Powered By Blogger

Sunday, July 01, 2018

குட்டிக்கரணங்களின் கதை ..!

நண்பர்களே,

வணக்கம். "ஆங்...துபாய் போனேனா ? அங்கே கமர்கட்டு வாங்கினேனா ?" என்றெல்லாம் இவ்வாரத்துப் பதிவு நீண்டு செல்லாது ! காரணங்கள் 2 !! சகோதரியின் மைந்தனுக்குத் திருமண ஏற்பாடுகள் என்பதால் சனி மதியமே ஆபீசுக்கு டாட்டா காட்டிவிட்டு வெளியூர் பயணம் ! So பதிவை டைப்பிடிக்க அமரும் போதே நள்ளிரவை தாண்டி விட்டது ! காரணம் # 2 : ஜூலையின் இதழ்கள் !! ஆவி பறக்க அவை உங்கள் கரங்களில் நிலைகொண்டிருக்கும் போது - கவனத்தை வேறெங்கும் திசைதிருப்பலாகாதில்லயா ? So இது நான் லொட லொடக்கும் வேளையல்ல ; இதழ்களை அலசியவாறே வண்டியை இட்டுச் செல்லும் பொறுப்பு உங்கள் தரப்பில் !!

ஏற்கனவே சொன்ன விஷயம் தான் ; மறுக்கா ஒலிபரப்பு செய்கிறேன் ! என்னதான் அட்டவணையைக் கண்ணும் கருத்துமாய்த் திட்டமிட்டாலுமே, சில டப்ஸாக்கள் உள்ளே புகுவதும் நிகழ்கிறது ; எதிர்பாரா ஹிட்கள் தாமாகவே ஸ்லாட்டில் வந்து அமர்வதும் நிகழ்கிறது ! இம்மாதத்து 4 இதழ்களின் கூட்டணி பின்சொன்ன தற்செயல் நிகழ்வே !! ஒன்றுக்கொன்று சளைக்கா இதழ்களாய் நான்கும் அமைந்து போனது பெரும் தேவன் மனிடோவின் மகிமையே அன்றி நாம் சண்டியர்களாய் உருமாறி வூடு கட்டியதன் பலனல்ல என்பேன் ! Anyways இந்த 4 இதழ் காம்போவின் பின்னணியில் பணியாற்றியது சுவாரஸ்யமான அனுபவமாய் அமைந்தது என்பதால், அது பற்றி ஜாலியாய் பேச முனைவதே இவ்வாரத்துப் பதிவின் முதுகெலும்பு !! 

Starting off with  ஜம்போ : "இங்கே சகலமும் சும்மா 'ஜிவ்'வென்று சறுக்கிக் கொண்டு ஓடியது ; குழந்தைப் புள்ளை விளையாட்டாய் அமைந்தது !" - என்றெல்லாம் நான் பீலா விட்டால்  ஒரு கோவில் யானையாவது என்னை மண்டையிலேயே குட்டி வைக்கத் தவறாது ! ஜம்போவின் ஒவ்வொரு எட்டுமே ஏகமாய் பெண்டைக் கழற்றிய சமாச்சாரம் ! "தனியாகவொரு லேபில் ; தனியாகவொரு கதைவரிசை" என்பதற்கு என்ன அவசியம் ? என்பதை. சாவகாசமாய் "சிங்கத்தின் பொக்கை வாய் வயதினிலே" எழுதும் சமயம் எப்படியேனும் தட்டுத் தடுமாறி ஞாபகப்படுத்தி எழுதிவிடுவேன் என்பதால் அதனுள் இப்போதைக்கு நுழையப் போவதில்லை ! "கதைத் தேர்வுகள்" என்று ஆரம்பித்த போது - பெரிதாய் நான் ரோசனை பண்ணிச் சாதித்தேன் என்பதை விட, சில பல ஆல்பங்கள் மொந்தென்று என் சறுக்குமண்டையில் தாமாகவே வந்து விழுந்தன - என்று சொல்வதே பொருத்தமாயிருக்கும் ! இடையிடையே வாங்கிய கதைகள் ; எப்பெப்போதோ துவக்கிய பேச்சு வார்த்தைகள், எப்பெப்போதோ நிறைவுற்றதன் பலனாய் வாங்க அவசியப்பட்ட கதைகள் என்று ஓசையின்றி கையில் ஒரு சிறு கத்தைக் கதைகள் துயின்று கொண்டிருந்தன ! ஜெரெமியா ; ஜேம்ஸ் பாண்ட் ; ஹெர்லாக் ஷோம்ஸ் ; Fleetway (சிறு) கதைகள் - அந்தக் கத்தையின் பிரதிநிதிகள் ! So இவற்றை கொண்டே அட்டவணையின் 90 சதவிகிதத்தை மங்களம் பாட சாத்தியமாகியிருக்க, ரங்கோலியின் துவக்கப் புள்ளி மட்டுமே எனக்கு அவசியப்பட்டது ! அந்தப் புள்ளி நமது தற்போதைய நடைமுறையின் ஒரு அங்கமாய் இல்லாதிருந்தால் தேவலையே  என்றும் தோன்றியது ; அதே சமயம் அதுவொரு  விஷப்பரீட்சையாகவும் இருந்திடக் கூடாதே என்ற முன்ஜாக்கிரதையும் நிறையவே இருந்தது ! அப்போது நினைவுக்கு வந்தவர் தான் ஜுனியர் 'தல' ! 

உள்ளதைச் சொல்வதானால் - 2018-ன் அட்டவணையில் இவரை நுழைத்திடத் தீர்மானித்திருந்தேன்  - "சிங்கத்தின் சிறுவயதில்" என்ற தலைப்போடு ! 😄😄 ஆனால் "டெக்ஸ் ஓவர்டோஸ்" என்ற பேச்சு வழக்கம் போல் லேசாய்த் தலைதூக்கிட, எனது ஒரிஜினல் தேர்வுகளிலிருந்து  2 டெக்ஸ் இதழ்களுக்கு கல்தா கொடுக்கத் தீர்மானித்தேன் ! அவற்றுள் ஒன்று தான் Young TEX ! இதை ஏதேனும் ஒரு ஸ்பெஷல் தருணத்துக்கென வைத்துக் கொள்ளலாமென்று தோன்றிட, 2018-ன் லயன் அட்டவணையின் இழப்பு - ஜம்போவின் லாபமாகிப் போனது ! ஒரு proven performer ; வெற்றிக்கு உத்திரவாதமான நாயகர் ; அதே சமயம் இந்த Young டெக்ஸ் அவதார் நமக்கு அத்தனை ஆழமாய்ப் பரிச்சயமற்ற ஒன்று எனும் போது, ஜம்போவின் ஆரம்பப் புள்ளியாகிட தகுதிகள் நிரம்பி வழிவதாய் எனக்குப்பட்டது ! தலைப்பை அப்படியே அமைத்தால் போராட்டக் குழுவை இன்னும் சித்தே உசுப்பிவிட்டது போலாகிடும் என்ற பயமும், பீதியும், என்னை அங்குலம், அங்குலமாய் ஆட்கொண்டதால்  - "காற்றுக்கு ஏது வேலி ?" என்பதில் freeze ஆனேன் ! கதைத் தேர்வும், தலைப்பும் ஒருமாதிரி சடுதியில் set ஆகிவிட்ட போதிலும் - தொடர்ந்த சகலமுமே மல்லுக்கட்டும் அனுபவங்களாகவே அமைந்தன ! 

ஒரு இதழின் அட்டைப்படம் திருப்திகரமாக அமைந்தாலே,  எனக்கு  அந்த இதழ் மீது positive vibes ஒடத் துவங்கிடுவது வழக்கம் ! அந்த நடைமுறையில் நம் ஓவியரை 2 டிசைன்கள் போட்டுக் கொணரும்படிச் சொல்ல, சோதனையாய் இரண்டுமே, செம மொக்கையாக வந்து சேர்ந்தன ! அவருக்கும் வயது 65-ஐக் கடந்துவிட்டுள்ள நிலையில், மூப்பின் தாக்கம் இப்போதெல்லாம்   தெரியத் துவங்குகிறது ! So முதல்முயற்சியிலேயே சரியாய் அமையாது போனால் - தொடரும் திருத்த முயற்சிகள் ரணகளமாகிப் போகின்றன ! இம்முறையும் அதுவே நிகழ்ந்தது ! டெக்சின் முகத்திலும், கழுத்தின் ஆங்கிளிலும் மாற்றங்கள் செய்ய முற்பட, கழுத்து சுளுக்கிக் கொண்ட நாட்களில் நாமெல்லாம் உடம்போடு திரும்பிப் பார்ப்போமே - அதைப் போல 'தல'யின் தலை தென்பட்டது ! மாற்றங்கள் தொடரத் தொடர, பரோட்டா சூரிக்கு கௌபாய் தொப்பி மாட்டியது போலொரு உருவம் பிரசன்னமானது தான் மிச்சம் ! சரி, இது வேலைக்கு ஆகாதென்று அதை ஓரம் கட்டிவிட்டு, புதிதாய் இன்னொரு டிசைன் போட்டுவரச் செய்தேன்! இம்முறை இளம் தல ஓ.கே.ஆகிட, பின்னணியில் எனக்குத் திருப்தியே இல்லை ! சரி, அதை நம் டிசைனரைக் கொண்டு மாற்றிக் கொள்ளலாம் என்றபடிக்கு டிசைனை ஸ்கேன் செய்து பொன்னனிடம் ஒப்படைத்தோம் ! வழக்கமாய் முதல் டிசைனிலோ, இரண்டாம் டிசைனிலோ, கோழியைக் கூடையைப் போட்டுக் கவிழ்ப்பது போல் ஒரே அமுக்காய் அமுக்கிடும் பொன்னன் இம்முறை சொதப்பிக் கொண்டே போக, எனக்கோ மண்டையெல்லாம் காய்ந்து போனது ! "அட...உள்ளேயே நாமும் முயற்சிப்போமே !" என்றபடிக்கு இன்டர்நெட்டில் சிக்கிய reference களையெல்லாம் திரட்டிக் கொண்டு நமது DTP கோகிலாவைக் கொலையாய்க் கொல்லத் துவங்கினேன் ! கலைநயம் என்பதெல்லாமே " வீசம்படி என்ன விலை ?" என்று கேட்கும் பார்ட்டி நான் ! பள்ளிக்கூடத்தில் டிராயிங் க்ளாசில் பட்டாம்பூச்சி வரைந்தால், வவ்வால் ஆஜராவதும் ; கார் வரைந்தால் கட்டை வண்டி ஆஜராவதும், எனக்கு மட்டுமே தெரிந்த சூட்சமங்கள் ! So எனது மேற்பார்வையில் டிசைன் பண்ணினால், அட்டைப்படம் விளங்கின மாதிரித் தான் !! என்பது ஓரிரு நாட்களின் கொடூர அனுபவங்களுக்கு  அப்புறமாய்ப் புலனாகிட, மறுக்கா பொன்னனைக் குடலை உருவத் துவங்கினோம் ! Sci-fi ரகக் கதைகளுக்கான டிசைன்கள் போல் ஏதேதோ  தொடர்ந்தன ! ஒருகட்டத்தில் மண்டையெல்லாம் காய்ந்து போக, டைனமைட் ஸ்பெஷலுக்கென ரிசர்வ் செய்து வைத்திருக்கும் டிசைனையே எடுத்துச் சோமாறிடுவோமா ? என்று புத்தி பயணிக்கத் துவங்கியது ! இன்னும் ஒரேயொரு மொக்கையான கலர் பேக்கிரவுண்ட் மட்டும் தொடர்ந்திருப்பின், டைனமைட் - ஜம்போவாகிப் போயிருக்கும் ! But அந்த சிகப்பு + grey  கலரிங்கில் ஒருமாதிரியாக 'பளிச்' டிசைன் ஒன்று கிட்டிட, புது பிரஸ்டிஜ் பிரெஷர் குக்கருக்குப் போட்டியாய் ஒரு பெரும் பெருமூச்சை விட்டு வைத்தேன் ! 

அட்டைப்படம் ரெடி ; அப்புறம் அந்த லோகோ ?! நண்பர் அனுப்பியிருந்த அந்த "யானைக்குள் யானை"யை மெருகேற்ற முயன்றால் எதுவும் சுகப்படவில்லை ! நண்பர் (சேலம்) ஜெகத் நிறைய டிஸைன்களாய்ப் போட்டுத் தாக்கியிருக்க, நம் மனதில் fix ஆகிவிட்டிருந்த அந்த யானை+யானையை மெருகூட்ட அவருக்கு அனுப்பி வைத்தேன் ! அவரிடமிருந்து கிட்டிய சில மாதிரிகளை மேற்கொண்டும் நோண்டி ஒரு மாதிரியாய் "இதுதான் லோகோ !" என்று தீர்மானித்தேன் ! நடுவில் உள்ள யானைகளின் வர்ணங்கள் மட்டும், ஒவ்வொரு அட்டைப்படத்தின் கலரிங் தீமுக்கும் ஏற்ப மாற்றிக் கொள்வது என்றும் தீர்மானித்தேன் ! So background சிகப்பெனில் யானைகளும் சிகப்பிலிருக்கும்; ப்ளூ எனில் அவையும் நீலத்தில்குளித்திருக்கும் !

சரி, கஷ்டமான மேட்டர்கள் ஓய்ந்தன ; கதைக்குள் நுழைறோம் ; டெக்ஸுக்கு மட்டும் பன்ச் வரிகள் எழுதறோம் ; பிரின்டிங் போறோம் ! என்றபடிக்கே புறப்பட்டவனுக்கு, மண்டை காய்ந்தே போனது ! ரொம்பவே out of sync ராகத்தில் வசனங்கள் கதைநெடுகிலும் முகாரி பாடுவது போல் பட - தொடர்ந்த 10 நாட்கள், திருத்தியெழுதும்  ராக்கூத்துத் தான் ! வயது முதிரா ஒரு போக்கிரி டெக்ஸ் ; வன்மேற்கில் பெரிதாய் சாதித்திருக்கா பச்சா .... இவனே இந்த ஆல்பத்தின் மத்திய உருவம் எனும் போது, வசனங்களில் அதீத மரியாதைகளுக்கோ ; கதை மாந்தர்கள் - டெக்சுக்கோசரம் :"லாலே...லா லல லா லா" என்று கோரஸ் பாடுவதும் ரொம்பவே நெருடியது தான் சிக்கலே ! வசனங்களில் லேசாய் துடுக்குத்தனமும், ஒருவரையொருவர் பெயர் சொல்லிக் கூப்பிடும் casualness-ம் புகுத்திட முயற்சித்தேன் ! பாதித் தூக்கத்தில் பணி செய்த அந்தப் 10 நாட்களில் முழுசுமாய் சாதித்த நம்பிக்கையெல்லாம் எழவில்லை எனக்கு ; ஆனால் துவக்கத்து நெருடல் மட்டுப்பட்டிருந்தது போல் தோன்றிட - அச்சுக்குச் சென்றோம் ! 

தயாரிப்பில் richness தெரிந்திட வேண்டுமென்பது மண்டைக்குள் குடைய - இந்த வெளிர் மஞ்சள் நிறத் தாளின் விலைகளைக் கேட்டுவிட்டேன் ! நம்மவர்கள் விலையை வந்து சொல்ல, ரெண்டு நாட்களுக்கு ஜெலுசில் மாத்திரைகளை கடலைமிட்டாய் போல் லபக் லபக்கென்று தின்று வைத்தேன் ! ஓரு மாதிரியாய் நான் என்னோடே சமரசம் செய்து கொண்டு, அந்த பேப்பரையே வாங்கிடுவோம் எனத் தீர்மானித்த போது "ஹையோ...ஹையோ..."என்று வடிவேல் மாடுலேஷனில் பேப்பர் ஸ்டார்க்காரர்கள் சிரித்தது போலிருந்தது எனக்கு - simply becos நான் யோசித்துக் கொண்டிருந்த நாட்களுக்குள் மில்லில் டன்னுக்கு ஆயிரம் ரூபாய் விலையேற்றம் செய்திருந்தார்கள் ! மறுக்கா ஒரு அட்டை ஜெலுசில் ஜீரணம் ஆனது தான் மிச்சம் ; "ச்சை...எனக்கு செக் எழுதவே புடிக்காது !!: என்றபடிக்கே பேப்பரை வாங்கினோம் !

ஜம்போவில் nothing but காமிக்ஸ் என்று முன்னமே  தீர்மானித்திருந்ததால் - அந்தக் குட்டியானதொரு அறிமுகத்தை மட்டும் எங்கே நுழைப்பது என்று யோசித்த சமயம் தான் முன்னட்டை & பின்னட்டையில் flaps பற்றிய யோசனை உதித்தது ! அந்த நிலையிலுமே இவை பற்றாது - "I want more emotions " என்று தோன்றியது ! அப்புறம் தான் அந்த மெல்லிய சொர சொர feel கொண்ட அட்டைக்கெனத் திட்டமிட்டோம் !  ஒரு வழியாய் எல்லாம் முடிந்து பைண்டிங்குக்கு புக்குகள் கிளம்பிட, மாமூலாய் இது போன்ற பணிகளுக்கு நண்பர் பூசைப்பாண்டி இரண்டே நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்வதில்லை என்ற நம்பிக்கையில் திங்கட்கிழமை despatch என்று பந்தாவாய்ப் போட்டு வைத்தேன் பதிவில் ! ஆனால் இறுதி பணியான சாட்டிங் துவக்கிய சமயம் பைண்டிங்கில் உள்ள கட்டிங் மிஷினின் முக்கிய பாகம் பணாலாகிப் போக, அதனை சரி செய்ய கோவைக்குத் தூக்கிக் கொண்டு புறப்பட்டார்கள் ! வழக்கமாய் இது போன்ற வேலைகள் கோவையில் ஒரே நாளில் முடிந்து விடுவது வழக்கம் ; ஆனால் இப்போதெல்லாம் அங்குள்ள எஞ்சினியரிங் சிறுநிறுவனங்கள் பெரும்பாலும் சிரமங்களில் உழன்று வர , ஒற்றை நாளின் வேலையை 4 நாட்களுக்கு ஜவ்வாய் இழுத்து விட்டார்கள் ! பைண்டிங் நண்பரோ கையைப் பிசைந்து கொண்டு முன்னிற்க - அவரைக் கடிவதில் லாபமிருப்பதாய்த் தோன்றவில்லை எனக்கு ! கடந்த 6 வருடங்களில் இது போன்றதொரு தாமதம் நிகழ்ந்ததாய் நினைவேயில்லை !  ஒரு மாதிரியாய் மிஷின் சரி செய்யப்பட்டு புக்குகள் வெட்டப்பட்டு, நம்மிடம் அவை வந்து சேர்ந்த போதே அந்த  வாரத்தின் பெரும் பகுதி ஓடிவிட்டிருந்தது ! So இன்னும் கொஞ்சமே கொஞ்சமாய்ப் பொறுத்தால் ஒட்டு மொத்தமாய் despatch சாத்தியமாகிடுமே என்று தீர்மானித்து, அதுக்கோசரம் இங்கே நண்பர்களிடம் ஒரு மண்டகப்படியை வாங்கிக் கட்டிக்கொண்ட கையோடு, அவசரம் அவசரமாய் சகலத்தையும் ரெடி பண்ணி அனுப்பியும் விட்டோம் ! 

இப்போது, இதழ்கள் உங்கள் கைகளில் .....and ஜம்போ சார்ந்த துவக்க அபிப்பிராயங்கள் "பிரமாதம் !" என்ற ரீதியில் இருப்பதைப் பார்த்த பின்பு தான் லேசாய் ஜீவன் திரும்புகிறது கூட்டுக்கு !! "தலயை நம்பினோர் - கைவிடப்படார் !" என்பது இன்னொரு தபா மெய்யாகியிருப்பதில் நாங்கள் ஹேப்பி அண்ணாச்சி ! தொடரும் நாட்களில் ஜம்போ இதழ்  # 1 தொடர் பாராட்டுக்களை ஈட்டினால் - இந்தக் குட்டிக்கரணங்களின் கதை - ஜாலியான நினைவுகளின் அச்சாரமாகிப் போய் விடும் ! Fingers crossed !! 

எதை எழுதினாலும் ராமாயண நீளத்துக்கு அது ஓடுவது வரமா ? சாபமா ? என்று தெரியா நிலையில் - "குட்டியான" இந்தப் பதிவு - குட்டி போட்டுக் கொண்டே செல்வதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டுக் கிளம்புகிறேன் guys ! பாக்கி இதழ்கள் பற்றி அடுத்த பதிவில் ஜவ்விழுக்கிறேன் ! இப்போதைக்கு adios ! 

In the meantime, ஜூலை விமர்சனங்கள் தொடரட்டுமே - ப்ளீஸ் ? Bye all ! Have a lovely weekend !!

P.S : கீழேயுள்ள இந்த டெக்ஸ் படத்தைப் பாருங்களேன்..? எவ்விதமுள்ளது ? இந்தப் படம் பற்றியொரு துணுக்குச் செய்தியுள்ளது - அடுத்த பதிவில் ! 

304 comments:

  1. Dinamite special அட்டைப்படம். சரிதானே? சூப்பர்.

    ReplyDelete
  2. Dinamite special அட்டைப்படம். சரிதானே? சூப்பர்.

    ReplyDelete
  3. டெக்ஸ் படம் மிகவும் நன்றாக உள்ளது.இதையே டெக்ஸ் 70க்குப் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து.

    ReplyDelete
  4. சார், நன்றி, வாழ்த்துகள்.உங்கள் ஜம்போ டீமின் உழைப்பு வீண் போகவில்லை.
    ஜம்போ டெக்ஸ் காலத்தால் அழியாத காமிக்ஸ் காவியமாக எங்கள் நெஞ்சில் ஆழ பதிந்து விட்டது.

    ReplyDelete
  5. //கீழேயுள்ள இந்த டெக்ஸ் படத்தைப் பாருங்களேன்..? எவ்விதமுள்ளது ? இந்தப் படம் பற்றியொரு துணுக்குச் செய்தியுள்ளது - அடுத்த பதிவில்//

    டெக்ஸ் பற்றிய செய்திகள் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு இன்ப செய்தியே!
    இது மினி டெக்ஸ் அட்டை படம்.?!

    ReplyDelete
  6. P.S : கீழேயுள்ள இந்த டெக்ஸ் படத்தைப் பாருங்களேன்..? எவ்விதமுள்ளது ? இந்தப் படம் பற்றியொரு துணுக்குச் செய்தியுள்ளது - அடுத்த பதிவில் !


    ########


    செமயாய் உள்ளது சார் கண்டிப்பாக ஒரு இதழுக்கு இந்த ஓவியத்தை அட்டைப்படமாக கொண்டு வாருங்கள் சார்..

    ReplyDelete
  7. சிங்கத்தின் பொக்கை வாய் வயதினிலே" எழுதும் சமயம் எப்படியேனும் தட்டுத் தடுமாறி ஞாபகப்படுத்தி எழுதிவிடுவேன் ..

    #######

    க்கும் ...நம்பிட்டோம் சார்...:-(


    *********

    2018-ன் அட்டவணையில் இவரை நுழைத்திடத் தீர்மானித்திருந்தேன் - "சிங்கத்தின் சிறுவயதில்" என்ற தலைப்போடு...

    ########


    ஓஹோ...கிர்ர்ர்....


    ************

    தலைப்பை அப்படியே அமைத்தால் போராட்டக் குழுவை இன்னும் சித்தே உசுப்பிவிட்டது போலாகிடும் என்ற பயமும், பீதியும், என்னை அங்குலம், அங்குலமாய் ஆட்கொண்டதால் - "காற்றுக்கு ஏது வேலி ?" என்பதில் freeze ஆனேன்

    ###########


    செயலரே ..போராட்டத்தை கொஞ்சம் நல்லா தீவிரபடுத்தினா இன்னும் பயந்துபோவாருன்னு நினைக்கிறேன் .தப்பு போராட்ட குழு மேலேதானோ என்ற சந்தேகம் இப்போது உள்ளத்நை ரணப்படுத்துகிறது.

    ************



    ReplyDelete
    Replies
    1. பயமெல்லாம் இல்லாமல் போகாது தலீவரே! நாம இதுவரை காட்டியது தக்கணூண்டு டெரர் முகம் தான். ஆகஸ்டு விழாவில் நம் முழுஅளவிலான டெரர் முகத்தை க்ளோஸ்-அப்பில் அவருக்குக் காட்டுவோம்!! பீதியில் உடனே "சி.சி.வ - விரைவில் புத்தகமாக - ஹார்டு பைண்டில் - வெளியாகிடும்"னு அறிவிக்கிறாரா இல்லையா பாருங்க!!

      போராட்டக்குழுவா... கொக்கா!!

      ப்பூ!!

      Delete
    2. ஆகஸ்டு விழாவில் எந்த போரட்டமா இருந்தாலும் அந்த அம்மு மெஸ்ஸுல வறுத்த கோழியை சாப்பிட்ட பிறகுதான்..

      Delete
    3. சூப்பர் ஐடியா கரூர்கார்!! வாயில் தொங்கும் லெக்பீஸுடன் அப்படியே க்ளோஸ்-அப்பில் டெரர் முகம் காட்டினோம்னா... 'ய்யீஈஈஈக்'ணு கத்திக்கிட்டே எதிரணித் தலைவர் எந்திரிச்சு ஓடப்போவது உறுதி!!

      Delete
    4. போன பதிவுல போட்ட டவணுபஸ்ஸு அதிரடி வேலை செய்யுது.

      சிங்கத்தின் பொக்கை வாய் வயதிலே போட்றேன்னு அறிப்பு சாரி அறிவிப்பு வந்த மட்டிலும் நமக்கு வெற்றி வெற்றி.

      அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தையில பாத்துருவோம்...

      Delete
    5. ஈவி...
      தலைவரை கலாய்ககறீங்களா இல்ல உண்மையாவே போராட்டத்துக்குத் தான் ஐடியா குடுக்கறீங்களான்னு சந்தேகமா இருக்கு.

      தல
      கேர்புல்லா இருங்க தல. உங்களை உண்ணாவிரதத்துல உக்காற வைச்சுட்டு உங்க பிரியாணியையும் செயலர் கட்டிடுவாரு போல.

      Delete
    6. என்னமோ நடக்க போவுது ..
      மர்மமா இருக்க போவுது..:-(

      Delete
    7. அம்மு மெஸ்ஸா
      அவ்வளவு ஈரோடு ஃபேமஸா

      எங்கனருக்கு

      அதென்னமோ ஒருத்தரு சொன்னாரு
      எல்லா வகை கறியும் பெரிய எல போட்டு தர்றாங்களாம்ல...
      பெருந்துறையோ பக்கத்திலயோ

      Delete
  8. எடிட்டர் சார்,

    'ஜம்போ'வின் தாமதத்திற்குப் பின்னே அதன் சைசுக்கான 'டப்பிகள்' மட்டுமன்றி, வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும் என்று உறுதியாக நம்பியிருந்தேன்! இந்தப் பதிவு அதை உறுதி செய்திருக்கிறது!! அட்டைப்பட டிசைனில் பிரச்சினை, யங் தல'க்கான மொழிபெயர்ப்பில் பிரச்சினை, பேப்பர் கொள்முதலில் பிரச்சினை, பைன்டிங் மெஷின் பணால் ஆனதில் பிரச்சினை என்று நிறையவே சோதனைகளைச் சந்தித்திருப்பதை இன்று படிக்கும்போது மலைப்பாய் இருக்கிறது! பட்ட கஷ்டங்களுக்கும், எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களுக்கும் பலனாக இன்று 'ஜம்போ' செம ஹிட் அடித்திருப்பதில் ஏக மகிழ்ச்சி எங்களுக்கு!

    ஆனாலும், நண்பர்களிடமிருந்து தாமதத்திற்கான 'டோஸ்' வரும்போதே "தாமதத்திற்கு இன்னும் சில காரணங்கள் உண்டு நண்பர்களே! சற்று பொறுமையோடு இருங்கள். அப்பாலிக்கா ஜாவகாசமா விசயத்தைச் சொல்றேன்"ன்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் நீங்க!! நண்பர்களிடம் எசகுபிசகா வாங்கிக்கட்டிக்கறதுன்னா உங்களுக்கு அவ்வளவு பிடிச்சிருக்கும்போது, அப்புறம் என்னத்தைச் சொல்ல?!!

    எல்லாப் பக்கங்களிலும் வார் வைத்துத் தைக்கப்பட்ட/தைத்துக்கொண்ட, உலகின் ஸ்பெஷல் மத்தளம் நீங்கள் - என்றால் அது மிகையல்ல!!

    ReplyDelete
    Replies
    1. எல்லாப் பக்கங்களிலும் வார் வைத்துத் தைக்கப்பட்ட/தைத்துக்கொண்ட, உலகின் ஸ்பெஷல் மத்தளம் நீங்கள் - என்றால் அது மிகையல்ல!!

      #######

      :-))))

      Delete
    2. ////எல்லாப் பக்கங்களிலும் வார் வைத்துத் தைக்கப்பட்ட/தைத்துக்கொண்ட, ////

      மத்தளம் போகட்டும்
      "வாா் வைத்த டவுசா்" பத்தி உங்களுக்கு தொியுமா?

      உடனே லூட்டி வித் லக்கிய படிங்க!

      ஹாஹாஹா

      Delete
    3. தாமதத்துக்கான காரணங்களை நான் சொல்லியிருக்கலாம் தான் ; ஆனால் கூரியர் செலவை மட்டுப்படுத்திட நண்பர்களே ஒரு வாய்ப்பை முன்வைத்திருப்பதை நான் பயன்படுத்திக் கொள்ள ஏதேதோ சால்ஜாப்புச் சொல்வது போலொரு தோற்றமும் எழக்கூடுமென்று பட்டது ! அதற்குள் மண்டகப்படி முழுவீச்சில் துவங்கியிருக்க, ரைட்டு.. .என்றபடிக்கு நடையைக் கட்டி விட்டேன் !

      Delete
    4. வேற இடத்துல வெளிர் மஞ்சள் தாள் விலை குறைவான மட்டமான தாள்னு வேற சிலர் புகார் சொல்லிருந்தாங்க. பதில் சொல்லி மாளாதுன்னு தாண்டி வந்துட்டேன்.

      Delete
    5. அதற்குள் மண்டகப்படி முழுவீச்சில் துவங்கியிருக்க, ரைட்டு.. .என்றபடிக்கு நடையைக் கட்டி விட்டேன் !

      #######

      பரவால சார் எப்ப ,எப்படி அமைதியா இருக்கனும்னு கரீட்டா தெரிஞ்சு வச்சுருக்கீங்க ..நாமதான் படக்கு படக்குன்னு பதில் சொல்லிட்டு பொசுக் பொசுக்குன்னு முதுகுல வாங்கிட்டே இருக்குறதா போகுது..:-)

      Delete
    6. //வேற இடத்துல வெளிர் மஞ்சள் தாள் விலை குறைவான மட்டமான தாள்னு வேற சிலர் புகார் சொல்லிருந்தாங்க. பதில் சொல்லி மாளாதுன்னு தாண்டி வந்துட்டேன்.//

      ஹை...ஜாலி....ஜாலி !!

      வெளிர் மஞ்சள் தாள் சஸ்தா சரக்கெனில் - ரெகுலர் வெள்ளைக் காகிதம் ஒஸ்தி ரகம் என்றாகிறது !

      ஆண்டுக்கு நமது ரெகுலர் black & white இதழ்களின் எண்ணிக்கை சுமார் 15 + ! ஜம்போவில் ஒட்டுமொத்தமே இரண்டே black & white இதழ்கள் தான் !!

      ஆக வருஷத்தில் பெரும்பங்கெடுக்கும் 15 + இதழ்களுக்கு நாம் நயம் வெள்ளைக் காகிதத்தை உபயோகிக்கிறோம் என்பதற்கொரு சான்றிதழ் கிட்டி விட்டது !

      Delete
    7. A4 TNPL வெள்ளையாக இருக்கும்!

      Executive Bond Sheet மஞ்சளாக இருக்கும்!!

      மஞ்சள் கலா் விலை குறைவு என்றால் பாண்ட் பேப்பரும் விலை குறைவாக கிடைக்குமே!!

      Delete
    8. விஜயன் சார்,
      செம பதில். தூள் சிக்ஸ். இப்படியே அடித்து விளையாட்டுகள்.


      // வருஷத்தில் பெரும்பங்கெடுக்கும் 15 + இதழ்களுக்கு நாம் நயம் வெள்ளைக் காகிதத்தை உபயோகிக்கிறோம் என்பதற்கொரு சான்றிதழ் கிட்டி விட்டது ! //

      Delete
    9. \\எல்லாப் பக்கங்களிலும் வார் வைத்துத் தைக்கப்பட்ட/தைத்துக்கொண்ட, உலகின் ஸ்பெஷல் மத்தளம் நீங்கள் - என்றால் அது மிகையல்ல!!\\
      ரணகளத்திலும் கிளுகிளுப்பாக மாற்ற உங்களால் மட்டுமே முடியும் ஈவி.

      Delete
  9. நேற்றைய முன்தினமும் எந்த தகவலும் வராமல் இருக்க நேற்றும் எந்த அலைபேசி தகவலும் வராமல் இருக்க இரண்டாவது நாளும் பார்சல் தகவல் கொரியர் அலுவலகத்தில் இருந்து வராமல் இருந்தது இல்லையே என நானே அலுவலகம் செல்ல என்னை பார்த்தவுடன் பார்சலை நீட்டினார் நண்பர் .நேற்றைய முன்தினமே வந்து விட்டது என அவர் கூற பார்சலில் எனது அலைபேசி எண்ணின் ஒரு எண் அழிந்து இருக்க தகவல் கொடுக்க முடியவில்லை என்றார் ஓகே சார் என்றபடியே பார்சலை ஆர்வமுடன் வாங்கி இல்லத்திற்கு வந்து பாக்ஸை பிரிக்க ஆரம்பித்தேன் .அலுவலகத்தில் வைத்திருந்த வரிசைபடியே புத்தகத்தை ஒவ்வொன்றாக எடுக்க ஆரம்பித்தேன்.

    முதலில் கைக்கு வந்தது " பனி மண்டல வேட்டை "

    அட்டைப்பட ஓவியம் செம கலக்கல் எனில் அந்த வித்தியாசமான அட்டை பாணி தடவி தடவி பார்க்க சொன்னது .உள்பக்க தாள்களும் இந்த முறை ஏதோ பளபளவென மின்னுவது போல் ஓர் எண்ணம் எனில் அறிமுக நாயகரின் ட்ரெண்ட்ன் ஓவியபாணி வெகு அழகு.கடைசி பக்கத்தில் அடுத்த வெளியீடு என ட்ரெண்ட் விளம்பரம் ஆச்சர்யபடுத்தியது .இவரை படித்து முடித்தவுடன் தான் உடனடியாக மீண்டும் இவரை தரிசப்பதில் உள்ள ஆனந்தம் புரிபடும் காத்திருக்கிறேன்..

    இரண்டாவதாக வந்த " எரிமலை தீவில் பிரின்ஸ் " பின் அட்டைபடத்தை முன் அட்டை படமாக வெளியிட்டு இருக்கலாமோ என்ற எண்ணம் எழாமல் இல்லை.இவை ஒரிஜினல் ஓவியங்கள் தான் எனும்பொழுது ஒரிஜினல் ஓவியங்களை விட நமது ஓவியர்கள் இன்னும் சிறப்பாகவே பட்டையை கிளப்புகிறார்கள் என்ற எண்ணமும் கூடவே எழுந்தது. படித்த கதையாகவே இருப்பினும் சிறப்பான தரத்தினால் உடனடியாக மீண்டும் படிக்க ஆவல் பீறிடிகிறது .அடுத்த வெளியீடாக " சைத்தான் சாம்ராஜ்யம் " விளம்பரமோ நவம்பர் உடனடியாக வராதா என்ற ஏக்கத்தை விதைக்கிறது.

    அடுத்து வந்த ஜம்போ காமிக்ஸ் " வாவ்" தரம் .வித்தியாசமான அட்டைபடத்தில் வித்தியாசமான ஹாட்லைன் பாணியும் ,அடுத்த வெளியீடு விளம்பரமும் ,அட்டகாசமான தாளின் தரமும் அசத்துகிறது .கறுப்பு வெள்ளையாக இருந்தாலும் ,வண்ண இதழாக இருந்தாலும் இதே அளவு பாணியில் ஜம்போ தொடர்ந்தால் சிறப்பாக இருக்குமோ என்றும் மனதில் ஓர் எண்ணம்.டெக்ஸின் வரலாற்றை அறிய குஷியுடன காத்திருக்கிறேன்.


    இறுதியாக

    " லூட்டி வித் லக்கி "

    அட்டைப்படம் ,வடிவமைப்பு ,ஹார்ட்கவர் ,உட்பக்க சித்திரங்கள் ,முக்கியமாய் இரத்தபடல விளம்பரம் என ஒட்டுமொத்நமாக "ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் " ரகம் .அட்டைப்பட ரோஸ் கலர் வண்ணம் கண்ணை பறிப்பது எனில் வில்லன்களின் அட்டைப்படம் அப்ளாஸை அள்ளுகிறது .


    மொத்தத்தில் இந்த மாதம் ஒரு கலக்கலான காமிக்ஸ் காம்போ மாதமாக உள்ளதை புரட்டி ,புரட்டி பார்ப்பதிலியே அறிந்து கொள்ள முடிகிறது.


    பார்த்து ரசித்தாயிற்று இனி படித்து.....

    ReplyDelete
    Replies
    1. தலீவரின் பதிவு ரெடி நண்பர்களே!

      இந்தா மேலேதான்! :D

      Delete
    2. //தலீவரின் பதிவு ரெடி நண்பர்களே!//

      Lolz

      Delete
  10. இனிய
    காலை
    வணக்கம்
    நண்பர்களே....!!!

    ReplyDelete
  11. // கீழேயுள்ள இந்த டெக்ஸ் படத்தைப் பாருங்களேன்..? எவ்விதமுள்ளது ? இந்தப் படம் பற்றியொரு துணுக்குச் செய்தியுள்ளது //
    டைனமைட் ஸ்பெஷல்???

    ReplyDelete
  12. காமிக்ஸ் பிக் பாஸ் அவர்களுக்கு வணக்கம்

    ReplyDelete
  13. ஹா ஹா ஹா!!

    'புற முதுகிட்டு ஓடுதல்' அப்படீன்னா நமக்குத் தெரியும்! 'புறப் பிட்டமிட்டு ஓடுதல்' தெரியுமோ...?!!

    கொடூரன் கோப்ரா, 'சாரை' சாம், மலைப்பாம்பு மாடிசன், மண்பாம்பு மஸ்கெனராஸ், தண்ணிப்பாம்பு தியோடர் - இவங்களை உங்களுக்கு அறிமுகமிருக்கோ...?!! இவங்களுக்கும், வார் வச்ச டவுசர்களுக்கும் என்ன சம்பந்தம்னாவது உங்களுக்குத் தெரியுமோ?

    'ஓலா கால்-டாக்ஸி' - தெரியும்! 'ஓலா வாடகைக் குதிரைகள்' தெரியுமோ?!!

    'டைபாய்டு'ன்னா ஜுரம்னு தெரியும்... 'டைபாய்டு'ன்ற டெரர் ஆசாமியைத் தெரியுமோ...?

    ஹா ஹா ஹா!!

    தெரியலேன்னா தெரிஞ்சுக்கோங்க -
    'ஸ்டேட் பேங்க் ஆஃப் டால்டன்'இல்!

    ReplyDelete
    Replies
    1. ///'புறப் பிட்டமிட்டு ஓடுதல்' தெரியுமோ...?!!///

      😂😂😂

      ஈ.வி. திசைக்கொரு திருடன் படுச்சுட்டீங்களா?

      Delete
    2. @ மிதுன்

      இனிமேதானுங்!

      Delete
  14. சிரிக்கிறேன் லக்கி லூக்க படிச்சிட்டு....

    ReplyDelete
  15. இப்பதிவை படிக்கும்போது பின்னணியில் விஸ்வரூபம் திரைபடத்தின் ஞாபகம் வருகிறதா பாடல் ஒலிப்பது எனக்கு மட்டும் தானோ ?!

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. மார்ஷல் டால்டன் படித்து விட்டேன். நகைச்சுவையில் லக்கிலுக் தான் என்றும் சூப்பர்ஸ்டார்.ஸ்டேட் பேங்க் ஆப் டால்டன் மார்ஷல் டால்டன் என உருமாறியது ஏனோ?

    ReplyDelete
    Replies
    1. அதோட சோ்த்தி மொத கதை பின்அட்டைக்கு போனது ஏன் என்றும் கேட்டு சொல்லுங்க!

      Delete
    2. Forward to சேலம் டெக்ஸ் விஜய்

      "//நகைச்சுவையில் லக்கிலுக் தான் என்றும் சூப்பர்ஸ்டார்.//"

      Delete
    3. லக்கி பாடுறாா்

      🎶🎶 சொல்லி அடிப்பேனடி
      அடிச்சேனுனா நெத்தி அடிதானடி 🎶🎶

      Delete
    4. நகைச்சுவையில் இப்போதும் லக்கி தான் நெ1....

      வாட் ஆயாம் சேயிங ஈஸ், ஹி ஈஸ் ஸ்லோலி பட் ஸ்டெடிலி லாஸிங் த கிரிப் ஆன் தட்; விரைவில் டாப் ஸ்பாட் பறி போகலாம்...!!!

      Delete
    5. ஹலோ, டெக்ஸ் முதலிடத்தை இழந்தாலும் இழக்கலாம்!

      லக்கி ஒருபோதும் நெ.1ஐ இழக்கப் போவதில்லை!

      Delete
    6. குட்.... ஐ லைக் தட் கான்பிடன்ஸ்...👏💐💐👏👏👏

      Delete
  18. எடிட்டர் அவர்களே...
    ஏற்கனவே வற்புறுத்தியதும் தான்.

    நீங்கள் இரவு நேரத்தில் கண் விழித்து பதிவுகள் ஏற்றுவதை தவிர்த்திட வேண்டுகிறேன்.

    நீங்களே உங்கள் உடலை வருத்துவதோடு, அதை தொடர்ந்து
    நேச சித்ரவதை செய்கிறீர்கள.

    ஏற்கனவே படுக்கைக்கு இரவு 11.30 மணிக்கு செல்லும் வாசகர்களையும் அதே நிலைக்குள்ளாக்குகிறீர்கள்.

    "கனிவான வார்த்தைகளுக்கு நன்றிகள் சார்" என்று சமாளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கண்கள் வேண்டும் இன்னும் கொஞ்சம் காமிக்ஸ் படிக்க....

    சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம்.
    புகழ் மிக்க எழுத்தாளரும், நண்பருமான சுஜாதா அவர்களை இறுதியாக சந்தித்த போது கூறினார்,"
    வயசுல ஒண்ணும் தெரியல.
    உடம்பு அப்பப்ப தெரிவித்த சமிக்ஞைகளையும் அலட்சியப்படுத்தினேன்.
    இப்ப உடம்பு அது இஷ்டப்படி என்னை ஆட்டுவிக்குது.
    யூரின் நல்லா போனா சந்தோஷமா இருக்கு.
    கலைல டாய்லட் போயிட்டு வந்துட்டா பரம திருப்தி.
    நேரத்துக்கு பசிச்சா நல்லாயிருக்கு.
    ஆனா..
    ஆனா..
    இஷ்டப்பட்டத சாப்ட முடியல...

    எழுத்தையே மூச்சா present பண்ண நெனச்சவனுக்கு குடிதண்ணீர் ரெண்டாம் பட்சமா போயிருச்சு.

    தண்ணீரப் பத்தி வர்ணனைகள் செஞ்ச நான் இப்ப பாட்டில் தண்ணி குடிக்கிற அவலம்.
    என்ன செய்ய...

    நீயாவது இப்பலேருந்து சுதாரிச்சுக்க..
    Always prevention is better than cure." என்று அறிவறுத்தியது நினைவுக்கு வருகிறது.

    Take care pl

    ReplyDelete
    Replies
    1. உண்மை உண்மை உண்மை!!

      விடிய விடிய பதிவு போடுதல், கண்விழித்துக் காமிக்ஸ் பணி செய்தல் ஆகியவை இனியாவது தவிர்க்கப்பட வேண்டும்!!

      உடல் நலமே முக்கியம்!!

      ஆகவே, பதிவுகள் இனி 'தலீவரின் நடுநிசி நேரத்திற்குள்' போடப்பட வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது$

      Delete
    2. // நீங்கள் இரவு நேரத்தில் கண் விழித்து பதிவுகள் ஏற்றுவதை தவிர்த்திட வேண்டுகிறேன். //
      யோசிக்க வேண்டிய கருத்து.
      +111111

      Delete
    3. பெரும்பாலான வாசகர்ளும் 40ஐக் கடந்த இளைஞர்களே.

      அவர்களும் சற்று சிந்தித்தால் இது நலமே...

      Delete
    4. ///// நீங்கள் இரவு நேரத்தில் கண் விழித்து பதிவுகள் ஏற்றுவதை தவிர்த்திட வேண்டுகிறேன். ///+22222...

      ஆம் சார்...என்னுடைய வேண்டுகோளும் இதுவே!!!!

      உங்கள் உடல்நலம் மிக முக்கியம்.

      ஏற்கெனவே சீனியர் சார் இதை அத்தியாவாசிமாக குறிப்பிட்டு இருந்தார்கள்...

      இதில் உடனடியாக கவனம் செலுத்துங்கள் சார்...

      இரவு 11மணிக்குள் பதிவு போட இயலவில்லை எனில், காலை 6மணிக்கு மேல் டைப்பி 9மணி வாக்கில் பதிவிட்டால் போதுமானது...!!!

      Delete
    5. முன்பெலாம் இரவு 2வரை கண் விழித்து டிவி பார்த்து விட்டு சகஜமாக அடுத்த நாள் வேலைக்கு போக முடிஞ்சது...ஆனால் இந்த 42வயதில் ஒரு நாள் இரவு 1:30வரை மேட்ச் பார்த்தா , அடுத்த நாள் தானாகவே 11மணிக்கெலாம் கண் சொருகுது....

      எங்கள் வயதுக்கே இப்படி எனில் எங்களை விட 10ஆண்டுகள் மூத்தவரான தங்களது பணிச்சுமை கொணரும் அசதி எத்தகையது என உணரமுடிகிறது.

      என்னதான் நெஞ்சுக்கு நெருக்கமான பணியானாலும், உடல் நலத்தை பாதிக்காவண்ணம் அமைத்து கொள்வது இன்றியமையாதது தானே சார்...

      Delete
    6. டெவி நாம சாப்ட்ட சாப்பாடு கறிகாய்கள் காத்து ஆட்டம் பாட்டம் வெளயாட்டு வெளி தூக்கம் நிம்மதி உறவுகள் நட்பு நடப்பு ....இன்ன பிற இத்யாதிகள்...
      எதுவும் நம்ம கொழந்தங்களுக்கு கெடக்கலியேன்னு.. மனசு வலிக்குது...
      எல்லாமே கெமிக்கல் மாசுக்கள்...

      நேத்து பாத்த நண்பன இன்னக்கி காணோம் சாமி...

      டென்ஷன்..
      டென்ஷன்
      டென்ஷன்.

      Delete
    7. அவுரு சொன்னாரா டெ வி 52 ன்னு...

      Delete
    8. நான் நெனச்சேன் 17 முடிஞ்சி 16 நடக்குதுன்னு...

      Delete
    9. ம்ம்ம்...
      காலை 6 மணிக்கு டைப்பி...

      ஒண்ணு நைட்டு

      இல்லாட்டி...
      காலங்காத்தால..

      அவரு பரிட்சையெல்லாம் பாஸ் பண்ணிட்டாருன்னு கேள்வி...

      Delete
    10. இதைதான் " பப்பளா " வருசமா சொல்லிட்டே இருக்கேன் சார்..:-)

      Delete
    11. நாம சொல்லி என்ன பண்ண...
      நம்ப சாருக்கு நைட் 1 மணியாச்சுன்னா உற்சாகம் பிச்சிக்கிறும் போலருக்கு...

      Delete
    12. அன்புக்கு நன்றிகள் நண்பர்களே.....! இரவு கண்முழிப்பது பழகிப் போனதொன்றாகி விட்டாலும், வயது கூடக் கூட, வண்டி சித்தே தடுமாறத்தான் செய்கிறது ! கண் முழிப்பதெல்லாம் பதிவு சார்ந்த சமாச்சாரமாய்த் தெரிந்தாலும், இதன் பின்னணி சற்றே ஆழமானது !

      2012 க்கு முந்தைய நாட்களுக்கும், post 2012-ன் நாட்களுக்கும் மத்தியில் ஒரு மிகப் பெரிய அரூப வேறுபாடு இருப்பதை ரொம்பச் சீக்கிரமே நான் புரிந்து கொண்டேன் ! அதுதான் நம் வாசக வட்டத்தின் ரசனைகள் பற்றிய மதிப்பீடு ! பழைய நாட்களில் நாம் வெளியிட்டு வந்த இதழ்களின் ஒரிஜினல்களை ஆங்கிலத்தில் படிப்பதென்பதெல்லாம் அத்தனை சுலபமில்லை ! ஆனால் CINEBOOK-ன் வருகை ; Amazon-ல் அயல்தேசத்து இதழ்களையும் ஆர்டர் செய்திடும் வசதி ; இன்டர்நெட்டில் ஸ்கேன்லெக்ஷன்களைத் தேடிப் பிடித்துப் படிக்கும் வசதி என்பனவெல்லாம் நடைமுறையில் இருக்கும் இந்த புது யுகத்தில் - முன்னெப்போதையும் விட, மொழிபெயர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் தலைதூக்கி நிற்கிறது ! முன்பெல்லாம் துல்லியமான மொழிபெயர்ப்பு இல்லாது போயினும், பெரிதாய் நாங்கள் மாட்டிக் கொள்ள நேரிடாது - simply becos கதைகளின் நதிமூலங்களை / ரிஷிமூலங்களை ஆராயும் வாய்ப்புகள் அன்றைக்கு உங்களுக்குக் குறைவு ! ஆனால் இன்றோ - நம்மிடமே CINEBOOK ஆங்கில புக்குகளை வாங்கிய கையோடு தமிழ் - இங்கிலீஷ் என இரண்டையும் நொடியில் ஒப்பீடு செய்ய முடியும் ! 'கொக்கரக்கோ' என்று எங்களது மொழிபெயர்ப்பு கூவும் ஒவ்வொரு தருணத்தையும் அப்புறம் சுட்டிக் காட்டுவது குழந்தைப் புள்ளை வேலையாகிப் போகும் ! So அந்த தர்மசங்கடம் தலைதூக்க அனுமதித்திடலாகாது என்பதை "ஒரு சிப்பாயின் சுவடுகள்" இதழின் போது உணர்ந்தேன்.

      அது வரையிலும் எடிட்டிங்கின் போது ஒரிஜினல் பிரென்ச் / இத்தாலிய மொழிபெயர்ப்புகளைக் கையில் எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்ததில்லை எனக்கு ! கருணையானந்தம் அவர்கள் எழுதியதை அப்படியே டைப்செட் செய்து, அதன் மீது நானாக மாற்றியெழுதும் படலம் மாத்திரமே அரங்கேறி வரும். அதாவது - பிரெஞ்சு / இத்தாலிய மொழிபெயர்ப்புகளின் முழுமையையும் திரு கருணையானந்தம் அவர்கள் முறையாகப் புரிந்தே பணியாற்றியிருப்பார் என்ற நம்பிக்கையில் வண்டியை ஒட்டி வந்தேன் ! ஆனால் "சிப்பாயின் சுவடுகள்" கிளைமாக்சில் நேர்ந்த சொதப்பலும் , அது சுட்டிக் காட்டப்பட்ட தருணத்தில் நேர்ந்த நெருடலும் ரொம்பவே தடுமாறச் செய்து விட்டன என்னை ! பற்றாக்குறைக்கு NBS இதழில் "அலைகளின் ஆலிங்கனம்" சாகசத்திலும் ஏதோவொரு குளறுபடி நேர்ந்திருந்தது நம்மை laughing stock ஆக்கியிருந்தது ! இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சகர்களின் பார்வைகள் எத்தனை ஆழமானவை & அவர்களிடம் இது போன்ற பிழைகள் சிக்கிடின் நேரக்கூடிய சேதாரங்கள் எத்தகையது என்பதை உணர்ந்த போது - "Never again " என்று தீர்மானித்தேன் !

      Contd.,

      Delete
    13. ஒரிஜினலை உள்வாங்க முயற்சிப்பது ; பிரெஞ்சு / இத்தாலிய மொழிபெயர்ப்பின் முழுமையையும் வாசிப்பது ; அப்புறம் தமிழ் மொழியாக்கத்தை மீது திருத்தங்கள் செய்வதென்று தீர்மானித்தேன் ! அப்புறம் தான் புரியத் துவங்கியது நம் தரப்பில் சுய பரிசோதனைகளுக்கு ஏகமாகவே இடமிருக்கும் உண்மை ! பிரெஞ்சின் மொழிபெயர்ப்பு முழுமையாய்ப் புரிபடா இடங்களில் நாமாய் improvise செய்வது ; அல்லது அவற்றைத் தாண்டிச் செல்வது என்று ஏதேதோ பிசகுகள் அரங்கேறியே வந்துள்ளன ! இனியொருமுறை இது போல் சொதப்பாதிருக்க வேண்டுமெனில் ஒவ்வொரு பக்கத்தையும், ஒவ்வொரு பிரேமையும், ஒவ்வொரு வசனத்தையும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றியபடிக்கு நானே செக் பண்ணிட வேண்டும் என்று அன்றைக்குத் தீர்மானித்தேன் ! சொல்வது சுலபம் ; தீர்மானிப்பது லேசு - ஆனால் செயல்படுத்துவது எத்தனை மென்னிமுறிக்கும் பணியென்பது சிறுகச் சிறுகத் தான் புரிந்தது ! அன்று துவங்கிய இந்த நேரம் விழுங்கும் பிரயாசைகள், இதழ்களின் எண்ணிக்கை கூடக் கூட பரிமாணத்தில் கூடிக் கொண்டே போன கதையாகவுள்ளது !

      இது நான் ஏதோ உலக மஹா மொழிபெயர்ப்பாளன் என்பதாகவும், மற்றப் பேரெல்லாம் ஒரு மாற்றுக குறைவானவர்கள் என்பது போலாகவும் ஒரு தோற்றத்தைத் தரும் பொருட்டு நான் சொல்லும் விஷயமல்ல guys ! மாறாக , பிழை எங்கிருப்பினும், உதை என் சொட்டைத் தலையில் தான் என்ற புரிதலின் காரணமாய் நானே வளர்க்கத் துவங்கியதொரு பயஉணர்வின் வெளிப்பாடு என்று சொல்லலாம் ! சில இரவுகள் எனக்கு சிவராத்திரியாகிடும் பட்சத்தில் - ஏளனங்களுக்கு ஆளாகிடும் வாய்ப்புகள் குறையக்கூடுமென்ற புரிதல் சிறுகச் சிறுக ஒரு வாழ்க்கைமுறையாகவே மாறிப் போய் விட்டது !End of the day - the buck stops with me ! ஆக - "இது அங்கே நேர்ந்த பிழை ; இங்கே நேர்ந்த புரிதலின் குறைபாடு" என்ற சால்ஜாப்புப் பருப்புகளெல்லாம் வேகாது எனும் போது - எனது ஜாக்கிரதையுணர்வு கூடிக் கொண்டே போகிறது ! பலன் : ராக்கூத்துக்கள் !

      புலிவாலைப் பிடித்த கதையென்று வைத்துக் கொள்ளுங்களேன் guys !

      Delete
    14. ஓவ்..
      புலிவாலின் பின்னணி புரிகிறது சார்....

      Delete
    15. ///புலிவாலைப் பிடித்த கதையென்று வைத்துக் கொள்ளுங்களேன்///

      இனி சிங்கத்தின் சிறுவயதில் கேட்பதில் அா்த்தமில்லை!

      சிங்கம் புலிவாலை பிடித்த கதையைத் தான் கேட்க வேண்டும்!!

      Delete
    16. விஜயன் சார், புரிகிறது உங்கள் சிவராத்திரி இரவுகளின் இரகசியம். ஆனால் உடம்பைக் கவனித்து கொள்வது அதனை விட முக்கியமானது என்பது எனது தாழ்மையான எண்ணம்.

      Delete
    17. இருப்பினும் எனது நடுசாம இரவுக்குள் உங்கள் பணிகளையும் ,பதிவுகளையும் முடித்து கொள்ள பாருங்கள் சார்

      அதே போல் சிங்கத்தின் சிறு வயதில் தொடராமல் இருப்பதற்கு ஏதாவது காரணம் இருப்பின் அதையாவது சொல்லுங்கள் சார்..கொஞ்சம் மனசாந்தியாவது அடைந்நு கொள்கிறோம்..:-(

      Delete
    18. மனசாந்தியா ? எல்லாமே உங்க மனப்பிராந்தி தலீவரே !

      Delete
    19. ஙே...( விட்டத்தை வெறித்து பார்க்கும் சிம்பள் :-)

      Delete
  19. சைத்தான் சாம்ராஜ்யம் நவம்பர் வெளியீடுன்னு போட்டுருக்கு,நவம்பரில்தான் தீபாவளி வருது,ஏற்கனவே தீபாவளி வெளியீடாக டெக்ஸின் காதலும் கடந்து போகும் அட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளது,கொஞ்சம் பார்த்து கவனிங்க சார்.
    மேலும் டெக்ஸ் இதழ்கள் இந்த ஆண்டுக்கு இன்னும் 3 தான் மொத்தமே பாக்கி உள்ளன.ஆனால் மாதங்களோ 5 பாக்கி உள்ளன.அப்ப 2 மாதங்களுக்கு டெக்ஸ் இல்லையா?!

    ReplyDelete
    Replies
    1. ஷைத்தானின் சாம்ராஜ்யத்தை அக்கட-இக்கட shift பண்ணிக்கொள்ளலாம் சார் ! தீபாவளி இந்தாண்டும் அக்டொபரிலேயே வருகிறதென்று ஏதோ ஒரு தப்புக் கணக்கில் உள்ளேன் !

      Delete
  20. முப்பது லட்சம் பார்வைகளுக்கு இன்னும் கிட்டதட்ட 1700 பார்வைகள் மட்டுமே பாக்கி,சிறப்பான ஒரு அறிவிப்பை எதிர்பார்க்கிறோம் சார்.
    இன்னிக்கு சாயந்திரம் சொன்னாக் கூட போதும் சார்,ஹி,ஹி.

    ReplyDelete
    Replies
    1. முப்பதா மூணா சார்
      கீழ ராகவன் சாரு மூணுங்கிறாரூ.

      Delete
    2. முப்பது லட்சம் தான் ஜெ சார்,ராகவன் சார் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.

      Delete
    3. மூணு மில்லியனுக்கு 3 என்று - ஜெரெமியா 3 -ஐ களமிறக்கி விடுவோமா ? :-) :-)

      Delete
    4. NO. ANY SPECIAL LIKE ARCHIE REPRINT, DETECTIVE DIGEST, ETC..

      Delete
    5. ///மூணு மில்லியனுக்கு 3 என்று - ஜெரெமியா 3 -ஐ களமிறக்கி விடுவோமா ? :-) :///

      நான் நெனைச்சேன்! நீங்க சொல்லீட்டீங்க சாா்!

      ஹாஹாஹா!

      Delete
    6. LMS or NBS மாதிரி ஒரு கதம்ப ஸ்பெசல் சார்...

      Delete
    7. என்னது ஜெரமாயாவா....

      அட ஆண்டவனே...

      Delete
    8. ///மூணு மில்லியனுக்கு 3 என்று - ஜெரெமியா 3 -ஐ களமிறக்கி விடுவோமா ? ////

      ம்... அது வந்து சார்... பேசாம நாம 5 மில்லியன் வரும்போது கொண்டாடிக்கிடுவோமே?!! ஹிஹி!!

      Delete
    9. ஹிஹ்ஹிஹ்ஹி
      10 மில்லியன்ல பாத்துக்கிடுவோம்...

      Delete
    10. // மூணு மில்லியனுக்கு 3 என்று - ஜெரெமியா 3 -ஐ களமிறக்கி விடுவோமா ? //

      +1

      அத்துடன் ஆர்ச்சியின் வெளிவராத கதையை இணைந்து விடுங்கள்.

      Delete
    11. ஈ வி ஒரு வேள இப்டி இருந்தாலும் இருக்கும்.

      ஜெராமயா ன்னு எடுத்து விட்டா
      இதுக்கும் பஞ்சாயத்து மண்டகப்படின்னு கொஞ்சம் ஓடும்.
      ஓடீர்றா கைபுள்ளனு தப்பிச்சிக்கலாம்னு நெனக்கிறாரோ....

      Delete
    12. ///மூணு மில்லியனுக்கு 3 என்று - ஜெரெமியா 3 -ஐ களமிறக்கி விடுவோமா ? :-) :///

      நல்லாத்தானே போய்ட்டிருந்தது.??

      Delete
    13. பார்த்துட்டே இருங்க ....JM தொகுப்பு - 2 சும்மா தீயா ஹிட்டடிக்கப் போகின்றது ; அப்புறம் நீங்களே கேட்கத் தான் போறீங்க ! ஜெய் ஜெரெமியா !!

      Delete
    14. ஜெராமயாவாவது தீயாவது
      ஏன் சார் ஜோக்கடிக்கிறீங்க.

      ஓவியரே கதையும் எழுதினா இப்டித்தான் சார்

      Delete
    15. Mr.J உங்களுக்கு ஜெராமயா பிடிக்கவில்லை போலிருக்கு! உங்களைப் போலவே நிறைய பேருக்கும் பிடிக்காமல் இருக்கலாம்!

      ஆனால் எனக்கு இது மிகவும் பிடித்தே இருந்தது. நிஜம் சொல்வதென்றால் "ஜெராமையா" வுக்காக வேண்டியே ஜம்போ சந்தா கட்டலாம்னு இருக்கேன்!

      //ஓவியரே கதையும் எழுதினா//ங்கிற உங்கள் கருத்து ஏற்புடையதல்ல!

      ஓவியரே கதாசிாியராக இருப்பது கூடுதல் சிறப்பு! மட்டற்ற சுதந்திரம் கிடைக்கும்!

      ஆனால் ஒரு ஓவியா் கதாசிாியா் ஆகலாம். ஒருபோதும் ஒரு கதாசிாியா் தக்குணுண்டு ஓவியராகக் கூட ஆக முடியாது என்பதே நிஜம்!

      அவா்கள் கதைசொல்லும் பாணியை கைக்கொள்ள சில காலம் பிடிக்கலாம்!

      அல்லது அவா்களது பாணியை நாம் புாிந்து கொள்ள சில காலம் ஆகலாம்!

      கொஞ்சம் பொறுமை காக்கலாமே!

      Delete
    16. ஹெர்மன்_ஜெராமையா
      கதையினுடைய தொடக்க காட்சிகள் 4 பேனல்களில் முதல் பக்கம் முழுமைபடுத்தப்பட்டிருக்கும்.முதல் பேனல் ஒரு வல்லரசு தேசத்தின் அரசியல் சூழலை காட்சிப்படுத்தி,தொடர்ந்து அந்த தேசம் சிதைக்கப்பட்டு,சிதிலமடைந்த நிலையில் அதன் நிலையையும் ,அதன் பிறகு துளிர் விடும் ஜுீவிதத்தையும் சித்தரிக்கப்பட்டிருக்கும் முதல் பக்கத்திலேயே(ஒற்றை பக்கத்தில்) தனக்கான கதைக்களத்தை மிக அழுத்தமாக பதிய வைப்பது அசாத்திய ஆற்றல் மிக்க கதாசிரியர்களால் கூட இயலாத காரியம்.
      இரண்டாவது கதையில் மிகச் சாதுர்யமாக ஒரு கிராமத்துக்குள் ஊடுருவும் கர்டி,சிறு கவனக்குறைவால் சிறைபிடிக்கப்படுகிறான்.தற்சார்ப்பு சிந்தனையால் ஜெராமையா வலிய இராவத்தின் வசம் சிறைபிடிக்கப்படுகிறான். இதுபோல் கதைத்தொடர் முழுவதும் சிற்சிறு ஜாலங்களும,ஓவியராகவும்,கதாசிரியராகவும் மிளிரக்கூடிய ஹெர்மனின் அவதானிப்பும் நிறைந்து காணப்படும்.
      ஹெர்மனின்_ ஜெராமையா*** சார்லியர் ஜெராட்ன் ப்ளூ பெரி***வான் ஹம்மின் Xlll ....., ......, ......, ஏனைய வரிசைகளில் காமிக்ஸ் காவியமே.

      Delete
    17. J @ உங்களுக்கு இந்த கதை பிடிக்காது ஆச்சரியமாக உள்ளது.

      கடந்த ஆண்டு என்னை மிகவும் கவர்ந்த கதைகளில் இதுவும் ஒன்று. யதார்த்தம், ப்ளஸ் உண்மை சம்பவத்தை கலந்து வந்த அருமையான கதை.

      Delete
    18. Sri Ram @ உண்மை. இதுவே எனது எண்ணம்.

      Delete
    19. நீங்கள் சொல்வதெல்லாம் சரி.
      ஆனால் ஏனோ தெரியவில்லை
      மனம் ஒட்டவில்லை.

      Delete
    20. J @ நிதானமாக படித்துப் பாருங்கள். கண்டிப்பாக பிடிக்கும்.

      Delete
  21. ////கீழேயுள்ள இந்த டெக்ஸ் படத்தைப் பாருங்களேன்..? எவ்விதமுள்ளது?/////


    அபாரமான சித்திரம்! பிரம்மாண்டம்!!

    ///இந்தப் படம் பற்றியொரு துணுக்குச் செய்தியுள்ளது ///

    ஆங்! கண்டுபிடிச்சுட்டேன்!! டெக்ஸை கோல்கேட் டூத்பேஸ்ட்டின் பிராண்டு அம்பாஸடரா புக் பண்ணியபோது அவர் கொடுத்த போஸ் இதுன்னு தோனுது!!

    ReplyDelete
  22. காற்றுக்கு ஏது வேலி

    இளம் டெக்ஸூ நடிகர் ஆர்யாவுக்கு டெக்ஸ் வேஷம் போட்ட மாதிரி இருக்கு.

    ReplyDelete
  23. எடிட்டர் ஏற்கனவே சொல்லிட்டாப்ல....
    அவருக்கு தாய் மாமன் டூட்டி ஜாஸ்தின்னு. .

    ReplyDelete
    Replies
    1. மாமஞ் சீர் வரிசை நினைவுகள்.

      Delete
  24. 300,000 ஹிட்ஸ் இன்றே காண நண்பர்கள் கோதாவில் இறங்கி விட்டது தெரிகிறது :-)

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும்.
      நீங்க வேற சார்...
      ஆளாளுக்கு போட்டாலே 250 தாண்டலே.
      அபாப 1700 பாக்கின்னா
      இனமும் 5 வாரம் பாக்கி இருக்குல.


      அதுசரி, நீங்களும் தமிழ்ல ஐக்கியமாயிட்டீங்க போலருக்கு...

      Delete
    2. பின்னூட்ட எண்ணிக்கைகளில் தான் தடுமாற்றமேயன்றி பார்வைகளின் எண்ணிக்கையிலல்ல சார் ! நம்மவர்கள் ஹாயாக காபியை பருகிக் கொண்டே, பதிவைப் படித்த கையோடு ஞாயிறு ஷாப்பிங் புறப்பட்டு விடுகின்றனர் போலும் !

      Delete
    3. நாள் முழுக்கவா ஷாப்பிங் பண்றாங்க,
      நெறய பேரக்காணோம் சார்.

      Delete
    4. நல்லாக் கேட்டீங்க ஜே. காலைல இருந்து பேக்கெல்லாம் கைல புடிச்சுட்டு (இல்லன்னா ஜெண்டில் மேன் கிடையாதாம்) 100 டிகிரி வெயில்ல லோ லோன்னு பின்னாடியே சுத்திட்டு இருக்கேன். 😩😩😩ஆனா பல தடவை வந்துட்டு போயிட்டேன்.

      Delete
  25. Replies
    1. எங்க போய்ட்டீங்க
      காலயிலருந்து காணோம்.

      Delete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. ///நண்பர் (சேலம்) ஜெகத் நிறைய டிஸைன்களாய்ப் போட்டுத் தாக்கியிருக்க, நம் மனதில் fix ஆகிவிட்டிருந்த அந்த யானை+யானையை மெருகூட்ட அவருக்கு அனுப்பி வைத்தேன் ! அவரிடமிருந்து கிட்டிய சில மாதிரிகளை மேற்கொண்டும் நோண்டி ஒரு மாதிரியாய் "இதுதான் லோகோ !" என்று தீர்மானித்தேன்///----

    வாழ்த்துக்கள் ஜெகத்...👏💐👏💐💐👏👏💐

    ReplyDelete
    Replies
    1. விஜயராகவன் சார்! உங்கள் வாழ்த்துக்கள் எனக்குரியதல்ல. எனக்கும் இந்த லோகோவுக்கும் துளி கூட சம்மந்தமில்லை. நான் நிறைய டிசைன்களை அனுப்பியது உண்மைதான். நான் பொழுதுபோக்காக நிறைய டிசைன்களை போட்டு பார்த்து அதில் எனக்கு பிடித்தவைகளை லயன் காமிக்ஸ் மெயிலுக்கு அனுப்பிவைத்தேன். ஒருநாள் மெயிலில் யானை+யானை டிசைனை மெருகூட்ட ஆசிரியரிடம் இருந்து வந்திருந்த டிசைன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தாயின் நிழலில் இளைப்பாறும் யானைக்குட்டியின் டிசைனில் வண்ணங்களையும் ஜம்போ காமிக்ஸ் என்ற அந்த எழுத்தையும் மாற்றாமல் அலங்கரித்து அனுப்புமாறு ஆசிரியர் சொல்லியிருந்தார். அதனால் படத்தின் உள்ளே எந்த மாற்றமும் செய்யாமல் பார்டர்களை மட்டும் அலங்கரித்து அனுப்பினேன். பதிவில் ஆசிரியர் என்னைப்பற்றி சொல்லியுள்ள வரிகளை படித்துவிட்டு காலையிலிருந்து குழம்பிப் போயிருக்கிறேன்.

      // அவரிடமிருந்து கிட்டிய சில
      மாதிரிகளை மேற்கொண்டும்
      நோண்டி ஒரு மாதிரியாய்
      "இதுதான் லோகோ !" என்று
      தீர்மானித்தேன். //

      -என்று சொல்லியிருக்கிறார். ஆனால்
      நான் அனுப்பிய எல்லா டிசைன்களையும் பார்த்துவிட்டேன். புத்தகத்தில் வெளியாகியுள்ள ஜம்போ லோகோவை அமைக்க ஏற்ற மாதிரிகளாக நான் அனுப்பிய படங்கள் எதுவும் அமையவில்லை. இந்த டிசைனை ஆசிரியரே தீர்மானித்து கொண்டுவந்திருக்கிறார்.

      Delete
    2. இது ஆசிரியரின் தன்னடக்கத்தை காட்டுகிறது.
      விஜயன் சார் தி கிரேட்.

      ஆல் இன் ஆல் விஜயன் பண்டிதர் என்று இன்று முதல் அழைக்கப்படுவீராக.

      Delete
    3. ஜெகத் @ லோகோவின் பினிஷிங் வேணா நம்ம ஆசிரியர் சார் செயதிருக்கலாம்; மாடல் உங்கள்து தான் நண்பரே...!!! சோ, பாராட்டுகள் உங்களுக்கு; வாழ்த்துக்கள் நம் அனபின் ஆசிரியர் சாருக்கு...!!

      Delete
    4. // லோகோவின் பினிஷிங் வேணா நம்ம ஆசிரியர் சார் செயதிருக்கலாம்; மாடல் உங்கள்து தான் நண்பரே...!!! சோ, பாராட்டுகள் உங்களுக்கு; வாழ்த்துக்கள் நம் அனபின் ஆசிரியர் சாருக்கு...!!//

      +1

      Delete
    5. @ விஜயராகவன் சார்!

      /// லோகோவின்
      பினிஷிங் வேணா நம்ம
      ஆசிரியர் சார்
      செயதிருக்கலாம்; மாடல்
      உங்கள்து தான் நண்பரே...!!! சோ,
      பாராட்டுகள் உங்களுக்கு; ///

      தவறு விஜயராகவன் சார்! அந்த பாராட்டு கூட இரண்டு யானை டிசைன் அனுப்பியவரையே சேரும். அந்த 2 யானைகளின் படம் மெயிலில் எனக்கு வந்திருந்தது. அதை அனுப்பியவரின் விவரங்களை ஆசிரியர் வெளியிடவில்லை. ஜூன் 16 - No frills பதிவில் ஆசிரியர் வெளியிட்ட தகவலை பாருங்கள்...

      /// - ஜம்போ # 1-ன் அட்டைப்பட
      முதல்பார்வை !! அட்டைப்படம் மாத்திரமன்றி
      அந்த லோகோவுமே புதுசு தான்!
      பெயர் சொல்ல விரும்பா நண்பரொருவர்
      அனுப்பிய டிசைனை நமக்குத்
      தெரிந்தமட்டுக்குக் கொஞ்சம் பட்டி-
      டிங்கரிங் பார்த்து இங்கே
      கொணர்ந்துள்ளோம் ! ///

      Delete
    6. ஜெகத்@ இந்த விபரங்கள் அடியேன் அறியேன் நண்பரே...!!!!

      மே கடேசி முதல் ஜூன் கடேசி வாரம் வரை கடும்பிசி வித் ஸ்கூல் சீசன்; எதையும் ஃபாலோ பண்ண முடியல...!!! எதோ ஒரு பதிவுல, ஜம்போவை ஒட்டுக்கா அனுப்புங்க என கொளுத்தி போட்டுட்டு மட்டும் எஸ் ஆகிட்டேன்.

      உங்கள் கருத்தில் இருந்து புரிவது, இரு யானை லோகோவுக்கு சொந்தக்காரர் வேறு ஒரு நண்பர் என்பதே...!!!

      சோ,உங்களுக்கு தந்த பாராட்டை வாபஸ்பெற்றுக் கொள்கிறேன்.

      அந்த லோகோவை உருவாக்கிய முகமறியா நண்பருக்கு பாராட்டுகள்...!!💐💐💐💐💐💐

      இந்தியாவிலேயே, ஏன் வேல்டுலயே மற்றவரின், வேலைக்கு தனக்கு பாராட்டு வேணாம் என மறுக்கும் நாகரீகம் கொண்டவர்கள் நம்ம காமிக்ஸ் ரசிகர்கள் தான்பா...!!!!
      அருமை ஜெகத்...👏👏👏

      Delete
  28. புது உயரங்களை தொட்டிருக்கும் படைப்புகள்.
    ஒவ்வொன்றும் ரசித்துக்கொண்டே இருக்கும் அழகு , புதுவகை அட்டைப்படங்கள் என அமர்க்களமான ஜூலை இதழ்கள்.
    வாழ்த்துக்கள் ஆசிரியரே

    ReplyDelete
  29. ஆசிரியர் இந்த வாரம் எழுதியதை படித்து சிறிது மகிழ்ந்தேன். அப்ப ப்பா எவ்வளவு காமெடி சீரியஸ் விஷயம் எழுதும்போதும்.

    "ஆங்...துபாய் போனேனா ? அங்கே கமர்கட்டு வாங்கினேனா ?"

    பள்ளிக்கூடத்தில் டிராயிங் க்ளாசில் பட்டாம்பூச்சி வரைந்தால், வவ்வால் ஆஜராவதும் ; கார் வரைந்தால் கட்டை வண்டி ஆஜராவதும், எனக்கு மட்டுமே தெரிந்த சூட்சமங்கள் !

    "கழுத்து சுளுக்கிக் கொண்ட நாட்களில் நாமெல்லாம் உடம்போடு திரும்பிப் பார்ப்போமே - அதைப் போல 'தல'யின் தலை தென்பட்டது ! மாற்றங்கள் தொடரத் தொடர, பரோட்டா சூரிக்கு கௌபாய் தொப்பி மாட்டியது போலொரு உருவம் பிரசன்னமானது தான் மிச்சம்"

    சிரித்து சிரித்து வாய் வலித்து விட்டது போங்கள்.

    டெக்சின் பர்த்டே இதழின் கவராக இருக்கலாம் என்பது பலரின் யுகம்

    இந்த வாரம் படித்ததிலிருந்து

    பழையது:

    மர்ம மைனா - நடக்க போவதை முன் கூட்டியே சொல்லிவிடும் ஒரு பாட்டியும் அவளுடைய மைனாவும் சில நாள் ஷெரிப் ஆஃபிஸில் தங்க, அப்பொழுது நடக்கும் சிரிப்பு ரகளையே கதை.

    புதியது:

    காவல் கழுகு - வழக்கமான டெக்ஸ் கதையே, செவ்விந்தியர்களை நடுவே பகையை மூட்டி விடும் வெள்ளைக்காரனை டெக்ஸ் புலன் விசாரணை செய்து செவ்விந்தியர்க்கு நியாயம் வழங்கிடும் அதே 1001 வது

    கதை. சித்திரங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. //அப்ப ப்பா எவ்வளவு காமெடி சீரியஸ் விஷயம் எழுதும்போதும்.//

      அட...நாமெல்லாம் கவுண்டரின் சிஷ்யப் புள்ளைகள் ஆச்சே சார் ?! நமக்கு எல்லாமே ஜாலி தானே ?

      Delete
  30. கடைகளில் டெக்ஸ் மட்டும் வாங்கும் எனது சில நண்பர்களுக்கான சந்தேக வினா


    ஜம்போ காமிக்ஸ் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளதா சார்..?

    ReplyDelete
    Replies
    1. ஆர்டர் செய்திருக்கிறார்களா என்பது தெரியலியே தலீவரே ! சில கடைகளில் வாங்குகிறார்கள் ; சிலர் ஊஹூம் !

      Delete
    2. நன்றி சார்...

      இருந்தாலும் கடைகளில் வழக்கம் போல போய் பார்க்க சொல்கிறேன் .அவர்களும் என்னை போல தான் நோ இணையம் நோ ஆன்லைன் ஒன்லி எம்ஓ ..:-(

      Delete
    3. ஒன்லி எம்ஓ? அப்படி என்றால்.

      Delete
    4. Money Order ஆ இருக்கும்னு நெனக்கிறேன்

      Delete
    5. கரெக்ட் j சார்...:-)

      Delete
  31. வாமன "டெக்ஸ்" (நன்றி:பொருளர் ஜி)--- விற்பனைக்கு வந்துள்ளதாங் சார்!!!

    ReplyDelete
  32. பனி மண்டல வேட்டை...


    அழகான அட்டைப்படம் ,அழகு மிகிர்ந்த சித்திர தரத்துடன் அறிமுக நாயகர் ட்ரெண்ட் தனது முதல் சாகஸத்தில் ஆஹோ ..ஓஹோ என பட்டையை கிளப்ப வில்லை தான் .ஆனால் போரடிக்காமல் அந்த பனி பிரதேசத்தில் நம்மையும் இணைத்து கொண்டு சவாரி வர செய்து விட்டார்.தன்னிலை பாணியில் நகரும் கதை களன் நீண்ட நாட்களுக்கு பிறகு .கெளபாய் வீர்ராக ட்ரெண்ட் கதை பாணியில் தென்படாமல் ஒரு டிடெக்டிவ் ,துப்பறியிம் நாயகராக தான் என் மனதுக்கு அறியபடுகிறார் என்றாலும் அந்த பாணியில் நாயகர் ட்ரெண்ட் வெற்றி பெற்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.மொத்தத்தில் ஒரே சாகஸத்தின் மூலம் நம் மனதிற்குள் ஆழமாக நுழைய வில்லை என்றாலும் நம் மனதை விட்டு தூரத்திற்கும் போக வில்லை.இனி இவரின் கதை கனமே இவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என அறிய முடிகிறது .

    எனவே மீண்டும் இவரை தரிசக்க குறையொன்றுமில்லை...

    ReplyDelete
  33. விஜயன், நமது இதழ்களில் தரம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அதேநேரம் இந்த இதழ்களுக்காக நீங்கள் அடிக்கும் குட்டிக்கரணங்களும் அதிகரிக்கிறது.

    சில வருடங்களுக்கு முன் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை குட்டிகரணங்கள் அடிப்பீர்கள், இப்போது மாதம் மாதம். எப்படி!!! நான் இரண்டு மாதங்கள் வேலையில் வேகமாக ஓடினால் அடுத்த சில வாரங்கள் கொஞ்சம் மெதுவாக ஓடுவேன். உங்கள் ஈடுபாடு எனக்கு பல விஷயங்களை சொல்கிறது. Hats off to you. :-)

    ReplyDelete
    Replies
    1. பரணி
      I think,,,,,,
      may be.... he is an workaholic

      Delete
  34. அன்பின் ஆசிரியருக்கு,

    வணக்கம். இந்த வருடத்தின் பெஸ்ட் கார்ட்டூன் கதைகள் நமது ஆண்டு மலரில் வெளியானதில் மகிழ்ச்சி. திசைக்கொரு திருடன் லக்கியின் ஆல்டைம் பெஸ்ட் கதைகளில் ஒன்றாக இருக்கக்கூடும். ஆரம்பத்தில் அந்த ஓவிய பாணியோடும்
    (கேமராவை சற்றே ஜூம்-இன் செய்தது போல அனைவரையும் கொஞ்சம் பெரிதாக வரைந்திருக்கும் பாணி, இதனை நம் நண்பர்கள் கவனித்தார்களா என்று தெரியவில்லை) அடர்த்தியான வண்ணங்களோடும் ஒட்ட சிறிது நேரம் பிடித்தது. ஆனால் கதையின் ஓட்டத்தில் அது பழகி விட டால்டன்களின் அதகளத்தை அதிகம் ரசிக்க முடிந்தது. மார்ஷல் டால்டனிலும் ரசித்துப் படிக்கும்படியான பல இடங்கள். ஆண்டு மலரில் பரம திருப்தி. ட்ரெண்ட் - அறிமுகக்கதை என்பதற்கான சலுகையை இவருக்குத் தரலாம். வெகு சாதாரணமான கதையை ஓவியங்களே தாங்கிப் பிடிக்கின்றன. சமீபமாக (டெக்ஸ் உட்பட) எக்கச்சக்க பனிப்பொழிவு சார்ந்த பகுதிகளில் பயணிக்கிறோமோ? ட்ரெண்டின் தலைவிதியை அடுத்தடுத்த கதைகளே தீர்மானிக்கக்கூடும். எரிமலைத்தீவில் பிரின்ஸ் கதையில் பழைய மொழிபெயர்ப்பையே தொடர்ந்து பயன்படுத்தி உள்ளீர்களா? நிறைய இடங்களில் ஒரு தொடர்ச்சியின்மை தட்டுப்படுகிறது. ஆனால் ஒரு கதையாக நிறைவான அனுபவம். இளம் டெக்ஸ் மட்டும் இன்னும் வாசிக்கவில்லை. நண்பர்களின் கருத்துகளைப் பார்க்கையில் ஜம்போவின் ஆரம்பமே அமர்க்களம் என்பது புரிகிறது. வெற்றி தொடர வாழ்த்துகள். நன்றி.

    பிரியமுடன்,
    கா.பா

    ReplyDelete
    Replies
    1. ///திசைக்கொரு திருடன் லக்கியின் ஆல்டைம் பெஸ்ட் கதைகளில் ஒன்றாக இருக்கக்கூடும்.///

      நிச்சயமாக சாா்! + 111

      கதையில் ஒரு விஷயம்!!

      நாம் இதுவரை டால்டன்களில் ஜோவையும், ஆவ்ரெலையும் நன்கு அறிவோம்!

      எதிரெதிா் துருவங்கள்!
      அதிமேதாவி - அடி முட்டாள் என்ற அளவில்!!

      அதேவேளை மற்ற இருவரையும் பொிதாக கண்டு கொள்ளவில்லை.

      ஆனால் அந்த இருவரும் தான் படுசமா்த்தா்கள் என்பதை இக்கதை வெளிப்படுத்தியிருப்பது, ரொம்பவே அருமை!

      Delete
    2. கோஸினி & மோாிஸ் கூட்டணிக்கு பிறகு இவ்வளவு அற்புதமான கதை உருவாகியிருப்பது "லக்கிலூக்"கிற்கு அழிவில்லை என்பதை உணா்த்துவதாகவே உள்ளது!

      மோாிஸின் கைவண்ணத்தில் அதிகம் பாா்த்துப் பழக்கப்பட்டதால் ஓவியா் "Achde"ன் பாணி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது உண்மை தான்; என்றாலும் டால்டன்களின் முகபாவங்களில் தனித்த கள்ளத் தனத்தை காண முடிகிறது!

      Delete
    3. //ட்ரெண்ட் - அறிமுகக்கதை வெகு சாதாரணமான கதையை ஓவியங்களே தாங்கிப் பிடிக்கின்றன.// //ட்ரெண்டின் தலைவிதியை அடுத்தடுத்த கதைகளே தீர்மானிக்கக்கூடும்.//

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. சார் ...மேலுள்ள அலசல்களில் நல்லது + சுமாரானது என இரண்டையுமே நண்பர்கள் குறிப்பிட்டிருக்க, சுமார் சமாச்சாரங்கள் மாத்திரமே உங்கள் கவனத்தை ஈர்ப்பதன் சூட்சமத்தை ஏதேனும் ஒரு மழை நாளில் கற்றுத் தாருங்களேன் ? நானுமே ஒரு நவீன யுக அன்னப்பட்சியாகும் ரகசியத்தை அறிந்து கொண்டது போலிருக்குமல்லவா ?

      Delete
    6. பாராட்டுக்கள் மட்டுமே இத்தளத்தில் விரும்பப்படுகிறது. கதைசரியில்லை என்று சொல்வது மிக மிக சொற்பமே. சரியில்லை என்று சொல்வது குற்றமா? அல்லது பாராட்டாமல் இருப்பது குற்றமா? தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டுவது எனது இயல்பு. காரணம் அத்தவறுகள் மீண்டும் ஏற்படவேண்டாம் என்ற எண்ணத்தினால்தான். தீபாவளி பலகாரம் சாப்பிட்ட பின்பு வீட்டில் உள்ள வயதான பாட்டி மருந்து கொடுப்பார்கள்; இனிப்பு திகட்டி உடநலத்திற்கு கேடு விளைவிக்கும் இம்மருந்தினை குடித்தால் உடல் நலம் சீராகும் என்றுதான். அப்படி எடுத்துக் கொள்ளுங்கள். மற்றபடி நான் குறைமட்டுமே கூறுகிறேன் என்று கருதவேண்டாம்.

      Delete
    7. வீட்டில் பாட்டி தருவது மருந்தை மட்டுமல்ல சார் !

      Delete
    8. நான்தான் கூறினேனே சாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று

      Delete
    9. குறைகளை நோில் சொல்வதும், நிறைகளை வெளியில் சொல்வதும் நல்ல மாண்பு என்று சொல்வதுண்டு!

      இது பொதுவெளி என்னும் போது,
      முடிந்தவரை நிறைகளை மட்டும் வெளிப்படுத்துதலே சாியாக இருக்கும்!

      குறைகள் இருப்பின் தனிப்பட்ட மின்அஞ்சல் முகவாிக்கு அனுப்பலாமே!

      Delete
    10. எனக்கு எங்க பாட்டீம்மாவின் ஞாபகம் வந்துடுச்சு! ப்பூஊஊஊவ்...

      பலகாரங்களை கண்ணுலயே காட்ட மாட்டாங்க. ஆனா 'வயத்துல பூச்சி வந்துடும்டா பயலே'ன்னு சொல்லி வேளாவேளைக்கு கசப்பு மருந்து மட்டும் தவறாமக் கொடுத்துப்புடுவாங்க!

      'ஆனா பாட்டி... நீ சமீபத்துல எந்தவொரு பலகாரமும் எனக்குக் கொடுக்கலியே?'ன்னு கேட்டதற்கு 'படுவா ராசுக்கோல்! போன தீபாளிக்கு முந்தின தீபாளி ஒரு கடுக்காய் மிட்டாய் கொடுத்தேனே மறந்துட்டியா? அதுக்குத்தான் இந்த கசப்பு மருந்து. கம்முனு குடி'ன்னாங்க!

      அப்புறமென்ன? கபால்னு பாய்ஞ்சு காதைக் கடிச்சுவச்சுட்டேன்!

      இப்போ எங்க பாட்டி இல்லை! ஆனா அவங்க கொடுத்த மருந்தோட கசப்பு மட்டும் நாக்குல அப்படியே தங்கிட்டமாதிரி ஒரு ப்பீலிங்!!

      மிஸ் யூ பாட்டீம்மா! ப்பூஊஊஊவ்...

      Delete
    11. Lion comics(fake ID) and mithunan. ஒரு விஷயம் நல்லா இல்லைன்னு சொன்னா தப்பா. இங்க நல்லா இருக்குன்னு மட்டும் தான் சொல்லனுமா?

      Delete
    12. ஈரோடு விஜய், உங்க டாக்டர் ஏற்கனவே ஸ்வீட் கொடுத்திருந்தால் தான் அவர் கொடுக்கும் கசப்பு மாத்திரையை சாப்பிடு வீர்களா என்ன? ஒருத்தர் நல்லா இல்லை என்று சொன்ன காரணத்திற்காக அவரை கட்டம் காட்டுவது சரியா?

      Delete
    13. //குறைகளை நோில் சொல்வதும், நிறைகளை வெளியில் சொல்வதும் நல்ல மாண்பு என்று சொல்வதுண்டு!//

      +9

      Delete
    14. நடுவால பூந்து பஞ்சாயத்து பண்ணும் ராஜ்ஜி@ போனபதிவில் Lion comics தன்னோட ஐடினு ஆசிரியர் சார் பதில் சொல்லி உள்ளார்...

      எதையும் பார்ப்பது இல்லை;நல்லா தெரிஞ்சிட்டு போலி ஐடினு போடுங்க ஜி.

      ///Parani from Bangalore29 June 2018 at 22:57:00 GMT+5:30
      Lion Comics @ விஜயன் சார், இது உங்க புது ஐடி யா?


      Vijayan30 June 2018 at 13:16:00 GMT+5:30
      //Lion Comics @ விஜயன் சார், இது உங்க புது ஐடி யா? //

      Yessss !////(பார்க்க போன பதிவில்)....

      அது எடிட்டரின் இன்னொரு ஐடினு கூட தெரியாம பஞ்சாயத்து பண்ண மட்டும் எப்படி ஜி வர்றீங்க????

      அப்புறம், அந்த நீங்கள் குறிப்பிட்ட கட்டம் கட்ட படுவதாக சொல்லப்படும் ஐடியின் முந்தைய கமெண்ட்களை பார்த்து உள்ளீர்களா????

      குறைகளை மட்டுமே அல்ல தனக்கு பிடிக்கலனாலும் அது நல்லாயில்லை என புலம்புவது மட்டுமே அந்த ஐடியின் வேலை....!!!!!
      நீங்களும் ரிவியூ எழுதறீங்க, நல்ல விஷயங்களை சொல்வீங்க;கடேசியாக குறைகளையும் சொல்வீங்க! அது மிகவும் நல்லது. நடுநிலையானது. அதனால்தான் உங்கள் ரைட்டிங்கிற்கு நாங்கள் எல்லாம் ஆண்டாண்டு காலமாக ரசிகர்கள் ஜி...!!!

      ஆனா, தனக்கு குறை மட்டுமே சொல்ல பிடிக்கும் னு ஒரு ஐடி சொன்ன பிறகும் அதற்கு வக்காளத்து வாங்குவது தங்களுக்கு முறையல்லவே....

      இப்பவும் இம்மாத இதழ்கள்ல நல்ல விசயங்களை பாராட்ட வேணாம், எடுத்து சொல்லிட்டு, குறைகளை பட்டியல் போடட்டுமே....!!!

      கமல்ட்ட கோட்பாரே, அந்த அப்பா "எங்கள் மகனை எதிர் பார்ப்பதற்கு ஒரு காரணமாச்சும் இருக்கா?" அது மாதிரி, அட 4புக்கில நல்லதா சொல்ல ஒரு காரணமும் அந்த ஐடிக்கு இல்லையா???

      Delete
    15. @ Raj kumar

      நல்லா இல்லை என்பதை சொல்வதற்கு மட்டுமே இத்தளத்திற்கு வருவது சாியா?

      அவருக்கு நல்லா இல்லை என்பதற்காக இனிமேல் இதுபோல் தவறு நடக்கக் கூடாது என்று சொல்வது சாியா?

      கதை பிடிப்பது பிடிக்காமல் போவது வேறு? அவருக்கு பிடித்திருந்தால் சாி, இல்லையென்றால் தவறு என்பது சாிதானா?

      கதை விமா்சனம் எப்போதும் ஏற்புடையதே! சொந்த விருப்பு வெறுப்புகளை தனிப்பட்ட முறையில் தானே வைத்துக் கொள்ள வேண்டும்?

      Delete
    16. நான் ஒரு விசயம் சொல்லட்டுமா? அந்த ஐடி இதுவரை ட்ரெண்ட் புக்கை திறந்தே பார்த்து இருக்க மாட்டாரு..!!

      மேலே இருந்து ஒவ்வொரு கமெண்ட்டா பார்த்துட்டே வந்து, எந்த கமெண்டல நல்லாயில்லைனு இருக்கோ, அங்க நிறுத்தி "+1" போட்டாரு போல...

      இந்த சந்தேகம் எனக்கு ரெம்ப நாளாகவே உண்டு...!
      ஒவ்வொரு தபா புக்வந்த உடன் ஒருபடி நேரத்திலோ, 4மணி நேரத்திலோ அல்லது அடுத்த நாள் யார் எப்படி நல்லாயில்லை னு போட்ட உடனே "+1" போடுவாரு இந்த ஐடி...

      அவராகவே இந்த கதையில் இந்த அட்டை சரியில்லை!
      களை மாக்ஸ் நல்லாயில்லை!
      இத்தியாதி, இத்தியாதினு எழுதியதே கிடையாது.. ...

      சரி அவருக்கு ஒரு சேலஞ்ச் வைப்போம், ட்ரெண்ட் நல்லாயில்லை னுட்னாரு.
      எந்த எந்த பக்கம் நல்லாயில்லை;
      எந்தசீன்லாம் தப்பு;
      எங்கெலாம் மொழி பெயர்ப்பு மொக்கை,
      ......இப்படி விளக்கட்டுமே???
      தயாரா????

      படிக்காமலே கண்ணை மூடிக்கொண்டு "+1" போடுறார்னு நினைக்கிறேன்...!!!

      Delete
    17. கூட்டத்திலொருவர் : "கனியிருப்ப காய் கவர்ந்தற்று! கனியிருப்ப காய் கவர்ந்தற்று!கனியிருப்ப காய் கவர்ந்தற்று!"

      தனியொருவர் : "காய் இருக்க கனி கவர்ந்தற்று! காய் இருக்க கனி கவர்ந்தற்று! காய் இருக்க கனி கவர்ந்தற்று! "

      இனிமே நான் வாழைப்பழத்தை உரிச்சு உள்ளேயிருக்கும் பழத்தைத் தூக்கிவீசிட்டு, தோலை மட்டும் சாப்பிடலாம்னு இருக்கேன்! பின்னே, அதில்தானே 'மருத்துவ' குணங்கள் அதிகம்னு ஊர்ப்பெரியவங்க பேசிக்கிடறாங்க!

      Delete
    18. நான் சொல்ல வருவது, ஒருத்தர் நல்லா இல்லை என்றால் என்ன நல்லா இல்லை என்று கேளுங்கள். ஆரோக்கியமான விவாதமாக இருக்கலாமே.நாலு தடவை என்ன தவறாக இருக்கிறது என்று கேளுங்கள். நிஜமாகவே தவறாக இருந்தால் தெரிய வ்ரும். இல்லை என்றால் சொல்ல தெரியாமல் போகப் போகிறார்

      Delete
    19. அதேதான் ராஜ் ஜி. பாயிண்ட பிடிச்சிட்டீங்க....!!!

      இப்ப இந்த ட்ரெண்ட் நல்லாயில்லை என சொல்லிட்டாரு....

      இதில் என்னென்ன நல்லாயில்லைனு வரிசையாக சுட்டிக் காட்டட்டும்...!!!!

      அவரின் பட்டியலையும், அதற்கான எடிட்டர் சாரின் பதில்களையும் பார்க்கலாம்....சுவையான விவாதமாக இருக்க கூடும் அல்லவா!!!!

      Delete
    20. டெக்ஸ் விஜய்
      "குறைகளை எங்களிடம் கூறுங்கள்.
      நிறைகளை நண்பர்களிடம் கூறுங்கள்"
      என்பது எல்லோருக்கும் தெரிந்த வாசகம்தான்.
      அதனை கடைபிடிப்பதும் கடைபிடிக்காத்தும் அவரவர் இஷ்டம்.இப்படி குறைகளை மட்டும் கூறும் பதிவுகளை நாம் தாண்டிச் செல்லலாமே.
      உங்கள் அனைவரின் பதில்களும் விழலுக்கு இறைத்த நீராய்தான் போகும்.

      Delete
  35. ட்ரென்ட் .......
    ஓகே ரகம் .....பார்ப்போம்......ஆக்சன் கம்மி

    ReplyDelete
    Replies
    1. ஆக்ஷனுக்கு இந்தத் தொடரில் அத்தனை முக்கியத்துவம் கிடையாது மந்திரியாரே ! மெல்லிய மனித உணர்வுகள் ; வித்தியாசமான பின்புலம் ; குழப்பமிலா கதைகள் என்பனவே இங்கே பிரதானமாய் சித்தரிக்கப்படும் !

      Delete
    2. Lion Comics

      இந்த ID க்கு சொந்தக்காரா் யாருங்க?

      லயன் காமிக்ஸ் நிா்வாகமா?

      வேற்று நபரா?

      Delete
    3. சூடா சுளுக்கு எடுக்குற கதையா இருந்தா ....சூப்பரா இருக்கும் .....

      Delete
  36. மறுபடியும் ஜெரிமையவா தாங்க முடியல சார்.

    ReplyDelete
  37. Waiting for ஜெரமயா! Super news sir!!

    ReplyDelete
  38. 3 மில்லியனைக் கடந்துட்டோம் நண்பர்களே! சபாஷ்!!!

    ReplyDelete
  39. Replies
    1. கண்டிப்பா ......
      எட்டு வழி சாலை அகலத்திற்கு வேணும்.....
      கண்டிப்பா கரீக்ட்டா சொல்றான் இந்த மந்திரி...

      Delete
  40. காமிக்ஸ்னா என்னாங்க?,

    ஓவியங்களில் லயித்து, அதன் வாயிலாக நகர்த்திச் செல்லப்படும் கதையை நுகர்வது...!

    இந்த யுக்தியை திறம்பட காட்டியிருக்கும் ட்ரெண்ட் அறிமுக கதை பிரமாதமான ஆரம்பத்திற்கு துவக்கப்புள்ளி.

    "வெளியே இரவின் பிடி இறுகிவிட்டது!
    பனிப்பொழவு ஓய்ந்து விட்டது!
    ஆனால் ஊதைக் காற்றின் சீற்றம்தான்
    சற்றும் தணிந்தபாடில்லை!"----

    ----- பனிமண்டல வேட்டையின் 6ம் பக்கம் இடது கீழ் கார்னர் பேனலின் டயலாக் இது.

    பனி மண்டலத்தில் நிலவும் சூழலை ஒற்றை பேனலில் தத்ரூபமாக காட்டும் காட்சி...!!!

    *அந்தக் கேபினின் பின்னேயுள்ள ஃபைன் மரங்களே நிழலாகத்தான் தெரிகிறது இருளின் இறுக்கத்தில்...

    *இரண்டு பனி போரத்திய ஊசி மரங்கள் வலது பக்கம் சாய்ந்து உள்ளது. பனிப் போர்வையின் எடையையையும் தாண்டி காற்று ஆதிக்கம் செலுத்துகிறது...

    *பட்டுப்போன இரு சிறு செடிகள் வெறும் குச்சியாக இருக்கின்றன. சூழலுக்கேற்ப வளைந்து கொடுக்கலனா ஜீவிக்க முடியாது என்ற இயற்கை பாடத்தை இயம்புகின்றன...

    *ஒற்றை சாளரத்தின் வழியே கசியும் மெல்லிய மஞ்சள் நிற ஒளி பனிக் குவியிலில் அலை அலையாக படிந்துள்ளது...

    ----ஓவிய உன்னதம் உச்சத்தில் அமைக்கப்பட்டிருக்கும் காட்சி, எத்தனை வலிமையாக....!!!

    தொடரும் அற்புதமான இயற்கை விருந்துக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு கூறுகிறது.

    பனி மண்டலத்தில் வாழ்க்கை எத்தனை கடினமானது என இந்த துவக்கப் பக்கங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

    இது நம்ம கண்ணின் வாயிலாக புலப்படவில்லையெனில், வரைபவர் என்னாங்க செய்ய முடியும்.

    இத்தகைய ஓவிய உன்னதத்தை தேடிப்பிடித்து நம் கைகளில் சேர்ப்பது மட்டுமே ஆசிரியர் சாரின் பணி. ரசித்து அதனை நுகர்வது நம் கைளில் தானே உள்ளது. தட தட வென புரட்டி விட்டு கதையும் இல்லை கத்தரிக்காயும் இல்லைனா யார்தான் என்ன செய்ய முடியும்????

    ReplyDelete
    Replies
    1. சார்...ரசனை பாணிகளுக்குத் தான் ஓராயிரம் பரிமாணங்கள் உண்டல்லவா ? சிலருக்கு கார்ட்டூன் என்றால் கல்கத்தா ரசகுல்லா போல் நாவில் எச்சில் ஊறும் ; சிலருக்கோ பாவக்காயாய் கசக்கும் ! சிலருக்கு "டெக்ஸ்" என்றால் சோறும் வேண்டாம் ; தண்ணீரும் வேண்டாம் ; சிலருக்கோ "டெக்ஸே வேண்டாம்" என்பது தான் தீர்வு ! என் போன்ற சிலருக்கு மெலிதாய் ஒரு சோகம் இழையோடும் கதைகள் பிடிக்கும் - தற்போதைய டிரெண்ட் போல ; சிலருக்கு அந்த வாசனையே வேண்டாமே என்ற எண்ணப் போக்கிருக்கும் ! So இதில் பிழையென்று யார் தரப்பிலும் விரல் நீட்ட முகாந்திரமிராது ; just a question of giving it time !

      Delete
    2. சார் நான் எண்ணியது சரிதான் என உங்களின் வார்த்தைகள் மூலம். புரிந்து கொண்டேன்.
      //மெலிதான ஒரு சோகம் இழையோடும் கதைகள் பிடிக்கும்-தற்போதைய டிரெண்ட் போல//
      ட்ரெண்ட்டிற்கு சோகம் இழையோடும் flashback ஏதும் உள்ளதா?
      ஆள் பார்க்க இளம் வயது jean claude vandamm போல இருந்தாலும் முகத்தில் ஒரு மெல்லிய சோகம் உறைந்திருப்பது போல் எனக்கு தோன்றியது.

      Delete
  41. " ஜம்போ காமிக்ஸ் "


    காற்றுக்கு ஏது வேலி ...

    படித்து இதழை முடித்த மறுகணம் இங்கே வருகிறேன் சார்..சூப்பர்..சூப்பர் ன்னு சொல்றதை தவிர வேறு எதுவுமே சொல்ல வார்த்தைகள் வர மாட்டேன் என்கிறது.அதுவும் க்ளைமேக்ஸ் கடைசி இரு பக்கங்கள் அப்படியே மனதுக்குள் ஒரு இனம் புரியா மகிழ்ச்சியை இன்னமும் ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது என்றால் டெக்ஸ் ,டெக்ஸ் தாண்டா என உதடுகள் கூக்குரல் இடுகிறது.டெக்ஸ்க்கும் அவர் குதிரை டைனமட்டுக்கும் உள்ள பிணைப்பு ,செவ்விந்திய தலைவன் கோசைஸ் அறிமுகம் என அவர் முன்காலத்தை அறிந்தது போல உடனடியாக அவர் எவ்வாறு ரேஞ்சர் பணிக்குள் வந்தார் ,கார்ஸன் டெக்ஸ் உடன் அறிமுகமாகியது எப்பொழுது எனவும் உடனடியாக அறிய ஆவல் ஏற்படுகிறது .அதற்கான சாகஸ இதழ் இருப்பின் உடனடியாக அதையும் விரைவில் வெளியிட பாருங்கள் சார்..


    காற்றுக்கு ஏது வேலி இதழின் மதிப்பெண் புத்தக தரம்,வடிவமைப்பு சித்திரம் ,கதை என எதிலுமே ஒரு துளி குறையுமின்றி முழுமதிப்பெண்களையும் அப்படியே பெற்று காமிக்ஸ் மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

    ReplyDelete
  42. * * * காற்றுக்கு ஏது வேலி * * *
    அட்டகாசம்
    ஓவியங்கள் மிக அருமை
    கண்களில் தெரியும் உணர்ச்சிகள் மிக அருமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது

    டெக்சின் ஸ்டைல் பட்டை கிளப்புகிறது அவரின் தெனாவெட்டு அதற்கும் மேலே
    வம்பன், கொம்பன் பட்டங்களுக்கு சொந்தக்காரர்
    வின் செஸ்டரின் அதிரடி நாயகன்
    துரோகிகளாக மாறும் நண்பர்களை துப்பாக்கி பயன் படுத்தாமல் நெற்றியடியாய் பதில் குடுத்து அவர்களின் மனசாட்சியை உலுக்குகிறார்

    கோசஸ் - சர்ப்ரைஸ் மீட்டிங்
    கோசஸ் கண்களிலும் டெக்ஸ் கண்களில் தெரிக்கும் அதே துள்ளல்
    சம பலம் பொருந்திய வீரரை கண்டவுடன் அதை அங்கீகரிக்கும் கண்கள்

    இறுதியில் வில் க்ரெமூரை, டெக்ஸ் நண்பனாக ஏற்று கொண்டு வழியனுப்பும் காட்சி மனதில் மகிழ்ச்சியும், அதை சமயம் நண்பர்களின் பிரிவு பாரத்தையும் தந்தது

    அவ்வப்போது டெக்ஸ் நிற்கும் போது உயரே ஒற்றை கழுகு பறப்பது போன்று காட்டி ஓவியர் நம் டெக்ஸ் ஒற்றை கழுகு என்பதை குறிப்பால் உணர்த்தியுள்ளார்

    ஜம்போவின் முதற் கதைக்கு மிக அருமையான தேர்வு ஆசிரியரே
    இளவயது டெக்ஸ் சிவகாசி பட்டாசு

    ReplyDelete
    Replies
    1. அருமையான விமா்சனம்!

      Delete
    2. நன்றி சகோதரர்களே :)

      Delete
    3. சகோதரி இவ்வளவு நீண்ட விமர்சனம் எழுதுவது இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன்!!!
      சூப்பர்!! அந்த அளவிற்கு இளம் டெக்ஸ் அனைவரையும் கவர்ந்திருக்கிறாரென புரிகிறது.

      Delete
    4. @rajendran A.T.
      உண்மைதான் சகோதரரே
      நன்றி சகோதரரே
      நலம்தானே சகோதரரே
      இம்மாதம் புத்தங்கள் கிடைக்க பெற்ற மகிழ்ச்சியில் உள்ளீர்கள் தானே (ஜம்போவை விடுத்து - கவலை வேண்டாம், வாங்கி விடலாம்)

      Delete
    5. நான் நலமே சகோ.நீங்களும் உங்கள் தாயாரும் நலமா? எங்கள் ஊரில் காமிக்ஸ் படிப்பவர்களே நாலைந்து பேர்தான் இருப்போம் போல.கூரியர் பெட்டிகள் வரும் போது பார்த்திருக்கிறேன்.
      கடைகளில் காமிக்ஸ் பற்றி கேட்டால் கிலோ என்ன விலை? என்று கேட்பார்கள்.
      எங்கள் ஊரில் பெல் புக் ஹவுஸ் என்று ஒரு கடை இருக்கிறது.நம் காமிக்ஸ் உள்ளட்டைகளில் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள் என்று அந்த கடையின் விலாசமும் இருக்கும்.ஆனால் காமிக்ஸ் இருக்காது. இரண்டு மாதம்முன் மறுபடி அந்த கடையின் பெயர் வர அங்கு போய் ஜம்போவை வாங்கிவிடலாமென நேற்று போய் கேட்கிறேன். "காமிக்ஸ் வருகிறதா?" என்று. "ஓ வருகிறதே!" என்று அங்கு பணிபுரியும் பெண்கள் சொன்னதும் "ஆஹா கைப்புள்ளே! நீ கொடுத்து வச்சவன்டா!!" என்று சந்தோஷத்துடன் நின்றால் போன வருட ஆங்கில டிங்கிள் காமிக்ஸை கொண்டு வருகிறார்கள். "நான் இதில்லை. ஜம்போ காமிக்ஸ் தமிழில் வரும் புத்தகம்" எனக்கூற மறுபடி உள்ளே போன அந்த பெண்மணி அட்டையில் யானை படம்போட்ட தமிழ் டிங்கிள் புத்தகத்தை கொடுக்க....
      எனக்கோ என் மண்டையில் நானே மனதால் கொட்டிக் கொண்டு பிடித்தேன் ஓட்டம்!!!

      Delete
    6. @ கடல் சகோ

      அனுபவிச்சுப் படிச்சிருக்கீங்க சகோ!! ஒவ்வொரு ஃப்ரேமையும் ரசிச்சுருக்கீங்க!!
      செமயான விமர்சனம்!!

      ஆச்சரியப்படுத்துகிறது!!

      Delete
    7. @rajendran A.T.

      //ஆங்கில டிங்கிள் காமிக்ஸை கொண்டு வருகிறார்கள். "நான் இதில்லை. ஜம்போ காமிக்ஸ் தமிழில் வரும் புத்தகம்" எனக்கூற மறுபடி உள்ளே போன அந்த பெண்மணி அட்டையில் யானை படம்போட்ட தமிழ் டிங்கிள் புத்தகத்தை கொடுக்க....
      எனக்கோ என் மண்டையில் நானே மனதால் கொட்டிக் கொண்டு பிடித்தேன் ஓட்டம்!!!//

      அப்பா என்னவொரு பயங்கர அனுபவம் தங்களுக்கு ஏற்பட்டுள்ளது சகோதரரே

      எங்கள் ஊரில் இதற்கு எதிர்
      தற்போது குறைந்தது 5 கடைகளிலாவது நமது காமிக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது ,அவர்களிடையே கடும் போட்டியும் நிலவுகிறது

      Delete
    8. @ஈரோடு விஜய்

      எப்போதும் படித்த அடுத்த நாளே கமெண்ட்ஸ் போட வேண்டும் என்று தான் இருப்பேன்.... முடியாமல் போய் விடும்...நானும் என் விமர்சனத்தை மறந்து விடுவேன்

      இம்முறை கண்டிப்பாக செய்தற்கான உந்துதல்
      நம் அட்டகாசமான டெக்ஸ் கதை தான் :)

      Delete
    9. //எங்கள் ஊரில் இதற்கு எதிர்
      தற்போது குறைந்த்து 5 கடைகளிலாவது நமது காமிக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது
      அவர்களிடையே கடும் போட்டியும்
      நிலவுகிறது//
      நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்!!! எங்கள் ஊர் கடைகளிலோ காமிக்ஸே வேண்டாம் என்பதில்தான் கடும் போட்டி நிலவுகிறது!!

      Delete
    10. @rajendran A.T.
      //எங்கள் ஊர் கடைகளிலோ காமிக்ஸே வேண்டாம் என்பதில்தான் கடும் போட்டி நிலவுகிறது!!//

      கூடிய சீக்கரத்தில் தங்கள் ஊரிலும் நம் காமிக்ஸ் பெயர் பெற்று விளங்க வேண்டுமென நான் வேண்டி கொள்கிறேன் சகோதரரே

      Delete
    11. உங்களது வாழ்த்து பலிக்குமானால் உங்களுக்கு எனது சார்பில் ஆயிரம் முறை நன்றியினை தெரிவிப்பேன் சகோ.
      பார்க்கும் பழைய நண்பர்களிடமெல்லாம் நமது காமிக்ஸினை கொடுத்து அவர்களை சந்தாவில் இணைக்க எண்ணி பல புத்தகங்களை இழந்த்துதான் மிச்சம்.இத்தனைக்கும் இவர்களெல்லோரும் அந்நாளில் மும்மூர்த்திகளின் ரசிகர்கள்!!!

      Delete
  43. போன மாதம் ஜம்போ சந்தாவுக்காக நண்பர் ஒருவரிடம் பணத்தையும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் செலானை எழுதியும் கொடுத்துவிட்டேன். என்னுடைய வீட்டிற்கும் வங்கிக்கும் தூரம் அதிகம்.நண்பருக்கோ அவர் வீட்டிற்கு போகும் வழியில்தான் வங்கி.அத்துடன் ஜம்போவுக்காக காத்திருந்தேன். இந்த மாதம் கூரியர் பெட்டியை வாங்கும் போதே எடை கம்மியாக இருக்க அங்கேயே பெட்டியை திறந்து பார்த்தால் ஜம்போ அம்போவாகி விட்டது. அவசரக் குடுக்கை மூளை நம் அலுவலகத்துக்கு ஃபோன் செய்து கேட்க சொல்லி உத்தரவிட எதற்கும் நண்பரிடம் ஒரு வார்த்தை கேட்போம் என்று இன்னொரு பக்கம் சிந்தனை ஓட( நல்ல வேளையாக அலுவலகத்துக்கு ஃபோன் பண்ணவில்லை) நண்பருக்கு ஃபோன் போட்டால் "எந்த செலான்? எந்த பணம்?" என்று கேட்டு வெறுப்பேற்ற நான் தெளிவாக கூறியதும் "சாரி நண்பரே! மறந்து விட்டேன்! ஹி...ஹி...!!" என்று இளிக்கிறார்.நான் கொடுத்த பணத்தையும் செலானையும் கொஞ்சம்கூட கசங்காமல் மடிப்பு கலையாமல் வீட்டிற்கு வந்து கொடுக்கிறார்.நானும் "சரி! இரத்தப்படலம்" புத்தகம் வாங்க இருக்கட்டும் என்று மனதை அமைதி படுத்தியபடி இருக்க இங்கே ஜம்போவின் வெற்றி பட்டாசாய் வெடிக்க எனக்கோ அந்த பதிவுகளை படிக்கையில் உடம்பு குளிர் ஜூரம் வந்த்து மாதிரி ஆகிவிட்டது. மனது "இங்கி பிங்கி பாங்கி"போட்டுக்கொண்டு இருக்கிறது!ஜம்போவா,இரத்தப்படலமா என்று!
    சோகத்தை மறக்க உதவியவர் ட்ரெண்ட்தான். அறிமுக கதையிலேயே மனதுக்கு நெருக்கமான ஃப்ரெண்ட்(friend) ஆகி விட்டார்.கதை முழுக்க அவருடன் நாமும் சேர்ந்து பயணித்த உணர்வு. அதிரடிகளோ,நாலாபுறமும் சீறிப்பாயும் தோட்டாக்களின் ஓசையும் இல்லாமல் "அமைதியான நதியினிலே ஓடம்" என்ற பாடலைக்கேட்கும் போது உண்டாகும் ஒரு மனதுக்கு இதமான உணர்வை ஏற்படுத்திய கதை.இரண்டாவது முறையாக வாசித்துவிட்டேன். அருமை!!
    ப்ரின்ஸ் ஏற்கனவே வாசித்த கதைதான்.
    கர்ணன் படத்தை டிஜிடலில் பார்ப்பது போன்ற உணர்வு.ப்ரின்ஸின் எல்லா கதைகளுமே வாசிப்புக்கு உகந்தவைதான்.இந்த கதையும் ஏற்கனவே ஹிட் அடித்த கதைதான்.பனிமண்டல கோட்டை நம் காமிக்ஸில் ப்ரின்ஸ் அறிமுகமான கதை என்று ஞாபகம்.அந்த கதையையும் இத்துடன் சேர்த்து ப்ரின்ஸ் ஸ்பெஷல் ஒன்று போட்டிருக்கலாம்.அதுவும் நல்ல கதைதான்.வரும் காலங்களில் அதுவும் வண்ணத்தில் ஆசிரியர் வெளியிடுவார் என நம்பலாம்.
    இறுதியாக லக்கி லூக்!
    இந்த கதையினை பொறுமையாக அனுபவித்து வாசிக்க வேண்டும்.போகிற போக்கில் புரட்டினால் நம் ஆசிரியரின் நய்யாண்டி வசனங்களையெல்லாம் மிஸ் பண்ண வேண்டி வரும்.நகைச்சுவை தூக்கலாக இருந்தாலும் நரசிம்மராவ் போலத்தான் முகத்தில் சலனமில்லாமல் படிக்க வேண்டி வரும் என்பதால் அதற்கான நேரத்துக்காக வெய்டிங்...!!

    ReplyDelete
  44. @Paranai from Bangalore
    புத்தங்களை பார்த்தாச்சா சகோதரரே ??

    ReplyDelete
  45. 3 மில்லியன் ஹிட்ஸ்!!!!

    இத்தளம் இப்படியொரு மைல்கல்லைக் கடக்கக் காரணமாய் அமைந்த

    * கூகுள்காரவுகளுக்கும்
    * சிவகாசிக்காரவுகளுக்கும்
    * (இத்தளம் உருவாகக் காரணமாய் இருந்த) சின்னச் சிவகாசிக்காரவுகளுக்கும்
    * பின்னூட்டம் போட்டு பின்னுபின்னுன்னு பின்னிவரும் நண்பர்களுக்கும்
    * சத்தமின்றி ரசித்துவரும் மெளனப்பார்வையாளர்களுக்கும்
    * தேய்ந்துபோன F5-keyகளுக்கும்

    நன்றி! நன்றி! நன்றி!!

    ReplyDelete
  46. //3 மில்லியன் ஹிட்ஸ்!!!!//

    Congrats காமிக்ஸ் ரசிகர்காs! :) Congrats Edit sir!

    ReplyDelete
  47. TODAY NIGHT EDI WILL ANNOUNCE 3 MILLION HIT SPECIAL ISSUE. (அப்படின்னு நினைக்கிறேன் )

    ReplyDelete
  48. 1. ஒரு மும்மூர்த்தி ஸ்பெஷல் (மாயாவி, ஜானி நீரோ அண்ட் லாரன்ஸ் டேவிட் நியூ ஸ்டோரி)
    2. ஒரு மூன்று ஹீரோ ஸ்பெஷல்

    ReplyDelete
  49. Trichy Vijai
    உங்களது பதிவுக்கு எனது ஆதரவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    ஆனால் இவர்களது புதிய கதை வரிசை எதுவும் கிடையாதென நினைக்கிறேன். அதனால் வெளியான கதைகளிலே நல்ல மூன்று கதைகளை ஒன்றாக வெளியிடலாம்.

    ReplyDelete
  50. பனி மண்டல வேட்டை - அட்டகாசம். இந்த மாத புத்தகத்தில் முதலில் படித்தது இந்த கதைதான். எனக்கு பிடித்து இருக்கிறது.

    பின்னூட்டம் 200 கடந்து விட்டதால் விமர்சனம் அடுத்த பதிவில்.

    ReplyDelete
  51. எங்கே நமது தளத்தின் "கிறிஸ்டோஃபர் நோலனை" காணோம்?
    நோலனின் படங்கள் எளிதில் புரியாது!
    நம் ஸ்டீலின் பதிவுகளும் அப்படித்தான்.பார்த்த உடனே புரியாது.பத்து தடவை படித்த பின்னர்தான் புரியும்!!
    வந்து 169 என்று பதிவிட்டு போனவர்.ஆளையே காணோம்.

    ReplyDelete