நண்பர்களே,
வணக்கம். So far…so good என்பேன் ! நான் குறிப்பிடுவது ஆண்டின் துவக்க இதழ்களது செயல்பாடுகள் பற்றியே என்பது நிச்சயம் புரிந்திருக்கும் ! வருஷத்தின் ஆரம்பம் அழகாய் அமைந்தால் தொடரும் மாதங்கள் பின்தங்கிடாது என்ற நம்பிக்கையை 2017 நமக்கு ஊட்டியது ! சத்தமின்றி யுத்தம் செய்தவர் போன வருடத்தை அதகளப்படுத்த உதவியதையும், அதைத் தொடர்ந்த நாட்களில் கியர்களை ‘சட் சட்‘டென்று மாற்றி வேகத்தை அதிகப்படுத்த முடிந்ததையும் மனசு வாஞ்சையோடு நினைவு கூர்கிறது ! இம்முறையோ அந்தப் பொறுப்பை ஆணழகர் தோர்கல் கையில் எடுத்திருக்கிறார் ! பார்க்கலாமே – எஞ்சி நிற்கும் 11 மாதங்களும் நமக்கென்ன கைவசம் வைத்துள்ளதென்பதை !
ஹார்ட்கவர் தோர்கலும், ஆல்பம் சைஸிலான கிராபிக் நாவலும், பாக்கெட் சைஸிலான ஸ்பைடரும், முதல் பார்வையிலேயே கவனங்களை தம் பக்கம் ஈர்த்திடுவர் என்பது புரிந்தாலுமே – எனக்குள் ஒரு சன்னமான பகுதியானது “பிறந்த நாள் பிள்ளை” மீதே லயித்து நின்றது ! "‘தல‘ பற்றிய கவலை ஏனோ???" என்று தோன்றலாம் தான் – ஆனால் 2017 நம் மத்தியில் அவருக்கொரு மித வருஷம் என்பதில் என்னளவில் ஐயமில்லை ! முத்தாய்ப்பாக – “அழகாய் ஒரு அராஜகம்” ரொம்பவே சுமாரானதாய் நமக்கு அமைந்திட, சென்றாண்டுக்கு டெக்ஸ் விடைதந்த விதத்தில் எனக்கு ரொம்பவே சங்கடமிருந்தது ! சகலத்தின் மூலகாரணமும் எனது கதைத்தேர்வுகளே என்பது அப்பட்டமாய் புரிந்த போது கையை நிறையவே பிசையத் தான் வேண்டி வந்தது ! வித்தியாசமான களங்களில் நம்மவர் உலவிட வேண்டுமென்ற வேகத்தில் தான் “ஆவியின் ஆடுகளம்”; “அராஜகம் அன்லிமிடெட்”; “வெறியனின் தடத்தில்”; “கவரிமான்களின் கதை”; “அழகாய் ஒரு அராஜகம்” எல்லாமே தேர்வாயின ! ஆனால் களங்களில் வேறுபாடு தென்பட்டாலும், கதைகளில் வீரியம் குறைவாய் இருப்பின், ரிசல்ட் சுகப்படாது என்பதை சென்றாண்டு சுட்டிக் காட்டியது ! “அட மடப் பயலே… என்ன தான் தலைவர் காமெடி பண்ணினாலும்; குணச்சித்திர ரோல்கள் பண்ணினாலும் – நாம் ஏங்குவதெல்லாம் அந்த ‘பாட்ஷா‘வுக்குத் தானே?” என்று கொஞ்சம் லேட்டாக ஞானோதயம் புலர்ந்த போது – நமது ‘தல‘யிடமும் நாம் எதிர்பார்த்திடுவது அந்தத் தெனாவட்டு ஸ்டைலையும் தெறிக்கும் அதிரடிகளையும் தானே ? என்று புரிந்தது. So நடப்பாண்டின் கதைகள் சகலத்திலும் அந்த ‘டெக்ஸ் டிரேட்மார்க்‘ நிச்சயம் இருந்திட வேண்டுமென்று தீர்மானித்தேன் !
பரிச்சயமான அதே ரயில் தண்டவாள போட்டிச் சண்டைகள் சார்ந்த கதையா ? படித்துப் பழகிய கொலைவெறியர்கள் வேட்டையா? பல முறை ரசித்துள்ள செவ்விந்திய சீற்றங்கள் பற்றிய சாகஸமா ? No problems at all...வரணும்… வரணும்… அவசியம் வரணும் என்று சொல்லி வைத்தேன் ! அவற்றின் துவக்கப்புள்ளியாக வருஷத்தின் முதல் Tex சாகஸமே அனல் பறக்க அமைந்திட வேண்டுமே என்ற ஆர்வம் முன் எப்போதையும் விட இம்முறை அதிகமிருந்தது ! அதுவும் Tex–ன் ஆண்டு # 70 இது எனும் போது, சொதப்பல்களுக்கு இடம் தந்திடலாகாதே என்ற பீதியும் உலுக்கி எடுத்தது ! அந்த வகையில் ஜனவரியில் நான் விரல்களைக் குறுக்கியபடியே காத்திருந்த காரணங்களுள் “ஒரு கணவாயின் கதை” பற்றிய அக்கறையும் பிரதானமானதே ! அட்டைப்படத்தில் ஆரம்பித்து, சூறாவளி ஆக்ஷனோடும், சித்திர ரம்யத்தோடும் டெக்ஸ் & கார்சன் பயணிப்பதை நீங்கள் ரசிக்கத் தொடங்கிய போது தான் இழுத்துப் பிடித்த மூச்சை லேசாக விட முடிந்தது எனக்கு ! விராட் கோஹ்லியாகவே இருந்தாலும், நாலு சுமாரான இன்னிங்ஸ்க்கு அப்புறமாய் களமிறங்கும் போது நெஞ்சம் 'படக்' 'படக்' என்று நமக்கு அடிக்கத் தானே செய்யும்?
And பிப்ரவரியின் காத்திருக்கும் “வெண்பனியில் செங்குருதி” இதே டெம்போவில் தடதடக்கும் இன்னொரு TEX எக்ஸ்பிரஸ் என்பேன் ! இம்முறையும் கார்சன் சளசளத்துக் கொண்டே கூட வர, இந்த சாகஸ ஜோடி கனடாவின் பனிமண்டலத்தினில் ஒரு வேட்டையை அரங்கேற்றுகிறது! மீண்டும் கதாசிரியர் மௌரோ போசெல்லி தான் ! So நல்லதொரு ஆரம்பத்தை அழகாய் முன் எடுத்துச் செல்ல இந்த ஆல்பம் நிச்சயம் உதவும் என்பேன் ! “கணவாயின் கதை”க்கும் சரி, காத்திருக்கும் அடுத்த இதழுக்கும் சரி, 2 ஒற்றுமைகளை உள்ளன! இரண்டுக்குமே கதாசிரியர் போசெல்லி தான் என்பது மட்டுமன்றி – இரண்டுமே சமீபப் படைப்புகளே! “கணவாயின் கதை” போனெல்லியின் TEX லிஸ்டில் 614 & 615 ! & “வெண்பனியில் செங்குருதி” - 544 & 545 ! So தற்போதைய Tex எடிட்டர்கள் டெக்ஸுக்கென current-ஆக என்ன பாதை நிர்ணயம் செய்துள்ளார்களோ – அதனை நாமும் பின்தொடர்ந்து பார்ப்பதில் தப்பில்லை என்று தோன்றுகிறது ! Your thoughts guys ?
Looking around – டெக்ஸின் 70-வது ஆண்டுக் கொண்டாட்டம் இத்தாலியில் முழுவீச்சில் துவங்கியுள்ளது. அங்குள்ள முக்கிய இத்தாலிய தினசரி செய்தித்தாளோடு கூட்டணியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நமது ரேஞ்சரின் டாப் சாகஸங்களுள் ஏதேனுமொன்று வண்ணத்தில், ஹார்ட் கவரில் நியூஸ்பேப்பரோடே விற்பனைக்கு வருகிறது ! இலவசமாயல்ல – ஆனால் சகாயமானதொரு விலையில் ! இது பற்றாதென்று ஒரு பருமனான ஸ்டிக்கர் கலெக்ஷனும் வாசகர்களுக்கென அதே நியூஸ் பேப்பரோடு கிடைத்திடும் ! ஓவியர் க்ளாடியோ வில்லாவின் அட்டகாசமான அட்டைப்பட டிசைன்கள் ஸ்டிக்கர்களாக வழங்கப்பட, ஒரு ஆல்பத்தில் அவற்றை ஒட்டிப் பத்திரப்படுத்திக் கொள்ளலாம் ! சூப்பரான ஐடியாவாகத் தான் படுகிறது ! நாமும் இதனை நடைமுறைப்படுத்திப் பார்க்க முனைவோமா guys?
கௌபாய் உலகின் சேதிகள் இன்னும் முடிந்தபாடில்லை என்பேன் ! And இதுவுமே ஒரு செம சுவாரஸ்யமான தகவல் ! ஓசையின்றி நம்மையெல்லாம் வீழ்த்திய திருவாளர் ட்யுராங்கோவின் படைப்பாளி Yves Swolfs-ஐ ஞாபகமிருக்கும் தானே ? ஒரு இடைவெளிக்குப் பின்பாய் மனுஷன் இன்னமுமொரு அட்டகாச கௌபாய் தொடரை உருவாக்குவதில் முனைப்பாக உள்ளார் ! ‘LONESOME” என்ற பெயரில் ட்யுராங்கோவின் கதை / சித்திர பாணியிலேயே இந்தப் புதுத் தொடரை தயார் செய்துள்ளார் ! வெகு சீக்கிரமே வண்ணத்தில் வெளியாகவுள்ளது – இதன் ஆல்பம் # 1! பாருங்களேன்:
இதற்கான விபரங்களை; டிஜிட்டல் கோப்புகளைக் கோரியுள்ளோம் பரிசீலனை செய்திட ! பரபரப்பான கதையாக இருந்து – one shot களாகவும் இருக்கும் பட்சத்தில் இவரையும் தமிழ் பேச வைத்து விடலாமா ? அல்லது ட்யுராங்கோ முற்றுப் பெறும்வரைக்கும் பொறுமையே பெருமை சேர்க்குமா ? What say all?
பழசு – புதுசாகும் படலம் இன்னொரு நாயகரின் விஷயத்திலுமே அரங்கேறி வருகிறது ! நமது சாகஸ வீரர் ரோஜரின் புதுயுக அவதார் – இரு வெற்றிகரமான ஆல்பங்களில் தொடர்கிறதாம் ! நம்மளவில் இவர் ஒரு ஓ.கே. நாயகரே என்றாலும் ஐரோப்பாவில் இவருக்கென்றே ஒரு கணிசமான ரசிகர் base உள்ளது ! பழசை சிலாகிக்கும் அவர்கள் இந்தப் புது பாணிக்குமே ‘ஜே‘ போட்டுள்ளாகள்! பாருங்களேன் !
புது பாணி artwork ; கதையோட்டத்தில் வேகம் - என்று இந்த இரு ஆல்பங்களுமே doing well என்று கேள்விப்பட்டேன் ! நாமும் இந்த ரோஜர் 2 .0 க்கு சிகப்புக் கம்பளம் விரிக்கலாமா ? அல்லது போட்ட ரெட் கார்டு - போட்டது தானா ? என்ன நினைக்கிறீர்கள் ?
And பிப்ரவரியின் மறுபதிப்பு நாயகர் இவரே என்பதால் – இதோ அவரை நாம் முதன்முதலாய் பரிச்சயம் செய்து கொண்ட இதழின் new look ராப்பர் !
இது தான் ஒரிஜினல் டிசைன் என்பதால் பட்டி – டிங்கரிங் ஏதுமின்றி அப்படியே பயன்படுத்தியுள்ளோம். கதையின் எழுத்துரு நமது 1986-ன் அட்டைப்படத்திலிருந்து இரவல் வாங்கியது ! மாதா மாதம் நமது மும்மூர்த்திகளும் ஸ்பைடர் சாருமாய் ஆக்ரமித்து வந்த மறுபதிப்பு slot-கள் வண்ண நாயகர்களின் ஸீட்டாக இடம்மாறும் நேரத்தை நெருங்கி விட்டதென்பதைப் பறைசாற்றும் ஒரு ஜாலியான வேளையாகவும் இதைப் பார்த்திடலாம் ! “மர்மக் கத்தி” உங்களுக்கு முதல் வாசிப்பெனில் – நிச்சயம் அந்த க்ளைமேக்ஸ் புருவங்களை உயரச் செய்யும் - திகைப்பில் !
புது ஆல்பங்கள் பற்றிய சேதிகளில் இருக்கும் போது – நமது ஆதர்ஷ மதிமுகப் பெண்மணி பற்றி ! (வை.கோ. அவர்களின் ம.தி.மு.க. கட்சியில்லை சாமி!!) இதோ வெகு சமீபமாய் வெளியாகி சூப்பராக விற்பனையாகி வரும் Lady S –ன் ஆல்பம் # 13-ன் preview ! 2014 முதலே இத்தொடரிலிருந்து கதாசிரியர் வான் ஹாம் (thank you radja sir !!) ஓய்வு பெற்று விட, இங்கேயும் ஓவியராக இருந்து வந்த அய்மண்ட் – கதாசிரியரின் தொப்பியையும் சேர்த்து இப்போது அணிந்து கொண்டிருக்கிறார் ! இது அவரது மூன்றாவது படைப்பு என்ற போதிலும், இதுவே அவரது best என்கிறார்கள் ! வரும் நாட்களில் ஒரு “மதிமுக ஸ்பெஷல்” போட்டு விடலாமா ?? – என்ற சொல்கிறீர்கள் ?
மீண்டும் சந்திப்போம் all ! ஜனவரியின் விமர்சனங்கள் இன்னமும் தொடர்ந்திடலாமே ?
And சந்தாப் புதுப்பித்தல்கள் இன்னமும் தொடர்ந்தால் அற்புதமாகயிருக்கும் ! Please do join in all : http://lioncomics.in/15-2018-subscription
கிளம்பும் முன்பாய் ஒரு ஜாலியான caption போட்டி - இம்முறையோ நமது மீசைக்கார கர்னலைக் கொண்டு ! இதோ அவரது லேட்டஸ்ட் ஆல்பத்தின் அட்டைப்படம் !! இதற்குப் பொருந்துமாறு நயமான caption ஒன்றை எழுதிடலாமே guys ? பரிசாக ஒரு LMS கு-ண்-டு புக் !!
கிளம்பும் முன்பாய் ஒரு ஜாலியான caption போட்டி - இம்முறையோ நமது மீசைக்கார கர்னலைக் கொண்டு ! இதோ அவரது லேட்டஸ்ட் ஆல்பத்தின் அட்டைப்படம் !! இதற்குப் பொருந்துமாறு நயமான caption ஒன்றை எழுதிடலாமே guys ? பரிசாக ஒரு LMS கு-ண்-டு புக் !!
Bye now! See you around !
இன்று (10-Jan-18) சென்னையில் துவங்கும் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 304 !! குடும்பத்துடன் ஒரு விசிட் அடித்திடலாமே - ப்ளீஸ் ?
1st.... 🤗
ReplyDeleteAha ! Mendum Naane !
ReplyDeleteMmm! Kalanithi ! Enakku Munne Neengal !
ReplyDeleteஒரு நூல் இலையில் நான் முதலாவது... உங்களுக்கும் ஒரு வாய்ப்பு வரும் 👍....
Deleteவாழையிலை,மாவிலை தெரியும்.
Deleteஅது என்ன புதுசா நூல் இலை?
ஹிஹி.
ஆஹா இந்த மாதமும் Tex யா .. 👏👏👏
ReplyDelete“அட மடப் பயலே… என்ன தான் தலைவர் காமெடி பண்ணினாலும்; குணச்சித்திர ரோல்கள் பண்ணினாலும் – நாம் ஏங்குவதெல்லாம் அந்த ‘பாட்ஷா‘வுக்குத் தானே?” என்று கொஞ்சம் லேட்டாக ஞானோதயம் புலர்ந்த போது – நமது ‘தல‘யிடமும் நாம் எதிர்பார்த்திடுவது அந்தத் தெனாவட்டு ஸ்டைலையும் தெறிக்கும் அதிரடிகளையும் தானே ? என்று புரிந்தது. So நடப்பாண்டின் கதைகள் சகலத்திலும் அந்த ‘டெக்ஸ் டிரேட்மார்க்‘ நிச்சயம் இருந்திட வேண்டுமென்று தீர்மானித்தேன் !
Deleteஆமாம் எடிட்டர் சார் ... நீங்க போட்டு தாக்கீங்க உங்க பிஸ்டல் ல குண்டு தீரும் வரை .....
வணக்கம்
ReplyDeleteஇரவு வணக்கம் நண்பர்களே!!!!
ReplyDeleteஇரவு வணக்கம் சார் & நண்பர்களே
ReplyDelete.
வணக்கம் ஆசிரியர் மற்றும் நணபரகளே...
ReplyDeleteகடந்த வருடத்தைப்போலவே இந்த வருடமும் எங்களையும் உங்களையும் சந்தோசப்படுத்தியிருக்கின்றன சார்
ReplyDeleteஅட்டகாசமான ஆரம்பம்
அதுவும் தோர்கலின் 4பாக சாகசம் எங்களை மாய உலகிற்கு அழைத்து சென்றது என சொன்னால் மிகையாகாது
அருமையான ஐடியா சார் இது
டெக்ஸ் வழக்கம்போல அதகளபடுத்துகிறார் சார்
.
கேப்சன் 1
ReplyDeleteA : பின்னாடி நிக்கும் நாலு கம்மனாட்டிகலை சுடுவானா? இல்லை என் மாா்பை சல்லடையா துளைக்கப் போரானான்னு தொியலையே?? இவனுகளை நம்பி புது மாப்பிள்ளை வேஷமெல்லாம் கட்டியிருக்கேனே!!
B : கண்ணாலம் பண்ணிக்க நான் தான் சாின்னு சொல்லிட்டனே? அப்புறம் ஏன் இவருக்கு முகத்திலே இந்த சவக்கலை!
கா்னலுக்கும் கண்ணாலம்னா கால் நடுக்கம் தானா?? அய்யோ அய்யோ!!
Present sir.
ReplyDeleteபுது ஆல்பங்கள் ஆர்வத்தை தூண்டுகின்றன. மர்ம கத்தி அட்டை படம் பிரமாதம்.
ReplyDeleteபோன தபா கேப்ஷன் வின்னர் யார் சார்?
ReplyDeleteகர்னல்: கருமம்.. இது கனவா இருக்கக்கூடாதா?
ReplyDeleteபெண்: கடவுளே, இது கனவா இருந்துடக்கூடாது.. கண்ைண தொறக்கவே மாட்டேன்..
இரவு வணக்கம் நண்பர்களே!!!!!
ReplyDelete18th
ReplyDeleteஅட்டை படம் சூப்பர் ஆக உள்ளது . ரோஜரின் "மர்ம கத்தி " முதல் முறையாக வாசிக்கும் பாக்கியம் உங்கள் மூலமாக நிறைவேற போகிறது . Lady s இன் தொடரில் புது கதாசிரியரின் இத்தனையும் தரிசித்துதான் பார்ப்போமே . தலயின் 70 வருடத்தினை சிறப்பிக்கும் விதமாக இத்தாலியினை போல நாமும் ஸ்டிக்கர்ஸ் வெளியிட்டு பார்க்கலாமே (எமது ஆசைகளை தெரிவித்தாலும் எடிட்டரின் நிதி நிலைமைகளை இடம்கொடுப்பின் ). சந்தா கட்டணம் 2018, இதர நாடுகளுக்கு 17500 என்று குறிப்பிட்டுள்ளது . பிரான்ஸ் க்கும் எவ்வளவு என்று தயவு செய்து அறிய தருகிறீர்களா சார்?
ReplyDelete// ரோஜரின் "மர்ம கத்தி " முதல் முறையாக வாசிக்கும் பாக்கியம் உங்கள் மூலமாக நிறைவேற போகிறது //
Delete+1
20☺
ReplyDeleteGood morning to all
ReplyDeleteமர்மக்கத்தி வெகு காலமாய் எதிர்பார்ப்பில் இருந்த இதழ்.சூப்பர் சார்.
ReplyDeleteஒவ்வொரு மாதமும் ஆவலுடன் இதழ்கள் எதிர்பார்க்க வைக்கின்றன.
ReplyDelete23rd
ReplyDeleteSpider reprint is disappointingly small size.
ReplyDeleteStall no Sir
ReplyDeleteகாலை வணக்கம் நண்பர்களே.
ReplyDeleteஆசிரியரே.
Hai!
ReplyDeleteமர்ம கத்தி அட்டைப்படம் வெகு அருமை ..ஏற்கனவே படித்த கதையாக இருப்பினும் மும்மூர்த்திகளை போல இல்லாமல் வண்ணத்தில் இந்த இதழை பார்க்க ஆவல் கூடுகிறது சார்..காத்திருக்கிறேன்..
ReplyDelete******
டெக்ஸ் ஸ்டிக்கர் அழகான யோசனை சார்..செயல்படுத்தலாமே..:-)
*********
புது கெளபாய் ஒன்ஷாட் கதையாக தொடருமாயின் தாராளமாக கொண்டுவரலாம் சார்.
போனவருடம் மிதமான டெக்ஸ் வருடம்..
ReplyDelete####
எனக்கு அப்படி தோணவில்லை..சார்...தீபாவளி மலரை தவிர மற்ற அனைத்து டெக்ஸ் சாகஸங்களும் எனக்கு அட்டகாசமான அனுபவத்தையே அளித்தது.
This comment has been removed by the author.
ReplyDeleteதோர்கல்:-
Deleteஎன்னய்யா கதை இது. இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன் பொம்மை புத்தகம் முலம் மாயலோகத்தில் உலவ, வாழ, மக்களோட பழக முடியுமா ? முடியும்ன்னு மீண்டும் மீண்டும் நிருபிச்சிட்டாங்கய்யா.
இந்த தோர்கலுக்கு எனது குடும்பமே அடிமை.
// ட்யுராங்கோ முற்றுப் பெறும்வரைக்கும் பொறுமையே பெருமை சேர்க்குமா //
ReplyDeleteஆம். பொறுமை தேவை
// ஒரு ஆல்பத்தில் அவற்றை ஒட்டிப் பத்திரப்படுத்திக் கொள்ளலாம் ! சூப்பரான ஐடியாவாகத் தான் படுகிறது ! நாமும் இதனை நடைமுறைப்படுத்திப் பார்க்க முனைவோமா guys?//
ReplyDeleteதாரளமாக செய்யலாம் சார்,முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை.
TEX sticker try pannalam sir ... New look Roger drawing ellam nalla iruku .. try pannalam sir ..
ReplyDelete// இதுவே அவரது best என்கிறார்கள் ! வரும் நாட்களில் ஒரு “மதிமுக ஸ்பெஷல்” போட்டு விடலாமா ?? – என்ற சொல்கிறீர்கள் ? //
ReplyDelete2019 ல் தயார் பண்ணிடுங்க.சூட்டோடு சூடாக படிச்சிடுவோம்.
//நாமும் இந்த ரோஜர் 2 .0 க்கு சிகப்புக் கம்பளம் விரிக்கலாமா ? //
ReplyDeleteஎவ்வளவோ பார்த்தாச்சி,இதையும் பார்த்துடுவோம்.
// one shot களாகவும் இருக்கும் பட்சத்தில் இவரையும் தமிழ் பேச வைத்து விடலாமா ? அல்லது ட்யுராங்கோ முற்றுப் பெறும்வரைக்கும் பொறுமையே பெருமை சேர்க்குமா ? What say all?//
ReplyDeleteஇவரைப் பார்த்தால் ட்யுராங்கோ தம்பி மாதிரியே இருக்காரு,அண்ணனுக்கு வாய்ப்பு முடிஞ்சதும் தம்பியை இறக்கி விட்டுடுங்க.
Test
ReplyDelete// one shot களாகவும் இருக்கும் பட்சத்தில் இவரையும் தமிழ் பேச வைத்து விடலாமா ? அல்லது ட்யுராங்கோ முற்றுப் பெறும்வரைக்கும் பொறுமையே பெருமை சேர்க்குமா ? What say all?//
ReplyDeleteபொறுமையே பெருமை. அல்லது வேறு ஜானர் கதைகளை முயற்சிக்கலாம்.
காமிக்ஸ் சொந்தம்களுக்கு காலை வணக்கம்கள்!
ReplyDelete'Lonesome' சித்திரம்கள் - அட்டகாசம்! ஒவ்வொரு ஃபிரேம்களும் ஒவ்வொரு கோணம்களில் வரையப்பட்டிருப்பது - செம! குறிப்பாக, அந்தக் கலரிங் (வண்ணம்கள்) பிரம்மிக்கச் செய்கிறது. விரைவில் இதைத் தமிழில் கொண்டுவர ஆவணம்கள் செய்யவேண்டுமாய் எடிட்டர் சமூகம்களைக் கேட்டுக்கொள்கிறேன்!
சாகஸ வீரர் ரோஜரின் புதிய தோற்றம்கள் பற்றி என்ன சொல்வதென்றே புரியவில்லை! ஒரே குழப்பம்கள்!
ஒன்றிரண்டு கதைகள் தவிர, சென்ற வருடத்தில் டெக்ஸ் கதைகள் அனைத்துமே சூப்பர்ஹிட் தான் என்பது என் கருத்து! 'ஒரு வெறியனின் தடத்தில்'கூட ஒரு மாறுபட்ட கதையம்சமுள்ள டெக்ஸ் சாகஸமே! அதில் வரும் அந்த வயதான தம்பதிகளின் வாழ்க்கை முறையும், பாசப் பிணைப்பும், அவர்களுக்காக டெக்ஸின் போராட்டமும் என்னளவில் நான் மிக ரசித்தவையே!
நான் இன்னும் பல 2017 இதழ்களையே முடிக்கவில்லை. சீக்கிரம் கோவை சென்று ஒரு 10 - 15 புத்தகங்கள் அள்ளி வந்து விடுவேன்.
ReplyDeleteஎன்னை பொறுத்த வரையில் டெக்சின் “அராஜகம் அன்லிமிடெட்” ஒரு மரண மொக்கை. “கவரிமான்களின் கதை” எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
“அழகாய் ஒரு அராஜகம்”, கதையும் சித்திரங்களும் மாறு பட்டு இருந்தால் தான் என்ன? அதுவும் ஒரு சுவை என்று ரசிக்க வேண்டும்.
‘பாட்ஷா‘ மட்டும் அல்ல, ' தில்லு முள்ளும்' ரசிக்கலாம் 'முள்ளும் மலரும்' கூட ரசிக்கலாம்.
[பரபரப்பான கதையாக இருந்து – one shot களாகவும் இருக்கும் பட்சத்தில் இவரையும் தமிழ் பேச வைத்து விடலாமா ? அல்லது ட்யுராங்கோ முற்றுப் பெறும்வரைக்கும் பொறுமையே பெருமை சேர்க்குமா ? What say all?]
எனது பதில், கவ்பாய் என்றாலே அது லயன் காமிக்ஸில் தோற்றதே இல்லை.
அதனால் டுரங்கோவிற்கு கொஞ்சம் நெறய வாய்ப்பு குடுக்கலாம். அதற்குள்ளாகவே அவருக்கு ஒரு புது போட்டி தேவையா? டுரங்கோ இன்னும் கொஞ்சம் கலக்கட்டும். Lonesome பின்னாடி பார்த்து கொள்ளலாம்.
எனக்கு கம்ப்ளீட் sci - fi கதைகளுக்காக வெயிட் பண்ணி கொண்டு இருக்கிறேன்.
புது சாகச வீரர் ரோஜர் - கண்டிப்பாக thumbs up
மர்ம கத்தி - முதல் முறையாக படிக்க போகிறேன் அதுவும் கலரில்.
Caption போட்டி
கர்னல் - அடேய் என்ன தீர்த்து கட்ட வந்திருக்கற முட்டா பசங்களா, இதுக்கு ஏன்டா இத்தனை பேரு. அதுதான் கல்யாணம் ஆயிருச்சே, இப்பவே நான் செத்த மாதிரி தான்,
பெண் - இனி அடுத்த ஆறு ஜென்மங்களுக்கும் இவரே தான் எனக்கு புருஷனா வரணும்.
பனியில் ஒரு நாடகம் - ரிப் கிர்பியின் தோழியின் அம்மா பிடித்த பொருளை திருடும் குணம் கொண்டவள். ரிப் கிர்பி அவள் மீது கண் வைத்து கொண்டு இருக்கும்போது ஒரு நகை திருடன் ஒரு பனி இரவில்
ReplyDeleteஇவர்களுடன் ஆடும் போலீஸ் திருடன் கதை தான் இது. மிகவும் விறு விறுப்பான கதை.
சிறுத்தைகள் சாம்ராஜ்யம் - வன ரேஞ்சர் ஜோ காட்டில் சிறுத்தை மனிதர்கள் கொலை செய்யும் காரணத்தை துப்பு துலக்குவதே கதை
டாலர் வேட்டை - விங் கமாண்டர் ஜார்ஜ் தன் உளவாளி தோழியுடன் ஒரு கள்ள நோட்டு கும்பலை பிடிப்பது தான் கதை. அருமையான கதை. தொய்வில்லாத முழு நீள திரில்லர்.
சிவப்பு தலை சாகசம் - ஷெர்லாக் ஹோம்ஸ் சிவப்பு தலை முடி உள்ளோர் சங்கம் நடத்தும் சதி திட்டத்தை முறியடிக்கும் கதை. கூடவே பியானோ படலம் என்ற லக்கி லுக் சிறுகதையும் உள்ளது
தலை இல்லா ராஜா - கருப்பு கிழவியின் கதை தொகுப்பு
சைத்தான் சுவர்
கடல் பூதம் - பேட்மேன் சாகசம்
யாருமறியா பேட்மேன்
வீடு தேடி ஒரு பிசாசு
சைத்தானின் சாசனம்
கில்லாடிக்கு கில்லாடி
இப்பொழுது
ஒரு சிலந்தியின் வலையில்
ஒரு தலைவன் ஒரு சகாப்தம்
நண்பர்களே, என்னிடம் ஒரு ரிப்போர்ட்டர் ஜானி கதை உள்ளது. இதன் முதல் பக்கம் என்னிடம் இல்லை, இந்த கதையின் தலைப்பு என்ன என்று தெரிய வில்லை. தெரிந்தவர்கள் கதையின் தலைப்பை கூறவும்.
ஜானி துப்பறியும் கதையில், கருப்பு நிற உடை அணிந்த ஒரு முகமூடி, சில பேரை கொன்று அவர்கள் உடம்பில் ஒரு அம்பு குறி விடுவான்.முடிவில் கொலையாளி பெயர் லாட்வின். தன்னை தானே சுட்டு கொண்டு
செத்து விடுவான்.
இந்த கதையின் தலைப்பு என்ன ?
சார் 'காலம் தவறிய காலன் ' sci-fic த்ரில்லர் இந்த வருடம் வரும் வாய்ப்புண்டா?
ReplyDeleteகால வேட்டை என்ற கதை விளம்பரப்படுத்தப் பட்டதே? அதைப் பற்றி?
:-)
Deleteடூரங்கோ வின் அடுத்த ஆல்பத்தை எதிர்பார்க்கிறேன் சார்.
ReplyDeleteலேடி S தமிழில் வந்த பொழுது அதனை தவிர்த்த பலரில் நானும் ஒருவன், காரணம் அதனை ஆங்கிலத்திலேயே படிக்க முடியாததால் தான். ஆனால் சமீபத்தில் முதல் பாகத்தை படித்தேன், தமிழில் ஆங்கிலத்தை விட மிக நன்றாக இருந்தது. ஒரே மூச்சில் மூன்று பாகத்தையும் படித்து முடித்துவிட்டேன். அடுத்த பாகத்தை எதிர்பார்த்து ஆவலுடன்.
@ஈ.வி கண்டிப்பாக படித்த புத்தகங்களின் கருத்தை பதிவிடுகிறேன் ☺️. ஆங்கில நாடகங்கள் பார்க்க ஆரபித்ததில் இருந்து படிப்பது குறைந்துவிட்டது. Netflix இந்தியா வருகை அதை மேலும் அதிகரித்துவிட்டது.
தோர்கல் கிட்டயும் ஒரு பறக்கம்பளம் இருக்கா.....what a shame ...what a shame.....
ReplyDeleteThorgal சூப்பர்.. 10/9.5
ReplyDeleteTeX 10/9. நல்ல கதை. கலக்கிட்டாரு.
மற்ற கதைகள் இன்னும் படிக்கவில்லை.
Durango முதலில் முடியட்டும் .. Lonesome பிறகு பார்த்துக்கொள்ள லாம் .
சூட்டோடு சூடாக thorgal ஐ முடித்துவிட்டால் காலியாகும் slot களில் lonesome அறிமுகப்ல்படுத்தினால் நன்று.
பாப் மொரேனைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியல.
தோர்கல் கிட்டயும் ஒரு பறக்கம்பளம் இருக்கா.....what a shame ...what a shame.....
ReplyDeleteDurango மொத்தமாக வரட்டடும்...ட்டும்....
ReplyDeleteDurango மொத்தமாக வரட்டடும்...ட்டும்....
ReplyDeleteடெக்ஸ் ஸ்டிக்கர் தேவையில்லை என்னை பொறுத்தவரை.
ReplyDeleteமாதம் தோறும் வேண்டாம். வருடத்திற்கு இரண்டு முறை வேண்டுமானால் முயற்சி செய்யலாம்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநண்பர்கள் அனைவர்க்கும் வணக்கம்....Im From Sri Lanka...நான் இந்த தளத்திற்கு பழையவன் ஆனால் உங்களுக்கு புதியவன் .... இந்த தளத்தில் எழுத வேண்டும் என்ற என் 3 வருட ஆசை இப்போது தான் நிறைவேறுகிறது.... எனக்கு இப்போது வயது 20... இந்த வயதிட்குள் எனக்குள் உருவான காமிக்ஸ் காதல் பற்றி இங்கே பதிவு செய்ய வேண்டும் என்பது எனது ஆவல்..... உங்கள் அனுமதி கிடைத்தால் மிகவும் மகிழ்வேன்....என்னையும் உங்கள் காமிக்ஸ் குடும்பத்தில் ஒரு குழந்தையாக இணைத்து கொள்வீர்களா??? ஆவலுடன் காத்திருக்கும் உங்கள்....
ReplyDeleteசிவா
வாங்க சிவா தம்பி! தாரளமாக எழுதவும்!
Delete@ டைகர் சிவா
Deleteமெளனம் கலைந்து இங்கே பதிவிட முனைந்ததற்கு வாழ்த்துகளுடன் வரவேற்கிறோம்! உங்கள் காமிக்ஸ் காதல் பற்றி அறிய ஆவலாய் இருக்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள்!
வாப்பா மதிமின்னல், ஜோதியில ஐக்கியமாயிடு தம்பி
Deleteமிக்க நன்றி....
Deleteவருக,வருக.
Deleteவாங்க டைகர் சிவா.தூள் கிளப்புங்கள்.டைகர் ரசிகர் என்றால் சும்மாவா.அடித்து தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா.
DeleteA:வியூ ஃபைண்டர்ல கரெக்டா நம்ம நெஞ்ச குறி வைச்சிருப்பாங்கே இந்நேரம்.கேமராவுக்கு முன்ன சிரிக்க முடியலங்க உட் பீ......
ReplyDeleteB: உங்களை - காதலிச்ச மாதிரியும் , கல்யாணமும் பண்ண போற மாதிரியும், குறி வைச்ச என்ன விடவா?அடப் போவியா பெருசு.
tex this month... supeeeerrr
ReplyDeleteதோர்கல்
ReplyDeleteகதை என்பதை இரண்டு வரிகளில் எழுதிவிடலாம்.
தோர்கல் போன்ற திறமைசாலி இருந்தால் மட்டும் சாதிக்க முடியும் என்ற ஒரு காரியத்தை அவன் குழந்தையை கடத்தி வைத்துக்கொண்டு
செய்ய கட்டாயபடுத்துவது; இதற்கு தோர்கல் ஒத்துக் கொண்டான? அவன் குழந்தையை எப்படி காப்பாற்றினான்? புதிய இடத்தில் சந்தித்த சவால்கள் என்ன? அந்த வில்லன் யார்?
இதனை நான்கு பாகமாக விறுவிறுப்பாக ஒரு மாயஜால உலகிற்க்கு அழைத்து சென்று நம்மையும் அவர்களுடன் பயணிக்க வைத்த ஓவியர் மற்றும் கதாசிரியருக்கு எனது நன்றி!
முதல் கதையில் தோர்கல், ஆரிசியா, க்றிஸ், மாயலோகத்தில் எதிரியை தேடி அலைவதை காண்பிக்கும் இடத்தில் உபயோகபடுத்திய பச்சை நிறத்தையே அவனது மகன் தந்தை பற்றி சிந்திக்கும் இடத்தில் உபயோகபடுத்தி உள்ளது சிறப்பு!
கதை முழுவதும் சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கு கதை நெடுக காணப்படும் முடிச்சிகள்; தோர்கலுடன் ஆரிசியாவும் கிளம்புவது, அவளின் புதிய அவதாரம்! தோர்கல் தந்தையார், தோர்கல் மகனின் கொள்ளு பேரன் யார்!
ஜாலின் பாத்திரபடைப்பு என்னை மிகவும் கவர்த்தது; அதே போல் க்றிஸ், ஒரு அக்மார்க் வில்லி; இவள் எப்போது எப்படி நடப்பால் என்பதை கொஞ்சமும் யூகிக்க முடியாத பாத்திரபடைப்பு! ஜோலன் குழந்தைதனத்தை கையாண்ட விதம் சூப்பர்!! ஆரிசியா தனது குழந்தை மற்றும் கணவன் மேல் கொண்டுள்ள அன்பும் மரியாதையும் போற்றுதலுக்கு உரியது!
தோர்கல் ஒரு சராசரி மனிதனாக அதுவும் இவனின் ஹீரோயிசத்தை செயல்கள் முலம் காண்பித்தது அருமை!
சித்திரங்கள் இதுவரை காணாதவை, ஒவ்வொரு படமும் ஆயிரம் கதை சொல்லும்; ஒவ்வொரு படமும் தனித்து நிக்கின்றன! இயற்கையை ரசிக்கும் நண்பர்களுக்கு இது ஒரு விசுவல் விருந்து!
முதல் கதையில் தோர்கல், ஆரிசியா, க்றிஸ், மாயலோகத்தில் எதிரியை தேடி அலைவதை காண்பிக்கும் இடத்தில் உபயோகபடுத்திய பச்சை நிறத்தையே அவனது மகன் தந்தை பற்றி சிந்திக்கும் இடத்தில் உபயோகபடுத்தி உள்ளது சிறப்பு! காரணம் இந்த குடும்பம் வேறு வேறு இடத்தில் இருந்தாலும் அவர்களின் சிந்தனை எல்லாம் மீண்டும் எப்போது இணைவோம் என்பதே!
DeleteB: இன்னமும் கர்னல் பெருச சுடாம என்ன பண்றாங்க அப்ரசண்டிங்க.
ReplyDeleteA: படியில கால் தடுமாறின மாதிரி விழுந்து , புளூகோட் ஸ்கூபி மாதிரி அய்யோ...ன்னு நெஞ்ச தடவிட்டா போச்சு.அதுக்குள்ள போட்டு தாக்கிட்டாங்கன்னா????.
கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக வாசிக்கும் நேரம் கிடைத்திருக்கிறது. நிறையவே பெண்டிங் ஆகிவிட்ட நமது காமிக்ஸ் இதழ்கள் உட்பட. இம்மாத இதழ்களில் நிஜங்களின் நிசப்தத்தை வாசித்துவிட்டேன்.
ReplyDeleteபல ஒன்ஷாட் கதைகளையும் நாம் கி.நா எனும் பெயரில் அழைத்து வந்தாலும், கிரீன் மெனாருக்குப் பிறகான குறிப்பிடத்தகுந்த கி.நா இதழாக நிஜங்களின் நிசப்தம் அமைந்திருந்தது எனலாம். நமது சராசரி ரசனைக்கு வெகு தொலைவில் அமைந்திருந்த படைப்பு என்று தோன்றியது எனக்கு. சராசரி ரசனையை தாழ்த்தியோ, உயர்த்தியோ நான் இங்கு குறிப்பிடவில்லை, வித்தியாசத்தைத்தான் குறிப்பிடுகிறேன். இதைப் பற்றிய நண்பர்களின் கருத்துகளை தெரிந்துகொள்ளவே கடந்த இரண்டு பதிவுகளின் பின்னூட்டங்களையும் மேய்ந்தேன். (அப்படியே நான் தவற விட்ட KOK, ஈ.வி போன்றோரின் பாதரச பின்னூட்டங்களும் கண்ணில் பட்டன. பின்னூட்டங்களைப் படிக்காவிட்டால் எவ்வளவு ஜாலியைத் தவற விட வேண்டியதாகிறது.. ஹும்!!)
சிறுவர் கதைகளில் துவங்குகிறோம், சிறுகதைகளில் தொடர்கிறோம், நாவல்கள் பரிச்சயமாகின்றன, எளிய கவிதைகளும் புரிபடுகின்றன, சற்றே மறைபொருள் கொண்ட படைப்புகளும் வியப்பூட்டுகின்றன, வளர்ந்துகொண்டே வருகிறோம்.. ஆனாலும்... நமக்கு புரிந்திடாத நடையில், அமைப்பில் படைக்கப்பட்ட சில ஆழ்ந்த கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும், நாவல்களும் அவ்வப்போது கண்ணில் பட்டு கடுப்பேற்றத்தான் செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை அவற்றின் பொருள்.. முன் சொன்ன வரிசையின் அடுத்த கட்டத்தை நாம் அடையும் போது விளங்கத்துவங்கும்! சிலவற்றை என் அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறேன். எத்தனை நயமான வார்த்தைகள் என்று ரசித்த ஒரு கவிதையின் பொருள் புரியாததால், அதை இகழ்ந்து பின்பொரு சமயம் மொட்டு மலரானதைப்போல பொருள் விளங்கி வியப்படைந்திருக்கிறேன்.
ஸ்டான்லி குப்ரிக்கின் படங்கள் நான் இன்னும் விளங்கிக் கொள்ள முடியாத முடிவுகளைக் கொண்டுள்ளன. அவரின் காட்சியமைப்புகள், காட்சியழகுகள் வசீகரமானவை, வியப்பூட்டுபவை.. ஆனாலும், படம் பார்த்து முடித்தபின்பு, ஆதாரக் கருத்து புரியாமல் கடுப்பாக இருக்கும். ஏன்தான் இப்படி எடுத்துத் தொலைக்கிறார் இவர்? உள்ளங்கை நெல்லிக்கனியாக, ஆல்ப்ரட் ஹிட்ச்காக் போல எடுத்தால்தான் என்னவாம் என்று பொருமுவதுண்டு. ஆனால், பிற்பாடு ஒரு விஷயம் புரிந்தது. அதாவது, சில கதைகள், சில களங்கள் அல்லது சில சம்பவங்கள் அப்படித்தான் சொல்லப்பட வேண்டும். ஒவ்வொரு கதைக்கும், அதற்குரிய வடிவம், அதற்குரிய நடை என்பது தனித்துவமான ஒன்று. அதைவிடுத்தும் புரியவில்லை/ அல்லது புரியாது என்பதற்காக ஒன்றை எளிமைப் படுத்தியும் சொல்லலாம்/ சொல்லப்பட்டிருக்கின்றன. ஆயினும் அவை அன்பு என்பது லவ் என்று மொழிமாற்றம் செய்யப்படுவதைப் போன்றதுதான். எங்கோ ஒரு ஓரமாய் இடிக்கத்தான் செய்யும், அது முழுமையாகிவிட முடியாது. மாறாக அதற்குரிய நடை, வடிவத்தில் சொல்லப்படும் போதுதான் அது முழுமையடையும். நமக்குப் புரியவில்லை என்பது அதன் குறையல்ல, நமது குறையுமல்ல! நமது ஆர்வம் அதை நோக்கியதாக இருந்தால் ஒரு நாள் அது மலர்வதைக் கண்டு நாம் உய்க்கலாம், இல்லாவிட்டாலும் பாதகமில்லை.. ரசிக்க நம்முன்னே வேறு மலர்வனமே காத்துக்கிடக்கின்றனதான்..
-தொடரும்..
பனிமலைகள், பனிப்பொழிவு, பனிக்காற்று என காற்றைக்கூட காட்சிப்படுத்தியிருக்கிறார் ஓவியர், நிஜங்களின் நிசப்தத்தில். மரங்கள், இலைகள், விலங்குகள், பறவைகள் க்ளோஸப் பிரேம்களில் தத்ரூபமாக உருக்கொண்டு நிற்கின்றன. விலங்குகளின் வாயிலாக, குறிப்பாக பறவைகளை கதையின் உணர்வுகளோடு பிணைத்திருக்கிறார். போரும், போர்ச்சூழலும், அதிகாரமும் எளிய மக்களை எப்படியெல்லாம் சிதைக்கும் என்பதை நம் காலத்திலும் பார்த்திடும் துரதிருஷ்டம் நமக்கும் வாய்த்திருக்கிறது. அது போன்றதொரு கதைக்களத்தை, அதனால் சிதைவுறும் மனித உணர்வுகளை நிஜங்களின் நிசப்தம் பதிவு செய்திருக்கிறது. ப்ரோடெக், ஆண்டெரர், ஆர்ஷ்யர் கதாபாத்திரங்கள் மிக முக்கியமானவை. ஒவ்வொன்றும் சொன்ன விஷயங்களை விட சொல்லாத விஷயங்களே அதிகம் என்று தோன்றுகிறது. கதை சொல்லப்பட்ட பாணியின் சிறப்புகளை நண்பர்கள் பலரும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். மொத்தத்தில் இக்கதையின் ஓவியங்கள் ஒரு பொக்கிஷத்துக்குச் சமமானவை. பெரும்பாலான இடங்களில் மிகச்சிறப்பான மொழிபெயர்ப்பு கதைக்குச் சிறப்பு சேர்த்திருக்கிறது. சாதாரணமாக நிகழ்காலத்துக்கும், பிளாஷ்பேக்குக்கும் இடையே போய்வருவதே சமயங்களில் சிரமத்துக்குள்ளாகும் போது, ஒன்றுக்கு மேற்பட்ட பிளாஷ்பேக்குகள் இடையிடையே மீண்டும் மீண்டும் வந்து செல்லும் இந்தக் கதைப்போக்கில், நம்மைச் சிரமத்துக்கு ஆளாக்காமல், முறுக்குக் கம்பி வேலிகள், பறவைகள், மெழுகுவர்த்தி என உபாயங்கள் தந்திருக்கிறார் ஓவியர். அப்படியும் எனக்குச் சிரமமாகத்தான் இருந்தது. அந்தச் சிரமமும், கதையின் ஆதாரப்போக்கில் எனக்கிருக்கும் எளிய கேள்விகளும் அடுத்தடுத்த வாசிப்புகளில் விலகும் என்று நினைக்கிறேன். நிஜங்களின் நிசப்தத்தைப்போன்ற ஆழ்ந்த படைப்புகள் மறு வாசிப்புகளில் புதிய புதிய அனுபவங்களைத் தரத் தவறுவதில்லை என்பதும் அனுபவப்பாடமே!!
Deleteஇவ்வாறான ஆழ்ந்த படைப்புகளுக்கும், பல சிரமங்களுக்கிடையே நம் அணிவகுப்பில் இடம்பிடித்து வைத்திருக்கும் எடிட்டருக்கு நம் அன்பும், ஒரிஜினல் படைப்பாளி இமானுவேல் லார்செனட் இருக்கும் திசைக்கு ஒரு பெருவணக்கமும்!
ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே.. அட்டகாசமான இதழ்த் தயாரிப்பு, பொருத்தமான அட்டை வடிவமைப்பு! அதாவது அட்டை பிடித்தவர்களுக்கு கதையும் பிடிக்கக்கூடும், அட்டையே கவராவிட்டால், கதை கவருவதும் சிரமமே! ஆக, வாங்குபவர்களுக்கு அது ஒரு வசதி! :-)))))
Deleteஅருமையான விமர்சனம். நான் படிக்க ஆரம்பித்து உள்ளேன்...உள்ளே போக போக தான் தெரியும்... எனக்கு புரிகிறதா என்று....
Deleteஆதி தாமிரா அவர்களே,நல்லதொரு விமர்சனம்.
Delete@ ஆதி
Deleteஉங்கள் மனம் சமனப்பட்டுப் போயிருக்கும் இவ்வேளையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் தனித்துவமான விமர்சனத்தைப் படித்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!
இத.. இத.. இதத்தான் எதிர்பார்த்தேன்! செம்ம்ம! :)
///நமக்குப் புரியவில்லை என்பது அதன் குறையல்ல, நமது குறையுமல்ல! நமது ஆர்வம் அதை நோக்கியதாக இருந்தால் ஒரு நாள் அது மலர்வதைக் கண்டு நாம் உய்க்கலாம், இல்லாவிட்டாலும் பாதகமில்லை///
Deleteஅருமை நண்பரே!
உங்கள் மொழி நடையில் ஜிப்ரான், ஓஸோவின் சாயல் தொிகிறதே
காமிக்ஸ் வாசிப்பானுபவம் என்றுமே ஒரு அலாதியான அனுபவம்தான்,இலக்கியத்தில் மேதமை ஞானம் கொண்ட திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் கூட காமிக்ஸ் மேல் தனிப் பிரியம் கொண்டவர்தான்.
Deleteஎனவே,காமிக்ஸ் வாசிப்பு தனிச்சிறப்பானதே.
This comment has been removed by the author.
Deleteபதில் கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே..
Delete@மிதுன்,
என் எழுத்தில் ஜிப்ரானா? யாரு இந்த மீஜிக் போடுவாரே அவரா?.. இருந்தாலும் இருக்கும்! அட போங்க சார் விளையாடிகிட்டு! :-))
என்னை பற்றி சில வரிகள்....
ReplyDeleteஎனக்கு வயது 20 .. பள்ளி படிப்பை முடித்து யூனிவெர்சிட்டிக்குள் கால் வைக்கும் இந்த நேரத்தில் ( இங்கு 19 வயது வரைக்கும் scl தான். +2 எக்ஸாம் இங்கு 19 வயதில் தான்.... இங்கு அந்த எக்ஸாமை Advanced Level Exam என்றுசொல்வோம்... அத்துடன் அங்கு உள்ளதை போல் பிரைவேட் காலேஜில் இங்கு படிக்க முடியாது Government யூனிவெர்சிட்டிஸ் மட்டும் தான்... ) எனவே Exam இல் செலக்ட் ஆனால் மட்டுமே யூனிவர்சிட்டி போக முடியும் என்ற சூழல்...அதுவும் நான் Biology மாணவன்... பிறகு சொல்லவா வேண்டும்?? ஆசை இருந்தாலும் இந்த தளத்திற்கு வந்து பதிவுகளை படிப்பதும் காமிக்ஸ்களை வாங்கி படிப்பதும் மட்டுமே என்னால் அப்போது செய்ய கூடியதாக இருந்தது.... அத்துடன் அப்போதைய முக்கிய பிரச்சனை "நேரம்".... "படிக்கவே டைம் இல்ல... என்னடா பண்ற கம்ப்யூட்டர்ல??" என்று கேட்கும் அம்மாவிடம் அப்போது நான் "காமிக்ஸ் படிக்கிறேன்மா" என்று சொல்லியிருந்தால் உதை நிச்சயம்... என்ன விஜய் சார் என் தாமதத்திட்கு காரணம் சரியாக இருக்கிறதா? ஹாஹாஹா...
ஈரோடு விஜய் சார் "மௌனம் கலைந்து"னு சொன்னீங்க சார்.... உண்மை தான் சார்.. என் கதையை படிக்கும் போது உங்களுக்கு புரியும் சார் நான் ஏன் இத சொல்றேன்னு... இந்த கதை சாரி என் சுயசரிதை உங்கள் பலரின் சிறுவயது நினைவுகளின் மௌனங்களை கலைக்கும் என எதிர்பார்க்கிறேன்...
எனது காமிக்ஸ் காதல் பள்ளி நாட்களில் ஆரம்பித்தது... விஜயன் சார் நீங்க என்ன நெனச்சு காமிக்ஸ் 7 வயது முதல் 70 வயது வரைனு போட்டிங்கனு எனக்கு தெரியாது. ஆனால் என் காமிக்ஸ் பயணம் ஆரம்பமானது என் 7 ஆவது வயதில் தான்... அப்போது எனக்கு ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், என்று எல்லாம் வித்தியாசம் தெரியாது...கையில் கிடைக்கும் புத்தகத்தை எடுத்து சித்திரங்களை பார்த்த படியே மணி கணக்கில் நூலக பாட வேளைகளை தொலைத்திருக்கின்றேன்.... ஆம் என் காமிக்ஸ் காதல் என் பாடசாலை நூல் நிலையத்தில் ஆரம்பமானது.... ஆரம்பத்தில் யார் அங்கு காமிக்ஸ் வாங்கி வைத்தார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் சில "பெரிய மனிதர்கள்" காமிக்ஸ் வேஸ்ட் பாடசாலையில் இதெல்லாம் படிக்க கூடாது என்று ஒரு மூலையில் ஒரு பெட்டிக்குள் போட்டு வைத்திருந்தார்கள்... அது என் கண்ணில் பட்டது எனக்கு வாழ்க்கையில் கிடைத்த மிக பெரிய அதிர்ஷ்டம்... அப்போது யாருமே எட்டி கூட பார்க்காத அந்த " நரகம்" எனக்கு மட்டும் சொர்க்கமாகி போனதை நினைத்தால் இப்போது கூட ஏன் என்று என்னால் தெளிவான காரணம் சொல்ல முடியவில்லை...
அந்த வயதில் நான் படித்த காமிக்ஸ் எதுவுமே என் நினைவில் இல்லை...அதாவது முழு கதையும் ஒன்று கூட நினைவில் இல்லை...வெறும் படங்களும் கதாநாயகர்களின் பெயர்களும் மட்டும் இப்போதும் பசுமையாக என் நெஞ்சில்.... மாயாவி, காரத், பிளஷ்கார்டென், மாடஸ்ட்டி, Etc….
முகமூடி மாயாவி தான் எனது First காமிக் ஹீரோ...அந்த சிறு வயதில் ராணி காமிக்ஸ்க்கும் முத்து காமிக்ஸ்க்கும் வேறுபாடு தெரியாமல் ஒரு புத்தகத்தில் மாயாவி என்றும் இன்னொரு புத்தகத்தில் வேதாளன் ன்றும் இருப்பதை பார்த்து பல தடவை இது ஒருவேளை அவரின் “ஒன்று விட்ட சித்தப்பாவாக” இருக்குமோ என்றெல்லாம் அந்த வயதில் யோசித்து இருக்கிறேன்... இப்படியாக எனது காமிக்ஸ் காதல் ஆரம்பித்து நூலகத்தில் இருந்த எல்லா காமிக்ஸ்களையும் வாசித்து முடித்த போது எனக்கு 10 வயது முடிந்து போனது... அந்த சிறு வயதில் எங்கு போய் காமிக்ஸ் வாங்குவது என்று தெரியாத காரணத்தால் 12 வயது வரை காமிக்ட்ஸை மறந்து போய் இருந்தேன்...
என் 13 வது வயதில் (2008 ) ஒரு புக் ஷாப் இல் முத்து காமிக்ஸ் ஐ கண்ட போது என் மனதில் தோன்றிய கலவையான எண்ணங்களை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை...
(இதற்கு பல வருடங்களுக்கு முன்பே ராணி காமிக்ஸ் வருவது நின்றிருந்தது... அன்று நான் பார்த்தது கூட முத்து காமிக்ஸ் வருவது இடையில் நிறுத்தப்பட்டதட்கு முன்பு வந்த காமிக்ஸ் தான் என்று நான் நினைக்கின்றேன்)
பல வருடங்களாக காதலியை பிரிந்த ஒருவன் மறுபடி அவளை காணும் நிலையில் நான் அப்போது இருந்தேன்... ஆனால் சிறுவன் என்பதால் பணப்பிரச்சனை எனக்கு இருந்தது...எனவே என்னிடம் இருந்த பணத்திற்கு ஏற்றது போல் ஒரு காமிக்ஸ் கிளாஸ்சிஸ் புத்தகத்தை வாங்கி கொண்டு வீடு வந்தேன்... அது ஸ்பைடர் பிளஸ் மாயாவி தோன்றும் பாதாள போராட்டம் + பறக்கும் பிசாசு புத்தகம்....அந்த ஒரு புத்தகத்திலேயே நான் இந்த இருவரின் ரசிகனாகி போனேன்….. அந்த கணம் எனக்கு தெரியாது முத்து காமிக்ஸ் என் காலம் முழுவதும் என்னுடன் பயணிக்க போகிறது என்று... ஏன் என்றால்....???!!!
வருக சகோதரரே... உங்களைப் பற்றிய அறிமுகத்தை ஒரு ப்ளாக்கில் எழுதிவிட்டு இணைப்பை இங்கே கொடுத்தால் இலகுவாக இருக்கும்.
Deleteஇனிமேல் அப்படியே செய்கிறேன் சார்...
Delete@ டைகர் சிவா
Deleteஆர்வத்தைக் கிளப்புகிறது உங்கள் காமிக்ஸ் காதல் அனுபவம். தொடர்ந்து எழுதுங்கள். நண்பர் பொடியன் சொன்னதைப் போல ஒரு ப்ளாக்கில் எழுதி அதை இங்கே லிங்க் கொடுத்தாலும் சரிதான்... அல்லது இங்கேயே பதிவிட்டாலும் சரிதான்! உங்களைப் போன்றவர்கள் தங்கள் காமிக்ஸ் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முன்வருவது பாராட்டுக்குரியது. காமிக்ஸ் தொடர்பான எதுவும் இங்கேயே பகிரப்படவேண்டும் என்பதே என் விருப்பம்!
தொடர்ந்து எழுதுங்கள் சிவா!
http://siva1304.blogspot.com/
Deleteரொம்ப நன்றி விஜய் சார்...
Deleteஇங்குள்ள யாவரும் உங்களைப் போன்ற அனுபவ புதிர்களே.
Deleteகாமிக்ஸ் மட்டுமே எம் போன்றோரின்
உலக ஈர்ப்பு.
கள்ள புலனைந்தும் காமிக்ஸ் மணிவிளக்கே.
நண்பரே!
Deleteஏறத்தாழ எனக்கும் உங்களையொத்த அனுபவம் தான்!
காமிக்ஸ் ஒரு வரம்!
அதைப் புாிந்து கொள்ளும் ஆற்றலை நமக்கு வழங்கிய போிறைக்கு நம் நன்றியை உாித்தாக்கியே தீர வேண்டும்!!
நம் நெருங்கிய உறவினா்களும், நண்பா்களுமே கூட இதை புாிந்து கொண்டாரில்லை என்னும் போது நாமெல்லாம் அதிா்ஷ்டசாலிகளே!
டைகர் சிவா, அருமை . உங்கள் அனுபவங்களை தொடருங்கள் . நானும் இலங்கையை சேர்ந்தவன்தான் . தற்போது பிரான்ஸ் இல் வசிக்கின்றேன் .
DeleteLoad more வந்துவிட்டால் தேடிப்பிடித்து படிப்பது கடினம். அதனால், பகுதி பகுதியாக இடும் பின்னூட்டங்களுக்கு வெளிஇணைப்பு பொருத்தமாக இருக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது ஒரே தடவையில் படித்திடலாம். அப்புறம் 'சாா்' என்பதெல்லாம் இங்கே ஆசிரியருக்குத்தான்.. :-)
Delete@Thiruchelvam Prapananth உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி நண்பரே....
Delete@Podiyan என்னுடன் ஒப்பிடும் போது இங்கே எல்லாருமே என்னை விட வயதில் மூத்தவர்கள்... பின் நான் எப்படி எல்லாரையும் கூப்பிட முடியும்? அப்போ இனிமே அண்ணன்னு கூப்பிட வேண்டியது தான்... எனக்கு உடன்பிறப்புகள் யாரும் இல்லை... I'm a Limited Edition For My Parents :D... So இங்கேயே அண்ணன்களை தேடி கொள்ள வேண்டியது தான்....
Delete////I'm a Limited Edition For My Parents :D... So இங்கேயே அண்ணன்களை தேடி கொள்ள வேண்டியது தான்....////
Deleteஹாஹாஹா!
நல்ல ஹியூமா்சென்ஸ்ங்க "தம்பி" உங்களுக்கு!!
Danku...Danku...
Deleteதோர்கல் எரிர்ஸன்,
ReplyDeleteஉண்மையிலேயே இவர் பிரபஞ்சத்தின் புதல்வன்தான்.வான் ஹாம்மே இவர் நிஜத்தில்.அவரின் அசாத்திய ஆற்றலை நாம் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.
காமிக்ஸ் உலகில் தோர்கல் ஒரு சிகரம் சாதாரண சிகரமல்ல யுத்த காரகனான செவ்வாய் கிரகத்தின் 32 ஆயிரம் அடி உயர சிகரம்.
ஓவியர் வர்ண தூரிகையால் சகாப்தம் படைத்திருக்கிறார்.நான்கு பாக கதையையும் சற்றும் தொய்வில்லாமல் அட்டகாசமாக கொண்டு சென்று முடித்திருக்கிறார்.
முதல் கதை (பி.புத.)புக்கை பார்த்த போதே பிடித்துபோனது நானாக மட்டுமே இருக்கும் என்று தலை கனத்துடன்(ஸ்பைடர்)சொல்லி கொள்கிறேன்.
கதை ஓவியம் பற்றி எழத சொல்ல நான்கு கை எட்டு வாய் வேண்டும் என்பதால் இத்துடன் முடித்து கொள்கிறேன்.
விசித்திர சவால்.
ReplyDeleteபாக்கெட் சைசில் அருமையாக வெளியிட்டே முதல் ஓவரில் ஆறு பவுண்டரிகள் அடித்துவிட்டீர் எடிட்டர் ஐயா.
ரொம்ப வருடங்களுக்கு முன் படித்த கதை என்பதால் கதையும் மறந்து விட்டது. புக்கையும் யாரோ ஆட்டையை போட்டு சென்றுவிட்டதால் தற்போது வந்ததை மிகவும் விரும்பி ரசித்து படித்தேன்(7 ம் கிளாஸ் ஞாபகம் வந்தது)
மறு பதிப்புகளை இதே அளவில் வெளியிடுங்கள்.எழுத்துக்களை படிக்க முடியவில்லை என்னும் ரசிகர்களுக்கு ஆளுக்கொரு பூதக்கண்ணாடி(ஹி ஹி)அளித்து விடலாம்.
சேற்றுக்குள் சடுகுடு.
ReplyDeleteப்ளுகோட் பட்டாளம் ஓராண்டு கழிந்து வந்துள்ளது.எப்படி இருக்குமோ என்று திறந்தால்(இதற்கு முன் வந்த கதைகள் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை)முதல் பக்கத்திலேயே சுறுசுறுப்பு தெரிந்தது.கர்னலும் காமெடியில் பின்னியெடுத்து விட்டார். போதாதென ஒரு பைங்கிளி படலமும் சேர்ந்து கொண்டதால் சிரிப்புக்கு பஞ்சமில்லை.
ப்ளுகோட் இம்மாதம் காமெடிகோட்.
ஆசிரியர் அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம். 2019 ல் மங்கா வருமாறு அட்டவணைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கையை இப்போதே முன்வைக்கிறேன்...
1. Attack on Titans
2. One Punch Man
3. My Hero Academia
4. Death Note
5. Tokyo Gohul
6. One Piece
7. Mob Psycho
8. Bleach
9. Full Metal Alchemist
10. Berserk
இந்த 10 ம் 10 முத்துக்கள்....
👏👏👏
Delete+ 111111
எனது மங்காவா? நான் வரவில்லை சாமி!
Deleteஒருமுறை மங்கா படித்து பாருங்கள்... பரணி அண்ணா :-) அப்பறம் ஆசிரியர் கிட்டே நீங்களே கேப்பிங்க.... நான் எனக்காகவே My Hero Academia மங்காவை 2400 பக்கங்களையும் ஒரே புத்தகமாக பிரிண்ட் செய்து வைத்துள்ளேன் என்றால் என்னுடைய மங்கா ஆர்வம் எப்படிப்பட்டது என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள் :-)
Deleteமங்கா தான் இன்றைய பள்ளி கல்லூரி மாணவர்களின் விருப்பமாக உள்ளது. Death Note Anime Series பாத்து அதனுடைய மங்காவை மட்டும் இதுவரை 32 பேர் என் கல்லூரியில் வாங்கி இருக்கிறார்கள்... (https://www.amazon.in/Death-Note-All-Takeshi-Obata/dp/1421597713/ref=sr_1_1?ie=UTF8&qid=1515473362&sr=8-1&keywords=death+note+all+in+one)...
*** மங்கா தமிழில் வரும்போது கண்டிப்பாக நமது வாசகர் வட்டம் பெரிதாகும்.... இதன் காரணமாகவே நான் தமிழில் மங்கா வர ஆசை படுகிறேன்...
Karthikeyan @ பார்க்கலாம்! :-)
Deleteநண்பர்களே, என்னிடம் ஒரு ரிப்போர்ட்டர் ஜானி கதை உள்ளது. இதன் முதல் பக்கம் என்னிடம் இல்லை, இந்த கதையின் தலைப்பு என்ன என்று தெரிய வில்லை. தெரிந்தவர்கள் கதையின் தலைப்பை கூறவும்.
ReplyDeleteஜானி துப்பறியும் கதையில், கருப்பு நிற உடை அணிந்த ஒரு முகமூடி, சில பேரை கொன்று அவர்கள் உடம்பில் ஒரு அம்பு குறி விடுவான்.முடிவில் கொலையாளி பெயர் லாட்வின். தன்னை தானே சுட்டு கொண்டு
செத்து விடுவான்.
இந்த கதையின் தலைப்பு என்ன ?
இரத்த அம்பு
Deleteதிகில் காமிக்ஸ்
Deleteவெளியீடு எண் :-42
மிக்க நன்றி சரவணகுமார்
DeleteB : ஏனிப்பிடி பேயறைஞ்ச மாதிரி முழிக்கிறீங்க.
ReplyDeleteA : பேய்க்கே வாழ்க்கப்பட்டாச்சு.இனிமே எவன் சுட்டா என்ன?
ஹா ஹா ஹா
DeleteA: ஆமா, ஏன் கண்ண மூடிட்டே வர்ற.
ReplyDeleteB: கண் இல்லாத எனக்கு வாழ்க்கை குடுத்த தெய்வம்ல நீங்க.
A: என்னாது கண்ணூ த்த்த்தெர்ரியாதா
எப்பா சீக்கிரமா சுட்டு தொலைங்க.என்னையில்ல.இவளை.
B: டார்லிங், உங்க கூட கண்ண மூடிட்டே நடந்தாலும் சொர்க்கம் தான்.
ReplyDeleteA: ஆமாமா,சொர்க்கத்துக்கு டைரக்ட் டிக்கெட் தர , எதிரே பார்ட்டிங்க ரெடி தான்.
டிசம்பர் 16 ல் சந்தா கட்டி இன்னும் புத்தகத்திற்காக வெயிட்டிங் .... கடுப்பேத்துராய்ங்க மைலார்ட்....
ReplyDeleteB: அன்பே,இந்த டிரஸ்ல நான் எப்டி இருக்கேன்னு சொல்லவேயில்லை. தேவதை மாதிரி இருக்கேனா.
ReplyDeleteA: பெண்களுக்கு நேரங்காலம் தெரியாதுங்கிறது ரொம்ப சரி.எதிரே ஒருத்தன் துப்பாக்கியில என்ன குறி பார்த்திட்டிருக்கான்
B: அப்ப பின்பக்கமா தப்பிச்சு ஓடிருங்க.
A: பின்னால உங்கப்பனும் உங்கண்ணனும் வழியில நிக்கிறாங்க.
B: அப்ப எதிரேயே ஓடீருங்க.யாரும் எதிர்பாக்க மாட்டாங்க.உங்க இன்சூரன்ஸ் பாலிசி பீரோவில தான இருக்கு.
கேப்ஷன் போட்டிக்காக : A:அடேய் துப்பாக்கியால் குறி பாக்கறது யாரயிருந்தாலும் முகூர்த்தத்துக்குள்ளே சுடுங்கடா இவளை கல்யாணம் செய்றதும் சாகறதும் ஒண்ணுதாண்டா B:உங்க மைண்ட் வாய்ஸ் கேட்ச் ஆகுது.உங்களை குறி வைக்கிறவன் என்னோட முன்னாள் பாய் ப்ரெண்ட் நீங்க கல்யாணத்தில் இருந்து எஸ்கேப் ஆனாதான் சுடுவான்.அவன் எஸ்கேப் ஆக வேணாமா?
ReplyDeleteநன்றி பரணி
DeleteA:எதிரே என் காதலி குறி பாத்து சுடப்போறா .
ReplyDeleteB: யாரு அந்த குந்தாணி கிழவியா.சீக்கிரமா சுட்டுட்டு ஜெயிலுக்கு போயிட்டான்னா நல்லது.அப்பத்தானே நான் அவளோட பாய்பிரண்ட அதாவது என்பழைய காதலனை கட்டிக்க முடியும்.பார்ட்டி பின்னால ரெடியா நிக்கிறானே.
A: மாப்பூ நல்லா வைக்கிறாங்கடா ஆப்பு.
எடிட்டர் சார்,
ReplyDeleteசென்ற வாரம் உங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தேன். பதில் கிட்டவில்லை. கொஞ்சம் பார்த்துவிட்டு சொல்லலாமா?
ஹாய் ஸார்,ஹாய் ப்ரண்ட்ஸ்
ReplyDelete"என்னது லேடி S ஸ்பெஷல் வெளியிடறீங்களா?ஏற்கனவே வந்த ரெண்டு கதையே இன்னும் ஜீரணிக்க முடியலை..எவ்வளவோ கதைகள் ஓ.கே பன்னிக்கலாம்...இது என்னால் முடியலை"
நன்றி
அப்போ மாடஸ்டி????
Deleteஇளவரசியார் மீது எப்போதும் எனக்கு மிகுந்த அபிமானம் உண்டு.'சிறையில் ஒரு சிட்டுகுருவி' மிகவும் ரசித்தேன்.ஆனால் உடன் களமிறங்கிய ஜூலியா சொதப்பி விட்டார்.என் ரசணை ஜூலியாவை ரசிக்கும் அளவு வளரவில்லை???
Deleteமாடஸ்டி ஒரு டிரேட்மார்க்
என் பதிவும் கருத்தில் எடுத்து கேள்வி கேட்டதற்கு நன்றி
:-)
DeleteA:caption ல ஜெயிச்சா சந்தா free ன்னுதானே சொன்னாங்க கடைசில எல்லாருமா சேர்ந்து இந்த சாந்தாவ என் தலையில கட்டிட்டானுங்களே?
ReplyDeleteB:கிழவன போட்டுத்தள்ளிட்டா சொத்தெல்லாம் நமக்குத்தான் அப்புறம் எடிட்டரும் நானும் ஹனிமூனுக்கு இத்தாலிதான்.ஐய்யா ஜாலி!
******* சேற்றுக்குள் சடுகுடு ******
ReplyDelete* கண்ணைக் கவரும் வண்ணங்கள்
* கிரிஸ்டல்-க்ளியர் பிரின்ட்டிங்
* பார்த்தாலே சிரிக்கத் தோன்றும் ஸ்கூபியின் முகபாவங்கள் + உடல்மொழி. இவற்றிற்கு 100% பொருந்திப்போகும் ரகளையான வசனங்கள்!
வேறென்ன வேண்டும் ஒரு ஜாலியான 'கெக்கபிக்கே' வாசிப்பு அனுபவத்திற்கு?!!
என்னுடைய ரேட்டிங் : 10/10
கேப்ஷன் போட்டில ஜெயிச்சதுக்கு பரிசா LMS தானே தர்றேன்னாங்க.....! இலவச இணைப்பா இவள கல்யாணம் பண்ணி வப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா....அந்தபோட்டிலயே கலந்துக்காம இருந்திருப்பேனே....!
ReplyDeleteLMS ல வந்த கி.நா.வை படிகக்கறதுக்கு முன்னமே இப்படி பேஸ்தடிச்சு கிடக்காரே.....! படிச்சதுக்கப்புறம் என்ன ஆவாரோ...?
ஜனவரி இதழ்கள் பட்டயக் கிளப்புகின்றன.
ReplyDeleteபிப்ரவரி இதழ்கள் லிஸ்ட் ப்ளீஸ் ...
ReplyDeleteவிஜயன் சார், நாளை துவங்குகிறது சென்னை புத்தக திருவிழா. நமது ஸ்டாலின் எண் என்ன? ஒரு ஸ்டாலா இரண்டு ஸ்டாலா?
ReplyDeleteபுத்தகத் திருவிழாவில் விற்பனையில் சாதிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.
கேப்ஷன் போட்டில ஜெயிச்சா LMS தானே தர்றேன்னாங்க...! இப்ப இலவச இணைப்பா இவள என் தலைல கட்டிட்டாங்களே....! இது மொதல்லயே தெரிஞ்சிருந்தா..போட்டில கலந்துக்காமலே இருந்திருப்பேனே...!
ReplyDeleteLMS ல வந்த கிராபிக் நாவல படிக்காததுக்கு முன்னமே இப்படி ஆயிட்டாரே...! படிச்சதுக்கப்புறம் என்ன ஆவாரோ...?!?!
மாப்பிள்ளை ஸார்வாள்.பொண்ணைப்பாருங்க எவ்வளவு அழகா சிரிக்குது..நீங்களும் கொஞ்சம் சிரிக்கலாமே நாங்க போட்டோ எடுக்கணும்லே..
ReplyDeleteஅட நாதாரிங்களா..கொஞ்சம் மீசை பெருசா வச்சது தப்பாடா?கல்யாண வயசைக் கடந்து முப்பது வருசமாச்சு இன்னிக்குதான் மணக்கோலத்திலே நிக்கிறேன் அதை நினைச்சி முப்பத்திரண்டு பல்லும் தெரியிற மாதிரி சிரிச்சிகிட்டுதானேடா இருக்கேன்
மாப்பிள்ளை சார்..நீங்க வெற ப்பா ஜம்முனு நிக்கிறீங்க பொண்ணு என்னமோ ஆப்பிரிக்கா விலே இருந்து பிடிச்சிட்டு வந்தமாதிரி தெரியுது
ReplyDeleteஉள்ளூர்லே எவண்டா எனக்கு பொண்ணு தர்றான்
டார்லிங் எதைப்பார்த்து எங்கிட்டே மயங்கினே?என்னோட கர்ன ல்ங்கிற அந்தஸ்தா என்னோட வீர தீர பராக்கிரமமா ..இல்லே என்னோட முறுக்கேறிய கட்டுமஸ்தான பெர்சனாலிட்டி பார்த்தா ?
ReplyDeleteஉங்க பேங்க் பாஸ்புக்கிலே ரெண்டு கோடி ரூபாய் இருக்கிறதை பார்த்துதான் டியர்
ஸ்விட்சர்லாந்துக்கு ஹனிமூன் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லித்தான் என்னை கல்யாணம் பண்றீங்க மீசை..முடியாதுனு சொன்னீங்க..
ReplyDeleteஎன்னை என்ன மாக்கான்னு நினைச்சியா டியர் மூணு மாசத்துக்கு டிக்கெட்டே இல்லென்னான் கெஞ்சி கூத்தாடி உனக்கு மட்டும் டிக்கெட் வாங்கி வந்திருக்கேன் சந்தோசம்தானே
செம ஜி
Deleteசெல்லக்கிளி உன்னோட தங்க நிற கன்னம் ஆப்பிள் மாதிரி செவந்துடுச்சே அப்படி என்ன அந்த வீடியோக் காரன் ரகசியமா அஞ்சு விரலைக் காட்டி சைகை பண்ணினான் ?
ReplyDeleteஓ கவனிச்சிட்டீங்களா ..இந்த வீ டியோக்காரன்தான் வழக்கமா என்னோட எல்லா கல்யாணத்துக்கும் படம் எடுக்கிறவன் அந்த வகையிலே அவனுக்கு நான் அஞ்சாயிரம் ரூபாய் பாக்கி அதைத்தான் ஞாபகப்படுத்தினான்
பெருசு..மோதிரம் மாத்தியாச்சு கை கோத்தாச்சு நச்சுன்னு லிப்கிஸ் குடுத்துட்டீ ங் கன்னா எங்க வேலையைப் பார்க்க போயிடுவோம்லே
ReplyDeleteஅடேய் வீடியோக்காரங்களா என்னடா உங்க வேலே ?
எங்களை என்ன சாதாரண படம் எடுக்கிற ஆளுன்னு நினைச்சியா ..கிழட்டுகர்னலின் லீலைகள்னு எடிட் பண்ணி உலகம் பூரா திருட்டு விசிடியிலே போட்டு பணத்தை அள்ளிட மாட்டோம்
கல்யாண மண்டபத்திலே பாட்டு கச்சேரி வச்சிருந்தேன் பாட்டு பாடுற பொண்ணு ஏன் இடையிலேயே எந்திரிச்சி ஓடுறா ?
ReplyDeleteஅதுவா..மச்சான் மீசை வீச்சரிவா பாட்டை மட்டும் இருபத்தி ஆறாவது தடவையாபாடச்சொல்லி மணப்பொண்ணு கேட்டுச்சாம்
ஏன் பாப்பா ..உன் சித்தப்பான்னு ஒருத்தன் வாத்து சரியில்லே வாத்து சரியில்லேன்னு மண்டபம் பூரா சொல்லிட்டுத்திரியிறானாம் ..நான் வாத்து பிரியாணி போடலியே ..கோழி பிரியாணி தானே போட்டிருக்கேன்
ReplyDeleteஐயோ ஐயோ .அவர் சொல்றது மண்டபத்துக்கு வாஸ்து சரியில்லேன்னு வயசான காலத்திலே ஸ்பீக்கரும் அவுட்டா ..
கேப்சன்ல ரண்டுமே மைன்ட் வாய்ஸ்க்கான பலூன் தானே இருக்கு!
ReplyDeleteரொம்ப சாமர்த்தியமா உங்களுக்கு ஒரு கல்யாண கிப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன் ..செலவே இல்லாம...
ReplyDeleteவெரிகுட் வெரிகுட் ..எப்படி ராசாத்தி
நேத்து உங்க கிரெடிட் கார்டிலே முப்பதாயிரம் ரூபாய்க்கு எனக்கு டிரஸ் வாங்கினேனா கடைக்காரன் ஒரு கர்ச்சீப் பிரீயா குடுத்தான் ..அது உங்களுக்கு .
நம்ம கல்யாணத்துக்கு மொய் எழுதுற இடத்திலே என்ன கலாட்டா ?
ReplyDeleteயாரோ ஆர் கே நகர் காரராம் ..பத்தாயிரம் எழுதிட்டு ஒரே ஒரு இருபது ரூபாய் தாளை நீட்டுறாராம்
ஏதோ நாலெழுத்து மட்டும் படிச்சிருக்கேன் ..மேற்கொண்டு மூணு எழுத்து படிக்க ஆசைப்படுறேன் அதுக்கு உங்க கல்யாணம் உதவி செஞ்சா சந்தோசப்படுவேன்னு நாசூக்கா நமக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருக்காரே யார் அவர் ?
ReplyDeleteராஜசிம்மன் சோமா தான் A B C டி படிச்சுட்டாராம் L M S சும் படிக்கணுமாம்
@ rajasimman soma
Deleteநல்ல நகைச்சுவை உணர்வும், எழுத்தாற்றலும் உங்களிடம் நிறைந்துள்ளது நண்பரே! ஆனால் அவற்றை கேப்ஷன் போட்டிக்காக மட்டும்தான் என்றில்லாது, அவ்வப்போது இங்கே தளத்தில் பங்குகொள்வதிலும் காட்டினால் அனைவரும் மகிழ்வோம்!
Stall no. 304 - assigned for our "Muthu Comics".
ReplyDeleteStall no. 304 - assigned for our "Muthu Comics".
ReplyDeleteஹலோ.!ஹலோ! மைக் டெஸ்ட்.!!
ReplyDeleteசில பல பொருளாதார நெருக்கடிகளுக்குப்
ReplyDeleteபிறகு அடிச்சுப்புடிச்சு சந்தா கட்டியாச்சு!!
ஹய்யா ஜாலி ஜாலி ஜாலி
வாழ்த்துக்கள்.!!!
Deleteநான் ஏற்காடு எக்ஸ்பிரஸை ஈரோட்டில் தவறவிட்டுவிட்ட்டேன்.! எப்படியாவது சேலத்தில் பிடித்துவிடுவேன்..!(பிப்ரவரியில் சந்தா கட்டிவிடுவேன் )
@Mithun Chakravarthi
Deleteவெரி குட்!
@மாடஸ்டி ஆர்மி.
அட்வான்ஸ் சல்யூட்!
ஹலோ.!ஹலோ!ஹல்லல்லோ.!!!
ReplyDeleteதோர்கல்
ReplyDeleteசாதாரணமான ஆள்கடத்தல், பிளாக் மெயில் எளிமையாக ஆரம்பிக்கும் கதை பக்கங்ளைத் தாண்டத் தாண்ட வித விதமான ஆச்சரியங்களைத் தொட்டு, முடிவில் கற்பனையையும் தாண்டிய பரிணாமமாக உருமாறி சிலிர்க்க வைக்கிறது.
மரக்காலன், ஜோலனுக்கு அம்பு விடும் பொசிஷனை விளக்கும்போதே வான் ஹேமே ன் ஆட்டம் ஆரம்பிக்கிறது. Fantasy உலகை மையமாக அமைத்தாலும், சம்பவங்களையும், சகமனிதர்களையும் உண்மைக்கு மிக அருகிலேயே பயணிக்க வைக்கிறார்.
கற்பனைக்கு எல்லையில்லை என்றாலும், சாதுரியமாக நம்பகத் தன்மையுடன் கூடிய கற்பனையாற்றலையே உலா விட்டிருக்கிறார். இதன் விளைவாக 'இது சாத்தியமா ' என்ற கேள்விக்குள் நுழையாத படி, நம்மை மெய் மறந்து கூடவே பயணம் செய்யும் மந்திர வித்தைக்கு அடிபணிய செய்தது.
நான்கு பாகங்களிலும் ஏகப்பட்ட ப்ளாஷ்பேக் முடிச்சிகள் இருந்தாலும், முன்பாகத்தை புரட்டும் அவசியம் இல்லாமலேயே கதையினை அமைத்திருக்கும் விதம் அற்புதம்.
கதைநாயகன் தோர்கலாக இருந்தாலும், கதை சுற்றியும் பின்னப்பட்டது ஜோலனை என்றாலுமே, தோர்கலின் ஈர்ப்பு எந்த விதத்திலும் மங்கிடவில்லை.
அடங்காப் பிடாரி வில்லியாக கிறிஸ், பெண்ணிண் அண்மையில் தடுமாறும் ஜால், மகனை மீட்க கூடவே வரும் ஆரிசியா, தன்னைக் கடவுளா அமைத்துக் கொண்ட ஓகோடை, டானாட்லாக் தேவன், ஸின்ஜின் இனத்தைச் சேர்ந்த வாரியே மற்றும் பலர் என மூச்சு முட்டும் பாத்திரங்கள் இருந்தாலும், குழப்பமில்லாத கதையமைப்பு.
பிரபஞ்சக் கூட்டத்திலேயே பூமி இருந்தாலும், பூமியை அடுத்துள்ளதே பிரபஞ்சவெளி என்றே மனமானது பூமியை தனித்துவமாக எண்ணுகிறது.
பிரபஞ்சம் என்பது வேறெங்கொ இருப்பதல்ல. நாம் இருப்பதே அதில்தான் எஎனும் போது அதன் மர்மம் எளிமையாகிறது.
ஆசிரியரின் மொழிபெயர்ப்பு ஜீவனுடன் விளங்குகிறது.அதிலும் டானாட்லாக் தேவனை 'ஐயனே ' என அழைப்பது சிறப்பாக உள்ளது.மாறாக கிரிஸ் 'மாமோய் ' என்பது பொருந்தவில்லை.
மொத்தத்தில்
புத்தாண்டை சிறப்புடன் வரவேற்க பொருத்தமானது.முக்கியமாக நான்கு பாகங்களையும், ஒரே பாகமாக வெளியிட்டது ஆகச்சிறந்த முடிவு.
///'இது சாத்தியமா ' என்ற கேள்விக்குள் நுழையாத படி, நம்மை மெய் மறந்து கூடவே பயணம் செய்யும் மந்திர வித்தைக்கு அடிபணிய செய்தது.///
Deleteஅழகான வரிகள்!
///பிரபஞ்சம் என்பது வேறெங்கொ இருப்பதல்ல. நாம் இருப்பதே அதில்தான் எஎனும் போது அதன் மர்மம் எளிமையாகிறது.///
செம!
//கற்பனைக்கு எல்லையில்லை என்றாலும், சாதுரியமாக நம்பகத் தன்மையுடன் கூடிய கற்பனையாற்றலையே உலா விட்டிருக்கிறார். இதன் விளைவாக 'இது சாத்தியமா ' என்ற கேள்விக்குள் நுழையாத படி, நம்மை மெய் மறந்து கூடவே பயணம் செய்யும் மந்திர வித்தைக்கு அடிபணிய செய்தது.//
Delete+1
சார்! எனக்கு இம்மாதம் வந்திருந்த கூரியர் பார்சலில் 'நிஜங்களின் நிசப்தம்' புத்தகம் இரண்டு இருந்தது. அதில் ஒன்றை நேற்று DTDC கூரியரில் அனுப்பி வைத்துவிட்டேன். அது இன்றைக்கு உங்கள் அலுவலகத்திற்கு வந்துவிடும்.
ReplyDeleteஎக்ஸ்ட்ரா காப்பியை திருப்பியனுப்ப நீங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தை - பாராட்டுக்குரியது! வாழ்த்துகள்!
DeleteThe Chennai Book Fair 2018 starts today. Any details about Stall No and Editior's visit to Chennai?
ReplyDelete@ Raghavan
Deleteஸ்டால் நம்பர் : 304
எடிட்டரின் வருகை குறித்து இதுவரை தகவல் ஏதுமில்லை!
Raghavan : ஸ்டாலில் இம்முறை all new டீம் என்பதால் இன்றைக்கு மதியம் ஒரு திடு திடு விசிட் அடித்து விட்டு சின்னதொரு பயணம் புறப்படுகிறேன் ! பொங்கல் விடுமுறைகளில் ஸ்டாலில் இருக்க எண்ணியுள்ளேன் சார் ! நிச்சயம் சந்திக்கலாம் !
Deleteபொங்கலன்று தங்களை சந்திக்க
Deleteகாகாத்திருப்பேன் விஜயன் சார்.
பொங்கலன்று தங்களை சந்திக்க
Deleteகாகாத்திருப்பேன் விஜயன் சார்.
Chennai bookfair stall number please.
ReplyDelete@ John simon
Deleteஸ்டால் நம்பர் : 304
பில் நார்ட்டன் அப்பாவியாக அறிமுகம் .ஆனால் அவன்பணிபுரியும் ரயில்வே கம்பெனி முதலாளியையே தீர்த்து கட்டஏற்பாடு செய்யும் கொலைகாரன் மாண்டேகோ ..காரணம் மார்ஷ் . பில்லின் வம்சத்தையே கொன்று நிலத்தை அபகரிக்க மார்ஷ் துணைக்கு நின்றது லூதர் வாகோமென் .தற்சமயம் வாகோமென் முதலாளியம்மா பெத்தானி .மார்ஷின் மனைவி மற்றும் விதவை.மாண்டேகோ வின் கையாள் ரௌல் .ரௌலைப் பிடிக்க ஓடும் ரயிலி ல் முனையும்போது வாகோமெனின் பாதை யில் நமது டெக்ஸ் குறுக்கிட ஆரம்பிக்கிறது ஒரு கணவாய் யுத்தம் முதல் சில பக்கங்களில் சாகச வில்லனாக வரும் மான்டேகோ
ReplyDeleteபிறகு நீதியின் பக்கம் இருப்பது சிறப்பு .அடிதடிக்கும் சாகசத்திற்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாத கதை..பேராசை கொண்ட பெத்தானி தன்னுடைய ரயில் பாதையிலேயே மலை உச்சியில் இருந்து வீழ்வது நயம்.கார்சனின் நகைச்சுவை . காராபூந்தி. மறக்க முடியா யுத்தம் கணவாய் யுத்தம்
நடுவுல கொஞ்சம் முற்றுப்புள்ளி, கொஞ்சம் கமா, சேத்திருந்தா நல்ல விமர்சனமாக மாறியிருந்திருக்கும் சார்.
Deleteசெம!
Deleteசூப்பர் விமர்சனம்!
Deleteஉங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சில்லே ..பின்னே ஏன் என் கிட்டே கல்யாணம் ஆகலேன்னு பொய் சொன்னீங்க ?
ReplyDeleteஉன் அழகிலே நான் மெய் மறந்து போனதுதான் காரணம் .
மாலை வணக்கம் நண்பர்களே.
ReplyDeleteHai
ReplyDelete300 பக்க கி.நாவையே 3 மணி நேரத்துல படிச்சிட்டேன். 30 பக்க இஸ்பைடர் அதுவும் இக்குனூண்டு சைஸ்ல படிக்கிறதுக்கு 3 நாள் முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறேன். இன்னும் முடியவில்லை. காலை பத்து மணி, மாலை ஆறு மணி என்று நேரங்கெட்ட நேரத்திலெல்லாம் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருப்பதற்காக வீட்டில் பாட்டு வாங்கிக் கொண்டிருக்கிறேன். நண்பர் ஈவி இதற்கு ஒரு வழி சொன்னால் தேவலை!
ReplyDelete@ ஆதி
Deleteஎன்னியவிடவும் கிட்ஆர்டின் கண்ணன் தான் இஸ்பைடர் கதைகளை விரும்ம்ம்பி படிப்பவர். அவரு ஐடியா சொல்றதுதான் சரியா இருக்கும்!
ஹிஹி. ஓவர் டூ KOK!
///என்னியவிடவும் கிட்ஆர்டின் கண்ணன் தான் இஸ்பைடர் கதைகளை விரும்ம்ம்பி படிப்பவர். அவரு ஐடியா சொல்றதுதான் சரியா இருக்கும்!///
Deleteஇதைப் படிச்சதும்
"ஒரு நிமிசம் தலை சுத்திடுச்சி "
@ ALL : இன்று சென்னையில் துவங்கும் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 304 !! குடும்பத்துடன் ஒரு விசிட் அடித்திடலாமே - ப்ளீஸ் ?
ReplyDeleteநமது ஸ்டால் நன்றாக உள்ளது!
Deleteஎல்லா புத்தகங்களுக்கும் 10 தள்ளுபடி என்பதை நமது ஸ்டாலின் முன் வைத்தது அருமையான யுக்தி!
வெற்றி பெற விற்பனை சிறக்க எனது வாழ்த்துக்கள்!
விற்பனையில் சிறக்க வாழ்த்துகள் சார். இரண்டு வார இறுதிகளுக்கும் டிக்கெட் புக் செய்து வைத்திருக்கிறேன் - எந்தவாரம் வர இயலுமோ அப்போது வந்துவிடலாம் என்று! இந்த வாரம் அங்கே வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைச்சல் என்பதால் 20,21 தேதிகளில் வருகிறோம். மாயாவி சிவா, புனித சாத்தான், டாக்டர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் அங்கே வர ஆர்வமாயுள்ளனர்!
Deleteநீண்ட இடைவெளிக்குப் பிறகு ராதாகிருஷ்ணன் அண்ணாச்சியை புத்தகத் திருவிழா ஸ்டாலில் காணக்கிடைப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது!
Deleteஸ்டால் அருமையாக உள்ளது .விற்பனை சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் சார் .
Deleteஇரண்டு ஸ்டால் கிடைக்காததில் வருத்தமே. மற்றபடி விற்பனை சிறக்க வாழ்த்துக்கள் சார்
DeleteSir, is hard cover necessary? It cost us more every month. Really a burdon.
ReplyDeleteSir,the burden hasn't been passed on to you. THORGAL was planned, priced & advertised as a regular book ; but the hardcover binding was done at no added cost to make the first book of the year look good.
DeleteThis cost is out of our pockets ; not the readers'....
Burden
ReplyDeleteகேப்சன்1:
ReplyDeleteA.(நாம வச்ச ஆளு இவள கண்டிப்பா காலி பண்ணிருவான்...ஹையா...)
B.(நாம வச்ச ஆளு இவன கண்டிப்பா காலி பண்ணிருவான்...ஹையா....)
கேப்சன்2:-
A.நம்ம மேரேஜ் முடிஞ்சத கொண்டாட என்ன பிலிம்க்கு போகலாம் டார்லிங்...
B."என்னை நோக்கி பாயும் தோட்டா!"
கேப்சன்3:
A.போட்டோ ஷீட்னு தானே சொன்னானுங்க...ஒருவேள நாமதான் தப்பா புரிஞ்சுகிட்டமோ?
B.ஆமா..மா..ம்..
கேப்சன்4:-
B.உங்களதான் சுட எய்ம் பண்றாங்க டியர்...
A.மூளை கெட்டவனுங்க...தற்கொலையை கொலையா மாத்தி என்னத்த சாதிக்க போறானுங்களோ..
கேப்சன்5:-
A.கல்யாணம் பண்ணதுக்கா என்னை இப்படி குறி வைக்கறானுங்க...
B.அறுபதாம் கல்யாணங்கறத தப்பா புரிஞ்சுகிட்டு அறுபது பேர கல்யாணம் பண்ணினா சும்மா விடுவாங்களா தாத்தா...
கேப்சன்6:-
A.காதலித்துப் பார்..உன்னை சுற்றி ஔிவட்டம் தோன்றும்..
B.கல்யாணம் பண்ணி பார்...உன்னை சுற்றி குறி வட்டம் தோன்றும்
கேப்சன்7:
A.நான் பெரிய ஆளுனு சொன்னப்ப நம்பலேல, அங்க பாரு பெரிய பெரிய கேமராலாம் வச்சு என்னை படம் பிடிக்கறாங்க..
B.அட கிழமே..முதல்ல கண்ணாடிய போட்டு பாரு,உன்ன போட்டு தள்ள குறி பார்க்கறானுங்க...
கேப்சன்8:
A.நீ எனக்கு கிடைச்சத என்னால நம்பவே முடியல டார்லிங்...சந்தோசத்துல என் இதயமே வெடிச்சுடும் போல இருக்கு...
B.இ..இப்..இப்ப அப்படிதான் நடக்க போகுதுனு நினைக்கறேன் டியர்...
கேப்சன்9:
B.அ..அங்க யாரோ துப்பாக்கியோட நிக்கறாங்க டார்லிங்..(நைஸா ஓடிட வேண்டியதுதான்)
A.(ம்க்கும்...)அப்படியே வானத்த பார்த்து மூணு குண்ட முழக்கிட்டு போயிடுங்கடா...
கேப்சன்10:
A.யாரு செய்யற வேலைடா இது..கூட நிக்கற அம்மணியா? இல்ல பின்னாடி உர்ருனு நிக்கற இந்த அம்மணியோட முன்னாள் வீட்டுகாரனுங்களா?புரியலயே
B.அத பண்றது வருங்கால "சிவகாசி மாமா"தானு இன்னுமா உங்களுக்கு புரியல டார்லிங்..
//
Deleteகேப்சன்4:-
B.உங்களதான் சுட எய்ம் பண்றாங்க டியர்...
A.மூளை கெட்டவனுங்க...தற்கொலையை கொலையா மாத்தி என்னத்த சாதிக்க போறானுங்களோ..
//
சூப்பர்.
சொல்ல போனால் எல்லாமும் அருமை. வாழ்த்துக்கள்.
நண்பர் பரணி சொன்னதுபோல் எல்லா கேப்ஷனுமே அருமை! வெற்றிபெற வாழ்த்துகள் M.Vidya!
Deleteநன்றி நண்பர்களே...
Deleteகேப்ஷன்.
ReplyDeleteகர்னல்: மனதில் பாடுகிறார்.!
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா.? இல்லை ஓடிப்போய் கல்யாணம் செஞ்சுக்கலாமா.???
மணப்பெண்.!(மனதில்)
எந்திருச்சு நிற்க்கவே தெம்பில்லை .....? இவனுக்கு ஒரு கல்யாணம் ஒரு கேடா.????
மணப்பெண்.! ஒருத்தன் உங்களை கொல்ல துப்பாக்கியில் குறிபார்க்கிறான் என்று சொல்லியும் மனுஷன் அசரவே இல்லையே.? உண்மையிலே வீரன்தான்.!
ReplyDeleteகர்னல் :
கள்ளிப்பாலில் ஹார்லிக்ஸ் கலந்து குடிச்சா என்ன? பூஸ்ட்கலந்து குடிச்சா என்ன? எல்லாம் ஒன்றுதான்.! கல்யாணம் பண்ணிக்கிறதும்., துப்பாக்கி குண்டு பட்டு சாகிறதும் ஒண்ணுதான்.!!
மணப்பெண்.!
ReplyDeleteஉங்களை கொல்ல ஒருத்தன் துப்பாக்கியில் குறி பார்க்கிறான் என்று சொல்லியும் ,மனுஷன் அசரவில்லையே.? உண்மையிலே வீரர்தான்.!
கர்னல்;
ஹூம்.! கள்ளிபாலில் ஹார்லிக்ஸ் கலந்து குடிச்சா என்ன ?,பூஸ்ட் கலந்து குடிச்ச என்ன எல்லாம் ஒண்ணுதான்.!அதுமாதிரி...........கல்யாணம் கட்டிக்கிறதும் ஒண்ணுதான் , குண்டடி பட்டு சாவதும் ஒண்ணுதான்.!
// ஹூம்.! கள்ளிபாலில் ஹார்லிக்ஸ் கலந்து குடிச்சா என்ன ?,பூஸ்ட் கலந்து குடிச்ச என்ன எல்லாம் ஒண்ணுதான்.!அதுமாதிரி...........கல்யாணம் கட்டிக்கிறதும் ஒண்ணுதான் , குண்டடி பட்டு சாவதும் ஒண்ணுதான்.! //
DeleteWhatsups இல் வந்த காமெடி!
உங்கள் கமென்ட் சூப்பர்...
Deleteநீங்கள் பரிசு வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது...வாழ்த்துக்கள்
இம்மாத நிஜங்களின் நிசப்தத்தை படிக்க முயற்சி செய்கிறேன். கண்டிப்பாக அனைவருக்குமான புத்தகம் கிடையாது. எனக்கு பிடிக்கவில்லை.
ReplyDelete:-)
Deleteமணப்பெண் :
ReplyDeleteமாப்பிள்ளை இவர்தான். ஆனா இவரு போட்டிருக்கிற கோட்டு என் புருஷனோடது.
கர்னல் ::
அங்க ஒருத்தன் உயிரை வாங்க போறான்.இங்க இவ மானத்தை வாங்கிட்டாளே.
ஓநாயின் சங்கீதம் - a breezy read. நேற்றைய தலைவலிக்கு மருந்தாக இருந்தது. சிறிய சஸ்பென்ஸுடன் அதிரடியாக சென்றது. எனக்கு பிடித்திருந்தது.
ReplyDeleteவிண்வெளி பொடியன் - கடி பாஷையின் நடுவே பொடி பாஷையும் அவ்வப்பொழுது சேர்ந்த நெருடல் தவிர மற்றபடி ok. எனக்கு பிடித்திருந்தது.
ஸ்டாலில் 70 வயது வாசகர் மாயாவியை
ReplyDeleteகையில் ஏந்தி நிற்கும் காட்சியை காண
மனம் மகிழ்கிறது.
ஞாயிறு ஸ்டாலில் சந்திப்போம்
ReplyDeleteநண்பர்களே.
ஈ வி நான் சென்னையில்தான்
உள்ளேன்.
ஞாயிறு ஸ்டாலில் சந்திப்போம்
ReplyDeleteநண்பர்களே.
ஈ வி நான் சென்னையில்தான்
உள்ளேன்.
நண்பர்கள் & மற்றும் எடிட்டர் சமூகத்திற்கு போகித்திருநாள் வாழ்த்துகள்!
ReplyDelete'பழையன கழிதலும், புதியன புகுதலுமாம்' இந்நன்னாளில் நண்பர்கள் யாரேனும் தங்களிடமிருக்கும் பழைய காமிக்சுகளை தூக்கியெறிய விரும்பினால் நீங்கள் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி:
ஈ.வி
ஈ - 638005
ReplyDeleteGANESH.KV.
நண்பர்களுக்கும் ஆசிரியருக்கும்
பணிக்குழு அன்பர்களுக்கும் இனிய
பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteGANESH.KV.
நண்பர்களுக்கும் ஆசிரியருக்கும்
பணிக்குழு அன்பர்களுக்கும் இனிய
பொங்கல் வாழ்த்துக்கள்.
நமது காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ..
ReplyDeleteகேப்சன்
நம்ம கல்யாணத்துக்கு இந்த டிரஸ் எகிப்திலே இருந்து வாங்கினேன் ..இந்த செப்பல் சிங்கப்பூர்லே இருந்து வாங்கினேன் நீங்க யார் கிட்டே என்ன வாங்கினீங்க டியர் ?
இ ஈ க
அப்படின்னா ?
இவ்வளவுக்கும் ஈட்டிக்காரனிடம் கடன்
நமது காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteகேப்சன்
டார்லிங் ஏன் சோகமா இருக்கீங்க பாருங்க நம்ம கல்யாணத்துக்கு இந்த கவுன் எகிப்திலே இருந்து வாங்கினேன் ..இந்த செப்பல் சிங்கப்பூர்லே இருந்து வாங்கினேன் இந்த பூங்கொத்து கூட...ஆமா நீங்க யார் கிட்டே என்ன வாங்கினீங்க ?
இ ஈ க
அப்படின்னா ?
இவ்வளவுக்கும் ஈட்டிக்காரனிடம் கடன் .
A: யாருப்பா அது என்னை குறி பாக்குறது
ReplyDeleteB: யாரு அப்பாவா. நாந்தான் பொண்ணோட அப்பா.நீ கெட்ட கேட்டுக்கு 5 பவுன் செயினும் காரும் கேட்டியில்ல.உன்ன போட்டுட்டா உன்னோட இன்சூரன்ஸூம் அப்பறமா வீடும் யாருக்குப்பா சொல்லு.
Editor sir &my dear friends wish you happy pongal
ReplyDelete