நண்பர்களே,
வணக்கம். சமீபமாய்க் காற்று வாங்கி வந்த நமது வலைப்பக்கம் ஜூலை இதழ்களின் உபயத்தில் லேசாய் சுறுசுறுப்பாகியிருப்பதில் மகிழ்ச்சி ! So கம்பெனி விதிமுறைகளின்படி - இதோ ஒரு உபபதிவு !
இம்மாதத்து நான்கில் எனது favorite எதுவென்பதில் துளியும் சந்தேகம் கிடையாது எனக்கு ! எனது முதல் choice என்றென்றும் கார்டூன்களே எனும்போது, 'இளம் தலயே' எதிரே கோதாவில் நிற்கும் வேளையிலும் கூட, எனது விரல்கள் "ஒல்லிப்பிச்சான்" என்ற பெயருக்கு நேராகவுள்ள அந்த பட்டனையே அமுக்கி வோட்டுப் போட முனைகிறது ! நடப்பாண்டின் அட்டவணையை இறுதி செய்த போதே - ஜூலை எப்போது வருமென்று என்னை எதிர்பார்க்கச் செய்த இதழ் - "லூட்டி with லக்கி" தான் ! இந்த ஆல்பத்தின் 2 கதைகளையும் ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்திருந்ததால் இவை நிச்சயமாய் உங்களுக்கு ரசிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருந்தது ! அதிலும் "திசைக்கொரு திருடன்" நம்மூரின் சூப்பர்-டூப்பர் ஹிட் திரைப்படமான "அருணாச்சலத்தை" லேசாய் நினைவுபடுத்தியது ! அங்கே ஒரு முரட்டுத் தொகையை, 30 நாட்களுக்குள் செலவிட்டாக வேண்டுமென்ற நெருக்கடி ; நடுவே வில்லன்கள் முட்டுக்கட்டை போடும் விதமாய் லாபத்தை அதிகமாக்கிவிட்டு சக்கை வைக்க முயற்சிப்பர் ! இங்கேயோ ஒரு மில்லியன் ஈட்டுவதில் டால்டன்களுக்கு மத்தியில் போட்டி & கன்னத்தில் மருவும், முகமெல்லாம் கரியும் பூசிக் கொண்டு லக்கி & ஜாலி வில்லன்களாக முனைகிறார்கள் !
பேனா பிடிக்கும் போதே இரு கதைகளுமே இந்த ஆண்டுமலரை bright ஆக்கிடுமென்ற நம்பிக்கை வலுப்பெற்றது ! போன வருஷம் (அல்லது அதுக்கு முந்தைய வருஷமா ??) அந்த கேப்டன் பிரின்ஸ் சிறுகதைகளும், பெட்டி பார்னோவ்ஸ்கியின் flashback சாகசமும் ஆண்டுமலராய் வெளியானதில் யாருக்கும் அத்தனை திருப்தி நஹி ! என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது ! So இம்முறை அதே மாதிரியான தப்பைச் செய்திடலாகாது என்றே உஷாராய் லக்கியை ஆண்டுமலருக்கென slot செய்தேன் ! And அட்டைப்படங்கள் எப்போதுமே ஓ.கே.ஆகி விட்டால் இதழும் ஓ.கே. ஆகிடுவது வழக்கம் என்ற அந்த எழுதப்படா விதி இம்முறையும் work out ஆகிட - ஒரு அழகான இதழ் நமக்கு சாத்தியமாகியுள்ளது !
உள்ளதைச் சொல்வதானால் "மார்செல் டால்டன்" கதையின் இடத்தினில் "கானம் பாடும் கம்பிகள்" தான் இடம்பிடிப்பதாக ஒரிஜினல் திட்டம் ! அந்தக் கதை "கௌபாய் எக்ஸ்பிரஸ்" பாணியிலான சாகஸம் ! ஆனால் இந்த ஒற்றை ஸ்பெஷல் இதழை, டால்டன்களின் கச்சேரி ஸ்பெஷலாக அமைத்தாலென்னவென்று திடீரெனத் தோன்றியது ! அட - அது கூட நல்லாத் தான் இருக்குமோ ? என்று மனதில் பட - இறுதி நிமிடத்தில் கதை மாற்றம் நிகழ்ந்தது ! Glad you liked it !!
கார்ட்டூன் ரேஸ்களில் இன்னமும் முதலிடத்தை விட்டுத் தர லக்கி & ஜாலி ஜோடி தயாராகயில்லை என்பதை இந்த இரு ஆல்பங்களும் உணர்த்தியிருப்பதில் எனக்கும் குஷி தான் ! எஞ்சியிருக்கும் கதைகளுள் இனி வரும் நாட்களில் ரொம்பவே கவனமாய்க் கதைத் தேர்வுகளைச் செய்திட வேண்டியிருக்கும் என்பதும் புரிகிறது !
கதைத் தேர்வுகள் பற்றி பேசும் போது - one கேள்வி உங்களுக்கு : லக்கியின் 70-வது பிறந்தநாளைக் கொண்டாடிட பிரெஞ்சில் உருவான கார்டூனும் இல்லா / சீரியஸ் பாணியமில்லா ஆல்பம் ஒன்றினைப் பற்றி ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன் ! "லக்கி லூக்கைப் போட்டுத் தள்ளியது யாரு ?" என்பதான இந்த சாகஸம் - லக்கி லூக் ஒரு நிஜ வாழ்க்கை வன்மேற்கு நாயகராய் இருப்பின் வாழ்க்கை எவ்விதமிருக்கும் என்பது போலானதொரு சாகஸம் ! No காமெடி - ஆனால் க்ரீன் மேனர் பாணியிலான ஓவியங்கள் கதைக்கொரு இலகுத்தன்மையை நல்குகின்றன ! என்ன நினைக்கிறீர்கள் folks ? இது 2019-க்கு சுகப்படுமா ? அல்லது சிவனே என்று இந்த நம்பகமான கார்ட்டூன் பாதையிலேயே பத்திரமாய்ப் பயணம் செய்யலாமா ? உங்கள் choice ?
ஜூலை reviews தொடரட்டுமே - ப்ளீஸ் ?! Bye now...see you around !
பேனா பிடிக்கும் போதே இரு கதைகளுமே இந்த ஆண்டுமலரை bright ஆக்கிடுமென்ற நம்பிக்கை வலுப்பெற்றது ! போன வருஷம் (அல்லது அதுக்கு முந்தைய வருஷமா ??) அந்த கேப்டன் பிரின்ஸ் சிறுகதைகளும், பெட்டி பார்னோவ்ஸ்கியின் flashback சாகசமும் ஆண்டுமலராய் வெளியானதில் யாருக்கும் அத்தனை திருப்தி நஹி ! என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது ! So இம்முறை அதே மாதிரியான தப்பைச் செய்திடலாகாது என்றே உஷாராய் லக்கியை ஆண்டுமலருக்கென slot செய்தேன் ! And அட்டைப்படங்கள் எப்போதுமே ஓ.கே.ஆகி விட்டால் இதழும் ஓ.கே. ஆகிடுவது வழக்கம் என்ற அந்த எழுதப்படா விதி இம்முறையும் work out ஆகிட - ஒரு அழகான இதழ் நமக்கு சாத்தியமாகியுள்ளது !
உள்ளதைச் சொல்வதானால் "மார்செல் டால்டன்" கதையின் இடத்தினில் "கானம் பாடும் கம்பிகள்" தான் இடம்பிடிப்பதாக ஒரிஜினல் திட்டம் ! அந்தக் கதை "கௌபாய் எக்ஸ்பிரஸ்" பாணியிலான சாகஸம் ! ஆனால் இந்த ஒற்றை ஸ்பெஷல் இதழை, டால்டன்களின் கச்சேரி ஸ்பெஷலாக அமைத்தாலென்னவென்று திடீரெனத் தோன்றியது ! அட - அது கூட நல்லாத் தான் இருக்குமோ ? என்று மனதில் பட - இறுதி நிமிடத்தில் கதை மாற்றம் நிகழ்ந்தது ! Glad you liked it !!
கார்ட்டூன் ரேஸ்களில் இன்னமும் முதலிடத்தை விட்டுத் தர லக்கி & ஜாலி ஜோடி தயாராகயில்லை என்பதை இந்த இரு ஆல்பங்களும் உணர்த்தியிருப்பதில் எனக்கும் குஷி தான் ! எஞ்சியிருக்கும் கதைகளுள் இனி வரும் நாட்களில் ரொம்பவே கவனமாய்க் கதைத் தேர்வுகளைச் செய்திட வேண்டியிருக்கும் என்பதும் புரிகிறது !
கதைத் தேர்வுகள் பற்றி பேசும் போது - one கேள்வி உங்களுக்கு : லக்கியின் 70-வது பிறந்தநாளைக் கொண்டாடிட பிரெஞ்சில் உருவான கார்டூனும் இல்லா / சீரியஸ் பாணியமில்லா ஆல்பம் ஒன்றினைப் பற்றி ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன் ! "லக்கி லூக்கைப் போட்டுத் தள்ளியது யாரு ?" என்பதான இந்த சாகஸம் - லக்கி லூக் ஒரு நிஜ வாழ்க்கை வன்மேற்கு நாயகராய் இருப்பின் வாழ்க்கை எவ்விதமிருக்கும் என்பது போலானதொரு சாகஸம் ! No காமெடி - ஆனால் க்ரீன் மேனர் பாணியிலான ஓவியங்கள் கதைக்கொரு இலகுத்தன்மையை நல்குகின்றன ! என்ன நினைக்கிறீர்கள் folks ? இது 2019-க்கு சுகப்படுமா ? அல்லது சிவனே என்று இந்த நம்பகமான கார்ட்டூன் பாதையிலேயே பத்திரமாய்ப் பயணம் செய்யலாமா ? உங்கள் choice ?
ஜூலை reviews தொடரட்டுமே - ப்ளீஸ் ?! Bye now...see you around !
ஆஹா வந்துட்டேன்.
ReplyDelete👏👏👏
Deleteமுதலிடம் எனக்கே!!
ReplyDeleteரன்னர் அப்புங்கோ...!!!!
ReplyDelete👍👍👍👍
Deleteஎடிட்டர் சார்
ReplyDeleteலக்கிலூக்கை போட்டுத் தள்ளியது யாரை 2019 ல் நீங்கள் போட்டுத் தள்ளுங்கள்.
ஆவலுடன் காத்திருப்போம் சார்...தயவு தயவுசெய்து சந்தா வில் அல்லாமல்லாவது 2019 ல் லக்கியை வெளியிடுங்களேன்....
Delete3
ReplyDelete/// சிவனே என்று இந்த நம்பகமான கார்ட்டூன் பாதையிலேயே பத்திரமாய்ப் பயணம் செய்யலாமா ? உங்கள் choice ?////....பழயை பயணமே தொடரட்டும் சார்..
ReplyDeleteகார்டூன் நாயகரின் பாதையை மாற்ற வேணாமே!
டெக்ஸ் கதையே சரியில்லைனு தள்ளி வைக்கும் காலமிதல்லவா!!!
கார்டூன் நாயகரின் பாதையை மாற்ற வேணாமே!
Delete//பிரதி எடுத்து ஒட்டப்பட்டது....//copy paste
+1
Delete-111
DeleteWow....Reached 3 Million...Happy annachi....
ReplyDelete3 மில்லியன் தாண்டியாச்சு சார்.. அறிவிப்பு ஏதும் இல்லையா?
ReplyDeleteஆகஸ்டில் அறிவிப்பு என ஹிட் அடிச்ச வுடனே அறிவிப்பு வந்துட்டதே நண்பரே,போன பதிவில்...
Delete///ஆகஸ்டில் அறிவிப்பு என ஹிட் அடிச்ச வுடனே அறிவிப்பு வந்துட்டதே ///
Deleteபராகுடாவா இருக்கணும் பரந்தாமா..!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கெளபாய் நாயகரா இருக்கனும் ஆண்டவரே..:-)
Delete///
Deleteபராகுடாவா இருக்கணும் பரந்தாமா..!!///+123456789...
குறிஞ்சி-மலையும் மலை சார்ந்த இடமும்-மலைகளில் வேண்டியமட்டும் ஓடித் திரிஞ்சாச்சுது.
முல்லை-காடும் காடு சார்ந்த இடமும்-காட்டில் உலவும் நாயகர்கள் தான் நம்ம பேவரைட்ஸ்..
மருதம்-வயலும் வயல் சார்ந்த இடமும்-அநேக கதைகளில், கி.நா.களில் வயல் வரப்புகளில் வேண்டிய மட்டும் விளையாடியாச்சுது.
பாலை-மணலும் மணல் சார்ந்த வறண்ட நிலங்கள்-அரிசோனா பாலையிலும், மெக்ஸிகன் பாலையிலும் கால் படாத இடமேது...
நெய்தல்-கடலும் கடல் சார்ந்த இடமும்- இன்னமும் காலடியே வைக்கலயே காமிக்ஸ் கடவுளரே!!!பார்த்து கடல் டூர் கூட்டிப் போங்க சாமி...!!!
பூமியிலேயே முக்கால்வாசி கடலா இருக்கிறப்ப, காமிக்ஸ்ல கடல் வராம போயிடுமா என்ன?
Deleteடெக்ஸ் ஜி இது உங்களுக்குக்கான கேள்வி அப்ப பிரின்ஸ் பாலைவனத்திலா கப்பல் விட்ராரு?
Delete@ஸ்ரீதர்(alias)குடந்தை ஸ்ரீதரன்
Deleteஹா ஹா!! கேட்டீங்களே ஒரு கேள்வி!!
நன்றி ஈ.வி ஜி.
Deleteடெக்ஸ் விஜய்னு பேர வச்சுகிட்டு பாரகுடா கேட்டா எப்படி?
எவ்வளவோ தல கதை இருக்கும்போது பாராகுடா கேக்குரார் பாருங்கள் ஈ.வி .
அட ...நம்ம 'தல' கூட பாலைவனத்தில் ஒரு கப்பலைத் தேடிப் போறாருங்கோ....! 2019 -ல் பார்க்கத் தான் போகிறீர்கள் !
Deleteஸ்ரீ ஜி@ மடக்கிட்டீங்களே! நல்ல கேள்வி.
Deleteபிரின்ஸ் என்னதான் கடலில் கப்பல் விட்டாலும் கூட கடலில் ஒரு முழுமையான சாகசமும் நிகழ்த்தலயே!
கடல்ல கப்பலோடு கப்பலாக
"அதோ அந்தபறவை போல வாழ வேணும், இதோ இந்த அலைகள்போல ஆடவேணும்....' என புரட்சித்தலைவர் பாணியில் பாடவேணும் அல்லவா!!!
கப்பல் பைட்ஸ், கப்பலோடு கப்பலை மோதி சிதறடிப்பது,
கடல்ல புதையல் தேடிவது... இப்படி எதிர்பார்த்துத்தான் அப்படி ஒரு வேண்டுகோள் வைத்தேன்...
(ஹி...ஹி.. எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதாக இருக்கு....எஸ்கேப்)
///ஆகஸ்டில் அறிவிப்பு என ஹிட் அடிச்ச வுடனே அறிவிப்பு வந்துட்டதே ///
Deleteபராகுடாவா இருக்கணும் பரந்தாமா..!!
+ 1234567890
பராகுடாவா - அனைத்து பாகங்களும் இணைந்து வெளிவந்தால் அட்டகாசமாக இருக்கும் சார் ...
Vijayan3 July 2018 at 22:18:00 GMT+5:30
Deleteஅட ...நம்ம 'தல' கூட பாலைவனத்தில் ஒரு கப்பலைத் தேடிப் போறாருங்கோ....! 2019 -ல் பார்க்கத் தான் போகிறீர்கள்
அப்படியா சார்.மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி சார்.!
பாரகுடா முழுத் தொகுப்பு, ,,ஆஹா நினைத்தாலே இனிக்கும்
Deleteசர்வமும் நானே கதை ,கடலும் கடல் சார்ந்த கதையும் பாணியில் ஆனது தானே?
Deleteசர்வமும் நானே கதை ,கடலும் கடல் சார்ந்த கதையும் பாணியில் ஆனது தானே?
Deleteபத்மனாபன் ஜி@ அலோ...அலோ...லைனே சரியா கிடைக்கலயே...!!!
Deleteஹி...ஹி...
பாரகுடா கேட்க அப்படி ஒரு "பிட்டு" போட்டேன் ஜி....!!!
// பராகுடாவா - அனைத்து பாகங்களும் இணைந்து வெளிவந்தால் அட்டகாசமாக இருக்கும் சார் .. //
Delete+1
உள்ளேன் ஐயா..!!
ReplyDelete///லக்கி லூக்கைப் போட்டுத் தள்ளியது யாரு ?" என்பதான இந்த சாகஸம் - லக்கி லூக் ஒரு நிஜ வாழ்க்கை வன்மேற்கு நாயகராய் இருப்பின் வாழ்க்கை எவ்விதமிருக்கும் என்பது போலானதொரு சாகஸம் ///
ReplyDeleteஇன்ட்ரஸ்டிச்கா இருக்கும்னா முயற்சி பண்றதுல தப்பே இல்லை சார்.!
ஒரேவொரு கதைதானே ...!
// இன்ட்ரஸ்டிச்கா இருக்கும்னா முயற்சி பண்றதுல தப்பே இல்லை சார்.! //
Deleteஅதே,அதே
+1111111111
எங்களுக்கு எது பிடிக்கும்; எது பிடிக்காதுன்னு (எங்களைவிட) உங்களுக்குத்தானே தெரியும் எடிட்டர் சார்?
Deleteநீங்களே முடிவெடுங்க! ஒருவேளை கதை ஹிட்டடிக்குமா இல்லையான்னு உங்களுக்கே டவுட்டு வந்ததுன்னா... இருக்கவே இருக்கு 'ஜம்போ'! எந்த வரையறைகளும் இல்லாம - எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காத - கட்டிளம் யானை தானே நம்ம 'ஜம்போ'!
பிரியப்படறவங்க மட்டும் வாங்கிக்கட்டும்!!
+12345678999
Delete+1 ...
Deleteஇப்படி நடுசாமத்துகுள்ள பதிவு வருவதில் ரொம்ப குஷி ..:-)
ReplyDeleteகதை படிக்க இன்ட்ரெஸ்ட்டா இருந்தா போட்டு தள்ளுங்க சார்..
ReplyDeleteஇல்லைன்னா ...?
# லக்கியை போட்டு தள்ளியது யார்..#
வந்தாச்சி.
ReplyDeleteலக்கியை போட்டு தள்ளியது யாரு? கண்டிப்பா போடலாம்👍👍👍
ReplyDeleteலக்கியை போட்டு தள்ளியது யாரு? கண்டிப்பா போட்டு தாக்கலாம் சார் ....
Delete+ 123
Delete🎶🎶 O Lucky Luke 🎶🎶
ReplyDelete🍻🍻🍻🍸🍸🍸🍹🍹🍹
எங்க கிட்ட பர்மிஷனெல்லாம் கேட்கணுமா என்ன ? ஜனவரிலேயே லக்கிய போட்டு தள்ளுங்க சார் ! அந்த க்ரீன் மேனர் ஓவிய பாணில லக்கி கதையை படிக்க செம ஆவலா இருக்கோம்.
ReplyDeleteஅப்புறம் இந்த மாத கதைகளில் ட்ரெண்ட் தன்னுடைய அறிமுக கதையிலே பாஸ் ஆகிவிட்டார்.பாலைவன ஹீரோக்களின் கதைகள் ஓவர் டோஸ் ஆகிவரும் நேரத்தில் இந்த பனிப்பிரதேச போலீஸ்காரர் ஆபத்பாந்தவனாக வந்து அமைதியாக கலக்கி விட்டார்.இவ்வளவு அழகான ஓவியங்களை சமீப காலத்தில் எந்த கதைகளிலும் பார்த்ததில்லை.நெஞ்சை அள்ளுகிறது அந்த கனடிய மலைப்பிரதேசங்கள்.அற்புதமான வண்ண சேர்க்கை, நேர்க்கோட்டிலான கதை, ரொம்பவே ஜெண்டிலான நாயகர் என ரசிக்க ஏராளமான விஷயங்கள்.இந்த புத்தகத்தை பீரோவிலிருந்து எடுத்து திரும்ப திரும்ப பார்த்து ரசிக்கிறேன் !
பனிமண்டல வேட்டை !
படித்தேன்.படிக்கிறேன்.இன்னும் பலமுறை எடுத்து படிப்பேன் !!!
+100
Delete+1
Deleteஆமா ஆமா சாத்தான் அய்யா...!!!
Deleteபாலைவன ஹீரோக்களின் கதைகள் ஓவர் டோஸ் ஆகிவரும் நேரத்தில் இந்த பனிப்பிரதேச போலீஸ்காரர் ஆபத்பாந்தவனாக வந்து அமைதியாக கலக்கி விட்டார்.
Deleteயாருப்பா அவரு? என்ன டெக்ஸ் ஜி நீங்களும் ஆமா போட்ரீங்க.
நம்ம டெக்ஸும் பாலைவனத்துக்கார் தான்.
//எங்க கிட்ட பர்மிஷனெல்லாம் கேட்கணுமா என்ன ? ஜனவரிலேயே லக்கிய போட்டு தள்ளுங்க சார் ! அந்த க்ரீன் மேனர் ஓவிய பாணில லக்கி கதையை படிக்க செம ஆவலா இருக்கோம்.//
Delete+9
"பனி மண்டல வேட்டை-ட்ரெண்ட்"....!!!
ReplyDelete*1990களில் நாவல்களில் ஒரு ரவுண்ட் வந்த காலங்களில் திரு சுபா சாரின் ராணுவ நாவல்கள் பிரசித்தம். காரணம் பெரும்பாலும் அவற்றில் நாயகன், தன்னிலையில் இருந்து கதை சொல்வது போல படைக்கப்பட்டு இருக்கும். மிகவும் வித்தியாசமான பாணி அது; என்னை வெகுவாக கவர்ந்தது. அவற்றின் நாயகன்கள் பெர்சனலாக ஏதாவது ஒரு சோகப் பின்னணியை கொண்டு இருப்பது வழக்கம்.
*ராணுவ கதை மட்டுமல்ல சில குறிப்பிட்ட கதைகளிலும் இதே பாணியை கடைபிடித்து இருப்பார்கள் மதிப்பிற்குரிய இரட்டையர்கள். ஒரு பெரிய நகைக் கடையை கொள்ளை அடிப்பது போன்ற "தீம்", மெல்லிய சோகம் இழையோடும் நாயகனின் பின்னனியில் அருமையாக சொல்லப்பட்டு இருக்கும். கதை பெயர் ஞாபகம் இல்லை; இன்றும் கூட படிக்கலாம். இதே பாணியில் திரு ராஜேஷ் குமார் சார்" Lபோர்டு மர்டர்" என்ற கதையை முயற்சித்து இருப்பார்; ஆனால் அது ஏனோ சரிப்பட்டு வர்ல.
*காமிக்ஸ்களிலும் இந்த தன்னிலை பாணியில் கதை நகர்த்தும் யுக்தியை இந்தாண்டு ஜனவரியில் வெளிவந்த "நிஜங்களின் நிசப்தம்" -ல பார்த்தோம். ஆழான சோகம் இழையோடும் அழகிய பனிபடர்ந்த கிராமத்து பின்னணியில் அற்புதமாக கதை சொல்லப்பட்டு இருக்கும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் 2வது முகத்தை தோலுரித்து காட்டியிருக்கும். கதையின் மித மெதுவான பாணி சிலரை வசீகரிக்காமல் போனது போல.
*6மாதங்களில் அதே பாணியில் மீண்டும் ஒரு காமிக்ஸ்; இம்முறை அசரடிக்கும் வண்ணத்தில்; சவாலான வாழ்க்கை முறை காணப்படும் கனடிய பனிமண்டலத்தில் எனும்போது எதிர்பார்ப்பு இருமடங்காக இருந்தது. கதை பாணி தன்னிலையில் நகர்த்தப்படும் என்றபோதே இதிலும் மெல்லிய சோகம் இழையோடும் என்பது புரிந்து போனது.
*இம்முறையும் மிதமான வேகத்தில் கதை நகர்ந்தாலும் சம்திங் வித்தியாசமான அம்சத்தோடு கதை நகருகிறது. அசாத்திய ஓவியங்களும், கடினமான வாழ்க்கை சூழலும் கதையின் உயிர்நாடிகள். ஓவியங்கள் கதையை முழுதும் நகர்த்தும் பொறுப்பை கையாள்கின்றன.
*காதலில் சூடுபட்ட மேல்வர்க்க இளைஞன் பிலிப் ட்ரெண்ட் தன் சோகத்தை மறக்க மிக மிக சவாலான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கிறான். பல நாட்கள் தனிமையில் உழலும் ராயல் மவுன்டட் காவல் பணியை தேர்ந்தெடுக்கிறான்; தன் மனக்காயத்திற்கு மருந்திடும் பொருட்டு. அவனது நீண்ட பயணத்தின் ஒரு பகுதியே இம்மாதம் நம் கைகளில் தவழும் பனிமண்டல வேட்டை.
*கதை போக்கில் 3வேட்டைகள் நடக்கின்றன.
---தன்னுடைய பணி நிமித்தம் ஒரு கொலைகாரனைத் தேடியலையும் சார்ஜெண்ட் ட்ரெண்ட்....
---சுயமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தங்கத்தை தேடி அலையும் பெருநகரப் பிரஜை ஆண்ட்ரே ஹார்லோ....
---ஆண்ட்ரேவைத் தேடி கண்டுபிடிக்க கனடிய பனிப்பிரதேசத்தில் உள்ள ஆபத்துகளையும் பொருட்படுத்தாமல் உலாவும், அவனது ஒன்றுவிட்ட சகோதரி- இளம் பெண் மிஸ்.அக்னஸ்....
*இந்த தேட்டைகளுக்கு நடுவே கதைப்போக்கில் தோன்றும் 4வதான சுகமான வேட்டையும் ஒன்று உண்டு..., ட்ரெண்ட்க்கும் அக்னெஸ்க்கும் இடையேயான காதல் வேட்கை தான் அது.
*இதற்கு நடுவே பரபரப்பான க்ளைமாக்ஸில் திடீர் திருப்பமாக தோன்றும் ஆள்மாறாட்ட வில்லன், நிஜ கொலைகாரன் ஆண்ட்ரேவா?
தேட்டையில் வென்றது யார்?
காதல் கைகூடியதா?
ட்ரெண்ட்டின் மெல்லிய சோக பின்னணிக்கு காரணம் என்ன?
----இதுபோன்ற கேள்விகளுக்கு சுடச்சுட பதில் தருகிறது ஜூலை வெளியீடு பனிமண்டல வேட்டை.
*சாதாரண போலீஸ் அதிகாரியின் பணிச்சவால்கள், பனிப்பிரதேசத்தில் வாழும் முறைகள், செவ்விந்தியர் உடனானா நட்பு என கூடுதலான அம்சங்கள் நிறையவே உண்டு. பொருமையாக நண்பர்கள் இந்த தொடருக்கு ஆதரவு நல்கும் பட்சத்தில் நம் நாயகர்களின் எண்ணிக்கை ஒன்று கூடும்.
*ஓவியங்கள் அசாத்திய உன்னதம். ஒவ்வொரு பேனலும் ஒரு கதை சொல்கின்றன...!!!! நிறைய இருந்தாலும் கூட ஓரிரண்டைக் குறிப்பிட வில்லை எனில் ட்ரெண்ட்டோடு அலையும் சாபம் எனக்கும் கிட்டிவிடும் அபாயம் உண்டல்லவா!!!!
###4ம் பக்கம் பனியில் நடக்கும் ட்ரெண்ட் அணிந்திருக்கும் பனியில் நடக்க உதவும் கால்தடுப்பு.
###பக்கம்6ல் உள்ள கேபினின் இரவு காட்சி.
###பக்கங்கள் 14, 15ல் விரியும் பனிச்சிகர காட்சிகள்.
###பக்கம் 20ல் காணப்படும் உயர்ந்த பனிமரக்கூட்டம்.
###பக்கம் 21ன் விரிவான பனிப்பள்ளத்தாக்கு.
###பக்கங்கள் 25,26ல் படகு சவாரி காட்சிகள். நாமும் மற்றொரு படகில் பயணிக்கும் உணர்வு.
###27ம் பக்கத்தில் வரும் சுரங்க நுழைவாயில். அண்டர்டேக்கர் சுரங்கத்தை நினைக்காமல் இருக்க முடியாது.
###34ம் பக்கத்தில் வரும் போர்ட் ரிட்லேயின் எழில்.
###பக்கங்கள் 39&40ல் ட்ரெண்ட் கொலை காரனைத் தேடிச் செல்லும் மலைச்சிகரங்கள். மயிர்க்கூச்ச வைக்கும் வின்னி ஆற்றின் படுகை.
###கதை முழக்கவரும் அழகு பைங்கிளி மிஸ்.அக்னெஸ்.
& அவ்வப்போது ட்ரெண்ட்டின் கனவில் வலம் வரும் அழகு பதுமை மிஸ்.ஜேனட்டின் எழில் வதனம்.
*இத்தனை அம்சங்கள் போதாதா மறுவாசிப்பு பட்டியலில் ட்ரெண்ட்டைச் சேர்க்க????
செமையா சொன்னீங்க விஜயராகவன். அட்டகாசமான விமர்சனம்.
Deleteவிஜயராகவன் @ உங்கள் பதிவுகளை மிகவும் எனர்ஜெட்டிக்காக எழுதுகிறீர்கள். தொடரட்டும்.
Deleteவாவ்..!
Deleteஉங்களோட உற்சாகத்தைப் பார்க்கும்போது, மறுபடியும் ட்ரெண்டை படிக்கணும்னு தோணுது.
ஆனா டெக்ஸுக்கு வாக்கு கொடுத்துட்டேன்.அதனால இன்றிரவு தலயோடதான் பிரயாணிக்க உள்ளேன்.
@ டெக்ஸ் விஜய்
Deleteஅசத்தலான விமர்சனம்!!
புக்கை எடுத்து ஒரு புரட்டு புரட்டி (நுனிப்புல் மேய்ந்து)விட்டு இங்கே வந்து 'மொக்கை' என்று கமெண்ட் போடுபவர்கள் உங்களின் இந்த பதிவை(!)ப் படித்த பிறகாவது திருந்தட்டும்!!
கடைக்கு வந்த உடன் வாங்கி விடுகிறேன். விமர்சனத்திற்கு மிக்க நன்றி.
Deleteஇது போன்ற விமர்சனத்தை காற்றுக்கு ஏது வேலிக்கு எதிர்பார்க்கிரேன் டெக்ஸ் ஜி.
Deleteஇந்த மாத கதைகளில் ட்ரெண்ட் இன்னும் படிக்க வில்லை ... ஆனால் நண்பர்களது விமர்சனம் சொல்லுதே இவர் பாஸ் ஆகி விட்டார் என்று ....
Deleteடெக்ஸ் கதைக்கு நான் விமர்சனம் செய்தால், நான் மட்டும் ஜிலேபியை சுவைப்பது மாதிரி ஜி! என் நாக்கு மட்டுமே இனிக்கும்.
Deleteஅதே நீங்கள் எல்லாம் சுவைத்து விமர்சிப்பது, என் நெஞ்சமெலாம் தித்திக்க வைக்கும்....!!!!
ப்ளூ@ ட்ரெண்ட் பாஸ் வித் டிஸ்டிங்சன்...!!!
Deleteஇல்லை ஜி.நீங்கள் கண்டிப்பாக தலைக்கு விமர்சனம் செய்ய வேண்டும் இது என் அன்பு கட்டளை ஜி.
Delete@டெக்ஸ்: இன்னும் மற்ற மூன்று (டெக்ஸ் தவிர) இதழ்களையும் படிக்கவில்லை. பதிவுகளை பார்த்தால் அடுத்து லக்கியா இல்லை ட்ரெண்டா (படிக்க) என கொஞ்சம் குழப்பமாக உள்ளது :)
Deleteஅருமை டெக்ஸ்
DeleteDear Blueberry @ Tirupur
DeleteWhy confusing??
Take a Lotti with Lucky!!
விமர்சனம் அருமையோ அருமை நண்பர் டெக்ஸ் விஜயராகவன் அவர்களே
Deleteஅழகான விமர்சனம் டெக்ஸ்..
Deleteநன்றிகள் நண்பர்களே...!!!
Deleteஉங்கள் அன்பும் ஆதரவுமே இதற்கான உந்து சக்திகள்....🙇
சூப்பர் டெக்ஸ் விஜய்.
ReplyDeleteஅருமையான பதிவு. கதையை ரொம்ப ரொம்ப ரொம்ப அனுபவித்து படித்திருக்கிறீர்கள். அனுபவித்ததை இயல்பாக உணர்வுபூர்வமாக வார்த்தைகளில் வடிக்க சாமர்த்தியம் வேண்டும்.அது உங்களிடம் அதிகமாகவே இருக்கிறது.எனக்கு சுட்டுப் போட்டாலும் இதெல்லாம் வரவே வராது.
"பனி மண்டல வேட்டை": ஆபீஸில் இருந்து வந்த உடன் ரொம்ப அசதியாக இருந்தது, கொஞ்ச நேரம்படுப்போம் என்று இந்த புத்தகத்தை கையில் எடுத்து சில பக்கங்களை வாசிக்க ஆரம்பித்தேன், அப்படியே மூழ்கி விட்டேன். இந்த கதையை டிரென்ட் சொல்வது போல் அமைத்து எளிதாக கதையில் நாமும் பயணிக்க உதவியது. அதுவும் நேர்கோட்டில் பயணிக்கும் ஒரு துப்பறியும் கதை இறுதியில் உள்ள டிவிஸ்ட் என அமர்க்களம். இந்த கதைக்கு மேலும் வழு சேர்ப்பது
ReplyDelete@ ஓவியம், தெளிவான நேர்த்தியான படங்கள் கனடாவை கண்முன்னே நிறுத்துகிறது.
@ இயல்பான தத்துவார்த்தமான வசனங்கள்; எடிட்டருக்கு வாழ்த்துக்கள்.
@ இயல்பான ஆர்ப்பாட்டம் இல்லாத செயல்திறன் கொண்ட நாயகன்.
@ கதையை படித்து முடித்த போது ஒரு அழகான கவிதையை வாசித்த அனுபவத்தை கொடுத்தது. ஆனால் மனம் கனத்தது.
@ அனைவரும் படிக்கும் வகையில் இருந்தது.
டிரென்ட் - டிரென்ட் செட்டர்.
இவரின் அடுத்த கதையை ஆர்வத்துடன் படிக்க உள்ளேன்.
குறை என நினைப்பது இது போன்ற புதிய கதைகளை முதல் முறை மட்டும் இரண்டு அல்லது மூன்று கதைகளாக இணைத்து வெளியிட்டால் முதல் வாசிப்பில் பலரைக் கவரும் வாய்ப்புகள் அதிகம். இனிவரும் காலங்களில் இதனை நடைமுறைபடுத்துங்கள்.
///இது போன்ற புதிய கதைகளை முதல் முறை மட்டும் இரண்டு அல்லது மூன்று கதைகளாக இணைத்து வெளியிட்டால் முதல் வாசிப்பில் பலரைக் கவரும் வாய்ப்புகள் அதிகம். இனிவரும் காலங்களில் இதனை நடைமுறைபடுத்துங்கள்.////---+10000
Deleteயெஸ். இரண்டு, மூன்று பாகங்கள் எனில் டியூராங்கோ போல இன்ஸ்டன்ட் ஹிட் அடிக்கும் வாய்ப்பை வழங்கும். மேலும் இதுபோன்ற ப்ளாஷ்பேக்கை பிரதானமாக கொண்ட கதைகளில் நாயகனை பற்றிய தெளிவாக அறிய முடியும்...
///கதையை படித்து முடித்த போது ஒரு அழகான கவிதையை வாசித்த அனுபவத்தை கொடுத்தது.////
Deleteசூப்பர்!! எனக்கும் அப்படித்தான் இருந்தது!!
( நல்லவேளையா அதில் எடிட்டரின் கவிதை எதுவும் இல்லை!) :P
//இவரின் அடுத்த கதையை ஆர்வத்துடன் படிக்க உள்ளேன்.//
Deleteநான் இவரின் முதல் கதையை படிக்க ஆர்வத்துடன் உள்ளேன் (நேரம் கிடைத்தவுடன்) :)
நன்றில
Delete//( நல்லவேளையா அதில் எடிட்டரின் கவிதை எதுவும் இல்லை!) :P//
Deleteஆல்பம் # 2 இருக்கே !! அங்கே கவிதைகள் தான் கதையின் முதுகெலும்பே !! ஹை ..ஜாலி ! ஜாலி !
வைச்சு செய்வோம்லே !!
ஹிக்!!
Delete@Parani from Bangalore
Deleteஅருமையாக சொல்லி உள்ளீர்கள் சகோதரரே
33rd
ReplyDelete(நன்றி : tex kit )
ஜூலையின் வோட்டு ?!
ReplyDelete1.லக்கியும் டால்ட்டனும் எப்போதுமே செம காம்போ தான் .. கிட் ஆர்டின் அண்ட் டாக் புல் சிறிது காலமாக வைத்திருந்த கார்ட்டூன் முதல் இடத்தை மீண்டும் லக்கி டால்டன்ஸ் உதவியுடன் பிடித்து விட்டார் ...
2. டிரென்ட் ... not bad .. it was a pleasant read ...expecting more in second issue ..
3. பிரின்ஸ் ..வழக்கமான பிரின்ஸ் ஸ்டைல் சாகசம் ..நன்றாக இருந்தது ..
4. இளம் தல .. என் NO 1 இது தான் .. தெறி மாஸ் சாகசம் .. MAYBE 2018 யின் சிறந்த ஆல்பம் இது வாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் .. (XIII AND 007 வந்த பின் மாறலாம் ).. BUT TEX IS UNDISPUTED KING OF LION COMICS ...
///BUT TEX IS UNDISPUTED KING OF LION COMICS .///
Deleteவாவ்! நச்!!
இதைப் படிக்கும்போது ஏதோ ஒருவகைப் பெருமை!!
///. BUT TEX IS UNDISPUTED KING OF LION COMICS ...///---தம்பி உங்களுக்கு ஈரோட்டில் ஒரு சிக்கென் லாலிபாப் உண்டு...!!!
Deleteசூப்பர் ஜி தொடருங்கள்.
Deleteஇளம் டெக்ஸ் என்னை அப்படியே அடிமை படுத்தி விட்டது.வாங்கிய தினம் முதல் தினமும் ஒரு அல்லது பல முறை பார்த்து ரசிக்கிரேன்.
I55
ReplyDeleteசார் இதென்ன கேள்வி லக்கிய போட்டுத் தள்ளுனவன கண்ல காட்டுங்க சார்,,,அவன சும்மா விடேன்
ReplyDeleteஇந்த மாத புத்தகங்களில் முதலில் வாசிக்க எடுத்தது இளம் தலையே .... நண்பர்கள் சொல்வது போல இந்த வருடத்தின் சிறந்த கதைகளில் இது இடம் பிடிக்கும்.
ReplyDeleteஜம்போ - முதல் பந்திலேயே சிக்ஸர் ....
+12233445567778899999999
Deleteகாமிக்ஸ்னா காா்ட்டூன்!
ReplyDeleteகாா்ட்டூன்னா லக்கி!!
Nomore questions!!!
பகட்டாக ஆயிரம் ஹீரோக்கள் வந்தாலும் என்றுமே நம்ம பேவாிட் லக்கி ஒன்லி!!!
DeleteOne who wins without troubles that is just victory!!
Deletebut
one who wins lot of troubles that is history!!
Only one hero is UNDERTAKER
Sorry "Lucky luke"
I wanna a lot of LUCKY LUKE Stories!
'cause Lucky is one of the best forever!!
///எனது முதல் choice என்றென்றும் கார்டூன்களே எனும்போது, 'இளம் தலயே' எதிரே கோதாவில் நிற்கும் வேளையிலும் கூட, எனது விரல்கள் "ஒல்லிப்பிச்சான்" என்ற பெயருக்கு நேராகவுள்ள அந்த பட்டனையே அமுக்கி வோட்டுப் போட முனைகிறது///
DeleteSame pitch sir!!
///ஜூலை எப்போது வருமென்று என்னை எதிர்பார்க்கச் செய்த இதழ் - "லூட்டி with லக்கி" தான்///
DeleteMe too sir!
// என்ன நினைக்கிறீர்கள் folks ? இது 2019-க்கு சுகப்படுமா ? அல்லது சிவனே என்று இந்த நம்பகமான கார்ட்டூன் பாதையிலேயே பத்திரமாய்ப் பயணம் செய்யலாமா ? உங்கள் choice ? //
ReplyDeleteசிவனே என்று இந்த நம்பகமான கார்ட்டூன் பாதையிலேயே பத்திரமாய்ப் பயணம் செய்யலாம்
81st
ReplyDeleteபனிமண்டல வேட்டை அருமையான சித்திரங்களுடன் அசத்தியது கதையும் தொய்வில்லாமல் நகர்ந்து ஒரு நல்ல கதையை படித்த திருப்தியை கொடுத்தது ட்ரெண்ட் டை வெடி போட்டு வரவேற்க்கலாம்
ReplyDeleteஉரிமையுள்ளவள்தான் என்றபோதும் உத்தரத்தை பார்த்து உச்சு கொட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட –ஆனி மாதம் 32-ம் நாள் கல்யாணம் செய்து கொண்ட புது மாப்பிள்ளை நிலையாகி இருந்தது என் நிலைமை ..
ReplyDeleteபுத்தகங்கள் வந்து இருந்தன ....ஆனால் யானோ பல காத தொலைவில் ....
இப்போது ...ஆடிப்பிரிவின் அவஸ்தையில் இருந்து விடுபட்ட மணமகனின் மனநிலையில் ...
உள்ளங்கையில் பனி மண்டல வேட்டை ..
///இப்போது ...ஆடிப்பிரிவின் அவஸ்தையில் இருந்து விடுபட்ட மணமகனின் மனநிலையில் ...///
Deleteஅப்படியானால், மணமகளின் கதி?!!
எதுக்கும் செனாஅனாவுக்கு இன்னொரு செட் புக்ஸ் அனுப்பிவச்சுடுங்க எடிட்டர் சார்! :D
பின்னுரிங்க. வாழ்த்துக்கள் செல்வம் அபிராமி.
Deleteஅபாரம் செனா அனா ஜி
Deleteகாமிக்ஸ் –ல்
ReplyDeleteகதை கணவன் எனில்
சித்திரங்கள் மனைவி என சொல்லலாம் ..
ஷேக்ஸ்பியர் ‘’ TWELFTH NIGHT ‘’ நாடகத்தில் சொன்னார்.
BETTER WELL HANGED THAN ILL WED…. என்று .
பனி மண்டல வேட்டையில் கதைக்கும் சித்திரங்களுக்கும் உள்ள பொருத்தத்தினை பார்க்கும்போது கனப்பொருத்தம் மிக்க இளம் தம்பதியர் என பரவசத்துடன் பறையறிவிக்க தோன்றுகிறது ..
இப்பொருத்தம் பற்றி விருத்தம் பாட கம்பன் தமிழ் கைவசம் இல்லையே என்ற வருத்தம் மேலிடுகிறது ...
கதையில் வரும் பனி நாம் உணரும் பனியல்ல....
தமிழ் நாட்டின் பனிக்காலம் மார்கழியில்
சாணிக்கு குளிராகுமோ ?
பூசணிப்பூ போர்த்திவிட்டாள்
மார்கழி கோலம் போட்ட பெண் .
என்ற ந.க. துறைவனின் ஹைக்கூ கவிதையில்
மனித மேனியின் குளிரை விடுத்து சாணியின் குளிர் பற்றி எழுதி மார்கழி பனியை சாடுகிறார் .
///பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற//
என திருவெம்பாவை சொல்லும் பனியையும் கணக்கில் எடுத்து கொள்ளலாம் ..
2017-ல் தமிழ்நாட்டில் மார்கழியில் குறைந்த பட்ச வெப்பநிலை 80 டிகிரி F.
பனி மூடிய கயிலாய மலையை வாசஸ்தலமாக விரும்பி வைத்துள்ள சிவனுக்கும் ( “உருத்திகழ் எயிற் கயிலை வெற்பி லுறைதற்கே விருப்புடையவற்புதர்” என ஞானசம்பந்தர் கூறுகிறார். ) அப்பனியில் இருந்து பாதுகாக்க புலித்தோலும் யானைத்தோலும் தேவைப்படுகின்றன
//துன்னுடைய வியாக்கிரமத் தோலுடையான் தானிருக்கப்//
என்கிறார் ராமலிங்க அடிகளார் திருவருட்பாவில் ...
துன் - துன்னுதல். தைத்தல் என்பது பொருள். வியாக்கிரம் - புலி. வியாக்கிரத்தோல் . சிவனுக்குப் புலித்தோல் உடையதாதலின் “வியாக்கிரமத் தோல் உடையான்” எனக் கூறுகின்றார். பனி மூடிய கயிலாய மலையில் இருத்தலை விரும்புபவனாவலால் தோலாடையும் யானைத் தோற் போர்வையும் வேண்டப்படுகின்றன.
சிவனுக்கே புலித்தோல் தேவைப்படும் கைலாஷ் மான் சரோவரில் பொதுவான குறைந்த பட்ச வெப்பநிலை 40 டிகிரி F.
கதை நிகழும் கனடாவின் வடமேற்கு பகுதியில் குளிர்காலத்தில் பொதுவான குறைந்த பட்ச வெப்பநிலை -40 டிகிரி F.
நாரை விடு தூது எழுதிய சத்திமுத்த புலவரை போல ‘’கையது கொண்டு மெய்யது பொத்தி ,காலது கொண்டு மேலது தழீ ‘’ கொண்டெல்லாம் இந்த குளிரில் இருந்து நம்மை காத்து கொள்ள முடியாது ....
பொறுப்பு துறப்பு (DISCLAIMER)
இப்படி ஒரு காலட்ஷேபம் நடத்த முழுக்காரணமும் அட்டை மற்றும் கதையின் ஆரம்ப பக்கங்களில் வரும் நேத்திரங்களை கொள்ளை கொள்ளும் நெஞ்சை அள்ளும் பனிப்பொழிவு சித்திரங்களே அன்றி யானல்ல.
ஆயக்கலைகள் அறுபத்தி நான்கில் முதல் பன்னிரண்டு கலைகள் கற்றுணர் கலைகள் ..
Deleteஆனால் ரசிக்க கூடிய வகையில் கண் புகு கலைஎன பதிமூன்றாம் கலையாக இசை ,நாட்டியம் இவற்றுக்கு முதலாக ஓவிய கலையை ஏன் வைத்தார்கள் என்ற கேள்விக்கு விளக்கமளிக்கும் வகையில் உள்ளது ‘’லியோவின் ‘’ சித்திரங்கள்
லயன் முத்துவின் சினிபுக் வெளியீடுகளில் ஒன்றான KENYA கதைத்தொடரை வாசித்தவர்களுக்கு இவர் பரிச்சயமானவரே ....
கதாசிரியர் ரோடால்ப் கமான்சே கதை தொடரின் கடைசி பாகத்தை கிரெக்-க்கு பதிலாக முடித்து கொடுத்தவர் ..
ரோடால்ப் –லியோ ஒரு வெற்றிகரமான கூட்டணி ...
பொருளாளரே ...சித்திரத்திற்கே செமயான விமர்சனம்னா இனி கதையை படிச்சவுடன்...:-)
Deleteசெல்வம் அபிராமி ஜி,ம் ம் ம் ம் ம் ம் எங்கியோ போயிட்டிங்க.
Deleteஆகா... விரைவில் முழு விமர்சனமும் போடுங்க பொருளர் ஜி....
Deleteஉங்களின் பார்வையில் , எப்போதுமே எங்கள் அனைவரின் பார்வையில் இருந்து தப்பிய கோணங்களில் விளக்குவீர்கள்...ஆவலுடன் வெயிட்டிங்
இன்று பிறந்தநாள் காணும் நண்பர் கரூர் சரவணன் ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஅவர் வாழ்வில் நலமும்,வளமும் பெற வாழ்த்துகிறோம்.
💞💖💞💖💞
கெடா வெட்டின் காதலர் கரூர் M.L.A. சரவணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எப்போதும் லெக் பீஸோடு வாழ்க
Deleteதிரு.கரூர் சரவணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.நலமுடன் வாழ்க பல்லாண்டு.
Delete🍬🍭🍦கெடா வெட்டுப் பிரியர் கரூர் சரவணன் சாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்🎂🍧🍫🎈🎈🎈🎈💐💐💐💐💐
Delete'கெடாக்களின் பரம வைரி' கரூர்கார்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும்!!
Deleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கரூர் சரவணன் சார்.
Deleteசகோதரர் கரூர் சரவணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் :)
Deleteகிடா உலகின் அண்டர்டேக்கர்,
Delete(தினமும் ஒரு) கிடாவை போட்டு தள்ளியது யாரு? என்ற வினாவின் விடை, கரூர் சரவணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!
அன்பு கரூர்க்கார்க்கு நமது பிறந்த நாள் வாழ்த்துக்களும் !!
Deleteகரூர் சரவணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!
Deleteபிறந்த நாள் வாழ்த்து சொன்ன மற்றும் சொல்லப் போகும் அனைத்து காமிக்ஸ் சொந்தங்களுக்கும் நன்றி.. 🙏🏽🙏🏽🙏🏽
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சரவணரே..!!
Deleteசரவணன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கரூர்கார்.
Deleteஅதே அதே.
Deleteபனி மண்டல வேட்டை: பக்கம் 41ல் வரும் டுபெலிஸின் முகபாவனையை மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteட்ரெண்ட் டுபெலிஸை மடக்கியவுடன் அவன் தன்னை ஒரு வன்மச் சிரிப்பு சிரிக்கும் இடம்.
அதே பக்கத்தில் சூப் பாத்திரத்தால் டெரெண்டை தாக்கும் இடத்தில் அவன் முகபாவனை.
அவன் அறிமுகமான சில பேனலுக்குள் அவன் எப்படிபட்ட வில்லன் என்பதை ஓவியர் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.
பரணி@ ஷூவுக்குள் விரியனை போடும் லக்னரின் முகம் மாதிரியே இருக்குதானே?
Deleteகதையை முழுசுமாக அவன் ஆங்கிளில் சொல்லப்பட்டு இருந்தா லக்னர் பார்ட் 2 வாக இருந்து இருக்க கூடும்....
// ஷூவுக்குள் விரியனை போடும் லக்னரின் முகம் மாதிரியே இருக்குதானே? //
Deleteமிகவும் சரியான உதாரணம் விஜயராகவன்.
விஜயன் சார்,
ReplyDelete// லக்கியை போட்டு தள்ளியது யாரு //
இந்த கதையை அடுத்த வருடம் ஜம்போவில் வெளியிடலாமே. ஜம்போதான் காமிக்ஸ் என்று எந்த வரமுறையின்றி வரவுள்ள கதைகளுக்கு ஏற்ற மைதானம்.
தயவு செய்து இந்த கதையை கார்டூன் சந்தாவில் சேர்த்து விடவேண்டாம்.
Please update and break the secret of TEX DYNAMITE SPECIAL BOOK. HOW MANY STORIES?? COLOUR OR BLACK AND WHITE.
ReplyDeleteKINDLY OPEN THE SECRET.
I.V.SUNDARAVARADAN
LITTLE KANCHEEPURAM
Sundar @
Delete// COLOUR OR BLACK AND WHITE. //
Based on the advertisement it is color only! rest we can wait.. may be he will announce it during the erode book fair! till then the focus will be on XIII. :-)
கலரில் பாதி கருப்பில் பாதி கலந்த கலவை....!!!
Deleteபக்கங்கள் 777னு சொன்னதாக ஞாபகம்...
ரகசியமெல்லாம் காக்கும் அவசியமுண்டா - என்ன சார் ? இதழ் கைக்குக் கிடைக்கும் வரை ஒரு சின்ன த்ரில் இருக்கட்டுமே என்று நினைத்தேன் !
Deleteசார், ரெகுலர் சந்தாவில் இந்த ந்யு ஸ்டைல் லக்கி வந்தால் சாத்து விழுமோ என்று நீங்கள் நினைத்தால், ஜம்போவில் இறக்கிடலாமே?
ReplyDeleteஅதெப்படி..? சாத்துன்னு தீர்மானம் ஆகிப் போனால் ஜம்போவாது ; அம்போவாவது !! பாரபட்சமில்லாது, சகல ஸ்தலங்களிலும் சாத்தியமாவது அது ஒன்று மட்டும் தானே சார் ?
Deleteஅதுவும் சரிதான் சார். ஆனால், கதை சொதப்பலில்லையே (ஆங்கிலத்தில் படித்ததால் சொல்கிறேன்). அதனால், வழமையான கார்டுன் பாணி பிடிக்காதவர்கள் சந்தா சி க்குள் ஏன் நுழைத்தீர்கள்? என்று கேட்டு கொதிப்பதையாவது தவிர்க்கலாமே!
Deleteவழமையான கார்டுன் பாணியை விட்டு விலகியதை ஏற்காதவர்கள், பிடிக்காதவர்கள் - என்று வந்திருக்கவேண்டும்..
Delete2 மாதங்களுக்கு முன் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக கார்வார் சென்ற போது அங்கே இந்த The man who shot lucky luke புத்தகத்தை படிக்க நேர்ந்தது. கொலை, ரத்தம் இவைகளை லக்கியின் கதைகளில் நான் இதுவரை பார்த்ததே இல்லை. ஆனால் இந்த கதையில் வருகிறது. எனக்கு அந்தக் கதையை படிக்க படிக்க, டைகருக்காக உருவாக்கிய கதையில் லக்கி லூக்கை போட்டுவிட்டார்களோ என்று ஒரு ஃபீலிங் இருந்தது. ஆனாலும் அந்த கதை அற்புதமாக இருந்தது. அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று லக்கி ரசிகர்களின் மனதில் புதிய இடத்தை பிடிக்கப்போவது உறுதி. காமெடியும் கொஞ்சம் இருக்கிறது என்று நினைக்கிறேன். கதை இப்போதே 50% மறந்துவிட்டது. அதை 2019'ல் வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த Request-டை சென்ற மாதம் ஏதோ ஒரு பதிவில் வெளியிட்டிருந்தேன். இன்னும் இரண்டு மாதங்களில் வரப்போகும் 2019 அட்டவணை புத்தகத்தில் இந்த கதையை எதிர்பார்க்கிறேன்.
ReplyDelete+111
Deleteமேலும் Chinaman கதையையும் வெளியிடுங்கள் சார்!
ReplyDelete"லக்கி லூக்கைப் போட்டுத் தள்ளியது யாரு ?" வரவேற்கிறேன்
ReplyDeleteஸ்ஸப்பா!
Deleteஎத்தனை +111 தான் போடரது!!
லக்கிய போட்டு தள்ளியது யாரு? யாரு வெளியீடு செய்யலாயோ அவரை போட்டுதள்ளிட வேண்டியது தான்.
ReplyDeleteஅப்புறம் எடியை போட்டு தள்ளியது யார்?
அப்பிடினு ஒரு போட்டியும் வைத்து விடலாம்.
This comment has been removed by the author.
Delete// எடியை போட்டு தள்ளியது யார்?அப்பிடினு ஒரு போட்டியும் வைத்து விடலாம் //
Deleteஅப்புறமேட்டு தஞ்சாவூர் ரோடு வரைக்கும் கூட்டம் அலைமோதும் !! பரால்லியா சார் ?
எடிட்டர் சார்!!
Delete:)))))))))
எனக்கு பரிசு (அடி,உதை ,குத்து) ( சத்,ணங்,கும்)கொடுக்க வரும் கூட்டம் தானே சார் .
Deleteஅட... நீங்க வேற ! எலிய விட்டாலும் விடலாம் ; எடிய விடப்படாது ! "போட்றா தம்பின்னு" அலைமோதும் கூட்டத்தை பத்திச் சொன்னேன் !
Delete@எடிட்டர்,ஸ்ரீதர்
Delete:-))))))
டெஸ்ட்.
ReplyDeleteஎடிட்டர் அவர்களுக்கும், தோழர்களுக்கும்
ReplyDeleteஇருபது நிமிடம் முன்னால் DTDC கூரியரில் இருந்து அழைப்பு. "உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது!!" என்று. "S.T.Courier ல் தான் நாம் நமது காமிக்ஸ் பார்சலை வாங்கிவிட்டோமே. இது வேறு என்னவாயிருக்கும்" என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே டூவீலரில் வந்த தோழர் நம் சிவகாசி அட்டை பெட்டி பார்சலைக் கொடுக்கிறார்.
பிரித்தால் உள்ளே "நம் இளவயது டெக்ஸ்!!"ஒரு நிமிடம் இன்ப அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே புரியவில்லை!!
நம்மில் ஒருவர் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். "யார் அந்த தோழர்? புரியவில்லை!! முப்பதாண்டு காலம் என்னுடன் இருந்து என்னால் பல உதவிகளும் பெற்று என்னிடம் நெருக்கமாக இருந்தவர்களே ஒரு நியாயமான காரியத்துக்காக போராடிய என்னை தங்கள் சுய நலத்துக்காக ஒன்றுகூடி முதுகில் குத்தி இருந்த வேலையையும் பறித்து இன்று வரை நீதிமன்றம் அங்கே இங்கே என்று அலையவிட்டு ஆனந்த பட்டுக் கொண்டிருக்கும்போது நான் யாரென்றே தெரியாமல் இந்த பரிசினை அளித்து இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நல்லிதயம் கொண்ட நண்பருக்கு ஆயிரம் நன்றிகள். இந்த அன்பை என்றும் மறவேன்."
வாழ்த்துக்கள்ATR sir....
Deleteவாவ்....அட்டகாஷ்...அருமையான பணி முகமறியா காமிக்ஸ் சொந்தமே...👏👏👏👏👏
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்...!!!!
நன்றி டெக்ஸ் விஜய். விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள் நம் கையில் வந்து சேரும் போது ஆனந்த அதிர்ச்சி சற்று அதிகமாகவே இருக்கிறது.
Deleteவாவ்!! வாழ்த்துகள் ATR சார்!!
Delete'மகிழ்வித்து மகிழும்' நம் அன்புள்ள அனாமதேயாவுக்கு நன்றிகள் பல!!
நம் தளத்தின் சிறப்பே அடுத்தவர்க்கு கிடைத்த பரிசைக்கூட தனக்கே கிடைத்தது போல மனம் மகிழ்ந்து பாராட்டுவதுதான்.
Deleteமனதளவில் வேற்றுமை இல்லாத போதுதான் இது சாத்தியப்படும்.இப்படி ஒரு சூழல் அமைய தளம் அமைத்துக் கொடுத்த எடிட்டருக்கும்,முகம் காட்டாமல் இன்ப அதிர்ச்சி அளிக்கும் அன்புள்ளத்துக்கும்,என்னுடன் சேர்ந்து மகிழும் தோழர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் பல.
அருமை,மகிழ்ச்சி.
Delete+11111
சூப்பர் சகோதரரே
Deleteபரிசளித்த நண்பரை பாராட்டுகிறேன்
ட்ரெண்ட் இரண்டு அல்லது 3 கதைகளை சேர்த்து ஒரே ஆல்பமாக போட்டால் தான் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியும்...
ReplyDeleteSir, Any EBF details ???!!!
ReplyDeleteஸ்டால் கிடைக்கட்டுமே சார் ?!
Deleteகோவை புத்தக விழாவில் நமது ஸ்டால் இடம்பெருமா சார்?
ReplyDeleteமுயற்சிப்போம் சார் !
Deleteபுத்தக விழா ஜூலை 20 to 27 .
ReplyDeleteதிரு.செல்வம் அபிராமி ஐயா அவா்களுக்கு அடியேனின் சிறு வேண்டுகோள்!
ReplyDeleteவிரைவாக லூட்டி வித் லக்கியை படித்துவிட்டு தூய தமிழில் விமா்சனம் செய்தால் மிக்க மகிழ்வேன்!
உங்களது பாா்வையில் லக்கிலூக்கின் விமா்சனத்தை பேராவலோடு எதிா்பாா்க்கிறேன்!!
@ மிதுன்!
Deleteலக்கி லூக் புடிக்காதவங்க யாருமே இல்லைன்னு நினைக்கிறேன் மிதுன்..
மறுக்கா ரெண்டு நாள் வெளியூர் பயணம்..
அதனால நாலு நாள் கழிச்சு எழுதறேன்..
செனா அனா ஜி அப்படியே நம்ம இளம் தலைக்கும்.
Deleteபேசாம "லக்கிய போட்டுத் தள்ளியது யாரு? யாரு?" னு ஒரு பொிய பேனரும், சிலபல பிட் நோட்டீஸ்களும், சுவரொட்டிகளும் ஒட்டி, விளம்பரம் பண்ணினா என்ன?
ReplyDeleteஇவண்,
சிடுமூஞ்சி ஸ்மா்ப்!😣😣😣
சாா்,
ReplyDeleteஇப்டிதான் ஒருதபா சுட்டி லக்கியின் பிட்டத்துக்கு பின்னாடி ஒரு கரடி நின்று கொண்டிருக்கும் படத்தை போட்டு, இந்த கதை ஒன்னு இருக்குனு குஷிய கெளப்பி விட்டுட்டு, அம்போனு விட்டுட்டீங்க??!!
ம்ம்ம்
ச்சை! எனக்கு இந்த அம்போனு விடரதே புடிக்காது!!
ச்சை..! எற்கனவே வாங்குறது பத்தாதுன்னு ஒற்றைப் பக்க கார்ட்டூன்களாய் மாத்திரமே உள்ளதொரு ஆல்பத்தை வெளியிட்டு விட்டு புதுசாவும் சாத்து வாங்குறதே எனக்குப் புடிக்காது !!
Deleteஹாஹாஹா 😂😂😂
DeleteDavid Shepard
Deleteஜம்போ இதழ் அட்டகாசம்.
ReplyDeleteகையில் ஏந்தியவுடன் தரையிலிருந்து "ஜம்ப்" பண்ணி 'ஓ....'வென கத்தத் தோன்றுகிறது.
அதனால்தான் ஆசிரியர் "ஜம்போ" வென பெயர் சூட்டினாரா?
அப்படித்தான் இருக்கும் நண்பரே வாழ்த்துகள்.
Delete🎶🎶லூட்டி வித் லக்கி🎶🎶
ReplyDeleteதிசைக்கொரு திருடன்
அட்டைப் படத்தில் "திருடன்" என்ற வாா்த்தையை கவனித்தீா்களா?
எழுத்தின் ஒவ்வொரு முனையிலும் திசையைக் காட்டுவது போல ஒரு அம்புக்குறி இருக்கும்!
"ன்" என்ற எழுத்தில் திசைக்கொரு என்ற வாா்த்தையை குறிக்கும் படியாக அம்புக்குறியானது மேலிருந்து கீழ்நோக்கி இருக்கிறது!!
அதேபோல "ட" என்ற எழுத்தின் நீட்சியின் கீழ்பகுதி நீண்டு மேலே போய் மீண்டும் திசைக்கொரு என்ற வாா்த்தை காட்டுவதாய் இருக்கிறது!
இப்படியாக திசைக்கொரு என்ற வாா்த்தையையும், திருடன் என்ற வாா்த்தையையும் மேலும் கீழும் தொடா்ந்து சுட்டுவதாய் டைட்டிலை அமைத்த விதத்தை பாா்க்கும் போது டைட்டிலை அமைத்ததில் நம் எடிட்டாின் பங்கு தாராளமாய் இருந்திருக்கும் போலிருக்கிறது!!
முதலாவதாய் டைட்டிலுக்கு ஒரு சல்யூட்!!
முதல் கதை மாா்ஷல் டால்டனாய் இருந்தாலும் டைட்டிலுக்காண்டியே "திசைக்கொரு திருடன்"னு முன்அட்டையில் போட்டிருப்பாரோ!!
அட்டையை திருப்பியதும் அடுத்த பக்கம் ஆரஞ்சு வண்ணத்தில் ரிவா்சில் டின்டில் இருக்கும் லக்கியின் பல்வேறு கதாபாத்திரங்களை தான் பாருங்களேன்!!
Deleteமுதலாவதாக ஆண்டுமலரைக் கொண்டாடும் விதமாய் லக்கியை
வியக்கச் செய்ய யுவதிகள் இருவா் நமது ஒல்லி பிச்சானின் எடைக்கு எடை நிகரான பிறந்த நாள் கேக்கை கொண்டு வருவதும், லக்கி விக்கித்து நிற்பதும்!!
அடுத்து, ஏதோ உலகையே புரட்டிப் போடும் ஆழ்ந்த சிந்தனையில் சுட்டி லக்கி நடைபழகுவதும்,
மா டால்டன் ரின்டின்கேனின் பிட்டத்தைப் பதம் பாா்க்கும் ஜோவை முறைப்பதும்,
ஜேனும், லக்கியும் ஒருசேர ஓடும் அழகும்,
ஒய்யாரமாய் ஜாலி ஜம்பரை கேரவேனாக்கி கிடந்துறங்கி வரும் லக்கியும்,
ஒல்லி பிச்சான் செவ்விந்தியத் தோற்றத்திலே பயணிக்கும் அழகும்,
இறுதியாய் முத்தாய்ப்பாக நம் ஞானசூன்யம் ரின்டின்கேனின் ஒளி பொருந்திய முகமும்
அடடடடா! எத்தனை அழகு!
அடுத்த பக்கத்தில் லக்கி தனது கதையை தானே படிக்கும் (ஆண்டு மலரை) ஒய்யாரத் தோற்றத்தையும் பாருங்களேன்!
Deleteட்ரண்ட் வாங்கியாச்.
Delete////ட்ரண்ட் வாங்கியாச்.////
Deleteரின்டின்கேனின் முகம் கொஞ்சம் பிரகாசம் கம்மிதான்! அதுக்காக இந்த ஆபீஸா் "ட்ரண்டை"யே மாத்துராரே! வழி தவறி வந்துட்டாரோ!
இளம் தல செம.தலையில்லா போராளி சைசில் வந்திருந்தால் ஆகா!
Deleteஉங்கள் விமர்சனம் சூப்பர். லக்கி லூக் எப்போதும் எனது ஃபேவரிட்.
Deleteவரும் நாட்களில் அவருடன் சிரிக்கப் போகிறேன்.
டெக்ஸின் காற்றுக்கென்ன வேலியை படிச்சி முடிச்சாச்சி,எனக்கு என்னமோ மற்றுமொரு வல்லவர்கள் வீழ்வதில்லை மாதிரி முத்திரை பதித்த கதை என்றே தோன்றுகிறது,கதையில் என்னவொரு அபாரமான பாய்ச்சல், பட்டையைக் கிளப்பும் வசனங்கள்,ரசனையான களம்,வில் க்ரெமெர்,டஸ்டின்னு வித்தியாசமான கேரக்டர்கள்,செவ்விந்தியத் தலைவன் கோசைஸ்,டெக்ஸின் உற்ற தோழன் டைனமைட்.
ReplyDeleteஎன்ன சொல்லி பாராட்டுறதுன்னே தெரியலை,டெக்ஸின் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்,டெக்ஸின் சாகஸத்தில் மற்றுமொரு மைல்கல்,டெக்ஸின் மறக்க முடியாத டாப் டென் சாகஸங்களில் இதுவும் ஒன்றாக இடம்பிடித்தால் அதில் வியப்பேதும் இல்லை.
எனது ரேட்டிங்-10/10.
+123488999999999999
Deleteஇத்தாலியில் இந்த ஆல்பம் மெகா சைசில் வந்துள்ளது சார் ; அட்டகாசமாய்த் தான் உள்ளது அந்த பெரிய சைசில் !!
Delete///
Deleteஇத்தாலியில் இந்த ஆல்பம் மெகா சைசில் வந்துள்ளது சார்///
மீண்டும் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள்!!
Dear Editor, When will the combined book of short stories of tex be available online?
Delete// இத்தாலியில் இந்த ஆல்பம் மெகா சைசில் வந்துள்ளது சார் ; அட்டகாசமாய்த் தான் உள்ளது அந்த பெரிய சைசில் !! //
Deleteஆஹா,கேட்கும் போதே செவிக்கு இனிமையா இருக்கே,நமக்கு எப்ப சார் இந்த பொன்னான தருணங்கள் வாய்க்கும்.
மெகா சைசில் திரும்ப கிடைக்கும் என்றால் எங்களுக்கு டபுள் ஓக்கே சார்.
Delete// நமக்கு எப்ப சார் இந்த பொன்னான தருணங்கள் வாய்க்கும். //
DeleteI am not interested!
ஆகஸ்ட்டில் டெக்ஸ் 70 வது சிறப்பிதழ் உண்டா ஆசிரியர் சார்?
ReplyDeleteசர்ப்ரைஸ் நல்லது,இதன் ஆசிரியர் நினைவில் ஓடும்,ஹி,ஹி.
Delete///சர்ப்ரைஸ் நல்லது///+123456789...
Deleteதிறக்கும் போது வெடிக்கனும் வாணவேடிக்கை; மலரனும் மனசு மத்தாப்பா....!!!!
ஆகஸ்டோ, செப்டம்பரோ...எப்பனாலும் டபுள் ஓகே...!!!
இம்மாத லக்கிலூக்கை பஸ் பயணத்தில் படிக்க எண்ணி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து" மார்சல் டால்டனை" இருபது பக்கங்கள்தான் படித்தேன்.அதற்கு மேல் தாங்காது என்று மூடி வைத்து விட்டேன்.பின்னே என்னவாம் இப்படியா நம்மை ஆசிரியர் சிரிக்க வைப்பார்!! பக்கத்திலிருந்தவரோ என்னை கண்டு எச்சரிக்கையுடன் சற்று நகர்ந்து எங்கோ பார்ப்பது போல என்னையே கவனிக்க நானும் சிரிப்பை எவ்வளவு நேரம்தான் அடக்க முடியும்.
ReplyDeleteதாங்க முடியவில்லை சாமி!ஒவ்வொரு திருடனுக்கும் என்ன அருமையான பெயர்.அரசியல்வாதிகள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது போல புத்தக திருவிழாவின் போது தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்க வாசகர்கள் சொன்னால் எப்படி இருக்கும்? என கற்பனை பண்ணி பார்த்தேன். அடுத்த நிமிடம் சற்று சத்தமாகவே சிரித்துவிட பக்கத்திலிருந்தவர் கபால் என்று காலியாய் இருந்த வேறொரு இருக்கைக்கு தாவி விட...
எப்படி சார்? ரூம் போட்டு யோசனை பண்ணுவீர்களா? கொடூரன் கோப்ரா,அனகோண்டா ஆலிசன்,மலைப்பாம்பு மாடிசன்,நாகப்பாம்பு நார்டன்,மண்பாம்பு மஸ்கரெனாஸ்,தண்ணிப்பாம்பு தியோடர்...கெத்தாக வரும் இவர்கள் வார்அறுந்த டிரவுஸர்களுடன் ஓட்டம் பிடிக்கும் போதும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
இனிமேல் யாருமில்லாத இடங்களாய் பார்த்து அமர்ந்துதான் மீதமுள்ள பக்கங்களை புரட்ட வேண்டும்!
சூப்பா் சாா் 😂😂😂
Delete@ திரு.ATR சார்
Delete'கார்ட்டூன் கதைகளை நான் அவ்வளவாக ரசிப்பதில்லை' என்று சிலபல மாதங்களுக்கு முன்னே இங்கே நீங்கள் பதிவிட்டிருந்ததாக ஞாபகம்!(இல்லை எனில் - மன்னிச்சூ) அப்படியாப்பட்ட உங்களையே வயிறுவலிக்க சிரிக்க வைத்த லக்கி + வெளிநாட்டு படைப்பாளீஸ் + உள்ளூர் படைப்பாளீஸ் கூட்டணியின் வெற்றி புரிகிறது!
மகிழ்ச்சி மகிழ்ச்சி!
கோபியில் குத்தாட்டம்...!!!
Deleteநிலநடுக்கமோ என மக்கள் பீதி...!!!
திரு.விஜய்
Deleteமன்னிச்சூக்கெல்லாம் அவசியமே இல்லை.உங்கள் ஞாபகம் சரிதான்.எல்லாவற்றுக்கும் என் மனதுதான் காரணம்.
முன்பு அவ்வளவாக ரசிக்க(முடிய)வில்லை.இப்போது முடிகிறது.
உள்ளூர்+வெளிநாட்டு படைப்பாளீஸ்+லக்கி இவரகளெல்லாம் எப்போதுமே சரியாகத்தான் இருந்திருக்கிறார்கள். தவறு என்னிடம்தான் இருந்திருக்கிறது.மாற்றம் ஒன்றுதான் மாறாததல்லவா.
///மாற்றம் ஒன்றுதான் மாறாததல்லவா.///
Delete///உள்ளூர்+வெளிநாட்டு படைப்பாளீஸ்+லக்கி இவரகளெல்லாம் எப்போதுமே சரியாகத்தான் இருந்திருக்கிறார்கள்.///
வாவ்! சூப்பா் சாா்!
நன்றி திரு.மிதுனன் சார்.
Deleteசிரிப்பு அணிக்குக் கூடுதலாய் ஒரு வோட்டா ? ஹை ! சூப்பர் !
DeleteIl magnifico fuorilegge-The magnificent outlaw...காற்றுக்கு ஏதுவேலி:-
ReplyDelete*துவக்கத்தில் போனெல்லியில் ஸ்ட்ரிப் பார்மேட்டை கடந்து, 1950களின் இறுதியில் இருந்து மாதா மாதம் ஒரே புத்தகமாக 2கதைகள் அல்லது 3கதைகள் என 162பக்கங்களில் வெளியிட்டு வந்தார்கள்.
இன்று அந்த ஒரிஜினில் சீரியஸ்ல வெளியீடு எண்694வந்துட்டது...
பிறகு அங்கேயும் இரு மறுபதிப்பு சீரியஸ்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆரம்பிக்கப்பட்டு இந்த துவக்க சீரியஸ் அப்படியே வெளியிடப்பட்டு வருகிறது.
*இந்த துவக்க சீரியஸ்ல எந்த வித கட்டுப்பாடும் இல்லை; ஒரே கதை பல பாகங்களில் நீளும்; குட்டையான கதைகள் இருண்டுகூட ஒரே மாதம் இடம்பெறும். இப்போது இந்த சீரியஸ் 110பக்கங்கள் என்ற அளவில் மெயின்டென் செய்யப்படுகிறது.
*புதிய கதாசிரியர்கள், ஓவியர்கள் என நிறைய பேர் வந்தவுடன் ஏதாவது மாற்றம் செய்ய முடிவெடுத்து அவ்வப்போது அதை செயல் படுத்தியும் வருகிறார்கள். விளைவு, மேக்ஸி டெக்ஸ்; அல்மனாக்கோ வெஸ்ட்; அல்போ ஸ்பெசல்; கலர் டெக்ஸ்; டெக்ஸ் க்ளாசிக், டெக்ஸ் மேகஸைன்,....என புதிய சீரியஸ்கள் புயலென புறப்பட்டு இத்தாலியின் டெக்ஸ் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகின்றன....
*அவற்றில் இரு சீரியஸ்கள் மிகவும் சக்ஸஸ் ஆனவை. இரண்டும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெளியிடப்படுகிறது.
ஒன்று மேக்ஸி சீரியஸ் எனப்படும் நீஈஈஈஈஈண்ட பக்கங்கள் கொண்டது. 330,288,....என பல்வேறு நீளங்களில் பட்டையை கிளப்பி வரும் கதைகள் கொண்டது. இதில் 22இதழ்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் ஒருசிலவற்றை நாமும் தரிசித்து உள்ளோம்.
*மற்றது அல்போ ஸ்பெசல் என்ற special album, 240பக்கங்களில் ஆண்டுக்கு ஒருமுறை ஆர்ப்பாட்டம் செய்யும் சீரியஸ். இந்த சீரியஸ்ல சத்தமில்லாமல் செம போடு போட்டதுதான் Il magnifico fuorilegge-The magnificent outlaw... என்ற இதழ்.
"யோவ்அதற்கும் நமக்கும் என்னயா சம்பந்தம்? இப்ப என்னயா சொல்ல வர்ற நீ???--- என கேட்டீங்கனா அதற்கான பதில்...,
2017ஜூன் மாதம் வெளியான இந்த இதழின் விளம்பர வாசகம்தான்,
"Tex and Dinamite, looking for adventure in the wild mountains of Arizona..."
---படித்தவுடன் கடைவாயோரம் குற்றாலம் குபீர் எனப்புறப்படும் வாசகம் அல்லவா!!!!!
*இம்மாதம் "காற்றுக்கு ஏது வேலி" என்ற பெயரில் ஜம்போவின் முதல் இதழாக வெளியாகி இருக்கும் சாகசம் தான் இந்த "The magnificent outlaw "
*இத்தாலியில் வெளிவந்த ஒரிஜினலின் அட்டைப்படத்தில், பாறைமுகட்டில் அபாச்சேக்கள் பார்க்க, குத்துப்பாறையின் முன்னே சிலிர்க்கும் டைனமைட்டில் இளம் டெக்ஸ் ஆரோகணித்து இருக்கும் காட்சி வடிக்கப்பட்டு இருக்கும். நம்ம ஜம்போவில் இளம் டெக்ஸ் சாகசம் என சிம்பாளிக்காக உணர்த்தும் 20வயது டெக்ஸின் இள உருவம் தீட்டப்பட்டுள்ளது.
*ஜம்போவைத் துவக்க மிகவும் பொருத்தமான கதைதான் "காற்றுக்கு ஏது வேலி". புயல் காற்றைப் போல துவக்கமே அதிரடி தான்....
*மெக்ஸிகோ-அரிசோனா எல்லையில் பாறை முகட்டில் வீற்றிருக்கும் டெக்ஸ், தன்னை ஓயாது விரட்டிவரும் கும்பலை எதிர்கொள்ள ஆயத்தமாகிறார். தூரத்தில் புழுதிபுயலை கிளப்பிவந்த கும்பல் டெக்ஸ் வீற்றிருக்கும் கணவாய் பாதையை நெருங்குகிறது...!!!
------சாப்பிட்டு வர்றேன்-----
@ சேலத்து செனாஅனா
Deleteசெம!!
மெக்ஸிகோ-அரிசோனா எல்லையில் பாறை முகட்டில் வீற்றிருக்கும் டெக்ஸ், தன்னை ஓயாது விரட்டிவரும் கும்பலை எதிர்கொள்ள ஆயத்தமாகிறார். தூரத்தில் புழுதிபுயலை கிளப்பிவந்த கும்பல் டெக்ஸ் வீற்றிருக்கும் கணவாய் பாதையை நெருங்குகிறது...!!!
Deleteஇந்த காட்சி வீடியோ பதிவு யு டியூப் பில் உள்ளது பார்த்து ரசியுங்கள்.
Wow! கெளப்புங்க!
ReplyDelete190வது. நான் சரியான லேட்.
ReplyDeleteடெக்ஸ் விஜய்
ReplyDelete"இந்த சாப்பாடே எனக்கு பிடிக்காது"என என்னை சொல்ல வைத்து விட்டீர்களே.முக்கியமான கட்டத்தில்
----சாப்பிட்டு வர்றேன்----என்று புறப்பட்டு விட்டீர்களே!!
காற்றுக்கு ஏது வேலி....தொடர்ச்சி:-
ReplyDelete*ப்ளூபெர்ரி என்ற கேப்டன் டைகரின் இளம்பருவத்தை அறிய "இளமையில் கொல்" லில் தொடங்கிய இளம்டைகர் சீரியஸ் உள்ளது.
*புதிய நாயகன் லார்கோவின் அந்தரங்கம் நமக்கு அத்துபடி, என்பெயர் லார்கோ உபயத்தில்.
*மாடஸ்தி ப்ளைசியின் இளவயது போராட்டங்களையும் நாம் அறிவோம்.
*நம்ம ஆத்ம நண்பன் ஜேசன் ப்ளையின் பள்ளி நாட்களில் நாமும் அவனோடு பனியில் சறுக்கியுள்ளோம்.
*அட நம்ம செல்லாக்குட்டி பெட்டி பர்னோஓஓஓஓஓஓவ்ஸ்கி....( அய்யோ காலை மிதிக்காதீங்கப்பா)...அதான் ஏமாத்திபுட்டாளே.
*அவ்வளவு ஏன் நம்ம தாத்தா கார்சனின் கடந்த காலம் கூட நமக்கு துல்லியமாத் தெரியும்.
*நம்ம எவர்க்ரீன் மெகாஸ்டார் டெக்ஸின் இளமை காலம் இத்தனை ஆண்டுகளும் நமக்கு மூடுமந்திரமே. அவ்வப்போது மினியான க்ளிம்ஸ்ஸாக மட்டுமே ஓரிரு தகவல்களை நாம் அறிவோம். அந்த இரத்த ஒப்பந்தம், தணியாத தனல், காலண் தீர்த்த கணக்கு 3பாக சாகசத்தின் மூலம் தல, லிலித்தை சந்தித்தது முதல் அவர்களின் காதல் என பிற்காலத்தை ஓரளவு அறிய முடிந்தது. அதற்கு முன்காலம்???
*"ஒரு தலைவன் ஒரு சாகப்தம்"-மேலும் குட்டையை குளப்பியது மட்டுமே மிச்சம். என்ன முயன்றும் விடை தெரியாமல் இருந்த கேள்விக்கு கடேசியாக விடை கூறியுள்ளது, "காற்றுக்கு ஏது வேலி". சட்டத்தால் தேடப்பட்ட குற்றவாளியாகத் தான் இருந்ததாக டெக்ஸ் சொல்லக் கேட்டிருந்தாலும், அதன் பின்னணி தெரியாமல் தவித்த தவிப்பு இப்போது தீர்ந்துள்ளது.
*ஏதோ ஒரு பயணத்தின் ஒரு நாளில் கார்சனிடமும், கிட் வில்லரிடமும் ப்ளாஷ் பேக்கில் தன் கதையை டெக்ஸ் சொல்கிறார். தன்னிலையில் சொல்லப்பட்டு இருப்பது மேலும் சிறப்பு.
*"பினோஸ் ஆல்டோஸ் "என்ற அபாச்சேக்களின் குடியிருப்பு எல்லையில் உள்ள தங்கச்சுரங்கத்தினரின் தங்கத்தை வழிப்பறிசெய்து விட்டு, சாதுர்யமாக அப்பழியை இளம் டெக்ஸ் மீது போடுகிறான் கிராதகன் வெர்டுகோ. அவனின் கூட்டாளிகள் ஸ்கிர்மெர் & மெண்டோஸ்; தங்கள் பங்கை வாங்கிக் கொண்டு தக்க சமயத்தில் டெக்ஸையும் போட்டுத்தள்ள ஆட்களை ஏவுகிறான் மெண்டோஸ்.
*இதற்கிடையே தலயின் தலைக்கே விலை அறிவித்து அவரை கைது செய்ய தங்களது ஆயதக்காவலர்களை ஏவிவிடுகிறது பினோஸ் ஆல்டோஸ்...., சட்டத்தால் தேடப்படும் குற்றவாளியாக்கப் படுகிறார் டெக்ஸ்.(இதான் அந்த நெடுநாள் ரகசியம்)
*டாம் டெக்கார்ட் தலைமையில் வரும் ஆயதபணிக் காவலர்கள்தான் (போன பதிவின் இறுதியில் பார்த்த) தலையை வேட்டையாட துரத்தும் கூட்டம். டாமின் ஆட்களில் ஒருவனை போட்டுத்தள்ளிட்டு, டைனமைட்டின் சகாயத்தில் தப்பி ஓடுகிறார் தல.
*தான் குற்றவாளியாக்கப்பட்டதன் பின்னணி பற்றியறிய நியூமெக்ஸிகோவில் உள்ள "ரேட்டில் ஸ்னேக்" டரேடிங் போஸ்ட் வருகிறார் டெக்ஸ். பன்னாக்கில் இருந்த "ஸ்கின்னர் ட்ரேடிங் போஸ்ட்" ஞாபகம் வந்தால் நீங்களும் ஒரு "அப்பாவி" தான்...!
*ரேட்டில் ஸ்னேக் உரிமையாளன் சாட்டோவிடம் உரையாடும் டெக்ஸை போட்டுத்தள்ள விழையும் (மெண்டோஸின் ஆட்கள்) போக்கிரிகள் மூவரை நொடியில் பரலோகம் அனுப்புகிறார் இளம்தல...மின்னல் தோற்றது போங்க...
*போக்கிரிகளை பற்றி சாட்டோவிடம் விசாரித்து அறியும் டெக்ஸ், "ராப்பர்ஸ் நெஸ்ட்" என்ற வரைபடத்தில் இல்லாத சமூக விரோதிகளின் புகலிடத்திற்கு விரைகிறார். குற்றவாளி என்பதால் ஏகபோக வரவேற்பு தான் தலைக்கு....!!!
*ஸ்கிர்மெர் & மெண்டோஸ் இருவரும் ராப்பர்ஸ் நெஸ்டின் இரு தலைகள். நகரின் ஒவ்வொரு கோடியிலும் ஆளுக்கொரு சலூனை வைத்து கொண்டு அராஜகம் செய்து வரும் இருவரும் ஒருவரை யொருவர் வீழ்த்த சமயத்தை எதிர்பார்த்து இருப்பவர்கள். உள்ளுக்குள் இந்ந வஞ்சக எண்ணம் இருந்தாலும் கூட இருவரும் கிடைக்கும் பணத்தை சமமாக பங்கிட்டு கொள்கிறார்கள்.
*ஸ்கிர்மெரின் சலூனில் சதை வியாபாரம் செய்யும் ஸோபியிடம் இருந்து அனைத்தும் அறியும் டெக்ஸ், வெர்டுகோவின் இடத்திற்கு செல்ல கிழட்டு போக்கிரி டஸ்டியின் உதவியை நாடுகிறார். இரவில், மெண்டோஸின் ஆட்கள் தன்னை கொல்ல இருக்கும் வலையை நோக்கி டெக்ஸ் போக; டெக்ஸிடம் முறைத்துக் கொள்ளும் இளம் போக்கிரி வில் க்ரெமெர் டெக்ஸை வீழ்த்த பார்க்க; கத்தியை கையில் வைத்துக்கொண்டு டஸ்டி இருக்க, "டுமீல்"....... வீழ்ந்தது....????
......டீ டைம்.......
அடிச்சு தூள் கிளப்புங்கள் ஜி.
Deleteஇளம் டெக்ஸ் திரும்ப திரும்ப படிக்க தூண்டுகிறது.
Lucky Luke book first story is funny. Second story lacks comedy. Much funnier is captain prince (though colouring is not ok) story picture page 26 3rd frame. I can't help bursting into laughter whenever I see this
ReplyDelete