Powered By Blogger

Sunday, August 25, 2019

சலசலக்கும் செப்டெம்பர் !

நண்பர்களே,

வணக்கம். சில நேரங்களில் வாசிப்புகள், ரசனைகள் என்று சகலமுமே ஏதேனுமொரு குறிப்பிட்ட திக்கில் நிலைகொண்டு நிற்பது வழக்கம். ஆரம்ப நாட்களில் இஷ்பைடர்; சட்டித்தலையன் ஆர்ச்சி; இரட்டை வேட்டையர்; மாடஸ்டி என்று ஜனரஞ்சக, ஆக்ஷன் கதைகளுள் முழுமையாய் ஆழ்ந்திருக்கிறோம் ! அப்புறமாய் புலர்ந்ததொரு phase-ல் டெக்ஸ் வில்லர்; கேப்டன் டைகர் என்று கௌபாய் மேனியாவில் மும்முரமாகிட – நமது சாலைகள் சகலமும் வன்மேற்குப் பக்கமாகவே பரந்து விரிந்தன ! அப்பாலிக்கா லார்கோ ; XIII ; ஷெல்டன் என்று சமகாலக் கதைகள் ; அதற்கும் அப்பாலிக்கா கிராபிக் நாவல்கள் என்று ரவுண்ட் அடித்து வருகிறோம் ! இதோ latest ஆகக் கூட “பி.பி.வி” எனும் அந்தக் 'கௌ-பாய் கிராபிக் நாவலுக்குள்' மெய்மறந்து ஆகஸ்டை ஓட்டி வருவது தானே நடந்து வருகிறது ? ஆழ்ந்த கதைக்கருக்கள் ; நிறைய சமூக messages ; வித்தியாசமான நான்-லீனியர் கதைப் பாணிகள் என்று ஓட்டமெடுத்து வரும் இன்றைய பொழுதினில் எனக்குள் லேசாயொரு நமைச்சல் ! 'அட... இந்தப் புதுமாதிரி கதைகளெல்லாம் ஓ.கே. தான்... ஆனாக்கா நாலு மொத்து ; நாற்பது குத்து; நானூறு பன்ச் டயலாக் என்று ஒரு சிம்பிளான நேர்கோட்டு ஆக்ஷன் மேளாவுக்குள் நீச்சலடித்து நிறையவே நாட்களாகி விட்டதே??!!' என்பதே மேற்படி நமைச்சலின் பின்னணி ! சமீபத்தைய அண்டர்டேக்கரோ ஒரு dark த்ரில்லர் ; ஜனரஞ்சக ட்யுராங்கோவோ ஒரு அமர்த்தலான அமைதியான அதிரடி ஆசாமி; தி Lone ரேஞ்சரோ – வேறு மாதிரியான நாயகர் ; பராகுடாவோ முற்றிலும் மாறுபட்ட களம் எனும் போது – சிம்பிளான, ஜாலியான, அதிரடியான, அதகளமான, ஆஸமான, அழகான, அட்டகாசமான ஒரு பட்டாசான கதைக்கோசரம் மனம் ஏங்கியது!

மேற்படி வர்ணனைகள் சகலத்துக்கும் நியாயம் செய்யக் கூடிய நாயகர் ஒருவர் சித்தே நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க – செப்டம்பரின் அட்டவணையும் அவரை என் மேஜைக்கே இட்டாந்திட – குதூகலமாய் நிமிர்ந்து பார்த்தால் நிற்கிறார் நமது மஞ்சள் சட்டை மாவீரர்!! “ஒரு ரௌத்திர ரேஞ்சர்!” என்ற தலைப்போடு 224 பக்க நீளத்திற்குப் பயணிக்கும் இந்த TEX சாகஸத்தினுள் நான் பணியாற்றியது ஏகப்பட்ட மாதங்களுக்கு முன்னே என்பதால் கிட்டத்தட்ட கதையின் outline நீ்ங்கலாக பாக்கி சகலமும் மறந்தே போயிருந்தது! So எடிட்டிங்குக்கென தூக்கிக் கொண்டு அமர்ந்த போது புதுசாய் ஒரு கதையைப் படிப்பது போலவே ஒரு fresh feel! And அந்த 220 பக்க அதிரடியினைப் பாதி எடிட் செய்துள்ள தருவாயில் இதை எழுதுகிறேன் guys; செப்டம்பரில் - ட்ரெண்ட்; ப்ளூகோட்ஸ்; லக்கி கிராபிக் நாவல் என அத்தினி பேரும் அப்டிக்கா ஓரமாய்ப் போய் விளையாடிட வேண்டியது தான் ! ஷப்பாாா!!! ஏகப்பட்ட நாட்களாகி விட்டன இத்தனை வித்தியாசமானதொரு களமும், எதிராளியும் TEX-க்கு அமைந்து! சும்மா ஒவ்வொரு பக்கத்திலும் மின்சாரம் பாயாத குறை தான்! கதையின் துவக்கத்திலேயே டாப் கியரில் எகிறும் நம்மவர் சுபம் போடும் வரையிலும் அதே ரணகள mode-ல் தொடர்ந்திடுகிறார்! And இம்முறை அவரோடு பொருதுவதோ – அடிக்கு அடி; உதைக்கு உதை; குத்துக்குக் குத்து; தோட்டாவுக்குத் தோட்டாவென ஈடுதரவல்லதொரு சக ரேஞ்சரே!! 

700+ ஆல்பங்கள் கொண்டதொரு தொடரில் – இன்னமும் புதுசாய்த் தோண்டியெடுக்கக் கூடிய கதைக்கருக்கள் என்ன தானிருக்க முடியுமோ? என்ற நினைப்பு என்னுள் அவ்வப்போது தோன்றிடுவதுண்டு! நாலைந்து வருடங்களுக்கு முன்பாய் TEX-ன் டாப் கதாசிரியரான திரு.மௌரோ போசெல்லியைச் சந்தித்த போது கூட இதே கேள்வியைத் தான் கேட்டு வைத்தேன் ! சன்னமான புன்னகையே பதிலாகக் கிடைத்தது எனக்கு ! TEX Room என்று அவர்கள் அழைக்கும் பெரியதொரு ரூமுக்குள் அப்புறமாய் அவரது உதவியாளர் அழைத்துச் சென்ற போது எக்கச்சக்கமாய் Wild West சார்ந்த புக்குகள் ; வரைபடங்கள் ; ஸ்டேஜ் கோச் ; ரைபிள் ; பிஸ்டல் ; குதிரைகளின் தத்ரூபமான பொம்மைகள் என்று நிறைந்து கிடப்பதைப் பார்க்க முடிந்தது ! வன்மேற்கின் வரலாற்றை அக்கு வேறு – ஆணி வேறாய்ப் படிக்கிறார்கள் ; நிஜ நிகழ்வுகளை நுணுக்கமாய் அலசுகிறார்கள்; இக்ளியூண்டு spark கிட்டினாலும் போதும், அதனையே அப்புறமாய் விஸ்தீரணம் செய்து, ஒரு முழுநீளக் கதையாக உருமாற்றுகிறார்கள் என்பது புரிந்தது!

And காத்திருக்கும் இந்த TEX அதிரடி கூட இத்தகையதொரு சன்னமான வரலாற்றுப் புள்ளியிலிருந்து புறப்பட்டிருக்குமோ என்னமோ – கதையின் முழுமையிலும் ஒருவித யதார்த்தமும், நம்பகத்தன்மையும் இழையோடுகிறது! பொதுவாய் 220 பக்க எடிட்டிங் வேலையெனும் போது – அது டெக்ஸ் கதையாகவே இருப்பினும் லேலெல்லாம் வலிக்கத் தான் செய்யும் – simply becos of the volume of the work! ஆனால் சமீபத்தைய கிராபிக் நாவல் mode-ல் கிடந்தவனுக்கு TEX கத்தையை இந்தவாட்டி பார்த்திடும் போது குச்சி முட்டாயும், குருவி ரொட்டியும் பார்த்த குழந்தைப் புள்ளை போல குஷியாகிப் போனது! மார்ச் மாதம் வெளியான “பாலைவனத்திலொரு கப்பல்” மாத்திரமே இந்தாண்டின் TEX முத்திரை கொண்ட சாகஸமாய் அமைந்துள்ளதை நமது அட்டவணை சொல்கிறது! அந்தக் குறையை நிவர்த்திக்க “ஒ.ரௌ.ரே” காத்துள்ளார் ! Electrifying TEX folks!! அதிலும் க்ளைமேக்சில் பறக்கும் அனல் + இழையோடும் மனித உணர்வுகள் நெடுநாள் மனதில் நிற்கப் போவது நிச்சயம்! பொதுவாய் நான் பில்டப் தருவதெல்லாம் சற்றே சவலைப்பிள்ளைகளான நாயக / நாயகியருக்கு தானிருந்திடுவதுண்டு! ரொம்ப காலம் கழித்து, நெல்லை ஊருக்கே இருட்டுக்கடை அல்வாவின் அருமை பெருமைகளைப் பற்றிப் பேசும் உணர்வே மேலோங்குகிறது! ஆனால் 115 பக்கங்களைக் கடந்துள்ள நிலையிலேயே சேர் மேலே ஏறி நின்று கொண்டு ‘விஷ்க்... விஷ்க்...‘ என்று விசிலடிக்கத் தோன்றுவதாலாயே இந்த ஒட்டைவாய் அவதார்!

And இதோ – இந்த இதழுக்கான அட்டைப்பட முதல் பார்வை – முழுக்கவே ஒரிஜினல் டிசைன்களுடன்! போனெல்லியின் 2 தனித்தனி இதழ்களில் – தொடர்களாய்த் தடதடத்த இந்த சாகஸத்திற்கு அவர்கள் போட்டிருந்த 2 அட்டைப்பட டிசைன்களுமே பட்டையைக் கிளப்ப – எதை முன்னட்டைக்கு ? எதைப் பின்னட்டைக்கு ? என்று நிர்ணயிக்க மட்டுமே ஒரு கணம் திணறினேன்! அப்புறம் ஓவியர் Garcia Seijas-ன் கைவண்ணத்தில் உட்பக்கங்களில் அரங்கேறும் சித்திர மேளா அதகளம் செய்கிறது! டெக்ஸின் கம்பீரம்; கார்சனின் வசீகரம்; எதிராளியின் வீரியம் என்று அத்தனையுமே ‘நச்‘ ரகம்! நிறைய முறைகள் கதைகளின் outline-களை வாசித்து ‘அடடே...!!!‘ என்றபடிக்கே அந்த ஆல்பத்தை வரவழைத்து ஆர்வமாய் புரட்டினால் – ‘புசுக்‘கென்று பலூனில் காற்று போனது போலாகிடும், சித்திர பாணிகளைப் பார்த்திடும் போது! திரையில் நடிகர் திலகம் பிரசன்னமாகும் போது – நாம் எதிர்பார்ப்பது அவரது சிம்மக்குரலைத் தானே? மாறாக – நடிகர் திலகத்துக்கு சுருளிராஜனின் voiceover அமைந்தால் வெறுத்துப் போய்விடுமன்றோ ? அதே feel தான் டெக்ஸின் ஒருசில புது ஓவியர்களின் படைப்புகளைப் பார்த்திடும் போது ஏற்படுவதுண்டு ! இத்தாலிய வாசகர்களுக்கெல்லாம் இது அத்தனை பெரிய சமாச்சாரமாய்த் தென்படுவதில்லை போலும் - கதையை; நாயகரை ரசிப்பதிலேயே திருப்திப்பட்டு விடுகின்றனர்! ஆனால் நமக்கோ பந்தியில் பரிமாறப்படும் ஸ்வீட்டிலிருந்து, ஊறுகாய் வரையிலும் சகலமுமே சுவையாய் அமைந்திடல் ஒரு அத்தியாவசியம் எனும் போது – கதைத் தேர்வுகளோடு, சித்திரச் சுந்தரங்களுக்கும் பெரும் பங்கு இருந்து வருகிறது! இம்முறை இரண்டுமே ஒற்றைப் புள்ளியில் சந்திக்க / சங்கமிக்க – a treat for all the senses in place!! 

கடைவாயோரம் வழிந்து வரும் குற்றாலத்தைத் துடைத்தபடிக்கே அடுத்த subject-க்குத் தாவும் முன்பாய் உள்ளுக்குள் இன்னொரு நினைப்புமே ஓடாதில்லை! “ஆத்தாடியோவ்... முரட்டுத்தனமான பில்டப் தந்திருக்கோம்; இப்பவே பெங்களூரின் ஒரு மூலையில்... கோபியின் இன்னொரு கோடியில் பெருசாய் பல்பு தர முஸ்தீபுகள் அரங்கேறிக் கொண்டிருக்குமோ?" என்ற பீதி தான் அது! ஆனாலும் நாம் பார்க்காத முட்டுச் சந்துகளா? வாங்காத LED பல்புகளா? எனும் போது  "பில்டப் படலத்தில் போவோமே....போய்த் தான் பாப்போமே !!" என்றபடிக்கு jump to the next topic!!

லக்கி லூக் !! சமீப மாதங்களது நமது ‘ஹிட்‘ படலத்துக்கு நிறையவே பெட்ரோலாய் அமைந்த புண்ணியவாளர் இவரே! மிஸிஸிபி நதியின் படகுப் போட்டி சாகஸத்தில் ஆரம்பித்து; உருளைக்கிழங்கை உரிக்கச் செய்யும் கர்னல் பிக்ஜீரோ; சுதந்திர தேவி சிலையைத் தூக்கித் திரியும் ரகளை என்று இவரது ஜாலி அதிரடிகள் இந்தாண்டின் கார்ட்டூன் வாசிப்புகளுக்கு ஒரு மெருகூட்டியுள்ளது! And காத்திருக்கும் செப்டம்பரிலும் இவரது பெயரை உச்சரிக்கவுள்ளோம் – இந்தவாட்டி செம வித்தியாசமானதொரு களத்தினில் ! (ஆரம்பிச்சாச்சா ? என்ற உங்கள் மைண்ட்வாய்ஸ் கேட்குது !!) மாதாமாதம் யாருக்காகவும் பில்டப் பலூனில் காற்று ஏற்றும் போதெல்லாம் – “செம வித்தியாசமான கதைக்களம்” என்ற பதத்தை நையப் புடைத்திடுவத எனது வாடிக்கை ! ஜானதன் கார்ட்லேண்டுக்குமே இதே போல லாலி பாடியிருப்பேன் என்பதால் எனது பில்டப்களைப் பொதுவாய் ஒரு சிட்டிகை உப்போடே அணுகுவீர்களென்பது புரிகிறது guys ! ஆனால் நம்பினால் நம்புங்கள் – இந்த முறை சந்திக்கவுள்ள லக்கி லூக் – 'ஆயுளில் ஒருவாட்டியே !' என்ற ஸ்டைலில் காத்திருக்கிறார்! சிரிப்பூட்டும் கார்ட்டூன் நாயகராக இன்றி – ஒருவித நிஜத்தன்மை கொண்ட கௌ-பாய் ; ஒரு அழகான களத்தில் ; ஜாலியான சித்திர பாணியில் கலக்குகிறார்! “லக்கி லூக்கைச் சுட்டது யார்?!” நம்மவரின் 70-வது பிறந்த நாளுக்கோரம் விசேஷமாய் 2017-ல் வெளியான ஆல்பம்! அப்போதே இதனை தமிழில் வெளியிடும் ஆசையிருந்த போதிலும் ஸ்லாட்ஸ் பற்றாக்குறையால் RAC-ல் காத்திருக்கச் செய்ய வேண்டிப் போனது ! லேட்டாயினும், லேட்டஸ்டாய் வந்தே தீருவேன் என்று மனுஷன் அடம்பிடிக்க, இதோ ஜம்போவின் சீஸன் 2 அதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது! முதல் எடிஷன் வெளியான பத்தே நாட்களில் முழுசும் விற்றுத் தீர்ந்திட – இரண்டாவது வாரமே மறுபதிப்புக்கு அவசியம் நேர்ந்ததாம் பிரெஞ்சு மொழியில்! நமக்குமே லக்கி லூக் collection-ல் இந்த ஆல்பத்துக்கென ஒரு உச்ச ஸ்தானம் கிட்டப் போவது நிச்சயமென்று ஜாலி ஜம்பர் சொல்கிறது! ரொம்பவே சமீபத்தை படைப்பு என்பதால் கலரிங் பாணி சும்மா பட்டையைக் கிளப்புகிறது ! நேற்று காலை துவங்கிய அச்சின் முதல் படிவத்தைப் பார்த்த போதே என் கண்களெல்லாம் பிரகாசமாகிப் போயின! Brilliant கலரிங்!

So இதோ – ஒரு மைல்கல் தருணத்துக்கொருத் தயாரான இதழின் ஒரிஜினல் ராப்பர் – துளியும் டிங்கரிங் இன்றி அப்படியே! அந்த எழுத்துருக்கள் மாத்திரம் நமது ஓவியர் சிகாமணியின் அதகளம்! மூப்புக்கும், திறன்களுக்கும் துளி கூடச் சம்மந்தம் நஹி போலும்... இன்னமுமே கலக்குகிறார் மனுஷன்!

Before I sign out - சில updates :

1.தஞ்சாவூரில் திங்களன்று ( நாளை) புத்தக விழா நிறைவுறுகிறது ! பெரு நகரமல்ல எனும் போது நமது எதிர்பார்ப்புகளும் பெருசாய் இருந்திடவில்லை; So ஓரளவுக்கான decent விற்பனையின் பொருட்டு மகிழ்ச்சியே! வாரயிறுதியில் இன்னும் வேகமெடுத்தால் சூப்பர்! புத்தக விழா கேரவனின் அடுத்த நிறுத்தம் – மதுரை ! BAPASI நடத்திடும் இந்த விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 195 ! இந்த book fair சீஸனை மதுரையில் சந்தோஷமாய் நிறைவு செய்திடலாம் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம் ! ! Fingers crossed ! 

2.அப்புறம் நண்பர் ஜேடர்பாளையம் சரவணகுமாருக்கு வரும் புதனன்று அறுவை சிகிச்சைக்குத் திட்டமிட்டுள்ளனராம் !! நமது பிரார்த்தனைகளும், சிறிதும், பெரிதுமான நமது பொருளாதார உதவிகளும், அவர் பூரண நலம் பெற நிரம்பவே உதவும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது !! While on this topic - குடும்பத்துக்கான மருத்துவக் காப்பீட்டின் முக்கியத்துவம் பற்றியும் கொஞ்சம் பேசுவோமா guys ?  இது போன்ற தருணங்களிலேயே அதன் அவசியம் நமக்கு ஸ்பஷ்டமாய் புரிகிறது ! நானே கூட 3 ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் இதற்கென மெனக்கெடாது எருமை போலவே சுற்றித் திரிந்தேன் தான் ! ஆனால் எனக்கு நேர் மாறான எனது தம்பி - இத்தகைய விஷயங்களில் செம முன்ஜாக்கிரதை முத்தண்ணா தான் ! அவனது நச்சரிப்பின் பேரில் medical பாலிசி ஒன்றினை எடுத்து வைத்தேன் !! 'காசுக்குப் பிடித்த கேடு' என்ற நினைப்பு என் தலைக்குள் ஒரு ஓரத்தில் குடிகொண்டிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை ! ஆனால் 4 மாதங்களுக்கு முன்னே சிறுநீரகக்கல் சிகிச்சைக்காக சென்னையில் போய் படுத்துக் கிடந்த வேளையில் தான் இந்த பாலிசியின் அருமை புரிந்தது ! 'சின்ன procedure தான் ; முந்தின நாள் அட்மிட் ஆனாக்கா மறு நாள் சாயந்திரம் வீட்டுக்குப் போயிடலாம் ; ஒண்ணுமே கிடையாது !!' என்று டாக்டர் சொல்லியிருந்ததைக் கொண்டு - ஏதோ ஒரு முப்பதாயிரம் - முப்பத்தைந்தாயிரம் ரேஞ்சுக்கு பில் போடுவார்களென்ற நினைப்பில் மல்லாந்து கிடந்தேன் ! ஆனால் அட்மிட் ஆகும் போதே " insurance இருக்கா ?" என்று கேட்ட கையோடு ஒரு எஸ்டிமேட்டும் போட்டு நீட்டினார்கள் ! வாங்கிப் பார்த்தால் எனது எதிர்பார்ப்பு + 1 ; அதாவது 1 லட்சம் + முப்பத்தைந்தாயிரம் என்றிருந்தது ! காப்பீட்டின் குஷன் மாத்திரம் இல்லாது போயின் - 'பூமிதிக்க' வந்து தீமிதிக்க வேண்டிப் போன கவுண்டரைப் போல் அன்றைக்கு நானும் "ஐயோ..நெருப்புடோய் !! ஐயோ...பில்லில் ஆறு இலக்கம்டோய் !!" என்று மிரண்டு போயிருப்பேன்  !! வெறும் 3000 ரூபாய் நீங்கலாய், பாக்கித் தொகை முழுசையும் இன்சூரன்ஸ் கம்பெனி நேரடியாய் மருத்துவமனைக்கே செலுத்தி விட - பெருமூச்சொன்றை விட்டபடிக்கே நடையைக் கட்டினேன் ! And இப்போதெல்லாம் காப்பீட்டுப் புதுப்பிப்புக்கு தலைகாட்டும் முகவர்களைப் பார்த்தால் மூக்கில் குத்தத் தோன்றுவதில்லை ; மாறாக 'காபி சாப்பிடறீங்களாண்ணா ? டிபன் சாப்பிடறீங்களாண்ணா ?' என்று குசலம் விசாரிக்கத் தான் தோன்றுகிறது ! 

கதையின் கருத்து : ஏதேதோ ஓட்டங்களில் நில்லாது ஈடுபடுவதே நமக்கு இன்றைக்கு வாழ்க்கை என்றாகிப் போய்விட்டது !! அந்த ஓட்ட மும்மரத்தில் சில அத்தியாவசியங்களின் அவசியங்களை நாம் மறக்க நேரிடுகிறது ! ஆனால் இன்றைக்கு நண்பர் JSK-க்கு புலர்ந்துள்ள சுகவீனத்தையும், இக்கட்டையும் பார்த்திடும் போது தான் பகீரென்று ஒரு நினைவூட்டலாய் அமைகிறது ! Please guys : இயன்ற தொகைக்கொரு குடும்பக் காப்பீட்டுத் திட்டத்தை எத்தனை சீக்கிரமாய் எடுத்திட முடியுமோ - அத்தனை சீக்கிரமாய் எடுத்திடுங்களேன் ? நித்தமும் செலவுகளுக்குப் பஞ்சமே இருக்கப் போவதில்லை தான் ;  இந்தக் காப்பீட்டுப் பிரீமியம் செலுத்தினாலும் சக்கரம் ஏதோவொரு விதத்தில் சுத்தத் தான் போகிறது ; செலுத்தாது போனாலும் வண்டி ஒடத் தான் போகிறது ! சிரமத்தோடு, சிரமமாய் இந்த அத்தியாவசியத்துக்கும் ஒரு வழி செய்து விடுவோமே ?

Bye folks....Have a great Sunday !! 

171 comments:

  1. படித்து விட்டு வருகிறேன் 😜

    ReplyDelete
  2. மூணாவதாக நான்..!

    ReplyDelete
  3. பதிவு வந்தாச்சு

    ReplyDelete
  4. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  5. //மருத்துவக்காப்பீடு//
    சமீப காலங்களில் நிறைய தேவைப்படும்
    சார் என் போன்ற மாதசம்பளகாரர்களுக்கு நிச்சயமா தேவைப்படும் சார்.....!

    டெக்ஸ் லக்கி வெற்றிக்கூட்டணி வருவது மகிழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. ஸ்டார் ஹல்த் இன்சுரன்ஸ் எடுத்தால், வருடத்திற்கு 15,000 கட்ட வேண்டி வரும் ப்ரோ. பணத்தை பார்க்காமல் கட்டினால் நல்லதுதான்... ஆனால், 15.000???

      Delete
    2. ₹7 இலட்சம் கவரேஜ் கிடைக்கும் குடும்பத்தில் 4 பேருக்கு தாய், தந்தை, 2 குழந்தைகள். பாலிசி எடுத்தால் அவசரக்காலத்தில் பதற தேவையில்லை. கொஞ்சம் சிக்கனத்தை கடைபிடித்தால் எதுவும் சாத்தியமே.

      Delete
    3. முயற்சிப்போம்..சகோ...

      Delete
  6. நன்றி சார். ஒத்தையா ரெட்டையா போட்டுட்டிருந்தேன்.விரைவிலேயே ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் போட்டுடறேன்..

    ReplyDelete
  7. Enter your comment...மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. எந்தமாதிரியான comment போடணும்னு சொன்னீங்கன்னா போட்டுடறேன்! :)

      Delete
    2. ஈ.வி எப்டிம்மா உன்னால மட்டும் முடியுது.

      டிசைனே அது மேரியா இருக்குமோ!!!🤔🤔🤔🤔🤔.

      😉😅😅😅😅.

      Delete
    3. ஈ.வி எப்டிம்மா உன்னால மட்டும் முடியுது.

      டிசைனே அது மேரியா இருக்குமோ!!!🤔🤔🤔🤔🤔.

      😉😅😅😅😅.

      Delete
  8. இந்த மாத இறுதி சனிக்கிழமையில் வருவதால் செப்டம்பர் இதழ்கள் கொஞ்சம் முன்னரே கையில் கிடைக்க வாய்ப்புண்டா சார்?????

    ReplyDelete
  9. கார்ட்டூன் என்றாலேகதறும் பலநண்பர்களும். லக்கி என்றால்லாலி லாலி லாலா என்று ஜாலியாக ஹம்மிங்குடன் வலம் வரும் அந்தமேஜிக்இதோ அருகில் போடு தன்னானேதானதந்தனதன்னானே கரூர் ராஜ் சேகரன்.

    ReplyDelete
  10. ////சும்மா ஒவ்வொரு பக்கத்திலும் மின்சாரம் பாயாத குறை தான்......///

    நான் ரெடி ஆசான்....சாரை பாம்பு சார்ளி போல glovesஉடன் காத்து கிடைக்கான் இந்த மந்திரி....


    ஷாக் அடிக்கமால் இருக்க என்னவெல்லாம் மாய்மாலம் பண்ண வேண்டி இருக்கு 😊😊😊😊



    சாரைப்பம்பூ சார்லி

    ....சூப்பர் சர்க்கஸ் இல் வரும் ஒரு யானை கொலையாளி....☺️☺️☺️

    ReplyDelete
    Replies
    1. மந்திரியாரே..

      :)))))

      Delete
    2. அதே தான்.... பூனையாரே😂😂😂

      Delete
  11. Load more......😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    ReplyDelete
    Replies
    1. அட...அதுக்குள்ள load more வந்துடுச்சா.....👍👍👍👍👍

      Delete
  12. சார் அதே போல சிம்பிளான.சிக்கனமான அழகான ஆக்ரோஷமான கராத்தே டாக்டர் போன்ற ஒரு கறுப்பு வெள்ளை அதிரடிபக்கம் ஒருமுறை எட்டிப் பார்க்கலாம் வாங்க ப்ளிஸ் பழைய லயனைமீண்டும் பார்க்க வேண்டும் போல் உள்ளது. கரூர் ராஜ் சேகரன்

    ReplyDelete
  13. So எடிட்டிங்குக்கென தூக்கிக் கொண்டு அமர்ந்த போது புதுசாய் ஒரு கதையைப் படிப்பது போலவே ஒரு fresh feel! ////
    ஆனாலும் சமீப நாட்களில் உங்கள் நகைச்சுவை உணர்ச்சி உச்சத்தில் உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. ரம்மி..

      ஹா ஹா ஹா! :)))

      Delete
    2. ரம்மி செம்மையா. ஹிஹிஹி

      Delete
    3. பவளச்சிலை மர்மம் & பழிவாங்கும் புயல் & தலைவாங்கி குரங்கு & டிராகன் நகரம்& கழுகு வேட்டை & இரத்த வெறியர்கள்....போன்ற அந்நாளைய சூப்பர் ஹிட் டெக்ஸ் சாகசங்கள் அவ்வப்போது எடுத்து படிப்பேன். ஒவ்வொரு தடவையும் புதிய கதை படிப்பது போலவே இருக்கும். டெக்ஸ் கதைகளின் பலமே அதான்!

      Delete
    4. டெக்ஸ் விஜயராகவன் ஜி இப்படி எல்லாம் காமெடி பண்ணப் படாது. எனக்கு எல்லா கதையும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.

      Delete
    5. எடிட்ருக்கே புத்துணர்ச்சி ன்னா நம்ம சேலத்து டெக்ஸ் பக்தாளுக்கு பத்து புத்துணர்ச்சி ல சாமியாடும்.

      Delete
  14. ஜுனியர் எடிட்டரை தான் மேக்ஸி லயனுக்கு எடிட்டர் ஆக்கிட்டீங்களே. அப்புறம் ஏன் வெயிட்டிங். அவர் சூட்டிய முதல் தலைப்பான ஒற்றை நொடி.. ஒன்பது தோட்டாவை களமிறக்கலாமே.
    பின்குறிப்பு: ஒரு வேளை அந்த 340 பக்க மேக்ஸி லயன் அதுதானோ? (கல்லை விட்டெறிவோம். பழம் வந்தால் டபுள் ஓகே.)

    ReplyDelete
  15. Replies
    1. ///“ஆத்தாடியோவ்... முரட்டுத்தனமான பில்டப் தந்திருக்கோம்; இப்பவே பெங்களூரின் ஒரு மூலையில்... கோபியின் இன்னொரு கோடியில் பெருசாய் பல்பு தர முஸ்தீபுகள் அரங்கேறிக் கொண்டிருக்குமோ?" என்ற பீதி தான் அது!///

      ஹாஹாஹா!!

      Delete
    2. சிரிச்சா மட்டும் போதாது,
      அந்த பீரோவுல காத்திருக்கும் டெக்ஸ் புக்லாம் படித்து விமர்சனம் போடுங்க மிதுனரே!

      Delete
  16. அடுத்த மாதம் இந்த இரண்டு கதைகள்.மட்டும்தானா

    ReplyDelete
    Replies
    1. ப்ளுகோட் பட்டாளம் இருக்கே.....

      Delete
    2. அடுத்த மாதம் ப்ளூ கோட், டிரெண்ட் மற்றும் லக்கி டெக்ஸ் உடன்

      Delete
    3. நாலு புக்கு....

      Delete
  17. Life insurance போலவே.....லயன் காமிக்ஸ்...முத்து காமிக்ஸ் நிறுவனத்தார்...ஏன் பழைய காமிக்ஸ்களுக்கு...insurance வழங்க கூடாது....

    பிரீமியம் கட்ட நான் ரெடி....🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    ReplyDelete
  18. அனைவருக்கும் வணக்கம்.!

    ReplyDelete
  19. // TEX கத்தையை இந்தவாட்டி பார்த்திடும் போது குச்சி முட்டாயும், குருவி ரொட்டியும் பார்த்த குழந்தைப் புள்ளை போல குஷியாகிப் போனது. //
    இந்த வருடம் டெக்ஸ் குண்டு ஸ்பெஷல் இல்லாத குறையை அடுத்த வருடமாவது தீர்த்து வையுங்கள் சார்,சர்வமும் நானே ஸ்பெஷல் போல் ஒரு அட்டகாசமான குண்டு ஸ்பெஷல் வந்தால் வேறு என்ன சந்தோஷம் தேவை சார் நமக்கு......
    கோரிக்கையை பரிசீலனை செய்யுங்கள் சார்.......

    ReplyDelete
  20. // இக்ளியூண்டு spark கிட்டினாலும் போதும், அதனையே அப்புறமாய் விஸ்தீரணம் செய்து, ஒரு முழுநீளக் கதையாக உருமாற்றுகிறார்கள் என்பது புரிந்தது! //
    போனெல்லியின் இந்த ஆக்கப்பூர்வமான சிந்தனைதான் நமக்கு சிறந்த பொழுதுபோக்காக அமைந்துள்ளது.......

    ReplyDelete
  21. // ஆனால் 115 பக்கங்களைக் கடந்துள்ள நிலையிலேயே சேர் மேலே ஏறி நின்று கொண்டு ‘விஷ்க்... விஷ்க்...‘ என்று விசிலடிக்கத் தோன்றுவதாலாயே இந்த ஒட்டைவாய் அவதார்! // ரொம்பவே ஆர்வம் கிளம்புதே,காத்திருப்பின் காலம் நீண்ட பொழுதாய் தோன்றப் போகிறது......

    ReplyDelete
  22. இருளின் ராஜ்யத்தில்:

    தனக்கும்,தன்னை சார்ந்தவர்களுக்கும் உடல்ரீதியான பல்வேறு கொடுமைகளை இழைக்கும் ஒரு சைக்கோ டாக்டரை கொல்ல வாய்ப்பு கிட்டியும் கொல்ல முடியாத துரதிர்ஷ்டம் யாருக்கேனும் அமையுமா?
    நம் நாயகருக்கு அமைகிறது...
    எல்லா பொழுதுகளிலும் விஷமச் சிரிப்புடனும் உலா வருபவன்,மற்றவரை பேசியே வசியம் செய்யும் வித்தகன்,ஜால வார்த்தைகளில் வித்தகன்,தோற்றத்தில் ஆகிருதியானவன்,மருத்துவத்தின் வித்தைகளை கைக்குள் வைத்திருப்பவன்,யாருக்கு நல்லவன்,யாருக்கு கெட்டவன் என்ற புதிருடன் இருப்பவன்,பலரால் அரக்கன் என்று அழைக்கப்படுபவன்,தன் செயல் ஒவ்வொன்றிற்கும் திறமையான தர்க்கங்களை வைத்திருப்பவன்,சட்டர்கேம்ப் அரக்கன் என்று அழைக்கப்படுபவன்,க்விண்ட் என்ற பெயருடன் ஊர்,ஊராய் திரியும் மருத்துவன்.....
    ப்பா..... எத்தனை அடைமொழிகள் ஒருவனுக்கு,அசாத்தியமான ஒரு வில்லன் க்விண்ட்....
    "குணப்படுத்துகிற தயாளனா?
    இல்லை, ஈவிரக்கமில்லாத கொலைகாரனா"

    தன் மருத்துவ திறமைகளையே தமக்கான தற்காப்பு ஆயுதமாக பயன்படுத்துவது செமையான உத்தி...
    செல்லும் இடத்தில் எல்லாம் பிரச்சினைகளையும் உண்டு செய்வது,பின் அதையே தனக்கு சாதகமாக திசை மாற்றுவது...
    அப்பப்பா......
    வெட்டியான் க்ரோ பெரும் போராட்டத்திற்குப் பின் க்விண்டை கொல்ல வாய்ப்பு கிடைக்கும் இறுதி சந்தர்ப்பத்திலும் தவறிப்போவது ஒன்றை உறுதிப்படுத்துகிறது,அடுத்து வரும் பாகங்களிலும் க்விண்டின் அட்டகாசம் தொடரும்.......

    ரோஸ் கதாபாத்திரமும் மனவுறுதியில் தான் சளைத்தவள் இல்லை என்றே அமைக்கப்பட்டிருக்கிறது,எனினும் கானகத்தில் க்விண்ட் உறங்கும் சந்தர்ப்பத்தில் அவனை கொல்ல வாய்ப்பு கிட்டியும் தடுமாறும் மனப்போராட்டமும்,உறங்கும் நேரத்திலும் க்விண்டின் விஷமப் புன்னகையும்...அடடே......செம....

    வெட்டியான் தன் முதல்பாகத்தைப் போலவே இதிலும் அழுத்தமான முத்திரையை பதித்து விட்டார்...

    கதைக்களம் நிறையவே இருளில் நடப்பதால் இருண்ட கானகத்தில் பயணிப்பதான உணர்வு......

    இருளின் ராஜ்யத்தில் அட்டகாசமான ஒரு சாகஸம்....

    வெட்டியானின் அடுத்த சாகஸத்துக்காக வெயிட்டிங்....

    2020 ல் ஏதேனும் உண்டா சார்....

    எமது மதிப்பெண்கள்-10/10.

    ReplyDelete
    Replies
    1. பிஸ்டலுக்கு பிரியாவிடை,நித்தம் ஒரு யுத்தம் இரண்டையும் முடிச்சாச்சி, அட்டகாசமான கதை தேர்வு சார்,தொடர்ந்து வந்த பதிவுகளில் இரு இதழ்களையுமே பெரும்பாலான துவைத்து தொங்க போட்டு விட்டதால் புதிதாய் சொல்ல ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது.......
      மற்றபடி இரு இதழ்களுமே மனதை கொள்ளை கொண்டது என்பதில் மாற்றுக் கருத்தில்லை சார்.....

      Delete
    2. ஆகஸ்டில் வெளிவந்த அனைத்து இதழ்களுமே நிறைவு சார்....
      ஒரு தகவலா தோன்றியது என்னன்னா,நண்பர் கண்ணன் சொன்னது போல் இந்த ஆர்பாட்டமான கொண்டாட்டங்கள் நிறைந்த வெளியீட்டுக்கு இடையே
      இருளின் ராஜ்யத்தில் போன்ற நல்ல கதைகள்,சிறப்பான தேர்வுகள் பெரிய அளவிலான கவனத்தை ஈர்க்காமல் சென்று விடுவதாக தோன்றுகிறது சார்....
      எனவே ஒரு மீள் விமர்சனம்.........

      Delete
    3. // "குணப்படுத்துகிற தயாளனா?
      இல்லை, ஈவிரக்கமில்லாத கொலைகாரனா"

      தன் மருத்துவ திறமைகளையே தமக்கான தற்காப்பு ஆயுதமாக பயன்படுத்துவது செமையான உத்தி...
      செல்லும் இடத்தில் எல்லாம் பிரச்சினைகளையும் உண்டு செய்வது,பின் அதையே தனக்கு சாதகமாக திசை மாற்றுவது...//

      உண்மை. இந்த வில்லன் கதாபாத்திரத்தை பற்றி ஒரு PhD ஆராய்ச்சியே செய்யலாம். இந்த வில்லனைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.

      Delete
    4. ரவி சார் அருமையான விமர்சனம். பின்றிங்கன்னா

      Delete
  23. Tex Willer கதை களம் புதுசு என்னும் போது சிப்பு சிப்பா வாருது : ) : ) :)
    உதாரணதுக்கு சமிபத்திய ”தகிக்கும் மெக்க்ஷிக்கொ” ஒரு முலு நீள கதையின் முதல் இரண்டு பக்கம் & கடைசி இரண்டு பக்கம் எண்று எடுத்துக்கொள்ளலாம். அதுவெ அந்த கோச் வண்டியின் கொள்ளையில் ஆரம்பித்து , Texக்கும் அந்த சிறுமிக்கும் ஒரு flashback வைத்து, அவர் ஊர் ஊராய் , ஒவ்வொரு கொள்ளையனாய் வேட்டையாடி இருப்பின்.. ஆஹா ஓஹோ பேக்ஷ் பேக்ஷ் என கொண்டாடியிருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. // Tex Willer கதை களம் புதுசு என்னும் போது சிப்பு சிப்பா வாருது : ) : ) :) // ஹிஹிஹி நண்பரே

      Delete
    2. ஹா..ஹா....!!சாத்தான் வேட்டை பாணியில் பட்டையை கிளப்பி இருக்கும்!

      Delete
    3. ///Tex Willer கதை களம் புதுசு என்னும் போது சிப்பு சிப்பா வாருது : ) : ) :)///

      சரி.! சரி! மெல்லமா சிரிச்சுகுங்க.!

      Delete
  24. எடிட்டர் சார்@@@@
    நண்பர்களே@@@@

    மருத்துவ மனையில் இருந்து சற்றுமுன் நம்ம நண்பர் JSK போன் செய்திருந்தார்!

    பெருமிதத்தால் உடைந்து போன குரலில் பேசினார்!

    சிகிச்சைக்கு இடையேயும் போனில் வாட்ஸ்அப் & தளத்தை பார்த்துஉள்ளார். அவருக்கு உதவும் நண்பர்களின் முயற்சியை பார்த்து உணர்ச்சிப்பெருக்கில் பேச்சு வரவில்லை அவருக்கு! கண்கலங்கி நிற்கிறார் ஃப்ரெண்ட்ஸ்!

    எத்தனை புண்ணியம் செய்திருப்பேனோ இத்தகைய அன்பு நிறைந்த நண்பர்களையும் எடிட்டர் சாரையும் வாழ்வில் சந்திக்க என தெரிவித்தார்!

    மாத்திரைகள் வாந்தியையும்
    தலைசுற்றலையும் கொஞ்சம் கண்ட்ரோல் செய்திருந்தாலும் கிறுகிறுப்பால் பாத்ரூம் செல்லும்போதும் கூட யாரையாவது பிடித்து கொண்டுதான் செல்ல முடிகிறதாம்.

    புதன்கிழமை அறுவை சிகிச்சை நடக்கும் என மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்களாம். அதன்பின்பு சில மாதங்கள் பூரண ஓய்வில் இருத்தாகனும் போல தெரிகிறது.

    அவருக்கு உதவிவரும் ஒவ்வொரு நண்பரிடமும் பேசி ஆறுதல் தேடிக்கொள்ள அவரது மனசு துடிக்கிறது. எல்லோருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவிக்கச் சொன்னார். நண்பர்களின் உதவியும், அவர்களது அன்பான ஆறுதலான வார்த்தைகளும் பிரார்த்தனைகளும், எத்தனை நம்பிக்கையை அவருள் விதைத்து இருக்கிறது என்பதை பலதடவை சொல்லி விட்டார்.

    எடிட்டர் சாரின் வாஞ்சையான வார்த்தைகள் கண்டு கண்கலங்கி நிற்கிறார். தளத்தில் அவரது உடல்நலம் பற்றியும், எடிட்டர் சாரின் வேண்டுகோளும், நண்பர்களின் உதவிக்கரமும் அவருக்கு புதிய நம்பிக்கையை தந்திருக்கிறது.

    இன்னும் உங்களின் மோலான உதவிகளைத் தொடருங்கள் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. Super super Tex விஜயராகவன். அறுவைசிகிச்சை முடிந்து நண்பர் ஊர் திரும்பியதும் அவருடன் பேசுவோம். அவர் விரைவில் குணம் அடையட்டும்

      Delete
    2. என்னால் முடிந்த தொகையை அனுப்பிவிட்டேன்.
      நான் வணங்கும் முருகனின் அருளையும் கோரியுள்ளேன்.நண்பர் நலமுடன் இல்லம் திரும்புவார்.

      Delete
  25. நீண்ட நாளாக எதிர்பார்த்த லக்கி லூக்கின் கிராபிக் நாவல் வெளிவருவது மகிழ்ச்சி

    ReplyDelete
  26. நண்பர் ஜேடர்பாளையம் சரவணகுமார் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  27. இந்த மாதம் பி.பி.வியின் தாக்கம் நண்பர்களிடம் அதிகம் தெரிகிறது. சந்தோஷமாக உள்ளது.

    அதேபோல் நி.ஒ.யு ஒரு அமைதியான ஆனால் அட்டகாசமான ஆக்சன். எல்லி மற்றும் டீம் தங்களின் முதல் கதையில் அழுத்தமாக முத்திரை பதித்துள்ளார்கள். மிகவும் வீக்கான மகளிர் அணியை பலப்படுத்த சரியான அறிமுகம்.

    இ.ரா.தில வெட்டியான் முதல் கதையை விட இந்த முறை என்னை மிகவும் கவர்ந்துள்ளார். அளவான ஆக்சன் கொஞ்சம் சென்டிமேட் மற்றும் நிறைய சஸ்பென்ஸ் என கதாசிரியர் கலக்கியிருக்கிறார். அதுவும் அமைதியான ஆனால் தான் அடிக்கும் ஒவ்வொரு அடியும் பின்னால் தனக்கு உதவும் படி அடிக்கும் அந்த வில்லன் டாக்டர் வித்தியாசமான படைப்பு; இந்த கதைக்கு வெட்டியான் ஒரு தூண் என்றால் இந்த வில்லன் மற்றொரு தூண். சமீபத்தில் படித்த கதைகளில் இந்த வில்லன் கதாப்பாத்திரம் தான் முதல் இடம்.

    ReplyDelete
    Replies
    1. இந்த மூன்று கதைகளும் எளிதான வாசிப்பு கதைகளில் அடங்கும்.

      Delete
  28. //இந்தக் கதாப்பாத்திரங்கள் அத்தனையும் வெள்ளித்திரைக்குப் புரமோஷன் கண்டால் - எந்த நடிகர்கள் / நடிகைகள் இந்த role களுக்குப் பொருத்தமாயிருப்பார்களோ ? சும்மா யூகம் செய்து பாருங்களேன் ?//

    Biron : Johny Depp
    Hogward: Dave Bautista
    Margo : Salma Hayek/Penelope D’Cruz
    Monavo: Danny Trajo
    Tim: Tom Holland
    Old Red Indian: Tommy Lee Jones
    Lucy: Dakota Fanning

    In Tamil

    Biron : Nagesh (then) Surya (Now)
    Hogward: Asokan(then) Sathyaraj(Now)
    Margo : Silk
    Monavo: R.S Manohar(Then) Mansoor Ali khan(now)
    Tim: Cho(then) Soori (Now)
    Old Red Indian: V.S Raghavan(Then) & Delhi Ganesh (now)
    Lucy: Young Sridevi(then) & Nainika(now)

    ReplyDelete
    Replies
    1. மார்கோ கேரக்டருக்கு என்னுடைய பலமான ஓட்டு 'ராதிகா ஆப்தே '. வேற யாருமே அதுக்கு செட் ஆக மாட்டாங்க.

      Delete
  29. ஜேடர்பாளையம் சரவணகுமார் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து அவர் முழுமையாக குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    இந்த முறை ஈரோடு புத்தகத் திருவிழாவில் சந்தித்த போது அதிகம் பேச முடியவில்லை. அவரை அடுத்து வர உள்ள சென்னை புத்தகக் திருவிழாவில் சந்தித்து பேச ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  30. """“ஒரு ரௌத்திர ரேஞ்சர்!”"""

    ---பெயரே தூள் கிளம்புதேங் எடிட்டர் சார்!

    டிராகன் நகரம்,
    பழிக்குப் பழி,
    எமனோடு ஒரு யுத்தம்,
    கழுகு வேட்டை,
    இருளின் மைந்தர்கள்,
    நில் கவனி சுடு,
    சட்டம் அறிந்திரா சமவெளி,
    வல்லவர்கள் வீழ்வதில்லை,
    சர்வமும் நானே!,
    காற்றுக்கு ஏது வேலி?,
    ----போன்ற ஆர்ப்பாட்டமான தலைப்புகள் வரசையில் இந்த ரெளத்திர ரேஞ்சர்-ம் இணைகிறது!

    ReplyDelete
    Replies
    1. அந்த மெபிஸ்டோ, யுமா கதைகளை போட்டால் தலைப்புகள் மெர்சலாகா இருக்கும் ஜீ.

      Delete
    2. காலம் கனியட்டும் சுந்தரவரதரே!
      ஸ்டீவ் டிக்கார்ட்-டோடு (மெபிஸ்டோ வின் பெயர்) மோதும் கதைகள் தலயின் பட்டியலில் இணையட்டும்.

      இருளின் மைந்தர்கள்- மறுபதிப்பு பெறப்போகும் வரவேற்பு விரைவாக மெபிஸ்டோவோடு,தல தமிழில் பேச வழி செய்யட்டும்...!!!

      Delete
    3. சட்டம் அறிந்திரா சமவெளி இந்த லிஸ்டில் இடம்பெறுவதற்கு ஏகப்பட்ட மாற்று குறைவான கதை.

      Delete
    4. GP@ ஆமா...அந்த அடர் வண்ணம்+ மெரட்டலான வில்லி! கிட்டு பெண் வேடம் கட்டுவது! கடேசியில் தாத்தாக்கள் தலயின் தலையை காப்பதுனு ஏகப்பட்ட அம்சங்கள் இருந்தாலும், ஒரு சில மாற்றுக்கள் குறைவான பொண்ணு!

      Delete
    5. மொத்தத்திலே.. பேரு மட்டும் தான் வித்தியாசம்ன்னு ஒத்துகிட்டா சரி..

      Delete
    6. ரம்மி சூப்பர் யா சூப்பர் யா ஹிஹிஹி

      Delete
  31. டியர் எடி,

    1. டெக்ஸ் கதைகளில் முன்பின் அட்டைகள் போட்டி போட்டது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன்.... அசத்தல் வரும் காலங்களில், இப்படி இணந்த இதழ்களுக்கு இதே பாணியை கடைபிடியுங்களேன்...நமது கலெக்‌ஷனில், சம்பந்தமே இல்லா அட்டைகளுக்கு பதில், தனித்துவமான மூல அட்டைகளே சேரவேண்டும் என்பது என் அவா.

    2.லக்கி சுட்டது யார், ஒரு அருமையான தேர்வு. பொதுவாக மூல மாற்றங்களை தங்களது அபிமான கதாபாத்திரங்களிடம் எதிர்பார்க்காத நமது வாசக வட்டத்தை மனதில் வைத்து நீங்கள் வெளியிடமாட்டீர்கள் என்று பிரஞ்சில் வந்த போது ஏங்கி இருக்கிறேன். இப்போது அனைவரும் தமிழில் உணர வாய்ப்பு... பேஷ் பேஷ்.

    3. சீக்கிரமே நலமடையட்டு்ம் ஜேடர்பாளையத்தார். நமக்கு அதிகம் பழக்கமானவர்களிடம் இனி மறவாமல் மருத்துவம் மற்றும் உயிர் காப்பீடின் மகத்துவத்தை உணர்த்துவது நமது கடமையாக இனி பாவிப்போமாக. உங்களின் பதிவு மூலம் அது நடந்தேறினால், மிக்க மகிழ்ச்சியே.

    ReplyDelete
  32. பாலிசி எடுக்கும் நபரே முகவர் ஆகி விட்டால் 15% கமிஷன் கிடைக்கும். மாதம் 2 பாலிசிகள் கொடுத்தால் ₹3000 குறைந்தபட்சம் கிடைக்கும் . அதை வைத்து உங்கள் பாலிசி பிரிமியத்தை வருட வருடம் கட்டி விடலாம் நண்பர்களே. நான் அப்படித்தான் செய்து வருகிறேன். நல்ல சைடு பிசினஸூம் கூட. மீதமிருக்கும் தொகையை லயன் காமிக்ஸ் சந்தா கூட கட்டி விடலாம்.

    ReplyDelete
  33. ////ஏகப்பட்ட நாட்களாகி விட்டன இத்தனை வித்தியாசமானதொரு களமும், எதிராளியும் TEX-க்கு அமைந்து! சும்மா ஒவ்வொரு பக்கத்திலும் மின்சாரம் பாயாத குறை தான்! கதையின் துவக்கத்திலேயே டாப் கியரில் எகிறும் நம்மவர் சுபம் போடும் வரையிலும் அதே ரணகள mode-ல் தொடர்ந்திடுகிறார்! And இம்முறை அவரோடு பொருதுவதோ – அடிக்கு அடி; உதைக்கு உதை; குத்துக்குக் குத்து; தோட்டாவுக்குத் தோட்டாவென ஈடுதரவல்லதொரு சக ரேஞ்சரே!!///

    --- வாவ்..வாவ்...அருமை எடிட்டர் சார். எதிர் பார்ப்பை ஏகமாக கிளறிவிட்டது மேற்கண்ட வரிகள். சீக்கிரம் 10நாள் ஓடனுமே!!!!

    கடைசியாக எப்ப இப்படி ஒரு டெரர் வில்லனை தல எதிர்கொண்டார்??? ஆங்!துரோகத்திற்கு முகமேது!--அந்த வில்லன்!

    டைகருக்கு ஒரு குவானா மாதிரி டெக்ஸூக்கு இந்த "ரேஞ்சர்" அமைவானோ????

    ReplyDelete
    Replies
    1. ஏன் ஜீ, மிஸ்டர் 'P 'ஐ மறந்து விட்டீங்களே.

      Delete
    2. GP ஆமா இந்த "P" ம் வித்தியாசமான வில்லன் தான். முழு நீள கதையாகவே யோசித்து இந்த காரமான கடுகை மறந்துட்டேன்!

      Delete
    3. நான் சொல்ல வந்ததை ஜிபி சொல்லிட்டார்

      Delete
    4. விட்டுப் போச்சி.. அட்டைப்படமும் வித்தியாசம் தான்..

      Delete
  34. ///இக்ளியூண்டு spark கிட்டினாலும் போதும், அதனையே அப்புறமாய் விஸ்தீரணம் செய்து, ஒரு முழுநீளக் கதையாக உருமாற்றுகிறார்கள் என்பது புரிந்தது///

    ---வீரிய வித்துக்கள் விஸ்வரூபம் எடுப்பது இயற்கைதானே!!!!(கண் அடிக்கும் படங்கள் பலநூறு... ஹி...ஹி...)

    ReplyDelete
  35. ///And காத்திருக்கும் இந்த TEX அதிரடி கூட இத்தகையதொரு சன்னமான வரலாற்றுப் புள்ளியிலிருந்து புறப்பட்டிருக்குமோ என்னமோ – கதையின் முழுமையிலும் ஒருவித யதார்த்தமும், நம்பகத்தன்மையும் இழையோடுகிறது!///-

    --- விக்கிப்பீடியாவுக்கு வேலையா???
    (வெள்ளைக்கொடிக்கு வேலையா???//--வடிவேலு ஸ்லாங்கில் படிக்கவும்)

    ReplyDelete
  36. ///அந்தக் குறையை நிவர்த்திக்க “ஒ.ரௌ.ரே” காத்துள்ளார் !///

    ///Electrifying TEX folks!! அதிலும் க்ளைமேக்சில் பறக்கும் அனல் + இழையோடும் மனித உணர்வுகள் நெடுநாள் மனதில் நிற்கப் போவது நிச்சயம்!///

    ///115 பக்கங்களைக் கடந்துள்ள நிலையிலேயே சேர் மேலே ஏறி நின்று கொண்டு ‘விஷ்க்... விஷ்க்...‘ என்று விசிலடிக்கத் தோன்றுவதாலாயே இந்த ஒட்டைவாய் அவதார்!////

    ---அய்யோ பீரோலு பீரோலு...சிலுவரு பேட்டரி...சிலுவரு பேட்டரி...!!!

    ReplyDelete
  37. ///ஓவியர் Garcia Seijas-ன் கைவண்ணத்தில் உட்பக்கங்களில் அரங்கேறும் சித்திர மேளா அதகளம் செய்கிறது!///


    ///போனெல்லியின் 2 தனித்தனி இதழ்களில் – தொடர்களாய்த் தடதடத்த இந்த சாகஸத்திற்கு அவர்கள் போட்டிருந்த 2 அட்டைப்பட டிசைன்களுமே பட்டையைக் கிளப்ப – எதை முன்னட்டைக்கு ? எதைப் பின்னட்டைக்கு ? என்று நிர்ணயிக்க மட்டுமே ஒரு கணம் திணறினேன்!////--

    தலைப்பின் ரெளத்திரம்;

    அட்டைகளின் அதகளம்;

    சித்திரங்களின் சிருங்காரம்;

    டெக்ஸின் கம்பீரம்;

    கார்சனின் வசீகரம்;

    எதிராளியின் வீரியம்...

    இத்தனை அம்சங்களையும் பார்த்தவுடன்
    குபீரெடுக்கும் எங்களின்,.

    கடைவாயோர குற்றாலம்!

    ReplyDelete
  38. “பிஸ்டலுக்கு ப்ரியா விடை” கதைக்கு வருவோம்.

    1. கதை எந்த ஊரில் ஆரம்பித்து, எந்த ஊரில் முடிகிறது?

    2. பெயர் சொல்லப்படும் கதை மாந்தர்கள் எத்தனை நபர்கள்? அவர்களின் பெயர் யாவை?


    3. கதைமாந்தர்களின் ஊர்கள் எந்த நாடுகளை சார்ந்தவை?


    4. ஆணுக்கு பெண் இளைத்தவள் இல்லை என்று ஒவ்வொரு முறையும் மார்கோ நிரூபிப்பது எங்கனம்?

    5. நாம் எதை அடைய ஆசை படுகிறமோ அது நமக்கு கிடைத்தே தீரும் என்று இக்கதையில் எங்கனம் நிரூபிக்க படுகிறது ?

    6. காதலுக்கு கண் இல்லை என்று யார்யாரெல்லாம் இந்த கதையில் நிரூபிக்கிறார்கள்?

    7. அப்பாவி காதலன் கடைசியில் என்ன ஆகிறான் ?


    8. அலெக்சாண்டாரின் மரணத்திற்கும் பைரனுக்கும் என்ன சம்மந்தம் ? யார் இந்த அலெக்சாண்டார் ?

    9. ஒவ்வொருவரும் தங்கள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள என்னென்ன சதிகளையும் சூழ்ச்சி திறன்களையும் கைக்கொள்கிறார்கள் ?

    10. எத்தனை முறை பட்டாலும் பார்த்தாலும் பலரும் ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் எத்தனை நபர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்?

    11. கதையின் மைய இழையான பொருள் ஈட்டல் (பணம் சம்பாரித்தல்) குறித்து ஒவ்வொருவரின் நிலை என்ன?

    12. இந்த கதைக்கும் டைகரின் கதையான “என் பெயர் டைகர்”- க்கும் உள்ள ஒற்றுமை என்ன ?

    13. இந்த கதையில் உங்களின் மனம் கவர்ந்த இடம் எது ?

    14. இறுதியாக பிஸ்டலுக்கு பிரியா விடை கொடுக்கப் பட்டதா?


    இவற்றின் விடைகளை அறிய "பிஸ்டலுக்கு பிரியா விடை" படிக்கவும்.


    இருளின் சாம்ராஜ்யம் குறித்து,

    கதையின் ‌‌‌ஹீரோ யார்? கதையில் வில்லன் யார்?

    எந்த கணத்தில் வில்லன் ஹீரோ ஆகிறார்?

    எப்போது ஹீரோ வில்லன் ஆகிறார்?

    ஹீரோயின் ரோஸ் ஏன் க்ரோவை பிரிகிறார்?

    ஒவ்வொரு தருணத்தையும் டாக்டர் க்விண்ட் எவ்விதம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்?

    கேப்டன் டைகர் கதைகளில் வருவது போல் இதிலும்
    வில்லனும் ஹீரோவும் எதிரெதிர் உத்திகளை எங்கனம்
    கையாளுகிறார்கள்?

    கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன?

    ReplyDelete
  39. என்னாது

    லக்கிய சுட்டுபுட்டாங்கேளா....


    ஆஆஆஆஆ

    ReplyDelete
  40. அண்டர்டேக்கர் 1ல

    அகினோ சிட்டி தங்கச்சுரங்க முதலாளி கஸ்கோ தன்னோட ஒட்டுமொத்த சம்பாத்தியத்தை தங்கமாக மாற்றி முழுங்கிட்டு டிக்கெட் வாங்கிடறார்.

    கஸ்கோவோட பாடியை அவரோட ஆசைபடி சுரங்கத்தில் அடக்கம் செய்ய வெட்டியான் குரோ ஜோனாஸ், பிரைரி ரோஸ் & லின் கோஷ்டி கிளம்ப, தங்கத்தை ஆட்டைபோட உள்ளூர் ஷெரீப் முதல் தொழிலாளர்கள் வரை அத்தனை பேரும் தொரத்த,
    ராணுவம் தலையிட.....,
    பரபரப்பான துரத்தல்கள்,
    டுவிஸ்ட்கள், என ஒரே ஓட்டம்;

    கிட்டத்தட்ட ஒரு செமி மெக்கானஸ்கோல்டு படம் பார்த்த எபெக்ட்ஸ்! கதை வெளியான ஜூன்2017 தளமே ஒரு மாசம் அல்லோலகல்லோலப்பட்டது!

    கதை1ன் முடிவில் நமக்கு விடை தெரியாத கேள்விகள்:-

    #36 கொலைகளுக்கு தேடப்படும் லான்ஸ் ஸ்ட்ரைக்லேண்ட் (எ) குரோவின் பின்னணி என்ன?

    #நிசமாகவே அத்தனை பேரை போட்டுத் தள்ளினானா??

    #Butcher of skullhill-என அவன் அழைக்கப்பட்டது ஏன்???

    #"Elite Union infantry regiment"-ன் ஷார்ப் சூட்டர்- நாட்டின் மிகப்பெரிய தேடப்பட்ட கொலைகாரன் ஆன மர்மம் என்ன?

    #ரோஸ்ம் குரோவும் காதலிப்பார்களா??

    ---இவைகளுக்கு விடை கிடைக்கும் என அண்டர்டேக்கர் 2வை படித்தால் அது நமக்கு பெப்பே காட்டுகிறது!

    பார்ட்1 மலையில் இருந்து குதித்து ஓடும் காட்டாறு என்றால், பார்ட்2 சமவெளியில் நிதானமான வேகத்தில் சலசலக்கும் சிற்றாறு!
    பார்ட்3 கடலில் கலக்கும் முன் கிளை கிளையாக ஓடும் சிறு சிறு கால்வாய் பின்னல்கள் போல கி.நா. வடிவம் எடுக்குமோ...!!!!

    ஒரு சீமாட்டி உடலை அடக்கம் பண்ண குரோ கோஷ்டி போக, அங்கே எதிர்பாரா டுவிஸ்ட் நடக்க, மறுபடியும் குரோ அணி ஓட,
    இம்முறை டார்கெட் ஒரு பித்துக்குளி சைக்கோ டாக்டர்!

    தன்னையும் தன் மேலதிகாரியான கர்னல் சார்லியையும் "சிகிச்சை" செய்த பரிசோதனை டாக்டர் கசாப்பை இவுங்க வேட்டையாட, மிலிட்டரி பின்னாடியே பாய்ந்துவர, இவுங்க இரு கோஷ்டிக்கும் தன் கசாப்பு மருத்தும் மூலம் தடையேற்படுத்திக் கொண்டே டாக்டர் டயாய்க்க பார்க்க,
    ஓவர் கானஃபிடன்ட் ரோஸ் தான்தோன்றித் தனமாக நடக்க
    கதை பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது.

    க்ளைமாக்ஸ்ல கூட சின்ன டுவிஸ்ட்! டாக்டரின் சிகிச்சைகள் நமக்கு வழிநெடுக நடுக்கத்தை தருகறது! கர்னல் தன் மகனையே பணயம் வைத்தது பரிதாபமான பின்னணி! லின்னும் சைடு கேப்பில் தன் முகத்தை காட்டுறாள்!

    கடைசியில் காதலுக்கு டாட்டா காட்டிபுட்டு ரோஸ் நடையைக் கட்டுகிறது. 2ம் பாகத்தின் முடிவில் தெரியும்னு நினைச்ச குரோ மர்மம் அப்படியே தொடருது!

    பிரிந்த ரோஸ் பிரைரியும் குரோவும் இணைவார்களா?, குரோ மர்மம் தெரியப்போவது எப்போ?---- கதாசிரியர் சேவியர் டோரிசனுக்கு மட்டும் தான் தெரியும்! வெயிட்டிங் தொடருது....!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமா நீங்க சொன்ன மாறி இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் எதுவும் இதில் இல்லை

      Delete
    2. கதையை நிதானமாக கொண்டு போவதை பார்த்தா இரத்தபடலம் ஸ்டைல்ல ஒரு 10பாகம் கொண்டு போவாங்க போல...!!!
      தோர்கல் சீரியஸ்லயும் ஒரு கதை எழுதுகிறார் இந்த கதாசிரியர்!

      Delete
  41. இந்த "பதிவை " திரு ரம்மி அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..:-)

    ReplyDelete
    Replies
    1. தலைவரே சூப்பர் சூப்பர் நீங்களும் அந்த timing try பண்ணுறீங்க. Good good

      Delete
    2. தாரை பரணி, ரம்மி வந்து உங்களை கும்மி அடிக்கப் போகிறார் :-)

      Delete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. லக்கி என்ற காமெடி கார்ட்டூன் நாயகனை வைத்து ஒரு சிரீயஸ் கதை? கதையின் தலைப்பு
    லக்கி லூக்கைச் சுட்டது யார்?! ஆர்வத்தை கிளப்புகிறது. என்ன மாதிரி கதை அதுவும் நாயகனை சுட்டதாக தலைப்பு செய்தி. எப்போது சார் கைகளில் தவழும்?

    ReplyDelete
  44. Enter your comment...சார் நானும்

    ReplyDelete
    Replies
    1. சரி! ஆனா, நீங்க முதல்ல! :)

      Delete
  45. நண்பர் ஜேடர்பாளையத்தார் விரைவில் குணம் பெற திருச்செந்தூர் முருகனை வேண்டுகிறேன்....சார் அருமையான அட்டைப்படம்.....எழுத்துரு அதகளம்...விசிலடிக்க வைத்த கதை என சொல்லும் போது பட்டய கிளப்பும் கார்சனின் கடந்த காலம் போல...பேசு பாக்கலாம்னு மொகரய பேப்பாரோ...லக்கி எதிர்பார்ப்ப எகிறச் செய்யுது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நான் முதலில் படிக்க போவது லக்கி லூக் தான். I'm waiting

      Delete
  46. மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். டெக்ஸ் வில்லரைப் பற்றி வாசகர்களாகிய நாங்கள் கூற விழைந்த அனைத்தையும் நீங்களே கூறிவிட்டதால் நாங்கள் மறுபதிவின்றி உற்சாகமாய் படித்தோம்.இவ்வருடம் வெளிவந்த சாத்தானின் சீடர்கள், வைகிங்தீவு மர்மம்,பாலைவனத்தில் ஒரு கப்பல்,தகிக்கும் மெக்ஸிகோ,நட்புக்கு நாட்களேது,சிங்கத்தின் சிறுவயதில்,பச்சோந்தி பகைவன்,பழிவாங்கும் பாவை போன்றவற்றில் ஆக்சன் குறைவு.தலயின் முழுநீள ஆக்சன் கதையைப் படித்து வருடமாகிவிட்டதே என்றே கூறலாம்...

    ReplyDelete
  47. சகோதரர் சரவணன் அவர்கள் உடல் நலம் குணமாக எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்

    ReplyDelete
  48. மருத்துவகாப்பீடு அவசியம் அதற்கு முன் தற்போது நடைமுறையில் இருக்கும் முதலமைச்சரின் விரிவானகாப்பீடுஅட்டை ஒரு குடும்பத்திற்க்கு ஆண்டுக்கு 5 லட்சம்
    மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் தங்களது ESI .மற்றும் பிரதம மந்திரி ஜன யோஜனா திட்டம் வங்கிகளில் வழங்கப்படும் குறைந்த பிரீமிய திட்ங்களை கேட்டு அப்டேட் செய்துகொள்ளுங்கள் நண்பர்களே....

    ReplyDelete
  49. ESI மிகுந்த உதவிகரமாக இருந்தது இருந்துவருகிறது எனக்கு....ஸ்டீலுக்கு தெரியும்....

    ReplyDelete
  50. சிறு நெருடல்

    ஒரு வேளை மேடிசனின் கடிதங்கள் பைரனின் கையில் கிடைத்திருப்பின்
    என்னவாயிருக்கும் ?

    ஜேம்ஸ் மேடிசன் சுமார் 19 அரசியல் சட்ட திருத்த வரைவுகளை முன் வைத்தார் .
    இவை அமெரிக்க காங்கிரசால் –செனட்டால் – 12 என சுருக்கப்பட்டன .

    பின் இவை மாகாணங்களின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன .

    குறைந்தபட்சம் 10 மாகாணங்கள் ஒப்புகொண்டால்தான் ( அப்போது ? 13 மாகாணங்கள் இருந்தன) இந்த வரைவுகள் அங்கீகாரம் பெறும்
    .. ஜேம்ஸ் மேடிசனின் 12 வரைவுகளில் இரண்டு அப்போதே ஏற்கப்படவில்லை ...

    ஒன்று
    – எளிமையாக சொல்லப்போனால் – தொகுதியில் உள்ள மக்கள்தொகை வருங்காலத்தில் அதிகரிக்குமேயானாலும் பிரதிநிதித்துவ விகித்தாச்சாரம் மாற்றப்படாது.....
    இரண்டு
    செனட் –அல்லது காங்கிரஸ் தனது உறுப்பினர்களின் சம்பளத்தை தானே அதிகரிக்க முடியாது ...

    இவை இரண்டையும் மாகாணங்கள் பெரும்பாலானவை ஒப்பு கொள்ளவில்லை
    அதாவது
    ஜேம்ஸ் மேடிசன் குடிமையியல் உரிமைகளுக்கான அரசியல் சட்ட திருத்த முன்வரைவுகளின் தந்தை என போற்றப்பட்டாலும் அவரது வரைவுகளை சுருக்க ,நீக்க ஒதுக்க செனட் மற்றும் மாகாணங்களுக்கு போதுமான அதிகாரம் இருந்து இருக்கிறது .
    இந்தநிலையில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு பின் ஜேம்ஸ் மேடிசனின் இந்த தனிப்பட்ட இரண்டாம் சட்ட திருத்தம் பற்றிய எண்ணங்கள் உள்ள கடிதம் ஏற்படுத்த கூடிய சட்ட ரீதியான சமூகரீதியான தாக்கங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாக கதையின் காலகட்டத்தில் இருந்து இருக்க கூடும் ?

    ReplyDelete
    Replies
    1. ஒரு ரவுண்டு படிச்சுட்டு அப்பாலிக்கா வாரேன்!

      Delete
    2. Nothing could had happened,that was also what I presumed, but for a story imagination it could be...

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. பொருளர் ஜி@ அமெரிக்கா சுதந்திரம் பெற்றது 1776.

      அமெரிக்க முதல் அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் பதவி ஏற்றது 1789!

      அமெரிக்கா விடுதலைக்காக இங்கிலாந்திடம் போர் செய்தது 1775டூ1783! இங்கே தான் நமக்கு உணர்ச்சி கிளம்பும் பாஸ்டன் தேநீர் விருந்து சம்பவங்கள் எல்லாம் வருது!

      1776முதல் யார் அமெரக்காவை ஆண்டது? அரசியலமைப்பு எப்போது இருந்து செயல்பட்டது!

      1783ல் சுதந்திரம் வாங்கியபின்பும் 6ஆண்டுகாலம் அதிபர் யார்? ஆட்சி செய்தது யார்?

      வாஷிங்டன், மேடிசன் போன்ற பெருந்தலைகள் அப்போது என்ன செய்தன?

      தங்களது கேள்விக்கான விடை அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒளிந்து கொண்டு இருக்கிறது என நினைக்கிறேன்!

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. பைரன் கடிதங்களை எடுத்துக் கொண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுப்பதாக சொல்வதை கவனிக்கவும். அமெரிக்க உச்ச நீதி மன்றத்தின் முக்கியப் பணியே அரசியல் சாஸனத்தை புரிந்துரைப்பது

      அமெரிக்க நீதிமன்றம் கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டாம் சட்டத் திருத்தம் தனிமனித உரிமை அல்ல என்று ஒரு தீர்ப்பு வழங்கி விட்டால முடிந்தது ஜோலி. எந்த ஒரு மாகாணமும் அதற்கு மீறி சட்டம் இயற்ற முடியாது.

      உதாரணம்: ஓரினச் சேர்க்கை திருமணங்களை சட்டப்பூர்வமாக அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அறிவித்து.

      Delete
    7. கதைப்படி அரசியல் சாசனத்தில் திருத்தம் ஏற்படுத்தப்படும்.




      ஆனால் சில அரசியல் விவகாரங்களும்,சட்ட சிக்கல்களுமே
      கணவன் ,மனைவிக்குள் பிரச்சனையாக உருவெடுத்து கதைக்கான தொடக்கமாக அமைகிறது.

      Delete
    8. ஷெரீஃப் குடுத்த விளக்கம் எனக்கு ஓகே

      Delete
    9. 92 ம் பக்கம் 5 வது ஓவியத்தில் பைரன் சொல்வது சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி இரண்டாம் சட்டத்திருத்தத்தைக் கிழித்து போடுவேன் என்று.

      அரசியல் சாஸன திருத்தம் என்பது அமெரிக்காவில் அவ்வளவு எளிதல்ல. 2/3 ஆதரவு காங்கிரசில் இருக்க வேண்டும். செனட்டில் நிறைவேற வாய்ப்பே கிடையாது. கீழ் சபையில் நிறைவேறினாலும் மேல்சபையில் (செனட்நி)ராகரிக்கப்படும். ஆனால் சுப்ரீம் கோர்ட் இந்த சட்டத்திற்கு இதுதான் விளக்கம் (கூட்டுரிமை; தனிமனித உரிமை அல்ல) என்று சொல்லிவிட்டால் அந்த சுப்ரீம் கோர்ட்டின் காம்போசிசன் மாறும் வரை ஒன்றும் செய்ய இயலாது. வேண்டுமானால் மறுபடி அரசியல் சாஸனத்தைத் திருத்தலாம்.

      Delete
    10. //கோர்ட்டில் வாதாடி இரண்டாம் சட்டத்திருத்தத்தைக் கிழித்து போடுவேன் என்று.//

      வழக்கு தாக்கல் செய்த பின் அரசியல் அமர்வுக்கு மாற்றப்பட்டு ;குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அரசு தரப்பை விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிடும்.
      ஆய்த நிறுவனங்களுக்கும்,ஆளும் அரசுக்கும் உள்ள மோதல் போக்கு (கதைப்படி) அரசாங்கம் வாக்கெடுப்பு நடத்தி திருத்தத்தை செயல்படுத்தும்.அரசாங்கத்தின் குரலாக மட்டுமே அரசு அங்கங்கள் செயல்படும்.


      ஆனால் ஆயுத நிறுவனங்கள் ஹேஸ்கர்ட்டை தங்கள் தரப்பில்(பண ஆசை காட்டி)வளைக்க முயற்சிக்கும்.
      தன்னுடைய ஆவணங்களை பைரன் பெக் தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்படும்.மன நலம் பாதிக்கப்பட்டிருந்த பையனின் கடந்த காலம் வழக்கில் கவனத்துக்குரியதாக இருக்கும்.நாடு முழுதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தும் வழக்கில் பைரன் பெக் பின்னடைவை சந்திப்பார்.
      ஹேஸ்கர்ட்டை தன் பக்கத்தில் தக்கவைக்க மார்கோவை நேக்கு போக்காக பழக சொன்னதன் உள்ளர்த்தம் இதுதான்.
      இந்த செய்கை மார்கோவுக்கும் பைரனுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறது.
      பைரன் விரும்பியது போலவே ஹேஸ்கர்டுடனே மருத்துவமனையில் இணைந்திருப்பதாக காட்சிகளை நிறைவு செய்து படைப்பாளிகள் பிரமிப்பை ஏற்படுத்துவர்.

      Delete
    11. செரீப் கதையை சரியா படிக்கலை போல..

      Delete
    12. //அமெரிக்க நீதிமன்றம் கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டாம் சட்டத் திருத்தம் தனிமனித உரிமை அல்ல என்று ஒரு தீர்ப்பு வழங்கி விட்டால முடிந்தது ஜோலி.//

      ஷெரிப்!!! ஜேம்ஸ் மேடிசன் வரைவை எழுதியபோது வர்ஜினியா செனட்டர் ..அதை தாண்டி அவரது தனிப்பட்ட எண்ணங்கள் எதுவாயினும் அது அரசியல் சாசன சட்ட திருத்தம் பற்றிய அடிப்படை கொள்கையை மாற்றியமைக்கும் வண்ணம் சுப்ரீம் கோர்ட்டை எப்படி தூண்டமுடியும் என்பதே என் சந்தேகம் ..

      அப்படி ஒரு எண்ணம் அவருக்கு இருந்து இருப்பினும் கூட

      குடிமையியல் உரிமை சட்டங்களை அமல்படுத்தியபின் ஜார்ஜ் வாஷிங்டனின் மிக நெருங்கிய அரசியல் ஆலோசகராக பணியாற்றினார்

      ஜெபர்சன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றபோது மிக வலிமை மிக்க செகரட்டரி ஆப் ஸ்டேட் ஆக 1801 முதல் 1809 வரை பணியாற்றினார் ..
      ( லூசியானா பகுதியை விலைக்கு வாங்கி அமெரிக்காவின் நிலப்பரப்பை இருமடங்காக்கியது இப்போதுதான் ..இவர்தான் )
      1809 முதல் 1817 வரை அமெரிக்காவின் நான்காவது ஜனாதிபதி ஆக பதவி வகித்தார் ...1812 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிட்டன் உடனான போரில் –போர் முடிவுகள் குழப்பமாக இருப்பினும் பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்து அமெரிக்கா முற்றிலும் விடுபட்டது உண்மையாயிற்று ..இவர் புகழும் அதிகரித்தது ..

      1836 –ல் இறந்துவிட்டார். மிகப் பெரிய பதவிகள் வகித்தபோது தன்னுடைய இரண்டாம் சட்ட திருத்தம் பற்றிய அதிருப்தியை அவர் வெளிக்காட்டவில்லை \ அதை மாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்னும்போது அக்கடிதங்கள் ஏற்படுத்தும் தாக்கம்தான் என்ன ?

      Delete
    13. தவிர அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன சட்டத்தை பாதுகாக்க முயலும் .
      மக்கள் நலன் என்று அது இரண்டாம் சட்ட திருத்தத்தை மறுக்கமுயலலாமே அன்றி மேடிசனின் தனிப்பட்ட கருத்துகளை முன்னிருத்தி அதை செய்ய விரும்பாது என்பது என் எண்ணம் ..
      சுப்ரீம் கோர்ட்டின் முடிவு இறுதியானது என சொல்லிவிடமுடியாது ..
      காங்கிரஸ் இம்முடிவை எதிர்த்து வேறு வடிவங்களில் சுப்ரீம் கோர்ட் கருத்தினை மறுத்து அரசியல் சட்ட வரைவை நிறைவேற்றமுடியும் ..

      constitutional issue, that judgment is virtually final; its decisions can be altered only by the rarely used procedure of constitutional amendment or by a new ruling of the Court. However, when the Court interprets a statute, new legislative action can be taken.
      Chief Justice Marshall expressed the challenge which the Supreme Court faces in maintaining free government by noting: "We must never forget that it is a constitution we are expounding . . . intended to endure for ages to come, and consequently, to be adapted to the various crises of human affairs."

      மேடிசனின் இரண்டாம் சட்ட திருத்தம் பிரிட்டிஷ் அரசின் ப்ளாக்ஸ்டோனின் குடிமையியல் உரிமை சட்ட திருத்தங்களை தழுவியது என்பதில் ரகசியம் ஏதுமில்லை ..
      பிரிட்டிஷ் அரச வம்சத்துக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் நிர்வாக ரீதியான அதிகாரம் யாருக்கு அதிகம் என்பதை மறைமுகமாக உணர்த்த அந்த சட்ட திருத்தம் எழுதப்பட்டது ( பிரிட்டிஷ் ராஜவம்சம் ப்ராட்டஸ்டன்ட் கிறிஸ்துவர்களின் ஆயுதங்களை களைய உத்தரவிட்டது )

      இங்கு பெடரல் அரசு மற்றும் மாகாணங்கள் இடையே அதிகாரம் பற்றிய பெடரல் எதிர்ப்பாளர்களை சமாளிக்க வேண்டி இரண்டாம் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது ...அடிமைகள் மற்றும் வரி வசூலின் போது ஏற்படும் நிலைமைகளை சமாளிக்க மாகாணங்கள் தனிப்படைகளை விரும்பின ....இரண்டாம் சட்ட திருத்தத்தின் வரிகள் சற்று குழப்பமானவைதான் ..

      The amendment reads: “A well regulated militia, being necessary to the security of a free state, the right of the people to keep and bear arms, shall not be infringed.”

      Delete
    14. தனி மனித உரிமை ,கூட்டுரிமை என்பது பற்றிய விவாதங்கள் இன்னமும் தொடரத்தான் செய்கின்றன ...

      ஆனால் மேடிசன் கடிதங்கள் தனி மனித உரிமை அல்ல கூட்டுரிமைதான் என அமெரிக்க சுப்ரீம் கோர்ட் போன்ற உயர் நீதி அமைப்புகள் முடிவெடுக்க முக்கிய காரணியாக இருக்க முடியாது என தோன்றுகிறது
      என் எண்ணம் தவறாக கூட இருக்கலாம் ...ஆயினும் அப்படி தோன்ற 2010 –ல் மச்டோனால்ட் வெர்சஸ் சிகாகோ சம்பவத்தில் ஆயுதம் ஏந்துவது தனி மனித உரிமை என தெளிவாக சுப்ரீம் கோர்ட் சொன்னது மட்டுமல்ல அதற்கான விளக்கங்களும் ஏற்புடையவே ..
      1939 –ல் நடைபெற்ற யு எஸ் வெர்சஸ் மில்லர் வழக்கில் தனி மனித உரிமை பக்கம் தீர்ப்பு வழங்கப்பட்டது ..
      2008 –ல் நடைபெற்ற கொலம்பியா வெர்சஸ் ஹெல்லர் வழக்கில் கூட்டுரிமை பக்கம் தீர்ப்பு வழங்கப்பட்டது
      கதையில் மூன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் பற்றி பேசப்படுகிறது ..கதையின் காலகட்டம் பற்றி யோசித்தால் 1939 வழக்கு தவிர ஏனைய வழக்குகள் பற்றி அறிய முடியவில்லை ..
      எது எப்படியோ இரண்டாம் சட்ட திருத்தத்தின் வரலாற்று பின்னணிகள் படிக்க சுவாரஸ்யமானவையே ......
      ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
      பூரிக்கட்டையை தடை செய்வது பற்றி அரசியல் சட்ட திருத்தம் செய்ய முடியுமா என கபில் சிபலை கேட்க வேண்டும் .;-)

      Delete
    15. சட்ட வரைவு களை உருவாக்கி அதை விவாதித்து மசோதாவாக மாற்றிய பின்பு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தால் மட்டுமே சட்டமாக மாறும்.
      சட்டம் இயற்றும் துறைக்கு தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்கள் அளிக்கும் அதிகாரம்.
      அதில் உச்ச நீதிமன்றங்கள் தலையீடு செய்யவோ,பரிந்துரைக்கவோ இயலாது.ஆளும் அரசாங்கம் இயற்றும் சட்டங்களை செயல்படுத்துவது தான் நீதி அமைப்பின் பணி.

      மக்களாட்சியில் மக்களின் உரிமைகள் பிரதானமானது.அதை பறிப்பது என்பது முதல் குடிமகனாக ஜனாதிபதியின் இருந்து கடைநிலை குடிமகன் வரை அடங்கிவிடுவர்.

      அதனால் மக்களின் உரிமைகள் ,அரசியல் சாசனத்தின் முகப்புரை இவற்றை மாற்றுவதற்கு அரசியல் சாசனத்தையே மாற்றுவதாகும்.

      சட்ட மசோதாவை மாற்றுவதற்கும்,அரசியல் சாசனத்தை திருத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.

      Delete
    16. Sri ram! அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரங்கள் ஏனைய ஜனநாயக நாடுகளில் இருந்து மாறுபட்டவை...

      Delete
    17. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசை விடவும் கூடுதலான அதிகாரங்கள் பெற்ற அமைப்பு எதுவும் இல்லை(மக்களாட்சி அமலில் உள்ள தேசங்களில்).

      அமெரிக்க உச்ச நீதிமன்றம் பெற்றிருக்கும் கூடுதல் அதிகாரங்களை அவை ஒருபோதும் பயன்படுத்தாது.ஜனாதிபதி இந்தியாவில் தங்களுடைய அதிகார வரைவு களை பயன்படுத்துவது போன்றதுதான்.
      அதுதான் மக்களாட்சியின் மாண்பு.

      Delete
    18. @செனா இப்படி யோசிச்சுப் பாருங்க.
      1. கதைப்படி 2A வோட சரியான அர்த்தம் யாருக்கும்பு ரியலை. அதனால ஜட்ஜுக ரெண்டு அல்லது மூனு விதமா தீர்ப்பு சொல்லிருக்காங்க.
      2. 2A வை எழுதினவர் மேடிசன்.
      3. அவரே விளக்கமா இது தனிமனித உரிமை அல்லன்னு எங்கியோ எழுதி வைச்சிட்டாரு.
      4. அந்தக் கடிதத்தை கோர்ட்ல குடுத்து ஜட்ஜுகளோட முந்தய புரிதல் தப்புன்னு நிருபிக்கறாங்க. அதை ஜட்ஜுகளும் ஏத்துகிட்டா...முந்தய தீர்ப்புகள் தவறென அறிவிக்கப்படும். இது தான் பைரனோட பாய்ன்ட் ஆப் வ்யூ

      உ-ம். Roe Vs Wade. இந்த தீர்ப்பின் படி பெணகளுக்கு கருக்கலைப்பு உரிமை உண்டு. ஆனால் இந்த தீர்ப்பு தவறென தற்போதய நீதிபதிகள் முடிவு செய்தால் கருக்கலைப்பு உரிமை பறிபோகும்.

      நீண்ட நாட்களா ஓரின திருமணம் பல மாநிலங்களில் சட்டபடி குற்றம். 2010-11 வாக்குல் வந்த தீர்ப்பின் படி சரி என அறிவிகப்பட்டு விட்டது. இவற்றையெல்லாம் சட்டபடி ஓவர்ரைட் செய்ய constitutional conference நடந்த வேண்டாம். அதெல்லாம் பிராக்டிகலா ஒத்து வராது.

      பைரன் டார்கெட் பண்ணுவது interpretation ஐ எப்படி சரி செய்வது. அதற்காக ஒரிஜினல் author இன் கடிதங்களை உபயோகிக்க நினைக்கிறான். ஒன்பது நீதிபதிகளில் 5 பேரை ஒத்துக்கொள்ள செய்வது எளிது என்பதே அவன் எண்ண ஓட்டம்.

      Delete
    19. constitutional conference நடந்த வேண்டாம்./
      வேண்டும் என்பதே சரி.

      Delete
    20. அமெரிக்க உச்ச நீதிமன்றம் பெற்றிருக்கும் கூடுதல் அதிகாரங்களை அவை ஒருபோதும் பயன்படுத்தாது.ஜனாதிபதி இந்தியாவில் தங்களுடைய அதிகார வரைவு களை பயன்படுத்துவது போன்றதுதான்.//

      இவையெல்லாம் மீறப்பட்டதற்கு நிறைய முன்னுதாரணங்கள் அமெரிக்க வரலாற்றில் இருக்கு சார்.

      உ-ம் சிட்டிசன்ஸ் யூனைடெட் வழக்கின் தீர்ப்பு. ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானது. சுப்ரீம் கோர்ட்டின் சாஸன interpretations ஐ எதிர் கொள்ள 66 செனட்டர்களின் ஓட்டு வேண்டும். இதுவே பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது. ஏனெனில் 6 மில்லியன் மக்கள் தொகை இருக்கும் மாநிலத்துக்கும் 600 ஆயிரம் மக்கள் தொகை இருக்கும் மாநிலத்துக்கும் ஒரே எண்ணிக்கையிலான செனட்டர்கள்.

      Delete
    21. நிறைய எழுத மிடில. அதனால சங்கமா சேந்து கடைசில எந்த முடிவுக்கு வருதோ அதுக்கு கட்டுப்படறேன்.

      Delete
    22. The Supreme Court is the final judge in all cases involving laws of Congress, and the highest law of all — the Constitution.//

      DOMA, DADT போன்றவை சாஸனத்திற்கு கதிரானவை என்று 2010-11 ல் சுப்ரீம் கோர்ட்டால் தூக்கி எறியப்பட்டது.

      Delete
    23. புஸ்வாணம்ங்குறாங்க.. சங்கு சக்கரம்ங்குறாங்க.. எல்லாம் சத்தம் மட்டும் தாங்க கேட்குது.பாக்க முடியல. (நானெல்லாம் கவுண்டமணி பாணி. ஒதுங்கி நின்னு நாலு கமெண்ட் போடறதோட சரி.) பெரியவங்க பேசிட்டு இருக்கிற எடத்துல நம்மள மாதிரி சின்ன பசங்களுக்கு என்ன வேல

      Delete
    24. ///@செனா இப்படி யோசிச்சுப் பாருங்க.
      1. கதைப்படி 2A வோட சரியான அர்த்தம் யாருக்கும்பு ரியலை. அதனால ஜட்ஜுக ரெண்டு அல்லது மூனு விதமா தீர்ப்பு சொல்லிருக்காங்க.
      2. 2A வை எழுதினவர் மேடிசன்.
      3. அவரே விளக்கமா இது தனிமனித உரிமை அல்லன்னு எங்கியோ எழுதி வைச்சிட்டாரு.
      4. அந்தக் கடிதத்தை கோர்ட்ல குடுத்து ஜட்ஜுகளோட முந்தய புரிதல் தப்புன்னு நிருபிக்கறாங்க. அதை ஜட்ஜுகளும் ஏத்துகிட்டா...முந்தய தீர்ப்புகள் தவறென அறிவிக்கப்படும். இது தான் பைரனோட பாய்ன்ட் ஆப் வ்யூ///

      பாய்ன்ட்....சரிதான் ...இரண்டாம் சட்ட திருத்த வரிகள் ambiguous இயல்பை கொண்டுள்ளன .. phrasing கொஞ்சம் குழப்புது .. அதனால எழுதுனுவரே இதுதான் அர்த்தம்னு சொல்ராறு...
      நெருடல்னு நெனச்சது இப்ப நெருடல ..

      ///உ-ம். Roe Vs Wade. இந்த தீர்ப்பின் படி பெணகளுக்கு கருக்கலைப்பு உரிமை உண்டு. ஆனால் இந்த தீர்ப்பு தவறென தற்போதய நீதிபதிகள் முடிவு செய்தால் கருக்கலைப்பு உரிமை பறிபோகும்.

      நீண்ட நாட்களா ஓரின திருமணம் பல மாநிலங்களில் சட்டபடி குற்றம். 2010-11 வாக்குல் வந்த தீர்ப்பின் படி சரி என அறிவிகப்பட்டு விட்டது. இவற்றையெல்லாம் சட்டபடி ஓவர்ரைட் செய்ய constitutional conference நடந்த வேண்டாம். அதெல்லாம் பிராக்டிகலா ஒத்து வராது. //
      இதெல்லாம் முதல் சட்ட திருத்தம் கீழ் வருபவை அல்லவா ?
      இதில் வரும் freedom of religion –என்பதே கடவுள் நம்பிக்கை அற்றவரையும் சேர்த்துதான் என கோர்ட் விளக்கம் பின்னாளில் சொன்னது ..எழுதப்பட்டது அபப்டி அல்ல ...
      பிறப்பினால் எல்லாரும் சமம் என எழுதவே மேடிசன் விரும்பினார் ..ஆனால் கறுப்பின மக்களை அடிமைகளாக வைத்து அப்படி எழுத முடியாது என்பதாலாயே freedom of conscience என முதல் அமென்ட்மென்ட்டில் phrasing செய்யப்பட்டது ..
      நீங்கள் உதாரணம் கொடுத்தபின் இவற்றை எடுத்து பார்க்கிறேன் ..
      ஆக சுப்ரீம் கோர்ட் கதைப்படி மேடிசனின் கடிதங்களை வைத்து –அதற்கான விளக்கங்களை அளிக்க -அதன்மூலம் இரண்டாம் சட்ட திருத்தம் சொல்லவரும்- இதுவரை கடைப்பிடித்து வந்த விஷயங்களை நிறுத்த போதுமான முன்னுதாரணங்கள் உள்ளது

      Delete
    25. நம்மூரு கான்ஸ்ட்டிபேசனே நமக்கு தற்குறி.

      இதுல பேரிக்கா கான்ஸ்டிபேசனுக்கு டல்கோலேக்ஸ் குடுக்குறாங்க ....

      Delete
  51. எடிட்டர் சார்..

    ஒரு ரெளத்திர ரேஞ்சரின் முன் பின் அட்டைப் படங்கள் - மிரட்டல்!! அந்த ரெள.ரேஞ்சரைப் பார்த்தாலே திகில் திகிலா வருது!
    பின்னட்டையில், அத்தனை களேபரங்களுக்கு நடுவிலும் தலயின் சலனமில்லாத முகபாவம் அட்டகாசம்!! அந்தக் குதிரைதான் ஏதோ கட்டையில செஞ்ச குதிரை மாதிரி இருக்கு.. ஆனாலும் செம கட்டைதான்!
    'ரேஞ்சர் Vs ரேஞ்சர்' கதையமைப்பு நமக்கு புதுசு! தல'க்கே டஃப் கொடுக்கப்போகும் கதையின் மீது ஏக ஆவல் எகிறுதுகிறது! (மொதல்ல போன மாசம் வந்த புக்கெல்லாம் படிக்கிற வழியப் பாருங்க கோணங்கிப் பூனையாரே'ன்னு நினைக்கிறது காதுல விழுது)

    மருத்துவக் காப்பீடு குறித்த உங்களின் விழிப்புணர்வு பிரச்சாரம் அருமை! ஆபத்துக் காலங்களில் அருமையாகப் பலன் கொடுக்கும் இதை முன்மொழிந்த செளந்தர், கார்த்திக் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. // மருத்துவக் காப்பீடு குறித்த உங்களின் விழிப்புணர்வு பிரச்சாரம் அருமை! ஆபத்துக் காலங்களில் அருமையாகப் பலன் கொடுக்கும் இதை முன்மொழிந்த செளந்தர், கார்த்திக் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! // நன்றி நண்பர்களே

      Delete
    2. கண்மணி.. அன்போட காதலன்.. நடுநடுவுல புக் பேரு போட்டுக்க.. மத்தபடி அதே கடிதாசி தானே..

      Delete
    3. இதுக்கு முன்னாடி நில் கவனி சுடு வோ எதுவோ .....ஷெரீப் தான் வில்லன்னு நெனைக்கிறேன்.

      அதுலயும் நம்ப வில்லரு கன் மட்டும் சரியாப் சுடும்.மேலயும் படும்.
      எதுக்க நின்னு நாலு பேரு சுட்டாங்கேன்னு நெனைக்கிறேன்.

      ஆப்பமாயிருச்சு...

      Delete
    4. கீழ ஒருத்தரு குளோரபார்ம் குடுத்திட்ருக்காரு.

      வாங்கி ரோஸ் குடிப்பாள்ல... அது மாதிரி ரோஸ்மில்க்மாதிரி குடிச்சிட்டு
      படுப்போம்....
      டெக்ஸ் பக்தாள்ஸ்

      Delete
  52. குளோரோபார்ம்
    சிறு நெருடல் 2

    குளோரோபார்ம் அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்தென 1850 –களில் அமெரிக்காவில் நுழைந்து அதற்கு முன் இருந்த ஈதரை புறம் தள்ளியது உண்மை ...
    இருபதாம் நூற்றாண்டின் முன் பகுதி வரை கோலோச்சியதும் உண்மை .

    இங்கிலாந்து ராணி விக்டோரியாவுக்கு இரு பிரசவங்களுக்கு குளோரோபார்ம் பயன்படுத்தப்பட்டதும் உண்மை ..
    கதையின் துவக்க பக்கத்தில் ஜெரோனிமஸ் நீண்ட நேரம் குளோரோபார்ம் உபயோகித்தால் இருதய பாதிப்பு வரும் என சொல்வதாக வருகிறது .
    அன்டர்டேக்கர் கதை இரண்டு நிகழும் காலம் 1868 – க்கு பிறகு 1870 என இருக்கலாம் ...
    குளோரோபார்ம் இருதய பாதிப்பு ஏற்படுத்துவதை லெவி 1911 –ல்தான் மிருக மாதிரிகளை கொண்டு நிரூபித்தார் ..( CARDIAC FIBRILLATATION)
    அதற்கு முன் சுவாச மண்டல பாதிப்பு காரணமாகவே குளோரோபார்ம் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவ உலகினர் எண்ணி வந்தனர்
    1870 களில் ஜெரோனிமஸ் இவ்வாறு சொல்ல முகாந்திரம் இல்லை

    ReplyDelete
    Replies
    1. ஓ.... அண்டர்டேக்கரின் காலத்தை துப்பறிந்தது இதுக்குத்தானா?

      அருமையான விளக்கம் மற்றும் திருத்தம்.

      Delete
    2. நல்ல விளக்கம். உங்கள் போஸ்ட் அனைத்தையும் நான் தவறாமல் படிப்பது இதற்கு தான்.

      Delete
    3. ஜெரோனிமஸ் ஒரு சுயநல மருத்துவ ஆரய்ச்சியாளர், 1911ல் மிருகங்களை சோதனை செய்து சொல்லபட்ட விசயம், அவர் 1850லெயெ கண்டுபிடித்திருக்கலாம்.

      Delete
    4. @கிரிதரசுதர்ஸன்..அட! ஆமாம்ல! அவுட் ஆப் தி பாக்ஸ் திங்கிங் ..

      நெருடல் இப்போது நெருடல!!!


      Delete
  53. பி.பி.வி யை படித்த பிறகு , எப்பேர்ப்பட்ட கி.நா வையும் கரைத்துக் குடிக்கும் ஆற்றல் கைவரப் பெற்றதாக ஒரு உணர்வு.அதே வேகத்தில் அண்டர்டேக்கரையும் 'ஒருகை 'பார்த்திடலாம் என்று சபதம் செய்து புத்தகத்தைப் பிரித்தால் முதல்பக்கத்திலேயே டாக்டர் க்விண்ட் மாறுகை மாறுகால் வாங்கும் நேர்த்தியை பார்த்து, 'ஒருகை பார்க்கலாம் 'என்ற பதத்தை அவசரஅவசரமாக அழித்துவிட்டேன்.எங்கே பாதியிலே மூடிவைத்தால் டாக்டர் கனவில் வந்து எனக்கு ஆபரேசன் ஏதும் பண்ணிடுவாரொங்கிற பயம்.ஒருவழியாக படித்து முடித்தபோது முத்து முத்தான வியர்வையில் குளித்தேவிட்டேன்.

    அந்த டாக்டரைப் பற்றி ஒரே வார்த்தை.

    'ஷெர்லக் ஹோம்ஸும், டாக்டர் வாட்சனும் சேர்ந்த கலவை.'

    ReplyDelete
    Replies
    1. // எங்கே பாதியிலே மூடிவைத்தால் டாக்டர் கனவில் வந்து எனக்கு ஆபரேசன் ஏதும் பண்ணிடுவாரொங்கிற பயம். // ஹிஹிஹி செம்ம ஜிபி

      Delete
    2. அடுத்த மாசம் கார்சனின் நண்பரின் கதையை படித்த உடன் நீங்கள் மீண்டும் பூமிக்கே திரும்பிட வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது..

      Delete
    3. //ஷெர்லக் ஹோம்ஸும், டாக்டர் வாட்சனும் சேர்ந்த கலவை//

      Sherlock Holmes and Dr Watson were wonderful humanbeiings..

      Dr Geronimus quint was a pure evil..

      Gp !your notion is an erratic one..sorry to say this..pardon me ..

      Delete
    4. டாக்டர் க்விண்டின் நுணுக்கமான, கூர்மையான பார்வையால் எடைபோடும் திறனை வைத்து ஒரு ஒப்பீடுக்காகச் சொன்னது.மத்தபடி ஹி...ஹி...

      Delete
    5. GP ஷெர்லாக் மற்றும் வாட்சன் அழியாப் பாத்திரப் படைப்புகள்.

      ஆர்தர் கானன்டாயல்ஸ்.

      சுஜாதாவின் கணேஷ் வசந்த் அதன் பிரதிபலிப்புகளே.

      உங்களை வன்மையாக கண்டுக்கிறேன்.

      கூடுதலாக ரெண்டு ஊத்தாப்பம் உங்களுக்கு வாங்கி தரப்படும்...


      ஹிஹ்ஹி

      Delete
    6. // அடுத்த மாசம் கார்சனின் நண்பரின் கதையை படித்த உடன் நீங்கள் மீண்டும் பூமிக்கே திரும்பிட வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.. //

      HA HA LOL! :-)

      Delete
  54. விதி படத்துல வர்ற கோர்ட் சீன் மாதிரியே வாதங்கள் பரபரப்பாக போகிறது.

    நீதிபதி ( ஆசிரியர் ) விரைந்து தீர்ப்பு எழுத வந்தால் சிறப்பு..

    ( நான் மோகன் அல்ல என்பது பின்குறிப்பு )

    ReplyDelete
  55. யாரோ ஜாமீன் கேட்டு மனு போட்டிருக்காகளாம். ஆசிரியர் தீர்ப்பு சொல்ல போயிருக்காக.வந்திடுவாக .

    ReplyDelete
  56. நண்பர்களே நம்ம நண்பர் குணாவின் மெசேஜ்!.......,


    """நல்லிதயம் கொண்ட அன்பு காமிக்ஸ் சொந்தங்களுக்கு வணக்கம்..என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் என தெரியவில்லை..கடந்த நான்கு நாட்களாக நண்பர்களின் நம்பிக்கையூட்டும் அலைபேசி அழைப்புகளும்,இதமான வார்த்தைகளும் எங்களை புத்துயிர் பெற வைத்திருக்கிறது..! உள்ளூர்,வெளியூர்,வெளிநாடு என நண்பர்களின் இடை விடாத பங்களிப்பினால் அறுவை சிகிச்சைக்கு தேவையான மட்டிலும் உதவி வந்தடைந்து விட்டது நண்பர்களே..!இனி நண்பர்கள் யாரும் பொருளதவியைத் தொடர வேண்டாம் என தயை கூர்ந்து அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.! இந்த காமிக்ஸ் குடும்பத்தில் நானும் ஒரு அங்கத்தினன் என்பதில் மமதை கொள்கிறேன்!
    நாளை ஈரோடு ட்ரஸ்ட் மருத்துவமனையில் அண்ணனை அனுமதிக்க உள்ளோம்..மருத்துவமனையின் வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் என்று அறுவை சிகிச்சை என்று சொல்வார்களாம்..அநேகமாக வெள்ளியன்று இருக்கலாம் என நினைக்கிறேன்..!
    தொடர்ந்து உங்கள் பிரார்த்தனைகளை வேண்டுகிறேன் நண்பர்களே.!
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼என்றும் அன்புடன் குணா""""



    ReplyDelete
  57. திரு.சரவணகுமார் அவர்கள் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வணங்கிே வேண்டுகிறோம்.

    ReplyDelete
  58. நவஹோ ரிசர்வேசன் ஏரியா டாவ்ஸ் சட்டத்துக்கு பிறகு இருமடங்காக உயர்ந்தது உண்மை –சுமார் இருபத்து ஏழாயிரம் சதுர மைல்கள்.

    முக்கிய காரணங்கள்

    1. நவஹோ மக்களிடையே இவ்விஷயத்தை மிக நன்றாக பரப்பியது

    2. பியூப்லோ மற்றும் ஸ்பானிஷ் இனத்தவரிடம் கொண்டு இருந்த
    நட்பு காரணமாக நீண்ட வருடங்களாக விவசாய வழிமுறைகள் ,மிருகங்கள் வளர்ப்பில் நவஹோ இனத்தவர் நன்கு அனுபவம் பெற்று இருந்தது .

    3.மிக அதிக அளவினாலான நவஹோ மக்கள்தொகை


    இந்த வரலாற்று உண்மையை தனது கதையின் மூலப்பொருளோடு கதையின் இறுதியில் இணைத்த கதாசிரியரின் கற்பனா திறமையை எண்ணி யாரும் வியக்காமல் இருக்க முடியாது



    இருப்பினும் இடப்பெயர்வு காரணமாக நவஹோ கலாச்சாரம் அழிந்தது...



    IT’S THE MOTHERS

    NOT THE WARRIORS

    WHO CREATE A PEOPLE

    AND GUIDE THEIR DESTINY

    - STANDING BEAR-

    நவஹோ இனத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகம் .

    பெண்கள் ஆண்களை விவாகரத்து செய்யலாம் .

    தாயின் சொத்து மகளுக்கு

    பெண்ணுக்கு பிரச்சினை என்றால் பெண் வீட்டு ஆண்மக்கள் பறந்தோடி
    வந்து பிரச்சினைக்கு காரணமானவர்களை பந்தாடிவிடுவர் ..


    டாவ்ஸ் சட்டத்துக்கு பின் நிலம் ஆணுக்கு வழங்கப்பட்டதால் பெண்ணின் நிலைமை கீழ் இறங்கிவிட்டது...

    பெண்ணின் தாய் வழி உறவினர்கள் இடப்பெயர்வு காரணமாய் நெடுந்தொலைவு சென்றுவிட்டபடியால் உடனே வந்து உதவ முடியவில்லை

    குடும்ப வன்முறை என்றால் என்னவென்று அறியாத நவஹோ இனப்பெண்கள் அதை எதிர்கொள்ள நேர்ந்தது ..


    கதையில் 211 –ம் பக்கம் சொல்லப்பட்ட டாவ்ஸ் சட்டத்தின் நவஹோ நிலப்பரப்பின் மீதான விளைவுகளை ஆங்கிலத்தில் அருமையான மிக சுருக்கமான ஸ்லைட் ப்ரசண்டேசனை காண பின்வரும் லிங்கை பயன்படுத்தவும்

    https://prezi.com/zclrsmqkwffi/the-impact-of-the-dawes-act-on-the-navajo-nation/


    மொபைல் திரை போதாது ..பிசி/ லேப்டாப் பயன்படுத்தவும்






    ReplyDelete
  59. Replies
    1. உண்மை...நாயகன் அல்லாத சிறந்த 10கதைகள் தேர்ந்தெடுக்கப் படும்போது உறுதியாக இதுவும் இடம்பெறும்.

      கதையின் ஆணிவேரில் இருந்த சொற்ப சந்தேகத்தையும்
      ஷெரீப்பும், பொருளர் ஜியும் தீர்த்து வைத்து விட்டார்கள்.

      அடர் கி.நா. என்ற இது இப்போது நமக்கு இலகுவான கதையாக தெரியவைத்து விட்டார்கள்.

      இனி 2ஆண்டுகள் அல்லது 3ஆண்டுகள் இடைவெளியில் மறுவாசிப்பு செய்யலாம்.

      Delete
  60. Replies
    1. மரணமுள்,
      பாலைவன பரலோகம், கழுகுவேட்டை,
      தலைவாங்கி குரங்கு,
      இருளின் மைந்தர்கள்,
      எல்லையில் ஒரு யுத்தம்,
      சிப்பாய் ஒரு சிலுவை போன்ற கதைகள் இந்த சைசில் வந்தா சொக்கி போயிடுவோம்.

      ப்ளஸ் எல்லா கார்டூன் மறுபதிப்புகளும்....!!!!

      தங்ககல்லரை மீண்டும் பழையநடை+ இந்த பிரமாண்டமான சைசில் ஆசாம் ஆசாம்மாக இருக்கும்...! அந்த பாலைவன தொடர்கள், முகடுகள், சுரங்கபகுதிகள், அடுக்கடுக்கான மணற்பரப்புகள் எல்லாம் வேற லெவல்ல அதகளப்படுத்தும்...!!!!

      அடுத்த ஆண்டு இதையும் சேர்த்து கொள்ளலாம்...!!!

      Delete
  61. Pleas comment friends
    I will give you
    Vaniyambadi briyani
    Hot and testy

    ReplyDelete
  62. //Pleas comment friends
    I will give you
    Vaniyambadi briyani
    Hot and testy //

    Tasty or Testy. எங்களை வைத்து ஏதும் பரிசோதனை முயற்சியா?

    ReplyDelete
    Replies
    1. Well when my mother cooks Briyani it is tasty

      Well when my wife cooks Briyani
      It is testy

      It tests my patience

      Parvez Arshad

      Delete
    2. Parvez Arshad ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்திதான் :-)

      Delete
  63. பி.பி.வி. கனமான கதைக்களத்தை அனைவரும் விரும்பும் வகையில் ஜனரஞ்சகமாக கொடுத்த கதாசிரியருக்கு பாராட்டுக்கள். அதே போல் கார்ட்டூன் சித்திரங்கள் மூலம் கதையின் வீரியத்தை குறைக்காமல் கொடுத்த ஓவியருக்கு ஒரு பூமாலை.

    இந்த கனமான கதை அனைவராலும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இயல்பான நடை மற்றும் பேச்சுத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்த மகேந்திரன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். இந்த கதை எனக்கு எளிதாக படிக்க முடிந்ததற்கு முக்கிய காரணம் உங்கள் மொழிபெயர்ப்பு, அவரின் குடலை சகட்டு மேனிக்கு உருவி மகேந்திரனின் திறமையை வெளிக்கொண்டு வந்த ஆசிரியருக்கு ஒரு பூங்கொத்து,

    கடந்த சில வருடங்களில் வந்த இது போன்ற கனமான கதையை விரைந்து படித்து முடிந்தது இந்த கதை மட்டும் தான். இது போன்ற எளிதான வாசிப்பு கதைகளை தொடர்ந்து வெளியிடுங்கள்.

    ReplyDelete
  64. Priyatels! எடிட்டரின் புதிய பதிவு ரெடி..!!!

    ReplyDelete