Powered By Blogger

Friday, August 23, 2019

கரம் கொடுப்போமா guys ?

நண்பர்களே,

வணக்கம். மனித விதி எத்தனை மூர்க்கமானதொரு சக்தி  என்பதை அவ்வப்போது நமக்குப் புரிந்திடச் செய்வதற்காகவோ - என்னவோ, எதிர்பாரா இன்னல்களையும், இக்கட்டுக்களையும் வாழ்க்கை நம் முன்னே கொணர்ந்து திடு திடுப்பென நிறுத்துகிறது போலும் ! இதோ அதன் லேட்டஸ்ட் பரிமாணம் - நமது காமிக்ஸ் குடும்பத்தைச் சார்ந்த நண்பர் ஜேடர்பாளையம் சரவண குமாருக்கு நேர்ந்திருக்கும் திடீர் உடல்நலக்குறைவு !! திடீர் தலைசுற்றல் ; தொடர் வாந்தி ; ஒரு காது கேளாமை என்ற சிக்கல்கள் ஒரு நாள் காலையில் தலைதூக்கிட, ஸ்கேன் செய்து பார்க்கும் போது மூளையில் கட்டி என்று report சொல்லியுள்ளது ! சீக்கிரமே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம் என்றும்  ; செலவு இரண்டு லட்சம் வரை ஆகும் என்றும் ஈரோடு KMCH மருத்துவமனையில் சொல்லியிருக்கிறார்களாம். மேற்படி ரிப்போர்ட்டை நம் வாசகக் குடும்பத்து மருத்துவர்களும் பார்த்துள்ளனர் & அறுவை சிகிச்சை உடனே அவசியமென்று அவர்களுமே பரிந்துரை செய்துள்ளனர் ! திடீரென இத்தனை பெரிய தொகையைப் புரட்ட வேண்டிய நெருக்கடியில் நண்பர் இருக்க, பிரியமான நமது இன்னொரு நண்பரும்,  அவரது தம்பியுமான கரூர் குணா - பணத்துக்காக இங்கும் அங்கும்  ஓடிக்கொண்டிருக்கிறார் ! 

இக்கட்டில் தத்தளிக்கும் குடும்பத்துக்கு இயன்ற பொருளாதார உதவிகளை இந்தத் தருணத்தில் செய்திட நமக்கு சாத்தியப்பட்டால் - நாமிங்கு பகிர்ந்து வரும் அன்புக்கும், நேசத்துக்கும் yet another அழகான அத்தியாயமாக விளங்கிடும் என்றுபட்டது எனக்கு ! பொதுவாய் வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியாதிருப்பதே நாகரீகம் என்றெல்லாம் சொல்லித் தந்திருப்பார்கள் நமக்கு - ஆனால் அந்த இங்கிதங்களுக்கெல்லாம் சில நெருக்கடி நேரங்களில் விதிவிலக்களித்து விடலாம் என்பேன் ! இதோ இங்குள்ள நண்பர் குணாவின் வங்கிக் கணக்கிற்கு இயன்ற உதவியினைச் செய்த கையோடு நமக்கொரு மின்னஞ்சலையும் தட்டி விடுங்களேன் - ப்ளீஸ் ? 

M.Gunasekaran
A/c Number: 1152155000135404
Karur vysya bank
IFSC :KVBL0001152
Karur west(LNS)
68,erode road
LNS post
KARUR
Tamil nadu-639002 

சிறிதோ,பெரிதோ - உதவிடும் நண்பர்கள் அனைவருக்குமே தொகையைக் குறிப்பிடாது - இங்கு சின்னதாயொரு பட்டியலில் நன்றி சொல்லிடுவோம் !! நம் பங்குக்கு, இன்றைய வங்கி விடுமுறை முடிந்த பிற்பாடு ஒரு தொகையினைNEFT அனுப்பிடுவோம் !  

தோள் கொடுப்போமே நம் நண்பருக்கு ? Please do chip in folks !!

85 comments:

  1. முக்கிய பதிவு..சிறிய தொகையாயிற்றே என எண்ண வேண்டாம்..முடிந்ததை செய்யவும்..சிறுதுளி பெருவெள்ளம்..

    விரைந்து செய்யவும்..

    ReplyDelete
    Replies
    1. // விரைந்து செய்யவும்.. //
      அப்படியே ஆகட்டும் அய்யா......

      Delete
  2. Replies
    1. நிச்சயமாக சார்.

      Delete
    2. என்னால் முடிந்த சிறு தொகை அனுப்பியாகி விட்டது சார்.நண்பர்களின் ஆதரவும் பிரார்த்தனையும் நிச்சயம் அவரை மீட்டுக் கொண்டுவரும்.

      Delete
  3. JSK என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் ஜேடர்பாளையம் சரவண குமாருக்கு இப்படியொரு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது!

    நண்பர் நல்லமுறையில் சிகிச்சை பெற்று பூரணசுகம் பெற நம்மால் இயன்றதைச் செய்வோம் நண்பர்களே!

    செனாஅனா சொல்லியிருப்பது போல 'சிறு துளி பெரு வெள்ளம்'! _/\_

    ReplyDelete
  4. ஓகே சார்
    உடனே பண்ணிடலாம் 🙏🏼

    எல்லாம் வல்ல இறைவனின் அருளால் பூரண நலம் பெற்று இல்லம் திரும்பட்டும் 🙏🏼🙏🏼🙏🏼

    ReplyDelete
  5. சீக்கிரமே நலம் பெற பிராத்திக்கிறேன்...

    ReplyDelete
  6. புயல்வேகத்தில் நண்பர்களின் பங்களிப்பு நடந்துகொண்டுள்ளது சார் கடவுள்அருளால் விரைவில் குணமடைந்து JSK அவர்கள் நம்முடன் இணைவார் சார்..

    ReplyDelete
    Replies
    1. ///புயல்வேகத்தில் நண்பர்களின் பங்களிப்பு நடந்துகொண்டுள்ளது சார் ///

      நல்ல செய்தி!

      Delete
  7. // தோள் கொடுப்போமே நம் நண்பருக்கு //
    உறுதியாக,வலிமையாக தோள் கொடுப்போம் சார்.....

    ReplyDelete
  8. கவலையளிக்கும் செய்தி!
    நண்பர் உடல்நலம் பெற எல்லாம் வல்ல எம்பெருமான் அருளை பிரார்த்திக்கிறேன்.
    முடிந்தளவு நிச்சயமாக உதவுவோம் சார்.

    ReplyDelete
  9. நிச்சயமாக...
    அத்துடன்,
    எல்லாம் வல்ல இறைவனின் அருளால் பூரண நலம் பெற நம் அனைவரின் பிரார்த்தனையும் அவருக்காக செய்வோம்..

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக...
      அத்துடன்,
      எல்லாம் வல்ல பரபிரும்மத்தின் அருளால் சகோதரர் JSK பூரண நலம் பெற நம் அனைவரின் பிரார்த்தனையும் அவருக்காக செய்வோம்..

      Delete
  10. கை கொடுப்போம் சார்

    ReplyDelete
  11. நிச்சயமாக அண்ணா!
    என்னால் இயன்றதை முயல்கிறேன்!
    கடவுள் ஆசிர்வதிப்பார்!

    ReplyDelete
  12. கடவுளின் அருளால் சீக்கிரமே நலம் பெற வேண்டுகிறேன்

    ReplyDelete
  13. உதவப்போகும் நண்பர்கள், உதவிய நண்பர்களை நினைத்து பெருமைப் படுகிறேன்.

    அதே நேரத்தில் இனியாவது மற்ற நண்பர்கள் குறைந்த பட்சம் 5 லட்ச ரூபாய்க்கு ஒரு *Health Insurance with Cashless Card* எடுத்து வைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். அது *உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் உயிர் காக்கும்*. அதற்கான செலவு??! மாதம் ஆயிரம் ரூபாய் தான் வரும்.

    ஏதேனும் ஒரு Health Insurance Companyயில் இன்றே apply செய்யுங்கள்.

    தள்ளிப்போடும் காரியம் .. என்றும் நடக்காது

    ==============
    *பின் குறிப்பு:*

    இது இன்ஸ்யூரன்ஸ் கேன்வாஸிங் அல்ல. என்னடா இவன் இந்த நிலையைப் பயன்படுத்தி இன்ஸ்யூரன்ஸ் விக்கிறான்னு நினைக்கவும் வேண்டாம். புரளி கிளப்பவும் வேண்டாம். நான் Health Insurance விற்பனை செய்வதில்லை. Life Insurance only.

    இது பரிந்துரை மட்டுமே ‌...

    ReplyDelete
    Replies
    1. This is also true ! I agree with Tsi Na Pah !!

      Delete
    2. தற்போதைய அவசர யுகத்தில் மருத்துவ காப்பீடு கட்டாயம் தேவை.

      Delete
    3. மிகவும் நல்ல பரிந்துரை.இதை எதிர்மறையாக யாரும் கருதப்போவதில்லை.

      Delete
  14. இறையருள் துணை நிற்கும்.. நண்பர்களும்..!

    ReplyDelete
  15. Replies
    1. 9786822001
      குணா, கரூர். JSK வின் சகோதரர். இந்த நெம்பரில் google pe உள்ளது.

      Delete
  16. சகோதரர் விரைவில் குணமடைதல் குறித்த பிரார்த்தனை உடன் கட்டாயமாக தோள் கொடுப்போம்

    ReplyDelete
  17. அருமையான பதிவு மற்றும் கோரிக்கை சார். மூத்த வாசகர் அண்ணன் ஜேடர்பாளையத்தாரை காக்க நம்மாலான அத்தனை முயற்சிகளையும் முன்னெடுத்து செல்வோம்.. இறையருள் துணை நிற்கட்டும்..

    ReplyDelete
  18. அன்புச் சகோதரர் JSK பரிபூரண உடல் நலத்துடன் விரைந்து குணமடைய வேண்டும்.
    ஆத்மார்த்தமாக உதவக்கூடிய நண்பர்பர்களின் கருணைக்கு நன்றி.

    அவரது மேன்மையான உடல்நலத்துக்காக பிரார்த்திக்கும் அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.




    பின்குறிப்பு.

    மருத்துவத்துக்கான தொகை சற்று பெரியது.அவர்களுடைய துயரத்தில் நாமும் சிறிதளவு பங்கெடுத்துக் கொள்வோம்.
    தயரமான நேரத்தில் பங்கெடுத்து அதை பாதியாக்குவதும்...
    மகிழ்ச்சியான நேரத்தில் பகிர்ந்து கொண்டு அதை இரட்டிப்பாக்குவதும் தோழமையின் இயல்பு.
    வங்கிக் கணக்கை மட்டும் வெளியிட்டால் போதுமானதாக இருக்கும்.
    தொடர்ச்சியாக ஈமெயிலுவது,அதை தளத்தில் பதிவிடுவது என்பதெல்லாம் ஒருவித அசௌகரியமான உணர்வை அல்லவா ஏற்படுத்துகிறது.தவறாக இருந்தால் பொறுப்பானவர்கள் ;மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. அசெளகரியம் தேவையில்லை நண்பரே!
      எல்லோருமே கொடுக்கும் நிலையிலிருப்பார் என்று எதிர்பார்க்க முடியாதுதான்! அவரவர் சூழ்நிலை அவரவருக்கு!

      இயன்றவர்கள் தந்துதவட்டும்..
      இல்லாதவர்கள் வேண்டிக்கொள்ளட்டும்..
      இரண்டுமே உயிர் காத்திடும்! _/\_

      Delete
    2. எந்த விதத்திலும் தங்களுடைய இருப்பை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாதவர்களுடைய நிலைமையை சங்கடத்துக்கு உள்ளாக்குவதாக இருந்துவிடும்....பரவால்ல.

      Delete
  19. // தவறாக இருந்தால் பொறுப்பானவர்கள் ;மன்னிக்கவும். //
    தளத்தில் நண்பர்கள் எவ்வளவு கொடுத்தார்கள் என்ற விவரங்கள் பதியப்பட வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.மற்றபடி உதவ இத்தனை நண்பர்கள் உள்ளார்கள் என்பதை தெரிவிப்பது உற்சாக உணர்வையே அளிக்கும் என்று நம்புவோமாக.....
    இன்றைய அவசர யுகத்தில் இக்கட்டான ஒரு சூழலில் தோள் கொடுக்க இவ்வளவு தோழர்கள் உள்ளார்கள் என்று எல்லோரும் தெரிந்து கொள்வதே ஒரு உற்சாகமான செய்திதானே நண்பரே....
    நல்லதே நடக்கட்டும்.....

    ReplyDelete
    Replies
    1. ///இன்றைய அவசர யுகத்தில் இக்கட்டான ஒரு சூழலில் தோள் கொடுக்க இவ்வளவு தோழர்கள் உள்ளார்கள்///---வெல் செட்!

      Delete
    2. ////இன்றைய அவசர யுகத்தில் இக்கட்டான ஒரு சூழலில் தோள் கொடுக்க இவ்வளவு தோழர்கள் உள்ளார்கள் என்று எல்லோரும் தெரிந்து கொள்வதே ஒரு உற்சாகமான செய்திதானே நண்பரே....
      நல்லதே நடக்கட்டும்.....///

      வேலிட் பாயிண்ட்!

      Delete
  20. நண்பர் விரைவில் பரிபூரண நலமடைய இறைவனை வேண்டுவதோடு நம்மால் முடிந்த உதவிகளை நண்பர்கள் நிச்சயம் இணைந்து தோள் கொடுப்போம் சார்.

    ReplyDelete
  21. சிறுதொகை அனுப்பியாச்சு சார்
    நம் காமிக்ஸ் நேசம் அவரை விரைவில் நலமுடன் மீட்டு வந்திடும் இதற்காக தோள் கொடுக்கும் கொடுக்கப் போகும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தொடரட்டும் தோழமைகளின் உதவி...

      Delete
  22. நண்பர் நலமுடன் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனின் ஆசியும்,காமிக்ஸ் நண்பர்களின் அன்பும் என்றும் அவருடன் தொடரும்.....நம்பிக்கை ஒன்றே அசாத்தியம் ஆனது ...
    நம்பிக்கை. ..
    நம்பிக்கை. ..
    நம்பிக்கை. ..

    ReplyDelete
  23. காமிக் லவர் ராகவன் ஒரு கணிசமான தொகையை நண்பருக்காக அனுப்பிவைத்திருக்கிறார்! அன்புள்ளத்திற்கு நம் நன்றிகள்! _/\_

    ReplyDelete
    Replies
    1. ஈ வி ,

      இன்னொரு முறை என்னை இப்படிப் பொதுவில் கூனிக் குறுகச் செய்தால் உங்களோடு தொடர்பு கொள்வதையே நிறுத்தி விடுவேன் !!!

      Delete
    2. சங்கிலிமுருகன் மாதிரி ஆகிடுச்சே என் நிலைமை!!
      'ஏம்ப்பா.. நான் சரியாத்தானே கமெண்ட் போட்டிருக்கேன்?' :)

      Delete
    3. @ Ragavanji..i apologize on behalf of ஈவி..we can understand..don't get hurt.

      @ஈவி...As always your intentions are good..but there are some delicate moments when one wants to be intentionally unobtrusive and his actions to remain discrete..this is one such occasion...thanks for the understanding...

      Delete
    4. ஹா ஹா ஹா.. அய்யோ.. அய்யோ!!

      என்னடா இவன் சீரியசான விசயம் பேசிக்கிட்டிருக்கும்போது இப்படிச் சிரிக்கானேன்னு யோசிக்கறீங்க.. அதானுங்களே செனாஅனா?

      ஹிஹி.. உதவி பண்ணிய ஒருத்தரின் பெயரை ஓபனா சொன்ன எனக்கே இப்படீன்னா..
      ///சிறிதோ,பெரிதோ - உதவிடும் நண்பர்கள் அனைவருக்குமே தொகையைக் குறிப்பிடாது - இங்கு சின்னதாயொரு பட்டியலில் நன்றி சொல்லிடுவோம் ///

      ஒரு பட்டியலே போடப் போற நம்ம எடிட்டரின் நிலைமையை நினைச்சுப் பார்த்தேன்.. சிப்புத் தாங்க முடியலை!! ஹோ ஹோ ஹோ!! :)

      Delete
    5. Doc .. nothing alarming ... சில சமயங்களில் இந்த பூனை பண்ணுற (நீங்கள் சொன்ன மாதிரி நல்ல எண்ணம் என்றாலும்) ரவுசு இருக்கே .. ஹ்ம்ம் .. என்ன பண்றது .. நமக்கு வாய்ச்ச பூனை அப்பிடி !!

      Delete
    6. @ Ragavanji..relieved.. I like EV so much that i was afraid he could be mistaken.. He is so jovial that it's nearly impossible for almost anybody not to be attracted by him..

      @ Ev..//ஒரு பட்டியலே போடப் போற நம்ம எடிட்டரின் நிலைமையை நினைச்சுப் பார்த்தேன்.. சிப்புத் தாங்க முடியலை!! ஹோ ஹோ ஹோ!! //

      என்னவொரு அட்டகாசம்.. எடிட்டர் கிட்ட வம்புல மாட்டிவிட பாக்கிறீங்களா???

      கிருஷ்ண ஜெயந்தி இன்னைக்குங்குறது உங்க குறும்பை பாத்தபிறகுதான் ஞாபகம் வருது..

      :-)

      டாக்டர் யுபெர் வந்தா கூட உங்களை மாத்த முடியாது..:)

      Delete
    7. // . I like EV so much that i was afraid he could be mistaken.. He is so jovial that it's nearly impossible for almost anybody not to be attracted by him.. // well said doc

      Delete
  24. ராமருக்கு அணில் போல
    என்னால் முடிந்த சிறு உதவி.
    JSK விரைவில் குணமடைய
    ஆண்டவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சாதாரணமாவே நண்பர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் ஆளாச்சே ஜி நீங்க! _/\_

      Delete
  25. Done from my side too! I wish him to get well soon.
    Regards,
    Mahesh kumar Selvaraj

    ReplyDelete
  26. அனுப்பியாச்சு சார்.விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.

    ReplyDelete

  27. ஜேடர்பாளையம் சரவண குமார் (எ) JSK

    கடிதங்கள் வாயிலாக மட்டுமே எடிட்டர் சாரோடு ரசிகர்கள் தொடர்பில் இருந்த காலகட்டம்....
    லயன் பழைய இதழ்களில் விமர்சனக் கடிதங்கள் பகுதி முக்கியமானவை! இன்றைய பெரும் புள்ளிகள் பலரும் அந்த பகுதியின் ரெகுலர் பங்களிப்பாளர்கள்!

    அதில் ஜேடர்பாளையம் சரவண குமார் என்ற பெயரில் பல லெட்டர்கள் அடிக்கடி இடம்பெற்று இருக்கும். நடுநிலையான எண்ணங்களை கதைப்போக்குகளை விமர்சித்து இருப்பார். அவரோட கடிதங்கள் பார்த்து அவரின் மேல் நல்ல அபிப்ராயம் வளர்த்து வந்துள்ளேன்.

    2015கோடையில் தளத்தில் போட்டிருந்த என் நம்பருக்கு ஒரு அழைப்பு வந்தது! மெல்லிய வாய்ஸில் தன்னை ஜேடர்பாளையம் சரவண குமார் என அறிமுகம் செய்து கொண்டார், நான் ரொம்ப நாளாக மீட் பண்ணனும் என நினைத்துக் கொண்டு இருந்த நண்பர்.

    ரொம்ப இயல்பாக நெடுநாள் பழகியதைப்போல பேசினார். காமிக்ஸ் மேல் எத்தனைக் காதல் கொண்டவர் என புரிந்து ஆச்சர்யம் அடைந்தேன்!

    டெக்ஸ் வில்லரின் தீவிர ரசிகர்களுள் தானும் உண்டு எனவும், டெக்ஸ் கதைகள் பற்றிய என்னுடைய விமர்சனங்கள் விரும்பி படிப்பார் எனவும் தெரிவித்தார்! பார்ரா இதை நாம மதிப்பு வைத்து இருக்கும் ஒருவர் நம்ம விமர்சனைங்களை ரசிக்கிறார் என ஒரு ஆனந்த ஜெர்க்!

    அன்று முதல் அவர் தன்னுடைய கருத்துக்களை எனக்கு போனில் தெரிவிப்பார்; நான் இங்கே தளத்தில் அவர் சார்பாக கமெண்ட்டாக பதிவேற்றி வந்துள்ளேன். அவரே பதிவு போடும் வரை இது தொடர்ந்தது.

    அவர் கேட்ட டெக்ஸ்கதை மறுபதிப்பு பற்றிய கமெண்டுக்கு, "பக்கத்து இலைக்கு பாயாசமா"----என நம்ம நண்பர்கள் சிலர் அப்போது கிண்டல் செய்துள்ளனர்!

    2015ஈரோடு விழாவிற்கு வந்திருந்து எடிட்டர் சாரை நேரில் சந்தித்து மகிழ்ந்தார்! நானும் அப்போது மொத முறையாக JSK வை பார்த்து பேசினேன்!

    தொடர்நத ஆண்டுகளில் அவரது விமர்சனங்களுக்கு எப்பவும் போல நான் ரசிகன்.

    சென்றாண்டு கரூர் நண்பர் சக்திவேல் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது நேரில் பார்க்க சில நண்பர்கள் சென்றிருந்தோம். அப்போதும் குணாவோடு வந்திருந்து நண்பர் சக்திவேலிடம் நலம் விசாரித்து சென்றிருந்தார்.

    இன்று அவரது உடல்நலம் பற்றிய இந்த செய்தி அதிர்வை தந்துட்டது. எத்தனை வாஞ்சையான அன்பர்.
    எல்லாம் வல்ல இறைவனின் அருளால் பூரண நலம்பெற பிரார்த்திப்போம்.

    நண்பர்களே நம் அனைவரின் ஒட்டுமொத்த இணைந்த கைகளின் சக்தியோடு நம்மிள் ஒருவரை இந்த சோதனையில் இருந்து மீட்டு வருவோம்; மீண்டும் நம்மோடு அவரது எழுத்துக்கள் உலவிடும் நாள் விரைவில் மலரட்டும்!

    அனைவரும் தங்களால் இயன்றளவு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


    ReplyDelete
  28. முடிந்த உதவியை விரைவில் செய்வோம் சார்.

    ReplyDelete
  29. நண்பர்களே பழனிவேல் கலில் ஜி பிளைசி பாபு ஆகியோரின் வாட்ஸ் ஆப் குருப்பில் புத்தகங்கள் ஏலம் மூலமாக நண்பர்கள் பணம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள் குருப்பில் இல்ல்லாத நண்பர்கள் இனைந்து நீங்களும் உதவி செய்யலாமே என்னால் முடிந்த சின்ன தொகை கொடுத்துள்ளேன்

    ReplyDelete
  30. நண்பர் சரவணன் பூரண நலம் பெற்று வரவேண்டும். உதவவாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள் குணாவிற்கும், ஆசிரியருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. // உதவவாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள் //
      அருமையான வார்த்தைகள் நண்பரே.....

      Delete
  31. நண்பர் பூரண குணம்பெற இறைவனை பிரார்திக்கின்றேன்.

    ReplyDelete
  32. Sent friends. Wishing a speedy recovery.

    ReplyDelete
  33. பழகுவதற்கு இனிய நண்பர் JSK பூரண குணம் பெற்று மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  34. @ஆசிரியர்:
    சிறு உதவியை செய்த கையோடு ஒரு வேண்டுகோள். மேலே நண்பர் சௌந்தர் கூறியது தான்! வாசகர்களிடையே மருத்துவக் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு எந்த அளவுக்கு இருக்கிறதோ தெரியவில்லை, அது பற்றி உங்கள் அடுத்த பதிவில் ஓரிரு வரிகளை எழுதினீர்களானால், நிறைய பேருக்கு சென்றடையும் வாய்ப்புள்ளது...

    ReplyDelete
  35. நண்பருக்கு என்னால் முடிந்த சிறு உதவி அனுப்பி விட்டேன்.

    ReplyDelete
  36. நண்பரின் சிகிச்சைக்கு என்னால் முடிந்த தொகையை அனுப்பி விட்டேன். விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  37. தொகையை அனுப்பி விட்டேன். நண்பர் பூரண குணம்பெற இறைவனை பிரார்திக்கின்றேன்.

    ReplyDelete
  38. என்னால் முடிந்தளவு பங்களிப்பை அனுப்பி விட்டேன்.காமிக்ஸ் நண்பர் ஜேடார்பாளையம் சரவணகுமார் சீக்கிரமாக குணமாகி நலமுடன் தன் குடும்பத்தாருடன் பல்லாண்டு வாழ வேண்டும் ஆதி அத்திகிரி வரதரை பணிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏🙏

    ReplyDelete
  39. காமிக்ஸ் தோழர்களே, உங்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ். ₹3 முதல் ₹5 இலட்சத்துக்கு ஹெல்த் பாலிசி ( FAMILY FLOATER ) எடுத்து கொள்ளுங்கள். அவசர காலத்தில் கண்டிப்பாக உதவும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்.

    ReplyDelete
  40. Enter your comment...அன்புள்ள கொண்ட லயன் முத்து காமிக்ஸ் நண்பர்களுக்கு நண்பர் நல பெற கடவுளை பிரார்த்தனை செய்வோம்

    ReplyDelete
  41. Enter your comment...நானும் ஐயா

    ReplyDelete
  42. Imps done, I pray God for his speedy recovery.

    ReplyDelete
  43. Zip சகோதரர். சரவண குமார் பூரண உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் கரூர் ராஜசேகரன்

    ReplyDelete
  44. நண்பர் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம். நண்பர் சவுந்தரின் காப்பீடு யோசனை இக்காலத்தின் கட்டாயம். திட்டம் வகுப்போம், வரும்முன் காப்போம்.

    ReplyDelete
  45. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete
  46. Done. Praying for a speedy recovery

    ReplyDelete
  47. நேற்றுதான் என்னால் பணம் அனுப்ப முடிந்தது.. Will pray jsk bro

    ReplyDelete
  48. நண்பரின் சிகிச்சைக்கு என்னால் முடிந்த தொகையை அனுப்பி விட்டேன். விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete