நண்பர்களே,
வணக்கம். இரத்தப் படலத்தின் பொருட்டு நண்பர்களின் மௌனங்கள் கலைவது சுவாரஸ்யமான சில பல சிந்தனைகளையும் முன்வைக்க உதவியுள்ளதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி ! விலை சார்ந்தும், ஆண்டின் காமிக்ஸ் பட்ஜெட்கள் குறித்தும் நண்பர்கள் நம் நலன் கருதி வெளிப்படுத்தியுள்ள அபிப்பிபிராயங்களும் நிச்சயமாய் கவனத்துக்கு உரியவைகளே !! ஏற்கனவே இது நாம கடந்து வந்துள்ளதொரு தலைப்பு தான் எனினும், இந்த "குண்டு புக்" காதல் வேளையில் நண்பர்களின் words of caution பற்றிய அளவளாவல் தவறில்லை என்று நினைத்தேன் ! So விலை சார்ந்த எண்ணங்கள் பற்றிய எனது two cents...! கண்ணுக்குத் தெரியும் சிக்கலைச் சொல்லி விட்டீர்கள் - சுலபமாய் ! புலப்படா விடையைத் தான் தேடி வருகிறேன் 5 ஆண்டுகளாய் ! இது விலைகளுக்கோ ; எண்ணிக்கைகளுக்கோ நான் செய்திடும் நியாயப்படுத்தலும் அல்ல ; உங்கள் சிந்தனையினில் குறை காணும் முயற்சியுமல்ல ! மாறாக - ஒரு unique சூழலில் ஒற்றையாய் அமர்ந்திருக்கும் எனது நிலையின் பகிர்வு மாத்திரமே !
கோழி முதலில் வந்ததா ? முட்டை முதலில் வந்ததா ? என்றால் நம்மைப் பொறுத்தவரையிலும் கோழி தான் முதலில் என்பேன் ! காமிக்ஸ் ரசிப்போரின் எண்ணிக்கை '90 களின் நடுவிலிருந்து சிறுகச் சிறுகக் குறைந்து கொண்டே சென்று - 2000 -களின் மதியினில் ஒரு மிகக் குறுகிய வட்டத்தினுள் நிலை கொண்ட பின்னே தான் நமது version 2 .0 நடைமுறைக்கு வந்தது ! ("நீ அன்றைக்கே இதை இப்படிச் செய்திருக்க வேண்டும் ; அதை அப்படிச் சரிபடுத்தியிருக்க வேண்டுமென" ஆங்காங்கே அறிவுரைகள் விரைவில் நல்கப்படும் என்பதை அறிந்தும் தான் இதைப் பதிவிடுகிறேன் ;simply because '95 க்குப் பிற்பாடான அந்த இருண்ட நாட்களின் சிரமங்களையும், வலிகளையும் அறிந்தவன் நான் மாத்திரமே என்பதால் !) பத்து ரூபாய்க்கு வெளியாகிய பிரான்க்கோ-பெல்ஜியக் கதைகளை மாதம் வெறும் 4000 பிரதிகள் மாத்திரமே அச்சிட்டு, அவற்றுள் 1500 ஐ வருஷங்களாய்க் கையிருப்பில் வைத்திருந்தது தானே 2010 வரைக்குமான நிலவரம் ? ரூ.200 விலையில் 852 பக்கங்களோடு இரத்தப் படலம் B & W வெளியாகி அவற்றை விற்பனை செய்திட நாக்குத் தொங்க 20 மாதங்கள் காத்திருந்ததும் நாம் அறிந்த விஷயம் தானே ? So காமிக்ஸ் வாசிப்பினைத் தீர்மானிக்கும் ஒரு இறுதிக் காரணியாக விலைகளைப் பார்த்திடுவதில் எனக்கு உடன்பாடில்லை !
இதோ - ஒவ்வொரு ஆண்டும் புத்தக விழாக்களில் நம்மை அடையாளம் கண்டு, அந்நேரம் ஆர்வமாய் காமிக்ஸ் வாங்கிடும் வாசகர்கள் அடுத்த புத்தக விழா வரையிலும் தம் கொள்முதல்களையோ ; வாசிப்புகளையோ தொடர்வதில்லை என்பது தானே யதார்த்தம் ? Granted - சென்னை போன்ற பெருநகரினில் நமது ஏஜென்ட்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவே ! ஆனால் ஈரோடு / சேலம் போன்ற நகரங்களில் குறைந்த பட்சம் ஐந்தாறு கடைகளில் நமது இதழ்கள் கிடைக்கின்றன எனும் போது - நிச்சயமாய் அங்கே சின்னதொரு மெனக்கெடலின் பின் நம் இதழ்களைத் தேடித் பிடிப்பதில் சிரமம் இருந்திடக் கூடாது தானே ? But 5 ஆண்டுகளும் ; 5 புத்தக விழாக்களும் கழிந்தான நிலையிலும் அங்கெல்லாம் நமது விற்பனை எண்ணிக்கைகளில் ஒரு குட்டியூண்டு முன்னேற்றம் கூடக் கிடையாது என்பது தான் நிஜம். So நமக்குப் பிடிக்கிறதோ - இல்லையோ ; அதனை ஏற்றுக் கொள்வது கசப்பாக இருக்கிறதோ - இல்லையோ - காமிக்ஸ் வாசிப்பென்பது இன்னமுமே ஒரு வெகுஜன ரசனையுமல்ல ; அத்தியாவசியமுமல்ல என்பதே bottomline !!
இது தான் நமக்குக் கிட்டியுள்ள களம் எனும் பொழுது, அதனை எண்ணி விசனப்பட்டுக் கொண்டிருந்த நாட்கள் தான் நமது version 1.0 -ன் இறுதி வேளைகள் ! ஆனால் அதுவே நம் பலமாகவும் மாறிட வாய்ப்புண்டு என்ற புரிதல் பிறந்ததன் பலனே version 2.0 ! சர்க்கஸ் கூடாரம் அமைத்து, ஊர் கூடிக் கைதட்டும் பொழுது கம்பி மேல் நடப்பதும் சாகசமே ; சாலையோரமாக கம்பி கட்டி விட்டு, டோலக்கு அடித்துக் கொண்டே "பாருங்க ஷாமியோவ் !!" என்றபடிக்கே அதே கம்பி மேல் பத்துப் பேர் முன்னே நடப்பதும் கூட சாகசமே என்று புரிய எனக்கும் அவகாசம் அவசியப்பட்டது ! அந்தப் புரிதலுக்குப் பின்பாகவே மாற்றங்கள் வடிவங்களிலும், விற்பனை பாணிகளிலும், விலைகளிலும் அரங்கேறின ! சின்னதொரு வட்டமே ; ஆனால் காமிக்ஸ் நேசத்தில் எஞ்சி நிற்கும் கூட்டம் ! அகவைகளில், ரசனைகளில் அடுத்த லெவெலில் நிற்கும் அணி ! அவர்களது ரசிப்புகளுக்கு மட்டுமன்றி, மாறிவிட்டிருக்கும் சந்தையின் தர அளவுகோல்களுக்குமே நியாயம் செய்திடும் ஒரு மினிமம் தரத்திற்கு நம்மை நாமே reinvent செய்து கொள்ளல் அவசியம் என்பது காலத்தின் கட்டயாமாகி நின்றது !
வடிவம், தரம், விலைகள்,உற்சாகம் என சகலமும் புதுசாகி நின்ற பொழுது நம் பயணம் வேகமெடுத்தது ! ஆனால் அன்றைக்கே எனக்குள் இந்த விலைகள் குறித்த நெருடல் இல்லாதில்லை ! எங்களது அலுவலகத்துக்கு கையில் நூறு ரூபாயை மட்டுமே வைத்துக் கொண்டு வந்து - டபுள் த்ரில் ஸ்பெஷலையும் ; இன்னும் ஏதோவொரு இதழையும் பெருமூச்சோடு பார்த்துக் கொண்டு நின்ற சிறுவனைப் பற்றி எழுதியிருந்தது நினைவுள்ளது ! ஆனால் சர்க்கஸ்களுக்கே கூட்டம் சேர நாக்குத் தொங்கும் இன்றைய நாட்களில், ஒரு சாலையோர சாகஸக்க்காரனுக்கு உள்ள limitations புரிபட்டதால் - வேறு வழியின்றி தொடர்ந்திட்டோம் !
நாட்கள் நகர நகர, நமது இந்த இரண்டாம் வருகை ஒரு fluke அல்ல ; இம்முறை இது தொடரப் போகும் நிஜமே என்பது உங்களுக்கும், எங்களுக்கும் ஊர்ஜிதமான போதே நம் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகமானது தானே நாம் கடந்து வந்துள்ள நாட்கள் ? ஒரு NBS திறந்துவிட்ட கனவுகளின் கதவுகள் ஓராயிரமல்லவா ? ஆயிரம் ரூபாய்க்கொரு மறுபதிப்பென்பது உங்கள் கனவுகளை நிஜமாக்கும் எங்கள் பணிகளின் ஒரு பகுதி தானே ?
ஒரு பொழுதும் மறுபதிப்புகள் பற்றிய எனது சிந்தைகளை நான் இரகசியமாக்கியவனல்ல ! Given a choice மாயாவிகாருவோ ; மின்னும் மரணங்களோ ; இரத்தப் படலங்களோ நிச்சயமாய் எனது அட்டவணையின் மேற்பகுதியில் இருந்திருக்கவே செய்யாது ! ஆனால் உங்கள் உற்சாகங்கள் தான் நாமின்று surf செய்யும் அலைகளின் மேலடுக்கு எனும் பொழுது அந்த உற்சாகங்கள் மீது ஈரத் துணியைப் போட்டு வைப்பது, நமக்கு நாமே கால்கட்டைப் போட்டுக் கொள்வதற்கு சமானம் என்றே நான் பார்க்கிறேன் !
ஒரு பொழுதும் மறுபதிப்புகள் பற்றிய எனது சிந்தைகளை நான் இரகசியமாக்கியவனல்ல ! Given a choice மாயாவிகாருவோ ; மின்னும் மரணங்களோ ; இரத்தப் படலங்களோ நிச்சயமாய் எனது அட்டவணையின் மேற்பகுதியில் இருந்திருக்கவே செய்யாது ! ஆனால் உங்கள் உற்சாகங்கள் தான் நாமின்று surf செய்யும் அலைகளின் மேலடுக்கு எனும் பொழுது அந்த உற்சாகங்கள் மீது ஈரத் துணியைப் போட்டு வைப்பது, நமக்கு நாமே கால்கட்டைப் போட்டுக் கொள்வதற்கு சமானம் என்றே நான் பார்க்கிறேன் !
முன்பெல்லாம் ஒரு நூறு ரூபாய் இதழைக் கொண்டு நான்கு வாரங்களையும், நாலைந்து பதிவுகளையும் நாம் ஒப்பேற்றினோம் ! ஆனால் இன்று யோசித்துப் பாருங்களேன் நிலவரத்தை :
- 4 பாகங்கள் கொண்ட ட்யுராங்கோ
- ஒரு முழுநீள டெக்ஸ்
- ஒரு ப்ளூ கோட் சாகசம்
- ஒரு மாயாவி மறுபதிப்பு
நமக்குப் பத்து நாட்களுக்குத் தாக்குப் பிடிக்க மாட்டேன்கிறது ! ட்யுராங்கோ என்றோ ஒரு தூர நாளில் வெளியானதொரு இதழாய்க் காட்சி தருவது நிச்சயம் எனக்கு மட்டுமல்ல என்பேன் ! Of course - 2016 -ன் பாதி இதழ்களையே இன்னமும் படிக்க நேரமின்றியுள்ள நண்பர்களும் கணிசமே ; ஆனால் அதன் பொருட்டு எண்ணிக்கைகளில் பிரேக் போடுவதென்பது நம் சின்ன வட்டத்தின் எனர்ஜிக்கும் பிரேக் போட்டது போலாகிடும் என்பதே எனது பயம் !
இதோ - இப்போது கூட இந்த இரத்தப் படலம் முயற்சியானதை நடைமுறைக்குக் கொணர்வதில் குறைந்த பட்சம் ரூ.இருபது லட்சம் சம்பந்தப்பட்டுள்ளது ! And இதன் பணிகளில் ஒட்டு மொத பெண்டும் கழன்றே போகுமென்பதிலும் இரகசியமேது ? ஆனால் இது தான் நம்மை சந்தோஷம் கொள்ளச் செய்யும் தாரக மந்திரமெனில், அதற்கு நாங்கள் ரெடி என்று கைதூக்கி நிற்பது கடமையன்றோ ? இந்தப் பதிவின் துவக்கத்தில் நான் சொன்ன விஷயத்தை இங்கே அடிக்கோடிட்டு முனைகிறேன் !! நானிருப்பதொரு "unique" இடத்தினில் ! கம்பிமேல் நிற்கும் எனக்கு, மேலே வானமும், கீழே மண்சாலையும் தான் என்றாலும், உங்களின் சிறுசிறு கனவுகளை நிஜமாக்கும் சாவியுமே என்னிடம் இருப்பது தானே தவிர்க்க இயலா யதார்த்தம் ? எனது தலையாட்டலோ, மறுப்போ தானே - உங்களின் ஒரு ஆதர்ஷ இதழின் வருகைக்கும், இல்லாமைக்கு இடையிலான வித்தியாசம் ? சத்தியமாய் இதனை அகங்காரத்தின் வெளிப்பாடாய்ச் சொல்லவில்லை ; ஆனால் சில வேளைகளில் எனது அவஸ்தைகளின் முழுப் பரிமாணங்களும் கண்ணுக்குப் புலப்படுவது இல்லை என்பதால்தான் இதனை இங்கு குறிப்பிட வேண்டிப் போகிறது !
Oh yes ...ஒரு ஆதர்ஷ உலகினில், நிறையப் பேர் காமிக்ஸ் படிக்கவும், நிறைய நிறுவனங்கள் விளம்பரங்கள் தரவும் தயாராகும் வேளையில் விலைகள் தாமாய் கீழிறங்கி விடும் ! ஆனால் அந்த ஆதர்ஷ உலகு தோர்கல் தேடித் திரியும் மூன்றாம் உலகை விடக் கூடுதல் தூரத்திலிருக்கும் பொழுது என் கட்டுக்குள் உள்ள சமாச்சாரங்கள் சொற்பம் தானே guys ?
இரத்தப் படலத்தை சைஸ் சுருக்கிடும் பட்சத்தில் விலையினை சற்றே கட்டுக்குள் கொண்டு வர வாய்ப்புண்டு ! Maybe TEX கதைகளின் சைசில் அதனை முயற்சிக்கலாம் தான் ! உங்களுக்கு ஓ.கே. எனில் I'm game for it !!
வேறெதெற்காக இல்லையெனினும் - வேலைப் பளுவின் காரணமாகவேணும் அடுத்தாண்டினில் நமது நம்பர்களை மட்டுப்படுத்துவது பற்றி நிச்சயம் சிந்திப்போம் !! உங்கள் எண்ணங்களிலுள்ள நியாயம் நிச்சயம் என் கவனத்தைத் தப்பவில்லை ! And நம் பொருட்டு, நீங்கள் கொள்ளும் அக்கறைகளும், தொலைநோக்குச் சிந்தனைகளும் எத்தனை உயர்வானவை என்பதும் புரிகிறது !! So நிச்சயமாய் துளியும் வருத்தமுமில்லை !
அப்புறம் இந்த "1250 குண்டு"புக்கை இப்போதைக்கு உங்கள் தலைகளில் போட்டு விடுவேனோ என்ற பயம் வேண்டாம் !! இதனை approve செய்யவே மாதங்கள் பிடிக்கும் ; அப்புறம் அதன் உரிமைகளை வாங்கிட சில மாதங்கள் & அதன் பின்னே இதனில் பணியாற்ற பல பல மாதங்கள் !! So அதற்கு நிறையவே நேரமுள்ளது !
அப்புறம் நடப்பாண்டினில் ஏற்கனவே பிராமிஸ் செய்திருந்த இரத்தக் கோட்டை & maybe அந்த இன்னொரு cowboy ஆல்பம் மட்டுமே அறிவிக்கப்பட்டதைத் தாண்டி வரவிருப்பவை !! அவையும், புத்தக விழாக்களின் பொழுது கூடிடும் நண்பர்களின் உற்சாக லெவெல்களை அதிகரிக்கும் பொருட்டே தவிர்த்து - ஆண்டின் நம் turnover-ஐ அதிகம் செய்திடும் நோக்கிலானதல்ல என்பதை நீங்களும் அறிவீர்கள் !
Before I sign off - இரத்தப் படலத்திற்கென நண்பர் ராகவன் பரிந்துரைக்கும் அந்த "18 மாதம் - 18 இதழ்கள் - நார்மல் விலை - ஒரு slipcase " என்ற அந்த option பற்றியும் கொஞ்சம் சிந்திக்கலாமே guys ? ரூ.75 விலையில் 18 நார்மல் சந்தா இதழ்கள் எனும் பொழுது ரூ.1350 + அந்த slipcase கிரயமாய் இன்னுமொரு ஐம்பது என்று வைத்துக் கொண்டாலும், ரூ.1400-ல் வேலை ஆகிவிடும் தான் !! அனைவருக்கும் கிடைத்தது போலவுமிருக்கும் ; விலைகளும் சல்லிசாய் (at least in comparison !!!) அமைந்தது போலவுமிருக்கும் ! நான் முன்னமே சொன்னது போல, மறுபதிப்புப் பந்துகள் என்றைக்குமே உங்கள் கோர்ட்டில் தான் ! அவற்றை எவ்விதம் ஆடச் சொல்கிறீர்களா, அதன்படி நான் ரெடி ! கோஹ்லியும், கேதார் ஜாதவும் ஆடியது போல் ஆடுவதா ? சற்றே நிதானமாய் ஆடுவதா ? சொல்லுங்கள் - செய்கிறோம் !! Bye for now all !!
P.S : நேற்றைக்கு "குண்டுக் கட்சி" ; இன்றைக்கு "நிதானக் கட்சி" என்று jumping jack ஆக நான் காட்சிதரலாம் என்பது புரிகிறது ! இது புது இதழ்கள் சார்ந்ததொரு தீர்மானமாக இருப்பின், சரியோ-தப்போ - நிச்சயமாய் எனது எண்ணங்களை செயல்படுத்திக் கொள்ள நொடியும் தயங்கியிருக்கமாட்டேன் ! ஆனால் ஒரு மறுபதிப்பு - வாசக ஆர்வங்கள் பொருட்டு எனும் பொழுது - அதனில் யார் மனதும் கோணிட வேண்டாமே என்பதே எனது அவா ! !!
அதே போல இந்தப் பதிவின் பொருட்டு - ""இ.ப."" முயற்சியை மூட்டை கட்டி விட்டதாகவோ, பின்வாங்கிவிட்டதாகவோ பொருள்படுத்திக் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ் ? இரத்தப் படலம் - ஆகஸ்ட் 2018 -க்கு நிச்சயமாய் உண்டு ! அதனை best ஆக நடைமுறை காணப் செய்ய வெவ்வேறு வழிவகைகளைத் தேடித் கொள்ள முயற்சிப்பதே தற்போதைய விவாத மேடைகளின் நோக்கம் !
P.S : நேற்றைக்கு "குண்டுக் கட்சி" ; இன்றைக்கு "நிதானக் கட்சி" என்று jumping jack ஆக நான் காட்சிதரலாம் என்பது புரிகிறது ! இது புது இதழ்கள் சார்ந்ததொரு தீர்மானமாக இருப்பின், சரியோ-தப்போ - நிச்சயமாய் எனது எண்ணங்களை செயல்படுத்திக் கொள்ள நொடியும் தயங்கியிருக்கமாட்டேன் ! ஆனால் ஒரு மறுபதிப்பு - வாசக ஆர்வங்கள் பொருட்டு எனும் பொழுது - அதனில் யார் மனதும் கோணிட வேண்டாமே என்பதே எனது அவா ! !!
அதே போல இந்தப் பதிவின் பொருட்டு - ""இ.ப."" முயற்சியை மூட்டை கட்டி விட்டதாகவோ, பின்வாங்கிவிட்டதாகவோ பொருள்படுத்திக் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ் ? இரத்தப் படலம் - ஆகஸ்ட் 2018 -க்கு நிச்சயமாய் உண்டு ! அதனை best ஆக நடைமுறை காணப் செய்ய வெவ்வேறு வழிவகைகளைத் தேடித் கொள்ள முயற்சிப்பதே தற்போதைய விவாத மேடைகளின் நோக்கம் !
First
ReplyDeleteGood after noon sir.
ReplyDeleteMaybe TEX கதைகளின் சைசில் அதனை முயற்சிக்கலாம் தான் !vendam sir தலை இல்லா போராளி சைசில் தான் வேண்டும். விலை நிர்ணயம் செய்து முன் பதிவு தொடங்கி வையுங்கள் சார்.
ReplyDeleteSridhar : நடக்க முனைவதே பிரயத்தனமாய் உள்ள சமயம், பறக்க ஆசை வேண்டாமே சார் ? "தலையில்லாப் போராளி" சைஸ் விலைகளை அபத்த உயரத்துக்கு கொண்டு சென்று விடும் !
DeleteKandipaka Tex size vendam. Padangaluku nyam seivathu pola irukkatum. Oru murai seivathu .. kaarsanin kadanthakalam pola akivida vendam pls
Deleteவிளக்கங்கள் புரிகிறது சார்!!! நன்றிகளும் கூட!!!!
ReplyDelete2016-ல் நமது வெளியீடுகளின் தரம் உலக தரத்துக்கு இணையானவை சார்..
தொடரும் சில ஆண்டுகளில் அதனை நிலைத்தன்மை என யாவரும் நினைக்கும்வண்ணம் ஸ்தாபிக்க வேண்டும் என்ற பேரவா மட்டுமே உண்டு..
எண்ணிக்கை, விலை எதுவாயினும் வணிக ரீதியில் நீங்கள் அணுகுவதில்லை...( ஒருவகையில் இதுவும் குறையே ...எங்களுக்கு மட்டுமே லாபம்)
படித்துவிட்டு வருகிறேன்
ReplyDeleteIn between 1 to 10th
ReplyDeleteநண்பர் ராகவன் அவர்களின் கருத்தும் சிறப்பு..!ஆனால் இந்த விலைகள் மட்டும் என் போன்றோரை மிரட்டுது சார்..!
DeleteArun Kamal : ரூ.75 வீதம் என்ற விலைகளும் மிரட்டலாய்த் தோன்றும் பட்சத்தில் - back to black & white என்பது மட்டும் தானே எஞ்சி நிற்கும் option நண்பரே ?
Deleteஅனைவருக்கும் மதிய வணக்கம்.
ReplyDeleteஅனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteEach month one xiii at doorsteps. A good idea. Rates too reduced. Wrappers for every issue very good one for preservation of the book. I accept this option. But most of our readers needs must be selected sir. Thanks.
ReplyDeleteVijayan sir,
ReplyDelete18 books 18 months is a good idea. Provided the first book release should start in March 2017 :)..
We will get 18 * 2 = 36 different wrappers too.
I agree with Raghavan's idea of 18books may be we will have summer SPL as 2 book packs so we could complete in 12months
DeleteYeah.me too agree with you kirish. Its a good idea.
Deleteமின்னும் மரணம் புத்தக அளவில் (9+9) 2 பாகங்களாக ?
ReplyDeleteநண்பர் ராகவன் கூறியுள்ள யோசனை - தனி சந்தாவில் 18 மாதங்களில் 18 இதழ்கள் - நல்ல யோசனையாகப்படுகிறது.
ReplyDeleteமாதத்தில் ஒரு இதழ் மட்டும் எனும்போது புது வாசகர்களும் மலைப்பு தோன்றாமல் படிக்க வசதியாக இருக்கும்.
மேலும் இப்படி தனி இதழ்களாக தொடர்ந்து வெளியிடும் போது கதையோட்டத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் புது வாசகர்கள் தொடரந்து வாங்கவும் ஒரு தூண்டுதலாக இருக்கும். இதன் மூலம் மற்ற இதழ்களையும் அவர்கள் வாங்கலாம். ஒரே இதழாக வெளியிடும் போது இந்த ஆர்வம் இருக்குமா என்பது தெரியாது. ஒரு கதையை தொடராக படிக்கும் போது இருக்கும் சுவாரஸ்யம் அதை ஒரே இதழாக படிக்கும்போது அவ்வளவாக இருப்பதில்லைதானே..
//மேலும் இப்படி தனி இதழ்களாக தொடர்ந்து வெளியிடும் போது கதையோட்டத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் புது வாசகர்கள் தொடரந்து வாங்கவும் ஒரு தூண்டுதலாக இருக்கும். இதன் மூலம் மற்ற இதழ்களையும் அவர்கள் வாங்கலாம். ஒரே இதழாக வெளியிடும் போது இந்த ஆர்வம் இருக்குமா என்பது தெரியாது. ஒரு கதையை தொடராக படிக்கும் போது இருக்கும் சுவாரஸ்யம் அதை ஒரே இதழாக படிக்கும்போது அவ்வளவாக இருப்பதில்லைதானே..//
DeleteAcceptable valid point....இருந்தாலும் குண்டு புக் வேணுமே....
அட மொத்தமா வந்ததும் பைண்டிங் போட்டுடுங்க சாரே.
Deleteஅட இது நல்லாயிருக்கே.
Deleteஇரத்தப்படலத்தின் பின்புலம், அதன் Classical Value, 18 பாகங்கள் கொண்ட ஒரு evergreen காமிக்ஸ் தொடர் போன்ற விஷயங்கள் புது வாசகர்களையும் சென்றடைய வேண்டும்.
ReplyDeleteஇரத்தப்படலத்தின் முதல் பாகத்தை முதன்முதலில் படிக்கும் எந்த ஒரு பது வாசகரும் அது தரும் அனுபவத்தை மறக்க முடியாது. முதல் பேனலில் தொடங்கும் வில்லியம் வான்ஸின் தூரிகை ஜாலம் கதையின் முடிவில் அதன் உச்சத்தை அடைந்திருக்கும். கதையின் முடிவில் நம்மை சூழும் சோகமும் கேள்விகளும் தரும் அந்த அனுபவம் காமிக்ஸ் இதழ்களின் மேல் தனி மரியாதையை ஏற்படுத்தும். மேலும் பல காமிக்ஸ் இதழ்களை தேடிப்பிடித்து படிக்க வைக்கும்.
இந்த அனுபவம் ஒரே இதழாய் படிக்கும் போது கிடைப்பது கடினம்.
Delete
உங்கள் கருத்தே என்கருத்தும்
Deleteவழி மொழிகிறேன்
குண்டு புக்கை விட தனிதனி ழ்களே மார்க்கட் லீடர்
Delete////இரத்தப்படலத்தின் முதல் பாகத்தை முதன்முதலில் படிக்கும் எந்த ஒரு பது வாசகரும் அது தரும் அனுபவத்தை மறக்க முடியாது. முதல் பேனலில் தொடங்கும் வில்லியம் வான்ஸின் தூரிகை ஜாலம் கதையின் முடிவில் அதன் உச்சத்தை அடைந்திருக்கும். கதையின் முடிவில் நம்மை சூழும் சோகமும் கேள்விகளும் தரும் அந்த அனுபவம் காமிக்ஸ் இதழ்களின் மேல் தனி மரியாதையை ஏற்படுத்தும். மேலும் பல காமிக்ஸ் இதழ்களை தேடிப்பிடித்து படிக்க வைக்கும். ////
Delete+1
அருமையான வரிகள்! செம!
///இந்த அனுபவம் ஒரே இதழாய் படிக்கும் போது கிடைப்பது கடினம்.///
-1
Sir, I am stand with d idea of RAGHAVAN We r already spending nearly 5K for an year for comics. So, another pre booking for 2000Rs is not advisable... So kindly re-release iratha padalam each part for RS 75/-. Hope tjis will be acceptable bu all.
ReplyDeleteவாவ் சர்ப்ரைஸ் பதிவு.
ReplyDelete//18 மாதம் - 18 இதழ்கள் - நார்மல் விலை - ஒரு slipcase "//
ReplyDelete-1
//இரத்தப் படலத்தை சைஸ் சுருக்கிடும் பட்சத்தில் விலையினை சற்றே கட்டுக்குள் கொண்டு வர வாய்ப்புண்டு ! Maybe TEX கதைகளின் சைசில் அதனை முயற்சிக்கலாம் தான் ! உங்களுக்கு ஓ.கே. எனில் I'm game for it !! //
ReplyDelete-1
//உங்களின் சிறுசிறு கனவுகளை நிஜமாக்கும் சாவியுமே என்னிடம் இருப்பது தானே தவிர்க்க இயலா யதார்த்தம் ? எனது தலையாட்டலோ, மறுப்போ தானே - உங்களின் ஒரு ஆதர்ஷ இதழின் வருகைக்கும், இல்லாமைக்கு இடையிலான வித்தியாசம் ?//
ReplyDeleteமறுக்க இயலா யதார்த்தம்..
அனால் எங்களை திருப்தி படுத்துவதென்பது ரொம்ப கடினம் Sir...இதுவும் கூட மறுக்க இயலா யதார்த்தம்..
Please give me atleast 2 kundu book sir
ReplyDeleteஎன்னை பொறுத்தவரை இந்த 18 இரத்தப்படலம் புத்தகங்களுக்கு பதில் 18 புது கதைகளை படிக்கலாம் தட்ஸ் ஆல். புதிய இரத்த படல கதைகளை படித்து இதன் மீது வெறுப்பு வந்ததுதான் மிச்சம்.
ReplyDeleteஇரத்த படலம் என்னை பொருத்தவரை WASTE OF TIME & MONEY ....எதனை பேர் அதை படிப்பார்கள் என்று கூட தெரியாது
Delete////இரத்த படலம் என்னை பொருத்தவரை WASTE OF TIME & MONEY ....எதனை பேர் அதை படிப்பார்கள் என்று கூட தெரியாது///
Delete-1
'இரத்தப்படலம் முழுத்தொகுப்பும் வேண்டும். கிடைக்குமா?' என்று நான் பங்குகொண்ட எல்லா புத்தகத் திருவிழாக்களிலும் சரமாரியான விசாரிப்புகளைச் சந்தித்திருக்கிறேன்! அவர்களில் சிலர் இதற்குமுன் காமிக்ஸே படித்திருக்காதவர்கள் என்பதும் ஒரு ஆச்சர்யமான உண்மை!
படிக்க ஆரம்பித்துவிட்டால் நிறுத்தவே மனமிருக்காது என்பதே இரத்தப்படலத்தின் மாயாஜாலம்!
மறுக்க முடியாத உண்மை செயலாளரே
Deleteஅசைக்க முடியா உண்மை ஈவி
Deleteஇரத்தப் படலம் மறுபதிப்பில் ஒரே இதழாக, 3 தனித் தனி இதழாக என ரிஸ்க் எடுப்பதற்கு பதில், "18 மாதம் - 18 இதழ்கள் - நார்மல் விலை - ஒரு slipcase " என்பது ஒரு safe zone. ஏற்கனவே ஒரு முழு தொகுப்பாக b / w வந்த இதழ் இப்போது ஆர்ட் பேப்பர் & வர்ணத்திற்காகவும் எனும் போது எப்படி வந்தால் என்ன? மறுபதிப்பிற்கான முழு இதழ் எனும் போது அதில் செலவாக்கக்கூடிய உழைப்பும், முதலீட்டையும், நேரத்தையும் வேறொரு புதிய கதைகள் கொண்ட "குண்டு" இதழுக்கு பயன் படுத்தலாம் எ . எ . க .
ReplyDelete18 பாகங்கள்-18 இதழ்கள்.i agree +111111111
ReplyDeleteஇதழை வெளியிட்டே ஆக வேண்டும் என முடிவு செய்து விட்டீர்கள் எனில் பெரும்பான்மையான வாசகர்கள் விருப்பம் எதுவோ அதை செய்வதே நலம் ஆசிரியரே.
ReplyDeleteதனித்தனி இதழ்கள் கூட ஒரு சுவராஸ்யமாகத்தான் இருக்கும்,
அதுக்காக குண்டு புக் கனவை சிதைத்து விடாதீர்கள்.
கடேசில ஒற்றை இதழாக கலெக்டர் எடிஷன் என்று பின்னொரு முறை கொண்டும் வர வாய்ப்புள்ளது சார்.
Deleteடியர் விஜயன் சார்,
ReplyDelete//நண்பர் ராகவன் பரிந்துரைக்கும் அந்த "18 மாதம் - 18 இதழ்கள் - நார்மல் விலை - ஒரு slipcase " என்ற அந்த option பற்றியும் கொஞ்சம் சிந்திக்கலாமே guys//
இது சிறப்பான யோசனையாகப் படுகிறது! வரவேற்புக்கு ஏற்ப அச்சுப் பிரதிகளை கூட்டிக் கொள்வதும் சாத்தியம். ஒரு மாதம் ஒரு இதழ், தொடரும் மாதம் இரு இதழ் என்ற வேகத்தில் சென்றால் ஒரே வருடத்திலும் முடித்து விடலாம்.
முதல் மற்றும் கடைசி இதழ்களைத் தவிர்த்து, மற்ற இதழ்களில் ஆசிரியர் பக்கம், வாசகர் பக்கம் போன்ற எந்த ஒரு கூடுதல் பகுதிகளும் வேண்டாம். அப்புறம் அந்த வெளிவராத 19வது இதழையும் slipcase-க்குள் நுழைத்து விடுங்களேன்?!
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மூன்று பாகங்கள் அடங்கிய தொகுப்பாக வெளியிட்டால், குண்டு புக்கு ஆர்வலர்களை திருப்தி படுத்தியது போலவும் இருக்கும் - ஒரு வருடத்தில் முடிந்தும் விடும்.
Delete////அப்புறம் அந்த வெளிவராத 19வது இதழையும் slipcase-க்குள் நுழைத்து விடுங்களேன்?!///
Delete+1
சார்...
ReplyDeleteXIII என்றாலே குழப்பம் தானோ. பாவம். எண்ணைப் போலவே அவரும் ராசி இல்லாதவரோ. இந்த கதையின் மறு பதிப்பு புத்தகத்தை, ஏற்கனவே வைத்து இருப்பவர்களும், வண்ணத்தில்கே ட்கிறார்கள் என்றால் அவர்கள் கண்டிப்பாக சாதாரண ரத்தபபடலம் இதழை உங்களிடம் எதிர் பார்க்கவில்லை. நாங்கள் எதிர்பார்ப்பது 3X6 or 6X3 ABS Classics தரத்தில். கார்ட்டூன் classics தரத்தில் தான் வரும் என்றால் எங்கள் கனவு இதழ் கனவாகவே போகட்டும்.
இதே போன்ற கோரிக்கையை அணைத்து கதைகளுக்கும் வைக்க போவதில்லை. மார்டின், ஜூலியா , டுரங்கோ எல்லாம் ஒரே மாதிரியாக இப்போது நீங்கள் வெளியிடுவதில்லை.கதைகளின் தன்மை , பிரமாண்டம் அவற்றின் பொருத்து ஹார்ட் கவர், வண்ணம் ஆகியவற்றை முடிவு செய்கிறீர்கள். அந்த மாதிரி இல்லாத காலகட்டத்தில் வெளியான கோட்டைகளையும்படலங்களையும் நல்ல தரத்தில் மறு பதிப்பாக வேண்டும் என்பது ஒரு சாராரின் கோரிக்கை.இதை வாங்கி படிக்காமல் பீரோவில் வைப்பதல்ல நோக்கம்.
போதுமான எண்ணிக்கை ஆதரவு இருந்தால் இதில் இறங்குங்கள். நீங்கள் 600 எண்ணிக்கை முன்பதிவில்வரவில்லை என்றால் திட்டத்தை கைவிட்டு விடுங்கள். நாங்கள் புரிந்து கொள்வோம். இதை மேலும் மேலும் அலசி ஆராய்வது மேலும் பதிவுகளின், விளக்கங்களின் எண்ணிக்கையைத்தான் அதிகப்படுத்தும். அதுமட்டுமல்ல இந்த விவாதங்கள் மேலும் வாசகர்களை பிளவுபடுத்துகிறது.
//இதை வாங்கி படிக்காமல் பீரோவில் வைப்பதல்ல நோக்கம்// +1
Delete//இந்த விவாதங்கள் மேலும் வாசகர்களை பிளவுபடுத்துகிறது// +1
////போதுமான எண்ணிக்கை ஆதரவு இருந்தால் இதில் இறங்குங்கள். நீங்கள் 600 எண்ணிக்கை முன்பதிவில்வரவில்லை என்றால் திட்டத்தை கைவிட்டு விடுங்கள்////
Delete+1
ஸ்ஸ்.......அப்பா.....ஒரே குழப்பமா இருக்கே!!!!!??????
ReplyDeleteஆசிரியர்
ReplyDeleteராகவன் சார்
நண்பர்கள் கிரிதரன்
பொடியன் அவர்கள்,
செல்வம் அபிராமி
மற்றும் பலரின் கருத்துகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
என்ன தான் உற்சாகம் என்றாலும் இதையெல்லாம் உதாசீனப்படுத்த முடியாது என்பது எதார்த்தம்.
நண்பர் ராகவன் கூறியுள்ளது சரியான யோசனையாகத்தான் படுகிறது.
மாதா மாதம் வரும் மறுபதிப்புகளுக்கு பதில் கூட இதனை கொண்டு வரலாம்.தனியாக கூட கொண்டு வரலாம்.
அதே சமயம் ஒரு வேண்டுகோள்
ஒவ்வொரு இதழும் HARD BOUND அட்டையில் வரவேண்டும்.விலை 75/-க்கு பதில் 100/- என்றாலும் சரியே.
மிக துல்லியமான அச்சுத்தரம் மற்றும் வண்ணங்களில்.ஒரிஜினல் சைஸ் தவிர வேறு முயற்சிகளும் வேண்டாமே ப்ளீஸ்....!!!
18 மாதங்கள் 18 இதழ்கள் என்பது மிகச்சிறப்பான யோசனை சார்..! இது அனைத்து தரப்பினரும் வாங்கிப்பயனடைய ஒரு நல்ல வழிமுறை...!
ReplyDelete+1111
Deleteசார், 18 தனி இதழ்களாக வருமெனில் தற்போதுவரும் XIII இதழின் அளவில் வருவதே சிறந்தது, மட்டுமல்ல இந்த புத்தகங்களை சேர்த்து வைக்க ஒரு பாக்ஸ் தந்தால் அனைத்தையும் பின்னர் ஒரு கலெக்ஷனாக அலங்காரமாக வைக்கவும் உதவும் :-)
ReplyDelete+1
Deleteமூன்று புத்தகங்களாய்,ஹார்டு பவுண்ட் அட்டையிலே,..
ReplyDeleteமூன்று மாத இடைவெளியிலே,,,
Atleast pls try - 18 பாகங்கள் x9 இதழ்கள் or 18 பாகங்கள் x 6 இதழ்கள்.
ReplyDelete18 புத்தகங்களாக வெளியிடுவது நல்லம் சார் இல்லை எனில் 3 பாகங்களாக பிரித்து வெளியிடவும் ஒற்றை புக்காக வெளியிட வேண்டாம் எங்களால் வாங்கி கொள்ள சிரமம் ஏற்படும் அப்படி வெளியிட்டால்
ReplyDelete18 இதழ்களாக ரத்தபடலம் வெளிவருவது சிறந்த யோசனை!
ReplyDeleteவாழ்த்துகள் முதலில் சார்...
ReplyDeleteஉலகத்தொலைக் காட்சிகளில் முதல்முறையாக,
"மூன்று நாட்கள்-மூன்று பதிவுகள் "
ஹாட்ரிக் பதிவடித்து புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கும் உங்களுக்கு பதிமூன்று கைதட்டல்கள் சார்...
Largo winch and Durango போல் இரட்டை அல்லது மூன்று with hard bound.
ReplyDeleteSir இரத்த படலம் வேண்டாம் என்று சொல்வது அது collecters Edison எங்களிடம் இருப்பதால் மட்டுமே மற்றபடி இப்போதைய சந்தா அதிகமல்லா அதனால் comics எண்ணிக்கையை குறைக்க வேண்டாம் அந்த விலைக்கு புதிய comics வந்தால் சந்தோஷபடுவோம் இரத்த படலம் வேண்டியவர்கு தரலாம்
ReplyDeleteராக்ஜியின் ஐடியா சூப்பர் சார்....
ReplyDelete12மாதங்களில் முடிகின்ற மாதிரி இந்த திட்டத்தை செயல்படுத்துங்கள் சார்.
இருப்பதிலேயே இதுதான் வண்ணத்தில் வெளியிடக்கூடிய ஆரம்ப விலைகள் எனும்போது பெரும்பாலான நண்பர்களை சென்றடைய இதுவே சிறப்பாக தெரிகிறது.
எங்கள் குண்டு புக் கனவை விட நிறைய நண்பர்களை இதழ் சென்றடைவதே இன்றியமையாதது சார். நண்பர்களாக இந்த சின்ன தியாகத்தை கூடவா செய்ய மாட்டோம்.
இரத்தக்கோட்டை குண்டு இந்த ஆண்டு குண்டு கனவை நிறைவேற்றவிடும்.
அடுத்த ஆண்டு ஏதாவது கதம்ப குண்டு தராமலா போய் விடப் போகிறீர்கள்.
எங்களுக்கு எதை எப்படி தரவேண்டும் என உங்களை விட சிறப்பாக அறிந்தவர்கள் உண்டோ??? சார்.
அந்த 1250பக்க குண்டை நிதானமாக பரிசீலித்து 2020வாக்கிலோ அதற்கு முன்னரோ முத்து 500வது இதழாக தந்து விடுங்கள் சார்.
எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்தது போலவும் ஆச்சு, எங்கள் குண்டு கனவுகள் நிதம் நிறைவேறியது போலவும் ஆச்சு.
ஏன் ஒலிம்பிக்கோ, FIFA வோ தான் எப்ப எப்ப எதுன்னு அடுத்த சில ஆண்டுகளுக்கு அறிவிக்கனுமோ? நாமும் கூடத்தான்.
எப்போதையும் விட இப்போது இன்னும் அழுத்தமாக எங்கள் எண்ணங்கள் உங்களைத் தொடரும் சார்.
////எங்கள் குண்டு புக் கனவை விட நிறைய நண்பர்களை இதழ் சென்றடைவதே இன்றியமையாதது சார். நண்பர்களாக இந்த சின்ன தியாகத்தை கூடவா செய்ய மாட்டோம். ////
Deleteநிஜமாகவே நிறைய வாசகர்களைச் சென்றடையும்பட்சத்தில் நானும் அப்படியொரு தியாகத்தைச் செய்யத் தயார்தான்! ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் வெளிச்சமாகத் தெரியவில்லை!
///எங்கள் குண்டு புக் கனவை விட நிறைய நண்பர்களை இதழ் சென்றடைவதே இன்றியமையாதது சார். நண்பர்களாக இந்த சின்ன தியாகத்தை கூடவா செய்ய மாட்டோம். ///
Deleteமாம்ஸ், உமக்கான பதில் இந்தப் பதிவிலேயே இருக்கிறது..!
///ஒவ்வொரு ஆண்டும் புத்தக விழாக்களில் நம்மை அடையாளம் கண்டு, அந்நேரம் ஆர்வமாய் காமிக்ஸ் வாங்கிடும் வாசகர்கள் அடுத்த புத்தக விழா வரையிலும் தம் கொள்முதல்களையோ ; வாசிப்புகளையோ தொடர்வதில்லை என்பது தானே யதார்த்தம் ? Granted - சென்னை போன்ற பெருநகரினில் நமது ஏஜென்ட்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவே ! ஆனால் ஈரோடு / சேலம் போன்ற நகரங்களில் குறைந்த பட்சம் ஐந்தாறு கடைகளில் நமது இதழ்கள் கிடைக்கின்றன எனும் போது - நிச்சயமாய் அங்கே சின்னதொரு மெனக்கெடலின் பின் நம் இதழ்களைத் தேடித் பிடிப்பதில் சிரமம் இருந்திடக் கூடாது தானே ? But 5 ஆண்டுகளும் ; 5 புத்தக விழாக்களும் கழிந்தான நிலையிலும் அங்கெல்லாம் நமது விற்பனை எண்ணிக்கைகளில் ஒரு குட்டியூண்டு முன்னேற்றம் கூடக் கிடையாது என்பது தான் நிஜம். So நமக்குப் பிடிக்கிறதோ - இல்லையோ ; அதனை ஏற்றுக் கொள்வது கசப்பாக இருக்கிறதோ - இல்லையோ - காமிக்ஸ் வாசிப்பென்பது இன்னமுமே ஒரு வெகுஜன ரசனையுமல்ல ; அத்தியாவசியமுமல்ல என்பதே bottomline !!///
இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகத்திருவிழாக்களிலும் குண்டு புத்தகங்களின் விற்பனை மொத்த விற்பனையில் பெரும்பங்கு வகிக்கிறதாம். அதுவும் ஹார்டு பவுண்ட் போட்ட குண்டுகள் அதிக கவனத்தை ஈர்த்து விற்பனையிலும் சக்கை போடு போடுகிறதாம். .!!
Ev...kit...+1
Deleteகுண்டு மறுபதிப்புச் வேண்டும் 2000 முன்னதாக இருந்தால் super
ReplyDeleteநண்பர்களே,
ReplyDeleteஇரு உதவிகள் இப்போதைக்கு எனக்குத் தேவை :
1 .ஜேசன் ப்ரைஸ் - இரண்டாம் பாகத்துக்கொரு கதைச் சுருக்கம் !
2 ."கழுகுமலைக் கோட்டை" - சென்னையிலுள்ளதொரு டிசைனரால் கலரிங் செய்யப்பட்டு வந்துள்ளது ! இதனை ஒருமுறை சரி பார்த்து ; அவசியமாகிடும் இடங்களில் கலர் மாற்றங்களை பரிந்துரை செய்திட இந்தத் துறையில் இருக்கக்கூடிய நண்பர்களின் உதவி !
கலரிங் என்பது எத்தனை சிரமமான பணி ; அதனைப் படைப்பாளிகள் எத்தனை அசாத்தியமாய்க் கையாள்கின்றனர் என்பது இப்போது தான் புரிகிறது !!
இந்தக் "கலர் பார்க்கும்" பணியினை நான் செய்வதைவிடவும், இத்துறையில் அனுபவம் கொண்டோர் செய்திடுவது தேவலாம் என்று பட்டது !
உதவிடக்கூடிய நண்பர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் ?
உங்கள் உழைப்பு புதிய கதைகள் பக்கம் இருக்கட்டும் அப்போது தான் எங்க௵க்கு bouncer green manor Durangoபோன்றவை கிடைக்கும் பழையது வரட்டும் மெதுவாக
ReplyDelete1 book per month x 18 months
ReplyDeleteOr
3in1 book × 6 months
லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்,
ReplyDeleteநேற்று போகிற போக்கில் நண்பர் ரபீக் ராஜா என்னிடம் 'தமிழில் ஸ்லிப் கேஸ்' வர எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ ? ஹ்ம்ம் என்று புலம்ப நான் சரி வாங்கி கட்டிக்கிட்டா நமக்குத்தானே என்று இங்கே பிட்டு போட்டு வெக்க அதுக்கு இவ்ளோ ஆதரவா ? (அப்டி ஸ்லிப் கேஸ்ல வருதோ இல்ல briefcaseல வருதோ, வேறு விஷயம்).
எனவே நண்பர் ரபீக்க்கும் ஒரு பராக் ! ஆஜராகவும் !!
ஒரே கதையை தனி இதழாக பல வருடங்கள் காத்திருந்து படித்தோம்.தெய்வத்தின் அருளால் ஒரே குண்டு புக்காக பிளாக் அண்ட் ஒயிட் டில் படித்தோம்..அதையே மீண்டும் வண்ணத்தில் வேண்டுமென்று கோரிக்கை வைத்தது நாமே...அதையும் மறுபடியும் 18 மாதங்கள் காத்திருந்து காத்திருந்து படிக்க வேண்டுமா...நோ சான்ஸ்
ReplyDelete500,அல்லது 600 பிரிண்ட்கள் முன்பணத்திற்கு மட்டும் ..இரண்டு குண்டு புக்காக..இதுவே என் கருத்து ..
//அதையே மீண்டும் வண்ணத்தில் வேண்டுமென்று கோரிக்கை வைத்தது நாமே...அதையும் மறுபடியும் 18 மாதங்கள் காத்திருந்து காத்திருந்து படிக்க வேண்டுமா...நோ சான்ஸ் //
Delete+1
வெட்டுக்கிளி +1
Delete+1
Delete+1
Deleteவெட்டுக்கிளியாரே சூப்பர்
Deleteவெட்டுக்கிளியாரே சூப்பர்
Deleteவெட்டுக்கிளியார் always பள..பளா
Deleteஇரத்தப்படலத்தின் பின்புலம், அதன் Classical Value, 18 பாகங்கள் கொண்ட ஒரு evergreen காமிக்ஸ் தொடர் போன்ற விஷயங்கள் புது வாசகர்களையும் சென்றடைய வேண்டும்.
ReplyDeleteஇரத்தப்படலத்தின் முதல் பாகத்தை முதன்முதலில் படிக்கும் எந்த ஒரு பது வாசகரும் அது தரும் அனுபவத்தை மறக்க முடியாது. முதல் பேனலில் தொடங்கும் வில்லியம் வான்ஸின் தூரிகை ஜாலம் கதையின் முடிவில் அதன் உச்சத்தை அடைந்திருக்கும். கதையின் முடிவில் நம்மை சூழும் சோகமும் கேள்விகளும் தரும் அந்த அனுபவம் காமிக்ஸ் இதழ்களின் மேல் தனி மரியாதையை ஏற்படுத்தும். மேலும் பல காமிக்ஸ் இதழ்களை தேடிப்பிடித்து படிக்க வைக்கும்.
இந்த அனுபவம் ஒரே இதழாய் படிக்கும் போது கிடைப்பது கடினம்.
Delete
நண்பர் ராகவன் கூறியுள்ள யோசனை - தனி சந்தாவில் 18 மாதங்களில் 18 இதழ்கள் - நல்ல யோசனையாகப்படுகிறது.
ReplyDeleteமாதத்தில் ஒரு இதழ் மட்டும் எனும்போது புது வாசகர்களும் மலைப்பு தோன்றாமல் படிக்க வசதியாக இருக்கும்.
மேலும் இப்படி தனி இதழ்களாக தொடர்ந்து வெளியிடும் போது கதையோட்டத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் புது வாசகர்கள் தொடரந்து வாங்கவும் ஒரு தூண்டுதலாக இருக்கும். இதன் மூலம் மற்ற இதழ்களையும் அவர்கள் வாங்கலாம். ஒரே இதழாக வெளியிடும் போது இந்த ஆர்வம் இருக்குமா என்பது தெரியாது. ஒரு கதையை தொடராக படிக்கும் போது இருக்கும் சுவாரஸ்யம் அதை ஒரே இதழாக படிக்கும்போது அவ்வளவாக இருப்பதில்லைதானே..
////இப்படி தனி இதழ்களாக தொடர்ந்து வெளியிடும் போது கதையோட்டத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் புது வாசகர்கள் தொடரந்து வாங்கவும் ஒரு தூண்டுதலாக இருக்கும். ///
Delete-1
இரத்தப்படலத்தை ஜம்போ ஸ்பெஷலில் ஒருசேரப் படித்தபோதுதான் அதன் முழு வீரியத்தை உணர்ந்து மலைத்துப்போனேன்! மாறாக, முந்தைய காலகட்டங்களில் தனித்தனியாக வெளிவந்து படித்தபோது 'என்னதான்யா சொல்லவராங்க?' என்று குழம்பிப்போயிருக்கிறேன். இத்தனைக்கும் நான் அப்போது 'புது வாசகன்' அல்ல!
இரத்தப்படலம் முழுவீச்சில் பிரபலமானதே 'ஜம்போ ஸ்பெஷலுக்கு' பிறகுதான் எ.எ.க!
+10000000000000000000000
Delete///இரத்தப்படலத்தை ஜம்போ ஸ்பெஷலில் ஒருசேரப் படித்தபோதுதான் அதன் முழு வீரியத்தை உணர்ந்து மலைத்துப்போனேன்! மாறாக, முந்தைய காலகட்டங்களில் தனித்தனியாக வெளிவந்து படித்தபோது 'என்னதான்யா சொல்லவராங்க?' என்று குழம்பிப்போயிருக்கிறேன். இத்தனைக்கும் நான் அப்போது 'புது வாசகன்' அல்ல! ///
Deleteஎன்ற மனசுல இருந்தத அப்புடியே சொல்லிபோட்டீங் குருநாயரே. .!!
××××××××××(+ old)இது தான் இப்போதைய style.
Delete==இரத்தப்படலத்தை ஜம்போ ஸ்பெஷலில் ஒருசேரப் படித்தபோதுதான் அதன் முழு வீரியத்தை உணர்ந்து மலைத்துப்போனேன்!==
Delete==என்ற மனசுல இருந்தத அப்புடியே சொல்லிபோட்டீங் குருநாயரே. .!!==
குருவும் சிஷ்யரும் கொஞ்சம் முன்னால் பதிவுகளுக்கு சென்று பாருங்களேன், ஜேசன் ப்ரைஸ் தொடருக்கு நண்பர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று!
'ஜேசன் ப்ரைஸ் ஒரே இதழாக வந்திருந்தால் இவ்வளவு ஆர்வமும் சுவாரசியமும் இருந்திருக்குமா தெரியாது' என்று நண்பர்கள் சிலர் கூறியதாக ஞாபகம்!!
==இரத்தப்படலத்தை ஜம்போ ஸ்பெஷலில் ஒருசேரப் படித்தபோதுதான் அதன் முழு வீரியத்தை உணர்ந்து மலைத்துப்போனேன்!==
Delete==என்ற மனசுல இருந்தத அப்புடியே சொல்லிபோட்டீங் குருநாயரே. .!!==
குருவும் சிஷ்யரும் கொஞ்சம் முன்னால் பதிவுகளுக்கு சென்று பாருங்களேன், ஜேசன் ப்ரைஸ் தொடருக்கு நண்பர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று!
'ஜேசன் ப்ரைஸ் ஒரே இதழாக வந்திருந்தால் இவ்வளவு ஆர்வமும் சுவாரசியமும் இருந்திருக்குமா தெரியாது' என்று நண்பர்கள் சிலர் கூறியதாக ஞாபகம்!!
///'ஜேசன் ப்ரைஸ் ஒரே இதழாக வந்திருந்தால் இவ்வளவு ஆர்வமும் சுவாரசியமும் இருந்திருக்குமா தெரியாது' என்று நண்பர்கள் சிலர் கூறியதாக ஞாபகம்!!///
Deleteஜேசன் ப்ரைஸ் ஒரே இதழாக வராததற்கு இது முக்கியமான காரணமாக தோன்றவில்லை சார்.
நமக்கு பரிச்சயமில்லாத புதுக்கதை என்றாலே கிநா முத்திரை குத்தி ஒதுக்கிவிடும் நண்பர்களும் பலர் உண்டு. தவிரவும் ஒரே இதழ் என்றால் கௌபாப்ஸ் பெரும் வரவேற்பை டிடெக்டிவ்ஸ் பெறுவதில்லையே.!
தீபாவளிக்கு இரவே இருளே கொல்லாதேன்னு ஒரு (ஒரே) கதையை போட்டுவிட்டு வாங்கிய கொட்டுகள் எடிட்டருக்கு இன்னும் வலிக்கிறதாம்.
எனவேதான் ரெகுலர் சந்தாவில் (பெரிய மாத்திரையை ரெண்டுமூணாக உடைத்து குழந்தைகளை விழுங்கவைக்கிற மாதிரி) பிரித்துபோட வேண்டியதாகிவிட்டது.
இரத்தப்படலம் அப்படியில்லை சார். .!!
18x18 my choice
ReplyDeleteநண்பர்களுக்கு வணக்கம். இந்த பதிவை பார்த்தபோது ரொம்ப நாட்களாக மனதை செல்லரித்து கொண்டு இருந்த விஷயம் ஆசிரியரின் மனதிலும் உதித்து இருப்பதை பார்த்த போது ஆச்சரியமாக தான் இருந்தது.
ReplyDeleteஎனது இந்த பதிவு சில வாசகர்களை மனம் வருத்தமடைய செய்தாலோ,மகிழ்ச்சி அடைய செய்தாலோ இரண்டையும் ஒன்றாகவே பார்ப்பேன்.
Ready start:கடந்த 14 வருடங்களில் வெளிநாட்டில் வேலை செய்வதால் 2,3 வருடங்களுக்கு ஒரு முறை 2 மாத லீவில் ஊருக்கு வரும் போது சில காமிக்ஸ் நண்பர்களை சந்திப்பதுண்டு.சந்திபில் நான் தவறாமல் கேட்கும் கேள்வி"காமிக்ஸ் ஆர்வம் எப்படி உள்ளது?"
வருடத்திற்கு 1 அல்லது 2 வந்தால் எப்படி படிக்க விருப்பம் இருக்கும்.(ஒருவர்) ....ஆமா இன்னமும் B&W ரூ10 விலையில் போட்டால் எப்படி படிக்க தோன்றும் (ஒருவர்) .அப்பப்பா அவர் பாட்டுக்கு புக்கை அடித்து தள்ளுகிறார். படிக்கவே நேரம் இல்லை (இப்படி ஒருவர்) .இப்படி ஒவ்வொருவரும் தங்கள் விரக்தியை தெரிவித்த போதும் புனர்ஜென்மம் எடுத்து வீரநடை போட்டு வந்தபோது கொடுத்த வரவேற்பை பார்த்தேன்.மலைப்பு அடங்க வெகு காலம் பிடித்தது அவர்களா இவர்கள்!!!!!!!!(இட்டுகட்டிய கதை அல்ல உண்மை. இதை படிக்கும் நண்பர்களுக்கு புரியும். )
கோயில் தேர் வீதிகளில் சுற்றி வருகிறது என்றால் ஊர் மக்கள் கூடிநின்று தெய்வ தரிசனத்தை காண்பதற்கு.தேர் இழுக்க யாரும் வரவில்லை என்றால் தேரை BULLDOZER கொண்டு இழுத்து செல்லவும் தயங்க மாட்டார்கள் அக்கரை உள்ளவர்கள்.
விலை அதிகம் என்றால் எப்படி எல்லாருக்கும் போய் சேறும் என்று அபிப்ராயம் தெரிவித்தவர்களை கேட்கிறேன்.நம்ம காமிக்ஸ் எடுத்தவுடன் 100,200,500,1000 என்றா வந்தது.?.ரூ 2 தானே ஆரம்பித்தது அப்போதே ரூபாய் 2க்கும் ரூபாய் 10 க்கும் வாங்கி படித்து இருந்தால் நடுவில் ஏன் ஆசிரியர் புத்தகத்தை நிறுத்தி இருப்பார்கள். என் நண்பனே என்னிடமிருந்து புக்கை திருடினானே தவிர ஒருமுறை கூட காசு கொடுத்து வாங்கியது இல்லை.
ஆதலால் திருடர்களும். குறை கூறுபவர்களும் இருக்க தான் செய்வார்கள். (புத்தகத்தை இழந்த வலி.திருடர்கள் மன்னிக்கவும்) .
காமிக்ஸ் நேசிப்பவர்களை மனதில் கொண்டு ஆசிரியர் செயல்பாடுகள் அமைந்தால் நன்றாக இருக்கும். இரத்தப்படலம் தனித்தனியாக வந்தால் நண்பர்கள் கூறுவதுபோல் வந்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால் பத்தோடு பதினொன்றாக போய்விடும். காமிக்ஸ் சேகரிப்பாளர்களுக்கு ஒரு உண்மையான பொக்கிஷம் வரவேண்டும் என்றால் ஒரே புக்காக வரவேண்டும். வேண்டுமானால் விலை சற்று குறைத்து TEX புக் சைஸில் வெளியிடலாம்.(. முன்பு பெரிய சைஸ்.தற்போது tex சைஸ் ஒரு different கிடைக்கும்.)
கள்ளும் குடிக்கணும்.மீசையிலும் ஒட்டக்கூடாது என்றால் எப்படி?
அதுக்கு 1.கள்ளு குடிக்கக்கூடாது.
2.மீசையை மழித்து விட வேண்டும்.
3.வாயில் புனலை வைத்து தான் ஊற்றவேண்டும்.
ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள்:காமிக்ஸ் வரதா என்று ஏங்கி தவித்து கொண்டு இருந்த அந்த கொஞ்சம் வாசக இதயங்களை மட்டும் நம்பி தேரை கோயில் வாசலில் கொண்டு வந்து நிறுத்துங்கள்.காட்டி இழுத்து வர நாங்கள் உண்டு. ..
அதேபோல் நீங்கள் முடிவெடுத்து அடுத்த வருடம் 1000 பக்கங்களுடன் இந்த கதைகளை தாங்கி இவ்வளவு விலையில் ஒரு special வரப்போகிறது என்று விளம்பரம் செய்தாலே போதும். செய்யலாமா வேண்டாமா என்ற விவாதம் இனி வேண்டவே வேண்டாம்.ஏனெனில் 1984 ராணி காமிக்ஸ் 007 கதைகளை சென்ஸார் செய்யாமலே வெளியிட்டார்கள்.
ஆனால் உலகமே கையில் உள்ளபோதும் மாடஸ்டிக்கு வலுக்கட்டாயமாக ஆடை அணிவிக்கும் நீங்களா தவறான கதைகளை தந்து விடப்போகிறீர்கள்!!!!!.
பின்குறிப்பு: விருந்து சாப்பிட முடிவு எடுத்தாயிற்று.பிறகு என்ன இன்று பிரியாணி, நாளை சிக்கன் 65,நாளை மறுநாள் மீன் FRY என்று. எல்லாவற்றையும் ஒருசேர வைத்தால் தானே அது விருந்து ..என்ன நான் சொல்றது. ....
நன்றி .....வணக்கம்.
சரவணன் சார் சூப்பர்
Deleteபொங்கல் வாழ்த்துக்கள்
+10000000000000000
Deleteஅருமை சரண் சார்
Deleteநன்றி நண்பர்களே ஆசிரியரும் இது
Deleteபோல் 😄😄😄😄
+1
DeleteSuper50-50
DeleteSuper50-50
Delete//அடுத்தாண்டினில் நமது நம்பர்களை மட்டுப்படுத்துவது பற்றி நிச்சயம் சிந்திப்போம் !!//
ReplyDelete-1
//அடுத்தாண்டினில் நமது நம்பர்களை மட்டுப்படுத்துவது பற்றி நிச்சயம் சிந்திப்போம் !!//
Delete-1
நம்பர்களை மட்டுப்படுத்திடும் எண்ணத்தை இத்தோட நிறுத்திக்கிடுங்க. ஆம்ம்ம்மா!
ஆசிரியரே வேண்டாமே இந்த விபரீத எண்ணம்
Deleteஆசிரியரே வேண்டாமே இந்த விபரீத எண்ணம்
Delete+1
Delete67வது
ReplyDeleteவணக்கம் விஜயன் சார்,
ReplyDeleteஎனது கருத்து பின்வருமாறு ,
1. 3 இதழ்களாக இருந்தால் கையில் பிடித்து படிப்பதற்கு கடினமாக இருக்காது .
2. விலை -- இரண்டு அல்லது மூன்று தவணைகளாக செலுத்திட வாய்ப்பினை தாருங்கள்.
இதுவே போதுமானது. கொத்துக்கறி ஆகிடவேண்டாமே . தனித்தனியாக 12 / 24 என்று.
குறிப்பு: முந்தய கருப்பு வெள்ளை இதழானது , பழுப்பேறி கிழிந்து போகும் நிலையில் தாளின் தரம் உள்ளது . எனவே கலரில் , தரமான அளவில் காண ஆவலுடன் உள்ளேன்.
மூன்று இதழ்களாக என்று எழுதியதால் தனித்தனியாக வெளியிட வேண்டும் என்று தவறாக நினைத்திட வேண்டாம்.
Deleteஇது ஒரு ஸ்பெஷல் விருந்து , ஒரே நாளில்தான் அமைய வேண்டும். மூன்றாக பிரிப்பது கையில் எளிதாக வைத்து படிப்பதற்கு மட்டுமே.
///இது ஒரு ஸ்பெஷல் விருந்து , ஒரே நாளில்தான் அமைய வேண்டும். மூன்றாக பிரிப்பது கையில் எளிதாக வைத்து படிப்பதற்கு மட்டுமே.///
Delete+1
சரியான விளக்கம்!
+1
Delete+100000
Delete-100000000000
ReplyDeleteFor 18 separate books
Collectors edition should come in hard bound
What is the need for reprint as 18 separate books
This point also suits for Ratha kottai
If price is the problem allow them to pay in 3 or 4 installment before delivery/ release
+1
Delete1 installment August 2017 --500
ReplyDelete2 installment January 2018---500
3 installment July 2018-- remaining
நண்பர்களின் வாத-பிரதி வாதங்களைக் கேட்டறிந்தபின்பு, நானும் 3×6 அல்லது 6×3 க்கு உடன்படுகிறேன்! ( குண்டுதான் வேணாம்ங்கறீங்க... கொஞ்சம் 'பூசினாப்ல'யாவது இருந்துட்டுப் போகட்டுமே நண்பர்களே..நண்பர்களே!)
ReplyDeleteசிங்கிள் ஆல்பங்களாக வருவதில் ஒரு 'கிக்' இல்லை (எ.எ.க)!
சிங்கிள்சிங்கிளா ஸ்லிப்-கேஸில்தான் வரும்னாலும் வாங்கி முறைச்சு முறைச்சுப் பார்த்துட்டு ( இந்த ஐடியா கொடுத்தவங்களுக்கு லைட்டா ஒரு சாபத்தை வீசிட்டு) பக்கங்களைப் புரட்டத் தொடங்கிடுவேன்! ஜானி சொன்னமாதிரி 18 பாகங்களையும் சேர்த்து வச்சு பைண்டிங் பண்ணிக்க வேண்டியதுதான்!
///சிங்கிள் ஆல்பங்களாக வருவதில் ஒரு 'கிக்' இல்லை (எ.எ.க)!///
Deleteஅதாவது, தனித்தனி ஆல்பங்களாக வருவதில் 'கிக்' இல்லை!
மூன்று × ஆறு பாகங்கள், ஆனால் ஒரே செட்டாக மட்டுமே விற்பனை. இதுதான் நல்லா இருக்கும்.!
ReplyDelete18 மாதங்கள் 18 தனித்தனி இதழ்களாக விற்பனைக்கு வந்தால் நடுவில் சில பாகங்கள் காணாமல் போக வாய்ப்புண்டு. (இரண்டு பாகங்களாக வந்த கார்சனின் கடந்த காலத்தில் ரெண்டாம் பாகம் மட்டும் நிறைய காணாமப் போயிருந்துச்சின்னு சொல்லிகிட்டாங்க :-))
எனவே பிரித்து விற்பனை செய்யும் யோசனையே வேண்டாம்.
+1
Deleteகாமிக்ஸ் நண்பர்களே.. எனக்கு ஒரு விசயம் புரியவில்லை.. 18 புக் தனித்தனியாக போடும் போது விலை ₹1400 - ₹1500 வரும்.. இதைத் தனிச் சந்தாவாக அறிவிக்கப்படாமல் புத்தகம் வெளியிடப் போகிறோமா.. இல்லையெனில் ₹1500 செலுத்தி 18 மாதங்களுக்கு ஒரு ஒரு புக்காக தனித்தனியாக வாங்குவதற்கு பதிலாக கொஞ்சம் சேர்த்து செலுத்தி ஆறு பாகங்களைக் கொண்ட மூன்று புத்தகங்களாக பாக்ஸ் செட்டாகவே வாங்கிக் கொள்ளலாமே..
Delete///₹1500 செலுத்தி 18 மாதங்களுக்கு ஒரு ஒரு புக்காக தனித்தனியாக வாங்குவதற்கு பதிலாக கொஞ்சம் சேர்த்து செலுத்தி ஆறு பாகங்களைக் கொண்ட மூன்று புத்தகங்களாக பாக்ஸ் செட்டாகவே வாங்கிக் கொள்ளலாமே..////
Deleteசரியாச் சொன்னீங்க காமிக்ஸ் நண்பரே!
+100
Deleteமிடில...எனக்கு இரத்தப் பொரியலே வேண்டாம்...தலைவலி (அதாம்பா அவரேதான்) மாதிரி XIIIக்கும் பெரிய விற்பனை கிடையாது. ரெகுலர் பிரிண்ட் ரன் வொர்க் out ஆகாது. 75க்கு டெக்ஸ் சைஸ்ல (புக் சைஸ் சொல்ரேன்) வந்தா நல்ல இருக்குமா? கார்சனின் கடந்த காலம் மாதிரி ஆயிருமே? இப்படி எல்லாம் நடக்கும்னு சொல்லல... நடந்த்ருமோன்னு பயமா இருக்கு. இருந்தாலும் ஆசிரியர் சரியாகத்தான் இதை செய்வார் என்ற நம்பிக்கை ஓரத்தில் இருக்கிறது.
DeleteMP @
Deleteதெளிவா பேசிட்டு இருந்த மனுசர இப்படி சேதுவையும் மாதவனையும் கலந்து செய்த கலவை மாதிரி ஆக்கிட்டாங்களே.!!
இனியும் தொடர்ந்தால் மெக்கானிக் முருகன் மாதிரி ஆயிடுவாரோன்னு பயம்மா இருக்கு .!
அந்த விபரீதம் நடக்குறதுக்குள்ள சட்டுபுட்டுன்னு 6×3 ஒரே செட்டுன்னு அறிவிச்சிடுங்க சார். .!!
lol.தெளிவா பேசிட்டு இருந்தனா... எப்ப...ஞம..ஞம...ஞம..ஞம
Deleteதனி தனி இதழ்களாக வருவதில் எனக்கும் உடன் பாடு இல்லை சார் ... ஒரே புத்தகம் அல்லது மூன்று புத்தகம் என்பதே சரியான முடிவாக இருக்கும் ...
Deleteஇரத்தப்படலம்...! குண்டு புத்தகத்திற்கு வாய்ப்பில்லை என்பதால் இந்த எண்ணம்.
ReplyDeleteமாதம் ஒரு புத்தகம் வீதம் பதினெட்டு மாதங்கள். விலையும் ரூபாய் 1400/-. சந்தேகமில்லாமல் எங்களுக்கு லாபம்தான்.
ஆனால் இதனை சந்தாதாரர்களை தவிர கடைகளில் விற்பதற்கும், தனிப்பட்ட முறையில் காமிக்ஸ் வாங்குபவர்களும் எத்தனை ஆர்வம் காட்டுவார்கள் என்பதையும் பாருங்கள்.மேலும் புத்தகவிழா விற்பனைகளும் பெரும் துணையாக இருக்கையில் ஆண்டுக்கு மூன்று புத்தகவிழா என தோராயமாக கணக்கில் வைத்துக் கொண்டாலும் அங்கு வருபவர்கள் பாகம் பாகமாக தொடரும் இக்கதையை வாங்க விருப்பப்படுவார்களா என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள் சார். புதிதாக காமிக்ஸ் வாங்குபவர்கள் முழுக்கதையையே வாங்க முன்வருவர். பாகம்பாகமாய் நீண்டு செல்லும் இதனை கண்டு கொள்ளாமல் போகவும் வாய்ப்பு அதிகம். அப்படியானால் பதினெட்டு மாதங்கள் வரை காத்திருந்தால்தான் முழுதொகுதியும் கிடைக்கும். அதுவரை இவைகள் உங்கள் கிட்டங்கியில் தேங்கவும் வாய்ப்புகள் அதிகம்.
தற்போது வெளிவந்த ட்யூராங்கோ நான்கு பாகங்கள் ஹார்ட் பவுண்ட் அட்டை இருநூறு பக்கங்கள் விலை ₹ 300.
இரத்தப்படலம் 852 பக்கங்கள்.4(200 பக்கங்கள்)×₹300=₹1200. கூடுதல் 52 பக்கங்களை இறுதி தொகுப்பில் இணைத்தால்+₹100. ஆக மொத்தம் ₹1300. limited edition எனும்போது அதற்கான தொகையையும் சேர்த்துக் கொண்டால் மொத்தம் எவ்வளவு தொகை வரும் எனப்பார்த்து நான்கு புத்தகமாக போட முடியுமாசார்? சந்தா தொகையை செலுத்த நான்கு தவணையாக அறிவிக்கலாம் சார். தேவையான கால அவகாசம் எடுத்து ஒரே சமயத்தில் கொண்டு வருவது உங்களுக்கும் நல்லதில்லையா? புதிதாய் வாங்குபவர்களுக்கும் முழு தொகுப்பும் கிடைக்கும்.கடைகளில் விற்பனைக்கு நீங்கள் ரெகுலர் சந்தாவில் இணைக்காமல் மாதாமாதம் வேறு புதிய கதைகளை வழங்கிக் கொண்டும் இருக்கலாம். "2016 பொங்கல் புத்தகவிழாவில் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட அடுக்கியிருக்கும் பல காமிக்ஸ்களில் மின்னும் மரணத்தை மட்டும் வாங்கியது இத்தனை பக்கங்கள் கொண்ட ஒரே கதை என்கிற எண்ணத்தில்தானே சார். (26.1.2016 உங்களது பதிவு)தலைவரிடமும் காண்பிப்பதாக சொல்லியிருக்கிறார்." இந்த எண்ணம் மற்றவர்களுக்கும் வரவாய்ப்புண்டே.
திரு.மகேந்திரன் பரமசிவன் கருத்தில் நானும் உடன்படுகிறேன். முன்பிரதிக்கு தேவையான எண்ணிக்கையை தொடமுடியாவிட்டால் இத்திட்டத்தையே கைவிட்டுவிடலாம்.
////புதிதாக காமிக்ஸ் வாங்குபவர்கள் முழுக்கதையையே வாங்க முன்வருவர். பாகம்பாகமாய் நீண்டு செல்லும் இதனை கண்டு கொள்ளாமல் போகவும் வாய்ப்பு அதிகம். அப்படியானால் பதினெட்டு மாதங்கள் வரை காத்திருந்தால்தான் முழுதொகுதியும் கிடைக்கும். அதுவரை இவைகள் உங்கள் கிட்டங்கியில் தேங்கவும் வாய்ப்புகள் அதிகம்.////
Delete+1
அர்த்தமுள்ள வரிகள்!
ரெகுலர் இதழ்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற யோசனைக்கும் தம்ஸ் டவுன்.
ReplyDeleteகாமிக்ஸ் உலக கடலில் நாம் (தமிழில்) ஒரு சிறிய குவளையில் அள்ளித்தான் பருகிக் கொண்டிருக்கிறோம். அதிலும் மறுபதிப்புகள் என்ற பெயரில் குவளையில் இருக்கும் அடைப்பால் ஒவ்வொரு முறையும் கணிசமான அளவு அள்ளும் வாய்ப்பும் குறைவாகவே இருக்கிறது.
அகத்தியராய் பிறந்திருந்தாலும் பரவாயில்லை., கடலையே காலி பண்ணியிருக்கலாம்.
ஆசாமிகளாய் பிறந்துவிட்ட நமக்கு அள்ளிக் குடிக்கத்தான் ஆண்டவன் அருள்பாலித்திருக்கிறார்.
அதிலும் குறைக்கச்சொன்னால் எப்படி சார்.!!
ஒரே இதழ் விலை அதிகமாக ப்ரிண்ட் ஆகியிருப்பதுதான் சிக்கலே தவிர எண்ணிக்கை எப்போதுமே சிக்கலேயில்லை. இன்னும் இன்னும் இன்னும் நிறைய புதிய கதவுகளை திறக்க வேண்டும். காணாத உலகங்களை காணவேண்டும்.!!
Who ever telling that full edition not required or no need of rathapadlam , those friends already have the book with them. But people like us missed out collectors edition and have not read the series fully definately feel very bad about this 18 separate books decision or delay in release.
ReplyDeleteI got options for this book in grey market, but i didn't purchase and still waiting for official purchase for last one year. Hope editor and other friends can understand.
I vote for single book or 3 books in single box-set released at single time.
இரத்தப்படலம் ஒரே இதழாய் வெளிடவும் ,ஆசிரியருக்கு இது அன்பான வேண்டுகோள்..
ReplyDeleteஇத்தன்ன ஆண்டுகள் காத்திருந்தது முழுனமயாக வாசிக்கவே.....
பிரித்துப்போட வேண்டாமே..... ப்ளீஷ் சார்....
இரத்தப்படலம் தனித்தனி இதழ்களாக (18 இதழ்கள் 18 மாதங்களில்) வெளியிட என் விருப்பம் தெரிவிக்க காரணம்:
ReplyDelete1. பரவலான வாசகர்களை சென்றடையும் புது வாசகர்கள் எடுத்தவுடன் அவ்வளவு பெரிய இதழை அவ்வளவு விலை கொடுத்து வாங்குவார்களா என்பது சந்தேகம். இதனால் ஒரு அட்டகாசமான காமிக்ஸ் தொடரை படிக்கும் வாய்ப்பை அவர்கள் இழக்க நேரிடலாம். நான் முன்னரே சொன்னது போல இரத்தப்படலம் முதல் பாகம் படிப்பவர்கள் அடுத்தடுத்த பாகங்களையும் வாங்கிட ஆர்வம் காட்டுவார்கள் என்பது என் நம்பிக்கை. அதற்கு இந்தத் தொடர் மாதா மாதம் தொடர்ந்து வரப்போகிறது என்பது தெரிய வேண்டும். முன்பு கருப்பு வெள்ளையில் வந்த போது நம் ஆர்வம் குறையக்காரணம் அடுத்த பாகம் எப்போது வருமென்பதே தெரியாது. அப்படி வரும்போது முந்தைய பாகத்தின் கதை நமக்கு மறந்து விட்டிருக்கும்.
2. ஒவ்வொரு பாகமும் படித்து முடித்தவுடன் ஏற்படும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு ஒரே இதழில் கிடைக்காது. தேடலுக்கான விடை உடனேயே தெரிந்துவிட்டால் சுவாரசியம் ஏது? இரத்தப்படலத்தின் சிறப்பே 'தொடரும் ஒரு தேடல்'தானே!
3. படிக்க சௌகரியமாக இருக்கும். வேண்டிய போது தேவையான பாகங்களை எடுத்து படிக்கலாம். ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு அட்டைப்படம் கூடுதல் சிறப்பு.
4. விலை குறையும். ஒரே சமயத்தில் அதிக செலவு இல்லை. எடிட்டருக்கும் வேலைப்பளு மிச்சம்.
இல்லை... இது எதுவுமே சரிப்பட்டு வராது... வாசகர்கள் தொடரந்து வாங்கும் வாயப்புகள் குறைவு.. மொத்தமாக வெளியிடுவதுதான் சரியாக வரும் என்றால் தயவு செய்து ஒரே இதழாக வெளியிட வேண்டாம். மூன்று பாகங்கள் ஒரு புத்தகம் என்ற கணக்கில் ஒரு பாக்ஸ் செட்டில் வைத்து வெளியிடுங்கள்.
இரத்தப்படலம் தனித்தனி இதழ்களாக (18 இதழ்கள் 18 மாதங்களில்) வெளியிட என் விருப்பம் தெரிவிக்க காரணம்:
ReplyDelete1. பரவலான வாசகர்களை சென்றடையும் புது வாசகர்கள் எடுத்தவுடன் அவ்வளவு பெரிய இதழை அவ்வளவு விலை கொடுத்து வாங்குவார்களா என்பது சந்தேகம். இதனால் ஒரு அட்டகாசமான காமிக்ஸ் தொடரை படிக்கும் வாய்ப்பை அவர்கள் இழக்க நேரிடலாம். நான் முன்னரே சொன்னது போல இரத்தப்படலம் முதல் பாகம் படிப்பவர்கள் அடுத்தடுத்த பாகங்களையும் வாங்கிட ஆர்வம் காட்டுவார்கள் என்பது என் நம்பிக்கை. அதற்கு இந்தத் தொடர் மாதா மாதம் தொடர்ந்து வரப்போகிறது என்பது தெரிய வேண்டும். முன்பு கருப்பு வெள்ளையில் வந்த போது நம் ஆர்வம் குறையக்காரணம் அடுத்த பாகம் எப்போது வருமென்பதே தெரியாது. அப்படி வரும்போது முந்தைய பாகத்தின் கதை நமக்கு மறந்து விட்டிருக்கும்.
2. ஒவ்வொரு பாகமும் படித்து முடித்தவுடன் ஏற்படும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு ஒரே இதழில் கிடைக்காது. தேடலுக்கான விடை உடனேயே தெரிந்துவிட்டால் சுவாரசியம் ஏது? இரத்தப்படலத்தின் சிறப்பே 'தொடரும் ஒரு தேடல்'தானே!
3. படிக்க சௌகரியமாக இருக்கும். வேண்டிய போது தேவையான பாகங்களை எடுத்து படிக்கலாம். ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு அட்டைப்படம் கூடுதல் சிறப்பு.
4. விலை குறையும். ஒரே சமயத்தில் அதிக செலவு இல்லை. எடிட்டருக்கும் வேலைப்பளு மிச்சம்.
இல்லை... இது எதுவுமே சரிப்பட்டு வராது... வாசகர்கள் தொடரந்து வாங்கும் வாயப்புகள் குறைவு.. மொத்தமாக வெளியிடுவதுதான் சரியாக வரும் என்றால் தயவு செய்து ஒரே இதழாக வெளியிட வேண்டாம். மூன்று பாகங்கள் ஒரு புத்தகம் என்ற கணக்கில் ஒரு பாக்ஸ் செட்டில் வைத்து வெளியிடுங்கள்.
ஆசிரியரே டெக்ஸ் சைஸ் மட்டும் வேண்டாம் ஏற்கனவே கார்சனின் கடந்த காலம் மறுபதிப்பில் குறிப்பிட்ட பக்கங்களில் அடக்க வேண்டும் என்பதற்காக படங்களை சின்ன சின்ன தாக போட்டதால் காலத்தால் அழிக்க முடியாத காவிய இதழை முழுவதுமாக ரசிக்க முடியாமல் போய் விட்டது இரத்தப் படலத்தை ஒரிஜினல் சைஸிலேயே வெளியிடுங்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆசிரியரே,
ReplyDeleteபுள்ளி விபரங்கள் தெரிந்த உங்களுக்கே எப்படி இந்தத் 'தனித் தனியாகப்' போடும் எண்ணம் வந்தது? ரத்தப் படலம் தனித்தனியாக வந்தும், பின் கறுப்பு வெள்ளை தொகுப்பாக வந்தும் பலரிடம் உள்ளது. திரும்பவும் தனித்தனியாகப் போட்டால், வண்ணத்தில் உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக வாங்குவோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். உண்மையில் குண்டாகப் போட்டாலும், தனித்தனியாகப் போட்டாலும் முன்பதிவில் ஒரு 400-500 பிரதிகள் தான் வரும். மீதியை விற்க நீங்கள் சென்னை, ஈரோடு போன்ற புத்தக விழாக்களைத் தான் நாட வேண்டி இருக்கும். புத்தக விழாவில் 'மட்டும்' காமிக்ஸ் வாங்குபர்கள் பெரும்பாலும் பணம் ஒரு பிரச்சினையாக இல்லாத, ஆனால் அதே நேரம் எதைப் போட்டாலும் வாங்குவோம் என்ற அளவுக்குத் தீவிர காமிக்ஸ் ரசனை இல்லாதவர்கள். அவர்கள் தங்கள் கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும் இதழையே வாங்குவார்கள். 18 தனித்தனி இதழ்கள் நிச்சயம் அவர்களை வாங்கத் தூண்டும் என்று நான் எண்ணவில்லை. போட்டால் ஒரே பாகமாகவோ அல்லது மூன்று பாகமாகவோ போடவும். ஆறு பாகம் என்பது கூட அதிகப் படிதான்.
இந்த slipcase எல்லாம் வெறும் அலங்காரம் தான். ஒரு boxed set இதழ் ஒன்று போட்டீர்களே கார்ட்டூன் ஸ்பெஷல் என்று? அந்தப் புத்தகங்களை அந்த box இல் வைத்து எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. எனவே தூக்கிப் போட்டு விட்டேன். slipcase அதை விட சிறப்பாக இருக்கலாம். ஆனால் hardbound க்கு இணையாகாது.
இங்கே மற்றவர்கள் சொல்வது போல் ஒரே பாகமாகப் போடுவதால், எடை சமாளிக்க முடியாத அளவு உயர்ந்து விடும் என்றும் நான் எண்ணவில்லை. எத்தனையோ நூல்கள் அப்படித்தானே போடப் படுகிறது. நந்திபுரத்து நாயகி (1000+ பக்கம். ஆனால் ஆர்ட் பேப்பர் இல்லை), காவல் கோட்டம் எல்லாம் பெரிய நூல்கள் தானே. ஆர்ட் பேப்பரில் உதாரணம் வேண்டும் என்றால் எத்தனையோ பாட நூல்கள் (மருத்துவப் பாட நூல்கள் பெரும்பாலும் ஆர்ட் பேப்பர் தான்) உள்ளன. ஆனால் உங்கள் நடைமுறைச் சிக்கல் கருதி மூன்றாகப் போட்டால் எனக்கு சம்மதமே. ஆனால் ஆறு பாகமாக்கிக் கொத்துக்கறி போட வேண்டாமே!
All+
Delete+ 100
Deleteரொம்பச் சரி!
Delete/அடுத்தாண்டினில் நமது நம்பர்களை மட்டுப்படுத்துவது பற்றி நிச்சயம் சிந்திப்போம்//தயவு செய்து வேண்டாமே சார் . ப்ளீஸ் .
ReplyDeleteடெக்ஸ் சைஸ் மட்டும் வேண்டாமே சார் . ஒரிஜினல் சைஸ் இல் வெளியிட மனது வையுங்கள் .புத்தக விழாக்களில் இந்த இதழ் தொடர் கதை என்று, தனி தனி இதழ்களாக வெளியிடும்போது , வாசகர்கள் எண்ணி தவிர்க்க கூடும் .
ஒரே இதழாக (3பாகங்கள் கொண்ட) வெளியிட வேண்டும் என்பதே எனது விருப்பம் .
/// இரத்தப் படலம் - ஆகஸ்ட் 2018 -க்கு நிச்சயமாய் உண்டு ! ///
ReplyDeleteJust do it sir. But in Original size please!. I don't mind however you split. I have the full set in English 1-18 but Tamil version gives more satisfaction.
//இரத்தப்படலத்தின் முதல் பாகத்தை முதன்முதலில் படிக்கும் எந்த ஒரு பது வாசகரும் அது தரும் அனுபவத்தை மறக்க முடியாது. முதல் பேனலில் தொடங்கும் வில்லியம் வான்ஸின் தூரிகை ஜாலம் கதையின் முடிவில் அதன் உச்சத்தை அடைந்திருக்கும். கதையின் முடிவில் நம்மை சூழும் சோகமும் கேள்விகளும் தரும் அந்த அனுபவம் காமிக்ஸ் இதழ்களின் மேல் தனி மரியாதையை ஏற்படுத்தும். மேலும் பல காமிக்ஸ் இதழ்களை தேடிப்பிடித்து படிக்க வைக்கும்.//
ReplyDeleteTotally Agree. When I read the first volume "Thigil" in late 80s, it was a amazing experience.
18 volumes but starting from this year, in original colour and size is a great idea. That's how the original French/English series is.
சார் நாங்கள் எல்லாம் எதை தந்தாலும் ஏற்றுக் கொள்பவர் சங்கம் குண்டு புத்தகம் எனில் குஷியாக வாங்கிக்கொள்வோம்
ReplyDeleteதனித்தனி என்றாலும் வேறு வழி இல்லை என்று வாங்கிக்கொள்வோம்
தனித்தனி என்றால் 2017ல் தொடங்கி விடலாம்
Perfectly said Senthil. Anything is OK for me too. But if you ask me to vote for only one option, then it is for ONE SINGLE BOOK as a collector's edition.
Delete-:)
DeleteSir, please make an issue of Rathappadalam as a size of TeX maxi size or. Original size.
ReplyDeleteUnless, it will be a waste of time and interests.
Most of our readers going to to read and enjoy. And it will be our collections of comics. 1. Two or three volumes. 2. Maxi size or original size, 3. Release date as of your wish. 4. Pls make an announcement
Pre-booking amount for two or single instalment s.
Than.
தனி தனி இதழ்களாக வருவதில் எனக்கும் உடன் பாடு இல்லை சார் ... ஒரே புத்தகம் அல்லது மூன்று புத்தகம் என்பதே சரியான முடிவாக இருக்கும் ...
ReplyDeleteசமீபத்தில் வெளிவந்து நமது நினைவில் உள்ள கதைகளை மறுபதிப்பு செய்வதினை விடுத்து புது கதைகளை வெளியிடலாம். வாங்கும் திறன் அனைத்து வாசகர்களுக்கும் சாத்தியமில்லை. ஆனால் ஆவல் காரணமாக ஆதரவு தெரிவித்து விடுவார்கள். விலையைப் பார்த்த பிறகு மலைப்பபாக இருக்கும். இதே நிலைமை புதிய வெளியீடுகளுக்கு இருக்காது. புதியவை நிறைய வெளிவந்தாலும் வாங்குவதற்கு தயங்குவதில்லை இதுதான் உண்மையான யதார்த்த நிலைமை. இரத்தபடலம் குண்டு புக் தேவையில்லை. நிதானம் மிகவும் முக்கியமே!!!
ReplyDeleteபுத்தக கண்காட்சிக்கு வரும் அன்பர்கள் காமிக்ஸ் ம்டடுமே வாங்குவதில்லை. மற்றைய ஸ்டால்களுக்கும் சென்று தங்களது தேடல்களை தொடர்ந்து புத்தகங்கள் வாங்குவார்கள். எனவே பணம் மிகவும் பிரதானம் என்பதால்¸ நமக்கு பிடித்தவைகளையும் வாங்க இயலாமல் திரும்பிடுவோர் அனேகம் பேர் இருப்பார்கள். நானே 12¸000-00 ரூபாய் கொண்டு சென்று முழுவதும் செலவழித்தும் திருப்தியில்லாமல் தான் திரும்பினேன். எனவே வருடம் முழுமைக்கு 5¸000 அல்லது 6000-க்குள் இருந்தால் மிக்க நலம்.
ReplyDeleteசார் பல நண்பர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற....அன்றய தொய்வான சூழலில் இரத்தபடலத்திற்காக மட்டுமே நமது காமிக்சை தொடர்ந்து வாங்கிய நண்பர்களும் உண்டல்லவா....நிறைய கதைகள் வரும்தான்...ஆனால் அனைத்து வகையிலும் முன்னனியில் இருக்கும் ஒரு இதழை காட்ட முடியுமா.....இரத்த படலம் கண்ட கதைக்களம்தான் எவ்வளவு சுவாரஸ்யமானது.....நம் உணர்வுகளோடு உறவாடும் ஒரு நண்பராய் இப்போது கூட தொடரக் காரணம் என்ன....சற்றே சிந்திக்க வேண்டும்......இப்போது கூட உலக வரலாற்றில் ஒரே கதைக் களத்திற்கு தொடர்ந்து ஆதரவு பெருகக் காரணம்தான் என்ன....சற்றே சிந்திக்க வேண்டும்....நம்மையும் பதைபதைப்போடு படிக்க செய்யும் மாயம் புரிபடுமா.....அது காட்டிய வரலாற்றுப் புனைவும் சுவாரஷ்யமல்லவா....பதிமூன்றின் தந்தை வாதாடும் இடமும்....கோர்வயான காட்சிகளும்...கென்னடி...சே....ஃபிடல் போன்ற வரலாற்று நாயகர்களை புனைவாய் தழுவிச் செல்வதும்...மாஃபியாக்களின் பங்களிப்பும் ,குக்கிளான்ஸ் என வியர்க்க விறுவிறுக்க படிக்க காத்திருக்கிறேன் கறுப்புத் திரை விலகி வண்ணத்திரையில் வெளிப்பட......அதிலும் மங்கூஸ் ..காரிங்டன்...மார்த்தா..முதியவர்கள்...அந்த ரயில்...டயானா...ஜோன்ஸ் பாத்திரங்கள் மனதோடு உறவாடிச் சென்றது போல பாத்திரங்களை படைக்க முடியுமா என்ன..எல்லாத்துக்கும் மேலாய்....ஈடாய்......வான்சின் தூரிகை செய்த ஜாலத்தை முழுதுமாய் அனுபவிக்கவில்லையே......பௌன்சரா...எல்லாரின் ஆவலை பூர்த்தி செய்து விட்டாரா...வான்ஸ் தந்த ஜேசனின் முகம் காட்டிய பாவனைகள் மறக்க ஏலுமா...இறுக்கமாய்...சோகமாய்...துரோகத்தின் வலியாய்....தேடலின் ஆவலாய்...இதய கீதமாய்...அடுத்த பாகம் என்ன காத்திருக்குமோ எனும் பதைபதைப்பை....தன்னுள்ளும்.....நம்முள்ளும் ...விதைத்த ஆசைமுகமல்லவா அது....!அதன் பிறகு வந்த ஓவியர்கள் கூட அந்த முகத்தை மாற்றாது வரைந்தார்களே...அந்த வான்சின் மாயாஜாலங்களை வண்ணத்தில் காணும் வாய்ப்பை இழந்திடுவோமோ.....சார் மறுபதிப்பாய் அங்கே பல கதைகளை தரலாம்தான் அதே விலையில் .....புதியன கூடதான்....இது தரும் சந்தோசம் அது தந்திடுமா.....இந்த கதை வந்து எட்டு வருடமாகிறதுதான்....அப்படியே வரிக்கு வரி நினைவில் நிற்கிறதா என்ன.....நிறய முறை படித்த எனக்கும் சில நேரங்களில் புதுமைதான்....சார் வான்ஹாம்மேயின் கதை சொல்லும் மிகுதியான உச்ச பட்ச ஆற்றலும் வான்சின் உச்சமான ஓவியத்திறனும் கொண்ட கலவை......மின்னும் மரணம்...இரத்தக்கோட்டை மட்டும் விதிவிலக்கா.......அதை மிஞ்சிய நிஜம்தானோ என எண்ண வைக்கும் இந்தத் தொய்வில்லா வண்ணக்காவியத்தை.....தன்னையறிய மெனக்கெடும் மனிதனை தவிக்க விடலாமா........அறுநூறில் வந்தால் கூட போதும்.....விலை பொருட்டல்ல...சிலவற்றை விலை கொடுத்து வாங்க தயங்கா மனம் இருப்போர் படிக்கட்டுமே...நீங்க கூறிய குண்டு சாவகாசமாய் வரட்டுமே....வாழ்க்கை நாளை எப்படி போகுமோ....என தோன்றக்கூடிய அச்ச உஎணர்வை தூக்கி எறிய வைத்த பதிமூன்றினதுகதை வராதோ எனும் உணர்வை அச்சமாய் ஏற்றி விட்டதே இனி இனிய ஆசிரியரே
ReplyDeleteராகவன் போன்ற நண்பர்கள் இரண்டு வருடங்களுக்கு முன் வேண்டும் என அடம்பிடித்ததும்....இப்ப வந்தா வரட்டும என கேட்க காரணம்.....புத்தகம் கையில் இருப்பதால் மட்டுமல்ல என்பது தங்களுக்கு தெரியும்தானே....காலம் கடந்த பின் மனம் மாறிவிட்டது...ஒரு நபர் குறைந்தாலும் இழப்பே...அவர் வாங்கிருவார்ங்றது தனி விசயம்........ கையிலிருந்தும் கேட்கும் எனைப்போன்ற நண்பர்கள் கேட்பது இரசிக்கும் மனநிலையில் உள்ளதால்...அதாவது ஒரு படி மேலாய் வண்ணத்தில் இரசிக்க எண்ன்பதால்....மேலும் நாட்கள் செல்ல செல்ல ஆட்கள் குறைந்தால் நண்பர்கள் குரல் பலவீனமாய் ஒலிக்குமே.....மின்னும் மரணம் பார்க்கா விமர்சனங்களா......இரத்தப்படலம் வரட்டும்...அதன் பிறகு எதும் வரட்டும்....இதற்கிணையாய் எதும் கிடையாது....நிச்சயமாய் கர்ணனுக்கிணையாய் யாரும் கிடையாது என்பது போல.. இப இல்லா இடம் நிச்சயம் பெரும் வெற்றிடம்...நான்கைந்து முறை படித்து பாருங்க்.... தொய்வென கூறும் அயர்லாந்து படலமும்.....வெள்ளி கடிகாரங்களும் பின்னபட்ட விதம்..இவர் ஏனோ தானோவென விற்பனையை குறி வைத்து நீட்டவில்லை கதையை என உணரக்கூடும்......சார் காவியம் சார்.....சேகரிப்புக்காக......வீட்ல வைக்க என கூறும் வரிகளுக்கு இதன் வலிமை புரியாது...ஆனா புத்தகத்த புரட்டும் போது அது தரும் வலிமை அந்த வரிகளுக்கே வலி தருவது திண்ணம்....பிற கதை தேடல்கள் சந்தோசம்தான்...ஆனா எப்பவும் நமது காமிக்சின் இதிகாசமாய் இருக்க போவது டெக்சின் கார்சனின் கடந்தகாலமும் ..இபவும்தான் எழுதிக் கோங்க...வெற்றி நிச்சயம்..நா சொல்றது விற்பனையை மட்டுமல்ல.....லககி இப்பதான வந்தது என கூறிய குரல்கள் மாறி ஒலிக்கலியா.....தரமாய் தாருங்கள்....நிறைவாய்தாருங்கள் ...சடுதியில் தாருங்கள்......நாளை என்பதே அதிசயம்......இதில் அடுத்தவருடம் யார் எப்படியோ.....உயிர்இருக்குமோ.....ஜனவரி அடுத்த வருடம் சமரசமின்றி ஒரே இதழாய் ...தலயில்லா போராளி சைசாய்....பதிப்புலகமே திரும்பி பார்க்கும் வகையில் ...இந்திய உலகம் மட்டுமல்ல...அந்த இபவின் படைப்புலக கடவுள் வான்ஹாம்மே.....விண்ணுலகில் பார்த்திருப்கும் வான்சும் ....மகிழும் வண்ணம்....எல்லாவற்றுக்கும்மேலாய் பதிமூன்றின் ரசிகனின் முகத்தில் மலரும் சந்தோசமாய் ...மகிழ்வோடு தாருங்கள்...தன்னம்பிக்கை கூட்டும் தன்னிகரில்லா கதை....தமிழில் உங்கள் நடையில் தவழட்டும் குழந்தையாய் எமது நண்பர்கள் கைகளில்...இதெல்லாம் நல்ல பிள்ளயா படிச்சிட்டு.... வேற ஏதாவத படிச்சிட்டு....அவங்க சொல்றதுல நியாயம்னு...மொதல்லருந்து புரோட்டாவ உலுங்கலாம்னு ஆசப்பட்டா....அப்பறம் ....பாத்துக்கோங்க....பொங்கல் ...உழவர் திருநாள் வாழ்துகளுடன் தன்னை மறந்த பதிமூன்றை மறக்க இயலாமல் நான்...நானே நானா....யாரோதானா..முடில..அழுதுறுவேன்.....
Deleteநேத்துதான் பாத்தேன்...இரண்டு பதிவு....இன்னைக்கு மூன்றா.யப்பா..படிச்சிட்டு வரேன்
Deleteஸ்டீல்!!!!
Deleteபின்னிப் பெடலெடுத்துட்டீங்க!!!
இரத்தப்படலத்தை எவ்வளவு காதலிக்கறீங்கன்றது உணர்வுப்பூர்வமான வார்த்தைகள்ல விளங்குது!
செம்ம!
இரும்புக்கரத்தாருக்கு நிகர் அவரேதான்.
Deleteசூப்பர் தோழரே.
என்னடா நம்ம தோழர் மௌனமாய் இருக்கிறாரே என்று பார்த்தால்......!!
புலி பதுங்கி பாய்ந்திருக்கிறது!
இரத்தப்படலத்தோடு வாழ்ந்து இருக்கிறீர்கள் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.சூப்ப்ப்பர்.........தோழரே. வாழ்க இரத்த( பாசம்)படலம்.
@ஸ்டீல் க்ளா.
Deleteமிகவும் அற்புதமான பதிவு.
உணர்வுகளை அற்புதமாய் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
இதை படித்த பின் ஆசிரியரின் நிலை மேலும் சிக்கலாகப்போவது நிஜம்.
சூப்பர் ஸ்டீல் உங்கள் உணர்வுகளை அருமையாக(அழுத்தமாக)பதிவிட்டிர்கள்
Deleteஉங்கள் ஆதங்கம் புரிகிறது நண்பரே.
Deleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : நண்பரே, பதின்மூன்றின் பொருட்டு நீங்கள் பொங்கியுள்ளதில் உங்களின் காமிக்ஸ் காதலைத் தாண்டி இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன் - "பிழையிலாப் பதிவு" என்பதாய் !! இதே பாணியில் தொடர்ந்தால் சூப்பர் !
Deleteசின்னதாய் சில விஷயங்கள் - அவகாசம் கிட்டும் போது நிதானமாய் அசை போட்டுத் தான் பாருங்களேன் ? "விலை ஒரு பொருட்டல்ல" என்பது ஒரு பொதுவான சிந்தனையாய் / கருத்தாய் இருத்தல் நிஜமாக சாத்தியம் தானா ? கதைகள் சார்ந்த ரசனைகள் போலவே, விலைகள் பற்றிய கண்ணோட்டங்களும் அவரவர் உடமையல்லவா ? உங்களுக்கோர் ஆதர்ஷ நாயகராய்த் தோன்றிடும் XIII - கொட்டாவிகளின் உறைவிடமாய்க் காட்சி தருவதும் நம் குடும்பத்தில் உள்ள சில நண்பர்களுக்குத் தானே ? So "XIII -க்கு விலையில் சமரசங்களின்றி ; உச்சமாய் வெளியிட்டே தீர வேண்டும் !" என்ற ஆர்வம் உங்கள் அளவுக்கே அனைவரிடமும் அதே தாக்கத்தை உண்டு செய்யுமென்று எதிர்பார்த்தல் நடைமுறைக்கு சாத்தியமாகிடுமா ?
இம்முறை சென்னைப் புத்தக விழாவில் என்னை சந்தித்த இரு வெவ்வேறு வாசகர்கள் ஜில் ஜோர்டனின் - காவியில் ஒரு ஆவி" இதழை இமயம் உயரத்துக்கு சிலாகித்தனர் ! எனக்கே அந்தப் பாராட்டுக்கள் சற்றே ஓவராய்த் தோன்றின ; ஆனால் அந்த 2 வாசகர்களும் மெய் மறந்தே பேசிக் கொண்டிருப்பது புரிந்தது ! So ரசனைகள் என்பன நிச்சயமாய் அவரவர் அளவுகோல்களில் மாறுபடும் சமாச்சாரம் என்பதில் மாற்றுக கருது இருந்திட முடியாது !
Yes - நமது மறதிக்கார நண்பரின் தொடர் ஒரு அசாத்தியப் படைப்பே ! ஆனால் நாமிப்போது பேசிக் கொண்டிருப்பது அவரது "மறு மறு பதிப்பைப்" பற்றி எனும் பொழுது இம்முறையும் அதே உத்வேகம் அனைவரிடமும் இருந்திட்டால் சூப்பர் ; இல்லாவிடின் அதனில் குற்றம் காண முடியாதே !! So ஒரு பொதுவான பாதையினைத் தேடிட வேண்டியது எனது பொறுப்பல்லவா ? நிச்சயமாய் ஒவ்வொருவரது ஆர்வங்களுக்கும் கவனம் தருவேன் !
மறுபடியும் 18 புத்தகமா? மறுபடியும் முதல்லேர்ந்தா...? கடுப்பேத்தாதீங்கப்பா....
ReplyDeleteபுத்தகத்தை ஒண்ணா குடுத்துட்டு, அதுக்கான பணத்தை மட்டும் வேணா பதினெட்டு தடவையா வாங்கிக்கச் சொல்லி எடிட்டர டார்ச்சர் பண்ணலாம்பா.... அல்லாரும் ஒத்துழைங்கப்பா... ப்ளீஸ்!
+100
Delete////
Deleteபுத்தகத்தை ஒண்ணா குடுத்துட்டு, அதுக்கான பணத்தை மட்டும் வேணா பதினெட்டு தடவையா வாங்கிக்கச் சொல்லி எடிட்டர டார்ச்சர் பண்ணலாம்பா...///
ஹாஹாஹா! :)))
திருS.V.வெங்கடேஷ் சார்
Deleteசூப்பர். பேஷ் பேஷ்.
இதுகூட நல்ல ஐடியாவாக இருக்கிறதே.
ஹாஹாஹாஹாஹா............
😄😄😄😄😄
Delete///
Deleteபுத்தகத்தை ஒண்ணா குடுத்துட்டு, அதுக்கான பணத்தை மட்டும் வேணா பதினெட்டு தடவையா வாங்கிக்கச் சொல்லி எடிட்டர டார்ச்சர் பண்ணலாம்பா...///
ஹாஹாஹா..!!!
SVV சார், இந்த மகாசிந்தனை உங்களுக்கு எப்படி தோன்றியது?!?! :-)
எல்லாம் மாயாவி சிவா சாரோட மாத்தியோசிதான் காரணம்
Deleteஅடிக்கடி இப்படி மாத்தியோசிச்சு எங்க எல்லோரையும் சந்தோஷப்படுத்துங்கள் சார்.
DeleteS.V.VENKATESHH : ஆனாலும் இந்த டீலிங் 'செம' !!
Deleteஇரத்தப்படலம்.
ReplyDeleteஇந்த பாடு படுத்துகிறது!
எடியை நம்பியோர் கைவிடப்படார்.
நாம் இங்கு ஆளுக்கொரு யோசனையாக அள்ளி வழங்கிக் கொண்டிருக்க
மௌனமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அவர் நாம் யாரும் எதிர்பாராதவிதமாக நம்மையெல்லாம் அசத்தப்போவது நிச்சயம்.
லாபத்தை இரண்டாவது இடத்திலும் நம் அனைவரின் சந்தோஷத்தை முதலிடத்திலும் வைத்து பார்ப்பதையே வழக்கமாக கொண்டுள்ள அவர் நிச்சயம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தப் போவது உறுதி..உறுதி..உறுதி...
ஆசிரியர் நமக்கு நட்டம் என நினைக்கிறார்...சில இடங்களில் நட்டம் என்பது மனம் சார்ந்த விசயம் என அறியாததல்லவே....கார்சனின் கடந்த காலம் போல...தலை வாங்கி குரங்கு போல வந்து விடக் கூடாது..சிறிதாய் தருகிறேன் என்று....உச்சபட்சமாய் ....பார்க்கும் போது மலரும் நினைவாய்...புரட்ட புரட்ட அதிசயமாய்...கனவு இதழாய் மலரவேண்டும்...சமரசம்....வேண்டாம்....எங்கள் பைகளில் பொத்தல் எனும் கவலை வேண்டாம்...மனதிற்கு பொத்தல் போட்டு விடாதீர்கள் .......மறு பதிப்பை சிறப்பாய் தாருங்கள்....விலை பொருட்டால் சிதயவேண்டாம்
Deleteமாத்தியோசி-16
ReplyDeleteவிஜயன் பாஸ் !
ReplyDelete"இரத்தப் படலம் - ஆகஸ்ட் 2018 -க்கு நிச்சயமாய் உண்டு !"
கூல்....இப்போ எப்படி பண்ண போறோம்.........
என்னாது.....18 மாதம் 18 புக்கா.....ஐயோ சொக்கா....???
...மறுபடியும் மொதல்ல இருந்தா.........???
ஐயோ... பகவானே......இது என்ன XIII க்கு வந்த சோதனை......
XIII நம்பர் ரெம்ப மோசம்பான்னு இனி யாரவது சொன்னா...கேள்வி கேக்கமா தலை ஆட்டத்தான் வேணும் போல.. ஹ்ம்ம்..... :-(
இப்போ...கலெக்டர்'ஸ் edition என்பதால்தான் இதுக்கு இவ்வளவு மரியாதை....
புக் வேணாம்னு சொல்றவங்க யாரும் இல்ல...இப்போ வேணாம்னு சொல்றவங்க கூட கொஞ்ச நாள் போய் கலெக்டர்'ஸ் edition தான் எதிர்பார்க்கறாங்க....
மேலும் நம்ம ATR சார், வெட்டுக்கிளி சார், மஹேந்திரன் பரமசிவம் சார் மற்றும் நண்பர்கள் கருத்தை நான் ஆதரிக்கிறேன்!
அப்புறம் பாஸு....நாலு கலெக்டர்'ஸ் edition கூட நம்ம சேந்தம்பட்டி குழு மிரட்டி உருட்டி வித்துருவாங்க (அந்த கொடூர punishments .. கேட்டா ஐஐ யோ ....னு ஒரு நாலு பேராவது வாங்க மாட்டாங்க...?)
ஆனா.....2018 புக் fairla இது இந்த மாசம் first புக் ....2020 புக் fairukku மறக்காம வந்து கடைசி பாகம் வாங்கிட்டு போங்கன்னு சொல்லிட்டு அந்த இடத்துல தைரியமா நிக்க முடியுமா என்ன :-)
நம்ம நண்பர்கள் பாணில சொன்னா.....
பத்து நாள் பட்டினி கெடந்து வந்தா முழு பிரியாணி கெடைக்கும்னா பரவாயில்லை....2018 , 2019 வரைக்கும் கூட வெயிட் பண்ணலாம்....
இல்ல.... பிரியாணி போட வேண்டிய ஆட்டு குட்டி இது.......
அடுத்த மாசம் வாங்க...மசாலா ரெடி ஆகிட்டு இருக்குனு சொன்னா....பாவம் சார் பசங்க நொந்து போய் சுத்த சைவமா மாறிட போறாங்க.....;-)
So ..... ஒரே புக்....இல்ல மூணு புக் collection ரிலீஸ் on the same day பாஸு!
புக் சைஸ்! எவ்ளோவ் பெருசா முடியுமோ அவ்ளோவ்....atleast அந்த பழைய black & white கலெக்ஷனை விட பெரிய சைஸ்!
பைனல் பண்ணுங்க.....பாஸு....பைனல் பண்ணுங்க!
(பாவம் இப்போ நடக்கற விவாதத்தை பார்த்தே எத்தனை பேரு லைட்டா XIII ஆகிட்டு இருங்கங்களோ தெரியல!)
அப்புறம்...நீங்க சொன்னா மாதிரி 4 புக் பத்து நாளா தாண்டாதபோது நம்ம புக் அதிக படுத்தலானாலும் தயை கூர்ந்து கொறைக்கற ரோசனையே வேணாம் பாஸ்!
//அப்புறம்...நீங்க சொன்னா மாதிரி 4 புக் பத்து நாளா தாண்டாதபோது நம்ம புக் அதிக படுத்தலானாலும் தயை கூர்ந்து கொறைக்கற ரோசனையே வேணாம் பாஸ்!//
ReplyDelete+10000
வண்ணத்தில் இரத்தப் படலம் வருவதை வரவேற்கிறேன. ஆனால் அதனை ஒரே இதழாக போடாமல், 4 அல்லது 5 பாகங்கள் கொண்ட இதழ்களாக ஒரே வருடத்தில் வெளியிட முயற்சிக்கலாம் ஐயா!
ReplyDeleteதாமதமானாலும் பரவாயில்லை, எங்களுக்கு முழு பிரியாணியும் வேண்டும். இ.ப. மேக்கஸி அளவில் , கண்ணை பறிக்கும் வண்ணத்தில்.......
ReplyDeleteleom : மறு ஒலிபரப்பு : வழக்கமான சைஸ் தாண்டி பெரிய சைஸ்கள் சாத்தியம் ஆகிடா !! So அவற்றை எதிர்பார்த்திடல் வேண்டாமே ?
Deleteஇன்னும் கொஞ்ச நாள் இப்படியே போச்சுன்னா நாம் எல்லோலும் இரத்தப் படலம் XIII மாதிரியே ஆயிடுவோம் என்று நினைக்கிறேன்! ஒவ்வொருவரிடமிருந்தும் வித விதமான எண்ணங்கள், விருப்பங்கள், கோரிக்கைகள். மொத்தத்தில் மூன்றையும் கலக்கியடித்த ஆம்லெட் போல் உள்ளது. இரத்தப் படலம் மறுப்பதிப்பாக முழு வடிவம் பெறுவதில் 3 நாட்களாய் தொடரும் ஒரு தேடல்...A well mixed opinion.
ReplyDelete1. ஒரே குண்டு புக் வேண்டி ஒரு சாரரும்
2. 6 X 3 புக் வேண்டி ஒரு சாரரும்
3. 18 தனித் தனி இதழ்கள் வேண்டி ஒரு சாரரும் (இவைகளில் முதலிரண்டும் 2000+ விலையேனும் போது, விருப்பமிருந்தாலும் மிரள்பவர்கள் ஒரு பக்கம்)
இந்த மூன்றில் ஒன்று தான் இறுதி வடிவம் பெறுமென்றாலும், அது எது என்பதுதான் இப்போதுள்ள பில்லியன் டாலர் கேள்வி...? (பேசாமல் இங்கி பிங்கி பாங்கி தான்)
(முதலிரண்டில் ஒன்று தேர்வாகும் பட்சத்தில், By GOD willing everything goes fine, But suppose குறிப்பிட்ட கெடுவுக்குள் டார்கெட் ரீச் ஆகவில்லையெனில் மாத்தியோசித்தல் அவசியம்.)
அடுத்த பதிவின் தலைப்பு இப்படியும் இருக்கலாம்...?
Delete1. சிக்கலில் ஒரு சிங்கம்.
2. operation சிக்கல்.
3. ஹலோ ! நான் எங்கே இருக்கேன்....!
MH Mohideen : "குழப்பமும் நல்லதே !!"
Deleteஇது கூட அடுத்த பதிவுக்குத் தலைப்பாகிடலாம் சார் !!
I prefer, nice quality stickers of our favorite characters is missing in our bookstore. Goodies T-Shirt, cups are costly. But each books nice wrapper work shouldn't be limited only to hardcover. If the best is printed as stickers we can use it to stick in our laptop/car/personalized gadgets for the ease. I hope it's a needy thing for us.
ReplyDeleteஒரே புக்
ReplyDeleteஇல்லன்னா 3 புக்
அதுக்கு மேல தாங்காது .....
2018 டூ டூ லேட் .........
ஆவாது .....ஆவருது இல்ல .....ஆகவேஆகாது........
துட்டு எவ்ளோ ''காமிக்ஸ்அங்கிள்'' (ஹி ஹி .......''அங்கிள்''தமிழ்ல புடிக்க்காத ஒரே வார்த்தை
)
சார் வரப் போவது ஒரு முறைதான்...சாதனையாகவும் மலரட்டுமே...கஷ்டம் என தள்ளி வைக்க வேண்டாமே..மறு முறை இந்த வாய்ப்பு வாய்க்குமோ எனத் தெரியாது..மிகச் சிறப்பாய் தரப் படுத்தி ஒரே இதழாய் ....மேக்சி சைசாய்....தரமான அட்டயாய்.....மின்னும் மரணத்துக்கு மேம் பட்டதாய் வரட்டும்...பைண்ட் பண்ணுவதில் கூடுதலாய் ..நீங்கள் கூறிய படி உழையுங்கள்...விலை ..அது ....இது என காரணம் காட்டாதீர்கள்...ஒரே வாய்ப்பு...பின்னர் யோசித்து பயனில்லை...கார்சனின் கடந்த காலத்திற்கு நேர்ந்த நிலை இதற்கு கூடாது...ஒரே கல்..ஒரே மீன்....
ReplyDeleteZர் நம் முன்னே ஒரே வாய்ப்பு...போனால்திரும்ப வாரா...வாய்ப்பு . கார்சனின் கடந்த காலம் போல செய்து விட்டு முழிக்க கூடாது .படைப்பாளிகள் நம்மை திரும்பி பார்க்கும் காலமிது .நண்பர்களே இப படைப்பாளகளே செய்தரா முயற்ச்சி . நம்மை பார்த்து அவர்களும் வெளியிடலாம் .இதனால் வெகு ஜன மீடியாக்களை நம்மை நோக்கி திருப்பவும் வாய்ப்பு ...செலவின்றி ...ஆகையால் செலவு என தடை சொல்லும் நண்பர்களோ...அல்லது பிரித்தால் என்ன எனகேட்கும் நண்பர்களோஒரேபதில் ..பிரம்மாண்டம் தரும் ஈர்ப்பு....நிச்சயம் அடுத்த பத்து வருடம் கழித்து குறைவாய் விட்டதால் மறுபதிப்பு கோரிக்கை வரலாம் ...இது நிச்சயம் வேண்டும் அனைவரை அடய போதுமானது என்பதுடன் படைப்பாளிகளை மேலும் ஒரு படி நம் முன்னே வரவைக்கும் ......நாம் இப்படி விடலியே என ஏங்க வைக்கணும் .....அதுவே பிரம்மாண்ட விளம்பரமாய் அமயனும் .ஆசிரியர தயக்கத்தை உதறச் செய்ய பாடு படுவது நம் கடமை .சார் ஒரே கல் ...ஒரே கனி ....காயாய்..பிஞ்சாய் வேண்டாம்..
ReplyDeleteநாம் காத்திருப்பது முப்பது வருடங்களாய்
Deleteஇரத்த படலம் பற்றிய என்னுடைய கருத்து ..
ReplyDeleteவேண்டாம் ..
இரத்தபடல பக்கங்களை விட அதிக பக்கங்களில் எனது கருத்தை தெரிவித்து எழுதினாலும்
ஆசிரியர்....பதிமூன்று தான் யார் என குழம்பி தவித்த நிலையை விட அதிகமாக இப்பொழுது இதை எப்படி வெளியிடுவது என குழம்பி ..புலம்பி ...கேசத்தை பிய்த்து கொண்டு இருக்கும் நிலை எப்படியும் மாறபோவதில்லை...
எனவே இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை
..ஆனா சந்தடி சாக்குல ..
"இதழை அடுத்த வருசம் குறைத்து விடலாம்னு "
ஒரு குண்டை தூக்கி போட்டீங்க பாருங்க ..ம்ஹீம்.... நல்லால...நல்லாவே இல்ல....நியாயமாரே...
இதுக்கு ஒரே ஒரு பதில் சொல்லி கொள்கிறேன் ..சார் ..அந்த பதிலும் நான் சொல்ல வில்லை....நண்பர்கள் சொல்ல வில்லை..நீங்களே சொன்னது தான் ..
*4 பாகங்கள் கொண்ட ட்யுராங்கோ
ஒரு முழுநீள டெக்ஸ்
ஒரு ப்ளூ கோட் சாகசம்
ஒரு மாயாவி மறுபதிப்பு
நமக்குப் பத்து நாட்களுக்குத் தாக்குப் பிடிக்க மாட்டேன்கிறது ! ட்யுராங்கோ என்றோ ஒரு தூர நாளில் வெளியானதொரு இதழாய்க் காட்சி தருவது நிச்சயம் எனக்கு மட்டுமல்ல என்பேன் *
ஏன் சார் ..வருசம் இத்தனை புக்கு வெளிவந்து கொண்டு இருக்கும் பொழுதே இந்த நிலை என்றால் இன்னமும் குறைத்தால் ....நெவர் ..
இதை ஏற்கவே முடியாது ..நீங்கள் ரத்தபடலம் போடுவீங்களோ...இரத்த கோட்டை போடுவீங்களோ ..வேற குண்டு புக்கு போடுவீங்களோ...இனி இதழை குறைக்கும் எண்ணம் வேண்டாம் ..
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ...தாங்கள் இதுவரை பார்த்த சிரிப்பு போராட்ட குழு ..இனி சீரியஸ் போராட்ட குழு வாக எதிர் நோக்கும் நிலை தங்களுக்கு ஏற்படும் என அழுது புரண்டு எச்சரிக்கிறேன் ...
+11111
Delete+11111111
DeleteParanitharan K : // இதுவரை பார்த்த சிரிப்பு போராட்ட குழு ..இனி சீரியஸ் போராட்ட குழு வாக எதிர் நோக்கும் நிலை தங்களுக்கு ஏற்படும் என அழுது புரண்டு எச்சரிக்கிறேன் //
Deleteசும்மா தலீவரின் "பன்ச்" அதிருது !!
மின்னும் மரணம் புத்தக அளவில் (9+9) 2 பாகங்களாக அல்லது "தலையில்லாப் போராளி" அளவில் 2 புத்தகங்களாக வெளியிடாலாமே sir
ReplyDeleteThilagar, Madurai : சார்.."தலையிலாப் போராளி" சைஸ் சிலபஸிலேயே இல்லாத சமாச்சாரம் ! So அதனை 'டிக்' அடிக்க வேண்டாமே ?
Deleteஒரே குழப்பமா இருக்கே.ஆசிரியர் என்ன முடிவு எடுக்க போகிறாரோ?
ReplyDelete'அதெல்லாம் முடியாது, இரத்தப் படலத்தை பாக்கெட் சைஸுலதான் நீங்க போடணும்'னு யாராவது கேட்டு அடம்பிடிச்சாங்கன்னா எடிட்டர் இத்தாலிக்கு எஸ்கேப் ஆகறதுக்கும் வாய்ப்பிருக்கு! ;)
Deleteபாக்கெட் சைஸில் போட்டு கூடவே ஒரு லென்ஸூம் கொடுத்து விட்டால் தீர்ந்தது பிரச்னை.அவரவர்க்கு வேண்டிய சைஸில் பார்க்க கிட்டே வைத்தும், தூரமாய் வைத்தும் அட்ஜஸ்ட் செய்து படிக்கலாம்.
DeleteArivarasu @ Ravi : கவலைப்படேல் சார் !! நிறைய சாத்தியங்கள் பற்றி நிறைய விவாதங்கள் எனும் போது - ஒவ்வொன்றின் சாதக / பாதகங்களையும் அழகாய் உள்வாங்கிக்கொள்ள முடிந்துள்ளது ! இதன் பொருட்டு, நிறைய மௌனங்கள் கலைந்திருப்பதாலும், சற்றே பரவலானதொரு பார்வைக் கோணம் கிடைத்த உணர்வும் எனக்கு !
Deleteநம் நண்பர் XIII -ஐ எவ்விதம் கையாண்டிட வேண்டுமென்பது பற்றியும் ; iஇந்தக் கனவு எல்லோருக்கும் ஏற்புடையதாய் அமைந்திட என்ன செய்தாக வேண்டுமென்பது பற்றியும் ஒரு ப்ளூபிரிண்ட் தலைக்குள் தயாராகி விட்டது ! இங்கே தற்போது அரங்கேறி வரும் சிந்தனைச் சிதறல்கள் எனது எண்ணங்களை சரி பார்த்துக் கொள்ள உதவுகின்றன என்று சொல்லுவேன் !!
So குழப்பமும் நல்லது சார் !!
அச்சச்சோ! எங்கயாவது குட்டிச் சுவத்துல முட்டிக்கிட்டு கிடப்பார்னு நினைச்சா.. இப்படி 'ப்ளூபிரிண்ட்' ரேஞ்சுக்கு தெளிவா இருக்காரே?!!
Deletev want gundu book
ReplyDeleteஇன்னாது..... மறுபடியும் 18 மாசம் 18 புக்கா........ என்னக்கொடும சார் இது.... :(
ReplyDeleteவேனாமே இந்த விளையாட்டு. ஒரே டைம்ல, ஒரே பாக்ஸ் செட்ல நாலு புக்கா பிரிச்சி 2018 சென்னை அல்லது ஈரோடு புக்பேர்ல வெளியிட்டால் மட்டுமே என் ஆதரவு. ஆமா சொல்லிபுட்டேன் ! :)
*நாலு புக்
Deleteசாரி மூன்று குண்டு சைஸ் ! :)
ஒரே பாக்ஸ் செட்ல நாலு புக்கா பிரிச்சி 2018 சென்னை அல்லது ஈரோடு புக்பேர்ல வெளியிட்டால் மட்டுமே என் ஆதரவு. ஆமா சொல்லிபுட்டேன் ! :).............
Deleteஇது அழகு .........
டியர் விஜயன் சார்,இரத்தபடலம் மூன்று புத்தகங்களாக வருவதே சிறப்பு.
ReplyDeleteமாதம் ஒவ்வொரு புத்தகம் என்பது தாங்காது.
தொடர்கதையாக வாராவாரம் வந்த கதைகளை,தொடர் முடித்து ஒரே புத்தகமாக வரூம்போது தொடர்கதைகளை படித்தவர்களே வாங்குவர். ஒரே புத்தகமாக படிக்கும்போது புது அனுபவத்தை தரூம்.
சாண்டில்யன் எழுதி குமுதத்தில் தொடராக வந்த கடல்புறா ,தொடர் முடிந்ததும் வானதி பதீப்பகத்தால் ஒரே புத்தகமாக பிரசுரிக்கபட்டபோது அதன் விலை நாற்பது ரூபாய்க்கும் மேல்.அப்போது இந்தீயாவிலேயே அதிக விலையுள்ள புத்தகமாக பார்க்கப்பட்டது. தொடர்கதைகளை படித்த வாசகர்களே வானதி வெளியீட்டையும் வாங்கினார்கள்!!!
விலையை குறைக்கும் பொருட்டு அது பல பாகங்களாக வெளியிடப்பட்டிருந்தால் அதன் சுவை குறைந்திருக்கும்.
புது தொடருக்கு மாதம் ஒரு புக் என்பது கூட ஒகே. ஏற்கனவே வந்து மறுபதிப்பு கண்டு மேலும் மறுமறு பதிப்பு காணப்போகும் இரத்தபடலம் மாதம் ஒரு புத்தகமாக என்ற கற்பனையை நினைத்துகூட பார்க்கமுடியவில்லை.அது கற்பனையாகவே இருந்து போகட்டும்!!!!!
Dr.Sundar,Salem. : கலையும் மௌனங்கள் !!
Deleteநிச்சயம் அனைவரது எண்ணங்களையும் உள்வாங்கிக் கொண்டே இருக்கிறேன் சார் !
இரத்தபடலம் மூன்று புத்தகங்களாக வருவதே சிறப்பு......ஒரே பாக்கெட் ......சூப்பர்
Delete13 @ 19 * 1 with hardbound
ReplyDeleteRegulr A4 size. No compromise.
Jan 2018 @ Chennai.
நண்பர்கள் Erode விஜய் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் இவுங்க ரெண்டு பேருக்கும் தனியா இரத்தப்படலம் போட்டு கொடுங்க அப்புறம் யாரும் இந்த புக்க பற்றி பேசவே மாட்டாங்க ..
ReplyDeleteendrumcomiclover : இது தெளிவானதொரு "வேண்டுவோர் வாங்கலாம்" முயற்சி மாத்திரமே ! ஆகையால் உங்களுக்கு இதனில் ஆர்வமின்றிப் போனால் - பட்டவர்த்தனமாக தங்களது "நோ" எண்ணங்களை பதிவிட்டுள்ள நண்பர்களின் பட்டியலில் இணைந்து கொள்ளலாமே ? நண்பர்கள் இருவரை மட்டும் இதன் பொருட்டு குறைபட்டுக் கொள்வானேன் ?
Deleteவிடுங்க எடிட்டர் சார்! 'Erode விஜய்'னு அவர் எழுதிய விதத்தை ரசிச்சுக்கிட்டிருக்கேனாக்கும்!
Deleteசார், நீங்க இப்படி திடீர்னு தெளிவாகிட்டா அப்புறம் இந்தவாரத்துக்கான நாலாவது பதிவை யார் போடுவாங்களாம்? ;)
ReplyDeleteErode VIJAY : தெளிஞ்சுட்டும் குழப்புவோமே..! குழப்பிட்டும் தெளிஞ்சுப்போமே !!
Deleteபிம்பிலிக்கா..பிலாக்கி !
முப்பது வருஷமாய் XIII கூடக் கொட்டிய குப்பைக்குப் பின்னே இதுகூட பழகாது போயின் எப்படி ?!