நண்பர்களே,
வணக்கம். 'ஆல்-இன்-ஆல் அழகுராஜா சைக்கிள்கடை' என்றொரு போர்டைப் பார்த்த பின்னேயும் ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு, Autograph சேரன் பாணியில் flashback-க்குக்குள் போகாது இருப்போமா - என்ன ? என்னடா திடீர் விசேஷமென்று யோசிக்கிறீர்களா ? முந்தைய ஆபீசில் அலமாரி ஒன்று வருஷங்களாய்த் திறக்கப்படாமலே கிடந்தது ! அதை போன வாரத்தில் ஒரு நாள் திறந்து பார்த்தால் நமது துவக்க நாட்களது பில் புக்குகள் ; சில பல மக்கிப் போன பைல்கள் ; வவுச்சர்கள் என்று ஒடிந்து விழும் நிலையில் காகிதங்கள் ஒரு வண்டி இருந்தன ! கரையான்கள் பீடித்திருந்த அவற்றையெல்லாம் இறுதியில் தீமூட்டத் தான் முடிந்ததென்றாலும் - அவற்றோடு கை கோர்த்து வந்த நினைவுகளை அசைபோடுவது ஒரு இனம்புரியா அனுபவமாய் அமைந்தது !! 34 வருடங்களுக்கு முன்பாய் இந்த வேளையில் என்ன செய்து கொண்டிருந்தோமென்பதை நினைவூட்ட இது போல் சந்தர்ப்பங்கள் வாய்த்தால் யார் தான் வாடகைச் சைக்கிளில் தொற்றிட மாட்டார்கள் ?! இந்த ஆயிரத்து நூத்திப் பதினாலாவது மலரும் நினைவுகள் படலமானது - கே.பி.சுந்தராம்பாள் காலத்துப் பாட்டு போலத் தோன்றிடலாம் தான் ; ஆனால் அந்தத் துவக்க நாட்களின் untold stories இன்னமுமே கொஞ்சம் மிச்சமுள்ளன என்றே தோன்றுகிறது ! அதிலும் நமது ஆண்டுமலர் கூப்பிடு தொலைவிலிருக்கும் இந்த வேளையில் லேசாய் ஒரு 'சேரன் சவாரி'போனால் தப்பில்லை என்று பட்டது ! ("ச்சை...எனக்கு இவன் போடுற மொக்கையே புடிக்காது " என்று feel பண்ணிடும் நண்பர்கள் நேராய் பதிவின் பின்பகுதிக்குப் பயணிக்கலாமே - ப்ளீஸ் ? ஜூலை இதழ்கள் பற்றிய preview -க்கள் ; இத்யாதிகள் அங்குள்ளன ! பிடிக்காததைப் படித்து விட்டு உம்மணாமூஞ்சி smurf போல் முகச்சுழிப்பை வெளிப்படுத்தும் சிரமம் கொள்வானேன் ? - என்றே இந்த suggestion )
நமது முதன் முதல் பணியாளருக்கு அன்றைக்குத் தந்த சம்பளத்தின் வவுச்சர்கள் ஒரு பைலில் பழுப்பேறிப் போய்க் கிடந்தன ! P .காளிராஜன் : மாதச் சம்பளம் ரூ.360 என்றிருந்ததைப் படித்த போது சிரிப்பதா - அழுவதா என்று தெரியவில்லை !! நாளொன்றுக்குப் பன்னிரண்டு ரூபாய் சம்பளம் ; அதுவும் ஒரு ஆர்ட்டிஸ்ட் வேலைக்கு !! என் தந்தையிடம் அச்சகத்தில் அந்நாட்களில் பணிபுரிந்து வந்ததொரு மூத்த பணியாளரின் தம்பி பையன் என்று அறிமுகமான காளிராஜனுக்கு, சிகாமணியைப் போலவோ ; மாலையப்பனைப் போலவோ இயற்கையாகவே ஓவியத் திறனெல்லாம் கிடையாது தான் ; ஆனால் ஆர்வத்தில் சிறுகச் சிறுக தானாய் வளர்த்துக் கொண்ட ஆற்றல், பின்னாட்களில் line drawing-களில் செம கில்லாடியென்ற நிலைக்கு இட்டுச் சென்றிருந்தது ! 1984-ல் வேலைக்குச் சேரும் போது காளிராஜனுக்கு என் வயது தான் இருக்கும் ; அவனும் ரூ.75 சம்பளத்துக்குப் பணி செய்த ஆபீஸ் பாயும் தான் நமது அப்போதைய ஒட்டு மொத்த அணி ; டீம் ; படை ; பட்டாளம் -எல்லாமே !! பத்துக்குப் பத்து ரூமும் , முன்னிருந்த முற்றமும் தான் நமது சாம்ராஜ்யம் !
கூரியர்கள் இல்லா அந்நாட்களில் - போஸ்ட்மேன் கொணர்ந்து ஒப்படைக்கும் கதைகளை, இந்த சூரப்புலியே மொழிபெயர்த்த கையோடு அந்நாட்களது முத்து காமிக்ஸில் பணியாற்றிய அச்சுக்கோர்ப்பு பணியாளர்களிடம் ஒப்படைப்பேன் ! அவையெல்லாம் முத்து காமிக்ஸ் பெரும் கும்பகர்ணத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த நாட்கள் என்பதால் யாருக்கும் அங்கே வேலையில்லாது - பேப்பர் படித்துக் கொண்டு ஈயோட்டிக் கொண்டிருப்பார்கள் ! சும்மா இருப்பவர்களுக்கு ஏதோ வேலை கொடுத்த மாதிரியாச்சே என்று MC-ன் மேனேஜர் பாலசுப்ரமணியமும் சந்தோஷப்பட - எனக்கோ ஓசியில் வேலையினை ஒப்பேற்றிய சந்தோஷம் ! அந்த அச்சுக்கோர்ப்புகளை பிரிண்ட் போட்டு எடுத்துக் கொண்டு போய் காளிராஜனிடம் கொடுத்து விட்டு அவன் முதுகுக்குப் பின்னே நட்டமாய் நின்றபடிக்கே அவன் வெட்டி, ஒட்டி, கருப்பு மசியைக் கொண்டு பபுள்களையும் ; கட்டங்களையும் போடுவதைப் பராக்குப் பார்ப்பேன் ! ஒரு மாதிரியாய் சகலமும் முடிந்த பின்னே பக்கங்களை பிலிம் எடுக்கத் தூக்கிக் கொண்டு நானும் காளிராஜனும் பிராசசிங் கூடத்துக்குப் படையெடுப்போம் ! அந்த நாட்களில் ஸ்பைடர் சைசிலான ஒரு முழு புக்குக்குமே சேர்த்து பிலிம் எடுக்கும் கிரயம் ரூ.450 தான் என்பதை பைலில் கிடந்த இன்னொரு பில்லில் பார்க்க முடிந்தது ! சுடச் சுட அப்போதே ரொக்கமாய் பட்டுவாடா செய்துவிடுவோம் என்பதால் நாங்கள்லாம் cash parties அந்நாட்களில் !!
இன்னும் சொல்லப் போனால் முதல் 18 மாதங்களுக்கு கணக்கு-வழக்கு என்று எதுவுமே எழுதும் பழக்கமே கிடையாது நம்மிடம் ! ஏஜென்ட்கள் டிராப்ட் அனுப்பினால் மட்டுமே புத்தகங்கள் அனுப்புவோம் ; so அந்த வரவும், பற்றும் tally ஆகிப் போய்விடும் ! அவர்களுக்கென ஏடுகள் maintain செய்யும் அவசியமே இராது துளியும் ! சம்பளமா ? 10 நாட்களுக்கொரு தபா ரூ.145 கொடுத்தால் முடிந்தது பிரச்னை ! பேப்பர் கொள்முதலா ? வாங்கும் போதே சுடச் சுட செக்கும் கொடுத்து விடுவோம் என்பதால் அவர்களது கணக்கில் பாக்கி என்ன உள்ளதென்று பார்க்கும் அவசியங்கள் இராது ! பிரின்டிங் கூலியும் அதே கதை தான் ; பேப்பரைக் கொண்டு போய் எனது பெரியப்பாவின் ஆபீசில் இறக்கிய அடுத்த முப்பதாவது நிமிடமே அவர்களது கணக்குப்பிள்ளைகள் படையெடுத்து விடுவார்கள் - முன்கூட்டியே என்னிடமிருந்து அச்சுக் கூலியைக் கறந்து விடமுடியுமென்ற நம்பிக்கையில் ! மொத்தமே ரூ.1800 கூலி தான் வரும் - ஒரு முழு புக்கினில் 20,000 பிரதிகள் black & white-ல் அச்சிட !!! எந்தச் சாமத்தில் போனாலும் முன்னுரிமையோடு நமது பணிகளை அச்சிட்டு வாங்கிட சாத்தியப்படும் என்பதால், நானுமே அவர்கள் கேட்க்கும் போதே நோட்டுக்களை நீட்டிவிடுவேன் ! So அங்கேயும் "லயன் காமிக்ஸ் முதலாளி" என்று ஒரு கெத்து !! பைண்டிங் பணிகளும் ஒட்டு மொத்தமாய் ரொக்கத்தில் மாத்திரமே செய்திடுவது வழக்கம் ! பாளையங்கோட்டையிலிருந்து ஒரு மூத்த பைண்டர் அந்நாட்களில் என் தந்தையின் அச்சகத்தில் காண்டிராக்ட் பணி செய்வதுண்டு ; அவரையே நாமும் பயன்படுத்திக் கொள்வோம் ! இன்றைக்கு வரையிலும் அவர் பெயர் தெரியாது ; "நைனா....பிரின்டிங் முடிஞ்சது ; கிளம்பி வாங்க" என்று ஒரு போன் அடித்தால் அடுத்த மூன்றாவது மணி நேரத்தில் மனுஷன் இங்கே ஆஜராகியிருப்பார் ! பைண்டிங் செய்ய பெரியப்பா ஆபீசில் இடம் இராதென்பதால் அது மாத்திரம் என் தந்தையின் ஆபீசில் வைத்து நடைபெறும். ஒரு மாதிரியாய்ப் பிரதிகள் தயாராகிய இரவே காளிராஜனின் சித்தப்பா மின்னல் வேகத்தில் பண்டல் போட்டுத் தருவார் நமக்கு ! அப்போதெல்லாம் ஆர்டர் புக்கும் கிடையாது ; ஒரு புடலங்காயும் இராது ! 'ஆங்...திண்டுக்கல் - 200 புக் ; மதுரை : 3000 ; ஈரோடு : 1500 : அறந்தாங்கி : 50 ; சோளிங்கர் : 35 ; புஞ்சைபுளியம்பட்டி : 25 etc..etc' என்று சகலமும் மனப்பாடமாக இருக்கும் என்னுள் ! பண்டல் ஒன்றுக்கு கூலி ரூ.2 & அவை சகலமும் ரயிலில் concession ரேட்டில் புக்காகி ஒவ்வொரு ஊருக்கும் பயணமாகிடும் - நான்கு ரூபாய்களுக்கும் ; ஐந்து ரூபாய்களுக்கும் !! மாலையில் ரயில்வே புரோக்கர் கை நிறைய பாஸ்களோடு ஆபீசுக்கு வரும் போது அட்ரஸ் எழுதி ரெடியாக இருக்கும் கவர்களில் அவற்றை மட மடவென திணித்து RMS எனும் ரெயில்வே போஸ்ட்டாபீஸில் போய் சேர்த்து விட்டு வருவேன் ! ஒற்றை ரூபாய் ஸ்டாம்ப் கூடுதலாய் ஓட்ட வேண்டும் அந்தச் சேவையைப் பயன்படுத்திட - ஆனால் ரயிலில் போகும் போதே sorting செய்து மறுநாள் பட்டுவாடா செய்துவிடுவார்கள் ! பண்டல்கள் போய்ச் சேர ; பாஸும் தபாலில் வந்திட, சூட்டோடு சூடாய் இதழ்கள் கடைகளுக்குச் சென்றுவிடும் !
ஏஜெண்ட்களின் டிராப்ட்களை பேங்கில் கொண்டு போய்ச் சேர்ப்பது ; மாதாமாதம் ஏஜெண்ட்களுக்கு புது இதழ்கள் பற்றிய சுற்றறிக்கை அனுப்புவது ; வரும் கடிதங்களுக்குத் தத்தக்கா -புத்தக்கா என்று ஏதாச்சும் பதில் போடுவது என்று எஞ்சியிருக்கும் வேலைகள் சகலமும் என்னதே ! And இவை சகலத்தையும் என்னோடு இருந்து கொண்டே ஜாலியாய் வேடிக்கை பார்ப்பது எனது தாத்தாவின் பொழுதுபோக்காக இருந்திடும் ! மாதம் பிறந்துவிட்டால் போதும் - முதற்காரியமாக காத்தைப் பிடித்துத் திருகி உட்காரச் செய்து அப்போதைய லாப-நஷ்டக் கணக்குகளைப் பார்க்கச் செய்துவிடுவார் ! 1984 -ன் இந்த வேளையில் என்னிடம் அவர் ஒப்படைத்திருந்தது ரூ.40,000 ரொக்கம் !! ஒவ்வொரு மாதமுமே அந்தப் பணம் எந்த ரூபத்தில் உள்ளதென்ற சரி பார்க்கும் படலம் தவறாது நடந்து விடும். பேங்க்கில் இருப்பு எவ்வளவு ? கதைகள் கையிருப்பு எவ்வளவு ? புத்தக ஸ்டாக்கின் கிரயமென்ன ? பேப்பர் ஸ்டாக் இருப்பின், எவ்வளவுக்கு ? என்று ஒரு லிஸ்ட் போட்டு அதனை தாத்தாவிடம் காட்டியாக வேண்டும் ! முந்தைய மாதத்துக் கணக்கிலிருந்து மறு மாதத்துக் கணக்கில் குறைந்த பட்சம் ரூ.ஐந்தாயிரமாவது ஜாஸ்தியாகிவிட்டிருந்தால் - "ஹை...இது தான் இந்த மாசத்து லாபமா ?" என்று எனது ஆந்தைவிழிகள் மேலும் விரியும் ! தாத்தாவும் திருப்தியோடு கிளம்பிவிடுவார்கள் ! ஆனால் ஏதாச்சும் சொதப்பி விட்டால் உட்கார வைத்து சகலத்தையும் மறுக்கா சரி பார்க்காது விட மாட்டார்கள் ! செப்டெம்பர் மாதவாக்கில் நான் அந்நேரம் ஓட்டிக் கொண்டிருந்ததொரு அலாவுதீன் காலத்து சைக்கிளை விற்று விட்டு, ரூ.970-க்கு ஒரு புது ஹெர்குலிஸ் சைக்கிளை வாங்கியிருந்தேன் ! எங்களது மாதாந்திர பட்ஜெட் மீட்டிங்கில் (!!!) இந்தக் கொள்முதல் எப்படியோ விடுபட்டுப் போக - கணக்கில் ஆயிரம் ரூபாய் துண்டு விழுந்தது போல் தோன்றியது ! "ஆயிரம் ரூபாய் தானே ? என்றெல்லாம் விட தாத்தாவும் தயாரில்லை ; ஏதோ பெருசாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோமென்ற கனவில் திரிந்த இந்தச் சுள்ளான் தொழிலதிபரும் தயாரில்லை ! ஒன்றரை மணி நேரம் அதே கணக்கை போடு போடென்று போட்டு - இறுதியில் சைக்கிள் சமாச்சாரமும் ஞாபகத்துக்கு வர - பேரனுக்கும், பெரியவருக்கும் முகமெல்லாம் மத்தாப்பூ !!
முதன்முதலாய் நமது வங்கிக் கணக்கில் மட்டுமே ரூ.ஐம்பதாயிரத்துக்கு மேலானதொரு தொகை இருப்பில் நின்ற நாளில் எங்களிருவருக்கும் கிட்டிய புளகாங்கிதத்தை இன்றைக்கும் என்னால் அசைபோட முடிகிறது !! பேங்க் இருப்பே ஐம்பதாயிரம் ; அப்புறமாய் கையிலுள்ள ஸ்டாக் ; இத்யாதி..இத்யாதியெல்லாம் சேர்த்து மொத்தம் தொண்ணூறாயிரம் தேறும் என்பது புரிந்த போது - போட்ட முதல் தொகையினை சேதாரமுமின்றி பயல் இரட்டிப்பாகி விட்டானென்ற சந்தோஷம் தாத்தாவுக்கு ! எனக்கோ அந்த பேங்க் பேஸ்புக்கை தலைமாட்டில் வைத்துப் படுத்துறங்காத குறைதான் !! ஆபீசில் இருக்கும்போது ஓசையின்றி மேஜையின் டிராயரைத் திறப்பேன் ; பாஸ்புக்கில் கிறுக்கலான கையெழுத்தில் பதிவாகியிருக்கும் அந்தத் தொகையினைப் பார்ப்பேன் ; சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு லேசாய் ஒரு இளிப்பு இளித்த கையோடு மறுபடியும் டிராயரிலேயே வைத்து விடுவேன் ! அதைவிடப் பெருங்கூத்து - அதுநாள்வரைக்கும் டப்பு-டப்பென்று payment பண்ணி வந்தவனுக்கு, எங்கே இந்த பேங்க் கையிருப்பு 50000-க்குக் கீழே கரைந்து விடுமோ ? என்ற பயத்தில் யாருக்கும் காசையே கண்ணில் காட்டாது, வரும் மணியார்டர் பணங்களிலேயே வண்டியை ஒட்டவும் முனைவேன் ! வாரயிறுதி ஆகிவிட்டால் - ஓவர்டைம் ரூ.60 வரும் ! அன்றைய மணியார்டரில் அந்தப் பட்டுவாடாவை ஒப்பேற்றிய கையோடு, மிச்சமிருக்கக் கூடிய நூறையோ, இருநூறையோ பைக்குள் திணித்துக் கொண்டே ஜாலியாய் இரவு ஒன்பது மணிக்கு ஆபீஸைப் பூட்டி விட்டு காளிராஜனும், நானுமாய்ப் புறப்படும் போது - வானமே எங்கள் காலடியில் என்பது போலொரு ஏகாந்தத்தை உணர முடியும் ! அவனும் என் வயதே என்பதால் - "அண்ணே..அண்ணே..!" என்று தான் கூப்பிடுவான் ; ரொம்பவே நட்பாகயிருப்பான் ! அவன் வீடு எங்கள் வீட்டைத் தாண்டித் தான் என்பதால் வழி நெடுக ஏதேதோ அரட்டையடித்துக் கொண்டே வீடு திரும்புவோம் ! பின்னாட்களில் சொந்தமாய்த் தொழில் செய்யும் பொருட்டு பணியிலிருந்து விலகியவனை, போன வருடம் எதேச்சையாய் சந்தித்த போது ரொம்பவே சந்தோஷமாகயிருந்தது ! மூன்று பசங்கள் ; லாரி புக்கிங் ஏஜென்சி ; நிதானமான வாழ்க்கை என்று வண்டி நிறைவாய் ஓடிக்கொண்டிருப்பதாய்ச் சொன்னான் ! ஜுனியர் எடிட்டரின் கல்யாணத்தின் போது தேடித் பிடித்து அவனிடமும் ஒரு பத்திரிகையை ஒப்படைத்த போது ரொம்பவே சந்தோஷப்பட்டான் !! அந்த முதல் சம்பள வவுச்சரைப் பார்த்த போது ஏகமாகவே nostalgia - எனக்குள் !!
அலமாரியைக் கிண்டக் கிண்ட - அலாவுதீன் விளக்கிலிருந்து வெளிப்படும் பூதங்கள் போல் ஞாபகங்களுமே படையெடுத்தன ! "கபாலர் கழகம்" இதழின் டைப்செட்டிங் பில் (அது தீபாவளிமலர் மாதத்தில் வந்த இதழோ என்னவோ - முதன்முறையாக வெளியே கொடுத்து அச்சுக் கோர்த்து வாங்கினோம்) ; மாலையப்பனுக்கு பெயின்டிங் போடும் பொருட்டு நான் திரட்டிக் கொடுத்த டிசைன் மாதிரிகள் ; சென்னையில் Southern Distributors என்ற நமது அந்நாளைய ஏஜெண்டுக்கு, பணம் அனுப்பத் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நான் கோபமாய் எழுதி அனுப்பி ஏழரையைக் கிளப்பிக் கொண்ட லெட்டரின் சாயம் போன நகல் ; பதிப்பகங்களுடனான மங்கிப் போன கடுதாசிப் பரிமாற்றங்கள் ; சிலபல "அடுத்த வெளியீடு" விளம்பரங்கள் ; என்று என்னென்னவோ இரைந்து கிடந்தன ! ஆனால் அத்தனையுமே தம் ஆயுள் முடிந்தநிலையில் ஒடிந்து விழாக் குறையாக ; கரையானுக்குத் தீனியாகிக் கிடக்க - அவற்றை நேற்றைக்குத் தான் எரித்து விட்டோம் ! நினைவுகளைக் கரையான்கள் அரிக்காதவரையிலும் உத்தமம் என்ற பெருமூச்சோடு ஆபீசுக்குத் திரும்பினேன் ! Phewww !!
நினைவுகள் சுகம்மாய் இருந்தாலும், நிதரிசனத்துக்குத் திரும்பிடல் அவசியமன்றோ ? So - இதோ ஜூலையில் காத்திருக்கும் வண்ண இதழ்களின் previews : "லூட்டி with லக்கி " - இந்தாண்டின் நமது ஆண்டுமலர் + டாப் கார்ட்டூன் நாயகரின் முதல் வருகை + அட்டகாசமான ஹார்டகவர் இதழும் கூட ! இரு புத்தம்புது சாகசங்கள் - முழுவண்ணத்தில் என்பதால் கார்ட்டூன் பிரியர்களுக்கு ஒரு கலக்கல் விருந்து காத்துள்ளது என்பேன் ! அதிலும் அந்த "திசைக்கொரு திருடன்" கதை செம ரகளையானது! டால்டன்கள் இரு ஆல்பங்களிலுமே பிரதான பங்கெடுக்கிறார்கள் என்றாலும் "தி.ஓ.தி" மாஸ் தான் ! டால்டன்கள் யோக்கியன்களாகவும், லக்கி முகமூடித் திருடனாகவும் மாறினால் - கூத்துக்குப் பஞ்சமிருக்குமா - என்ன ? State Bank of டால்டன் - இந்த மொள்ளமாறிச் சகோதரர்களை யோக்கியமான பேங்க்கர்களாக மாற்ற முற்படும் ஒரு தாய்மாமனின் கதை ! Again ஒரு சிரிப்பு மேளா தான் ! அட்டைப்படம் - ஒரிஜினல்கள் - நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணத்தில். ஹார்டகவர் புக்காக்கிப் பார்க்கும் போது இது செமையாய் ஸ்கோர் செய்கிறது ! இதோ - உட்பக்கங்களிருந்தும் previews :
State Bank of Dalton !! |
"திசைக்கொரு திருடன்" |
ஜூலையின் இன்னொரு கௌபாய் பற்றி இனி ! டிரெண்ட் தோன்றும் "பனிமண்டல வேட்டை" - இந்தப் புதியவரின் துவக்க சாகசம் ! இந்த ஆல்பத்தைப் புரட்டும் போது எனக்குத் தோன்றிய முதல் சிந்தனையே : கமான்சே தொடரில் எல்லா கதைமாந்தர்களும் பரட்டைகளாய் உலவியதற்கு இந்தத் தொடர் நேர் contrast ; சகலரும் படிய வாரிய தலைகளோடு நீட்டாய் காட்சியளிக்கிறார்கள் - என்பதே ! கதையுமே அழகாய், நேர்கோட்டில் பயணிக்கிறது - மயக்கும் சித்திரங்களோடும், வர்ணங்களோடும் ! இந்தத் தொடரின் அடுத்த 3 ஆல்பங்களையும் போன வாரம் படிக்க நேர்ந்தது ; remarkably refreshing என்பதே எனது எண்ணமாக இருந்தது ! ஆனால் நான் ஓவர் பில்டப் தந்து விட்டேனென்று பின்னாளில் துடைப்பங்களைத் தேடும் படலமெல்லாம் உங்களுக்கு வேண்டாமே என்பதால் - நீங்களே படித்து தீர்ப்புச் சொல்வது தேவலாம் என்றுபடுகிறது ! இதோ டிரெண்டின் previews :
ஜூலையின் மூன்றாவது வண்ண இதழான "எரிமலைத்தீவில் பிரின்ஸ்" preview-க்களை புக் அனுப்பும் நாளின் பதிவில் கண்ணில் காட்டிவிடலாமென்றுள்ளதால் இப்போதைக்குக் கிளம்புகிறேன் ! Bye all ; have an awesome weekend !! ஆங்....அந்த கலர் டெக்ஸ் 3 குட்டிக்கதைகள் இணைந்த தொகுப்பானது இந்த ஜூலையில் தயாராகியிருக்கும், என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன் ! சந்தாவில் இல்லா நண்பர்கள் அவற்றை ஆன்லைனில் வாங்கிடலாம் - ஜூலை முதல்வாரத்தில் ! See you around folks !!
I first
ReplyDeleteSuper
DeletePresent sir
ReplyDelete4
ReplyDeleteவந்தாச்சி.
ReplyDelete1st
ReplyDeleteம்ஹூம்!! உங்களை திரும்பவும் LKGக்கு அனுப்பி படிக்க வச்சாத்தான் சரிப்படுவீங்க! :D
Deleteஈவி அவரு Pre kg தான் படிக்கிறாரு,,,முடிஞ்சதும் Lkg தான்
Deleteபரவால்ல ஈ வி
Deleteநம்ப டவுணு பஸ்ஸூ போராட்டத்துல
ஶ்ரீராமுங் கலந்துக்க சொல்லிட்டா போச்சி...
ஶ்ரீராம் சாரு பஸ்ட் பஸ்ட் பஸ்ட்னு ரிபீட் அடிக்கட்டும்.
ஆமா ஶ்ரீராம் சார் ஒங்களுக்கு சிசிவ பிடிக்குந்தானே.....
ரெடின்னா கம்...
7th...???
ReplyDeleteநானும் வந்திட்டேன்.
ReplyDelete10மணிக்கு பதிவு!!!
ReplyDeleteHi...
ReplyDeleteயப்பா
ReplyDeleteஇரவு வணக்கம் 🙏
ReplyDeleteHi
ReplyDeleteWhen is the jumbo comics coming?
Deleteஒரு வழியா 'சிங்கத்தின் சிறு வயதில் 'வந்து விட்டது.
ReplyDeleteமிஸ்டர்... ப்ளாக்கில் இதை சத்தமாகச் சொல்லச் சொல்லி சிவகாசியிலிருந்து எதனாச்சும் செக்/மணியார்டர்/பழைய புத்தகம் வந்ததா உங்களுக்கு?
Deleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteI am3
ReplyDeleteஇன்றைய பதிவுக்கும் இன்று எனக்கு கிடைத்த அனுபவத்திற்கும் உள்ள ஒற்றுமை அந்த ஆட்டோகிராப். ஆம் எனது கல்லூரியில் படித்த நண்பர்கள் அனைவரும் பலவருடங்கள் கழிந்தது இன்று விருதுநகரில் சந்தித்தது படித்த கல்லூரியை சில மணிநேரம் சுற்றி வந்தது ஒரு இனிமையான அனுபவம்.
ReplyDeleteஇந்த இரண்டும் ஒரே நாளில் அமைந்து எனக்கு இரட்டிப்பு சந்தோஷம்.
அடடே!! அழகான அனுபவம்கள்!!
Deleteநண்பர் ராஜ்முத்துக்குமாரை மின்னும் மரணம் புத்தக விழாவிற்கு பின்னர் இன்று சந்தித்தேன்.
DeleteJ @ காலையில் பர்மா கடையில் கொத்துக்கறி, ஆட்டுக்கால் பாயா மற்றும் ஈரல்.
மதியம் ராஜாமணியில், சுக்கா, நாட்டுக் கோழி சாப்ஸ் மற்றும் குடல் வருவல் என வயிற்றுக்கு சிறப்பான கவனிப்புதான் போங்க :-)
அட்றா சக்க
Deleteஅட்றா சக்க
சூப்பரப்பூ
Deleteஅனைவருக்கும் இரவு வணக்கம்.
ReplyDeleteலயன் முத்துவோடு உங்களின் மலரும் நினைவுகளை அந்த சுயஎள்ளல் நடையில் படித்திடுவது எப்போதுமே அலாதியான ஒன்று சார்.!
ReplyDeleteமாதம் குறைந்தபட்சம் ஒரு பதிவாவது மலரும் நினைவுகளுக்கென ஒதுக்கிவிடுங்கள் என்று ப்ரேக்பாஸ்ட்டுக்கும் லஞ்சுக்கும் இடையில் கடினமான உண்ணாநோன்பு மேற்கொள்ளும் குழுவினரின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.!!
பின்குறிப்பு :
ஆனாப்பாருங்க எடிட்டர் சார். .,நீங்க ஒரு சேரனின் சவாரின்னு டைட்டில் வெச்சதும் ....சேரனின் ஆட்டோகிராப் மாதிரி மூணுநாலு டூயட்டெல்லாம் இருக்கும் (ஹிஹி) பதிவா இருக்குமோன்னு நினைச்சி .....ஹிஹி ..!!
மனசுக்குள்ளே காதல் வந்நல்லோ?
Deleteஅப்பிராணி KOK
Deleteஈவி
Deleteஅந்த NCC ட்ரெஸ்ல தானே டூயட்டூ...
அடுத்த பாட்டுல. மஞ்ச சாரி மஞ்சளா கொண்டை மேக்கப்ல....
அதைவிடுங்க ....
Deleteஅந்த Sslc மேட்டருக்கு வாங்க ...
கம்மாப்பட்டி கமலாவை அதுக்கப்புறம் பாத்தீங்களா சார்..!?
அந்த சோகத்த ஏங்கேக்குறீங்க..
Deleteகெய்வி ஆயிட்டா.
பத்தாத கொறக்கி , மாமாட்ட போ , மாமாட்டன்னு சொல்லி அவ கொழந்தய எங்கையில குடுக்குறா...
என்ன அநியாயம் J சார்.??
Deleteஉங்களைப்போய் குழந்தைக்கு மாமான்னா சொல்லிட்டாங்க ...அய்யகோ நெஞ்சு பொறுக்குதில்லையே ...என்ன அநியாயம்.!
அந்த கம்மாப்பட்டி கமலாக்கு கண்ணுல சாலேஸ்வரமா என்ன.!?
ஒரு தாத்தாவைப் போய் மாமான்னு சொல்லியாருக்கே ..!!!
கண்ணு கலங்கி கண்ணும் கண்ணும் கலங்கு கலங்கு கலங்கி நைசா குழந்தைய என்ட்ட டச்சிங் டச்சிங்ல ,மாமான்னு பிரியமா கூப்புட்ற மாதிரி குடுத்தா.
Deleteநீங்க ரெண்டு காதுலயும் சிகரெட் விட்டதுமே உங்கள பாத்தா..
வேற வழி ...தத்தக்கா புத்தக்கான்னு
கொழந்தய தா தா ன்னு சந்தடி சாக்குல வழிஞ்சீங்களா...ஹூம்
தா தா ங்ககறவரு தாத்தான்னுட்டா...
This comment has been removed by the author.
DeleteLeo என்றாலே நீட் தான் சார்
ReplyDeleteஅட டே முன் இரவுப் பதிவு...!!!சூப்பர்...
ReplyDeleteசார் ஜம்போ ?
ReplyDeleteசரி 👍 ✔️
ReplyDeleteDear Editor,
ReplyDeleteஇன்றைய விடுமுறை நாளில் DURANGO படித்து முடித்தேன். அருமையான கதைகள். முதல் தொகுப்பினை விட (அதன் தொடர்ச்சியாய் இருப்பினும்) action அட்டகாசம். அந்த one-shot "ஒரு ராஜகுமாரனின் கதை"யும் நன்றே.
இந்த வருடத்தின் முதலாறு மாதங்களின் சிறந்தத் தொகுப்பு டுரங்கோவே. (இதற்கு முன்னாள் thorgal தொகுப்பு நன்றாக இருந்ததாய்ப் பட்டது). இப்போது என்னளவில் தோர்கள் இரண்டாம் இடத்தில் இவ்வருடம்.
என்னாது எம்ஜியார் செத்தப்போயிட்டாரா
Deleteஐயகோ....( தமாஷ் ராகவன்சாரே...)
+111
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete'ப்ளாஷ்பேக்' அருமை எடிட்டர் சார்!! அடடா அதற்குள் முடிந்துவிட்டதே என்று தோன்றியது!! பேங்க் பாஸ்புக்கை வைத்துக்கொண்டு நீங்கள் அன்று செய்த அலப்பறைகள் செம 'கெக்கபிக்கே' ரகம்!!
ReplyDeleteநிகழ்காலச் சம்பவங்களைவிடவும், பழைய சம்பவங்களை உங்கள் எழுத்துகளின் வாயிலாகப் படிப்பதில் எப்போதுமே ஒரு கூடுதல் லயிப்பு ஏற்படுவது உண்மை!! (மிஸ் யூ வெரி பேட்லி சி.சி.வ!)
கிட்ஆர்டின் கண்ணன் கேட்டுக்கொண்டதைப்போல மாதம் ஒரு முறையாவது ஒரு ஃப்ளாஷ்பேக் பதிவு போடுங்களேன்?! நல்லாத் தேடிப் பாருங்க சார்... பல வருடங்களாய் திறக்கப்படாத அலமாரிகள் நம் அலுவலகத்தில் இன்னும் பலப்பல இருக்கக்கூடும்!
இப்படி மாதம் ஒரு மலரும் நினைவுகள் பதிவுன்னு செட்டிலாயிட்டா அப்புறம் சிசிவ கதி?
Delete// நல்லாத் தேடிப் பாருங்க சார்... பல வருடங்களாய் திறக்கப்படாத அலமாரிகள் நம் அலுவலகத்தில் இன்னும் பலப்பல இருக்கக்கூடும்! // அலமாரிகள் மட்டுமா ரகசிய காமிக்ஸ் சுரங்க அறைகள் இன்னும் பல திறக்காமல் இருப்பதாக சிவகாசியில் பேசிக்கிறாங்க. :-)
Deleteஇங்கே டைப் பண்ற நேரத்துல அச்சுக்கு கொடுத்தா பலரின் ஆசைகள் நிறைவேறும் என்பதை ஆசிரியர் என்று உணர்வார்..
Deleteஇப்படீக்கு
சி.சி.வ.போ.போ.வெ.போ.சங்கம்..
தலீவருக்கு
Deleteஅறப் போராட்டமெல்லாம் இனி செல்லுபடியாகாது. ஒரே 20 குயர்ல கண்ணீர்க்கடிதம் எழுதுங்க பேசாமா ஆசிரியரை ஆகஸ்ட்ல நிறய செலவு பண்ணி டவுன்பஸ்ல டிக்கட் வாங்கி கடத்தி கூப்புட்டு போய் கட்டிப் போட்டு உங்க கடிதத்தை படிக்கிறோம். அவர் தன்னாலே மாச மாசம் சி. சி. வ. எழுத ஆரம்பிச்சுடுவார்.
இப்படிக்கு,
தங்கள் வழி நடக்கும்
தொண்டன்.
////ஆசிரியரை ஆகஸ்ட்ல நிறய செலவு பண்ணி டவுன்பஸ்ல டிக்கட் வாங்கி கடத்தி கூப்புட்டு போய் கட்டிப் போட்டு உங்க கடிதத்தை படிக்கிறோம்////
Deleteஇவ்வளவு காஸ்ட்லியான கடத்தல் அவசியம்தானா?!! பேசாம சிம்ப்பிளா ஒரு கால்-டாக்ஸி வச்சுக் கடத்திப்புடலாமே?
வண்டில ஏத்தின நிமிடத்திலிருந்தே சித்ரவதையை ஆரம்பிக்கிறோம். அதாவது, நானும், கிட்ஆர்டின் கண்ணனும் பாடறோம்! பாட்டுக்கு நடுநடுவே நம்ம ஸ்டீல்க்ளா தானே இயற்றிய கவிதையை எட்டுக்கட்டை சுருதியில் படிப்பாரு! "என்னை விட்டுடுங்க... நான் 'சிங்கத்தின் ங்கா வயதில்'லேர்ந்து இப்போ நடந்தவரைக்கும் சகலத்தையும் எழுதித் தள்ளிடறேன்"னு நம்ம பிணைக்கைதி கதறப்போவது நிச்சயம்!
ஆகா ஆகா இரண்டு ஆஸ்தான பாடகர்கள் பாட ஆஸ்தான கவிஞர் பாடல் இயற்ற அப்பா நினைக்கவே டெரரா இருக்கு :-)
Deleteநம்ம பிணைக்கைதிகிட்டே இதையெல்லாம் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க PfB! இதிலுள்ள பயங்கரங்களை அவர் புரிஞ்சுக்கிட்டமாதிரி தெரியலை!!
Delete@ PfB
Deleteஆங்! பிணைக்கைதி படும் அவஸ்தைகளை செல்ஃபி ஸ்டிக் வச்சு வீடியோ எடுக்கவேண்டியது உங்க பொறுப்பு! YouTubeல live streaming போட்டு உலகத்தையே உச்சுக்கொட்ட வைக்கிறோம்!!
இருந்தாலும் டவுணுபஸ்ஸு மாதிரி வருமா...
Deleteஏன்...
பஸ்ஸில ஏறுன ஒடனே சலம்ப ஆரம்பிக்குறோம்.
நான் அடிக்கடி வாந்தி வர்ற மாதிரி ஓவ் போட்றேன்.
ஸ்டீலு " சரக்கு மேல சரக்கு போடுது" னு பாடித்தள்றாரு.
தலீவரு டமால்னு பதுங்கு குழீலருந்து பாஞ்சு வந்து நடு ரோட்ல நெம்ப தெகிரியமா நின்னு ரெண்டு கைய விரிச்சி . ...பஸ்ஸுல பாஞ்சு ஏறி....ஏறி.....ஏறி.....
அவுரு பங்குக்கு உண்ணுவெரதம் தம்கட்றாரு அதுவும் பஸ்ஸு எஞ்சினு டப்பா மேல ஒக்காந்து சாம்பார பிரிச்சி பாதிய ஊத்திட்டு மீதிய டைவர்ட்ட குடுத்து பிடிச்சிக்க சொல்றாரு....
ஈவி பரிதாபாமா மிமிக்ரி பண்றாரு....
பஸ்ஸுல எடமில்லாம நிக்குற கெழவிய பாத்து தாய்குலமேன்னு MGR கொரல்ல பாசமா ஆரம்பிக்குறாரு....
ஆஆஆ நான் இருக்குற பஸ்ஸுல தாய்கொலத்துக்கு எடமில்லியே..ன்னு கண்ணு கலங்குறாரு ...படார்ன்னு கெழவிய கூட்டிட்டு போயி... போயி...
டைவரு தாய்கொலத்துக்கு எடம் கொடுக்காம என்ன கைய கால ஆட்டிட்டு இருக்கண்ணே...எந்திரிச்சி எடத்த குடுன்னு சவுண்டு வுட்றாரு...
இன்னொரு பக்கம் கிருதா கணேஷ் சாரு புவீ புவீன்னு கூவிகூவி ப்ரீயா தலவலி தைலம் தர்றோம்னு வித்து தள்றாரு....
நம்ப KOK கூட நெறய வாழப்பூ வடய தூக்கிட்டு வந்து ....வந்து
"கீழே போட்ட ஓடயாத வடன்னு சொல்லி...
கைல குடுத்து.. கீழ போட்டு ஓடஞ்ச ஒடனே..ஏண்டா எ வடய ஒடச்சேன்னு அல்லாரு தலய்லயும் வடய கட்றாரு....
நம்ப PFB ஏய் சும்மா இருங்கப்பா சும்மா இருங்கப்பா ன்னுட்டு..ட்டு...
ஒனக்கு வாந்தியெல்லா வராதுன்னு சொல்ல நா மறுபடியும் வாந்தி ஆக்ட் குடுக்கறேன்.
தலீவரு சட்னி பாக்கெட்ட பிரிச்சி டைவருட்டகுடுத்து பிடிச்சிக்க சொல்றாரு...
கணேஷு தலவலி தைய்லத்த அல்லாருக்கும் தேய் தேய்னு தேச்ச்சி வுட்டு.... வேணும்னே ஒருத்தே கண்ணுல தேச்சி ரகள பண்றாரு...
ஈவீ கெழவிய இழுத்துட்டு போயி கண்டக்டரு மடியில ஒக்கார வக்கிறாரு...
PFB... ஏய் சும்மா இருங்கப்பான்னு மறுபடியும் ஆரம்பிக்கிறாரு...
பஸ்ஸூல இருந்தவங்கே அல்லாரும்," இவங்கள கூட்டிட்டு வந்தது ஆருன்னு"
கத்துறாங்கே...
நாம அல்லாரும் நம்ப அவுலு ஐஸ நைசா கைய காட்றோம்
பஸ்ஸே கொதிக்குது.
அவ்ளோ நேரம் சொம்மா இருந்தவுரு,"நா சி.வி போட்டுர்றேன்னு
சிசிவீ போட்டுர்றேன்னு கதர்றாரு.
எப்பூடி....
//நானும், கிட்ஆர்டின் கண்ணனும் பாடறோம்!// நான் இப்பவே கோயமுத்தூர் பஞ்சு மில்ல ரெண்டு டன் ஆர்டர் பண்ணிட்டேன். எனக்கும் கால் டாக்சி ட்ரைவருக்கும்.
DeleteJ sir .....😂😂😂😂😂😂
Delete///நான் இப்பவே கோயமுத்தூர் பஞ்சு மில்ல ரெண்டு டன் ஆர்டர் பண்ணிட்டேன். எனக்கும் கால் டாக்சி ட்ரைவருக்கும்.///
Deleteஎன்ன இப்படி சொல்லிட்டிங்க ..!
என் பாட்டைக் கேட்டு மழை பேஞ்சிருக்கு பயிர் வளர்ந்திருக்கு அவ்வளவு ஏன் தலையில முடிகூட வளர்ந்திருக்குன்னு ரசிகர் மன்றத்தார் சொல்லிக்கிட்டு இருக்காங்க ..!
ரெகுலரா கேட்ட பலபேருக்கு நிக்காத பேதி கூட நின்னுட்டதா கேள்விப்பட்டிருக்கேன் ... நீங்க என்னன்னா ....!!
இங்கிட்டு தலைல பாதியும் கொல்லைல பாதியும் காணோம்ல...
DeleteThis comment has been removed by the author.
Deleteயப்பாபா YouTube ஜடியா செம. அப்படியே நம்ப கார்த்திக் சோமலிங்காவை liveவா அனல் பறக்கும் ரிப்போர்ட் கொடுக்க சொல்கிறோம்
DeleteJ sir...
Delete:-))))
J sir .....😂😂😂😂😂😂
Deleteஹஹஹஹஹஹஹ..J பாட்டு தயார் ஆள பிடிங்க
DeleteJ சார். சூப்பர். 😂😂😂😂😂😂
Deleteஜம்போ காமிக்ஸ் இன்னும் வரவில்லை எனக்கு .நண்பர்கள் வாங்கி விட்டார்களா?
ReplyDelete@ madhan
Deleteஎனக்கும் வரவில்லை நண்பரே!!
அவ்வளவு ஏன்... இன்னும் யாருக்குமே வரலேன்னா பாத்துக்கோங்களேன்!!!
@vijay
DeleteKusumbu ji ungalukku
ஹிஹி!! :)
Deleteஆண்டுமலர் அட்டைப்படம் பிங்க் நிறப் பின்னணியில் பின்னிப் பெடலெடுக்கிறது!! ஹார்டு பைண்டில் அசத்தல் படைப்பாக வரயிருக்கும் இப்புத்தகம் இவ்வாண்டின் 'பெஸ்ட் செல்லர்ஸ்'ஸில் டாப் இடத்தைப் பெறப்போவது உறுதி!! இரண்டு கதைகளிலுமே டால்டன்களின் ரகளை இடம்பெறப்போவது கூடுதல் சிறப்பு!!
ReplyDelete30ஆவது
ReplyDelete'பனி மண்டல வேட்டை' அட்டைப்படம் - மிரட்டல்!! அழகான பனிப் பிரதேசத்தின் பின்னே ஒளிந்துள்ள பயங்கரத்தைக் குறிப்பால் உணர்த்துவதைப்போல இரத்தச் சிவப்பிலான அந்த பின்னணி வண்ணம் அமைந்து பயமுறுத்துகிறது!! அந்த ட்ரெய்லர் பக்கம் - ய்யீஈஈஈஈஈஈக்!!!
ReplyDelete37th
ReplyDeleteடியர் எடிட்,
ReplyDeleteட்ரெண்ட் அட்டை கனஜோர்... லக்கியும் வசீகரிக்கிறது... ஜூலை இதழ்கள் கண்டிப்பாக ஹிட்டடிக்கும்.
பழைய ஞாபகங்கள் இன்னொன்றையும் நினைவுக்கு கொண்டு வந்தது... 'சிங்கத்தின் சிறுவயதில்'க்கு எப்போது ரீஎன்ட்ரீ கொடுக்க போகிறீர்கள்....??? :)
அப்டீ கேளுங்க சார்...
Deleteஆனா பதில் தான் வருசகணக்காகியும் கிடைக்க மாட்டேங்கது...:-(
அதுக்கு நா மேல வழி மொழிஞ்சிருக்கேன்ல...
Deleteஅப்படின்னா இந்த பதிவு 'சிங்கத்தின் சிறு வயதில்' இல்லையா?
Deleteஆசிரியரே பிங்க் கலர் அட்டையில் மிகவும் வசீகரிக்கிறார் லக்கி லூக்
ReplyDeleteதங்களின் மலரும் நினைவுகள் மிக அருமை
ReplyDeleteகாமிக்ஸ் உலகின் பொற்காலம் தங்கள் மலரும் நினைவுகளில் புலப்படுகிறது.
ReplyDeleteவிஜயன் சார், உங்கள் ஞாபகசக்தி அபாரம். அத்துடன் இணைந்த உங்கள் நகைச்சுவை இந்த பதிவை இன்னும் சுவாரசியமானதாக ஆக்கிவிட்டது. நன்றி.
ReplyDeleteவிஜயன் சார், "கபாலர் கழகம்" மறுபதிப்பு செய்யமுடியுமா? இதுவரை இந்த கதையை நான் படித்தது இல்லை.
ReplyDelete// நினைவுகளைக் கரையான்கள் அரிக்காதவரையிலும் உத்தமம் //
ReplyDelete+1
அய்யே வேணாம்பா
Deleteமாயாவியோட முழுநீள டுபாங்கூரு ஒண்ண கம்பேக்ல போட்டு பின்னி பெடலெடுத்தாங்கள்ல...
அதவுட பயங்கர அனுபவமாயிடும்...
விஜயன் சார், // ஜூலையின் மூன்றாவது வண்ண இதழான "எரிமலைத்தீவில் பிரின்ஸ்" preview-க்களை புக் அனுப்பும் நாளின் //
ReplyDeleteஇதப்பார்த்தால் வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை ஜுலை மாத இதழ்கள் சிவகாசியில் இருந்து கிளம்பி விடும் போல் தெரிகிறது.
This comment has been removed by the author.
Delete51
ReplyDeleteசார் அருமையன பதிவு. அந்த பழுப்பேறிய சில தாள்களயும், வருகிறது விளம்பரங்களயும் கண்ணில் காட்டியிழுக்கலம் .இரண்டு அட்டைகளும் இது வரை வந்த அட்டைகளிலே எது பெஸ்ட் என சொல்ல வைக்க திணறுகின்றன .இரண்டுமே டாப். அட்டையில் பூசியிருக்கும் லக்கி வண்ணமாகட்டும் அல்லது ட்ரெண்டின் இரு வண்ணமும் கண்ணுக்கு விருந்து. அட்டைப்படம் ஹார்டுபௌண்டில் என்பது எதிர்பாரா இனிய அதிர்ச்சி .பிரின்ஸ் அட்டை பட்டய கிளப்பும் போல, ,,,முதன் முறை இரு ஹார்டுபௌண்ட் ஒரே டப்பிக்குள், ஐய்து இதழ்கள் விரைவில், ,,ஆஹா
ReplyDeleteஎன்னாது ஹார்டு பைண்டா....
Deleteசொக்கா......
சமீப காலமாக இந்த தளம் கிராபிக் நாவல் போல் சற்று புரியாமல் தள்ளியிருந்த எனக்கு,இன்றைய பதிவை படித்ததும் பழைய உற்சாகமும் குதுகலமும் ஏற்பட்டது.ஆட்டோகிராப் பட ஸ்டையிலில் எடிட்டரை காண்பதே அளாதி ஆனந்தம்தான்.!!!!
ReplyDeleteரஜினி நடித்த அண்ணாமலை படத்தில் மனதை நோகடித்த மகளை நினைத்து வருந்தி தன் கடந்த காலத்தை நினைத்து பாடும் " ஒரு பெண் புறா "என்ற பாட்டை பாடனும் போல தோனிற்று(எனக்கு,சாணி பேப்பரில் எடிட்டரின் ஹாட்லைன் எளிதாக புரிந்த அழகான கதைகள் போன்ற இத்யாதி.,இத்யாதி......)
சமீப காலமாக இந்த தளம் கிராபிக் நாவல் போல் சற்று புரியாமல் தள்ளியிருந்த எனக்கு,இன்றைய பதிவை படித்ததும் பழைய உற்சாகமும் குதுகலமும் ஏற்பட்டது.ஆட்டோகிராப் பட ஸ்டையிலில் எடிட்டரை காண்பதே அளாதி ஆனந்தம்தான்.!!!!
ReplyDeleteரஜினி நடித்த அண்ணாமலை படத்தில் மனதை நோகடித்த மகளை நினைத்து வருந்தி தன் கடந்த காலத்தை நினைத்து பாடும் " ஒரு பெண் புறா "என்ற பாட்டை பாடனும் போல தோனிற்று(எனக்கு,சாணி பேப்பரில் எடிட்டரின் ஹாட்லைன் எளிதாக புரிந்த அழகான கதைகள் போன்ற இத்யாதி.,இத்யாதி......)
இந்த பதிவை படித்தவுடன் சி.சி.வயதில் போராட்டத்தை தீவிரபடுத்தலாமா என்று யோசனை வருகிறது..
ReplyDeleteஆ..ஆனால்...:-(
பனி மண்டல வேட்டை அட்டைப்படம் செம அழகு சார்...
ReplyDeleteசூப்பரா இருக்கு...
பனியிலும் சூப் இருக்கா...?
Deleteஇன்று பிறந்தநாள் காணும் அருமைச் சகோதரர் சுசி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஅவர் வாழ்வில் வளமும்,நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பேபிம்மா ....😍😍😍😍😍😍
Deleteமீசை வைத்த குழந்தைக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும்..:-)
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
Deleteதெய்வீக சிரிப்பாளர் நண்பன் பேபிக்கு இறுக்கி அணைத்த உம்மாவுடன் பிறந்த நாள் வாழ்த்துகள்.
Deleteதிரு.சுசி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.நலமுடன் வாழ்க பல்லாண்டு.
DeleteHappy birthday Baby..
Deleteதிரு சுசீந்திரகுமார் சார்@
Deleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சார்💐
ஆள பாத்திருக்காட்டியும்..
Deleteபொறந்த நாளு வாழ்த்து சொல்லிட்றேன்.
Many more Happy returns of the day Susi!!!!
Deleteமீசை வைத்த குழந்தைக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும்..:-)
Deleteமீசை வைத்த பாசக்கார குழந்தைக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும்..:-)
Deleteசுசி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
Deleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுசி சார்.
Delete🎂🎁💐🎊🌹🎆🎉🎈
மீசை வைத்த குழந்தைக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும்..:-)
ReplyDeleteExcellent nostalgia recap.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசீ
ReplyDelete🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
I have not received the first issue of the Jumbo Comics yet.Please inform when it is likely to be sent.
ReplyDeleteஜம்போ இன்னும் வெளியிடப்படவேயில்லை சார்.
Deleteஅநேகமாக புதன் அல்லது வியாழன் அன்று அனுப்பப் படலாம்.
வியாழன் அல்லது வெள்ளி, ஜம்போ தரிசனம் உறுதி என நினைக்கிறேன்..!!!
உங்களுக்கு மட்டுமல்ல...
DeleteNobody is in receipt of that ,till now sir including editor I think so..,
I have not received the first issue of Jumbo Comics yet. Please inform when it is going to be sent.
ReplyDeleteமறுபடியும் மொதல்லருந்தா....
Deleteமிடியல...
///டிரெண்ட் தோன்றும் "பனிமண்டல வேட்டை" - இந்தப் புதியவரின் துவக்க சாகசம் ! இந்த ஆல்பத்தைப் புரட்டும் போது எனக்குத் தோன்றிய முதல் சிந்தனையே : கமான்சே தொடரில் எல்லா கதைமாந்தர்களும் பரட்டைகளாய் உலவியதற்கு இந்தத் தொடர் நேர் contrast ; சகலரும் படிய வாரிய தலைகளோடு நீட்டாய் காட்சியளிக்கிறார்கள் -///
ReplyDeleteஅந்த ப்ரீவியூவின் கடைசிப் பேனலில் இருப்பவர் தலையை படிய வாரிய மாதிரி தெரியலையே ...!?!!?
ஒருவேளை கெஸ்ட்ரோலில் வந்திருப்பாரோ
தமாஷ் அப்பாலிக்கா (அதாவது Jokes apart)
ட்ரெண்ட்டை ரொம்பவே ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.!
அமைதியான தெளிவான நேர்கோட்டில் பயணிக்கும் கௌபாய் தொடர் என்பதாலும்,. ஒவ்வொரு ஆல்பமும் தனித்தனி கதைகள் என்பதாலும் டெக்ஸ் வில்லருக்கு துணையாக இருக்கும்.!!
அதுக்கும் முந்துன பேனல்ல ஒருத்தருக்கு நட்டுக் குத்தலால்ல நிக்கிது....
DeleteThis comment has been removed by the author.
Delete///அதுக்கும் முந்துன பேனல்ல ஒருத்தருக்கு நட்டுக் குத்தலால்ல நிக்கிது....///
Deleteஅந்த ஹேர்ஸ்டைலுக்கு பேருதான் ஸ்பைக் ..!!
என்ன ...பைக்கு சைடுஸ்டான்ட் போட்டாப்புல நிக்குது ..அவ்ளோதான்..!!
😜😜😜
ஸ்ப்பைக்கா
Deleteநா ஸ்கூல் பேக்னு நெனச்சேன்.
இந்த பக்கம் ஸ்கேல்,பென்சில்பாக்ஸ்
அந்த பக்கம் தண்ணி பாட்டிலு மாதிரி
வீங்கிட்டு இருந்திச்சா....
அக்காங்...😇😇😇😇😇
பழையது:
ReplyDeleteபரலோகத்திற்கொரு பாலம் - லக்கி லுக் செயின்ட் லூயிஸ் மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய இரு இடத்திற்கு நடுவில் பாலம் கட்ட என்ஜினீருக்கு அந்த ஊரின் மேயரின் அடாவடி எதிர்த்து உதவுவதே கதையின்
மையம்.
சூ மந்திரகாளி - லக்கி லுக்கிற்கு தன்னை அறியாமல் திருட நினைக்கும் ஒரு மாயாஜால வித்தைக்காரனை காவல் காக்கும் கடமை.
டால்டன் நகரம் - லக்கி லுக் டால்டன் சகோதர்களுக்கு உதவி செய்வது போல ஏமாற்றி மொத்த மொள்ளமாரிகளையும் ஒரு இடத்துக்கு வர செய்து கைது செய்யும் கதை. இந்த கதையில் ஜாலியை விட ரின் டின்
கேன் பண்ணும் சேஷ்டைகள் அதிகம்
விண்ணில் ஒரு மந்திரி - மந்திரி மோடி மஸ்தான் இம்முறை விண்வெளி பயணிகளின் உதவியோடு சுல்தானை வேறு உலகத்துக்கு அனுப்ப முயற்சித்து தோத்து போவது தான் கதை
மந்திரியும் நானே மன்னவனும் நானே - கிட் ஆர்ட்டினுக்கு நாடக நடிகன் ஆக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும்போது இரு ஏமாத்துக்காரர்களிடம் சிக்கி தலையில் அடிப்பட. திரும்ப திரும்ப தான் செனட்டர்
பெர்குசன் என்று சொல்ல ஆரம்பிக்கிறான். அதை வைத்து அந்த போக்கிரிகள் மக்களை ஏமாத்தி பணம் பிடுங்குவதை சிக் பில் & கோ தடுப்பதே கதை.
பாலைவனத்தில் ஒரு கப்பல் - கௌ பாய் ஸ்டிவ் ஒரு பெண்ணுடன் சேர்ந்து பாலைவனத்தில் ஒரு கப்பல். அதில் உள்ள புதையலை தேடி போகிறார்கள். போகும் வழியில் போக்கிரிகள் இவர்களை பின் தொடர்ந்து
வருகிறார்கள். புதையல் கிடைத்ததா? ஸ்டிவ் மற்றும் அந்த பெண்ணின் முடிவு என்ன ஆனது என்பதே கதை
புதியது
மௌனமாயொரு இடிமுழக்கம் - இதில் முதல் இரண்டு கதைகளை விட அந்த ஒன் ஷாட் கதையான ஒரு ராஜகுமாரனின் கதை மிகவும் நன்றாக இருந்தது. டியூரங்கோ எனோ கிளின்ட் ஈஸ்ட்வுட் ஞாபக
படுத்துவதை தவிர்க்க முடியவில்
குற்றத் திருவிழா - டேஞ்சர் டயபாலிக் ரெண்டு கதைகள் படித்து இருக்கிறேன். இது இரண்டாவது. இந்த கதைகளின் சித்திரங்கள், கலரிங் எல்லாம் சூப்பர். இந்த கதைகளை நிறுத்தியது வருத்தமே. மிகவும் பிடித்த கதை.
சூப்பர்
Deleteஒரு கேள்வி, கலர் டெக்ஸ் 3 குட்டிக்கதைகள் இணைந்த தொகுப்பு, கடைகளிலும் கிடைக்குமா அல்லது வெறும் ஆன்லைன் மட்டும் தான ?
ReplyDeleteHa...ha...Tex புக்கு கடைக்கு வராமலா???
DeleteText book தான டெ வி
ReplyDeleteTex bookல Text இருக்கும்.
DeleteText bookல TeX இருக்குமா???
நம்ப Lion comics ஸ்கூல்ல ஓரே சப்ஜெக்ட் Tex மட்டுந்தான்.
Deleteமாசா மாசம் புது புக்க குடுத்து படிக்கச் சொல்லுவாங்கே.
படிச்சே ஆகணும்.
படிக்க பிடிக்காதவங்கே all pass தான்.
ஒரே வாத்தியாரு நம்ப விஜயன் சாரு மட்டுந்தேன்.
தமிழ் பண்டிட், இங்கிலீஷ்,சயின்ஸூ,சரித்திரம் பூகோளம் அல்லாத்தையும் கலந்து கட்டி அடிப்பாரு.
நாமளும் சளக்காமே ஒரே வகுப்புல உக்காந்தே (வேற கிளாஸ் ரூம் இல்லங்கிறதால)PhD வரைக்கும் முடிச்சிட்டோம்.
மாசா மாசம் ஒரு தடவை கெட் டுகதர் ப்ளாக்ல போட்டு கொண்டாடுவோம்.
வாராவாரம் நாயத்து கெழமயில வாத்தியார மறக்காம ஹலோ சொல்லி பேசிடுவோம்...
மணி நாலேகால் ஆயிடிச்சி
Deleteவாத்தியார காணோம்...
///Tex bookல Text இருக்கும்.
DeleteText bookல TeX இருக்குமா???///
புதிய தத்துவம் பத்தாயிரத்து இருநூற்றி முப்பது.😂😂😂
வாவ்...வாவ்...
Deleteஇனிமே விஜயராகவன் PhD னெ போட்டுறலாமாஜி...???
அல்லாரும் வித்தியாசம் காட்டுவதெப்புடி???
குட்டி டெக்ஸ் எப்படி தர்லாம்னு ரோசனயாகீறாரோ????
Tex book கடையில் கிடைக்கும் ஆனா text book schoola தான் வாங்கிக்கனும்.
ReplyDelete///மிஸ்டர்... ப்ளாக்கில் இதை சத்தமாகச் சொல்லச் சொல்லி சிவகாசியிலிருந்து எதனாச்சும் செக்/மணியார்டர்/பழைய புத்தகம் வந்ததா உங்களுக்கு?///
ReplyDeleteபழைய புத்தகமெல்லாம் வரல சார்.புது புத்தகத்தை இந்த வாரம் அனுப்புவார்னு வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்.
சிவகாசி பழைய பொத்தகம் ஒன்னு 400க்கு வந்ததே, தேடி வந்தீங்களே??
Deleteஅகப்பட்டதா G.P???
இன்னும் கிடைக்கவில்லை சார்.!
Deleteஎன்ன புத்தகம தேடிக் கொண்டு இருக்கிறீர்கள் ஜிபி?
DeleteNever Before Special மஹி சார்.
Deleteபிரான்கோ-பெல்ஜியம் கா(மிக்ஸ்)ல் பந்து...!!!
ReplyDeleteநம்ம காமிக்ஸ் உற்பத்தியாளர்கள் கால்பந்திலும் கலக்கிவற்ராங்க ப்ரென்ஸ்...
1998ல் சேம்பியன் வென்ற பிரான்சு, இம்முறையும் கெத்து காட்டி வருது. ஜிடேன் மாதிரி ஒரு டைகர் இல்லாத குறைதான் இம்முறை....
ரியல் சர்ப்ரைஸ் பெல்ஜியம் தான். வேல்டு நெ.3ரேக்கிங் கிற்கு தகுந்தவாறு தெறமை காட்டறாங்க...
"நவ் ஆர் நெவர்"---என்றபாணியில் ஒருங்கிணைந்த சூப்பர் ஸ்டார் வீரர்கள் கறுப்பின வீரர் லுக்குலு தலைமையில் வெளுத்து கட்டறாங்க...!!! தங்க ஷூவும் சேர்ந்து கிடைக்கும் போல....!!!
காமிக்ஸில் கலக்கும் பெல்ஜியம் கோப்பைய வென்றா நமக்கும் சந்தோஷம்தானே...!!!!
அப்புறம் நம்ம வைக்கிங் பாய்ஸ் ஐஸ்லாந்து, அர்ஜென்டினா வையே பொரட்டி எடுத்துட்டாங்க...!!!
I AM WAITING FOR """JUMBO TEX and COLOUR TEX """".
ReplyDeleteDear Editor,
ReplyDeleteLooks like 11000 hits to 3 million. What is the special book? This time it has to be better than Jeremiah. You can release in August fair.
/// This time it has to be better than Jeremiah. ///
Delete😜😜😜
பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி நன்றி🙏🙏🙏🙏
ReplyDeleteவைக்கோலுக்கும் யானைக்கும்
ReplyDeleteவாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலும் மால்யானை யாம். (3)
வைக்கோலானது வாரிக் களத்தில் அடிக்கப்படும். பின்னர் அது வைக்கோல் போர்க் கோட்டையாக புகுத்தப்படும். வைக்கோல் போரில் அது சிறந்து பொலிவுற்றிருக்கும்ய
யானை பகைவர்களை வாரிப் போர்க்களத்தில் அடிக்கும். பின்பு வந்து அதன் கட்டுத்தறியாகிய கோட்டைக்குள் புகும். போர்க்களத்தில் சிறப்புடன் பொலிவுற்று விளங்கும்.
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
காளமேக புலவர் காலடி தடத்தில் ........
முத்திக்கும் மணம் பரப்பும் முனைந்தேயுதவி செய்யும்
தித்திக்கும் உள்ளிருப்பு திறக்கும் வாய் இன்சிரிப்பு
சூலத்தை தரித்து சுகவனேஸ்வர் தானுறையும்
சேலத்து மாங்கனியும் சுசீயும் காண்.
சேலத்து மாங்கனி :
வரகம்பாடி ,வனவாசி , நங்கவள்ளி ,சேர்ந்தமங்கலம் என சேலத்து மாம்பழங்கள் தான் இருக்கும் திசையல்லாது மற்ற மூன்று திசையிலும் நல்ல மணம் வீசுபவை .
பசித்திருக்கும் வயிற்றுக்கு அப்பசி ஆற்ற உதவுபவை .
தோல் உள்ளே இருக்கும் மாங்கனியின் கதுப்பு மிகவும் இனிப்பாயிருக்கும்.
அவற்றை உண்பவர் வாய் விரிய சிரித்து மகிழும் .
சுசீ
தான் இருக்கும் திசையல்லாது மற்ற மூன்று திசைகளிலும் நட்பு மணம் வீச செய்பவர் .
நண்பர்கள் உதவி என்று கேட்டால் முனைப்புடன் அதை செய்து முடிப்பவர் .
உள்ளே இருக்கும் அவர் இதயம் மிகவும் இனிமையானது ...
கபடமின்றி அவர் வாய் திறந்து சிரிப்பது மறக்க இயலா ஒன்று ..
திரிசூலாயுதபாணியான சிவன் லிங்கவடிவில் பழைய பேருந்து நிலையம் அருகில் சுகவனேஸ்வரர் என்ற பெயரில் உறையும் சேலம் நகரின் மாம்பழமும் சுசீயும் ஒன்றுதான்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு சுசீ !!!
மாம்பழமும் மிகவும் பிடித்த பழம். அதை விட இனிது சுசியின் நட்பும் செனா அனாவின் தமிழும்.
Delete@ சேலம் சுசி (எ) மாம்பழம்
Deleteஇதைவிடவும் அருமையானதொரு வாழ்த்து இந்தப் பிறந்தநாளில் உங்களுக்கு அமைந்துவிட முடியாது!!
@செனா அனா
பின்றீங்க பாஸ்!!
நல்லா யோசனை பண்ணிச் சொல்லுங்க... சிலபல நூற்றாண்டுகளுக்கு முன்னே உங்களை எல்லாரும் "சேக்கிழார்.. சேக்கிழார்"னு தானே கூப்பிடுவாங்க? ;)
@ MP
நம்ம கிட்நா கால்-டாக்ஸியில் செனாஅனாவுக்கும் ஒரு இடத்தைப் போட்டுடுங்க. எனக்கென்னவோ இவர் ரொம்பவே உபயோகமா இருப்பார்னு தோனறது!! :D
////காளமேக புலவர் காலடி தடத்தில் ...///
Deleteஎன்னிக்காச்சும் இந்திய வரலாறு பற்றிய காமிக்ஸ் வெளியிடப்படுமானால், எடிட்டர் சார்... இதோ ஒரு டைட்டில் ரெடி! :)
அருமை செனாஆனாஜி... அட்டகாசமான பிறந்த நாள் வாழ்த்து.
Delete.்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்
செனா அனா ஜி,
Deleteகாளமேக புலவர் பாடலில் வரும் "திருமலை ராயன்..." தான் எனது பிறந்த/சொந்த ஊர் (திருமலை ராயன் பட்டினம்). காரைக்கால் பக்கத்தில் 5கி.மீ.
108 கோவில் & 108 குளமுமாக இருந்த அந்த திருமலை ராஜன் பட்டினம் அழிந்தது, காளமேக புலவரின் சாபத்தால்தான் என்று ஒரு பேச்சுவழக்கு உண்டு.எனது சிறுவயதில் அங்கு 1கி.மீ தூரத்திற்கு ஒரு மணல்மேடு இருந்தது. அதன் கீழ்தான் அம்மன்னனின் அரண்மனை புதையுண்டு இருப்பதாகவும் எனது பால்ய வயதில் சொல்லியுள்ளார்கள். அதன் உண்மையான வரலாற்றை, உங்களைபோன்ற ஆராய்ச்சியாளர்தான் உறுதிபடுத்தனும். அத்துடன் இதுபோன்ற இடங்களை ஏன் அகழ்வாராய்ச்சி ஆட்கள் ஆர்வமாக தோண்டுவதில்லை???
கால மேக புலவர்...
Delete...
அருமையான விளக்கம்...
ஆழ்ந்த கருத்து...
தீர்ந்த்து சந்தேகம்....
அட்டகாசம் செல்வம் அபிராமி.
Deleteசூப்ப்ப்ப்பர் செனா அனா ..!!
Deleteபிறந்தநாள் வாழ்த்தைக்கூட இப்படி பின்னிப்பெடலெடுத்து சொல்லி வியர்க்க வைக்குறீங்களே ஐயா..!!
(நேத்து நைட்டுல இருந்து பேபி, மிரண்டுபோன கண்களோடும், கலைந்துபோன தலையோடும், பட்டன் போடாத சட்டையோடும் இந்த வாழ்த்தை' தமிழில் ' மொழிபெயர்க்க ஆள் கிடைக்குமான்னு தேடிக்கிட்டு திரியுறதா தகவல் கிடைச்சுது ..!!:-))
///சிலபல நூற்றாண்டுகளுக்கு முன்னே உங்களை எல்லாரும் "சேக்கிழார்.. சேக்கிழார்"னு தானே கூப்பிடுவாங்க? ;)///
Deleteகிழார்னா வயசானவர்னுதானே அர்த்தம் ..! செனா அனா செவப்பா இருக்கிறதாலே அவரை செவப்புகிழவர் அதாவது சேக்கிழார்னு சொல்லி கிண்டல் பண்றிங்களா குருநாயரே..
///108 கோவில் & 108 குளமுமாக இருந்த அந்த திருமலை ராஜன் பட்டினம் அழிந்தது, காளமேக புலவரின் சாபத்தால்தான் என்று ஒரு பேச்சுவழக்கு உண்டு.///
Deleteநான் இனிமே கவிதை எழுதுறதை நிறுத்திடலாம்னு முடிவு பண்ணிட்டேன் ..!! குருநாயரே நீங்களும் புத்திசாலித்தனமா முடிவெடுங்க ..! இந்த காளமேகப்புலவர் ரொம்ப கோவக்காரார் போலிருக்கு ..!!
////நான் இனிமே கவிதை எழுதுறதை நிறுத்திடலாம்னு முடிவு பண்ணிட்டேன் ..!! குருநாயரே நீங்களும் புத்திசாலித்தனமா முடிவெடுங்க ..!////
Deleteஉடனே நிறுத்திடலாம்னு முடிவு பண்ணிட்டேன். அ..ஆனா நான் இதுவரைக்கும் கவிதையே எழுதினதில்லையே...?!!
ஆங்! புரிஞ்சுடுச்சு!! ஹிஹி நான் இதுவரைக்கும் போட்ட கமெண்ட்ஸ் எல்லாம் உங்களுக்கு கவிதை மாதிரி தெரிஞ்சிருக்கு, அப்படித்தானே? ச்சோ ஸ்வீட்!!!
என்னதவம் செய்தனை சுசீந்த்ரா ....
Deleteஎன்ன தவம் செய்தனை...
எங்கும்நிறை செனாஅனா...இங்ஙனமோர் வாழ்த்தருள ...
என்னதவம் செய்தனை சுசீந்த்ரா ...
என்னதவம் செய்தனை...
////என்னதவம் செய்தனை சுசீந்த்ரா ....
Deleteஎன்ன தவம் செய்தனை...////
கண்டிப்பா போன ஜென்மத்துல நீங்க ஒரு மாமுனிவராக இருந்து தவங்கள் பல செஞ்சிருக்கணும்!!
அட! 'மா'ன்னா மாம்பழம். 'மாமுனிவர்'னா 'மாம்பழ முனிவர்'!!
சரியாத்தானே இருக்கு!! :D
///////என்னதவம் செய்தனை சுசீந்த்ரா ...////
Deleteஎன்ன தவம்னு எனக்கும் சரியாத் தெரியலை!! ஆனா கண்டிப்பா ஏதோ ஒரு மாமரத்துக்கு அடியில் உட்கார்ந்துதான் தவம் பண்ணியிருக்கீங்கன்னு தோனறது! :D
அட்டை படங்கள் இரண்டுமே சூப்பர் . இரண்டு கதைகளிலுமே லால்டன்கள் உள்ளதும், அதிலும் டால்டனகள் யோக்கியன்களாயும், லக்கி முகமூடி திருடனும் என்பதுடன் , ஆண்டுமலர் என்பதும் ஆவலுடன் காத்துள்ளேன்சார்.
ReplyDeleteட்ரெண்டின் “ பனி மண்டல வேட்டை” உம் அட்டை படம் ஆவலை தூண்டுவதாயும் உட்பக்க ரீசர் பயத்துடன் கூடிய எதிர்பார்ப்பை கூட்டுகின்றன.
சி.சி.வ இனை கண்ணில் காட்டியது போலுள்ளது. முழுதுக்கும் ஆசைப்பட கூடாதா சார்?
அட்டை படம் அருமை
ReplyDeleteகஜினி பார்ட்டி எப்போ வருவார்...
நா கூட பள்ளிக்கூட புக்குக்கு நடுவால
காமிக்ஸ் வச்சு படிச்சேன்...
ஹூம்..
@Edi Your writing is superb sir.
ReplyDeleteAt the same time, most of the times from your writing, I can see that you are very cautious that no one should comment or insult you. That's why yourself you are commenting like ---
"ச்சை...எனக்கு இவன் போடுற மொக்கையே புடிக்காது " என்று feel பண்ணிடும் நண்பர்கள் நேராய் பதிவின் பின்பகுதிக்குப் பயணிக்கலாமே - ப்ளீஸ் //
This being a methodology which I also learnt from my unlce.
We can comment ourself very badly, but if anyone comments over us, we can't accept & will feel very bad.
To avoid these circumstances we are following this methodology.
Am I right sir?
Moreover you are more senior than me and hence your feelings will be very high.
Sir nobody has guts to attack in front of you. Then why are you tsking such peoples so seriously & writing like this?
Sometimes this leads to like "you have the questions and answers for everything". Nobody has space to answer you or ask you any question.
Your hilarious writing is so unique & good stress reliever. Just cutting off such niches will be more great.
Sincerely your fan.
Thanks
தமிழ்ல இதை 'சுய எள்ளல்'னு சொல்லிக்கிடறாங்க!! அதாவது, மத்தவங்க எள்ளறதுக்கு முன்னாடி நம்மை நாமே எள்ளிக்கறது!!
Deleteஉதாரணத்துக்கு, யாராவது நம்மை புரட்டியெடுக்கலாம்னு நம்மைநோக்கி வரும்போது, நம்மை நாமே பளார் பளார்'னு அப்பிக்கொள்வது & சுவற்றில் முட்டிக் கொள்வது!! இதைப் பார்த்து எதிராளிக்கே பரிதாபமாயிடும்! அடிக்க வந்தவன் அஞ்சோ பத்தோ பணம் கொடுத்துட்டு ஆறுதலும் சொல்லிட்டுப்போயிடுவான்!!
ஆனா, இது அந்தக் காலம்!!
இப்போல்லாம் நம்மை நாமே 'பளார் பளார்' பண்ணும்வரை பொறுமையாகக் காத்திருக்கும் எதிராளி, நாம ஓய்ந்ததுமே அவன் பங்குக்கும் ரெண்டு 'பளார்ஸ்' விட்டுட்டுத்தான் நடையைக் கட்டுறான் - கிராதகனுங்க! :D
😄😄😄😄😄😄😄😄😄
Delete/// 'பளார்ஸ்' விட்டுட்டுத்தான் நடையைக் கட்டுறான் - கிராதகனுங்க! :D////---- நல்லா அழுத்தி சொல்லுங்க....!!!
Deleteஇப்பல்லாம் யார் வேணா பளார்ஸ் பண்ணுற காலம்....ஹூம்...
நிஜங்களின் நிசப்தம்...!!!
ReplyDelete"நீ பிறந்து வளர்ந்த பூமியிது! ஆனால் இனியொரு தடவை இங்கே திரும்பும் வாய்ப்பு உனக்கு இருக்கப் போவதில்லை!"
"இன்றோடு உன் கிராமம் அஸ்தமனம் ஆகிட்டது"....
----மறுவாசிப்பில் ஒவ்வொரு பக்கமாக நின்று நிதானித்து மீள்கையில்,ரியலி எ ஜெம்.....!!!
வார்த்தைகளின் அர்த்தம் வீரியமா???
Deleteஓவியங்களின் வீச்சில் எழும் காட்சிகளின் நீட்சியின் பரிணாமங்களா???
ஓசையின்றி மீண்டும் பூகம்பவாசம்....!!!
"கல்லில் வடிக்கப்பட்ட எதையுமே
Deleteநீக்குவது சுலபக் காரியமல்ல தானே?
மனித மனசுகளுமே பல தருணங்களில் கல்தோனோ???"....
"நான் சிறுவனாக இருந்தபோதே நிறையக் கேள்வி கேட்பேன்! அவை நம்மை இட்டுச் செல்லும் பாதைதான் முக்கியம்.பதில்கள் அல்ல.....
Deleteஅந்தப் பாதையில் நம் சிந்தனை மேலும், கீழுமாகப் பயணிக்கும் போது, கிடைக்கும் சுகமே அலாதிதான்...."
"நடந்த நிஜங்களை உனது லட்சியங்களின் எதிர்பார்ப்புகளோடு ஒப்பீடு செய்ய முயற்சிக்காதே!
Deleteசரியான பாதையிலேயே பயணம் பண்ண பிரயாசை எடு!
உன்னுடைய எதிர்பார்ப்புகள்,,
நீ எழுதும் வார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்!...."
அய்யய்யோ! என்ன ஆச்சு!
Deleteநி.நி.மோனியா தாக்கிருச்சு போலிருக்கே!
Deleteஹி...ஹி.... ரொம்ப நாள் கழித்து ஒரு முழு ஓய்வுநாள்(வேலையில் தான்) கிட்டியது. சனவரியில் அவசர வாசிப்பில் தவறவிட்ட அம்சங்களை நிதானமாக கவனித்து வருகிறேன்.
Deleteநாளையும் கூட நிமோனியா தொடரும்.....!!!
ஒன் ஆஃப் த ஸ்பெசல் ரைட்டிங் ஃப்ரம் அவர் எடிட்டர் சார். இட் டிசர்வ்ஸ் செகண்ட் ரீடிங்...!!!
LUCKY LUKE
ReplyDeleteI am eagerly waiting for Lucky Luke!!
லுக்கி லுக்!! 😍😍😍 😆😆😆
Delete🎶 I'm a poor lonesome combay, 🎶
Delete🎶🎵 And a long way from home 🎵🎶
"ஆட்டம்" சாஸ்தியா இருக்கே மிதுனரே...!!!
Deleteகம்பேக்கிற்குப் பின்பு வெளிவந்த முதல் ஆண்டுமலர் (2012ஆண்டுமலர்)
ReplyDeleteலக்கி லூக் டபுள் தமாக்கா தான் மிதுன்....
பனியில் ஒரு கண்ணாமூச்சி&
ஒரு வானவில்லைத் தேடி...!!!
அந்த சமயத்தில் வரவேற்பு கொஞ்சம் லக்கி ஸ்டேண்டர்டு க்கு ஒரு மாற்று குறைவுதான்.
6ஆண்டுகளுக்குப் பின்பு இப்ப மீஈஈஈண்டும் ஆண்டுமலரில் லக்கி டபுள் தமாக்காஆஆஆஆ....
இம்முறை தயாரிப்பு தரம் பட்டையைகிளப்பி வருது.,
கதையும் ஈக்குவலா ஹிட் அடிக்குமா???
இந்த வருட டாப் செல்லா் இதுதான்!
Deleteஅதனால் இரண்டிரண்டாக, மூன்று மூன்றாக வாங்கி பத்திரப்படுத்தி கொள்ளுமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம்!
போனா வராது!📢📢📣📣
விட்டா கெடைக்காது!📢📢📣📣
போனா வராது!📢📢📣📣
விட்டா கெடைக்காது!📢📢📣📣
ஏற கெனவே கொஞ்சம் கொஞ்சமாக உட் சிடி கோஷ்டி கார்டூன்ல நெ1ஐ நோக்கி முன்னேறி வரும் சூழலில், லக்கி தன் அந்தஸ்தை தக்க வைப்பாரா????
Deleteநெருங்கிவரும் உட்சிடி கோமாளிகள் தங்களுக்கும், லக்கிக்கான தொலைவை குறைப்பார்களா?????
விடை தெரியும் நேரம் இது....!!!
///போனா வராது!📢📢📣📣
Deleteவிட்டா கெடைக்காது!📢📢📣📣///----
ஆம் ஆமாம், நெ1 ஸ்பாட்டும் அப்படித்தான்....
////"லூட்டி with லக்கி " - இந்தாண்டின் நமது ஆண்டுமலர் + டாப் கார்ட்டூன் நாயகரின் முதல் வருகை + அட்டகாசமான ஹார்டகவர் இதழும் கூட ! இரு புத்தம்புது சாகசங்கள் - முழுவண்ணத்தில் என்பதால் கார்ட்டூன் பிரியர்களுக்கு ஒரு கலக்கல் விருந்து காத்துள்ளது என்பேன் ! அதிலும் அந்த "திசைக்கொரு திருடன்" கதை செம ரகளையானது! டால்டன்கள் இரு ஆல்பங்களிலுமே பிரதான பங்கெடுக்கிறார்கள் என்றாலும் "தி.ஓ.தி" மாஸ் தான் ! டால்டன்கள் யோக்கியன்களாகவும், லக்கி முகமூடித் திருடனாகவும் மாறினால் - கூத்துக்குப் பஞ்சமிருக்குமா - என்ன ? State Bank of டால்டன் - இந்த மொள்ளமாறிச் சகோதரர்களை யோக்கியமான பேங்க்கர்களாக மாற்ற முற்படும் ஒரு தாய்மாமனின் கதை ! Again ஒரு சிரிப்பு மேளா தான் ! அட்டைப்படம் - ஒரிஜினல்கள் - நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணத்தில். ஹார்டகவர் புக்காக்கிப் பார்க்கும் போது இது செமையாய் ஸ்கோர் செய்கிறது////
Deleteஇத ஒரு 10 தபா படிங்க!!
எல்லாம் சொியா பூடும்!!
அலோ அலோ... இது மாதிரிப் பாடமெலாம் பல நூறு தடவை படிச்சாச்சி...!!!
Deleteஎது க்ளிக் ஆகும்னு அந்த பரமேஸ்வரன்தான் அறிவார்!!!
லக்கிலூக் கதைகளில் டால்டன் சகோதரர்கள் இருந்துவிட்டால் ரகளை பல மடங்கு தூக்கலாகவே இருக்கும்!
Delete'திசைக்கொரு திருடன்'ஐ எடிட்டரே இவ்வளவு சிலாகித்திருப்பதை வைத்துக் கணித்தால் - பக்கத்துக்குப் பக்கம் கெக்கபிக்கே உறுதி என்று தெரிகிறது!!
'ஸ்டேட் பாங்க் ஆஃப் டால்டன்ஸ்' கூட ரொம்ப நாளாக எதிர்பார்க்கப்படும் கதைதான்!(நன்றி : கிட்ஆர்டின் கண்ணன்)
லக்கிலூக் கதை சிங்கிளாக வந்தாலே உற்சாகம் பிய்த்துக்கொள்ளும்... இதிலே 'டபுள் டமாக்கா' வேறு!!
சிவகாசிக்காரவுக சீக்கிரமா புத்தகங்களை அனுப்பிவச்சா தேவலை!!
///ஸ்டேட் பாங்க் ஆஃப் டால்டன்ஸ்' கூட ரொம்ப நாளாக எதிர்பார்க்கப்படும் கதைதான்!(நன்றி : கிட்ஆர்டின் கண்ணன்)////----
Deleteஉள்குத்து,வெளிக்குத்துனு ஏதும்.........???
நோ உள்/வெளி குத்து!! ஏற்கனவே அதை ஆங்கிலத்தில் படிச்ச நம்ம கி.ஆ.க என்கிட்டே இந்தக் கதையைப் பற்றி சிலாகிச்சுருக்கார், அவ்வளவே!!
DeleteO yeah!
Delete🎁🎁 🍸🍸 🍾🍾💖💖💖💨💨💨💦
லுக்கி லூ.......க்
Delete🕛🕧🕐🕜🕔🕟🕓🕞🕒🕝🕑🕠🕕🕡🕖
🌑🌒🌓🌔🌕🌖🌗🌘🌙🌚 ⏲⏱⌛⏳⌚
அனுப்பியாச்சுன்னு பஜ்ஜ்ஜ்ஜி சொலுலுதே, ,,,உண்மையா சார்
Deleteபஜ்ஜ்ஜியா??!!
Deleteமுட்டை பஜ்ஜியா?
Deleteமெளகா பஜ்ஜியா?
/// நம்ம கி.ஆ.க என்கிட்டே இந்தக் கதையைப் பற்றி சிலாகிச்சுருக்கார், அவ்வளவே!!///
Deleteஉண்மைதான் குருநாயரே.!!
நாலு டால்டன்களின் அலப்பறையே விலாநோகச்செய்யும்போது ஐந்தாவதாக மார்சல் டால்டன்னு ஒரு தாய்மாமன் களமிறங்கி ..நம்ம டால்டன்களை கௌரவமான பாங்கர்களாக மாற்ற முயல்வதும் ..தொடரும் சம்பவங்களும் ...சிரிச்சுண்டே இருக்கலாம்.!
தமிழில் நம்ம எடிட்டரின் கைவண்ணத்தில் கேட்கவா வேண்டும்.. சிரிப்புக்கு பஞ்சமே இருக்கப்போவதில்லை.!
அதிலும் வழிப்பறி கொள்ளையர்களும் ..., சஸ்பெண்டர் வியாபரி ஒருத்தரும் ...அய்யய்யோ ..விட்டா முழுக்கதையையும் சொல்லிடுவேன் ஹிஹி....டாட்டா ...!!
இந்த வருடத்தின் டாப் மோஸ்ட் ஹிட்டாக ஆண்டுமலர் இருக்கும்.!
(கார்ட்டூன் வரிசையில் ...ஏன்னா டெக்ஸ் 70 காத்திருக்கே ..)
மாடஸ்டி பிளைசி
Delete///மாடஸ்டி பிளைசி///
Deleteஇந்த ஆபிஸருக்கு என்ன ஆச்சு!
///இந்த ஆபிஸருக்கு என்ன ஆச்சு///
Deleteஅவர் இளவரசியின் அதிதீவிர ரசிகர்! நல்ல எழுத்துத் திறமை கொண்டவர். ஆனால் அதிகம் எழுதுவதில்லை!
///
Deleteஇந்த வருடத்தின் டாப் மோஸ்ட் ஹிட்டாக ஆண்டுமலர் இருக்கும்.!///
டெபனட்லி டெபனட்லி!
நெய்வேலி புத்தக கண்காட்சியில் நமது குழுமம் இந்தாண்டு 29 ஜுன் அன்று பங்கேற்கிறதா ஆசிரியரே?
ReplyDeleteஸ்டால் எண் என்ன?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWow! Super!
DeleteXIII-ன் இரண்டாவது தொடரின் கடைசி ஆல்பமா????? அதுதான் போன வருடம் லயனில் வெளிவந்ததே! (THE END?)
Deleteஇரட்டை சதம்!
ReplyDeleteவாழ்த்துக்கள் சார். 😃😃😃
Delete