நண்பர்களே,
வணக்கம். புயல் ஓய்ந்தாலும் - சேதாரம் தொடர்கிறதே என்ற சங்கடத்தைத் தவிர்க்க இயலவில்லை ! மேலோட்டமாய் எல்லாமே சகஜமாய்த் தெரிந்திருந்தாலும் - ஆங்காங்கே உள்ளுக்குள் இத்தனை காலமாய் ஆர்ப்பரித்து கிடந்திருக்கும் இந்த ரௌத்திரங்கள் உண்மையில் மலைக்கச் செய்கின்றன ! எல்லாம் நலமாகிடுமென்று நம்பிக் கொண்டே தொடர்ந்தாலும், டி.வி. விவாத மேடை போல குரல்களில் இன்றும் தெறிக்கும் கனல்களைப் பார்க்கும் போது - "ஈகோ' எனும் எமன் எத்தகைய நட்புக்களையும் விட்டு வைக்காது என்பது புரிகிறது !
"நாம் பார்க்காத ரணகளங்களா ?" என்று நமக்கு நாமே இம்முறையும் சமாதானம் சொல்லிக் கொண்டாலுமே, தொடர்கதைகளாகிடும் மோதல்களுக்கு எவ்வித நியாயங்களும் கற்பித்தல் பொருத்தமாயிராது - அதுவும் நம் வயதுகளில்!! தவறு எங்கே ? யாரிடம் ? என்ற ஆராய்ச்சிகளுக்குள் நூற்றியோராவது தடவையாகப் புகுவதில் நிச்சயம் அர்த்தம் இருப்பதாய்த் தோன்றவில்லை - simply becos இங்கே சகலத்தின் துவக்கப் புள்ளியும் நானே ! So நல்லதோ - கெட்டதோ அதன் முதல் பொறுப்பாளியும் நானே! நான் ஏங்கியது எல்லாமே நாமனைவரும் தோள் மேல் கைபோட்டு ஓரணியாய் நடை போட வேண்டுமென்று ! ஆனால் end of the day நட்பை ஈட்டிய வேகத்திலேயே ஏதேதோ காரணங்களின் பொருட்டு பகையையும் சமபங்கிலேயே சம்பாதித்துள்ளேன் எனும் பொழுது - தெரிந்தோ, தெரியாமலோ நிறையவே சொதப்பியிருக்கிறேன் என்பது அப்பட்டம் ! மனதறிந்து யாரையும் காயப்படுத்துவது எனது எண்ணமாக இருந்ததில்லை தான் ; ஆனால் man management திறன்களில் எனது ஆற்றல் போதாது போலும் !
பொதுவெளியில் காயப்பட்டு நிற்பது எத்தனை பெரிய ரணம் என்பதை வெவ்வேறு தருணங்களில் நம்மில் நிறையப் பேர் உணர்ந்திருப்போம். வேண்டாமே அந்தக் கடினங்கள் தொடர்ந்திடல் - at least நமது உபயத்தில் ! இந்த நொடியின் தேவை ஒவ்வொருத்தருக்குமே கொஞ்சம் தனிமையும், நிம்மதியும் என்பேன் ! So நாளை புறப்படவுள்ள பிப்ரவரி காமிக்ஸ் இதழ்களை ரசிப்பதிலோ / அலசுவதிலோ மட்டும் தொடரும் நாட்களை பயன்படுத்திக் கொள்வோமே ? இந்த இரத்தப் படலம் ; புலனாய்வு என்ற சகலத்தையும் கொஞ்ச காலத்துக்கு என்னிடம் விட்டுவிட்டு அலைபாயும் மனங்களை சமனப்படுத்த மட்டும் முயற்சியுங்கள் ப்ளீஸ் !
என் பங்குக்கு, ரொம்ப காலமாகவே தள்ளிப் போட்டு வரும் உடல் சார்ந்த சில பட்டி-டிங்கரிங் வேலைகளின் பொருட்டு ஒரு break எடுத்துக் கொள்ள நினைக்கிறேன். 12 ஆண்டுகளுக்கும் மேலாய் சர்க்கரை நோயையும், இரத்த அழுத்தத்தையும் கூடவே கூட்டித் திரிபவன் என்ற முறையில் எனக்கிது அவசியமானதொரு ஓய்வாக இருந்திடக் கூடும். பற்றாக்குறைக்கு முதுகு வலியும் நமக்கொரு ஜிகிடி தோஸ்த் ! So ரொம்பவே தாமதப்பட்டுப் போனதொரு FC-க்கு இப்போதாவது வண்டியை விடல் நலமென்று படுகிறது !
இதுவொரு knee jerk reaction-ம் அல்ல ; "ஐயோ....போகாதீங்க ப்ளீஸ் !" என்ற சென்டிமென்ட்களை கசக்கிப் பிழிய முற்படும் மலிவான சிந்தனையுமல்ல ; கடந்த 2 நாட்களின் அமளிகளின் பின்விளைவுமல்ல ! சொல்லப் போனால் இந்த அமளிகளுக்குப் பின்பாய் என்னுள் நிறையவே தெளிவு பிறந்திருப்பது போல் உணர்கிறேன் ! ஜுனியரின் திருமணம் முடிந்த கையோடு எடுக்க எண்ணியிருந்த மருத்துவ ஓய்வினை ஏதேதோ பணிகளின் பொருட்டு தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்ததொரு சராசரி 50 வயதுக்காரனுக்கு இப்போது கிட்டியிருக்கும் ஒரு வாய்ப்பு மாத்திரமே இது !
பணிகள் வழக்கம் போல் ஓடிக் கொண்டிருக்கும் & இதழ்களும், எவ்வித தொய்வுமின்றி எப்போதும் போல் ஆஜராகிடும் guys ! ஒரே வித்தியாசம் - உங்கள் முகங்களுக்குள் நின்று 6 வருஷங்களாக ஆடி வந்த நர்த்தனத்தை கொஞ்ச அவகாசத்துக்கு இதழ்களுக்குப் பின்னிருந்து மட்டுமே செய்து வருவேன் ! பரஸ்பரம் ஒய்வையும், தெளிவையும் நமதாக்கிக் கொண்ட நாளில் 'வந்துட்டேன்" என்று ஜம்ப் பண்ணி ஆஜராகியிருப்பேன் ! இடைப்பட்ட காலத்துக்கு இங்கு நடக்கும் சகலத்தையும் சந்தோஷத்தோடோ, சங்கடத்தோடோ பார்வையிட்டு வரும் சீனியர் எடிட்டர் இங்கே உங்களது பொழுதுகளை சுவாரஸ்யமாக்கிட முனைகிறாரா என்று maybe கேட்டுப் பார்க்கலாம் ! அவருக்குமே இங்கொரு active பங்கெடுப்பதென்பது பல நாள் கனவு ! ஆனால் தமிழில் டைப் செய்வது அவருக்குத் தெரியாதென்றே நினைக்கிறேன் ; but you never know !
புகை விட்டுக் கொண்டே கிளம்பும் ரயிலிலிருந்து சினிமா பாணியில் கையசைக்கும் 'டாட்டா..பை-பை' . ரவுசெல்லாம் நானிந்தத் தருணத்தில் பண்ணப் போவதில்லை ; simply becos I'm going nowhere ! ஆங்கிலத்தில் ஒரு பழமொழியுண்டு : Familiarity breeds contempt என்று !! ஒரு அளவுக்கு மேலாய் முகத்துக்குள்ளேயே இருக்கும் போது அயர்ச்சியே மேலோங்கும் என்பதாய் பொருள்படும் இந்தப் பழமொழியினை கொஞ்சமேனும் மதிக்க முயற்சித்துப் பார்ப்போமே guys ?! Bye for now ....See you around !
And இதோ - நம்மாள் ரின்டின் கேனின் அட்டைப்பட first look !! நாளை கூரியர்கள் கிளம்பிடும் !
Hi
ReplyDeleteahh... I First
DeleteSir get well soon
Deleteபழகப் பழக பாலும் புளிக்கும்
Delete👋✋👋✋👋✋👋✋
ReplyDeleteரின் டின் - எனது குழந்தைகளுக்கு கதை சொல்ல ரெடியாகி விட்டேன்.
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteGet well son sir
ReplyDelete// FC-க்கு இப்போதாவது வண்டியை விடல் நலமென்று படுகிறது ! //
ReplyDeleteநலமுடன் புத்துணர்ச்சியுடன் விரைவில் நீங்கள் வர வேண்டுகிறேன். Take care.
இதுவும் நல்லதற்கே...
ReplyDelete///! So ரொம்பவே தாமதப்பட்டுப் போனதொரு FC-க்கு இப்போதாவது வண்டியை விடல் நலமென்று படுகிறது ! ///
ReplyDeleteகூடிய விரைவில் முழுநலமுடனும் கூடுதல் உத்வேகத்துடனும் திரும்பி வாருங்கள் சார்.!
காத்திருக்காறோம் ..!!
பிரேக்குக்கு அப்புறம் ்பரெஷா வாருங்கள் சார். தெரிந்தோ தெரியாமலோ குழப்பங்களுக்கு நானும்பங்குதாரன் எனும் வகையில் உங்களுக்கு என்னுடைய மன்னிப்புகள். ஆகஸ்டில் புத்தகத்தை கையில் வாங்கும் போது இவை எல்லாம் எல்லாருக்கும் மறந்து விடும் என நம்புவோமாக.
ReplyDeleteவந்தாச்சி.
ReplyDeleteஆஹா ரின் டின் வாங்க ....
ReplyDeleteநடந்ததை எல்லாவற்றையும் மறந்து .. காமிக்ஸ் உடன் நம் பயணத்தை தொடருவோம்..
Take Care Sir,உடல்நலன் மிக முக்கியம் அதை கவனித்துக் கொள்ளவும்.
ReplyDeleteஉடல் நிலையும் மன நிலையும் பலம் பெற பிரார்த்திக்கிறேன் மீண்டு(ம்) வரும் போது அதிரடியான அறிவிப்புகளுடன் கலக்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன்
ReplyDelete🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உடல், மனம் அனைத்திலும் நலன் மேம்பட்டு இயல்பாக பழைய பன்னீர்செல்வமாக வாருங்கள் சார். நாங்கள் எப்போதும் இப்படி தானே? எந்த காலத்திலும் மாற்றம் கிடையாதே?.எல்லாம் அடுத்த ஈரோட்டு புத்தக விழாவில் மாறி இருக்கும் சார்.எங்களை விட்டு விட்டு குடும்பத்தில் சிறிது நேரம் ஒதுக்கி மகிழ்ந்து இருங்கள்.
ReplyDelete17
ReplyDeleteஉடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் சார்.... புத்துணர்ச்சியோடு வரும் உங்களுக்காக காத்திருப்போம்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ReplyDelete,சார் அட்டைபட வண்ணம் அருமை
ReplyDeleteநலமுடன் திரும்பி வாங்க எடிட்டர் சார்...
ReplyDeleteநடந்ததை மறந்து நமது காமிக்ஸ் உடன் பயணத்தை தொடருவோம்..
////சீனியர் எடிட்டர் இங்கே உங்களது பொழுதுகளை சுவாரஸ்யமாக்கிட முனைகிறாரா என்று maybe கேட்டுப் பார்க்கலாம் ! அவருக்குமே இங்கொரு active பங்கெடுப்பதென்பது பல நாள் கனவு ! ஆனால் தமிழில் டைப் செய்வது அவருக்குத் தெரியாதென்றே நினைக்கிறேன் ; but you never know !////---- வாவ்...சூப்பர்...அருமை....🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 வெல்கம் சீனியர் சார்.
ReplyDeleteமெளனமாய் இருந்த உங்களை இனி இங்கே சந்திக்கப் போகிறோம் எனும்போதே உற்சாகம் பீறிடுகிறது.
வேண்டாம் டெக்ஸ். என்னுடய வேண்டுகோள் அவர் அவருடைய ரிடையர்மென்டைநன்றாக சந்தோசமாக கழிக்கட்டும். இங்கு யாருக்கும் மரியாதையும் தெரிவதில்லை. எல்லாவற்றையும் கொச்சைப்படுத்துவதே வழக்கமாகி விட்டது. ஒருவர் காயப்பட்டதே போதும். 🙏🙏🙏🙏🙏
Delete👍💐
Delete//வேண்டாம் டெக்ஸ். என்னுடய வேண்டுகோள் அவர் அவருடைய ரிடையர்மென்டைநன்றாக சந்தோசமாக கழிக்கட்டும். இங்கு யாருக்கும் மரியாதையும் தெரிவதில்லை. எல்லாவற்றையும் கொச்சைப்படுத்துவதே வழக்கமாகி விட்டது. ஒருவர் காயப்பட்டதே போதும். 🙏🙏🙏🙏🙏//
Delete+1111
ஷெரீப் மஹி சொல்வதை நானும் வழிமொழிகிறேன்.!
Delete//ஒருவர் காயப்பட்டதே போதும்// உண்மையான வார்த்தைகள் ஜி. ஒப்புக் கொள்கிறேன்....
Deleteசீனியர் சார் இங்கே மொளன பார்வையாளராக இருந்து வருகிறார் எனும் போது ஆடுகளத்தின் நீள அகலங்களை நன்கு அறிவார். எனினும் அவர் விருப்பம் எதுவாயினும் ஏற்றுக் கொள்வோம்.
நீநீநீநீநீளமும் அகலமும் நம்ப பிளாக்கிலே இருக்கும் கணக்கு அவருக்கு தெரியாது சார்... அவரை பொறுத்த வரை ஒன்னும் ஒன்னும் ரெண்டே... நிச்சயமாக 13 இல்லை..
Delete// என்னுடய வேண்டுகோள் அவர் அவருடைய ரிடையர்மென்டைநன்றாக சந்தோசமாக கழிக்கட்டும். இங்கு யாருக்கும் மரியாதையும் தெரிவதில்லை. எல்லாவற்றையும் கொச்சைப்படுத்துவதே வழக்கமாகி விட்டது. ஒருவர் காயப்பட்டதே போதும். 🙏🙏🙏🙏🙏 //
Delete+1 very true
ரம்மி@ சீனியர் சாருக்கு , இங்கே 1+1= 13னும்தெரியும்; நீங்கள் தோள்பட்டையில் குத்தியுள்ள XIIIம் தெரியும்.
Deleteநம்ம எடிட்டர் சாரை விட சீனியர் சாருக்கு அனுபவும் பல மடங்கு அதிகம். அவர் உலகம் பூராவும் நம்மை மாதிரி வாண்டுப் பசங்களை நிறைய கையாண்டு இருப்பார்.
தளத்தை நடத்துவதில் நம் எடிட்டர் சாரை விட இன்னும் சிறப்பாக சீனியர் சார் செய்வார்கள். அவருடைய அனுபவங்களை கேட்டுக் கொண்டு இருந்தாலே நமக்கு போதுமானது.
ஏப்ரல்2015சென்னை விழாவில் சீனியர் சாருடன் அரை மணி நேரம் உரையாடி மகிழ்ந்து உள்ளேன். அப்போது
தெரிந்து கொண்ட அவரின் காமிக்ஸ் உலக அனுபவங்கள் பிரமிப்பு ஊட்டுபவையாக இருந்தன.
என்னுடைய கணக்கு பெரும்பாலும் தவறியதில்லை. நிச்சயமாக சீனியர் சாரின் அனுபவங்களை இங்கே கேட்டறியப்போகிறோம்.
இரவுக்கழகாரே.!
Delete// நம்மை மாதிரி வாண்டு பசங்களை//
ஙே.????????
" பிள்ளை இல்லாத வீட்டில் கிழம் துள்ளிவிளையாடுது.."என்று கிண்டல் செய்யும் வயசு அயிடுச்சு நண்பரே.!!!
முன்னாள் சேந்தம்பட்டி உறுப்பினரே.!
Deleteநலமா.?
விரைவில் மீண்டும் சேந்தம்பட்டி உறுப்பினர் ஆகி, கண்கள் பனீர்தது,உள்ளம் இனித்தது,உடல் சிலிர்த்தது....என்று சந்தோசத்தை காண ஆசை.!!!
மாடஸ்தி ஆர்மி@
Delete///" பிள்ளை இல்லாத வீட்டில் கிழம் துள்ளிவிளையாடுது.."என்று கிண்டல் செய்யும் வயசு அயிடுச்சு நண்பரே.!!!///ஹா...ஹா... நாமெல்லாம் என்றும் இளசுகள் தான் சார்...
///மீண்டும் சேந்தம்பட்டி உறுப்பினர் ஆகி///... M.V. sir.. மனதளவில் நான் விலகியிருந்தால் தானே...!!!
Deleteநான் எங்கே இருந்தாலும் என் எண்ணுமும் செயல்பாடுகளும் சேந்தம்பட்டியில் தான் இருக்கும்.
///முன்னாள் உறுப்பினர்///என போடக் காரணம் நான் அவ்வப்போது என்னுடைய சார்ட் டெம்பர் காரணமாக வீண் விவாதங்களில் இறங்கி விடுவேன். அது அவர்களை பாதிக்க கூடாது என்பதற்காகத் தான்.
// இங்கு யாருக்கும் மரியாதையும் தெரிவதில்லை. எல்லாவற்றையும் கொச்சைப்படுத்துவதே வழக்கமாகி விட்டது. ஒருவர் காயப்பட்டதே போதும்.//உண்மை மஹி,பொதுவாக பொருளோ,நபரோ இருக்கும்போது பலருக்கு அருமை புரிவதில்லை.
Deleteநலமுடன் இரு மடங்கு பலமுடன் மீண்டு வாருங்கள் சார்.
ReplyDeleteFC Report:
ReplyDeleteபார்வைக்கு- கார்ஸன்;
பாடி கன்டிஷன்- டெக்ஸ்;
ஐ சைட் - மாடஸ்டி (தூரப் பார்வை)
லேடி எஸ் (கிட்டப்பார்வை)
ஹார்ட் பீட்- "லக்கி" "லூக்"
வயிறு- ரின் டின் கேன்.
தலை - சிக் பதில்
பிட்டம்- கிட் ஆர்ட்டின்
வாய்- ஸ்பைடர்
உள்ளம் - தோர்கல்.
🤣
உண்மை-வாசகர்கள்
Deleteஅருமை நண்பர்களே
Deleteவருத்தமிருந்தாலும்...
ReplyDeleteஉங்கள் உடல்/மன நலன் கருதி,
நல்லா ரெஸ்ட் எடுத்து நலமுடன், பலமாக திரும்பி வாங்க சார்.
இன்னும் பல படைப்புகளை உங்கள் எழுத்தில், தயாரிப்பில் காண காத்திருக்கிறோம்.
எடிட்டர் சார்
ReplyDeleteஇப்போதாவது உங்களுக்கு உடல்நலத்தை பற்றிய எண்ணம் உதித்ததே.இங்கு பல நல்லிதயங்கள் உங்களின் நலம் வேண்டி ப்ரார்த்தனை செய்து காத்துக்கிடக்கும் என்பதை மறவாதீர்கள் சார்.
இனி கொஞ்ச நாட்களுக்கு எங்களுக்கு ஞாயிறு விடியல்கள் உங்களின் பதிவுகளை காணமுடியாத வருத்தமான விடியல்களாக இருக்கப்போகிறது.
அதைவிட எங்களுக்கு உங்கள் உடல் நலமே முக்கியம்.புத்துணர்ச்சியுடன் நீங்கள் திரும்ப வரும் நாளை எண்ணி காத்துக்கிடப்போம்.முன்னெப்போதையும் விட உற்சாகமுடன் திரும்பி வரும் நாளை எண்ணி காத்திருப்போம் சார்.நாளை நமதே.
எடிட்டரின் ஒவ்வொரு பதிவையும் படித்துமுடிக்கும்போதும் மனதுக்குள் ஜிவ்வென்ற உற்சாகம் பிறப்பது வாடிக்கை!
ReplyDeleteஒரு பதிவைப் படித்தபின் நிலைகுலைந்துபோய், கனத்த மனதுடன் நிற்பது இதுவே முதல் முறை!
கொஞ்சமாய் ஆசுவாசப்படுத்திக்கொண்டு நிதானமாய் யோசித்தால் இந்த ப்ரேக் அவசியம் என்றுதான் தோன்றுகிறது - உடலுக்கும், மனதுக்கும், நிதானமான திட்டமிடல்களுக்கும்!
ஆனாலும் இது நிகழ்ந்திருக்க வேண்டாம் தான்!
+1
Delete+13
Delete+1
Deleteஎல்லாம் நன்மைக்கே ஈ.வி,ஆசிரியர் ஓய்வெடுக்க மட்டுமே சென்றுள்ளார், மீண்டும் புத்துணர்ச்சியோடு வருவார் என்று நம்புவோம்.நாம் வழக்கம்போல் ஆரோக்கியமாக விவாதித்து மகிழ்வோம்,அதையே அவரும் விரும்புவார்.
Delete+12345
Deleteவிரைவில் நலமுடன் திரும்பி வாருங்கள் சார் காத்திருக்கிறோம்
ReplyDeleteகொரியர் கிளம்பிவிட்டதா என பார்க்க வந்தால் புரியாத புதிராக ஒரு பதிவு.. பழைய பதிவுகளை பார்த்து புரிந்துகொள்ள 1 மணி நேரம் ஆகிவிட்டது.
ReplyDeleteவருந்தத்தக்க நிகழ்வு.. அவ்வப்பொழுது இதுபோல ஒன்று தளத்தில் நிகழ்ந்து ஆசிரியரை வருந்த செய்துவிடுகிறது.
ஆசிரியரின் மருத்துவ ஓய்வு சரியாக தோன்றினாலும் பதிவுகள் இல்லாத ஞாயிறை நினைத்து பார்க்கமுடியாத சுயநலம் எனக்கு.
ஓய்வு எடுங்கள் ஆனால் பதிவுகளை நிறுத்திவிடாதீர்கள் ப்ளீஸ்.
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
ReplyDeleteநாவினால் சுட்ட வடு.
நீரின்றி அமையாது உலகு .
நீங்களின்றி எரியாது காமிக்ஸ் தீபம்
தணியாது எங்கள் காமிக்ஸ் காதல்.
உடலுக்கும் உள்ளத்திற்கும் உரம்சேர்த்து
எங்கள் உள்ளங்களை கொள்ளைகொள்ள
விரைவில் வரவும்.ஜெயவிஜயீபவ.
வெல்கம்பேக் சார். இன்னும் உங்ககிட்ட மல்லுக்கட்டு நிகழ்த்த வேண்டியுள்ளது. ஜெய் Xiii!
ReplyDeleteபெருந்தலைவரது இனிய நினைவலைகளை யாரையாவது வைத்து அப்படியே டைப்பிடலாமே?!?! யோசியுங்க பாஸ். அவரது இருப்பு இங்கே அத்தியாவசியமும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருக்கப் போவது உறுதி. டொக்.
Deleteநல்ல யோசனை ஜி.
Deleteஅன்பு நண்பரே,
Deleteஉங்க ஜெய் Xiiiக்கு👏பல,
உங்க ஜெய் Xiiiக்கு👍பல,
உங்க ஜெய் Xiiiக்கு💐பல..............
அதுவரை போரடிக்காம இருக்க....ஜானி சார் pdf எடுத்தோ , பிறர் மொழி பெயர்ப்ப திருட்டுத்தனமா அச்சிட ஊக்கப்படுத்துவதூ குற்றமாமே....அப்டியா...
Deleteஅ்துக்கு உங்்க துறைல ஏதாவது தண்டனை உண்டா...காவல் துறையினர் ஈடுபட்டால் விதிவிலக்குண்டா...டுமீல்
Deleteஇரும்பு கையாரே.!
Deleteஒய் திஸ் கொலைவெறி.???
நண்பரே, எந்த ஒரு புத்தகத்தில் இருந்தும் ஒரே ஒரு பக்கத்தை Xerox எடுப்பது கூட Copyright சட்டத்தின்படி குற்றம் தான். So, எனக்கு தெரிந்து எல்லாருமே குற்றவாளிகள் தான்.
Delete(நமக்கு நமது Certificatesஐ மட்டும் தான் Xerox எடுக்க உரிமை உள்ளது)
செந்தில் தவறுதான்...அதுக்காக புத்தகத்த அச்சிடுவதும்.....அதற்கு காவலாய் இருப்பதும் சரிதானா
Deleteஒரே வெறுப்பாக இருக்கிறது...😡
Deleteநண்பரே, நீங்கள் இது வரை PDFல் ஓரே ஒரு புத்தகத்தைகூட படித்தது கிடையாதா அல்லது பழைய புத்தகங்கள் PDFல் கிடைக்குமா என்று தேடியதுகூட இல்லையா?
Deleteஉண்டுதான்...ஆனா ஆசிரியர் வருந்துகிறார்னதும் இப கூட வேண்டாம்னேன்....கொலைப்படய கூட அழித்து விட்டேன்...ஆசிரியர் இப்ப வெளியிட முடியாது ...காத்திருங்ககன்னு சொன்னது தப்பா...
Deleteநா எங்கயும் எதுக்கும் கலங்கியதும் , வருந்தியதும் கிடையாது...அதுக்கு காரணம் நம்ம ஆசிரியரின் புத்தகங்கதான்...அவ்ளோதான்
Delete🙏🙏🙏
Delete😊
DeleteFounder of HiGopi, whose code lets us type in Tamil online, passes away https://www.thenewsminute.com/article/founder-higopi-whose-code-lets-us-type-tamil-online-passes-away-75660
ReplyDeleteMay his soul rest in peace. தமிழ் கணினி இருக்கும் வரை இவர் நினைவு இருக்கும்.
எடிட்டர் சார்,
ReplyDeleteசெல்லாது செல்லாது. வேணும்னா ஒரு வாரமோ அல்லது ரெண்டு வாரமோ ஓய்வு எடுத்துட்டு வாங்க. அதுக்குமேல நம்மளால தாங்க முடியாது. அப்புறம் பிரான்சிலும் ஒரு போராட்டக்குழு ஆரம்பிக்க வேண்டியிருக்கும். அம்புடுதேன், சொல்லிப்புட்டேன்.
ஜி கவலை வேண்டாம். அவர் ரெஸ்டில் இருந்தாலும் இங்கு வழக்கம் போல் அவரின் பதிவு வரும் என நம்புகிறேன்.
Deleteஅந்த போராட்டத்துக்கு நான் சைக்கிள்ல வந்தாவது கலந்துக்குவேன் ராட்ஜா சார்..
Deleteகவலைப்படாதீங்க கடவுளின் அருளால் சோர்வு நீங்கி மீண்டுவருவார்.!!
Deleteவசூல் ராஜா எம்பிபிஎஸ் காக்காய் ராதாகிருஷ்ணனுக்கு கேரம்போர்டு மாதிரி,
குவாட்டர் பாட்டில் முடி சுத்திகுச்சு கொஞ்சம் திறந்து கொடுங்கண்ணே.....என்ற மணிவண்ணன் காமெடி மாதிரிதான்....நாமும் காமிக்ஸ்சும்...
கவலை படாதீங்க....!!!
வருத்தமாக உள்ளது.நன்றி
ReplyDeleteஅன்பு தோழர்களுக்கு
ReplyDeleteஎன்னுடைய பதிவுகள் Publish ஆனது அடுத்த முறை பார்க்கையில் காணாமல் போய்விடுகிறது.
நேற்று இரவு ஆசிரியரின் தற்காலிக விடுப்பை எண்ணி வருத்தமுடன் நான் இட்ட பின்னூட்டம்(திரு.நவநீத கிருஷ்ணன் அவர்களின் பின்னூட்டத்துக்கு அடுத்து என்னுடைய பின்னூட்டத்தை நானே பார்த்தேன்) காலையில் மறைந்துவிட்டது.நேற்றும் ஒரு பின்னூட்டத்தை தவிர மூன்றைக் காணோம்.
இது எதனால் என்பதை விவரம் தெரிந்த தோழர்கள் விளக்கி உதவ வேண்டுகிறேன். நன்றி.
உங்கள் பின்னூட்டங்கள் spam இல் accidental ஆக சென்றிருக்கலாம் அல்லது பின்னூட்டங்களின் முடிவில் load more எனும் option ஐ அழுத்துவதன் மூலம் பெற முடியும்.
Deleteஓய்வெடுத்து உடல்நிலையை இன்னும் பலமுடன் புதுப்பித்து கொண்டு விரைவில் வாருங்கள் சார்...
ReplyDeleteஅதுவரை காத்து கொண்டு இருக்கிறோம் ..நீங்கள் சில நாட்களுக்கு " மெளன பார்வையாளர் " ஆக இருங்கள் சார்..அதே சமயம் " மெளன பதிவாளர் " என்பதை மட்டும் கடை பிடிக்க முயலாதீர்கள் என்பதை மட்டும் ஒரே வேண்டுகோளாக வைக்கிறேன்..
குறைந்த பட்சம் ஆறு மாதம் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் சார்.
ReplyDeleteஇனிமேல் வாசகர் காமிக்ஸ் காக செய்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று கூறி விடுங்கள்.
உதவி செய்பவர்கள் உரிமை இருப்பதாக நினைத்து கொண்டு அடிக்கும் கூத்தை பார்க்க சகிக்க வில்லை.
திரும்பி வரும்போது ஜனநாயக வாதியாக மட்டும் இல்லாமல் சற்று சர்வாதிகாரியாகவும் மாற முயற்சி செய்யுங்கள்.
ஆறு மாதங்கள் வெறும் தகவல் தரும் தளமாக மட்டும் blog இருக்கட்டும்.
தற்காலிக ஓய்வை சிறப்பாக அனுபவிக்க என் வாழ்த்துக்கள்.
வாங்க கணேஷ். உண்மை.
DeleteDear Editor,
ReplyDeleteநாங்க ஏதாவது தப்பாக கேட்டிருந்தால், உங்கவீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சுருங்கோ.
வழக்கம் போல தளத்தில் இருந்து தொடர்ந்து கலக்குங்கோ.
நன்றி,
செந்தில் விநாயகம்
லயன்/முத்து காமிக்ஸ் படிப்போர் சங்கம்
ஆஸ்திரேலியா.
மருத்துவ விடுப்பை விரைவில் ரத்து செய்து மும்மடங்கு புத்துணர்ச்சியுடன் வாருங்கள் எடிட்டர்சார்.
ReplyDeleteசங்கடமான நிலை தான் ஈ.வி. நிச்சயம் மாறும் என நம்பிக்கை கொள்வோம்.
ReplyDeleteதண்ணீரைப் பிரிந்து மீனால் வாழ முடியாது .வியாழன் வெள்ளி சனி மூன்று நாட்கள் ரெஸ்ட் போதுமே.. ஞாயிறு அதிகாலை புத்துணர்ச்சியோடு எடிட்டரைப் பார்ப்போம் என்று நம்புகிறேன் ..
ReplyDeleteமாயாவி சிவா சார்@
ReplyDelete///இரும்பு கோட்டை என அனைவரையும் நம்பவைத்திருக்கும் உங்கள் ராஜ்ஜியம்,தட்டிவிட்டால் சரிந்துவிடும் சீட்டுகட்டு///
இது புலன் விசாரணை பதிவின் இறுதியில் நீங்கள் சொன்னது.புலன் விசாரணைக்கு சம்பந்தம் இல்லாத இந்த கருத்துக்களை அங்கே நீங்கள் பதிவிட தேவையில்லையே சார்.
மீண்டும் மிகத்தவறான கருத்தை சொல்லி உள்ளீர்கள் சார். சேந்தம்பட்டி என்பது உறுதியான எஃகு கோட்டை சார். உங்கள் கற்பனையில் உதித்த சீட்டுக்கட்டு மாளிகை என்பதை பார்த்து எனக்கு சிரிப்புத்தான் வந்தது. என்றும் அது நிலைத்து நிற்கும்.
ஏதோ நான் என்னுடைய முன் கோபம் காரணமாக சிலரை சங்கடப்படுத்தி விடுகிறன். என்னுடைய கருத்துக்களால் நான் விலகி இருக்கும் படியான சூழல் அவ்வளவே. நான் விலகி இருந்தாலும் என் மனம் அங்கே தான் இருக்கும்.
யாரையும் சங்கடப்படுத்தி பார்க்காமல் மகிழ்வித்தே பார்க்கும் நல்ல மனங்களால் கட்டமைக்கப் பட்டது தான் சேந்தம்பட்டி. கற்பனையில் கூட அங்கே இருப்பவர்கள் யாரையும் சங்கடப்படுத்த கூடாது என நினைப்பவர்கள். அங்கே மற்றவர்களை சங்கடப்படுத்துவது நானே. நீங்கள் அங்கே இருந்த காலங்களில் உங்களுக்கும் தெரிந்து இருக்குமே, அந்த நல்ல உள்ளங்களின் பழகும் தன்மை. அந்த தன்மை இருக்கும் வரை சேந்தம்பட்டியும் இருக்கும்.
நீங்கள் சேந்தம்பட்டிக்கு வருவதற்கு முன்பே அதற்கு வயது2. அது சரிவது உங்கள் கற்பனையில் மட்டுமே என சொல்லிக் கொள்கிறேன்.
புரிதலுக்கும்..,பக்குவத்திற்கும் நன்றிகள் டெக்ஸ்..:-)
Deleteடெக்ஸ் நாம ஏதோ தம்மாந்துண்டு புத்தகத்த விடற ஆசிரியர புகழ்ற அளவுக்கு ...பெரிய சாதன பன்ற அவரோட இங்கே பகிளிக்க புகழ்றதில்லயாம்...யாராவது இருந்தா பாராட்டி பட்டயம் குடுங்கப்பா...
Deleteஹி ...ஹி..ஹி...ஹி..ஸ்டீல் மிடியல ..
Deleteஉங்கனால குடுகக்க முடிலன்னா விடுங்க☹..வேற யாராச்சும் குடுப்பாங்க😉
Deleteஎடிட்டர் சற்றே காயம்பட்டிருப்பது புரிகிறது. எதிலிருந்தும் சற்று ஓய்வு அவசியம்தான்.
ReplyDeleteஉடம்ப பாத்துக்குங்க சார்!
ஆனால், எனக்கென்னவோ அதிகபட்சம் ஒரு மாசம்கூட தாங்காமல் ஓடியாந்துடுவார்னு தோணுது. பீப்பிலாம் உங்களுக்கு இல்லாத இருந்தால்தான் ஆச்சரியம்! எனிவே, மனம்போல் ஓய்வெடுத்துக்கொண்டு வாருங்கள் சார்..
அதுவரை சீனியரோ, ஜூனியரோ இங்க வந்து கடையை திறந்து வைக்கச் சொல்லுங்க.. நாங்க எப்படியாவது சமாளிச்சி ரத்தப்பொரியல், சில்லிமூக்கு வறுவல், முதுகில் தோசை போடுவது என விளையாடிக் கொண்டிருக்கிறோம். இல்லைனா போரடிச்சிடும். :-))))))))
///நாங்க எப்படியாவது சமாளிச்சி ரத்தப்பொரியல், சில்லிமூக்கு வறுவல், முதுகில் தோசை போடுவது என விளையாடிக் கொண்டிருக்கிறோம். ///
Deleteசட்டைக் காலரை கிழிக்கும் விளையாட்டை விட்டுட்டீங்களே ஆதி!
அப்புறம்... 'சில்லுமூக்குகளை சிதறடிக்காமல் சிறப்பாய் சிலம்பம் விளையாடுவது எப்படி?' அப்படீன்னு ஏதாவது பதிப்பகத்துல புத்தகம் வெளியிட்டிருந்தாங்கன்னா எனக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்! ஒரு நண்பருக்கு பரிசளிக்கவேண்டியிருக்கிறது!
Dear Vijayan sir, thats sensible. a good Break is as good as ReSurrection!!. Get well soon and come back with 1000% energy sir!! - Selva K
ReplyDeleteஎடிட்டர் பூரண நலமடைய எனது பிரார்த்தனைகள்.
ReplyDeleteGet well soon editor sir
ReplyDeleteஎடிட்டர் சார் தங்கள் உடல் நலனை கவனிக்க சிறிது காலம் ஓய்வு தேவைதான் ! இருப்பினும் இந்த ஓய்வினை புதிய படைப்புகளுக்கான தேடலுக்கு வாய்ப்பாக்கி கொள்ளுங்கள். அதுவரையில் வழக்கமான முன்னோடங்கள் அறிவிப்புகள் ஞாயிறுதோறும் எதிர்பார்கிறோம்.Get well soon!
ReplyDeleteஇந்தப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு.... எக்கச்சக்க ரத்தக்களறி ஆகியிருக்கும் போல?... நல்லவேளை நான் எஸ்கேப்...
ReplyDeleteஉடம்பை கவனித்துக்கொள்ளுங்கள் எடிட்டர் சார்.... நன்றாக ஓய்வெடுத்துக்கொண்டு திரும்பி வாருங்கள்...
// 12 ஆண்டுகளுக்கும் மேலாய் சர்க்கரை நோயையும், இரத்த அழுத்தத்தையும் கூடவே கூட்டித் திரிபவன் என்ற முறையில் எனக்கிது அவசியமானதொரு ஓய்வாக இருந்திடக் கூடும். பற்றாக்குறைக்கு முதுகு வலியும் நமக்கொரு ஜிகிடி தோஸ்த்! //
ReplyDelete@ Vijayan Sir, Probably you have those due to missing night sleeps for decades - just a guess. Take care of your health and life style. Wish to see you stay better than now and produce much more wonders in Lion - Muthu in your 60s and 70s, seriously! :)
டியர் விஜயன் சார், NBS வெளியீட்டிற்கு முன்பு கூட இதேபோல் விரும்பதகாத நிகழ்வு நடந்து தளத்தை பினாயில் ஊற்றி சுத்தபடுத்தினீர்கள். வெளிவந்த NBS மெகா ஹிட் என்பதை சொல்லவேண்டியதில்லை.
ReplyDeleteஅதேபோல் இரத்தபடலமும் வெற்றிகொடி நாட்டும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை....
தேவையான அளவு ஓய்வெடுத்துகொண்டு மீண்டும் தளத்தில் கலக்குவீர்கள் என்ற நம்பிக்கையுண்டு....
அட ஆமாம்.!!
Deleteகலவரம் கண்ட இதழ்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட்தான்.!!!
( என் பெயர் டவுசர் விதிவிலக்கு.!!!)
அட ஆமாம்.!!
Deleteகலவரம் கண்ட இதழ்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட்தான்.!!!
( என் பெயர் டவுசர் விதிவிலக்கு.!!!)
82nd
ReplyDeleteAppo sunday vara thevai illaiyaa..Pazhakkam antha matha sollureengalo..
ReplyDeleteHealth is wealth, kindly take care.
ReplyDeleteEdi has given freely original 1 shadow 2 for subscribers without announcement. now he is giving free tex for subscriber. so let us wait. Edi is so
ReplyDeleteஆஹா மர்மக்கத்தி...ஷெல்டன் நாளை
ReplyDelete"உடலுக்கும், மனசுக்கும் சவாலான விசயங்கள், உடம்புக்கு ரொம்பவே நல்லது.இம்மாதிரி அனுபவங்கள் இன்னும் ஒரு மாதங்கள் நீடித்தால் தனிமனிதனாகவே என்னால் சதாம் உசேனையே தகர்க்க முடியும் "
ReplyDeleteஇரத்தப் படலம் நான்காம் பாகத்தில் ராஸ் டான்னர் எனும் ஜேசன் ப்ளை கூறும் வசனம் இது.
மீண்டு வாருங்கள் எடிட்டர் சார். சேர்ந்தே பயணிப்போம்.எட்ட வேண்டிய இலக்குகள் ஏராளமாக உள்ளன. காலடி பட வேண்டிய சிகரங்கள் கண்ணெதிரே உள்ளன.
உடலுக்குதான் ஓய்வே தவிர, மனதுக்கு அல்ல.
Please take care.
யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்யமே.வியாபாரம் என்று வந்த பிறகு ஆசிரியர் மாணவரின் இடத்தில் வந்து அமர்ந்து மாணவரை ஆசிரியரின் இருக்கையில் அமரவைத்து எந்த பாடம் நடத்தட்டும் எப்படி நடத்தட்டும் என்பதோடில்லாமல் தன்னையே கேலி செய்வதும் என்னைப்பொறுத்தவரை ஆசிரியருக்கும் அழகல்ல வியாபாரத்திற்கும் அழகல்ல.இதுவே இதைப்போன்ற விமர்சனங்களுக்கு மன உளைச்சல்களுக்கு பிள்ளையார் சுழி என்றே நினைக்கின்றேன்.ஏன் இந்த blog இல்லாமல் வெறும் ஹாட்லைனை வைத்தே இந்த தேரை இழுக்கலாம்.எதற்க்கும் நாங்கள் ரெடி.
ReplyDeleteஇப்பதான் வரேன் கொஞ்ச நாளைக்கு பிற கு...
ReplyDeleteஏ.. என்னப்பா பண்ணிங்க?..என்ன நடந்தது?
போய் படிச்சிட்டு வரேன்..
Our sastras never recommend hard work (other than for God). Good decision u ve made sir. Pls Take complete rest reading Ramayana. Get well soon sir.
ReplyDeleteபுத்தகங்கள வாங்கியாச்
ReplyDeleteசார் ஷெல்டன கம்பிக்கு பின்னே நிறுத்தும் அட்டை தத்ருபம்....சான்சே நஹி....இந்த மாத டாப் அட்டை டெக்ஸ்தான்...பின்னுது...ரோஜரின் முன்னட்டை பழமை...பரவால்லை...பின்னட்டை அசத்தல்....சர்ப்ரைஸ் டெகக்ஸ் அட்டகாசம்...
ReplyDeleteசூப்பர்ல!
Deleteகொஞ்சம் பழசையெல்லாம் கிண்டாமஇருல!
,எல தம்பி ...சும்மா இருக்க வுட மாட்டாங்றல நம்ப சேக்காளிவ...கடேசியா ஒரு தடவ மனசாட்சிய உலுக்க வேண்டி வரலாம்...வேடிக்க மட்டும் பாரு மக்கா
Deleteதேவையில்லை மக்கா.
Delete😊
Delete@Editor: Regular check ups and relaxation, முடித்துவிட்டு வாருங்கள்!
ReplyDeleteComics இல்லாமல் உங்களாலும் relax ஆக இருக்க முடியாது!
பார்சலை வாங்கியாச்சே..!!
ReplyDeleteபுரட்டிட்டு வாரேன்.!
எனக்கு தகவல் வந்துருச்சு...ஆனா வாங்க முடியாம அலுவலகத்தில் ..இரவு வாங்கலாம் என்றால் நாளை தான் தாரை செல்ல வேண்டும்..
ReplyDeleteஇருக்கும் டென்சனை குறைக்க காமிக்ஸை வாங்கலாம் என்று பார்த்தால் காமிக்ஸ் வாங்க முடியாமல் டென்சன் இன்னும் ஏறுகிறது..
என்னமோ போடா மாதவா...:-(
வழக்கம் போல புத்தகங்கள் வாங்கியாச்சி....
ReplyDeleteபுத்தகங்களை பார்த்ததும் அத்துனையும் மறந்து ஓரு உற்சாகம் ஒட்டி கொண்டது.
அனைத்து அட்டை படங்களும் அருமை...
டெக்ஸ் ஒரு மார்க் கூடுதலாக பெற்று டாப்பாக வருது...
செல்டன் 2ம் இடம்..
நம்ம குட்டி நாய் , ரின் டின் 3வது இடம்..
மர்ம கத்தி 4வதாக வித்தியாசமான கலரில் இருக்கு..
டெக்ஸின் வழக்கமான சாகச களங்களில் இருந்து வெகு தூரத்தில் இருக்கும் கனடாவில் நடக்கும் அனைத்தும் வித்தியாசமான அனுபவங்களை தரக்கூடியது...
ReplyDeleteவைகிங் தீவு மர்மம்,
நிலவொளியில் ஒரு நரபலி,
லயன் 250- பிரம்மன் மறந்த பிரதேசம் என ஒவ்வொன்றும் அதனதன் போக்கில் அசத்தின. இம்முறையும் வெண்பனியில் செங்குறுதி பட்டையை கிளப்பும் என கையில் ஏந்துகையிலேயே தெரிகிறது.
வழக்கத்தை விட கனமாகத் தெரிவிது எனக்கு மட்டும் தானா???
வெண்பனியில் செங்குருதி - அட்டைப்படமும் குறிப்பாக முன்னட்டை, சித்திரங்களும் அட்டகாஷ் .. தல வில்லரின் தாண்டவம் இம்மாதமும் தொடர்கிறது.!
ReplyDeleteமரணம் ஒரு முறையே - வாவ்.. செம்ம ஆர்ட்வொர்க்.!
என் நண்பேண்டா ..- இன்னிக்கு பொழுது ரின்டின்னோடுதான். .ஹிஹி ..கலக்குறாப்புல ..!!
பர்மா கத்தி - டாக்டர் சுந்தர் கோச்சுக்குவாரு, அதனால மௌணவிரதம்.
அண்ட்
இம்மாதத்தின் டாப்மோஸ்ட் பெஸ்ட் விரட்டும் விதி .. -
வர்ரே வாஹ்.! என்ன கலரிங் .. என்ன ஸ்டைலான ட்ராயிங் .. சிக்குன்னு செம்ம லுக்கான புத்தகம். வில்லர்மேனியாவோட உச்சம் மாதிரி முதல்பார்வையில் தெரிகிறது ..! பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல. சோ க்யூட்.!
டியர் எடி,
ReplyDeleteஇந்த பதிவேடை நீங்கள் துவக்கிய காலம், நமது காமிக்ஸ் இதழ்கள் புத்துயிர் பெற்று சீரான இடைவெளியில் வெளியாக மெதுவாக அடி எடுத்து கொண்டிருந்த தருணம். எனவே, நீங்கள் இங்கே அதிக நேரங்களை பதிவிலும், பதிலிலும் செலவிடுவதை நான் பெரிதாக கருதியதில்லை. ஆனால், கடந்த 6 வருடங்களாக நமது காமிக்ஸ்கள் சகட்டு மேனிக்கு சிறப்பு தொகுப்புகளும், புது புது வகையிலும் வர தொடங்கிய பின்பும் உங்கள் வருகையை இங்கே நீங்கள் தொடர்ந்ததை பார்த்த போது பிரமிப்பே மிஞ்சியது. எப்படி இந்த ஆசாமிக்கு மற்றும் இவ்வளவு நேரம் கையகபடுத்த முடிகிறது என்று.
மாற்று அலுவலுக்கான பயணங்கள், மொழிபெயர்ப்புகள், பொறுப்பாசிரியர் மேற்பார்வைகள், தயாரிப்பு, விநியோகம், தந்தை மற்றும் மகனாக ஆற்ற வேண்டிய கடமைகள், இவற்றின் நடுவே 6 வருடங்களாக இந்த பதிவேடையும் கணகச்சிதமாக சமாளித்து சாதித்து விட்டீர்கள்.
ஓய்வு அனைவருக்கும் அவசியமானதே. அதுவும் நீங்கள் மேற்கூறிய உபாதைகள், காலத்திற்கும் தொடரும் தொல்லைகள். சிறிது காலத்திற்கு இப்பதிவேடில் இருந்து விலகியிருப்பதன் மூலம் கிடைக்கும் ஓய்வில் சற்றே ஆசுவாசபடுத்தி கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை.
தேவை படும் அளவிற்கு ஓய்வு எடுத்து விட்டு, புத்துணர்ச்சியுடன் திரும்ப வாருங்கள். அது வரை புதிய புத்தகங்களுக்கான அறிவிப்பாகவும், விமர்சன தளமாகவும் இத்தளம் தொடருவதற்கு நண்பர்கள் தயாராகவே இருப்பார்கள்.
நடப்பது எல்லாம் நண்மைக்கே.
ரஃபீக் ஜி@
Delete//அது வரை புதிய புத்தகங்களுக்கான அறிவிப்பாகவும், விமர்சன தளமாகவும் இத்தளம் தொடருவதற்கு நண்பர்கள் தயாராகவே இருப்பார்கள்.// யெஸ்; சத்தியமான வார்த்தைகள்...
///நடப்பது எல்லாம் நண்மைக்கே//+100
This comment has been removed by the author.
DeleteVery good raja
Deleteபுத்தக விழா போட்டோக்கள் அள்ளுது....
ReplyDeleteநடிகர் பொன்வண்ணன் சார் முதல் போட்டோவில் , அசத்தல். 2007ல் சென்னையில் நடந்த ஒரு காமிக்ஸ் விழாவில் அவரோடு போட்டோ எடுத்து கொண்டது மகிழ்ச்சியான தருணம். அந்த விழாவில் அறிமுகம் இல்லாமல் இன்றைய பெரும்பாலான நண்பர்களும் கலந்து கொண்டனர். நம்ம மாடஸ்தி ஆர்மி சாரும் அந்த குரூப் போட்டோவுல இருப்பார்...
கணேஷ் சார் போட்டோ சும்மா அள்ளுது.... நல்லவேளை இம்முறை
நான் போகல, கணேஷ் சார்து மாதிரி ஒரு போட்டோ வந்திருந்தாலும், நம்ம காமிக்ஸ் ஆட்டத்திற்கு தி என்ட் போட்ருவாங்க...
மர்ம கத்தி செமயான பிரிண்டிங், முகங்கள் தத்ரூபமாக கலக்குது... டாக்டர் என்சாய்....
ஆர்ப்பாட்டமான ஒரு அம்சம் அந்த டெக்ஸின் இலவச இணைப்பு; சும்மா நச்சுனு அள்ளுது... ஓவியங்கள் செம ரியாலிஸ்டிக்... 11ம் பக்கம் அந்த பாம்பு உயிரோடு இருக்கும் படியே மிரட்டுது...
ரின் டின், செல்டன் லாம் சும்மா புரட்டலுக்கே அசத்துது...
இம்மாதம் குறைவிலா கொண்டாட்டம் அனைவருக்கும்..
ரொம்ப காலமாகவே எதிர்பார்த்த தோட்டா தலைநகர் அடுத்த மாசம் வருது...👏👏👏👏
ReplyDeleteஅந்த ஸ்கூல் மிஸ்ஸை கலரில் காண கண் கோடி வேணும்; இப்பத்திலிருந்தே மனசு மார்ச்சு மாசத்தை நோக்கி👀👀👀
முதல் புரட்டலில் இந்த மாத இதழ்கள் அனைத்தும் நச்,சர்ப்ரைஸ் டெக்ஸும் அசத்தல்.
ReplyDeleteஇந்த மாத டாப் டெக்ஸாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
ReplyDeleteஇந்தமாதப் புத்தகங்களின் அட்டைப்படங்களெல்லாம் ஒன்றுக்கொன்று போட்டி போடும் அளவுக்கு கொள்ளை அழகு! ஷார்ப்பான ஓவியங்களாலும், வண்ணங்களாலும் அசத்துகின்றன!
சந்தாதாரருக்கான இலவச 'கலர் டெக்ஸ்' 32 பக்கங்களில் ஒரு மினி புத்தகமாக, வண்ணமயமாக - ரொம்பவே க்யூட்!
'இரத்தப் படலம்' விளம்பரத்தில் இத்தனை நாளும் இடம்பெற்றிருந்த 'இலட்சியம் - ஆகஸ்ட் 2018'என்ற வாசகம் 'நிச்சயம்- ஆகஸ்ட் 2018' என்ற மாற்றப்பட்டிருக்கிறது. இந்தமாற்றம் மகிழ்ச்சி, பெருமிதம் இவற்றோடு ஏனோ ஓர் இனம்புரியாத சோகத்தையும் ஏற்படுத்தியது!
/சந்தாதாரருக்கான இலவச 'கலர் டெக்ஸ்' 32 பக்கங்களில் ஒரு மினி புத்தகமாக, வண்ணமயமாக - ரொம்பவே க்யூட்/
Delete+111111
காமிக்ஸ் நண்பர்களே வணக்கம்
ReplyDeleteவருக வருக ... வணக்கம்
Deleteவணக்கம் வெங்கி
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete120th
ReplyDeleteமிகவும் வருத்தமான முடிவு சார். உங்கள் உடம்பை கவனிக்க இந்த ஓய்வு கட்டாயம் தேவைதான் சார். நீங்கள் இல்லை என்றால் உங்கள் குழந்தைகள் நாங்கள் எல்லாம் என்ன ஆவோம் சார் என்று நினைத்து பார்க்கவே முடியவில்லை . கட்டாயம் சுயநலம்தான் . இந்த தேரின் அச்சாணி நீங்கள் . ஏதோ பார்த்து செய்யுங்கள் .
ReplyDeleteஎடிட்ட ரால் இந்த தளத்தை(நம்மை) விட்டுட்டு இருக்க முடியாது
ReplyDeleteவந்துடுவார் யாரும் குழப்பாமல் இருங்க அது போதும்
டெக்ஸின் அட்டைப்படம் பட்டய கிளப்புது.இம்மாத அட்டைப்பபடங்களில் சந்தேகமில்லாமல் இதுதான் டாப்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநண்பர்களே!
ReplyDeleteசென்றவருட CBFல் இரண்டு நாட்கள் முழு மூச்சாய் நம் ஸ்டாலில் பணியாற்றிய கரூரைச் சேர்ந்த நண்பர் ராஜசேகருக்கு கடந்த மாதத்தில் மூளையில் ஏற்பட்ட ரத்தக்குழாய் அடைப்பாலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின்னே தற்போது அவரது வீட்டில் ஓய்விலிருக்கிறார். உடலின் ஒரு பகுதி சரிவர செயல்படமுடியாத நிலையில் இன்னும் எழுந்து நடமாடவே சிரமப்பட்டு வருகிறார். ஒரு சில நாட்களுக்கு முன் ஃபோனில் அவரோடு பேசியபோது மனதாலும், உடலாலும் ரொம்பவே பலவீனப்பட்டுப் போயிருப்பதை உணரமுடிந்தது! "சுவற்றைப் பிடித்தபடிதான் இரண்டு எட்டுகள் நடக்க முயற்சிக்கிறேன் விஜய் சார்" என்று அவர் கூறியபோது நமக்கு நெஞ்சம் பதறிப்போனது.
அடுத்த வாரத்தில் ஏதாவது ஒருநாள் அவரது வீட்டிற்குச் சென்று நலம்விசாரித்துவரும் எண்ணத்திலிருக்கிறேன்! அடுத்த சனிக் கிழமை மாலை அல்லது ஞாயிறு காலையில் அவரைச் சந்திக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். கரூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதி நண்பர்கள் யாரேனும் அவரைப் பார்த்து ஆறுதலளிக்க விரும்பினால் அவர்களோடு இணைந்துகொள்ள சித்தமாய் இருக்கிறேன்!
விஜய் சார் நான் தயாராக இரு க்கிறேன்.
Deleteகரூர் ராஜசேகர் அவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்.!
Deleteராஜசேகர் அவர்களின் உடல்நிலை விரைவில் குணமடைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன்
Deleteநானும் வருகிறேன் விஜய் சார்
Deleteநண்பர் கரூர் ராஜசேகர் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நண்பரே, சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு நானும் உங்களை போன்றே , மூளையில் ஏற்பட்ட ரத்தகுழாய் அடைப்பினாலும், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு வலது கை கால் சரிவர இயங்காமலேதான் இருந்தேன். இன்னும் பூர்ணமாக குணமடையவில்லை. ஆனால் இன்று எவ்வளவோ முன்னேறியுள்ளேன் நண்பரே. எனது அனுபவத்தில் சொல்கிறேன். நம்பிக்கையை மட்டும் எந்த சமயத்திலும் கைவிடாதீர்கள். அந்நிலையிலும் எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது காமிக்ஸ்தான். மனோதத்துவ ரீதியாக என்னை டாக்டர் சோதிக்கும்போது காமிக்ஸ் வாசிப்பு மிகுந்த பலன் உள்ளதாய் இருந்தது. உங்களுக்காய் கடவுளை இறைஞ்சுகிறேன்.
Delete@Thiruchelvam Prapananth
Deleteமன உறுதியும், நம் காமிக்ஸ் வாசிப்புகளுமே ஒரு பெரும் இக்கட்டிலிருந்து உங்களை மீட்டெடுத்திருக்கிறது என்ற உங்களது வாழ்க்கைப் பாடம் - நம் நண்பர் ராஜசேகருக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக அமையும்!
நான் அவரைப் பார்க்க நேரில் செல்லும்போது உங்களுடைய இந்தப் பின்னூட்டத்தையும், ஒரு மருத்துவராக பிரசன்னா R மது கீழே சொல்லியிருக்கும் அறிவுரைகளையும் நிச்சயம் படித்துக்காட்டுவேன்!
உண்மை பிரபானநத்
Delete🗣""தல"" டெக்ஸின் 70 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக இம்மாதம் வாசகர்களுக்கு கிடைத்த குட்டி 'டைனமைட் ' 😤இந்த விரட்டும் விதி.....!😤
ReplyDelete👄டக்ஸன் நகரில் உள்ள வங்கியில் 2 லட்சம் டாலர் கொள்ளை அடித்ததோடு வங்கி ஊழியர் இருவரை காவு வாங்கி விட்டு கம்பி நீட்டுகின்றனர் ப்ரைன் மர்ரே கும்பல்......
👣டக்ஸனின் ஷெரீப் ரூபர்ட் தனது நண்பர் டெக்ஸிடம் மர்ரே கும்பலை ஒழிக்கும் பொறுப்பு வந்துசேர காசாகிராண்டேவிலிருந்து மர்ரேவை பின்தொடர்கிறார் டெக்ஸ். தலயின் வருகையை அறிந்து அங்கிருந்து தப்பியொடும்போது வழியில் அனபெல் காலேம்ஸ் எனும் பெண்மணியும் அவளது மகளுடன் ஒட்டிக்கொண்டு அடைக்கலமாகிறான் மர்ரே.
😢மர்ரேவின் உதவிக்கு கைமாறாக அனபெல் வயிறுபுடைக்க விருந்தோடு விஸ்கியில் விஷம்கலந்து அவனை கொள்ள முயன்றதோடு இதேபோல் பலர் தன்னுடைய விஷத்திற்கு பலியான கதை சொல்கிறாள்.
💗இருவரூக்கும் இடையிலான போராட்டத்தில் அனபெல்லின் கையிலுள்ள துப்பாக்கி வெடிக்க மர்ரே பலியாகும் போது தல வீட்டின் உள்ளே வர மர்ரே தன்னிடம் தவறாக நடக்க முயன்றான் ஆகவே தற்காப்பிற்காக அவனை கொலை செய்ததாக நாடமாடுகிறாள் .
😳டெக்ஸிற்க்கு விசம் கலந்த விஸ்கியை ஊற்றி தருகிறாள் அனபெல் வழக்கம் போல் தல அதில் விஷம் கலந்திருப்பதை அனபெல் மகளின் முகத்திலோடிய சவக்களையை கண்டு சுதாரிக்க சட்டென்று தன் மகளின் நெற்றியில் தூப்பாக்கியை வைத்து சுட முயல அப்போது மர்ரே கும்பலில் மீந்துபோன ஒருவன் உள்ளேவர டெக்ஸ் சமர்த்தியமாக அனபெல்லை தள்ளிவிட்டு எதிரியை போட்டு தள்ளுகிறார், அனபெல் எதிரியின் துப்பாக்கிக்கு இரையானாள்.
😥பெலிஷியாவை மீட்டு திரும்புகிறார் ""தல"" டெக்ஸ்.....
😃கடுகு சிறுத்தாலும் காரம் குரையாது என்பதாக அளவில் சிறிய கதை என்ற போதும் தல கதையின் அத்தனை அம்சமும் பக்காவாக அமைந்து ஒவ்வொரு பக்கமும் ஜெலட்டின் குச்சியாக சித்திரம் வெடித்து சிதறுகிறது.
😤பக்கம் 4,5 ல் மர்ரே கும்பல் வங்கி ஊழியரை போட்டு தள்ளும் காட்சிகள் ஒவ்வொன்றும் மத்தாப்பூ தோரணம்.
💗பக்கம் 4ல் முதல் கட்டத்தில் துப்பாக்கி வெடிக்கும் காட்சி, பக்கம் 5ல் 4வது கட்டத்தில் வங்கி ஊழியரை கொள்ளையன் சிவப்பு டவலால் முகத்தை மறைத்துக் கொண்டு மிரட்டும்போது வங்கி ஊழியர் வாயிலிருந்து ஒழுகும் ரத்தமும் கண்ணில்தெரியும் மிரட்சியும் 70mm திரையில் 4k technology லே படம் பார்த்த பிரமிப்பு.....
💖பக்கம் 25ல் இரண்டாவது கட்டத்தில் மர்ரே விஷமருந்தி அது வயிற்றில் உள்ளேபோய் தீப்பிடித்து கதற மறுக்கப் கையிலுள்ள கிளாஸ் கீழேவிழுந்து நொறுங்கும் காட்சி அடடா.....
என்ன அற்புதமான சித்தரிப்பு.....
💜அனபெல் அட்டகாசமான விஸ்கி இது என ஊற்றி தலயிடம் தர அதனை கையில் வாங்கிக்கொண்டு பெலிஷியாவை பார்க்க அவள் முகத்தில் தெரிந்த சவக்கலை 4 கட்டத்தில் மர்ரே கையில் கீழேவிழுந்து கொட்டிய விஸ்கி சிதறிய பணத்தினூடாக கலந்து பச்சைநிறத்தில் காட்சிதந்து நான் விஷமாக்கும் என சாட்சி சொல்கிறது.
கதாசிரியருக்கும் ஓவியருக்கும் நல்ல புரிதல் உள்ளதை இவை காட்டுகின்றன.
வாசகர்களுக்கு உண்மையிலேயே தல விருந்தாக அமைந்துள்ளது இந்த விரட்டும் விதி.....!
www.lioncomics.in
பிப்ரவரி லயன் காமிக்ஸ் இனணப்பு இது...
💋யாழிசை செல்வா 💋
03/01/2018
இங்க யாராவது கதையக் கேட்டாங்களா யாழிசை செல்வா சார்..? இப்பிடி சஸ்பென்ஸை உடைச்சா, இன்னும் படிக்காம வெயிட் பண்றவங்க என்ன பண்றது..? சஸ்பென்ஸ் த்ரில்லர் மூவியான ஒரு புதுப்படம் ரிலீஸானதும் அதைப் பார்க்காதவங்களுக்கு முன்னமேயே கதை சொல்ற மாதிரித்தான் இதுவும்... கொஞ்சம் பாத்துப் பண்ணுங்க சார்..!
Deleteநண்பர் ராஜசேகர் விரைவில் குணமடைய
ReplyDeleteஎல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.நமது நண்பர்கள் ஒன்று
கூடி அவருக்கு உதவி செய்யலாம்
என்று நினைக்கிறேன்.ஒருவர் தலைமையில் அவரது வங்கி கணக்கு
விபரம் தளத்தில் அளித்தால் நம்
நண்பர்கள் தங்களால் இயன்ற உதவியை
செய்ய முடியும்.இது நம் கடமை என
நினைக்கிறேன்.
தளத்தில் வங்கி விபரம் வேணாமே. ஈவி கிட்ட போன்ல கேட்டு வாங்கிக்கறது பெட்டரோ?
Deleteஉண்மை நண்பரே
Deleteசிறு துளி பெறுவெள்ளமாக நமது
ReplyDeleteபங்களிப்பு அவரது உடல் நிலையும்
பொருளாதாரநிலையும் முன்னேற
உதவுமாகையால் நண்பர்கள் கரம்
கோர்த்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
ராஜசேகரின் வங்கி கணக்கு விபரம்
ReplyDeleteகிடைத்தால் மிக்க நன்று.
நண்பர் ஈ வி இதனை முன்னெடுத்து
செய்யுமாறு வேண்டுகிறேன்.
ஆம் ஈவி... ப்ளீஸ் டூ திஸ்..
Deleteநன்றி நண்பர்களே! _/\_
Deleteவங்கி விவரங்களை சரியாகச் சொல்லும் நிலையில் நண்பர் ராஜசேகர் இல்லையென்பதால், அவர் வீட்டிலுள்ளவர்களிடம் அவரது வங்கிக் கணக்கு விவரங்களை எனக்கு SMS செய்யும்படி கேட்டிருக்கிறேன். தகவல் வந்ததும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்!
நன்றி ஈ வி.
Deleteஎன்னால் தற்சமயம் வரமுடியாது விஜய். என்னால் முடிந்த உதவியை செய்ய விரும்புகிறேன்.
Deleteநண்பர் விரைவில் குணம் பெற முருகனை வேண்டுகிறேன்.
Deleteடியர்,
Deleteஅன்புள்ள சந்தா அனாமதேயாக்கள் இவருக்கு உதவி செய்வார்களா ?
அல்லது சந்தா இனாமாகப் பெற்ற தன்னிகரற்ற தானைத் தலீவர் தாரை பரணி போன்ற நண்பர்கள் தங்களின் சந்தா பணத்தை உதவி செய்வார்களா ??
# நாமெல்லாம் காமிக்ஸ் குடும்பம்...
அன்புடன்,
உண்மையான யதார்த்தம் மற்றும் உண்மையான அக்கறை _/\_
சந்தா இனாம் பெறா விட்டாலும் என்னால் முடிந்த உதவியை செய்வேன் நண்பரே...
Deleteகவலை வேண்டாம்...
ஆனால் நான் சந்தா இனாம் பெற்று விட்டேன் என்றா மற்ற சந்தா அன்பை பெற்றவர்களை நீங்களும் உங்கள் அன்பு நண்பரும. கொச்சை படுத்தினீர்கள்...என் மேல் தான் எவ்வளவு அன்பு வருந்துகிறேன் ...
உங்கள் அன்புக்காகவே பகிரங்கமாக சத்தம் போட்டு கேட்கிறேன்..
அன்பு அநாமதேய நண்பர்களே ..நான் இந்த முறை அரையாண்டு சந்தாவை மட்டுமே இதுவரை செலுத்தி உள்ளேன்.எனவே மீதம் உள்ள சந்தாவை எனக்காக இல்லாவிட்டாலும் அன்பு நண்பர் உதய் அவர்களுக்காக யாராவது கட்டுவீர்களா நண்பர்களே...
தலீவரே. இந்த தளம்நல்லவர்கள் நிறைந்தது. நல்லதே நடக்கும். செயலாளர் ஏற்கனவே செயலில் இறங்கி விட்டார். அமைதி காப்போம். 🙏🙏🙏🙏
Deleteஒருசிலரை தவிர..( நா என்னைய சொன்னேன்..)உடனே கிளம்பிடாதீங்க , யாருக்குமே புரியாதா மாதிரி பக்கம்....பக்கமா டைப்பிக்கிட்டு....பாவம் மக்கள் எல்லாம் ஆல்ரெடி ஏற்கனவே தலை சுத்திப்போயி இருக்காங்க...
Delete// அல்லது சந்தா இனாமாகப் பெற்ற தன்னிகரற்ற தானைத் தலீவர் தாரை பரணி போன்ற நண்பர்கள் தங்களின் சந்தா பணத்தை உதவி செய்வார்களா ??//
Deleteதலைவா வா தலைவா உன்னைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்,அதெப்டி தலைவா கொஞ்சம் கூட கூச்சபடாம பேசற,யாரு தலைவா எழுதி கொடுத்தா சொல்லு தலைவா,அது சரி இம்புட்டு பேசறியே நீ இன்னா தலைவா பண்ணப் போற,ஆனா ஒன்னு மட்டும் தெரியுது தலைவா நல்லது செய்றோமோ இல்லையோ,வக்கனையா நொட்டை மட்டும் சொல்றிங்க தலைவா.
அன்பு நண்பர்களுக்கு...
Deleteஏற்கனவே ஆசிரியரை வைத்து அரசியல் பண்ணியவர்கள் இப்பொழுது உடல்நிலை சரியில்லா நிலையில் இருக்கும் வாசக நண்பரை வைத்து அரசியல் பண்ண நினைக்கும் பொழுதே இவர்களின் மன அழுக்கு புரிந்து விடுகிறதே ...
என் பொருட்டு இந்த அன்பு நண்பருக்கு பதில் சொல்லி ஆசிரியரை நாம் மீண்டும் அந்த சூழலுக்கு கொண்டு செல்ல வேண்டாம்..ப்ளீஸ்..
பரணிதரன்...நச்
Delete@ தலைவர்.
Delete+1
அன்பு நண்பர்களுக்கு...
Deleteஏற்கனவே ஆசிரியரை வைத்து அரசியல் பண்ணியவர்கள் இப்பொழுது உடல்நிலை சரியில்லா நிலையில் இருக்கும் வாசக நண்பரை வைத்து அரசியல் பண்ண நினைக்கும் பொழுதே இவர்களின் மன அழுக்கு புரிந்து விடுகிறதே ...
என் பொருட்டு இந்த அன்பு நண்பருக்கு பதில் சொல்லி ஆசிரியரை நாம் மீண்டும் அந்த சூழலுக்கு கொண்டு செல்ல வேண்டாம்..ப்ளீஸ்..
உதய குமார்... திருந்துங்க சார்... இப்பத்தான் இங்கதான் இதைக் காட்டணுமா..? ச்சே...
Deleteநண்பர் ராஜசேகர் விரைந்து குணம் பெற நம் அன்பு!
Delete@ஈவி, கணேஷ்,
உங்கள் உதவும் குணத்துக்கும் நம் அன்பு. வங்கி எண்ணை வெளியிடாமல் இருந்ததற்கு அப்பாடா.! பொது வெளியில் வங்கி எண்ணை வெளியிட்டு பணம் சேகரிப்பது, இன்னொருவருக்காக நம் கணக்கில் சேகரிப்பது போன்ற நடவடிக்கைகள் பல சிக்கல்களை உண்டாக்கும். நோக்கம் சிறப்பானதாக இருந்தாலும் நேர்மை குறித்தான கேள்விகள், சந்தேகங்கள்ம, அரசியல் மட்டுமல்லாது சட்ட சிக்கல்கள் வரை நேரும். 15 ஆண்டுகள் இணைய அனுபவத்தில் நிறைய பார்த்தாயிற்று. உதவ மனமிருப்பவர்கள் நேரடியாக பயனாளர் எண்ணுக்கு அனுப்புவது மட்டுமே சிறப்பு. அதுவும் இப்போது நீங்கள் செய்வது போல ஆன் ரிக்வஸ்ட் இருப்பது நலம். ஆர்வத்தில் இதைத் தாண்டி சென்றிட வேண்டாம்.
நண்பர் ராஜசேகர் விரைவில் பூரண நலம் பெற மனதார வேண்டுகிறேன்..
ReplyDeleteநானும் மனதார நாராயணனை வேண்டுகின்றேன்.
Deleteநண்பர் ராஜசேகர் விரைவில் பூரண நலம் பெற மனதார வேண்டுகிறேன்.
ReplyDeleteநண்பர் ராஜசேகர் விரைவில் பூரண நலம் பெற மனதார வேண்டுகிறேன்
ReplyDeleteமுகமறியா நண்பர் ராஜசேகர் விரைவில் குணமடைய எம்பெருமான் முருகனை வேண்டுகிறேன்.
ReplyDeleteநண்பர் கரூர் ராஜசேகரின் வங்கிக் கணக்கு விவரங்கள் கிடைக்கப்பெற்றன நண்பர்களே! நம் நண்பர்களில் யாருக்கேனும் உதவி தேவைப்படும்போது மற்ற நண்பர்கள் ஓடிவந்து உதவுவது மொத்த காமிக்ஸ் உலகிற்கும் பெருமை சேர்க்கிறது. தொடர்ந்து நிறைய நண்பர்கள் அவரது நலம் குறித்து விசாரிப்பதும், தங்களால் இயன்றதை செய்து உதவ முன்வருவதும் இன்று மதியத்திலிருந்தே தொடர்ந்து நடந்துவருகிறது!
ReplyDeleteஇந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க! _/\_
அவருடைய வங்கி அக்கெளண்ட் நம்பர் விவரங்கள் தேவைப்படும் நண்பர்கள் 7598325050 என்ற என்னுடைய நம்பருக்கு ஒரு SMS அல்லது WhatsApp செய்யுங்களேன் ப்ளீஸ்? (அல்லது vijay_muns@yahoo.com க்கு ஒரு மெயில் தட்டிவிட்டாலும் சரிதான்!)
Dear ராஜசேகர்! CVA ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளின் உதவியைவிட மனத்துணிவே பழைய நிலையை அடைய உதவும். Do not give up ur faith in you. பல்வேறு பக்கவாத நோயாளிகள் தாமாகவே பழைய நிலையை அடந்ததை நேரே கண்டவன் நான். சில மாதங்களிலேயே உங்களால் பழைய நிலையை அடைய முடியும். ஆவணியில் நீங்கள் நடந்து வருவதைக்காணமுடியம் என நான் நம்புகிறேன் !
ReplyDeleteGet well soon!
Dear vijayan sir,
ReplyDeleteWe are happy to be among with your comics community...
No one satisfy all. If this apply for a common man, how much sure it is for a leader like you. So take care of yourself... if anyone stand against you, they didn't know the other side fully. Even if any of our post hurts you, i feel sorry for that.. We love you and always want to be with your decision whenever possible.
Cheers
With love
Udhay
******* என் நண்பேன்டா *******
ReplyDeleteசில வருடங்களுக்கு முன்பு நண்பர் கார்த்திக் சோமலிங்காவின் மொழிபெயர்ப்பில் 6 பக்க குறுங்காமிக்ஸாக நம் இதழில் வெளியாகி நம்மை கெக்கேபிக்கே செய்த அதே கதை (ஒரு ஒட்டகத்தின் கதை?) - இப்போது முழுநீள கதையாக - தேவையான ரணகள மாற்றங்களோடு - ரின்டிட்கேனை இணைத்துக்கொண்டு - வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்திருக்கிறது!
கதையின் பின்னணி : பரந்த பாலைவனப் பரப்புகளினூடே ராணுவத்தில் பொதி சுமக்கும் பணிகளுக்கு மட்டக்கழுதைகளை விட ஒட்டகங்கள் தோதானவை என்று அமெரிக்க அரசாங்க மேலிடம் முடிவு செய்கிறது - அதைத்தொடர்ந்து ஒட்டகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இராணுவக் கோட்டைகளுக்கு அனுப்பப்படுகின்றன. குதிரைச் சவாரிகளுக்கே பழக்கப்பட்டுப்போயிருந்த இராணுவ வீரர்களோ ஒட்டகங்களிடமிருந்து வரும் சகிக்கமுடியாத நாற்றம், அவற்றின் மந்தபுத்தி, கீழ்ப்படியாமை ஆகியவற்றால் கடுமையான பாதிப்புக்குள்ளாயினர் - சிலபல வருடங்களுக்குப் பிறகு ஒட்டகத் திட்டம் படுதோல்வியடைந்ததை அரசாங்கமே ஒப்புக்கொண்டபிறகு, இறுதியில் அந்த ஒட்டகங்கள் சர்க்கஸ் கம்பெனிகளுக்கு சல்லீசு விலைகளில் விற்கப்பட்டனவாம்! இது 1850களில் நடந்த உண்மைச் சம்பவம்!
நமது 'நால்கால் ஞானசூன்யா' ரின்டின்கேன் காவல் பதவி வகிக்கும் சிறைச்சாலைக்கு புதிதாய் ஒரு ஒட்டகம் சாங்ஷன் ஆக, அதை யுமா கோட்டையிலிருந்து அழைத்துவரும் பொறுப்பு ரின்டின்கேனிடமும், அதன் பராமளிப்பாளர் பாவ்லோவுக்கும் வந்துசேருகிறது! யுமா கோட்டைக்குச் செல்லும் வழியில் ரின்டின்கேனின் சோலோ அதகளமும், யுமா கோட்டையிலிருந்து திரும்பும் வழியில் ஒட்டகத்துடன் (பெயர் - பச்சோலி. சுருக்கமாக 'பச்சி') இணைந்து ரின்டின்கேன் செய்யும் ரணகளமும் தான் மீதக் கதை!
வயிறுகுலுங்க சிரித்த வசனங்கள் ஏராளம் - அவையெல்லாம் அவ்வப்போது இங்கே!
என்னுடைய ரேட்டிங் : 10/10
// மொழிபெயர்ப்பில் 6 பக்க குறுங்காமிக்ஸாக நம் இதழில் வெளியாகி நம்மை கெக்கேபிக்கே செய்த அதே கதை //
Deleteஅப்படியா. படித்தது மறந்து விட்டது. அந்த புத்தகத்தை தேடி எடுத்து படிக்கப் போகிறேன்.
உண்மை சம்பவத்தை பற்றிய தகவல்கள் அருமை.
வழக்கம்போல சனி இரவில் காத்திருக்கும் படலம் தொடர்கிறது
ReplyDeleteஇன்னும் சற்று நேரத்தில் அலாரம் வைத்து எழுந்து, கோழியே தன் கூவும் வேலையைத் தொடங்கவிருக்கிறது. இதற்கு மேலுமா பதிவு வந்துவிடப் போகிறது? போய் தூங்கற வழியப் பாருங்க ஷல்லூம்! க்கும்!!
Deleteதூக்கம் வரல ஈசேலி பூனையாரே
Deleteவரும் பதிவு கண்டிப்பாக வரும், காலை உணவிற்கு பிறகு.
Delete'காலை உணவுக்குப் பிறகுதான் பதிவு வரும்'னு நீங்க சொன்னதுனால, நம்ம நண்பர்களில் பலர், விடிஞ்சும் விடியாததுமா பல்லுகூட விளக்காம இப்பவே பழைய சோற்றை எடுத்து வச்சு விழுங்கிக்கிட்டிருக்காங்களாம்!
Deleteஆனாலும் நம்ம ஆளுங்க ஞாயிறு பதிவுக்கு இம்புட்டு அடிமை ஆகியிருக்கக்கூடாது தான்! மொச் மொச் க்ளக்!
பதிவு எனக்கு சனி மதியம் அல்லது மாலை வரும். அட்டெனடன்ஸ் போட்டுட்டு ஒஉ தடவை படிச்சுட்டு தூங்கப் போற முன்னாடி ஒருக்கா படிச்சுடுவேன். ஞாயித்துக்கிழமை காலைல எழுந்து அப்படியே பின்னூட்டங்களை மேஞ்சுட்டே காபியோ டீயோ உறிஞ்சுவேன்.
Deleteகாத்திருப்புகள் பிரார்ததனைகளாக மாறி ஆசிரியரின் உடலுக்கும் மனதுக்கும் உரமாக மாறட்டும். நிழலின் அருமை உணர வெயில் வேண்டும்.
@ MP
Deleteமேலே 'பின்னூட்டங்களை'ன்றதை 'புல்பூண்டுகளை'ன்னு படிச்சுத் தொலைச்சுட்டேன் ஹிஹி! ;)
இன்னிக்கு மட்டனுக்கு வீட்ல உங்களை பூண்டு உறிக்கவைச்சுட்டாங்களாட்டு இருக்கு.
Delete\\பின்னூட்டங்களை'ன்றதை 'புல்பூண்டுகளை'ன்னு படிச்சுத் தொலைச்சுட்டேன்// - ஹா ...ஹா...
Deleteஅப்பாடி ஈவி பேக் டூ ஃபார்ம்...
மஹி ஜி @ டைமிங் செம...
ReplyDeleteஅனைவருக்கும் காலை வணக்கம் . இத்தனை நாள்பதிவு பதிவு வரும் என தெரியும் உறுதியாக, எனவே காலை எழுந்து பார்ப்பேன். 6 மணி ஆச்சே பதிவு ஏதும் வந்துள்ளதா என பார்க்க ஆவலுடன் எழுந்து பார்க்குறேன்.....
காத்திருப்போம் விடியலை நோக்கி....
நண்பர்களே ...ஆசிரியரின் புது பதிவு ரெடி என்று எப்பொழுது பதிவிடுவீர்கள் செயலரே...:-(
ReplyDeleteநம்ம 'சி.சி.வ' போராட்டம் மாதிரியே 'பு.ப.வ' (புது பதிவு வரணும்) போராட்டத்தையும் ஆரம்பிக்க வேண்டியிருக்கும் போலிருக்கே தலீவரே!
Deleteஅந்த போராட்டம் எல்லாம் வேலைக்கு ஆவாது செயலரே...பாத்துட்டு தானே வரோம்...
Deleteஅதனால் புது பதிவு வற்ரவரைக்கும் நான் இன்னிக்கு என் வீட்ல சாப்பிட போறதில்லை...:-)
புது பதிவில் தான் பது இதழ்களை பற்றி விமர்சனம் பதியவேண்டும் என்று என்னை போல் எத்தனை பேர் காத்திருக்கிறார்களோ...:-(
ReplyDeleteஆசிரியரின் பதிவு இல்லாமல் இந்த ஞாயிறு உற்சாகமிலந்திருக்கிறது
ReplyDeleteஎடிட்டர் சார்... ஒரு ஐடியா! புதுப் பதிவுக்கான விசயங்களை நீங்க கம்ப்போஸ் பண்ணி வச்சுட்டு, சீனியர் எடிட்டரைக் கூப்பிட்டு பப்ளிஷ் பட்டனை அழுத்தச் சொல்லிடுங்க. சீனியர் எடிட்டர் பதிவு போட்டமாதிரியும் ஆச்சு... 'நான் பதிவு எதையும் போடலேப்பா'ன்னு நீங்க அப்படியே மெயின்ட்டெய்ன் பண்ணா மாதிரியும் ஆச்சு! ன்னான்றீங்க? :D
ReplyDelete��
ReplyDeleteஇன்னும் பதிவு வரவில்லையே
ReplyDelete😔😔😔😔😔😭😭😭😭😭
ஆசிரியர் பதிவு போடற வரைக்கும் நான் கதை சொல்லிட்டு வருவேனாம்...அதை ஆசிரியர் மட்டும் புது பதிவு போட்டுட்டு தான் வந்து படிக்கனும் சொல்லிபுட்டேன் சார்..
ReplyDeleteஅப்புறமா ஒரு முக்கிய குறிப்பு ..அந்த கதை எல்லாம் என் சொந்த கற்பனை அல்ல..இரவல்...அதுக்கும் பஞ்சாயத்து வச்சு திரும்ப ஆசிரியரை ரிவர்ஸ் நடை போட வச்சுறாதீங்க என் உயிர் நண்பர்களே..:-(
கதை சொல்வதற்கு முன்...
ReplyDelete*மிக நன்றாக வேலை செய்யும் இயந்திரம் உண்டாக்கும் சத்தம் பொதுவாக மிகக் குறைவாகவே இருக்கும்.*
அதன் இயங்கும் திறன் *குறைவுபடும் போதுதான் சத்தம் அதிகரிக்கத் துவங்கும்.*
பழுதுபடும் நிலையில் *சத்தம் மிக அதிகமாகும் !*
*~இது இயந்திரங்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும்.~*
நிறைய சாதித்தவர்கள், சமுதாயத்தில் தங்கள் தடங்களைப் பதித்தவர்களின் வாழ்க்கையை கவனித்தால் அவர்கள் *ஓயாமல் பேசுபவர்களாக இருப்பதில்லை !*
_'நான் இப்படி செய்யப் போகிறேன்', 'நான் அப்படி சாதிக்கப் போகிறேன்' என்றெல்லாம் வாய் கிழிய சொல்லிக் கொண்டு இருப்பதில்லை._
வம்பு பேசுபவர்களாகவோ அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அலசுபவர்களாகவோ, விமரிசித்து மகிழ்பவர்களாகவோ இருப்பதில்லை.
_அவர்களுக்கென்று வாழ்க்கையில் குறிக்கோள் இருக்கிறது._
_அதில்தான் அவர்களுக்கு முழுக்கவனமும், உற்சாகமும் இருக்கிறது. அவர்களிடம் தேவையற்ற பேச்சுகளுக்கு நேரமோ, எண்ணமோ இருப்பதில்லை._
எதிலும் நமது முழுத் திறமை வெளிப்பட வேண்டுமானால் *மனதை ஒழுங்குபடுத்தி, அனைத்து சக்திகளையும் நாம் ஒருமுகப்படுத்த வேண்டும்.*
மௌனம் நமது சக்தியை சேமிக்க உதவுகிறது.
எனவே முதலில் *நமக்கும் மற்றவர்களுக்கும் பயன்தராத தேவையில்லாத பேச்சுகளை குறைத்துக் கொள்வோம்.*
_இது பல பிரச்சினைகளை தவிர்க்கவும், நம்மைச் சுற்றி ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கவும் பெரிதும் உதவும்._
*ஒரு பெரும் சூறாவளியின் சகல சக்திகளுக்கும் மூலம் அதன் அமைதியான மையத்தில் இருப்பது போல* எல்லா சாதனைகளையும் புரியத் தேவையான
*மகா சக்தியை நம்முள்ளே பிறக்கும் அந்த மௌனத்தில் நாம் காண முடியும் ....
@ஈவி, கிஆக,
Deleteசேந்தம்பட்டியானந்தா ஆஸ்ரமம் அமைக்கவும், வழிநடத்தவும் கை வசம் ஒரு நல்ல பீசு இருக்குனு இதுவரை சொல்லாம விட்டுட்டீங்களே.. :-))))))))
சூப்பர்் நண்பரே
Delete.சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கதை சொல்லி சாப்பிட வைக்கும் நிலை போல வந்து விட்டதே என்னமோ போங்க சார்..சரி கதைக்கு போவோம்...:-)
ReplyDeleteஅலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில் செல் ஒலித்தது.
"ஏங்க உங்க வைத்தி மாமா வந்திருக்கார். உங்களைப் பார்க்கணும்னு காத்திக்கிட்டுருக்கார். எப்ப வருவீங்க?" மனைவி தான் பேசினாள்.
"அந்த ஆளை நல்லா நாலு கேள்வி கேட்கணும். சரி.. சரி வை. பத்து நிமிஷத்தில் வந்துடுவேன். நேர்ல பேசிக்கிறேன்"
யாரைப் பார்த்து நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்க வேண்டுமென்று இந்தப் பத்து வருடங்களாக நினைத்துக் கொண்டிருந்தேனோ, அந்த மனுஷனே வீடு தேடி வந்திருக்கார். அன்றைக்கு அவர் பேசின பேச்சை நான் இன்னும் மறக்கவில்லை.
பி.ஏ படித்து விட்டு சும்மா இருந்த நேரம்.
"என் ஒண்ணுவிட்ட அண்ணன், மந்திரிக்கு பர்சனல் செக்ரட்டரியா இருக்கான். அவன்கிட்ட ஒரு வார்த்தை சொன்னாப் போதும். உடனே உனக்கு வேலை வாங்கிக் கொடுத்துடுவான்"னு சொல்லி அம்மாதான் என்னை இந்த வைத்தி மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
என்னை ஒரு புழுவைப் போலப் பார்த்து, "என்ன படிச்சிருக்கே?" என்றார் மாமா.
"பி.ஏ"
"பி.ஏ படிச்சிட்டா பெரிய மேதாவின்னு நெனைப்பா? அந்தக் காலத்துல நாங்க படிச்ச எஸ்.எஸ்.எல்.சி.க்கு ஈடாகுமா ஒங்க பி.ஏ? இந்தக் காலத்துப் பசங்க ஒடம்பு நோகாம யார் சிபாரிசுலயாவது வேலை கெடைக்காதானு அலையுதுங்க. தெனம் நாலு பேர் தங்களோட புள்ளைங்களை அழைச்சுக்கிட்டு சிபாரிசு கேட்டு வர்றானுங்க. சரி. சரி. ஒன்னோட
பயோ டேட்டாவைக் கொடுத்துட்டுப் போ. பார்க்கிறேன்" என்றார் அலட்சியமாக.
ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது எனக்கு. அதற்குப் பிறகு எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டுப் படித்து படிப்படியாக முன்னேறி இப்போது வங்கியில் பெரிய பொறுப்பில் இருக்கிறேன்.
இப்ப எந்த மூஞ்சை வைச்சுக்கிட்டு என்னைப் பார்க்க வந்தீங்கன்னு கேட்கணும்....வீடு வந்ததும் சிந்தனை தடைபட்டது.
"வாங்க மாமா, எப்படியிருக்கீங்க?" என்னையும் அறியாமல் வெளிவந்தன வார்த்தைகள்.
"ஏதோ இருக்கேம்பா. ஒன் மாமி பூவும் பொட்டுமா மகராசியா போய்ச் சேர்ந்துட்டா. நான் தான் தனியா கெடந்து தவிக்கிறேன். எத்தனை நாளைக்கு இப்படியிருந்து கஷ்டப்படணும்னு என் தலையில எழுதியிருக்கோ தெரியல.
பையனும் சரியில்லை. பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு என்னைக் கவனிக்கிறதில்லே. வர வர கண்ணும் சரியாத் தெரிய மாட்டேங்குது. ஆப்ரேஷன் பண்ணலாம்னா கொஞ்சம் பணம் கொறையுது. அதான் ஒன்னைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். ஆயிரம் ரூபாய் கடனாக் கொடுத்தீன்னா, கொஞ்ச நாள்ல திருப்பிக் கொடுத்துடுவேன்" என்றார் மாமா கெஞ்சும் குரலில்.
என் மனதில் இருந்த ஆணவக்கார மாமாவுக்கும் இவருக்கும் துளியும் சம்பந்தமில்லாதது போல் தோன்றியது.
சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து, "இந்தாங்க மாமா, கடனா வேணாம். நான் கொடுத்ததாவே இருக்கட்டும்" என்று சொல்லி ஆயிரம் ரூபாயை அவர் கையில் கொடுத்தேன்.
"ரொம்ப சந்தோஷம்பா. குணத்துல அப்படியே என் தங்கச்சியை உரிச்சி வைச்சிருக்கே. பெண்டாட்டி புள்ளக்குட்டிகளோட நல்லா இருக்கணும்பா நீ"
முகம் மலர வாழ்த்தி விட்டு விடை பெற்றார் மாமா.
"நீங்க வந்தவுடனே சண்டை போட்டு அவரை வெளியே அனுப்பிடு வீங்களோன்னு பயந்துக்கிட்டிருந்தேன். நீங்க என்னடான்னா, அவரை வாய் நிறைய வாங்க மாமான்னு வரவேத்த தோடல்லாம, பணமும் கொடுத்தனுப்புறீங்க. உங்களைப் புரிஞ்சுக்கவே முடியல"
"வீட்டுக்கு வர்ற வரைக்கும் என்னென்னவோ கேட்கணும்னு நெனைச்சுக் கிட்டு தான் வந்தேன். ஆனா வீட்டுக்கு வந்தவங்க விரோதியா இருந்தாலும், வாங்கன்னு சொல்லணும்னு அம்மா அடிக்கடி சொல்லு வாங்க. அந்தப் பழக்கத்துல வாங்க மாமான்னு சொல்லிட்டேன்.
உடம்பும் மனசும் தளர்ந்து போய் வந்திருக்கிற ஒரு முதியவர்கிட்டப் போய் பழசைக் குத்திக் கிளறி அவமானப் படுத்தறது மனிதாபிமானம் இல்லன்னு தோணிச்சு. மேலும் அன்னிக்கு அவர் பேசின பேச்சு தான், எனக்குள்ள ரோஷத்தைக் கிளப்பி இந்தளவுக்கு என்னை முன்னேற வெச்சது.
உழைப்பே உயர்வு தரும்னு போதிச்சதுக்கு நான் தந்த ’டியூஷன்’ பணம் தான் இந்த ஆயிரம் ரூபாய்," என்றேன் புன்னகையுடன்.
அப்ப விமர்சனத்தை இந்த பதிவில் தான் இட வேண்டுமா...:-(
ReplyDelete