Powered By Blogger

Thursday, January 26, 2017

ஒரு விடுமுறை நாளும்..ஒரு காலப் பயணமும் !

நண்பர்களே,

வணக்கம். புத்தாண்டு பிறந்த வேகத்தில் புத்தக விழா ; புத்தக விழா துவங்கிய வேகத்தில் வாசக சந்திப்பு ; வாசக சந்திப்பு தந்த வேகத்தில் XIII-ன் அறிவிப்பு ; அந்த அறிவிப்பின் வேகத்தில் வாசகக் கருத்து மழை என்று இந்த ஜனவரியே "வாயு வேக வாசுவாய்"  அமைந்துவிட்டுள்ளது நமக்கு !! ட்யுராங்கோ அண்ணாச்சியும், ப்ளூகோட் போட்ட பட்டாளங்களும் நம் முன்னே அணிவகுத்தது எல்லாமே ஏதோ ஒரு கி.மு. ; கி.பி. காலத்துச் சமாச்சாரம் போலத் தோன்றுகிறது மண்டைக்குள் ! XIII ஏற்படுத்திய செம களேபரங்களுக்கு மத்தியினில் -  பிப்ரவரி மாதமானது கூப்பிடு தொலைவில் காத்துக் கொண்டிருப்பத்தைச் சுலபமாய் மறந்திருக்கலாம் தான் ; ஆனால் கடந்த நாலைந்து ஆண்டுகளாய் உள்ளுக்குள் குடி புகுந்திருக்கும் அலாரக் கடிகாரம் குய்யோ-முறையோ என்று கூச்சல் போட்டுக் கொண்டே இருப்பதால்  - பிப்ரவரி பணிகள் பிசிறின்றி ஓடிக் கொண்டுள்ளன ! நான்கில் மூன்று தயாராகியும் விட்டன ! இரவுக்  கழுகாரின் இறுதிக்கட்டப் பணிகளும், இம்மாதத்து சந்தா surprise-ம் மாத்திரமே அடுத்த சில நாட்களில் தயாராகிட வேண்டியுள்ளன !! So  31-ல் இங்கிருந்து மொத்தமாய்க் கிளம்பி - முதல் தேதிக்கு உங்கள் ஊர்களில் கதவைத் தட்டிக் கொண்டிருப்பர் - ஜேசன் ப்ரைஸும் ; டெக்ஸும் மந்திரியாரும் ; லாரன்ஸ்-டேவிட் ஜோடியும் !! ஆனால் - இன்றைய பதிவில் அவர்களது ராப்பர்களையும், டீசர்களையும் போட்டு ஒப்பேற்றுவதை விடவும் ஒரு ஜாலியான பின்னோக்கிய பயணத்தினுள் வண்டியை விடவிருக்கிறேன்! தொடரும் ஞாயிறுப் பதிவு - பிப்ரவரி நாயகர்களின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சிடும் பதிவென்று வைத்துக் கொள்வோமே ? 

கொஞ்ச காலம் முன்பாய் நமது டவுன் கிட்டங்கியை ஒதுக்கிய போது, ஏராளமாய் பழைய நெகட்டிவ்கள் ; அந்நாட்களில் நமது ஆர்டிஸ்ட்கள் பணி செய்த கதை ஒரிஜினல்கள் ; மங்கிப் போன ஜெராக்ஸ் பிரதிகள் ; எப்பெப்போதோ சேகரித்த புத்தகங்கள் என ஒரு சின்ன மலையே தேறியிருந்தது. அவற்றுள் மேலோட்டமாய் பார்வையை ஓடவிட்டு, சில பல பைல்கள் ; கரையான் விழுங்கியிருக்கா பழைய இதழ்கள் என்று மட்டும் மீட்டு விட்டு, மிச்சத்தைப் பின்னொரு மழைநாளில் கை பார்த்துக் கொள்ளலாம் என்று ஓரம் கட்டி வைத்திருந்தேன் / வைத்திருக்கிறேன். அந்த மழைநாள் இன்னமும் நமக்கு வந்திருக்காவிடினும், லேசானதொரு தூறல் நாள் சமீபமாய் எட்டிப் பார்த்தது ! கிடைத்த அவகாசத்தினில் அந்தப் பழங்குவியலுக்குள் தலை நுழைத்த போது - நமது சட்டித்தலையன் ஆர்ச்சியின் காலப் பயண மிஷினில் ஏறி 1988 -க்கே பயணமானதொரு பீலிங் எனக்கு ! அந்த மாலையின் அனுபவங்களே இந்தப் பதிவின் வித்து ! 

நினைவலை # 1

புரட்டியிருக்கும் இந்த புக்கின் படங்களை கொஞ்சம் கூர்ந்து கவனியுங்களேன் - நமது லயனில் வெளிவந்து ரகளையான ஹிட்டடித்த இந்த சாகசத்தின் பெயர் நினைவுக்கு வருகிறதா ? இன்றைய நம் பயணத்தில் கௌபாய் ரசனைகளுக்கொரு பிரதான இடமிருக்கிறதெனில் -  இந்தப் புத்தகத்திற்கும், இதே போல் என்னிடமிருந்த இன்னுமொரு டஜன் இதழ்களுக்குமே அந்தப் பெருமை சாரும் ! ஏற்கனவே எங்கெங்கோ இதைப் பற்றி எழுதி இருப்பேன் தான் ; ஆனால் எனது பால்யங்களை அழகானதாய் உருமாற்றித் தந்த சமாச்சாரத்தை 40 ஆண்டுகளுக்குப் பின்னே அதே மெருகோடு பார்க்க முடிந்த போது - "ஏழு கழுதை வயசாகிப் போச்சோ நமக்கு ?" என்ற வழுக்கையைத் தடவியதொரு  மெல்லிய ஆதங்கத்தையும் தாண்டி - உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகளின் நர்த்தனங்களை உணர முடிந்தது ! இந்த இதழை தூக்கி வைத்துக் கொண்டு கௌபாய் டெக்ஸ் வில்லரை கௌ-மேன் ராமராஜனாக்க முனைந்தது மூன்றாம் வகுப்பின் விடுமுறைகளில் போது என்பது நினைவிருக்கிறது ! அப்போது படம் பார்ப்பதிலேயே அப்படியொரு சுவாரஸ்யத்தை எனக்குள் விதைத்த "தல" - ஐந்தாம் வகுப்பிலிருந்து, கழுதை வயசாகும் வரைக்கும்  என் தலைமாட்டில் காவல் கிடந்தவர் என்று சொல்லலாம் ! படிக்க, புரிந்து கொள்ள இயன்ற நாள் முதலாய் என் கற்பனைகளை கணிசமாய்க் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட கதைகளுள் இதுவும் ஒன்று ! சான் பிரான்சிஸ்கோ நகரில் தலையும் , டீமும் செய்யும் அதிரடிகளை என் தலைக்குள் உருவகப்படுத்திக் கொள்ள முயன்ற ராப்பொழுதுகள் ஒரு வண்டி !  கோக்கு மாக்காய் ஊற்றப்பட்டதொரு ஆம்லெட்டைப் போல உலக வரைபடத்தில் காட்சி தரும் அமெரிக்காவை நான் அடிக்கடித் தேடித் தேடிப் பார்த்துக் கொண்டது சான் பிரான்சிஸ்கோ எங்குள்ளது என்று அறிந்து கொள்ளவே !! அந்த நகரம், அந்தத் துறைமுகம், அங்குள்ள பார்கள், அந்த வீதிகள் ; அங்கே TEX & கோ. உலா வருவது என எல்லாமே மனத்திரையில் ஓடும் !! TOPSELLERS என்ற பிரிட்டிஷ் பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்ட அத்தனை  கதைகளும் - பெயருக்கேற்றபடியே - TOPSELLERS தான் !! 

நினைவலை # 2 :

மாயாவியின் சாகசம் என்பது obvious ; ஆனால் இந்தக் கத்தைப் பேப்பர்கள் என்னவென்று தெரியுமோ ? ஜெராக்ஸ் பிரதிகள் என்றதொரு சமாச்சாரமே கண்டுபிடிக்கப்படா காலத்தில் இங்கிலாந்திலிருந்து வந்திடும் ஒரிஜினல் வழு வழு பிரிண்ட்களின் மீதே அச்சிடப்பட்ட தமிழ் வசனங்களை நமது ஓவியர்கள் ஒட்டி, பணியாற்றுவார்கள். அவை பின்னர் நெகட்டிவ்களாக மாற்றப்பட்டு அச்சாகி விடும். இந்த வழு வழு ஒரிஜினல்களோ நாளாசரியாய் சிகப்படிக்கத் துவங்கி விடும் - ஏன் தெரியுமா ? தமிழ் வசனங்களை அந்த ஒரிஜினல்களின் மீது ஒட்டிட நம்மவர்கள் பயன்படுத்துவது பசையல்ல ; மாறாக - சைக்கிள் டயருக்கு பங்ச்சர் ஒட்டிடப் பயனாகும் சிகப்பு நிற ரப்பர்சொலுஷயனை ! வசனங்கள் எதையேனும் தப்பான இடத்தில ஆர்டிஸ்ட்கள் ஓட்டிடும் பட்சத்தில் கூட, சுலபமாய் அவற்றை அப்புறப்படுத்திவிட்டு முடியும் ! பசை ; கம் என்றால் பேப்பர் கிழிந்து விடும் ; ஆனால் இந்த சிகப்பு சொலுஷனில் அந்தத் தலைவலி லேது ! ஒரே சிக்கல் - நாள்பட ஒரிஜினல்கள் செந்நிறமாகி விடும். So பத்திரப்படுத்தும் பொருட்டு - ஒவ்வொரு இதழையும் நியூஸ் பிரிண்டில் அச்சிடும் வேளைகளில், வெள்ளைக் காகிதங்களில் ஒரு 10 ஷீட் மட்டும் சேர்த்துக் கொள்வோம் ! அந்தப் பத்து வெள்ளைத் தாள் பிரிண்ட்களுள் இரண்டு தெளிவான பேப்பர்களை மட்டும் எடுத்து, வெட்டி, பக்கங்களாகி, பத்திரமாய் பண்டல் போட்டு பரணுக்குப் பார்சல் செய்திடுவோம். இவையே எங்களது அந்நாட்களது archiving சிஸ்டம் ! அந்த "வெள்ளைக்" காகிதங்களும் இன்றைக்கு பல்லைக் காட்டும் மஞ்சளாய் மாறிப் போயோ ; ஒடிந்து விழும் ரஸ்க் துண்டுகள் போலவோ உருமாற்றம் கொண்டிருப்பது கால ஓட்டத்தின் கோலம் ! இது எஞ்சியுள்ளதொரு மாயாவியின் ஒரிஜினல் !! 

இங்கே ஒரு கொசுறுக் கிளைச் செய்தியும் கூட !! இந்த சிகப்பு ரப்பர் சொல்யூஷனுக்கு ஒரு சமயத்தில் தட்டுப்பாடும் தலைகாட்டியது !! விட்டேனா பார் - என்று சுத்துப்பட்டு ஊர்களுக்கெல்லாம் ஆட்களை அனுப்பி ஒரு 100 டியூப்களையாவது   வாங்கிப்   பதுக்கியிருப்பேன்  ! ஆர்டிஸ்ட்கள் வந்து "புது டியூப் வேணும் அண்ணாச்சி" - என்று நின்றால், பிதுக்கி எடுக்கப்பட்ட பழசை என்னிடம் முதலில் ஒப்படைத்தாக வேண்டும் !! ஆனாலும் இந்த சுடலைமுத்து அன்னிக்கே ரெம்போ ஸ்ட்ரிக்ட் !! அக்காங் !! 

நினைவலை # 3 :

இதைக் கொண்டு ஒரு முழுப் பதிவே போட்டுத் தாக்கியுள்ளதால் - புதுசாய் சொல்ல ஏதுமில்லை என்னிடம் ! இங்கே புத்தம் புதுசாய் இருப்பது இந்த இதழ் மட்டுமே !! புரட்டக்கூடப் படாது, அப்படியே பத்திரமாய், அட்டகாசமாய் இதழ் இருப்பதை பார்த்து அசந்தே போனேன் ! நாடோடி ரெமி !! இன்னமும் புத்தம்  புதுசாய் !!

நினைவலை # 4 :

BRUCE LEE காமிக்ஸ் தொடரின் மங்கிப் போன இந்த ஜெராக்ஸைப்  பார்த்த போது என்னையும் அறியாது கிக்கி-பிக்கி என்ற சிரிப்பைத் தவிர்க்க இயலவில்லை !  1981 / 82-ல் முத்து காமிக்ஸ் வாரமலர் என்ற விஷப்பரீட்சை அரங்கேறிய நாட்கள் நினைவுக்கு வந்தன ! எந்தப் புதுக் கதையோ, தொடரோ தபாலில் வந்து சேர்ந்தால், அதனை முதலில் படிக்கும் ஆசாமி நானே ! முத்து காமிக்சில் வெளியான முக்காலே மூன்று வீசம் ரிப் கிர்பி ; காரிகன் ; வேதாளம் ; மாண்ட்ரேக் கதைகளையெல்லாம் நான் படிக்காது மொழிபெயர்ப்புக்கே போனதாய் சரித்திரம் இருந்திராது. அப்படியிருக்கையில் திடுமென மறுபிரவேசம் செய்திருந்த திருவாளர் மு.த. வாரமலரில் ஏதேனும் புதுசாய்க் கதையினைப் போட வேண்டுமென்ற ஆர்வத்தில் - டில்லியிலிருந்து BRUCE LEE கதை ஒன்றை வாங்கிட சீனியரை நச்சரித்து காரியம் சாதித்திருந்தார். "ப்ரூஸ் லீ மேனியா" உச்சத்திலிருந்த நாட்களவை என்பதால் சீனியரும் தலையாட்டி இருந்திருக்க வேண்டும் !   கதையும் வந்து விட்டிருந்தது போலும் ; ஆனால் என் கண்ணில் அதைக் காட்டிடக்  கூடாதென்று திருவாளர் முனா.தனா சொல்லியிருந்திருக்கிறார் பணியாளர்களிடம். So சத்தமில்லாது அதனில் கலர் செய்யும் பணிகள் ; பிராசசிங் எல்லாமே நடந்து இதழை அச்சில் பார்க்க முடிந்த போதே இப்படியொரு சமாச்சாரம் அரங்கேறி இருப்பது எனக்குத் தெரிய வந்தது ! இந்தக் கூத்துக்களெல்லாம் நடப்பதற்கு ஓராண்டுக்கு முன்னரே "டிங்-டாங்" என்றதொரு இதழின் பொருட்டு நான் கதைகள் ; காமிக்ஸ் தொடர்கதைகள் என்றெல்லாம் சேகரித்து வைத்திருந்தேன் ! (அப்போது சிக்கியவர் தான் பின்னாட்களில் லயனில் வெளிவந்த ஈகில்மேன் !) "அட...நம் கண்ணில் இந்த ப்ரூஸ் லீ காமிக்ஸ் தட்டுப்படாது போச்சே ?!" என்ற ஆதங்கம் எனக்குள் சத்தமில்லாமல் குடியேறியது ! அந்த "டிங்-டாங்" முயற்சிக்கு டமால்-டுமீல்  காட்டி விட்டுத் தான் வாரமலர் அரங்கேறி இருந்தது என்பதால் செம கடுப்பில் இருந்த எனக்கு இந்த "ப்ரூஸ் லீ கிட்டாமை" வேறு  எரிச்சலைப் பன்மடங்காக்கியிருந்தது ! ஆனால் கதையைப் படிக்க ஆரம்பித்த போது - எனக்குள் எழுந்தது பாருங்களேன் ஒரு உற்சாகம் - சுரண்டல் லாட்டரியில் முதல் சீட்டிலேயே ஜாக்பாட் விழுந்ததைப் போல ! கதை சொல்லி மாளா மொக்கையாக இருந்தது ! நிறைய வசனங்கள் ; ப்ரூஸ் லீயின் முத்திரையான ஆக்ஷனுக்கு பெரியதொரு முக்கியத்துவமும் இல்லை ; சித்திரங்களும் சுமாரே ! முதல் பாகத்தைப் படித்த போதே - "இது நிச்சயமாய் தேறாது !" என்று எனக்குள் ஒரு gut feel ! இந்தச் சமாச்சாரத்தைத் தான் என் கண்ணில் கூடக் காட்டக் கூடாதென்று பதுக்கிப் பாதுகாத்தீர்களாக்கும் சாமிகளா ? Enjoy !! என்றபடிக்கு சந்தோஷமாய்க் கிளம்பினேன் ! எதிர்பார்த்தபடிக்கே 'சவ சவ' வேகத்திலேயே தொடர்ந்த பாகங்களும் நகர்ந்திட, ஒவ்வொரு இதழ் வெளியாகும் வேளையிலும் எனக்கு கார்ட்டூன் பார்த்தது போலொரு பீலிங்கு ! இத்னை அந்நாட்களில் மொழிபெயர்த்த முத்து காமிக்சின் மேனேஜர் பாலசுப்ரமணியம் கதையை நொந்து கொண்டே வேலை செய்வார் ! 35 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த நாட்களை நினைவுக்கு கொணர்ந்த பக்கமிது ! 

நினைவலை # 5 : 
And இதோ - திட்டமிடலின்றித் துவங்கி, திடுமென்று மரித்தும் போன அந்த இதழின் ஒரு பிரதி(நிதி) ! Conceptwise இதுவொரு பிரமாதமான முயற்சியே ! ஆனால் தேர்வான கதைகளிலிருந்து ; தயாரிப்பு ; விநியோகம் ; முதலீட்டு ஆற்றல் என எங்குமே மருந்துக்கு கூடத் திட்டமிடல் இல்லையென்பதால்  21 இதழ்களோடு தட்டுத் தடுமாறி காலாவதியாகிப் போனதில் ஆச்சர்யமில்லை தான் ! இதைப் போலொரு முயற்சியினை நல்ல திட்டமிடலோடு ; உருப்படியான கதைகளோடு வெளியிட வேண்டுமென்பது எனது நெடுநாள்க் கனவு ; ஆனால் வாசிப்புக் களங்கள் ஏகமாய் மாற்றம் கண்டுவிட்ட இந்நாளில் இதுவொரு non -starter என்பது அப்பட்டம் !!  

இந்த முயற்சியில் எனக்கு ரொம்பவே பிடித்ததொரு விஷயம் இருந்ததெனில் - அது நமது ஓவியர் உருவாக்கிய அந்த ஸ்டாம்ப் வடிவிலான லோகோ தான் ! அதுவும், அந்த "வாரமலர்" என்ற எழுத்துக்களும் "நாளெல்லாம் ரசிக்கலாம்" ரகம் !! 


நினைவலை # 6 :


பொறுமையாய்ப் படித்துப் பாருங்களேன் - இது என்னவாக இருக்குமென்று புரிகிறதாவென்று ?  Yes - எண்பதுகளில் நாம் வெளியிட்ட ஏதோவொரு டெக்ஸ் கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது !! TOPSELLERS ஆங்கிலத்தில் வெளியிட்ட டெக்ஸ் கதைகளையாய் ஆரம்பத்தில் வாங்கி, தமிழில் வெளியிட்டு வந்தவரைக்கும் இத்தாலிய மொழிபெயர்ப்புக்கு அவசியம் தெரிந்திடவில்லை ! ஆனால் ஒருகட்டத்தில் வண்டி மேற்கொண்டு ஓடிட வேண்டுமெனில் - இங்கொரு இத்தாலிய மொழி அறிந்தவரைப் பிடித்தாக வேண்டும் என்ற சூழல் எழுந்தது ! அப்போதெல்லாம் தேடல்களுக்கு கூகுள் ஆண்டவர் லேது ; இன்டர்நெட் நஹி ; so நியூஸ்பேப்பர் விளம்பரம் ; இத்தாலியத் தூதரகத்தில் விசாரிப்பு என்றே தேடலைத் தொடங்கினோம். அவ்விதம் கிட்டியதொரு துப்பு - சென்னையில் வசிக்குமொரு பெண்மணி இத்தாலிய மொழியில் பெரும் புலமை கொண்டவர் என்ற தகவலைச் சொல்லியது. நேரில் சந்தித்துக் கேட்டுப் பார்க்கலாமென சீனியர் முயற்சித்த போது தான் புரிந்தது - அந்தப் பெண்மணி சென்னையின் ஒரு பிரம்மாண்டத் தொழில் குழுமத் தலைவரின் இல்லத்தரசி என்பது !! அவர்களது சென்னை வீடே ஒரு குட்டி அரண்மனை போன்றது !! இவர்களிடம் சென்று - நமது மாமூலான பஞ்சப் பட்டைப் பாடுவது எவ்விதம் ? பெண்டைக் கழற்றக் கூடிய இந்தப் பணிகளை செய்யக் கோருவது எவ்விதம் ? என்ற தயக்கம் தலைக்காட்டியது ! ஆனால் ஆங்காங்கே ஆண்டவன் நம் சார்பில் ஆஜராகி விடுவாரோ - என்னவோ ; மகிழ்ச்சியோடு சம்மதித்தார்கள் !! "இதுவொரு வித்தியாசமான, சவாலான முயற்சியாகத் தோன்றுகிறது ; நிச்சயம் செய்து தருகிறேன்" என்று ஒப்புக் கொண்டவர் - கிட்டத்தட்ட 20 இத்தாலிய கதைகளை நமக்கு மொழிபெயர்த்துத் தந்திருப்பார் !! "பேப்பரில், கட்டங்களுக்கு நம்பர் போட்டுவிட்டு மொழிபெயர்த்தால் போதும் மேடம்!" என்று சொன்னாலும், ஒவ்வொரு கதைக்கும் இதைப் போலொரு நோட்டை வாங்கி, ஒவ்வொரு பக்கத்தின் படங்களுக்கேற்ப கட்டங்களை வரைந்து - அதனுள் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதித் தருவார் ! கூச்சப்பட்டுக் கொண்டே நம்மால் இயன்ற சன்மானத்தை நாம் வழங்கிடும் போது புன்னகை மாறாது அதனை ஏற்றுக் கொண்டவர் அந்தக் கோடிகளின் அதிபதி !! கடவுள் இருக்கார் குமாரு !! அவரும் நிச்சயமொரு காமிக்ஸ் காதலர் குமாரு !! என்று தான் தோன்றுகிறது - அந்நாட்களை நினைக்கும் போது ! Phew !!

இன்னமும் கொஞ்சம் "மலரும் நினைவலைகள்" ஸ்டாக்கில்   உள்ளன ; ஆனால் இன்னுமொரு நாளின் பதிவுக்கென அவற்றை சேமித்துக் கொள்கிறேனே ?

குடியரசு தின வாழ்த்துக்கள் all !! மீண்டும் சந்திப்போம் !! 

161 comments:

  1. விஜயன் சார், ிஅருமையான பதிவு!

    ReplyDelete
  2. விஜயன் சார், ஆவியின் ஆடுகளம்: நமது காமிக்ஸில் தற்போது சரியான துப்பறியும் கதைகள் இல்லை என்பதை நிவர்த்தி செய்ய வந்த கதை இது எனலாம்!
    கதையின் தலைப்பை மழை இரவு புதிர்கள் அல்லது மழை இரவு மர்மம்கள் என வைத்து இருக்கலாம்.

    ReplyDelete
  3. மலரும் நினைவுகள் மறக்க இயலாதவை!

    ReplyDelete
  4. எடி விஜயன் சார்க்கும், நண்பர்களுக்கும் 68வது குடியரசு தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மலரும் நினைவுகள் பதிவு அருமை
    தொடரட்டும் எடி சார்


    நீங்க அடுத்த மாத திருப்பூர் புக்பேர் ல் தலைகாட்டிடும் நாள் எதுங்க.??

    ReplyDelete
    Replies
    1. Tex Sampath : போன பதிவிலேயே எழுதியிருந்தேனே....அடுத்த சந்திப்பு ஈரோட்டிலேயே !

      Delete
  6. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. எல்லாருக்கும் குடியரசுதின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. Good morning all always old is greener

    ReplyDelete
  10. ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்விழ்த்துக்கள்

    ReplyDelete
  11. இதுவரைக்கும் காட்டாத அந்த அட்டைபடங்கள அடுத்த பதிவிலும் காட்டாம இருந்தா நன்னாயிருக்கும்.

    பெங்களூருவிலிருந்து ஃபெர்னானந்தா

    ReplyDelete
    Replies
    1. போற பக்கமெல்லாம் ஆசிரமம் ஆரம்பிச்சி ஆனந்தா ஆயிடறதையே பொழப்பா வெச்சிட்டு இருக்கீரே..!!

      Delete
  12. Replies
    1. பிளைஸியை ரொம்ப நாளா காணோமே ??

      Delete
    2. மார்ச்சில் "கழுகுமலைக் கோட்டையில்" வருகிறார் !

      Delete
  13. வாவ் எதிர்பாராத அருமையான தகவல்கள் சூப்பரு விஜயன் சார்

    அனைவருக்கும் குடியரசுதின வாழ்த்துக்கள் 🙏🏼

    ReplyDelete
  14. அருமையான பதிவு சாரே! 'சி.சி.வ' தொடரில் ஒரு கிளைத்தொடர் போல படிக்கப் படிக்க சுவாரஸ்யம்! ஆனால், பொசுக்கென்று 'தொடரும்' போட்டுட்டீங்களே...?!

    அந்நாட்களில் திரு.முனா-தனா ஏற்பாடு செய்திருந்த ப்ரூஸ்-லீயை படித்துவிட்டு நீங்கள் அடைந்த 'உற்சாகம்' -கெக்கெபிக்கே ரகம்!
    தல'யின் அந்தப் பழைய ஒரிஜினல், வாரமலர்கள், ரெமி - இவற்றையெல்லாம் பார்க்கும்போது இத்தனைநாளும் நம் குடோனுக்குள் புகுந்து ஆட்டையைப் போடாமல் விட்ட என் புத்தியை... ¥¢£€*%@#

    ReplyDelete
  15. ////இந்த சிகப்பு ரப்பர் சொல்யூஷனுக்கு ஒரு சமயத்தில் தட்டுப்பாடும் தலைகாட்டியது !! விட்டேனா பார் - என்று சுத்துப்பட்டு ஊர்களுக்கெல்லாம் ஆட்களை அனுப்பி ஒரு 100 டியூப்களையாவது வாங்கிப் பதுக்கியிருப்பேன் ! ஆர்டிஸ்ட்கள் வந்து "புது டியூப் வேணும் அண்ணாச்சி" - என்று நின்றால், பிதுக்கி எடுக்கப்பட்ட பழசை என்னிடம் முதலில் ஒப்படைத்தாக வேண்டும் !! ஆனாலும் இந்த சுடலைமுத்து அன்னிக்கே ரெம்போ ஸ்ட்ரிக்ட் !! அக்காங் !! ///


    ஹா ஹா ஹா! :)))))

    ReplyDelete
  16. ///புத்தாண்டு பிறந்த வேகத்தில் புத்தக விழா ; புத்தக விழா துவங்கிய வேகத்தில் வாசக சந்திப்பு ; வாசக சந்திப்பு தந்த வேகத்தில் XIII-ன் அறிவிப்பு ; ///

    அறிவிப்பு தந்த உத்வேகத்தில் 'தலையில்லா போராளி' சைஸ் என்ற அதிரடி முடிவு(?!)

    ReplyDelete
    Replies
    1. Four negative = ?
      Mr steel
      :-)))

      Delete
    2. Erode VIJAY : //அறிவிப்பு தந்த உத்வேகத்தில் 'தலையில்லா போராளி' சைஸ் என்ற அதிரடி முடிவு(?!)//

      "அதிரடி முடிவோடு" முயற்சியே முடிவுக்கு வந்திடக் கூடாதே என்ற ஞானோதயத்தில் மறுபடியும் நார்மல் சைசுக்கே செல்வதென்ற வேக முடிவு !!

      Delete
    3. ஓ! அப்ப என்னோட நூறு நெகட்டிவ் பாசிட்டிவ்தான....அல்லது தொன்னூத்தாறு நெகட்டிவும் பாசிட்டிவாம்...உபயம் கூகுள்....சார் சும்மா வெளாண்டோம்...அப்டியே வரட்டும்..ஆண்டவா

      Delete
  17. நண்பர்கள் அனைவருக்கும் குடியரசுதின வாழ்த்துக்கள்...!!!!

    ReplyDelete
  18. ஈ வி ** தன் முயற்சியில் சற்றும் தளராத
    விக்ரமாதித்தன் மீண்டும்

    ஆர் & நண்பர்களுக்ககு குடியரசு தின
    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  19. ப்ளூ கோட் பட்டாளம்: இந்த முறை இந்த கதை சிரிக்க வைத்தது மட்டும் அல்லாமல் பல இடம்களில் சிந்திக்க வைக்கவும் செய்தது. கதையின் சித்திரம்களை கொஞ்சம் கவனித்து பார்த்தால் யுத்தத்தில் நடக்கும் பல தகிடுதத்தம், ஆட்களை பிடித்துவந்து பயிற்சியில்லாமல் போர்களத்திற்கு அனுப்புவது!

    இதற்கு முன்னால் வந்த கதைகளில் யுத்தத்தில் நடக்கும் தகிடுதத்தம்களை இந்த அளவு அழகாக சொன்னது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. +1.....பல இடங்களில் விழுந்து விழுந்து சிரித்தேன்...குதிரய ஓட்ட பழக செல்ல குதிரை வருவதும்...பின் தொடர்ந்து....நம்ம பழகுனர் வருவதும்...கடசியில் மிலிட்டரிக்கு சேர ....புதிய கண்ணாளர் விரைவதும்...

      Delete
    2. Parani from Bangalore : //இதற்கு முன்னால் வந்த கதைகளில் யுத்தத்தில் நடக்கும் தகிடுதத்தம்களை இந்த அளவு அழகாக சொன்னது இல்லை.//

      "ஆகாயத்தில் அட்டகாசம்" இதழினை மீண்டுமொருமுறை படித்துப் பாருங்களேன் ?

      Delete
    3. சாருக்கு ஒரு ப்ளஸ் ..இல்ல இல்ல பல ப்ளஸ்....இப்ப மட்டுமில்ல... எப்பவுமே....கப்பளுக்குள் களேபரமும் குறஞ்சா போயிடும்....அல்லது காதலிக்க குதிரையில்லை மட்டுமென்ன விதிவிலக்கா என்ன

      Delete
    4. Vijayan @ கண்டிப்பாக படித்துவிட்டு வருகிறேன்!

      Delete
  20. விஜயன் சார், முத்து வாரமலர் இதனை வரும் காலம்களில் "மலரும் மலர்" மறுபதிப்பாக வெளி இடமுடியுமா?

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : சார்.."இரத்தப் படலத்தை" மிஞ்சியதொரு சிரம முயற்சி வேறெதுவும் இருந்திட வாய்ப்பில்லை ! அதனோடே முட்டிப் பார்க்கத் தயாராகிய பின்னே மற்றதெல்லாம் பஞ்சு மிட்டாய் சாப்பிடும் ரகம் !

      Delete
    2. பரணி தம்பி...முதல்ல இரத்த படலம் வரட்டும்....+1😊

      Delete
  21. மலரும் நினைவுகள் முகத்தை மலரச்செய்யும் எப்போதும். இதுவும் அப்படியே சார்...அட்டகாசம்.

    ஜேசன் க்ளைமாக்ஸ் ஒருவழியாக 1ம் தேதி...சூப்பர் ஆவலுடன் வெயிட்டிங் சார்....

    ReplyDelete
  22. ///சென்னையில் வசிக்குமொரு பெண்மணி இத்தாலிய மொழியில் பெரும் புலமை கொண்டவர் என்ற தகவலைச் சொல்லியது. நேரில் சந்தித்துக் கெட்டப் பார்க்கலாமென சீனியர் முயற்சித்த போது ///

    @ சீனியர் எடிட்டர்

    பாருங்க சார்.. பாருங்க! நீங்க 'கேட்டுப்பார்க்க' போனதை உங்க சன் எப்படி எழுதியிருக்காருன்னு பாருங்க!

    இதுக்கு என்ன பனிஷ்மென்ட் கொடுக்கறதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம், குடும்ப விவகாரங்கள்ல நாங்க தலையிடறதா இல்லை! :D

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஈரோடு விஜய் சார்!

      Delete
    2. வணக்கம் JK அவர்களே!
      காலையிலேயே உங்களின் கணநேரத் தரிசனசம் கிடைத்ததில் மகிழ்ச்சி! :)

      Delete
    3. எனக்கும் மகிழ்ச்சியே!! ஆனால், ஒரு வணக்கம் வைப்பதற்குள் வேகமாக கடந்துவிட்டீர்களே என்று வருத்தம்...

      Delete
  23. ///கடவுள் இருக்கார் குமாரு !! அவரும் நிச்சயமொரு காமிக்ஸ் காதலர் குமாரு !! என்று தான் தோன்றுகிறது.///

    உண்மையோ உண்மை. ஒரு பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் மாதம் பத்துரூபாய்காச்சும் ஒரு காமிக்ஸ் வரணும் கடவுளேன்னு வேண்டியது நினைவில் இருக்கிறது. .!!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : உங்கள் பக்கத்து நெட்வொர்க் கொஞ்சம் சுமாராக இருந்திருக்க வேண்டும் போலும்; ஆண்டவனிடம் உங்கள் பிரார்த்தனை போய்ச் சேரக் கொஞ்சம் லேட்டாகியிருக்கும் ! ஆனால் 5 ஆண்டுகள் லேட்டாகவேணும் கண் திறந்தாரே !!

      Delete
  24. அருமையான பதிவு சார்....நான் படிக்க ஆரம்பித்தது 1984 இரண்டாம் வகுப்பின் போது.....இரும்பு மனிதன் மூலமாய்...இந்த புத்தகங்கள் கடைகளில் கிடைத்தால் வாங்கியிருப்பேன்...ஆனால் அந்த வாரமலர் லோகோவும்..வண்ணமும் கலக்குதே....இவற்றை அச்சிட நேரும் போது இதே வண்ணத்தில் சாதா தாளில் விட்டுப் பார்க்க வேண்டும் ....அருமை ...அந்த ஆரஞ்சு வண்ணக் கலவையை பார்த்தாலே மனம் கால எந்திரத்தில் ஏறிடுதே சார்....

    ReplyDelete
    Replies
    1. ////நான் படிக்க ஆரம்பித்தது 1984 இரண்டாம் வகுப்பின் போது....///

      இப்பவும் அதானுங்களா ஸ்டீல்? :P

      Delete
    2. ////நான் படிக்க ஆரம்பித்தது 1984 இரண்டாம் வகுப்பின் போது....///

      இப்பவும் அதானுங்களா ஸ்டீல்? :P.///

      இதுவரைக்கும் அதேதானுங்க..!! :-)

      Delete
  25. ///பொறுமையாய்ப் படித்துப் பாருங்களேன் - இது என்னவாக இருக்குமென்று புரிகிறதாவென்று ? Yes - எண்பதுகளில் நாம் வெளியிட்ட ஏதோவொரு டெக்ஸ் கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது ///

    ஏதோ ஒரு செவ்விந்தியர் வெள்ளையர் ஒருவரை துப்பாக்கியை பறித்துக்கொண்டு பஞ்சாயத்து பண்ணுவதைத் தாண்டி வேறொன்றும் கண்டறிய முடியவில்லை சார்.!

    ReplyDelete
    Replies
    1. துப்பாக்கியை தூர எறியச்சொல்லிவிட்டு *

      Delete
    2. எல்லா டெக்ஸ் கதையிலும் வரும் வழக்கமான டெம்பிளேட்தான் அது. எனவே கதை டைட்டிலை கணிப்பது ரொம்பவே கஷ்டம்!!!

      Delete
    3. எல்லா டெக்ஸ் கதையிலும் வரும் வழக்கமான டெம்பிளேட்தான் அது. எனவே கதை டைட்டிலை கணிப்பது ரொம்பவே கஷ்டம்!!!

      Delete
  26. "ரத்த வெறியர்கள்"

    ReplyDelete
  27. Wish you a happy republic day. A Small
    Request to editor sir, please reprint ottrai kann marmam, irumbu manidhan and cid marshall SADHI VALAI in same sizé. We need that books. This books are very excellent stories and very rare books. So reprint as early as possible. We are waiting for ratha kottai and ratha padalam advance booking opens. Have a nice day sir.

    V. SUNDARAVARADAN
    LITTLE KANCHEEPURAM

    ReplyDelete
  28. This January month books are vwry excellennt. Keep it very well and publish this type of stories. Please reprint rib jerby and kareighan old muthu comics.

    ReplyDelete
  29. வந்தேமாதரம் !
    பாரத தேசமென்று பெயர்சொல்லுவார் - மிடிப்
    பயங்கொல்லுவார் துயர்ப்பகை வெல்லுவார். !

    happy Republic days friends !

    ReplyDelete
  30. Replies
    1. வாழ்த்துகள் ....

      Delete
    2. குட்டித் தேவதை! கிரேட்!!
      வாழ்த்துகள் சதீஷ்குமார் அவர்களே! :)

      Delete
    3. மிக அருமையான பதிவு. இதுபோன்று காலத்தை பின்னோக்கி செலுத்தும் போது ஏற்படும் ஆனந்தத்திற்கு ஈடுயில்லை என்றே சொல்லலாம்.
      பொது மக்களின் மீது காட்டிய தடியடியை பார்த்த போது இந்தியனாக பிறந்ததை நினைத்து வருந்தினேன் .மனம் சஞ்சலம் அடைந்து இருந்ந நேரத்தில் தென்றலாய் வந்ததுஇந்த பதிவு.நன்றி ஆசிரியரே.

      Delete
    4. வாழ்த்துக்கள் நண்பரே.

      Delete
    5. வாழ்த்துகள் சதீஷ்!!!!

      Delete
    6. வாழ்த்துக்கள் Sathis நண்பரே :-)

      Delete
    7. வாழ்த்துகள் Sathish kumar sir ..!

      Delete
    8. பிடியுங்கள் வாழ்த்துக்களை !! தேசமே உங்கள் வீட்டு மாடஸ்டியின் பிறந்தநாளை இனிக் கொண்டாடும் !!

      Delete
    9. லட்சுமியே வந்தாச்சு வீட்டுக்கு
      வாழ்த்துக்கள் சதீஸ் :) :) :)

      Delete
    10. வாழ்த்துக்கள் நண்பரே ...

      Delete
    11. :) நன்றி ஹிஸ்டரி டாக்டர் sir, நன்றி EV அவர்களே!
      நன்றி Arivarasu @ Ravi sir!
      நன்றி Dr.Sundar sir!
      திருப்பூர் புளுபெர்ரி-நன்றி தலைவரே! :)
      நன்றி Sathiya :)
      :):) thanks Steel :)
      நன்றி Mecheri Ravi kanan sir :)
      குப்.... பிடித்தேன் வாழ்த்துக்களை எடிட் சார் :) நன்றி !
      :) உண்மை Tex Sampath நன்றி !
      நன்றி கரூர் சரவணன் sir! :)

      Delete
  31. Editor sir,
    நாடோடி ரெமி மறுபதிப்பு வர ஏதேனும் வாய்ப்புண்டா?? இப்போதைய தரத்தில் நாடோடி ரெமி வந்தால் ஆஹா......ஓஹோ வாக இருக்கும். அப்போது வந்தபோதே அது ஒரு ட்ரேட்மார்க் புத்தகமாக இருந்த ஞாபகம். தயவு செய்து முயற்சியுங்கள் சார்!!!

    ReplyDelete
    Replies
    1. ஹாரிஸண்ணே!
      அது சுமாரிலும் சுமாரான கதையாச்சுதுங்களே. .!!

      Delete
    2. KiD ஆர்டின் KannaN @ இந்த கதைய படிக்காத எனக்கு யாராவது இந்த புத்தகத்தை கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால் மறுபதிப்பு வேண்டாம்!

      Delete
    3. Pfb @
      என்னிடம் இந்த புத்தகம் இருக்குமா என்று தெரியவில்லை (ஒருவேளை தேடினால் கிடைக்கலாம்) .

      வேண்டுமானால் நினைவிலிருப்பதை கோர்வையாக்கி கதைச்சுருக்கம் சொல்கிறேனே!!

      ரெமி, பெற்றோரைப் பிரிந்து அனாதையாக ஒரு தம்பதியர் வீட்டில் வளர்வான். பின்னர் ரெமியை ஒரு வித்தைக்கார முதியவருக்கு விற்றுவிடுவார்கள்.ரெமியுடன் அந்தப்பெரியவர் தொலைதூரம் சென்றுவிடுவார். ஊர்ஊராக வித்தைகாட்டி பிழைப்பு நடத்தும் நாடோடிப் பெரியவருடன் குரங்கு நாய் ரெமி ஆகியோரும் பயணிப்பர். முதியவர் இறந்ததும் அவருடன் இருந்த குரங்கு நாய்கள் போன்றவற்றின் உதவியுடன் தன்னை வளர்த்த (விற்ற) தம்பதியினரை தேடிவருவான் ரெமி.
      அந்த பெண்மூலம் (வளர்ப்பு அம்மா) தன்னுடைய பெற்றோர் எங்கோ இருப்பதை தெரிந்துகொள்ளும் ரெமி, குரங்கு மற்றும் நாய் உதவியுடன் அவர்களிடம் சேர்வதே கதை. .!

      முழுவண்ணத்தில் சற்றே மேம்பட்ட முத்துமினி (வாயு வேக வாசு நினைவிருக்கிறதா) காமிக்ஸ் போன்றதே நாடோடி ரெமி ..!!

      Delete
    4. Mohammad Harris : அதுவொரு மரண மொக்கை சார் !!

      வேண்டுமானால் "விண்ணில் ஒரு வேங்கை " பாகம் 2 போடவா ?

      :-)

      Delete
    5. ஹா ஹா ஹா ட்ரூ சாரே!

      Delete
  32. அனைவருக்கும் வணக்கம். குடியரசு தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. வணக்கம் சார்!
    இரத்த கோட்டையை பொறுத்த வரை, தோட்டா தலைநகரத்தையும் இணைத்து ஒரே ஆல்பமாக வெளியிட்டால் நல்லது.
    இரத்தப்படலம் 6 ஆல்பங்கள்- ஒவ்வொன்றிலும் 3 கதைகள் என்பதற்கு பதிலாக 3 ஆல்பங்கள்- ஒவ்வொன்றிலும் 6 கதைகள் என்பதே சிறப்பெனப்படுகிறது.எனினும்,இதில் தங்களின் முடிவையே இறுதியானதாக ஏற்றுக்கொள்வோம்.
    "நீங்க தனியா போடுங்க!இல்ல மொத்தமா போடுங்க!ஆனா,எங்களுக்கு இரத்த கோட்டை,தோட்டா தலைநகரம் மற்றும் இரத்தப்படலம்(முழுதும்)வண்ணத்தில் வந்தே ஆகணும்!ஆங்...!"

    ReplyDelete
    Replies
    1. Boopathi Rajkumar : ஜமுக்காளத்தை மடிச்சு சலவைக்குப் போட்டாச்சு ; சொம்பை கழுவப் போட்டாச்சு ; பஞ்சாயத்தும் கலைஞ்சு வூட்டுக்குப் போய் ஒரு வாரம் ஆகப் போகிறது ! ஆலமரத்தடியில் மூணு சீட்டு ஓடிக்கொண்டிருக்கிறது !

      So "நாட்டாமை...தீர்ப்பை மாத்து" என்ற குரல் ரொம்பவே லேட் !

      Delete
    2. சார் பதிமூனு சீட்டு தலையில்லா சைசுல என் கனவுல வேற ஆடுது

      Delete
  34. ////பொறுமையாய்ப் படித்துப் பாருங்களேன் - இது என்னவாக இருக்குமென்று புரிகிறதாவென்று ? ////

    ஹிஹி! 'தலையில்லாப் போராளி' தான்!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : இந்த ஆட்டத்துக்கே நான் வரலை சாமி !

      Delete
    2. வரணும் ..சார்..பழய பன்னீர் செல்வமா வரணுமே...ஏல ..பரணி..இங்க வால..வரச்சொல்லுல.. ஓடின கூப்டுல...

      Delete
  35. அனைவருக்கும் இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  36. விஜயன் சார்,இந்த பதிவிற்கு "சிங்கத்தின் விடலை பருவத்தில்" டைட்டில் பொருந்தி வருதான்னு பாருங்க:-)

    ReplyDelete
    Replies
    1. Dr.Sundar,Salem. : தோன்றுவதை எழுதுவதோடு என் வேலை முடிந்து விடுகிறது சார் ! மாற்றுத் தலைப்புகள் நம்மள் கி இலாக்கா நஹி !

      Delete
  37. ///இந்த முயற்சியில் எனக்கு ரொம்பவே பிடித்ததொரு விஷயம் இருந்ததெனில் - அது நமது ஓவியர் உருவாக்கிய அந்த ஸ்டாம்ப் வடிவிலான லோகோ தான் ! அதுவும், அந்த "வாரமலர்" என்ற எழுத்துக்களும் "நாளெல்லாம் ரசிக்கலாம்" ரகம் !! ///


    ம்ம்ம்ம்..!! இதையெல்லாம் பார்க்கும் பாக்கியம் இதுவரையிலும் கிட்டவில்லை..!!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : அட...ஏற்பாடு செய்தால் போச்சு !

      Delete
    2. ஆஹா..!! தனியாவானேன்.! .ம்ஹூம். அது மசாலா ஐட்டமாச்சே..!!??

      என்னமோ வருமே. !

      ம்ம்ம்...! தனியாளானேன்..!

      இல்லையே. .! இது ஒத்தையில திரியுறதாச்சே. .!!?,

      வேறென்னவோ சொல்வாங்களே!!?

      ஆங்..!!

      தன்யானானேன்..!!

      Delete
    3. அதுவும் தப்பு. .!!

      "தன்யனானேன்..!!

      ஹிஹி..இதான் சரி . .! :-)

      Delete
    4. சூப்பர் சார்....ஒரு வேள இன்ப அதிர்ச்சி இதுவோ...அப்புறம் மாடஸ்டி இம்மாதமில்லயா சார்...

      Delete
  38. அருமையான பதிவு

    ReplyDelete
  39. எப்போதுமே நான் சிங்கத்தின் சிறுவயதில் ஹாட்லைன் போன்றவற்றையும் அதற்கு அடுத்த வெளியீடுகள் குறித்த விளம்பரங்களையும் தரிசித்து விட்டே கதைக்குள் புகுவேன். அந்த நினைவுகளைக் கிளப்பி விட்டன இந்த முறை தங்களது பதிவு. மகிழ்ச்சியுடன்....

    ReplyDelete
    Replies
    1. //எப்போதுமே நான் சிங்கத்தின் சிறுவயதில் ஹாட்லைன் போன்றவற்றையும் அதற்கு அடுத்த வெளியீடுகள் குறித்த விளம்பரங்களையும் தரிசித்து விட்டே கதைக்குள் புகுவேன்.//
      +1

      Delete
    2. அடியேனும் அப்படியே! காமிக்ஸ் படிப்பவர்களில் பெரும்பாலானவர்களும் அப்படியே! ( பெரும்பலானவர்கள்'னு படிச்ச தமிழ் பண்டிதர்களெல்லாம் கையைத் தூக்குங்க பாக்கலாம்!) ;)

      Delete
    3. வருகிறது விளம்பரங்கள் தான் எப்புவும் சொக்க வைப்பவை...

      Delete
  40. ஒரு மாற்று பதிவு, அந்த காலத்தில் நீங்க போட்ட குட்டிகரணம் பார்க்கும் பொது - நம்ம லக்கி லூக் "புரட்சி தீ" கதைதான் நியாபகம் வருது :)

    ReplyDelete
    Replies
    1. ////அந்த காலத்தில் நீங்க போட்ட குட்டிகரணம் பார்க்கும் பொது - நம்ம லக்கி லூக் "புரட்சி தீ" கதைதான் நியாபகம் வருது ////

      ஒன்றா... ரெண்டா?!! அவர் அடித்த குட்டிக்கரணங்களுக்கு நியாயப்படி அவர் வேல்டு ஃபேமஸ் ஜிம்னாஸ்டிக் மாஸ்டராத்தான் இருந்திருக்கணும்! அவர் போறாத வேளை; இப்படி நம்மகிட்டே வந்து எடிட்டரா மாட்டிக்கிட்டு போராட்டக்குழுவின் வியூகங்களைச் சமாளிக்க முடியாமத் திண்டாடிக்கிட்டிருக்கார்! :P

      Delete
  41. அருமையான பதிவு................இதெல்லாம் சீக்கிரம் போடுங்க சாரே .........!!!!

    ReplyDelete
  42. ட்யுராங்கோ ஒரு அட்டகாச அறிமுகம். ஆவியின் ஆடுகளம், மாயாவியின் ஜூபிடர் சோதனை(thatswhat my friend referred when he gave this story for read 20+ years back) என நிறைவான கதைகள் ஜனவரியில். :-)

    ReplyDelete
  43. டெக்ஸ் வில்லர்-ன் "the wild bunch" இரத்த வெறியர்கள் கதை நான் படித்த முதல் லயன் காமிக்ஸ்,அதனால் அதன் மீது பைத்தியகாரத்தனமான ஒரு காதலே உண்டு..
    டெக்ஸ்- ன் மிகச் சிறந்த கதைகளுள் ஒன்றும் கூட..
    அதனுடைய மறுபதிப்பு கிடைத்தால் அருமையாக இருக்கும்..

    ReplyDelete
  44. Vijayan sir,

    "அதே சமயம் ஒரு வித்தியாசமான கதைத் தொடரானது கண்ணில் படவே செய்தது ! 1250 பக்கங்கள் கொண்ட ஒரே மெகா-மெகா-மெகா கதையது ! "

    Is it Mac Coy?

    Looks like "Alexis MacCoy" is famous cowboy like Blueberry.

    http://www.bedetheque.com/BD-Mac-Coy-Tome-9-Le-canyon-du-diable-20168.html

    ReplyDelete
    Replies
    1. அப்படிப் போடுங்க! சரியா அடிச்சுட்டீங்கன்னுதான் தோனுது!

      Mac coy - ஒரு ப்ரிவியூ பார்த்தேன்.. ஓவியங்களும், துப்பாக்கிப் பிளிறல்களும் பட்டையக் கிளப்புது!

      1250 பக்கங்களை தூக்கமுடியாமத் தூக்கி, தொந்தி மேல வச்சுப் படிக்கப்போறதை நினைச்சா இப்பவே குஜாலாக்கீது!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Vijay,

      Thanks. Lets see, what Vijayan sir is going to tell :)

      Delete
  45. 2018 -ல் மாதம் ஒரு முத்து காமிக்ஸ் வாரமலர் ரிலிஸ் செய்யலாம் ( மறுபதிப்பு)
    ஒற்றைக் கண் மர்மம் என்னால் மறக்கமுடியாது

    ReplyDelete
  46. புத்தக விழாவில் ஆர்ச்சி கட் அவுட் பார்த்தேன்
    4 ஆர்ச்சி கதைகள் சேர்த்து ஆர்ச்சி ஸ்பெஷல்
    போடலாம் any idea

    ReplyDelete
    Replies
    1. குட் ஐடியா! கலர்ல கேட்கலாம்!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ///குட் ஐடியா! கலர்ல கேட்கலாம்!///

      அந்த "தலையில்லா போராளி " சைசுல..!!

      அத்த வுட்டுட்டீங்களே குருநாயரே..!!

      (நறநற. . கிர்ர்ர்ர்ர். . .)

      Delete
    4. இனிமே மறுபதிப்புன்னாலே 'த.இ.போ'சைஸுல தானே கினாஆனா அவர்களே!
      ஆர்ச்சிக்கான அட்டைப்படம்கூட முடிவு பண்ணியாச்சு. கொஞ்சநாளுக்கு மின்னாடி ஒரு கேப்ஷன் போட்டிக்காண்டி ஆர்ச்சி நடுவால நிக்க, இரண்டுபுறமும் அட்டகாசமா ரெண்டு லேடீஸ் துப்பாக்கியெல்லாம் வச்சுக்கிட்டு போஸ் கொடுப்பாங்களே... அதான்! ச்சும்மா பட்டையகிளப்பிடும்ல?!!

      அந்த அட்டைப்படத்துக்காகவே சேல்ஸ் பிச்சிக்கப்போறதும் உறுதி!

      Delete
    5. வரப்போகும் 'மரணத்தின் நிறம் பச்சை'யை த.இ.போ சைஸில் போடலாமே சார்.

      Delete
    6. கரெக்ட்! பெரிய்ய்ய மரணம் பெரிய்ய்ய பச்சையா இருந்துட்டுப் போகட்டுமே! ;)

      Delete
    7. வருடம் ஒர தடவை வந்தால் நான் தீவாளி...

      Delete
  47. Endraya engal thirumana nan nalil Muthu comicsku valthugal.

    ReplyDelete
  48. Endraya engal thirumana nan nalil Muthu comicsku valthugal.

    ReplyDelete
    Replies
    1. இனிய திருமணநாள் வாழ்த்துகள் சார்! :)

      Delete
    2. Happy Wednesday sir. . இது..இது. . Wedding day sir. .!!

      Delete
  49. இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் எடிட்டர் சார்!!!

    ReplyDelete
  50. Replies
    1. நல்வரவு டாக்டர் சார்!
      உங்க பேஷன்ட்ஸ் எல்லாரும் செளக்கியமா இருக்காங்களா? ( கொஞ்சம் வில்லங்கமான கேள்விதான்!ஹிஹி!) ;)

      Delete
    2. லயன் தளத்திற்கு நல்வரவு டாக்டர் சார்...

      Delete
  51. முன்னெல்லாம் சனிக்கிழமை ராவுல கரீக்ட்டா பதிவு வந்துடும்; இப்போல்லாம் ஒரு கமெண்ட் மட்டும்தான் வருது - "All: காலையில நீங்க காப்பி குடிக்கிற வேளையில பதிவு காத்திருக்கும். குட்நைட்"னு!

    இப்போல்லாம் சனிக்கிழமை ராவுல வாத்தியார்டேர்ந்து கமெண்ட் வந்தாலே அர்த்தராத்திரியில டெலிகிராம் வந்தாப்ல 'திக்'னு ஆயிடுது!

    என்ன நண்பர்களே, நான் சொல்வது சரிதானே? ( டெம்ப்ளேட் உதவி : L.கர்ணன், சேலம்)

    ReplyDelete
    Replies
    1. என்னதான் "என்ன நண்பர்களே, நான் சொல்வது சரிதானே? சரிதானே?"ன்னு கத்தினாலும் ஒரு '+1'னோ, நாலு '-ve'வோ கூட வராது! சிதலமடைஞ்ச செவ்விந்திய கிராமம் மாதிரியே ஆளரவமில்லாமக் கிடக்கும்! ஆனாப் பாருங்க.. புதுப்பதிவு அர்த்த ராத்திரியில வந்தாலும் 'ஐயாம் ஃபர்ஸ்ட்', 'பிலோ டென் - ஃபார் த ஃபர்ஸ்ட் டைம்' அப்படீன்னு பத்து செகண்டுல பதினைஞ்சு கமெண்ட் வந்து விழும்! இந்த ப்ளாக்ல அப்படி எங்கதான் ஒளிஞ்சுக்கிட்டிருப்பாய்ங்களோ...!!!

      Delete
    2. // ப்ளாக்ல அப்படி எங்கதான் ஒளிஞ்சுக்கிட்டிருப்பாய்ங்களோ...!!!//

      ஹி..ஹி.. இங்கதான் அப்படியே ஒரு ஓரமா .... :)

      Delete
    3. பாத்தீங்களா?!! இம்புட்டுநேரமா ஈசாணி மூலையில ஒளிஞ்சிக்கிட்டிருந்தவர் இப்ப வெளியே வந்துட்டார்! நெக்ஸ்ட்?

      Delete
    4. ///இம்புட்டுநேரமா ஈசாணி மூலையில ஒளிஞ்சிக்கிட்டிருந்தவர் இப்ப வெளியே வந்துட்டார்! நெக்ஸ்ட்.///

      அடியேன் குபேர மூலையில குந்திட்டுருக்கேன். .!!

      நீங்க அதே அக்னி மூலையிலதானே இருக்கேள்..??

      Delete
    5. அதே அக்னி மூலையிலதான் குந்திக்கிட்டிருக்கேன்! நல்லா வெந்து போச்சு!

      Delete
    6. கவனத்தை பூரா கன்னிமூலையிலியே வெச்சுண்டுருந்தா அப்படித்தான் ஆகும்னேன்.
      என்னைப் பார்த்தேளா எப்பவாச்சும் பாக்குறதோட நிறுத்திடுறது. .!!

      Delete
    7. கிட் அங்கிள் குபேரன் திசைதான் உண்டு போல, குபேரன் மூலை ஏதும் இல்லை போல...(எனக்கு பிடிஞ்சது ஃப்ரை செஞ்ச ஆட்டு மூளை)

      வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம்
      வடகிழக்கு மூலையாகும் (ஈசான்ய
      மூலை / சனி மூலை). தெற்கும்
      கிழக்கும் சந்திக்கும் இடம்
      தென்கிழக்கு மூலையாகும்(அக்னி
      மூலை). தெற்கும் மேற்கும்
      சந்திக்கும் இடம் தென்மேற்கு
      மூலையாகும் (நைருதி மூலை/
      கன்னி மூலை) மற்றும் வடக்கும்
      மேற்கும் சந்திக்கும் இடம்
      வடமேற்குமூலையாகும்(வாயு
      மூலை).

      Delete
    8. எப்படியோ, வாயு மூலைலேர்ந்து வர்றவாள்லாம் கேஸ் ட்ரபுளோட வராம இருந்தா சரிதான்!

      Delete
    9. அக்னி மூலைக்கும் (ஈ வி க்கும்) கன்னி மூலைக்கும் (இதுக்குமா ப்ராக்கட்ல ஜொள்ளனும்) இடையில் (நடுவால ஹிஹி) இருப்பதே குபேர மூலை எனப்படும். .!

      இதுலயும் ஆராய்ச்சி பண்ணிண்டு இருக்காதீரும் ஓய். .!!

      Delete
    10. டெக்ஸ் விஜயை வச்சு 'இலவச வாஸ்த்து ஆலோசனை சிறப்பு முகாம்' ஒன்னு நடத்திடலாம் போலிருக்கே..!! இப்போல்லாம் நிறைய ஆசுபத்திரிங்க நோயாளிகளை இப்படித்தான் வலைவீசிப் புடிக்கறாங்க!

      Delete
    11. அந்த மூலை, இந்த மூலைன்னுட்டு கிடக்கோம்... உலகின் எந்த மூலையில் உட்கார்ந்துகிட்டு புதுப்பதிவ டைப்பிக்கிட்டிருக்காரோ நம்ம எடிட்டரு! இந்த வாரம் ஏதோ வெளியூர் பயணம்னு சொன்னா மாதிரி ஒரு ஞாபகம்!

      Delete
    12. மூலையில் உட்கார்ந்து கொண்டு மூளையை கசக்கிட்டு இருக்கிங்களா?!

      Delete
  52. அப்போ பதிவு பஸ்ஸை புடிச்சி வந்துசேர லேட்டாகுமே???

    ReplyDelete
  53. இம்புட்டு நேரமாகியும் இன்னமும் எடிட்டர்ட்டேர்ந்து 'குட்நைட்' கமெண்ட் வரலேன்னா என்ன அர்த்தம்?

    செய்த தவறை உணர்ந்து, மனம் திருந்தி, இன்னிக்கு ராவுலயே பதிவப் போட முடிவுசெஞ்சுட்டாரோ என்னவோ?!!

    அல்லது...

    "ஒரு கி.நா மொழிபெயர்ப்பு வேலையில் மூழ்கிக்கிடந்ததால் கடிகாரத்தைக் கவனிக்கத் தவறிவிட்டேன் நண்பர்களே! நிமிர்ந்துபார்த்தபோது நள்ளிரவைத் தாண்டி நிறையவே நேரம் ஓடிவிட்டிருந்ததை உணரமுடிந்தது! பிளிரும் கொட்டாவிகளின் மத்தியில் இதற்குமேலும் கண்விழிக்க திராணியில்லாததால், காலையில் பதிவிடுகிறேனே guys? குட்நைட்" - அப்படீன்னு அடுத்த நிமிசமே ஒரு டெரர் கமெண்ட் வந்தாலும் வரலாம்!

    கலிகாலம்னா சும்மாவுங்களா?!!

    ReplyDelete
  54. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete