Powered By Blogger

Saturday, August 03, 2019

ஈரோடு Ahoy !!!

நண்பர்களே,

வணக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சில பல படைப்பாளிகள் தத்தம் நகங்களைக் கடித்து, விரல் வரையிலும் ரணமாக்கிக் கொள்வதுண்டாம் நமது கோலிவுட்டில் - simply becos  இப்பொதெல்லாமே முக்கால்வாசிப் புதுப் படங்கள் ரிலீஸ் காண்பது வெள்ளியன்றே !! அந்த  முதல் நாள் - முதல் ஷோவின் ரசிக அபிப்பிராயங்களே அந்தப் படத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் எனும் போது, முதல்போட்டவரின் ஆதங்கங்களும் சரி ; படைப்பாளிகளின் நடுக்கங்களும் சரி - totally understandable !! கோலிவுட்டுக்கு வெள்ளிகளெனில், நமக்கோ மாதத்தின் முதல் வாரங்கள் - அந்த 'டிக்.டிக்.டிக்' பொழுதுகளை கொணரும் judgement days !! இந்த ஆகஸ்டிலோ ஒன்றல்ல, இரண்டல்ல - அரை டஜன் இதழ்களெனும் போது,உள்ளுக்குள் கொஞ்சம் கணிசமாகவே  'டர்ர்ர் factor ' உலா வருகிறது !! And இதோ இந்தப் பதிவை நீங்கள் சுடச் சுட வாசித்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் - இதே நொடியில் ஈரோட்டில் ஒவ்வொன்றாய் ஸ்பெஷல் இதழ்கள் நான்கையும் unveil செய்து கொண்டிருப்போம் !! அங்கு கலந்து கொள்ளவியலாது போன நண்பர்களின் பொருட்டு இந்தப் previews !!

'தி ஈரோடு எக்ஸ்பிரஸ்' கோச் 1 & 2 பற்ற நிறையவே விளம்பரங்களைக் கண்ணில் காட்டியிருப்பதால் - அவற்றினில் என்ன எதிர்பார்ப்பதென்று கொஞ்சமேனும் நீங்கள் யூகித்திருக்க முடியும் ! அதே சமயம் - கோச் நம்பர் 3 & 4 - "TEX + கார்ட்டூன்" என்று மொட்டைக் கட்டையாய் மட்டுமே சொல்லி வைத்துவிட்டு, பிடிவாதமாய் வாய் நிறைய பெவிகாலைப் பூசித் திரிந்ததால் - அக்கட curiosity ஒரு மிடறு ஜாஸ்தி என்று சொல்லலாம் ! In fact - கடந்த 15 நாட்களில் நமது அலுவலகப் பணிப்பெண்களின் வாயைக் கிளறி - அந்த 2 "சஸ்பென்ஸ் இதழ்கள்" பற்றிய தகவல்களைக் கிரகிக்க நடந்த டெலிபோன் முயற்சிகள் நிச்சயமாய் 150 க்குக் குறையிராது !! 'அடிச்சும் கேட்பாக....எதையும் சொல்லிப்புடாதீங்க !!' என்று நான் அவர்களுக்குச் சொல்லி வைத்தது பற்றாதென்று மேற்படி 2 புக்குகளையுமே அவர்களின் கண்களிலேயே காட்டவில்லை !! பைண்டிங்கிலிருந்து மொத்தமாய் புக்குகளை ராவோடு ராவாய்த்  தூக்கியாந்து - மொத்தத்தையும் மாடியிலுள்ள குடோனுக்குள் அடுக்கி ஒரு மூடாக்கையும் போட்டு வைக்கச் செய்தேன்! So உள்ளபடிக்கே பணியாட்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை எனும் போது, நிறைய வாசக எரிச்சல்களை அவர்கள் வாங்கிக் கட்டிக் கொண்டதே மிச்சம் !! இந்த 'சஸ்பென்ஸ்' ; சுண்ணாம்பு எல்லாமே - ஈரோட்டிற்குப் பயணிக்க மெனக்கெடும் நண்பர்களின் புருவங்களை ஒற்றை நொடிக்கேனும் 'அட !' என உயரச் செய்யும் ஆர்வத்தின் பொருட்டே எனும் போது - இதர வாசகர்களிடம் ஒரு sorry சொல்லும் கடமை நமக்குண்டு !! ஏதாச்சுமொரு விதத்தில் உங்கள் ஆர்வங்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் அவாவின் விளைவே இந்தக் குரங்குச் சேட்டைகள்  என்று புரிந்து கொண்டால் மகிழ்வேன் !! தவிர, இந்த 2 இதழ்களையுமே under wraps வைத்திருக்க நான் பிரயாசை மேற்கொண்டதற்கு இன்னொரு காரணமும் இல்லாதில்லை - ஆனால் அதைப் பற்றி லொட லொடக்கும் முன்பாய் இதழ்களைக் கண்ணில் காட்டி விடுகிறேனே ?

Without more ado - இதோ "அந்த" TEX இதழின் முதற்பார்வை !!  
ஒரு 360 டிகிரி all round வாசக அபிமானத்தைத் தனதாக்கியிருக்கும் மாஸ் நாயகரைக் கொண்டு "வேணும்னா வாங்கிக்கலாம் ; வெளியான அப்பாலிக்கா பாத்துக்கோங்க !" என்ற ரீதியில் நானொரு இதழைத் திட்டமிடும் நொடியே அதுவொரு மறுபதிப்பாய் மாத்திரமே இருக்க முடியும் என்று உங்களில் நிறையப் பேர் யூகித்திருக்கலாம் ! புது இதழாய் இருக்கும் பட்சத்தில் - TEX போன்ற அசுரர்கள் ரெகுலர் சந்தாவினில் மட்டும் தானே ஜாலியாய் உலா வருவார்கள் ? So இதுவொரு மறுபதிப்பாய்த் தானிருக்குமென்று நீங்கள் யூகித்திருப்பின், உங்களையே முதுகில் ஒருவாட்டி  தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்களேன் ?! 'அது சரி - மாமூலாய் வெளியாகும் ஒரு மறுபதிப்பில், எங்களை புதுசாய் சுவாரஸ்யப்படுத்தக்கூடிய மேட்டர் என்னவோ ?' என்று கொட்டாவியோடு கேட்கிறீர்களா ? புக்கை நேரில், கையில் ஏந்திப் பார்த்தால் மாத்திரமே அதற்கான பதில் புரிபடும் உங்களுக்கு ! 

Becos - இந்த இதழானது - "தலையில்லாப் போராளி " ; "ஒரு தலைவன் - ஒரு சகாப்தம்" வெளிவந்த அதே மெகா சைசில் வண்ணத்தில் வெளிவந்துள்ளது ! 'தலையிலாப் போராளி" இதழினில் - ரெகுலர் சித்திரங்களை அப்படியே பெரிதாக்கி வெளியிட்டிருந்தோம் ! "ஒரு தலைவன்...ஒரு சகாப்தம்" இதழினிலோ - ஓவியர் Serpieri மெகா சைசில், பிரான்கோ-பெல்ஜிய பாணியில் உருவாக்கியிருந்த பக்கங்களை அப்படியே ஈயடிச்சான் காப்பி செய்திருந்தோம் ! ஆனால் இங்கோ - நமது ரெகுலர் சைசிலான TEX பக்கங்களில் ஏகமாய் பணியாற்றி, மெகா சைசுக்கு convert செய்துள்ளோம் ! ரெகுலர் சைசின் 2 பக்கங்கள் இங்கே 1 மெகா பக்கமாய் உருமாற்றம் கண்டுள்ளன - துளி கூட சித்திரச் சிதைவுகளின்றி !! டெக்சின் 70+ ஆண்டு கால சகாப்தத்தினில் - ஏதேதோ ரூபங்களில், பாணிகளில் அவரது ஆல்பங்கள் உலகெங்கும் வெளியாகியிருக்கும் தான் ; ஆனால் நாமிப்போது கையிலெடுத்திருக்கும் இந்த MAXI format இதுவரையிலும் யாரும் முயற்சித்திரா ஒரு பாணி என்று நினைக்கிறேன் !! இதற்கென போனெல்லியில் சம்மதம் கோரிப் பெற்று, பொறுமையாய் பணியாற்றி இதோ MAXI LION என்றதொரு வரிசையில் களமிறக்கியுள்ளோம் !! And இதோ - உட்பக்கங்களின் previews :

இனி இது சார்ந்த "கேள்வியும் நானே - பதிலும் நானே" கச்சேரி :

கேள்வி 1 .'சிவனே'ன்னு போய்க்கினு இருந்த மறுபதிப்புத் தடத்திலே இந்த புது வண்டியை ஓட்டுவானேன் ? நாங்க எக்ஸ்டரா நம்பர் போடச் சொல்லிக் கேட்டோமா ? "

"அப்புறம் இதை அறிவிப்பா வெளியிடாம அப்டி சஸ்பென்ஸா வைச்சிருக்க என்ன அவசியமாம் ?"

பதில் 1 : "மாற்றம் ஒன்றே மாறாதது !" - at least ஒரு ஆகச் சிறு வட்டத்துக்குள் ஜட்கா வண்டி ஓட்ட முற்படும் நமக்கேனும் !! TEX இதழ்கள் சகலமுமே ஒரே பாணியில், ஒரே format-ல் தொடர்ச்சியாய்ப் பயணிப்பது - நெடும் ஓட்டத்துக்கு சுகப்படாதென்று, தலையின் எங்கோ ஒரு மூலையில் ஒரு பட்சியின் அரைகூவலாய்க் கேட்டு வந்தது !  சில பல மாதங்களுக்கு முன்பாய் ஒரு வியட்நாமிய விமான நிலையத்தில், நானும், ஜூனியர் எடிட்டரும் பொதுவாய்ப் பேசிக் கொண்டிருந்த போது, இந்தத் தலைப்பும் அலசலுக்கு உட்பட - "மெகா சைசில், கலரில், அழகாய் வெளியிட இயன்றால் - கடைகளில் விற்பனைக்கும் 'பளிச்' என்று கண்ணில்பட்ட மாதிரியிருக்குமே !!" என்ற ரீதியில் ஜுனியர் எடிட்டரின் அபிப்பிராயமிருந்தது !! சும்மாவே சாமியாடுபவனுக்கு, வேப்பிலையும் அடித்தால் கேட்கவா வேண்டும் ? ஈரோட்டுக்கான TEX இந்த மெகா சைசில் தான் என்று fix ஆனேன் !!  

ஆனால் இந்த புக்கைக் கையில் ஏந்தி, இந்தப் புது format-ல் நிஜத்தில் படித்துப் பார்க்கும் வரையிலும், இவை குறித்து ஒரு சரியான எண்ணவோட்டம் உங்கள் மத்தியில் உருப்பெறுவது சிரமம் என்று எனக்குள் ஒரு எச்சரிக்கை சிக்னலுமே  மினுமினுத்தது !! So விளம்பரங்களாய்  இந்த சமாச்சாரத்தை முன்கூட்டியே நான் அறிவித்திருந்தால் - "குரங்கு வேலை" ; "விஷப் பரீட்சை !" : "நிச்சயிக்கப்பட்ட சொதப்பல் ; "பூட்ட கேசு " என்று மழைச் சாரலாய் அன்பு பொழிந்திருக்கக்கூடுமென்று நினைத்தேன் !! ஆங்காங்கே வாட்சப் க்ரூப்களில், FB குழுக்களில், பரோட்டா மாவைப் பிசைவது போல என் வழுக்கை மண்டையைப் பிசைந்து தள்ளுவதொரு செம ஜாலியான பொழுதுபோக்காகி இருக்கக்கூடும் என்று தோன்றியதால் - உங்கள் கைகளில் புக்கை ஒப்படைக்கும் நொடி வரைக்கும் பெவிகாலே உத்தமம் என்று தீர்மானித்தேன் !

Of course - அதற்காக புக்கினைக் கையில் ஏந்திடும் இந்த நொடியில் இந்த முயற்சியினை அத்தனை பேரும் கைதட்டி, வரவேற்று ஏற்றுக் கொண்டு, சிகப்புக் கம்பளத்தை லாண்டரியிலிருந்து வரவழைத்து விரித்து விடுவீர்களென்றெல்லாம் நான் பகற்கனவு  காணப் போவதில்லை !! "இது பெருசா கீது ;படிக்க வசதியாவே இல்லை !" ; "விலை இவ்ளோவா ??" "ரெகுலர் சைஸ்லே அது பாட்டுக்கு வந்தது பொறுக்கலியா ?" ; "ஆட்டையைப் போட புது ரூட்டாக்கும் ?" என்றெல்லாம் `முதல் reactions வெகு பாசமாய் இருக்கக்கூடுமென்பது புரியாதுமில்லை !! ஆனால் திட்டிக் கொண்டேனும் இந்த ஒற்றை இதழை முழுசுமாய் வாசிக்க நேரமெடுத்துக் கொண்டால் - இந்தப் புது பாணி ஒரு whiff of fresh air போலிருப்பதை மறுக்கவும் மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது !! விலையைப் பொறுத்தவரைக்கும் - cover price ரூ.150 என்றிருப்பினும், உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் விலை காத்துள்ளது !! அது பற்றிய விபரம் சித்தே கழித்து...!!

And here you go - அந்த "சஸ்பென்ஸ்" கார்ட்டூன் இதழின் முதற்பார்வையும் இதோ : 


அதே மெகா சைசில், முழு வண்ணத்தில், மேம்படுத்தப்பட்ட மொழியாக்கத்தோடு லக்கி லூக்கின் all-time classic கதைகளுள் ஒன்றான "மனதில் உறுதி வேண்டும்" வெளியாகிறது - MAXI லயன் இதழ் # 2 ஆக !! இங்கே சித்திரங்களில் resetting பணிகள் ஏதும் இருக்கவில்லை நமக்கு - படைப்பாளிகள் வெளியிடும் அதே ஒரிஜினல் சைசில், அதே அட்டைப்படங்களோடு சிம்பிளாக வெளியிட்டுள்ளோம் - கதையின் பின்னணி பற்றிய 8 கூடுதல்ப் பக்கங்களோடு !! ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் இந்தக் கதைகள் வெளிவந்திடும் ஒரிஜினல் சைஸ் & பாணி இதுவே எனும் போது - ஆயுசில் முதல்வாட்டி - படைப்பாளிகளின் கால்தடங்களை அட்சர சுத்தமாய்ப் பின்பற்றும் வாய்ப்பு கிட்டியுள்ளது ! Moreso இது போன்ற க்ளாஸிக் மறுபதிப்புகளை இந்த மெகா சைசில் ரசிப்பதும், பத்திரப்படுத்துவதும் ஒரு ரம்யமான அனுபவமாக இருந்திடக்கூடுமென்று நினைத்தேன் !! Of course - உங்களது அபிப்பிராயங்கள் மாறுபட்டிடலாம் தான் ! So early days !! 

கேள்வி # 2 : ஏண்டாப்பா அம்பி...மறுபதிப்புகள் ரெண்டையுமே இந்த சைசில் போட்டிருக்கியே - ரெகுலர் மறுபதிப்புச் சந்தாலாம் இனிமே எப்டியோ ?

பதில் # 2 : ஐந்தாறு ஆன்டுகளுக்கு முன்பாய் - இதே ஈரோட்டுப் புத்தக விழாவினில் நமக்கு ஸ்டால் மறுக்கப்பட்ட போது தலைவர் திருமிகு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் சொன்ன valid காரணம் - "நம்மிடம் போதிய titles இல்லை ; வெறும் 50 இதழ்களோடு ஒரு அரங்கம் அமைப்பது, வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தரக்கூடுமென்பதே !!" So சடுதியில் நமது titles கையிருப்பை உசத்துவதே பிரதான குறிக்கோளாயிருந்தது - மறுபதிப்புகளை நாம் முழுமூச்சாய் அரவணைக்கத் தொடங்கிய போது ! அதன் பிற்பாடு ஒவ்வொரு ஆண்டும் REPRINTS ரகங்கள் ஒரு பிரேத்யேகத் தடத்தைத் தமதாக்கிக் கொண்டு வந்துள்ளன ! ஆனால் இன்றைக்கோ நமது titles கையிருப்பு ஆஞ்சநேயர் வாலின் விஸ்தீரணத்தில் காட்சி தரும் நிலையில் - time for a rethink on the reprints என்றுபட்டது !! தவிர, ஒரு மறுபதிப்புச் சந்தா என்று உருவாக்கிய கையோடு அதனை உங்கள் சிரங்களில் வருஷா வருஷம் விடாப்பிடியாய்க் கட்டி வருவது போலவும் தோன்றியது !! So காத்திருக்கும் 2020 முதலாய் இனிமேல் மறுபதிப்புகளுக்கோசரம் தனியாய் ஒரு சந்தாவென்றெல்லாம் இராது !! மாறாக - சென்னை ; கோவை ; ஈரோடு & மதுரை (or) திருப்பூர் என்ற நான்கு புத்தகவிழாக்களின் போது  - MAXI LION format-ல் மறுபதிப்புகள் வெளிவந்திடும் !  சென்னை & ஈரோட்டில் தலா 2 இதழ்கள் & இதர விழாக்களில் தலா 1 வீதம் ! நீங்கள் அவற்றை அந்தந்த book-fair களில் வாங்கிக் கொள்ளலாம் - அல்லது நம்மிடமிருந்து நேரடியாகவும் அதே புத்தக விழா டிஸ்கவுண்டுடன், வாங்கிக் கொள்ளலாம் ! புத்தக விழாக்களை நமக்கு சற்றே மெருகூட்டவும், நீங்களங்கு வருகை தந்திடவொரு சன்னமான முகாந்திரமாகவும்  இந்த முயற்சிகள் பயன்பட்டால் மகிழ்ச்சியே !! So it will be Exit : Reprint சந்தா & Enter : Buy as you please - MAXI லயன் !! 

கேள்வி # 3 : "விலையிலே இன்னா சலுகைப்பா ??"

பதில் # 3 : இந்த 2 இதழ்களையும் "தி ஈரோடு எக்ஸ்பிரஸ்" முன்பதிவிலேயே இணைத்திருப்பின் - 2 தடவைகளாய் வாங்கும் அவசியமும் இருந்திராது தான் & 2 கூரியர் செலவுகளையும் தவிர்த்திருக்கலாம் தான் ! ஆனால் புது பாணி ; புது விலை ; புது format ப்ளஸ் மறுபதிப்புகளே  எனும் போது - முழுசாய் தெரிந்து கொள்ளாது முன்பதிவு செய்துவிட்டு, அப்புறமாய் "முட்டைக்கண்ணன் ஏமாத்திபுட்டான்டா மாப்பிளை !!" என்று ஆங்காங்கே விசனப்படும் படலங்களைத் தவிர்க்க எண்ணினேன் ! So எனது  எக்ஸ்ட்ரா முன்ஜாக்கிரதையின் பலனான எக்ஸ்டரா கூரியர் செலவினை ஈடு செய்திடும் விதமாய் இந்த 2 இதழ்களையும் ரூ.125 + ரூ.125 = ரூ.250 என்று டிஸ்கவுண்டுடன் விற்பனை செய்திடவுள்ளோம் ! இந்த சலுகை ஈரோட்டுப் புத்தக விழாவிலும் இருக்கும் ; நமது ஆன்லைன் லிஸ்ட்டிங்கிலும் கிட்டிடும் !! So இரட்டிப்புக் கூரியர் கட்டணங்கள் உங்களை ரொம்பவும் பாதிக்காதென்று நம்புவோம் ! 

கேள்வி # 4 : இனி எல்லா மறுபதிப்புகளுமே இதே பாணி தானா ?

பதில் # 4 : ஒரு புது பிளேயரை டீமுக்குள் எடுக்கும் போது அவருக்கு ஒரு குறைந்த பட்ச அவகாசமாவது தந்திடல் அவசியம் தானே ? "தம்பி....முத மேட்சிலேயே செஞ்சுரி போடாட்டி நீ பூட்ட கேசுடி !!" என்று அவர் காதில் ஓதினால் மனுஷன் பதட்டத்திலேயே பணால் ஆகிப் போவது தானே இயல்பு ?! So இந்தப் புதுப் பாணிக்குமே ஒரு குறைந்த பட்ச அவகாசம் - அதாவது ஜனவரி 2020 சென்னைப் புத்தக விழா வரையிலும் தந்திடுவோமே - ப்ளீஸ் ? If all is well - புது சைசில் தொடர்வோம் ! இல்லையேல் அவசியப்படும் திருத்தங்கள் செய்யப்படும் - அவற்றிற்கான உருப்படியான முகாந்திரங்களிருக்கும் பட்சத்தினில் !! 

கேள்வி # 5 : "அது இன்னா...சூனியரு பேரு மாத்திரமே புக்கிலே கீது ?"

பதில் # 5 : முதிர்ந்த வயதிலுமே இளைஞர் அணிச் செயலாளர் பதவியோடு சுற்றி வரும் காலங்களெல்லாம் போயே போச்சென்பத்தைத் தான் இன்றைக்குப் பார்க்கிறோமே  ? So நாமும் சன்னமாய் அதிலிருந்தொரு பாடம் படித்த மாதிரி இருக்கட்டுமே ? இந்த MAXI லயன் வரிசையின் பொறுப்புகள் ஜூனியரிடமே இருந்திடும் ! மிஞ்சிப் போனால் நானிங்கு பேனா பிடிப்பேன் - மொழிபெயர்ப்பாளனாய் !! மற்றபடிக்கு  இவை சார்ந்த திட்டமிடல்கள் ; தயாரிப்புப் பணிகள் எல்லாமே எனது தலையீடின்றி இருந்திடும் ! So "செல்லக் கண்மணிகளே....வாசகச் செல்வங்களே !!" என்ற ரீதியிலான ஹாட்லைன்..கோல்ட்லைன்.. வெது வெது லைனெல்லாம் நிச்சயமிராது ! காது வரை நீளும் வாயானது  எனது பிரேத்யேகச் சொத்தென்பதால் - அந்த இம்சைகளின்றி MAXI லயன் தட தடக்கும் !! 

கேள்வி # 6 : "அடுத்த MAXI லயன் மதுரையிலேயா ?"

பதில் # 6 : Nopes ...மாதயிறுதியில் துவங்கும் மதுரை விழா too early for another reprint !! இனி அடுத்த MAXI லயன் ஜனவரி 2020-ல் தான் !! Maybe..just maybe அதற்கிடையே திருப்பூரில் புத்தக விழா இருப்பின் - அங்கொரு MAXI முயற்சிக்கலாம் !! 

கேள்வி # 7 : அடுத்த TEX reprint என்னவாம் ?

பதில் # 7 : திருப்பூரில் /  சென்னையில் சொல்றேனே ?

கேள்வி # 8 : MAXI லயனில் சகலமும் மறுபதிப்புமயம் தானா ?

பதில் # 8 : ஆரம்பத்தில் மறுபதிப்புகளில் மாத்திரமே MAXI லயன் கவனம் காட்டிடும் ! காத்திருக்கும் காலங்களில் MAXI நீளம் கொண்ட முன்பதிவிற்கான  (புது) ஆல்பங்களும் இதன் ரேடாரில் இடம்பிடித்திடும் வாய்ப்புகள் உண்டு !!

Uffff !! எத்தனை ஹெல்மெட்டுகளை இப்டிக்காவும், அப்டிக்காவும் நான் மாட்டிக்க முற்பட்டாலும், டாலடிக்கும் என் முன்மண்டையில் ஒரு போடு போட ஏதேனுமொரு பாதாள ஆங்கிளில் வழி தேடப்படுவது உறுதி என்பது தெரியாதில்லை ! So ஜாலியாய் அதற்காகக் காத்திருக்கும் கேப்பில் - ஈரோடு எக்ஸ்பிரஸின் கோச் # 1 & 2 பற்றிய அறிமுகங்களைச் செய்திடுகிறேனே ? 

இதோ - "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" இதழின் அட்டைப்பட முதல்பார்வை ! இம்முறை அட்டகாசமான ஒரிஜினல் சித்திரங்களே ஈரோட்டின் 4 ஸ்பெஷல் இதழ்களுக்குமே !! And "பி.பி.வி." ஹார்டகவர் இதழுக்கு ஏகப்பட்ட நகாசுகள் செய்துள்ளோம் ராப்பரில் !! 4 பாகங்கள் கொண்ட இந்த இந்த இதழே இம்மாதத்திய எனது செல்லப்பிள்ளை !! இதுவே உங்களின் ஆதர்ஷப் பிள்ளையாகவும் உருமாறிட்டால் - would be the icing on the erode cake !! 
And இதோ - புதியவர்களான DAMOCLES டீமின் தெறிக்கும் ஆக்ஷன் த்ரில்லரின் அட்டைப்படமுமே !! நிறைய ஆக்ஷன் ; கொஞ்சம் காதல் ; கொஞ்சம் செண்டிமெண்ட் என்று நகரும் இந்த ஆல்பமும் நிச்சயமாய் இந்த ஆகஸ்ட்டை அமர்க்களப்படுத்துமென்ற நம்பிக்கை எனக்குள்ளது !! All fingers crossed !!  
ஈரோட்டில் நேரில் பெற்றுக் கொள்ள இயலா இதர நண்பர்களின் புக்குகள், கூரியரில் இன்று  (சனிக்கிழமை) காலையில் சிவகாசியிலிருந்து கிளம்பிடும் ! திங்களன்று பெற்றுக் கொள்ளும்வரையிலும் பொறுமை ப்ளீஸ் !! 

And MAXI லயனின் TEX + லக்கி லூக் மறுபதிப்புகளின் ஆன்லைன் லிஸ்டிங் கூட இன்று ரெடியாகிடும் ! So புது பாணியினை கண்ணில் கண்டிட விரும்பும் நண்பர்கள் ஆன்லைனிலோ ; முகவர்கள் வாயிலாகவோ வாங்கிக் கொள்ளலாம் ! Happy shopping  & here's praying that you like them !!

இந்தப் பதிவை வியாழன் ராவினில் டைப்படிக்கிறேன் - வெள்ளியன்று நேரமிராது என்பதால் !! So ஈரோட்டுக்கு உங்களை மீண்டுமொருமுறை வரவேற்கிறேன் folks - காமிக்ஸ் நேசமெனும் ஒற்றைக் குடையினடியே இளைப்பாறி மகிழ்ந்திட !! பெரும் தேவன் மனிடோ நம்மைக் காப்பாராக !!! Adios for now folks !!!
ஈரோட்டில் துவங்கும் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 4 !!
ஒரு காமிக்ஸ் குவியலோடு உங்களை வரவேற்கக் காத்திருப்போம் !! Please visit us !!

305 comments:

  1. ஈரோடு 2019-சஸ்பென்ஸ் பழி வாங்கும் பாவை! எதிர்பாரா ஆச்சர்யம்!

    ஏதாவது புதிய புக்காக இருக்கும் என நினைக்க, பழி வாங்கும் பாவை ஸ்லாட்டை தட்டிட்டது! பெரிய சைஸக்கு ஏற்ற கதை!

    தேங்யூ எடிட்டர் சார்& டீம்!

    ReplyDelete
  2. Thank you Editor sir😁🏵️🌺🌺🍧🍧🎂

    ReplyDelete
  3. எனது கணிப்பு சரியே. போன பதிவில் நான் கமெண்ட் போட்ட போது பழிவாங்கும் புயல் என்று தவறாக டைப்பினேன்.so my my guessing correct.

    ReplyDelete
  4. பழி வாங்கும் பாவை இதழ் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இதுவரை படிக்காத கதை எனக்கு.காமிக்ஸ் கிளாசிக் கில் வந்த போதே இந்த இதழ் மட்டும் கிடைக்கவில்லை...

    ReplyDelete
    Replies
    1. Thanks tex vijayaraghavan..books orderd waiting for Monday or Tuesday.

      Delete
  5. அருமையான பதிவு.

    ReplyDelete
  6. வந்தாச்சுங்கோ சார்

    சர்ப்ரைஸ் இதழ்கள் அருமை

    கலக்கலா போயிட்டுருக்கு சார் 👍🏼🙏🏼
    .

    ReplyDelete
  7. காமிக்ஸ் பந்தங்களுக்கு,

    புத்தக திருவிழா சிறக்க இனிய வாழ்த்துக்கள்.

    ஆகஸ்ட் மாதத்தை அதிரடியாக திட்டமிட்ட ஆசிரியர் குழுவிற்கு மிகுந்த நன்றி.

    ஒவ்வொருவர் மனதிலும் ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சி‌ பெருவெள்ளம் வாழ்நாள் எல்லாம் நின்று நிலைக்கட்டும்.
    🌹🌹🌹🌺🌺🌺🏵️🏵️🏵️💐💐💐🌼🌼🌼🌷🌷🌷🌸🌸🌸

    ReplyDelete
    Replies
    1. @ Sri Ram

      நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.

      Delete
    2. @ GP சார்,

      வரணும்தான் முயற்சி செய்தேன்.புத்தகவிழாவுக்கு இரு நாட்களுக்கு முன்புதான் ஒரு சிறு விபத்தில் காலில் பலத்த அடி.தெய்வாதீனமாக எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை.கால் வீக்கத்தோடு கலந்து கொள்வது உகந்ததாக படவில்லை.
      இருந்தபோதிலும் உங்கள் ஒவ்வொருவரின் அன்பும் ,நட்பும் எத்தகையது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்துள்ளேன்.காமிக்ஸ்க்கும்,ஆசிரியர் குழுவுக்கும் அனைத்து நன்றிகளும் உரித்தாகுக.

      அது மட்டும் இன்றி தனிப்பட்ட முறையிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓர் முக்கிய ஆளுமைக்காக காத்திருக்கிறேன்.அவரின் வருகை என்ற ஒன்றே என்னுடைய ஒற்றை சிந்தனையாக உள்ளது.
      ஆகஸ்ட்டில் அது நிகழ வாய்ப்பு உள்ளது.

      Delete
  8. சார் 2020 ஜானதண் கார்லேண்ட்டுக்கு வாய்பு கெடையாதா

    ReplyDelete
    Replies
    1. இல்லை என்பதுதான் தற்போதைய நிலை.

      Delete
    2. ///சார் 2020 ஜானதண் கார்லேண்ட்டுக்கு வாய்பு கெடையாதா///

      ஹி...ஹி..

      என்னவொரு தைரியம்.
      என்னவொரு தைரியம்.

      Delete
  9. Really superb selections sir (Lucky Luke & Tex )

    ReplyDelete
  10. நானும் வந்துட்டேன்

    ReplyDelete
    Replies
    1. நானும் வரவேற்கிறேன்..

      Delete
  11. சார, website க்கு வேலை பளு காரணமாக தலை காட்ட முடியவில்லை. அதனால் கொஞ்சம் குழப்பம். மன்னிக்கவும். Maxi Lion reprints என்னோட regular and jumbo சந்தால உண்டா. அல்லது தனியாக பணம் அனுப்பி or online purchasing பண்ண வேண்டுமா?. Just couple of days back only, I sent money for Erode special books. Those are special books, so no confusion with them.

    ReplyDelete
    Replies
    1. தனியாக பணம் செலுத்த வேண்டும்.

      Delete
    2. நன்றி கணேஷ்!

      Delete
  12. அப்பாடா....

    வந்தாச்சு....;-)

    ReplyDelete
  13. One more Query for friends who purchased in online earlier. If I do online purchasing today, how long the whole process will take to get the books in hand within Tamilnadu?. Thanks.

    ReplyDelete
    Replies
    1. Maximum of 3 days. It depends on where you are located in Tamil Nadu

      Delete
    2. நன்றி குமார்

      Delete
  14. Dear Edi,

    A Warm welcome to the Maxi size reprints. Sent money to our office account, for booking my copies.

    ReplyDelete
  15. அசத்திட்டாங்க. ஆதரவு உண்டு மேக்ஸிக்கு.


    வாழ்த்துக்கள் ஜுனியருக்கு.


    குறிப்பு 1: ஈரோடு எக்ஸ்பிரஸின் கோச் # 1 & 2 மற்றும் 3 & 4 எல்லாமே என் போன்ற வெளிமாநில ரசிகர்களுக்கு 1 வாரம் கழித்தே கிடைக்கும்.

    குறிப்பு 2: இந்த முறையும் புத்தக விழா வர இயலவில்லை

    ReplyDelete
  16. மனதில் உறுதி வேண்டும் maxi size ல் படிக்க அருமையான அனுபவாமாக உள்ளது.

    இனி வரும் காலங்களில் maxi size தான் காமிக்ஸை ஆளப்போகிறது.

    ReplyDelete
  17. great sir. we welcome maxi lion and all the best for the new editor. we will be always loyal to the lion family editors.

    these books come under erode special? or we have to buy separately?

    ReplyDelete
    Replies
    1. Both Tex and Lucky Maxi have to be purchased separately.

      Delete
  18. புத்தக விழா updates,

    2020 - In

    1. டயபாலிக்
    2. மாடஸ்டி
    3. டிரெண்ட்
    4. ரிப்போர்டர் ஜானி old style
    5. இருளின் மைந்தர்கள் - TeX மறுபதிப்பு
    6. மந்திரி
    7. கிளிப்டன்
    8. இளம் டைகர் புதிய கதைகள் முழுத்தொகுப்பு - erode book fair special 2020
    9. மார்டின் - 2 slot
    10. C.I.D. ராபின்
    11. இளம் டெக்ஸ்

    Out

    1. கார்ட்லேண்ட்
    2. ஸ்மர்ப்
    3. ஜானி new style
    4. XII spinoffs
    5. பென்னி
    6. Fleet way releases (13 வது தளம்)
    7. Lady S

    ReplyDelete
    Replies
    1. டயபாலிக்கை முன்னால போட்டு ,டெக்ஸை கடைசில போட்டுருக்கீங்க.மறைமுகமா ஏதாவது சொல்ல வர்றீங்களோ.

      Delete
    2. அதாவது என்ன கருத்துனா டையபாலிக் கான போராட்டம் வெற்றி...என்பது தான்...

      Delete
  19. Hi Sir,
    This is Leon from Colombo.
    How are we going to get the books to Colombo. I would like to buy all the books released by you guys. But it will be easy for me to pay everything at once rather than paying small amounts each them there is a surprise specials. Any solution for this? May be you can at least let us know a lump-sum amount in the beginning of the year for specials. Any remaining form this amount can be carried forward to next year. Even this erode specials I would like to buy but I am not sure how much I need to pay for this with courier charges as well.

    ReplyDelete
    Replies
    1. Valid point sir.some confusion for transferring the amount at once rather than paying differently and it is giving confusion..example erode book fair special one amt and number and again surpriss release some amt..2 times courier and follow up

      Delete
    2. Me too accept the same. If Editor says he's gonna release some special books he don't have to name them. Just say the price along with the regular subscription.

      Delete
  20. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.நான் ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு முன்பே 600 ரூபாய் செலுத்தி உள்ளேன்.டெக்ஸ் மற்றும் லக்கிலூக் புத்தகம் வாங்க மறுபடியும் பணம் அனுப்ப வேண்டுமா என தெரியப்படுத்தவும்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. //
      டெக்ஸ் மற்றும் லக்கிலூக் புத்தகம் வாங்க மறுபடியும் பணம் அனுப்ப வேண்டுமா என தெரியப்படுத்தவும்.நன்றி
      //

      தனியாக பணம் அனுப்ப வேண்டும் மதன்.

      Delete
  21. ஆசிரியர் அவர்களுக்கு ஈரோடு ஸ்பெஷல் 1&2 புக்கிற்கு முன்பதிவு செய்யவில்லை. சஸ்பென்ஸ் இதழ் வந்தவுடன் மொத்தமாக செலுத்தி பெற்று கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்....
    என் முன் உள்ள கேள்வி இது தான்..
    1.4 புத்தகங்களையும் பெற்று கொள்ள அனுப்ப வேண்டிய தொகை எவ்வளவு ?
    2.முன் பதிவு செய்யாத என் போன்ற வாசகர்களுக்கு முன்பதிவு பாயிண்ட் உண்டா..(இப்போது தான் அது பற்றி யோசித்தேன்..காலம் கடந்த யோசனை. .மன்னிக்கவும்) ..

    ReplyDelete
  22. எனக்கு அந்த பெவிகால் உலக நாதனை அவ்வளவாக பிடிக்காது...ஆனால் இது போன்ற தருணங்களில் ரொம்ப பிடிக்க தான் செய்கிறது. ...
    தொடரட்டும் பெவிகால் உலக நாதனின் சாதனைகள் 💐💐💐💐💐

    ReplyDelete
  23. வருடத்திற்கு 2 முறையாவது டெக்ஸின் maxi சைஸ் வந்தால் ரொம்ப சந்தோஷம். ....

    ReplyDelete
  24. நமது காமிக்ஸ் கதைகளுக்கு மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்ட மற்றும் தொடர்ந்து ஈடுபடவுள்ள நண்பர்கள் மகேந்திரன் மற்றும் (கிட் ஆர்டின்) கண்ணணுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. ஞாயிறு பதிவு இல்லையா?

    ReplyDelete
  26. ஞாயிறு பதிவு இல்லையா?

    ReplyDelete
  27. இம்முறை ஈரோடு புத்தக விழாவினில் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை .

    ReplyDelete
  28. எனது முதல் மீட்டிங் இந்த முறை ஈரோட்டில் அட்டகாசம். நண்பர்களின் அன்பு அரவணைப்பு. என்ன ஒரு உற்சாகம். எங்கெங்கோ இருந்து நெடும் தூரம் பயணம் செய்து வந்த நண்பர்கள். என்ன ஒரு மகிழ்ச்சி பிரவாகம். எடிட்டர் சாரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  29. நண்பர்கள் நீண்ட நாள் பழகிய நண்பனை வரவேற்பது போல வரவேற்றனர். பல வாசக ஜாம்பவான்கள் நேரில் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது. நண்பர் சேலம் டெக்ஸ் விஜயராகவன் சொன்னது போல கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த மகிழ்ச்சி கிடைக்காது

    ReplyDelete
  30. டெக்ஸின் வண்ண மறுபதிப்பு கதையான பழிவாங்கும் பாவை உண்மையிலேயே அசத்தலாக உள்ளது சார். இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த சைஸில் உங்களிடம் கேட்டிருந்தேன். அதனை இப்பொழுது நனவாக்கியுள்ளீர்கள் நன்றி சார். இதே போல கழுகு வேட்டை, பழிக்குப் பழி, இரத்த முத்திரை, தொடர்ந்தால் அதிர்வேட்டுதான். அப்புறம் மனமிறங்கி டயபாலிக்கை போட ஒத்துக் கொண்டமைக்கு நன்றியோ நன்றி சார். இது போல இன்னும் வெளிவராத அந்த ஸ்பைடர் கதையான சினிஸ்டர் செவனை பாக்கெட் சைஸில் போட்டால், விற்பனையில் புதிய சகாப்தம் படைக்கும். இந்த செய்திய கேட்கும் பல பழைய வாசகர்களின் மனதில் பால் வார்த்தது போன்று இருக்கும். ஏதோ பார்த்து செய்யுங்கள் 😊

    ReplyDelete
    Replies
    1. Apadie அந்த விண்வெளி பிசாசு.

      Delete
    2. முதல்ல புதுசுக்கு வழிய தேடுவோம் நண்பரே! இது வந்த பிறகு விண்வெளி பிசாசுக்கு கொடி பிடிப்போம் (ஏற்கனவே பிடிச்ச கொடிதான் 😁)

      Delete
    3. ஸ்பைடர் வருவதாக இன்று காலையில் எடிட்டரை ஸ்டாலின் வீட்டில் சந்தித்த நண்பர்கள் சொன்னார்கள்.

      Delete
    4. சத்தியமாக இல்லை !

      Delete
    5. சத்தியமாக இல்லை !

      நல்லவேலை மாமியார் மீது சத்தியம் செய்யவில்லை 😁

      Delete
    6. கழுகு வேட்டை லாங் பெண்டிங் சார்.
      மாக்ஸி இல் வர ஆவண செய்யுங்கள் ப்ளீஸ்

      Delete
    7. வாட்ஸ் அப் குழுவில் உள்ள ஒரு தகவல் என்னை குழப்பி விட்டது. தவறு என்னுடைய தவறான புரிதல். சாரி சார். சாரி நண்பர்களே.

      Delete
  31. நண்பர் EV அவர்களுக்கு நன்றி. நான் நீண்ட நெடுங்காலமாக தேடி கொண்டு இருந்த லக்கி கிளாசிக் பரிசளித்தார் எனக்கு. என்னை எடிட்டர் சார் பாராட்டியது icing on the cake.

    ReplyDelete
  32. மீண்டும் மாலை அடுத்த சந்திப்பு . நண்பர் கார்த்திகை பாண்டியனின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றேன். எடிட்டர் சார் புத்தகத்தை வெளியிட்டார். சிறிய சிறப்பான function. Athan பிறகு நண்பர்கள் கூட்டம் கூட மரத்தடி மாநாடு.

    ReplyDelete
  33. நமது நண்பர்கள் மாறி மாறி எடிட்டர் இடம் கேள்விகள் கேட்க அவரும் பொறுமையாக அனைத்து கேள்விகளுக்கும் சாதக பாதகங்களை பொறுமையாக விளக்கினார்.

    ReplyDelete
  34. இந்த மீட்டிங் மட்டும் 2 மணி நேரம் வரை நீடித்தது. மிகுந்த மகிழ்ச்சி

    ReplyDelete
  35. இன்னும் பலப்பல விசயங்கள் பற்றி எழுதவேண்டும். இன்று நிதானமாக அமர்ந்து கோர்வையாக எழுத முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. குட்...குட்....பைனலி நீங்களும் அந்த உணர்வை ஸ்பரிசித்து விட்டீர்கள். அதை அப்படியே நியூரான்களில் சிங் பண்ண விடுங்க! அடுத்த ஆறு மாதங்களுக்கு அப்படியே இலவம் மாதிரி மனசு பறக்கும்! பொறவு அடுத்த மீட்டுக்கு ஏஙக ஆரம்பிக்கும்! அந்த உணர்வு தேடி மனசு அல்லாடும்! ஒவ்வொரு புத்தக விழாவா நாங்கள் பயணத்தது இப்படித்தான்! இனி நீங்களும் அப்படியே........!!!!

      Delete
  36. Sir, the villain of the Lucky Luke story appeared in a cameo role in Last month‘s story “A cowboy in Paris”. On seeing him I have a thought to read once again “Manathil urudhi veendum”. Now I have the opportunity to read it in Maxi size. Thank you...And

    If you relase the Tex viller’s “Pali Ketta Puligal “in Maxi Size, it will be an amazing experience of reading it.

    ReplyDelete
  37. மாநாட்டின் தலைவரின் எழுச்சியுரையை இன்னும் காணவில்லையே.

    ReplyDelete
    Replies
    1. தலைவர் கடிதக் கணையோடு முடிச்சுக்குவாரு.

      Delete
  38. ஈரோடு புக் ஃபேர் எத்தனை நாட்கள் என்று தெரிவிக்க முடியுமா? ப்ளீஸ்.

    ReplyDelete
  39. டயபாலிக்! வாவ்.. வார்ர்ர்ரே வா.....! (இன்றைய சின்னத்திரைத் தொடர்களில் டயபாலிக்கின் வில்லத்தனங்களை விட நூறு மடங்கு காண்பிக்கிறார்கள்.... அதனால் டயபாலிக் எம்மைப் பொறுத்தவரை ஒரு பச்சைக் குழந்தை என்பதைச் சொல்லிக்கொண்டு..)

    ReplyDelete
    Replies
    1. @podiyan...
      உங்களுக்கு தெரியுது ஊர்ல இருக்கும் பெரிய மனிதர்களுக்கு தெரிய மாடிகுதே...🤦🏻‍♂️

      Delete
    2. மனம் சோர்ந்திடக்கூடாது சகோ, இப்போது எடிட்டர் 2010இல் தலைவரை வெளியே உலாவவிட ஒத்துக்கொண்டுள்ளதே நம் நண்பர்கள் அனைவரதும் விடாமுயற்சியின் வெற்றியே! 'இதற்காகத்தான் கொடிபிடிச்சீங்க போல...' என்று மற்றவர்கள் ஏளனப் பார்வை வீசாத கதையொன்றை எடிட்டர் தயர் செய்வார் என்று நம்புவோம்!!

      Delete
    3. டயபாலிக் ஆயாவை பாயா போட்டு விட்டார் என்று யாரும் போர்க்கொடி உயர்த்தாத மாதிரியான கதைகளை வெளியிடுங்கள் எடிட்டர் சார்.

      Delete
    4. டயபாலிக் என்னமோ கோட்டை ஏறி கொடி நட்டு விட்டார் என்று பெருமை பட்டுகொள்ள வேண்டாம்.

      அரங்கத்திற்க்கு வந்திருந்த (சுமார் நூறு பேர்) பேரில் டையபாலிக்கு கை தூக்கியது வெறும் பதினைந்து பேர்தான்(ஸ்மர்ஸுக்கு முப்பது பேருக்கு மேல் ஆதரவு இருந்தது).

      அகில் ரொம்பவும் ஆசைபட்டதால் தான் ஆசிரியர் டயபாலிகை தேர்வு செய்தார்.

      நாங்களும் நீதி செத்துபோச்சுன்னு சொல்லி எதிர்கமாக, போய்ட்டு போகுதுன்னு விட்டுட்டோம்.

      Delete
    5. //நாங்களும் நீதி செத்துபோச்சுன்னு சொல்லி எதிர்கமாக, போய்ட்டு போகுதுன்னு விட்டுட்டோம்.// அப்படியே ஒவ்வொரு வருசமும் ஒரு ஸ்லாட்டை விட்டுக்கொடுத்துட்டீங்கன்னா இலங்கையிலேருந்து ஈரோட்டுக்கு யாழ்ப்பாண ஸ்பெஷல் எள்ளுருண்டையும் பருத்தித்துறை வடையும் கொரியர்ல வரவழி பண்ணிப்புடுவோம்!

      Delete
    6. போடுறதே 12 12 12 பொம்ம புக்கு இதுக்கு ஒரு சண்டையா கணேஸ் குமார் 2635 சார் ?

      டயபாலிக் இத்தாலில டெக்ஸை விட எம்மாம் பெரிய ஹீரோ !!!

      இங்க வந்து அடி பட்டு சாகனும்னு அவருக்கு தல விதி (இதில பொழைச்போகட்டும்னு வேற சொல்றாங்க 😡😡😡 .. *குறை குடம் என்னைக்குமே கூத்தாடும்* )

      இங்க நான் யாரையும் தப்பா சொல்லலை

      அவரவர்க்கு ஒரு மானசீக ஹீரோ/யினி இருப்பாங்க

      அதை அசிங்கப்படுத்த வேணாம்னு தான் சொல்றேன் ..

      ஸ்மர்ப்ஸ் எத்தனை பேர்க்கு பிடிக்கும் .. சொம்மா ஹால்ல கை தூக்கின அந்த 30 பேர் மட்டும்தான் தமிழ் காமிக்ஸ் உவகமா என்ன.?? இதை யே இங்க கேட்டு பார்ங்க .. ஆல்ரெடி எடி இங்க கேட்டதுதானே ?? அதுக்கு எத்தனை பேர் கை தூக்குனாங்க.?? எப்ப பார்த்தாலும் நாங்க நாங்க ங்கிற வார்த்தையை (இந்த வார்த்தையை கேட்கும்போது ஒரு மாதிரியா இருக்கு) நிப்பாட்டிட்டு நாமன்னு சேர்த்து சொல்லுங்க .. தனி மரம் தோப்பாகாது .. நாம எல்லாரும் சேர்ந்துதான் இந்த தமிழ் காமிக்ஸ் உலகம் ... தட்ஸ் ஆல்.. 🙏🙏🙏

      Delete
    7. ///டயபாலிக் இத்தாலில டெக்ஸை விட எம்மாம் பெரிய ஹீரோ !!! ///

      இத்தாலில அவர் யாரா இருந்தா எனக்கு என்ன சார்.
      ஆயாவ பாய பன்னதால எனக்கு புடிக்கல.

      \\\தனி மரம் தோப்பாகாது .. \\\

      டயபாலிக் விஷயத்தில் தனிமரம் தான் தோப்பாகி உள்ளது.

      \\\ எப்ப பாரத்தாலும் நாங்க நாங்க\\\

      நாங்கள் என்கிற எங்களுடன் நாமங்கிற நீங்கள் சேரம இருப்பதுக்கு நாங்கள் என்ன பன்ன முடியும்.


      Delete
    8. //டயபாலிக் விஷயத்தில் தனிமரம் தான் தோப்பாகி உள்ளது.//
      அப்படி இருப்பதாக இருந்தால் ஹாலில் அந்த தனி நபர் மட்டும் தானே கை உசதிருக்க வேனும்...ஒரு அளவுக்கு அதரவு இருந்ததே...
      //ஆயாவ பாய பன்னதால எனக்கு புடிக்கல.//
      ஒரு சில கதைகள் டெக்ஸில் கூட மோசமானதாக இருக்கலாம்...
      இன்னொரு வாய்ப்பு தருவதில் எதுவும் பிரளையம் உருவாக போவதில்லை...அண்ணே...

      Delete
    9. எண்ணிக்கை அடிப்படையில் சொல்லவில்லை(பதினைந்து பேர் கை தூக்கினார்கள்). தனிப்பட்ட அகிலன் ஆர்வத்தால்தான் வந்தது என்று கூறினேன்.
      நீ காட்டிய ஆர்வத்த்தால் தான், நான் டையபாலிக்கை டிக் அடித்த போது ஒன்றும் சொல்லவில்லை. உன் தனிப்பட்ட முயற்சி க்கு கிடைத்த வெற்றி தான் டையபாலிக் வரப்போகிறது.

      தொடர்ந்து டையபாலிக் நன்றாக வருவது இனி டையபாலிக் கையில்.

      Delete
  40. நித்தம் ஒரு யுத்தம்... தெரிக்கின்றது யுத்தம். மிகவும் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  41. மிக்க மகிழ்ச்சி. நான் மேக்சி லயன் புத்தகங்கள் நமது ஸ்டாலில் வாங்கியபோது 150ரூ என்றே கொடுத்தார்கள். அவர்களிடம் அந்த சலுகை விலை பற்றி கொஞ்சம் நினைவுப்படுத்துங்கள் சார். புத்தக விழா வந்தது மிக்க மகிழ்ச்சி. நிறைய நண்பர்களை சந்திக்க முடிந்தது. நிறைய நண்பர்கள் புதிதாக அறிமுகம் ஆனார்கள். நொறுக்கு தீனிகள், மத்திய உணவு, சூடான விவாதங்கள், அரட்டைகள்.. icing on the cake

    ReplyDelete
    Replies
    1. Sorry brother
      its also my mistake for not noticing that while billing the books
      They will ensure that it is done right
      Thanks for bringing it up🙂

      Delete
    2. It's ok.. உங்கள் பொன்னான நேரத்தை நீங்கள் எங்களுக்காக செலவிட்டதில் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  42. Lion-Muthucomics.com தளத்தில் இன்னும் லிஸ்டிங் வரவில்லை சார்.

    Lioncomics.in தளத்தில் ஆர்டர் செய்துள்ளேன்.

    புத்தக கண்காட்சியில் எடிட்டர் அறிவித்துள்ளவைகள் தொகுத்து நண்பர்கள் யாராவது கூறினால் நன்றாக இருக்கும் 🙏🏻

    ReplyDelete
    Replies
    1. //Lion-Muthucomics.com தளத்தில் இன்னும் லிஸ்டிங் வரவில்லை சார்.//

      நாளைக்கு செய்திடுவோம் சார் !

      Delete
  43. எடிட்டர் சார்
    ஈரோடு ஸ்பெஷல் புத்தகங்கள் 3 மற்றும் 4 க்கு S.T.Courier மூலம் பெற ( தமிழ்நாட்டுக்குள்) எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என தெரிவியுங்கள்.

    ReplyDelete
  44. நித்தம் ஒரு யுத்தம்... அட்டகாசமான கதை. ஆரம்பத்திலுருந்தே செம விறுவிறுப்பான கதை. கோபம், ஆக்சன், காதல், துரோகம், சஸ்பென்ஸ் என அனைத்தும் கலந்து கட்டி அடிக்க்கிறது. கதை முடியும் போது எல்லி கதாபாத்திரம் மனம் பூராவும் நிறைந்து விட்டது. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. அடடே ..படிச்சாச்சா ?

      Delete
    2. அடுத்த டபுள் ஆல்பத்திலும் எல்லி மனதை தொடுவார் - இன்னும் ஒரு படி கூடுதலாகவே !!

      Delete
  45. பிஸ்டலுக்கு பிரியாவிடை சூப்பர்.

    சிகுவாகுவா சில்க்கையே "அப்படி தூர போ" என்று பிஸ்டலுக்கு பிரியாவிடை அம்மனிநயாகி தூள் கிளப்புகிறார்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாசிப்பின் வேகத்தின் பொருட்டு இன்று முதல் 'கன் கணேஷ் குமார்' என்று அறியப்படுவீர்களாக !

      Delete
  46. ஈரோடு புத்தக விழாவில் நமது காமிக்ஸ் (2019) சந்திப்பை சிறப்பாக செய்த ஆசிரியருக்கும், மற்றும் காமிக்ஸ் ஆர்வலர்ககளுக்கும் எனது வாழ்த்துக்கள்.
    ஆசிரியர் அவர்கள் ஒவ்வொரு வருடமும் வாசகர் சந்திப்பை சுவராஸ்யத்துடன் கொண்டு செல்ல முடியும் என்று நிரூபித்து விட்டார்.
    வாழ்த்துக்கள் ii, சார் ii
    நானும் அந்த Extra - இரண்டு புத்தகங்களையும் சொல்லட்டுமே என்று சாதரணமாகத் தான் காத்திருந்தேன்.
    ( மகளை காலேஜ் சேர்ப்பப்பது வரை வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் இருந்தேன்.)
    சஸ்பென்ஸ் இதழ்களில் ஒன்று _டெக்ஸின் "பழிக்குப் பழி" - இதழ் என்று கருதி இருந்தேன்.
    கார்ட்டூன் இதழ் - ஸ்மர்ப் அல்லது பென்னியாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்.
    லக்கி லூக் - மனதில் உறுதி வேண்டும். எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
    ஏ ெனன்றால் - அடுத்த லக்கி மறு Uதிப்பு எதைக் கேட்கலாம் என்று பழைய லக்கிகி- களைப் படித்ததில் - மனதில் உறுதி வேண்டும் - வாய் விட்டு சிரிக்கும் படியும் இருந்தது. இரண்டே கலரில் வெளிவந்தது வேறு ஒரு குறையாக இருந்தது.
    எனவே, மிக்க நன்றி.ம. உ.வே - தேர்வுக்குகு. அதுவும் பெரிய சைஸுக்குகு
    - இந்த கதை தேர்வு நிச்சயம் HiT_ அடிக்கும்.
    அப்றம், Tex_ பழிவாங்கும் பாவை - நம்மைப் பொறுத்தவரை அன்று இருந்த Maxi_SIze_யிலிருந்து பாக்கெட் சைஸில் வெளியிட்டு கோபப்படுத்திய இதழ் -
    அந்த இதழின் ஒவியமும், கதைக்களமும் Uல முறை ரசித்துப் படித்த இதழ்.
    ஒவியத்தில் TeX - ன் ேதாரணையும், வசனங்களும், பாக் கெட்
    சைஸ் என்பதால் கருப்பு மையில் அழுத்தமான பிரின்டிங்கும் நினைவில் என்றும் நீங்காத இதழாக இருந்தது.
    அந்த இதழ் மறுபதிப்பு - வண்ணத்தில் வருவது சந்தோசமே.
    ஆனால் என்னை ப் பொறுத்தவரை Tex_Uக்கத்துக்கு 8 Frame-கள் என்பது சீக்கிரம் கதை முடிந்து விடுவது போல் தோன்றும்.
    Uக்ககத்துக்கு 6 Frame-கள் என்பதே அடுத்து என்ன என்ற சுவராஸ்யத்துடன்
    பக்கத்தை புரட்டிக் கொன்டே போவது. கதை படித்த திருப்தியைத் தரும் என்பது என் எண்ணம்.
    எனினும், புதிய வாசகர்களை கவர இந்த சைஸ் நிச்சயம் உதவும் என்ற எண்ணமும் உள்ளது.
    எனவே, இந்த சைஸுக்கு வரவேற்ப்பை கொடுப்பது நம் கட மை. வாழ்த்துக்கள் சார். நன்றிகள்.சார் ii



    .

    ReplyDelete
    Replies
    1. //Tex_Uக்கத்துக்கு 8 Frame-கள் என்பது சீக்கிரம் கதை முடிந்து விடுவது போல் தோன்றும்.
      Uக்ககத்துக்கு 6 Frame-கள் என்பதே அடுத்து என்ன என்ற சுவராஸ்யத்துடன்
      பக்கத்தை புரட்டிக் கொன்டே போவது. கதை படித்த திருப்தியைத் தரும் என்பது என் எண்ணம்.//

      சார்.. சட்டியில் இருக்கும் மொத்தம் மாறிடுவதில்லையே ?!

      மாறுவது நாம் உபயோகிக்கும் கரண்டி மட்டும் தானே ?

      Delete
  47. "மாணவர்களுக்கு ப்ரோஸ் தனியாக , படம் தனியாக , காமிக்ஸ் எனப்படும் sequential
    Arts மூலமாக ஒரு விஷயத்தை கற்பிக்கையில் காமிக்ஸ் மூலம் சொல்லப்படும் விஷயங்கள் எளிமையான மற்றும் வேகமான புரிதல்களுக்கு அடிகோலுகின்றன என comprehensive understanding பற்றி தெளிவாக பேசியபோது மிகவும் ஆச்சர்யமாகவும் பெருமிதமாகவும் இருந்தது.."

    நேற்றைய சந்திப்பில் பள்ளி ஆசிரியை ஒருவரின் தாழ்மையான கருத்து மற்றும் ஆதங்கம்.

    மேலே உள்ள தகவல் ஈரோடு புத்தகத் திருவிழா வாட்ஸ் குழுவில் நண்பர் ஒருவரால் பகிரப்பட்ட விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. True...ரொம்பவே அழகாய்ப் பேசினார் !

      Delete
  48. நேற்று தாங்கள் டையபாலிக்கை டிக் செய்த போது...
    அய்யோ...சொல்ல வார்தைகள் இல்லை...
    கிடைத்திருக்கும் வாய்ப்பை நல்ல படியாக பயன்படுத்துவார் டையபாலிக்...நான் உறுதி அளிக்கிறேன்...
    நல்ல கதையை தேர்வு செய்யுங்கள் சார்...
    அது போதும்...
    மீண்டும் நன்றிகள் சார்...
    டையபாலிக்குக் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தமைக்கு...

    ReplyDelete
    Replies
    1. //கிடைத்திருக்கும் வாய்ப்பை நல்ல படியாக பயன்படுத்துவார் டையபாலிக்...நான் உறுதி அளிக்கிறேன்...//

      அடடே... முகமூடிக்காரரிடம் ஹாட்லைனில் அதுக்குள்ளாறவே பேசியாச்சா ?

      Delete
    2. ஆமா சாரே...
      நீங்க டையபாலிக்கா பொட்ட மட்டும் போதும்...காத்திருப்போம்

      Delete
    3. டயபாலிக் தேர்வு செய்தமைக்கு நன்றி ஐயா 🙏🏼🙏🏼

      Delete
  49. வாசகர் திருவிழா அமோகமாக இருந்தது.

    ReplyDelete
  50. சார்

    ஒரே ஒரு விண்ணப்பம் : ஈரோடு போலவே கோயம்புத்தூர், மதுரை, சென்னை என்று ஏதாவது ஒரு கூடுதல் நகரத்தில் 1.5 வருடங்களுக்கு ஒரு முறை Meet போடவும். நமது காமிக்ஸ்களுக்கு வெளிச்சம் போட்டது போலும் இருக்கும். Let Erode be a permanent fixture - the other one can be revolving ?!

    ReplyDelete
    Replies
    1. சென்னையில் சந்தித்திடலாம் தான் ; ஆனால் உள்ளூர் வாசகர்கள் எத்தனை பேர் ஆர்வம் காட்டுவார்கள் என்பது தான் கேள்வியே !

      Delete
  51. சார்

    இளம் டைகர் "அனைத்து" புத்தகங்களையும் ஒரு 'ரெண்டு-குண்டு' box செட்டா போட்டுடுங்கோ. அந்த ஒத்தை புக்க நாங்க relic என்று 1000 ரூபாய்க்கு அப்பாலிக்கா வித்துக்கறோம் :-) :-) :-)

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் இந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு !

      Delete
  52. டியர் MAXI எடிட்டர்,

    பொறுப்புக்கு நல்வரவு - it is a wonderful decision to go with MAXI series.

    எண்ணிக்கைகளும் ஒரு வருடத்தின் அளவில் நியாயமாகவே படுகிறது. Maxi புத்தகங்கள் ஹார்ட் கவர் செய்யப்பட்டால் இன்னும் ஜொலிக்கும் என்பது N கருத்து. அப்பாவைப் போல hotline காவியங்கள் (!!!) படைக்காவிடினும் கொஞ்சம் ஒரு இதழ் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி பற்றி இரு வரிகள் எழுதலாமே - if possible with how many copies sold in the original Lion edition .

    Again the idea is great - அன்பளிப்பு செய்யவும் ஏதுவானது.

    ReplyDelete
    Replies
    1. ஹி ..ஹி ! நமக்கு எப்போவாச்சும் பெவிகால் சுகப்படும் ; MAXI Lion எடிட்டருக்கு எப்போவுமே அது பிடித்தமான வஸ்து !

      So நம்ம காவியங்களை இன்னும் கொஞ்ச காலம் சகித்தே

      Delete
    2. /* ஹி ..ஹி ! நமக்கு எப்போவாச்சும் பெவிகால் சுகப்படும் */

      Sir ... ;-) :-P actually evident from your jumping the queue to answer comment meant for ME :-D

      Delete
  53. சார் ஜானதனுக்கு ஒரு வாய்பு கொடுகள்

    ReplyDelete
    Replies
    1. இவருக்கு ஆதரவாக கை தூக்கியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

      Delete
  54. எடி சார் ,

    டயபாலிக்கிற்க்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு ஒரு பிக் தாங்க்ஸ் சார் ..

    இதில் முன்பு வந்த டேஞ்சர் டயாபாலிக்கையே ரீப்பிரிண்டாய் கலரில் தர முடியுமாங்க சார் .. மெர்சலாய் மிரட்சியுடன் அட போட வைத்த க்ளைமேக்ஸ் எல்லாமே வேற லெவல் லாய் இருக்கும் .. இது என் கோரிக்கை மட்டும் .. 😍😍

    ReplyDelete
    Replies
    1. அண்ணா...
      Re entryல 1st ஒரு கலக்கல் hit ப
      அடிக்கட்டும் அப்புறம் பாத்துக்கலா...
      இப்போது இருக்க நிலமைல டையபாலிக் வந்தா போதுனு இருக்கு

      Delete
  55. முதலில் ஈரோடு Meet பற்றிய ஆசிரியரின் பதிவு அவசியத் தேவை .

    ReplyDelete
  56. என்னைப் போன்ற' நேரில் வர இயலாதவர்கள்' சங்கம் சார்பில் வேண்டுகோள். ஈரோடு அப்டேட்ஸ் ப்ளீஸ்.

    ReplyDelete
  57. உங்களனைவரின் அன்பை சுமந்து வீடு வந்து விட்டேன் ஆபீசர்ஸ்

    ReplyDelete
  58. நித்தமும் யுத்தம் அட்டகாசம் என்ன ஒரு ஆக்சன் சும்மா தூள் பறக்குது. Dialogues எல்லாம் பட்டய கெலப்புது. அதும் கிளைமாக்ஸ் டுவிஸ்ட் எதிர்பாராதது. எங்க bond kku போட்டியாளர்களை களம் இறக்கி விட்டுள்ளார். வாரே வா. Loved it. It's a sure hit. இப்போது பி பி வி உடன்.

    ReplyDelete
  59. மிகப் பெரிய வாசக சந்திப்பு நிகழ்ந்துள்ளது, இந்நேரம் தளம் அதகளப்பட வேண்டாமா?

    வாங்க ஒவ்வொருவரும் களம் இறங்குங்க.

    முதல்ல தலீவர்ல இருந்து ஆரம்பிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. All வீடு திரும்பி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிடும் முஸ்தீபுகளில் இருப்பார்கள் சார் !

      பண்டிகை வருதுங்கிற உற்சாகம் எத்தனை துள்ளலானதோ - அதற்கு நேர் மாறானது தானே - பண்டிகை முடிஞ்சு போச்சென்ற புரிதல் !

      சிறுகச் சிறுக புக்குகளைப் புரட்டிட நேரம் கிட்டிய பிற்பாடே இங்கே நடமாட்டம் கூடிடும் !

      Delete
  60. போடுறதே 12 12 12 பொம்ம புக்கு இதுக்கு ஒரு சண்டையா கணேஸ் குமார் 2635 சார் ?

    டயபாலிக் இத்தாலில டெக்ஸை விட எம்மாம் பெரிய ஹீரோ !!!

    இங்க வந்து அடி பட்டு சாகனும்னு அவருக்கு தல விதி (இதில பொழைச்போகட்டும்னு வேற சொல்றாங்க 😡😡😡 .. *குறை குடம் என்னைக்குமே கூத்தாடும்* )

    இங்க நான் யாரையும் தப்பா சொல்லலை

    அவரவர்க்கு ஒரு மானசீக ஹீரோ/யினி இருப்பாங்க

    அதை அசிங்கப்படுத்த வேணாம்னு தான் சொல்றேன் ..

    ஸ்மர்ப்ஸ் எத்தனை பேர்க்கு பிடிக்கும் .. சொம்மா ஹால்ல கை தூக்கின அந்த 30 பேர் மட்டும்தான் தமிழ் காமிக்ஸ் உவகமா என்ன.?? இதை யே இங்க கேட்டு பார்ங்க .. ஆல்ரெடி எடி இங்க கேட்டதுதானே ?? அதுக்கு எத்தனை பேர் கை தூக்குனாங்க.?? எப்ப பார்த்தாலும் நாங்க நாங்க ங்கிற வார்த்தையை (இந்த வார்த்தையை கேட்கும்போது ஒரு மாதிரியா இருக்கு) நிப்பாட்டிட்டு நாமன்னு சேர்த்து சொல்லுங்க .. தனி மரம் தோப்பாகாது .. நாம எல்லாரும் சேர்ந்துதான் இந்த தமிழ் காமிக்ஸ் உலகம் ... தட்ஸ் ஆல்.. 🙏🙏🙏


    இன்னொன்னும் சொல்லிக் கொள்ள விருப்பபுகிறேன் ...

    ஸ்மர்ப்ஸாவது 10 கதைகளுக்கு மேல வந்திட்டாங்க .. இதில எத்தனை தேரிச்சு ? எனக்கு தெரிந்து ஒன்றிரண்டு கதைகள்தான் .. மத்ததெல்லாம் அட்டர் பிளாப் .. இதையே இங்க நிறைய பேர் சொல்லக்கூட முடியாம குமுறிட்டிருக்காங்க ..

    டயபாலிக் வெறும் 4 கதையை மட்டும் போட்டிட்டு புடிக்கலைன்னு சொன்னது கடைசியா வந்த அந்த ஒரு கதையைத்தான் ..
    அவரோட மொத்த கதைகள்ல ஒரு 50 ஸ்டோரிய போட்டிட்டு சொல்லுங்க அப்ப எத்தனை பேர் கை தூக்கறாங்கன்னு பார்க்கவாம் .. முதல்ல வந்த டேஞ்சர் டயாபாலிக் கதையை விரும்பாதவங்க யார் யார்ன்னு விரல் விட்டு எண்ணிப்புடலாம் ... 🙏

    ReplyDelete
    Replies
    1. \\இதில பொழைச்போகட்டும்னு வேற சொல்றாங்க 😡😡😡 .. *குறை குடம் என்னைக்குமே கூத்தாடும்* )\\

      வெறும் பதினைந்து கை தூக்கியதுக்காக எப்படி ஸ்லாட் கொடுக்கலாம் என்று சண்டை போடமல் விட்டதுகாக இப்போது வருந்துகிறேன்.

      Delete
    2. இதே தளத்தில் கொஞ்சம் ரிவர்ஸ்ல போய் பாருங்க ..

      எத்தனை பேர் டயபாலிக்
      மறுபடியும் வரனும்ன்னு கேட்டிருக்காங்க & பேசி இருக்காங்கன்னு தெரியும் ..

      அது தெரியாம இங்கஈரோட்டுக்கு வந்தவங்க கை தூக்கினதை மட்டும் இவர் பார்த்திட்டு பேசுவாராம் .. சண்ட போடுவாராம் ..

      நெனப்புதான் பொழப்ப கெடுத்துச்சாம்ங்கிற கதையால்ல இருக்கு .. 😃😃

      Delete
    3. போன முறை தளத்தில் கேட்டபோது இருபத்தைந்து பேர். அரங்கில் பதினைந்து.
      மொத்தத்தில் நாற்பது தான்.

      ஸ்மர்ஸுக்கு தளத்தில் 15. அரங்கில் 30. மொத்தத்தில் நாற்பத்தி ஐந்து.

      எப்படி பார்த்தாலும் 50 கூட தேறலையே.

      மேலும் தளத்தில் நீங்கள் ஒட்டு போட்டிங்க, அரங்கில் நீங்கள் ஓட்டு போட்டு இருக்கிங்க. இரண்டு கை தூக்றது தப்பு சார்.

      ஈரோட்டில் வந்தவர்கள் கை தூக்க வைத்து, செலக்ட் செய்தது ஆசிரியர். நான் இல்லை.அங்கு தளத்தில் ஓட்டு போட்டவர்களை ஆசிரியர் கண்கில் கொள்வேன் என்று சொன்னதாக எனக்கு நினைவில்லை.
      நீங்க என்னை பகடி பன்றன்னு நினைத்து, ஆசிரியரை கிண்டல் செஞ்சு கிட்டு இருக்கிங்க.

      Delete
  61. அடுத்ததா எடிட்டர் ஏன் டயாபாலிக்கை மறுபடி உள்ளே கொண்டு வர மாட்டேங்குறார்ன்னு எனக்கும் தெரியும் .. (நாங்கன்னு சொல்ற உங்களுக்கும் தெரியும்) ஆனா நீங்க வெளில சொல்ல மாட்டீங்க..

    டெக்ஸை விட மிகப்பெரிய ஹீரோ அவர் இத்தாலியில .. இது இங்க எத்தனை பேர்க்கு தெரியும் .. ? ?

    குறைந்த பட்சம் ஒரு
    பத்து கதைகளாவது போட்டிட்டு நொட்டை நொள்ளைகளை பற்றி அப்புறம் பேசுவோமே

    ReplyDelete
    Replies
    1. அண்ணே point 2...
      விற்பனையில் top 5குல் இடம் பிடித்துள்ளது...
      அனைத்து புக்குமே out of stock

      Delete
    2. //டயபாலிக் இத்தாலில டெக்ஸை விட எம்மாம் பெரிய ஹீரோ !!! ///

      இத்தாலில அவர் யாரா இருந்தா எனக்கு என்ன சார்.
      ஆயாவ பாய பன்னதால எனக்கு புடிக்கல.



      \\\ எப்ப பாரத்தாலும் நாங்க நாங்க\\\

      நாங்கள் என்கிற எங்களுடன் நாமங்கிற நீங்கள் சேரம இருப்பதுக்கு நாங்கள் என்ன பன்ன முடியும்.

      Delete
    3. // இத்தாலில அவர் யாரா இருந்தா எனக்கு என்ன சார்.

      ஆயாவ பாய பன்னதால எனக்கு புடிக்கல. //


      இப்பத்தான் பாய்ண்ட்டுக்கு வந்திருக்கீங்க .. இவ்வளவு நேரமா நாங்க ன்னு சொல்லிட்டிருந்தவர் .. இப்ப எனக்கு பிடிக்கலைங்கிறார் உங்க ஒருத்தருக்கு பிடிக்கலைங்கிறதுக்காக மத்தவங்களுக்கும் பிடிக்கக்கூடாதுங்களா ?? .. என்னதான் சார் உங்க ப்ரச்சினை ??

      நானும் டெக்ஸ் பேன் தான் சில டெக்ஸ் கதை சரியில்லாமே பிடிக்காம இருக்கும் அதுக்காக நான் என்ன டெக்ஸ் வேண்டாம்னா சொன்னேன் .. (உங்களுக்கு டெக்ஸ் எப்பவுமே பிடிக்காதுங்கிறது தனி கதை 😄)

      Delete
    4. உங்க ஒருத்தருக்கு பிடிக்கலைங்கிறதுக்காக மத்தவங்களுக்கும் பிடிக்கக்கூடாதுங்களா ?? .. என்னதான் சார் உங்க ப்ரச்சினை ??////

      என்ன ஒரு கண்டுபிடிப்பு. சார் 15 பேர் 100 பேர்ல மெஜரிட்டின்டி சொல்ற கணக்கு புலியா இருக்கிங்களே.

      நான் வேண்டாம் என்று கூறியதால் மட்டும் டயபாலிக் நிறுத்த படவில்லை. விற்பனையில் சரியாக சாதிக்க வில்லை என்று ஆசிரியர் தான் நிறுத்தினார்.

      தற்போது கூட டைட்டில் அதிகமாக தேவை என்பதற்காக தான் டயபாலிக் மறுவருகை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

      Delete
  62. டேஞ்சர் டயபாலிக் மீள்வருகைக்கு நன்றி சார்.


    அப்படியே கமான்சே,
    லேடி எஸ் மீண்டும் கொண்டு வரவும் சார்.
    நல்ல கதை மிஸ் ஆகுது.
    அருமையான சித்திரம்.

    ReplyDelete
  63. ஈரோடு புத்தக விழாவில் நமது காமிக்ஸ் (2019) சந்திப்பை சிறப்பாக செய்த ஆசிரியருக்கும், மற்றும் காமிக்ஸ் ஆர்வலர்ககளுக்கும் எனது வாழ்த்துக்கள்.
    ஆசிரியர் அவர்கள் ஒவ்வொரு வருடமும் வாசகர் சந்திப்பை சுவராஸ்யத்துடன் கொண்டு செல்ல முடியும் என்று நிரூபித்து விட்டார்.
    வாழ்த்துக்கள் ii, சார் ii
    நானும் அந்த Extra - இரண்டு புத்தகங்களையும் சொல்லட்டுமே என்று சாதரணமாகத் தான் காத்திருந்தேன்.
    ( மகளை காலேஜ் சேர்ப்பப்பது வரை வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் இருந்தேன்.)
    சஸ்பென்ஸ் இதழ்களில் ஒன்று _டெக்ஸின் "பழிக்குப் பழி" - இதழ் என்று கருதி இருந்தேன்.
    கார்ட்டூன் இதழ் - ஸ்மர்ப் அல்லது பென்னியாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்.
    லக்கி லூக் - மனதில் உறுதி வேண்டும். எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
    ஏ ெனன்றால் - அடுத்த லக்கி மறு Uதிப்பு எதைக் கேட்கலாம் என்று பழைய லக்கிகி- களைப் படித்ததில் - மனதில் உறுதி வேண்டும் - வாய் விட்டு சிரிக்கும் படியும் இருந்தது. இரண்டே கலரில் வெளிவந்தது வேறு ஒரு குறையாக இருந்தது.
    எனவே, மிக்க நன்றி.ம. உ.வே - தேர்வுக்குகு. அதுவும் பெரிய சைஸுக்குகு
    - இந்த கதை தேர்வு நிச்சயம் HiT_ அடிக்கும்.
    அப்றம், Tex_ பழிவாங்கும் பாவை - நம்மைப் பொறுத்தவரை அன்று இருந்த Maxi_SIze_யிலிருந்து பாக்கெட் சைஸில் வெளியிட்டு கோபப்படுத்திய இதழ் -
    அந்த இதழின் ஒவியமும், கதைக்களமும் Uல முறை ரசித்துப் படித்த இதழ்.
    ஒவியத்தில் TeX - ன் ேதாரணையும், வசனங்களும், பாக் கெட்
    சைஸ் என்பதால் கருப்பு மையில் அழுத்தமான பிரின்டிங்கும் நினைவில் என்றும் நீங்காத இதழாக இருந்தது.
    அந்த இதழ் மறுபதிப்பு - வண்ணத்தில் வருவது சந்தோசமே.
    ஆனால் என்னை ப் பொறுத்தவரை Tex_Uக்கத்துக்கு 8 Frame-கள் என்பது சீக்கிரம் கதை முடிந்து விடுவது போல் தோன்றும்.
    Uக்ககத்துக்கு 6 Frame-கள் என்பதே அடுத்து என்ன என்ற சுவராஸ்யத்துடன்
    பக்கத்தை புரட்டிக் கொன்டே போவது. கதை படித்த திருப்தியைத் தரும் என்பது என் எண்ணம்.
    எனினும், புதிய வாசகர்களை கவர இந்த சைஸ் நிச்சயம் உதவும் என்ற எண்ணமும் உள்ளது.
    எனவே, இந்த சைஸுக்கு வரவேற்ப்பை கொடுப்பது நம் கட மை. வாழ்த்துக்கள் சார். நன்றிகள்.சார் ii



    .

    ReplyDelete
  64. ஈரோடு பயணம் :

    ( பிச்சைக்காரன் ஓடை , பெரும்பள்ள ஓடை ஆகிய இரு ஓடைகளுக்கு இடையே அமைந்துள்ளபடியால் இரு ஓடை –ஈரோடை ஆகி ஈரோடு ஆகிற்று .
    புராணம் .. தன் பேச்சை மீறி தட்சனின் யாகத்துக்கு சென்ற தாட்சாயினியை சிவன் நெற்றிக்கண்ணால் எரிக்க பிரம்மஹத்தி தோஷம் பிரம்மனின் மண்டையோடு வடிவில் சிவன் கையில் பீடிக்க கபால தீர்த்தம்தனில் சிவன் நீராட மண்டையோடு சிதைந்து வெள்ளோடு ,சித்தோடு என இங்கு விழ ஈரோடு என பெயர் பெற்றது ..

    மகா பெரியவர் காஞ்சி மடம்...
    பிரம்மாவின் ஆணவம் அடக்க சிவன் பிரம்மாவின் ஐந்து தலைகளை கிள்ளி எடுக்க பிரம்மஹத்தி தோஷம் காரணமாய் ரத்த ஈரம் உள்ள மண்டையோடு அவர் கையோடு ஒட்டி கொள்ள ஆர்த்ர கபாலீஸ்வர் ஆனார் ..ஆர்த்ரம் –ஈரம் கபாலம் ..(மண்டை ) ஓடு ஈர ஓடு ..ஈரோடு ஆயிற்று
    /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    நன்றி சொல்ல உமக்கு வார்த்தை இல்லை எமக்கு
    காவிரியில் வேண்டுமாயின் ஆடியில் வெள்ளம் வராது போய்
    இருந்து இருக்கலாம் ..ஆனால் மனக்காவிரியில் எண்ணப் புனல் பெருக்கெடுத்து ஓடுகிறது ..

    முதலில் சிறப்பு விருந்தினர் என்ற வகையில் தங்குமிடம் சிறப்பாக ,உணவு மகன் ,மகள் என மூவருக்கும் அளித்து மிகவும் கௌரப்படுத்திய மற்ற இருவர் சார்பாகவும் சேர்த்து எடிட்டர் அவர்களுக்கு சிரம் தாழ்த்திய நன்றிகள் .

    ReplyDelete
    Replies
    1. நலம்தானா .நலம்தானா .உடலும் உள்ளமும் நலம்தானா..?
      சிறுநீரக கற்களுக்கான அறுவை சிகிச்சை சமீபத்தில் மேற்கொண்ட எடிட்டர் அவர்களை முதலில் கேட்க விரும்பிய கேள்வி இதுதான் ..
      மருத்துவ சிந்தனைகள் விடுத்து அலைபாயும் எண்ணம் இதுமாதிரிதான் ..சொற்களை கற்களாக எடிட்டர் மீது வீசியபடியால்தான் அவை சிறுநீரகத்தில் தஞ்சம் புகுந்தனவோ என்ற துன்பவியல் நினைவுகள் ..
      உற்சாகம் நிரம்பி வழியும் நேரத்தில் அசர்ந்தப்ப கேள்வியாய் அது மாறிவிடுமோ என்ற அச்சம் மட்டுமல்ல ..

      வீசி எறியப்பட்ட சொற்களாம் கற்களை கூடாக்கி அதில் சித்திரக்கதை பிரேமம் என்னும் தேன்மதுரம் தடவிவிட்டபடியால் அக்கூட்டில் இருந்து
      சிறகடிக்கும் தேனி போல் ஒரு சமயம் மேடையருகே ,மறுகணம் விழ அரங்கு வாசலில் ,அரைக்கால் மாத்திரை நொடியளவில் என ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றும் பிரமை எழ ஒரோபோராஸ் மோதிரம் கைவசம் இருப்பின் மட்டுமே எடிட்டர் அவர்களின் நிலையான பிம்பம் காண முடியும் என மனம் சொன்னதும் கூடுதல் காரணம்... அலங்காநல்லூர் காளையை அடக்க முனையும் இளவட்டம் போல் வலம் வருபவரிடம் இக்கேள்வியை எஞ்ஞனம் கேட்பது?
      எனினும் தொக்கி நிற்கும் கேள்விக்கு எடிட்டர் விடையளிப்பார் என விரும்புகிறேன் ..
      காமிக்ஸ் மட்டும் அல்ல உங்களிடம் கேட்க விரும்புவது ..தேக ஆரோக்கியமும் கூட ..
      /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    2. ........பிறர் உயர்விலே உனக்கிருக்கும் இன்பம் இவை அனைத்திலும் இருப்பதுதான் தெய்வம் ...
      வெளிச்சம் கொடுக்கும் சாதாரண மண் அகல் விளக்குதான் ..அதன் மகத்துவம் கர்ப்பகிரஹத்தில் வைக்கப்படும்போது முற்றிலும் மாறிவிடுகிறது.

      சாதாரண மெழுகுவர்த்திதான்...ஆனால் கர்த்தரின் தேவாலயத்தில் வைக்கப்படும்போது அதன் மகத்துவம் முற்றிலும் மாறிவிடுகிறது..

      விழா அரங்கு மேடை வெறும் மரத்தினால் ஆனது ..அதன் மேல் எடிட்டர் நீங்கள் ,மூத்த எடிட்டர் ,மொழிபெயர்ப்பாளர் திரு கருணையானந்தம் என மூவரும் ஏறியவுடன் அதன் முக்கியத்துவம் மாறிவிடுகிறது ..
      நீங்கள் இருக்கும்போது அம்மேடையின் மேன்மை குறித்து ஒரு சாமான்ய வாசகனாய் நன்கு அறிவேன் ..

      அத்தகு மேடையில் அத்தருணத்தில் ஏற வாசகர்கள் யாருக்கும் உரிமையில்லை ..
      பல பத்தாண்டுகளின் உழைப்பும் ,அனுபவமும் ,மேதமையும் ஜ்வாலையாய் தகித்து கொண்டிருக்கும் மேடை ..அது இப்போது சாதாரண மரத்தினால் செய்யப்பட்ட மேடை அன்று ....
      திரு சொக்கன் போன்று எழுத்துலக ஆளுமைகள் செய்த - செய்ய -வேண்டிய விஷயத்தை காமிக்ஸ் வாசிப்பில் அரும்புகளாய் இருக்கும் அபிராமி ,தீபக்கை மேடையேற்றி நூல்களை வெளியிட வைத்தது எண்ணி நெஞ்சம் சந்தோஷத்திலும் பெருமிதத்திலும் விம்மி வெடிக்கிறது ...
      இதை விட மாபெரும் கௌரவம் என்ன இருக்க முடியும் ?

      அதுவும் எப்பேர்ப்பட்ட நூல்கள் ?

      என்ன என்னவென்று என்னை போலவே காமிக்ஸ் உலகின் அத்துணை வாசகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த நூல்கள் ....வந்திருப்போர் மட்டுமன்றி ,தமிழகம் மட்டுமன்றி ,வெளி மாநிலவாசிகள் மட்டுமன்றி அயல்நாடுகளில் வசிக்கும் வாசகர்களும் மிகவும் துடிப்புடன் எதிர்நோக்கி இருந்த புத்தகங்கள் .
      மேக்சி –லயன் என புத்தம் புது வடிவமைப்பிலான சர்வதேச தரத்தை எட்டி பிடிக்கும் நோக்கிலான நூல்கள் ..

      மெய்யாகவே எடிட்டர் சார் ! விழிகளில் ஆனந்த கண்ணீர் !
      தலை தாழ்ந்த வணக்கங்கள் !!!!!
      ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    3. கண்களும் கவி பாடுமே !!!

      தற்போது மிகவும் பிரசித்தி பெற்றுவிட்ட ‘’ சிவகாசி பன்னை’’ பற்றி கீழ்வரும் வெண்பா பல நூற்றாண்டுகளுக்கு பின் ‘’பன்னூறு ‘’ எனற தலைப்பில் இடம் பெற்றால் ஆச்சர்யப்படவேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.!!!

      சிவநேசம் மட்டுமல்ல யமபாசம் வெல்வதற்கு
      அவகாசம் எடுத்ததனை அரைத்து மெல்ல உண்க
      பத்தோடு பதினொன்றென பரிகாசம் செய்யாதீர்
      சித்தோடு வெள்ளோடுறை சிவகாசி வட்டப்பம் ..
      அருட்சொல்பொருள்
      சித்தோடு வெள்ளோடுறை : ஈரோடு வந்துறையும்
      வட்டப்பம் : பன்
      ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    4. உன் வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட முன்னாடி வந்தால்தான் முகம் காட்டும் இங்கே
      ஈரோட்டு காமிக்ஸ் புத்தக திருவிழாவில் தனது மகள் சக்தியுடன் நான் சந்தித்த நண்பர் பல்லடம் சரவணகுமார். தொடக்க பள்ளி ஆசிரியர்.

      மாணவர்களுக்கு ப்ரோஸ் தனியாக , படம் தனியாக , காமிக்ஸ் எனப்படும் sequential Arts மூலமாக ஒரு விஷயத்தை கற்பிக்கையில் காமிக்ஸ் மூலம் சொல்லப்படும் விஷயங்கள் எளிமையான மற்றும் வேகமான புரிதல்களுக்கு அடிகோலுகின்றன என comprehensive understanding பற்றி தெளிவாக பேசியபோது மிகவும் ஆச்சர்யமாகவும் பெருமிதமாகவும் இருந்தது..

      ஏன் இவை குறித்து தளத்தில் அல்லது பொதுவெளியில் எழுதுவதில்லை என வினவியபோது தயக்க உணர்வுகளே காரணம் என்றார்..திறமையாளர்கள் பலரும் ஒளிந்திருக்க இந்த சங்கோஜ உணர்வுகளே காரணம்..அவற்றை விடுத்து நல்ல விஷயங்களை பகிர முன்வர வேண்டுகிறேன்..


      ( மேலே உள்ள எனது செய்தியை வாட்ஸ் அப் குழுமத்தில் பகிர்ந்தபோது அச்செய்தியை நண்பர் பரணி இங்கு தவறுதலாக பதிவு செய்து விட்டார் ..விழா அரங்கில் சகோதரி பள்ளி ஆசிரியை பேசியது ஸ்மர்ப்ஸ் பற்றியது ...ஆனால் நண்பர் சரவணகுமார் பேசியது comprehensive understanding பற்றிய பொதுவான கருத்து ..வேறொரு குழுமத்தில் இது பகிரப்பட்டு அங்கு காமிரேடு சுதா ராமமூர்த்தி இது குறித்து தொடர் பள்ளி குழுமங்கள் நடத்தும் தனது நண்பர்கள் குழாமிடம் இது பற்றி பேச நண்பர் சரவணகுமார் அவர்களின் அலைபேசி எண்ணை கேட்டு பெற்றுள்ளார் ... காமிக்ஸ் வாசிப்பின் பயன்களின் பக்க பிரதிபலிப்பாக எண்ணாமல் இதை வேறு எப்படி கருதுவது ?)

      ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    5. இன்னம் எண்ண புனல் கண்மாய்களாக பிரியினும் மடை திறந்து தாவும் நதியலைகளாக இருப்பினும் இதோ பின்னால் பலர் வருவார்கள் .

      ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////



      வளர்நத குழ்ந்தைகள் போல் நீங்கள் ,எல்லோரும் இங்கு இருக்கிறீர்கள்

      என மகளும் மகனும் சொன்னபோது எனக்கு அதில் ஆச்சர்யம் ஏதுமில்லை ...காமிக்ஸ் குற்றாலத்தில் நனைவோர் மட்டுமே உணரக்கூடிய புத்துணர்ச்சி இது ...ஈரோடு புத்தக திருவிழா ..

      வரவேற்பு இதழ்களில் expecting your august presence அப்டின்னு போட்டு இருப்பாங்க ..

      நீங்க ஒரு தடவை ஈரோடு வந்தீங்கன்னா .அடுத்த presence of august எப்பன்னு உங்க காலண்டரை அடிக்கடி பாக்க ஆரம்பிச்சுடுவீங்க

      ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////






      மோப்பக் குழையும் அனிச்சம்

      எடிட்டரின் விருந்தோம்பல் குறித்து மிகவும் பாராட்டி நண்பர் டெக்ஸ் சம்பத் எழுதியுள்ளதை படிக்க வேண்டுமா ?
      அனைவரையும் அன்போடு அழைத்து கனிவாய் இன்முகத்தோடு நடந்து அனைவரையும் சாப்பிட்டார்களா என்று அவராகவே கேட்டு சாப்பிட பணிந்து சாப்பாடு போட்டு அனுப்பி வைத்த எடிட்டரின் இந்த பாங்கே போதும் இனி அடுத்த புக்பேர் வரை தாங்கும்யா தாங்கும் .. சாப்பாடு பிரமாதம்*

      Delete
    6. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

      Delete
    7. செல்வம் அபிராமி சார் அருமை ஐயா. பல விசயங்களை எழுதி இருக்கிறீர். உங்கள் எழுத்தை படிப்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். அருமை அருமை.

      Delete
    8. @ செனா அனா

      பின்றீங்க செனாஅனா!! உங்களோடு இம்முறை அபிராமி & தீபக்கையும் சந்திக்க நேரிட்டது மிகவும் மகிழ்ச்சி!! நம்முடைய உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொண்டிருந்ததை அவ்வப்போது கவனித்தேன்!! வரம் வாங்கிவந்திருக்கும் செல்வங்கள் அவர்கள்!!
      (நிகழ்ச்சி முடிஞ்சதுமே நீங்க எல்லோரும் விட்டலாச்சாரியார் படத்துல வர்றமாதிரி டஸ்ஸ்னு மறைஞ்சுட்டதுதான் கொஞ்சம் வருத்தம் எனக்கு!)

      Delete
    9. @ஈ வி

      ஹா..ஹா...அடுத்தத்தடவை செனாவை நம்ம சிறப்பு விருந்தினரா அழைச்சிட்டு வந்து ரெண்டு நாள் கூடவே தங்க வைச்சுட்டா அவரும் அப்படி தப்பிக்க முடியாது. இதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க.

      Delete
    10. அய்யா செல்வம் அபிராமி அவர்களையும் அவர்தம் வாரிசுகளையும் சந்தித்தது மகிழ்ச்சி,அவர் போலவே மற்ற இருவரும் விழா முடியும் வரை புன்னகை ஒளிரும் இன்முகத்துடன் இருந்தது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி,அது அகத்தின் பிரதிபலிப்பு,முழுமையான அன்பின் வெளிப்பாடு.....

      Delete
  65. @Selvam Abirami
    நீங்கள் அனைத்தையும் சிறந்த முறையில் வெளிப்படுத்தியுள்ளீர்கள் 🙂

    ReplyDelete
    Replies
    1. சிறந்த மனிதர்களிடம் இருந்து சிறந்த வார்த்தைகளே வெளிப்படும்.....

      Delete
  66. ஒவ்வொரு உற்சாகமான ஹலோவிற்கு பின்னரும் சோகமான குட்பை உண்டு.

    நேற்று நண்பர்கள் எல்லாரும் பிரிய மனமின்றி பேருந்து நிலையம் வந்து பஸ் ஏற்றி விட்டார்கள். ரெண்டு வருசத்துக்கு தாங்கற அளவுக்கு ரீசாரஜ் பண்ணியாச்சு.

    முன்னே இருந்த சீட்டில் சேலம் குமாரும். பேசிக்கொண்டே வந்த சுவராஸ்யத்தில் பஸ் ஸ்டாப்பை மிஸ் பண்ணி விட்டேன். என்ற தப்புத்தேன் மன்னிச்சுக்குங்கய்யான்னு சொல்லிட்டு பஸ்ஸை விட்டு இறங்கினேன்.
    எவ்வளவு நேரம் செலவழித்தாலும் நட்புக்களுடன் செலவழிக்கும் நேரமெல்லாம் சந்தோச வரவே.

    சோகமான குட்பையை மறக்கடிக்கும் மருந்தாக இந்த தளமிருக்கும் போது கவலை ஏதுமில்லை. இந்த உறவுகள் ஏற்பட காரணமாக இருந்த ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ஷெரீஃப் ஜி நன்றி. நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

      Delete
  67. பி பி வி நேற்று இரவே படித்து முடித்து விட்டேன். இந்த கதை ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி சொல்லியே ஆக வேண்டும். அதுவும் அந்த மார்கோ அப்பப்பா என்ன ஒரு உருவாக்கம். அருமையான கதை. அந்த பைரன் கேரக்டர் கொஞ்சமும் சளைத்ததல்ல . எதிர் பாராத திருப்பங்கள் எதிர் பாரா முடிவு. கதையை படித்து முடித்து விட்டு கொஞ்ச நேரம் எதுவுமே தோன்றவில்லை. அதன் தாக்கத்தில் அப்படியே அமர்ந்து இருந்தேன்.

    இந்த கதை பேசிய பல விசயங்கள் எந்த காலத்துக்கும் பொருந்தும். இதில் பேசப்பட்ட அரசியல் கார்ப்பரேட் கம்பெனி எல்லாம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

    இந்த கதைக்கு நண்பர்களின் கருத்துக்களை அறிய ஆவல்.

    எனக்கு மிகவும் பிடித்தது. சித்திர தரம் அப்பப்பா

    ReplyDelete
    Replies
    1. பின் குறிப்பு: இந்த கதை சத்தியமாக ரசனையில் முதிர்ந்த வாசகர்களுக்கு மட்டுமே. இளகிய மனம் கொண்ட வாசகர்கள் be careful.

      Delete
    2. https://edition-m.cnn.com/2019/08/04/us/three-shootings-el-paso-mississippi-gilroy/index.html?r=https%3A%2F%2Fedition.cnn.com%2F//

      நேற்று அமெரிக்காவில் இன்னொரு மாஸ் சூட்டிங். இன்றும் தொடரும் அவலம். 😔😔😔😔

      Delete
    3. இந்த கதை சத்தியமாக ரசனையில் முதிர்ந்த வாசகர்களுக்கு மட்டுமே. ///

      ஆமாம். குமார்.

      Delete
    4. \\\பைரன் கேரக்டர் கொஞ்சமும் சளைத்ததல்ல\\\

      புத்திசாலி பைரன் மார்கோவின் ஒவ்வொரு நகர்வையும் கனித்து அவளை கட்டம் கட்ட நினைக்க, அவளோ ஒவ்வொன்றாக அநாயசமா மார்கோ சமாளிக்க. கதை அதகளம் செய்கிறது.

      Delete
    5. MP

      Mass shootings wont stop until weapons lobby stops. Amd weapons lobby will never cease either .. Weapons are among the highest grossers there :(

      Delete
  68. எந்தவித நோக்கமுமில்லை...

    எந்தவித எதிர்பார்ப்புகளுமில்லை...

    தூய அன்பு....

    உள்ளத்தை ஊடுறவும் கனிவான பார்வைகள்....

    ஈரோடு சந்திப்பு ஒரு தனி உலகம்...!!


    நன்றி அன்பு சொந்தங்களே...!

    நன்றி ஆசானே...!!

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்றிருந்தவர்களில் நீங்களும் ஒருவர். சில மணித்துளிகள் ஆனாலும் உங்களை சந்திக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

      Delete
    2. சிக்கென்று கச்சிதமாக - ஆனால் மிக அழகாக - எழுதியிருக்கிறீர்கள் பாட்ஷா ஜி!! இம்முறை உங்களைச் சந்தித்தது நீண்டநாள் பிரிந்திருந்த நண்பனைச் சந்தித்த உற்சாகத்தை ஏற்படுத்தியது!! நன்றிகள் பல - உங்களுக்கும், உங்கள் மக்கன்பேடாவிற்கும்!!

      Delete
  69. 4.8.2019 ஞாயிறு.

    மாலையில் சுமார் 5.30மணியளவில் ஸ்டாலுக்குச் சென்றேன். ஸ்டாலில் Jசார் இருந்தார்.கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர ,ஸ்டால் நிரம்பத் தொடங்கியது.நாங்கள் வெளியிலிருந்து வரவேற்க ,J சார் உள்ளுக்குள் நின்று கொண்டார்.சும்மா சொல்லக்கூடாது மனிதர் சங்கு சக்கரம் போல தீயா வேலை செய்கிறார்.ஸ்டாலுக்கு வரும் ஒவ்வொருவரையும் வரவேற்று, ஆளுக்குத் தகுந்தாற் ஒவ்வொரு காமிக்ஸை பரிந்துரைத்து, அனைவர் முகத்திலும் சந்தோசப் புன்னகையை விதைத்தார்.Hats off J sir.

    திருப்பூரிலிருந்து காமிக்ஸ் நண்பர் ராஜாராம் அவர்கள் வந்திருந்தார்.உற்சாகம் பொங்க பேசியவர் இந்த வருட ஈபுவியில் கலந்துகொள்ள முடியவில்லை என்று மிகவும் வருந்தினார்.மேக்ஸி டெக்ஸ் நார்மல் சைஸ் டெக்ஸ் என கொள்முதல் செய்தார்.அண்டர்டேக்கரை ஆர்வமுடன் அள்ளினார், டியூராங்கோவை ஆசையுடன் அரவணைத்தார்.நீண்ட நேரம் பேசியவர், பிஸ்டலுக்கு பிரியாவிடையுடன், நம்மிடம் பிரியாவிடை பெற்றார்.மனிதருக்கு கார்டூன் மேல் அவ்வளவு ஈடுபாடு இல்லை.

    இன்னொரு திருப்பூர்காரரும் வந்திருந்தார்.அவர் டெக்ஸ் வெறியர்.வெறியர் என்று சொல்வதற்கு காரணம் உண்டு.அவர் டெக்ஸை தவிர வேறு காமிக்ஸ் எதுவும் படிப்பதில்லை என்ற தீவிர கொள்கை உடையவர்.மேக்ஸி டெக்ஸ், படிக்காத வேறு சில டெக்ஸ் என வாங்கியவர், மற்ற ரேக்குகளில் பார்வையைக்கூட திருப்பவில்லை என்றால் பாருங்களேன்.நானும் டியூராங்கோ, பவுன்சர், அண்டர் டேக்கர் லக்கி என தம் கட்டி பார்த்தேன், அவர் அசராமல் 'படிச்சா டெக்ஸ் மட்டுந்தேன் 'னு சிம்பிளா முடித்துக் கொண்டார்.

    மகளுக்கு ஸ்மர்பை தேர்தெடுத்த தாய்
    தன் மகனுக்கு மேக்ஸி லக்கியை வாங்கித் தந்த தந்தை, தன் மகளுக்கு கௌபாய் உலகைத்தான் அறிமுகப்படுத்துவேன் 'ஈரோட்டில் இத்தாலியை பரிசளித்த தந்தை.கேப்டன் பிரின்ஸ் கதைகள் மட்டும் பர்சேஸ் செய்த நண்பர் , இரும்புக் கை மாயாவியைத் தேடிய இரு இளைஞர்கள், ஸ்பைடரைக் குறி வைத்துப் பாய்ந்து எடுத்த சிறுவன் என விதவிதமான வாசகர்களின் வகைவகையான ரசனைகளை முழுதாக உணர்ந்தேன்.

    ஒவ்வொருவரையும் திருப்தி செய்வது எவ்வளவு சிரமம் எனப் புரிந்தபோது ஆசிரியரின் தலைநோவு புரிந்தது.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் GP!! அழகாக விவரித்திருக்கிறீர்கள்!!

      Delete
  70. * வருடத்தின் இரண்டு அழகான தினங்களைக் கடந்து, மீண்டும் குண்டுச்சட்டி வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கிறேன்! இதுபோன்ற உற்சாக தினங்கள் வருடத்திற்கு இருமுறைகளாவது வந்துவிடாதா என்ற ஏக்கமாய் இருக்கிறது!

    * ஆடிப் பெருக்கினால் சில நண்பர்கள் ஆப்சென்ட் என்ற போதிலும் உற்காகத்தோடு பங்கேற்ற நண்பர்களின் எண்ணிக்கை சுமார் 135. (இரத்தப்படலம் களமிறங்கிய கடந்தவருடத்தில் இந்த எண்ணிக்கை சுமார் 180)

    * 9:30 மணிக்கே சீனியர் எடிட்டரும், கருணையானந்தம் அவர்களும் (உடல் சற்று தளர்ந்திருந்தாலும் உள்ளத்தால்/உற்சாகத்தால் நம் அனைவரையும் மிஞ்சிய வாலிபர்கள்) மீட்டிங் ஹாலுக்கு ஒரு விசிட் அடித்து ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதாவென பார்த்துவிட்டுச் சென்றனர்!

    * லயன் அலுவலகப் பணியாளர்கள் மேடையின் ஓரத்தில் நிறைய அட்டைப்பெட்டிகளை அடுக்கி வைத்திருந்தனர் (பன், பிஸ்கட், வாட்டர் பாட்டில்கள், பரிசுப் புத்தகங்கள், சர்ப்ரைஸ் இதழ்கள், இன்னபிற). சர்ப்ரைஸ் இதழ்கள் அடங்கிய பெட்டி எதுவாக இருக்கும் என்று நாக்கைத் தொங்கப்போட்டபடி தேடிப் பார்த்தபோது ஒரு பெட்டியில் மட்டும் 'Please do not open this box - S. Vijayan' என்று எழுதியிருந்தது!! பெட்டியைத் திறந்துவிடலாம்.. யாராவது கேட்டால் 'இங்கிலீஸ் படிக்கத் தெரியாதுங்க'ன்னு சொல்லி சமாளிச்சுடலாம்னு மனசு சொன்னாலும், 'S.vijayan' என்ற அந்த எழுத்துக்கள் தடுத்துவிட்டன!

    * 10:30 சுமாருக்கு ஹால் நிரம்பியிருக்க, எடிட்டர்கள் குழு மேடையேறிய பின்னரும் 11 மணி வரை நண்பர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள, நலம் விசாரித்திட, கொஞ்சிக்குலாவிட நேரம் கிடைத்தது!

    * வந்திருந்த நண்பர்கள் அனைவரிடமுமே உற்சாகம் கரைபுரண்டு ஓடியதை கண்ணாரக் கண்டு களிப்படைய முடிந்தது!

    * ரெகுலர் இதழ்களை நம் அன்புக்குரிய கெஸ்ட் ஆப் ஹானர்கள் பலத்த கரகோசங்களுக்கிடையே வெளியிட, சர்ப்ரைஸ் இதழ்களை வெளியிட்டதோ நம் செல்வத்தின் செல்வங்கள்!! ராப்பருக்குள் ராப்பர் - ராப்பருக்குள் ராப்பர் - என்று முடிவேயில்லாமல் வந்துகொண்டிருக்க - திக்திக் தடக்தடக் இதயத்தோடு நாம் தவிப்பதை எடிட்டர் மோனலிசா புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்தார் (கிர்ர்ர்...). ஒருவழியாய் புத்தகம் வெளிப்பட்டபோது 'பழிவாங்கும் பாவை' அட்டைப்படத்தில் பிரம்மாண்ட அணிவகுப்பை நடத்தியிருந்த தல'யின் மிடுக்கும், புத்தகத்தின் மேக்ஸி சைசும் அரங்கில் குழுமியிருந்த அத்தனை நண்பர்களது மூச்சையும் ஒருகணமாவது இழுத்துப்பிடித்திருக்கும் என்பது உறுதி!! 'ஏதோ ஒரு மறுபதிப்பாத்தான் இருக்கும்' என்று நண்பர்களில் பலர் கணித்திருந்தாலும், இந்த பிரம்மாண்ட சைஸ் யாருமே எதிர்பார்த்திடாத ஒன்று!! அங்கே நிக்கறீங்க எடிட்டர் சார்!!

    (நேரம் கிடைக்கும்போது தொடரும்...)

    ReplyDelete
    Replies
    1. AngE nikkarathu MAXI Editor :-) Nammavar THOTTAVODU THALAIVALI endru title vaithukkondirukkiraar :-) :-) :-)

      Delete
  71. Along with the Erode Special you have sent a 48 pages booklet supposed to be an opinion poll. It does not say what to do with that. 48 pages of wasted paper and effort. Instead you could have given additional reading material for the same effort.

    Further the same pattern with the same colour illustration could have been put up as a web poll, where many would have answered (not just subscribers) and you would have got a much better response and opinion.

    Any case the 48 page booklet is a waste since I am going to junk as I do have the time or energy to take it to the post box to post it affixing the enormous value of stamp

    ReplyDelete
    Replies
    1. For my above post/suggestion the reply from lion
      Sir,

      We decide what the freebie is to be....and you decide what to do with it !

      Simple as that sir !

      Regards.
      What arrogance

      Delete
    2. My reply for that is

      Yes.will take a call at the appropriate time. God bless you

      Gopalakrishnan

      Delete
    3. // Any case the 48 page booklet is a waste since I am going to junk as I do have the time or energy to take it to the post box to post it affixing the enormous value of stamp //

      How do I take the above line? if you consider the replay is "arrogance", then the above line from you also consider as "arrogance" in your language. So it is how you take it.

      Also I don't find anything wrong with the reply, it is how do you take it friend

      // We decide what the freebie is to be....and you decide what to do with it !

      Simple as that sir !

      //

      Delete
  72. காமிக்ஸ் திருவிழாவின் வீடியோ தொகுப்புகளைக்காண "இங்கே க்ளிக்குங்க பாஸு!"
    நமக்காகத் தொகுத்து வழங்கியிருப்பவர் - Parani from Bangalore! நன்றி நண்பா!!

    ReplyDelete
  73. காமிக்ஸ் திருவிழாவின் புகைப்படப் பதிவுகளைக் காண "இங்கே க்ளிக்குங்க பாஸு!"
    நமக்காகத் தொகுத்து வழங்கியிருப்பவர் - Parani from Bangalore! மீண்டும் நன்றிகள் நண்பா!!

    ReplyDelete
  74. பல்வேறு நண்பர்களை ஈ.பு.வி யில் சந்தித்தது மகிழ்ச்சி,அரங்கம் முழுவதிலும் நண்பர்கள் மகிழ்ச்சியில் நல்லதொரு நேர்மறை எண்ணம் பரவி இருந்ததாலோ என்னவோ விழா மிக,மிக மனநிறைவுடன் முடிந்தது...
    காரப்பொறியும் + காமிக்ஸுமாக விழா கலகலப்பாய் முடிந்தது....

    ReplyDelete
  75. அன்பு நண்பர்கள்..

    கிரிதரன்,
    ராகவன்,
    சுப்பிரமண்யம் சார்,
    மாயாவி சிவா சார்,
    மற்றும் பல நண்பர்களை சந்திக்க முடியாமல் போனதில் மனவருத்தம்.

    ReplyDelete
  76. Replies
    1. இன்ஷா அல்லாஹ் ...

      நிச்சயம் சந்திப்போம் நண்பரே

      Delete
  77. இந்த முறை ஈரோட்டுப்பயணம் மிக அருமையாக இருந்தது. மீட்டிங் ஹாலில் தனித்து சொல்வதை விட அனைத்தும் அருமை .. 💛💙💜💚❤

    ReplyDelete
  78. Dear Editor,

    The best release this EBF is neither The ERODE EXPRESS books nor the MAXI REPRINTS - they are good - yep, surprises - yeah but the best one is reserved for the FULL FLEDGED BLOW UP of TEX. Thanks for this !! My boss is going to love it as a gift from me :-)

    ReplyDelete
  79. மறுபடியும் தளம் சூடு பிடித்து விட்டது போலவே. Wow I like it a lot

    ReplyDelete
  80. பிஸ்டலுக்கு பிரியாவிடை இன்று படிக்க எடுத்தேன்
    கார்ட்டூன் மாதிரியான கதை என்பதால் எப்படியிருக்குமோ என்று அசுவாரசியமாக படிக்க ஆரம்பித்தேன் கதையின் விறுவிறுப்பில் நான்கு பாகங்களையும் ஒரு சேர படித்து முடித்து விட்டேன் ..

    எடுத்து காட்டுக்கு இரண்டு வசனங்கள் ::

    ஒரு நாள் லாஸ் ஏஞ்சல்சில்ஒரு வழிபோக்கன் சுடுகாட்டிற்கு வேகமா போறதுக்கு வழி கேட்க அவனை கோச்சு வண்டி சக்கரங்களுக்கு அடியில கடாசி புட்டார்....
    சுடுகாட்டுக்கு வேகமா போக அதை விடவும் வேகமான வழிதான் ஏது ?


    அப்போல்லாம் ஒரு பொட்டு சரக்கு கூட தேவைபடல எனக்கு!!
    மரணத்தை விதைச்சு போறதே செம போதையா இருந்தது!!


    இந்த வசனங்கள் நகைச்சுவையா தெரிந்தாலும் அதிலுள்ள குரூரம் என்னவென்பது??

    ரொம்ப சாதாரணமான பேச்சு நடையில்
    மொழி பெயர்ப்பு வேற லெவல் ..


    இன்றைய நாளிதழில் வந்த அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 20 பேர் பலி என்ற தகவல் என்னவொரு தற்செயலான சோக நிகழ்வு....
    பி.பி.வி இறுதி பக்கத்தில் உள்ள வாசகம் மனதை கனமாக்கியது ..


    இன்னும் என்னென்னவோ எழுத தோன்றியது ஆனால் கதையில ஒன்னு ரெண்டு பாயிண்ட் ன்னா எழுதலாம் மொத்த கதையுமே நல்லா இருந்தா எத குறிப்பிட்டு எழுதுவது??

    மொத்தத்தில் ஈரோடு ஸ்பெஷல்க்கு முற்றிலும் தகுதியான கதை ஆசானே ...

    ReplyDelete
  81. பிஸ்டலுக்கு பிரியா விடை...
    அத்தியாயம் 1,2...
    சும்மா எக்ஸ்பிரஸ் ரெயில் போல தடதடனு தெரிக்குது...
    பெக் என்னும் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்ததுள்ளது இதுவரைக்கும்...
    கதை நகர்த்தி போகும் பானி மிகவும் நுனுக்கமாக கையாள பட்டுள்ளது...இதுவரைக்கும்...Hatsoff...
    சரி நா போய் மிதத்தையும் படித்து விட்டு வந்து
    ரிவ்யு செய்கிறேன்

    ReplyDelete