Powered By Blogger

Thursday, August 08, 2019

ஜன்னலோரம் ஒரு ஆந்தை !

நண்பர்களே,

வணக்கம். மேஜையின் ஒரு பக்கம் அடுத்த ஜம்போவின்  பக்கங்கள் குவிந்து கிடக்கின்றன....இந்தாண்டை ட்ரெண்ட் கதை மொழிபெயர்ப்பில் முதல் பாதி நிறைவுற்ற நிலையில், பிற்பாதி அனாமத்தாய் கிடக்கிறது ; அப்பாலிக்காவோ டெக்சின் ஒரு 220 ரௌத்திர சாகசம் பேனா பிடிக்கக் கோரி காத்திருக்கிறது ! ஆனால் மையமாய் குந்தியிருக்கும் நானோ மோவாயைத் தடவிக் கொண்டே ஒருவித மோன நிலையில் மோட்டைப் பார்ப்பதும், மேஜை மீது கிடக்கும் பக்கங்களை வெறித்துப் பார்ப்பதுமாய்ப் பொழுதை ஒட்டிக் கொண்டிருக்கிறேன் !! "ஏலே மக்கா ...தேதி 10 ஆகப் போகுது....இன்னும் 10 நாளிலே செப்டெம்பர் பொஸ்தவம்லாம் பிரிண்டிங்குக்கு ரெடியாகணும்லே !!" என்றொரு குரல் உள்ளுக்குள் உரக்க ஒலித்தாலும், தமன்னாவைத் தரிசித்து வந்த தங்கக்கம்பியைப்  போலொரு மந்தகாசப் புன்னகையை மாத்திரமே உதிர்க்க இங்கே சாத்தியப்படுகிறது !! 'சரி....இது இன்னொரு ஈரோட்டுப் பயணத்தின் பின்விளைவு தான் ; தானா இறங்கிட்டா ஓ.கே. ...இல்லாங்காட்டி கருப்பசாமி கோவிலிலே போயி திருநீறு போட வேண்டியது தான் !' என்று பாரியாளும் தீர்மானிக்க - கோமாளிக் கூத்து தொடர்கிறது !!

இதோ இந்தப் பதிவை நான் டைப்புவது வியாழன் மதியம் .....! அப்படியே அந்தக்காலத்து சினிமாக்களில் வரும் ஒரு flashback மியூசிக்கை பின்னணியில் ஒலிக்கச் செய்யாமலே, வளையம் வளையமாய் விரியச் செய்யாமலேயும் மண்டை தானாய் பின்னோக்கி எங்கெங்கோ பயணிக்கிறது ! சரியாக 6 நாட்களுக்கு முன்பாய் இதே பொழுதில் மூட்டைகளைக் கட்டிக்கொண்டு ஈரோட்டுக்கு ரயில் ஏறிய நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன !! அந்த ஈரோட்டு நினைவுகளோடே இன்னும் கொஞ்சம் சவாரி செய்தால், முதன்முதலாய் ஈரோட்டில் புத்தக விழாவினில் பங்கேற்கக் கிளம்பி வந்த பொழுதில் ஜூனியர் எடிட்டர் தேடித் தந்திருந்த "இரவே..இருளே..கொல்லாதே" கதையைப் படித்தபடிக்கே ஈரோட்டில் ரயில் நின்றுவிட்டதைக்கூட உணராது லயித்துக் கிடந்த அனுபவம் ; அந்த வருடம் இன்னொரு பதிப்பகத்துடன் ஸ்டாலில் நடத்திய ஒண்டுக்குடித்தனம் ; முதன்முதலாய் நண்பர்களுடன் நடத்திய மரத்தடி மீட்டிங்கு ; தொடர்ந்த வருடங்களின் LMS ; இரத்தக் கோட்டை : ஈரோட்டில் இத்தாலி வெளியீட்டு உற்சாகங்கள் ; மரத்தடியில் நண்பர் பிரபாகரின் பிறந்த நாளின் பொருட்டு கேக் வெட்டிய தருணம் ; எழுத்தாளர் சொக்கன் அவர்களை நம் சந்திப்புக்கு வரவேற்ற பொழுது ; உச்சக்கட்டமாக "இரத்தப் படல" வண்ணத் தொகுப்பின் ரிலீஸின் அதகளம்  என்று வரிசை கட்டுகின்றன கலர் கலரான நினைவுகள் ! Cut to the immediate past - போன வெள்ளி மாலையில் ரயிலில் ஜூனியருடன் ஏறி ஏதேதோ மொக்கை போட்டபடிக்கே மஞ்சளநகரைச் சென்றடைந்தது அப்படியே கண்முன் வருகிறது !

அதே பரபரப்பான ரயில் நிலையம் ; செங்கல்கட்டி சைசுக்கு ஆரஞ்சு நிறத்திலான அல்வா பாக்கெட்டுகளுடனான அதே ஸ்டால்கள் ; பிஸியான அதே பஸ் ஸ்டான்ட் & பஜார் ; VOC பார்க்கை நெருங்கிவிட்டதை உணர்த்தும் அதே புத்தக விழா வரவேற்ப்புப் பதாகைகள், வளையங்கள் ; நடப்பன / பறப்பன / நீந்துவன என சகலத்தையும் சமைத்துப் பசியாற்றும் அதே விடுதிகள் ; அந்தச் சாலையெங்கும் இறைந்து கிடக்கும் அதே புத்தக விழாவின் நோட்டீஸ்கள் ; நிசப்தமாய் உயர்ந்து நிற்கும் Le Jardin ஹோட்டல் என்று அத்தனையும் துளி மாற்றம் காணாது இருக்க - எங்கள் அறைக்குச் சென்று அடங்கிய போது மணி 11 ஆகியிருந்தது ! ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் நமக்கு ஏகமாய் சந்தோஷங்களைத் தந்துள்ள  புத்தக அரங்கு நிலவொளியில் குளித்துக் கிடக்கும் காட்சி நிசப்தமாய் விரிந்தது ! இதன் பெயரைச் சொல்லித் தான் நாம் எத்தனை எத்தனை தூரம் உற்சாகமாய்ப் பயணித்துள்ளோமென்ற புரிதலோடு கட்டையைக் கிடத்தினேன் ! இந்த சந்தோஷ நினைவுகளின் இன்னொரு அத்தியாயமாய், காத்திருக்கும் புதுப் பொழுதின் காலையுமே உருமாறிட்டால் பிரமாதமாக இருக்குமே என்றதொரு எண்ணத்தோடே தூக்கத்துக்குள் கரைந்தால் - கனவுகளெல்லாம்  கன்னாபின்னாவென்று நமது 'சஸ்பென்ஸ் இதழ்களை' சுற்றியே கும்மியடித்தன !! "மண்டையை மறைச்சாலும், கொண்டையை மறைக்கலியே ?" என்ற கதையாய் 'MAXI லயன்' பண்டலை நம்மாட்கள் பப்பரக்கா என்று திறந்து போட்டு வைத்திருப்பது போல் கனவில் வர, நாலரை மணி சுமாருக்கெலாம் விழித்து மடக் மடக்கென்று தண்ணீரைக் குடித்து வைத்தேன் !! தூக்கம் பிடிக்காது படுக்கையில் புரளும் போது  - ஒவ்வொரு ஆண்டுமே என்னை ஆட்கொள்ளும் வழக்கமான பீதிப் பிசாசுகள் அப்போதும் என்னோடு மல்லுக்கட்டத் துவங்கின ! "காலை பத்து மணிக்கு ஆரம்பிக்கும் சந்திப்பை 4 மணி நேரங்களுக்கு எவ்விதம் நீட்டிப்பதோ  ? பன்னிரண்டு மணிவாக்குக்கே பேச வேண்டிய மேட்டர் சகலமும் ஓவர் என்றால் மீந்திருக்கக்கூடிய  2 மணி நேரத்துக்கு என்ன செய்வது ?" என்ற டர்...ஒவ்வொரு ஆண்டுமே என்னை அலைக்கழிப்பதுண்டு ! அதே போல 150 பேர் அமரக்கூடிய அரங்கில் குறைவான turnout மாத்திரமே தேறி - ஹால் ஜிலோவென்று காற்று வாங்கினால் என்ன செய்வதென்றே பயமும் ரெகுலராய்த் தோன்றிடுவதுண்டு ! பற்றாக்குறைக்கு இம்முறை ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று நமது சந்திப்பை நாம்  திட்டமிட்டிருக்க - "இரத்தப் படலம்" போலானதொரு big name இதழின் ரிலீஸ் இலா நிலையில், வாசகர்கள்  சொல்லிக்கொள்ளும் எண்ணிக்கையில் வருகை தருவார்களா ? மாட்டார்களா ? என்ற கலக்கமும் கைகோர்த்துக்கொண்டது !  "சஸ்பென்ஸ் இதழ்கள் " என்ற பில்டப்பை ரொம்பப் பெருசாய் செய்துவிட்டு அப்புறம் அதே சைசில் பல்பு வாங்கிடும் படலம் வேண்டாமே என்ற முன்ஜாக்கிரதையின் பொருட்டு - அது பற்றி நான் அவ்வளவாய் வாய் திறக்க முனைந்திருக்கவில்லை  என்றபோதிலும் - உள்ளுக்குள் அது சார்ந்த பயமும் குடியிருக்கவே செய்தது ! "அட..இம்புட்டுதானாக்கும் உன் சஸ்சுபென்சு ?" என்று அந்த 2 MAXI லயன் இதழ்களையும் வாரிடுவீர்களோ என்ற மெலிதான கலக்கமும் கலந்து கொள்ள, பொழுது விடியும் வரைக்கும் குட்டி போட்ட பூனையைப் போல அறைக்குள் உலாற்றிக்கொண்டே இருந்தேன் !! இந்தக் கூத்துக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு நிம்மதியாய்த் தூங்கிக் கொண்டிருக்கும் ஜூனியரைப் பார்த்த போது - 'அட...காதுவரைக்கும் கிழியும் வாயும், தொண்டைக்குழி வரைக்கும் பயணமாகும் பாதமும் நமக்கு இல்லாங்காட்டி - இதே நிம்மதியான உறக்கம் நமக்கும் வாய்த்திருக்குமோ ?"என்ற எண்ணம் தோன்றாதில்லை !!

பொழுதும் புலர, முதல் ஆளாய் முக்கால் டிராயரில் கீழே போய் ஒன்னரை இட்லியை விழுங்கி விட்டு மாடிக்குத் திரும்ப முற்படும் போது ஒரு பரிச்சயமான உருவம் குளித்து, ரெடியாகி, பிரெஷாக ஹோட்டல் வாசலில் நிற்பதைப் பார்க்க முடிந்தது !! "ஆத்தாடியோவ் - பொருளாளர் ராவில் லேட்டாய் வந்திறங்கியும், காலையில் முதல் ஆளாய்த் தயாராகி நிற்கிறார் !!" என்றபடிக்கே ஓட்டமெடுத்தேன் குளியலைப் போட ! குளித்து முடித்த கையோடு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் மரத்தடியில் நண்பர்களின் குழுமம் சிறுகச் சிறுக வலுப்பெறுவது தெரிந்தது !!  கீழே அரங்கில் நமது பேனரைக் கட்டிய கையோடு "ஈரோடு எக்ஸ்பிரஸ்" முன்பதிவு புக் பாக்கெட்டுகளை எடுத்து அடுக்கச் சொல்லியிருந்தேன் நமது பணியாட்களிடம் ! "எல்லாம் ரெடி !" என்று சொன்னவர்களிடம் மறுக்கா உறுதி செய்து கொண்டேன் - சஸ்பென்ஸ் இதழ்களின் பண்டலை இன்னமும் உடைக்கலை தானென்று !! நான்பாட்டுக்கு லார்ட் லபக்தாஸ் போல போய் நிற்கும் நேரத்துக்கு ஆளாளுக்கு MAXI லயனைப் புரட்டிக் கொண்டிருந்தால் - அப்பாலிக்கா வழியக்கூடிய அசடைத் துடைக்க ஒரு ஈரோட்டு ஜமுக்காளமே அவசியப்பட்டிருக்குமே ?! பத்தேகால் மணிக்கு அரங்குக்கு நானும் ஜுனியரும் நுழைந்தது மட்டுமே ஞாபகமுள்ளது ! தொடர்ந்த 5 மணி நேரங்களுக்கு அங்கு அரங்கேறிய அத்தனையுமே ஒரு surreal உணர்வையே உண்டு பண்ணுகின்றன !!

நண்பர்களை மொத்த மொத்தமாய்ப் பார்த்த கணத்தில் அது வரையிலும் பிரேக் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த பேஸ்மெண்ட் L & T சிமென்டின் ஸ்திரத்தன்மையைப் பெற்றது போல் நிலைகொண்டிட - சிறுகச் சிறுக அந்தக் காலையின் ரம்யம் களை கட்டத் துவங்கியது ! நம் சிறப்பு விருந்தினர்கள் - அறிவிக்கப்பட்ட 2 ஸ்பெஷல் இதழ்களையும் ரிலீஸ் செய்ய - அவற்றைக் கையில் ஏந்தும் ஆவலை விடவும், அடுத்த  2 சஸ்பென்ஸ் இதழ்கள் என்னவென்று தெரிந்து கொள்ளும் அவாவே அரங்கில் அலையடித்ததைப் பார்க்க முடிந்தது !! இரண்டரை மாதங்களாய் கோஷாப் பெண்ணைப் போல கண்ணில் காட்டாதே இவற்றைப் பொத்தி வைத்திருந்ததன் பலனை எதிர்பார்ப்புகளின் கனத்துடனான  அந்த நொடியில் தான் முழுசாய் உணர முடிந்தது !! இதில் பெரும்கூத்து என்னவென்றால் - MAXI லயனின் 2 இதழ்களையும் சீனியர் எடிட்டருக்கே அதுவரையிலும் காட்டியிருக்கவில்லை ! ஒரு மாதிரியாய் பார்சலுக்குள் பார்சலாய்ப் பதுங்கிக்கிடந்த MAXI லயனின் இதழ் # 1 & 2-ஐ நமது பொருளாளரின் செல்வங்கள் வெளியிட்ட நொடியில் ஏதோ சந்திராயனையே ஏவியது போலொரு திருப்தி எனக்கு - simply becos 'ஆபரேஷன் சாக்கைப் போட்டு அமுக்கு' முழுசாய் வெற்றி கண்டிருந்தது !! 2 ஆண்டுகளுக்கு முன்பாய் கர்னல் ஆமோஸ் இதழினை புக் fair ஸ்பெஷல் என ஓசையின்றி நான் திட்டமிட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே - அதனை நமது "கைவசமுள்ள ஸ்டாக்" லிஸ்டிலிருந்து கண்டு பிடித்து நீங்கள் எனக்குப் புளிப்பு முட்டாய்  கொடுத்தது நினைவுள்ளது !! So ரிலீஸ் வரைக்கும் இம்முறை ரகசியம் காக்க முடிந்ததில் ஒரு ஜாலியான த்ரில் எனக்கும், ஜுனியருக்கும் !!

ஒரு மாதிரியாய் ஆரவாரங்களுக்கு மத்தியில் அன்றைய பொழுதின் மையப்புள்ளி  unveil செய்யப்பட பிற்பாடு - பெவிக்காலை கழுவிய உத்வேகத்தில் பெரியசாமி பின்னணிக்குப் போக - உலகநாதன் செம வேகத்தோடு களமிறங்க - கடந்த 12 மாதங்களின் இதழ்கள் சார்ந்த அலசல் வேகமெடுத்தது ! இதனை நான் துவக்கத்தில் திட்டமிட்டிருந்தது - பொழுதைக் கடத்துமொரு யுக்தியாய் மாத்திரமே என்றாலும் - அதனை முறையாய்ப் பயன்படுத்திக்கொண்டால் 2020-ன் அட்டவணை திட்டமிடலுக்குப்  பெரிதும் உதவிடும் என்பது புரிபட்டது ! அதன் பலனே அன்றைய interactive session !! Trust me guys - உங்களது அன்றைய inputs காரணமாய், கிட்டத்தட்ட 99.5% நிறைவுற்றிருந்த அட்டவணையினில் சிற்சிறு பட்டி-டிங்கேரிங் அரங்கேறி வருகிறது !! காத்திருக்கும் ஆண்டின் திட்டமிடல் சிறப்பாய் அமையின் - அங்கு உங்களின் தடங்களும் நிச்சயமாய்ப் பதிந்திருக்கும் என்பது உறுதி !! Maybe..just maybe...காத்திருக்கும் காலங்களில் நமது புது அட்டவணையின் ரிலீஸ் தருணத்தினில் இது போலொரு வாசக சந்திப்பை எங்கேனும் நிகழ்த்திட இயன்றால் - எனது ஒவ்வொரு தேர்வின்  பின்னணியினையும் ; நிராகரிப்புகளின் காரணங்களையும்  அலசிட சாத்தியமாகிடக்கூடும் !! 

அப்புறமாய் சீனியர் எடிட்டர் ; கருணையானந்தம் அவர்கள் கொஞ்ச கொஞ்ச நேரங்கள் பேசிட - நண்பர்களில் சிலர் மைக் பிடிக்க - நேரம் ஓடிய சுவடே தெரியாது மதிய சாப்பாட்டு வேளையினை தொட்டு நின்றோம் ! 3 பந்திகளில் பசியாறிய பிற்பாடு - MAXI லயன் இதழ்களை வாங்கிய கையோடு ; கணக்கற்ற selfie-க்களைக் க்ளிக்கிய பின்னே விடைபெற்ற அத்தனை பேரிடமும் ஒருவித நிறைவு தென்பட்டதே எனது அன்றைய பொழுதின் highlight !! அரங்கினுள் AC மட்டும் சொதப்பாது இருப்பின் - அன்றைய சந்திப்பு இன்னமுமே செமத்தியாக இருந்திருக்குமென்ற ஆதங்கத்தை மட்டும் சுமந்து கொண்டே ரூமுக்குத் திரும்பிய போது - மாலை நாலாகியிருந்தது !! இன்னுமொரு 365 நாட்களுக்கு இந்த நினைவுகளின் உத்வேகத்தோடே பயணிக்கலாமென்ற நம்பிக்கையோடு ஜன்னலருகே நின்றபடிக்கே பிஸியாய்க் காட்சி தந்த அதே புத்தக விழா அரங்கினை இப்போது பார்த்த போது - மனம் முழுக்க இளையராஜாவின் மெலடி தான் ஒலித்தது போலிருந்தது !!

அன்றைய பொழுதின் கணக்கிலா சந்தோஷத் தருணங்களை chronicle செய்திட எனக்கு ஏகமாய் ஆசை தான் ; ஆனால் மறதியில் எதையேனும் / யாரையேனும் குறிப்பிட மறந்து போயின் அது பிழையாகிடும் என்பதால் - இதோவொரு ஆந்தை விழியினில் மேலோட்டப் பார்வை :


  • ஆளுக்கொரு name tag கொணர்ந்திருந்தேன் - 'தல' ; 'தளபதி' ; கிட் ஆர்டின் & லக்கி லூக் படங்களோடு - இஷ்டப்பட்ட நாயகரைத் தேர்வு செய்து கொள்ளட்டுமே என்று !! "சர்வமும் நானே" என்ற tag line சகிதமிருந்த TEX படத்துக்கே அடிபிடி !! 
  • மக்கன் பேடா என்ற ஸ்வீட்டோடு பெங்களூரு / திருப்பத்தூரிலிருந்து நண்பர் அஹ்மத் பாஷா ஆஜரானது செம sweet surprise !! 
  • பாண்டிச்சேரியிலிருந்து வருகை தந்திருந்த நமது guest of honor உடன் நண்பர் கலீல் மாத்திரமன்றி - 2 surprise visitors கூட !! அது "தமிழ் காமிக்சின் வரலாறு" என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றிருக்கும் டாக்டர்.பிரபாவதியும் அவரது கணவரும் !! பிரபாவதி நம் வட்டத்துக்குப் புதியவர் அல்ல தான் ; ஆனால் அவரது கணவரும் ஒரு 'பொம்ம பொஸ்தவ' விழாவுக்கு வருகை தந்தது மாத்திரமன்றி, சுற்றி நடக்கும் களேபரங்களை சுவாரஸ்யத்தோடு கவனித்துக் கொண்டிருந்தது செம !! 
  • நமது செனா அனாஜியின் பிள்ளைகள்  - budding doctors தீபக் & அபிராமி சென்னையிலிருந்து கோவைக்குப் பயணித்து, அங்கிருந்து ஈரோட்டுக்கு பின்னிரவில் வந்து சேர்ந்திருந்த போதிலும், காலையில் செம உற்சாகமாய் தந்தையோடு ஆஜரானது இன்னொரு அட்டகாச surprise !! ஏற்கனவே இது குறித்து நண்பர் நமக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்த போதிலும், நான் அதை இங்கே போட்டுடைக்காது இன்னொரு ஸ்பூன் பெவிக்காலை வாயில் பூசிக் கொண்டிருந்தேன் ; கடைசி நிமிடத்தில் ஏதேனும் மாற்றங்களிருப்பின், பொருளாளர்ஜி அப்புறமாய் அதற்கு விளக்கம் சொல்ல வேண்டிப் போகுமென்பதால் மௌனமே safe என்ற காரணத்தினால் ! பொதுவாய் இன்றைய   தலைமுறையின் பிள்ளைகளை  அவர்களது comfort zone-களிலிருந்து வெளியே நகர்த்திக் கூட்டி வருவது எத்தனை கஷ்டம் என்பதை  நாமறிவோம் !! அதுவும் இது அவர்கட்கு நேரடி ஈடுபாடிலா ; முழுக்கவே பெருசுகளாய் சங்கமிக்கும் ஒரு விழா எனும் போது அவர்களது interest levels எவ்விதமிருக்குமோ என்ற சிறு நெருடல் எனக்கிருந்தது !  Maybe அப்பாவின் வற்புறுத்தலின் பேரில் கலந்து கொண்டிருப்பின், சற்றைக்கெல்லாம் போரடித்துப் போய் இருக்க நேரிடின் தவறு அவர்களதாய் இருந்திராது !! ஆனால் surprise ...surprise ....ஹாலிலிருந்த அத்தனை பேரும் டீனேஜுக்கும் ; அதற்கும் கீழிருக்கும் ஏஜ்களுக்கும் ஒரேயடியாய்ப் பாய்ந்திட்ட medical miracle-ஐ முகம் நிறைந்த புன்சிரிப்புகளோடு ரசித்துக் கொண்டிருந்தனர் !! வீட்டுக்குப் போய் அப்பாவை எத்தனை கலாய்த்தனர் என்பதையும் ; தத்தம் நண்பர்களிடம் இங்கே நடந்த கூத்துக்களை எவ்விதம் பகிர்ந்து கொண்டனர் என்பதையெல்லாம் இன்னொரு நாளில் கண்டுபிடிக்க முயற்சித்திட வேண்டும் !! 
  • பத்தே வயதானதொரு ஈரோட்டுச் சுட்டிப் புயல் ஒன்று மேடையேறி, மைக் பிடித்து "Smurfs போடுங்க !!" என்று சொன்னது a wow moment !! 
  • அதே போல ஆசிரியர் ஒருவர் - கற்பித்தலுக்கும், காமிக்ஸுக்கும் உள்ள பாலத்தைப் பற்றி பேசியதும் ; ஆசிரியை ஒருவர் சிறு பிள்ளைகளின் வாசிப்புக்காகவேணும் நாம் செய்திடக்கூடிய மாற்றங்கள் பற்றிப் பேசியதும் lovely !! 
  • நண்பர் கரூர் ராஜசேகரன் பூரணமாய்க் குணமாகி, செம ஆர்வமாய் இம்முறை கலந்து கொண்டது - ஒரு மனம் குளிரச் செய்த moment ! ஓசையின்றி ஒரு துண்டுச் சீட்டில் - "வான் ஹாமின் one shot கதைகளை போடுவதாய்ச் சொல்லியிருந்தீர்களே ?" என்று நினைவூட்டியிருந்தது என்னை அசரச் செய்தது ! நல்ல கதைகளாய்க் கிடைத்தால் நிச்சயம் வெளியிடுவோம் சார் !! 
  • வழக்கம் போலவே போட்டோக்களையும், வீடியோக்களையும் சுட்டுத் தள்ளும் பொறுப்பைத் தனதாக்கிக் கொண்டே - நமது அரட்டைகளிலும் பங்கேற்ற நண்பர் பெங்களூர் பரணி - as always a picture of efficiency !! 
  • சிவகாசி ரவுண்டு பன் சீக்கிரமே உலகப் பிரசித்தி பெற்று, ஒரு புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பிக்க நேர்ந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை போலும் !! இம்முறையும் hit !! Maybe அடுத்தவாட்டி ஏதேனும் தீபாவளி ; ஆண்டுமலர் ; பொங்கல்  போன்ற விசேஷங்களின் போது மிட்டாய்களுக்குப் பதிலாய், கூரியர் டப்பிக்களில் சந்தா நண்பர்கள் அனைவருக்குமே இதையே அனுப்பலாமோ ?  
  • சீனியர் எடிட்டருக்கும், கருணையானந்தம் அவர்களுக்கும் இம்முறையும்  ரொம்பவே சந்தோஷம் - நண்பர்களின் உத்வேகத்தைக் கண்டு !! Maybe அடுத்த முறை நமது டீம் முழுசையுமே ஈரோட்டுக்கு வரவழைத்து அவர்கள் அனைவரையும் இந்த சந்தோஷங்களில் ஒரு சிறு பங்கெடுக்க முனைந்திடலாமோ ? 
  • "எங்க வீட்டில் டெக்சின் முதல் ரசிகை எங்க தாயார் தான் !!" ஈரோட்டில் மட்டுமே இந்த வாசகத்தை at least ஒரு அரை டஜன் தடவைகள் கேட்டிருப்பேன் !! Floored !!!!
  • ஜேம்ஸ் பாண்ட் ; ட்யுராங்கோ ; லார்கோ ; தோர்கல் என்று ஜாம்பவான்கள் இன்னும் எத்தனை பேர் களம் கண்டாலும் - 'தல' & 'தளபதி' எப்போதுமே வேறொரு லெவெலில் தான் இருப்பார்களென்பது அன்றைக்கு இன்னொருமுறை ஊர்ஜிதமானது !! சொல்லப் போனால் - இளம் டைகர் பற்றிய அலசலுக்குள் புகுந்த போது, எஞ்சியிருக்கும் 12 புதுக் கதைகளை வெளியிடுவது குறித்து  நான் சத்தியமாய் இத்தகைய வரவேற்பினை உங்களிடம் எதிர்பார்த்திருக்கவில்லை ! கிட்டத்தட்ட அத்தனை பேருமே இரண்டு கைகளையும் தூக்காத குறை தான் என்ற போது வாயடைத்துப்போனேன் நான் !! In fact அடுத்த ஈரோட்டு ஸ்பெஷல் இதழ்களாக கென்யா + அமெரிக்கா ஆல்பங்களையே மனதில் கொண்டிருந்தேன் ! ஆனால் நீங்கள் போட்ட அதிர்வேட்டு ஆர்ப்பரித்ததில் - ERODE 2020 : "இளம் டைகர் 12 ஆல்பங்கள்" என்று தீர்மானிக்கச் செய்தது !! Talk about people power !! இதனை எவ்விதம் திட்டமிடுவது ; எவ்விதம் வெளியிடுவது என்றெல்லாம் சாவகாசமாய் ஆண்டின் இறுதியில் ஒரு பொழுதினில் அலசிடுவோமே ? (ஹைய் !! ஒண்ணு ரென்று பதிவுகளுக்கு மேட்டர் ரெடி !!)
  • அதே போல டயபாலிக் மறுவருகைக்கு அன்றைக்குக் கிட்டிய ஆதரவு மெய்யாலுமே ஆச்சர்யம் கொள்ளச் செய்தது ! 'ஆயாவைப் பாயா செய்றானுங்கோ !' என்ற குரல்களை YESSS என்ற குரல்கள் வென்ற மாயத்தை எண்ணி புருவங்கள் உயர்ந்தன எனக்கு !! Maybe absence makes the heart grow fonder !!! 
  • அன்று மாலை அரங்கின் பின்பக்கமிருந்த கார் பார்க்கிங் பகுதியில் குழுமிய கையோடு ஓட்டமெடுத்த அரட்டையானது ரொம்பவே refreshing & ரொம்பவே different ! வழக்கம் போலான "கொரில்லா சாம்ராஜ்யம் எப்போ ?" ; "விண்வெளிப் பிசாசு எப்போ ?" என்ற கேள்விகள் சன்னமாய் எழுப்பப்பட்டாலும் - அவற்றிற்கு எனது பதில் என்னவாகயிருக்குமென்பதில் யாருக்கும் பெருசாய் ஆர்வம் இருக்கவில்லை !  புதுக் களங்கள் ; light reading ; கிராபிக் நாவல்கள் ; 2020 அட்டவணை ; கார்ட்டூன்களின் முக்கியத்துவம் ; ஜம்போ என்று படு current ஆன தலைப்புகளில் பர பரவென கேள்விகளை நண்பர்கள் கேட்கத் துவங்க - அவற்றிற்கு ஜாலியாய்ப் பதில் சொல்வதில் அந்த மாலைப் பொழுது சுவையாய்க் கரைந்தது !! மொய்யென்று ஒரு இடத்தில மட்டும் என்ன கும்பலென்று எட்டிப் பார்த்துப் போனவர்கள் ஒரு சொட்டைத் தலையனை மையத்தில் பார்த்துக் கடுப்பாகிப் போயிருப்பார்கள் என்பது கொசுறுச் சேதி !! 
  • வழக்கமான நண்பர்களோடு இம்முறை புதியவர்களும் நிறையவே ஈரோட்டில் ஆஜராகியிருக்க - வெறும் பெயர்களாய் மாத்திரமே இருந்த பரிச்சயங்கள் அடுத்த நிலையைத் தொட்டதைக் காண முடிந்தது !! "இந்த புக்...அந்த புக்...இந்த ஹீரோ...அந்த ஹீரோயின்" என்ற அலசல்களையெல்லாம் தாண்டி சாஸ்வதமாய் நிற்கும் ஆற்றல் இந்த நட்புக்களுக்கே உண்டெனும் போது இந்த சந்திப்புகளின் highlight சர்வ நிச்சயமாய் அதுவே என்பேன் !! 
சந்திப்பை நிறைவு செய்து நண்பர்களுக்கு விடை தந்துவிட்டு ரூமுக்குத் திரும்பிய போது வயிறு பேய்ப்பசியில் கூக்குரலிட்டது !! ஆனால் மனசோ ஒருவித ஏகாந்தத்தில் மிதந்து கொண்டிருந்தது ! Zomato-வில் டொமாட்டோ ரைஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டுப் படுக்கும் போது குறுக்கெல்லாம் நோவினாலும் உறக்கம் பிடிக்க மறுத்தது !! ஜூனியரோ காதில் இயர்போனை மாட்டிக் கொண்டு ஏதோவொரு லோகத்தில் சஞ்சரித்துக் கிடக்க - வழக்கம் போலவே அந்த ஜன்னலோரம் தஞ்சமானேன் !! கண்ணாடி வழியாய் பார்வையை நீளச் செய்த போது மெதுமெதுவாய் அடங்கிடும் புத்தக விழாவின் அரங்கு நித்திரைக்குள் ஆழ்ந்திடத் துவங்குவது தெரிந்தது !! ஒற்றை நாள்....மூன்று முறைகள் அதே ஜன்னலோரம்....பார்வைகளிலும், உணர்வுகளிலும் தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள் !!! இன்னுமொரு 364 நாட்களே பாக்கி - இதே ஜன்னலோரம் அதே தட தடுக்கும் இதயத்தோடு நிலைகொண்டிட என்ற எண்ணத்தோடே கட்டிலில் சாய்ந்தேன் !! 

பிஸ்டலுக்கு மாத்திரமல்ல..ஈரோட்டுக்குமே பிரியாவிடை சாத்தியமல்ல என்ற எண்ணத்தோடே இமைகள் சொருகின தூக்கத்தில் !! 

Thank you folks...for being the meaning of all that we strive for ! We are truly humbled !!




  1. MAXI லயன் 2 இதழ்களுக்குமான உங்களின் response - simply staggering !! இத்தகையதொரு பரபரப்பையும், ஆர்வத்தையும் நாங்கள் கடைசியாய்ப் பார்த்தது "இரத்தப் படலம்" வெளியீட்டின் போதே !! ஆன்லைனில் ஆர்டர் செய்திடும் நண்பர்களின் வேகத்துக்கு ஈடு தர இயன்ற மட்டிலும் முயற்சித்து வருகிறோம் !!
  2. உங்களின் வேகம் நம் முகவர்களையுமே தொற்றிக் கொள்ள - ஈரோடு ஸ்பெஷல் தெறிக்கச் செய்து வருகிறது !!
  3. பிஸ்டலுக்குப் பிரியாவிடை !!! இதனைப் பற்றி சும்மா ஒற்றை வரியில் சொல்லிவிட்டுப் போனால் - புனித தேவன் மனிடோ என் முட்டைக்கண்களைக் குத்தியே தீருவார் !! This deserves a post on its own !! 

241 comments:

  1. Replies
    1. மக்கள் திலகம் எப்பவாவதுதான் ரெட்டை வேஷத்தில் நடிப்பாரு!:-)

      உங்க பதிவுகள் மட்டும்..?? :)

      Delete
    2. அவர் மூன்று முறை முதல்வர் ஆனவர். நான் இரண்டு முறை .அதுவும் பதிவில் மட்டும்.

      Delete
    3. அவர் மூன்று முறை முதல்வர் ஆனவர். நான் இரண்டு முறை .அதுவும் பதிவில் மட்டும்.

      Delete
  2. பதிவின் தலைப்பில் ஒரு ஒன் ஷாட் கிநா வந்தாலும் ஆச்சர்யபடறதுக்கில்லை...

    ReplyDelete
  3. //ஈரோட்டுக்கு பிரியாவிடை சாத்தியமல்ல...//

    செம...

    ReplyDelete
    Replies
    1. இதை நீங்க சொல்லக் கூடாது.. கிளம்பும் பொழுது ஒரு வார்த்தையாவது சொன்னீங்கலா??
      ஒவ்வொரு ஆண்டும் புத்தக திருவிழா வருவதுக்கு உங்களை பார்க்கனுமிங்கிறதும் ஒரு காரணம்..

      Delete
    2. அய்யோ..சாரி ! ரம்மி ..எடிட்டர் கூட போட்டோ எடுத்த கையோட உங்க எல்லோரோடும் போட்டோ எடுத்துகிட்டு நம்ம ஸ்டாலுக்கும் போறதுதான் ப்ளான்..

      விழா அன்னிக்கு நம்ம முதல்வரும் துணைமுதல்வரும் கோவை ஏர்போர்ட்டில் வந்திறங்குவதால் ட்ராபிக் ப்ளாக் / கெடுபிடிகள் துவங்கிவிடும் என செய்தி வந்ததால் அவசரமாக கிளம்பவேண்டியதாயிற்று..

      அடுத்தமுறை...

      Delete
    3. வேறு போனிலிருந்து டைப் செய்வதை இப்போதுதான் கவனிக்கிறேன்...:)

      செ அ..

      Delete
    4. நம்பிட்டேன்.. இன்னும் ஒரு வாக்கிங் பாக்கி இருக்கு வாக்கர் கூட..

      Delete
  4. இன்று காலை 10 மணிக்கு கரூர்காகிதபுரத்தில் (அது நம்ம ஊ௹ங்கோ) இருந்து சொந்த வேலையாக ஈரோடு வந்து, பகல் 12 மணி அளவில் நமது ஸ்டாலில் விசிட் அடித்தேன் மேக்ஸி லயன் 2 புத்தகங்ககளையும் வாங்கியதும் பில் போட்டது நமது திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள். அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டு காலம் சென்ற எனது தம்பி சிவா (சென்னை) அவர்களைப் பற்றி பேசியதும் அவர் மிகவும் உருகிப் பேசினார். ஒகேனக்ககல்லில் என் தம்பி 2005ல் இறந்ததைப் பற்றி கேட்டு மிகவும் வருந்தினார். என் தம்பி .மற்றும் அவரது நண்பர்கள் திருச்சி விஜயசாரதி. துபாய் ஹாஜா இஸ்மாயில் ஆகியோர் அலுவலகம் வந்தது. ஆசிரியரை சந்தித்து பேசியது, போட்டோ எடுத்துக் கொண்டது குறித்து ஆர்வத்துடன பேசினார். மீண்டும் 1 மணி ட்ரெ யினை பிடிக்க வேண்டிய அவசரம். அவரிடம் சொல்லிவிட்டு விடை பெற்றேன்.
    அரங்கம் முழுதும் விதவிதமான சீருடைகளில் பள்ளி மாணவ மாணவியர் கூட்டம். உற்சாகமான தேடல்ககளால் அரங்கம் நிரம்பி வழிந்தது. மனதுக்கு நிறைவாய் இருந்தது. அரங்கம் முமு தும் சுற்றிப் பார்க்க இயலாத நெருக்கடி . கண்டிப்பாக சனிக்கிழமை மீண்டும் வருவது என்ற முடிவோடு வீடு திரும்பினேன் சிறப்பான ஏற்பாடுகள். நன்றிகள் ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஏன் meeting ku வரவில்லை சார்?

      Delete
    2. I'm hoping to see you next year sir. Please come and join the fun.

      Delete
  5. ////ஒற்றை நாள்....மூன்று முறைகள் அதே ஜன்னலோரம்....பார்வைகளிலும், உணர்வுகளிலும் தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள் !!! இன்னுமொரு 364 நாட்களே பாக்கி - இதே ஜன்னலோரம் அதே தட தடுக்கும் இதயத்தோடு நிலைகொண்டிட என்ற எண்ணத்தோடே கட்டிலில் சாய்ந்தேன் !! ////

    வாவ்!! எத்தனை அருமையான வரிகள்!!! பின்றீங்க எடிட்டர் சார்!!

    எனக்கென்னமோ நீங்க எதிர்காலத்துல ஒரு பெரிய எழுத்தாளரா வருவீங்கன்னு தோனுது! :P

    ReplyDelete
    Replies
    1. சரியான லொள்ளு உங்களுக்கு. But I love you

      Delete
    2. அஸ்கு..புஸ்கு... ஞான்லாம் கவிஞரா ஆகும்னு நினைச்சூ ! ஆர்தர் ரைம்போவின் கவிதைகளுக்கே நாங்க டப்பிங் போட்டிருக்கோமாக்கும் !

      Delete
    3. கொடுமை என்னான்னா நண்பர் கார்த்திகை பாண்டியனோடு எதிர் வெளியீடு ஸ்டாலில் நின்றிருந்த போது எழுத்தாளர் போகன் சங்கருடன் அறிமுகமாகிப் பேசிக் கொண்டிருந்தேன் ! நமது காமிக்ஸ்களைத் தவறாது படிப்பவர் -"ஹ்யூமர் தான் உங்களுக்கு சுலபமாய் வருதே - ஏதாச்சும் எழுதணும் என்ற ஆசை தோன்றியதில்லையா ?"என்று கேட்டார் ! 'நஹி சார். நம் பயணம் என்றென்றும் பொம்ம பொஸ்தவங்களோடு மட்டுமே ! என்று பதில் சொன்னேன் !

      Phew... தமிழ் இலக்கிய உலகு எத்தனை பெரிய கண்டத்திலிருந்து தப்பியுள்ளதென்பதை வரலாறு அறியாது !

      Delete
    4. நீங்க முயற்சி செய்து பார்த்துவிட்டு பிறகு இதை சொல்லி இருக்க வேண்டும் ஆசிரியரே.

      Delete
    5. தன்னடக்க தாண்டவக்கோன் என்ற பட்டத்திற்கு முற்றும் தகுதி உடையவர் நீவிர்.

      Delete
    6. 'தன்னடக்கம்' என்பதை விடவும் 'தன் உயரம் அறிதல்' என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் சார் !

      Delete
  6. ////பிஸ்டலுக்கு மாத்திரமல்ல..ஈரோட்டுக்குமே பிரியாவிடை சாத்தியமல்ல என்ற எண்ணத்தோடே இமைகள் சொருகின தூக்கத்தில் !! ///

    நிறைவாய் உணர்கிறது மனம்!! _/\_

    ReplyDelete
  7. ////காலை பத்து மணிக்கு ஆரம்பிக்கும் சந்திப்பை 4 மணி நேரங்களுக்கு எவ்விதம் நீட்டிப்பதோ ? பன்னிரண்டு மணிவாக்குக்கே பேச வேண்டிய மேட்டர் சகலமும் ஓவர் என்றால் மீந்திருக்கக்கூடிய 2 மணி நேரத்துக்கு என்ன செய்வது ?" என்ற டர்...ஒவ்வொரு ஆண்டுமே என்னை அலைக்கழிப்பதுண்டு !////

    உண்மையைச் சொன்னால், நமக்கு 4 மணி நேரங்கள் எல்லாம் நான்கு நிமிடங்களைப் போல கரைந்துவிடுகிறது என்பதுதான் உண்மை!
    அடுத்தமுறை, மதிய உணவுக்குப் பின் மீண்டும் மாலை வரை மீட்டிங்கைத் தொடர்வதே சரியாக இருந்திடும்!!

    ReplyDelete
    Replies
    1. அடுத்தமுறை, மதிய உணவுக்குப் பின் மீண்டும் மாலை வரை மீட்டிங்கைத் தொடர்வதே சரியாக இருந்திடும்!!//

      +1

      Delete
    2. என்னாது... ஈரோட்டு திருவிழா முடிஞ்சுருச்சா???

      Delete
  8. /// - ERODE 2020 : "இளம் டைகர் 12 ஆல்பங்கள்///---

    வாழ்த்துகள் டூ டைகர் ரசிகர்கள்!
    மற்றொரு மின்னும் மரணமாக மின்னிடப் போவது இப்பவே தெரிகிறது!

    ReplyDelete
    Replies
    1. இந்த டவுசர் ரசிகர்கள் இதுக்கப்புறம கேக்க ஏதுமில்லை. நாமளும் நிம்மதிய இருக்கலாம் 😉

      Delete
    2. அப்படி நினைக்காதீங்க MPசார்.நாங்க முதல்லேர்ந்து தங்கக்கல்லறைனு ஆரம்பிப்போம்.அதாவது கருப்பு வெள்ளையில்.எப்படி?

      Delete
    3. அதுவும் MAXI சைஸிலே ! உடாதீங்க GP sir !

      Delete
    4. ஆமா GP விட மாட்டோம்

      Delete
  9. ////எங்க வீட்டில் டெக்சின் முதல் ரசிகை எங்க தாயார் தான் !!" ஈரோட்டில் மட்டுமே இந்த வாசகத்தை at least ஒரு அரை டஜன் தடவைகள் கேட்டிருப்பேன் !! Floored !!!!///

    பெண்களின் அமோக ஆதரவு என்றுமே டெக்ஸுக்குத்தானே அன்றி வேறு எந்த பயலுக்கும் இல்லை!
    பெண்களின் அமோக ஆதரவு என்றுமே டெக்ஸுக்குத்தானே அன்றி வேறு எந்த பயலுக்கும் இல்லை!
    பெண்களின் அமோக ஆதரவு என்றுமே டெக்ஸுக்குத்தானே அன்றி வேறு எந்த பயலுக்கும் இல்லை!
    பெண்களின் அமோக ஆதரவு என்றுமே டெக்ஸுக்குத்தானே அன்றி வேறு எந்த பயலுக்கும் இல்லை!
    பெண்களின் அமோக ஆதரவு என்றுமே டெக்ஸுக்குத்தானே அன்றி வேறு எந்த பயலுக்கும் இல்லை!

    (ஏதோ டெக்னிக்கல் மிஸ்டேக் போலிருக்கு, ஹிஹி!)

    ReplyDelete
    Replies
    1. டெக்னிக்கலா மிஸஸ்டேக் பண்ணிட்டீடீங்க போலிருக்கு.

      Delete
  10. /// நீங்கள் போட்ட அதிர்வேட்டு ஆர்ப்பரித்ததில் - ERODE 2020 : "இளம் டைகர் 12 ஆல்பங்கள்" என்று தீர்மானிக்கச் செய்தது !! ///
    கேட்க வேண்டியவங்களுக்கு கேட்டுச்சாசாசாசாசா...

    ReplyDelete
    Replies
    1. அங்க டெக்ஸ் குண்டு புக்குன்னு சொன்னா அரங்கத்தில புகம்பமே வந்துருக்கும்.

      Delete
    2. கார்சனின் நண்பரின் கதை மாதிரியே இருக்கு உங்க கமென்ட்டு..

      Delete
    3. கேட்டுச்சு...கேட்டுச்சு...நல்லா கேட்டுச்சு! நாங்களும் இப்படி ஒரு நாள் அலப்பறைய தருவோம்!

      2017ல கோட்டை, 2018ல படலம், 2019ல மார்கோ, 2020ல யங் டவுசர்.... (எதிர் காமிக்ஸ் காரன் பார்த்தா என்ன நினைப்பான்)

      Delete
    4. ஹி..ஹி... ஒரு டவுசர் ரசிகர் மொத ஆளா வாங்கி மொத ஆளா படிக்கற அளவுக்கு இன்ட்ரெஸ்டிங்கா இருக்கா?

      Delete
    5. சத்தியமா நான் பழி வாங்கும் புயல்லுன்னு தா நம்பி படிச்சேன்.. ஆனா சீக்கிரமே முடிச்சுட்டாங்க... இதுக்கு தான் சொல்றேன் ஒரே கதைக்கு ரெண்டு பேர் வைக்க கூடாதுன்னு..

      Delete
  11. அப்போது நான் +12 வா?

    ReplyDelete
    Replies
    1. இப்ப வரைக்குமே +2 தாம்பா நீ??

      Delete
  12. பிஸ்டலுக்குப் பிரியாவிடை !!! இதனைப் பற்றி சும்மா ஒற்றை வரியில் சொல்லிவிட்டுப் போனால் - புனித தேவன் மனிடோ என் முட்டைக்கண்களைக் குத்தியே தீருவார் !! This deserves a post on its own !! ///
    சத்தியமான உண்மை.. ஞாயிறு காலைக்காக வெயிட்டிங்.. எது மாதிரியும் இல்லாத புது மாதிரி கதை என்றாலும் சிலுக்கு நியாபகம் வருவதை தவிர்க்க இயலவில்லை..

    ReplyDelete
    Replies
    1. // சிலுக்கு நியாபகம் வருவதை தவிர்க்க இயலவில்லை.. // ரம்மி சும்மா இறங்கி அடி பிரிச்சு எடுத்துட்டிங்க

      Delete
    2. எந்த சிலுக்கை ?? அதையும் தெளிவாச் சொல்லிப்புடுங்க சாமீ !

      Delete
  13. ஆளுக்கொரு name tag கொணர்ந்திருந்தேன் - 'தல' ; 'தளபதி' ; கிட் ஆர்டின் & லக்கி லூக் படங்களோடு - இஷ்டப்பட்ட நாயகரைத் தேர்வு செய்து கொள்ளட்டுமே என்று !! "சர்வமும் நானே" என்ற tag line சகிதமிருந்த TEX படத்துக்கே அடிபிடி !! ///
    பம்மல் ஙே சம்பந்தம் டயலாக் தான் நியாபகம் வருது.. அந்த ப்ளோ அப் ஒரு ஓரவஞ்சனை.. அதுக்கும் ஆப்சன் குடுத்திருக்கனும்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க. அதிலேயும் டைகரை ஒரு ஓரமாத்தான் போட்டிருக்காங்க.

      Delete
  14. சந்தா அறிவிப்புக்கு பிறகு அலசல்களை சென்னையில் வைத்து கொள்ளலாமே

    ReplyDelete
    Replies
    1. ஜனங்க வர்ரதில்லியே புரபசர்..இங்கிருந்து தான் ரயில வெச்சி ஆளை கூட்டிட்டு போகனும் போல..

      Delete
    2. ஏதாவது முயற்சி செய்யலாம்

      Delete
  15. Maxi lion மெய்யாலுமே தூளா இருக்குது.

    இன்னொரு வில்லர்,இன்னொரு லக்கி இதே அளவில் வந்தால் சிறப்பாக இருக்கும்.
    இளம் டைகர் தொடரின் மீதமுள்ள 12 கதைகளும் வெளிவருவது மகிழ்ச்சியே.ஆனால் இந்த வரிசையில் கடந்த ஆண்டுகளில் வெளிவந்த கதைகள் சிலதை தவற விட்டுள்ளார்; அதை எந்த விதத்தில் வாசிப்பது என்பது புரியவில்லை.
    மொத்தமாக அனைத்து கதைகளையுமே இரு தொகுப்பாக வெளியிடுவது குறித்து ஏனைய வாசகர்களின் எண்ணங்களை அறிந்து கொண்டு முடிவு செய்யலாம்.
    திரும்ப திரும்ப ஒரே கதைகளை பதிப்பித்து விற்பனை செய்வது ஒரு வித அயர்ச்சியையும் ;நம்பகமற்ற தன்மையையும் உருவாக்கிவிடக் கூடும்.
    அடுத்த ஆண்டுக்கான கதை தேர்வுகள் விலை நிலவரம் என்பது பற்றியெல்லாம் தனிப்பட்ட முறையில் எந்தவித கவனமும் இல்லை.மாதம் குறைந்த பட்சம் இரண்டு வெளியீடுகளாவது தரமானதாக திட்டமிடப்பட வேண்டும்.

    வான் ஹம் அவர்களுடைய படைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தரலாம்.
    லேடி S தொடர்ந்து வந்தால் நன்றாக இருக்கும்.ஜெராமையாவும் நல்ல கதை தொடர்.அதன் எதிர்காலமும் இருட்டடிப்பு செய்யும் நிலையில்தான் உள்ளது.கிடைப்பதை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில்தான் உள்ளோம்.
    ஸ்மர்ப்,டைலன் டாக், ஜீலியா,டையபாலிக்,போன்ற கதைத் தொடர்களில் சிறந்த கதைகளை தேர்வு செய்திருந்தால் அவர்களும் நிலைத்திருப்பார்கள் என்ற எண்ணம் உருவாவதை தவிர்க்க இயலவில்லை.ஸ்மர்ப் தொடரில் மொழி பெயர்ப்பில் (பொடி பாஸை) சறுக்கியதுதான் மிகப்பெரிய குறை.காசு ,பணம்,துட்டு அசாத்தியமான கதை.

    ReplyDelete
    Replies
    1. அப்படியே அந்த காமான்சேவையும் கரை சேர்த்திட்டா பரவாயில்லை!

      Delete
    2. // காசு ,பணம்,துட்டு அசாத்தியமான கதை.// உண்மை.

      Delete
    3. ஒரு தொடரை அறிமுகம் செய்வதும் அதனைப் பரிந்துரைக்க முனைவதும் மட்டுமே நான் செய்யக் கூடியது சார் ! ஜெரெமியாவில் 6 ஆல்பங்கள் ; லேடி S-ல் 4 என்று முயற்சிக்கவும் செய்தோம் ! ஆனால் அவற்றை முற்றிலுமாய் வாசகப் பெரும்பான்மை நிராகரிக்கும் போது நான் என்ன செய்வதென்று சொல்லுங்களேன் நண்பரே ?

      Delete
    4. கமான்சேவுக்கு வருடம் ஒன்று என slot ஒதுக்கி மீத கதைகளை வெளியிடுமாறு கேட்டேன்.எடிட்டர் திடமாக மறுத்து விட்டார்!😭

      Delete
  16. வான் ஹாமே ட்ரிப்யூட் இன்னும் தொக்கி நிக்கிது.. சீக்கிரமே எதிர்பார்க்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. தொக்கி நிற்பது சென்றாண்டு காலமான திரு. வில்லியம் வான்சுக்கான ட்ரிபியூட்டே ! வான் ஹாமிற்கல்ல !

      Ringo - டிசம்பரில் !

      Delete
    2. தவறை திருத்திய தற்கு நன்றி ஆசிரியரே. Technical fault

      Delete
  17. அடுத்த பதிவா,அடடே.....

    ReplyDelete
  18. ///"சர்வமும் நானே" என்ற tag line சகிதமிருந்த TEX படத்துக்கே அடிபிடி//

    ----லாலே லாலி லாலா...!!!!

    எத்தனை முறை படித்தாலும் மனசு இந்த லைனை விட்டு நகர மாட்டேங்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. எழுத்து கூட்டி எழுதி .. படிச்சாலே இப்பிடி தான்..

      Delete
  19. டியர் எடிட்டர்

    /*
    சிவகாசி ரவுண்டு பன் சீக்கிரமே உலகப் பிரசித்தி பெற்று, ஒரு புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பிக்க நேர்ந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை போலும் !! இம்முறையும் hit !! Maybe அடுத்தவாட்டி ஏதேனும் தீபாவளி ; ஆண்டுமலர் ; பொங்கல் போன்ற விசேஷங்களின் போது மிட்டாய்களுக்குப் பதிலாய், கூரியர் டப்பிக்களில் சந்தா நண்பர்கள் அனைவருக்குமே இதையே அனுப்பலாமோ ? */

    ஏனுங்கோ ? அடுத்த மாசம் கூரியருக்குள்ளாற அடைச்சு அனுப்பிச்சா சாப்பிட மாட்டோம்னா சொல்லப்போறோமுங்கோ ? :-) அப்டியே சொதந்தரத்தை கொண்டாடியதை நெனச்சுக்குவோம் !!

    ReplyDelete
    Replies
    1. தாராளமாக அனுப்புங்கள் சார் .

      Delete
    2. செப்டெம்பரிலே எந்த தேசத்து சொதந்திரத்தைக் கொண்டாடறதோ ? தீவாலிக்கு ஜூப்பரா அனுப்பிடுவோம் !

      Delete
    3. நன்றி சார். தீபாவளி with round bun

      Delete
  20. விஜயன் சார், கென்யா & அமெரிக்கா ஜனவரி சென்னை புத்தகக் திருவிழாவில் வெளியிட முடியுமா? இரண்டு மேக்ஸி இதழ்களும் இதனுடன் சேர்ந்தால் நினைக்கவே இனிக்கிறது. இதனுடன் முத்து ஆண்டு மலருக்கு தோர்கலும் சேர்ந்தால் இதனை விட 2020 சிறப்பாக வரவேற்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. பரணி என்னமா பிளான் பண்றீங்க. சூப்பர் மா+1

      Delete
    2. குமார் @ உங்களை சந்தித்து மகிழ்ச்சி அளித்தது. மீண்டும் ஒருமுறை சந்திக்க ஆர்வமுடன் உள்ளேன்.

      Delete
    3. எனக்கும் நண்பரே. உங்களை பற்றி நிறைய நல்ல விசயங்கள் கேள்வி பட்டு இருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி

      Delete
    4. பட்ஜெட் கூரையைப் பெயர்த்துக் கொண்டு நிற்கும் சார் !

      Delete
    5. ஒவ்வொரு முறையும் இந்த பட்ஜெட் தான் பிரச்சினையே. ச்சே எனக்கு இந்த பட்ஜெட் ஏ பிடிக்காது.

      Delete
    6. அருமை பரணி...... இருகரம் புறம் சிரம் நீட்டி வரவேற்கிறேன்...

      Delete
  21. அசுரர்கள் ஒருபுறமும் (நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்) தேவர்கள் ஒருபுறமும் (இதுக்கும் நோ கமெண்ட்ஸ்ட்ஸ் ப்ளீஸ்) மந்தார மலையை (ஆசிரியர்) கொண்டு பாற்கடலை ( காமிக்ஸ்) கடைந்தபோது தான் அமிர்தம் ( விதவிதமான ஜானர்கள்) கிடைத்தது என்பது புராணம். நன்றாக கடையுங்கள் மக்களே. அமிர்தம் மேலும் மேலும் கிடைக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. பெட்ரோல்.. கிட்ரோல் வந்து சேர போகுது சாரே !

      Delete
    2. எடிட்டர் சார் 🤣😂

      Delete
    3. @Padmanaban.R

      வாவ்!! அருமையான உதாரணம்!!!

      @ எடிட்டர்

      பெட்ரோல் = கி.நா? :)

      Delete
  22. சார் முதல ஒரு நன்றி சொல்லிக்கொள்கிறேன்...
    ஏனெனில் இந்த பதிவு என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது...😌
    ஒரு நிம்மதி பெருமூச்சு தா விட தோன்றியது...🙂
    மிகவும் அட்டகாசமான பதிவு...
    மீண்டும் ஒரு முறை நன்றி சார்...😍

    ReplyDelete
  23. அட்டகாசமான பதிவு ஆசிரியரே. நானும் 4 நாட்களாக காத்து கொண்டு இருக்கிறேன். செம்ம. உங்க எழுத்துக்கு நான் அடிமை ஐயா.

    ReplyDelete
  24. // அடுத்த முறை நமது டீம் முழுசையுமே ஈரோட்டுக்கு வரவழைத்து அவர்கள் அனைவரையும் இந்த சந்தோஷங்களில் ஒரு சிறு பங்கெடுக்க முனைந்திடலாமோ ? // பிளீஸ் சார்

    ReplyDelete
  25. தல போஸ்டர் பத்தி எதுவுமே சொல்லலைங்களே சார் ..

    மெர்ஸலான போஸ்டர் .. 😍 💛💙💜💚❤

    வீட்டுக்கு வந்ததுமே பிரேம் பண்ண கொடுத்தாச்சு ..

    - மைசூரிலிருந்து சம்பத்

    ReplyDelete
    Replies
    1. அந்தக் காலங்களது ஸ்போர்ட்ஸ்டார் இதழ்களின் போஸ்டர்கள் ஏகப் பிரசித்தம் ! அதை மனதில் நிறுத்தியே நம்மவரை போஸ்டராக்க எண்ணினேன் !! Glad it was well liked !!

      Delete
    2. அட... மைசூர் ஜாகையா ? சூப்பர் !!

      Delete
    3. அப்படின்னா.. அடுத்த வருஷம் டைகர் கதைக்கும் ஒரு போஸ்டர் குடுங்க.. 😎

      Delete
  26. மகேந்திரன் @ உங்களின் பரிசுக்கு நன்றி. அதனை தொலைதூரத்தில் இருந்து பத்திரமாக கொண்டு வந்து எங்கள் கைகளில் கொடுத்தமைக்கு நன்றி. அதனை நானும் பத்திரமாக பெங்களூர் கொண்டு வந்து சேர்த்து விட்டேன். உங்களின் காமிக்ஸ் காதல் மற்றும் நட்பு பாராட்டுக்குரியது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். ஷெரீஃப் மாதிரி ஒரு ஆளை பற்றி நான் கேள்வி பட்டது கூட இல்லை. What a man! A great person indeed.

      Delete
    2. ///ஆமாம். ஷெரீஃப் மாதிரி ஒரு ஆளை பற்றி நான் கேள்வி பட்டது கூட இல்லை. What a man! A great person indeed///

      உண்ம! ஆனா ஷெரீப் டாக்புல்'னு ஒருத்தர் இருக்கார்! அவர் இவரைவிட நல்லவர்!! ;)

      Delete
    3. ஆனாக்கா.. ரெண்டு ஷெரீப்புக்கும் என்னையத் தூக்கிப்போட்டு மிதிக்கிறதுதான் முழுநேர வேலையே.. !!

      Delete
    4. //ஆனாக்கா.. ரெண்டு ஷெரீப்புக்கும் என்னையத் தூக்கிப்போட்டு மிதிக்கிறதுதான் முழுநேர வேலையே.. //


      :-)))

      Delete
    5. ///ஆனாக்கா.. ரெண்டு ஷெரீப்புக்கும் என்னையத் தூக்கிப்போட்டு மிதிக்கிறதுதான் முழுநேர வேலையே.. !!///

      ஆனா, இந்த தடவ உங்கள மிதிக்க முடியாம, தன்னையே பாதுகாத்துக்கிற நிலமை தான் வந்துருச்சு நம்ம ஷெரிப்புக்கு..

      Delete
  27. // வழக்கமான நண்பர்களோடு இம்முறை புதியவர்களும் நிறையவே ஈரோட்டில் ஆஜராகியிருக்க - வெறும் பெயர்களாய் மாத்திரமே இருந்த பரிச்சயங்கள் அடுத்த நிலையைத் தொட்டதைக் காண முடிந்தது !! "இந்த புக்...அந்த புக்...இந்த ஹீரோ...அந்த ஹீரோயின்" என்ற அலசல்களையெல்லாம் தாண்டி சாஸ்வதமாய் நிற்கும் ஆற்றல் இந்த நட்புக்களுக்கே உண்டெனும் போது இந்த சந்திப்புகளின் highlight சர்வ நிச்சயமாய் அதுவே என்பேன் !! // சாஸ்வதமான உண்மை.

    ReplyDelete
  28. யாருக்காவது திருஷ்டி பொம்மை வேணுமின்னா சொல்லுங்க.. கொரியர் செலவு என்னுது..

    ReplyDelete
    Replies
    1. அப்பாலிக்கா அது ஆயிரம் பொன்னுக்கு ஈடாகப் போகுது ...ரொம்பவே வருத்தப்படப் போறீங்க !

      Delete
    2. நான் மகிழ்வோடு பெற்றுக் கொள்கிறேன்!

      Delete
  29. How much I need to pay to get Erode specials to Colombo?
    Let me know please.

    ReplyDelete
    Replies
    1. நாளை விசாரித்துச் சொல்லச் செய்கிறேன் நண்பரே !

      Delete
  30. 3 தேதி நடந்த மீட்டிங் குக்கு முன் வியாழன் வெள்ளி இரண்டு இரவுகளும் நான் தூங்கவே இல்லை. முதல் முறை செல்ல போகிறோம் என்ன நடக்குமோ என்ற பயம் உள்ளே இருந்தது. ஆனால் ஒரு உற்சாகம் இனம் புரியாத சந்தோசம் கூடவே இருந்தது. ஆனால் நம் நண்பர்களை நேரில் சந்தித்ததும் அவர்கள் நம்மை வரவேற்று உபசரித்து நம்மை அவர்களில் ஒருவனாகவே நடத்துகிறார்கள். அப்படியே நம் முகத்தில் ஒரு புன்னகை வந்து ஒட்டி கொள்கிறது. அது அப்படியே இரண்டு நாட்கள் இருந்தது. மனமெல்லாம் அப்படி ஒரு சந்தோசம் மற்றும் நிறைவு.

    ReplyDelete
    Replies
    1. இங்கே சமீப நாட்களில் நீங்கள் காட்டி வரும் உத்வேகம் truly amazing sir !

      Delete
    2. நன்றிகள் கோடி சார். நீங்கள் விழாவில் என்னை பாராட்டியது என்றுமே நினைவில் நிற்கும். 🙏

      Delete
    3. ///3 தேதி நடந்த மீட்டிங் குக்கு முன் வியாழன் வெள்ளி இரண்டு இரவுகளும் நான் தூங்கவே இல்லை. முதல் முறை செல்ல போகிறோம் என்ன நடக்குமோ என்ற பயம் உள்ளே இருந்தது. ///

      அடக்கடவுளே!!! முகத்தை எப்பவும் சிரிச்சா மாதிரியே வச்சுட்டிருக்கறதெல்லாம் பயத்தை மறைக்கத்தானா?!!

      அப்படீன்னா, வீட்ல இன்னும் அதிகமா சிரிப்பீங்களா?!!

      Delete
    4. EV உங்க கிட்ட இந்த timing கற்று கொள்ள வேண்டும்.

      Delete
    5. ///இங்கே சமீப நாட்களில் நீங்கள் காட்டி வரும் உத்வேகம் truly amazing sir !///

      உண்மை சார்!! தளத்திற்கு இவரால் புதிய உற்சாகம் கிடைத்திருக்கிறது!!

      (குமார்.. இப்படியெல்லாம் நீங்க பாராட்டு வாங்கினா காமிக்ஸை படுகுழியில் தள்ள நினைக்கும் சில புண்ணியாத்மாக்களிடமிருந்து உங்களுக்கு ஃபோன்கால் வரக்கூடும். இனிக்க இனிக்கப் பேசி உங்களை கொஞ்சம் கொஞ்சமா வசப்படுத்தி, அவர்களின் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பாங்க - ஏமாந்துடாதீங்க!)

      Delete
    6. நன்றி EV. Be careful (நான் என்னை சொன்னேன்).

      Delete
  31. இங்கே சந்தித்த ஒவ்வொரு நண்பரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவரே . தளத்தில் இருந்த பலரை நேரில் பார்ப்பது மிக மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். அதுவும் அனைவரையும் ஒரே இடத்தில். தங்கமான வாய்ப்பு.

    ReplyDelete
  32. எனக்கு ஒரே ஒரு சந்தேகம். இப்போது எப்படி அமெரிக்கா மற்றும் கென்யா 2020 இல் வரமுடியும். ஒன்றை தீபாவளி மலராகவும் மற்றதை கோடை மலராகவும் வெளியிட வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. ஏன் பொங்கல் மலரா போட்டா வேணாமாக்கும்

      Delete
    2. நான் என்னைக்கு வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன்.

      Delete
  33. அடுத்த MAXI டெக்ஸ் என்ன கதை ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. பொறுங்க! மேக்ஸி எடிட்டர் காதிலேர்ந்து இயல் ஃபோனை கழட்டியதுமே அவரிடம் கலந்துபேசி முடிவு செய்யப்படும்! :P

      Delete
    2. சென்னையில் ஒரு maxi பிசாசு பண்ணை. டெக்ஸ் maxi than ennanu theriala

      Delete
    3. நான்லாம் எப்போவாச்சும் பெவிகால் பார்ட்டின்னா - MAXI லயனின் அண்ணாத்தே அதன் ஒட்டு மொத்தக் குத்தகையாளர் ! ஜனவரியில் நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்வீர்கள் சத்யா !

      Delete
  34. ///// அடுத்த முறை நமது டீம் முழுசையுமே ஈரோட்டுக்கு வரவழைத்து அவர்கள் அனைவரையும் இந்த சந்தோஷங்களில் ஒரு சிறு பங்கெடுக்க முனைந்திடலாமோ ? ///

    கூட்டிட்டு வாங்க சார்! எந்த கும்பலுக்காக நீங்கள் இரவு பகலாக உழைக்கிறீர்களோ - எந்த கும்பலுக்காக நீங்கள் அவர்களை வருடம் முழுக்க பென்டுகழட்டுகிறீர்களோ - அந்த கும்பலின் ஆக்டிவான ஒரு சிறு பகுதியை அவர்கள் ஈரோட்டு விழாவில் காணட்டும்!!

    ReplyDelete
    Replies
    1. ///கூட்டிட்டு வாங்க சார்! எந்த கும்பலுக்காக நீங்கள் இரவு பகலாக உழைக்கிறீர்களோ - எந்த கும்பலுக்காக நீங்கள் அவர்களை வருடம் முழுக்க பென்டுகழட்டுகிறீர்களோ - அந்த கும்பலின் ஆக்டிவான ஒரு சிறு பகுதியை அவர்கள் ஈரோட்டு விழாவில் காணட்டும்!!///

      உண்மைதான்.! NBS இதழில் அறிமுகம் செய்துவைத்த போதே என்றாவது ஒருநாள் இந்த டீம் முழுவதையும் நேரில் சந்தித்து பேசவேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு.!

      அச்சகப் பணியாளர்கள் ,அலுவலகப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் ஓரிரு நிமிடங்களாவது தங்களது பணியைப்பற்றி பேசச்சொல்லி கேட்கவேண்டும் என்பதும் நெடுநாள் ஆசை.!

      Delete
    2. அடுத்தாண்டு கொஞ்சம் முன்கூட்டியே பேசிப் பார்க்கணும் ! நிச்சயமாய் முயற்சிப்போம் !

      Delete
    3. // அச்சகப் பணியாளர்கள் ,அலுவலகப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் ஓரிரு நிமிடங்களாவது தங்களது பணியைப்பற்றி பேசச்சொல்லி கேட்கவேண்டும் என்பதும் நெடுநாள் ஆசை.!// அருமையாக சொன்னீர்கள் கண்ணா

      Delete
  35. அவர்களின் பேட்ரியும் சார்ஜ் ஆயிக்கிடும்..

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார். அங்கீகாரம் மற்றும் பாராட்டினால் சார்ஜ் ஆகாத பேட்டரி எது?

      Delete
  36. EBF முடிந்து வந்ததில் இருந்து மாரியம்மன் பண்டிகைக்கான முஸ்தீபுகள்.. பின்னர் திருவிழாக் கொண்டாட்டங்கள் சேர்ந்து வேறு பக்கம் திரும்பவிடாமல் கட்டிப்போட்டுவிட்டன..!

    நாளையில் இருந்துதான் இதழ்களை புரட்டத் தொடங்கவேண்டும்.!
    நாலாப்பக்கமும் நல்ல விமர்சனங்களே கண்ணில் படுகின்றன.. மகிழ்ச்சி.!

    ReplyDelete
  37. பழைய இதழ்கள் சமீபமாய் தூங்கவைப்பதாகவும், புதிய மெச்சூரான ஜானர்களை மனம் விரும்புவதாகவும் கர்ஜனைகள் அரங்கத்தை நிறைத்தபோது, சிம்பாவின் சிறுகுரல் 'நாங்களும் உங்களபோல ஆரம்பத்திலிருந்து வரவேணாமா?' என எதிரொலித்தபோது .....கன்னத்தை திருப்பிதிருப்பி காட்டத்தோன்றியது.

    ReplyDelete
    Replies
    1. அன்றைய பொழுதின் எனது பிரதானக் கேள்வியே - 'லைட் ரீடிங் தான் இப்போதைய தேவையா ? என்பதாகத் தானே இருந்தது நண்பரே ! நிச்சயமாக ஒன்றை இழந்து இன்னொன்றை ஈட்டும் பிழையினைச் செய்திட மாட்டோம் !

      Delete
  38. அதான் சார். இளையவர்களை குழந்தைகளை நம்முடன் கூட்டிச்செல்லும் பெரும்பொறுப்பு,கடமை நமக்குள்ளது

    ReplyDelete
  39. இளையராஜா மெலடி போல.....ம்ம்ம்.....சூப்பர்....

    ReplyDelete
  40. டியர் எடிட்டர்

    Review book-ஐ நான் ஒரு keepsake ஆக வைத்துக்கொள்ள விரும்புவதால் இதோ my feedback. Your scale with my extra comments. மொத்தமாய் பார்த்தால் ஒரு சிறந்த காமிக்ஸ் வருடம் என்பேன் ...!

    XIII - சூப்பர்
    புலன் விசாரணை - OK
    ட்ரெண்ட் - களவும் கற்று மற - வாங்கவில்லை (2018ல் நான் சந்தா செலுத்தவில்லை)
    Modesty - வாங்கவில்லை
    TEX - சைத்தான் சாமராஜ்யம் - சூப்பர்
    ஹெர்லோக் - குரங்கு சேட்டை - சூப்பர்
    ஜானி - மரணம் சொல்ல வந்தேன் - சூப்பர்
    TEX - Dynamite ஸ்பெஷல் - மிடீல (not worth the price - இரண்டாம் கதை terrific )
    யார் அந்த Mr X - கிளிப்டன் - சூப்பர்
    CID ராபின் - சூப்பர்
    TEX - காதலும் கடந்து போகும் - சூப்பர்
    Smurfs - காசு பணம் துட்டு - சூப்பர்
    ஜேம்ஸ் பாண்ட் - சூப்பர்
    Tex - காலனின் கானகம் - சூப்பர்
    மதியில்லா மந்திரி - சூப்பர்
    லக்கி கிளாஸ்சிக்ஸ் - சூப்பர்
    The Action ஸ்பெஷல் - 13th floor - சூப்பர், மீதி எல்லாம் மிடீல
    சிகரங்களின் சாம்ராட் - சூப்பர்
    Tex - சாத்தானின் சீடர்கள் - சூப்பர்
    Baracuda - மிடீல
    ஜானி 2.0 - சூப்பர்
    நடனமாடும் கொரில்லாக்கள் - சூப்பர்
    TEX - வைக்கிங் தீவு மர்மம் - சூப்பர்
    JEREMIAH - மிடீல
    TEX - பாலைவனத்தில் ஒரு கப்பல் - சூப்பர்
    ஹெர்லோக் ஷோல்ம்ஸ் - சூப்பர்
    முடிவில்லா மூடுபனி - சூப்பர்
    ஜேம்ஸ் பாண்ட் - சூப்பர்
    Jonathan Cartland - சூப்பர்
    TEX - பச்சோந்திப் பகைவன் - சூப்பர்
    Lucky Luke - பரலோகத்துக்கு படகு - சூப்பர்
    பிரின்ஸ் - மரண வைரங்கள் - சூப்பர்
    TEX - கலர் tex - சூப்பர்
    டுரங்கோ- சூப்பர்
    Baracuda - மிடீல
    Lone Ranger - சூப்பர்
    மார்ட்டின் - சூப்பர்
    சிக் பில் - சூப்பர்
    Young Blueberry - சூப்பர்
    TEX - சிங்கத்தின் சிறுவயதில் - மிடீல
    நீரில்லை நிலமில்லை - மிடீல
    லக்கி லூக் - பாரிசில் ஒரு கவ்பாய் - சூப்பர்
    நித்திரை மறந்த நியூயார்க் - மிடீல
    Undertaker - சூப்பர்
    ஜானி - தலைமுறை எதிரி - சூப்பர்
    The Erode Special 1 - பிஸ்டலுக்கு பிரியாவிடை - சூப்பர்
    The Erode Special 2 - Domacles - சூப்பர்
    TEX MAXI - சூப்பர்
    Lucky லூக் MAXI - சூப்பர்

    Thanks for the booklet - very colorful ...

    Comic Lover

    ReplyDelete
    Replies
    1. Great effort ji. நல்ல முயற்சி.

      Delete
  41. XIII - சூப்பர்
    புலன் விசாரணை - படிக்கலை.
    ட்ரெண்ட் - களவும் கற்று மற - ஓகே.
    Modesty -
    TEX - சைத்தான் சாமராஜ்யம் - சூப்பர்
    ஹெர்லோக் - குரங்கு சேட்டை - சூப்பர்
    ஜானி - மரணம் சொல்ல வந்தேன் - சூப்பர்
    TEX - Dynamite ஸ்பெஷல் - சூப்பர்
    யார் அந்த Mr X - கிளிப்டன் - சூப்பர்
    CID ராபின் - OK
    TEX - காதலும் கடந்து போகும் - சூப்பர்
    Smurfs - காசு பணம் துட்டு - சூப்பர்
    ஜேம்ஸ் பாண்ட் - சூப்பர்
    Tex - காலனின் கானகம் - சூப்பர்
    மதியில்லா மந்திரி - சூப்பர்
    லக்கி கிளாஸ்சிக்ஸ் - சூப்பர்
    The Action ஸ்பெஷல் - மிடீல
    சிகரங்களின் சாம்ராட் - சூப்பர்
    Tex - சாத்தானின் சீடர்கள் - OK.
    Baracuda - சூப்பர்
    ஜானி 2.0 - சூப்பர்
    நடனமாடும் கொரில்லாக்கள் - சூப்பர்
    TEX - வைக்கிங் தீவு மர்மம் - சூப்பர்
    JEREMIAH - பரவாயில்லை
    TEX - பாலைவனத்தில் ஒரு கப்பல் - சூப்பர்
    ஹெர்லோக் ஷோல்ம்ஸ் - சூப்பர்
    முடிவில்லா மூடுபனி - சூப்பர்.
    ஜேம்ஸ் பாண்ட் - சூப்பர்
    Jonathan Cartland - மிடீல
    TEX - பச்சோந்திப் பகைவன் - சூப்பர்
    Lucky Luke - பரலோகத்துக்கு படகு - சூப்பர்
    பிரின்ஸ் - மரண வைரங்கள் - சூப்பர்
    TEX - கலர் tex - சூப்பர்
    டுரங்கோ- சூப்பர்
    Baracuda - சூப்பர்
    Lone Ranger - சூப்பர்
    மார்ட்டின் - சூப்பர்
    சிக் பில் - சூப்பர்
    Young Blueberry - சூப்பர்
    TEX - சிங்கத்தின் சிறுவயதில் - சூப்பர்.
    நீரில்லை நிலமில்லை - ஓகே.
    லக்கி லூக் - பாரிசில் ஒரு கவ்பாய் - சூப்பர்
    நித்திரை மறந்த நியூயார்க் - ஓகே. ஆனா சோகக்கதைகள் பிடிப்பதில்லை.
    Undertaker - சூப்பர்
    ஜானி - தலைமுறை எதிரி - சூப்பர்
    The Erode Special 1 - பிஸ்டலுக்கு பிரியாவிடை - சூப்பர்
    The Erode Special 2 - Domacles - சூப்பர்
    TEX MAXI - சூப்பர்
    Lucky லூக் MAXI - சூப்பர்

    நன்றி காமிக் லவர்.

    ReplyDelete
    Replies
    1. இது மாதிரியான மதிப்பீடு நன்றாக உள்ளது.ஒட்டுமொத்த இதழ்களையும் வகைப்படுத்தி உள்ளது சிறப்பு.

      Delete
  42. சார் நேற்று மழை காரணமாய் அழைப்புகள் இல்லாததால் வீட்டில் பொழுத கழிக்கையில் திடுமென கண்ணில் பட்டு வழிகாட்டியது நம்ம கலங்கரை விளக்கம்தான்...நீரில்லை ...நிலமில்லை....பல முறை விறுவிறுப்பாய் 20 பக்க புரட்டலில் தொங்கிக் கொண்டிருந்த கதை....நேற்று மதியம் வரை புரட்ட வெளியே மழையால ஜில்...உள்ள திகிலால ஜில் நெஞ்சில்...பக்கங்கள் யார்டா...யார்டான்னு சும்மா அசுர வேகத்தில் பாய எனது நிதாரன புரட்டல்கள் கடிவாளமாய் மாற இங்க வந்தது யாரா இருக்கும்னே மனம் பின் பாய ....இரவு தூக்கம் கொள்ளாமல் படித்து முடித்தே வைத்தேன்...யப்பா என்னா ௐரு கதை...நமக்கும் ௐரே மாதிரி வாழ்க்கை போரடித்து செல்வது போல தோன்றும் போது இது மாதிரி தோன்றினால் யப்பா...நல்ல வேள எனக்கு எங்க திருச்செந்தூர் ஏக்கம் வந்து மனச திருப்பி விடும் செந்தூர் வேலவனுக்கு நன்றி...அலெக்சா இருக்குமோ...இராது ...இராது...ஷெர்ஜாதான் இருக்கும்....இராது இராது ...அவளாத்தான் இருக்கும்....ஜானாக இருக்கும்....ஆனா அவன் நடமாடும் சுவடே இல்லயே....என்னாது பியரியா எதிர்பாக்கலயே...அட அலெக்ஸ்தானா...இல்ல கடசில அவதான்னு காட்டுவான்னு பாத்தா....பியரி அலெக்ஸ்....கதை தொங்கலில்லாம அட்டகாசமா பாய்வது அருமை....அந்த விரல் மோதிரம் என்னன்னு புரியல...மீண்டும் படிக்கப் போறேன் இன்று வாய்ப்புக் கிட்டின்...இந்த கத முடிவ நெருங்கயில ஏதுமில்லயேன்னு உணர்வு வந்தா அரைச்ச மாவுதான் உங்களுக்கு பிடிக்கும்...லார்கோ ...டெக்ஸ் ...ஸ்பைடர்னு போயிடலாம்....கார்ட்டூன் எப்படி லைட் ரீடிங்கா படுதோ அதப் போல கனமான கட்டிப் போடும் பீதி இந்த ஹெவியான களத்லயும் வேகத் த தருது...ௐன்னுமில்லன்னு தோணுதா....கடைசி வரிகள் ௐங்கி அறைஞ்சு மின்னுது ....வாழ்க்கய நேசிச்சிருந்தா வாழ்க்கயும் ௐங்கள நேசிச்சிருக்கும் பெண்ணே.... என்பது சுபமான மனதாழத்தில் பதிக்க வேண்டிய வரிகள்...நாம் வரம் வாங்கியவர்கள் வாழ்க்கை ௐரே மாதிரியா இருக்கேன்னு விபரீத முடிவுகளுக்கு செல்லாமல் இருப்பதால்....யப்பா காமிக்சே போதும்டான்னு கொண்டாடத் தோன்றினால் ....காமிக்ச நீங்க நேசிச்சா அதும் உங்கள நேசிச்சு சந்தோசம் தரும்...நம்பிதானே நகர்கிறோம்...நம்ம நம்பிக்கை பொய்க்கவில்லையே...சார் இதிலிருந்து தெரிவது புய்ப்பமோ....அரச்ச மாவோ...சினிஸ்டர் செவன போட்டு நேசிச்சு படிச்சா சந்தோசமும் சிறு வயது நேசமான ஸ்பைடரும் சந்தோசம் தந்து நம்மள நேசிக்க காத்திருக்கிறார்....நீரில்லை நிலமில்லை கலங்கரை விளக்கமே மாற்று வழி தேடி தகாதன செய்வோர்க்கு...வாழ்க்கய நேசி... வாழ விடு ..வாழ்வாய்....திருட்டு கும்பலுக்கும் ௐர் எச்சரிக்கை...ஸ்டன்னிங்...பரகுடா கடல் பயணத்தின் ஊடே கலங்கரை விளக்கத்திலிருந்து விண்வெளிப் பயணமா(ஸ்பைடரா) அல்லது பழய புராதன எகிப்து நாகரிகத்த தோண்டப் போறமா(குட்டி டெக்சா)...எது வந்தாலும் சந்தோசமே...ஆனா ௐரே கததான மீதம்...பாத்து செய்யுங்க....சார்....சார்...ஸ்பைடர் சார்...

    ReplyDelete
    Replies
    1. ஸ்டீல் க்ளா செம்ம செம்ம . என்ன ஒரு விமர்சனம்

      Delete
  43. சார் ஈரோட்டு புத்தகங்கள் திங்களன்றே கிடைத்தன...ஞாயிறு தாரேன்ன கொரியர் நண்பர் என்ன மறந்ததால...திங்களா புரட்ட அட்டகாசமாய் ஈரிதழ்கள்....ஆனாக்க இவை இபக்கு ஈடாகுமா என எண்ணினால் மேக்சி வந்தாச்சேன்னு நண்பர்கள் கோசம் கோவைய எட்டினாலும் நேர்ல பாத்து சொல்லாட்டி எப்படி ஈரோடு போயிருக்கலாமோ என ஏங்க வைத்தது சனியன்றே பணமனுப்பியும் புதனன்றே பளபபளப்பாய் வந்திறங்கிய மேக்சியுமே தாமதத்த மறக்கடிக்க செய்து கொண்டாடத் தூண்ட...டெக்ஸ் எழுத்துக்கள் தகதகக்க புரட்டப்பட்ட பக்கங்கள் அட்டகாசம்தான்...நிற்க....சர்ப்ரைஸ் புத்தகங்கள் ஈரோட்டிற்கு போகலாமே என நினைத்த என்னை ஆர்வம் காட்டி இழுத்ததென்னவோ உண்மைதான்...ஆனா வர இயலா சூழல் உருவானால் ....ஆகவே சர்ப்ரைஸ் விலைகள் அறிவிக்க இயலா நிலையில் முன் பணம் செலுத்தவும் வழி இல்லை...இதப் போக்க ௐரு ஆயிரம் ரூவாய முன் பணமா வைப்போமே...நீங்க இது தேவயில்ல ...புத்தகம் என்னான்னு தெரியாம...ௐங்களுக்கு பிடிக்காமன்னு ...நீங்க சொல்ல வேணாம்...எதுவானாலும் வாங்கக் காத்திருப்போரின் சிறிதளவூ ஏமாற்றத்த தவிர்க்க உதவட்டுமே...பாத்து வாங்குவோர் பின்னர் பணமனுப்பி வாங்கலாமே...ஆவன செய்வீர்களா....ஸ்மர்ஃப்பா இருக்குமோ..பணம் கட்டிருப்பாரோ ராயல்டியா என எண்ணினா லக்கியும் சந்தோசமே...ஸ்மர்ஃப் குரல்கள் ௐலிப்பதாய் நண்பர்கள் குரலும் சந்தோசமே...விற்பனை சீர் பட்டு ஸ்மர்ஃப் கொடி பறக்க முருகனை வேண்டும் போதே...மேக்ஸி கொணர்ந்து தந்த விக்ரமும் பல்லாண்டு இதப் போல வெற்றி பெற/தர செந்தூர் வேலவன் துணை நிற்க வேண்டி அடுத்த கதை தேடி பாய்கிறேன்...ஈரோடு வர ஏலலன்னாலும் அதகளபடுத்திய நண்பர்கள் நேரில் காணும் வாய்ப்பை நல்கினர்...வெற்றி...வெற்றி...வெற்றி எப்போதும் நம்மோடும்...

    ReplyDelete
  44. ச்சை!! என்ன பிழைப்பு இது!!
    ஒரு காமிக்ஸ் படிக்க நேரமில்லை.. அதிலே கலர்கலரா வர்ற கேரக்டர்களை ரசிக்க நேரமில்லை..
    பேசாம எல்லாத்தையும் தலைமுழுகிட்டு காசிக்கோ சிவகாசிக்கோ போய்டலாம்னு இருக்கு!

    ReplyDelete
  45. ///நமது செனா அனாஜியின் பிள்ளைகள் - budding doctors தீபக் & அபிராமி சென்னையிலிருந்து கோவைக்குப் பயணித்து, அங்கிருந்து ஈரோட்டுக்கு பின்னிரவில் வந்து சேர்ந்திருந்த போதிலும், ///

    அவங்க இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தும் ஒரு camp கூட நடத்தமுடியாமப் போச்சே...

    ReplyDelete
  46. ////சிவகாசி ரவுண்டு பன் சீக்கிரமே உலகப் பிரசித்தி பெற்று, ஒரு புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பிக்க நேர்ந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை போலும் ///

    சிவகாசி ரவுண்டு பன்னு குறித்து அந்தக்காலத்து சங்க இலக்கியங்கள்லகூட எழுதிவச்சிருக்காங்களாம் - கடந்தபதிவுல செனாஅனா சொன்னாரு!!

    எது எப்படியோ.. என் பழைய ரவுண்டு பன்னு பாக்கிகளை எல்லாம் இந்தத் தபா ஓரளவுக்கு அடைச்சுட்டேன்! நன்றிகள் பல எடிட்டர் சார்!! _/\_

    ReplyDelete
    Replies
    1. டப்பாவிலே இருந்த எக்ஸ்டரா பன்னுலாம் இப்டி தான் அழிஞ்சதாக்கும் ?

      கடன் தீர்க்கும் நேரமிது !

      Delete
  47. நித்தம் ஒரு யுத்தம்

    மிகப் பெரிய கோடீஸ்வர முதலாளிகளுக்கு தனது உயிரை விட்டாவது அவர்களை பாதுகாப்பதே தமது கடமை எனும் செயலாற்றும் நண்பர்களுக்கும் ,அந்த கோடீஸ்வர கோமான்களின் பாதுகாப்பை எப்படியாவது நிர்மூலம் செய்து அவர்களை ஒழித்து கட்ட வேண்டும் என்று லட்சியவாதியாய் துடிக்கும் நண்பர்களுக்கும் இடையே நடக்கும் இந்த யுத்தமே நித்தம் ஒரு யுத்தம்..இதில் நல்லவர்கள் யார் ,வல்லவர்கள் யார் என்பது வாசிக்கும் அவரவர் முடிவே..ஆனால் கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் மறக்க முடியா ஆளுமைகள் .

    தெறிக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் என அட்டைப்படத்தில் குறிப்பிட்டவாறே 100% தெறிக்க விட்ட ஆக்‌ஷன் கதையே இந்த நித்தம் ஒரு யுத்தம் .அதே சமயம் இந்த அளவு தெறி மாஸான ஆக்‌ஷன் கதைகளத்திலும் எதிர்பாரா சஸ்பென்ஸ் க்ளைமேக்ஸ்ம் ,மனதை கனக்க வைக்கும் முடிவும் இருக்க முடியும் என்று டெமக்லீஸ் குழுவினர் உணர்த்திவிட்டார்கள். அட்டகாசமான கதை பாணி ,அசத்தலான ஓவிய பாணி என இந்த புது அறிமுகங்களும் பலத்த கை தட்டலோடு வரவேற்கலாம் ..ஒரு லார்கோ ,ஷெல்டன் அறிமுகமான பொழுது எந்த விதத்தில் மனதை கவர்ந்து இழுத்தார்களோ ,அதே விதத்தில் இந்த தீவிரவாதிகளின் தீவிர எதிரிகளும் கவர்ந்து விட்டார்கள்.கதையில் வந்த எந்த கதாபாத்திரமும் சோடை போகவில்லை.அதே போல " பதுங்கு குழி " என்பது எவ்வளவு மேம்பட்ட ஒன்று என்பதும் ,அங்கேயும் ஆபத்துகள் அரங்கேறும் என்பதும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது :-)

    மொத்தத்தில் இந்த மாதம் இதழ்களின் எண்ணிக்கை அதிகம் போல் தோன்றினாலும் ( மகிழ்வான ஒன்று தான் ) எந்த இதழுமே சோடை போகவில்லை என்பது தான் மறுக்க முடியா உண்மை.

    அண்டர்டேக்கர் அசத்தல்..

    பிஸ்டலுக்கு பிரியாவிடை பிஸ்தா..

    நித்தம் ஒரு யுத்தம் ஆக்‌ஷன் முத்தம்

    தலைமுறை எதிரி இனிக்கும் எதிரி..

    பழிவாங்கும் பாவை ,மனதில் உறுதி வேண்டும் மறுபடி மறுபடி ரசிக்கும் மறுபதிப்பு பொக்கிஷங்கள்...

    இறுதியாக இந்த ஆகஸ்ட் அதகளப்படுத்தி விட்டது ..

    நன்றி ..நன்றி..நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஈரோட்டு சிறப்பிதழ் இரண்டையும் இன்னும் வாசிக்காததால் உங்கள் விமர்சனத்தை கடந்து செல்கிறேன் தலைவரே....
      ஆனாக்கா நீங்க ரொம்ப ஸ்பீடு தலைவரே......

      Delete
    2. நம்முடைய விமர்சனம் எப்பொழுதும் படிக்காதவர்களும் படிக்கலாம் வகையை சார்ந்தது ரவி ...அதனால் நோ பயம்..:-)

      Delete
    3. //இந்த மாதம் இதழ்களின் எண்ணிக்கை அதிகம் போல் தோன்றினாலும் ( மகிழ்வான ஒன்று தான் ) எந்த இதழுமே சோடை போகவில்லை//

      நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் தலீவரே !

      Delete
  48. சஸ்பென்ஸ் இதழ்களில் நான் அதிகம் எதிர்பார்த்தது கார்ட்டூன் அதுவும் இரண்டு (ஒரு smurf & ஒரு பென்னி அல்லது ஒரு ரின் டின் & ஒரு பென்னி) கதைகள் இணைந்து ஒரு கார்ட்டூன் ஸ்பெஷலாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் எல்லாம் தலைக்கீழ்! நான் கிடைப்பதை வைத்து சந்தோஷபடுபவன் என்பதால் நான் எதிர்பார்த்த கார்ட்டூன் ஸ்பெஷல் இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் வரும் என்று லக்கி மற்றும் டெக்ஸ் மேக்ஸி இதழ்களில் மூழ்கிவிட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. நானும் ஒரு Smurf எதிர் பார்த்தேன். Anyway I'm satisfied

      Delete
  49. பழிவாங்கும் பாவை: ஏற்கனவே இந்த கதையை படித்து இருக்கிறேன் ஆனால் எனக்கு பெரிய ஞாபக சக்தியெல்லாம் கிடையாது என்பதால் மீண்டும் இந்த புதிய மேக்ஸி இதழை நேற்று படித்து முடித்து விட்டேன்! படிப்பதற்கு நன்றாக இருந்தது, கத்தி இன்றி ரத்தம் இன்றி பழிவாங்கியது அருமை! ஆனால் இதே போன்ற ஒரு tex கதையை சமீபத்தில் படித்ததாக ஞாபகம் (மறுபதிப்பு கதை ) அதனால் சுவாரசியம் குறைந்து விட்டது!

    கர்னல் ஆர்லிண்டன் பார்ப்பதற்கு கார்சன் போலவே இருந்தார் , இவருக்கும் கார்சனுக்கும் ஏதாவது ரத்த பந்தம் / சொந்தம் இருக்கா?

    இந்த புத்தகத்தில் குறை என பார்த்தால் எழுத்து பிழைகள்!

    அட்டைப்படம் அருமை!

    டெக்ஸ் ப்ளோ up கொடுத்தது போல் வரும் காலங்களில் கார்ட்டூன் நாயகர்களின் ப்ளோ up கொடுங்கள் வளரும் குழந்தைகளை சந்தோசபடுத்தும்!

    ReplyDelete
    Replies
    1. // கர்னல் ஆர்லிண்டன் பார்ப்பதற்கு கார்சன் போலவே இருந்தார் //
      ஆமாம் பரணி,நானும் முதலில் அப்படித்தான் நினைச்சேன்,முதல் வாசிப்பு வேற,அதனால் தெரியலை,போகபோகத்தான் தெரிஞ்சது அவர் கார்சனோட டூப்புனு,ஹி,ஹி,ஹி...
      ஒருவேளை விதி போட்ட விடுகதையில் கிட் டெக்ஸுக்கு எதிராக கிளம்புவாரே,அதுபோல ஆகுமோன்னு நினைச்சேன்....
      அதேபோல இன்னொன்றும் தோணிச்சி,பழி வாங்கும் பாவைன்னு பேர் வெச்சிட்டு,தமிழ்ப் படங்களில் இறுதிக் காட்சியில் வரும் போலீஸைப் போல அந்த பெண் இறுதிக் காட்சியில் வந்து பழிவாங்குவது கொஞ்சம் காமெடியாகத் தான் இருந்தது ,இந்தக் கதைக்கு “பழி வாங்கும் பாவை” என்பதே சரியான தலைப்பா என்று கூட ஒருகணம் தோன்றியது.......
      எனினும் கதை போரடிக்காமல் விறுவிறுப்பாக சென்றது தனிக்கதை....

      Delete
    2. //கர்னல் ஆர்லிண்டன் பார்ப்பதற்கு கார்சன் போலவே இருந்தார் , இவருக்கும் கார்சனுக்கும் ஏதாவது ரத்த பந்தம் / சொந்தம் இருக்கா?//

      பங்காளி முறையா இருக்குமோ ?

      Delete
    3. கதை விறுவிறுப்பாக சென்றது.

      கதை இப்படி தான் என்று இரண்டாவது அத்தியாயத்தில் தெரிந்த பிறகு சுவாரசியம் குறைந்தது விட்டது.

      Delete
  50. ஹலோ ஆல்

    # 2 MAXI லயன் இதழ்களையும் வாரிடுவீர்களோ என்ற மெலிதான கலக்கமும் கலந்து கொள்ள,

    வேற யாரோட இதழையாவது விட்டிருந்தா டிமோனிடைசேஷன் பண்ணி வாங்கி கட்டிட்ட மாதிரி பின்னியிருப்பாங்க.. டெக்ஸ் கதைய போட்டாலே கலங்க வேண்டியதில்லை சாரே. தங்கம் மாதிரி. வேண்டாம்னு சொல்லும் பூலோகவாசிகளே கிடையாது.

    #"சர்வமும் நானே" என்ற tag line சகிதமிருந்த TEX படத்துக்கே அடிபிடி !!
    # "எங்க வீட்டில் டெக்சின் முதல் ரசிகை எங்க தாயார் தான் !!" ஈரோட்டில் மட்டுமே இந்த வாசகத்தை at least ஒரு அரை டஜன் தடவைகள் கேட்டிருப்பேன் !! Floored !!!!

    லைன் காமிக்ஸ்னாலே டெக்ஸ் தான். டெக்ஸ்னாலே லைன் காமிக்ஸ் தான் என்பதை தலை மீண்டும் நிரூபித்து உள்ளார்.. மற்றவர்கள் அனைவரும் பக்க வாத்தியங்களே..

    ஈரோடு வரமுடியாதவர்களுக்கு ஆசிரியரின் பதிவு மிகுந்த மகிழ்வை தந்தது. அடுத்த முறையேனும் முயற்சிக்க வேண்டும்..

    ERODE 2020 : "இளம் டைகர் 12 ஆல்பங்கள்" உடன் சர்ப்ரைஸாக கென்யா + அமெரிக்கா ஆல்பங்களைய வெளியிடுங்கள். நாங்கள் கண்டு பிடிக்க மாட்டோம். முடிந்தவர்கள் வாங்கி கொள்ளலாம். பெஸ்ட் உலக காமிக்ஸ் படைப்புகளை படிக்க நாம் ஒரு வருடத்திற்கு வெளியிடும் 50+ வெளியீடுகள் போதாது என்பது என் அபிப்ராயம். நன்றி..

    ReplyDelete
    Replies
    1. // ERODE 2020 : "இளம் டைகர் 12 ஆல்பங்கள்" உடன் சர்ப்ரைஸாக கென்யா + அமெரிக்கா ஆல்பங்களைய வெளியிடுங்கள். நாங்கள் கண்டு பிடிக்க மாட்டோம். முடிந்தவர்கள் வாங்கி கொள்ளலாம். பெஸ்ட் உலக காமிக்ஸ் படைப்புகளை படிக்க நாம் ஒரு வருடத்திற்கு வெளியிடும் 50+ வெளியீடுகள் போதாது என்பது என் அபிப்ராயம். நன்றி.. // அருமையான ஐடியா. கண்டிப்பாக போதாது.

      Delete
    2. //கண்டிப்பாக போதாது.//

      +1... பட்ஜெட்டானது இத்தனை விசாலமாய்க் கடை விரிக்கப் போதாது தான் !

      Delete

  51. லயன்-முத்து வெர்சன் 2.0ல் ஒவ்வொரு ஆண்டும் அசத்திய புதிய நாயகர்கள்,
    ஒவ்வொருவரும் என்னை பொறுத்து ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் வெவ்வேறானது.

    2012-லார்கோ வின்ச்-ஒரு பிளே பாய்போல அறிமுகமாகி கம்பெனி நிர்வாகம், ஷேர் மார்கெட், போட்டி கம்பெனிகளை காலி செய்தல் போன்ற அசகாய சாகசங்களை அசால்ட்டாக சொல்லிட்டு போனார்.

    2013-வெய்ன் செல்டன்-கிட்டத்தட்ட நாமே இறங்கி சாகசம் செய்த ஆத்மார்த்தத்தை அள்ளி அள்ளி வழங்கியவர்!

    2014-தோர்கல்-வைகிங்குகளின் ஆதார கொள்கையான கொலை&கொள்ளை இரண்டிலும் நேரெதிரான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு ஒரு வைகிங் ஆக தோர்கல் ஏஜெர்சன் அநாயசமாக வாழ்ந்து காட்டுகிறார். வான் ஹாமின் அசாத்திய பாத்திரப் படைப்பு!

    2015-பெளன்சர்- வன்மேற்கின் அத்தனை சகஜாலங்களிலும் பூந்து புறப்பட்டு அலைக்கழிக்கப்படும் ஒற்றைக் கையனின் சவாலான சாகசங்கள் எப்பவும் ஹார்ட் பீட்டை உத்தஸ்தாயில் வைத்து கொண்டே இருக்கும்!

    2016-ஜேசன் ப்ரைஸ்-சும்மா மிரட்டிட்டு போயிட்டார் மனுசன். 3பாகம்னாலும் தெறி சாகசம்.

    2017-ட்யூராங்கோ- வன்மேற்கின் மற்றொரு முகம்! எத்தனை அசாத்தியமான சூழலிலும் ஜஸ்மேனாக இருந்து சாதிப்பவர். தொடர்முழுதும் வரும், கண்களால் கதைபேசும் மயக்கும் விழியாள்கள் ஆவலை கிளம்பும் கூடுதல் அம்சம்.

    2018-ட்ரெண்ட்- பாலை வனங்களில் திரிந்து தொண்டை பூரா மணலை விழுங்கி, குரூர கொலைகாரன்களையும், லக்னர் வகையறாக்களையும் டீல் செய்து வந்த நயகர்கள் மத்தியில், ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பாணியும், சீலீரிடும் பனிப்பள்ளத்தாக்குகளுடனும் வந்து லேசான ஒரு மாற்றத்தை விதைத்துச் சென்றார்.

    இந்த வரிசையில் 2019ல் யார் என்ற கேள்விக்கு---
    பராகுடா,
    ஜோனதன் கார்ட்லேண்ட்,
    தனியொருவன்,
    ஜிம் பிரிட்ஜர்---என புதிய நாயகர்கள் வலம் வந்தாலும் அவர்கள் அத்தனை பேரையும் பின்னால் நிற்கச்செய்து நான்தான்
    "கிங் ஆஃப் 2019"----என சத்தமாகவே முத்திரை பதித்தது- "பிஸ்டலுக்கு பிரியா விடை"

    இங்கே கதையே நாயகன்; கதைக்களமே விடாக்கொண்டன் பைரோனையும், சிங்கார சிருங்காரி மார்கோவையும் விஞ்சி நிற்கிறது!

    நீஈஈஈஈஈண்ட நாட்கள் இதன் தாக்கம் நியூரான்களில் நிலையாக நீடித்து நிற்கும்!



    ReplyDelete
    Replies

    1. முதல் இரு பாகங்களில் பரபரப்பான காட்சிகளோடு கதை நகருகிறது.
      பைரோன், மார்கோ, ஹோகார்ட் இடையேயான முக்கோண உறவு;
      பைரோனின் லட்சியம்-மார்கோவின் கனவு வாழ்க்கை 2லும் ஹோகார்ட் எப்படி மாற்றங்களை வித்திடுகிறார் என்ற டுவிஸ்ட்கள் சிலீரிடுகின்றன.

      பாகம்3&4ல் படுசீரியஸ் களமாக கதை ஓட்டமெடுக்கிறது. செவ்விந்திய பழங்குடியினர் மற்றும் நவஹோக்களின் வாழ்க்கையை பல்லாயிரக்கணக்கான மைல்கள் தாண்டியுள்ள சமூகம் எப்படி தீர்மானிக்கிறது என அறியும் கட்டங்கள் நம் மனசை பிசைகிறது. ஒரு கணம் அந்த பழங்குடியின மக்களை எண்ணி கண் கலங்கத்தான் வேணும்.

      படுமசாலாவான கதையாக தொடங்கி வரலாற்று பாதையில் பயணித்து வெரி வெரி இன்ட்ரஸ்டிங்கான க்ளைமாக்ஸ் சீக்குவன்ஸ்ஸை அடைகிறது.

      பைரோனின் லட்சியம் ஈடேடுமா?
      மார்கோ தான் விரும்பும் கனவு வாழ்க்கையை அடைவாளா?
      ஹோகார்ட் வஞ்சம் தீர்ப்பானா?
      நவஹோக்கள் தங்களது குடியிருப்பு உரிமையை தக்கவைப்பார்களா? என்ற
      கேள்விகளுக்கு விடையாக எதிர்பாரா க்ளைமாக்ஸ் காத்திருக்கிறது!

      செவ்விந்திய பழங்குடியினர் பற்றி அவ்வப்போது நெட்டில் எதையாவது படித்துக் கொண்டு இருப்பேன். மற்ற பழங்குடியினரோடு ஒப்பிடுகையில் நவஹோக்களுக்கு மட்டும் எப்படி இத்தனை பெரிய தனிநாடு இருக்கிறது என்ற கேள்விக்கு கற்பனையான இந்த கதை விடை சொல்கிறது!

      வன்மேற்கின் மற்றொரு குரூரமுகத்தையும்
      பழங்குடியினர் அவல வாழ்க்கை முறையையும் அற்புதமான ஓவியங்களில் படம்பிடித்துக் காட்டுகிறது.

      கதையின் துவக்கத்தில் தொடங்கி முடிவு வரை கதையோட்டத்திற்கு இணையாண உரையாடல்கள், வர்ணனைகள் கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. லயன் டைனமைட் ஸ்பெசல்க்கு பிறகு டயலாக்குகள் வெகுவாக ரசிக்க வைத்தன!

      லயனின் இரத்தபூமி, எமனின் திசை மேற்கு வரிசையில் இதுவும் இடம்பிடிக்கிறது. இந்த 3கதைகளுக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை மூன்றிலும் கதையே நாயகன்!

      Delete
    2. உண்மைதான்.வில்லரைப் படிக்காமல் பிஸ்டலைப் பிடிக்கும்போது 'பிரியாவிடை 'பிடிக்காமல் போகுமா என்ன ?

      Delete
    3. //படுமசாலாவான கதையாக தொடங்கி வரலாற்று பாதையில் பயணித்து வெரி வெரி இன்ட்ரஸ்டிங்கான க்ளைமாக்ஸ் சீக்குவன்ஸ்ஸை அடைகிறது. //

      கதாசிரியரின் இமாலய வெற்றி சார் !

      Delete
    4. எவளோ பெரிய விமர்சனம். Almost அனைத்து பாய்ண்ட் களையும் தொட்டு வந்து விட்டீர்கள். எனக்கு மிகவும் பிடித்த character அந்த சின்ன பெண் தான். அட்டகாசமான பாத்திரம்.

      Delete
    5. // செவ்விந்திய பழங்குடியினர் மற்றும் நவஹோக்களின் வாழ்க்கையை பல்லாயிரக்கணக்கான மைல்கள் தாண்டியுள்ள சமூகம் எப்படி தீர்மானிக்கிறது என அறியும் கட்டங்கள் நம் மனசை பிசைகிறது. ஒரு கணம் அந்த பழங்குடியின மக்களை எண்ணி கண் கலங்கத்தான் வேணும். // அந்த சமூகத்துக்கு செவிந்தியர்களை பற்றியோ அவர்கள் வாழ்க்கையை பற்றியோ எதுமே தெரியாது என்பது அதைவிட கொடுமை.

      Delete
  52. தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும்.

    ஈரோடு நமது காமிக்ஸ் விழாவிற்க்கு நான்காவது முறையாக கலந்துகொண்டதை நினைக்கும்போதெல்லாம் பிரமிப்பாகவும், பெருமையாகவும் இருக்கிறது. ஏற்கனவே மூன்று விழாவில் பங்கெடுத்தாலும் இந்த முறை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். கடந்த வருடம் வரை ஒரு மூலையில் அமதியாக அமர்ந்து விழா நிகழ்வுகளை ரசித்துக் கொண்டிருந்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவேன். சென்னை புத்தக விழாவிலும் அப்படிதான். ஆனால் இந்த முறையோ பெஸ்ட் ஆப் ஹானர் எனும் பெருமையில் (அதற்கு நான் தகுதி இல்லை என்பது எனக்கே தெரியும்) நானும் ஒருவன். ஆகா இதென்னடா தர்மசங்கடமா போச்சே எஸ்கேப்பாகிடலாமோ, என்று நினைத்துக் கொண்டிருந்தேன். என்னதான் ஆஃபிஸில் டெய்லி மீட்டிங், தினம் ஒரு தொழிலாளர் பஞ்சாயாத்து என்று ஓரளவுக்கு கெத்துக் காட்டினாலும், மனது படபடப்பாகத்தான் இருந்தது.

    மீட்டிங் ஹால் உள்ளே நுழைந்த உடனே நமது எடிட்டர் இன்முகத்துடன் வரவேற்றார். 2013 சென்னை புத்தக விழாவில் முதன் முதலாக விஜயன் சார் அவர்களை பார்த்ததிலிருந்தே, அவரிடம் எனக்கு பிடித்ததே, எடிட்டர் என்ற பந்தா இம்மிளவும் இல்லாமல், அனைத்து வாசகர்களிடமும் நண்பராக பழகுவதே. என்னை வரவேற்க்கும்போதே கலாய்த்துதான் வரவேற்றார். சரி வழக்கம்போல ஓரமாக அமர்ந்துவிடுவோமே என்று நகர்ந்தால், என்னையும் மேடை ஏற்றி, புத்தகங்களை வெளியிட வைத்து, மைக்கை நீட்டி இரண்டு வார்த்தைகள் பேசுங்கள் என்ற எடிட்டர் அவர்களுக்கு, எனது வாழ்வில் எப்போதும் பசுமையாக இருக்கபோகும் இந்த மறக்கமுடியாத நிகழ்வுகளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது. இதே போல் பெஸ்ட் ஆப் ஹானருக்கு முற்றிலும் தகுதியான டாக்டர்.செல்வம் அபிராமி அவர்கள் என்னை தேடி வந்து பேசி எனக்கு பெரிய ஆச்சரியத்தையும், அதே சமயம், அடச்சே.. என்ன ஆளுடா நீ, நீ அல்லவா முதலில் சென்று பேசி இருக்கவேண்டும், என்ற பாடத்தையும் கற்பித்து சென்றார். உணவுக்கு பிறகு அவரிடம் பேச வேண்டும் என்ற ஆசை நிறைவேறவில்லை. இன்னும் சில நண்பர்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று ஆசை இருந்தாலும் விழாவில் கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள். மதிப்புக்குறிய எடிட்டர் திரு.விஜயன் அவர்களுக்கு நன்றிகள்.

    வாழ்வில் மறக்க முடியாத இந்த இனிய அனுபவத்தை தந்த ஆண்டவனுக்கு நன்றி !!

    ReplyDelete
    Replies
    1. அருமையாக எழுதி இருக்கிறீர்கள் கார்த்தி சார். செம்ம செம்ம.

      Delete
    2. சார்... பானைச் சோற்றின் பதமாக மட்டுமே அந்த அரங்கில் அன்றைக்கிருந்த ஆற்றலாளர்களை பார்த்தால் கூட "பந்தா" என்ற சமாச்சாரங்களை நான் கனவிலாவது நினைத்தாவது பார்க்க இயலுமா ?

      Delete
    3. Comirade PK! MODESTY must be your middle name ..!!!

      Delete
    4. ஈபுவியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அழகான உணர்வு.

      Delete
  53. // ஜன்னலோரம் ஒரு ஆந்தை //
    எப்படி இப்படியெல்லாம் தலைப்பை யோசிக்கிறிங்க ஆசிரியரே......

    ReplyDelete
    Replies
    1. முதலில் நான் தேர்வு செய்தது - 'ஜன்னலோரம் ஒரு ஆ .வி.' என்ற தலைப்பையே சார் !

      Delete
    2. தற்போதைய தலைப்பே ”நச்”னு இருக்கே சார்....

      Delete
    3. ///முதலில் நான் தேர்வு செய்தது - 'ஜன்னலோரம் ஒரு ஆ .வி.' என்ற தலைப்பையே சார் !///

      இதுவும் நல்லாத்தான் இருக்கு சார்.

      Delete
  54. மனதில் உறுதி வேண்டும்,
    இதுவும் முதல் வாசிப்பே,ரொம்பவுமே சீரியசாகப் போக வேண்டிய ஒரு கதைக் களத்தை தேர்ந்தெடுத்து மிக,மிக கவனமாக கையாண்டிருக்கிறார்கள்,கொஞ்சம் கவனம் பிசகினாலும் சொதப்பி விடும் வாய்ப்புகள் அதிகம் அல்லது ஜில்லார் கதை மாதிரி செமி டைப் ஆகும் வாய்ப்புகள் நிறையவே,கம்பி மேல் நடக்கும் வித்தைதான்.....
    சிக்மண்ட் பிராய்டின் கருத்துகள் ரொம்பவே ஆழமானவை,மிகவும் அடர்த்தியானவை,மனம் சார்ந்த அவரது கருத்துகளை உள்வாங்குவதே பெரிய விஷயம்,ஞானி ஓஷோ அவர்களின் விவாதங்களில் புத்தர்,சிக்மண்ட் பிராய்ட் போன்றோர்களின் கருத்துகள் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும்....
    இதை காமெடி களத்தில் வைத்து கதையை நகர்த்திச் செல்ல யோசிப்பதே மிக வியப்பான விஷயம்,ஆனால் அதை திறம்பட செய்திருக்கிறார்கள் மோரிஸ் & கோசினி கூட்டணியினர்....
    இரசனையான ஒரு கதையை வாசித்த திருப்தி கிட்டியது......

    ReplyDelete
    Replies
    1. ஹை ...பிஸ்டலுக்குப் பிரியாவிடை ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை மீறியொரு கமெண்ட் !!

      Delete
    2. சரியான விமர்சனம் ரவி. மிக ரசனையான கதை. நான் மிகவும் ரசித்தேன். லக்கி எப்போதுமே சூப்பர் ஸ்டார் தான்.

      Delete
  55. இளம் டைகர் 12 ஆல்பங்ககள் Waiting from now.

    ReplyDelete
  56. ***** ஒரு ஈரோட்டு முகவரின் அழுகுரல் ******

    ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புத்தகங்களை மாதாமாதம் சிவகாசியிலிருந்து வரவழைத்துவிட்டு, வீடுதேடிவரும் வாசகர்களுக்காகக் காத்திருக்கும் முகவர் அவர்! உலக சர்வாதிகாரி ஒருவரின் பெயர் கொண்ட அந்த முகவருக்கு மாதத்தின் முதல் தேதிகளில் "இந்தமாச புக்கு வந்துடுச்சுங்களா?" என்று கேட்டு வரிசையாய் ஃபோன்கால்கள் வருவதுண்டாம்!! "சடச்சுட வந்து இறங்கியிருக்கு.. உடனே வந்து வாங்கிக்கிடுங்கோ" என்று இவர் பதிலளித்தால் எதிர்முனையில் "டெக்ஸு வந்திருக்கா?" என்பார்களாம்! "ஆனாக்க இந்த மாசம் டெக்ஸு இல்லையே.." என்று இவர் பதிலளித்தால் "அட என்னாங்க.. டெக்ஸு இல்லாம எப்படிங்க... சரி நான் அப்புறம் பேசுறேனுங்க" என்றபடிக்கே அவசரமாகத் துண்டித்துவிடுகிறார்களாம்! மீண்டும் முதல்தேதி வரை தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விடுகிறார்களாம்!

    "டெக்ஸு இல்லேன்னா அந்த மாசத்துல வர்ற மற்ற புத்தகங்களெல்லாம் பலத்த அடி வாங்குதுங்க நண்பரே! ஆனா அதுவே டெக்ஸ் புக்கு வந்துச்சுன்னா கூடவே மத்த புத்தகங்களையும் சேர்த்து வாங்கிட்டுப் போயிடறாங்க. தமிழ் காமிக்ஸைப் பொருத்தவரை சர்வமும் டெக்ஸே! இதையெல்லாம் அந்த சிங்கமுத்து வாத்தியார் என்னிக்குப் புரிஞ்சுக்கறது.. நானும் என்னிக்கு நாலு புக்கு விக்கறது" என்று மூக்கைச் சிந்துகிறார்!

    "சி.மு.வாத்தியார்ட்ட நீங்களாவது எடுத்துச் சொல்லக்கூடாதா? முடிஞ்சா இதை ப்ளாகிலும் போடுங்க.. ஆனா என் பெயரை மட்டும் வெளியிட்டுடாதீங்க" என்று கேட்டுக்கொண்டவரின் கரங்களைப்பற்றி "கவலைப்படாதீங்க ஸ்டாலின் ஜி" என்று ஆறுதல் சொல்லியபடிக்கே நாம் கனத்த மனதோடு அவ்விடத்திலிருந்து கிளம்பினோம்!!

    ReplyDelete
    Replies
    1. யாரா இருக்கும்..!?
      ஏதாச்சும் க்ளூ குடுங்க குருநாயரே .!

      Delete
    2. மன்னிச்சுக்கோங்க கிட்! எடிட்டரே கேட்டாலும் நான் அவர் பெயரை வெளியிடறதா இல்லை!!

      Delete
    3. பரவாயில்லே ஈ. வி. ; நான் கர்னல் க்ளிப்டனையோ / டாக்டர் வேஸ்ட்சன்னையோ களத்திலே இறக்கி அந்த மர்ம முடிச்ச அவிழ்க்க பாக்குறேன் !

      Delete
  57. நல்லவேளை. பழி வாங்கும் பாவையில் கார்சன் இல்லை.இருந்திருந்தா கார்சன் யாரு, கர்னல் அர்லிங்டன் யாருனு ரொம்பவே குழப்பம் வந்திருக்கும்.

    ReplyDelete
  58. அதென்னங்க

    கார்சனப் போட்டு டெக்ஸூ இந்த அடி அடிக்கிக்கிறாரு.

    பழி வாங்கிய ஓவியம்(ர்)

    ReplyDelete
    Replies
    1. கார்சனுமே இந்த இதழில் இடம் பிடிக்கிறாரே நண்பரே... பக்கம் 60 முதலாய் !

      Delete
    2. அது வந்து...ஹி..ஹி பிபிவி படிச்ச பாதிப்பில் ,மத்த புத்தகங்களை இன்னும் படிக்கல.
      அதனால பவாபா கதையை முதலிரண்டு பக்ககமும், கடைசியிரண்டு பக்கமும் லுக் விட்டு நானே கற்பனை பண்ணிட்டேன்.
      ஆனா அந்த லுக்கு மக்கா போச்சு..!

      Delete
    3. எனக்கு மட்டும் தான் பழி வாங்கும் புயலுக்கும் இந்த பழி வாங்கும் பாவை க்கும் ஏதோ ஒற்றுமை இருப்பது போல படுகிறதோ? 🤔

      Delete
  59. E. S6 ஈ. வி. சகோ. நீங்க அடிச்சு க்ககூட கேட்டாலும்ஸ்டாலின்ஸாரின் பெயரை சொல்ல மாட்டீங்கன்னு எல்லாருக்கும் நல்லா தெரியும். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. இங்கே ஓடும் அத்தனை ரவுசுகளையும் நீங்க கவனிப்பது செம சார் !

      Delete
  60. ஈரோடு ஸ்பெஷல் முதல் பார்வையிலே மெர்சலாக்கியது தலயின் மேக்சி லயன் தான். சித்திரங்கள் மேக்சி லயனில் பார்க்கும் போது அற்புதமாக உள்ளது.
    முயற்சி தொடரட்டும் சார்.

    ReplyDelete
  61. தலயின் கழுகு வேட்டை,
    பழிக்கு பழி,
    இரத்த வெறியர்கள்,
    இரத்த முத்திரை மேக்சி லயனில் விரைவில் காண ஆசை.

    ReplyDelete
    Replies
    1. அதே அதே அதே. அடுத்த வருட surprise இதழ்கள் காத்திருப்பை எகிற செய்கிறது. என்னா டுவிஸ்ட். Reprints Kum twist வைத்தார் பாருங்க எடிட்டர்.

      Delete
  62. 200th வெற்றி வெற்றி

    ReplyDelete