நண்பர்களே,
வணக்கம். பள்ளிக்கூடம் போகும் நாட்களில் கூட இத்தனை வாசித்த மாதிரி ஞாபகம் இல்லை ! அந்தக் காலத்தில் (!!!) நினைவாற்றல் பிரமாதமாக இருக்க, வகுப்பறையில் கவனித்தது மண்டையில் தங்கியிருக்கும் ; அப்புறமாய் பரீட்சைகளுக்கு முந்தைய தினங்களில் லேசாக ஒரு வாசிப்பைப் போட்ட கையோடு வண்டியோட்ட சாத்தியமாயிற்று ! ஆனால் இன்றைக்கோ “ஞாபகசக்தியா ? வீசம்படி எவ்வளவு ?” என்று கேட்க வேண்டிய நிலை ! ஆனால் வருஷா வருஷம் என் முன்னே இந்த ஜுலை / ஆகஸ்ட் மாதங்களில் விஸ்வரூபமெடுத்து நிற்கும் “மெகா தேர்வு”களின் பரிமாணமோ முரட்டுத்தனமானது ! So 'மாங்கு மாங்கென்று' வாசிப்பதைத் தாண்டி என்ன செய்திட முடியும் ?! வாசிக்கிறேன்… சிக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் வாசிக்கிறேன்…! விடிய விடிய வாசிக்கிறேன் !
சமீபமாய் கார்ட்டூன்களை (சு)வாசிக்கிறேன் – புதுசாய் ஏதேனும் சிக்குமா என்ற ஏக்கத்தோடு ! தற்போதைய நமது காமிக்ஸ் பட்டியலில் ஏகமாய் நாயகர்களும், நாய்களும் இருந்தாலும் – அவர்கள் சகலருமே உங்கள் மனங்களில் இடம்பிடித்து விட்டார்களென்ற நிலையில்லை தானே ?! சமீப cartoon வரவுகளில் பலர் – புத்தக விழாக்களில், casual வாசகர்களின் புண்ணியத்தில் மட்டுமே வண்டியோட்டி வருவதில் ஏது இரகசியம் ? So 2019-ன் அட்டவணைக்கான இடப்பங்கீடு இறுதியாகும் தருணத்தில் – யார் உள்ளே? யார் வெளியே ? என்ற கேள்விக்குப் பொருத்தமான பதில் தேட வேண்டியிருக்கும் என்பதால் – புது வரவுகளை உள்ளே புகுத்த முடிகிறதா ? என்ற ஆசை எனக்குள் !
கார்ட்டூன்களில் நமது ரசனைகள் ஒரு நேர்கோட்டு template-ல் இருந்து வருவதை ஸ்பர்ஷ்டமாகப் புரிந்து கொள்ள முடிகிறது ! ‘கெக்கே-பிக்கே‘ நாயகர்கள் சார்ந்த கதைகளே இவை என்ற போதிலும் – இங்கொரு தெளிவான கதைக்களத்தை நீங்கள் எதிர்பார்த்திடுவது புரிகிறது ! அந்தக் கதையைச் சொல்லும் விதத்தில் நகைச்சுவை நிறைவாக இருந்திட வேண்டும் என்பதும் உங்கள் எதிர்பார்ப்பு ! So இந்த 2 முக்கிய கண்டிஷன்களுக்கும் நியாயம் செய்திடக் கூடிய தொடர்கள் / ஆல்பங்கள் hands down வெற்றிகளை ஈட்டி விடுகின்றன – சமீபத்தைய 2 லக்கி லூக் சாகஸங்களைப் போல ! அந்த இரு எபிசோட்களிலுமே சுலபமான, ஆனால் தெளிவானதொரு கதை இருந்ததால் அவற்றோடு ஒன்றிடுவதில் உங்களுக்கு சிரமமிருக்கவில்லை என்று யூகிக்க இயலுகிறது ! இவை எல்லாவற்றையும் விட உங்களின் இன்னொரு தலையாய கண்டிஷன் - “நம்பகத்தன்மை” சார்ந்ததே என்பதும் புரியாதில்லை ! சிரிப்பு நாயகர்களே ஆயினும் அவர்கள் ”காதுல பூ” ரகத்தில் இருந்திடக் கூடாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டி விட்டீர்கள் ! சமீப வரவுகளான ”மேக் & ஜாக்” ஹிட்டானதற்குக் காரணமாக இதையுமே நான் பார்த்திடுகிறேன் ! So மேற்படி 3 கண்டிஷன்களும், கையுமாய், வரன் தேடும் தோப்பனாரைப் போல கார்ட்டூன் லோகத்தினுள் ‘லோ-லோ‘வென்று சுற்றித் திரிகிறேன் சமீப நாட்களில் !
புதியதொரு தொடர் கண்ணில்பட்டது – வித்தியாசமான களத்தோடு! ஒரு விண்கல் கிராமத்தில் மத்தியில் விழுந்து வைக்க – அதைப் பராக்குப் பார்த்தபடிக்கே தொட்டுப் பார்க்கும் மக்கள் எல்லாருமே சித்திரக் குள்ளர்களாகிப் போகிறார்கள்! கிராமமே சுண்டுவிரல் சைஸ் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட – இந்தக் குட்டி மனுஷர்களின் சாகஸங்கள் தான் இந்தத் தொடரின் அச்சாணி ! Maybe கார்ட்டூன் களங்களை ஆர்வ ஆர்வமாய் உட்புகுத்திய நாட்களில் இந்தத் தொடர் என் அகன்ற விழிகளில் பட்டிருப்பின் – மறுயோசனையின்றி ‘டிக்‘ அடித்திருப்பேன் ! ஆனால் இன்றைக்கோ ஏற்கனவே ஒரு ‘குட்டிக் கும்பல்‘ பெற்று வரும் mixed reactions-க்கு இடையினில் இந்தப் “புதுக் குட்டிகளை” களமிறக்க பயம் பயமா வருது !
இன்னொரு தொடர்… ஆனால் இதுவோ ஒரு ஆக்ஷன் தொடர் போன்ற சித்திரங்களோடு ! நாயகரோ ஒரு டெரரான டான் மாதிரி ! கதைக் களத்திலுமே ஆக்ஷன் நிறையவே இருந்தாலும் – இறுதியில் எஞ்சி நிற்பது விலா நோகச் செய்யும் சிரிப்புகளே ! “அட… இதுக்கென்ன குறைச்சலாம்டாப்பா ?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது ! பிரச்சனை என்னவென்றால் இது முழுக்க முழுக்கவே 4 பக்கம் அல்லது 6 பக்கத்திலான சிறுகதைகளின் தொகுப்புகள் ! நாம் எதிர்பார்த்திடும் நீ-ள-மா-ன கதை என்ற ஜோலியெல்லாம் இங்கே லேது ! ஏற்கனவே நமது பஞ்சுமிட்டாய் தாடிக்காரத் தாத்தாவும், மதியிலா மந்திரிகாருவும் இந்தக் காரணத்தின் பொருட்டு பெற்று வரும் சாத்துக்கள் மனதில் வந்து வந்து போக – உரமேறிய முதுகு – “நான் இந்த ஆட்டத்துக்கே வரலீங்கோ!” என்று கதறுவது கேட்கிறது ! மறுபடியும் பயந்து பயந்து வருது!
அட… புதுசாய்… இன்னும் விரிவாய்த் தேடலைத் தொடரலாமே என்று முனைந்தால் – ஒரு சிறைக்கைதி கண்ணில் பட்டான்! இது வரை நாம் பார்த்திரா கதை நாயகனாட்டம் தெரிகிறானே – பயபுள்ளையை லபக்கிப் பார்க்கலாமா ? என்று அவனது பின்னணி; முன்னணி, சைட் அணி என்று நிறைய ஆணிகளைப் பரபரவென பிடுங்கிப் பார்த்தால் – கிட்டிய reviews எல்லாமே “பிரமாதம்” என்ற சேஞ்சில் இருந்தன ! முகமெல்லாம் பிரகாசமாக – இந்தத் தொடரின் 2 ஆல்பங்களைக் கோரிப் பெற்றேன், அவசரம் அவசரமாய் ! ஃபைல்களும் வந்து சேர்ந்தன ! ஆனால் புரட்டப் புரட்ட நம்மள் கி பிரகாசம் காணாமல் போகத் துவங்கியது ! கதை நயமாக இருக்குதோ – இல்லையோ; சித்திர பாணி செம சுமாராய் காட்சி தந்தது ! ரொம்பவே காஷுவலான படங்களோடு கதை பயணிக்க, எனக்குச் ‘சப்‘பென்று போய் விட்டது ! லக்கி லூக் தொடரிலேயே ஆரம்ப நாட்களது லக்கி & ஜாலி ஜம்பர் படு சுமாராய் காட்சியளிப்பதன் காரணமாய் அந்தப் பக்கமாய் தலைவைக்காத நமக்கு, இந்தப் புதுத் தொடர் சுத்தமாய் ரசிக்காதென்று பட்டது! பச்சக்… அந்த சாப்டர் க்ளோஸ் !
இன்னொரு தொடர் ! இங்கே கதை நாயகரே ஒரு மியாவிகாரர் தான்! பூனைகளின் அழகான உலகத்தினுள் கதாசிரியர் நம்மை இட்டுச் சென்று – மனிதர்களோடு மாரடிக்க இந்த நாலுகால் சுட்டிகள் படும் அவஸ்தைகளைப் பிரமாதமாய் சொல்லியிருக்கிறார் ! சித்திரங்களும் decent ரகம் தான்! Again – இந்தத் தொடரை ”ஆயிரம் துடைப்பச் சாத்துக்கள் வாங்கிய அபூர்வ சிகாமணி” அவதார் எடுப்பதற்கு முன்பாக நான் பார்த்திருக்க நேர்ந்திருந்தால் – துளித் தயக்கமுமின்றி சிகப்புக் கம்பளம் விரித்திருப்பேன் ! ஆனால் ஒரேயொரு நாலுகால் ஞானசூன்யம் கதைநெடுக வலம் வருவதற்கே தெளிய வைத்துத் தெளிய வைத்துத் தெறிக்க விடும் நண்பர்களிடம் ஒரு பூனை gang–ஐ ஒட்டுமொத்தமாய் கொண்டு போய் நிறுத்தினால் – நம் திசையில் பறக்கக் கூடிய வீட்டை சுத்தம் செய்யும் உபகரணங்கள்; பூரி போட்டிட உதவும் சாதனங்கள் பற்றிய நினைப்பைத் தவிர்க்க இயலவில்லை ! அதுவும் இப்போதெல்லாம் நல்ல, நயமான ஸ்டீலில் மேற்படி உபகரணங்கள் கிட்டி வரும் வேளையில் பயம் இருமடங்காகிறது!
'இதுக்கெல்லாம் பயந்தாக்கா குப்பை கொட்ட முடியுமா? ஜெய் பூரிபலி!” என்றபடிக்கே தேடலைத் தொடர்ந்த சமயம் – நம் முன்னே ஒரு வித்தியாசமான டார்ஜான் மாதிரியான சுள்ளான் நின்றான்! நவீன உலகின் புள்ளை – ஆனால் கொரில்லாக்களால் கடத்தப்பட்டு காட்டிலேயே செட்டில் ஆகிவிடுகிறான் – ஒரிஜினல் டார்ஜானின் ப்ளாஷ்பேக் போலவே! தம்பிக்கு உற்ற துணை ஒரு ஆறடி மலைக்குரங்கே ! இந்த கொரில்லாவும், லங்கோடு கட்டிய சுள்ளானும் அடிக்கும் கூத்துக்களே இந்தத் தொடரின் களம்! “பரவாயில்லையே… இது தேறிடும் போல்படுதே!” என்றபடிக்கு இதன் முதல் சிறுகதையை மொழிபெயர்த்து வாங்கினேன் ! ‘ஙே‘ என்று முழிக்கத் தான் முடிந்தது – ஸ்கிரிப்டைப் படிக்கத் துவங்கிய போது! ரொம்பவே ஜுனியர்களுக்கான கதைக்களமாய், ரொம்பவே தத்தியான நகைச்சுவை உணர்வுடன் கதை பயணிக்கிறது! Moreover – நாம் எதிர்பார்த்திடும் வலுவான கதை எனும் சமாச்சாரம் இங்கே sorely lacking ! சம்பவங்களை; டயலாக்குகளை; வார்த்தை விளையாட்டுகளை மட்டுமே நம்பி இந்தக் கதைகள் உருவாக்கப்பட்டிருக்கும் போலும் ! ஏற்கனவே ஒரு மந்திரியாரின் தொடர் இந்த template-ல் வலம் வந்து கொண்டிருக்கையில் "இன்னொன்றா? “தாங்காது சாமி !” என்று தோன்றியது !
”ஊஹும்… இது ஆவுற கதையில்லே !" என்றபடிக்கு லேப்டாப்பிலிருந்த உலகம் வியக்கும் கார்ட்டூன் ஆல்பங்களை ஒரு மோன நிலையில் ஓட விட்டேன் ! சகலமும் classics – சகலமுமே நமக்கு எட்டா உயரங்களிலிருக்கும் உச்சப் படைப்புகள் எனும் போது – அமாவாசை விரத நாளில் ஒரு மிட்டாய் கடையைத் தாண்டிப் போகும் உணர்வு தான் ஏற்பட்டது ! "ஹை… டின்டின் நெய் மைசூர்பாகு…! ஹைய்யோ… ஆஸ்டெரிக்ஸ் பால்கோவா ! ஸ்ஸ்ஸ்ஸ்… வால்ட் டிஸ்னி ரசகுல்லா….!!” என்ற ரீதியில் ! ச்சை…. சடாரென்று வளர்ந்து; தடாரென்று மேற்படி ஜாம்பவான் தொடர்களுக்கு அருகதை கொண்டவர்களாய் நாம் மாறிட ஏதேனும் புதுரக காம்ப்ளான் இருந்தால் தேவலையே - என்று தோன்றியது! கடைவாய் ஓரத்தில் வழிந்தோடும் ஜொள்ளை லேசாகத் துடைத்துக் கொண்டே ”No… no… ஆஸ்டெரிக்ஸ்லாம் தமிழாக்கம் பண்றதிலே நகைச்சுவை குன்றிடும் ; வால்ட் டிஸ்னியெலாம் ரசிக்கிற வயசா நமக்கு?” என்றபடிக்கே நடையைக் கட்டுகிறேன் ! நமக்கு ஒல்லிப்பிச்சானும், வுட் சிட்டியின் கோமாளிகளும் தான் சரிப்படுவார்கள் போலும் !! ஹ்ம்ம்ம்ம்ம் !!
கிளம்பும் முன்பாய் சில கேள்விகள் guys :
➤ கார்ட்டூன் கதைகள் – மாதம்தோறும் உங்கள் வாசிப்புகளுக்கு வர்ணமூட்டும் சமாச்சாரங்களா ? அல்லது வேறு வழியின்றி படித்து வைக்க வேண்டி வருகிறதா ? எவ்விதம் பார்க்கிறீர்கள் folks ?
➤தற்போதைய சூழலில் – உங்களின் O.K. களைப் பெற்றிடும் சிரிப்பு நாயகர்கள் யார்-யாரோ ?
இதை நூற்றியெட்டாம் தடவையாகக் கேட்கிறேன் தான் – ஆனால் ரசனைகளெனும் விஷயம் நிலையாய் நிற்பதில்லை எனும் போது, அட்டவணைக்கு இறுதி வடிவம் தரும் முன்பாய் உங்களின் எண்ணங்களை அறிந்திட முயற்சிக்கிறேன்!
And மௌன நண்பர்களே : தயைகூர்ந்து மௌனம் கலைத்திடக் கோருகிறேன் !! அப்புறமாய் அட்டவணை வெளியாகும் சமயம் – “இவரைக் காணோம்; எனக்குப் பிடித்த அவரைக் காணோம் !” என்று விசனம் கொள்வதில் பலனிராது ! உங்கள் இலைகளில் என்ன பரிமாறலாம் ? என்பதை நீங்களே சொன்னால் நிறைவாக இருக்குமே ? Please ?
Before I sign off - சில updates:
1. வரும் ஜுலை 20 முதல் கோவை கொடீஸியா அரங்கில் துவங்கிடவுள்ள புத்தக விழாவில் நாம் பங்கேற்கிறோம் ! நமது ஸ்டால் நம்பர் : 123. எப்போதும் போல நமது கோவை நண்பர்களின் ஒத்தாசையை இப்போதும் கோரி நிற்கிறோம் ! நேரம் கிட்டும் போதெல்லாம் அங்கே எட்டிப் பார்க்க முனையுங்களேன் – ப்ளீஸ்?
2. சமீபமாய்க் கண்ணில் பட்ட இந்த வண்ணப் பக்கம் ரொம்பவே உசுப்பேற்றியது ! என்னவென்று பாருங்களேன்! நமது இரண்டாவது இன்னிங்சில் ‘தல‘ அடித்த பிரதான சிக்ஸர்களுள் ஒன்றான “நில்…கவனி…சுடு” முழு வண்ணத்தில்; மெகா சைஸில் ! ஓவராய் உசுப்பேத்துறாங்க யுவர் ஆனர்!
3.அப்புறம் இது நமது வாசகர் ஜெயராமன் (சென்னை) அனுப்பிய சமீபத்து போட்டோ ! நமக்குப் பரிச்சயமான / பிரியமான நாயகர்களை ஜெர்மனியின் புத்தகக் கடைகளில் பார்க்க இயன்ற சந்தோஷத்தைப் பகிர்ந்துள்ளார் !!
4.And இதோ - "இரத்தப் படலம்" முன்பதிவுகளின் இறுதிப் பட்டியல் ! விடுதல்கள் இருப்பின் (and there are bound to be....) கோபித்துக் கொள்ளாது ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடுங்களேன் - ப்ளீஸ் ?
3.அப்புறம் இது நமது வாசகர் ஜெயராமன் (சென்னை) அனுப்பிய சமீபத்து போட்டோ ! நமக்குப் பரிச்சயமான / பிரியமான நாயகர்களை ஜெர்மனியின் புத்தகக் கடைகளில் பார்க்க இயன்ற சந்தோஷத்தைப் பகிர்ந்துள்ளார் !!
4.And இதோ - "இரத்தப் படலம்" முன்பதிவுகளின் இறுதிப் பட்டியல் ! விடுதல்கள் இருப்பின் (and there are bound to be....) கோபித்துக் கொள்ளாது ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடுங்களேன் - ப்ளீஸ் ?
ஓராண்டுக்கு முன்னே சிறுகனவாய் என் மீது நீங்கள் சுமத்தியதொரு சமாச்சாரத்தை, இன்றைக்கொரு அசாத்திய வெற்றியாக்கிக் காட்டியிருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்களின் மெகா சல்யூட் ! பணிகளுக்குள் புதைந்து கிடக்கும் இந்த நொடியின் மும்முரத்தில், தற்சமயம் இதன் முழுப் பரிமாணமும் எங்களுள் இறங்கியிருக்கவில்லை தான் ; ஆனால் என்றேனும் ஒரு சாவகாசமான மழைநாளில் இந்த ஒட்டுமொத்த அனுபவத்தை மனதில் அசைபோடும் சமயம், உங்கள் ஆதரவின் அசகாய அளவானது, பிடரியில் அறையாது போகாது !! Simply awesome guys !!
மீண்டும் சந்திப்போம்! Have a great weekend all! Bye for now!
மீண்டும் சந்திப்போம்! Have a great weekend all! Bye for now!
Hi..
ReplyDeleteMe first..
Deleteஇ.ப .முன்பதிவு பட்டியலில் அடியேனின் பெயரும் இருக்க கண்டு மகிழ்ச்சி..ஆன்லைன் பேமென்ட் சரிவர கிடைத்ததா இல்லையா என்ற கவலை போனது ..ஆகஸ்டில் மற்ற கதைகள் ?
ReplyDeleteHai everybody
ReplyDeleteHI
ReplyDeleteHi
ReplyDeleteமாலை வணக்கம்...!!!
Deleteகார்டூன் கதைகள் தேவையா?நூறாவது முறையாக இல்லை ஆயிரமாவது தடவை கேட்டாலும் வேண்டும் வேண்டும் என்பதே பதில்.மனசை லேசாக்கும் மாயாஜாலம் விளைவிப்பவை கார்டூன் கதைகளே.வுட் சிட்டி யின் கோமாளிகள்,லக்கிலூக் ,புளூ கோட் பட்டாளம் ,அவ்வப்போது ஸ்மர்ப்ஸ் மதியில்லாமந்திரி ,புதிதாக வந்திருக்கும் காமெடிகர்னல் எதையுமே இழக்க தயாராக இல்லை ..இன்னும் புதிய கார்டூன் நாயகர்கள் வந்தாலும் சரிதான் ..வாழ்க்கை வாழ்வதற்கே ..வாழ்க்கை சிரித்து வாழ்வதற்கே..
ReplyDelete+123
DeleteSuper !!
Delete// வாழ்க்கை வாழ்வதற்கே ..வாழ்க்கை சிரித்து வாழ்வதற்கே //
Delete+1
ஆபீசர் பேசுறத பாத்தா அடுத்த வருடம் சிவகாசிக்கு நமக்கு விசா கிடைக்காது போல
ReplyDeleteஏதாவது பண்ணி ரிடிகே க்கு பர்மனண்ட் கார்டு குடுங்கப்பா.
Deleteரின்டின்கேன் க்கு ஜே!!
Deleteநம்ப வீட்டில் 4 ஓட்டு ரின் டின் கே.
Deleteஎன்னாது ரின்டின்கேனு இல்லியா.
Deleteயாரு சொன்னாங்க.....
12
ReplyDelete// நில்…கவனி…சுடு” முழு வண்ணத்தில்; மெகா சைஸில் //
ReplyDeleteஆஹா எப்படி எல்லாம் சோதிக்கறாங்கபா.
I am Ravi..elangoravi..
ReplyDeleteWarm welcome Ravi
Deleteஹலோ!
ReplyDelete// கார்ட்டூன் கதைகள் – மாதம்தோறும் உங்கள் வாசிப்புகளுக்கு வர்ணமூட்டும் சமாச்சாரங்களா ? அல்லது வேறு வழியின்றி படித்து வைக்க வேண்டி வருகிறதா ? எவ்விதம் பார்க்கிறீர்கள் folks ? //
ReplyDeleteகண்டிப்பாக கார்ட்டுன் வர்ண ஜாலத்தை பூசும் சமாச்சாரம்தான் சார்,உதாரணமாக திரைப்படங்களையே எடுத்துக் கொள்வோமே,என்னதான் சூப்பர் ஹீரோ படங்களை ரசித்தாலும்,இன்னொரு பக்கம் அதை எள்ளல்,பகடி செய்யும் Spoof பாணியிலான படங்களையும் வெகுவாக ரசிக்கவும்,வரவேற்கவும் செய்கிறோமே.
மேலும்,இப்போதுள்ள அழுத்தம் நிறைந்த வாழ்வியல் முறைக்கு கார்ட்டூன் கதைகள் நமக்கு மிக,மிக அவசியமே.
Yes
Deleteவணக்கம் ஆசிரியரே
ReplyDeleteநின்று கவனித்து சரியான சமயம் கிடைக்கும் போது சுட்ரலாம் சார்.
ReplyDeleteஇரவு வணக்கம் 🙏
ReplyDeleteகார்ட்டூன் கதைகள் மாதந்தோறும் வெளிவந்தால் சற்று சலிப்பைத்தான் ஏற்படுத்தும் சார். வருடத்திற்கு ஆறு கதைகள் வருவதே சாலச்சிறந்தது. லக்கிலுக்,சிக்பில்,ப்ளுகோட்,பொடியன், மேக்&ஜாக்,கர்னல் கிளிப்டன் இவர்களே கார்ட்டூன் கதைகளுக்கு போதுமானவர்களாக தோன்றுகிறது புதியவர்களுக்கு வாய்ப்பு தர விழைந்தால் சுஸ்கி&விஸ்கி க்கு வாய்ப்பளித்து பார்க்கலாம்.
ReplyDeleteபொடியனா ? பொடியரா ? நம்மிடம் இரு தொடர்களுமே உள்ளனவே சார் ?!
Deleteபொடியன் என்று தெளிவாகத்தானே ஐயா எழுதியுள்ளேன். சரி இன்னும் தெளிவாகவே சொல்லி விடுகிறேனே பொடியன் பென்னி!
Deleteபொடியன் பென்னியா
Deleteஎந்த எடத்துல சிரிச்சீங்க
சொல்லுங்ஙங்கங்க
லக்கிலுக்,
Deleteசிக்பில்,
பொடியன்,
மேக்&ஜாக்,
கர்னல் கிளிப்டன்
இவைகள் மட்டும் போதுமேயன்னா
புளூகோட் - சிரிப்பதற்க்கே சான்ஸ் தரமாட்டேங்கறாங்களே ?!!!
கார்ட்டூன்ல எனக்கு லக்கிலுக் & சிக்பில். லை தவிர வேறு எந்த நாயகரின் கதையுமே (படிக்கவும்) பிடிக்காது மிஸ்டர் ஜே & சம்பத்! எண்ணிக்கைக்காக இவர்களை (மற்றவர்களை) சொவ்கிறேன்!
Delete// தற்போதைய சூழலில் – உங்களின் O.K. களைப் பெற்றிடும் சிரிப்பு நாயகர்கள் யார்-யாரோ ? //
ReplyDeleteபெரும்பாலான கதைகள் திருப்தியாகவே உள்ளன,எப்போதும் விருப்பாமனவை நம்ம லக்கியார்,சிக்பில் & கோ,ஸ்மர்ப்ஸ்,மதியில்லா மந்திரியார்.
பென்னியும்,ப்ளுகோட்டும் கூட ஓகேதான்,எது எப்படி இருந்தாலும் விற்பனையில் சுறுசுறுப்பாக இருக்கும் இதழ்களையே பெரும்பாலும் தேர்வு செய்ய வேண்டியிருக்கும் என்றே நினைக்கிறேன்.
+ 1
Delete//சுறுசுறுப்பாக இருக்கும் இதழ்களையே பெரும்பாலும் தேர்வு செய்ய வேண்டியிருக்கும் என்றே நினைக்கிறேன்.//
DeleteTrue....ஆனால் சந்தாதாரர்களுக்குமே அவை பிடித்தவைகளாக அமைந்திட வேண்டியதும் ரொம்பவே முக்கியம் சார் !
சந்தாதாரரான எனக்கு லியனார்டோ பிடிக்கும்
Delete22😃
ReplyDeleteகார்டூன் பற்றி சொல்ல என்னிடம் எதுவும் இல்லை சார்.
ReplyDeleteஹார்ட் பவுண்ட் அட்டை தவிர்த்து முயற்சி மேற்கொள்ளலாம்.
அட்டை பெரிதாக இருப்பதால் பக்கங்கள் குறைவாக தெரிகிறது.
எங்கள் ஊர் கடையில் கார்டூன் அவ்வளவாக சாதிக்கவில்லை சார்.
தற்கால பிள்ளைகள் யூ ட்யுப் கார்டூன் பார்க்கவே விரும்புகிறார்கள்.
இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே முடிவு அல்ல சார்.
//சமீபமாய்க் கண்ணில் பட்ட இந்த வண்ணப் பக்கம் ரொம்பவே உசுப்பேற்றியது ! என்னவென்று பாருங்களேன்! நமது இரண்டாவதுஇன்னிங்சில் ‘தல‘ அடித்த பிரதான சிக்ஸர்களுள் ஒன்றான “நில்…கவனி…சுடு” முழு வண்ணத்தில்; மெகா சைஸில் ! ஓவராய் உசுப்பேத்துறாங்க யுவர் ஆனர்!//
ReplyDeleteஇ பி கோ 347ன் படி உங்களுக்கு தெரியாத சட்டமில்லை அதன்படி நேரம் பார்த்து கொண்டு வரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் யுவர் ஆனர்.டாங்க் யூ.
காா்ட்டூன் காமிக்ஸ்களில் "ரசனையில் முதிா்ந்தோருக்கு"ன்னு போடலாம்!😂😂
ReplyDeleteலக்கியோ சிக்பில்லோ குழந்தைகள் விரும்ப (புாிந்து கொள்ள) வாய்ப்பே இல்லை!
அதில் உள்ள பகடியும், சுயஎள்ளலும், அரசியல்-சமூக விமா்சனமும், நையாண்டியும் பொியவா்களுக்கே புாியாதபோது, காா்ட்டூன்களை குழந்தைகளுக்கானது என்று எவ்விதம் சொல்ல முடியும்??
///அதில் உள்ள பகடியும், சுயஎள்ளலும், அரசியல்-சமூக விமா்சனமும், நையாண்டியும் பொியவா்களுக்கே புாியாதபோது, காா்ட்டூன்களை குழந்தைகளுக்கானது என்று எவ்விதம் சொல்ல முடியும்?? ///
Deleteசெம & உண்ம!
அதனை தற்போது உள்ள குழந்தைகளுக்கு கொஞ்சம் உட்கார்ந்து விளக்கமாகச் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்வார்கள். அதை நாம் செய்வது இல்லை. தற்போது உள்ள குழந்தைகளின் கிரகிப்புத் தன்மை அதிகம்.நாம் தாம் அவர்களை குறைவாக மதிப்பிடுகிறோம்
Deleteஇன்றைய ஓட்டங்களுக்கு மத்தியில் குழந்தைகளோடு இணைந்து இளைப்பாற நமக்குப் பரவலாய் நேரம் கிட்டுவதில்லை என்பதே யதார்த்தம் !! செல் போன்களுக்கு நாம் தரும் நேரத்தின் ஒரு பகுதியினை நம் வீட்டுக் குட்டீஸ்களுக்குத் தர சாத்தியப்பட்டால் பிரமாதமாக இருக்கும் !
Delete//➤ கார்ட்டூன் கதைகள் – மாதம்தோறும் உங்கள் வாசிப்புகளுக்கு வர்ணமூட்டும் சமாச்சாரங்களா ? அல்லது வேறு வழியின்றி படித்து வைக்க வேண்டி வருகிறதா ? எவ்விதம் பார்க்கிறீர்கள் folks ?
ReplyDelete➤தற்போதைய சூழலில் – உங்களின் O.K. களைப் பெற்றிடும் சிரிப்பு நாயகர்கள் யார்-யாரோ ?//
ச்சே, இந்த கேள்விகளே நமக்கு பிடிக்காதுப்பா...
//பொியவா்களுக்கே புாியாதபோது, காா்ட்டூன்களை குழந்தைகளுக்கானது என்று எவ்விதம் சொல்ல முடியும்??//
ReplyDeleteஇந்த கருத்தை நான் வேறு விதமாக சொல்லி இருக்கிறேன் அவ்வளவே.
அன்பின் ஆசிரியருக்கு,
ReplyDeleteவணக்கம். கார்ட்டூன்கள் தொடர வேண்டும் என்பது என் விருப்பம். இவையெல்லாமே எனக்குப் பிரியமான தொடர்கள்..
லக்கி லூக்
சிக் பில்
ஸ்மர்ஃப்ஸ்
கர்னல் க்ளிப்டன்
புளூகோட் பட்டாளம்
பென்னி
மதியில்லா மந்திரி
ஓகே ரகம் என்பதில்..
ரின் டின் கேன்
மேக் & ஜாக்
லியனார்டோ
ஆக கார்ட்டூன்களில் ஆகாதவை என்று ஏதுமில்லை. இவையனைத்தையும் தொடரலாம். அதே நேரம் புதிய நாயகர்களை அறிமுகப்படுத்த எண்ணினால், புதிதாகத் தேடுவதைக் காட்டிலும், மினி லயன் மற்றும் ஜூனியர் லயன் இதழில் வெளியாகி வெற்றி கண்ட இதழ்களை வெளியிட்டால் மகிழ்வேன். நன்றி.
பிரியமுடன்,
கார்த்திகைப் பாண்டியன்
அன்றைய அலி பாபா கதைக்கு டிஜிடல் கோப்புகள் படைப்பாளிகளிடம் நஹி ; வால்ட் டிஸ்னியின் கதைகள் நமக்கு (இன்றைக்கு) எட்டா கனிகள் ; அன்றைய சிக் பில் & லக்கி லுக் இன்றும் தொடர்கிறார்கள் ; சுஸ்கி - விஸ்கி பற்றி இங்கே பேசியுள்ளோம் எனும் போது - எஞ்சியிருக்கும் மினி-லயன் ; ஜுனியர் லயன் கார்ட்டூன் தொடர்கள் வேறென்னவென்று நினைவுக்கு வர மாட்டேன்கிறதே சார் !
DeleteVanakkam!!!
ReplyDeleteVanakkam Thambi
Deleteசார் சிக்பில் , லக்கி, ஊதா பொடியர்கள்
ReplyDelete+1
DeleteCartoon kathaigal virumbum padikiren
ReplyDeleteRintin, Sikbil, Mac & Jack, Smurfs, mathilla manthiri, podiyan Billy, col. Clipton, kill Jordan, bluecoats, Ivarkalathu Ella kathaigalum enakku pidithullathu
This comment has been removed by the author.
DeleteNice stall number 123😎
ReplyDeleteFancy number
Delete////➤ கார்ட்டூன் கதைகள் – மாதம்தோறும் உங்கள் வாசிப்புகளுக்கு வர்ணமூட்டும் சமாச்சாரங்களா ? அல்லது வேறு வழியின்றி படித்து வைக்க வேண்டி வருகிறதா ? எவ்விதம் பார்க்கிறீர்கள் folks ? ////
ReplyDelete---கார்டூன்கள் அவசியம் தேவை சார்.
அதுவும் இன்றைய சூழலில் அழுத்தம் நிறைந்த மனதிற்கு, ஃப்ரெசர் ரிலீசர் ஆக கார்டூன்களே இருக்கின்றன.
வரவேற்பு & வியாபாரத்தை பொறுத்து 6அல்லது 9 என முடிவு செய்து கொள்ளுங்கள் சார்.
எத்தனை ஹீரோஸ் வந்தாலும்,
சந்திரபாபு,
நாகேஷ்,
தங்கவேலு,
சுருளியார்,
கவுண்டர்,
வடிவேலு,
---------
---------
போன்றோரை தொலைக்காட்சி சீன்களில் தரிசிக்கும்போது சிரிக்காதோரும் உளறோ???
// கார்டூன்கள் அவசியம் தேவை சார்.
Deleteஅதுவும் இன்றைய சூழலில் அழுத்தம் நிறைந்த மனதிற்கு, ஃப்ரெசர் ரிலீசர் ஆக கார்டூன்களே இருக்கின்றன. //
எனது எண்ணமும் இதுவே.
ஒரு வேளை நண்பர்களுள் நிறையப் பேருக்கு அன்றாட வாழ்க்கையில் பிரஷர் லேதுவோ ?
Deleteஅவங்கவங்கே ப்ரஷர் அவங்கவங்களுக்குத்தான்
Deleteசும்மா செத்து சுண்ணாம்பாயி போயிட்டருக்கிறவங்ககிட்ட போயி....
கார்ட்டூனு வேணுமான்னு கேள்வி வேற...
நல்லாருங்க வாத்தியாரே
This comment has been removed by the author.
ReplyDeleteவிஜயன் சார்,
ReplyDelete➤ கார்ட்டூன் கதைகள் – மாதம்தோறும் உங்கள் வாசிப்புகளுக்கு வர்ணமூட்டும் சமாச்சாரங்களா ?
ஆம். எளிதான மற்றும் தற்போதைய கம்யூட்டர் உலகத்தில் இது போன்ற கதைகள்தான் மனதை எளிதாக்குகிறது. அதேநேரம் இந்த கதைகளை எனது குழந்தைகளுக்கு சொல்லும் போது அவர்களுடைய உலகத்தில் பயணிக்க முடிகிறது.
தற்போது வரும் அனைத்து நாயகர்கள் கதைகள் அனைத்தும் எனக்கு தொடர்ந்து வரும் வேண்டும்.
முடிந்தால் வருடம் 9 கார்டூன் கதைகளை வெளியீடுகள், excluding மறுபதிப்பு.
எனது குழந்தைகள் ஒவ்வொரு மாதமும் கார்டூன் கதைகளை எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மை. அவர்கள் அதிகம் விரும்புவது லக்கி, ரின் டின், ஸ்மர்ப், பென்னி. இது தவிர நான் மேற்கொண்டு விரும்புவது சிக்பில், ப்ளூகோட், மேக் அன்டு ஜாக்,மதியில்லா மந்திரி, லியனாரலியோ மற்றும் கிளிப்டன்.
9ல் ஒரு இடம் சுஸ்கி-விஸ்கினா கதை சொல்ல இன்னும் வித விதமான களங்கள் கிட்டும்...!!!
Deleteபுஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ....😬😬
DeleteP.S : (குக்கர் சத்தமல்ல ; பெருமூச்சு விட்டேன் !!)
இங்கன டயரே ப்ளாட்டாயிடிச்சி
Deleteதொசுக்க்க். ...
Should publish all Gil jordan, Tif et Tondu, Marc Lebut, bluecoats, lucky Luke and chicbill.
ReplyDeleteSimilarly all of Martin mystery,
Tex willer. Captain prince,
Only these will make everyone to buy everything.
Should cut loose rin tin can, benny, leanardo immediately.
ஜம்போ சந்தா கட்டியாச்சு.
ReplyDeleteஅப்படியே இளம் டெக்ஸ் வேண்டாம் என்றும் சொல்லியாச்சு...
இளம் டெக்ஸை படித்துப் பாருங்கள் சார்.நீங்கள் டெக்ஸ் ப்ரியர் ஆவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
Delete+1000
Deleteவிஜயன் சார், கார்டூன் கதைகள் பற்றி இன்னோரு விசயம்.
ReplyDelete1. மொழிபெயர்ப்பு செய்யும் போது முடிந்த அளவு தமிழ் படங்களில் வரும் காமெடி வசனங்களை தவிருங்கள்.
2. எனது குழந்தைகளுக்கு மதியில்லா மந்திரி, லியோனார்டோ (எனக்கு மிகவும் பிடித்த தொடர்) போன்ற சிறுகதை தொகுப்புகளை வருடம் இரண்டாவது வெளியிடுங்கள். இது குழந்தைகள் படிக்க சிந்திக்க வைக்கும் சிறந்த கதைகள்.
3. புதிய கார்டூன் கதைகளை வருடம் இரண்டு வெளியீடுகள்.
4. வரும் வருடம் ஜம்போ சந்தாவில் புதிய கார்டூன் கதைகளுக்கு இடம் ஒதுக்குங்கள், குறைந்தது இரண்டு வேண்டும்.
யதார்த்தங்களை உள்வாங்கிக் கொள்ளும் பொறுப்புமே எனக்குள்ளதே சார் ; எடிட்டர் குல்லாவை மறைத்து விட்டு, வெறும் காமிக்ஸ் ரசிகனாக நானும் இருக்க முடிந்தால் - உங்கள் கோரிக்கைகள் சகலத்துக்கும் 'ஜே ' போட்டிருப்பேன் தான் !
Delete// ஒரு விண்கல் கிராமத்தில் மத்தியில் விழுந்து வைக்க – அதைப் பராக்குப் பார்த்தபடிக்கே தொட்டுப் பார்க்கும் மக்கள் எல்லாருமே சித்திரக் குள்ளர்களாகிப் போகிறார்கள்! கிராமமே சுண்டுவிரல் சைஸ் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட – இந்தக் குட்டி மனுஷர்களின் சாகஸங்கள் தான் இந்தத் தொடரின் அச்சாணி ! //
ReplyDeleteசார். இந்த கதை வேண்டும். ப்ளீஸ்.
எனக்கு மேலுள்ள பட்டியலின் முக்கால்வாசி வேண்டும் என்று தானுள்ளது !!!! பிக் பாஸ்கள் நீங்கள் மனது வைத்தாக வேண்டுமே ?!
Deleteநான் கார்ட்டூன் பிரியன் என்பதை விட வெறியன் என்றே சொல்லலாம்.
ReplyDeleteநான் பெரும்பாலும் மீள் வாசிப்பு செய்வது கார்ட்டூன் கதைகளே.
அதிலும் கொடுமை லக்கி எனக்கு பிடித்த நாயகர் கிடையாது.(டெக்ஸ் மாதிரி சுத்தமாக பிடிக்காது என்று சொல்ல முடியாது).
ப்ளூகோட் தான் எனது மற்றும் எனது குடும்பத்தாரின் விருப்பமான தேர்வு.
லக்கி லுக்கை புடிக்காதா ? கஷ்டம் தான் சார் !!
Delete😣🤔😂😁😥 😣🤔😂😁😥
Deleteலக்கி பிடிக்காது என்று சொல்லவில்லை. லக்கியோடு டால்டன்கள் அடிக்கும் லுட்டி ரொம்ப பிடிக்கும்.
Deleteஅதுவும்
உங்களுக்கு ஒரு நற்செய்தி சொல்லும்போது.
"என்ன நீ மண்டைய போடப்போறியா "என்ற ஜோவின் பதில் சரியான டைமிங் காமெடி.
லக்கி ஜெயிலில் இருப்பதை பார்க்கும் ஜோ
"என்ன ஒரு கணகொள்ளா காட்சி " ஜோ நக்கல் அடிப்பது போன்ற காட்சிகள் நகைசுவையின் உச்சம்.
ப்ளூகோட்டை தான் எனது பிடித்த நாயகர்கள். அதனால் லக்கி பிடிக்காது என்று இல்லை.
///➤தற்போதைய சூழலில் – உங்களின் O.K. களைப் பெற்றிடும் சிரிப்பு நாயகர்கள் யார்-யாரோ ?///
ReplyDeleteஅவசியம் தேவை:-
*லக்கிலூக்...
*உட்சிடி பாய்ஸ்...
*க்ளிப்டன்...
*ப்ளூ கோட்ஸ்...
*மேக்&ஜாக்...
*மந்திரியார்...
வரவேற்பு & ஏனைய காரணிகள் பொறுத்து:-
*ரின் டின் கேன்...
*நீலப்பொடியர்கள்...
*பென்னி...
2019ல் சுஸ்கி-விஸ்கி அவசியம் எதிர்பார்க்கிறேன் சார்...!!!
அந்த பேரிக்காய் போராட்டம் தான் ஓசி வாங்கி அதிக தடவை படித்த கார்டூன் கதை...!!!
சுஸ்கி - விஸ்கியா ? 30 ஆண்டுகளுக்கு முன்பாய் நாம் இவர்களை ரசித்தது ஒ.கே தான் - ஆனால் இன்றைக்கு இந்த அணி நமக்கு சுகப்படுமா ? என்பதில் எனக்குள் நிறையவே சந்தேகம் உள்ளது சார் !
Deleteவிஜயன் சார்,
Deleteசுஸ்கி - விஸ்கி பற்றி எனது எண்ணமும் இதுவே. ஆனால் முடிந்தால் பேரிக்காய் போராட்டத்தை மட்டும் மறுபதிப்புப்பாக அடுத்த வருடம்
எங்களுக்கு தாருங்களேன். அதன் வரவேற்பைப் பொருத்து சுஸ்கி - விஸ்கியின் புதிய கதைகளை முயற்சிக்களாமே.
///சுஸ்கி - விஸ்கியா ? இன்றைக்கு இந்த அணி நமக்கு சுகப்படுமா ?///
Deleteகஷ்டம்தான் சாா்!
பொடியர்கள் &பென்னியையே ரசிக்கிறோம். சுஸ்கி விஸ்கியும் ரசிக்க முடியும்.
Deleteவாய்ப்பு இருந்தா, பேரிக்காய் பறிப்போம்; சரிவர்லனா என்ட் போட்டு விடலாம் சார்.
தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசு தேவலாம்தானே!!!!
பழக்கடையிலேயே ஒற்றை பேரிக்காயை மாத்திரம் வாங்க இயலாதெனும் போது - 340 ஆல்பங்களுக்கும் மேலுள்ளதொரு தொடரிலிருந்து ஒரேயொரு பேரிக்காய்ப் போராட்டத்தை வாங்க முற்படுவது எத்தனை பெரிய போராட்டமாய் இருக்குமென்று யோசித்துப் பாருங்களேன் சார் !!
Deleteஅதாவது 'ஒரு நாணயப் போராட்டம் 'அளவுக்கு இருக்குனு சொல்றீங்க . அஅப்படித்தானே சார்.😃😃😃
Delete340ஆஆஆஆஆஆ.....தொம்....!!!
Deleteஇரவு வணக்கம் நண்பர்களே
ReplyDeleteவிஜயன் சார், புதிய கதைகளை தேடுவதை எக்காரணம் கொண்டும் கைவிட கூடாது அதுவும் கார்டூன் கதைகளுக்கு.
ReplyDeleteநாம வாங்காத அடியா சார். இதற்கு எல்லாம் நாம் பயந்து பின்வாங்கக் கூடாது. முதல் சில தடவைகள் தான் வலிக்கும் அதற்கு அப்புறம் மசாஜ் செய்வது போல இருக்கும் சார்.
அதனால் புதிய கார்டூன் கதைகள் தேடும் படலத்தை எங்களுக்கு அறிமுகப் படுத்துவதை நிறுத்த வேண்டாம்.
வருஷம் முழுக்க மசாஜும் வேலைக்கு ஆகாது சார் !
Delete58th
ReplyDeleteஎனது பாா்வையில் டாப் 5 காா்ட்டூன்ஸ்
ReplyDeleteபல்வேறு காரணங்களுக்காக!!
1. லக்கிலூக்
2. சிக்பில்
3. ஸ்மா்ப்ஸ்
4. மதியில்லா மந்திாி
5. ரின்டின்கேன்
ஆவரேஜ் காா்ட்டூன்ஸ்
1. புளூகோட் (ஒவியமும், வண்ணமும் அற்புதம்)
குழந்தை காா்ட்டூன்ஸ்
1. லியனாா்டோ
2. கா்னல் கிளிப்டன்
3. பென்னி
//குழந்தை காா்ட்டூன்ஸ் : . கா்னல் கிளிப்டன்//
Delete😳😵
மதியில்லா மந்திாி உண்மையிலேயே அற்புதமான தொடா்!
Deleteசிறுசிறு கதைகள் என்பது குறையல்ல! உண்மையிலே மிகவும் நன்றாக உள்ளது!
ஆனாக்கா லியனாா்டோ ஹிஹிஹி!! அது வேற கதை!
அதேபோல சுட்டி லக்கியை சிறு கதைகள் என்பதற்காக விளக்க வேண்டாமே சாா்!
ஒற்றைப் பக்கச் சமாச்சாரங்களை "சிறுகதை" என்று கூட அடையாளப்படுத்த இயலாதே என்பது தான் எனது சிக்கலே சார் !
Deleteஇளம் டெக்ஸ்:-
ReplyDeleteஅட்டகாசம். இந்த கதை வழக்கமான டெக்ஸ் கதைகளில் இருந்து சில விசயங்களில் மாறுபடுகிறது. டைகர் கதைகளில் வரும் தந்திரங்கள் டெக்ஸ் கதைக்கு புதிது. பல இடங்களில் அவர் கணிப்பு தவறாகி பல்பு வாங்குவது புதிது. ஆனால் இந்த அனுபவங்கள் தான் அவரரை தற்போது வரும் கதைகளில் வெற்றி நாயகனாக ஜொலிக்கச் செய்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது.
கதையின் முடிவில் வில் தேர்தெடுக்கும் மற்றும் தனது உண்மையான பெயர் வில் இல்லை மற்றும் டெக்ஸ் மற்றும் டஸ்டியிடம் தான் கற்றவை எவை எனச் சொல்வது ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரு படத்தை நினைவு படுத்தியது.
நண்பர்கள் பலர் ஏற்கனவே இதன் சிறப்பை சொல்லி விட்டார்கள். குறை என நினைப்பது கதையின் நீளம். இரண்டு மூன்று இடங்களில் கதை முடிவது போல் இருந்தது ஆனால் அதன் பின்னரும் கதை தொடர்ந்து. இந்த கதையில் கார்சன் சொல்வது போல் சில பக்கங்களை குறைத்து இருக்கலாம்.
இந்த கதையில் டெக்ஸ் தன்னை எப்படி நிரபராதி என நிரூபிக்க போகிறாரோ என்பதை விட வில் க்ரெமரின் உண்மையான முகம் என்ன என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வமே எனக்கு அதிகமாக இருந்தது.
HI SIR
ReplyDeleteIM V S PRABHU FROM POLLACHI
MY BOOKING ID 491 BUT V S PRABHU COIMBATORE IRRUKU PLZ CHANGE
இரத்த படலம்: முன் பதிவு எண்ணிக்கை 500+ சூப்பர்.வாவ்.
ReplyDeleteகோவை புத்தகக் திருவிழா: நமது புத்தக விற்பனை சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteரம்யா, ஸ்டீல், திருநாவுக்கரசு, சுரேஷ் சந்த் சார் மற்றும் பாபு. இது உங்க ஏரியா கலக்குங்க.
>>>>கார்ட்டூன் கதைகள் – மாதம்தோறும் உங்கள் வாசிப்புகளுக்கு வர்ணமூட்டும் சமாச்சாரங்களா ? அல்லது வேறு வழியின்றி படித்து வைக்க வேண்டி வருகிறதா ? எவ்விதம் பார்க்கிறீர்கள் folks ?
ReplyDeleteI mostly avoid buying it. Even if I buy hoping to be good, mostly not entertaining including recent lucky,mac & jack etc
தற்போதைய சூழலில் – உங்களின் O.K. களைப் பெற்றிடும் சிரிப்பு நாயகர்கள் யார்-யாரோ ?
In the new entries only Gil Jourdan is promising.
Cartoons are good and entertaining if they came as additional filler pages in main books. And not as separate books.
In case if you have choice to avoid cartoons please do so. Sorry to be frank.
சார்..இது அவரவரது எண்ணங்களின் பகிர்வுகளே என்பதால் - எந்தவொரு தரப்புக்கும் சாதகமாய்ப் பேசிட வேண்டுமென்ற அவசியமெல்லாம் கிடையாது ! You can just be frank now & everytime !
Deleteலுக்கி லுக் & டாக்புல் கிட் ஆர்ட்டின்
ReplyDeleteஇவர்களை என்றுமே தவிர்க்க முடியாது சார் இவர்களுடன் சுஸ்கி விஸ்கி வந்தால் நலம்
+1
Delete87வது
ReplyDeleteஎனக்கு பிடித்த கார்ட்டூன் நாயகர்கள்..
ReplyDeleteலக்கி...
சிக்பில்...
பென்னி...
மேக் அன்ட் ஜாக்..
மதியில்லா மந்திரி..
ப்ளூ கோட் பட்டாளம்..
ஆசிரியர் சார்..
ReplyDeleteநீங்கள் மேலே முன்னோட்டம் செய்த அனைத்து கார்ட்டூன் கதை களங்களில் 80% நன்றாக உள்ளது ..;-)
+100
DeleteMy ratha padalam booking number is 324. It is not there in the list. Please add the same.
ReplyDeletePlease drop a mail with your address sir ; you can use the communication form on the top right corner of this blog too !
Deleteஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். ஒவ்வொரு மாதமும் வெளியிடும் புத்தகத்தில் மாதமும் வருடமும் சேர்த்து அச்சிட்டால் பல வருடங்களுக்கு பிறகு எடுத்து படிக்கும்போது கூட எங்களின் நினைவுக்கு சுலபமாக இருக்கும்.
ReplyDeleteஇந்த நடைமுறையில் ஏதோ சில சிரமங்கள் இருப்பதாக ஏற்கனவே ஆசிரியர் சொன்னதாக நினைவு.
Deleteதிரு மதன்
Deleteகடைகளில் வாங்குபவர்கள் மாதத்தை பார்த்துவிட்டு நடப்பு மாத புத்தகங்களை மட்டுமே வாங்கக்கூடும்.கடந்த மாத புத்தகங்களை பழைய புத்தகம் என்று வாங்காமல் போக வாய்ப்புண்டு.இதனால் கடைகளில் விற்பனை செய்பவரும், ஆசிரியருமே பாதிக்கப்படுவர்.ரெகுலராக வாங்குபவர் என்றால் பிரச்னை இல்லை.அவ்வப்போது வாங்குபவர்கள் கடந்துபோன மாத புத்தகங்களை வாங்குவது பெரும்பாலும் சாத்தியமில்லை.அதனால் புத்தகங்களில் மாதமும்,வருடமும் அச்சிடுவதில்லை. ஆசிரியரிடம் கேட்ட கேள்விக்கு நான் பதிலளிப்பதாக தவறாக எண்ண வேண்டாம். இன்னும் வேறு ஏதேனும் காரணம் இருப்பின் ஆசியர் தெளிவுபடுத்துவார்.
நமது இதழ்களின் பலமே - "என்றைக்கும் படிக்கலாம்" என்ற concept தானே சார் ? ஆண்டாண்டு காலமாய் கிட்டங்கியிலோ ; ஏஜெண்ட்களின் கையிருப்பிலோ இருந்தாலுமே, அவற்றை பழைய பேப்பருக்குக் கடாசிடாது இருக்கச் செய்வது இந்த சமாச்சாரம் மாத்திரமே ! So தேதி, மாதம், வருஷம் என்றெல்லாம் போட்டுவிட்டு, நம்மை நாமே காலில் சுட்டுக் கொள்வானேன் என்ற எண்ணத்தில் தான் வெளியீட்டு நம்பரோடு நிறுத்திக் கொள்கிறோம் சார் !
Delete100
ReplyDeleteஎனது பேவரைட் கார்டூன் நாயகர்கள்.
ReplyDeleteலக்கி லூக்.
ப்ளூ கோட்ஸ
மதியில்லா மந்திரி
சிக்பில்
கர்னல் க்ளிப்டன்.
ஸ்மர்ப் மற்றும் பென்னி பரவாயில்லை ரகம்.
ஆனால் 'மேக்& ஜாக் 'அவ்வளவு சுகப்படவில்லை.
கார்டூன் இல்லாத காமிக்ஸ் உடல்நலத்திற்கு எதிரானது என்பதால், கார்டூன்களை முப்பொழுதும் வரவேற்கிறேன்.
'வாழ வைக்கும் கார்டூனுக்கு ஜே! '
// கார்டூன் இல்லாத காமிக்ஸ் உடல்நலத்திற்கு எதிரானது என்பதால், கார்டூன்களை முப்பொழுதும் வரவேற்கிறேன்.//
Deleteசெமையா சொன்னீங்க
///கார்டூன் இல்லாத காமிக்ஸ் உடல்நலத்திற்கு எதிரானது...///+1000
Deleteஅதே அதே நண்பரே!
Dear Editor sir, List no 377 and 498 are the same?
ReplyDeleteSir, I can ask the people to check....please drop a mail too !
Deleteஎடிட்டர் சார்
ReplyDeleteஇன்றைய சூழல் ப்ரஷர் குக்கரைப் போல நம்மையெல்லாம் மாற்றி வைத்துள்ளது.குக்கர் விசிலடித்து உள்ளிருக்கும் அழுத்தத்தை வெளியேற்றுவது போல கார்ட்டூன் கதைகள் நம்முள் இருக்கும் அழுத்தத்தை வெளியேற்றி குக்கரில் பதமாக வடித்த சாதத்தை போல நம் மனதை பதமாகவும்,இதமாகவும் மாற்ற உதவுகின்றன. சாதம் எப்போதாவது குழைந்து போவது போல அவ்வப்போது சில கார்ட்டூன் கதைகளும் அமைந்துவிடுகின்றன.அது தவிர்க்க முடியாததுதான்.ஆனால் அதற்காக சாதத்தையே தவிர்ப்பது சாத்தியமில்லை.
பட்டாசு இல்லாமல் தீபாவளியில்லை.கார்ட்டூன் கதைகள் இல்லாமல் காமிக்ஸூமில்லை.
நமது காமிக்ஸ்களில் கார்ட்டூன் கதைகளை எடுத்துவிட்டால் பிரியாணியிலிருந்து லெக் பீசை ஆட்டையைப் போட்டது போல் இருக்கும்.மன்னிக்கவும்! பிரியாணியிலிருந்து லெக் பீசை எடுத்தது போல இருக்கும்!!
+11111
Delete👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Deleteஅருமை....
செம & உண்ம!
Deleteபிரியாணியிலிருந்து லெக் பீஸை ஆட்டையைப் போடுவது முறையில்லை தான் சார் ; ஆனால் பந்தியில் அமர்வோர் சைவமாய் இருக்கும் பட்சத்தில் ??? நிகழ்வது அது தானே சார் இப்போது !!
Deleteசைவத்துக்கும்,அசைவத்துக்கும் தனித் தனியே பந்தியெனும்போது லெக்பீசை எடுக்கும் அவசியம் லேது சார்.
Deleteநீங்கள் ஒவ்வொர கதை வரிசைக்கும் தனி சந்தாவாக்கி கார்ட்டூன் தனி சந்தாவில் வரும்போது கார்ட்டூன் பிடிக்காதவர்களை சைவ பந்தியில் அமர வைக்கலாமே சார்.
இரு தனித்தனிச் சமையல்கள் ; பந்திகள் ; மெனுக்கள் என்றாலும், விருந்துக்கான கூட்டமே சொற்பம் என்பது தானே பிரச்னையே சார் !
Delete//1.கார்ட்டூன் கதைகள் – மாதம்தோறும் உங்கள் வாசிப்புகளுக்கு வர்ணமூட்டும் சமாச்சாரங்களா ? அல்லது வேறு வழியின்றி படித்து வைக்க வேண்டி வருகிறதா ? எவ்விதம் பார்க்கிறீர்கள் folks ?//
ReplyDeleteகார்ட்டூன் மாதம் ஒன்று வரலாம் சார் ...
//2.தற்போதைய சூழலில் – உங்களின் O.K. களைப் பெற்றிடும் சிரிப்பு நாயகர்கள் யார்-யாரோ ?//
ஸ்மர்ப், லியோனார்டோ தவிர மற்றவை ஓகே தான் சார் ...
நீலப் பொடியர்களின் mixed reactions தான் என்னளவுக்கு ரொம்பவே ஆச்சர்யமூட்டும் சமாச்சாரம் சார் ! நிச்சயம் யார் மீதும் குறை நஹி ; but just surprised !!
DeleteOK
Deleteஒரு மௌன விரும்பியின் பதிவு:
ReplyDeleteநீங்களே சில கார்ட்டூன் தொடர்களை சொல்லிவிட்டு அது சரியில்லை இது சரியில்லை என்று நீங்களே ஒதுக்குவது ஏன் சார். எனக்கு தெரிந்து கார்ட்டூன் தொடர்களில் கிளிப்டன் வேற ரெஞ்ச் காமெடி, லக்கியும் சூப்பர்தான். எனவே உங்க செலக்ஷன் நல்லாத்தான் இருக்கு. எனவே ஏதாவது நல்ல கார்ட்டூன் கதை உங்கள் கண்ணில் பட்டால் தயங்காமல் அறிவித்துவிடுங்களேன்.
நான் மாத்திரமே தயங்காது கதைகளை வெளியிடுவதென்பது ஒற்றைக் கையால் கைதட்ட முனைவது போலல்லவா இருந்திடும் நண்பரே ?
Deleteகார்டூன் கதைகள் வருடத்திற்கு ஒரு ஆறு அல்லது ஏழு போதும் சார். லக்கியும், சிக் பில்லும் எப்போதும் என்னுடைய பேவரிட்.
ReplyDeleteநிச்சயம் அளவுக்கு மீறிட அனுமதிக்க மாட்டோம் சார் !
Deleteகார்டூன்கள் அவசியம் தேவை, நமக்கு இருக்கும் பன்முக ரசனைகளுக்கு இதுவும் ஒரு சான்று..,
ReplyDeleteதற்போது இருப்பவர்களில் பெரும்பாலானோர் எனக்கு O.K. தான்..,
1. LUKY LUKE
2. SIGBIL
3. BLUECOATS
4. BENNY
5. RIN TIN
6. MANTHRI
7. SMURF
8. CLIFTON
9. MAK&JACK
இவர்களோடு புது (பழைய) வரவான
HERLOCK HOLMES சேர்த்தால் COUNT 10 ஆச்சு..,
லக்கி லூக்கோடு, சிக்பில் அல்லது HERLOCK HOLMES கதைகளை இரண்டாக வெளியிட்டால், மாதம் ஒன்று வீதம் 12 ஆயிற்று.
சார்...உங்களைப் போல ஊருக்கு நாலு பேர் இருந்தால் - ஒரேயொரு வருஷமாச்சும் ALL CARTOON சந்தா என்று வருடத்தின் 36 இதழ்களையும் கார்ட்டூன்களாய் வெளியிட்டு விட மாட்டேனா ?
DeleteALL CARTOON சந்தா ஜே!!😂😘😘😘
Deleteஅடாடாடா ....நினைத்தாலே எகிறி அடிக்குது !!!
Deleteநிதானத்துக்குத் திரும்பினால், அது பிடரியில் விழும் சாத்தின் மகிமை என்பது புரிகிறது !
J ji@ 10நாள் காணலயே தங்களை??? Tight work??
ReplyDeleteஹிஹ்ஹிஹ்ஹி
Deleteவேல வேல வேல....
வேல முடிஞ்சி வீட்டுக்கு வந்தா
தொல்ல தொல்ல தொல்ல...
நில்லு கவனி சுடு
ReplyDeleteப்ளாக் ஒயிட்லயே போதும் ..
கலர்லா வேணாம்.
பேப்பர் வெல கூடிருச்சு
இங்க் வெல கூடிருச்சி..
எல்லாமே கூடிருச்சி...
ஆனாக்க
எல்லாத்துக்கும் ஜொள்ளு....
அப்ப
எல்லா கதயும் கருப்பு வெள்ளயும் போடுவீங்க
கலர்லயும் போடுவீங்க...
நல்லாருக்குங்க உங்க ....டக்கு....
இதானா சார் .உங்க ...டக்கு...
என்
ஒரேவாட்டி கலர்லயே போட்டு வித்துருங்க...ளேன்...
தாராளமான சந்தா பட்ஜெட் இருந்தால் தாராளமாய்ப் போடலாமே - முதல்வாட்டியே கலரில் !
Deleteஆனாக்க
Deleteநாம தா போட மாட்டமே.....
Lucky,Kit,Manthiri,Klipton,
ReplyDeleteகார்டூன்கள் தொடராய் இருந்தால் வேண்டாம் சார். சிங்கிள் ஷாட்களாய் ஏதாவது முயற்சி செய்தால் நலமே.
ReplyDeleteமுன்பு ஒரு முறை லக்கியின் ஒரு துணை கதாபாத்திரமாய் வந்த ஒரு குக் பற்றி ஒரு ஒற்றை ஆல்பம் உள்ளது... முயற்சித்துப் பார்க்கலாமா என்று நீங்களே கேட்டிருந்தீர்கள்...
அப்புறம் இன்னும் ஒரு நினைவுபடுத்தல்... வெகுகாலத்திற்கு முன்பு... (அதாவது 2017ல்) 2019 புலரும் வேளையில் வேதாளரை களமிறக்கப் போவதாக சொன்னீர்கள்... அதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
வேதாளர் என்றில்லை சார் ; எந்தவொரு நெடுந்தொடர் நாயகரையும் களம் இறக்குவதாயின், அவர்கட்கென ஒரு தனித்த தடம் உருவாக்கி, ஆண்டொன்றுக்கு குறைந்த பட்சமாய் 10 - 12 கதைகளையாவது வெளியிடுவதற்கு நாம் தயாராய் இருந்தால் மாத்திரமே உரிமைகளை வாங்கிட இயலும் என்பது இன்றைய நிலவரம் !
Deleteடெக்ஸ் வில்லருக்கு தற்சமயம் நாம் வழங்கிவரும் slot-களுக்கு நிகராய் வேதாளன் போன்ற யுகங்களாய் தொடரும் ஹீரோவுக்கும் நாம் தந்திட அவசியமாகிடும் ! அவ்விதமின்றி, ஆண்டுக்கு மூன்றோ, நாங்கோ கதைகளை மட்டும் வெளியிட்டுக் கொள்ளக் கோரினால், மடேரென கதவைச் சாத்தி, படீரென பூட்டும் போட்டு விடுகிறார்கள் !! ஆயிரக்கணக்கில் கதைகள் கொண்ட தொடரெனும் போது அவர்களது குறைந்த பட்ச எதிர்பார்ப்புகளையாவது நாம் பூர்த்தி செய்திடாத நிலையில், தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் பருப்பு வேக மறுக்கிறது சார் ! முயற்சித்துப் பார்த்து விட்டேன் ஓராண்டுக்கு முன்னமே !
Separate subscription Double OK
Deleteஹாய் சார்..
ReplyDeleteமுதலில் ஒன்றை தெளிவுபடுத்தி விடுகிறேன்.சக தோழர்களை போலவே நானும் காமிக்சின் தீவிர(வாதி) வாசகன் தான்..
பொம்மை கதையாய் எதை பார்த்தாலும் வாங்கி படித்து கலெக்சனில் சேர்க்கும்அதே ரகம் தான்.
கடந்த நான்கு வருடங்களாய் தான் காமிக்ஸ் குடும்பத்தில் இணைந்தவன்.
கார்ட்டூன் கதை பற்றிய தங்கள் கேள்விக்கு என் கருத்து எதிர்மறை தான் சார்.
புளூகோட் /கிளிப்டன்/ ரின்டின் இன்னும் பலவும் சந்தாவி்ல் வாங்கியதற்காக படிக்க தோணுகிறதே ஒழிய படிப்பதற்காக வாங்க தோணவில்லை என்பதே என் அளவில் உண்மை.
சந்தாவில் சாய்ஸ் இருந்தாலும் எந்த புத்தகத்தையும் விட மனமிருப்பதில்லை.
ஓரளவு முன்பு ரசித்த லக்கிலூக் கூட ஏனோ இப்போது அவ்வளவாய் ஈர்ப்பதில்லை.
ஆனால் புத்தகங்கள் வந்தவுடன் முதலில் ப(மு)டிப்பது இவைகளைத்தான்...
பெயருக்கு வேகமாய் புரட்டி முடித்து விட்டு மற்ற புத்தகங்களை பொறுமையாய் ரசித்து படிக்கும் பழக்கம் எனக்கு மட்டுமே உரித்தானதுதானா என தெரியவில்லை.
நிறைய லாஜிக் மீறல்கள்/ பெரிய அளவில் வலுவான அடிப்படை கதை இல்லாதது வயதும் ரசனையும் மாறி போனது இவையெல்லாம் தான் அவற்றை ரசிக்க தடையோயென தோன்றுகிறது.கதை என வரும்போது லக்கி ஓரளவு ஸ்கோர் பண்ணி விடுகிறார்.
அழகான மொழி பெயர்ப்பு நகைச்சுவை சித்திரங்கள் என பிளஸ் பாயிண்ட்கள் இருந்தாலும் ஆர்வ தூண்டல் அமைவதில்லை எப்போதும்...
பெரும்பாலும் சிறுவனாய் லக்கியை தரிசித்தவர்கள்தான் இன்றும் விடாமல் ரசிக்கிறவர்களாக இருக்கிறார்கள்...
அதனால்தானோ என்னவோ லார்கோ பௌன்சர் என ஆரம்பித்தவர்களுக்கு கார்ட்டூன்கள் அந்நியமாகவே கிடக்கின்றன.
வலுவான கதை கள காமெடி/திரில்லர் காமெடிகள்/ புது களங்கள் ஒருவேளை ரசிக்கப்படும் நாள் வரலாம்.
இவை என் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே.
நன்றி சார்.
சார்...ரசனை சார்ந்த விஷயங்களில் பிடித்தங்களுக்கும் சரி, பிடித்தமின்மைகளுக்கும் சரி, காரணங்கள் இருக்க வேண்டுமென்ற அவசியம் துளி கூடக் கிடையாது ! So கார்ட்டூன்கள் ரசிக்காது போயின் அதன் பின்னணியைத் தேடிச் சிரமம் கொள்ளத் தேவை நஹி ! கார்ட்டூன்களை ரசித்தாலன்றி நாமொரு அக்மார்க் காமிக்ஸ் ஆர்வலர் ஆகிட முடியாது என்றும் நியதிகள் ஏதும் கிடையாதெனும் போது - பிடித்ததை மட்டும் ஜாலியாகப் படியுங்கள் சார் !
Deleteதவிர, ஒவ்வொருவரது ரசனையும் மாறுபட்டிருப்பதே என்முன்னுள்ள சவால் அல்லவா ? இந்தப் பயணத்தை சுவாரஸ்யமாக்கிடும் காரணிகளுள் அதுவும் ஒன்றல்லவா ?
So உங்கள் ரசனை - உங்கள் உரிமை !!
மனங்களில்
Deleteமாறுபட்ட ரசனை
கொண்டோரை
காமிக்ஸ் ரயிலில்
பாதுகாப்பாய்
அவரவர் ஜன்னல் வழி காட்சிகளுடன் மகிழ்ச்சியாய்
பயணப்பட வைக்கும்
எடி சார்க்கு
ஒரு
ராயல் சல்யூட்....!!
அவரவர் ஆதர்ஷ அனுபவங்களோடு பயணப்படச் செய்வதில் வெற்றியோ இல்லையோ ; முயற்சிக்கிறேன் என்பது நிஜம் சார் !
DeleteFor Cartoon 6 slot is enough, apart from lucky and chic bil classics in regular subscription. My favourite 1.Lucky luke 2. Chic bill 3. Benny 4. Bluecoat 5. Clipton 6. Mak and Jak.
ReplyDeleteசிக் பில் & லக்கியுமே கார்ட்டூன் சந்தாவில் இருப்பது தானே சார் பொருத்தம் ?
DeleteI don't think they r part of the cartons.. They are regular heroes
Deleteபழகி போயிடுச்சே....
DeleteI love cartoon. அதற்காக மற்றவை குறைக்க வேண்டாம். கடந்த வாரம் தங்களது தாய் தந்தையரை kovai hospital சந்தித்தேன், மகிழ்வான தருனங்கள். அதே நேரம் அவர்களது முதுமையின் சிரமங்கள் பார்க்க மனது பாரமாகவும் இருந்தது. 😞
ReplyDeleteவாழ்க்கைச் சக்கரங்கள் யாருக்காகவும் பரிவாய்ச் சுழல்வதில்லையே சார் !
Deleteஇந்த புது ஐடியிலிருந்து பதில் வேண்டாமே பிளீஸ்..ஏன்னா அந்த பென் மார்க் இருந்தால் மட்டும் அந்த கமென்ட்சை படிப்பேன்..
ReplyDeleteஒரு மாதிரி போனிலும் இதே ஐடி கொண்டு வந்து விட்டேன் !
DeleteEditor sir 3 Million Hits crossed , any news about an special comics issue to celebrate this?
ReplyDelete2019-ன் அட்டவணையில் பார்த்திடப் போகிறீர்கள் நண்பரே !
Deleteடெக்ஸ்தானே சார்?
Deleteமறுபதிப்பு, சன்ஷைன் லைப்ரரி, ஜம்போ என மாறுபட்ட களங்களிலும் கலக்கிவரும் டெக்ஸ் மட்டுமே, இதுவரை வந்த இரண்டு மில்லியன் ஹிட்களும் முழு வெற்றியை தராத நிலையை மாற்றி மில்லியன் ஹிட்டுகளுக்கும் ஒரு புதிய பரிணாமத்தை தர இயலும்....!!!
///தற்போதைய சூழலில் – உங்களின் O.K. களைப் பெற்றிடும் சிரிப்பு நாயகர்கள் யார்-யாரோ ?///
ReplyDeleteடென்சனை குறைக்கத்தான் கார்ட்டூன் புக்கை நான் படிப்பேன்
அங்கும் சிரிப்பு வருவதற்க்கு பதில் மேலும் எரிச்சல் படுத்தினால் அதை தள்ளி வைக்கவே நான் விரும்புகிறேன்
நடப்பில்
எனக்கும் / எனது மகனுக்கும் பிடித்தவைகள்
1. மேதகு
லூக் லக்கி லூக்
2. சிக்பில் & கோ
3. சுட்டி பையன் பென்னி
4. மதியில்லா மந்திரி
ஆகியோர் மட்டும்
தாடி வாலா தாத்தா
ஸ்மர்ப்ஸ்
ரின்டின் கேன்
புளூ கோட்ஸ் பட்டாளம்
இவைகளை நானும் எனது மகனாரும் தொடுவது கூட கிடையாது..
இதில் ஸ்மர்ப்ஸ் ஸை டிவியில் பார்க்க மட்டும் போதும் படிக்க வேணாம்பாங்கிறான்
ரின்டின் ம் தள்ளி வைப்பு படலத்தில்..
பெருசை படிக்கவே முடியலை சார்..
புளூ கோட்ஸ் முதலிரண்டு கதைகளில் சிரிப்பை அள்ளித்தெளித்தவர்கள் தற்போது சிரிப்பினில் வறண்ட பாலைவனத்தையே காண்பிக்கிறார்கள்...
மேக் & ஜேக் / கர்னலை கொஞ்சநாள் தொடரலாம் என்பது என் எண்ணம்
எனது மீள் வாசிப்பில் மினிலயனில்
என்றும் . அலிபாபா / சுஸ்கி விஸ்கி / லக்கிலூக் / டொனால்டு டக்குகளே நீக்கமற நிறைந்திருக்கின்றனர் ...
எத்துனை முறைகள் இவைகளை பற்றி உங்களிடம் முறையிட்டாலும் நீங்கள் சாமாதானம் சொல்லும் போக்கையே கடைபிடிக்கிறீர்கள்..
மேலும் விற்பனையில் சாதிக்காத புத்தகங்களையே போட்டுக்கொண்டே வருகிறீர்கள் .. ஸ்டாக் படலம் என்று வேறு சொல்கிறீர்கள்.. அடூத்தவருடத்திலாவது மினிலயனில் பிரகாசித்த வந்த இவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
(மறுபதிப்பில் இவைகள் வரும் சாத்தியக்கூறுகள் குறைந்துகொண்டே வருகிறது)
கொஞ்சமே கொஞ்சமாய் மேலே scroll செய்தீர்கள் என்றாலோ ; அல்லது இவை சார்ந்த முன்னாட்களது எனது பின்னூட்டங்களை நினைவு கூர்ந்தாலோ - நான் "சமாதானம் சொல்லும் போக்கைக்" கடைபிடிக்கவில்லை ; மாறாக சாத்தியமாகிடும் கதைகளோடு பயணம் செய்கிறோம் என்பது புரியும் சார் !
Deleteஅட....அதுக்கெல்லாம் நேரமில்லையா ? பிரச்சனையே இல்லை - மறுஒலிபரப்பாய் இன்னொரு முறை ஸ்பஷ்டமாய் நிலவரத்தைச் சொல்லி விட்டால் போச்சு !
மினி-லயன் நாட்களுக்கும் இன்றைய நாட்களுக்கும் இடையினில் ஆண்டுகள் 30 கடந்து விட்டுள்ளன ! இடைப்பட்ட இந்த வேளையினில் உலகமும், காமிக்ஸ் படைப்பாளிகளும் பன்மடங்கு வளர்ந்து விஸ்வரூபமெடுத்துள்ளார்கள் ; நாமோ வாசக வட்டத்தில் குறுகி, மிகச் சொற்ப பிரிண்ட் ரன்னில் நடை பயின்று வருகின்றோம் ! So அன்றைக்குத் திறந்த எல்லாக் கதவுகளும் நீங்களும், நானும் ஆசைப்பட்டுவிட்டதற்காக இன்றைக்கும் அதே சுலபத்தோடு திறந்திடப் போவதில்லை என்பது தான் யதார்த்த நிஜம் !
உங்கள் மீள்வாசிப்பினில் நிறைந்திருக்கும் நாயகர்கள் :
அலிபாபா : இந்தத் தொடருக்கான டிஜிட்டல் கோப்புகள் படைப்பாளிகளிடம் இல்லை ! So இவற்றை இனி வண்ணத்திலோ, கருப்பு வெள்ளையிலோ முறைப்படி வெளியிட யாருக்கும் சாத்தியம் கிடையாது! இதை ஏற்கனவே ஏகப்பட்ட தடவைகள் அறிவித்திருக்கிறேனே ?
டொனால்டு டக் : வால்ட் டிஸ்னியின் இன்றைய உயரங்களை நாம் நெருங்க கனவுகளில் கூட சாத்தியமாகாது என்பதில் ஏது ரகசியம் ? தவிர அவர்களது தரம் சார்ந்த விதிமுறைகளுக்கு எட்டுத் தெரு தொலைவில் கூட நாம் இன்றும் இல்லை ! இவர்களிடம் மன்றாடி அலுத்துப் போனது எனக்கு மட்டுமே தெரிந்த கதை ! Again இங்கே நான் செய்திடக் கூடியது என்னவாக இருக்குமோ சார் ?
லக்கி லூக் : இதற்கான பதில் அவசியமா - என்ன ?
சுஸ்கி-விஸ்கி : கதைகளுக்கு உரிமைகள் வாங்கிட சாத்தியமே ; ஆனால் இன்றைய நமது ரசனை அளவுகோல்களை மனதில் கொள்ளும் போது இந்தத் தொடரில் nostalgia தவிர்த்து வெற்றிக்கான காரணிகள் ஏதும் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை ! இதனையுமே பற்பல தடவைகள் பகிர்ந்துள்ளேனே - ஒளிவின்றி ?
தவிர, கர்னல் க்ளிப்டன் ; சிக் பில் போன்றோரும் மினி-லயனின் ஆரம்ப நாட்களது அறிமுகங்களே & இன்றளவும் தொடரத் தானே செய்கிறார்கள் ?!
So இதில் நான் சமாதானம் சொல்லாது, இதையெல்லாம் மீறி செய்யக் கூடியது என்னவென்று சொல்லுங்கள் சார் ; நிச்சயம் முயற்சிக்கிறேன் !
///அன்றைக்குத் திறந்த எல்லாக் கதவுகளும் நீங்களும், நானும் ஆசைப்பட்டுவிட்டதற்காக இன்றைக்கும் அதே சுலபத்தோடு திறந்திடப் போவதில்லை என்பது தான் யதார்த்த நிஜம் ! //
Deleteஇதை விடத் தெளிவாகச் சொல்ல முடியுமா என்ன ?
அவர்கள் எட்டா உயரங்களை எட்டி விட்டார்கள் எனும் போது, நாம் கூடுதல் குள்ளமாய்த் தெரிகிறோம் சார் ....ஏற்றுக் கொள்ள வேண்டிய நிஜமிது !
DeleteFor cartoon sandha, I have a request. Not sure how feasible it is, but I would let you ask our readers on that. For young readers(6 to 8 years group), we need some stories which have short dialogues. Smurfs is good to an extent, but even there sometimes the dialogues goes pretty big. If we can get one book a year for such books, it will help the kids like my son to start reading.
ReplyDeleteRight now, my son is not able to read the smurfs books and he is making me read them before going to bed.
நான்: டேய், தூக்கம் வருதுடா. நாளைக்கு பார்க்கலாம்.
மகன்: இனி ஒரே ஒரு page அப்பா.
வாய்ப்பே இல்லா சமாச்சாரம் நண்பரே ! இன்றைய சுமார் 2000 காமிக்ஸ் வாசகர்களுள் 1990 பேராவது குறைந்த பட்சம் 25 வயதுக்கு மேலானவர்கள் என்று தைரியமாகச் சொல்லலாம் ! இந்த நிலவரத்தில் 6 வயது மழலைகளுக்கு ஏற்ற மாதிரியான கதைகளை வெளியிட்டு யாரிடம் போணி பண்ணுவதோ ? அதற்கும் மீறி, வெளியிட்டே பார்க்கின்றோமெனில், எத்தனை வாசகர்களுக்குக் கதை கேட்கும் பருவத்திலான சிறார்கள் வீட்டில் இருக்கக் கூடுமோ ? & எத்தனை தந்தையருக்குக் கதை சொல்ல நேரமும், பொறுமையும் இருக்குமோ ?
Deleteசிக்கல் உங்கள் ஜுனியரின் எதிர்பார்ப்பில் அல்ல நண்பரே ; இன்றைய பரபரப்பில் சிக்கிக் கிடக்கும் நம் வாழ்க்கை முறைகளில் !
Anyways, மௌனம் கலைத்து பதிவிட முன்வந்தமைக்கு உங்களுக்கும் சரி, இன்றைய புதுப் பின்னூட்ட நண்பர்களுக்கும் சரி, நமது நன்றிகள் உரித்தாகுக !
கார்ட்டூன் இல்லா மாதம் கறுப்பு மாதம்..!!
ReplyDelete
Deleteகார்ட்டூன் இல்லா மாதம் கட்டங் கறுப்பு - கன்னங் கரேல் மாதம்!!
கார்ட்டூன் இல்லா மாதம் காதலி இல்லா மாதம் ..!!
Deleteகார்ட்டூன் இல்லா மாதம் காராப்பூந்தி கிடைக்கா மாதம் !
Deleteகார்ட்டூன் இல்லா மாதம் - மரங்கள் இல்லாத மொட்டைத் தீவு!
Delete(ஹிஹி! 'கள்ளக் காதலி இல்லா மாதம்'னு நான் சொல்லுவேன்னு நினைச்சீங்கதானே கிட்?)
கார்ட்டூன் இல்லா மாதம் காற்றடிக்காத ஆடி மாதம் போல !!
Deleteபாத்தீங்களா மக்களே?
Deleteகார்ட்டூன் சிலருக்கு 'காதலி' ரேஞ்சுனா, சிலருக்கு 'காராபூந்தி' ரேஞ்சு!!
காதலியெல்லாம் கார்ட்டூன் ரேஞ்சு தான் என்று சொல்ல வருகிறீர்களோ புலவரே ?
Delete///
Delete(ஹிஹி! 'கள்ளக் காதலி இல்லா மாதம்'னு நான் சொல்லுவேன்னு நினைச்சீங்கதானே கிட்?)///
ஹீஹீ ...!!
உசாராயிட்டீங்களே ..!!
///காதலியெல்லாம் கார்ட்டூன் ரேஞ்சு தான் என்று சொல்ல வருகிறீர்களோ புலவரே ?///
கார்ட்டூனெல்லாம் காதலி ரேஞ்சு என்றே சொல்லியிருக்கிறேன் ..!
புலவரேன்னு என்னை சொல்லலைதானே சார்.!? :-)
காதலி - கார்ட்டூன் மாதிரி தான் சார்... காமெடியாய் இருக்கும்!
Deleteமனைவி தான் 'கி.நா' மாதிரி!!
பூரிக்கட்டையோ சந்தா B மாதிரி...!
Deleteஅந்த சந்தா B & கி.நா.சந்தாவும், கை கோர்த்தால் சும்மா தெறிக்கும்லே !!
ஆனாக்க கார்ட்டூன் இருக்குற மாசம் சகதர்மிணி அம்மா வூட்டுக்கு போயிருக்குற ஹேப்பி பேச்சலர் மாசம்.
Deleteகார்ட்டூன் இல்லா மாசம்.... மோசம்
எல்லாம் ஒரு மாதிரியாக பேசுறத பார்த்தால் வீட்டில் கிச்சன் விடுமுறை போல் தெரிகிறது:-)
Deleteஆனால் ஒவ்வொருவருடைய கமெண்டும் செம காமெடி வாய்விட்டுச் சிரித்தேன்.
//
Deleteகாதலி - கார்ட்டூன் மாதிரி தான் சார்... காமெடியாய் இருக்கும்!
மனைவி தான் 'கி.நா' மாதிரி //
//
கார்ட்டூன் இல்லா மாதம் காற்றடிக்காத ஆடி மாதம் போல //
// கார்ட்டூன் இல்லா மாதம் காராப்பூந்தி கிடைக்கா மாதம் //
அனுபவம் பேசுகிறது சாரி எழுதுகிறது:-)
Hi comics lovers ,good evening.
ReplyDeleteகார்ட்டூன் இல்லா மாதம் பீசு இல்லா பிரியாணி ..!!
ReplyDelete(Sundayக்கு ஏத்தா மாதிரி எதையாவது சொல்வோமேன்னு ..!)
கார்ட்டூன் இல்லா மாதம் குறட்டை இல்லா தூக்கம் மாதிரி !!
Deleteஏ லெவலுக்கு ஒண்ணு சொல்லட்டுமா...
Deleteஉள்ளாற சரக்கு இல்லாத வெத்து விஸ்கி பாட்டிலு மாதிரி....
ஹா ஹா செம
DeleteMy kids of age 15 and 12 egarly reading lucky luke, Smurf, Benny ,Rin tin can . They are not touching blue coat , chik bill as they are coming under cow boy series.
ReplyDeleteலக்கி லூக்கும் கௌபாய் தானே சார் ?
Deleteவிஜயன் சார், லியோனார்டோ என்னை மிகவும் கவர்ந்த கதை. வெறும் காமெடி என்று இல்லாமல் இரண்டு மூன்று பக்கங்களில் ஒரு கண்டுபிடிப்பு, அது காதில் பூ சூற்றலாக தெரியலாம் ஆனால் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இது தான் ஆரம்பம். இதனை குழந்தைகள் ஸ்தானத்தில் இருந்து பார்த்தால் பல விஷயங்கள் புரியும்.
ReplyDeleteலியோனார்டோ கண்டிப்பாக வேண்டும். அப்படி தனிப் புத்தகமாக வெளியீட முடியாத சூழ்நிலை என்றால் ரெகுலர் இதழ்களில் பில்லர் பேஜ் கதைகளாக வெளியீடுகள் சார் ப்ளீஸ். மதியில்லாத மந்திரியையும் இது போல் வெளியீடுகள்.
வாய்ப்பே இல்லை சார்...!
Delete// வாய்ப்பே இல்லை சார்...! //
Delete:-(
லியனார்டோவும் சரி, மந்திரியாரும் சரி, filler pages-களுக்கு சாத்தியமில்லை ! வெளியிடுவதாயின் முழு ஆல்பமாய் மாத்திரமே !
DeleteOnly manthri
Deleteலியனாா்டோ போகட்டும்!
Deleteமந்திாியாரை கைவிட வேண்டாம்!!
வழக்கமான காமிக்ஸ் கதைகளில் இருந்து மாறுபட்ட லார்கோ, பௌன்சர், தோர்கல் மற்றும் கிராப்பிக் நாவல்களை ரசிக்க ஆரம்பித்துள்ள நாம் கார்டூன் கதைகளுக்கு மட்டும் இன்னமும் லக்கி மற்றும் சிக்பில் மட்டும் போதும் என்ற எண்ணத்தில் இருந்து வெளிவந்தால் இன்னும் பல கார்டூன் கதைகளை ரசிக்கலாம் நமது குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
ReplyDeleteவருடத்திற்கு 12 கார்டூன் கதைகள் வேண்டாம், ஒரு 9 கதைகள் மட்டும் கார்டூன் கதைகளுக்கு ஒதுக்குவோமே?
12 ok
Delete6 பெஸ்ட் நச்சுனு இருக்கும்...!!!
Delete+க்ளாசிக்ல, ஜம்போவுல என 9மாதங்கள் வரும்படி அமைத்தால் சிறப்பு...!!!
வருடத்துக்குப் 12 என்பெதல்லாம் மலையேறி நாளாகிப் போச்சே சார் ? கடந்த 2 ஆண்டுகளாகவே 9 இதழ்கள் தானே சந்தா ரகங்களில் ?
Delete9. pl. Do it
DeleteNo reduce
Deleteஅப்படி என்றால் தயவுசெய்து 9 (excluding reprint) என்பதில் இருந்து குறைக்க வேண்டாமே சார்.
Deleteகார்டூன் கதைகளில் ஸ்மர்ப் காமெடி கொஞ்சம் குறைவுதான். இதில் ரசிக்கும் விஷயம் அந்த குட்டி மனிதர்களின் உலகம் மற்றும் அவர்களின் மனசு. இதனை எத்தனை பேர் விரும்புகிறார்கள் என்பது தெரியவில்லை.
ReplyDeleteவருங்காலத்தில் இவர்கள் கதைகளில் நகைச்சுவை அதிகம் இருப்பதால் மட்டும் வெளியீடவும். எனது குழந்தைகளுக்கு வானம் தந்த வரம் மற்றும் விண்வெளியில் ஒரு ஸ்மர்ப் கதை தவிர பிற ஸ்மர்ப் கதைகளை அந்த அளவுக்கு விரும்பவில்லை.
+1
Delete