஆகியோரை சந்தித்ததில் மகிழ்ச்சி!

    ----------------------------------------------------------------------------------

    diabolik akkil : Ratings of this month 1)தோர்கல் 10/10 super ☺ 1)டெக்ஸ் 9/10 fantasti��3)சிரிப்பு பட்டாளம்8.5 good not super good�� 4)ஸ்பைடர் 10/10 best entertainer superb dynamic ரெப்ரின்ட்
    ----------------------------------------------------------------------------------

    ReplyDelete
    Replies
    1. இன்னமும் கூட - SPAM -லிருந்து :

      தோர்கல் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.... படைப்பின் அசாத்தியமான உயரம் என்று கூட இதை கூறலாம். இந்த மாத புத்தகங்களில் முதலில் படிக்க எடுத்தது தோர்கலையே... தினமும் இரவு கொஞ்சம் கொஞ்சமாக படிக்கலாம் என நினைத்து ஆரம்பித்தது ... இரண்டு நாட்களில் முழுவதும் படித்து முடித்து விட்டே கீழே வைத்தேன் ... தோர்கல் – வந்த புதிதில் பிடிக்காது என்பது ஆச்சரியமில்லை, இப்பொழுது பிடிக்கவில்லை என யாரவது கூறினால்தான் ஆச்சரியம் இதை போலவே அனைத்து வருடங்களும் நான்கு அல்லது ஐந்து பாகங்கள் கொண்ட (குண்டு) புத்தகமாக தோர்கல் வெளி வர வேண்டும் என்பது எனது ஆசை. திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்
      ----------------------------------------------------------------------------------

      rajasimman soma : என்ன சொல்ல ..?எப்படி புரிந்து கொள்வது.?இது வரை காணாத ஒரு அற்புத சித்திரக் குவியல் ..கதை? டமால் டுமீலை எதிர்பார்த்தாலோ,காமெடியை எதிர்பார்த்தாலோ,ஹாரர் போன்ற அமானுஷ்யங்களை எதிர்பார்த்தாலோ நிச்சயம் ஏமாற்றம்தான் .முழுக்க முழுக்க மனித உணர்வுகள்.. கூட இருப்பவர்களை பலி கொடுத்தேனும் தான் மட்டும் வாழ வேண்டும் என்கிற சூழ்நிலை அந்த சூழ்நிலைக்கு தள்ளப் படுவதுமே மனிதர்களாலேதான் யுத்தம் என்ற பெயரில்..பிறவியில் இருந்தே துரதிர்ஷ்டம் தொடந்து வரும் ப்ரொடெக் ..இயற்கையின் காதலன் யுத்தக்கைதிகளின் முகாமில் நாயோடு நாயாக சித்திரவதை பட்டு சொந்த கிராமத்திற்கு திரும்பிய பிறகும் சோதனைகள் ஏமாற்றங்கள்..பிற பெண்களைக் காப்பாற்ற முனைந்து தானும் அவலத்திற்கு ஆளாகி அதனால் வாய் பேசாது பாடல் ஒன்றேதுணையென வாழும் அவன் .அன்பு மனைவி.சேற்றில் முளைத்த செந்தாமரையாக குழந்தை.வயதானாலும் அன்பு குறையாத பாட்டி அனாமதேய ஆன்டெரர் பயமும் அவ நம்பிக்கையுமாய் கிராமத்துஜனங்கள் இயற்கையின் பேரழகு நிஜங்களின்நிசப்தம் நெடுநாட்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும் !
      ---------------------------------------------------------------------------

      Delete
    2. அடடா!! இம்புட்டு அழகான பின்னூட்டங்களை SPAMல் போட்டு வைக்க அந்த கூகுளுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ!!

      Delete
  57. மதிப்பிட்ட ஆசிரியருக்கும் மதிப்பு தந்த நண்பர்களுக்கும் நன்றிகள்....

    ReplyDelete
  58. ///நிஜங்களின் நிசப்தம்" சென்னை விற்பனையில் உச்சங்களோடு போட்டி போடும் இதழ் மட்டுமல்ல ; வெளியான அதே மாதத்திற்குள் விற்றுத் தீர்ந்த முதல் இதழும் கூட !!! Oh yes - ஜனவரி 1-ல் ரிலீஸ் ஆன இந்த இதழ் ஜனவரி 22-ல் காலி !! ///

    நல்ல தகவல் ..!
    குறைந்த எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டு இருந்தாலுமேகூட., 22 நாட்களில் காலியானது மெய்யாலுமே சர்ப்ரைஸ்தான். . கிநா ஹேப்பி அண்ணாச்சி ..! ;)

    ReplyDelete
  59. @ திரு விஜயன்

    சங்கடமான கேள்வியை முன்வைப்பதற்கு முன்கூட்டிய மன்னிப்புகள்..!(இதை கேட்க மொத்த பசங்களும் பம்முறாங்க,வேதாளரை நெஞ்சில் சுமக்கும் நான் பம்மமுடியுமா.!)

    சரியாக ஒரு வருடம் முன்பு...

    ஐனவரி 22, 2017 அன்று...

    18...6..3..1...XIII.!

    அப்படிங்கிற பதிவுல நீங்களாவே (கவனிக்க நீங்களாகவே) கொடுத்த ஒரு வாக்கு என்னோட SPAM-ல் கிடக்கின்றன ஸார்.

    அது....

    /////
    Of course - முன்பதிவில் "600 " எனும் அந்த மந்திர இலக்கை எட்டிப் பிடித்தலும் இந்த முயற்சியின் முதுகெலும்பே என்பதை மறந்திடலாகாது !! நூறு, இருநூற்று என்ற எண்ணிக்கையிலேயே முன்பதிவுகள் தடுமாற்றம் காணில் - நிச்சயமாய் எல்லா மகாசிந்தனைகளுமே புலிக்கேசி வடிவேலின் கனவுகளாகிப் போய் விடுமென்ற எச்சரிக்கைப் பலகையும் சாலையோரத்தில் திடமாய் நிற்பதை நினைவூட்டுகிறேன்  ! நல்லதே நடக்குமென்ற நம்பிக்கையோடு வலது காலை முன்வைப்போமே ? 

    And மறக்கும் முன்பாக - அந்தப் "புலன்விசாரணைப் பாகம்" - முன்பதிவுகளுக்கொரு பரிசாய் உண்டென்பதையும் சொல்லி விடுகிறேனே ?!Bye all! See you around!
    /////

    இதுக்கு ஏதும் பரிகாரம் உண்டா ஸார்..?????

    பின்னால் சில கோரஸ் வாய்ஸ்:

    1.வரலாறும் வாக்கும் முக்கியம் அல்லவா அமைச்சரே...அவுக்...

    2.என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...

    3.ஆஹா இலக்கை தொட்டதும் முருங்கை மரம் நியாபகம் வரலாமா...???

    4.என்னப்பா இது மறதிக்காரன் கதைக்கு வந்த சோதனை...!?!?!?

    5.செம...செம...பத்த வெச்சிட்டியே பரட்ட...ஹா..ஹா...

    பின் குறிப்பு: மேற்கொண்ட கமெண்ட் தளம் சுறுசுறுப்புக்கு என பாசிட்டிவா எடுத்துகங்க.!

    ReplyDelete
    Replies
    1. மாயாவி அவர்களே...

      இந்தப் பதிவுக்கு பிறகு வேறொரு பதிவில் 'புலன் விசாரணை' பற்றிய நடைமுறைச் சிக்கல்களை காரணம் சொல்லி எடிட்டர் அப்போதே தன் வாக்குறுதியை வாபஸ் வாங்கிக்கொண்ட ஞாபகம் இருக்கிறதே... அதுவும் உங்க SPAMல் எங்காவது கிடக்கிறதான்னு பாருங்களேன்! :)

      Delete
    2. @ இத்தாலியாரே

      வாக்கு தான் எங்கள் செக்‌ஷன்.!
      வாபஸ், மழுப்பல் எல்லாம் உங்கள் செக்‌ஷன்.!ஹீ..ஹீ...

      44 பக்கம் ஒரு சிரமம் என்பதெல்லாம் லயன் காமிக்ஸ் எடிட்டருக்கு ஒரு விஷயமேயல்ல.!

      வாக்கு தவறும் அரசாங்கத்தின் கையில் சிக்கி சின்னபின்னமாகி, காமிக்ஸ் கரையில் ஒதுங்கினால் இங்கியுமாகிறது சரிப்படாதுன்னு உங்க எதிரணி தலைவர்கிட்ட எடுத்து சொல்லுறது தான் அழகு.!

      அம்புட்னுதான் சொல்ல முடியும்.!!

      டிராகன் நகரம் வாக்கு கால்வாசி பேரில் பியூசை பிடிங்கிடிச்சி...XIII-க்கு தொடர்ந்தா...

      ஆண்டாள்,தமிழ்தாய் வாழ்த்துன்னு இப்ப போற டிரெண்ட் பாத்து எதிரணி தலைவர் அடம் பிடிச்சா...

      என்னத்த சொல்ல...

      கமல் சொன்ன வழிதான்!

      Delete
    3. mayavi.siva : உங்கள் பின்னூட்டத்திலேயே உங்கள் கேள்விக்கான பதில் உள்ளது சார் !

      Delete
    4. mayavi.siva : And இன்னொரு விஷயமும் கூட : "புலனாய்வு " 44 பக்கச் சமாச்சாரம் அல்ல சார் ; முழுசாய் 110 பக்கங்கள் கொண்டதொரு ஆக்கம் !!

      இதனை மொழிபெயர்ப்பது மெகா சிரமம் # 1 எனில் - இதற்கென ஆகும் பட்ஜெட் - இடர் # 2 !!

      ஒரு 112 பக்க இதழை இலவச இணைப்பாய் வழங்கும் cushion இங்கு ஏது சார் ?

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. @ திரு விஜயன்

      கடந்த ஈரோடு புத்த திருவிழாவில் நண்பர் ராட்ஜா தங்களுக்கு பரிசாக கொடுத்த the XIII Mystery lnquiry கிற பாதிசித்திரங்கள்+பாதி விரிவுரை கலந்த 47 பக்கத்தில் அடங்கும் அடக்கவிலை 52/-அளவிலான ஒரு கையேடுத்தான் எதிர்ப்பார்கிறார்கள்.

      அந்த புத்தக டிஜிட்டல் பைல் உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன்.நீங்கள் குறிப்பிடுவதும்,நாங்கள் குறிப்பிடுவதும் வேற என்ற விளக்கம் ப்ளிஸ்.!

      Delete
    7. mayavi.siva : தவறான புரிதல் சார் ! ஒரிஜினலான "புலனாய்வு" 110 பக்கங்கள் கொண்டதொரு சமாச்சாரம் ! பின்னாளில் வெளியானது ஒரு commercial edition மாதிரி !!

      Delete
    8. இங்கே சென்று பாருங்களேன் ஒரிஜினலின் சில கோப்புகளை : https://imgur.com/a/mLOF2

      Delete
    9. mayavi.siva : "முன்பதிவு இலக்கைத் தொட்ட பிற்பாடு பேச்சு மாறுகிறேன்" என்பதான குற்றச்சாட்டினை வாசிக்கும் போது சங்கடம் மட்டுமே மேலோங்குகிறது ! "இரத்தப் படலம்" இறுதி செய்யப்பட்டு - சகலமும் அறிவிக்கப்பட்ட பதிவையும், அதைத் தொடர்ந்து நாம் செய்து வரும் விளம்பரங்களையும் படித்த பின்னேயும் சிக்கல் உங்களது புரிதலிலா ? அல்லது என்னிடமா ? என்று தீர்மானிக்கலாமே ப்ளீஸ் ?

      அப்புறம் நீங்கள் அனுப்பியுள்ள கோப்புகளை ஒருமுறை பொறுமையைத் திறந்து பார்த்திடலாமே - அதனில் இருப்பதுமே 99 பக்கங்கள் !! And இது தான் ஒரிஜினல் "புலனாய்வு" இதழும் கூட ; Scan செய்துள்ள போது படங்கள் உள்ள ரெட்டைப் பக்கங்களை ஒற்றையாக்கி compress செய்துள்ளதால் 99 பக்கங்கள் என்று காட்டுகிறது உங்களுக்கு ! ஒரிஜினலாக இதனை வெளியிடும் பட்சம் இதன் நீளம் 110 பக்கங்களாகவே வரும் !

      Delete
    10. ///பின் குறிப்பு: மேற்கொண்ட கமெண்ட் தளம் சுறுசுறுப்புக்கு என பாசிட்டிவா எடுத்துகங்க.!///

      ஞாபகப் படுத்தினேன் அவ்ளோதான்!

      Delete
    11. mayavi.siva :
      -------------------------------------------------------------------------
      https://lion-muthucomics.blogspot.in/2017/08/

      //கனவுகளுக்கொரு ரம்யமான பழக்கம் உண்டு - ஒன்று நிறைவேறியான பின்னே அதனைத் தொடர்வதோ, ஒரு படி மெகா சைசில் இருப்பது வாடிக்கை என்ற விதத்தில் ! And அது மீண்டுமொருமுறை நிஜமாகியுள்ளது - "இரத்தப் படலம்" ஒரு முழுவண்ணத் தொகுப்பு என்ற ரூபத்தில் ! சிலபல ஆண்டுகளாகவே இந்தக் கோரிக்கையினை நண்பர்கள் முன்வைத்து வருவதும், "பார்ப்போமே !" என்று நான்தட்டிக் கழித்து வந்ததிலும் இரகசியமேது ? இம்முறை அதற்கான தருணம் மெய்யாகவே புலர்ந்திருப்பதாய் நினைக்கத் தோன்றுகிறது - நண்பர்களின் வேகத்தைப் பார்க்கும் பொழுது ! And so - இதோ அதற்கான முறையான அறிவிப்பு !

      வெறும் 800 பிரதிகளே விற்பனை இலக்கென்ற நிர்ணயத்தோடு 848 முழுவண்ணப் பக்கங்களோடு - 3 தொகுப்புகள் இணைந்ததொரு பிரத்யேக slipcase-ல் இதனைத் திட்டமிட்டுள்ளோம் !

      ஒற்றை இதழாய் - இரண்டேகால் கிலோ எடையோடு இந்த இதழைத் தயாரிப்பதில் ஒரு பிரம்மாண்டம் நிச்சயம் இருக்கும் தான் ; ஆனால் தயாரிப்பில் ; சேகரிப்பில் ; வாசிப்பில் ஏகமாய் நடைமுறை சிக்கல்கள் கொண்ட அந்த முயற்சியை விடவும், இந்த 3 தொகுப்பென்ற பாணி நிரம்ப சுலபமென்பதில் சந்தேகங்கள் கிடையாது !

      இந்தத் தொகுப்பின் விலை ரூ.2200 ; slipcase ; கூரியர் / ஏர்மெயில் கட்டணங்கள் தனி !

      இது முன்பதிவின் விலை மாத்திரமே ; கடைகளில் / புத்தக விழாக்களில் வாங்கிடுவதாக இருப்பின், விலை கூடுதலாய் இருக்கும் !

      தற்சமயம் ரூ.1200 முன்பதிவுக்கென அனுப்பினால் போதுமானது. பாக்கித் தொகையினை 31/01/2018-க்கு முன்பாய் அனுப்பிடல் வேண்டும்.

      குறைந்த பட்சம் 400 முன்பதிவுகள் அத்தியாவசியம் - இந்த முயற்சி நனவாகிட ! So நமது நண்பர் XIII-ன் விதியை தமிழில் நிர்ணயிக்கப் போகும் பொறுப்பு உங்களிடமே இனி !

      ஜனவரிக்குள் முன்பதிவுகள் ; அடுத்த ஈரோட்டு விழாவினில் இதழ் ரிலீஸ் என்பதே இலட்சியம் ! Maybe ; just maybe - 'தட தடவென' முன்பதிவுகள் கிட்டிடும் பட்சத்தில் ஏப்ரல் 2018-ல் இதனை அழகு பார்க்கும் சாத்தியங்களும் இருக்கலாம் !

      பாகங்கள் 1 - 18 அதே ஒரிஜினல் மொழிபெயர்ப்போடு வெளிவந்திடும் ! Proofreading பணியினில் நமக்கு ஒரு கூட்டு முயற்சி ரொம்பவே அவசியம் என்பதால் - இதற்கு உதவிட உங்களை பெரிதும் எதிர்பார்த்திருப்போம் guys !!

      "இரத்தக் கோட்டை" பாணியிலேயே - ஓவியர் வான்சின் ஒரிஜினல் அட்டைப்பட டிசைன்கள் மட்டுமே 3 ஆல்பங்களுக்குமே அட்டைப்படங்களாக அமைக்கப்படும்.

      Plus - XIII சார்ந்த செய்திகள் தவிர்த்து இங்கே வேறெந்த விஷயங்களுக்கும் இடமிராது ! Will be a total dedication to XIII !

      முன்பதிவு செய்திடும் முதல் 200 நண்பர்களுக்கு "Codename மின்னல்" என்றதொரு பேட்ஜ் + wristband உண்டு !

      நண்பர்களின் உதவியோடு இந்த முயற்சிக்கென ஒரு பிரத்யேக FB பக்கமொன்றை உருவாக்கிட எண்ணியுள்ளேன் ! ரெகுலராக XIII சார்ந்த செய்திகள் ; நினைவுகள் ; என இதனில் சுவாரஸ்யத்தைத் தொடர முனைவோம் !

      நாளைய தினமே ஆன்லைன் லிஸ்டிங்கும் செய்து விடுவோம் என்பதால் புக்கிங்கள் சுலபமாகிடக் கூடும் ! //
      ----------------------------------------------------------------------

      இது தானே இறுதியாய் நாம் செய்த அறிவிப்பு ?!

      அந்த பிரத்யேக FACEBOOK பக்கமொன்றை நிறுவுவதாக வாக்குத் தந்ததைத் தவிர்த்து வேறு எதனில் நான் பேச்சு மாறுவதாய்த் தோன்றுகிறது நண்பரே ? வாக்கு கொடுத்திருப்பின், என் சொட்டைத் தலையை அடகு வைத்தாவது அதனை நிறைவேற்றிடுவேனே !!

      Delete
    12. சாா்,
      உங்கள் நிலையை விளக்கினால் ஏற்றுக் கொள்ள பெரும்பாலானோா் தயாராகவே இருக்கிறோம்!

      எங்களுக்கு சாப்பாடே போதுமானது!
      ஜிகா்தண்டா தூத் எல்லாம் தேவையில்லை!

      சும்மா கேட்டுப் பாப்போம்னு கேட்டோம் இல்லைனா விட்ருவோம் சாா்!

      என்னைப் பொருத்தவரை இப்பதினெட்டு பாக கதையே அசாத்திய சாதனை தான் என்பேன்!

      ஒருபக்க லெட்டரை மொழி மாற்றம் செய்யவே தகிடு தத்தம் போடவேண்டியுள்ளதை நினைக்கும் போது உங்களது பணியின் சுமையை நான் பலமுறை உணா்ந்துள்ளேன்!

      போகிறபோக்கில் படித்து சொல்வது வேறு! மொழிமாற்றம் என்பது வேறு என்பதை அனைவரும் உணா்ந்தே இருப்பாா்கள்!

      Delete
    13. //.ஆஹா இலக்கை தொட்டதும் முருங்கை மரம் நியாபகம் வரலாமா...???//

      Phew.... !!

      Delete
    14. மியா.....வ்!

      பூனை ஏந்திருச்சிருச்சு!

      எல்லாரும் ஓடுங்க......!
      சாாி தூங்குங்......க!

      Delete
    15. வயதில் மூத்த கருணையானந்தம் அவர்களிடம் பரீட்சை பேப்பர் போன்ற இந்தப் பக்கங்களை ஒப்படைத்து எழுதச் சொல்வதென்பது அவரைச் சங்கடப்படுத்துவது போலாகும் என்பதால் நானே இதனுள் புகுந்திடல் அவசியமாகிடும் ! வேறு யாரிடமாவது பணியை ஒப்படைத்து விட்டு, ஏனோ -தானோவென்று மொழிமாற்றம் செய்து வைத்து, அதன் பொருட்டு வருத்தங்களை சம்பாதிக்க நேரிட்டால் அந்நேரம் விழும் குட்டுக்கள் இதைவிடவும் ஜாஸ்தியாக இருக்குமென்பதும் புரியாதில்லை !

      So திருப்தியாக இதழின் பிரதானப் பணிகளைப் பூர்த்தி செய்து முடிக்கும் வரையிலுமாவது கவனத்தைச் சிதற விடவேண்டாமே என்ற முன்ஜாக்கிரதையில் பிழையென்னவென்று புரியவில்லையே ?!

      Delete
    16. ////பரீட்சை பேப்பர் போன்ற இந்தப் பக்கங்களை ஒப்படைத்து எழுதச் சொல்வதென்பது////

      வேண்டாங்க சாா்!

      ////திருப்தியாக இதழின் பிரதானப் பணிகளைப் பூர்த்தி செய்து முடிக்கும் வரையிலுமாவது கவனத்தைச் சிதற விடவேண்டாமே////

      சூப்பா்ங்க சாா்!!

      Delete
    17. மாயாவியாரே...நிச்சயமாக ஆசிரியர் மேல் நீங்கள் கொண்ட அன்பை அனைவரும் அறிவோம் . உங்ககிட்ட நண்பர்கள் கேட்க வாய்ப்பிருந்தும் , பரரவால்லை என விட்டு விட்ட கேள்விகள்தான் . முுதலில் யாரயாவது திருப்திபடுத்த ...இிங்க பார் நான் பாராட்டவும் , செய்வேன் ....அவசியம்னா குட்டவும் செய்வேன்கிற ஹீரரோஃபோபியா . அதற்்கு சில நண்பர்கள் நம்மிடம் கேட்கும் சில கேள்விகள் வினையூக்கிகள் . ஆசிரியர் வாக்கு தந்தது விலையை குறிப்பிடாமல் . அன்றய கால கட்டத்தில் . நிச்சயமாக ஆசிரியர் விிலையை மேலும் உயர்த்த விரும்பாததாலேதான் அந்த கட் . அந்த காலத்ல gstஇல்லயோ என்னவோ ! அப்புறம் நிச்சயமா ஆசிரியர் மொழி பெயர்க்க நேரம் இருக்கலாம்தான்...ஆனா அதே மாதமே டெக்சு 700ங்ற கூடுதல் பளு . இந்த டெக்ச அடுத்த வருடம் விடலாமேன்னு கேக்க ஆசைதான் எனக்கும் . ஆனா வெகு ஜனம் பின்னிருவாங்களே . ஆனா ஆசிரியர் புலன் விசாரனய தலய அடமானம் வச்சாவது வெளிவிடுவது அ்வசியம் அதே இதழுடன் விலை கூட்டியோ...தனியாயோ அதே நேரத்தில்...போட்டோதான் கல்யாண நேரத்தில் ஆன குளருபடின்னு அதவிட சிறப்்பா தந்தாரே . உங்க ஆசப்படியே சமாளிஃபிகேசன் ...அறுநூறு முன்பதிவதான் சுருக்கி நானாறாக்கிட்டாரே...சுருங்கியது புத்தக எண்ணிிக்கை மட்டுமல்ல நண்பரே , காணாமல் போன புலன்விிசாரணையும்தான்் . விலையை இறுதி செய்தபின் ஆசிரியர் பேச்சு மாறலை அல்லவா...☺

      Delete
    18. Dear Editor/Mayavi, this is just my suggestion regarding XIII.
      1. No doubt இந்த புத்தகம் ஒரு பெரிய ஹிட். தயவுசெய்து இந்த 3 புத்தகங்களுடன் 'புலன் விசாரணை' புத்தகத்தையும் சேர்த்தே வெளியிடலாம்.
      2. இதற்காக கூடுதல் பணம் அனுப்பவேண்டியிருந்தாலும் அதை கொடுப்பதற்கு நாங்கள் தயார். இலவசம் என்ற பேச்சிற்கே இடமில்லை.
      3. மேலும் கண்டிப்பாக இந்த 'புலன் விசாரணை' புத்தகத்தை யாரும் தனியாக வாங்கப்போவதில்லை. எனவே SLIP CASE உள்ளேயே இந்த 'புலன் விசாரணை' புத்தகத்தையும் வைக்குமாறு செய்துவிட்டால் நன்றாக இருக்கும்.
      4. எடிட்டர் சொல்வதுபோல் EBFல் TEX 70ம் வரவுள்ளதால் XIII வேலைப்பளு அதிகமாக இருக்கும். எனவே EBFல் TEX 70 மட்டும் வெளியிட்டுவிட்டு, XIII collector edition + புலன் விசாரணை with SLIP CASE என்பதை 'தீபாவளி' வெளியீடாக வைக்கலாம் (இதற்கு நண்பர்களின் ஆதரவும் தேவை).

      Delete
    19. XIII collector editionற்காக இத்தனை வருடம் காத்திருந்து விட்டாயிற்று. புலன் விசாரணைக்கு சில மாதங்கள் காத்திருக்கவும் தயார்.

      Kindly request Editor to look into our wish.

      Delete
    20. //அப்புறம் நீங்கள் அனுப்பியுள்ள கோப்புகளை ஒருமுறை பொறுமையைத் திறந்து பார்த்திடலாமே - அதனில் இருப்பதுமே 99 பக்கங்கள் !! And இது தான் ஒரிஜினல் "புலனாய்வு" இதழும் கூட ; Scan செய்துள்ள போது படங்கள் உள்ள ரெட்டைப் பக்கங்களை ஒற்றையாக்கி compress செய்துள்ளதால் 99 பக்கங்கள் என்று காட்டுகிறது உங்களுக்கு ! ஒரிஜினலாக இதனை வெளியிடும் பட்சம் இதன் நீளம் 110 பக்கங்களாகவே வரும் !// விளக்கத்துக்கு நன்றி சார். நண்பர்களின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டைப் பார்த்ததும் குழப்பம்தான் ஏற்பட்டது. ஆனால், பொறுமையாக ஆசிரியர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம் என்று காத்திருந்தேன். 'கலகம் நன்மையும் தரும்!' 'பல விடயங்கள்' புரிந்தன இங்கே!!!

      Delete
    21. Podiyan : //நண்பர்களின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டைப் பார்த்ததும் குழப்பம்தான் ஏற்பட்டது. ஆனால், பொறுமையாக ஆசிரியர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம் என்று காத்திருந்தேன். //

      பொறுமைக்கு நன்றிகள் சார் !

      Delete
    22. Senthil Vinayagam : //இதற்காக கூடுதல் பணம் அனுப்பவேண்டியிருந்தாலும் அதை கொடுப்பதற்கு நாங்கள் தயார். இலவசம் என்ற பேச்சிற்கே இடமில்லை. //

      Nopes...நடைமுறையில் இதனில் உள்ள சிக்கல்கள் ஒரு நூறு சார்...!

      'மேற்கொண்டு ரூ.150 ஐ..அனுப்புங்கள்..ரூ.200 -ஐ அனுப்புங்கள்' என்று 400 + வாசகர்களுக்கும் தகவல் அனுப்பி , அவர்களது இசைவை பெறுவது ; அப்புறமாய் அந்தந்தச் சிறு தொகைகளை track செய்து அவரவர் வரவுகளில் ஏற்றுவது என்பதெல்லாம் பெண்டு கழற்றும் வேலை ! தவிர, "எனக்கு அந்த புக்கே வேண்டாம் !" என்று சொல்வோரும் இருந்திட வாய்ப்புகள் உண்டென்பதால் - அதற்கென ஒரு தனி பட்டியலை ஏற்படுத்திட வேண்டி வரும் . End of the day - இதழ்கள் அனுப்பும் வேளையில் ஏதேனும் சிறு குளறுபடி ஏற்பட்டாலும் கூட நம்மைத் துவைத்துத் தொங்கப் போட்டும் விடுவார்கள் ! So நடைமுறை சாத்தியங்களையும் இங்கே கணக்கிலிட வேண்டும்.

      Delete
    23. Senthil Vinayagam : //EBFல் TEX 70ம் வரவுள்ளதால் XIII வேலைப்பளு அதிகமாக இருக்கும். எனவே EBFல் TEX 70 மட்டும் வெளியிட்டுவிட்டு, XIII collector edition + புலன் விசாரணை with SLIP CASE என்பதை 'தீபாவளி' வெளியீடாக வைக்கலாம்//

      இதற்கு நிச்சயம் பெரியளவிற்கு ஆதரவு இராதென்றே தோன்றுகிறது எனக்கு !

      Delete
    24. @ ALL : இந்த விஷயத்தில் எனது நிலைப்பாட்டை புரிந்திட "புலனாய்வு" கோரும் நண்பர்கள் கொஞ்சமும் பொறுமை காட்டிடவில்லையே என்பதில் தான் வருத்தமே !

      இந்தச் சிக்கலுக்கும் ஒரு சுலப விடையுள்ளது ; அதனை முன்மொழிய எனக்குத் தேவைப்படும் அவகாசத்தை தந்திடும் பொறுமை யாருக்கேனும் இருந்திருப்பின் நிச்சயம் மகிழ்ந்திருப்பேன் !

      Delete
    25. @ திரு விஜயன்

      ///இது தானே இறுதியாய் நாம் செய்த அறிவிப்பு ?!

      அந்த பிரத்யேக FACEBOOK பக்கமொன்றை நிறுவுவதாக வாக்குத் தந்ததைத் தவிர்த்து வேறு எதனில் நான் பேச்சு மாறுவதாய்த் தோன்றுகிறது நண்பரே ? வாக்கு கொடுத்திருப்பின், என் சொட்டைத் தலையை அடகு வைத்தாவது அதனை நிறைவேற்றிடுவேனே !!////

      நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பாருங்கள் என்பது சரியானது அல்ல.XIII என கடந்த வருடம் தாங்கள் பதிவிட்டது இரண்டு. அவற்றில் ஒரு பக்கத்தை மாத்திரமே.அதன் மறுபக்கம் பார்க்க...இங்கே'கிளிக்'

      வலது காலை தயக்கத்துடன் முதலில் எடுத்துவைத்து விட்டு, இடதுகால் ஆழ ஊன்றியதும்....வலதுகால் தயங்கி தயங்கி தானே முன் வந்தது, அது எப்படி முக்கியமாகும் என்பது....சில வாரமாக தொடர்ந்து மீடியாவில் வரும் விவாதத்தில் கூட குறைவே..!

      எட்டு வருடங்கள் முன்பு தாங்கள் செய்த விளம்பரம் பார்க்க...இங்கே'கிளிக்'

      நாணயத்தின் மறுபக்கத்தை படிக்க...இங்கே'கிளிக்'

      ஆத்திர அவசரத்தில் 44 பக்கங்கள் என கூறவில்லை,நீங்கள் எதை மறந்திர்கள் என்பதை பற்றியும்.... இந்த 'புலன் விசாரணை'யின் பின்னணியில் உள்ள அவசரதன்மை என்ன என்பதுபற்றிய விரிவான அலசல் பதிவிட டைம் ப்ளிஸ்...!

      அப்புறம்...

      முறையாக,ஒரு சரியான வேண்டுகோளை முன்வைத்ததற்கு... கலகம்,குற்றசாட்டு என திசை திருப்பும் உங்கள் வரவேற்ப்பு ரசிக்கும்படியாக இல்லை ஸார்.! :(((( உங்கள் தளம்,உங்கள் வசதிக்கு விழும் கமெண்ட்டுகளை வரவேற்று கொள்ளலாம். ஆனால் நீங்கள் சொல்லும் வாக்கு வரிகள் பல நெஞ்சங்களில் கல்வெட்டுகளாக மாறிவிடுகின்றன என்பதே நிதர்சனம்.! "அதற்கு நான் என்ன செய்ய..???" என தாங்கள் கைவிரிக்கும் உரிமை தங்களிடம் இல்லை என்பது மற்றுமொரு நிதர்சனம்.

      அது எப்படி...???

      டைம் ப்ளிஸ்...

      Delete
    26. எனக்குப் புரியவில்லை சார் !

      ஒரு நூறு விவாதங்கள் செய்தோம் என்பதை எல்லோரும் அறிவோம் ; இறுதியில் எடுத்த முடிவென்னவென்றும் எல்லோரும் அறிவோம். அந்த முடிவின் நீட்சியாகவே விளம்பரங்களும் செய்தோம் / முன்பதிவுகளையும் கோரினோம் என்பதிலும் இரகசியமில்லை !இப்போது "பழசை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை?" என்ற கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வதென்று எதிர்பார்கிறீர்களோ - தெரியவில்லையே !

      உரக்க சிந்திப்பது ஒரு நூறு விஷயங்களை ; அவற்றில் செயல் சாத்தியம் கொண்டவை சொற்பமே என்பதில் இரகசியமேது ? "நீ தான் முன்னே சொன்னியே?" என்று ஒவ்வொரு தருணத்திலும் தர்க்கம் செய்வதாயின் நான் ஒவ்வொரு முறையுமே குற்றவாளியாகக் காட்சி தரத் தான் வேண்டி வரும் ; அல்லது வாயைத் திறந்தால் தானே வம்பென்று 'சிவனே' என வாய்க்கொரு பூட்டுப் போட்டுக் கொள்ளத் தான் வேண்டும் !

      விவாதம் செய்யப்பட்ட ஒவ்வொன்றின் அடிப்படையிலும் இன்றைக்கு கோரிக்கை எழுப்புவதாயின் - "ஒரே புக்காகப் போடுவதாகப் பேசிய சமாச்சாரங்கள் என்னாச்சு ?" என்றும் கேட்க நண்பர்களில் ஒரு அணியும் இருக்கக் கூடும் தானே ? அதுவும் கூட ஒரு நீள்விவாதத்தின் தலைப்பாகத் தானே இருந்தது ?

      And "புலன்விசாரணை" 110 பக்கங்கள் கொண்டதொரு ஆக்கம் என்பதை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் ஏனென்று புரியவில்லை எனக்கு ! எட்டுப் பத்து ஆண்டுகளுக்கு முன்பாய் நான் என்ன அறிவித்தேன் என்பது சத்தியமாய் நினைவில்லை ; but அன்றைக்கே ரிவர்ஸ் அடித்தது இந்தப் பணியின் பளு + தன்மையைப் பார்த்த பின்பே என்பது நினைவுள்ளது !

      சவாலாக அல்ல ; சத்தியத்தோடு சொல்கிறேன் : அது மட்டும் வெறும் 42 பக்கத்து இதழாக இருப்பின் : நயா பைசா அதிகமின்றி, "புலன் விசாரணை" இதழினை இலவச இணைப்பாக வழங்கிட நான் தயார் என்று இன்றைக்கே அறிவிக்கிறேன்

      "ஒரு factual statement -ஐ மறுத்துக் காட்டுகிறேன் - அதன் பொருட்டு "டைம் ப்ளீஸ்" என்று இறுதியாய்க் கோருகிறீர்களே சார் ; அதே நொடியினில் ஒரு ஹேஷ்யத்தை நிஜமாக்கிக் காட்டிட / இந்த சிக்கலுக்கு சுலப விடை கண்டிட எனக்கு அவசியப்படுவதும் அதே டைம் தான் என்பதை புரிந்து கொள்ளக் கூடாதா ?

      Delete
  60. ///இந்த லிஸ்டில் இம்முறை லார்கோ தான் surprise package என்பேன் ! ரொம்பவே மித விற்பனை இந்தாண்டு ! And ஏனோ தெரியவில்லை - நமது நீல பொடியர்களுமே இம்முறை விற்பனையில் கோட்டை விட்டுள்ளனர் !! மற்றவர்கள் வழக்கத்தை விட ஒரு மாற்று குறைவாய் இந்தாண்டினில் ! ஒண்ணுமே புரியலே...உலகத்திலே.....!///

    லார்கோ, ஷெல்டன் விற்பனையில் சோபிக்காதது ஆச்சயர்யமே ..!

    ஸ்மர்ஃப்ஸில் பெரும்பான்மையினரின் பிரச்சினை அந்த பொடிபாஷையாக இருக்கக்கூடுமோ?
    பொடிதல் இல்லாமல் நார்மலான பாஷையில் இருந்தால் ஒருவேளை இன்னும் கொஞ்சம் அதிக வாசகர்களை கவர்ந்திருக்கலாமோ என்றொரு சிறு சம்சயம் ..!
    ஆனால், பொடிபாஷை இல்லாத ரெகுலர் மொழிக்கு பியோ ஒத்துக்கொள்வார்களா என்பதும் சந்தேகமே ..??!!

    ReplyDelete
  61. ///அதே கதை தான் கேப்டன் பிரின்ஸ் & ரின்டின் கேன் விஷயத்திலும் !! "மோசமில்லை ; நிச்சயம் மோசமில்லை" என்ற தீர்ப்பு எழுதலாம் ! ///

    தோர்கல்.. நல்லபடி முன்னேறி வருகிறார் ..வருவார்.!
    பெர்னார்டு பிரின்ஸை பொறுத்தவரை மறுபதிப்புகள் மட்டுமே என்பதால் ஓரிரு வருடங்களில் கழுகு கரை ஒதுங்கிவிடும்.;

    ரின்டின்கேன் தப்பிப்பிழைப்பது மகிழ்ச்சியான தகவல் ..!

    And ரிப்போர்ட்டர் ஜானி .., திகிலில் வந்த நிறைய ஜானி க்ளாசிக்ஸ் மறுபதிப்புக்காக காத்திருக்கின்றன.. அத்தோடு புதியபாணியும் வெய்ட்டிங்கில் இருக்கையில் ... ஜானியும் விற்பனையில் ஓகே ரகம் என்று கேள்விப்படும்போது உள்ளம் குதூகலிக்கிறது ..!!

    ReplyDelete
  62. ///அழகான விற்பனையில் இரு மாறுபட்ட நாயகர்களும் இடம்பிடிக்கின்றார் - "ஜேசன் பிரைஸ்" & "மர்ம மனிதன் மார்ட்டின்" ரூபத்தில் ! நானே நேரில் பார்த்தேன் - மார்டினின் கதைகளுக்கொரு niche வாசக அணி இருப்பதை ! And ஜேசன் ப்ரைஸ் மூன்று பாகங்களுமே சுவாரஸ்யமான விற்பனை கண்டது !! அதே போலவே LADY S ஆல்பங்களும் நிறைவாக விற்பனை கண்டுள்ளன ! அந்த மதிமுகம் செய்யும் வேலையோ ?///

    ஜேசன் ப்ரைஸ் மாதிரியான கதைகளை வண்ணத்தில் நிறைய முயற்ச்சிக்கலாம் சார்.!
    ம.ம. மார்ட்டின் ஒரு ஸ்லாட் கூடுதலாக கொடுக்கலாம்தான். .(மாடஸ்டி பெரியமனசு பண்ணி வழிவிட்டா ;;)

    லேடி S ... ஆஹா ..!

    ReplyDelete
    Replies
    1. //ஜேசன் ப்ரைஸ் மாதிரியான கதைகளை வண்ணத்தில் நிறைய முயற்ச்சிக்கலாம் சார்.!//

      சந்தா F & F !

      Delete
  63. /// சிக் பில் & ப்ளூ கோட்ஸ் & சுட்டிப்புயல் பென்னி !! இந்த மூன்று கார்ட்டூன் பிரதிநிதிகளுமே - ஓசையின்றி முத்திரை பதித்துள்ளது புரிகிறது - நம்பர்களை அலசிடும் போது ! அதிலும் பென்னி அடித்துள்ளது சிக்ஸர்கள் மட்டுமே - கொண்டு சென்ற 2 அல்பங்களுமே சுத்தமாய்த் தீர்ந்து போன வகையில் ! And "சிக் பில் ஸ்பெஷல்" - ஸ்பெஷலான கவனத்தை ஈர்த்துள்ளது ///

    ப்ளூகோட்ஸ் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியான சேதி.!
    பென்னி .. வாவ். .. சூப்பர்.!
    சிக்பில் - கிட்ஆர்டின் டாக்புல்லுக்கு ரசிகர்களுக்கா பஞ்சம் .. போடு தகிடதகிட தகிட தகிட தாஆஆஆ ..!!

    ReplyDelete
    Replies
    1. But ஆரஞ்சு மீசைக்காரரும், நீலப் பொடியர்களும் இம்முறை பராக்கு மட்டுமே பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர் !! Sad !!

      Delete
    2. தொடக்கத்தில் இருந்தே ஸ்மர்ஃப்ஸ்க்கு ரசிகர் பட்டாளம் பெரிதாக இருந்ததில்லை என்பதால் விற்பனை சுணக்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது சார்.! ஆனால் க்ளிப்டனும் விற்னையில் பின்னடைவை சந்தித்திருப்பது கவலைய்ளிக்கும் சங்கதியே சார்.!

      Delete
    3. ஸ்டால் சின்னது! புத்தகம் நெறைய! தொிவு செய்யும் வாய்ப்பு பொிதாய் இருக்கும்போது இதெல்லாம் சகஜம் தான்!

      அதுக்காக நாம "Les Schtroumpfs" படிக்கரத நிறுத்த முடியுமா என்ன??

      Delete
    4. கிட் ஆா்ட்டின் கண்ணன் : 3 ஆப்பிள் உயரமே உள்ள நீலப் பொடியா்கள் ஆதாலால் எதாவது டேபிள் சந்துல சிக்கி கண்ணுக்கு தொியாம போயிருக்கலாம்ல!

      Delete
  64. Sir waiting for Kid Lucky!

    ஆயிரம் கதைகள் இருந்தாலும் லக்கிலாக் கதைகளில் கிடைக்கும் மன நிறைவே அலாதியானது!

    விற்பனையில் சக்கைபோடு போட்ட "ஒரு பட்டா போட்டி"யை மீண்டும் படிக்கும்போது படுக்கையை சுற்றி லக்கியின் கதைகளை பரப்பி வைத்து அதன் மேலேயே கிடந்துறங்க வேண்டும் என்ற பால்ய நினைவுகளை தவிா்க்கவே முடிவதில்லை??

    இக்கதையையும், "ஒரு ஜென்டில் மேனின் கதையையும்" குறைந்தது 100 முறைக்கு மேலே படித்திருப்பேன் இப்போதும் அலுக்காத ரசனையை என்னவென்று சொல்வது!

    ReplyDelete
    Replies
    1. // இக்கதையையும், "ஒரு ஜென்டில் மேனின் கதையையும்" குறைந்தது 100 முறைக்கு மேலே படித்திருப்பேன் இப்போதும் அலுக்காத ரசனையை என்னவென்று சொல்வது!//
      உங்கள் லக்கி லூக் காதலுக்கு ஒரு மிகப்பெரிய பூங்கொத்து.

      Delete
  65. கேப்சன் போட்டியில் வெற்றி பெற்ற வித்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...புத்தகத்திருவிழா வெற்றி பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் ..ஸ்மர்ப்ஸ் சில பேருக்குப் பிடிக்காமல் போனதில் ஆச்சர்யமே...குட்டி மனிதர்களின் சுட்டித்தனங்களை ரசிப்பதற்கு ஒரு தனி ரசனை தேவையோ ?பார்ப்போம் அடுத்த தடவை ....சிக்பில் ,லக்கிலூக் வெற்றி எதிர்பார்த்ததே ..மாடஸ்டி ?

    ReplyDelete
  66. Dear Editor/Mayavi, this is just my suggestion regarding XIII.
    1. No doubt இந்த புத்தகம் ஒரு பெரிய ஹிட். தயவுசெய்து இந்த 3 புத்தகங்களுடன் 'புலன் விசாரணை' புத்தகத்தையும் சேர்த்தே வெளியிடலாம்.
    2. இதற்காக கூடுதல் பணம் அனுப்பவேண்டியிருந்தாலும் அதை கொடுப்பதற்கு நாங்கள் தயார். இலவசம் என்ற பேச்சிற்கே இடமில்லை.
    3. மேலும் கண்டிப்பாக இந்த 'புலன் விசாரணை' புத்தகத்தை யாரும் தனியாக வாங்கப்போவதில்லை. எனவே SLIP CASE உள்ளேயே இந்த 'புலன் விசாரணை' புத்தகத்தையும் வைக்குமாறு செய்துவிட்டால் நன்றாக இருக்கும்.
    4. எடிட்டர் சொல்வதுபோல் EBFல் TEX 70ம் வரவுள்ளதால் XIII வேலைப்பளு அதிகமாக இருக்கும். எனவே EBFல் TEX 70 மட்டும் வெளியிட்டுவிட்டு, XIII collector edition + புலன் விசாரணை with SLIP CASE என்பதை 'தீபாவளி' வெளியீடாக வைக்கலாம் (இதற்கு நண்பர்களின் ஆதரவும் தேவை).
    5. XIII collector editionற்காக இத்தனை வருடம் காத்திருந்து விட்டாயிற்று. புலன் விசாரணைக்கு சில மாதங்கள் காத்திருக்கவும் தயார்.

    Kindly request Editor to look into our wish.

    ReplyDelete
    Replies
    1. @ ALL : இந்த விஷயத்தில் எனது நிலைப்பாட்டை புரிந்திட "புலனாய்வு" கோரும் நண்பர்கள் கொஞ்சமும் பொறுமை காட்டிடவில்லையே என்பதில் தான் வருத்தமே!

      இந்தச் சிக்கலுக்கும் ஒரு சுலப விடையுள்ளது ; அதனை முன்மொழிய எனக்குத் தேவைப்படும் அவகாசத்தை தந்திடும் பொறுமை யாருக்கேனும் இருந்திருப்பின் நிச்சயம் மகிழ்ந்திருப்பேன் !

      Delete
    2. Dear Editor,

      XIII collector edition + SLIP CASEல் புலன் விசாரணையும் இருந்தால் தான் அழகு & சிறப்பு. எனக்குத்தெரிந்து சில மாதங்கள் காத்திருக்க நமது நண்பர்கள் தயார். கூடுதல் பணம் செலுத்தவும் நமது நண்பர்கள் தயார்.

      மேலும் இந்த சிக்கலுக்கான சுலப விடைக்கு காத்திருக்கவும் நண்பர்கள் தயார்.

      வேலைப்பளுவினால் தாமதமாக வந்தாலும், தயவுசெய்து XIII collector edition + புலன் விசாரணை with SLIP CASE என்று வெளியிடவும்.

      Thanks in advance - Senthil.

      Delete
  67. ஓ...ரெண்டு மூணு பதிவா கமெண்ட் எல்லாம் இங்கே வராம பக்கத்து வீட்டுல போய் ஒழிஞ்சுட்டு இருந்துருக்கு ..அதான் இந்த பய லோடுமோரை பாக்க முடியலை போல...:-)

    ஆனா நாகுஜீ ஒரு மாசத்துக்கு முன்னாடியே என் கமெண்ட காணாம போகது .,காணமாபோகுதுன்னு புலம்பிட்டு இருந்தாரு...:-)

    ReplyDelete
  68. இப்பொழுது இரத்தபடலம் முன்பதிவு வெற்றி அடையும் நேரத்தில் சிலபல யோசனைகள்...வாக்குறுதிகள் ..,உண்மைகள் ,என கலந்து கட்டி வரும் நேரத்தில் எனது நிலைப்பாடு என்னவென்று சொல்வதற்கு முன் எனது அனுபவத்தை பகிர நினைக்கிறேன்.


    இரத்தபடலம் ஆரம்ப பாகங்கள் திகில் ..,லயன் இதழில் தொடராக வந்த பொழுது வரிசைகிரகமாக அல்லாமல் விட்டு விட்டு படித்தாலும் அவ்வளவு சுவையுடன் ..விறுவிறுப்புடன் நகர்ந்து சென்றது மட்டுமல்ல அடுத்த பாகம் எப்பொழுது வரும் என ஏங்க வைத்ததும் உண்டு .பின் சில பல வருடங்களுக்கு பின் ஒட்டுமொத்தமாக ஒன்று முதல் பதினெட்டு பாகங்கள் வரை மொத்தமாக ,ஒரே தொகுப்பாக வெளிவந்ததும் அதன் அளவையும் பருமனையும் பார்த்து அசராதவர்களே கிடையாது.அதன் பின் அந்த தொகுப்பை முழுவதுமாக படித்த பின்னர் ஏற்பட்ட மன உணர்வை நினைவுபடுத்தி பாருங்கள் .நாமும் அந்த மறதி நாயகனாகவே மாறி இருப்போம்.அதன் க்ளைமேக்ஸ் பக்கங்களையும் ,அந்த பக்கத்தின் கடைசிவரிகளையும் படித்து முடித்தவுடன் நெஞ்சில் ஓர் இனம் புரியா சோகமும்,மகிழ்வும் ஒரு சேர ஏற்படும்.எனக்கோ மனதில் மட்டுமல்ல கண்களில் கூட மாற்றத்தை ஏற்படுத்திய அந்த முடிவுரை பகுதி அதன் ஒரிஜினல் மொழியில் தெரிந்து படித்தால் கூட ஏற்படுமா என்றால் சந்தேகமே...

    பிறகு மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு இரத்தபடலம் தொடர்ச்சி..ஸ்பின் ஆப் ..கதாபாத்திரங்களின் வரலாறு என்ற அறிவிப்பும்..வரவும் ..விற்பனையும் நாம் அறிந்த ஒன்றே..அந்த இதழ்கள் விற்பனையில் சாதித்தனவா..வெற்றியா ..தோல்வியா என்பதற்குள் நான் புக விரும்ப வில்லை.

    ஆனால் நண்பர்களுக்கு ஒரே ஒரு வினா...உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்.இரத்தபடலம் பதினெட்டு முடிவுரைக்கு பிறகு அதன்பின் வந்த இதழ்கள் பழைய பாகங்கள் ஏற்படுத்திய உணர்வினை ஏற்படுத்தியதா..உணர்வை கூட விடுங்கள் பழைய அந்த திருப்தியை அளித்ததா என்றால் என்னை பொறுத்தவரை இல்லை என்பதே..

    இரத்தபடலம் மகா வெற்றி இதழ் என்பது ஒன்று முதல் பதினெட்டு வரை உள்ள தொகுப்புமட்டுமே..அதன் வரை மட்டுமே எனக்கு இரத்தபடலம் முழு நிறைவான இதழ்.அதன்பின் வந்த எந்த இரத்தபடல சம்பந்தபட்ட இதழ்களும் அதற்கு கொஞ்சம் கூட ஈடு செய்யவி்ல்லை என்பதே உண்மை.இன்னும் உண்மையை சொன்னால் முன்னரின் பாகங்களில் உள்ள தெளிவை ஏற்படுத்தியதை விட குழப்பத்தை விளைவிப்பது தான் அதிகம் என்பது தான் எனது கருத்து.


    எனவே இப்பொழுது வரும் வண்ண தொகுப்பு முதலில் வந்த கறுப்பு வெள்ளை பாகங்களுடன் வந்தது போலவே வந்தால் தான் டிஜிட்டல் பாட்ஷா போல வெற்றி அடையும்.இல்லையேல் பில்லா2 ரீமேக்போல் ஏமாற்றமே அளிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்க வெற்றி அடையும் என்ற வரிகளுக்கு பதிலாக " பழைய திருப்தியை அளிக்கும் "என்று படிக்குமாறு வேண்டிகொள்கிறேன்.

      Delete
  69. Dear Editor,

    மணப்பெண்ணிற்கு என்னதான் beauty parlour போய் மேக்கப் போட்டாலும், நெற்றியில் ஒரு போட்டு வைத்தால்தான் மணப்பெண்ணிற்கு அழகு.

    XIII collector editionல் 'புலன் விசாரணை'தான் அந்த பொட்டு என்பது நமது நண்பர்களின் கருத்து.

    ReplyDelete

  70. மாயாசார்@

    ///டிராகன் நகரம் வாக்கு கால்வாசி பேரில் பியூசை பிடிங்கிடிச்சி...XIII-க்கு தொடர்ந்தா...//.......

    மிகத் தவறான புரிதல். ட்ராகன் நகர ஏமாற்றம் வருத்தம் தந்த்தென்னவோ உண்மைதான். ஆனால்,

    பியூசை பிடிங்கிடிச்சி..என்ற அளவுக்கெலாம் நிச்சயமாக இல்லை.
    உங்கள் குற்றச்சாட்டில் சற்றும் உண்மையில்லை மாயாசார். வருத்தத்தில் சில நண்பர்கள் இருந்தார்கள் என்பதே நிதர்சனம். பிறகு பிரின்ஸ் ஸ்பெசலில் வெளிவந்த அசத்தலனா போட்டோக்கள் அந்த வருத்தத்தையும் துடைத்து எறிந்துவிட்டது என உறுதியாக சொல்லலாம்.

    நண்பர்கள் அவரவர் சூழலின் காரணமாக இங்கே பங்கு பெறுவது குறைந்துள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி....

    நானும் கூட கொஞ்சம் ஓவர் ரியாக்ட் செய்துவிட்டேனோ என பலமுறை யோசித்து உள்ளேன். சொதப்பல் போதும் என்ற ரீதியில், பிரின்ஸ் ஸ்பெசலில் போட்டோ போட வேணாம்னு நான் கேட்டுக்கொண்டேன். அதற்கு பின்பும் கூட அட்டகாசமான தரத்தில் போட்டோவை தந்து வாயடைக்கச் செய்துவிட்டார். அப்போது பிடிங்கப்பட்டது பியூஸ் அல்ல; எந்த விசயத்திற்கும் ஓவர் ரியாக்ட் தேவையில்லை என்ற எண்ணமே.

    வேறுபல பணி நெருக்கடி காரணமாகவே இங்கே கவனம் செலுத்த இயலவில்லை. அதளபாதாளத்தில் உள்ள வியாபாரத்தில் முழுக்கவனமும் செலுத்த வேண்டியுள்ளது.

    அநாமதேய நண்பரின் புண்ணியத்தில் (இருக்கும் சூழலில் இம்முறை சந்தா செலுத்த இயலாமல் போயிருக்க கூடும்...!!!) இதுவரை வெளிவந்த இதழ்களில் கூட கவனம் செலுத்த நேரம் அமையவில்லை.


    ReplyDelete
    Replies
    1. @ சேலம் டெக்ஸ்

      சிரிப்பு மூட்டாதிங்க டெக்ஸ்....டிராகன் நகரம் மேட்டர்ல நீங்கள் பண்ணின ரகளை,தலைமறைவு உலகத்துக்கே தெரியும்.!

      அந்த ரகளைக்கு முன் பின் தளத்தின் கமெண்ட்ஸ் வேகம் என்னான்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.ஸும்மா ஏத்திவிடாதிங்க பாஸ்..!

      Delete