Powered By Blogger

Sunday, January 22, 2017

18....6...3...1...XIII !

நண்பர்களே,
         
வணக்கம். வரலாற்றில் ஒரு கல்வெட்டுத் தருணத்தின் மத்தியில் நாமிப்போது பயணிக்கிறோம் என்ற உணர்வை நிச்சயமாய் மட்டுப்படுத்திட முடியவில்லை ! சமூகவலைத் தளங்களும், அவற்றின் ஆக்கபூர்வப் பலன்களும் ஒருசேர சமுதாயத்தை அரவணைக்கும் போது ஒவ்வொரு சாமான்யனுமே போராளியாய் உருப்பெறும் விந்தைகளை இந்த வாரம் முழுவதுமே நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது ! ட்யுராங்கோவிற்குப் பொருந்தியதோ இல்லையோ- ஆனால் 'சத்தமின்றி யுத்தம் செய்யும் ஆற்றல்' நமது இளைய சமுதாயத்திடம் அபரிமிதமாய் உள்ளதை தேசமே லயித்து, ரசித்து வருகிறது என்பேன் ! இந்த எழுச்சியில் நம் நண்பர்களில் சிலரும் கலந்து கொண்டதை ஃபோட்டோக்களில் பார்க்க முடிந்த போது - நிறைவாக இருந்தது!

சுனாமிக்கு நிகரான எழுச்சியினை  சமூகம் கண்டு வரும் வேளைதனில் - நமது பதிவினிலும் ஒரு மினி வாசக விஸ்வரூபம் அரங்கேறியுள்ளதெனலாம் ! எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியவில்லை; ஆனால் 376 பின்னூட்டங்களைத் தாங்கி நிற்கும் சமீபப் பதிவினில் கருத்துச் சொல்லவும், active ஆகப் பங்கேற்கவும் நேரம் ஒதுக்கியுள்ளது மொத்தம் 80 நண்பர்கள் ! சமீபமாய் வேறெந்தப் பதிவுக்கும் இத்தனை மௌனங்கள் கலைந்ததாக எனக்கு நினைவில்லை ! நினைவைத் தொலைத்து விட்டு; சலனமின்றி நிற்கும் ஒரு மௌன மனிதனுக்கோசரம் இத்தனை குரல்கள் என்பதே ஒரு சாதனை என்று படுகிறது ! And இது முகஸ்துதியின் பொருட்டு எழுதப்பட்ட  சம்பிரதாய வார்த்தைகளல்ல guys - உங்கள் ஒவ்வொருவரின் எண்ணப் பகிரல்களுமே பற்பல புதுப்பரிமாணங்களை எனக்கு அறிமுகம் செய்து தருகின்றன ! ஒவ்வொரு புத்தகவிழாவிலும் ‘நான் தவறாமல் பதிவுகளை... பின்னனூட்டங்களை follow செய்கிறேன் சார்!‘ என்று சொல்லிச் செல்லும், மௌன வாசகர்களும் சிறுகச் சிறுகக் கலந்துரையாடலில் ஒரு அங்கமாகிடின் - நம் பாதையும், பயணமும் ஜெகஜோதியாகிடாதா?
“சரி... பில்டப்பெல்லாம் சரி ! அவசரச்  சட்டம போட்டாச்சா ? ஒப்புதல் வாங்கியாச்சா ?” என்ற ரீதியில் 'புஷ்டியணியும்' , 'புல்தடுக்கிப் பயில்வான்' அணியும் காத்திருப்பது புரிகிறது ! சிலபல நாட்களுக்கு முன்பாகவே இது பற்றிய எனது தீர்மானத்தை நான் எடுத்து விட்டேன் என்ற போதிலும்- “படைப்பாளிகள்” என்ற உச்ச அதிகாரம் கொண்டோரின் இசைவுக்காக வெயிட்டிங் ! அவர்கள் தற்போது இரு முக்கிய சர்வதேச புத்தகவிழாக்களின் பொருட்டு பிசியாக இருப்பதால் பதில் கிட்ட தாராளமாய் ஒரு மாதத்துக்கும் மேலாக எடுக்கும் ! கதாசிரியர் வான் ஹாம்மே முதல் ஓவியர் வான்ஸ் வரையிலும் நமது திட்டமிடல் பயணமாகி அவர்களது சம்மதங்களும் கிடைத்திட வேண்டும் - இத்தனை பெரிய project எனும் போது ! “பேச்சைக் குறைக்க மாட்டேன்கிறானே...!” என்ற மெல்லிய கடுப்ஸ் உங்களுக்குள் குடியேறும் முன்பாகத் திரையை விலக்கி விடுகிறேனே - எனது thought process-ன் மீதாக ?

Please note guys: இது நுமது வரைபடம் மாத்திரமே ! இதன் மீதான இறுதித் தீர்மானம் படைப்பாளிகளின் கைகளில் என்பதால் ஏதேனும் மாற்றங்களுக்கும் வாய்ப்புண்டு ! And இந்த முயற்சியானது கிட்டத்தட்ட 1½ ஆண்டுகள் கழித்தே நனவாகும் ரகம் என்பதால் - விலைகள் பற்றிய அறிவிப்பினை முன்பதிவு துவங்கிடும் வேளையிலேயே என்னால் பகிர்ந்திட முடியும் ! So இப்போதைக்கு இது இதழின் தயாரிப்புத் திட்டங்கள் பற்றி மாத்திரமே !

18 பாகங்களாய்; 6 பாகங்களாய்; 3 பாகங்களாய்; ஒரே பாகமாய் - என இந்த இதழுக்கான சாத்தியங்கள் மொத்தமும் நான்காக நம் முன்னே நின்றன ! ஒவ்வொன்றுக்கும் நிறைகளும், குறைகளும் நிறையவே கண்ணில் பட்டன ! ஆனால் அவற்றையும் மீறி இதனில் எனக்குப் புலப்பட்டது உங்கள் ஒவ்வொருவரின் உத்வேகங்களே ! ஒரு லேண்ட்மார்க் இதழ் மாத்திரமின்றி - இரத்தப் படலமே நமது மறுபதிப்புக் கோரிக்கைகளுள் இறுதி மெகா பிராஜெக்டாக இருந்திட இயலுமென்பதாக புரிந்து கொள்ள முடிந்தது ! மாயாவி, ஸ்பைடர், இத்தியாதிகள் திகட்டத் திகட்ட மறுபதிப்பாகிக் கொண்டிருக்க; டெக்ஸின் classics; லக்கி க்ளாசிக்ஸ்; சிக்பில் ஸ்பெஷல்ஸ் போன்றவையும் உண்ணும்விரதங்களுக்கு அவசியமின்றியே வெளிவந்து கொண்டிருக்க ; ‘இரத்தக் கோட்டையும்‘ உறுதி என்றாகியிருக்க – எஞ்சிடக் கூடியது ‘வேதாளன் எப்போது?‘; ‘ஆர்ச்சி எப்போது?‘; ‘ஜான் மாஸ்டர் உண்டா?‘ என்ற ரீதியிலான கோரிக்கைகளாகத் தானே இருந்திட முடியும் ? அவற்றை உரிய வேளைகள் புலரும் போது சிறுகச் சிறுக கையாண்டு கொள்ளலாமென்ற உறுதி உள்ளதால் - இரத்தப் படலமே மறுபதிப்புப் பேராளிகளின் இறுதி சாம்ராஜ்ய வேட்கையாக இருந்திட முடியும் என்பதை உணர்ந்த போது - ஒவ்வொருவரது கோரிக்கையுமே அந்தளவிற்கு முக்கியமாய்த் தோன்றத் தொடங்கின எனக்கு ! So - ஏதேனும் ஒரு முடிவை என்னளவில் எடுத்துக் கொண்டு - அதற்கு இசைவு சொல்லும் பின்னூட்டங்களைத் தேடிடாது – ஒவ்வொரு பாதையையுமே சாவகாசமாய் பரிசீலனை செய்து பார்க்கத் தொடங்கினேன் ! நண்பர்கள் இங்கும், அங்குமாய் ஊசலாடிக் கொண்டிருந்தாலும் அவர்களுள் இந்தக் ‘கனவு இதழ்‘ ஒரு மறக்க இயலா நினைவாய் உருப்பெற்றிட வேண்டுமே என்ற படபடப்பு நிறையவே தெரிந்தது ! Of course- “பதின்மூன்றாம் நம்பர் ஆணியே பிடுங்க வேண்டாமே ?” என்ற குரல்களும் என் கவனத்தைத் தப்பவில்லை ; ஆனால் 95% க்கு முன்னே 5% என்ற விகிதாச்சாரம் கெலிக்க வாய்ப்பேது ?

"மாதம் ஒரு இதழ்- 18 மாதங்களுக்கு; அல்லது 18 பாகங்கள்- தனித்தனியாய், ஒற்றை ஆண்டுக்குள் நிறைவு பெறுவதாக" என்ற proposal தான் என்னளவில் மிக மிகச் சுலபமாய்த் தென்பட்டது ! வழக்கமான பணிகளோடு ஒரு 48 பக்க இதழை இணைத்துக் கொள்வதென்பது பஞ்சுமிட்டாய் சாப்பிடும் சுலபப் பணி என்பதால் இதனில் என் ஆந்தை விழிகள் சற்றே அழுந்தவே பதிந்தன தான் ! விலையும் கட்டுக்குள் இருந்திடும் என்ற ப்ளஸ் பளிச்சிடவும் செய்தது ! ஆனால் சில அனுபவப் பாடங்கள் இந்தப் பயணப் பாதைக்கு சிகப்புக் கொடி காட்டின ! எல்லா முயற்சிகளுமே ஆரம்பம் காணும் போது கரகோஷங்களோடு துவங்கினாலும், நாட்கள் செல்லச் செல்ல அவற்றின் மீதான ஈர்ப்பு ATM-களின் கையிருப்புகளைப் போல வற்றிப் போவது நாம் பார்த்து வரும் சமாச்சாரம் ! Fleetway மறுபதிப்புகளில் ஆரம்பித்து; “என் பெயர் டைகர்”; ‘Super 6” முன்பதிவுகளில் என இந்த blowing hot & cold பாங்கை நாம் பார்த்திடத் தான் செய்கிறோம். So துவக்க இதழ்கள் ‘பர பர‘வென்று விற்பனையாகி விட்டாலும், நடுவில் ஒரு தொய்வு தொற்றிக் கொள்ளும் பட்சத்தில், வண்டியை ‘தட்டுத் தடுமாறித் தான் எல்லை சேர்க்க வேண்டி வரும் என்ற பயம் தலைகாட்டியது. அடுத்ததாக நெருடியது ‘நடுவிலே சில இதழ்களைக் காணோம்‘ syndrome ! 18 பாகங்கள் என்ற தொடர் சங்கிலியின் இடையே சிற்சிறு கண்ணிகள் காணாது போயின் - மொத்தமுமே பேய்முழி முழித்த பாடாகி விடும் என்பது நிதர்சனம். புத்தக விழாக்களிலோ / ஆன்லைன் ஸ்டோரிலோ இடைப்பட்ட சில பாகங்கள் கூடுதலாய் விற்றுப் போய் விட்டால்- தலைப்பகுதியும், வால்பகுதியும் தத்தளித்த நிலையாகிப் போகும்! முன்னர் ‘கார்சனின் கடந்த காலம்‘ இரு பாகங்களாய், வெளியாகி கையில் கிடந்த வேளையில், பாகம் 2 முந்திக் கொண்டு தீர்ந்து போனது! க்ளைமேக்ஸ் பாகமின்றி ஆரம்பத்தை மட்டும் கையிருப்பில் வைத்துக் கொண்டு தடுமாறிய பிழைப்பு XIII ன் கதையிலும் தொடர வேண்டாமே என்று பட்டது! காரணம் # 3 – சமீப புத்தக விழாக்களில் காண முடிந்த sales pattern! “18 இதழ்கள் சேர்ந்து ஒரு கதையாகிடும்” என்று கைநிறைய இதழ்களை அள்ளித் தந்தால் அதனில் மிரட்சியடையும் பாணியே அதிகமிருக்குமென்பது நம்மவர்கள் சொல்லும் விற்பனைப் புள்ளி விபரம்! அதே வேளையில் அந்த உதிரி இதழ்கள் சில பல தொகுப்புகளாய் அமைந்திடும் பட்சத்தில் - அந்த விற்பனை பாணியே மாறிப் போகிறது! Last but not the least – ஒரு மறு மறு பதிப்பை- புதியவர்கள் ஆதரிப்பார்கள்; ஆராதிப்பார்கள் என்ற நம்பிக்கையானது – “இருப்பதை மறந்து- பறப்பதைப் பிடிக்க முனைவது போலாகும்” என்று அழுத்தமாய் மனதில் பட்டது! இந்த வண்ண மறு மறுபதிப்பை படித்தாலும் சரி; சேகரித்தாலும் சரி- அதற்கென இத்தனை உத்வேகம் காட்ட நம்மவர்கள் தயாராகக் காத்திருக்கும் போது - முதல் மரியாதை வேறு எங்கு முறையாகிடும்? என்ற கேள்வி எழுந்த போது பதிலில்லை எனக்குள்! May be ரூ.100 / ரூ.120 என்ற விலை வைத்து ஒவ்வொரு சிங்கிள் ஆல்பத்துக்குமே hard cover போட்டு- ஒட்டுமொத்தமாய் 18 பாகங்ககளை அடக்கிக் கொள்ளவொரு slipcase-ம் தந்திடலாம் தான்; ஆனால் ஆர்வங்களை மாத்திரமின்றி - எங்களது தயாரிப்புத் தரங்களையும் over a period of 18 months & 18 books 18 துளியும் ஏற்ற இறக்கமின்றித் தக்க வைப்பது இமாலயச் சிரமம் என்ற யதார்த்தம் புரிந்தது ! So இந்த option க்கு ‘NO’ போட்டேன்!

தொடர்ந்தது 3 பாகங்கள் வீதம் மொத்தம் 6 ஆல்பங்கள் என்ற வரைவு! இங்கே அந்த 6 தனித்தனி ஆல்பங்களை இடைவெளி விட்டு வெளியிடுவதா ? - அல்லது ஏக் தம்மில் மொத்தத்தையும் ரிலீஸ் செய்வதா ? எது சுகப்படும் ? என்ற கேள்வி எழுந்தது! ஒற்றை ஆல்பங்களின் கதையில் நான் முன்வைத்த பற்பல வாதங்கள் இதனையுமே பிரித்து வெளியிடும் பட்சத்தில் சந்திக்க வேண்டி வருமென்பது புரிந்தது! So - எத்தனை பாகமாய்ப் போட்டாலும் சரி, அவற்றை ஏக காலத்தில் வெளியிடுவதே தீர்வு என்பதை அழுத்தமாய் எனக்குள் சொல்லிக் கொண்டேன்! அந்தத் தெளிவோடு இந்த 6 ஆல்பங்கள் கொண்ட செட் என்ற வரைவைப் பார்வையிட்ட போது- நிறைகளே நிறையத் தெரிந்தன! இந்தத் தொடரை படைப்பாளிகளே இதே போலவே மும்மூன்று கதைகள் இணைந்த Integral இதழ்களாகவே வெளியிட்டு வந்திருப்பது நினைவுக்கு வந்தது! 6 அட்டைப்படங்கள்; அவ்வப்போது எடுத்துப் படிக்க வசதியாக அதிக எடையின்றி இருக்கும் இதழ்கள் என்று மேற்கொண்டும் posiives மனதி்ல் நிழலாடின! நான் மல்லாக்கப் படுத்துக் கொண்டே விட்டத்தை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டு “பதினெட்டு... ஆறு... மூணு... ஒன்ணு... பதிமூன்று” என்று பெனாத்திக் கொண்டிருப்பதைக் கவனித்த ஜுனியர் எடிட்டர்- உச்சந்தலையில் தேய்த்து விட சிலபல எலுமிச்சைகளை வாங்கிக் கொண்டு வந்த கையோடு பேச்சுக் கொடுத்தார். உரக்கப் பேசி, மனதிலுள்ள சந்தேகங்களை எழுப்பிடும் போது- வெளியிலிருந்து விடைகள் கிடைக்கின்றனவோ; இல்லையோ- உள்ளுக்குள்ளேயே ஒரு தெளிவு கிட்டுவதை அந்த நொடியில் உணர முடிந்தது! பொதுவாக எனது தீர்மானங்களுக்குள் ஜு.எ. தலையையோ; மூக்கையோ நுழைப்பதில்லை! ஆனால் அப்பனின் சொற்பக் கேசமும் நட்டுக்குத்தி நிற்பதைப் பார்க்கும் சராசரிப் பிள்ளையின் ஆதங்கத்தோடு ஜு.எ. தனது யோசனைகளையும் சொல்ல முன்வந்த போது, அவருமே அந்த “6 ஆல்பங்கள்- 3 கதைகள் வீதமாய்; ஒரே சமயத்தில் ரிலீஸ்” என்ற கட்சியில் இருப்பது புரிந்தது! அது மட்டுமில்லாது- இந்த 6 ஆல்பங்களையும் அடுக்கிப் பத்திரப்படுத்த ஒரு அயல்நாட்டு மாதிரியையும் காட்டிய போது என் மண்டைக்குள் LED பல்புகள் எரிந்தது போலொரு பிரகாசம்! “ரைட்டு... இந்த option திறந்த நிலையிலேயே இருக்கட்டும்; அடுத்த இரண்டையும் பரிசீலித்து விட்டுத் தீர்மானிப்போம்” என்று அடுத்த மகாச்சிந்தனைக்குள் தாவினேன்!

ஒவ்வொரு ஆல்பத்திலும் 6 பாகங்கள்; மொத்தம் 3 ஆல்பங்கள்! And ஏக காலத்தில் மூன்றுமே ரிலீஸ்” என்றது தான் அந்த அடுத்த பயணப் பாதை! “இது தான் தேவலை” என்று அடியேன் துவக்கத்தில் மனதில் fix செய்திருந்தது இந்த ரூட்டைத் தான் என்றபோது- இதன் நிறைகளைத் தேடுவதை விடக் குறைகள் என்னவாக இருக்குமென்றே மனம் பரபரத்தது! ஆறு பாகங்கள் ஒரே ஆல்பத்தில் எனும் போது- இதுவும் கூட எடையில் சற்றே ஜாஸ்தி என்ற ரகமாகவே அமையுமோ? என்ற கேள்வி மனதில் எழுந்தது! அதே போல- XIII போன்ற heavy ஆன கதையினில் ஒரே மூச்சில் 6 பாகங்களை வாசிப்பது ஸ்டீல்க்ளா போலவோ, பழனிவேல் போலவோ XIII-ன் அதிதீவிர பக்தர்களுக்குச் சாத்தியமாகிடலாம்- ஆனால் நம் போன்ற சாமான்யர்களுக்கு அது சற்றே ஓவராக இருக்குமோ? என்ற கேள்வி உறுத்திக் கொண்டேயிருந்தது! எடையும் ஒன்றே முக்கால் கிலோவைத் தொட்டிருக்கும் எனும் போது- பயணங்களுக்குத் துணையாகிட இது அத்தனை சுகப்படாது என்று தோன்றத் தொடங்கியது! So- மகத்தான குறைகளின்றிப் போனாலுமே இந்த option பக்கமாய் தலையசைக்க தயக்கமே மேலோங்கியது! ஆக இறுதி ஜம்ப்; ஏக் தம்; ஏக் இதழ்!‘ என்ற ஃபார்முலாப் பக்கமாய்!

'பிடாரியாயக் கனக்கும்; தூக்கித் திரியும் போது புஜம் கழன்று போகும்; படுத்துக் கொண்டு படித்தால் தொப்பை தெறித்துப் போகும்; இதழின் விலையை மனையாள் தற்செயலாய்க் கவனித்தால் 108 ஆம்புலன்ஸிற்க்குத் தேவை ஏற்படும்; ‘படிக்க‘ என்பதை விட- பார்த்துப் பரவசப்பட என்பதற்கே இது சரிப்படும்! என்று வரிசையாய் நெகடிவ்கள் கோரஸாய்ப் கைதூக்கி நிற்பது புரிந்தது! ஆனால் அவை சகலத்தையும் சகட்டுமேனிக்கு வீழ்த்தி விட்டு முன்நின்றது அந்த பிரம்மாண்ட factor மாத்திரமே! "உலகிலேயே யாரும் செய்திருக்கா முயற்சி; ஆயிரம் பேரே நம் ஆட்பலமென்றாலும் ஆற்றலில் அசுரர்களுக்குச் சளைத்தவர்களல்ல நாம் !" என்ற இறுமாப்பினை இந்த “ஒரே இதழ் 18 ஆல்பங்கள்” என்ற தீர்மானம் தந்திடுமென்று தெள்ளத் தெளிவாய்ப் புலனானது! பைண்டிங்கில் பிழைகளுக்கு நிறைய சாத்தியங்கள்; கூரியரில் இவற்றை அனுப்பிட நாக்குத் தொங்கிப் போய் விடும் என்று தயாரிப்பின் சிரமங்களும் சைரன் ஒலியெழுப்பின தான்! ஆனால் உங்கள் கனவுகளை நனவாக்கிப் பார்க்கும் இத்தகைய பிரம்மாண்டமான வாய்ப்பு, எனது career-ல் இனியொரு முறை எழுமா? என்பது சந்தேகமே என்ற நிலையில்- முட்டித் தான் பார்ப்போமே? என்ற உந்துதல் உரம் கொண்டது!

ஆக 4 பாதைகளில்- இரண்டை ‘ஊஹும்‘ என்று நிராகரித்தான பின்னே எஞ்சி நின்றன:

6 ஆல்பம்பங்கள்- ஒவ்வொன்றிலும் 3 கதைகள் என்ற அமைப்பில்!
            (OR)
ஒரே ராட்சஸ ஆல்பம் – 18 பாகங்களையும் இணைத்துக் கொண்டு!

இரண்டிலும் நிறையவே நிறைகள்; நிறையவே வாசக அபிமானம் தென்பட்டன எனும் போது விஞ்ஞானபூர்வமான ‘இன்க்கி... பின்க்கி... பாங்க்கி...‘ வழிமுறையைக் கையிலெடுக்க மனம் ஒப்பவில்லை! ஆறு ஆல்பங்களாகப் பிரிக்கும் போது, ஒவ்வொன்றின் individual விலைகளும் ஓரளவுக்கு ஓ.கே.வாகத் தெரியுமென்பதால்- பற்பல இல்லங்களில் சிலபல பூரிக்கட்டைகள் காங்கோக்களாய் உருமாற்றம் காண அவசியமின்றிப் போகலாம் என்ற யதார்த்தம் பளீரிட்டது! ஆனால் ஏதேனும் ஒரு பக்கமாய்த் தலையசைத்து, இதர நண்பர்களின் வருத்தங்களைச் சம்பாதிப்பதை விடவும், சிரமங்களை சிரத்தில் ஏற்றிக் கொண்டாவது- இரண்டுக்குமே thumbsup தந்தாலென்னவென்று தோன்றியது! “கட்டை விரலை விரயம் செய்வானேன்?” என்ற சிந்தனை உதயமான கணவே- “ஆனது ஆகட்டும்! இரண்டு குதிரைகளிலுமே இம்முறை சவாரி செய்திடுவோம் ! 6 ஆல்பங்களா? ஒரே இதழா? அல்லது இரண்டுமேவா? எதை வாங்குவது ? என்ற தீர்மானத்தை முன்பதிவு வேளையில் நீங்களே செய்து கொள்ளுங்கள் guys!” என்று தீர்மானித்தேன்!

So- இரத்தப் படலம் வண்ணத் தொகுப்பு முதன் முறையாகவும் (and probably இறுதித் தடவையாகவும்) இத்தகையதொரு இரட்டை அவதாரத்தில் ஆஜராகவுள்ளது! Of course- சத்தியமாய் இது நம் சக்திக்கு மிதமிஞ்சிய முயற்சியே என்பது புரிகிறது! ஆனால் உங்களைக் கனவு காணச் சொல்லி ஊக்குவிப்பவன் நானே எனும் போது; அவற்றை நனவாக்கிடும் பளுவைச் சுமக்கப் பின்வாங்கவும் கூடாது தானே?! ஆனது ஆகட்டும்- நிறைய அவகாசமுள்ளதே- we will give it our best shot & more என்று தீர்மானித்தேன்!

So இது தான் நிலவரம்! And சைஸைப் பொறுத்தவரை நாம் வழக்கமாய் பயன்படுத்தி வரும் அதே சைஸ் தான் நடைமுறை கண்டிடும்! “தலையில்லாப் போராளி” சைஸுக்கு இதனையும் தயாரிப்பதெனில் விலைகள் out of control போய் விடுமென்பது மாத்திரமின்றிப் பைண்டிங்கில் இதற்கென பிரத்யேகமான பெரிய சைஸ் தையல் மிஷினும் அவசியப்படும்! ஆகையால் கனவுகள், கெட்ட சொப்பனங்களாகவும் மாறிடாது போக அணை போடும் கடமை எனக்குள்ளது! நண்பர் ஸ்டீல்க்ளா அடுத்த 18 மாதங்களுக்கு பற்பல 'புர்ஜ் கலீபா' உயரக் கோபுரங்களை இங்கே எழுப்புவார் என்பதில் ரகசியமில்லை என்றபோதிலும் - சைஸில் மாற்று சிந்தனைக்குத் துளியும் இடமில்லை என்பதே bottomline ! விலைகள்; பேக்கிங் முறைகள் பற்றியெல்லாம் நிறையவே திட்டமிடல் தேவை என்பதால்- படைப்பாளிகளின் ஒப்புதல் தெரிந்தான பின்பே அந்த முயற்சிகளுக்குள் கால் பதிப்போம்! So நாளையே விலையைச் சொல்லி வைத்து; முன்பதிவைத் துவங்கிடலாமே? என்ற அவசரங்கள் காட்டிட வேண்டாமே ப்ளீஸ்? முறையான; நிதானமான திட்டமிடல்களுக்கு அவசியம் இங்கே ஒரு வண்டியுள்ளது! அவற்றை நடப்பு இதழ்களின் வேலைகளுக்கு இடையூறின்றி நடத்திட எனக்கு நிறைய நிறைய space தேவை! ஆகையால் என்னிடமிருந்து அறிவிப்பை நாலே வாரங்களில் எதிர்பார்த்து விட்டு- ‘அம்புட்டுத் தானா? பூட்ட கேஸா?‘ என்ற ரீதியில் சங்கடம் கொள்ள வேண்டாமே? The Project is pretty much on! ஓசையின்றி எங்கள் பணிகள் துவங்கியிருக்கும்!

விரல்கள் இதற்கு மேலும் எழுதவோ; டைப் அடிக்கவோ ஒத்துழைக்க மறுப்பதால் இப்போதைக்கு விடை பெறுகிறேன் ! எனது எண்ணங்கள் / திட்டமிடல்கள் 100% பிழையற்றவைகளாக இராது தான் என்பது புரிகிறது ! ஆனால் சரியோ- தவறோ- ஒரு முடிவுக்கு வந்தான பின்னர் அதனோடே பயணிப்பது தானே முன்செல்லும் மார்க்கம் ? ஆகையால் "நாட்டாமை....தீர்ப்பெ மாத்திச் சொல்லு !!" என்று மீண்டும் ஒரு rethink இங்கே நிகழ்த்திடக் கோர வேண்டாமே - ப்ளீஸ் ? அதே போல   -  "உன் லாஜிக்கில் நிறைய ஓட்டைகள் உள்ளன ; இது விரலுக்குப் பொருந்தா வீக்கம் ; ஆகையால் நீ பூட்ட கேஸே மாமே  !" என்ற நோஸ்ட்ரடாமஸ்  பாணியிலான   நீள நீள மின்னஞ்சல்களிலும் ஆற்றல்  விரயம் வேண்டாமே - ப்ளீஸ் ? இனி முன்செல்லும் வழி மீது மாத்திரமே விழிகளைப் பதிப்போமே ? இது ஒரு ஒட்டு மொத்த மெகாக் கனவினை மெய்ப்பிக்குமொரு ராட்சஸ முயற்சி    ! அபிப்பிராய பேதங்களின்றி ஆளுக்கொரு கைப்பிடித்தாலே இந்தத் தேர் கிளம்பும் !!

Of course - முன்பதிவில் "600 " எனும் அந்த மந்திர இலக்கை எட்டிப் பிடித்தலும் இந்த முயற்சியின் முதுகெலும்பே என்பதை மறந்திடலாகாது !! நூறு, இருநூற்று என்ற எண்ணிக்கையிலேயே முன்பதிவுகள் தடுமாற்றம் காணில் - நிச்சயமாய் எல்லா மகாசிந்தனைகளுமே புலிக்கேசி வடிவேலின் கனவுகளாகிப் போய் விடுமென்ற எச்சரிக்கைப் பலகையும் சாலையோரத்தில் திடமாய் நிற்பதை நினைவூட்டுகிறேன்  ! நல்லதே நடக்குமென்ற நம்பிக்கையோடு வலது காலை முன்வைப்போமே ? 

And மறக்கும் முன்பாக - அந்தப் "புலன்விசாரணைப் பாகம்" - முன்பதிவுகளுக்கொரு பரிசாய் உண்டென்பதையும் சொல்லி விடுகிறேனே ?!Bye all! See you around!

P.S : பிப்ரவரி 3  முதல் 12 வரையிலும் திருப்பூர் புத்தக விழா நடைபெறவுள்ளது ! நாமும் அங்கிருப்போம் ! பத்மினி கார்டன்ஸ், காங்கேய சாலை என்பது முகவரி ! எப்போதும் போல் உங்களை எதிர்பார்த்திருப்போம் guys !!

310 comments:

  1. குண்டுமச்சான்ஸ் அணியின் சட்ட ஆலோசராக நான் ஆஜர்

    ReplyDelete
  2. ''வினைக்கண் வினைகெடல் ஒம்பல் வினைக்குறை
    தீர்த்தாரின் தீர்ந்தன்று உலகு.''

    மகாத்மா: மாணவர்களின் எழுச்சிக்கு தலைவணங்குவோம். மகாத்மா வாழ்ந்த நாட்டில் இவ்வளவு இளைய சமுதாயம் மகாத்மா வழியில் அகிம்சை போராட்த்தில் ஈடுபடுவதை பார்க்கும் பொழுது மகாத்மா இந்தியாவில் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பதை நாமும் உணர்வோம். அகிம்சைக்கு அன்று மகாத்மா தலைமையேற்றார். இன்றோ இலட்சக்கணக்கான இளைஞர்களின் உருவில் மகாத்மா அறப்போராட்டத்தினை நடத்துகிறார். காமிக்ஸ் ஆர்வலர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம் . வாழ்க காந்தி தேசம்!!!

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே முகநூல் போராளி அவதாரம் எடுத்து நண்பர்கள் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஐயா! தங்கள் ஊக்கத்துக்கு நன்றி.

      Delete
  3. காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் காலை(ளை) வணக்கங்கள்..

    ReplyDelete
  4. 4 வது நான் தான் ஜேசன் ப்ரைஸ் இன் எழுதப்பட்ட விதி வாசித்தேன் சார் அருமையாக உள்ளது இவ்வாறான கதைகளை அதிகம் தேர்ந்தெடுத்து வெளியிடுங்கள் தற்போது அடுத்த பாகம் வாசித்து கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  5. குளிரான காலை வணக்கம் சார் ..படித்து விட்டு வருகிறேன் ..

    ஆனா இந்த முறை பதிவு அலைபேசியில் சிறிய அளவில் வருகிறதே..:-(

    ReplyDelete
    Replies
    1. தலிவா.. இது நம்ம கவர்ன்மெண்ட் டெக்னிக்... வேற வழி இல்லை..

      Delete
    2. Paranitharan K : தலீவரே..இப்போதொருமுறை refresh அடித்துப் பாருங்களேன் ? Font எப்போதும் போலாகி விட்டிருக்கும் !

      Delete
    3. Excellent dicision about rathapadalam jumbo special book. I request don't increase the price . Wait for 1000 advance bookings and give 18 months time. Then it will be successful in your comics carrier. Advance congratulations for your esteemed dream project. We always support you sir.
      Thanking you
      One important matter. At a time don't concentrate two projects.either rathapadalam or rathakottai. Choice is yours. Finally all the best.

      V.SUNDARAVARADAN
      LITTLE KANCHEEPURAM
      7666291648.

      Delete
    4. Indira V Sundaravaradan : கோட்டை 2017 -க்கு சார் ; படலம் 2018 க்கு !

      Delete
  6. இனிய காலை வணக்கம் சார்.. நல்ல செய்தி..

    ReplyDelete
  7. படிச்சுட்டு வாரேன்

    ReplyDelete
  8. அனைவருக்கும் இனிய ஞாயிறு காலை வணக்கம் !

    எடிட்டர் சார், எங்கமேல கோபம் ஏதாச்சும் இருந்தா கூடுதலாக ரெண்டு புக் போட்டு உங்க கோவத்த தீர்த்துக்குங்க. அதுக்காக இப்படி பேபி ஸைஸ்ல டைப்பனனி இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க மாதிரி விளையாடுரிங்களே சார் ! :-) எந்த சைஸ்ல இருந்தாலும் படிப்போமாக்கும் !

    ReplyDelete
    Replies
    1. //- 6 ஆல்பம்பங்கள்- ஒவ்வொன்றிலும் 3 கதைகள் என்ற அமைப்பில் !

      - ஒரே ராட்சஸ ஆல்பம் – 18 பாகங்களையும் இணைத்துக் கொண்டு !//

      செம்ம.. மாற்று கருத்துக்கு இடமே இல்லை. கொண்டாட்டத்திற்கு ரெடி ! :-)

      Delete
    2. அட Font சைஸ் மாரிடுச்சு! :-)

      Delete
    3. P.Karthikeyan : அலாரம் வைத்து எழுந்து நாலு மணிக்கு டைப் அடித்ததில் வந்த வினை !!

      Delete
  9. Goondu morning காளை வணக்கம்.

    ReplyDelete
  10. 6 ஆல்பம்பங்கள்- ஒவ்வொன்றிலும் 3 கதைகள் என்ற அமைப்பில் இதுவே எனக்கு சிறந்ததாக தெரிகின்றது ஏற்கனவே இரத்தபடலத்தை ஆங்கிலத்தில் வாசிக்க தொடங்கியாயிற்று ஆனால் அதை தமிழில் வாசிக்க வேண்டும் அதை ரசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இன்னும் குறைந்த பாடில்லை 18 பாகங்களும் வெளியாகும் முன்னே இதற்கு பின்னுள்ள அனைத்து பாகங்களையும் வாங்கிவிட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Aashique.stark : //6 ஆல்பம்பங்கள்- ஒவ்வொன்றிலும் 3 கதைகள் என்ற அமைப்பில் இதுவே எனக்கு சிறந்ததாக தெரிகின்றது //

      நிச்சயமிது அழகாய் அமையும் !

      Delete
  11. ஓ கே சார் எப்படியோ XIII வந்துடுவார் அது போதும்
    அப்புறம்
    புத்தகவிழாவில் சந்தா நிலவரம் என்ன
    விற்பனை எப்படி ? தெரிந்து கொள்ள ஆவல்

    ReplyDelete
    Replies
    1. Anandappane karaikal : புத்தக விழா : சிறப்பு !!!

      சந்தாவில் - இன்னுமொரு 50 நண்பர்கள் ஐக்கியமாகிட waiting !!

      Delete
  12. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
  13. Good morning all
    2+2 or 3+3 or 3+2 or 2+3
    Fingers crossed

    ReplyDelete
    Replies
    1. senthil kumar : சார்...பதிவைப் படியுங்கள் ! எல்லா விடைகளும் உள்ளன அதனுள் !

      Delete
    2. Sir
      My arithmetic is for combination of pre booking
      -:))

      Delete
  14. அய்யா ஜாலி ரெண்டு பொண்ணுங்களுக்கு ரெண்டு விதமா புக்கு தேவையான கால இடைவெளி வர்லாம் வர்லாம் வர்லாம் வா XIII வா !சொக்கா கூடவே புலன்விசாரணை வேர ஜமாயச்சர்லாம் சார்

    ReplyDelete
    Replies
    1. palanivel arumugam : ஜமாய்ச்சே ஆகணும் பழனிவேல் !!

      Delete
    2. என்னவேனா பண்ணலாம் சார் கவலை வேண்டாம் சார்

      Delete
  15. இரண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது நல்ல யோசனை சார்.

    ReplyDelete
  16. Replies
    1. ஆதி தாமிரா : ஆச்சரியங்களும் நல்லதே ? இல்லையா சார் ?

      :-)

      Delete
  17. 20 வருடங்கள் ஆச்சு முதலில் இரத்தப்படலம் படிக்க ஆரம்பித்து இன்னும் 18 மாசத்துல கனவுக்காவியம் கைகளில் தவழப்போகிறது 18 மாதக்குழந்தையாக .! எனது குழந்தைகளை கைகளில் வாங்கியதருணம் போல் அமையும் காத்திருக்கிறேன் சார்

    ReplyDelete
    Replies
    1. palanivel arumugam : பழனிவேல்...திகைக்கச் செய்கிறீர்கள் !!

      Delete
  18. ஆஹா..ஆஹா..!!
    அற்புதமான செய்தி.
    குண்டு புக்/ஆறு பாக ஸ்பெஷல் என இரண்டு அவதாரங்களில் என குஷி தெறிக்குது.
    இரண்டையும் ரசிக்க வழிவகை ஏற்படுத்திய ஆசிரியருக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆனா படிக்க படிக்க கடசி வர பீதிய கிளப்பிட்டார்..இரண்டுமேன்ன பின்னதான் போன உயிர் திரும்பிச்சு

      Delete
    2. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //ஆனா படிக்க படிக்க கடசி வர பீதிய கிளப்பிட்டார்..இரண்டுமேன்ன பின்னதான் போன உயிர் திரும்பிச்சு//

      தெரியுமே !! படிக்கும்போது உங்கள் ரியாக்ஷன் இப்படித் தான் இருந்திருக்குமென்பது தெரியுமே !!

      Delete
  19. ஸ்டீல்க்ளா ஜி உங்கள் நெம்பர் வேணும் நம்ம சங்கத்த பலப்படுத்தவேணும் என்னபண்ணலாம்

    ReplyDelete
    Replies
    1. நண்பரே 8870863122....அனைவர் துணையுடன் வென்றாச்சே...இனி மேம்படுத்துவோம்ஆசிரியர் மற்றும் நம் நண்பர்களின் வண்ணக்கனவுகளால்

      Delete
  20. அருமை விஜயன் சார் _/|\_

    நம்ம முதல் ஆதரவு ஒரே புத்தகத்திற்கே
    ( என்ன தலையில்லா போராளி சைசுக்கு வந்தா இன்னமும் அருமையாக இருக்கும் )_/\_

    அப்படியே அந்த 1250 பக்க குண்டு புக்கு எப்ப வருமுன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்

    இல்லாங்காட்டி போராட்டகுழு களத்தில் இறங்க தயாராக உள்ளது என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

    தொடருங்கள் தொடர்கிறோம்


    நன்றி
    .

    ReplyDelete
    Replies
    1. Prabakar T : சார்...போராட்டக் குழுத் தலீவரிடம் - அந்த 1250 பக்க குண்டு - ஒரு கிராபிக் நாவல் என்ற குண்டை மட்டும் தூக்கிப் போட்டால் போதும் - தொடர்பு எல்லைக்கு அப்பால் போய் விடுவார் ! அப்புறம் போராட்டம் - போண்டா சாப்பிடும் படலமாய்ப் போய் விடாதா ?

      Delete
  21. T.K.AHMEDBASHA : Display image செம சார் !

    ReplyDelete
  22. திருப்பூர்புத்தகதிருவிழாவிற்கு நண்பர்கள்அனைவரையும்அன்போடு வருகவருக எனவரவேற்கிறோம்நன்றி
    .

    ReplyDelete
  23. Dear editor sir. அந்த 13.ம் பாகம் b&w விடுபட்டதுபோல் வரும் கலர் பதிப்பிலும் வராது போலிருக்கிறதே ஸார்?
    .
    அது ஒரு characters flashback படலம் என்றாலும், அதையும் வரும் கலர் பதிப்பில் சேர்த்து மொத்தம் 19 பாகமாக வெளியிட்டால், முழு தொகுப்பையும் சேகரித்த திருப்தி எங்களுக்கு கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மறக்கும் முன்பாக - அந்தப் "புலன்விசாரணைப் பாகம்" - முன்பதிவுகளுக்கொரு பரிசாய் உண்டென்பதையும் சொல்லி விடுகிறேனே ?


      Delete
    2. Rajkumar : பதிவின் வால்பகுதியினில் பாருங்கள் சார் !

      Delete
    3. Sry, muthalil padikkum pothu tamil fonts sariyaga theriya villai en mobilil.. :)

      Delete
  24. ///6 ஆல்பம்பங்கள்- ஒவ்வொன்றிலும் 3 கதைகள் என்ற அமைப்பில்!
    (OR)
    - ஒரே ராட்சஸ ஆல்பம் – 18 பாகங்களையும் இணைத்துக் கொண்டு!///

    முன்னது ஜூலியானா
    பின்னது டார்லிங் பெட்டி

    ரெண்டுமே கண்ணைப் பறிக்குமே..!!

    ReplyDelete
  25. திரை விலகும் நேரம் எப்போது புலரும் என்று சொல்லவே இல்லையே சார்.?

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : தொங்கி நிற்கும் நாக்காருக்கும், சிவந்து கிடைக்கும் விழிகளாருக்கும், சித்தே ஒய்வு கொடுத்துக் கொண்டான் பின்னே !

      Delete
  26. ய்ய்ய்யாயாயாஹூஹூஹூ!
    எந்தன் மனம் துள்ளி விளையாடுவதும் ஏனோ...

    ReplyDelete
  27. முடியும்...
    உங்களால முடியும்...
    சிங்கமுத்து வாத்தியாரால முடியும்...

    அ..அந்த குண்டுமச்சானை 'தலையில்லாப் போராளி' சைஸுல....

    ReplyDelete
    Replies
    1. புதுமை உலகம் மலரும் ...நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்...ஒன்றாய் காணும் தலையில்லா போரிளி சைசும் இதுவும் ஒன்றுதானே...இந்த நாளும் நன்றுதானே

      Delete
  28. இரத்தபடல்ம் வண்ண மறுபதிப்பு இரு options வாய்ப்பது so safe and reliable!

    ReplyDelete
  29. இதனை மிஞ்சிய தீர்ப்பு கிடையாது சார்.
    நன்றி.நன்றி.நன்றி.
    இரத்தப்படலம் வெளியிட்டுக்குமுன்
    இரத்தப்படலம் வெளியீட்டுக்குப்பின்.
    இ.மு, இ.பி. என காமிக்ஸ் கால பயணமும் இரண்டாக பிரிந்து காமிக்ஸ் வரலாற்றில் இடம் பெறப்போவது தவிர்க்க இயலா ஒன்றாக அமையும் என்பதை முதல் ஆளாக சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமையாக இருக்கிறது சார்.
    குடத்திலிட்ட விளக்காய் இருக்கும் நம் காமிக்ஸின் புகழ் நிச்சயம் குன்றின் மேல் ஏற்றிய தீபமாக ஒளிரப்போவது நிச்சயம்.நிச்சயம்.
    இந்தியாவே உற்றுப் பார்க்கப் போகும் அந்த நாளை எண்ணி இனிவரப்போகும் நாட்களை கடப்போம்.
    ஐநூறு பேருக்கு பாடம் நடத்தும் நமது ஆசிரியர் குறைந்த பட்சம் ஒரு ஐம்பதாயிரம் பேருக்கு ஆசிரியராக மாற இரத்தப்படலம் உதவுமானால் அதைவிட பெருமகிழ்ச்சி காமிக்ஸை உயிருக்கு நிகராக நேசிக்கும் நமக்கெல்லாம் வேறு என்ன இருக்கப்போகிறது.

    ReplyDelete
  30. Editor sir, I stand 6 books with 3 parts each, records apart if u choose 18 parts book its difficult. To carry while travelling, difficult to read, difficult to store whereas in addition we may get 6 wrappers in the prior one... So, I stand for 6 books.

    ReplyDelete
  31. ////
    And மறக்கும் முன்பாக - அந்தப் "புலன்விசாரணைப் பாகம்" - முன்பதிவுகளுக்கொரு பரிசாய் உண்டென்பதையும் சொல்லி விடுகிறேனே ?!/////


    இரத்தப்படலம் வண்ணத்தொகுப்பு - குண்ண்ண்ண்டாய் - என்பதே மிகப்பெரிய்ய்ய்ய பரிசு எனும்போது - பரிசுக்கே பரிசா?!!!!!!!

    பின்றீங்க சார்!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : இதெல்லாம் என்ன பின்னல் ? கொஞ்ச நேரத்தில் நம்மவர் கோவை எக்ஸ்பிரஸில் கிளம்பி வந்து பின்னுவார் பாருங்க - ! அதுக்கு பெயர் தான் ஒரிஜினல் "பின்னல்" !!

      Delete
    2. நீங்க பின்னிட்டீங்க சார்...வாய்ப்பிருந்தால் அதயும் பின்னாம விட்றுவீங்களா...?

      Delete
  32. '6 ஆல்பம்பங்கள்- ஒவ்வொன்றிலும் 3 கதைகள் என்ற அமைப்பில்!'

    -இந்த கட்சியில் நான் :-)

    இந்த option இல் 6 covers கிடைக்கும் என்பது போனஸ் :-)

    முன்பதிவை விரைவில் துவக்கவும்!!

    ReplyDelete
  33. டியர் விஜயன் சார்,

    நமது வாசகர்களில் பெரும்பாலோனோர் தாங்கள் வெளியிடும் ஒவ்வொரு இதழையும் வாங்கி சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்ற வகையில் எங்களுக்கு இரட்டைச் செலவு வைத்து விட்டீர்கள் என்பதை சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

    //என்னளவில் குண்டுப் படலத்துக்கு பெரிய எதிர்பெல்லாம் கிடையாது//
    சென்ற பதிவில் சொன்னது, இதுவே என் நிலைப்பாடு! ஒன்றே போதுமே?!

    ReplyDelete
    Replies

    1. +1

      இந்த இரட்டை முயற்சி உங்களுடைய நிதி முதலீட்டையும் ஏகத்துக்கும் ஏற்றிவிடும் என்பது எங்களுடைய கவலை!

      (குண்ண்ண்ண்டாய்) ஒன்று பெற்றால் ஒளிமயம்!

      (மறுபடியும் குழப்ப ஆரம்பிச்சுட்டோம்ல?!)

      Delete
    2. sir confusion sir if both options are there

      Delete
    3. Karthik Somalinga : ஒன்றுக்கும், ஆறுக்கும் - கதையினில், வாசிப்பு அனுபவங்களில் துளியும் வேற்றுமையில்லை என்றாலும், இத்னை நம் நண்பர்கள் ஒவ்வொருவரும் அணுகும் விதமும் உணர்வுபூர்வமாக வேறுபட்டு நிற்கிறதே கார்த்திக் ?! இந்த இரட்டைக் குதிரை பாணியில் "யாருமே தோற்கவில்லை" என்ற திருப்தியும் மிஞ்சும் போது - அதனை என் வேண்டாமென்பானேன் என்று நினைத்தேன் !

      Delete
    4. அருமை சார்...உங்க நிலையையும் கவனத்தில் கொள்ளுங்கள்...

      Delete
  34. Both options are excellent. Thank you sir

    ReplyDelete
  35. நல்ல திட்டம். படிக்கிறதுக்கு 6*3. படம் காட்ட 1*18. வெற்றி பெற வாழத்துகள்.

    ReplyDelete
    Replies
    1. //நல்ல திட்டம். படிக்கிறதுக்கு 6*3. படம் காட்ட 1*18. வெற்றி பெற வாழத்துகள்// point!

      Delete
    2. Mahendran Paramasivam : //படிக்கிறதுக்கு 6*3. படம் காட்ட 1*18.//

      அட...ஆமாமலே ? !!

      Delete
  36. நம் பாரம்பரியத்தை விட்டுகொடுக்க முடியாது.
    உலகமே வியந்து பார்க்கிறது நமது ஒற்றுமையை.
    தமிழர்கள்என்று சொல்லிக்கொள்வதில் ஏகப்பட்ட பெறுமை சார்...!!!

    Delete

    ReplyDelete
  37. அருமை விஜயன் சார்!!!!

    நீங்கள் எப்போதுமே வெகுஜன காமிக்ஸ் வாசகர்கள் பக்கமே என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்தே வந்துள்ளீர்கள். இப்போதும் அவ்விதமே!!!!
    என்னை போன்ற ஆசாமிகளால ஜல்லிகட்டு காளைகளைதான் அடக்க முடியல,இப்படி மெகாசைஸ் புக்கை தூக்கியாவது எங்கள் புஜபலபராக்கிரங்களை பெருக்கி கொள்கிறோம்:-)

    சுந்தர் டபுள் ஹேப்பி அண்ணாச்சீசீசீசீ!!!!!!

    ReplyDelete
    Replies
    1. Dr.Sundar, Salem : ஒவ்வொரு முகத்திலும் ஒரு சந்தோஷப் புன்னகை !!

      இது தானே சார் நமது லட்சியமே ?

      Delete
  38. வணக்கம் எடிட்டர் சார்...!
    வணக்கம் நண்பர்களே...!
    ஜேஸன் ப்ரைஸின் மர்மத்திரை விலகும் முன்னரே...., இரத்தப்படலம் எந்த வடிவத்தில் வரப்போகிறது என்ற திரை விலகி விட்டது.மகிழ்ச்சி.

    ReplyDelete
  39. வெற்றி வெற்றி வெற்றி. இது எனது
    தலைவர் புரட்சி திலகம் M G R கூறும்
    வார்த்தைகள் மட்டுமல்ல. எனக்கும்
    என் வேண்டுகோளான ஒரே குண்ண்டு
    மற்றும் மூன்று -அ - ஆறு பாகம்
    என்ற இரண்டு வித இதழ் கனவு
    பலிக்க போகின்றது. எனக்கு இரண்டுமே
    வேண்டும்.

    ReplyDelete
  40. விஜயன் சார், இருக்கிற குறைந்த வாசகர் வட்டம் சந்தோசமாக இருக்க நீங்கள் மீண்டும் கால்விரல்களை வாயில் நுழைத்து இருப்பது எதிர்பார்த்த ஒன்று! வாசகர் சந்தோசத்திற்காக எதையும் செய்பவர் நீங்கள் என்பதை மீண்டும் நிருபிக்கும் முடிவு! வாழ்த்துக்கள்.

    இந்த முயற்சி வெற்றி பெறவேண்டும், எனவே எனக்கு இரண்டும் வேண்டும்; இரண்டையும் முன்பதிவு செய்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : பல்லாயிரத்திலோ ; இலட்சத்திலோ விற்பனை கொண்டிருப்பின், பயணப் பாதை பற்றிய சந்தேகங்கள் எழுந்திடும் வாய்ப்புகள் சொற்பம் ! விற்பனையின் மகத்துவமே எல்லாக் கேள்விகளுக்கும் விடை சொல்லியிருக்கும் ! ஆனால் நமது வட்டமோ குருவிக் கூட்டைப் போன்றதெனும் பொழுது - இங்குள்ளோரின் சந்தோஷங்களைத் தக்க வைக்க முயற்சிப்பது கடமையாச்சே சார் ?

      Delete
  41. இரத்தப்படலம் மறுபதிப்பு பற்றி முதன்முறையாக இங்கே விவாதம் தொடங்கியபோது 6 பாகங்கள் 3 தொகுதிகள் என்ற நிலைப்பாட்டில் உறுதியாய் நினறேன்.பிறகு சென்ற வாரம் 18 இதழ்கள் 18 மாதங்கள் என்ற ஆப்ஷனை பார்த்தவுடன் ....
    அடடே...நார்மல் விலைக்கே கிடைக்கும் போலிருக்கிறதே என்று கட்சி மாறி..சிங்கிள் இதழ்களின் பக்கம் கை தூக்கி நினறேன்.ஆனால் தனி இதழ்களின் மைனஸ்கள் பற்றி உங்கள் விளக்கங்களை பார்த்தபின்னே ....ரைட்...மறுபடியும் கட்சி மாறிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
    6*3 SUPER SIR..!

    ReplyDelete
  42. இரத்த படலமாக வந்தாலும் சரி
    இரட்டை படலமாக வந்தாலம் சரி
    இரண்டிற்ன்க்கும் என் ஆதரவு உண்டு..

    ReplyDelete
  43. ஏறுதழுவல் எம்இன உரிமை!

    குண்டுபுக் எங்கள் உரிமை!!!!!

    தடை அதை உடை.........!!!!

    ReplyDelete
  44. //பிப்ரவரி 3 முதல் 12 வரையிலும் திருப்பூர் புத்தக விழா நடைபெறவுள்ளது ! நாமும் அங்கிருப்போம் ! பத்மினி கார்டன்ஸ், காங்கேய சாலை என்பது முகவரி ! எப்போதும் போல் உங்களை எதிர்பார்த்திருப்போம் guys !!///---

    நீங்கள் என்று வருகிறீர்கள் சார்?

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : அடுத்த சந்திப்பு ஈரோடாகத் தானிருக்கும் என்று நினைக்கிறேன் சார் !

      Delete
  45. டியர் எடிட்டர்

    6 புத்தகங்கள் வடிவை வரவேற்கிறேன். ஒரே புத்தகமாய் வந்தால் அது ஒரு காபி டேபிள் அலங்காரப்பொருளாகவே இருந்திடும் - இந்த optionக்கு நன்றி. எக்காரணம் கொண்டும் இந்த optionஐ விலக்காதீர்கள்.

    இரு வடிவங்களுக்கும் ஒரே வரிசை எண் வைத்துவிட்டால் கலெக்டர்களுக்கு பிரச்சனை தீர்ந்தது.

    ReplyDelete
    Replies
    1. Raghavan : //இரு வடிவங்களுக்கும் ஒரே வரிசை எண் வைத்துவிட்டால் கலெக்டர்களுக்கு பிரச்சனை தீர்ந்தது.//

      நிச்சயமாய் !!

      Delete
  46. குண்டு ஒன்று குண்டு நன்று லட்சியம் அது நிச்சயம் வரவேற்கிறேன்.

    ReplyDelete
  47. டியர் எடிட்டர்

    இந்த விஷயத்தில் நமது உடலை பேணி காக்கும் ஒரு விஷயமும் அடங்கி இருக்கிறதல்லவா - அதாவது ஒரு குண்டு செல்லத்தையும் ஒரு செட் of ஒல்லியும் வாங்கி தினமும் காலை மாலை அல்லது எப்ப வேணும்னாலும் dumbells போன்று இரு கைகளிலும் வைத்து சீர் தூக்கி பயிற்சி செய்யலாம் அல்லவா - எனவே இதுக்கு HEALTH SPECIAL என்று வைத்து விடவும் :-)

    ReplyDelete
    Replies
    1. Raghavan : ஹை...!! HEALTH SPECIAL !! இதழின் பிரமோஷனுக்கு இதைக் கூடச் சொல்லிப் பார்க்கலாமோ ?

      Delete
  48. வாழ்த்துக்கள் ...நண்பர்களே...

    போராடி பெற்ற இந்த இரு வெற்றிகளையும் காமிக்ஸ் எழுச்சி இளைஞர் பட்டாளத்திற்கே உரித்தாகும் ..

    இருபிரிவுகளையும் சமமாக பாவித்து ஒரு நல்ல தீர்ப்பை வழங்கிய ஆசிரியருக்கு மாபெரும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : தலீவரே....ஆனாலும் அந்த "இளைஞர் பட்டாளம்" என்று நீங்கள் குறிப்பிட்டது யாரையோ ? சித்தே விளக்கினீர்களெனில் தேவலாமே ?

      Delete
    2. சார்....இங்கே இளைஞர் பட்டாளம் என கூறியது இங்கே வருகை புரியும் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டுதான் .....

      உண்மையை சொன்னால் குழந்தைகள் பட்டாளம் என்றே சொல்லி இருக்க வேண்டும் ...:-)

      Delete
  49. Dear Editor,

    My vote is for COLLECTOR's EDITION - One single book. As usual I will book 2 copies. Please announce the per-booking detail (Vitamin 'M'oney).

    ReplyDelete
  50. Replies
    1. இன்றைக்கு நீங்கள் இடப்போகும் கமெட்ண்ட்களின் எண்ணிக்கையா ஸ்டீல்? ;)

      Delete
  51. //இரண்டு விதமான முறையில் இ.ப.//

    நாட்டாமை சார்.!சூப்பர் ஜட்ஜ்மெண்ட்.!

    குண்டுதான் எனது சாய்ஸ்.!

    ஏனென்றால் ,அழகான சித்திரம் ,தொய்வில்லாத மிக நீண்ட கதை ,மெகா சைஸ் என்று எல்லா கதைக்கும் இந்த பெருமை கிடைக்குமா என்பது சந்தேகமே.!

    நேற்று 18 இதழ்கள் சந்தாவில் என்றவுடன் கொலவெறியே வந்துவிட்டது.போராட மெரினாவில் வேறு இடமில்லை.! நன்றி சார்.!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாடஸ்டியாரே..!!

      லாங் டைம் நோ சீயிங். வாட் வாக்கிங்..? (என்ன நடந்ததுன்னு கேட்டுருக்கேன்?)

      Delete
    2. ஜனவரி முதல்தேதிக்குப் பிறகு இங்கே வழக்கமான பங்களிப்பை வழங்குவேனென்று உறுதியளித்திருந்த மா.வெ எங்கே எங்கே எங்கே?!!

      Delete
    3. மாடஸ்டி வெங்கடேஸ்வரன். : நல்ல காலம் - பெசன்ட் நகர் பீச் / முட்டுக்காடு தப்பியதோ சார் ?

      Delete
    4. அடுத்த மாதம்மாடஸ்டிய தரிசிக்த்தா வருவீங்களோன்னு நெனச்சேன்....இபக்கு வந்துட்டீங்க..சூப்பர்

      Delete
    5. உங்கள் அனைவருக்கும் நன்றி ____/|\_____

      ஸ்டீல் க்ளா@
      கண்ணா லட்டு திண்ணா ஆசையா படத்தில் , சந்தானம் பாட்டு வாத்தியரை மேடையில் பாட வைப்பாரே அதே போல் தடையை மீறி ஒடியந்துட்டேன்.!

      " 18 பாகம் என்றவுடன்."

      Delete
  52. கண்ணாரெண்டு லட்டு தின்ன ஆசையா?

    ReplyDelete
  53. ///பிப்ரவரி 3 முதல் 12 வரையிலும் திருப்பூர் புத்தக விழா நடைபெறவுள்ளது ! நாமும் அங்கிருப்போம் ! பத்மினி கார்டன்ஸ், காங்கேய சாலை என்பது முகவரி ! எப்போதும் போல் உங்களை எதிர்பார்த்திருப்போம் guys !!///

    ஒரு வாரமா சல்லிக்கட்டு செய்திகளா படிச்சிட்டு இருந்ததால காங்கேய சாலை என்பதை காங்கேய காளைன்னு படிச்சிட்டேன். .!!

    ///பிப்ரவரி 3 முதல் 12 வரையிலும் திருப்பூர் புத்தக விழா நடைபெறவுள்ளது ! நாமும் அங்கிருப்போம் ! பத்மினி கார்டன்ஸ், காங்கேய சாலை என்பது முகவரி ! எப்போதும் போல் உங்களை எதிர்பார்த்திருப்போம் guys !!

    /// நாமும் அங்கிருப்போம் ! ///

    திருப்பூர் விஜயம் உண்டா சார்..?

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : //திருப்பூர் விஜயம் உண்டா சார்..?//

      வாய்ப்புகள் குறைச்சல் சார் ! தூரப் பயணங்கள் சில காத்துள்ளன !

      Delete
  54. Prefer to have it all in one single book hardcover ultimate edition.

    ReplyDelete
    Replies

    1. ///ultimate edition.///

      இதுகூட நல்லாருக்கே!!

      இரத்தப்படலம் - The ultimate edition!

      Delete
    2. இரத்தப்படலம் - The ultimate edition!

      ஹை !!! சூப்பர் !!

      Delete
  55. Six volumes o.k. if you plan for a single issue, we requested to make a MAXI SIZE " as Thalaiyilla Porali".
    Unless, it might not be Eye catchy, and not worth able to collect. It is my humble request.

    ReplyDelete
    Replies
    1. leom : சாத்தியமிலாக் கோரிக்கை சார் !

      Delete
  56. சார் அட்டகாசம்...சரியான முடிவு....தலையில்லா போராளி சைசென்றால் விலை எவ்வளவு வருமெனக் கூறுங்களேன்...பைண்டிங்கில் பெரிய மெசின் தேவை...அது கடினமான இயலா முயற்ச்சி எனில் கை விட்டு விடுங்கள்...கதையை சிறிய சுருக்கமாய்..மாந்தர்கள் ஒவ்வொருவர் பற்றியும் எழுதி அனைவரையும் இரசிக்கச் செய்திடுவோம்..மாயாவி சிவா போன்ற நண்பர்கள் துணையுடன் .....அப்புறம் இக்கதைக்கு நாமே உச்சகட்ட மரியாதை செய்வதுடன்......நமது காதலால் வான்ஹாம்மே மீண்டும் கதைகளை நம்மை போன்ற ரசிகர்களுக்காக.....படைக்க இது உத்வேகமாக மாறலாம்தானே...லார்கோவ மிஞ்சும் வகையில் கதைகளை படைக்க நமது காதல் உதவலாமல்லவா. படங்களை பெரிய சைசில் பார்க்கவும் ......எழுத்து பலூன்கள் ஓவியங்கள மறைக்கும் சிரமத்த தவிர்த்திடவும் .....வரிகளில் கத்தரிகள் விழாதிருக்கவும்....மொத்தத்தில் அது அதுவாகவே இருக்கவும் வாய்ப்பல்லவா........இயலுமென்றால் அதாவது பெரிய சிரமங்களின்றி இயலுமென்றால் தலையில்லாப் போராளி சைசை பரிசீலியுங்கள்....மிகச்சிறந் கதைக்கு அனைத்து நண்பர்களும் குவிந்நததில் தங்கள் மகிழ்ச்சி கண்டு மேலும் மகிழ்ச்சி.....மகிழ்ச்சி..மகிழ்ச்சி ..இன்றும் ....நேற்றை போல என்றென்றும்...எங்கள் உணர்ச்சிகளுக்கும் ...மகிழ்ச்சிகளுக்கும் தடையில்லா தீனி போட்டு வரும் தங்களை என்றென்றும் தொடர்வோம்....எனதுஇப கதைச் சுருக்கத்தை விரைவில் அனுப்புகிறேன்.....மௌனம் ஜல்லிக்கட்டுக்கு கலைந்ததை போல......அதற்கிணையாய் இங்கும் கிளர்ந்தது அந்தக் கதையை சிறப்பாய் கையாண்ட தங்களுக்கு கிடைத்த பரிசு என்பதில் மறைவேது..மேலும் நடப்பு மாதம் ட்யூராங்கோ என்றால் வரும் மாதம் மாடஸ்டி...ஜேசன்..அடுத்த மாதம் தோர்கள்...அதனுட்ன் காலண்டர் தந்த இனிய அதிர்ச்சி போல ... இந்த மாதமும் காத்திருப்போம்..மாதங்களை மட்டுமின்றி வருடங்களையும் எதிர் பார்க்க வைத்து விட்டீர்கள் இப மூலம்.....நாட்கள் கரைவதை இரசிப்பது சிறு வயதில் கிரிக்கட்டுக்காக மட்டுமே என இருந்தத போல நம்ம காமிக்சுக்காக எனும் போது உங்கள் முக்கியத்துவம் புரிகிறதா சார்
    ...

    ReplyDelete
    Replies
    1. இன்னொன்று மறந்துட்டேன்...புலன் விசாரணை இல்லயா என 18என தொடரும் தலைப்பை கண்டு ஏங்கியபடி தொடர்ந்தால் ....கீழே வாயடைக்கச் செய்திட்டீர்கள்...நன்றிகள் சொன்னா போதாதே....ஆனாலும் பல கோடி நன்றிகள் இவ்வரிகளில் ஒளிந்துள்ளது...நன்றி சார்

      Delete
    2. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் //நாட்கள் கரைவதை இரசிப்பது சிறு வயதில் கிரிக்கட்டுக்காக மட்டுமே என இருந்தத போல நம்ம காமிக்சுக்காக எனும் போது உங்கள் முக்கியத்துவம் புரிகிறதா சார் ?//

      என்னை நானே ஒருபோதும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை நண்பரே ! அவையடக்க வார்த்தைகள் போல் இது தோன்றினாலும் நிஜம் இதுவே ! என் அண்டை வீட்டுக்காரர்களுக்கோ ; எங்களுக்கு எதிரிலுள்ள ஆபீஸிலுள்ளவர்களுக்கோ கூட நான் என்ன செய்கிறேன் என்பது பற்றித் துளி கூடத் தெரியாது ! நமதிந்தச் சின்னஞ்சிறு வட்டத்துக்குள் மட்டுமே எனக்கொரு அடையாளம் தந்துள்ளீர்கள் !

      ஏதாவது புதிதாய், அழகாய் செய்ய சாத்தியமாகும் போது, அதனை ரசிக்கத் தோன்றும் ; அது உங்கள் முகங்களுக்குக் கொணரும் சந்தோஷங்களை எங்களது கதைத் தேர்வுகளின் / பணியின் நேர்மைக்கொரு அங்கீகாரமாய்ப் பார்க்கத் தோன்றும் ! ஜனவரியில் ட்யுராங்கோவினில் நடந்ததும் இதுவே. அத்தோடு சரி - அடுத்த வேலைக்குள் மூழ்கிடுவோம் ! இதுதான் யதார்த்தம் !

      அதை விட்டுவிட்டு, "பார்டா....ஐயா என்னமாய் வூடுகாட்டி அடிச்சிருக்கார் பாரேன் !" என்று எனக்கு நானே தொப்பி போட்டுக் கொண்டு போனால் பொடதியில் பொளேரென சாத்து விழும் நாள் சீக்கிரமே புலர்ந்து விடும் ! வாழ்க்கையானது செறுக்கை தட்டி வைக்கும் வித்தைகள் அறிந்ததொரு அட்டகாச ஆசான் நண்பரே !

      Maybe , just maybe ஓய்வுக்குப் பின்னே இந்தப் பயணத்தை அசைபோட்டுப் பார்க்கும் நேரம் என்றைக்காவது ஒருநாள் வாய்த்தால் - 'அட...இத்தனை சர்க்கஸ் பண்ணியிருக்கோமா ?' என்று தோன்றுமோ - என்னவோ ? இப்போதைக்கு பிசியோ பிசி நல்லது !

      Delete
    3. என்னளவில் உண்மையான வார்த்தைகள் சார்...குறைந்த எண்ணிக்கை எனினும் அனைவரையும் சந்தோசப்படுத்த நீங்க எடுக்கும் ஒவ்வொரு முயற்ச்சியும்தூள்

      Delete
    4. லயன்ங்ற பேரே காட்டு ராஜான்னா...காமிக்ஸ் ராஜாதான நீங்க அன்றும்..இன்று தனித்து நின்றும்..இயன்றத சிறப்பா செய்றது சாதாரண காரியமா..இன்னைக்கும் கலக்குறீங்களே சார் தனிக்காட்டு ராஜாவாய்....தானாய் வந்த பேர் மட்டுமின்றி சரியாய் செட் ஆன பேர் கூ அல்லவா..அது போல இவற்றை சாதாரணமாய் கடந்து விடுகிறீர்கள்..

      Delete
  57. மிக அருமையான முடிவு. எப்படியும் இரண்டு புக் வாங்க இருந்தேன். இப்போ இதுல ஒன்னு, அதுல ஒன்னு. அவ்ளவுதான்..... கோகுல் happy அண்ணாச்சி

    ReplyDelete
    Replies
    1. Gokul C : அட...இதிலொன்று ; அதிலொன்று என சிம்பிளாக முடித்துக் கொண்டீர்களே சார் !!

      Delete
  58. இரத்தப்படலாம் என்பது ஒரு வரலாறு. ஒரே புத்தகமாக கையில் எடுத்து படிப்பதை காட்டிலும் பிரித்து ஒரே சமயத்தில் வெளிவந்தால் படிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஏதுவாக இருக்கும். மூன்று புத்தகங்களாக வேண்டும் என நான் விரும்பினேன். ஆனால் ஆசிரியர் சொல்வது போல 6 புத்தகமாக வந்தால் படிப்பதற்கு இன்னும் எளிதாக இருக்கும். So I vote for 6 part but at the same time.

    ReplyDelete
  59. அன்பு ஆசிரியர்...

    மிகவும் மகிழ்ச்சி தரும் பதிவு.... இதயம் "குண்டு" கேட்க, அறிவு "6x3" கேட்க...

    குழம்பிக் கிடந்தேன்....

    தங்கள் பதிவினால் குதூகலம் கொண்டேன்....

    So decision made easy.... One in both formats....


    👏👏👏👏👏👏👏👏👏

    😍😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete
    Replies
    1. AKK : நாமெல்லாம் இதயத்திலிருந்து முடிவுகளையும், தலையிலிருந்து செயல்களையும் நடத்திடுபவர்கள் தானே சார் ? இந்த மெகா முயற்சி மாத்திரம் அதற்கொரு விதிவிலக்காகிடுமா ?

      Delete
  60. \\\எஞ்சிடக்கூடியது வேதாளன் எப்போது? ஆர்ச்சி எப்போது? ஜான் மாஸ்டர் உண்டா? என்ற ரீதியிலான கோரிக்கைகளாகத்தானே இருந்திட முடியும்? அவற்றை உரிய வேளைகள் புலரும்போது சிறுகச்சிறுக கையாண்டு கொள்ளலாமென்ற உறுதி உள்ளதால்...///
    ரொம்ப சந்தோஷம் சார்.அப்படியே இந்தப்பட்டியலில் இரட்டை வேட்டையரையும்,இரும்புக்கை நார்மனையும் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஜேடர்பாளையம் சரவணகுமார் : சார்...இரத்தப் படலத்தோடு கொஞ்ச ஆண்டுகளுக்காவது இந்த ரிவர்ஸ் கியர் போடும் பாங்குக்கு விடுமுறை தருவதாக உள்ளேன் ! எஞ்சியிருக்கக் கூடிய எனது 10 ஆண்டுக் career-ல் தொட்டுப் பார்க்க நான் இலக்கில் கொண்டுள்ள புதுமைகள் ஏகம் உள்ளன ! So பழைய சாதத்தை மைக்ரோவேவில் சூடு பண்ணிப் பரிமாறுவதிலேயே லயித்திருப்பதை நிச்சயம் மறுபரிசீலனை செய்திடத் தேவைப்படலாம் !

      Delete
    2. என்னாது எஞ்சியுள்ள 10 ஆண்டு கேரியரா?? பாஸு ஜு.எ. முழு பொறுப்பு எடுத்துகிட்டாலும்கூட நாம கடைசிவரைக்கும் ஒரு தனி ரூட்ட போட்டுகிட்டே கூடவரணும். அப்படி உங்க இஷ்டத்துக்கு எல்லாம் எஸ்கேப் ஆக முடியாது கபர்தார்.

      Delete
  61. ஜான் மாஸ்டரை சேர்க்கும் பொழுது காரிக்கனுக்கு இடமில்லையா?

    ReplyDelete
    Replies
    1. வைரஸ்x, மடாலய மர்மம், கடலில் தூங்கிய பூதம், பில்லி சூனியமா பித்தலாட்டமா, வான்வெளி சர்க்கஸ், தீ விபத்தில் திரைப்படச்சுருள் இவையெல்லாம் மறக்கக் கூடிய கதைகளா சார்.மும்மூர்த்திகள் படையெடுப்பு முடிந்த பின்பாக ஆசிரியரின் கவனம் மறுபதிப்பில் இதர பழைய நாயகர்களின் பக்கம் திரும்புமேயானால் காரிகனை மீண்டும் தரிசிக்கலாம்.

      Delete
    2. Jegang Atg : ஜான் மாஸடரைச் சேர்ப்பதாக நான் எப்போது சொன்னேன் சார் ?

      Delete
  62. குண்டு புத்தகம் வருக வருக என வரவேற்கிறோம் சார்.....
    1250 பக்கம் கிராபிக் நாவல் வருனக்க்கு எப்போதும் வருக வருக என வரவேற்கிறேன்.....

    ReplyDelete
  63. பிப்ரவரி புத்தகம் எப்ப சார் அது பற்றிய விவரம் கூறவும் சார்....

    ReplyDelete
    Replies
    1. yazhisai selva : "ஜனவரியில் பிப்ரவரி" என்றொரு பதிவு போட மேட்டரை ரிசர்வில் வைத்துக் கொள்ள வேண்டுமே நண்பரே ?!

      Delete
    2. நான் ரெடி, பள்ளிகூடம் செல்லும்போது எனது மாணவர்களுக்கு நமது காமிக்ஸ் காண்பித்து அது பற்றி எடுத்து கூறுவேன், சென்ற வருடம் ஈரோட்டு புத்தக திருவிழாவிற்கு எனது மாணவிகனள வலச்செய்து நமது காமிக்ஸ் வாங்கி ததந்தேன், மேலும் ஈரோடு பேருந்து நினலய கனடயில் கினடக்கும் விவரத்தனத எடுத்து சொன்னேன், வாங்குவமாக கூறினர்....

      Delete
  64. எதிர்பார்த்த முடிவு தான் சார்,எனது தேர்வு 6*3 தான்.எனினும் இரண்டு வித தேர்வும் சிறப்பே.

    ReplyDelete
  65. டியர் எடிட்,

    உங்கள் தீரிய சிந்தனையில் உதித்த வழிமுறைகளை, செம்மையாக பதிவறேற்றி விட்டீர்கள். இருந்தாலும், நமது 1000 சந்தாதாரர் என்ற கூட்டத்தின் 90 சதவிகிதம் பேர், நம் காமிக்ஸ் புத்தகங்கள் அனைத்தையும் தவறாமல் சேர்க்க வேண்டும் என்ற கொள்கைபாடின்படி பயணிக்கும் ஒத்த சிந்தனையுடவர்கள் என்பது தாங்கள் அறியாதது அல்ல.

    எனவே, இரு முறையில் வெளிவரும் இரண்டு XIII ஸ்பெஷல்களையும் வாங்க ஆசைபடுவதன் மூலம், அவர்களுக்கு இரு மடங்கு செலவை இம்முடிவு கூட்ட போவதை, அவர்களில் ஒருவனாக நானும் பதிவேற்ளி கொள்கிறேன். அப்பணம் இவ்வழியில் செலவலிவதை விட இன்னொரு புதிய காமிக்ஸ் இதழுக்கா, இல்லை ஒரு பிரத்யேக புது முயற்சி சந்தாவிற்கோ செலவு செய்தால் தகும்.

    குண்டு புக் மோகம், ஒரு மையலே தவிர, 1200 பக்க புத்தகத்தை எவ்விதத்திலும் பாதுகாக்கவோ படிக்கவோ உகந்தது அல்ல, என்பதால் என் ஓட்டு 18 தனி இதழ்கள் இல்லை என்ற தர்க்கவாதத்தில் அடிப்படையில் 6•3 என்பதற்கே எனது சார்பு... ஆனாலும், ஒருவேளை இரு இதழ்கள் எப்படியும் சாத்தியம் என்று நீங்கள் இறுதியாக முடிவெடுத்தாலும், இரண்டையும் சொந்தம் கொண்டாட என் சந்தா கண்டிப்பாக சேர்ப்பிக்கபடும்.

    நடக்கட்டும் கலைகட்டு.

    ReplyDelete
    Replies
    1. Rafiq Raja : சார்...இரட்டைச் செலவுகளை உருவாக்குவது நம் எண்ணமல்ல ; ஆனால் எந்தவொரு திட்டமுமே பக்கவிளைவுகள் இல்லாத 100 % மகிழ்வைத் தரக்கூடியவைகளாக இருக்க இங்கு வாய்ப்பில்லை எனும் பொழுது இந்தவொரு சிரமத்தை ஏற்றே தீர வேண்டி வருகிறது !

      Delete
    2. ஒரே குண்டு புக் னா எனக்கு
      ரெண்ண்ண்டு பார்சல்

      Delete
  66. ஆனாலும் ரத்தப்படலம் பஞ்சாயத்து அதுக்குள்ள ஒரு முடிவுக்கு வந்திட்டது கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு! ஏதாச்சும் செய்யணுமே... ம்..?

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் அவசர சட்டம் போட்டு இரண்டு பார்மட் கொண்டு வந்திருக்கிறார்..

      இது தற்காலிமானதுதான்...


      சர்வ தேச நீதிமன்றம் ( படைப்பாளிகள்) இன்னும் தலையாட்டவில்லை...


      அதுவரை போராடுவோம்...


      இந்த மாதிரி இருக்கலாமா செயலாளர் அவர்களே??? :)

      Delete
    2. Erode VIJAY : ஆனாலும்...அந்த ஆலமரத்தின் மீதும்...ஜமுக்காளத்தின் மீதும், நமக்கெல்லாம் ரொம்பவே தான் காதல் !!

      Delete
    3. செயலாளருக்கு ஓ.கே....பொருளாளருக்கும் டபுள் ஓ.கே. ; ஆனால் தலீவர் தாமரையிலை மேல் பன்னீர் போல்...சாரி சாரி..தண்ணீர் போலப் பட்டும் படாமலும் இந்தப் பஞ்சாயத்தில் கலந்து கொள்வதன் பின்னணி என்னவோ ? சங்கத்தில் சலசலப்பு....நடந்தது என்ன ?

      இப்படிக்கு கூட பஞ்சாயத்தை கொண்டு போய் பார்ப்போமா ?

      Delete
    4. ஆசிரியர் சார்...

      இதன் தீர்ப்பை தாங்கள் ஏற்கனவே அறிவீர்கள் என்பதை நம்புகிறேன்

      :-))))

      Delete
    5. அதுக்குத்தான் தலையில்லா போராளி சைஸ் இருககே..வெளாடுவமா..?

      Delete
  67. ஆறு ஆல்பங்கள்....!
    ஆறு அட்டைப் படங்கள்....!!
    ஹைய்யா...ஜாலி..ஜாலி...!!!

    ReplyDelete
  68. ஹப்பாடா...!
    நெடு நாட்களுக்குப் பிறகு ஆசிரியரின் திரு நாவால் அருள் மொழி...
    மீண்டும் சட்டித் தலையன்...!!

    🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌

    ReplyDelete
    Replies
    1. Guna Karur : மிரட்டலாயுள்ளது display image !!

      Delete
    2. நல்லது நடக்கும்..!
      நல்லதே நடக்கும்....!!

      Delete
  69. சார்! அந்த "புலன்விசாரணை பாகம்" தனியாக BOOK FESTIVAL ஸ்டால்களில் விற்பனைக்கு வருமா சார்?

    ReplyDelete
    Replies
    1. Jagath Kumar : Sorry ஜகத்...அது விலையற்றதொரு இதழே !

      நிறைய அவகாசம் எடுத்துக் கொண்டு இரண்டல்லது மூன்று தவணைகளிலும் பணமனுப்பும் வசதிகள் நிச்சயமாய் இருந்திடும் ! And ஓராண்டு டைம் இருக்கும் முன்பதிவுக்கு !

      Delete
    2. மிக்க நன்றி சார்!! முன்பதிவு செய்து பெற்றுக் கொள்கிறேன். அந்த புலன்விசாரணை பாகம் படிக்காதது மட்டுமே குறையாக இருந்தது. அது படிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக தவித்துக் கொண்டிருந்தேன்.

      Delete
  70. நாம் ஒருவர் நமக்கு அறுவர் VS நாம் ஒருவர் நமக்கு ஒருவர்!

    நான் நமக்கு ஒருவர் கட்சி!!!

    ReplyDelete
    Replies
    1. saint satan : சாத்தான்ஜி...நமது காங்கேயம் காளையைக் காணோமே இன்னமும் ?

      Delete
  71. ஈரோட்டில் இரத்தக் கோட்டை வெளியிடும்போது 'சர்ப்ரைஸ்' இதழாக டைகரின் 'தோட்டா தலைநகரம்' போடுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. Jagath Kumar : ஹி..ஹி...! சர்ப்ரைசாகவா ? இனிமேலா ?

      Delete
  72. இரத்தப்படலம் 2 க்கும் இப்பேவே துண்டை விரித்து விட்டேன்.

    ReplyDelete
  73. இரத்தப்படலாம் முழு மெகா சைசில் வரவேண்டும் என கோரிக்கை வைத்திருப்போர். அது பெருமை எனச் சொல்லிக்கொள்வதால், வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் அந்த மெகா சைஸ் புத்தகத்தை தங்கள் அலுவலகத்துக்கோ, கல்விக் கூடங்களுக்கோ அல்லது பொழுபோக்கிடங்களுக்கோ, பேருத்திலோ எடுத்துச் சென்று கண்காட்சிப்படுத்த சபதம் மேற்கொண்டு இங்கே பதிவிட வேண்டுமென கேட்டுக்கொண்டு....

    ReplyDelete
    Replies
    1. Podiyan : ஹை !! இது நூதனமான பயிற்சியாகத் தெரிகிறதே ?

      Delete
    2. ஆமாம் ஆசிரியரே, உடல் வலுவுக்கு பயிற்சியுமாச்சு, காமிக்ஸ் பிரச்சாரமுமாச்சு... நண்பர்கள் சொல்வதுபோல அவர்களுக்கு 'பெருமையும்' ஆச்சல்லவா?... (ஸ்ஸ்ஸப்பா.. எத்தனை ஆச்சு...)

      Delete
    3. Podiyan : ஆனால் இது "பயிற்சி" போல் தெரியவில்லையே ?

      :-)

      Delete
    4. ஹி..ஹி... எல்லாவற்றுக்கும் ஒரு விலையிருக்குமல்லவா சார்...?

      Delete
    5. அனுமதிபெற்று, தயார் செய்து, அச்சிட்டு, கஸ்டப்பட்டு பைண்ட் செய்து வரும்போது... அதற்குரிய விலை என்பது அச்சிடப்படும் பணத்தொகை மட்டுமல்லவே?

      Delete
  74. நண்பரே அது போலவே பிரெஞ்சு காமிக்ஸ் உலகமே திரும்பிப் பார்க்க போகிறது நம்ம இபவ பாத்து

    ReplyDelete
  75. Editor sir:

    இரண்டு வடிவங்களில் இரத்த படலம் வருவது சந்தோஷம். இரண்டுமே வண்ணத்தில் வருவது குறித்து இன்னும் சிறிது யோசிக்கலாம். இதை யாரும் சொல்லியுள்ளார்களா என தெரியவில்லை ஆனால் வில்லியம் வான்ஸின் சித்திரங்களை B/W தான் மிக அற்புதமாக எடுத்து காட்டும். வண்ணத்தில் என்ன தான் அட்டகாசமாக இருந்தாலும் பிரகாசமான கறுப்பு வெள்ளைக்கு நிகராகாது என்பது என் கருத்து. இரண்டுமே வண்ணத்தில் வருவதில் அவ்வளவு ஈர்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

    So ஆறு ஆல்பம்களை வண்ணத்திலும், ஒற்றை பெரிய ஆல்பத்தை பழைய முறையில் தரமான B/W-லும் வெளியிட முயற்சிக்கலாம். விலையையும் கட்டுக்குள் வைத்தாற்போல் இருக்கும்!

    முதல் முறையாக 'புலன்விசாரணை' பாகம் வருவதும் top news.

    இரத்த கோட்டையை பொறுத்த வரை, தோட்டா தலைநகரத்தையும் இணைத்தே கொண்டு வரலாம். Single shot என்பதை விட, அந்த பாகம் தொடரின் epilogue போல அமைக்கப்பட்டிருக்கும்.

    ReplyDelete
  76. ஒரே குண்டு புக் னா எனக்கு
    ரெண்ண்ண்டு பார்சல்

    ReplyDelete
  77. கோவை ஸ்டில் சார் ...

    இந்த பதிவை படித்தவுடன் ஈரோட்டில் உங்களை பலத்த மகிழ்ச்சியுடன் காணப்பட்ட முகமே கண்ணுக்கு வருகிறது ...:-)

    ReplyDelete
    Replies
    1. இப்ப மகிழ்ச்சி மேலும் கூடுது நண்பரே ..தங்கள் வரி கண்டு

      Delete
  78. 18+6+3+1=28 = 10= 1 so only one is the best

    ReplyDelete
  79. // பிப்ரவரி 3 முதல் 12 வரையிலும் திருப்பூர் புத்தக விழா நடைபெறவுள்ளது !//
    நல்லது சார்.

    ReplyDelete
  80. விஜயன் சார், கடந்த வார சென்னை புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை பற்றி ஒரு சில வரிகள் சொன்னால் நன்றாக இருக்கும். புதிய சந்தாதார்கள் யாரும் நமது சந்தா குடும்பத்தில் இணைத்துள்ளார்களா?

    ReplyDelete