Powered By Blogger

Saturday, March 08, 2025

கட்டைவிரல் கடைவாயில்!!

நண்பர்களே, 

வணக்கம்! சமீபமாய் எங்கோ வாசித்தேன்- "புரியாத மெரியே பதிவுகளில், பதில்களில் ஆந்தையன் எழுதிக்கினு இருக்காப்டி '' என்று ! அட, அந்த நண்பரது கண்டுபிடிப்புக்கு உரம் சேர்த்தால் என்னவென்று தோன்றிய நொடியில் இந்தப் பதிவுக்கு மூக்கைச் சுற்றியொரு முன்னுரை தந்திடலாமென்று பட்டது! ஐன்ஸ்டீனின் Relativity தியரி சொல்வதென்னவென்றால் - நேரத்தின் ஓட்டமானது - கடிகாரங்கள் நிர்ணயிப்பது போல அனைவருக்கும் ஒரே சீரானது அல்லவாம் ! கடந்து போயிருப்பது ஒற்றை வாரமாய் - ஏழு தினங்களாக இருக்கலாம்! ஆனால், நண்பர்களோடு ஜாலி  டூர் போயிருப்பவருக்கும், குடும்பத்தைப் பிரிந்து துபாயில் பணியாற்றுபவருக்கும் இடையே அந்த 7 தினங்களுக்கான தாக்கம் மாறுபடும் தானே !

அதே நிலமை தான் இங்கு எங்களுக்குமே! சீனியர் எடிட்டர் நலமாய் இருந்த வேளைகளில், ஒரு வாரயிறுதியின் பதிவுக்கும், அடுத்த பதிவுக்கும் மத்தியிலான அவகாசம் மின்னலாய்க் கடந்து விடுவதாகத் தோன்றுவது வழக்கம்! ஆனால், சுகவீனங்கள் ; நடமாட்ட முடக்கம் என்றான நிலையில் - கடந்த 7 நாட்களை நகர்த்துவதென்பது ஒரு யுகத்தைக் கடப்பதற்கு ஒப்பாகத் தென்படுகிறது! சிறுகச் சிறுக சீனியர் எடிட்டரின் உடல்நலம் தேறி வந்தாலும், மனதின் சலனங்கள் சீராகியிருக்கவில்லை! Maybe மறுபடியும் இந்தப் பதிவுப் பக்கங்களுக்கு விஜயம் செய்யத் துவங்கினாரென்றால் உங்களின் உற்சாக ஆறுதல்கள் அவருக்குத் தெம்பூட்டலாம்! Fingers crossed!

ரைட்டு... மார்ச்சின் இதழ்கள் சகலமுமே சக்கை போடு போட்டு வரும் சந்தோஷச் சேதியை முதலி­ல் பகிர்ந்து விடுகிறேனே! ஆன்லைனில்  குவிந்து வரும் ஆர்டர்களை டெஸ்பாட்ச் செய்திட நம்மாட்கள் மெய்யாலுமே தடுமாறி வருகின்றனர்! அதிலும் டின்டின் & ஆர்ச்சி MAXI இதழ்கள் தெறி மாஸ்! 

சிறுகச் சிறுக டின்டினின் முழுப் பரிமாணமும் நம் வட்டத்தின் மத்தியில் பிரபலமாகி வருவதில் அடியேன் செம ஹேப்பி! Honestly speaking நமது க்ளாஸிக் நாயகர்களுக்கு ஈடாக டின்டினுக்கு வரவேற்பு கிட்டக் காணோமே என்பதில் உள்ளுக்குள் நிறையவே நெருடல் இருந்தது தான்! "இதுவுமே ஒரு கார்ட்டூன் தான்" என்ற எண்ணத்தில், நம்மவர்களில் ஒரு பகுதியினர் இந்த பெல்ஜிய ஜாம்பவானை பெரிதாய் கண்டுகொள்ளவில்லையோ என்பதாகவே எனக்குத் தோன்றியது. ஆனால் அமரர் Herge-ன் படைப்புகளின் சகலமுமே, ஆக்ஷன், அட்வென்சர், சென்டிமென்ட், காமெடி என்ற ரசனைகளின் ரம்யமான கலவை, என்பதை "விண்கல் வேட்டை'' அழுந்தப் பதிவு செய்துள்ளது கண்கூடு! தயாரிப்பில் இம்மி பிசகினாலும் கண்ணைக் குத்திட படைப்பாளிகள் ஒருபுறமும், கதைத் தரத்தில்  ஒற்றை மாற்று குறைந்தாலும் செம மாத்து மாத்த நீங்கள் மறுபுறமும் காத்திருப்பதால், +2 பரீட்சைக்குப் படித்ததைக் காட்டிலும் ஜாஸ்தி பயந்து, பயந்து பணி செய்தேன் ! And இன்று அந்த மெனக்கெடலுக்கான பலன்களை தரிசிக்க இயலும் போது, மனதில் ஒரு நிறைவு விரவுவதை உணர முடிகிறது!

Next in line  காத்திருப்பது "கேல்குலஸ் படலம்'! டின்டின் தொடரிலேயே செம சுவாரஸ்யமான Spy த்ரில்லர் சாகஸமென்றால் இதைத் தான் சொல்வேன்! Again சிங்கிள் ஆல்பமே! Hopefully in September '25.

இம்மாதத்து சர்ப்ரைஸ் ஆர்ச்சி தான்! அந்த MAXI சைஸ் தரும் கெத்தான லுக் ஒரு பக்கமென்றால், நமது பால்ய நண்பனின் மீள்வருகை ஒரு இனம்புரியா மகிழ்ச்சியினை படரச் செய்திருப்பதையும் மறுப்பதற்கில்லை! Oh yes -"அவற்றைப் புரட்டக் கூட இப்போதெல்லாம் முடிய மாட்டேன்குதுங்கோ!"என்று விசனப்படும் நண்பர்களும் உண்டென்பதை நானறிவேன்- but உள்ளதைச் சொல்வதானால் - ஸ்பைடரின் பாட்டில் பூதத்தை விட, புரட்சித் தலைவன் ஆர்ச்சியில் பணியாற்றுவது  சுலபமாகயிருந்தது எனக்கு!  தவிர, ஒரு புதுக்கதை + ஒரு க்ளாஸிக் மறுபதிப்பு என்ற கலவையுமே ரசித்ததாகப்பட்டது மனசுக்கு!

இந்த க்ளாஸிக் பார்ட்டிகளின் entry - புத்தகவிழாக்களில் பள்ளி மாணாக்கருக்குமே பயன்படும் விதமாய் நமது அடுத்த திட்டமிடல்களைச் செய்திடவிருக்கிறோம்! So எதிர்வரும் மாதங்களில்:

      😀விச்சு கிச்சு

      😀பரட்டைத் தலை ராஜா

      😀செக்ஸ்டன் ப்ளேக்

      😀கபிஷ்

ஆகியோரின் கூட்டணியோடு, இன்னும் இரண்டு பார்ட்டிகள் கரம் கோர்க்க உள்ளனர்! In fact "2 பார்ட்டிகள்" என்பதை விட ""மூவர்'' என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்! Becos அந்த நாயக ­லிஸ்டில் உள்ள முதல் பெயரே "இரட்டை'' என்பது தான்! இதையெல்லாம் ஒரு quiz என்று வைத்து, நானும் கேள்விளைக் கேட்டு வைத்தால் மொக்கை (Meaning : முரட்டு; பலமான) பல்பு தான் வாங்க நேரிடும் என்பதால் நானே சொல்லி  விடுகிறேனே!!

இரட்டை வேட்டையர்   

&

C.I.D ஜான்மாஸ்டர்  

இவர்களே "மீள்வருகை ­லிஸ்டில்' இணைந்திடக் காத்துள்ள அடுத்த batch! இவர்களது டிஜிட்டல் கோப்புகளெல்லாம் தயாராகிவிட்டன என்பதால் - சின்னச் சின்ன விலைகளுக்கு இவர்களது சாகஸங்களைக் களமிறக்க வேண்டியது தான் இந்தாண்டின் பிற்பகுதிப் புத்தகவிழாக்கால agendas!!!

"ஆங்.. பழைய சோத்தை மைக்ரோவேவில் சூடு பண்ணிப் போட்டே பிராணனை வாங்கிடுவே!'' என்று மலைப்பிரதேசத்தி­லிருந்தொரு குரல் கேட்கிற மெரி இருப்பதால் அடுத்த டாபிக் பக்கமாய்ப் பயணிப்போம்!

"குண்டு புக்'' மீதான நமது காத­லில் இரகசியங்கள் ஏதுமில்லை தான்! ஆனால், அளவில், பருமனில், பக்க நீளங்களில் மட்டுமே குண்டென்று இல்லாது - புக்கே ஒரு குண்டைப் பற்றியதென்றால் என்ன சொல்வீர்களோ folks?

Yes - you guessed it!  மனித வரலாற்றில் ஒரு நீங்காக் கறையாகிப் போன ஹிரோஷிமா - நாகசாகி மீதான இரண்டாம் உலக யுத்தத்தின் அணுகுண்டுத் தாக்குதல் படலத்தை, துவக்கம் முதலாய் கர்ம சிரத்தையாக விவரித்துச், சித்தரிக்கும் LA BOMBE என்ற 452 பக்க அசுர கிராபிக் நாவல் நம் மத்தியில் களமிறங்கத் தயாராகி வருகிறது!

2020-ல் ப்ரெஞ்சில் உருவான இந்தப் படைப்பு இதுவரையிலும் 18 மொழிகளில் வெளியாகியுள்ளது! And தமிழ் will be # 19!!எண்ணற்ற விருதுகள், வெளியான தேசங்களிலெல்லாமே அசாத்தியமான பாராட்டுக்கள் - எனக் குவித்திருக்கும் இந்த ஆக்கத்தை தமிழில் வெளியிட வேண்டுமென்பது பல மாதங்களாகப் பெரும் கனவு எனக்கு! In fact நாம் "அர்ஸ் மேக்னா''  வெளியிட்ட அந்த சமயத்திலேயே இதற்கான உரிமைகளையும் வாங்கிட உள்ளங்கை அரித்தது தான்! Becos அர்ஸ் மேக்னாவின் கதாசிரியரே இங்கே "LA BOMBE' ஆசிரியருமே! ஆனால், இந்தப் பணியின் பரிமாணம்;  அந்தக் கொரோனா நாட்களெல்லாம் மிரட்டலான தடைகளாக அமைந்து போயின!

ரொம்பச் சமீபமாய் நண்பர் அறிவரசு ரவி, "இந்த கி.நா. சாத்தியப்படுமா சார்?" என்று இங்கே கேள்வி எழுப்பிய போது கூட சபலம் உள்ளுக்குள் ஆட்டிப் படைத்தது தான் - but இதன் மொழிபெயர்ப்புப் பணியானது நம்ம பல்லடத்துத் தோர்கல் காதலரின் லடாக் சிகரமேற்றத்துக்கு ஒப்பான சிரமம் என்பதால் back அடித்திருந்தேன்! ""இதெல்லாம் நண்பர் கார்த்திகைப் பாண்டியன் எழுதினால் தான் வேலைக்கு ஆகும் சார்!'' என்றபடிக்கே ஜகா வாங்கியிருந்தேன்! இதெல்லாம் maybe ஐந்தாறு மாதங்களுக்கு முன்பான நிகழ்வுகள்!  இந்த ஜனவரியின் இறுதிவாக்கில் பார்த்தால் நண்பர் கார்த்திகை பாண்டியனிடமிருந்து மெஸேஜ்- ""சார்.. ப்ளாக்கில் வாசித்தேன்! BOMB தமிழாக்கம் பண்ண நான் ரெடி!!'' என்று!!

சமீப ஆண்டுகளில் நம் நண்பரின் எழுத்துப் பணிகள் அவரை உயரே உயரே இட்டுச் சென்று கொண்டிருப்பதை நாமறிவோம்! இன்று தமிழ் எழுத்துலகில் ஒரு முக்கிய ஆற்றலாளராய் வலம் வருபவர்! And  செம பிஸியாக இருப்பவரை இட்டாந்து, நம்ம கி.நா.வை மொழிபெயர்க்கச் சொல்­லிக் கேட்கிறதுக்கெல்லாம் எனக்காக வாயே வந்திருக்காது தான்! ஆனால், நண்பரே முன்வந்து கேட்ட நொடியில் கோ- ஆப்டெக்ஸ் பெட்ஷீட்களை ஒண்ணுக்கு - ரெண்டாகப் போர்த்தி, அப்படியே லாக் பண்ணிய கையோடு, கதைக்கான உரிமைகளை வாங்கிவிட்டோம்!

So  கடந்த இரண்டு வாரங்களாகப் பணிகள் ஓட்டமெடுக்கத் துவங்கிவிட்டன & அவரது வாடிக்கையான வேலைகளுக்கு இடர் தராத வகையில் நிதானமாய்ப் பணியாற்ற அவகாசமும், திட்டமிட்டுவிட்டோம்! So இந்தப் பக்கமாய் தலைகாட்டி விஷயத்தை உங்களிடம் பகிர்ந்திடலாமென்றுபட்டது!

 And here goes:

1.அசாத்தியமான கிராபிக் நாவல் இது! இரண்டாம் உலக யுத்தத்தை "சட்'டென்று ஒரு முற்றுப்புள்ளி காணச் செய்த அணுகுண்டு வீச்சு; அதன் பின்னணித் திட்டமிடல்கள்; உருவாக்க முஸ்தீப்புகள் ; அரசியல்கள்; அதிரடிகள் என்று சகலத் தரவுகளையும் கதாசிரியர் Didier Swysen துளிப் பிசகுமின்றிச் சேகரித்து - இரு அற்புத ஓவியர்களின் துணை கொண்டு இதனை உருவாக்கியுள்ளார்!  இங்கே பன்ச் டயலாக்ஸ் இராது ; கெக்கே பிக்கே தருணங்கள் இராது; ஹீரோ- வில்லன்கள் என்ற சராசரிகளும் இராது!

மாறாக, மனிதகுலத்தின் மகத்தானதொரு களங்கப் பக்கத்தின் ஆதி முதல் அந்தம் வரையிலான நிகழ்வுகளின் மீது வெளிச்சம் மட்டுமே பரவிக் கிடக்கும்! So இது சர்வ நிச்சயமாய் ஒரு கமர்ஷியல் முயற்சியே ஆகிடாது எனும் போது, மாமூலான வாசிப்பாக இது இருந்திடவே செய்யாது! அது ஸ்பஷ்டமாகவே புரிகிறது!

ஆனால், அரை நூற்றாண்டுக்கும் மேலாக காமிக்ஸ் உலகினில் அன்னம் - தண்ணீர் புழங்கிய பிற்பாடும் 'Only கமர்ஷியல்ஸ்' என்ற அடையாளத்தின் கீழே குளிர் காய்வது பொருத்தமாகப்படவில்லை! So ஜெயமோ- மிதமோ, பலன் எதுவாகயிருந்தாலும் - அதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளத் தயாராகக் களமிறங்குகிறோம் - ஆபத்பாந்தவர்களாய், நீங்களிருக்கும் தைரியத்தில்! 




2. இது முழுக்கவே முன்பதிவுகளுக்கு மட்டுமேயானதொரு இதழாக அமைந்திடும்! முகவர்களுமே தேவைப்படும் பட்சத்தில் முன்பதிவு செய்திடத் தான் அவசியமாகிடும்!

3. மிகக் குறைந்த ப்ரிண்ட்-ரன் என்பதால் விலையில் சமரசம் சாத்தியமாகவில்லை! ஆனால் MAXI சைஸில், இயன்ற அத்தனை நகாசு வேலைகளுடனும், அட்டகாசமான தயாரிப்பில் இதழை உங்களிடம் ஒப்படைப்பது எங்களது promise!

4. தற்சமயத்துக்கு ""ஈரோடு 2025'' என்பது இலக்கு - இந்த இதழின் ரிலீஸுக்கு! ஆனால், இது துளியும் அவசரப்பட்டுச்  செய்திடக் கூடாததொரு படைப்பு என்பதால் maybe "சேலம் 2025'' என்றும் கூட அமைந்திடலாம்!

5. பேக்கிங் & கூரியர் கட்டணங்கள் தனி : ரூ.50 (தமிழகம்) & ரூ.75 (பிற மாநிலம்) so ஒரு டீசண்டான நம்பரினை முன்பதிவில் எட்டிடத் தேவையான அவகாசங்கள் தந்திடுவோம்!

And நண்பர்கள் விரும்பினால் - ரூ 500 இப்போது & ரூ.400 இதழ் வெளியாடுகிவதற்கு முன்பாக - என்றும் இரண்டு தவணைகளில் பணம் அனுப்பலாம்!

6.ஒரு இமாலயப் பணியினில் இறங்கியிருக்கும் நண்பர் கார்த்திகைப் பாண்டியனுக்கும் ஒரு பலத்த கரகோஷத்தை இந்த நொடியில் ஒப்படைத்தோமெனில் சர்வநிச்சயமாய் அவரது சிரமங்கள் மட்டுப்பட்டுத் தென்படும் என்பேன்!  செய்வோமா மக்களே?

7.கதைக்கான தலைப்பாய் எதை பரிந்துரை செய்வீர்களோ? என்று கேட்ட போது சிம்பிளாக "குண்டு" என்றார் நண்பர் கா. பா. ஆனால் நம்ம மூக்கு தான் புடைப்பானது ஆச்சே ; சிம்பிளான தீர்வுகளை ஏற்றுக் கொள்ளாதே? So - "சாம்பலின் சங்கீதம் " என்ற பெயரை முன்மொழிந்தேன் & நண்பரும் உடனே டிக் அடித்தார்! And here we are!!

So ஒரு சிகரம் ஏறும் முயற்சிக்கு ஒட்டு மொத்தமாய் தயாராக வேண்டிய தருணமிது folks! தம் கட்டியபடியே ஆரம்பிக்கலாமுங்களா? 

Of course - "இது எங்கே தேற போகுது? ச்சீ.. ச்சீ... இது டாக்குமென்டரி படம் மெரி இருக்குமே - இந்த ஆணிய யாரு கேட்டா?" என்ற ரீதியிலான ஞானம் தோய்ந்த குரல்கள் ஆங்காங்கே துரிதமாய் ஒலிக்கும் என்பதில் எனக்குக் கிஞ்சித்தும் சந்தேகங்களில்லை! ஆனால் சமகால உலகக் காமிக்ஸ் படைப்புகளுள் அசாத்திய ஆழம் கொண்ட இந்த ஆல்பத்தில் வெறும் 100 பிரதிகள் மட்டுமே தமிழில் போணி பண்ண முடிந்தாலுமே மகிழ்வோம் - simply becos ஒரு சிகரத்தை ஏறிடத் துணிந்தோம் என்ற திருப்தி நமதாகி இருக்குமே?! 

விஷப் பரீட்சை தான் ; சக்திகளுக்கு மீறிய முயற்சி தான் - but காலிருக்கி.... கட்டை விரலிருக்கி... கடைவாயுமிருக்கி.... எனும் போது விடுவானேன்? "கட்டைவிரல் கடைவாயில்" - at it's absolute peak! 

புனித மனிட்டோ நமக்குத் துணை நிற்பாராக 🙏🙏🙏!!

Bye all... மர்ம மனிதன் மார்ட்டினோடு சால்ஸா ஆட நான் கிளம்புகிறேன்! See you all ! Have a lovely Sunday!! 



268 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. கட்டை விரல் காதலர் வாழ்க...

    ReplyDelete
  3. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  4. La Bombe


    செம்ம்ம்மமமம சார்...

    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️


    ReplyDelete
  5. இரட்டை வேட்டையர்கள் & ஜான் மாஸ்டர் ஆஹா ஆனந்தம் பரமானந்தம்

    ReplyDelete
  6. // Yes - you guessed it! மனித வரலாற்றில் ஒரு நீங்காக் கறையாகிப் போன ஹிரோஷிமா - நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதல் படலத்தை துவக்கம் முதலாய் கர்ம சிரத்தையாக விவரித்துச், சித்தரிக்கும் LA BOMBE என்ற 452 பக்க அசுர கிராபிக் நாவல் நம்ம மத்தியில் களமிறங்கத் தயாராகி வருகிறது! //

    Super News!

    ReplyDelete
  7. .ஒரு இமாலயப் பணியினில் இறங்கியிருக்கும் நண்பர் கார்த்திகைப் பாண்டியனுக்கும் ஒரு பலத்த கரகோஷத்தை இந்த நொடியில் ஒப்படைத்தோமெனில் சர்வநிச்சயமாய் அவரது சிரமங்கள் மட்டுப்பட்டுத் தென்படும் என்பேன்! /////

    👏👏👏👏👏👏👏👏👏

    ReplyDelete
  8. // நண்பர் கார்த்திகைப் பாண்டியன் //

    Super Nanba!!

    ReplyDelete
  9. சாம்பலின் சங்கீதம்..


    அட்டகாசம்...👌👌👌👌👌👌

    ReplyDelete
    Replies
    1. மண்டையில் உதித்த இரண்டாவது பெயர் சார்!

      Delete
    2. அப்போ முதல் பெயர்???

      Delete
    3. அதானே, அப்போ முதல் பெயர் என்ன ஆசிரியரே

      Delete
  10. வரலாறு முக்கியம் அமைச்சரே!

    "சாம்பலின் சங்கீதம்" கவிதையான தலைப்பு. நம் ரசனைகள் பல உயரங்களை தொட்டவை. இக்கதையும் வெற்றி பெற நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. போடறோம் - படிக்கிறோம் - கொண்டாடறோம் சார் 💪

      Delete
  11. Wow for the attempt sir and kudos KP sir

    ReplyDelete
  12. வணக்கம் ஆசிரியர் சார். இந்தக் குண்டு புத்தகத்தைத் தாங்கள் அறிமுகப்படுத்திய போதே இது எப்போது வெளிவரும் என்று ஆவலாய் பின்னூட்டமிட்டேன். அடுத்து தளத்தில் கோரிக்கையும் வைத்தேன். தற்போது வெளிவரப் போகும் அறிவிப்பு கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். விரைவில் என் பிரதிக்கான பணத்தை அனுப்பி வைத்து மகிழ்கின்றேன்.தங்களின் அனைத்து நல்முயற்சிகளுக்கும் உற்ற ஆதரவாய் இருப்பேன். நன்றி வணக்கம் சார்.

    ReplyDelete
  13. கார்த்திகைப் பாண்டியன சார் ஒரு சப்யூட்

    ReplyDelete
  14. எல்லாம் வல்ல இறைவன் அருளால் எங்களது மதிப்பிற்குரிய சீனியர் ஆசிரியர் அவர்கள் வெகு விரைவில் நல்ல குணம் அடைந்து மீண்டும் முன் போல் வருவார். என்றும் எங்களது அன்பும் ஆதரவும் அவருக்கு உண்டு. இறைவன் அருள் நமது காமிக்ஸ் பிதாமகருக்கு உண்டு.

    ReplyDelete
  15. கார்த்திகை பாண்டியன் சார் அவர்களுக்கு எங்களது நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  16. சங்கீதம் என்றாலே மகிழ்ச்சியானது என்ற பொதுபுத்தியில் ஏன் சோக கீதத்தை, சங்கீதம் என்று சொல்லக் கூடாதா என செவிட்டில் அடித்தது மனசாட்சி

    ReplyDelete
  17. சாம்பலின் சங்கீதம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏தேங்க்ஸ் கார்த்திகைப் பாண்டியன் சார்

    ReplyDelete
  18. 💐😘😘😘களம் இறங்கி குண்டு வீச காத்திருக்கும் கார்த்திகை பாண்டியன் ப்ரோ க்கும்,

    💐😘🥰😘🥰குண்டு வீச களம் அமைத்து கொடுத்த நம் Edi Sir க்கும்


    கோடானு கோடி நன்றிகள் 👍👍😘🥰💐🙏

    ReplyDelete
  19. பணம் அனுப்பி விட்டேன். சாம்பலின் சங்கீதத்திற்காக ஆவலுடன் வெயிட்டிங்...

    ReplyDelete
    Replies
    1. வர்ற வரைக்கும் சம்சா ரெண்டை போடணுமோ 🤔🤔?

      Delete

    2. "பன்" இருந்தால் போதுங்க நம் ஈரோடு இளவரசருக்கு

      Delete
  20. வறலாற்றின் கருப்பு பக்கங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாய் புத்தகங்களில் அனிமேக்களில் படங களில் வாசித்திருக்கிறேன், பார்த்து இருக்கிறேன். ஆனால் இந்த புத்தகம் அந்த பக்கங்களின் நிழல்களில் வெளிச்சம் பாய்ச்சும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன் sir

    ReplyDelete
    Replies
    1. இதைப் போல் ஒரு புக்கை நாம் பார்த்திருக்க முடியாது சார் - கதாசிரியர் Didier Swysen அசாத்தியமாய் உழைத்துள்ளார்!

      Delete
  21. வர வர ப்ளாக் பக்கம் வந்தாலே சில பல சந்தோச அறிவிப்புகள் (தி பாம் & டெக்ஸ் 1000, பழைய கிச்சு கிச்சு பார்டிகள் மீள் வருகை, படித்திரா இரட்டை வேட்டையர் ... Etc... etc .) திக்கு முக்காடச் செய்வது எனக்கு மட்டும் தானா 😍😍😁😁

    ReplyDelete
    Replies
    1. இன்னும் வெயிட்டிங் 😀😀

      Delete
    2. //ஆஹா மே வெயில
      மேளா தெறிக்க விடறோம்...//

      கண்டிப்பாக ஸ்டீல் 💪💪💪

      Delete
  22. ?என்னடா இது ஆச்சரியமா இருக்குது என்று பதிவு போட்ட உடனேயே பதிவு தெரிகிறது

    ReplyDelete
  23. இந்த குண்டு புக்குக்கு அடுத்த மாதம் தான் பணம் கட்ட முடியும்.

    ReplyDelete
    Replies
    1. ஒண்ணும் பிரச்சனை இல்லை சார் ; போதுமான அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் 👍👍

      Delete
  24. புதிய கதைக்களம் என்றும் மகிழ்ச்சியே வரவேற்கிறேன் ❤️

    ReplyDelete
  25. நண்பர் கார்த்திகை பாண்டியன் அவர்களின் தமிழாக்கத்தில் சாம்பலின் சங்கீதம் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு சிம்பொனியாய் ஒலிக்கட்டும்!! 🎼🎵🎶🎵🎼🎵
    அசத்துங்கள் ஜி 💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  26. அன்று தங்கள் மீது குண்டு போட்டு அமெரிக்கா நாட்டுடன் இன்று ஜப்பான் நாடு நண்பன். காலம் எப்படி மாறி இருக்கிறது

    ReplyDelete
  27. புதிய கதைக்களம் என்றும் மகிழ்ச்சியே வரவேற்கிறேன் ❤️.
    போக...
    இரட்டை வேட்டையர்,
    ஜான் மாஸ்டர்,
    பரட்டத்தலை ராஜா,
    விச்சு கிச்சு...
    படிக்க படிக்க கூஸ்பம்ப் ஆகுதே சார்....

    அதிலும் இரட்டை வேட்டையர் & ஜான் மாஸ்டர் 👏👏👏🎇🎆🎇🎆🎇 அதிரடி அறிவிப்பு.

    ReplyDelete
    Replies
    1. போட்டுத் தாக்குவோம் சார் - ஒவ்வொண்ணாய்!

      Delete
  28. குண்டு வீச நானும் ரெடி சாரே.. 😘🥰👍
    அட்வான்ஸ் போட்டாச்சுங்க.. 😘😄🥰

    ReplyDelete
  29. // LA BOMBE என்ற 452 பக்க அசுர கிராபிக் நாவல் நம் மத்தியில் களமிறங்கத் தயாராகி வருகிறது! //
    சார் அட்டகாசம்,அருமை,சிறப்பு,மகிழ்ச்சி...

    ReplyDelete
  30. // So ஒரு சிகரம் ஏறும் முயற்சிக்கு ஒட்டு மொத்தமாய் தயாராக வேண்டிய தருணமிது folks! தம் கட்டியபடியே ஆரம்பிக்கலாமுங்களா? //
    மொழி பெயர்ப்பாளர் கா.பா அவர்களுக்கு வாழ்த்துகள்...
    சாம்பலின் சங்கீதம் தலைப்பு அசத்தல்...

    ReplyDelete
    Replies
    1. "The சாம்பலின் சங்கீதம் "-ன்னு வைச்சிருக்கலாமோ 🤔🤔?

      Delete
    2. "The" முக்கியம் 😁😁😁

      Delete
  31. Rs.850+courier Rs. 50=Total Rs. 900..
    Only for booking.. 👍
    First installment Rs. 500 now😘..
    Next 400 in August👍..

    Lion comics Gpay 9003964584👍

    ReplyDelete
  32. கனவா நிஜமா. BOMB தமிழில். கிளாசிக் அறிவிப்புகளில் துவண்டு போய் இருந்த எனக்கு இது ஒரு உற்சாக டானிக். இன்னும் இது போல் எவ்வளவோ பார்க்க வேண்டி இருக்கிறது. காலம் நிச்சயம் மாறும். நிஜங்களின் நிசப்தம் கதைக்கு பிறகு ஒரு மிக வலுவான படைப்பு loading. Iam waiting. மிக்க நன்றி

    ReplyDelete
  33. Hi Editor sir , La Bombe
    This is awesome sir. Very happy about it. இரட்டை வேட்டையர் & C.I.D ஜான்மாஸ்டர் 

    ReplyDelete
  34. Very fortunate to hear about this news sir. Eagerly waiting for it

    ReplyDelete
  35. அட்ரா சக்கை…அட்ரா சக்கை…

    ReplyDelete
  36. கார்த்திகை பாண்டியன் சார் அவர்களுக்கு எங்களது நன்றிகளும்,பாராட்டுககளும் மற்றும் வாழ்த்துககளும்.

    ReplyDelete
  37. அப்பா எப்படி இருக்கிறார் டியர் எடி .. உடல் நலம் தேறி இருக்கிறாரா? ?

    எல்லாம் வல்ல முருகன் உங்களுக்கு துணையிருப்பான் ..

    ReplyDelete
    Replies
    1. ஆண்டவன் சித்தம்!

      Delete
    2. நல்லதே நினைப்போம் டியர் எடி .. முருகன் குடிலில் தினமும் வேண்டுதல் வைத்துள்ளேன் .. இவ்வருட ஆகஸ்டில் ஐயா லருவார் என காத்திருக்கிறேன் ❤

      Delete
    3. நல்லதே நடக்கட்டும் சார்.

      Delete
  38. "திக்கு தெரியாத தீவில்" - இரட்டை வேட்டையர் சாகஸம். இதுவரை நாம் வெளியிட்ட கதைகளில் one of the very best Action & Adventure story. மலிவு விலையில் வெளியிடாமல், ஒரு பிரம்மாண்டமான புத்தகமாக வெளியிட வேண்டுகிறேன். அதற்கு 100% நியாயம் சேர்க்கும் கதைக்களம் கொண்டது தி தெ தீ

    ReplyDelete
    Replies
    1. That 'ராயப்பா... நான் - நான் தானா? நீ - நீ தானா?' moment!

      Delete
    2. வருது.... "திக்குத் தெரியாத தீவில்" MAXI சைசில்!

      Delete
    3. உண்மை சகோ அந்த கதை ஸ்பெஷல் வெளியீடாக வந்தால் மகிழ்ச்சி அடைவேன் .எல்லாம் அந்த விஜய கடவுளின் கண் பார்வை கிட்டணும்(மே)

      Delete
    4. @திருநாவுக்கரசு சகோ
      அருமை

      Delete
    5. ' திக்கு தெரியாத தீவில்' இப்பவும் பத்திரமா வச்சிருக்கேன். அன்றைய காலகட்டத்தில் என்னை அசர வைத்த, பலமுறை திரும்ப திரும்ப படிக்க வைத்த ஆக்சன் கதை!

      மறுபதிப்பு வண்ணத்தில் வருகிறது என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி!!😍😍

      Delete
  39. டியர் எடி,

    ஒரு வழியாக, அந்த புத்தகத்தைப் பற்றிய அறிவிப்பு அயல்நாட்டில் வெளியான சமயத்தில் இருந்து எப்போது நமது பதிப்பில் வரும் என்று அவளுடன் காத்திருந்த, அந்த மெகா "குண்டு" புக் வந்தேவிட்டது

    குமுதா ஹாப்பி அண்ணாச்சி... 😍

    ReplyDelete
  40. இன்னிக்கு தமிழ் இசையின் ரசிகனாக காலரை தூக்கி விட்டுட்டு கெத்தா சுத்திட்டிருந்தேன். கூடவே தமிழ் காமிக்ஸ் ரசிகனாவும் காலரை தூக்கி விட்டுட்டு சுத்துங்கற மாதிரியான சேதியும் வந்து சேத்துருக்கு. அருமை. ஆசம். மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே, தூக்க கலக்கத்திலே இளையராஜா DP-ஐ பாத்தா ஒடனே பொங்கிட்டீங்க போலும்! இவரு... அவரு இல்லே!

      Delete
    2. அட ஆமாம், ஸ்டீல் சகோ 😂😂😂

      Delete
    3. கோட்டசாமி முழிச்சுக்கோ 🙃

      Delete
  41. தலைப்பு நிச்சயமாக அட்டகாசமாக அமைத்திருக்கிறீர்கள் சார்.. நண்பர் கார்த்திகைப் பாண்டியனுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. ஒரு அசாத்தியப் படைப்புக்கு நமது தலைப்பு நியாயம் செய்தாகணுமே சார்!

      Delete
  42. ஒவ்வொரு மாத புத்தகங்கள் வந்தவுடன் அவைகளை ஆபீஸ் செல்லும் நாட்களில் கூடவே எடுத்து சென்று எனது மேஜை மேல் வைத்துவிடுவேன்; ஆஃபிஸில் தமிழ் தெரிந்தவர்கள் ஒரு சிலர் ஆர்வத்துடன் வந்து புரட்ட மாட்டார்களா என்ற ஆர்வத்தில். நேற்றும் அதேதான் செய்தேன், இந்த மாத புத்தகங்களை எனது மேஜையில் வைத்துவிட்டு வேலை பார்க்க ஆரம்பித்து விட்டேன், அந்த பக்கம் வந்த எனது டைரக்டர் புத்தகங்களை ஆர்வத்துடன் எடுத்து புரட்ட ஆரம்பித்து விட்டார்; டெக்ஸ் புத்தகத்தை எடுத்துவிட்டு பணத்தை கொடுத்தவரிடன் டின் டின் பற்றி சொன்னேன்; அவர் டின் டின் ஆங்கிலத்தில் படித்து இருக்கிறார், ஸ்நோயீ பற்றி நினைவு கூர்ந்தார்; நமது மொழிபெயர்ப்பு, தரம், அச்சுதரம் மற்றும் விலையை பற்றி சொன்னேன்; முக்கியமாக ஆங்கிலத்தில் உள்ளதை விட நமது தமிழ் காமிக்ஸ் எல்லா விதத்திலும் சிறந்தது என்று சொன்னேன். டெக்ஸ் ஒரு commercial நாயகன், நம்மால் நங் சத் கும் வாழ்க்கையில் செய்ய முடியாததை இவர் கதை படிக்கும் போது இவைகளை பார்த்து ரசிக்கலாம் என்று சொன்னேன். டெக்ஸ் படித்து பார்த்து உங்கள் எண்ணங்களை சொல்லுங்கள் என்றேன் அடுத்த வாரம் சந்திக்கும் போது சொல்கிறேன் என்று சொல்லிஉள்ளார்; அவரின் கருத்துக்களை கேட்க ஆவலுடன் உள்ளேன்.

    கொசுறு: அவரின் அண்ணனின் காமிக்ஸ் புத்தகங்கள் மழை வெள்ளத்தில் அடித்து சென்றதை வருத்தத்துடன் சொன்னார், இது போன்று காமிக்ஸ் collection இழந்த காமிக்ஸ் நண்பர்கள் எங்கள் காமிக்ஸ் குடும்பத்தில் உண்டு என்று சொன்னேன்.

    ReplyDelete
  43. விஜயன் சார், மாடஸ்டி ஸ்பெஷல் வரும் போது அதனுடன் ஒரு மாடஸ்டி போஸ்டர் கொடுத்தால் மாடஸ்டியை விரும்பும் நமது டாக்டர் நண்பர்கள் சந்தோசபடுவார்கள்.

    அதே போல மாடஸ்டியின் அதி தீவிர ரசிகர்களான மேச்சேரி ஜமீன் மற்றும் ஷெரிப் இன்னும் சந்தோஷபடுவார்கள். :-)

    இந்த வேண்டுகோளை கொஞ்சம் பரிசீலனை செய்யுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. ப்ளீஸ் மாடஸ்டி போஸ்டர்

      Delete
    2. மாடஸ்டி படம் போட்ட போர்வை கொடுத்துட்டீங்கன்னா.. தினமும் அதையே போர்த்தி படுத்துப்பாங்க - இந்த வெயில் காலத்திலும்!😝😝

      Delete
  44. // 6.ஒரு இமாலயப் பணியினில் இறங்கியிருக்கும் நண்பர் கார்த்திகைப் பாண்டியனுக்கும் ஒரு பலத்த கரகோஷத்தை இந்த நொடியில் ஒப்படைத்தோமெனில் சர்வநிச்சயமாய் அவரது சிரமங்கள் மட்டுப்பட்டுத் தென்படும் என்பேன்! செய்வோமா மக்களே? //

    வாழ்த்துக்கள் நண்பா! உன்னால் முடியும்! படிக்க ஆர்வமுடன் உள்ளேன்!

    ReplyDelete
  45. La Bombe - சாம்பலின் சங்கீதம்

    கதையும், தலைப்பும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன!

    ஆவலோடு எதிர்பார்க்கிறேன்...!

    சாவோடு சூதாட்டம் போல,

    சங்கோடு குத்தாட்டம்,
    குண்டோடு கைலாசம்,

    இப்படியெல்லாம் தலைப்புகளை யோசிக்க வெச்சுட்டீங்க..!

    ReplyDelete
    Replies
    1. ///குண்டோடு கைலாசம்///

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

      Delete
  46. இரும்பு மனிதன், கொலைப் படை, சதிவலை , பிறகு அட்டகாசமான முழுவண்ணஇதழ் . இப்போது ஆர்ச்சியின் சூப்பரான ஐந்தாம் MAXI sized இதழ் இது. Waiting for the next Archie Maxi

    ReplyDelete
  47. டின் டின் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது சார்.

    ReplyDelete
  48. சீனியர் எடிட்டர் நலம் பெற்று வருவது சந்தோஷம் சார். அவர் முழுநலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  49. குண்டு புக்'' மீதான நமது காத­லில் இரகசியங்கள் ஏதுமில்லை தான்! ஆனால், அளவில், பருமனில், பக்க நீளங்களில் மட்டுமே குண்டென்று இல்லாது - புக்கே ஒரு குண்டைப் பற்றியதென்றால் என்ன சொல்வீர்களோ folks?....


    செம் சார்...இது வரை எந்த பதிவுகளிலே டாப் ஆஃப் த பெஸ்ட் பதிவு இதான் சார்...ரசிச்சு எழுதியிருக்கீங்க...

    ReplyDelete
    Replies
    1. அசாத்தியமான கிராபிக் நாவல் இது! இரண்டாம் உலக யுத்தத்தை "சட்'டென்று ஒரு முற்றுப்புள்ளி காணச் செய்த அணுகுண்டு வீச்சு; அதன் பின்னணித் திட்டமிடல்கள்; உருவாக்க முஸ்தீப்புகள் ; அரசியல்கள்; அதிரடிகள் என்று சகலத் தரவுகளையும் கதாசிரியர் Didier Swysen துளிப் பிசகுமின்றிச் சேகரித்து - இரு அற்புத ஓவியர்களின் துணை கொண்டு இதனை உருவாக்கியுள்ளார்! இங்கே பன்ச் டயலாக்ஸ் இராது ; கெக்கே பிக்கே தருணங்கள் இராது; ஹீரோ- வில்லன்கள் என்ற சராசரிகளும் இராது!

      மாறாக, மனிதகுலத்தின் மகத்தானதொரு களங்கப் பக்கத்தின் ஆதி முதல் அந்தம் வரையிலான நிகழ்வுகளின் மீது வெளிச்சம் மட்டுமே பரவிக் கிடக்கும்! So இது சர்வ நிச்சயமாய் ஒரு கமர்ஷியல் முயற்சியே ஆகிடாது எனும் போது, மாமூலான வாசிப்பாக இது இருந்திடவே செய்யாது! அது ஸ்பஷ்டமாகவே புரிகிறது!


      ....அந்த பாமின்/ பாம்பின் வீச்சுக்கு இணையானது இந்த வரிகளின் வீச்சு ....செம சார் ...சீக்கிரமா தாங்க

      Delete
    2. பதிவு முழுக்க சந்தோச விதைகளின் தூவல்கள்...தந்தையார் உடல்நலம்...பரட்டை விச்சு...ஜானிரட்டை...பாம் உற்சாகம்...ஆர்ச்சி தகவல்கள்....நண்பர் கார்த்திகை பாண்டியனுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்....இப்பவே பாம்ன் வீச்சுக்கு இரையாகிட்டேன்...அது நமக்கு இரையாக காத்திருக்கிறேன்

      Delete
    3. சென்ற வாரம் பாரதிராஜா புக்ஹவுசுக்கு அருகே வாடகைக்கு சென்றிருந்தேன்...அங்கே இரண்டு ஸ்பைடரின் மேக்சிகள் மொத்த புத்தக தொகுப்பையே அழகாக்கி கொண்டிருந்தன...இப்ப அத ஃபோட்டோ பிடிக்காம வந்துட்டமேன்னு வருந்துகிறேன்...முடிஞ்சா அது அனுப்புறேன் வரும் நாட்களில்

      Delete
  50. ஃப்ரென்ச்சில் 17000 சொச்சம்...நம்ம தமிழில் 850...அள்ளிக் கோ அள்ளிக் கோ அண்ணாச்சி கடைல அள்ளிக் கோ விளம்பரம் தான் நினைவில்...சரவணா ஸ்டோர் விளம்பரம் ...நம்ம சௌந்தரனாஸ் ஸ்டோரா மாறிடுச்சி

    ReplyDelete
    Replies
    1. நெசமாவே பாம்தான்...போட்டது நாம்தான்...விலையில்...மலையிலோர் விலை மடுவிலோர் நிலை

      Delete
  51. சார் இரத்தப் படத்துக்கு...ஸ்பைடருக்கூட பணம் உடனே அனுப்பிய தில்லை...பணத்த போட்டாச்சு...பாம போடுங்க

    ReplyDelete
  52. சாம்பலின் சங்கீதத்தை கார்சனின் கடந்த காலம் புக் தரத்தில் வெளியிட வாய்ப்பு இருக்குங்களா சார் ?!
    அதன் தரம் நம்பமுடியாத வகையில் அற்புதமாய் இருந்தது,அத்தரத்திலேயே அமைந்தால் கூடுதல் மகிழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. பார்த்துக் கொண்டே இருங்க சார் - பின்னிடலாம் 👍

      Delete
    2. அருமை சார்,மகிழ்ச்சி...

      Delete
  53. 'ஒரு சாம்பல் குவியலின் சங்கீதம்'?

    ReplyDelete
    Replies
    1. The சாம்பல் குவியலின் சங்கீதம் 💪

      Delete
  54. சார் அட்டகாசமான அறிவிப்பு. எனது பங்களிப்பை செலுத்தி விட்டேன். இது போன்ற பரீட்சார்த்த முயற்சிகளுக்கு எப்போதுமே எனது ஆதரவு உண்டு. 2025 தொடர் அறிவிப்புகளால் களை கட்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. //2025 தொடர் அறிவிப்புகளால் களை கட்டுகிறது.//

      ஆமாங்க சகோ 🥳🥳🥳

      Delete
    2. மலை ஏறுவோரிடம் போய் - "சிவனேன்னு இருக்காம ஏனுங்கணா மலைகளிலேல்லாம் ஏறிக்கிட்டு இருக்கீங்கன்னு?" கேட்டாக்கா ஒரே பதிலைத் தான் சொல்லுவார்கள் சார்! "Becos it's there" என்று!

      நம் கதை கூட அதுவே! இது பரீட்சார்த்தம் என்பதை விடவும் ஒரு மெகா சவால் என்பேன் சார்!

      Delete
    3. நமக்கான சவால் சார் ; காமிக்ஸ் நேசம் கொண்ட நம் சிறுவட்டத்தின் முன்பான மெகா சவால் 🔥🔥

      Delete
    4. //நமக்கான சவால் சார் ; காமிக்ஸ் நேசம் கொண்ட நம் சிறுவட்டத்தின் முன்பான மெகா சவால் 🔥🔥//

      🔥🔥🔥🔥🔥

      Delete
    5. // "Becos it's there" wow .. just wow sir :-)

      Delete
  55. அருமை சார்...

    சாம்பலின் சங்கீதம் பொருத்தமான அழகான தலைப்பு...


    நண்பர் காபா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும்..வாழ்த்துகளும்..

    ப்ளஸ் பலத்த கை தட்டல்களும்..

    ReplyDelete
  56. விச்சு கிச்சு.. இரட்டை வேட்டையர் ..மாஸ்டர் அறிவிப்பு எல்லாம் பட்டையை கிளப்புகிறது சார்...மிக மிக ஆவலுடன் புத்தக விழாக்களை எதிர் நோக்குகிறேன்..

    ReplyDelete
  57. ஆர்ச்சி இதழ் இந்த முறை தரமான படைப்பில் கதைகளும் சோடை போகவில்லை சார்..போரடிக்காமல் சுவராஸ்யமாக வாசிக்க வைத்தது .

    ReplyDelete
  58. @கார்த்திகை பாண்டியன் சகோ

    நன்றிகள் சகோ🙏🙏🙏
    பலத்த கரகோஷங்கள் தங்களுக்கு
    பெரிய பணியை சிறப்பாக செய்திட வாழ்த்துகள் சகோ 💐💐💐

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பர் கா பா இல்லாமல் இது சாத்தியம் ஆகி இருக்காது இவ்வளவு விரைவில். நான் இந்த புத்தகம் எல்லாம் வெளியாக வாய்ப்பே இல்லை என்று நினைத்து இருந்தேன்

      Delete
    2. நானுமே அப்படிதான் நினைத்து கொண்டிருந்தேன் சகோ
      ஆசிரியர் நமக்கு சந்தோசத்தில் ஆழ்த்தி விட்டார்

      Delete
    3. Big Thanks to கார்த்திகை பாண்டியன் சகோ

      Delete
  59. "La Bomb" தமிழில் கொண்டு வரும் முயற்சிக்கு பாராட்டுகள் ஆசிரியரே
    இது வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  60. "சாம்பலின் சங்கீதம்" அருமையான தேர்வு

    ReplyDelete
  61. "La.bombe"... I love war & sea & jungles related comics from my childhood. Thank you so much sir... thanks too Karthigai pandian sir... ( subscribed )

    ReplyDelete
  62. //மார்ச்சின் இதழ்கள் சகலமுமே சக்கை போடு போட்டு வரும் சந்தோஷச் சேதியை முதலி­ல் பகிர்ந்து விடுகிறேனே! ஆன்லைனில் குவிந்து வரும் ஆர்டர்களை டெஸ்பாட்ச் செய்திட நம்மாட்கள் மெய்யாலுமே தடுமாறி வருகின்றனர்! அதிலும் டின்டின் & ஆர்ச்சி MAXI இதழ்கள் தெறி மாஸ்! //


    சூப்பர் ஆசிரியரே 🥳🥳🥳🥳🥳

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் வாசகர்களே என்று சொல்லணும் 💪💪

      Delete
  63. *விண்கல் வேட்டை...!*

    மற்றுமொரு அட்டகாசமான டின்டின் அட்வென்ட்சர்

    பூமியை நோக்கி வரும் விண்கல் கடைசி நேரங்களில் திசை மாறி போய்விட விண்கலின் ஒரு சிறு பகுதி மட்டும் பூமியில் விழுந்து விடுகிறது, அது அறிவியல் ஆராய்ச்சிகர்களை ஈர்க்க அதை தேடி செல்லும் அறிவியல் ஆராய்ச்சி யாளர்களுக்கு உதவிட நம்ம டின்டின் & கேப்டன் ஹேடாக் செல்கின்றனர்
    அதை வியாபார நோக்கில் அபகரிக்க இன்னொரு கப்பலில் செல்கிறது வில்லன் கேங்

    வெற்றி பெற்றர்களா இல்லை சதி வலையில் சிக்கினார்களா
    எல்லாவற்றையும் விட
    *சரக்கடிக்காத சிங்கம் சங்கத்தில் இருந்து கொண்டு நம் கேப்டன் வெற்றி பெற்றாரா* 😉😜?

    *ஸ்நோயியும் உணவுகளும்* தனியாக ஒரு அட்வென்ட்சர் ட்ராக் வைச்சிடலாம், உணவை தேடி அதன் அலும்புகள் தனி

    முதல் தடவை பயணம் செய்யும் ஆராய்ச்சியாளர்கள் தள்ளாடுவது தனி கதை😂😂😂

    கேப்டன் ஹேடாக்
    சரக்கடிச்சா ஒரு கேரக்டர், சரக்கடிக்காதப்போ ஒரு கேரக்டர்
    டின்டின் இதை நல்லாவே பயன்படுத்தி கொள்கிறார் 😂😂😂

    ஹேடாக்கின் வசனங்கள் தான் ஹைலைட், தன் நண்பனை சந்தித்து வுடன் அந்த பாடலும் ஆடலும், சண்டைதான் நினைக்கிற போது நண்பேன்டா என அறிமுகம் செய்கிறார், அவரே ஆபந்பாந்தவனாகவும் உதவுகிறார்

    ஒரு விண்கலை வைத்து தன் கற்பனை திறனை நன்றாக செயல்படுத்தி உள்ளார் கதாரிசியர் , அதுவும் சிலந்தி பெரிதாகி டின்டினை துரத்துவது செம காமெடி 😂😂😂

    கேப்டன் ஹேடாக் ஒரு சிறந்த மாலுமி and innocent ... கடலை பற்றி நல்ல ஞானம் உள்ளவர், தனக்கிருக்கும் கடமையை , ஒரு மாலுமியாக இருந்து கொண்டு தவறான அபாயக்குரல் எழுப்புவது மிகப் பெரிய தவறு என்று கொந்தளிக்கும் போது அவர் கோப உணர்வுகளை உணர முடிகிறது, அப்ப திட்டி பேசுற வசனங்கள் 😂😂😂😂😂😂😂😂

    அறிவியல் ஆராயச்சியாளர்கள் தங்கள் குறிக்கோளுக்குதான் முக்கியதுவம் தருவார்கள், ஆனால் உதவி கேட்டு மெஸேச் வந்ததும் பியரி முதலில் சென்றால் பரவாயில்லை என்று விட்டு தரும்போது, ஹேட்ஸ் ஆப் டூ தி சயின்டிஸ்ட்ஸ்

    வில்லனின் சிறந்த ஆயுதம் எதுவுமே வேலைக்கு ஆகலைன்னா
    *எதிராளியின் நல்லெண்ண உணர்வை* பயன்படுத்திக்கலாம்😊😁

    வண்ண சேர்க்கை பிரமாதம், லைட் ஷேட்ஸ் செம, படம் பார்த்து ரசித்து படிக்க மிக அருமையாக இருந்தது

    *டின்டின் & ஸ்நோயி*
    *டின்டின் & கேப்டன் ஹேடாக்*
    *டின்டின் &சரக்கடிக்காத சிங்கம் சங்கத்தின் தலைவர்*
    *ஸ்நோயி & உணவு*
    இந்த ஒவ்வொரு கூட்டனியும் செம

    தமிழில் டின்டின் மிக அருமை 💙💙💙💙💙

    ReplyDelete
    Replies
    1. சூப்பரா எழுதியிருக்கீங்க சகோ!!👏👏👏👏💐💐💐

      Delete
    2. நன்றிகள் ஈரோடு இளவரசரே

      Delete
    3. ரம்யமான அலசல் ரம்யா 👍👍

      Delete
    4. நன்றிகள் ஆசிரியரே 💐💐💐💐💐❤❤❤❤

      Delete
  64. தி சாம்பலின் சங்கீதம் பணம் அனுப்பிவிடேன் சார்.

    ReplyDelete
  65. பாம் என்றால் சிவகாசிதான் என்று தெரிந்த நமக்கு இந்த தமிழ் காமிக்ஸ் பாம்மும் வரலாற்றில் புதிய சரித்திரதை எழுதட்டும்.

    ReplyDelete
  66. புதிய ஆக்கங்களுக்கு என்றுமே வரவேற்பு உண்டு.லயனின் முத்திரையே அதுதானே!.

    ReplyDelete
  67. *சிரிக்கும் விசித்திரம்*

    லாஜிக் இல்லாத ஹாரர் கதைகள் எனக்கு அலுப்பை கொடுத்து விடும். லாஜிக் இல்லாவிட்டாலும் லாஜிக்காக ஒரு விளக்கமாவது கொடுக்க வேண்டிய கட்டாயம் ஒரு கதாசிரியருக்கு உண்டு. விளக்கம் கொடுக்காமல் நான் சொல்லிட்டேன், மந்திரம் போட்டாரு, பயங்கர சக்தி கிடைச்சுதுன்னு காதுல பூ சுத்தாமல் கொஞ்சமாவது அறிவியலுக்கு அருகில் நின்று எதோ ஒரு வகையில் விளக்கி சிரிக்கும் விசித்திரத்தை தலை நிமிர செய்துள்ளார் கதாசிரியர்.

    ரசவாதிகள் நிறைந்த பண்டைய காலங்கள், இது போன்ற எண்ணற்ற விந்தைகளை மேஜிக் என்றே கடந்து விடுகின்றது. தற்பொழுது  தோர்கலின் மாந்தோர் எனும் கதாபாத்திரம் கூட ரெட் மேஜிக் எனும் வைத்திய முறையில் கைதேர்ந்தவரை கை காட்டுகிறது. மாந்தோர் போன்று டார்க் வுட்டில் வாழ்ந்த முகமற்ற மாயாவிகளின் கூட்டம் மருத்துவத்துறையில் அசாத்திய திறமைகளை உள்ளடக்கியதாக நிறுவப்படுகிறது. 

    தற்பொழுது புற்றுநோயை குணமாக்க ஹெர்பெஸ் வைரஸ்களை genetic modification செய்து ஆராய்ச்சி செய்வது போல, இந்த முகமற்ற மாயாவிகள் மனிதனுக்கு இருக்கும் அத்தனை புலன்களையும் அபிவிருத்தி செய்ய எதோ ஒரு வைரஸ் கிருமியை அல்லது தடுப்பூசியை அல்லது இரண்டையும்  முகமூடி வழியாய் உள்ளே செலுத்துவது மட்டுமல்லாமல் அந்த வைரஸ் கிருமிக்கு எதிராக ஒரு தடுப்பூசியையும் போட்டு விட்டது போல் வில்லனை தயார் செய்கிறார்கள். இதில் தடுப்பூசி முகமூடியாக இருக்கலாம் என்பது என் கணிப்பு 

    வில்லனோ கிடைத்த சக்தியை கொண்டு நல்லது செய்யாமல், தன் உள்ளத்தில் உறைந்து கிடைக்கும் மிருகத்துக்கு உணவளித்து, மேலும் தீமைகளை கட்டவிழ்த்து விடுகிறார். அப்புறம் என்ன ஹீரோவுடன் மல்லுக்கட்டி ஹீரோ ஜெயித்தாரா வில்லன் தோற்றாரா என்று கேள்விக்கு பதிலளித்து முடித்திருக்கிறார்கள் கதையை. தோற்கடிக்க முடியாத வில்லன் உள்ள கதைகள் பெரும் வெற்றி பெறுவதுண்டு. வில்லனை அடக்க முடியாமல் தோற்று ஓடிய ஹீரோ மீண்டும் எப்படி எந்த வகையில் வில்லனை தோற்கடிப்பார் எனும் எதிர்பார்ப்பை விதைத்து, கதையை பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள்.

    கர்னல் பெர்ரி போன்ற கேரக்டர்கள் கதையை மேலும் வலு சேர்க்கிறது. சீகோ கேரக்டர் நகைச்சுவைக்காக சேர்க்கப் பட்டிருந்தாலும், உருவ கேலிக்கு உள்ளாகும் அவர் மேல் இரக்கமே வருகிறது.

    கதை 10/10

    ஓவியம் 10/10

    மேக்கிங் 10/10

    ReplyDelete
    Replies
    1. தரமான எழுத்துக்கள்! அருமையான விமர்சனம்!!💐💐💐💐👏👏👏

      Delete
  68. குண்டு புக் குண்டு புக் குனு கேட்ட எங்களுக்கு சாம்பலின் சங்கீதம் என்ற கவிதை போன்ற தலைப்பில் நிஜமான குண்டு புத்தகம் வழங்கும் ஆசிரியருக்கு நன்றி .இரட்டை வேட்டையரின் திக்கு தெரியாத தீவில் கிளாசிக் சாகசத்திற்க்கும் நன்றிகள்ங்க சார்

    ReplyDelete
  69. ஆஹா அட்டகாசமான அறிவிப்பு சார் ... சாம்பலின் சங்கீதம் பெரிய வெற்றி பெற்று இதுபோன்ற நிறைய கதைகள் வரவேண்டும் ...

    ReplyDelete
  70. *ஒரு கொடூரனும் கடற்கன்னியும்*

    ஒரு கொடூரனும் இரண்டு கடற்கன்னிகளும் தான் பொருத்தமான தலைப்பு என்பேன். டைகர் கதைகளின் சிறப்பே அதன் ஓவியங்கள் தான். அட்டையை புரட்டியவுடன் இருக்கும் army camp படம் கருப்பு வெள்ளையில் என் மனதை கொள்ளை அடித்தது, இதற்கு கலர் அடித்தால் எப்படி இருக்கும் என்று மனம் யோசித்துக் கொண்டே இருந்தது. இந்த புத்தகத்தை நான் ஒரே மூச்சில் படிக்காததால் ஒவ்வொரு முறையும் திறக்கும் பொழுதும் அந்த army camp detailலில் மனம் மயங்கியே கிடந்தேன். அது போலவே போர்க்கள காட்சிகள் அபாரம். மிசிசிப்பியின் கரையோரங்களில் இருக்கும் நகரங்களை குறிக்கும் வரைபடம் போல நாமும் நம் நாட்டை வரைந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தனையில் தொலைந்து போனேன்.

    அடுத்ததாக இந்த கதையில் வரும் கருவிகள். அறிவியல் ஆய்வுகள் அனைத்தும் மனிதனின் நன்மைக்காகவே உருவாகின்றது தான். ஆனால் அது தீமையின் கருவியாகவே பல நேரம் பயன்படுத்தப் படுகிறது. நாம் பயணிக்கும் highways கூட முதன் முதலில் ராணுவம் தங்குதடையின்றி பயணிக்கவே உருவாக்கப்பட்டது என்பது எனக்கு சென்ற வருடம் தான் தெரியும். யுரேனியம் மூலம் அணு மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கூட அணுகுண்டுகளை தயாரிக்கவே. மாறாக தோரியம் மூலம் அணு உலைகளில் மின்சாரம் தயாரித்தால் அணுகுண்டுகளை தேவையான ப்ளூட்டோனியம் கிடைப்பது சிரமம் என்று தோரியம் சார்ந்த அணு உலைகள் உபயோகப்படுத்துவதில்லை. 

    இங்கோ போரை முடிவுக்கு கொண்டு வர தயாரிக்கப்பட்ட ஒரு கேடலிங் துப்பாக்கி எப்படி எண்ணற்ற உயிர்களை கொன்றது என்பது வரலாறு. அந்த துப்பாக்கியை சுற்றி பின்னப்பட்ட ஒரு அபார கதை தான் இந்த கதை.

    கதைக்கு வருவோம். டைகர் கதைகளில் எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் இந்த கதையிலும் இருக்கிறது. ஆனால் சுவாரஸ்யத்துக்கு அதுவே அடிகோலிடுகிறது. நான்கு குழுக்கள் ஒரே பொருளின் மீது கண் வைத்தால் அற்புதம் நிகழும் ஒரு இடியாப்ப சிக்கல் கதைக்கருவை கொண்டு வந்து விட முடியும் என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம். வரலாற்றின் பக்கங்களில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்துக் கொண்டிருக்கும் நிழல்களின் மீது வெளிச்சம் பாய்ச்சினால், அருமையான கதை உருவாக வாய்ப்பு உள்ளது என்பதை இந்த கதை மூலம்  நிரூபணமாகியுள்ளது. 

    பிழைக்கப் பிழைக்க பார்த்துக் கொள்ளலாம் எனும் திட்டம் என்று டைகரின் வாயாலேயே டைகர் கதையின் சாராம்சத்தை கூறியதற்கு வசனகர்த்தாவுக்கு என் வணக்கங்கள். விதி வசம் ஒப்படைத்து கதையை நகர்த்தி, விதி வசத்தால் ஹீரோ வென்று, விதி வசத்தால் சுபம் என்பது எனக்கு ஒவ்வாமையே. ஆனால் அதையும் விறுவிறுப்பாக சொல்லியிருப்பது chanceless. 

    தொடரும் போரை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த பாகத்துக்காக.

    கதை 9/10

    ஓவியம் 11/10

    மேக்கிங் 11/10

    ReplyDelete
    Replies
    1. ///வரலாற்றின் பக்கங்களில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்துக் கொண்டிருக்கும் நிழல்களின் மீது வெளிச்சம் பாய்ச்சினால், அருமையான கதை உருவாக வாய்ப்பு உள்ளது என்பதை இந்த கதை மூலம் நிரூபணமாகியுள்ளது. ///

      உண்மை & அருமை!!👏👏👏💐💐💐

      Delete
    2. //வரலாற்றின் பக்கங்களில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்துக் கொண்டிருக்கும் நிழல்களின் மீது வெளிச்சம் பாய்ச்சினால், அருமையான கதை உருவாக வாய்ப்பு உள்ளது என்பதை இந்த கதை மூலம் நிரூபணமாகியுள்ளது. //

      சூப்பர் சகோதரரே

      Delete
  71. Wow for all announcements. Have made payment for சாம்பலின் சங்கீதம்... waiting for other announcements...one of the memorable Golden period for our comics

    ReplyDelete
  72. மிக சமீபத்தில் நமது நண்பர் கார்த்திகை பாண்டியன் - அவர் பணிபுரிந்த கல்லூரியில் முதல்வராக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்ற தகவலை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்! அவர் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற சரியான பதவி! வாழ்த்துகள் கா. பா ஜி!💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் கார்த்திகை பாண்டியன் சகோ

      Delete
    2. //கா. பா ஜி//

      அரசியலவாதியின் பேர் மெரி கீது 💪💪

      Delete
  73. விண்கல் வேட்டை ;

    காமிக்ஸ் படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே.. உலகில் அதிகம் விற்பனையாகும் காமிக்ஸ் தொடர்களைப்பற்றி படித்ததுண்டு.! அவற்றில் எனக்கு பிரதானமாக தோன்றியவை இரண்டு..! ஒன்று ஆஸ்டெரிக்ஸ் & ஒப்ளிக்ஸ்.. மற்றொன்று டின்டின்..!
    இவையெல்லாம் தமிழில் வருவது என்பது.. பெட்டி பார்னோவௌஸ்கியுடன் கெட் டுகதரில் வாழ்வதற்கு சமம் என்றே நினைத்திருந்தேன்..!

    ஆனால் பெட்டி விசயம் நிஜமாகவில்லை என்றாலும்.. இதோ தமிழ் டின்டின் என் கைகளில்.. அதுவும் நாலாவது ஆல்பம்.! என்றாவது ஒருநாள் பெட்டி கனவும்.. கூடிய விரைவில் மற்ற கனவுகளும் பலிக்கும் என்ற நம்பிக்கையோடு கதைக்குள் போவோம்....

    பூமியை நோக்கி பூமியை விட பெரிதான விண்கல் ஒன்று அசுரவேகத்தில் வந்துகொண்டிருக்கிறது.. அவ்வளவுதான் பூமியே மொத்தமா சாமிகிட்ட போகப்போகுதுன்னு எல்லோரும் கிடுகிடுன்னு நடுங்கிக் கொண்டிருக்கையில்.... வழக்கம் போல விலகிப்போயிடுது..!

    ஏன் விலகிப்போச்சி.. என்ன காரணம்னு பாத்தா.. அது விலகிப்போகலை.. அதோட பயணப்பாதையை கணித்த விலங்காத விஞ்ஞானிகளோட கணக்குதான் தப்புன்னு பின்னாடி தெரியவருது.!

    போறப்போ சும்மா போகாம பெரிய விண்கல் ஒரு சின்ன விண்கல்லை பூமி மேல வீசீட்டு போயிடுது..! அந்தக் விண்கல்லை கைப்பற்ற டின்டின்.. கேப்டன் ஹேடாக் துணையோடு ஒரு குழுவும்.. வில்லன் கோஷ்டி துணையோடு ஒரு குழுவும் தனித்தனி கப்பல்களில் ஆர்டிக் நோக்கி பயணத்தை தொடங்க.. கதையும் கலகலப்பாக தொடங்குகிறது..! விண்கல் என்னவானாது.. யார் அதை கைப்பற்றினார்கள் என்பதே மீதக் கதை..! இதுவரை நான் சொன்னது வெறும் 13 பக்கங்களில் இருப்பதுதான்.. மீதம் 49 பக்கங்களில் நடக்கும் கலகலப்பான. விறுவிறுப்பான சம்பவங்கள்தான் கதையின் பலமே.. எனவே மேலே சொல்லியிருப்பது நோ ஸ்பாய்லர்..!

    விண்கல் பூமியை தாக்கவில்லை என்ற சந்தோசத்தை பத்துபென்னிகளுக்கு சூட மிட்டாய் வாங்கி கொண்டாடும் விஞ்ஞானக்குழு தலைவரிடம் தொடங்கும் காமெடி... அடுத்து கேப்டன் ஹேடாக் உள்ளே நுழைந்ததும் டாப் கியருக்கு மாறுகிறது..!

    ஸ்நோயியின் தனி ஆவர்த்தனம் ஒருபுறமும்.. கேப்டன் ஹேடாக்கின் வசவு கச்சேரி மறுபுறமும் கதையை தொய்வில்லாமல் கொண்டு செல்கின்றன.!

    விஞ்ஞானியாய் இருந்துவிட்டு.. உலகம் அழியப்போகிறது என்று தெரிந்ததும் சித்தம் கலங்கி தத்துவ மேதையாக மாறிவிடும் தீர்க்கதரிசி பிலிப்புலஸ்.. கொஞ்ச நேரமே வந்தாலும் கேப்டன் ஹேடாக்கின் நண்பர் கேப்டன் செஸ்டர்.. கதையினூடே கலகலப்பை ஊட்டும் பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.!

    மெகா சைசும்.. கண்ணை உறுத்தாத வண்ணச் சேர்க்கையும் டின்டின் கதைகளின் ப்ளஸ் பாயிண்ட்ஸ்.. (தமிழில் வசனங்களும் கூடுதல் ப்ளஸ் பாயிண்ட் ) இந்த இதழும் அப்படியே..!

    டின் டின் கதைகள் உலகம் முழுதும் சக்கைபோடு போடுதாம்.. அப்படி இதுல என்னதான் இருக்கு.. மேலோட்டமா பாத்தா ஒண்ணுமே இல்லை.. ஆனா கண்டிப்பா ஏதோ இருக்கு.. ருசியே இல்லாம சும்மா இறங்கிடுமா சோறு..!

    ReplyDelete
    Replies
    1. ///இவையெல்லாம் தமிழில் வருவது என்பது.. பெட்டி பார்னோவௌஸ்கியுடன் கெட் டுகதரில் வாழ்வதற்கு சமம் என்றே நினைத்திருந்தேன்..!///

      😝😝😝

      Delete
    2. //டின் டின் கதைகள் உலகம் முழுதும் சக்கைபோடு போடுதாம்.. அப்படி இதுல என்னதான் இருக்கு.. மேலோட்டமா பாத்தா ஒண்ணுமே இல்லை.. ஆனா கண்டிப்பா ஏதோ இருக்கு.. ருசியே இல்லாம சும்மா இறங்கிடுமா சோறு//

      +9

      Delete
    3. ண்ணா...... அது லிவிங் டுகெதர் 😁😁😁... Not கெட் டூகெதர்!

      Delete
  74. மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். தகவலுக்கு நன்றி ஈ.வி.

    ReplyDelete
    Replies
    1. நெதர்லாந்துல போய் இறங்கிட்டிங்களா பத்து சார்?.. குளிர் வாட்டுகிறதா? கண்களுக்கு கதகதப்பான காட்சிகள் சிக்கினவா? 😝

      Delete
  75. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் கார்த்திகை பாண்டியன் சார் !

    ReplyDelete
  76. Congratulations Karthigai Pandiyan sir, thanks for you and our Edi for bringing these kind of Treasure to Tamil

    ReplyDelete
  77. *இளமை எனும் பூங்காற்று*

    HART என்று இல்லாமல் HEART என்று இருந்திருந்தால் முத்து இதயம் என்று பெயர் சூட்டியிருக்கலாம். பேர்ல் ஹார்ட்டின் இளமை காலங்கள் இந்த கதையில் இல்லாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இருந்தாலும் அது ஒரு குறையாகவும் தெரியவில்லை.

     ஒரு சில விஷயங்களை விளக்கி சொல்லாமல் கதையின் போக்கிலேயே புரிய வைக்க முயற்சித்து இருக்கிறார்கள். முக்கியமாக பேர்லுக்கு துப்பாக்கி தூக்க வேண்டிய ஆசை ஏன் வந்தது, ஆணுக்கு பெண் சளைத்தவள் இல்லை எனும் எண்ணம் ஏன் வந்தது, அவளது கதையை டிராமாவாக போட முடிவு செய்ததன் பின்னணி என்ன என்பதை கதையின் எட்டாம் பக்கத்தில் விளக்கி உள்ளார்கள். ஆனால் முதல் முறை படித்த பொழுது எனக்கு இது புரிபடவில்லை. மீண்டும் முதலில் இருந்து கதையை படித்த பொழுது தான். அட என்று ஆச்சரியப்பட்டு போனேன்.

    பேர்ல் ஹார்ட் ஒரு முதல் கோச்சு வண்டி கொள்ளைக்காரியாக இருந்திருக்கலாம் ஆனால் முதல் பெண்ணிய சிந்தனை துளிர் விட்டவளாக இல்லை என்பதை ஆனீ ஓக்லே எனும் கதாபாத்திரத்தை BUFFALO BILL மூலம் கூறியிருப்பது சிறப்பு. வணமேற்கின் தொலைந்து போன வரலாற்று பக்கங்களில் இது போன்று எண்ணற்ற பெண்கள் இருப்பார்கள் என்று தெரிகிறது.

    ஓவியங்கள் டைகர் கதையின் ஓவியங்களுக்கு TOUGH கொடுக்கும் அளவுக்கு போட்டி போடுகின்றது. கிராண்ட் CANYON அழகிலே மயங்கி இருந்த நம்மை, KANE CREEK பள்ளத்தாக்கும் சளைத்ததல்ல என்று ஓவியங்களால் மிரட்டி விளக்கியிருக்கிறார்கள். 

    பேர்ல் ஹார்ட் கோர்ட்டில் வாதாடும் காட்சி அவளது அறிவுத்திறனை அடிக்கோடிட்டு காட்டுகிறது. கடைசியில் எந்த BUFFALO BILL அவரை சேர்த்துக் கொள்ள முடியாது என்று நிராகரித்தாரோ அவரின் குழுவிலேயே நமது ஹீரோயினின் டிராமா அரங்கேறுவதாக முடித்திருப்பது அருமை.

    என்னடா டெக்ஸ் கதைக்கு விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டு டெக்ஸ் கார்சனை குறிப்பிடாமல் இவ்வளவு எழுதியிருக்க என்று என் மனசாட்சி நச்சரித்தபடி உள்ளது. என்னத்த எழுத இந்த கதைக்கு ஹீரோ பேர்ல் ஹார்ட் தானே என்று சமாதானப்படுத்த முயற்சித்து கொண்டிருக்கிறேன். இது போன்ற கதைகளை அடிக்கடி கொண்டு வாங்க விஜயன் சார். 

    கதை 11/10

    ஓவியம் 11/10

    மேக்கிங் 11/10

    ReplyDelete
    Replies
    1. //இது போன்ற கதைகளை அடிக்கடி கொண்டு வாங்க//

      எப்போவாச்சும் இது போன்ற கதைகளை முயற்சிக்கலாம் சார் ; அடிக்கடி என்பது ஒத்து வராது!

      Delete
  78. *குத்துங்க எசமான் குத்துங்க*

    கரண்டியும் வெள்ளையும் அடிக்கும் இரண்டாவது லூட்டி குத்துங்க எஜமான் குத்துங்க. என்னடா சிகப்பு ரோஜாக்கள் டயலாக் கதை தலைப்பா வச்சிருக்காரே, கதையில் 18+ சமாச்சாரங்கள் இருக்குமோ என்று யோசித்துக் கொண்டே தான் கதையை படிக்க ஆரம்பித்தேன். 18+ என்று குறிப்பிட மறந்து விட்டார்களா அல்லது இதெல்லாம் 18+ சமாச்சாரம் இல்லை என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோமா என்று புரிந்துக் கொள்ள முடியவில்லை. 

    உங்கள் குழந்தைக்கு கார்ட்டூன் புத்தகம் என்று நீங்கள் கொடுக்க நினைத்தால் ஒரு முறை இதை படித்து விட்டு நீங்கள் கொடுக்கலாம் என்று நினைத்தால் மட்டுமே கொடுக்கவும். சில 18+ பூடகமான வார்த்தைகள் அங்கங்கே தூவப்பட்டுள்ளது. சிறுவர்கள் பார்க்கும் நருடோ போன்ற அனிமேக்களில் இருக்கும் 18+ சமாச்சாரங்களை விட இதில் குறைவே இருந்தாலும் நீங்களே அதை முடிவு செய்துக் கொள்ளுங்கள்  

    நகைச்சுவை. வசனங்களே இல்லாத நகைச்சுவை அதிலும் டார்க் காமடி வகையறா கலக்கல் வாசிப்பு என்பேன். நம் கற்பனை குதிரை தறிகெட்டு ஓடி அந்த ஒரு பேனலுக்கு நிமிடத்துக்கு 24 பேனல்களை வைத்து ஒரு ஒளி சித்திரத்தை மனதில் ரசித்து அட அட அட... அந்த முதல் பக்கம். நம் வீதிகளில் உறைந்து நிற்கும் தேசத்தலைவர்கள் மீது இருக்கும் பறவைகளின் எச்சம் ஏன் சுதந்திர தேவி சிலை போன்ற பெரிய சிலைகளில் இல்லை என்று நான் இதுவரை சிந்தித்தது இல்லை. அங்கேயும் பறவைகள் எச்சம் போகும் என்று யோசித்து அதற்கு வசனங்களே இல்லாமல் காட்சிகளை அடுக்கி அந்த காக்கைக்கு ஹீரோ அந்தஸ்து கொடுத்து, அதற்கும் அந்த காக்கை எதையோ சாதித்து விட்டது போல நெஞ்சை நிமிர்த்தி நிற்பதும் ஆஹா. இதுவே இந்த கதையின் கருவை கட்டியம் போட்டு கூறுகிறது. 

    அந்த காக்கை போலவே ஸ்பூன், வைட், பால்கனி, சீ தூ, கோல் மால் என உப்புக்கு சப்பு இல்லாத செயல்களை செய்து மார் தட்டிக் கொள்கிறார்கள் என சகட்டு மேனிக்கு கிண்டலடித்து உள்ளார்கள். 

    இந்த கதையில் என்னென்ன விஷயங்களை நக்கலடித்து உள்ளார்கள் என்பதே ஒரு பெரும் பட்டியல். இப்படி சகட்டு மேனிக்கு கலாய்த்து எடுப்பதையே ஒரு கதையாக பின்னி கொடுத்திருக்கிறார்கள். மணக்கும் மண்பானை சமையல் போன்ற conceptடை கலாய்த்து எடுத்ததற்கே ஒரு சபாஷ். அந்த கிரீன்விச் பிரெஞ்சு fries கடைபோட்டிருக்கும் தம்பியின் கைகளில்  XIII மற்றும் ஆரிசியா பெயரை ஹார்ட்டினில் பச்சை குத்தப்பட்டுள்ளதை நண்பர்கள் கவனித்தீர்களா?

    இப்படி ஒரு மசாலா கதையை தரமாக தந்துள்ளார்கள். ஒரு முறை ரிலாக்ஸாக டைம் பாஸ் பண்ண அருமையான புத்தகம். அடுத்து என்ன லந்து கொடுக்கப் போகிறார்களோ என்று எதிர்பார்ப்பு மீட்டரை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் ஸ்பூன் அண்ட் ஒயிட் 

    கதை 9/10

    ஓவியம் 10/10

    மேக்கிங் 10/10

    ReplyDelete
    Replies
    1. //அடுத்து என்ன லந்து கொடுக்கப் போகிறார்களோ என்று எதிர்பார்ப்பு மீட்டரை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் ஸ்பூன் அண்ட் ஒயிட் //

      அதுவே இந்த ஜோடியின் வெற்றி சார்!

      Delete
  79. இரட்டை வேட்டையர்கள் & ஜான் மாஸ்டர்..
    நீண்ண்ட வருடங்களது ஆசை பூர்த்தியாகும் வேளை.... 🔥🔥🔥😍🔥

    ReplyDelete
  80. வி&கி..
    ப. த. ரா.
    பேய் வீரர்..
    கபிஷ்..
    😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️ஆஹா...

    ReplyDelete
  81. சாம்பலின் சங்கீதம்....

    ஆயிரமாயிரம் சோகங்களைச் சொல்லுகிறதே.. தலைப்பு..!!

    வல்லிய தலைப்பு!

    ReplyDelete
  82. *கனவுலகம் விமர்சனப் போட்டி*
    *தந்தைக்கொரு தியாகம்..*
    *முத்து காமிக்ஸ்*~*மார்ச் 2025*

    அடடைப் பட தலைப்பிலேயே மெய்யெழுத்துகளில் தியாகச் சுடர் எரிவது போல வடிவமைத்திருப்பது கதையின் முழுப் பரிமாணத்தையும் சொல்லிச் செல்கிறது..

    உயிருக்குப் போராடிய நிலையிலே தோர்கலை இழுத்துக் கொண்டு தன் பிள்ளைகளுடன் பயணப்படும் ஆரிஸியா தனது பால்ய நண்பன் அஸ்கார்டைச் சேர்ந்த விக்ரிட்டின் உதவியோடு வடதிசை வைகிங்களின் பூமியான தனது சொந்த கிராமத்திற்கு வந்து சேர்கிறாள்..

    இடையே.. விக்ரிட்டின் ஜாலத்தால் உயிர் பிழைக்கும் தோர்கல் ஓடினின் கோபத்திற்கு ஆளாகிறான்.. தோர்கலை மாய உலகினுள் கடத்த நடக்கும் நிகழ்விலே தந்தையைக் காப்பாற்ற முனையும் ஜோலனும் அந்த மாய உலகினிலே பிரவேசிக்க நேரிடுகிறது..

    தந்தையும், மகனும் திறவுகோல்களின் கார்டியனின் உதவியோடு முடிவேயில்லாத பனிப் பிரதேச பொட்டலில் மாட்டிக் கொள்கிறார்கள்..
    உயிர் உறிஞ்சும் கடுங் குளிரிலிருந்து அந்த பனிப் பிரதேச தடையைத் தகர்த்து வேறொரு உலகினுள் நுழைந்து விடுகிறார்கள்..
    விக்ரிட்டினால் ஏற்கனவே உயிர் பிழைக்க வைக்கப்பட்ட தோர்கலுக்கு இரண்டு நாட்களுக்கு மட்டும் மரணக் கெடு விதிக்கப்படுகிறது.. இரண்டு நாட்களில் இடைப்பட்ட உலகைச் சார்ந்த, அதிசய ஆற்றல் மிக்க மாந்தோர் என்பவனால் தோர்கலின் உயிர்ச் சக்தி மீட்டெடுக்கப்படும் என்ற தகவல் மூலம் மாந்தோரை தேடித் திரிகிறார்கள் தோர்கலும், ஜோலனும்..

    விக்ரிட்டால் தோர்கலுக்கு அணிவிக்கப்பட்ட, ஜாஜியின் கண்ணீர் துளிகளாகக் கருதப்பட்ட வெண்முத்துகள் வெண்மையை இழந்து கருமை நிறத்தை அடைய, அடைய தோர்கலின் மரணம் உறுதி செய்யப்பட்டுக் கொண்டே போகிறது..

    மாந்தோரின் உலகை அடையும் தருவாயில் கிட்டத்தட்ட மரண தேவதை தோர்கலின் கரம் பிடிக்கும் வேளையில், மாந்தோரின் வீரர்களால் மீட்கப்பட்டு, மாளிகைக்கு கொண்டு வரப்படுகிறான் தோர்கல்...

    தந்தையை எப்படியாவது உயிர்ப்பித்துத் தாருங்கள் என்ற ஜோலனின் கோரிக்கைக்கு ஒரு நிபந்தனை முன் வைக்கப்படுகிறது..
    அடுத்து வரும் பௌர்ணமி நிலவு நாளன்று தாயையும், தந்தையையும், உடன் பிறந்தோரையும் பிரிந்து, வரையறை இல்லா காலங்களுக்கு மாந்தோருக்காக கீழ்படிந்தும் நடந்தாக வேண்டும் என்ற நிபந்தனைக்கு ஒத்துக் கொள்கிறான் ஜோலன்..

    *தந்தைக்காக..*
    *தந்தைக்கொரு தியாகம்..*

    என்னவொரு பொருத்தமான தலைப்பு!!

    ஒன்று சேர்ந்த குடும்பத்தை விட்டு அந்த முழு நிலா நாளில் எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்புகிறான் ஜோலன்...

    ஆனாலும் இதைத் தெரிந்து கொள்ளும் தோர்கல் கனத்த இதயத்தோடு மகனை வழியனுப்ப வருகிறான்..

    தந்தையும், மகனும் கட்டிக் கொள்ள..

    நம் மனம் கனத்துப் போய் கிடக்கிறது..

    மாந்தோரை நோக்கி நடந்து போகிறான் ஜோலன்..

    கையறு நிலையிலே விழிகள் நிறைய கண்ணீரோடு மகன் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டு நிற்கிறான் தோர்கல்..

    கடைசிப் பக்க பேனல்களில் நிறைந்து கிடக்கும் இருளும், பனியும் போல ஏதோ ஒன்று நம் அடி மனதைக் கவ்விப் பிசைகிறது...

    அட்டகாச ஓவியங்கள்..
    கிறங்கடிக்கும் வர்ணக் கலவைகள்..
    இதழின் பெரும் சிறப்புகள்..

    ஜோலனின் வருகைக்காக பிரபஞ்ச புதல்வனின் குடும்பம் மட்டுமல்ல..
    நாமுமே காத்திருக்கிறோம் பேராவலோடு..!!

    ~ 𝗚𝘂𝗻𝗮 𝗞𝗮𝗿𝘂𝗿

    ReplyDelete
  83. *காமிக்ஸ் எனும் கனவுலகம்* *சிறப்பு விமர்சனப் போட்டி!*

    *இரவே..*
    *இருளே..*
    *கொல்லாதே..!*

    *லயன் காமிக்ஸ்*
    *வெளியீடு எண்~238*

    அதிக மக்கள் தொகை இல்லாத ஊர் அது..
    ஹாலோவின் திருவிழா காலத்தில் இந்தக் கதை ஆரம்பமாகிறது..

    *அன்று...*

    காதலின் மோக வலையில் வீழ்ந்து போன பெண்ணொருத்தி..

    *மேரி*

    டக்ளஸ் என்ற வஞ்சனின் களியாட்டத்தில் விளைந்தவன் பில்லி என்ற அவலட்சண முகத்தான்..
    டக்ளசுக்கு அவனைப் பிடிக்கவில்லை..
    ஆனால் மேரி அவன் மீது உயிராய் இருக்கிறாள்..
    நான்கு சுவற்றுக்குள் நடந்த உயிர் உருவாக்க வேட்டையை நான்கு பேருக்கு சொல்ல வேண்டும் என விரும்புகிறாள் மேரி..
    பில்லிக்கு டக்ளசின் இன்சியலை சூட்ட பிரியப்படுகிறாள்..

    அதிகார வர்க்க ஆணவத்தில் பிறந்த குழந்தையல்லவா..
    ஏற்க மறுக்கிறான் டக்ளஸ்..
    பணத்தை கொண்டு மேரியின் வாயடைக்கப் பார்க்கிறான்..
    ஆனால் மேரி பிடிவாதமாயிருக்கிறாள்..
    வெறி ஏறிப் போய் பில்லியைக் கொன்று போடுகிறான்..
    பில்லி காணாமல் போனதாக நாடகமாடுகிறான்..
    நம்ப மறுக்கிறாள் மேரி..
    டக்ளஸை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்கிறாள்..
    ஒருஸமுறை குரூரத்தின் உச்சிக்கு செல்லும் டக்ளஸ் மேரியையும் கொன்று போடுகிறான்..
    நண்பர்களின் உதவியோடு இரண்டு படு கொலைகளையும் மூடி மறைக்கிறான்..
    தனது இயல்பு வாழ்க்கைக்கு மாற முயற்சிக்கிறான்..

    *இன்னொரு அன்று..*

    அந்த பில்லியின் உயிர் நண்பன் நோரிஸ்..

    டக்ளசும் அவன் நண்பர்களும் பில்லிக்கு ஹாலோவீன் வேடமிட்டு பழைய அறுவை ஆலையை நோக்கி இட்டுச் செல்வதைப் பார்க்கிறான்..
    பதைக்கும் நெஞ்சோடு பின் தொடர்கிறான்..
    விளையாட்டு வினையாகிறது..
    பில்லியின் அவலட்சண முகத்தை வெறுக்கும் அவர்களில் ஹார்வி பில்லியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான்..
    ஏதும் செய்ய முடியாத கையறு நிலையில் நோரிஸ்..

    பில்லியை மறக்க முடியாத நோரிஸ் பில்லி புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டி சடலத்தை வெளியே எடுக்கிறான்..
    அந்த சடலத்தை தன்னுடனேயே வைத்து பராமரிக்கவும் செய்கிறான்..
    பில்லியைக் கொன்றவர்களின் மீதான ஆத்திரம் தீரவேயில்லை அவனுக்கு..
    ஆனாலும் அந்த வயதில் என்ன செய்திருக்க முடியும்..??
    நாளடைவில் அந்த பழி வாங்கும் உணர்வும் அவனுள் இற்றுப் போகிறது....

    *இன்று..*

    *பெட்ஸி*

    அதிகம் பிரபல்யமடையாத நடிகை அவள்..
    அந்த சிறியதொரு நகரைக் கடந்து கலிபோர்னியோவுக்குப் பயணப்படும் போது அவளது கார் விபத்துக்குள்ளாகிறது..
    மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள்..
    சிறிய சிராய்ப்புகளோடு தப்பித்துக் கொள்கிறாள்..
    விபத்து பற்றிய விசாரணைக்காக அந்த ஊரிலேயே அவள் தங்க நேரிடுகிறது..
    அவளது பிரவேசம் நிகழ்ந்ததிலிருந்து அந்த மர்மமான ஹாலோவீன் படு கொலைகள் ஆரம்பமாகின்றன..

    கூரான ஆயுதம் கொண்டு குரல் வளைகள் குத்திக் கிழிக்கப்படுகின்றது..
    இரவு நேர வன்னிசையாய்...

    🎼🎼*இருட்டில் பூசணிக்காய்கள் விகாரமாக இளிக்கின்றன..
    ஹாலோவின் இரவு இது..
    உங்கள் வீட்டு ஜன்னல்களையும், கதவுகளையும் மூடிக் கொண்டு விடுங்கள்...*🎼🎼

    அந்த சிறிய நகரிலே பெட்ஸியை அடையாளம் கண்டு கொள்கிறான் அவளது தீவிர விசிறியான டோட் என்பவன்..
    முன் நாட்களில் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் தேறி இப்போது நார்மலாக இருப்பவன்..

    அடுத்தடுத்து நடக்கும் கொடூர கொலைகளில் பெட்ஸியின் பங்கும் இருப்பதாக நம்பப்படுகிறது..
    ஏனெனில் பெட்ஸியை தீமையின் உருவமாக பார்க்கிறர்கள்..
    அன்று மேரியைப் பார்த்ததைப் போலவே..
    ஏனெனில் அந்த மேரியின் உருவத்தை அச்சு அசலாக வார்த்த்தெடுத்து வந்திருப்பவள்தான் இந்த பெட்ஸி..
    ஆனால் மேரிக்கும், பெட்ஸிக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை..
    ஆனாலும் கொலையாளி அவளாகவே பாவிக்கப்படுகிறாள்..
    தனது அங்கிளின் சித்ரவதையில் வளர்ந்த பெண் அவள்..
    ஒரு வகையில் அவளும் மனதளவிலே பாதிக்கப்பட்டிருக்கிறாள்..

    ஒவ்வொரு பக்கங்களிலும், ஒவ்வொரு பேனல்களிலும் சித்திரங்கள் அதகளம் செய்திருக்கின்றன..
    லாந்தர் லைட் எபஃக்ட்டும், மிதமான பிங்க், மற்றும் பச்சை நிற வர்ணக் கலவைகளும் கதைக்கு முதுகெலும்பாய் தாங்குகின்றன..

    சூழ்நிலை விளக்க வசனங்கள் ஏதுமில்லாது, கதை நடக்கும் ஒவ்வொரு கால கட்டத்தையும் உணர்ந்து கொண்டு வாசிக்க, வாசிக்க....
    ஒரு அட்டகாசமான ஹாரர்+த்ரில்லர் ரக ஹாலிவுட் மூவியை பிரம்மிப்போடு பார்த்து முடித்த உணர்வு மேலோங்குகிறது..
    145 பக்க மூன்று பாகக் கதையிது..
    இம்மியும் தொய்வு ஏற்படாத பக்கா திரைக்கதை யுக்தி அமைப்பு இதழின் மிகப் பெரிய பலம்.. 🔥🔥🔥

    எனது இரண்டாவது முறை மறு வாசிப்பு இது..
    முதல் முறை வாசிப்பது போன்றே தோன்றுகிறது..
    ஏகப்பட்ட பாத்திரங்கள்..
    சட், சட்டென்று நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்திற்குச் கூட்டிச் செல்வது.. அங்கிருந்து ஒரே பக்கத்திலேயே நிகழ் கால நிகழ்வுகளுக்குள் இழுத்துச் செல்வது என கதாசிரியர் அட்டகாசமான கதையாக்கத்தைக் கையாண்டிருக்கிறார்.. 👌🏻👌🏻👌

    -𝗚𝗨𝗡𝗔 𝗞𝗔𝗥𝗨𝗥

    ReplyDelete
  84. ரஜினியோட பாஷாவும், நாசரோட அவதாரமும், 1995 இல் ஏறக்குறைய ஓரே சமயம் வந்தது.

    இங்கு ரஜினியும் நீங்களே நாசரும் நீங்களே. அதனால். உங்க non-commercial முயற்சிகள் தொடரட்டும்.

    ReplyDelete