Tuesday, October 01, 2019

கச்சேரி எப்போதோ வித்வான்களே ?

நண்பர்களே,

வணக்கம். கொஞ்சம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ; நிறைய போங்கு ஆட்டங்கள் என்ற உபயத்தில் பின்னூட்ட எண்ணிக்கை எகிறி நிற்க - அதனிடையே இம்மாதத்து விமர்சனங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன் ! கண்ணில் பட்டமட்டுக்கு ட்ரெண்டுக்கு thumbs up ; வஞ்சம் மறப்பதில்லைக்கு ஒரு 'high five ' ; இளவரசிக்கு ஒரு ஹி..ஹி..ரக விமர்சனமும், ஒரு சிலாகிப்பும் !! ஆனால் இம்மாதத்தைத் தனதாக்கிடுவாரென்று எதிர்பார்த்த 'தல' சாகசத்துக்குள் யாரும் புகுந்த மாதிரித் தெரியக்காணோம் ! அட்டைப்படங்களையும், உட்பக்க மசிகளின் பெட்ரோல் மணத்தையும் தாண்டிட நாளைய விடுமுறையாவது சுகப்பட்டால் சிறப்பு !! 

விடுமுறையெனும் போது, பெரிதாய்ப் பதிவொன்றை எதிர்பார்த்திருக்கக் கூடிய நண்பர்களுக்கு ஒரு sorry !! அடுத்த 2 நாட்களுக்கு குடும்பத்துடன் பயணம் என்பதால்  ஒரு நெடிய பதிவினை தயார் செய்ய அவகாசமில்லை ! So இது உங்கள் ஆட்டங்களில் நேரம் !! ஒன்றுக்கு - நாலாய் புக்குகள் கையிலிருக்க, உங்கள் எண்ணச் சிதறல்களை தெறிக்க விடலாமே - ப்ளீஸ் ?

என்னிடம் ஒரேயொரு கேள்வியே - இம்மாதத்தின் இதழ்கள் குறித்து : இளவரசியின் "பழி வாங்கும் புயல்" இதழானது ஈட்டிடவுள்ள வாசிப்பின் சதவிகிதம் என்னவாக இருக்குமோ ? அல்லது "சேகரிப்புக்கே " என்ற கட்சி தான் பிரதானமோ ? I ask this because - எனக்கு ஞாபகத்தில் நிற்கும் மாடஸ்டி சாகசங்களுள் இது அன்றைக்கு செமையாய் நம்மிடையே ஸ்கோர் செய்திருந்தது !! ஆண்டுகளின் ஓட்டங்களோடு நம் 'இளவரசி' ரசனைகளில் பெருசாய் மாற்றமின்றித் தொடர்ந்தால் தப்பித்தோம் !! ஈரோட்டில் இது தொடர்பாய்க் கேள்வியெழுப்பிய போது வேகமாய் கை தூக்கியது நிறையப்பேர் !! அவர்கள் இங்கும் ஒருவாட்டி ஆஜர் போட்டு விட்டால் நலம் !! 
சரி....டிரெண்டிலிருந்து ஆரம்பிக்கலாமா அலசல்களை ? Or Modesty ?

Bye guys ....see you around !! 

251 comments:

 1. Replies
  1. பாலன் வர வர இங்கேயே தவம் கிடக் கெரீர் போல🙃

   Delete
 2. வந்துட்டேன், ஆசிரியர் சார்

  ReplyDelete
 3. மாடஸ்ட்டி வாழ்க....

  ReplyDelete
 4. இந்த படத்தையே அட்டைப்படமாக போட்டிருக்கலாம்.ஹி..ஹி..

  ReplyDelete
  Replies
  1. திரு வாசகம் சார்.

   Delete
  2. அட ஆமால்ல... அட்டையா போடாட்டி கூட பரவாயில்லை, இதையே கலரில் ஒரு பெரிய போஸ்டரா அடிச்சு புத்தகத்தோட இலவச இணைப்பா கொடுத்திருக்கலாம்... ம்.. வடை போச்சே....

   Delete
 5. சார்.மாடஸ்டியும் டெக்ஸும் நமக்கு ரெம்பவே நெருக்கமானவங்க.அதுக்காக அப்பப்ப புதுசா என்ட்ரி ஆகிறவங்களுக்கு ஆரத்தி எடுக்கலைனா, நல்லாயிருக்காது.அதனால எப்பவுமே புது ஜானருக்கு முன்னுரிமை.

  மத்தபடி மாடஸ்டி இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை..!

  ReplyDelete
 6. பென்டாடே யிலிருந்து ஆரம்பிச்சா பென்டாஸ்டிக்கா இருக்கும்.

  ReplyDelete
 7. ட்ரெண்ட் தவிர எல்லாம் படிச்சாச்சு.. இப்போதைய டாப் வஞ்சம் மறப்பதில்லை.

  ReplyDelete
 8. இளவரசியே
  என்றும் அரசி!
  MODESTY BLAISE வாழ்க!

  ReplyDelete
 9. மாடஸ்டி கதையை இப்பொழுதுதான் படித்து முடித்தேன்.

  இறுதியில் கார்வினின் ஆக்ரோசம் அப்பப்பா... நீண்ட நாட்களுக்கு பின்பு ஒரு அட்டகாசமான அதிரடி சாகசம்..

  எனது மதிப்பென் 8.5/10

  ReplyDelete
  Replies
  1. இதை தான் நானும் உணர்ந்தேன். அந்த வெறி ஆட்டம் அபப்பா அபாரம் . ஒரு நெடு நாளைய நண்பனை இழந்தால் நம் ஒ்வொருவருக்கும் வரும் வெறியே அது. எனது மதிப்பெண் 10/10

   Delete
  2. @குமார் சேலம்: உண்மை....

   மாடஸ்டி கதைக்கே 10/10 குடுத்திட்டா, டெக்ஸ் கதைக்கு என்ன கொடுப்பீங்க ? 15/10 ஆ ???

   Delete
  3. ஹிஹிஹி முடியுமா? நடக்காது நண்பரே

   Delete
  4. அதற்கு சரியான பெயர் ருத்ர தாண்டவம். என்னா இம்பாக்ட் இன்னும் அதில் இருந்து மீளவில்லை

   Delete
 10. நான் இந்த மாதம் முதலில் படித்தது மாடஸ்டி தான். முதல் பந்தே சிக்ஸர்.

  ReplyDelete
  Replies
  1. என்னை பொறுத்த வரை அடுத்த வருடம் modesty ku one place please.

   Delete
 11. இபோது வஞ்சம் மறப்பதில்லை. என்னாம்மா எகிறி அடிக்கிறது முகத்தில் அறையும் ஆக்சன். யாப்பா நான் பார்த்த பல ஆங்கில படங்களையும் ஆங்கில சீரிஸ் களையும் தூக்கி சாப்பிட்டு விட்டது. அடி ஒன்றோன்றும் மரண அடி தான். நான் எதிர் பார்த்தது போலவே மாஸ் ஹிட். நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் சார் வஞ்சம் மறப்பதில்லை க்கு sequel இல்லை prequel ஏதாவது இருந்தால் அதையும் அடுத்த வருடம் வெளியிட வேண்டுகிறேன்.

   Delete
 12. ஹைய்யா! புத்தகங்களைக் கையில் ஏந்தியாச்சு!

  இம்முறை அட்டைப் படங்கள் எல்லாமே அழகுதான்!! சின்னக்கவுண்டர் படத்தில் நடிகர் செந்தில் குப்புறப்படுத்தபடி செய்யும் புல் ஆராய்சி போல, நானும் எது பெஸ்ட் அட்டை என்ற ஆராய்ச்சியில் இறங்கியதில்,

  தலயும், வஞ்சம் மறப்பதில்லை'யும் கூட்டாக முதல் இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்!! இரண்டு அட்டைப் படங்களுமே பிரம்மிக்கச் செய்கின்றன!

  ட்ரெண்டும், இளவரசியும் - இரண்டாமிடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்!

  முதலில் ட்ரெண்டை படிக்க ஆரம்பிக்கலாமான்னு ரோசணை!! ம்ம்ம்...

  ReplyDelete
 13. வழக்கம் போல இளவரசி கதையையே முதலில் படித்தேன்... இறுதியில் கார்வினில் அதிரடியால் இளவரசியின் மீதான மதிப்பு அதிகரிக்கவே செய்தது..

  கண்டிப்பாக அடுத்த வருடம் இளவரசிக்கு இடம் வேண்டும்..

  இரண்டாவதாக டெக்ஸ் வில்லரின் கதை.. ஆக்சன் குறைவாக இருப்பது போலவே எனக்கு தோன்றுகிறது.. மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கவேண்டும்.. கடைசி ட்விஸ்ட், டெக்ஸின் தனித்துவத்தைக் காட்டியது..

  மூன்றாவதாக, ட்ரெண்ட் - நேர் கோட்டுக் கதையல்ல.. நேர் நேர் கோட்டுக் கதை.. ஓவியங்கள் மிக அருமை..

  நான்காவது இன்னும் படிக்கவில்லை..

  ReplyDelete
  Replies
  1. ///கடைசி ட்விஸ்ட், டெக்ஸின் தனித்துவத்தைக் காட்டியது..///

   ----லாலே லாலி லாலா...!!!

   Delete
 14. கண்டிப்பாக வருடத்திற்கு ஒரு முறையாவது "இளவரசி"வரவேண்டும்.

  ReplyDelete
 15. சார்,
  இந்த முறை முதலில் கையில்
  எடுத்தது மாடஸ்தி தான். முதலில் பக்கங்களை புரட்டலில் தான் என் சிந்தனை இருந்தது. ஆனால் சும்மா நான்கு பக்கங்களை வாசித்தபின் பரபர வென கதை நகரவே கிளைமாக்ஸ் வரை இழுத்து சென்று விட்டது. கதையில் அந்த புராண நெடி அடித்தாலும் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை. கிளைமாக்சில் வில்லி ஒன் மேன் ஆர்மியாக கலக்க மாடஸ்திக்கு வேலை குறைவுதான். ஆனால் பழி வாங்கும் புயல் தலைப்பிற்கு கதைக்கும் சம்பந்தமில்லாததுபோல் ஓர் ஃபீல். கண்டிப்பாக மாடஸ்தியின் சிறந்த இதழ்களில் ஒன்று.

  இந்த மாடஸ்திக்கும் வஞ்சம் மறப்பதில்லை இதழுக்கும் ஓர் சம்பந்தமிருக்கிறது. அதாவது வ. ம. ஓவியரான ஜான் பார்ன்ஸ் மாடஸ்தியின் சில கதைகளுக்கு ஓவியராக பணி புரிந்துள்ளார். இவ்விருவரும் ஒரே மாதத்தில் இரு வெவ்வேறு இதழ் மூலம் நம்மிடையே வந்தடைவது என்ன ஒரு ஆச்சரியம்!.

  MH MOHIDEEN

  ReplyDelete
  Replies
  1. ////இந்த மாடஸ்திக்கும் வஞ்சம் மறப்பதில்லை இதழுக்கும் ஓர் சம்பந்தமிருக்கிறது. அதாவது வ. ம. ஓவியரான ஜான் பார்ன்ஸ் மாடஸ்தியின் சில கதைகளுக்கு ஓவியராக பணி புரிந்துள்ளார். இவ்விருவரும் ஒரே மாதத்தில் இரு வெவ்வேறு இதழ் மூலம் நம்மிடையே வந்தடைவது என்ன ஒரு ஆச்சரியம்!.??///

   அட!!! பின்றீங்க சார்!! :)

   Delete
  2. மொய்தீன் சார் நல்ல பதிவு. புதிய தகவல் இது.

   Delete
  3. லைன் டிராயிங் கருப்பு வெள்ளைக்கு பதிலாக மாடஸ்தியை இதே ஓவியர் வஞ்சம் மறப்பதில்லை பாணியில் கேன்வாஸ் பெய்டிங்கில் முழுவண்ணத்தில் போட்டு தாக்கினால் ம்ம் கற்பனையிலேயே சும்மா மிரட்டலாகயிருக்கிறது

   Delete
  4. Superb sir. If John Burns is the same person, we too have his artwork for Modesty story lion comics #35 (visithira sagotharargal) Marana Master. (original Yellowstone Booty?)

   Delete
 16. ஆசிரியரின் புதிய பதிவுக்காக....😄

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீ ஆனா உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி

   Delete
  2. கோவையின் தனித்துவமே அதுதாங்ணா....

   Delete
 17. இளவரசிக்கு ஒரு அஞ்சு வருசம் ஓய்வு குடுக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஏன் ஷெரீப் இந்த கொல வெறி...எங்க இளவரசி மேலே பொறாமை..டைகரை விட அதிக மதிப்பெண் எடுக்குறாங்குன்னு ..

   இறுதி தர்மம் வெல்லும்..:-)

   Delete
  2. ///டைகரை விட அதிக மதிப்பெண் எடுக்குறாங்குன்னு ..////

   ----கேட்டுச்சாச்சாசாசாசாசாசா

   @ரம்மி
   @குமார்

   மொதல்ல இளவரசி மாடஸ்தி கிட்ட மோதி செயிங்கப்பா!

   Delete
  3. ஷெரீஃப் ஜி ஏன் இந்த கொலை வெறி man

   Delete
  4. எங்களை மாதிரி யூத்துகளுக்கு பிடிச்ச மாதிரி புது ஹீரோயின் கொண்டு வர வேணாமா?

   Delete
 18. பழி வாங்கும் புயல். அமைதியாக செல்லும் கதை க்ளைமாக்ஸில் கார்வினின்விஸ்வரூபத்திற்குப்பின் புயல் வேகம்எடுக்கிறது. துப்பாக்கியால் தரையைக்கூடகுறிவைத்துசுடத்தெரியாதவர் என்று மாடஸ்டி யால் கிண்டலடிக்கப்படும் கார்வின்மாடஸ்டிக்காகதுப்பாக்கியை எடுப்பது அருமை.. கரூர் ராஜ சேகரன் மாடஸ்டி இம்முறையும் அதிரடி அசத்தல்

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா. அசத்தல் தான்

   Delete
  2. // இளவரசிக்கு ஒரு அஞ்சு வருசம் ஓய்வு குடுக்கலாம். //
   தப்பில்லை,தப்பில்லை.....

   Delete
 19. தெளிவான நீரோடை போல் ஒரே நேர்க்கோட்டில் கதை சென்றாலும் ஒரு திடுக் ,திடுக் மனவோட்டத்தை கதை நெடுகிலும் கொண்டு வந்ததை மறுப்பதற்கில்லை..ட்ரெண்ட் ன் முன் பாக சாகஸங்களை கொஞ்சம் தொட்டு சென்றாலும் அதனை படிக்கா நண்பர்களும் இந்த இதழை படிக்கும் பொழுது எந்த நெருடலும் ஏற்படாதவாறு அமைந்தது மிக சிறப்பு .இறுதியில் இந்த மாதமும் ஒரு கனத்த முடிவுடன் முடிவுரை அமைந்து மனதை நெகிழ வைத்து விட்டார் ட்ரெண்ட் .இந்த மாதமும் ட்ரெண்ட் அசத்தி விட்டார் என்று உறுதியாக சொல்லலாம்.மற்ற கெளபாய் நாயகர்களை போல இவர் டுமீல் ,டுமீல் என பொறிபறக்க சுடவில்லை தான்..எதிரிகளை நோக்கி பன்ச் டயலாக் பேசவில்லை தான் ..ஆனாலும் வர வர மனதில் நெருங்கி கொண்டே வருகிறார் இந்த அழகான சித்திர நாயகர்.தோர்கலை போல இவரும் இனி வீறு நடை தான் போடுவார் என்பதில் இனி எந்த சந்தேகமும் இல்லை...


  ReplyDelete
  Replies
  1. சூப்பர் விமர்சனம் தலைவரே. எடிட்டர் சொல்வது போல புக் ஐ படித்து விட்டு உடனே விமர்சனம் இடுவதில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை.

   Delete
 20. சார் கிட்டத்தட்ட 100 கதைகளாவது உள்ள தொடர் மாடஸ்டி. இதில் ஆகச்சிறந்ததையே தாங்கள் இதுவரையிலும் வெளியிட்டுள்ளீர்கள். இதில் இன்னும் வெளிவராத கதைகளை முயற்சிக்கலாமே. கிராஃபிக் நாவல்கள் நம் ரசனையை பன்மடங்கு உயர்த்தி யிருக்கும் போது 18+ சித்திரங்கள் ஒரு பொருட்டல்லவே (ஒரு வேளை இதனால் தான் வெளியிட தயங்குகிறீர்களோ). வருடத்திற்கு ஒருமுறை மட்டுமாவது berth கொடுங்கள். RAC, Waiting list எல்லாம் இளவரசிக்கு வேண்டாமே.

  ReplyDelete
  Replies
  1. வழிமொழிகிறேன்..

   மாடஸ்தியின் வெற்றியை ஈரோட்டுலியே ஆசிரியர் பார்த்து விட்டார் ..எனவே..:-)

   Delete

  2. மாடஸ்டி யே ஆஸ்தான கதாநாயகி.
   "பழிவாங்கும் புயல்" - அதையே
   நிரூபித்து விட்டது.
   " மாடஸ் டியின் கதை " யையும் இணைத்து வெளியிட்டிருந்தால் கார்வினின் பழிவாங்க புறப்படும் வேகம் அனைவருக்கும் புரிந்திருக்கும்.

   Delete

  3. மாடஸ்டி யே ஆஸ்தான கதாநாயகி.
   "பழிவாங்கும் புயல்" - அதையே
   நிரூபித்து விட்டது.
   " மாடஸ் டியின் கதை " யையும் இணைத்து வெளியிட்டிருந்தால் கார்வினின் பழிவாங்க புறப்படும் வேகம் அனைவருக்கும் புரிந்திருக்கும்.

   Delete
 21. மாடஸ்தி இன்றுதான் படிக்க வேண்டும் ..ஆனால் எனது மதிப்பெண் பத்துக்கு பத்து என கூறிவிட்டு மீண்டும் மாடஸ்திக்கு அதிக இடங்களை அளிக்குமாறு வேண்டிக்கொண்டு விடைபெறுகிறேன் .

  நன்றி வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. தலைவரே இது ரொம்ப ஓவர்

   Delete
  2. இளவரசி கதை பரபரவென்று தொடங்கி கார்வினின் அதிரடியில் புயல் கரை கடந்தது.

   கார்வினின் இத்தனை கோபம் எதை காட்டுகிறது இளவரசி மீதான காதலா??? இல்லை நட்பு???

   தொடரட்டும்.....
   கதை10/10

   வருடம் 2கதையாவது இளவரசிக்கு வேண்டும் .....

   Delete
 22. வஞ்சம் மறப்பதில்லை ..எப்படியோ படித்து முடித்து விட்டேன்..நண்பர் சொன்னது போல இரத்த பொரியல் தான் ( இரத்த பொரியல் எனக்கு பிடிக்காது என்பது வேறு விசயம்.)

  நமது சமீப இதழ்களில் பராகுடா பெளன்சர் போன்ற கதைகளில் இதை விட அதிக வன்முறை காட்சிகளை பார்த்து விட்டோம் தான்..ஆனால் அந்த இதழ்களில் எந்த இரத்த வாடையும் அடிக்க வில்லை .காரணம் கதையின் தன்மை அது போல ..எந்த வித குறுகுறுப்பையும் ,நெகிழ்வையும் தராத அட்டகாசமான கதை களங்கள்.ஆனால் வஞ்சம் மறப்பதில்லை யின் வன்முறைகள் முகத்தில் அடிப்பது போல் தோன்றுவது அதன் ஓவிய பாணிகளின் காரணமாகவா அல்லது வலுவான கதை குறைந்த காரணமா என என்னால் அனுமானுக்க முடியவில்லை..இது போன்ற ஓவிய பாணிகள் பார்ப்பதற்கு ஈர்த்தாலும் கதையாக படிக்கும் பொழுது வழக்கமான சித்திர பாணிகளில் வரும் நெருக்கம் இதில் வந்து விடுமா என எதிர்பார்த்தேன்.ஆனால் வழக்கம் போலவே அந்நியபடுத்தி விட்டது சார். ( எனக்கு)..


  வஞ்சம் மறப்பதில்லை - மறக்க நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. +1
   உண்மை தலீவரே..! எனக்கும் அதேதான் தோன்றியது..!

   Delete
  2. +1

   நான் இன்னும் படிக்கவில்லை.. ஆனாலும் தலிவர் இளவரசிக்கு ஓட்டு போட்டதால், தலிவருக்கு என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்..

   Delete
  3. // தலிவர் இளவரசிக்கு ஓட்டு போட்டதால், //
   ஆஹான்.......

   Delete
  4. நான் இன்னும் படிக்கவில்லை.. ஆனாலும் தலிவர் இளவரசிக்கு ஓட்டு போட்டதால், தலிவருக்கு என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்..

   #####


   ஹாஹாஹா...:-))))))

   Delete
 23. ஒரு பள்ளத்தாக்குப் படலம்:
  பனிப் பிரதேசத்தில் ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் நடக்கும் இரயில் கட்டுமானப் பணிக்கு பொறுப்பேற்று வழிநடத்த வருகிறார் இளம் பணியாளர் ஜார்ஜ்....
  அங்கே சில அசாதரணமான சம்பவங்கள் அரங்கேற,மர்மக்கரடி உருவில் ஆபத்துகளும் உருவாக,பணியாளர்கள் பலர் பீதியில் தெறித்து ஓட,ஒரு கட்டத்தில் அங்கே இருப்பவர்களுக்கும் வெளி உலகத்திற்குமான தொடர்பே அறுந்து போக நேரிடுகிறது......
  நம் நாயகர் ட்ரெண்டின் முன்னாள் காதலி ஆக்னஸின் கணவர்தான் ஜார்ஜ்....
  விசாரணைக் களத்தில் ட்ரெண்ட் குதிக்க அவரை ஆக்னஸ் தொடர, அடுத்தடுத்த சம்பவங்களை கேட்க வேண்டுமா என்ன?
  கவிதையான வசனங்கள்,மென்சோகம் இழையோடும் காட்சிகள்,கண்ணுக்கு குளிர்ச்சியான ஓவியங்கள் எனத் தொடர....
  ஜார்ஜின் நிலை என்ன???
  பள்ளத்தாக்கில் நிகழும் அசாதரணமான சம்பவங்களுக்கு விடை என்ன???
  மர்மக்கரடி வேட்டையாடப்பட்டதா???
  விடைகள் கதைக்களத்தில்....

  "படைத்தவனின் பாதைகள் தான் எத்தனை புதிரானவை"....
  உண்மைதானே......

  வழக்கமான குழப்பமில்லாத நேர்கோட்டுப் பாணிக் கதை.....

  இறுதியாக ஒரு சந்தேகம்,
  உணவு,நீர் இன்றி,உறக்கமின்றி ஓர் மனிதன் 15 நாட்கள் தாக்குப் பிடிக்க முடியுமா என்ன?
  இதற்கு என்ன விளக்கம் இருக்க முடியும்?

  எமது மதிப்பெண்கள்-9/10

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் ஒரு சந்தேகம்..கொஞ்ச நாள் போகட்டும் :-)

   Delete
  2. // "படைத்தவனின் பாதைகள் தான் எத்தனை புதிரானவை"....
   உண்மைதானே // வசனங்கள் எல்லாமே டாப் கிளாஸ்.

   Delete
  3. ///இறுதியாக ஒரு சந்தேகம்,
   உணவு,நீர் இன்றி,உறக்கமின்றி ஓர் மனிதன் 15 நாட்கள் தாக்குப் பிடிக்க முடியுமா என்ன?
   இதற்கு என்ன விளக்கம் இருக்க முடியும்?
   ////

   இதற்கு சரியான விளக்கமளிக்க நமது தளத்தின் 'சுஜாதா' திரு.செனா அனா அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்!

   Delete
 24. 2020 ல் இளவரசி மீண்டும் வேண்டும். ப்ளீஸ். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 25. புதைந்து போன புதையல்:
  கோடைக்காலத்தின் ஒரு காலைப்பொழுதில் ஃப்ளாக்ஸ்டாப் நகரில் காலடி பதிக்கிறது நம் ரேஞ்சர் ஜோடி,
  லின்க் வாக்கர் எனும் கொள்ளயனின் தலைமையில் சுற்றும் கொள்ளைக் கும்பலின் கைவசமுள்ள பெருமதிப்புடைய தொகை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும்,தற்போது வாக்கர் & கோ இல்லாத நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் புதையலை கைப்பற்றும் பணி வில்லர் & கார்சன் கூட்டணியிடம்
  பிங்கர்டன் ஏஜன்சியால் ஒப்படைக்கப்படுகிறது,
  புதையலைப் பற்றி துப்பு சொன்ன வாக்கரின் மனைவி ஃப்ளோரா கெல்லி மற்றும் சிறைவாசத்தில் இருக்கும் வாக்கரின் இரு கூட்டாளிகளில் ஒருவனான டாம் கில்டர் துணையுடன் புதையலை தேடிச் செல்லும் நிலை டெக்ஸ் கூட்டணிக்கு ஏற்படுகிறது.
  இடையில் வாக்கரின் இரு கூட்டாளிகளில் மற்றொருவனான ரே கிளாக் சிறைக் காவலன் மால்டன் உதவியுடன் தப்ப,புதையலை தேடி இரண்டாம் கூட்டணியும் கிளம்புகிறது....
  புதையலின் தேடலை எளிதாக்க ரே மெக்சிகோ கொள்ளைத் தலைவன் ஹொரேசியா ஃப்யூண்டஸ் உதவியை நாட ஒரு புதுக் கூட்டணி உருவாகிறது....
  மெக்சிகோ கொள்ளையனுடன் ஏற்படும் பிணக்கில் வெளியேறும் கர்லோஸ் ரிகரா எனும் கூட்டாளி பழிவாங்கும் நோக்கில் மெக்சிகோ மிலிட்டரி கர்னல் யுரைகாவின் உதவியை நாட பேராசை கொண்ட மெக்சிகோ கர்னலால் மூன்றாம் கூட்டணி புதையலை நோக்கி பயணிக்கிறது......
  கர்னலுக்கு கடுக்காய் கொடுக்கும் டெக்ஸ் கூட்டணி புதையலை கைப்பற்ற இடைமறிக்கும் ஹொரேசியா கூட்டணியிடம் மாட்டிக்கொண்டு தடுமாற,புதையலை கைப்பற்றி ரேஞ்சர் கூட்டணியை கொளுத்தும் வெயிலில் கட்டிப்போட்டு விட்டு செல்ல....
  அடுத்தடுத்த திருப்பங்களில்,

  ரேஞ்சர் கூட்டணி தப்பித்ததா???

  கர்னலின் பேராசை பலித்ததா???

  மெக்சிகோ கொள்ளையன் வசமிருந்த புதையலின் கதி என்ன???

  வாக்கரின் மனைவி என்னவானாள்???

  வாக்கரின் சிறைக் கூட்டாளிகள் மற்றும் சிறைக் காவலனின் கதி என்ன???

  இடியாப்பச் சிக்கலில் ரேஞ்சர் கூட்டணி புதையலை கைப்பற்றியதா????

  விடைகளைக் காண கதைக் களம் செல்வீர்.....

  இறுதியாக கதையில் வரும் திருப்புமுனை உண்மையிலேயே எதிர்பார்க்காத திருப்புமுனைதான் சார்.....

  கதை முடிவும் மனதை நெகிழ வைத்தது,கதையின் கனத்தை இன்னும் சற்று கூட்டியது.....

  "புலன்களை விழிப்பாய் வைத்திருப்பவன் மட்டுமே இந்த வன்மேற்கில் வெற்றி காண முடியும்"

  நேர்த்தியான வசனங்கள்....

  அருமையான ஒரு ஆக்‌ஷன் திரில்லர்.
  சில இடங்களில் ஆக்‌ஷன் குறைவாக இருப்பினும் பரபரப்பான கதையோட்டம் அந்த குறையை நிவர்த்தி செய்கிறது....

  ஓவியங்கள் சற்றே சுமார் இரகம்தான்....

  அட்டகாசமான அட்டைப்படம்,
  இந்த வருடத்தில் டெக்ஸ் சிறந்த அட்டைப்பட வரிசையில் இடம்பிடிக்க வாய்ப்புண்டு.

  எமது ரேட்டிங்-10/10

  ReplyDelete
  Replies
  1. செம விமர்சனம் அமைச்சரே...இன்று நேரம் கிடைப்பின் தலைவர் உடன் தான்..:-)

   Delete
  2. நன்னி தலைவரே......

   Delete
  3. ரவி அண்ணா வரவர சூப்பர் உங்கள் விமர்சனம். தெளிவாக மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

   Delete
  4. பாணியே சொல்லுது நல்ல விமர்சனம்! இப்பத்திக்கு ஸ்கிப் பண்ணிட்டு கதையை படிச்சிட்டி படிச்சிடறேன். தலை ஆல்வேஸ் 🎸!!!

   Delete
  5. ஒட்டு மொத்த கதைக்களத்தின் பிரமாண்டத்தையும் வார்த்தைகளாக கண்முன் நிறுத்தியுள்ளீர்கள்.
   செம்ம விமர்சனம்!!!.

   Delete
  6. // ரவி அண்ணா வரவர சூப்பர் உங்கள் விமர்சனம் //
   நன்னி குமார்,எல்லாம் பெரியவங்க ஆசீர்வாதம் தான்,ஹி,ஹி,ஹி....

   Delete
  7. // தலை ஆல்வேஸ் 🎸!!! //
   உண்மைதான்.....

   Delete
  8. //:செம்ம விமர்சனம்!!!. //
   நன்னி ஸ்ரீராம் ஜி......

   Delete
  9. முதலில் கதையைப் படிச்சுட்டு அப்பாலிக்கா வந்து இந்த விமர்சனத்தைப் படிக்கலாம்னு இருக்கேன்!!

   Delete
 26. மாடஸ்டியின் பழி வாங்கும் புயலை பொறுத்தமட்டில் முதல் வாசிப்பு என்பதாகத்தான் நினைவு....
  கதை ஆஹா,ஓஹோ இரகம் இல்லை எனினும் படிக்கலாம் வகையறாதான்.....
  மற்றபடி அடுத்த அட்டவனையில் நல்ல கதைகள் இருப்பின் இடம் கொடுக்கலாம்....

  ReplyDelete
 27. I don't know why many readers don't appreciate Modesty Blaise stories sir. Personally speaking, even before your giving information about Peter O' Donnel & Jim Holdaway, despite not knowing the background, I wondered how great and interesting the plot of every story was. I rememmer reading 'Garvin's Travels' (Neville Colvin) - (Garvinin Yaathiraigal in Kodaimalar 1987) umpteen times enjoying as I did for the first time. Why? even now I have the book and sometimes read it again. God willing, I may not lose that book in the future.

  ReplyDelete
  Replies
  1. ரசனைகள் பலவிதம் சார்!

   எல்லோருக்கும் எல்லாமே பிடிக்கும் னு சொல்ல முடியாதே!

   கிர்பிக்குனும், மாண்ட்ரேக்குனும் தனிப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஆனா பெருவாரியான ரசிகர்களை கவராத காரணமாக அவைகள் இப்பலாம் வர்றது இல்லை!

   கார்டூன்னா காத தூரம் ஓடும் ரசிகர்கள் இருக்காங்க! ஆனா இந்த திருவிழாவில் கார்டூன்கள் கொளுத்தின!

   டெக்ஸை கழவி ஊத்துவதை கொள்கையாக கொண்ட ரசிகர்கள் பவணி வர்றாங்களே இங்கே அதையும் பார்க்கிறோம் தானே!
   அது அவுங்க சாய்ஸ்!

   மாடஸ்திக்கு எத்தனை குரல்கள் ஒலிக்குது;அதை பார்த்து சந்தோசபடுங்க சார்!

   Delete
  2. காமிக்ஸ் படிப்பது ஹீரோயிச ரசனை என்று எடுத்துக் கொண்டால் " மாட ஸ்டி" அருமையான கதைத் தொடர்.
   மற்றபடி, ஆணாதிக்க சிந்தனையுடன், "ஜேம்ஸ் பாண்டை " ஒத்துக் கொள்வோம்..ii (ஒவ்வொரு கதையிலும் ஒரு ஹீரோயின்.. ப்பா. எத்தனை பேரோடு .என் றெல்லாம் யோசிக்கக் கூடாது.) அது ஒரு கதாசிரியரின் கதை நகர்த்தும் உத்தி. அந்த பாய் ப்ரண்டை அந்த கதையோடு மறந்து விட வேண்டும்...
   "ட்ரெண்ட் "எல்லாலாம் ஒரு தடவை படிக்கலாம். மறுபடிUடிக்க தூண்டுவதாகவே இல்லை. (எங்களுக்குள.?i)
   எனவே, அன்புள்ள ஆசிரியருக்கு, "மாட் ஸ்டி" யை " கிராபிக் நாவல்" வரிசையிலாவது இணைத்து வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.
   காரணம்... : கிராபிக் நாவல் _வரிசையில் - கலாச்சார பிரச்சனை கிடையாது. கவர்ச்சியாய் இருக்கிறது என்ற பிரச்சனை கிடையாது. முக்கியமாய் கதை புரியவில்லை என்ற பிரச்சனையும் இருக்காது.( மாடஸ் டிக்கும், கார்வினுக்கும் உள்ள உறவு முறையில் ஒரு கிராபிக் நாவல்தனம் தானே தென்படுகிறது.)
   எனவே, 2020யில் இந்த கோணத்தில் ஆவண செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

   Delete
  3. காமிக்ஸ் படிப்பது ஹீரோயிச ரசனை என்று எடுத்துக் கொண்டால் " மாட ஸ்டி" அருமையான கதைத் தொடர்.
   மற்றபடி, ஆணாதிக்க சிந்தனையுடன், "ஜேம்ஸ் பாண்டை " ஒத்துக் கொள்வோம்..ii (ஒவ்வொரு கதையிலும் ஒரு ஹீரோயின்.. ப்பா. எத்தனை பேரோடு .என் றெல்லாம் யோசிக்கக் கூடாது.) அது ஒரு கதாசிரியரின் கதை நகர்த்தும் உத்தி. அந்த பாய் ப்ரண்டை அந்த கதையோடு மறந்து விட வேண்டும்...
   "ட்ரெண்ட் "எல்லாலாம் ஒரு தடவை படிக்கலாம். மறுபடிUடிக்க தூண்டுவதாகவே இல்லை. (எங்களுக்குள.?i)
   எனவே, அன்புள்ள ஆசிரியருக்கு, "மாட் ஸ்டி" யை " கிராபிக் நாவல்" வரிசையிலாவது இணைத்து வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.
   காரணம்... : கிராபிக் நாவல் _வரிசையில் - கலாச்சார பிரச்சனை கிடையாது. கவர்ச்சியாய் இருக்கிறது என்ற பிரச்சனை கிடையாது. முக்கியமாய் கதை புரியவில்லை என்ற பிரச்சனையும் இருக்காது.( மாடஸ் டிக்கும், கார்வினுக்கும் உள்ள உறவு முறையில் ஒரு கிராபிக் நாவல்தனம் தானே தென்படுகிறது.)
   எனவே, 2020யில் இந்த கோணத்தில் ஆவண செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

   Delete
  4. டெக்ஸ் ஸ கழுவி ஊத்தறவங்க இருக்கத் தானே செய்கிறார்கள்//
   இனத மறுக்கிறேன் போட்டியே இல்லைனா எந்த சுவாரஸ்யமும் இல்லை

   Delete
  5. கிராபிக் நாவலில் இளவரசிக்கு இடம் ஒதுக்கலாம்.

   Delete
 28. இன்னும் புக்கும் டெலிவரி ஆகவில்லை...

  மாடஸ்தி எப்போதும் செபெஷ்சல்தான்.

  ReplyDelete
 29. Just complete 2 books

  Modesty. -. 7 / 10
  Trent. -. 6 / 10

  Remaining books rating will be posted latter.

  ReplyDelete
  Replies
  1. செல்வா சார் கொஞ்சம் தாராளமாக மார்க் போடலாமே

   Delete
  2. ஆமா சகோ நம்ம தலைக்கு தாராளமாக அள்ளி போடுங்க!

   Delete
 30. 3 புத்தகங்கள் படித்து முடித்து விட்டேன். வஞ்சம் மறப்பதில்லை அட்டகாசம். அந்த nazzi கேம்ப் ஃப்ளாஷ்பேக் பயங்கரம். இந்த தாக்கம் வெகு நாட்கள் இருக்கும். நெற்றி அடி 10/10

  ReplyDelete
  Replies
  1. ///அந்த nazzi கேம்ப் ஃப்ளாஷ்பேக் பயங்கரம். இந்த தாக்கம் வெகு நாட்கள் இருக்கும்.///

   இதெல்லாம் ஒண்ணுமேயில்லை குமார்.!
   நீங்க NBS ல் வந்த பிரளயத்தின் பிள்ளைகள் படிக்கலையா..?!

   Delete
  2. படித்தேன் கண்ணா. நினைவில் இருக்கிறது. நீங்கள் சொல்வது போல அதனுடன் ஒப்பிட்டால் இது ஒன்றுமில்லை.

   Delete
  3. பிரளயத்தின பிள்ளைகள் பெஸ்ட் கிராபிக் நாவல். எனது all-time மறுவாசிப்பில் இதற்கும் கிரீன் மேனர் கதைகளுக்கும் என்றும் இடம் உண்டு.

   Delete
 31. புதைந்து போன புதையல். நான் பெரிய டெக்ஸ் ஃபேன் அல்ல. ஆனால் இந்த கதை அட்டகாசம். மும்முனை போட்டி அதில் எப்படியும் கார்சனின் நண்பர் ஜெயித்து விடுவார் என்று நமக்கு தெரியும். ஆனால் மிக சுவாரசியமாக கொண்டு சென்று உள்ளார் கதாசிரியர். நான் அந்த டுவிஸ்ட் ஐ கெஸ் செய்து விட்டேன். ஆனால் அது நான் எதிர் பார்த்ததை விட சிறப்பாக வே இருந்தது. அந்த கிளைமாக்ஸ் touching and class. I'll give 8/10. 3 out of 3 . இன்னும் டிரெண்ட் மட்டும் பாக்கி. கண்டிப்பாக அது ஹிட் தான். அதையும் படித்து விட்டு வருகிறேன்

  ReplyDelete
  Replies
  1. இந்த மாத அட்டைகளில் இதுவே சிறந்த அட்டைப்படம். 10/10 top notch.

   Delete
  2. அட டே! டைகர் முகாமில் டெக்ஸ் கொடி பறக்குது!

   ஷார்ட் & சுவீட்டான விமர்சனம்! சூப்பர்!
   நல்லது! நடக்கட்டும்...டும்...ம்....!

   Delete
  3. // மிக சுவாரசியமாக கொண்டு சென்று உள்ளார் கதாசிரியர் //
   உண்மைதான் குமார்,சீரான கதையோட்டத்தில் மிகதெளிவான கதையமைப்புகள்,காட்சி நகர்வுகள் என கோர்வையான அமைப்புகள் கதையை இன்னும் சுவராஸ்யப்படுத்தின.....
   சற்றே உற்று கவனித்தால் ஒரு கதையில் எத்தனை சம்பவங்கள்.....
   இதை இன்னும் விரிவாக பேசலாம்,ஆனால் எல்லா சம்பவங்களையும் தொகுத்தால் கதையின் ட்விஸ்ட் உடையும் அபாயமுண்டு......

   Delete
  4. புதைந்து போன புதையல்..
   மின்னும் மரணம் வெர்சன் 0.2

   Delete
  5. ரம்மி வாங்க வாங்க. எப்படி இப்படி உங்களால் யோசிக்க முடிகிறது. வழக்கம் போலவே நெத்தி அடி.

   Delete
 32. கடைசியாக டிரெண்ட் இந்த முறை saved the best for last. ஒரு சில கதைகளை படிக்கும் போது மட்டுமே அவை நம்மை அப்படியே உள்ளே இழுத்து கதையோடு ஒன்றசெய்யும். டிரெண்ட் கதையில் அந்த மாயாஜாலம் ஒவொரு முறையும் நிகழ்கிறது.
  நம்மை போல இரத்தமும் சதையும் ஆன ஒரு சாமானிய மனிதனே கதாநாயகன் எனும் போது கதையோடு எளிதாக ஒன்ற முடிகிறது. இந்த கதையை படித்து முடித்தவுடன் ஏதோ ஒன்று மனதை பிசைகிறது. டிரெண்ட் க்கு அடுத்த வருடம் 2 இடம் பிளீஸ். My marks 100/10

  ReplyDelete
  Replies
  1. ஏன் பாக்கி இருக்கும் 4கதைகளையும் ஒரே குண்டாக போட்டா வேணாமா?

   2கதைகள் மட்டுமே போட்டா பாக்கியுள்ள 2கதைகள் தான் தொடரின் க்ளைமாக்ஸ்!

   அதிலும் அந்த 7வது கதை

   மிஸ் ஹெலன்----இன்னிக்கெலாம் பார்த்துட்டே இருக்கனும் போல அத்தனை அழகு!

   Helen of Troy யை நேரில் பார்க்க முடியாத நாமெலாம் இந்த ஹெலனை பார்த்தவே பரவசம் தான்.

   அது என்னவோ ஹெலன்னு பெயர் இருந்தாவே ஓவியர் கையில் உள்ள தூரிகையில் மின்னல் வந்து ஒட்டிக்குது!

   8வது பாகம் ஆளை புரட்டி போடும் ட்விஸ்ட் க்ளைமாக்ஸ்! அதற்கு இன்னும் ஒரு வருடம் காத்து இருக்கனுமா???

   4புக் சும்மா தெறிக்கவிட்டுறுவாரு ட்ரெண்ட்!!!

   Delete
  2. சரிதான் ஒரே வருடத்தில் முடித்து விடுங்கள். Jason Brice pottu முடித்தது போல. +1234567890

   Delete
  3. ட்ரெண்ட் - மெல்லிய மனித உணர்வுகளை தட்டியெழுப்பும் ஆற்றல் கொண்ட ஒரு தொடர்!! இதை 4 பாகங்களாக சேர்ந்தாற்போல படிக்க நேரிட்டால் அது கொஞ்சம் ஓவர்டோஸாகிவிட வாய்ப்பிருக்கிறது! ஓரிரு மாத இடைவெளிகளில் தனித்தனி இதழ்களாகப் படித்திடுவதே முழுப் பலனளிக்கும் எ.எ.க!

   Delete
 33. அனைவருக்கும் வணக்கம். இந்தமுறை ட்ரெண்ட் வழக்கம் போல் heart touching கிளைமாக்ஸ் அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத அருமையான கதை.

  @வஞ்சம் மறப்பதில்லை இந்த மாதம் முதல் இடத்திற்கு தகுதியானதே. வன்முறை அதிகம். But i enjoyed lot.
  @tex ஒரு அருமையான வித்தியாசமான பரபரப்பான chasing கதை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஹீரோ/ஹீரோயின் யார் என்பதில் சற்று குழப்பம். Tex கு அதிக வேலை இல்லை.
  @மாடஸ்தி கார்வினின் அதிரடி super.


  ReplyDelete
  Replies
  1. அப்படி சொல்லுங்கள் சார். அப்பப்போ வந்து இது போல விமர்சனமும் போடுங்கள்.

   Delete
  2. // @tex ஒரு அருமையான வித்தியாசமான பரபரப்பான chasing கதை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஹீரோ/ஹீரோயின் யார் என்பதில் சற்று குழப்பம். Tex கு அதிக வேலை இல்லை. // டெக்ஸ் கதையில் டெக்ஸ் க்கு அதிக வேலை யில்லை என்றாலே அந்த கதை நன்றாக தானே இருக்கும்.

   Delete
  3. // ஆனால் ஹீரோ/ஹீரோயின் யார் என்பதில் சற்று குழப்பம். // டெக்ஸ் விஜயராகவன் கேட்டுச் சாசாசாசா .

   Delete
  4. டெக்ஸ், 800கதைகள் கொண்ட அமிர்த்த கலசம்.

   அள்ள அள்ள குறையாத வெரைட்டி உண்டு! அதில் இது ஒண்ணு!

   விருந்தில் எல்லா வகையும் சுவைக்கணும். அப்பத்தான் சிறப்பு!
   வித்தியாசமான முறையில் வந்ததால் தானே இத்தனை ரசிகர்கள் கவரப்பட்டு இருக்காங்க! பெரு மகிழ்ச்சி!

   நம்புள்து மாதிரியா?? ஒரு ஏழு, எட்டு கதையை மட்டுமே வெச்சிட்டு பாவம்... என்னத்த சொல்ல!

   Delete
 34. எடிட்டர் சார் ஆகஸ்டில் இருந்து October வரை உங்களது வெற்றிபயணம் தொடர்கிறது. வெற்றி மேல் வெற்றி. உங்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் பூங்கொத்தும் வாழ்த்துக்கள். உங்கள் உழைப்புக்கும் அர்பணிப்பு க்கும் தலை வணங்குகிறேன். நன்றி நன்றி நன்றி. நான் மருக்கா போய் எல்லா புத்தகங்களையும் மறுபடி படிச்சுட்டு வாரேன்.

  ReplyDelete
  Replies
  1. ///நான் மருக்கா போய் எல்லா புத்தகங்களையும் மறுபடி படிச்சுட்டு வாரேன்.///

   ரெண்டாவது ரவுண்டா?
   சிட்டி ரோபோ புத்தகங்களை ஸ்கேன் பண்றமாதிரி படிக்காம, இந்தத் தபா நிதானமாப் படிக்க முயற்சி பண்ணுங்க!! ;)

   Delete
  2. இந்த முறை நிதானமாக ரசித்து ரசித்து படிக்கிறேன். இப்படியே பழகி விட்டது. ஒரு புத்தகத்தை எடுத்தால் அதை படித்து முடித்து விட்டு தான் மறு வேலை.

   Delete
 35. இன்னமும் கூரியர் வரவில்லை... கூரியர் நம்பர் வாங்கி தான் செக் பண்ணனும்

  ReplyDelete
 36. படிக்காமல் இளவரசிக்கு மதிப்பெண் அளித்து அதுவே ஆசிரியர் மைனஸாக நினைத்து விட்டால் என்ன செய்வது என்ற யோசனையின் காரணமாக இளவரசிக்கு பிறகு தல என முடிவெடுத்து "பழிவாங்கும் புயலில்" நுழைந்து வெளியாகி விட்டது.ஏற்கனவே இந்த புயலில் சிக்கிய அனுபவம் இருந்தாலுமே நீண்ட காலங்கள் கழித்து மீண்டும் சிக்கியதால் ஒரு புது புயலில் சிக்கிய அனுபவத்தையே ஏற்படுத்தியது .ஆனால் இந்த புயல் மற்ற புயல்களை போல பாதிக்கப்பட வைக்காமல் பரபரக்க மட்டுமே வைத்தது.இந்த பழைய புயலில் சிக்கி முடித்து வெளியேறிய பொழுது இளவரசியின் புது புயலில் எப்போது மாட்டுவோம் என்ற நினைப்பே மனதினுள்.

  நன்று👌🏻👌🏻😍

  ReplyDelete
 37. இனி புதையலை தேடி புறப்பட வேண்டும்...:-)

  ReplyDelete
 38. ***** ஒரு பள்ளத்தாக்குப் படலம் *****

  கனடாவின் வடகோடியில் மனிதசஞ்சாரமற்ற பனிப் பள்ளத்தாக்குப் பகுதியில் முகாம் அமைத்து வேலை செய்து வருகிறது ஒரு ரயில்வே பாதையமைக்கும் குழு! அக்குழுவிற்கு ஒரு பிரம்மாண்ட பனிக்கரடியின் மூலம் ஆபத்து வந்து சேருகிறது! நம் செஞ்சட்டை ஹீரோ ட்ரெண்ட் - தன் பழைய காதலி ஆக்னெஸை உடனழைத்துக் கொண்டு அவ்வூருக்கு வந்து சேர்கிறார். சுமார் 50 பேருக்கும் மேலிருந்த அந்தக் கேம்ப் அவர் வந்து சேரும்போது வெறிச்சோடிக்கிடக்கிறது!

  * கேம்ப்பிலிருந்தவர்களின் நிலை என்ன?
  * ட்ரெண்ட் தன் பழைய காதலியோடு அந்த ஆபத்தான இடத்திற்கு வரவேண்டிய அவசியமென்ன?
  * அந்த ராட்சசக் கரடியை ட்ரெண்ட் கொன்றாரா.. இல்லையா?
  * அந்தக் கரடியின் பின்புலத்தில் மறைந்திருக்கும் கதை(?!) என்ன?

  என்பதையெல்லாம் திகைக்கச் செய்யும் காட்சிப்படுத்துதலோடும், நேர்கோட்டில் பயணிக்கும் கதை நகர்வோடும், மனித மனங்களின் உறுதியை லேசாய் குலைத்துப் பார்த்திடும் இறுதிப் பக்கங்களோடும் வா/சுவாசித்து அனுபவித்திடுங்கள்!!

  பனிப் பிரதேசத்தின் அழகுகளையும், திகைக்கச் செய்திடும் அபாயங்களையும், மனித மனங்களில் துளிர்விடும் மெல்லிய உணர்வுகளை அருமையான முகபாவங்களின் மூலமும் அட்டகாசமாய் கண்முன் நிறுத்திக் காட்டும் சித்திரங்களே இக்கதையின் மிகப்பெரும் பலம்!!

  ட்ரெண்ட் - தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்!

  என்னுடைய ரேட்டிங் : 9.5/10

  ReplyDelete
  Replies
  1. // மனித மனங்களில் துளிர்விடும் மெல்லிய உணர்வுகளை அருமையான முகபாவங்களின் மூலமும் அட்டகாசமாய் கண்முன் நிறுத்திக் காட்டும் சித்திரங்களே இக்கதையின் மிகப்பெரும் பலம்!! // இதுதான் விமர்சனம் இதுக்கு தான் EV venum

   Delete
  2. அந்த அரை மார்க்கு ஏன் குறைஞ்சதுன்னு யாராவது கேட்டீங்கன்னா பதில் சொல்லக் கடமைப்பட்டவனாவேன்!!

   Delete
  3. // அந்த அரை மார்க்கு ஏன் குறைஞ்சதுன்னு யாராவது கேட்டீங்கன்னா //
   நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் அதானே.....

   Delete
  4. அப்படிக் கேளுங்க தலீவரே!!

   லைட்ட்டாய் 'காதுல பூ' சமாச்சாரம் இருப்பதுதான் மார்க் குறைச்சலுக்குக் காரணம்!

   உடம்பில் உரம் பாய்ந்த 50 பேர் கொண்ட ஒரு (கேம்ப்) கும்பலை; அதுவும் துப்பாக்கி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய பலர் இருக்கும் கும்பலை, ஒரு ஒற்றை ராட்சசக் கரடி ஒருவர் பாக்கியில்லாமல் கொன்று குவிக்கிறதாம்! என்னதான் ஆஜானுபாகுவான கரடியாகவே அது இருந்தாலும் கூட, அதன் மூளையைச் சிதறடிக்க ஒற்றைத் தோட்டா போதாதா?!! அது ஒருவரிடம் கூடவா இல்லாமல் போச்சு?!!

   ட்ரெண்ட் இரவில் அந்தக் கேம்ப்பில் தங்கியிருக்கும்போது வெளியே காலடிச் சத்தமும், பிறாண்டும் சத்தமும் கேட்கும்! படக்கென்று கதவைத் திறந்து பார்த்தால் காத தூரத்துக்கு யாருமே கண்ணில் படமாட்டார்கள்! 'காற்றில் கரைந்த கரடி'யாக்கும்? இதெல்லாம் படிப்பவர்களை பயமுறுத்திப் பார்க்கவும், பக்கங்களை நகர்த்தவும் கடைபிடிக்கப்படும் அதரபழைய டெக்னிக்!!

   ட்ரெண்டின் கடந்த கதையைக் (சாலையெல்லாம் ஜூவாலைகளே!) காட்டிலும் இதில் கதைக்களத்தின் வலு கொஞ்சம் குறைச்சல் - ஆகவேதான் மார்க்கும் குறைச்சல்!!

   Delete
  5. நீங்கள் சொல்வது சரிதான் EV ஆனால் கதையை படிக்கும் போது இதெல்லாம் தோன்றவில்லை என்பது தான் நிஜம்.

   Delete
  6. ///ட்ரெண்டின் கடந்த கதையைக் (சாலையெல்லாம் ஜூவாலைகளே!) காட்டிலும் இதில் கதைக்களத்தின் வலு கொஞ்சம் குறைச்சல்///

   Yes

   Delete
  7. ///நீங்கள் சொல்வது சரிதான் EV ஆனால் கதையை படிக்கும் போது இதெல்லாம் தோன்றவில்லை என்பது தான் நிஜம்///

   அதில் தவறொன்றுமில்லை குமார்! உங்கள் 'டிசைன்' அப்படி! ;)

   Delete
 39. Just now finished Vanjam Marappadhillai. It simply satisfied our expectations . Different storyline and extraordinary artwork

  ReplyDelete
 40. Albeit this month's books arrived much earlier i couldn't lay my hands upon them..but that's not going to stop me from raising my hands vouching modesty blaise..After all for saying " full moon is gorgeous " one need not look over the sky to affirm that statement for each month..once gorgeous it's always to be..modesty has been ,is & always will be a full Moon....dot.

  ReplyDelete
  Replies
  1. மாடஸ்டியின் பல்லாயிரக்கணக்கான பாய்பிரண்டுகளில் ஓரிரு டாக்டர்களும் உண்டென்பதை நாங்களறிவோம்! ஹிஹி!! ;)

   Delete
  2. இந்த வடுவூர் துரைசாமி அய்யங்கா காலத்து வாசகர்ளே இப்படித்தான் குருநாயரே..!

   பௌர்ணமி.. முழுநிலா.. பாத்துதான் சொல்லணும்னு இல்லைன்னு எல்லாம் பழம்பெரும் ஹீரோயின்களுக்கு விசிறி வீசுவாங்க..!
   ஆனா நம்ம மாதிரி யூத்துகளுக்கு இதெல்லாம் ஒத்துவராது..!;-)

   Delete
  3. // மாடஸ்டியின் பல்லாயிரக்கணக்கான பாய்பிரண்டுகளில் ஓரிரு டாக்டர்களும் உண்டென்பதை நாங்களறிவோம்! ஹிஹி!! ;) // இது தான் EV உடைய trade mark. ,😂🤣

   Delete
  4. //இந்த வடுவூர் துரைசாமி அய்யங்கா காலத்து வாசகர்ளே இப்படித்தான் குருநாயரே..!//

   :-))))

   Delete
 41. 1.இளவரசியின் "பழி வாங்கும் புயல்"

  MODESTY எப்பொழுதும் பெரிதாக என்னை ஈர்த்ததும் இல்லை .. வெறுத்ததும் இல்லை .. பழிவாங்கும் புயல் எப்பொழுதும் போல் நேர் கோட்டு கதை.. CLIMAX ல் கார்வினின் அதிரடி எல்லாம் நன்றாக இருந்தது.. CAN READ ONCE .. மற்றபடி அடுத்த வருட அட்டவனையில் மக்கள் பெருமான்மை என்ன சொல்கிறார்களோ அப்டியே செய்து விடுங்கள் சார் ..

  2. . ட்ரெண்ட் ன் ஒரு பள்ளத்தாக்குப் படலம்

  வழக்கமான குழப்பமில்லாத நேர்கோட்டுப் பாணிக் கதை.. வசனங்கள் தான் ட்ரெண்ட் ன் பலம்
  எப்பொழுதும் .. குறிப்பாக கடைசி இரண்டு பக்கங்கள் .. PERSONALLY I PREFER COMMANCHE OVER TRENT .. ஈவி ஜி சொன்ன மாறி சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் STILL ITS A GOOD READ ..

  ReplyDelete
  Replies
  1. ///வசனங்கள் தான் ட்ரெண்ட் ன் பலம்
   எப்பொழுதும் .. குறிப்பாக கடைசி இரண்டு பக்கங்கள் .///

   யெஸ்!!
   கிடைத்த வாய்ப்பை நம் எடிட்டரும் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டு பட்டையைக் கிளப்பியிருக்கிறார்!!

   Delete
 42. // நிறைய போங்கு ஆட்டங்கள் என்ற உபயத்தில் பின்னூட்ட எண்ணிக்கை எகிறி நிற்க - // எடிட்டர் சார் நீங்க யாரை சொல்கிறீர்கள் என்று தெரிகிறது.

  ReplyDelete
 43. Finished 'Oru Pallathaakku (matha pal ellaam yaar thakkaradhu) Padalam. Nice story. But in the beginning it reminds us of ' Man Eaters of Tzavo ' (There Patterson here Peterson). But as usual twist on last page. Very nice artwork.

  ReplyDelete
  Replies
  1. ///Oru Pallathaakku (matha pal ellaam yaar thakkaradhu) Padalam///

   ஹா ஹா ஹா!! :))))))))))))

   Delete
 44. இந்த மாதம் கொஞ்சம் பின்தங்கிட்டாப்ல இருக்கு!! டெக்ஸ்ஐ படிக்கவே தூக்கம் வராது இரவுகள் தேவைப்படும் போது எப்படிதான் இந்த மா...டஸ்தி ஆன்டிய புடிக்கப் போறேனோ சே... படிக்கப் போறனோ தெரியலை!!
  இதுல ட்ரெண்ட்ம் இந்த தபா கொஞ்சம் சொனங்கிட்டாப்ல!!
  பெருசா எதிர்பார்த்த வஞ்சம் மறப்பதில்லை பத்தி சொல்லனும்னாக்க 'நல்லா இருக்குனும் சொல்லலாம்! நல்ல இல்லைனும் சொல்லலாம்' ரகம் தான்!

  1. வஞ்சம் மறப்பதில்லை 8/10
  2. ட்ரெண்ட் 7/10

  மத்த ரெண்டையும் படிச்சா.. மார்க் சொல்றேன்!! எப்டியும் டெக்ஸ்ஐ படிச்சுருவேன்!!!

  ஆனா மாடஸ்தி ஆன்டி தான்.....???

  ReplyDelete
 45. Dear Editor 

  Tex தவிர மற்றவை படித்தாகிவிட்டது.

  வஞ்சம் மறப்பதில்லை - வன்முறை சற்றே அதிகம். 18+ அறிவிப்பு தாங்கி வந்தது சிறப்பு. இது பிரபல 2000AD காமிக்ஸின் தமிழாக்கம் என்பதனை அறிந்திருக்கவில்லை. நன்றாய் வந்துள்ளது. இம்மாதத்தின் சூப்பர்ஹிட்.

  ட்ரெண்ட் - எனக்கென்னமோ  இந்த கதையை விட போன மாத கதை பிடித்திருந்தது. ஆனால் இதுவும் சென்ற வருடத்திய காவியத்தை விட மோசமில்லை. Sketches again stole the show !

  Modesty - no more please - சத்தியமா முடில. இதற்கு ஸ்பைடர், லாரன்ஸ் - டேவிட், மாயாவி எவ்வளவோ மேல். அடுத்த சந்தாவில் மாடஸ்டியைக் கண்டால் 100 ருபாய் குறைத்து அனுப்ப உத்தேசம். இல்லை என்றால் முழுச்சந்தா மற்றும் மூன்று சந்தா காம்பினேஷன் கட்டுபவருக்கு மாடஸ்ட்டி புத்தகம் இலவசமாய் அறிவித்து விடுங்கள். எனது காப்பியை பிரிண்ட் செய்யவே வேண்டாம் :-D :-D அல்லது டாக்டர் செல்வத்துக்கு அனுப்பி விடுங்கள் :-) 

  Tex படிக்க அடுத்த விடுமுறை நாளுக்கு waiting !

  ReplyDelete
  Replies
  1. ////எனது காப்பியை பிரிண்ட் செய்யவே வேண்டாம் :-D :-D அல்லது டாக்டர் செல்வத்துக்கு அனுப்பி விடுங்கள் ////

   ஹா ஹா ஹா! :))))))))

   Delete
  2. //எனது காப்பியை பிரிண்ட் செய்யவே வேண்டாம் :-D :-D அல்லது டாக்டர் செல்வத்துக்கு அனுப்பி விடுங்கள் :-) //

   ROFL

   Delete
  3. மாடஸ்தி மேல எல்லாருக்கும் பொறாமை..🤨

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. சத்தியமா முடில. இதற்கு ஸ்பைடர், லாரன்ஸ் - டேவிட், மாயாவி எவ்வளவோ மேல். அடுத்த சந்தாவில் மாடஸ்டியைக் கண்டால் 100 ருபாய் குறைத்து அனுப்ப உத்தேசம். இல்லை என்றால் முழுச்சந்தா மற்றும் மூன்று சந்தா காம்பினேஷன் கட்டுபவருக்கு மாடஸ்ட்டி புத்தகம் இலவசமாய் அறிவித்து விடுங்கள். எனது காப்பியை பிரிண்ட் செய்யவே வேண்டாம் :-D :-D அல்லது டாக்டர் செல்வத்துக்கு அனுப்பி விடுங்கள் :-) //+

   வருடத்திற்கு ஒரு காமிக்ஸ்கே இவ்வளவு இப்படி வெறுத்து போன எப்படி?.

   நான் வருடத்தில் பன்னிரண்டு டெகஸ் க காமிக்ஸ் க்கு extra பணம் கட்டிகிட்டு இருக்கேன்.

   உ.ம் இந்த மாதத்து பட்டாபட்டி லில்லர்..கதையில் இருந்து

   அம்மினிஷியா கேள்வி பட்டு இருக்கேன் , செலக்டிவ் அம்னிஷியா கூட இருக்குது.

   ஆனால் முக்கியமான விஷத்தை மட்டும் மறந்து விட்டு தேவையில்த்த விஷயங்களை மட்டும் ஞாபகம் வைத்து கொள்ளும் இந்த புதுவிதமான அம்னிஷியா விற்கு என்ன பேர்.

   ஆசிரியர் கதையில் பயங்கர ட்விஸ்ட் இருக்கும் ஆசிரியர் சொன்னார். ட்விஸ்ட் அம்னிஷியா பயங்கர விஷயம் தான்.

   Delete
  6. ஒரு காமிக்ஸ், ரெண்டு காமிக்ஸ் என்பதல்ல விஷயம் .. ஆசிரியர் கருத்து கேட்கிறார் - எனது உண்மையான கருத்தினை சொல்கிறேன் - அவ்ளோதான் - no sweat ! போன வருடம் ட்ரெண்ட்க்கு இப்படித்தான் சொன்னேன். இந்த வருடம் ட்ரெண்ட் பிடித்திருந்தது. முன்பு Kings ஸ்பெஷல் என்ற ஒரு Tex வந்தது - பாரதத்தின் மூன்றாம் இதிகாசம் :-D எடிட்டர்க்கு கவிஞர் சிவகாசி சௌ ஸ்ரீ மு வி என்று நாமகரணம் செய்தோமாக்கும் - கொஞ்சநாள் என் மேல் 'கொலே காண்ட்லே' இருந்ததாய் பட்சி சொல்லியது :-) இப்போவோ எல்லா Texம் பிடிக்குது. இதெல்லாம் ஜகஜம்தான் :-) 

   பின்குறிப்பு: நம்ம பில்ட் அப்பு பரமானந்தம் அப்டித்தான் ட்விஸ்டு கிஸ்ட்டுன்னு கொஞ்சம் அப்பப்போ அள்ளி விடுவார். அப்புறம் ரெண்டு மாசம் கழிச்சு எதார்த்த ஏகாம்பரம் 'புக்கு பரவாயில்லை ரகமே என்பதனைப் உங்களின் உஷ்ணம் கொண்டே உணர்ந்திட்டேன்' அப்டியின்னு வண்டி ஓட்டிடுவாப்லே :-)

   Delete
  7. ட்விஸ்ட் இல்லாமலில்லை சாமீஸ் ! ஒரே வித்தியாசம் - அதை பெருசாய் நம்மவர்கள் (இதுவரையிலாவது) எடுத்துக் கொள்ளவில்லை !

   Delete
  8. அப்புறம் ஒரு விஷயம் சொல்லட்டுமா ? டெக்சின் 'வல்லவர்கள் வீழ்வதில்லை ' எனக்குமே ஆயாசத்தையே கொணர்ந்தது ! சொல்லப் போனால் - 'சர்வமும் நானே ' கூட அத்தனை கதை வலுவின்றிக் காட்சி தந்ததாகவே பயந்தேன் ! ஆனால் இரண்டுமே சூப்பர் ஹிட்ஸ் ! So நிறைய நேரங்களில் எனது பில்டப் படலங்களில் மாமூலான வியாபார நோக்கங்களைத் தாண்டி நிற்பது எனது தனிப்பட்ட ரசனைசார் எண்ணங்களுமே !

   Delete
  9. //:டெக்சின் 'வல்லவர்கள் வீழ்வதில்லை ' எனக்குமே ஆயாசத்தையே கொணர்ந்தது ! சொல்லப் போனால் - 'சர்வமும் நானே ' கூட அத்தனை கதை வலுவின்றிக் காட்சி தந்ததாகவே பயந்தேன் //
   இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்த கதைகள் சார்,சொல்லப் போனால் சர்வமும் நானே பேசப்பட்ட அளவிற்கு வ.வீ பேசப்படவில்லை என்றே தோன்றுகிறது....
   டெக்ஸின் பிரதான கதைகள் பட்டியலில் இவைகளுக்கு கண்டிப்பாக இடமுண்டு....
   சர்வமும் நானே கொஞ்சம் கூட போரடிக்காத கதை,நிகழ்வுகள் அழகாக,கோர்வையாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்,அட்டகாசமான ஒரு மாஸ் மசாலா,ஆக்‌ஷன் த்ரில்லர்,
   நல்லதொரு எண்டர்டெயினர்....
   ஒரு பக்காவான ஆக்‌ஷன் சினிமாவை கண்முன் கொண்டுவந்து நிறுத்தும்.....

   Delete
  10. ///டெக்சின் 'வல்லவர்கள் வீழ்வதில்லை ' எனக்குமே ஆயாசத்தையே கொணர்ந்தது ! ///

   சார்.. உங்களுக்கு ஆயாசத்தைக் கொணர்ந்த கதை - எங்களுக்குப் பாயாசத்தைக் கொணர்ந்தது!!

   நீங்க அடிக்கடி ஆயாசப்பட வேணுமின்னு கேட்டுக்கறேன்!

   Delete
  11. அப்புறம் ஒரு விஷயம் சொல்லட்டுமா ? டெக்சின் 'வல்லவர்கள் வீழ்வதில்லை ' எனக்குமே ஆயாசத்தையே கொணர்ந்தது

   #####

   எனக்குமே சார்..:-)

   Delete
  12. உண்மையாக செல்லனும்னா நிறைய கதைகள் படிக்க மிடில.
   டெக்ஸ் வில்லன் கதைகளில் ஆர்வம் இல்லை.
   கடந்த வருடங்களில் ""நடமாடும் நரகம்,கடற்குதிரை முத்திரை,இரும்பு குதிரையில் தங்க புதையல்""னு சில கதைகளே வாங்கியதாக நினைவு.
   அதர பழைய ஓவிய பாணி,அலுப்பை ஏற்படுத்தும் கதைகள் போன்ற காரணிகள் காமிக்ஸ்ல் அயர்ச்சியையும் சற்று ஏமாற்றத்தையும் தருகிறது.
   ஆண்டுக்கு பதினைந்து வெளியீடுகள் சிறப்பாக இருந்தாலே போதும்.ஆனால் அதைவிட அதிகமாகவே தருவதற்கு ஆசிரியர் குழு முனைப்பாக செயல்படும் போது குறைபடுவதற்கு ஏதுமில்லை.
   ஒட்டு மொத்த வெளியீடுகளும் நிறைவாக இருக்காது என்பதே எதார்த்தம்.அதனால்தான் காமிக்ஸை தனிப்பட்ட முறையில் நிறைவாக உணர முடிகிறது.
   சந்தாவில் இணையாமல்
   கடைகளிலும் புத்தக விழாக்களிலும் தேர்வு செய்து வாங்குவது எனக்கு சரியானதாக தோன்றுகிறது.
   அடிப்படையில் பணம் ஒரு பொருட்டே அல்ல. பொருள் வணிகம் சார்ந்த நிறுவனம்,நுகர்வோர் திறன் சார்ந்த மன நிறைவு என்ற காரணிகளே பிரதானம்.மாதம் ₹ஆயிரம் மதிப்பிலான வெளியீடுகளுக்கும் தயார் நிலையில் உள்ள வாசகர்களை அறிவேன்.
   இரசனைகள் பலவிதம் என்ற ஒற்றை காரணியை முன்னிறித்தி எளிதில் கடந்து விடலாம்.ஆனால் உண்மை அதுவல்ல என்பதே நிஜம்.
   அள்ள அள்ள குறையாத அற்புதங்கள் அங்கே ஏராளம் உண்டு.தரமான படைப்புகளை உருவாக்கம் செய்வதும் சவாலானது. அதை தரவிறக்கம் செய்து வெளியிடுவதிலும் நடைமுறை சிக்கல் உண்டு.இதை புரிந்து கொள்ள முடிகிறது.
   மாதம் ஒரு காமிக்ஸ் புத்தகம் சிறப்பானதாக கிடைத்தால் அதுவே எனக்கு போதும்.கூடுதலாக கிடைத்தால் கொண்டாட்டமே.

   Delete
  13. ஹாலிவுட்டில் வெளியான""வான்டேஜ் பாய்ன்ட்""என்ற திரைப்படம்.ஒரு காட்சியில் நிகழும் ஒரு சம்பவம்.
   அடுத்தடுத்து ஒவ்வொரு கதாபாத்திரங்களின் கண்ணோட்டத்திலும் கதைகளும் விரிவடைந்து கொண்டே இருக்கும்.இறுதி காட்சியில் அனைத்து கதாபாத்திரங்களும் ஒரு புள்ளியில் சந்திக்கும் போது கதை நிறைவடையும்.
   இந்த விதமான கதை காமிக்ஸ் கதையில் ஒரு ப்ரெஞ் கதாசிரியரால் எழுதப்பட்டது.
   கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ""மெமன்டோ"" திரைப்படம்.
   ஒரு பிரதான மைய காட்சியை ஆதாரமாக கொண்டு(சென்டர் பாய்ன்ட் ஆஃப் சீன்) கதையின் பிற்பாதி காட்சிகளை முதலில் காட்சி படுத்தியிருப்பர்.மைய காட்சியை அடைந்தவுடன் கதையின் முதல்பாதி காட்சிகள் தொடக்கம் பெறும்.
   அவரின் இயக்கத்தில் இடம் பெற்ற ""பிரெஸ்டீஜ்"" திரைப்படம்.
   இரு கதாபாத்திரங்களின் பார்வையில் கதைகளம் மாறி மாறி பயணிக்கும்.
   இவை அனைத்துமே ப்ரென்ச் கதாசிரியர்களின் காமிக்ஸ் கதையின் வடிவங்களே.

   உலகம் முன்னோக்கி அனைத்து துறைகளிலும் அசுர வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம்.

   Delete
  14. இது எவ்விதத்திலும் எவ்வித சால்ஜாப்போ ; சமாதானமோ அல்ல சார் ! பின்னூட்டத்தைப் படித்த நொடியினில் தலைக்குள் தோன்றியது மாத்திரமே !

   Oh yes - ஹாலிவுட்டில் நீங்கள் விவரித்த மாறுபட்ட களங்கள் ; திரைக்கதை யுக்திகளென ரகளை செய்திடுவது மெய்யே ! ஆனால் ஆண்டொன்றில் அங்கு வெளியாகும் திரைப்படங்கள் எத்தனை ? அவற்றுள் 'வேண்டேஜ் பாய்ண்ட்' ; 'மெமென்டோ' ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைக்காவியங்கள் எத்தனை ?என்பதையும் அலசிடல் இன்னும் பொருத்தமாயிருக்குமோ ?

   https://m.imdb.com/list/ls021503608/

   மேற்படி லிங்க் - ஹாலிவுட்டின் டாப் 100 உப்மாக்களின் பட்டியலைக் கொண்டது - கடந்தாண்டிற்கு ! இதே போல ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு மெகா லிஸ்ட் வைத்திருக்கிறார்கள் சார் ! So இந்த பட்டியலை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு ஹாலிவுட்டை எடைபோடுமொரு முயற்சியை நாம் எவ்விதம் அணுகுவோமோ ?

   "நிச்சயம் சரியன்று" என்று சொல்லும் பட்சத்தில் - 'வான்டேஜ் பாயிண்டை' மட்டுமே அளவுகோலாக்கி "சகலமும் உச்சத்தைத் தொட்டு நிற்கிறதென்று" ஊர்ஜிதம் செய்வதும் சரியாகாது தானே ?

   No questions at all sir - they are an infinitely superior think factory !! ஆனால் entertainment
   இண்டஸ்ட்ரியின் ஒரு அசுர பரிமாணத்தின் பிம்பம் அவர்களெனில் நாம் அதே துறையின் ஒரு இக்ளூயூண்டு அங்கம். ஒவ்வொன்றின் dynamics பிரேத்யேகமானவை என்பதிலும் இரகசியங்களில்லை தானே சார் ?
   அவ்விதமிருக்க - ஆலமரத்தடியில் கிட்டிப்புள் ஆடுவோரை IPL / BIG BASH லீகுகளோடு ஒப்பீடு செய்திடுவதில் சமநிலை தென்பட வாய்ப்புகள் சொற்பம் என்பது மாத்திரமே நான் சொல்ல முனைவது !

   But on the same coin - கிட்டிப்புள்களில் ஆரம்பிப்பது தன பின்னாட்களில் விஸ்வரூபமெடுக்கும் திறமைகளென்பதையும் மறப்பானேன் ?

   Delete
 46. இம்மாதம் வந்த அனைத்து கதைகளையும் படித்து புடித்து விட்டேன்
  இம்மாதம் வந்தவற்றின் தரவரிசை
  1. ஒரு பள்ளத்தாக்கு படலம் (10/10 )
  2. புதைந்து போன புதையல்(9.5/10)
  3. பழி வாங்கும் புயல்(8/10)
  4. வஞ்சம் மறப்பதில்லை

  “ஒரு பள்ளத்தாக்கு படலம் “ கதையில் நிகழ்வுகள் நேர்கோட்டுப் பாதையில் செல்கின்றன.
  இந்தக் கதையை தயவுசெய்து வெறும் எழுத்துக்களை மட்டும் படித்துக் கொண்டு செல்லாதீர்கள்
  இதில் உள்ள படங்களை சிறிது பார்த்து ரசியுங்கள்
  எடுத்துக்காட்டு பக்கம் எண் 16 “ஹலோ பிலிப்” என்று வசனம் வரும் படம் மற்றும் அதற்கு கீழே உள்ள படம்.

  மற்றுமொரு எடுத்துக்காட்டு அதற்குப் பக்கத்து பக்கத்திலேயே பக்கம் எண் 17 ரயில் படத்தின் கீழே வரும் கட்டம் ஆக்னஸ் ஸின் ஓரப்பார்வை ட்ரெண்டின் வெறித்த பார்வை.

  தயவுசெய்து கதையைப் படித்துக் கொண்டே கடந்து விடாதீர்கள் படம் பேசும் பொருட்களையும் குறிப்பாக ஆக்னெஸ்ஸின் கொண்டையை பார்க்க மறக்காதீர்கள்.
  பக்கம் எண் 50 மற்றும் 51 உள்ள வரிகளை ரசித்து படியுங்கள்..
  ட்ரெண்ட் இன் கதையில் உங்கள் மனதைக் கவர்ந்த சித்திரங்கள் எவைஎவை?
  கரடிக்கு புத்திசாலித்தனம் எப்படி வந்தது ?
  இறுதிக் காட்சியை எதிர் பார்த்தீர்களா ?

  இரண்டாவதாக புதைந்து போன புதையல் டெக்ஸ் வில்லர்
  பக்கம் 15 ல் சொல்லும் வசனம் "சுரங்கத்திற்கு அடுத்து செல்லும் வழிகாட்டி கையில் வரைபடம் என சகலத்தையும் வைத்திருக்கும்போது நாங்கள் எதற்கு?
  அனைத்தும் இருந்த பிறகு, எளிதாக முடிய வேண்டிய வேலை ஆனால் முடியவில்லை ஏனென்றால்
  பல்வேறு திருப்பங்கள்
  பல்வேறு சூழ்ச்சிகள்
  எளிதில் அடைந்த புதையல் பல கைகள் மாறி டெக்ஸ் கைக்கு வரும்.
  கைக்கு கிட்டிய பின் ஏற்படும் உணர்ச்சிப்பூர்வமான முடிவுகள்.
  விறுவிறுப்பான நடை.
  நேர்கோட்டுப் பாதையில் முதன் முதலில் ஏற்பட்ட தடங்கல் எது?
  எதிர்பார்த்து காத்திருந்த இரண்டு வில்லன்களையும் டெக்ஸ் அன் கோ வினர் மீண்டது எங்கனம் ?
  சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதுபோல முதியவரை காப்பாற்றியதால் அடைந்த பயன் என்ன?
  எதிரிக்கு எதிரி நண்பன் என்று உணர்த்தும் கட்டம் எது ?
  பல்வேறு சூழ்ச்சிக்கு வித்திட்டு பேராசையால் அந்த பாலைவன பரப்பில் தன்னந்தனியாக மரணமடைந்த துரோகி யார் ? அவரைக் கொன்றது யார்? எங்கனம்?

  மூன்றாவதாக வஞ்சம் மறப்பதில்லை. 3 சிறுகதைகள்.
  எடி சொன்ன மாதிரியான பெயின்டிங் பாணியிலான சித்திரங்கள்.
  ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டும் செயலில் உள்ள இன்பம் பழிக்கு பழி வாங்குவதில் கிடைப்பதில்லை என்று உணர்த்தும் முத்தான மூன்று கதைகள் .
  சோதனை மேல் சோதனை என்று வந்தால் ஒரு மனிதன் தனது குழந்தையை பணயம் வைக்க இயலுமா ?
  மகன் முன்னால் தாய்க்கு நிகழ்ந்த அட்டூழியம் என்ன?
  அந்தத் தாயின் வஞ்சம் எங்கனம் தீர்க்கப்பட்டது?


  கடைசியாக “பழி வாங்கும் புயல்” .

  மாடஸ்டி மரணம் வில்லியை புயலாய் மாற்றும் சாகசம்
  வில்லியின் மரணப் போராட்டம். மாடஸ்டி கைப்பிடியில் வில்லியின் உயிரோட்டம்

  டெக்ஸ்வில்லர் கதைக்கும் மாடஸ்டி கதைக்கும் உள்ள ஒரே ஒரு ஒற்றுமைக்கான எல்லை என்ன?

  ReplyDelete
  Replies
  1. அனைத்து இதழ்களையும் ரசித்து ரசித்து படித்துள்ளீர்கள் நண்பரே..வாழ்த்துகள்..:-)

   Delete
  2. வாவ்!!! அட்டகாசமா விமர்சனம் எழுதியிருக்கீங்க செந்தில்நாதன்!!! மிகவும் ரசித்தேன்!!

   ('வஞ்சம் மறப்பதில்லை'க்கு மார்க்கு?!!)

   Delete
  3. ('வஞ்சம் மறப்பதில்லை'க்கு மார்க்கு?!!)

   விடுங்களேன் செயலரே..:-)

   Delete
  4. ///ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டும் செயலில் உள்ள இன்பம் பழிக்கு பழி வாங்குவதில் கிடைப்பதில்லை என்று உணர்த்தும் முத்தான மூன்று கதைகள் .////

   அருமை!!

   Delete
 47. இம்மாத இதழ்கள் அனைத்தையும் படித்தாயிற்று..கடைசி இதழாக படித்த டெக்ஸ் பற்றி என்ன எழுதுவது வழக்கம் போல் பாராட்டுவதை தவிர..டெக்ஸின் பங்கு கதையில் அதிகம் இருந்தாலும் மின்னுகிறது.குறைவாக இருந்தாலும் மின்னுகிறது..இம்மாத எனது கணிப்பில் முதல் இடம் ..முதல் இடம் முதல் இடம்..

  டெக்ஸ்...

  இரண்டாம் இடம்

  ட்ரெண்ட்..


  மூன்றாம் இடம்..


  இளவரசி ..


  இனி தீபாவளி மலரை எதிர்நோக்கி...:-)

  ReplyDelete
  Replies
  1. தலீவரே.. 'வஞ்சம் மறப்பதில்லை'?!!

   வ.ம-வை இப்போதுதான் கால்வாசி படித்திருக்கிறேன்.. படித்தவை பட்டாசாய்தானே போகுது?!! உங்களுக்கு மட்டும் ஏன் 'ங்ஙே!' வாம்?!!

   Delete
  2. ஒரு வேளை பட்டாசு பலமாய் வெடித்து விட்டதோ என்னமோ தெரியவில்லையே செயலரே..:-)

   Delete
 48. இளவரசி 10/10
  டெக்ஸ்8/10
  வஞ்சம்9/10
  ட்ரென்ட்7/10

  ReplyDelete
 49. வ.ம.. எது மாதிரியும் இல்லாத புது மாதிரி.. ஆக்சன் ஒரு புறம் இருந்தாலும் வசனங்கள் தெறிக்க விடுகின்றன..
  பானை சோற்றுக்கு..
  " வஞ்சம் தீர்ப்பதை பற்றி சின்னதாய் ஒரு விசயம் சொல்லட்டுமா??:திஜமாகவே பழி தீர்க்க தேவைதானா என்பதை பழி தீர்த்த பிற்பாடே உணர்ந்திட சாத்தியமாகிடும்..

  ReplyDelete
  Replies
  1. மேற்கூறிய வசனத்தை நானும் ரொம்பவே ரசித்தேன்!!

   Delete
  2. வஞ்சம் மறப்பதில்லை - வசனங்கள் நேர்த்தியானவை என்பதை மறுப்பதற்கில்லை தான்......

   Delete
 50. புதைந்து போன புதையல்

  கதை

  அட இதுகூட தெரியாதா. ஆமாங்க நீங்க நெனைக்கிறது சரிதான். அட அதேதாங்க...

  பாஸிட்டிவ்ஸ்

  1. முதல் பாஸிட்டிவ் நம்ம டெக்ஸ்-கார்ஸன்தான்.

  2. டெக்ஸ் கதைகளில் நம்ம தலதான் ஒவ்வொரு பக்கத்தையும் ஆக்கிரமிப்பார். இதுல பாருங்க அவர அடக்கி வாசிக்க வைத்து, மற்ற கதாபாத்திரங்களுக்கு வேலை கொடுத்திருப்பார் கதாசிரியர்.

  3. கணவன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும், நம்ம ஊர் பெண்கள் போல கணவனே கண் கண்ட தெய்வமாக சித்தரிக்கப்படும் அந்த பெண் பாத்திரம் வாசகர்கள் மனதை பரிதாபப்பட வைத்த விதம் கவர்கிறது.

  4. ரொம்பவே டீட்டைலான அருமையான சித்திரங்கள் ரசிக்க வைக்கிறது.

  5. 135 ரூபாயில் அமெரிக்க, மெக்ஸிகோ எல்லைகளை சுற்றி பார்த்த திருப்தியை தருவது.

  நெகட்டிவ்ஸ்

  1. வேறு யாரு டெக்ஸ்-கார்ஸன்தான். கொஞ்சம் வயசானவங்களா தெரியராங்க. அதிலும் நம்ம கார்ஸன் அங்கிள் இதுல கார்ஸன் தாத்தாவா வருகிறார் (ஒரு கட்டத்தில் அந்த பெண் பாத்திரம் தாத்தான்னே சொல்லும்).

  2.எளிதாக யூகிக்ககூடிய திருப்பங்கள் ஒரு சோர்வை எற்ப்படுத்துகிறது.

  3. மூன்று லட்சம் டாலர் நோட்டுகளை, ஆளாளுக்கு ஏதோ தாம்பூலம் பை அளவுக்கு ஒரு ஹேண்ட்பேக்ல சுத்திட்டு திறிவது கதையில் காமெடி இல்லாத குறையை தீர்க்கிறது.

  4. கதையை கொஞ்சம் நீளமா இழுத்துப் போன மாதிரி ஒரு ஃபீலிங் வருவது.

  5.எல்லாம் டெக்ஸ் கதைகள் போல, இக்கட்டான நிலமைகளில் எல்லாம் ரோந்து இராணுவ வீரர்கள் ஊதிகிட்டே வந்து டெக்ஸ காப்பாத்துவது எரிச்சலை கிளப்புது (தலயவே சமாளிக்க விடுங்கப்பா)

  மொத்தத்தில் இப்போது ஒண்டைம் ரசிக்கலாம். ஒரு இரண்டாண்டுகள் கழித்து மறு வாசிப்புக்கு கண்டிப்பாக இந்த புதையலை தேடலாம்.

  இந்தக் புதையலுக்கு என்னோட ரேட்டிங் 8.4/10

  ReplyDelete
  Replies
  1. இராணுவ வீரர்கள் ஊதிகிட்டே வந்து டெக்ஸ காப்பாத்துவது எரிச்சலை கிளப்புது (தலயவே சமாளிக்க விடுங்கப்பா)////

   மொத்த மெக்கிகோவே வந்தாலும் தனது ஒத்த பிஸ்ட்லால டொக்ஸ் லில்லர் சமாளிக்க மாட்டாரா....

   இத்துனுன்டு கொஞ்சம் பெரிய சமளிக்க
   இராணுவத்தை முடியாதா?.தனாகவே பகஸ் சுடும் திசையில் எல்லோரும் குறுக்கே புகுந்து வீரமரணம் அடைய மாட்டார்கள?

   Delete
  2. குறை சொல்றதுன்னு முடிவாகி விட்டது,அதை பிழையில்லாமல் சொல்லுங்கள் நண்பரே......

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. எப்படி செயலரே கரீட்டா வர்றீங்க..:-)

   Delete
  5. @Arivarasu @ Ravi

   அது.. டெக்ஸ் கதையப் படிச்சு கொஞ்சம் ஓவரா கிறக்கமாகிட்டதால அப்படி நா குழறி...

   Delete
  6. R.Anbu @ நான் சொன்னதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தீர்கள் தானே! மேலே நம்ம 2635 ன் கமெண்ட் உங்களுக்கு டெடிகேட் பண்ணுகிறேன்!

   நீங்களே ஒரு ஞாயத்த சொல்லுங்க நண்பரே!

   எல்லா பக்கமும் டெக்ஸ் இம்மாதம் பாஸிடிவ் ரிசல்ட்!

   Delete
 51. இந்த வருடத்தின் டெக்ஸ் கதைகளில் பாலைவனத்திலொரு கப்பலுக்கு அடுத்து மனதில் பதியக்கூடிய கதையாக "புதைந்து போன புதையல்" உள்ளது!!!

  புதைந்து போன புதையல் 9/10 👏👏👏

  ஆக இம்மாதத்தை பொருத்தவரை முதலிடம் டொக்ஸ்க்கே!!!! 😆😆😆

  ஆனாலும் மா....டஸ்தி ஆன்ட்டிக்கு
  நோ மார்க்!!!?

  ReplyDelete
  Replies
  1. ஆக இம்மாதத்தை பொருத்தவரை முதலிடம் டொக்ஸ்க்கே!!!! 😆

   வழக்கமாக இந்த டொக்ஸ் ழெண்டு மூணு மாசம் போச்சுன்னா மறுபடிப்பு படிக்க ஆசையை போடுவாரு..ஆனா இந்த புதையல் ரெண்டு மூணு நாளுலேயே மறுபடிப்பு படிக்க தோண வைக்குறாரு..

   வாழுக டொக்ஸ்...:-)

   Delete
  2. "வஷிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம்"
   ------என்ற எடிட்டர் சாரின் ட்ராகன் நகர க்ளைமாக்ஸ் டயலாக்கை கடன் வாங்கி இங்கே பதிவு செய்கிறேன்.

   டெக்ஸை பிடிக்காத மிதுனருக்கே இம்மாத டெக்ஸ் பிடிச்சிட்டதுனா, தல அதகளப்படுத்தி விட்டார்னு அர்த்தம்!👌👌👌👌👌

   போட்டுத் தாக்கு! போட்டுத் தாக்கு!🎈🎈🎈🎈🎈

   போடறா தீவாளி வெடியா இப்பமே....!!!!

   Delete
  3. Oh God mithunukkum pidithe இருக்கிறது. சூப்பர்.

   Delete
 52. ******* வஞ்சம் மறப்பதில்லை *******

  'பெரிய மனிதன்' போர்வையில் உலாவரும் - சட்டத்தால் நெருங்க இயலாத சமூக விரோதிகளுக்கு வலை விரித்து, அவர்களை வதம் செய்வதற்கென்றே ஒரு ரகசிய அமைப்பு - அதன் பெயர் 'பென்டாட்டே'! அதில் மூன்றே மூன்று உறுப்பினர்கள். அதிலும் ஒருவள் பெண்!! மூவருமே தங்களின் கடந்த காலத்தில் மேற்கூறிய பெரிய மனிதர்களால் ஏதேனும் ஒருவகையில் வஞ்சிக்கப்பட்டவர்!! தங்களைப் போலவே பாதிக்கப்பட்டவர்களை கஸ்டமர்களாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்காகப் பழி தீர்ப்பதையே கடமையாகக் கொண்டு தீயாய் வேலை செய்கிறார்கள் - இதுவே கதை!!

  நம்மவூர் மணிரத்தினம் ஒரு ஹாலிவுட் ஆக்ஷன் படத்தை இயக்கினால் எப்படியிருக்குமோ.. அப்படியே இருக்கிறது மொத்தக் கதை நகர்வும்!! ஆச்சரியப்படுத்தும் வசனங்களாகட்டும், கதை மாந்தர்களின் குணாதிசயங்களாகட்டும், நேரடியாக பெயிண்டிங் செய்ததைப் போன்ற சித்திர பாணியாகட்டும், ரணகளமான ஆக்ஷன் காட்சிகளாகட்டும் - ச்சும்மா தெறிக்க விட்டிருக்கிறார்கள்!! மிரள வைத்திருக்கிறார்கள்!! குறிப்பாக கடைசிப் பக்கங்களில் பென்டாட்டே அமைப்பின் தற்போதைய கஷ்டமர் யார் என்ற முடிச்சை படைப்பாளிகள் அவிழ்த்திருக்கும் விதத்திற்கு எழுந்து நின்றுகூட கைதட்டலாம்.. அப்படியொரு அதகளம்!!

  நேர்கோட்டு பாணி கதை தான்.. ஆனால் காட்சிப்படுத்திய விதத்தில் கி.நா போல ஜோடித்திருக்கிறார்கள்!! இந்த ஜோடிப்பை புரிந்துகொள்ளாதவர்களுக்கு இது ஏதோ ஒரு 'உயர் ரக கி.நா' போல காட்சியளித்து மிரளச் செய்துவிடக்கூடும், ஏமாந்துவிடாதீர்கள்!!

  பென்டாட்டே குழுவின் பெண் ஏஜென்டான மிஷெலின் ஃப்ளாஸ்பேக் கதை மட்டும் இடம்பெறாமல்போனது ஒரு சிறு குறை என்றாலும், பிரிட்டிஷ் கி.நா வரிசையில் இப்படியொரு ஸ்டைலான கதையமைப்பை சத்தியமாக எதிர்பார்த்திருக்கவில்லை நான்!!

  இக்கதையை தைரியமாகத் தேர்ந்தெடுத்ததற்கும், அதை தெறிக்கும் வசனங்கள் சகிதம் தமிழ்படுத்தி வண்ணமயமாய் நம் கைகளில் ஒப்படைத்து ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவம் கிடைக்கச் செய்ததற்காகவும் 'லயன் கி.நா' டீமிற்கு ஒரு மானசீகப் பூங்கொத்தை சங்கத்தின் சார்பாக அனுப்பி வைக்கிறேன்!!

  வஞ்சம் மறப்பதில்லை - என்றுமே மறக்காத வாசிப்பு வரிசையில்!

  என்னுடைய ரேட்டிங் : 10/10


  ReplyDelete
  Replies
  1. கடுப்ஸ் :
   அதான் எதையுமே சரியா பார்க்க விடாம எல்லா இடத்திலும் டயலாக் பலூனை சரமாரியா நிறுத்தி வச்சிருக்கீங்களே.. அப்புறம் எதுக்கு அட்டையில 'Recommended for 18+'னு ஒரு ஸ்டிக்கர் ஒட்டணும்றேன்?!!

   Delete
  2. Ev அருமையான விமர்சனம். உங்களுக்கும் வஞ்சம் மறப்பதில்லை பிடித்து இருக்கிறது நல்ல வேலை. I just loved it. இது இரத்த பூமி.
   // விடாம எல்லா இடத்திலும் டயலாக் பலூனை சரமாரியா நிறுத்தி வச்சிருக்கீங்களே.. அப்புறம் எதுக்கு அட்டையில 'Recommended for 18+'னு ஒரு ஸ்டிக்கர் ஒட்டணும்றேன்?!! //
   ஹிஹிஹி

   Delete
  3. //ஒரு மானசீகப் பூங்கொத்தை சங்கத்தின் சார்பாக அனுப்பி வைக்கிறேன்!!//

   சங்கம் செம வளமாய் ஓடுது போலிருக்கே ! அது சரி 'வஞ்சரம்' என்று எங்கேயாச்சும் கேட்டால் கூட இப்போதெல்லாம் தலீவர் புடுங்கும் புடுங்கில் - உசேன் போல்ட்டே சிதறியடிக்கும் நிலையில் - செயலர் எதிர்த்திக்கில் வண்டியோட்டுவது எவ்விதம் ?

   சங்கத்தில் பிளவு ? Breaking news...?

   Delete
  4. எடிட்டர் சார் அந்த அட்டவணை வெளியீடு மாத இறுதி தானா அல்லது நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ஏதும் முன்னேற்றம் உள்ளதா? பிளீஸ்

   Delete
  5. தலீவரின் பட்டாப்பெட்டி நாடாவை செயலர் தன் வண்டியின் பின் பக்கத்தில் பிணைத்திருக்கிறார் சார்.. இப்போது தரையோடு தரையாக - நம் தாரைத் தலீவர்!! :)

   Delete
  6. சும்மா கி.நா.க்களையெல்லாம் நள்ளி எலும்பு சாப்புடும் ராஜ்கிரண் போல சுவைத்த மனுஷன், இம்மாதம் எகிறிக் குதித்து ஓட்டமெடுக்குறாரே ? புரட்டாசி விரதமோ ? Thinking...

   Delete
  7. எங்கள் தலீவர் ஆஸ்கர் விருதுக்குக்கூட தகுதி வாய்ந்த ஒரு தேர்ந்த நடிகர் என்ற விபரம் - பலரும் அறியாதது எடிட்டர் சார்!! ஆனால் என்னதான் தேர்ந்த நடிப்பாளியானாலும் என்றாவது ஒருநாள் வேஷம் கலைஞ்சுதானே ஆகணும்?!!

   கலைச்சிட்டார்!! :)

   Delete
  8. // எங்கள் தலீவர் ஆஸ்கர் விருதுக்குக்கூட தகுதி வாய்ந்த ஒரு தேர்ந்த நடிகர் என்ற விபரம் - பலரும் அறியாதது எடிட்டர் சார்!! ஆனால் என்னதான் தேர்ந்த நடிப்பாளியானாலும் என்றாவது ஒருநாள் வேஷம் கலைஞ்சுதானே ஆகணும்?!! // EV சிரித்து சிரித்து கண்களில் கண்ணீர் வந்து விட்டது.😂🤣

   Delete
  9. செயலரின் மதிப்பெண் வஞ்சத்துக்கு பத்துக்கு பத்தா...ஓ..சங்கத்தில் அடுத்த பதவிக்கு அடி போடுறாரு போல...மக்கழே இதற்காகவது அந்த வஞ்சத்தை அனைவரும் படித்து தங்கள் பொன்னான வாக்குகளை ( மனச்சாட்சிப்படி ) குத்துமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன்..

   Delete
  10. எங்க தலீவரை கலாய்க்கும் எதிர்கட்சித் தலைவரையும் உள்ளூர் செயலரையும் வன்மையாக்க் கண்டிக்கிறேன். இதை எதிர்த்து தலீவர் நாளை முதல் எங்கியாவது உண்ணாவிரதம் இருப்பார் என பெருமையுடன் அறிவிக்கிறேன்

   Delete
 53. செயலர் எதிர்த்திக்கில் வண்டியோட்டுவது எவ்விதம் ?

  சங்கத்தில் பிளவு ? Breaking news...?

  #####

  ஒரே "மந்தையில் " இருந்த இரண்டு ஆடுகளும் எதிரெதிர் திசையில் food ஐ மேய போய்விட்டது சார்..:-((


  ReplyDelete
  Replies
  1. தல. உங்களை நம்பி உண்ணாவிரதப் போராட்டம்னு அறிவிச்சா food ஐ தேடிப் போய்கிட்டிருக்கீங்களா. உங்களை நம்பினா இந்த தொண்டன் கதி அதோ கதி தான் போல.

   Delete