Powered By Blogger

Saturday, August 17, 2019

36000 அடியில் சொர்க்கம்..!

நண்பர்களே,

வணக்கம். உஷார்....நிறைய பயணப் புராணம் + கொஞ்சமாய் காமிக்ஸ் கலந்த பதிவிது !! So "ச்சை....புராணங்களே நேக்குப் பிடிக்காது!" என்ற ரகமாக நீங்களிருப்பின், best to skip the top half of this post என்பேன் !!

சுதந்திர தினம் புலரும் வேளையில் நீங்கள் எவ்விதம் ஜாலியாய் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தீர்களோ - தெரியாது ; ஆனால் நானோ ஒரு திடீர் நெடும் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன் - ஒரு பள பளா விமான நிலையத்தில் ! பொதுவாய் விடுமுறை தினங்களை இது போல் வேலை நிமித்தம் செலவிடுவது எனக்கு செம கடுப்பேத்தும் விவகாரம் என்பதால் கடுவன் பூனை போலவே உலாற்றித் திரிந்தேன் - விமானம் கிளம்பத் தயாராகிட வேண்டிய பின்னிரவு இரண்டு மணி வரையிலும் !! தூக்கம் ஒரு பக்கம் ; எரிச்சல் ஒரு பக்கம் என்று அப்பி நின்றாலும் - இத்தினி ஜனம் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு உலக வரைபடத்தின் ஒவ்வொரு மூலைக்கும் கடல் கடந்து பயணிக்கும் விந்தையை எண்ணி அதிசயிக்காது இருக்க இயலவில்லை !! கொஞ்சமே கொஞ்சமாய் அந்த முட்டைக்கண்களை உருட்டி கொஞ்சமே கொஞ்சமாய் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பாணியில் யார் யார் என்ன மாதிரியான பயணத்தில் ஈடுபடக் காத்திருக்கிறார்களென்று யூகிக்க முயற்சிக்கத் தோன்றியது !  

டைலன் டாக் போல ஒருவித சூன்யப் பார்வைகளோடு தனித்து இருக்கும் ஆண்கள் விடுமுறை முடிந்து வேலைக்குத்  திரும்பும் பார்ட்டிகளோ ? என்று தோன்றியது ! புத்தம் புது ஜெர்கினை இறுகப் பற்றியபடிக்கே வாயில் பபுள் கம்மை மொச்சக் மொச்சக்கென்று மென்று கொண்டே, காதில் செவிட்டு மிஷின் போல எதையெதையோ மாட்டிக் கொண்டு யார் யாரிடமோ மிஷன் கன் வேகங்களில் பேசிடும்  இளசுகள் அமெரிக்காவில் யூனிவர்சிட்டி அட்மிஷன் கிடைத்து படிக்கப் புறப்படும் freshers ஆக இருப்பார்களோ ? தட தடவென குறுக்கும் நெடுக்கும் ஓடும் பொடுசுகளின் பின்னேயே மூச்சிரைக்க ஓடிடும் முக்கால் டிராயர் போட்ட தொப்பைப் பார்ட்டிகளெல்லாம் விடுமுறைக்கு பிள்ளைகளோடு சொந்த ஊர் வந்து விட்டு இன்றைக்கு தத்தம் கூடுகளை நோக்கிப் பயணிக்கும் அயல்தேசத்தில் செட்டில் ஆகியுள்ள தேசிக்களோ ? என்னைப் போலவே கொடூரமாய் முறைத்துக் கொண்டு குந்தியிருக்கும் ஒற்றை கழுகுகள் சகலமும் தவிர்க்க இயலா பயணத்திற்கென கூடியிருப்போரோ ? சத்தமாய்...உறங்கும் நண்பர்களையும் எழுப்பி, விடாப்பிடியாய் மொக்கை போடும் விடலைப் பசங்கள் அத்தினி பேருமே நேத்து வரைக்கும் சென்னையின் OMR ரோட்டின் ஹாஸ்டல்களில் குடித்தனம் பண்ணிவிட்டு, இன்றைக்கு ஆன்-சைட் வாய்ப்புப் பெற்று புது NIKE ஷூவோடு கெத்தாய் கிளம்பும் IT வல்லுனர்களோ ? கொட்டாவி விட்டம் வரை விரியும் வேளை வரைக்கும் எனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தேன் ! 

ஒரு வழியாய் விமானமும் புறப்படத் தயாரென்று அறிவிக்க - நம்மாட்கள் உசேன் போல்ட்டுக்கே தண்ணீர் காட்டும் வேகத்தில் லைனில் முண்டியடிக்கத் துவங்க, ஒரு மாதிரியாய் எனது வாய்ப்பும் வந்தது !  கண்ணெல்லாம் தூக்கம் மண்டிக்கிடந்தாலும் அந்நாட்களது சரோஜா தேவியைப் போல புல்-மேக்கப்பில் நிற்க அவசியமாகியிருந்த யுவதியிடம் போர்டிங் பாஸை நான் நீட்ட ; அதைச் சரி பார்க்க வேண்டிய மிஷினின் முன்னே அவரும் நீட்ட - 'புளியாம்-புளியாமென்று சிகப்பு லைட் எரிந்தது ! 'இது என்ன புதுசா ஏழரை ?' என்ற எரிச்சலோடு நிமிரும் நேரம் "you have been upgraded to business class sir " என்றபடிக்கே புதுசாய் ஒரு போர்டிங் பாஸை pirint செய்து கையில் ஒப்படைத்தார் ! நேற்றைய ஓவியாவும், இன்றைய லொஸ்லியாவும் லாலி பாட, சிட் ஸ்ரீராமின் குரல் பின்னணியில் ஒலிக்க - ஒற்றை நொடியில் சுற்றுச் சூழலே செம ரம்யமாய் மாறி விட்டது போல் தோன்றியது ! 16 மணி நேர நெடும் பயணங்கள் செய்துள்ள நண்பர்களுக்குத் தெரியும் - விமானத்தின் economy சீட்கள் பிட்டங்களை என்னமாய்ப் பதம் பார்த்திட வல்லவை என்று ! அதுவும் பிசாசாய் உறக்கம் கண்ணைச் சுழற்றும் நேரங்களில் கூட  டிக்கிலோனாக்கள் அனுப்பும் 'என்னைக் காப்பாற்று' என்ற அபயக் குரல்களை   உதாசீனம் செய்திட இயலாது, எழுந்து, கொஞ்ச நேரம் தட்டுத் தடுமாறியாச்சும் நடக்க வேண்டி வரும் !! 'வேறு வழி நஹி ; இது தான் விதி' என்றிருந்தவனுக்கு திடீர் அதிர்ஷ்டமாய் business class-ல் ஜாகை என்ற போது தூக்கமெல்லாம் போயே போச்சு !!  

விமானத்தின் பின்வாயில் வழியாய் உட்புகுந்து கொண்டிருந்த ஜனத்தை விட்டு விலகி - முன்வாட்டில் இருந்த வாயிலை நோக்கி நடந்த போது ஒரு டஜன் கடுப்ஸ் ஆப் இந்தியா பார்வைகள் என் முதுகைத் துளைப்பது தெரிந்தது !! பந்தாவாய் business class பகுதியினுள் கால்வைத்தால் என்னவொரு ஆச்சர்யம் - மூப்பிலும், க்டு கடு பார்வையிலும்  எனக்குப் போட்டி தரவல்ல முதிர்கன்னி ஏர்ஹோஸ்டஸ் யாரையும் காணோம் ; அத்தனையுமே  சிரித்த முகங்களுடனான இளம் பெண்கள் !! 'அடேய் பாவிகளா....இதிலுமா அல்வா கிண்டுவீங்க economy பயணிகளிடம் ?' என்றபடிக்கே எனது சீட்டுக்குப் போனால் ஒரு சின்ன தேர் அளவுக்கு சீட் ஜம்மென்று காத்திருந்தது !! 

வரிசைக்கு இரண்டே சீட்கள் ; மொத்தமாய் 16 பயணிகள் மட்டுமே ; ஆனால் அவர்கட்கு 4 பணிப்பெண்கள் என்றிருப்பதைக் கவனித்தேன் ! என்னருகே அமர்ந்திருந்தார் ஒரு 60 வயது மதிக்கத்தக்க மனுஷர் - "சீமான் வீட்டுத் தாத்தா" என்ற அடையாளம் மேனியெங்கும் மினுமினுக்க ! கண்ணாடி பிரேமிலிருந்து ; மணிக்கட்டில் மிளிர்ந்த Longines வாட்ச் வரை அத்தனையிலும் செழிப்பின் சின்னங்கள் ! கண்ணுக்குக் குளிர்ச்சியாய் யாரேனும் பயணத்துணையாய் அமைந்திடக்கூடுமென்ற எதிர்பார்ப்பில் இருந்தாரோ என்னவோ - ஒரு காலரிலா முழுக்கை டிஷர்ட்டில் வந்து அமர்ந்த வழுக்கைத் தலையனைப்  பார்த்தவுடன் மனுஷனுக்கு முகத்தில் பியூஸ் போய்விட்டது ! 'இன்னிக்கு உம்ம ராசி அம்புட்டுத்தேன் ஓய்' என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டே எனது இடத்தில அமர்ந்தால் - சீட்டின் கைப்பிடிகளில் மேலே ஏற்ற / இறக்க / சாய்ந்து கொள்ள / மல்லாக்க நீட்டிக் கொள்ள ; கால்களுக்கு தாக்கான்  கொடுக்க என்று ஏகப்பட்ட controls ! இதற்கு முன்பும் இதே போல ஒரு இரண்டோ / மூன்றோ  தடவைகள் business class-களுக்கு மாற்றம் கிட்டியுள்ளது தான் என்றாலும், ஒவ்வொரு விமான சர்வீஸிலும் இந்த உயர் வகுப்பு சீட் அமைப்புகள் ஒவ்வொரு விதத்தில் இருப்பதுண்டு ! தவிர, அந்த அனுபவங்கள் எல்லாமே ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே எனும் போது - ரோடியோ போட்டியில் குதிரைகளைச் சமாளிப்பது போல் இந்த hi-tech சீட்களைக் கையாண்டதெல்லாம் மறந்தும் போயிருந்தது !  ஒரு பொத்தானை அமுக்கினால் சலூனில் சேர் மல்லாக்கச் சாய்வது போல் சாய்ந்தது ; 'கிழிஞ்சது போ ' என்றபடிக்கே வேறொரு பொத்தானை அமுக்க - காலுக்கு கீழே இருந்த தாக்கான் மேலெழும்பி போடேரென்று பின்னங்காலில் சாத்தியது ! வம்பே வேணாம், மல்லாந்திடலாமென்று அந்தக் குறியீடிருந்த பட்டனைத் தட்டினால் - 'அம்மாங்கோ' என்று வடிவேல் மல்லாந்து கிடக்கும் பொசிஷனுக்கு ஒரே நொடியில் கொண்டு போனது ! நானடிக்கும் லூட்டிகளை 'அய்யே' என்பது போலானதொரு பார்வையோடு ஓரக்கண்ணால் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார் - "சீ.வீ.தா."!

ஒரு மாதிரியாய் விமானமும் புறப்படத் தயாராகிட - கையில் இரண்டு தட்டுக்களோடு பணிப்பெண் ஒருத்தர் வந்து - "பனீர்  டிக்கா வேணுமா சார் ? அல்லது ப்ரோக்கோலி சாலட் சாப்பிடறீங்களா ?" என்று அன்பாய் வினவினார் ! அடடே....உபசாரம் இப்டிலாம் உண்டா ? என்றபடிக்கு "ரெண்டையும் கொஞ்சம் கொஞ்சம் வையுங்க அம்மணி !" என்றேன் !! பக்கத்து சீட் "சீ.வீ.தா.வோ "ஊம்ப்ப்ப்..இதெல்லாம் பெரிய மனுஷன் சாப்பிடுவானா ?" என்ற தோரணையில் மண்டையை மறுப்பாய் ஆட்டி வைத்தார் ! பின்னாடியே இன்னொரு யுவதி - "சிக்கன் 65 சார் ?" என்றபடிக்கே நெருங்கிட - கொலைப்பசியில் இருந்த எனக்கு செம குஷி !! அதே சமயம் - 'தின்னாத் தின்னு...இல்லாங்காட்டி போ...இது தான் இன்னிக்கு உங்களுக்கான பூவா !' என்று சொல்லாத குறையாய் economy வகுப்பில் வழங்கப்படும் சாப்பாடும் கண்முன்னே ஒரு நொடிக்கு அணிவகுத்து மறைந்து போனது !! 'அட...ஊர் திரும்பும் வேளையில் அது தானே நமக்கும் விதி ; இப்போதைக்கு மனிடோ தேவன் தந்துள்ள இந்த வசதிகளை அனுபவிச்சுக்கோடா முட்டைக் கண்ணா !!' என்று உள்ளுக்குள் ஒலிக்க "வையுங்கோ...வையுங்கோ.." என்றேன் !  "சீ.வீ.தா."வுக்கும் கோழியைப் பார்த்தவுடன் கொள்கை மறந்து போச்சோ என்னவோ - வேண்டாவெறுப்பாக தட்டில் வைக்குமாறு சைகை செய்தார் ! வைத்த மறு கணம் முட்கரண்டியும், கத்தியும் கொண்டு சிக்கன் 65 உடன் மல்லுக்கட்டத் துவங்கி கெத்தாய் ஒரு வாய் வைத்திருப்பார் ; இங்கே நானோ 'சிவனே' என்று கையால் எடுத்து ரெண்டே கடியில் விழுங்கியிருந்தேன் !! சீமான் சாரோ கெத்தை விட்டுக் கொடுப்பதாயில்லை ! முன்னெல்லாம் இது போன்ற சூழல்களில் கிட்டக்க இருக்கும் ஆட்கள் என்ன நினைப்பார்களோ என்ற லஜ்ஜையில் நானுமே இந்தப் பாசாங்கில் இறங்கியிருப்பேன் ; அல்லது வம்பே வாணாம் என்று அந்த ஐட்டத்தையே நிராகரித்திருப்பேன் ! ஆனால் ஏழு கழுதை வயசான பிற்பாடு அந்த கூச்சங்களெல்லாம் போயே போச்சு ! "சீ.வீ.தா." நிச்சயமாய் எனக்குப் பெண் கொடுக்கப் போவதில்லை ; அப்படியே கொடுக்க மனுஷன் முன்வந்தாலும் ஆத்திலே காத்திருக்கும் அம்மணி விறகுக்கட்டையால் இந்த சொட்டை நடுமண்டையில் போட்டிடும் வாய்ப்புகள் பிரகாசம் எனும் போது - தாத்தாவிடம் பந்தா காட்டி சாதிக்க ஏதும் இருப்பதாய்த் தோன்றிடவில்லை ! So நான்பாட்டுக்கு ஜாலியாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருக்க - கோழியுடன் யுத்தம் நடத்தித் தோற்றும் போன "சீ.வி.தா' இறுதியில் என் பாணிக்கே மாறிவிட்டார் !! 'அடடே...வாங்க சாரே...நம்ம கட்சியில் ஐக்கியம் ஆயாச்சாக்கும் ?"என்ற பாணியில் லைட்டாய் ஒரு நக்கல் சிரிப்பைப் போட்டு வைக்க எனக்கொரு வாய்ப்புக் கிட்டிய போது  மனசு ஜில்லென்றிருந்தது !!

விளக்குகளை ரொம்பவே டிம்மாக்கிட்ட - ஒரு டிராலியில் புதுசாய் எதையோ உருட்டிக் கொண்டு வந்தனர் - 2 இளசுகள் !! "ஏலேய்...இதுக்கு மேல snacks தின்ன முடியாதுங்கடா !" என்று மனசில் தோன்றிய நினைப்போடு எட்டிப் பார்த்தால் - கண்ணாடிக் கவர்களில் உடுப்புகள் செட் செட்டாய்த் தென்பட்டன !! "யாருக்காச்சும் நைட் டிரஸ் மாத்திக்கணுமா ?" என்றபடிக்கே அந்த ஹோஸ்டஸ் பெண்கள் கேட்க - எனக்கு காண்ட்ஸ் ஆப் இந்தியா ! 'இதெல்லாம் டூ..டூ..மச்....எண்ணி பத்தே அடி பின்னே குந்தியிருக்கும் பயணிகளுக்கு ஒரு கர்சீப் குடுக்கக் கூட மாட்டீங்க ; இக்கட ஆளுக்கொரு நைட் ட்ரெஸ்ஸா பாவிகளா ?!!" என்று மனசு கூக்குரலிட்டது ! But அதுக்குள்ளாற பக்கத்து சீட் சார்வாள் நைட் டிரஸ் வாங்கி, பாத்ரூம் போய்ப் போட்டும் வந்துவிட்டார் ஹாயாக !! 'சரி...கட்டையைக் கிடைத்தும் முன்பாய் மூச்சா போய் வரலாமென்றால் அங்கேயும் சொகுசின் அடையாளங்கள் !! பின்னேயோ சுமார் 90 பயணிகளுக்கு இரண்டே டாய்லெட் என்ற நிலையில் ஆளாளுக்கு அந்த நடைபாதைகளில் பாம்பு டான்ஸ் ஆடாத குறையாய் நெளிந்து க்ண்டிருப்பதைப் பார்த்திட இயலும் ! இங்கேயோ 16 பேருக்கு 4 மூச்சா ரூம்கள் ; ஒவ்வொன்றும் பளீர் சுத்தத்தோடு !! "காசே தான் கடவுளடா....அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமடா" என்று அந்தக்காலத்துப் பாட்டு தான் எனக்குள் அந்த நொடியில் ஓடியது ! அங்கலாய்த்து முடித்த கையோடு சீட்டுக்குப் போய் மல்லாந்தால் - நமது வைகைப் புயலின் பொன்மொழியின் நிஜமான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது !! "மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்க்கிறதிலே தான் என்னவொரு சுகம் ?!!" நல்ல கனத்த ரஸாய் போலொரு கம்பிளியை 2 இலவம்பஞ்சுத் தலையணைகளோடு யுவதிகள் விநியோகம் செய்திட - தலைக்கு ஒண்ணு...காலுக்கு இன்னொண்ணு என்று செருகிக் கொண்டே கண்களையும் செருகினேன் !! Economy வகுப்பில் - லாஸ்லியாவோடே குத்தாட்டம் போடும் ஜிலோ கனவில் நாம் செம பிசியாக இருந்தாலும் கூட தோளைப் பிடித்து உலுக்கி - சோத்தை முன்னே நீட்டுவர் முறைக்கும் ஏர்-இந்தியா economy class முதிர்கன்னிகள்  ! ஆனால் இங்கேயோ மட்டையாகி விட்டால் துளியும் தொந்தரவு செய்திடாது - நாம் கண்முழிக்கும் தருணமாய் சாப்பாடை சுடச் சுடக் கொணர்கின்றனர் ! அதுவும் மங்குத் தட்டுக்களில் ; அழகான கோப்பைகளில் !! தொடர்ந்த 16 மணி நேரங்களுள் 15-ஐ மட்டை + பூவா ; பூவா + மட்டை என்ற routine-ல் செம நேர்த்தியாய்ச் செலவிட்டேன் ! இதுவே சொர்க்கம் என்ற நினைப்பிலிருந்தால் எங்களுக்கும் முன்னே ஒரு சிறு கேபினில் நான்கே சீட்கள் மட்டுமிருக்க - அது இன்னமும் பெரும் அப்பாடக்கர் சீமான்கள் பயணிக்கும் First Class என்பது புரிந்தது !! அவர்களுக்கெல்லாம் வீட்டிலிருந்தே கட்டில், மெத்தையெல்லாம் கொண்டு வந்து விரித்து ; அப்பாலிக்கா குளிக்க சூடு தண்ணீரெல்லாம் போட்டுத் தருவார்களோ ? என்று கூட நினைக்கத் தோன்றியது எனக்கு ! யப்பா....சொர்க்கம் உசக்கே தான் என்பது தெரியும் தான் ; ஆனால் விலை தர சத்திருந்தால், மண்டையைப் போடும் முன்பாகவே அதனை 36,000 அடி உயரத்திலேயே அனுபவித்திடலாமென்பதை அன்றைக்குத் தான் உணர்ந்தேன் ! இங்கே வாசலில் நோட்டோடு / ஐ-பேடோடு  பாவ/புண்ணிய கணக்குப் பார்த்து உரிய பிரிவுக்கு மக்களை வகை பிரித்து அனுப்பிட  சித்திரகுப்தர் நிற்பதெல்லாம் கிடையாது ; ரோஸ் நிறத்து காந்தித் தாத்தா நோட்டுக்களை விசிறியடிக்க  சக்தியுள்ளதா - இல்லியா ? என்று மட்டுமே சரி பார்க்கிறார்கள் ! இருந்தால் மல்லாக்கப் படுத்து சொகுசாய் விட்டம் ; இல்லாங்காட்டி பாடாய்ப் படப் போவது பிட்டம் !! Simple as that !!

சிகாகோவில் தரையிறங்கிய போது சும்மா அத்தனை பேட்டரிகளும் அடுத்த ஆறு மாசத்துக்கான சார்ஜ் ஏறியது போலானதொரு உற்சாகத்தோடு கீழிறங்க முடிந்தது ! தள்ளாட்டங்களோடு, சரியாய்த் தூங்கியிரா சிவந்த விழிகளோடு பின்தொடர்ந்த economy பயணிகளை பார்த்த போது லைட்டாக உள்ளுக்குள் ஜெர்க் !! இன்னும் இரண்டே நாட்களில் நம்மளும் அக்கட தானே ஐக்கியமாகிக் கிடக்கணுமென்ற நினைப்பே பகீரென்றது ! சொகுசுகள் என்னவென்று தெரியா நாட்கள் வரையிலும் - இருப்பதில் சமாளிக்கும் ஆற்றல் தானாய் பழகியிருந்தது ! ஆனால் இனி அது சித்தே சிரமம் என்பதைப் பெருமூச்சோடு புரிந்து கொண்ட கையோடு கான்சஸ் நகருக்கான அடுத்த பிளைட்டை பிடிக்க ஓட்டமெடுத்தேன் !!

கான்சஸ்...நமக்கெல்லாம் நிரம்பப் பரிச்சயமான ஊர் தானே ? நமது கௌபாய்களின் புண்ணியத்தில், டெக்ஸாஸ் ; கான்சஸ் ; அரிசோனா ; நியூ மெக்சிகோவெல்லாமே உசிலம்பட்டிகளையும் ; கொட்டாம்பட்டிகளையும் விட நமக்கு ஒரு மிடறு நெருக்கமானவை என்று சொன்னால் அது மிகையாயிராது தானே ? அதுவும் சமீபத்து "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" ஆல்பத்துக்குப் பிற்பாடு அந்த அமெரிக்க மண்ணே - "சென்னைக்கு மிக மிக அருகில்" இருப்பது போலவே தோன்றுவது எனக்கு மட்டும் தானா ? என்று தெரியலை - but in many ways நமது கௌபாய் காதல்களுக்கு  ஒரு புதுப் பரிமாணம் இனி வரும் நாட்களில் இருந்தால் வியந்திட மாட்டேன் !  ஈரோட்டுக்கு கிளம்பும் போது எனக்குள் ஒரு சின்ன பயம் இருக்கவே செய்தது - சஸ்பென்ஸ் இதழ் எதுவோ ? என்ற உங்களின் தேடல்களில் 'பி.பி.வி' மீதும், 'நித்தமொரு யுத்தம் ' நியாயமாய்ப் பாடிய வேண்டிய ஒளிவட்டம் சிதறிடக்கூடுமோ ? என்று ! அன்றைக்கு புக் ரிலீஸ் செய்திட்ட வேளையில் அந்த பயங்கள் ஊர்ஜிதமும் கண்டன - because சஸ்பென்ஸ் இதழ்கள் என்னவென்பதைப் பார்த்தான பின்னே - அரட்டைகளுள், அலசல்களுள் இறங்கிடும் முனைப்பே அனைவரிடமும் தென்பட்டது ! பி.பி.வி. & நி.ஓ.யு. முன்பதிவு இதழ்களை பதறாமல் வாங்கிக் கொள்கிறோமென்று நீங்கள்  சொன்னாலும் - எனக்குள் பதறியது !! ஆனால் - ஆனால் - சந்திப்பின் அலப்பரைகள் தணிந்த முதல் தருணத்தில் - பி.பி.வி. ஆல்பத்தின் வாசிப்பினுள் நீங்கள் மூழ்கத் துவங்கிய நொடியில் எனது பயங்கள் சிறுகச் சிறுகக் கரையத் துவங்கின - Content will always be King !! என்பது நிரூபணமாகிய நொடிகளில் !! பொதுவாய் இது போன்ற சற்றே offbeat கதைகள் சற்றே mixed response ஈட்டினால் அதனில் ஆச்சர்யமோ, வருத்தமோ கொள்ள முகாந்திரமிருந்திராது ! ஆனால் இம்முறையோ - கிட்டத்தட்ட நூற்றுக்கு நூறு என்ற மதிப்பெண்ணை ஈட்டியுள்ள விதம் ரொம்பவே மனநிறைவைத் தருகிறது ! பொதுவாய்ப் 'பீற்றல் பீட்டர் ராமசாமி' அவதார் எனக்குப் பிடிப்பதில்லை ; ஆனால் இந்த ஒற்றை தருணத்தில் அந்த மனுஷனுக்கு 'ஜெ' போடுவதில் தப்பில்லை என்று படுகிறது !! எனது பெருமிதத்துக்குக் காரணம் - கதைத் தேர்வில் நான் செய்த அசகாய சூரத்தனம் என்றோ ; கையாண்ட விதத்தில் மேதாவித்தனம் என்ற காரணங்களினாலோ அல்லவே அல்ல !! மாறாய் - இத்தகையதொரு கதை பாணியை இத்தனை ரம்யமாய் ரசிக்கவல்லதொரு வாசக வட்டம் இந்தியாவிலேயே வேறெந்த மொழியிலும் இருக்க சாத்தியமே அல்ல என்ற மார் தட்டும் உறுதியினில் !! எங்கோ ஒரு தொலைதூர தேசத்தில் ; நாம் கண்ணிலேயே பார்த்திரா ஒரு கலாச்சாரத்தில் ; எப்போதோ ஒரு யுகத்தில் நடந்திருக்கக்கூடிய நிகழ்வுகளை ; நமக்குத் துளி கூடத் தொடர்பிரா ஒரு அரசியல் சாசனத்தின் மீதான அலசலை பண்ருட்டியிலும், பட்டுக்கோட்டையிலும் அமர்ந்திருக்கும் நம்மால் உணர்வுபூர்வமாய் ரசிக்க இயல்கிறதெனில் WOW என்பதைத் தாண்டி வேறென்ன சொல்வதோ நான் ?  Take a bow guys - நீங்கள் ரசனைகளின் மீட்டர்களில் தொட்டு வரும் உச்சங்கள் மெய்யாக மெய்சிலிர்க்கச் செய்யும் சமாச்சாரங்கள் !! 

What made this album so very unique ? I have a theory on that guys !! ஒரு வலுவான கதைக்களத்தைக் கையில் எடுக்கும் ஒவ்வொரு வேளையிலுமே ஒரு ஹிட் உத்திரவாதம் என்றெல்லாம் கட்டியம் கட்டிச் சொல்லல் இயலாது ! சும்மா ஒரு பேச்சுக்கு பின்தொடருமிந்த scenario-க்களை மனதில் உருவகப்படுத்தி மட்டும் பாருங்களேன் folks :

இதே கருவை சீரியஸ் ரகச் சித்திரங்களோடு - ட்யுரங்கோ மாதிரியானதொரு அதிரடி ஹீரோவிடம் ஒப்படைத்திருந்தால் ? பைரனின் ரோலில் ட்யுராங்கோ உலவியிருந்தால் பொறி பரந்திருக்கும் கதை நெடுகிலும் !! கதைக்கு வேறொரு அதிரடிப் பரிமாணத்தைத் தந்திருக்கவும் கூடும் தான் ; ஒரு ஆக்ஷன் ஹிட்டாக அது அமைந்திருக்கவும் கூடும் தான் ! ஆனால் - நாயகரைப் பிரதானப்படுத்தும் முஸ்தீப்பில் பி.பி.வி.தொட்டுச் செல்லும் ஆழ்ந்த கருத்துக்களை ; வருத்தங்களை ; பழங்குடியினரின் இழப்பின் வலிகளைச் சொல்ல அங்கே சாத்தியப்பட்டிருக்குமா ? ட்யுராங்கோ டுமீல்-டுமீல் என்றால் நாம் குஷியாவோம் ; மாறாய் அவர் தத்துவம் பேசினால் கண்சிவப்போம் என்பது தானே நிஜம் ? So ஒரு வலுவான ஹீரோவாக கதையை முன்னெடுத்துப் போகும் பைரனை - ஒரு சாமான்யனாக ; பயங்கள், பேராசைகள்,கோபங்கள், தாபங்கள் கொண்டதொரு சராசரி ஆசாமியாய் சித்தரிக்கக் கதாசிரியர் தீர்மானித்தது ஒரு masterstroke என்பேன் !

பைரனை ஒரு முனையில் நிறுத்திய கையோடு மறுபக்கம் மார்கோ எனும் அழகிய அசுரியை (!!) நமது பொருளாளர் வெகு அழகாய்ச் சுட்டிக் காட்டியது போல - அசிங்கமான புழுமுட்டை நிலையிலிருந்து, அற்புதமான பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் காணுமொரு கதாப்பாத்திரமாய் சிருஷ்டிக்க கதாசிரியருக்குத் தோன்றியது masterstroke # 2 என்பேன் ! இங்குமொரு கற்பனை செய்து பாருங்களேன் guys : மார்கோவை வில்லியாகவே ; ஒரு சிகுவாகுவா சில்க் போலான கதாப்பாத்திரமாய் மட்டுமே கையாண்டிருந்தாலும் இந்தக் கதை வெற்றி கண்டிருக்கக் கூடும் தான் ; ஆனால் இன்றைய இந்தத் தாக்கம் கிட்டியிருப்பது சந்தேகமே !! அந்த அழகியின்புற வனப்பு - அகத்தின் வனப்பாயும் translate ஆவது தானே நம் நெஞ்சங்களை வருடிய சமாச்சாரம் ? (Of course அந்தப் புற அழகும் நம்மவர்களை வருடியிருக்கும் தான் !!!)

Masterstroke # 3 and probably the best of them all - இந்தக் கதையினை கார்ட்டூன் பாணிச் சித்திரங்களில் ; ஆங்காங்கே humor சகிதம் நகற்றிச் செல்ல / சொல்ல முனைந்ததே என்பேன் !! சீரியஸான சித்திரங்களோடு இதே கதையை நம்மால் இதே ஈடுபாட்டோடு படிக்க சாத்தியப்பட்டிருக்குமா என்பதொரு million dollar இல்லாங்காட்டியும் நூறு டாலர் கேள்வியாகவாச்சும் இருந்திருக்கும் ! கொஞ்ச நேரத்திலேயே - 'அய்யே...இன்னா இவன் வள வளன்னு பேசிக்கினே போறான் ?;என்று நமக்கு எரிச்சல்  தோன்றியிருக்கக்கூடும் ! ஆனால் கார்ட்டூன் பாணி + கதையோடு பயணிக்கும் humor அந்தச் சிக்கலின்றி காப்பாற்றிவிட்டதல்லவா ?

So ஒரு நிறைவான ஆல்பத்தை நம் பயணத்தின் மைல்கல்லாக்கிய சந்தோஷத்தோடு செப்டெம்பர் நோக்கிப் பயணிக்கிறோம் !! ஞாயிறு ராவுக்கு ஊர் திரும்பிடுவதாய்த் திட்டம் ; so திங்கள் முதல் jet lag புண்ணாக்கென்ற சால்ஜாப்பெலாமின்றி பணிகளுக்குள் குதித்தாக வேண்டும் !! செம ஜாலியான கதைகள் waiting  என்பதால் அந்தமட்டுக்கு easy !! இதோ ஊர் திரும்பும் வேளையில், பிட்டங்களோடு போராடிக் கொண்டே டிரெண்டின் மொழிபெயர்ப்புக் குறைப்படியைச் செய்திடவும் முயற்சிக்கணும் !! Another day ...another month ...and we start from scratch all over !! நேற்றைய இதழ்கள் எத்தகையதாயிருப்பினும், புதுசாய் அடுத்த பணி துவங்கும் போது பூஜ்யத்திலிருந்து தானே துவங்கியாகணும் ? அடுத்த பரீட்சைக்குத் தயாராகிறோம் guys !! இதோ - காத்திருக்கும் செப்டெம்பர் இதழ்களின் முதல் preview - ஒரிஜினல் அட்டைப்படத்தோடே !!

அப்புறம் தஞ்சாவூரில் 17 ஆகஸ்ட் முதல் துவங்கிடவுள்ள புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 67 !! மண்ணின் மைந்தர்கள் வருகை புரிந்தால் மகிழ்வோம்!! Welcome all !!

Have a cool weekend !! Bye for now !!

268 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மாலை வணக்கம்! படிச்சிட்டு வாரேன்!

    ReplyDelete
  3. தஞ்சாவூரில் இருளின் மைந்தர்களை களம் இறக்கி பாருங்கள் சார். புதியவர்களையும் கவருவார்

    ReplyDelete
  4. பதினொராவது...ப்ளூவா தெரிஞ்சது.. படிச்சிப்பிட்டு வாரன்..

    ReplyDelete
  5. Master stroke4: நாம வருடம் பூரா பேசி, சிரிச்சி, லொள்ளு பண்ணி, விவாதம் பண்ணிய நம்மோட பேச்சு பாணியில் உரையாடல் & வர்ணனை அமைத்ததே!

    நாமே இந்த பைரோன் கூட பாலைகளில் திரிந்து;
    மார்கோவோடு யாரைக் கவுக்கலாம் என சிந்தித்து;
    ஜாக்கோடு நவஹா காடுமேடெல்லாம் அலைந்து கலிபோர்னியா டூ வாசிங்டன் சம்மர் டூர் போயிட்டு வந்த எஃபெக்ட் தந்திட்டது!
    அதனால் தானோ என்னவோ இன்னமும் அந்த மோர்கோவோடும் லூசியோடும் சஞ்சரித்த வண்ணமே உள்ளேன்(ளோம்)!

    அண்டர்டேக்கர் அண்மையோ,
    எல்லியின் எழிலோ,
    ஆர்லிங்டன் அராத்தோ...எதுவும் இனிதான்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் அப்படியே அனைத்து கதைகளையும் தூக்கி சாப்பிட்டு விட்டது பி பி வி.

      Delete
  6. எட்டாவது ஆளாக...மாலை வணக்கம் நண்பர்களே..

    ReplyDelete
  7. பிஸ்டலுக்கு பிரியாவிடை இப்போதுதான் படிக்க நேரம் கிடைத்தது. நான் நண்பர்களுடன் இணைந்து காமிக்ஸ் பற்றிய விபரங்களை பதிவிடும் fan page நடத்தி வருகிறேன். பெரும்பாலும் அதில் மார்வெல், டிசி கதைகள் பற்றித்தான் பலரும் எதிர்பார்ப்பார்கள். நமது காமிக்ஸ் இதழ்கள் பற்றி அதில் எழுதி வரும் விமர்சனங்களுக்கு சமீப காலமாக நல்ல ஆதரவு கிட்டியிருக்கிறது. நேற்று பிஸ்டலுக்கு பிரியாவிடை பற்றிய நான் எழுதிய பதிவை படித்த சிலர்.. இந்த கதைகளை யார் பதிப்பிக்கிறார்கள்.. நாங்கள் எப்படி வாங்குவது என்று கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு நமது தளத்தின் லிங்கை அளித்துள்ளேன். மொழிபெயர்த்த நண்பருக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி. ஒரு திரைப்படத்தை பார்த்து முடித்து போல் இருந்தது. ஈரோடு புத்தக விழாவில் நிறைய குழந்தைகள் ஸ்மாரஃப் புக் வாங்கி போனதாக அறிந்தேன்.. குழந்தைகளுக்கான கதைகளில் பெரியவர்கள் கருத்து செல்லாது என்று நிரூபித்து விட்டார்கள் குட்டிஸ்.. மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. // குழந்தைகளுக்கான கதைகளில் பெரியவர்கள் கருத்து செல்லாது என்று நிரூபித்து விட்டார்கள் குட்டிஸ்.. மிக்க மகிழ்ச்சி.. //

      செம. உண்மை.

      Delete
    2. ///குழந்தைகளுக்கான கதைகளில் பெரியவர்கள் கருத்து செல்லாது என்று நிரூபித்து விட்டார்கள் குட்டிஸ்.. மிக்க மகிழ்ச்சி..///

      நச் பாயிண்ட்!!

      Delete
    3. Super பிரசாந்த். அந்த பதிவை இங்கேயும் பகிரலாம். பிளீஸ்

      Delete
    4. Prasanth Karthik
      இங்கு பிடிக்குது பிடிக்கலை! கருத்து சொல்வதும், சொல்லாததையும் தாண்டி விற்பனை என்கிற ஒரு விஷயமும் உள்ளது சகோ! விற்பனையில் சாதித்தால் ஏன் ஸ்மர்ப்பை போடாமல் தள்ளி வைக்கப் போகிறார்? (அதுவும் ஸ்மர்ப் எடிட்டருக்கு ரொம்ப பிடித்த கதை என்று அவரே பலமுறை கூறியிருக்கிறார்) பத்து பேருக்கு பிடிக்குது என்பதற்காக ஆயிரக்கணக்கான புத்தகங்களை அடித்து, குடோனை நிரப்பிக் கொள்ள முடியாதுதானே? சுத்தமாக அதை பரணுக்கு அனுப்பி விட்டதாகவும் எங்கேயும் இதுவரை எடிட்டர் சொல்லவில்லை தானே? வரும் சமயம் வாய்க்கும் போது! அப்போது ஸ்மர்ப்பை படித்து இன்புறுங்கள் 😃

      Delete
  8. ப்ளுகோட்ஸ் பட்டாளங்களுக்கு வைட்டிங்

    ReplyDelete
  9. //தொடர்ந்த 16 மணி நேரங்களுள் 15-ஐ மட்டை + பூவா ; பூவா + மட்டை என்ற routine-ல் செம நேர்த்தியாய்ச் செலவிட்டேன் !///----ஹா..ஹா...!

    இதைபடிக்கையில்....
    வீட்டம்மாவோட சண்டை வரச்சொல்ல,
    அவிக என்னை உதைக்க; நான் அவுககிட்ட உதை வாங்க.... என்ற நினைவுதான் ஓடுது....!

    ReplyDelete
  10. அட பதிவு வந்தாச்சா?!

    ReplyDelete
  11. ஹா...ஹா..

    வாய்விட்டு சிரிக்க வைத்த சித்ததனைகள்.

    ReplyDelete
    Replies
    1. நானும் படித்து கொண்டு இருக்கும் போது சிரித்து விட்டேன்.

      Delete
  12. சார் மதுரைக்கு ஒரு Maxi ??

    ReplyDelete
    Replies
    1. அடுத்த maxi சென்னைல தான் பழனி. ஒண்ணு இல்ல ரெண்டு

      Delete
    2. மதுரைக்கு ஒண்ணு முயற்சி பண்ணலாம் எடி மனசு வெச்சா முடியும் ஜி...

      Delete
  13. ஒரு ரிலாக்சிங் பதிவு.. Mood changer.. Super

    ReplyDelete
  14. ரொம்பவே ரசித்துச் சிரிக்கவைத்த பதிவு - சூப்பர் எடிட்டர் சார்!!

    ReplyDelete
    Replies
    1. உண்மையாகவே மிகவும் ரசித்தேன். வர வர உங்க காமெடி சென்ஸ் ஜாஸ்தி ஆகிறது எடிட்டர் ஐயா.

      Delete
  15. அருமையான காமெடி பதிவு.

    ப்ளூகோட் பட்டாளம் நீண்ட இடைவெளிக்கு பிறகு. படிக்க ஆர்வத்துடன் உள்ளேன். நன்றி.

    ReplyDelete
  16. Replies
    1. ஷெரீஃப் ஐயா . பி பி வி ல பின்னிடிங்க. அட்டகாசம். Keep the good work going.

      Delete
    2. எடிட்டர் உருவிய குடலின் விளைவு எவ்வளவு அட்டகாசமான பலன்களை தர வல்லது என்பதை இப்போது நாங்களும் நீங்களும் உணர்ந்து கொண்டோம்.

      Delete
  17. ரொம்ப பிடிச்ச அந்த குட்டையனும் நெட்டையனும்...... அப்பறம் அந்த மறக்க முடியாத ச்ச்ச்சார்ர்ர்ஜ்ஜ்ஜ்......


    வந்தமா...

    சுட்டோமா...


    செத்தோமான்னு இருக்கணும்....ங்கிற மறக்க முடியாத வசனம்....

    ReplyDelete
    Replies
    1. // வந்தமா...

      சுட்டோமா...


      செத்தோமான்னு இருக்கணும். //

      +1 சீரியஸான விஷயம் காமெடி என்ற இனிப்பை தடவி.

      Delete
    2. J சார் செம்ம சார். அந்த டயலாக்

      Delete
  18. /// பந்தாவாய் business class பகுதியினுள் கால்வைத்தால் என்னவொரு ஆச்சர்யம் - மூப்பிலும், க்டு கடு பார்வையிலும்  எனக்குப் போட்டி தரவல்ல முதிர்கன்னி ஏர்ஹோஸ்டஸ் யாரையும் காணோம் ; அத்தனையுமே  சிரித்த முகங்களுடனான இளம் பெண்கள் !! ///

    /// வரிசைக்கு இரண்டே சீட்கள் ; மொத்தமாய் 16 பயணிகள் மட்டுமே ; ஆனால் அவர்கட்கு 4 பணிப்பெண்கள் என்றிருப்பதைக் கவனித்தேன் ! ///

    /// கையில் இரண்டு தட்டுக்களோடு பணிப்பெண் ஒருத்தர் வந்து - "பனீர்  டிக்கா வேணுமா சார் ? அல்லது ப்ரோக்கோலி சாலட் சாப்பிடறீங்களா ?" என்று அன்பாய் வினவினார் ! ///

    /// பின்னாடியே இன்னொரு யுவதி - "சிக்கன் 65 சார் ?" என்றபடிக்கே நெருங்கிட///

    இன்னும் நிறைய இருக்கு.. எத்தனைய காப்பி பண்ண..

    மொத்தத்தில் முதல் பாக பதிவை படித்தவுடன் உடனே தோன்றியது..

    எங்கே நமது நிதி ஆலோசகர்.. உடனே அடுத்த டூருக்கு பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட்டுக்கே ப்ளான் பண்ணுங்க.. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை...

    ஆனா அப்புறம் தான் நீங்க சொன்ன

    ஆத்திலே காத்திருக்கும் அம்மணி விறகுக்கட்டையால் இந்த சொட்டை நடுமண்டையில் போட்டிடும் வாய்ப்புகள் பிரகாசம் என்று நினைக்கும் போது கண்ணு வேத்து வேத்து போகுது...

    ReplyDelete
    Replies
    1. எக்கானமியை விட மூன்று அல்லது நான்கு மடங்கு இருக்கும். அவ்வளவே.

      Delete
    2. பெர்ர்ரிசா தான் இருக்கும்...

      Delete
    3. அம்மணி விறகுக்கட்டை....

      அடடா

      வுடுங்க பாஸ்...அவங்க வேற யாரப் போயி அடிக்க முடியும்.....

      Delete
    4. ///எக்கானமியை விட மூன்று அல்லது நான்கு மடங்கு இருக்கும். அவ்வளவே.//

      சீட்டெல்லாம் கூட தேவையில்லைங்க ஷெரீப்.. விமானத்தோட வால்பகுதியிலயோ அல்லது தட்டுமுட்டு சாமான்கள் வைக்குமிடத்திலோ ஒரு ஓரத்துல இடம் கிடைச்சா போதும்.. எம்புட்டு செலவாகும்? இத்தாலி ப்ளைட்டுக்கு!

      Delete
    5. EV இன்னமும் விமர்சனம் வரல. உங்கள் ரசிகர்களை ஏமாற்றதிர்கள். I'm still waiting

      Delete
  19. பாக்கியம் ராமசாமி அவர்களை நினைவுபடுத்தும் நகைச்சுைவை கலந்த எழுத்து நடை. மிகவும் ரசித்து சிரிக்க வைத்த பதிவு.

    ReplyDelete
    Replies
    1. லே பீமா...

      எம்ஜியார் பந்து பிட்ரு...

      நோடு நோடிய...

      Delete
    2. ஏனு ரசா .. ஈ நியாய இல்லா. எடிட்டரை நாம் கைவிடுபிடுது.பக்கபலமா நின்னு ஒத்த சமாளிக்க ேபகு.

      Delete
    3. Jத்தா ரசாவா?? அந்த்ரே அரைப்ளேடு எவரு..!?

      Delete
    4. இதிலி ஏனு சந்தேக இத்தே.

      அது நீவுத்தப்பா ...

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. சூப்பரப்பு ... அப்டியே சீதாப்பாட்டி, கீதாப்பாட்டி...

      Delete
    7. ஆ வுடுகி ருக்குமணின பிட்பிட்ரீ குரு..!

      Delete
    8. ருக்கு பேட...ஃகுண்டி ஆகிபிட்ளு

      தாத்தா எல்லி காணிவி?

      நானு ஹேளிது நம்மு ஷெரீப்பு ன த்தா...

      சீதா அவ்வகே நம்மு ரம்மின பவர்கிளாஸ் மாட்டி பிட்டுடானு.

      சென்னாங்கே இந்தா...

      Delete
  20. // நேற்றைய ஓவியாவும், இன்றைய லொஸ்லியாவும் லாலி பாட, சிட் ஸ்ரீராமின் குரல் பின்னணியில் ஒலிக்க - ஒற்றை நொடியில் சுற்றுச் சூழலே செம ரம்யமாய் மாறி விட்டது போல் தோன்றியது ! // தரையில் விழுந்து புரண்டு சிரிக்கும் படங்கள் 1000

    ReplyDelete
  21. https://chat.whatsapp.com/BVMdmE1Q1aD3tv8tskEo5X

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே
      மேற்காணும் லிங்க் தஞ்சாவூர் புத்தக கண்காட்சி க்கான வாட்ஸ்அப் குரூப்.

      வாருங்கள் கலக்குங்கள்
      J

      Delete
    2. hyperlink போட்டுவிடுங்க j ji!

      Delete
  22. எல்லாமே சிகாகோ படுத்துற பாடு...

    மார்கோ மார்க்கமே தனி....

    ReplyDelete
  23. மனதில் உறுதி வேண்டும்(maxi) :

    எனக்கு ரொம்பப் பிடித்த லக்கிலூக் கதைகளில் ஒன்று ..!
    இருவண்ணத்தில் கானகத்தில் கலவரம் என்ற ப்ரின்ஸ் கதையின் அட்டைப்படத்துடன் பல நூற்றாண்டுகளுக்கு முன் வெளியான கதை.! அப்போதிருந்து ஐம்பது முறைகளுக்கு குறையாமல் படித்திருப்பேன்..!
    இப்போது மேக்ஸி சைஸில் தெளிவான சித்திரங்களுடன் கண்கவர் வண்ணக்கலவையில்.. அடடா அடடா.. கேட்கவா வேண்டும்.! அப்போது டாக்டர் ஆட்டோவாக இருந்தவர் காலத்திற்கேற்றாற்போல் இப்போது டாக்டர் யுபெர் ஓலாவாக மாறிவிட்டார். டெபுடேஷனில் சேட்டன்ட கேரள நாட்டுக்கும் போய்வந்திருப்பார் போல.. பேச்சில் மலையாள வா'ஷ'னை டாலடிக்கிறது.!

    சிக்மெண்ட் ஃப்ராய்டின் கோட்பாட்டின் அடிப்படையில் ஃப்ராய்டுக்கு முன்னதாகவே(கற்பனைதான்) டால்டன்களுக்கு சிகிச்சை அளிக்க முயற்சி செய்து டால்டன்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வித்தியாசமான கொள்ளைக்காரனாக மாறி .. அதாவது கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றி புதுபாணியில் பேசியே கொள்ளையடிக்கிறார் டாக்டர் யுபெர் ஓலா.!

    ஆனால் டாக்டரின் சிகிச்சைக்கு பலனில்லாமல் போய்விடவில்லை.! ஐந்தறிவு ரின்டின்கேனும் ஐந்தேகால் அறிவு ஆவ்ரேல் டால்டனும் குணமாகிவிடுகிறார்கள்..!
    அவர்கள் இருவரையும் பயண்படுத்தி படு தமாசாக டாக்டர் ப்ளஸ் டால்டன் கோஷ்டியை சட்டத்தின் பிடியில் கொண்டுவருகிறார் லக்கிலூக்.!
    சிறைச்சாலையிலும் டாக்டரின் அட்ராசிடிஸ் தொடர்வதுதான் ஹைலைட்டே.!

    மனதில் உறுதி வேண்டும் - புன்னகை.!

    ReplyDelete
    Replies
    1. புன்னகை யா வெடிசிரிப்பா?

      Delete
    2. ஐம்பது முறைகள் குமார்..:-)))

      Delete
    3. வெடி புன்னகை...

      Delete
    4. J சார் சரியான பதில்

      Delete
  24. சார்! நான் உங்களுடைய வெளிநாட்டு பயணம் பற்றிய பதிவுகளை விரும்பி படிப்பேன். ஆனால், இன்று மேற்கத்திய நகரில் உங்கள் அனுபவங்களை பற்றி சொல்வப் போகிறீர்கள் என்று ஆவலோடு படிக்க ஆரம்பித்த எனக்கு இந்த பதிவு மிகவும் ஏமாற்றமாக அமைந்துவிட்டது.

    ReplyDelete
  25. // காசே தான் கடவுளடா....அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமடா" என்று அந்தக்காலத்துப் பாட்டு தான் எனக்குள் அந்த நொடியில் ஓடியது ! அங்கலாய்த்து முடித்த கையோடு சீட்டுக்குப் போய் மல்லாந்தால் //
    பேசாமல் இந்தப் பதிவிற்கு “ஒரு அங்கலாய்ப்பு பதிவு” என்று தலைப்பிட்டிருக்கலாம் சார்.......ஹா,ஹா,ஹா.....

    ReplyDelete
    Replies
    1. பணம் பத்தும் செய்யும்னு சும்மாவா சொன்னாங்க..:-)

      Delete
  26. சிங்கமுத்து In சிகாேகேn அப்டின்னு உப பதிவு ரெடியாகிட்டு இருக்காம்.

    ReplyDelete
  27. பழிவாங்கும் பாவை (maxi):

    இந்தக்கதையை பாக்கெட் சைஸில் க்ளாசிக்ஸ் வெளியீட்டில் படித்திருக்கிறேன்.! பெரிய சைஸில் முழுவண்ணத்தில் செம்ம க்ராண்டாக வந்திருக்கிது.!
    டெக்ஸ் வில்லர் கதைகள் இலகுரக வாசிப்பின் உச்சம் என்பது நாமறிந்ததே.! ஜாலியாக எடுத்து ஜாலியாக ரசித்து ஜாலியாக படித்தாயிற்று.!
    கதைக்களம் எப்போதும் பச்சையானது.. அதாங்க.. Tamilல Evergreen..! மூர்க்கத்தனமான மூட ராணுவ உயர்அதிகாரி.. அப்பாவி செவ்விந்தியர்களை அநியாயமாக கொன்றுவிடுகிறார்.! வில்லர் தலையிட்டு வில்லனின் பதவியைப் பறித்து ஓடவிடுகிறார்.! வில்லன் கர்னல் அர்லிங்டனால் (மின்னும் மரணத்திலும் ஒரு அர்லிங்டன் வருவார்.. அவரும் மெயின் வில்லனே..! அர்லிங்டன் என்ற பெயர்மீது கதாசிரியர்களுக்கு சம்திங் சம்திங் இருக்குமோ..!?) கணவனை இழந்த நவஹோ மங்கை சமயம் பார்த்து காத்திருந்து பழிதீர்த்துக்கொள்கிறாள்.!

    பழிவாங்கும் பாவை - டெக்ஸ் என்னும் மந்திரச்சொல்.

    ReplyDelete
  28. சார் அட்டகாசமான நகை பாயும் ...ஏங்கச் செய்யும் ப௰ணப்பதிவு....விமானப் பயணம் மேல் ஆசய ஏற்றி விட்டீர்கள்....ப்ளூகோட் அட்டை அருமை...அதும் அந்த ஃப்ளோரசண்ட் பச்சை ஏனோ முதன் முதலில் ஆறாப்பு படிச்சயில அறிமுகமான மிக்கி மெளஸ் வண்ண ஸ்கெட்ச நினைவு படுத்துது...மிகச்சிறந்த அட்டைப்படத்ல இதும் இடம் பிடிக்கும்னு பட்சி கூவுது......அப்புறம் ஈரோட்ல இமாலய வெற்றி கொண்ட ஸ்மர்ஃப் அடுத்த ஆண்டு தனித்தடத்ல தடதடக்க வாய்ப்பிருக்குமா....பதில் சரின்னா சந்தோசம்

    ReplyDelete
  29. நித்தமும் யுத்தம் :

    வரும்காலத்தில் நடப்பதான கதை..

    பெரும் பணக்காரர்கள் தங்களது பாதுகாப்புக்கு பயிற்றுவிக்கப்பட்ட பாடிகார்ட்ஸை பணியில் அமர்த்திக் கொள்கிறார்கள்.! அந்த பாடிகார்ட்ஸை பயிற்றுவித்து சப்ளை செய்யும் நிறுவனங்களும் நிறைய இருக்கின்றன.! அப்படி ஒரு நிறுவனம்தான் டமாக்லிஸ். அந்நிறுவனத்தின் சாகச வீரர்கள்தான் நம் ஹீரோக்கள்.! மூன்று ஆண்கள் ஒரு பெண்.. ஆண்களைவிட எல்லி என்னும் அந்தப் பெண்தான் அதிகம் கவனத்தை ஈர்க்கிறாள்.. அவளே கதையின் நாயகி .!

    ஷெர்வுட் புரட்சிப் படை என்ற சர்வ வல்லமை படைத்த அமைப்பு ஒன்று, வண்டனின் பெரும் பணக்காரர் ஒருவரின் மகனை தூக்கப்போவதாக (தமிழில் கிட்நா) பகிரங்கமாக சவால் விடுகிறது. அந்தப் பணக்காரர் டமாக்லிஸின் உதவியை நாட.. புரட்சிப்படை ஜெயித்ததா அல்லது பாதுகாப்புப்படை ஜெயித்ததா என்பதை புத்தகத்திரையில் கண்டுகொள்க.!

    ஊதாரியான அந்தப் பணக்காரப் பையன் சயீதை கடத்த வரும் பெண், தான் அவனுடைய சகோதரி என்று சொல்கிறாள், அவளுடைய தாயாரை சயீதீன் தந்தை ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டதால், அவனையும் அவனுடைய தந்தையையும் நாசமாக்குவதே அவளுடைய லட்சியம் என்று சொல்கிறாள்.!
    சரி.. பாதிக்கப்பட்ட பெண் பழி உணர்ச்சியில் இருப்பது நியாயந்தானே என்று நாம் படித்துக்கொண்டே போகையில் க்ளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட்.. நாம் அதுவரை வெறுத்துவந்த நபர்களின் மேல் ஒரு பச்சாதாபத்தை விதைத்துவிடுகிறது.!

    மிகவும் அருமையான கதைத்தேர்வு எடிட்டர் சார்.!

    லார்கோ வின்ச், ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் எழுதப்பட்ட வசனங்களும் அருமையாகப் பொருந்தியிருக்கிறது.!

    நித்தமும் யுத்தம் - எதிர்காலம்

    ReplyDelete
    Replies
    1. எதிர்காலமே! சந்தேகம் இல்லை

      Delete
    2. கண்ணா அருமையாக எழுதுகிறீர்கள். சும்மாவா எடிட்டர் சார் உங்களையும் ஷெரீஃப் ஜி யயும் விழாவில் கௌரவித்தார். அட்டகாசம் யா

      Delete
    3. Kumar Salem @

      எடிட்டர் உள்ளிட்ட நல்ல உள்ளங்கள் பலரின் அன்புக்கு என்னிடம் கைமாறு இல்லை என்பதே உண்மை.!

      Delete
    4. என்ன வேணும்னு கேட்டோம்.

      Delete
  30. செப்டம்பருக்கு இன்னும் 12நாட்களே உள்ளன. இதழ்களைப்பற்றிய முன்னோட்டம் உள்ளதா என்றஅஆவலையும்மீறி ரசிக்க வைத்த பதிவு. ஒரு காமிக்ஸ் படித்த திருப்தி கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  31. மீண்டும் வணக்கம்!

    ReplyDelete
  32. சார் செப்டம்பர் இதழ்கள் சற்று லேட் ஆக வந்தாலும் பரவாயில்லை. Take your own time சார். நான் அதுக்குள்ள ஆகஸ்ட் இதழ்களை இன்னும் ஒரு 4 , 5 முறை படித்து விடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ப்ரீ போலத் தெரிகிறது. கொடுத்து வைத்தவர் :-)

      Delete
    2. ரொம்ப ஃப்ரீ டைம்....

      பூஊஊஊ..ப்பூஹுஊஊ...


      இப்டீக்கு

      ப்ரீ டைமை பறி கொடுத்தவர்

      Delete
  33. //
    தஞ்சாவூரில் 17 ஆகஸ்ட் முதல் துவங்கிடவுள்ள புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 67 !! //

    இது ஆசிரியர் எழுதி யாரோ போட்ட பதிவாக இருக்கனும் அல்லது ஆசிரியர் வேறு கண்டத்தில் இருப்பதால் இன்று தான் ஆகஸ்ட் 17 என்று தேதி தெரியாமல் போட்ட பதிவாக இருக்கனும் 🤔

    ReplyDelete
    Replies
    1. அவரு பதிவு போட்ட பொழுது இங்கே ஆகஸ்ட் 16 இரவு தான் பரணி.

      Delete
  34. பிஸ்டலுக்குப் பிரியாவிடை :

    ஒரேமூச்சில் படிக்கவைத்த கதை.!
    அமெரிக்காவின் முக்கிய சட்டத்தையே மாற்றியெழுதவல்ல ஆவணம் கைக்கு கிடைத்ததும்.., அதைப் பயண்படுத்தி கொள்ளை கொள்ளையாய் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் மனைவி ஒருபுறம், அழகான அந்த மனைவியின் ஆசையையும் பணத்தையும் புறக்கணித்துவிட்டு நாட்டு மக்களின் நலனுக்காக அந்த ஆவணத்தைப் பயண்படுத்த நினைக்கும் வக்கீல் கணவன் மறுபுறம்..
    கதையின் மையக்கரு இதுதான்.!

    அழகான, அம்சமான, கச்சிதமான, கவர்ச்சியான இன்னும் பலவான மார்கோ பணவெறி கொண்ட பெண்ணாகவும். பணத்திற்காக ஆண்களை வரிசையாக வலையில் வீழ்த்தி.., வேலை முடிந்தாலோ, அல்லது இது தேறாது என்று தெரிந்தாலோ தயங்காமல் போட்டுத்தள்ளும் கிராதகியாகவும்தான் கதைமுழுக்க நடமாடுகிறாள்.! ஆனால் அந்த செவ்விந்தியச் சிறுமி லிசாவை சந்தித்ததில் இருந்து மார்கோவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு, இறுதியில் பெண்மை (தாய்மை) குணம் வெளிப்பட்டு, எந்த லட்சியத்திற்காக ஏழெட்டு கணவர்களை மாற்றினாளோ அந்த லட்சியத்தையே தூக்கி எறிந்துவிடுகிறாள்.!

    வக்கீல் பைரன் பெக்.. மார்கோவின் ஒண்ணாவது புருசனாக நமக்கு அறிமுகமாகிறவர்.(அப்புறந்தான் தெரியுது.. நண்பர் அலெக்ஸாண்டர்கிட்ட இருந்து மார்கோவை இந்தாளே ஆட்டையப் போட்டுக்கிட்டுதான் வந்திருக்காப்ல) .
    தேர்ந்த லட்சியவாதி. இவரும் இவருடைய காரியதரிசி ஹோக்கார்ட்டும் (இவரும் மார்கோவின் வலையில் மாட்டிய பீசுதான்) ஒன்று சேர்ந்து மார்கோ லவட்டிக்கொண்டு போன ஆவணங்களை மீட்கக் கிளம்புகிறார்கள்.!

    மார்கோவிடம் இருந்து ஒரு வழிப்பறி கும்பல் அந்த ஆவணங்களின் மதிப்பு தெரியாமலேயே திருடிச்சென்று விடுகிறது.! அதை மீட்க அக்கும்பலின் தலைவனையும் மயக்குகிறாள் மார்கோ.! (வைகைப்புயல் காமெடியில் வருமே.. போனவருசம் அழகர் ஆத்துல இறங்குனப்பன்னு ஆரம்பிச்சி.. வரிசையா ஒரு டசன் பேரைச்சொல்லி டாக்டர்ல முடிக்குமே ஒரு புள்ள.. அப்புறம் உங்க வீட்ல நிறைய வேலைக்காரங்க இருங்காங்களான்னு கூட கேக்குமே .. அதோட அமெரிக்க வெர்சன்தான் மார்கோ)

    அந்தக் கொள்ளைக் கும்பலுக்கு ஒட்டு மொத்தமாக டேக்கா கொடுத்துவிட்டு ஒரு செவ்விந்திய பெருசு அவங்க தேட்டைப் பொருட்களோட சேர்த்து ஆவணத்தையும் கிளப்பிக்கிட்டு போயிடுது.! அந்தப் பெருசு கொள்ளைப் பொருட்களை திருடுற விதம் இருக்கே.. செம்ம.! பானை செய்ய மண்ணு எங்கிருந்து கிடைக்குதுன்னு பாத்தா... யோவ் பெரீவரே..செம்ம தில்லாலங்கடியா நீனு.!


    இதுக்கு நடுவால கட்டிளங்காளை டிம்முன்னு ஒரு ரெண்டுங்கெட்டான் போர்ட்டர் வேற மார்கோவை கண்டதும் காதல்னு அவளையே பின்தொடர்ந்து வரான்.! அவனோட உதவியால பைரன், ஹோக்கார்ட் மற்றும் கொள்ளை கும்பல்கிட்ட இருந்து தப்பி அந்த செவ்விந்தியப் பெருசைத் தேடிப்போறா மார்கோ.! அவரையும் கரெக்ட் பண்ணலாம்னு பாக்கறப்போ எனக்கு வயசாயிடிச்சிம்மான்னு பெருசு மார்கோவுக்கு டிமிக்கி குடுத்துடுறாரு.! டிம், பெருசு ரெண்டு பேத்தையும் ஏமாத்திட்டு ஆவணங்களோட மறுபடியும் எஸ் ஆகுறா மார்கோ..!

    பைரன், ஹோக்கார்ட் ஜோடி மற்றும் டிம் பெருசு ஜாக் அத்தோட ஒரு கறுப்பின செவ்விந்திய ஜோடி இத்தனை பேருக்கும் கடுக்கா குடுத்துட்டு ஆவணங்களை பணமாக்க முயற்சி செய்யும் மார்கோவின் லட்சியம் ஜெயித்ததா.. அல்லது பைரனின் உன்னத லட்சியம் ஜெயித்ததான்னு புக்குல படிச்சித் தெரிஞ்சிக்கோங்க மக்களே.!

    கார்ட்டூன் பாணி சித்திரங்கள் இக்கதைத்கு எக்ஸ்ட்ரா ஈர்ப்பைக் கொடுக்கிறது.! கேரக்டர்களுக்கு ஏற்றவாறு வசனங்களை அமைத்த மொழிபெயப்பு பாந்தமாக பொருந்தியிருக்கிறது..!(கோயமுத்தூர் மாப்பிள்ளைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.. கலக்கிட்ட மச்சி)

    கடலுக்குள் மூழ்கி முத்தெடுப்பதைப்போல காமிக்ஸ் கடலினுள் மூழ்கி மூழ்கி நமக்காக இப்படிப்பட்ட நல்முத்துகளை அள்ளிவந்து மாலையாக்கித் தரும் நமது அன்பு எடிட்டருக்கு நமது அன்புகலந்த நன்றியை தெரிவிப்போம் நண்பர்களே.!

    பிஸ்டலுக்குப் பிரியாவிடை - அடேங்கப்பா.!

    ReplyDelete
    Replies
    1. அருமை அருமை. சூப்பர் கண்ணா பின்னரிங்க.

      Delete
    2. கிட் ஆர்டின் கண்ணர் அவர்களுக்கும் அமெரிக்க கோயம்பத்தூர் மாப்பிள்ளைக்கும் வாழ்த்துக்களுடன் நன்றிகளும்...

      ஆமா பாஸ்.. உங்க அடுத்த அப்ரேசன் என்ன???

      Delete
  35. ஆகஸ்டு வெளியீடுகள்ல இன்னும் அண்டர்டேக்கர் மாத்திரமே பாக்கி.! இன்னும் ஓரிரு நாட்கள் கழிச்சிதான் படிக்கமுடியும்.!

    ஏன்னா..
    இப்போ என்னோட நிலை..

    "நோ ஜாப் ஃபார் டாக்
    பட்
    நோ டைம் ஃபார் ஸ்டேன்ட்." ங்குற இங்க்லீஷ் பழமொழி மாதிரி இருக்கு.!


    அதுவும் சூப்பரா இருக்குன்னுதான் படிச்சவங்க சொன்னாங்க.!

    மொத்தத்தில் ஆகஸ்டு அதகளம்தான்.!

    ReplyDelete
    Replies
    1. படபடவென அனைத்து இதழ்களின் விமர்சனத்தையும் போட்டு அசத்தி விட்டீர்கள் ரவிகண்ணன்..அருமை..

      Delete
  36. பிஸ்டலுக்கு பிரியாவிடை ஒரு காமிக்ஸ் காவியம்!!

    வாவ் மார்கோ! நெடு நாட்களுக்கு நெஞ்சை விட்டு நீங்காத கதாபாத்திரம்! உண்மையில் தற்காலத்தில் பணியிடத்தில் பெண்கள் தங்களை survival செய்து கொள்ள இன்னும் இக்காலத்திலும் எத்தனையோ மாய்மாலங்கள் செய்ய வேண்டிய தேவை இன்றளவும் உள்ளதை நம் தேசத்திலும் மறுப்பதற்கில்லை தான்!

    நாம் ஏற்றுக் கொண்டாலும், ஏற்காவிட்டாலும் பெண்களின் வாழ்க்கை என்பது ஆண் சமூகத்தின் கைகளில் தான் உள்ளது!

    ஆண்களின் பார்வை நேர் கொண்டதாய் மாறாத வரைக்கும், பெண்களின் வாழ்க்கையும் சீர் கொண்டதாய் இராது என்பதே சமகாலமும், இக்கதையும் உணர்த்தும் நிஜம்!!

    Once again 10/10

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் மிதுன். Well said.

      Delete
    2. இந்த ஒப்பீடு அட்டகாசம். நானும் இது எவ்வளவு உண்மை என்பதை உணர்கிறேன். சூப்பர் ஜி சூப்பர் ஜி

      Delete
    3. ஆண்களின் பார்வை நேர் கொண்டதாயா மாறும்...

      வாய்ப்பில்லை.... இந்நாட்களில்

      அதிநவீன தொழில்நுட்ப பார்வைகளாகவே பாயும்...

      Delete
    4. மிதுனரே@ ///பிஸ்டலுக்கு பிரியாவிடை ஒரு காமிக்ஸ் காவியம்!!///ஆமா...ஆமா...!

      அண்டர்டேக்கர் 2??

      Delete
  37. எல்லோருக்கும் வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  38. 36000 அடி சொர்க்கம்.

    10 நிமிட ரீடிங்

    ReplyDelete
    Replies
    1. J சார் இரவு தூங்கவே மாட்டீங்களா

      Delete
    2. நைட் தண்ணி குடிக்க எந்திரிச்சி....

      Delete
  39. வாய்விட்டு சிரிக்க வைத்த பதிவு...

    அருமை சார்..

    :-))))

    ReplyDelete
    Replies
    1. இப்பிடி காலங்காத்தால 6.15 மணிக்கி நாலு தடவை சிரிச்சா கால டிபன் நெனச்சு கலங்கணும்

      Delete
  40. சார்! பௌன்சரின் அடுத்த 2 டபுல் ஆல்பங்களை வெளியிட முயற்சி செய்யுங்கள் சார்!!

    ReplyDelete
    Replies
    1. ஆமா...+1000!

      அடுத்த 4பாகங்களும் ஒரே புக்காக அடுத்த கோடைமலர்ல போடலாம்!

      Delete
    2. பெளன்சருக்கு நானும் கை தூக்குகிறேன்..:-)

      Delete
    3. பாராகுடாவை பார்த்த அதே வேகத்தில் பவுன்சரையும் இறக்கினால் நன்றாக இருக்கும் (எங்களுக்கு)

      Delete
  41. Bouncer yes yes����������

    ReplyDelete
  42. பிஸ்டலுக்கு பிரியாவிடை

    வன்மேற்கு (வைல்ட் வெஸ்ட்) கதைகள் என்று சொன்னாலே முதலில் நியாபகம் வருவது அழுக்கு கௌபாய்கள் (மாடு மேய்க்கிறவைங்க). அடுத்தது துப்பாக்கி! சில நூற்றாண்டுகளாக பல கோடி உயிர்களை பலி வாங்கியுள்ள மோசமான ஆயுதம்.

    அமெரிக்க சட்டத்திட்டங்கள் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் குடாக்குத்தனமானவை. நீங்கள் ஒரு ஆளை சுட்டால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஒரு ஜோடி குதிரைகளை திருடிவிட்டால் தூக்கில் போட்டு விடுவார்கள். அல்லது உங்களுக்கு ஒரு விலை நிர்ணயம் செய்து வெகுமதி வேட்டயர்களை ஏவி விடுவார்கள். வன்மேற்கின் சட்டத்திட்டங்களில் இருந்து, வாழ்க்கை முறை வரைக்கும் துப்பாக்கி பல வித மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படிப்பட்ட துப்பாக்கி கலாசாரத்தை மொத்தமாக துடைத்தெறிய கிளம்பும் மனோபாலா அளவுக்கு பாடியான ஒரு வக்கீலின் கதைதான் "பிஸ்டலுக்கு பிரியாவிடை".

    ஒட்டு மொத்த அமெரிக்காவின் மோசமான பக்கங்களை பல இடங்களில் பகடி செய்து கொண்டே செல்கிறார்கள் அந்த கதையில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும்! முக்கியமாக செவிந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த ஒவ்வொரு துரோகத்தையும், செவ்விந்தியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டத்தையும் ஆங்காங்கே கதையில் சொல்லி இருக்கிறார்கள். முழுக்க முழுக்க காமெடியாக பயணிக்கும் இந்த கதையை பற்றி சுருக்கமாக எழுதி படித்து பார்த்தால் "ஜாங்கோ" போல சீரியஸான ஒரு கதையாக தெரியும். அதனால் கதையை விளக்க முயற்சிப்பது அர்த்தமற்றது.

    ஆனால் காலம் காலமாக அமெரிக்காவில் செவ்விந்தியர்களுக்கும், கறுப்பின மக்களுக்கும் நிறைவேற்றப்பட்ட கொடுமைகளை பற்றியும், சட்டம் எப்படியெல்லாம் மேல்வர்க்கத்தினருக்கு உதவியது என்பது பற்றியும் படிப்பவருக்கு புரியும் வண்ணம் நகைசுவையாக சொல்லியிருக்கிறார்கள்.

    உதாரணமாக ஒரு செவ்விந்திய சிறுமி இன்னொரு செவ்விந்திய பெண்ணிடம் வாஷிங்டன் சதுக்கத்தில் இருக்கும் சுதந்திர தேவி சிலையை காட்டி அது என்னவென்று கேட்பாள். அதற்கு பதில் தெரியாத அந்த பெண் "அது வெள்ளையர்களோட கடவுளா இருக்கும். பாரு அது தலையில் மலர் வளையம் மாதிரி இருக்கு" என சொல்வாள்.

    உடனே அருகிலிருக்கும் வெள்ளைக்கார காவலன் " இல்லை.. அதுதான் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை" என்பான்.

    இடைமறித்து கறுப்பின ஆசாமி ஒருவர் "ஆமாம்.. சுதந்திர தேவி சிலை. ஆனா அதை கட்டினது அடிமைகளை வெச்சுதான்" என்று பதில் அளிப்பார்.

    அமெரிக்காவின் சுதந்திரம், ஜனநாயகம் எல்லாம் பூர்விக மக்களின் எலும்பு கூடுகள் மீதும், கருப்பினத்தவரின் ரத்ததாலும்தான் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றன என்று சொல்லாமல் சொல்லும் காட்சிகள் அவை.

    இதுபோல கதை முழுவதுமே ஒரு தீவிரமான அரசியல் பகடித்தான். சிரிக்க வைக்கும் அதே நேரம் சிந்திக்கவும் வைக்கும். 4 பாகம் கொண்ட இந்த கதையை படித்து முடித்த போது "டாவின்சி கோட்" மாதிரியான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரை பார்த்து முடித்த உணர்வு..

    கதையின் இறுதியில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று, துப்பாக்கி - மனிதாபிமானமற்ற ஆயுதம். இரண்டு, சட்டம் - துப்பாக்கியை விட பலமான ஆயுதம். இரண்டுமே உபயோகிப்பவரின் வலிமையை பொறுத்து எதிராளி மீது பலமாக பாய்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ///வெள்ளைக்கார காவலன் " இல்லை.. அதுதான் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை" என்பான்.

      இடைமறித்து கறுப்பின ஆசாமி ஒருவர் "ஆமாம்.. சுதந்திர தேவி சிலை. ஆனா அதை கட்டினது அடிமைகளை வெச்சுதான்" என்று பதில் அளிப்பார்.///

      வலுவான கருத்து!!??

      ///துப்பாக்கி - மனிதாபிமானமற்ற ஆயுதம். இரண்டு, சட்டம் - துப்பாக்கியை விட பலமான ஆயுதம். இரண்டுமே உபயோகிப்பவரின் வலிமையை பொறுத்து எதிராளி மீது பலமாக பாய்கிறது.///

      அருமை நண்பரே!

      Delete
    2. அருமை பிரசாந்த் அருமை யா. உங்களது விமர்சனத்தை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. செம்ம

      Delete
    3. ///ஒன்று, துப்பாக்கி - மனிதாபிமானமற்ற ஆயுதம். இரண்டு, சட்டம் - துப்பாக்கியை விட பலமான ஆயுதம்.///

      அருமை.!அருமை!

      Delete
    4. ///துப்பாக்கி - மனிதாபிமானமற்ற ஆயுதம். இரண்டு, சட்டம் - துப்பாக்கியை விட பலமான ஆயுதம். இரண்டுமே உபயோகிப்பவரின் வலிமையை பொறுத்து எதிராளி மீது பலமாக பாய்கிறது.///

      அருமை ப்ரசாந்த் கார்த்திக்..!

      Delete
    5. நன்றிகள் நண்பர்களே..

      Delete
    6. நல்ல விமர்சனம் பிரசாந்த்!
      அரசியல் நையாண்டிகளை சின்ன சின்ன கேரக்டர்ஸ் வாயிலாக புகுத்தி இருப்பது எல்லாம் சிறப்பாக பாயிண்ட் அவுட் பண்ணி இருக்கீங்க!நச்!

      குடாக்குத் தனமான சட்டங்கள்///--ஹா...ஹா...! அந்த 19ம் நூற்றாண்டின் காலகட்டத்தில் அதுதான் பொருந்தி வருமோ என்னவோ!

      //ஒற்றைக்கு ஒற்றை சவாலில் சுட்டுக்கொல்வது சட்டப்படி குற்றமல்ல///---என பழிக்குப்பழி டெக்ஸ் கதையிலும், டைகர் கதையிலும் வரும்!

      குதிரையை திருடினா தூக்குதான்!ஏன்னா அங்கே குதிரை இல்லீனா ஒரு ஆள் ஜீவிக்க முடியாது! டைகரையும் அப்படி சொல்லித்தானே தூக்குல போட தெறத்துவாங்க!

      Delete
    7. ///துப்பாக்கி - மனிதாபிமானமற்ற ஆயுதம். இரண்டு, சட்டம் - துப்பாக்கியை விட பலமான ஆயுதம். இரண்டுமே உபயோகிப்பவரின் வலிமையை பொறுத்து எதிராளி மீது பலமாக பாய்கிறது.///

      அருமை ப்ரசாந்த் கார்த்திக்..!

      நமது காமிக்ஸ் காதலர்களில் தான் எத்தனை எத்தனை சிந்தனைகள்.. வாழ்க காமிக்ஸ் நேசம்.... வளரட்டும் காமிக்ஸ் விமர்சனம்...

      Delete
    8. சூப்பர் விமர்சனம்.. பாராட்டுகள்.

      Delete
    9. அருமையான விமர்சனம் நண்பரே..

      Delete
    10. மிக்க மகிழ்ச்சி நண்பர்களே மற்றும் நன்றியும் கூட..

      இதுபோன்ற பல வித்தியாசமான கதைகளங்களை தமிழில் கொண்டு வந்து நம்மை பல தேடல்களுக்கு உடப்படுத்தும் ஆசிரியருக்கு மிகப்பெரிய நன்றி!!💐💐

      Delete
    11. ///துப்பாக்கி - மனிதாபிமானமற்ற ஆயுதம். இரண்டு, சட்டம் - துப்பாக்கியை விட பலமான ஆயுதம். இரண்டுமே உபயோகிப்பவரின் வலிமையை பொறுத்து எதிராளி மீது பலமாக பாய்கிறது.///
      இவை அனைத்தையும் விட பையனின் வார்த்தைகள் அபாயகரமானவை.தான் ஒருவன் புகழ் பெற வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த அனைத்தையுமே தவறாக வழி நடத்தும் வாய் ஜாலம்.
      கொள்ளையர் கூட்டத்தை நிர்மூலமாக்குவது.பாதுகாப்பிற்கு வரும் சிறை காவலர்கள் மேல் தாக்குதல் நடைபெறும் போது வெளிப்படுத்தும் வார்த்தைகள்.பங்கு வர்த்தக அரங்கில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் என அனைத்துமே திறமையான வழக்கறிஞரின் ஆற்றல்.

      மேடிசனின் கடிதங்களை பயன்படுத்தி சட்ட திருத்தை ஏற்படுத்தினால் தனி நபர் ஆயுத பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
      ஆனால் அரசியல் குழுக்களுக்கு வழங்கப்படும் அதிகாரம் இதைவிடவும் மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
      இதன் மூலம் கனடா ,மெக்ஸிகோ,வட அமெரிக்கா,தென் அமெரிக்கா என்று அரசியல் குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு உள்நாட்டு போர் நீடிக்கும் ஆபத்து ஏற்படும்.
      நீக்ரோக்கள்,செவ்விந்தியர் மற்றும் ஆங்கிலேயருக்கு இடைப்பட்ட ஆயுத மோதலாக உருவெடுக்கும்.அமெரிக்கா உலக அரங்கில் முதலாளித்துவ வல்லரசாக தழைத்திருக்க முடியாது.
      பைரனின் லட்சியம் மட்டுமே ஈடேறும்.ஆயத தயாரிப்பு நிறுவனங்கள் இன்னும் சில சட்ட வரைவு களை தங்களுக்கு சாதகமாக உருவாக்கி வணிகம் செய்வர்.
      ஆளும் அதிகார வர்கத்தினரின் மனோபாவம் மாறாதவரை சட்ட வரையறைகள் அனைத்து தேசங்களிலும் செல்லுபடியாகாத நாணயங்களே.


      .

      Delete
  43. புழு பட்டாம்பூச்சி....சூப்பர் மார்கோ....

    மேனி எழிலுக்கு மார்கோ சோப் ...பயன்படுத்துங்கள்.....

    ReplyDelete
  44. கோவை புத்தக திருவிழா...
    தஞ்சை புத்தக திருவிழா...

    மாக்ஸி லயன் ரிலீஸ் பண்ணலாம்ல காமிக் ஆசான்....

    ReplyDelete
    Replies
    1. அதென்ன ஈரோட்டுக்கு மட்டும்....,😢😊

      Delete
    2. /// அதென்ன ஈரோட்டுக்கு மட்டும்....,😢😊 ///

      அதானே...???

      Delete
  45. பிஸ்டலுக்கு பிரியாவிடை ஐந்தாவது தடவையாக போய்க்கொண்டிருக்கிறது.ஒவ்வொரு முறையும் படிக்கும்போது புதுப்புது விசயங்கள் விளங்குகிறது.

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஒரு தடவ படிக்கரதே நாங்க 5 டைம் படிப்பதற்கு சமம். நீங்களே 5 time padikkaringana🤔

      Delete
    2. GP @ 5வது தடவையா?? சூப்பரு! பி.பி.வி. இஸ்பின் ஆப் "மார்கோ" வுக்கு ஒரு கதையே ரெடி ஆகியிருக்குமே...உங்க மனசுல!

      ஓவியர் & வசனகர்த்தா ரெடியா இருக்காக!

      படிக்க பார்க்க நாங்களும் ரெடி!

      Delete
    3. @ kumar salem

      நம்மை விட ஜாம்பவான்கள் உலவும் இடமிது.ஆர்வத்தோடு படிக்கும்போது சில விசயங்கள் அழகாய் புரிகிறது அவ்வளவே.

      @STV

      இந்நேரம் மார்கோவின் ஸ்பின் ஆஃப்க்கான ஸ்கெட்ச் உங்க மனசில உருவாகாம இருந்தாதான் ஆச்சரியம்.படிப்போம் வியப்போம் பாலிசியே என்னுடையது.

      Delete
    4. GP

      இதுக்குத் தான் பாலிசி பாலிசின்னு பேசுற நண்பரோட பழகிப் பாக்குறீங்களோ

      Delete
  46. @ kumar salem & all

    'பிஸ்டலுக்குப் பிரியா விடை' இரண்டுபாகங்கள் மட்டுமே இதுவரை படிச்சிருக்கேன்! மேற்கொண்டு படிக்க மனசு பூரா ஆசைதான்.. ஆனா முடியல! ஏன்னு தெரிஞ்சுக்க " இங்கே கிளிக்குங்க பாஸு "

    ReplyDelete
    Replies
    1. நம்ம மார்கோ "மாரு"கோ சோப் போட்டு குளிக்கிற அழக, உங்க பாப்பா பாத்தூடாம .....

      Delete
    2. குருநாயரே..😍😍😍😍😍😍

      Delete
    3. திருவள்ளுவரே...🌀🌀🌀

      Delete
    4. இதே அன்புத் தொல்லை தான் என் வீட்டிலேயும் சார்

      Delete
  47. ஹாஷ்யமான பதிவு!

    ReplyDelete
  48. பழி வாங்கும் பாவை!
    எத்தனை முறைதான் வாசிப்பது..?

    இம்முறையும் சலிக்கவில்லை..!
    😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete
  49. பி.பி.வி.

    நாயகியை மறுக்கவும் முடியவில்லை...

    வெறுக்கவும் முடியவில்லை..!

    ReplyDelete
  50. அண்டர்டேக்கர்..

    பிணத்தோடு பயணத்தில் சிக்சர் அடித்தவர்,
    இருளின் ராஜ்யத்தில் பவுண்டரி அடித்திருக்கிறார்..!

    ReplyDelete
  51. இன்று ஸ்மர்ப்ஸ் நாள்.

    ReplyDelete
  52. சேலத்தில் இருந்த வந்த பிறகு முதல் முதலில் படிக்க ஆரம்பித்தது மாக்ஸி சைஸ்

    1 மனதில் உறுதி வேண்டும் - இது நான் சமீபத்தில் அதாவது ஒரு 6 மாதத்திற்கு முன்பு படித்தது தான் என்பதால், வாங்குவதா வேண்டாமா என்று யோசித்த போது அந்த 50 ருபாய் discount யோசிக்கவிடாமல் வாங்க வைத்தது.

    வாவ்.. செம கிளாரிட்டி .. ஒரு UHD இல் படம் பார்த்த பீலிங். கதை பத்தி சொல்ல தேவை இல்லை. சிரிப்பு தோரணம். ஜாலி ஜம்பரையே லக்கி லுக் மேல் கோவம் கொள்ள வைக்கும் அளவுக்கு இருக்கிறது டாக்டரின் திறமை.

    2 பழி வாங்கும் பாவை - முதல் முறை படிக்கிறேன். வழக்கமான டெக்ஸ் கதை தான், பெரிதாக ஈர்க்கும் விஷயம் எதுவும் இல்லை.

    டெக்ஸை பொறுத்தவரை, ஒன்னு 10000 வாளா போல பட பட என வெடித்து தள்ளும், இல்லை என்றால் நவுத்து போன ரோல் கேப் போல புஸ்சென்று போய் விடும். இது ரெண்டாவது ரகம்.

    3 நித்தம் ஒரு யுத்தம் - செம செம செம.. அடி தூள், அட்ரா அட்ரா என்று ஸ்கோர் பண்ணி இருக்கிறது. விறு விறுப்பு பர பரப்பு என்று செம மாஸ் காட்டி இருக்கிறது. ஒரு ஹாலிவுட் படத்திற்கு ஸ்கிரிப்ட் ரெடி.

    4 பிஸ்டலுக்கு பிரியா விடை - இரண்டு அத்தியாயங்கள் தான் முடித்து இருக்கிறேன். இந்த வருடத்தின் டாப் 3 க்குள் இடம் பெற்று விட்டது என்று நினைக்கிறேன். கிரீன் மேனர் போல சித்திரங்கள் ஆனால் நகைச்சுவை இழைத்த ரொம்பவே சீரியஸ் கதை.

    என்ன மார்கோவை செவ்விந்திய கிழவன் பார்த்த அளவு கூட நாம் பார்க்க கொடுப்பினை இல்லை.. ஹி ஹி ஹீ

    ஈரோடு எக்ஸ்பிரஸ், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டது.

    ReplyDelete
  53. It must be the destiny that we the people are reading a comics whose central theme is about certain amendment of constitution of a country while our own country is being caught in the fire about abrogation of certain article of our own constitution.

    What a random coincidence..!!!

    ReplyDelete
    Replies
    1. Not only article sir. So many other things also related to us. That's y all of us can empathize with it. And it became a huge hit.

      Delete
  54. மனதில் உறுதி வேண்டும். படித்ததும் முதலில் தோன்றியது, எம்ஜிஆர் இதை படிச்சுட்டு தான் 'பல்லாண்டு வாழ்க' படம் எடுத்தாரோ?

    ReplyDelete
    Replies
    1. பல்லாண்டு வாழ்க படமே தோ ஆன்கேன் பாரா ஹாத் ங்குற ஹிந்திப் படத்தோட ரீமேக்தானே.!?

      வேணும்னா நாம இப்படி சொல்லிக்கலாம்..

      பல்லாண்டு வாழ்க படம் பாத்துட்டுதான் மனதில் உறுதி வேண்டும் கதையை எழுதியிருப்பாங்களோ..!? :-)

      Delete
    2. .அது கரெக்ட்டு.. அப்போ சாந்தாராம் அவர்கள் இதை படித்திருப்பாரோ?

      Delete
    3. எது முந்தையது என்பதே பதிலாகும்.

      Delete
    4. ஆனால் பல்லாண்டு வாழ்க சீனியாரிட்டீல கிடையாது

      Delete
  55. பாலச்சந்தரும் பிரமிளாவும் பிஸ்டலுக்கு பிரியா விடையும்

    வில்ஃரிட் லுபனோ.நன்றிகள் பல.


    அருமையான கதைக்கரு.கையாண்ட விதம் நறுக்.ஒரு கதாசிரியனால் எப்படி அசாத்திய பாவங்களை ,படிக்கும்ரசிகர்களின் சுபாவங்களில் புகுத்திட முடியும்.பி பி வி தான் பதில்.

    செல்வச் செழிப்பு என்ற பணமாயை பின்னால் அலைகழிக்கப்படும் பெண் மாயை.பெண்ணே ஒரு மாயா தானே.
    அலெக்சாண்டர் ,பைரன் ஹோகர்ட்,மொனல்லோ ,செவ்விந்தியன் ,டிம் என்று செல்லும் தாசித்தனம் மார்கோ படைப்பு.அன்பே பிரதானமாய் இறுதியூற்று பெருகும் போதும் சொல்லும் வசனம்-இளமை வாளிப்பும்,கவர்ச்சி சதைகளும்,ஆண்களும் பிழைக்க வழி என்றே முடிக்கிறாள். வேறு வழி ஏது பிரமிளா?. உலகம் தான் உனக்கு வேறு நல்வழி காட்டுமா....அல்லது உன்னால்தான் அப்படி மாறிட முடியுமா...

    வக்கீல் பைரன்.நற்சான்று தரமுடியா பிஸ்டலில்லா லக்கிலூக்.வரலாற்றை மாற்றி எழுத தன்முனைப்பு மட்டுமே போதும் என்ற மனோதிடம்.பணம் இரண்டாம் பட்சம் நியாயவாதியிடம்.

    ஹோகர்ட்.சபலம் தட்டினால் இழப்பு உறுதி.கணநேர சுகத்திற்கு ஆவணத்தொகுப்பை இழந்தபிறகும், மீண்டும் சிக்கிய பெண் மாய்மாலத்திடம் தோற்கும் உடல்திடம்.உப்பைத்தின்றால் தண்ணீர் குடிக்கத் தான் வேண்டும்.

    மொனல்லோ ரகசியம்.இவனிடம் கொள்ளையில் சிக்கிய ரகசிய ஆவணத்தினை கைப்பற்றிட, திரும்ப திரும்ப அவ்வழியே பிரயாணம் செய்து, அவன்பார்வையில் விழுந்து, அவனை படுக்கையில் வீழ்த்தி, அவனையும் தலை குப்புற வீழ்த்தி,அதை அடையும் வேளை, கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போகிறது.

    சுரங்கம் தோண்டிய மண்ணில் பானை செய்து, அதை,மடக்கொள்ளையர் சுடக் கொடுக்கும் பானை பிடித்த பாக்கியவான்.ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்கும் கிழக்கோன்.
    டம்மி டிம்முக்கு டிம்பிள் கபாடியா கேக்குதாக்கும்.கதையின் கிரியா ஊக்கி.
    லூசி.கதையை தோள்மேல் சுமக்கும் சரியான தேர்வு.மார்கோவை மாற்றும் பிடிவாதி.
    கறுப்பின ஜோடி , சிஸ்டர் கதையின் உயிரோட்டம்.
    ஆயினும் இத்துணை பாத்திரப் படைப்புகளையும் உயிர்ப்பிக்கும் அந்த பிராணன் கதையே.வாசி இல்லாவிடின் சுவாசிப்பேது. வன்முறையும் தர்மத்திடம் தோற்றிடத்தான் வேண்டும்.
    ஒரே வரி.
    ஆரம்பித்தவர்களே கதையை முடித்தும் வைக்கிறார்கள்.

    ஆனாலும் கதை மட்டும் நம்மைத் தொடர்ந்து மனபாரத்தை ஏற்றி நம்மை பிஸ்டலில்லாமல் துளைத்து துவழச்செய்து விடும் அசாத்தியத்தை உணர்கிறோம்.

    உணர்வுகளின் ஜீவிதம் பி பி வ.

    J.


    ReplyDelete
    Replies
    1. அந்த பாலச்சந்தர் தாக்கம் பிபிவி

      Delete
    2. நாயகர்கள் அருமையாக ஆக்கி சமைத்தாலும் , இசை இனித்தாலும், ஒளிப்பதிவு அசத்தினாலும், எடிட்டிங் கைத்தட்டல் பெற்றாலும்,கதையும் -பாலச்சந்தருமே பின்புலம்.

      Delete
    3. அரங்கேற்றம் படத்தையா சொல்றிங்க?

      Delete
    4. ஆமாம் பிரமிளா உயிரைக் குடுத்து நடித்திருந்தாலும் .....மனதில் நிற்பது ?

      Delete
    5. அழகையே ஆடையாக உடுத்திக் கொண்டு விட்டதால் கதை அம்மணமாக நிற்பது கண்ணில் தென்படவில்லை.ஆக்கியோனுக்கும்,ஊக்கியோனுக்கும் எந்நன்றிகள் சமர்ப்பணம்.

      Delete
    6. அருமையான விமர்சனம்

      Delete
    7. சூப்பர் சார்!!

      Delete
    8. அருமையான விமர்சனம் J அண்ணா...

      Delete
    9. இந்த முறை அனைவரும் இந்த மாத இதழ்களை பற்றி விமர்சிக்கும் விதத்தை (நான்அல்ல ) பார்த்தாலே தெரிந்து விடும் இந்த மாத இதழ்களின் அதிரடி வெற்றி..


      வாழ்த்துக்கள் ஆசிரியர் சார்..

      Delete
    10. J சார் அருமையான பதிவு. இந்த கதை பிஸ்டல் இல்லாமலே நம்மை துளைத்து விட்டது . No doubt

      Delete
    11. அனைவருக்கும் நன்றி.

      நீங்களும் உங்கள் கருத்தினை பகிருங்கள்.

      விமர்சனங்கள் துளைக்கட்டும்.

      Delete
  56. பிஸ்டலுக்கு பிரியாவிடை...



    நான்கு பாக கதைகளில் முதல் பாகம் வெகுவாக கவனத்தை ஈர்க்கிறது.ஒவ்வொரு காட்சிகளையும் அத்தனை நேர்த்தியாக ,ஒருவித புத்துணர்ச்சியோடு கதை நகர்வது சிறந்த வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது.
    தொடர்ந்து வரும் பாகங்களில் கதை கருவை நிறுவ கதாசிரியர் முயற்சிக்கும் போது ஒட்டு மொத்த கதையுனுடைய வீரியமும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.இப்படியெல்லாம் கதை சொல்ல முடிகிறது;காமிக்ஸ்சில்.
    கதை நெடுகிலும் ஏதோவொரு கதாபாத்திரத்துடன் தொடர்பில் இருக்க வேண்டிய சூழல் கதையின் நாயகிக்கு.நெஞ்சுப் பகுதியை திறந்து காட்டி வலைவிரிக்க வேண்டிய பரிதாபமான நிலையும் உருவாகிறது.
    துளி அளவு பிசகினாலும் கதை மொத்தமும் ஆபாசமாக;மூன்றாந்தர படைப்பாக உருமாறி விடும் ஆபத்தும் உள்ளது.ஓவியங்களில் துள்ளியத்தை காட்ட முயற்சிக்காமல் கார்ட்டூன் பாணியில் அமைத்து பெரும் இக்கட்டிலிருந்து கரை சேர்த்துள்ளனர்.கத்தி மேல் பயணிக்கும் சவால்;அதை படைப்பாளிகள் கையாண்டிருக்கும் விதம் அசரடிக்கிறது.
    கோணல் சித்திரங்களாக இருந்தாலும் நேர்த்தியாக வரைய வேண்டிய காட்சிகளில் ஓவியங்கள் தனித்துவத்துடன் அமைந்துள்ளது.
    தொலை நோக்கியில்‌ பார்க்கும் காட்சிகள்; கட்டிடங்களின் கலைநயத்தை பிரதிபலிப்பது; பக்கம் 19 ல் பைரனின் முகம் மதுக் கோப்பைக்கு பின்புறமாக உள்ளது போல் அமைக்கப்பட்டது.பக்கம் 96ல் பழக் கூடையில் இருந்து ஆப்பிள் தவறி ஆற்று நீருக்குள் மிதப்பதும்;அதை மீன்கள் மொய்பதுமாக இருப்பது.இதுபோல் கதை நெடுகிலும் படைப்பாளிகளின் கலையுணர்வை சுட்டிக்காட்ட இயலும்.


    அரசியல் சாசனத்தில் வெகுவாக தாக்கத்தை ஏற்படுத்தும் ஆவணங்கள் தன் தொழில் சேவையை நாடிவரும் வாடிக்கையாளர் ஒருவர் மூலம் கிடைக்கப்பெறுகிறது.
    அதைவைத்து புகழ் ஈட்ட வேண்டும் என்று நினைக்கும் கணவன்.பணம் ஈட்ட ஆசைப்படும் மனைவி.கதையில் இழையோடும் கரு.தன்னுடைய வனப்பான அழகு மூலம் ஆவணங்களுக்கு உரியவரை வசியம் செய்து வைப்பதில் மார்க்கோவும் வெற்றி பெறுகிறார். தன்னுடைய கவர்ச்சியான பேச்சு சாதுர்யம் மூலம் பைரனும் ஹேஸ்கர்ட்டை ஆளுமை செய்கிறான்.
    ஒலகத்திலேயே அதிக மயக்கம் தருவதும்,போதை ஏற்படுத்துவதும் புகழ் மட்டுமே.நாலு அல்லக்கைகளை வைத்து கொண்டு,ஜால்ரா கோஷ்டிகளோடு தலை சாய்ந்து கண்மூடிக் கிடக்கும் சுக அனுபவத்தை பழக்கப்படுத்தி கொண்டால் அந்த மயக்கம் அலாதியானது.
    க்வான்டின் ஜெரேனிமஸ் பிறரை துன்புறுத்தி அதில் இன்பம் காணும் மன நிலையில் இருப்பது போல்;இத்தகைய மனோபாவமும் பல விபரீதங்களை உருவாக்கிவிடும் ஆபத்துக்கள் அதிகம்.
    பைரன் புகழின் உச்சியை அடைய பகீரத முயற்சிகளை மேற்கொள்கிறான்.
    ஆனால் லூசி என்ற பிறப்பால் செவ்விந்திய இனத்தை சேர்ந்த பெண் ,படிப்பறிவு இல்லாவிட்டாலும் தன்னுடைய மாண்புமிகு செய்கையின் மூலம் மிக எளிதாக அதை அடைந்தும் விடுகிறாள்.
    செல்வத்தின் மீதான ஈர்ப்பு ஏதாவது துயரமான ஓரிடத்தில் ஓய்ந்துவிடும்.ஆனால் புகழை தேடி ஓட முற்பட்டால் அது மரணம் வரையிலும் நிறைவு காணாது.அது இயல்பாக தங்களுடைய செய்கை மூலம் தானாக அமைவது.
    அனைத்து குண சித்திரங்களுக்கும் போதுமான வடிவமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். தனி ஒருத்தியால் சாதிக்க இயலாது,கூட்டறிவோடு குழுவாக இயங்கினால் மட்டுமே இலக்கை எட்ட இயலும் என்பதை உணர்ந்து ஆவணங்களை ஜாக்கிடம் ஒப்படைத்து விட்டு லூசியை ஏற்றுக் கொள்ளும் மார்க்கோவின் பெண்மை தான் சிறப்பான பாத்திரப் படைப்பு.

    அனைத்து விதத்திலும் ஆகச் சிறந்த படைப்பு. பிஸ்டலுக்கு பிரியாவிடை பேசும் பொருள் வலிமையானது.மேலோட்டமாக வாசித்தால் கடல் நீரை வாளியில் அள்ளி உடல் மீது நனைத்து கொண்டு கடலில் குளித்ததாக கூறுவது போல் அமைந்து விடும்.


    மேலோட்டமாக அணுகினால் காமிக்ஸ் சில் ஆபாசத்தை விதைப்பதாக சித்தரிக்கவும் இயலும். இதை வெளியிடுவதற்கும் அசாத்திய துணிச்சல் தேவை.தன் மீதும் தனிப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்படும் என்பதை உணர்ந்தும் இதை செயல்படுத்திய ஆசிரியருக்கு நன்றி.

    ***** 🌸🌸🌸 *****



    ReplyDelete
    Replies
    1. அருமை நண்பரே!

      Delete
    2. Sri Ram @ அட்டகாசமாக எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள்

      Delete
    3. அருமையான விமர்சனம் Sri Ram...

      Delete
    4. செம மாஸான விமர்சனம் நண்பரே...:-)

      Delete
    5. // மேலோட்டமாக அணுகினால் காமிக்ஸ் சில் ஆபாசத்தை விதைப்பதாக சித்தரிக்கவும் இயலும். இதை வெளியிடுவதற்கும் அசாத்திய துணிச்சல் தேவை.தன் மீதும் தனிப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்படும் என்பதை உணர்ந்தும் இதை செயல்படுத்திய ஆசிரியருக்கு நன்றி. // செம்ம ஸ்ரீ சூப்பர் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். அந்த கடல் நீர் உதாரணம் டாப்

      Delete
  57. பிஸ்டலுக்கு பிரியாவிடை...




    ஒரு வரலாற்று பிழையை ஏற்படுத்தியதற்காக மன்னிக்க வேண்டும்.




    கதையில் வெகுவாக கவனிக்க வேண்டியது இதன் மொழி பெயர்ப்பு.
    பதம் தவறினால் பதார்த்தமும் தவறிவிடும் என்பதை உணர்ந்து மிக கவனமாக வார்த்தைகளை வடித்துள்ளனர்.
    அழுத்தமாக வாசித்தால் கதை சீரியஸாக அமைவதும்,இலகுவாக வாசித்தால் அதில் நகைச்சுவை இழையோடுவதும் அற்புதம்.இதில் பங்களிப்பு செய்த நல்ல உள்ளங்களுக்கு அன்பு வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. மொழி பெயர்ப்பு அட்டகாசம். அந்த கதையின் கருவும் கெடாமல் நமக்கு தகுந்த முறையில் செய்யப்பட்டது. டாப் கிளாஸ்

      Delete
  58. Sri ram அறுமை சார்

    ReplyDelete
  59. பழி வாங்கும் பாவை & தலைமுறை எதிரி இவ்விரணடும் இவ்வருடத்தின் மிகச்சிறந்த மறு பதிப்புகள்

    ReplyDelete
  60. // இதுவே சொர்க்கம் என்ற நினைப்பிலிருந்தால் எங்களுக்கும் முன்னே ஒரு சிறு கேபினில் நான்கே சீட்கள் மட்டுமிருக்க - அது இன்னமும் பெரும் அப்பாடக்கர் சீமான்கள் பயணிக்கும் First Class என்பது புரிந்தது !! அவர்களுக்கெல்லாம் வீட்டிலிருந்தே கட்டில், மெத்தையெல்லாம் கொண்டு வந்து விரித்து ; அப்பாலிக்கா குளிக்க சூடு தண்ணீரெல்லாம் போட்டுத் தருவார்களோ ? என்று கூட நினைக்கத் தோன்றியது எனக்கு ! //
    உங்கள் எழுத்து நடை மற்றும் கற்பனை திறன் வியக்க வைத்து கொண்டு இருக்கிறது சார். நீங்கள் ஏதாவது ஒரு தொடர் கதையோ அல்லது பயண கதையோ இல்லை சிங்கத்தின் சிறு வயதில் மீண்டும் தொடரவோ செய்ய வேண்டும். இது ஒட்டு மொத்த வாசகர்களின் சார்பாக உங்களுக்கு வைக்கும் கோரிக்கை.

    ReplyDelete
    Replies
    1. சார்...எழுத்தை ஜாலியாய் அணுகுவதற்கும் , ஜோலியாய் அணுகுவதற்கும் நிறையவே வேறுபாடு உண்டல்லவா ? நாமெல்லாம் முதல் ரகத்துக்கு மட்டுமே சரிப்படுவோம் !! So அதையே தொடர்வோமே ?

      Delete
  61. நான் பின் தொடர்கிறேன்

    ReplyDelete