நண்பர்களே,
வணக்கம்! ஏதேனும் பெருநகரங்களுக்குப் போய், அங்கே பொழுதைப் போக்க வேண்டுமெனில் இப்போதெல்லாம் ஒரு உத்திரவாதமான வழிமுறை உள்ளது! "பச்சக்' என செல்லை எடுத்து Zomato அல்லது Swiggy-ன் சாப்பாட்டுக் கடை மெனுக்களைப் பார்க்க ஆரம்பித்தால் நேரம் ஓடினதே தெரியாது & கடைவாயெல்லாம் ஜலமாகிக் கிடக்கவும் நேரிடும்! நாம இறுதியில் ஆர்டர் பண்ணப் போவது ரவா கிச்சடியோ; புளிசாதமோ தான் என்றாலும்- கண்கள் அகல- "ஹை.. சிக்கனிலே இத்தினி ஐட்டமா? பன்னீரிலே இம்புட்டு ரகங்களா? ஸ்வீட்களில் இவ்ளோ வெரைட்டியா?? பர்கரா? பீட்ஸாவா? கபாபா?'' என்று ஜொள்ளை "லபக்'' "லபக்''கென்று விழுங்கியபடியே பராக்குப் பார்ப்பது ஒரு சுவாரஸ்ய அனுபவம்! And கடந்த பத்து நாட்களாய் இங்கே கிட்டத்தட்ட அதே நிலையில் தான் நானிருக்கிறேன்!
ஆன்லைன் புத்தக விழா!!
ரெகுலர் சந்தாத் தடங்களில் அல்லாத ஸ்பெஷல் இதழ்களைக் களமிறக்கும் ஒரு சூப்பரான வாய்ப்பு!
So இந்த சந்தர்ப்பத்தில் நம் கைவசமுள்ளவற்றிலிருந்து எதையெல்லாம் ரெடி பண்ணலாம் ? புதுசாய் எதையெல்லாம் வாங்கிடலாம்? என்ற ஆர்வத்தில் தாறுமாறாய் combo-க்களைத் திட்டமிட்டு வருகிறேன்! காலையில் "ஏ.. சூப்பரப்பு'' என்று தோன்றும் ஒரு கூட்டணியானது, ராப்பொழுதில் குப்பைக் கூடைக்குப் போயிருக்கும் & vice versa too! அதுவும் இந்தக் கடைசி ஒரு வாரத்தில் - லோகத்தில் உருவான பொம்ம புக்குகளில் முக்காலே மூணு வீசத்தையாச்சும் பரிசீலனை செய்திருப்பேன்! நேர்த்தியான வாசிப்புக்கும் உரமிட வேண்டும்; கமர்ஷியலாகவும் அவை வெற்றி காண வேணும் எனும் போது, மண்டைக்குள் "கொய்ங்ங்ங்' என்ற குடைச்சல்! "அற்புதம்.. அட்டகாசம்..'' என்று பாராட்டுக்களை வாங்கி விட்டு- விற்பனைகளில் பேந்தப் பேந்த முழித்தல் வேலைக்கு ஆகாதல்லவா?
அங்கே தான் "தல' டெக்ஸின் மகிமை அற்புதமாய் மிளிர்கிறது! "ஒரே பாணி.. ஒரே template.. முடிலே' என்று பெயரளவிற்கு ஒரு துக்கனுண்டு அணியினர் கானம் பாடினாலும், ஒவ்வொரு மாதத்தையும் அவர்களுமே டெக்ஸோடு தான் துவக்கிடுகிறார்கள் என்பது கண்கூடு! மீதமிருக்கும் பெரும்பான்மைக்கோ - தமிழ் காமிக்ஸின் அடையாளமே டெக்ஸ் தான் என்ற நிலை! And முகவர்கள் மத்தியிலும் சரி, புத்தக விழாக்களின் casual வாசகர்களிடையேயும் சரி- நிரந்தர டார்லிங் நம்மவர் தான்! So இந்த ஆன்லைன் மேளாவின் தேடல்களிலும் எனக்குக் கைகொடுக்கும் ஆபத்பாந்தவராய் முதலில் கரம் தூக்கி நிற்பவர் நமது இரவுக்கழுகாரே!
போன வருஷத்து இறுதியில் "தி Magic Moments ஸ்பெஷல்'' என்று கலரில் நாம் தெறிக்க விட்ட சாகஸத்துக்கு ஒரு sequel இருப்பதை அப்போதே பார்த்திருந்தோம்! And கிடைக்கும் முதல் வாய்ப்பினில் அந்த க்ளைமேக்ஸ் பாகத்தைப் போட்டே தீருவோமென்று நான் வாக்கும் தந்திருந்தேன்! "அது எப்படி ஒரு தீவட்டித் தடியன் நம்ம "தல'யை ஜெயிலில் அடைச்சுப் போட்டுட்டு, "தேமே'ன்னு இருக்கலாம்? பயபுள்ளையை நாலு காட்டு காட்ட வேணாமா?'' என்று பொங்கிடும் நம் நண்பர்களுக்காக "The மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல்" ஆன்லைன் மேளாவின் முதல் இதழாகிடுகிறது! No surprises here I'm sure!!
And இந்த அத்தியாயத்தில் இன்னொரு highlight-ம் உண்டு! அது தான் ஓவியர் சிவிடெலியின் சித்திரங்கள்! ஏப்ரலில் வரக் காத்துள்ள "சாபங்கள் சாவதில்லை'' ஆல்பத்துக்கு சிவிடெலியே படங்கள் போட்டுள்ளார் எனும் போது, தொடர்ந்திடவுள்ள மே மாதத்திலும் அவரது கைவண்ணம் தான்- this time in color! இன்னமும் கதைக்குள் எடிட்டிங் செய்ய நான் புகுந்திருக்கவில்லை; ஆனால், ரெடியாகக் காத்துள்ள பக்கங்களை மேலோட்டமாய் புரட்டும் போது அனல் பறப்பது தெரிகிறது! And இந்த சாகஸமும் 251 பக்கங்கள் நீளத்திலானது! Soபாகம் 1+2 ஒன்றிணைந்து இந்த மெக்ஸிகோ ரணகளத்தை 502 பக்கங்கள் கொண்டதொரு அசுர சாகஸமாக்குகிறது! இதோ- இந்த ஆல்பத்தின் உட்பக்க preview!
ஆங்.. ஆன்லைன் மேளாவுக்கு இன்னமும் கணிசமாக அவகாசம் இருப்பதால் - வாரா வாரம் ஒரு ஸ்பெஷல் இதழை preview பண்ணுவோமே என்று நினைத்தேன் folks? எனக்குமே இன்க்கி-பின்க்கி-பான்க்கி போட்டுப் பார்த்து இதழ்களை உறுதி செய்திட இன்னுமே அவகாசம் கிட்டியது போலாகிடும்! Rest assured, இங்கு பேய்த்தனமாய்ப் பணிகள் ஓடி வருகின்றன என்றமட்டில் !
And talking about ஸ்பெஷல் இதழ்கள்- "சாம்பலின் சங்கீதம்'' மெகா கிராபிக் நாவலின் முன்பதிவுகள் 160-ஐ தாண்டியாச்சு! தொடரும் பொழுதுகளில் இதே துரிதம் சீராகத் தொடர்ந்தால் - துளியும் தாமதங்களின்றி இந்தப் பெரும் கனவை நனவாக்கிடலாம்!
Back to the ரெகுலர் தடங்கள் - ஏப்ரலின் மூன்றாவது இதழான மர்ம மனிதன் மார்ட்டின் பக்கமாய் கவனங்களைத் திருப்புவோமா? இந்த நொடியில் நான் அதன் மொழிபெயர்ப்பில் பக்கம் 30 வரை தான் வந்திருக்கிறேன் என்பதால் கதையின் போக்கு எவ்விதம் இருக்கவுள்ளதோ? இதன் க்ளைமேக்ஸை படைப்பாளிகள் எவ்விதம் திட்டமிட்டிருப்பரோ? என்பது பற்றியும் இம்மி கூட யூகிக்க முடியவில்லை! ஏற்கனவே சொன்னது தான் : மொழிபெயர்ப்பின் போது, நான் ஒருபோதும் கதையை முழுசாய்ப் படித்து முடிப்பதே கிடையாது! பக்கங்களை எழுதத் தேவைப்படும் போது, அப்படியே அவற்றோடு travel செய்வது தான் வாடிக்கை! But கொஞ்சமாய் கதைக்குள் புகுந்த பிற்பாடு "இது இப்படித் தான் போகப் போகுது.. இப்படித்தான் திரும்பப் போகுது!" என்றெல்லாம் யூகிக்க ஓரளவுக்காவது முடியும் ! ஆனால், இங்கே மார்ட்டின் கதைகளில் "சுபம்' போடும் panel-க்கு முந்தைய கட்டம் வரையுமே கதாசிரியரின் மனதை சுத்தமாய் வாசிக்கவே முடியாது தான் போலும்! So yet another மார்ட்டின் ட்ரேட்மார்க் ரகளை காத்துள்ளதென்ற நம்பிக்கை மாத்திரமே இந்த நொடியில் உள்ளுக்குள்! இதோ - ஒரிஜினல் அட்டைப்படம், நண்பர் ஜகத்தின் எழுத்துருக்களில்! And இம்முறை உட்பக்கச் சித்திரங்களுமே செம classy என்பதால் மார்ட்டின் நிஜமான ஹீரோ போல காட்சி தருகிறார்! 80 பக்க "சிக்' ஆல்பம் தான்- இம்முறையும் வாசிப்புக்கு அதிக நேரம் பிடிக்கக் கூடாது guys!
!!!!!!!!!!!!
Looking ahead இப்போதே சிறுகச் சிறுக 2026-ன் திட்டமிடல்களுக்குள்ளேயும் சிந்தனைகள் புகுந்து வருகின்றன! ஜுனியர் எடிட்டர் ஒரு ஃபார்முலாவை பரிந்துரைத்திருக்க, அதன் தோளில் உப்புமூட்டை ஏறியபடிக்கே மோட்டு வளைகளை இப்போதெல்லாம் டிசைன்-டிசைனாக முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்! எப்போதுமே ஜுன்வாக்கில் கதைகளை இறுதி செய்துவிடுவோம் என்பதால் Who's in..? Who's out...? யாருக்கு எவ்வளவு ஸ்லாட்கள் ? என்பதையெல்லாம் ஏப்ரல் / மே மாதங்களுக்குள் இறுதி செய்து விடுவோம்! So உங்களுக்கு சில மேலோட்டமான கேள்விகள் ப்ளீஸ்:
1.அடுத்த ஆண்டுக்கு எத்தனை புக்ஸ் சரிப்படும்?
அஞ்சு.. ஆறு.. என்றெல்லாம் நாம் மாதா மாதம் அள்ளிப் பருகிய காலங்கள் லெமூரியாவோடு காணாதே போய்விட்டன என்பதால், யதார்த்தங்களோடு ஒத்துப் போகுமொரு நம்பரை பரிந்துரை பண்ணுங்களேன் ப்ளீஸ்?
2.நடப்பு அட்டவணையிலிருந்து யாருக்கேனும் கல்தா தந்தால் நலமென்று தோன்றுகிறதா?
If yes - யார் அந்த விளிம்பு நிலைப் பார்ட்டி?
3.நடப்பு அட்டவணையிலிருந்து யாருக்கேனும் ஸ்லாட்ஸ் கூடுதலாக்கினால் தேவலாமென்று படுகிறதா?
If yes- யாருக்கு?
அல்லது - இப்போது போலவே எல்லோருமே தொடரலாமா நலமாய்?
4.தற்போதைக்கு வெளியே நிற்போரிலிருந்து யாரையேனும் "உள்ளாற வாங்க மாப்பு'' ன்னு கூப்பிடலாம் என்பீர்களா?
If yes- யாரை?
5.ஒரு சிக்கன சித்தார்த்தனாக மாறி:
ரொம்பவே அத்தியாவசியமான ஆல்பங்களுக்குத் தவிர, No to கலர் இதழ்கள் !
No to ஹார்ட் கவர் இதழ்கள் !
என்று திட்டமிட்டால் பட்ஜெட் கொஞ்சம் குறையக் கூடும்! And இதழ்களின் எண்ணிக்கையுமே சற்றே கூடக்கூடும்! இது பற்றி உங்களின் சிந்தனை ப்ளீஸ்? சாகஸ வீரர் ரோஜரின் "நேற்றைய நகரம்'' ஒரிஜினலாக கலராக இருந்த இதழ் தான் - பச்சே அதை black & white-ல் வெளியிட்டு மிதமான வெற்றியும் கண்டோம் தானே? So அப்படியொரு முயற்சி பற்றி உங்களின் சாரமான சிந்தனைஸ் ப்ளீஸ்; வெயில் காலமென்பதால் காரம் உடம்புக்கு ஆகாது! This is just a fleeting thought ; so ஆதாம், ஏவாள் காலத்திலிருந்தான விளக்கம்ஸ், பால பாடம்ஸ் என வேணாமே ப்ளீஸ் ?
6.TINTIN ?
டின்டின் இதழ்கள் - உலகளாவிய சேகரிப்பாளர்களுக்கென பறந்து வருகின்றன !! ஏஜெண்ட்களும் are loving him ! நம் மத்தியில் தெறி மாஸ் !! அடுத்தாண்டு இவருக்கு slots எப்படி ஒதுக்கலாமோ ?
மேலோட்டமான இந்த வினாக்களுக்கு உங்களின் விடைகள் தெரியப் பெற்ற பிற்பாடு specific கேள்விகளோடு பின்னொரு தினத்தில் திரும்பிடுகிறேன்! இந்த நொடிக்கு தி கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ.. ச்சீசீ... தி கிரேட் ஆன்லைன் மேளா காத்திருப்பதால் அந்தப் பணிகளுள் ஐக்கியமாகிடப் புறப்படுகிறேன்! Bye all .. see you around! Have a fun weekend!
P.S : ராமநாதபுரம் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 69 ! அந்தப் பக்கங்களது நண்பர்கள் - do drop in ப்ளீஸ் ?
And "சாம்பலின் சங்கீதம்" முன்பதிவுகளில் இணைந்தாச்சா ப்ளீஸ் ?
Hi
ReplyDeleteவாழ்த்துக்கள் தம்பி
Deleteநன்றி அண்ணா
DeleteSecond
ReplyDeleteFirst 👀😉
ReplyDeletePresent Sir
ReplyDeleteMe 3rd
ReplyDelete1st
ReplyDelete😇
DeleteFirst 6th comment 😄
Delete😂😅
DeleteHi
ReplyDeleteவணக்கமுங்க
ReplyDeleteயார்க்கு வணக்கமுங்க. 😱
Deleteஎல்லாருக்கும்
Delete9th
ReplyDeleteMe in😘🥰
ReplyDelete10 kulla vanthachuu
ReplyDeleteஇல்லீங்க 'தல'..மணிய பாருங்க ; பத்து ஐஞ்சு !
Delete😄😄😄
DeletePathivum 10 vanthathum 10 comment kulla
Delete😂😂
Deletehi
ReplyDelete🙏🙏🙏
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்
ReplyDelete//ரொம்பவே அத்தியாவசியமான ஆல்பங்களுக்குத் தவிர, No to கலர் இதழ்கள் !
ReplyDeleteNo to ஹார்ட் கவர் இதழ்கள் !//
இப்போது வருவது போலவே வரட்டும் ! இதில் நோ சிக்கனம் ப்ளீஸ்
நான் வழி மொழிகிறேன் 💐🙏👍
Delete+1
DeleteRadja... சொல்வது மிகவும் சரிதான்ங் sir.... Colour அவசியமில்லை... Hard cover ம் தேவையில்லை... ஒரு சில ஓவியர்களின் art work க்கு b &w... அற்புதமாக இருக்கும்.. சிவிடெல்லி... அதில் ஒருவர்... ❤️❤️.. 👍
Deleteஓ ஓ.. Radja சொன்னதை நான் புரிந்து கொள்ளவில்லை.. 😄😄❤️👍...
Deleteஅனைவருக்கும் வணக்கம் .
ReplyDeleteமாதா மாதம் நச்சுனு 3 போதும் சாரே.. 😘🥰
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteDear Edi
ReplyDeleteமெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல் என்கிற அந்த வார்த்தைக்கு முடிட்டை வடிவம் முன்புற அட்டைக்கு நன்றாக இல்லை 😡😡 .. டெக்ஸ் எனும் ஆங்கில எழுத்துக்கு கீழே நீள வாக்கில் ஒரு டிசைன் ரெடி பண்ணுங்க நல்லார்க்கும்ன்னு கேட்டுக்குறேன் எசமான் 🙏🙏
நானும் வந்துட்டேன்
ReplyDeleteஅட்டை அண்ட் டெக்ஸ் & கோ கலரிங் முன்னட்டைக்கு ரொம்ப பாந்தமா அழகா இருக்கு .. லவ்லி 😘😘😘
ReplyDelete,பட் அந்த முட்டை நல்லால்லைங்க எண்ட சாரே
MMS செம்ம கலரிங் .. அடிச்சு தூக்குற மாதிரி இல்லாம மனச வருடுற மாதிரி கலரிங் இருக்கு .. நல்லார்க்கு .. ❤❤💐💐
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete"The மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல்" அடுத்த மாசம் வெளியாக இருப்பது ரொம்பவே மகிழ்ச்சியான சமாச்சாரம் சார்! 😍😍😍😍 அட்டைப்படம் அள்ளுது. உள்பக்கசித்திரங்களும் அப்படியே! ஆன்லைன் புத்தகமேளாவில் ஒரு பெரிய விருந்து காத்திருப்பது புரிகிறது!😍😍😍🥰🥰🥰
ReplyDeleteமறக்காமல் முந்தைய பாகத்தின் முன் கதை சுருக்கத்தை இந்த இதழில் கொடுத்து விடுங்கள். ஒருவேளை முதல் பாகத்தை படிக்காதவர்களுக்குமே கூட கதையைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது.
மாட்டின் அட்டைப்படம் வித்தியாசமாக இருக்கிறது. உள்பக்க சித்திரமும் நேர்த்தியாகவ இருக்கிறது!
இன்னும் என்னென்ன கதைகள் எல்லாம் ஆன்லைன் புத்தக திருவிழாவில் வரப்போகிறது என்று தெரிந்து கொள்ள ஆசை ஆர்வமும்.. 😍😍
///மாட்டின்///
Delete'ர்' ர விட்டுட்டேன் 😄
6 கேள்விகளில் 5 க்கு நண்பர்களே பதிலளித்து விடுவார்கள் நாம ஏன் நோகனும்னேன்?
ReplyDeleteஆனா அந்த 6 வது கேள்விக்கான என் பதில்
வருடா வருஞம் மூன்று டின் டின் நீங்க போட்டே ஆகனும் மை டியர் எடி
"சாபங்கள் சாவதில்லை''
ReplyDeleteதலைப்பு மிரட்டுகிறது...
5. Sure, why not? என்று துள்ளி குதித்தது மனது. ஆனா ஒரு நிமிடம் சமநிலைக்கு வந்து யோசித்து பார்த்தது.. சில ஓவியங்கள் வண்ணங்களின் சேர்க்கையால் தான் ரசிக்கும்படி உள்ளது. உதாரணமாக tango. Tangoவை கருப்பு வெள்ளையில் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. சில கதைகள் கலரில் தான் எது நிகழ்காலம் எது கடந்த காலம் என உணர்த்துகிறது.. TeX வேதாளர் போன்ற கதைகள்கருப்பு வெள்ளையிலேயே வரலாம் ஆனால் தாத்தாஸ் ஸ்டேர்ன் ரூபின் போன்றவர்கள் கண்டிப்பாய் வண்ணத்தில் வேண்டும் boss
ReplyDeleteகுண்டு புத்தகத்துக்கு hard cover OK sir, மெலிதான புத்தகத்துக்கு சாதா அட்டையே போதும் சார்
Deleteமாதம் நான்கு புத்தகங்களே போதும் சார்.. அதுக்குமேல வாணாங்க..
ReplyDelete6. Tintin, சென்னை கோவை திருச்சி போன்ற நகரங்களின் புத்தக காட்சிகளை target செய்து வெளியிடுங்கள்.. ஆண்டுக்கு 3 போதும் சார்
ReplyDelete1. வாரத்துக்கு ஒன்று ஆக ஆண்டுக்கு 54
ReplyDeleteஇந்த ஆண்டு 32 தான் planning ஆனால் கதை சொல்லும் காமிக்ஸ் ஆன்லைன் மேளா என்று 48 வரும் என்பது என் கணிப்பு.. ஆக 54 எனும் அசாத்திய எண்ணிக்கையை கூறி உள்ளேன் சார்
Deleteஉள்ளேன் ஐயா..!
ReplyDelete2. தோர்கல் குறித்து நீங்க என்ன முடிவு எடுத்து இருக்கீங்கன்னு தெரிஞ்சா யாருக்கு கல்தா கொடுக்கலாம்னு யோசிக்கலாம் சார்.. அது தெரியாம நாங்க ஏதாவது உளறி இரண்டு நாயகர்களுக்கு கல்தா கொடுப்பது போல் ஆகிடுமே
ReplyDelete3. இளம் டெக்ஸ் கொஞ்சம் அதிகமாக்குங்களேன் சார... மாதா மாதம். தொடராக வந்தாலும் ஓகே தான்
ReplyDeleteதொடரைல்லாம் யாரும் லைக் பண்ண மாட்டாங்க அப்படி செய்தால் இக்ககு விற்பனை சரியும்
Deleteநிறைய கதைகள் தொடர் கதை தான் சார்.. Largo winch வரிசை்படி படிக்காததால் எனக்கு பிடிக்காமல் போனது. ஒரு நாள் வரிசை்படி படித்ததால் எனக்கு லார்கோவை மிகவும் பிடித்து விட்டது
Delete1. குறைந்தது மாதத்திற்கு 3 (லயன், முத்து, & V)
ReplyDelete2. விற்பனையி்ல் சோபிக்காத யாராவது ஒருவர்.
3. யங் டெக்ஸ்
4. சோடா
5. ஒரிஜினலாக கலரில் வந்த இதழ்கள் கலரில் ஒருவதே சிறப்பு. கலரில் வரும் மைல்கல் குண்டு இதழ்கள் ஹார்ட் கவரோடு வந்தால் தான் நல்லாருக்கும். ஆனால் பட்ஜட் பிரச்னை என்றால் வேற வழியில்லாம சகிச்சுக்கறோம்
6. டின்டின் - 2
4. அந்த மேகி காரிசன் கடைசி பகுதியையும் வெளியிட்டு விட்டால் நாங்க நிம்மதியா இருப்போம் சார்.
ReplyDeleteஉண்மை உண்மை உண்மை
DeleteHi..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHard cover issues can be avoided . In my opinion suski viski which is supposed to be a big hit got failed becos of hardcover. It's cost sore to 300+ is not affordable for kids. Kids will love it if it is affordable. Tintin which is of best quality is 300 only but suzki visky is more
ReplyDeleteWhat kind of a comparison is that sir? One has 64 pages... The other has 100..
DeleteSometimes it's surprising to hear these weird theories and thought processes !! A hardcover binding costs just Rs.30 extra....! It's not going to be like Suske & Wiske will be priced rockbottom otherwise!
DeleteSir my pov is kids books to be published in less cost. You know better than anyone, it's just a suggestion as Suski viski is struggling with second issue and not going to see future .
Delete2.நடப்பு அட்டவணையிலிருந்து யாருக்கேனும் கல்தா தந்தால் நலமென்று தோன்றுகிறதா?
ReplyDeleteஅதிகாரி..
சார் ஒரு சந்தேகம்.
ReplyDelete'சாண்டா' க்ளாஸ் என்றுதானே இருக்க வேண்டும்.
'சான்டா' க்ளாஸ் என்பது சரியா?
ஆங்கில எழுத்துக்கள்... உச்சரிப்புகள்.... தமிழில் அவற்றை கொணர்வதில் உள்ள சிக்கல்கள் பற்றி ரொம்ப முன்னமே பேசியுள்ளோம் சார்!
DeleteAndy... இந்தப் பெயரை தமிழில் எழுத முயற்சி பண்ணுங்களேன்?
நம்மிடம் தமிழில் ஒரே "ட"ன்னா மட்டுமே உண்டு. But அவர்களிடம் "D" & "T" என 2 வெவ்வேறு உச்சரிப்புகளுக்கான எழுத்துக்கள் உள்ளன!
"N" என்ற எழுத்தைப் பொறுத்த வரை நிலவரம் உல்ட்டா! N என்பதை தமிழில் உச்சரிக்க முனையும் போது ந்...ன்...ண்... என்ன 3 தினுசுகளில் பதில் கிட்டும். பூ -புயிப்பம்!
DeleteATR அவர்கள் அடிப்படை தமிழ் இலக்கண விதியை பற்றி சொல்ல விரும்புகிறார் என்று நினைக்கிறேன் சார்.
றன்னகரம்,டண்ணகரம், தந்நகரம்
பற்றி தான் அவர் சொல்ல விரும்பி இருக்கிறார் என நினைக்கிறேன்
ற என்ற நிரலுக்கு முன்பாக ன் என்ற மெய் எழுத்து மட்டுமே வர முடியும்.
ட என்ற நிரலுக்கு முன்பாக ண் என்ற மெய்யெழுத்து மட்டுமே வர முடியும்.
த என்ற நிரலுக்கு முன்பாக ந் என்ற மெய்யெழுத்து மட்டுமே வர முடியும்
ன், ண், ந் என்ற மெய்யெழுத்துகளுக்கு பின்பாக வரக்கூடிய உயிர் மெய் எழுத்து களுக்கு முறையே ற, ட, த இவற்றுக்கு விதிவிலக்குகள் உண்டு. ஆயினும் பெரும்பாலும் முதலில் குறிப்பிட்டவையே பெரும்பாலும் வரும்.
டண்ணகர விதிப்படி சாண்டா கிளாஸ் என்பதே சரியாக இருக்க முடியும்.
Andy என்பதின் தமிழ் உச்சரிப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதை அண்டி என எழுத விரும்பினால் டி என்ற நிரல் வருவதால் ண் மட்டுமே போட முடியும். அன்டி என எழுத இயலாது.
இதைத்தான் ஏ டி ஆர் சொல்ல விரும்பி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
குண்டு புக் வந்தால் நண்பர்களுக்கு கொண்டாட்டம்தான் என்பதைப் போல. (ண், ன், ந் போன்ற மெல்லின மெய் எழுத்துக்களை தொடர்ந்து வருவது வல்லினம் சார்ந்த உயிர்மெய் எழுத்துக்களே)
இத்துடன் இந்த கோனார் தமிழ் உரை நிறைவு பெறுகிறது 😁
நன்றி செல்வம் அபிராமி சார்.
Deleteஅடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா நான் படிக்கப்போற ஸ்கூலுக்கு நீங்களே தமிழய்யாவா வரணுமுங்க செனா அனா ஜி.. 🥲🥲🫠
DeleteAmazing 🤩🤩🤩
Deleteசெல்வம் சார் அருமை 👌
Delete👌👌👌
ReplyDelete// "The மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல்" ஆன்லைன் மேளாவின் முதல் இதழாகிடுகிறது! //
ReplyDeleteThank you sir!
1..அடுத்த ஆண்டுக்கு எத்தனை புக்ஸ் சரிப்படும்?
ReplyDelete36
2.நடப்பு அட்டவணையிலிருந்து யாருக்கேனும் கல்தா தந்தால் நலமென்று தோன்றுகிறதா?
தோர்கல் தன்னைத் தானே நாடு கடத்திக் கொண்ட மாதிரி தோன்றுகிறது. வேறு யாரையும் வெளியேற்றும் எண்ணம் ஏதுமில்லை.
நடப்பு அட்டவணையிலிருந்து யாருக்கேனும் ஸ்லாட்ஸ் கூடுதலாக்கினால் தேவலாமென்று படுகிறதா?
If yes- யாருக்கு?
சிக்பில் முடிந்தால்.
.தற்போதைக்கு வெளியே நிற்போரிலிருந்து யாரையேனும் "உள்ளாற வாங்க மாப்பு'' ன்னு கூப்பிடலாம் என்பீர்களா?
If yes- யாரை?
ஜில் ஜோர்டான் முடிந்தால்
ஒரு சிக்கன சித்தார்த்தனாக மாறி:
Deleteரொம்பவே அத்தியாவசியமான ஆல்பங்களுக்குத் தவிர, No to கலர் இதழ்கள் !
No to ஹார்ட் கவர் இதழ்கள் !
இயல்பாக வண்ணத்தில் வருவதை வண்ணத்திலேயே வெளியிடலாம். மற்றபடி வண்ணம் ஹார்ட் கவர் என்பதெல்லாம் பெரிது இல்லை. படித்தால் மகிழ்வளிக்கும் விதத்தில் கதைகள் இருந்தாலே போதுமானது
டின் டின் வருடத்திற்கு மூன்று இதழ்கள் வரலாம்
Deleteஜில் ஜோர்டானை பொறுத்தவரை அதை ஒரு நகைச்சுவை கார்ட்டூன் என எண்ணாமல் ஒரு lite துப்பறியும் கார்ட்டூனாக எண்ணலாம். தனிப்பட்ட முறையில் மிகவும் கவர்ந்த கதை வரிசை
ReplyDeleteசூப்பர் சார்...டெக்ஸ் வண்ணத்ல கட்டிப் போடுதுன்னு அட்டைய பாத்து அசர...மார்ட்டின் அட்டைப்படம் அடேயப்பான்னு ஒரே போடா போட துரத்தும் விமானத்தை முந்தி பக்கங்கள் செல்லாதோன்னு ஓர் ஏக்கம் சாண்டாவ பாக்க...எதிர்பார்ப்பு கூடுது...
ReplyDelete1. இயன்றா 4 இயலாட்டி 3
ReplyDelete2. யாருமில்லை
3. கிநாக்களுக்கு...புதிய நாயகர்கள்
4. ஸ்மர்ஃப்ஸ்
5. வண்ணங்களில் அட்டகாசமா இருந்தால் அவை வண்ணத்தில் வரட்டும்...இயற்கையழகு மிளிர்ந்தால்
ஹார்டு பௌண்டு நல்லது
Deleteடின் டின் இரு மாதமொரு முறை விற்பனைச் சிறகடித்தால்....ஓரளவுக்கு வாசகர்களையும் திரட்ட வாய்ப்பிருப்பதால்...அடுத்து ஆஸ்ட்ரிக்ஸ்ல ஒரு மூணாவது வந்தாலும் வரலாமே
Delete13 ஆர்வத்ல நமக்கும் ஞாபக மறதி தொத்திகிச்சு....13 ஸ்பின் ஆஃப்...நமக்கு முதன் முதலாக தெரிஞ்ச 13 ன் முதல் காதலி மார்த்தா ஸ்பின் ஆஃப்....பிற ஸ்பின்களும்...அந்த வான்ஹாம்மேவின் காட்டுக்குள் விழுந்த விமானம்னு முன்பு
Deleteவிளம்பரப்படுத்தி ஒரு பக்கத்தில் கூட சொன்னீங்களே அதையும் பறக்க விடலாமே இந்த மே'ல முடிஞ்சா மேல்..
This comment has been removed by the author.
ReplyDeleteHi Editor sir ,
ReplyDelete1.Monthly 3 books
5. Color books are good.especially Vedhalar and tex are rocking in color. I would request to keep some color books sir
3.may be Vedhalar sir if possible . Its again my personal choice sir
டின் டின் கதைகளை அதிகமாக வெளியிடலாம். மொத்தம் 24 கதைகள் தான் என்றாலும் இரண்டு இரண்டாக வெளியிட்டால் பல வருடங்கள் ஆகும்.
ReplyDeleteநடப்பு அட்டையில் இருந்து யாருக்கேனும் கல்தா யாருமில்லை. புதிதாக இணைக்க வேண்டியவர்கள் . நம்முடைய பழைய நாயகர்கள் ,நாம் டாட்டா காட்டியவர்கள். மேஜிக் விண்ட் , கமான்சே ஸ்மர்ப்ஸ். லியோனார்டோ. தாத்தா ,கிளாசிக் ஜேம்ஸ் பாண்ட். என்று பெரிய லிஸ்ட் டே உள்ளதுங்க சார். இவர்களின் சமீபத்திய கதைகள் அல்லது பழைய கதைகள் எதுவும் பெரியஹிட் என்று தெரிந்தால் இணைக்கலாம்.
ReplyDeleteநடப்பு அட்டையில் இருந்து யாருக்கேனும் ஸ்லாட்ஸ் கூடுதலாக்கலாமா. ஸ்பூன். Andஒயிட். கூடுதலாக்கலாம் சார்
ReplyDeleteமாதம் 4 books
ReplyDeleteமலிவு விலை books நிச்சயம் வரவேற்பு பெறும்
டெக்ஸ் கதைகளில் இந்த இரண்டு பாக கதைக்கு தலைப்பு இல்லை. சிறைக்குள் சிக்கிய சூறாவளி என பேர் வைப்போமா எடி சார்
ReplyDeleteMMS அட்டை படம் கலக்கல் சார்....
ReplyDeleteடெக்ஸ்க்கு இது ஒரு வித்தியாசமான அட்டை....மரணத்தின் நிறம் பச்சையை நினைவூட்டுது.... அட்டையே இம்முறை பாதி வெற்றியை தந்திடும்...
1.36க்கு குறைச்சிட்டா ரொம்ப பொசுக்குனு போயிடும் சார்....!!
ReplyDelete2.டைப்பவே கஷ்டமாகத்தான் உள்ளது.....காலத்தின் கட்டாயம்...தோர்கல்.
ReplyDelete3......இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே.....
ReplyDelete4.புதிய சிஸ்கோ.....கலாஷ் நிகோவ் காதலுக்கான பாகம்2 காத்துள்ளதுங் சார்.
ReplyDeleteஉடனே போடுங்கள் சார். முடிந்தால் மே ஆ லைன் புத்தக திருவிழாவுக்கு
Delete5.இப்பவே ஹார்டு கவர் இதழ்கள் குறைவு..இதனினும் குறைக்க வேணாம்....
ReplyDeleteகலர் மிக மிக அத்தியாவசியமான ஒன்றுங்சார்...
இந்த 2ஆம் அத்தியாத்தின் உயிர் நாடியே கலர் தான்....
ஓப்பனாக சொல்லப்போனா க/வெ புக்னாவே கை தானாகவே ரிஜக்ட் பண்ணிடுது.. வாசிக்காமல் பேக்லாக் ஆகிப்போகும் இதழ்களில் க/வெ யே அதிகம்...
சிறு எழுத்துகள் & க/வெ வாசிப்பின் எதிரிகள்...
// 5.இப்பவே ஹார்டு கவர் இதழ்கள் குறைவு..இதனினும் குறைக்க வேணாம்....
Deleteகலர் மிக மிக அத்தியாவசியமான ஒன்றுங்சார்...
இந்த 2ஆம் அத்தியாத்தின் உயிர் நாடியே கலர் தான்....//
+1
எனது முதல் எண்ணமும் இதுவே
6.டின்டின் ஆண்டுக்கு 3என்பதை சற்றே மாற்றி ஆண்டுக்கு 2ஆல்பங்கள் என வைக்க இயன்றால் ஓகே சார்... ஆண்டுக்கு 2என்றால் கொஞ்சம் காலம் அவரும் நம்மோடு இருப்பார்... 3னா சில ஆண்டுகளிலேயே முடிஞ்சிடுவார்.
ReplyDeleteடியூராங்கோவை மிஸ் பண்ணுவதை போல, ட்ரெண்ட்டை மிஸ் பண்ணுவதை போல இருக்கும்.. தோர்கலாரும் ஒரு தற்காலிக முடிவுக்கு வந்திருப்பதால் டின்னாரை சில காலம் நீட்டிக்க செய்யலாம் சார்
Yes
Deleteஓரிரு ஆண்டுகளாக லயன் இதழ்களின் பெயரை தம் கையினால் எழுதி நமக்கு பெயரிலேயே வித்தியாசங் காட்டும் நண்பர் சேலம் ஜெகத் துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்....🎂🎂🎂🎂🎂🎂💐💐💐💐💐💐
ReplyDeleteஅடடே.... பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜகத் 🎂🎂🎂
Deleteஅற்புதமான எழுத்துருக்களைப் படைத்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் ஜகத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெகத் சகோ 💐💐💐💐💐
Deleteபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஜெகத் 😊
Delete1.அடுத்த ஆண்டுக்கு எத்தனை புக்ஸ் சரிப்படும்?
ReplyDelete4 ..
2.நடப்பு அட்டவணையிலிருந்து யாருக்கேனும் கல்தா தந்தால் நலமென்று தோன்றுகிறதா?
Spoon&White ..
3.நடப்பு அட்டவணையிலிருந்து யாருக்கேனும் ஸ்லாட்ஸ் கூடுதலாக்கினால் தேவலாமென்று படுகிறதா?
Chick Bill , Zagor
4.தற்போதைக்கு வெளியே நிற்போரிலிருந்து யாரையேனும் "உள்ளாற வாங்க மாப்பு'' ன்னு கூப்பிடலாம் என்பீர்களா?
soda , Bond 2.0 , Sisco ,Alpha
5.ஒரு சிக்கன சித்தார்த்தனாக மாறி:
S to கலர் இதழ்கள் AND hard cover ..
6.TINTIN ?
ஆண்டுக்கு 2 ஆல்பங்கள் ..
சில கதைகள் b/w நல்லா இருக்கும். ஆனால் கலர் வந்த பிறகு தான், lion comics அடுத்த கட்டத்தில் உள்ளது. திரும்பவும் b/w என்றால் நல்லா இருக்காது. B/w கதைகள் V comics வெளிட்டு முயற்சிக்கலாம்.
ReplyDeleteதரமான புத்தகத்துக்கு Lion and muthu பிராண்ட் ஆகி விட்டது. தரத்தை குறக்க வேண்டாம்.
சிறுவர் கதைகள் V காமிக்ஸ்யில்
சகாய விலையில் வெளியிடலாம்
சோடா - வை எப்படியாவது உள்ளே கொண்டு வந்து விடுங்கள்..
ReplyDeleteசிக்பில் - கூடுதல் ஸ்டால்ட்
ReplyDelete(மறுபதிப்பிலாவது)
Yes
Deleteமார்ட்டின் அட்டைப்பட கலரே வித்தியாசமா இருக்கு 👌& மெக்ஸிகோ இதழின் அட்டைப்பட கலரும் டாப்.
ReplyDelete1) அடுத்த ஆண்டுக்கு எத்தனை புக்ஸ் சரிப்படும்?.
:-மாதம் 3 புக்/ 3 மாசத்துக்கு ஒருக்கா 4 புக் னு,
400 (அ) 450 பக்கங்களுக்கு குறையாமல்,
வருசத்துக்கு - 40 புக் ரெகுலர் சந்தா.
2.நடப்பு அட்டவணையிலிருந்து யாருக்கேனும் கல்தா தந்தால் நலமென்று தோன்றுகிறதா?.
:-ராபின்.
3)நடப்பு அட்டவணையிலிருந்து யாருக்கேனும் ஸ்லாட்ஸ் கூடுதலாக்கினால் தேவலாமென்று படுகிறதா?
:-ஸாகோர் (அ) யங் டெக்ஸ்.
4)தற்போதைக்கு வெளியே நிற்போரிலிருந்து யாரையேனும் "உள்ளாற வாங்க மாப்பு'' ன்னு கூப்பிடலாம் என்பீர்களா?
:-சிஸ்கோ.
5).ஒரு சிக்கன சித்தார்த்தனாக மாறி:.
எனக்கு இதில் பெரிதாக மாற்றம் இருப்பது மாதிரி தெரிலைங்க,
அத்தியாவசிய இதழ்களுக்கு கலர்னா OK.
ஹார்ட் கவர் வெறும் 100,150 பக்கங்களுக்கு தேவையில்லை வெறும் நார்மல் OK.
250 பக்கங்களுக்கு மேல் இருந்தால் ஹார்ட் கவர் தரலாம்.
6)டின்டின் வருசத்துக்கு 3 வரலாம்.
இக்கட்டான சூழல்னா 2 OK.
மாதம் - 3 இதழ்கள் ( ரெகுலர் சந்தாவில்) ..
ReplyDelete300 - பக்கங்களுக்கு குறைவான
இதழ்களுக்கு ஹார்டு பவுண்ட் - யை தவிர்க்கலாம்... (உ-ம்- லக்கிலூக்கிற்கு தவிர்த்து விட்டீர்கள்.. பாதகம் இல்லை..)
Sir
ReplyDeleteநடப்பு அட்டவணையிலிருந்து யாருக்கேனும் ஸ்லாட்ஸ் கூடுதலாக்கினால் தேவலாமென்று படுகிறதா?
If yes- யாருக்கு?
V காமிக்ஸ் ஸாகோர் ரெகுலராக 240 பக்கம் வருடத்திற்கு 10 கதைகள் அதில் 3 வண்ணத்தில் வந்தால் நன்றாக இருக்கும் சார்
1..) மாதம் 4
ReplyDelete2)கல்தா - தோர்கல்
3) கூடுதல் ஸ்லாட் - சிக்பில்
4)
5) என்னை பொறுத்தவரை குண்டு இதழ்களுக்கு மட்டும் ஹார்ட் பைண்டிங் ஓகே சார்..மற்ற இதழ்களுக்கு எப்பொழுதும் போல இருப்பது தான் பிடித்து உள்ளது..
வண்ணமும் அதே போல்..தேவையான முக்கிய இதழ்கள் போக எனக்கு கறுப்பு வெள்ளையே ஓகே..
2)கல்தா - தோர்கல்
Deleteதல இது எல்லாம் ஓவர். தோர்கல் முதல் சுற்று முடிந்து விட்டது
1. 4 x 12 = 48
ReplyDelete2. Trent / Blue Coats
3. Martin, Wood City, Bernard
4. கலர் புத்தகங்கள் கலரில் தான் வேண்டும். Hardcover புத்தகங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். தரத்தில் எப்பொழுதும் No compromise. வருடம் 25 புத்தகங்களே வந்தாலும் எந்தவித cutbackஉம் தரத்தில் இருக்கக் கூடாது.
6. Tintin 3 அல்லது 4
வியஜன் சார், 2019 இல் கி. நா இதழ்கள் 6 கிடைத்தன. அதன் பின்னர் கி. நா இதழ்கள் குறைந்து விட்டன. எனவே, இனிவரும் ஆண்டுகளில் கி. நா இதழ்களை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteசார் ஜேம்ஸ் பான்ட் 2.0 கொண்டு வரமுடிந்தால் நன்றாக இருக்கும்.
ReplyDelete36 இதழ்கள் சரியாக இருக்கும். அது போக மறுபதிப்புகள், ஆன்லைன் மற்றும் ஈரோடு/சேலம்/சென்னை இதழ்கள் மற்றும் சர்ப்ரைஸ் இதழ்கள் என சேரும் போது 50+ வந்துவிடும்
இளம் டூரங்கோ பற்றி ஒருமுறை கூறி இருந்தீர்கள் அதற்கு எதுவும் வாய்ப்பு?
டெக்ஸ் தான் நமது சுவாசம் என்பதால் கொஞ்சம் திகட்டினாலும் அளவை குறைக்க முடியாது.
பல புதிய கார்ட்டூன் முயற்சி செய்தாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வெற்றி பெற முடிவதில்லை
மற்ற படி நீங்கள் எந்த ஹீரோ/கதைகள் தேர்வு செய்தாலும் ஓகே தான்
மேஜிக் மொமெண்ட் வில்லன் கதாப்பாத்திரம் அருமை அவ்வளவு முன்னோக்கி யோசித்து காய்களை நகர்த்தி இருந்தான் இனி வரும் பாகத்தில் அவனை எவ்விதம் டெக்ஸ் குழு கையாளப்போகிறது என தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்
டின் டினுக்கு தற்போதைய நம்பர் போதுமானதாக தோன்றுகிறது வருடத்திற்கு 2 கதைகள்
DeleteTin Tin வருடத்துக்கு 2 போதும் சார். அதிகம் வந்தால் மற்ற கதைகளின் எண்ணிக்கையை குறைக்கும்படி ஆகிவிடும் சார். இப்போதுதான் பிக்கப் ஆகிவரும் இவரை 2 வருடங்கள் கழித்து கதைகளின் எண்ணிக்கையை அதிகபடுத்தலாம் சார்.
ReplyDelete1.அடுத்த ஆண்டுக்கு எத்தனை புக்ஸ் சரிப்படும்?
ReplyDeleteமாதம் - 3
அதுபோக... குண்டு போன்ற குண்டு இதழ்கள் சில.. + புக்ஃபேர் ஷ்பெசல்ஸ்
2.நடப்பு அட்டவணையிலிருந்து யாருக்கேனும் கல்தா தந்தால் நலமென்று தோன்றுகிறதா?
இன்னாரென்று இல்லை.. எரெல்லாம் வாடகை தராமல் குடோனில் குடியேறுகிறார்களோ.. அவர்கள்.
3.நடப்பு அட்டவணையிலிருந்து யாருக்கேனும் ஸ்லாட்ஸ் கூடுதலாக்கினால் தேவலாமென்று படுகிறதா?
If yes- யாருக்கு?
ஸாகோர் - டீ - நே
சிக்பில்
&
டெக்ஸ் (பத்தல..பத்தல.)
4.தற்போதைக்கு வெளியே நிற்போரிலிருந்து யாரையேனும் "உள்ளாற வாங்க மாப்பு'' ன்னு கூப்பிடலாம் என்பீர்களா?
If yes- யாரை?
ப்ளூகோட்ஸ்
ஜில் ஜோர்டான்
சுஸ்கி விஸ்கி
5.ஒரு சிக்கன சித்தார்த்தனாக மாறி:
ரொம்பவே அத்தியாவசியமான ஆல்பங்களுக்குத் தவிர, No to கலர் இதழ்கள் !
No to ஹார்ட் கவர் இதழ்கள் !
ஒரிஜினாலாக என்ன வந்திருக்கிறதோ.. அதுவே.!
Tin Tin
ஆண்டுக்கு ரெண்டு
// இன்னாரென்று இல்லை.. எரெல்லாம் வாடகை தராமல் குடோனில் குடியேறுகிறார்களோ.. அவர்கள் //
Delete+1
கண்டிப்பாக யாராவது என்றால் மார்டின்; இப்போது வரும் கதைகள் ரொம்ப சுவாரசியம் இல்லை சார்.
1 நடப்பு சந்தாவில் குறைந்தது 48 இதழ்களாவது வேண்டும் சாரே!
ReplyDelete2 ஸ்பூன் அண்ட் வைட்
3. சிக் பில்
4 ஆல்பா சிஸ்கோ
5 ஹார்ட் கவர் வேண்டவே வேண்டாம்... கலர் இதழ்களுக்கு பஞ்சமும் வேண்டாமே.
6 டின் டின் ஆண்டுக்கு 1
சுஸ்கி விஸ்கி- ஆண்டுக்கு ஒரு கதை கொடுக்க முடியுமா சார்?
ReplyDeleteஅல்லது ஆன்லைன் புத்தக திருவிழாவில் ஒரு கதை வண்ணத்தில் டெக்ஸ் சைசில் கொடுக்க முடியுமா சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
+1234567890
Deleteஹார்ட் கவர் சிறப்பு / மைல்கல் இதழ்களுக்கு கண்டிப்பாக வேண்டும். இப்போதெல்லாம் இவை குறைவாகவே வருகிறது.
ReplyDeleteஇன்னும் இதனை நீங்கள் குறைக்க ஒன்றும் இல்லை என்பதே உண்மை சார்.
Delete" ம.ம. மார்டின் " - க்கு பதில் ஜூலியா - கதை வெளிவரலாம்..
ReplyDeleteகுற்றம் சார்ந்த உளவியலை - யாவது புரிந்து கொள்ளலாம்..
நெப்போலியன் பொக்கிஷத்தின் முந்தைய பாகமான புதையலுக்கொரு பாதை இப்போதுதான் படிக்க முடிந்தது.
ReplyDeleteஅருமை.
எடிட்டர் சார் மறுபதிப்பு பற்றி கேட்டாரல்லவா?
புதையலுக்கொரு பாதை, நெப்போலியன் பொக்கிஷம் இரண்டையும் ஒரே ஹார்ட் பவுண்ட் பைண்டிங்கில் மறு பதிப்பு போடலாம்.
முடிந்தால் கலரில்.
சூப்பராக இருக்கும்.
I am waiting. 😊
127th
ReplyDelete1.அடுத்த ஆண்டுக்கு எத்தனை புக்ஸ் சரிப்படும்?
ReplyDeleteமாதம் 3 குறைந்த பட்சம். இடையே ஸ்பெஷல் வெளியீடுகள்
2.நடப்பு அட்டவணையிலிருந்து யாருக்கேனும் கல்தா தந்தால் நலமென்று தோன்றுகிறதா?
Spoon&White
3.நடப்பு அட்டவணையிலிருந்து யாருக்கேனும் ஸ்லாட்ஸ் கூடுதலாக்கினால் தேவலாமென்று படுகிறதா?
ஸாகோர், சிக் பில்
4.தற்போதைக்கு வெளியே நிற்போரிலிருந்து யாரையேனும் "உள்ளாற வாங்க மாப்பு'' ன்னு கூப்பிடலாம் என்பீர்களா?
soda , Bond 2.0 , Sisco ,Alpha, ஜில் ஜோர்டன்
5.ஒரு சிக்கன சித்தார்த்தனாக மாறி:
S to கலர் இதழ்கள் AND hard cover ..
6.TINTIN ?
ஆண்டுக்கு 3 ஆல்பங்கள் ..
சார் மினி டெக்ஸ் இப்போது ஏன் வருவது இல்லை?, யங் டெக்ஸ் கண்டிப்பாக அதிகரிக்கலாம்.
Delete//சார் மினி டெக்ஸ் இப்போது ஏன் வருவது இல்லை?, யங் டெக்ஸ் கண்டிப்பாக அதிகரிக்கலாம்.//
Delete+9
அடுத்த ஆண்டுக்கு எத்தனை புக்ஸ் சரிப்படும்?
ReplyDeleteமாதம் 4 வேண்டும் சந்தாவில். சந்தாவின் எண்ணிக்கையை கூட்டுங்கள். Special வெளியீடுகளின் எண்ணிக்கையை குறையுங்கள்
2.நடப்பு அட்டவணையிலிருந்து யாருக்கேனும் கல்தா தந்தால் நலமென்று தோன்றுகிறதா?
யாருமில்லை
3.நடப்பு அட்டவணையிலிருந்து யாருக்கேனும் ஸ்லாட்ஸ் கூடுதலாக்கினால் தேவலாமென்று படுகிறதா?
டின் டின் & டெக்ஸ்
4.தற்போதைக்கு வெளியே நிற்போரிலிருந்து யாரையேனும் "உள்ளாற வாங்க மாப்பு'' ன்னு கூப்பிடலாம் என்பீர்களா?
தாத்தாஸ், ரின் டின் கேன், மேக் & ஜாக்
5.ஒரு சிக்கன சித்தார்த்தனாக மாறி:
முக்கிய வெளியீடுகளுக்கு Hard cover இருக்கட்டும்
No compramise in colour. Ullathu உள்ளபடியே இருக்கட்டும். வேண்டுமெனில் கருப்பு வெள்ளையில் வரும் புத்தகங்களை கலர் ஆக்கும் விஷப்பரிட்சையை கைவிடலாம்
6.TINTIN ?
ஆண்டுக்கு 3 ஆல்பங்கள் ..
// தாத்தாஸ், ரின் டின் கேன் //
Deleteநம்ப ஆளு நீங்க
மாதம் 4,அதில் 1 டெக்ஸ்,காலாண்டுக்கு ஒரு முறை புதியஹீரொ அல்லது கிராபிக்ஸ் நாவல் என திட்டமிடலாம்.
ReplyDeleteடின்டின் 3 ஆல்பங்கள்
ReplyDeleteஇனியபிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜெகத் சகோ
ReplyDeleteஅடுத்த ஆண்டுக்கு எத்தனை புக்ஸ் சரிப்படும்?
ReplyDeleteமாதம் 3 (லயன் + முத்து + வி)
2.நடப்பு அட்டவணையிலிருந்து யாருக்கேனும் கல்தா தந்தால் நலமென்று தோன்றுகிறதா?
யாருமில்லை
3.நடப்பு அட்டவணையிலிருந்து யாருக்கேனும் ஸ்லாட்ஸ் கூடுதலாக்கினால் தேவலாமென்று படுகிறதா?
ஸாகோர், டைலன்
4.தற்போதைக்கு வெளியே நிற்போரிலிருந்து யாரையேனும் "உள்ளாற வாங்க மாப்பு'' ன்னு கூப்பிடலாம் என்பீர்களா?
மாடஸ்டி, ஆல்பா, மேக் & ஜாக், சோடா, நெவாடா, கார்டூன்ஸ்
5.ஒரு சிக்கன சித்தார்த்தனாக மாறி:
ஹார்ட் கவர் ரொம்ப ஸ்பெசல் இதழ்களுக்கு மட்டும், இவை குறைப்பதில் ஓகேதான், கொஞ்சம் கனம்
வண்ணத்தில் இருப்பவை வண்ணத்திலே வரலாம்
6.TINTIN ?
ஆண்டுக்கு 2
டெக்ஸ் வருடத்திற்கு 12
Deleteயங் டெக்ஸ் தனியாக வேண்டும்
மாதம் நான்கு
48 புத்தகங்கள்
+1000000
Deleteசிக் பில் ok
ReplyDeleteசார் , சீனியர் எடிட்டர் ஐயா. அவர்கள் நலம் அறிய ஆவல். விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteமெக்ஸிகோ மேஜிக் மூம்மெண்ட் அட்டைபடம் சூப்பர்
ReplyDeleteடெக்ஸின் ஸ்டைல் செம
எழுத்துருவம் ஆக்கம் மற்றும் டிசைன் அருமை
எனக்கு பிடித்துள்ளது
மார்டின் அட்டைப்படமும் சூப்பர்
ReplyDeleteகதையை பற்றிய க்யூயாரிசிட்டியை கிளப்புது
இது வரை வந்த மார்ட்டின் அட்டைப் படங்களில் டாப் அட்டை இதுதான். வழக்கமா இது கவிஞர் சொல்வதுதான் . இருந்தாலும் அதே வார்த்தைய சொல்லாமல் இருக்க முடியல
ReplyDelete😊😊😊
Delete😂😂😂😂😂
Delete1. மாதம் 3 to 4 புத்தகங்கள்
ReplyDelete2. கல்தா - Spoon & White
3. கூடுதல் ஸ்லாட்ஸ் - யங் டெக்ஸ்
4. தாத்தாஸ் / சோடா / சிஸ்கோ / ஆல்பா (உள்ளாற வாங்க மாப்பு)
5. YES to கலர் & ஹார்ட் கவர் இதழ்கள்
6. TINTIN - 2
1. மாதம் 4 புத்தகங்கள் (try to avoid single shots with less than 120 pages. To be frank I'm fan of biggies or Gundu books).
ReplyDelete2. கல்தா - All single shots in 64 pages (really boring to read Zagore smaller books)
3. கூடுதல் ஸ்லாட்ஸ் - யங் டெக்ஸ், New Investigative thrillers
4. தாத்தாஸ் / சோடா / சிஸ்கோ / ஆல்பா /
5. YES to கலர் & ஹார்ட் கவர் இதழ்கள்
6. TINTIN - 2
இரண்டு நாளா 148லயே இருக்கோம். இத்துடன் 149
ReplyDeleteசார் ஏப்ரல் மாத புத்தகங்கள் சனிக்கிழமை கிடைத்து விடுமா?
ReplyDelete70,களின் பள்ளி,கல்லூரி தாண்டிய வாசிப்பு அனுபவம் உள்ள அனைவருக்கும் ஹீரோ இரும்புக்கை மாயாவி.இதோஎழுத்துலக ஆளுமைகளுள் ஒருவரான மனுஷ்ய புத்திரன் அவர்களின் கைகளில் இரும்புக்கை யார்.
ReplyDelete. சார் .இந்த மாதம் மார்ச்சில் ஏப்ரலா?
ReplyDeleteநண்பர்களே ஒரு துயரச் செய்தி. நமது சீனியர் எடிட்டர் இறைவனுடன் கலந்து விட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். RIP Sir
ReplyDelete😭😭😭😭 🙏🙏🙏🙏