நண்பர்களே,
வணக்கம். அனைவருக்கும் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! நலமும், வளமும், சந்தோஷமும் இல்லமெங்கும் மிளிரட்டும் இந்நன்னாளில் !!
சந்தோஷங்கள் பொங்கிட வேண்டியதொரு தீப ஒளி நாளில், தமிழகத்தின் ஒரு சிறுநகர மூலையில் ஒரு ஜீவ மரணப் போராட்டம் அரங்கேறி வருவது நெஞ்சைப் பிசைகிறது ! பிரபஞ்சத்திலுள்ள அத்தனை கடவுளர்க்கும் கைகூப்புவோம் : சிறுவன் சுர்ஜித் நலமாய் மீண்டு, துடித்துத் தவிக்கும் பெற்றோருக்கு தீர்க்காயுசான பிள்ளையாய் வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டி !! புகைப்படத்தில் புன்னகைக்கும் அந்தப் பிள்ளையை பூமியின் பாதாளத்துக்குள் புதைய அனுமதித்த அந்த மடைமைக்கு வேறெந்த தண்டனையேனும் ஆண்டவன் தந்து விட்டுப் போகட்டும் - அந்த மழலையின் ஆயுளை மட்டும் காவாய்க் கேட்டிடாது !!
எத்தனையோ அதிசயங்கள் நிகழ்கின்றன நித்தமும் ; அதனில் இன்னொரு அசாத்திய அத்தியாயமாக இதனை நடத்திக் காட்ட பெரும் தேவன் மனிடோவை கேட்போமே நாமெல்லாம் ? நல்ல செய்தியோடு பொழுது விடியுமென்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன் guys !! ஒரு அதிசயக் காலையாகப் புலரின் இங்கும் அதைக் கொண்டாடி மகிழ்வோம் !
Take care ....have a safe Diwali all !!
Hi
ReplyDelete2
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்.
ReplyDelete4... இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
ReplyDeleteஆசிரியர், லயன் டீம், வாசகர்கள் மற்றும் அனைவரின் குடும்பத்தாருக்கும் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்.
ReplyDeleteசிறுவன் சுர்ஜித்தின் நலம் குறித்தும் அண்ணன் ATR ன் நலம் குறித்தும் மனமார்ந்த பிரார்த்தனைகள்.
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்!!
ReplyDeleteHappy Diwali sir and to all friends..,
ReplyDeleteஇனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!
ReplyDelete9th
ReplyDeleteஇனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஆசிரியருக்கும் காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDelete13th
ReplyDeleteWish you happy Deepavali🧨🧨🧨🧨🎇🎆🎇🎆🧨🧨🧨🧨
ReplyDeleteசீனியர் எடிட்டர், எடிட்டர், ஜூனியர் எடிட்டருக்கும்,அவர்களது குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete������������������
தீபாவளி நல்வாழ்த்துகள்
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஹேப்பீ தீபாவளி.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ☺☺☺
ReplyDeleteஅனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிறுவன் சுர்ஜித் நலமுடன் மீண்டு வர ஆண்டவன் அருள் புரிவாராக.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! அனைவரது வாழ்விலும், மனதிலும் மத்தாப்பூ போல மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கட்டும்!
ReplyDeleteதளத்தோட 'தல' , தளபதி மற்றும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆசிரியர் ,அவர்தம் குடும்பத்தினர் ,அவர்தம் பணியாளர்கள் அனைவருக்கும் ,இங்கே வருகை தரும் அனைத்து நண்பர்கள் ,அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும்
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்..
அந்த அருமை சிறுவனும் ,திரு ஏடிஆர் சார் அவர்களும் பூரண நலம் பெற மனமார்ந்த பிரார்தனைகள்...
ஆசிரியர் அவர்தம் குடும்பத்தார், பணியாள நண்பர்கள்,மற்றும் நமது நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்
ReplyDeleteசிறுவன் மீண்டுவர எல்லாம் தரவல்ல செந்தூர் முருகன வேண்டுகிறேன்,,,
ReplyDeleteகாமிக்ஸ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. 🙏🏼🙏🏼🙏🏼
ReplyDelete// எத்தனையோ அதிசயங்கள் நிகழ்கின்றன நித்தமும் ; அதனில் இன்னொரு அசாத்திய அத்தியாயமாக இதனை நடத்திக் காட்ட பெரும் தேவன் மனிடோவை கேட்போமே நாமெல்லாம் ? நல்ல செய்தியோடு பொழுது விடியுமென்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன் guys !! ஒரு அதிசயக் காலையாகப் புலரின் இங்கும் அதைக் கொண்டாடி மகிழ்வோம் ! //
ReplyDeleteஎல்லாம் வல்ல இறைவன் துணையிருக்கட்டும் 🙏🏼🙏🏼🙏🏼
.
ReplyDeleteசீனியர் எடிட்டர், எடிட்டர், ஜூனியர் எடிட்டருக்கும்,அவர்களது குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
நலமும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் துணையிருக்கட்டும் 🙏🏼🙏🏼🙏🏼
.
தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள். நண்பர்கள் அனைவருக்கும்.
ReplyDeleteஆசிரியர் அவர்தம் குடும்பத்தார், பணியாள நண்பர்கள் மற்றும் நமது நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஆசிரியர்,அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.......
ReplyDeleteHappy Diwali..
ReplyDeleteகாமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்!
ReplyDelete
ReplyDeleteகிர்பியை கொண்டுவந்ததிற்கு நன்றி!
காரிகனும் கொண்டுவர ஏதாவது செய்யுங்கள்.
ப்ளுகோட்டடு பட்டாளம் எனக்கு சரிபடுவதில்லை
விலையில்லா இதழ்கள் மூன்று சந்தா கட்டினாலும் உண்டா?
37th
ReplyDeleteதிரு. ATR அவர்களின் உடல்நிலை குறித்த தகவல் வருத்தத்தையும் ஏற்படுத்தினாலும், அவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடுதிரும்பியிருப்பது மகிழ்சியை ஏற்படுத்தியிருக்கிறது!
ReplyDeleteசற்றுமுன்பு அவரது பின்னூட்டத்தைப் படித்தபோது, நசுங்கிய சிவகாசி பன்னுக்கு உதாரணமாக நகைக்கடை திறப்புவிழா கூட்டத்தில் சிக்கிய நயன்தாராவை குறிப்பிட்டிருந்தது குபுக் சிரிப்பை ஏற்படுத்தியது! இந்த உண்மையான ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு!!
குழந்தை சுர்ஜித்துக்காக பிரார்த்திக்கிறேன்! _/\_
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்....
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்....
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துகள்!!
ReplyDeleteஅனைவருக்கு . ....... ..,ம் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஆசிரியர் அவர்களுக்கு 2019 அட்டவணைகள் உடன் வெளிவந்த statbankof காமிக்ஸ் தான் திவாலா
ReplyDeleteசிறுவன் சுஜித் - தை நல முடன் மீட்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteசாரி சார் ,
ReplyDeleteஅட்டவணையை உள்வாங்கிக் கொண்டு பதிவு போடுவதற்குள் Load More - ஆகி விடுகிறது.
அட்டவணையில் A- B - C - E. Maxi - எல்லாம் பெரியதொரு எதிர்பார்ப்பு + சஸ்பென்ஸ் இல்லாமல் கடந்து சென்றன.
சந்தா D_பற்றி தான் பெரியதொரு ஆர்வம் இருந்தது. நீங்கள் இடை இடையே கேட்ட கேள்விகள். ஒரு சின்ன யூகம் , ஒரு சின்ன ஆலோசனை இருந்தாலும் சொல்லத் தயக்கம் இருந்தது. ஆனால் எங்கள் மனதைப் படித்தறிந்தது போல் தாங்கள் அறிவித்திருப்பது நிச்சயம் உங்களால் மட்டுமே செய்ய இயலும் ஒரு முயற்சி. சிலவேளைகளில் குண்டு புக் - காகஅறிவுக்கும் போது கால் கட்டை விரலை வாயில் நுழைப்பதாக சொல்வீர்களே. அது போன்ற முயற்சி. நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பி _ வாழ்த்துகிறேன்.
லயன் தீபாவளி மலர் 2019- என் அபிமான ஹூரோக்களின் பங்களிப்பில் அமைந்தனர். பழைய மாதிரி ஒரு தீபாவளி மலரை கொடுத்தற்கு நன்றி.i
ReplyDeleteஅடுத்த ஆண்டும் 2020-யில் இதே கூட்டணியை எதிர்பார்த்ததில் ஒரு ஏமாற்றம் .ஜூலியா -வை கழட்டி விட்டு விட்டீகளே. ஏ ஏ ஏ ஏ ஏ.. ன்?i (மனோரமா - ஸ்டைலில் வாசிக்கவும். நீங்கள் சிவாஜி ஸ்டைலில் பதில் சொல்லாமல்) சந்தா Dயில் தில்லானுக்கு Uதில் இணைக்க முயிற்சி செய்யுங்களேன்.
பச்சிளம் குழந்தை பத்திரமாய் மீட்கப்பட இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
ReplyDeleteநல்ல செய்தி கிடைத்தவுடன்,இறைவனுக்கு நன்றி செலுத்தி, நூறு ஏழைகளுக்கு உணவளிக்க நேர்ச்சை செய்துள்ளோம்.
தீபாவளி மலரில் டெக்ஸ் முடித்தாகிவிட்டது. அக்மார்க் டெக்ஸ் சாகசம்.
ReplyDeleteவருடா வருடம் குண்டு டெக்ஸ் கதைகளை தீபாவளி மலராக படித்து வந்த்தால் என்னவோ இந்த வருட டெக்ஸ் கதை உடனே முடிந்த மாதிரி ஒரு பீலிங்...
இனிமேல் தீபாவளி மலரை டெக்ஸ்க்கு என்றே ஒதுக்கலாம் (சர்வமும் நானே போல)
மற்ற தீபாவளி மலர் கதைகள் நாளை....
மொத்தம் 7 கதைகள்.
ReplyDeleteகிளிப்டன் 9/10
ஷெல்டன் 9/10
இப்போது தீபாவளி மலர் பற்றி
இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்ன வென்றால் மிகவும் எதிர் பார்த்த டெக்ஸ் மற்றும் மார்டினை விட இரண்டாம் நிலை ஆட்டக்காரர்கள் Dylan Julia மற்றும் ராபின் அசத்தி விட்டார்கள்.
அதுவும் Dylan dog தான் என்னை பொறுத்த வரை இந்த சூப்பர் ஸ்டார் சும்மா அசத்தி விட்டார். அந்த சற்றும் எதிர் பாரா கிளைமாக்ஸ். 10/10
ஜூலியா சற்றும் சோடை போகவில்லை. மனித மனதின் மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் இது போன்ற கதைகள் மிக அழகு இதிலுமே சற்றும் எதிர்பாராத முடிவு. இதற்கும் 10/10.
ராபின் எப்போதும் போலவே நல்ல ரேஸி த்ரில்லர் சரியான chase ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை. நமது தீய பழக்கங்கள் எந்த அளவுக்கு நம்மை மட்டும் அல்ல நம்மை சார்ந்த வர்களையும் எப்படி பாதிக்கிறது என்பது. ஆங்கில படம் பார்த்தது போலவே இருந்தது. 9/10
மார்டின் எப்போதுமே ஏமாற்றுவது இல்லை. A very good read. இந்த கதையில் எப்போதும் போலவே மார்டின் துணை கதாபாத்திரத்தில் வர அந்த பாட் சும்மா அசத்தி விட்டாள். 8/10
டெக்ஸ் ஒன்றும் மோசம் இல்லை. ஆனால் வழக்கமான டெக்ஸ் சாகசத்தை எதிர் பார்த்து ஏமாந்து விடாதீர்கள். 7/10 .
மொத்தத்தில் இந்த மாதம் ஹிட் தான். இந்த கதைகளை விட தங்களின் மொழி பெயர்ப்பு தான் டாப் கிளாஸ்.
இம்மாத கதைகள் அனைத்தையும் படித்து முடித்து விட்டேன் இம்மாதம் எனது தரவரிசை இதோ
ReplyDeleteஒன்று விடுமுறையில் கொல்.
இரண்டு சிஐடி ராபின். பக்கத்துக்குப் பக்கம் திருப்பம்.
மூன்று கவித்துவமான ஜூலியா.
4 மர்ம மனிதன் மார்டின் MIB
கடைசியாக டெக்ஸ் வில்லர்.
டெக்ஸ் வில்லர் எத்தனை முறை இதே வழிமுறையை கடைபிடித்து தப்பித்து இருப்பார்?
This comment has been removed by the author.
Deleteதீபாவளி மலர் - ராபின்: அருமையான கதை தேர்வு. ஒரு ஹாலிவுட் ஆக்சன் மூவி பார்த்தை போலவே ஒரு பீலிங்... இது போன்ற ராபின் கதைகளை தாராளமாக வெளியிடலாம்...
ReplyDeleteசந்தாவை பார்த்ததில் டைகர் கதையில் அப்பாச்சே கதைக்கு இன்னும் இடம் ஒதுக்கப்படவில்லை. அதனை ஆண்டு சந்தாவில் அல்லது வேறு ஏதேனும் வகையில் வெளியிட செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteசர்க்கஸ் சாகசம்
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று முதல் பக்கத்தில் டெக்ஸ் கார்சன் ஆறிப் பௌன காப்பியை குடிக்கிறார்களோ..
கதையும் ரொம்ப சாதாரணமாக உள்ளது.மனதிலேயே ஒட்டவில்லை.
டெக்ஸ் கதைகளில் டெக்ஸ்டை தவிர்த்து ஒரு கேரக்டர் அதிகம் பேரை கொன்றது இந்தக் கதையில் தான்.
ரெம்ப ரெம்ப அல்பமான ரோஸ் வில்லியாம்.சர்க்கஸ் ஓனர் பென் செய்மோரின் மனைவி.இவர் ஒரு கிளாஸ் மற்றும் ஒரு பாட்டிலை உடைத்து வில்லி என காட்டப்படுகிறார்.மேஜிஸியன் வொண்டர் பில், துப்பாக்கி வீரன் ப்ளாக் ஜிம் , ரிங் மாஸ்டர் லியோ ,குள்ளன் ஜோ சர்வ சாதாரணமாக பேங்குகளை கொள்ளையடித்து விட்டு ஆற்றின் வழியாக படகில் தப்பி கரடிகூண்டுக்கு கீழே படகையே மறைத்து வைத்து விடுகிறார்கள்.பெரிய லாஜிக் மைனஸ்.
பேட்மெக்ரயன் ஆஜானுபாகுவாக இருந்தும் ஒன்றும் குத்தவில்லை யாரையும்.
அட்டைப்படத்தில் காட்டப்பட்டிருந்த செவ்விந்தியர்களை எதிர்பார்த்திருந்தால் ஏமாந்து போவீர்கள்.மருந்துக்குகூட ஒரு செவ்விந்தியனும் இல்லை.
பணப்புழக்கம் குறைவான இந்த தீபாவளியைப் போலவே சர்க்கஸ் சாகசமும் மோசம்.
அந்த டெக்ஸ் டச் இல்லை.
கார்சன் இருக்கிறாரா என்றே தெரியவில்லை...
மொத்தத்தில் ஊத்திக்கிடுச்சு....
6/10.
அந்த முதல் பக்க டெக்ஸ்-கார்சன் வித் காபி மக் போஸ்டரும் கூட ரிபீட் தான்.
Deleteஅண்ணா என் இவளோ tension aagitinga. 😜
Deleteபிகில்
Deleteஜே @ போன மாத கதையில் கூட டெக்ஸ் & கார்சன் கெஸ்ட் ரோல் தான். ஆனால் கதையில் அந்த மெக்சிகோ கொள்ளை கூட்டம் மற்றும் ஜெயில் அதிகாரி (/கர்னல்) அமர்க்களம் செய்து விட்டார்கள்.
Deleteஅது படிக்க பிடிச்சது பரணி.
Deleteஇது ஏண்டா படிச்சோம்னு ஆச்சுது...
குமாரு....
Deleteமேல நீங்களும் புலம்பீருந்தீங்க தான...
அச்சச்சோ ஏன் இப்படி?
Deleteஅறந்தாங்கி இளங்காளை டெக்ஸ் சர்க்கஸ் படிச்சிட்டாரா....
Delete'Best of Bonelli' என்ற அடையாளத்துடன் வந்திருக்கும் இந்தத் தீபாவளி மலரின் கதையொன்னு 'ஊத்திக்கிடுச்சு' என்று விமர்சனம் கொடுக்குமளவுக்கு தரம் குறைவாக இருக்க வாய்ப்பிருக்காது என்பதே எண்ணம்! அதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தக் கதையை முதலில் படிக்கும் ஆவல் எழுகிறது!
Deleteபடிச்சுட்டு வரேன்!
சீனியர் எடிட்டர், எடிட்டர், ஜூனியர் எடிட்டருக்கும்,அவர்களது குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteகுழந்தை சுர்ஜித் நலமுடன் மீண்டு வர ஆண்டவன் அருள் புரிவாராக...
பிரார்த்தனைகளுடன்...
விடுமுறையில் கொல் 9/10..
ReplyDeleteஷெல்டன் 8.5/10
ReplyDeleteநான் படித்த கதை டயலன் டாக்,,,,,கதை அட்டகாசம், ,,,அனல் பறக்கும் வேகத்தில் பின் தொடர அந்தக் கொலைகாரன் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார், ,,,வசனங்களும் அருமை,,,,சிறந்த படைப்பாளிகளுக்குத் திருப்தியே ஏற்படுவதில்லை, ,,,,ஆகச்சிறந்தது இதுதான் என்ற திருப்தி எப்போதுமே ஏற்படப்போவதில்லை,,ஆனால் சரியான திசையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் அர்த்தம் பொதிந்தது, ,,,என ஒவ்வோரடிகளும் பாடம் நடத்த நாம நல்லதுக்கு பொருத்திப் பார்த்தாலும் அதே பதில்,,,கோஸ்ட் துப்பறிவாளர் என காட்டும் கதை,,,,டயலன் தேர்வை முழு ஈடுபாடில்லாமல்தான் ஆதரித்தேன்,,,,இத படிச்சதும் மீண்டும் அடுத்த இதழுக்காக காத்திருக்கிறேன், ,,,,ஒரே குறை வண்ணத்ல வந்திருக்கலாம்,,,,பாதையெங்கும் விடாது கருப்பு என கருப்பு அப்பியுள்ளது!
ReplyDeleteடயலனின் படிக்காத கடைசி இருகதைகள படிக்கப் போறேன்
Deleteநமது காமிக்ஸின் வந்த டயலான் டயாக்கின் கடைசி இரண்டு கதைகள் உண்மையில் அருமையான கதைகள்.
Deleteஇருந்தாலும் நாமளும் தீபாவளி கண்ணோட்டத்ல இருக்கனுஙறதால கிளிப்டனா ஷெல்டனான்னு யோசிக்கிறல தம்பி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமார்டின்...
ReplyDeleteம்யூட்டண்ட்ஸ்....
விநோதப் பிறவிகள்.
அந்த எக்ஸ்ட்ராஸம் பவர்ஸ் இவங்களுக்கு மட்டும் எப்படின்னு - நமது காமிக்ஸ் மண்ணின் மாமேதை செ அ விளங்குவார்கள்.
குரோமோசோம் உட்கன்டன்ட்ஸால மட்டும் டிஎன்ஏ வும் ஆர்என்ஏ வும் வித்தியாசமான குணாதிசயங்கள தரமுடியுமா...
அதுசரி மொத மியூடண்ட் கல்கத்தால பறக்குறாரு.
அந்த மொட்டை தலை மியூடண்ட்டுக்கு டேமேஜானதெல்லாம் தானா புதுப்பிச்சிக்கிது...(நமக்கு அந்த பவர் இருந்தா முக்கிய!யமானத புதுப்பிச்சிக்கலாம் ஹிஹ்ஹி)
இன்னொரு மண்டவீங்கி மியூடண்ட்டோ உக்காந்த எடத்துல இருந்தே இன்னோர்த்தரோட எண்ணங்களை இயக்குவார்.
டோக்கியோ ஜப்பானிய பெண் மியூடண்ட்டோ எண்ணங்களால் ரோபோக்கள இயக்குறார்...
தொடரும்
ஜான் மெட்ரிக்...
Deleteஇவரது சக்தி வித்தியாசமானது.
மென் இன் ப்ளாக் காக நாடகமாடும் இன்னொரு ம்யூடண்ட்டின் எண்ணங்களுக்குள் ஊடுருவுவதன் மூலம் இந்த மண்டைவீங்கி மியூடண்ட் அந்த வில்லனை மண்டைவீங்க வைத்து உப்பி வெடித்து சாகடித்து விடுகிறார்.
இது ஹிப்னாடிஸமா. மாறாக மெஸ்மரிஸமா....
ஹிப்னாடிஸம் - எண்ணங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் ஆக்ரமித்து நமது எல்லைக்குள் அடைத்தல்.
Deleteமெஸ்மரிஸமோ கொஞ்சம் வித்தியாசமானது.
" யத் பாவம்:தத்பவதி:"
எதுவாக நினைக்கிறோமோ அதுவாக ஆகிவிடுவது.
நம்ம முன்னோர்கள் வாக்கு இது.
அப்பிரம்மங்களாகிய மானிடர்கள் சுகபிரம்மங்களாக மாறிவிடலாம்.ஆனால் பரபிரம்மமாக மாறுவதற்கு யத்பாவமான மனோபாவம் தத்பாவமாக மாறவேண்டும்.
இது எப்படி?
ஞாநீ - அவர் பெரிய ஞாநீ யென்றால்
Deleteஅனைத்தையும் சமமாக பாவிப்பவர் என்றர்த்தம்.
ஞான்(நான்) நீயாக இருந்தால் ஞாநீ.
அவனைப் போல் நான் இல்லயே.அவளைப்போல ஆக நம்மால் முடியலயே என்ற எண்ணமே நம்மை வேறுபடுத்தி விடும்.
அட்டாச்மெண்ட்ஸான எண்ணங்கள் - நான் ,எனது என்ற உன்மத்தங்களை வளர்க்கும்.எப்பொழுது நாம் என்கிறோமோ அதுதான் விடுதலையின் முதல்படி.
சொல்,செயல் இறந்தால் - அமைதி
அமைதி இறந்தால் - மௌனம்.
மௌனம் இறந்தால் - தியானம்
தியானம் இறந்தால் - யோகம்
யோகம் இறந்தால் - ஞானம்
ஞானம் இறந்தால் - பிரம்மம்
இப்ப ஜான் மெரிக் என்ன செய்றார்.
ஹிப்னாடிஸமா...
மெஸ்மரிஸமா...
உங்க முடிவுக்கே விட்டு விடுகிறேன்...
ஆனா பாருங்க.
ஜான் மெரிக்கையே அந்த வில்ல மியூடண்ட் தாட் ரீடிங் பண்ணுன ஆளாக்கும்...
திருவாரூரும் தீபாவளி டெக்ஸ் கதையும் ...
ReplyDeleteLIFE IS MORE FICTITIOUS THAN FICTION ..என்பது எவ்வளவு உண்மை !!
குற்றங்கள் மாறுவதில்லை ..குற்றமுறைகளும் அதை கண்டுபிடிக்கும் வழிமுறைகளும் மட்டுமே மாறுகின்றன என விசா பதிப்பக ‘’ மூன்று குற்றங்கள் ‘’ தொகுப்பின் முன்னுரையில் சுஜாதா குறிப்பிட்டு இருப்பதுதான் எவ்வளவு பொருத்தம் ????
டெக்ஸின் சர்க்கஸ் சாகசம் யதார்த்தத்தின் மிக அருகில் வரும் கதை ..
முரட்டுத்தன வில்லன் அல்ல ..மூளை மிகுந்த வில்லனால் கதை சுவாரஸ்யம் ஊட்டுகிறது ..
திருவாரூர் முருகன் கதையை எடுத்து கொள்வோமே |||||
கொள்ளையடிக்க போகும்போது பொதுஇடத்தில் தங்குவதில்லை –
ஹோட்டல்கள் ,வீடு வாடகைக்கு எடுப்பது என்ற பேச்சுக்கு இடமில்லை
தங்குவது ,சமைப்பது எல்லாம் காரிலேயே ...
கைபேசிகள் உபயோகிப்பது இல்லை
சிறப்பு அலைவரிசை வாக்கி டாக்கிகள் உபயோகிப்பது
சுவரை ஓட்டை போட கேஸ் வெல்டிங் ,அதிக சத்தம் வராத கைக்கு அடக்கமான கடப்பாரைகள்
கேஸ் வெல்டிங் வைப்பவர் பணி அதோடு சரி ..
உள்ளே நுழைபவர் தனி
வெளியே கண்காணிப்பு பணியில் ஈடுபடுபவர் தனி
மாஸ்டர்மைன்ட் முருகன் ஸ்கெட்ச் போடுவதோடு சரி..
கொள்ளையடிக்கபட்டநகைகள் மாஸ்டர்மைண்ட்டிடம் வந்து சேர்ந்தபின் நேரடியாக விற்பதில்லை
அதற்கான புரோக்கர்கள் தனி
ஒரு கொள்ளை சம்பவம் நடந்தபின் வேறு மாநிலத்துக்கு இடம் பெயர்வது ..
ஒரு நல்ல (!!!!!) திருட்டு கும்பலுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் முருகன் குழுவிடம் இருப்பதை பார்க்கிறோம் ..
நவீன விஞஞான யுக்திகள் ,உபகரணங்கள் உதவி இருப்பினும் முருகனை பிடிக்க இவ்வளவு காலம் பிடித்தது ...
கொலராடோ நதியோர கொள்ளை சம்பவங்களுக்கும் காவிரி தீர்த்தக்கரை திருவாரூர் முருகன் ( திருவாரூர் சுற்றிபாயும் வெண்ணாறு ,,வெட்டாறு ஆகியவை காவிரிக்கு நீர் கொண்டு செல்கின்றன ) சம்பவத்துக்கும் உள்ள தொடர்புகள் வியப்பை அளிக்கும் ..
ஜன்னல் வழியே நுழைய ஒரு ஆள்,
டைனமைட் வைத்து பெட்டகம் தகர்த்து கொள்ளையடிப்பது தனி ஆட்கள்
துரத்துபவர்களை சமாளிக்க துப்பாக்கி பிரயோகத்தில் சிறந்த ஒரு ஆள்
ஓட ஒரு நீர்வழி
ஒளிய சிறப்பான ஒரு இடம்
சம்பவ இடத்துக்கே வராத ஒரு மாஸ்டர்மைண்ட்
எத்தனை சிமிலாரிட்டீஸ்
REALLY LIFE IS MORE FICTITIOUS THAN FICTION ..
ஒரு தேர்ந்த குழுவின் செயல்பாடுகள் முன்னால் தற்போதைய நவீன வசதிகள் ஏதும் இல்லாத டெக்ஸ் & கோ தடுமாறுவதில் ஆச்சர்யமில்லை
இதுவே கதையின் யதார்த்த தன்மையை கூடுதலாக பிரதிபலிக்கிறது
அதனாலேயே கதைக்கான எனது மதிப்பெண்கள் கூடுகிறது
CONCUSSIONISM என்ற மரபுசாரா வார்த்தை பிரயோகம் உண்டு
அடி ,உதை ,துப்பாக்கி மூலம் எதையும் சாதிக்கலாம் என்ற மனப்பான்மை .
இதுவே டெக்ஸ் கதைகளின் ஜீவநாடி என்ற கூற்றை மறுக்கும் பல டெக்ஸ் கதைகள் வந்துள்ளன....
இதோ மற்றுமோர் கதை
9/10
அசத்தீட்டிங்க செனா. கதையை படிக்கத் தூண்டும்வித்யாசமான விமர்சனம்.
Deleteடீயை விட கப்பு சூடாக இருந்தாற் போல், கதையை விடவும் சுவாரசியமான விமர்சனம்.. அருமை..
Deleteவாவ்!!!! பின்னிட்டீங்க செனாஅனா!!
Deleteநம்மவூர் புத்திச்சாலி கொள்ளைக் கும்பலின் திறமையை விவரித்த விதம் விதமும், அவர்களை கொலராடோ கும்பலோடு ஒப்பிட்ட விதமும் அருமையோ அருமை!!
உங்கள் எழுத்துகள் பல விதங்களிலும் எழுத்தாளர் சுஜாதாவை நினைவூட்டுவதாக இருக்கின்றன!! எனவே இன்றுமுதல் நீங்கள் 'சுட்டிகளின் சுஜாதா' என்று உலக மக்களால் அன்போடு அழைக்கப்படுவீர்கள்! (சுட்டிகள்'னு சொல்லிக்கிட்டது எங்களைத்தான்.. ஹிஹி!)
விடுமுறையில் கொல்
ReplyDeleteஇது தான் முதல்ல படிக்க வேண்டியது
ஜூலியா பாக்கி இருக்கும் நிலையில் என்னுடைய ரேங்க்கிங்
ReplyDelete1. ராபின்
2. டைலன் டாக்
3. ஷெல்டன்
4. மார்ட்டின்
5. கர்னல்
6. கார்சனின் நண்பர்
எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!
ReplyDelete