வணக்கம் நண்பர்களே, அநேகமாய் இது நம்மில் அனைவருக்குமே நிகழ்ந்திருக்குமென்று நினைக்கிறேன் :
புது ஊர்...பணிகள் முடிந்த கையோடு ஊர் திரும்பலாமென்றிருக்கும் நேரம் ; ரயிலுக்கு நேரம் நிறையவே இருக்கும் ! சாலையில் பராக்குப் பார்த்தபடிக்கே நடக்கும் போது எதிரே திடீரென ஒரு 'பளிச்' ஹோட்டல் கண்ணில்படும் ! 'அடடே...சூப்பரா கீதே ?!" என்றபடிக்கு உள்ளே விரைகிறோம் ! ஜிலீர் AC முகத்தை வருடித் தர - வரிசைகட்டி நிற்கும் மெத் மெத்தென்ற சோபாக்கள் நம்மைப் பார்த்துக் கூப்பிடுவது போலொரு பிரமை ! ஒய்யாரமாய் அமர்ந்தால் ஆறடியிலான பீம்பாய், தடிமனானதொரு மெனுவை நம்மிடம் நீட்டுவார் ! புரட்டினால் சும்மா கண்களுக்கும், புத்திக்கும் ஒரு விருந்தே எதிர்படும் ! "அடடே...பாஸந்தி இருக்கா ? சர்ர்ர்ர்....பானிபூரி கூட இருக்கு போல ? தோ பார்டா.....சில்லி இட்லியா ? சூப்பரு...சூப்பரு...! ஹ்ம்ம்ம்…பக்கத்து டேபிளுக்குப் போறது டிராகன் காளிபிளவரா…? ஆர்டர் பண்ணிட வேண்டியது தான் ....ஹை…. பாஸ்த்தா கூட இருக்கு போல ; சொல்லிப் பார்ப்போமா..? அச்சோ...எதிர் டேபிள்லே அந்த ஆசாமி விழுங்கும் பலூடாவைப் பார்த்தாக்கா மெர்சலா கீதே !!"” என்றபடிக்கே மூளைக்கும், நாவுக்குக்குமிடையே ஒரு ஜலப் பிரவாக சம்பாஷணை ஓடும் பாருங்கள் - அந்த நொடியில் வயிறு ஒரு நெல் கிட்டங்கியாய் மாறிடக் கூடாதா ? என்பது போலொரு ஆதங்கம் எழும் ! ஆனால் "இதுவா-அதுவா ? ஒற்றை ஆளுக்கு அது கொஞ்சம் ஜாஸ்தியோ ? காரத்தை ஓவராய்த் தின்னுப்புட்டு காலைத் தூக்கிக் கொண்டு கிடப்பானேன் ?" என்பது மாதிரியான சிந்தனைகள் தலைக்குள் சுழன்றடிக்கும் போதே - பொறுமையிழந்த பீம்பாய் - "என்ன சார் சாப்பிடறீங்க ?" என்று வினவும் குரல் கேட்கும்! திருதிருவென முழித்தபடிக்கு "ஆங்...ரெண்டு இட்லி கொடுங்க !!"என்று சொல்லிவிட்டு அந்த மெனுவை பட்டென்று மூடி வைத்து விடுவோம் ! "இந்தக் கூத்துக்கு தான் இவ்ளோ நேரம் மெனுவை புரட்டுனியாக்கும் ?" என்பது போலொரு பார்வையோடு பீம்பாய் அகலும் போது, நாமோ ஐ,நா.சபையிலிருந்து அவசர சேதி வந்திருப்பது போல் செல்போனுக்குள் புதையும் பாவ்லா காட்டிக்கொண்டிருப்போம் ! மனக்கண்ணில் பாம்பே மீல்ஸ்களும் ; தந்தூரி ஐட்டங்களும் ; ஐஸ்க்ரீம்களும் அணிவகுத்து ஓட ; ராமநாதபுர மாவட்ட வறட்சிக்கே விடையாகிடக்கூடிய அளவுக்கு, வாய்க்குள் ததும்பிக் கிடக்கும் ஜொள் நீரை சத்தமில்லாது விழுங்கி விட்டு,தட்டில் மலர்ந்து கிடக்கும் இட்லிக்களைப் பிய்த்து போடத் துவங்கிடுவோம் - ஒரு மௌனப் பெருமூச்சோடு ! "அது வந்து - travel-லே இட்லி தான் best !" என்று நமக்கே ஒரு சமாதானமும் சொல்லிக் கொள்வோம் ! Phewww !!!
அநேகமாய் இது போன்ற அனுபவத்திலிருந்து நம்மில் யாருமே விதிவிலக்காக இருந்திருக்க இயலாது என்பேன் !! அது சரி - இதுக்கும் , இன்றைய பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ? சித்தே பொறுமை ப்ளீஸ் ; குட்டிக் கதை வரும் முன்னே - சம்பந்தம் வரும் பின்னே !
இப்போ cut பண்ணுனா - நேரா நடப்பு நாட்களுக்குத் திரும்புகின்றோம் ! ஜூலையின் சந்தோஷங்களோடே தொடரவிருக்கும் மாதங்கள் மீதான பணிகள், ஜரூராய் நடந்தேறி வருகின்றன! “இரத்தப் படலம்” சார்ந்த பணிகள் நம்மளவிற்கு முற்றிலுமாய் நிறைவுற்றிருக்க – அந்த 3 தடிமனான ஹார்ட்கவர் இதழ்களை நுழைத்திடும் slip-case க்கான காத்திருப்பு தொடங்கியுள்ளது ! அது மாத்திரம் வெளிமாநிலத்திலிருந்து வந்திட வேண்டிய சமாச்சாரம் என்பதால் ஆகஸ்ட் துவக்க நாட்களில் தான் நம் கைக்கு வந்து சேரும் போலும் ! So டப்பிக்குள் இதழ்களை அடைத்த கையோடு – அந்த “Code Name மின்னல்” என்ற ரவுண்ட் பேட்ஜோடு தயாராகிட வேண்டியது தான்! நம்மளவிற்கு எஞ்சியிருப்பது அந்த பேட்ஜை செய்து வாங்கும் வேலை மாத்திரமே ! So அக்கடாவென சேரில் சாய்ந்து உட்கார லேசாய் முற்பட்டு வருகிறோம் ! And பேட்ஜ் டிசைனை செய்து தர நண்பர்களுக்கு ஆர்வமிருப்பின் – most welcome too !!
ஆகஸ்ட் முழுமைக்குமே “இரத்தப் படலம்” மாத்திரமே என்பதால் – ஆண்டின் இறுதி quarter-ன் இதழ்கள் மீதான வேலைகள் துவங்கி விட்டன ! தடதடவென ஆண்டின் பெரும்பகுதி ஓட்டமாய் ஓடிவிட்டிருக்க – அடுத்த biggies என்று நம்மை எதிர்நோக்கியிருப்பன சிலபல ‘தல‘ வெளியீடுகளே !
- முழு வண்ணத்தில் – “சைத்தான் சாம்ராஜ்யம்” – color reprint செப்டம்பரிலும்.....
- வண்ணம் + b&w – “டைனமைட் ஸ்பெஷல்” – அக்டோபரிலும்......
- B&W-ல் தீபாவளி மலராக – ”காதலும் கடந்து போகும்” நவம்பரிலும்.....
slot ஆகிக் காத்துள்ளன ! ‘தல‘யின் பிறந்த நாள் தினமான செப்டம்பர் 30-ல் – இத்தாலியில் ஏதேதோ ஸ்பெஷல் வெளியீடுகளை போனெல்லி திட்டமிட்டிருக்க, அதே தேதியில் நாம் “டைனமைட் ஸ்பெஷலை” கையில் ஏந்திடலாமென்று நினைத்தேன்! “இ.ப.” பணிகள் முடிந்து விட்டதால் – இப்போதைக்கு எனது மேஜையை நிரப்பிக் கிடப்பது – மேற்படி டைனமைட்டே!! இதில் வரவிருக்கும் கதைகளைப் பற்றி அடுத்த மாதம் preview பார்த்திடலாமென்றும் நினைத்தேன் – நம்மவர் XIII மீதான கவனம் சற்றே ஓய்ந்த நிலையில் !
‘டைனமைட்டை‘க் கரை சேர்த்த கையோடு அடுத்த மெகாப் பணி – தொடரவிருக்கும் புது வருடத்தின் கதைத் தேர்வுகள் + அட்டவணை இறுதி செய்தல் தானென்பதால் – இப்போதே கிடைக்கும் சந்தடி சாக்குகளில் கதைகளை மேயத் தொடங்கியுள்ளேன்! வருடத்தின் இந்தத் தருணம் தான் – இந்தப் படைப்பாளிகளின் பிரம்மாண்டத்தை எண்ணி மேலும் மேலும் வாய்பிளக்கும் வாய்ப்புகளைத் தருகின்றது! ஷப்பாடி… எத்தனை எத்தனை வித விதமான ஜானர்கள் ; எத்தனை எத்தனை பரீட்சார்த்த முயற்சிகள்?!! இவர்களெல்லாம் மனுஷப் பிறவிகளே கிடையாது ; அசுரர்கள் ; ஜாம்பவான்கள் ; தெய்வப் பிறவிகள் !!
👀“ஹாரர்” கதை வரிசைகளுக்குள் புகுந்தால் – மிரளச் செய்யும் variety சிதறிக் கிடப்பதைப் பார்க்க முடிகிறது! ஏற்கனவே நாம் விவாதித்த Zombie கதைகள் இங்கும், அங்கும் கொட்டிக் கிடக்கின்றன! நமக்குத் தான் அந்த அருவருப்பான ஜென்மங்களை நம் வாசிப்புக் குடையினுள் புகுத்திக் கொள்ளும் பிரியம் எழமாட்டேன்கிறது; ஆனால் ஐரோப்பிய & அமெரிக்க காமிக்ஸ் ரசிகர்கள் இந்தச் செத்தும், சாகாத அழகு சுந்தரன்களோடு வாஞ்சையோடு தோளில் கைபோட்டுக் கொள்கிறார்கள்!! அதே போல Monsters சார்ந்த கதைகளும் ஏராளமோ ஏராளம் !
👀 நேற்றைக்கு வரவழைத்ததொரு மூன்று பாக ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்தாலே கபாலத்தில் மீதமிருக்கும் ரோமக்கால்கள் குத்திட்டு நிற்காத குறை தான்! மனிதன் பாதி – மிருகம் பாதி – என்பது போலொரு அசுர உருவம் கேசரி சாப்பிடுவது போல ஒரு ஆசாமியின் குடலை உருவி வாய்க்குள் தள்ளிக் கொண்டுள்ளது! ‘லாஜிக்‘ என்றதொரு சங்கிலியை அந்த ஊர் மார்வாடி நண்பரிடம் தற்காலிகமாய் ஒப்படைத்து விட்டு –படைப்பாளிகள் தங்களின் கற்பனைக் குதிரைகளுக்கு ஒரு லோடு ரம்மை ஊற்றிக் கொடுத்து விடுகிறார்கள் என்பது நொடியில் புரிந்தது. வண்ணத்தில் அந்தச் சித்திரங்களைப் பார்த்தால் ஒவ்வொரு பக்கமும் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் பிரம்மாண்டத்தோடு போட்டி போடுவது அப்பட்டமாய்த் தெரிகிறது! நமக்கு மட்டும் லாஜிக் சார்ந்த templates அவசியப்படாதிருப்பின் இந்த முப்பாக ஹாரர் த்ரில்லர் மீது நிச்சயம் ஒரு பெரிய ‘டிக்‘ அடித்திருப்பேன்! A stunning visual masterpiece !!
👀அதே போல பரபரவெனப் பயணிக்கும் சைக்கோ கொலைகாரன் plot கொண்டதொரு ஆல்பத்தையும் படித்துப் பார்த்தேன் (அதாவது, கதைச்சுருக்கம் சகிதம் பக்கங்களைப் புரட்டினேன் !! !!) ஆளரவமில்லாத் தீவு ஒன்றில் குழுமும் நண்பர்கள் குழுவில் ஒவ்வொரு உருப்படியாய் பரலோகம் போய்ச் சேருகிறது ! அட… சுவாரஸ்யமாக உள்ளதே ?! என்றபடிக்குப் பக்கங்களைப் புரட்டினால் – திடுமென ‘அடல்ட்ஸ் ஒன்லி‘ சமாச்சாரங்களின் தாக்குதல், உலகக் கோப்பையில் பெல்ஜியத்தின் கோல்களைப் போல் அதிரடியாய்த் துவங்கின ! பழைய தமிழ் சினிமாப் படங்களில் வருவதைப் போல,அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சார சீன்களில் மொக்கையான சூரியகாந்திப் பூக்களை உட்புகுத்தினாலுமே, பிரேம்களில் விரசத்தை அணைகட்ட முடியாதென்று புரிந்தது! ஒரு பௌன்சரைச் சமாளிப்பதிலேயே பிராணனில் பாதி காலாவதியான நிலையில் மேற்கொண்டும் வில்லங்கத்தை விலை தந்து வாங்குவானேன்? என்று தோன்றிட – ‘டப்‘பென்று அந்தப் பக்கங்களை மூடி விட்டேன்!
👀கௌபாய் + fantasy + திகில் என்ற ஒரு வித்தியாசமான கூட்டணியில் கதையொன்று கண்ணில் பட, அதனையும் நெட்டில் தேடிப் பிடித்து அலசினேன் ! கதை நெடுகிலும் குதிரை போட்டிருக்கும் அதே அளவு துணியை மட்டுமே நாயகியும் போட்டிருக்க, பக்கங்களைப் புரட்ட புரட்ட – ஜேஸன் ப்ரைஸ் மாதிரியான கதைக்களம் என்று தோன்றியது ! "அட… ஜே.பி. ஹிட் தந்த கதைபாணியாச்சே ? – அதனைத் தொடர்ந்திட இதுவொரு வாய்ப்பாக அமையுமோ?" என்ற ஆர்வம் மேலோங்கியது! ஆனால் கதை நகர, நகர fantasy சமாச்சாரங்கள் டாப் கியரைத் தொட்டு விட்டது போல - பூதம்; பிசாசு ; சாத்தான் என்று ஏதேதோ தாண்டவமாடத் தொடங்கின! ”ஆத்தாடியோவ்… விட்டலாச்சாரியா காலமெல்லாம் மலையேறி ஏகப்பட்ட மாமாங்கங்கள் போயே போச்சு! இந்நேரத்தில் இது வேலைக்கு ஆகாதுடோய்‘” என்று தீர்மானித்து ஓட்டம் பிடித்தேன்!
சரி… 2019-ஐ கிராபிக் நாவல்களால் கலக்கலாமென்ற ஆர்வத்தோடு – ஏற்கனவே போட்டு வைத்திருக்கும் பட்டியலோடு, புதுத் தேடல்களையும் தொடங்கினேன்! கற்பனைகளுக்கு வானம் கூட எல்லையாகாது என்பதை umpteenth தடவையாகப் புரிந்து கொள்ள முடிந்தது! இன்ன தான் கதைக்கள வரையறைகள் என்றில்லாது – just like that வாழ்க்கையின் சகல பரிமாணங்கள் பக்கமும் பார்வைகளை ஓடவிடுகிறார்கள்!
👍 கர்ப்பமடையும் பெண்ணொருத்திக்கு பிரசவத்தில் சிக்கல்கள் இருக்கக் கூடுமென்பதால் டாக்டர்கள் முழு ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள் - 5-ம் மாதம் முதலாக ! வேறு வழியின்றி ஓய்ந்து கிடக்கும் போது வாழ்க்கையை ஒரு புது கோணத்தில் பார்க்கிறாள் அந்தப் பெண்! நேற்று வரை பரபரவென உலகத்தோடு தானுமே ஓடித் திரிந்த போது கவனித்திரா எக்கச்சக்க சமாச்சாரங்கள் இன்றைய ஓய்வில் அவள் கண்ணுக்கு எட்டுகின்றன ! இது தான் ஒரு ஆல்பத்தின் களமே !! என்னவொரு தைரியமென்று வியக்க மட்டுமே முடிந்தது !
👍 முதல் உலகப்போரின் போது நிகழ்ந்ததொரு நிஜ சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு இன்னொரு ஆல்பத்தை தரிசித்தேன்! பிரெஞ்சு – ஜெர்மானிய எல்லையை ஒட்டியதொரு பகுதியில் 1300 பேருக்கும் அதிகமான மனநோயாளிகளைப் பராமரிக்கும் ஒரு காப்பகம் உள்ளது! நாஜிக்களின் படை நெருங்கிட, தலைமை டாக்டர்களும், காவலர்களும் ஓட்டம் பிடிக்கின்றனர். எஞ்சியிருக்கும் செவிலியரும் பணியாளர்களும் அந்த நரக சூழலைச் சமாளிப்பதே இந்த ஆல்பத்தின் கதைக்களம்! உணவு இருப்பு பூஜ்யம்; மருந்து – மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு! மனதை உருக்கும் ஒரு ஜீவ மரணப் போராட்டம்! நெருங்கும் பனிக்காலத்தில் இதை சாமான்ய மக்கள் சமாளிப்பதே இந்த ஆல்பத்தின் முதுகெலும்பு ! “அட… மறுக்கா அழுகாச்சிக் கதைகளா? வாணாமே”? என்று நம்முள் பலமாய் அலாரம் அடித்திடக் கூடுமென்பதால் இது போன்ற ஆல்பங்களைப் பெருமூச்சோடு தாண்டிட வேண்டி வருகிறது!
👍 இன்னொன்றோ – செம சிரிப்பு + செம டிராஜெடி கலந்ததொரு படைப்பு! ‘படம் எடுக்கிறேன் பேர்வழி‘ என்று ஒரு புது டைரக்டர் பட்ஜெட்டை எக்குத்தப்பாய் எகிறச் செய்து விடுகிறார்! படமும் முடிகிறது ; ஆனால் பட்ஜெட்டோ கூரையைப் பிய்த்துக் கொண்டு எங்கோ சென்று விடுகிறது ! 20 மடங்கு கூடிப் போன செலவை என்ன செய்தாலும் ஈடு செய்ய இயலாதென்று புரிந்த கணத்தில் ரௌத்திரம் கொள்ளும் தயாரிப்பாளர், ஆத்திரத்தில் மொத்த பிலிம் சுருள்களையும் தூக்கிப் போய் எங்கோ ஒரு வனாந்திரத்தில் குழி தோண்டிப் புதைத்து விடுகிறார்! நாட்களின் ஓட்டத்தோடு, அந்தச் சுருள்களும் மாயமாய் மறைந்து போகின்றன! பின்னாளில் அதைத் தேட முற்படுவதே இந்த ஆல்பத்தின் ஓட்டம் !
👍 ஒரு சர்வதேச வல்லரசின் வரலாற்றுத் தலைவர் அவர்! இரும்புக்கரத்தோடு பரந்து விரிந்த தேசத்தையே ஆள்பவர்! ஒரு நாளிரவு மனுஷன் இறந்து போகிறார்! சகலமுமாய் இத்தனை காலம் நின்றவர் சவமான மறுகணமே அடுத்தகட்டப் பொறுப்பிலிருக்கும் மனிதர்களின் பதவி வெறிகள் உந்திக் கொண்டு வெளிவருகின்றன! தலைவரின் சாவை வெளியுலகிற்கு அறிவிக்காது – அதற்கு முன்பாய் தத்தம் ஆதாயங்களை கணக்கிடுகிறது அதிகார மையம்! யதார்த்தத்தை; வரலாற்றை – பகடியோடு சொல்கிறார்கள்! க்ரீன் மேனர் பாணியில் ஒரு வித கார்ட்டூன் ஸ்டைல் சித்திரங்களுடன் கலக்குகிறது தான்! ஆனால் வரலாறு சார்ந்த விவகாரம்; நம்மூர்களில் வேறுவிதமாய் பார்க்கப்படலாம் என்பதால் தைரியம் நஹி – இதனுள் தலைநுழைக்க!
👍 இன்னொரு “வெட்டியான்” பற்றிய கதை! இவனுமே ஒரு விவேகமான பார்ட்டி தான்! புக் படிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவன்! தொழிலுக்கும், சுபாவத்துக்கும் துளியும் தொடர்பிலா ஆசாமி! தொல்லையைக் கண்டு தெறித்து ஓட நினைக்கும் போதெல்லாம் அது இவனை இறுகத் தழுவிக் கொள்கிறது! அதே வன்மேற்குக் களம் தான் & சித்திரங்களுமே semi-cartoon பாணியில்! பொறுமையாய் கதையை வாசித்த பின் – நாம் எதிர்பார்க்கும் கதையோட்டம் ; ஆக்ஷன் என்றான templates missing என்பது புரிந்தது! சாரி ப்ரோ… எங்ககிட்டே இருக்கும் அந்த அண்டர்டேக்கரே இப்போதைக்கு போதும் ! என்படிக்கு நடையைக் கட்டினேன்!
👍 Sci-fi ரகக் கதைகள் ஒரு வண்டி காத்துக் கிடக்கின்றன! எப்போதும் போல அவற்றை இம்முறையும் பராக்குப் பார்த்த கையோடு டாட்டா காட்டி விட்டுக் கிளம்பத் தான் முடிகிறது! Incals; Metabarons; Valerian – என்று பிரான்கோ-பெல்ஜியத்தில் மாத்திரமின்றி – ஏகமாய் பல வேற்று மார்கெட்களிலும் சாதனைகள் செய்துள்ள கதைகளை நாம் (சு)வாசிக்க நாள் என்று புலருமோ ?
பெருமூச்சு விடும் கணத்தில், கட் பண்ணிய கையோடு நேராக இந்தப் பதிவின் துவக்கத்துக்குப் போலாமா ? அந்த ஹோட்டல் ; மெனு ; குழப்பம் ; இறுதியில் இட்லி என்ற விவரிப்பை இப்போது மறுக்கா படியுங்களேன் - ப்ளீஸ் ? லேசாய் ஒரு தொடர்பு ; ஒரு சம்பந்தம் இருப்பது புரிந்திடுமென்று நினைக்கிறேன் !
Variety எனும் மெனுவிலிருந்து,வித்தியாசமாய் ஆர்டர் செய்திட ஆசையிருக்கும் தான்; ஆனால் பயணத்தின் போது, கண்டதையும் தின்னு வயித்தைக் கெடுத்துப்பானேன்? என்ற முன்ஜாக்கிரதையும் தலைதூக்கும் ! அதே dilemma தான் நமக்கும் - இந்தக் கதை தேர்வுகளில் ! ! லேசாய் வித்தியாசம் காட்ட எண்ணி கனடாவின் போலீஸ்காரரைக் களமிறக்கிய மறுகணமே ”ஆக்ஷன் கம்மி! ஊஹும்…!” என்ற அபிப்பிராயங்கள் சுற்றி வர – “டெக்ஸ் வில்லர் இட்லிகளும்; தோர்கல் வீட்டு தோசைகளும்; லக்கி லூக் பொங்கலுமே போதுமோ?” என்ற மகா சிந்தனை எழுகிறது! விற்பனை எனும் அளவுகோல்களில் மட்டுமல்லாது - நம் சின்னவட்டத்தின் பெரும்பான்மைக்கு உகந்த ரசனை எனும் அளவுகோலிலும் நமது mainstream, commercial நாயகர்களே பிரதான இடம்பிடித்துத் தொடர்கிறார்கள் எனும் போது - பரீட்சார்த்த முயற்சிகள் பக்கமாய் நாம் அதிக கவனம் தர சாத்தியப்பட மாட்டேன்கிறது ! இதில் யார் மீதும் தவறும் இல்லை எனும் போது - நீள நீளமான மெனுக்களின் மீது ஒரு ஏக்கப் பார்வையை மட்டுமே வீச முடிகிறது !
ச்சை! எனக்கு இந்தப் பெ-ரி-ய மெனுக்களே புடிக்காது!!!
Bye folks! See you around !!
P.S : கலர் டெக்ஸ் தொகுப்பு ஜூலை 15-ல் ஆன்லைனில் விற்பனைக்கு வந்திடும் ! இதன் அட்டைப்படம் - 'தல' தேசத்திலிருக்கும் ஒரு 'தல' ரசிக / ஓவியர் நமக்காக வரைந்து தந்துள்ள சமாச்சாரம் ! நாம் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் டெக்சின் முகத்தில் இத்தனை களையைக் கொணர சாத்தியமாவதில்லை ! ஆனால் இத்தாலிய ஓவியருக்கோ - இது செம சுலபமாய் முடிகின்றது !! Classic !!!
Wow tex
ReplyDeleteநன்றில
Deleteகலர் டெக்ஸ் தொகுப்பு அட்டைப் படம் சூப்பர்
ReplyDelete3rd
ReplyDeleteHi
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்.
ReplyDelete5th..!
ReplyDeleteஅதுக்குள்ள ஆறாவதா இறக்கி விட்டுட்டீங்களே..?
Deleteஇன்னும் 28 நாள் தான் ஈபுவிக்கு. நண்பர்களை சந்திக்கப் போறோம்னாலே குஷியா இருக்கு.
ReplyDeleteஉண்மை ஆவலுடன் வெயிட்டிங் :))
Delete.
நேனும் ஆர்வங்கா வெய்ட் சேஸ்தானு..வண்டி வண்டி..!!
Deleteபோங்க ன்றதுக்கு போன்டி ன்னா வாங்க ன்றதுக்கு வண்டிதானே??(நன்றி -சபாபதி)
ஆட்டம் ஹே,பாட்டம் ஹே,கொண்டாட்டம் ஹே.
Deleteஆஹா
Deleteவந்தாச்சி.
ReplyDeleteலக்கி லூக்- ஸ்டேட் பாங்க் ஆப் டால்டன் பாங்கை கொள்ளை அடிக்கும் டால்டன் சகோதரர்கள் பாங்க் நடத்த ஆரம்பித்தால் எப்படி இருக்கும்? வித்தியாசமான சிந்தனை.
ReplyDeleteஇவர்களின் மாமா ஒரு ஜென்டில்மேன். பத்தடிக்கு ஒரு திருடன் வழி மறிப்பது அவர்கள் தங்கள் பேன்ட்டை பிடித்துக் கொண்டு ஓடுவது; அவர்கள் ஒவ்வொருக்கும் பாம்பு குடும்ப பெயரை வைத்து இருப்பது சிறப்பு.
இறுதி முடிவு நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தால் என்னவாகும் என்று பலமொழியை நினைவுபடுத்தியது.
லக்கியின் இந்த கதை வழக்கம் போல் சிரிப்பு தோரணம்.
ஆஹா...நடுசாமத்திற்குள்...நன்றி சார்...:-)
ReplyDeleteமுன்மாலை பதிவுதானே நாம கேட்டோம் தலீவர்!
Deleteநண்பர்களின் வேண்டுகோளை ஏற்று முன்மாலையிலேயே பதிவிட்டதற்கு நன்றிகள் சார்....
///கர்ப்பமடையும் பெண்ணொருத்திக்கு பிரசவத்தில் சிக்கல்கள் இருக்கக் கூடுமென்பதால் டாக்டர்கள் முழு ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள் - 5-ம் மாதம் முதலாக ! வேறு வழியின்றி ஓய்ந்து கிடக்கும் போது வாழ்க்கையை ஒரு புது கோணத்தில் பார்க்கிறாள் அந்தப் பெண்! நேற்று வரை பரபரவென உலகத்தோடு தானுமே ஓடித் திரிந்த போது கவனித்திரா எக்கச்சக்க சமாச்சாரங்கள் இன்றைய ஓய்வில் அவள் கண்ணுக்கு எட்டுகின்றன ! இது தான் ஒரு ஆல்பத்தின் களமே !! என்னவொரு தைரியமென்று வியக்க மட்டுமே முடிந்தது ! ///
ReplyDeleteஆா்வத்தை தூண்டும் கதைக்களம்!
ச்சை! இந்த இட்லி கதையே புடிக்காது!
நமக்குத் ஆரியபவன், சரவண பவன் மெனு தான் சார் இப்பொழுது. மற்றவை எல்லாம் மெனு கார்டில் பார்த்து ரசிக்க வேண்டியது தான்.
ReplyDeleteஇட்லி கட்சியா சார் ? அஜீரணம் அண்டாது தான் !!
Deleteஹா ஹா!! அட்டகாசம் எடிட்டர் சார்!!
ReplyDeleteஹோட்டல் மெனுவையும், அடுத்த வருடப் பட்டியலுக்கான உங்கள் அலசல்களையும் தொடர்புபடுத்திய விதம் - செம்ம!!
குறிப்பாக, அந்த ஹோட்டலில் இட்லியை தேர்ந்தெடுத்ததற்காக காரணம் ////அது வந்து - travel-லே இட்லி தான் best !"/// - ஹா ஹா ஹா!!
இத்தாலிய 'தல' ரசிகர் (நமக்கே நமக்காகவா?!!) வரைந்து கொடுத்த அட்டைப்பட ஓவியம் - அபாரம்!! அந்த இத்தாலி நண்பருக்கு நம் சார்பாக வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துவிடுங்கள்!!
மாலை வணக்கம் சார்.
ReplyDeleteவணக்கங்கள் நட்பூஸ்...
பதிவை பார்த்துட்டு வர்றேன்...!!!
உள்ளேன் ஐயா..!!
ReplyDeleteHi..
ReplyDeleteமெதுவா நிதானம் என்ற வார்த்தைகளே நமக்கு பிடிக்காது நமக்கு தெரிஞ்ச தெலாம் Lமால் தடால் அப்டி ஒரு வசனம் பிரின்ஸ் கதையில் வரும் அந்த மாதிரிதா நமக்கு கதைத் தேர்வும்
ReplyDelete///கதை நெடுகிலும் குதிரை போட்டிருக்கும் அதே அளவு துணியை மட்டுமே நாயகியும் போட்டிருக்க ///
ReplyDeleteஹாஹாஹா...!!!
///மனிதன் பாதி – மிருகம் பாதி – என்பது போலொரு அசுர உருவம் கேசரி சாப்பிடுவது போல ஒரு ஆசாமியின் குடலை உருவி வாய்க்குள் தள்ளிக் கொண்டுள்ளது!///
ஈஸ்வராஆஆஆஆ....!!!
///கர்ப்பமடையும் பெண்ணொருத்திக்கு பிரசவத்தில் சிக்கல்கள் இருக்கக் கூடுமென்பதால் டாக்டர்கள் முழு ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள் - 5-ம் மாதம் முதலாக ! வேறு வழியின்றி ஓய்ந்து கிடக்கும் போது வாழ்க்கையை ஒரு புது கோணத்தில் பார்க்கிறாள் அந்தப் பெண்! நேற்று வரை பரபரவென உலகத்தோடு தானுமே ஓடித் திரிந்த போது கவனித்திரா எக்கச்சக்க சமாச்சாரங்கள் இன்றைய ஓய்வில் அவள் கண்ணுக்கு எட்டுகின்றன ! இது தான் ஒரு ஆல்பத்தின் களமே !! என்னவொரு தைரியமென்று வியக்க மட்டுமே முடிந்தது ! ///
ReplyDeleteஆல்ஃப்ரெட் ஹிட்சாக்கின் ரியர் விண்டோ படத்தை நினைவூட்டும் கதைக்களம்.!
படத்தில் ஹீரோ காலில் அடிபட்டு வீட்டோடு கிடப்பார்.கதையிலோ கர்ப்பவதி ஓய்வெடுக்கிறார்!
சுவாரஸ்யமான கதை சொல்லும் பாணியெனில் இக்கதையை பரிட்சித்துப் பார்க்கலாம்னு தோணுது சார்..!
ஏனோ தெரியலை - ஆனாக்கா குற்றால அருவிக்கரையில் உடம்பு முழுக்க எண்ணெயைத் தேய்த்து விடும் காட்சியே எனக்கு மனசில் வந்து வந்து போகுது !!
Delete// 👍 ஒரு சர்வதேச வல்லரசின் வரலாற்றுத் தலைவர் அவர்! இரும்புக்கரத்தோடு பரந்து விரிந்த தேசத்தையே ஆள்பவர்! ஒரு நாளிரவு மனுஷன் இறந்து போகிறார்! சகலமுமாய் இத்தனை காலம் நின்றவர் சவமான மறுகணமே அடுத்தகட்டப் பொறுப்பிலிருக்கும் மனிதர்களின் பதவி வெறிகள் உந்திக் கொண்டு வெளிவருகின்றன! தலைவரின் சாவை வெளியுலகிற்கு அறிவிக்காது – அதற்கு முன்பாய் தத்தம் ஆதாயங்களை கணக்கிடுகிறது அதிகார மையம்! யதார்த்தத்தை; வரலாற்றை – பகடியோடு சொல்கிறார்கள்! க்ரீன் மேனர் பாணியில் ஒரு வித கார்ட்டூன் ஸ்டைல் சித்திரங்களுடன் கலக்குகிறது தான்! ஆனால் வரலாறு சார்ந்த விவகாரம்; நம்மூர்களில் வேறுவிதமாய் பார்க்கப்படலாம் என்பதால் தைரியம் நஹி – இதனுள் தலைநுழைக்க!//
ReplyDeleteஆமா. கொஞ்சம் ஜாக்கிரதை சார். சமீபத்தில் இறந்த ஒரு அரசியல் பெண் தலைவர் கதை போல இருக்கு, கட்டி தூக்கிட்டு போய் விடப் போறாங்க.
அந்தக் கதையைப் போட்டாத் தானென்றில்லை ; போடாங்காட்டியுமே கட்டித் தூக்கிப் போகத் தான் ஒரு அணியே தயாராக உள்ளதே !!
Deleteஎடிட்டர் சார்,
ReplyDeleteபோன வருசம் விதம் விதமான கி.நா'களை கண்ணில் காட்டி வாசிப்பு அனுபவத்தின் ஒரு புதிய சுவையை உணர வச்சீங்க! மனித ரத்தத்தின் சுவையறிந்த சிறுத்தைப் புலி கணக்கா நாங்களும் நாக்கைத் தொங்கப்போட்டுட்டு கி.நா'க்காண்டி இந்த வருசமும் காத்துக்கிட்டிருந்தோம்... ஆனா இப்பவரைக்கும் இக்ளியூண்டு இரத்த வாடைகூட வரலை..!
அடுத்த வருசமாவது அஞ்சாறு கி.நா'க்களை கண்ணுல காட்டுவீங்கன்னு நம்பிக்கையோட காத்துக்கிட்டிருக்கோம்... ஆனா நீங்க 'இட்லியே போதும்'னு நினைக்கறதைப் பார்த்தா 'ஞே'ன்னு ஆகுது! சிறுத்தைப் புலிகளுக்கு சிக்கன்சூப்பை சூடுபண்ணிக் கொடுத்து அதுங்களை சினம்கொள்ள வைக்காதீங்க!
வீ வான்ட் மனித ரத்தம் - சூஊஊஊடா!!
சிறுத்தைப் புலிகளுக்கு குச்சிஐஸ் கொடுத்தா கூலாகிடாதா ? கிரேப் ஐஸா ? சேமியா ஐஸா ?
Deleteசூஊஊஊடா ரத்தம் கிடைக்கலேன்னா ஜில்லுனு குச்சிஐஸ் சாப்பிடறதுல அப்படியொன்னும் தப்பில்லையாம் - ஊருக்குள்ள பேசிக்கிடறாஹ!
Deleteஅதானால...
////அந்த ஹோட்டல் ; மெனு ; குழப்பம் ; இறுதியில் இட்லி என்ற விவரிப்பை இப்போது மறுக்கா படியுங்களேன் - ப்ளீஸ் ? லேசாய் ஒரு தொடர்பு ; ஒரு சம்பந்தம் இருப்பது புரிந்திடுமென்று நினைக்கிறேன் ! ///
ReplyDeleteங்ஙே ...!!!
அப்போ 2019 லயும் F&F க்கு வாய்ப்பு நஹி ஹேவா ...!!
நான் கோவமா போய் உப்புமா சாப்பிடுறேன்..!!
///நான் கோவமா போய் உப்புமா சாப்பிடுறேன்..!!///
Deleteநீங்க குஷியா போனாலும் அதே உப்புமாதானே கிடைக்கப்போகுது கிட்?!! ;)
///நான் கோவமா போய் உப்புமா சாப்பிடுறேன்..!!///
Deleteநாங்களெல்லாம் கொலைவெறியோடு இருக்கிறப்பதான் உப்புமா சாப்புடுவோம்.
பி.கு.
கொலைவெறியை கொலைப்பசி 'ன்னும் சொல்லலாம். தப்பில்லை.
ஏவ்! இட்லி சூப்பர். மறுக்கா சாப்பிடனும் போல இருக்கு.ஏவ்...
Delete// நான் கோவமா போய் உப்புமா சாப்பிடுறேன்..!! //
Delete/// நாங்களெல்லாம் கொலைவெறியோடு இருக்கிறப்பதான் உப்புமா சாப்புடுவோம்.//
செம ஹா ஹா ஹா
****** காற்றுக்கு ஏது வேலி *******
ReplyDelete* துல்லியமான, நேர்த்தியான சித்திரங்கள்...
* துளிகூட தொய்வின்றி நகரும் கதை...
* அமர்க்களமான, மிக நேர்த்தியான வசனங்கள்...
* துள்ளலான, ஸ்டைலான, விவேகமான, தில்லான, தெனாவட்டான - இளம் தல...
* மனதில் நிற்கும் பாத்திரப் படைப்புகள்...
கதையைப் படித்து முடிக்கும்போது ஒருவித சிலிர்ப்பு ஏற்படுகிறதே... அதை எந்த வார்த்தைகளைக் கொண்டு வடிப்பேன்?!!
சினிமாவுக்கு கொடுக்கப்படுவதைப் போல காமிக்ஸூக்கும் ஏதாவது விருது வழங்கப்படுமானால் 'காற்றுக்கு ஏது வேலி' - Best entertainer பிரிவில் நிச்சயம் ஒரு விருதைத் தட்டிச் செல்லும்!
எனது ரேட்டிங் : 10/10
//கதையைப் படித்து முடிக்கும்போது ஒருவித சிலிர்ப்பு ஏற்படுகிறதே... அதை எந்த வார்த்தைகளைக் கொண்டு வடிப்பேன்?!!//
Deleteஈ.வி.ஜி சேம் பீலிங்.
இன்றும் ஒருமுறை வாசித்து ரசித்தேன்.
மௌரோ போசெல்லி - 'தல'யை தனக்குள் உருவகப்படுத்தியிருக்கும் விதம் நம் நெஞ்சங்களுக்கு ரொம்பவே நெருக்கமான பாணி !! இளம் டெக்ஸ் வீரியமாய்த் தோன்றிடுவதில் MB-யின் பங்களிப்பு சிலாகிக்கப்பட வேண்டியதொன்று !
Deleteகதையை வாசித்த எங்களுக்கே இப்படினா .
Deleteஉண்மையில் டெக்ஸின் வசனங்கள் சும்மா தெரிக்க விட்டிருக்கீறிர்கள் சார். நன்றி சார்.
நம்ம டெக்ஸ் இட்லி மாசா மாசம் ஒன்னுதேன் தரீங்க சார்.
Deleteகதாசிரியரின் மனதிலிருக்கும் அந்த இளம் டெக்சின் தெனாவட்டான சித்தரிப்புக்கு நாம் நியாயம் செய்ய கூடியது வசனங்களில் மட்டுமே சார் ! So அங்கே நாம் ஈடு தராது போனால், கல்யாண விருந்தில் உப்பு குறைச்சலாகியது போலாகி விடுமல்லவா ?
Deleteவந்துவிட்டேன்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteபயங்கர ஆபாச பதிவு..
DeleteApologies....திருத்தம் செய்து விட்டேன் !
DeleteUdaya Kumar : ரொம்பவே விரசமாய்த் தெரிந்த சமாச்சாரத்தைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் !
Deleteஇட்லி தினமும் சாப்பிடும் போதும் திகட்டுவது இல்லை.
ReplyDeleteஎவ்வளவு சாப்பிட்டாலும் ஜீரனம் ஆகிவிடும்.
எப்பவும் எனக்கு இட்லி பிடிக்கும் வகை வகையான சட்னி சாம்பாருடன்.
வாரத்துக்கு ஒருக்கா இட்லின்னா ஓ.கே. டெய்லியுமே இட்லின்னா எப்பிடி?
Deleteஅப்டி கேளுங்க !!
Deleteஸ்ரீதர்(alias)குடந்தை ஸ்ரீதரன்7 July 2018 at 23:25:00 GMT+5:30
Deleteநம்ம டெக்ஸ் இட்லி மாசா மாசம் ஒன்னுதேன் தரீங்க சார்.
ஓவராய் இட்லியை உள்ளே தள்ளினாலும் விக்கிக்கும் சார் !
Deleteஆஜராயிட்டேன் ஆசிரியரே
ReplyDeleteI 35
ReplyDeleteஆசிரியர் சார்@
ReplyDelete/// கலர் டெக்ஸ் தொகுப்பு ஜூலை 15-ல் ஆன்லைனில் விற்பனைக்கு வந்திடும் ! இதன் அட்டைப்படம் - 'தல' தேசத்திலிருக்கும் ஒரு 'தல' ரசிக / ஓவியர் நமக்காக வரைந்து தந்துள்ள சமாச்சாரம் ! நாம் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் டெக்சின் முகத்தில் இத்தனை களையைக் கொணர சாத்தியமாவதில்லை ! ஆனால் இத்தாலிய ஓவியருக்கோ - இது செம சுலபமாய் முடிகின்றது !! Classic !!!///---
இது புதிய அட்டைப்படத்துடன் வெளியீடு எண்331ஆக வருது போல...
சந்நா வாசகர்கள் எங்களிடம் புக் இருக்கு...அட்டைப்படம் நஹி.
எங்களுக்கு அட்டைப்படத்தை மட்டும் அடுத்த மாத பார்சலில் அனுப்பினால், நாங்களும் பின் பண்ணி ஒரு இதழாக செய்துவிடுவோம்.
ஆன் லைனில் மட்டுமே கிடக்குமா அல்லது ஆப்லைனிலும் உண்டா ஆசிரியரே!
Deleteவழக்கமாய்ப் பாடும் அதே பாட்டே சார் ; உங்கள் நகர முகவர் வாங்கிடுவாரா - இல்லையா என்பதைப் பொறுத்தே !! இப்போதெல்லாம் ஏஜெண்ட்கள் கூட selective ஆக வாங்குகிறார்கள் !!
Delete///முழு வண்ணத்தில் – “சைத்தான் சாம்ராஜ்யம்” – color reprint செப்டம்பரிலும்.....
ReplyDeleteவண்ணம் + b&w – “டைனமைட் ஸ்பெஷல்” – அக்டோபரிலும்......
B&W-ல் தீபாவளி மலராக – ”காதலும் கடந்து போகும்” நவம்பரிலும்..... ///
///ஆகஸ்ட் முழுமைக்குமே “இரத்தப் படலம்” மாத்திரமே///---
ஏகப்பட்ட சந்தேகங்கள் தீர்ந்தன சார்..!!!
ஆகஸ்டில் இரத்தப்படலம் மீதி ஓளவெள்ளம் இருப்பது சிறப்பு!
"டைனமைட் ஸ்பெசல்", நாமும் டெக்ஸின் பிறந்தநாள் அன்றே ரசிப்போம் என்ற செய்தி ஐசிங் ஆன் த கேக் சார்....!!!
+1223344566778899924588999999
Delete///அப்போ 2019 லயும் F&F க்கு வாய்ப்பு நஹி ஹேவா ...!!///
ReplyDeleteஅதானே.
'கேள்வி பிறந்தது இன்று.
நல்ல பதில் கிடைக்குமே நாளை.
பதில் ஆகஸ்டில்....!
Deleteகி.நா. சந்தா ஈரோட்டில் அறிவி்ப்பு....உய்...உய்...உய்...!!!
Deleteஅட்லீஸ்ட் 9இதழ்கள்கள் வருமாறு அமையுங்கள் சார்...
செயலர் சொன்னா மாதிரி, கி.நா.வெறி ஏறிப்போய் கிடக்கிறோம்...!!!
+1
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete// இன்னொன்றோ – செம சிரிப்பு + செம டிராஜெடி கலந்ததொரு படைப்பு! ‘படம் எடுக்கிறேன் பேர்வழி‘ என்று ஒரு புது டைரக்டர் பட்ஜெட்டை எக்குத்தப்பாய் எகிறச் செய்து விடுகிறார்! படமும் முடிகிறது. //
Deleteஏற்கனவே இதே மாதிரி படம் எடுக்கும் பாணியில் ஒரு கதை நம்ம காமிக்ஸில் வந்துருக்கே,ஹாலிவுட்டில் ஜாலி என்று நினைக்கிறேன்,அது கூட வாசிக்க சுவராஸ்யமாக இருந்ததாக நினைவு,அது மாதிரின்னா முயற்சிக்கலாமே சார்.
முயற்சிக்க ஆசை தான் சார் ; இன்னும் சொல்லப் போனால் மேலே விவரித்திருப்பது, நான் சமீப மாதங்களில் மண்டையை நுழைத்துப் பார்த்த புதுக் கதைகளின் கால்வாசி கூட இல்லை தான் ! ஆனால் commercial வெற்றி" என்றதொரு தேர்வில் வெற்றி காணும் நாயகர்களின் பட்டியலில் பெரிதாய் மாற்றங்களே இருக்க மாட்டேன்கிறது எனும் போது - கையைப் பிசையத் தான் முடிகிறது ! "ஆண்டாண்டு காலமாய்ப் பழகிய, கதை ரகங்களே எனக்குப் போதும்" என்று நம் வட்டத்தின் முக்கால் பங்கு தீர்ப்பெழுதி விடும் வேளையில் என்ஆசைகளை பரணில் படுக்கப் போட மட்டுமே முடிகிறது !
DeleteNot exactly sir. The stories u mentioned here seem repulsive. Otherwise we are not against new series. We actually welcome them. But what to do...they fail to entertain us as did by old heroes. Moreover unlike Indians , they people find pleasure in cruelty and they don't spare comics too... don't they? Why should we enjoy such horrible things in comics? Cruelty is as bad adults only contents. That is why I hate Dylon Dog. And science fiction is not that entertaining. But you can try them sir because nowadays we readers have options to buy . Previously only one issue would come but now no problem
DeleteOne man 's meat is another 's poison என்பார்கள் சார் ! அது மெய் தானோ ?
Deleteநான் மேலே பட்டியலிட்டுள்ள கதைகளுள் நீங்கள் "repulsive " என்று கருத்திடும் ஆல்பங்கள் எவையோ எனக்குத் தெரியவில்லை ; ஆனால் போன வருடத்தின் மெகா ஹிட்டான அண்டர்டேக்கரை விடவா நெருடலானதொரு சாகசம் அமைந்திடப் போகிறது ? அந்த ஆல்பத்தினில் பணியாற்றும் போது எனக்கு வயிற்றைக் கலக்கியது என்பது நிஜம் ! அனால் நம்மிடையே அந்த ஆல்பம் உண்டாக்கிய தாக்கம் எத்தகையது என்பதை நாமறிவோம் !
And நான் விவரித்துள்ள கதைகளுள் cruelty என்ற முத்திரைக்கு உரித்தான genre கள் என்னவாக இருக்க முடியுமென்றும் யோசிக்கிறேன் !!
கருணையின்மையெனும் அளவுகோல்களைக் கையில் ஏந்துவதாயின் - ஒவ்வொரு கதையிலும் குறைந்தது 20 செவ்விந்தியர்களோ ; வெள்ளையர்களோ ; குதிரைகளோ மண்டையைப் போடும் நமது கௌபாய் சாகசங்களும் "cruel " என்ற குடைக்குள் கீழே வந்திடக்கூடிய சமாச்சாரங்கள் தானே ?
Cruelty I mean is the monster story u mentioned sir where some monster is consuming human intestine...........
Deleteவிஜயன் சார், அடுத்த மாதம் வரவுள்ள புத்தகங்கள் எவை? இரத்த படலம் மட்டுமே என்றால் ரெகுலர் சந்தா மட்டும் செலுத்திய நண்பர்களுக்கு காமிக்ஸ் இல்லாத மாதமாக அமையுமே அவர்களுக்கு? ஏதாவது பார்த்து செய்யுங்கள் சார்.
ReplyDeleteஅடுத்த மாதம் டிரெண்ட் சாகஸம்-2 களவும் கற்று மற வருகிறதுன்னு போட்டுருக்காங்க.
Deleteவருடத்தின் முழுமைக்குமே 36 புக்குகள் தான் எனும் போது - தற்சமயம் எஞ்சி நிற்பது மொத்தமே 11 இதழ்கள் தான் ! இவற்றைக் கொண்டு தான் டிசம்பர் வரை வண்டியை ஓட்டியாக வேண்டும் ! So ஒற்றை மாத பிரேக் inevitable !
Delete😒
Deleteஇன்னும் 11 புக் மட்டும்தான் இருக்கிறதா ? இனி ஒவ்வொரு மாசமும் டயட் 'லதான் இருக்குமே.!
Deleteஇரு ஹெவிவெயிட் இருக்க கவலை ஏன்?
Deleteஎல்லாம் சரிதான்... எனக்குமே ஏக்கமாக இருக்கிறது... மீதமுள்ள தங்க தலைவன் தொகுப்பு எப்போ சார்??
ReplyDelete"தங்கத் தலைவன்" தொகுப்புகளைத் தான் போட்டுத் தாக்கி விட்டோமே ; எஞ்சியிருப்பது "தங்கத் தம்பி" மட்டும் தான் எனும் போது, தம்பி கொஞ்ச காலம் ஓய்விலிருக்கட்டும் ! அப்புறமாய் பார்த்துக் கொள்வோம் !
Deleteஹஹஹஹஹ...கிட் ஆகஸ்டு கொடைல கவனிச்சுக்குவம்
Deleteசார் உற்சாகமும், காமெடியும் இந்த பதிவில் சற்றே தூக்கல், இப கலக்கலாய் வந்ததால்தான் இந்த உற்சாக சந்தோசமா. மாபொரும் கனவு விரைவில் விடியலில் சந்தோச கூவலாய் எழுப்புகிறது. ஆனா நமுபவே முடியல நாட்களின் ஓட்டத்த,,,,இப நேத்துதான் அறிவிச்சத போல உள்ளது,,,பட்டய கிளப்ப போகுது அந்த நாள்,,,சொக்கா இவுவளவு வருடங்கள வேகமா நகர்த்திட்ட,,,முருகா மயிலேறி நளைக்கே ஆகஸ்டுகுள்ள நுழைச்சிட மாட்டியான்னு ஏங்க செய்தே,,,சார் டைகர் கடந்த கால கதய டெக்ஸ் சாருபா விலை உயர்த்தி வண்ணத்தில் இட உங்க ஞாபக மறதி உதவினால்,,நீங்களும் சஞ்சய் ராமசாமிதான்
ReplyDeleteஸ்டீல் : இந்தியாவின் தந்தி சேவை நின்று போய் விட்டதே என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்களொரு வரப்பிரசாதம் !!
DeleteHa ha ha ha sir 😃😃😃
Deleteநாட்களின் வேகம் தந்தியாய்,,,,அதன் விளைவோ என்னமோ சார்,,,டைகர் கடந்த காலத்த
Deleteஆசிரியர் சார்@
ReplyDelete*காற்றுக்கு ஏது வேலி-"The magnificent outlaw"வைத் தொடர்ந்து, மேக்ஸி சீரியஸ்ல "Nueces valley"- என்ற 288பக்கங்கள் கொண்ட கதையை 2017அக்டோபரில் போனெல்லி வெளியிட்டார்கள். அதில் என்ன சிறப்பு??? டெக்ஸ் பிறந்த இடம்தான் இந்த Nueces valley.
*இன்னும் ஒருபடி முன்னே சென்று டெக்ஸின் தாய் "மே வில்லர்"& தந்தை "கென் வில்லர்" பற்றியும்& மலைவாழ் மனிதர் ஜிம், டெக்ஸின் வாழ்கையில் என்ன பங்கு வகித்தார் எனவும் தெளிவாக விளக்குகிறது. Tex willed & Sam willer (டெக்ஸின் சகோதரன்) இருவரின் பிறப்பு, இளமைபருவம், டெக்ஸின் பால்ய நட்புகள் பற்றியும் அறியலாம்.
*நிறைமாத கர்ப்பிணியாக டெக்ஸின் தாய் நியூகஸ் வேலிக்கு வரும் காட்சிகள் இத்தாலி மொழியில் ஓவியங்களாக பார்க்கையில் எப்போ லயனில் படிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பை கட்டுப்படுத்தவே முடியாது.
*3மில்லியன் ஹிட் ஸ்பெசலுக்கு அகில உலக தமிழ் டெக்ஸ் ரசிகர்கள் சார்பில், வரும் புத்தாண்டில் இக்கதையை வெளியிட வேணும் என அன்பின் ஆசிரியர் சாரிடம் இருகரம் கூப்பி வேண்டுகோளாக வைக்கிறோம்...!!!
இதை நான் நம் நண்பர்கள் சார்பில் வழிமொழிகிரேன்.
DeleteA time for everything......and everything in it's time....!
DeleteThanks sir.
Deleteஇளம் டெக்ஸ் - ஜம்போவின் அணி !!
DeleteSo இரண்டாம் சுற்றின் முதல் இதழில் டெக்சின் flashback(s) தொடரும் ! பொறுமை ப்ளீஸ் சார் !
Wow...super sir...!!!
DeleteThank you sir...
அப்ப 3மில்லியன் ஹிட் ஸ்பெசலுக்கு அடுத்த சாய்ஸ்ஸாக "பாராகுடா" முழுத்தொகுப்பை முன்மொழிகிறேன் சார்....!!!
Deleteஆஹா சூப்பர்
Deleteஜம்போ காமிக்ஸில் வெளிவந்த காற்றுக்கு என்ன வேலி மிக பிரமாதம். பைண்டிங்கில் கவனம் தேவை இறுதி கட்டத்திற்கு முன் கொத்தாக 5 பக்கங்கள் தனியே வந்துவிட்டன. 2012ல் இருந்து இன்று வரை பைண்டிங் தரத்தில் குறை இருந்ததில்லை. காற்றுக்கு என்ன வேலி விதிவிலக்கு. இரத்த படலம் வெளியிட்டிற்கு காத்திருப்பு ஆரம்பம். ஆகஸ்ட் மாதம் எப்போது புலரும் என ஆவலாக உள்ளேன். நண்பர்களின் நிலையும் இதுவாகதான் இருக்கும் என நினைக்கிறேன்.
ReplyDeleteடைனமைட் மேலேறி பய்ந்து வருது டெக்ச போல
Deleteஎனக்கு வந்த லக்கி ஸ்பெஷல் இதழிலும் பைண்டிங் மிகவும் பலவீனமாக இருந்தது.
Delete80th
ReplyDeleteHi friends happy comics wk end !!😂
ReplyDelete82வது
ReplyDeleteமரணம் மறந்த மனிதர்கள் கிராபிக் நாவல் வெளிவர வாய்ப்பிருக்கா சார்? ??
ReplyDeleteதற்போதைய நம் கிராபிக் நாவல் ரசனைகளுக்கு வான் ஹாமின் இந்த ஆரம்ப காலத்தது சாகசம் அத்தனை சுகப்படாது என்றே தோன்றுகிறது சார் ! தமிழ் சினிமாவின் பாணியிலான அந்த கிளைமாக்ஸ் நீங்கலாய், கதையில் ஆழம் குறைவே !
Deleteஎடிட்டர் சார்,
ReplyDeleteட்ரென்ட் படைப்பாளி லியோவின் ஆல்டபரான்/கென்யா/நமீபா போன்ற கதைகளை பரிசீலிக்கலாமே!!! அபாரமான சித்திரங்கள், தெளிவான கதைக்களம் , விருவிருப்பு என நமது ரசனைக்கு சரியாக வரும் என்றே கருதுகிறேன்.
இன்னொரு வேண்டுகோள். இங்கே தாங்கள் பரிசீலித்த கதைகளை பற்றி சொல்லும்போது, வெளியிட வாய்ப்பற்ற / சாத்தியமற்ற கதைகளின் பெயர்களைச் சொன்னால் , அதை ஆங்கிலத்திலாவது வாசித்துக் கொள்வோமே!!! பரிசீலிக்கவும்.
இவை எல்லாமே ஸ்கேன்லெஷன்களை எட்டி இருக்கா சமாச்சாரங்கள் சார் ; ஆங்கிலத்தில் வாசிக்க வாய்ப்பு நஹி !
Delete//ட்ரென்ட் படைப்பாளி லியோவின் ஆல்டபரான்/கென்யா/நமீபா//
Deleteநமீபா >>>>> கரெக்க்ஷன் >>>>> நமிபியா
by சின்ன தாடி நக்கீரர் :)
ஆனா 'நமீதா'ன்றதுதானே சரியான உச்சரிப்பா இருக்கும்?!! :P
Deleteநல்ல பதிவு. வாழ்த்துக்கள்
ReplyDeleteகி.நா வை இது வரை திருப்பி படித்தே இல்லை.......
ReplyDeleteSci fiவருடத்திற்கு ஒன்று முயற்சி செய்யலாம்....ஜாம்பி ஒன்று முயற்சி செய்யலாம்.....
குழந்தைகள் படிக்க விரும்பும்... ஹிஹி நானும் தேங்
டெக்ஸ் அட்டை அ,,ருமை
Delete//இன்னொன்றோ – செம சிரிப்பு + செம டிராஜெடி கலந்ததொரு படைப்பு! ‘படம் எடுக்கிறேன் பேர்வழி‘ என்று ஒரு புது டைரக்டர் பட்ஜெட்டை எக்குத்தப்பாய் எகிறச் செய்து விடுகிறார்! படமும் முடிகிறது ; ஆனால் பட்ஜெட்டோ கூரையைப் பிய்த்துக் கொண்டு எங்கோ சென்று விடுகிறது ! 20 மடங்கு கூடிப் போன செலவை என்ன செய்தாலும் ஈடு செய்ய இயலாதென்று புரிந்த கணத்தில் ரௌத்திரம் கொள்ளும் தயாரிப்பாளர், ஆத்திரத்தில் மொத்த பிலிம் சுருள்களையும் தூக்கிப் போய் எங்கோ ஒரு வனாந்திரத்தில் குழி தோண்டிப் புதைத்து விடுகிறார்! நாட்களின் ஓட்டத்தோடு, அந்தச் சுருள்களும் மாயமாய் மறைந்து போகின்றன! பின்னாளில் அதைத் தேட முற்படுவதே இந்த ஆல்பத்தின் ஓட்டம் !
ReplyDelete👍 ஒரு சர்வதேச வல்லரசின் வரலாற்றுத் தலைவர் அவர்! இரும்புக்கரத்தோடு பரந்து விரிந்த தேசத்தையே ஆள்பவர்! ஒரு நாளிரவு மனுஷன் இறந்து போகிறார்! சகலமுமாய் இத்தனை காலம் நின்றவர் சவமான மறுகணமே அடுத்தகட்டப் பொறுப்பிலிருக்கும் மனிதர்களின் பதவி வெறிகள் உந்திக் கொண்டு வெளிவருகின்றன! தலைவரின் சாவை வெளியுலகிற்கு அறிவிக்காது – அதற்கு முன்பாய் தத்தம் ஆதாயங்களை கணக்கிடுகிறது அதிகார மையம்! யதார்த்தத்தை; வரலாற்றை – பகடியோடு சொல்கிறார்கள்! க்ரீன் மேனர் பாணியில் ஒரு வித கார்ட்டூன் ஸ்டைல் சித்திரங்களுடன் கலக்குகிறது தான்! ஆனால் வரலாறு சார்ந்த விவகாரம்; நம்மூர்களில் வேறுவிதமாய் பார்க்கப்படலாம் என்பதால் தைரியம் நஹி – இதனுள் தலைநுழைக்க!
//
இவை இரண்டையும் அடுத்த வருடம் முயற்சிக்கலாமே?
டியர் எடிட்டர்,
ReplyDeleteவெகு நாட்களுக்கு பிறகு ஆண்டு மலர் ஒரு சூப்பர் ஹிட் ! சிரிச்சு மாளவில்லை. எங் Tex இன்னொரு அதிரடி.
அதே சமயம் இரு புத்தகங்களிலும் பைண்டிங் சரியில்லை. இரு landmark இதழ்கள் பைண்டிங் பொருட்டு ஒரு முறைதான் படிக்க வேண்டும் என்பது மெல்லிய சோகம்.
உண்ம!
Deleteஅதே!
Deleteசார்! 'கறுப்பு கிழவியின் கதைகளில் புதிய கதைகள் இருப்பதாக சென்ற வருடம் ஒரு பதிவில் சொன்னீர்கள். அதை 2019-ல் வெளியிடுங்கள்.
ReplyDeleteமேலும், இளம் தோர்கலின் கதைகளை வெளியிடுங்கள். 2 வயதான என் மகனுக்காக ஸ்மர்ஃப், பென்னி, லக்கி, சுட்டி லக்கி, மதியில்லா மந்திரி இவர்களின் கதைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். கதைகள் அனைத்தும் நல்ல கதைகள்தான். ஆனால், அதெல்லாம் ஜாலியான ரக கதைகளாக மட்டுமே உள்ளன. Fantacy-க்கு தோர்கலின் கதைகள் இருந்தாலும் அதை அவன் 10, வயதுக்கு மேல்தான் ஈடுபாடோடு படிக்க முடியும். 5 வயதில் அவனை மடியில் வைத்து பரபரப்பாக சொல்லி, அவன் ரசிக்கும் அளவிற்கு Fantacy + Thriller கதைகள் வேண்டும். (Gulliver in Lilliput, Hansel & Gretel போல..) அதில் இளம் தோர்கல் கதைகள் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
என் மகனை டெக்ஸ் வில்லர் ரசிகனாக்க டெக்ஸ் Vs மெஃபிஸ்டோ கதைகள் உபயோகப்படும் என்று நினைக்கிறேன். அந்த கதைகளை நானே விரும்பவில்லை என்று கூறியிருக்கிறேன். அது தவறோ என்று தோன்றுகிறது.
Erode book fair ல் நமது meeting, ரத்தப்படலம் வெளியீடு எந்த தேதியில் சார்...
ReplyDelete///கதை நெடுகிலும் குதிரை போட்டிருக்கும் அதே அளவு துணியை மட்டுமே நாயகியும் போட்டிருக்க ///
ReplyDeleteஹீ ஹீ ஹீ ....!!!
///மனிதன் பாதி – மிருகம் பாதி – என்பது போலொரு அசுர உருவம் கேசரி சாப்பிடுவது போல ஒரு ஆசாமியின் குடலை உருவி வாய்க்குள் தள்ளிக் கொண்டுள்ளது!///
எனக்கு ஒரு பிளேட் கேசரி பார்சல் வேணும்.
ஜாம்பி கதைகள், ஹாரர், ஸ்லேஷர் கதைகள் பிடிக்கும். சரி ஆங்கிலத்திலேயே படித்து கொள்ள வேண்டியாயது தான்.
ஆசிரியர் சார் கவனத்திற்கு, நான் சிறு வயதில் ஒரு காமிக்ஸ் தொடர்கதை படித்து இருக்கிறேன். தினமலர் என்று நினைக்கிறேன்.
கதை இது தான், உலகத்தில் திடீரென்று ஒரு கொள்ளை நோய் பரவுகிறது. இதனால் மனித குளம் மொத்தமும் அழிந்து விடுகிறது, ஒரு சில சிறுவர்களை தவிர. இவர்களின் ரத்த வகை ஒரு வகையில் வித்தியாசப்பட்டு இருப்பதினால் இவர்கள் உயிரோடு இருக்கிறார்கள்.
இதில் மெயின் கேரக்டர் சிறுவன், தான் மட்டும் தான் உலகத்தில் உயிரோடு இருப்பதாக நினைத்து கொண்டு இருக்கும் வேலையில், வேறு சில சிறுவர்கள் காற்றடைத்த பந்துகளுக்குள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதுக்குள் இருந்தே ஓட முடியும் நடக்க முடியும். இந்த சிறுவர்களும் சிறுமிகளும் பெரியவர்களே இல்லாத இந்த உலகத்தில் சந்திக்கும் சம்பவங்களும் போராட்டங்களும் கதை. இதில் ஜோம்பிகள் இருந்ததா இல்லையா என்பது எனக்கு நினைவு இல்லை.
வாரா வாரம் ஞாயிற்று கிழமை சிறுவர் மலருக்காக காத்திருந்து படித்த தொடர் அது.
சார் sci -fi முயற்சிக்க எது உங்களுக்கு தடை செய்கிறது என்பது புரியவில்லை. வலேரியான் படம் பார்த்து இருக்கிறேன். நன்றாக தான் இருந்தது. அதை ஏன் முயற்சிக்க கூடாது ஜம்போவில் ?
Trendon - 10/10
ReplyDeleteCaptain Prince - 10/10
Lucky -10/10
July winner - Lucky Luke
//Trendon - 10/10//
Delete@ SISTER
TRENDON >>>>> NO
TRENTON >>>>>> NO
SERGEANT PHILIP TRENT >>>>> YES
BY குறுந்தாடியுடன் நக்கீரர் :)
நக்கீரர் குறுந்தாடியுடன் மட்டும் இருப்பாரா? அல்லது பாகவதர் கிராப் அல்லது என்.எஸ்.கிருஷ்ணன் கிராப் அல்லது ஸ்டெப் கட்டிங்,ஸ்பைக் இப்படி காட்சியளிப்பாரா? இல்லை ஜடாமுடியுடன் இருப்பாரா? அவருடன் ஒரு செல்ஃபி எடுக்க வேணும்போல் தோணுகிறது!
Delete@selvam abirami
Deleteநன்றி சகோதரரே (குறுந்தாடி நக்கீரரருக்கு) :P
அவசரமாய் டைப் செய்யும் பொது பெயரை மறந்து தவறாக போட்டு விடுகிறேன்
No to idly
ReplyDeleteVariety plz
Kovai book fair???? 😐😶😓
ReplyDeleteதிசைக்கொரு திருடன்:- டால்டன் சகோதரர்களுக்குள் ஒரு போட்டி, ஒரு மில்லியன் டாலர் முதலில் சம்பாதிப்பவர்கள் மட்டுமே டால்டன் குடும்பத்தின் பாஸ்.
ReplyDeleteஜெயில் தப்பிப்பதில் ஆரம்பிக்கும் கலாட்டா கடைசி பக்கம் வரை ஒரே சிரிப்புதான். அதிலும் ஜெயில் இருந்து தப்பிக்க ஆளுக்கு ஒரு பக்கமாக குழிதோண்டி தப்பிப்பது. சகோதரர்கள் ஒரு மில்லியன் சம்பாதிக்க முதலில் தடுமாறினாலும் பின்னர் அவர்கள் தேர்ந்தெடுத்த வழியில் வெற்றி பெறுவது அவர்களை லக்கி கைது செய்ய முடியாமல் தடுமாறுவதும்; பின்னர் லக்கி திருடன் பாதையை தேர்தெடுப்பது என ரகளையான சிந்தனை.
ஒரு கட்டத்தில் ஆவ்ரெல் தனது சமையல் திறமை மூலம் அனைவரையும் கவர்ந்தது அவன் மேல் மக்கள் மத்தியில் ஒரு நல்ல எண்ணம் உருவாவது அருமை. லக்கி ஆவ்ரெலை மட்டும் கைது பண்ணாமல் விட்டு விட்டால் நன்றாக இருக்கும் என மனம் எண்ண ஆரம்பித்து.
ஆண்டு மலரில் இரண்டு கதைகளும் அருமை. அதில் என்னை மிகவும் கவர்ந்தது திசைக்கொரு திருடன்.
திசைக்கொரு திருடன்- திரும்பிய திசை எல்லாம் சிரிப்பு.
Deleteசூப்பா் 👏👏👏
Deleteசெம & அரும!
Delete//ஒரு கட்டத்தில் ஆவ்ரெல் தனது சமையல் திறமை மூலம் அனைவரையும் கவர்ந்தது அவன் மேல் மக்கள் மத்தியில் ஒரு நல்ல எண்ணம் உருவாவது அருமை. லக்கி ஆவ்ரெலை மட்டும் கைது பண்ணாமல் விட்டு விட்டால் நன்றாக இருக்கும் என மனம் எண்ண ஆரம்பித்து//
Delete+9
எடிட்டர் சார்
ReplyDeleteசைத்தான் சாம்ராஜ்யம் புத்தகம் நிலவொளியில் நரபலி சைஸா?
எல்லாம் பூட்ட கண்ணா போச்சினு அந்த சைசுக்கு ஆப்பு வெச்சிட்டாங்க சார்...
Deleteஹூம்...
தினமும் என் செல்போனை அந்த புக் மேலே தான் வைப்பேன்.்்..
ஒவ்வொரு முறை அந்த மினி சைசை பார்க்கையில் ஒரு மகிழ்ச்சி...
தற்போது வரும் டெக்ஸ் சைஸில் வண்ணத்தில் வந்தால் நன்றாக இருக்கும்.
ReplyDelete+1233445567889099909
Delete3காரணமாக...
Delete1.பட்ஜெட்...
2.பட்ஜெட்...
3.பட்ஜெட்...
காற்றுக்கு ஏது வேலி, வண்ணத்தில் இந்தளவு அசத்தியிராது என்பது என் எண்ணம்...!!
Delete///காற்றுக்கு ஏது வேலி, வண்ணத்தில் இந்தளவு அசத்தியிராது என்பது என் எண்ணம்...!!///
Deleteஅக்மார்க் நிஜம்.!!
ATR sir@ நீங்கள் எல்லா டெக்ஸ் கதையும் வண்ணத்தில் கேட்கிறீர்களோ என நினைத்து போட்ட பதில் அது...!!! ஸ்கிப் தட்...!!!
Deleteசைத்தான் சாம்ராஜ்யம் @ நீங்கள் சொன்னபடி ரெகுலர் டெக்ஸ் சைசில் தான் வருகிறது. முந்தைய பதிவுகளில் தேடி, ஆசிரியர் சாரின் பதிலில் இருந்து அறிந்து கொண்டது.
ஆனா நம்மை போன்ற சிலரை கவர்ந்த மினி பாக்கெட் சைசில் வேறு ஏதும் டெக்ஸ் கதை வந்தால்தான் உண்டு...!!!
டெக்ஸ் விஜய்
Deleteசைத்தான் சாம்ராஜ்யம் விளம்பரத்தில்
(எரிமலைத்தீவில் ப்ரின்ஸ்) 130 பக்கங்கள் விலை ரூ.125 என்றுள்ளதே. வழக்கமான டெக்ஸ் சைசில் வண்ணத்தில் இந்த விலை ஆசிரியருக்கு கட்டுப்படியாகுமா தெரியவில்லை. அந்த சந்தேகத்தில் ஒருவேளை நிலவொளியில் நரபலி சைஸில் வருகிறதா என தெரிந்து கொள்ள எழுப்பப் பட்ட வினா அதுதானே என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
நியாயமான சந்தேகம் தான் சார்...
Deleteபவளச்சிலை மர்மம் கூட இதே சைஸ்தான், அதுவும் ரூபாய் 125தான்...!!!
பவளம் 110பக்கங்கள் தான்...
அதே விலைக்கு சைத்தான் சாம்ராஜ்யம் 20பக்கங்கள் அதிகம், தீவாளி போனஸ் நமக்கு...!!!
நன்றி டெக்ஸ் விஜய் சந்தேகத்தை தீர்த்தமைக்கு.
Deleteட்ராகன் நகரம்???
ReplyDeleteதிசைக்கொரு திருடன்.
ReplyDeleteடால்டன் சகோதரர்கள் நான்கு பேர் இருந்தாலும், ஜோ 'வின் கொலைவெறியும், ஆவ்ரேலின் உணவுப் ப்ரியமுமே மிகவும் புகழ் பெற்றது.
மற்ற இருவரைப் பற்றியு தகவல்கள் குறைவே.கதைகளிலும் அவர்களுக்கான பங்கு குறைவே.
டால்டன் நகரத்தில் வில்லியம் க்கு முக்கிய ரோல் இருந்தாலும், ஜோ ப்ளான் செய்து, ஒட்டு மொத்த வெளிச்சத்தை தன் பக்கம் திருப்பி விடுகிறார்.
ஆனால் 'திசைக்கொரு திருடனில் 'தங்களுடைய சுய முயற்ச்சியில் முன்னேற போராடும்படியான கருவை தேர்ந்தெடுத்திருப்பது பாதி வெற்றியை சுலபமாக்கி விட்டது.
ஜோவும் , ஆவ்ரெலும் பற்றி நாம் நன்றாகவே யூகிக்க முடிவதால், எதிர்பார்ப்பும் ,பரபரப்பும் மற்ற இருவரைப் பற்றியதே.
ஜாக் 'ம் வில்லியமும் ஆடும் ஆட்டமே இந்தக் கதையில் சிறப்பு வாய்ந்தது.
ஜொவும், ஆவ்ரெலும் வழக்கம் போலவே நம்மை ஆட்டுவிக்கின்றனர்.
மாறுபட்ட ஓவிய பாணி இன்னும் ஈர்க்கிறது.
இந்த வருட ஆண்டுமலர் ,வருடம் முழுக்க நினைவில் இருக்கும்படி அமைந்துவிட்டது.
///இந்த வருட ஆண்டுமலர் ,வருடம் முழுக்க நினைவில் இருக்கும்படி அமைந்துவிட்டது.///---yes 18வது லயன் ஆண்டுமலர் பர்ஃபெக்ட்....
Deleteஓவர் டூ இரத்தப்படலம்,
டைனமைட் ஸ்பெசல்,
டெக்ஸ் தீபாவளி மலர்...
அடுத்த 5மாசத்தில் 3ஸ்பெல்கள்...
போட்டுத்தாக்கு...போட்டு தாக்கு...போட்டு தாக்கு...
கோவிந்தோ @ அட்டகாசமான விமர்சனம்.
Delete////இந்த வருட ஆண்டுமலர் ,வருடம் முழுக்க நினைவில் இருக்கும்படி அமைந்துவிட்டது.////
Deleteசெம & உண்ம!
///மற்ற இருவரைப் பற்றியு தகவல்கள் குறைவே.கதைகளிலும் அவர்களுக்கான பங்கு குறைவே.///
Delete///ஜாக் 'ம் வில்லியமும் ஆடும் ஆட்டமே இந்தக் கதையில் சிறப்பு வாய்ந்தது.///
மிகச்சாி! 👏👏👏
ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கு இரத்தப் படலம் முன்பதிவுக்கு இன்னமும் வாய்ப்பு உள்ளதா?இனிமேல் முன்பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை வருமா? கடைகளில் இதன் விலை ₹ 2650 என்பதாக முகவர் ஒருவர் தெரிவித்தார். தயவு செய்து தெளிவு படுத்தவும்.
ReplyDeleteயெஸ் சார்....! ரூ.2200 விலையானது முன்பதிவுகளுக்கு மாத்திரமே ! And இதழ்கள் முழுசுமாய் தயாராகிவிட்டுள்ள நிலையில், முன்பதிவு option-ம் இப்போது நிறைவுற்று விட்டது ! slipcase இல்லாது வாங்கினால் விலை ரூ.2600 & slipcase சகிதமெனில் ரூ.2675...
Deleteதெளிவான பதிலுக்கு நன்றிகள் சார்.
DeleteDear Editor,
DeleteThe price at Erode Book Fair would be 2408 (after 10% discount) or 2415 (10% minus the slip case + slip case) ?
மொத்தமே நாம் அச்சிட்டுள்ளது 800 பிரதிகள் தான் சார் ! இதனில் 500 + முன்பதிவுகள் + ஏஜெண்ட்களின் ஆர்டர் என்ற எண்ணிக்கை போக என்ன மீதமிருக்குமோ அதனைப் பொறுத்தே தீர்மானிக்க இயலும் !
Deleteஇந்த மாத இதழ்கள் பற்றிய எனது கருத்துக்கள்
ReplyDelete1) காற்றுக்கென்ன வேலி
சிலசமயம் நீங்கள் வைக்கும் பெயர்கள் கதைக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்று நினைப்பதுண்டு. இந்த கதையிலும் அப்படிதான். கட்டுக்கடங்காத காளை பருவத்தில் டெக்ஸ் சாகசங்களுக்கு இதை விட நல்ல பெயர் இருக்க முடியுமா? வழக்கமான டெக்ஸ் கதை மாதிரியே எந்த முன்னுரையும் இல்லாமல் சரேலென என மூன்றாம் பக்கத்திலேயே தன் துப்பாக்கியை முழக்கி விடுகிறார். இளம் டெக்ஸ் என்பதால் கதையின் வேகமும் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. கார்சன் இல்லாத குறையை அந்த கிழவரும் கிட் இல்லாத குறையை கவ்பாய் அப்ரெண்டிசும் தீர்க்கிறார்கள். இளம் டெக்ஸ் என்பதால் சற்றே சறுக்கிறார். அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்டு தான் தீரராய் மாறி இருக்கிறார் என்ற மாதிரியான கதை அமைப்புக்கள் சற்றே டெக்ஸ் கதைகளின் நம்பக தன்மையை அதிகரிக்கும். டெக்சின் அப்பா அண்ணனுக்கு நேர்ந்தது பற்றி கதை வந்திருக்கிறதா? 1000 வாலா வெடியில் பட்டாசுகளை எடுத்து விட்டு டயனமைட்டுகளை பொருத்தினால் எப்படி ருக்குமோ அப்படி இருக்கிறது. கடைசியில் அந்த அப்ரண்டீஸ் தான் பேங்க் வேலைக்கு போகிறேன் என்று சொன்னாலும், தலையின் தொண தொண வென்று பேசினால் எரிச்சலாகும் குணத்தையும் எடுத்துக் கொண்டு போகிறார். ஆமாம் காலா கிளைமேக்ஸ் மாதிரி டெக்ஸ் வழியனுப்ப வந்தாரா இல்லை பிரம்மை தானா ?
2) லக்கி கதைகள்
ரெண்டு கதைகளும் அருமை. டெர்ரர் திருடர்களின் பெயர்களும் அவர்களின் அறுபட்ட பட்டாபட்டி வார்களும் சிரிப்பை வரவழைத்தது. "கிழிஞ்சுது போ மெய்யாலுமே கிழிந்தது போ" என்று ஒரு செய்விந்தியன் ஓடுவது அட்டகாசம். அம்மாக்களிடம் இருந்தும் டீச்சர்களிடம் இருந்தும் எந்த டைபாய்டாக இருந்தாலும் தப்பிக்க முடியாதது போல் அமைத்து இருப்பது அருமை.
முதல் கதையை விட ரெண்டாம் கதை ஸ்பெஷல். அதற்கு காரணம் டால்ட்டன்கள் தனித்தனி வழிகளில் சம்பாதிக்க முனைவது.அவர்கள் செய்யும் தொழிலும் நம்மைக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் தொழிலாளாக இருப்பது நம்மை அந்த கதையுடன் ஒன்றை செய்கிறது. சமகால சூழ்நிலைகளை வைத்து நீங்கள் ஆங்காங்கே வைத்திருக்கும் பொடிகளை யாராவது கவனித்தார்களா என்று தெரிய வில்லை. மிக நன்றாக அவை அந்த கதைக்கு பொருந்தி இருந்தது.
1) உதாரணமாக ஸ்கீம்னா என்னன்னு தெரியுமா என்பது காவிரி பிரச்சனையில் வநத ஸ்கீம்
2) தொழிலதிபர்ன்னு காட்டிக்கிறது புடிச்சுட்டா லண்டன், ஹாங்கங்னு தேசாந்திரம் போய்ட வேண்டியது (மல்லய்யா , நீரவ் மோடி)
3) எஞ்சி நின்னவங்களோட பேரையும் நாசமாக்கி யாச்சு கருத் து சுதந்திரத்துக்கு ஜே . ஜனநாயகத்துக்கு ஜே . ஹி ஹி யாருன்னு நான் சொல்ல வேண்டுமா என்ன?
3) ட்ரெண்ட்
அட்டகாசம் அட்டகாசம் என்று கொண்டே இராமல் ஓய்வெடுக்க இந்த மாதிரி கதைகளும் வேண்டும் என்பேன்.அருமையான சித்திரங்கள் பனி படர்ந்த இடத்தில மக்களின் வாழ்க்கை. நிலப் பரப்பு அதிகம் இருக்கும் கனடாவில் குறைந்த காவலர்களும் அவர்களின் அன்றாட பணியும் சிறப்பு வாய்ந்தவை. அமைதியான கதை கண்ணுக்கு குளுமையான சித்திரங்கள் என்று நன்றாக இருந்தது. இது மாதிரி கதைகளும் வர வேண்டும் என்பதே என் விருப்பம். ட்ரெண்ட் என் மனதில் இடம் பிடித்து விட்டார். குறைந்த பட்சம் ஒரு மூன்று கதைகளாவது போடுங்களேன்.
4) எரிமலை தீவில் பிரின்ஸ்
அட்டைப் படம் அட்டகாசம். ஆனால் கதை ஏற்கனவே படித்த கதை மாதிரியே தெரிவது எனக்கு மட்டும் தானா ? ஏற்கனவே காட்டு தீயில் இருந்து காப்பாற்ற போகும் கதையும் இதே மாதிரி தான் இருந்தது.
பிளஸ்
1) புது அட்டை பினிஷிங் அருமை. இதே மாதிரி தொடரலாம்
மைனஸ்
1) லக்கி கதையில் எனக்கு வந்த புக்கில் ரெண்டு இடங்களில் பின்பக்க பிரேம் இந்த பக்க பிரேமும் கலந்து தெரிந்தது. எண்ணெய் பட்டார் போல. லக்கி கதைகள் EBF இல் அதிகம் விற்பவை. அதில் இந்த மாதிரி குறைகள் இல்லாமல் வந்தால் நன்றாக இருக்கும்.
2) ஏற்கனவே வந்த மாதிரியே இருக்கும் கதைகளை விலக்கலாமே ?
சூப்பர் விமர்சனம் முத்து.
Deleteஇதைத்தான் ஜி உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.
Deleteவழக்கம்போல பட்டாசு கிளப்பி விட்டீர்கள்...!!!
@ Raj Muthu Kumar
Deleteசெம விமர்சனம்!! நீண்டநாட்களுக்குப் பிறகு உங்களுடைய இரசணையான எழுத்துகளைப் படித்ததில் மகிழ்ச்சி!
ஆங், சொல்ல மறந்துட்டேன்! போன வாரம் இப்படித்தான் யாரோ ஒருத்தர் உங்க படத்தை புரொஃபைல் பிக்சர்ல போட்டுக்கிட்டு 'Raj kumar'ன்ற பேர்ல இங்கே வந்து, எப்பவும் நெகட்டிவாவே எழுதிக்கிட்டிருக்கும் ஒரு மூத்த வாசகருக்கு சப்போர்ட் பண்றா மாதிரி கமெண்ட் போட்டுக்கிட்டுக் கிடந்தார்!
நம்பிடுவோமா நாங்க?!! இல்ல நம்பிடுவோமான்றேன்?!!
யாருகிட்ட?!!
எங்க 'ரா.மு.கு'வை எங்களுக்குத் தெரியாதா என்ன? ஹெஹ்ஹே!! அந்த போலி ஐடியை நாங்க மதிக்கக்கூட இல்லை! அதுக்கப்புறம் அது காணாமப் போய்டுச்சு!
பிரபலமானவங்க பேர்ல இங்கே வந்து எசகுபிசகா கமெண்ட் போடும் கலாச்சாரம் இப்ப வேகமாப் பரவிக்கிட்டிருக்காப்ல தெரியுது! இதுக்கெல்லாம் எப்பத்தான் முற்றுப்புள்ளி வருமோ?!!
நாலுமே அருமையான விமா்சனம்!!
Delete👏👏👏
அருமை!! அருமை!!
Deleteமைனஸ்ஸில் விட்டுப் போனது
Delete3) தலை புத்தகம் பக்கம் 181 மெண்டோசா கிரேவர் நாணயத்தை தூக்கி பொடும் போதே "கை துப்பாக்கியை இயக்குவதில் நீ கில்லாடிதான் என்கிறார். ஆனால் அடுத்த பக்கத்தில் தான் கிரே வர் சுடவே செய்கிறார். ஆனால் அப்போது மெண்டாஸா நாணயங்கள் திருப்பி சுடாது என்கிறார். ஏன் இந்த தடுமாற்றம்? எனக்கு என்னவோ மொழி பெயர்க்கும் பொழுது தவறு நேர்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
4) நண்பர்கள் சிலர் சொன்ன பிறகு லக்கியின் பைண்டிங் பார்த்தேன். அவர்கள் சொன்னது சரிதான். இது போன்ற அடிப்படை தவறுகள் நம்மை தொல்லை செய்கிறதே.
கை துப்பாக்கியை இயக்குவதில் நீ கில்லாடிதான் என்கிறார். ஆனால் அடுத்த பக்கத்தில் தான் கிரே வர் சுடவே செய்கிறார். ஆனால் அப்போது மெண்டாஸா நாணயங்கள் திருப்பி சுடாது என்கிறார். ஏன் இந்த தடுமாற்றம்? எனக்கு என்னவோ மொழி பெயர்க்கும் பொழுது தவறு நேர்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன். //
Deleteமொழி மாற்றத்தில் எந்த தவறும் இல்லை ஜி.
நாம் புரிந்து கொள்வதில் தான் தவறு இருக்கிறது. மறு முறை வாசித்து பாருங்கள் ஜி.
உன் போல் திறமையாக சுடும் எதிராளியிடம் சுட்டு பார் நாணயத்திடம் வீரம் காட்டாதே என்பதாகும்.
ஸ்ரீதர்(alias)குடந்தை ஸ்ரீதரன் : என் சார்பிலான விளக்கத்துக்கு நன்றி சார் !
DeleteRaj kumar S : நண்பர் சொல்லிய context -ல் வாசித்துப் பாருங்கள் சார் ; நெருடல் தெரியாது !
அந்த வசனத்தை மிக ரசித்தேன் சார்.
Deleteஉண்மையில் இந்த டெக்ஸ் கதை என்னை கட்டி போட்டு விட்டது.இப்போது கூட டெக்ஸ் என் பக்கத்தில் தான் இருக்கிறார். இன்னும் சிலாகிக்க நிரய உள்ளது ஆனால் தட்டச்சு வேகமாக இயக்க இயலவில்லை. நன்றி சார்.
//உன் போல் திறமையாக சுடும் எதிராளியிடம் சுட்டு பார் நாணயத்திடம் வீரம் காட்டாதே என்பதாகும்//
Delete+9
Nice post.very funny too 😂😂😂
ReplyDeleteஈரோடு விஜய்: அது நானே தான். Fake ID இல்லை. நான் அதிகம் comment களை படிப்பதில்லை என்பதால் அவர் எப்போதுமே குறை சொல்லி என்று எனக்கு தெரியாது. மேலும் உண்மையான குறையை சுட்டிக் காட்டு பவர்களே இல்லாமல் போய் விடக் கூடாது என்பதற்காக தான் நானே மீண்டும் blog பக்கம் தலை காட்டி இருக்கிறேன்.
ReplyDeleteஇரு வேறு email கொண்டு உள் nulaivathaal ஏற்படும் மாற்றம் தான் இது.
Delete// அது நானே தான். Fake ID இல்லை //
Deleteடேய் முத்து அது உன்னை கலாய்க்க போட்ட கமெண்ட்! :-)
///நான் அதிகம் comment களை படிப்பதில்லை என்பதால் அவர் எப்போதுமே குறை சொல்லி என்று எனக்கு தெரியாது. மேலும் உண்மையான குறையை சுட்டிக் காட்டு பவர்களே இல்லாமல் போய் விடக் கூடாது என்பதற்காக தான் நானே மீண்டும் blog பக்கம் தலை காட்டி இருக்கிறேன்.///
Deleteஅருமை ...!!
கண்டீப்பாக குறைகள் சுட்டிக்காட்டப்பட வேண்டியவையே ராஜ்முத்துகுமார் சார்..!! நிறைகுறைகள் இரண்டையும் அலசிய உங்கள் விமர்சனங்கள் அருமையாக பாராட்டும்படி இருந்தது.!
அக்கறையுடன் சுட்டிக்காட்டுவது
குறைகளை தவறுகளை சரிசெய்யவும் உதவியாக இருக்கும்.!!
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்."
இடிப்பாரையை மட்டுமே கொடுப்பேன் ..அதுவும் கடப்பாரையால் மட்டுமே கொடுப்பேன் என்று ஓரிருவர் செய்துவிட்டு ...மொத்தமாக குறை சொல்லவே இங்கே அனுமதிப்பதில்லை என்று அவர்களே பரப்புரையும் ஆற்றுவதுதான் நகைப்புக்குரியது.!
@ Rajkumar S
Good review sir continue as you are..!!
////அப்போது மெண்டாஸா நாணயங்கள் திருப்பி சுடாது என்கிறார். ////
Deleteநான் மிகவும் ரசித்த வசனங்களில் ஒன்று அது! 'ஆனால் நாணயங்கள் திருப்பிச் சுடாது' என்பது இளம் டெக்ஸை மறைமுகமாகப் புகழும் கூற்று!
அதாவது, 'ந்தாப்பா தம்பீ... இங்கே நீ நாணயத்தை தூக்கிப் போட்டு சுட்டு, அதில் ஓட்டையும் போட்டுவிடலாம்தான். ஆனால் அங்கே நீ எதிர்கொள்ளப்போவது - சுடுவதில் உன்னைவிடவும் ஆற்றல் வாய்ந்த டெக்ஸ் வில்லரை. உன் வித்தையெல்லாம் டெக்ஸிடம் செல்லுபடியாகாது' என்று மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
எதிரிகளின் வாயினாலேயே டெக்ஸுக்கு புகழாரம்!
@ PfB
Deleteஉஷ்ஷ்ஷ்... உஷ்ஷ்ஷ்...! (EBFல உங்களை தனியா கவனிச்சுடறேன், சரிதானே?)
விஜய் @ சிக்கன் பிரியாணி என்றால் ஓகே. டீலா?
Delete///So டப்பிக்குள் இதழ்களை அடைத்த கையோடு – அந்த “Code Name மின்னல்” என்ற ரவுண்ட் பேட்ஜோடு தயாராகிட வேண்டியது தான்! நம்மளவிற்கு எஞ்சியிருப்பது அந்த பேட்ஜை செய்து வாங்கும் வேலை மாத்திரமே !///
ReplyDeleteஎடிட்டர் சார், பறவை பேட்ஜையே கொஞ்சம் பெரிஷ்ஷ்ஷா, அகலமா - போர்வீரர்கள் பயன்படுத்தும் கேடயம் சைசுல செஞ்சு கொடு்த்துட்டீங்கன்னா, வீட்டில் சமயலறையிலிருந்து திடீர்திடீரென பறந்துவந்து 'மடேர், நங்ங், சத்' போன்ற சத்தங்களை ஏற்படுத்தும் பொருட்களிடமிருந்து எங்களைத் தற்காத்துக்கொள்ள உதவியாய் இருந்திடும்!
சாதாரணமாக, காமிக்ஸ் சார்ந்த எந்தவொரு பொருளையும் பத்திரப்படுத்தி பாதுகாப்பதே எங்கள் வழக்கம்! இம்முறை காமிக்ஸ் சார்ந்த பொருளொன்று எங்களைப் பாதுகாக்கட்டுமே? :D
வீட்டம்மா திட்டுவது எனக்கு கேட்கும்படி அவுங்களுக்கு தெரியனும்; ஆனா எனக்கு நிஜத்தில் கேட்கப்படாது.
Deleteஅப்படி ஏதாவது ஸ்பெசல் பேட்ஜ் அனுப்புங்கள் ஆசிரியர் சார்...!!!ஹி...ஹி...
@ STV
Deleteஅப்படீன்னா உங்களுக்கு சிவகாசியிலிருந்து 'குருவி வெடி'யைத் தான் அனுப்பி வைக்கணும். காதுல சொருகி பத்தவச்சுக்கிட்டீங்கன்னா, ஒரு ஆறுமாசத்துக்கு யார் பேசினாலுமே கேட்காது! :P
கண்ணும் தெரியலனா இன்னும் கூட செம்மையாக இருக்கும்....
Deleteஅவுங்க நம்மைநோக்கி செய்யும் சைகைகள் தெரியாதே...!!!
@விஜயராவன் சார்.
Deleteஅவ்வளவு ஏன் சார் கஷ்டப்படணும்?
சிவகாசிலேர்ந்து ஒரு பட்டுப் புடவை ஒண்ணு, காமிக்ஸ் படிக்கிறவங்களுக்கு மட்டும், அதிலும் சேலத்துல இருக்கிறவங்களுக்கு மட்டும்,அதிலும் எஎனக்கு மட்டும் (அதாவது உங்களுக்கு) பரிசா வந்திருக்கு ,னு எடுத்து விட்டா போதுமே.மேலிடம் தானா கூல் ஆயிடும்.😂😂😂
எல்லாம் இப்படி பயந்த சுபாவமா இருக்காங்களே. டெக்ஸ் டைகர்னு படிச்சு வீரமா இருப்பாங்கன்னு தப்பு கணக்கு போட்டுட்டனோ🤔
Deleteகாட்டில் ஒரு புலிக்கு திருமண ரிசப்சன் நடந்ததாம்.
Deleteஎல்லா மிருகங்களும் தூரத்தில் இருந்தே வாழ்த்து தெரிவித்தனவாம்.
ஒரேயொரு பூனை மட்டும் புலியின் முன்சென்று கையை குழுக்கி வாழத்தியதாம்.
கோபமான புலி என்னா பூனை உனக்கு இவ்வளவு தைரியமா என கேட்டதாம்.
அந்த பூனையின் பதில்...
"யோவ்,என்னை நல்லா உற்றுப்பார், திருமணத்திற்கு முன் நானும் புலிதான்யா...."
அதென்னவோ தெரியல...என்ன மாயமோன்னு தெரியல....பூனைன்னாலே நம்ம ஈ.வி. ஞாபகம்தான் வருகிறது!
Delete//எல்லாம் இப்படி பயந்த சுபாவமா இருக்காங்களே. டெக்ஸ் டைகர்னு
Deleteபடிச்சு வீரமா இருப்பாங்கன்னு தப்பு கணக்கு போட்டுட்டனோ//
உங்கள் கணக்கு சரிதான் சார்!!
உண்மையில் நடந்ததென்னமோ நாங்களெல்லோரும் டெக்ஸ் டைகரை ஒரிருமுறை படித்தத்தோடு சரி.ஆனால் வீட்டம்மாக்களோ நாம வெளிய வந்தப்புறம் ஒவ்வொரு கதையையும் பத்து பதினைந்து முறை படித்திருப்பார்கள் போல் தெரிகிறது!தாடையில் குத்துவிடும் போது பேசும் வசனங்களும் ஒரே குத்தில் நாம 'நாக் அவுட்' ஆகும்போதும் டெக்ஸ் மணக்கண்ணில் வந்து போகிறார்.கையில் உள்ள பாத்திரங்கள் குறி தவறாமல் நம்மை வந்து தாக்கும் போது கார்வினின் காங்கோ ஞாபகம் வருகிறது! அப்படியே 'ஜம்ப்' பண்ணி காலால் நம் முகத்தை பதம் பார்த்து அடுத்த நொடியே ஒரு 'சைடு கிக்' அட! இது நம்ம மாடஸ்டி அடி அல்லவா! என்று ஆச்சரியப்படுவதற்குள் மயக்கம் வந்து விடுகிறது....!
இதில் எங்கேயிருந்து வீரமாக இருப்பது!!
நிலமை இவ்வளவு சீரியஸாக இருக்க நம்ம எடிட்டர் வேறு காட்டாற்று வெள்ளமாக பாயும் இளம் டெக்ஸை 'காற்றுக்கென்ன வேலி' என்று களமிறக்கி விட்டிருக்கிறார்.கொஞ்சமே கொஞ்சம் வயதான டெக்ஸ் கதை படித்தே இந்த அடி வாங்கிக் கொண்டிருக்கிறோம். இதில் இளம் டெக்ஸ் வேறு வீட்டம்மாவின் கண்ணில் பட்டால்...?
Deleteஒவ்வொரு அடியும் இடி மாதிரி விழுமேயென்ற பயத்துடன் வெளியே போகும் போதும் வரும்போதும் டெக்ஸை பையிலேயே பத்திரமாக அடை காத்துக் கொண்டிருக்கிறேன்.இப்படியே கொஞ்ச வருடங்களை ஓட்டிவிட்டால் இளம் டெக்ஸூக்கும் வயசாகி விடுமல்லவா? அப்போது வாங்கப்போகும் அடியின் வீச்சு கொஞ்சம் கம்மியாக இருக்குமல்லவா? அப்போது புத்தகத்தை வெளியில் எடுக்கலாமென்று புத்தகத்தை மறைத்தே வைத்திருக்கிறேன்.
'காற்றுக்கு ஏது வேலி'தான் நடுக்கத்தில் 'காற்றுக்கென்ன வேலி'யாக போய்விட்டது!
Delete// "யோவ்,என்னை நல்லா உற்றுப்பார், திருமணத்திற்கு முன் நானும் புலிதான்யா...." //
Delete:-) ஹா ஹா
பிரின்ஸ் அட்டைப்படம் அருமை
ReplyDeleteபுலியின் கண்கள் நெருப்பாக தெரிகின்றது
அட்டைப்படத்தின் ஓவியம் மிக மிக அருமை
ட்ரெண்ட் ஓவியங்கள் அட்டகாசம்
பனி பொலியும் கனடா பிரதேசத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என்று ஆவலை தூண்டி விட்டது
///ஆனா 'நமீதா'ன்றதுதானே சரியான உச்சரிப்பா இருக்கும்?!! :P///
ReplyDeleteட்ரெண்ட் பாத்தி கேட்டா, அவுட் ஆப் ட்ரெண்ட்-ஐ பதிலா சொன்னா என்ன அா்த்தம்னேன்!!
சார் நம்ம பதிமூன்று ரோமன் எண்ணுடன் பின்னணியில் பதிமூனு படம் கோல்டன் கலர் அல்லது ஊதா கலர் பேட்ஜ Early birdகுகு தந்தா கலக்கிபுடாதா
ReplyDeleteமார்சல் டால்டன் (ஸ்டேட் பேங் ஆஃப் டால்டன்)....
ReplyDeleteசூப்பர் சர்க்கஸ்...
புரட்சித்தீ...
பயங்கரபொடியன்...
அதிடிப்பொடியன்...
ஜெஸ்ஸி ஜேம்ஸ்...
பூம்பூம் படலம்...
ஒரு பட்டாப் போட்டி...
வரிசையில் அடுத்த அகமார்க் சாகசம் எது என்ற கேள்விக்கு விடையாக அமைந்துள்ளது இம்மாத 18ம் லயன் ஆண்டுமலர் சாகசம் "மார்சல் டால்டன்".
அக்மார்க் லக்கி காமெடிக்கு வேண்டிய அத்தனை அம்சங்களையும் சிறப்பாக தன்னகத்தே கொண்டு படைக்கப்பட்டுள்ளது...
சில கதைகள் காமெடிக்கு பதில் கடுப்பை கிளப்பும் வேளையில், நாம் ஆசிரியர் சாரிடம் கேட்க அவரும் என்ன பண்ணுவார்?
"சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்".
இந்த சட்டி, அல்ல- பானை முழுதும் காமெடி கலவையாக இருக்க, தன் எழுத்துநடை என்ற தித்திப்பை சேர்த்து சுவையாக பரிமாறியுள்ளார்...!!!
பக்கத்துக்கு பக்கம் வெடிச்சிரிப்பு....
எத்தனை இருக்கமான சூழலையும் தகர்த்தெறியும் ரகளையான காமெடி வெடிதான் இந்த மார்சல் டால்டன்....
வரிசையாக வார்களை தகர்த்து கொண்டே லக்கி வர 20ம் பக்கத்தில் " என் பேரைக் கேட்டா ஊரே கிடுகிடுக்கும்" என மண்பாம்பு மஸ்கரெனாஸ் பிஸ்டலுடன் வர, அவனும் வரிசையா தன் அடைமொழிகளை சொல்ல, மருந்துக்கு கூட அவனை அவர்கள் கவனிக்காமல் போக....அவனோ திட்டிக் கொண்டே நடையைகட்ட நையாண்டியின் உச்சம்...!!!
-டால்டன்கள் பேங்கில் முதல் நாள் அலுவலில் அமர்ந்து இருக்கும் காட்சி...
-டீச்சரம்மா டெரர் டைபாய்டை வெளுக்கும் இடம்...
-டைபயிடின் பாம்களை நைச்சியமாக லக்கி இடம் மாற்ற வைப்பது...
-Julia restaurantல டால்டன்ஸ் தட்டு பாத்திரம் கழுவுவது...
"எத்தினி வருஷமா இந்தப் பொம்பளை பாத்திங்களைக் கழுவாமல் அடுக்கி வச்சிருந்து காத்துக் கிடதாளோ"--(ஹா...ஹா...)
-வெல்ஸ் பார்கோ பெட்டகத்தில் தேன்கூடு...
"வச்சி செஞ்சுட்டானுக"...
----சிரிச்சி சிரிச்சே வயிறே வலிக்கும் இடங்கள்....
மற மறு மறு வாசிப்பு பட்டியல்ல பக்காவா இடம்பெறும் சாகசம் இது....
*ஒரு சேஃப்டியான பின்குறிப்பு:-
-இத்தளத்தில் என்னுடைய வார்த்தைகளுக்கு நானே முழுப்பொறுப்பு.
எந்தவொரு குறிப்பிட்ட தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட ஒரு குழுவையோ என் வார்த்தைகள் கட்டுப்படுத்தாது.
// -டீச்சரம்மா டெரர் டைபாய்டை வெளுக்கும் இடம்...
Delete-டைபயிடின் பாம்களை நைச்சியமாக லக்கி இடம் மாற்ற வைப்பது...
-Julia restaurantல டால்டன்ஸ் தட்டு பாத்திரம் கழுவுவது...
"எத்தினி வருஷமா இந்தப் பொம்பளை பாத்திங்களைக் கழுவாமல் அடுக்கி வச்சிருந்து காத்துக் கிடதாளோ"--(ஹா...ஹா...)
//
இவை நான் மிகவும் ரசித்து சிரித்த இடம்!
///ஒரு சேஃப்டியான பின்குறிப்பு:-///
Deleteஇவை நான் மிகவும் ரசித்து சிரித்த இடம்!
ச்சை! இந்த கட்-காப்பி பேஸ்ட்டே புடிக்காது!
Delete😣😣😣
😂😂😂😂
ReplyDeleteதளம் ரொம்ப அமைதியாக இருக்கிறதே!!??
ReplyDeleteஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.
ReplyDelete“உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?”
“ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன்.
கடவுள் சிரித்தார்.
“என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?”
“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?”
கடவுள் சொன்னார்…
“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.
பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்…
எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்… நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது!
சாகாமல் இருக்க வாழ்கிறான்… ஆனால் வாழாமலே சாகிறான்…”
கடவுளின் கைகள் லேசாக அசைந்தன.. சில நொடிகள் மவுனம்.
“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன?”
-மீண்டும் கேட்டான்.
கடவுளிடமிருந்து ஒரு புன்னகை…
“கண்ணா… யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே… நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.
வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல… அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு…
ஒண்ணைவிட ஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.
எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே… உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்!
நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்… ஆனால் அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும்…
நம்மை நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பதுதான் நிஜம்…
பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு. சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது.
இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.
ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.. எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே!
அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்…
நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்… நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!”
-பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார் கடவுள். அவரது கதவுகள் மூடின…
தேவையானது கிடைத்த சந்தோஷத்துடன்… விழித்தெழுந்தான் அவன்
நன்றி ஜென் கதைக்கு.
ReplyDeleteஇன்று பிறந்த நாள் காணும் தோழர் செந்தில் சத்யா விற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்
ReplyDeleteதிரு.செந்தில் சத்யா அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு நலமுடன்.
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செந்தில்..!!
Deleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் செந்தில் சத்யா...💐🎈🍫🎁🍨🎂
Deleteஇனிய நண்பர் செந்தில் சத்யாவுக்கு ஈவியின் இனிய வாழ்த்துகளும்!!
Deleteதிரு.ATR
Deleteகிட் ஆர்ட்டின் கண்ணன்
டெக்ஸ் விஜய ராகவன்
செயலாளர்
கடல் யாழ் ரம்யா
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
This comment has been removed by the author.
ReplyDeleteமிதுனரே@
ReplyDeleteவாழ்த்துக்கள்💐
லக்கி &லக்கி தேசம் ஆல்வேஸ் டாப்...!!!
சிக்பில் மட்டுமல்ல சிக்பில் தேசமும் செகண்ட் பெஸ்ட் தான் எப்போதும். ரியாலிட்டி ப்ரூவன்ட் ஒன்ஸ் எகெய்ன்...!
பெஸ்ட் ஆஃப் லக் டூ கான்கொயர் த வேர்ல்ட்...!!!
எரிமலைத்தீவில் பிரின்ஸ்:-
ReplyDelete*கேப்டன் பிரின்ஸ் கதைகள் என்றாலே கனமான, வித்தியாசமான களம் இருக்கும். அசாதாரணமான சூழலை கிழவன் பார்னேயுடனும், சிறுவன் ஜின் உடனான கூட்டாஞ்சோறு கூட்டணியோடு எப்படி கையாள்கிறார் என்பது சுவாரஸ்யத்தை ஒரு மிடறு கூட்டும்.
*இம்மாத எரிமலைத்தீவில் பிரின்ஸ் கதையில் அந்த வித்தியாசமான களம் இருக்கு; ஆனா "கனம்" ஒரு மாற்று குறைவுதான். கதையின் போக்கு நம்மையும் அதனோடு ஒன்றச் செய்யும் வழக்கமாக.
*க்ளைமாக்ஸ் ஒரு அதிரடியோடோ, டவிஸ்ட்டோடோ இருக்கும்; இம்முறையில் அதனில் மட்டும் லேசான ஒரு ஏமாற்றம். மற்றபடி பரபரப்பில் எந்தவித தொய்வும் இல்லை.
*ஓவியங்கள்:கதை ரேசியோ 50:50 %ல் இருக்கும்.இம்முறை அது 60:40%ல் இருக்கிறது. கதை முழுதும் துல்லியமான ஓவியங்கள் விருந்து படைக்கின்றன.
*கடல் சாகசம் இல்லை,பாரகுடா வேணும்னு கேட்ட நேரமோ என்னவோ ஏறக்குறைய முழு கதையும் கடலிலேயே நடக்கிறது.
ஓவரால் ரேங்கிங் ஆஃப் ஜூலை...
#ஜம்போ 100/100
#ட்ரெண்ட் 95/100
#லூட்டி வித் லக்கி95/100
#ப்ரின்ஸ் 90/100
லயன்-முத்து வெர்சன் 2.0ல் ஒவ்வொரு ஆண்டும் அசத்திய அறிமுக நாயகர்கள்,
ReplyDeleteஒவ்வொருவரும் நம்மிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் வெவ்வேறானது.
2012-லார்கோ வின்ச்
2013-வெய்ன் செல்டன்
2014-தோர்கல்
2015-பெளன்சர்
2016-ஜேசன் ப்ரைஸ்
2017-ட்யூராங்கோ
2018-ட்ரெண்ட்
----இந்த புதுநாயக வரிசையில் இணைந்துள்ள ட்ரெண்ட் தனக்கென தனிப்பாணியை வகுத்து கொண்டு சிலீரிட வைக்கிறார். பாலை வனங்களில் திரிந்து தொண்டை பூரா மணலை விழுங்கி, குரூர கொலைகாரன்களையும், லக்னர் வகையறாக்களையும் டீல் செய்து வந்த நமக்கு ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பாணியும், சீலீரிடும் பனிப்பள்ளத்தாக்குகளும் லேசான ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன...
ட்ரெண்ட் நிச்சயமாக ஒரு ரவுண்ட் வருவார்....
பனி மண்டல வேட்டை கதையில் எனக்கு ஒரு சந்தேகம்.
ReplyDeleteஆண்ட்ரே ஹார்லோ தனது டைரி குறிப்பில் இரண்டு நபர்களை பற்றி குறிப்பிட்டிருக்கிறான். ஒருவன் சிறுவன், இன்னொருவன் ஜெர்மானியன் என்று.
இப்படியிருக்க, போர்ட் ரிட்லே நகரில் நடந்த கொலையை செய்த கொலைகாரனை சந்தித்து பேசியுள்ள மளிகை கடைக்காரர், கொலைகாரனின் முக ஜாடை அவன் அமெரிக்க கண்டத்தை சேர்ந்தவனல்ல, ஐரோப்பாவை சேர்ந்தவன் என்று சொல்லியிருக்க வேண்டுமே. அந்த முக்கியமான தகவலை ஏன் அவர் சொல்லவில்லை.?