Powered By Blogger

Sunday, October 01, 2017

காதலிக்கக் காரணங்கள் !

நண்பர்களே,

வணக்கம். லோகத்திலேயே மொக்கையான பணி எதுவென்று கேட்டால் - "ஒரு காமிக்ஸ் வோட்டெடுப்புக்குத் தேர்தல் அதிகாரியாய் இருப்பதே !" என்பேன் ! தளப் பார்வையாளர்களே 500+ என்றால் இங்கே பதிவாகும் ஓட்டுக்கள் மூன்று மடங்குக்கு மேலே !! 'திருமங்கலமாவது....புண்ணாக்காவது....எங்க கிட்டே டியூஷன் படிக்க வாங்க !' என்று சவால் விடும் நம்மவர்களை கண்காணிக்க ஒரு ஜோடி ஆந்தை விழிகள் போதாது என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டேன் ! எல்லாமே ஒரு ஜாலியான ஆட்டம் தான் என்பது தெரிவது ஒருபக்கமெனில் ; உங்களின் இந்த "பழமை மோகம்" போட்டுத் தாக்கும் வீரியம் இன்னொரு பக்கம் ! இருப்பதோ ஒரே slot எனும் பொழுது, ஞான் என்ன செய்யப் போகுதோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் ! 

ஒன்றுக்கு ரெண்டாய், மூன்றாய்,நான்காய் விடுமுறைகள் தொடர்ந்து அமைவதெல்லாம் குதிரைக் கொம்பெனும் போது - இந்நாட்களை உங்களைப் போலவே நானும்  குடும்பத்தோடு செலவிட்டு வருகிறேன் ! இருந்தாலும் அந்த சனியிரவு அலாரம் தலைக்குள் ஒலிக்கத் துவங்க - லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு ஓரங்கட்டத் தான் தோன்றியது ! வாரயிறுதியில் எனது  இந்தப்  பதிவுப் படலமானது இப்போதெல்லாம் அவர்களுக்கும் தெரிந்த சமாச்சாரம் என்பதால் - புள்ளையாண்டான் ஏதாச்சும் ஓரமாய் ஒதுங்கி சேட்டை பண்ணுறானோ ? என்ற சந்தேகம் எழுவதில்லை ! 

அக்டோபர் இதழ்கள் பிரெஷ்ஷாக நம்மிடையே உலவி வரும் இந்த வேளையில், ஒளிவட்டத்தை அவற்றை விட்டு வெகு தூரத்துக்கு  நகற்ற மனமில்லை ! கிராபிக் நாவலைப் பற்றி நான் பேசுவதை விடவும், நீங்கள் அலசுவதே சுவாரஸ்யம் என்பதால், அந்த ரூட்டில்  வண்டியை விட மனசில்லை ! வேறென்ன எழுதலாமெனும் போது - மெகா உருவமாய் நமது flagship நாயகர் நிற்பதும், இது அவரது 70-வது வெற்றியாண்டு எனும்பொழுது நூற்றியோராவது முறையாக அவரைப் பற்றி எழுதினாலுமே ரசிக்க நிச்சயமாய் நமக்குத் தடையிராது என்றுபட்டது ! நமது காமிக்ஸ் தலைமகனுக்கு நம் சார்பில், உங்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்வோமே முதலில் என்று நினைத்தேன் ! Happy 70th Birthday Boss !!

கூகுளைத் தட்டினால் - நம்மவரின் வரலாறு ; பூகோளம் என சகலமும் சகலருக்கும் கிடைக்கும் என்பதால் புதுசாய் அதனில் நான் சொல்ல என்ன இருக்கப் போகிறதென்று யோசிக்கும் போதே இந்த மஞ்சள் சட்டை மாவீரர் மீது நமக்கு அப்படி என்னவொரு விடாப்பிடியான காதல் என்று நூற்றியோராவது தடவையாக யோசிக்கத் தொடங்கினேன் ! நீதியை நிலைநாட்டும் சூப்பர் ஸ்டார்கள் நமக்கொன்றும் புதிதல்ல தானே ? மாயாவியில் துவங்கி, சட்டித் தலையன் ஆர்ச்சி ; ஸ்பைடர் என்று அத்தனை பேருமே செய்யும் வேலை அது தானெனும் பொழுது - டெக்சின் அந்த "நீதி தேவன் அவதார்" மாத்திரமே அவரது பிரபல்யத்துக்குக் காரணம் என்று சொல்ல மாட்டேன் ! ஓராயிரம் ஹீரோக்கள் எதிரிகளை 'ஏக் மார் - தோ துக்கடா' செய்தாலும், நம்மவர் போக்கிரிகளைத் தெறிக்க விடும் போது நமது இரத்தஓட்டம் வேகம் காண்பதற்கு நிச்சயமாய் வேறு காரணங்களும் இருக்க வேண்டுமென்றோ ?
ஹீரோக்களுக்கெனவொரு இலக்கணம் சினிமாக்களில் ஊறிப் போன நமக்குள்ளும் புதைந்திருப்பது நிச்சயம் என்பதால் TEX & கோ.வின் அந்த துளியும் பிசகா நாணயம் ; நேர்மை ; துணிச்சல் ; பெண்கள் மீது காட்டும் மரியாதை என சகலமும் பிடித்துப் போனதில் வியப்பில்லை ! இங்கு தான் டெக்சின் பிதாமகர் G.L.போனெல்லியின் தீட்சண்யத்துக்கு நாம் தலைவணங்கிட வேண்டும் ! ஒரு கதாப்பாத்திரத்தை உருவாக்கும் போது அதன் சாஸ்வதம் பற்றியோ ; வெற்றியைப் பற்றியோ பெரியதொரு கனவெல்லாம் கொண்டிருக்க சாத்தியமாகியிராது ! ஒரு நூறு காமிக்ஸ் கௌபாய்கள் உலவிடும் போது புது வரவான TEX  என்ன சாதித்திட முடியும் என்ற எண்ணம் நிச்சயமாய் அந்நாட்களது வாசகர்களுள் இருந்திருக்கக் கூடும். ஆனால் அந்தப் பாத்திரத்துக்கு போனெல்லி தந்த அழுத்தம் ; துவக்கத்திலேயே அசாத்தியமென்பேன்  ! சமீபத்து "கடல்குதிரையின் முத்திரை" அதற்கொரு உதாரணம் ! கதைத் தொடரின் இதழ் நம்பர் 15-க்கே TEX ; அவரைச் சுற்றியுள்ள உபநாயகர்கள் என எல்லோரது குணாதிசயங்களும் பக்காவாக set ஆகி இருப்பதைப் பார்க்கும் போது "ஆரம்பம் முதலே  அசைக்க இயலாவொரு" சக்தியாக டெக்ஸை உருவகப்படுத்தி இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது ! அந்தத் தன்னம்பிக்கை தான் நம்மை வசீகரம் செய்த முதல் புள்ளி  என்பேன் ! ஒரு கதாப்பாத்திரத்தை நல்லவன்-வல்லவன்-நாலும் தெரிந்தவன் என்று படைப்பது சுலபம் தான் ; ஆனால் தொடர் முழுசுக்கும் அந்த குணாதிசயங்களுக்கு நியாயம் செய்வது சுலபக் காரியமே அல்ல ! அதே போல ஓவர் பில்டப் தந்து அந்த நாயகனை காமெடி பீஸாக்காது தொடரச் செய்வதுமே செம tough சமாச்சாரம் ! இந்த இரண்டுக்குமே போனெல்லி சீனியர் எடுத்துக் கொண்டுள்ள பிரயத்தனங்கள் extraordinary !

TEX-ன் ஈர்ப்பிற்கு என்னைப் பொறுத்தவரை இன்னொரு  முக்கிய  காரணி - காலவோட்டத்தால் துளியும் மாற்றம் கண்டிடா தன்மையே என்று சொல்லலாம்  ! Oh yes - யார் நாயகராக இருந்தாலுமே வன்மேற்கு துளியும் மாற்றம் கண்டிடாது - அதே பாலை நிலம் ; முரட்டு மனிதர்கள் ; செவ்விந்தியர்கள் என்று தான் காட்சி தரப் போகிறது ! ஆனால்  நாட்களின் போக்கிற்கேற்ப கதை மாந்தர்களிடையே சிற்சிறு மாறுதல்கள் தலைதூக்குவது இயல்பே ! டைகரின் தொடரையே எடுத்துக் கொள்வோமே : இளம் சிப்பாயாய் ; தறுதலை லெப்டினென்டாக ; அப்புறம் சூதாட்ட ஸ்பெஷலிஸ்ட்டாக ; பின்னர் மார்ஷலாகப் பார்த்திருக்கிறோம் ! ஆனால் 70 ஆண்டுகள் பயணித்த பின்னேயும் இம்மி கூட மாற்றமின்றி - நாயகர்களின் தன்மைகள் ; தோற்றங்கள் ; பாணிகள் என்று எல்லாமே கல்லில் வடிக்கப்பட்டது போல் தொடர்வது நமக்கெல்லாம் "ரொம்பப் பழகியதொரு நண்பன்" என்ற உணர்வைத் தொடரச் செய்திருக்குமோ ?  போனெல்லியில்  பேசிக் கொண்டிருந்த போதுமே குழுமத் தலைவர் டேவிட் போனெல்லியிடம்  இது பற்றி மெதுவாய்க் கிளறிப் பார்த்தேன் ; அவரோ - அமைதியான புன்னகையோடு - "Tex has no reasons to change  " என்று சொல்லி விட்டார் ! So வரிகள் ; தேர்தல்கள் ; மொக்கை அரசியல்வாதிகள் ; மரத்தைச் சுற்றி பாட்டுப் பாடும் கிருஸ்துமஸ் தாத்தா வயது ஹீரோக்கள் ; விராட் கோலியின் சதங்கள் - என  வாழ்க்கையின் மாற்றம் காணா விஷயங்களுள் டெக்சின் இளமையும் ஒன்றென்பதில் நமக்கெல்லாம் ஒரு அதீத மகிழ்ச்சி என்பேன் !
"தென்காசிக்குப் போக வேண்டுமெனில் த்ரூ பஸ்ஸைப் பிடி ; உசிலம்பட்டி போய் ; ஆண்டிபட்டி போய் ; வாடிப்பட்டி போய் அப்புறம் தென்காசிக்கு வண்டி தேடும் ஜோலியெல்லாம் எதற்கு ?" - என்ற பாணியில் - போக வேண்டிய இலக்கிற்கு நேர்கோட்டில் பயணம் மேற்கொள்ளும் கதை பாணிகள் காரணம் # 3 என்பேன் ! ஸ்டைலாகக் கதை சொல்லும் பாணிகளோ ; பரீட்சார்த்த முயற்சிகளோ நம்மளுக்கு தேவையே கிடையாது பாஸ் ! பத்தாம் பக்கத்திலேயே இது தான் கதையின் plot ; இந்த சோமாறி தான் கதையின் மொள்ளமாறி என்பதையெல்லாம் ஸ்பஷ்டமாய் establish செய்துமே கதைகளை உயிர்ப்போடு நகற்றிச் செல்வது ஒரு அசாத்தியக் கலை ! அதனில் டாக்டரேட் பெற்றவர் சீனியர் போனெல்லி என்பதால் - அவரைத் தொடர்ந்த கதாசிரியர்களுமே அந்த பாணியை ஓரளவிற்குத் தொடரத் தவறவில்லை ! So காமிக்ஸ் வாசிப்புக்குப் புதியவர்களுக்கு கூட 'தல' யின் அந்த சில்லுமூக்கைச் சிதறடிக்கும் பாணி சுலபத்தில் பிடித்துப் போவதில் நோ வியப்பு என்று எடுத்துக் கொள்ளலாம் தானே ?

காரணம் # 4 என்று நான் நினைப்பது ஓவியர் கலெப்பினியின் சித்திரங்கள் என்று சொல்லலாம் ! நம்மவரின் அந்த கத்தி போன்ற மூக்கும், திடமான மோவாயும் கதைக்கு கதை துளியும் மாற்றங்களின்றி நம்மை வசீகரித்து வந்தது துவக்க நாட்களது எல்லா சாகசங்களிலும் ஒரு constant ! பகல்முழுக்க சீனியர் போனெல்லியுடன் கதை அலசல்களில் நேரத்தைச் செலவிடும் மனுஷன், இரையெல்லாம் டெக்ஸ் சித்திரங்களை போடுவது வழக்கமாம் ! அந்த dedicated excellence - இந்தத் தொடருக்கு ஒரு யானையின் பலத்தை நல்கியது கண்கூடல்லவா ?

காரணம் # 5 : ரொம்பச் சீக்கிரமே வாசகர்களின் நாடித் துடிப்பை உணர்ந்து கொண்ட போனெல்லி குழுமத்தின் ஆற்றல் என்பேன் ! ஒரு தொடர் வெற்றி காணும் போது அதனை நகாசு வேலைகளுக்கு உட்படுத்தும் ஆர்வம் படைப்பாளிகளின் மத்தியில் எழுவது இயல்பு ! அதே போல முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய இடங்களில் வம்படியாய்க் கதையை நீட்டிச் செல்வது ; காலத்தின் தன்மைகளுக்கும், கதையோட்டத்துக்கும் மத்தியினில் ஒரு இடைவெளி விழுந்து போய்விடின் அங்கே மங்களம் பாடத் தவறுவது என்ற தவறுகள் நிறைய கதைவரிசைகளில் அரங்கேறியுள்ளன ! ஆனால் டெக்ஸ் ஒரு ஜெயிக்கும் குதிரை என்பதை வெகு விரைவிலேயே உணர்ந்து கொண்ட போனெல்லி குழுமம் - தங்களது படைப்புலகையே டெக்ஸைச் சுற்றிச் சுழலுமாறு அமைத்துக் கொண்டார்கள் ! டாப் கதாசிரியர்கள் ; டாப் ஓவியர்கள் என சகலருக்கும் TEX தொடரில் தான் பிரதானப் பணி என்று அமைத்துக் கொண்டது மட்டுமன்றி - அந்த வெற்றியின் template துளி மாற்றமுமின்றித் தொடர அனுமதித்தார்கள் ! அட்டைப்பட ஓவியங்களில் அதே பாணிகள் ; வாசகர்களின் ஆர்வங்களுக்கேற்ப ஏகமாய் டெக்ஸ் கதைகளை உருவாக்க ஏற்பாடுகள் செய்தது ; அவற்றை ஒட்டுமொத்தமாய் வர்ணமயமாக்கிட வாய்ப்புக் கிட்டிய நேரத்தில் அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது என்பனவெல்லாம் போனெல்லியின் ஓசையிலா சாதனைகள் ! தொடர்ச்சியாய் டாப் திறமைசாலிகள் கைவண்ணங்களை ரசிக்கத் தொடங்கிடும் போதே நமக்கு அந்தத் தொடர் பிடித்தமானதொரு மெகா சீரியலாகிப் போய் விடுவது இயல்பு தானே ? Take a bow Bonelli Editore !!

அப்புறம்  ்கதைகளின் பன்முகத்தன்மையை டெக்சின் வெற்றிக்கு அடுத்த காரணமாகச் சொல்லலாம் தானே ? வன்மேற்குக் களங்கள் தானென்றாலுமே, அமானுஷ்யம் ; மாயாஜாலம் ; சைக்கோ த்ரில்லர் பாணிகள் ; டிடெக்டிவ் பாணிகள் ; etc etc என்று என்னென்னெமோ வர்ணஜாலங்களை நம் கண்முன்னே கொணர்ந்த பெருமை டெக்சின் படைப்பாளிகளை சாரும் ! "தலைவாங்கிக் குரங்கு" ;  "இருளின் மைந்தர்கள்" "சைத்தான் சாம்ராஜ்யம்" ; "மரணத்தின் நிறம்  பச்சை" ; திகில்நகரில் டெக்ஸ்" ; "குற்றம் பார்க்கின்" என்று வித விதமான ரகளைகளை நடத்திக் காட்டியுள்ள ஒரு நெடும்தொடரில் - "இன்னும் என்னென்ன மாறுபட்ட கதைகள் இங்கே காத்துள்ளனவோ ?" என்ற எதிர்பார்ப்பும் தானாய்ச் சேர்ந்து கொள்கிறதல்லவா ? கைவசமுள்ளது ஒரு குண்டுச் சட்டியே என்றாலுமே, அதனுள்ளே ஓட்ட முனையும் குதிரைச் சவாரிகளில் தான் எத்தனை எத்தனைவேறுபாடுகளை செய்திட முனைகிறார்கள் இந்தப் படைப்புலக ஜாம்பவான்கள் ? அவர்களது திறமைகளை டெக்ஸ் மூலமாய் நாம் உணரும் பொழுது - இந்தத்  தொடர் தொடும் உயரங்கள் ஒரு நூறல்லவா ? Variety within boundaries !!

அடுக்கிக் கொண்டே போகலாம் தான் - ஆனாலும் கார்சனின் பங்கை இந்த வெற்றிக் கதையினில் குறைவாய் மதிப்பீடு செய்வது நிச்சயமாய் மதியீனமே ! ஓகே...பின்னாட்களில் தான் டெக்ஸ் - கார்சன் வசனங்களில் ஒரு கலாய்க்கும் தொனியினை தூக்கலாக்கிட முனைந்திருந்தோம் ; அவர்களது நட்பின் ஆழத்தை highlight செய்திட வரிகளில் வீரியமும் கூட்டியிருந்தோம் ! ஆனால் ஆரம்பம் முதலே இந்த ஜோடியினிடையே இருந்த கெமிஸ்ட்ரி ஒரு அற்புத ரகம் ! So டெக்ஸை சிலாகிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் ஒரு கணிசமான பங்கு நம் ஆட்டுத்தாடி அண்ணாச்சியையும் சென்று சேர்ந்திட வேண்டும் நியாயப்படி ! And டைகர் ஜாக் + கிட வில்லரின் பங்களிப்புகளுமே குறைச்சலானாதா - என்ன ? The FAB FOUR !!!
சகலத்துக்கும் கிரீடம் வைத்தது போலாக - இந்தத் தொடரின் நாயகர்கள் ஒவ்வொருவருக்குமே தரப்பட்டிருக்கும் அந்த classic looks நம்மை மயக்கியதென்று சொன்னால் மிகையில்லை என்பேன் ! ஒரு சித்திரக்கதைக்கு சித்திரங்களே ஜீவன் ; அந்த சித்திரங்களில் நாயகர்களே பிரதானம் எனும் பொழுது - அவர்கள் ஒட்டு  மொத்தமாய் ஒரு கலக்கல் கம்பீரத்தோடு வலம் வந்தால் கண்களுக்கும், சிந்தைக்கும் சுகம் தானே ? அந்த கம்பீரமான ரேஞ்சர் அணி நமது ஆதர்ஷ அணியானத்தில் வியப்பேது ?

இதற்கு மேலும் டைப்பிடிக்க தம் லேது என்பதால் - பாக்கியுள்ள REASONS TO LOVE TEX -களை இங்கே சிலாகிக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டு விட்டு விடைபெறுகிறேன் தூக்கத்தைப் பிடிக்க ! அக்டோபர் இதழ்களின் அலசல்களோடு இத்தனையும் சேர்த்துக் கொண்டு தொடரும் வாரத்தை பட்டாசாக்கும் பொறுப்பு இப்போது உங்களதே guys ! Bye now ..see you around !! 


337 comments:

  1. ஆவ் அந்த டெக்ஸ் சைஸ் சூப்பர் சார்

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் கஷ்டப்பட்டா கெடைக்கும் .!

      Delete
    2. அந்த சைசில் டெக்ஸை பிரமிச்சு பாத்து கொஞ்ச நேரம் மெய்மறந்தேன் நண்பரே

      Delete
    3. அந்த சைசில் டெக்ஸை பிரமிச்சு பாத்து கொஞ்ச நேரம் மெய்மறந்தேன் நண்பரே

      Delete
    4. ஆமாம். பிரமிப்பு.ஆனால் இரண்டாம் கதை........

      Delete
    5. இந்த சைசில் இரத்த படலம் வெளிவந்துள்ளது ஒரேயொரு பாகம்...
      நண்பர்களின் சகாயத்தால் அது எனக்கு கிட்டியது... கையில் எடுக்கையிலேயே மனசு பரபரக்கும்...

      அந்த சைசில் படிக்க முடிந்தால் உண்மையிலேயே அதிர்ஷ்டம் செய்தவர்கள் நாம்...

      ஒரே புக்காக வாங்குவதைவிட இது உபயோகமான ஒன்று...

      Delete
    6. Dear Vijayan, the big size Tex is a novel attempt. The story content was also good. Apart from this,Leaving it's fancy size and it's big size, the negative side is its size itself. It is awkward to handle and read. Further it consumes more paper and it's a loss to the national resource. I would suggest that we stick on to the time tested A4 and/ or A5 paper size format which are easy to handle and read

      Delete
  2. ஒவ்வொரு வாரமும் பதிவுவை பார்க்க துடித்து கொண்டு என் போன்றோர்க்கு இந்த வாரம் எதை பற்றி எழுத போகிறார் என்ற ஐயப்பாடு.(அது தான் செப்டம்பரில் அக்டோபர் தந்து அசத்தி விட்டீர்களே.)ஆனால் சற்று எதிர் பார்க்க வில்லை தலையை கையில் எடுப்பீர்கள்.பாராட்ட வார்த்தைகளே இல்லை .தலயின் வெற்றி பற்றிய தங்களின் அலசல் ...வாவ்....

    ReplyDelete
  3. சுவாசித்து விட்டேன் உறங்கச் செல்கிறேன்.நடக்க வேண்டியதை இனி நண்பர்கள் பார்த்து கொள்வார்கள்.(டெக்ஸின் வெற்றி ரகசியத்தை அலசி விட மாட்டார்களா! !!.😛😛😛😛

    ReplyDelete
  4. TeX has no reasons to change - சோக்கா சொன்னாரு வாத்தியாரு !!!

    ReplyDelete
  5. சார் அருமை....டெக்ஸ்னாலே ..எங்க இன்னொருக்கா பேசிப் பாருன்னு ..கேட்டு விலாசுவாறே வில்லன்கள...அதான் டாப்...அப்புறம் நண்பர்கள் நால்வருக்கும் உள்ள நட்பு...தனித்து செயல் பட்டாலும் , நால்வரும் ஒன்றாய் போனாலும் அவர்களின் செயல்பாடுகள்.....அப்புறம் நம்ம கார்சன் , டெக்ஸ் நட்ப காட்டும் அந்த இருளின் மைந்தர்கள்....நீங்களே ஒருக்கா எடுத்து இவர்கள் பங்கு பெறும் பக்கங்கள மட்டும் புரட்டுங்களேன்..யப்பா சான்சே இல்ல..எழுதுன உங்களுக்கே புல்லரிக்கும்...டெக்ஸுன்னா டெக்ஸ்தான்....இவரின் அருமய ஒரே டிராகன் நகரம் அடுத்த மாதம் காட்டும் பாருங்க......டெக்ஸ் அந்த நட்சத்திர பேட்ஜ அணிந்த படி டிராகன் நகர வீதிகள்ல வலம் வரும் போது...அப்புறம் அந்த ரேஞ்சர்ங்ற வார்த்தை..அந்த வாம்படம்...யப்பா ....ஸ்மர்ஃப் ஒரு ஓரம் என்றால் நம்ம டெக்ஸ் மறு ஓரம்....நடுவிலே தோர்கள பிடிச்சிட்டு பயணிக்கும் லயன் தரும் இன்பம் அலாதி....தோர்கள புரட்டினேன் ..முதல் கத என்ன இருக்குன்னே தெரில ....அவ்வளவு ஈர்ப்பு...இயற்கையின் கடல் கடந்த கொடையா கடல்தான் எவ்ளோ அழகு...தாயின் பாசம்...இயற்கையின் அழகு என மனதை கட்டிப் போட்ட காவியம்...தனித்தடம் டெக்சுக்கு இணையா யார் வரலாம்னு கேட்டீங்களே ...ஏகப்பட்ட கதைகளுடன் காத்திருக்கும் தோர்கள் வரலாமே...💘

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் இன்னொன்ன மறந்துட்டேன்....ஆரம்ப காலத்துல டெக்ஸ் குழுவ பத்தி நீங்க ஒவ்வொருத்தரயும் வர்ணித்து பண்ணி விளம்பரம்...அதிலேயை டெக்ஸ் ராட்சஸத்தனமாய் மனதில் விசுவரூபம் எடுத்து விட்டார் என்றால் சத்தியமா மிகையல்ல.....அதப்போல ஓரு அற்புத விளம்பரத்த இரத்தப்படலத்துக்கும் ஒரு மூணு பக்கங்கள்ல விளம்பரபடுத்துனீங்கண்ணா முன்பதிவு அடுத்த ரவுண்டுலயும் சூடு பிடிக்குமே...கொஞ்சம் பாத்து அற்புதமா தீட்டுங்க சார் ..அந்த கனவு 😊 இதழுக்கு நீங்க எழுதுன ஹாட்லைன் கூட அருமயான விளம்பரமாய் அமையுமே..கண்ணீர் துளிகளாய் விடை கொடுத்த ஈரம் இன்னும் காயலை...

      Delete
  6. சிங்கத்தின் சிறு வயதில் காவாலி...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.. சிங்கத்தின் சிறுவயதில் தனி குண்டு புக்காக தலையில்லா போராளி சைசில் வேண்டும்..

      Delete
    2. சிங்கத்தின் குட்டி வயசில் வேண்டும்.ஹி,ஹி,எப்படி எல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு.
      😀😁😀

      Delete
    3. சிங்கத்தின் சிறுவயதில்

      ( இப்படியொரு தலைப்பு முன்பொரு காலத்தில் நமது வெளியீடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. திரையுலக, அரசியல் விஐபி'கள் பலரும்கூட இந்தத் தலைப்பு தாங்கிவந்த தொடருக்கு ரசிகர்களாக இருந்தனர். பிற்காலத்தில் 'இடப்பற்றாக்குறை' என்ற சப்பைக் காரணத்தால் இந்தத் தொடர் அந்தரத்தில் விடப்பட்டது )

      Delete
    4. சிங்கம் ஹே
      சிறுவயதில் ஹே
      வேணும் ஹே.
      KOK வ முந்தியாச்சு

      Delete
    5. சிங்கத்தின் சிறுவயதில் வேணும்...

      Delete
    6. குற்ற தொழிற்சாலை ...


      படிக்காமல் காத்து கொண்டே இருக்கிறது...:-(

      Delete
    7. சிங்கத்தின் சிறுவயதில் II வேண்டும்.

      Delete
    8. ///சிங்கம் ஹே
      சிறுவயதில் ஹே
      வேணும் ஹே.
      KOK வ முந்தியாச்சு ///

      அச்சா கணேஷ் ஜி.. பகூத் அச்சா..!

      Delete
    9. சிங்கம் மறந்து போன சிங்கத்தின் சிறு வயதில்

      Delete
  7. டெக்ஸ். எவ்வளவு சுலபமா எளிதா உச்சரிக்கக்கூடிய சாதாரண பெயர். ஆனா அந்த பெயருக்கு பின்னால் உள்ள மேஜிக்கே தனி. கம்பீரமே தனி. 24 கதை இருக்கு 99 கதை இருக்குன்னு சொன்னாலும் மாத மாதம் தனியா வர தகர்க்க முடியாத விற்பனை வரலாறும் வேண்டும். அத யாருக்கு இருக்கு? முதல் பத்து இடம் டெக்ஸுக்கு. அப்புறம் தான் மீதி எல்லாருமே.

    நான் டைகர் கதைகளின் ரசிகன். மி. ம. , ர. கோ, தங்க கல்லறைக்கு பொறவு தான் எல்லா கதைகளுமே. ஆனாலும் 6 அல்லது வருடத்திற்கு ஒரு முறை எனக்கு வரும் பண்டல்களில் முதலில் படித்து முடிப்பது டெக்ஸ்.

    அப்படி என்ன இருக்கு டெக்ஸ் கிட்ட? டெக்ஸ் ஸ்பைடர்மேன், சூப்பர் மேன், மற்றும் பல சூப்பர் ஹீரோக்கள் மாதிரி சூப்பர் பவர் கொண்டவர் அல்ல. என்னனை மாதிரியே அவரும் ஒரு சாதாரண மனிதர். (என்ன இந்த வயசிலயும் ்பிட்டா்இருக்கார். நான் பிட்டு பிட்டா இருக்கேன். )

    என்னைப் போல் ஒரு சராசரி மனிதனுக்கு வாழ்க்கையில் நடக்கும் அக்கிரமங்கள் தெரியும். இருந்தாலும் பெரிதாக நடவடிக்கை எடுக்கத் தெரியாது அல்லது முடியாது. ஓக்லஹாமா கதையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வரும் திருட்டுப் பயல்களை படிக்கும் போதெல்லாம் மென்னியை முறிக்க வேண்டிம் என்று தோன்றும். யாருடா வருவாங்க எப்படா அவனுங்க மொகரையை பேப்பாங்கங்கற ஒரு உணர்வு துடிச்சுகிட்டே இருக்கும். இந்த மாதிரி பேர்வழிகளை நடைமுறையில்நிறய சந்தித்திருப்போம்.

    இந்த மாதிரி சந்தர்பபங்களில் லாப நட்டம் ஆபத்து போன்றவற்றை கணக்கு போட்டு செயல்படும் என்னை போன்ற சராசரிகளுக்கு உடனே செயலில் இறங்கும் டெக்ஸ் போன்றவர்களின் மேல் காதல் வராமல் இருக்குமா?
    அது மட்டுமில்லாமல், டெக்ஸ் கதைகளில் எனக்கு பிடித்தது எப்படிபட்ட சூழ்நிலையிலும் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பது. சமீபத்தில் தான் துரோகத்திற்கு முகமில்லை படித்து முடித்தேன். எவ்வளவு சிரமமான கட்டத்திலும் முயற்சியை கைவிடாத டெக்ஸ். எவ்வளவு விரக்தி இருந்தாலும் தொடர்நது போராடும் டெக்ஸ். அது தான் என்னைக்கவர்நத டெக்ஸ்.

    டெக்ஸ் மற்றும் கார்சன் இடையேயான நட்பு அலாதியான விசயம். டெக்ஸிற்கு கார்சனின் மீது அதிக பிரியம்்இருப்பதால் தான் கிண்டல் செய்கிறார். எங்களுடய காமிக்ஸ் நண்பர்களின் வாட்ஸ்அப் குழுமத்தில் ஒருவரை ஒருவர உரிமையோடு கிண்டல் செய்து கொள்வோம். இதறகு காரணம் பிரியம். நட்போடு இருப்பவர்களுக்கு டெக்ஸும் கார்சனும் ஒருவரை ஒருவர் கலாய்ததுக் கொள்வது ஏன் என்று எளிதில் பிடிபட்டு விடும். அது காதலர்களுக்கு நடுவே இருக்கும் ஊடல் போல.


    ReplyDelete
    Replies
    1. மகிஜி.. அருமையான எழுத்து நடை.. அழகான வரிகள்..

      Delete
    2. ரசித்து எழுதியிருக்கிறீர்கள் ஜீ.

      Delete
    3. அட்டகாசமான..,அழகான ....ஆழமான கருத்துக்கள் மகிஜீ...சூப்பர்...:-)

      Delete
    4. மஹி ஜி,அருமை,அருமை,அசத்திட்டிங்க போங்க.

      Delete
    5. நன்றி நண்பரகளே. எல்லாம் உங்களுடய ஊக்கம் தான். என்னோட ஸ்பெல்லிங் மிஸ்டேக்கெல்லாம் பாத்தா எனக்கே வருத்தமா இருக்கு. எனக்கு fat finger issue. திரும்ப படிச்சு கரெக்ட் பண்ணலாம்னா செல் போன் ஒத்துழைக்க மாட்டேங்குது. உங்களுடய ஊக்கத்தால் தொடர்நது முயறசி பண்றேன்.

      ஏன்னா. தலீவரும், செயலரும்்ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க. ஆசிரியர் வார வாரம் எழுதறதே நம்மள சந்தோசப்படுத்த. நாம எதுவும் ரெஸ்பானட் பண்ணாம இருந்தா அது நல்லாருக்குமான்னு. அதனால் இந்த முயற்சி தொடரும்.

      கை தட்டடுறது தான கலைஞர்களை உற்சாகப்படுத்தும். எழுத்தாளர்களும் கலைஞர்களே. நான் எழுத முயல்வது ஆசிரியருக்கான என்னால் முடிந்த கைதட்டலே.

      Delete
    6. @ MP

      'பேஸிகலி, ஐ யாம் எ சோம்பேறி'னு நீங்க சொல்லிக்கிட்டாலும், உங்களையே இப்படி பத்தி பத்தியா சிலாகிச்சு எழுதவச்சுட்டாரில்லையா நம்ம டெக்ஸ்! அதான் டெக்ஸ்!!

      அனுபவிச்சு எழுதியிருக்கீங்க போங்க, செம்ம்ம!

      Delete
    7. ///கை தட்டடுறது தான கலைஞர்களை உற்சாகப்படுத்தும். எழுத்தாளர்களும் கலைஞர்களே. நான் எழுத முயல்வது ஆசிரியருக்கான என்னால் முடிந்த கைதட்டலே.///

      அது! அது! அதே தான்!!

      Delete
    8. மஹி ஜி..!

      ///கை தட்டடுறது தான கலைஞர்களை உற்சாகப்படுத்தும். எழுத்தாளர்களும் கலைஞர்களே. நான் எழுத முயல்வது ஆசிரியருக்கான என்னால் முடிந்த கைதட்டலே.///

      இது உங்களுக்கான

      👏👏👏👏👏👏👏👏👏

      Delete
    9. TeXன் மகிமை....

      பேச்சு வந்த சிவாஜி பின்னி பெடலெடுப்பது போல, பட்டையை கிளப்பிட்டீங்க மஜி ஜி சூப்பர்...

      நீங்கள் கெளபாய் ரசிகர் என உங்கள் எழுத்தக்களில் இருந்து அறிய முடிகிறது;

      கட்டுரையாளர்கள் வரிசையில் இணைந்துள்ள உங்களை வருக வருக என பலத்த கரகோசத்தோடு சக கட்டுரையாளனாக(???) வரவேற்கிறேன்...

      ஆசிரியர் சாருக்கு நாம ஏதாவது செய்ய முடியும்னா அது, இது இது மட்டுமே...

      வருடம் பூராவும் நமக்காக எழுதும் அவரின் பணியின் தன்மை எத்தகையது என பல்வேறு இடங்களிலும் விமர்சனங்கள் எழுதும் போதே உணர்ந்து கொண்டேன்; அதே பாணியில் நீங்களும் இணைந்து இருப்பது மகிழ்ச்சி&நெகிழ்ச்சி...!!!

      Delete
    10. அருமை மஹி ஜி.......

      Delete
    11. ////இந்த மாதிரி சந்தர்பபங்களில் லாப நட்டம் ஆபத்து போன்றவற்றை கணக்கு போட்டு செயல்படும் என்னை போன்ற சராசரிகளுக்கு உடனே செயலில் இறங்கும் டெக்ஸ் போன்றவர்களின் மேல் காதல் வராமல் இருக்குமா?////

      மிகச் சாி நண்பரே!

      நமது ஆற்றாமையே நாயகா்களை உருவாக்குகிறது.

      Delete
    12. மீண்டும் அழகான பதில் மகிஜீ...

      Delete
    13. மகேந்திரன் பரமசிவம் சார்,நல்ல விமர்சனம்.

      Delete
    14. //பேச்சு வந்த சிவாஜி பின்னி பெடலெடுப்பது போல,//
      அப்ப பேச்சு வராத சிவாஜி பின்னி பெடலெடுக்க மாட்டாரா???

      Delete
    15. கிருஷ்ணா@
      பேச்சு தானே உயிர்,
      மூச்சு தமிழனுக்கு....

      Delete
    16. மகேந்திர பாகுபலி ஜி செம்ம

      Delete
    17. நல்லா இருக்கு
      தன்மையா இருக்கு

      Delete
    18. Mp சார் பாராளுமன்றத்துல அருமையா
      சொற்பொழிவாற்றிவிட்டீர்கள்

      Delete
  8. அக்டோபர் மாத இதழ்களின் விமர்சனம்:
    க) கனவுகளின் கதையிது

    அட்டைப்படம்: சுமார்
    சித்திரங்கள் : அருமை
    கதை : மிக அருமை
    ஒரு வரி விமர்சனம்: கனவுகள் முலம் அழகான கதையை சொன்ன விதம் அருமை.

    உ) சிக்பில்

    அட்டைப்படம்: அருமை
    சித்திரங்கள் : அருமை
    கதை : சுமார்
    ஒரு வரி விமர்சனம்: வழக்கமான நகைச்சுவை இந்த கதையில் குறைவு.

    ங) டெக்ஸ் வில்லர்

    அட்டைப்படம்: சுமார்
    சித்திரங்கள் : சுமார்
    கதை : சுமார்
    ஒரு வரி விமர்சனம்: ஆசிரியர் வேற யாரையோ டெக்ஸ் என்று போட்டு விட்டார் இரண்டு கதையிலும்….
    சு) ஸ்பைடர்

    அட்டைப்படம்: சுமார்
    சித்திரங்கள் : சுமார்
    கதை : சுமார்
    ஒரு வரி விமர்சனம்: காதில் ரொம்பவே பூ சுற்றிய கதை….ஆனால் படிப்பதற்கு விறுவிறுப்பாக இருந்தது.

    ReplyDelete
  9. எடிட்டர் சார், லயன் காமிக்ஸ் சிங்கப்பூரில் கிடைக்குமா? இல்லையெனில் amazon.com ல் list செய்ய இயலுமா? USD ல் இருப்பினும் international shipping மூலம் வாங்க முடியும். Please consider. Thanks

    ReplyDelete
  10. கார்சனின் வயதான உருவத்தினைப் பார்க்கும் பொழுது மனசை பிசைகிறது.

    முதல் கதையில் டெக்ஸ் கம்பீரமாகத்தான் உள்ளார் கதையும் மிக நன்றாக உள்ளது. ஒரு தலைவன் ஒரு சகாப்தம் - ரகளை.

    ஆனால் இரண்டாம் கதை சோபிக்கவில்லை.

    அழ்காய் ஒரு அதிரடி - ரசிக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அது கார்சனல்ல என்று கடைசியில் சொல்லியிருப்பார்களே...?

      Delete
    2. ஆம்...கரூராரே...அதனால் தான் அந்த சித்திர வேறுபாடு கூட கதைக்கு ப்ளஸ் ஆகி விட்டது..:-)

      Delete
    3. //கார்சனின் வயதான உருவத்தினைப் பார்க்கும் பொழுது மனசை பிசைகிறது.//
      எனக்கும்தான் சார்,அதுக்காக பிசையற மனசை வெச்சி சப்பாத்தியோ,பூரியோ போட முடியாதே???

      Delete
    4. ரின் டின் கேன் வாசம் அடிக்குதே இந்த கிருஷ்ணாவிடம்...

      Delete
  11. Graphic novel gives nice experience to read. 🎅 🎅 🎅 .

    ReplyDelete
  12. டெக்ஸ் ஸ்பெஷல் பதிவா?

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் பதிவு என்றாலே அது ஸ்பெஷல் தானே....:-)

      Delete
    2. .////டெக்ஸ் பதிவு என்றாலே அது ஸ்பெஷல் தானே....:-)///---தலீவர்👏👏👏

      Delete
  13. டெக்ஸ் &குழு எனக்கு பிடிக்கும்.....ரொம்ப ..ரொம்ப......


    ஏன்னா....



    அவங்கதான் ஒரிஜினல் ஹீரோஸ் ...

    ReplyDelete
    Replies
    1. ////அவங்கதான் ஒரிஜினல் ஹீரோஸ் ...//// ...101%உண்மையான ஹீரோஸ் அதுவே இந்த இமாலய வெற்றிக்கு காரணம்....

      Delete
    2. அதுவும் சுருக்கமாக சொல்லிவிட்டேன் டெக்ஸ் ..விரிவாக சொல்ல வேண்டுமென்றால் ...


      ஒரிஜினல் ஹீரோ என்றால்

      அது டெக்ஸ் வில்லர் தான்..


      ஒரிஜினல் நண்பன் என்றால் ...


      அது கார்ஸன் தான் ...



      ஒரிஜினல் வாரிசு என்றால் ..



      அது கிட் தான்...



      ஒரிஜினல் தொண்டன் என்றால்...



      அது டைகர் ஜாக் தான்...




      மொத்தத்தில் பெண்கள் இல்லாத ஓரிஜினல் குடும்பம் தான் ...


      நமது டெக்ஸ் & கோ....

      Delete
    3. சூப்பர் ஜீ.அருமையான வரிகள்.

      Delete
    4. தலீவரே இப்படி காயப்போடாந்தீங்க.

      Delete
  14. ****** ஒரு தலைவன் - ஒரு சகாப்தம் *******

    நான் கொஞ்சம் உஷாரா இருந்திருக்கணும்! 'பிராங்கோ-பெல்ஜிய கி.நா பாணியில் டெக்ஸ்'னு தெரிஞ்சும் மெத்தனமா கதையைப் படிச்சுட்டேன்! விளைவு...? கி.நா'க்கள் மட்டுமே கொடுக்கும் அந்த இறுதிப்பக்க அதிர்ச்சி!! ப்பா, அப்படியொரு ட்விஸ்ட் இருக்கும்னு நினைச்சுக்கூட பார்க்கல!

    குட்டிக்குட்டியா கோடுபோட்ட மாதிரியான ஓவியப் பாணியில், வித்தியாசமான வண்ணக்கலவைகளோட - ஒவ்வொரு ஃப்ரேமும் புதுசாய் ஒரு ரசிப்புப் பாணியையும் ஏற்படுத்துகிறது!

    ஆரம்ப காலத்து டோனி மாதிரியான ஹேர்-ஸ்டைலில் தல'யை பார்க்கும் போதெல்லாம் 'ஏன் படைப்பாளிகள் இப்படியொரு வித்தியாசமான சிகையரங்காரத்தை டெக்ஸுக்கு கொடுத்தாங்க?!!'ன்னு ஒரு நெருடலான சந்தேகம் ஓடிக்கிட்டே இருந்துச்சு. அப்புறம் கடைசிப் பக்கத்தைப் படிச்சதுக்கப்புறம்தான் நெருடல்கள் எல்லாம் தவிடுபொடியாகி ஞானம் பிறந்தது!

    கதை முழுக்க - அபாச்சேக்களைக் கையாள்வதற்காக - அவர்களுடைய வழிமுறைகளையே பின்பற்றி தல செய்யும் யுக்திகள் ஒவ்வொன்றிலும் ஒரு சிங்கத்தின் கர்ஜனை ஏற்படுத்தும் பிரம்மிப்பு!

    பெரிய்ய பக்கங்களின் கனத்தைத் தாங்க முடியாமல் வளையும் புத்தக வடிவமைப்பு ஒரு சிறிய குறை! ஹார்டு பைன்டில் வந்திருந்தால் இந்தக் குறையும் சரிசெய்யப்பட்டு ஒரு கம்பீரத் தோற்றம் கிடைத்திருக்கும்!

    என்னுடைய ரேட்டிங் : 10/10

    ReplyDelete
    Replies
    1. ////ஆரம்ப காலத்து டோனி மாதிரியான ஹேர்-ஸ்டைலில் தல'யை பார்க்கும் போதெல்லாம்////

      "தல"னாலே ஆரம்ப காலத்துல தலை நிறைய முடியோடு தான் இருப்பாங்களோ??🤔🤔🤔

      Delete
  15. டெக்ஸ்- என்ன சொல்ல எதை விட.
    டெக்ஸ் இது ஒரு மந்திர வார்த்தை அனைவரையும் வசியம் செய்யும் பெயர் எனக்கு தெரிந்து இந்த பெயரில் வேறு யாரும் இல்லை.(டெக்ஸ் விஜய், டெக்ஸ் சம்பத்,டெக்ஸ் கனேஷ் இது கணேசன் சாருக்கு நான் வைத்த பெயர்)
    டெக்ஸ் பிடிவாதம் நல்ல விஷயத்தில்.
    டெக்ஸ் பிடிவாதம் எதிரிகளை விரட்டிப்பிடித்து வதம் செய்வதில் எனக்கு நிரம்ப பிடித்தது.
    பஞ்ச் வசனம் நமது எடி உபயத்தில் அழகான அதிரடியில் ஒர் அசத்தல் வசனம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் டெக்ஸ் பஞ்ச் பேசுவதற்கு நிறைய சுதந்திரம் இருக்கிற்து என்பது.
    சில்லு மூக்குகளை சிதறடிக்கும் ஸ்டைல்,துப்பாக்கி கையாளும் லாவகம் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் விஜய், டெக்ஸ் சம்பத்,டெக்ஸ் கனேஷ் இது கணேசன் சாருக்கு நான் வைத்த பெயர்)
      ஸ்ரீதர்
      போன வாரம்தான் பிறந்தநாள்
      கொண்டாடினேன்.அதுக்குள்ள
      பெயர் சூட்டலா.( ஆமா நீங்க எனக்கு
      தானே புது பெயர் வெச்சீங்க ஏன்னா
      இதே பெயரில் 4-5நண்பர்கள் உள்ளனர்

      Delete
    2. உங்களுக்கு தான் சார்.

      Delete
    3. டெக்ஸ் அதுவும் வேணும்
      இதுவும் வேணும்.

      Delete
  16. //லோகத்திலேயே மொக்கையான பணி எதுவென்று கேட்டால் - "ஒரு காமிக்ஸ் வோட்டெடுப்புக்குத் தேர்தல் அதிகாரியாய் இருப்பதே !" என்பேன் ! தளப் பார்வையாளர்களே 500+ என்றால் இங்கே பதிவாகும் ஓட்டுக்கள் மூன்று மடங்குக்கு மேலே !! 'திருமங்கலமாவது....புண்ணாக்காவது....எங்க கிட்டே டியூஷன் படிக்க வாங்க !' என்று சவால் விடும் நம்மவர்களை கண்காணிக்க ஒரு ஜோடி ஆந்தை விழிகள் போதாது என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டேன்// Ha ha ha

    பெட்டர் ஆப்சன் ரெண்டு பேரையும் ஒரே இதழில் சேர்த்திடுங்கள் பிரின்ஸ் அண்ட் ஜானி காம்போ என்று களை கட்டட்டும் :).எக்ஸ்ட்ரா அமவுண்டை அடுத்த வருட சந்தாவில் சேர்த்து கட்டி விடுகிறோம் :)

    ReplyDelete
    Replies

    1. //பெட்டர் ஆப்சன் ரெண்டு பேரையும் ஒரே இதழில் சேர்த்திடுங்கள் பிரின்ஸ் அண்ட் ஜானி காம்போ என்று களை கட்டட்டும் :).எக்ஸ்ட்ரா அமவுண்டை அடுத்த வருட சந்தாவில் சேர்த்து கட்டி விடுகிறோம் :)//

      +1
      இதை நானும் வழி மொழிகிறேன்....


      Delete
  17. டெக்ஸ் என்றால் டெக்ஸ் தான். 70 வ௫டம் என்ன இன்னும் நிறைய வ௫டம் சாதனைகள் படைப்பார்.

    ReplyDelete
  18. விஜயன் சார்
    தலயின் விஸ்வரூப தரிசனம் கண்டேன்.
    இனி வரும் தலையின் அனைத்து
    அதகளங்களும் இதே போல் இதே சைசில்
    வந்தால் நினைத்தாலே இனிக்கும்.

    ReplyDelete
  19. ஒரு தலைவன் ஒரு சகாப்தம்...

    அட்டைப்படத்தில் முன்பின் டெக்ஸ் டெக்ஸ் ஆக இல்லாவிட்டாலும் அந்த பெரிய்ய்ய சைசில் அந்த வேறொரு பாணி ஓவியங்கள் அட்டகாச படுத்த அட்டைப்படங்களை மட்டுமல்ல உள்ளே சித்திரங்களையும் சிலமணி துளிகள் ரசித்து..,ரசித்து ..பார்த்தேன் .அதென்னவோ மனம் கவர்ந்த அதிரடி நாயகன் டெக்ஸ் ...,ஆனால் அட்டையிலோ முழுவண்ண கிராபிக் நாவல் என்ற அறிவிப்பு..,சித்திரங்களோ எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி இந்த முறை என இன்றே படிக்க துவங்கி விட்டேன் ..அழகான ஓவியங்களும்..கார்சனின் நினைவுபேழைகளும்.,விறுவிறுப்பான கதைப்போக்கும் பரபரவென படிக்க வைக்க மனதில் சிறு ஓரத்தில் மட்டும் ஓர் எண்ணம் அடிக்கடி இடறி கொண்டே இருந்தது. இவ்வளவு சிறப்புடன் ..பரபரவென செல்லும் இந்த கதைக்கு டெக்ஸ் அவர்களை டெக்ஸ் போலவே வரைந்து இருந்தால் இன்னும் அமர்களமாகவே இருந்திருக்கும் என்று .ஆனால் கதையின் அந்த கடைசிபக்க சம்பவங்கள் இந்த மாறுபட்ட ஓவியத்திற்கும் சரி..டெக்ஸ் ....,டெக்ஸ் போல் அல்லாமல் போவதற்கும் சரி சரியான காரணமாகி போய்விட்டதுடன் அந்த குறை ...குறை அல்ல நிறை என நிரூபித்து விட்டது .அதுமட்டுமல்லாமல் அந்த கடைசி பக்க சிதறல்கள் இதுதாண்டா " கிராபிக் நாவல் " என சத்தம் போட சொல்ல வைத்து விட்டது .அட்டகாசம் .


    ஆனால் இதைவிட எதிர்பாரா திருப்பம் அந்த இறுதி பேனல் க்ளைமேக்ஸ் திருப்பம்.உண்மையில் அதை படித்தவுடன் இப்படி கதையை முடித்து வைத்து மனதினுள் பெரும் சந்தோச ஆர்ப்பரிப்பை எந்த அளவிற்கு அள்ளி தெளித்தது என்பதை எனது கைகளின் மயிர்கால்கள் சிலிர்த்து எழுந்ததின் மூலம் அறிந்து கொண்டேன் .

    அடுத்து அழகாய் ஒரு அதிரடிக்கு நுழைய கூட மனம் செல்ல வில்லை.உடனே உடனே இப்பொழுதே மீண்டும் இதே தலைவனின் சகாப்தத்தில் உலவ வேண்டும் என்று தான் மனம் அடம்பிடிக்கிறது.


    பாராட்ட வார்த்தைகளே இல்லை என்பதே உண்மை...

    ReplyDelete
    Replies
    1. //அடுத்து அழகாய் ஒரு அதிரடிக்கு நுழைய கூட மனம் செல்ல வில்லை//
      அதை படிக்கறதுக்கு நீங்க சும்மாவே இருக்கலாம் சார்.

      Delete
    2. அழகாய் ஒரு அதிரடி - ஒரு மாறுபட்ட கோணத்தில், முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் நம் டெக்ஸ்...

      கண்டிப்பாக படிக்கச் வேண்டும்...

      Delete
  20. கனவுகளின் கதையிது :-

    இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் என்னெத்தை வாழ்ந்து என்னெத்தை கிழித்து என்பது போல தோற்றமளிக்கும் ஒரு சிற்றூரில் தேமே என்று தொடங்குகிறது கதை.!
    பஸ்ஸில் இருந்து இறங்கி ஒரு துக்கம் நடந்த வீட்டிற்குள் செல்கிறாள் ஷானேன் என்கிற ஒரு டீன்ஏஜ் பெண்.
    அதையடுத்து அவள் செய்யும் காரியம்தான் கதையின் கருவே..! இறந்தவர் கடைசியாக படுத்திருந்த இடத்தில் அதேபோல் படுத்தால், இறந்தவர்களின் இறுதிநேரத்து சிந்தனைகள் அவளுக்கு கனவாக வருகின்றன.

    இதனை ஒரு தொழிலாகவே விரும்பி ஏற்றும் கொண்டிருக்கிறாள் ஷானென்.! ஒருநாள் யதேச்சையாக மழைக்கு ஒரு ஒதுக்குப்புற குடிலில் ஒதுங்க நேரும்போது அவளுக்குத் தோன்றும் கனவும் அதன்மூலம் அவள் சந்திக்கும் சிக்கல்களையும் செம்ம த்ரில்லிங்காக சொல்லியிருக்கிறார் கதாசிரியை பவுலா பர்பட்டோ. !
    லாஷ்ஷாரினியின் சித்திரங்கள் தெளிவாக அழகாக (வசனங்கள் குறைவான இடங்களிலும்) கதையை நகர்த்திச்செல்ல பெரிதும் உதவியிருக்கின்றன.!

    டிம் ஷானெனை தொடக்கத்திலிருந்தே வெறுப்பது ஏன், பெட்ஸியை எதற்காக, யாருக்காக அந்த இரண்டு நண்பர்களும் கொல்கிறார்கள், இவற்றோடு ஸாமுக்கும் கொலைக்குமுள்ள தொடர்பு என்ன மற்றும் காரணமென்ன போன்ற பல முடிச்சுகளை கடைசி இரண்டு பக்கங்களில் தெளிவுபடுத்தும்போது அடேங்கப்பா என்று சொல்லத்தோன்றியது. !

    ஒரு கேரக்டரின் தன்மையை தெளிவாக சொல்லி அதன்மூலம் மற்றொரு கேரக்டரின் தன்மையை மறைமுகமாக வெளிப்படுத்தியிருக்கும் பவுலா பர்பட்டோவுக்கு மிகப்பெரிய சபாஷ்..!
    கேரக்டர்களைப்போலவே சம்பவங்களையும் ஒன்றை தெளிவாக சொல்லி அதையொத்த மற்றொன்றை மறைமுகமாக நமக்கு சொல்லியிருக்கிறார் பவுலா..!
    உள்ளுக்குள் கொப்பளித்துக்கொண்டு இருக்கும் குரோதத்தை வெளிப்படுத்தும் விதம்.. அதாவது பிடிக்காதவர் மீதான வெறுப்பை பதறாமல் பொறுமையாக வெளிப்படுத்தி சமயம் பார்த்து பழிதீர்த்துக் கொள்(ல்)வது போன்ற உள்மனதின் வக்கிர உணர்வுகளை வெளிப்படுத்தியதில் பவுலாவுக்கு மற்றொரு சபாஷ்..!
    அதுவும் அந்த கடைசிப்பக்கங்களில் கதையை முடித்திருக்கும் விதம் ஒட்டுமொத்த கதைக்கும் ஒரு அற்புத அர்த்தத்தை கொடுத்துள்ளது.. (எனக்கு புரிந்த வகையில்) ..!!

    ஒரு முடியா இரவும் இவருடைய கதைதான் என்று நினைக்கும்போது பவுலாவை மனதார பாராட்டாமல் இருக்க முடியவில்லை..!

    இரண்டு கதைகளிலும் மனிதர்களின் அக உணர்வுகளை அழகாக கையாண்டிருக்கிறார்..!!

    கனவுகளின் கதையிது - உணர்வுகளின் உறைவிடமிது .

    ரேட்டிங் 10/10

    ReplyDelete
    Replies
    1. ////இங்கிலாந்தின் வேல்ஸ்////

      சும்மா ஒரு தகவல் !!

      UK (United Kingdom) என்பது
      The Great Britain and Northern Ireland

      Great Britain என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய மூன்று நாடுகளையும் உள்ளடக்கிய ஒன்று!

      ஏனோ ஆசிாியா் இங்கிலாந்தின் வேல்ஸ் என்று போட்டிருக்கிறாா்!!

      ஆனால் பிாிட்டனின் வேல்ஸ் என்பதே சாி!

      இங்கிலாந்து வேறு!
      பிாிட்டன் வேறு!

      சும்மா தகவலுக்காண்டி!!😁😁😁

      Delete
    2. ///
      இங்கிலாந்து வேறு!
      பிாிட்டன் வேறு!///--
      இட்லிவேறு மாவுவேறு---என்று சொல்வதைப்போல உள்ளது இது...
      கிரேட் பிரிட்டனின் அங்கங்கள் ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, வேல்ஸ்& நார்தர்ன் அயர்லாந்து (அயர்லாந்து ரிப்பப்ளிக் மட்டுமே தனிநாடு) எல்லாம்...
      இங்கிலாந்தின் வேல்ஸ்னாலும், பிரிட்டனின் வேல்ஸ்னாலும் ஒண்ணுதானே...
      ஸ்காட்லாந்து மட்டுமே இந்த கூட்டணியில் இருந்து வெளியேற முயற்சித்து வருகிறது...

      ஒலிம்பிக்ல ஒண்ணா மண்ணாத்தான் கலந்துக்கிறாங்க... இரண்டும் வேறு வேறுனா அடிக்க வந்துடுவான் வெள்ளையன்...!!!

      Delete
    3. ////இட்லிவேறு மாவுவேறு////

      சந்தோசம் நண்பரே!

      ஆனால் பிாிட்டன் என்பது 3 நாடுதான்

      UK என்பது தான் பிாிட்டன் + வட அயா்லாந்து

      3 + 1

      நீங்கள் இட்லினாலும், தோசைனாலும் வரலாறு இதுதான்!

      எதுக்கும் உங்க வரலாற்று ஆசிாியாிடம் இன்னொரு தபா கேட்டு கன்பாா்ம் பண்ணிகோங்க!

      Delete
    4. இக்கதையில் ரசிக்கவும், விமா்சிக்கவும் பல விசயங்கள் இருந்தாலும், விவாதிக்கும் போது இறுதிக் காட்சியை பற்றியும் விவாதிக்க வாய்ப்பிருப்பதாலும், நண்பா்களின் ஆலோசனையின் போில் அதை தவிா்க்க வேண்டி, அந்த விவாதத்திற்குள் சிறிது காலம் தாழ்த்திச் செல்வதே நலம் என்று படுகிறது.

      Delete
    5. இதுவரையிலான கி.நா.வில்
      எனது மதிப்பீடு!

      1. அண்டா்டேக்கா்
      2. கனவுகளின் கதையிது
      3. பொ்லின் சுவா்
      (என் சித்தம் சாத்தானுக்கே
      சொந்தம்)
      4. ஒரு முடியா இரவு

      Delete
    6. ////ஒரு கேரக்டரின் தன்மையை தெளிவாக சொல்லி அதன்மூலம் மற்றொரு கேரக்டரின் தன்மையை மறைமுகமாக வெளிப்படுத்தியிருக்கும் பவுலா பர்பட்டோவுக்கு மிகப்பெரிய சபாஷ்..!////

      அருமை நண்பரே!!

      Delete
    7. UK.great Britain,England Britain,British, English எல்லாம் ஒன்று தானே.

      Delete
    8. /// Politically, the island is part of the United Kingdom of Great Britain and Northern Ireland, and constitutes most of its territory.[10] Most of England, Scotland, and Wales are on the island. The term "Great Britain" often extends to include surrounding islands that form part of England, Scotland, and Wales, and is also sometimes loosely applied to the UK as a whole.///----

      மேற்கண்ட கூகுளாண்டவரின் வரிகளில் உங்கள் சந்தேகத்தை போக்கும் சரக்கு இருக்கு மிதுன்...

      அந்த லாஸ்ட் லைனை படியுங்கள்,
      இட்லியும் ஒண்ணு தான், மாவும் ஒண்ணுதான்; மசால்தோசையும் ஒண்ணுதான்னு தெரிந்து கொள்ளலாம்..

      உங்க வரலாறு வாத்தியாரையும் உலக வழக்கை தெரிந்து கொள்ள அறிவுறுத்துங்கள்... பாவம் உங்களுக்கு தப்பா சொல்லி கொடுத்துட்டார் போல...

      Delete
    9. ////1. அண்டா்டேக்கா்
      2. கனவுகளின் கதையிது
      3. பொ்லின் சுவா்
      (என் சித்தம் சாத்தானுக்கே
      சொந்தம்)
      4. ஒரு முடியா இரவு///...ம்ம்ம...

      எத்தனை கி.நா.வந்தாலும் அண்டர்டேக்கரை அடிச்சிக்க முடியுமா...!!!ஙே..ஙே...ஙே...

      Delete
    10. உலக வழக்கம் சட்னியே சாம்பாா்னும் சொல்லும். சாம்பரை தக்காளி ரசம்னும் சொல்லும்.

      உண்மையை ஒத்துங்கோங்க நண்பரே!

      Delete
    11. ////எத்தனை கி.நா.வந்தாலும் அண்டர்டேக்கரை அடிச்சிக்க முடியுமா...!!!////

      வேட்டியான் is great!!

      அடுத்த வருட அட்டவணையில் இடம் உண்டான்னு ஆவலோடு எதிா்பாா்த்துக் கொண்டிருக்கிறேன்!!

      Delete
    12. ///இதுவரையிலான கி.நா.வில்
      எனது மதிப்பீடு!

      1. அண்டா்டேக்கா்
      2. கனவுகளின் கதையிது
      3. பொ்லின் சுவா்
      (என் சித்தம் சாத்தானுக்கே
      சொந்தம்)
      4. ஒரு முடியா இரவு ///

      எடிட்டர் சாருக்கு ஒரு வேண்டுகோள்..!

      இந்த சந்தா E யில் அண்டர்டேக்கரை தவிர மற்ற அனைத்தும் சிங்கிள் ஆல்பங்கள்.!
      தொடர்கதையான அண்டர்டேக்கரை சந்தா Aவுக்கு நாடுகடத்திவிட்டு சந்தா Eல் எல்லாமே ஒன்ஷாட் கதைகளாக வெளியிட்டால் அந்த genre க்கு ஒரு சிறப்பு செய்தார் போலாகுமே..!
      மேலும் அண்டர்டேக்கர் என்பவர் ஒரு பவுன்சர் போல, ட்யூராங்கோ போல கௌபாய் ஹீரோக்களின் வரிசையில் அடங்குபவர்.!
      ஆனால் முடியா இரவு, சி சா சொ, கனவுகளின் கதையிது போன்ற மாறுபட்ட கதைக்களங்களுக்கு ஒட்டாதவராய் தெரிகிறார் ஹிஹி..!!

      Delete
    13. ////அண்டர்டேக்கரை சந்தா Aவுக்கு நாடுகடத்திவிட்டு சந்தா Eல் எல்லாமே ஒன்ஷாட் கதைகளாக வெளியிட்டால் அந்த genre க்கு ஒரு சிறப்பு செய்தார் போலாகுமே..!////

      மிகச்சாி நண்பரே!!

      Delete
    14. KOK

      +1

      நியாயமான கோரிக்கை!

      Delete
    15. நண்பர் கண்ணனின் கோரிக்கையை நானும் வழிமொழிகிறேன்.
      +111111111

      Delete
    16. நானும் வழிமொழிகின்றேன்.
      +11222222222222222222222222222

      Delete
    17. ரவிகண்ணன் அவர்களின் கூற்றை வழிமொழிகறேன் ..

      Delete
    18. Kok அதே அதே சபாபதே.

      Delete
  21. டெக்ஸ் கார்சன் நட்பு - நட்புக்கு இலக்கணம்.
    தந்தை சொல் தட்டாத பிள்ளை கிட் வில்லர்.
    கருமமே கண்ணாக கொண்ட டைகர் ஜாக்.
    நவோஜோ இன மக்கள், மோரிச்கோ,யுஸிஸிபியோ,இன்னும் நிறைய....

    ReplyDelete
  22. தொடர் விடுமுறை காரணமா என்னவென்று தெரியவில்லை, இந்த தடவை எங்க ஏரியா வட "கொரியர்" ஜிம் ஜாங் பின் இந்த மாத தீபாவளி காமிக்ஸை இதுவரை கண்ணில் காட்டவில்லை. நானே புது டெக்ஸ் கிராபிக் நாவல் எப்படி இருக்கும்னு தவிப்பில் இருக்கேன், இதுல டெக்ஸ் ஏன் பிடிக்கும்ன்னு சொல்லனுமா. கிர்ர்ர் :)

    ReplyDelete
  23. Don't know why there are negative reviews for 'Azhagaai Oru Athiradi'. I liked it more than the first story.

    ReplyDelete
    Replies
    1. சோ சிம்பிள்...!!!
      உலகமே ரசிக்கும் ஒரு விசயத்தை நல்லாயில்லைனு சொன்னா எல்லாம் நம்மை திரும்பி பார்ப்பான்னு ஒரு எண்ணம்தான்...

      நிறையபேர் அந்த வித்தையை கையாண்டு பெரிய ஆளாகலாம்னு கனவு காண்கிறாங்க... வேறொன்றும் சொல்வதிற்கில்லை...

      Delete
    2. இன்னொரு காரணமும் இருக்கும், ஏதாவது நமக்கு புரியலனா- உடனே அதை நல்லாயில்லைனு சொல்வது ஒரு வழக்கம் இப்போ...!!!

      Delete
    3. ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்..

      ஆதலால் நமக்கு பிடிச்சிருக்கு/பிடிக்கவில்லை என்பதை மட்டும் பதிவிடுவோமே...

      அடுத்தவரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அதை விமர்சனம் செய்து, ஆராய்ந்து அவர்களின் மனதை காயப்படுத்த வேண்டாமே...

      என் கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்....

      Delete
    4. ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்..

      ஆதலால் நமக்கு பிடிச்சிருக்கு/பிடிக்கவில்லை என்பதை மட்டும் பதிவிடுவோமே...

      அடுத்தவரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அதை விமர்சனம் செய்து, ஆராய்ந்து அவர்களின் மனதை காயப்படுத்த வேண்டாமே...

      என் கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்....

      Delete
    5. ////அடுத்தவரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அதை விமர்சனம் செய்து, ஆராய்ந்து அவர்களின் மனதை காயப்படுத்த வேண்டாமே////

      வரவேற்க வேண்டிய கருத்து!!

      👏👏👏👏👏👏

      Delete
    6. Dasu Bala

      +1

      எல்லார்க்கும் எல்லாக் கதையும் பிடிக்கவேண்டிய அவசியமில்லை தான்- ரசணைகள் பலவிதம்!

      பிடிக்காமல்போனதற்கான காரணத்தையும் பாந்தமாக பதிவிடமுடிந்தால் நண்பர்களின் ரசணைகளைப் புரிந்துகொள்ள எடிட்டருக்கு அது உதவியாக இருந்திடும்!

      அன்றி,படைப்பாளிகளின் பல மாத உழைப்பையும், நம் சிவகாசி டீமின் பல நாள் உழைப்பையும் 'குப்பை' என்றோ, 'பப்ளிக் டாய்லெட்' என்றோ கேவலப்படுத்தும் கடுஞ்சொற்களே கண்டனத்திற்கு உரியவை!

      Delete
    7. ((((//அடுத்து அழகாய் ஒரு அதிரடிக்கு நுழைய கூட மனம் செல்ல வில்லை//
      அதை படிக்கறதுக்கு நீங்க சும்மாவே இருக்கலாம் சார்.))))...

      இதைப்போல ஓர் கமெண்ட் போடும் போது அதையும் ஆராய்ச்சி செய்யாமல் கடந்துதான் செல்லவேணுமா நண்பர்களே...???

      இந்த தீவாளி மலரின் 2வது கதை இத்தாலி, சில ஐரோப்பிய நாடுகள், அதிக அளவில் ரசிகர்கள் உள்ள பிரேசில் என உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட கதை... அவர்கள் எல்லாம் ரசனையில் குறைந்தவர்களா???..
      அந்த அளவுக்கு வரவேற்பை பெற்ற ஒரு கதையை குறைந்தபட்சம் படிக்க கூட தகுதி இல்லை என ஒருவர் சொல்வது ரசனையின் வெளிப்பாடா நண்பர்களே...???

      75ரூவாய் கொடுத்து வாங்கும் ரசிகருக்கு பிடிக்குது, பிடிக்கல, நல்லாயில்லை என சொல்ல முழு உரிமையும் இருக்கிறது. ஆனால் படிக்க அதில் ஒன்றும் இல்லை என பொதுவெளியில் மற்றவர்களுக்கு அறிவுறுத்தல் செய்ய அனுமதி வழங்குமா என்ன????

      Delete
    8. அவரின் கருத்துக்கு, நான் கூறியுள்ள positive கருத்தை கவனிக்கவும் STV அவர்களே.

      தன் கருத்தை வெளியிட அவரவர்க்கு முழு உரிமை/சுதந்திரம் உள்ளது...
      ஆனால் அதை விமர்சிக்க நமக்கு உரிமை இல்லை என்பது என் தாழ்வான கருத்து... தவறாக கூறி இருப்பின் மன்னிக்கவும்..

      மேலும், ஒருவர் நெகடிவ் கருத்து கூறி இருந்தால் அதை நாம் கடந்து செல்வோம், இல்லையேல் அதற்கு ஈடான ஒரு positive கருத்தை நாம் விட்டு செல்வோம்.. அதன் மூலம் அந்த negative கருத்து அங்கேயே அடிபட்டுவிடும்..

      ஆனால், நாம் நெகடிவ் கருத்தை விமர்சிப்பதின் மூலம், நமக்கே தெரியாமல் அதை வெளிச்சம் போட்டு விளம்பரபடுத்தி அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்று விடுகிறோம்..

      ஆகையால் முடிந்த மட்டிற்கு அவரவரின் கருத்திற்கு மதிப்பளிர்த்து கடந்து செல்வோமே...

      நான் ரொம்ப அதிகமா பேசுவது போல் எனக்கு தோன்றுகிறது..அவ்வாறே அனைவருக்கும் தோன்றினால், தயை கூர்ந்து பொறுத்து கொண்டு, கடந்து செல்லவும்...

      Delete
    9. Dasu bala சார் உங்கள் கருத்து உண்மையே...

      Delete
    10. ////நாம் நெகடிவ் கருத்தை விமர்சிப்பதின் மூலம், நமக்கே தெரியாமல் அதை வெளிச்சம் போட்டு விளம்பரபடுத்தி அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்று விடுகிறோம்////

      Dasu bala சார்!

      மிகச் சாியான கருத்து!

      Delete
    11. ///இத்தாலி¸ சில ஐரோப்பிய நாடுகள்¸ அதிக அளவில் ரசிகர்கள் உள்ள பிரேசில் என உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட கதை... அவர்கள் எல்லாம் ரசனையில் குறைந்தவர்களா???///..

      டேஞ்சர் டயாபலிக் அங்கே பிரபலம் ஆனால் இங்கோ எடுபடவில்லை. அதற்காக என்ன செய்வது?

      எக்ஸ்மேன் / பேட்மேன் / தி அமெரிக்கா போன்ற கதைகள் இங்கு தமிழில் வெளிவரவே தயங்குகிறது இதற்கெல்லாம் என்ன சொல்வது.

      Delete
    12. ///தன் கருத்தை வெளியிட அவரவர்க்கு முழு உரிமை/சுதந்திரம் உள்ளது...
      ஆனால் அதை விமர்சிக்க நமக்கு உரிமை இல்லை என்பது என் தாழ்வான கருத்து...///---பொதுவெளியில் வைக்கப்படும் எதுவும் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதே என் நிலைப்பாடு நண்பரே...!!!
      அதற்கு இங்கே வருகை தருபவர்களுக்கு உரிமை இருப்பதாக நான் கருதுகிறேன். தளத்தின் உரிமையாளர் இதுபற்றி விளக்கி விட்டால் யார் எதுபற்றி கூறினாலும் தாண்டிப்போய் விடலாம்...

      அவரவர் கருத்தை சொல்ல உரிமை/சுதந்திரம் இருக்கு; ஆனால் அதை பற்றி விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை எனில்,
      "75ரூவாய் தண்டமா போச்சு;
      சகிக்க இயலா வீச்சம் கதையில்;
      மொழிபெயர்த்து சொதப்பிட்டாங்க;"
      போன்ற கருத்துக்களை
      அனைவரும் தாண்டி செல்லனும் அல்லவா...!!!
      ஆனால் அப்படி இதற்கு முன்னால் நடந்தபோதெல்லாம் ஏன் நண்பர்கள் தலையிட்டனர்??? இப்போது தலையிட கூடாது என சொல்லும் நீங்கள், தலீவர்,மிதுன் எல்லாம் அப்போது மெளனம் காத்தது ஏனோ நண்பர்களே???
      அப்படி தலையிட்ட நண்பர்களை அப்போது நீங்கள் எல்லாம் தட்டி வைக்காதது ஏனோ??? குறைந்தபட்சம் எதிர்ப்பு கூட தெரிவிக்காதது ஏனோ நண்பரே???

      Delete
    13. ///டேஞ்சர் டயாபலிக் அங்கே பிரபலம் ஆனால் இங்கோ எடுபடவில்லை. அதற்காக என்ன செய்வது?

      எக்ஸ்மேன் / பேட்மேன் / தி அமெரிக்கா போன்ற கதைகள் இங்கு தமிழில் வெளிவரவே தயங்குகிறது இதற்கெல்லாம் என்ன சொல்வது.///---டயபாலிக்பை பொறுத்து பெரும்பாலான நண்பர்கள் ரசனைக்கு ஒத்து வர்ல என்று தான் தெரிவித்தனரே தவிர;,
      தண்டம், படிப்பதற்கு ஒன்றுமேயில்லை என யாரும் தெரிவிக்கலயே...!!!

      மற்ற 3ம் ராயல்டி சம்பந்தப்பட்ட விவகாரம், அது நம் கையில் இல்லையே...

      நாம காசு கொடுத்து வாங்கிட்டோம் என்பதால் நமக்கு பிடிக்கல என சொல்லலாம் நண்பரே;
      மற்றவர்களிடம் படிப்பதற்கு ஒன்றுமேயில்லை- என சொல்ல அந்த 75ரூபாய் ஒன்றும் அனுமதி சீட்டு அல்லவே...!!?

      Delete
    14. @ Dasu Bal

      ///நான் ரொம்ப அதிகமா பேசுவது போல் எனக்கு தோன்றுகிறது..///

      நீங்க இப்பத்தானே பேசவே ஆரம்பிச்சிருக்கீங்க! :)

      jokes apart, இங்கே கொஞ்சம் காரசாரமாய் விவாதிக்கும் டெக்ஸ் விஜயராகவன் உள்ளிட்ட நண்பர்கள் பலரும் நேரில் சந்திக்கும்போது நெக்குருகிப் போய்விடுமளவுக்கு அன்பைப் பொழியக்கூடியவர்களே!

      'அதிகமாகப் பேசுகிறோமோ' என்ற தயக்கமெல்லாம் வேண்டாம் நண்பரே! தொடர்ந்து உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்! நிதானம் தவறி வார்த்தைகளை அள்ளிவீசும் ரகமல்ல நீங்கள் என்பதை நானும், நண்பர்கள் பலரும் அறிவர்!

      Delete
    15. ///'அதிகமாகப் பேசுகிறோமோ' என்ற தயக்கமெல்லாம் வேண்டாம் நண்பரே! தொடர்ந்து உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்! நிதானம் தவறி வார்த்தைகளை அள்ளிவீசும் ரகமல்ல நீங்கள் என்பதை நானும், நண்பர்கள் பலரும் அறிவர்///+1000 அதே அதே பாலா ஜி...உங்கள் கருத்துக்களில் 99%எனக்கு நிறைய சமயங்களில் உன்ன்பாடே,
      நிறைய நடுநிலையான கருத்தக்களை உங்களிடம் இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம்...
      அவ்வப்போது வரும் சிறு சிறு விவாதங்களுக்காக தயங்கி நிற்க வேணாம்...
      நினைப்பதை சொல்வது அழகாக வருது உங்களுக்கு, அதுவே பெரிய விசயம்... தொடர்ந்து நிறைய எழுதுங்கள் நண்பரே...!!!

      Delete
    16. EV & STV @ புரிந்து கொண்டமைக்கு நன்றிகள் பல...

      Delete
  24. தளத்திற்கு வருகைதரும் நண்பர்களே
    XIII சிறப்பு பதிப்புக்கு முன்பதிவு
    செய்து விட்டீர்களா.
    போனா வராது பொழுது போனா
    கிடைக்காது.

    ReplyDelete
  25. இந்த மாத இதழ்கள் ரேட்டிங் :
    1.கனவுகளின் கதையிது – 9.5/10,
    2.கார்ட்டூன் ஸ்பெஷல் :
    அ.ஒரு ஷெரிப் சிப்பியாகிறார் – 9/10,
    ஆ.லக்கி லூக் கபர்தார் -9.5/10,
    சிறைக்குள் சொர்க்கம் -9.5/10,
    3.டெக்ஸ் ஸ்பெஷல் :
    அ.ஒரு தலைவன் ஒரு சகாப்தம்-8/10,
    ஆ.அழகாய் ஒரு அதிரடி -7/10.

    ReplyDelete
  26. கனவுகளின் கதையிது,
    குறு விமர்சனம்,
    வாழ்வின் இறுதி கணத்தில் கனவு காணும் மனிதர்களின் கனவுகளை தனது நெருக்கமான உணர்வாக கருதும்,கனவுகளை நேசிக்கும் ஒரு பெண்ணின் கதையிது,மனித உணர்வுகளை நுட்பமாக தட்டி எழுப்பும் வேலையை செய்வதே இது போன்ற கிராபிக் நாவல்களின் சிறப்பம்சமாகும்,
    வாழ்வின் இறுதி கணத்தில் ஒருவர் காணும் கனவை தானும் கண்டு சொல்லும் புதிரான ஒரு தன்மையை கொண்ட நாயகி ஷானேன் பட்லர்,நெருக்கமான தோழியாக ஸாம்,கதையின் திருப்புமுனை பாத்திரமாக பெட்ஸி,கதை நாயகியை எப்போதும் பின்தொடர்ந்து கடுவன் பூனையாக கடுப்பேற்றும் டிம் வின்னி,வின்னியின் நண்பன் ஜெர்ரி,இவர்களிடையே பின்னி சுழற்றி நடக்கும் கதைக்களமே கனவுகளின் கதை.
    முதல் வாசிப்பை விட இரண்டாம் வாசிப்பு நல்ல புரிதலை ஏற்படுத்தியது,விரிவாக அலச தோன்றினாலும் அதற்கு கூடுதல் கவனம் தேவை என்பதால் குறுவிமர்சனத்தோடு நிறுத்த வேண்டியுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அருமை....ரவி அவர்களே....

      Delete
    2. ////மனித உணர்வுகளை நுட்பமாக தட்டி எழுப்பும் வேலையை செய்வதே இது போன்ற கிராபிக் நாவல்களின் சிறப்பம்சமாகும்////

      👏👏👏👏

      Delete
    3. @ அறிவரசு ரவி

      விமர்சனம் செம!

      நிற்க;

      ///கதை நாயகியை எப்போதும் பின்தொடர்ந்து கடுவன் பூனையாக கடுப்பேற்றும் டிம் வின்னி///

      கடுவன் பூனைகள் யாரையாவது பின் தொடர்ந்து நீங்க பார்த்திருக்கீங்களா? அப்படியே பின் தொடர்ந்தாலும் உங்களுக்கு ஏன் கடுப்பாகுதுன்றேன்?
      சரி, ஒரு உதாரணத்துக்கு சொல்லியிருக்கலாம்தான்... ஒரு கடுவன் புலி, ஒரு கடுவன் கரடி - இப்படிச் சொல்லியிருக்கலாமில்லே? அது ஏங்க பூனைகளையே வம்புக்கு இழுக்கறீங்க? உங்களையெல்லாம்...

      குனிக;

      சரக் சரக்

      Delete
    4. அது சரி,கடுவன் பூனைய சொன்னா ஏன் நெடுவன் பூனை குறுக்கால வருது.ஹி,ஹி.

      Delete
    5. அருமையான விளக்கம் சார்.

      Delete
  27. // இருப்பதோ ஒரே slot எனும் பொழுது, ஞான் என்ன செய்யப் போகுதோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் ! //
    ஹி,ஹி,இரு அணிகளுமே ஓட்டுக்காக ரொம்ப கஷ்டபட்டுருக்காங்க சார்,ஏதோ நீங்க பார்த்து மனசு வைங்க.ரெண்டு பேரையும் சேர்த்து ஒரு ஹார்ட் பைண்ட் போட்டாலும் நாங்க கோவிச்சிக்க மாட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை.....அரசியல்வாதிகள் கூட தேர்தல் அன்று உறங்கி இருக்கலாம்.ஆனால் நம்மவர்கள் ஊன்உறக்கம் இன்றி பாடுபட்டது வீணாய் போக கூடாது தான்..எனவே இதையே நானும் வழிமொழிகிறேன் சார்..:-)

      Delete
  28. ஒரு ஷெரிப் சிப்பாய் ஆகிறார்...


    அட்டகாச நகைச்சுவை படைப்பு...வழக்கமாக சிக்பில் அவர்களின் பங்களிப்பு குறைவாகவும்... ஷெரிப் & டாக்புல் பங்களிப்பு நிறையவும் ..,நிறைவாகவும் இருந்தாலும் ஆரம்பத்தில் போல் இப்பொழுது சிக்பில் பங்களிப்பு அதிகம் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. இந்த கதையில் அதுவும் தீர்ந்தது... நகைச்சுவைக்கும் பஞ்சம் வைக்காது இருந்தன.இப்பொழுது எல்லாம் லக்கிலூக்கை விட சிக்பில் அன்ட் கோ சிறப்பாகவும்..சிரிப்பாகவும் அமைந்து வருவது போல ஓர் எண்ணம் எனக்கு மட்டும்தானா என தெரியவில்லை..

    இனைப்பாக வந்த லக்கிலூக் கபர்தார்..இதைவிட அட்டகாசம்..வாய்விட்டு சிரிக்க வைத்த சாகஸம்..எனில் அதற்கடுத்த மற்றொரு சாகஸம் படுசுவராஸ்யமாகவும்..,(நகை )சுவையாகவும் இருந்தாலும் பாதியில் முடிந்த சிறுகதை போல ஓர் எண்ணம்.அந்த அழகான கதையை முழுநீளத்தில் கொண்டு சென்று இருந்தால் சிக்பில் அன்ட் கோ விற்கு இந்த கதை மேலும் ஒரு சிறகை செருகி இருக்கும்..

    மொத்ததில் மனம் மகிழ சிரிக்க வைத்த ஓர் இதழ் இந்த ஷெரிப் ஒரு சிப்பாய் ஆகும் படலம்.

    ReplyDelete
    Replies
    1. // மொத்ததில் மனம் மகிழ சிரிக்க வைத்த ஓர் இதழ் இந்த ஷெரிப் ஒரு சிப்பாய் ஆகும் படலம்.//
      உண்மை,அதுவும் முதல் கதையை விட,இரண்டு மற்றும் மூன்றாம் கதைகள் அளவில் சிறியதாக இருப்பினும் நகைச்சுவையை தாராளாமாகவே அள்ளித் தெளித்திருந்தது.

      Delete
    2. ///இப்பொழுது எல்லாம் லக்கிலூக்கை விட சிக்பில் அன்ட் கோ சிறப்பாகவும்..சிரிப்பாகவும் அமைந்து வருவது போல ஓர் எண்ணம் எனக்கு மட்டும்தானா என தெரியவில்லை..///

      இருக்கலாம் தலீவரே! டாக்புல்லின் முகபாவங்களைப் பார்க்கும்போது எடிட்டருக்கு காமெடி வசனங்கள் ஊற்றெடுப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்!

      Delete
  29. சமீப வழக்கம் போலவே இந்த மாதமும் எந்த இதழும் சோடை போகவில்லை என்பது உண்மையாகி விட்டது..


    குற்ற தொழிற்சாலை வெற்றி தொழிற்சாலையாக தான் அமையும் என்ற நம்பிக்கை பலமாக இருப்பினும் அதை தரிசுக்க முடியாத பாவியாகி விட்டேனே என்று உள்ளம் குமறுகிறது ஆசிரியர் சார்..அதுவும் அனைத்து புது இதழ்களும் படித்து விட்டு இந்த படிக்காத வலைமன்னனை தடவி தடவி ரசித்து கொண்டு இருக்கிறேன்..:-(

    ReplyDelete
  30. //பாக்கியுள்ள REASONS TO LOVE TEX// அவ்வப்போது கவனம் ஈர்க்கும் துணைக்கதாபாத்திரங்கள் குறிப்பிடப்படவேண்டியவை. கதை முடிவில் நம் நாயகர்களோடு கனத்த மனதோடு விடைபெற்ற பலர் உள்ளார்களே. ஏனோதானோவென்று கடந்திடாமல் அவற்றையும் செதுக்கியிருப்ப்து சிறப்பல்லவா?

    ReplyDelete
  31. கி நா வில் என்னை கவர்ந்தது
    தேவ ரகசியம் தேடலுக்கல்ல.

    ReplyDelete
    Replies

    1. எனக்கு நிறைய்ய இருக்கே..!

      எமனின் திசை மேற்கு
      இரத்த பூமி
      இரவே இருளே கொல்லாதே
      சிப்பாயின் சுவடுகளில்
      தேவரகசியம் தேடலுக்கல்ல
      க்ரீன்மேனர் சீரீஸ்
      பிரளயத்தின் பிள்ளைகள்
      மற்றும்
      சந்தா Eன் அனைத்தும்..!

      Delete
    2. எனக்கு இரத்த பூமி..எமனின் திசை மேற்கு.. ஸ்டாப் பண்ணிட்டு ஒரு லாங் ஜம்ப பண்ணா சந்தா E அனைத்தும்..:-)

      Delete
  32. நண்பர்களே Tex 70 கொண்டாடாடினீர்களா?(நான் பால்பயாசத்துடன்)🎂

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ்-70 கொண்டாட முழுசா ஒருவருசம் இருக்கு டாக்டர் சார்! ஓசில ஒரு பால்பாயாசம் கிடைச்சதுக்காக இப்பவே கொண்டாடுறதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்! ;)

      Delete
    2. பொங்க வைக்கலியா

      Delete
  33. 2018 ஆண்டு காமிக்ஸ் அட்டவனையில் இளவரசியின் கதை இல்லையெனில் நான் இந்த நாட்டைவிட்டு வெளியே போரத தவிர வேற வழியேயில்லை.....
    இளவரசியின் கதை இடம்பெறும் வரையில் போராடுவோம்...... போராடுவோம்.....

    ReplyDelete
    Replies
    1. எதுக்கும் பொட்டி, படுக்கையெல்லாம் ரெடியா வச்சுக்கங்க! ஹிஹி!

      Delete
    2. நினைத்தை முடிப்போம் நண்பா,
      எடிட்டர் என்னை ஏமாற்ற மாட்டார் நண்பா....
      நம்பிக்கை தான் வாழ்க்கை...

      Delete
    3. வேல்ஸ் இளவரசி டயானாவைத் தானே சொல்றீங்க பாஸூ!

      அவங்க காா் ஆக்ஸிடேன்ட்லயே மேலேயே போயிட்டாங்களே!

      Delete
    4. பூனை குறுக்கே போனாலும் சக்கரவர்த்திகள் சட்டம் போட்டாலும் அதனையும் மீறி இளவரசி 2018ல் தடம் பதிப்பாள். ஆயிரம் நட்டக் கதைகள் கூறிய போதும் அந்த இரக்கமுள்ள இளவரசன் மாடஸ்டியை அடுத்தாண்டு இடம் பெற வைப்பார். சக்கவர்த்திகளுக்கே இன்னும் யார் இளவரசி என்று தெரியவில்லை.இறவாப் புகழ் இளவரசி மாடஸ்டி ஒருவரே என்பதை அறியும்

      Delete
  34. // எல்லாமே ஒரு ஜாலியான ஆட்டம் தான் என்பது தெரிவது ஒருபக்கமெனில் ; உங்களின் இந்த "பழமை மோகம்" போட்டுத் தாக்கும் வீரியம் இன்னொரு பக்கம் ! இருப்பதோ ஒரே slot எனும் பொழுது, ஞான் என்ன செய்யப் போகுதோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் ! //

    அவ்வளவுதான் ஆட்டம் முடிவுக்கு வந்தாச்சி
    நாட்டாமை தீர்ப்பை சொல்லிட்டாரு

    இனி எல்லாமே ஜானியோட ஆட்டம் தானாம்
    .

    ReplyDelete
    Replies
    1. ஹிக்!

      கிர்ர்ர்ர்ர்...

      Delete
    2. பார்த்து கொஞ்சம் பால் குடிங்கோ :))

      பூனையாருகிட்ட தண்ணி குடிங்கண்ணு சொல்ல
      கோவத்துல எங்காச்சும் பிராண்டி வச்ச்சுட்டாருன்னா

      அதான் ;-)
      .

      Delete
  35. ஏ யப்பா

    ஓட்டு போட்டவங்களில் பாதி பேரு இரத்தப்படலத்துக்கு முன் பதிவு செய்திருந்தாலே போதுமே
    வர ஜனவரியில் சென்னை புத்தக திருவிழாவில் ஜொலிப்பாரே

    என்னமோ போடா மாதவா ஒண்ணுமே புரிய மாட்டேங்குது
    .

    ReplyDelete
    Replies
    1. ஓட்டு போட்டவங்கைல்லாம் முன பதிவு பண்ணிட்டாங்க சிபிஜி. ஆனா அவங்க
      ஓட்டு போட்ட அளவுக்கு முன்பதிவு பண்ணலை.

      Delete
  36. கனவுகளின் கதையிது

    அசத்தல் ரகம் சார்

    இறுதி வரை நம்மை யோசிக்கவே விடவில்லை

    பர பர வென பட்டாசாய் நகரும் கதையும் அதற்கு ஈடு கொடுக்கும் சித்திரங்களும்
    இரண்டையும் முழுமையாக கவனித்து படிக்க வேண்டிய நிலையில் நாமும்

    யாரும் எதிர் பாராத முடிவும்

    அடுத்த வருடம் அடுத்த கதையில் ஹாட் ட்ரிக் அடிப்பார் என நம்பலாம்

    கனவுகளின் கதையிது அக்மார்க் கி நா
    .

    ReplyDelete
    Replies
    1. //இறுதி வரை நம்மை யோசிக்கவே விடவில்லை//
      கதை நெடுக நிறைய கேள்விகள் மனதை அரித்தாலும், நம்மை கொஞ்சம் கூட யோசிக்க விடாமல் கதையோடு ஒன்றி விடும் விதமாக கதையின் வேகம்/அமைப்பு உள்ளது...

      Delete
  37. // "ஆரம்பம் முதலே அசைக்க இயலாவொரு" சக்தியாக டெக்ஸை உருவகப்படுத்தி இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது ! அந்தத் தன்னம்பிக்கை தான் நம்மை வசீகரம் செய்த முதல் புள்ளி என்பேன் ! ஒரு கதாப்பாத்திரத்தை நல்லவன்-வல்லவன்-நாலும் தெரிந்தவன் என்று படைப்பது சுலபம் தான் ; ஆனால் தொடர் முழுசுக்கும் அந்த குணாதிசயங்களுக்கு நியாயம் செய்வது சுலபக் காரியமே அல்ல ! அதே போல ஓவர் பில்டப் தந்து அந்த நாயகனை காமெடி பீஸாக்காது தொடரச் செய்வதுமே செம tough சமாச்சாரம் ! இந்த இரண்டுக்குமே போனெல்லி சீனியர் எடுத்துக் கொண்டுள்ள பிரயத்தனங்கள் extraordinary ! //

    உண்மைதான் சார்

    .

    ReplyDelete
  38. ஒரு தலைவன்... ஒரு சகாப்தம்...

    டாக்டா் : டெக்ஸ் வில்லா் கதாபாத்திரம் முழுக்க முழுக்க கற்பனையே!

    அவா் : நானும் அதை அறிவேன்! அது நிஜமோ கற்பனையோ அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை! அது ஒரு அற்புதக் கதாபாத்திரம்!!

    "டெக்ஸ் வில்லா்" இந்த இதிகாச நாயகனை வைத்து என் கதைகளைப் படைப்பேன்!!

    வன்மேற்கின் வரலாற்றில் பிடித்தமானது இதிகாசமா? உண்மைச் சம்பவமா? என்று வரும்போது, வெற்றி பெறுவது எப்போதுமே இதிகாசமாகத் தான் இருக்க முடியும்!!

    டாக்டா் : உங்கள் பேச்சு எனது ஆவலைத் தூண்டுகிறது. உங்கள் பெயரைச் சொல்லிவிட்டுப் போங்கள்!!

    அவா் : என் பெயா் "போனேல்லி"!


    வாவ்! இந்த இடத்தில் தான் இக்கதை கிராபிக் நாவல் என்ற தன்மையை அடைகிறது!!

    அதோடு 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரு வயதான கிழம் தன் கடந்த காலத்தை நினைவு கூறுகிறாா்.

    அவா் தான் 18 ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் வன்மேற்கின் தவிா்க்க முடியாத அடையாளமாக, காவல் தெய்வமாக, எதிாிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த

    THE GREAT "TEX WILLER"ன் நெருங்கிய நண்பரான "கிட் காா்ஸன்"!

    இன்னொரு முறை வாவ்! வாவ்!!

    டெக்ஸ் வில்லாின் கதைகளில் ஒரு கிராபிக் நாவல் என்பது மிகச்சாி!!

    ReplyDelete
  39. "தல " டெக்ஸ் கதை ஒரே நேர்கோட்டில் பயணிக்கும்.
    டெக்ஸ் அன் கோ குழுவின் அட்டகாசமான கூட்டணியில் அரங்கேறும் ஒவ்வொரு சாகசமும் அற்புதம்.
    செவ்விந்திய மக்களின் ஞாயமான கோரிக்கை களையும் போராட்டத்தையும் ஒருங்கிணைக்கும் கன்னியாக தலைமையேற்று அரங்கேற்றும் தலயின் தாண்டவம் அற்புதம் .....
    இதுவே என்னை தலயின் ரசிகனாக்கியது.....

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் நண்பரே,பழிவாங்கும்புயல் அதன் உச்சம்.

      Delete
  40. IN 1972 DIWALI EDITION IMAYATHIL MAAYAAVI CAME WITH THANGA MEENGAL POCKET NOVELAS A DIWAI GIFT.AFTER THAT NADUNISI KALVAN CAME WITH MAAYAAVI COLOURFUL CALENDER AS A NEW YEAR GIFT

    ReplyDelete
  41. எல்லாம் இப்படித்தான்
    1)நம்மால் செய்ய முடியாத ஒன்றை
    ஒரு கற்பனை பாத்திரம் செய்யும் பொழுது , அதை மிக நேசித்து ரசிப்போம்.
    2) எதையும் நேராக , முகத்திற்கு எதிரே சொல்ல முடிவது- நம்மால் அது முடிவதில்லை- நாமெல்லாம் சூழ் நிலை கைதிகள்
    3)மதியூகம்- இப்படி செய்தால் எதிராளி இப்படி ரீஆக்ட் செய்வான் என்ற நிலைபாடு.
    ( அடிக்கடி கார்ஸனிடம் பந்தயம் கட்ட சொல்வது)
    4)நுனிப்புல் மேயாத தன்னம்பிக்கை.
    ஆழமாக தீர்க்கமாக செயல்படுவது-👍
    இப்படி தான் செய்ய வேண்டும் என்ற நேர்மை
    5) தலைமைக்கு ஏற்ற தன்மை.
    உறுதி கொண்ட கண்கள், அந்த தாடையை பாருங்கள் புரியும்.இறந்து விட்டது மனைவி என்ற போதிலும் துவண்டு விடாமல் , சாதித்தே தீர்வது என்ற பிடிவாதம்.
    6)முன் வைத்த காலை பின் வைப்பதில்லை.மகன்,நண்பன், தோழன் யாராக இருந்து எதிர்த்தாலும் - கலங்காத தன்மை.
    7) சம யோஜிதம். அந்தந்ந நேரத்திற்கு தக்கவாறு திட்டமிடல்.
    8) பூர்ணத்துவம்- கடைசி வரை போராடும் குணம் untiring easiness
    9)யாராக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடுவது.- அதிகார பலம், மூர்க்கத்தனம்,படைபலம், கொலை வெறித்தனம், குள்ள நரித்தனம், முட்டாள்த் தனம், மூட நம்பிக்கை, நயவஞ்சகம், கலகம் மூட்டுவது, கலக்கம் மூட்டுவது,ஆணவம்,அகம்பாவம் -

    எல்லாம் துச்சம் இவருக்கு
    10)எதிராளியும் மனிதன் என்பதோடு,
    சூழ்நிலை கருதி மன்னிக்கும் தன்மை,
    மனிதம் , மனித நேயம்

    ஆகிய இந்த தச பாவங்களால்,
    இந்த கேரக்டர் நம் மனதில் ஆழ பதிகிறது

    "என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்கப்பா " - சத்யராஜ்
    "என் கேரக்டரை நல்லா புரிஞ்சுக்கங்கப்பா " - டெக்ஸ் வில்லர்

    வசீகரம்° நேர்மை° நாணயம்° சத்தியம்°அன்பு° பண்பு° அடக்கம்°
    நாம் உருவகப் படுத்தி பார்க்கும் சகலமும் நற்குண அதியற்புத பாத்திர படைப்பு
    J

    ReplyDelete
    Replies
    1. செம!

      J க்கு ஒரு ஜே!

      Delete
    2. சிவகாசிக்கொரு விஜயன்
      ஈரோட்டுக்கொரு விஜய்

      Delete
    3. அழகா சொல்லி இருக்கீங்க சார்..அருமை...:-)

      Delete
    4. j சார்...

      இதுக்கு பேசாம நீங்க டெக்ஸுகிட்டே ஒரு வின்செஸ்டரை கடன்வாங்கி என் மண்டையில ஒரு போடு போட்டிருக்கலாம் நீங்க! :D

      Delete
    5. வின்செஸ்ட்டர கார்சன் கடன் வாங்கிட்டு போயிருக்காராம்

      Delete
    6. பரணி சார்
      தாஸு பாலா சார்
      நாமெல்லாம் டெக்ஸ் கதைகளின் வீரியத்தை ரசிக்கும் சாதாரண பாமரன்களே!☺

      Delete
  42. ரசித்து சிலாகிக்கலாம் டெக்ஸ் வில்லரை இல்லையா ஈ.வி

    ReplyDelete
    Replies
    1. ரசிப்பதற்கு - ஷானியா
      சிலாகிப்பதற்கு - டெக்ஸ்

      ஹிஹி!

      Delete
    2. அப்பிடியா சேதி
      ஷானியா பார்ட்டியா நீங்க
      சொல்லவே இல்லை

      Delete
    3. அப்ப ஷானியா இல்லாட்டி இனிமா
      போணியாகது இல்லையா

      Delete
  43. டெக்ஸ்.
    ஜலதோஷத்தை நீக்க விக்ஸ்.
    வன்மேற்கின்
    ஜனங்களின் தோஷத்தை நீக்க நம்ம டெக்ஸ்.
    எவ்வளவுதான் தைரியமுள்ள பலசாலியான மனிதனென்றாலும் அவனை வீழ்த்த ஏதாவது ஒரு வாய்ப்பு இல்லாமல் போகாது. ஆனால் நம்ம டெக்ஸ் சில சமயங்களில் வீழ்வது போல் இருந்தாலும் அதுகூட வீறுகொண்டு எழுவதற்கே என்பதுதானே நிதர்சனம்.
    நம்மால் ஒரு ஐந்து பேரை பந்தாட இயலுமா??!!( இயலும்! அது எப்போதென்றால் கனவுகளிலும்,தூக்கம் தொலைத்த இரவுகளில் மட்டுமே அது சாத்தியம்)
    ஆனால் நம்ம டெக்ஸூக்கு அது சாத்தியம்.நம்மால் முடியாத ஒன்று டெக்ஸின் மூலம் நிகழ்வது நாமே அதனை செய்வதான உணர்வினை உண்டாக்குகிறது.அதனால்தான் ஒவ்வொரு முறையும் டெக்ஸ் கயவர்களை பந்தாடுகையில் நாமே அதனை செய்த உணர்வு இயல்பாகவே நமக்குள் ஊற்றெடுக்கிறது.
    அப்பாவிகளிடம் ஒரு முகம்.
    பாவிகளிடம் வேறு முகம்.
    அதுதான் டெக்ஸ்.
    மனிதனுக்கு தேவையான தன்னம்பிக்கை, தைரியம்,விடாமுயற்சி அத்தனையும் ஒருங்கே கொண்டவர்தான் நம்ம டெக்ஸ்.
    ஆயிரம் தன்னம்பிக்கை நூல்கள் நம்முள் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு நிகராண மாற்றங்களை டெக்ஸின் கதைகள் சர்வ சாதாரணமாக நம்முள் ஏற்படுத்திவிடுகின்றன.
    ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்று அடுத்தவருக்கு போதனை செய்தால் ஆயிரம் கொட்டாவிகள்தான் மிஞ்சும்.ஆனால் அந்த போதனைகளை டெக்ஸின் கதைகளில் சுவாரஸ்யம் கலந்து வாசிப்பவருக்கு தெரியாமலேயே அவர்களிடம் ஐக்கியமாக்குவது கதாசிரியரின் சாமர்த்தியம்.
    என்னதான் ஒரு நாயகரை தூக்கிப்பிடித்து கதைகளை எழுதினாலும் அது நம்பும்படியும், அந்த நாயகரின் தோற்றம் நமக்கு அலுக்காமலும் இருப்பது மிக மிக முக்கியம். அந்த விஷயத்தில் டெக்ஸ் இன்றுவரை கவனமாக கையாளப்பட்டே வருகிறார். மாதாமாதம் டெக்ஸ் என்றாலும் இன்றுவரை நமக்கு சலிக்காமல் இருப்பதே ஒரு சாதனைதானே.(மாதமிருமுறை டெக்ஸை காணும் காலமும் கனியத்தான் போகிறது)
    டெக்ஸ் கதைகளை வாசிக்கும் கன்னியர் நமக்கு இப்படி ஒரு கணவன் வாய்க்க மாட்டானா என ஏங்குவது உண்மை.
    அதே போலத்தான் ஆண்களுக்கும் ஒரு ரோல் மாடலாக டெக்ஸ் திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல.
    டெக்ஸ் ஒரு கள்ளன்!
    ஆம்! நம் அனைவரின் உள்ளம் கவர் கள்ளன்தான் நம்ம டெக்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு வார்த்தையும் உண்மை சார்.

      Delete
    2. ஏடிஆர்சார் சூப்பர் ...அனைத்து கருத்துகளும் உண்மையே...:-)

      Delete
    3. உயர்திரு.ATR

      அருமையான கருத்துகள் சார்!

      Delete
    4. ATR sir@ செல்ல... பட்டையை கிளப்பிட்டீங்க...

      ///டெக்ஸ் ஒரு கள்ளன்!
      ஆம்! நம் அனைவரின் உள்ளம் கவர் கள்ளன்தான் நம்ம டெக்ஸ்.// எக்காலத்திலும் பொருந்தும் காமிக்ஸ் கருத்துமொழி...

      Delete
  44. திரு.ஈ.வி.
    உயர்திரு. A.T.R.??!!
    இந்த "உயர்திரு"வெல்லாம் நம் தளத்தில் நமது அன்புக்குரிய சீனியர் எடிட்டர் அவர்களுக்கே பொருத்தமாகவும்,தகுதியாகவும் இருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
    மற்றபடி நம் தள தோழர்களின் அன்புக்கு
    தகுதியானவனாக இருப்பதே எனக்கு பெருமை.

    ReplyDelete