நண்பர்களே,
வணக்கம். கூப்பிடு தொலைவிற்கு அக்டோபர் நெருங்கியிருக்க, நாலில் மூன்று இதழ்கள் அச்சுப் பணிகள் நிறைவுற்று மினுமினுக்கின்றன ! And வழக்கம் போலவே கிராபிக் நாவலின் மீது மட்டும் சற்றே கூடுதலாய் கவனம் அவசியமாவதால் இன்றும், நாளையும் அதற்கென நேரம் ஒதுக்கித் தயார் செய்து, புதன் காலையில் உங்கள் கூரியர் பார்சல்களை அனுப்பிடுவதாகத் திட்டமிட்டுள்ளோம் ! நமது சர்வீஸில் - ஆயுத பூஜைக்கே தீபாவளி மலர் தயாராவது இது தான் முதல்முறை என்று சொல்வேன் !! அந்த என்னமோ போடா மாதவா moment #
இதோ - ஆண்டின் முதல் புது சாகசத்தோடு உட்ஸிடியின் பட்டாளம் உங்களைச் சந்திக்கத் தயாராகிடும் இதழின் அட்டைப்பட preview :
வழக்கம் போலவே ஒரிஜினல் டிசைனே நமது ராப்பராகியுள்ளது ; பின்னட்டை மாத்திரமே நமது கைவண்ணம் ! கதையைப் பொறுத்தவரைக்கும் - இது ஒரு முழுநீளக் கெக்கேபிக்கே தோரணம் என்று சொல்வதை விடவும், நகைச்சுவையாய்ச் சொல்லப்பட்டதொரு ஜாலியான adventure என்று சொல்லலாம் ! ஒரு முழுநீள சாகசம் + குட்டிக் கதைகள் என்ற ஆரம்ப நாட்களின் template இந்த இதழிலும் நடைமுறை காண்கிறது ! இதோ உட்பக்க டீசர் :
And இதோ - லயன் கிராபிக் நாவலின் இதழ் # 4-ன் அட்டைப்பட முதல்பார்வையும் !
இந்த இதழும் போனெல்லியின் கறுப்பு-வெள்ளை Le Storie வரிசையினைச் சார்ந்தது என்பதால் - வழக்கம் போலவே ஒரு மாறுபட்ட களத்தில்கதை அரங்கேறுவதைப் பார்த்திடலாம் ! "இது தான் கதையின் pattern " என்று எவ்வித வட்டத்தினுள்ளும் இந்தத் தொடரினை அடைக்க இயலாது என்பதே இதன் பிரத்யேகத்தனம் என்பேன் ! இம்முறையுமே நாம் இதுவரையிலும் பார்த்தேயிரா ஒரு setting ! இங்கிலாந்தின் வேல்ஸ் பிராந்தியமும், அங்கு மக்களின் வாழ்வாதாரமாய் இருந்து வந்த சுரங்கத் தொழிலும் தான் இந்த ஆல்பத்தின் ஜீவநாடி ! அந்த மண்ணில் அரங்கேறும் ஒரு படு வித்தியாசமான சாகசமே நமது அக்டோபரின் "கனவுகளின் கதையிது" ! பார்த்திட வேண்டும் - "க.க." எவ்விதம் score செய்கிறதென்று !!
So தமிழக அரசியலை விடவும் அதிரடியான புதுப் புதுக் கூட்டணிகளோடு வலம் வந்திடும் yet another month நம் முன்னே ! ஒரு கௌபாய் சாகசம் ; ஒரு கார்ட்டூன் ; ஒரு சூப்பர் ஹீரோ tale ; ஒரு கிராபிக் நாவல் என்று இம்மாத combo அமைந்துள்ளதைப் பார்க்கும் போது கேள்வியொன்று உதித்தது தலைக்குள்ளே ! இத்தனை variety என்பது இல்லாது - ஒரே நாயகரின் சாகஸங்களைத் தொடர்ச்சியாய் ஆண்டாண்டு காலமாய் வெளியிட்டு வரும் நிறுவனங்களின் வாசகர்களின் ரசனைகள் எவ்விதம் shape ஆகியிருக்குமோ ? என்பதே அந்தக் கேள்வி ! போனெல்லியையே எடுத்துக் கொள்ளுங்களேன் - மாதா மாதம் ஒரு TEX ; ஒரு ஜூலியா ; ஒரு மர்ம மனிதன் மார்ட்டின் etc..etc..என்று போட்டுத் தாக்கி வருகின்றனர் ! மெஜாரிட்டி வாசகர்கள் டெக்சின் ரசிகர்கள் என்ற போதிலும், இதர நாயக / நாயகியரின் ஆல்பங்களை வாங்குவோர் predominantly அந்தந்த ஹீரோக்களின் ரசிகர்கள் மட்டுமேவாம் ! நமக்கெல்லாம் ஒரு முக்கால்வாசி TEX சந்தாவினை எட்டிப்பிடிக்கவே இத்தனை ஆண்டுகள் பிடித்துள்ளது ; variety என்றில்லாது, மாதந்தோறும் ஒரே நாயகரை நாமும் தரிசிப்பதாயின் அது எப்படிப்பட்ட அனுபவமாக இருக்கக் கூடுமென்பீர்கள் guys ? யோசித்துத் தான் பாருங்களேன் ? And அப்படியே ஒரே நாயகரை 12 மாதங்களும் ரசித்திடுவதாயின் - நமது தற்போதைய அணிவகுப்பில் TEX தவிர்த்து வேறு யாரையெல்லாம் இதற்கெனத் தேர்வு செய்திட முடியுமென்பீர்கள் ? இது strictly சும்மா ஜாலிக்காண்டியான கேள்வியே என்பதால் ஜாலியாக மட்டுமே இதனுள் புகுந்திடலாமே ?
Looking ahead - 2018-ன் அட்டவணை பற்றி நிறையவே பில்டப் கொடுத்திருக்கும் நிலையில் மேற்கொண்டு பிட்டு போடும் வேலையைச் செய்யப் போவதில்லை நான் ! மாறாக - கேட்லாக்கின் முன்னட்டை first look-ஐ உங்களிடம் காட்டினாலென்னவென்று தோன்றியது !
ஒவ்வொரு வருடமும் இந்த அட்டவணைத் தயாரிப்பென்பது நமது DTP அணியை போட்டுப் பிழிந்தெடுக்கும் படலமே ! என்னளவிற்கு ஏகமாய் ரோசனைகள் செய்து முடித்த கையோடு - வரிசையாய் அத்தனை கதைகளின் பட்டியலையும் ; அந்நேரத்துக்கு எனக்குத் தோன்றியிருந்த பெயர்களோடு எழுதிக் கொடுத்து விட்டு, அவை ஒவ்வொன்றுக்குமான விளம்பரப் படங்களைத் தேடிப் பிடித்து தேற்றித் தந்தாக வேண்டும் ! சில சந்தர்ப்பங்களில் நெட்டில் படங்கள் சிக்கும் ; பல சந்தர்ப்பங்களில் படைப்பாளிகளைக் கதற கதற அழ வைத்துகாரியம் சாதிக்க வேண்டி வரும் ! அப்புறமாய் ஆரம்பிப்பது தான் ஒரிஜினல் குலை குலையா முந்திரிக்கா ஆட்டமே ! "இந்தக் கதைக்கு பெயர் சரியில்லை ; இந்தக் கதைக்கு சித்திரங்கள் சரியில்லை ; இந்தக் கதையே சரியில்லை" ; அய்யய்யோ - திட்டமிடலில் ஆண்டுமலரைக் காணோமே ? ; இந்த ஹீரோவே வேண்டாம் ; அந்த அம்மணிக்கு VRS கொடுப்போம் ; கிழிஞ்சது போ - பட்ஜெட் எகிறுது ; இந்தக் கதையைத் தூக்கி அங்கே போடு ; அதைத் தூக்கி தூர போடு ! " என்று நித்தமொரு 'ஆட்றா ராமா....தான்றா ராமா!!" கூத்து அரங்கேறத் துவங்கும். நான் காலையில் ஆபீசுக்குள் நுழையும் போதே 'இன்னிக்கு முழியாங்கண்ணன் என்ன செய்யக் காத்திருக்கானோ ?" என்ற பீதியோடே DTP அணி இருப்பதுண்டு ! இந்தாண்டு அட்டவணையின் வடிவமைப்பு முழுக்கவே கோகிலா தான் ! இதுவரையிலும் அரை டஜன் பிரிண்ட்களாவது போட்டிருப்போம் முழு அட்டவணையையும் - வண்டி மாற்றங்களோடு ! இப்போதைய நிலவரப்படி குறைந்த பட்சம் 4 புதியவர்களுண்டு - 2018-ன் பயணத்திற்கு ! அந்த நம்பர் கூடவும் செய்யலாம் ; குறையவும் செய்யலாம் - தீபாவளிக்கு மறுதினம் ஆன்லைனில் 2018-ன் planner-ஐ உங்களிடம் காட்டுவதற்குள்ளாக !
Maybe ஏதேனுமொரு வருஷம் மட்டுமாவது அட்டவணையின் திட்டமிடலை எங்கள்மட்டிற்குச் செய்து விட்டு - அதனை உங்களிடம் அறிவிக்காமலே ஆண்டைத் துவக்கிட்டால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன் !! மாதந்தோறும் கூரியர் டப்பாக்களுக்குள் என்ன இதழ்கள் உள்ளனவோ ? என்பதே தெரியாது காத்திருக்கும் சஸ்பென்ஸ் எத்தகையதாக இருக்குமென்று சொல்வீர்கள் guys ? காத்திருக்கும் புது இதழ்களின் அறிவிப்புகளைக் கொண்டே மாதத்தின் பாதிப் பதிவுகளை ஒப்பேற்றும் எனக்கு, முன்கூட்டிய அறிவிப்புகளில்லை எனும் பட்சத்தில் சமாளிக்கத் திணறிப் போய் விடும் என்பதே இதனில் எனக்குத் தட்டுப்படும் உடனடிச் சிக்கல் !! Again - இதுவும் ஒரு லூட்டிக்காண்டி சிந்தனை மாத்திரமே என்பதால் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாமே ? !
முன்னே கொஞ்சம் பார்த்தாகி விட்ட நிலையில் - பின்னேயும் கொஞ்சமாய் பார்வையினை ஓடச் செய்வோமா ? Moreso - சரியாய் 30 ஆண்டுகளுக்கு முன்பாய் இதே தருணத்தில் தான் - நானும், இன்றுவரைக்கும் உங்களில் பலரும் ஆராதிக்கும் இதழொன்று வெளியானதெனும் போது !! Oh yes - சாதனை படைத்த "லயன் சூப்பர் ஸ்பெஷல்" 1987-ன் தீபாவளிக்கு ரூபாய் பத்து என்ற விலையோடு அட்டகாசமாய் களமிறங்கி 30 ஆண்டுகள் ஓடிவிட்டன ! இன்றைக்கு ஆயிரம் ; இரண்டாயிரம் என்ற விலைகளெல்லாம் நமது அகராதியினில் சகஜமாகிவிட்ட நிலையில் அன்றைய பத்து ரூபாய் இதழுக்கு அப்படியென்ன craze இருந்திருக்க முடியுமென இந்தத் தலைமுறையைச் சார்ந்த புது வாசகர்கள் நினைத்திடக்கூடும் ! ஆனால் ஒரு ரூபாய்த் தாள்களுமே புழக்கத்தில் இருந்துவந்த அந்த நாட்களில் அதுவொரு அசாத்திய விலை - at least ஒரு காமிக்ஸ் இதழுக்கு !!
ஒரு ஞாயிறு காலையில் "இதுதான் விலை ; இதுதான் புக்" என்று மேக்கி நூடுல்ஸ் வேகத்தில் கிண்டிவிட்ட கையோடு பணிகளுக்குள் நான் மூழ்கிப் போனது நினைவுள்ளது ; ஆனால் எனது தாத்தாவோ பதறிப் போய் விட்டார் ! என்னிடம் தனது கலக்கத்தை நேரடியாய்க் காட்டாது - தைரியம் சொல்வது போல் அவர் நடந்து கொண்டாலும், உள்ளுக்குள் "பேரப் பிள்ளை ஏழரையை இழுத்து விட்டுட்டானோ !!" என்ற மிரட்சி மிகுந்திருந்ததை நானறிவேன் ! பயமெனும் தொற்று நோய் தான் சைக்கிள் கேப்பில் கிடா வெட்டி விடுமே ? ; என்னை மட்டும் விட்டு வைக்குமா - என்ன ? "ஆங்...அதுலாம் பாத்துக்கலாம் !" என்றபடிக்கே ஆபீசில் அவர் பங்குக்கு உடுக்கையடித்த சீனியர் staff பொன்னுச்சாமியைச் சமாளித்துவிட்டாலுமே - எனக்குள் அடிமட்டம் ; நடுமட்டம் மேல்மட்டம் என்று சகல மட்டங்களிலும் ரிக்டர் ஸ்கேலில் 8.0 நிலநடுக்கம் நேர்ந்தது போலொரு ஆட்டம் இருந்ததை இன்றளவும் மறக்க இயலவில்லை !
BATMAN ; ஸ்பைடர் ; ஆர்ச்சி ; மாயாவி ; இரட்டை வேட்டையர் ; நார்மன் என்று ஏகப்பட்ட ஸ்டார் நாயகர்களோடு துளி ரிஸ்கும் இல்லாது வண்டியோட்ட வாய்ப்புகள் சல்லிசாய் இருந்த நாட்களவை ! So இந்தக் குரங்கு பல்டி அடித்து மண்டையை புடைக்கச் செய்து கொள்ள முகாந்திரங்கள் இருக்கவில்லை தான் ! ஆனால் கைவசம் குவிந்து போய் விட்ட கதைகளை இது போலொரு தருணத்தில் 'ஏக் தம்மில்' காலி செய்யாது போனால் கடும் பண வறட்சிக்கு அது காரணமாகி விடுமோ என்ற பயமே என்னை இந்தக் கூத்துக்குத் தயாராக்கியது ! தொடர்ந்த மாதங்களின் ஒவ்வொரு நாளிரவுமே இப்போதும் எனக்கு நினைவில் உள்ளது ! நமது ஓவிய அணி முழு வீச்சில் + அச்சுக் கோர்க்கும் பணியாளர்களும் ஒவ்வொரு நாளிரவும் 2 மணி வரைக்கும் கொட்டாவிகளையும், கொசுக்களையும் போராடிக் கொண்டே பணியாற்றுவார்கள் ! நான் நள்ளிரவைத் தொடும் வேளைக்கு சாவகாசமாய் புரோட்டா ஸ்டால்களை தினமொன்றாய் படையெடுத்துவிட்டு, பணியாளர்களுக்கு பார்சல்கள் ஏற்பாடு செய்திடுவேன் ! அந்த 500+ பக்க ஸ்பெஷல் இதழுக்குப் பின்னே குறைந்த பட்சம் ஓராயிரம் புரோட்டாக்களாவது பதுங்கி கிடப்பது நிச்சயம் !! கம்பியூட்டர்கள் கிடையாது ; சகலமும் மனிதத் திறன்களின் பலன்களே எனும் பொழுது - அவர்கள் ஒவ்வொருவருமே ஆத்மார்த்தமான ஈடுபாட்டோடு களமிறங்கிடாவிடின் சர்வ நிச்சயமாய் அந்த இதழ் கரை சேர்ந்திருக்காது !
கதைச் சுருக்கங்கள் ; பிட் நோட்டீஸ்கள் என்று ஏதேதோ அந்த இதழின் teaser ஆகத் திட்டமிட்டது ; சுடச் சுட டிசைன் செய்தது ; டிசைனின் இந்தியன் இன்க் காயும் முன்பாகவே பிராசஸ் செய்து சிக்கிய சிக்கிய கலர்களிலெல்லாம் அவற்றை அச்சிட்டது என்று என்னென்னெவோ செய்தோம் இந்த "மெகா" இதழை சொதப்பாது காப்பாற்ற வேண்டுமென்ற முனைப்பில் !
அதை விடவும் இந்த ராக்கூத்துக்களின் பின்னணியில் வேறொரு காரணமும் இருந்தது ! வீட்டுக்குக் காலத்தோடு போய் விட்டால் எனது தாத்தா முழித்திருப்பார் ; ஏதேனும் கேள்வி கேட்பாரோ என்ற பயம் ! திருடன் கோணிப்பையைத் தூக்கித் திரியும் இரவு இரண்டு மணிவாக்கில் வீடு திரும்பினால் தூக்கக் கலக்கத்தில் அம்மா தான் கதவைத் திறப்பார்கள் ; சத்தமின்றிப் போய் படுக்கையில் விழுந்து விடலாம் ! அதே போல காலையிலும் "பிள்ளை 2 மணிக்குத் தான் வீடு திரும்பிச்சு ; தூங்கட்டும்" என்று தொந்தரவு செய்ய மாட்டார்கள் ! So தாத்தா வீட்டிலிருக்கும் அந்த சீக்கிரப் பொழுதுகளை நான் குறட்டை உலகில் கழித்து விடுவேன் ! ஒரு மாதிரியாய் உங்களது உற்சாக வரவேற்பு - ஆர்டர்களாக ; முன்பதிவுகளாக ஏஜெண்ட்களிடமிருந்து வரத் துவங்கிய பொழுது சன்னம் சன்னமாய் என் ஜீவன் திரும்பத் துவங்கியது !
அப்போதெல்லாம் யாருக்கும் கடன் என்ற பேச்சே கிடையாது ; முழுத் தொகையும் முன்பணமாய்க் கிட்டாது போனால் - "ரிஜிட்ட் " என்று அந்த ஊர் முகவரின் கடுதாசியை ஓரம் கட்டி விடுவேன் ! தினமும் காலையில் கடிதங்களைக் கையில் தொட்டுப் பார்க்கும் கணமே எனக்கு யூகிக்க சாத்தியமாகியிருக்கும் - "ஆங்..இது திண்டுக்கல் ஏஜெண்ட் கவர் ; கனமா இருக்கு ; LVB பேங்க் டிராப்ட் உள்ளே இருக்கும் ; இது கோவை முகவரோட லெட்டர் - அரிசி மணிகள் போன்ற எழுத்துக்களில் ஆர்டர் குறிப்பிடப்பட்டிருக்கும் ; IOB டிராப்ட் ரூ.3000 க்கு இருக்கும்" என்ற ரீதியில் !! கவர்களை உடைத்து, டிராஃப்டுகளை ஒன்றொன்றாய் வெளியே எடுத்து டோட்டல் போட்டு அவற்றை பேங்குக்கு எடுத்துப் போகும் போது மனசு றெக்கை கட்டிப் பறக்கும் பாருங்களேன் - Lufthansa வாவது ; ஏர் இந்தியாவாவது - விமானங்களெல்லாம் பிச்சை எடுக்க வேண்டிவரும் அந்த மானசீகப் பறக்கும் படலங்கள் முன்னே !
And இந்த ஸ்பெஷல் வெளியீட்டின் விலை வழக்கத்தை விடவும் 5 மடங்கு கூடுதல் என்பதால் கிட்டும் டிராஃப்டுகளின் கனமும் பன்மடங்கு ஜாஸ்தி என்பதால் தினமுமே காது வரை விரிந்து கிடக்கும் சிரிப்பு ! வழக்கமாய் பில்களுக்குப் பணம் கேட்டு வருவோர்க்கு அதிக அலைச்சல்களை உண்டாக்காது ஒரு மாதிரியாய்ப் பணம் தந்து விடுவேன் அந்நாட்களில் ! ஆனால் அந்த குறிப்பிட்ட அக்டோபர் மாதத்திலோ - அத்தனை பேருக்குமே இரும்புச் செருப்புக்கள் வாங்கிடும் அவசியத்தை ஏற்படுத்திவிட்டேன் - வங்கி கணக்கில் கணிசமாய்ப் பணம் இருந்துமே !! வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு லட்சத்துக்கு மேலான தொகை என்னிடம் இருப்பில் இருந்த அந்த சந்தோஷத்தை அத்தனை சீக்கிரத்தில் இழக்க மனமில்லை என்பதே அத்தனை பேருக்கும் தற்காலிகமாய் அல்வா கிண்டியதன் பின்னணி ! பில்களுக்கு மளமளவென்று பணம் கொடுத்து இருப்பைக் கரைத்து விடாமல் - பேங்க் பாஸ்புக்கை இலட்சத்திச் சொச்சம் என்ற மோன நிலையிலேயே கொஞ்ச நாட்களுக்காவது தொடரச் செய்ய நினைத்தது இன்றைக்கு டுபுக்குத்தனமாய்த் தோன்றுகிறது ! ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பான லோகத்தில் சகலமுமே வேறொரு விதமன்றோ ?
பலரின் அசுர உழைப்பின் பலனாய் ஒருவழியாய் இதழ் வெளியானது ; தட்டுத் தடுமாறியேனும் சொன்னதைச் செய்து விட்டேனென்ற குஷியில் சுற்றித் திரிந்தது ; நான் கவனிக்கவில்லை என்ற எண்ணத்தில் - பருமனான இதழைக் கையில் தூக்கிப் புரட்டிப் பார்த்தவாறே "பரவாயில்லேலே டா ராதாகிருஷ்ணா ? புக்க நல்லா போட்டிருக்கான்லே பய ? " என்று கேட்டபடிக்கே "ஆர்டர்லாம் நெறய வருதுலே ?" என்று வினவிய தாத்தாவை மிஷின் ஹாலிலிருந்து வேடிக்கை பார்த்தது என்று வாழ்க்கையின் சந்தோஷங்களையும், பாடங்களையும் ஒட்டு மொத்தமாய் உணர வழிதேடித் தந்த அந்த "சூப்பர் ஸ்பெஷல்" நாளை 30 years down the line நினைவு கூர்ந்து பார்க்கிறேன் ! வாழ்கைக்குத் தான் எத்தனை எத்தனை வர்ணங்கள் !!
மீண்டும் சந்திப்போம் guys - bye for now ! அந்த சூப்பர் ஸ்பெஷல் நாட்களில் நம்மோடு இணைந்திருந்த நண்பர்கள் இருப்பின், அவர்களது மலரும் நினைவுகளை பகிர்ந்திடலாமே ? Have an awesome weekend !
1sr
ReplyDeleteமுதலாவது...இரவு வணக்கம் நண்பர்களே....!!!
Delete1987...அந்த தீபாவளி மலரை நான் வாங்கியது திருச்சி இரயில் நிலையம் எதிரே இருந்த கடையில்... அப்போது நான் 8வது படித்து கொண்டு இருந்தேன். கடைக்காரர் அந்த தீபாவளி மலரை விற்க விரும்பவில்லை. வாடகை விட்டு சம்பாதிக்க நினைத்து இருந்தார்...நான் பிடிவாதமாக கேட்டு வாங்கியது...இன்னும் நினைவில் இருக்கிறது. அதை நான் தொலைத்த கதை...சேலத்தில் அரங்கேறியது. அது ஒரு நிலா காலம்... மீண்டும் வராது....
Deleteசெம Maran...
Deleteசேலத்தில் கொஞ்சம் சாக்கிரதையாத்தான் இருக்கனும் காமிக்ஸ் விசயத்தில்... ஹி..ஹி...
I was part time BE student at Guindy Engg College.I purchase this issue near T Nagar bus stand.
DeleteHai
ReplyDeleteலந்துட்டேன்
ReplyDelete3வது...
ReplyDeleteSuper 6
ReplyDeleteஈ. வி. 10க்குள்ளே வந்துட்டோம்ல!
Deleteஎம்மாம் பெரிய பதிவு
ReplyDeleteபடிச்சிட்டு வரோமுங்க சார்
.
வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே
ReplyDelete12👍
ReplyDeleteGood morning to all and happy Sunday
ReplyDeleteஅனைவருக்கும் ஞாயிறு வணக்கம்!
ReplyDeleteசிங்கத்தின் சிறுவயதில்!
சிங்கத்தின் ஸ்மால் வயதில் _/|\_
Delete.
உலகம் சுற்றிய சிங்கத்தின் சிறு வயதில்
Deleteசிங்கத்தின் சிறுவயதில்!
Deleteசிங்கத்தின் சிறு வயதில்...!!!
Delete(இந்தப் பதிவே அதானே என யாரோ சிவகாசில சொல்றாங்க...)
சிங்கத்தின் சிறுவயதில்!
Deleteசிங்கம் ஹே
Deleteசிறுவயசு ஹே
வேணும் ஹே ஹே..!!
தேவை சிங்கத்தின் சிறு வயதில்.
Deleteதேவை ஒரு சிங்கம் .....!
Delete// ஆயுத பூஜைக்கே தீபாவளி மலர் தயாராவது இது தான் முதல்முறை என்று சொல்வேன் !! //
ReplyDeleteவாவ்
சூப்பர் விஜயன் சார் _/\_
அப்படியே அந்த 2018 அட்டவணையையும் இதேமாதிரி அனுப்புங்க உங்களுக்கு புண்ணியமா போவும்
இவரு வருவாரா இல்ல அவரு வருவாரா
இவருக்கு கல்தாவா இல்ல அவருக்கு கல்தாவான்னு
சந்தா D யில் என்னதான் விசேசமிருக்கும்
சந்தா Eக்கு எக்ஸ்டிரா ஸ்லாட்டு வருமா
இப்படியெல்லாம்யோசிச்சு யோசிச்சு தலையில் பாதிய காணோமுங்க சார்
(யாராச்சும் ஏற்கெனவே அப்படித்தான்னு சொன்னீங்க பிச்சி பிச்சி ). _/|\_
.
//d இதோ - லயன் கிராபிக் நாவலின் இதழ் # 4-ன் அட்டைப்பட முதல்பார்வையும் //
ReplyDeleteநிஜங்களின் கதை மாதிரி இருக்குங்களே விஜயன் சார்
.
classic தீபாவளி இதழ்களை மறுபதிப்பு சாத்தியப்படுமா என ஏக்கத்தை ஏற்படுத்திவிட்டது மலரும் நினைவுகள். கூடவே பழைய நினைப்புதான் பேராண்டி என்ற வரிகளும் முன் நிற்கின்றன!
ReplyDeleteசார் அருமை..பின்னோக்கி போவத விட உலகத்தில் சுகமானது ஏதுமில்லை என ோங்கி உரைக்கும் பதிவு..எல்லா கலரும் ஜிங்குச்சா....அட்டைப் படங்கள் அனைத்தும் அருமை....அடுத்த வாரம் தலையில்லா போராளி சைசுல..கலருல..ெக்ஸ் ..இதுவும் அட்டகாசமே , நாளை மலரும் தினங்களும்.
ReplyDeleteஇதழ்கள் தெரியாமல் காத்து இருப்பது ஒரு சுகம் தான். அதையும் முயன்று பார்க்கலாம் ஆசிரியரே...
ReplyDeleteஒவ்வொரு மாதமும் வர, நான் விரும்பு நாயகர் - ஜானி...அப்புறம்...வேதாளர்...
Delete10 ரூபாய் விலையில் ஒரு பொக்கிஷம் ஆனால் 10 ரூபாய் என்பதால்
ReplyDeleteஎன் அம்மாவால் எனக்கு வாங்கித் தர முடியவில்லை அன்றிலிருந்து இன்று வரை அந்த பொக்கிஷத்தை கண்ணால் கூட என்னால் காண முடியவில்லை என்பது மிக மிக வேதனையான விஷயம் இன்றைக்கு
ரூ 2350 விலையிலான இரத்தப் படலத்தை கூட முகமறியா நண்பர்கள் எனக்கு பரிசளிக்கிறார்கள் அது மிகவும் சந்தோஷம் சூப்பர் ஸ்பெஷல் என்றும் என் கனவில் நிழலாடி கொண்டிருக்கும்
லயன் சூப்பர் ஸ்பெஷல் ஒரு மறக்கவியலா ஞாபகம். 1993 மே மாதம் வரை நான் பொக்கிஷமாய் வைத்திருந்த ஒரே தமிழ் காமிக்ஸ்.
ReplyDelete1987ல் வாங்கிய நாள் நன்றாய் ஞாபகம் உள்ளது. தீபாவளிக்கு முன் தினம் - காலை சிற்றுண்டி ஒரு டீ நகர் உஸ்மான் ரோட் ஓட்டலில் உண்டபின் வாசலில் இருக்கும் புத்தகக்கடையில் பத்து ரூபாய் கொடுத்து வாங்கியது. அப்போது நான் BATMAN ரசிகன் என்பதால் தமிழிலும் BATMAN கதைகள் படிப்பது மற்றும் வண்ணத்தில் வந்த லக்கி லூக் என்று மகிழச்செய்த இதழ்.
பின்னர் படித்துக்கொண்டே அப்பாவின் காரில் திருச்சிக்கு தீபாவளி பயணம். Oh those days ..!
லக்கி கதையை படித்து விட்டு அடுத்த ஐந்தாண்டுகள் எந்த ஹோட்டல் சென்றாலும் க்ரீம் கேக் மற்றும் ஹாட் சாக்லேட் குடித்துக் கொண்டிருந்தேன் :-) ஹா ஹா ஹா !!
////லக்கி கதையை படித்து விட்டு அடுத்த ஐந்தாண்டுகள் எந்த ஹோட்டல் சென்றாலும் க்ரீம் கேக் மற்றும் ஹாட் சாக்லேட் குடித்துக் கொண்டிருந்தேன் :-) ஹா ஹா ஹா !!////
Deleteசூப்பா் 🔫🔫🔫🔫
///லக்கி கதையை படித்து விட்டு அடுத்த ஐந்தாண்டுகள் எந்த ஹோட்டல் சென்றாலும் க்ரீம் கேக் மற்றும் ஹாட் சாக்லேட் குடித்துக் கொண்டிருந்தேன் ///
Deleteஉங்க 'கொழுக் மொழுக் - அமுல்பேபி' ரகசியம் இப்பத்தான் புரியுது ராகவன் ஜி! :D
சூப்பர் ராக் ஜி...
Delete// - சாதனை படைத்த "லயன் சூப்பர் ஸ்பெஷல்" 1987-ன் தீபாவளிக்கு ரூபாய் பத்து என்ற விலையோடு அட்டகாசமாய் களமிறங்கி 30 ஆண்டுகள் ஓடிவிட்டன //
ReplyDeleteஉண்மைதான் விஜயன் சார்
இன்னமும் அந்த புத்தகத்தின் சாதனை
பீட் செய்யப்படவில்லை
.
சார் கையில் கிடைத்தததை வைத்து அன்று ஒரு தீபாவளி மலர் போட்ட நீங்கல் இன்று அதே போல் ஒன்றை போட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?! Kindly consider a கதம்ப குண்டு புத்தகம் ஒன்று please sir
ReplyDelete+111111
Deleteஅதில் ஒன்றிரண்டு நாயகர்கள் நமக்கு பிடிக்காமல் இருந்தாலும் கதம்ப புக்கிற்கு
அனைவரும் ஆதரவு கொடுத்தால் தான்
சேல்ஸ் எண்ணிக்கை எடிட்டரின் டார்கெடில் வரும்.
இதனுடன் சி.சி.வயதில் இணைத்து விடலாம்
வெறும் 500ரூ. வில் லிமிடெடட் எடிசனாக முயற்சித்துப்பார்கலாம் சார்.
Deleteஇதற்கு ஆதரவு தரும் நண்பர்கள்
+1 போடவும்.
நன்றி நண்பர்களே
+100000000
Deleteஎன்னுடைய ஏகோபித்த ஆதரவும்!
++11
Delete+1111111
Delete+12345678910
Deleteநல்ல யோசனை.
Delete+111111111
சரி
Deleteபழையதை நீங்கள் நினைவுகூர்வது எப்போதுமே ஒரு அழகுதான் எடிட்டர் சார்! அப்போது நீங்கள் அடித்த அந்தர்பல்டி வேலைகளை விவரிக்க விவரிக்க - அதை நாங்கள் படிக்கப்படிக்க - இத்தனை வருடங்களுக்கப்புறமும் - எங்கள் நெஞ்சில் 'திக்திக் தடக்தடக்' ஸ்பஷ்டமாய் உணரமுடிகிறதே... அதை என்னவென்று சொல்ல?!!
ReplyDeleteஅதுவும் நீங்கள் நினைவுகூர்வது எங்களுக்கும் அந்நாளைய கனவு இதழான 'தீபாவளி சூப்பர் ஸ்பெஷல்' பற்றியதென்றால் - எழுந்திடும் உணர்வுகளை கேட்கவும் வேண்டுமா?!!
அன்றைய நாட்களில் கடையில் இந்த சூப்பர் ஸ்பெஷலை வாங்கிக்கொண்டு அதன் அட்டைப்பட அழகையும், புத்தகத்தின் தடிமனையும், பிரம்மிப்போடு ரசித்த அந்தக்கணங்களையும் 30 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே அதிர்வலைகளோடு இப்போதும் உணரமுடிவது - ஒரு ஆச்சரியமான விசயம் தான்!
ஓ... மனம் ரெக்கை கட்டிப் பறந்த அந்த நாட்கள்தான் எத்தனை ரம்மியமானவை!!!!
////variety என்றில்லாது, மாதந்தோறும் ஒரே நாயகரை நாமும் தரிசிப்பதாயின் அது எப்படிப்பட்ட அனுபவமாக இருக்கக் கூடுமென்பீர்கள் guys ? யோசித்துத் தான் பாருங்களேன் ? And அப்படியே ஒரே நாயகரை 12 மாதங்களும் ரசித்திடுவதாயின் - நமது தற்போதைய அணிவகுப்பில் TEX தவிர்த்து வேறு யாரையெல்லாம் இதற்கெனத் தேர்வு செய்திட முடியுமென்பீர்கள் ?////
ReplyDeleteஇதென்ன சந்தேகம்!
The man who shoots faster than his own shadow ன்னு டாக்புல்லே சொல்லீட்டாருல்ல! (டீசா்ல)!!
அப்புறம் என்னங்க சாா்!
லக்கிலூக் தான் ஒரே தோ்வு!!
பஞ்சாயத்து முடிஞ்சுது!
யாரும் இதைப் பத்தி பேசப்படாது!
OK வா!!
ஆசை...தோசை..அப்பளம்...வடை...பொங்கல்... பாயாசம்...
Deleteஅம்புட்டும் எனக்கா
Deleteஎளிதில் தற்போது கிடைக்காத சூப்பர் ஸ்பெஷலை மறு பதிப்பில் வண்ணத்தில் வெளியிடலாமே. முடிந்தால் வண்ணத்தில் .விளையாட்டு வயதில் உங்கள் சிரமம் அறியாது தொட்டு படித்து பின் இழந்து விட்டேன். உங்கள் உணர்வுகளை மனதில் கொண்டு மீண்டும் அதை படிக்க வழியிருக்கா சார்?
ReplyDeleteமாடஸ்டி கதை ஒன்னு அதுல இருக்கன்றதுக்காக எப்டியெல்லாம் நைஸ் பண்றீங்க நண்பரே!
Delete10 நாயகர்கள் மொத்த மாக வந்த புக் இதுவரை வேறு வரவில்லை நண்பரே. அதிரடி பொடியனில் பில்லி தான் ஹீரோ என நினைத்திருந்த காலம் அது
Deleteரா.இ
Delete+100000000
இந்தப்பதிவில் படமாகப் போட்டிருக்கும் அந்த 'தீபாவளி சூப்பர் ஸ்பெஷல்' புக்குகளை எந்த பீரோவுல வச்சிருக்கீங்க எடிட்டர் சார்? ச்சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜுக்குத்தான்! ;)
ReplyDeleteபுது கதை டைட்டில் 2018க்கு
Delete"அா்த்த ராத்திாியில் ஈவி"
எத்தனை நாளுக்குத்தான் ஆவினே வைக்கறது!!
@ மிதுன்
Delete:)))))
ஆனா இது ஏதோ மலையாளப்பட டைட்டில் மாதிரியில்ல இருக்கு? சரி, இருந்துட்டுப் போவட்டும், ஹிஹி!
இது தெரியாதா ஈ வி.அவரது ஆபீஸ்
Deleteஅறையில் உள்ள கண்ணாடி அலமாரியில்
அழகாக ஆயிரத்துக்கும் அதிகமாக
அடுக்கி வைத்துள்ளார்.
ஈ வி சிவகாசிக்கு ரெண்டு டிக்கட்
போட்றுவமா கோணிப்பை ரெடி.
அப்பாடா வந்தாச்சு சாமி!
ReplyDeleteகாமிக்ஸ் காதலர்களுக்கு சலாம் வைக்குறேங்கோ?!!!!!
ReplyDelete12 மாதங்களுக்கும் ஒரே கதாநாயகர் எனில் என் சாய்ஸ் மர்ம மனிதன் மார்ட்டின் தான் . 2018 லிஸ்ட் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். :)
ReplyDeleteஆகா சந்தோசம். நன்றி நண்பா. மார்ட்டின் தான் என் சாய்சும்.
Deleteஆகா சந்தோசம். நன்றி நண்பா. மார்ட்டின் தான் என் சாய்சும்.
Deleteஎனது விருப்பமும் மார்டின் தான்.
Deleteஎனது விருப்பமும் மார்டின் தான்.
Deleteஎனது விருப்பமும் லா மார்ட்டின் லா.
Deleteஇது மலேசிய தமிழ் லா.
என்னுடைய விருப்பமும் மார்ட்டின் தான்....
Deleteமார்ட்டின் வரலாம்
Deleteஎங்கண்ணு எஞ்செல்லம்
Deleteமணிக்குட்டி
நா நெனச்சத அப்டியே சொல்றப்பா
////எனது விருப்பமும் லா மார்ட்டின் லா.////
Deleteஹாஹாஹா 😂😂😂
12 மாதமும் கருப்பு கிழவியை வண்ணத்தில் போடலாம். அந்த உண்மையான பழைய திகில் சுவை இப்போது எதிலும் இல்லை
ReplyDeleteமறுபதிப்பில் இரண்டு மூன்று ஸ்லாட் ஒதுக்கலாம்.
Deleteகறுப்புக்கிழவி
Deleteகதை கேட்க நாங்க ரெடி.
கேட்லாக்கின் முன்னட்டை - பட்டையைக் கிளப்புது எடிட்டர் சார்! அணல் தெறிக்கிறது தல + கார்ஸன் போஸ்களிலும், தெறிக்கும் வண்ணங்களிலும்! ஆவலோடு காத்திருக்கும் - உள்பக்கங்களையும் தரிசித்திட!
ReplyDeleteLGNன் அட்டைப்படம் - இந்த அட்டைப்படத்துக்காகவே விற்பனையில் சக்கைப்போடும் என மனதுக்குள் ஏதோவொரு பிராணி ஆரூடம் சொல்கிறது!
'ஒரு ஷெரீப் சிப்பாயாகிறார்' முன்னட்டை ஓகே ரகம்! ( அந்த டெலஸ்கோப் குறியீடு மறைக்காமல் இருந்திருந்தால் இன்னும் செமயாக இருந்திருக்கும்!)
டியர் எடிட்டர் சார்,
ReplyDelete10 ரூபாயா என்ற மிரட்சியும், வாங்கியவுடன் அடைந்த ஆச்சர்யம், திகைப்பு , மகிழ்ச்சி கலந்த வாய் கொள் ளாத சிரிப்புடன், தூங்கும் பொழுதும் அருகில் வைத்து தூங்கிய நாட்கள் அவை.
உங்களுக்கும், எங்களுக்கும் இவ்வளவு
ஸ்பெஷலான ஒரு இதழை மறுபதிப்பு கொண்டு வர முயற்சியுங்களேன். ஒரு வேண்டுகோள் தான். நடைமுறை சாத்தியக்கூறுகளை தாங்கள் மட்டுமே அறிவீர்கள்.
வரும் வருட அட்டவணைக்கு தீபாவளி வரை காத்திருக்க வேண்டுமா? அடுத்த வார விசேஷங்களை முன்னிட்டு ஒரு ட்ரைலர் காட்டுங்களேன் சார்!!
Deleteஆமாம் சார்!!!
Deleteஏதோ கொஞ்சம் மனசு வைங்க சார்!!!@!
ஆமாம் சார்!!!
Deleteஏதோ கொஞ்சம் மனசு வைங்க சார்!!!@
இந்த லயன் சூப்பர் ஸ்பெசல் வெளிவந்த 1987ல் கிராமத்து காட்டில் ஜாகை, காமிக்ஸ்னா என்னா்னு நான் உணரவே இன்னும் 4வருசடம் பாக்கி இருக்கு...
ReplyDeleteகடவுள் அருளால் நல்ல நண்பர் ஓருவரால் நல்ல காப்பியாகவே, வெளிவந்து 10ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கப் பெற்றேன்.... அதை அடைந்த அனுபவத்தை ஏற்கனவே இங்கே 2015ல் போட்டு செம "பேமஸ்" ஆகிப் போனேன்...
இப்போதும் வலிக்குது முதுகு... நாளை அதை தேடி எடுத்து எடிட் செய்து போடுகிறேன்...
ம் தல வந்துட்டாரு!!
Deleteஅலாா்ட்!! அலாா்ட்!!
நல்லா நினைவிருக்கு டெக்ஸ். அப்ப உங்க கூட அவ்வளவா பழக்கமில்லை. சாதாரண சொற்பிரயோகத்துக்காக உங்களுக்கு விழுந்த தர்ம அடி ஞாபகத்துல இருக்கு. ஆனா அந்த சர்சசை அதை தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படிக்க ஆரம்பித்து உங்கள் எழுத்துகளுக்கு அபிமானியாகப்போனேன். அதற்குப் பிறகு உங்களை ஆகஸ்டில் சந்தித்தது, பேசியது, சேந்தம்பட்டி நண்பரகளுடன் பழகியது எல்லாம் மனதில் பசுமையாக உள்ளது.
Deleteஅந்த அழகான அனுபவங்களையெல்லாம் இங்கே பிட்டு பிட்டா ஞாபகப்படுத்தி பதிவிட முயற்சியுங்க டெக்ஸ் விஜய்! ;)
Deleteமறுபடியும் மொதல்ல இருந்தா.... தலை தெறிக்க ஓடிங்...
Deleteஹலோ என் காதுல ஏதோ பிட்டு படம்னு
Deleteவிழுந்துச்சு.
டெக்ஸ் போல் மாதா மாதம் மார்ட்டின் கதைகள் வந்தால் நான் மிகவும் மகிழ்வேன்!!!!.
ReplyDeleteஅது என்னமோ தெர்ல
Deleteமார்ட்டின் எப்ப பப்ளிஸ் ஆவாருங்கிறதே மர்மம் மர்மம்
////Maybe ஏதேனுமொரு வருஷம் மட்டுமாவது அட்டவணையின் திட்டமிடலை எங்கள்மட்டிற்குச் செய்து விட்டு - அதனை உங்களிடம் அறிவிக்காமலே ஆண்டைத் துவக்கிட்டால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன் !! மாதந்தோறும் கூரியர் டப்பாக்களுக்குள் என்ன இதழ்கள் உள்ளனவோ ? என்பதே தெரியாது காத்திருக்கும் சஸ்பென்ஸ் எத்தகையதாக இருக்குமென்று சொல்வீர்கள் guys ? ////
ReplyDeleteசெமையா இருக்கும் சார்! எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறும்... கூரியர் பெட்டிகளைத் திறக்கும்போது வெளிப்படும் 'லப்டப்' சத்தம் தறிப்பட்டறைகள் ஏற்படுத்தும் சத்தகங்களையும் மிஞ்சிவிடும்! நம் லயன் அலுவலக நண்பர்கள் மற்றும் சகோதரிகளுக்கு 'புத்தகத்தின் தலைப்பைச் சொல்லாவிட்டால் நடக்கிறதே வேற'னு தொலைபேசியில் நிறைய மிரட்டல்கள் வரக்கூடும்... போலியான அட்டைப்படங்கள் தயாரிக்கப்பட்டு "secret revealed -இதுதான் இந்தமாத அட்டைப்படங்கள்"னு FBலயும், வாட்ஸ்அப் க்ரூப்புகளிலும் பலப்பல போலி 'இங்கே க்ளிக்'குகள் வலம் வரக்கூடும்... இப்படி இன்னும் பல கூத்துகள்!
ஒருமுறை முயற்சித்துத்தான் பாருங்களேன் எடிட்டர் சார்?
////ஒருமுறை முயற்சித்துத்தான் பாருங்களேன் எடிட்டர் சார்?////
Deleteமீ .... டூ .....
அப்படியே எங்க கண்ணுல அடுத்த மாத
Deleteஇதழ்கள் என்ற கடைசி பக்க விளம்பரம்
கண்ல படாம பார்த்துக்கங்க
இப்டி போடுவாரு எடி
Deleteஇந்த மாச இதழ்கள் என்ன ன்னு
சொல்றவங்களுக்கு
ஈரோட்ல ஊத்தாப்பம்+1982 வந்த ஒரிஜினல் பரிசு.
சனிக்கிழமை பதிவு வர வரைக்கும் ரிப்ரெஷ் பட்டனை அழுத்தி அழுத்தி பாத்துகினு இருக்கிறது தான் எங்க பொழுது போக்கு. சனிக்கிழமை ஆனாலே அப்படிய பரபரன்னு்இருக்கும். அப்படியே கையெல்லாம் நடுங்கற மாதிரி இருக்கும். புது பதிவை பாத்திட்டா தான் படபடப்பு அடங்கும். பதிவைக் கூட படிக்காம சர்ரருனு ஸ்க்ரோல் பண்ணி கீழே கமென்ட்ஸ் பாத்துட்டு யாரும் கமென்ட் போடாம் இருக்கும் போது பட்டுனு 1 இல்ல 2 ன்னு போட்டுட்டா கிடைக்கும் பாருங்க ஒரு ஆத்ம திருப்தி.
ReplyDeleteஅப்பறமா ஒரு டீயோ்காப்பியோ போட்டு எடுத்துட்டு வந்து நிதானமா குடிச்சுகிட்டே பதிவை படிக்கிற சுகம் இருக்கே. அடடா..பேரின்பம்.
@ MP
Deleteஅமெரிக்காவுல டீயோ காப்பியோ குடிச்சுக்கிட்டுத்தான் பதிவப் படிக்கறீங்கன்னா - நம்பமுடியவில்லை!
இதுக்கு பேசாம நீங்க தமிழ்நாட்டுலயே பதிவப் படிச்சிருக்கலாம்! :P
படிக்கறது தெளிவா புரியனுமில்ல. அதான் டீ.
Deleteவணக்கம் MP சார்!!
Delete///படிக்கறது தெளிவா புரியனுமில்ல. அதான் டீ.///
Deleteஅதாவது, ஏற்கனவே மசமச'னு தெரியுற கண்களை கொஞ்சம் தெளிவுபடுத்த - டீ! அதானே?!! ;)
ஈ வி கம்பேனீ சீக்ரெட்ட சொல்லக்கூடாது
Deleteஇங்க பாருங்கப்பா
Deleteஎப்டி எப்டியெல்லாமோ
டீ குடிக்கிறாய்ங்கே
நம்ப கதயே வேற
ஐயா மொதுவா எந்திரிச்சி
(ஞாயத்து கெழமல்ல)
ம்ம்ம் ஒரு பன மரத்த புடுங்கி அத வெச்சி பல்ல வெளக்கு வெளக்குன்னு வெளக்கீ துப்பிட்டூ (இதெல்லா டீ குடிச்சாப்பெறமாட்டி தானாக்கும்)
ஈ ன்னு கறிக்கட பாய்ட்ட போயி
தண்ணீ ஏத்தறதுக்கு முந்தின கறிய வாங்கி ருசி சாகாம இருக்க கருப்பு பைல கரித்துண்டோட
போட்டுட்டு வந்தாப்பரமா
சக தர்மினி போட்டுத் தாக்கற
வெந்நி டீய (2வது டீ)😢😢😢😢
மந்தகாசமா குடிச்சி களெச்சி
அப்பறங்காட்டி குளிச்சி(பேருக்கு)
இட்லிக்கி கறிக்கொழம்ப தொவச்சி அடிச்சாப்பறமா
எரை எடுத்த மல பாம்பாட்டமா
நெளிச்சிக்கிட்டு
செல்லு போன (கிர்ர்ர்ர்ர்ர்-ச்சார்ஜர போட்டப்பறமா)
நோண்டி நோண்டி பாத்த உட்ட கமெண்ட டைப்பு டைப்புன்னூ
வெரலு தேய அடிச்சா
சாயங்காலமாயிருக்கும்
அப்பறம் டீ வி.......,,,,,,,
:)))))))
Deleteவார்த்தை வெளாட்டுல பின்றீங்க ஜனா ஜி! செம்ம!! :))))
இந்தாங்க ஈ வி ஒரு செல்ல கிஸ்
Delete// அந்த அம்மணிக்கு VRS கொடுப்போம் //
ReplyDeleteஓ...அப்ப அந்த அம்மணி அடுத்த வருசம் கிடையாதா? 🏃🏃🏃
இளவரசி
Deleteஜூலியா
ஷானியா
இந்த மூவரில் யார்?
70 வருஷம் ஆனவங்களுக்கு முதல்ல VRS கொடுங்க
Deleteஹா...ஹா... நம்ம காமிக்ஸ்ல மிக மூத்த சாகசம் மாடஸ்தியுடையது தானே, VRSக்கு பொறுத்தமானவர் அவரை தவிர வேற யாரு இருக்காங்க....
Deleteஹலோ
Deleteஷானியா பிகர்
ஜுலியா அக்கா
மாடஸ்டி மேடம் ( அம்மணி)
சரியா
லயன் சூப்பர் ஸ்பெசல்.....
ReplyDelete*1990களின் ஆரம்பத்தில் லயன் காமிக்ஸ் படிக்க வந்து நாய்அலை பேய் அலை என அலைந்ததன் பயனாக பெரும்பாலான டெக்ஸ் புத்தகங்கள் கிடைத்தன. இப்போது ஓரிரு இதழ்களை கடையில் சுடச்சுட வாங்கும் அளவு ஒரு காமிக்ஸ் ரசிகனாக வளர்த்து(?) விட்டேன்.
*1994ல் சில மாதங்கள் கழித்து ரூபாய் 20க்கு லயன் சென்சுரி ஸ்பெசல் வரும் என தகவல் தெரிய ஆவலானேன். கடையில் 20ரூபாய்
கொடுத்து வாங்குவது இமாலய முயற்சி
என்னைப் பொறுத்து. அந்த சென்சுவரி ஸ்பெசல் புத்தகத்தை கடையில் வாங்கிய அன்று கிடைத்த திருப்தி, மகிழ்ச்சி இதுவரை
கிட்டியதில்லை. அந்த புத்தகத்தில் இதுவரை வந்த லயன் காமிக்ஸ்களின் பட்டியல் இருந்தது. அந்த பட்டிலை சரியாக சொன்ன 9பேருக்கும் பரிசு வழங்கப்பட்டு, அவர்களின் அட்ரஸ்சும் இருந்தது. அவர்கள் எனக்கு காமிக்ஸ்
ஜாம்பவான்களாக தோன்றினார்கள் .
*அந்த லிஸ்ட்ல கோடைமலர்86, தீபாவளி மலர்86, கோடைமலர்87, லயன் சூப்பர் ஸ்பெசல்87 (தீபாவளி மலர் 87என பிறகு தெரிந்து கொண்டேன்) என்ற வார்த்தைகள் நெஞ்சில மையம் கொண்டன. ரூபாய் 5க்கு இத்தகைய இதழா, இத்தனை கதைகளா என ஆச்சர்யம் அளித்தன. அவைகளை எப்படியும் தேடி
பிடிப்பது என முடிவு செய்தேன் .
*1994ல் +2 முடிவதற்குள் பெரும்பாலான
டெக்ஸ் கதைகளை சேர்த்து விட்டேன் . சில பழைய புத்தக கடையில் ,சில எக்ஸ்சேஞ்
முறையில் ,ஓரிரு புத்தகங்களுக்கு 10க்கும்
அதிகமாக புக் தந்து தான் வாங்கினேன் .
ஆனாலும் என்ன குட்டிக்கரணம் அடித்தும் அந்த கனவு இதழ்கள் 4ம் கண்ணால் பார்க்க கூட இயலவில்லை. இடையில் ஒரு நண்பர் மூலம் லயன் சூப்பர் ஸ்பெசல் படிக்க மட்டுமே முடிந்தது .
*அவ்வப்போது நண்பர் ஒருவர் சில தகவல்களை சொல்லி பயமுறுத்துவார், அதாவது இந்த
சின்ன சைஸ் மிக்ஸர் கட்டி விற்பவர்கள் எளிதாக உள்ளதால் கிழித்து விடுகிறார்கள்
என்பதுதான் அது . ஆனாலும் வேறு ஒரு
நண்பர் சொன்ன தகவல் ஓரளவு பொருந்தி
வந்தது....அதாவது இவைகள் விலை அதிகம் என்பதால் அச்சடிக்கும்போதே குறைவான எண்ணிக்கையில் தான் அடிக்கப்பட்டு இருக்கும் ,கொஞ்சம் பொறுமை வேண்டும் என்பது தான் அது . இடையில் ஒரு நண்பரின் தவறான வழிகாட்டலில் குறுக்கு வழியில் அடைவது என்ற வழியில் இறங்கி ஓரிரு நண்பர்களின் வெறுப்பை சம்பாதித்தது தான் லாபம்.
*நம்பிக்கை இல்லாமல் சோர்ந்திருந்த சமயத்தில் ஒரு நாள்..........
போன தீபாவளிக்கு இரும்பு நகர் இரவுக் கழுகு தீபாவளி மலர்களை பத்தி எல்லாம் தொடர்கட்டுரை போட்டார் அருமையா்இருந்துச்சு. வர வருடம் டெக்ஸ் 70. டெக்ஸோட டாப் டென் பத்தி வரிசையா போட்டு கலக்குவாரா?
ReplyDeleteநிச்சயமாக கலக்கிடலாம் மஹி ஜி...
Delete62nd
ReplyDeleteவணக்கம் சார், நலமா?
Deleteகேட்லாக்கின் அட்டை சும்மா தகதகவென தங்கமாய் ஜொலிக்கிறது. உள்பக்கங்களை நினைத்தால் தான் வயிற்றில் பூரான் ஊறுவது போல் ஒர் இனம் புரியாத பரபரப்பு .!!!!
ReplyDeleteமனதில் ஆசையும் ஆவலும் கிடந்து அடித்துக் கொள்கின்றன.!!!!!
அடுத்த வ௫டமாவது கதம்ப குண்டு ஸ்பெஷல் வ௫மா என்று மனசு கிடந்து அடித்துக் கொள்கிறது.!!!!
அடுத்த ஆண்டு கோடைமலர் த௫வதாகச் சொன்ன சிங்கமுத்து வாத்தியார் என்ன செய்யக் காத்தி௫க்கின்றாரோ?!!!!!
அடுத்த ஆண்டு ட்யுராங்கோ மற்றும் ஜெரமயாவுக்கு எத்தனை சிலாட்கள் ஒதுக்கப் பட்டுள்ளதோ?!!!!!
அடுத்த ஆண்டாவது இ௫ம்புக் கை மாயாவியின் வண்ண மறுபதிப்பு உண்டோ?!@!!!
அடுத்த ஆண்டு இளவரசி மாடஸ்டியின் பாக்கெட் சைஸ் வண்ண மறுபதிப்பு உண்டா!?!!!!
இன்னும் இன்னும் ஏராளமான சின்ன சின்ன ஆசைகள் மனதில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டுள்ளன.
என்னமோ போடா மாதவா?!!!!
///வயிற்றில் பூரான் ஊறுவது போல் ஒர் இனம் புரியாத பரபரப்பு .!!!! ///
Deleteஊற்ரா மாதிரியே இருக்கறவரைக்கும் பிரச்சினையில்லை! கடிக்கிறா மாதிரி இருந்ததுன்னா மனசு தான் காரணம்னு ஏகாந்தமா இருந்துடாம, சட்டுபுட்டுனு ட்ரெஸ்ஸை கழட்டி எதுக்கும் ஒருதபா செக் பண்ணிக்கோங்க சரவணன்! :D
ஈ வி
Deleteஅவரு அவத்து போட்டா
பட்டா பட்டி தான்
இல்லீங்களா சரவணே
(காப்பாத்திட்டோம்ல சரவணன)
LGN 4ன் அட்டைப் படம் சொல்லாமல் சொல்லிவிட்டது அதன் வெற்றியை.!!!
ReplyDeleteகதையும் சோடைபோகாது என்ற நம்பிக்கை நிறையவே இ௫க்கிறது எங்களுள்.!!!
பத்து ரூபாய் என்பது ஒரு மிடில்க்ளாஸ் குடும்பத்துக்கு சற்றே அதிகப்படியான அந்தக் காலகட்டங்களில் நான் வீட்டில் என் அம்மாவிடம் ஒருநாள் முழுக்க அழுது, அடம் பிடித்து, "எனக்கு தீபாவளிக்கு பட்டாசோ, புதுத் துணியோ வேண்டாம்மா... லயன் தீபாவளி மலர் வாங்க காசு மட்டும் கொடுங்க போதும்" எனக் கெஞ்சிக்கேட்டு வாங்கிய நாட்களவை! ( அப்பா அப்போது வெளியூரில் இருந்ததால் அவரிடம் பணம் கேட்க முடியாத நிலைமை)
ReplyDeleteகையில் காசு கிடைத்தவுடன் ஈரோடு - கருங்கல்பாளையம் பகுதியில் ஒரு புத்தகக் கடையில் தேடிப்பிடித்து இந்த சூப்பர் ஸ்பெஷலுக்கு சொந்தக்காரனானபோது கிடைத்த சந்தோசம் - இப்போதுவரை வேறு எந்தத் தருணங்களிலாவது கிட்டியிருக்கிறதாவென யோசிக்க வைக்கிறது!
அனுதினமும் அதைக் கையில் வைத்துக்கொண்டே குதூகலித்த தினங்கள்தான் எத்தனை எத்தனை அழகானவை!
சிலநாட்களிலேயே, என் அண்ணனின் உபயத்தால் அந்தப் புத்தகம் அவரது நண்பர்களுக்கு படிக்கக்கொடுக்கப்பட்டு - நான் கெஞ்சிக்கேட்டு அதைத் திரும்பப் பெற்று - இந்தச் சம்பவங்கள் பலமுறை நிகழ்த்தப்பட்டு - அழகான அப்புத்தகம் பலரது கைமாறியால் கொஞ்சம் கொஞ்சமாக அட்டைகளும், உள்பக்கங்களும் சிதைக்கப்பட்டு - கடைசியில்... கடைசியில்.. அது என் அண்ணின் யாரோ ஒரு நண்பருக்குக் கொடுக்கப்பட்டு திரும்ப வராமலே போய்விட்டது! :(
நான் இழந்த என் பிரியத்துக்குரிய அந்தப் புத்தகத்தை அதன்பிறகு நான் இன்றுவரை பார்க்கவில்லை! இன்றுவரை - அது என் வாழ்க்கையின் மிகப்பெரிய இழப்பாக கருதுகிறேன்!
எந்தவொரு புத்தகத்தையும் வெறியுடன் தேடியலையும் சுபாவம் கொண்டவனல்ல நான் என்பதால் - இன்றுவரை பொறுமையாகவே காத்திருக்கிறேன் - என்றாவது ஒருநாள் அது மீண்டும் என் கைகளை வந்தடையுமென்று!
ஷோ சேடு, நண்பர்களே! :(
அய்யோ..
Delete///அய்யோ..///
Deleteஏன் இந்த அதிர்ச்சி மந்திரியாரே?!!!
என்னோட அந்த புக் - ஒருவேளை - இப்போ உங்ககிட்டேத்தான் இருக்கா?!!! ;)
ஹலோ ஹலோ இங்க சிக்னல் வீக்கா..இ......ரு....க.......
Delete70th
ReplyDeleteஅடுத்த ஆண்டுக்கான அதிரடி அட்டவணையின் அட்டையில் LGN லோகோ இடம் பெறவில்லையே, ஏன் சார்?
ReplyDeleteமுத்து 40வயசான லோகோ..
Deleteலயன் 30வயசான லோகோ..
LGN வெறும் 3மாத குழந்தை..
அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே... அன்று போல் இல்லயே நண்பனே நண்பனே... இன்று என்ன விலையில் புத்தகங்கள் வந்தாலும் வாங்க முடிந்த எனக்கு அன்று 90களில் சூப்பர் ஸ்பெஷல் இதழை பழைய புத்தகக் கடையில் வாங்க அடித்த பல்டிகள் எல்லாம் தனி வரலாறு.
ReplyDeleteகார்ட்டூன் கதைகளில் எந்த நாயகருடைய கதை 12 மாதங்களுக்கு வந்தாலும் மகிழ்ச்சி. லக்கி லூக், சிக் பில், ஸ்மர்ப்ஸ், சுஸ்கி விஸ்கி, அஸ்டிரிக்ஸ், டின் டின், etc.
2018 அட்டவணையின் முதல் பக்கமே அருமை... வாழ்த்துக்கள்.
என் சித்தம் சத்தானுக்கே சொந்தம் அருமையான கதை. லயன் கிராபிக் நாவல் ஒவ்வொன்றும் அடுத்த கதையின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது. அடுத்த வருடம் சந்தா E 12 இதழ்களாக அறிவித்துவிடுங்கள் சார்...
////கார்ட்டூன் கதைகளில் எந்த நாயகருடைய கதை 12 மாதங்களுக்கு வந்தாலும் மகிழ்ச்சி. லக்கி லூக், சிக் பில், ஸ்மர்ப்ஸ், சுஸ்கி விஸ்கி, அஸ்டிரிக்ஸ், டின் டின், etc.////
Delete+111111
மீத்துன்
Deleteஅத விட கலந்து கட்டி அடிங்க
சும்மா எகிறி அடிக்கும்
அன்புள்ள ஆசிரியருக்கு!
ReplyDeleteசூப்பர் ஸ்பெசல் இன்றும் வெளியிடலாம். குறைந்தது 10 கதைகளை உள்ளடக்கியவாறு வருடத்திற்கு 3 சூப்பர் ஸ்பெசல் புத்தகங்களை வெளியிடலாம் பட்டியலில் இல்லாமல் தனியாக புக் செய்பவர்களுக்காக தனி விலை நிர்ணயம் செய்து இம்முயற்சியினை செயல்படுத்தலாம்.
முதலில் 2018 அட்டை முகப்பு சூப்பர் பட்டை கிள்ப்புகிறது.
ReplyDelete87 தீபாவளி மலரை நான் மறக்க முடியாத ஒன்று.ஏன் என்றால் 10 ரூபாய் மிகப்பெரிய தொகை எனவே குறுக்கு வழியில் என் தாத்தா சுருக்கு பையில் ஒரு ரூபாய் நாணயங்கள் நிறைய இருக்கும் அதனை நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் விகிதத்தில் 5 ரூபாய் தேற்றிவிட்டேன்.
மீதி 5 ரூபாய் தினம் பள்ளி செல்லும் போது 10 பைசா கொடுப்பார்கள் அதை வைத்து ஒரு மூன்று ரூபாய் தேற்றிவிட்டேன்.மீதி 2 ரூபாய் மறுபடியும் தாத்தா சுருக்கு பையில் ஆட்டை போட்டு வாங்கி விட்டேன். அதை நான் வாங்கிய தருணத்தில் நான் அடைந்த அந்த மகிழ்ச்சியான தீபாவளி இதுவரை வேறு எந்த தீபாவளியும் கொண்டு வந்தது இல்லை.
அந்த தீபாவளி மலர் விளம்பரம் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் மூலமாக தபால் வந்ததை தொடங்கி வாங்கும் வரை கனவில் சஞ்சரித்தேன். பின்னர் அதை ஒழிய வைத்து படித்து மாட்டிக் கொண்டு தர்ம அடி வாங்கியது தனி கதை அதுவே தொடர் கதையாகி போனது. 87 தீபாவளி மலர் வெளியீட்டு தேதி என்னால் மறக்க இயலாத ஒன்று ஏன் என்றால் அந்த தேதி 10/10/1987.
பேட் மேன், ஜானி,பதிமூன்று என கலவையாக வந்த இதழில் கடைசியாக வந்ததும் இதுவே என நினைக்கிறேன்.
அன்பு ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள் அந்த நாள் திரும்ப வராது ஆனால் அந்த இதழ் திரும்ப வந்தால் ஈ.வி போல் என்னை போல் தீபாவளி மலரை இழந்த அன்பு நெஞ்சங்கள் மகிழ்ச்சி அடையும்.... தொடரும்.
அந்தக் காலத்தில் நம்மைப் போன்ற குழந்தைகளின் காமிக்ஸ் வாசிப்புக்கு எத்தனை தாத்தா பாட்டிகளின் சுறுக்குப்பைகளும், அம்மாக்களின் சமையலறை கடுகு டப்பாக்களும் - மறைமுகமாக உதவியிருக்கின்றன!!
Deleteஅப்போது ஆட்டையை போட்டு காமிக்ஸ் வாங்கியபோது கிடைத்த அந்த த்ரில் - இப்போது சொந்தக் காசில் வாங்கும்போது கிடைப்பதில்லை! :D
ஆமாம் அதே.
Deleteஈ வி நாம் இப்பவும் குழந்தைதான்
Deleteஆனாலும் மாச ஆரம்பத்த நெனச்சு நெனச்சு இப்பவும் தான ஏங்குறோம்-
Deleteதீபாவளி ஸ்பெஷல் ஆயுதபூஜைக்கு வர்ற மாதிரி 2018 புக்ஃபேர் ஸ்பெஷல், அதாங்க,ரத்தபடலம், ஜனவரியில் வர்றதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு சொல்லுங்களேன்,ப்ளீஸ்.(கேட்டு வெப்போம்.கிடைச்சாலும் கிடைக்கும்.)
ReplyDelete+13
Delete+13
+13
+13
+13
+13
+13
+13
+13
+13
+13
+13
+13
Wow! Dear sir, sunbathing siruvalayil 'singathin siruvayadhil'. You know? I don't find it boring hearing about 1987 Lion super special and it is not uncommon for me reading singathin siruvayadhil again and again from old books. We people cannot reason our being old maniac.
ReplyDeleteThough I started buying our comics in 1984, fearing my parent's scolding, I did not buy 1987 super special that year. But later in 1992, I got it from old book shop and manage to retain it till now.
ReplyDelete///அந்த சூப்பர் ஸ்பெஷல் நாட்களில் நம்மோடு இணைந்திருந்த நண்பர்கள் இருப்பின், அவர்களது மலரும் நினைவுகளை பகிர்ந்திடலாமே ?///
ReplyDeleteஅந்நாட்களில் அநேகமாக அடியேன் அங்கன்வாடியில் அமர்ந்திருந்திருக்கக்கூடும்.!!
"கொழ கொழயா முந்திரிக்கா
நரியே நரியே சுத்தி வா "
"குண்டு குண்டு மீனாட்சி
குதிரைவாலு மீனாட்சி "
"கத்திரிக்கா சொத்தை
கடலோரம் மெத்தை
ஏண்டி சரோஜா
எப்ப கல்யாணம் "
"ஞாயிற்றுக்கிழமை நகையைக் காணோம்
திங்கட்கிழமை திருடன் கிடைத்தான் "
போன்ற காலத்தால் அழியாக் காவியப்பாடல்கள் மட்டுமே நினைவில் உள்ளன.
இந்த லயன் தீபாவளி சூப்பர் ஷ்பெசலை பின்னாட்களில் படித்த நினைவு லேசாகத்தான் இருக்கிறது.
அந்த பல்முளைக்கா பருவத்து நினைவுகளை திரும்பக் கொண்டுவர வேண்டுமெனில், இன்று திரும்பவும் அதைப்போலவே( நோட் திஸ் போயிண்ட் யுவர்ஹானர்! அதைப்போலவே.. . அதையே அல்ல..) ஒரு சூப்பர் ஷ்பெசலை இன்றைய நாயகர்களை கொண்ட ஒரு டஜன் கதைகளுடன் பெரிய தீபாவளி மலர் ஒன்றை வெளியிட்டால், இப்போது பதின்பருவத்தில் அடியேனுக்கு நினைவில் இருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.!
இன்னும் முப்பது வருடங்கள் கழித்து கேட்டால் விலாவரியாக சொல்லவும் ஏதுவாக இருக்குமென்தை தெரிவித்துக்கொண்டு.. . .. . . . . .!!
KOK...
Delete:D :D :D
கிட் போட வச்சருவோம்ல
Delete:-)))))
Deleteதீபாவளி மலர் 87 வருடம் தான் கிடச்சது அன்பளிப்பாய்..ஊர் பெயர் வெளிட விரும்பாத நண்பரிடம்இருந்து....
ReplyDeleteபழநி ரணகாளி அம்மன் கோயில் அருகே....
வாடகைக்கு காலையில் வாங்கி அங்கேயே உட்கார்ந்து படித்துவிட்டு மாலை வீடு சென்ற போது தீவாளி பட்டாசு போல கண்ணத்தில் பளார் என்று வாங்கியது....
நல்ல தீவாளிடா சாமி...
இதில் உள்ள பல கதைகள் கடந்த சில ஆண்டுகளில் ஆசான் போட்டுவிட்டதால் வருத்தப்பட ஏதுமில்லை....
Hi friends good morning 😃😃🙌 🎅 👼
ReplyDelete87 ல் ஏழு வயது சிறுவன். அந்நாளில் விளையாட்டை தவிர வேறு எதையும் நினைத்துதது இல்லை.
ReplyDeleteஆ.பு என்றால் என்ன? (அக்டோபர் புதரில்?)
ReplyDeleteதீ.ம - தீபாவளி மலர்
ஆ.பு - 'ஆயுத புஜை'னு நினைக்கிறேன்! :D
Deleteஆப்பு விஜய்
Deleteஆனந்த புதன்
Deleteஎல்லா டைப் கதையும் கலந்து கட்டி அத மாதிரி ஒரு தீபாவளி மலர் போடலாமே- ஏன்னு கேளுங்க
ReplyDeleteஸ்லாட்ல எடமில்லாதவங்களுக்கு இடம் குடுத்த மாதிரியும் ஆச்சு
கதம்ப கூட்டு சாப்ட்ட மாதிரியும் ஆச்சூ
+11
Deleteஈரோட்ல தீபாவளி
ReplyDeleteமலர்கள் பத்தி டிஸ்கஸ் பண்ணி வெலய சொல்லிட்டா போச்சு
டபுள் தமாக்கா தானே ஃஃஃஃஃஃஃஃ
காமிக்ஸ்கான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......
நண்பர் ஜனாவின் தலைமையில அப்படி ஒரு ஏற்பாட்டை செஞ்சிட்டாப் போச்சு!
Deleteஇப்படை தோற்க்கின் எப்படை வெல்லும்? ;)
சும்மா சொல்லப்டாது
Deleteதலைவர் ஈ.விஜய் (கவனிக்க- அடுத்த தலீவர் ரெடி) கோஷம் போட பிரியாணி வாங்கி குடுத்தாவது ஆள இட்டாந்துருவாராக்கும்.
2018 டெக்ஸ் கதைகளுக்கு மட்டும் உள்ள கெட்லாக்கா? 2018 சுற்றி உள்ள டிசைனுக்கு பதில் வேறு டிசைன் முயற்சிக்கலாமே?
ReplyDeleteமாத்தியோசி-187
ReplyDelete2018 ட்ரைலர் புத்தகம் gloss paper கவர் கொண்டு வரட்டுமே ப்ளீஸ் !
ReplyDeleteDear edi, before dewali, November month books release pannidugal
ReplyDeleteஇதுகூட நல்லா ஐடியாவாத்தான் இருக்கு!
Deleteசந்தா A,B,C,D,E இல் ஏதேனும் ஒன்றோ இரண்டோ பிரிவுகளை சஸ்பென்ஸ் சந்தா ஆக்கிவிடலாமே? மற்ற சந்தாக்களை வைத்து பதிவுகளை ஓட்டியது போலவும் இருக்கும், எங்களுக்கும் கொஞ்சம் சஸ்பென்ஸ் இருக்கும்.
ReplyDelete/// ஒரு முழுநீள சாகசம் + குட்டிக் கதைகள் என்ற ஆரம்ப நாட்களின் template இந்த இதழிலும் நடைமுறை காண்கிறது ! இதோ உட்பக்க டீசர் : ///
ReplyDeleteஆர்டினை மீட் செய்யான்வேண்டி இவிடே ஒரு ஜீவன் தாரகங்கள் கண்விழிக்கும் நீலராவில் உறங்காமல் நோக்கி உண்ணு..!!
ஓஓஓஓ
Deleteநிங்களு மட்டுமில்லா
இவிட வும் ஒரு ஜீவனுண்டு கண் முழிக்க
ஆ கண் முழி சிவகாசி ஜிவனுண்டே
பறயாங்காட்டி
ஆ சிவகாசி ஜீவன் எண்ட வல்லிய பொன்னு ஜீவனல்லே
ஓ . . அங்ஙனே..!
Deleteவரும் சாரே, வண்ணு எங்கிளிடே சோதியில் ஐக்கியாமாய்க்கும் சாரே. .!!
ஞான்னொரு வல்லிய ஜோதியாக்கும்
Deleteகனவுகளின் கதை அட்டைப்படம் சும்மா மிரட்டுகிறது. ஏதோ ஆவி சம்பந்தப்பட்ட கதை போல தெரிகிறது. ஆவி எனக்கு பிடிக்கும் :-)
ReplyDelete///ஆவி எனக்கு பிடிக்கும் ///
Deleteய்யீயீஈஈஈக்!!!
ஆவி உங்களைப் பிடிக்காம பார்த்துக்கோங்க PfB! :D
பை த வே, இந்த பேய், ஆவி, கொள்ளிவாய் பிசாசு - இதுங்க மேல இருந்த பயமெல்லாம் கல்யாணத்துக்கப்புறம் எனக்கு கபால்னு காணாப்போயிடுச்சு! அப்பப்போ நகை, ஷாப்பிங், சுற்றுலா'னு ஆவிங்க கேட்கிறதை நிறைவேத்திவச்சு முடிஞ்சவரைக்கும் ஃப்ரண்ட்லியாவே இருக்க முயற்சி பண்றேன்! ஆனாலும் அப்பப்போ ஒரு அமானுஷ்ய அடி விழத்தான் செய்யும்... சில சுபாவங்களை மாத்திக்கிடவே முடியாது பாருங்க? ;)
ஆ பு தீ ம - இ ஜொ ரெ
ReplyDeleteவிஜயன் சார்
ReplyDeleteநீங்கள் எதை செய்தாலும் வெற்றியே.
உங்கள் பெயரிலேயே இரண்டு வெற்றி
உள்ளது.
வி-ன் முதல் இரு எழுத்து
ஜய நடு இண்டெழுத்து
இரண்டின் பொருளும் வெற்றிதான்.
எங்கள் அன்பும் ஆதரவும்
என்றும் உங்களுக்குத்தான்.
பின்றீங்க கணேஷ் ஜி!
Deleteதூள் தூள்!!! 😁😁😁
Delete///Maybe ஏதேனுமொரு வருஷம் மட்டுமாவது அட்டவணையின் திட்டமிடலை எங்கள்மட்டிற்குச் செய்து விட்டு - அதனை உங்களிடம் அறிவிக்காமலே ஆண்டைத் துவக்கிட்டால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன் !! மாதந்தோறும் கூரியர் டப்பாக்களுக்குள் என்ன இதழ்கள் உள்ளனவோ ? என்பதே தெரியாது காத்திருக்கும் சஸ்பென்ஸ் எத்தகையதாக இருக்குமென்று சொல்வீர்கள் guys ? ///
ReplyDeleteகொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் சார்.!
ஆனாலும் பார்சலில் என்ன வந்திருக்குமோ என்று தெரியாமலேயே பிரிக்கப்போகும் அந்த திக்திக் வினாடிகளை நினைக்கும்போதே ஜிவ்வென்று இருக்கிறதே..!!
வேண்டுமானால் சாம்பிளுக்கு அடுத்தவருடம் ஒரே ஒரு மாதத்திற்கு மட்டுமாவது முன்னறிவிப்போ விளம்பரமோ இல்லாமல் வெளியிட்டு சோதித்துப் பார்க்கலாம் சார். .
/// அப்படியே ஒரே நாயகரை 12 மாதங்களும் ரசித்திடுவதாயின் - நமது தற்போதைய அணிவகுப்பில் TEX தவிர்த்து வேறு யாரையெல்லாம் இதற்கெனத் தேர்வு செய்திட முடியுமென்பீர்கள் ?///
ReplyDeleteஇந்த கேள்வி தங்களுக்கே வேடிக்கையாக இல்லை..?!?!
வேறு யாரைச் சொல்லப்போகிறோம்..
லக்கியும் ஆர்டினும் கலந்த காம்போதான்..
ஒருத்தருக்கு மாத்திரமே அனுமதி என்றால் சந்தேகமே இல்லாமல் லக்கி லூக் தான்.. கூட ஒரு ஆர்டின் கதையுடன்..!!:-)
////ஒருத்தருக்கு மாத்திரமே அனுமதி என்றால் சந்தேகமே இல்லாமல் லக்கி லூக் தான்.. கூட ஒரு ஆர்டின் கதையுடன்..!!:-)///
Deleteநியாயமான பேச்சு!!
KiD ஆர்டின் KannaN //வேண்டுமானால் சாம்பிளுக்கு அடுத்தவருடம் ஒரே ஒரு மாதத்திற்கு மட்டுமாவது முன்னறிவிப்போ விளம்பரமோ இல்லாமல் வெளியிட்டு சோதித்துப் பார்க்கலாம் சார்.//
Deleteநான் ரெடி....நீங்க ரெடியா guys ?
// மாதந்தோறும் கூரியர் டப்பாக்களுக்குள் என்ன இதழ்கள் உள்ளனவோ ? என்பதே தெரியாது காத்திருக்கும் சஸ்பென்ஸ் எத்தகையதாக இருக்குமென்று சொல்வீர்கள் guys ? //
ReplyDeleteஎன்னதான் ப்ளாகில் முன்னோட்டம் பார்த்தாலும் அதன் மேல் எங்களுக்கு ஈர்ப்பு அதிகமாகுமே தவிர குறையாது,இதுவே போதும்.
//இப்போதைய நிலவரப்படி குறைந்த பட்சம் 4 புதியவர்களுண்டு - 2018-ன் பயணத்திற்கு ! அந்த நம்பர் கூடவும் செய்யலாம் ; குறையவும் செய்யலாம் - தீபாவளிக்கு மறுதினம் ஆன்லைனில் 2018-ன் planner-ஐ உங்களிடம் காட்டுவதற்குள்ளாக !//
ReplyDeleteஆக தீபாவளிக்கு செம ட்ரைலர் உண்டு,களம் சுவாரசியமாக இருந்தால் நான்கு என்னால் ஆறு கூட ஓகே தான்.
//And அப்படியே ஒரே நாயகரை 12 மாதங்களும் ரசித்திடுவதாயின் - நமது தற்போதைய அணிவகுப்பில் TEX தவிர்த்து வேறு யாரையெல்லாம் இதற்கெனத் தேர்வு செய்திட முடியுமென்பீர்கள் ?//
ReplyDelete1.மர்ம மனிதன் மார்ட்டின்,
2.ரிப்போர்ட்டர் ஜானி,
3.லார்கோ,
4.ஸ்மர்ப்ஸ்,
5.லக்கி லூக்,
6.சிக் பில் & கோ.
///4.ஸ்மர்ப்ஸ்,
Delete5.லக்கி லூக்,
6.சிக் பில் & கோ.///
இது OK
SMURFS - எனக்கும் டபுள் ஓ.கே. !
Deleteஅட்டவணையின் கவர் போஸே அசுர வைக்கிறது....இந்த மாதமே அட்ட வணையை இனைத்திருக்க கூடாதா என ஏங்க வைக்கிறது....
ReplyDeleteவிஜயன் சார் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம்...
ReplyDeleteஅப்புறம் அட்வான்ஸ் ஆயுதபூஜை, தீபாவளி வாழ்த்துக்கள்!
இந்த வார பதிவு இந்த மாத இதழ்களில் " சிங்கத்தின் சிறு வயதில் " கட்டுரை இடம் பெற்றால் எவ்வளவு மகிழ்வாக இருக்குமோ அவ்வளவு மகிழ்வாக அமைந்து உள்ளது....:-)
ReplyDeleteவிஜயன் சார்!
ReplyDeleteLe Storie - கதைகளில் எனது தேர்வுகள்...
1. LA RIVOLTA DEI SEPOY (இந்திய சிப்பாய் கலகத்தினை பிண்ணனியாக கொண்ட கதை)
2. AMORE NERO (காதல் கலந்த திரில்லர்)
3. IL FATTORE Z (ஜோம்பிகளின் அட்டகாசம்)
தங்களின் தேர்வுகளில் இவை உள்ளதா சார்?
///1. LA RIVOLTA DEI SEPOY (இந்திய சிப்பாய் கலகத்தினை பிண்ணனியாக கொண்ட கதை)///
Deleteசார் சார்! இந்த கதையை போடலாம் சார்.! நம்மூரு பாசையில பேரு வெச்சிருக்காங்க.!
லா ரிவோல்டா "டேய் சிப்போய் "னு தமிழ்ல பேரு இருக்குறதாலே இதையே போடுங்க சார். . ! :-)
////லா ரிவோல்டா "டேய் சிப்போய் "னு தமிழ்ல பேரு இருக்குறதாலே இதையே போடுங்க சார். . ! ///
Delete:))))))) LOL
கப் சிப்போய்ய்ய்ய்
DeleteBoopathi Tiruchengode : கதைச்சுருக்கங்களைத் தாண்டியும் ஏகமாய் அளவுகோல்கள் உள்ளன சார் தேர்வுகளுக்கு !
Deleteஅவை எல்லாமே, எல்லா நேரங்களிலும் ஓ.கே. ஆவதில்லை தான் ; ஆனாலும் நம்மளவிற்கு ஒவ்வொரு கதையின் குடலையும் நீள, அகலங்களை அலசிட முனைவதே வாடிக்கை !
Anithu palaya comicskalaiyum gundu booksaga veliyidungal editor sir-limited print run.
ReplyDeleteBalachandran Subramaniam : :-)
Deleteஉஷார்!! உஷார்!!!
ReplyDeleteஇன்னும் மூனுமாசத்துக்குள்ள இந்தியப் பெருங்கடல்ல ஒரு பெரிய்ய்ய பூகம்பம் ஏற்படப்போவதாகவும், அதைத் தொடர்ந்து சுனாமி ஏற்படும்னும் ஆராய்ச்சியாளர்கள் சொல்லிக்கிடறாங்க!
அதனால... சிவகாசி போன்ற தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களுடைய பழைய காமிக்ஸ்கள் அடங்கிய பீரோக்களையெல்லாம் உடனே ஈரோடு, சேலம் போன்ற பாதுகாப்பான இடங்களில் கொண்டுவந்து வைத்துவிடும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்!
அதிலும் சேலத்தில் மிகவும் மேடான பகுதியான தாரமங்கலத்தில் வைத்தால் மிகவும் பாதுகாப்பானது என
Deleteஅகில உலக வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் அறிவித்து உள்ளார் .:)
ஆமாமா ஈரோட்டை விட மேடான பகுதி கோபிங்கறதால அங்கே கொண்டாந்தீங்கனா இன்னும் Safeஆ இருக்கும்!!
Deleteதாரமங்கலத்துல சுனாமியே அவசியமில்லையே தலீவரே...! அந்தப் புத்தகப் பீரோக்களை பார்த்தவுடனே நீங்க வுடற ஆனந்தக் கண்ணீர்லயே ஊர்ல முக்கால்வாசி மூழ்கிப்போய்டுமே?!! ;)
Deleteஉங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன்.!
Deleteமேட்டுச் சேரி என்பதே நாளடைவில் மருவி மேச்சேரின்னு ஆயிடுச்சாம்.! அதனால பேர்லயே மேடு வெச்சிருக்கிறதாலே எங்கூருதான் மேடான பாதுகாப்பான ஊரூ.! எங்கூருல பீரோக்களை வைப்பதே பாதுகாப்பானது..!!
(ஊர் பெரியவங்ககிட்ட கேட்டாலும், கூகுள்ல தேடினாலும் - மேய்ச்சல் ஏரி என்பதே மருவி மேச்சேரி ஆயிடுச்சின்னு சொல்வாங்க . . அதையெல்லாம் நம்பாதிங்க மக்களே!!
யாராச்சும் "மேட்டுப்பாளையத்தார்கள்" இல்லாங்காட்டி - "மேட்டுப்பட்டிக்காரர்கள்" இங்கே இருக்கீங்களா சாமி ? வந்தீங்கன்னா ஒரு வணக்கதே வாங்கிக்கலாமில்லே ?
Deleteடெக்ஸ் போல மாதம் ஒரு நாயகர் எவர் எனில்
ReplyDeleteலார்கோ....ஷெல்டன் ....
ஆனால் அது வேலைக்கு ஆவாது ன்னு தெரியறதாலே ...
இன்னும் யோசிச்சா
லக்கி ....கிட் ஆரட்டின் வராக ....
இவுக கார்ட்டூன் நாயகர் வேற யோசிங்க என்றால் .....
ரிப்போர்ட்டர் ஜானி.....:-)
////லக்கி ....கிட் ஆரட்டின் வராக ....////
Deleteஇதுதான் பைனல் சாய்ஸ்!!
@ Friends : எனது வோட் தோர்கலுக்கே !!
Deleteஆஹா.....எனது பெயர் கொண்ட பெங்களூர் நண்பரே ...
Deleteநோட் தி குறிப்பு....:-)
இந்த பாக்கெட் குண்டு இதழை கண்டவுடன் பல புத்தகங்கள் கொடுத்து இந்த இதழை கைப்பற்றியது சந்தோசம் அளித்தாலும் இதே போல் திகிலில் ஒரு குண்டு புக்கு வெளியிட்டீர்களே சார்...
ReplyDeleteஅதை இன்னும் கண்ணில் கூட பார்க்கவில்லையே என்ற ஏக்கம் தான் அதிகம் வருகிறது சார்....
இந்த ஏக்கத்தை போக்க அடுத்த வருடமாவது இப்படி ஒரு குண்டு புக்கை ....,கதம்ப மலரை கோடை மலராகவோ....தீபாவளி மலராகவோ...வெளிவர ஆவண செய்யுங்கள் சார்....
Paranitharan K : நீங்க "குண்டா" காட்சி தரும் நாளைக்கு ஒரு குண்டு புக் அறிவித்து விடுவோம் தலீவரே ! டீலா ?
Deleteஐய்யய்யோ .....என் கனவை கானல் நீராக்கி விடாதீர்கள் சார்...:-(
Deleteஎல்லாருமா சேர்ந்து உருட்டுக்கட்டையால புரட்டி எடுத்தோம்னா கொஞ்சநாளைக்காவது குண்டா காட்சியளிப்பாரு நம்ம தலீவரு!
Deleteகாமிஸுக்காண்டி எதையும் தாங்கிக்குவாரு எங்க தங்கத் தலீவரு!
'ம்'மினு ஒரு வார்த்தை சொல்லுங்க தலீவரே...
விளம்பரம் இல்லாமல் வெளியீடு கண்டிப்பாக இன்ப அதிர்ச்சியாக தான் இருக்கும் சார்....
ReplyDeleteஎன்ன மாசம் ஒரு டெக்ஸ் அப்பவும் கண்டிப்பா இருக்கனும் அவ்ளோதான் சார்...:-)
தலீவர் இத்தாலியில் பிறந்திருக்க வேண்டியவர் !!
Deleteசெயலரும்தான் எடிட்டர் சார்!
Deleteபிரேசிலிலுமே TEX ரெம்போ famous செயலாளரே ! எங்கன போகுமோ ?
Delete