Saturday, October 19, 2019

அக்டோபரில் நவம்பர் !

நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாமே சனிக்கிழமைகள் ஆகிப் போனால் நமது DTP அணிக்குக் குளிர் ஜுரம் வராத குறை தான் ! இல்லாங்காட்டி ஆளாளுக்கு கன்னத்தில் மரு; காதிலே கடுக்கன் என்று எதையாச்சும் பொருத்திக் கொண்டு, வடக்கே போகும் முதல் ரயிலில் தொற்றிக் கொள்ள வழியிருக்கிறதா ? என்று பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள் ! நான் பாட்டுக்கு 18 பக்கம் ; 20 பக்கமென்று பதிவுகளைப் போட்டுத் தாக்கி அனுப்பிட, அவற்றை வெறுமனே ‘லொட்டு லொட்‘டென்று தட்டித் தர வேண்டியவர்களின் பாடுகள் மெய்யாலுமே பாவம் தான் ! எது எப்படியோ – இந்த வாரம் அவர்களும் பிழைத்தார்கள் ; நீங்களும் பிழைத்தீர்கள் ; எனது பதிவானது crisp-ஆன இங்கிலீஷ் திரைப்படத்தைப் போல ‘நறுக்‘கென்று இருந்திடப் போகிறது ! இந்தச் சிக்கனத்துக்கு விஷயப் பஞ்சம் காரணமென்று சொல்ல மாட்டேன் – ஏனெனில் முட்டுச் சந்தில் போய் மொத்து வாங்கி வருவதைக் கூட உப்பு ; காரம் ; புளி சேர்த்து சும்மா ‘ஜிலோ‘வென அவிழ்த்து விடும் டகுல்பாஜி வேலை தான் நமக்கு அத்துப்படியாச்சே ?! So இவ்வாரப் பதிவின் நீளச் சுருக்கத்திற்குக் காரணங்களே வேறு !

- To start with தீபாவளி மலர் & இதர நவம்பர் இதழ்கள் ஒரு மாதிரியாய் அச்சுக்குக் கிளம்பி விட்டதால், அவற்றுள் என்னளவிலான பணிகள் ஓவர் ! ஆனால் கேட்லாக் 2020-ல் ‘படங்களை மாற்று… தலைப்பை மாற்று‘ என்று ‘ஆட்றா ராமா… தாண்ட்றா ராமா‘ கூத்து இன்னமுமே படு மும்முரமாய் அரங்கேறி வருகிறது ! சில கடைசி நிமிட ஞானோதயங்களைச் செயல்படுத்திடவும் ; இடிக்கும் பட்ஜெட்களைச் சமாதானம் செய்திடவும் இந்த ஞாயிறு எனக்கு ரொம்பவே அவசியப்படும்!

- அதை விடப் பெரிய காரணம் – காத்துள்ள 'அட்டவணை பதிவினை‘ எழுத எனக்கும் ; அதை டைப்படிக்க நண்பர் குருமூர்த்திக்கும் கொஞ்சமாவது ஜீவன் மிஞ்சியிருக்க வேண்டுமென்பதால் இந்தப் பதிவில் அடக்கி வாசிக்க முற்படுகிறேன் ! போன வருஷத்து அட்டவணை அறிவிப்பு 25 பக்க நீளத்தை ஆக்கிரமித்தது நினைவுள்ளது ! பேசாமல் டைப்படிக்காது Youtube-ல் ஒரு வீடியோவாகப் பதிவு செய்து போட்டு விடலாமா? என்ற எண்ணம் கூட தலைதூக்கியது! ஆனால் நம்ம ஆந்தைவிழிகளைப் பார்த்துத் தெறித்தோடுவது ஒரு பக்கமாயிருப்பின் ; சுகப்படும் போதெல்லாம் வாசிக்கும் வசதி, அசைபோடும் வசதி அங்கே சாத்தியமாகாது என்பதால் ‘பழைய குருடி… கதவைத் திறடி‘ பாணியே இம்முறையும் ! So ஒரு புது Writing Pad தயார் – இந்த ஞாயிறை அத்தோடு செலவிட நான் தான் தயாராகணும்!

சரி… நீட்டி முழக்கியே பதிவின் பாதியைத் தொட்டு நிற்கக் கூடாதென்பதால் – இதோ இந்த ஒற்றைப் பதிவிலேயே நவம்பரின் 3 இதழ்களுக்குமான preview படலம் ! வேறு ஏதேதோ கதைகள் விட்டே அக்டோபரின் இத்தனை தேதிகளைக் கடத்திட சாத்தியப்பட்டிருப்பதால் இந்த வாரம் ஒட்டுமொத்த ட்ரெய்லர் படலம் !

சந்தேகமின்றி இம்மாதத்து highlights ஆக அமையப் போவது நமது (குண்டு) லயன் தீபாவளி மலரும், எங்கள் ஊரின் ரவுண்ட் பன்னுமே எனும் போது பிள்ளையார் சுழியைப் போடுவதும் அங்கிருந்தே என்றால் தானே பொருத்தம் ? போன வருஷத்து ‘டைனமைட் ஸ்பெஷல்‘ பெரும்பான்மையான பக்கங்களை வண்ணத்திலும், பாக்கியினை b&w-லும் கொண்டிருந்தது நினைவிருக்கலாம் ! இந்தவாட்டி அத்தகைய luxury சாத்தியம் நஹி ; பட்ஜெட்டில் விழுந்த துண்டின் காரணமாய் ! To be fair – இம்முறையிலான 5 கதைக் காம்போவில்,  டெக்ஸ் நீங்கலாக பாக்கிக் கதைகள் எதுவுமே வண்ணத்தில் இல்லையெனும் போது – நாம் ஆசைப்பட்டிருந்தாலும் வண்ணத்துக்குப் பிரதானம் தந்திருக்க இயன்றிராது ! So இதழின் பருமனையே இம்முறை ப்ளஸ் பாய்ண்டாக எடுத்துக் கொண்டு, கதைகள் பக்கமாய் கவனத்தைத் திருப்புவோமா ?

இதோ – தீபாவளி மலரின் அட்டைப்பட முதல் பார்வையுமே ! ஒரிஜினல் போனெலி அட்டைப்பட சித்திரத்தில் – பின்னணி வர்ணங்களில் மட்டும் கூட்டல் – குறைத்தல் செய்துள்ளோம் - வழக்கம் போல சில நகாசு வேலைகளோடு ! And பின்னட்டை – ஒவ்வொரு கதைக்குமென ஒரிஜினல் ராப்பருடன் ! 
ஆட்டத்தை ஆரம்பிப்பவர் நமது மஞ்சள் சட்டை மாவீரரே! 1969-ல் பெரியவர் போனெலியின் பேனாவினிலும், மூத்த ஓவியர் அரெலியோ காலெபினியின் தூரிகைகளிலும் பிறந்ததொரு 157 பக்க சாகஸம் தான் இம்முறை நம் வாசிப்புக்குத் தீனி போடவுள்ள முதல் கதையானது ! வழக்கம் போலவே நேர்கோட்டுக் கதையே & வழக்கம் போலவே துவக்கம் முதலே டெக்ஸின் நண்பரும் ; கார்சனின் நண்பரும் இணைந்தே கதை நெடுகப் பயணிக்கிறார்கள்! ரொம்ப dramatic ஆன கருவெல்லாம் இம்முறை கிடையாது ; ஆனால் தெளிந்த நீரோடை போலான கதையை ஒரு சர்க்கஸின் பின்னணியில்; காலெபினியின் அற்புதச் சித்திரங்களில் ரசிக்கும் அனுபவம் நிச்சயமாய் கவர்ந்திடும் என்று நம்புகிறேன்! இதோ – உட்பக்க ட்ரெயிலர் ! 
கதை நம்பர் 2 – மர்ம மனிதன் மார்டினின் “விசித்திர உலகமிது !” ம.ம.மா.வின் களங்கள் எப்போதுமே offbeat ஆனவை ; சிந்தனைகளைத் தூண்டும் ரகத்திலானவை என்பதை நாமறிவோம் ! இம்முறையும் அதனில் மாற்றமில்லை ; ஆனால் விஞ்ஞான ரீதிகளில் நம் சிந்தைகளைக் கிளறிடாது – மனிதாபிமான ரீதியில் யோசிக்கச் செய்திடவுள்ள கதையிது ! A word of caution : ‘இனியெல்லாம் மரணமே‘ ; ‘கனவின் குழந்தைகள்‘ ரேஞ்சுக்கு ஆழத்தையோ; அழுத்தத்தையோ எதிர்பாராது உட்புகுந்தீர்களெனில் மகிழ்வீர்கள் ! And இதோ இந்த சாகஸத்தின் ட்ரெயிலருமே ! இந்த சாகஸத்தில் ஒரு கூத்தும் உண்டு ; நம் நாயகரை ஒன்றுக்கு இரண்டாய்க் காதலிகள் விரட்டி விரட்டி சரசமாட முற்படுகின்றனர் !! மார்டினுக்கு வந்த வாழ்வு !!
கதை நம்பர் 3 – ‘டைலன் டாக் 2.0‘! முற்றிலும் புதிய கதாசிரியர்கள் ; ஓவியர்கள் ; முற்றிலும் வித்தியாசமான treatment என்று டைலன் டாக் இந்தப் புது அவதாரில் இத்தாலியில் கலக்கி வருகிறார் ! ஆல்பம் # 399 முற்றுப் பெற்று, ஆல்பம் # 400-க்கு கால் பதிக்கவுள்ள டை.டா.க்கு திருமணம் அரங்கேறவுள்ளது - அந்த மைல்கல் இதழில் !! திருமண விழா celebration-க்கென வாசகர்களுக்கு போனெலி ஏதேதோ வழங்கிடவுள்ளது !  அவரது துவக்க ஆண்டுகளது பாணிகளிலிருந்து நிரம்பவே வேறுபட்டு நிற்கும் இந்த சாகஸத்தின் கதையோட்டமும் செம ஸ்டைலிஷ்! தட தட வென ஓட்டமெடுத்து இறுதி 4 பக்கங்களில் ஒரு வித்தியாசமான க்ளைமேக்ஸில் கரைந்திடும் இந்த சாகஸத்தினை நீங்கள் எவ்விதம் ரசிப்பீர்களெனப் பார்த்திட பெரும் ஆவலாயிருப்பேன்! DD with a difference ! 

கதை # 4 நமது நியூயார்க் போலீஸின் C.I.D. ராபின்! வழக்கம் போலவே ஒரு மிகையிலா ; யதார்த்தமான ; இயல்பான போலீஸ்ப் புலனாய்வைக் கண்முன்னே கொண்டு வரும் பாணி இந்த 92 பக்க சாகஸத்திலும் தொடர்கிறது ! தொடர் கொலைகள் ; அவற்றின் பின்னணிகளை மோப்பம் பிடித்துச் செல்லும் ராபின் & டீம் இந்தக் கதையின் highlights ! இதோ – இவரது ட்ரெயிலருமே!
கதை # 5 – நமது பென்சிலிடை ஜுலியா தான்! “ஒரு இல்லத்தின் கதை” அவரது வழக்கமான template-ல் பயணிக்கும் ஒரு சுவாரஸ்யமான வாசிப்பு  ! இடையிடையே கொஞ்சம் வாழ்வியல் தத்துவங்கள் ; ஜுலியாவின் காதல் வாழ்க்கை என்று செல்லும் இந்தக் கதையின் மொழிபெயர்ப்பு ரொம்பவே பதம் பார்த்து விட்டதென்பேன் ! கதைகளை முடித்து அச்சுக்கு அனுப்பும் பரபரப்பினில் இதனுள் புகுந்தால், செமத்தியான ஸ்பீட் பிரேக்கர் ! தட்டுத் தடுமாறி ; சிலபல ராக்கூத்துக்களை நடத்திய பிற்பாடே ஜுலியாவை அச்சில் பார்க்க சாத்தியமானது ! ஏதேனும் அவசரத்திலிருக்கும் தருணங்களில் இதனை வாசிக்க முனைந்திட வேண்டாமே ப்ளீஸ் ! நிதானமாய்; நிறையவே நேரம் தந்து வாசிக்க முனைந்தால் நிச்சயம் இது தித்திக்கும் ! Here you go with the previews :

அத்தோடு இன்னொரு சேதியுமே!

‘தீபாவளி மலர்‘ இதழினை தீபாவளிக்கு முன்பாய்ப் பெற்றிட விரும்பும் பட்சத்தில் – அதற்கான முன்பதிவு லிங்க்கை நமது ஆன்லைன் தளங்களில் நாளை ஏற்படுத்திடவுள்ளோம் ! So சந்தாப் பிரதிகளை அனுப்பிய மறுதினம் முதலாய் இவற்றையும் டெஸ்பாட்ச் செய்திடவுள்ளோம் ! Go for it guys!

Moving on, நவம்பரின் கலர் கோட்டாவினை பூர்த்தி செய்திட ஆஜராவோர் இரு முதியவர்களே ! முன்னவர் கதாசிரியர் வான் ஹாமின் நரைமுடி வேய்ன் ஷெல்டன் எனில் பின்னவர் கேரட் மீசைக் க்ளிப்டன் 

ஷெல்டனின் “துரோகமே துணை” ஒரு அக்மார்க் தமிழ் சீரியல் போல இங்கும், அங்கும் வளைந்து, மூச்சிரைக்கும் வேகத்தில் பயணிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் ! கதை நெடுக வந்திடும் சிலபல இத்தாலிய மாஃபியா பார்ட்டிகளின் பெயர்களை மட்டும் ஞாபகங்களில் இருத்தி வாசித்தீர்களெனில் ஒரு அதிரடி வாசிப்பு க்யாரண்டி ! வேய்ன் ஷெல்டன் தொடரின் இறுதி ஆல்பமிது – இப்போதைக்காவது ! 2017-ல் இது வெளியான பிற்பாடு இதுவரையிலும் அடுத்த ஆல்பம் பற்றிய தகவல்களில்லை ! ‘நிச்சயம் தொடரும்‘ என்றே சொல்லியிருந்தார்கள் என்பதால் காத்திருக்க வேண்டியது தான் !

கேரட் மீசை க்ளிப்டன் “விடுமுறையில் கொல்” எனும் செம breezy read-ல் வலம் வரவுள்ளார் – ஆண்டின் கார்ட்டூன் கோட்டாவினை பூர்த்தி செய்திடும் பொருட்டு ! எப்போதும் போலவே ஒரு மர்மம் ; சன்னமாய் ஆக்ஷன் ; இடையிடையே கோணாங்கித்தனங்கள் என்று ஓட்டமெடுக்கும் சாகஸம் இதுவும் ! கதை நெடுகவுள்ள அழகான வர்ணச் சேர்க்கையினை அச்சில் பார்க்கும் போது சும்மா ஜில்லென்று உள்ளது ! வாசிப்பிலும் அந்த ரம்யம் தென்பட்டால்  – க்ளிப்டனும் ஹேப்பி; நானுமே ஹேப்பி!

ஆக மேற்படி 3 இதழ்கள் + 2020 கேட்லாக் + ஓரத்திலிருக்கும் இடைவெளிக்குள் நெளிந்து, வளைந்து புகுந்திடும் ரவுண்ட் பன் என இம்மாதத்து கூரியர் டப்பிகள் இருந்திடும் ! ரவுண்ட் பன் – செவ்வக பன்னாகவோ ; நீள்வடிவ பன்னாகவோ உருமாற்றம் கண்டு உங்களை அடைந்திடும் பட்சத்தில் கம்பெனியைத் திட்டாதீங்கோ என்றபடிக்கு விடை பெறுகிறேன் guys ! புதன் நள்ளிரவுக்கு அனுசரித்து அட்டவணையோடு ஆஜராகிறேன் !

Bye for now guys ! Have a festive weekend ! See you around !!

P.S : ஒரு அவசரக் கேள்வி ! உங்களின் பதில்கள் அவசரமாய்த் தேவை ! அந்நாட்களில் ராணி காமிக்ஸில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதைகளின் உரிமையும் தற்போது நம்மிடம் உள்ளது ! கறுப்பு - வெள்ளையில் மித விலைகளில் ஒன்றிரண்டை நமது வழக்கமான பாணிகளில் ; நமது மொழியாக்கத்தில் வெளியிட்டால் ஓ.கே வா ?

ONLINE LISTINGS :

http://www.lion-muthucomics.com/home/430-november-20119-pack.html

463 comments:

 1. டிரெண்ட் 2
  தோர்கல் 1 (3கதைகள்)
  டியூரங்கோ 1 (3/2 கதைகள்)
  ஜானி 1
  டெக்ஸ் 9 (புதியது+மறுபதிப்பு)
  லக்கி 2+1(க்ளாசிக் மறுபதிப்பு)
  சிக் பில் 1
  ப்ளூகோட் 1(+1)
  க்ளிப்டன் 1
  மேக் & ஜாக் 1
  பென்னி 1
  மார்ட்டின் 2
  ராபின் 1
  டயபாலிக் 1
  மாடஸ்டி 1(0)
  டைலன் டாக் 1
  ஓநாய் கனவாய் 1 (மறு பதிப்பு?)
  இளம் டைகர் 1
  Xiii ஏதாவது ஒன்று 1
  புதிய நாயர்கள் 3
  புதிய கார்டூன் நாயகர் 1

  ReplyDelete
  Replies
  1. ஜம்போ:
   கென்யா
   007 2 (அல்லது 1)
   டெக்ஸ் 1
   வஞ்சம் மறப்பதில்லை இரண்டாம் பாகம் 1 (?)
   நித்தம் ஒரு யுத்தம் இரண்டாம் பாகம் 1
   கடல் சார்ந்த கதை?
   போக்கிரி டெக்ஸ் 1

   அடுத்த வருட அட்டவணை இப்படியும் இருக்கலாம் :-)

   Delete
  2. ஊஹூம்....நிறைய மாற்றங்களுண்டு சார் - ஒரிஜினலுக்கும் - உங்கள் யூகத்திற்குமிடையே !

   Delete
  3. And வஞ்சம் மறப்பதில்லையெல்லாம் ஒரே பாகம் தான் சார் - இப்போது வரையிலாவது !

   Delete
  4. வஞ்சம் மறப்பதில்லை ஆல்பத்தில் மூன்றாம் கதையை மிகவும் ரசித்தேன்; மற்ற இரண்டு கதைகளை விட இந்த கதை ரொம்ப நன்றாக இருந்தது.

   Delete
  5. பார்க்கலாம் சார். :)
   மொத்த இதழ்கள் எத்தனை என சொல்லுங்கள் நாங்கள் ரோடு போடுகிறோம்:-)

   Delete
  6. கோடு - ரோடு - ஹைவே - என சகலத்தையும் புதன் ராவுக்கு or வியாழன் பகலுக்கு வைத்துக் கொள்வோமே சார் !

   Delete
 2. Sir my first choice juliavin
  Oru illathin kathai

  ReplyDelete
 3. முன்னிரவு பதிவு சூப்பர்!!!!
  வணக்கம் சார்🙏
  ஹாய் ஆயிரங்களே!😍

  ReplyDelete
  Replies
  1. //ஹாய் ஆயிரங்களே!//

   இப்போல்லாம் ரேஞ்சே மாறிப் போச்சு போலும் !!

   Delete
  2. ஆயிரத்தில் ஒருவன்---- சொல்லும் போதே தெறிக்குதுங் சார்.!

   Delete
  3. சந்தாக்களும் ஆயிரங்களை தாண்டினால் குஷியோ குஷி!

   Delete
 4. // புதன் நள்ளிரவுக்கு அனுசரித்து அட்டவணையோடு ஆஜராகிறேன் ! //
  ஆவலுடன் ஒரு காத்திருப்பு படலம்.......

  ReplyDelete
 5. ஹய்யா பதிவு வந்தாச்சு...

  ReplyDelete
 6. நவம்பரில் தங்க தலைவனின் புது ஆல்பம் வெளிவருவதாக போன பதிவில் சொல்லியிருந்தீர்கள்.. ஆனால் மற்ற 3 புத்தகங்களுக்கு மட்டுமே இப்போது ட்ரைலர் வந்துள்ளது.. தங்க தலைவன் கதை??

  ReplyDelete
  Replies
  1. சாமி....அந்தப் பதிவை மறுக்கா ஒருவாட்டி படியுங்களேன் ?

   Delete
  2. பிரெஞ்சில் அந்த ஆல்பம் வெளியாகவுள்ளதே நவம்பர் 29 தேதிக்கு !!

   Delete
 7. க்ளிப்டனும்,ஷெல்டனும் மிட்டாய் கலரில் மிளிர்கிறார்கள்......

  ReplyDelete
 8. விஜயன் சார், இந்த மாதம் மினி டெக்ஸ் உண்டா?

  ReplyDelete
 9. அட்டைப்படத்தில் தல யின் தல சற்று வலப்பக்கம் வந்திருந்தால் இவ்வாண்டின் மிகச்சிறந்த அட்டைப்படமாக இருந்திருக்கும்

  ReplyDelete
  Replies
  1. இத்தாலிக்குத் தான் ஒரு நடை போய்ச் சொல்லிட வேண்டியிருந்திருக்கும் சத்யா ! அங்கே ஒரிஜினலாய் அவர்கள் வரைந்ததாச்சே ?

   Delete
 10. நாம் சிரித்தால்.....டண்டட்டட்டண்டண்

  நாம் சிரித்தால் தீபாவளீ ஹௌய்


  நாளுமிங்கே ஜாமக் கோடாங்கி ஹேய்....

  ReplyDelete
  Replies
  1. இன்னும் ஜாமமாக நெறய நேரம் இருக்கே சார் !!

   Delete
 11. டெக்ஸ் எப்படிய்ம் 300 பக்கம் எதிர் பார்த்தேன். 157 பக்கம் என்பது சற்று குறைவாக படுகிறது சார்.
  பழமையை உணர்த்தும் சித்திரங்கள்.!?

  ReplyDelete
  Replies
  1. // 157 பக்கம் என்பது சற்று குறைவாக படுகிறது //
   அட இது வேறயா.....

   Delete
  2. டெக்சின் முதற்தலைமுறை ஓவியரின் கைவண்ணம் நண்பரே !

   Delete
  3. சுவாரஸ்யமான தகவல் சார்......

   Delete
 12. // நிச்சயம் தொடரும்‘ என்றே சொல்லியிருந்தார்கள் என்பதால் காத்திருக்க வேண்டியது தான் ! //
  ஷெல்டன் பரபரப்பான கதைக் களத்திற்கு உத்திரவாதம் அளிப்பார்,மீண்டும் அடுத்த பகுதிகளுக்காக காத்திருப்போம்......

  ReplyDelete
  Replies
  1. ரெம்போவே காத்திருக்கணும் போலத் தெரியுது சார் !

   Delete
  2. பரவாயில்லை சார், அதுவரைக்கும் வரிசையில் நிக்கறவங்களை பார்ப்போம்.....

   Delete
  3. லார்கோ அவ்வளவுதே...
   ஷெல்டன் அம்புட்டுதே

   XIII கதம்கதம்....
   டைகரு ம்ஹும்.....

   ஆனா டெக்ஸ் மட்டும் அமுத சுரபி மாதிரி....

   நீ பூந்து ஆடு தல.....

   Delete
 13. வந்து விட்டேன்!!!

  ReplyDelete
 14. அனைவருக்கும் வணக்கம். Sweet news. காத்திருக்கிறேன் ஆர்வத்துடன். Best wishes to the success of deebavali malar.

  ReplyDelete
 15. Replies
  1. போய்ட்டு வாங்கோ......

   Delete
  2. வந்தவுடனே போகச் சொல்றீங்களே.

   Delete
 16. கார்ட்டூன் எண்ணிக்கை கூடவா? குறையவாங்க?? சார்???

  ReplyDelete
  Replies
  1. பல நேரங்களில் மஞ்சள்சட்டைக்காரரே உங்களுக்கு சிரிப்புப் பார்ட்டி தானெனும் போது கார்ட்டூனுக்குக் குறையிருக்குமா ?

   Delete
 17. ஆன்லைனில் நவம்பர் பேக்குடன் 2020 கேட்லாக்கும் கிடைக்க வாய்புள்ளதா சார்.

  ReplyDelete
 18. சந்தா A-9
  சந்தா B-9
  சந்தா C-9
  சந்தாGN-9

  சந்தா B:-

  டெக்ஸ்-6
  மார்டின்-1
  டயபாலிக்-1
  தீபாவளி மலர்-1(டெக்ஸ்,மார்டின், ஜூலியா,டயலான்)

  சந்தாGN---ஹாட் கி.நா.க்கள் 9!

  சந்தாC:-

  ரெகுலர்ல 1லக்கி & 2 கதைகள் இணைந்த ஆண்டுமலர்!-2ஸ்லாட்

  சிக்பில் 2ஸ்லாட்

  ப்ளூகோட்-1ஸ்லாட்

  க்ளிப்டன்-1

  மந்திரி-1

  மேக்&ஜாக்-1

  அறிமுகம்-1

  (ரின்டின்கேன், ஸ்மர்ஃப்பு, பென்னி-காத்திருப்பு பட்டியல்)

  ReplyDelete
  Replies
  1. // ஊஹூம் //
   ஏதோ பெரிய சர்ப்ரைஸ் இருக்கும் போல........

   Delete
 19. .. டைலன் டாக் இந்தப் புது அவதாரில் இத்தாலியில் கலக்கி வருகிறார் //
  இந்த கதை அடுத்த வெர்ஷனா சார்.....

  ReplyDelete
  Replies
  1. Yes ! நம்மாட்கள் அந்தக் கதையிலிருந்து கோப்புகளை எனக்கு அனுப்ப மறந்து விட்டார்கள் சார் !! இல்லாவிடின் அதுவும் டிரெய்லரில் இடம்பிடித்திருக்கும் !

   Delete
  2. அடடா.. மிஸ்ஸாயிடுச்சி.!

   Delete
 20. மார்டீன் கன் கல்கத்தாவா....

  ReplyDelete
 21. // ம.மா.வின் களங்கள் எப்போதுமே offbeat ஆனவை ; சிந்தனைகளைத் தூண்டும் ரகத்திலானவை என்பதை நாமறிவோம் //
  அட நம்மாளு.........
  .....

  ReplyDelete
 22. // துவக்கம் முதலே டெக்ஸின் நண்பரும் ; கார்சனின் நண்பரும் இணைந்தே கதை நெடுகப் பயணிக்கிறார்கள்! //
  வித்தை காட்டும் வார்த்தைகள் சார்......

  ReplyDelete
  Replies
  1. :-) குசும்பான பேனா சார் !

   Delete
 23. சார் போக்கிரி டெக்ஸ் உண்டா?
  இதுவரை 5 வந்துள்ளது அத்தனையும் சேர்த்து ஒரு 300 பக்கம் வரும் கொஞ்சம் கருனை காட்டுங்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. ஐந்தா ? சார்...அது எப்போதோ ஆகிப் போச்சு இரட்டை இலக்கமாய் !!

   Delete
 24. சந்தா A:-

  தோர்கல்-1

  டியூராங்கோ-1

  ஜானி-1

  இளம் டைகர்-1(இளமையில் கொல்-பாக்கி 2பாகங்கள்.)

  ரிங்கோ-1

  ட்ரெண்ட்-2

  புதியவர்கள்-2

  ReplyDelete
 25. Replies
  1. பிஸ்டலுக்கு பிரியா விடை மாதிரி....

   பீரங்கிக்கு பெரிய வடை .....ன்னு ஏதாச்சும்.....

   Delete
  2. ரைபிளும் கொஞ்சம் ரைம்ஸும்.

   Delete
 26. டைலன் டாக் டிரெய்லர் இல்லை போல......
  தல கதையின் பேரைக் காணோம்......
  இதெல்லாம் சஸ்பென்ஸா?????

  ReplyDelete
  Replies
  1. இல்லை சார் ; DTP பெண் இன்றைக்கு சீக்கிரமே கிளம்பிட்டதால் கோப்புகளைத் தேடி எடுப்பதில் சிக்கல் !

   Delete
  2. அவுங்க புதன்கிழமை லீவு போடாம பாத்துக்குங்க சார்.😊😊😊

   Delete
 27. ஹார்டு பவுண்ட் 4னு சொல்லிட்டீங்க சார்!

  உத்தேசமாக....

  1.டியூராங்கோ
  2.ஆண்டுமலர்
  3.தீபாவளிமலர்
  4.கி.நா.வில்-1(நெய்தல் திணை)

  ReplyDelete
 28. ///5 கதைக் காம்போவில், டெக்ஸ் நீங்கலாக பாக்கிக் கதைகள் எதுவுமே வண்ணத்தில் இல்லையெனும் போது ///

  சார்,
  தல க/வெ யிலா, இல்ல வண்ணத்திலா?

  ReplyDelete
 29. கடவுளே, தீபாவளி மலர் கையில் கிடைப்பதற்கு முன்பே "வஞ்சம் மறப்பதில்லை" படித்து முடித்துவிட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.. இதுவல்லவா வேண்டுதல்..;-)

   Delete
 30. சந்தா A-12
  சந்தா B-12
  சந்தா C-6
  சந்தாGN-6

  சந்தா B:-

  டெக்ஸ்-6
  மார்டின்-2
  டயபாலிக்-1
  மாடஸ்தி-1
  ஜூலியா-1
  தீபாவளி மலர்-1(டெக்ஸ், ராபின்,டயலான்)

  சந்தாGN--மிரட்டும் கி.நா.க்கள் 6!

  சந்தாC:-

  ரெகுலர்ல 1லக்கி & 2 கதைகள் இணைந்த ஆண்டுமலர்!-2ஸ்லாட்

  சிக்பில் 2

  ப்ளூகோட்-1

  க்ளிப்டன்-1

  மேக்&ஜாக்-1


  சந்தாA:-

  சந்தா A:-

  தோர்கல்-2

  டியூராங்கோ-1

  ஜானி-1

  இளம் டைகர்-1(இளமையில் கொல்-பாக்கி 2பாகங்கள்.)

  ரிங்கோ-1

  ட்ரெண்ட்-2

  நித்தம் ஒரு யுத்தம் பார்ட்2-1

  புதியவர்கள்-3

  ReplyDelete
 31. , வியட்நாம்வீடுஸாரி வியட்நாம் வீரர் ஷெல்டன்தான்வழக்கம்பாபோல்இம்முறையும்ரேஸில்முதலாவதாக வருவார்என்றுஎதிர்பார்க்கிறேன். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. மார்ட்டீன உட்டுட்டீங்க....

   Delete
 32. Dear Editor,

  Could you please forward Mr.Saravanan's (NOIDA) email seeking Minnum Maranam book? On receipt of it I would contact him to spare my unopened copy. Thanks.

  Awaiting links to order one more copy of Diwali Issue :-)

  ReplyDelete
 33. தீபாவளி மலரில் முதலில் படிப்பது ஜுலியா.அப்புறம் மார்டின்.மூணாவதா டைலன் டாக்.அதுக்கப்புறம் டெக்ஸ்.கடைசிலே ராபின்.

  ReplyDelete
  Replies
  1. நடுவுல கிளிப்டன் அண்ணாச்சி ஜாயிண்ட் பண்ணிக்குவாரு.

   Delete
  2. டெக்ஸ்......தீபாவளி இட்ல ப்ளஸ் கறிகொழம்போட......அடடா...

   Delete
 34. தீபாவளி லீவு முடியறனக்கி கிளிப்டன்....

  ReplyDelete
 35. சார்
  கூரியர் பெட்டிகளினுள் எறும்புகளின் படையெடுப்பு நிகழ்ந்துவிடப் போகிறது. ரவுண்டு பன் இல்லாவிட்டால்கூட பரவாயில்லை. புத்தகங்கள் பாதுகாப்பாய் வந்தாலே போதும்.

  ReplyDelete
  Replies
  1. Round Bun comes in sealed packets - it should not be a problem. You would have seen sealed pack buns in Nilgiris etc.

   Delete
 36. @ALL :

  ஒரு அவசரக் கேள்வி ! உங்களின் பதில்கள் அவசரமாய்த் தேவை !

  அந்நாட்களில் ராணி காமிக்ஸில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதைகளின் உரிமையும் தற்போது நம்மிடம் உள்ளது ! கறுப்பு - வெள்ளையில் மித விலைகளில் ஒன்றிரண்டை நமது வழக்கமான பாணிகளில் ; நமது மொழியாக்கத்தில் வெளியிட்டால் ஓ.கே வா ?

  ReplyDelete
  Replies
  1. சார்.. இப்படிக் கேட்டுப்புட்டீங்களே சார்? மனசு துள்ளிக்குதிக்குது!!

   பழைய 007 - கருப்பு வெள்ளையில் - அதுவும் குறைவான விலையில் - நம் கம்பேனி மொழிபெயர்பில் - வாவ் வாவ்!!!! இதைவிட வேறு என்ன வேணும்?!!!

   போட்டுத்தாக்குங்க ப்ளீஸ்!!!

   Delete
  2. ஆஹா...ஆஹா...இது கனவில்லையே சார்!!!


   அருமை போட்டு தாக்குங்கள் சார்.

   காமிக்ஸ் படிக்க வந்ததே அந்த கதைகள் வாயிலாக தானே!

   ஒரு 6கதைகள் அடுத்த ஆண்டில் தாக்கிடலாம்.

   கரும்பு தின்ன கூலியா???😍

   Delete
  3. ஒரு சிறப்புப் பதிவாகப் போட்டு உற்சாக மீட்டரை எகிற வைக்கவேண்டிய சமாச்சாரத்தை பத்தோட பதினொன்னா கேட்கறீங்களே சார்?!!!
   நீங்க எப்பவுமே இப்புடித்தான்!!

   Delete
  4. ட்ரிபிள் ஓகே சார்....

   Delete
  5. "அழகியை தேடி" வண்ணத்தில் மட்டுமே வரணும் சார்???😋😋😋

   Delete
  6. ///ஒரு அவசரக் கேள்வி ! உங்களின் பதில்கள் அவசரமாய்த் தேவை !
   ///

   நாங்களும் அவசரமாவே பதில் சொல்றோம்..
   ஓகே!
   ஓகே!
   ஓகே!!

   இன்னிக்கு நைட்டே பிரின்டிங்கை ஸ்டார்ட் பண்ணிடுங்க சார்..!

   Delete
  7. அச்சுக்குப் போகும் முன்னே கடைசி நிமிடக் குழப்பங்கள் சார் !

   'நான் செரியா தானே பேசிட்டிருக்கேன் ?' என்று ஊர்ஜிதம் தேடிக் கொள்ளும் சங்கிலி முருகனை ஒருவாட்டி மனக்கண்ணுக்குக் கொண்டு வாங்க ; அதே நிலைமை தான் எனக்கும் !

   Delete
  8. கைநீட்டி வாங்கிடப் போகும் காசுக்கு நியாயம் செய்திட வேண்டுமே என்ற ஆர்வம் / ஆதங்கம் தான் இப்படிக் கேள்விகளாய் உருமாற்றம் காண்கின்றன - வேளை கெட்ட வேளைகளிலும் !

   Delete
  9. சார் இதே மாதிரியே நீங்க அவசர அவசரமா 'அங்கிள் ஸ்க்ரூஜ், அலிபாபா, கருப்புக்கிழவி, பேட்மேன், இரட்டை வேட்டையர்' - இதெல்லாம் ஓகேவா?ன்னு கேட்டீங்கன்னா கூட நாங்க உடனே ஓகே சொல்லத் தயாராய் இருக்கிறோம்!!

   சீக்கிரம் கேளுங்க சார்.. அச்சுக்குப் போக டயமாயிட்டிருக்கு!! :)

   Delete

  10. தேன் குடிக்கிற கரடிகிட்ட தேன் வேணுமான்னு கேட்டா அதுகிட்ட புன்முறுவல் தான் வரும். அந்த மாதிரிக் கேள்வி இது.

   PS1: உவமைக்கு இன்ஸ்பிரேசன் செனா அனா மற்றும் கண்ணன் ரவி.
   PS2: குழப்பம் வேண்டாம். சொல்லவந்தது என்னன்னா செனா சொன்ன தேன் குடிக்கும் வண்டுங்கற உவமையை பார்த்து சொன்னது இந்த உவமை.

   Delete
  11. ///அந்நாட்களில் ராணி காமிக்ஸில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதைகளின் உரிமையும் தற்போது நம்மிடம் உள்ளது ! கறுப்பு - வெள்ளையில் மித விலைகளில் ஒன்றிரண்டை நமது வழக்கமான பாணிகளில் ; நமது மொழியாக்கத்தில் வெளியிட்டால் ஓ.கே வா ?///

   டபுள், ட்ரிபிள்..ஃபோரபிள்.. பைவபிள் ஓகே சார்..!


   சுத்தமாக எதிர்பார்த்திடாத ஆனந்த அதிர்ச்சி..!

   Delete
  12. ///கைநீட்டி வாங்கிடப் போகும் காசுக்கு நியாயம் செய்திட வேண்டுமே என்ற ஆர்வம் / ஆதங்கம் தான் இப்படிக் கேள்விகளாய் உருமாற்றம் காண்கின்றன///

   எங்களைவிடவும் அதிகமாய் பேங்க்காரங்ககிட்டே தானே சார் (லோன்'ன்ற பேர்ல) நீங்க அதிகமா கைநீட்டி காசு வாங்கறீங்க? எதுக்கும் அவங்க ஒப்பீனியனையும் ஒருவாட்டி கேட்டுடுங்கேன்!!

   'அ..அலோ.. தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்கு ஓனருங்களா?'

   Delete
  13. ஒன்றிரண்டு வேண்டாம்.. நிறைய வேண்டும் சார்.

   Delete
  14. Yes sir - Azhagiyai Thedi and Dr No - without censor ;-p Also please release as Double Album on special / festive months !

   Delete
  15. டபிள் ஓகே சார். போட்டு தாக்குங்க. அதுக்குள்ள 141 ஆ?

   Delete
  16. மகிழ்ச்சி. பழைய ஜேம்ஸ்பாண்டை வரவேற்கிறேன்.
   சமீபத்திய ஜேம்ஸ் சித்திரப்பாணி இன்னும் என்னை கவரவில்லை...

   Delete
  17. I have mixed reactions, remake is always risky.
   I was so used to rain comics translation for those James Bond books not sure whether will be able to accept our translation.

   Try with one or two and decide based on response.

   Delete
  18. டபுள் ஓக்கே சார்.
   007 ட்ன் ட்ன் டடட்ன் டூமில்
   கோடு போட்ட சட்டை இல்லாமல் பார்த்து செய்ங்க சார்.!

   Delete
  19. அந்த ஜேம்ஸ் பாண்ட் அத்தனையும் மொத்தமா Omnibus vol 1, 2, 3, 4, 5, 6 மாதிரி இறக்குங்க் சார்.

   Delete
  20. போட்டுத் தாக்குங்க சார்.....

   Delete
  21. எனக்கு விருப்பம் இல்லை. அந்த காலத்து கதை மற்றும் ஓவியங்கள், தற்சமய வாசிப்புக்கு சுகப்படுமா? ஒரு முறை முயற்சி செய்யலாம், விற்பனையில் சாதித்தால் தொடருங்கள்.

   Delete
  22. This comment has been removed by the author.

   Delete
 37. ஐயகோ..

  அந்த அழகியைத் தேடி .. டாக்டர் நோ நினைத்தாலே ஜில்லோங்குது சார்.!


  எவ்ளோ பெரிய் சமாச்சாரத்தை சாதாரணமா அறிவிச்சிட்டிங்க சார்... செம்ம.. செம்ம..😍

  ReplyDelete
 38. ஜேம்ஸ்பாண்டை அப்படியே ஒரு குண்டு புத்தகமாக போட்டுதாக்குங்கள் சார்.
  தனித்தனியே போட்டாலும் ஓ.கே.
  இதையெல்லாம் கேட்கவேண்டிய கேள்வியே இல்லை சார்.

  ReplyDelete
 39. ///PS1: உவமைக்கு இன்ஸ்பிரேசன் செனா அனா மற்றும் கண்ணன் ரவி.
  PS2: குழப்பம் வேண்டாம். சொல்லவந்தது என்னன்னா செனா சொன்ன தேன் குடிக்கும் வண்டுங்கற உவமையை பார்த்து சொன்னது இந்த உவமை.///

  நான் தேன்.. சரி கரடி யாருங்க.!?

  ReplyDelete
 40. அப்படியே உங்கள் மேஜையில் உறங்கும் காரிகன், ரிப்கிர்பி, சார்லி,விங் கமாண்டர் ஜார்ஜ் இவர்களையும் கொடுத்தால் வேண்டாமுன்னா சொல்லப்போறோம்!

  ReplyDelete
 41. ராணி காமிக்ஸ் ஜேம்ஸ் பாண்ட் ரகசிய மாநாடு என்ற இரண்டு பாகங்கள் உள்ள கதை. அருமையான கதை சார். Pls.. sir..

  ReplyDelete
  Replies
  1. அழகிய ஆபத்து

   கடல் கொள்ளை
   மர்ம ராக்கெட்


   நிறைய்ய இருக்கு...

   இனி கும்மாளம்தான்...😍😍😍

   Delete
  2. ஜேம்ஸ்பாண்ட்... பராக்...! பராக்...!

   Delete
 42. James Bond கதைகளூக்கு என்றும் வரவேற்பு உண்டு!

  ReplyDelete
 43. தீபாவளி மலர் அட்டைபடம் ஓஹோ! அட்டவணைக்கு waiting continues...

  ReplyDelete
 44. 007 ஏற்படுத்திய பரபரப்பில் 'தீபாவளி மலர்' அட்டைப்படத்தைப் பற்றி கமெண்ட்ட மறந்துட்டோம் பாத்தீங்களா?!!

  அட்டைப்படம் - டாப் டக்கர்!! குறிப்பா தலயின் முகத்தைவிடவும் பின்னணியில் அந்த மலைமுகடும், அதன் பின்னணியில் அடர் சிவப்பு நிற வானத்தைப் பின்னணியாகக் கொண்டு 'தீபாவளி மலர்' எழுத்துருவும் இருக்கிறதே.. அது கொண்டுசேர்க்கும் உற்சாகங்கள் சொல்லி மாளாது ரகம்!!

  கைகளில் ஏந்திடும்போது ஏற்படும் அந்த பிரம்மிப்பை உணர்ந்திடும் தருணத்திற்காக ஆவலுடன் வெயிட்டிங்!!

  ReplyDelete
 45. ONLINE LISTINGS :

  http://www.lion-muthucomics.com/home/430-november-20119-pack.html

  http://lioncomics.in/monthly-packs/630-november-2019-pack.html

  ReplyDelete
  Replies
  1. 'தீபாவளி மலருக்கான ஆன்லைன் லிஸ்ட்டிங்'ன்றதை மென்ஷன் பண்ணிடுங்க சார்.. இல்லேன்னா நம்ம ஆளுக 007க்கான ஆன்லைன் லிஸ்டிங்னு நினைச்சுடப்போறாங்க!! :D

   Delete
 46. என் கணிப்பு சரியாக இருக்குமேயானால் இந்த கருப்பு-வெள்ளை 007 இரண்டு மார்க்கங்களில் வாசகர்களைச் சென்றடையப் போகுதுன்னு தோனுது!!

  அட்டவணை வெளியாகும்போது என் கணிப்பு சரியா தவறான்னு தெரியும்!

  ReplyDelete
  Replies
  1. சந்தா---1

   லாயல்டி பாயிண்ட்---2

   Delete
  2. லாயல்டி பாயிண்ட்? கலர் டெக்ஸ் மாதிரியா?

   Delete
 47. ஆசிரியரே உடனே 007 ஐ களம் இறக்குங்கள் தெய்வமே
  அழகியைத்தேடி
  எரிநட்சத்திரம்
  பொன் தேவதை
  சீன உளவாளி
  மந்திரியை கடத்திய மாணவி
  ரத்தக்காட்டேறி என சூப்பர் ஹிட் கதைகள் நிறைய உள்ளன ஆசிரியரே பிளாக் பக்கம் நான் வரத போதே கடிதங்களின் மூலமாக நான் உங்களிடம் இந்த கோரிக்கையை வைத்தேன் புண்ணியமாகபோகும் ஆசிரியரே

  ReplyDelete
 48. அட்டவணை நேரத்தில் நீங்கள் இந்த கேள்வி கேட்டது என்னை வானத்தில் றக்க செய்கிறது ஆசிரியரே

  ReplyDelete
 49. ஜேம்ஸ்பாண்ட் உங்களின் மொழி பெயர்ப்பில் படிக்க போவதை நினைத்தால் உற்சாகம் பிய்த்துக் கொள்கிறது

  ReplyDelete
 50. கரும்பு தின்ன கூலியா உங்களின் மொழி பெயர்பே காமிக்ஸின் உயிர் துடிப்பு

  ReplyDelete
 51. 007 வருடத்திற்க்கு மூன்றாவது வேண்டும் ஆசிரியரே

  ReplyDelete
 52. ரகசிய மாநாடு இரண்டு பாகங்களையும் ஒன்றாக வெளியிடுங்கள்

  ReplyDelete
  Replies
  1. +1
   (இப்படி போடும் நம்பர் ok தானே.... இல்லை இதுக்கும் தடை இருக்கா?)

   Delete
 53. அட்டவணை வருவதற்க்கு முன்பே எங்களை சுறுசுறுப்பாக்கிவிட்டீர்களே நன்றி ஆசிரியரே

  ReplyDelete
 54. இந்த கேள்வியைத்தான் சார் இந்த பதிவில் பிரதானமாக கேட்டிருக்க வேண்டும்

  ReplyDelete
 55. அதுவும் குறைவான விலையில் பழைய 007 சத்தியமாக இது கனவுதான் யாரச்சும் என்னை எட்டி உதையுங்கள் கனவா நனவான்னு பார்ப்போம்

  ReplyDelete
 56. நீங்கள் வாங்குகிற காசுக்கு மனசாட்சியுடன்தான் வேலை செய்கிறீர்கள் என்று பெருமையுடன் கர்வத்துடன் சொல்கிறேன் ஆசிரியரே இது நண்பர்கள் அனைவருக்கும் கண்கூடாக தெரியும் உண்மை நீங்கள் எங்களை திருப்தி படுத்த எடுக்கும் கால் கட்டைவிரல் முயற்சி

  ReplyDelete
 57. நாலுவித ஓவியங்களில் 007 இருப்பார்
  அழகியைத்தேடி பாண்ட்
  அழகிய ஆபத்து பாண்ட்
  கடல் கொள்ளை பாண்ட்
  இசைப்பெட்டி பாண்ட் என விதவிதமாக 007 னை வரைந்திருப்பார்கள் அழகியைத்தேடி 007 தான் அழகாக இருப்பார்

  ReplyDelete
  Replies
  1. அந்த 4 ஒவியர் விபரம் இங்கே..

   https://en.m.wikipedia.org/wiki/James_Bond_comic_strips

   Delete
 58. மும்மூர்த்திகள் & ஸ்பைடர் மறுவருகையை நீங்கள் பதிவிட்டது ஒரு பரண் உருட்டும் படலம் அதனை நாறுமுறையாவது படித்து மகிழ்ந்திருப்பேன் அதைவிட பல மடங்கு மகிழ்ச்சியை நீங்கள் 007 வருகையை அறிவிக்கும் பொழுது ஏற்படுகிறது மிக்க நன்றி ஆசிரியரே

  ReplyDelete
 59. பரவலாக ஒரு பேச்சு உண்டு லயன் & முத்து பழைய கதைகளை எப்படியாவது மறுபதிப்பில் பார்க்கலாம் ஆனால் ராணி காமிக்ஸ் இனி அவ்வளவுதான் சகாப்தம் முடிந்தது என ஆனால் ஆசிரியர் 007 மூலம் அதையும் சாதித்துவிட்டார் 007 கதைகளையாவது கண்ணில் பார்க்கப் போகிறோம்

  ReplyDelete
 60. பழைய 007 பழைய நினைவுகளை தூண்டி விட்டது. டபிள் ஓகே. தீபாவளி மலருக்காக வெயிட்டிங். அதனை விட புதன் இரவு பதிவு தான் இப்போது முதல் target. இந்த நள்ளிரவில் அட்டகாசமான தகவல்கள் தந்த உங்களுக்கு நன்றி நன்றி நன்றி ஆசிரியரே.

  ReplyDelete
 61. சார் அட்டகாசமான அட்டைகளில் இதுவரை வந்ததிரே முதலிடம் எனக்குத்தானே எனக் கூறிய பார்வையில் தலயும் தெனாவட்டா நிற்கும் ஷெல்ட்டனும் போட்டி போட. சுற்றி வழியும் வண்ணவ்கள் நான் நீன்னு போட்டி போட கிளிப்டனும் அருமை. சார் இது வரை வந்த தீபாவளிகளிலே ஸ்பெசலாய் அமைந்திட்ட தீபாவளி மலர் இது! தீபாவளிக்கு ஓரிரு வாரங்கள் முன்னதாயே பட்டாசு லிஸ்ட்ட வாங்கி வைத்து இந்த வெடி இபபடி இருக்குமா அந்த வெடி அப்படி வெடிக்குமான்னு பாத்து வியந்து கொண்டிருக்கயில் முன் பக்கத்தை ஆக்கிரமிக்கும் கம்பி மத்தாப்புக்களுமே வண்ணத்தை காட்டி ஒளிருமே மனதில் அது போல பின்னட்டையுமே கடந்த கால தீபாவளி மலர்கள ஆக்கிரமிக்குமே Long long ago so long ago no body knows how long ago ன்ன காலத்ல ஈயென இருப்பாரே தானைத்தலைவர் அதப் போல இவ்வட்டையும் அதிர்வுகள ஏற்படுத்தத் தவறவில்லை! டெக்ஸ் பாசறையில் வண்ண வான வேடிக்கைகள ஏராளம்னு காட்டும் படியாய் அட்டகாச அட்டை ! சார் தீபாவளி ஏக்கங்கள் பட்டாசு உடைகளில் தாக்கம் பெருமளவு குறைந்தாலும் குறையவில்லை தீபாவளிக் கனவு மலரின் தாக்கம், ,,,, இந்த முறை என்னவோ தெரியல இந்தாண்டு அட்டைய பாத்ததுமே மனமெல்லாம் மத்தாப்பு, ராவெல்லாம் ராக்கெட்டு அதுவும் அந்தக் கால ரோகினி ராக்கெட்டு . சார் அந்தக்கால டெக்ஸ் ஓவியம் சும்மா தூள் கிளப்ப , கதையோ சர்கஸில் எனும் வார்த்தைய பார்த்ததுமே சந்தோச அதிர்வுகள வர்ணிக்க வார்த்தைகள் வசப்படவில்லை ! நம்ம மாயாவியின் இரு வண்ண பறக்கும் பிசாசும் , லக்கியின் சூப்பர் சர்க்கஸும் , லார்கோ சர்க்கஸில் வாழ்ந்த சந்தோசக் காலங்களும் வந்து நீ இன்னுமே சிறுவண்தான்டா பொடிப்பயலேன்னு இந்த அகால வெளையிலும் என்ன சந்தோசமா டைப்ப வைப்பது இதுவே முதன் முறைன்னு நினைக்கிறேன் , எண்ணங்களில்தான் எத்தனை மத்தாப்புக்கள ஆச்சரியமே! அதிலும் நம்ம பென்சில் இடையழகிக் கதையின் மழையோட கூடிய முன்னட்டை நிறைத்த சந்தோச மழை தீபாவளிக்கு முன்னிரவு பெய்யுமே சோவென மழை, அது தரும் சந்தோசத்திற்க்கு இணையே என வெறும்
  பக்கங்களிலே தூறும் மழைத் தூறலுக்கு கூட உள்ள சக்திய கூடக், குறைய
  கூறத் தூறும் வார்த்தைகளுக்கு சாத்தியமேது! அதிலும் மார்ட்டினின் ,,, மனித மனங்களில் சோக காவியங்களுக்கு மனதை ஈர்க்கும் சக்தி என்னளவில் தாராளம் எண்பதால் ஏதோ ஒரு கண்ணீருடன் நான் தயார் . டயலனே கண்ல காட்டவே இல்லையே சார் ,,,,வண்ண வேடிக்கைதானோ!

  ReplyDelete
 62. வண்ணத்தின் ஆக்கிரமிப்பு கதை முக்கியமா வண்ணக் கலவை முக்கியமா என அசரடிக்கும் ஷெல்டனும் அட்டகாசமே, ,,,, மத்தாப்பு பார்வையுடன் பின் பக்கம் வசீகரிக்கும் நம்ம ஷெல்டன் ஆளும் அருமை பின்னட்டையில் ! மாடஸ்டிக்கு அடுத்து நீங்க இளவரசின்னு எழுதியது டயானாக்குத்தானே, நண்பர் இளவரசின்னா மாடஸ்டிதான்னு கூற நீங்க பின் வாங்கினாலும் என்னளவில் இளவரசி ஷெல்ட்டன் நாயகிதான்! முன்னட்டையில் பஞ்சு மிட்டாய் கலரில் மின்னுவது அட்டைப் படம் நேரில் வந்தால் இதான் டெக்ச கூட மிஞ்சும் அட்டயா நகாசு வேலைகளால் என பட்சி பதறுவது உண்மையா ? சார் நீலம் எப்பவுமே இதம்... பக்கம் முழுக்க வந்தாலுமே எனக்கு பிற நிறங்கள் கூடத் தேவையில்லன்னு உணர்ந்துதான் சொட்டு நீலம்டோய் ரீகல் சொட்டு நீலம்டோய்னு கிளிப்டன் இப்பக்கத்த தந்தாரோ! இந்த அட்டையும் அருமை !

  ஜேம்ஸுக்காக அக்காலங்களில் ராணிகமிக்ச தவிர்த்தேன் ...இப்ப படிக்கையில அழகியத் தேடி , மந்திரியக் கடத்திய. மாணவி, முதன முறையா இரும்பு மனிதனுக்கு போட்டியா கூடத் தொங்கிய, நான் வாங்கத் தவறிய (அதாவது நீச்சலுடைக்காக வாங்காம விட்டிருகக்கலாம்) சுறா வேட்டையும் இப்போ என்னை ஈர்க்கத் தவறவில்லை ....வந்தால் சந்தோசமே! அந்த மான்ஸ்டர் வந்தாக்கா கூடுதல் சந்தோசமே, ,,,எந்த ஆண்டுமில்லா கூடுதல் உற்ச்சாகம் இந்த டெக்ஸ் அட்டையால் ,,,,போன வருடம் பச்சய மட்டும் காட்டி ஆர்வத்த குறச்சதுக்கு வட்டி முதலுமாய் இவ்வருடம் போலெவ் வருடமுமில்லை என வண்ணத்திலடித்து சத்தியம் செய்றாரு, ,,வேறாரு,,,,டெக்ஸுதான்னு கூறி காத்திருக்கும் வண்ண அட்டவணைக்குள் கண்களை சொருகுகிறேன் தூக்கப் படிகளிலேறி ! இந்த அட்டைதான் இது வரை வந்ததிலேயே பெஸ்ட்டு பெஸ்ட்டு பெஸ்ட்டு ...ஸ்ட்டு ....ஸ்ட்டு .....டு .....டு ....டுர் ...ர் ...ர்ர்ர் ....ர்ர்ர்ர்ர்.... ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ....கொர்ர்ர் ...கொர்ர்ர் ...கொர்ர்ர்ர்....

  ReplyDelete
 63. Dear Edi,

  Double Triple Like for bringing the famous James Bond Daily Steps in regular issues under our brands. Let's do at least one issue every quarter to start with.

  Probably we could try a different size for these issues like Coffebook, so we can publish the failure so format as it is, 3 panels every row - 2 strips every page. It will be a true collectors edition that way.

  ReplyDelete
 64. அய்யோ Super Sir,
  Million OK for old James bond.
  அந்த Yaroslav Horak வரைந்த அந்த ஜேம்ஸ் பாண்ட் மறக்கவே முடியாது சார்.

  ReplyDelete
 65. கவச உடை எரி நட்சத்திரம்
  மற்றும் பல சூப்பர் சார்.
  சார் அந்த போக்கிரி டெக்ஸ் சமாச்சாரம் அத மறந்து டாதீங்க!

  ReplyDelete
 66. Omnibus vol 1-6 amazon-ல் இன்றும் சக்கை போடு போடும் ஜேம்ஸ் பாண்ட்!
  அன்று ராணியில் வந்தது..
  உங்கள் மொழிபெயர்பில் செமையாக இருக்கும்! "கத்தி" மட்டும் கொஞ்சமாக போடுங்கள்.. ஹி..ஹி..("அப்படியே போட்டால் better!)

  ReplyDelete
 67. நண்பர்களே,
  நீங்களே செல்லுங்கள்.. சிறு வயதில் நமக்கு ஜேம்ஸ் பாண்ட் என்றால் அது இவர்தானே?

  https://en.m.wikipedia.org/wiki/File:Horak007.jpg

  ReplyDelete
  Replies
  1. இவரே தான்!! 007 என்றாலே மனக்கண்ணில் வந்து நிற்கும் உருவமும் இதுவே!!

   Delete
  2. பிரபு இவரே தான் இவரே தான். சிறு வயதில் மட்டுமல்ல இப்போதும் என் மனதில் உள்ள பாண்ட் பிம்பம் இது தான்.

   Delete
 68. Classic James bond...!
  Nostalgic...!
  லயனின் மொழிபெயர்ப்பில் நிச்சயம் வரவேற்கிறோம் சார்...
  போட்டுத் தாக்குங்க...

  ReplyDelete
 69. மாதமொரு கார்ட்டூன் என்று வாக்கு கொடுத்திருக்கீங்க சார்! அட்டவணை தயாரிக்கும் போது அதை மறந்துடாம கொஞ்சம் ஞாபகப் படுத்திக்கோங்க...

  ReplyDelete
  Replies
  1. மாறுவேட மன்னன் ஹெர்லாக் ஷோம்ஸ் ஜம்போவில் மட்டும் தானா?
   தூள் கிளப்புறார் சார், தரத்திலும் சரி, காமெடியிலும் சரி, ஒரு slot அவருக்கு

   Delete
 70. பின் அட்டைப் படத்திலிருந்தும் தலைப்பிலிருந்தும் கிரகிக்க முடிந்தது என்னவென்றால் கர்னல் க்ளிப்டன் பாட்டியுடன் பயணம் போகிறார் விடுமுறைக்கு... ஐயோ இப்பவே சிரிப்பு சிரிப்பாய் வருதே...

  ReplyDelete
  Replies
  1. பலே பாட்டியுடன் பயங்கர பயணம்!

   Delete
 71. மர்ம மனிதனின் இந்திய விஜயம்?

  ReplyDelete
  Replies
  1. நேத்து தான் எங்கேயோ இரும்புக்கை மாயாவியின் இந்திய விஜயம் பத்தி பேசிய ஞாபகம்... இமயத்தில் மாயாவி?

   Delete
 72. James bond stories ok sir but print quality must be equal to old ones. Lateri will tell you why I am telling this

  ReplyDelete
 73. Eagerly waiting for classic James bond with out any censor cut and with lable only for 18😍😍🤩😂🤣😁😁🤗🤗🤗

  ReplyDelete
 74. //அந்நாட்களில் ராணி காமிக்ஸில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதைகளின் உரிமையும் தற்போது நம்மிடம் உள்ளது ! கறுப்பு - வெள்ளையில் மித விலைகளில் ஒன்றிரண்டை நமது வழக்கமான பாணிகளில் ; நமது மொழியாக்கத்தில் வெளியிட்டால் ஓ.கே வா ?//
  கேள்வியே வேண்டாம் சார் நிச்சயமா போடலாம் JAMES BOND OMNIBUS போல குண்டா கும்முன்னு....

  ReplyDelete
 75. 53 + ஜேம்ஸ்பாண்ட் கதைகள் இருக்கும் மறுபதிப்பு கோட்டாவில் ஒரு ஸ்பெசல் இதழா போட்டுதாக்கிவிடலாம் சார்....

  ReplyDelete
 76. *பாண்டால பிளாக்கே பத்திக்கிச்சு பார்த்தீங்களா?*

  ReplyDelete
 77. சார்....இதெல்லாம் நல்லால....விடிகாலைல வந்து பதிவை படிச்சுட்டு கமெண்டு போட வந்தா இப்ப எல்லாம் இந்நேரத்துக்கே லோடு மோர் க்கு பக்கமா வந்தா நான் என் கருத்தை எப்படி பதிவிடுவது....🙄🙁🙁🙁🙁

  ReplyDelete
 78. லயன் தீபாவளி மலர் அட்டைப்படம் - பட்டாசு

  திருஷ்டி சுத்தி போடனும் சார்..செம கலக்கல்


  💥🔥⭐✨⚡

  ReplyDelete
 79. ஒரு அவசரக் கேள்வி ! உங்களின் பதில்கள் அவசரமாய்த் தேவை !

  அந்நாட்களில் ராணி காமிக்ஸில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதைகளின் உரிமையும் தற்போது நம்மிடம் உள்ளது ! கறுப்பு - வெள்ளையில் மித விலைகளில் ஒன்றிரண்டை நமது வழக்கமான பாணிகளில் ; நமது மொழியாக்கத்தில் வெளியிட்டால் ஓ.கே வா ?

  #######


  சார்..இதெல்லாம் நடுராத்திரில கேக்குற கேள்வியா ...என்ன அநியாயம்...டபுள் ஓகே சார்...த்ரிபிள் ஓகே சார்..போர்வபில் ஓகே சார்...இன்னும் இன்னும் ஓகே சார்...எத்தனை நாள் நினைத்திருக்கிறேன் நமது மொழி பெயர்ப்பில் பழைய ஜேம்ஸ் பாண்ட்டை...மிதமான வெயிட் ன்னு சொல்லிட்டீங்க...அதனால் ஒண்ணு ரெண்டுன்னு இல்லாம கை நிறைய எடுத்துட்டு அச்சுக்கு போங்க சார்..:-)

  ReplyDelete
 80. Sir, please try to publish old 007 as a single volume with 3 books. Just a request.

  ReplyDelete
 81. அப்பாடா....எங்கள் மானசீக ஹீரோ...லார்கோவின் மறுபதிப்பு ,நவீன டெக்ஸ் வில்லர் திரு .ஷெல்டனை பார்க்கும் பொழுது எவ்வளவு ஆனந்தமாக உள்ளது ..தீபாவளி மலரை போல ஷெல்டனையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

  ReplyDelete
 82. 'தீபாவளி மலர்' அட்டைப்படத்தில் எதுவோ குறைச்சலாக இருப்பதைப் போன்ற உணர்வு நேற்றிரவு முதலே!! குறிப்பாக, தல'யின் உருவ அமைப்பில் ஏதோ நிறைவாக இல்லாததைப் போல!!

  காலையில் கண்விழித்ததும் மீண்டும் ஒருமுறை பார்த்ததில்...

  முன்புறமாக நீட்டப்பட்ட துப்பாக்கியும், கை முஷ்டியும் பெரிதாகத் தெரிவதைப் போல வரைந்திருப்பது இயல்பே! அதில் குறையில்லை! ஆனால், உடல் அளவோடு ஒப்பிடுகையில் (தலயின்) தலையின் அளவு சற்று கூடுதலாக வரையப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது! கண்கள் மிகச் சிறியதாகவும், மீசை இருக்கவேண்டிய ஏரியா சில மில்லிமீட்டர்கள் அதிகமாகவும் வரையப்பட்டிருக்கின்றன! (அட்டைப்படமும் காலெப்பினியின் கைவண்ணமோ?)

  "என்னதான் ஒரிஜினல் ஓவியத்தையே அட்டைப்படமாகப் போட்டாலும்கூட இந்த உள்ளூர் நாட்டாமைகளின் அளப்பறைகளுக்கு ஒரு அளவே இல்லையப்பா!" எனும் எடிட்டரின் மைன்டுவாய்ஸ் உரக்கக் கேட்கிறது! ஹிஹி!!

  ReplyDelete
 83. எல்லாம் சரிங்க சார்...

  ஆனா ஏன் பழசு.....007
  அதெல்லாம் தான் ஏற்கனவே இருக்கே நம்மட்ட....

  ஏன் சார்...

  நண்பர்களின் உற்சாகம் கரை புரள்கிறது.

  தடையில்லாமல் வரட்டும்..ஒரே புக்கா முடிச்சுடுங்க...

  நாஸ்டால்ஜியா ஓகே...

  ஆனா அந்த ஸ்லாட்டுகளில் புதிய காமிக்ஸ் புதினங்கள் கடலளவில் கையளவாவது காட்டலாம்....

  ReplyDelete
  Replies
  1. அதே பழைய 007 - நம் ட்ரேடுமார்க் மொழிபெயர்ப்பில் - என்பதே இங்கே பிரதானம்!!

   Delete
 84. லயன் தீபாவளி மலர் எழுத்துக்கள் சிந்தா கலரில் சாதாரணமாக இருப்பது போல் ஃபீலிங் ....

  ReplyDelete
  Replies
  1. நகாசு வேலைகளில் அதை சரிபண்ணிடுவாங்கன்னு தோனுது!

   Delete
 85. 007 என் வேண்டாம் என்பதற்கு:-
  சிறுவயதில் முகமூடி வேதாளன் கதைகளை இந்திரஜால் காமிக்ஸில் வந்த போது அந்த கானகம் மற்றும் முத்திரை மோதிரத்தை கண்டு வியந்துள்ளேன்; மிகவும் விரும்பி படிப்பேன்.

  நமது காமிக்ஸில் வந்த இவரின் கதையை சில மாதங்களுக்கு முன் முதல் முறையாக படித்த போது எளிதான வாசிப்பாக மட்டுமே இருந்தது. கதை, விறுவிறுப்பு இல்லை மற்ற விஷயங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கதையை படித்து முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

  007 ஏன் சோதனை முயற்சியில் வரட்டும் என்பதற்கு:-
  பழைய 007 கதையை புதிய மொழிபெயர்ப்பு, நமது ஸ்டைலில் குறைந்த விலையில் வருவது பழைய காமிக்ஸ் வாசகர்களை மீண்டும் நமது பக்கம் இழுக்க வாய்ப்பு உள்ளது அதேபோல் புத்தகக கடைகளில் இவரின் கதைக்கு மௌசு ஜாஸ்தி; எனவே அங்கு இவர் விற்பனையில் சாதிக்க இவருக்கு வாய்ப்புகள் அதிகம். போகிற போக்கில் அவர்கள் மாதம் ஒரு ஜேம்ஸ் பாண்ட் கதையை கேட்டாலும் ஆச்சரியம் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. மாதம் ஒரு ஜேம்ஸ் பாண்ட் வேண்டும் என்று அவர்கள் கேட்பது கட்டாயம் நடக்கும். டெக்ஸ் க்கு தனி சந்தா போல பாண்ட் க்கும் தனி சந்தா.

   Delete
 86. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.


  ஆரவார வரவேற்பு உள்ள வெளியீடுகளை,
  விற்பனைக்கு உத்தரவாதம் உள்ள இதழ்களை வெளியிட தயங்க வேண்டியதில்லை.
  மும்மூர்த்திகள்,டெக்ஸ் வில்லர்,மாடஸ்தி என்ற கதைகளோடு காமிக்ஸ் உலாத்திக் கொண்டிருந்தால் வெளி உலகத்தின் பார்வைக்கு காமிக்ஸ் என்பது கோமாளிகளின் கூட்டமாகக் தான் அறியப்படும்.
  ஆனால் காமிக்ஸ்ல் அறிவுப்பூர்வமான பலநூறு வெளியீடுகள் வெளிவந்து கொண்டுள்ளது.இதை உணரத் தவரும் போது,சிறு கிணற்றுக்குள்ளேயே வாழ்ந்து விடும் மதிகெட்ட ஜீவனாகவே வாழ்ந்து விடுவோம்.
  இவ்விதமாக எழுதுவது சற்று மிகைபடுத்தப்பட்ட விவகாரமாக,பலரையும் காயப்படுத்துவதாக நண்பர்களுக்கு தோன்றும்.ஆனால் என்றாவது ஒரு நாள் இதனின் ஆத்மார்த்தமான பொருள் உணரப்படும் போது ஒவ்வொரு வாசகனும்,தாங்கள் இழந்த விலைமதிப்பானது எத்தகையது என்பதை ;காலப்போக்கில் உணர்ந்து கொள்வார்கள்.
  தனிப்பட்ட விதத்தில் இரசனைகளை சுட்டிக்காட்டி எவருடைய மனதையும் காயப்படுத்தும் உள் நோக்கமோ,அதில் ஏற்படக் கூடிய புல்லரிப்புகளை சிலாகித்துக் கொள்ளும் ஈன புத்தியோ இல்லை.
  காமிக்ஸ் தன்னிகரில்லா த கலை படைப்பு என்பது அறிந்தவன்.உலக மேதைகளே இத்துறையில் தான் சாதித்து கொண்டுள்ளனர்.
  லயன் நிறுவனம் காமிக்ஸ்ல் தமிழில் ஆகப் பெரிய பங்களிப்பை செய்துள்ளது.
  நல்ல வெளியீடுகள் வரும் போது உறுதியாக ஆதரவு அளிப்பது ஒவ்வொருவருடைய கடமை.அதற்காக கோணங்கித்தனமான கதைகளுக்காக கொடி பிடிப்பது என்பது இயல்புகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும்.வெளி உலகத்தின ரின் பார்வையில் காமிக்ஸ் என்பது வேடிக்கையான விசயமாக பார்க்கப்படுவதற்கு இத்தகைய வெளியீடுகள் தான் காரணமேயன்றி வேறென்ன.
  தனிப்பட்ட விதத்தில் பல கதைகளை தவிர்த்துவிட்டு தேர்வு செய்து வாங்கி கொள்வது என்னளவிற்கு சரியானது.மற்றவர்கள் எதை தேவையோ ஆசிரியரிடம் தாராளமாக கேட்டு பெறலாம்.இத்தகைய கருத்துக்களை பதிவிடுவதற்காக எத்தகைய இழிச்சொற்களையும் தள நண்பர்கள் என் மீது திணிக்கலாம்.அவை அனைத்தையுமே அன்போடு ஏற்றுக்கொள்கிறேன்.
  வேறு விதமாக யாரேனும் சிலுவையில் அறைய முற்படுவீர்களாயினும் அதையும் சகித்து கொள்ளவும்,பொறுத்த கொள்ளவும் வலிமை பெற்றவனாகவே இருப்பேன்.

  ReplyDelete
 87. சார் 007 ஐ குண்டூ புக்காவே போடலாம்

  ReplyDelete
 88. // சும்மா ‘ஜிலோ‘வென அவிழ்த்து விடும் டகுல்பாஜி வேலை தான் நமக்கு அத்துப்படியாச்சே ?! // இதை படித்து விட்டு வாய் விட்டு சிரித்து விட்டேன் சார். ஹிஹிஹி

  ReplyDelete