Powered By Blogger

Sunday, March 02, 2025

மூப்போடு ஒரு மோதல்!

நண்பர்களே,

வணக்கம். ஜாலியாய் டின்டின், டெக்ஸ், ஆர்ச்சி என்று வெளிவந்திருக்கும் தருணத்தில் இந்தப் பதிவைப் போடலாமா - வேண்டாமா? என்று உள்ளுக்குள் குழப்பம். தவிர, சொந்தச் சிக்கல்கள், நோவுகள் பற்றியெல்லாம் இங்கு எழுதி உங்களையும் சங்கடப்படுத்துவானேன் என்ற தயக்கமும் தான். ஆனால் 'இட்லி சாப்டேன் - இடியாப்பம் சாப்டேன்' என்றெல்லாம் எழுதும் பழக்கம் கொண்ட பின்னே, இதனைப் பகிர்ந்திடாது இருப்பதும் முறையாகாது என்று படுகிறது.

விஷயம் இது தான் folks : 

கடந்த மூன்று வாரங்களாகவே நமது சீனியர் எடிட்டரின் உடல்நலத்தில் கணிசமான சவால்கள்! தொடர்ச்சியாய் ஹாஸ்பிடல் விஜயங்கள் ; சேர்க்கைகள் என்றே வண்டி ஓடி வருகிறது. ஜனவரி இறுதி வரைக்குமே நலமாய் இருந்தவருக்கு, இந்த பிப்ரவரி அத்தனை அனுகூலம் காட்டியிருக்கவில்லை! வயது சார்ந்த பிணிகள் ஒன்றன்பின் ஒன்றாய் ரவுண்டு கட்டி வருகின்றன and இந்தப் பொழுதில் கூட ஹாஸ்பிடலில் தான் ஜாகை! 2 வாரங்களுக்கு முன்னே ராஜபாளயத்தில் மேடையில் பேசும் சமயம் அப்பாவைப் பற்றிப் பேசும் நொடியில் எனக்கு தொண்டை அடைத்துப் போனதன் பின்னணி இதுவே!

To his credit - ஒவ்வொரு பின்னடைவையும், சீனியர் எடிட்டர் தளராது போராடி வருகிறார் தான் - yet மூப்பெனும் படலத்தின் முழுப் பரிமாணங்களையும் பார்க்கும் போது மிரட்டலாக உள்ளது! ஆபத்தான கட்டத்தினை தற்சமயம் தாண்டி விட்டார் & இனி மெதுமெதுவாய் தேறிடுவார் என்ற நம்பிக்கையில் நாட்களை நாங்கள் நகர்த்தி வருகின்றோம்! 

இந்த வேளையில் அவர் நலம் பெற உங்களின் வாழ்த்துக்கள் நிரம்பவே உதவிடும் என்ற நம்பிக்கையில் தான்  கணிசமான யோசனைக்குப் பின்னே இதனை எழுதிடுகிறேன். தடுமாற்றங்களுடன் இன்னமுமே நமது blog பக்கத்தினை பின்தொடர்கிறார் எனும் போது அவர் பெரிதும் நேசிக்கும் உங்களது அன்புகளின் வெளிப்பாடு அவருக்கு நிரம்பவே பலம் சேர்த்திடும் என்பதில் எனக்கு ஐயங்களில்லை! 🙏🙏🙏

And இங்கே ஒரு நாளும் கருத்து கந்தசாமியாய் மாறி அட்வைஸ் பொழிந்திடும் ஜோலியெல்லாம் கூடவே கூடாது என்பதில் தீவிரமாய் இருக்கும் என்னிடமிருந்தே இந்த நொடியில் சின்னதாயொரு அட்வைஸ் guys : 

மூப்பெனும் வாழ்க்கையின் தவிர்க்க இயலா அந்திமக் காலகட்டத்திற்கு, அறுபதையோ - அறுபத்தைந்தையோ தொடும் பொழுதிலிருந்தே மனதளவில் சிறுகச் சிறுக தயாராகிக் கொள்ளல் நலம் போலும்! இந்தத் தயாராகும் படலங்கள் ஆளுக்கு ஆள் மாறுபடலாம் தான் ; but இன்றியமையா சில சமரசங்களை நம் மனங்களில் செய்து கொள்ளல், மூப்போடு நெருடலின்றி ஐக்கியமாகிக் கொள்ள உதவிடும் முதல் படி போலும்! Age is definitely just a number ; ஆனால் அந்த நம்பரோடு சகஜமாய், சௌஜன்யமாய் கைகுலுக்கிக் கொண்டால் நமது வாழ்க்கைப் பயணங்கள் எதிர்பாரா jerks இல்லாத பயணமாக அமைந்திடும் போலும்!

And ப்ளீஸ் - நீங்கள் அம்பானிக்கு உறவுமுறையாய் இல்லாத பட்சத்தில்  நலமாய் இருக்கும். வேளையிலேயே தவறாது health insurance எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் மக்களே!  மருத்துவத் தரம் உயர்ந்திருக்கும் அதே வேகத்தில் இன்றைக்கு அவற்றிற்கான கட்டணங்களும் உயர்ந்துள்ளன எனும் போது இந்தக் காப்பீடுகள் நிரம்பவே அத்தியாவசியம் என்றாகிறது! So அது குறித்து கவனம் ப்ளீஸ் all 🙏🙏

உங்களின் ஞாயிறு காலைகளை சங்கடமூட்டும் சேதியோடு சற்றே ஈரமானவைகளாக்கி உள்ளமைக்கு ரொம்பவே சாரி folks ; இதை நான் எழுதியிருப்பது சரியா, தப்பா - என்று கூட இன்னமும் தெரியவில்லை தான்! யார் வீட்டில் தான் நோவுகளில்லை - சுகவீனங்கள் இல்லை? Yet மூச்சுக்கு முன்னூறுவாட்டி "வாசகக் குடும்பம் " என்று பேசவும், எழுதவும் செய்து விட்டு சீனியர் சார்ந்ததொரு  முக்கிய விஷயத்தினைப் பகிர்ந்திடாது போவது நெருடியது! அதனால் தான் தயக்கத்துடனான இந்தப் பதிவு!

இந்த நொடியில் All is Well... அது தொடர சீனியர் எடிட்டரை உங்கள் பிரார்த்தனைகளில் இருத்திக் கொண்டால் அற்புதம்! Bye all... See you around! Have a safe sunday!