Powered By Blogger

Saturday, September 16, 2017

பெல்ஜியம் in இத்தாலி !

நண்பர்களே.

வணக்கம். கொஞ்சம் பயணம் ; கொஞ்சம் சொந்தப் பணிகள் ; நிறைய அக்டோபர் இதழ்களின் பணிகள் என்று எனது கடந்த வாரம் முழுமையாய் ஓடியிருக்க, வலைப்பதிவுப் பக்கமாய்த் தலைவைக்க சாத்தியமாகிடவில்லை ! இந்த ஞாயிறு மதியமாவது , முந்தைய பதிவு + இன்றைய பதிவின் அலசல்களுக்கு உங்களோடு நேரம் செலவிட எண்ணியுள்ளேன் ! Given a choice - ஒவ்வொரு ஞாயிறும் இங்கே அரட்டை அடிக்க நேரம் எடுத்துக் கொள்ள செம ஆர்வமே ; ஆனால் வேறு இடையூறுகளின்றி மொழிபெயர்ப்புக்குள்ளோ ; புதுத் தேர்வுகளை மதிப்பீடு செய்திடும் படலத்துக்குள்ளோ புகுந்திட இந்த விடுமுறை தினமே வாகான வேளையாக இருப்பதால் அதனைத் தவிர்ப்பது சிரமமாகிப் போய் விடுகிறது ! 

அட்டவணையினை 95% முடித்து விட்டிருக்கும் தருணத்தில் - இறுதி நிமிடக் கூட்டல் / கழித்தல்கள் அரங்கேறி வருகின்றன ! கடந்த பதிவில் விலைகள் பற்றி சில பின்னூட்டங்கள் இருப்பதையும், நண்பர்கள் அதற்கான விளக்கங்களையும் அழகாய்ச் சொல்லியிருந்ததைக் கவனித்தேன் ! நிறைய முறைகள் நாம் அலசி விட்டுள்ள topic தான் என்பதால் மீண்டும் துவக்கத்திலிருந்து நான் ஆரம்பிக்க அவசியமிராது என்றே நினைக்கிறேன் ! But - சமீப சில நிகழ்வுகள் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் சொற்பமே என்பதால் அதை பற்றி லேசாக !

ஜூலையில் தேசம் முழுக்க GST வரி அமலானது ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு விதத்தில் சாதக-பாதகங்களை ஏற்படுத்தியுள்ளன ! நம்மளவிற்கு புத்தக விற்பனைகளுக்கு  GST வரிகள் ஏதும் கிடையாதென்ற போதிலும் - தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் இப்போது தர்ம அடி வாங்கி வருகிறோம் ! பேப்பரின் மீதிருந்த 5% வரியானது இப்போது 12% என்றாகியுள்ளது ! நியாயப்படிப் பார்த்தால் பேப்பர் மில்கள் தங்கள் உற்பத்தி விலைகளைக் குறைத்து விட்டு அப்புறமாய் GST 12% வரி விதிப்பைச் செய்திட வேண்டும். ஆனால் உதடைப் பெரிதாய்ச் சுளித்து விட்டு - 'விலை அதே தான் ; பிளஸ் 12% GST ' என்று ஒரே போடாகப் போட்டு விட்டுக் கிளம்பி விடுகிறார்கள் ! இது போதாதென்று அச்சுக்கு அவசியமான முக்கால்வாசிப் பொருட்கள் மீது இப்போது 18 % வரி ! And இதுநாள்வரை பைண்டிங் + கூரியர்கள் மீது வரிச்சுமை இல்லாதிருக்க - ஜூலை முதலோ அங்கும் 18% ! சரக்குக் கட்டணங்களும் (ஏஜெண்ட்களுக்கு அனுப்பும் "சரக்கு" சாமியோவ் !!) இப்போது கிட்டத்தட்ட 20% கூடுதல் எனும் பொழுது - சந்துக்குள் சிக்கிய பெருச்சாளி நிலைமை தான் ஒவ்வொரு பதிப்பகத்துக்குமே ! விலையேற்றம் என்பது எல்லோருக்குமே அத்தனை சுலபமல்ல எனும் போது - தத்தம் விளம்பரக் கட்டணங்களைக் கூட்டி வைத்துக் கொண்டு லேசாகச் சமாளிக்க முற்படுகின்றனர் ! ஆனால் "விளம்பரம்-னா வீசம்படி எவ்ளோ ?" என்று கேட்கும் நம் போன்றவர்களுக்கு அந்த மார்க்கமும் லேது ! So முன்கூட்டிய சந்தா நிர்ணயங்களுக்குள் இந்த எதிர்பாரா சமாச்சாரங்களுக்கெல்லாம் cushion இம்மியூண்டும் கிடையாது என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டே தொடர வேண்டியுள்ளது ! அதற்காக காத்திருக்கும் புது அட்டவணையிலும் பெருசாய் விலையேற்றங்களை செய்திடுவதாகவுமில்லை ! அதே ரூ.75 விலையிலேயே வண்ண இதழ்கள் தொடரும் ; மறுபதிப்புகள் மட்டும் ஐம்பதில் தாக்குப்பிடிக்கவே முடியவில்லை என்ற நிலையில் ரூ.60 என்றிருக்கும் !

"விலைகளைக் கட்டுக்குள் வைத்திட  ;இதைக் குறைக்கலாம் - அதைக் குறைக்கலாம்" என்ற யோசனைகள் சகலத்திலுமே தரத்தில் சமரசம் செய்து கொள்ளும் சிந்தனைகளே மேலோங்கி நிற்கின்றன ! கடந்த காலங்களில் செய்த அதே தவறுகளை மறுபடியும் செய்வதாக இல்லை என்பதால் - இந்த ரிவர்ஸ் கியர் போடும் யுக்தியினை நாடுவதாகவே இல்லை ! "கலர் வேண்டாம் ; black & white போதும்" என்ற சிந்தனைகளுக்கு நான் சொல்லக் கூடியது ஒன்றே : ஒரேயொரு லார்கோ இதழை ; லக்கி லூக் ஆல்பத்தை கருப்பு - வெள்ளையில் கற்பனை செய்து பாருங்களேன் என்பதையே ! கதையும், சித்திரங்களும் ஒரு ஆக்கத்துக்கு எத்தனை அத்தியாவசியமோ - அதே அளவு முக்கியத்துவம் கொண்டது வர்ணச் சேர்க்கையுமே ! அந்தக் காலத்தில் தான் வேறு நாதியின்றி black & white-ல் சாகடித்தோம் பல படைப்புகளை ; இன்றும் அதைத் தொடரத் தான் வேண்டுமா ? And இன்றைக்கு நமக்கு பல சர்வதேசப் படைப்பாளிகளின் கதவுகள் திறக்கின்றன என்றால் - அது ஓரளவுக்காவது கண்ணைக் கொண்டு பார்க்கக்கூடிய தரத்தை எட்டிப்பிடிக்க நாம் முயற்சிக்கிறோம் என்பதாலேயே ! So 'தற்போதைய பாதையில் பை-பாஸ் போடுவோமா ?' என்ற சிந்தைகள் வேண்டாமே - ப்ளீஸ் ? More than anything else - ஐந்து ரூபாய்களுக்கும், பத்து ரூபாய்களுக்கும் வெளியிட்டுமே கிட்டங்கி முழுக்க பிரதிகள் தேங்கிக் கிடந்த நாட்களும் நமக்குப் பரிச்சயம்  தானே ?  So அதே ரூட்டில் மறுபடியும் வண்டியை விடச் சொல்வதற்குப் பதிலாய் - முன்செல்லும் பாதைக்குப் பிரயோஜனமான யோசனைகளை சொல்லிடலாமே ? நண்பர் ராகவன் சொல்லும் அந்தக் "கூட்டுச் சந்தா" பாணியானதை நடைமுறைப்படுத்திட நாங்கள் தயார் !  இரண்டோ-மூன்றோ நண்பர்கள் ஒன்றிணைந்து சந்தா செலுத்துவதாயின் - சுழற்சி முறையில் ஒவ்வொருவரது முகவரிக்கும் கூரியர்களை அனுப்பிடலாம் ! So இது போல் ஏதேனும் நடைமுறை சாத்தியம் கொண்ட சிந்தனைகளுக்கு நம் செவிகள் எப்போதும் திறந்திருக்கும் ! அதே போல புது அட்டவணையில் - "கார்ட்டூன் வேண்டும் / வேண்டாம் ; TEX வேண்டும் / வேண்டாம் ; மறுபதிப்புகள் வேண்டும் / வேண்டாம் " என சகல ரசனைத் தேர்வுகளுக்குமே வாய்ப்பிருக்கும் ! So பிடித்ததை மட்டும் வாங்கிடும் சுதந்திரம் உங்களதே ! இருப்பதை ரசித்திடுவோமே guys - இல்லாததைத் தேடும் வேளைதனில் ! Maybe long term திட்டமிடலில் - டெக்ஸ் இதழ்களை தற்போதைய சைஸிலிருந்து - "நிலவொளியில் நரபலி" சைசுக்கு மாற்றுவதாயின் விலைகளில் சுமார் 20 ரூபாய் குறைய வாய்ப்பிருக்கலாம் ! அந்த சைசில் படிப்பதில் சிரமமிராதெனில் - எனக்கதில் சிக்கலிராது ! அதே சமாச்சாரம் தான் மறுபதிப்புகளுக்குமே ! ஆனால் ரெண்டடி தொலைவில் நிற்கும் நீர்யானையையே கண்ணைச் சுறுக்கிப் பார்க்கும் அவசியமுள்ள என்போன்ற நண்பர்களுக்கு இதனில் எத்தனை உடன்பாடிருக்கக் கூடுமென்பது anybody's guess !

இந்த ஆராய்ச்சிகள் இத்தோடு போதுமென்பதால் - அக்டோபர் பக்கமாய்ப் பார்வைகளை ஓட விடுவோமா ? காத்திருக்கும் "லயன் தீபாவளி மலர்"  சிலபல highlights-க்கு சொந்தம் கொண்டாடக்கூடியது என்பேன் !

மெகா சைசில் முழு வண்ணம் என்பது HL # 1 ! சென்றாண்டின் 'தலையில்லாப் போராளி" தந்த உத்வேகத்தை நாம் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டோம் தானே ?! அதே மெகா சைசில் முழுவண்ணம் எனும் பொழுது இதழ்  சும்மா மினுமினுக்கிறது !

HL # 2 - நமது இரவுக் கழுகாரின் முதல் கிராபிக் நாவல் இதுவாகத் தானிருக்கும் என்பதே ! ஓவியர் Serpieri யின் இந்தப் படைப்பில் நம் ஆதர்ஷ டெக்ஸ் - கார்சன் ஜோடியின் முதல் சந்திப்புப் புள்ளி கண்ணில் காட்டப்படுவது மட்டுமன்றி - இந்த ஒட்டு மொத்தத் தொடரையுமே ஒரு மாறுபட்ட கோணத்தில் பார்த்திட முனைகிறது ! இறுதிப் பக்கத்திலுள்ள  மினி twist-ஐப் படித்தான  பின்னே ஒட்டுமொத்தக் கதையையுமே  ஒரு மறுவாசிப்பு செய்திடும் ஆர்வம் எழுமென்பது  நிச்சயம் !

HL # 3 : "பிரான்க்கோ-பெல்ஜிய பாணிகளில் நாங்களும் கலக்குவோம்லே ?" என்று டெக்சின் படைப்பாளிகள் உரக்கக் கூவுவதை இந்த இதழின் முழுமையிலும் உணரவிருக்கிறோம் ! பக்க அளவு ; சித்திர அமைப்புகள் ; கதை பாணியில் மாற்றம் ;ஓவிய / வர்ணச் சேர்க்கைகளில் வித்தியாசம் என்று இது ஒரு "பெல்ஜியம் in இத்தாலி " எனலாம் !

Hardcover-க்கு மட்டும் பட்ஜெட் இருந்திருப்பின், இன்னமும் மிரட்டலாய் இதழ் அமைந்திருக்கும் என்பது நிச்சயம். இந்த சைசில் - சொற்பப் பக்கங்களுக்கு மட்டும் hardcover என்பது  நிறையவே செலவாகும் என்பதால் அட்டவணையில் இதனைத் திட்டமிட்டிருக்கவில்லை ! And இதன் ராப்பரும் 60 நாட்களுக்கு முன்பாகவே அச்சாகி விட்டபடியால் கடைசி நிமிட மாற்றம் ஏதும் செய்திட வாய்ப்பிருக்கவில்லை ! இதோ - இந்த அதிரடி இதழின் அட்டைப்படப் preview !
ஒரிஜினல் அட்டைப்படம் துளி மாற்றமுமின்றி - பின்னணி வர்ணத்தில் மட்டும் மாறுதலோடு ! And பின்னட்டையும் இந்த இதழிலுள்ள கதை # 2 -ன் ஒரிஜினல் ராப்பரே ! உட்பக்க சித்திரங்களைப் பொறுத்தவரையிலும் இரு வேறு ஓவியர்களின் பாணிகள் இங்கே அமலில் உள்ளன என்பதால் முற்றிலும் மாறுபட்ட இரு மாதிரியான 'தல' தாண்டவங்களைப் பார்த்திடவுள்ளோம் !

இது கதை # 1-ன் உட்பக்கம் ! டெக்சின் கிட்டேயுள்ள மீசைக்கார மாமா தான் கார்சன் !

இதுவொரு ஓவிய அதகளம் என்பதாலும் ; இரவுக் கழுகாரின் துவக்கப் புள்ளி என்பதாலும், ஸ்கிரிப்ட்டில் பன்ச் வரிகளுக்கு அத்தனை முகாந்திரங்களில்லை !  இரண்டாம் சித்திரம்  மௌரோ போசெல்லியின் கதையின் உட்பக்க டீசர் !  

So ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்திற்குத் தயாராகிக் கொள்ளுங்கள் folks ! Talking about changes - எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் - நமது காமிக்ஸ் வாசிப்பினில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை ஒரு நீண்ட (ஆங்கிலக்) கட்டுரையில் அழகாய் அலசியுள்ளார் - வலைத்தளக் கட்டுரை ஒன்றினில் ! நமது XIII தொடரில் துவங்கி ; "பிரளயத்தின் பிள்ளைகள்" என்று பயணமாகியுள்ளவர் - இம்மாதத்து "சித்தம் - சாத்தான்-சொந்தம்" இதழினை நிரம்பவே சிலாகித்துள்ளார் ! இதோ அந்த கட்டுரையின் லிங்க் : https://swarajyamag.com/culture/how-the-world-of-tamil-comics-is-going-through-a-quiet-revolution.உங்களின் ரசனைத் திறன்களுக்குக் கிடைத்துள்ள ஷொட்டு இது guys !! 

And இந்த கிராபிக் நாவல் எதிர்பாரா திக்குகளிலிருந்து மேற்கொண்டும் பாராட்டுக்களை ஈட்டி வருகின்றது ! கடந்த வாரத்தின் ஒருநாளில் ஒரு முன்னணிப் பதிப்பகத்தின் ஆசிரியர் தொலைபேசியில் அழைத்து இந்த கிராபிக் நாவலைப் பற்றி ரொம்பவே சந்தோஷம் தெரிவித்தார் ! நமது வாசக வட்டத்தின் பன்முகத்தன்மையை அவருமே வியப்போடு விவரித்த போது உங்கள் ஒவ்வொருவரின் காலர்களையும் தூக்கி விட்ட effect தான் என்கண்களில்  ! ஒரு 'பொம்மை புக்' வட்டத்துக்கு  கிட்டி வரும் அங்கீகாரம் சிறுகச் சிறுக மெருகேறி வருவதை எண்ணிடும் போது வெரி ஹேப்பி அண்ணாச்சி  ! 

அப்படியே ஒரு U -turn அடித்தால் இம்மாதம் நம்மைப் பார்த்து "ஈஈஈ" என்று இளிக்கத் தயாராகி நிற்கும் கூர்மண்டையருக்கு 'ஹலோ' சொல்லிடலாம் ! இதோ - சிலபல ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் நம்மை மெஸ்மெரிஸம் செய்து வைத்திருந்த ஸ்பைடரின் அட்டைப்பட preview !
இன்றும், இன்னமும் இவர் நமக்கொரு முக்கிய நபரே ; ஆனால் 2 வாரங்களுக்கு முன்பாய் பெர்லின் சுவர் பற்றியும், Cold War பற்றியும் அலசி விட்டு - 'டண்டணக்கா' என்று இந்த சிலந்தி உலகினுள் இப்போது குதிப்பது லைட்டாக ஜெர்க் அடிக்கச் செய்கிறது !! ஆனால் வானவில்லின் இரு முனைகளை நிதரிசனமாக்கிட இதை விடவும் வேறொரு உபாயம் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை ! இதோ அன்றைக்கு நாமெல்லாம் வாய்க்குள் ஈ போவதைக் கூட உணராது ரசித்ததொரு கதையின் உட்பக்கமும் ! And சேலத்து இரும்பு மனிதர் இதற்கான பிழைதிருத்தங்களைச் செய்து தந்து, எனது கேச இழப்பைக் கணிசமாய்க் குறைத்து விட்டிருக்கிறார் இம்முறை ! 
எனது இவ்வாரக் கேள்வியே இது சார்ந்து தான் all : இந்த புய்ப்ப தோரண நாட்களிலிருந்து நாம் ஒட்டு மொத்தமாய் நகர்ந்து விட்டோமென்று சொல்லுவது சரியாக இருக்குமா ? அல்லது இன்னமுமே இந்த மசாலா மன்னர்களுக்கு நம்மிடையே ஒரு இடம் தொடரத் தான் செய்கிறதா ? நம் ரசனைகளில் நேர்ந்துள்ளது ஒரு நிரந்தர shift ஆ ? அல்லது இன்றைக்கும்  நம்மில் ஒரு கணிச எண்ணிக்கை சட்டித் தலையன் ஆர்ச்சியை ஜனாதிபதியாக்க முயன்று வருவதையும்  மறந்து விடக்கூடாது என்பீர்களா ? மிகச் சரியாய்ச் சொல்வதாயின் நாம் தற்சமயம் நிற்பது மாற்றங்களின் வாயிலிலா ? அல்லது மாற்றங்கள் எனும் பெருங்கட்டிடம் கண்ணில்படும் தொலைவில் மட்டுமேவா ? 

Back to serious stuff - இதோ  XIII இரத்தப் படல வண்ணத் தொகுப்புக்கான இப்போதுவரையிலான முன்பதிவுப் பட்டியல். இயன்றமட்டிலும் இதனை ஒரு updated லிஸ்ட்டாகப் பார்த்திடலாம் ! இதிலும் விடுதல்கள் இருப்பின், திரு திருவென்று நான் விழிக்கும் படங்களைத் தான் இறக்கி விட்டாக வேண்டியிருக்கும் ! ஜெய் சஞ்சய் ராமசாமி ! 

கிட்டத்தட்ட பாதித் தூரத்தைக் கடந்து விட்டிருக்கிறோம் - முன்பதிவு  இலக்குதனில் !! இன்னமும் மீதப் பாதியைக் கடக்க எஞ்சியிருக்கும் நண்பர்களும் மனது வைத்திட வேண்டும் ! So please do chip in folks !! 

தற்போது நடந்து முடிந்துள்ள மதுரை புத்தக விழா சென்றாண்டைப் போலவே ஓ.கே. ரகத்தில் இருந்துள்ளதில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு !! கோவை & ஈரோடு இந்தாண்டினில் so so ரகம் தான் என்பதால் மதுரையை எண்ணியும் பயந்தே இருந்தேன் ! And மதுரையில் விற்பனை pattern கிட்டத்தட்ட மற்ற புத்தக விழாக்களின் பாணியிலேயே தான் ! Top of the list - லக்கி லூக் தான் ! And டெக்ஸ் வில்லர் இரண்டாமிடத்தில் ! ஆச்சர்யமாய் 'ஜெரெமியா' நன்றாக விற்றுள்ளது மதுரையில் !! இங்கொரு கொசுறுச் சேதி : 1200 பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்ட லக்கி கிளாஸ்சிக்ஸ் & ஜெரெமியா கிட்டத்தட்ட காலியாகும் நிலையைத் தொட்டு நிற்கின்றன !! மிகக் குறைவான printrun  தான் என்ற போதிலும், ஏதேனுமொரு title ஸ்டாக் காலியாகிறதென்றாலே அதுவொரு தலைப்புச் செய்தியாகிப் போகிறது இப்போதெல்லாம் ! ஓராண்டு கையில் இருக்கும் இதழ்களால் நிச்சயம் தலை நோவுகள் கிடையாது ; மாறாக 4 ஆண்டுகளாகியும் நம் மீதான காதல் துளியும் குன்றா உடும்புப்பிடி ரோமியோக்களும், ஜூலியட்களுமே - தலைவலி மாத்திரைகளை டஜன்கணக்கில் வாங்கச் செய்கிறார்கள் !! 

2018-ன் அட்டவணையில் ஒரேயொரு சமாச்சாரம் மட்டும் என்னை மண்டை சொரியும் படலத்தினில் ஆழ்த்தி வருகிறது - குறிப்பிட்டவொரு நாயகரின் கதைக்கு எத்தனை slots வழங்கிடலாமென்ற ரோசனையில் ! அதனை மட்டும் பைசல் செய்து விட்டால் - we  should be ready to roll - அதாவது  கடைசி நிமிடத்தில் புதுசாய் ஏதேனும் கண்ணில் பட்டு நாவில் ஜலம் ஓடச்   செய்து மறுபரிசீலனைகளை உண்டாக்கிடாது இருக்கும் பட்சத்தில் ! எத்தனை முயன்றாலும் "அத்தனையையும் முயற்சிப்போமே" என்ற அந்தப் பேராசை மட்டும் போகவே மாட்டேன்கிறது !!

Before I sign off -ஒரு குட்டிச் சேதி :  இம்மாத இறுதியில் தொடர்ச்சியாய் ஆயுத பூஜை & காந்தி ஜெயந்தி விடுமுறைகள் வரவிருப்பதால் - அக்டோபர் இதழ்களை அதற்கு முன்பாகவே உங்களிடம் ஒப்படைக்க இயன்ற மட்டிலும் முயற்சிப்போம் ! தொடரும் அடுத்த சில நாட்களில் 'தம்' பிடித்துப் பணியாற்றினேன் என்றால் - செப்டெம்பரில் அக்டோபர் நிச்சயமாய் நிஜமாகிடும் !! ஜெய் புனித மனிடோ !! Bye all for now ! மதிய பொழுதில் நிச்சயம் ஆஜராகிடுவேன் !! So see you around for sure !!

327 comments:

  1. 2வது...
    வணக்கம் சார்..
    ஹாய் நட்பூஸ்...

    ReplyDelete
  2. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  3. கொஞ்சம் பெரிய பதிவு. படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  4. வணக்கம் சார்..
    ஹாய் நட்பூஸ்...

    ReplyDelete
    Replies
    1. //இம்மாத இறுதியில் தொடர்ச்சியாய் ஆயுத பூஜை & காந்தி ஜெயந்தி விடுமுறைகள் வரவிருப்பதால் - அக்டோபர் இதழ்களை அதற்கு முன்பாகவே உங்களிடம் ஒப்படைக்க இயன்ற மட்டிலும் முயற்சிப்போம் ! //

      சந்தோச செய்தியாக இருந்தாலும் நடுவுல 15ந் தேதிவாக்கில் தீபாவளி ஸ்பெசல் ஒரு புக்கும் அனுப்ப ஏற்பாடு செய்தால் இன்னும் சந்தோசமாக இருக்கும்..

      Delete
    2. அப்படி போடுங்க அருவாள!!
      +987654321123456789

      Delete
    3. அலோ தீபாவளி மலரை செப்டம்பர்லயே படிச்சி புட்டா, தீவாளிக்கு என்ன பண்ணுவதாம்...

      அக்டோபர் 5க்கே தாங்க சார், அவசரப்பட்டு ஏதாவது பதம் தப்பிட போகுது அதிரசம்(மீண்டும் புரட்டாசி)

      Delete
    4. அதெல்லாம் ஒரு பதமும் தப்பாது,இதழ்கள் முன்னாடியே வந்தா அட்டவணையும் முன்னாடியே கிடைக்குமே.

      Delete
    5. அதெல்லாம் ஒரு பதமும் தப்பாது,இதழ்கள் முன்னாடியே வந்தா அட்டவணையும் முன்னாடியே கிடைக்குமே



      ஆமாம் ....ஆமாம்.....ஆமாம்...

      Delete
  5. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  6. நண்பர்கள் அனைவருக்கும் இரவு வணக்கங்கள்.!

    காலையில் வருகிறேன்.!! :)))

    ReplyDelete
    Replies
    1. மாஜி
      யாத்திரை முடிந்து
      நித்திரை முடித்து
      புத்துணர்ச்சியுடன்
      மாத்தி யோசிக்க
      வாரீர் வாரீர்.
      (இப்பவாச்சும் எனக்கு ஆப்பிள் வாங்கி
      வந்தீர்களா???)

      Delete
    2. வாங்கண்ணா வணக்ககங்கணா

      Delete
    3. இரண்டு வாரபயணம்...
      இரண்டு நிமிடத்தில் பார்க்க...இங்கே'கிளிக்'

      Delete
  7. வந்தாச்சி,வாவ் முன்கூட்டியே பதிவு.

    ReplyDelete
  8. எதிர்பாராத சனி முன்னிரவு பதிவு... ஆனந்த ஆச்சர்யம் ஆசிரியர் சார்...
    ஆயிரம் ஆரவார ஆர்ப்பரிப்பாண நன்றிகள்...

    ReplyDelete
  9. நிறைவான பதிவு!!
    பெரிய பதிவு!
    டெக்ஸ் பதிவு!!!குறிப்பிட்டவொரு நாயகரின் கதைக்கு எத்தனை slots வழங்கிடலாமென்ற ரோசனையில் ! அதனை மட்டும் பைசல் செய்து விட்டால்? யார் அவர்னு சொல்லவே இல்லை சார்.

    ReplyDelete
  10. இனிய இரவு வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  11. வரவிருக்கும் தலயின் முதல் கிராபிக் நாவல் தீபாவளி மலரால் நாம் அனைவரும் தீபாவளிக்கு முன்னாடியே
    தீபாவளி கொண்டாடும் பெருமை பெற்று
    விடுவோம்.

    ReplyDelete
  12. விஜயன் சார்,

    அடுத்த வருடம் டெக்ஸ் மறுபதிப்பில் பவள சிலை மர்மம் & சைத்தான் சாம்ராஜ்யம் இரண்டு கதைகளையும் இணைத்து ஒரு இதழாக கொடுக்க முடியுமா?

    ஈரோடு புத்தக திருவிழாவில் வைத்த அதே கோரிக்கையை மீண்டும் இங்கே!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார் கொஞ்சம் மனசு வைத்தால் புண்ணியமாப் போகும் சாமி!!!@

      Delete
    2. ஆமாம் சார் கொஞ்சம் மனசு வைத்தால் புண்ணியமாப் போகும் சாமி!!!@

      Delete
    3. அதே அதே.

      Delete
    4. பவளச்சிலை மர்மம்+ சைத்தான் சாம்ராஜ்ஜியம்....வெஜிடபிள் பிரியாணி

      பவளச்சிலை மர்மம்+ பழிக்குப்பழி...காளான் பிரியாணி

      பவளச்சிலை மர்மம்+ வைக்கிங் தீவு மர்மம்...வெஜிடபுள் பலாவ்

      எந்த டிஸ்னாலும் ஓகே தான்... ஒன்றும் இல்லை, புரட்டாசி பீலிங்ஸ்...

      Delete
    5. // பவளச்சிலை மர்மம்+ வைக்கிங் தீவு மர்மம் //

      இந்த காம்பினேஷன் எனக்கு டபுள் ஓகே!! ப்ளீஸ்! ப்ளீஸ் சார்!!!

      நன்றி விஜயராகவன் - வைக்கிங் தீவு மர்மம்தான் ஈரோடு புத்தக திருவிழாவில் அதிக வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்த கதை என நினைக்கிறன்!!!

      Delete
    6. /// வைக்கிங் தீவு மர்மம்தான் ஈரோடு புத்தக திருவிழாவில் அதிக வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்த கதை என நினைக்கிறன்!!!///---ஆம் நண்பரே பரணி...

      இதான் வோட் வின்னிங் காம்பினேசன்....

      பார்ப்போம் பவளசிலையோடு ஜொலிக்கப்போவது யார்னு....!!!

      Delete
    7. 4 யையும் சேர்த்து ஒரு குண்டு புக்கா போட்டுட்டா நாம இன்னோரு வாட்டி தொந்திரவு குடுப்பதை ஆசிரியர் தவிர்க்கலாம் 😊

      Delete
  13. 'சிங்கத்தின் சிறுவயதில்' தொடரை ஒரு புக்காப் போட்டு (அதுவும் கலர்ல) கையில் திணிச்சாப்ல ஒரு சந்தோசம் - இந்த சனிக்கிழமை முன்னிரவுப் பதிவைப் பார்க்கும்போது!

    ReplyDelete
    Replies
    1. 'சிங்கத்தின் சிறுவயதில்' தொடரை ஒரு புக்காப் போட்டு (அதுவும் கலர்ல) கையில் திணிச்சாப்ல ஒரு சந்தோசம்


      விடிகாலையில் இந்த சந்தோச பதிவை படிக்கும் பொழுது....!


      Delete
  14. விஜயன் சார்
    மறு பதிப்பு என்பது
    மாற்ற முடியாத
    மறுக்க முடியாத
    எங்கள் வாசிப்பில்
    மறக்க இயலாத
    ஒன்றை தாங்கள்
    என்றும்
    மறுக்காமல்
    மறக்காமல்
    மறுபதிப்பு செய்து எங்களை
    மனகிழச்செய்யுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனமகிழச்செய்யுங்கள்

      Delete
  15. இரத்தப்படலம் -ஓர் அலசல்
    கதையை பற்றிய அலசல் அல்ல.(காமிக்ஸ் படிக்கும் நண்பர்களில் 80%அறிவார்கள் இந்த பாட்டி வடை சுட்ட கதையை.பிறகு நான் என்ன சுடப் போகிறேன்.சுடுகிறேன் சைஸ் பற்றி மட்டும்).காமிக்ஸ் வரலாற்றில் ஒரு மைல்கல் இதழ் இரத்தப்படலம் என்றால் அது மிகை அல்ல.இந்த காரியத்திற்கு நாம் என்ன செய்ய போகிறோம் என்பது தான் என் முன் உள்ள மில்லியன் கேள்விகள்.இந்த கதையை 10  பாகம் வரை தனித்தனியாக கருப்பு வெள்ளையில் பல சைஸில் பார்த்தோம்.பிறகு 18 பாகங்களையும் ஒன்றாக ஜம்போ ஸ்பெஷலாக பார்த்து ரசித்தோம்.பின் என்ன இருக்கு?
    அயல் நாட்டு தரத்தில் வண்ணத்தில் இதை ரசிக்க வேண்டாமா என்று ஆசிரியர் முடிவெடுக்க நண்பர்கள் ஆமோதிக்க .அந்த பயணத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்.
    இது போன்ற இதழ் வருவதே சந்தோஷத்தின் உச்சக் கட்டம் என்றாலும் ஏதோ ஒரு சிறு நெருடல் இருந்து கொண்டு இருக்கிறது. அது தான் இந்த பதிவு.
    நெருடல்:புத்தகத்தை பிரித்தல்(இங்கு ஒரு விசயத்தை தெரியப் படுத்தி விடுகிறேன்.நமது நிறுவனத்தில் இருந்து  வெளிவரும் ஒரு துண்டுச் சீட்டை கூட வாங்காமல் விட மாட்டேன்.)
    இந்த புத்தகம் ஒன்றாக வந்தால் தூக்கி படிக்கவோ,படுத்து கொண்டு படிக்கவோ முடியாது என்று  அதிகமாக கோஷம் எழுந்ததால் 3 ஆக பிரிக்க ஆசிரியர் முடிவெடுத்து உள்ளார்.அவர்களை பார்த்து ஒன்று கேட்கிறேன்.மின்னும் மரணம்,மேக்னம் ஸ்பெஷல்,லயன் 250 போன்ற புக்கை எல்லாம் படுத்து கொண்ட படித்தீர்களா அல்லதுபயணம் செய்யும் போது எடுத்து சென்று படித்தீர்களா? (கொஞ்சம் யோசித்து சொல்லுங்களேன்.
    1.பல தனித்தனி கதைகளை ஒன்றாக சேர்த்து குண்டு புக்காக கேட்கும் நாம். ஒரு கதையை பிரிக்க இவ்வளவு ஏன் மெனக்கெடுகிறோம்.(புரியாத புதிர் 1).
    இந்துக்களுக்கு பகவத் கீதை,கிறித்துவர்களுக்கு பைபிள்,இஸ்லாமியர்களுக்கு குரான் எப்படியோ .அது போல் காமிக்ஸ் படிக்கும் நமக்கு இரத்தப் படலம் தொகுப்பு.இதை மட்டும் பிரிப்பானேன்.(புரியாத புதிர் 2).
    மாதத்திற்கு 4,5 புத்தகங்களை தந்து நம்மை எல்லாம் சந்தோஷப் படுத்தி கொண்டு இருக்கிறார்நம் ஆசிரியர்.நம்மில் எத்தனை பேர் வந்தவுடன் அனைத்து புக்கையும் உடனே படிப்பவர்கள்.(நான் 2,3 நாட்களில் படித்து விடுவேன் எவ்வளவு வேலை இருந்தாலும்).அப்படி இருக்க இரத்தப்படலம் புக் பிரித்து வந்தால் மட்டும் உடனே எடுத்து படித்து விடுவார்களா.(புரியாத புதிர் 3).
    ராஜரிஷி படத்தில் ஒரு வசனம்.(காவலுக்கு நிற்பவர்களே களவாட நினைக்கலாமா.திரிகளை கொடுங்கள் என் நாயகனின் பஞ்சபூத விளக்கை ஏற்ற வேண்டும். ).ஓரே தொகுப்பாக தான் வேண்டும் என்று கொடி தூக்க வேண்டிய நாமே ஒதிங்கினால்...(புரியாத புதிர் 4).
    900 பக்கத்திற்கே இப்படி என்றால் நாளை 1000,1500,2000 பக்க புத்தகம் எல்லாம் வெறும் கனவாகவே போய் விடுமோ(புரியாத புதிர் 5).
    ஆசிரியரிடம்-முன்பு ஒரு பதிவில் இரத்தப்படலம் எப்படி எல்லாம் வந்தால் நன்றாக இருக்கும் என்று அழகாக சொல்லி கடைசியாக ஒரே குண்டு புக்&3 புக்காக என்று சொன்னீர்கள்.பின்பு ஏன்இப்போது புக்காக முடிவு செய்தீர்கள்...(தொடரும்)..

    ReplyDelete
    Replies
    1. சரண் செல்வி
      அருமை
      அற்புதம்
      என் மனதில் உள்ளதை அப்படியே
      உரக்கச்சொல்லிவிட்டீர்.
      நம் குரல் ஒலிக்க நாம் 13 மணி நேரம்
      விஜயன் சாரிடம் வேண்டுகோள் வைப்போம்.அல்லது ஈரோட்டில் ஆசிரியரிடம் நான் கேட்டதுபோல்
      3 பாகமாக800புத்தமும் ஒரே புத்தகமாக
      200-மட்டும் வெளிடலாமே. இதன் மூலம்
      காமிக்ஸ் வரலாற்றில் புதிய சாதனையை
      நாம் நிகழ்த்தப்போவது உறுதி

      Delete
    2. நடந்தால் அதை விட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும் சொல்லுங்கள் நண்பரே.

      Delete
    3. நடந்தால் அதை விட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும் சொல்லுங்கள் நண்பரே.

      Delete
    4. எல்லா 'புரியாத புதிர்களுமே' நெற்றியிலடித்தாற்போல கிடுக்கிப்பிடி கேள்விகள்!! ஆனால் சற்று தாமதமாக வந்து சேர்ந்திருப்பதுதான் பரிதாபம்!

      எனக்கும் ஒரே குண்டு என்பதுதான் தனியாத ஆசை என்றாலும், பைண்டிங்கில் உள்ள பிரச்சினைகள் + செலவுகள் பற்றி எடிட்டர் விளக்கிக்கூறியபோது அது நியாயமாகப்பட்டதால் - 'மூன்று புத்தகங்களாக' பாணிக்கு (கொஞ்சம் அரைமனதோடு) தயாராகிவிட்டேன்!

      'மூன்று புத்தகங்களாக' என்று பரவலாகப் பல்வேறு முறைகளிலும் அறிவிக்கப்பட்டுவிட்ட இந்நிலையில், மறுபடியும் 'சிங்கிளாக' என்ற கோஷம் பிரயோஜனப்படாது என்பதே என் யூகம்!

      Delete
    5. ஈ வி என் பரிந்துரை
      குண்ண்ண்டாக 100 அல்லது200 மட்டுமே.
      அதற்கு ஸ்பெஷல் பைண்டிங் பிரீமியம்
      விலை நிர்ணயம் செய்யலாமே.

      Delete
    6. என்னது மறுபடியும் முதல்ல இ௫ந்தா!!!பரோட்டா சூரி தான் ஞாபகம் வ௫கின்றார்!!!

      Delete
    7. சரண் செல்வி& கணேஷ் சார்@ மேலே இரத்த படலம் முன்பதிவு மொத்த புக்கிங்கே இன்னும் 200வர்ல சாமிகளா...!!!

      புக்கிங் நல்லபடியாக நடந்து 400வந்து, புத்தகம் வரணும்னு எல்லா கடவுளையும் வேண்டி கொள்ளுங்கள்....தட் ஈஸ் த நீட் ஆஃப் த ஹார்...
      நிதர்சனத்திற்கு வாங்க சார்ஸ்... இப்பத்தான் எல்லா நண்பர்களும் ஒரே புள்ளியில் குவியத் துவங்கியுள்ளனர், மீண்டும் குழப்ப வேணாமே...

      Delete
    8. நண்பரே நம்மை ஆதரிப்பவர்களை விட நையாண்டி செய்யவே அதிகம் உண்டு முதலில் முன்பதிவை வெற்றிறியாக்குவோம் பின் புத்தக அமைப்பு பற்றி எடிட்டரிடம் வேண்டுகோள் வைப்போம்

      Delete
    9. //
      இப்பத்தான் எல்லா நண்பர்களும் ஒரே புள்ளியில் குவியத் துவங்கியுள்ளனர், மீண்டும் குழப்ப வேணாமே...
      //

      ++++++++++100000000000000000

      Delete
    10. குழப்பம் இல்லை நண்பரே.100 புக் ஒரே குண்டு புக்காக விருப்பம் உள்ளவர்கள் தனியாக முன்பதிவு செய்யுங்கள் என்று ஆசிரியர் கூறினால் அதற்கு தனியாக ஒரு கூட்டம் சேருமே என்ற நப்பாசை....
      இதோ எனக்கொரு பார்சல்...

      Delete
    11. எனக்கு இரண்டு

      Delete
    12. எனக்கொரு பார்சல்

      Delete
    13. //இந்துக்களுக்கு பகவத் கீதை,கிறித்துவர்களுக்கு பைபிள்,இஸ்லாமியர்களுக்கு குரான் எப்படியோ .அது போல் காமிக்ஸ் படிக்கும் நமக்கு இரத்தப் படலம் தொகுப்பு.//
      +1

      Delete
    14. ரஜினியின் சிவாஜி பட ஸ்டைலில் சொல்வதானால்....... "நீங்க வந்தா மட்டும் போதும்"

      Delete
  16. தானைத் தலைவன் லக்கி லூக் கிளாசிக் தீரும் நிலையில் உள்ளதென்பது மகிழ்ச்சியான செய்தி. அடுத்த வருடம் இவருக்கு இன்னும் அதிகமான இதழ்களை கொடுங்கள் சார்.
    ஒரு தலைவன் ஒரு சகாப்தம் முன் அட்டையில் டெக்ஸ், டைகர் போல தோற்றமளிப்பது எனக்கு மட்டும் தானா??!!
    இன்னும் செப்டம்பர் இதழ்கள் கைக்கு வந்து சேரவில்லை... மோட்டு வளையை பார்த்துக்கொண்டிருக்கும் படங்கள் பத்து....

    ReplyDelete
    Replies
    1. ///தானைத் தலைவன் லக்கி லூக் கிளாசிக் தீரும் நிலையில் உள்ளதென்பது மகிழ்ச்சியான செய்தி///

      Delete
  17. ஹை
    நம்ம பிளாக் கிலும் மீம்ஸ்..

    இந்த வார பதிவின் கடைசியில் memes சூப்பர்..

    ReplyDelete
  18. Replies
    1. விஜயன் சார்,
      // டெக்ஸ் இதழ்களை தற்போதைய சைஸிலிருந்து - "நிலவொளியில் நரபலி" சைசுக்கு மாற்றுவதாயின் விலைகளில் சுமார் 20 ரூபாய் குறைய வாய்ப்பிருக்கலாம் ! அந்த சைசில் படிப்பதில் சிரமமிராதெனில் - எனக்கதில் சிக்கலிராது ! அதே சமாச்சாரம் தான் மறுபதிப்புகளுக்குமே ! //

      இந்த யோசனை எனக்கு பிடித்து இருக்கிறது. "நிலவொளியில் நரபலி" சைஸ் எனக்கு மிகவும் பிடித்தது,பாக்கட் சைஸ் மற்றும் தற்போது வரும் கருப்பு வெள்ளை இதழ்களின் சைஸ் இரண்டிக்கும் இடைப்பட்ட ஒரு சைஸ்.

      இந்த யோசனை முலம் நமது சில இதழ்களில் விலை குறையும் என்றால் இதனை நான் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன்.

      வேண்டுகோள்:
      1. இந்த சைஸில் வெளிஈடும் போது எழுத்துகள் படிக்கும் அளவில் இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.
      2. சித்திரங்கள் பார்பதற்கு அழகாக இருக்கும்படி பார்த்து கொள்ளவும்

      Delete
    2. பரணி
      சைசும் சின்னதாக வேண்டும்
      படங்களும் எழுத்தும் பெரியதாக
      வேண்டும்.எப்பீடி.

      Delete
    3. ///வேண்டுகோள்:
      1. இந்த சைஸில் வெளிஈடும் போது எழுத்துகள் படிக்கும் அளவில் இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.
      2. சித்திரங்கள் பார்பதற்கு அழகாக இருக்கும்படி பார்த்து கொள்ளவும்///

      அப்படியானால், 'ஒரு பக்கத்திற்கு ஒரேயொரு பேனல்'ன்ற வீதத்துல மட்டும்தான் அச்சிட முடியும் PFB! ;)

      Delete
    4. // சித்திரங்கள் பார்பதற்கு அழகாக இருக்கும்படி பார்த்து கொள்ளவும் //

      கார்சனின் கடந்தகாலம் மறுபதிப்பு போல் சித்திரங்கள் அமைந்து விட கூடாது என்பது எனது வேண்டுகோள்!

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. ganesh kv @
      // சைசும் சின்னதாக வேண்டும்
      படங்களும் எழுத்தும் பெரியதாக
      வேண்டும் //

      மீண்டும் ஒருமுறை நான் எழுதியதை படித்துவிட்டு சொல்லுங்கள் :-) நான் எங்கும் படம் பெரிதாக வேண்டும் என சொல்லவில்லையே :-)

      Delete
    7. பரணி
      ஏதோ ரைமிங்கா சொன்னா அதுக்கு போய்
      கோச்சிக்கிட்டு.
      நாளக்கே ஒரு பூதக்கண்ணாடி ஒன்னு
      வாங்கிடறேன்.Ok

      Delete
    8. நிலவொளியில் நரபலி சைஸ் உண்மையிலேயே படிக்க வசதியானது தான்! இதற்கு எனது ஓட்டும் உண்டு நண்பரே பரணி!!

      Delete
    9. "நிலவொளியில் நரபலி"-சைசில் வருடம் ஒன்றே ஒன்று வரட்டும் நண்பர்களே.... அந்த சைஸை பார்க்கும்போது ஒரு மெல்லிய அதிர்வுடன் ஆசையாக அள்ளிக்கிடத் தோணும்...

      தலையில்லாப் போராளி சைசிலும் ஒன்று வரட்டும்... அது நம் வளர்ச்சியை உறக்கச் சொல்லும் உதாரண இதழ்...

      Delete
  19. சரண் செல்வி
    அருமை
    அற்புதம்
    என் மனதில் உள்ளதை அப்படியே
    உரக்கச்சொல்லிவிட்டீர்.
    நம் குரல் ஒலிக்க நாம் 13 மணி நேரம்
    விஜயன் சாரிடம் வேண்டுகோள் வைப்போம்.அல்லது ஈரோட்டில் ஆசிரியரிடம் நான் கேட்டதுபோல்
    3 பாகமாக800புத்தமும் ஒரே புத்தகமாக
    200-மட்டும் வெளிடலாமே. இதன் மூலம்
    காமிக்ஸ் வரலாற்றில் புதிய சாதனையை
    நாம் நிகழ்த்தப்போவது உறுதி.

    ReplyDelete
  20. ####டெக்ஸ் இதழ்களை தற்போதைய சைஸிலிருந்து - "நிலவொளியில் நரபலி" சைசுக்கு மாற்றுவதாயின் விலைகளில் சுமார் 20 ரூபாய் குறைய வாய்ப்பிருக்கலாம் ! அந்த சைசில் படிப்பதில் சிரமமிராதெனில் - எனக்கதில் சிக்கலிராது ! அதே சமாச்சாரம் தான் மறுபதிப்புகளுக்குமே ! ஆனால் ரெண்டடி தொலைவில் நிற்கும் நீர்யானையையே கண்ணைச் சுறுக்கிப் பார்க்கும் அவசியமுள்ள என்போன்ற நண்பர்களுக்கு இதனில் எத்தனை உடன்பாடிருக்கக் கூடுமென்பது anybody's guess !###

    எனக்கு மிகவும் பிடித்த,
    கைக்கு அடக்கமான சைஸ் நண்பர்களுக்காக adjust செய்து காெள்கிறாேம்..

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மிகவும் பிடித்த,
      கைக்கு அடக்கமான சைஸ் நண்பர்களுக்காக adjust செய்து காெள்கிறாேம்..
      ஆமாமா
      பீரோவில வெச்சுட்டு
      ரெண்டு நளா கையவிட்டு தேடின
      கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும்.

      Delete
  21. வணக்கம் அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்களே

    ReplyDelete
  22. டெக்ஸ் - ஒரு தலைவன் ஒரு சகாப்தம்
    அட்டை படம் மற்றும் உள்பக்க டீசர் அருமை. உள்பக்க டீசர் ஓவியம்கள் எமனின் திசை மேற்கு கதையின் ஓவிய பாணியை ஞாபகபடுத்துகிறது. இந்த கதையின் ஓவியங்கள் தற்போது வரும் மற்ற கதைகளுக் சவாலாக இருக்கும் போல் தெரிகிறது. கைகளில் வைத்து புரட்ட ஆவலுடன் :-)

    ReplyDelete
  23. குற்ற தொழில்சாலை - அட்டை படம் அள்ளுது!

    // இந்த புய்ப்ப தோரண நாட்களிலிருந்து நாம் ஒட்டு மொத்தமாய் நகர்ந்து விட்டோமென்று சொல்லுவது சரியாக இருக்குமா //

    இல்லை! இல்லை! இல்லை! BIG NO!!!

    ReplyDelete
    Replies
    1. புய்ப்ப தோரண நாட்களிலிருந்து நாம் ஒட்டுமொத்தமாய் விலகவில்லை.விலகவும் மாட்டோம்.சென்ற மாதம் டைலன் டாக் சுற்றாத புய்ப்பமா.? இருந்தாலும் புய்ப்பங்களை ஒதுக்கிவிட்டு அதிரடிகளை மட்டும் ரசித்தோம்தானே..? பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜேஸன் ப்ரைஸ் கூட ஒரு லோடூ புய்ப்பத்தை காதில் சுற்றிச்சென்றவர்தானே..? நண்பர்களின் பன்முக ரசனைத்தன்மைக்கு தானைத்தலைவன் ஸ்பைடர் கதைகளும் இருக்கட்டும்.

      Delete
  24. இனிய இரவு வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  25. Hello Editor sir&how are you my dear friends 🙌👋👋👋🌹🌹

    ReplyDelete
  26. சனிக்கிழமை முன்னிரவுப் பதிவு மிக மிக சந்தோஷம் சார்.நீண்ட பதிவு மிக மிக மகிழ்ச்சி த௫ம் பதிவு. "ஒ௫ தலைவன் ஒ௫ சகாப்தம் " அட்டைப் படம் ஏனோ என்னைக் கவர்வதாக இல்லை.அதற்குக் காரணம் டெக்ஸ் ஆக அவர் தோற்றம் தராததாக இ௫க்கலாம். ஆனால் உட்பக்க சித்திரங்கள் எங்கள் "தல" டெக்ஸ் சும்மா பட்டையக் கிளப்புவார் என்பதை அட்சரசுத்தமாக நி௫பிக்கின்றன. வண்ணத்தில் படா சைசில் "தல"யின் தரிசனத்தைக் காண கைகளும் மனதும் பரபரவென்று துடிக்கின்றன.ஆசிரியர்
    வேறு செப்டம்பரில் அக்டோபர் என்று சொல்லிவிட்டீர்களா, ஒவ்வொ௫ நாளையும் விரல் விட்டு கழித்துப் பார்த்துப் பொழுதைப் போக்க முணுமுணுத்துக் கொண்டு இ௫ப்பதால் பூரிக் கட்டை வேறு புதிது தான் வாங்கவேண்டும்.!!!

    ReplyDelete
    Replies
    1. ////"ஒ௫ தலைவன் ஒ௫ சகாப்தம் " அட்டைப் படம் ஏனோ என்னைக் கவர்வதாக இல்லை////

      மீ டூ!

      Delete
  27. வரப்புயர நீர் உயரும்
    நீர் உயர நெல் உயரும்
    நெல் உயர குடி உயரும்
    குடி உயர கோன் உயர்வான்.
    வாசகர் உயர
    சந்தா உயரும்
    சந்தா உயர
    கதை எண்ணிக்கை உயரும்
    கதை உயர விற்பனை உயரும்
    விற்பனை உயர விஜயன் உழைப்பார்
    நாம் அனைவரும் காமிக்ஸ் படித்து
    என்றும் குழந்தைகளாய் இன்பமுடன்
    மகிழ்ச்சியாய் இருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. செமயா சொன்னீங்க புலவரே! ;)

      Delete
    2. ஆஹா!!! கவித கவித!!!!நீர் ஒ௫ புலவர் என்று சொல்லவே இல்ல@!!

      Delete
    3. ஐயன்மீர்
      வரப்பில் இருந்து
      கோன் உயர்வது வரை
      நம் முன்னோரின் அசல் கவிதையே.
      அதுக்கப்பறம் உள்ளது நம்ம சரக்கு.
      ஹிஹிஹிஹி

      Delete
    4. நல்லாயிருக்கு...கவித...கவித...

      Delete
    5. கணேஷ் சார் கலக்குறேள் போங்கோ

      Delete
    6. கலக்குறீங்க கணேஷாரே....:-)

      Delete
    7. கணேஷ் ஜீ!

      கூடியவிரைவில் கவிதைநூல் வெளியிடுங்க. அதுக்கும் ஒரு மீட்டிங்கை போட்ருவோம்! 💐💐💐

      Delete
    8. கணேஷ் ஜி,அருமை கலக்குங்க.

      Delete
    9. சூப்பா் சாா்!!

      Delete
    10. நன்றிகள் பல நண்பர்களே.
      ஆளுக்கு ஆயிரம் எண்ணங்கள் இருந்தாலும் நம் அனைவரின் ஒருமித்த
      கருத்து காமிக்ஸ் காமிக்ஸ் காமிக்ஸ்
      ஒன்றே.

      Delete
  28. // XIII இரத்தப் படல வண்ணத் தொகுப்புக்கான இப்போதுவரையிலான முன்பதிவுப் பட்டியல். இயன்றமட்டிலும் இதனை ஒரு updated லிஸ்ட்டாகப் பார்த்திடலாம் ! //

    இரத்த படலம் முன்பதிவு அறிவித்த இரண்டு மாதம் பத்து நாட்களில் பாதி கடல் தாண்டி விட்டோம் என்பது மிக பெரிய ஆச்சரியம் மற்றும் சாதனை! அடுத்த இரண்டு மாதம்களில் முன்பதிவு எண்ணிக்கை 400
    தொட்டுவிட்டால் இது ஒரு இமாலய சாதனை! கண்டிப்பாக தொடுவோம்!!!

    ReplyDelete
    Replies
    1. ///இரத்த படலம் முன்பதிவு அறிவித்த இரண்டு மாதம் பத்து நாட்களில்///

      ஒரு மாதம் + 10 நாட்கள்

      Delete
    2. ஈரோடு விஜய் @ ஆமாம்! நான் கணக்குள்ள கொஞ்சம் தவறு செய்து விட்டேன் :-(

      Delete
    3. சரி விடும்கள் PfB. இதற்கு எதற்கு வருத்தம்கள்?

      இம்மாத இறுதிக்குள் 300 முன்பதிவுகள் என்பதே நம் எல்லோரது ஏக்கம்கள்!

      Delete
    4. ///சரி விடும்கள் ///


      ///எல்லோரது ஏக்கம்கள்!///


      குருநாயரே..!!

      Delete
    5. நம் தளத்தின் நக்கீரன்
      நம் KID ORDIN KANNAN என்றால்
      அது மிகையாகாது.
      காலை வணக்கம் KOK மற்றும்
      நண்பர்களே.

      Delete
    6. நக்கீரரும் அவரே....தருமியும் அவரே....:-))

      Delete
    7. க்கும், நள்ளிரவு பனியிரண்டு மணிக்கு கமெண்ட் போடும் போது....

      Delete
  29. குற்றத் தொழிற்சாலை அட்டைப்படம் சும்மா அள்ளுது.
    அப்புறம் நல்லாத்தானே போய்கிட்டி௫க்கு, நம்ம மறுபதிப்பு பிள்ளைக அவங்கபாட்டுக்கு ஒர் ஒரமா வந்துட்டுப் போறாய்ங்க.!!!!
    என்ன மக்களே நான் சொல்லுது சரி தானே?!!!
    நம்ம ஆர்ச்சி அண்ணன் அமெரிக்க ஜனாதிபதியான நமக்குத் தான்ல மொத சந்தோஷம்@!!!

    ReplyDelete
    Replies
    1. ///குற்றத் தொழிற்சாலை அட்டைப்படம் சும்மா அள்ளுது.///

      உண்மை!! இஸ்பைடர் - ச்சும்மா மிரட்டுரார் போங்கோ!

      Delete
    2. பச்சை கலரு சிங்குச்சான்னு நம்ம ஸைபர் சார் மின்னுறார்...
      அட்டைப்பட போட்டில மொத ஆளா வந்துடுவாரோ...???

      Delete
    3. ஸ்பைடர் அட்டைப்படம் அமர்க்களம்.
      கொஞ்சம் கச்சா முச்சா ஓவியங்கள்தானென்றாலும் 86 கோடைமலரில் இந்தக்கதையைப்படித்து மறந்த நாட்கள் மனதைவிட்டு அகலவில்லை.பிறகு இப்போதுதான் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.அதற்காகவே வெய்ட்டிங்.
      இப்போதும் அதே சுவாரஸ்யம் இருக்கும் என்றே நம்புகிறேன்.

      Delete
  30. ஆஹா !அற்புதம்!!!அ௫மை!!!!
    லக்கி லூக் மற்றும் ஜெரெமியா விற்றுத் தீ௫ம் நிலையில் இ௫க்கின்றார்களா? நல்ல செய்தி.
    இதேபோல் ஆசிரியரின் கொடவுன் காலியாகி எங்களுக்கு நிறைய காமிக்ஸ் கிடைக்க புனித தேவன் மனிடோ தான் அ௫ள் புரியவேண்டும்.

    ReplyDelete
  31. ///சரக்குக் கட்டணங்களும் (ஏஜெண்ட்களுக்கு அனுப்பும் "சரக்கு" சாமியோவ் !!) ///

    ஏஜண்டுகளை இப்படி ஸ்பெஷலா கவனிக்கறீங்கன்னு முன்னமே தெரிஞ்சிருந்தா, நானும் எப்பயோ ஏஜண்ட்டாகியிருந்திருப்பேனே...!! :P

    ReplyDelete
  32. ஷப்பாடி லோட் மோர் ஆகுறதுக்கு முன்னாடி படிச்சிட்டு வந்தாச். 79.ஜான் சைமன், சென்னை முகவரி மாறி விட்டது சார். கணினிப் பிரிவில் மாற்றாமல் வைத்துள்ளனர். இரத்தக் கோட்டையைப் பிடிப்பதற்குள் பெரும் போராட்டமே நடத்தியாயிற்று. முகவரி மாற்ற வாட்ஸ் அப் செய்துள்ளேன். அலுவலக எண்ணுக்கு. இனி விழுப்புர முகவரியே குறிப்பிட்டு அனுப்பக் கூறுங்கள். பேக் டு ஹோம் டவ்ன். நாட் டவுன். தாங்க்ஸ். அப்றம் தங்கத் தலைவன் ஆர்ச்சி ப்ளஸ் ஆய்ச்சி ரெண்டு பேருக்கும் அடுத்தாண்டு ஸ்லாட்ல கொஞ்சம் மிச்சம் வைங்க. அப்படியே அடுத்த ஸ்டெப்பையும் கிராபிக்ஸ் மேல எடுத்து வெச்சா போச்சு. இதுக்கே மெர்சலானா எப்டி சாரே?!?!?

    ReplyDelete
  33. அனைவருக்கும் வணக்கம்
    உங்கள்
    செந்தில் சத்யா

    ReplyDelete
  34. சார் மாற்றங்களின் வாயிலில் நிற்க்கிறோம் என்று மறு பதிப்பின் வாயில் மண்ணை அள்ளி போட்டு விட போகிறிர்கள்
    குற்றத் தொழிற்சாலை அட்டைப் படத்தை பார்க்கும் போதே உற்சாகம் கரை புரண்டோடுகிறது இந்த சந்தோஷத்திற்க்கு வேட்டு வைத்து விடாதீர்கள் மறு பதிப்புகள் தொடர்வதே நல்லது

    ReplyDelete
  35. ஆர்ச்சியை அமெரிக்க ஜனாதிபதியாக்கினால்
    சந்தோஷம் மிக சந்தோஷம்

    ReplyDelete
  36. ஆசிரியரே தீபாவளிப் பரிசாக குற்றத் தொழிற்சாலை தலைவன் ஒரு சகாப்த்தம்
    கிடைக்கப் பெறுவது சந்தோஷம் இவைகளுடன் 2018 ன் அட்டவனையும் கிடைக்குமா

    ReplyDelete
  37. கடந்த இரண்டு பதிவு சுருக்கமா இருந்ததுக்கு இந்த பதிவு ஈடு கட்டி விட்டது. வரும் மாத இதழ்களில் நீளமான சி. சி. வ. வை மறக்காம இணைத்து விடுங்கள்.
    டெக்ஸின் அட்டைப் படம் அசத்துகிறது. தலையில்லா போராளியை படித்து விட்டு அடடா இது வண்ணத்தில் வந்தா அசத்தி இருக்குமே என்ற அங்கலாய்த்தேன். அந்த அங்கலாய்ப்பை இது கட்டாயம் போக்கி விடும்.
    சந்தா D ல் மறு பதிப்புகளில் மும்மூர்த்திகள் கோட்டா முடிந்த பிறகு கதம்பமாக இருக்கும்படி பாருங்களேன் சார்? டெக்ஸ், லக்கி, ஆர்ச்சி, சிக்பில், நார்மன் என பழய லயன், முத்து ஹிட் இதழ்களை மாத மாதம் கொண்டு வரலாமே. இப்படி இருக்கும் பட்சத்தில் வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
    பழிக்கு பழி, கழுகு வேட்டை என கடந்த இரண்டு வாரமாக நணபர்கள் கேட்ட வண்ணம் இருந்ததை கவனித்து இருப்பீர்கள். இந்த மாதிரி இதழ்களை சந்தா D ல் மற்ற மசாலா மன்னர்களோடு இணைத்து விட்டால் கொண்டாட்டமே.

    ReplyDelete
    Replies
    1. கடந்த இரண்டு பதிவு சுருக்கமா இருந்ததுக்கு இந்த பதிவு ஈடு கட்டி விட்டது. வரும் மாத இதழ்களில் நீளமான சி. சி. வ. வை மறக்காம இணைத்து விடுங்கள்.


      #######


      நன்று சொன்னீர் மகேந்திரவர்மரே.....:-)

      Delete
    2. அருமையாக சொன்னீர்கள்
      மகேந்திர பாகுபலி ஜி

      Delete
  38. இரத்தப்படலத்தை பிரிப்பதன் மூலம் 10தோடு பதினொன்றாக போய் விடும் என்ற பயம் தான் கண்முன் வருகிறது. இது வெறும் புத்தகமல்ல பொக்கிஷம் என்று என்னை போல் நினைப்பவர்கள் சிலர் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் முன் சில கோரிக்கையை வைக்கிறேன்.இந்த புத்தகத்தை ஒரே குண்டு புக்காக சில பிரதிகள் கொடுக்க முடியுமா?அதற்கு ஆகும் செலவை தனியாக ஏற்று கொள்ளும் பட்சத்தில் உங்களால் அப்படி தர முடியுமா? ....
    ஒரே புக்காக வந்தால் 1. எண்ணிக்கையில் சிறிதே என்றாலும் தரத்திலும் வாசிப்பிலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை தமிழர்கள் என்பதை மற்றவர்களுக்கு மார்தட்டி காட்ட கூடிய வாய்ப்பு. ..அது
    2.இதை கையில் ஏந்தி படிக்கும்போது அங்கு வருபவர்கள் (காமிக்ஸ் என்றாலே பொம்மை புக் என்று நினைப்பவர்கள்) வியப்பில் புருவம் உயர்த்துவர்களே..அது..
    3.அப்படி புருவம் உயர்த்துவர்கள் புத்தகத்தை படிக்க கேட்கும் போது நானே இப்போது தான் படித்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் வேறு வாங்கி கொள்ளுங்கள் என்று சொல்லலாம். (நடைமுறையில் நடந்த உண்மை. .magnum special ன் போது) ....அது...
    4.பத்து வருடம் கழித்தோஅல்லது என் இறப்புக்கு பின்னோ என் மகன் இந்த புத்தகத்தை கையில் ஏந்தும் போது கிடைக்கும் அந்த பரவசம். ....அது....இன்னும்எவ்வளவோ.
    இது முழுவதும் என் தனிப்பட்ட உணர்வுகள் மட்டுமே.யாரையும் காயப்படுத்தும் முயற்சி அல்ல.இதன் நல்லது ஆசிரியர் மட்டுமே.அறிவார்...தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். ....🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. அருமையான விளக்கம்+வேண்டுகோள்
      +9999999999999999999999999999999999

      Delete
    2. உணர்வுப்பூர்வமான வேண்டுகோள்!! உண்மையும் கூட!!

      அப்படியொரு வாய்ப்பிருக்கும்பட்சதில் - என்னுடைய ஆதரவும்!

      Delete
    3. என்னுடைய ஆதரவும்!

      Delete
    4. அருமையான கருத்து சரண் ஜி

      Delete
  39. டைலன் டாக் கை கருப்பு வெள்ளை ஆக்கிவிடலாம் சார்

    ReplyDelete
    Replies
    1. இல்லை நண்பரே...!
      டைலன் வண்ணத்தில் வருவதே சிறப்பு.

      Delete
  40. Editor sir, Smurfs paperback formet is looks good. We can try this small size. I liked the small size asterix and smurfs than big size. The art work and color are great in small size. I suggest and vote for this small size. Hope the price can be controlled and no compromise with art and color.

    ReplyDelete
  41. நி. ந. சைஸ் ல டெக்ஸ் புக் போட்டா நல்லா இருக்குமா? ☹️ சித்திரங்கள் சின்னதாயி வசனமும் பொடி எழுத்துல வருமே? வயதான காலத்தில் உனக்கு இப்படி ஒரு சோதனையா மகேந்திரா...?

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிகிறேன் ....டெக்ஸை வழக்கம் போலவே கொண்டு வாருங்கள் சார் ...

      Delete
    2. அதானே சிறிய விலை குறைப்பு பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி விடும்,வேண்டாமே இந்த முடிவு,அப்புறம் கார்சனின் கடந்த காலத்திற்காக இப்போதும் வருந்துவது போல் அமைந்துவிடும்.
      ரெகுலர் சைஸில் விட்டாலே போதும்.
      யானையே போகுதாம்,இதுல பூனை போறதா பெரிய விஷயம்.

      Delete
    3. ஹலோ ஈ வி மேல என்ன கோபம்.

      Delete
    4. நீளம் குறைவான கதைகள் இருக்கும் போது வருடம் ஒரேயொரு பாக்கெட் சைஸ் போடலாம் தானே நண்பர்களே...!!!

      அந்த சைஸில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கு....

      Delete
    5. உண்மை. .உண்மை. .

      Delete
    6. ஏதாவது ஒரு இதழ்..இரண்டு இதழ் எனில் ஓகே தான் டெக்ஸ் .ஆனால் அதுவே என்றால் நோ தான்..

      மேலும் அந்த சைசில் செயலர் சொன்னபடி எழுத்துருக்கள் பெரிய சைஸில் இருந்தால் நோ ப்ராபளம்.இல்லையெனில் ..:-(

      Delete
    7. பாக்கெட் சைஸே சாஸவதம் ஆக்க முடியாது; அதில் எனக்கும் உடன்பாடு இல்லை... ஒன்றே ஒன்றே கண்ணே கண்ணுனு வருடம் ஒன்று வரட்டும் என்பதே என் விருப்பம்...

      நிலவொளியில் நரபலி 3புத்தகங்கள் வாங்கி எல்லா இடங்களிலும் கண்ணில் படும்படி வைத்து உள்ளேன்...

      Delete
    8. வருடம் ஒன்று ஓகே.
      +12345

      Delete
  42. காதில் பூ சுற்றும் கதைகளை நிறுத்த வேண்டாம் தொடர்ந்து கருப்பு வெள்ளையிலாவது வழங்குங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மறுபதிப்புகள் தற்பொழுது வரும் அளவிலேயே தொடர்ந்து வரட்டும். மற்ற வெளியீடுகள் ரெகுலராக ஒரே பாணியில் வரட்டும் பக்கங்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும் ரெகுலர் அளவிலேயே வரட்டும். இந்த இரண்டு அளவுகளைத் தவர்த்து பாக்கெட் மற்றும் பெரிய சைசில் வருவதை தவிர்த்து விடலாம்.

      Delete
  43. உறங்கி எழந்து குளித்து முடித்து ஆசையுடன் பதிவை படித்து இங்கே இந்த விடி காலையில் கமெண்ட்ஸ் போட்டால் நூறாவதாக வருகிறேன் ..


    என்ன கொடுமை சரவணன் சார் இது ..:-(

    ReplyDelete
  44. இம்மாத இறுதியில் தொடர்ச்சியாய் ஆயுத பூஜை & காந்தி ஜெயந்தி விடுமுறைகள் வரவிருப்பதால் - அக்டோபர் இதழ்களை அதற்கு முன்பாகவே உங்களிடம் ஒப்படைக்க இயன்ற மட்டிலும் முயற்சிப்போம் ! தொடரும் அடுத்த சில நாட்களில் 'தம்' பிடித்துப் பணியாற்றினேன் என்றால் - செப்டெம்பரில் அக்டோபர் நிச்சயமாய் நிஜமாகிடும் !! ஜெய் புனித மனிடோ !!



    ###########


    வாரே வாவ்....

    அழகான செய்தி...,


    அருமையான செய்தி....,


    அட்டகாச செய்தி.....,


    அமர்க்களமான செய்தி....,


    அசத்தபோகும் செய்தி.....




    ReplyDelete
    Replies
    1. தலீவரே.. தீபாவளி Oct 15ம் தேதி வருது.. புக்கெல்லாம் இந்த மாசமே நாலு நாளுக்கு முன்னேயே வந்துருச்சுன்னா, அப்புறம் நம்மளைத்தான் தீபாவளி பலகாரம் பண்ண சொல்லுவாங்க... உசாராயிக்குங்க...

      Delete
    2. கரூராரே.....இருக்கும் ஒரு வழி இருக்கு....

      செப்டம்பரில் அக்டோபர் வந்த மாதிரி அக்டோபரில் நவம்பரை கொண்டு வந்துருவோம் ...


      ஆசிரியர் சார் ரெடியா....:-))

      Delete
    3. சூப்பரே.
      😍😍😍😍😍

      Delete
  45. இரத்த படலம் ...


    மொத்த சாகஸ பயணத்தையும் படித்து முடித்த அரைமணிநேரத்தில் இதை எழுதுகிறேன்.நீங்கள் சொன்னது போல் இனிமேல் இதில் பாரட்ட ஒன்றுமில்லை.முதல் ஒரு நாள் முதல் பத்து பாகமும் ..,சிறிது இடைவெளி விட்டு அடுத்த எட்டு பாகமும் என ஒரு நாளும் என்னை வேறு உலகிற்கு அழைத்து சென்ற உங்கள் அனைத்து குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    கடைசி பாகத்தின் ,கடைசி பக்கத்தில் ,கடைசி பாராவில் ..,"நிம்மதி நிலைக்கட்டும் ஜேசன் " என்று முடித்தீர்களே ..அப்போது என் கண்களில் விழுந்த கண்ணீர் தான் உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியும் ,பாராட்டுகளும் .உங்கள் மொழிபெயர்ப்பு குழுவினருக்கு எனது ஸ்பெஷல் பாராட்டுகள் .


    எப்பொழுது ஓய்வு கிடைத்தாலும் இப்பொழுதெல்லாம் உடனே தொலைக்காட்சியையும் ,செல்போனையும் நோண்டி கொண்டு இருக்கும் நான் இரத்தபடலம் கைக்கு கிடைத்த இரண்டு நாட்களும் முழுவதுமாக செல்போனை சுவீட்ச் ஆப் செய்தும் ,தொலைகாட்சி பெட்டியை கண் நோக்காமல் இருந்ததும் தான் உங்கள் உழைப்பிற்கு என்னால் கொடுக்க முடிந்த மரியாதை .

    இந்த இதழில் ஏதாவது குறைகள் தென்பட்டால் குறையை கண்டுபிடித்து சொன்னால் பாராட்டுக்கள் என்று சொன்னீர்கள் .எனக்கு அந்த பாராட்டுகளே தேவையில்லை..


    ##########



    என்னடா இரத்த படல வண்ண இதழ் அதற்குள் வந்து விட்டு விமர்சனமும் போட்டுவிட்டானே என்று ஆச்சர்ய பட வேண்டாம் நண்பர்களே..பல வருடங்களுக்கு முன் அந்த கறுப்பு வெள்ளை இரத்த படல இதழை படித்து விட்டு இரண்டு பக்கத்திற்கு விமர்சனம் செய்து எழுதி ..அடுத்த இதழில் சுருக்கமாக பிரசுரமான எனது அன்றைய வாசகர் கடிதமே இது ..

    இப்படி பட்ட காவிய இதழான இரத்த படலத்தின் வண்ண மறுபதிப்பிற்கு பதிவு செய்து விட்டீர்களா...?

    ReplyDelete
    Replies
    1. தலீவரே...அட்டகாசம்.

      Delete
    2. பின்றீங்க தலீவரே!

      எங்கத் தலீவர் - தங்கத் தலீவர்!

      Delete
    3. தலைவரே,செம,செம அசத்திறிங்க போங்க.

      Delete
    4. தலீவரின் ஆனந்த அனுபவத்தை
      அனைவரும் அடைந்திட உடனே
      இரத்த படலம் முன்பதிவு செய்யுங்கள்.

      Delete
  46. ///சேலத்து இரும்பு மனிதர் இதற்கான பிழைதிருத்தங்களைச் செய்து தந்து, எனது கேச இழப்பைக் கணிசமாய்க் குறைத்து விட்டிருக்கிறார் இம்முறை ! ///


    ஸ்பைடரையே திருத்திவிட்ட மாம்ஸ்க்கு வாழ்த்துகளோ வாழ்த்துகள்..! 😃😃😃

    ReplyDelete
    Replies
    1. வாவ்,வாழ்த்துக்கள் டெக்ஸ்.

      Delete
    2. பாராட்டுக்கள் சேலம் டெக்ஸ்.
      தொடரட்டும் நற்பணி.

      Delete
    3. வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பர்களே...!!!

      Delete
  47. இன்னிக்கு இவ்வளவுதானுங்களா?

    ReplyDelete
  48. ///இன்னிக்கு இவ்வளவுதானுங்களா///

    தவறான கேள்வி குருநாயரே!

    இந்த வாரத்துக்கு இவ்ளோதானுங்களா? ன்னு கேக்கோணும்! 😝

    ReplyDelete
  49. 'நிலவொளியில் ஒரு நரபலி' சைஸை ஒரு மாற்றத்திற்காக வேண்டுமானால் எப்பவாவது கொண்டுவரலாமே தவிர, இதை ரெகுலராக்குவதில் சிலபல சிக்கல்கள் இல்லாமலில்லை! ஷார்ப்பான ஓவியங்களும், குறைவான வசனங்களும் கொண்ட டெக்ஸ் கதைகளே இந்த சைஸுக்கு சரிப்பட்டுவரும் எ.எ.க!

    'ஒரு தலைவன் ஒரு சகாப்தம்' வெளியாகட்டும்... "இனிமே எல்லா டெக்ஸும் இதே சைஸுலதான் வேணும்"னு கேட்டு அழுது அடம்பிடிக்கிறோமா இல்லையா பாருங்க! :D

    ReplyDelete
  50. அன்புள்ள ஆசிரியருக்கு!
    புய்ப்ப கதைகள் கண்டிப்பாக வேண்டும். கால இயந்திரத்தில் பயணம் செய்து கடந்த காலத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஏற்படும் மகிழ்சி மற்றும் ஆத்ம திருப்த்தியினை கெடுத்து விடாதீர்கள் Please.

    ReplyDelete
    Replies
    1. +1 ...

      மேலும் இல்லாத அந்த பழைய இதழ்களை இப்போது புதிதாய் குறைந்த விலைக்கு வாங்கி கொண்டு இருக்கிறோம் சார் உங்களால் ...திரும்ப பழைய புத்தக கடைக்கு எங்களால் அலைய முடியாது ..வயசாயிட்டே போகுது வேற ...அப்படியே அலைந்து கண்டுபிடித்து வாங்கினாலும் ஓரு இதழை அரையாண்டு சந்தா அளவிற்கு பழைய புத்தக கடையில் விலை சொல்வார்கள் ..:-(

      Delete
  51. அன்புள்ள ஆசிரியருக்கு!

    எனது நீண்ட நாட்களின் கோரிக்கையின்படி புத்தகங்களின் பட்டியல் கிடைக்கப்பெற்றேன் நன்றி!.

    இதுவரை வெளிவந்த நமது இதழ்களின் பட்டியல்படி எனது இருப்புகளை சரிபார்த்து அதன் படி நம்பரிட்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும். இல்லாத புத்தகங்களை எப்படியாவது சேகரிக்க வேண்டும்.

    ReplyDelete
  52. டெக்ஸ் தற்போதைய size மட்டுமே நன்றாக உள்ளது, 20 ரூபாய்க்காக இன்னும் சிறிய அளவிலா ? Maxi size காலத்தில் அதைவிட பின் நோக்கிப் பயணமா ? வேண்டவே வேண்டாம் சார்...

    ReplyDelete
  53. //இம்மாத இறுதியில் தொடர்ச்சியாய் ஆயுத பூஜை & காந்தி ஜெயந்தி விடுமுறைகள் வரவிருப்பதால் - அக்டோபர் இதழ்களை அதற்கு முன்பாகவே உங்களிடம் ஒப்படைக்க இயன்ற மட்டிலும் முயற்சிப்போம் ! //
    சூப்பர் சார்,விடுமுறை தின கொண்டாட்டத்திற்கு தயாராவோம்.கூடவே அடுத்த வருஷ அட்டவணையும்,செம என்ஜாய் தான்.

    ReplyDelete
  54. சேலத்து இரும்பு மனிதர் இதற்கான பிழைதிருத்தங்களைச் செய்து தந்து, எனது கேச இழப்பைக் கணிசமாய்க் குறைத்து விட்டிருக்கிறார் இம்முறை



    ##########



    வலை மன்னனுக்கே வலை வீசிய டெக்ஸ் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ...:-)

    ReplyDelete
    Replies
    1. அடேய் அற்ப பதற்களே ன்னு ரெண்டு வாரமா விஜயராகவன் பொலம்பிட்டு இருந்ததற்கான காரணம் இப்பதான் தெரியுது.

      Delete
    2. சுந்தர்சார்...


      :-))))))

      Delete
    3. வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பர்களே...!!!

      நல்லதொரு வாய்ப்பை வழங்கிய ஆசிரியர் சாருக்கு பணிவான வணக்கங்கள்...

      சுந்தர்@ ஹா...ஹா...

      Delete
  55. // Hardcover-க்கு மட்டும் பட்ஜெட் இருந்திருப்பின், இன்னமும் மிரட்டலாய் இதழ் அமைந்திருக்கும் என்பது நிச்சயம்.//
    எப்பவும் பட்ஜெட்தான் இடைஞ்சலாக வந்து நிற்கிறது,இது போன்ற பெரிய வடிவிலான இதழ்களுக்கு ஹார்ட்பைண்ட் இருந்தால் இதழை பாதுகாப்பாக பராமரிக்கவும்,பார்த்து மகிழவும் செய்கரியமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை ரவி...

      என்னுடைய தலையில்லாப்போராளி முதல் காப்பி புரட்டி புரட்டி கசங்கி போய்... இம்முறை இன்னொன்று வாங்கி பாதுகாப்புடன் வைத்து உள்ளேன்... எனவே அடுத்த முறையில் இருந்து இந்த அளவிற்கு ஹார்டு பைண்டு அவசியம்...

      Delete
  56. // அட்டவணையினை 95% முடித்து விட்டிருக்கும் தருணத்தில் - இறுதி நிமிடக் கூட்டல் / கழித்தல்கள் அரங்கேறி வருகின்றன !//
    மிகவும் ஆவலுடன்,நல்லதொரு அட்டவணைக்காக.

    ReplyDelete
  57. I THINK IN 1972 IMAYATHIL MAAYAVI BOOK CAME WITH THANGA MEENGAL POCKET NOVEL AS A DIWALI GIFT.NADUNISI KALVAN ISSUE CAME WITH BEAUTIFUL COLOURFUL LAMINATED IRUMBUKAI MAAYAAVI MONTHLY CALANDER AS A NEW YEAR GIFT.

    ReplyDelete
  58. டெக்ஸின் சிறுகதை பவளசிலை மர்மம்.
    டெக்ஸின் குறு நாவல் பழிக்கு பழி.

    இரண்டையும் இணைத்து கொடுத்தால் ஒரு நாவல் படித்த திருப்தி கிடைக்கும்.

    இல்லையெனில் , ஒரு விருந்துக்கு போய், அப்பளத்தையும், பொரியலையும் மட்டும் சாப்பிட்டுவிட்டு , வந்த திருப்தியே கிடைக்கும் :-)

    வண்ணத்தில் டெக்ஸ், அதுவும் தலையில்லா போராளி மெகா சைஸில். ஆஹா அந்த அற்புதத்தை காண இன்னும் இரு வாரங்கள் காத்திருக்க வேண்டுமா!!!!


    ReplyDelete
    Replies
    1. 'ப.சி.ம + ப.ப' கோம்பினேசனுக்கு எண்ட வல்லிய ஆதரவும்!

      Delete
    2. ///டெக்ஸின் சிறுகதை பவளசிலை மர்மம்.
      டெக்ஸின் குறு நாவல் பழிக்கு பழி.

      இரண்டையும் இணைத்து கொடுத்தால் ஒரு நாவல் படித்த திருப்தி கிடைக்கும்.///

      ஞாநும் ஸ்ட்ராங்காயிட்டு கொடி பிடிக்கும் ..!

      Delete
    3. இரண்டிலும் செவ்விந்திய பெண் ஒருத்திதான் டர்னிங் பாயிண்டே...

      பட்டாசான காம்பினேசன்...

      மோர்குழம்பும் மாங்காய் ஊறுகாயும் போல...

      Delete
    4. // ஞாநும் ஸ்ட்ராங்காயிட்டு கொடி பிடிக்கும் ..!//
      நீங்க ஸ்டராங்கா காப்பிதானே குடிப்பிங்க.

      Delete
  59. செனா அனா ஜி@ அந்த கடற்குதிரை முத்திரைல சிலபல சந்தேகங்கள் இருக்கு... உப பதிவில் பார்த்து கொள்ளலாமா ஜி???

    ReplyDelete
  60. // நண்பர்களே.

    வணக்கம். கொஞ்சம் பயணம் ; கொஞ்சம் சொந்தப் பணிகள் ; நிறைய அக்டோபர் இதழ்களின் பணிகள் என்று எனது கடந்த வாரம் முழுமையாய் ஓடியிருக்க, வலைப்பதிவுப் பக்கமாய்த் தலைவைக்க சாத்தியமாகிடவில்லை !//

    காலை வணக்கம் சார் _/\_

    அப்பாடா இப்பவாச்சும் சொன்னீங்களே சார்

    நல்லவேளை தப்பிச்சீங்க
    இல்லாங்காட்டி இந்நேரம் காணவில்லைன்னு புகார் குடுக்க நம்மாளுங்க கிளம்பியிருப்பாங்க
    மிக்க நன்றி சார் _/|\_
    .

    ReplyDelete
  61. //அட்டவணையினை 95% முடித்து விட்டிருக்கும் தருணத்தில் - இறுதி நிமிடக் கூட்டல் / கழித்தல்கள் அரங்கேறி வருகின்றன ! //

    இதனையே சொல்லி சொல்லி ரெண்டு மாதம் கடத்திட்டீங்க சார்

    எப்படியும் தீபாவளிக்கு வரப்போகும் புத்தகங்களோடத்தான் அதனையும் கொடுக்க போறீங்க
    .

    ReplyDelete
  62. // டெக்ஸ் இதழ்களை தற்போதைய சைஸிலிருந்து - "நிலவொளியில் நரபலி" சைசுக்கு மாற்றுவதாயின் விலைகளில் சுமார் 20 ரூபாய் குறைய வாய்ப்பிருக்கலாம் //


    த போ சைஸ்ல எல்லா புத்தகங்களையும் கேட்டுட்டு இருக்கும்போது, இப்ப வந்து நீங்க
    நி ந னனு கேட்டுட்டு
    நல்லாவே இல்லீங்கோ

    சார் சார் தயவு செய்து அந்த எண்ணம் மட்டும் வேண்டாமே _/|\_

    .

    ReplyDelete
  63. Texன் முக்கிய கதைகளை மட்டும் கலரில், அதுவும் பெரிய சைசில் மட்டும் வெளியிட்டால் நமது ரசனைக்கும், கதைக்கும் நியாயம் செய்வது ஆகும். சுமாரான கதைகளை க. வெ.யில் , நி.நரபலி சைசில்வெளி யிட்டால் பாதகம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. leom : கதைகளின் முக்கியத்துவத்தை எவ்வித அளவுகோல்களை கொண்டு நிர்ணயம் செய்வது நண்பரே ? தேடல்களில் சகலமும் சிறப்பானவைகளாக இருக்க வேண்டுமென்பது தானே நம் அவாவாக இருக்க முடியும் ? அவ்விதமிருக்க - "இவையெல்லாம் சுமாரான கதைகள்" என்று நாமே முத்திரை குத்துவது சரியாகுமா ?

      Delete
  64. கண்டிப்பாக Dylan dog கதைகள் கலரில் வெளியிடப்பட்டால் மட்டுமே அந்த genre க்கு கதைகளனுக்கு நன்றாக இருக்கும்

    ReplyDelete
  65. // மெகா சைசில் முழு வண்ணம் என்பது HL # 1 ! சென்றாண்டின் 'தலையில்லாப் போராளி" தந்த உத்வேகத்தை நாம் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டோம் தானே ?! அதே மெகா சைசில் முழுவண்ணம் எனும் பொழுது இதழ் சும்மா மினுமினுக்கிறது ! //

    இதைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் சார்
    .

    ReplyDelete
    Replies
    1. Prabakar T : சார்...ஆசையிருக்கு அண்டத்தையே விலை பேச !! ஆனால் பர்ஸ்கள் மீதுமொரு கண் அவசியமெனும் போது அடக்கி வாசிக்க நேரிடுகிறது !

      Delete
    2. அதானே சார் நமக்கு மிகப்பெரிய தடையா இருக்கு.

      Delete
    3. Arivarasu @ Ravi : தவிர்க்க இயலாக் கட்டாயங்களுள் இது பிரதானமானதாச்சே சார் ?

      ஆனால் எனக்கொரு கனவுண்டு : நான் ரிட்டையர் ஆகவிருக்கும் ஆண்டினில் மட்டுமாவது இந்த பட்ஜெட் போடும் பாங்குகளைக் கடாசிவிட்டு ஒரு "ஆசைதீர அதகளம் செய்யும் பாணியைக்" கையில் எடுக்க வேண்டும் ! இஷ்டப்பட்ட சைஸ் ; இஷ்டப்பட்ட பக்க நீளங்கள் ; இஷ்டப்பட்ட கதைத் தொடர்கள் என்று ரகளை செய்திட வேண்டும் ஆண்டு முழுக்க !!

      Delete
  66. நிலவொளியில் நரபலி சைஸ் வேண்டாம் சார் ஓவியங்கள் சின்ன சைசாக்குவது கார்சனின் கடந்தகாலத்தோடு போகட்டும் வேண்டுமானால்
    EBF. CBF. திருவிழாக்களில் மட்டும்
    ( விற்பனைக்காக) முயற்சி செய்யலாம்

    ReplyDelete
    Replies
    1. செந்தில் சத்யா : அந்த சைஸ் வேண்டுமென்று நான் சொல்லவில்லை சத்யா ; விலை குறைப்புக்காக வாதாடும் நண்பர்களின் பொருட்டு அதெற்கென உள்ள நடைமுறை சாத்தியம் கொண்ட வழிமுறைகளை முன்வைக்க மாத்திரமே முனைகிறேன் !

      Delete
  67. பவளச்சிலை மர்மம்+வைக்கிங் தீவு மர்மம் காம்பினேஷக்கு என் ஓட்டு

    ReplyDelete
    Replies
    1. Senthil Madesh : பட்ஜெட்..பட்ஜெட்...!

      Delete
    2. வெல்கம் பேக் டூ கமெண்ட் செசன் சார்...

      உங்களின் பதிவு இன்றைய நாளை துவக்குது எனில் , பதில்கள் வாரத்தையே உற்சாகமாக ஓட்ட உதவுது...

      Delete