நண்பர்களே,
வணக்கம். கொஞ்சம் நிறையவே நேரத்தையும், கணிசமானதொரு நெட் pack-ஐயும் கைவசம் வைத்துக் கொண்டு தொடரும் வரிகளுக்குள் புகுந்திடல் தேவலாம் என்பேன் guys - ஒரு பாகுபலி நீளத்துப் பதிவு தொடரவுள்ளது ! Without much ado - இதோ - தொடரவிருக்கும் புத்தாண்டிற்கான நமது காமிக்ஸ் ப்ளூபிரிண்ட் ! இதன் பொருட்டு ஏழு கடல் தாண்டினேன் ; ஏழெட்டு மலைகள் தாண்டினேன் என்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை - ஆனால் அரை டன் காகிதமும், சில பல லிட்டர்கள் நள்ளிரவு எண்ணெய்யும் இதற்கு அவசியமானதென்னவோ உண்மை தான் ! பணிகளை முடித்த கையோடு சோம்பல் முறித்த கணத்தில் - "இதுக்கு தானா சிண்டை இத்தனை பிய்த்துக் கொண்டாய் சாமி ?" என்று தோன்றியது நிஜம் தான் ; ஆனால் "எல்லா முகங்களிலும் ஒரு சந்தோஷப புன்னகை" என்பதை இயன்றமட்டிலும் நிஜமாக்கிடும் பொருட்டு - எந்தவொரு மார்க்கத்தையும் அலசாது விட்டு விடக்கூடாதே என்ற ஆதங்கமும், ஆர்வக் கோளாறும் தான்நிறையவே நேரத்தை விழுங்கின ! இந்தாண்டினில் என்முன்னே இருந்த சவால்களின் பரிமாணங்கள் வழக்கத்தை விட ஓரிரு படிகள் ஜாஸ்தி என்பதும் இன்னொரு காரணம் ! அப்படி என்னடாப்பா சமாச்சாரங்கள் ? என்று கேட்கிறீர்களா ? இதோ :
Factor # 1 : எப்போதும் போலவே பட்ஜெட் தான் எங்களது துவக்கப் புள்ளி ! "காமிக்ஸ் வாசிப்பானது - சீமான்களின் பொழுதுபோக்கு என்றாகிவிட்டது" என்ற மாதிரியான விமர்சனங்களின் பின்னணி, முன்னணி, சைடணி பற்றி பெரிதாய் ஆராய்ச்சி செய்திட நான் முனைவதே இல்லை ; simply becos விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் தேவையினை பிரதானமாய்க் கருதும் முதல் ஆசாமி நானே என்பதால் ! தரத்தில் குறை வைக்காது, விலையில் சமரசம் செய்திடக் கூடிய மாயாஜாலத்துக்கு ஈடாய் எனது அகவைகளில் ஒரு பங்கை பண்டமாற்று செய்திட ஜேசன் ப்ரைஸ் கதையின் கிளைமாக்ஸைப் போல் சாத்தியம் இருப்பின், நிச்சயமாய் அந்த ஒப்பந்தத்துக்குத் தயங்கிடவே மாட்டேன் ! So பட்ஜெட் எகிறிடக் கூடாது என்பதே எப்போதும் போல் சவால் பட்டியலின் உச்சத்தில் இருந்தது இம்முறையுமே !
Factor # 2 : நடப்பாண்டில் 2 முக்கிய நிகழ்வுகளை நமது பயணம் சந்தித்துள்ளது ! அவற்றின் பொருட்டு 2018-ல் மட்டுமல்ல ; தொடரவிருக்கும் காலங்களிலுமே நாம் நிறையவே கவனம் தந்திட அவசியப்படும் என்பதில் எனக்கு ஐயமில்லை !
- நிகழ்வு # 1 - சூப்பர் 6 சந்தாவில் மறுபதிப்புகள் கண்டுள்ள வெற்றிகள் ! வண்ணத்தில் ; ஹார்ட்கவரில் , வந்துள்ள லக்கி கிளாசிக்ஸ் ; சிக் பில் கிளாஸிக்ஸ் ; மாடஸ்டி (கலர் பதிப்பு) have all been smash hits ! காத்திருக்கும் டெக்சின் டிராகன் நகரம் & பிரின்ஸ் ஸ்பெஷலுமே இந்தப் பட்டியலும் ஐக்கியமாகிடப் போவது உறுதி என்பதை ஆரூடம் சொல்ல ஜோதிட நிபுணத்துவம் தேவையில்லை தானே ? So இந்தாண்டின் இந்த வெள்ளோட்ட முயற்சியானது ஒவ்வொரு ஆண்டுமே அவசியப்படுமென்று மனதில் தோன்றியது !
- நிகழ்வு # 2 : இதுவரையிலுமாவது சந்தா E பெற்று வந்துள்ள வரவேற்பும் ; ஏற்படுத்தியுள்ள தாக்கங்களும் ! சென்றாண்டினில் இந்த exclusive கிராபிக் நாவல் சந்தாவொன்றைத் திட்டமிடத் தீர்மானித்த தருணத்தில் ஒரு விஷயம் எனக்குள் தீர்க்கமாய் பதிவாகியிருந்தது ! இம்முறை சொதப்பின் - "கி.நா" என்ற சொற்றொடர் என் ஆயுசுக்காவது ஒரு தீண்டத்தகா சமாச்சாரமாகவே தொடர்ந்திடுமென்பதில் எனக்கு சந்தேகம் இருக்கவில்லை ! So இந்தாண்டினில் அவை ஒவ்வொன்றாய் களமிறங்கி, ஒவ்வொரு விதத்தினில் உங்கள் அபிமானத்தை ஈட்டத் துவங்கிய போது என்னுள்ளே மேலோங்கிய முதல் உணர்வு ஒருவித நிம்மதியே ! "ஹா ...சாதித்து விட்டோம் ! என்ற மிதப்பை விட - "சாமி..கடவுளே...கிராபிக் நாவல்கள் மீதொரு தீரா வெறுப்பு நம் புண்ணியத்தில் உருவாகிப் போனதென்ற கரும்புள்ளியிலிருந்து தப்பிச்சோமே !" என்ற எண்ணமே ததும்பியது ! தொடர்ந்த நாட்களில் இந்த "கதையே நாயகன்" பாணிக்குமொரு எதிர்காலம் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை சிறுகச் சிறுக பிறந்த கணங்களில், அவை சார்ந்த தேடல்களும் வீரியம் கண்டன - சமீபத்தைய ஜெர்மானியப் புத்தகவிழா வரைக்கும் ! ஒரு ஹிட் நாயகரின் கதையையே இரண்டாம் இடத்துக்குத் தள்ளுகின்றன இந்தப் புதுவரவுகள் எனும் பொழுது இவற்றை ஓராண்டின் பரிசோதனைகளாக மட்டுமே பார்த்திட இயலாதென்று படுகிறது ! Of course - இவை இன்னமும் நம் வட்டத்தின் 100% அபிமானங்களை பெற்றிடவில்லை தான் ; ஆனால் ஒரு சரியான இலக்கில் தான் travel உள்ளதென்று தோன்றும் போது, சிறுகச் சிறுகவாவது உடன் நடப்போர் அதிகரிப்பர் என்ற நம்பிக்கையுள்ளது ! So இந்த கிராபிக் நாவல் ரசனையின் துளிர்விடலையுமே 2017-ன் ஒரு முக்கிய நிகழ்வாய்ப் பார்க்கிறேன் !
Factor # 3 : நமது பெல்ஜியத்து சஞ்சய் ராமசாமி ! ஓராண்டின் சந்தாத் தொகையில் பாதிக்கு நெருங்கியதொரு தொகையினை நாம் திட்டமிட்டுள்ள இவரது வண்ணத் தொகுப்பு கபளீகரம் செய்திட உள்ளது ! பணம் ஒருபக்கமிருக்க, இந்தக் கனவை நனவாக்கிட அவசியமாகிடப் போகும் உழைப்பின் பரிமாணத்தை நாம் குறைவாய் எடை போட்டோமென்றால், முகம் முழுக்க வழிந்திடக்கூடிய ஒரு டன் அசடை துடைக்க ஈரோட்டுச் சந்தையின் டர்கி டவல்களை ஒட்டுமொத்தமாய் விலை பேச வேண்டி வரலாம் ! Is going to be a humongous task !! ஆக அதன் பொருட்டு நமது ரெகுலர் பணிகளிலும் ஒரு தெளிவும், திட்டமிடலும் இந்தாண்டு சற்றே கூடுதலானது தேவை என்பேன் !
Factor # 4 : 'தல'யின் 70 -வது பிறந்தநாளும் காத்திருக்கும் 2018-ல் தான் எனும் பொழுது, அதற்கென ஏதாவது தெறிக்கும் ஸ்பெஷல் ஒன்று நம் திட்டமிடலில் இருத்தல் அவசியம் என்பது மண்டையின் ஒரு மூலையில் குடிகொண்டே நின்றது ! பத்தோடு பதினொன்றாய், ஏப்பைசாப்பையாய் எதையேனும் அறிவித்தால் நிறைய நண்பர்கள் வாடிப் போவார்கள் என்பதும் அப்பட்டம் ! So அவரது ஸ்பெஷல் ஒரு மெகா பட்ஜெட் முயற்சியாகிடல் தவிர்க்க இயலா சங்கதி எனும் போது - எங்கே குறைத்து, இங்கே கூட்டுவது ? என்ற கேள்வி என் முன்னே துள்ளிக் குதித்து நின்றது !
Factor # 5 : GST !!!! இயல்பான விலைவாசி உயர்வுகள் ஒருபக்கமெனில், GST திடுமென நம் பிடரியில் இறக்கியுள்ள ஜூடோ டேவிட் பாணியிலான சாத்து - ஒரு pile driver ! உள்ளீட்டு வரிகள் என 12 % ; 18 % என்று ஆங்காங்கே எகிறிடும் செலவினங்களை - இந்தச் சின்ன சர்குலேஷனுக்குள் balance செய்திடும் சாத்தியங்களை கண்டிடும் பொருட்டு ஜூனியர் எடிட்டரும் நானுமாய் ஒரு நூறுமுறைகள் costing போட்டுப் பார்த்திருப்போம் ! ஆனால் எத்தனை முறை ; எத்தனை பேர் ; எத்தனை சூத்திரங்களைப் போட்டு கணக்குகளைப் போட்டாலும் ரெண்டையும் ,ரெண்டையும் கூட்டினால் நாலு தானே வரும் - விடையாய் ? So இந்தாண்டின் ஒரு கணிசமான மண்டைநோவு - மாறியுள்ள சூழலுக்குள் பிழைக்க மார்க்கம் தேடுவதே !
Factor # 6 : கண்ணுக்குப் புலப்படா இன்னமுமொரு சமாச்சாரம் உள்ளது ஒவ்வொரு ஆண்டின் திட்டமிடலிலும் ! இருக்கும் போதே, இல்லாததைத் தேடுவதே மனித இயல்பு ! And காமிக்ஸ் காதலர்களான நாம் மட்டுமென்ன விதிவிலக்கா - இந்த எழுதப்படா நியதிக்கு ? காமிக்ஸ் இதழ்கள் குறிஞ்சிப் பூக்களாய் இருந்த நாட்களில் அவற்றைத் தேடியும், நாடியும் ஓடிய வேகமே வேறு ! இன்றைக்கோ கேட்டால்-கிடைக்கும் என்றாகிய சூழலில், "அந்த நாட்களை போல் வருமா ?" என்ற ஒரு சன்னமான (காரணமிலா) ஏக்கம் நம்மையும் அறியாது உட்புகுதல் இயல்பே ! ஆண்டுகள் ஓட ஓட - நமது பீரோக்களுள் காமிக்ஸ் இருப்புகள் கூடக் கூட - அங்கே வெற்றிடமும், ஒன்றிரண்டு இதழ்களுமே குந்திக் கிடந்த அந்த good old நாட்களை (!!!) எண்ணியும் ஏங்கிடும் தருணங்கள் துளிர்விடலாம் ! இது போன்ற வெளிச்சொல்ல இயலாச் சங்கடங்கள் உங்களுக்கு நேர்ந்திடக் கூடாதெனில் இயன்றமட்டுக்கு அட்டவணையின் ஒவ்வொரு அத்தியாயமும் ஏதேனுமொரு விதத்தில் தெறிக்கும் தோட்டாவாய் அமைந்திடல் அவசியம் ! 50 இதழ்களுள் ஒரு நாலைந்து சோடை போனால் கூட - "அந்தக் காலத்தில் கதை ஒவ்வொண்ணும் எப்படி இருக்கும் தெரியுமா ?" என்ற விமர்சனம் ஜனிக்கும் என்பது யதார்த்தம் ! So நாட்களின் ஓட்டத்துக்கு ஏற்ப, கதைத் தரங்களும் வீரியமாய் இருத்தல் அவசியம் ! "ஷப்பா...காமிக்ஸ் திரும்பவும் வர ஆரம்பிச்சிடுச்சே !! அந்த மட்டுக்குபோதும்டா சாமி !" என்ற ஏற்பு துவக்க நாட்களின் சராசரிக் கதைகளுக்கு தாக்குத் தந்திடலாம் ; ஆனால் 6 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் - அதே கனிவை நீங்கள் நல்கிடத் தயாராக இருப்பினும், நான் அதனை தொடர்ந்தொரு கேடயமாகவே பார்த்து வந்தால் சுகப்படாதே ! நமக்குத் தேவை சென்டம் தான் ! நூற்றுக்கு நூறு ! சர்வமும் ஹிட்ஸ் ! ஒவ்வொரு இன்னிங்சிலும் சதம் !! ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் !! நடைமுறைக்கு இதெல்லாம் சாத்தியம் தானா ? என்று நினைக்கத் தோன்றிடலாம் ; ஆனால் ஓராண்டுக்கான தேர்வுகளைத் திட்டமிடும் தருணத்தில் - நான் விரேந்தர் சேவாகாக மாறிட விழைவது - அவரது மின்னும் முன்மண்டையை விஞ்சிட மட்டுமல்ல - அவரைப் போலவே ஒவ்வொரு பந்தையும் எல்லைக்கோட்டுக்கு உசக்கே அனுப்பிடவுமே ! And this year has been no different ! அதற்காக அத்தனை கதைகளும் சூப்பர் ஹிட்களாகி விடுமென்று நான் சொல்லப் போவதில்லை ; ஆனால் வானத்தை நோக்கினால் தானே குடிசையின் கூரைக்காவது ஏணி எட்டும் ?! So ஒவ்வொரு ஆண்டின் "அட்டவணை தருணங்களும்" ஓராயிரம் சிந்தனைத் தருணங்களே நமக்கு!
ஷப்பா...பில்டப்பிலேயே கண்ணைக் கட்டுதே ?! என்கிறீர்களா ? இதோ குதித்து விடலாம் அட்டவணைக்குள் !
As usual - கதைகளை genre வாரியாகப் பிரித்து, சந்தாக்களை அதற்கேற்பவும் அமைத்துள்ளோம் ! சந்தா A-வில் வழக்கம் போல ஆக்ஷன் கதைகள் ! இங்கே சில பல அசைக்க இயலா ஜாம்பவான்கள் உண்டென்பதால் - அவர்களுக்குத் தொகுதிகள் ஒதுக்குவதில் முச்சூடும் சிரமம் இருக்கவில்லை ! அவர்கள் யாரென்று பார்த்து விடுவோமே ?
- லார்கோ வின்ச்
- வெய்ன் ஷெல்டன்
- தோர்கல்
- ரிப்போர்ட்டர் ஜானி
- ட்யுராங்கோ
- Lady S
So ஆறு பெயர்கள் முன்மொழியப்பட்டான பிற்பாடு - ஆறு துண்டுகளை அவர்களது சீட்களில் போட்டு வைப்பதில் தயக்கம் துளியும் இருக்கவில்லை ! லார்கோவின் தேர்விலோ ; ஷெல்டனின் தொடர்ச்சியிலோ ஆக்ஷன் ரசிகர்களுக்கு எவ்வித இரண்டாம் சிந்தனைகளும் இராதென்பது உறுதி ! And இவர்களது தொடர்களின் சமீபக் கதைகள் வரையிலும் நாம் எட்டிப் பிடித்து நிற்பதால் - படைப்பாளிகளின் லேட்டஸ்ட் கதை சொல்லும் யுக்திகளோடும், சித்திரத் தரங்களோடும் தோளோடு தோள் உரசி நிற்கிறோம் என்பது கூடுதல் ப்ளஸ் பாய்ண்ட் !
Fantasy நாயகன் தோர்கலைப் பொறுத்தவரையிலும் - "ஒரு ஊர்லே ஒரு ராஜாவாம் ; அப்புறம் ஒரு மந்திரவாதியாம் ; மலை மேலே உள்ள கூண்டிலே கிளியிடம் அவன் உசிர் இருந்துச்சாம் !!" என்ற ரீதியில் கதையோட்டம் இருந்த காலமெல்லாம் மலையேறி விட்டது ! காத்திருக்கும் தோர்கல் சாகசமானது ஒரு அடுத்த லெவெலுக்குச் செல்லும் பயணத்துக்கு நம்மை தயார் செய்திடவுள்ளதென்பேன் ! "கனவு மெய்ப்பட வேண்டும்" இதழினில் நாம் சந்தித்த அந்த வில்லங்க அழகியோடு தொடரும் அடுத்த பக்கமானது 4 பாகங்கள் கொண்டதொரு கதைச் சுற்று ! வழக்கம் போல் தோர்களுக்கொரு டபுள் ஆல்பம் என்றே எனது துவக்கத் திட்டமிடல் இருந்தது ! ஆனால் கதைகளைப் பரிசீலனை செய்யத் துவங்கும் வேளையில் தான் இதுவொரு நீ-ண்-ட saga என்பது புலனானது ! இதனையும் 2018-ல் பாதி ; 2019-ல் மீதி என நான் திட்டமிட்டால் - செமத்தியான டின்கட்டல் காத்திருக்குமென மாயாஜாலக் கண்ணாடியில் ஆரூடம் ஓடியதால் ஒற்றை ஆல்பம் - 4 பாகங்கள் என்று டிக் செய்தென் ! அது மாத்திரமின்றி - இது "கனவு மெய்ப்பட வேண்டும்" இதழுக்கு மெலிதாய் தொடர்பு கொண்டு பயணிக்கும் கதை என்பதால் இரண்டுக்கும் இடையினில் பெரியதொரு gap வேண்டாமே என்று மனத்துக்குப் பட்டது ! So ட்யுராங்கோவை வைத்து 2017-ஐத் துவக்கியது போல காத்திருக்கும் புத்தாண்டை தோர்கலின் சாகசத்தோடு வரவேற்க நினைத்தேன் ! "கடவுளரின் தேசம்" முத்து காமிக்ஸின் 46-வது ஆண்டுமலரும் கூட ! இன்னொரு முக்கிய தகவலுமே : நடப்பாண்டு - தோர்கலின் 40-வது வெற்றியாண்டு ! அதனை miss செய்ததற்கு தொடரும் வருஷத்திலாவது கொஞ்சமாய் ஈடு செய்வோமே ?
Lady S - சமீப வரவே என்றாலும், இதுவரையிலும் தூள் கிளப்பியுள்ளார் என்பதால் அவரது தொடர்விலும் சிக்கல்கள் இருக்கவில்லை ! And உங்கள் மத்தியினில் ரிப்போர்ட்டர் ஜானியின் கெத்தை சமீபமாய்ப் பார்த்தான பின்பும் அவரது எதிர்காலம் பற்றிக் கேள்விக்குறி எழுப்ப நான் நிச்சயமாய் டோங்கிரி இல்லை !! So அவருமே ஆட்டோமேட்டிக் செலெக்ஷன் ! கதைத் தேர்வினில் தான் நண்பர் ராட்ஜா முன்மொழிந்திருந்த புது பாணி ஜானியினைக் களமிறக்க 2019-ஐத் தேர்வு செய்வோமே என்று தீர்மானித்தேன் - simply becos அவரது நடப்புத் தொடரிலேயே ஒரு பரபரப்பான த்ரில்லர் கிட்டியுள்ளது ! "மரணம் சொல்ல வந்தேன்" சித்திரம் ; வர்ணம் ; கதையோட்டம் - என மூன்று பிரிவுகளிலுமே பின்னிப் பெடல் எடுக்கிறது !
சத்தமின்றி யுத்தம் செய்பவருமே நம் மனங்களில், வாசிப்பினில் ஒரு உறுதியான இடத்தைப் பிடித்துப் போட்டிருக்கும் போது - அங்கே வேறு யாரேனும் பட்டா போடுவது ஆகிற காரியமல்ல தானே ? So "மௌனமாயொரு இடிமுழக்கம்" நமது காமிக்ஸ் உலகின் கிளின்ட் ஈஸ்ட்உட்டொடு உலா வரக் காத்துள்ளது ! Durango is here to stay ! And ட்யுராங்கோ - 2018-ன் கோடை மலராக இருந்திடும் என்பது கொசுறுச் சேதி !
ஆக அரை டஜன் சுலபத் தேர்வுகள் முடிந்த பிற்பாடு - இந்தச் சந்தாவுக்கு புது இரத்தம் பாய்ச்ச புதுசாய் யாரேனும் இருந்தால் தேவலையே என்று நினைத்தேன் ! ஒவ்வொரு அட்டவணையிலும், புதியவர்(கள்) யாரென்றே தேடல் உங்கள் சுவாரஸ்யத்தில் முக்கியமானது என்பதில் ரகசியமேது ? So இந்தாண்டு அந்த கோட்டாவைப் பூர்த்தி செய்திட வருபவர் ஒரு செஞ்சட்டை சாகஸ வீரர் ! "ஓங்கி அடித்தால் ஒண்ணேமுக்கால் டன் ; ஒதுங்கி அடிச்சா மூணெமுக்கால் டன்" என்றெல்லாம் சவுண்ட் விடும் பார்ட்டியல்ல இவர் ! கனடாவின் பரந்து விரிந்த பிராந்தியங்களில் சட்டத்தைப் பரிபாலனம் செய்திடும் Royal Mounted போலீஸ் பிரிவின் அதிகாரி ! நம்பிக்கையானதொரு குதிரை ; விசுவாசமானதொரு நாய் என அந்தப் பனிப்பிரதேசத்தில் சுற்றி வரும் இந்த நாயகரின் பெயர் ட்ரெண்ட் ! வசீகரிக்கும் சித்திரங்கள் ; வித்தியாசமான கதைக் களங்கள் ; ரகளையான வர்ணங்கள் என்று இந்தத் தொடர் கண்ணுக்கும், சிதைக்கும் இதமானதொரு புது வருவாய் இருக்குமென்ற நம்பிக்கை எனக்குள்ளது ! மொத்தமே 10 one shots கொண்ட தொடர் என்பதால் ஆண்டாண்டு காலமாய் ஜவ்வு இழுக்கவும் சாத்தியமாகாது இங்கே ! புதியவருக்கு 2 சீட் என்றவுடன் மொத்தம் 8 இதழ்களின் slots பூர்த்தி காண்கின்றன !
2018-ல் ஒவ்வொரு சந்தாப் பிரிவிலும் 9 இதழ்களே இடம்பெறும் - இரு காரணங்களின் பொருட்டு ! நடப்பாண்டில் 4 சந்தாப் பிரிவுகள் x தலா 10 இதழ்கள் = 40 இதழ்கள் + சந்தா E - 6 இதழ்கள் : ஆக Grand Total : 46 இதழ்கள் என்றிருந்தது ! தொடரும் ஆண்டிலோ - 5 சந்தாப் பிரிவுகள் x தலா 9 இதழ்கள் = ஆக மொத்தம் 45 என்ற கணக்கு ! கிராபிக் நாவல்களுக்கு சற்றே கூடுதலாய் slots வழங்கிடும் பொருட்டு இந்த அடஜஸ்ட்மென்ட் ! காரணம் # 2 - "இரத்தப் படலம்" - 18 அத்தியாயங்களின் தயாரிப்புக்கென கொஞ்சமேனும் மூச்சு வீட்டுக் கொள்ள எங்களுக்கு நாங்களே வழங்கிக் கொள்ளும் வாய்ப்பு !
So சந்தாக்களில் இதழ்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாய் விசனம் கொள்ளல் வேண்டாமே - ப்ளீஸ் ?! இரத்தப் படலம் முடிந்தான பிற்பாடு - இதுபோல் டண்டணக்கா டணக்குடக்கா படலங்கள் இராதென்பதால் 2019 முதல் மீண்டும் ஒவ்வொன்றிலும் 10-க்குப் போய் விடலாம் ! ஆகையால் "இதை மறுபரிசீலனை செய்யுங்கள் ; etc etc " என்ற பின்னூட்டங்கள் வேண்டாமே ?
ஆக 9 ஸ்லாட்கள் கொண்ட சந்தாப் பிரிவின் இறுதி இதழுக்கான தேர்வை செய்திட கொஞ்சம் தடுமாறவே செய்தேன் ! மாமூலாய்ப் பார்த்தால் - "கமான்சே" அந்த இடத்தை இட்டு நிரப்பிடுவார் ! ஆனால் கடந்த 2 + ஆண்டுகளாகவே ரெட் டஸ்ட் & சகாக்களின் sales performance ரொம்பவே சுமார் ரகம் ! ஒவ்வொரு புத்தக விழாவையும் வேடிக்கை பார்த்து விட்டு மட்டும் வீடு திரும்பும் ஒழுக்க சிகாமணிகளாய் இவரது சாகசங்கள் அமைந்து வருகின்றன ! ஆன்லைனில் தேர்வு செய்து வாங்கும் வாசகர்களுமே இவர் திசைக்கு ஒரு நமஸ்காரம் போடுவதைக் கவனிக்க முடிகிறது ! கேப்டன் பிரின்ஸ் கதைகளுக்கும் அதே கீச்சல் பாணி ஓவியங்கள் தானென்றாலும், அங்கே கதைகள் ஸ்கோர் செய்துவிடுவதால் வண்டி ஓடிவிட்டது ! ஆனால் கமான்சே ரொம்பவே யதார்த்தம் ; இயல்பு என்று நிதான நடை போடுவதாலோ என்னமோ - நம் மனங்களை முழுமையாய்க் கொள்ளை கொள்ளவில்லை இன்னமும் ! So "விற்பனை" என்ற நீட் தேர்வில் சொதப்பும் மாணாக்கர் யாராக இருப்பினும், தாற்காலிகமாகவாவது ஓய்வில் இருத்தல் அவசியம் என்ற விதி அமலுக்கு வருகிறது ! "'போச்சா ? உருப்படியா இருந்த ஒரு தொடரையும் போட்டுத் தள்ளியாச்சா ?" என்ற ஆதங்கக் குரல்கள் நிச்சயம் எழுமென்று புரிகிறது ! ஆனால் கைவசமுள்ள இவரது இதழ்களை எப்பாடுபட்டேனும் விற்க முயற்சிக்க இந்த மினி பிரேக் உதவிட்டால் தேவலை தானே ? அஜிங்க்ய ரஹானேக்குமே அவ்வப்போது இடமில்லையே நம் அணியில்...?
Last slot -க்கென இவரா ? அவரா ? என்றெல்லாம் நிறைய ரோசனைகளுக்குள் ஆழ்ந்தேன் ! உருப்படியாய் கதை ஏதேனும் சிக்கினாலும் - பக்க நீளங்கள் ; தொடரின் விஸ்தீரணம் என்று ஏதாவதொரு வகையில் இடர்கள் தென்பட்டன ! டிடெக்டிவ் கதை ரகங்கள் மருந்துக்கும் இல்லையே என்ற கவலை இந்தாண்டும் இடம்பிடித்ததால் - துப்பறிவாளப் பெருமக்களையாய் தேடித் தேடித் திரிந்தேன் ! அப்போது தான் சமீபத்தில் வாசித்ததொரு ஜில்லாரின் த்ரில்லர் நினைவுக்கு வந்தது ! ஒரு மிதமான கதை ; ஒரு மொக்கையான அல்லக்கை அசிஸ்டண்ட் ; டின்டின் பாணியிலான ஓவியங்கள் என்பதே நாமிதுவரையிலும் அறிந்து வைத்துள்ள ஜில் ஜோர்டன் முத்திரை ! ஆனால் பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் படைப்புகளின் alltime top 20 பட்டியலுக்குள் இந்தத் தொடருக்கு இடம் கிட்டியது எவ்விதம் என்பதை உணர்ந்திட வாய்ப்பொன்று வாய்த்தது சில மாதங்களுக்கு முன்பாய் ! ஓய்வாய் இருக்கும் தருணங்களில் முன்கூட்டிய french மொழிபெயர்ப்புகளை செய்து வைப்பது நமது வாடிக்கை தானே ? அந்த விதத்தில் 'எதற்கும் இருக்கட்டுமே' என்ற எண்ணத்தில் ஒரு GJ கதையினை மொழியாக்கம் செய்து வாங்கியிருந்தோம். அதே கதையினை சமீபமாய் ஆங்கிலத்திலும் பார்க்க நேரிட்ட போது பட்டென்று வாங்கி, சட்டென்று படித்தேன் ! WOW என்று மாத்திரமே சொல்ல முடிந்தது அதனைப் படித்து முடித்த பிற்பாடு !! பிரமாதமானதொரு டிடெக்டிவ் த்ரில்லர் ; ஜாலியான பாணியில் என்றிருக்கும் இந்தக் கதையினை சந்தா A -வின் இறுதி slot க்கு ஊர்ஜிதம் செய்வதென்று தீர்மானித்தேன் - சிலபல புருவ உயர்தல்களுக்கு இவை வழி வகுக்கக்கூடும் என்பது தெரிந்திருந்துமே ! கதையின் வலுவும், அது சொல்லப்பட்டிருக்கும் விதத்தினில் நாம் செய்திடக்கூடிய நகாசு வேலைகளுக்கான வாய்ப்புகளும் இது நிச்சயம் ஒரு சுவாரஸ்ய அனுபவமாய் அமைந்திடுமென்ற நம்பிக்கையூட்டியது ! So GJ மறுவருகை செய்திடுகிறார் - ஒரு கிளாசிக் டிடெக்டிவாக !!
ஆக சந்தா A பூர்த்தி கண்டது இவ்வதமாய் ! இதோ - அதன் கதை டிரைலர்கள் !
Moving on, வழக்கம் போல சந்தா B - போனெல்லியின் black & white அதகளங்களோடு ! மேம்போக்காய்ப் பார்க்கையில் இதுவே சந்தாப் பிரிவுகளுள் மிகச் சுலபமானதாக இருந்திட வேண்டியது - எனது தேர்வுகளை பொறுத்தவரையிலும் ! ஆனால் no freebies இங்கேயுமே !!
முதல் & முக்கிய கேள்வியானது TEX-ன் 70-வது ஆண்டின் கொண்டாட்டத்துக்கு என்ன திட்டமிடலாம் என்பதே ! ஒவ்வொரு ஆண்டிலும், நம் முன்னிருக்கும் தாண்டு உயரங்களை நாமாகவே உயர்த்திக் கொண்டே இருப்பதில் ஒரு சிரமம் இல்லாதில்லை ! அது தான் உங்களின் எகிறும் எதிர்பார்ப்புகள் என்பது ! ரூம் போட்டு யோசிக்க வேண்டியுள்ளது இப்போதெல்லாம் - உங்களைத் திகைக்கச் செய்ய வேண்டுமெனில் ! So சில பல ரூம் போடல்களும், சிண்டைப் பிய்த்தல்களும் அரங்கேறிய பின்னே TEX - The Dynamite Special-ன் திட்டமிடலுக்கு வடிவம் தர சாத்தியமானது ! ரூ.700 விலை ; 777 பக்கங்கள் ; வண்ணமும் உண்டு ; black & white -ம் உண்டு என்பதே இது சார்ந்த தகவல்கள் இப்போதைக்கு ! கதைகளை ஈரோட்டின் ரிலீஸ் வரைக்கும் under wraps வைத்திருப்போமே - கொஞ்சமேனும் சஸ்பென்ஸ் தொடர்ந்திட ? Rest assured - ஒரு அசாத்திய விருந்து காத்துள்ளது என்ற மட்டிற்கு !! அப்புறம் - இந்த இதழுக்கான பெயர் சூட்டும் போட்டியினை அறிவித்தது மாத்திரம் ஞாபகம் உள்ளது - ஆனால் DYNAMITE Special என்ற இந்தப் பெயரை முன்மொழிந்த நண்பர்கள் பற்றிய தகவல் மண்டையில் லேது ! ப்ளீஸ்..மேடைக்கு வந்து நம் மரியாதைகளை ஏற்றுக் கொள்ளுங்களேன் ? எடுத்த எடுப்பிலேயே இந்த இதழுக்கு இத்தனை பெரிய விலையோ ; பட்ஜெட்டோ ஒதுக்க மனம் ஒப்பவில்லை தான் ! ஆனால் நம்முள் உள்ள TEX காதலுக்கு சப்பையாய் ஒரு இதழை, இது போன்றொரு முக்கிய தருணத்தில் அறிவித்து, ஒட்டு மொத்த மூட்-அவுட்டை சந்திக்க பயம் தலைதூக்கியதால் - வேறெங்கேயாவது வெட்டிக் கொள்ளலாம் இங்கே ஒட்டி விட என்று தீர்மானித்தேன் !
டெக்சின் மெகா இதழுக்கென கதை பரிசீலனை செயதேன் ஒரு மாமாங்கத்துக்கு !! வழக்கம் போல இணையத்தில் ஆராய்ச்சி ; இத்தாலிய ஆர்வலர்களிடம் விசாரிப்புகள் ; நம் கைவசமுள்ள இதழ்களில் அலசல் ; மிலன் நகரில் சென்றாண்டு நான் எடுத்துக் கொண்ட குறிப்புகள் - என ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ரேஞ்சுக்கு தோண்டிப் பார்க்க முனைந்தேன் ! "அட்டைப்படங்களை மாற்றினால் போதும் - மற்றபடிக்குக் கதைகளுள் வேற்றுமை லேது !" என்று டெக்ஸை விமர்சிக்கும் நண்பர்களை ஓராண்டின் எனது TEX தேடலின் பொழுது உடனிருக்கச் செய்தால் அவர்களது எண்ணங்கள் சடுதியில் மாறிப் போகும் என்பது சர்வ நிச்சயம் ! எத்தனை அசுரத்தனமானதொரு கதைக் குவியல் நம்முன்னே வீற்றிருக்கிறதென்பதை ஒவ்வொரு ஆண்டும் பார்த்துப் பார்த்து மலைக்கத் தான் முடிகிறது ! அதனுள்ளிருந்து தேர்வுகளைச் செய்வது - நாக்கைத் தொங்கச் செய்யும் பணி என்பதை அனுபவத்தில் சொல்ல முடிகிறது !
ஒரு மாதிரியாய் மெகா இதழுக்கு மாத்திரமன்றி - ரெகுலர் இதழ்களுக்குமே தேர்வுகளைச் செய்து முடித்தேன் ! சித்திரத் தரம் ; கதைகளில் சுவாரஸ்யம் ; பக்க நீளங்களில் ஏற்பு ; புராதனம் மிளிரா படைப்புகள் - என ஏதேதோ எனக்குத் தெரிந்த அளவுகோல்களை இங்கே செயல்படுத்தியிருக்கிறேன் ! End of the day - எனது தேர்வுகள் மிதமோ, சூப்பரோ - 'தல' மிச்சத்தைப் பார்த்துக் கொள்வாரென்ற நம்பிக்கையில் வண்டி ஓடுகிறது ! 2018-ன் தீபாவளி மலராய் வரவிருக்கும் இதழ் - டெக்ஸ் வரிசையில் ஒரு ஸ்பெஷல் படைப்பு - டைகர் ஜாக்கின் (காதல்) கதையைச் சொல்லும் விதத்தில் ! இதுநாள் வரைக்கும் "வோ" ; "வோ" என்றே வண்டியை ஒட்டி வந்திருக்கும் இந்த செவ்விந்திய சகாவின் saga - தலையில்லா போராளி சைசில் வர காத்துள்ளது !
போனெல்லின் black & white அணியினில் இம்முறை கணிசமான கல்தாக்களுமே உண்டு ! பென்சில் இடையழகி ஜூலியா இதுவரையிலான வாய்ப்புகளில் அத்தனை அட்டகாசமாய் மிளிர்ந்திருக்கவில்லை என்பதோடு - விற்பனைகளிலுமே சாதிக்கக் காணோம் - இதுவரையிலாவது ! Maybe எனது கதைத் தேர்வுகள் இந்த flop show-க்கொரு காரணமாய் இருக்கக் கூடும் தான் ; so ஒரு சின்ன இடைவெளியினில் நல்ல கதைகளைத் தேட முயற்சிப்போமே என்று நினைத்தேன் ! நீட் தேர்வில் உதை வாங்கிடும் இன்னொரு போனெல்லிக்காரர் - டைலன் டாக் ! வித்தியாசமான கதைகள் தான் ; ஆனால் பொதுவான ரசனைகளுக்கு ஒத்து போகவில்லை என்பது விற்பனை ஈனஸ்வரத்தில் தெரிகிறது ! ஆன்லைன் ஆர்டர்களிலும் இவர் ரொம்பவே பின்தங்கிய வேட்பாளர் ! So இந்த அமானுஷ்ய வேட்டையரை கொஞ்ச நாட்களுக்கு ஓய்வில் அனுப்பிட நினைத்தேன் !
வெளியே போவோர் இருவர் எனில் - உள்ளிருப்போர் CID ராபின் & மர்ம மனிதன் மார்ட்டின் ! இருவருமே - தத்தம் பொறுப்புகளை அழகாய் பார்த்துக் கொள்வதால் - அவர்களின் தேர்வின் பொருட்டு எவ்விதக் குழப்பங்களும் எழவில்லை ! As usual - இரவுக் கழுகார் maximum தொகுதிகளைத் தனதாக்கிக் கொண்டுவிட்டதால் - எஞ்சியிருக்கும் சொற்பத்தையே மற்றவர்கள் பங்கு பிரித்துக் கொள்ள முடிகிறது ! So ராபின் & மார்ட்டின் தலா ஒரு slot மாத்திரமே !
கறுப்பு-வெள்ளைக் கோட்டாவினைக் கடை மூடும் முன்பாய் நம் இளவரசியை பரிசீலனை செய்திட வேண்டுமன்றோ ? இன்றைய காலகட்டத்தில் not a brilliant performer ; ஆனால் நிச்சயமாய் சொதப்பலும் அல்ல என்பதே இந்தத் தொடரின் ரேட்டிங் ! அழுத்தமான ஆல்பங்களாய் இன்றைக்குப் பார்த்துப் பழகியான பின்னே, இந்த தினசரி strip களின் தொகுப்புகள் ஒரு வித ஆழமின்மையோடு இருப்பதாய் தோன்றுகிறதோ - என்னவோ ?! எது எப்படியோ - இம்முறையும் ஒரு கூட்டணி இதழில் இளவரசிக்கு ஒற்றை சீட் ஒதுக்குவதில் தவறு இராது என்று நினைத்தேன் ! Just makes it in !!
ஆக - சந்தா B திடமான கதை இதுவே & இதோ - டிரைலர்கள் :
தொடர்வது சந்தா C - எனது favorite !! And எப்போதும் போலவே இங்கே கார்ட்டூன் நாயகர்களின் அணிவகுப்பே - மிளிரும் வண்ணத்தில் ! "தவிர்க்க இயலா ஹீரோக்கள்" என இங்கேயுமொரு பட்டியல் உள்ளதால் அவர்களுக்கு நேராக டிக் அடித்து வைத்தேன் :
இவர்கள் மூவருமே - கார்ட்டூன் சந்தாக்களின் தூண்கள் என்பதால் ஆளுக்கொரு இடம் - ஆட்டோமேட்டிக்காக ! And lucky gets lucky - ஒரு டபுள் ஆல்ப ஆண்டுமலர் வாய்ப்போடு !
பாக்கி கிச்சு கிச்சு பார்ட்டிகள் அனைவருமே - good for a slot என்பதில் துளியும் சந்தேகம் நஹி என்பதால் கட கடவென அவர்களது பெயர்களையும் எழுதி வைத்தேன் :
இவர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதத்தில் ப்ளஸ் & மைனஸ் கொண்டிருப்பதில் ரகசியங்கள் கிடையாது !
ப்ளூகோட் பட்டாளம் - மேலோட்டமாய் கார்ட்டூனாய்த் தோன்றினாலும், உள்ளுக்குள் போரின் அர்த்தமின்மையைச் சாடும் ஒரு தொடர் ! So மாறுபட்டதொரு கதை canvas க்கு டிக் அடிப்போம் என்று நினைத்தேன் !
கர்னல்ஜியுமே ஒரு மாமூலான சிரிப்பு நாயகராக வலம் வராது - ஸ்காட்லாண்டு யார்டின் சிறப்புப் போலீசாய்ச் சுற்றி வந்து, அந்த பிரிட்டிஷ் கலாச்சாரங்களை பகடி செய்யும் கேரட் மீசைக்காரர் ! மறுபடியும் டிக் !
ரின்டின் கேன் !! என்ன சொல்லுவது நமது ஆதர்ஷ நாலுகால் ஞானசூன்யத்தைப் பற்றி ? ஒரே நொடியில் அம்மாஞ்சியாகவும், அட்டகாச சிந்தனைவாதியாகவும் காட்சி தரக்கூடிய இந்த செல்லப் பிள்ளையை இந்தாண்டு நாமெல்லாமே உச்சி முகரப் போவது உறுதி - கிட்டியிருக்கும் கதையின் தன்மையின்காரணத்தால் ! ஒட்டகம் ஒன்றோடு நம்மாள் தோஸ்தாகிப் போக - இருவரும் அடிக்கும் லூட்டிகள் அட்டகாஷ்!
மந்திரிகாருவைப் பொறுத்தவரையிலும் - முழுநீளத்தில் கதைகள் இல்லையே என்ற ஆதங்கம் ஒரு பக்கம் இருந்தாலுமே, அந்த செம ஒரிஜினலான கதை concept -க்கு நாமொரு சலாம் போடாது போவது மகாப் பிழையாகிப் போகுமென்பதால் - இங்குமொரு டிக் ! ஒரு slot !
நமது நீலக் குட்டி மனுஷர்கள் பற்றிய mixed reactions நாம் அறிந்ததே ! So மறுபடியும் அதனுள் புகுந்து உங்கள் கழுத்தில் ரம்பத்தை அணைகட்டுவானேன் என்று பார்த்தேன் ! ஒரு நீளமான கதையைச் சுருக்குவதானால் - கூடுதலான இடங்களை வழங்காது - இவர்களுடனான தொகுதி உடன்பாட்டை ஒன்றோடு நிறுத்திக் கொள்வோமெனத் தீர்மானித்தேன்! So இங்குமொரு டிக் !
8 தேர்வுகள் ஆச்சு ; இறுதி இடம் யாருக்கோ ? என்ற கேள்விக்கு - நிறையவே யோசித்தேன் ! இங்குமே ஒரு புதுமுகம் கிட்டிடும் பட்சத்தில் உற்சாக மீட்டர்கள் உயரக்கூடுமே என்று பட்டது ! 'டக்'கென்று நினைவுக்கு வந்தது ஒரு குள்ள வாத்து ஹீரோ ! அது என்னவோ தெரியலை - பென்னியில் துவங்கி, மந்திரியார், SMURFS என சிரிப்புப் பார்ட்டிகளில் பலரும் குள்ள வாத்துக்களாகவே உள்ளனர் ! காத்திருக்கும் புதுவரவின் ஒரிஜினல் பெயர் SAMMY ! ஆனால் அந்தப் பெயரை தமிழுக்கு மாற்றம் செய்திடும் போது "சாமி" ; "சேம்மி" என்று வருவது அத்தனை சுகப்பட்டது போல் தோன்றவில்லை ! So மேக் & ஜாக் என்ற பெயர்களோடு இந்தக் கதையின் சிரிப்பு நாயகர்கள் அறிமுகம் காணவுள்ளனர் ! 1920-களின் அமெரிக்காவே கதையின் பின்னணி ! மாஃபியாக் கும்பல்கள் சிகாகோவை உலுக்கி வந்த கால கட்டத்தில் - பாடிகார்டுகளாக தங்களையே வாடகைக்கு விடும் நிறுவனமொன்றின் முதலாளிகள் இவர்கள் இருவரும் ! சில காலமாகவே இவர்களைக் களமிறக்க எண்ணி இருந்தேன் ; 2018 அதற்கொரு வாய்ப்பளித்த தந்துள்ளதில் அண்ணாச்சி ஹேப்பி ! So நாயகர்கள் 9 பேரைத் தேர்வு செய்ததன் பின்னே, அவர்களது தொடர்களிலிருந்து உருப்படியான கதைகளைத் தேர்வு செய்யும் வேலை மட்டுமே பாக்கி நின்றது ! எப்போதுமே இது அத்தனை கடினப் பணியாக இருந்ததில்லை ; and சமீப காலங்களில் கிளிப்டன் ; ப்ளூ கோட் பட்டாளம் ; லக்கி லூக் ; பென்னி ; smurfs ; மந்திரியார் என அநேகரின் கதைகள் ஆங்கிலத்திலும் கிடைப்பதால் எனது selection process ரொம்பவே சுலபமாகிப் போய் விட்டது ! Here you go :
காத்திருந்ததோ - சந்தா D ! துவங்கிய ஆண்டிலும், தொடர்ந்த பொழுதிலும் மின்னல் தோற்றது இந்த மறுபதிப்புச் சாந்தாவின் வேகத்தின் முன்னே ! நயாகராவில் மாயாவிக்களும் ;கொள்ளைக்கார மாயாவிகளும் செய்த விற்பனை அதகளங்கள் அசாத்திய ரேஞ் ! ஆனால் அதன் பின்பாய் மெது மெதுவாய் தொய்வு தெரியத் துவங்கிட, நடப்பாண்டில் உங்களில் பலருக்கும் தூக்க மாத்திரைகளாக சந்தா D செயல்பட்டு வருவதை உணர முடிந்தது ! மறுபதிப்புகளின் பொருட்டு நாம் மொத்தமாய் நிறைய முதலீடு செய்துள்ளது நிஜம் தான் ; ஆனால் அவற்றை முழுமையாய் காலி செய்திட இன்னமும் 2 ஆண்டுகளாவது பிடிக்கும் ; and அதற்குள்ளாக உங்களில் பலர் இமயமலை அடிவாரங்களில் தவம் மேற்கொண்டிருக்கும் வாய்ப்புகள் பிரகாசமாய்க் கண்ணில் பட்டது ! ஜுனியர் குப்பாண்ணாக்களை போட்டுத் தாக்குவோரை ஜடாமுடியோடும், கமண்டலங்களோடும் கற்பனை செய்வதே கஷ்டமாக இருப்பதால் - தொடரும் ஆண்டிலாவது உங்களுக்கு கொஞ்சமேனும் நிவாரணம் தர நினைத்தேன் ! So அந்த உறுதியில் தான் ஈரோட்டின் சந்திப்பின் போதும் கூட, காத்திருக்கும் சந்தா D - பர பரப்பாக இருக்கப் போவது உறுதி என்று சொன்னேன் !
முதல் வேலையாக மும்மூர்த்திகளுக்கும், இஸ்பய்டர் சாருக்கும் ஆளுக்கொரு slot கூட வேண்டாம் - மூன்றே தொகுதிகளை அவர்களுக்குள்ளாக்கப் பிரித்துக் கொள்ளட்டும் என்று தீர்மானித்தேன் ! So SECRET AGENT ஸ்பெஷல் என்ற பெயரில் CID லாரன்ஸ் & டேவிட் சாகசமும், ஜானி நீரோ சாகசமும் இணைந்து வர ; மாயாவியும், ஸ்பைடரும் ஆளுக்கொரு இதழில் ! What next ? என்ற போது தான் சூப்பர் 6-ன் "இன்றியமையா மறுபதிப்புத் தொகுப்புகளை" உள்நுழைக்கும் மகாசிந்தனை உதித்தது ! Fleetway மறுபதிப்புகள் காலி செய்து தந்திருந்த இடங்களில் லக்கி க்ளாசிக்ஸ் 2 ; சிக் பில் க்ளாசிக்ஸ் 2 & TEX கலர் கிளாசிக் எனப் புகுத்தினால் - நடப்பாண்டின் smash hits சிக்கலின்றித் தொடர்ந்தது போலவும் ஆச்சு ; இதற்கென இன்னொரு சந்தாத் தடத்தை உருவாக்கும் மெனெக்கெடலும் கிடையாதென்று பட்டது ! இது சரியான தீர்மானமா ? இல்லையா ? என்ற கேள்விக்கு லேட்டஸ்ட்டான பாய் பிறாண்டும் விஞ்ஞான வழிமுறைகளை நடைமுறைப்படுத்திய பின்னே தீர்மானித்தேன் YES என்று !
ஈரோட்டில் TEX மறுபதிப்புக்கெனத் தேர்வான "பளிங்குச் சிலை மர்மம்" - வண்ணத்தில் வருகிறது ! Of course - "வைகிங் தீவு மர்மம்" கதையையும் இதனோடு இணைத்திருக்க ஆசை தான் ; ஆனால் தற்போதே பட்ஜெட் உதைக்கிறதென்ற சிகப்பு லைட் கண் முன்னே டாலடிக்க - TEX ஒற்றை சாகசம் மாத்திரமே எனத் தீர்மானித்தேன் ! கிடைக்கும் அடுத்த முதல் சந்தர்ப்பத்தில் "வை.தீ.ம" தான் TEX மறுபதிப்பு என்பதில் சந்தேகம் வேண்டாம் folks !
லக்கி கிளாஸிக்ஸ் 2-க்கென "மேடையில் ஒரு மன்மதன்" + "அதிரடிப் பொடியன்" கதைகளைத் தேர்வு செயதேன் ! இரண்டுமே classics என்பதால் - நிச்சயம் ஒரு விருந்து காத்துள்ளது என்பேன் ! And hard cover too !!
நமது வுட் சிட்டி பார்ட்டிக்களின் கிளாசிக்சில் "கொலைகாரக் காதலி" & "தேவை ஒரு மொட்டை" இடம்பிடிக்கின்றன ! மறுபடியும் hard cover இங்கும் !
இந்த 3 ஸ்பெஷல் இதழ்களையும் டிக் அடித்ததன் பின்னே, மனதுக்கு வந்த முதல் பெயர் - "தோட்டா தலைநகரம்" ! "இரத்தக் கோட்டை" தொகுப்பினில் இத்னை இணைக்க இயலாது போன சமயமே promise செய்திருந்தேன் - இது தனி இதழாய் விரைவிலேயே வந்திடுமென்று ! ஆகையால் மறுபதிப்பு # 7 ஆக இடம்பிடித்த இதழிது !
And அது போலவே இன்னமுமொரு பிராமிஸ் செய்த நினைவும் இருந்தது - நமது சாகச வீரர் ரோஜரின் "மர்மக் கத்தி" தொடர்பாய் ! 1986-ல் வெளியான இதழிது என்ற முறையில் நமது புது வாசகர்களும் பெரும்பகுதியினர் இதனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவே மாட்டார்கள் என்பது நிச்சயம். So "மர்மக் கத்தி" slot 8-ல் ! ரெகுலர் சந்தாக்களில் இம்முறை கேப்டன் டைகரும், ரோஜரும் இடம்பெற்றிருக்கவில்லை எனும் சூழலில், இவர்களை மறுபதிப்பிலாவது பார்த்த திருப்தி கிட்டட்டுமே என்று நினைத்தேன் !
அந்த சிந்தனையின் கிளையே - சந்தா D -வின் இறுதி slot-ஐ கேப்டன் பிரின்ஸ் பிடிக்க நேர்ந்ததன் பின்னணி ! கேப்டனா ? ரிப்போர்ட்டரா ? என்ற அனல் பறக்கும் போட்டி சமீபமாய் இங்கே அரங்கேறிய வேளையில் - "பிரின்ஸை மறுபதிப்பில் பார்த்தால் மட்டும் தானே ஆச்சு ?" என்று முன்வைக்கப்பட்ட வாதம் எனக்கு லாஜிக்கலாகத் தோன்றியது ! So விட்டேனா -பார் என்று இங்கே திருமங்கலமும், RK நகரும் அரங்கேறிய டுபாக்கூர் வேளையில் - "எரிமலைத்தீவில் பிரின்ஸ்" என்று டிக் அடித்திருந்தேன் ! So ஒரு சவ சவ சந்தா D - சற்றே சுறு சுறுப்பாய்க் காட்சி தருவது போல் எனக்குள் தோன்றிய விதம் இதுவே ! And here are the trailers :
ஒரு பெருமூச்சோடு பேனாவை மூடி வைத்துவிட்டு -இதுவரையிலுமான இதழ்களின் கிரயங்களை டோட்டல் போடும் படலத்தினுள் இறங்கினேன் ! கூரியர் கட்டணங்கள் ஏற்கனவே எகிறிப் போய்க் கிடைக்கும் சூழலில் - அதனை balance செய்திடுவது எவ்விதம் ? சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு நடப்பாண்டைப் போலவே எவ்விதம் ஊக்கம் வழங்குவது ?என்றெல்லாம் யோசிக்கத் துவங்கினேன் !
அந்த நொடியில் பிறந்தது தான் TEX in ColoR !! இது நம்மவரின் 70-வது ஆண்டுக் கொண்டாட்டங்களெனும் போது - இன்னும் கூடுதலாய் எமோஷன்ஸ் இருப்பின் நலமே என்று மனதுக்குப்பட்டது ! So கொஞ்சகாலமாகவே நான் மனதுக்குள் அசை போட்டு வரும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும் வேளை இது என்று தீர்மானித்தேன். TEX கதைகள் நார்மலாய் கறுப்பு -வெள்ளையில் வரையப்பட்டு ; அவ்விதமே வெளியிடவும்பட்டு ;பின்னர் வர்ணம் பூசப்பட்டு - கலர் பதிப்புகளாக சுற்றி வருவது வழக்கம். ஆனால் COLOR TEX என்ற தொடரின் பொருட்டு, முழு வண்ணத்திலேயே, பெயின்டிங் போடுவது போல TEX கதைகளுக்கு ஓவியங்கள் தீட்டும் முயற்சியிலும் போனெல்லி இறங்கியுள்ளனர் ! அந்த தொடரின் வரிசையில் - அரை டஜன் 32 பக்க சிறுகதைகள் உள்ளன ! அவை ஒவ்வொன்றையுமே, பிரத்யேக இதழ்களாக்கி - இரு மாதங்களுக்கு ஒருமுறை சந்தா நண்பர்களுக்கு நமது அன்பளிப்பாய்க் கொடுக்க திட்டமிட்டேன் ! So திரும்பிய திக்கெல்லாம் TEX 2018-ல் உலா வர போவது உறுதி !
And அயல்நாட்டு வாசகர்கள் ; சந்தா செலுத்தப் பிரியம் கொள்ளா வாசகர்கள் கூட இந்த COLOR TEX இதழ்களை பெற்றிடலாம் - but ஆண்டுக்கு 2 தருணங்களில் மட்டும் - அதற்கான விலைகளைக் கொடுத்து ! விபரமாய் - தொடரும் பக்கங்களில் எழுதியுள்ளேன் ; please அதை படிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன் ? சந்தாவில் இணையாதோரும் இந்த இதழ்களை பெற்றிடல் சாத்தியமே என்பதால் - "பாரபட்சம் ; இத்யாதி..இத்யாதி" என்ற புகார்களுக்கு இங்கே முகாந்திரங்களில்லை ! Please do read carefully !
"சரி...மொட்டையும் போட்டாச்சு ; காதும் குதியாச்சு ; யானைகிட்டே ஆசீர்வாதமும் வாங்கியாச்சு ; கடா எங்கேப்பா ?" என்ற சில மௌனக் கதறல்கள் எனக்கு கேட்காதில்லை ! சந்தா E பற்றிய சேதி என்னவோ ? என்பது தானே உங்கள் கேள்வி ?
இதோ பதில் : கிராபிக் நாவல் சந்தா ஏப்ரலில் அறிவிக்கப்பட்டு, ஜூன் 2018 முதல் துவங்கிடும் ! இங்குமே 9 இதழ்கள் - அவற்றுள் கலர் ஐந்தா ? b & w ஐந்தா ? என்பதே உங்களுக்கான யூகப் பயிற்சி ! So 5 + 4 என வரக் காத்திருக்கும் கிராபிக் நாவல் சந்தாவிற்கு "the five & four " சந்தா எனப் பெயரிட்டுள்ளோம் ! பாருங்களேன் :
உங்களுக்குப் பரிச்சயமான கதைகள் ; முற்றிலும் பார்த்திராப் புதுசுகள் ; வண்ணத்தில் ; கறுப்பு-வெள்ளையில் ; இருண்ட கதைகள் ; தெறிக்கும் புது பாணிகள் ; தொடரும் பழையோர் ; தழைக்கப் போகும் புதியோர் - என இங்கு எல்லாமே இருந்திடும் ; நல்லாவும் இருந்திடும் ! "அதெல்லாம் சரி தான் ; ஆனால் இதையும் இப்போதே அறிவித்து விட்டால் - ஒரே வேலையாய் முடிந்திடுமே ?" என்று கேட்போரும் இருப்பார்கள் என்பது புரிகிறது ! 3 காரணங்கள் - அதனை செய்யாதிருப்பதற்கு :
1.பட்ஜெட் : ஏற்கனவே சென்றாண்டின் அளவைத் தாண்டி விட்ட நிலையில் - மேற்கொண்டு எகிறச் செய்ய இது நேரமல்ல என்று எண்ணினேன் !
2:தற்போதைய பிராங்பர்ட் சந்திப்பினைத் தொடர்ந்து புதிதாய்த் திறந்துள்ள சில கதவுகளையும் முழுமையாய் ஆராய்ந்து - ஒரு கலக்கலான திட்டமிடலை மறுபடியும் உருவாக்க கணிசமான அவகாசம் தேவை !
3.இந்தாண்டின் எஞ்சியுள்ள கிராபிக் நாவலும் வெளியாகிவிட்ட பின்பாக - ஒரு consolidated பார்வை அவசியமென்று நினைக்கிறேன் ! கதைத்தேர்வுகளில் அதீத கவனம் அவசியமாகிடும் களமிது என்பதால் - தட தட ஓட்டத்தை விடவும், நிதான ஓட்டம் நல்லதென்று நினைத்தேன் !
So back to the drawing board சென்றிடல் அவசியம் எனும் நிலையில் - என்னளவில் மனதுக்குள் ஒரு திருத்தப்பட்ட ப்ளூ பிரிண்ட் ரெடி செய்திருக்கிறேன் !! அதனை நடைமுறையாக்க ஒரு time gap அத்தியாவசியம் ! அதுவரையிலும் "அண்டர்டேக்கர் உண்டா ? ஜெரேமியா ? பராகுடா ? யார் உள்ளே - யார் வெளியே ?" என்று ஆராயத் தொடங்கினீர்களெனில் நாட்கள் ஓட்டமாய் ஓடியே போய் விடும் ! So சந்தா E - சந்தா F & F ஆக உருமாறுகிறதென்ற சேதியோடு - இதோ 2018-ன் சந்தா தொகையினை உங்கள் பார்வைக்கு வழங்கிடுகிறேன் :
ஆண்டுதோறும் பட்ஜெட்டை சட்டசபையில் சமர்ப்பிக்க வரும் நிதி மந்திரிகள் ஒரு தம்மாத்துண்டு பிரீஃப் கேஸோடு வாயெல்லாம் பல்லாக போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதை பார்த்திருப்போம் ! அதனுள் என்னதான் இருக்குமோ ? என்று நான் நிறைய தடவைகள் யோசித்திருக்குப்பேன் ! என்னையும் இப்போது அப்படியொரு "ஈ ஈ ஈ " moment-ல் கற்பனை செய்வதாக இருப்பின், என் கையில் இருக்கக் கூடிய பொட்டிக்குள் - கொஞ்சம் அதிரசம் ; சீவல் ; முறுக்கு என்று பட்சணங்கள் தானிருக்கும் ; இதனையே டைப் முடிப்பதற்குள் பேயாய் பசிக்கிறதே ?!!
அப்புறம் எப்போதோ செய்திருக்க வேண்டியதொரு திட்டம் இப்போதேனும் நடைமுறை காணவிருக்கிறதே என்ற மகிழ்ச்சி எனக்கு ! பாருங்களேன் :
ஆன்லைனிலும் வழக்கம் போல சந்தாக்களை செலுத்தலாம் guys ; ஆனால் இன்றைய பொழுது விடுமுறை என்பதால் ஜுனியரைக் கொண்டு A + B + C +D சந்தாவினை மட்டும் லிஸ்டிங் செய்துள்ளேன் : http://lioncomics.in/15-2018-subscription
இதர பிரிவுகளை வெள்ளிக்கிழமை ஆன்லைனில் பார்த்திடலாம் !
இம்முறை பிடித்ததைத் தேர்வு செய்யும் சுதந்திரம் முழுமையாய் உங்கள் வசம் ! "TEX திகட்டுகிறது" என்று சொல்லும் சிறுபான்மையா நீங்கள் ? No worries - சந்தா B-ஐ நீங்கள் தேர்வு செய்திடும் அவசியமில்லை ! கார்ட்டூன் வேண்டாமா ? - ஒன்றும் பிரச்சனையே இல்லை ; பை-பாசில் வண்டியை வீட்டுக் கொள்ளுங்கள் ! மறுபதிப்புகளுக்கு NO சொல்வோரா நீங்கள் ? சுதந்திரமாய் சந்தா D-க்கும் NO சொல்லிடலாம் ! So இயன்றமட்டுக்கு எல்லாக் கூட்டணிகளிலும் சந்தாப் பிரிவுகளை இம்முறை உங்களுக்கென உருவாக்கியுள்ளோம் ! Please note : இவை தவிர்த்து வேறு எவ்வித சந்தாத் திட்டமிடல்களும் கிடையாது ! So வேறெவ்வித கூட்டணி குறித்தும் நம்மவர்களிடம் விசாரித்திட வேண்டாமே - ப்ளீஸ் ?
இனி பந்து உங்கள் தரப்பில் folks ! எப்போதும் போல அதே உற்சாகத்தோடும், உத்வேகத்தோடும் நமது சந்தாச் சக்கரங்களைச் சுழலச் செய்யும் பொறுப்பு உங்களிடம் ! கடவுள் துணையோடு இந்தாண்டும் ஒரு வெற்றி தெறிக்கும் ஆண்டாய் அமையுமென்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன் !
Of course - கதைத் தேர்வுகள் ; ரசனைகள் ; தலைப்புகள் என ஒவ்வொன்றிலும் சிற்சிறு மாற்றுச் சிந்தனைகள் இருக்கக் கூடும்தான் ! ஆனால் ஒவ்வொரு தீர்மானத்திற்கு முன்பும், உங்கள் ஒவ்வொருவரின் இடங்களிலிருந்தும், ஒரு கணமேனும் சிந்தித்துப் பார்க்க நாங்கள் முயற்சித்துள்ளது நிஜம் ! So உங்களுக்கு ஏற்புடைய தேர்வுகள் மிஸ்ஸிங் எனில் அதற்கொரு காரணம் இருக்கக்கூடுமென்ற நம்பிக்கை கொள்ளுங்களேன் ப்ளீஸ் ? இந்த நொடியின் தேவை உங்களின் ஒட்டுமொத்த பாசிட்டிவ் சிந்தனைகளே ! ஒரு சின்ன வட்டத்தினுள் பிரபஞ்சத்தையே உள்ளங்கைக்குள் கொணர்ந்து பார்க்கும் பேரவா நமக்கு என்பதால் - ஒட்டுமொத்த வாழ்த்துக்களின்றி அது சாத்தியமாகாது ! கரம் கோர்ப்போம் - மீண்டுமொருமுறை !!
பொறுமையாய் இத்தனை நேரம் வாசித்தமைக்கு நன்றிகள் ; அப்புறம் உங்களின் data packs நாளை 'பிம்பிலிக்கா-பிலாக்கி' என்றால் என்னைத் திட்டாதீர்கள் !! Bye all ! See you around !!
P.S : ஆங்......ஈரோட்டிலேயே சொல்ல நினைத்தது !!
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

- லக்கி லூக்
- டாக் புல் & கிட் ஆர்டின்
- சுட்டிப் புயல் பென்னி
இவர்கள் மூவருமே - கார்ட்டூன் சந்தாக்களின் தூண்கள் என்பதால் ஆளுக்கொரு இடம் - ஆட்டோமேட்டிக்காக ! And lucky gets lucky - ஒரு டபுள் ஆல்ப ஆண்டுமலர் வாய்ப்போடு !
பாக்கி கிச்சு கிச்சு பார்ட்டிகள் அனைவருமே - good for a slot என்பதில் துளியும் சந்தேகம் நஹி என்பதால் கட கடவென அவர்களது பெயர்களையும் எழுதி வைத்தேன் :
- ப்ளூ கோட் பட்டாளம்
- கர்னல் க்ளிப்டன்
- ரின்டின் கேன்
- மதியிலா மந்திரி
- SMURFS

மீ?
ReplyDeleteயெஷ் !
DeleteHi!
ReplyDeleteஹாய்
ReplyDeleteநாங்களும் வருவோம்ல.
ReplyDeleteவந்தாச்சி.
ReplyDeletewithin First 10 ?@@@
ReplyDeleteதீபாவளி வந்தாச்சு ?&%>]]#=:<[~ >-%;"_ >-$:;?@!%&( _;(&}<> 😂😂😂
ReplyDelete😁😁😁
புரியுது.நீங்க செவ்விந்திய பாஷையில் வாழ்த்து சொல்றீங்கனு புரியுது சார்.
Deleteஆத்தாடி எம்மாம் பெரிய பதிவு
ReplyDelete.
Prabakar T : என் லேப்டாப்பின் கீ-போர்டு கதறுகிறது சார் !
DeleteUnbleivable - Chandru @ Kovai
ReplyDeleteகற்றது காமிக்ஸ் : எதைக் குறிப்பிடுகிறீர்கள் நண்பரே ?
DeleteAnd btw, warm welcome !
Warm welcome Chandru.
Deleteஹாய்..
ReplyDelete// 'தல'யின் 70 -வது பிறந்தநாளும் காத்திருக்கும் 2018-ல் தான் எனும் பொழுது, அதற்கென ஏதாவது தெறிக்கும் ஸ்பெஷல் ஒன்று நம் திட்டமிடலில் இருத்தல் அவசியம் என்பது மண்டையின் ஒரு மூலையில் குடிகொண்டே நின்றது ! பத்தோடு பதினொன்றாய், ஏப்பைசாப்பையாய் எதையேனும் அறிவித்தால் நிறைய நண்பர்கள் வாடிப் போவார்கள் என்பதும் அப்பட்டம் //
ReplyDeleteஉண்மையோ உண்மை சார்
.
Editor & family
ReplyDeleteAll friends and family
Wish you a happy Diwali..
NOOOOOOOOOOOOOOOOOOO!!! .. நேக்கு ஒரு B+D வேணும் வேணும் வேணும் ! :-)
ReplyDeleteAt least B+C+D? :-)
DeleteIdu than original Deepavali!!!!!.
ReplyDeleteசத்தியமாக இந்த பதிவுதான் எனக்கு அதிகமான தீபாவளி சந்தோசத்தை கொடுத்திருக்கிறது. !
ReplyDeleteபாராட்ட வார்த்தைகளே இல்லை..!அற்புதமான திட்டமிடல் Hat's off you sir..!!
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
+12345
Deleteஉண்மை ரவிகண்ணன் அவர்களே..
Deleteபாருங்களேன் நாளைக்கு தீபாவளின்னா இன்னிக்கு உறங்க முடியாத அன்றைய சிறுவனின் மனநிலை போல இன்று என்னால் உறங்க முடியா நிலை...:-)
மக்கா சாச்சுப்புட்யே .
ReplyDeleteமக்கா.
சூப்பர் இதுதான் உண்மையான தீபாவளி
ReplyDeleteசீனியர் ஆசிரியர் ஆசிரியர் ஜுனியர் ஆசிரியர் மற்றும் காமிக்ஸ் நண்பர்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசந்த் சார் உங்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
DeleteI have to admit that this is your best selection of books for an annual subscription ever. And this is going to be a run-away hit.
ReplyDeleteAs for me, I am sticking to my stance of buying the books I need from 2018 - Including double issues of Tex and other cowboys for my friend (including double copies of the 32 page issues and any Tex merchandise). And that would amount to more than A+B+C+D.
After some calculations this weekend, I would transfer the amount on first of November !!
25வது. அட்டகாஷ்
ReplyDeleteதெளிவான திட்டமிடல். அற்புதமான அட்டவணை, அனைவரையும் திருப்தி கொள்ளச் செய்யும் என நம்புகிறேன். தனிப்பட்ட முறையில், ஒரேயொரு வேண்டுகோள். ஏப்ரல் சந்தாவில் பௌன்சரின் மீதமுள்ள ஆல்பங்களைச் சேர்க்க முடியுமா என்று பாருங்கள் எடிட்டர் சார். லயன் குடும்பத்தார் அனைவருக்கும் மனமார்ந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteபிரியமுடன்,
கார்த்திகைப் பாண்டியன்
கார்த்திகைப் பாண்டியன் : மீதமுள்ள பெளன்சர் ஆல்பங்கள் அதீதமான அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்களோடு தட தடப்பதே சிக்கல் சார் !
Deleteமறக்கமுடியாத தீபாவளி பதிவு.
ReplyDeleteதீபாவளி பலகாரங்களை சாப்பிட்டுவிட்டு சற்றே ஜீரணமாகாமல் மோட்டுவளையை பார்த்து கொண்டிருந்தபோது இந்த நீள பதிவு. மகிழ்ச்சி. இதை படித்து முடிப்பதற்குள் வீட்டம்மா இன்னொரு தட்டு ஸ்வீட்டோடு வந்து நிற்ககூடாதென்பதே என் கவலை :-)
மர்மகத்தி வெளியீடு மகிழ்ச்சீ. அதே நேரத்தில் இரத்ததீவும் இணைந்து வந்திருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்திருப்பேன். இப்போது *மகிழ்ச்சி* மட்டுமே அடைந்திருக்கிறேன் என்பதை ஆணித்தரமாக சொல்லிகொள்ள விரும்புகிறேன்.
அடுத்த வருட அட்டவணையில் அனைத்துதரப்பினரையும் திருப்தி படுத்த பிரம்மபிரயத்தனம் செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளீர்கள். மகிழ்ச்சீ :-)
Dear Editor,
ReplyDeleteI just checked our blog after a hectic day in office and for my surprise, what an awesome news!
You made my day. Thanks a lot.
Aldrin Ramesh
Muscat
:-)
Deleteசூப்பர் சார்..... ஜில்ஜோர்டன் - இந்த ஒரே காரணத்திற்காகவே சந்தா -A சரியாகிவிட்டது.
ReplyDelete.... அப்புறம் அந்த காற்றில் கரைந்த கப்பல்களை மட்டும் கழட்டி விடமுடியுமா?
.... SVV
DeleteVENKATESHH VARADHARAJAN : அட....ஜில்லாருக்கும் ரசிகர் மன்றமா ? சூப்பர் சார் !
Deleteஅப்புறம் அந்த "காற்றில் கரைந்த கப்பல்கள்" மீது அப்படியென்ன கடுப்ஸ் ?
90% சதவீதம் நிறைவான சந்தா சார்,அப்புறம் அந்த லாயல்டி பாஸ்போர்ட் தாளை தனியாக கட் செய்து அனுப்ப ஏதுவாக அனுப்புங்கள் சார்.
ReplyDeleteமீதி 10 சதவீதம் எதனால் நீங்கள் மன நிறைவு அடையவில்லை என்று கூறினால் அடுத்து வரும் அட்டவணையை தயாரிக்க எடிட்டருக்கு உதவுமில்லையா ரவி :-)
Deleteஅதற்காக கிராபிக் நாவலுக்கு ஸ்லாட் கம்மின்னு நீங்க பீல் செஞ்சா உங்க விலாசத்துக்கு வாரம் ஒரு கண்ணீர் கடிதாசி தாரமங்கலத்திலிருந்து வரும் ஆபத்துண்டு என்று சொல்லிகொண்டு ........
ஹா,ஹா தலைவரும் கிராபிக் நாவல் விசிறியா மாறிக்கொண்டு வருவதால் கடிதாசிக்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன் சார்.
Deleteகிராபிக் நாவலா...
Deleteஇன்னும் ஒரு செட் பார்சல்...:-)
//இந்த 3 ஸ்பெஷல் இதழ்களையும் டிக் அடித்ததன் பின்னே, மனதுக்கு வந்த முதல் பெயர் - "தோட்டா தலைநகரம்" ! "இரத்தக் கோட்டை" தொகுப்பினில் இத்னை இணைக்க இயலாது போன சமயமே promise செய்திருந்தேன் - இது தனி இதழாய் விரைவிலேயே வந்திடுமென்று ! ஆகையால் மறுபதிப்பு # 7 ஆக இடம்பிடித்த இதழிது !//
ReplyDelete:)
+1
//பிரின்ஸ்//
:)
//"the five & four " சந்தா//
:)
//"the five & four " சந்தா only by April 2018//
:|
//"கனவு மெய்ப்பட வேண்டும்" இதழினில் நாம் சந்தித்த அந்த வில்லங்க அழகியோடு தொடரும் அடுத்த பக்கமானது 4 பாகங்கள் கொண்டதொரு கதைச் சுற்று ! வழக்கம் போல் தோர்களுக்கொரு டபுள் ஆல்பம் என்றே எனது துவக்கத் திட்டமிடல் இருந்தது ! ஆனால் கதைகளைப் பரிசீலனை செய்யத் துவங்கும் வேளையில் தான் இதுவொரு நீ-ண்-ட saga என்பது புலனானது ! இதனையும் 2018-ல் பாதி ; 2019-ல் மீதி என நான் திட்டமிட்டால் - செமத்தியான டின்கட்டல் காத்திருக்குமென மாயாஜாலக் கண்ணாடியில் ஆரூடம் ஓடியதால் ஒற்றை ஆல்பம் - 4 பாகங்கள் என்று டிக் செய்தென் ! அது மாத்திரமின்றி - இது "கனவு மெய்ப்பட வேண்டும்" இதழுக்கு மெலிதாய் தொடர்பு கொண்டு பயணிக்கும் கதை என்பதால் இரண்டுக்கும் இடையினில் பெரியதொரு gap வேண்டாமே என்று மனத்துக்குப் பட்டது !//
ReplyDeleteWOW ...!
ஐயா நீங்க எது சொன்னாலும் ok தான்.
ReplyDeleteஎல்லாருக்கும் வணக்கம்.
ReplyDeleteஇரண்டாவது தீபாவளி!!!!!
ReplyDeleteமிக மிக மிக சந்தோசம்!!!!!
graphics mama :)
ReplyDeleteSir 007 enge sir .. Yemathida thinga sir...
ReplyDeleteappadi kelunga !
Delete+!
பார்த்துக் கொண்டே இருங்களேன்..!
Delete@ திரு விஜயன்
Deleteஇது மாதிரி செமத்தியா 007 வரப்போறாரோ..:))))
பார்க்க...இங்கே'கிளிக்'
///பார்த்துக் கொண்டே இருங்களேன்///
Deleteதேங்க்யூ எடிட்டர் சார்.
மாயாவி சார் செமத்தியான க்ளிக்.
சூப்பர் பாஸ்!
Deleteஇது மாதிரி ட்ரை பண்ணலாமே ?
அட ..ஆமால்ல...
Delete007 லும் ஒரு சஸ்பென்ஸா சார்...
செம...:-)
அட்டகாசம் மாயாவி ஜி ...
Deletemayavi.siva : அந்த 007 ஸ்டைல் சூப்பர் சார் !
Deleteஉண்மை, ஆனாலும் 007 எப்ப வருவார் சார் ?
Deleteஜாம்போ ஸ்பெஷல் கதை எவை?
செம .மாயாவி சார். ஆசிரியர் சஸ்பென்ஸ் என்பதால் , 007 க்காக ஆவலுடன் வெயிட்டிங்க்
Deleteஆந்தாடீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
ReplyDelete😎😎😎😎😎😎😎😁😁😁😁🙏🙏
எங்கும் Tex எதிலும் Tex...👏👏👏👏👏👏👏👏
லேசா தலை கிறு கிறுக்குதே, இந்த டெக்ஸ் புதையலை அடையப் போகும் மகிழ்ச்சியான அதிர்ச்சியில் இருந்து மீள ஒரு மாதம் ஆகும்னு நினைக்கிறேன்...😲😲😲😲😲😲😲😲
ஆயிரம் கோடி நன்றிகள் ஆசிரியர் சாருக்கு...🙏🙏🙏🙏🙏🙏
அசாத்திய உழைப்ப+திட்டமிடல்=அட்டவணை, திகட்டாத தீபாவளி பரிசு இன்றய பதிவும் "சிங்ககத்தின்"பெரு வரலாற்றில் இடம்பெபெறவேண்டிய ஒன்று. நன்றிஎடிட்டர் சார்.
ReplyDelete//2018-ன் தீபாவளி மலராய் வரவிருக்கும் இதழ் - டெக்ஸ் வரிசையில் ஒரு ஸ்பெஷல் படைப்பு - டைகர் ஜாக்கின் (காதல்) கதையைச் சொல்லும் விதத்தில் ! இதுநாள் வரைக்கும் "வோ" ; "வோ" என்றே வண்டியை ஒட்டி வந்திருக்கும் இந்த செவ்விந்திய சகாவின் saga - தலையில்லா போராளி சைசில் வர காத்துள்ளது ! //
ReplyDelete:) expectations unlimited .....
டெ.. டெ.. டெ... டெக்ஸ்க்கு இத்தாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ பெரிய புதையாலாஆஆஆஆஆஆஆஆஆ😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲
ReplyDelete777 பக்கங்கள், ஹார்டு பவுண்ட்...70பிறந்தநாளைக் கொண்டாடுவதில் போனெல்லி ஹோம்லேண்டோ, உலகிலயே அதிக ரசிகர்கள் கொண்ட பிரசிலோ நம்மை பார்த்து மலைத்து நிற்கனும்னேன்....
இந்த இதழை நீங்கள் ரிலீஸ் செய்யப்போகும் சமயம் போனெல்லி யிலும் அதிர்வு அலைகள் ஏற்படப்போவதி உறுதிங் சார்...🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
41 ஆண்டுகளில் எனக்கு விபரம் தெரிந்து ஞாபகம் இருக்கும் 31தீபாவளிகளில் தி பெஸ்ட் எதுனா....
"தீபாவளி 2018"
💖💖💖💖💖💖💖💖🎉🎉🎉🎉🎉🎉🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
எனக்கு தெரிஞ்சு ஒவ்வொரு தீபாவளி மலர் அறிவுப்புக்கும் இதையேதான் சொல்றீங்க விஜய் :-)
Deleteஆம் சுந்தர், தீபாவளி மலர்கள் மேல் எனக்கு இருக்கும் தனிப்பிரியத்தால் அப்படி சொல்கிறேன்... ஆயினும் இந்த டைகரின் இளவயது கதையை ஏற்கெனவே ஆங்கிலத்தில் எழுத்து கூட்டி வாசித்து விட்டதால் உறுதியாக சொல்கிறேன், இதே கருத்தை நீங்களும் அடுத்த நவம்பரில் சொல்வீர்கள்... பந்தயமே கட்டுகிறேன் ...!!!
Deleteஎஸ் பாஸ்!
Deleteஇந்த தீபாவளி மலர் ரெண்டாவது புலி கத மாதிரி இல்லாம இனி எல்லா தீபாவளியும் "சர்வமும் நானே" மாதிரி கலக்கணும் பாஸு!
Saravanan R : அது இன்னாதுங்கோ ரெண்டாவது புலிக் கதை ?
Delete@விஜயன் பாஸ்
Deleteஅதான் பாஸு!
நம்ம தல புலி வேஷம் போட்டு நடிச்சிருப்பாரே..."அழகாய் ஒரு அராஜகம் !"
;-)
தீபாவளிக்கு நம்ம ஒரு ஒரு முறையும் " ஒரு சர்வமும் நானே" இல்ல அட்லீஸ்ட் ஒரு "கவரி மான்களின் கதை" / "துரோகத்திற்கு முகமில்லை" ரேஞ்சுக்கு எதிர்பார்க்கறோம் பாஸு !
(அட் எ ஸ்ட்ரெட்ச் ஆல் புக்ஸ் ஒன் ஷாட்ல படிச்ச தெகிரியத்துல சொல்றேன் பாஸு ;-))
//So திரும்பிய திக்கெல்லாம் TEX 2018-ல் உலா வர போவது உறுதி !//
ReplyDeleteAmudhu ! nandru !
Deepavali palagaram Wow!, Deepavali legiyam yengenga sir?
// தோர்கலின் சாகசத்தோடு வரவேற்க நினைத்தேன் ! "கடவுளரின் தேசம்" முத்து காமிக்ஸின் 46-வது ஆண்டுமலரும் கூட ! //
ReplyDeleteஎனது துணைவியாரிடம் இருந்து பலத்த ஆரவாரமான கைதட்டல்.
என்னோட பக்கமிருந்து வரும் கைதட்டல்களையும் சேத்துக்குங்க சார். சுதி இன்னும் அதிகமாகும்.
Delete@PFB: இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மொமெண்ட :)
Deleteஎஸ்ஸஸஸஸஸஸஸஸஸஸஸ்.
Deleteவருடத்தின் ஆரம்பமே சூப்பர்.நன்றி நண்பர்களே.
Parani from Bangalore : விசில் உத்தரவாதம் என்று சொன்னேன் தானே சார் ?
DeleteIt's 3rd Deewaali
ReplyDeleteThank you edi.....
டியூரங்கோ - இந்த வருடமும் குண்டு புத்தகம். சூப்பர். சூப்பர்.நன்றி.
ReplyDeleteநன்றி எடிட்டர் சார் இம்முறையும் சந்தா தொகை கை எட்டும் வகையில் நிர்ணயம் செய்ததற்காக
ReplyDeleteடியர் விஜயன் சார், ரோஜரின் மர்மகத்தியும், டைகரின் தோட்டா தலைநகரும் 48 பக்கங்கள், 75 ரூபாய் என சொல்லியுள்ளீர்கள். சரி. ஆனால் கருப்பு வெள்ளையில் என சொல்லியிருப்பது சற்றே குழப்புகிறது. அந்த கதைகள் கருப்பு வெள்ளையா அல்ல கலரிலா என தெரியபடுத்தினால் நன்று! !!
ReplyDeleteஇரண்டுமே கலரில் சார் !
Deleteநன்றிகள் பல சார். அப்படியே இரத்ததீவு பற்றியும் சொல்லீட்டீங்கன்னா நான் தன்யனாவேன் :-)
Deleteஹலோ ...ஹலோ... ஹலோ.. டவர் சரியில்லையே இங்க !
DeleteI think i proposed dynamite special name!
ReplyDeleteடியர் விஜயன் சார், ரோஜரின் மர்மகத்தியும், டைகரின் தோட்டா தலைநகரும் 48 பக்கங்கள், 75 ரூபாய் என சொல்லியுள்ளீர்கள். சரி. ஆனால் கருப்பு வெள்ளையில் என சொல்லியிருப்பது சற்றே குழப்புகிறது. அந்த கதைகள் கருப்பு வெள்ளையா அல்ல கலரிலா என தெரியபடுத்தினால் நன்று! !!
ReplyDeleteஒரு கமெண்ட் போட்டா இன்னொரு கமெண்ட் ப்ரீங்கிற மாதிரி என் மொபைல் படுத்தி எடுக்குது.சிரமத்துக்கு மன்னிக்கவும் :-(
Deleteஒருதடவைக்கு ரெண்டு தடவை சொல்றது நல்லதுதானே டாக்டர் சார்.
Deleteலயன் முத்து காமிக்ஸ் வரலாற்றில் அதிக மலர்களைக் கொண்ட ஆண்டுகளாக இருந்தவை இளம் ஆசிரியர் சார் காற்றாற்று வெள்ளமாகச் சீறிப்பாய்ந்த துவக்க காலங்களே...
ReplyDelete1985,
1986,
1987
----- இம்மூன்று ஆண்டுகளிலும் பொங்கல் மலர்,
கோடை மலர்,
ஆண்டு மலர்,
தீபாவளி மலர்... என 4ம் அதிரடிகளை கிளப்பி சரித்திரம் படைத்த ஆண்டுகள்...
இளம் கன்று பயமாறியாது என்ற முது மொழிக்கேற்ற இந்த ஆண்டுகளில் வந்த இந்த 12இதழ்களும் நிஜமான போக்கிஷங்கள்....
அதற்கு பிறகு வந்த ஆண்டுகளில் இந்த 4மலர்களும் சேர்ந்தார்போல் வெளியிடப்படவில்லை, அப்படியே வந்து இருந்தாலும் அத்தனை சோபிக்கவில்லை...
எந்த துறையானாலும் இரண்டு வித ஏரா அல்லது டிகேட்களை கம்பேர் செய்வது சரிப்படாது. அந்தந்த கால கட்டத்தில் இருந்த வசதிகளை கொண்டு செயல்படுத்தப்பட்டு ஒவ்வொன்றும் தனித்தனி சிறப்பங்களை தன்னகத்தே கொண்டவை....இருப்பினும்,
தன்னுடைய அனுபவத்தில் சிறந்து விளங்கும் தருணத்தில் அவரின் அந்த சாதனைகளை எல்லாம் முறியடிக்கும் விதமாக லயன் முத்து வரலாற்றில் அதிக மலர்களைக் கொண்ட ஆண்டாக 2018 இருக்கப் போகிறது....
பொங்கல் மலர்(முத்து 46வது ஆண்டுமலர்)
கோடை மலர்(டியூராங்கோ)
ஆண்டுமலர்(லக்கி இன் லக்கி)
இரத்தபடலம்(வண்ண கலக்டர் ஸ்பெசல்)
டெக்ஸ்70- தி டைனமைட் ஸ்பெசல்
தீபாவளிமலர்(டெக்ஸ்- காதலும் கடந்து போகும்)
இத்தனை மலர்கள் கொண்ட ஆண்டை லைவ்வாக தரிசித்து அனுபவித்து ரசிக்கப் போகும் நாம் கொடுத்து வைத்தவர்களே...
இனிவரப்போகும் காலங்களுக்கு இது ஒரு பெஞ் மார்க் ஆண்டாக ட்ரெண்ட் செட் செய்யப் போவது உறுதி...
///இத்தனை மலர்கள் கொண்ட ஆண்டை லைவ்வாக தரிசித்து அனுபவித்து ரசிக்கப் போகும் நாம் கொடுத்து வைத்தவர்களே...///
Deleteடெபனட்லீ.. டெபனட்லீ..!
அடப்பாவி விஜய் எவ்ளோ பெரிய மாத்திரை. ஆமா ஏற்கனவே டைப் செஞ்சு வெச்சிட்டியா, இந்த மாதிரி அறிவிப்பு வரபோகுதுன்னு :-)
Deleteஉண்மை.
Delete+123456789
அடப்பாவி இல்லை சுந்தர்; "அப்பாவி"- விஜய்...
Deleteமனசெல்லாம் மத்தாப்பு மலர்கையில் விரல்களும் விரைவாக டைப்புகின்றன...
6 மலர்களா ? சூப்பர் ....
Deleteப்ளூ@ அட்டவணையை மீண்டும் அலசினால் கிடைக்கும் தகவல் மலர்கள் உண்மையில் 8;
Deleteசிக்பிக் க்ளாசிக்2 & லக்கி க்ளாசிக்2; இரண்டும் ஹார்ட் பவுண்டுல அட்டகாசமான மலர்களே...
ஜில்லாரின் மறுவருகை மகிழ்ச்சியூட்டுகிறது. !
ReplyDeleteசர்ப்ரைஸ்.. . ஆத்தீ.. இதுவல்வோ சர்ப்ரைஸ்..! ஆறு கலர் டெக்ஸ் புக்ஸா? கிள்ளினால் வலிக்குதே.. கனவுமில்லை..எடிட்டர் சார் தேங்க்யூ சோ மச்..!! _/|\_/|\_/|\_
எனக்கு அப்படியே இரத்தபடலம் நீட்சி கதையான பெட்டி கதை நினைவுக்கு வந்து போகுது கண்ணன் :-)
Deleteஏன்னா
நீங்க ரொம்ப எதிர்பார்க்கிற கதைகள் வெளிவரும்போது அனேகருக்கு பிடிப்பதில்லை என்றசரித்திர உண்மையை சொல்லிகொண்டு .....
///எனக்கு அப்படியே இரத்தபடலம் நீட்சி கதையான பெட்டி கதை நினைவுக்கு வந்து போகுது கண்ணன் :-)///
Deleteஅந்த கதையில்கூட பெட்டி நல்லா இருந்தது சுந்தர்.! ஆனா கதைதான்...ஹிஹி..!!
சீனியர் ஆசிரியருக்கும், ஆசிரியருக்கும், ஜூனியர் ஆசிரியருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவர்கள்தம் குடும்பத்தினருக்கும் மனங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete🎁💐🎊🌹🎆💝🎁💐🎊🌹🎆🎁💐🎊🌹🎉
Nice selections!
ReplyDeleteWhat about some of new titles discussed here?
Examples include that pirates book!
இன்னும் கொஞ்சம் நுணுக்கமாய்ப் பதிவைப் பார்க்க முயற்சியுங்களேன்...!
Deleteஎனது சந்தேகம் A C D தேர்வு செய்தால் லாயல்டி சந்தா points உண்டா?
ReplyDeleteசந்தாப் பிரிவின் எண்ணிக்கைக்கு ஏற்ப points உண்டு ; 3 தேர்வுகளெனில் 3 points
Deleteநன்றி!!!! விடுதலை, விடுதலை, விடுதலை டெக்ஸ் சத்தே இல்லாத கசப்பு கஷயாத்தை (எனக்கு மட்டும்) கஷ்டப்பட்டு மாத மாதா குடிக்கும் தொல்லை யில் இருந்து விடுதலை.
Deleteலக்கி, சிக்பில், டெக்ஸ் க்ளாசிக்ஸை சந்தா D யில் கொண்டுவந்தது சூப்பரான ட்விஸ்டு சார் !
ReplyDeleteபோலவே தோர்கலின் நான்கு ஆல்பங்கள் கொண்ட தொகுப்பும்.,,
அப்புறம் டெக்ஸ் 70 கொண்டாட்டம் சொல்லவே வேணாம்.., பின்னி பெடலெடுத்துட்டிங்க. !
வோ.. வோ ,,மட்டுமே பேசிக்கொண்டிருந்த டைகர் ஜாக்கிற்கும் லவ் லவ் னு பேசிய அனுபவம் இருந்திருக்கும் என்று கற்பனையாககூட நினைத்துப் பார்த்ததில்லை.. செம்ம செம்ம. .!
777 பக்கங்கள் கலரிலும் கருப்புவெள்ளையிலும் இணைந்த ஷ்பெசல்..மூச்சை இழுத்து நிறுத்தும் பிரம்மாண்டம்..!
அட்டகாசமான அட்டவணை..!
+123456789
Deleteசாதாரண லவ் இல்லை மாம்ஸ்...
Deleteகதையோட்டம் ஒரு இடத்தில், ஒரு நொடி நம் இயக்கத்தை ஸ்தம்பிக்கச் செய்து மீண்டும் நார்மலுக்கு கொண்டு வரும்...
அசாதாரண தொடர் ஓட்டம், 4x400 ரிலே பைனல் பார்க்கும் படி த்ரில்லிங்காக இருக்கும்...
தோர்கல் 4 சாகசங்கள் இணைந்து ஒரே புக் அருமையான பிளான்.
ReplyDeleteதோர்களை இனி மேல் இது போலவே வெளியிட வேண்டும் என்பது எனது ஆசை .... :)
Deleteதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : Story arc அதற்கேற்ப அமையும் போது நிச்சயம் இந்த பாணியையே கடைபிடிப்போம் சார் !
Deleteஜாக் & மேக் சித்திரங்கள் கர்னல் கப்கேக் கிளிப்டனை நினைவுபடுத்துகின்றன..!
ReplyDeleteலாரல் ஹார்டி இரட்டையரைப்போல் தோற்றமளிக்கும் ஜாக் & மேக் ஜோடியை நமது தமிழ்கூறும் நல்லுலகுக்கு வரவேற்கிறேன்.!
இந்த ஜோடியும் லக்கி, சிக்பில் போல் ரெகுலராக இனி சந்தாவில் இடம்பிடிக்கும் என்று தோன்றுகிறது..!!
Super super
ReplyDeleteசந்தா E சேர்த்து தகைமை சல்லி இருக்கலாம்
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteஆல் டீடைல்ஸ்சும் மெர்சலா இருக்கு சாரே!!!!
ReplyDeleteதட் ஜம்போ இதழ் டீடெயில்ஸ் ப்ளீஸ் ப்ளீஸ்.....
பொறுத்தார் பூமியும் ஆள்வார் !!
Deleteதீபாவளியை இன்றே கொண்டாட வைத்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சார்...
ReplyDeleteஅனைத்து அட்டவனை வரிசைகளுக்கும் ப்ளஸ் ஐ தவிர வேறு எதுவும் குறிப்பிட தோன்ற வில்லை..உண்மையை சொல்ல போனால் ஓவ்வொரு வருடமும் இந்த அட்டவனை வரிசை வரும் பொழுது இதுக்கு பதிலா அது...அதுக்கு பதிலா இது என்ற எண்ணம் ஓரிரு நாயகர்களுக்கு ஏற்படுவதும் ..மறுபதிப்பு வரிசையில் சில இதழ்களுக்கு மறுபடியும் முதல்ல இருந்தா என்ற என்ற எண்ணமும் தலை தூக்குவது உண்டு தான் .ஆனால் இம்முறை இவை போன்ற எந்த எண்ணமும் கொஞ்சம் கூட எழவில்லை என்பது அக்மார்க் உண்மை.
வெளியேறிய நாயகர்களை பற்றிய கவலையும் வரவில்லை..ஸ்லாட் குறைந்த நாயகர்கள் பற்றிய கவலையும் சரிதானே..சரியான முடிவு என்ற எண்ணமும் மட்டுமே ஏற்பட்டது.
டெக்ஸ் எழுபதாவது கொண்டாட்டத்தை அட்டகாசமாக அறிவித்து உள்ளீர்கள் என்றால் சந்தா பரிசாக செம ..செம...என தோன்றும் அட்டகாச பரிசு கொடுத்து அசத்தி விட்டீர்கள் .உண்மையில் இந்த பரிசு புத்தக காட்சிக்கு விற்பனைக்கும் வரும் சமயம் புதிதாய் காமிக்ஸ் மாணவர் எவராவது இதன் மூலம் கூட கவர்ந்து பெரும் காமிக்ஸ் ரசிகராய் உருமாற வாய்ப்பு உள்ளது .
உண்மையில் எந்த அட்டவனையிலும் எந்த குறையும் எனக்கு தோன்ற வில்லை.மேலும் சந்தா E ஆறு இதழ்களில் இருந்து வழக்கமான இதழ்களுக்கு ஈடு கொடுக்கும்படி பதவி உயர்வு பெற்றுள்ளது கூடுதல் மகிழ்ச்சியை கொடுக்கிறது.
புத்தாண்டில் ஆரம்ப இதழே மலராக மலர்வதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும் அதே சமயம் டெக்ஸ் தோரணமும் அங்கே அந்த சமயத்தில் கட்ட மறந்து விடாதீர்கள் சார்.போலவே டெக்ஸ் இல்லா மாதம் எதுவும் இல்லை என்பதாகவும் அட்டவனையை திட்டமிட்டு கொண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கையும் உண்டு.
போட்டி மறுபதிப்பில் கேப்டன் பிரின்ஸ் அவர்கள் வெற்றி பெற்று எனது மிக மனம் கவர்ந்த சாகஸ் இதழ் வெளிவர இருப்பதும் மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்துகிறது.
இதை விட சிறப்பு இன்ப அதிர்ச்சியாக இறுதியில் ஒரு சஸ்பென்ஸ் கொடுத்த அந்த ஜம்போ காமிக்ஸ் என்ன...என்ன ..எப்படி ..எப்படி...எப்போது...எப்போது...என மண்டை வெடித்து விடும் அளவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது ..கொஞ்சூண்டு க்ளூ கொடுங்கள் சார்..ப்ளீஸ்..
மொத்தத்தில் இந்த பதிவு எங்களின் அரை தீபாவளியை முழு தீபாவளியாக்கி உள்ளது மிகுந்த நன்றி சார்..
ஹை !! தலீவர் நள்ளிரவுக்கும் முழிச்சு இருக்கார் !!
Deleteஆச்சர்யங்களை அள்ளி வழங்குவதில் இப்போது தலீவரும் தாராளயமாகி மாமாங்கம் ஆகுதுங் சார்...
Deleteசார்..உண்மையை சொல்ல போனால் உங்களின் இந்த சிறுகதை பதிவை சாரி நெடுங்கதை பதிவை ஆற ..அமர...ரசித்து ..ருசித்து மிக பொறுமையுடன் ஒவ்வொரு வரியாக ஆழ்ந்து படித்து விட்டு வந்தாலும் மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படிக்க மேலே சென்று வருகிறேன் ..பிறகு தான் உறக்கம் என்னும் தூக்கம்...:-)
Deleteடெக்ஸ்...:-)))
Deleteதலிவரே.. அந்த சிங்கத்தின் சிறு வயதில்..
Deleteதலீவரை நமது ஸ்லீப்பர் செல்கள் ஸ்லீப் mode க்குக் கொண்டு சென்று விட்டது தெரியாதா சார் ?
Delete
ReplyDeleteஉள்ளங்கையில் பிரபஞ்சம் எப்பேர் பட்ட ஒரு சத்திய வாக்கு காமிக்ஸ் படிக்கும் நமக்கு.வெளிநாடுகளில் வசிக்கும் என் பிரம்மசாரிகளுக்கு(கல்யாணம் பண்ணியும்)தீபாவளி, பொங்கல், etc...கிடையாது என்பார்கள்..ஆனால் மாலை 5.45 க்கு தீபாவளியை கொண்டாடினேன் இந்த பதிவின் மூலம்.
படிக்க படிக்க அனுமார் வால் போல் நீண்டு செல்லும் இந்த பதிவுக்கு சூப்பர் நன்றாக இருந்தது என்று முடிக்க லாமா...atleast இந்த பதிவுக்கு அனுமன் வால் இல்லாவிட்டாலும் சுக்ரீவன் வால் நீளத்திற்காகவது கமெண்ட் இட வேண்டாமா....இதோ சில paper யை ஒரு பேனாவையும் எடுத்து கொண்டு பதிவை அலசப் போகிறேன்.அலசி பிறகு இங்கு வருகிறேன்.அதற்குள்ளாகவே நமது நண்பர்கள் அந்த பணியைச் செவ்வன செய்து முடித்து விடுவார்கள். நம் பங்குங்கு ஏதேனும் செய்ய வேண்டும் அல்லவா....
சுருக்கமாக இந்த பதிவுக்கு எனது பதில்....சவுதியில் ஒரு தீபாவளி. ...நன்றி. ..வணக்கம்💐💐💐💐
Saran Selvi : தொலைவில் இருந்தாலும், நீங்களும் இங்கே நம் குடும்பத்தில் ஒருவர் தானே நண்பரே ?!
Deleteநன்றி ஆசிரியரே....தூரத்தில் இருந்தாலும் இது எனது இரண்டாவது குடும்பம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் நமது விக்ரம் தம்பியின் திருமணத்திற்கும் ,புத்தக விழாக்களில் தங்களையும்,நண்பர்களையும் சந்திக்க முடியாமல் போகும் போதேல்லாம் நெஞ்சில் TEX ன் தோட்டா செல்வதை தவிர்க்க முடிய வில்லை. 😭😭😭
Deleteசூப்பர் பாஸ்!
ReplyDeleteமர்ம கத்தி கலரில் இல்லையானு கேக்க நெனெச்சேன்!
இருக்குனு சொல்லிடீங்க!
இப்போ 100 / 100 பாஸ்!
வழக்கம்போல் தேர்வு பிரமாதம். வழக்கம்போல் சந்தாவும் உடனே கட்டிவிட்டேன். A balance act to accommodate all taste.
ReplyDeleteparimel : ரசனைகள் பலவிதம் எனும் போது இயன்ற அளவிற்கு அனைவரையும் மகிழ்வு கொள்ளச் செய்வது நம் கடமையல்லவா சார் ?
Deleteஆசிரியர் சார்@ பவளச் சிலை மர்மம்- நம்முடைய லயனில் வந்தபோது இப்போதைய ரெகுலர் டெக்ஸ் சைசைவிட அகலத்தில் சற்றே பெரியதுங் சார்....
ReplyDeleteஅந்த அகலத்தில் பெரிய சைசில் அசாத்திய ஓவியங்கள் அசத்தின...
நிலவொளியில் நரபரலி சைஸ்னு அறிவிப்புல இருக்கு, அது மினி பாக்கெட் சைஸ்..
இந்த சைசில் அந்த பவளசிலை 110பக்கத்தில் எனில் ஓவியங்கள் மினியாக இருக்குமே,லென்ஸ் வச்சுத்தான் பார்க்கனும்...ஓவிய உன்னதத்தை
ரசிப்பதில் சிறு தடங்கள் இருக்கு கூடுமோ???
ஒருவேளை ஒரு பெரிய பக்கத்தை இரண்டு சிறிய பக்கங்களாக்கி 220பக்கங்களில் பெரிய புக்காக தரப்போகிறீர்களா சார்...
கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்...!!!
95 சதவிகிதம் அட்டவணை நிறைவை தருகிறது ஆசிரியரே ஆர்ச்சி இடம் பெறாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது சுஸ்கி விஸ்கி யும் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டனர் இனி இவர்களின் கதைகளை கள்ள மார்க்கெட்டில் தான் தேட வேண்டும் மற்றபடி டெக்ஸ் 70 வது ஆண்டை மிகவும் ரசிக்கும் படி செய்து விட்டீர்கள் அருமை ஆசிரியரே ஸ்பைடரின் விசித்திர சவால் லக்கியின் மேடையில் ஒரு மன்மதன் சிக்பில்லின் தேவை ஒரு மொட்டை பிரிண்ஸின் எரிமலைத் தீவில் பிரிண்ஸ் ரோஜரின் மர்ம கத்தி இவைகள் வருவது சந்தோஷம் ரொம்ப ரொம்ப சந்தோஷம்
ReplyDeleteஓராண்டு பொறுங்களேன் ....ஆர்ச்சியை தரிசிக்கலாம் !
Deleteகொலைப்படை ஸ்பைடர் + மர்மத்தீவில் ஆர்ச்சி combo வில் தெறிக்க விடுவோமா ?
ஊய் ஊய் கணக்கில்லாமல் விசிலடிக்கும் படங்கள் நன்றி ஆசிரியரே
Deleteதாராளமாக செய்யலாம் சார்,ஹும்,இன்னும் அந்த பாட்டில் பூதம் வேற வெயிட்டிங்.
Deleteகிணறு வெட்ட பூதம் கிளம்பியதுன்னு சொல்வாங்க,இந்த பூதம் எப்ப கிளம்புமோ.😁😁😁😍😍😍
அறிவரசு ரவி சூப்பர்
Delete+ 111111111
வாவ்...!!!!
Deleteஆர்ச்சி திரும்ப வருதா?????
நன்றி எடி அவர்களே!
ஆசிரியரே 2016 ல் ஈரோட்டில் புதையல் பாதை யானைக் கல்லறை சிறுத்தைகள் சாம்ராஜ்யம் மூன்றையும் ஒரே புக்காக தருவதாக வாக்களித்திருந்தீர்கள் அதை மறந்து விட்டீர்களே
ReplyDeleteமறந்தது நானல்ல ; அவற்றினை டிஜிட்டல் பைல்களாக சேமிக்க மறந்த படைப்பாளிகளே சத்யா ! என்றேனும் ஓரு நாள் அவற்றிற்கு உயிரூட்டும் வரையிலும் காத்திருக்க வேண்டும் நாம் ...!
Deleteஉங்களுக்கு நினைவிருந்தால் சந்தோஷம் ஆசிரியரே என்றாவது ஒரு நாள் சாதிப்போம்
Deleteகலக்கல் அட்டவணை...
ReplyDeleteடைகர் கலரில் வந்தால் நன்றாக இருக்கும், ஏதாவது பார்த்து செய்யுங்கள் எடிட்டர் sir....
அது கலர் தான் சார் ; விளம்பரத்தில் தவறு நேர்ந்திருக்கும் !
Deleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteஉங்களது தீபாவளி பதிவு (பரிசு) அட்டகாசம் ... பிடியுங்கள் மலர் கொத்து ஒன்றை ...
இது போன்ற திட்டமிடல்கள், உங்களின் கணிசமான நேரத்தை விழுங்கி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எங்களது ஒவ்வொருவரின் முகத்திலும் இந்த பதிவை படித்தான பின்னே வரும் சந்தோசமே உங்களது உழைப்பின் வெற்றி என்றால் மிகையில்லை சார் ...
சந்தா சந்தோசங்கள்:
1) முதல் சந்தோசம் – தோர்கள் நான்கு இதழ்கள் சேர்ந்த தொகுப்பு அதுவும் வருட ஆரம்பத்தில் .... நினைத்து பார்க்கும் பொழுதே மனம் சிறகடிக்கிறது ... தொடரும் நாட்களில் கூட தோர்களை இது போலவே முயற்சி செய்யலாம் சார் ....
2) டெக்ஸ் DYNAMITE – உண்மையிலேயே அதகளம் செய்ய போகும் இதழ் ... அடுத்த வருட ஈரோடு புத்தக திருவிழா அதகளம் செய்ய போகிறது ...
3) LOYALTY பாஸ்போர்ட் – கை தட்டும் படங்கள் பல நூறு சார் ... சிறப்பான முயற்சி ...
4) டெக்ஸ் கலர் இதழ்கள் சந்தாதாரர்களுக்கு – வரவேற்க கூடிய விஷயம் சார். சந்தா நண்(ம்)பர்கள் அதிகரிக்க நல்ல வாய்ப்பு
5) ஜம்போ காமிக்ஸ் – கை தட்டி வரவேற்கிறோம். ஜூனியர் எடிட்டரின் கை வண்ணத்தில் வெளி வரப்போகும் இதழ் என நினைக்கிறேன். WELCOME ஜூனியர் ....
6) நிறைவான திட்டமிடல் ... மகிழ்ச்சி ....
சந்தா சந்தேகங்கள்:
1) தோர்கள் – ஹார்ட்கவர் பைண்டிங்ல் வெளிவருகிறதா சார் ? நான்கு இதழ்கள் சேர்ந்து வருவதால் ஹார்ட்கவர் பைண்டிங் இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
2) ட்யுராங்கோ – மூன்று இதழ்கள் சேர்ந்து வருவதால் ஹார்ட்கவர் பைண்டிங் இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். உண்டா சார் ?
3) தொடர்ந்து சந்தா செலுத்தி வரும் நண்பர்களுக்கு நிலையான சந்தா நம்பரை ஒதுக்கினால் சுலபமாக இருக்கும் என நினைக்கிறேன் சார்.. உதாரணமாக எனது சந்தா நம்பர் – S1005 என வைத்து கொண்டால், இந்த நம்பரே அனைத்து வருடங்களிலும் தொடர வேண்டும். இந்த சந்தா எண்ணுக்கு வருடா வருடம் எந்த சந்தா பிரிவுகளில் பணம் செலுத்துகிறார்கள் என பதிவு செய்து கொள்ளலாம்.
S1005 – 2017 – சந்தா A+B+C+D+E
S1005 – 2017 – சந்தா Super 6
S1005 – 2017 – சந்தா இரத்தப்படலம்
S1005 – 2018 – சந்தா A+B+C+D+Color Tex
S1005 – 2018 – சந்தா F & F
S1005 – 2019 – சந்தா A+B+C+D+F&F+G&G+H&H+Z
4) LOYALTY பாஸ்போர்ட் – சந்தாதாரரின் பாயிண்ட் இருப்பு மற்றும் மாற்றி கொள்ளும் முறை போன்றவற்றை ONLINE LOGIN வசதி ஏற்படுத்தி தருவதன் மூலம் சுலபமாக கையாள முடியும் சார் ... ஜூனியர் இது பற்றி ஏற்கனவே யோசித்து இருப்பார் என நம்புகிறேன் .....
5) LOYALTY பாஸ்போர்ட் – இரத்தப்படலம் இதழானது பாதி ஆண்டு சந்தா என்ற நிலையில், இதற்கும் 2 பாயிண்ட்டை ஒதுக்கினால் நலமே என நினைக்கிறேன் சார் ...
ஆக மொத்தம் அருமையான தேர்வுகள் ... இந்த முறை உங்களது மெயின் அட்டவணையில் எங்கள் தளபதிக்கு நீங்கள் இடம் அளிக்க முடியவில்லை எனினும் உங்களது மனதில் அவருக்குதான் முதலிடம் கொடுத்து இருப்பீர்கள் என உறுதியாக நம்புகிறேன். அடுத்த வருடம் 2018 = TEX + XIII
திருப்பூர் ப்ளுபெர்ர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்
// தொடர்ந்து சந்தா செலுத்தி வரும் நண்பர்களுக்கு நிலையான சந்தா நம்பரை ஒதுக்கினால் சுலபமாக இருக்கும் என நினைக்கிறேன் சார்..//
Deleteநல்ல யோசனை.
//இது போன்ற திட்டமிடல்கள், உங்களின் கணிசமான நேரத்தை விழுங்கி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எங்களது ஒவ்வொருவரின் முகத்திலும் இந்த பதிவை படித்தான பின்னே வரும் சந்தோசமே உங்களது உழைப்பின் வெற்றி என்றால் மிகையில்லை சார்//
Delete+1
//3) தொடர்ந்து சந்தா செலுத்தி வரும் நண்பர்களுக்கு நிலையான சந்தா நம்பரை ஒதுக்கினால் சுலபமாக இருக்கும் என நினைக்கிறேன்//
Very good suggestion. +1
தொடர்ந்து சந்தா செலுத்திடும் போது, நீங்கள் முன்மொழியும் திட்டத்தில் சிக்கல்கள் கிடையாது சார் ; ஆனால் நடைமுறையில் உதைப்பதே அங்கு தானே ? ஒவ்வொரு ஆண்டும்..'பழையன கழிதலும், புதியன புகுதலும் ' கணிசமாகவே உண்டு !
Deleteஇதற்கு ஒரே வழி.. மூன்று அல்லது நான்கு வருட சந்தாக்களை ஒன்றாகக் கட்டிவிடுவதே..
Deleteசுஸ்கி விஸ்கியை 2019 ல் எதிர் பார்க்கலாமா
ReplyDeleteஒரு ஆர்வம் தான்
செந்தில் சத்யா : இருப்பதை ரசிப்போமே ; இல்லாததைத் தேடும் நேரம்தனில்..?
Deleteலார்கோ மற்றும் ஷெல்டன், வரும் வருடத்துடன் நிறைவு பெறுகிறது என எடுத்துக்கொள்ளலாமா?
ReplyDeleteநோ ...புதுக் கதாசிரியர்களுடன் தொடர்கின்றன ! இரண்டுமே....!
Deleteசெம்ம
Deleteஅவைகளை சில வருடங்கள் கழித்து நன்றாக இருந்தால் மட்டும் வெளியிடலாம்.
Deleteஇன்று இரவு (மன நிறைவான அட்டவணை யை பார்த்ததால்) நிம்மதியான தூக்கம் வரும்
ReplyDeleteமாதம்தோறும் டெக்ஸ் சிறுகதைகள் செம் ஐடியா. சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன்.
ReplyDelete@PFB: இரு மாதங்களுக்கு ஒரு முறை நண்பரே ...
Deleteநன்றி. சரி செய்கிறேன்.
Deleteமொத்தத்தில் 2018 காமிக்ஸ் அட்டவணை முழுதிருப்தி. நன்றி. வெற்றி நமதே.
ReplyDeleteமற்றவை பற்றி நாளைக்கு எழுதுகிறேன்.
ஆஹா ... தீபாவளி இப்பதேன் எனக்கு ஆரம்பிக்குது. மறுபடி மறுபடி படிச்சாச்சு. பதிவு படிச்சு அடைஞ்ச சந்தோசம் நணபர்களின் பின்னூட்டங்களை படிக்க படிக்க பல்மடங்காயிடுச்சு. 770 பக்க டெக்ஸு்ஈபுவில வருதா? தல உன்னைப் பாக்க ஈபுவி வர இப்பவே வீட்டம்மா கிட்ட பர்மிசன் வாங்கிட்டேன் (இத எல்லாரும் பாலோ பண்ணிடாதீங்கப்பு. இன்னிலருந்து ஆகஸ்ட் வரைக்கும் என்கிட்ட என்ன என்ன வேலை செய்யனும்னு லிஸ்ட் போட ஆரம்பிச்சுட்டாங்க. நாம தான் தப்பை பண்ணிட்டு தண்டனை கிடைச்சதும் தான உணருவோம்).
ReplyDeleteகதை செலக்சன் பரம திருப்தி. இன்னும் பத்து புக் வராதன்னு ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனாலும் வாத்தியாருக்கு தெரியும் எப்ப எதை செய்யனும்னு.
2018 இந்த வருசத்தை விட கலக்குதுங்கோ. சந்தாவை கட்டி சந்தோசமா இருங்க அப்பு.
Mahendran Paramasivam : ஹை...ஈரோட்டுக்கு இப்போவே டிக்கெட் போட்டாச்சா ?
Deleteடிக்கெட் இன்னும் போடலை சார். ஆன ஆபிஸ்ல மூனு வாரம் லீவு சொல்லியாச்சு. வூடல மூனு நாளைக்கு ஈரோடு போக பர்மிசன்்வாங்கியாச்சு
Deleteமகேந்திரன் செம ப்ளானிங். வாங்க மீண்டும் பழகலாம்
Deleteஅடுத்த தீபாவளி ஒரு வருஷம் கழித்தல்ல
ReplyDeleteநவம்பர் 30 ந் தேதி
ஆசிரியரையும் அவரது குடும்பத்தையும் நண்பர்களையும் ஒன்றாக பார்ப்பது உரையாடுவது தீபாவளிக்கு சமமானது அல்லவா
:-) :-)
DeleteThis comment has been removed by the author.
Deleteஎனது சந்தா என்றும் போல் எல்லா காமிக்ஸ்க்கும் தொடரும். எத்தனை சந்தா பிரிவுகள் நீங்கள் அறிமுகம் செய்தாலும் அனைத்தையும் வாங்குவேன்.
ReplyDeleteசந்தாவில் இன்று போல் வரும் அனைத்து வருடங்களிலும் தொடருவேன்.
அருமையான எளிமையான அட்டவணை சார் மகிழ்ச்சி
ReplyDeleteDTS DYNAMITE TEX SPECIAL என்ற பெயரை ஆதிகாலத்தில் முன்மொழிந்தேன் எந்த பதிவு என்று தேட வேண்டும் சார்
@ ALL : இதுவரையிலான இன்றைய பக்கப்பார்வைகள் : 3084 !! நிறைய கீ -போர்ட்களில் refresh பட்டன் தேய்ந்து துரும்பாகியிருக்கும் போல் தெரிகிறதே !!
ReplyDeleteதேர்வுகளை பற்றி simpleஆக சொல்வதென்றால் சபாஷ் சரியான தேர்வு!
ReplyDeleteA+B+c+D வழக்கம்போல் சந்தா தொகை தவணையில் விரைவில் transfer செய்யப்படும்.
ReplyDelete####இந்த இதழுக்கான பெயர் சூட்டும் போட்டியினை அறிவித்தது மாத்திரம் ஞாபகம் உள்ளது - ஆனால் DYNAMITE Special என்ற இந்தப் பெயரை முன்மொழிந்த நண்பர்கள் பற்றிய தகவல் மண்டையில் லேது ! ப்ளீஸ்..மேடைக்கு வந்து நம் மரியாதைகளை ஏற்றுக் கொள்ளுங்களேன் ?#####
ReplyDeleteArivarasu @ Ravi23 April 2017 at 09:38:00 GMT+5:30
//TEX - 70 : ஒரு அதிரடிப் பெயர் ப்ளீஸ் ?//
1.தல-70,
2.எவர்கிரீன் டெக்ஸ்-70,
3.டைனமெட் ஸ்பெஷல்-70,
4.ஆக்க்ஷன் மேளா ஸ்பெஷல்-70,
5.எவர்கிரீன் ஹீரோ ஸ்பெஷல்-70.
sivakumar siva23 April 2017 at 12:52:00 GMT+5:30
###TEX - 70 : ஒரு அதிரடிப் பெயர் ப்ளீஸ் ?##
1)தெறிக்கும் தோட்டாக்கள் பத்து
2) டைனமைட் ஸ்பெஷல்
3) Unbeatable tex special
4) Asia Tex special (இதை சொல்லும்போது சிறிது பெருமையும் உள்ளது)
5) forever Tex special
Senthil Vinayagam23 April 2017 at 19:23:00 GMT+5:30
TEX - 70 : ஒரு அதிரடிப் பெயர் ப்ளீஸ்.....................
"அதிரடி டைனமைட் ஸ்பெஷல்"
palanivel arumugam26 April 2017 at 05:09:00 GMT+5:30
Dynamite Tex Special its DTS
எங்களுக்கு பிடித்த ஆதர்ச நாயகனின் ஒரு மாபெரும் இதழுக்கு நாங்கள் குறிப்பிட்டுள்ள பெயரை தேர்ந்தெடுத்த உங்களின் பெருந்தன்மையை மனதார பாரட்டுகிறேன் சாா் ...
இது பாேன்ற பாேட்டிகள்தான் முழு மனதாேடு காமிக்சுடன் என்னை
ஒன்றினைக்கிறது..
sivakumar siva : சூப்பர்...தேடிப் பிடித்து விட்டீர்களே !!
Deleteஎழுபதாவது ஆண்டு காெண்டாட்டம் என்றவுடன் மிரட்டலான இதழ் கண்டிப்பாக வெளியிடுவீர்கள் என்ற நம்பிகை என்னிடம் நிறைய இருந்தது சாா் அதன் பெயரும் சும்மா அதிரடியாக இருக்க வேண்டும் என்ற அவாவின் பலன் இன்று மிக மிக உற்சாகத்தை தருகிறது நன்றி நன்றி சாா்
DeleteOnly 42 books or 45
ReplyDelete#####
ReplyDelete"கடவுளரின் தேசம்" முத்து காமிக்ஸின் 46-வது ஆண்டுமலரும் கூட ! ######
சென்ற வருடத்தைய முத்து வின் ஆண்டு மலர் குண்டு புக்காக வரவில்லை என்ற என் பாேன்ற வாசகர்களுக்கு 2018 ன் ஆண்டு மலர் மிக மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது...
'கி. நா'வுக்குத் தோராயமாய் எவ்வளவு என்று சொல்லியிருந்தால் (அட்லீஸ்ட் இப்பவாவது) நல்லாயிருந்திருக்கும் விஜயன் சார்..!
ReplyDeleteArun Kamal : கறை மட்டுமல்ல...சஸ்பென்ஸுமே நல்லது !
Deleteஆசிரியரே நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளுங்கள் எல்லோருக்கும் நிறைவான அட்டவணையை உருவாக்கியதற்க்காக
ReplyDeleteசத்யா...இப்போது செய்துள்ளது ஒரு டீசரை உருவாக்கியது மட்டுமே ; இவை அனைத்தையும் நிஜமாக்குவதில் தான் சவாலே காத்துள்ளது !
Delete//2018-ன் தீபாவளி மலராய் வரவிருக்கும் இதழ் - டெக்ஸ் வரிசையில் ஒரு ஸ்பெஷல் படைப்பு - டைகர் ஜாக்கின் (காதல்) கதையைச் சொல்லும் விதத்தில் ! இதுநாள் வரைக்கும் "வோ" ; "வோ" என்றே வண்டியை ஒட்டி வந்திருக்கும் இந்த செவ்விந்திய சகாவின் saga - தலையில்லா போராளி சைசில் வர காத்துள்ளது ! //இந்த அறிவிப்பு Icing in the Cake . சூப்பர் சார்.
ReplyDeleteஎடிட்டர் சார்...
ReplyDeleteஅட்டவணையையும், சந்தா தொகை மற்றும் சந்தா காம்பினேஷன்களையும் தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தோம்! இதை நீங்கள் சரிவரச் செய்வதே சவாலான பணி எனும்போது எக்ஸ்ட்ராவாக எதிர்பார்த்திடத் தோனவில்லை என்பதுதான் உண்மை!
ஆனால், இம்முறையும் எங்கள் எதிர்பார்ப்புகளின் எல்லைகளைத் தகர்த்தெறிந்துவிட்டு - அந்த எல்லைக்கு அப்பாலுள்ள ஆச்சரியங்களையும் கண்முன்னே கொண்டு நிறுத்தியிருக்கிறீர்கள்! குறிப்பாக சந்தாரர்களுக்கான டெக்ஸ் இன் கலர், சந்தா-Dயின் அதிரடி மாற்றங்கள், டெக்ஸ்-70 யின் பிரம்மாண்ட அறிவிப்பு, சந்தாதாரர்கான loyalty திட்டம், மற்றும் எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக 'ஜம்போ காமிக்ஸ்' பற்றிய அறிவிப்பு!! ப்பா!!! சந்தோசத்துல மூச்சு முட்டுது போங்க!
மாலையில் இந்த அட்டவணையையும், உங்கள் திட்டங்களையும் பார்த்த பின்னே ஏதோவொரு பரவச நிலையிலேயே தொடர்ந்து நீடித்திருப்பதுபோல உணருகிறேன். இந்த அட்டவணை, சந்தா, மற்றும் உங்களது ஏனைய திட்டங்கள் குறித்த சாதக-பாதகங்களையெல்லாம் அலசிடத் தோன்றவேயில்லை! இந்தப் பதிவை ஏற்கனவே ( ஒருவித படபடப்புடனே) மூன்று முறை படித்தபிறகும் - எல்லாம் புரிந்ததுபோலவும், எதுவுமே புரியாததுபோலவும் ஒரு 'அந்தி மண்டல நிலை' இன்னும் தொடர்கிறது!
இப்போதிருக்கும் நிலையில் கோர்வையாக சிந்திக்கவோ, எழுதவோ வரவில்லையென்பதால், தோனுவதையெல்லாம் அப்பப்போ எழுதலாம்னு இருக்கேன்!
நமது வட்டம் சின்னதே என்றாலும், அதன் அங்கத்தினர்கள் எத்தகையோர் என்பதில தான் ஏது இரகசியம் ?
Deleteஇதோ தமிழகத்தின் நாடித் துடிப்பையே ஜோப்பியில் வைத்திருக்கும் குமுதம் இதழின் எடிட்டர் அவர்களே நமது ரசனைகளோடு ஓன்றிப் போகிறார் எனும் போது - கதைத் தேர்வுகளிலும், தேடல்களிலும் நமது முயற்சிகள் எத்தனை அழுத்தமாய் அமைந்திட வேண்டும் ? ஒரு அங்கீகாரத்தைத் தேடியலைவது எத்தனை சிரமமோ, அதை விடப் பன்மடங்கு சிரமம் அதனைத் தக்க வைத்துக் கொள்வது எனும் பொழுது - அந்த உழைப்பு அவசியம் தானே ?
இயன்றவரை, இயன்றதெல்லாத்தையும் செய்தொமென்ற திருப்தியை தேடிய ஓட்டமிது சார் ! இன்னும் தூரம் நிறையவுள்ளது கடக்க !!
And தலீவர் பாணியில் செயலரும் சீக்கிரமே குறட்டை தேசத்துக்கு இன்று கிளம்பி விட்டாரோ ? என்ற சந்தேகம் எழுந்தது எனக்கு !
Delete////ஒரு அங்கீகாரத்தைத் தேடியலைவது எத்தனை சிரமமோ, அதை விடப் பன்மடங்கு சிரமம் அதனைத் தக்க வைத்துக் கொள்வது எனும் பொழுது - அந்த உழைப்பு அவசியம் தானே ? ///
Deleteஉண்மையோ உண்மை சார்!
///இன்னும் தூரம் நிறையவுள்ளது கடக்க !!///
அப்படிப்போடுங்க! இதைப் படிக்கும்போதே உற்சாகம் பிச்சுக்குது சார்!
சூப்பர்.. வேறு எதுவும் தோணலை...
ReplyDeleteமுத்து, லயன், திகில், மினிலயன் என 4இதழ்கள் பட்டயை கிளப்பிய 1980களின் பிற்பகுதியை சீனியர் நண்பர்கள் விவரிக்கையில் பொறாமையாக இருக்கும்.
ReplyDeleteஅவர்களின் அந்த மகிழ்ச்சியான விவரிப்பில் சிலசமயங்களில் நம்மையும் அந்த தருணங்களில் மூழ்க செய்துவிடுவார்கள்.
நமக்கும் காதுகளில் கிளம்பும் லேசான புகைச்சலைக் கண்டு அவர்களின் கண்களில் சற்றே பெருமிதம் மிளிரும்.
அப்போதெல்லாம் நாமும் அந்த காலகட்டத்தில் பிறக்காது போய் விட்டோமே என்ற ஏக்க கனவு எழுந்து கலையும்.
அந்த கால கட்டத்திற்கு சற்றும் சளைத்ததல்ல இன்றைய 2015,2016,2017,2018....ஆண்டுகள். அந்த கால இதழ்கள் ஒவ்வொன்றுக்கும் மேட்ச்சிங் அன்ட் ஈகுலன்ட் பைட் தரக்கூடிய இதழ்கள் இன்றைய கால கட்டத்தை 2வது பொற்காலமாக்குகின்றன...
அன்றைய இளம் ஆசிரியர் எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் அத்தகைய சாதனையை நிகழ்த்தியபோது, இன்றைய அனுபவம் முதிர்ந்த ஆசிரியர் அதைவிட ஒருபடி மேலே சிந்திப்பதும், அதை நிஜமாக்கியதும் இந்த அற்புதமான காலகட்டத்தின் பொன்னான நிகழ்வுகளுக்கு ஒரு சான்று.
அந்த கனவு காலத்தை மிஸ் செய்த என்போன்ற பெரும்பாலான நண்பர்களுக்கு
இந்த 2வது பொற்காலத்தில், அவரோடு பயணிப்பதும்;,
ஏன் அவர்களுக்கு கிடைக்காத இதைப்போன்ற லைவ்வான இதழ்கள் அறிவிப்பும்; அதுசம்பந்தமாக ஆசிரியர் சாரோடு கலந்துரையாடும் வாய்ப்பும் என அவர்களை விட ஒரு படி மேலான பரவசங்களில் உழலுவது சத்தியமாக நாம் வங்கி வந்த வரமே...!!!
சார் ...அன்றைய முயற்சிகள் இளவயதின் ரவுசுகள் ! மனதில் பசுமையாக நிற்கும் நினைவுகள் !
Deleteஇன்றோ ஊர் கூடித் தேர் இழுக்கும் வைபவம் ! ஆயுளுக்கும் மறக்கா அழுத்தம் தாங்கி நிற்கும் !
எனது (அ) எங்களது எதிர்பார்ப்பில் அடுத்தவருடத்திற்கான கதைகளின் 'தலைப்புகள்' எவ்விதம் இருந்திடப் போகிறதோ எனும் எதிர்பார்ப்பும் ஒன்று!
ReplyDeleteஎங்களின் கடந்த கால / நிகழ்கால அனுபவங்களின்படி, சில தலைப்புகள் பார்த்தவுடனே பட்டாசாய் தோன்றும், சில தலைப்புகள் முதலில் சுமாராகத் தோன்றினாலும் கதையைப் படித்தபிறகு மிகமிகப் பொருத்தமானதாகி ஆச்சரியப்படுத்தும்! முதலாவது வகையில் 'பார்த்தவுடன் பத்திக்கொண்ட தலைப்புகள்' பின்வருமாறு :
* பிரியமுடன் ஒரு பிரளயம்
* மெளனமாயொரு இடிமுழக்கம்
* மரணம் ஒருமுறையே...
* மரணம் சொல்ல வந்தேன்
* மெல்லத் திறந்தது கதவு
* நடமாடும் நரகம்
* காதலும் கடந்து போகும்!
* ஸ்டேட் பேங்க் ஆப் டால்டன்
* கனவெல்லாம் கலீஃபா
* இரவுக்கழுகின் நிழலில்!
அட்டகாசம்!!!!
LGNன் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தப்பட்டிருப்பதும் ஒரு இன்ப அதிர்ச்சி எடிட்டர் சார்! ஒரு காலத்தில் கி.நா'க்களுக்கு எதிராக கொடி பிடித்த நண்பர்கள் பலரிடமும்கூட நல்லதொரு மாற்றம் ஏற்பட்டிருப்பதன் பிரதிபலிப்பே இந்த 'எண்ணிக்கை உயர்வு' என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது! உண்மையில், இப்போதெல்லாம் 'மாதம் ஒரு கி.நா இருந்தாத் தேவலையே!' என்ற நினைப்பும்; அந்த நினைப்பு ஆசையாக உருவெடுத்திருப்பதும் உண்மை! 'மாதம் ஒரு டெக்ஸ்' போலவே, இனிவரும் வருடங்களிலும் 'மாதம் ஒரு கி.நா' தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிடும் என்று தோன்றுகிறது. சந்தா-E குறித்த அறிவிப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் சார்!
ReplyDeleteசென்னை புத்தக கண்காட்சிக்கு தோர்கல் மட்டும் தான் .ஈரோடுக்கு இரத்த ப்படலமும் டெக்ஸ்-70ம்.சென்னை யின் விற்பனை சாத்தியங்களை தவறவிடுகிறோமோ?.
ReplyDeleteசூப்பர் . துள்ளி கூத்தாட தோன்றுகிறது சார் . எல்லா தரப்பினையும் திருப்திப்படுத்த , மிக கடுமையாக முயற்ட்சித்து , அதில் வெற்றியும் அடித்துள்ளீர்கள் . நன்றிகள் கோடி சார் .
ReplyDelete183😊
ReplyDeleteஇலங்கைக்கு 12500/= ம் , இதர நாடுகளுக்கு 17500/=ம் என்று ஆசிரியர் அறிவித்துள்ளார் . ஒரு சிறிய சந்தேகம் . பிரான்ஸ் க்கு 17500/= ஆ ? ஆசிரியர் அல்லது நண்பர்கள் யாராவது நிவர்த்தி பண்ணுங்களேன் . ப்ளீஸ் ?
ReplyDelete👌
ReplyDeleteமர்மகத்தி மிகவும் எதிர்பார்த்து. இது வரை படித்து இல்லை. படிக்க ஆவலுடன் உள்ளேன்.
ReplyDeleteஅறிமுக நாயகன் ட்ரன்ட்க்கு இரண்டு ஸ்லாட் கொடுக்க ஏதாவது ஸ்பெஷல் காரணம் உண்டா? ஏன் என்றால் இரண்டு ஸ்லாட்களில் ஒரு நாயகருக்கு பதில் இரண்டு புதிய நாயகர்களை அறிமுகபடுத்தலாம?
ReplyDeleteதோர்கல் hard bound தானே?
ReplyDeleteட்யூரங்கோவும் hard bound என்றே நம்புகிறேன்.
Deleteசந்தா E விலை பின்பு அறிவிக்கப்படுமா?
ReplyDeleteஆமா ஜி
Deleteகார்டூன் - எனது ஆதர்ஷ் நாயகர்கள் அடுத்த வருடமும் தொட்ர்வது சந்தோசம்.
ReplyDeleteஅதுவும் லக்கி-லூக் இரண்டு கதைகள் பரம சந்தோஷம்.
ரின் டின் எனது மகளிடம் இருந்து ஒரு ஸ்பெஷல் தாங்ஸ். முடிந்தால் ஜனவரி அல்லது கோடை விடுமுறையில் வெளிவருவது போல் பார்த்து கொள்ளவும்.
மேக் & ஜாக் (சாமி) இவர்களை பற்றி கேள்வி
பட்டது இல்லை. படித்தது தெரிந்து கொள்ள ஆர்வமுடன் உள்ளேன்.
கார்டூன் க்ளாஸிக் லக்கி மற்றும் சிக்பில் இரண்டும் படித்துள்ளேன், என்னிடம் உள்ளன. கொலைகார காதலி மற்றும் மேடையில் ஒரு மன்மதன் எனது ஃபேவரிட். வண்ணத்தில் படிக்க தயாராக உள்ளேன்.
ReplyDeleteLGN - இந்த வருடம் நல்ல வரவேற்பு கிடைத்தது சந்தோசம். ஆனால் இன்னும் ஒரு வருடம் இதே 6ல் தொடர்ந்து விட்டு 2019ல் அதிகபடுத்தி இருக்கலாம். அந்த 3னை மறுபதிப்புக்கு கொடுத்தது இருக்கலாம். குறிப்பாக மும்மூர்த்திகளுக்கு அதுவும் இதுவரை வராத மறுபதிப்பு கதைகளுக்கு. லாரன்ஸ், ஸ்பைடர் (யார அந்த மினி ஸ்பைடர்)& மாயாவி.
ReplyDelete2018 கதை மற்றும் நாயகர்கள் தேர்வு அனைத்தும் நன்றாக உள்ளது. வழக்கம் போல தோன்றும் ஆசை, இவை அனைத்தையும் ஜனவரியிலேயே கைகளில் கிடைக்காதா என்ற நிறைவேறாத ஆசையுடன் :-)
ReplyDeleteஜூலியா மற்றும் டைலன் இருவருக்கும் இடைவேளை கொடுத்து சரியான முடிவு.
அதேநேரத்தில் இந்த வருடம் வந்த டைலன் எனது ஆல் டைம் ஃப்வேரிட.
Super, excellent, marvellous, awesome - இது போன்று எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம், உங்கள் உழைப்பு, தேர்வு, அக்கறை மற்றும் ஆர்வத்திற்கு.
ReplyDeleteநன்றி & வாழ்த்துக்கள் எடி ஒரு சிறப்பான டீசருக்கு...
ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம் ஜம்போவை....
"உண்மையான தீபாவளி (பண்டிகை) கொண்டாட்டம்"
கலக்குங்க... நாங்க கலந்துக்குறோம்...!
- ஹசன்