நண்பர்களே,
வணக்கம்.திக்குமுக்காடச் செய்ததொரு தினத்தின் அந்திமத்தில் இதனை எழுத முற்படுகிறேன் folks.....! And எப்போதும் போலவே இந்தா இருக்கிற மவுண்ட் ரோடு போவதற்கு - எண்ணூர் போய், வண்ணாரப்பேட்டை சுற்றி, அம்பத்தூர் வழியா மாம்பலம் போயி, அப்பாலிக்கா மவுண்ட் ரோடை எட்டிப் பிடிக்கவே டைப்படிக்கும் விரல்கள் இழுத்துப் போகின்றன! சொல்ல நினைப்பதை சுருக்கமாய், நேரடியாய்ச் சொல்ல நமக்குத் தான் ஒரு நாளும் தீராதே!
இன்றைய ஊர்,உலக வழக்கப்படி எங்க குடும்பத்திற்குமொரு வாட்சப் க்ரூப் உண்டு & நண்டு, சிண்டு முதற்கொண்டு அத்தினி பேருமே அதனில் ஐக்கியம். யாருக்கேனும் பொறந்த நாள் வந்திடும் பட்சத்தில் - கைக்கு சிக்கின கேக் எமோஜிக்களை எல்லாம் நம்ம உம்மாலக்கடி ஜம்பிங் தலக்கு ஈடா அள்ளித் தெளிச்ச கையோடு, அவரவர் மாமூல் வாழ்க்கைகளுக்குத் திரும்பிடுவது வாடிக்கை.
But நமக்குன்னு பொறந்த நாள் நெருங்க நெருங்க - லைட்டா ஒரு பீதி அலையடிப்பதுண்டு! "குரூப்ல நம்ம பர்த்டேயை ஒட்டுமொத்தமா அல்லாருமே மறந்துப்புட்டா என்னாவறது? ரொம்ப பப்பி ஷேம் ஆகிடுமோ?" என்று முதல் நாள் ராவில் தோணும்! மறு நாளோ - "ஆத்துக்கார அம்மிணிக்கே நினைவு இருக்கா மாதிரி தெரிய காணோமே? நாளைக்கும் புளிக்குழம்பு வைக்கப் போறதா தானே பேசிட்டிருந்தாள்?" என்ற திகில் தாண்டாவமாடும்.
'என்னமோ போடா மாதவா'.... என்றபடிக்கே சேவல் கூவுறதுக்கு முன்னமே எழுந்து உட்கார்ந்து, செல்லை நோண்டிப்பார்த்தால் - லோகமே தன்போக்குக்கு உறங்கிக் கொண்டிருப்பது போலிருக்கும் - ஒரு சுடுகுஞ்சி கூட பொறந்தநாள் வாழ்த்து சொல்லியிருக்காது!
"ஆங். Wishes சொல்லிட்டாலும் அப்டியே இந்த வயசில கிளு கிளுன்னு புடுங்கி நட்டிடப் போறோமோ? அதே குப்பையை... அதே கூடையில் இன்னிக்கும் கொட்டப் போறோம்.... விடு விடு!" என்று பல்லத் தேய்க்க கோல்கேட்டை பிதுக்க ஆரம்பிக்கும் நொடியில் புலியாங்.. புலியாங்... என்று போன் சிணுங்கும் ஓசை கேட்கும். "இல்லியே... நேக்கு இதிலேல்லாம் பெருசா ஈடுபாடோ - எதிர்பார்ப்போ இல்லியே!!" என்றபடிக்கே போனுக்குள் போனால் - பார்த்தாலே சுகரை 500-க்கு ஏற்றும் அளவுக்கு கேக் + சாக்லேட் படங்களை போட்டு "வாழ்த்துக்கள் பெரிப்பா.... மாம்ஸ்.... மாம்ப்பா..." என்று க்ரீட்டிங்ஸ் கிடக்கும்! 'ரைட்டு... நம்மளை இன்னும் காலாவதியான க்ரோஸின் பாட்டில் ரேஞ்சுக்கு நகர்த்தியிருக்கலை! புழைச்சோம்!" என்றபடிக்கே ஷவரை தொறக்கும் போது SPB பாட்டுக்கள் அருவியாய் உள்ளுக்குள் பெருக்கெடுக்கும்!
எஞ்சி இருக்க நாலு மxxகளை ஒரு கர்ச்சீப்பால் துவட்டிட்டு சாப்பிட உட்காரும் போது, டேபிளில் கொஞ்சம் கேசரியை பார்த்தால் - ஜேசுதாசே தொண்டைக்கு குடிபெயர்ந்த குஷி விரவிடும்!! "தப்பிச்சேன்.... அம்மிணிக்கும் மறக்கலை!" என்றபடியே தட்டில் பல்லிளிக்கும் உப்மாவை கூட களிப்போடு விழுங்கும் நொடியினில் அந்தப் பிறந்தநாள்ப் பொழுது பூர்ணம் அடைந்திருக்கும்!
எனக்கு - இன்று அதிகாலை பொழுது துவங்கியது மிகச் சரியாக இவ்விதம் தான்!
Of course - ப்ளாக் பக்கமாப் போனால் ஒரு பத்துப் பதினைந்து நண்பர்களின் வாழ்த்துக்கள் நிச்சயம் இருந்திடும்! நன்றி சொன்ன கையோடு FB பக்கமாப் போனால் அங்குமொரு பத்துப் பதினைந்து அன்புப் பதிவுகள் இருந்திடுமென்று தெரியும்! So உப்மாவை ஏப்பமிட்ட கையோடு ரெண்டுக்குள்ளும் புகுந்தால் - ஊஹும்! வெட்டவெளியாய், காற்றோட்டமாய், காலியாய் கிடந்தன! "ரைட்டு... கொஞ்ச நேரம் கழிச்சு வராமப் போகாது ; அதுவரைக்கும் மார்ட்டின் இருக்க பயமேன்? " என்றபடிக்கே பணிகளுக்குள் புகுந்திட முயற்சித்தேன்! But nopes.... வேலைக்குள் ஐக்கியமாக மிடிலே!
"நம்ம பெருசாய் சென்டிமெண்ட் பார்க்கும் பேர்வழியெல்லாம் கிடையாதே...இன்னிக்கி மட்டும் வண்டி ஏன் இப்படி மக்கர் பண்ணுது?" என்று என்னை நானே வினவிடும் பொழுது தான் மனசு ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தந்தது! இத்தனை காலமாய் நம்பர்களாய் கடந்த அகவைகள் - இன்று 58-ல்.... அரசு ஊழியர்களின் ஓய்வு தருணத்தில் வந்து நிற்பது ஏனோ உள்ளுக்குள் லைட்டாக ஒரு பிசைதலை உருவாக்கிடுவது தான் காரணம் என்பது புரிந்தது! "மாப்பு.... இன்னா தான் சொக்காயை இன்சர்ட் பண்ணிக்கினு, மார்க்கண்டேய அவதார் எடுக்க முற்பட்டாலும், நீ சீனியர் சிட்டிசன்டியேய்!" என்று உள்மனசு செய்திடும் பிரகடனமே இன்றைக்கு போடும் மொக்கைகளின் பின்னணி என்று உணர முடிந்தது! "ரிட்டயர் ஆகணும், ஒய்வா இருக்கணும்" என்ற கனவுகள் எல்லாமே நிஜமாகிடும் நொடி தொடும் அண்மைக்கு நெருங்கும் போது பேஸ்மென்ட் இந்த மாதிரி டான்ஸ் ஆடும் என்பதை சத்தியமாய் நான் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தான் bottomline!
ஆட்டம் கண்ட இந்த நொடியில் கிட்டிடக் கூடிய அன்பானது, பன்மடங்கு precious என்பதும் புரிந்தது! And maybe எனது இந்த நெருடல் உங்களையும் எட்டியதோ - என்னவோ : boy.. oh.. boy.... காலையில் ஒரு ஏழே முக்காலுக்கு துவங்கிய வாழ்த்துக்களின் பிரவாகம் நண்பகலைக் கடந்தும் ஒய்ந்த பாடில்லை!
தனிச்செய்திகளில், இங்கு நமது கம்யூனிட்டியில், FB-ல் ; பிளாக்கில் என்று இன்றைய ஒற்றைப் பொழுதில் மட்டுமே எனக்குக் கிட்டிய வாழ்த்துக்கள் + அன்பு - இந்த ஒட்டுமொத்த ஆயுட்கால அகவைகளிலுமே நான் பெற்றிராதது!! எங்கெங்கிருந்தெல்லாமோ.... வித விதமாய்.. போட்டோக்களாய்... வீடியோக்களாய்... சிம்பிளான வாழ்த்துக்களாய்.... கவித்துவமான வரிகளாய்.. நெகிழச் செய்யும் உணர்வுகளாய் இன்று நான் உணர்ந்த அன்பானது - ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பைக் காட்டிலும் விலைமதிப்பற்றது என்பேன்!!
ABSOLUTELY STAGGERED FOLKS 🙏🙏🙏🙏🙏
Oh yes. அந்தி சாயும் நேரத்துக்குள்ளாறவே - "ஹாட்லைன் எழுதணும்.... மார்ட்டின் முடிஞ்சதா..? இந்த ரூபின் ராப்பர் டிசைன் ஓகேவா? கருணையானந்தம் அங்கிளுக்கு எழுத எதை அனுப்புறது? இந்த மாசத்துக்கு பேப்பர் வாங்கணும்டோய்!" என்ற ரீதியிலான யதார்த்தங்கள் - என்னை மறுக்கா தரையில் திடமாய் காலூன்றச் செய்து விட்டன and நார்மல் சர்வீஸ் is back -up & running!! இதோ டின்டின் ஒருபக்கம் - மார்ட்டின் இன்னொரு பக்கம் - டெக்ஸ் எடிட்டிங் என்று வழக்கம் போலவே கூத்துக்கள் ஆரம்பிச்சூ!!
But ஒரு விண்ணில் மிதக்கும் பகல் பொழுதின் அனுபவம் என்னோடு நெடுங்காலத்துக்குப் பயணிக்கும் - for sure!!
இந்த எல்லைகளில்லா அன்புக்கும், நேசத்துக்கும், எதிர்பார்ப்பில்லா உற்சாகங்களுக்கும் கரம் கூப்பிய நன்றிகள் all!! உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் எனது கஜானாவின் பொக்கிஷங்கள் & இந்த நொடியில் அது நிரம்பி வழிகிறது!!
Thank you all... from the bottom of my ஹார்ட் 🙏🙏🙏
வணக்கம் சார் 🙏
ReplyDelete❤️💐
ReplyDeleteஆசிரியரின் பிறந்தநாள்.. இதழ் எதுவும் உண்டுங்களா எஜமான் 🏃🏃🏃🏃🏃🏃
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள் எடிட்டர் சார் 💐❣️
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஎதிர் பாரா புதிய பதிவு
ReplyDeleteவணக்கம் எடிட்டர் சார் & நண்பர்களே
ReplyDeleteஇதோ வந்துட்டேன்
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் 💐❣️
ReplyDelete10th
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார்.
ReplyDelete🎂🎁💐🌹🎊🎆🎉🌈💥🎇🍰
எங்கள் காமிக்ஸ் மார்க்கண்டேயரை
ReplyDeleteபல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டுகள்
வாழ வாழ்த்துகிறேன் 💐💐💐🙏😘😘😘🥰😘🥰😘
ஆமா ஜம்பிங் தல
Deleteஇன்னும் பல்லாண்டுக் காலம் வாழ்ந்து எங்களையும் வாழ்விஹ்ட்க்கு மகிழ்ந்து மகிவிக்க பிரார்த்தனைகள் சார்..!
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆசிரியர் சார்
ReplyDelete@ALL : நண்பர்களே, அன்புக்கு மீண்டும் நன்றிகள்.... 🙏🙏... பொழுதும் நகர்ந்து விட்டது!
ReplyDeleteSo let's get on with life! "சாம்பலின் சங்கீதம் " முன்பதிவு 150-ஐ தாண்டியாச்சு 🔥🔥
மகிழ்ச்சியான செய்தி சார்.
Deleteநானும் மே மாத ஆன்லைன் மேளாவிற்கு பின்னர் ஜோதியில் ஐக்கியமாயிடறேன்.
🔥🔥🔥
Deleteமகிழ்ச்சி சார். 👌
Delete16th
ReplyDeleteகுட் நியூஸ் : நம்ம 'உம்மாலக்கடி' ஜம்பிங் தல - புரமோஷனில் விழுப்புரம் கோயிங் 👍👍👍👍!! வாழ்த்துக்கள் ஸாகோர் சாய் பாபு சார் 💪💪!!
ReplyDeleteவாழ்த்துக்கள் பாபு சார்
Deleteவாழ்த்துகள்...
Deleteவாழ்த்துக்கள் பாபு சார்.
Deleteவாழ்த்துக்கள் சார்...
DeleteThis comment has been removed by the author.
Deleteநல்ல பெயர் உம்மாலக்கடி - சிவகாசி குசும்பு சார்
DeleteSuper sir. Real feelings. Once more, wish you many more happy returns of the day sir. Stay blessed.
ReplyDeleteYou are like Rajinikanth ( not in age sir)...on seeing Thalaivar in screen, we can not measure the amount of happiness we feel. Similarly you are bringing happiness to us, whenever we see your writings, announcements, blog etc.,
Long live Sir...God be with you always
Very well Said Sir.
Deleteஏதாவது ஒரு மே மேளா கதை அட்டய கண்ல பிறந்தநாள் பரிசாக காட்டவா மே சார்
ReplyDeleteநன்றி சார். 🙏🏻
ReplyDeleteஆசிரியரே பிறந்தநாள் ஸ்பெஷல் எதுவுமில்லையா
ReplyDelete///ரைட்டு... நம்மளை இன்னும் காலாவதியான க்ரோஸின் பாட்டில் ரேஞ்சுக்கு நகர்த்தியிருக்கலை! புழைச்சோம்!" ///
ReplyDelete😂😂😂😂😂 இதுமாதிரியான மேற்கோள்களை எங்கேர்ந்து சார் புடிக்கறீங்க?
///புழைச்சோம்! என்றபடிக்கே ஷவரை தொறக்கும் போது SPB பாட்டுக்கள் அருவியாய் உள்ளுக்குள் பெருக்கெடுக்கும்! ///
ReplyDeleteசார் நம்ம அடுத்த வாசகர் சந்திப்புல நீங்க மேடையில் பாடறீங்க.. நாங்கல்லாம் கேட்டு கிறுகிறுத்துப் போய் நிக்கறோம் - சரிதானுங்களே? 😍😍🫠🫠🫠
ஒருவேளை.. ஷவர் இருந்தாதான் பாட்டு வரும்னா.. மேடையிலேயே ஒரு ஷவர் செட்அப் ரெடி பண்ணிடலாம். 😝
இயவரசரரே 😂😂😂😂😂
Delete🤣
DeleteMany more happy returns of the day Edi sir. 💐💐💐💐💐
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐💐
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஎன்னுடைய காமிக்ஸ் வாசிப்பில் நிஜ ஹீரோ நீங்கள் தான் சார்...
ReplyDelete//ஒரு விண்ணில் மிதக்கும் பகல் பொழுதின் அனுபவம் என்னோடு நெடுங்காலத்துக்குப் பயணிக்கும்//
ReplyDelete💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
நல்லா இருங்க ஐயா❤️❤️❤️
ReplyDeleteசார் ஆன்லைன் புத்தக விழாவில் வெளிவரும் புத்தகங்கள் பற்றிய அறிவிப்பு எப்போது சார்?
ReplyDeleteஇப்போதைக்கு
Delete1.டெக்ஸ்-350
2. டைலன் -150
அந்த 200 ரூபாய் புத்தகம் என்ன சார்?
காரில் பயணம் செய்யும் கருப்பு வெள்ளை கதை + மற்றும் ஒரு கதை 🤔
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஜயன் சார்
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்...!
ReplyDeleteநீங்கள் என்றும் மார்க்கண்டேயர் தான் சார்....
ReplyDeleteஎங்கள் வாழ்த்தும் அன்பும் என்றும் தங்கள் கூடவே...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆசிரியரே🌷
ReplyDelete// காலாவதியான க்ரோஸின் பாட்டில் //
ReplyDeleteROFL 😂
Happy birthday and wishing many more returns, Sir!! 🎆🎆🎆
ReplyDelete**** விண்கல் வேட்டை ****
ReplyDeleteசுமார் 25 வருடங்களுக்கு முன்பு ஈரோட்டில் ஒரு பழைய புத்தக கடையில் இதன் ஆங்கில பதிப்பை சல்லீசு ரேட்டில் வாங்கி நான் படித்த முதல் டின்டின் கதை இந்தக் கதைதான்! அந்த புத்தகத்தின் பெரிய சைஸ் வடிவமைப்பும், தரமான தாள்களும், நேர்த்தியான வண்ணங்களும், விறுவிறுப்பான கதை அமைப்பும் கண்டு அன்றைய நாட்களில் கிட்டத்தட்ட மிரண்டு போய் கிடந்தேன் என்பது தான் உண்மை! (அப்போதைய காலகட்டத்தில் நமது லயன் முத்து காமிக்ஸின் பேப்பர் தரம் நாமெல்லாம் அறிந்தது தானே.. ஹி ஹி 😁). ' இதே கதையை இதே தரத்தில் நமது லயன் முத்து காமிக்ஸ்சில் என்றாவது ஒருநாள் படிப்போமா' என்று ஒரு மினி சூறாவளியை உருவாக்கும் அளவுக்கு நான் ஏக்கப் பெருமூச்சு விட்ட நாட்களவை!
இதோ.. இதோ.. இன்று அதே பெரிய சைஸில், அதே தரமான பேப்பரில், அதே அட்டைப் படத்தோடு, அதே அழகிய வண்ணங்களோடு, அதே விறுவிறுப்பான கதையை நம் எடிட்டரின் மொழிபெயர்ப்பில், நம் அழகு தமிழில் அதை படிக்கும்போது ஏற்படும் பரவசத்திற்கு அளவே இல்லை! 'ஓராயிரம் பன்னு பாக்கெட்டுகள் உச்சந்தலையில் விழ' நேர்ந்ததைப் போன்றதொரு சந்தோசம் அனுபவம் இது! 😍😍😍🥰🥰
இத்தனை தரத்திலான இந்த புத்தகத்தை இதை விடவும் குறைவான விலையில் உலகத்தில் வேறு எங்காவது - யாராவது வாங்கிக் காட்டினால் - அவர்களுக்கு ஆயிரம் சம்சா பரிசளிக்க நான் ரெடி!
அன்றைய என் சூறாவளி காற்றை இன்று இதமான தென்றலாக மாற்றிய எடிட்டர் சமூகத்திற்கு எனது நன்றிகளும், மானசீக பூங்கொத்துக்களும்! 💐💐🙏🥰🥰
இப்படிக்கு:
இளவரசர்
C/o பணிப்பெண்கள்
அந்தப்புரம்.
செம்ம EV என்ன ஒரு விமர்சனம்
DeleteDanks KS☺️🙏😇
Deleteசூப்பர் சூப்பர்
Deleteபெயர்,இ.சி. உள்ள ஈ ரோடு இளவரசர் என்றல்லவா இருக்க வேண்டும்.
ReplyDeleteராஜசேகரன் ஜி.. பத்து பணிப்பெண்கள் புடைசூழ இருக்கும்போது 'இரக்க சிந்தை'யா இருக்கும் ஒரு இளவரசருக்கு?😝 யோசிங்க ஜி!☺️
Deleteஇளவரசர்ஜி. நான் பொதுவா சொன்னேன்.
ReplyDeleteதந்தைக்கொரு தியாகம்...!... - மார்ச் 2025
ReplyDeleteபிரபஞ்சத்தின் புதல்வன் தோர்கல் தொடரின் முதல் சுற்று முடிவடைகிறது. 2வது சுற்றுக்கு வாய்ப்பில்லை அல்லது மிக குறைவான வாய்ப்புகளே என்ற சோக கீதங்களுடனான பின்னணியில் தான், எனக்கு மிகவும் பிடித்தமான தோர்கலின் இந்த மாத ஆல்பமான தந்தைக்கொரு தியாகத்தை கையில் எடுத்தேன்.
தலைப்பு போலவே இந்த கதையில், தந்தையான தோர்கலை விட தனையனான ஜோலனே வழிநடத்திச் செல்கிறான். அடுத்து வரும் இரண்டாம் சுற்று ஜோலனுக்கு மிகப்பெரும் பாத்திரங்களை வைத்திருக்கிறது என்பது என்னுடைய அனுமானம்.
கடந்த பாகமான க்றிஸ் ஆப் வல்நார் கதையின் இறுதியில், குற்றுயிரும் குலை உயிருமாக தப்பித்து வரும் தோர்கல் மற்றும் அவருடைய குடும்பத்தினர், அவருக்கு இருக்கும் வியாதியால் விரைவிலேயே அவருடைய உயிர் போய் விடும் என்பதை அறிந்து மிகவும் நொந்து போய் இருக்கிறார்கள். உள்ளூர் வாசிகளிடம் உணவும் அடைக்கலமும் கேட்டு ஏற்படும் உரசலில் மாட்டிக்கொள்ளும் ஆரிசியாவும், ஜோலனும், அவர்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கும் நல்ல சின்ன தேவனான விக்ரிட்டின் வருகையினால் ஊக்கம் பெறுகிறார்கள்.
ஜாஜியின் கண்ணீர் துளிகளால் ஆன 2 முத்துக்கள் மூலமாக, 2 நாட்களுக்கு மட்டும் தன்னுடைய பலத்தைப் பெறும் தோர்கல், ஓடினின் கோபத்தினால் எல்லையில்லாப் பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு உலகிற்குள் ஜோலனுடன் சேர்த்து ஈர்க்கப்படுகிறார். அதே வேளையில் ஆரிசியா, ஓநாய்க்குட்டி மாற்றும் கடைக்குட்டி அனியல் ஆகியோரை அவளுடைய பூர்வீக இடமான வடதிசை வைகிங்குகளின் இடத்திற்கு கொண்டு சேர்க்க உதவுகிறார் விக்ரிட்.
ஒரு வழியாக ஆரிஸியா செட்டில் ஆக, ஜோலன், தோர்கல் ஜோடியினர் கார்டியன்களை எதிர்கொண்டு, தோர்கலின் நோய் தீர்க்க உதவும் இடம் மாந்தோர் வசிக்கும் இடைநிலை உலகம் என்பதை அறிந்து கொள்கிறார்கள். அந்த இடைநிலை உலகில் நுழைவதற்கான திறவுகோல் ஜோலன் என்றுங்கார்டியன் சொல்லி மறைய,அவ அங்கிருக்கும் வேறொரு நுழைவாயில் வழியாக பனி படர்ந்த வேறொரு இடத்திற்கு வந்து சேருகிறார்கள் தந்தையும், தனையனும். அங்கிருந்து ஜோலனின் மூலமாக மாந்தோரின் இடைநிலை உலகத்திற்குள் நுழைகிறார்கள் தோர்கலும், ஜோலனும்.
பொன்னிற நீரின் வழிகாட்டுதல் மூலமாக மாந்தோரின் இருப்பிடத்தை அடையும் தோர்கல், அங்கு வசிக்கும் ராட்சச கடல் நண்டுகள், ஆமைகளிடம் மாட்டிக்கொண்டு விட, இந்த முறையும் விகிரிட்டின் உதவியுடன் அங்கே வரும் ஜோலன் தந்தையைக் காக்கிறான். ஜாஜியின் 2 முத்துக்களும் கிட்டத்தட்ட முழுமையாக கருப்பாகி விட, மூர்ச்சையாகி கிடக்கும் தோர்கலை விட்டு விட்டு மாந்தோரை சந்திக்க தனியாக செல்கிறான் ஜோலன்.
ஜோலனை சந்திக்கும் மாந்தோர், தந்தையின் உயிருக்கு ஈடாக தன்னிடம் பல ஆண்டுகளுக்கு கைகட்டி சேவகம் புரிய வேண்டும் என்று கேட்கிறார். தந்தைக்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கும் ஜோலன் இதை ஏற்றுக் கொள்ளவும் தோர்கல் மீண்டும் உயிருடன் வருகிறார்.
இந்தக் கதையைப் பொருத்தவரை தந்தையை விட மகனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தந்தையின் உயிரைக் காப்பாற்ற எத்தனை இன்னல்களையும் மன உறுதியுடன் புத்திசாலித்தனத்துடன் எதிர்கொள்கிறார் ஜோலன். எல்லையில்லா பிரபஞ்சத்தை நோக்கி தோர்கல் ஈர்க்கப்படும் போதும், ஒரிஜினல் கார்டியன் யார் என கண்டறியும் போதும், ராட்சசன் கடல் விலங்குகளிடம் மாட்டிக் கொண்ட தோர்கலை, குறி பார்த்து அம்பை எய்து காப்பாற்றும் போதிலும், இறுதியாக இந்த அத்தனை விஷயங்களுக்கும் சிகரம் வைத்தார் போல கூர்ஷ் மற்றும் ஹெஸ்ரக் உடன் ஒரே ஒரு கேள்வியை கேட்டு சரியான கதவை கண்டுபிடித்து வெளியில் வரும்போதும் ஜோலன் நம்மை அள்ளிக் கொள்கிறார். அது என்ன கேள்வியாக இருக்கும்?
இந்தக் கதையைப் படிக்கும் ஒவ்வொருவரும், பூமி - எல்லையில்லா பிரபஞ்சத்தில் உள்ள ஒரு உலகம் - கார்டியன்களின் உலகம் - பனி படர்ந்த உலகம் - மாந்தோரின் இரட்டை நிலவு உலகம் - பூமி என எல்லா உலகங்களுக்கும் உட்கார்ந்த இடத்திலிருந்தே விசிட் அடிக்க முடியும். கதாசிரியர் வான்ஹாம்மேவும், ஓவியர் ரோசின்ஸ்கியும் போட்டி போட்டுக் கொண்டு நம்மை குஷிப்படுத்தியுள்ளார்கள்.
விற்பனை ரீதியாக தோர்கல் தொடர் ஏன் சாதிக்கவில்லை என்பதை ஆய்வு செய்வதை விட, இதுவரை வந்த கதைகளை படித்து மகிழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
சென்று வாருங்கள் தோர்கல்...!*
அருமையான விமர்சனம். பாராட்டுக்கள்
Deleteஎன்னவொரு தெளிவான எழுத்து நடை!! செம விமர்ச்சனம் 👏👏👏💐💐💐
DeleteHappy Happy birthday editor sir... May God bless you...
ReplyDeleteDiscoverpoo .சார். வழக்கம்போல அருமையான விமர்சனம்.பாராட்டுக்கள்
ReplyDelete