நண்பர்களே,
வணக்கம். ஜூலையின் இதழ்கள் தயார் ! வியாழனின் கூரியரில் ஜம்போ + ஜூலை புக்ஸ் புறப்பட்டுவிட்டன என்பதால் காலையில் உங்கள் கைகளில் 4 இதழ்களும் இருந்திடும் !! (அதாவது ஜம்போவுக்கும் நீங்கள் சந்தா கட்டியிருக்கும் பட்சத்தில் !!)
And இதோ - இதுவரையிலும் கண்ணில் காட்டியிருக்கா "எரிமலைத்தீவில் பிரின்ஸ்" இதழின் அட்டைப்படம் + வண்ண உட்பக்க previews :
முன் & பின் அட்டைகள் - ஹெர்மனின் ஒரிஜினல் படைப்புகளே ; நாமிங்கு செய்திருப்பது தமிழில் தலைப்பை அமைத்திடும் பணியினை மாத்திரமே ! And சமீப இதழ்களின் பாணியிலேயே, இம்முறையும் தலைப்பு கையால் எழுதப்பட்டுள்ளது - நம் மூத்த ஓவியர் சிகாமணியின் தூரிகையினால் !! இதழினைக் கையில் ஏந்திப் பார்க்கும் சமயம் அந்த எழுத்துக்களின் நளினத்தையும் சித்தே ரசித்திட நேரம் ஒதுக்கித் தான் பாருங்களேன் - சிறுகச் சிறுக மறைந்து போய் வரும் ஒரு கலையின் பரிமாணம் என்னவென்று புரியும் !!
கதையைப் பொறுத்தவரையிலும். இதனை ஏற்கனவே படித்த ஞாபகம் உங்களில் எத்தனை பேருக்கு உள்ளதோ நானறியேன் - ஆனால் எனக்குச் சுத்தமாய் நினைவு நஹி ! So புதுசாய்ப் படித்த உணர்வைத் தவிர்க்க இயலவில்லை ! வண்ணத்தில், பெரிய சைசில் புக்கைப் புரட்டுவதே ஒரு ரம்யமான அனுபவமாய் இருந்தது எனக்கு !
பிரின்ஸ் தானென்றில்லாது - இம்மாதத்து ஒட்டு மொத்த இதழ்களுமே ஒன்றுக்கொன்று போட்டியாய் அமைந்திருப்பதாய்த் தோன்றுவது எனக்கு மட்டும் தானா ? அல்லது அதனில் உங்களுக்கும் உடன்பாடிருக்குமாவென்று அறிந்திட இக்ளியூண்டு ஆர்வம் பீறிடுகிறது ! So கூரியர் கைக்கு கிட்டிய சற்றைக்கெல்லாமே, இதழ்களின் first look -க்கு உங்கள் ரேட்டிங்குகள் / மார்க்குகள் என்னவென்பதைத் தெரியப்படுத்த நேரம் எடுத்துக் கொள்ள முடிந்தால் - எங்களது டீமே ஹேப்பி அண்ணாச்சி ! அப்புறம் புக்குகளை ஒவ்வொன்றாய்ப் படிக்கத் துவங்கிய பிற்பாடு - அலசல்களை வைத்துக் கொள்ளலாம் !!
அவ்வப்போது பெரிதாய் எந்தவொரு திட்டமிடலும் இல்லாமலே, சில மாதத்து இதழ்களின் combo சுவாரஸ்யமாய் அமைந்து போவதுண்டு ! இது அத்தகையதொரு கூட்டணி என்று மனதுக்குப் பட்டது !
- லக்கியின் ஹார்ட் கவர் ஆல்பம் !
- ஜம்போவின் முதல் இதழ் + Young டெக்சின் அதிரடி !
- புது நாயகர் டிரெண்ட் !
- அட்டைப்படங்களில் நீங்கள் பார்த்திடப்போகும் நகாசு வேலைகள் !
என்று பேச நிறையவே topics இம்முறை இருக்குமென்ற பட்சியின் செய்தியோடு நான் புறப்படுகிறேன் folks ! மீண்டும் சந்திப்போம் ; Bye for now ! Happy Reading !!
P.S : ஆன்லைனில் வாங்கிட இங்கே க்ளிக் ப்ளீஸ் : http://lioncomics.in/monthly-packs/517-july-2018pack.html
1st....!!!
ReplyDeleteநள்ளிரவு வணக்கங்கள் சார்...
Deleteகாலையில் கொரியர் ஆபீஸ் போயிடுவோம்...!!!
Hi there....
ReplyDelete3rd
ReplyDeleteபிரின்ஸ் பின் அட்டை பிரமாதம் சார்...!
ReplyDeleteஜூலை இதழ்கள் விளம்பரத்தில் சின்னத்தலையை காணோம் சார்???
ReplyDeleteஅட்டை படம் அட்டகாஷ் . “ எரிமலை தீவில். பிரின்ஸ்” நான் முன்பு படித்த ஞாபகமில்லை. ஆவலுடன் Waiting.
ReplyDelete3கெளபாய்கள் இடம்பெற்ற இதழ்கள், ஆஹா.... விருந்து காத்திருக்கு...
ReplyDeleteஎன்னைப் போன்ற குதிரை பையன்ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
ரொம்ப நாளைக்கு பிறகு இங்கி பிங்கி பாங்கி- விஞ்ஞானத்துக்கு வேலை வந்துட்டதே...
ம், சரிசரி ஃபேர் பிளேவில் நாமும் புகுந்திடலாம்...!!!!
Deleteபுதுவரவு ட்ரெண்ட் லிருந்து விருந்துண்ணலாம்...!!!
திகட்டாது
Deleteலக்கிலூக்...
ReplyDeleteஇளம்தல டெக்ஸ்...
புது பய ட்ரெண்ட்...
ஓல்டு கோல்டு பிரிண்ஸ்...!!!
அடேங்கப்பா....,
வேல்டு கப் டாப் ஹாஃப் ட்ரா மாதிரி கிண்ணுனு இருக்கேகளம்...!!!
🏆 யாருக்கு????
கடும் சவாலான மாதம்...!!!
காமிக்ஸ் "பிரேசில்"--- இளம்"தல"க்கே நம்ம ஓட்டு...!!!
இந்த வருட ஃபிபா கோப்பை கொரியாவுக்கே.
Delete///லக்கிலூக்...
Deleteஇளம்தல டெக்ஸ்...
புது பய ட்ரெண்ட்...
ஓல்டு கோல்டு பிரிண்ஸ்...!!!///
இதென்ன தலைவரே! நீங்களே முதல்ல லக்கிய போட்டுட்டு, கப் யாருக்குன்னா என்ன அா்த்தம்?
டார்க் ஹார்ஸ் - லக்கி லூக்கே தான்....!
DeleteI 11
ReplyDeleteஅட்டகாசம் சார்,,,அட்டையும்
ReplyDeleteசார் தப்பு தப்பா தகவல் தந்த அந்த பட்சிய அடி பிச்சிட்டேன்,,,,ரெண்டு ஹார்டு அட்டண்ணியேன்னு கேட்டதுக்கு முன்னாடி ஒன்னு பின்னாடி ஒன்னு கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வருங்குதே,,,,ஐந்து புத்தகம்னு கேட்டா கதயயும் கூட்டி கழிக்க சொல்லிருக்கும் ,,,பேச உடலியே
ReplyDeleteI கமண்ட்லயும் 13
DeleteThis comment has been removed by the author.
Deleteஅதான் திண்ணபட்சினு சொல்லிருச்சே.உடுங்க ஸ்டீலு.
Deleteதேவுடா தேவுடா
மூணு புக்கு தேவுடா
டங்கிடிடக்கா டங்கிடிடக்கா
மூணுமே முக்கனியாம்
நல்லா சாப்பிடு தேவுடா
டஙகிடிடக்கா டங்கிடிடக்கா
எல்லாமே சூப்பரு
எல்லாரும் ரசிகர்கள்
நம்மாளு அனுப்பிட்டாருல்ல
டட்டங்டங்
சக்தியெல்லாம் சேத்து படிப்போமே
ஓஹ்ஹோ ஹோஹ்ஹோ....
நம்ம ஸ்டீலுக்கு பதில் சொல்ல சரியான நபர் நீங்கதான் J சார்!!
Delete😂😂😂
Deleteஹீ..ஹீ...ஹீ..
Deleteஉர்ர்ர்ர்ர்,,,
Deleteசார் நம்ப முடில ஒரு வருட ஓட்ட வேகத்த,,,,அடுத்த மாதம் 13
ReplyDeleteகட கடனு ஓடிரும் காலம்...!
Deleteஅதை அதை அப்பப்ப கேப்பு உட்டு வாங்கலாம்யானா, ஆரு ஏத்துகிட்டீங்க????
அடுத்த மாசம் 8 ஸ்டீல் !!
Deleteஎட்டு புத்தகமா,,,ஐயா ஜாலி,,,ஸபைட.....ர்
Deleteசாரி ஸ்பைடருக்கு எட்டு காலாமே,,,,டெக்ஸ் இருந்தாலும் காத்திருப்பு ஏக காலம்,,,ஆனா வீண் போகாது,,,இந்த மாதம் போல திகைக்க வைப்பார் நமதாசரியர்
Deleteசார் ஸ்பைடருக்கு எட்டு காலாமே,,,பட்சி சொல்லுது,,,டெக்ஸ் காத்திருப்பு ஏக காலம்தா,,,ஆனா ஆசிரியர் இம்மாதம் போலவே திகைக்க வைப்பதுறுதி,,
Delete// So புதுசாய்ப் படித்த உணர்வைத் தவிர்க்க இயலவில்லை //
ReplyDeleteநானுமே முதல் வாசிப்புதான் சார்,ஆவலுடன் காத்திருக்கிறேன்.
எடிட்டர் சார்
ReplyDeleteநெய்வேலி புத்தக விழாவில் நமக்கு ஸ்டால் உண்டா?
இல்லை சார் ; ஸ்டால் எண்ணிக்கை அங்கு குறைவே ; so பதிப்புலக ஜாம்பவான்களுக்கே இட பற்றாக்குறை !
Deleteகுட் மார்னிங்
ReplyDeleteHi..
ReplyDeleteபிரின்ஸ் கதை எந்த ஒரு டெம்ப்ளேட்டும் இல்லாமல் புதிய கதை மற்றும் கதைக்களத்துடன் வருவது சிறப்பு; இவர் நீரிலும் நிலத்திலும் ஏன் வானத்தில் கூட சாகசம் செய்வார். இந்த காரணத்திற்காக எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும், அதேநேரம் இவர்கள் கதையில் இழையோடும் மனிதாபிமானம் + பாசப் பிணைப்பு.
ReplyDeleteஇந்த கதையை இதற்கு முன் படித்ததாக ஞாபகம் இல்லை. ஆர்வமுடன் உள்ளேன். ஆனால் திங்கள்கிழமை தான் படிக்க முடியும்:-(
///மனிதாபிமானம் + பாசப் பிணைப்பு.///---யெஸ்.வின்னிங் ஃபார்முலா...!!!
Delete🎶🎼 தனிமையே என் துணைவன் 🎼🎶
ReplyDeleteThe man shoots faster then his shadow
🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫
இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு வரப்போகும் தீபாவளிக்காக இப்போர்ந்தே நிறைய துப்பாக்கிகள் வாங்கி வச்சுட்டீங்க போலிருக்கே? :D
Deleteஅதுவும் சுருள் கேப்போட வாங்கிட்டாரு போலருக்கு
DeleteThen....
'எரிமலைத் தீவில் பிரின்ஸ்' அட்டைப்படத்தில் அந்த சினம்கொண்ட புலியின் சீற்றத்தைக் காணும்போது சின்னதாய் ஒரு கிலி ஏற்படுகிறது!!
ReplyDeleteஅட்டைப்படத்தில் அந்த பச்சை நிறம்... பத்துநிமிடம் உற்றுப் பார்த்தால் பார்வை பறிபோய்விடுமோ என்ற கிலேசம்!
///எரிமலைத் தீவில் பிரின்ஸ்' அட்டைப்படத்தில் அந்த சினம்கொண்ட புலியின் சீற்றத்தைக் காணும்போது சின்னதாய் ஒரு கிலி ஏற்படுகிறது!!///
Deleteநேக்கு புலியைவிட ,ப்ரின்ஸைப் பாக்கறச்சேதான் லேசா ஒதர்றது..!! :-)
வாங்கியாச்
ReplyDeleteச ல
Deleteநகாச பத்தி கொஞ்சம் எடுத்து உடுங்க ஸ்டீலு!
Deleteஆமா அப்படியே சகாந பத்தி கொஞ்சம் எடுத்து உடுலே
Deleteஎல ஓங்கியடிச்சா ஒன்றரை டண்ணுல,,,பாத்ததும் டெக்ஸ்
Deleteஅ பாலே
Deleteஆமால்லே.....
Deleteஆனா புரியல....
அபோலே
Deleteஎவாலே
Deleteஎரிமலை வெடிப்பு கருப்பு வெள்ளையிலேயே வல்கானோ திரைப்படம் பார்த்தது போன்ற பாதிப்பை ஏற்படுத்தும்.. வண்ணத்தில் அதுதான் டாப் இதழாக அமையுமென்பது உறுதி.
ReplyDeleteJumbo Comics Courier Received😊
ReplyDelete42nd
ReplyDeleteவழக்கமாக பார்சலைக் கைப்பற்றுவது தான் போராட்டமாக இருக்கும்...!!!
ReplyDeleteஆனா இம்மாதம், கொரியர் ஆபீஸை கண்டு பிடிக்கவே பெரிய சோதனையா போச்சுது...!!!
பார்சல் வர்ற அன்று வழக்கமாக 9.15க்கே கிளம்பிடுவேன். சேலம்,பெரமனூ் ரைட் வின் மாலுக்கு எதிரில் மாடியில் உள்ள DCTC ஆபீஸ்க்கு 9:30க்கு போவேன். பார்சலை எனக்கு தந்துட்டு டெலிவரிக்கு அங்கே இருப்பவர் கிளம்பிடுவார்.
இன்றும் போய் நின்னா, மாடி படி பூட்டி இருக்கு, அண்ணாந்து பார்த்தா கொரியர் ஆபீஸ் போர்டை காணோம்....
அப்டியே தலையை சுத்திடிச்சி...!!!!
சுதாரித்துக் கொண்டு, அவுங்க போன்நம்பர் ட்ரை பண்ணா, பயந்தபடியே அம்புட்டும் சுவிச் ஆஃப். 3வருடம் முன்னாடி நம்பர்.... ஜியோ புண்ணியத்தில் எல்லாம் நம்பரை மாத்தி இருக்காங்க...!!!
அக்கம் பக்கம் இருக்கும் ஒரே கடை கார அண்ணாச்சிக்கும் கொரியர் ஆபீஸ் போன தடம் தெரியல. பசி வேறு 2மடங்கா எகிறிட்டு,டென்சன்ல...!!!
நெட்ல தேடி, தேடி, தேடி....3ஆபீஸ் விசாரித்து,
ஒரு வழியாக ஒரு நெம்பர் கிடைக்க,
"அட ஆமா சார், நம்ம ஆபீஸ் மாறிட்டு..."ன்னார் பழைய நபர்.
அவரிடம் புதிய ஆபீஸ் முகவரிவாங்கிட்டு, (மனிடோ புண்ணியத்தில் 1கி.மீ.தான் தொலைவு) பறந்து போய் பார்சலை கைப்பற்றி, புஸ்ஸ்ஸ்னு ஒரு பெருமூச்சை விட்டு கடைக்கு வந்து சேர்ந்தேன்.
மசால் தோசை வாங்கியாற அஸிஸ்ட் போயிருக்கான். இனி பசியாறிட்டுத்தான் இளம் தல தரிசனம்....!!!!
சாா்,
ReplyDeleteவழக்கமான கிளாஸ் பினிஷிங் ரேப்பரைவிட,
இந்த ஒரு வகையான மேட் பினிஷிங் ரேப்பா் தூள்
100 க்கு 200 மாா்க்!!
இது தனி லேமினேசன் இல்லை போலிருக்கே!
Deleteஅட்டையே இந்த மாதிாி டிசைன்ல இருக்கு!
சார்...சிவகாசியின் பலமே இது போன்ற ஜிகினா வேலைகள் - கைக்கெட்டும் தூரங்களில் இருப்பது தான் ! ஜாலியாய் ரசியுங்கள் !
Deleteவாவ்....வாவ்.....வாவ்....!!!!
ReplyDeleteசூப்பர்....அடி தூள்....ஃபெண்டாஸ்டிக் சார்....!!!!
பார்சலை பிரித்தானிய முதலில் தெம்பட்டது, லக்கி ஹார்டு கவர்...!!!
வழக்கமான ஹார்டு கவர். ஓகேனு , அடுத்த புக்குகளை பார்க்க, 3ம் டாட் டாட் வைத்த மேட் ஃபினிஸ் அட்டை. செம...
கையில் வைத்து பார்க்கவே வழு வழுன்னு வழுக்குது. கன்னத்தோடு இழைத்து பார்த்தால் சிலுசிலுக்குது. அட டா...
புதிய முயற்சி சூப்பர் சார்... அட்டகாசாமா இருக்கு...!!!
இந்த புதிய மேட்அட்டை பற்றி டெக்னிகலாக விவரியுங்கள் ஆசிரியர் சார்...
ReplyDeleteஒன்றும் பெருசாய்க் கம்பு சுற்றும் வேலையெல்லாம் இங்கு நஹி ; அவ்வப்போது மார்க்கெட்டுக்கு வந்திடும் நகாசு வேலைகள் என்னவென்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு அவற்றிற்குள் தலையை நுழைத்துப் பார்க்கும் ஒரு ஆர்வம் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! அத்தோடு ஏதேனுமொரு தம்மாத்துண்டு விதத்திலாவது உங்கள் புருவங்களை உயரச் செய்ய முடிகிறதா என்ற ஆர்வமுமே !!
Deleteதம்மாத்துண்டு விதத்தில் அல்ல சார்,
Deleteகணிசமான அளவுக்கே ஆச்சர்யம் அடையவைத்து விட்டீர்கள்.
"குட்டி ஜப்பான் "---சிவகாசியில் இருப்பதன் செளகர்யங்கள் உங்களுக்கும், எங்களுக்கும் கிடைத்த வரங்கள் தான் சார்...!!!
உங்களின் சிரத்தை எப்போதும் போல சிலிர்க்க வைக்கிறது.
இதெல்லாம் தூர நகரங்களில் எட்டி என்று வரம்???
🎶💤💤💤
Deleteபுதிய பாணி பேப்பரிலான அட்டையில் இருமடங்கு வசீகரம் கூடியுள்ளது.
ReplyDeleteஎன்ன அழகு எத்தனை அழகு கோடிமலர் கொட்டிய அழகு....!!!!
வியப்பான புதிய பரிணாமம் தொடருமா சார???? இதன் விலைகள் வழக்கமானதைவிட அதிகமாகத் தான் இருக்கும், தொடரும் சாத்தியங்கள் இருந்தால் தூளாக இருக்கும்...
பயணத்தின் புதுப் புது அனுபவங்கள் சார் ; தொடர்ந்து கொண்டேயிருக்கும் !
Deleteதொடரட்டும் சார்...!!!
Deleteஅப்புறம், இரத்தப் படலத்தில் இதுமாதிரி ஏதும் வாணவேடிக்கைகள் உண்டாங் சார்!!!!...
42 வயசானாலும், இது போன்ற விசயங்களை பார்க்கும்போது, பொம்மை வகைளை கண்டு குதூகலிக்கும் தம்பி, தங்கைகளின் குழந்தைகள் போல நாமும் மாறிவிடுகிறோம்....!!!
அவிங்களுக்கு பொம்மை,
நமக்கு பொம்மை போட்ட பொஸ்தகம்....!!!
///அவிங்களுக்கு பொம்மை,
Deleteநமக்கு பொம்மை போட்ட பொஸ்தகம்....!!!///
உண்ம!
பச்சை நிறத்தைவிட சிகப்பும்,கிரேவும் இந்த மேட் பினிஸில் டாலடிக்கின்றன..
ReplyDeleteஇந்த பின்னணியில்,
டாப் அட்டை-ட்ரெண்ட்..
ரன்னர்அப்-ஜம்போ இளம்டெக்ஸ்.
3ம் இடம்- பச்சைவண்ண ப்ரின்ஸ்ம் பிங்பாய் லாட்டி லக்கியும்...
ஜம்போ காமிக்ஸ்...!!!!
ReplyDeleteலோகோ கலரில் நேரில் நன்றாகத்தான் தெரிகிறது. டிசைன் செய்த நண்பருக்கு பாராட்டுக்கள். தேர்வு செய்த ஆசிரியர் சாருக்கு வாழ்த்துக்கள்.
மெக்ஸிகன் சர்ச் பின்னணியில் ஆரஞ்சு வர்ண மாலை ஒளியை பட்டாசாக வரைந்துள்ளார்கள். இளம் தல கட்டி போடுகிறார்,வசீகரத்தில்...
பின்அட்டையும் பிரமாதப் படுத்துகிறது.
உள் பக்கங்களை புரட்டினால் ஸ்டன்னிங.
அற்புதமான தரமான வெளிர்பழுப்புநிற காகிதத்தில் பிரிண்டிங். செம...சித்திரங்களின் தரத்தை இருமடங்காக்கி காட்டுகிறது.
முதல் பேனலே அசத்தலான காட்சி. அம்மாடி, சித்திரங்கள் இத்தொடர் முழுக்கவே இப்படித்தான் இருக்கும் என்ற செய்தியே நாவில் இனிக்கிறது.
ஆர்ப்பாட்டமான வெற்றிக்கு கட்டியம்கூறும் அழகு...
ஜம்போவின் கருப்பு இதழ்களுக்கு இதே காகிதமா சார் அல்லது இளம் டெக்ஸ் தொடருக்கு மட்டுமா??
//ஜம்போவின் கருப்பு இதழ்களுக்கு இதே காகிதமா சார் அல்லது இளம் டெக்ஸ் தொடருக்கு மட்டுமா??//
Deleteதயாரிப்புத் தரங்களில் ஜம்போ one step ahead இருக்கும் சார் - எல்லா நேரங்களிலும் !
சூப்பர் சார்,தொடரட்டும்...!!!
Delete4,000 விலையுள்ள the story of the world cup, பேப்பர் எடிசன்,(Faber & Faber, Londonவெளியீடு) புக், அமேசான்ல செகண்ட் ஹாண்டில் ரூபாய் 600க்கு வாங்கியுள்ளேன். நீண்டநாள் கனவு, இந்தவருடம் தான்நிறைவேறியது.
அந்தபுத்தகத்தின் தாளின் குவாலிட்டிக்கு சற்றும் குறைவில்லா ஜம்போவின் தரத்தை பார்க்கும்போது வாவ்..வாவ்... என சொல்லத் தோணுது சார்...!!!
சூப்பர் சார் மிரட்டுவது டெக்ஸ் மட்டுமல்ல, ,,பக்கத்தாள்களுமே
DeleteDear Vijayan Sir,
ReplyDeleteReceived next month books in advance, thanks. My Jumbo Tex is missing in the box.
Congrats for the new look covers, feels like a leather finish. Please continue in same way if possible.
Expected a preview for Tex 70 Special, Little bit disappointing.
Dear Vijayan Sir,
ReplyDeleteReceived next month books in advance, thanks. My Jumbo Tex is missing in the box.
Congrats for the new look covers, feels like a leather finish. Please continue in same way if possible.
Expected a preview for Tex 70 Special, Little bit disappointing.
உங்கள் சந்தா நம்பரோடு ஒரு மின்னஞ்சலை மட்டும் தட்டி விடுங்களேன் சார்...!
Deleteமுதல் பக்கம் கடேசி பிரேமில்
ReplyDeleteலக்கி : ச்சை! ஓவா் சமா்த்தான குதிரைகளையே புடிக்காது!
(உபயம் : சிடுமூஞ்சி ஸ்மா்ப்)
ஹாஹாஹா!
படத்துக்கு பொருத்தமான டயலாக்!
சூப்பா் சாா்!
கார்ட்டூன்களுக்குப் பேனா பிடிப்பது எப்போதுமே ஜாலியான அனுபவம் சார் ; பெரிதாய் நாம் மெனக்கெட அவசியங்களில்லாது - அந்தச் சித்திரங்களும், கதைகளுமே நம்மைக் கையைப் பிடித்து இட்டுச் சென்றுவிடும் !
Deleteஆனால் டெக்ஸ் கதையிலும் இதே போன்ற டயலாக் வருகிறது.. சிரிப்பை வரவழைத்தாலும், ஏனோ ஒட்டவில்லை..
Deleteஆஹா...! லூட்டி வித் லக்கி ...பிங்க் கலர் வழவழ ஹார்டு பவுண்ட் ..ஆஹா..!!
ReplyDeleteடெக்ஸ் ..,ட்ரெண்ட் ..,ப்ரின்ஸ்..மேட் ஃபினிசிங் அட்டையை தடவிண்டே இருக்கலாம் போலிருக்கு..!!
என்ன ஒண்ணு ...பூரா மொரட்டுப்பயலுகளாவே அட்டைப்படத்துல இருக்காங்க..!போதாக்குறைக்கு புலி, நாயெல்லாம் இருக்கவும் தடவிண்டேஏஏஏ இருக்க பயம்மா இருக்கு.!
ஒரு ஷானியாவோ., பெட்டியோ ..அட்டையில இருந்திருக்கலாம்.!! :-)
ஷானியாவும், பெட்டியும் பட்டியலுக்குள் தொடர்கிறார்களா என்று பார்ப்போம் சார் - பொட்டிக்குள் அடைப்பது பற்றி யோசிக்கும் முன்பாய் !!
Delete:-)
கதை வராட்டி பரவாயில்லை சார்..!
Deleteஅட்டைப்படத்தில் மட்டுமாவது வரட்டுமே..!
இப்போ ப்ரின்ஸ் கதைக்கான அட்டையில் ஷானியாவை பெருசாப் போட்டு .., ஷானியா தோன்றாத ப்ரின்ஸ் சாகசம்னு போட்டு சமாளிச்சுடலாமே ...எப்புடி ..!? :-)
///இப்போ ப்ரின்ஸ் கதைக்கான அட்டையில் ஷானியாவை பெருசாப் போட்டு .., ஷானியா தோன்றாத ப்ரின்ஸ் சாகசம்னு போட்டு சமாளிச்சுடலாமே ////
Deleteஹா ஹா ஹா!! :))))))))
ஜம்போவுக்கு உபயோகப்படுத்தியிருக்கும் பேப்பர் சூப்பரா இருக்கு சார்..!!
ReplyDeleteட்ரெண்ட் ..,உட்பக்க சித்திரங்கள் தெளிவாக அழகாக தெரிகின்றன..!!
பெர்னார்டு ப்ரின்ஸ் ..,வழக்கம்போல அட்டையிலிருந்தே மிரட்டுகிறார்..ஹிஹி..!!
சாா்,
ReplyDeleteகாா்ட்டூன்களில் திரும்பவும் அந்த பழைய FOND STYLEக்கே மாறியதற்கு நன்றிகள் பல!
இவை தான் படிப்பதற்கு தொல்லையில்லாமல் இருக்கின்றன!
ஒரே எழுத்துரு போரடித்துப் போகுமே என்ற எண்ணத்தில் தான் அவ்வப்போது மாற்றிடுகிறோம் ; maybe அதனில் விஷப்பரீட்சை செய்யாது விட்டு விடலாம் இனிமேல் !
DeleteThis comment has been removed by the author.
Deleteஜம்போ :)
ReplyDeleteபார்த்தாச்சா ரம்யா ?
Deleteரம்யா அனேகமாக இந்த வார இறுதியில் வாங்கிப் படிப்பாங்க என நினைக்கிறேன்.
Delete😊
Delete@Vijayan
Deleteபார்த்தாச்சு ஆசிரியரே
ஜம்போ கிடைக்க பெற்றதில் மகிழ்ச்சி
டெக்ஸ் நேற்று மதியம் மூன்று மணி ஆகும் போது கையில் கிடைத்து விட்டார்
அட்டைப்படம் நன்றாக உள்ளது
ஜூலை மாதம் புத்தங்களை அடுத்த வாரம் தான் வாங்க முடியும்
லோகோ பிடித்துள்ளது
Deleteடிசைன் செய்த வாசகருக்கு பாராட்டுக்கள்
ஜம்போ மட்டும் வரல! :(
ReplyDeleteஜம்போ சந்தா அறிவிச்ச உடனே கட்டியாச்சு. ஆனா புக் அனுப்பாம அம்போனு விட்டுட்டாங்க சார்....... :(
same blood bro. I emailed, called 5 times but issue not yet sorted. Manda Vedikkuthu.
Deleteசார்..ஆபீசில் கடந்த இரு நாட்களாய் 3 பெண்கள் சுகவீனத்தில் விடுமுறையில் உள்ளனர் ; எஞ்சியிருக்கும் ஒரேயொரு ஆளாய் சமாளிக்கக் கொஞ்சம் திணறி வருவதால் சற்றே பொறுமை ப்ளீஸ் !
Deleteசார் ஓடிக்கிட்டுருக்கேன்,,,,,பொறுமையா உக்காந்து ரசித்த படி பிரித்ததும் பகிருகிறேன்
ReplyDeleteWrapper ஜோர்! லக்கி லுக் தவிர அனைத்து அட்டைகளிலும் ஒரு விதமான சொரசொரப்பு தன்மை புதிதாக உள்ளது. ஜம்போ வடிவமைப்பு அமர்க்களம். பாராட்டுக்கள் எடிட்டர் சார் !
ReplyDeleteபுதிய பாணி அட்டையின் ஆச்சர்யங்களில் இருந்து மீண்டு, வண்ண உட் பக்கங்களில் பார்வையை ஓடவிட்டால், ட்ரெண்ட் சம்திங் நியூ என மீண்டும் ஆச்சர்யத்தை தொடரச் செய்கிறார்.
ReplyDelete2017ஜனவரியில் டியுராங்கோ பாணி கலரிங் புதியபாணியில் அசத்தியது.
ட்ரெண்ட் , அதை விட இன்னும் கொஞ்சம் மாறுபட்ட கலரிங்கில் மிளிர்கிறது சார்.
கனடிய பனிமலைகள், மலைச் சிகரங்கள்,
கதாபாத்திங்களின் முகத்தின் உணர்வுகள் என முற்றிலும் அசத்தலான கலரிங்...
பக்கங்கள் 13,14ன் முக பாவங்கள்,
15ன் மலை முகடு,
18ன் அடர்பச்சையில் ஜேனட்டின்முகம்,
20ல் பனி மரங்கள்,
21ன் பனிச் சிகரங்கள்,
26&27ன் மலை ஓடை,
33ன் படகு காட்சி,
................
................
செம...செம..செம சார்...
கமானசேவின் மாற்று, ஒர்த்தியான ஒன்றுதான்...!!!!
2018ன் அறிமுக நாயகன் ட்ரெண்ட் தான்..!!!
காலையில் கொருயருக்குளு நுழைய, நண்பர் இல்லமல் திகைக்க, மேனேஜர் முறைக்க, ஒருவர் வாடிக்கையளரு என கூவ, கண்டுக்காத மாதிரி நான் கலைக்க, சின்ன டப்பியும் பெரிய டப்பியும் கிடக்க, இரண்டு பாக்ஸ் எனக் கூவ, கடசிய ஒரே பாக்ஸ் கிடைக்க , ஆபீசுக்கு போன் போடு என இதயமும் கதற, இந்நேரத்திலா என மூளை உரைக்க , வர வர அட பார்சல் குண்டா இருக்கே என இதயம் மகிழ்ந்து மூளைய கேக்க, அது ஜம்போ மட்டும் வாங்குவோர்க்கு என மூளை இளிக்க,,,,,காக்க காக்க கனகவேல் காக்க நோக்காத நோக்காத நொடியினில் நோக்காத என விரல்கள் டைப்ப, ,,,காத்திருக்கிறேன்
ReplyDelete@Steelclaw
Deleteபார்சல் கிடைக்க கவிதை பிறக்க அதை தாங்கள் இங்கே வர்ணிக்க
செம்ம சகோதரரே
ஸ்டுலு ஸ்டீலு தான்
ReplyDeleteஅவரு
டைப் டைப்புதான்
ஏ.. டச்சிங் டச்சிங் டச்சிங்
டச்சிங் டச்சிங் ஃபோனா ஸ்டீல்...
என்ன வேகம்
என்ன டைப்பிங்..
எனக்கு புரியுது..
ஏ ஸ்டீலு ஸ்டீலு தான்
அவரு டைப்பிங் டைப்பிங் தான்
என்ன வேகம் என்ன உணர்ச்சி
என்ன லவ்வப்பா( காமிக்ஸ் மேல)
ஒங்களவிடவா
Deleteபுத்தகங்களைப் பார்த்த நண்பர்களின் சிலாகிப்புகள் எதிர்பார்ப்பை ஏகத்தும் எகிறச் செய்கின்றன!
ReplyDeleteஎன்னமா ரசிச்சுத் தள்றாய்ங்க (குறிப்பா அந்த டெக்ஸு விஜய்)!!
சாயந்திரமாகட்டும்னு இருக்கேன்... புத்தகங்களைக் கைப்பற்றுவோம்... அப்புறம் நாங்களும் ரசிப்போம்... சிலாகிப்போம்... யாரும் பார்க்காத சமயத்துல குட்டியா ஒரு குத்தாட்டம் கூட போடுவோம்!!
ப்பூ!!
அந்த மூணாவது புக்கிலே ஏழாவது பக்கத்திலே ஆறாவது பேனல் பார்த்தீங்கன்னா அப்டியே மெர்சலாகிடுவீங்க !! ஆங் ...அதே போல ரெண்டாவது புக்கிலேயும்...நாலாவது புக்கிலேயும் என்ன ஸ்பெஷல்னா ... அது வந்து ...அது வந்து ...அச்சச்சோ நீங்க இன்னும் புக்குகளைப் பாக்கலீயோ ?
Deleteடெடிகேடட் டூ செயலர் ஒனலி.....!!!!
Deleteஅன்றும்...
இன்றும்...
என்றும்...
மாறாமல் மலைக்கச் செய்து வருபவை வருகிறது விளம்பரங்களே...!!!
இம்முறையும் வாயெல்லாம வாட்டர் ஃபால்ஸ வர வைக்கத் தவறவில்லை...!!!
அடுத்த வெளியீடு...
"இரத்தப்படலம் வண்ண கலக்சன் ஸ்பெசல்"--- இதற்கு ஆசிரியர் சார் தந்திருக்கும் எஃபெக்ட்ஸ், பழைய படங்கள் ஸ்டன்னிங்; ஹைலைட் ஆஃப் த மன்த்...
அடுத்த ஜம்போ இதழ்....,
ஹெர்லக் ஷோம்ஸ் தோன்றும்," ஒரு குரங்கு வேட்டை"---விளம்பரம் செம்மா அள்ளுது....
விரைவில்! முழு வண்ணத்தில்...!
லக்கி க்ளாசிக்ஸ்(2)
அதிரடிப் பொடியன்& மேடையில் ஒரு மன்மதன்....
எவர் கரீன் லக்கியின் அதிர்வெடிகள்...
அடுத்த லயன் வெளியீடு,
"களவும் கற்று மற"---ட்ரெண்ட். அம்மாடியோவ்....இதற்கான விளம்பரத்தின் கடேசி அகலப்படம்...ஓவ்..ஓவ்...தூஊஊஊள்....
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்,
ஐஸிங் ஆன் த கேக்....
நவம்பரில் வெளிவருகிறது!
TEX ன்,
" சைத்தான் சாம்ராஜ்யம் "....மாஸான கலரிங்....!
குறிப்பு:-
வலையிலிருந்து விமர்சனங்கள்,
Erode Vijay
வாடகைக்கு கொரில்லாக்கள் ஒரு கொடூரமான............
...............
.............
.............
ஆனால் நான் அந்த 15 புத்தகத்தான் பார்த்தேன். நாளைக்கு நீங்க சொல்லுற அந்த புத்தகத்தை பார்க்கிறேன் ஜி.
Deleteஒரு பின் குறிப்பு!- போதும் வயிற்றெரிச்சல் கிளப்புனது.
Deleteபடிக்கப் போகலாம்.
டரெண்டா??? ஜம்போவா???
ம்???
ம்???
ம்???
ட்ரெண்ட் டே படிப்போம்....!!!
2சில்பான்ஸ் வேறு இருக்கே...!!!
காதுல புகை வருதே!! !😠💨😠💨😠💨
Deleteபார்ரா பனை மரத்துல தேள் கொட்டுனா, தென்னை மரத்துல நெறி ஏறுது....!!!
Deleteநெறி ஏறல. வெறி ஏறுது.
Deleteசார் இருந்தாலும், இல்லாட்டியும் சந்தேகத்துடனே நுழைக்கிறேன் விரல்களையல்ல கண்களை சின்னதா இருக்குதா, ,,,,அப்பாடா இக்குதே, இப்ப நுழைக்கிறேன் விரல்களை , இழுக்கிறேன் விரல்களை சொர சொரன்னு கண்களுக்கு தட்டுப்பட கைகளிலோ வழவழப்பு, ,,,,ஓ மேட் பினிஷ் அட்டகாசமாய் மனதை இழுத்தாலும் அந்த கெட்டி அட்டை என்பதை விட ரோஸ் கலர் டால்டன்கள் அட்டை பளீர் ரகம். இது வரை வந்த அட்டைகளில் முதலிடம் இதற்குத்தான், என்னதான் பிற அட்டைகள் கலக்கினாலுமே, ட்ரெண்ட், டெக்ஸ், பிரின்ஸ் என சகல அட்டைகளும் வரிசைப் படி நச் . நுழைகிறேன் ஆனந்த உலகில்
ReplyDeleteபனி,,,எங்கும் பனி, கண்ணுக்கு எட்டிய மட்டிலும், அதயும் தாண்டி,,,பிரபஞ்சம் முழுக்க, பனி மட்டுமே வியாபித்துக் கிடக்கிறதா என பனி மண்டலத்துக்குள் துவக்க வரிகள் விளிக்க மனசுக்குள்ளே ஜிலீர்,,,
ReplyDeleteவாடாதே வண்ணத்துக்கு நானிருக்கேன்னு பிரின்ஸ் பிளிர, வண்ணத்தில் நவம்பரில் நானிருக்கேன்னு சைத்தான் சாம்ராஜ்யம் விளம்பரம் அதகளமாய் அட்டகாசம்
Deleteஇப்ப இப்ப சகலத்தையிம் விட டெக்ஸ் அட்டை சுண்டியிழுக்க காரணம் வண்ணக் கலவையா, அந்த டெக்ஸ் அதகள ஓவியமாஎன நுழைய, சும்மா பேப்பர் தரம் டாலடிக்க , எப்பயும் துரத்திச் செல்லும் டெக்ஸ், ,,தப்பியோடுவது ஆசிரியர் கூறியபடி வேற டெக்ஸ் என கட்டியம் காட்டும் முதல் பக்கம் கரைய,,,,ந்த அட்டைய மடிச்ச விதம் அழகு ,,,ஆசிரியர இதுல்ல மட்டும் இத்துனூண்டு பாக்கலாம்
Deleteஇப்ப லக்கிய புரட்டுனா அந்த ஆரஞ்சு வண்ணம் உள் பக்கம் மனதை ஈர்க்க , பக்கத்த புரட்னா அப்பாடா ஹாட்லைன் இருக்கு,,,ஈர்ப்பான வண்ணத்தில் பக்கங்கள் புரள , அப்பாடா இப அடுத்த வெளியீடு அட்டகாசமாய் விளம்பரமாய் , நேர்த்தியாய்,,,,இத விட அட்டகாச விளம்பரம் ஏதுன்னு அதட்டியபடி ,,,,பின் பக்க ஆரஞ்சு பக்பமும் அசத்த, ,,,சூப்பர் சார்
Deleteஸ்டீல்@ அந்த ஜம்போவின் அட்டைகள் மடித்து உள்ளது இன்னும் வித்தியாசமான அம்சமா இருக்கில்லையா!!!
Deleteலெஃப்ட் மடிப்பில் take offடைம்னு மினி ஹாட்லைன், மடிப்பை விரித்து பார்த்தால் ஜம்போ லோகா....!!
ரைட் மடிப்பில் அடுத்த ஜம்போ விளம்பரம். கலரில்+ கருப்பு வெள்ளையில்... அதகள செட்அப்...
ஜம்போ ரியிலி டேக் ஆஃப்ஸ்....ஜூஊஊஊஊஊம்...
அருமையாக உள்ளது டெக்ஸ், ,,,ப்ளசே அதான
Deleteபொறுங்க!! பொறுங்க!! !
Deleteபுக்கையே இன்னும் பாக்கல. அதுக்குள்ளாற கேப் விடாம அடிச்சீங்கன்னா , நான் எங்க போவேன்? யார்க்கிட்ட போய் சொல்லுவேன்.?
கொஞ்சம் பெண்டிங் வைங்க. இன்னைக்கு ராத்திரியை சிவ ராத்திரி ஆக்கிப்புடலாம்.
ஜிபி.
Deleteநம்ம டெக்ஸ் எழுதறத படிச்சீங்கன்னா பக்கத்துல இருந்து நாமளும் உணருவது போலவே இருக்கேன் இந்த மனுசன் ஓட்டல்ல போய் சாப்பிட்டதையெல்லாம் எழதறத படிச்சா நமக்கு வாயெல்லாம் குத்தாலமா ஆயிடும். அவரோட பழய புத்தக விழா சம்பந்தப்பட்ட கட்டுரையெல்லாம் படிச்சுப் பாருங்க.
எடிட்டர் சார் ஒரு சிறிய வருத்தமான தகவல் ...
ReplyDeleteஎனக்கு சென்ற மாத டெக்ஸ் கதையில் பல பக்கங்கள் படிக்க முடியாதவாறு கருப்படித்து இருந்தது... சரி என்ன செய்ய என யோசித்து கொண்டிருந்தேன் ஆனால் இன்று வந்த ஜம்போ காமிக்ஸ் டெக்ஸ் புக்கில் 4 பேப்பர் கசங்கி மிகவும் அசிங்கமாக உள்ளது நான் என்ன செய்ய சார் ஈரோடு புத்தக கண்காட்சியில் வந்து மாற்றிகொள்ள வாய்ப்பு உள்ளதா இல்லை காசு கொடுத்து திரும்பவும் புதிதாக வாங்க வேண்டுமா இதை கேட்க தர்ம சங்கடமாக உள்ளது சாரி சார்..
இதில் நீங்கள் சாரி சொல்ல அவசியமேது சார் ? உங்கள் முகவரியோடு ஒரு மின்னஞ்சலை மட்டும் அனுப்பிடுங்கள் - 2 புத்தகங்களுக்குமே மாற்று அனுப்பிடுவார்கள் !
Deleteதேவையில்லா கூரியர் செலவு அதான் சார் எப்படியா இருந்தாலும் ஈரோடு புக் பேர் வருவேன் அப்ப மாற்றிகொள்ள வாய்ப்பு இருந்தால் நல்லது அதான் சார்
Deleteநிச்சயம் மாற்றிக் கொள்ளலாம் சார் !
Deleteநன்றி சார்
Deleteஒண்ணு நல்லா கன்பர்ம் ஆயிடுச்சி.
ReplyDeleteபுக் வெளிவரும் போது, கொரியரைக் கைப்பற்றி விட்டு, பார்சலை ஓபன் பண்ணிட்டுதான், தளத்தை ஓபன் பண்ணணும்.
9:50ஆனாலும் கிளம்ப ரோசிக்கும் நானு, மாசம் ஒரு நாள் மட்டும் 9:15க்கே கிளம்புறது எதுக்காம்.
Deleteகாலைல டிபனே நம்ம நாயகர்களை ரசிச்ச பின்பு தானே!
கொஞ்சம் மிஸ் ஆச்சுனா கொரியர் டெலிவரி மேன் கிளம்பிடுவாரு, பொறவு அவரு வரும்போது தானே கிடைக்கும். 2மணி வரை வர்லினா லஞ்க்கு வேறு கிளம்பிடனும்...!!!
எனக்கு நல்லாவே தொியும் சிவகாசி லோடு 9.30க்கு தான் வரும்னு!
Deleteஆனாலும் 9.25 க்கே போன் போட்டு பார்சல் வந்துருச்சானு கேப்போம்ல !
ஆசிரியர், 15ஆம் தேதி புத்தகம் வரும், இந்த வாரத்தின் ஆரம்பத்தில் வரும் என்று சொன்னதை நம்பி, எதிர்பார்த்து, ஏமாந்ததற்கு பிறகு, ஒருவழியாக இன்று மதியம் புத்தகம் கைக்கு கிடைத்தது.
ReplyDeleteரொம்ப ஆவலோடு பிரித்து பார்த்ததும், புது விதமான அட்டை ரகத்தை பார்த்து வியந்து மலைத்து சந்தோஷத்தை முழுமையாக அனுபவிப்பதற்குள், லக்கி கிளாசிக் மற்றும் ஜம்போ புத்தகத்தின் பைண்டிங் தரம், என் சந்தோஷத்தை முழுமையாக கெடுத்துவிட்டது..
லக்கி கிளாசிக் spine சைடு முழுமையாக ஒட்டப்படாமல் ரொம்ப லூசாக அட்டை உள்ளது, நான் அதை படித்து முடிப்பதற்குள், அட்டையும் பக்கங்களும் கண்டிப்பாக தனியாக வந்துவிடும்.
இதைவிட கொடுமை, ஜம்போ புத்தகத்தின் அட்டை படம், உள்பக்கங்களை விட 5mm சிறியதாக அமைந்து, உள் பக்கங்கள் வெளியே நீட்டி கொண்டு பார்க்கவே கொடுமையாக உள்ளது..
அட்டை படத்தின் தரத்தை, புதுவித டிசைனை கண்டு வியப்பதா அல்லது பல ஏமாற்றங்களுக்கு பிறகு புத்தகம் கைக்கு வந்து, அதை விட பெரிய ஏமாற்றத்தை உண்டாக்கியதை நினைத்து அழுவதா என்று தெரியாமல் புத்தகத்தை ஓரம் கட்டியாகி விட்டது மெதுவாக படிக்கலாம் என்று.
எனக்குமே கூட ஒரு சங்கடம் சார் ! ஜம்போவில் நீங்கள் "அது நீட்டம்..இது கட்டை" என்று குறிப்பிட்டுள்ளதே தான் இந்த பைண்டிங்கின் ஸ்பெஷாலிட்டியே ! எப்போதும் போல் அட்டையும், உட்பக்கங்களும் ஒரே அளவில் இருந்தால் - புக்கின் 3 முனைகளையும் இறுதியில் வெட்டும் போது தலையங்கம் + அடுத்த வெளியீடு விளம்பரம் இடம்பிடித்திடும் அந்த flap களும் சேர்ந்து துண்டாகிப் போகும் அல்லவா ? அதனால் தான் ராப்பரை ஓட்டும் போதே போஸ்டிங் மிஷின் இது போல் அட்டையின் இருமுனைகளையும் உள்மடக்கி விடும் ! So அட்டைப்படம் துளியூண்டு குட்டையாகவும், உட்பக்கங்கள் துளியூண்டு பெரிதாகவும் இருக்கும் ! ஆனால் "இது அசிங்கம் !" என்று உங்களுக்குத் தோன்றினால் - சாரி, என்னிடம் அதற்கு விளக்கமில்லை சார் !
Deleteலக்கி லூக் பைண்டிங்கில் குறைபாடிருப்பின் அதற்கு உடனே வேறொரு பிரதி அனுப்பிடுவோம் !
குறைகளிருப்பின் தாராளமாய்ச் சுட்டிக் காட்டுங்கள் சார் ; அவற்றைக் களைய இயன்றமட்டிலும் முயற்சிப்போம் ! ஆனால் பணி செய்வோரும் மனிதர்கள் தானே ? ஒவ்வொரு குறைக்கும், பிழைக்கும் நானும் அவர்களிடம் இத்தனை விசனம் கொள்ளின் - அவர்கள் எங்கு போவார்கள் ?
புத்தகங்களை வாங்கியாச்சு!! நிமிடத்துக்கு ஒரு புத்தகம் என்ற கணக்கில் மாற்றி மாற்றி இரசித்துக் கொண்டிருக்கிறேன்!! ப்பா!! ஒவ்வொன்றும் தினுசு தினுசாய்... கலர் கலராய்... விதவிதமாய் அசத்துகிறது!!!
ReplyDeleteநண்பர்களின் சிலாகிப்புகளில் அர்த்தமில்லாமலில்லை!!
(ஸ்பெஷல் தேங்க்ஸ் டூ ஆத்தா மகமாயி!)
ஞானும் அவ்வண்ணமே...!
Deleteட்ரெண்ட்,
ReplyDeleteமுன்னட்டையிலும், பின்னட்டையிலும் புது 'ட்ரெண்டையே 'உண்டாக்கி விட்டார்
ட்ரெண்ட் சார்,
புவு வரவுங்கிறதால கூச்சப்பட்டு முகத்தை மறைச்சிட்டு வர்றீங்கனு புரியுது. மேடை பயத்தைப் போல இது அட்டைப்பட பயம் தான்.வீணா கலவரப்படத் தேவையில்லை.
தைரியமா முன்னால வாங்க.
டால்டன்களுக்கு மொத்த இடத்தையும் குத்தகைகக்கு விட்டுவிட்டு, லக்கி லூக் கெஸ்ட் ரோல் போல பெருந்தன்மையாக ஓரமாக லுக் விடும்போதே தெரிகிறது, டால்டன் வகையறாக்களின் அட்டகாசம்.
ReplyDeleteஅழகான அட்டைப்பபடம் அழகோ அழகு.
இளைய தல ஏனோ இன்னைக்கு வரவில்லை. நாளை வருவார் என்றே எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteஜம்போ முதல் இதழ் செம இளம் டெக்ஸ் வசீகரமான முகம்.
ReplyDeleteஅட்டை செம கலக்கல்.
கதை செம்ம ஹிட்டடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.சூப்பர்.
புத்தகங்களை கைப்பற்றியாச்சு, தடவு தடவுன்னு தடவியாச்சு, சரக் சரக்குனு புரட்டிப் பார்த்துப் புளங்காகிதம் அடைஞ்சாச்சு ( இந்தக் காகிதத்துல ஒரு புக்கு பிரின்ட் பண்ணிப் பாருங்களேன் எடிட்டர் சார்?)!
ReplyDeleteசரி... இப்போ எதை முதலில் படிக்கிறதாம்?!!
சிலபல சிந்தனைகளுக்குப் பின்னே, ஒரு பக்குவப்பட்ட காமிக்ஸ் ரசிகனாக (ஹிஹி) நான் முடிவு செய்தது - பனி மண்டல வேட்டை!
காரணம்... லக்கி, பிரின்ஸ், தல - ஆகியோர் ஏற்கனவே நம் மனதுக்கு நெருக்கமானவர்களாய் இருக்க, புதிதாய் களமிறங்கியிருக்கும் 'ட்ரெண்ட்'ஐ வரவேற்று உபசரிப்பதே சரியென்று பட்டது!!
ஆகவே... மொன மொன மொன...
#Jumbo_Comics #இதழ்_எண்_01
ReplyDelete29.06.2018
டெக்ஸ்வில்லர்-ன்
#காற்றுக்கு_ஏது_வேலி
10000 வாலா பட்டாசாய் முதல் இதழை தெறிக்கவிட்டிருக்கிறது #ஜம்போ_காமிக்ஸ்
#இளவயது_டெக்ஸ் கதைகளில் இது மாறுபட்டு உள்ளதா எனப்பார்த்தால் எதிலும் சோடை போகாமல் தெறித்திருக்கிறது
#மிக_அருமையான_கதை
இதில் #கார்ஸன் இல்லா குறையை #டஸ்டி தீர்த்து வைக்கிறார்
#கிட் இல்லா குறையை கொஞ்சமே கொஞ்சம் #வில்_க்ரெமெர் செய்திருக்கிறார் ...
அனைத்து கதாபாத்திரங்களும் கச்சிதமாய் அவர்களின் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்
டஸ்டி
வில் க்ரெமெர்
நிடா & மரியா
இதில் நாம் அனைவரும் எதிர் பார்க்காத ஒரு காதாபாத்திரம் உண்டு
அவர் #கோசைஸ்
இதுவரை வயதான தோற்றத்தில் பார்த்த நாம் இப்போது மிக இளமையான தோற்றத்தில் பார்க்கலாம்..
அதிலும் அவர் அறிமுகமாகும் இடம்
ஒரு இனத்தின் தலைவரை இப்படி ஒரு #கெத்தான_தோற்றத்தில்_பார்த்திருக்கவே_மாட்டோம்... 😱😱😱
நான் கதை படிக்கும் போது டெக்ஸ் தன்னை கைவிட்டு போன நண்பர்களை பாறையின் மேல் ஏறிவரும்போது கண்டு கொள்ளும் அந்த தருணம் என் மனதை நெகிழ வைத்துவிட்டது. #டைனமைட் டும் இதில் இளமையாய் தெரிவது எனக்கு மட்டும் தானா ??
( டைனமைட் ஆரம்பகால சினேகிதன் என்பதை இக்கதையின் மூலமே தெரிந்து கொண்டேன். எடி இதை பற்றி எங்காவது சொல்லி இருக்கிறாரா என்று நண்பர்கள் யாருக்கேனும் தெரியுமா ? )
ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கும் கதை களன் சுறு சுறுவென ஆரம்பித்து வேகமெடுக்கிறது.. நாம் #யூகிக்கவே முடியாத ஏகப்பட்ட #திருப்பங்களை பக்கத்துக்கு பக்கம் அனுபவித்து ரசித்து படித்தேன்..
#ரொம்பவே_மாஸான_ஸ்டோரி... <3 <3 <3
டெக்ஸின் #சிங்கிள்_ஆல்பங்களில்_பேர்_சொல்லும்_கதையாக இது அமையப் போது சர்வ நிச்சயம்... <3
வசனங்களும் , ஓவியங்களும் மிக அருமை (ரின் டின் கேன் வசனம் ஒன்று இதில் உண்டு கண்டுபிடிங்க பார்க்கலாம்)
எனது மார்க் 10 / 10
(மறுபடியும் எப்போது வேண்டும் எவ்வளவு நாள் கழித்தும் இக்கதையை திரும்பி படிக்கலாம் அவ்ளோ இண்ட்ரஸ்ட்டிங்கான கதை.. தொலைதூர பயணம் செய்யும் நண்பர்கள் படிக்க இக்கதையை தேர்வு செய்யலாம்)
என்ன சார், இவ்ளோ வேகமாவா படிப்பது? நாங்க இன்னும் புக்கையே பாக்கல.நீங்க பிரிச்சு மேஞ்சிட்டீங்களே.
Deleteஜம்போவின் முதல் விமர்சனமே பட்டாசாய் தெறிக்கிறது ; நன்றிகள் சார் !
Deleteமாலை ஐந்து மணிக்குத்தான் பாஸ் புக்கையே கையில் எடுத்தேன் ..
Deleteபுக்கை கீழே வைக்கவே முடியலை
அவ்ளோ இன்ரஸ்டிங் ஸ்டோரி
இதில எதிர்பார திருப்பங்கள் வேற... 😱😱
கதை முடிஞ்சிடுச்சின்னு பார்த்தா
கதையின் ஆரம்பத்தில் வரவங்க (இவங்களை இக்கதை படிக்கும்போது மறந்தே விட்டேன்) திடும்னு உள்ளே குதிச்சிட்டாங்க .. இது போல திடீர் திருப்பங்களால கதை மாஸா இருக்கிறதுங்கிறது என் அபிப்ராயம்...
குறிப்பு :
Delete(ரின் டின் கேன் வசனம் ஒன்று இதில் உண்டு கண்டுபிடிங்க பார்க்கலாம்)
இது ரின் டின் கேன் அல்ல. ஸ்மர்ப்ஸ் என்று மாற்றிக்கொள்ளவும்
ஆமாம்.. அது ஒன்றுதான் சிரிப்பை வரவழைத்தாலும் டெக்ஸின் டெம்ப்ளெட்டுக்கு மாறாக உள்ளது.. குறையாகச் சொல்லவில்லை.. லக்கி லூக்கை எடிட்டிங் செய்த கையோடு இந்த இடத்திலும் மொழி பெயர்ப்பு நடந்திருக்கலாம்...
DeleteLion Comics
Delete// ஜம்போவின் முதல் விமர்சனமே பட்டாசாய் தெறிக்கிறது ; நன்றிகள் சார் //
இந்த வெற்றிக்காகத்தானே நீங்கள் இக்கதையை பற்றி அதிகமாக பேசவில்லை என்று நினைக்கிறேன் ...
நாமதான் புக்ஸ் வந்தா முதல்ல படிக்கிறது நம்ம
* தல *
யத்தானே சார்
மேலும் இக்கதை போல வேறு கதைகளை இப்படி கிலாகிச்சு நான் படித்ததில்லை (பழிவாங்கும் புயல் & விதி போட்ட விடுகதையை தவிர்த்து)
இனி ஜம்போவின் ஒவ்வொரு வருடத்திலும் இது போல ஒரு டெக்ஸ் கதையை வருடத்தின் முதல் கதையாக போடுங்க விஜயன் சார். இது எனது வேண்டுகோள்
ஜம்போ மேன் மேலும் உயர்ந்து பெரிய வெற்றிகளை பெற்றிட வாழ்த்துக்கள் எடிட்டர் சார் 😌😌😌 💐💐💐
*விடுபட்டவைகளையும் சேர்த்து*
ReplyDelete#Jumbo_Comics #இதழ்_எண்_01
29.06.2018
டெக்ஸ்வில்லர்-ன்
#காற்றுக்கு_ஏது_வேலி
10000 வாலா பட்டாசாய் முதல் இதழை தெறிக்கவிட்டிருக்கிறது #ஜம்போ_காமிக்ஸ்
#இளவயது_டெக்ஸ் கதைகளில் இது மாறுபட்டு உள்ளதா எனப்பார்த்தால் எதிலும் சோடை போகாமல் தெறித்திருக்கிறது
#மிக_அருமையான_கதை
இதில் #கார்ஸன் இல்லா குறையை #டஸ்டி தீர்த்து வைக்கிறார்
#கிட் இல்லா குறையை கொஞ்சமே கொஞ்சம் #வில்_க்ரெமெர் செய்திருக்கிறார் ...
அனைத்து கதாபாத்திரங்களும் கச்சிதமாய் அவர்களின் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்
டஸ்டி
வில் க்ரெமெர்
நிடா & மரியா
இதில் நாம் அனைவரும் எதிர் பார்க்காத ஒரு காதாபாத்திரம் உண்டு
அவர் #கோசைஸ்
இதுவரை வயதான தோற்றத்தில் பார்த்த நாம் இப்போது மிக இளமையான தோற்றத்தில் பார்க்கலாம்..
அதிலும் அவர் அறிமுகமாகும் இடம்
ஒரு இனத்தின் தலைவரை இப்படி ஒரு #கெத்தான_தோற்றத்தில்_பார்த்திருக்கவே_மாட்டோம்... 😱😱😱
தென் #வில்லன்கள்
இவர்களுக்கு இங்கு அதிகம் வேலை இல்லை
ஆனாலும்
அந்த கிளைமாக்ஸ் #ஒற்றைக்கு_ஒற்றை எதிர்பாராத செம திருப்பம்
நான் கதை படிக்கும் போது டெக்ஸ் தன்னை கைவிட்டு போன நண்பர்களை பாறையின் மேல் ஏறிவரும்போது கண்டு கொள்ளும் அந்த தருணம் என் மனதை நெகிழ வைத்துவிட்டது. #டைனமைட் டும் இதில் இளமையாய் தெரிவது எனக்கு மட்டும் தானா ??
( டைனமைட் ஆரம்பகால சினேகிதன் என்பதை இக்கதையின் மூலமே தெரிந்து கொண்டேன். எடி இதை பற்றி எங்காவது சொல்லி இருக்கிறாரா என்று நண்பர்கள் யாருக்கேனும் தெரியுமா ? )
ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கும் கதை களன் சுறு சுறுவென ஆரம்பித்து வேகமெடுக்கிறது.. நாம் #யூகிக்கவே முடியாத ஏகப்பட்ட #திருப்பங்களை பக்கத்துக்கு பக்கம் அனுபவித்து ரசித்து படித்தேன்..
#ரொம்பவே_மாஸான_ஸ்டோரி... <3 <3 <3
டெக்ஸின் #சிங்கிள்_ஆல்பங்களில்_பேர்_சொல்லும்_கதையாக இது அமையப் போது சர்வ நிச்சயம்... <3
வசனங்களும் , ஓவியங்களும் மிக அருமை (ஸ்மர்ப்ஸ் - ன் வசனம் ஒன்று இதில் உண்டு கண்டுபிடிங்க பார்க்கலாம்)
எனது மார்க் 10 / 10
(மறுபடியும் எப்போது வேண்டும் எவ்வளவு நாள் கழித்தும் இக்கதையை திரும்பி படிக்கலாம் அவ்ளோ இண்ட்ரஸ்ட்டிங்கான கதை.. தொலைதூர பயணம் செய்யும் நண்பர்கள் படிக்க இக்கதையை தேர்வு செய்யலாம்)
+123468999999999999999999999999122344566677888999999000
Deleteஉண்மைதான் சம்பத்... மிகவும் ரசித்து நிலைக்கக் கூடிய கதைகளில் ஒன்றே தான் இது..
Deleteஅருமையான விமர்சனம் சம்பத் ப்ரோ
Deleteஅருமையான விமர்சனம் தோழரே
DeleteHappy diwali TeX diwali.
ReplyDeleteஎல்லாம் சரிதான். இப்பதான் குற்றால அருவிகளில் அட்டகாசமான குளியல் குடும்பத்துடன் போட்டு விட்டு நம்ப பார்டர் கடையில் பரோட்டா சிக்கனை அவுக் அவுக் எனச் சாப்பிட்டு விட்டு தூத்துக்குடி நோக்கி திரும்பி கொண்டு உள்ளேன். ஏயோய் (ஏப்பம்).
ReplyDeleteதிங்கள்கிழமை தான் புத்தகங்களை கண்களில் பார்க்க முடியும். அப்படியே பார்த்தாலும் உடனே படிக்க நேரம் கிடைக்க வேண்டும். பார்க்கலாம்.
ஆரம்ப கால மினி லயன் மற்றும் ஜுனியர் லயனில் பயன்படுத்திய matte finish அட்டை 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நமது வெளியீடுகளில் தலைகாட்டுவது மகிழ்ச்சி.இதே பாணி தொடரவேண்டும் என விரும்புகிறேன் சார் !!!
ReplyDeleteஅது ரொம்பவே சல்லிசான பாணி சார் ; தற்போதைய சமாச்சாரம் சித்தே காஸ்டலி !
DeleteLion Comics @ விஜயன் சார், இது உங்க புது ஐடி யா?
Delete//Lion Comics @ விஜயன் சார், இது உங்க புது ஐடி யா? //
DeleteYessss !
பிரின்ஸ் அட்டைப்படம் அள்ளுது.சூப்பர்
ReplyDeleteஇம்மாத இதழ்கள் சூப்பர்
ReplyDeleteஅதிலும் இளம் டெக்ஸ் வாவ் சூப்பர்
ReplyDelete******** பனி மண்டல வேட்டை ********
ReplyDeleteகதை : கொலைக் குற்றம் புரிந்த கயவன் ஒருவனைத் தேடி கனடாவின் பனிபடர்ந்த கானகப் பகுதியில் தன் வளர்ப்பு நாயின் துணையோடு ஆபத்தான பயணத்தில் ஈடுபடுகிறார் நம் புதிய நாயகனும், கனடா வின் 'செஞ்சட்டை' போலீஸ்காரருமான சார்ஜென்ட் பிலிப் ட்ரெண்ட்! வழியில், காணாமல்போன தன் சகோதரனைத் தேடித் தனியே சுற்றியலையும் இளம் யுவதி அக்னெஸை ஓநாய்களிடமிருந்து காப்பாற்றி அடைக்கலம் கொடுக்கிறார்! அக்னெஸின் வேண்டுகோளுக்கு இணங்க, அவள் சகோதரனைத் தேடிக் கண்டுபிடிக்க அவளுக்கு உதவ முன்வருகிறார்!
தொடரும் அவர்களுடைய பயணத்தில் தான் தேடியலையும் குற்றவாளியும், அக்னெஸின் சகோரனும் - ஒருவரே என்ற உண்மையைத் தெரிந்துகொண்ட ட்ரெண்ட், அருகிலுள்ள செவ்விந்திய கிராமத்திற்குச் சென்று, அவர்களுடைய உதவியைப் பெற்று ஆற்றில் பயணித்து, ஒரு பாழடைந்த தங்கச் சுரங்கத்தை அடைகிறார்! சுரங்கத்தில் அடையாளம் தெரியாத இரு மனித எலும்புக் கூடுகள் - கொலையுண்டதற்கான தடயத்தோடு கிடக்கவே, ட்ரெண்டிட் தேடல் பயணம் அருகிலுள்ள சிறுநகரமான போர்ட் ரிட்லேவுக்கு அவரை இட்டுச் செல்கிறது!
அந்த சிறுநகரில் அப்போதுதான் சுடச்சுட ஒரு கொலை நடந்து முடிந்திருக்க, இந்தக் கொலையின் காரணகர்த்தாவும் தான் தேடிவந்த கொலையாளியும், அக்னெஸின் சகோதரனுமான ஆண்ட்ரே ஹார்லோதான் என்பது உறுதியாகிறது! கொலையாளி தப்பிச் சென்ற பாதையில் அவனைப் பின்தொடர்ந்து செல்கிறார் ட்ரெண்ட்!!
ஆபத்தான மலைப்பாதையின் முடிவில் முகாமிட்டிருந்த கொலையாளியை பாய்ந்து சென்று கைது செய்ய முனைகிறார் ட்ரெண்ட்! ஆனால், கொலையாளி சூழ்ச்சியாக ட்ரெண்டை தாக்கி வீழ்த்தி, அவரை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முனைகிறான்!
* ட்ரெண்ட் தப்பித்தாரா? ( இதற்கான பதிலை ஒரு குழந்தைகூட சொல்லிவிடும் என்பதால், அடுத்த கேள்விக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்)
* கொலையாளி கைது செய்யப்பட்டானா?
* அந்தக் கொலையாளிதான் அக்னெஸின் சகோதரன் என்ற ட்ரெண்டின் கணிப்பு சரியா?
* கொலைகளுக்கான பின்னணி என்ன?
என்பதையெல்லாம் பெரியதொரு பரபரப்பு ஏதுமின்றி நிதானமாக பனிப்பிரதேசத்தில் பயணிக்கும் இயல்பான கதையோடு நீங்களும் பயணித்துத் தெரிந்துகொள்ளுங்கள்!!
அழுத்தமான கதைக் களமோ, பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளோ, எதிர்பாராத திருப்பங்களோ - கிட்டத்தட்ட 'இல்லை' தான்!! ஆனாலும், நேர்த்தியான - இயல்பான வசனங்களுக்காகவும், பனிப்பிரதேசத்தின் அழகை ஒட்டு மொத்தமாய் வடித்தெடுத்த சித்திரங்களுக்காகவும், ஒவ்வொரு ஃபிரேமிலும் விதவிதமாய் முகபாவங்களை வெளிப்படுத்தி வியக்க வைத்திடும் யுவதி அக்னெஸின் இயல்பான பாத்திரப்படைப்புக்காகவும், அக்னெஸுக்கும் ட்ரெண்டுக்கும் இடையிலான ஒரு மெல்லிய கெமிஸ்ட்ரிக்காவும் - இந்தக் கதையைப் படித்து, நம் மெல்லிய உணர்வுகளை தூசுதட்டிக்கொள்ளலாம்!!
கதை மாந்தர்களில் ஒருவரே அக்கதையை எடுத்துரைக்கும் பாணியிலான self-narrative styleல், ட்ரெண்டின் கண்ணோட்டத்தில் கதை பயணிப்பது - இக்கதையில் (எனக்குப் பிடித்த) மற்றொரு சிறப்பம்சம்!
ட்ரெண்டின் பாத்திரப் படைப்பு முழுமையாக விளக்கப்படாமலிருப்பது சிறியதொரு குறை! மனிதர் அவ்வப்போது காணும் கனவுகளின் மூலமாக - காதலியால் வஞ்சிக்கப்பட்டு - கண்காணாமல் ஓடிவந்தவர் என்பது மட்டும் புரிகிறது! ( ஏனோ 'இரும்புக்கை நார்மன்' ஞாபகத்துக்கு வருகிறார்!). அடுத்தடுத்த சாகஸங்களிலாவது மனிதர் மனம் திறக்கிறாரா பார்ப்போம்!
'பனி மண்டல வேட்டை' - கண்களுக்கு விருந்து... மனதுக்கு மருந்து!!
என்னுடைய ரேட்டிங் : 9.75/10
எம்மாம் பெரிய விமர்சனம்.
Delete3 டெகஸ் சிறு கதைகள் ஜூலையில் உண்டா?
ReplyDeleteஆமாங்க
Deleteஇளம் டெக்ஸின் காற்றுக்கு ஏது வேலி.. நிஜமாகவே நீண்ட நாட்களுக்குப் பிறகு டெக்ஸின் அருமையான பட்டாசான கதை... கதையை படித்து முடித்த பிறகு மீண்டும் படிக்க தூண்டிய கதை..
ReplyDeleteபட்டாசா டைனமைட் சார்.
Deleteலூட்டி with லக்கி 😘😘😘
ReplyDeleteசமீப காலத்தில் இது போல விலா நோக சிரிக்க வைத்த கதை எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
" வாா் வச்ச டவுசா் " கான்சப்ட், யப்பா சிரிச்சு மாலலை!
சந்தேகமே இல்லாமல் இது இந்த வருடத்தின் டாப் ஹிட் தான்!
இரண்டு கதைகளில் எது பெஸ்ட்னு தெரிவு செய்வது மிகவும் கடினம்!
"மார்ஷல் டால்டன்"
மீண்டும் ஒருமுறை திருடன் திருந்தினாலும் திருந்துவான், டால்டன்ஸ் ஒருபோதும் திருந்த மாட்டாா்கள் என்ற "உலக உண்மையை" உலகிற்கு எடுத்துரைக்திறது!
இம்முறை இவ்வறிய பணியை முயற்சிப்பதோ டால்டன்ஸ் பிரதா்ஸின் ஒன்னுவிட்ட மாமா "மாா்ஷல் டால்டன்"
ஒரு நோ்மையான வங்கி அதிகாாி மருமான்களுக்கு வங்கி நடத்த வகுப்பொடுப்பதில் தொடங்கி, "மலை முழுங்கி வங்கி" ஓனா் திவாலாவது வரை நடக்கும் கூத்துக்கள் ஜாலி ஜம்பரையே சிாிக்க வைக்கிறது என்றால் பாா்த்துக்கோங்களேன்!
1986 கோடைமலர்
ReplyDeleteபெய்ரூட்டில் ஜானி
எத்தனுக்கு எத்தன்
மஞ்சள் பூ மர்மங்கள்
தலைவாங்கி குரங்கு
நரக வேட்டை
ஆர்ச்சி Vs ஆர்ச்சி
மற்றும் பல பல...திகில் காமிக்ஸ் முத்து காமிக்ஸ் மினிலயன் ஜீனியர் லயன் வாவ் 1980 களின் நினைவு இன்று...தேங்க்ஸ் விஜயன்.
1986 கோடைமலர்
ReplyDeleteபெய்ரூட்டில் ஜானி
எத்தனுக்கு எத்தன்
மஞ்சள் பூ மர்மங்கள்
தலைவாங்கி குரங்கு
நரக வேட்டை
ஆர்ச்சி Vs ஆர்ச்சி
மற்றும் பல பல...திகில் காமிக்ஸ் முத்து காமிக்ஸ் மினிலயன் ஜீனியர் லயன் வாவ் 1980 களின் நினைவு இன்று...தேங்க்ஸ் விஜயன்.
Jumbo book innum varAla
ReplyDeleteவேலைப் பளுவினாலும்,கூரியர் குழப்பத்தாலும் தாமாதமான இதழ்கள் ஒருவழியாக இப்போதுதான் கைக்கு கிடைத்தது.
ReplyDeleteமுதல் புரட்டலில்,
ReplyDelete1.ஜம்போ டெக்ஸ்-உள் அட்டை மடிப்புடன் கூடிய பாணி மிகவும் கவனத்தை ஈர்த்தது,அசத்தல் ஓவியங்கள்,வித்தியாசமான பேப்பர் (தாளின் தரத்தைப் பற்றி பொதுவாக எனக்குத் தெரியாது,நண்பர்கள் இதுதான் தரமான தாள் என்றதும் மிக்க மகிழ்ச்சி)
2.பிரின்ஸ்-ஹெர்மன் ஓவியங்கள் என்றாலே அட்டை to அட்டை வேறுவிதமான பாணிதானே,தலைப்பில் எழுத்துருக்கள் மேல் தீ எரிவது போல் இருந்ததும்,கையால் எழுதியது போன்ற தன்மையுடன் இருந்த தலைப்பும் கவர்ந்தது.
3.லக்கி லூக் ஸ்பெஷல்-
வழக்கம்போல் சோடை போகாத கலரிங் பாணி,தரமான கெட்டி அட்டை,ஆண்டுமலருக்கான லோகோ கலரிங் இன்னும் சற்று தூக்கலாக இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்,அடர் ரோஸ் கலர் பிண்ணனி லோகோவை டல்லாக்கியது போல் ஒரு உணர்வு.
4.ட்ரெண்ட்-சில்லென்ற பனி கொட்டும் பிண்ணனியில் அட்டைப்படம் சிறப்பு,ஓவியங்களும்,கலரிங்கும் கண்ணைப் பறிக்கின்றன.
-இறுதியாக இந்த மாத இதழ்கள் ஏதோ மேட் பினிசிங் அட்டைன்னு நண்பர்கள் சொல்றாங்க,பார்க்க நிறைவாகவே உள்ளது,மொத்த இந்தமாத இதழ்கள் முழுநிறைவு,ஒவ்வொரு இதழ்களும் ஒரு ரகம்.
அடுத்த வெளியீடுகள் பற்றிய குறைவாக இருப்பது போல் ஒரு பீலிங்,ஆசிரியருக்கு ஏதாவது திட்டம் இருக்கலாம்,அது சர்ப்ரைஸாகவும் இருக்கலாம்.
ReplyDeleteட்ரெண்ட் படித்து விட்டேன் சார்...
ReplyDeleteஉண்மையை சொன்னால் தங்க்க் கல்லறையை மீண்டும் ஒருமுறை ஞாபக படுத்தியது...குறிப்பாக லக்னர் என்கிற கஸ்டாப் ஹேவல் கேரக்டர் இக்கதையில் வரும் வில்லனுக்கு அப்படியே பொருந்துகிறது ...
தல வசனம் சும்மா தெறிக்கிறது.
ReplyDeleteசித்திரம் சும்மா அள்ளுகிறது.
கதை அதிரடி ரகம்.
கோசைஸ் டெக்ஸிடம் பேசும் வசனம் மிக நெகிழ்ச்சி.
இன்னும் நிறய frames very nice.
Thanku sir.மற்றும் ஒரு கார்சனின் கடந்த காலம். இது டெக்சின் கடந்த காலம்.
Erimalai theevil prince I never ever forget it and still have the original copy. Actually it was advertised to be published along with karuppu 4 kilavi stories at 5 rupees. But was published at 3 rupees with only prince story + 1 frill . But paper colour was very nice .27 years gone! Unbelievable sir
ReplyDeleteஆசிரியர் சார்.எல்லா இதழ்களையும் ஜம்போ போல வடிவமைத்தால் என்ன?
ReplyDeleteஇன்னிக்கு சனிக்கிழமைன்றதை சிவகாசிக்காரவுஹ யாரும் மறக்கலைதானே?!!
ReplyDeleteஹலோ இன்னிக்கு ஞாயித்துகிழமை!
Deleteஅதெல்லாம் முடியாது! விடியற வரைக்கும் சனிக்கிழமைதான்!
Deleteமறுபடியும் மொத கமெண்ட் போட, வெயிட்டிங்....!!!!
Deleteஇன்னும் ஒரு மணி நேரம் காத்து இருப்பேன்...!!
ஈ.வி.@ இன்னும் 2மணி நேரம் போனா கறி கடைல ஆடுகளின் தோலை உரிக்க ஆரம்பிச்சிடுவாங்க....
Deleteபொறவு எப்பூடி சனிக்கிழமை????
சார்....தூங்குறே வழிய பாருங்க....இப்போ தான் கம்பியூட்டரையே கையில் எடுக்கிறேன் ! காலையிலே (குட்டிப்) பதிவு காத்திருக்கும் !
Delete@ STV
Deleteஉரிக்கிறதெல்லாம் கணக்கு கிடையாது. அடுப்பிலே வெந்தாத்தான் ஞாயிறு!!
என்னேயே ஏமாத்தப்பாக்குறீங்களா?
மெஸ்ஸி யை அனுப்பியாச்சுங் சார்...
Deleteஇன்னும் ஒரு மணிநேரஞ் சென்றா, ரொனால்டோவுக்கும் டாட்டா காட்டலாம்...!!!!
சரி விடுங்க, இப்ப டாட்டா,
காலைல பதிவு...!!!!
அலாா்ட்! நம்மல தூங்க சொல்லிட்டு நைசா கமெண்ட் போடலாம்னு பாக்கறாா் போலிருக்கு!
Delete2ன்ட் ஆஃப் ஸ்டார்ட்ஸ், பை பை...!!!
Deleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!
ReplyDelete