Sunday, September 03, 2017

ஒரு பத்தியப் பதிவு !

நண்பர்களே,

வணக்கம். ரொம்ப நாள் கழித்து என்ன எழுதுவது புதுசாய் என்று தெரியா வறட்சி நிலை ! 
 • செப்டம்பர் இதழ்கள் - டிக் அடித்தாச்சு !
 • இரத்தப் படலம் பில்டப் - டிக் அடித்தாச்சு !
 • தீபாவளி மலர் பற்றி பில்டப்  : அதற்கு இன்னமும் நிறைய அவகாசம் உள்ளதே !
 • 2018 அட்டவணை பற்றி பில்டப் - ஏகமாய்க் கொடுத்தாச்சு 
 • ஆண்டின் எஞ்சியுள்ள இதழ்கள் பற்றிய பில்டப் : இப்போவேவா ?

இது போன்ற வறண்ட நாட்களின் போதெல்லாம் - "நான் குழந்தையா இருக்கச்சே - பிராங்கபர்ட் போய் என்ன செஞ்சேன்னா " என்று ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் காதில் இரத்தம் கசியுமளவிற்கு பாட்டி வடை சுட்ட அந்தக் கதைகளைச் சொல்லி முடித்துவிட்டபடியால் அந்தத் திக்கில் தலை வைக்கவே பயமாயுள்ளது !

தவிர, இது செப்டெம்பர் இதழ்கள் மீது நம் கவனங்கள் லயித்தாகிட வேண்டிய தருணம் என்பதால் - வேறு எதையேனும்  எழுதி வைத்து ஒளிவட்டத்தை திசைதிருப்ப மனமில்லை ! So இந்த வாரம் ஒரு பத்திய பதிவு மட்டுமே ! அதுவும் செப்டெம்பர் இதழ்களை சார்ந்த தகவல்களாய் !  

இம்மாத டெக்சின் சாகசம் அவரது memorable ஹிட்ஸ்களுள் ஒன்றாக இருக்கக் கூடுமென்று முதல்தகவல் அறிக்கை சொல்வதை உணர முடிகிறது ! சரியாக 56 ஆண்டுகளுக்கு முன்பாய் "கடல்குதிரையின் முத்திரை" வெளியானதென்பதை நான் தோட்டா டைம்ஸில் எழுதியிருந்தேன் என்றால் - இன்னமுமொரு புதுத்  தகவல் நேற்றைய மின்னஞ்சலில் கிட்டியது போனெலியிடமிருந்து ! டெக்சின் பிதாமகர் திரு G.L போனெல்லி எனில் - ஓவிய அசுரர் திரு அரேலியோ காலெப்பினி தான் ! டெக்ஸை சிருஷ்டித்த இந்த ஜாம்பவானின் 100 -வது பிறந்தநாள் ஆகஸ்ட் 28 -ல் தானாம் !! So தெரிந்தோ-தெரியாமலோ இந்த செப்டம்பரில் அவரது கைவண்ணத்தில் உருவான சாகசத்தையே வெளியிட்டுள்ளோம் ! Talk about coincidences !!
செப்டம்பர் 22-ல் போனெல்லி நிறுவனம் நூற்றாண்டை நினைவூட்டும் விதமாயொரு GALEP ஸ்பெஷல் வெளியிடவுள்ளனர் ! And இதோ - அவரது துவக்க நாட்களது படைப்புகள் :


எத்தனைதான் புதுப் புது பாணிகளில் சித்திரம் போட இன்று இத்தாலியில் ஓவியர்கள் தயாராகி நின்றாலும், டெக்ஸை இத்தனை அழகாய் நம் கண்முன்னே உலவச் செய்தவர் என்ற பெருமை நிச்சயமாய் இவரையே சாரும் ! 2018-ன் நமது அட்டவணையில்  இவரது கதைகளுக்கும் நிறைவாய் இடமுள்ளது என்பது கொசுறுச் சேதி !

70 -வது 'தல' பிறந்த நாள் ஆண்டு காத்திருக்க, ஓவியரின் நூற்றாண்டும் முந்திக் கொள்ள - போனெல்லி சரமாரியாக ஏதேதோ திட்டமிட்டு வைத்திருக்க - TEX வரலாற்றில் சில பல அதி முக்கிய நாட்கள் முன்னே காத்திருப்பதாய்த் தோன்றுகிறது! நம் பங்குக்கும் ஏதேனும் அட்டகாசமாய் செய்திட வேண்டுமே என்ற துடிப்பு ஒரு பக்கமிருக்கிறது ; அதே சமயம் பட்ஜெட் எனும் ஸ்பீட் பிரேக்கரும் தாட்டியமாய் நம் முன்னே கை கட்டி நிற்பதும் தெரிகிறது ! இரண்டுக்கும் சமரசம் செய்யும் விதமாய் திட்டமிடுவதில் தான் ஏகமாய் மண்டை காய்கிறது ! ஏற்கனவே XIII -ன் மெகா பட்ஜெட் 2018 கென நிற்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதொரு சமாச்சாரமல்லவா? மோவாயில் கை வைத்து சிந்திக்கும் படங்கள் ஒரு டஜன் !

கிராபிக் நாவலும் இம்மாதத்து ஹிட் பட்டியலில் இடம்பிடித்திடுமா என்பதை அறிய தொடரும் பின்னூட்டங்களும், நாட்களும் வழிசெய்யும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பேன்.நேர்கோட்டில் பிரயாணம் செய்யும் linear story telling பாணியும் கூட   "கிராபிக் நாவல்" என்ற ரகத்துக்குள் இடம்பிடித்திட முடியும் என்பதற்கு "சித்தம்-சாத்தான்" ஒரு உதாரணம் ! இந்தக் கதையை சென்றாண்டு தேர்வு செய்வதற்கென இத்தாலியில் 6 தீவிர காமிக்ஸ் வாசகர்களிடம் அபிப்பிராயம் கோரியிருந்தேன்! அவர்களது ரசனைகள் நம்மோடு ஒத்துப் போகும் அவசியமில்லை தானென்றாலும், மொழி கடந்த ஒருவித பிணைப்பு காமிக்ஸ் ஆர்வலர்களுக்கு மத்தியில் உண்டென்று எனக்குத் தோன்றியது. அபிப்பிராயம் சொன்ன 6 பேருமே - இந்த ஆல்பத்தை "a dark classic " என்று விவரித்தனர் ! இயன்றமட்டுக்கு நானுமே கூகுளில் தேடித் துழாவிப் பார்த்த போதும் கிட்டிய reviews எல்லாமே ரொம்ப நல்ல மார்க்குகளோடுஇருந்தன ! "மறுபடியும் ஒரு யுத்தப் பின்னணிக கதையா ?" என்ற முகம் சுளிப்பு கதைத் துவக்கத்தில் தோன்றிடக் கூடுமென்ற பயம் மட்டும் என்னை அலைக்கழித்தது ! ஆனால் இது ஒரு '70 களில் நடைபெறும் கதை என்பதை சிறுகச் சிறுக உணர முடிந்த போது - "சாத்து வாங்குவதாக இருப்பினும் பரவாயில்லை ; முயற்சித்துப் பார்ப்போம்" என்று பட்டது !  And லயன் கிராபிக் நாவலின் துவக்க இதழாய் இதுவே இருந்திடுவதாகத் தான் திட்டமும் ஒரிஜினலாய் ! ஆனால் இந்தக் கதை வரிசையே மௌபடியும் யுத்தம் சார்ந்த கதை தோரணமாய் அமைந்திடுமோ ? என்ற சந்தேகம் யாருக்கும் தோன்றிட இடம் தர வேண்டாமே என்று நினைத்தேன் ! So ஒரு முடியா இரவும், அண்டர்டேக்கரும் முந்திக் கொண்டனர் - LGN க்கு குறிப்பிட்ட template எதுவுமே கிடையாதென்று நிரூபித்திட !

இதன் ஒரிஜினல் தலைப்பு "Friedrichstrasse " என்பதே ! பெர்லின் மதில் சுவருக்கு இந்தப் பக்கமும், அந்தப் பக்கமமுமாய் ஓடும் தெருவைக் குறிப்பிடும் விதத்தில் கதாசிரியர் பெயரினை அமைத்திருப்பினும் - தமிழுக்கு என்ன செய்வதென்று கை பிசைந்து கிடந்தது இன்னமும் நினைவுள்ளது ! ஏதோவொரு பொறி தட்ட - "சித்தம்-சாத்தான்" பெயரில் freeze ஆனேன் ! இந்தப் பெயரில் புதைந்து கிடக்கக்கூடிய அர்த்தமென்னவென்று தெடிக் கண்டுபிடிப்பதும் இம்மாத சுவாரஸ்யங்களுள் ஒன்றாக இருந்திடக்கூடுமென்று நினைத்தேன் ! LGN -ஐப் படித்து விட்டிருக்கும் நண்பர்கள் தான் சொல்ல வேண்டும் - இந்தப் பெயரின் பொருத்தத்தைப் பற்றி ! விரிவான அலசல்களோடு "பெயர் காரணங்களையும்" இணைத்துக் கொள்ளலாமே folks ?

டாக்டர் பொடியன் இதழைப் பொறுத்தவரை - எனது முந்தைய எண்ணமே இப்போதும் தொடர்கிறது ! சுண்டுவிரல் சைசிலான இந்த ஆசாமிகளைக் கொண்டே ஆறடி ஆசாமிகளான நம்மையெல்லாம் பகடி செய்வதில் தான் படைப்பாளிகளுக்கு எத்தனை எத்தனை லாவகம் ?!! யுத்தத்தின் அர்த்தமின்மையை ப்ளூ கோட் பட்டாளம் சொல்கிறதெனில் - மனித குணங்களையும், பழக்க வழக்கங்களையும் ஒரு critical பார்வை பார்ப்பது தானோ இந்த நீல மனுஷர்களின்நோக்கம் ? காமிக்ஸ் + ப்ளூ கலருக்கு இப்படியுமொரு தொடர்பா ? இம்மாத கார்ட்டூன் இதழினை - "இது நமக்கல்ல" என்று ஒதுக்கியிருக்கக் கூடிய நண்பர்களும் ஒருவாட்டி முயற்சித்துத் தான் பாருங்களேன் - ப்ளீஸ் ?!

செப்டெம்பர் கச்சேரி இன்னமும் முழுசாய்த் துவங்கவில்லை என்பது அப்பட்டம் ! இன்றும், தொடரும் தினங்களும் அதற்கு பயன்படின் அட்டகாசமாய் இருக்கும் ! Start the music !! மீண்டும் சந்திப்போம் all ! Have a Wonderful weekend ! 

298 comments:

 1. Hi at last my name also enrolled in comics history

  ReplyDelete
 2. Appada rendu thadava thodar joya 10kkulla vanthachuu

  ReplyDelete
 3. Karanal Amos intha masam than varum...waiting

  ReplyDelete
 4. Dear sir, with this quality of paper and print why not BATMAN? koluthipottaachu!

  ReplyDelete
 5. எடிட்டர் சார்,

  சை-ஃபை ரகக் கதைகளையும் நாம் முயற்சிக்கலாமே! பல வித்தியாசமான களங்களை அறிமுகப்படுத்தி அதில் சில பல கதைகள் அபார வெற்றியையும் ருசித்துள்ளனவைதானே! அதேபோல் இந்த ஜானரிலும் அறிமுகப்படுத்துங்கள்

  ReplyDelete
 6. முழுச்சாப்பாட்டை எதிர்பார்த்தால், மெது வடையை கொடுத்துட்டீங்களே சார்?

  ReplyDelete
 7. 2018-ன் நமது அட்டவணையில் இவரது கதைகளுக்கும் நிறைவாய் இடமுள்ளது என்பது கொசுறுச் சேதி !

  Mahizhchi

  ReplyDelete
 8. Dear sir, with this quality of paper and print why not BATMAN? koluthipottaachu!

  ReplyDelete
 9. Today's Dhinakaran vasantham magazine question answer page our comic is mentioned

  ReplyDelete
 10. வணக்கம் சார்...
  வணக்கம் நட்பூஸ்...

  ReplyDelete
 11. // செப்டம்பர் 22-ல் போனெல்லி நிறுவனம் நூற்றாண்டை நினைவூட்டும் விதமாயொரு GALEP ஸ்பெஷல் வெளியிடவுள்ளனர் ! And இதோ - அவரது துவக்க நாட்களது படைப்புகள் //
  அருமை,அப்படியே அடுத்த ஆண்டு லிஸ்டில் அதையும் சேர்த்துடுங்க சார்.

  ReplyDelete
 12. // அதே சமயம் பட்ஜெட் எனும் ஸ்பீட் பிரேக்கரும் தாட்டியமாய் நம் முன்னே கை கட்டி நிற்பதும் தெரிகிறது ! இரண்டுக்கும் சமரசம் செய்யும் விதமாய் திட்டமிடுவதில் தான் ஏகமாய் மண்டை காய்கிறது ! ஏற்கனவே XIII -ன் மெகா பட்ஜெட் 2018 கென நிற்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதொரு சமாச்சாரமல்லவா? //
  இந்த வார்த்தை வரக்கூடாது என்றுதான் மிகவும் பயந்தேன்,சார் நண்பர்களிடமும் இதையே சொல்லி இருந்தேன்,அடுத்த ஆண்டு இது பெரிய தலைவலியாகத்தான் இருக்கும்.கனவுகளை நிறைவேற்ற இது ஒரு பெரிய ஸ்பீட் பிரேக்கர்.

  ReplyDelete
 13. // கிராபிக் நாவலும் இம்மாதத்து ஹிட் பட்டியலில் இடம்பிடித்திடுமா என்பதை அறிய தொடரும் பின்னூட்டங்களும், நாட்களும் வழிசெய்யும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பேன். //
  கவலையே வேண்டாம்,இந்த மாத LGN-என் சித்தம் சாத்தனுக்கே சொந்தம் சந்தேகம் இன்றி சூப்பர் ஹிட் சார்.

  ReplyDelete
 14. என் பெயர் சாத்தானுக்கே சொந்தம் !
  முதலில் எனது மதிப்பெண்களை சொல்லி விடுகிறேன்-10/10,
  ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில்,மேற்கு மற்றும் கிழக்கு பெர்லினுக்கு இடையிலான சுவரை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள கதை.
  இக்கதையின் முக்கிய பலமே கருப்பு & வெள்ளை பின்னணிதான்,அடர்த்தியான கதைக்களம் போகிற போக்கில் நம்மை வாரி அரவணைத்துக் கொள்கிறது,கதை மாந்தர்களிடையே நாம் உணர்வுப்பூர்வமாக உலாவுகிறோம்,கதை சொல்லும் படங்கள் என்ற வாசகத்தை நான் அடிக்கடி நினைவு கூர்வேன்,அதற்கான முழு நியாயத்தையும் இக்கதை செய்துள்ளது,,கதை மாந்தர்களின் கண்களின் வழியே நாம் இதில் கதை படிக்கலாம்,துரோகம்,வன்மம்,காதல்,குரூரம் என பல்வேறு உணர்வுகளின் கூட்டு கலவையாக இக்கதை உருவெடுத்துள்ளது,சொற்களால் வடிக்க இயலாத உணர்வுகளை இக்கதை நம் மனதில் எழுப்புகின்றன.
  கதை நெடுகிலும் ஒரு மென்சோகம் ஊடும்,பாவுமாக செல்கிறது,கதை மாந்தர்களிடையே ஒரு விரக்தியான மனநிலையும்,கண்களில் இனம் காண முடியா சோகமும் இழையோடி செல்கின்றது.
  பாடகி மர்லின் பெக்கர் கதியின் போக்கில் பல்வேறு இடர்ப்பாடுகள்,சோதனைகள்,போராட்டங்களை தாண்டி செல்வதாக நமக்கு விவரிக்கப்பட்டிருப்பினும் இறுதியில் துரோகத்தின் வடிவமாக மாறுவது அபாரமான திருப்புமுனை,நாயகன் காம்ரேட் கேப்டன் ப்ரெடரிக்கின் சித்தாந்தம் அவருக்கு எதிராகவே திரும்புவது திகைப்பான தருணம்,இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இதுதான்-ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு.
  வசனங்கள் கதைக்கு வலுசேர்ப்பதில் முழு பங்களிப்பையும் செய்திருக்கின்றன,
  குறிப்பிட்ட சில பக்கங்கள் மனதை மிகவும் கவர்கின்றன அவை,
  பக்கம்-79 ல் தனது ராஜ விசுவாசத்தை பறைசாற்றும் சித்தாந்தத்தை பற்றி மர்லின் பெக்கரிடம் ப்ரெடரிக் சொல்வது,
  பக்கம்-98 ல் மர்லின் பெக்கர் ப்ரெடரிக்கை பார்த்து அவரது சித்தாந்த்தை பற்றி அவருக்கே பாடம் எடுப்பது,
  பக்கம்-96 ல் வோட்கா கோப்பையை நைச்சியமாக மாற்றுவது,
  பக்கம்-99 ல் ஒரே மாதிரியான கோப்பையை பயன்படுத்தக் கூடாது என்று வகுப்பு எடுப்பது,
  பக்கம்-100 ல் மர்லின் பெக்கரின் அருகில் வேதனையுடன் அருகில் அமர்ந்து,நீ உளவாளியா ? நான் உளவாளியா ? எனப் புலம்புவது,
  ப்ரெடரிக்கிற்கு விமானதின் உள்ள காதலையும்,ஆர்வத்தையும் நாம் அறிந்து கொள்ள உதவுபவை:
  பக்கம்-9 ல் கடுமையான ஒரு சூழலில் டேபிளில் உள்ள விமானப் படத்தை ஆர்வமுடன் தடவிப் பார்ப்பது,
  பக்கம்-16 ல் ப்ரெடரிக்கின் அறையில் உள்ள ரேக் முழுவதும் விமான மாதிரி வடிவங்கள் இருப்பது,
  பக்கம்-75 ல் தனது தந்தையும்,சகோதரனும் வடிவமைக்கும் விமானத்தை பார்த்து அது மேல் எழும்புவது சிரமம் என்று விளக்கம் அளிப்பது.
  ப்ரெடரிக்கிற்கு மர்லின் பெக்கரின் மேல் உள்ள வேட்கையை புரிந்துகொள்ள:
  பக்கம்-19,43 ல் பாட்டிலில் உள்ள வாசனையை நுகர்வது போன்ற காட்சிகள்,
  பக்கம்-44 ல் அதை உறுதிபடுத்தும் காட்சி அமைப்பு.
  பக்கம்-15 ல் மர்லின் பெக்கரின் பாடலை ப்ரெடரிக் மிகவும் இரசித்து கேட்பது,
  பக்கம்-22 ல் ப்ரெடரிக் தனது அறையில் உள்ள மர்லின் பெக்கரின் படத்தை இரசித்து பார்ப்பது.
  -இறுதியாக எழுந்து நின்று கைகளை தட்டிக் கொண்டே கம்பீரமாகவும்,கர்வமாகவும் சொல்லலாம்,காமிக்ஸ் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல,அதுக்கும் மேல என்று.
  மூன்று முறை வாசித்தும் மீண்டும்,மீண்டும், வாசிக்க தூண்டுகிறது இக்கதை.என்ன பிளாட் என்றே தெரியாமல் இந்த மாதிரி கதைகளை புரட்டுவது என்பதே ஒரு அலாதியான அனுபவம்தான்.அடுத்த ஆண்டு சந்தா E-யை இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறேன்.
  நீண்டு செல்லும் சாலை போல கதை முடிவில்லா உணர்வுகளுடனும், எனது விவரிப்புகளுடனும் போய்க் கொண்டே உள்ளது,வேறு வழி இன்றி பயணத்தை நிறுத்துகின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. அம்மாடியோவ்!!!! பின்னிப்பெடலெடுத்துட்டீங்க அறிவரசு ரவி அவர்களே!! ஃப்ரேமுக்கு ஃப்ரேம் எவ்வளவு ரசிச்சுப் படிச்சிருக்கீங்கன்றதை உங்கள் எழுத்துகளில் உணர முடிகிறது!
   இவ்வளவு ரசித்து நீங்கள் ஒரு விமர்சனம் எழுதி நான் இதற்குமுன் பார்த்த ஞாபகமில்லை!

   ///கதை மாந்தர்களின் கண்களின் வழியே நாம் இதில் கதை படிக்கலாம்,துரோகம்,வன்மம்,காதல்,குரூரம் என பல்வேறு உணர்வுகளின் கூட்டு கலவையாக இக்கதை உருவெடுத்துள்ளது,சொற்களால் வடிக்க இயலாத உணர்வுகளை இக்கதை நம் மனதில் எழுப்புகின்றன///

   உண்மை உண்மை!

   ///எழுந்து நின்று கைகளை தட்டிக் கொண்டே கம்பீரமாகவும்,கர்வமாகவும் சொல்லலாம்,காமிக்ஸ் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல,அதுக்கும் மேல என்று.
   மூன்று முறை வாசித்தும் மீண்டும்,மீண்டும், வாசிக்க தூண்டுகிறது இக்கதை.என்ன பிளாட் என்றே தெரியாமல் இந்த மாதிரி கதைகளை புரட்டுவது என்பதே ஒரு அலாதியான அனுபவம்தான்.அடுத்த ஆண்டு சந்தா E-யை இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறேன்.///


   செம செம செம!

   Delete
  2. டைட்டிலில் என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் என்பதற்கு பதிலாக-என் பெயர் சாத்தானுக்கே சொந்தம் என்று தவறாக இடம் பெற்று விட்டது,நண்பர்கள் கவனத்தில் கொள்ளவும்.

   Delete
  3. பாராட்டுகளுக்கு நன்றி ஈ.வி,உண்மையில் நான் சொல்ல நினைத்ததில் பாதியே சொல்லியுள்ளேன்,ஒருநாள் முழுவதும் எ.சி.சா.சொ வைப் பற்றி பேசிக் கொண்டே போகலாம்.ஏனோ இக்கதை என்னை மிகவும் ஈர்த்து விட்டது,காமிக்ஸ் பற்றி எவரேனும் PH.D செய்ய விரும்பினால்,நான் இக்கதையை முதலில் சிபாரிசு செய்வேன்.இது மிகையல்ல உண்மை.

   Delete
  4. ரவி 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.!

   Delete
  5. வாவ் ரவி !!!! (உஙகள் விமர்சனத்திற்க்கு எழுந்து நின்று கைதட்டும் புகைப்படங்கள் 1000)

   அருமையான விமர்சனம். இன்னும் புக்கு கிடைக்காத நாங்கெல்ள்லாளம் உங்க விமர்சனத்தால் மெர்சலாகி நிக்கிறோம்...

   Delete
  6. மிக சிறப்பான நல்ல நுணுக்கமான முறையில் தெளிவான விமர்சனம் இரவி. நீங்கள் உண்மையில் அறிவின் அரசுதான். வாழ்த்துக்கள்

   Delete
  7. மிக சிறப்பான நல்ல நுணுக்கமான முறையில் தெளிவான விமர்சனம் இரவி. நீங்கள் உண்மையில் அறிவின் அரசுதான். வாழ்த்துக்கள்

   Delete
  8. ரவி ....அட்டகாச விமர்சனம் ...அழகான நடையில் ...


   உங்கள் விமர்சனத்திற்கும் பலத்த கை தட்டல் படங்கள் பல நூறு .....

   Delete
  9. ரவி.... அட்டகாச விமர்சனம் .. அழகான நடையில்..

   இந்தக் கதையை படித்து, பிரமிப்பில் இருந்து இன்னும் விடுபடவில்லை..

   மிக நுண்ணியமாக கதைகளை தேர்ந்தெடுத்து வழங்கும் ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகள் பல.


   Delete
  10. மினி பார்வைகளாக பார்த்து கொண்டிருந்த ரவி, இன்று முழு பரிணாமம் அடைந்த பதிவராக பிரமாண்டமான பதிவை படைத்து இருக்கிறார். வாழ்த்துகள் & பாராட்டுகள் ரவி...

   உங்கள் பதிவிகள் தொடர்ந்து கலக்கு வாழ்த்தி, ஆவலுடன் காத்துள்ளேன்...

   இதே பாணியில் டெக்ஸ் கதையை பற்றிய பதிவையும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்...

   தொடர்ந்து கலக்குங்கள்....

   Delete
  11. சூப்பர் நண்பரே. பிரேமுக்கு பிரேம் ரசித்து அழகாகவும் படிக்கத்தூண்டும் விதத்திலும் சிறப்பான விமர்சனம்.

   Delete
  12. பாராட்டுகளுக்கு நன்றிகள் பல நண்பர்களே.

   Delete
  13. விமர்சனம் நச். உடனே படிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டி விட்டீர்கள்.

   Delete
  14. @Arivarasu @ Ravi

   அருமை நண்பரே ... இந்த மாத புத்தகங்களில் படிக்க, தோர்கள் அல்லது பொடியன் எனது முதல் தேர்வாக இருந்த்தது. ஆனால் திரு கரூர் சரவணன் மற்றும் உங்களது பதிவுகளை பார்த்த பிறகு முடிவை மாற்றி கொண்டு முதலில் படித்தது "என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்"

   நல்ல அருமையான GN ... அடுத்த வருட LGN கோட்டா 12 புத்தகங்களாக உயர்ந்தால் மகிழ்ச்சியே

   Delete
  15. அற்புத விமா்சனம் நண்பரே!

   Delete
 15. ///70 -வது 'தல' பிறந்த நாள் ஆண்டு காத்திருக்க, ஓவியரின் நூற்றாண்டும் முந்திக் கொள்ள - போனெல்லி சரமாரியாக ஏதேதோ திட்டமிட்டு வைத்திருக்க - TEX வரலாற்றில் சில பல அதி முக்கிய நாட்கள் முன்னே காத்திருப்பதாய்த் தோன்றுகிறது! நம் பங்குக்கும் ஏதேனும் அட்டகாசமாய் செய்திட வேண்டுமே என்ற துடிப்பு ஒரு பக்கமிருக்கிறது ; அதே சமயம் பட்ஜெட் எனும் ஸ்பீட் பிரேக்கரும் தாட்டியமாய் நம் முன்னே கை கட்டி நிற்பதும் தெரிகிறது ! இரண்டுக்கும் சமரசம் செய்யும் விதமாய் திட்டமிடுவதில் தான் ஏகமாய் மண்டை காய்கிறது ! ஏற்கனவே XIII -ன் மெகா பட்ஜெட் 2018 கென நிற்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதொரு சமாச்சாரமல்லவா? மோவாயில் கை வைத்து சிந்திக்கும் படங்கள் ஒரு டஜன் !
  ///

  சற்றே சிக்கலான சூழ்நிலைதான்! இதன்பொருட்டு நண்பர்கள் தரும் ஆதரவும், உத்வேகமுமே எடிட்டரை தடைபல தகர்த்தெறிந்து பீடுநடை போடவைத்திடும்!

  இரத்தப்படலம் முன்பதிவு எண்ணிக்கைக்கு அவரவர் தம் பங்களிப்பைச் செய்து உத்வேகமளிப்போம் நண்பர்களே!

  ReplyDelete
 16. இனிய ஞாயிறு காலை வணக்கம்

  ReplyDelete
 17. அனைவருக்கும் காலை வணக்கம்.
  இன்னும் புதிய கதைகளை படிக்க நேரம்
  கிடைக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரமா படிச்சுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க கணேஷ் சார் ....!

   Delete
 18. Editor sir Good morning. En sittham sathanuke sondham simply superb. Friends please read graphic novel. 🙌🙌🌻🌻🏆🏆

  ReplyDelete
 19. ஆசிரியரின் காமிக் டைம்மில் சந்தா 'A' என்று குறிப்பிட்ட டெக்ஸ் பின்புறம் விளம்பரத்தில் சந்தா 'B' என்று குறிப்பிடப்பட்டுள்ளது


  ReplyDelete
  Replies
  1. ஏனுங்கோ குறை சொல்ல மட்டும்தான் வருவிங்களா? தனியொருவன்னு பேரை வெச்சிகிட்டு தனியாவே பேசிக்கிட்டுருந்தா இன்னா அர்த்தங்கிறேன்.

   Delete
  2. அவருக்குப் பின்னாடி ஒரு கூட்டமே இருக்குன்னு அா்த்தம்!

   இல்லைங்களா ஜி!!

   Delete
 20. சர்ப்ரைஸ் BOOK NOT RECEIVED.

  கடல் குதிரையின் முத்திரை ஏற்கனவே ரொம்ப காலத்திற்கு முன்பு விளம்பரம் வந்துள்ளதாக ஞாபகம்

  ReplyDelete
 21. டியர் எடிட்டர்ஜீ!!!

  டெக்ஸ் தீபாவளி மலரில் படைப்பாளர் போனெல்லி,ஓவியர் காலெப்பினி இருவரைப் பற்றியும் ஒரு பயோடேட்டா போடுங்கள் சார். அவர்களின் அந்நாளைய புகைப்படங்கள், ஓவிய மாதிரிகள்,மற்றும் டெக்ஸ் உதயமான வரலாற்று தகவல்களை வெளியிட்டால் மகிழ்வோம்!

  ReplyDelete
  Replies
  1. யாரது ..சாத்தான்ஜீயா ...தங்க கல்லறை அப்போ பாத்தது ...திரும்ப இப்ப தான் உங்களை பாக்குறேன் ..

   வருக ..வருக ...என வரவேற்கிறேன் ..:-)

   Delete
  2. தங்க கல்லறையில தேட்டை போட்ட தங்கத்த எடுத்துட்டு அப்படியே மெக்ஸிகோவுலேயே செட்டில் ஆயிட்டேன்.இருந்த தங்கத்த கேசினோவுல போக்கர் ஆடியே தொலைச்சாச்சு.அதனால இந்தியாவுக்கே திரும்பிட்டேன்.இங்கே வந்து எறங்குனா ஏர்போட்டுல ஒரு குண்டு அங்கிள் "கல்யாண் ஜுவ்வல்லரி போ.நெறய தங்கம் கிடைக்கும்.நம்ம கடை தான் தம்பி.இந்த அண்ணன் சொல்றேன். நம்பு " னு சொன்னாரு.நம்பி போனா அங்கே தங்க பிசுக்கோத்துக்கு பதிலா ஏதோ நகையாமே அதுதான் இருந்துச்சு.அத வச்சி போக்கர் ஆடுனா போலீசு ( நம்ம ஜான் சைமன் சார்) புடிச்சு நம்மள லாடம் கட்டிருவாங்கன்னு பயந்து அங்கிருந்து எஸ்ஸாயி மறுபடியும் இங்கயே வந்துட்டேன் தலீவரே.

   இது தான் என்னோட ஜோக கதை !!!

   Delete
  3. ஹா,ஹா,ஹா சாத் ஜி செம,செம.

   Delete
 22. தோர்கல் படித்து முடித்து விட்டேன். அப்பா என்ன ஒரு வேகம் கற்பனை.. இந்த தாக்கத்தில் இருந்து முழுவதும் இன்னும் வெளிவரவில்லை... விமர்சனம் எழுத கொஞ்சநேரம் தேவை. விரைவில்....

  ReplyDelete
 23. ஆசிரியர் அவர்களுக்கு ,

  நேற்றைய பொக்கிஷ பெட்டியை பிரித்தவுடன் ஏற்கனவே நண்பர் மூலம் அறிந்த அந்த "இம்மாத சர்ப்ரைஸ் பரிசை " தான் ஆவலுடன் துழாவினேன் ..நமது இதழ்களின் தொகுப்பு பட்டியல் இப்படி ஒரு சிறப்பு இதழ் போல் கையில் இருக்க வேண்டும் என்பது எனது மிக நீண்டகால , மிகப் பெரிய ஆசை எனலாம் ..இப்படி அட்டகாச தரமும், அழகான வடிவமைப்பும் ,முன் பக்க "அட்டைப்பட" அட்டையும் என மனதை மயக்கும் ஒரு காமிக்ஸ் இதழாகவே "இந்த தொகுப்பு பட்டியல் " மனதிற்குள் ஒன்றியது.இப்படி ஒரு இதழை இம்மாத சர்ப்ரைஸ் ஆக அளித்த தங்களுக்கு அனைத்து நண்பர்களின் சார்பாகவும் நன்றி ..,நன்றி...,நன்றி....  தொகுப்பை ரசித்த கையோடு அனைத்து இதழ்களையும் வழமை போல புரட்டி ,ரசித்து,முகர்ந்து முதலில் படிக்க எடுத்த இதழ்  "என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் "


  லயன் கிராபிக் நாவல் என்ற முத்திரையும் ,கதையின் தலைப்பும் ,அந்த வித்தியாசமான அட்டைப்பட ஓவியமும் காமிக்ஸ் அறியாத , விரும்பாத,படிக்காத.... ஆனால் நாவல்களை விரும்பும் நண்பர்கள் கண்டால் உடனடியாக ஒரு வித்தியாசமான நாவல் இதழ் போல என உடனடியாக கைகளில் ஏந்துவர் என்பது உண்மை.கதைகளுக்கு பின்னர் கதையை பற்றிய பின் குறிப்புகள் இடம் பெற்றாலும் கதையை தவிர மற்ற அனைத்து பகுதிகளையும் படித்துவிட்டு இறுதியாகவே கதையை படிக்கும் வழக்கம் என்பதால் ஹாட்லைன் ,ஒரு சுவரின் கதை போன்றவற்றை வாசித்த பொழுது இது ஒரு "போராட்ட கள " கிராபிக் நாவல் என்ற உணர்வும் எழுந்து அசுவாராஸ்மாகவும்..ஆரம்ப பக்கங்கள் முதலில் பரபரத்தாலும் சில நிமிடங்களில் வசனமில்லா பாடல்களுடன் பக்கங்கள் தொடர அது உண்மைதானோ எனும் வழியிலேயே செல்லவும் கொஞ்சம் ஆர்வம் மட்டுப்பட்டது உண்மை .ஆனால் அதன் பிறகு வரும் வேகமும் மர்லின் ,ஃப்ரெடரிக் ன் வாழ்க்கை சம்பங்களும் பரபரப்புடன் மட்டுமல்ல இறுதிவரை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் போலவும் விறுவிறுப்புடன் சென்றது உண்மை..கதை இறுதிவரை படித்தவுடன் தான் அந்த வசனமில்லா பாடல் வரிகள் கொண்ட அந்த பக்கங்கள் ஏன் கதாசிரியரால் படைக்க பட்டது என்பதையும் உணர முடிந்தது. ஆனால் தப்பி சென்ற "..............." மீண்டும் கண்டதும் ஃப்ரெடரிக்கை விட அதிகம் அதிர்ந்து போனது வாசிக்கும் நாமே...முறையற்ற உறவுகள்,வஞ்சகம் ,துரோகங்கள்,சூழ்ச்சிகள், என்றே சாத்தானாக கதை பரவி சென்றும் ,கதை களம் மேலும் செல்ல செல்ல மனதை கொஞ்சம் கனக்க செய்தும் , இறுதயில் மகிழ்வுற களம் முடிவுபெற்றதும் மகிழ்ச்சியாக இருந்தது.உளவாளி ஃப்ரெடரிக்ன உயரதிகாரியின் மீசையும் ஒரு குறியீடு போலவே ..,

  "அரசுக்கு விசுவாசியாக எத்தனை தூரம் அடையாளம் காட்டி கொள்ளமுடிகிறதோ ,அத்தனை அங்கீகாரம் கிடைக்கும் அதிகாரவர்க்கத்தின் மத்தியில் " போன்ற வசனங்களும் அப்பொழுது மட்டுமல்ல ,இன்றைய காலகட்டத்திலும் ,அதுவும் நமது தமிழக அரசியலுக்குமே நன்கு பொருந்தும் எனவும் எடுத்து காட்டுகிறது..  மொத்தத்தில் "என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் " ஊசிவெடியும் அல்ல ,யானை வெடியும் அல்ல...அதிரடி சர வெடி .

  இது சந்தா "E" யின் ஹாட்ரிக் வெற்றி மட்டுமல்ல ..

  " ஐயம் எ காம்ப்ளான் பாய்" என நிரூபக்கும் இதழும் கூட ..:-)

  ReplyDelete
  Replies
  1. தலீவரே 👏👏👏👏👏👏👏👏👏.!!

   Delete
  2. அருமை தலிவரே...👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

   Delete
  3. போராட்ட குழு @ கரெக்டா தீபாவளிமலர் வரும் மாதமா பார்த்து போராட்டத்தை ஆரம்பிக்கிறீர்களே...!!!

   தீபாவளி மலர், இங்கி பிங்கி பாங்கிலே செலக்ட் ஆச்சுனா என்ன செய்ய??? போங்கு ஆட்டமாக அல்லவா போய் விடும்.

   ஏதோ பார்த்து பண்ணுங்க...

   நான் வேணா தீபாவளி மலரை ஒதுக்கிட்டு இங்கி பிங்கி பாங்கி போடுறேன்...ஹி...ஹி...

   Delete
  4. என்ன ஆனாலும் சரி டெக்ஸ் சார் ...போராட்டம் முடிவு பண்ணியாயிற்று ..

   இது அரசியல் போராட்டம் அல்ல ...அற போராட்டம் ..

   போராடுவோம் ..வெல்வோம் ..

   Delete
  5. தலைவருக்கு பிடிச்சாவே அது ஹிட்தான்.

   Delete
  6. தாரை, மடிப்பாக்கம் போன்ற இடங்களை தலைமையகமாக கொண்ட கி. நா. எதிர்பபு அணியின் தீவிர எதிர்ப்பு சிவகாசி சந்தா ஈ யின் அதிரடி தாக்குதலினால் வலுவிழந்து போய்விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

   Delete
 24. ///வழக்கங்களையும் ஒரு critical பார்வை பார்ப்பது தானோ இந்த நீல மனுஷர்களின்நோக்கம் ? ///


  அக்மார்க் உண்மை..!!

  தோற்றத்தில் ஒரே மாதிரியும் (ஜுனியஸ், சீனியர். ஸ்மர்ப்பட் நீங்கலாக) குணங்களில் வேறுபட்டும் இருக்கும் இந்த குட்டிச்செல்லங்கள் நம்முடைய மக்கள் சமுதாயத்தையே பிரதிபலிக்கிறார்கள்.!!

  ரொம்ப டீப்பாக போகத்தேவையில்லை. நமக்கு நட்பான, உறவான மனிதர்களிலேயே இந்த ஸ்மர்ஃப்களின் குணநலன்களை காணமுடியும்.!!

  ReplyDelete
  Replies
  1. ///ரொம்ப டீப்பாக போகத்தேவையில்லை. நமக்கு நட்பான, உறவான மனிதர்களிலேயே இந்த ஸ்மர்ஃப்களின் குணநலன்களை காணமுடியும்.!!///

   நீங்க குறிப்பா யார் யாரைச் சொல்றீங்கன்னு தெரியுது கிட்! ;)

   Delete
 25. 70 -வது 'தல' பிறந்த நாள் ஆண்டு காத்திருக்க, ஓவியரின் நூற்றாண்டும் முந்திக் கொள்ள - போனெல்லி சரமாரியாக ஏதேதோ திட்டமிட்டு வைத்திருக்க - TEX வரலாற்றில் சில பல அதி முக்கிய நாட்கள் முன்னே காத்திருப்பதாய்த் தோன்றுகிறது! நம் பங்குக்கும் ஏதேனும் அட்டகாசமாய் செய்திட வேண்டுமே என்ற துடிப்பு ஒரு பக்கமிருக்கிறது ; அதே சமயம் பட்ஜெட் எனும் ஸ்பீட் பிரேக்கரும் தாட்டியமாய் நம் முன்னே கை கட்டி நிற்பதும் தெரிகிறது ! இரண்டுக்கும் சமரசம் செய்யும் விதமாய் திட்டமிடுவதில் தான் ஏகமாய் மண்டை காய்கிறது ! ஏற்கனவே XIII -ன் மெகா பட்ஜெட் 2018 கென நிற்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதொரு சமாச்சாரமல்லவா? // பட்ஜெட் குறித்த கவலையில் டெக்ஸ் 70 க்கு உண்டான மஹா கொண்டாட்டத்தை இழந்து டெக்ஸ் இதழுக்கும், டெக்ஸ் வில்லர் இரசிகர்கள் எங்களுக்கும் அநீதி இழைத்து விட வேண்டாம்.எடிட்டர் சார். வரலாற்று பிழை நிகழ்த்தி விடவேண்டாம்.

  ReplyDelete
  Replies
  1. ட்ரம்ஸ் அடித்து கொண்டே வழியோ வழி மொழிகிறேன் ...

   Delete
  2. நம்ம போஸ்டல் ராஜா இம்மாம் பெரிய கமெண்ட் போட்டிருக்காரேன்னு அதிர்ச்சியோட படிச்சிப்பாத்தா,,

   ஹிஹி..!

   நம்மாளோட சரக்கு நாலே வரிதான்னு தெரிஞ்சுது 😂😂😂

   நாலுவரிக்கும் நானூறு +1 கள் ராஜா!

   Delete
  3. ஹா,ஹா,ஹா,ராஜா செம,+12345

   Delete
  4. ஷேம் பிளட் ராஜா...

   இதேதான் நானும் கீழே சொல்லியிருக்கிறேன்.

   Delete
  5. ்பீனிக்ஸ்@ +1000. அப்படியே வழிமொழிகிறேன்.

   Delete
 26. டாக்டர் பொடியன் :-):-)


  அழகான முன்னட்டை :-)பின்னட்டை அட்டைப்படம் மனதை கவர உடப்பக்க வண்ண சித்திரங்களும் கண்ணை கவர :-):-)

  வாசிக்க ஆரம்பித்தால் கடைசிவரை பல இடங்களில் கவனிக்கவும் பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்து விட்டனர் :-) மருத்துவ நிலைமைகளையும் :-) முக்கியமாய் இன்றைய அரசியல் நிலவரங்களை கூட பொடியரில் பொடிய வைத்து அட்டகாச படுத்தி விட்டீர்கள் .இதுவரை சிறிது :-) சிறிதாக மனதை கவர்ந்த இந்த பொடியர்கள் இந்த முறை மனதை மிகவும் அதிகமாகவே கவர்ந்து விட்டார்கள் :-)

  இதுவரை இந்த பொடியர்களின் கதையை பொடியாதவர்கள் சிலரை நான் அறிவேன் :-) காரணம் நானும் பொடியர்களை பொடிந்தது உண்டு தானே :-) ஆனால் அவர்கள் இந்த டாக்டர் பொடியனை முதல் முறையாக படிக்க ஆரம்பித்தால் பொடியர்களுக்கு பொடி மன்றமே வைத்து விடுவார்கள் என்பது உறுதி :-) இந்த சமர்புகளை வேண்டா வெறுப்பாய் படித்தவன் என்ற முறையில் எம்மனதை மாற்றிய இந்த டாக்டர் பொடியன் மற்ற நண்பர்களையும் மாற்றுவான் என உறுதியாக நம்புகிறேன் :-) இம்முறை இவர்களை ஒதுக்கி வைக்காமல் பொடிந்து பாருங்கள் நண்பர்களே என பொடிந்து வேண்டுகிறேன் .

  ஆரம்பத்தில் தள்ளி இருந்த பொடியர்கள் :-)சென்ற முறை மனதிற்கு அருகில் வந்து நிற்க :-) இந்த முறையோ மனதினுள் நெருக்கமாகி விட்டார்கள் :-)

  இந்த முறை இந்த சமர்புகளின் மதிப்பெண் பத்துக்கு பத்து என பொடிந்து கூறுவேன் என்பது எனக்கே ஆச்சர்யம் :-)  பின்குறிப்பு : என்னடா இது கருத்தில் கமா ,புள்ளி,டாட் ஏதும் இல்லாமல் அனைத்திலும் நகைப்பு குறிகளே உள்ளதே என தவறாக எண்ண வேண்டாம் .இந்த முறை டாக்டர் பொடியன்களின் கிராமத்தில் உலவ ,உலவ சிரிக்க வைத்து கொண்டே இருந்தார்கள் .அதற்கான குறியீடே அந்த "ஒரே குறியீடு"

  :-)


  ReplyDelete
  Replies
  1. ///இந்த முறை இந்த சமர்புகளின் மதிப்பெண் பத்துக்கு பத்து என பொடிந்து கூறுவேன் என்பது எனக்கே ஆச்சர்யம் :-)///

   ஸ்மர்ஃப்பை சமர்ப்புன்னு நையாண்டியாக செப்பித்திரிந்த தன்னிஜாரில்லா தலீவரே பத்துக்கு பத்து கொடுத்திருப்பது மெத்த மகிழ்ச்சியளிக்கிறது..!

   Delete
  2. நல்லா பொடிஞ்சிங்க தலைவரே.

   Delete
 27. வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே

  ReplyDelete
 28. 70 -வது 'தல' பிறந்த நாள் ஆண்டு காத்திருக்க, ஓவியரின் நூற்றாண்டும் முந்திக் கொள்ள - போனெல்லி சரமாரியாக ஏதேதோ திட்டமிட்டு வைத்திருக்க - TEX வரலாற்றில் சில பல அதி முக்கிய நாட்கள் முன்னே காத்திருப்பதாய்த் தோன்றுகிறது! நம் பங்குக்கும் ஏதேனும் அட்டகாசமாய் செய்திட வேண்டுமே என்ற துடிப்பு ஒரு பக்கமிருக்கிறது ; அதே சமயம் பட்ஜெட் எனும் ஸ்பீட் பிரேக்கரும் தாட்டியமாய் நம் முன்னே கை கட்டி நிற்பதும் தெரிகிறது ! இரண்டுக்கும் சமரசம் செய்யும் விதமாய் திட்டமிடுவதில் தான் ஏகமாய் மண்டை காய்கிறது ! ஏற்கனவே XIII -ன் மெகா பட்ஜெட் 2018 கென நிற்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதொரு சமாச்சாரமல்லவா? // பட்ஜெட் குறித்த கவலையில் டெக்ஸ் 70 க்கு உண்டான மஹா கொண்டாட்டத்தை இழந்து டெக்ஸ் இதழுக்கும், டெக்ஸ் வில்லர் இரசிகர்கள் எங்களுக்கும் அநீதி இழைத்து விட வேண்டாம்.எடிட்டர் சார். வரலாற்று பிழை நிகழ்த்தி விடவேண்டாம்.

  ReplyDelete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete
 30. ஆசிரியரின் கவனத்திற்கு...


  இதுவரை இல்லாத அளவிற்கு இந்த சமர்ப் பொடியர்கள் மனதை கவர்ந்து உள்ளார்கள் என்பது கண்டிப்பான உண்மை .அதே சமயம் ஒரு சிறு குறை தங்களின் கவனத்திற்கு ...


  இறுதி பக்கங்களில் சில இடங்களில் (மீண்டும் கவனிக்க ..இறுதி சில இடங்களில் மட்டுமே )வசனங்களுக்கு மேல் அடர் சிவப்பு வர்ணம் இடம் பெற்று இருந்து ,கூர்ந்து கவனித்து ,கண்களை சுருக்கி படிப்பது போல் ஆனது சார் .

  இது வண்ணத்தின் குறைப்பாடா அல்லது வயதின் குறைப்பாடா என தெரியா விட்டாலும் தங்களின் கவனத்திற்கு சார் ..!

  ReplyDelete
  Replies
  1. தலீவரே....அது ஒரிஜினலின் வர்ண அமைப்பு ; and அதனை மாற்றியமைக்க நமக்கு அதிகாரம் கிடையாது !

   Delete
  2. ஆஹான் ...தகவலுக்கு நன்றி சார் ...புரிந்து கொண்டேன் ..:-(

   Delete
 31. அன்புள்ள ஆசிரியருக்கு,

  பல காரணங்களால் (முக்கியமாக நேரமிண்மை) பின்னூட்டம் இடாமல் இருந்த நான் இன்று ஈ.வி.யின் வார்த்தைகளால் இன்றுமுதல் தொடர்ந்து பின்னூட்டமிட முயற்ச்சிக்கிறேன்.

  அடுத்த வருடத்தை (2018) ஒரு விதிவிலக்காக எண்ணி பட்ஜெட் காரணியை தள்ளி வைக்கவும். அட்லீஸ்ட் இரத்த படலம் ஜம்போ + டெக்ஸ் 70 காவது அந்த பட்ஜெட்லெஸ் கான்செப்டை அமலாக்க முயற்சிக்கவும். இரண்டுமே காமிக்ஸ் வரலாற்றில் ஒருமுறைதானே வர போகிறது.

  டெக்ஸ் 70-ஐ சந்தாவுக்கு வெளியில் வச்சி செய்யலாமே?????

  - ஹசன்

  ReplyDelete
  Replies
  1. மீண்டு (ம்) வந்த ஹசன் ஜீ அவர்களை காமிக்ஸ் நல்லுலகம் வருக ,வருக என வரவேற்கிறது ..

   Delete
  2. நன்றி தல ;-) (வடிவேலுக்கு சொன்ன மாதிரியே நீங்க எடுத்து கொள்ளலாம்...)

   Delete
  3. ///அடுத்த வருடத்தை (2018) ஒரு விதிவிலக்காக எண்ணி பட்ஜெட் காரணியை தள்ளி வைக்கவும். அட்லீஸ்ட் இரத்த படலம் ஜம்போ + டெக்ஸ் 70 காவது அந்த பட்ஜெட்லெஸ் கான்செப்டை அமலாக்க முயற்சிக்கவும். இரண்டுமே காமிக்ஸ் வரலாற்றில் ஒருமுறைதானே வர போகிறது.///


   செம கருத்து! +100000

   Delete
  4. ஹசன் சரியா சொன்னிங்க.

   Delete
  5. //டெக்ஸ் 70-ஐ சந்தாவுக்கு வெளியில் வச்சி செய்யலாமே?????//

   எனது வேண்டுகோளும் இதே தான்.

   Delete
 32. கொஞ்சம் முன்னே பார்ப்போமா - எனது விடைகள்

  1. ஆண்டுச் சந்தா எவ்வளவாக இருந்தால் தேவலாம் :

  எனது விடை - அடுத்த ஆண்டு சந்தாவில் இணையப்போவதில்லை. அதாவது உங்கள் முழு சந்தா தொகையை முன் பணமாக செலுத்தி விடுவேன். ஆனால் எனக்கு வேண்டிய புத்தகங்கள் மட்டும் ஒரு காப்பி அல்லது நண்பருக்கும் சேர்த்து இரண்டு காப்பிகள் என்று பெற்றுக் கொள்வேன். இம்முறையில் உங்கள் ஆதார நிதியும் குறையாது - எனக்கு வேண்டாத புத்தகமும் வாங்க மாட்டேன். Win - win !! எனவே சந்தா அளவுகள் பற்றி கவலை இல்லை.

  2. சந்தா E :

  எனது விடை : ஹலோ ஹலோ .. இங்கே டவர் கிடைக்கலை ! (சூப்பர் six சந்தா செலுத்தப்படும் நிச்சயம்)

  3. வாரமொரு வலைப்பதிவென்பது :

  விடை : இவ்வாரமே பதில் உள்ளதே உங்களிடம் :-)

  4. 2018ல் அதிகம் பார்க்க விரும்பிடாத நாயக / நாயகிகள் :

  விடை : A. ஷானியா B. Durango / Young Blueberry கதைகள் (சூர மொக்கைகள் )

  5. 2018ல் பார்க்க விரும்பும் மருவருகையாளர்கள்:

  விடை : A. Uncle Scrooge (!!) B. Robot ஆர்ச்சி (!!!! :-))

  6. Franco-Belgian vs Italian - உங்கள் பார்வையில் எது முதலிடம்:

  விடை : Tex .. Tex .. Tex .. Tex .. Tex .. Tex .. Tex .. Tex ......

  7. 'Tex willer' ஈர்ப்பு :

  விடை : அடுத்த அமெரிக்க ஜனாதிபதி , தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் Tex ! Tex !! Tex !!!

  8. நீங்கள் கார்ட்டூன் காதலரா ?

  விடை : ஆமாங்கோ !

  9. குதிரைப் பசங்கள் தொடர்வது ஓகே தானா ?

  விடை : Tex இன்றி தமிழ் காமிக்ஸ் இல்லை .. :-)

  10. மகளிரணி செயல்பாடுகள் (!!) எவ்விதமோ :

  விடை : Modesty : ஓகே , ஜூலியா : ஓகே ஷானியா : NO !!

  11. ஸ்பெஷல் இதழ்கள் தரும் தாக்கங்கள் :

  விடை : once a quarter is welcome !!

  12. மறுபதிப்புக்கள் இந்தாண்டு நீங்கள் பிடித்திருப்பது :

  விடை : ஸ்பைடர் கதைகள் அனைத்தும் படித்தேன் - மற்றவை தானம் செய்யப்பட்டது நண்பர்களுக்கு :-)

  ReplyDelete
  Replies
  1. பதில் 5-B யை கன்னாபின்னாவென்று வரவேற்கிறேன் :-)

   Delete
  2. நச் பதில்கள் - காமிக் லவரின் தனித்துவம்!

   Delete
 33. ஆசிரியரின் கண்டிப்பான கவனத்திற்கு ..,


  அனைத்து இதழ்களையும் தண்ணீர் தொட்டு புரட்டி புரட்டி பார்த்தாலும் ..சிங்கத்தின் சிறு வயதில் வழக்கம் போல காணவில்லை என்பதை அறிந்து கொண்டோம் ..தங்களின் வேலைப்பளு ..அதிக எண்ணிக்கையில் இதழ்கள் ,புத்தக காட்சி திட்டமிடல்கள் ,இரத்த கோட்டை என பல சுமைகளுக்கு இடையில் எங்களின் இந்த இன்ப சுவையான "சி.சி.வயதில் " பற்றி கேள்வி எழுப்பாமல் இருந்தது உண்மையே ..ஆனால் அதற்காக நாங்கள் அனைவரும் அந்த போராட்டத்தை மறந்து வேறு கடமைகளில் மூழ்கிவிட்டோம் என தாங்கள் நினைத்து விட்டால் அது எங்கள் தவறு அல்ல .

  இந்த மாதமே செயலர் மற்றும் நண்பர்கள் ஆலோசித்து மிக தீவிரமாக " இங்கி பிங்கி " போராட்டத்தில் ஈடுபடலாம் என வெளியே பலமான ஆலோசனை செய்தாலும் முன் கூட்டிய அறிவிப்பு இன்றி போராடுவது போராட்ட குழுவிற்கு அழகல்ல என்ற பலமான குரல்களால் தற்காலிகமாக எங்கள் போராட்டத்தை அடுத்த மாதம் முதல் தொடர உள்ளோம் ..

  எனவே அடுத்த மாத இதழ்கள் முதல் தொடர்ந்து கவனிக்க தொடர்ந்து இடம் பெறவில்லை எனில் எங்களின் போராட்டம் தீவிரம் அடையும் என்பதையும் கவனத்தில் கொள்ள கோருகிறோம் .


  தலை வாழை இலையில் அருசுவையையும் படைத்து விட்டு உணவு அருந்தும் சமயம் கரங்களை பிடித்து தடுத்தால் அது எவ்வகை பாவத்தை சேரும் என்பது தாங்கள் அறியாத ஓன்று அல்ல ..


  இப்படிக்கு

  புதிய பொலிவுடன் ச்சே புதிய வலிமையுடன்


  அகில உலக சிங்கத்தின் சிறு வயதில் போராட்ட குழு ..

  ReplyDelete
  Replies
  1. போராட்டத்தின் போதோ அல்லது வெற்றிவிழாவின் போதோ, ஈரோட்டு திருவிழாவில் ஏமாந்த கெடா விருந்து கண்டிப்பாக இருக்கும்...

   Delete
  2. அருமையான போராட்ட அரைகூவல் இது, தலீவரே!! எதிரணிக்கு இப்பவே ஆட்டம் கண்டிருக்கும்றது உறுதி!! அடுத்தமாசம் 'சி.சி.வ' இல்லேன்னா நேரா சிவகாசி ஆபீஸ் முன்னாடி நின்னு கோஷம் போடுவோம்! சாலை மறியல் பண்ணுவோம்! "அவங்க கேட்கறதைத் தான் கொஞ்சம் கொடுத்திடுங்களேன் சார்?"னு சிவகாசி கலெக்டர், தாசில்தார், மந்திரிங்க எல்லாம் நேர்ல வந்து எதிரணித் தலைவருக்கு அட்வைஸ் பண்றாப்ல ஆகணும்!

   களம்னு வந்திட்டா நாமெல்லாம் கட்டுக்கடங்காத காளைகள்னு எதிரணிக்குப் புரியவைப்போம்!

   Delete
  3. புரிய வைத்து விடுவோம் செயலரே...


   ஆசிரியர் ..சிறுவர்களின் கூக்குரலாக நினைத்து விட்டார்போலும் ..

   சிங்கத்தின் சிறு வயதை அறிய கோருவதும் சிங்க குட்டிகளே என நிரூபிப்போம்

   Delete
 34. தலீவரின் போராட்ட அறைகூவலுக்கு இணங்க இன்று முதலாக போராட்டம் துவங்க ஆயத்தமாக உள்ளோம் என கன்னாபின்னா என வழிமொழியும்- தலீவரின் விழுதுகள்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.......விழுதுகளின் விழுதே ...போராட்டம் அடுத்த மாத இதழ்களில் இருந்தே ...இந்த மாதம் போராட்டத்திற்கான உடல் வலிமைக்காக போராடி தயார் ஆவோம் ...:-)

   Delete
  2. ஏதோ ஒற்றர்களின் சதி வேலையால் நமது போராட்டத்தை பற்றி எதிரணி தலைவர் அறிந்தே தான் இந்த வார தலைப்பில் " பத்தியத்தை "கொண்டு வந்துள்ளார் போலும் ..

   ஏமாந்து விடாதீர் நண்பர்களே..:-(

   Delete
  3. போராட்டம் வெல்ல வாழ்த்துக்கள்.
   - இவண்:தலைவரின் விழுதுகள்.

   Delete
 35. என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் கதை The lives of Others என்ற புகழ்பெற்ற ஜெர்மானிய திரைப்படத்தை அடிப்படியாக கொண்டது, என்று நினைக்கிறேன் ்்.

  ReplyDelete
  Replies
  1. Leom : கிராபிக் டைம் பகுதியைப் படித்துப் பாருங்களேன் ..?

   Delete
  2. ஆமாம் சார் அருமை... கிழக்கு மற்றும் மேற்கு ஜர்மனிகளுக்கிடையேயான இந்த cold war genre கதைகள் அருமையானவை மற்றும் பெரும்பாலான கதாசிரியர்களால் இன்னும் தொடப்படாத கதைக்களங்கள்.
   இப்படிப்பட்ட அருமையிலும் அருமையான கதைகளங்கள் நம்முடைய காமிக்கில் வருவது எங்களுக்கெல்லாம் பெருமை . நன்றி கள் பல உங்களுக்கு சார்...

   Delete
 36. Florian Henkel von Donner's marks ன் The lives of others கதையானது அப்போதைய கிழக்கு ஜெர்மனி யின் கண்காணிப்பு ஆட்சியின் கீழ் மக்கள் பட்ட கஷ்டங்களை, குறிப்பாக அரசு secret police ஒரு எழுத்தாளர் மற்றும் அவரது மனைவியான ஒரு நாடக நடிகை யை கண்காணிப்பின் கீழ் கொண்டு வருகின்ற து. அரசின் நோக்கம் "நாட்டில் நடக்கும் விடயங்கள் எல்லாவற்றையும் அறிந்து கொள்வதே". சோவியத் ஆதரவு Socialist நாடான கிழக்கு ஜெர்மனி எந்த அளவில் மக்களை கண்காணித்து வந்தது என்பதை மிக விளக்கமாகவும் துல்லியத்துடன் பதிவு செய்த படம் இது.

  ReplyDelete
 37. சோசலிச கொள்கைகளுக்கெதிரானவர் என கருதப்படும் பிரபல எழுத்தாளரையும் , அவருடைய நண்பர்களுடனான உரையாடல்களையும் கண்காணிக்க் முடிவு செய்கிறது அரசு. அதறகாக ஒரு அதிகாரி தனது குழாத்துடன் எழுத்தாளர் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி மற்றும் இதர உளவு சாதனங்கள் ஐ நிறுவுகிறான். Shift ,முறையில் வீடு கண்காணிக்கப்படுகிறது. கலாச்சார துறை அமைச்சர், நாடக நடிகையான எழுத்தாளரின் மனைவியை, தனது இச்சைக்கு பயன்படுததி்க் கொள்கிறார். தன்னுடன் ஒத்துழைத்தால் மட்டுமே முதல் தர நடிகையாக பிரகாசிக்க முடியும் என்கிற அச்சுறுத்தலுடன்.
  இதற்கிடையில் எழுத்தாளருக்கு பல பிரச்சினைகள், சக எழுத்தாளரின் தற்கொலை, அவருடைய மனைவி மீதான சந்தேகம். அவரது எழுத்துக்களின் நோக்கம் சோசலிசத்தை எதிர்ப்பதல்ல, அதை சில adjustments , கருத்து சுதந்திரத்தின் மூலம் பலவீனமடந்து வரும் சோசலிச கட்டுமானத்தை பலப்படுத்துவதே, என்பதையும், எழுத்தாளருக்கும் அவருடய மனைவிக்குமான ஆழ்ந்த காதலையும், நாட்ட்டின் மேல் அக்கறை காட்டும் உரையாடல் களையும் கேட்டு தன்னையே நொந்து கொள்கிறார் உளவு அதிகாரி.
  தொடரும் நாட்களில், ஒரு கட்டுரை அரசால் பதிவு செய்யப்பட்ட டைப் ரைட்டடரைக்கொண்டு பதிவு செய்கிறார் எழுத்தாளர். அதை கைப்பற்ற அரசு முடிவு செய்கையில் , கள்ளமற்ற எழுத்தாளரை காப்பாற்ற டைப் ரைட்டரை காணாமல் போகச்செய்கிறார் அதிகாரி. வேலையில் ஒழுங்கீனம் காட்டியதற்காக பதவி நீக்கம் செய்யப்படும் அதகாரி தபால்துறைக்கு மாற்றப்படுகிறார். Berlin wall 1989ல்உடைந்த பிறகு
  எழுத்தாளர் புகழ்பெறுகிறார்.. ஒரு கட்டத்தில்
  தானும், தன் வீடும் ஐந்து வருடங்களாக கண்காணிக்கப்பட்டதையும், தன்னைப் பற்றி அரசுக்கு மேம்போக்கான அறிக்கை மட்டுமே அளிக்கப்பட்டு இருந்த்தையும் தெரிந்து கொள்கிறார்.. தனக்கு உதவி செய்த அந்த கண்ணுக்கு தெரியாத அதிகாரியை் பற்றி அறிந்து கொள்ள பழைய அரசாங்க confidential files களை பார்க்க நேரிடும்போது
  அதிகாரிக்குறிய சிறப்பு கடவுச் சொல் மட்டுமே தெரிய வருகிறது. கடவு சொல்க்கான அதிகாரியே கண்காணித்தவர், என எழுத்தாளருக்கு தெரிய வருகிறது.

  1991 ஒன்று பட்ட ஜெர்மனியின் புகழ்பெற்ற எழுத்தாளராகும் அவர் தன்னுடய புதிய புத்தகத்தை(magnum opus) சிறப்பு கடவு ச்சொல்லை கொண்ட அந்த கண் காணா அதிகாரியை நன்றிக்குறியவராக்கி அர்ப்பணம் செய்கிறார்.

  உலக அளவில். பல விருதுகள் மற்றும் பாராட்டுக்களை பெற்ற திரைப்படம் இது.

  நண்பர்கள் அனைவரையம் இப்படத்தை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. அழகான தகவலுக்கு நன்றி சார் ...:-)

   Delete
  2. நம்முடைய ரசனையை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்திக் கொள்ளும் வாய்ப்பை ஆசிரியர் நமக்கு ஏற்படுத்தி கொடுக்கிறார்..

   Delete
  3. leom : சார் ...தேடல்களை விரிவாக்க தைரியம் தருவதே உங்களது ஒட்டு மொத்த பாசிட்டிவ் சிந்தனைகள் தான் ! எல்லாப் புகழும் வாசகர்களுக்கே !

   Delete
  4. ////நம்முடைய ரசனையை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்திக் கொள்ளும் வாய்ப்பை ஆசிரியர் நமக்கு ஏற்படுத்தி கொடுக்கிறார்..///

   +1000000

   Delete
 38. தலீவரின் போராட்ட அறைகூவலுக்கு இணங்க இன்று முதலாக போராட்டம் துவங்க ஆயத்தமாக உள்ளோம் என கன்னாபின்னா என வழிமொழியும்- தலீவரின் விழுதுகள்...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ....நன்றி நண்பரே ...

   இப்படை தோற்கின் எப்படை வெல்லும் :-)

   Delete
 39. எடிட்டர் சாருக்கு வணக்கம்!

  இளவரசி முன்னேற்ற கழகத்தின் சார்பா சில கோரிக்கைகளை முன்வைக்கலாமேன்னு வந்திருக்கேன்.

  இருந்தாலும் நீங்க இப்படி எங்க இளவரசியை மட்டமா நடத்தக்கூடாது சார். இளவரசியை தனியா போட்டாதானே "கெத்தே" தெரியும்.

  இந்த லயன் 300 ஏ எங்க இளவரசியாலதான் வித்துச்சி. அதை மறைச்சி டெக்ஸ் வில்லராலதான் வித்துச்சின்னு தவறான தகவலை பரப்பிட்டாங்க. நீங்க மட்டும் அட்டையில டெக்ஸ் வில்லர போடாம இளவரசியப் போட்டுருந்தா பவர் என்னன்னு 'தெரிஞ்சிருக்கும் ' . அவ்வளவு ஏன் சார்! அந்த மெகா ட்ரீம் ஷ்பெசலே எங்க இளவரசியோட பதினாறு பக்க கதை இருந்ததுனாலதானே வித்துச்சி.

  இனிமேலும் எங்க இளவரசியோட செல்வாக்கை பயண்படுத்தி டெக்ஸ் வில்லரோ மத்தவங்களோ பொழைச்சிகிட்டு இருக்குறதை எங்களால அனுமதிக்க முடியாது சார். இனிமே பெண்சிங்கம் மாடஸ்டி சிங்கிளாத்தான் வரணும்.

  ஏதோ உங்கமேல இருக்குற பிரியத்துலயும், உங்கள பிரிய மனசில்லாமலும் எங்க இளவரசி தனியா வர்ரப்ப எல்லாம் குடோன்ல தங்கியிருக்கலாம் . அதுக்காக விற்பனை சரியில்லைன்னு சிலபேரு சொல்றதை நம்பிடுறதா?

  டெக்ஸ் வில்லரு நெறய்ய போடுறிங்க அதனால நெறய்ய விக்குது. கம்மியாப்போட்டு பாருங்க கம்மியாத்தான் விக்கும். போடாமயே விட்டுப்பாருங்க விக்கவே விக்காது .

  இளவரசிக்கு தனிசந்தா ஒண்ணு ஆரம்பிச்சு கலரு கருப்பு வெள்ளை நீலம் னு போட்டுப்பாருங்க, அப்பத்தெரியும் கொஞ்சங்கூட நன்றியில்லாம சீக்கிரமே வித்து உங்களை விட்டுட்டு போயிடுற டெக்ஸ் லக்கி பெருசா இல்லை நன்றியோட உங்ககூடவே குடோன்ல தங்கிடுற இளவரசி பெருசான்னு.

  மறுபதிப்புலயும் இரும்புக்கை, வலைதுப்பாக்கி, பூப்போட்ட டவுசரு, மொட்டை டேவிட்டு முடியிருக்குற லாரன்சு எல்லாத்தையும் ஏரகட்டிட்டு எங்க இளவரசியோட சின்னவயசு சில்மிசங்கள சாரி சாகசங்கள களமெறக்கிப் பாருங்க. சும்மா பிச்சிகினு போவும்.

  இளவரசிதான் சார் நன்றி மறக்காம கூடவே இருக்கும். ஆனா நீங்களோ நன்றியே இல்லாத அவிங்களுக்குத்தான் அதிக இடம் குடுக்குறிங்க. வரலாறு உங்களை தூற்றாதா சார்?

  ReplyDelete
  Replies
  1. @ Parthasaarathy P

   ROFL :)))))))))))))))))))))

   பிரிச்சு மேஞ்சுட்டீங்க நண்பரே! வரிக்குவரி சிரிச்சு மாளல!

   Delete
  2. பார்த்து கண்ணா யாருப்பா நீ எங்கிருந்து வந்தருக்க,சும்மா அதிருதில்லன்னு இருக்கேஉன்ற பதிவு,எழவரசி பத்தின அருமைய புட்டு,புட்டு வெக்கிறியேப்பா,இந்த எழவரசியோட புகழ பயன்படுத்திக்கிட்டு சில சின்னபசங்க சாகசம் பண்றேன்னு உள்ள பூந்து நம்மள சதாய்க்கறாங்க,எழவரசியோட மெர்சலான சாகசத்துக்கு முன்னாடி இந்த டெக்ஸு,டைகரு பயலுக எல்லாம் நிக்க முடியுமா.
   இந்த எடிட்டரு யார டபாய்க்க பாக்கறாரு,எழவரசிக்கு அடுத்து வருஷம் ஏதோ ஸ்லாட்டோ,பிளாட்டோ அதுல பார்த்து மொத்த அட்டைய போட்டு,ஏதோ குண்டு புக்காமே? அத்த போடுங்க,சும்மா எழவரசி அட்டையில தக,தகன்னு மின்னனும்,அப்புறம் பாருங்க சேல்ஸ,எழவரசியோட பேனுங்க சும்மா வூடு கட்டி அடிப்பாங்க சேல்ஸுல,அக்காங்.

   Delete
  3. ///டெக்ஸ் வில்லரு நெறய்ய போடுறிங்க அதனால நெறய்ய விக்குது. கம்மியாப்போட்டு பாருங்க கம்மியாத்தான் விக்கும். போடாமயே விட்டுப்பாருங்க விக்கவே விக்காது .///

   😂😂😂😂😂😂😂😂😂

   Delete
  4. ///மெகா ட்ரீம் ஷ்பெசலே எங்க இளவரசியோட பதினாறு பக்க கதை இருந்ததுனாலதானே வித்துச்சி.///

   ஆனாக்கா மெகா ட்ரீம் ஸ்பெஷல்ல இளவரசி கதையே கிடையாதே.

   Delete
 40. இன்று பயணம் புறப்பட இருப்பது டெக்ஸ் அவர்களுடன் ...


  அட்டைப்படம் அசத்தலோ அசத்தல் எனில் இதழின் சித்திரங்கள் ,இதழை புரட்டும் பொழுதே அந்த அருமையான டெக்ஸின் சித்திர பாணிகள் எதை தெரிவிக்கிறது எனில் திரையின் மனம் கவர்ந்த மூத்த நாயகர்கள் மீண்டும் இளமை பொலிவில் களம் இறங்கினால் மனம் எவ்வளவு கூதுகலம் அடையும் ..அந்த சந்தோசத்தை தருகிறது " கடல் குதிரையின் முத்திரை"

  டிராகன் நகரம் ,பவளசிலை மர்மம், பழிக்கு பழி போன்ற இதழ்களில் பார்த்த டெக்ஸ் வில்லர் இதில் அப்படியே காணப்படுகறார்.அந்த இதழ்களின் வெற்றியே இந்த இதழுக்குமான பலன் என்பதை அறிந்தே இருந்தாலும் பயணம் முடிந்து மீண்டும் .....

  ReplyDelete
 41. விஜயன் சார் வாராவாரம் நீங்கள் எழுதும் பதிவுகள்தான் அடுத்தமாத
  புத்தகங்கள் வரும்வரை எங்களுக்கு
  உணவு உணர்வு சுவாசம் பாசம்
  அமைதி அகமகிழ்வு.மாதம் ஒருமுறைதான் புத்தகம் ஆனால் வாரம்
  ஒரு பெரிய பதிவின்றி அந்த வாரம்
  சிறக்காது. இனியாவது அடுத்துதூ வரும்
  பதிவுகள் பெரியதாக வழங்கு மாறு
  கேட்டுக்கொள்கிறேன்.
  இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்.

  ReplyDelete
  Replies
  1. +1

   இப்படிக்கி,
   அண்ணனின் மற்றுமொரு விழுது

   Delete
  2. அண்ணனின் மற்றொரு விழுது   +1

   Delete
  3. மீ டூ அதர் ரூட்...

   இன்றைய பதிவு ஏமாற்றம் தான் எனக்கும்...

   இன்று நல்ல கெட்டி முகூர்த்தம், ஏதோ ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு நல்லா ஒரு கட்டு கட்டிட்டு, டைப்ப முடியாத காரணத்தால், பதில்ல போட வைத்து இருந்த தகவல்களை பதிவாக போட்டாரோ ஆசிரியர் சார்...!! - அப்டீனு லேசா ஒரு ஐயம்...

   Delete
  4. +1. சனி இரவுக்குள் பதிவு இல்லை என்றால் ஞாயிறு காலை எழுந்தவுடன் காபிக்கு முன் கூட செய்வது பதிவை தேடுவது தான்...

   Delete
 42. பின் குறிப்பு
  ஊட்டசத்து வழங்க வேண்டிய இடத்தில்
  பத்திய சாப்பாடா????

  ReplyDelete
 43. என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்... கதையின் தலைப்பை பார்த்து பயந்து நேற்று இரவில் படிக்க பயந்து காலையில் தான் படித்தேன்..சந்தா E ன் இன்னுமொரு அட்டகாசம். இது போன்ற கதைகளை படிக்க வாய்ப்பளித்திற்க்கு முதலில் ஒரு பெரிய நன்றி சார்.. சிறப்பான கதை... யார் நல்லவன் யார் கெட்டவன் என யூகிக்க முடியாத அளவிற்கு அருமையான திருப்பங்கள். சந்தா E இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் என்பதில் சந்தகேகமே இல்லக.

  ReplyDelete
  Replies
  1. Rummi XIII : காத்திருக்கும் 3 LGN இதழ்களும் சிறப்பாய் ஸ்கோர் செய்ய வேண்டுமென்ற உத்வேகம் இன்னமும் கூடுகிறது என்னுள் !

   Delete
  2. ஆனா... இந்த கதைக்கு ஏன் இந்த தலைப்புன்னு தான் புரியலை சார்...

   Delete
  3. நிச்சயம் நம்மவர்கள் அதனுள்ளும் புகுந்திடுவார்கள் ; அது வரை பொறுத்திடுவோம் சார் !

   Delete
  4. சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா ! உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே-என்று ஒரு பாடல் உண்டு.
   சம்ஸ்கிருத மொழியில் சித்த என்பது நிறைவானது என்ற பொருள் படலாம்,
   "உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக "
   -மத்தேயு 6:10
   படைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சித்தங்களை குழப்பும் ஒரு கலகக்காரன் தன சாத்தான்-யோபு 1:6 N W.
   தனது செயல்களை தன்வசமின்றி செய்வதால்,தனது சித்தங்களை அவர் உரிமை கொண்டாட முடியாது அவை சாத்தனுக்கே சொந்தம்.
   யாருடைய சித்தம் என்பது படிப்பவரின் முடிவுக்கு உட்பட்டது.

   Delete
  5. இவ்வாறான தலைப்புக்கள் தாங்கி வரும் கதைகள் வாங்குவதில்லை என்று எப்போதோ முடிவெடுத்தாகிவிட்டது. நல்ல கதை என்று சொல்லப்படும் இஃது, வேறு தலைப்பில் வந்திருந்தால் குறைந்த எண்ணிக்கை என்னும் அடைப்பிலிருந்து வெளிப்பட்டிருக்குமோ என்னவோ !

   Delete
  6. //ஆனா... இந்த கதைக்கு ஏன் இந்த தலைப்புன்னு தான் புரியலை சார்...//
   +1..
   //நிச்சயம் நம்மவர்கள் அதனுள்ளும் புகுந்திடுவார்கள் ; அது வரை பொறுத்திடுவோம் சார் !//
   Waiting

   Delete
  7. //சந்தா E ன் இன்னுமொரு அட்டகாசம். இது போன்ற கதைகளை படிக்க வாய்ப்பளித்திற்க்கு முதலில் ஒரு பெரிய நன்றி சார்.. சிறப்பான கதை... யார் நல்லவன் யார் கெட்டவன் என யூகிக்க முடியாத அளவிற்கு அருமையான திருப்பங்கள். சந்தா E இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் என்பதில் சந்தகேகமே இல்லக//
   +1

   Delete
  8. //தனது செயல்களை தன்வசமின்றி செய்வதால்,தனது சித்தங்களை அவர் உரிமை கொண்டாட முடியாது அவை சாத்தனுக்கே சொந்தம்.//
   அருமை

   Delete


 44. நமது குழுவின் பொருளாளர் என்பதை விட நாலும் தெரிந்த வித்தகர் என்று அனைவராலும் அறியப்படும் திரு .செல்வம் அபிராமி எனப்படும் செனா அனாஜீயை அனைவரும் அறிவோம் ..ஆனால் இதுவரை அவர் முகம் காணாத நண்பர்களே அதிகம் .(தலையில்லா போராளி செல்பி கூட தலை காட்டாமல் எடுத்து அனுப்பியவர் நமது செனா அனாஜீ )முதன் முறையாக நமது ஈரோடு புத்தக காட்சியில் இந்த முறை முகம் காட்டி விட்டார் .ஈரோடு புத்தக திருவிழாவிற்கு வராதவர்களுக்காக இந்த குறிப்பு .

  நமது டாக்டர் பொடியன் இதழில் ஈரோடு புத்தக காட்சி சிறப்பு புகைப்படங்களில் இரண்டாவது புகைப்படத்தில் காணப்படும் நண்பரே நமது செனா அனா ஜீ என பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்..

  ReplyDelete
 45. "ADVENTURE MAGAZINE - 100 YEARS OF GALEP A LIFE WITH TEX...."

  (இந்த அட்வென்சர் மேகசின் என்பது ஆண்டுக்கு ஒரு இதழ் மட்டுமே அங்கே வெளியாகிறது)

  இது தான் ஆசிரியர் சார் இன்றைய பதிவில் குறிப்பிட்டுள்ள பிரம்மா காலப்பினி அவர்களுக்காக "காலப்"என போனெல்லி வெளியிட உள்ள அந்த இதழ். செப்டம்பர் 22வெளியாகவுள்ளது.

  அந்த இதழில் அப்படி என்ன ஸ்பெசல், இதோ உங்களுக்காக உலக டெக்ஸ் வில்லர் பேஸ்புக் குரூப்களில் புகுந்து புறப்பட்டு, அங்கே கண்ட தகவல்...

  ஆண்டு 1948ல் பிதாமகர் திரு ஜியான்லூஜி போனெல்லி கனவில் உதித்த இரண்டு ஹீரோக்கள் நமது தல டெக்ஸ் எனும் குதிரை வீரனும், "ஆக்சியோ கபோ" என்ற வாள்வீச்சு வீரனும் ஆவர்.

  1948ல் சிற்சிறு ஜங்கிள் புக் ஒரு பக்க கதை ஓவியங்களையும் திரு காலப்பினி வரைந்து வந்தார். ஆனால் ஏனோ அது முற்றுப்பெறவில்லை. நம்ம ஆசிரியர் சாரின் டேபிளில் பலர் உறங்குவது போல அதுவும் அங்கே 70ஆண்டுகள் துயில் பயின்றது.

  சரியாக திரு காலப்பினி அவர்களின் 100வது பிறந்த தினத்தின் போது வெளியாகும் அந்த சிறப்பிதழில் மொத்தம் 3விசயங்கள் அடங்கியுள்ளன...

  1.அந்த அதிகம் வெளிச்சத்தை பார்க்காத வாள்வீரனின் முதல் இரு சாகசங்கள்.

  2.12ஜங்குள் புக் ஓவிய பக்கங்கள்

  3.டெக்ஸின் புகழ்பெற்ற இத்தாலியில் டாப் வரிசையில் இடம்பெற்ற கதைகளில் ஒன்றான "சில்வர்பெல்" எனும் வண்ண சாகசம்.

  --இதில் ஒன்றை அதிர்ஷ்டவசதாக ஏற்கனவே நாம் ரசித்து விட்டோம். அது டெக்ஸின் புகழ்பெற்ற சாகசம்தான். 1987கோடைமலரில் இடம்பெற்ற "பழிக்குப்பழி"-தான் அது.

  (விரைவில் Texடெக்ஸ்வில்லர்ல போட்டோக்கள் போடப்படும்)

  ReplyDelete
  Replies
  1. தகவல் திரட்டலுக்கும், தொகுத்தளித்ததற்கும் நன்றி டெக்ஸ் விஜய்!

   தல பற்றிய எந்தச் செய்தியும் சுவையானதே!!

   Delete
  2. தலயின் வீரத்தையும் விவேகத்தையும்
   எடுத்துரைத்த சேலம் டெக்ஸுக்கு நன்றி.

   Delete
 46. 1. சந்தா எவ்வளவாக இருந்தால் தேவலாம் :

  எனக்கு இது ஒரு பெரிய சிக்கலாக தோன்றியதில்லை. சகலவல்லவன் கோவை KG தியேட்டரில் நான் பார்த்த பொழுது டிக்கெட் விலை INR 2.90. இப்போது அது எத்தனை மடங்கு என்பது நான் சொல்ல தேவை இல்லை. நிறைய சந்தாக்கள் (ABCDE) இருப்பதால் வேண்டுமென்பதை தேர்ந்து எடுத்து கொள்ளும் வசதி இருப்பதால், வேண்டாம் என்பதை விட்டு விடலாமே. அப்படி இல்லை என்றால் ஆண்டு சந்தாவை இப்போது இருக்கும் தொகையில் நிர்ணயித்து விட்டு சூப்பர் 6 போல நிறைய தனியாக அறிவிக்கலாம்.

  2. சந்தா E :

  எந்த புத்தகமும் எனக்கு கிடைக்காததால் படிக்க வில்லை. ஜூன் வரை வந்த புத்தகங்கள் படிச்சாச்சு. எல்லாமே நலம். நான் மதிக்கும் நண்பர்களின் விமர்சனத்தின் படி சந்தா E சூப்பர்.

  இந்த சிக்கலுக்காகவே அடுத்த வருடம் புத்தகங்களை நேரிடையாக இங்கேயே தருவித்து விடலாம் என்று தோன்றுகிறது...

  3. வாரமொரு வலைப்பதிவென்பது :

  எங்களை தொடர்ந்து உற்சாகமூட்டுவது இதுவே... தயவு செய்து இதை தவிர்த்து விடாதீர்கள்.

  4. 2018ல் அதிகம் பார்க்க விரும்பிடாத நாயக / நாயகிகள் :

  Magic Wind, டயபலிக். முன்னமவரயவது ஒத்துக்கொள்ளலாம்.

  5. 2018ல் பார்க்க விரும்பும் மருவருகையாளர்கள்:

  Robot ஆர்ச்சி , கார்ட்டூன் கதைகள்

  6. Franco-Belgian vs Italian - உங்கள் பார்வையில் எது முதலிடம்:

  இரண்டுமே

  7. 'Tex willer' ஈர்ப்பு :

  இன்னும் பத்து வருஷம் கழிச்சு கேளுங்க...
  8. நீங்கள் கார்ட்டூன் காதலரா ?

  விடை : ஆமாங்கோ !

  9. குதிரைப் பசங்கள் தொடர்வது ஓகே தானா ?

  டபுள் ஓகே

  10. மகளிரணி செயல்பாடுகள் (!!) எவ்விதமோ :

  ஷானியா :நெம்ப நல்லாருக்கு ஜூலியா – ஓகே

  11. ஸ்பெஷல் இதழ்கள் தரும் தாக்கங்கள் :

  அருமை. காமிக்ஸும் ஹீரோயின்களை போலவே. குண்டாக இருந்தாத்தான் பிடிக்குது

  12. மறுபதிப்புக்கள் இந்தாண்டு நீங்கள் பிடித்திருப்பது :
  முதல் ஆறு மாத புத்தகங்கள் படித்து விட்டேன். இப்போ பைக் ஓட்டறேன் . அதுக்காக முன்னே ஒட்டிய சைக்கிள் வெறுப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. + B.Com எத்தன நாளுக்குத்தான் +1 +2
   என்று போடுவது.ஈ வி Ok யா.

   Delete
 47. தோர்கல்:
  கனவு மெய்ப்பட வேண்டும்
  தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தனி தீவில் வசிக்கும் தோர்கல், தனது குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க கடலில் பயணம் செய்கிறான்; குடும்பத்தை தீவில் தனியே விட்டு விட்டு.
  தனியே இருக்கும் ஆரிசியா மற்றும் ஜோலன் சந்திக்கும் வித்தியாசமான பிரச்சினையே கதை.

  தன்னுடைய தாயிடம் தனக்கு விளையாட துணை இல்லை என்பதையும், நாசூக்காக தம்பி அல்லது தங்கை பாப்பா ஏன் அவர்களுக்கு இல்லை & எப்போது என்றும் ஆரிசியா சொல்லும் இடம் அருமை.

  ஆள் இல்லாத தீவில் மகனின் புதிய நண்பன் யார் என பயப்படும் ஆரிசியா, அலினோ தனது மகனால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை பாத்திரம் என்பதும் பின்னர் அவனுடன் ஜோலன் விளையாடுவதை கண்டவுடன் எனக்கு பகீர் என்றது.

  அலினோ ஜோலன் கட்டுப்பாடுட்டில் இல்லாமல் பல அலினோவாகமாறி ஆரிசியா மற்றும் ஜோலனை துரத்தும் இடம்கள் பரபர திக் திக். ஏதோ திகில் படம் பார்த்த உணர்வு.

  மனதில் பயத்தை வைத்து கொண்டு மகனை காப்பாற்ற வேண்டும் என்ற ஆரிசியா கதாபாத்திரப் படைப்பு அருமை, அதனை மேலும் சிறக்க செய்தது நமது முத்த ஆசிரியர் அவர்களின் மொழிபெயர்ப்பு.

  மிகவும் ரசித்த வசனம்: தனிமை தரும் கசப்பு எத்தனை முறை பழகினாலும் மங்கிப் போவதில்லை.

  படங்களும் அதன் வண்ணகலவை பிரமிக்கவைக்கிறது. ஒவ்வொரு படத்தையும் செதுக்கி உள்ளார்கள். நேரம் கிடைக்கும் போது இதனை பற்றி எழுத ஆவல்.

  கனவு மெய்ப்பட வேண்டும் என்னை கற்பனை உலகில் மிதக்க விட்டுவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. @ PfB

   செம!
   இன்னிக்கு நைட்டே நானும் அந்தக் கற்பனை உலகில் மிதக்கப் போகிறேன்!

   Delete
 48. தோர்கல் படித்து பின்னர் மனதில் தோன்றிய கேள்விகள்:
  1. ஜோலன் கையில் கிடைக்கும் காப்பு உண்மையில் என்ன? எங்கிருந்து அது வந்தது?
  2. அலினோ முதலில் ஜோலன் சொல்வதை கேட்பதும் பின்னர் கொலை செய்ய முயல்வதும் ஏன்? அதன் உண்மையான குறிக்கோள் என்ன? அதற்கு பின் யாராவது இருக்கிறார்களா?
  3. தனது மகனை காப்பாற்றும் தோர்கல் அவன் கையில் உள்ள காப்பை எடுத்து விடுகிறான். தோர்கலுக்கு காப்புதான் பிரச்சனை என்பது எப்படி தெரியும், ஜோலனின் டெலிபதி செய்தி?
  4. தோர்கல் யார்? மிகவும் முன்னேறிய உலகம் அழியும் போது தப்பிய மனிதன், வேறு ஒரு உலகத்தில் கற்கால வாழும் மனிதன். அந்த அழிந்த உலகம் நாம் வாழும் இந்த உலகம்தானா?

  இவைகள் எனது துணைவியாரிடம் கதையை பற்றி விவாதம் செய்ய போது எங்களுக்குள் எழுந்த சில கேள்விகள்.

  ReplyDelete
  Replies
  1. 1. காப்பு கண்டெடுக்கப் பட்ட ஒரு distraction. ஜோலன் தான் நினைத்ததை சிருஷ்டிக்க கூடிய ஆற்றல் கொண்ட சிறுவன். சிறுவன் என்பதால் சரியாக கையாள முடியாமல் ஆலினோவை சொதப்பலாய் சிருஷ்டிக்கிறான்.

   2. ஆலினோ ஒரு நண்பனாய் சிருஷ்டிக்கப் படுகிறான். ஜோலனுக்கு அம்மா மீது கோவம் வரும்போது ஆலினோ ஜோலனின் எண்ணங்களால் ஆரிசியா மீது கோவம் கொள்கிறான். மேற்குறிப்பிட்ட முழுமையடையாத ஆற்றலினால் ஒரு சமயத்தில் ஆலினோ ஜோலனின் பிடியிலிருந்து விடுபட்டு தான்தோன்றி ஆகிவிடுகிறான்.

   3. இங்கே ஜோலனின் எண்ணங்கள் தோர்கல் டெலிபதி மூலம் தெரிந்து கொள்வது. காப்பினால் சக்தி என்பது ஜோலனின் எண்ணமே - ஜோல்னால் கழற்ற முடியவில்லை. எனவே தோர்கல் வெட்டி விடுகிறான். பின் வரும் கதைகளில் ஜோலன் வளரும்போது இந்த ஆற்றல் முழுமையடைந்த பின் சரிவர விளங்கும்.

   4. மிகவும் முன்னேறிய உலகம் அழியும் பொது தப்பும் ஒரு புனைவு தோர்கல். விசேஷ சக்திகள் இதனால் உண்டு. (சூப்பர்மேன் மாதிரி - ஆனால் ஒன்று தோர்களின் விசேஷ சக்திகள் அடங்கிவிடும் இவ்வுலகில் (முன் புத்தகம் பார்க்க). அவனது மகன் மற்றும் மகளின் சக்திகள் தொடரும் - அடங்காது.

   Delete
  2. @ Raghavan

   இந்தமாதத் தோர்கலின் முதல் பகுதியை மட்டும் சற்றுமுன்பு படித்துவிட்டு, PfBயின் கேள்விகளுக்கான உங்களது பதில்களைப் படித்தேன்... எல்லாமே அருமையான விளக்கங்கள்! குறிப்பாக, பதில்#3

   செம!

   Delete
 49. 1. சந்தா எவ்வளவாக இருந்தால் தேவலாம் :

  இப்போதிருப்பதே எனக்கு ஓகே தான்! நல்ல கதைகளின்பொருட்டு இன்னும் கொஞ்சம் கூடினாலும் பாதகமில்லை! தேவைப்படும் காம்பினேஷனில் சந்தாவை தேர்ந்தெடுத்துக்கொள்ள நீங்கள் அறிமுகப்படுத்தயிருக்கும் திட்டம் பலத்த வரவேற்பைப் பெறப்போவது உறுதி!

  2. சந்தா E :

  சந்தா-E ன் மீதான எதிர்பார்ப்பு - அது அறிவிக்கப்பட்ட தருணத்திலேயே மிக அதிகமாக இருந்தது! எதிர்பார்பு வீண்போகவில்லை என்பதை LGNன் ஒவ்வொரு வெளியீடுமே நிரூபித்து வருகிறது. 'மாதம் ஒரு கி.நா' என்ற நிலை ஏற்படுமாயின் ஏக குஷியாகிடுவேன். இப்போதில்லையென்றாலும் அந்நிலை வரும்நாள் வெகுதொலைவில் இல்லை!


  3. வாரமொரு வலைப்பதிவென்பது :

  ( ஏன் உங்களுக்கு இப்படியெல்லாம் கேட்கத் தோனுதுன்னு தெரியலையே!! ஆறு வருசமா அம்சமாத்தானே போய்க்கிட்டிருக்கு? புற்றீசல்கள் போல நிறைய காமிக்ஸ் வாட்ஸ்அப் குரூப்புகள் முளைத்திருப்பதால் அவ்வப்போது இங்கே கொஞ்சம் டல்லடிப்பது உண்மை! ஆனால் எல்லா குரூப்புகளுக்குமே பிராணவாயு இந்தத் தளத்திலிருந்துதான் செல்கிறது என்பதை எடிட்டர் சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்)

  எங்களது வார இறுதிகளை கலர்ஃபுல்லாக்குவது உங்கள் பதிவுகளே! வார இறுதியில் ஒரு முழுநீளப்பதிவும், வார மத்தியில் ஒரு மினி பதிவும் எங்களின் அத்தியாவசியத் தேவை!

  4. 2018ல் அதிகம் பார்க்க விரும்பிடாத நாயக / நாயகிகள் :

  டயபாலிக், மேஜிக் விண்டு

  5. 2018ல் பார்க்க விரும்பும் மறுவருகையாளர்கள்:

  கருப்புக்கிழவி, சட்டித்தலையன் ஆர்ச்சி, அங்கிள் ஸ்க்ரூட்ஜ், இரட்டை வேட்டையர், ஷெர்லக் ஹோம்ஸ், பேட் மேன்

  6. Franco-Belgian vs Italian - உங்கள் பார்வையில் எது முதலிடம்:

  எனக்கு ஐஸ்கிரீம், சாக்லெட் - இரண்டுமே பிடிக்கும்! அவுக் அவுக் லபக்!

  7. 'Tex willer' ஈர்ப்பு :

  இன்னும் பல ஜென்மங்கள் கண்ட பிறகும்!
  ஒருவேளை 'எல்லா நல்ல கதைகளையும் நாம போட்டாச்சு' என்ற நிலைமை வந்தால்கூட - பழைய கதைகளையே படிச்சுப் படிச்சு மெர்சலாகிகிட்டேஏஏஏஏ இருப்பேன்!

  8. நீங்கள் கார்ட்டூன் காதலரா ?

  விடை : ஆமாங்கோ !

  9. குதிரைப் பசங்கள் தொடர்வது ஓகே தானா ?

  டபுள் ஓகே !! குதிரைப் பசங்களின் அடாவடிகள் மீதும், கரடுமுரடான பாலைநிலப்பரப்புகள் மீதும் ஏனோ ஓர் ஈர்ப்பு - எப்போதும்!

  10. மகளிரணி செயல்பாடுகள் (!!) எவ்விதமோ :

  ஷானியா : அறிமுகப்படலம் அசத்தல்!!! ஆனாலும் அடுத்த சில ஆல்பங்களைப் பார்த்தபிறகுதான் எதையும் சொல்ல முடியும்! ( இதை எழுதும்போது என் மனசு எவ்வளவு பாடுபட்டிருக்கும்னு உங்களுக்குத் தெரியுமில்லே?)
  ஜூலியா – ரொம்பச் சாதாரணமாக அறிமுகமாகி, தற்போது ரொம்பவே அசத்தி வருகிறார்!
  மாடஸ்டி : கதைகளின்மேல் எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு! ஆனால், கசமுசா பாணி சித்திரங்கள் மட்டுமே பயமுறுத்தும் அம்சம்!

  11. ஸ்பெஷல் இதழ்கள் தரும் தாக்கங்கள் :

  பிரம்மிப்பு - ஒவ்வொரு முறையும்!

  12. மறுபதிப்புக்கள் இந்தாண்டு நீங்கள் படித்திருப்பது :

  பாதிக்கும் மேல்!

  ReplyDelete
 50. நான் செப்டம்பர் மாத இதழ்களை வாங்க அடுத்த மாதம் ஆகி விடும். நான் சந்தாதாரன் அல்ல. மற்றும் பெங்களூரில் உள்ளதால், கோவை போய் வரும்போது ஒரு இரு டஜன் பூக்குகளை அள்ளி வருவேன்.

  மின்னும் மரணம் ஜூலை மாதம் படிக்க ஆரம்பித்தது.. இன்னுமும் படித்து கொண்டேஏஏஏ இருக்கிறேன். யப்பா எவ்வளவு பெரிய சாகசம்.

  அந்த நாள் கதைகள்

  கிசு கிசுக்கும் மரணம் - ஸ்டீவ்வின் கதை. கிசு கிசுக்கும் குரல் கொண்ட முகம் தெரியாத கொலையாளியை கண்டுபிடிக்கும் கதை. பயங்கர விறுவிறுப்பான கதை
  மரண மண் - வெஸ் ஸ்லெட் கதை. சித்திரமும் கதையும் படு சுமார். இதன் கூட இன்ஸ்பெக்டர் கருடா சாகசம் ஒன்று உள்ளது, அது நன்றாக இருந்தது.

  வேங்கையோடு மோததே - சிஸ்கோ சாகசம். சிஸ்கோ இதில் ஒரு கோச் வண்டி திருடர்களை வீழ்த்துவதே கதை.

  தங்கப்பாதை - சிஸ்கோ சாகசம். இது சிஸ்கோவின் காதல் கதை.

  சிஸ்கோ கதைகளின் சித்திரங்கள் தான் எனக்கு மிகவும் பிடித்தவை. மிகவும் தெளிவாக இருக்கும். அதுவும் ஏதோ ஒரு வெஸ்டர்ன் சினிமா பார்ப்பதன் உணர்வை கொண்டு வர செய்யும்.
  மீண்டும் சிஸ்கோ கதைகளை மறுபதிப்பு செய்தால் ரொம்ப நன்றாக இருக்கும். அதுவும் சிஸ்கோ கதைகள் மிக சிறியவை. அதனால், ஒரு 5 அல்லது 10 கதைகளின் தொகுப்பை மறு பதிப்பாக கொண்டு வந்தால் ஹிட் அடிக்க வாய்ப்பு இருக்கிறது.


  ReplyDelete
 51. இந்த மாத இதழ்கள் ரேட்டிங்:
  1.என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்-10/10,
  2.டாக்டர் பொடியன்-9/10,
  3.கடற்குதிரையின் முத்திரை-8/10,
  4.கனவு மெய்ப்பட வேண்டும்-8/10.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் படிக்கவில்லை
   இருந்தாலும்
   +123456789

   Delete
 52. ////8. நீங்கள் கார்ட்டூன் காதலரா ?////

  ஆமாங்கோன்னு பதிவிட்ட எல்லாருக்கும் டாங்ஸ்பா!!

  ReplyDelete
 53. டாக்டா் ஸ்மா்ப் வந்து பாத்தா தான் காய்ச்சல் போவும் போலிருக்கே!!

  ReplyDelete
 54. என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்...

  சந்தா E ன் இன்னுமொரு அட்டகாசம். இது போன்ற கதைகளை படிக்க வாய்ப்பளித்திற்க்கு முதலில் ஒரு பெரிய நன்றி சார்.. சிறப்பான கதை... யார் நல்லவன் யார் கெட்டவன் என யூகிக்க முடியாத அளவிற்கு அருமையான திருப்பங்கள்.

  சந்தா E இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் என்பதில் சந்தகேகமே இல்லை

  தேங்க்ஸ்: ரம்மி

  ReplyDelete
 55. கொஞ்சம் முன்னே பார்ப்போமோ..?


  1. ஆண்டு சந்தா - தற்போதைய நிலை ஓகே ..டெக்ஸ் 70 போல் சில சிறப்பு சமயங்களில் கொஞ்சம் கூடுதல் ஆனாலும் தவறல்ல.


  2.சந்தா E -நிச்சயம் சந்தா கட்டுவேன்.


  3.வாரமொரு வலைபதிவு - கண்டிப்பாக வேண்டும் .ஞாயிறு காலை புது பதிவு தங்களை சந்திப்பது போல ஒரு இனிய நிகழ்வு ..


  4.பார்க்க விரும்பிடாத நாயகர்


  ரெண்டு தாத்தா ...கர்னல் தாத்தா ,லியோ தாத்தா ..


  5.பார்க்க விரும்பும் மறு நாயகர் ..

  ஜான் மாஸ்டர் ..சிஸ்கோ கிட்


  6. ப்ரான்கோ பெல்ஜிய படைப்பு- இத்தாலிய படைப்பு


  இரு கண்கள்  7 .டெக்ஸ் வில்லர் -


  வாரம் ஒன்று வருகை தருமா சார் ...  8 . நீங்கள் கார்ட்டூன் காதலரா ..


  அப்போது ஆம். இப்போது நோ லவ் நோ ஹேட் (லக்கி ,சிக்பில் மட்டும் ஒன்லி லவ் )


  9 . குதிரை பசங்கள் ..


  இன்னும் புது குதிரை இருந்தா மேய்ச்சலுக்கு விடுங்கள் சார் ...  10 - மகளிரணி ..


  லேடி S. சூப்பர் ...இளவரசி நன்று ...ஜூலியா ஓகே...  11 - ஸ்பெஷல் இதழ்கள் ..


  ஆஹா ...ஆஹா....  12. மறுபதிப்புகள்


  அனைத்தும் படித்தாயிற்று ..

  ReplyDelete
 56. 1. சந்தா எவ்வளவாக இருந்தால் தேவலாம் :

  இப்போதிருப்பதே எனக்கு ஓகே தான்! சந்தா தொகையை இவ்வாறே நிர்ணயித்து விட்டு அவ்வப்பொழுது சில பல குண்டு புத்தகங்களை (புத்தக திருவிழா சிறப்பு) களம் இறக்கினால் சந்தோசமே ..

  2. சந்தா E :

  சந்தா-E உண்மையாகவே ஒரு 'இவன் வேற மாதிரி' என்பதாக வெற்றி கண்டு வருகிறது. அடுத்த வருட LGN கோட்டா 12 புத்தகங்களாக உயர்ந்தால் மகிழ்ச்சியே ...


  3. வாரமொரு வலைப்பதிவென்பது :

  எங்களது வார இறுதிகளை கலர்ஃபுல்லாக்குவது உங்கள் பதிவுகளே! வார இறுதியில் ஒரு முழுநீளப்பதிவும், வார மத்தியில் ஒரு மினி பதிவும் எங்களின் அத்தியாவசியத் தேவை!

  4. 2018ல் அதிகம் பார்க்க விரும்பிடாத நாயக / நாயகிகள் :

  யாருமே இல்லை :)

  5. 2018ல் பார்க்க விரும்பும் மறுவருகையாளர்கள்:

  யார் வந்தாலும் சந்தோசமே :)

  6. Franco-Belgian vs Italian - உங்கள் பார்வையில் எது முதலிடம்:

  எனக்கு ஐஸ்கிரீம், சாக்லெட் - இரண்டுமே பிடிக்கும்! அவுக் அவுக் லபக்!

  7. 'Tex willer' ஈர்ப்பு :

  சார் எப்படி வாழக்கையில் நமது நெருங்கிய நண்பர்களின் நட்போ அது போலவே டெக்ஸ் நமது காமிக்ஸ் வாழ்க்கையில் ... நெருங்கிய நண்பன் என்றான பின்னே ஓவர்டோஸ், ஈர்ப்பு, குறை போன்ற விசயங்கள் எதுவே இல்லை ... ஆல்வேஸ் ஹேப்பி அண்ணாச்சி ...

  8. நீங்கள் கார்ட்டூன் காதலரா ?

  ஆமாங்கோ ! YES சார் !

  9. குதிரைப் பசங்கள் தொடர்வது ஓகே தானா ?

  டபுள் ஓகே !! ட்ரிப்பில் ஓகே !!! குதிரைப் பசங்களின் அடாவடிகள் மீதும், கரடுமுரடான பாலைநிலப்பரப்புகள் + செவிந்தியர்கள் மீதும் ஏனோ ஓர் ஈர்ப்பு - எப்போதும்!

  10. மகளிரணி செயல்பாடுகள் (!!) எவ்விதமோ :

  ஷானியா : அறிமுகப்படலம் அசத்தல்!!! ஆனாலும் அடுத்த சில ஆல்பங்களைப் பார்த்தபிறகுதான் சொல்ல முடியும்! ( இதை எழுதும்போது ஈரோடு விஜய் மனசு எவ்வளவு பாடுபட்டிருக்கும்னு உங்களுக்குத் தெரியுமில்லே?)

  ஜூலியா – சாதாரணமாக அறிமுகமாகி, தற்போது ரொம்பவே அசத்தி வருகிறார்!

  மாடஸ்டி : கதைகளின்மேல் எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு!

  11. ஸ்பெஷல் இதழ்கள் தரும் தாக்கங்கள் :

  பிரம்மிப்பு - ஒவ்வொரு முறையும்!

  12. மறுபதிப்புக்கள் இந்தாண்டு நீங்கள் படித்திருப்பது :

  எல்லாவற்றையும் (மறுபதிப்பு + புதுபதிப்பு) படித்து விடுவது வாடிக்கை சார் ..  நன்றி : ஈரோடு விஜய் (எனது டைப்பிங் வேலையை சுலபமாகியதற்க்கு)

  ReplyDelete
 57. 1. சந்தா எவ்வளவாக இருந்தால் தேவலாம் :

  இப்போதிருப்பதே எனக்கு ஓகே தான்

  2. சந்தா E :

  சந்தா-E 6 போதும் ..


  3. வாரமொரு வலைப்பதிவென்பது :
  XXXL பதிவு ஒன்றும் .......உபபதிவு ஒன்றும்

  நான் கமெண்ட் இடுவதற்குள்....லோட் மொரு வந்து விடுகிறது..

  ஞாயிறு நான் ரொம்ப பிசி ........அரண்மனையை கூட்டி பெருக்கி ஒட்டடை அடித்து .....ஹி ஹி

  4. 2018ல் அதிகம் பார்க்க விரும்பிடாத நாயக / நாயகிகள் :சாணி நீரோ

  5. 2018ல் பார்க்க விரும்பும் மறுவருகையாளர்கள்:

  ஆர்ச்சி,இரட்டை வேட்டையர்கள்,இரும்புகை வில்சன்

  6. Franco-Belgian vs Italian - உங்கள் பார்வையில் எது முதலிடம்:

  அப்படின்னா என்ன ........? I KNOW ONLY LION முத்து காமிக்ஸ் .....
  அது உங்க பாடு ஆசான்

  7. 'Tex willer' ஆரஞ்சு சொக்காய் போட்டு பார்க்கலாமே

  8. நீங்கள் கார்ட்டூன் காதலரா: நானே ஒரு கார்ட்டூன் கதாபாத்திரம் தானே

  9. குதிரைப் பசங்கள் தொடர்வது ஓகே தானா ? டகடி டகடி தொடரட்டும்

  10. மகளிரணி செயல்பாடுகள் (!!) எவ்விதமோ :
  ஜூலியா –எப்படி போனா என்ன ...? மாதேச்டி வரட்டும் ...டும்

  11. ஸ்பெஷல் இதழ்கள் தரும் தாக்கங்கள் :மந்திரி பிளான் போல சுவை

  12. மறுபதிப்புக்கள் இந்தாண்டு நீங்கள் படித்திருப்பது :
  எல்லாம் படிச்சாச்சு ...........பத்து முறை

  ReplyDelete
  Replies
  1. ////ஞாயிறு நான் ரொம்ப பிசி ........அரண்மனையை கூட்டி பெருக்கி ஒட்டடை அடித்து .....ஹி ஹி ///

   எப்பிடி சார், இப்படி திறந்த புத்தகமா அந்த ராஜ ரகசியத்தை வெளிய சொல்லிட்டீங்க.?

   Delete
  2. //ஞாயிறு நான் ரொம்ப பிசி ........அரண்மனையை கூட்டி பெருக்கி ஒட்டடை அடித்து .....ஹி ஹி //

   LOL :))))))
   மந்திரியாரின் ட்ரேடுமார்க் நகைச்சுவை!

   'மதியில்லா மந்திரி' என்ற பெயரில் ரொம்ப வருஷங்களாவே ரணகளம் செய்துவருபவர் யார்? என்ற கேள்வி எனக்குள் ரொம்ப நாளாகவே உண்டு!

   மந்திரியாரை சரியாக அடையாளப்படுத்தும் நண்பருக்கு ஈனாவினாவின் சிறப்புப் பரிசு உண்டு!

   Delete
  3. ////எப்பிடி சார், இப்படி திறந்த புத்தகமா அந்த ராஜ ரகசியத்தை வெளிய சொல்லிட்டீங்க.?.........

   சாரி சார் தூக்கத்துல கமெண்ட் போடுற வியாதி இருக்கு.......

   Delete
 58. இது எனது தனிப்பட்ட விருப்பம் அவ்வளவுதான்!

  1. சந்தா எவ்வளவாக இருந்தால் தேவலாம் :

  விரும்பினால் 1 புத்தகம் 2400 என்றாலும் வாங்குவேன்! 5000 என்றாலும் வாங்குவேன்!
  கருப்பு வெள்ளையில் சுத்தமாக நாட்டமே இல்லை! மீறி வாங்கியவற்றில் பாதிக்குமேல் சில பக்கங்களைக் கூட கடக்காமல் பீரோவில் தூங்குகின்றன!
  சந்தாவில் வண்ணப் புத்தகங்களை மட்டும் தெரிவு செய்ய வாய்ப்பின்மையால் சந்தா செலுத்தாமலே விட்டுவிட்டேன்! "தலையில்லா போராளி" போன்றவை இதில் விதிவிலக்கு! என்னைப் பொறுத்தவரை காமிக்ஸ் என்றாலே ஓவியங்கள் தான்! அதுவும் வண்ணத்தில் எனும்போது கூடுதல் சிறப்பு! அனைத்தும் வண்ணத்தில் என்றால் முழுச்சந்தாவும் மகிழ்ச்சியோடு செலுத்தலாம்! இல்லையேல் தொிவு செய்யும் வாய்ப்பை கொடுங்கள்!

  2. சந்தா E :

  சந்தா Eக்கு மட்டுமே பணம் செலுத்தியுள்ளேன்! சூப்பா்!! அற்புதம்!!!

  3. வாரமொரு வலைப்பதிவென்பது :

  கட்டாயம் வேண்டும்!!

  4. 2018ல் அதிகம் பார்க்க விரும்பிடாத நாயக / நாயகிகள் :

  மாடஸ்டி பிழை சி
  தாத்தா லியனார்டோ
  கா்னல் கிளிப்டன்

  5. 2018ல் பார்க்க விரும்பும் மறுவருகையாளர்கள்:

  No comments

  6. Franco-Belgian vs Italian - உங்கள் பார்வையில் எது முதலிடம்:

  சந்தேகமே இல்லாமல் Franco-Belgian தான்!!!

  7. 'Tex willer' ஈர்ப்பு :

  தல மேல ஈா்ப்பில்லாது இருக்க முடியுமா??
  ஒவியத்திற்கும், வண்ணத்திற்கும் முதன்மையும், முக்கியத்துவமும் கொடுத்தால் மிக்க மகிழ்ச்சி! அதுவும் டெக்ஸ்-70ஐ சிறப்பிக்கும் விதமாகவாவது!

  8. நீங்கள் கார்ட்டூன் காதலரா ?

  ஹிஹி ஈ.வி.
  காா்ட்டூன்க்கு வாழ்நாள் சந்தானாலும் ரெடி
  கருப்புவெள்ளைக்கு ஹிஹி??🤔🤔

  9. குதிரைப் பசங்கள் தொடர்வது ஓகே தானா ?

  நிறைய வேண்டும்!

  10. மகளிரணி செயல்பாடுகள் (!!) எவ்விதமோ :

  Lady S so happy
  மாடஸ்டி so sad

  11. ஸ்பெஷல் இதழ்கள் தரும் தாக்கங்கள்

  அற்புதம்! சூப்பா்!!

  12. மறுபதிப்புக்கள் இந்தாண்டு நீங்கள் படித்திருப்பது :

  கடந்த ஆண்டு வாங்கியவையே இன்னும் பீரோவில் மீளாத் துயிலில் உள்ளன!

  ReplyDelete
 59. கொஞ்சம் முன்னே பார்ப்போமோ..?

  1. ஆண்டு சந்தா - தற்போதைய நிலை+5டூ10% எக்ஸ்ட்ரா ஓகே சார்.(விலை வாசி ஏற்றம்&GSTசமாளிக்க,என் கடையில் சொற்ப டர்ன் ஓவருக்கே நானே கொஞ்சம் விலையை கூட்டித்தான் சமாளிக்க முடிகிறது)
  டெக்ஸ்70&காலப்பினி100 போன்ற ஸ்பெசல் தருணங்களில் கட்டுப்பாடு தளர்த்தலாம்,வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே வரும் ஸ்பெசல் தருணங்கள் இவைகள் அல்லவா...!!

  2.சந்தா E -
  நிச்சயம் சந்தா கட்டுவேன். ஆனால்3கருப்பு+3கலர் என்பதே என் விருப்பம்.

  3.வாரமொரு வலைபதிவு -அவசியம் வேணும்; நல்ல விவாதங்களில் உப பதிவும் ஓகே. உங்கள் பிரசன்டேசன் கொஞ்சம் இருக்கனும் சார், ஞாயிறு மட்டுமாவது ஒரு 2மணி நேரம் இதற்காக நீங்கள் ஒதுக்கத்தான் வேணும். ரெகுலராக நீங்கள் பதில் தருவீர்கள் என்ற நிலை இருக்கும் போது இன்னும் கொஞ்சம் தலைகாட்டாத நண்பர்களும் வரக்கூடும் சார்.

  4.பார்க்க விரும்பிடாத நாயகர்.
  ஜீலியா

  5.பார்க்க விரும்பும் மறு நாயகர் ..

  சுஸ்கி விஸ்கி& ஜெரோம்

  6.ப்ரான்கோ பெல்ஜிய படைப்பு- இத்தாலிய படைப்பு

  சாக்லேட்:ஐஸ்கிரீம்=50:50

  7 .டெக்ஸ் வில்லர் -

  அடுத்த அமெரிக்க ஜனாதிபதி டெக்ஸ்!;
  600ஐயும் படிக்கலனாலும் பாதியாவது படிக்க வகை செய்யுங்கள்.

  8.நீங்கள் கார்ட்டூன் காதலரா ..

  ஆமாங்கோ...!!!புதிய கார்டூன் நாயகர் ஆண்டுதோறும் இல்லைனாலும் இரண்டு ஆண்டுக்கு ஒரு அறிமுகம் வேணும்.


  9.குதிரை பசங்கள் இதே போல் தொடர்வது???

  குதிரைகள் இன்றி தமிழ் காமிக்ஸ் இல்லை. இன்னும் வேணும் வேணும் என கேட்பது இவர்களுக்கு தான் சாலப் பொருந்தும். அந்த மலைத் தொடர்களில், பாலை பரப்புகளில் நாமும் கூடவே பயணிப்பதான உணர்வை இவர்கள் தவிர யாராலும் தர இயலாது....

  10 - மகளிரணி செயல்பாடுகள்..

  லேடி Sதான் எதிர்காலம்.
  இளவரசி-விற்பனை இல்லையேல் எதிர்காலம் இல்லை என்பது இயல்புதானே.
  ஜூலியா சாரி பிக் நோ...

  11 - ஸ்பெஷல் இதழ்கள் தரும் தாக்கங்கள்!!!

  முன்பைவிடவும் ரொம்பவே ஜாஸ்தி...மாதம் விட்டு மாதம் ஸ்பெசல் இதழ்கள் என்றால் ஆட்டம் கொண்ட்டாட்டம் தான். எத்தனை இதழ்கள் வந்தாலும் சூப்பர் ஸ்பெசல், சென்சுரி ஸ்பெசல், கெளபாய் ஸ்பெசல், நெவர் பிஃபோர் ஸ்பெசல், மேக்னம் ஸ்பெசல், லயன்300, மின்னும் மரண தொகுப்பு, இரத்த கோட்டை,இரத்தபடலம் ஜம்போ...என மனதில் நிற்பவைகள் இவைகளே...

  இந்தாண்டே டியூராங்கோ, சிக்பில் ஸ்பெசல், இரத்த கோட்டை, லயன்300,ட்ராகன் நகரம் என ஸ்பெசல் களின் சாம்ராஜ்ஜியம் தான் அனைவரையும் வசீகரிக்கிறது.
  ஆண்டுக்கு 6ஸ்பெசல் இனிமேல் பிரிக்க முடியாத ஒன்று என்பதே நிதர்சனம்.

  12. மறுபதிப்புகள்

  பிடித்த கதைகள் அவ்வப்போது படிக்கப் படுகின்றன; வெயிட்டிங் ஃபார் 2018 அட்டவணையில் மறுபதிப்பு பட்டியலுக்காக...

  ReplyDelete
  Replies
  1. +9999999999999999999999999999999999
   +8888888888888888888888888888888888
   +7777777777777777777777777777777777
   +6666666666666666666666666666666666
   +5555555555555555555555555555555555
   +4444444444444444444444444444444444
   +3333333333333333333333333333333333
   +2222222222222222222222222222232222
   +1111111111111111111111111111111111
   இந்த + போதுமா இன்னும் கொஞ்சம்
   வேணுமா.

   Delete
 60. பல போராட்டங்களுக்கும், கூாியா் குழப்பங்களுக்கும் பிறகு "என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்" கிடைத்து விட்டது.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு இப்ப தேவை 'சாத்தான் ' இல்ல. 'டாக்டர் '

   அதனால டாக்டரைப் பாருங்க.
   சந்தோசமா இருங்க.

   Delete
  2. மிதுன்
   சந்தா கட்டுங்க
   சந்தோஷமாக லயன்&முத்து படியுங்க.
   Ok

   Delete
  3. கோவிந்தராஜ் சார்
   நீங்கள் கூறிய டாக்டர் ஸ்மர்ப் தானே.

   Delete
  4. சந்தா E க்கும், சூப்பா் 6 க்கும் சந்தா கட்டியிருக்கிறேன்!!

   இதுவரை அது எனக்கு முழு நிறைவே!

   காா்ட்டூனுக்கு தான் கையைப் பிணைய வேண்டியுள்ளது! தனி சந்தா இல்லாமையால்!!

   அதற்கும் இன்று பணம் செலுத்திவிட்டேன்!

   கூடவே தோா்கலுக்கும் சோ்த்து!

   Delete
  5. @ ganesh kv,

   க க க போ.


   கணேஷ் சார்.
   தயவுசெய்து நீங்க என்னை பேர் சொல்லியே தாராளமா கூப்பிடலாம்.

   Delete
 61. தோர்கல்.

  மஞ்சள் வண்ணப் பிண்ணணியில், சுற்றிலும் தங்கமாக ஜொலிக்கும் இலைகளும் பாறையும், மேலிருந்து சிறிதாக வழியும் அருவி நீரானது மண்ணை அடைந்ததும் மெதுவாக டாலடிக்கும் மாயாஜாலம், திருமதி தோர்கல் ஜீனியர் தோர்கலுடன் தள்ளி நின்றிருக்க, முன்பகுதியில் பச்சைமுடிவண்ணன் என தேர்ந்த ஓவியமாக மின்னுகிறது.
  விவரிக்க இயலாத உணர்வை தனது தூரிகையின் மூலம் உருவாக்கிய ஓவியர், அதன் மூலப் பொருளான கற்பனையை மனதுக்குள் ஒருமுகப்படுத்திய கதாசிரியர், அட்டைப்படத்திலேயே சகலத்தையும் அடக்கிய ஆற்றலை எண்ணி கை தட்டி பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 62. நல்ல ஆங்கிளில் அமைந்த. 'கடல் குதிரையின் முத்திரை' அட்டைப்பபடம் சிறப்பாக அமைந்துள்ளளது. டெக்ஸ்ம் கார்சன்ம் அடையாளம் மாறாமல் போஸ் கொடுத்திருக்கும் விதம் அலாதாதியானது.

  கண்ணாடி ஜன்னலை துளைத்துக் கொண்டு வெளியேறும் தோட்டாக்கள், பதிலடி கொடுத்து விட்டு புகை வழியும் துப்பாக்கியோடு பதுங்கும் இரு சிங்கங்கள் என, சமீபத்திய டெக்ஸ் கதைகளிலே சிறந்த அட்டைப்பபடமாக தாராளமாக கூறலாம்.

  இடது பக்க மேல்முனையில் ' Wanted ' போஸ்டரில் 'T 'க்கு பதிலாக I உள்ளது.
  (விளக்கெண்ணை இல்லாததால் கண்ணில் தேங்காய் எண்ணை விட்டு பார்த்த போது கவனித்தது.)

  ReplyDelete
 63. 'என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்' என்று தலைப்பு வைக்கப்பட்டதன் பின்னணி என்ன? யாராவது கண்டுபிடித்தீர்களா இல்லையா?

  நானும் ரெண்டு நாளா யோசிச்சுக்கிட்டிருக்கேன்... பிரயோஜனமில்ல! இப்படியே யோசிச்சுக்கிட்டிருந்தா என் சித்தமும் - குறைந்தபட்சம் நம்ம புனித சாத்தான்ஜீக்காவது - சொந்தமாயிடும் போலிருக்கே...!

  ReplyDelete
  Replies
  1. எல்லாரும் அந்த கதைய படிச்சிருக்க மாட்டாங்கனு நினைக்கிறேன்.(என்னையும் சேத்து)

   ஒரு வேளை படிச்சிருந்தாலும், அடுத்ததா இன்னும் மூணு புக் படிக்கறதுக்கு லைன் கட்டி நிக்கறப்ப, தலைப்ப அப்புறம் பாத்துக்கலாம்னு விட்டாங்களோ? என்னவோ.

   Delete
  2. கிழட்டுப் பாடகி மா்லின் பெக்கா்-ன் சித்தமானது (செயல்) நன்மை செய்யும் கடவுளுக்கு அல்ல! தீமை செய்யும் சாத்தானுக்கே சொந்தம்!!

   யாமறிந்த மட்டிலும் இதுவே!!

   Delete
  3. சித்தம் என்றால் - எண்ணம்(மனது)

   Delete
  4. தனியொருவன் ஜீ சூப்பா்!!

   Delete
  5. சித்தம்- அது நமக்கு சுத்தமா கிடையாது .......

   சாத்தான் யாரென்றே தெரியாது ......
   (ஸ்லிம்மா இன் பண்ணாமல் கையில் புக்கை வச்சுக்கிட்டு போஸ் குடுத்துட்டு தங்ககல்லறை பழய மொழி பெயர்ப்பே வேணும்னு சொல்லுவாரே அவர் கண்டிப்பா இல்லை ............ )

   ஒரே கன்பீஸன்

   Delete
 64. இன்றுதான் கடல் குதிரையின் முத்திரை
  படித்தேன்.அருமை.
  பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே
  இது டெக்ஸுக்கு மட்டுமே பொருந்தும்.
  தன்னை இருமுறை கொல்ல முயன்ற
  மேன்யூலாவின் மீது கருணை காட்டி
  காப்பாற்ற முயற்ச்சிப்பதிலாகட்டும்
  அவள் இறந்த பின் அடக்கம் செய்வதாட்டும் தல தலதான்.

  ReplyDelete
 65. இன்று இரவு சாத்தானை படித்துவிடுவேன்
  அதுபற்றி விமர்சனம் நாளை.

  ReplyDelete
 66. பொ்லின் சுவா்!!!

  ஒற்றை ஆளாய் உலகையே மிரட்டிய ஹிட்லா், ஜொ்மனிக்கு கீழே ஐரோப்பா முழுமையையும் கொணர வேண்டுமென்ற வேட்கையில் ஏறத்தாழ வெற்றியும் பெற இருந்த நிலையில்,

  அமொிக்கா ஜொ்மனிக்கு எதிராக களத்தில் இறங்கியதும்,

  தொடா் வெற்றிகள் முட்டாள்தனத்திற்கே வழிவகுக்கும் என்பதற்கிணங்க ஹிட்லா் ரஷ்யாவை வெற்றிகொள்ள படையெடுத்துச் சென்றதும் ஒருங்கே இணைய ஹிட்லாின் ராஜ்ஜியம் சாியத் தொடங்கியது!

  மேற்கிலிருந்து அமொிக்க-ஐரோப்பிய கூட்டுப் படைகளும்,

  கிழக்கிலிருந்து ரஷ்யாவின் ராட்சதப் பெரும் படையும் சோ்ந்து நசுக்க ஜொ்மனியோடு ஹிட்லாின் மனோதிடமும் சுருங்கத் தொடங்கியது!

  ஜொ்மனியில் எந்தத் திசையிலும் தப்ப இயலாத ஹிட்லா் தற்கொலை செய்து கொண்டாா்!

  ஒற்றை மனிதனை வீழ்த்த மொத்த உலகமும் ஒன்று கூடியது உலகங் கண்டிரா அாிய நிகழ்வு!

  ஹிட்லாின் வீழ்ச்சியாக பாா்க்காமல், ஜொ்மனியின் வீழ்ச்சியாக உலகம் பாா்த்ததே இன்னுமொரு அழிக்க முடியா கரையை மனிதத்தின் மேல் பூசியது!

  போா் முடிந்தபின்னும் ரஷ்யாவும், அமொிக்காவும் தத்தமது ஆதிக்கதிலான பகுதிகளை பெருக்கிக் கொண்டே சென்றன.

  மேற்கு அமொிக்கக் கூட்டணிக்கும், கிழக்கு ரஷ்யாவுக்குமென "இழவு" வீட்டில் பாகம் பிாிக்கும் வேளையில் இருபெரும் வல்லரசுகளும் வெற்றி கண்டன.

  தூத்தெறி இதற்கு ஹிட்லரே தேவலாம் என்று ஒவ்வொரு ஜொ்மானியனும் மனம் வெதும்பும்படியான பல காட்சிகள் ஜொ்மனியில் அரங்கேறின.

  அதில் ஒன்றுதான் ஜொ்மனியின் தலைநகரான பொ்லினில் கட்டப்பட்ட இந்த "பொ்லின் சுவா்"

  அண்ணனும் தம்பியும், அப்பனும் மகனும், மாமனும் மச்சானும், இன்னபிற சொந்தங்களும், நண்பா்களும் ஆளுக்கொரு புறமாய் எவனோ இரு வல்லரசுகள் கொடு போட்டுப் பிாிக்கும் கேவலத்தையும், அந்நாட்டு மக்களின் மனத்துயரையும் என்னவென்று சொல்வது?

  வரலாறு தொிந்தவனுக்கு இதைப் பதியும் போது கண்ணில் நீா் பெருவது தவிா்க்க இயலா ஒன்று!

  யானும் அப்படியே!

  எது எப்படியோ கிராபிக் நாவல்கள் தரத்தில் புதிய உச்சத்தை தொட்டிருப்பது கண்கூடு!!

  ReplyDelete
  Replies
  1. எடிட்டா் சாா்,

   இக்கதைக்கு "பொ்லின் சுவா்" என்றே தலைப்பிட்டிருக்கலாமே!

   Delete
  2. அற்புதம் சார்.

   200 பக்க புத்தக அளவுக்குண்டான விவகாரங்களை இருபது பத்திகளில் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கிவிட்டீர்கள்.

   வெல்டன்.

   Delete
  3. அருமையா எழுதியிருக்கீங்க மிதுன் அவர்களே! செம்ம செம்ம!!!

   ////வரலாறு தொிந்தவனுக்கு இதைப் பதியும் போது கண்ணில் நீா் பெருவது தவிா்க்க இயலா ஒன்று!

   யானும் அப்படியே!///

   'அடுத்தவர் துயர்கண்டு அழும் உள்ளங்களில் ஆண்டவன் வாழ்கின்றான்'னு பெரியவுங்க சொல்லுவாய்ங்க...
   உங்ககிட்டேயும் கடவுள் இருக்காப்லனு தெரியுது!

   ஆங்! பேச்சுவாக்கிலே நான் சொல்ல மறந்துடக்கூடாது பாருங்க..? சித்தே முன்னாடிதான் நானும் அழுது முடிச்சேன்... ஹிஹி!

   செனாஅனா ஏன் இந்தப்பக்கம் எட்டிப்பாக்கலேன்னு இப்பத்தான் புரியுது! வெள்ளிக்கிழமை புக்கை வாங்கின கையோட அழ ஆரம்பிச்சவர், இன்னும் நிறுத்தியிருக்கவே மாட்டார்னு உறுதியாச் சொல்லிடலாம்!

   Delete
  4. ///அதில் ஒன்றுதான் ஜொ்மனியின் தலைநகரான பொ்லினில் கட்டப்பட்ட இந்த "பொ்லின் சுவா்".............

   அந்த சுவர் கட்ட எவ்வளவு ஆச்சு .........

   கலீபாவை அந்தாண்ட விட்டுடலாம் பாருங்க .........ஹி ஹி

   Delete
  5. Mithun Chakravarthi : சார் ..யுத்தக் கதைகள் மீதொருவித 'டர்ர்ர்' நம்மவர்களுக்கு இருப்பதென்பதில் இரகசியமேது ? So "பெர்லின் சுவர்" என்று பெயரிட்டாலே "போச்சுடா ; ஆந்தைக் கண்ணன் இன்னொரு டுப்பாக்கி , ஏரோபிளேன் கதையைப் போட்டுத் தாக்கி விட்டானோ ?" என்ற பீதி தான் தலை தூக்கியிருக்கும் ! கதைக்குள் நுழையும் முன்பாகவே preconceived notions-க்கு இடமளிக்க வேண்டாமே என்ற பார்த்தேன் !

   Delete
  6. "பொ்லின் சுவா்" familiar name இல்லைங்களா சாா்?

   விற்பனைக்கு வசதியாக இருக்குமே என்று தான் சொன்னேன் சாா்!!

   Delete
  7. /* விற்பனைக்கு வசதியாக இருக்குமே என்று தான் சொன்னேன் சாா்!! */

   Exactly the point !

   Given that comics are still seen in India as 'bommai book' for kids, how many parents would lift this book for their kids if it is titled 'En Si... Sa... So .....'.

   We have to avoid repulsive/revulsive titles for our releases.

   Delete
 67. அன்புள்ள ஆசிரியருக்கு!
  எனக்கு சர்ப்ரைஸ் புக் வரவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன் பதில் காணோம்.

  புத்தகங்களின் பட்டியலை வெளியிடுமாறு கோரிக்கையினை முதன் முதலாக வைத்தது நான்தான். எனக்கே கிடைக்கவில்லை. நண்பர்கள் யாரிடமாவது அதன் ஜெராக்ஸ் நகலினை பெறவேண்டியது தான்.

  ReplyDelete
  Replies
  1. Jegang Atq : சார் ...இங்கிருக்கும் வலைப்பதிவுப் பெயர்களைக் கொண்டு மேற்கொண்டு நான் செய்யக் கூடியது கொஞ்சமே..! உங்கள் சந்தா நம்பர் / பெயர் & முகவரியோடு மின்னஞ்சல் ஒன்றைத் தட்டி விட்டீர்களெனில் சிக்கல் தீர்ந்து விடும் ! Please !

   Delete
 68. ///மந்திரியாரை சரியாக அடையாளப்படுத்தும் நண்பருக்கு ஈனாவினாவின் சிறப்புப் பரிசு உண்டு!///

  பரிசு என்னான்னு சொன்னீங்கன்னா...........

  நானே என் அதார் கார்ட் (ஹி ஹி ஹி ஹோ ஹோ ஹோ ஹோ ......ஹ ஹ ஹ ...அடையாளம் காட்டி )...........

  நானே என்னை அடையாள படுத்தி ..........

  அதாவது தன மீதே விசாரணை கமிஷன் அமைப்பாங்களே அது மாதிரி.....

  வாங்கிக்குவேன் ........

  நீங்க காமிக் ஆசான் கிட்ட வாங்காத பெண்டிங் புக் எதாவது இருந்தால் அதையும் சொல்லுங்க ......

  இன்னைக்கவது நிம்மதியா கடைய விரிக்க முடிஞ்சுதே ........

  லோடு மோரு நற நற ......

  ReplyDelete
  Replies
  1. ஸ்டவ்வில் காயாத டீயும்;
   பேக்கிங் ஆவாத பன்னும் தான் அது மந்திரி ஜி.

   Delete
  2. ///நீங்க காமிக் ஆசான் கிட்ட வாங்காத பெண்டிங் புக் எதாவது இருந்தால் அதையும் சொல்லுங்க ......///

   அவருடைய பாஸ்புக் தான் பாக்கியிருக்கும்னு நினைக்கிறேன்... ;)
   'பாஸ்போர்ட் புக்'கூட பாக்கி இருக்குதான்... ஆனா அதையெல்லாம் அவர் பாட்டிம்மாக்களிடம் மட்டுமே கொடுப்பார்! :P

   Delete
 69. ******* கனவு மெய்ப்பட வேண்டும் ******

  ராட்சதர்கள்!! ஒரு கட்டுக் கதையையும், சிலபல சித்திரங்களையும் கொண்டு இவர்களால் எப்படித்தான் இப்படியொரு கனவுலகை உருவாக்கி, அதில் நம்மையும் அழைத்துக்கொண்டு உலா வர முடிகிறதோ!!!!

  முதல் பாகம் - குளிர்காலத் தேவைகளைச் சமாளித்திடும் பொருட்டு சில அத்தியாசியப் பொருட்களை சேகரித்துவர, தன் மனைவி ஆரிசியாவையும், பால் மணம் மாறாத தன் மகன் ஜோலனையும் தனியேவிட்டுவிட்டு, தாங்கள் வாழும் ஒரு தனித்தீவிலிருந்து வெளியேறி கடல்பயணம் மேற்கொள்கிறான் தோர்கல்! சிறுவன் ஜோலனைத் தனிமை வாட்ட, விளையாட ஆளின்றி ஏங்கித் தவிக்கும் அவனுக்கு பச்சைநிற கேசம் கொண்ட அலினோ எனும் சிறுவன் ஒருவன் நண்பனாகிறான்! ஆளே இல்லாத தீவில் எங்கிருந்து முளைத்தான் இந்த சிறுவன் என கிலேசமடைகிறாள் ஆரிசியா! அவ்வப்போது அமானுஷ்யமாய் வந்து போகும் அந்தச் சிறுவன் அலினோ யார் என்ற உண்மை தெரியவரும்போது அதிர்ச்சியில் உறைந்துபோகிறாள்! அதைத் தொடர்ந்து அவளையும், அவளுடைய மகனையும் மரணம் துரத்துகிறது! தோர்கல் அருகில் இல்லாத நிலையில் அந்த ஜீவமரணப் போராட்டத்தில் ஆரிசியாவின் கதி என்ன?
  யார் அந்த அமானுஷ்ய சிறுவன்?
  யாரால் இவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது? என்பதையெல்லாம் தடதடக்கும் இதயத்துடன் பக்கங்களைப் புரட்டவைத்து பதில் சொல்கிறது முதல் பாகம்!

  இரண்டாவது பாகமோ - இதற்கு முற்றிலும் மாறுபட்டு - ஒரு அட்டகாசமான வில்வித்தைப் போட்டியில் பங்கேற்க நேரிடும் தோர்கலின் நிலையைச் சொல்லி, ஒரு இளம் வில்லியை அறிமுகப்படுத்தி, பரபரப்பாகப் பக்கங்களைப் புரட்ட வைத்து பிரம்மிக்கச் செய்கிறது!

  ஓவியங்களுக்கும், வண்ணக்கலவைகளுக்கும், இவைகளை ஒருங்கிணைத்த வான்ஹாம்மேவின் கற்பனா சக்திக்கும் எழுந்துநின்று கைகளைத் தட்டிக்கொண்டே இருக்கலாம்!

  தோர்கல் தொடரின் மொத்தப் பாகங்களையும் ஒன்றாய் வைத்துப் படிக்க நேரிட்டால் ( 35 பாகங்கள்?), அந்தக் கனவுலகிலிருந்து என்னைப்போன்றவர்களால் மீண்டு வெளியேறுவது மிகக் கடினமே! ( அப்புறம் ஸ்ட்ரெய்ட்டா ஏர்வாடிதான்!)

  என்னுடைய ரேட்டிங் : 10/10


  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. 'கனவு மெய்ப்பட வேண்டும்' என்ற இந்தப் புரட்சிகரமான, கவித்துவமான டைட்டில் இந்தக் கதைக்கு அழகாக; ஆனால் கொஞ்சம் வேறுவிதமாகப் பொருந்திப் போகிறது!
   யாருடைய கனவு?
   மெய்ப்பட்டதா இல்லையா?
   கனவின் விளைவு?

   கதையில் மூழ்கி முத்தெடுத்துத் தெரிந்துகொள்ளுங்கள்!

   Delete
  3. இந்த வருடத்தில் என்னை மிகவும் பாதித்தது கதை இது, அம்மா மகன் பாசத்தை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தது. மொழிபெயர்ப்பு இதற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது. இதற்காகவே கைதட்டி கொண்டே இருக்கலாம்.

   Delete
 70. ஒரு டவுட்!

  தோர்கலை நாம் 'பிரபஞ்சத்தின் புதல்வன்' என்று அழைக்கும்போது...
  தோர்கலின் மகன் ஜோலனை நாம் ஏன் 'பிரபஞ்சத்தின் பேராண்டி'ன்னு அழைக்கக்கூடாதுன்றேன்?

  ReplyDelete
  Replies
  1. (ஏா்வாடி கன்பாா்ம்டு போலிருக்கே!)
   சும்மா தமாஸுக்கான்டி!!

   அதெப்புடி உங்களால மட்டும் இதெல்லாம் முடியாது!

   Delete
 71. கனவு மெய்ப்பட வேண்டும்: தனது தாயிடம் அலினோ பற்றி மறைக்கும் ஜோலனை ஆரிசியா பொய் சொல்ல கூடாது என்று சொல்லும் காட்சியும் அதனை தொடர்ந்து அலினோவை தண்டிக்க நினைத்து ஆரிசியா காயப்பட்டு அதனை ஜோலனிடம் மறைக்க முற்படும் இடத்தில் நடைபெறும் உரையாடல் மிகவும் அருமை. கதையில் நான் மிகவும் ரசித்த இடம் இது.

  ReplyDelete
  Replies
  1. அந்த குட்டிப் பையன் ஜோலன் - ரொம்பவே க்யூட்! ஒரு பாலகனுக்கான அத்தனை உடல்மொழியையும், முகபாவங்களையும் அழகாகத் தன் தூரிகையில் வடித்திருக்கிறார் இதன் ஓவியர்!

   Delete
 72. தோர்கல் இந்த மாத புத்தகத்தில் உள்ள இரண்டாம் கதை, கனவு மெய்ப்பட வேண்டும் கதையில் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை கடலுக்கு சேகரிக்க சென்ற போது நடந்த கதையா?

  ReplyDelete