Powered By Blogger

Tuesday, September 26, 2017

மு.தொ.உ.ப.!

நண்பர்களே,

வணக்கம். "முன்னூறைத் தொட்டால் உபபதிவு" என்ற நம் இலக்கணம் தொடர்கிறது ! இம்முறையோ - ஒரு கேள்வியோடும் ; ஒரு உப கேள்வியோடும் ; ஒரு வேண்டுகோளோடும் !

முதலில் கேள்வி : ஒரேயொரு மறுபதிப்பு slot மாத்திரமே காலியெனில் - அதனை இட்டு நிரப்ப உங்கள் சாய்ஸ் ஏதேனுமொரு கேப்டன் பிரின்ஸ் சாகசமா ? அல்லது ரிப்போர்ட்டர் ஜானி சாகசமா ? சொல்லுங்களேன் ?

உப கேள்வி : நாயகத் தேர்வைச் செய்து விட்டீர்களெனில் - அப்டிக்கா அந்த நாயகரின் எந்தக் கதையை மறுபதிப்பில் பார்த்திடும் ஆர்வத்தில் இருப்பீர்களோ ?

பின்குறிப்பு / பின் குத்தாத குறிப்பு : மேற்படி சிலபஸில் மாத்திரமே தற்போதைய பரீட்சை ! So நமது கவிஞர்கள் "XIII" என்று கலிங்கத்துப் பரணிகளைப் பாட முற்படுவதோ ; இளவரசி,மற்றும் இன்னபிற வெண்பாக்கள் இயற்ற முற்படுவதோ இப்போதைக்கு வேண்டாமே ?


அப்புறம் அந்த வேண்டுகோள் : டிசம்பரில் வரவுள்ள "மர்மத் தீவில் மாயாவி" இதழின் 6 பக்கங்கள் நம்மிடமுள்ள பிரதியினில் ஓரங்கள் வெட்டப்பட்டுள்ள நிலையில் உள்ளன ; so யாரிடமேனும் இந்த இதழ் பத்திரமாய் இருப்பின் சொல்லுங்களேன் - ப்ளீஸ் ? கூரியரில் அனுப்பித் தந்தீர்களெனில் இரண்டே நாட்களில் திரும்ப அனுப்பிடுவோம் ! 

Update on the new books : 4 இதழ்களையும் அச்சிட்டு முடித்த கையோடு - பைண்டிங் ஆபீசில் வாசலில் அந்த கிராபிக் நாவல் ராப்பரில் உள்ள ஆவியைப் போல் கோந்து போட்டு நின்று வருகிறோம் ! மனுஷன் நின்றாலோ ; நடந்தாலோ - நம்மவர்களும் அவ்ருக்கு நிழலாய்த் தொடர்கிறார்கள் ! நாளைய தினம் நிச்சயம் despatch தினமாயிருக்கும் என்ற நம்பிக்கையோடு இப்போதைக்கு விடைபெறுகிறேன் ! 

Bye all ! See you around !!

மறுபடியுமொரு பின்குறிப்பு : கிராபிக் நாவல் பணியில் தொடர்ச்சியாய்  2 நாட்கள் என்பதால் - தலைப்புகளும் அந்த பாணியில் அமைந்து போகின்றன ! கவலை வேண்டாம் - சீக்கிரமே தெளிந்து விடுவேன் ! 

347 comments:

  1. Replies
    1. ஒரேயொரு மறுபதிப்பு slot மாத்திரமே காலியெனில் - அதனை இட்டு நிரப்ப உங்கள் சாய்ஸ் ஏதேனுமொரு கேப்டன் பிரின்ஸ் சாகசமா ? அல்லது ரிப்போர்ட்டர் ஜானி சாகசமா ? சொல்லுங்களேன் ?

      Delete
    2. ஜானி சாகசம் எனது தேர்வு

      Delete
    3. திகிலில் வந்த ஆரம்ப கதைகள்... தலைப்பு தான் தெரியவில்லை...

      Delete
    4. Vijan sir, ஜானி சாகசம் எனது தேர்வு. அந்த குங்குமத்தில் தொடராக வந்த ஜானி புக் எது சார்? அது வேறு பெயரில் லயன் அல்லது திகிலில் வந்துள்ளதா.

      Friends,
      I remember reading one page of Reporter Johnny story in Kungumam tamil magazine. It had ஆசிரியர் name as Vijayan. I read only one page in குங்குமம் book. In that page Johnny receives a letter (envelope) from a post man. And the address was written using blood. I guess that book is not yet published in Lion/Thigil/Muthu. It's the right time to ask Editor on that...
      Come forward and show your support here.

      Delete
    5. Mahesh kumar S : அது "குங்குமம்" பத்திரிக்கை அல்ல ; "மின்மினி" என்ற பெயரில் வெளியானதொரு இதழ் !

      Delete
    6. கதை பெயர் எனக்கும் ஞாபகமில்லை but sure - மறுபதிப்புக்கென ரிப்போர்ட்டர் ஜானியே தேர்வாகிடும் பட்சத்தில், தொடர்கதையாகி வந்த இந்த சாகஸத்தையுமே மறுபதிப்புத் தேர்வுகளுள் ஒன்றாக்கிடலாம் தான் !

      Delete
    7. Vijayan sir,
      OK. Thanks for the information.
      Those days we had so many weekly magazines, hence I got confused.
      அந்த புத்தகத்தை நாம திகில் அல்லது லயனில் பிரசுரித்து உள்ளோமா சார்?
      இதுவரை பிரசுரிக்கவில்லை என்றால் கூடிய விரைவில் பிரசுரிக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.
      Better late than never. ..

      Delete
    8. Vijayan sir,

      //மறுபதிப்புக்கென ரிப்போர்ட்டர் ஜானியே தேர்வாகிடும் பட்சத்தில், தொடர்கதையாகி வந்த இந்த சாகஸத்தையுமே மறுபதிப்புத் தேர்வுகளுள் ஒன்றாக்கிடலாம் தான்//

      நன்றிகள் பல!!! தீவிர காமிக்ஸ் ரசிகர்களுக்கே இது புதிய தகவல் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. I think I am the only one keep on asking about this book.

      Delete
    9. ஆமாம் நண்பா. புதிய தகவல் இது.

      Delete
    10. ///மறுபதிப்புக்கென ரிப்போர்ட்டர் ஜானியே தேர்வாகிடும் பட்சத்தில், தொடர்கதையாகி வந்த இந்த சாகஸத்தையுமே மறுபதிப்புத் தேர்வுகளுள் ஒன்றாக்கிடலாம் தான் ///

      ஜானிதான் தேர்வாயிருக்கார் சார்.!

      நான் இன்னும் ஒரு ஐம்பது ஓட்டுகள் ஜானிக்கு போட்டுவிடுகிறேன்.! :-)

      Delete
  2. கேப்டன் பிரின்ஸ் சாகஸம் தா௫ங்கள் சார்!!!!

    ReplyDelete
    Replies
    1. //கேப்டன் பிரின்ஸ் சாகஸம் தா௫ங்கள் சார்!!!!//
      +11111

      Delete
  3. மதிய வணக்கம்

    ReplyDelete
  4. காமிக்ஸ் காதலர்கள் அனைவ௫க்கும் மதிய வணக்கங்கள்!!!!

    ReplyDelete
  5. பிரின்ஸ் தான் பெஸ்ட்.
    பனிமண்டலக்கோட்டை
    அல்லது
    கொலைகார கானகம்

    ReplyDelete
    Replies
    1. கொலைகார கானகம் தான் ஏற்கனவே Super 6ல செலக்ட் ஆயிடுச்சே சார்.

      Delete
    2. சாரி G P
      13 கூட சேர்ந்து ஞாபக மறதி
      அதிகமாகிடுச்சு.

      Delete
  6. சார் ரிப்போர்ட்டர் ஜானி சாகஸமான "இரத்தக் காட்டேரி மர்மம்" வெளியிடலாம் சார்!!!!.

    ReplyDelete
  7. Replies
    1. கவிஞர்களுக்காகவே பின்குறிப்பு இருப்பதைக் கவனியுங்கள் சாரே !

      Delete
    2. விடாக் கொண்டன், கொடாக்கண்டன்!

      Delete
    3. இருவரும் இணைந்த திகில் ஸ்பெஷல் வேண்டும்.

      Delete
  8. கேப்டன் பிரின்ஸ் ஸின் கீழ்க்கண்ட சாகசங்களில் ஏதாவது ஒன்றத் தா௫ங்கள் சார்.
    இரண்டையும் தந்தாலும் சரி தான்,
    நாங்கள் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகின்றோம்.
    1.பனிமண்டலக் கோட்டை.
    2.கானகத்தில் கலவரம்.

    ReplyDelete
    Replies
    1. கா.க உடன்
      சிறுவர்கள் காட்டில் மாட்டிக்கொள்வதாக ஒரு தொடர்கதை
      (தொடர்ந்து வந்ததா என்று தெரில.
      பேரும் நாபகமில்ல. ஹும்

      Delete
    2. அந்த கதையையும் வெளியிட்டால் நல்லா இருக்கும்.

      Delete
  9. கேப்டன் பிரின்ஸ் சாகசங்கள் பல மறுபதிப்பாக வந்துவிட்டன. ஆனால் ரிப்போர்ட்டர் ஜானி சாகசம் எதுவும் மறுபதிப்பு வரவில்லை. எனவே அவருக்கு இந்த வாய்ப்பை தரலாமே!

    சில பதிவுகளுக்கு முன் கண்ணன் சில ஜானியின் கோல்டன் ஓல்ட் கதைகளை பற்றி சொல்லி இருந்தார். அதில் இருந்து ஏதாவது ஒன்றை வெளி இடலாமே?

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : //கேப்டன் பிரின்ஸ் சாகசங்கள் பல மறுபதிப்பாக வந்துவிட்டன. ஆனால் ரிப்போர்ட்டர் ஜானி சாகசம் எதுவும் மறுபதிப்பு வரவில்லை//

      "ரிப்போர்ட்டர் ஜானி ஸ்பெஷல்" என்றே ஒரு வண்ண மறுபதிப்பு டபுள் இதழ் 2014 -ல் வெளியானது மறந்து போச்சா சார் ?

      Delete
    2. ///அட ஆமால///---பரணி@ வடதிசை வைக்கிங்குகள்ட்டயே இருந்தா இப்படித்தான்...
      ஆபீஸ் போறதுக்கு "போட்" தானா???

      Delete
    3. ///"ரிப்போர்ட்டர் ஜானி ஸ்பெஷல்" என்றே ஒரு வண்ண மறுபதிப்பு டபுள் இதழ் 2014 -ல் வெளியானது மறந்து போச்சா சார் ? ///

      ஓநாய் மனிதன் + ஊடு சூன்யம்.

      மேலும் சிங்கிளாக வந்த மறுபதிப்புகள்:-

      சைத்தான் வீடு

      (ப்பூபூவ் இதுமட்டும்தான் நினைவிருக்கு 😢😢😢)

      Delete
  10. அருமை உப பதிவுக்கு நன்றி ஆசிரியரே

    ReplyDelete
  11. எனது தேர்வு ரிப்போர்ட்டர் ஜானி
    1.தலைமுறை எதிரி (அல்லது )
    2.விண்வெளிப் படையெடுப்பு

    ReplyDelete
    Replies
    1. ஸாரி நண்பர்களே ப்ரின்ஸ்க்கு ஓட்டுபோட்டேன்... எனி வே பெஸ்ட் ஆஃப் லக்... உங்க அணிக்கும்...

      Delete
    2. விஜயராகவன் @ இரண்டு கள்ள வோட்ட இந்த ஆளுக்கு போடுங்க ஜி.

      Delete
  12. நாளை நமது நாள் தீபாவளியை சற்று முன் கூட்டியே கொண்டாடவிருக்கிறோம் தல யை சந்திக்க ஆர்வமுடன் உங்கள் நான்

    ReplyDelete
  13. கேப்டன் பிரின்ஸ் என்றாலே இனம் புரியாத ஈர்ப்பு ஒன்று ஏற்படுவது எனக்கு மட்டும் தானா..???

    ReplyDelete
    Replies
    1. நேக்கும்தான் பாட்ஷா ஜி!

      Delete
    2. மீ டூ பாசா ஜி... அதுவும் அந்த அகலம் கம்மியா நீட்டமா நாவல் கணக்கா வந்தவைகள்னா தனிப்பிரியம்...

      Delete
    3. எனக்கும் தான்...

      Delete
  14. ஜானிக்கு நிறைய புதுக் கதைகளும் இ௫க்கு, எனவே அவர் இனி நம் இதழ்களில் வ௫வார்.ஆனால் பிரின்ஸ் முடிந்து போன தொடர்.எனவே பிரின்ஸ்க்கு முக்கியத்துவம் தரலாம் என்பது என் க௫த்து. கடல் சார்ந்த கதைகளில் பிரின்ஸ் கதைகள் மாணிக்கல்லாய் ஒளிர்கின்றன என்றால் அது மிகையில்லை.

    ReplyDelete
  15. கேப்டன் பிரின்ஸின் பனிமண்டலக்கோட்டை.

    ReplyDelete
    Replies
    1. பனிமண்டலக் கோட்டை - என்னிடம் இல்லையென்பதால் எனக்கு ஓகே தான். ஆனால் சிலகாலம் முன்புவரை இது வேறு ஒரு காமிக்ஸ் கம்பெனியால்(!) முழுவண்ணம் + ஹார்டு கவரில் விற்கப்பட்டதுதான் என்பதால் நம் நண்பர்களில் நிறையப் பேரிடம் இருக்க வாய்ப்புகள் அதிகமே!

      Delete
    2. சாமியே வரம் கொடுத்தாலும் இந்த
      பூசாரி ( பூனை) ங்க படுத்துர பாடு
      இருக்கே. அனவன் ஆயிரம் பூனைய
      சமாளிக்கிறான் நாம மட்டும் இந்த
      ஒரேஒரு ஈரோட்டுப்பூனைய வெச்சுக்குட்டு
      ஐய்யிய்யய்யோ.

      Delete
    3. முற்றிலும் உண்மை.

      Delete
    4. நண்பர்களே என்னுடைய 'முற்றிலும் உண்மை' ஈ.வி அவர்கள் பதிவிற்கு. அதற்குள் கணேஷ் ஜிவி உள்ளே வந்துட்டார்.

      Delete
    5. மன்னிக்கவும் கணேஷ் கேவி.

      Delete
    6. பெயரில் மட்டுமல்ல நம் ஒற்றுமை.
      சிந்தனையும் ஒரே போல் உள்ளது.
      ஈ வி ய வம்புக்கு இழுக்கிறதுன்னா
      எல்லார்க்கும் என்ன ஒரு ஆனந்தம்.
      பார்த்து பிறாண்டி வைக்கப்போறார்.

      Delete
  16. 3அ4 ஆண்டுகளுக்கு முன் சென்னை புக் ஃபேரில் வாங்கிய நினைவு

    ReplyDelete
  17. சிறுவர்கள் காட்டில் மாட்டிக்கொள்வதாக ஒரு தொடர்கதை
    (தொடர்ந்து வந்ததா என்று தெரில.
    பேரும் நாபகமில்ல. ஹும்

    அந்த கதையையும் வெளியிட்டால் நல்லா இருக்கும்.

    ReplyDelete
  18. என்னுடைய சாய்ஸ் கேப்டனே...எந்தக் கதை எனினும் ஓகே... ஏன்னா எனக்கு அதிகமாக பெயர்கள் தெரியாது..

    ReplyDelete
    Replies
    1. இது செல்லாத ஓட்டு என்று தெரிவித்துக்கொண்டு.. . .

      Delete
    2. நடுநிலையான ஓட்டெல்லாம் சானிக்காம்...
      இங்கே கேப்டனுக்கு என்றே விழுந்த ஓட்டு செல்லாதாம்...
      நல்ல நாயம்தானுங்க மாமோய்...!!!

      Delete
    3. கேப்டனே செல்லாம போயிட்டாராம் இதுல
      போயி ஹலோ நான் டைகர சொன்னேன்

      Delete
  19. நண்பர்கள் ஆள் ஆளுக்கு ஒன்னு ஒன்னு கேக்கறாங்க. அதனால நான் நடுநிலைமை வகிச்சுடறேன்.

    ReplyDelete
    Replies
    1. ///நண்பர்கள் ஆள் ஆளுக்கு ஒன்னு ஒன்னு கேக்கறாங்க. அதனால நான் நடுநிலைமை வகிச்சுடறேன்.///

      இந்த ஓட்டையும் ஜானி கணக்கில் வைத்துக்கொள்ளும்படி.. . .

      Delete
    2. நடுநிலைனா , ஜானி கணக்காம்...

      அப்டீனா அந்த "மேட்டு+சேரி" எப்படீனு பார்த்து கொள்ளலாம் நண்பர்களே...!!!

      எங்க ஊரு சேலத்தில் "கோரிமேடு" பகுதியில் உள்ளது என்பதை ஏனோ சொல்ல தோணுச்சி...

      Delete
    3. மேட்டு சேரி கோரிமேடு இவ்வளவுதானா
      எல்லாத்திலியும் சிறந்த காசி மேடு நீங்க
      எல்லாரும் வந்திறங்க கோயம்பேடு
      சென்னையில் உள்ளதென கூறிக்கொண்டு
      உங்கள் பொன்னான வாக்குகளை
      எங்கள் அண்ணணன் ஜினல் ஜினல்
      ஒரிஜினல் கேப்டன் பிரின்சுக்கே
      அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
      அண்ணணணுக்கு வாக்களிக்கும்
      அனைவருக்கும் ஒரு ஃபுல் கோழிபிரியாணி
      உண்டு என்பதையும் இங்கே சொல்ல
      கடமைப்பட்டுள்ளேன்.

      Delete
  20. ////4 இதழ்களையும் அச்சிட்டு முடித்த கையோடு - பைண்டிங் ஆபீசில் வாசலில் அந்த கிராபிக் நாவல் ராப்பரில் உள்ள ஆவியைப் போல் கோந்து போட்டு நின்று வருகிறோம் ! மனுஷன் நின்றாலோ ; நடந்தாலோ - நம்மவர்களும் அவ்ருக்கு நிழலாய்த் தொடர்கிறார்கள் !////


    ஹா ஹா ஹா! :))))))

    ReplyDelete
  21. Repoerter jhonny - "vinvelip padaiyeduppu!"

    ReplyDelete
  22. ///முதலில் கேள்வி : ஒரேயொரு மறுபதிப்பு slot மாத்திரமே காலியெனில் - அதனை இட்டு நிரப்ப உங்கள் சாய்ஸ் ஏதேனுமொரு கேப்டன் பிரின்ஸ் சாகசமா ? அல்லது ரிப்போர்ட்டர் ஜானி சாகசமா ? சொல்லுங்களேன் ?///

    கப்தான் இளவரசர்

    ////உப கேள்வி : நாயகத் தேர்வைச் செய்து விட்டீர்களெனில் - அப்டிக்கா அந்த நாயகரின் எந்தக் கதையை மறுபதிப்பில் பார்த்திடும் ஆர்வத்தில் இருப்பீர்களோ ?//

    ஐஸ் டிவிசன் ஃபோர்ட்...

    ReplyDelete
  23. வணக்கம் எடிட்டர் சார்....!

    வணக்கம் நண்பர்களே....!

    ReplyDelete
  24. கே.ஒ :ரி.ஜா

    உ.கே : ந.தே ( நண்பர்கள் தேர்வு)

    ( நிறைய பழைய கதை படிக்கல)

    ReplyDelete
    Replies
    1. ///
      உ.கே : ந.தே ( நண்பர்கள் தேர்வு)///

      செனா அனா சார்பில்

      1.ரத்தக்காட்டேரி மர்மம்
      2. பிசாசுக்குகை
      3.ரத்த அம்பு
      4. சிவப்புப் பாதை
      5. தலைமுறை எதிரி
      6. மரணப்பட்டியல்
      7.மர்ம முத்திரை
      8. நள்ளிரவு பிசாசு
      9. விசித்திரப் போட்டி
      10. விசித்திர நண்பன்

      இவையெல்லாம் ஜானி க்ளாசிக்ஸ்.! இவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது எல்லாமுமோ கூட ஓகேதான் என்று செனா அனா சார்பில் தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைந்துகொண்டு....😍

      Delete
    2. கண்ணா @ இதே இதே. ஜானியின் பல கதைகள் படித்தது இல்லை... இப்படி மறுபதிப்பில் பார்த்தால்தான் உண்டு. ப்ளீஸ்

      Delete
  25. கேப்டனா...? ரிப்போர்ட்டரா....!

    ஹ்ம்ம்....!


    பிரின்ஸின் சில கதைகளை வண்ணத்தில் மறுபதிப்பாக ரசித்துவிட்டபடியால்....ஜானிக்கே முன்னுரிமை வழங்கலாம்...!

    ஜானியின் க்ளாஸிக்குகள் எதுவென்றாலும் ஓ.கே.

    ReplyDelete
  26. ஒருக்கால் வாக்கெடுப்பில் கேப்டன் வென்றால் திகில் கோடை மலரில் வந்த மரண வைரங்கள் என் தேர்வாக இருக்கும்.

    ReplyDelete
  27. எனது தேர்வு கேப்டன் பிரின்ஸ் - மரண வைரங்கள் அல்லது சைத்தான் ஜெனரல்

    ReplyDelete
  28. Dear Edi,

    I vote for Reporter Johny Reprint... Any classic stories from Thigil could be chanced upon.

    Eager to see the October set. Traveling, so would have to wait for a week, before laying my hands on the package.

    ReplyDelete
  29. எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும் என்பதால்... நீங்களா பாத்து எதுனா செய்ங்க சார்..

    ReplyDelete
    Replies
    1. நாங்க மட்டும் என்னவாம்?!!!!

      Delete
    2. ///எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும் என்பதால்... நீங்களா பாத்து எதுனா செய்ங்க சார்..///

      இந்த ஓட்டையும் ஜானி கணக்கில் வைத்தீக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டு.. . ..

      Delete
  30. Editor sir thanks for uba pathivu. My choice is captain prince. Wish You Happy Ayutha pooja &Vijaya Dasami.🙌👦🌺🌷🍍🍓🍒

    ReplyDelete
  31. ///கேப்டன் பிரின்ஸ் சாகசமா ? அல்லது ரிப்போர்ட்டர் ஜானி சாகசமா ? சொல்லுங்களேன் ?

    உப கேள்வி : நாயகத் தேர்வைச் செய்து விட்டீர்களெனில் - அப்டிக்கா அந்த நாயகரின் எந்தக் கதையை மறுபதிப்பில் பார்த்திடும் ஆர்வத்தில் இருப்பீர்களோ ?///

    ஜானி. . ரிப்போர்ட்டர் ஜானி..!!


    கதை : இரத்தக்காட்டேரி மர்மம் அல்லது பிசாசுக்குகை அல்லது தலைமுறை எதிரி.

    ReplyDelete
  32. சார்....

    பிரின்ஸ் அவர்களை மறுபதிப்புக்கு டிக் அடிக்கலாம் என உங்கள் பதிவை படித்தவுடன் தேர்ந்தெடுத்து இருந்தேன் ..ஆனால் மேலுள்ள கமெண்ட்ல் நண்பர் மகேஷ்குமார் சொன்ன தகவல் உண்மையிலேயே பல நண்பர்களுக்கு இன்ப தகவலாக தான் இருக்கும்.தாங்கள் தெரிவித்துள்ள அந்த மின்மினியில் வந்த தொடர்கதை பலரும் அறியாத தகவல் என்பதால் புதுகதை போல ஆர்வம் மேலோங்கும்.படித்த நண்பர்களுக்கோ தொடராக வந்த காரணத்தால் ஒரே தொகுப்பில் இப்போது புதிதாய் காண நிச்சயம் ஆவலாக இருப்பார்கள் .மொத்தத்தில் அந்த கதையை தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு மறுபதிப்பு ஆனால் எங்களை போன்ற கண்ணால் கூட காணாத அந்த தொடர் மறுபதிப்போ புத்தம் புதிது ...



    எனவே எனது சாய்ஸ் மின்மினி இதழில் வந்த தொடர்சாகஸமே...:-)

    ReplyDelete
    Replies
    1. தலைவரே சொன்னதுக்கப்புறம் இதுக்கு தான் என்னோட ஆதரவும்.

      Delete
    2. அவாளே சொல்லிட்டாளா.

      Delete
  33. ///
    எனவே எனது சாய்ஸ் மின்மினி இதழில் வந்த தொடர்சாகஸமே...:-)///

    இதுவும் ஏற்புடையதே..!!

    +1

    ReplyDelete
  34. ///முதலில் கேள்வி : ஒரேயொரு மறுபதிப்பு slot மாத்திரமே காலியெனில் - அதனை இட்டு நிரப்ப உங்கள் சாய்ஸ்///

    எடிட்டர் சார்!

    முதலில் கேள்வியில் இப்போது எனக்கு பெரிய சந்தேகம் . .!!

    இந்த Slot மீந்திருப்பது 2018 லா அல்லது 2017லேயா?? 😄

    ReplyDelete
  35. மர்மதீவில் மாயாவி இதழ் மட்டுமல்ல ஒருஜினல் ஒரு ரூபாய் முத்துகாமிக்ஸ் இதழ்களை ஏன் இரண்டு ரூபாய் இதழ்கள் பலவற்றை கனவில் மட்டுமே
    கண்டுள்ளேன் சார்..( இதில் பெரிய கொடுமை என்னவெனில் லயனில் பல இதழ்களில் எனது வாசகர் கடிதம் அதிகம் இடம்பெற்று இருந்த காரணத்தால் நான் ஒரு பெரும் காமிக்ஸ் புதையலுக்கு சொந்தகாரன் என பலர் நினைப்பது தான் )

    எனவே காமிக்ஸ் க்ளாசிக் இதழில் வந்த மறுபதிப்பான மர்மதீவில் மாயாவி தான் கைவசம் .உள்ளது சார்.அதை அனுப்பலாமா...!

    ReplyDelete
  36. முதலில் கேள்வி : ஒரேயொரு மறுபதிப்பு slot மாத்திரமே காலியெனில் - அதனை இட்டு நிரப்ப உங்கள் சாய்ஸ் ஏதேனுமொரு கேப்டன் பிரின்ஸ் சாகசமா ? அல்லது ரிப்போர்ட்டர் ஜானி சாகசமா ? சொல்லுங்களேன் ?


    என்னுடைய ஆதரவு ஜனியின் கதைக்கே சார்....அதிலும் அந்த இரத்தக் காட்டேரி மர்மம் கதைக்கு , என்னுடைய தாறுமாறான ஆதரவு சார்....

    ReplyDelete
  37. My vote to Captain Prince . The story that came in kodail malar of thigil

    Not sure about the name : Marana viram

    ReplyDelete
  38. சிக்கனை சில்லியா போட்டாலும், ப்ரையா போட்டாலும் எனக்கு ஓகே தான்.. கூடவே மீன் வருவல்னாலும் டபுள் ஓகே...

    ReplyDelete
    Replies
    1. புரட்டாசியப்ப பேசற பேச்சா இது.

      Delete
    2. வாங்க கரூர்கார்
      எந்த ஹோட்டலுக்கு போலாம்

      Delete
    3. இந்த சிக்கன்னா பெ..பெ..ன்னு சொல்லுமே, இரண்டு கால் இருக்குமே அதா...அய்யோ... உசுரு உள்ள பிராணி அய்யா அது...அதையா சாப்பிடுவது... இரக்கமே இல்லாத மனசா...!!! ஓவ் புனித மனிடோ தேவனே இவர்களை மன்னியும்...

      இந்த கண்ணாடி தொட்டில வைத்து வளர்க்கும் கலர் கலர் மீன் தெரியும். அது என்ன ப்ரை பண்ணற மீன்?? அப்படியெல்லாம் மீன்ல இருக்கிறதா???
      அப்படியே இருந்தாலும் உயிர் உள்ள ஜீவனை உண்பதா...!!! கேட்கும்போதே மனசு கலங்குதே...!!!
      கண்ணீர் உகுக்கிறதே...!!!

      Delete
    4. இன்னும் பத்து நாள் போச்சுன்னா, கண்ணுல பாக்கிறதயெல்லாம் ப்ரை போடத் தோணும்..

      Delete
  39. மறுபதிப்புக்கான என்னுடைய தேர்வு: கேப்டன் ப்ரின்ஸ்.
    கதைகள்: எரிமலைத்தீவில் ப்ரின்ஸ் (அ) மரண வைரங்கள்.

    ReplyDelete
    Replies
    1. +11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111

      Delete
    2. இந்த கதைகளை கூட படித்து இல்லை. ஜானி + பிரின்ஸ் இணைத்து ஒரு ஸ்பெஷல் போட்டு விடுங்க சார்.

      Delete
  40. இருவரும் இணைந்த திகில் ஸ்பெஷல் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. +1000 நல்ல அகுடியா.... பஞ்சாயத்து முடிஞ்சி போச்...

      தல டெக்‌ஸின் தீவிர ரசிகர்களுக்கு தான் என்னே ஒரு தாராள மனது என்பதை கிருஷ் ஜியின் பதிவு உணர்த்தும் உலகுக்கு...💖💖💖
      இருவரின் ரசிகர்களும் வரவேற்கும் நல்ல முடிவாகவும் பார்க்கலாம்...

      Delete
    2. Krishna VV : இது சிலபஸிலேயே இல்லீங்களே ?!

      Delete
  41. கேப்டன் பிரின்ஸ் எனது ஆசை சார்...

    ReplyDelete
  42. இதுவரை கேப்டனே லீடிங்... ஆனால் பெரிய தலையெல்லாம் ஜானிக்கு ஓட்டு போட்டிருப்பதால் பயந்து பயந்து வருது...

    ReplyDelete
    Replies
    1. நம்ம தொகுதி பொட்டிய எண்ண ஆரம்பிக்கட்டும்... அப்புறம் பாருங்க யார் லீடிங்'னு!

      Delete
    2. உங்க தொகுதியிலதான் கள்ளவோட்டோ போட்டுருக்கோம்.!!

      Delete
    3. கவலை வேணாம் கார்த்திக்... கேப்டன் நல்ல லீடிங்ல ஜெயம் காண்பது உறுதி...

      Delete
    4. எவ்வளோ நாள் தான் பாலைவனத்தையும், நெரிசலான நகரத்தையும் பார்ப்பது.. ஒரு சேஞ்சுக்கு கடல் பயணத்தையும் தான் பார்ப்போமே..

      Delete
    5. க௫ர் சரவணன் சார்-அற்புதம்.
      அழகு.அ௫மை.அட்டகாசம்.அபாரம்.நன்றி.!!!!

      Delete
  43. மறுபதிப்புக்கான என்னுடைய தேர்வு: கேப்டன் ப்ரின்ஸ்.
    கதை: எரிமலைத்தீவில் ப்ரின்ஸ்
    A master piece, would like to read in color.

    ReplyDelete
  44. வழக்கம்போல மௌணப்பார்வையாளர்கள் முந்நூறு பேர் தொடர்புகொண்டு, தங்களுடைய சார்பில் ஜானிக்கு ஓட்டுப்போடச்சொல்லி என்னிடம் மௌணமாக கூறியுள்ளனர்.!

    எனவே ரிப்போர்ட்டர் ஜானிக்கு கூடுதலாக முந்நூறு ஓட்டுகளை கணக்கில் வைத்துக்கொள்ளும்படி எடிட்டர் சாரை கேட்டுக்கொள்கிறேன்! 😝😝😝

    ReplyDelete
    Replies
    1. இங்கே 3வாட்ஸ்அப்பில் 3000 ஓட்டுக்கள் கேப்டன் ப்ரின்ஸ்க்கு விழுந்துள்ளது ...
      ஆசிரியர் சார், இதையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டுமாய் பணிவன்போடு கேப்டன் ரசிகர் மன்றம் கோரிக்கை வைக்கிறது...

      மேலும் முக நூலில் குவிந்த வண்ணம் வாக்குகள் பெருமளவில் கேப்டனுக்கு விழுந்து வருவதால், என்னுடைய முகநூல் ஐடியே டவுன் ஆகிட்டது என்ற தகவலையும் மன்றத்தார் முன்னிலையில் வைக்கும் கடமை எனக்குண்டு சார்...

      Delete
    2. @ கேப்டன் ரசிகர் மன்றம் : That "காரைக்குடிலே கூப்டாகோ....ஜப்பானிலே கூப்டாகோ....அந்த ஜேக்கி சானே கூப்டாகோ" moment #

      Delete
  45. Replies
    1. நண்பருக்கு ப்ளஸ் ஒன் போட சொல்லி பலநூறு பேர் போர்கொடி தூக்குவதால் அவர்கள் சார்பாக ப்ளஸ் ...

      Delete
    2. தலீவரே..இன்னிக்காச்சும் உங்க நள்ளிரவுப் பிரச்சாரத்தைத் தொடங்குங்கோ...!! இல்லே அதுக்குள்ளாற பெட்ஷீட்டுக்குள்ளே புகுந்தாச்சா ?

      Delete
    3. நண்பருக்கு ப்ளஸ் ஒன் போட சொல்லி பலநூறு பேர் போர்கொடி தூக்குவதால் அவர்கள் சார்பாக ப்ளஸ் ...

      Delete
    4. தலீவர் + 1 படிக்கும்போதுகூட 9 மணிக்கே
      தூங்குவார்னு கேள்வி.இப்ப என்னடான்னா

      Delete
    5. என்ன பன்றது கணேஷ் சார்...

      சொத்து ப்ரச்சனை ன்னா தூங்கிரலாம்...

      இது ஓட்டு பிரச்சனை ...


      முழிக்கலைன்னா பின்னாடி பிரச்சனை ஆயிறும்...

      Delete
  46. மக்களே!!

    உங்கள் வோட்டு 'கேப்டன் பிரின்ஸ்'க்கே!

    ஏன்?

    * நீலக்கடல், பச்சைப் பசேல் காடுகள், தகிக்கும் பாலை, குமுறும் எரிமலை, இருண்ட சதுப்பு நிலங்கள் - இவற்றினூடே புகுந்து புறப்படும் நேர்கோட்டு சாகஸங்கள்!

    * இயற்கை அழகை அப்படியே கண்முன் நிறுத்தும் ஆற்றல் கொண்ட ஹெர்மனின் அற்புத ஓவியங்கள்!

    * பிரின்ஸ், பார்னே, பொடியன் ஜின் - ஆகிய மூன்றுதலைமுறையினரின் பாசப் போராட்டங்கள்! ஒருவருக்காக ஒருவர் உயிர்துறக்கவும் யோசிக்காத அபார பந்தம்!

    * குழப்பமில்லா கதைக் களங்கள்!

    * யதார்த்மான வசனங்கள்!


    வேறென்ன வேண்டும் நமக்கு? உங்கள் பொன்னான வாக்குகளை சாகஸ நாயகன் 'கேப்டன் பிரின்ஸ்'க்கே அளித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்!

    _/\_

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் கவர்ச்சியான போலி பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு.. . .

      Delete
    2. எனக்கும் பிரின்ஸ் தான் ..ஆனா இதுவரை பாக்காத ..,படிக்காத ( நான் மட்டுமல்ல ..) ஒரு கதை மறுபதிப்பு ..

      நினைச்சு பாருங்க செயலரே....:-(

      Delete
    3. செயலர் சொல்வதை அப்படியே வரிக்கு வரி வழிமொழிகிறேன் மக்களே....
      உங்கள் பொன்னான வாக்குகளை "கழுகு" சின்னத்தில் பொறித்து கேப்டன் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி கேட்டு கொள்கிறேன் மக்களே...

      Delete
    4. ஈரோடு விஜய்@ My vote is for Captain Prince

      Delete
    5. இதுவரை நாம் வெளியிடாத ரிப்போர்டர் ஜானி கதைகளே ஏகப்பட்டது இருக்கு தலீவர் அவர்களே...

      ஆனால், கேப்டனுக்கு இனி புதுக்கதைகள் வெளிவர சாத்தியமே இல்லை. அதை யோசிச்சுப் பாருங்க!

      Delete
    6. இந்த முறை செயலாளருக்கே எங்கள் ஓட்டு.. தலிவரே, உங்களுக்கு பதுங்குக் குழியில் ஏசி வசதியுடன் சிக்கன்,மீன், மட்டன் மற்றும் அந்த ஆமை முட்டையில் செய்த பொரியலும் ஏற்பாடு செஞ்சுருக்காங்க.. போய் ரெஸ்ட் எடுத்துட்டு ப்ரெஷ்சா "சிங்கத்தின் சிறுவயதில்" போராட்டத்திற்கு வாங்க..

      Delete
    7. கேப்டன் பிரின்ஸுக்கு ஆதரவாக வாக்களித்துவரும் அனைவருக்கும் நன்றி நண்பர்களே!

      உண்மையை உணராமல் ரிப்போர்டர் ஜானிக்கு ஆதரவாக கோஷமிட்டு வரும் அந்த ஒருசிலரும் விரைவில் நம்மோடு வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது!

      Delete
    8. பிரின்ஸ்க்கு ஓட்டு போடறவங்களுக்கு கடலை மிட்டாய் தரலாம்னு இருக்கேன்

      Delete
    9. கேப்டன் பிரின்ஸ் வாழ்க!வாழ்க!!வாழ்க!!!!வாழ்க!!!!

      Delete
    10. R.Anbu : இப்போ தான் நம்மூர் தேர்தல் வாடையே லேசா அடிக்கத் தொடங்குது டோய் !!

      ஆனாலும் கழக நிதி நிலைமை ஒரு கடலைமிட்டாய் நிலைமைக்கு இறங்கிவிட்டது தான் கொஞ்சம் உதைக்குது !

      Delete
    11. சேலம் டெக்ஸ் நீங்கள் பொன்னான வாக்குகளை கழுகு சின்னத்தில் பொறித்து
      என்றது எங்கள் காதில் கழுகை கிண்ணத்தில் பொன்போல பொரித்து
      என்று கேட்டது தட் கழுகு ஃப்ரை.😝😝

      Delete
    12. குழப்பம் மிக நல்லது. அதற்கு பிறகு கிடைக்கும் தெளிவு இன்னும் நல்லது என எங்க பாட்டி சொல்லி இருக்காங்க. எனவே ஜானிக்கு உங்கள் வோட்டை போடவும்.

      Delete
  47. எனது ஒட் Bernard prince கோஷ்டிக்கே !

    ReplyDelete
  48. சேந்தம்பட்டியின் மூத்த நண்பர்...இளைய மனதுகாரர்..,ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ..,மெளன பார்வையாளர் திரு .அன்பரசன் சார் அவர்களின் தேர்வு கேப்டன் பிரின்ஸ் என்பதை தெரிவிக்க சொல்லி உள்ளார் ...நன்றி....:-)

    ReplyDelete
    Replies
    1. அப்படி போடுங்க அன்பு சார்....

      கேப்டன் பிரின்ஸ் அனைத்து தரப்பு வாக்காள பெருமக்களின் ஏகோபித்த ஆதரவையும் பெற்று ஈடுகட்டவே முடியாத முன்னணியில் இருப்பதால் , ஆசிரியர் சார் தாமதமின்றி முடிவை அறிவிக்க வேண்டுகிறேன்...

      Delete
    2. மெளனப் பார்வையாளாராக இருந்தாலும்கூட 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்' என்று தலீவர் மூலமாக வாக்களித்திருக்கும் மதிப்புக்குரிய ஐயா கும்பகோணம் அன்பரசன் அவர்களுக்கு கேப்டன் பிரின்ஸ் நற்பணி மன்றத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்! _/\_

      Delete
    3. அட...திடீர் திருப்பங்கள் இல்லா தேர்தல் களமா ?

      ரிப்போர்ட்டர் ஜானி அணியினரே : MORE EMOTIONS PLEASE !!

      Delete
    4. ///ரிப்போர்ட்டர் ஜானி அணியினரே : MORE EMOTIONS PLEASE ///

      பொறுங்க சார்! அவங்கள்லாம் கள்ளவோட்டு போட பக்கத்து ஸ்டேட்டுக்கு போயிருக்காங்க. பிரியாணிப் பொட்டலத்தை வாங்கிக்கிட்டு சீக்கிரமே வந்துடுவாங்க!

      Delete
    5. K O K தலைமையில்

      Delete
  49. மக்களே...

    நீங்கள் ஏன் ரிப்போர்ட்டர் ஜானிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்?

    இதோ காரணங்கள்:

    * முதல் பக்கத்திலிருந்து கடேசி அட்டைவரை குழப்பம்னா குழப்பம்.. அப்படியொரு குழப்பம்!

    * எல்லாக் கதைகளிலும் ஒரே மாதிரியான டெம்ப்ளேட்! கதையில் எப்போதுமே ஜானியைச் சுற்றிச் சுற்றிவரும் நாலுபேரில் யாரோ ஒருவர்தான் குற்றவாளியாக இருப்பார்கள்! ஆனால் 44ம் பக்கத்திற்குப் பிறகுதான் ஜானியால் குற்றவாளியை அடையாளம் காணமுடியுமாம்! ( பக்கத்தை நிரப்பணுமில்லே?)

    * பக்கத்துக்குப் பக்கம் யாராவது ஒருவர் வாய் பிளந்து அதிர்ச்சியைக் காட்டிக்கொண்டே இருப்பார்கள்! ஓவர் ஆக்டிங் மாதிரியே இருக்கும்!

    * கதைக்களம் ஒரு சிறுநகரத்தில், நான்கு வீடுகள், ஒரு ஒதுக்குப் புறமான வீடு, ஒரு புராதன சர்ச், ஒரு பலசரக்குக் கடை - இவற்றை மையப்படுத்தியே சுற்றிச் சுற்றி வந்து அலுப்புத்தட்ட வைக்கும்!

    சிந்திப்பீர்!! வாக்களிப்பீர்!!!

    உங்கள் வோட்டு - சாகஸத் தலைவன் - பிரின்ஸுக்கே!!

    ReplyDelete
    Replies
    1. ஓட் ஃபார் ப்ரின்ஸ்...
      உங்கள் ஓட்டு பிரின்ஸ்க்கே...

      Delete
    2. ப்ரின்ஸ் கூட வரும் அந்த பிஞ்சு முக தாத்தாவையும் நினைச்சு பார்த்து ஓட்டுப் போடுங்க..

      Delete
    3. ///ப்ரின்ஸ் கூட வரும் அந்த பிஞ்சு முக தாத்தாவையும் நினைச்சு பார்த்து ஓட்டுப் போடுங்க..///

      நெகிழவச்சுட்டீங்க கரூர்கார்!

      Delete
    4. அந்த பிஞ்சு தாத்தா.... பாட்டிலா வாங்கி சிறுவனின் மனதை நஞ்சாக்குவதை ஒத்து கொள்கிறீரா மக்கழே...

      Delete
  50. hahahaha....
    //உங்கள் வோட்டு - சாகஸத் தலைவன் - பிரின்ஸுக்கே!!// +1

    ReplyDelete
    Replies
    1. நடுநிலையான நண்பர்களில் ஒருவரான நம்ம பாலா ஜியும் பிரின்ஸ்ஸையே தேர்ந்தெடுத்து விட்டதால், போட்டி ஒரு திசையில் மட்டுமே பயணிக்கிறது...

      Delete
    2. அது என்ன நடுநிலை அப்ப நாங்க எல்லாம் சென்டர் நிலைன்னு வச்சுக்கோங்க மக்களே. ஜானிக்கே உங்கள் வோட்டு.

      Delete
  51. /ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ..,மெளன பார்வையாளர் திரு .அன்பரசன் /
    யாருங்க அவரு நா பார்க்கணுமே

    ReplyDelete
    Replies
    1. கும்பகோணம் போனால் பார்க்கலாம் நண்பரே...!!!

      Delete
  52. ஹை....மதியம் உ.ப.வைப் போட்டு விட்டு (உப பதிவு தானுங்கோ) சாவகாசமாய் இப்போது இங்கே எட்டிப் பார்த்தால் சும்மா RK நகருக்குள் கால் பதித்த மாதிரி ஒரு பீலிங்கு !! வேட்பாளர்களுக்காக அணிகள் செய்யும் பிரச்சாரம் சும்மா அதிருதில்லே !!

    நடுநிலை வாக்காளர்கள் இந்தப் பொன்னான வாய்ப்பை நழுவ விடாது, நமது ஜனநாயக மரபுப்படி - "கவருக்குள் காந்தித் தாத்தா" ; "'87 தீபாவளி மலரில் ஒரு பிரதி" ; "இரத்தப் படலம் முன்பதிவு" என்று அவரவர் ரேஞ்சுக்கு ஏதேனும் தேற்ற முடிகிறதாவென்று பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் !

    அட..ஒண்ணும் தேறலியா ? - அட் லீஸ்ட் "தலப்பாக்கட்டிக்கோ ; ஜுனியர் குப்பண்ணாவுக்கோ ஒரு டோக்கன்" என்று பிட்டைப் போட்டுத் தான் பாருங்களேன் ?!

    ReplyDelete
    Replies
    1. 'என் ஓட்டும் சாகஸத் தலைவன் பிரின்ஸுக்கே!' என மறைமுக ஆதரவளித்திருக்கும் எடிட்டர் சமூகத்திற்கு நமது நன்றிகளும், வாழ்த்துகளும்!!

      ( எடிட்டருக்கு ஒரு டோக்கன் கொடுத்துடுங்கப்பா!)

      Delete
    2. அடியேன் டெல்லியிலிருந்து வந்திருக்கும் நடுநிலை தேர்தல் அதிகாரி மட்டும் தானாக்கும் ! வந்தோமா - ரெண்டு அணிகளின் தலீவர்களின் கையைப் புடிச்சு இழுத்தோமா ; ஒண்ணு சேர்த்துப்புட்டு ; போட்டோவுக்கு போஸ் குடுத்த கையோடு அடுத்த பிளைட்டை புடிச்சோமான்னு இருந்தாகணும் !

      அபி புரட்டாசி மாதம் ஹை !.....கோமள விலாஸ் டோக்கன் மிலேகா ?

      Delete
    3. :))))))

      நோ ப்ராப்ளம் சார்! நாங்கள் கொடுக்கும் ஜூனியர் குப்பண்ணா டோக்கனின் வேலிடிட்டி - இரண்டு மாதங்கள்! சாவகாசமா புரட்டாசிய முடிச்சுட்டு வந்து குப்பண்ணாவில் சாகஸம் பண்ணலாம் நீங்க!

      Delete
  53. உஷார் மக்களே... உஷார்!!

    ரிப்போர்ட்டர் ஜானி - இவருடைய உண்மையான பெயர் - Ric Hochet. போலிப் பெயரில் தமிழ்நாட்டினுள் நுழைந்து, போலி ஆதார் அட்டையுடன் சிவகாசியில் குடிகொண்டு - கதைக்குக் கதை பல குழப்பங்களை விளைவித்துவரும் - இவருக்கா உங்கள் ஓட்டு?!!!

    சிந்திப்பீர்!! வாக்களிப்பீர்!!!

    ReplyDelete
  54. இன்டர்போல் வேலையையே ஒரு பிசாத்து படகு கிடைச்ச காரணத்தினாலே உதறித் தள்ளின ஆசாமிங்க கிட்ட பொறுப்பை ஒப்படைக்கிறது பத்தியும் சிந்தியுங்கள் மக்க லே !!

    ReplyDelete
    Replies
    1. 'அடுத்தவரிடம் கையைக் கட்டி வேலை செய்வதெல்லாம் ஒரு பிழைப்பா?' என்று இன்டர்போல் வேலையை உதறிவிட்டு, சுயதொழில் செய்து முன்னேறத் துடிக்கும் தன்மானமுள்ள இளைஞருக்கே உங்கள் ஓட்டன்றி வேறு யாருக்கு?

      தன்மானமுள்ள இளைஞர்கள் தவறாது வாக்களிக்கும் ஒரே சின்னம்தான் 'படகு' சின்னம்!

      உங்கள் ஓட்டு பிரின்ஸுக்கே!

      Delete
    2. படிய வாரிய அந்தப் "படித்துறைப் பாண்டி கிராப்பை" ஒரு கணம் மனசுக்குள் கொண்டு வாங்க ; மறு கணம் எண்ணெயே பார்த்திரா ஒரு பரட்டைத் தலையையும் மனக்கண்ணில் நிறுத்துங்க ! தலை வாரத் தெரியாதவருக்கா தலைமை ?

      சிந்திப்பீர் !! செயல்படுவீர் !!

      Delete
    3. கடல் பயணமும், அந்த உப்புக் காற்றும் எப்பேர்ப்பட்ட சிகையலங்காரத்தையும் நட்டுக்கொள்ளச் செய்யும்! திரைகடல் ஓடியும் திரவியம் தேடிடும் உழைப்பாளர்களின் தலை 'பரட்டையாகவே' காட்சியளிக்கும்!

      எங்கள் சாகஸத் தலைவன் - பிரின்ஸின் தலை பரட்டையாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்!!

      நீங்களும் பெருமிதத்தோடு பிரின்ஸுக்கே வாக்களியுங்கள் மக்களே!!

      Delete
    4. தண்ணீர் இருந்தும் குளிக்காமல் சுற்றும் இந்த ஜன்மங்களுக்கா உங்கள் வோட்டா? சிந்திப்பீர். சுத்தத்தின் மறு உருவான ஜானிக்கே உங்கள் வோட்டு.

      Delete
    5. ///சுத்தத்தின் மறு உருவான ஜானிக்கே உங்கள் வோட்டு.///

      வேற வழியில்லை! இல்லேன்னா நாடீன் பக்கத்திலேயே வரமாட்டா இல்ல?!! ;)

      Delete
    6. விஜயன் சார் கொஞ்சம் முன்னாடிதான்
      அடியேன் டெல்லியிலிருந்து வந்திருக்கும் நடுநிலை தேர்தல் அதிகாரி மட்டும் தானாக்கும் ! வந்தோமா - ரெண்டு அணிகளின் தலீவர்களின் கையைப் புடிச்சு இழுத்தோமா ; ஒண்ணு சேர்த்துப்புட்டு ; போட்டோவுக்கு போஸ் குடுத்த கையோடு அடுத்த பிளைட்டை புடிச்சோமான்னு இருந்தாகணும் !அப்பீடீன்னு சொன்னீங்
      அதுக்குள்ள வெயிட்டான சூட்கேஸ்
      வந்திடுச்சா.

      Delete
    7. ganesh kv : டில்லி என்றாலே கொஞ்சம் இப்படியும், அப்படியும் இருந்தாகணுமே சார் ?

      Delete
  55. நாட்டாமை சார் சீக்கிரம் தீர்ப்பைச் சொல்லுங்க!!!!.

    ReplyDelete
    Replies
    1. SARAVANAN : மேலே பாருங்கள் நண்பரே : ஒரு வோட்டெடுப்புக்கு ஏற்பாடு செய்துள்ளேன் ! பதிவின் வலது மேல்கோடியில் ....!

      Delete
  56. துப்பறிய வேண்டியது - போலீஸின் வேலை!
    செய்தி சேகரித்து கட்டுரை எழுதவேண்டியது - ரிப்போர்ட்டரின் வேலை!

    செய்தி சேகரிக்க வேண்டிய ஜானிக்கு - துப்பறியும் அதிகாரத்தை யார் கொடுத்தது??
    உள்ளூர் போலீஸ் கமிஷனரைக் கைக்குள் போட்டுக் கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கா உங்கள் ஓட்டு!!

    பண்புள்ள மக்களே சிந்திப்பீர்!! செயல்படுவீர்!!!

    ReplyDelete
    Replies
    1. குழந்தைத் தொழிலாளர்களை சிவகாசியே புறந்தள்ளும் நாட்களில் - ஒரு பச்சைப் புள்ளையை ஒரு குடிகாரக் கிழத்தோடு கோர்த்து விட்டு சம்பளமே தராது சவட்டி எடுப்போரா உங்கள் தேர்வு ? ஒரு கணம் சிந்திப்பீர் ௧

      Delete
    2. அனாதைச் சிறுவன் ஜின்'க்கு புகழிடமும், கெளரவமான வேலையும், கைநிறைய காசும் கொடுத்துத் தன் உடன்பிறவாச் சகோதரன் போல கண்ணுக்குள் வைத்துக் கவனிக்கும் - இரக்க சிந்தையுள்ள இளவரசன் - கேப்டன் பிரின்ஸுக்கே உங்கள் வோட்டு!!

      Delete
    3. அந்த சிறுவனிடம் " பாட்டில் " வாங்கி வர சொல்லி சிறுவனை கெடுக்கும் கிழவர்களுக்கா உங்கள் ஓட்டு ..

      மின்மினி போல் அந்த சிறுவனை பறக்க வைக்க உங்கள் ஓட்டு மின்மனி ஜானிக்கே....

      Delete
  57. யப்பா.....ஆனாலும் தாரமங்கலத்துக்கு மட்டும் நள்ளிரவை நாலு மணி நேரம் முன்னதாகவே கொண்டு வந்தது யாரு ?

    ReplyDelete
    Replies
    1. வந்துட்டேன் சார் ...வந்துட்டேன் .நாலுநாள் தூக்கம் போனாலும் பரவாயில்லை....வெற்றிவேல் மின்மினி ஜானி வேல் ...

      Delete
  58. கேப்டன் பிரின்ஸ் சாகஸம் செய்வது - வயிற்றுப் பிழைப்புக்காக! தன்னை நம்பியிருக்கும் பார்னே மற்றும் ஜின்னுக்காக!

    ரிப்போர்ட்டர் ஜானி சாகஸம் செய்வது - நாடீனை இம்ப்ரஸ் செய்வதற்காக! இம்ப்ரஸ் செய்து அவளுடன் டேட்டிங் செல்வதற்காக!

    முடிவு செய்யுங்கள் மக்களே... உங்களது முத்திரை யாருக்கு?!!!

    ReplyDelete
    Replies
    1. நீதியை நிலைநாட்டும் தருணத்தில் டேட்டிங் போகவும் வாய்ப்புக் கிட்டினால் அதனை நிந்திப்பானேன் ? அது எதற்குமே வழியின்றித் தானே கடலுக்குள் பயணம் ? காதில் புகை கசிவானேன் ? யோசியுங்கள் !

      Delete
    2. ஆஹா....ஆஹா.....

      முந்தைய எதிரணி தலைவர் இப்பொழுது எங்களின் குரு தலைவர்...


      தொண்டர்களே படை எடுங்கள்....செயலரை செயல்பட விடாமல் தடுப்போம்...

      Delete
  59. தூங்கிட்டு இருந்தவனுக்கு திடீர் தாகம் எடுத்து எழுந்தால் தேர்தலில் நிற்கும் வேட்பாளரின் மன நிலையில் எதற்கும் எட்டி பார்க்கலாமே என நினைத்தால் பிரச்சாரம் அதற்குள் இந்த சூடு பறக்கிறது..சத்தம் போடாம பிரச்சாரம் பண்ண .வந்துட்டேன் ....:-))

    ReplyDelete
    Replies
    1. இங்கே கூவிக் கூவி ஏன் தொண்டையும் வறண்டே போச்சு தலீவரே ; நல்ல காலத்துக்கு வந்தீங்க !!

      Delete
    2. ஆப்பிள் ஜூஸ் உடன் வருகிறேன் சார் ...ரெஸ்ட் எடுங்கள் ..படை எடுக்கிறேன் ..

      Delete
  60. கேப்டன் பிரின்ஸ் க்கு முத்திரை குத்தியாச்சு.!!!
    காமிக்ஸ் காதலர்களே விரைந்து cp க்கு வாக்களிக்க மறவாதீர்கள்!@@@

    ReplyDelete
    Replies
    1. பிரின்ஸ் முத்திரை நமது ஓட்டு முத்திரை ..ஒரே நாளில் மறைந்து விடும்..


      மின்மினி ஜானி முத்திரையோ

      வேதாள முத்திரை .


      என்றும் மறையா....


      வாருங்கள் தோழர்களே...

      Delete
  61. 'ஒரு பானை சோற்றுக்கு - ஒரு சோறு பதம்'

    மேலே ரிப்போர்டர் ஜானியின் படத்தைக் கவனியுங்கள் மக்களே...

    ஒரே ஆள் - இரண்டு கெட்அப்புகளில்!! எத்தனை பித்தலாட்டம்!!!!

    சிந்திப்பீர்!!! உண்மைக்கு வாக்களிப்பீர்!!!

    ReplyDelete
    Replies
    1. ஒரு பானை சோறுக்கு ...ஒரு சோறு பதம்....


      விதவிதமான கெட் அப் போட்டு .தன்னை வருத்தி ...பிறருக்கு நீதி வழங்கும் வள்ளலை பார் மக்களே.....கெட்அப் போட்டு செட்அப் செய்யும் மனிதர்கள் மத்தியில் நீதிக்காக கெட்அப் போடும் மின்மினி ஜானியை பாருங்கள் ...யோசியுங்கள்...

      Delete
    2. மாற்றம்..முன்னேற்றம் ! என்றும் நம் தாரக மந்திரம் !

      Delete
  62. அலையாம்....


    படகாம்.....



    கடலாம்.....



    இவை பார்க்க..பார்க்க....ரசிக்க தோணும் மக்களே...


    ஆனால் முடிவு ...நினைத்து பாருங்கள் ..

    டைட்டானிக்கை....காவியமாகலாம்....


    காலனிடம் போனபிறகு காவியமாகி என்ன பயன்....



    மின்மினியாய் பறங்கள்....ஒளிவெள்ளத்தை படையுங்கள்.....

    ReplyDelete
    Replies
    1. தலீவரைப் பொருத்தவரை இது அவருக்கு நள்ளிரவு தாண்டிய நேரமென்பதால் தூக்கத்தில் உளற ஆரம்பித்துவிட்டார் மக்களே!

      குழப்பம் வேண்டாம்! அவர் சொல்ல விழைவது "உங்கள் ஓட்டு கேப்டன் பிரின்ஸுக்கே!"

      Delete
  63. ஐயோ ....கண்ணு வேற ஙிஜயகாந்த் மாதிரி சிவக்குதே...

    தேர்தல் கமிஷன் பத்து மணிக்கு மேல பிரச்சாரம் பண்ணக்கூடாதுன்னு என்னை மிரட்டறாங்க சார்...:-(

    ReplyDelete
    Replies
    1. பால்மணம் மாறா தலீவரின் ஆசி பெற்றவருக்கு போடுங்களேன் வோட்டை ?

      Delete
  64. ஜானி கதைகள் புதியது இருந்தாலும் பழையவை படிக்காத கதைகள் பல உள்ளன மேலும் பலரிடம் இல்லாதவை. மறுபதிப்பில் ப்ரின்ஸ்க்கு பலமுறை வாய்ப்புகள் கொடுத்துவிட்டபடியால் வரும் ஆண்டில் ஜானிக்கு வாய்ப்பு கொடுங்கள். விற்பனையில் சாதனை படைப்பாளர்.

    ReplyDelete
  65. Replies
    1. "ங்ஙே" என்று கூறிக்கொண்டு...

      Delete