Powered By Blogger

Sunday, March 02, 2025

மூப்போடு ஒரு மோதல்!

நண்பர்களே,

வணக்கம். ஜாலியாய் டின்டின், டெக்ஸ், ஆர்ச்சி என்று வெளிவந்திருக்கும் தருணத்தில் இந்தப் பதிவைப் போடலாமா - வேண்டாமா? என்று உள்ளுக்குள் குழப்பம். தவிர, சொந்தச் சிக்கல்கள், நோவுகள் பற்றியெல்லாம் இங்கு எழுதி உங்களையும் சங்கடப்படுத்துவானேன் என்ற தயக்கமும் தான். ஆனால் 'இட்லி சாப்டேன் - இடியாப்பம் சாப்டேன்' என்றெல்லாம் எழுதும் பழக்கம் கொண்ட பின்னே, இதனைப் பகிர்ந்திடாது இருப்பதும் முறையாகாது என்று படுகிறது.

விஷயம் இது தான் folks : 

கடந்த மூன்று வாரங்களாகவே நமது சீனியர் எடிட்டரின் உடல்நலத்தில் கணிசமான சவால்கள்! தொடர்ச்சியாய் ஹாஸ்பிடல் விஜயங்கள் ; சேர்க்கைகள் என்றே வண்டி ஓடி வருகிறது. ஜனவரி இறுதி வரைக்குமே நலமாய் இருந்தவருக்கு, இந்த பிப்ரவரி அத்தனை அனுகூலம் காட்டியிருக்கவில்லை! வயது சார்ந்த பிணிகள் ஒன்றன்பின் ஒன்றாய் ரவுண்டு கட்டி வருகின்றன and இந்தப் பொழுதில் கூட ஹாஸ்பிடலில் தான் ஜாகை! 2 வாரங்களுக்கு முன்னே ராஜபாளயத்தில் மேடையில் பேசும் சமயம் அப்பாவைப் பற்றிப் பேசும் நொடியில் எனக்கு தொண்டை அடைத்துப் போனதன் பின்னணி இதுவே!

To his credit - ஒவ்வொரு பின்னடைவையும், சீனியர் எடிட்டர் தளராது போராடி வருகிறார் தான் - yet மூப்பெனும் படலத்தின் முழுப் பரிமாணங்களையும் பார்க்கும் போது மிரட்டலாக உள்ளது! ஆபத்தான கட்டத்தினை தற்சமயம் தாண்டி விட்டார் & இனி மெதுமெதுவாய் தேறிடுவார் என்ற நம்பிக்கையில் நாட்களை நாங்கள் நகர்த்தி வருகின்றோம்! 

இந்த வேளையில் அவர் நலம் பெற உங்களின் வாழ்த்துக்கள் நிரம்பவே உதவிடும் என்ற நம்பிக்கையில் தான்  கணிசமான யோசனைக்குப் பின்னே இதனை எழுதிடுகிறேன். தடுமாற்றங்களுடன் இன்னமுமே நமது blog பக்கத்தினை பின்தொடர்கிறார் எனும் போது அவர் பெரிதும் நேசிக்கும் உங்களது அன்புகளின் வெளிப்பாடு அவருக்கு நிரம்பவே பலம் சேர்த்திடும் என்பதில் எனக்கு ஐயங்களில்லை! 🙏🙏🙏

And இங்கே ஒரு நாளும் கருத்து கந்தசாமியாய் மாறி அட்வைஸ் பொழிந்திடும் ஜோலியெல்லாம் கூடவே கூடாது என்பதில் தீவிரமாய் இருக்கும் என்னிடமிருந்தே இந்த நொடியில் சின்னதாயொரு அட்வைஸ் guys : 

மூப்பெனும் வாழ்க்கையின் தவிர்க்க இயலா அந்திமக் காலகட்டத்திற்கு, அறுபதையோ - அறுபத்தைந்தையோ தொடும் பொழுதிலிருந்தே மனதளவில் சிறுகச் சிறுக தயாராகிக் கொள்ளல் நலம் போலும்! இந்தத் தயாராகும் படலங்கள் ஆளுக்கு ஆள் மாறுபடலாம் தான் ; but இன்றியமையா சில சமரசங்களை நம் மனங்களில் செய்து கொள்ளல், மூப்போடு நெருடலின்றி ஐக்கியமாகிக் கொள்ள உதவிடும் முதல் படி போலும்! Age is definitely just a number ; ஆனால் அந்த நம்பரோடு சகஜமாய், சௌஜன்யமாய் கைகுலுக்கிக் கொண்டால் நமது வாழ்க்கைப் பயணங்கள் எதிர்பாரா jerks இல்லாத பயணமாக அமைந்திடும் போலும்!

And ப்ளீஸ் - நீங்கள் அம்பானிக்கு உறவுமுறையாய் இல்லாத பட்சத்தில்  நலமாய் இருக்கும். வேளையிலேயே தவறாது health insurance எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் மக்களே!  மருத்துவத் தரம் உயர்ந்திருக்கும் அதே வேகத்தில் இன்றைக்கு அவற்றிற்கான கட்டணங்களும் உயர்ந்துள்ளன எனும் போது இந்தக் காப்பீடுகள் நிரம்பவே அத்தியாவசியம் என்றாகிறது! So அது குறித்து கவனம் ப்ளீஸ் all 🙏🙏

உங்களின் ஞாயிறு காலைகளை சங்கடமூட்டும் சேதியோடு சற்றே ஈரமானவைகளாக்கி உள்ளமைக்கு ரொம்பவே சாரி folks ; இதை நான் எழுதியிருப்பது சரியா, தப்பா - என்று கூட இன்னமும் தெரியவில்லை தான்! யார் வீட்டில் தான் நோவுகளில்லை - சுகவீனங்கள் இல்லை? Yet மூச்சுக்கு முன்னூறுவாட்டி "வாசகக் குடும்பம் " என்று பேசவும், எழுதவும் செய்து விட்டு சீனியர் சார்ந்ததொரு  முக்கிய விஷயத்தினைப் பகிர்ந்திடாது போவது நெருடியது! அதனால் தான் தயக்கத்துடனான இந்தப் பதிவு!

இந்த நொடியில் All is Well... அது தொடர சீனியர் எடிட்டரை உங்கள் பிரார்த்தனைகளில் இருத்திக் கொண்டால் அற்புதம்! Bye all... See you around! Have a safe sunday!



119 comments:

  1. வணக்கம் காமிக்ஸ் உறவுகளே...இனிதே தொடங்கட்டும் மார்ச் மாதம்🔥🥳

    ReplyDelete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. Wishing him fast recovery and healthy life.

    ReplyDelete
  4. சீக்கிரமே சீனியர் எடிட்டரின் உடல்நலம் சரியாகி விடும் சார்❤️

    ReplyDelete
  5. தந்தைக்கொரு தியாகம்,
    வாழ்க்கை ஒரு வட்டம்னு சொல்வது போல தன் பயணத்தை தொடங்கிய கிராமத்திலேயே வந்து முடிக்கிறார் தோர்கல்...

    கதைக்களத்தின் பயணத்தினிடையே ஆங்காங்கே பொறிவைத்தாற்போல ஓர் உணர்வு எழுவது எனக்கு மட்டும்தானா ?!
    கரடி ரூபத்தில் வரும் விக்ரிட்,பறக்கும் படகு,பிரபஞ்ச வானவில்,ஜாஜியின் கண்ணீர்த் துளிகளால் ஆன முத்துக்கள்,திறவுகோல்களின் கார்டியன்,தீய சக்தியில் இருந்து மீட்கும் ஆற்றல் கொண்ட மாந்தோர்,மிட்கார்ட்,அஸ்கார்ட்,நடு உலகம்,சிந்தனையற்ற நிலையில் ஒரு திறப்பு,தங்கத் தண்ணீர்,மாந்தோரின் மாளிகை,தோர்கலைக் காப்பாற்ற மாந்தோரின் பேரம்,மாந்தோரின் காவலாளிகள் கூர்ஷ்,ஹெஸ்ரக் என கதாசிரியரின் கதை சொல்லும் திறனும்,ஊற்றெடுக்கும் கற்பனை ஜாலமும் வியக்க வைக்கிறது...
    கதையின் முடிவு மகிழ்ச்சியையும்,சற்றே கனத்தையும் சேர்ந்தாற்போல அளிக்கிறது...
    ஷான்வான்ஹாமின் இறுதிப் படைப்பில் நட்சத்திரங்களின் நாயகனுக்கு ஓய்வளிக்க முடிவெடுத்து விட்டார் போல,
    இனி ஜோலனின் ராஜ்யம்தானோ ?!
    ஆயுள் முழுக்க ஓடி ஓடி களைத்து விட்ட தோர்கலுக்கு இந்த ஓய்வு தேவைதான்...
    தந்தைக்கொரு தியாகம் இதை விட இக்கதைக்கு பொருத்தமானதொரு தலைப்பை வைத்து விட முடியாதுதான்...
    ஓவியங்கள் அற்புதம்,வர்ணஜாலங்கள் கதைநெடுக விரிகிறது...
    கதையின் அடுத்த சுற்று தொடங்கினால் தொடக்கப்புள்ளியும்,மையப் புள்ளியும் ஜோலனாகத்தான் இருப்பான்...
    அந்த இரு காவலாளிகளிடம் அப்படி என்ன கேள்வியை கேட்டிருப்பான் ஜோலன் ?!
    தந்தைக்கொரு தியாகம் கலவையானதொரு உணர்வுகளைக் கொடுக்கும் வாசிப்பு...

    ReplyDelete
  6. இறைவன் அருளால் சீனியர் எடிட்டர் இன்னும் பல்லாண்டுகள் நலமுடன் நம்மோடு பயணிப்பார் sir...

    ReplyDelete
  7. சீனியர் எடிட்டர் நலம் பெற ப்ரார்த்திக்கிறேன் டியர் எடி ..

    ReplyDelete
  8. senior editor sir will get well soon sir .. our prayers r with u and him .. v ll be eagerly waiting to hear his speech in erode book fair sir ..

    ReplyDelete
  9. நல்லதே நடக்கும்!
    All is well!!
    🙏🙏🙏

    ReplyDelete
  10. சாபம் வாங்கிய சுரங்கம்,
    "மூப்பில் கூனிக் குறுகிப்போன கிழவியின் தண்டுவடத்தைப் போல காட்சி தந்த குன்றுகள்"-அடடே என்ன ஒரு ஒப்பீடு...
    "சூரிய அஸ்தமனத்தின் இரத்தச் சிதறல் போலான வெளிச்சம்"-
    நல்ல வசனம்...

    வில்-" முதலில் கோல்டீனாவில் சுக்கா ரோஸ்ட்,பின் க்ளராவின் ஆப்பிள் கேக்"
    கார்சன்-"நீர் என் இனமய்யா"...
    -நாவில் ஜலம் ஊறவைக்கும் கார்சனின் வசனங்கள்...

    சூப்பர்ஸ்டிஷன் மலைத் தொடர் மர்மம்...
    சாபம் வாங்கிய சுரங்கத்தின் மர்மம்...
    அத்தியாயம்-1 முடிச்சி 2 ஆம் அத்தியாயத்தில் பயணம்...

    அத்தியாயம்-2 முடிச்சாச்சி...
    இடியின் புத்திரர்கள்,தலை வெட்டும் பிசாசுகள்,சிறுவன் அன்ட்ரீஸின் அன்பும்,சிறுவன் குரல் வளம் பெறும் நிகழ்வும், சுரங்கத்தில் நடக்கும் அதிரிபுதிரி சம்பவங்களும்,தொடரும் தோட்டாத் தோரணங்களுமா, அனல்பறக்கும் கதையின் வேகத்துக்கு குறைவில்லை...
    விறுவிறுப்பான கதை நகர்வு அடுத்து என்ன,அடுத்து என்னன்னு நம்மை இழுத்துச் செல்வதுதான் பலம்...

    "இந்த வாழ்க்கையே பேரான்மா வழங்கிய பரிசுதான்,ரொம்பவே அற்புதமானது,அதை வாழ்வது நம் கடமை"-அருமையான வசனம்...
    முடிவு மகிழ்ச்சி,நெகிழ்ச்சி...
    சாபம் வாங்கிய சுரங்கம்-வாசிக்க எடுத்தால் கீழே வைக்க விடாத திரைக்கதை சுரங்கம்...

    ReplyDelete
  11. விரைவில் பூரண நலம் பெற்று சீனியர் எடிட்டர் சார் நம்முடன் எப்போதும் போல பயணிக்க இறைவன் அருள பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  12. நீங்கள் சொல்வதும் சரிதான் டியர் எடி .. தற்போது வருடா வருடம் புல் பேமிலிக்குமே இன்சூரன்ஸ் எடுத்து வருகிறோம் ..

    எங்கள் ஊர் முருகன் குடில் லில் ப்ராத்தனை வைக்கிறேன் டியர் எடி

    நலமுடன் வீடு திரும்புவார் சௌந்திர ராஜன் ஐயா ..

    ஓம் முருகா போற்றி .. ❤❤❤

    ReplyDelete
  13. சீனியர் எடிட்டர் ஐயா அவர்களின் உடல் நிலை நலம் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் எழுந்து வர இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  14. // சீனியர் எடிட்டரை உங்கள் பிரார்த்தனைகளில் இருத்திக் கொண்டால் அற்புதம்! //
    சங்கடமூட்டும் செய்தி,சீனியர் எடிட்டர் விரைவில் நலம்பெற எல்லாம் வல்ல இறையை பிரார்த்திக்கின்றேன் சார்...

    ReplyDelete
  15. சீனியர் எடிட்டர் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எடி

    ReplyDelete
  16. // தடுமாற்றங்களுடன் இன்னமுமே நமது blog பக்கத்தினை பின்தொடர்கிறார் எனும் போது...//
    அவரை உயிர்ப்பாக வைத்திருப்பதே இதுதான் சார்...

    ReplyDelete
  17. எங்களுக்கு இதை விட காமிக்ஸ் பெரிதில்லை சார்,
    கவலை வேண்டாம் சார், இறைவன் அருளுடன் நம் சீனியர் விரைவில் நலமுடன் வருவார்.
    மேலும்
    எங்கள் உணர்வுடன் கலந்தது காமிக்ஸ் எனும்போது, இதை சொல்ல ஏன் தயக்கம் சார்?. யாரும் காமிக்ஸ் பற்றிய செய்தியை மட்டுமே பகிர வேண்டும் என கேக்க மாட்டாங்க. எங்களையும் உங்களவர்களாக எண்ணி இந்த பதிவை போட்டதில் சந்தோஷம். கண்டிப்பாக நம் சீனியர் நலமுடன் வருவார்.
    அனைவரும் ப்ராத்திப்போம் நண்பர்களே.

    ReplyDelete
  18. // தவறாது health insurance எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் மக்களே! //
    அவசியமான குறிப்பு...

    ReplyDelete
  19. சீனியர் எடிட்டர் நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேன்டுகிறேன்

    ReplyDelete
  20. // சீனியர் எடிட்டரை உங்கள் பிரார்த்தனைகளில் இருத்திக் கொண்டால் அற்புதம்! //
    தந்தைக்கொரு தியாகத்தில் தோர்கலார் நலம் பெற்று மீண்டு வந்தது போல,பிரார்த்தனை மற்றும் அன்பும்,ஆசிர்வாதங்கள் வழியே சீனியர் எடிட்டர் மீண்டு வருவராக...

    ReplyDelete
  21. We pray to God for senior Editors speedy recovery sir. We understand your love and affection for him. Definitely our prayers will be a boost for him.....As usual he will come back strongly....

    ReplyDelete
  22. சீனியர் எடிட்டர் நலம் பெற இறைவனை வேண்டுவோம்

    ReplyDelete
  23. சீனியர் எடிட்டர் நலமுடன் இருக்க எங்கள் பிரார்த்தனைகள் ஆசிரியரே

    ReplyDelete
  24. சார் சீனியர் எடிட்டர் சீக்கிரமே உடல் நலம் சரியாகி திரும்ப வருவார். நாங்கள் எப்போதும் உங்களுடன். எங்களது பிரார்த்தனைகளும் உங்களுடன்... Take care sir all will be fine.

    ReplyDelete
  25. 💐💐நம் சீனியர் எடிட்டர் சார்..
    நலமுடன் வருவார்.. 👍

    வரும் ஆகஸ்ட்ல் வாசகர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுவார் 👍🙏

    ஒன்றும் கவலை வேண்டாம் Sir👍

    நம் நாமக்கல் நாயகன் ஆஞ்சநேயரின் அருளால் நல்லதே நடக்கும் சார் 💐💐🙏👍

    ReplyDelete
  26. சீனியர் எடிட்டர் உடல் மற்றும மன வலிமை பெற்று குணமடைய மனமார்ந்த பிரார்த்தனைகள். லயன் 50 ஐ சீனியர் எடிட்டருடன் நாம் கொண்டாடுவோம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  27. விரைவில் குணமடைந்து, அவரது உற்ற நண்பருடன் இந்த வருட நமது ஈரோடு புத்தக விழாவை வழக்கம் போல் சிறப்பிப்பார். உற்சாகமாக வாருங்கள் அய்யா, உங்களுக்காக இத்தனை உறவுகளும் காத்து கொண்டிருக்கிறது

    ReplyDelete
  28. சீனியர் எடிட்டர் நலம் பெற மனமார்ந்த பிரார்த்தனைகள்..🙏🙏🙏

    ReplyDelete
  29. காலை வணக்கம் எடிட்டர் சார்.... சீனியர் எடிட்டர் எங்கள் அனைவருக்குமே...தந்தை ஸ்தானத்தில் இருந்து வருகிறார்..நிச்சயம்..அவர் மீண்டும்..பழைய சுறுசுறுப்போடு தெம்போடும் வருவார்...எல்லாம் வல்ல இந்த பிரபஞ்சம்...நம் தீவிர நம்பிக்கைகளை.. செயல் படுத்தும்...இந்த காமிக்ஸ் குடும்பம்..எப்போதும் உங்களோடு...

    ReplyDelete
  30. எங்கள் வாழ்வில் காமிக்ஸ் தொடங்கி வைத்த சீனியர் ஆசிரியரெ, காமிக்ஸ் ஆர்வம் குறையாமல் இன்றும் எங்களோடு தொடர்பில் இருப்பவர்,
    ஒவ்வொரு வருடமும் ஈரோடு விழாவில் உற்காத்துடன் கலந்து கொள்பவர்

    He is our family

    ReplyDelete
  31. சீனியர் எடிட்டர் ஐயா அவர்கள் பூரண நலம் பெற எனது பிரார்த்தனைகளும்!🙏🙏

    மீண்டு வாருங்கள் சீனியர் சார்.. இன்னும் பல ஈரோடு விழாக்களுக்கு நீங்கள் தலைமை தாங்கவேண்டியத்திருக்கிறது! Lion-50, Muthu-60 போன்ற கொண்டாட்டமான தருணங்கள் நமக்காகக் காத்திருக்கிறது. உங்களது இத்தனை வருட உழைப்பிற்குப் பிறகு மெல்ல மெல்ல இப்போது இளம் தலைமுறையின் கைகளில் காமிக்ஸ் தவழ ஆரம்பித்திருக்கிறது. அது முழுப் பரிமானமெடுத்து விருட்சமாய் வளர்த்து நிற்கும்போது கண்களில் தேங்கிய கண்ணீருடன் அதை நீங்கள் கண்டுக்களிக்க வேண்டாமா? மீண்டு வாருங்கள்.. உங்களோடு அந்த சந்தோச தருணங்களைப் பகிர்ந்துக்கொள்ள நூற்றுக்கணக்கான அன்பு வாசகர்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறோம்... 🙏

    ReplyDelete
    Replies
    1. சீனியர் எடிட்டர் ஸார் கடவுள் அருளால் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார் சார்... 🤝
      நாம் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்வோம்🙏

      Delete
  32. எல்லாம் வல்ல இறைவன் அருளால் சீனியர் எடிட்டர் முத்து காமிக்ஸ் தந்த முத்து பூரண குணமடைந்து இன்னும் பல ஆண்டுகள் நம்மோடு பயணிக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

    ReplyDelete
  33. Your dad will be fine sir. I started the journey with Murphy comics in 70s and was energized in 80s with Lion in my teens. It's been a wonderful ride. All our prayers are with you and your family

    ReplyDelete
  34. சீனியர் எடிட்டர் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்...

    ReplyDelete
  35. சீனியர் எடிட்டர் சாரின் உடல் நலத்திற்கான பிரார்த்தனைகளுடன்...

    ReplyDelete
  36. Our Senior Editor has faced so many ups and downs throughout. He will sail this through too. Hope keeps us moving forward sir. He will definitely comeback hale and healthy.

    ReplyDelete
  37. Dear Sir, சீனியர் எடிட்டர் ஐயா சீக்கிரம் நலம் பெற வேண்டுகிறேன் 🙏🙏🙏!!!

    ReplyDelete
  38. சீனியர் எடிட்டர் சார் நலம் பெற எல்லாம் வல்ல இறை அருளை பிரார்த்திக்கிறோம்..🙏🙏🙏

    ReplyDelete
  39. காமிக்ஸின் தலைமகன் சீக்கிரமே குணமடைந்து வீடு திரும்ப ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

    ReplyDelete
  40. We pray to god for senior editor’s speedy recovery sir .

    ReplyDelete
  41. சீனியர் எடிட்டர் விரைவில் பூரண குணம் அடைய பழனி முருகனை வேண்டி கொள்கிறேன் சார்.
    கண்டிப்பாக அவர் மீண்டும் உற்சாகத்துடன் வாட்சப் குழுவில் பல தகவல்கள் பகிர்ந்து எங்களை மகிழ்விக்க வேண்டும்.

    ReplyDelete
  42. எல்லாம் வல்ல இறைவன் அருளால் சீனியர் எடிட்டர் நலம் பெற்று இல்லம் திரும்புவார் சார். இன்னும் பலபல ஈரோடு விழாக்களுக்கு தலைமை தாங்கி மகிழ்விக்க உள்ளார்.

    நலமுடன் வாருங்கள் சீனியர் எடிட்டர் சார்.

    ReplyDelete
  43. சீனியா ஆசிரியர் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஈரோட்டில் இந்த வருடமும் அவரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  44. மரியாதைக்குரிய சீனியர் எடிட்டர் செளந்திரபாண்டியன் ஐயா விரைவில் உடல்நலம் நலமடைய எல்லாம் வல்ல எம்பெருமான் ஏழுமலையானின் திருவடிகளை வேண்டுகிறேன்...🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  45. வரும் நவம்பரில் ஐயா அவர்கள் சேலம் புத்தக விழாவில் ஸ்பெசல் ரீலீஸ் செய்ய அதனை பெற்று கொண்டு ஐயாவிடம் ஆசிகள் வாங்க ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளோம் ....

    ReplyDelete
  46. எங்களுக்கு என்று ஒரு அழகான உலகை காட்டிய சீனியர் எடிட்டர் விரைவில் நலமடைந்து குணமடைய என்னுடைய மனப்பூர்வமான வேண்டுதல்கள்...

    ReplyDelete
  47. எங்கள் வழிகாட்டி சீனியர் எடிட்டர் விரைவில் உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  48. மரியாதைக்குரிய சீனியர் எடிட்டர் திரு.செளந்திரபாண்டியன் ஐயா அவர்கள் விரைவில் உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன். 🙏🙏🙏🙏

    ReplyDelete
  49. நானும் சீனியர் எடிட்டர் திரு.சௌந்திர பாண்டியன் ஐயாவின் நலம் சீராகிட ப்ரார்த்தனை செய்கிறேன்.. இறையருள் துணை நிற்கட்டும்..

    ReplyDelete
  50. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
    Replies
    1. சீனியர் எடிட்டர் விரைவில் பூரண நலம் பெற்று திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன் சார்.

      Delete
    2. முத்து காமிக்ஸின் பிதாமகரான சீனியர் எடிட்டர் அய்யா எங்கள் அனைவருக்குமே தந்தை போலானவர் சார். அவர் உடல்நலம் குறித்து தகவல் தெரிவிக்க தயக்கம் வேண்டாம்.

      நீங்கள் ஏற்கனவே சொன்னதுதான். லயன் ஈஸ் எ பேமிலி!!

      Delete
    3. //லயன் ஈஸ் எ பேமிலி!!//

      +9

      Delete
  51. உங்கள் தந்தையாரின் உடல்நலம் பற்றிச் சொல்வதில் உங்களுக்கு என்ன தயக்கம்?
    அவர் உங்கள் தந்தையார் மட்டுமல்ல.
    முத்து காமிக்ஸின் தந்தையார்.
    எங்கள் போன்ற வாசகர்களின் மனங்களை மகிழ்வித்த பிதாமகன்.
    எங்கள் எல்லோருடைய பிரார்த்தனையும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்பதுதான்.
    அவர் பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. // உங்கள் தந்தையாரின் உடல்நலம் பற்றிச் சொல்வதில் உங்களுக்கு என்ன தயக்கம்?
      அவர் உங்கள் தந்தையார் மட்டுமல்ல.
      முத்து காமிக்ஸின் தந்தையார்.
      எங்கள் போன்ற வாசகர்களின் மனங்களை மகிழ்வித்த பிதாமகன்.//

      +1

      Delete

  52. சீனியர் எடிட்டர் அவர்கள் நலம் பெற்று நூறாண்டுகள் வாழ எல்லாம் வல்ல இறை அருளை பிரார்த்திக்கின்றேன்...

    Reply

    ReplyDelete
  53. Wishing.. praying...to our Senior Editors recovery

    ReplyDelete
  54. சீனியர் எடிட்டர் அவர்கள் மீண்டும் உறுதியான உடல் நலம் பெற்று திரும்பி வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  55. சீனியர் எடிட்டர் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் சார்..

    ReplyDelete
  56. சீனியர் எடிட்டர் ஐயா அவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  57. சீனியர் எடிட்டர் மிக விரைவில் நலம் பெற்று வருவார்.

    ReplyDelete
  58. சீனியர் எடிட்டர் விரைவில் பூரண நலம் பெற்று திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன் சார். 🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  59. மதிப்பிற்குரிய மூத்த ஆசிரியர் உடல் நலம் பெற இறைவனை வேண்டி கொள்கிறேன்..

    ReplyDelete
  60. அவர் உடல் நலம் பெற்று நமக்கான அன்பளிப்புகளாய் இன்னும் நிறைய புத்தகங்கள் வழங்க தயாராகுவார் எல்லாம் வல்ல ஈசன் அருள் கிடைக்கும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் அய்யா

    ReplyDelete
  61. சீனியர் எடிட்டர் ஐயா
    உடல் நலம் பெற
    இறைவனை வேண்டிக்
    கொள்கிறேன்,

    ReplyDelete
  62. ஐயா அவர்கள் உடல் நலம் பெற இறைவன் தாள் பணிந்து வணங்குகிறேன்.

    ReplyDelete
  63. Editor Sir, சீனியர் எடிட்டர் ஐயா சீக்கிரம் நலம் பெற வேண்டுகிறேன் 🙏🙏🙏!!!

    ReplyDelete
  64. That's saddening news sir. Ageing especially when spouse is not arround can be damning.

    Sincere prayers for Senior Editors recovery sir.

    ReplyDelete
  65. சீனியர் எடிட்டர் விரைவில் பூரண நலம் பெற்று எங்களோடு பயணிக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் ...

    ReplyDelete
  66. எங்கள் குலதெய்வம் வள்ளியரசல் ஸ்ரீ பொன் அழகு நாச்சியம்மன் அருளால் மூத்த ஆசிரியர் அவர்கள் சீக்கிரம் நலம் நலம் பெற்று வருவார்.

    ReplyDelete
  67. விஜயன் சார் நான் கூட என் அப்பாவின் அம்மாவையும் என் அம்மாவின் அம்மாவையும் அவர்களின் அந்திமக்காலத்தில் கிட்ட இருந்து கவனித்துக் கொண்டவன் தான்.
    அவர்களைக் குழந்தையைப் போல பாவித்து பார்த்துக் கொண்டேன். அதனால் மூப்பின் வலி எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆகவே நாமும் மூப்பின் தன்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அது தரும் அசவுகரியங்களையும் நாம் பொறுத்துதான் ஆக வேண்டும்.

    ReplyDelete
  68. சீனியர் எடிட்டர் விரைவில் பூரண நலம் பெற்று திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன் சார்.

    ReplyDelete
  69. சீனியர் எடிட்டர் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  70. சீனியர் எடிட்டர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  71. Dear sir I pray cordially for speedy recovery of our seniorand glow with health and long live blissfully 🙏🙏🙏

    ReplyDelete
  72. நன்றிகள் நண்பர்களே 🙏🙏🙏🙏.. அடுத்த ஒரிரு நாட்களில் சீனியர் எடிட்டர் வீடு திரும்பிடலாம் என்று டாக்டர்கள் சொல்லியுள்ளனர்!! Fingers crossed!

    மெது மெதுவாய் இனி பிசியோதெரபி முயற்சிக்கச் சொல்லியுள்ளனர்! Hoping for the best!

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷம் சார். நல்லதே நடக்கும்.

      Delete
    2. Super super. நல்ல செய்தி.

      Delete
    3. ரொம்ப சந்தோஷம் சார்...🙏🙏

      Delete
    4. நல்ல செய்தி,மகிழ்ச்சி சார்...

      Delete
  73. சீனியர் எடிட்டரின் உடல்நலம் மிக சீக்கிரம் குணமாக எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார் சார்... 🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  74. சீனியர் எடிட்டர் விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் சார் 🙏🙏🙏

    ReplyDelete
  75. we pray GOD.... senior editor will be recovered soon......

    ReplyDelete
  76. எங்களின் எடிட்டர் மனதளவில் வலு நிறைந்தவர்...

    நலமே நிறைக...

    ReplyDelete
  77. We pray to god for the speed recovery of senior editor... Everything will turn out to be good..

    ReplyDelete
  78. He will recover soon sir. May eachanari vinayagar will be with him

    ReplyDelete
  79. During covid, i got scared and took 30lakhs health insurance policy and 2.5cr term insurance policy. It was great because the health insurance covered us for almost 3 lakhs in last 3 years when we had health issues.

    ReplyDelete
  80. சீனியர் எடிட்டர் விரைவில் நலம்பெற மனமாற வேண்டிக் கொள்கிறேன்...

    ReplyDelete
  81. Praying for fast and complete recovery soon.

    ReplyDelete
  82. சீனியர் எடிட்டர் விரைவில் நலம் பெற ஆண்டவனை உளமாற பிரார்த்திக்கிறேன். கவலை வேண்டாம் சார்.

    ReplyDelete
  83. எனக்கும் 60 வயதாகி விட்டதுங்க sir... "முதுமை பழைய நினைவுகளில் வாழ்கிறது " என்று படித்துள்ளேன்... அதையுணர்கிறேன் sir... நமது காமிக்ஸ் வயதை குறைப்பதையும் உணர்கிறேன்..
    அடிக்கடி பழைய நினைவுகளில் ஆழ்ந்தும் விடுகிறேன்.. ஏனோ.. கண்ணீர் வருதுங்க sir... ஏன்னு புரியல.. ❤️❤️🙏🙏...

    ReplyDelete
  84. சீனியர் எடிட்டர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    🙏🙏🙏🙏

    ReplyDelete
  85. அவசியம் தங்கள் அறிவுரையை ஏற்று நடப்பேன் சார். மருத்துவமனையில் நீண்ட காலம் கழித்த அனுபவம் உண்டு சார். நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை சார். மருத்துவ காப்பீடு என்பது இக் காலத்தில் ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்றாகி விட்டது.

    ReplyDelete
  86. 💐😘சீனியர் எடிட்டர் அய்யா🙏

    மீண்டு வாருங்கள் 💐👍
    மீண்டும் வாருங்கள் 👍😘

    பழைய பன்னீர் செல்வமா
    வாருங்கள் 💐👍

    We are waiting.. 💐👍👍😘🥰

    ReplyDelete
  87. *விண்கல் வேட்டை.*

    சென்ற முறை என் நண்பரின் மகன்கள் பெட்டியை பிரிக்கும் நேரத்தில் வந்திருந்ததால் அவர்களிடம் டின்டின் புத்தகங்களை பறிகொடுத்திருந்தேன். இன்று அவர்கள் இல்லாததால் பெட்டியை பிரித்த உடனேயே டின்டின்னை படித்து விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு படித்து முடித்து விட்டேன்.

    முதல் மூன்று புத்தகங்களை போன்றில்லாமல் இதில் நகைச்சுவை குறைவே, ஆனால் ஒரு ஆக்ஷன் படம் பார்த்த திருப்தி. அந்த காலத்தில் அறிவியல் ஆராய்ச்சி குழுவினர் அடித்துக் கொண்டு, புது இடங்களை தேட போட்டி போட்டிக் கொண்டு கிளம்பிய செயல்களை கலாய்த்து எடுக்கவே இந்த கதையை எழுதியுள்ளது போல் உள்ளது.அண்டார்டிக்காவின் தெற்கு முனையை சென்றடைய நடந்த போட்டிக பிரசித்தம் பெற்றவை. அது போல் பல்வேறு போட்டிகள் அறிவியல் ஆய்வுக் குழுவினரிடையே பிரசித்தம். அது மட்டுமன்றி சரக்கடிக்கும் சிங்கங்களின் சங்கம் என்று இனிமேல் சரக்கு அடிக்க மாட்டேன் என்று லூட்டி அடிப்போரையும் கலாய்த்து எடுத்து உள்ளனர்.

    இதில் நகைச்சுவை என்பது நடக்கும் சம்பவங்களில் சொதப்பும் கதாபாத்திரங்களின் வழியே கடத்தப் படுகிறது. முக்கியமாக ஸ்னோவி அடிக்கும் லூட்டிகள் இந்த கதைக்கு உரம் சேர்க்கிறது. 

    இந்த கதை வழியே சில கலாச்சார செய்திகளையும் நம்மால் உணர முடிகிறது. என்ன தான் போட்டியில் ஜெயிக்க வேண்டிய கட்டாயம் இருந்தாலும், சிக்கலில் இருக்கும் கப்பலின் அபயக்குரலை செவிமடுத்தே ஆக வேண்டும் எனும் நாகரீகம் கொண்ட மனிதனாக வாழ்வதே சிறந்தது எனும் செய்தியை கடத்தி இருப்பது சிறப்பு. அதிலும் விளையாடுவது கேடுகெட்ட தனம் என்று கேப்டன் கோபப்படுவது மாலுமிகளின் மனதை படம் பிடித்து காட்டுகிறது.

    ஒரு சில விஷயங்கள் லாஜிக் இல்லாமல் இருந்தாலும், கதையை நகர்த்தி செல்ல துணை புரிவதால் பகடி கதைகளுக்கு கொடுக்கும் அதே exceptionகளை இந்த கதைக்கும் பொருத்தி கடந்து செல்லலாம். ஒரே ஒரு இடத்தில் எழும் சந்தேகத்துக்கு பதில் கிடைக்காமல் உறுத்துவதை கடந்து சென்றால், ஒரு அருமையான ஆக்ஷன் கதையை படித்த திருப்தி உள்ளது.

    கதை 9/10

    ஓவியம் 10/10

    மேக்கிங் 9/10

    ReplyDelete
    Replies
    1. Enormous என்பதற்கு மொக்கை என்று மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. சற்று நேரம் முன்பு தான் நண்பர் பரணி, மொக்கை என்பது பருமன் என்று அர்த்தம் கொள்ளலாம் என்று விளக்கியிருந்தார். நாங்கள் இங்கே வழக்கமாக மொக்கை என்றால் கூர்மையற்ற என்ற பதத்திலேயே உபயோகித்ததால் இந்த சொல்லாடல் இடறியது. ஆகையால் 9 மார்க் கொடுத்திருந்தேன். எனது புரிதலில் உள்ள குழப்பமே காரணம்

      Delete
  88. எங்களது இளவயது கனவுகளின் கர்த்தா மீண்டும் நலம்பெற இறைவனை வேண்டுகிறோம்

    ReplyDelete
  89. *தந்தைக்கொரு தியாகம்*

    சிந்தனை செய்யும் திறன் மாயையை வெல்ல முடியாததாக்குகிறது. சிந்தனையை அறவே வென்று, சிந்தனை செய்யாத நிலையை அடைந்து விட்டால், மாயையை வென்று ஞானத்தை அடைவோம் என்று அத்வைதம் கூறுகிறது. இதனின் ஒரே ஒரு நூலிழையை எடுத்து ஒரு மாயா உலகத்தில் இருந்து மற்றொரு மாயா உலகத்துக்கு செல்ல, சிந்தனை அற்ற ஒரு நிலையை அடைந்து, அதன் மூலம் செல்ல வேண்டிய உலகத்துக்கு செல்கிறான் தோர்கல். phewww...

    இந்த அத்வைதம் philosophy நோர்டிக் mythologyயிலும் உள்ளதா என்று தெரியவில்லை. இப்படி ஏகத்துக்கும் ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட கதை, ஒரு வழியாக அதன் துவக்க கதாசிரியரின் கைகளில் இருந்து விடை பெறுகிறது. இது வரை வந்த கதைகளில் உள்ள விட்ட குறை தொட்ட குறை அனைத்தையும் ஒரு வழியாக அவசரம் அவசரமாக முடித்து  இருந்தாலும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் கதை இனிதே முடிந்தது. இனியும் தோர்கலின் நிம்மதி தேடி அலையும் பயணம் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்பதே நிம்மதியாக இருக்கிறது..

    முதல் கதைக்கும் கடைசி கதைக்கும் உள்ள ஓவியங்களில் தான் எவ்வளவு வித்தியாசங்கள். இந்த கதையில் உள்ள ஓவியங்களின் BRUSH STROKES பின்னி பெடலெடுக்கிறது. அரிசியா பிரிக் தேவதையிடம் மன்றாடும் காட்சியில் முகத்தின் closeup மற்றும் கடைசி பேனலில் தோர்கல் அழுதபடியே ஜோலனை பார்க்கும் closeup காட்சிகள் என்னை கவர்ந்தது. 

    புதிர்களும் அதை அவிழ்க்கும் மர்மங்களும் தோர்கல் கதைகளின் ஆதாரம் அதே போன்று பழைய விடுகதையில் ஒன்றை இந்த கதையில் பயன்படுத்தி ஜோலனும் தோர்களும் மிடிகார்டுக்கு திரும்ப வருகிறார்கள். ஜோலன் அந்த காவலாளிகளிடம் என்ன கேள்வி கேட்டிருந்தால் சரியான கதவை கண்டுபிடிக்க முடிந்தது எனும் புதிருக்கு கூகிளில் தேடி பதிலை கண்டுபிடித்து விட்டேன். நீங்களும் அந்த பதிலை கண்டுபிடியுங்கள். செம சுவாரசியமாக இருக்கிறது. 

    அந்த புதிரின் மூலம் சில கேள்விகளுக்கான பதில்கள் சாதாரணமாகவே இருக்கும் என்பதும் இதற்காக ரொம்ப யோசிக்க கூடாது என்பதையும் கூறி, நிம்மதியை தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை அது நீ இருக்கும் இடத்திலேயே தான் இருக்கிறது என்று முடித்திருப்பது கச்சிதமான முடிவுரை.

    ஜோலனின் கதை துவங்கப் போவதை காண தோர்கல் காத்திருப்பது போல வாசகர்களாகிய நாமும் காத்திருக்கிறோம். 

    கதை 9/10

    ஓவியம் 11/10

    மேக்கிங் 10/10

    ReplyDelete