Powered By Blogger

Sunday, January 08, 2017

வரம் வாங்கிய தினங்கள் !!

நண்பர்களே,

வணக்கம். நிறையக் கதைகளுக்கு நிறைய ஸ்கிரிப்ட்களை எழுதியிருக்கிறேன்  ; ஆனால் சில நேரங்களில் மேலிருப்பவர் நமக்கென எழுதும் ஸ்கிரிப்ட்களின் ரம்யத்தோடும், டைமிங்கோடும் போட்டி போட சான்ஸே இல்லையென்பேன் ! இதோ - நமது பதிவு எண் 350 புலர்ந்திருப்பது சென்னைப் புத்தக விழாவும், நண்பர்கள் சந்திப்பும் ஒன்றிணைந்ததொரு அழகான தருணத்தில் எனும் போது "அட...தற்செயலான நிகழ்விது !" என்று எண்ணிக் கடக்க இயலவில்லை ! All the more reason to think - படைத்தவரும் ஒரு காமிக்ஸ் காதலரே என்று !

முதன்முறையாக டபுள் ஸ்டால் ; புது ரேக்குகள் ; கிரெடிட் கார்டு மிஷின், PAYTm பதிவு என்பதோடு - கதைகளை genre வாரியாக வரிசைப்படுத்தும் முயற்சி என நிறையவே வீட்டுப்பாடம் போட்டுவிட்டே நம்மவர்களை சென்னைக்கு அனுப்பி வைத்திருந்தோம். புத்தக விழா  துவங்கியது, சென்னையில் இந்த  வெள்ளிக்கிழமை மாலை என்றாலும், இந்தப் பதிவின் முதல் புள்ளி ஆரம்பிப்பது தேசத்தின் தலைநகரில் ! பிரெஞ்சு அரசு நமக்கென அன்போடு ஒரு மான்யம் வழங்க முன்வந்திருப்பது பற்றி ஏற்கனவே பதிவிட்டிருந்தேன் ; பகிர்ந்திருந்தேன் ! ஆனால் எல்லாமே மின்னஞ்சல்கள் வாயிலான பரிமாற்றங்களாகவே இது வரையிலும் அமைந்திருக்க, இதற்குப் பெரிதும் உறுதுணையாய் நின்றிருந்த பிரெஞ்சுக் கலாச்சார மையத்தின் தலைமை அதிகாரிகளை சந்தர்ப்பம் கிட்டும் பொழுது நேரில் சந்தித்து நமது நன்றிகளைச் சொல்லியாக வேண்டுமே என்ற குடைச்சல் எனக்குள் குடியிருந்தது ! அப்போது பிரான்சிலிருந்து வந்ததொரு புது மின்னஞ்சல் ஒரே கல்லில் இரு மாங்காய்களை விழச் செய்ய உதவிய போது குஷியாகிப் போனேன் ! கடந்த 32 ஆண்டுகளின் பிரான்க்கோ-பெல்ஜியக் கதைத் தேடல்களில் கொஞ்சம் வெற்றிகள் ; கொஞ்சம் பல்புகள் என்று சம விகிதத்தில் ஈட்டி இருப்போம் தான் ! ஆனால்  ஐரோப்பியக் காமிக்ஸ் உலகின் முன்னணிப் பதிப்பகங்களின் லைசென்சிங் பிரிவுகளின் முக்கிய தலைகள் அனைவரோடும் பரிச்சயம் செய்து கொள்ள முடிந்தது இந்த முயற்சிகளின் ஒரு அசாத்திய ப்ளஸ் பாயிண்ட் !  போட்டி நிறுவனங்களைச் சார்ந்தவர்களாக இருப்பினும், இந்த லைசென்சிங் heads-க்கு மத்தியினில் ரொம்பவே  சகஜ நட்புண்டு ! ஒவ்வொரு முக்கிய சர்வதேசப் புத்தகவிழாவிலும் சந்தித்துக் கொள்ளும் பொழுது தத்தம் புதுமுயற்சிகள் பற்றிப் பேசிக் கொள்வார்கள் !  அவர்களில் பெரும்பாலோனருக்கு எனது சொட்டைத் தலை ரொம்பவே பழக்கமானதொன்று என்பதால் ஆசிய / இந்திய மார்க்கெட் பற்றிய பேச்சு எழும் போதெல்லாம் நம்மைப் பற்றிய தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியும் ! "பௌன்சர்" உரிமைகளை வாங்கி இருக்கிறீர்களாமே ? ; SMURFS தமிழ் பேசப் போகிறார்களாமே ?" ; SOLEIL நிறுவனத்தோடு கைகோர்க்கப் போகிறீர்களாமே ? என்று இதர நிறுவனத்தினர் என்னைப் பார்க்கும் போது விசாரிப்பது வாடிக்கை ! அவர்களுக்குள்ளானதொரு சமீப உரையாடலின் பலனாய் நம்மைத் தேடி வந்ததே அந்தப் புது மின்னஞ்சல் ! "நாங்களும் ___ ஆண்டுகளாய் பிரான்க்கோ-பெல்ஜிய மார்க்கெட்டில் உள்ளது உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறோம் ; எங்கள் மொழிப படைப்புகளை நீங்கள் ஆண்டாண்டு காலமாய் தமிழில் வெளியிட்டு வருவதைப் பற்றி சமீபமாய்க் கேள்விப்பட்டோம் ! இந்திய சந்தையில் உங்கள் வாயிலாக எங்களது படைப்புகளும் அறிமுகம் காணச் செய்திட ரொம்பவே ஆர்வமாக உள்ளோம் ! லைசன்சிங் பிரிவின் தலைவரான நான் சீனா செல்லும் வழியில் , ஒரு நாளைக்கு புது டில்லி புத்தக விழாவினில் எட்டிப் பார்த்திடவுள்ளேன் ! அந்நேரம் உங்களை சந்திக்க முடிந்தால் சந்தோஷம் !" என்று போட்டுத் தாக்கியது அந்த மின்னஞ்சல் ! "ஆஹா...ஆஹாஹா !!" என்பதைத் தவிர்த்து வேறு எதுவும் தோன்றவில்லை அந்தக் கணத்தில் !! புதியவரைச் சந்தித்தது போலவும் ஆயிற்று ; பிரெஞ்சுக் கலாச்சார மையத்தினரைப் பார்த்து நன்றி சொன்னது  போலவும் ஆச்சு என்று தோன்றியதால் "OKKKKKK " என்று அப்போதே பதிலைப் போட்டு விட்டு, டிக்கெட்டையும் போட்டு விட்டேன் ! சனிக்கிழமை இங்கே சென்னையில் நமது ஸ்டாலில் நண்பர்களை சந்திக்க இருந்திட வேண்டும் என்பதால் வெள்ளியன்றே ஓட்டமாய் ஓடிவிட்டுத் திரும்பிடத் திட்டம் !

சிலு சிலு வென்று குளிர் அடிக்கும் டெல்லியில் சென்று இறங்கி ; புதியவரை மதியமாய் சந்திக்கக் சென்றேன் ! அதற்கு முன்பாக எனக்கு நானே நிறைய விதிகளை போட்டுக் கொண்டிருந்தேன் ! "எக்கச்சக்கமாய் நாயகர்கள் / நாயகியர் ஏற்கனவே காத்துக் கிடக்கின்றனர் ; ஆளுக்கு ஒரு ஸ்லாட் ; அரை ஸ்லாட் என்று தீர்த்தம் வழங்கியது போலத் தான் இடங்களை சுருக்கமாய் ஒதுக்கிட முடிகிறது ! So புதுசாய் அவர்களது படைப்புகளைப் பார்த்தவுடனே பொங்கிடாதே சாமி ; நிதானம் !! go easy !! control !! என்று ஒப்பித்துக் கொண்டே அவர் முன்னே போய் நின்றேன் !! பிரெஞ்சு நாட்டவருக்கே உரித்தான புன்னகையோடு பேசத் தொடங்கியவரோடு நொடியில் நட்பாகிட முடிந்தது ! கடந்த 10 ஆண்டுகளாய் இந்தத் துறையில் உள்ளதாய்ச் சொன்னவரிடம் - நமது வண்டி 32 ஆண்டுகளாய் அவர்களது கரைகளில் மீன்பிடித்து வருவதைச் சொன்ன போது திகைத்தே போனார் ! ஊர் கதை ; உலகக் கதை என்று ஏதேதோ பேசி விட்டு, ஒரு மாதிரியாய் அவர் தனது IPAD ஐத் திறந்து தங்களது சமீபத் படைப்புகளைக் காட்டத் தயாராகிய போது நான் சேரை இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டு - "சொன்னதுலாம் நினைவு இருக்கட்டும் தம்பி !!" என்று எனக்கு நானே நினைவூட்டிக் கொண்டேன் !! அவர் சர் சர்ரென்று பக்கங்களைப் புரட்டிக் கொண்டே ஒவ்வொரு கதையைப் பற்றியும் விளக்கிக் கொண்டே போக என் மண்டைக்குள் "கொய்ங்க்க் " என்று ஒரு ராட்சஸக் குடைச்சல் சத்தம் கேட்கத் தொடங்கியது ! "ஐயையோ..இது ரசகுல்லா மாதிரித் தோணுதே  ; ஆத்தாடி இந்தப் பால் அல்வா அள்ளுதே !! கிளிஞ்சது போ --- இந்த ரவா லட்டு கலக்கல் !!" என்று கடைவாய்ப் பக்கமாய் என் கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டு ஜலப் பிரவாகம் துவங்கியிருந்தது !! காலில் பூட்ஸ் இருந்தாலும் பரவாயில்லை ; கட்டைவிரலோ - மொத்தக் காலோ - சிக்கியதை இப்போதே தொண்டைக்குள் திணித்துக் கொள்வோமே என்ற நமைச்சல் படுத்தி எடுக்கத் தொடங்கியது ! தொடர்ந்து   ஒன்றரை மணிநேரம் நமது நாலுகாலார் ரின்டின் கேன் சூப்பையோ ; சோப்பையோ பார்க்கும் வேளையில் எவ்விதம் உணருவார் என்பதை நேர்பட உணர்ந்திடும் அனுபவம் கிட்டியது !  பத்தியம் இருக்க வேண்டிய வேளையில் ஒரு மார்வாடித் திருமண விருந்தே முன்விரிக்கப்பட்டால் அந்த நாக்கு தான் நாலு தெரு நீளத்துக்கு நீளாது என்ன செய்யும் ? சரியாக சீல் செய்யப்படாத தண்ணீர் லாரியிலிருந்து ஒழுகுவதை போல "சள  சள"வென்று ஜொள்ளு தான் கொட்டாது போகுமா ? அவருடன் கைகுலுக்கி விட்டுக் கிளம்பும் வேளையில் என் டயரியில் ஒரு 10 தொடர்களின் பெயர்களாவது கிறுக்கப்பட்டிருந்தன் ; நமது மின்னஞ்சலுக்கு அவற்றின் மாதிரிகளும் வந்து கிடந்தன !!

அடுத்த ஸ்டாப் பிரெஞ்சு மையம் என்பதால் பர பரவென்று அங்கே ஓட்டம் பிடித்தேன் ! தூதரகங்களும், வெளிநாட்டு வர்த்தக மையங்களும் அணிவகுத்து நிற்கும் டில்லியின் கம்பீரமான பகுதியது !! OLA -வின் புண்ணியத்தில் சரியான நேரத்துக்கு அவர்களது கதவைத் தட்ட முடிந்தது ! அங்கு சென்ற போது 30+ ஆண்டுகளுக்கு முன்பான சில பல நினைவுகள் அலையடித்தன ; 1985-ல் இதே முகவரியினில் தவம் கிடந்ததொரு நாள் சார்ந்த ஞாபகங்கள் அவை ! (இன்னொரு நாளுக்கு அது !!) அட்டகாசமாய்த் தோற்றம் தந்த மையத்தினுள் ஏராளமான கெடுபிடிகளுக்குப் பின்பாய் புகுந்து சென்று காத்திருந்த போது - முந்தைய சந்திப்பின் தாக்கமே தொடர்ந்து கொண்டிருந்தது ! "பறந்தது போது...தரையிறங்கு புண்ணியவாளா !!" என்றபடிக்கு மையத்தின் தலைவரைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டேன் ! குளிர்காலங்களில் டில்லியில் ஜட்கா வண்டிக்காரரே கோட் போட்டிருப்பது வாடிக்கை எனும் போது - இத்தனை உயரதிகாரி தடபுடலாக வந்து நிற்கப் போகிறார் ; சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு எப்போதும் போல நாம் வந்து நிற்கிறோமே ?! என்று லேசாக உள்ளுக்குள் உதறத்  தொடங்கியது அந்த கம்பீரமான காத்திருப்பு அறையினுள் அமர்ந்திருந்த போது ! ஆனால் சற்றைக்கெல்லாம் "மிஸ்டர் விஜயன் ?" என்றபடிக்கு என் முன் ஆஜரானவர் என்னை விடவும் சிம்பிளாய் நின்ற போது - "தப்பிச்சோம்டா சாமி!!" என்ற பெருமூச்சே மேலோங்கியது ! அவர்களது மீட்டிங் ஹாலுக்கு இட்டுச் சென்று அடுத்த 20 நிமிடங்களை நமக்காக ஒதுக்கியவருக்கு இயன்ற விதங்களிலெல்லாம் நன்றி சொன்னேன் ! மாறாத புன்னகையோடு அவர் நம் மார்க்கெட் பற்றியும், நம் வாசகக் குடும்பம் பற்றியும் ரொம்ப ரொம்ப ஆர்வமாய் விசாரித்தார் ! " அது எப்படி, இங்கே ஒரு மூலையில் உள்ளதொரு காமிக்ஸ் வாசகர்களுக்கு  எங்கோ ஒரு தூர தேசத்துப் படைப்புகளின் மீது - இத்தனை காலம் முன்பிலிருந்தே காதலாகி விட்டுள்ளது ? என்று வியப்போடு கேட்டார் !! ரொம்பவே பெருமையாய், நமது வாசகர்களின் ரசனைகளைப் பற்றியும் சிலாகித்தவர் -" really unique " என்று சொன்ன போது உங்கள் ஒவ்வொருவரின் காமிக்ஸ் நேசத்துக்கான சான்றிதழாய் அதனைப் பார்த்திட முடிந்தது ! இன்னும் நிறைய பேசினார் - தொடரவிருக்கும் இந்தாண்டின் இறுதியில் உள்ள அவர்களது சில திட்டமிடல்களைப் பற்றியும் ! உரிய சமயம் வரும் போது அவற்றைப் பற்றி விரிவாய்ச் சொல்கிறேன் guys - இன்னும் சில சந்தோஷ நாட்கள் நமக்குக் காத்துள்ளன என்பது மட்டும் இப்போதைக்கு ! ஒரே நாளில் இதுக்கு மேல் வேறென்ன வரங்கள் கிட்டிட இயலும் ? என்ற மனநிறைவோடு நான் விடைபெற்று டில்லியின் BP எந்தச் செய்யும் டிராபிக்கினூடே விமான நிலையத்தை எட்டிப் பிடித்தேன் ! "விமானம் தாமதம்" என்று சந்தோஷமாய், சிரித்த முகத்தோடு சொன்ன ஜெட் ஏர்வேஸ் பணியாளரிடம் லேசாய் ஏமாற்றத்தைப் பகிரக் கூடத் தோன்றவில்லை - நானிருந்த உற்சாகத்தில் ! "எந்நேரமாச்சும் சென்னை கொண்டு சேர்த்து விட்டால் போதும் "என்றபடிக்கு அன்றய நினைவுகளை அசை போடத் தொடங்கியவனுக்கு இரவு மணி 11 ஆனதும் உரைக்கவில்லை ; 2  மணி சுமாருக்குத் தான் சென்னை வந்து சேர்ந்ததொரு சிரமமாகவும் தோன்றவில்லை ! ஒரு மார்க்கமாய் கட்டையைக் கிடத்திய போது மணி மூன்றைத் தொட்டிருந்தது !

காலையில் புத்தக விழாவில் நண்பர்கள் சந்திப்பு என்ற ஞாபகத்தோடு தூங்கப் சென்றதாலோ - என்னவோ : கண்ணைத் திறக்கும் போதே முகத்திலொரு புன்னகையும் இலவச இணைப்பாய் ஒட்டிக் கொண்டிருந்தது ! ஒரு மாதிரியாய் ஜுனியரும், நானும் புத்தக விழா அரங்கிற்குச் சென்ற போது நமது நண்பர்கள் அங்கே ஏற்கனவே ஆஜர் ! சேந்தம்பட்டிக் குழுவினர் எண்ணிக்கையில் குறைவாகயிருந்தாலும், ஆளுக்கொரு MAY I HELP YOU ? என்ற பேட்ஜ்களோடு ஸ்டாலில் அதகளம் செய்துகொண்டிருந்தனர் ! வெள்ளி மாலை சென்னையில் உள்ள நம் நண்பர்கள் புத்தகங்களை ஒதுக்கி, sort out செய்வதில் போட்டு வைத்திருந்த பிள்ளையார் சுழியை சேந்தம்பட்டி கம்பெனி சனியின் பொழுதுக்கு அட்டகாசமாய்த் தொடர்ந்து கொண்டிருந்தனர் ! வருகை தரும் புதியவர்களுக்கு உதவிடுவதில் துவங்கி, பில்லிங்கில் ஒத்தாசை ; கிரெடிட் கார்டு மிஷினில் நம்மவர்களுக்கு பயிற்சி தருவது ; புத்தகங்கள் காலியாகும் நொடியே பண்டல்களிருந்து மாற்றுப் பிரதிகளை எடுத்து அடுக்குவது ; வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தந்திடுவது என தூள் கிளப்பிக் கொண்டிருந்தனர் ! காரைக்கால் ; பெங்களூரு & சென்னை நண்பர்களும் குழுமத் துவங்க,  - போட்டோக்கள் ; அரட்டைகள் ; ஜனவரியின் விமர்சனங்கள் என்று காலைப் பொழுது சிட்டாய்ப் பறந்து போனது ! இம்முறை டபுள் ஸ்டால் என்பதால் பக்கத்துக்கு கடையினர்  யாருக்கும் பெரியதொரு நெருடலை ஏற்படுத்தா வண்ணம் நமது நண்பர்கள் அரட்டை சாத்தியமானது ! ட்யுராங்கோவின் தாக்கத்திலிருந்து நண்பர்கள் எவருமே மீளவில்லை என்பதை நேற்றைய பொழுது தெளிவாய்க் காட்டியது ! அந்த அட்டைப்படத்தில் துவங்கி, கதை பாணி ; சித்திரங்கள் ; வர்ணங்கள் ; தயாரிப்புத் தரம் என்று ஏகத்துக்கு ட்யுராங்கோ நமது நாடித் துடிப்புகளை எகிறச்  செய்துள்ளார் என்பதை அறிய முடிந்த போது சந்தோஷமாக இருந்தது ! And ஜனவரியின் ப்ளூ கோட் சாகசமும் ஏகோபித்த பாராட்டுகளை பெற்றதை நேற்றைய தினத்தின் இன்னுமொரு highlight ஆகப் பார்த்தேன் ! ஓராண்டு விடுமுறைக்குப் பின்பாய், ஆண்டின் முதல் இதழாய் கார்ட்டூன் சந்தாவில் தலைகாட்டும் இந்தக் காமெடிப் போராளிகள் ஏனோ-தானோ response பெற்றிருப்பின், நிச்சயமாய் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கும் - நம் இதழ்களுள் ! ஆனால் அதெற்கெல்லாம் இடமே தராது "பச்சக்" என்று முத்திரை பதித்து விட்டார்கள் என்பதில் more than happy !

நேற்றைய பொழுதின் இன்னொரு சந்தோஷ விஷயம் - சிறுகச் சிறுகக் கூடிவரும் சுட்டீஸ்கள் ஆர்வங்கள் ! பெற்றோர்களுடன் வருகை தரும் நிறையப் பொடுசுகளுக்கு  லக்கி லூக் பரிச்சயமானதொரு முகமாக உள்ளார் ! SMURFS ; சிக்பில் என்றும் சுவாரஸ்யமாய்ப் புரட்டுவதை பார்க்கும் பொழுது - எதிருள்ள பாதையில் ஒளிக்கீற்று ஸ்பஷ்டமாய்த் தெரிகிறது ! இன்னொரு welcome முன்னேற்றம் - வாசகியரின் ஆர்வங்களும் !! காமிக்ஸ் என்பது "பசங்க சமாச்சாரம் மட்டுமல்ல என்பதை நேற்றைக்கு கண்கூடாய்ப் பார்க்க இயன்றது !  "வீட்டில் லைப்ரரியே வைத்திருக்கிறேன் சார் - வேண்டுமானால் நமது காமிக்ஸ் இதழ்களிலிருந்து என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்களேன் ?" என்று சவால் விடும் அளவுக்கு அந்த வளர்ச்சி உள்ளதென்பதை பார்க்க இயன்ற போது உற்சாகமாய் இருந்தது ! நேற்றைய இன்னுமொரு icing on the cake - நிறைய சீனியர் வாசகர்களை சந்திக்க முடிந்த அனுபவம் !

"கட்சி மீட்டிங்கின் பொருட்டு சென்னை வந்தோம் சார் ! நானும், எனது சகோதரரும் நெடுங்காலத்து வாசகர்கள் ; உங்க ஸ்டாலைப் பார்க்க முடிந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி" என்று பூரித்தவர்கள் ; "கை கொடுங்கள் சார் ; எங்கள் பால்யங்களை இன்னமும் நினைவுபடுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி வருகிறீர்கள் !!" என்று முகம்நிறைய மகிழ்ச்சியோடு வருகை தந்தவர்கள் ; "என் மகளின்று தமிழகத்தின் நம்பர் 1 வார இதழில் பணியாற்றுகிறாள் ; நான் ஊக்குவித்த நமது காமிக்ஸ் வாசிப்புப் பழக்கமே அவளது தமிழுக்கும், இன்றைய பணிக்கும் வேர்கள்" என்றுபெருமிதம் கொண்ட தந்தையையும் ; "அம்மா வாங்கி கொடுத்த முதல் இதழ் "கடத்தல் குமிழிகள் !" என்ற சிலாகிப்போடு இன்றுவரையிலும் நம் இதழ்கள் மீது குன்றாக் காதல் கொண்ட அந்த அழகான குடும்பம்  ; "வேதாளன் கதைகள் என் போட மாட்டேங்கிறீர்கள் ?" : என்று உரிமையோடு கோரும் அன்னையார் என்று நேற்றைய தினம் ஏராளமான அழகான நொடிகளைத் தன்னுள்ளே கொண்டிருந்தது ! இந்தியாவின் ஜாம்பவான் காமிக்ஸ் பதிப்பகத்தின் சென்னைக் கிளை மேலாளரோ - நம் ஸ்டாலில் ஒரு மணிநேரமாவது செலவிட்டிருப்பார் - அன்பின் மிகுதியால் ! தமிழ் ஹிந்து நாளிதழின் எடிட்டோரியல் குழுவினரோ நம்மைப் பார்த்த சமயம் சிலிர்க்கச் செய்யும் பாராட்டு மழையில் திக்குமுக்காடச் செய்தனர் !  நூற்றாண்டைக் கடந்ததொரு பதிப்புலக விருட்சத்தின் முன்னே நாமெல்லாம் குட்டியான குடைக் காளான்கள் மாத்திரமே என்றாலும், காமிக்ஸ் எனும் நேசம் சாத்தியமாக்கித் தரும் இத்தகைய அனுபவங்கள் என்றென்றும் மறக்க இயலாதவை !! மதிய உணவு நண்பர்களோடு - மீண்டும் ஸ்டாலில்  அரட்டை என்று பொழுது ஓடியதே தெரியவில்லை ! மாலை மேற்கொண்டும் சென்னை நண்பர்கள் குழுமத் துவங்க, சிங்கப்பூரிலிருந்தும், கோவையிலிருந்தும் நண்பர்கள் "ஹலோ " சொல்லி வந்து நின்ற போது நிறைவாக இருந்தது !

முதலில் காலியாகிப் போனது "சர்வமும் நானே" ! அதைத் தொடர்ந்து லக்கி கிளாஸிக்ஸ் ! அப்புறம் ட்யுராங்கோ ! மூன்றுக்கும் மத்தியினில் உள்ள ஒற்றுமை அவை மூன்றுமே hardcover / ஸ்பெஷல் இதழ்கள் என்பதை புரிந்திட நான் லியனார்டோவாய் இருக்க வேண்டியதில்லை தான் !! Point noted ! மாயாவியைப் பற்றிப் பேசாது போனால் மூத்த நண்பர்கள் கண்ணைக் குத்தி விடுவார்கள் என்பதால் நமது evergreen நாயகரைப் பற்றியும் !! ஒரு வரிசை முழுக்க மாயாவி இதழ்களை பார்க்கும் சமயம் சிலபல முகங்களில் பளீரிடத் தொடங்கும் அந்தப் பிரகாசத்துக்குப் பின்னே லாஜிக் இருக்க இயலாது ; ஆனால் நிறையவே காமிக்ஸ் நேசமுள்ளது ! தான் அந்நாட்களில் படித்த புத்தகங்களை வரிக்கு வரி வாசித்துக் காட்டி, தன மகளிடம் பெருமிதம் கொள்ளும் தந்தையைப் பார்க்க முடிந்த போது ரொம்பவே நெகிழ்வாய் உணர்ந்தேன் ! இன்றைய தலைமுறையின் பிரதிநிதியான அந்தப் பெண் - தந்தையின் சிலாகிப்பின் பின்னணிகளை புரிந்து கொண்டாரோ - இல்லையோ, ஆனால் அவர் முகத்தில் தெரிந்த அப்பட்டமான மகிழ்வின் பொருட்டு பொறுமையாய் காது கொடுத்துக் கொண்டிருந்தார் ! "தேசம் தேசமாய் வாழ்ந்து வந்தவன் ; இன்றைக்கு இந்தியப் பெருநகரங்களுக்கு மத்தியில் வாழ்க்கை - ஆனால் மாயாவி மட்டுமே அன்றைக்கும், இன்றைக்கும் எங்கள் வாழ்வில் தொடர்புள்ளிகள் " என்றபடிக்கு தனது விசிட்டிங் கார்டை நீட்டிய மூத்த அரசு உச்சப் பதவியின் சொந்தக்காரர் ; "மிச்சம் மீதமிருக்கும் மாயாவியும் எனக்கு உடனே கிடைக்க வழியுள்ளதா ?"  என்று எதிர்பார்ப்போடு கேட்கும் வாசகர் ; "எங்க அப்பா வாங்கி கொடுத்த புக் சார் இது ! " என்றபடிக்கு புன்னகைக்கும் வாசகி - என மாயாவியின் வசீகரம் வற்றாது தொடர்கிறது ! And இம்முறை பரவலாய்க் கேட்கப்பட்ட இன்னுமொரு கேள்வி - "அண்ணன் ஆர்ச்சி ஆஜராகப் போவது எப்போது ?" என்பதே ! 'ஹி..ஹி..' என்று நான் ஒப்பேற்றி வைத்தாலும், நனைத்து சட்டித் தலையனுக்கான ஆதரவு பெருகி வருவது கண்கூடு ! Uffffff !!

ஒவ்வொரு மேஜர் புத்தக விழாவிற்கும் ஏதாச்சும் ஸ்பெஷல் அறிவிப்பு இருக்குமே சார் - இம்முறை என்னதோ ? என்ற கேள்வி இம்முறையும் எழாதில்லை ! இப்போதெல்லாம் மாதா மாதம் ஏதேனுமொரு ஸ்பெஷல் இதழ் வரும் விதமே நம் அட்டவணை உள்ளதெனும் பொழுது - புதுசாய் இதற்கு மேலும் என்ன அறிவிப்பது ? உங்கள் பர்ஸ்களை இன்னமும் பொத்தல் போடத்  தான் வேண்டுமா ? என்று தோன்றும் ! ஆனால் இங்கு வந்து உங்களின் உற்சாகங்களை நேரில் உணரும் பொழுது கட்டைவிரல் ரொம்பவே ருசியானதொரு பதார்த்தமாய்த் தெரியத் தொடங்கி   விடுவதன் மர்மம் தான் என்னவென்று புரிய  மாட்டேன்கிறது !  So - 2 இரத்தச் சமாச்சாரங்களும்  ஒரு அதிகாரப்பூர்வமான துவக்க தந்து விடுவோமா இந்த வேலையினில் ? கோட்டையை ஈரோட்டிலும், படலத்தை சென்னையிலும் வைத்துக் கொள்வோமா ? நான் ரெடி !! நீங்க ? 

நேற்றிரவு கிளம்பும் முன்னர் நம் ஸ்டாலின்  அருகினில் காவல்துறையினர் சிலர் புத்தகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் ! அப்போது அமைதியாய் ஒரு வாசகர் நமது ஸ்டாலைப் பார்வையிட்டபடியே - நான் உங்கள் சந்தாதாரர் ! சந்தாவில் வந்திருக்கா இதழ்கள் வேறு ஏதேனும் உள்ளனவா ? " என்று கேட்டார். நான் லக்கி கிளாசிக்ஸ் இத்தலைக் காட்டிய போது - "SUPER 6 -ம் சந்தா கட்டி விட்டேன்" என்றவர் -"நீங்கள்     ஆங்கிலப் பதிப்புகளும் விற்பனை செய்கிறீர்களாமே ? அவை கிடைக்குமா ? " என்று வினவினார் ! "ஆன்லைனில் லிஸ்டிங் உள்ளது சார்" என்றபடிக்கே நமது CINEBOOK கேட்டலாகை எடுத்துக் காட்டினேன் ! இவற்றுள் தமிழில் வெளி வந்திருக்கா இதழ்கள் எவையெல்லாமோ - அவை அனைத்தும் வேண்டுமே ; பணம் கட்டி விடுகிறேன் - வீட்டுக்கு அனுப்பிவிடுகிறீர்களா ? என்றபடிக்கு தனது முகவரியை எழுதிக் கொடுத்தார் ! கிளம்பும் சமயம் "நானொரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் !" என்ற போது தான் உரைத்தது - போலீஸ் பந்தோபஸ்து அங்கிருந்ததன் காரணம் !! ஸ்நேகமாய் விடைபெற்ற பொழுது "ஓரளவுவுக்காச்சும்  லாபமாக ஓடுகிறதா ?" என்ற விசாரித்தார் ! "சந்தோஷமாக ஓடுகிறது சார் !" என்று நான் பதிலளித்த போது புன்சிரிப்போடு நகர்ந்தார் !

கடந்த 2 நாட்களை மட்டுமன்றி எங்களது சமீபக் காலங்களையும் விவரிக்க அந்த வரி மெத்தப் பொருத்தம் என்பேன் !! Thanks ever so much all !! This has been a truly memorable phase in life ! Bye for now ! See you around !














இவர் ப்ளூ கோட் பிரியர் !! 
இவரோ பென்னி ரசிகர் ! இவருக்கு நானே ரசிகர் ! 





272 comments:

  1. அ னைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. புத்தக விழாவில் எனது நெடு நாள் கணவு நேற்று எடிட்டரை சந்தித்தத மூலம் நிறைவேறியது மாயாவி. விஜய் மற்றும் நன்பர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி

      Delete
    2. 5 வது புகைப்படத்தில்
      கட்டம் போட்ட சட்டையுடன் நான் I am very happy thank U so much

      Delete
  2. வந்துட்டோமுல்ல.

    ReplyDelete
  3. காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் வணக்கம், சென்னை புத்தகத் திருவிழாவிற்கு வருகை தரும், வருகை தரப் போகும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. சார் நாங்க எப்போவோ ரெடி சீக்கிரம் அறிவிப்புகளை போட்டுத் தாக்குங்கள்

    ReplyDelete
  5. இந்த முறை வர இயலாத்தற்கு வருந்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நீங்க எப்பதான் வந்தீங்க :-)

      Delete
  6. நேற்று நான் எனது குடும்பத்துடன் ஆசிரியரை சந்தித்தது ஆசிரியர் எனது மகளை கொஞ்சியது நண்பர்களின் சந்தோஷ குழாவல்கள் என மறக்க முடியாத தினமாகி விட்டது

    ReplyDelete
  7. // ஐயையோ..இது ரசகுல்லா மாதிரித் தோணுதே ; ஆத்தாடி இந்தப் பால் அல்வா அள்ளுதே //

    அந்த பத்து தொடர்கள் என்னென்ன எடி சார் ?

    புத்தகத்திருவிழாவில் நமது ஸ்டால் களை கட்டிவிட்டதென்பதை உங்கள் பதிவு சுட்டிக்காட்டுகிறது

    நண்பர்கள் புத்தகத்திருவிழாவில் நனைந்த போட்டோக்களை அப்லோடு பண்ணுங்க விஜயன் சார் & ப்ரண்ட்ஸ்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சென்னை செல்லவில்லையா சம்பத்!?

      Delete
  8. ரத்தப்படலம் +111111111111

    ReplyDelete
  9. இனிமை..மகிழ்ச்சி..நேசம்..கலக்கலான கலவை இம்முறை. வந்து சிறப்பித்துக் கொண்டுள்ள அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் செல்லவில்லையா ஜி?

      Delete
    2. உற்சாகத்தின் மறுஉருவம்- ஜான் சைமன்! இன்றும் வருவீர்கள்தானே?

      Delete
    3. நேற்று வந்ததை அவரது புகைப்படம் அறிந்து கொண்டேன்!

      Delete
  10. எனது சீனியர் நண்பருக்கு பரிசளிக்க காமிக்ஸ்கள் வாங்கினேன் ஆசிரியர் எக்ஸ்டிரா 10 பர்சண்ட் டிஸ்கவுண்ட் கொடுத்தார் நன்றி ஆசிரியரே

    ReplyDelete
  11. Replies
    1. சென்னை புத்தக திருவிழாவில் எப்போதும் மிக பழைய மற்றும் V.I.P வாசகர்களை சந்திக்க வாய்ப்புள்ள இடம் என்பதை இந்த புத்தக திருவிழா மீண்டும் நிருபித்து விட்டது. வழக்கம் போல் இந்த முறை இதனை மிஸ் செய்து விட்டேன்! வருத்தமாக உள்ளது!

      Delete
    2. அடியேனும் ஒருவன்

      Delete
  12. Kottai yai Erodil, Padalathai chennaiyil!!!! This is d real icing in d cake... Mahilchiiiii.....

    ReplyDelete
  13. //தான் அந்நாட்களில் படித்த புத்தகங்களை வரிக்கு வரி வாசித்துக் காட்டி, தன மகளிடம் பெருமிதம் கொள்ளும் தந்தையைப் பார்க்க முடிந்த போது ரொம்பவே நெகிழ்வாய் உணர்ந்தேன் ! இன்றைய தலைமுறையின் பிரதிநிதியான அந்தப் பெண் - தந்தையின் சிலாகிப்பின் பின்னணிகளை புரிந்து கொண்டாரோ - இல்லையோ, ஆனால் அவர் முகத்தில் தெரிந்த அப்பட்டமான மகிழ்வின் பொருட்டு பொறுமையாய் காது கொடுத்துக் கொண்டிருந்தார் ! /// மனதை தொடும், வருடும் வரிகள்..

    ReplyDelete
  14. Replies
    1. எல மக்கா புத்தகத்திலேயா, என் புத்தகத்தில் படம் எல்லாம் இருக்குல! நல்லா பார்த்து விட்டு சொல்லுல :-)

      Delete
  15. காலை வணக்கம்! ஒரு வழியாக பூனை வெளிவரும் நேரம் வந்துவிட்டது. இரத்தபடல்ம் அறிவிப்பு வரயிருக்கும் தருணத்தை தான் சொல்கிறேன் சார்!

    ReplyDelete
  16. கோட்டையை ஈரோட்டிலும், படலத்தை சென்னையிலும் வைத்துக் கொள்வோமா ? நான் ரெடி !! நீங்க ? Yes sir...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப வருஷமா ரெடியாத்தான் இருக்கோம்.

      Delete
  17. ரத்தப்படலம் - ஒரே புத்தகமாகவா? என்னை பொருத்தவரை ஒரே புத்தகமாக வெளி இடுவதை விட, மூன்று புத்தகமாக பாக்ஸ் செட்டில் வெளி இட்டால் படிப்தற்கு நன்றாக இருக்கும். ஹார்ட் கவர் தேவை!

    ReplyDelete
    Replies
    1. @பரணி. அப்படித்தான் வரும் என்று ஈபுவி யில்ஆசிரியர் தெரிவித்தார்

      Delete
    2. Mahendran Paramasivam @ ஆமா ஜி! அதனை மறுபடியும் நினைவுபடுத்த மற்றும் உறுதி செய்யவே இதனை பதிவிட்டேன்!

      Delete
  18. ///கோட்டையை ஈரோட்டிலும், படலத்தை சென்னையிலும் வைத்துக் கொள்வோமா ? நான் ரெடி !! நீங்க ? // பணம் எவ்வளவு சார் அனுப்பனும்

    ReplyDelete
  19. ஈரோடு விஜய் எனது கை எப்படியிருக்கிறது என்று அக்கறையுடன் விசாரித்தது மகிழ்ச்சியளிக்க ஆசிரியரும் கை சரியாகி விட்டதா என கேட்ட போது எனது மகிழ்ச்சி ஆயிரம் மடங்காகி விட்டது ஆயிரம் வேலைகள் இருந்தாலும் என்னை மறக்காமல் விசாரித்தது எனக்கு ரொம்பவே ஆறுதலாக இருக்கிறது நன்றி ஆசிரியரே & நண்பர்களே

    ReplyDelete
  20. ஆசிரியர் நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!

    ReplyDelete
  21. வெள்ளிக்கிழமை அன்றே எல்லா புத்தகங்கள் அனைத்தும் வாங்கி விட்டேன்.மனம் காற்றில் பறக்கிறது

    ReplyDelete
  22. இந்த மந்திர எழுத்தாற்றலை ரசிக்கத்தான் காலை ஐந்து மணி முதல் காத்திருந்தேன் சார்...!!
    உற்சாகமான பல சந்தோஷ செய்திகளுக்கு மத்தியில் இரத்த படலம்மற்றும்இரத்த தடம்குண்டு இதழ்களின் அறிவிப்புகள் குதூகலத்தை தெறிக்க செய்துவிட்டது.
    நட்பூக்களுடனான நேற்றைய சந்திப்பு நெடு நாள் மனதில் பசுமையாய் நிற்கும்.
    என் இன்னொரு குடும்பம் இது.

    ReplyDelete
    Replies
    1. \\இந்த மந்திர எழுத்தாற்றலை\\

      அப்பட்டமான உண்மை. நான் ஆசிரியரின் எழுத்துக்கு அடிமை.

      Delete
    2. ரத்த தடம் ????

      ரத்த கோட்டை???

      Delete
    3. @ செனாஅனா

      கோட்டைதான்!

      Delete
  23. ///கோட்டையை ஈரோட்டிலும், படலத்தை சென்னையிலும் வைத்துக் கொள்வோமா ? நான் ரெடி !! நீங்க ///

    அப்படியே அந்த புது கௌபாயும். .ம்.ம்.ம்.!!!

    ReplyDelete
    Replies
    1. அப்படியே அந்த பத்து காமிக்ஸும் .ம்.ம்.ம்.

      Delete
  24. இந்த மந்திர எழுத்தாற்றலை ரசிக்கத்தான் காலை ஐந்து மணி முதல் காத்திருந்தேன் சார்...!!
    உற்சாகமான பல சந்தோஷ செய்திகளுக்கு மத்தியில் இரத்த படலம்மற்றும்இரத்த தடம்குண்டு இதழ்களின் அறிவிப்புகள் குதூகலத்தை தெறிக்க செய்துவிட்டது.
    நட்பூக்களுடனான நேற்றைய சந்திப்பு நெடு நாள் மனதில் பசுமையாய் நிற்கும்.
    என் இன்னொரு குடும்பம் இது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் குடும்ப நண்பராய் இருப்பதில் பெருமை கொள்கிறேன் பாஷா ஜி

      Delete
    2. ஆசிரியர்
      செயலாளர் ஈரோடு விஜய்
      மாயாவி சிவா
      கருர் எம்.எல்.ஏ.சரவணன்
      செந்தில் சத்யா
      சுவாமிநாதன் ஜி
      ராகவன் ஜி
      மொய்தின்
      பிரசன்னா
      சாத்தான் ஜி
      நாகராஜன் புளு பெர்ரி ...!!
      நண்பர்கள் அனைவரின் முகங்களிலும் தென்பட்ட அந்த களப்படமில்லா புன்னகை 100% உண்மையானது.
      நம் ஊர் நிகழ்ச்சிகளில் ஒட்டியிருக்குமே...ஒரு சம்பிரதாய செயற்கைத்தனம் அப்படியல்ல.
      இது தான் குடும்பம்.

      Delete
    3. உங்களுடன் செலவிட்ட நேற்றைய பொழுதுகள் உற்சாகம் தெறிப்பவை பாட்ஷா ஜி!

      Delete
    4. கலக்கல் சந்திப்போ?

      Delete
  25. ஆசிரியர்
    செயலாளர் ஈரோடு விஜய்
    மாயாவி சிவா
    கருர் எம்.எல்.ஏ.சரவணன்
    அகமத் பாஷா
    சுவாமிநாதன் ஜி
    ராகவன் ஜி
    மொய்தின்
    பிரசன்னா
    சாத்தான் ஜி
    நாகராஜன் புளு பெர்ரி
    அனைவரையும் சந்தித்தது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சியை தவிர்த்து வேறொன்றுமில்லை

    ReplyDelete
    Replies
    1. உங்களை மீண்டும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி சார்...!!!

      Delete
    2. பலப்பல சிரமங்களுக்கு மத்தியிலும் குடும்பத்துடன் வந்திருந்து நண்பர்களோடு அளவலாவிய அந்த உற்சாகம் மறக்கமுடியாதது செந்தில் சத்யா அவர்களே! உங்கள் சுட்டிப்பெண் சத்யாவின் சிரித்த முகமும் அவ்வாறே!

      Delete
    3. பாஷா ஜி கடந்த இரண்டு வருடங்களாக உங்களின் அழுத்தமான கை குலுக்கலையும் உற்சாகம் தெறிக்கும் காமிக்ஸ் கலந்துரையாடைலையும் மிகவும் மிஸ் செய்திருந்தேன் அதேபோல் ஈரோடு விஜய்யின் குறும்பு கொப்பளிக்கும் பேச்சையும் அனைவரையும் புண்னகையோடு வரவேற்கும் உற்சாகமும் ஈரோட்டில் (உடல்நிலை காரணமாக)மிஸ்ஸிங் இவை இரண்டும் சென்னையில் மீண்டும் கிடைத்தது சூப்பர்

      Delete
    4. ///உங்களின் அழுத்தமான கை குலுக்கலையும்///

      @ செந்தில் சத்யா: அடிக்கடி பிரியாணி உள்ளே தள்ளியதன் விளைவு சார்....!!

      Delete
    5. ///அடிக்கடி பிரியாணி உள்ளே தள்ளியதின் விளைவு சார்.....!!///
      சிக்கனா அல்லது மட்டனா என்பதை குறிப்பிட மறந்துவிட்டீர்களே சார்!!

      Delete
  26. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
    இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  27. தங்கள் பதிவு உடல் சிலிர்க வைத்தது. மகிழ்ச்சி,புதியவை காண காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  28. சார் படிக்க படிக்க சேரை கெட்டியாக நீங்கள் பிடித்த படி உரையாற்றுவது போல வர சிரித்த படி தொடர ....நகர நகர ுங்கள் உற்ச்சாகம் கூடுதலாய்...அதாவது உங்களை விட அதிக சந்தோசமாய் தொடர....அப்படியே வருகிறது விளம்பரங்களாய் மனதில் களை கட்ட...நமது நிறுவனம் பெற்று வரும் மதிப்புகளும் ,சிறப்புகளும் நெகிழச் செய்ய தொடர்ந்தால்...2 இரத்த எனும் வரியை பார்த்ததும் கோட்டையும் , படலமும் உடனே எட்டிப்பார்க்க செய்யும் வரிகள் நினைவில் மலர...ிது இரண்டாம் எண் என இருக்குமோ என தடதடக்கும் இதயத்தோட முன் வரிகளை எட்டி பார்க்க.....பட பட எனத் தொடர்ந்தால் .....அதான் ....அதேதான்.....வருமென தெரிந்தாலும் அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வரனுமே..வந்துடுதுடா கைப்பிள்ளேன்னு சந்தோச அலைகளில்..ஆர்ச்சியும்..அந்த குண்டு ஸ்பைடரும் என அடுத்த கட்ட நகர்வுகளை அசைபோட்ட படி.....நகர்கிறேன் naan

    ReplyDelete
  29. ஆசிரியர்
    செயலாளர் ஈரோடு விஜய்
    மாயாவி சிவா
    கருர் எம்.எல்.ஏ.சரவணன்
    அகமத் பாஷா
    சுவாமிநாதன் ஜி
    ராகவன் ஜி
    மொய்தின்
    பிரசன்னா
    சாத்தான் ஜி
    நாகராஜன் புளு பெர்ரி
    அனைவரையும் சந்தித்தது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சியை தவிர்த்து வேறொன்றுமில்லை

    ReplyDelete
  30. Sir,

    It was a pleasant reading your article, i hope to see hardcovers for all books in the future or you can try both paperback and hardcover at different prices for same book. I personally feel albums are better than single edition. And last but not least congrats for your well earned recognition for your contribution towards comics from all over the world. May you achieve new level of heights in the near future. All the best sit.

    ReplyDelete
  31. நேற்று நமது ஸ்டாலுக்கு நண்பர் ஒருவரை அழைத்து வந்து மீள் அறிமுகம்செய்து, சுமார் முப்பத்தைந்து இதழ்களை பரிசளித்தேன்.கூடிய விரைவில் ஒரு புது சந்தாதாரர் ரெடி...!!

    ReplyDelete
    Replies
    1. தூக்கமுடியாத அளவுக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுக்கவும் நல்ல மனசு (+ வெய்ட்டான பர்ஸ்) வேண்டும் பாட்ஷா ஜி! சூப்பர்!

      Delete
    2. அத்தனை புத்தகங்களையும் அடுக்கி எடுத்து செல்ல,எங்கெங்கோ தேடியலைந்து ஒரு அட்டைப்பெட்டி கொண்டு வந்த உங்கள் பரிவும்,பண்பும் ....!!!
      நெகிழ்ந்து விட்டேன் விஜய்...!!

      Delete
    3. அத்தனை புத்தகங்களையும் அடுக்கி எடுத்து செல்ல,எங்கெங்கோ தேடியலைந்து ஒரு அட்டைப்பெட்டி கொண்டு வந்த உங்கள் பரிவும்,பண்பும் ....!!!
      நெகிழ்ந்து விட்டேன் விஜய்...!!

      Delete
  32. சார்! ஈரோட்டுக்கு கோட்டை ஓ.கே. சார்! ஆனால், சென்னைக்கு இரத்தப் படலத்திற்கு பதிலாக ("மின்னும் மரணம்" போல 'ஜம்போ ஸ்பெஷ'லாக) 2018-ல் ட்யுராங்கோவின் மீதம் உள்ள 13 பாகங்களும் ஒரே புத்தகமாக வெளியிடுங்கள்.

    ReplyDelete
  33. எடிட்டர் சார்!
    உங்களின் பரபரப்பு எங்களையும் தொற்றிக் கொண்டது...!
    அழகான விவரிப்பு..!

    ReplyDelete
  34. கோட்டையும்,படலமும்......
    தெறிக்க விடலாமா...!!

    ReplyDelete
  35. சட்டித் தலையனின் கோட்டையை கண்ணில் காண்பது எப்போது...?
    கண்ணில் காணும் தினமே......
    வரம் வாங்கிய தினம்..!
    😁😁😁

    ReplyDelete
  36. //அவருடன் கைகுலுக்கி விட்டுக் கிளம்பும் வேளையில் என் டயரியில் ஒரு 10 தொடர்களின் பெயர்களாவது கிறுக்கப்பட்டிருந்தன் ; நமது மின்னஞ்சலுக்கு அவற்றின் மாதிரிகளும் வந்து கிடந்தன !!//
    வாவ் சூப்பர் சார்.பேசாம இந்த பதிவுக்கு வாயில் ஜலம் ஊறும் நேரம் அப்படின்னு வெச்சிருக்கலாம்.ஹி,ஹி.

    ReplyDelete
  37. // கோட்டையை ஈரோட்டிலும், படலத்தை சென்னையிலும் வைத்துக் கொள்வோமா ? நான் ரெடி !! நீங்க ?//
    கோட்டை ஓகே,ஆனா படலம் ஹி,ஹி.அதுக்குள்ளயேவா?

    ReplyDelete
  38. We are always ready
    கரும்்பு தின்்ன கசக்்குமா சார்்

    ReplyDelete
  39. // அவருடன் கைகுலுக்கி விட்டுக் கிளம்பும் வேளையில் என் டயரியில் ஒரு 10 தொடர்களின் பெயர்களாவது கிறுக்கப்பட்டிருந்தன் ; நமது மின்னஞ்சலுக்கு அவற்றின் மாதிரிகளும் வந்து கிடந்தன !!//
    எங்களுக்கு செம வேட்டை காத்திருக்குன்னு சொல்லுங்க.

    ReplyDelete
  40. படிக்க படிக்க ஆனந்தம் ....
    படிக்க படிக்க கூதுகலம் ...
    படிக்க படிக்க மகிழ்ச்சி...
    படிக்க படிக்க புன்னகை....


    படித்து முடித்தவுடன் " சந்திப்பை தவற விட்ட வருத்தம்...:-(

    ReplyDelete
  41. மகிழ்வும் உற்சாகமும் அளிக்க கூடிய பதிவும் அது தரும் செய்திகளும்...

    விற்பனை பன்மடங்கு அதிகரிக்க விருப்பமும் வாழ்த்துகளும் ....


    போட்டோஸ் அப்டேட்டுக்குக்காக வெயிட்டிங்

    ReplyDelete
  42. கோட்டையை ஈரோட்டிலும், படலத்தை சென்னையிலும் வைத்துக் கொள்வோமா ? நான் ரெடி !! நீங்க ? ////


    நானும் ரெடி சாா்

    ReplyDelete
  43. அரசியல் பெரியவர்களும் நமது வாசகர்கள் என்பது எதிர் பாராத ஆச்சர்யம் ..

    பெரும் மகிழ்ச்சி...:-)

    ReplyDelete
  44. ///கோட்டையை ஈரோட்டிலும், படலத்தை சென்னையிலும் வைத்துக் கொள்வோமா ? நான் ரெடி !! நீங்க ? ///

    சார்.,

    இரத்தக்கோட்டை ஐந்து பாகங்களுடன் தோட்டா தலைநகரத்தையும் சேர்த்து வெளியிடுவதாக வாக்கு கொடுத்திருக்கிறீர்கள். அதையும் சேர்த்தே எதிர்பார்க்கிறோம்.!

    ReplyDelete
  45. ////அண்ணன் ஆர்ச்சி ஆஜராகப் போவது எப்போது ?"///

    என்னதான் காதில் முழம் முழமாக பூ சுற்றும் ரகம் என்றாலும் ஒரு காலத்தில் அவனுமே என் ஆதர்ச நாயகன்தான்...
    விரைவில் அறிவிப்பு வெளியிடுங்கள் சாா்..

    ReplyDelete
    Replies
    1. //அவனுமே என் ஆதர்ச நாயகன்தான்...
      விரைவில் அறிவிப்பு வெளியிடுங்கள் சாா்..//
      +1

      Delete
    2. +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
      ப்ளஸ்ஸோ ப்ளஸ்...!!!

      Delete
  46. இரத்தப்படலம் இன்னும் ஒரே வருடம். !வெறும் 12 மாதம் சும்மா 52 வாரம் காற்றாய் பறந்துவிடும் 365 நாட்கள் காத்திருக்கிறோம் சார்

    ReplyDelete
  47. சென்னை
    மற்றும் சுற்றுப்புற நண்பர்கள் பலரை இன்று சந்திக்க ஆவலாய் இருக்கிறோம்! உற்சாகமான சந்திப்புகள் நிகழ இன்னும் சில நிமிடங்களே பாக்கி!

    எந்தன் மனம் துள்ளி விளையாடுவதும் ஏனோ!!!

    ReplyDelete
  48. //என் டயரியில் ஒரு 10 தொடர்களின் பெயர்களாவது கிறுக்கப்பட்டிருந்தன//

    அப்போ சந்தா 'J'- for Jollu சீரிஸ், நாமகரணத்திற்கு நாள் குறிக்கலாமா...!?

    //கோட்டையை ஈரோட்டிலும், படலத்தை சென்னையிலும் வைத்துக் கொள்வோமா ? நான் ரெடி !! நீங்க ?//

    கேட்டதும் வாயோரம் எனக்கும் 'ஜல'தரங்கம்... இவைகள் "Collector's Edition" என்பதால் 100/200 கூடினாலும் "லக்கி கிளாசிக்' பதத்தில் வருவேண்டும்.

    ReplyDelete
  49. ///ஐயையோ..இது ரசகுல்லா மாதிரித் தோணுதே ; ஆத்தாடி இந்தப் பால் அல்வா அள்ளுதே !! கிளிஞ்சது போ --- இந்த ரவா லட்டு கலக்கல் !!" என்று கடைவாய்ப் பக்கமாய் என் கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டு ஜலப் பிரவாகம் துவங்கியிருந்தது ///

    சந்தா S (Sweet stal) ன்னு ஒண்ணு அறிவிச்சு அந்த பத்தையும் போட்டுத்தாக்கிடுவோமே சார்.!?

    ReplyDelete
  50. நண்பர்களே ஆதரவு தெறிவிக்காவிட்டாலும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம்

    ReplyDelete
  51. எடிட்டர்,பழனிவேல் ஆறுமுகம்,சுரேஷ்Chand,ராஜாராம்K காதலிங்கம்,சேலம் டெக்ஸ்(!),ஜான்ஸ்டீபன்,பொடியன்,சரன்செல்வி, ஈரோடுவிஜய், செந்தில்வெஸ்ட்,ஜெகந்,ராஜேஸ்ராமன்,கிட்ஆர்டீன்,ராஜ்முத்துக்குமார்,ஃகாப்டைகர்,ரிக்கிTbmரமேஷ்,சங்கர்C,மணிகண்டன்N,AT RAJAN SIR,Sathiya, கடல்யாழ், வெட்டுக்கிளி வீரையன், திருச்செல்வம், யாசின் ஆகிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,தாங்கள் அனைவரும் Christmas நல்வாழ்த்துக்கள் சொன்னீர்கள்.வேலை பளு காரணமாய் வலை பக்கத்திற்கு வர காலதாமதம் ஆகிவிட்டது. தங்களுக்கு எனது நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.
      கால தாமதமானாலும் வருகைக்கு நன்றி சார்.

      Delete
    2. AT RAJAN Sir,
      பிரிண்ட் பதிவிடும் போது நான் பிரிவுயு பார்க்க வில்லை. தங்களது பெயர் இணைந்து இல்லாமல் இருக்க கண்டேன். தவறுக்கு என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். எனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது.தவறுக்கு வருந்துகிறேன்.

      Delete
    3. இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்டெல்லாம் சங்கடப்படாதீர்கள் சார். அச்சில் என் பெயர் வராவிட்டால் என்ன?
      உங்கள் மனதில் இருப்பதே பெரிய விஷயம்.
      அது போதும் எனக்கு.

      Delete
  52. CBF ஒரு பத்து நாட்களுக்கு முன்பாக வந்திருக்ககூடாதா...டிசம்பரின் கடைசி வாரத்தில் அமெரிக்க விமானத்தைப் பிடிக்க சென்னையில் இரண்டுநாட்கள் தேவுடு காத்திருந்தேன்...விமானத்தை சரியாய் பிடித்துவிட்டு CBF ரயிலையும், நண்பர்களுடனான சந்திப்பையும் கோட்டை விட்டுவிட்டேனோ...!?

    ReplyDelete
  53. //கோட்டையை ஈரோட்டிலும், படலத்தை சென்னையிலும் வைத்துக் கொள்வோமா ? நான் ரெடி !! நீங்க?//
    என்ன சார் இப்படி கேட்டு புட்டிங்க...இதுக்கு தானே பல மாதமா Waiting....
    விலையை சொல்லி, முன்பதிவை இன்றே ஆரம்பிங்க சார்....

    ReplyDelete
  54. //இவரோ பென்னி ரசிகர் ! இவருக்கு நானே ரசிகர் ! //

    Classic shot....1000 likes worthy.

    ReplyDelete
  55. அனைவருக்கும் வணக்கம். இனிமையான நெகிழ்ச்சியான பதிவு. இரத்தம்..... வர I am waiting

    ReplyDelete
  56. அனைவருக்கும் வணக்கம். இனிமையான நெகிழ்ச்சியான பதிவு. இரத்தம்..... வர I am waiting

    ReplyDelete
  57. அனைவருக்கும் வணக்கம்.
    எடிட்டர் சார்
    இன்றைய பதிவு எங்கள் எல்லோருக்கும் மிகவும் சந்தோஷத்தை அளிக்கும் பல விஷயங்களை உள்ளடக்கிய பதிவாக உள்ளது சார்.
    இரத்தப்படலம், ரத்தக்கோட்டை இதெல்லாம் நாங்கள் பல நூற்றாண்டுகளாக!!! காத்துக்கிடக்கும் ஒன்று சார்.
    இப்போது உங்களது மௌனத்தை கலைத்ததற்கு நன்றிகள் சார். இரத்தப்படலத்தை தலையில்லா போராளி சைஸில் வண்ணத்தில் ஹார்ட் பவுன்ட் அட்டையுடன் மூன்று பாகங்களாக வெளியிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் சார்.
    கனத்த புத்தக பார்சல்களுடன் புத்தக விழாவிற்கு வருகை புரிந்த உங்கள் குழு வெறும் கைகளுடன் ஊர் திரும்பவேண்டும் என விரும்புகிறேன் சார். அந்த நிலை ஏற்பட விற்பனை உச்சம் தொடவேண்டும். அதற்கு எனது வாழ்த்துக்கள்.
    பிரகாஷ் பப்ளிஷர்ஸ்க்கு கிடைக்கும் வெற்றி எங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வெற்றியாக கருதுகிறோம் சார்.
    "முயற்சி திருவினையாக்கும்."

    ReplyDelete
    Replies
    1. Rathapadalam +1 தலையில்லா போராளி சைஸ்...இவ்வளவு கால நண்பர்களின் காத்திருப்புக்கு ஈடு செய்யும் விதமாய் பிரம்மாண்டமாய்...வேண்டும்..எப்டியெல்லாம் சிறப்பிக்க ஏலுமோ அது போல...காவியம்...இதிகாசத்திற்கு ஈடுசெய்யும் வண்ணமிருக்கனும் நமது படைப்பு ...பிரெஞ்சுலகமே திணரணும் ஆமா

      Delete
    2. ///Rathapadalam +1 தலையில்லா போராளி சைஸ்...இவ்வளவு கால நண்பர்களின் காத்திருப்புக்கு ஈடு செய்யும் விதமாய் பிரம்மாண்டமாய்...வேண்டும்///

      +10000000000000

      Delete
    3. ///Rathapadalam +1 தலையில்லா போராளி சைஸ்...இவ்வளவு கால நண்பர்களின் காத்திருப்புக்கு ஈடு செய்யும் விதமாய் பிரம்மாண்டமாய்...வேண்டும்///

      +10000000000000

      Delete
  58. ஆசிரியநண்பரே., தங்கள் எதை கொடுத்தாலும் சிறப்பாக தான் இருக்கும்.. எங்கள் ஆதரவு என்றும் எப்போதும் உண்டு..புதிய சந்தாவை எதிர்நோக்குகிறோம்.,வரவேற்கிறொம்

    ReplyDelete
  59. வணக்கம் சார்...
    வணக்கம் நண்பர்களே...
    அற்புதமான விவரிப்பு சார்....

    ReplyDelete
    Replies
    1. உங்களையும்,தலீவர் மற்றும் கலீல்,கிரிதரனையும் எதிர்ப்பாத்தோம் சார்...!!
      ஈரோட்டில் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்

      Delete
    2. உங்களையும்,தலீவர் மற்றும் கலீல்,கிரிதரனையும் எதிர்ப்பாத்தோம் சார்...!!
      ஈரோட்டில் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்

      Delete
    3. நிச்சயமாக சந்திப்போம் பாஷா சார்

      Delete
  60. எழுத்துப்பிழைகள் உள்ளன..மன்னிக்கவும்

    ReplyDelete
  61. நிறைய சந்தோஷத்தையும் மனநிறைவையும் தந்திருக்கிறது இந்த வாரப்பதிவு.
    மனதில் பொங்கிய சந்தோஷம் கண்ணில் கண்ணீராய் தளும்பி நிற்கிறது..

    வாழ்த்துக்கள் விஜயன் சார்..

    நான் பணிபுரியும் அலுவலக சூழலில் சனி ஞாயிறு விடுமுறை என்பது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.. நண்பர்களையும் புத்தகத்திருவிழா கொண்டாட்டத்தையும் ரொம்பவே மிஸ் செய்கிறேன்..

    ReplyDelete
  62. சந்தா கட்டியாச்சு.
    நான் போன வருடம் தான் சந்தா கட்டினேன். அதற்கு முன் online தான். தமாமதமாக வருவது தான் பெரிய குறையாக இருந்தது முதல் ஆறு மாதத்திற்கு. ஆனால் தற்போது எல்லாம் மறுநாள் அல்லது அதிக பட்சசம் ஓரு நாள் இடைவெளி. பார்சல் டான்னு வந்துடுது.

    Online listing பன்ன பிறகு தான் நம் கையில் புத்தகம் வரும். எப்படியும் நமது கைக்கு வர அதன் பிறகு நாள் எடுக்கும்.

    சந்தா கட்ட ஆரம்பித்து முதல் முதல் நாள் முதல் ஷோ ரஜினி படம் பார்கிற ஓரு feeling கிடைக்கிறது. இந்த மாதம் சந்தா கட்ட தாமதம் ஆனதால் த்ரில்லிங் feeling ரொம்ப மிஸ் செய்தேன்.

    இன்னோரு பெரிய plus கடந்த மாதம் எதிர்பாராத பெரிய செலவு கையில் 100 ரூபாய் கூட இல்லை. சந்தா கட்டியதால் எந்த ஓரு பிரச்சனை இல்லாமல் காமிக்ஸ் படிக்க முடிந்தது.
    சந்தா கட்டுங்க சந்தோஷம இருங்கள்.

    ReplyDelete
  63. /// கோட்டையை ஈரோட்டிலும், படலத்தை சென்னையிலும் வைத்துக் கொள்வோமா ? நான் ரெடி !! நீங்க ? ///...ரெடியோ ரெடிங் சார்...

    கோட்டையில் "குடி"புகும் நாளும்,
    படலத்தில் " பட்டை"யை கிளப்பும் நேரமும்,
    கண் முன்னே வந்து போகிறது.

    படலத்திற்கு ஹார்ட் கவரையும் தாண்டி ஏதாவது (நண்பர் Atrசொன்னவாறு ) பிரம்மாண்டமான சைஸ் க்கு வாய்ப்பிருக்கா என்ற ஆப்சன்லயும் ஒரு பார்வை வைங்க சார்...

    ReplyDelete
  64. நண்பர்களே நேற்று குறிப்பிட தக்க இன்னொன்று ஜூனியர் எடிட்டர் எப்போதும் மவுனமாகவே இருப்பார் நேற்று (ஒரளவு) எல்லோரிடமும் பேசினார் அந்த முகத்தில் புண்ணகை மட்டும் நிரந்தரமாக குடி கொண்டிருந்தது ஈரோட்டில் எல்லோரிடமும் சகஜமாக பேசுவார் என நினைக்கிறேன் சூப்பர் ஜூனியரே

    ReplyDelete
  65. ## மத்தாப்பூ சிரிப்பில் பட்டாசு தோரணம்
    - ட்யுராங்கோ
    ## சரவெடி இனிசகலமும்வெடி,
    இது "" தல"" வெடி- இது
    எப்போதும் சரவெடி!!!
    ## மாயமானது மாயாவிமட்டுமல்ல
    எங்கள் மனசும் தான்!!!!

    ReplyDelete
  66. கல்கி அவர்களுக்கு "பொன்னியின் செல்வன்" காலத்தை வென்ற காவியமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் இன்றைக்கும் அவர் பெயரை உச்சரிக்கையில் அவரது எழுத்துக்களில் எத்தனையோ காவியங்கள் வந்திருந்தாலும் "பொன்னியின் செல்வன்" மட்டும் முதலில் ஞாபகம் வருவதென்பது எப்படி தவிர்க்க இயலாமல் போய்விட்டதோ அப்படி உங்களுக்கும் " இரத்தப்படலம்" ஒரு சாதனை இதழாக எடிட்டர் விஜயன் என்றாலே வருங்கால சந்ததியினருக்கு "இரத்தப்படலம்" என்ற பெயர் ஞாபகம் வருமளவிற்கு இன்னமும் சிறப்பாக என்னென்ன செய்யலாம் என நண்பர்களின் ஆலோசனைகளையும் கேட்டு அதனை வெளியிட முயற்சியுங்கள் சார்.
    நிச்சயமாக அந்த இதழ் உங்கள் பெயரை இந்தியா முழுமைக்கும் கொண்டு போகவிருப்பது உறுதி.
    இதுவரை இப்படி ஒரு புத்தகம் வந்ததுமில்லை.
    இனி வருவதற்கும் சாத்தியமில்லை என்று சொல்லுமளவிற்கு ஆரம்பம் முதல் இறுதிவரை மற்றும் அதனுடைய அத்தனை தொகுப்புகளும், அவை சம்பந்தமான அத்தனை செய்திகளும், கொண்டதொரு முழுமையான இதழாக கொண்டு வாருங்கள் சார்.
    இப்போதே இதயம் படபடக்க ஆரம்பித்து விட்டது.
    ஒரு வருடம்தானே காத்திருக்க வேண்டும்?
    மாதாமாதம் நம் இதழ்களின் தரமான மற்றும் தாமதமில்லா வருகையினால் இப்போதெல்லாம் நாட்கள் நகர்வதே தெரியவில்லை.
    போதாததற்கு உங்களுடைய சலிக்காத பதிவுகள், நண்பர்களின் வானவில்லின் வர்ணங்களைப்போன்ற எழுத்துக்கள் என்று ஒரு வருடத்தை "போம்மா.,.. மின்னல்" என்று சர்ர்ர்ரென கடக்க வைத்துவிடும்.

    ReplyDelete
  67. ரத்தக்கோட்டை + இரத்தப்படலம் புத்தகங்களுக்கான முன்பதிவுத் தொகையை முதன்முதலாகச் செலுத்திய Early bird பெருக்குரியவர் - கரூர் சரவணன் அவர்கள்!

    வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. எது எதற்கு எவ்வளவு என அறிவிச்சாச்சா விஜய்?
      படலம் எத்தனை புத்தகங்களா பிரிக்கப்பட்டு உள்ளது?

      Delete
    2. அட அதுக்குள்ளயேவா? சூப்பர் ஜி.

      Delete
    3. இந்த மாதிரி ஸ்பெஷல் இதழ்களுக்காகவே என்று ஏற்கனவே நான் கூடுதல் பணம் அனுப்பிவிடுபவனாக்கும்...!!!
      அந்த முறையில் ஐயாவும் முதல் இடத்திற்கான பந்தயத்தில் உள்ளார் டோய்....!!!

      Delete
    4. சூப்பர் நண்பர்கள் கரூர் சரவணன் சார் , அகமது பாட்ஷா சார் .

      Delete
  68. சூப்பர் திரு.கரூர் சரவணன் அவர்கள் மற்றும் திரு.அஹ்மது பாஷா அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. பணிவான ஸலாம் சார்

      Delete
    2. திரு.அஹ்மத் பாஷா அவர்களுக்கு
      உங்களின் "பணிவான" என்ற வார்த்தை என்னை நெளிய வைக்கிறது.
      இந்த வார்த்தை நமக்கெல்லாம் காமிக்ஸ் என்ற மந்திரச் சொல்லை நாம் வாழும் காலம் முழுவதும் உச்சரிக்கவும், அதனை நம் உயிர் மூச்சாக கருத வித்திட்ட நம் அனைவரின் மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரிய சீனியர் எடிட்டர் அவர்களுக்கு மட்டுமே சமர்ப்பணம் செய்வோம். அதுதான் அந்த வார்த்தைக்கே அழகூட்டும்.
      தயவுசெய்து தவறாக எண்ணவேண்டாம்.

      Delete
  69. இந்த 2017 ஆம் ஆண்டு சென்னை புத்தக திருவிழாவின் வெற்றியோடு துவங்கிட வாழ்த்துக்கள். மேலும் ரத்தப்படலாம் பற்றிய அறிவிப்பு இன்ப அதிரிச்சி . அதன் முழு தொகுதியும் மூன்று புத்தகங்களாக பிரித்து ஒரே சமயத்தில் வெளியிட வேண்டும்...

    ReplyDelete
  70. சத்தமின்றி ஷல்லூம்

    ReplyDelete
  71. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு 2018 வேறு எந்த ஸ்பெஷலுக்கும் வாக்குறுதியோ எதிர்பார்ப்போ தர வேண்டாம்.காரணம் காமிக்ஸ் உலகின் முடிசூடா மன்னன் நமது தலயின் 70 வது ஆண்டு அல்லவா.
    அதை சும்மா விடமுடியுமா .மிக பிரமாண்டமாக ஒரு ஸ்பெஷலை வருக வருக என்று இப்போதே வரவேற்க வேண்டாமா.
    அது பற்றி ஆசிரியர் யோசிப்பார் என்று நினைக்கிறேன். காலை முழுவதும் வாயில் வைத்தால் வாசகர் நமக்கு 2018 ஒரு பவர்புல் தீபாவளிவாக மாறும் என்பதில் ஐயமில்லை.
    நன்றி. வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. புதுசா ட்ராங்கோ மாதிரி வர வழி விடுங்கள். சும்மா அரைச்ச மாவயே அரச்சுகிட்டு...
      மாதம் ஒன்று பத்தாத...

      Delete
    2. கணேசுக்கும் சரணுக்கும் பொதுவாக இதுல ஒன்னு அதுல ஒன்னு.

      Delete
    3. ஆ இது போங்கு ஆட்டம். ஏதேனும் ஒண்ணுக்கு. கையை தூக்கணும்.

      Delete
  72. //கோட்டையை ஈரோட்டிலும், படலத்தை சென்னையிலும் வைத்துக் கொள்வோமா ? //
    இதனைப் படிக்கும் போது மனம் குதூகலித்து முகத்தில் புன்னகையை உருவாக்கியது.
    I'm expecting...

    ReplyDelete
  73. எனது பெயரினிடத்தில் unknown என வருகிறது. அதனை எவ்வாறு மாற்றுவது?

    ReplyDelete
    Replies
    1. Please watch this video:
      https://www.youtube.com/watch?v=8LYIunVYLlIhttps://www.youtube.com/watch?v=8LYIunVYLlI

      Delete
  74. We want Durango Complete collection...

    ReplyDelete
  75. We want Durango Complete collection...

    ReplyDelete
  76. We want Durango Complete collection...

    ReplyDelete
  77. We want Durango Complete collection...

    ReplyDelete
  78. We want Durango Complete collection...

    ReplyDelete
  79. We want Durango Complete collection...

    ReplyDelete
  80. We want Durango Complete collection...

    ReplyDelete
  81. We want Durango Complete collection...

    ReplyDelete
  82. We want Durango Complete collection...

    ReplyDelete
  83. சென்னை புத்தக விழாவெனும் வேடந்தாங்கலுக்கு பயணித்த பாசப் பறவைகளான எடிட்டர், ஜூனியர் எடிட்டர் மற்றும் தோழர்கள் அனைவரும் கொண்டாட்ட தருணங்களை சில மணி நேரங்கள் மறந்து பத்திரமாய் ஊர் திரும்ப வேண்டுகிறேன்.
    அவரவர் வீடு திரும்பிய பின் கொண்டாட்ட தருணங்களின் இனிய நினைவுகளை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  84. ஆசிரியரின் இந்தப் பதிவை படிக்கும்போது மகிழ்ச்சி தானாய் தாண்டவமாடுகிறது. விழா இனிதே நடந்து முடிய என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    எப்போதும் இரண்டாண்டு ஒரு முறைதான் இந்தியா வருவது வழக்கம். சென்ற முறை நமது ஈரோடு விழாவில் கிடைத்த மகிழ்ச்சி/ இன்பம் இம்முறையும் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா வர தூண்டுகிறது. பார்ப்போம் ;-)

    ReplyDelete
    Replies
    1. காத்திருப்போம் சார்.

      Delete
    2. திரு.ரட்ஜா சார்
      வாருங்கள் சார். வந்து ஒரு ஆண்டிற்கான புத்துணர்ச்சியினை பெற்று திரும்புங்கள்.உங்களைப் போன்றோர்களால்தான் கடல் கடந்தும் நம் காமிக்ஸ் வாழ்கிறது.

      Delete
    3. @ராஜா. அதே உணர்வுகள் அங்கேயும். ஆனால் வேலை மற்றும் இட மாற்றத்தால் 2017ல் என்னால் வர முடியாது. ஆனால் கண்டிப்பாக 2018ல வந்து விடுவேன்.

      Delete
  85. டுயுராங்கோ படிச்சு முடிச்ச உடன் தோன்றிய மொத கேள்வி..















    அடுத்த பாகம் எப்படி வரும்????????????????????????????????????????????????????????????????????????

    ReplyDelete
  86. எப்படி இல்ல எப்போ...

    ReplyDelete
  87. இன்றைய விழா பற்றி தகவல்கள் ஏதும் ????

    ReplyDelete
  88. எடி சார், உங்களை புத்தக விழாவில் சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சி. டியராங்கோ முதல் இரண்டு பாகங்கள் ஒரே மூச்சில் முடித்து விட்டேன் சார். அற்புதமான சித்திரங்கள் வன்மேற்கை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. யதார்த்தமான அதே சமயம் விறுவிறுப்பான கதைக்களம். டியுராங்கோ நிச்சய வெற்றி சார். கமான்சே கதைகளில் குறைவது இந்த அதிரடி தானோ என்று தோன்றுகிறது. இவரை அடிக்கடி கண்ணில் காட்டுங்கள் சார். இந்த ஆண்டு இதே போல் தொடரட்டும்!

    ReplyDelete
  89. இத இதைத்தானே இப்போது வரும் என்று எதிர் பார்த்து காத்து இருந்தோம் . எனக்கு டபுள் ஓகே சார். ரத்த கோட்டை, ரத்த படலம் இரண்டு இதழ்களின் அதிகார பூர்வ அறிவிப்பு என்னை ஆனந்த கூத்தாட வைத்து விட்டது சார் . எவ்வளவு என்று அறிவித்தீர்கள் என்றால் உடனே அனுப்பி விடுவேன் . அப்படியே சட்டி தலையன் ஆர்ச்சி யினையும் கண்ணில் காட்டி விட்டீர்கள்என்றால் ஜென்ம பயன் அடைந் தவனாவேன். CBF இல் கலந்து கொண்ட திருப்தியை , ஆசிரியரின் போட்டோக்களும், பதிவுகளும் நண்பர்களின்பதிவுகளும் தந்தன . நன்றிகள் .

    ReplyDelete
  90. Netrum endrum srirangaam perumal darsan.Thangal pani sirakka valthukal.

    ReplyDelete
  91. My hands heavy claps to you dear editor sir,
    Really i like this your writing. Congradulation..... Continue..

    ReplyDelete
  92. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்..!

    நம் காமிக்ஸ் அரங்குள்ள புத்தககண்காட்சி அனுபவம் வழக்கமாக எப்படிஇருக்கும்..?

    எடிட்டரின் வருகை...
    காமிக்ஸ் வாசகர்கள் தொடர் வருகை...
    உற்சாக கூக் குரல்கள்...
    கட்டித்தழுவும் காமிக்ஸ் நண்பர்கள்...
    இடைவிடாமல் எடிட்டரிடம் புதிதும் பழதும் திரும்ப திரும்ப கேள்விகள்...
    எடிட்டரின் எதிர்கால அறிவிப்புகள்...
    குபீர் சிரிப்புகள்...
    கைதட்டல்கள்...

    இது வழக்கமான நிகழ்வுகள்..! வழக்கமான அனுபவங்கள்..!

    ஆனால் எனக்கான அனுபவம் இம்முறை முற்றிலும் வேறுஒருபக்கம் நோக்கிதிருப்பபட்டது.நான் விரும்பிய அந்த அனுபவம் பற்றிய பகிர்வு இந்த பதிவு.!

    ஒன்று இரண்டு சோடை போன புத்தகங்கள் தவிர மற்றவைகள் எல்லோராலும் விரும்பப்பட்ட கலவைகளுடன் 2015 பட்டியல்.அந்த சோடைபோன புத்தகங்கள் கொடுத்ததற்கும், இனம்பிரித்து பார்க்க முடியாத தன் தேர்வுக்கு மன்னிக்கவேண்டி, அதற்கு ஈடாக விலையில்லாமல் ஒரு புத்தகம் அன்பளிப்பு என 2016 சந்தாவில் அறிவிப்பு. 2016 ல் ஒரு புத்தகம் கூட சோடைபோக கூடாது என கவனமாக தேர்ந்தெடுத்து அதகளமாக அணிவகுத்து அட்டகாசபடுத்திய 2016 பட்டியல். இப்படி கதை தேர்வும்,பட்டியலும் மளமளவென்று வளர்ச்சிகான...

    ஒருபக்கம் தரமான பைண்டிங்கில்,காகிதத்தில்,அச்சில்,அழகில்,தலைப்புகளில் காமிக்ஸ்கள் கையிருப்பு சந்தோசமாக சேர்ந்துகொண்டே போனாலும்கூட..மறுபக்கம் தொடரும் சம்மட்டியடி இயற்கை பேரிடர்கள், அரசியல் கொள்ளைகள் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் வாசகர்களின் மனதில் தப்பிபிழைத்திருக்கும் காதலை நசுக்க துவங்கிவிட்டதோ என ஒரு பதைப்பு உள்ளுக்குள் ஓடத்தான் செய்தது.!

    என[நம]க்கே இப்படிஎன்றால் திரு விஜயன் அவர்களுக்கும் அவரின் குட்டி குழுவிற்கும் எப்படியிருக்கும் என நினைக்கையில் அதை சொல்லத்தான் வேண்டுமா..!!! கற்பனையில் அதை நினைத்து பார்த்து 'கடவுளே இது என்ன சோதனை..?' என சின்ன வேதனையை வெளிப்படுத்திவிட்டு அடுத்த வேலைக்கு நகர்வதை விட களமிறங்கி ஏதும் ஒரு சின்ன முயற்சி,பங்களிப்பு செய்வோமே என யோசித்தபோது...

    இத்தாலி விஜய் "மாயாவி அவர்களே...இந்தமுறை சென்னைபயணம் நமக்கான ஜாலிக்காண்டி போகாம...எடிட்டரை சந்திப்பை ஒரு குட்டி ஹாயோடு முடிச்சிட்டு, மக்கள்கிட்ட பேசி காமிக்ஸ் அறிமுகத்துக்காண்டி போவோமா..? மா...இல்ல..போறோம்.." ன்னு சொன்னதும்...

    ஒரே வார்த்தை 'டன்'.! நமக்கு இந்தவருஷம் வைகுண்ட ஏகாதேசி முத்துகாமிக்ஸ் ஸ்டால்லதான்..!

    இந்தமுறை வந்த நண்பர்கள் யார் யார்..? என பட்டியல் போட்டு சந்தோசபடுத்தும் செக்ஷனை இத்தாலிகாரு கிட்ட ஒப்படைச்சிட்டு நான் ரெண்டுவித்தியாசமான நெகிழ்வை ஏற்படுத்திய நண்பர்களை மட்டும் ஹைலைட் பண்ண விரும்புறேன்.

    1. ஸ்டாலுக்கு வந்த மக்களை கவனிச்ச... வெள்ளந்தியான தலிவரையே தூக்கி சாப்பிடும் அருமையான நண்பர்.

    2. ஸ்டாலுக்கு வந்த சேந்தம்பட்டி காமிக்ஸ் நண்பர்களை கவனிச்சி சாப்பிடவெச்சி இரவுவரையில் கூட இருந்தது சந்தோசப்படுத்திய மற்றொரு அருமையான நண்பர்.

    தொடரும்...


    ReplyDelete
    Replies
    1. செம பதிவு
      தொடருங்கள் மாயாவி.

      Delete
    2. தொடருங்கள் மாயாவி.

      Delete
    3. மாயாஜீ செம செம ..

      சீக்கிரமா தொடர் போடாமல் தொடருங்கள் ..

      ஆவல் தாங்க முடியவில்லை..

      Delete
    4. அடிச்சு தூள் பண்ணுங்க மாயாவி அவர்களே!

      Delete
    5. அட வரவேற்ப்பு பரவாயில்லையே..இங்க முழுநாள் பவர்கட்,போனில் நான் டைப்செய்தில்லை. லேட்டானாலும் கொஞ்சமேனும் பிழையில்லாம சிஸ்டத்துலயே செஞ்சிடறேன்..[ஹீ...ஹீ..ஹீ ஒன்னு ரெண்டு பிழையோட தப்பிச்சிடலாம்]

      பதிவு - 2

      அரைவயிற்று கஞ்சிக்கே வழியில்லாமல் தடுமாறி...உச்சிவெயிலில்... இருக்கும் கொஞ்சம் சத்தைவைத்து உழைக்க வேண்டி...ரூட்பஸ்ஸுக்காக அனல்தகிக்கும் தார்சாலையில் மேல் விழிவைத்து காத்திருக்கும் ஏழை உழைப்பாளி தாகத்தில்சுருண்டு விழும்முன் பஸ் ஏறினானா..? இல்லை பணமதிப்பு விவகாரத்தில் மொத்தநாடும் மூச்சு விடமுடியாமல் திணறிக்கொண்டு இருக்க... <உனக்கா..? உயிர் பிழைக்க வேலையா..? ஹாஹாஹா..என சிரித்தபடி டீமானிடேசன் அவனை விழுங்கியதா என்ற திகில் கேள்விக்கு இணையாகத்தான் இந்த வருட புத்தகத்திருவிழா துவக்கத்தில் பதிப்பாசிரியர்கள் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

      அதுவும், 699 பதிப்பகர்கள் பட்டியலில் கடைசி ஆளாய், ஒற்றை ஆளாய் காலில் செருப்பு கூட இல்லாமல் நிற்கும் உழைப்பாளி பயணம் பஸ்ஸிலா..? நடராஜா சர்விஸா..? என்ற மனநிலையில் [இரட்டை ஸ்டால் வேறு எடுத்து] நம்ம எடிட்டர் துவக்கத்தில் இருந்திருக்கலாம் எனவும் தோன்றியது.

      களத்தில் இறங்கி சேவை என்பதால்...
      அதுவும் களப்பணி அனுபவமே இல்லாத கற்றுக்குட்டி நான் என்பதால்...
      ஒரு வார்த்தை கூட யாரிடமும் சென்னை சேவைக்கு வருகிறிர்களா என அழைக்க மனசேயில்லை. "சின்னதாக அவுட்டிங் உண்டா மாயாவி..? ஒரு கெடா விருந்தாவது வெளியில் உண்டா..?" என வாண்டடாக கேட்டவர்களிடம் கூட "ஸாரி பாஸ்...அந்த காம்பௌண்டை விட்டு ரெண்டுநாள் வெளிய வர்ற ஐடியாவே இல்லை.." என மறுக்கவேண்டியதாகி விட்டது.

      அப்படியிருந்தும் நான் வந்தே தீருவேன் என முன்வந்த.. முகம் தெரியாத நண்பரும்,அவர் பின்னணியும் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள். அதன் மறுபக்கமாக அவரின் காமிக்ஸ் ஆர்வம் + அறிவு தெரிந்தால் வியந்தும் போவீர்கள்.!

      தொடரும்...

      Delete
    6. சை! எனக்கு 'தொடரும்'ன்ற வார்த்தையே புடிக்காது!

      Delete
    7. சை! எனக்கு தொடர்ந்து டைப்பவே வாரமாட்டேங்குதே!

      Delete
    8. எனக்கு கடுப்பாகீது.

      Delete
    9. பகுதி - 3

      நான் பார்த்த காமிக்ஸ் நண்பர்களில் ரொம்பவே மெலிந்த தேகம் கொண்டவர் இவராகத்தான் இருப்பார், எட்டாம் வகுப்புடன் முடித்து 14 வயதில் அரிசிமில்லில் வேலைக்கு சேர்ந்து 32 வருடங்கள் இடம் மாறாமல் உழைக்கும் வர்க்கம். தினசரி சுமார் 50 கிலோமீட்டர்கள் பயணம். அந்த பயணம் கூட fc பண்ணமுடியாதா பழமையிலும் பழைமையான டிவிஎஸ் வண்டியில். இயந்திரத்துடன் ஒரு அங்கமாகவே மாறிய சற்றே வளைந்தே போன கைகள்
      வேறு, முதுகுதண்டையும் வளைக்காமல் விடவில்லை.

      செய்யும் வேலைக்கு பெயர் சூப்பர்வைசர் என்றாலும்கூட அவருக்கு கிழ் வேலைபார்ப்பவர்களை விட குறைவான ஊதியம்.வடநாட்டுவர்களுடன் நடுஜாமம் வரை போராடிவிட்டு விடிந்ததும் மில்லிக்கு ஓடும் வாழ்க்கை. வெளியுலகம் என்றால் என்னவென்றே தெரியாத சங்கிலியால் பிணைந்த சின்னவட்டம்.ஞாயிறு மட்டுமே மாலைபொழுதை பார்க்கும் வாய்ப்பு.

      "இராத்திரி ஒரு எட்டுமணிக்கு வந்ததா கூட ஒரு ரெண்டுமணி நேரம் காமிக்ஸ்படிக்கலாம்...எப்படியும் பதினொருமணி ஆயிடுது...அதுக்கப்புறம் எப்படி படிக்க? விடிஞ்சதும்தான் படிகிறாப்பல முடியுது.இது கூட நல்லதுதான்...படிச்சதை நினைச்சிட்டே நாள்பூரா வேலைபாக்கலாம்" என கிடைத்ததை வைத்து சந்தோஷப்படும் நிறைஞ்சமனம்.

      ஒன்றரை வருடசந்தா அளவே ஒரு மாதவருமானத்தில் எப்படிங்க சமாளிக்கிறிங்க..? என கேட்டால் "நீங்க வேற நம்ம தேவைக்கு ஒரு சந்தாஅளவு பணம்தான் செலவே ஆகுது...உபரியா ரெண்டாயிரம் மிச்சம்.." என டீ,காபி,அசைவம் தொடாமல் கணிசமாக செலவுவைக்கும்சத்துணவுவிஷயங்களை தவிர்த்து காலரை தூக்கிவிட்டு வாழ்வின் ரகசியத்தை சொல்லும் அவரை பார்த்தால்...என்னவொரு போதும் என்ற பொன்செய்யும் மருந்தை வைத்திருக்கும் மனம். இவரல்லவா தன்னிறைவு மனிதர்.!

      இவரின் சூழல்... இவரை இந்த சமுதாயம் சுரண்டிபிழைப்பதாக அப்பட்டமாக தெரிந்தாலும், நமக்கு வலித்தாலும்... அவரிடம் அப்படிஒரு வலி உள்ள சுவடேஇல்லை. அவரை எதுதான் மனதை ரிலாக்ஸ் செய்கிறது? என்னதான் பொழுதுபோக்கு? என கேட்டால்...

      "என்னசார் இப்படி கேக்குறிங்க..? நீங்க காமிக்ஸ் படிக்கிறிங்களா இல்லையா.? அதுல கிடைக்கிற சந்தோசத்தைவிட,படிக்கிறப்போ உண்டாகிற ரிலாக்ஸ் வேற எதுலயும் கிடைக்குமா என்ன..!" என திருப்பி அடித்தார் பாருங்கள் செம.

      காலை ஐந்துமணிக்கே எழுந்து...அப்போதுதான் தூக்கம் பிடிக்கும் நம்மை தட்டி எழுப்பி"ஸார் எழுந்திருங்க...விடிஞ்சிபோச்சி...அம்மா சமாதியை பார்த்துட்டு மணி பத்துக்கெல்லாம் ஸ்டால் போய்டலாம்...இன்னிக்கு ஞாயிறுஇல்லையா...நிறையவே கூட்டம் வரும்ன்னு சொன்னிங்களே..." என நடுஇரவில்(?) மொத்த லைட்டையும் போட்டு பதைபதைத்த அந்த வெள்ளைமனசுக்காரரை கைபிடித்து முத்துகாமிக்ஸ் ஸ்டாலில் விட்டதும் அவர் என்ன செய்தார் தெரியுமா..?

      தொடரும்...(எதோ தவறு..விடுபட்ட வரிகளுக்கு திரும்ப போடவேண்டியதாச்சி.. :)

      பாஷா பாய் ... :)))

      Delete
  93. தொடரும் என போட்டு விட்டு தொடர வில்லையே...! தொடரஙல் m a y a v i.

    ReplyDelete
  94. ஆசிரியர் ரொம்ப பிஸியோ...?

    லைட்டா எட்டி பாக்குறது....!!!

    ReplyDelete
  95. சார் ஆவியின் ஆடுகளம் முடித்தேன்....சான்சே இல்ல..நமக்கேத்த ஆடுகளம் ....கதை சும்மா ஜிவ்வென ஆரம்பம் முதல் தடதடக்கிறது...ஓரே ஒரு துப்பாக்கி சண்டை என்றாலும் யுக்திகள் ...கார்சன் கிண்டல்கள் என கண் முன் நிற்கிது....வரிகளும் அம்சமாய் அமைந்து டெக்ஸ் கதைகளில் இது ஒரு மகுடம் என்றே சொல்லலாம். சரளமாக நகரும் கட்டங்களும் ...டெக்ஸ் கார்சனுக்கேற்ற இயல்பான உரையாடல்களும் கதையை ஜெட் வேகத்தில் நகர்த்த.......முடிவு ...கடசியில் கூட எதிர் பாராமல் முடிய.... ஏற்கனவே பெற்ற தண்டனை போதும் என நிறைவாய் டெக்ஸ் சொல்ல நானும் நிறைவாய் முடித்தேன்...டெக்ஸ் சுழன்று உதைத்த கணத்தில் ப்ளாக்டனின் கையிலிருந்த கத்திக்கு இறக்கை முளைத்தது வரிகளும்...மேளம் இல்லாமலே நம்மாள் சாமியாடுவான் ..இந்தபயலோ பக்காவாய் வாத்தியங்களை இசைத்து மேடையும் போட்டுத் தருகிறான் ..இன்றைக்கு கூத்துக்கா பஞ்சமிருக்க போகிறது வரிகள் உற்சாகத்தையும் புன்முறுவலையும் தரத்தவறவில்லை....பின் பக்கங்கள் முழுவதும் டெக்ஸ் தாண்டவமில்லை எனினும் உங்கள் எழுத்தின் தாண்டவம் பக்காவான நகர்த்தலை தொடருது. இக்கதை உங்கள் கரங்களில் சிக்கியது நாங்கள் வாங்கி வந்த வரம் ஆசிரியரே...அருமை

    ReplyDelete
    Replies
    1. ////பின் பக்கங்கள் முழுவதும் டெக்ஸ் தாண்டவமில்லை எனினும் உங்கள் எழுத்தின் தாண்டவம் பக்காவான நகர்த்தலை தொடருது. இக்கதை உங்கள் கரங்களில் சிக்கியது நாங்கள் வாங்கி வந்த வரம் ஆசிரியரே...அருமை///

      +1

      Delete
  96. மாயாவி சார்., ரொம்ப நல்லாயிருக்கு.,தொடரை சஸ்பென்ஸிலியே முடிக்கிரீங்க.,ஆவலை அதிகமா தூண்டுறீங்க.,சூப்பரப்பு

    ReplyDelete
  97. புத்தக விழாவில் நம் ஆசிரியர் மற்றும்
    நண்பர்கள் ஈரோடு விஜய் மாத்தியோசி
    மாயாவி கரூர்சரவணன் மேலும் பல
    நண்பர்களை ஞாயிறு சந்தித்தது மிக்க
    மகிழ்ச்சி. விழாவில் பல வாசகர்கள் புத்தகங்கள் சென்னையில் வேறு எங்கே
    கிடைக்கும் என்று கேட்டனர்??? நமது
    புத்தகங்களின் 2 -3 வது உள்அட்டைகளில் தமிழக முகவர்களின்
    பெயர் விலாசம் Phone நம்பர்களை
    தொடர்ந்துஅனைத்து இதழ்களிலும்
    வெளியிட்டால்விற்பனை உயர்வது
    மட்டுமல்லாமல் சந்தாவும் உயரும்.
    எபெடை Col&bwஇரண்டு அவதாரம்
    எடுத்தது போல் இரத்தபடலம்Colspl
    ஒரே புத்தகமாகவும்With hardbound
    மற்றும் மூன்று தனி புத்தககள்With
    Hardbound ஏன் முயற்சி செய்யக்கூடாது
    நம்பிக்கையோடு வேண்டுகிறேன்
    இனியநண்பர்EV உங்களுடைய ஊக்கமளிக்கும் பேச்சும் இதமான
    அன்பும் மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. திரு. ganesh kv

      ஸ்டாலில் பம்பரமாய் சுழன்று காமிக்ஸ் பணியாற்றியவரும், உற்சாகம் ததும்பும் பேச்சுக்குச் சொந்தக்காரருமாகிய உங்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சியடைபவன் நானே! இந்த CBF எனக்கு மேலும் சில நேசமுள்ள காமிக்ஸ் நண்பர்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் நீங்களும் ஒருவர்!

      கொஞ்சம் கொஞ்சமாக நம் காமிக்ஸ் வட்டம் பெருகிக்கொண்டே வருவதும், ஈரோட்டுத் திருவிழாவின் உற்சாகங்கள் சென்னையிலும் உணரப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதும் உங்களைப் போன்ற நண்பர்களின் அறிமுகம் உறுதி செய்கிறது!

      கடமைகள் அழைத்தபோதும் பிரிந்து செல்ல மனமின்றி கடைசிவரை ஸ்டாலில் எங்களுடன் நின்றிருந்த உங்களுடைய நேசத்தை என்னவென்பது?!!

      இந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க! _/\_

      Delete
  98. நண்பர்கள் அனைவருக்கும் இனிய தை பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
    advance wishes to all.

    ReplyDelete
  99. பிரசன்னா சார்...!!

    இரண்டொரு வார்த்தைகள் எழுதலாமே.....!!!

    ReplyDelete
  100. ***** நன்றி நவிழும் நேரமிது! ******

    ப்ளூபெர்ரி aka நாகராஜன் சாந்தன் : புத்தகத் திருவிழா நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே விசாலமான அறையை உடனடியாக ஏற்பாடு செய்து கொடுத்தது - கிடைக்கும் சின்ன சின்ன கேப்களில் கூட அலுவலகத்திலிருந்து ஓடி வந்து நண்பர்களின் தேவைகளையும் ஸ்டால் பணிகளையும் கவனித்துக் கொண்டது - விற்பனையில்; குறிப்பாகப் பில்லிங்கில் பேருதவி செய்தது, இன்னும் பல - என இவரது பணி மகத்தானது!

    நன்றி ப்ளூ! அலுவலகம், குடும்பம், நண்பர்கள், காமிக்ஸ் களப்பணி ஆகியவற்றை திறம்பட நிர்வகிப்பது எப்படி என்று உங்களிடம் ட்யூசன் கற்றுக்கொள்ளலாம்! _/\_

    மாயாவி சிவா aka மாயாவிகாரு : பயண ஏற்பாடுகள், செலவுக் கணக்குகள், யாரிடமும் துளியும் தயங்காது பேசி வேண்டிய விபரங்களைக் கேட்டுப் பெறல், ஸ்டாலில் தனது உற்சாகம் தெறிக்கும் பேச்சினால் பார்வையாளர்களைக் கவர்ந்து புத்தகங்களை அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்ய உதவி, புதிய நண்பர்களை வரவேற்று உபசரித்து அனைவரிடமும் அறிமுகப்படுத்திய பாங்கு - என 'சர்வமும் நானே' என்ற டைட்டிலுக்குச் சொந்தக்காரராக இவரைச் சொல்லலாம்! 'நாள் முழுக்கப் பம்பரமாய் சுழன்று பணியாற்றினாலும்,இவரது உடலும் மனதும் களைப்பென்றால் என்னவென்றே அறியாததோ!' என நம்மை ஆச்சர்யப்பட வைப்பவர்!
    நன்றி மாயாவி அவர்களே! நீங்களின்றி ஒரு பயணம் இனிதாய் அமைவது அரிது! _/\_

    நேரம் கிடைக்கும்போது நன்றி நவிழல் தொடரும்...

    ReplyDelete