Powered By Blogger

Wednesday, April 30, 2014

வெப்ப நாட்களும்....நிதான சிந்தனைகளும் !


நண்பர்களே,

வணக்கம். அக்னி நட்சத்திரம் துவங்க இன்னும் நாட்கள் சில பாக்கியுள்ள போதிலும், கடந்த சில தினங்களாய் இங்கே நமது வலைப்பதிவில் வெப்பத்தின் அளவுகள் கூடி வருவதை நாம் அறிவோம் ! அதைப் பற்றிய ஆராய்ச்சிக்குள் தலையை நுழைப்பதற்கு முன்பாக நமது மாமூலான வேலைகளோடு பிள்ளையார் சுழியைப் போடுவோமா ?

மே துவங்கவிருப்பது நாளைய தினமே எனினும் நமக்கோ 'காமிக்ஸ் மே' ஒரு வாரத்திற்கு முன்பாகவே புலர்ந்து விட்டது! 3 கதைகளையும் படித்து, விமர்சித்து முடித்த கையோடு - what next ? என்ற கொட்டாவியோடு அமர்ந்திருக்கிறோம். LMS ன் பணிகள் ஒரு பக்கம் ஓசையின்றி நடந்து வரும் போதிலும் - இடைப்பட்ட ஜூன் & ஜூலை மாதங்களுக்கான ரெகுலர் இதழ்களை 'சட சட' வென்று பூர்த்தி செய்து விட்டால் கொஞ்சம் நிம்மதியாக இருக்குமென்ற எண்ணம் எனக்குள் குடி கொண்டு விட்டதால் ஜூன் & ஜூலை issues ஜரூராய்த் தயாராகி வருகின்றன ! 2014-ல் முதல் தடவையாக வுட்சிடியின் கோமாளிகளும், கோடீஸ்வரக் கோமானும் தலை காட்டப் போவது ஜூன் மாதத்தில் ! இதோ சிக் பில் & கோவின் முழுநீளக் காமெடி கலாட்டாவின் அட்டைப்படம் + உட்பக்க teaser !  

ஒரிஜினல் அட்டைப்படமே அழகாய் அமைந்திருந்தபடியால் அதனை நோண்டும் அவசியம் ஏதும் நேரவில்லை ; கதையின் பெயர், இத்யாதிகளை மாத்திரம் இங்கும் அங்குமாய் பொருத்தி விட்டு மேகி நூடுல்ஸ் பாணியில் விரைவாகத் தயார் செய்து விட முடிந்தது. பின்னட்டையில் கதைச்சுருக்கம் மட்டுமே சேர்ந்திடும் அச்சாகும் முன்பாக ! வழக்கம் போல ஷெரிப் & ஆர்ட்டின் அடிக்கும் கூத்துக்களே கதையின் highlight என்ற போதிலும், பின்பாதியில் சிக் பில் & குள்ளன் பொறுப்பாய்  இணைந்து கொள்கிறார்கள் ! 1953 முதலாய் சிக் பில் கதைகள் பிரெஞ்சில் வெளியாகி வரும் போதிலும், இதர மொழிகளில் அத்தனை பெரிதாய் சோபிக்கவில்லை என்பது தான் புதிரான விஷயம் ! வேற்று மொழிகளில் வெளியிட டிமாண்ட் அதிகம் இல்லாது போனதால் இத்தொடரின் அனைத்துக் கதைகளையும் டிஜிட்டல் கோப்புகளாக்கும் முயற்சியில் படைப்பாளிகள் வேகம் காட்டவில்லை ! தொடரின் புதுக் கதைகள் நீங்கலாக வண்ணத்தில் எஞ்சி இருப்பது 1960-களில் வெளியான இத்தொடரின் ஆரம்பத்து ஆல்பம்கள் மாத்திரமே ! அத்தனை பழைய கதைகளில் கையாளப்பட்டிருக்கும் சித்திர பாணியில் ; கதாப்பாத்திரங்களின் தன்மைகளில் நிறையவே வேறுபாடுகள் இருக்குமென்பதால் அவற்றால் நமக்குப் பெரியதொரு புண்ணியம் கிடையாது ! Cinebook போன்ற சாவதேச ஜாம்பவான்கள் யாரேனும் சிக் பில்லை வெளியிட முன்வந்தால் அவர்களின் பொருட்டாவது தயாராகக் கூடிய டிஜிட்டல் பைல்கள் நமக்கும் பயன்படும் ! நம்புவோம் - அப்படியொரு நாள் புலருமென்று !


"சென்னைப் புத்தக சங்கமம்" மிதமான விற்பனையைத் தந்த வகையில் பெரியதொரு ஏமாற்றம் ஏதுமில்லாது தலை தப்பிக்க உதவியது ! ஜூலை மாதம் நெய்வேலியில் நடக்கவிருக்கும் புத்தக விழா நமது அடுத்த இலக்கு ! அந்தப் பகுதிகள் நமக்கு முற்றிலுமாய் புதுசு என்பதால் அங்கு ஸ்டால் கிடைக்கும் பட்சத்தில் நமது இதழ்களை அங்குள்ள வாசகர்களுக்கு அறிமுகம் செய்திட ஒரு வாசல் திறக்கும் ! விண்ணப்பித்துள்ளோம் - நம்பிக்கையோடு ! ஸ்டால் கிட்டும் பட்சத்தில் 'சூப்பர் 6'-ன் முதலாவது BOOK FAIR SPECIAL அங்கே அரங்கேறிடும் ! "மேஜிக் விண்ட்" முதல் வண்ண இதழும், டெக்சின் "காவல் கழுகு" 114 பக்க B &W  சாகசமும் நெய்வேலிக்கென target செய்துள்ளோம் ! குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஸ்டால்கள் மாத்திரமே நெய்வேலியில் அனுமதிக்கப்படும் என்பதால் புதியவர்களுக்கு entry கிடைப்பது சுலபமல்ல என்றும் சக புத்தக வெளியீட்டாளர்கள் மூலமாய் அறிந்து கொள்ள முடிந்தது ! ஆனால் அதன் அமைப்பாளர்கள் நம் மீது பரிவு காட்டுவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்துள்ளோம் ! மேஜிக் விண்ட் கதைகளின் வண்ண டிஜிட்டல் பைல்கள் ஓரிரண்டு நாட்களுக்கு முன்பாக நம்மை வந்து சேர்ந்தன ! ரொம்பவே வித்தியாசமான கதைக்கு, ரொம்பவே மாறுபட்ட வர்ணக் கலவை தரப்பட்டுள்ளது ! டெக்ஸ் ; டயபாலிக் சைஸ்களில் ஆர்ட் பேப்பரில் முழுவண்ணத்தில் வரக் காத்திருக்கும் இந்தத் தொடர் மட்டுமல்லாது, இந்த format -ம் கூட நம்மை ரசிக்கச் செய்யுமென்று நினைக்கிறேன் ! Fingers crossed !

அப்புறம் கடந்த பதிவின் பின்னூட்டக் கோர்வைகளில் கலந்துள்ள தேவையற்ற உஷ்ணத்தைப் பற்றி ! இந்த வலைப்பூ தனது இரண்டரை ஆண்டுகாலப் பயணத்தில் பார்த்திடும் முதல் சலனமோ, இறுதிச் சலனமோ இதுவல்ல எனும் போது இதற்கெனப் பெரிதாய் தூக்கத்தைத் தொலைக்காது நம் பாதையில் எப்போதும் போலத் தொடர்வது தானே லாஜிக் ? அபிப்ராயங்களில் ; அவற்றை வெளிப்படுத்தும் தொனிகளில் வேறுபாடு இருப்பினும், நிஜமான அடையாளங்களை வெளிக்காட்டிக் கொள்ளும் பிரியமின்றி, புனைப்பெயர்களோடு திடுமென இங்கு உலவுவோரும் கூட நம்மோடு வேறு பல சந்தர்ப்பங்களில் நேசத்தைப் பரிமாறிய நண்பர்களே என்பதையும் நினைவில் கொள்வோமே ?  ஏளனத்துக்கு ஏளனம் ; வெப்பத்துக்கு வெப்பம் என்றுமே பதிலாகாது என்பதை  அறியாதவர்களா நாம் ? So அந்த கணத்தின் தூண்டுதலில் காரமாய் பதில் சொல்லி தேவையற்ற சர்ச்சைகளை வளர்க்க வேண்டாமே ? சங்கடத்தை உருவாக்கும் விதமாய் பின்னூட்டங்கள் இனி இங்கு இடப்படும் பட்சத்தில் தேர்தலில் தற்போது தரப்பட்டுள்ள "வாக்களிக்கப் பிரியமில்லை"  என்ற ரீதியிலான உபாயத்தை நாமும் கையாள்வோம் ! "இந்தக் கருத்தோடு நான் உடன்படவில்லை!" என்று நாசூக்காய் பதிவு  செய்து விட்டு நகன்று செல்வோமே ? "பணிந்தவன்   பயந்தவனில்லை" என்பது ஆட்டோ பின்பக்கத்து வாசகமாய் மட்டுமே இருத்தல் அவசியமாகாது அல்லவா ? அதே போல யாரையேனும் நேரடியாகவோ, ஜாடையாகவோ காயப்படுத்தும் விதமாய் பதிவு ஏதேனும் இருப்பின், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் அதை நான் களைந்து விடுவேன் ! 'இங்கு ஜால்ரா அடிக்கும் விதமான சிந்தனைகளுக்கு மாத்திரமே இடமுண்டு !" என்ற ரீதியிலான விமர்சனத்தை அது கொண்டுவரினும் பரவாயில்லை ! ஏனெனில் அதனைப் பதிவு செய்வோர்க்கே தெரியும், அத்தகையக் குற்றச்சாட்டில் காலணாவிற்கு சரக்குக் கிடையாதென்று ! 

இது காமிக்ஸ் எனும் சுவையை நட்போடு பகிர்ந்து கொள்ளும் பொதுத் தளம் ! இங்கு எவ்விதமான கமெண்ட்கள் இருந்திட வேண்டும் ; எத்தனை கமெண்ட்கள் இருந்திட வேண்டும் ; என்ன ரீதியிலான கோரிக்கைகள் ; விவாதங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் நிர்ணயம் செய்யும் உரிமையோ, பிரதிநித்துவமோ நிச்சயமாய் எவருக்கும் கிடையாது ! இங்கு ஜாலியாய், சந்தோஷமாய் பதிவிடுவோரெல்லாம் ஆற்றலில், விவேகத்தில் குறைச்சலானவர்கள் என்ற அபத்த சிந்தனைகளுக்கோ ; பள்ளி வகுப்பறைரீதியிலான அமைதி காக்கப்பட வேண்டுமென்ற code of conduct எதுவுமோ நிச்சயம் அமலில் இல்லை ! எப்போதும் போலவே மனதில் தோன்றுவதை சந்தோஷமாய் பகிர்ந்திட இந்தத் தளம் தனது கதவுகளை 24/7 திறந்தே வைத்திருக்கும் ! 

அதே சமயம் நண்பர்களுக்கு சின்னதாய் சில வேண்டுகோள்களும் கூட :

  1. பதிவுகளை இங்கொன்றும், அங்கொன்றுமாய் சிதறல்களாய்   வெளியிட்டிடாமல் கோர்வையாக எழுதினால் படிக்கவோ / தாண்டிச் செல்லவோ ஏதுவாக  இருக்கும் - அவரவர் விருப்பத்தைப் பொருத்து ! 
  2. பல சந்தர்ப்பங்களில் நான் உங்களது பின்னூட்டங்களுக்குப் பதில் போட முனைவது நடுச்சாமத்திலோ, அதிகாலையிலோ தான் ! அயர்ச்சியின் காரணமாகவோ, திடீர் மின்வெட்டின் காரணமாகவோ ; தொங்கிக் கொண்டிருக்கும் கதைகளின் எழுத்துப் பணிகளின் பொருட்டோ- நண்பர்களின் எல்லா கேள்விகளுக்கும் பதில் தர முடியாது போகலாம் ! "அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் கிட்டுகிறது ; எனக்கில்லையா ?" என்ற ரீதியில் சில சமயங்களில் உளைச்சல்களை இது ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்பது எனக்குப் புரியாமல் இல்லை ! நிச்சயமாய் நண்பர்களுக்குள் பாகுபாடு பார்க்கும் அவசியம் எனக்குக் கிடையவே கிடையாது ! அதே போல உங்கள் கேள்விகள் / அபிப்ராயங்கள் பகிரப்படுவது ன் ஒருவனை நோக்கி மாத்திரமே என்பதால் அதனை நீங்கள் மறக்காதிருப்பது சுலபம் ! ஆனால் என் நிலையோ வேறு - பதிவின் பின்னூட்ட எண்ணிக்கை நூறைத் தாண்டிடும் நிலையிலேயே - யார் என்ன சொன்னார்கள் ? ; யாருக்கு நான் என்ன பதில் சொன்னேன் ?என்பது என் தலைக்குள் சாம்பாராகிப் போயிருக்கும் ! So அதன் பொருட்டு அவ்வப்போது நேரக்கூடிய சிற்சிறு மனவருத்தங்களுக்காக எனது apologies !
  3. "அவ்வப்போது தட்டி வைக்கப்படாவிடால் ஆசாமிக்கு மண்டைக்கனம் ஏறி விடும் ! " என்ற ரீதியிலான அபிப்ராயங்கள் நண்பர்களின் ஒரு சிறுபான்மைக்கு உள்ளதை அவ்வப்போது வரும் சில மின்னஞ்சல்களும், மாற்றுப் பெயரிலான பின்னூட்டங்களும் சொல்வதை நான் புரிந்து கொள்ளாமல் இல்லை ! இதன் பொருட்டே கூட விமர்சனங்களில் காரம் எனும் வத்தல் (தேவைக்கு அதிகமாகவே) தூக்கலாய் ஆங்காங்கே இருப்பதையும் உணரவும் செய்கிறேன் ! வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விஷயம் பிரதானமாகத் தெரிவது இயல்பே ! நான் தற்போது நிலைகொண்டுள்ள பருவத்தில் - எழுத்தும், அது கொண்டு வரும் திருப்தியுமே என்னை இயக்கும் பெட்ரோல் ! அவ்வப்போது நண்பர்களின் கனிவான வார்த்தைகளைப் படிக்கும் போது எழும் சின்னதொரு சந்தோஷத்தைத் தாண்டி இறுமாப்பிற்குப் படிக்கட்டுகளாய் அவை ஒரு நாளும் இருந்ததில்லை ; இருக்கவும் போவதில்லை! I know I am as good or as bad as my last hit or my last flop ! ஏப்ரலில் ஷெல்டனும், லக்கியும் கச்சிதமாய் அமையப் பெற்றதால் 'ஹிட்' அடிக்க முடிந்தது ! ஆனால் 25 நாட்களே கடந்த நிலையில் - கதைகளில் ; தர எதிர்பார்ப்புகளில் கொஞ்சமேனும் குறைகள் எட்டிப் பார்க்கும் போதே பிசிறடிக்கும் எண்ணச் சிதறல்கள் நிலவரத்தைப் பறை சாற்றுகின்றன ! So உயர மிதக்கிறேன் பேர்வழி என்று பறந்து விட்டு, மோடேர் என்று பூமியைப் பதம் பார்ப்பதை விட கால்கள் தரையில் திடமாய் ஊன்றி நிற்பது சாலச் சிறந்தது என்பது எனது வாழ்க்கைப் பாடம் ! 
  4. Last but not the least, ஒவ்வொரு முறையும் ஈகோ எனும் முகமில்லா மாயாவி நம்மிடையே உலவும் வேளை வரும் போது தான் முட்டல்களும்  , மோதல்களும் தலைதூக்குகின்றன ! ஏதேதோ சிற்சிறு மனத்தாங்கல்களால் மனதளவில் விலகி நிற்கும் நண்பர்கள் அனைவரும் நேசமெனும் கரத்தை முன்நீட்டினால் "இனி எல்லாம் சுபமே  !" என்று end card போட்டு விடலாம் அல்லவா ? நானும் இங்கே மாங்கு மாங்கென்று 'அட்வைஸ் அய்யாசாமியாய்' அவதாரம் எடுப்பதற்குப் பதிலாய் - அண்ணன் "மேஜிக் விண்ட்" அவர்களோடுடனான பணிகளைக் கவனிக்கச் செல்வேன் அல்லவா ? Take care folks ! See you around !
P.S: கடந்த பதிவில் ஆங்காங்கே காயம் செய்யும் விதமாய் பரிமாறப்பட்டுள்ள பின்னூட்டங்களை ஒட்டு மொத்தமாய் களைந்திட நினைத்தேன் ; ஆனால் முன்பு ஒருமுறை செய்த அந்த "மொத்த இருட்டடிப்பு" வேண்டாமே என்று தோன்றியது ! மன உளைச்சல்களுக்கு நானும் ஒரு விதத்தில் காரணம் ஆகி விட்டதற்கு மீண்டும்  apologies !!

289 comments:

  1. Replies
    1. நேரம் என்பது மகத்தான ஒரு விஷயம் சார்! அதில் மன மகிழ்ச்சிக்கு என்று கரை சேரும் இடமாக காமிக்ஸ் உலகம் அமைந்துள்ளது! என்னதான் மனக் கஷ்டங்கள் இருப்பினும் அவற்றை ஓரம் தள்ளி ஒரு காமிக்ஸ்க்கு இடம் ஒதுக்குகையில் கிடைக்கும் நிம்மதியே தனி! இதிலும் தங்களது கருத்து மழைகளை பொழிந்து துவம்சம் செய்வதில் அரிதான சிலருக்கு நிம்மதி கிடைக்கிறது போலும்! தாங்கள் சொன்னதுபோல ஒதுக்கி_ஒதுங்கி செல்வதில் நமக்கொன்றும் நட்டமில்லைதான்! வரவிருக்கும் திருச்சி திருவிழா களை கட்ட என் வாழ்த்துக்கள்!

      Delete
  2. ##'சூப்பர் 6'-ன் முதலாவது BOOK FAIR SPECIAL அங்கே அரங்கேறிடும் ! "மேஜிக் விண்ட்" முதல் வண்ண இதழும், டெக்சின் "காவல் கழுகு" 114 பக்க B &W சாகசமும் நெய்வேலிக்கென target செய்துள்ளோம் !##

    super அறிவிப்பு

    ReplyDelete
  3. அப்படியே திகில் நகரில் டெக்ஸ் புத்தகத்தையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  4. சார் போன பதிவில் நடந்த களேபரத்தில் எனது சிறு கேள்வியை காணாமல் விட்டுருக்கலாம், இருந்தும் அதற்கான விடை காணாமல் இருக்க முடியவில்லை. அதனால் ஓர் மீள் பதிவு.

    //சார் போன பதிவில் பேப்பர் பற்றி கூ றிய பொழுது ஆர்ட் பேப்பர் பார்ததால் ஏற்பட்டிருக்கும் என்று கூறியவர் இன்று அதர்கென பதிவில் விளக்கம் அளித்துள்ளீர்கள் நான் கூறியபொழுது ஏற்காததன் காரணம் என்ன
    நான் கூறினால் அதில் உண்மை இருக்காதா//

    எனது வருத்தம் எல்லாம் நான் கூறிய பொழுது அவ்வாறு கூறிய நீங்கள் மற்ற நண்பர்கள் கூறியதும் தாங்கள் கடந்த பதிவில் அதற்கென விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. Krishna VV : நண்பரே...உங்களின் பின்னூட்டத்தையும், பின்தொடர்ந்த இதரப் பின்னூட்டங்களையும், எனது பதில்களையும் சற்றே கூர்ந்து படியுங்களேன்..!

      ஒற்றை வரியில் டெக்சின் காகிதம் முந்தைய ரூ.10 விலை இதழ்களுக்கானது போல் உள்ளது என்று எழுதியுள்ளீர்கள் ! மற்றவர்களோ காகிதம் சற்றே பழுப்பாய் இருப்பதாய் சொல்லி இருந்தனர். ஏழு மாதங்களுக்கு முன்பாய் தீபாவளி மலருக்கு வாங்கிய காகிதத்தின் மீதம் இப்போது சற்றே பழுப்பேறி இருக்க வாய்ப்புண்டு ! ஆனால் நீங்கள் ஒப்பிடுவதோ நாம் முன்பு பயன்படுத்திய unbleached நியூஸ்பிரிண்ட் வகைக் காகிதத்தோடு ! அதற்கும், தற்போது பயன்படுத்தப்பட்டுள்ள maplitho காகிதத்துக்கும் விலை வித்தியாசம் கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு !இரண்டும் ஒன்றாய்த் தோன்றுவதாய் நீங்கள் சொல்லுவதில் நான் மாறுபடுவது தவறா ?

      Delete
  5. Need of the hour is PATIENCE. This is not the battle for your livelihood, but it is for the Editor... so give him some space. Even though Muthu Lion Comics has been there for most of our lifetime..this second coming is unbelievably punctual, adventurous and damn beautiful. I'm really proud to own such high quality Comics in India (Guys please don't compare the books with Dargaud, Cinebook etc). The quality and content of our comics will surely rise in the coming years. I want Vikram to retire as an acclaimed editor and not as an accomplished engineer. Thank God internet and such caustic comments were not in the early years of Muthu Lion Comics for it would have really turned our Editor to other fields, and it would've been a loss to all of us Comic Lovers. Every one who writes comments here is a comic lover, otherwise we won't be spending time in this blog. Vitriol alone doesn't improve the quality or content, but appreciation (even unwarranted) may boost the spirit of the Editor's team that may benefit us in the long run. From his early days our editor has been deprecatiing of himself for the book delays and quality of the content. Now only he has started delivering the promises he must have made to himself. I think he would be the first critic of his books. Give him space ..Criticize him but don't break his spirit...don't spoil the wonderful revival of Tamil Comics Literature..

    ReplyDelete
    Replies
    1. @ AKK, /* but appreciation (even unwarranted) may boost the spirit of the Editor's team */

      I do not think unwarranted appreciation will go uncovered in time. In the name of appreciation it intensifies / influences subconscious favoritism which should be avoided. That the comics survived the first two years of the come back and is leaping up in numbers, indicates the confidence the Editor and team has. Hence overwhelming, unwarranted appreciation which is not genuine will not hold water for long.

      Something that my friends like Steel Claw and ஈரோடு விஜய் should realize.

      Positiveness FOR THE SAKE OF JUST BEING POSITIVE is in the long run detrimental to the growth of any venture. Pragmatism and constructive review (which may NOT always be positive) should be mixed in right amounts for the success of any venture.

      Delete
    2. அதென்ன ராகவன்ஜி மொத்த கமெண்ட்டையும் இங்கிலீஸ்ல போட்டுட்டு 'ஈரோடு விஜய்'ன்றதை மட்டும் தமிழ்ல போடறீங்க? ஹைலைட் பண்றீங்களாக்கும்? ஒரு பிறாண்டு பிறாண்டினாத்தான் சரிப்படுவீங்க போலிருக்கே? கிர்ர்ர்ர்...

      பதில்: அதை உங்க கிட்ட மட்டும் ரகசியமா சொல்றேன். இங்கே சொன்னா வள்ளுவரைய்யா வைய்யுவாரு. ;)

      Delete
    3. நான் எதற்கைய்யா உங்களை வைய போகிறேன் தேவை இன்றி??? உமது ஹாஸ்ய கமெண்ட்க்கு இந்த பாண்டிய நாடே என்றும் அடிமை ஐயா... :P

      Delete
    4. ப்ராண்டரீங்களோ இல்லியோ .. சொல்ல வேண்டியது சொல்லிட்டேன் .. அப்புறம் உங்க இஷ்டம் (80 N கருத்து :-))

      Delete
    5. AKK : Thank you for the kindness ; and please don't worry ! Resilience is a wonderful trait that the dry lands of Sivakasi teach us very early in life !

      Delete
  6. /பதிவுகளை இங்கொன்றும், அங்கொன்றுமாய் சிதறல்களாய் வெளியிட்டிடாமல் கோர்வையாக எழுதினால் படிக்கவோ / தாண்டிச் செல்லவோ ஏதுவாக இருக்கும் - அவரவர் விருப்பத்தைப் பொருத்து ! / இது இதை தாங்க அப்போதிலிருந்து கத்தி கொண்டுள்ளேன் ஆசானே. இனிமேலாவது புரியட்டும் சிலருக்கு. ஆசானே நீங்கள் ஒரு பக்கா ஜென்டில்மேன் என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக பதித்து விட்டீர்கள். நெஞ்சம் நெகிழ்கிறது ஆசானே... :)

    ReplyDelete
  7. /So உயர மிதக்கிறேன் பேர்வழி என்று பறந்து விட்டு, மோடேர் என்று பூமியைப் பதம் பார்ப்பதை விட கால்கள் தரையில் திடமாய் ஊன்றி நிற்பது சாலச் சிறந்தது என்பது எனது வாழ்க்கைப் பாடம் ! / தெளிவு படுத்தியதற்கு நன்றிகள் ஆசானே... அப்படி பறக்க வைத்துவிட போறாங்கலோன்னு தான் பயம் இருந்தது ஆசானே... இனி இல்லை அச்சம்...

    ReplyDelete
  8. Dear sir, Thorgal is the best among all three books in this month, plz publish all series in thorgal.

    Thorgal- 4 stars
    Tex - 3 stars
    Myavi & Bruno Brazil - 2 stars.

    ReplyDelete
    Replies
    1. Aslam Basha : டெக்சை விட தோர்கலுக்கு ஒரு ஸ்டார் ஜாஸ்தியா ? அடடே !

      Delete
  9. ஈகிள் மேன் , பேட் மேன், மிக்கி அண்ட் டோனல்ட், சுஸ்கி&விஸ்கி , கறுப்புக் கிழவி கதைகளை கலரில் வெளி இட முடியுமா சார் , டிஜிட்டல் பைல்கள் மேற்சொன்ன எந்த கதைகளுக்கு இல்லை

    ReplyDelete
    Replies
    1. lion ganesh : டிஜிடல் பைல்கள் பிரச்னையல்ல - நம் பைக்குள் இருக்கும் பணமே பிரச்னை - மேற்சொன்ன பிரபல படைப்புகளை நாம் எட்டிப் பிடிக்க !

      ஈகிள்மேன் கதை one shot ; தொடர்வதல்ல !

      Delete
  10. சார், அட்டை படம் இரண்டுமே அருமை . இவர்களின் அடுத்த கொண்டாட்டம் தொடர காத்திருக்க வேண்டும் என்பது சற்றே வருத்தமளிக்கிறது. எனக்கு மிக பிடித்த நாயகர்கள் இவர்கள். அடுத்து ப்ளூ கோட்சை வைத்து சமாளிக்க வேண்டியதுதான் .
    முதல் புக் ஃ பேர் spl அறிவிப்புகள் ஜூலைதனை ஏக்கத்துடன் காத்திருக்க செய்து விட்டன .

    ReplyDelete
    Replies
    1. உம்ம கருத்து கும்மிகளைத் தொடர நேரமே அமையலை நண்பா! முகநூலில் தலை காட்டாமல் ஒளிந்து கொண்டிருக்கும் உங்களை இங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி!

      Delete
    2. உமது முகநூலில் உறுப்பினராக வேண்டும் போல உள்ளதே நண்பா . அதில் மெம்பராக தகுதிகள் எனக்கு இன்னும் வரவில்லை நண்பரே . இங்கே வந்து தலை காட்டி என்னை பார்த்து செல்லும் தங்களுக்கு நன்றி நண்பரே .

      Delete
  11. நெய்வேலி புத்தக திருவிழாவில் நமக்கு கண்டிப்பாக இடம் கிடைக்கும் என நம்புவோம் ! காவல் கழுகு 114 பக்கம்தான் எனும்போது கதை எதிர்பார்க்கும் வேகம் இருக்குமோ ???- குண்டு புக் அங்கத்தினர்

    ReplyDelete
    Replies
    1. கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை நண்பரே! நமக்கு நிச்சயமாக அட்டகாசமான தீனி காத்திருப்பது உறுதி! நலம்! நலமே நாடுகிறேன் நண்பா!

      Delete
    2. senthilwest2000@ Karumandabam Senthil : 110 பக்க டெக்ஸ் கதைகளை நாம் நிறையவே படித்திருக்கிறோமே ?

      Delete
  12. Super 6 சந்தா மட்டுமே கட்டிய எனக்கு மியாவி எப்போ கிடைக்கும் sir

    ReplyDelete
    Replies
    1. Dasu bala : ரெகுலர் சந்தா + சூப்பர் 6 சந்தா என இரண்டுமே கட்டியுள்ள நண்பர்களுக்குத் தான் தற்போது மியாவி அனுப்பியுள்ளோம் ! சூப்பர் 6 இதழோடு தான் உங்கள் சந்தாவே துவங்கும் எனும் போது அதற்கின்னும் நாள் உள்ளதே ! இடையில் வேறு இதழ்கள் ஏதேனும் வாங்கும் போது நினைவுபடுத்துங்களேன் !

      Delete
    2. Fine. Thanks for the reply sir...

      Delete
  13. ஒரு பைங்கிளி படலம் அட்டை படம் அருமையாக உள்ளது

    ReplyDelete
  14. ஆசிரியரே....
    மேக்னம் ஸ்பெஷல் 900 பக்கங்கள் என்பது ஒரு கனவு நிஜமாவது போல் சந்தோஷம் தருகிறது..
    அதே சமயம் அத்தனை கனமான புத்தகம் படுத்தவாக்கில் வாசிக்க ,தொடர்ந்து கைகளில் பிடிக்க இலகுவாக இருக்குமா என்ற ஒரு சின்ன ஐயம்...
    சார்...இந்த 30 ஆன்டு கால அற்புத சாதனை இதழை பல புத்தகங்கள் அடங்கிய ஒரு பாக்ஸ் செட் ஆக தயாரிக்க முடியாதா..?

    ReplyDelete
    Replies
    1. வலித்தாலும் மகிழ்ச்சியோடு தாங்கிடுவோம் நண்பரே! ஹீ ஹீ ஹீ உங்க ஐடியாவும் நன்றாகவே இருக்கிறது! எங்கள் ஊரில் பள்ளிக்கூடத்தில் உள்ள நூலகத்தில் இதுபோன்று ஒரு செட் ஆனால் தனி தனி அட்டைகளுடன் கூடிய தனித்தனி தலைப்புகள் ஒரே அட்டை பெட்டி வடிவில் கிடைத்து வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்!!

      Delete
    2. AHMEDBASHA TK : //பல புத்தகங்கள் அடங்கிய ஒரு பாக்ஸ் செட்//

      பல இதழ்கள் எனும் போது பல அட்டைப்படங்கள் + பல பைண்டிங் செலவுகள் + பாக்ஸ் தயாரிப்பு என்று ஏக சமாச்சாரங்கள் உள்ளன நண்பரே ! பட்ஜெட்டில் அதற்கேது இடம் ?

      Delete
  15. டியர் எடிட்டர்,

    * சிக்-பில் குழுவினரின் அட்டைப்படம் எனக்கு OK ரகமாகவே தெரிகிறது. வெகுநாட்களுக்கு முன் காமெடித் தோரணம் கட்டிய 'ஒரு களுதையின் கதை'க்குப் பிறகு மீண்டும் 'கவுண்டர்-செந்தில்' பாணியிலான ஒரு காமெடி காலாட்டா அரங்கேறவிருப்பது குதூகலமளிக்கிறது.

    * நெய்வேலி புத்தகத் திருவிழாவின்போதே மேஜக்விண்ட் மற்றும் 'தல' ஆகியோர் சூப்பர்-6ல் வெளிவரயிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 'ஈரோடு புத்தகத் திருவிழாவின்போது சூப்பர்-6க்கான சந்தாவை அண்ணாச்சியிடம் செலுத்திட்டாப் போச்சு' என்ற என் மெத்தனத்திற்கு லேசாய் ஆப்பு வைத்திருக்கிறீர்கள். அடுத்த ஓரிரு நாட்களில் சந்தா செலுத்திவிடுகிறேன்.

    * முந்தைய தமிழ்பட க்ளைமாக்ஸ்களில் எப்போதுமே லேட்டாகவே வரும் போலீஸ் போல் அல்லாமல், ஒரு பெரும் கலவரம் ஏற்படுவதற்கு முன்பே இங்கே ஒரு பதிவை இட்டு (தற்காலிகமாகவாவது) இங்கே அமைதியை நிலை நாட்டியதற்கு உங்களுக்கு என் பாராட்டுகளும், நன்றிகளும்! :)
    உங்களுக்கு சற்றே ஓய்வான நேரம் ஏதாவது கிடைக்கும்போது, ஒரு பதிவை கம்போஸ் செய்து தயாராய் வைத்திருந்தீர்களெனில், இம்மாதிரியான கருத்துமோதல்கள் ஏற்படும்போது 'கபால்' என்று 'பப்ளிஷ்' பட்டனை அழுத்திப் பெரும் கலவரங்கள் நேராமல் தடுத்துவிடலாமில்லையா? ;)



    ReplyDelete
    Replies
    1. "முந்தைய தமிழ்பட க்ளைமாக்ஸ்களில் எப்போதுமே லேட்டாகவே வரும் போலீஸ் போல்" நற நற ஈரோட்டாரே! நான் சென்னை புத்தக சங்கமத்தில் அண்ணாச்சி அவர்களிடம் கட்டிட்டேனாக்கும்!!!!

      Delete
    2. என் அன்னையாரிடம் ஆசிரியர் சந்தா பெற்றுக் கொள்வது போல ஒரு சம்பவம் நிகழ்த்திடவே எண்ணியிருந்தேன்! நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கின்றதே????

      Delete

    3. தமிழ்நாட்டின் 'காவல் கழுகு' ஜான் சைமன் - வாழ்க வாழ்க! :)

      Delete
    4. John Simon C : //என் அன்னையாரிடம் ஆசிரியர் சந்தா பெற்றுக் கொள்வது போல ஒரு சம்பவம் நிகழ்த்திடவே எண்ணியிருந்தேன்! //

      அடடா..இன்னொரு சந்தர்ப்பத்தை ஜனவரி ஏற்படுத்திக் கொடுக்குமென்று நம்புவோம் !!

      Delete
    5. Erode VIJAY : //'ஈரோடு புத்தகத் திருவிழாவின்போது சூப்பர்-6க்கான சந்தாவை அண்ணாச்சியிடம் செலுத்திட்டாப் போச்சு' என்ற என் மெத்தனத்திற்கு லேசாய் ஆப்பு வைத்திருக்கிறீர்கள்.//

      நெய்வேலி...நடுவில் உருவாகிய புது வாசல் ! ஆனால் BOOK FAIR SPECIAL என்று அறிவித்த போது, நெய்வேலி அல்லது பாண்டிச்சேரி என் மனதில் இல்லாமல் இல்லை !

      Delete
  16. அடுத்த புத்தகங்கள் பற்றிய அறிவிப்புகள் மகிழ்வைத் தருகின்றன. விரைந்து அதிக புத்தகங்கள் வெளியிட ஆவன செய்யுங்கள். எவ்வளவு வந்தாலும் போதாது போலவே ஒரு ஃபீலிங்கு! :-)))))

    ஒரே ஒரு குறைதான். டெக்ஸ் தீபாவளி மலருடன் ஒப்பிடுகையில், நில்,கவனி, சுடு ரொம்ப ஒல்லியாகிப்போய்விட்டது. இந்த அழகில் வெறும் 114 பக்கத்தில் காவல் கழுகா? என்ன அநியாயம்? பெரிய சைஸ், கலர் புத்தகங்களில்தான் குண்டு தரமாட்டீர்கள் சரி, புரிகிறது. இந்த டெக்ஸ் புத்தகங்களையாவது கொஞ்சம் புஷ்டியாக மெயிண்டெயின் செய்யக்கூடாதா? ஏதோ பார்த்து செய்யுங்கள் சார். கதையே அவ்வளவு சின்னதுதான் எனில் கூட ரெண்டு கதைகளை இணையுங்கள். புண்ணியமாப் போகும்!!

    அப்புறம், இணையத்தில் அவ்வப்போது லூசுங்க வந்து, ’என்ன கையப்புடிச்சி இழுத்தியா’ ரேஞ்சுக்கு விடாம அனத்திகிட்டிருப்பதெல்லாம் ரொம்ப சகஜம். இணையத்துக்கு புதியவர்கள்தான் இதில் கொஞ்சம் ஜெர்க் ஆவார்கள். நம் வாசக நண்பர்கள் சிலரும் கூட அதிர்ச்சியில் தம்மு கட்டிக்கொண்டு அவர்களிடம் உரையாடுவதைப் பார்க்கிறோம். நீங்களாவது சும்மா இருப்பீர்கள் என்று பார்த்தால், தனி பதிவு போட்டு, ரிக்வஸ்ட் வைத்து, பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். இவர்களைக் கடந்து செல்ல ஒரே வழி, பொருட்படுத்தாது கடந்து சென்றுவிடுவது மட்டும்தான்!

    ReplyDelete
    Replies
    1. /அதே போல யாரையேனும் நேரடியாகவோ, ஜாடையாகவோ காயப்படுத்தும் விதமாய் பதிவு ஏதேனும் இருப்பின், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் அதை நான் களைந்து விடுவேன் ! /
      ஆசானின் மேற்குறிய வரிகளை படித்த பின்னும் இந்த "அப்புறம், இணையத்தில் அவ்வப்போது லூசுங்க வந்து, ’என்ன கையப்புடிச்சி இழுத்தியா’ ரேஞ்சுக்கு விடாம அனத்திகிட்டிருப்பதெல்லாம் ரொம்ப சகஜம்." கண்ணியம் காக்கா வரிகள் தேவையா நண்பரே??? புதிய சர்ச்சைக்கு வித்திடுகிற மாதிரி உள்ளது உங்களின் எகத்தாளம். ஆசானே உங்கள் கருத்து என்ன என்று கூறலாமே???

      Delete
    2. // அப்புறம், இணையத்தில் அவ்வப்போது லூசுங்க வந்து, ’என்ன கையப்புடிச்சி இழுத்தியா’ ரேஞ்சுக்கு விடாம அனத்திகிட்டிருப்பதெல்லாம் ரொம்ப சகஜம். இணையத்துக்கு புதியவர்கள்தான் இதில் கொஞ்சம் ஜெர்க் ஆவார்கள். நம் வாசக நண்பர்கள் சிலரும் கூட அதிர்ச்சியில் தம்மு கட்டிக்கொண்டு அவர்களிடம் உரையாடுவதைப் பார்க்கிறோம். நீங்களாவது சும்மா இருப்பீர்கள் என்று பார்த்தால், தனி பதிவு போட்டு, ரிக்வஸ்ட் வைத்து, பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். இவர்களைக் கடந்து செல்ல ஒரே வழி, பொருட்படுத்தாது கடந்து சென்றுவிடுவது மட்டும்தான்! //

      @Vijayan sir, you have too many enemies in the form of supporters. The above is an example. They have problems whenever you try to open doors for people who are staying in the fence for long time.

      Delete
    3. All of us who are matured / well educated / even well positioned in society are doing the exact same mistake in the internet. It is populating the hatred SILENTLY. Last year, when I was new here (am an internet for 10 years on non Tamil communities), I was amazed about the fact that how much commenters enthusiastically make comments in TAMIL here. That's exactly what attracted me to participate here.

      But right now, I am ashamed for being friends with some people who are constantly and indirectly seeding hatred and make it look like other people as immature.

      Ok, when I will stop commenting here? No worries, I will never open this website since I see favouritism directly making the seeds of hatred towards a lot of people. Good bye.

      Delete
    4. @ந.வ,
      பிம்பிலிகி பிலாபி! :-)))))

      @ரமேஷ்,
      உங்கள் தீவிர சிந்தனை, தீராத ஆர்வம், இத்தளம் குறித்த மேலான கவலை இதெல்லாம் பாக்கச்சொல்லோ.... நெகுழுது!! :-)))))

      Delete
    5. புரிந்து கொள்ளும் ஒற்றை ஜீவனும் சென்று விட்டால் வெறுமையாகி விடாதோ இங்கு??? உங்களை இறைஞ்சி கேட்கிறேன் நண்பரே... தயை கூர்ந்து தொடருங்கள்... எங்களை போன்றோரின் பொருட்டேனும்... :(

      Delete
    6. ஆஹா கண்டேன் உண்மையான TROLL'ஐ (ஆதி) ... நீர் மெத்த படித்த மேதை ஐயா. உமது கொச்சை பாஷை புரிய வில்லையே... மனிதர்களை எடை போடுவதில் நீர் தனி ரகம் போலும்... /எவ்வளவு வந்தாலும் போதாது போலவே ஒரு ஃபீலிங்கு! :-)))))/ அதையும் தாண்டி மெச்சூர்டாக பதிவு இட முடியாதா நண்பரே உம்மால்??? ஆசானே!!??? சத்திய சோதனை பாஸ்...

      Delete
    7. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்ற கதையாக இருக்கிறது ஆதியின் கமெண்ட்.

      Delete
    8. Ramesh Kumar,
      What do you mean by 'people have problem when editor tries to open the door for people in the fence'? Please understand, we all welcome people who come, comment and criticize. But is that what happening here? what is happening in this blog since last post is called 'trolling'. If you don't call this trolling, then I am not sure what is trolling. Athi is right is opposing trolls. His comment is specifically targetted at such 'trolls'. His definition "இணையத்தில் அவ்வப்போது லூசுங்க வந்து, ’என்ன கையப்புடிச்சி இழுத்தியா’ ரேஞ்சுக்கு விடாம அனத்திகிட்டிருப்பதெல்லாம் ரொம்ப சகஜம்" fits perfectly with internet trolls.
      Are we expected to talk respectively about trolls too? Did Editor say such a thing?

      Delete
    9. @Prunthaban,

      The terms like "internet trolls" won't work when you see your past friends become troll.

      Editor is on that situation, so as long as Editor sees them as past friends / comic readers, lets not comment harshly/ignorantly about them. That will just trigger more separations - we faced a lot already. In critical situations, when we know 3rd party is watching us, it is better not talk about 3rd party. That's simple logic - which we will not ignore was long as we have the interest of peace.

      Better read again Editors post thoroughly, it simply has valid points to follow. hmm..

      Delete
    10. @Ramesh Kumar,
      I agree with you. The problem is that these people exhibit all traits of a troll and they are also the ones who are the reason why lion/muthu is still surviving :( Like AKK said above for the sake of Tamil Comics we/editor need to tolerate them. That is why I generally do not comment harsh on them. I just went and re-read most of the comments by 'naveena valluvar' in the last post, and most of them are plain trolling :( Sadly we need to live with this.

      Delete
    11. A small correction,
      they are also the ones who are the reason why lion/muthu is still surviving -> they are also one of the reasons why lion/muthu is still surviving.

      I/Others may not believe this. But reading Editor's blog, it does feel like he believes in this and wants us to tolerate them even if they keep pulling everyone's leg here in a derogatory way (some does it in a friendly way which is acceptable to me).

      Delete
    12. dear pal... i am a critic just like others. u specifically do it in a soft tone excluding the editor, i did it in a way pointing editor especially. whom others leg have i pulled before? i did it it without losing my cool or defaming others. how are u categorising my comments as derogatory??? editor never felt for the comemnts on him... y u people are magnifying things??? u mean to safeguard the above comemmnts from aathi's not in the troll list??? its pathetic friend... have a open mind to all comemnts please dont be biased... if we start commenting back as mentals loitering around here wont it offend others??? no one has commented in such a sarcastic indiscriminate was as he has done here. u can again go back and verify it on your own boss.. try to understand...

      Delete
    13. ஆதி தாமிரா @ // இணையத்தில் அவ்வப்போது லூசுங்க வந்து//
      தங்களிடம் இருந்து இது போன்ற வார்த்தைகளை எதிர் பார்க்கவில்லை நண்பரே :-(

      Delete
    14. ஐயோ தலைவரே இப்படி இந்த டயலாக் "பிம்பிலிகி பிலாபி! :-)))))" னு சொல்லி உங்களை நீங்களே காட்டி குடுத்துட்டிங்களே... நீங்க தப்பிச்சி போனத ஏன் பாஸ் நீங்களே உளறிடிங்க??? அவங்களா புடிச்சி அடைக்கறதுக்கு முன்னால நீங்களா வந்துட்டா கொஞ்சமா தான் பாஸ் அடிப்பாங்க. உங்களுக்கே தெரிஞ்ச விஷயம், அனுபவபட்டது தானே... வார்டு க்கு வெரசா வா தல... தலைவனின் வரவை எதிர்நோக்கும் தொண்டன்... :))))))))

      Delete
    15. @ ஆதி: எவ்வளவு நாள் தல நீங்க மட்டுமே அனத்திகிட்டு இருப்பிங்க??? ஓரவஞ்சனை வேணாம் தல...

      Delete
    16. I agree with one point of நவீன வள்ளுவன்.

      /* editor never felt for the comemnts on him... y u people are magnifying things??? */

      When we direct a comment at the Editor - praise or criticism or leg pull - it would be good for others not to speak "in favor" or "for the Editor". As clarified by the Editor, if he is not in a position to answer a query or comment, just e-mail him personally and it has worked for me in the past - even in the recent past when I was not visiting this blog.

      @ Prunthaban, like I did in the last post, you have also fallen into this trap of classifying some comments as TROLL and some of them as positive and jocular - reality is all of us trip. Best is to be objective :-)

      @ Ramesh Kumar, /* No worries, I will never open this website */

      I bet you wont keep to this for the next thousand years :-) :-) :-)

      Favoritism has come to exist in all walks of life. It is as much prevalent here as it is anywhere else.

      In that respect I am not buying into the Editor's disposition on being non-partisan because subconsciously all of us have soft corners for the folks we like or the folks who enable us. So there are indeed 'Jaalraas' to the Editor and as much to all of us.

      The best thing then is to be objective, and where there are points to be delivered to Editor - just do it plain and simple. Stay there !

      Delete
    17. எம் தரிசனம் கிட்டும் முன்னரே இவ்வளவு அர்ச்சனையா? நன்று, மிக நன்று. மற்றபடி பிம்பிலிக்கி பிலாபி என்பதை நண்பர் ரமேஷ் அவர்கள் தமாஷ் நடிகர் செந்தில் சொன்னதைப் போல் எடுத்துக் கொண்டு மீண்டும் தாங்கள் அவ்வப்போது தங்கள் கருத்துகளை பதிவிட வேண்டுமாறு கேட்கிறோம்.

      Delete
    18. @ Friends : நண்பர் ஆதியின் கருத்தோடு நான் உடன்பட மாட்டேன்...இணையத்தின் இதர தளங்களில் நடைமுறை எவ்விதமோ - நானறியேன் ; ஆனால் இங்கும் அதுவே நடப்பாய் இருக்கும் அவசியம் கிடையாது !

      நமக்குள் இருக்கக் கூடிய அபிப்ராய பேதங்களை காமிக்ஸ் மீதான ஆர்வம் நிச்சயமாய் வெல்லும் என்பதில் எனக்கு ஐயமில்லை ! So இடையிடையே தோன்றி மறையும் சிரம நாட்களை முடிந்த மட்டிற்கு சலனமின்றிக் கடக்க முயற்சிப்போமே ! எளனுத்துக்கு ஏளனம் பதிலாய் வேண்டாமே !

      Delete
    19. என் வார்த்தைகள் உங்கள் மனதை புண்படுத்தி இருப்பின் (இருக்கும்) தயை கூர்ந்து மன்னியுங்கள் ஆசானே... மீண்டும் ஒரு முறை யார் சார்பும் அற்றவன் என்பதை நிரூபித்து விட்டீர்கள் ஆசானே... :(

      Delete
    20. டியர் ஆல்,
      நண்பர் ஆதி குறிப்பாக யாரையும் இவர் லூசுத்தனமாக பதிவிட்டுள்ளார் என கூறாதபோது நாம் ஏன் ஒரு சிலரை மட்டும் அந்த கூற்று சுட்டிக்காட்டுவதாக எடுத்துக்கொள்ளவேண்டும். இங்கே பின்னூட்டமிட வருகின்றவகள் எல்லோரையும் "காமிக்ஸ் மீத அவர்கள் கொண்ட தீராத காதல்" மட்டுமே(!) இயக்குகிறது, என்று எதார்த்தவாதியாக நாம் ஏற்றுக்கொண்டாலும், இந்த தளத்தில் பதிகின்ற பின்னூட்டங்கள்
      அனைத்தும் புத்திசாலித்தனமானவை என நாம் கொண்டால் அது புரிதலில் நமக்குள்ள குறைபாடு தவிர
      வேறொன்றுமில்லை.லூசுத்தனமும் புத்திசாலித்தனமும் மனிதருள் இரண்டற கலந்த குணங்கள். இங்கே என்ன பிரச்னை என்றால் யாருடைய கருத்து லூசுத்தனமானது என்பதை பற்றி மட்டுமே. எனதாகவும்
      இருக்கலாம்.

      ஒரு சமூக அமைப்புக்குள் நீயா நானா என போட்டி வந்தால் முடிவில் வெல்வது,பெரும்பான்மையானோர் ஏற்கும் நிலைப்பாடு. மேலும் இது தொடர்ந்து மாறக்கூடிய ஒரு PERSPECTIVE VIEW.

      இங்கே யாருடைய கருத்து சரியானது என்பதை அறிய யார் இங்கே நீண்ட நாட்கள் தங்கள் நிலை மாறாமல் பதிவிடுகிறார்கள் என்பதை கொண்டு தீர்மாணிக்கலாம். நமக்கு முதல் எதிரி நமது மனது தான் நண்பர்களே.கோபத்திலும், ஒரு வேகத்திலும் நாம் எடுக்கும் ஒரு சார்பு நிலை நீண்ட நாட்களுக்கு நிற்காது.நமது மனதும் தொடர்ந்து அதை ஏற்காது. :-)

      ஆதி சொல்லவந்ததெல்லாம் ஆசிரியர் தனது பொன்னான நேரத்தை இது போன்ற அர்த்தமற்ற
      நீயா? நானா? விவகாரங்களில்/சச்சரவுகளில் தலையிட்டு சமரசம் செய்ய நினைப்பது நமக்கெல்லாம் ஒரு பெரிய இழப்பு எனும்படியானது. நானும் more or less இதே கருத்தை எனது பின்னூட்டத்திலும்
      வலியுறுத்தியுள்ளேன். ஒரே வித்தியாசம் ஆதி செய்தது point blank ரேஞ்சில் நின்று.

      இன்னொரு ஆச்சர்யமான விஷயம் நாம் இங்கே விவாதிப்பது காஷ்மீர் பிரச்சனையோ காவிரி பிரச்சனையோ அல்ல. சொல்ல போனால் நாம் இங்கே விவாதம் எனும்படியாக எதையும் ஆரம்பிக்கவே இல்லை. பிறகு ஏன் இங்கே பின்னூட்டங்களில் அனல் பறக்கிறது எனபது புரிபடாத ஒரு ஆச்சர்யம்.

      *நீ இந்த புக்/ஹீரோ வேணுங்கற, நான் சொன்னத வேண்டாங்கற என்ற ரேஞ்சுக்கு சில மோதல்கள்.

      *நீ போடற பின்னூட்டமெல்லாம் ப்ளாக்'ல இடத்த நிரப்புது. மத்தவங்க யாரும் ப்ளாகுக்குள்ளயே வரமுடிய மாட்டேங்குது, நா சொல்றத நீ கேக்கவே மாட்டியா?" எனும்படியான morel policing வேலை.

      இந்த இரண்டு சச்சரவுகள் தான் பெரும்பான்மையான நேரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கே யார் மேலும் பிரச்னை இல்லை. சொல்லப்போனால் இது பெரிதாக விவாதிக்கப்படவேண்டிய பிரச்னை
      கூட கிடையாது. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வெறுப்பு வெறுப்புகள் மற்றவர்களிடம் இருந்து நிச்சயம் மாறுபடும் என்பதை புரிந்துகொண்ட ஆசிரியரிடம் எது சரி என்பதை விட்டுவிடுவது ஒன்றே இதற்கு சரியான தீர்வாக இருக்கமுடியும்.அப்படி விடுவதற்கு விருப்பமில்லா நண்பர்களை "நீ
      தான்யா இங்கே பெரியவன்/புத்திசாலி" என முடிவு செய்து கொள்வோமே. என்ன குறைந்துவிட போகிறோம் நாம் ?

      மேலும் இந்த ப்ளாக்கை முடக்க வேண்டும் எனும் தீரா வேட்கையுடன் அலைபவர்கள் என ஒரு கூட்டம் உள்ளது எனபது நகைப்புக்குரியது. அப்படியொன்று ஹவாலா ரேஞ்சுக்கு இங்கே வர்த்தகம் நடப்பதில்லை, அதை கொண்டு ஆதாயம் அடைவதற்கு. அப்படியே ஒரு ECCENTRIC கூட்டமிருந்தாலும், அவர்களது அந்த ECCENTRIC மனதில் பகல் கனவு காண்பதை விட இங்கே சாதிக்கப்போவது எதுவுமில்லை. SO RELAX PLEASE!

      Delete
    21. இங்கே இன்னொரு சீரியஸ் விஷயம்,சிலர் நம்மிடையே உள்ள காமிக்ஸ் passion னை பயன்படுத்தி முறையற்ற முறையில் பணம் சம்பாதிக்க நினைகிறார்கள் எனும் படியான கருத்துக்கள் சில வேலைகளில் சொல்லப்படுவது.இதில் ஆசிரியருக்கு, அவரது கருத்தை அறிந்து உதவி செய்வதோடு மட்டும் நமது பங்களிப்பு நிறுத்திக்கொள்ளவேண்டுமோ தவிர ப்ளாக்கில் அப்படிப்பட்ட நபர்களை
      encounter செய்ய நினைப்பதும் ஒரு வகை morel policing வேலை தான்.

      மேலும் இங்கே நண்பர்களுள் ஒரு தவறான புரிதல் உள்ளது. நமது ஆசிரியர் அவரது நிறுவனத்தின் சார்பாக, வெவ்வேறு வெளிநாட்டு காமிக்ஸ் நிறுவனங்களிடம் புத்தகங்களுக்கான காப்புரிமை பெற்று தமிழில் வெளியிடுகிறார். இந்த புத்தகங்களை விலை கொடுத்து வாங்கும் யாரும் அந்த புத்தகத்தின் முழு உரிமையாளர் ஆகிறார்கள். லயன்/முத்து முத்திரையை மாற்றாமல்/சிதைக்காமல், அந்த புத்தகம் எந்த
      நோக்கத்துக்காக படைக்கப்பட்டதோ, அதே நோக்கத்தில் உபயோகப்படுத்த விருப்பமுள்ள யாருக்கும் எந்த விலையிலும் விற்கலாம். நாம் விலை கொடுத்து வாங்கும் எந்த ஒரு பொருளுக்கும் நாம் முழு உரிமையாளர் ஆகிறோம்.இது பொதுவான நுகர்வோரின் உரிமை.

      புத்தகங்களை பொறுத்தவரை நாம் வாங்கும் இதழ்களுக்கான உரிமை நம்மிடம் இருந்தாலும், அந்த இதழின் உள்ளே உள்ள CONTENT/ படைப்புக்கான உரிமை எப்போதும் படைப்பாளிகளிடம் மட்டுமா இருக்கும் என்பதால் அதை ஸ்கேன் செய்வது,ஜெராக்ஸ் செய்வது, அப்படியே காப்பி அடித்து இன்னொரு
      புத்தகத்தில் வெளியிடுவது,இணையதளத்தில் பதிவேற்றுவது சட்டப்படி குற்றம்.

      அத்தியாவிசய நுகர் பொருட்களுக்கு மட்டுமே பொருள் பதுக்கல் சட்டம் பொருந்தும். புத்தகங்கள் மற்றும் இன்னபிற பொருட்களை நமக்கு திறமை இருந்தால் நூற்றுக்கணக்கில் வாங்கி ஸ்டாக் வைத்து இன்னொரு நாளில் அதிக விலைக்கு விற்கலாம். இந்த செயல் குற்றமாகாது.இதுவும் ஒரு வகை
      தொழிலே.ஒருவேளை ஆசிரியருக்கு இதில் விருப்பமில்லை என்றால் புத்தக கடைகள், வழக்கமான முகவர்களை தவிர்த்து தனி நபர்களுக்கு bulk order கிடையாது எனும் கொள்கையை கடைபிடிக்கலாம். அதோடல்லாமல் இதில் நம்மால் செய்யக்கூடியது எதுவுமில்லை.

      இப்போது நமது நண்பர்கள் சிலர் நம் புத்தகத்தை அதிக எண்ணிக்கையில் வாங்கி பின்னொரு நாளில் விற்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அதையே CD யில் பதிவு செய்வதோ, ஜெராக்ஸ் எடுத்து விற்பதோ , இன்னொரு முறை பதிப்பிப்பதோ குற்றம் என்பதால் அதற்கான ஆதாரம் யாரிடமாவது
      இருந்தால் தயவு செய்து ஆசிரியருக்கு அதை அனுப்பிவைக்கவும்.

      மற்றபடி நமது பழைய இரண்டு ருபாய் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனை ஆகிறது எனும் தகவல், நாம் பெருமை பட வேண்டிய விஷயம். சூப்பர் மேனின் முதல் புத்தகம் $286,800 விற்பனையாகியுள்ளது.
      அன்றைய நாளில் விண்டஜ் காமிக் புத்தகங்கள் மட்டும் சுமார் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போயுள்ளது.உலகம் முழுவதும் பழைய பொக்கிஷங்களுக்கு எப்போதும் மதிப்பு அதிகம். விலையும்
      கூடுதல். நமது பழைய புத்தகங்கள் இதே போல அதிக விலைக்கு விற்கப்படுகிறது என்பதை எண்ணி நாம் ஏன் விசனப்பட வேண்டும் என்று தெரியவில்லை.

      உண்மையிலேயே நமது பழைய புத்தகங்களுக்கு அதிக மதிப்பு/DEMAND இருந்தால், ஆசிரியரே OFFICIAL லாக ஒரு AUCTION நடத்த ஏற்பாடு செய்யலாம்.

      Delete
    22. @விஸ்கி‍சுஸ்கி,

      புரிதலுக்கு நன்றி. ஆனால் இந்தப் புரிதல் இங்குள்ள பெரும்பால‌ருக்கும், குறிப்பாக மௌன பார்வையாளர்க்கு இருக்கிறது என்பதுதான் உண்மை. ஆக, இந்த விவாதங்களிலெல்லாம் வருந்த ஒன்றுமேயில்லை. ஆசிரியர் இப்போது என் கருத்தை மறுப்பதற்கான காரணமும் மிக எளிதானதுதான். பொறுப்பு மிக்கவர் எனும் முறையில், அனைவரையும் அரவணைத்துச் செல்லவிரும்புகிறார், அவ்வளவே! அதுவே நல்முடிவும் கூட!

      கேலிக்குத்தான் எத்தனை வீரியம் பாருங்களேன். சில நாட்களுக்கு முன்பாக நண்பர் எனக்கொண்டவரையும் கூட தகிக்க வைக்கிறது. புரிதல் தவிர்க்க வைக்கிறது. கற்பிதம் ஏற்க வைக்கிறது. :‍)))))

      இப்போது கூட வசமாகக் கேலி செய்ய என் கைகள் பரபரக்கின்றன. இன்றும், நாளையும் அலுவலகத்தில் ஈ ஓட்டிக்கொண்டுதான் இருக்கப்போகிறேன். ஆக, நன்றாக பொழுது போகும், எனக்கும், பலருக்கும்! :‍)))))). ஆனால் கைகளை அடக்கிக்கொள்கிறேன். அவசியமில்லாது இத்தளம் என்னால் ஹாட் ஆகவேண்டாம் என்பதாலும், சில நல்லுள்ளங்கள் வருந்தும் என்பதாலும், அது எப்போதும் என் நோக்கமாக இருந்ததில்லை என்பதாலும்.

      ஒரு விஷயத்தில் மட்டும் சிரிப்பு அடக்கமுடியவில்லை. ஆனாலும் சில நண்பர்களுக்கு ஓவரா தங்கமனசு. பாத்துங்க, அட்சய திரிதியை வேறு இன்றைக்காம்.! :‍))))))

      Delete
    23. @சுஸ்கிவிஸ்கி,

      இதைத்தான் போன பதிவிலும் நாசூக்காக குறிப்பிட்டிருந்தேன். பலரும் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டும் சில நண்பர்கள் இதைப் புரிந்துகொள்வதில்லை. வேறு காரணங்களுக்காக மறுமதிப்பு கேட்கலாம், தவறில்லை. ஆனால், பழைய 2 ரூ புத்தகம் இப்போது 20000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பதற்காக கேட்பது த‌வறு. இது வின்டேஜ் பொருட்கள் மீதான மனித விருப்பம். இதை மறுபதிப்பால் சரிசெய்துவிடவே முடியாது. உண்மையில் நம் புத்தகங்களுக்கு இந்த விலையும், வின்டேஜ் மரியாதையும் கிடைப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் பெருமைதான் கொள்ளவேண்டும்!

      Delete
    24. அப்புறம் இன்னொரு விஷயம். 23ம் தேதி அனுப்பப்பட்ட புத்தகம் இன்னும் என்னை வந்தடையவில்லை. கம்ப்ளைன்ட்ஸ், போன் உரையாடல்கள், காத்திருப்புக்கு பின்பு இன்று எஸ்டி கூரியரின் ஊழியை, 'நாங்கள் என்ன செய்யமுடியும், எங்கள் மதுரை பிராஞ்சிலிருந்து இன்னும் எங்களை வந்து சேரவில்லை. வந்தால் தருவோம்' என்பதாகக் கூறி என்னிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார். முன்னதாக கடந்த 3 மாதங்களாக மறுநாளே எனக்கு (சென்னை) டெலிவர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகவே பொறுமை காக்கிறேன்.

      இது ஆசிரியரின், நண்பர்களின் தகவலுக்காக மட்டுமே!

      Delete
    25. //இப்போது நமது நண்பர்கள் சிலர் நம் புத்தகத்தை அதிக எண்ணிக்கையில் வாங்கி பின்னொரு நாளில் விற்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அதையே CD யில் பதிவு செய்வதோ, ஜெராக்ஸ் எடுத்து விற்பதோ , இன்னொரு முறை பதிப்பிப்பதோ குற்றம் என்பதால் அதற்கான ஆதாரம் யாரிடமாவது
      இருந்தால் தயவு செய்து ஆசிரியருக்கு அதை அனுப்பிவைக்கவும்.
      //
      //வேறு காரணங்களுக்காக மறுமதிப்பு கேட்கலாம், தவறில்லை. ஆனால், பழைய 2 ரூ புத்தகம் இப்போது 20000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பதற்காக கேட்பது த‌வறு. இது வின்டேஜ் பொருட்கள் மீதான மனித விருப்பம். இதை மறுபதிப்பால் சரிசெய்துவிடவே முடியாது.//


      அருமையாக சொன்னீர்கள் நண்பர்களே இதனை அனைவரும் புரிந்து கொண்டால் தீர்ந்து விடும் பிரச்சினை .

      Delete
    26. ஐநூறு ரூபாய் எனினும் தீபாவளி மலர் 1987 நான் வாங்க தயார் . ஆனால் அந்த விலைக்கு கிடையாது என யாரும் கோபித்து கொள்ளாதீர்கள் .

      Delete
    27. @ விஸ்கி-சுஸ்கி:

      எடிட்டருக்கு சினிமா வசனம் எழுத சான்ஸ் கிடைக்குதோ இல்லியோ, ஒரு மூத்த அரசியல் தலைவரின் இலக்கிய மற்றும் பெச்சுலக வாரிசு இனி யார் என்பது எனக்கு லேசா பிடி படற மாதிரி இருக்கு :-) :-)

      காமிக்ஸ், கலிங்கத்து பரணி, demand-supply, psychology எல்லாம் கலந்து பல அடுக்கு மாடிகள் அட்டகாசம் !

      Delete
    28. //ஆனால் அதையே CD யில் பதிவு செய்வதோ, ஜெராக்ஸ் எடுத்து விற்பதோ , இன்னொரு முறை பதிப்பிப்பதோ குற்றம் என்பதால் அதற்கான ஆதாரம் யாரிடமாவது
      இருந்தால் தயவு செய்து ஆசிரியருக்கு அதை அனுப்பிவைக்கவும்.//
      இது கூட இங்கே குறைவாய் உள்ள எத்தனை பேருக்கு உதவிட போகுது . என்ன இருந்தாலும் ஒரிஜினலில் படிப்பது போல யாரும் விரும்ப போவதில்லை . படிப்பதற்கு மட்டுமே என நினைப்போரும் அதிக விலை கொடுத்து வாங்க போவதில்லை . சேர்த்து வைக்க விரும்புவோர் ஒரிஜினலை தவிர பிறவற்றை அதிக விலை கொடுத்து வாங்க போவதில்லை . இவை யாவுமே தானாய் அழிந்து விடும் , நமது ஆசிரியர் தொடர்ந்து புத்தகங்களை வெளி விடுவதால் .

      Delete
    29. /* பேச்சுலக வாரிசு */ :-)

      Delete
    30. நண்பர் ராகவன் அவர்களே உண்மையை அழகாய் சொல்லி உள்ளார் , யாரும் வருந்தா வண்ணம் . கொஞ்சம் ஓவராய் புகழ்ந்து விட்டார்தான் . ஆனால் புகழ்ச்சியால் ஆசிரியர் மயங்கி விட போவதில்லை . சுஸ்கி அவர்கள் இதனால் வளர்ந்து விட போவதில்லை .

      Delete
    31. @ வி-சு

      பழைய புத்தகங்களை அதிக விலைக்கு விற்பதும் தவறு; வாங்குவதும் தவறு என்றே இத்தனை நாளும் நினைத்திருந்தேன். ஆனால் அது 'பெருமைக்குரியது' என விளக்கியிருக்கிறீர்கள். நல்ல விளக்கம்!

      இதைப் பற்றிய எடிட்டரின் கருத்துக்களையும் அறிந்திட ஆவல்!

      Delete
    32. @ வி-சு:

      அயல்நாட்டினில் லட்சக்கணக்கான டாலர்களுக்கு ஏலம் எடுப்பதை வாங்குபவர்கள் உலகெங்கிலும் உள்ள கோடீஸ்வரர்கள் - அவர்களுள் உள்ள கலெக்டர்கள். நமது இரண்டு ரூபாய் காமிக்ஸ். அதற்கு ஆயிரம் - இரண்டாயிரம் மடங்கு விலைகளில் விற்கப்படுவது இம்மாதிரியான கொடீஸ்வரர்களிடம் அல்ல. பெரும்பாலும் நம்மைப் போன்ற சாதாரண காமிக்ஸ் காதலர்களிடையே தான் விற்கப்படுகிறது - பேரம் பேசப்படுகிறது. இவ்வகை சுரண்டல்கள் நின்றிட மறுபதிப்புக்கள் உதவிடும்!

      உடனே இதற்கு ஒரு கோஷ்டி, வாங்குபவர் வாங்கினால் உனக்கு என்ன என்பார். பதில்: நம் அன்புக்குரிய, காதலுக்குரிய பொருள் நமக்கு தெரிந்த நண்பரின் ஆசை தூண்டப்பட்டு அதிக விலைக்கு விற்கப்பட்டால் நமக்கும் வருத்தம் தானே!

      இவ்வாறான சாதாரண மக்களின் ஏக்கங்கள் சுரண்டப்படுவது நமக்கு மகிழ்ச்சி அளித்திடும் விஷயம் அல்ல என்று கூறி எனது உரையை முடித்துக் கொள்கிறேன் .. நன்றி .. வணக்கம் .. (சோடா குடுங்கப்பா ... :-))

      (உதாரணம்: பாட்டில் பூதம் என்ற புத்தகம் ஐயாயிரம் ரூபாய்க்கு சமீபத்தில் விற்பனை ஆனது நான் அறிவேன்).

      Delete
    33. நண்பரே பாட்டில் பூதம் ஐந்நூறுக்கு பிடித்திடலாம் என்றிருந்தேன் . என்ன செய்ய ஆசிரியரை வண்ணத்தில் வெளி விட சொல்ல வேண்டியதுதான்.

      Delete
    34. //உடனே இதற்கு ஒரு கோஷ்டி, வாங்குபவர் வாங்கினால் உனக்கு என்ன என்பார்.//
      நிச்சயம் நண்பரே .
      சாதாரண மக்கள் பல வழிகளில் மகிழ்ச்சியான விசயங்களை தவிர்க்க பழகுகிறார்கள். சிலர் அன்றாட தேவையான உணவுகளை கூட இழந்து ஒரு வேளைதான் சாபிடுகின்றனர். தவறு அங்கே இல்லை நண்பரே . இயலாத ,இது போதும் என்ற எண்ணமே . எனக்கு ஐநூறு ரூபாய்க்கு பாட்டில் பூதம் சரி . அதற்க்கு மேல் என் நிலை முடியாது . ஆகட்டும் பாப்போம் என்று விட்டு விடுவேன் . பின்னொரு நாளில் கிடைக்கலாம் . இது கூட ஒரு தகுதி சம்மந்தமான விசயம்தான் நண்பரே . கோடீஸ்வரன் bmw வாங்குகிறான். அடுத்த நிலையில் உள்ளவன் அதற்க்கு கீழே ....இப்படி போய் கொண்டிருப்பதுதான் உலகம் இல்லையா ? பாட்டில் பூதம் வைத்திருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அதனை வாங்குபவர்கள் திறமைசாலிகள் . ஆசிரியரிடம் கேட்டு மறுபதிப்பில் அப்போதயதை விட , இப்போது உயர் தரத்தில் வாங்கி விட்டால் நாம் அதிர்ஷ்டசாலிகள் மட்டுமின்றி திறமைசாலிகள் கூட தானே !

      Delete
    35. @ஆதி
      //இப்போது கூட வசமாகக் கேலி செய்ய என் கைகள் பரபரக்கின்றன. இன்றும், நாளையும் அலுவலகத்தில் ஈ ஓட்டிக்கொண்டுதான் இருக்கப்போகிறேன். //

      கோபமாக பின்னூட்டமிட்டால் குணத்தை நாம் இழப்போம்!

      வேகமாக பின்னூட்டமிட்டால் அர்த்தத்தை நாம் இழப்போம்!

      அதிகமாக பின்னூட்டமிட்டால் அமைதியை நாம் இழப்போம்!

      ஆணவமாய் பின்னூட்டமிட்டால் அன்பை நாம் இழப்போம்!

      வெட்டியாய் பின்னூட்டமிட்டால் வேலையை நாம் இழப்போம்! :-))))!

      //வேறு காரணங்களுக்காக மறுமதிப்பு கேட்கலாம், தவறில்லை. ஆனால், பழைய 2 ரூ புத்தகம் இப்போது 20000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பதற்காக கேட்பது த‌வறு.//

      +1


      @ராகவன்
      //ஒரு மூத்த அரசியல் தலைவரின் இலக்கிய மற்றும் பெச்சுலக வாரிசு இனி யார் என்பது எனக்கு லேசா பிடி படற மாதிரி இருக்கு//

      ஒரு சிற்றூரில் ஒரு சிறிய வட்டத்துள் வாழ்ந்த எனது தாத்தாவுக்கு இருந்த சிந்தை-தெளிவு/உடல் உறுதி கூட எனக்கு இல்லாதபோது ஒரு இனத்தை inspire செய்த தலைவருக்கு எப்படி வாரிசாக முடியும்??எனது
      மூத்த சந்ததியரை இப்போதே ஏதோ லெமூரியர்களை போல அடிக்கடி ஆச்சரியாமாக பார்க்க தவறுவதில்லை. தற்போதைய அழுத்தம் நிறைந்த நமது வாழ்கை சூழலில், இன்னமும் ஒரு பத்து, பதினைந்து வருடங்களில் நமக்கு தற்போதிருக்கும் இந்த புற/அக நிதானத்தை நாம் இலக்காவிட்டால்
      அதைவிட ஆச்சர்யம் வேறு எதுவும் இல்லை.


      @ஸ்டீல்

      //என்ன இருந்தாலும் ஒரிஜினலில் படிப்பது போல யாரும் விரும்ப போவதில்லை .//

      உண்மை ஸ்டீல். பழைய அச்சும் பழுப்புநிரக்காகிதமும் stunning combination. பழைய புத்தகக்கடையின் மூலையில் தேடிஎடுக்கும், கிழிந்த அழுக்கு புத்தகம் கொண்டுவரும் உவகை வெள்ளம், ஏனோ புதிதாய் ஆர்ட் பேபரில் அச்சடித்து, அழகாய் உரையில் போட்டு,அச்சுமையின் வாசம் மறையாமல் நமது மேசை தேடிவரும் reprint காமிக்ஸ் புத்தகங்கள் கொடுப்பதில்லை. :-(


      @விஜய்
      //பழைய புத்தகங்களை அதிக விலைக்கு விற்பதும் தவறு; வாங்குவதும் தவறு என்றே இத்தனை நாளும் நினைத்திருந்தேன். //

      உலகம் எவ்வாறு சுழல்கிறதோ அதயோட்டியே நமது சுழற்சி அமையும் போது, இதில் மட்டும் நாம் மாறுபட்டிருக்க காரணம் என்ன இருக்கிறது? நேற்று வெளிவந்த புத்தகங்களை வாங்கி விற்பது தவறாகாத போது பத்து வருடங்களுக்கு முன்பு வந்த புத்தகங்களை விற்பது மட்டும் எப்படி தவறாகும். vintage என்பதற்கான எல்லைகோடு நிலையானது இல்லையே. மேலும் இதை நாம் கட்டுப்படுத்த நினைத்தாலும் சட்டரீதியாக நம்மால் அதை செயல்படுத்த முடியாதே. அவ்வாறிருக்கும்போது போது புத்திசாலித்தனமான முடிவு எடுப்பது அவசியமாகிறது. எ.எ.க !


      @ராகவன்
      //இவ்வாறான சாதாரண மக்களின் ஏக்கங்கள் சுரண்டப்படுவது நமக்கு மகிழ்ச்சி அளித்திடும் விஷயம் அல்ல என்று கூறி எனது உரையை முடித்துக் கொள்கிறேன்//

      என்னத்த சொல்ல. நீங்க சமீபத்துல நிறைய அரசியல் கூட்டங்களுக்கு போய் வந்திருக்கீங்கன்னு தெரியுது!

      Delete
    36. @ விஸ்கி-சுஸ்கி :

      சமீப கால உங்களது பின்னூட்டங்கள் மிகவும் ரசிக்க வைக்கின்றன :-). Thanks indeed.

      Delete
    37. @வி-சு,

      கலக்கலான, ரிதமிக்கான பின்னூட்ட பொன்மொழிகள் அழகு.

      //வெட்டியாய் பின்னூட்டமிட்டால் வேலையை நாம் இழப்போம்! //
      இரவுகள், ஞாயிறுகள் பார்க்காமல் கடுமையாக உழைக்கையில், வேலையில்லாத ஓரிரு நாட்கள் அப்பிடி இப்பிடி இருக்கத்தான் செய்வோம்! சர்வீஸ் ஃபீல்ட் பாஸ்!! இதெல்லாம் கண்டுக்கிறப்பிடாது!! ஹிஹி!!

      Delete
    38. @வி-சு,
      மிகத் தெளிவான நடுநிலையான பார்வை :)

      Delete
    39. Radja & Puranthaban

      நன்றி நண்பரே!இந்த தளத்தில் ரசிக்கப்படவேண்டிய,பாராட்டப்படவேண்டிய எழுத்துக்களுக்கு creater/ சொந்தக்காரர் ஒருவர் மட்டுமே! அவர் நமது ஆசிரியர்! உங்க compliments அனைத்தும் ஆசிரியருக்கே சாரும்!

      ஆதி
      //இரவுகள், ஞாயிறுகள் பார்க்காமல் கடுமையாக உழைக்கையில், வேலையில்லாத ஓரிரு நாட்கள் அப்பிடி இப்பிடி இருக்கத்தான் செய்வோம்! சர்வீஸ் ஃபீல்ட் பாஸ்!! இதெல்லாம் கண்டுக்கிறப்பிடாது!! ஹிஹி!!//
      நானும் உங்கள மாதிரி தான் பாஸ்! அலுவலகத்தினுள் பணி என்பதால் சற்று கூடுதல் நேரம் balaced ஆகா கிடைக்கிறது. பெரும்பாலான வேலைகளில் அந்த பொன்மொழிகளை எனக்கு நானா சொல்லிக்கொள்வேன். சில சமயம் முக்கிய அலுவல் பணியையும் புறந்தள்ளிவிட்டு இங்கே comments போட அமர்ந்துவிடுவதும் உண்டு.GOD SAVE US ALL! :-))))! நண்பர் ரபீக் சொன்னதை போல் இது ஒரு வியாதி...The Itch was too Big to Avoid.... !


      Delete
  17. நம்ம காமிக்ஸ் வாசிப்பு ஜெட்வேக பயணமாக தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்பு எப்படா காமிக்ஸ் வரும்ன்னு தெரிஞ்ச கடைகளில் கேட்டு , வெளிவரவில்லை என்றதும் அசட்டு சிரிப்போடு நகர்ந்த காலங்கள் போய், இப்போதோ அடுத்த மாத வெளியீடை இந்த மாத கைகளில் தவழ செய்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறீர்கள், நன்றி சார். அதேநேரம் தாங்கள், தங்களின் பணியார்கள் மேற்கொள்ளும் கடின உழைப்பே இந்த மின்னல்வேக வெளியீடுகளுக்கு காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. உங்களுக்கும், நம் தோழர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. // முன்பு எப்படா காமிக்ஸ் வரும்ன்னு தெரிஞ்ச கடைகளில் கேட்டு , வெளிவரவில்லை என்றதும் அசட்டு சிரிப்போடு நகர்ந்த காலங்கள்//

      Same feeling ++++

      // தாங்கள், தங்களின் பணியார்கள் மேற்கொள்ளும் கடின உழைப்பே இந்த மின்னல்வேக வெளியீடுகளுக்கு காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. உங்களுக்கும், நம் தோழர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சார்! //
      +1

      Delete
    2. :-) நம் பணியாளர்கள் சார்பில் நன்றிகள் !

      Delete
  18. டியர் எடிட்டர்ஜீ!!!

    இன்றுதான் டெக்ஸ் வில்லரின் நில் கவனி சுடு -வை படித்து முடித்தேன்.சித்திரங்கள் சற்று உறுத்தினாலும் விறு விறுப்பான கதைக்களம் அந்த கால கிளிண்ட் ஈஸ்ட்வுட் படங்களை கண்முன் நிறுத்தின.சமீபத்திய டெக்ஸ் கதைகளில் காணப்பட்ட ஆக்சன் வறட்சி காரணமாக சோர்வுற்றிருந்த டெக்ஸ் ரசிகர்களுக்கு இக்கதை ஆகப்பெரிய ஆக்சன் விருந்தாக அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.சட்டம் அறியா சமவெளியும் இதே BANG BANG ரக கதையாக இருக்கவேண்டும் என்பதே அடியேனின் அவா.

    அப்புறம் நமது வலைதளத்தில் அவ்வப்போது நடந்துவரும் குஸ்தி சண்டை பற்றி அடியேனின் அபிப்ராயம்....

    இந்த சண்டைகள் கொஞ்சம் இம்மெச்சூர்டாக இருக்கிறது.நாம் என்ன சிறு பிள்ளைகளா...?நம்மில் பலர் நாற்பதை நெருங்குகிறோம்.அல்லது நாற்பதை கடந்துவிட்டோம்.வயதிற்கேற்ற வார்த்தைகளை மட்டும் பயன்படுத்துவோமே.கடும் சொற்பதங்கள் நமது காமிக்ஸ் கலாச்சாரத்திற்கு ஏற்புடையது அல்லவே.ஒருமையில் ஒருவரையொருவர் தாக்கி பின்னூட்டமிடுவது படிக்க சகிக்கவில்லை.இது தவிர்க்கப்பட வேண்டும்.
    தங்களது சொந்த பெயர்களையும்,அடையாளங்களையும் மறைத்துக்கொண்டு "மாங்கா மடையன்","புரோட்டா தலையன்","நார வாயன்"-போன்ற புனை பெயர்களில் பின்னூட்டமிடும் புண்ணியாத்மாக்கள் எடிட்டரின் இந்த பதிவை படித்தாவது திருந்தவேண்டும்.இல்லையேல் அவர்கள் கடும் விளைவை சந்திப்பார்கள் (என்றெல்லாம் எழுத அடியேனுக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது.ஆனால்,விழப்போகும் அடியை நினைத்தால்தான் கொஞ்சம் உதறலாக இருக்கிறது.ஹிஹி!!!)

    ReplyDelete
    Replies
    1. பல பேருக்கு புது புது 'ஐடி' க்களை அள்ளி தந்த வள்ளலுக்கு வீர வணக்கம்... :) அதிலும் இந்த நா.வா வாவ்... சூப்பர் பாஸ்!!!

      Delete
    2. // (என்றெல்லாம் எழுத அடியேனுக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது.ஆனால்,விழப்போகும் அடியை நினைத்தால்தான் கொஞ்சம் உதறலாக இருக்கிறது.ஹிஹி!!!) //

      LOL - satan at his best

      Delete
    3. செயின்ட்ஜி: உங்களையும் அறியாமல் பல புது ஐடிக்களை உருவாக்கிட்டீங்களே ஜி :-) இனிமே நீங்க சொன்ன பேருல யாரு வந்தாலும் அது நீங்கதான்னு ஒரு லேசான சந்தேகமும் வருமே :-) :-) :-)

      Delete
    4. செயின்ட் அவர்கள் கூறியது போல் இங்கு யாம் எதிர்பார்ப்பது கண்ணியமான வார்த்தைகளை மட்டுமே.மற்றபடி விழப்போகும் அடியை நினைத்தால் உதறல் எடுக்கிறது என்பதும் உமது நகைச்சுவை உணர்விற்கு ஓர் எடுத்துக்காட்டு.

      Delete
    5. டியர் ராகவன்!!!

      //உங்களையும் அறியாமல் பல புது ஐடிக்களை உருவாக்கிட்டீங்களே ஜி :-) இனிமே நீங்க சொன்ன பேருல யாரு வந்தாலும் அது நீங்கதான்னு ஒரு லேசான சந்தேகமும் வருமே :-) :-) :-)//

      *அடியேனின் "ஜாதகம்" அப்படி ;-)

      Delete
    6. saint satan : //சட்டம் அறியா சமவெளியும் இதே BANG BANG ரக கதையாக இருக்கவேண்டும் என்பதே அடியேனின் அவா.//

      கவலையே வேண்டாம் - அக்மார்க் அதிரடி !

      Delete
  19. Vijayan27 April 2014 22:07:00 GMT+5:30
    சேலம் Tex விஜயராகவன் : //2013ல் 4 சொதப்பல்களுக்கு பிறகு 2014ல்தலையின் சூப்பர் ஹிட் ஓபனிங்கிற்கு பிறகு புது நம்பிக்கை வந்து விட்டது //

    "நிலவொளியில் ஒரு நரபலியும்", "சிகப்பாய் ஒரு சொப்பனமும்" சொத்தப்பல்கள் என்று சொல்ல முடியாதே நண்பரே - அன்பின் ஆசிரியர் அவர்களே இது கடந்த பதிவில் தாங்கள் எனக்கு அளித்த பதில். உலக கோப்பைனா பிரேசில் , சாம்பியன்ஸ் லீக்னா ரியல் மாட்ரிட் , பிரீமியர் லீக்னா மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டம் என்றாலே தனி அழகு சார். அது போல Texனாலே பவள சிலை மர்மம் , தலை வாங்கி குரங்கு , கார்சனின் கடந்த காலம் ........முகங்கள் தான் கண் முன்பே வருகிறது. இந்த பாழா போன மனம் ஒவ்வொரு Tex கதை வரும் போதும் மேற்கண்ட கதைகளின் ஓவியங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறது சார். என்னை பொறுத்த வரை அழகிய ஆர்ட் பாதி வெற்றிக்கு உத்தரவாதம் சார். என்னால் இம்மாத Tex முகத்தை துளியும் ஜீரணிக்க இயலவில்லை சார். இனியாவது நல்ல ஆர்ட் ஒர்க்ஸ் எதிர் பார்க்கிறேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : நண்பரே, 635+ கதைகள் கொண்ட டெக்ஸ் வரிசையில் சுமார் 30% கதைகளுக்கு மட்டுமே (நமக்கு) லட்சணமான டெக்ஸ் ஓவியப் பாணி உண்டு ! ஆகையால் கொஞ்சம் கொஞ்சமாய் இவற்றைப் பழகிக் கொள்ளவும் நாம் தயாராகிக் கொள்ளுதல் அவசியம் !

      ஒவ்வொரு லீக் மேட்சும் ஒரு உலகக் கோப்பை இறுதி ஆட்டமாய் அமைய வேண்டுமென்று எதிர்பார்ப்பது நியாயம் ஆகுமா ?

      Delete
  20. சிக் பில்லின் அட்டைப்படம் நன்றாகவுள்ளது! அடுத்தடுத்த அறிவிப்புகள் துள்ளவைக்கின்றன! ஜூன் மாதம் 2 கதைகளுடன் வருவாரென்ற டைலன் என்னவானார்...? LMS-க்கு அப்புறம்தான் தலைக் காட்டுவாரோ.?

    அதிரடி ஆக்சன், அளவான வசனங்களுடன் 96 பக்கங்களில் டெக்ஸ் இதழின் அளவில் வெளிவரவிருக்கும் 'மேஜிக் விண்டோ" வண்ணத்தில் ஓர் புதிய அனுபவத்தை வாசிப்பதில் விதைக்குமென்பதில் சந்தேகமில்லை.?

    "யாகவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு."


    பொருள்: ஒருவர் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவைக் காத்தல் வேண்டும். அவ்வாறு காக்கவில்லையென்றால் குற்றமான சொற்களைச் சொல்லித் தாமே துன்பமடைவர்!

    ReplyDelete
    Replies
    1. MH Mohideen : மேஜிக் விண்டின் முதல் பாகத்தை எழுதும் போதே அதன் மாறுபட்ட களம் ரசிக்கச் செய்கிறது ! வண்ணத்தில் அட்டகாசமாய் தோன்றப் போவது உறுதி !

      Delete
  21. Chick bill - front cover looks very good, this is one of the story that i had seen in "coming soon" advertisement for some time and its finally getting into print.

    It looks like editor is releasing the monthly books earlier, so that he can finish august books in July itself - In that way LMS will have its magnum opening on August. Second half of this year is going to be very exciting.

    ReplyDelete
  22. //1953 முதலாய் சிக் பில் கதைகள் பிரெஞ்சில் வெளியாகி வரும் போதிலும், இதர மொழிகளில் அத்தனை பெரிதாய் சோபிக்கவில்லை என்பது தான் புதிரான விஷயம் ! //

    இதில் என்ன சார் புதிரான விஷயம் இருக்க முடியும்.இதர மொழிகளில் ஹிட் அடிக்காததற்க்கு ஒரே காரணம் நீங்கள்! எஸ் பாஸ்! உண்மை தான்! உங்களை போல ஒரு translater பிற மொழிகளுக்கு வாய்க்கவில்லை என்பது மட்டுமே ஒரே காரணமாக இருக்க முடியும். we are very lucky indeed! எனக்கு என்னமோ விரைவில் உங்களுக்கு ஒரு திரைப்பட வாய்ப்பு கிடைக்கப்போவதாக மனதினுள் ஒரு பட்சி கூவுகிறது. congrats in advance !

    நீங்க ஏதாவது ஒரு புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததுண்டா சார் ??

    அப்புறம் இப்படி நாங்க இங்கே பகைபாரட்டும்போது கட்டிப்புரண்டு குருதிசிந்த சண்டையிட்டுக்கொள்வதும் பிறகு நட்பின் குலவிளக்காய் மாறி கட்டியணைத்து உச்சிமுகர்ந்து கொள்வதும் எங்கள் காமிக்ஸ் குலவழக்கம் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

    எங்களது சண்டை எவ்வாறிருக்கும் என்பதற்கு கலிங்கத்துப்பரணி இவ்வாறிருக்கும் என்கிறது

    "இரு தொடை அற்றிருக்கும் மறவர்கள் எதிர் பொருகைக் களிற்றின் வலி கெட
    ஒரு தொடையைச் சுழற்றி எறிவர்கள் ஒரு தொடை இட்டு வைப்பர் எறியவே"

    இடுப்பு வரை இரண்டு கால்களையும் சண்டையில் இழந்தவர்கள், பக்கத்தில் கிடக்கும் தன் கால்களில் ஒன்றை எடுத்து யானை மீது வீசி எறிந்து அதைச் சாய்க்கப் பார்க்கிறார்களாம், இன்னொரு தொடையை அடுத்த யானைக்கு விட்டு வைக்கிறார்களாம். ரொம்பத்தான் தைரியம்!

    சண்டை முடிந்தபின் இங்கே நடப்பது இன்னொரு கூத்து

    "பொருதடக்கை வாளெங்கே மணிமார் பெங்கே
    போர்முகத்தி லெவர்வரினும் புறங்கொ டாத
    பருவயிரத் தோளெங்கே யெங்கே யென்று
    பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்"

    பின்னூட்டமிடும் நண்பர்கள் சண்டைக்குப்பின் சிறிதுகாலம் காணாமல் போவார்கள். அப்படி காணாமல் போனவர்களின் நண்பர்கள் இங்கே வந்து அவர்களை தேடி அலைந்து கடைசியாக பைரவியை இப்படி கேட்பார்கள்.

    பிறகு இறுதியாக போர்முடிந்தபின்,.

    "விருந்தினரும் வறியவரு நெருங்கி யுண்ண
    மேன்மேலு முகம்மலரு மேலோர் போலப்
    பருந்தினமுங் கழுகினமுந் தாமே யுண்ணப்
    பதுமமுக மலர்ந்தாரைப் பார்மின் பார்மின்."

    இதற்கு விளக்கம் தேவையா என்ன? சண்டையிட்ட வீரர்கள் காயங்களுடன் சோர்வாக அமர்திருக்க, அவர்களின் சண்டையை பார்த்து பொறுக்காத மௌன பார்வையாளர்கள், பருந்தாகவும் கழுகாகவும் மாறி அவ்வீரர்களை கிழி கிழியென கிழிக்கும்போது, அந்த நிலையிலும் வீரர்களின் முகம் தாமரை போல மலர்ந்திருக்கிறது.


    அனந்தவன்மனும்,குலோத்துங்கனும் இப்போதில்லை என்றாலும் அவர்கள் வழியில் வந்த நாம், நம் வீர தீர பராக்கிரம வரலாற்றை மறக்கலாமா ??

    அதனால் எங்களை பார்த்து தவறான ஒரு முடிவுக்கு வரவேண்டாம், எங்களுக்கு இவ்வளவு பெரிய அட்வைசெல்லாம் அவசியமில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். :-)))!

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பரே,கடந்த பதிவில் குஸ்திகள் பல போட்டதும்,இப்பதிவில் கட்டி விளையாடுவதும் நண்பர்களுக்குள் சகஜம் என விளக்கத்துடன் எடுத்துரைத்து இது நண்பர்களுக்குள் வரும் ஊடல் வகையைச் சார்ந்த விவாதமே என நீவீர் இட்ட பதிவைக் கண்டு மகிழ்ந்து கூறுகிறோம் உமக்கு நன்றி. இதேபோல் ஆக்கபூர்வ செயல்கள் நடைபெற்றால்தான் நமக்கும் ஆசிரியரிடமிருந்து பல பல காமிக்ஸ்கள் கை மேல் பலனாய் கிட்டிடும்.நடந்ததை மறந்து நல்லதே நடக்கபோவதை நினைத்து நீர் இட்டிருக்கும் இப்பதிவு உமது அவாவை காட்டிடுகிறது.நன்றி

      Delete
    2. விஸ்கி-சுஸ்கி : வரலாற்றையும், இலக்கியத்தையும் காமிக்ஸையும் ரவுண்ட் கட்டி அடித்திருக்கும் பின்னூட்டம் - யப்பாடி !

      //எனக்கு என்னமோ விரைவில் உங்களுக்கு ஒரு திரைப்பட வாய்ப்பு கிடைக்கப்போவதாக மனதினுள் ஒரு பட்சி கூவுகிறது//

      மொழு மொழுமண்டை நெல்லை பாஸ்கருக்கு துணைக்கு ஆள் குறைவதாய் தகவல் ஏதும் வந்துச்சா சார் ? :-)

      Delete
  23. டியர் எடிட்,

    உள்ளம் கவர்ந்த சிக்பில் கதைகள் மீண்டும் தலைகாட்ட போவது அறிந்து மகிழ்ச்சியே. நமக்கெல்லாம் இவ்வளவு பிடித்தமான இந்த கதை தொடர், பெரும்பான்மையான மேலை நாட்டு ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது ஏன் என்று தெரியவில்லை. சினிபுக் நிறுவனத்தினடரிடம், இத்தொடரை வெளியிட கோரி பல முறை கேட்டும், பார்க்கலாம் என்ற பதிலே வருகிறது. நமது இதழ்கள் மூலம் இவர்கள் கதைகள் தொடர்ந்து வரும் என்ற நம்பிக்கையுடன், தொடர்கிறேன்.

    உண்மையை கூற வேண்டுமானால் சிக்பில் கதைகளின் ஆரம்ப கால கதை தரம், சமீபத்திய இதழ்களில் குறைவு என்பது தெள்ளதெளிவு. ஆரம்ப கால கதைவரிசைகள் டிஜிட்டல் கோப்புகளாக உருமாறும் வேளையில் ஒன்று விடாமல் அனைத்தையும் வெளியிட்டு விட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

    ஒரிஜினல் அட்டை அப்படியே இடபட்டிருப்பதில் மகிழ்ச்சியே, என்றாலும் மொத்தமும் ஊதா கலர் கொஞ்சம் அதிக இடத்தை ஆக்கிரமித்து விட்டது போல இருக்கிறது. கதாநாயகர்களின் முகங்களை அட்டையில் பேக்ரவுண்ட் ஓவியத்துடன் புல் ப்ளோஅப் செய்திருந்தால் அட்டை இன்னும் பிரமாதமாக வந்திருக்கும்.

    பி.கு.: பல மாமாங்களாக மவுனமாக மட்டும் படித்து வந்த வலைதளத்தில், மீண்டும் கருத்திட வைத்தது பதிவின் உங்கள் கடைசி வார்த்தைகள். முன்பு போல வெளியிடும் அனைத்து இதழ்களையும் முதலில் படித்து முடித்துவிட தற்போது நேரம் போதவில்லை என்றாலும், சந்தாவில் கிடைக்கும் புத்தகங்களின் மீதான என் கருத்தை, வழக்கம் போல இனி தொடர்ந்து பதிவேன், நேர கால அவகாசபடி.

    ReplyDelete
    Replies
    1. Hooeee....
      great to see you bhai..
      Welcome back

      Delete
    2. டியர் ரபிக் !!!

      அஸ்ஸலாமு அலைக்கும்...!

      Delete
    3. Rafiq Raja : Welcome back & make yourself at home !!

      சிக் பில் வரிசையின் '70s படைப்புகளை அடித்துக் கொள்ள சமீபத்திய கதைகளுக்கு வலு பற்றாது என்பதில் மறு பேச்சுக்கே இடம் கிடையாது ! தொடரில் ஒரு விதத் தொய்வு அதன் ஆசிரியருக்கே எழுந்து விட்டதை பின்னாட்களின் ஆக்கங்கள் உணர்த்துகின்றன என்பதை சுலபமாய்ப் புரிந்து கொள்ள முடிகின்றது தானே !! ஏதாவதொரு அதிசயம் நிகழ்ந்து படைப்பாளிகள் இதனை முழுமையாய் digitalize செய்ய முன்வருவார்கள் என்று நம்புவோம் !

      Delete
  24. attai padam alagu...june idhalukku may maatham muthley kaathirukiren sir..

    ReplyDelete
  25. நண்பர்களின் கலகம் நன்மையில் முடிந்துள்ளது. போன பதிவில் நண்பர் காமிக்லவரும் இப்போது நண்பர் ரஃபீக் ராஜாஉம் மீண்டும் பதிவிட வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று . வாருங்கள் நண்பர்களே சம பந்தி விருந்தை உண்டு மகிழலாம்.

    ReplyDelete
  26. Dear sir . .
    Enke ungalidam ealuppapadu kelvikaluku neengal pathil sollalenalum parava ellai . . Ungal saarpil pathil solvathai nirutha sollungal . . Appuram chat il seyya vendiya . . " saappitya . . Thoonguniya . . Eantha eadathil eruka . . Poandra arivarantha vivathangalai nirutha sollunga . . Ungaluku punniyama poagum . .

    ReplyDelete
  27. // டியர் எடிட் //

    அட!! இந்த வார்த்தைகளைக் கேட்டு எவ்வளவு நாளாச்சு!!!

    Welcome back, Rafiq! :)

    ReplyDelete
  28. சேலம் ஈரோடு விஜய நண்பர்களே.... சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்களில் நீங்கள் திரும்ப திரும்ப அழைத்தும் வராமல் இருந்து விடுவேனா என்ன....

    8 வயதில் தோன்றிய காமிக்ஸ் காதல், அதுவும் தமிழ் மொழி மூலம்... தமிழில் வரும் ஒரே காமிக்ஸ் நிறுவனத்தில் வலைபக்கத்தில் தலை காட்டாமல் மவுனம் சாதிப்பதை அனுமதிக்கவில்லை.... The Itch was too Big to Avoid.... :D

    3 வருடமாக சராமரியாக வந்த காமிக் புத்தகங்களை இவ்வாரம் தான் ஒரு சேர எடுத்து பார்த்தேன்... படிக்க விட்டு போனவற்றை இம்மாத இதழில் இருந்து தொடங்கனும்.... ம்ம்.... எவ்வளவு பெரிய மாத்திரை :)

    ReplyDelete
    Replies
    1. சுகமான சுவையான சுத்தமான மாத்திரைன்னு சொல்லுங்கள் நண்பரே!

      Delete
  29. மதிற்பிற்குரிய ஆசிரியரே,
    எனது அபிமான கதாநாயகர்களான மாயாவி மற்றும் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை நீண்ட காலமாக இழந்து மீண்டும் வராதா அல்லது கிடைக்காதா என ஏங்குகின்றேன்... உங்கள் புத்தகங்களில் மாயாவி , ஜேம்ஸ் பாண்ட் கதைகளை மீண்டும் வெளியிடவே முடியாதா... புதிய கதையாக இருந்தாலும் மகிழ்ச்சியே... பழைய கதையாயினும் இரட்டிப்பு மகிழ்ச்சியே... இதை நீங்கள் வெளியிடும் பட்சத்தில் மட்டுமே நான் ஆண்டு சந்தா மூலம் தங்களது அனைத்து புத்தகங்களையும் இங்கு (France) பெற்று கொள்ள ஆவலாக உள்ளேன்... இப்பொழுது நான் டெக்ஸ் மற்றும் டைகர் புத்தகங்களை மட்டுமே வாங்குகின்றேன்... எனது ஆவல் நிறைவேறுமா ஆசிரியரே... இதற்க்கு தங்களின் முடிவு அல்லது பதில் என்னவாக இருக்கும் என்று அறிய ஆவலுடன் உள்ளேன்.... மீண்டும் அவர்கள் வருவார்களா என எனது ஆவல் அதிகரித்து கொண்டே செல்கின்றது... என்னை போல இன்னும் நிறைய வாசகர்கள் இருப்பார்கள் என நிச்சயமாக நம்புகின்றேன்... தங்களின் பதிலை ஆவலுடன் எதிர் பார்கின்றேன்....!!!!

    ReplyDelete
    Replies
    1. James Bond Prashanth 007 : மாயாவி கதைகள் என்றோ நிறைவு பெற்றதொரு தொடர் என்பதால் அதனில் புதுக் கதைகள் கிடையாது ! ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் பெரும்பான்மை ராணி காமிக்ஸ் நிறுவனத்தால் ஏற்கனவே வெளியிடப்பட்டு, பரவலாய் விற்பனை கண்டவை ! So அவற்றை நாம் மறு ஒளிபரப்பு செய்வதில் சுவாரஸ்யம் என்ன இருக்கப் போகிறது ?

      Delete
  30. சமீபத்தில் வந்த கதைகள் பற்றிய என் எண்ணங்கள்.
    எஞ்சி நின்றவனின் கதை. - திருப்தியான இதழ். அதிரடி ரசிகர்களுக்கு செம விருந்து. (ஒரு சந்தேகம். ஷெல்டன் தொடர்களுக்கு van hamme தான் கதாசிரியர் என்று எண்ணியிருந்தேன். அனால் வேறு ஒருவர் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.. )

    எதிர் வீட்டில் எதிரிகள் - சமீப காலமாக லக்கி யின் இதழ்களை ஆர்வம் இல்லாமல் தான் வாங்கி கொண்டிருக்கிறேன். நகைச்சுவை பஞ்சம், சுமாரான கதை என சமீப லக்கி இதழ்கள் எதுவுமே மனதில் நிக்கவில்லை. (நீரில் பார்த்த ஓரிரு நண்பர்களும் இதே கருத்தை பிரதிபலித்தார்கள்) நகைச்சுவையில் சிக் பில் மற்றும் மந்திரியார் கதைகள் மட்டுமே திருப்தி அளிக்கும் வகைளில் இருக்கின்றன. லக்கி கதைகள் ஓவர் டோஸ் ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது. எதிர் வீட்டில் எதிரிகள் - சுமார் கதைகளில் கொஞ்சம் பரவாயில்லை ராகம் என்பது ஆறுதல்.

    thorkal - ரொம்பவும் மோசமில்லை. போக போக பார்ப்போம்.

    நில் கவனி சுடு - பாதி கதைதான் படித்துளேன். இப்போதுதான் டெக்ஸ் ஊருக்குள் பிரவேசிக்கிறார். அனால் இந்த கதையை விமர்சிக்க பாதி கதையே போதும். பட்டாசாக போகிறது.

    முகமற்ற கண்கள் - ஒரு பழைய hit திரைப்படத்தை multiplex திரை அரங்கில் பார்த்த feeling. நான் முதன் முறையாக இந்த கதையை படிக்கிறேன். எளிமையான கதை, அழகான சித்திரங்கள் என நான் ரசித்துதான் படித்தேன். இதே கதையை சின்ன sizeல் கருப்பு வெள்ளையில் வெளிட்டு இருந்தால் அனைவருக்கும் பிடித்து இருக்குமோ....

    ReplyDelete
    Replies
    1. SIV : வான் ஹம்மே துவக்கி வைத்த ஷெல்டன் தொடரை தொடர்வது வேறு எழுத்தாளர்கள் !

      லக்கி லூக் கதைகளில் நாம் துவக்க நாட்களில் தேர்வு செய்து போட்டவைகள் சகலமுமே நகைச்சுவைத் தோரணங்கள் ! ஆனால் 75+ கதைகள் கொண்டதொரு தொடரில் ஒவ்வொரு முறையும் வயிற்றைப் பதம் பார்க்கும் ரகக் காமெடி அமைவது ரொம்பவே சிரமம் ஆகாதா ?

      ASTERIX & OBELIX தொடரை நீங்கள் ரசித்திருக்கும் பட்சத்தில் எனது கருத்தை சுலபமாய்ப் புரிந்து கொள்ள இயலும் ! துவக்கத்தில் தயார் செய்யப்பட ஒரு செட் கதைகளைத் தாண்டி அத்தொடரில் வேறு கதைகளை உருவாக்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை ! Simply becauseஅந்த goldenage படைப்புகளில் ஒவ்வொன்றும் ஒரு சிரிப்பு வெடிகுண்டாய் அமைந்த பின்னே, ஒரு லெவல் குறைச்சலான கதைகள் கூட எடுபடுவது சிரமம் என்பதைப் படைப்பாளிகள் புரிந்து கொண்டனர். வியாபாரக் காரணங்களை மனதில் கொண்டு பின்னாட்களில் வெளியான ASTERIX கதைகள் எவையும் ஒரிஜினல் தரங்களில் அமையவில்லை !

      காமெடி கதைகளுக்கு உள்ளதொரு சிக்கல் இது ! சிக் பில் கதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல !

      Delete
  31. விஜயன் சார், இந்த முறை அட்டை படத்தில் உள்ள நீல கலர் சமீபத்தில் வந்துள்ள நமது இதழ்களில் உபயோக படுத்தாத கலர், வித்தியாசமாக உள்ளது.

    இந்த இரண்டு ஜூன் மாத இதழ்கள் விரைத்து எங்களை அடைவதை விட சற்று தாமதமாக வந்தாலும் பரவாயில்லை ஆனால் தரத்தில் குறை இல்லாமல் வருமாறு பார்த்துகொள்ளவும். கடந்த மாதம் இதழ்களில் உள்ள குறைகள் மறுமுறை ஏற்படாமல் பார்த்து கொள்ளவும்.

    மறுபதிப்பு பற்றிய எனது கருத்து:- கருப்பு&வெள்ளை மற்றும் வண்ண கதைகளில் நம்மிடம் உள்ள சிறந்த ௧௦ கதைகளை நமது தளத்திலும்/புத்தகத்தில் வெளி இட்டு நமது வாசகர்களை மின் அஞ்சல்/கடிதம் மூலம் தெரிவிக்க சொல்லலாம்; பெருமதிப்பு பெற்ற கதைகளை வெளி இடலாம்; மீதம் உள்ள புத்தகம்களை அடுத்த மறுபதிப்பில் வெளி இடலாம். இதன் மூலம் இணைய தளத்திற்கு அப்பால் உள்ள வாசகர்களின் கருத்துகளை கேட்பது உடன் கடைசி நேரத்தில் அறிவித்த கதைகளை வெளி இட முடியாமல் கடத்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்களை தவிர்க்கலாம்.

    நமது சில கருத்துகள் தளத்தில் உள்ள சிலரை மறைமுகமாக காயப்படுத்தும் என்பதற்கு கடந்த பதிவு மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளது என்றால் மிகையில்லை... சில நண்பர்கள் மீண்டும் விலகி சென்று உள்ளனர்.

    நண்பர் "Saint Satan" கூறியது போல்
    // வயதிற்கேற்ற வார்த்தைகளை மட்டும் பயன்படுத்துவோமே.கடும் சொற்பதங்கள் நமது காமிக்ஸ் கலாச்சாரத்திற்கு ஏற்புடையது அல்லவே.ஒருமையில் ஒருவரையொருவர் தாக்கி பின்னூட்டமிடுவது படிக்க சகிக்கவில்லை.//

    அதே போல் இங்கு இடப்படும் கருத்துகளுக்கு சக வாசகர்களாகிய நாம் பதில் சொல்வது முறையாகாது, அந்த வேலையை ஆசிரியரிடம் விட்டு விடுவோம், என்னை பொறுத்தவரை அது நமது ஆசிரியர் வேலை; நமது ஆசிரியர்க்கு இவைகளை கையாள போதுமான முன் அனுபவம்கள் உள்ளன என்பதையும் நாம் உணர்த்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்

      Delete
  32. To: Editor,

    நண்பர் Rafiq Raja கூறியதுபோல சிக்பில் கதைகளின் ஆரம்ப காலத்து கதைகளின் சுவாரஸ்யம் இப்போதுள்ள கதைகளில் குறைவு என்பது உண்மையே.

    முன்னைய கதைகளில் அடிப்படைக் கதை சிறியதாக இருந்தால்கூட, அதனை அழகாக த்ரில் மற்றும் காமெடி கலந்து விறுவிறுப்பாகத் தந்திருப்பார்கள் (தமிழில் ஆசிரியரின் கைவண்ணம்!).

    ஆயினும், இப்போதுள்ள கதைகள் டெலி ட்ராமாவின் ஒரு எபிசோட்டை எப்படி ஜவ்வாக இழுப்பார்களோ, அவ்வாறு இழுத்து சட்டென்று முடிக்கிற பாணியிலேயே அமைகின்றன. இது, ஒரு நிறைவான கதையைப் படித்த திருப்தியைத் தருவதேயில்லை. முன்னைய கதைகள் மீண்டும் வந்தால், சிக்பில் அன்ட் கோவுக்கு மீண்டும் ஒரு ராஜ மரியாதை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை!

    ஒரு காலத்தில் வந்து காணாமல்போய்விட்ட ஹெர்லாக் ஹோம்ஸ் காமெடி நாயகரின் கதைகள் ஏதும் மீதமிருந்தால் கொண்டுவரலாமே சார்?

    அது மட்டுமல்லாமல், முத்து காமிக்ஸ் இல் கலக்கிய ஒரிஜினல் 'ஷெர்லாக் ஹோம்ஸ்' கதைகள் கலரில் வந்துள்ளனவே? (புதிய கதைகள்). அவற்றினை முடியுமானால் கொண்டுவரலாமே? நிச்சயம் நம் வாசகர்களிடத்தில் அவை வரவேற்பைப் பெறும் என்றே நம்புகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை காமிக்ஸ் ஆக்கிடா நிறுவனங்களே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு ஆளாளுக்கு ஒவ்வொரு மொழியில் அவரை உலாவச் செய்து வருகின்றனர் ! நாம் முன்பு முத்து காமிக்ஸில் வெளியிட்டவை புராதன newspaper strips ; தற்போது வண்ணத்தில் வருபவை அவையல்ல ! பிரெஞ்சில் தற்போது வரும் ஒரு S.H.ஆக்கம் அட்டகாசமாய் தெரிகிறது ; முயற்சித்துப் பார்க்க வேண்டும் 2015-க்கு !

      Delete
    2. ஆமாம். அருமையான தொடராக தெரிகிறது சார். ஹோம்ஸ் திரைப்படங்களும் இப்போது அபாரமாய் தயாரிக்கப்பட்டுவரும்வேளையில் நிச்சயம் அவர் மறுபடியும் நமது காமிக்ஸ்களிலும் ஒரு ரவுண்டு வருவார்!

      Delete
  33. டியர் விஜயன் சார்,

    பைங்கிளிப் படலத்தின் மாதிரிப் பக்கம் அக்மார்க் "கிட்"பில்! :) சிக்பில் தொடரின் unofficial கதாநாயகனான 'கிட் ஆர்டின்' காதலித்தால், அது 'ஒரு கழுதையின் கதை'; ஆனால், 'டாக் புல்' காதலித்தால் மட்டும் அது பைங்கிளிப் படலமோ?! ;) 'ஒரு எருமையின் கதை' என்று பெயர் வைத்திருக்க வேண்டாமோ? :D

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga @ //'ஒரு எருமையின் கதை' என்று பெயர் வைத்திருக்க வேண்டாமோ? //
      LOL

      Delete
    2. என்ன ஒரு ஓர வஞ்சனை எங்க செந்தில் "கிட் ஆர்டின்" மேல :-)

      Delete
    3. Karthik Somalinga : இந்த இதழில் ரோமியோக்களின் எண்ணிக்கை ஒன்றல்ல - இரண்டு ! So கதையின் தலைப்பு - காதலியை நோக்கியே என்று வைத்துக் கொள்ளுங்கள் !!

      Delete
  34. இம்மாத சொதப்பல்களுக்கு பிறகு கோடீஸ்வர கோமானும் , சிக் பில் & கோவும் ஆறுதல் அளிப்பார்கள் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : சொதப்பலுக்கும் - சூப்பருக்கும் இடைப்பட்டதொரு நிலை மே மாதத்து இதழ்கள் என்பது எனது சொந்த அபிப்ராயம் ! தோர்கல் கதைகளை அந்த பாணிக்காக ஏற்றுக் கொள்ளாவிடின் அவை நிச்சயம் அந்நியமாகவே தோன்றும் !

      Delete
    2. தோர்கல் எனக்கு புரியவில்லை என்பதற்க்காக குறை சொல்ல மாட்டேன்... அதுவும் வர போகும் கதைகள் ஒரு விருந்து என்று ஆசிரியர் உறுதி அளிக்கும் போது!!!\

      எனக்கு புரியாதது முகமற்ற கண்கள் மறுப்துப்பு தான்!!! எப்படி உள்ளே நுழைந்து என்பதுதான்!!???

      Delete
  35. டியர் எடிட்டர்,

    Translator போட்டிகள் குறித்து :

    ஒரு முழு புத்தகத்தை ஒரு வாசகர் translate செய்ய வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்தால் - பதிப்புக்குரிய ஒரு மொழியாக்கம் அவ்வாறு அமைந்து விட்டால் - அது புதிய கதை எனில் ஒரு translator-ன் முழு சன்மானமும், மறுபதிப்புக் கதை எனில் (வேறு நடையில் வேண்டுமெனில்) பாதி சன்மானமும் அறிவிக்கலாமே? (80 N கருத்து).

    பி கு: ஒவ்வொரு முறையும் நமது பங்களிப்புகளுக்கு பெயர் மட்டும் போட்டுக்கொண்டிருந்தால் நம்மவர்களுக்கு 'மங்கள விலாஸ் பாத்திரக் கடை' ஞாபகம் வந்திடப்போவுதுங்கோ :-) :-)

    ReplyDelete
    Replies
    1. Raghavan : மாதா மாதம் அடியேன் நிற்பது 'மங்கள விலாஸ் பாத்திரக் கடையின் லைனில் தான் என்பதை நினைவுபடுத்துகிறீர்களே ?!! நமக்குக் கட்டுபடியாகும் தொகைகளுக்கு இன்று 'சன்மானம்' என்று பெயர் வைத்தால் ஊற வைத்து உதைக்கப் போகிறார்கள் !

      Jokes apart, சந்தாவில் சேராத இதழ்களாய் வரும் ஏதாவதொரு one shot கதையினில் இந்த முயற்சியை செய்து பார்க்கலாம் ! 'இது புதியவரின் மொழியாக்கம் !' என்பதற்கு ஒ.கே. சொல்லி வாங்கும் போது திறந்த மனங்களோடு புதிய எழுத்துப் பாணியை நண்பர்கள் ரசிக்கக் கூடும் !

      Delete
    2. /* நமக்குக் கட்டுபடியாகும் தொகைகளுக்கு இன்று 'சன்மானம்' என்று பெயர் வைத்தால் ஊற வைத்து உதைக்கப் போகிறார்கள் ! */

      @ எடிட்டர்,

      நிச்சயம் கிடையாது. என் பணி விடுமுறை நாட்களில் என் நண்பனின் நிறுவனத்திற்கு சில பணிகளுக்கு நான் consulting செய்வதுண்டு. அதற்கு வரும் சன்மானம் எனது சம்பளத்தைவிட மிகக் குறைவே - எனினும் அதனை சன்மானமாகவே பாவிக்கிறேன். நான் செய்யும் பகுதி நேர translation பணிகளுக்கும் சன்மானம் உண்டு.

      இவைகளில் வரும் பொருளின் அளவு எவ்வாறிருந்தாலும் அவைகளைப் பெறும் இடங்களால் (சபைகளால் என்றும் கொள்ளலாம்) மதிப்பு மிக உயர்வானது - எனவே சன்மானம்தான்!

      இங்கும் நம்மவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் !

      Delete
  36. "முகமற்ற கண்கள்" முதல் முறையாக படிக்கிறேன், அந்நாளைய "typical" நமது காமிக்ஸ்; நன்றாக இருந்தது. மொத்ததில் இந்த வண்ணகதையில் சித்திரத்தை ரசித்த இடங்கள் பக்கம் 35 மற்றும் 42. முதல் முறையாக ப்ருனோ பிரேசில் குழுவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து சாகசம் நிகழ்த்திய ஒரு கதை.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : கேப்டன் பிரின்ஸ் போன்ற சாகசக் கதைகளில் கடல்கள், கானகங்கள், பாலை நிலங்கள் என்று களம் வேறு மாதிரி அமைவதால் அங்கே timeline ஒரு பெரிய நெருடலைத் தோற்றுவிக்க மாட்டேன்கிறது ! ஆனால் ப்ருனோ போன்ற 'நகரத்துக் கதைகளில்' தவிர்க்க இயலா அந்தப் புராதன நெடி தான் நெருடலே ! தவிர, ஜெட்டில் சுற்றித் திரியும் லார்கோவைப் படித்துப் பழகிய பின்னர் - டாக்சியில் ஷண்டிங் அடிக்கும் ப்ருனோவை ரசிக்க நண்பர்களின் ஒரு பகுதியினர் திணறுவது தெரிகிறது !!

      Delete
  37. அன்பு நண்பர்களே.. இந்த தளத்தில் நாம் கூடியுள்ளது காமிக்ஸ் மீதான காதல் தவிர வேறு ஒன்றும் இல்லை, நமது காதலை ( மாற்று கருத்து என்கின்ற பெயரில்) ஏளனம் செய்பவர்கள் , மேலும் இரண்டு போஸ்ட்க்கு மேல் போட்டால் அவர்களை வேலை இல்லாமல் வீண் சண்டைக்கு அலைபவர்கள் (அவர் அவர் தகுதிக்கு ஏற்ப அனைவரும் வேலைக்கு செல்பவர்கள் தாம் நாம் அனைவரும் ), ஆபத்தான கருத்துக்களை பரப்புபவர்கள் என்று சொல்வது, நமது ஆஸ்ரியரின் எழுத்துகளை விமர்சனம் என்கின்ற பெயரில் ஏளனம் செய்வது ( மியாவி குறித்து ஒரு நண்பர் பகிர்ந்த கருத்துக்கு சிப்பாயின் சுவடுகள் குறித்து ஒருவர் எழுதியது) மேலும் ஆசிரியரின் எழுத்து , கதை தெரிவு குறித்து பாராட்டினால் உடனே ஜாலரா அடிப்பவர் என்று நக்கல் அடிப்பது!!! இத்தகைய போக்கு தொடர்ந்து வருவதால் இனி நான் இங்கு பதிவிட மாட்டேன் !! இது வரை என் பதிவினை வாசித்த நண்பர்களுக்கும் , இந்த தளத்தை அமைத்து தந்த அன்பர்களுக்கும், நமது எடிட்டர் மற்றும் அவர்களது குழுவினர்க்கும் நன்றிகளை சமர்ப்பித்து விடை பெறுகின்றேன்!!

    ReplyDelete
    Replies
    1. Balaji Ramnath :

      நமக்கு காமிக்ஸ் முக்கியம்...ஆதனால இங்க வரோம்....கமெண்ட்ஸ் போடுங்க....reply it if necessary... ரொம்ப time இருந்துச்சுன கமெண்ட்ஸ் படிங்க....please don't take all the persons comments personally... னிங்க போகும் அளவுக்கு இங்கு எதுவும் நடக்க வில்லை....உங்கள் முடிவை மாற்றவும்...PLEASE!!!

      Delete
    2. @ Balaji ramnath

      "ஹைய்யா! இன்னொரு விக்கெட்டும் காலி" என்று சம்மந்தப்பட்டவர்கள் தம் நோக்கம் நிறைவேறிக்கொண்டிருப்பதை எண்ணி குதூகலமடைய வைக்குமே உங்களின் இந்த 'இனி இங்கு வரமாட்டேன்' அறிவிப்பு!

      கெட்ட எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே இத்தளத்தில் நிறைந்து கிடக்கும் ஒரு நன்னாளில் இப்படியானதொரு முடிவை நீங்கள் எடுத்திட நேர்ந்தால் உங்கள் வழியை மறித்துக்கொண்டு நிற்கமாட்டேன் தான்! ஆனால் இன்னும் அப்படிப்பட்ட நிலைமை வந்துவிடவில்லை நண்பரே!

      எடிட்டரின் இந்தப் பதிவை மீண்டும் ஒருமுறை ஆழ்ந்து படித்தீர்களென்றால் உங்கள் மனதில் இதுபோன்ற எண்ணங்கள் தோன்றாது எ.எ.க!

      Delete
    3. /கெட்ட எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே இத்தளத்தில் நிறைந்து கிடக்கும் ஒரு நன்னாளில் இப்படியானதொரு முடிவை நீங்கள் எடுத்திட நேர்ந்தால் உங்கள் வழியை மறித்துக்கொண்டு நிற்கமாட்டேன் தான்! ஆனால் இன்னும் அப்படிப்பட்ட நிலைமை வந்துவிடவில்லை நண்பரே!/ பாஸ் என்னாது இப்படி சொல்லிபுட்டிங்க??? நீங்க எப்போதுல இருந்து இங்க வந்திங்க னு மறந்தாச்சா???? அது முன்னால இங்க இருந்தவங்க எல்லாம் கெட்ட எண்ணம், மொள்ள மாரித்தனம்... இத்யாதி இத்யாதி கொண்டவர்கள் மட்டுமா??? பரவால்ல பாஸ். நீங்கள் ஒருவராவது 'புனிதர்' போல எங்களை ரட்சிக்க இருக்கும் வரை அந்த கெட்ட ஆவிகள் வராது என்பது திண்ணம்... நீங்கள் இருக்கும் வரை அந்த நிலைமை வராது என்பதே எங்களுக்கு நிம்மதி பாஸ். சாருக்கு எல்லோரும் ஒரு தடவை ஜோரா கை தட்டுங்க பாப்போம்...

      Delete
    4. balaji ramnath : உங்கள் சிந்தைகளை, அபிப்ராயங்களைப் பதிவு செய்ய நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் - 'இதற்கு அவர் எவ்விதம் ரியாக்ட் செய்வார் ? ....இவர் என்ன சொல்வாரோ ?" என்ற பதட்டம் நிச்சயமாய் இங்கு தேவை இல்லை ! ஆனால் தோளுக்குப் பின்னே திரும்பிப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு செயலிலும் ஈடுபடும் விதமானதொரு சூழல் இங்கு நிலவ நேர்ந்தது நிச்சயமாய் வருத்தம் தரும் விஷயமே !

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  38. கார்சனின் கடந்த காலம் மறுபதிப்பு எபோது என்பது பற்றி ஏதனும் hint கொடுக்கலாமே Editor Sir?? உழைப்பாளிகள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : 2014-ன் முதல் பாதி கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில் , எஞ்சி நிற்கும் இரண்டாம் பாதியில் தான் "கா.க.கா" இருக்குமென்பதை நான் சொல்லவும் வேண்டுமா சார் ?

      Delete
    2. //..இரண்டாம் பாதியில் தான் "கா.க.கா" இருக்குமென்பதை ..//

      Dear Editor, இந்தாண்டிலேயே "கா.க.கா" மறுபதிப்பை உறுதிப்படுத்தியதற்கு நன்றி. அப்படியே அது வண்ணத்தில் மறுபதிப்பு செய்யப்படுகிறது என்பதையும் உறுதிப்படுத்திவிட்டால், இங்கே நிறைய வாசகர்களுக்கு, முக்கியமாக எனக்கு நிம்மதியாக இருக்கும்..

      இல்லாவிட்டால் நாங்கள் மற்றொரு போராட்டத்தில் இறங்கவேண்டும் :)

      Delete
    3. Periyar : 2014-ன் அட்டவணையில் தான் "கா.க.கா" பற்றிய அறிவிப்பே வந்திருந்ததே ! So அது வெளியாவதில் சந்தேகங்கள் கிடையாதே !

      Delete
    4. Dear Editor, அப்படியே அது வண்ணத்தில் வருமென்ற உறுதியையும் கொடுத்துவிட்டால் நல்லது ... :) :P

      Delete
    5. டியர் எடிட்டர்,
      "கார்சனின் கடந்த காலம் " 2014 பின்பாதியில் வெளி வரும் என்ற உங்களின் அறிவிப்பு முன்னரே வந்திருப்பினும் , உங்களின் வாயினால் அத்தகவலினை உறுதிபடுத்துவதில் , இருந்தே புரியவில்லையா சார் ? வெள்ளி முடியாரின் காதலினை அறியும் ஒரே ஆவல் தவிர வேறென்ன ?

      Delete
  39. நில் கவனி சுடு - அக்மார்க் டெக்ஸ் கதை அதிலும் நம்மவர்கள் நால்வரும் சேர்ந்து கலக்குவது சூப்பர் ... நண்பர்கள் அனைவரும் கூறியது போல சித்திரம் இன்னும் சிறப்பாக அமைத்திருந்தால் சூப்பரோ சூப்பர் என கலக்கி இருக்கும்.

    நில் கவனி சுடு - மே மாத வெளியீட்டில் முதலிடம்

    தோர்கள் - படிக்க படிக்க பிடிக்கிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் படிக்கும் பொழுது கதையோட்டத்துடன் இணைய முடிகிறது.

    தோர்கள் - இரண்டாம் இடம்

    முகமற்ற கண்கள் - இது வரை படித்திடாத கதை என்பதால், சுவாரசியமாக படிக்க முடிந்தது.

    முகமற்ற கண்கள் - மூன்றாம் இடம்



    வேட்டை நகரம் வெனிஸ் - கண்டியப்பாக முதலிடம் பிடிக்கும், பைங்கிளி படலம் இரண்டாம் இடம் பிடிக்குமா இல்லை லார்கோ வுடன் சேர்ந்து முதலிடத்தை பங்கு போட்டு கொள்ளுமா என்பதை அடுத்த (இந்த) மாதம் பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : //சித்திரம் இன்னும் சிறப்பாக அமைத்திருந்தால் சூப்பரோ சூப்பர் என கலக்கி இருக்கும். //

      LMS -ல் வரும் டெக்ஸ் கம்பீரமாய்த் தோற்றம் தருவார் ! கவலை வேண்டாம் !

      Delete
    2. வயிற்றிலே பாலை வாத்தீங்களே , நற்செய்தி நன்றி சார்

      Delete
  40. போச்சுடா மறுபடியும் மொதல்லே இருந்தா..

    ReplyDelete
  41. இந்த கோமாளிகளோட தொல்ல தாங்க முடிலப்பா .

    ReplyDelete
  42. உண்மையான காமிக்ஸ் ஆர்வமுள்ள யாரும் இத்தளத்தை விடடு ஒரு போதும் போக நினைக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  43. ஸ்கூல் பிள்ளைகள் போல் அடித்துக்கொள்வதும், தனிப்பட்ட தாக்குதல்களும்,அனைவரும் கிரிமினல்கள் என

    சாடுவதும் நம்மை எந்த விதத்திலும் நாகரீகமானவர்கள் பட்டியலில் சேர்க்கவில்லை...இத்தளத்தை சொந்த

    வீடாக நினைப்பவர்கள் இது போல் நாகரீகமற்ற சொற்களை நமது வீட்டில் பயன்படுத்துவோமா?

    காமிக்ஸ் ஒன்றே காதலாக இருப்பவர்கள் நாம் என்றால் ஆரோக்கியமான உரையாடல்களில் மட்டுமே

    ஈடுபடுவோம்

    ReplyDelete
    Replies
    1. Senthil Madesh : //காமிக்ஸ் ஒன்றே காதலாக இருப்பவர்கள் நாம் என்றால் ஆரோக்கியமான உரையாடல்களில் மட்டுமே ஈடுபடுவோம //

      Well said !

      Delete
  44. ஆகஸ்டுல ஆண்டு மலருக்கு ஸ்லாட் ஒதுக்கீடு செய்யத்தானே இப்போது ஒவ்வொரு மாதமும் விரைவாக புத்தகங்களை ரிலீஸ் செய்கிறீர்கள் சார் ?

    ReplyDelete
  45. விஜயன் சார், நில் கவனி சுடு.. அத்தியாயம்-1 மற்றும் 2 வசனம்களுக்கு இருவேறு "font" உபயோகபடுத்தி உள்ளதாக நினைக்கிறன், அத்தியாயம்-2 உபயோகபடுத்தி உள்ள font படிப்தற்கு நன்றாக உள்ளது, அத்தியாயம்-1-ல் உபயோகபடுத்தி உள்ள font படிப்தற்கு சரியில்லை.

    அத்தியாயம்-1:- இதுவரை படித்ததில் பக்கம்-2௦ உள்ள முதல் படத்தில் கீழ்-வலது மூலையில் பலூன் மட்டும் உள்ளது, அதில் வசனம் ஏதும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : இரு தனித் தனி நபர்களால் டைப்செட் செய்யப்பட்டவை அத்தியாயம் 1 & 2 ! இரண்டாம் அத்தியாயத்து எழுத்துக்கள் தான் படிக்க சிரமின்றி, பெரிதாக இருப்பதாய் என் தந்தை அபிப்ராயப்பட்டார் !

      Delete
    2. Request you to ensure "unique font" is used for the entire story especially LMS.

      Delete
  46. விஜயன் சார்,
    LMS:- முடிந்தால் கருப்பு&வெள்ளை மற்றும் வண்ண கதைகளை தனிதனி புத்தகமாக வெளி இடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Dear Editor,

      நானும் இதை ஆமோதிக்கிறேன்.

      இரண்டு புத்தகங்களாக வெளியிட்டால் original புத்தக அளவுகளைச் சுருக்கவோ, குறைக்கவோ தேவையிருக்காது. அத்துடன் படிப்பதற்கும் ஏதுவாக இருக்கும்.

      சிறிது விலை கூடினாலும் பரவாயில்லை... கொஞ்சம் மனது வைக்கவும்

      Delete
    2. Dear Editor,

      எனக்கும் இரு தடிமனான தொகுப்புக்களாய் வருவது சிறந்தது என்று தோன்றுகிறது. காரணத்தை ஏற்கனவே கூறிவிட்டேன். Two fat books in a box would be great. இவ்வளவு பணம் செலுத்தும் நம்மவர்கள் இன்னொரு சிறு தொகையை செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது - பாக்ஸ்க்கு. மேலும் இவ்வளவு பெரியதாய் வாங்க இயலாதவர்கள் ஒன்றை வாங்கவும் வசதிப்படச் செய்திடும்.

      LMS and LMBWS ...!

      Delete
    3. @ FRIENDS : பாக்ஸ் செய்வதென்பது நிச்சயமாய் expensive option ! இதே விலையிலேயே அதனை உள்ளடக்குவது இயலாக் காரியம் ! திரும்பவும் ஒரு விலை கூட்டல் ; சின்னதொரு தொகைக்காக நண்பர்களை மீண்டும் ஒரு முறை பணம் அனுப்பச் சொல்லுவது - எல்லாமே நடைமுறையில் சிக்கல் தருபவை ! So இப்போதைக்கு அதனை செயல்படுத்துவது சிரமமே !

      படிக்கும் போது புத்தகத்தின் பருமன் கஷ்டம் தராது இருக்க வேறொரு சிந்தனையில் உள்ளேன்...! பெல்ஜிய சாக்லெட்டையும் , இத்தாலிய ஐஸ்கிரீமையும் தனித்தனியாக்கி விட்டால் கொஞ்சமேனும் கனம் குறையும் அல்லவா ?

      Delete
    4. Dear Editor,

      எங்கள் கோரிக்கையை ஏற்று இரண்டு புத்தகங்களாக வெளியிட முடிவு செய்ததற்கு மிக்க நன்றி! ... அப்போ, Belgian Chocolates :) அளவைக் குறைக்கத் தேவை இருக்காது என்று நம்புகிறேன்.

      நாமும் BOX set புத்தகங்கள் வெளியிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று நம்புகிறேன்

      Delete
    5. அது போல அளவுகள் வேறு என்றால் மட்டுமே பிரித்து வெளி விடுங்கள் சார் . ஒரே அளவு என்றால் நீங்கள் தயார் செய்து பார்த்த டம்மியை மனதில் கொண்டு சிறப்பாய் இருப்பின் அப்படியே வெளிவிடுங்கள்.ஆயிரம் பக்கங்களில் ஒரே புத்தகமாய் வருவது தயாரிப்பு செலவுகளை கட்டு படுத்த உதவுவதுடன் , நாம் சந்தோசமாய் எடுத்து பார்க்க , ஒரு ஆயிரம் பக்க சாதனையில் இடம் பிடிக்க உதவுமே . சாதனை எனும் பொது தூக்கி படிக்கும் வலியை சிறிது ஏற்று கொண்டுதானே ஆக வேண்டும் .

      Delete
    6. +1 .
      As Steel Claw is correctly said, A 1000 pages book would be a great achievement for which let us bear some pain.
      Well Said Thozhar.

      Delete
    7. அதே போல ஆயிரம் பக்கத்தில் ஒரு காமிக்ஸ் என்பதே நமக்கு நிச்சயம் ஒரு விளம்பரத்தை தேடி தரும் . என்னடா காமிக்ஸ் காமிக்ஸ் என்கிறார்களே என திரும்பி பார்க்க வைக்கும் , என்பதும் முக்கியம் இல்லையா .சிறப்பானதை தேடி அலைபவர் கூட , அதை படித்துதான் பார்ப்போமே என்று சிலர் வரலாமே . படித்து விட்டால் இந்த கலவை கதைகள் அற்புதமாய் அமைந்து விட்டால் , அதனால் அவர்களையும் கவர்ந்து விட்டால் பெரிய வரவேற்பு இருக்கும் . இல்லையா தோழரே ?

      Delete
    8. //ஆயிரம் பக்கங்களில் ஒரே புத்தகமாய் வருவது தயாரிப்பு செலவுகளை கட்டு படுத்த உதவுவதுடன் , நாம் சந்தோசமாய் எடுத்து பார்க்க , ஒரு ஆயிரம் பக்க சாதனையில் இடம் பிடிக்க உதவுமே .//
      +10000000

      Sir...1000 பக்கம் என்பது, 30 ஆண்டு கால comics பயணத்தில் ஒரு மிக பெரிய மைல் கல் so please புத்தகம் ஒன்றாகவே இருக்கட்டும் sir...

      Delete
    9. ஆனால்............. தூக்கி பிடிக்க ஒரு ஆள் தேவை

      Delete
    10. ஸ்டீல்:

      ஆயிரம் பக்கங்களுக்கு காமிக்ஸ் என்பது ஒரு 1500 சொச்சம் பேர்களுக்கு exciting ஆகத் தான் இருக்கும். அதில் பாதிப் பேர் இரண்டு புத்தகங்கள் கூட வாங்கி விடுவார்கள் - [ சிலர் இன்னும் நிறைய - நாலு வருஷம் கழிச்சு வித்தா 'லம்பா' கிடைக்கும் என்று :-) ]

      ஆனால் இந்த புத்தகத்தை திரும்பிப் பார்க்கும் சாதாரண (காமிக் காதலராய் அமையாத) வாசிப்பாளர்கள், தடவிப் பார்த்து விட்டு நகர்ந்து விடுவார்கள்.

      கடைசியா நீங்களும் நானும் வாங்கிய ஆயிரம் பக்க புத்தகம் என்ன? அதைப் படித்து முடித்து விட்டோமா? அதை வாங்குவற்கு யோசித்தோமா இல்லியா? இது போன்ற கேள்விகள் சாதாரண வாசகர்களை யோசிக்க வைத்து விடும்.

      இதற்கு பதிலாய் இரண்டு தொகுதிகளாய் வந்தால் விற்பனை சதவிகித சான்ஸ் அதிகம்.

      இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன்:

      1) ஆனந்த விகடன் Encyclopedia Brittanica கொண்டு வந்தார்கள் - நாலாயிரத்துக்கு ஆரம்பித்து, இறுதியில் ஆயிரம் ரூபாய் என்று அறிவித்து - அப்போவும் வாங்காமல் விட்டவரே அதிகம்

      2) நடந்து முடிந்த சென்னை சங்கமத்தில் பிரபல பத்திரிகையைச் சேர்ந்த ஒரு ப்ளாகர் தனது மகனுக்கு காமிக்ஸ் வாங்கலாம் என்று நுழைந்தார். லக்கி லுக், ப்ளூ கோட்ஸ் - இவைகளை நான் விளக்கிக் கொண்டிருந்தேன் - விலையைப் பார்த்த அவர் தயங்கிக் கொண்டிருந்தது புரிந்தது - இறுதியாய் மியாவி புத்தகம் ஒன்றை நீட்டி 25 ரூபாய் என்றதும் அதை மட்டும் வாங்கிக் கொண்டு, எடிட்டரிடம் 'மியாவி' வாங்கிட்டேன் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.

      எல்லாரும் இப்படி இருப்பார்கள் என்று சொல்ல வரவில்லை - ஆனால் பெரும்பாலான சாதாரண, காமிக்ஸ் காதலர்களை தவிர்த்த, வாசகர் வட்டத்தில் ஆயிரம் பக்கம், தொள்ளாயிரம் ரூபாய் என்பதெல்லாம் விரும்பத்தகாத செலவாகவே கருதப்படுகிறது !

      இந்த எனது பதில் உங்களுக்கு மட்டுமே ஸ்டீல் :-)

      [ஆல் இன் ஆல் அல்கேட்ஸ்கள் வந்து அப்பிடப் போறாங்க :-) பயமாகீது :-p ]

      Delete
    11. //எல்லாரும் இப்படி இருப்பார்கள் என்று சொல்ல வரவில்லை - ஆனால் பெரும்பாலான சாதாரண, காமிக்ஸ் காதலர்களை தவிர்த்த, வாசகர் வட்டத்தில் ஆயிரம் பக்கம், தொள்ளாயிரம் ரூபாய் என்பதெல்லாம் விரும்பத்தகாத செலவாகவே கருதப்படுகிறது !//

      உண்மைதான் நண்பரே ! ஆகவே இது நிச்சயம் வாசிக்கும் பழக்கம் உள்ள சிறந்த விமர்சகர்களை திரும்பி பார்க்க வைக்கும் . தீபாவளி மலர் , இரத்த படலம் போன்றவை ஃப்ரீயாக விமர்சனங்கள் மூலம் பெற்ற விளம்பர்கள் போல .
      ஆனந்த விகடன் அத்தனை பேரை அடையும் பத்திரிகை . விர்காததர்க்கு காரணம் அவர்கள் விட்ட என்சைக்ளோ பீடியா போல பல புத்தகங்கள் ஏற்கனவே வெளி வந்ததும் , இன்டர்நெட் கூட ஒரு காரணம் என்பது தாங்களும் அறிவீர்கள் . நம்மை அறியாத பலர் உண்டு. இன்னும் வந்து கொண்டிருப்பது அறியாத வாங்க தயாராய் இருக்கும் சிலர் உண்டு . இரத்த படலம் இரண்டு வருடங்கள் தேங்கி கிடந்தது . இப்போது nbs ஒரே வருடத்திற்குள் விற்று தீர்ந்தது . எப்படி ? அதன் பிறகு தெரிந்து வந்த வாசகர்கள் . அது போல இதுவும் ஒரு மிக பெரிய வெற்றியை அடையும் , இந்த ஆயிரம் பக்கம் என்ற பிரம்மாண்டத்தின் விளம்பரம் துணை கொண்டு . இது ஒரு மாபெரும் கவன ஈர்ப்பை கொண்டு வர சாத்தியமாகலாம் . இந்தியாவிலேயே முதன் முறையாக இவ்வளவு பெரிய / விலை கொண்ட புத்தகம் என்று .
      மியாவி வாங்கிய நண்பர் அறுபது ரூபாய் கூட செலவு செய்ய தயாரில்லை . நீங்கள் குழந்தை போல அடம் பிடித்து செய்த விளம்பரம் காரணமாக அவர் குழந்தைகளுக்கு வாங்கி சென்றிருக்கலாம் . அவர் குழந்தை அது பிடித்து பின்னர் வரும் போது அதன் மூலம் ஓரிரு சந்தாதாரர்கள் வரலாம் . அது போன்றவர்களை கவர அந்த வழி . பிரம்மாண்டத்தை ரசிக்க வருபவர்களை கவர இந்த வழி . இவர்களையும் ஈர்த்தால் ... வழக்கம் போல நமது நூறு ரூபாய் புத்தகங்கள் விற்பனை அதிகரிக்க ஒரு வழி .நாமும் தொடர்ந்து படிக்க வாய்ப்பு . இரு வேறு வழிகளில் நமது நிரந்தர புத்தகங்கள் அதிக விற்பனை அடையலாம் 80 n கருத்து . பாதை வேறாக இருந்தாலும் கடலுக்கு செல்லும் ஆறுகள் போல. இந்த விலைக்கு புத்தகம் வெளியிட இப்போது ஒரு வாய்ப்பு முப்பது ஆண்டு என கூறி !


      நிச்சயமாக யாரும் சண்டைக்கு வர மாட்டார்கள் ராகவன் . மறந்துட்டேன் ...நேத்தே கேட்டீங்க ...இந்தாங்க சோடா !

      Delete
  47. சஸ்பென்ஸில் உள்ள ஒரு super 6 இதழ் இரத்த கோட்டை முழு தொடரின் வண்ண மறு பாதிப்பு தான் என்ற இரகசியத்தை எப்போது தான் ஒத்து கொள்வீர்கள்????

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : ரொம்பவே சிம்பிள் ...அது நிஜமாய் இருக்கும் பட்சத்தில் தான் !

      Delete
  48. சார் , கார்சனின் கடந்த காலத்தை இயன்ற அளவு வண்ணத்தில் வெளிவிடுங்கள் .

    ReplyDelete
    Replies
    1. Dear Editor, கார்சனின் கடந்த காலம் வண்ணத்தில் மட்டுமே வரும் .. உறுதியாக நம்புகிறேன்

      Delete
  49. ஒரு பைங்கிளிப் படலம் - முன், பின் அட்டகாசம். எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    நேற்று தான், முகமற்ற கண்கள் படிக்க நேரம் கிடைத்தது. என்னைப் பொறுத்த வரை கதை மற்றும் சித்திரங்கள் நன்றாகவே இருந்தது. நான் பழைய இதழைப் பார்த்தது/படித்தது இல்லை .

    மியாவி - கோடை விடுமுறை சென்றுள்ள மகன்களிடம் அனுப்பிவிட்டேன். அவர்களிடம் feedback கேக்க வேண்டும்

    நில் கவனி சுடு - இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. இக்கதையை ஏற்கனவே ஆங்கில மூலத்தில் படித்துள்ளேன். அட்டகாசமான, trade mark டெக்ஸ் அதிரடி. ஒரு சில வாசகர்கள் கூறியது போல, இக்கதை டிராகன் நகரம், காரசனின் கடந்த காலம், பவளச்சிலை மர்மம் வரிசையில் வைக்க வேண்டிய ஒரு மெகா ஹிட். என்னைப் பொறுத்தவரை இந்தப் புது மாதிரியான சித்திரங்கள் மற்ற வாசகர்கள் கூறுமளவு அவ்வளவு மோசமில்லை. Just a different style

    ReplyDelete
  50. பெல்ஜியம் சாக்லேட் கலரில் பெரிய சைஸாங் சார் ?. இத்தாலியன் டிலைட் கருப்பு வெள்ளை அளவில் சார் . டபுள் ok சார் . கலரில் பெரிய அளவு எனில் ஒரு டிடக்டிவ்கு பதில் சிக்பில் கதை சேர்க்க இன்னமும் வாய்ப்பு உள்ளதா என அறிய ஆவல் சார் . தங்கள் முன்னய பதில் படி வெனிஸ் வேட்டை இம்மாதமே வருவதை எண்ணி நாக்கை தொங்க போட்ட படி (வேட்டை நாய் மாதிரி ) உள்ளேன் சார. யாரும் மாட்னாக்கா ர்ர்ர் கர்ர் ர்ர்...........

    ReplyDelete
  51. ஆகா ......கருப்பு வெள்ளையில் ஒரு குண்டு புக் ....

    கலரில் ஒரு குண்டு புக் .....

    சூப்பர் சார் ..

    ReplyDelete
  52. "பாக்ஸ் செய்வதென்பது நிச்சயமாய் expensive option !"

    நமது காமிக்ஸில் ஏன் விளம்பரங்களை வெளியிடுவதில்லை?

    நகைக்கடைக்காரர்களுக்கும், துணிக்கடைக்காரர்களுக்கும் காமிக்ஸ் படிக்க நேரமிருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம்....

    ஆனால் நிச்சயமாய் அவர்கள் கொடுக்கும் விளம்பர காசு கணிசமான சுமையைக் குறைக்கும் அல்லவா?

    அல்லது தங்களுக்கு காமிக்ஸில் விளம்பரங்கள் கூடாது என்பது கொள்கையா?

    ReplyDelete
  53. விஜயன் சார், தோர்கல் படித்து முடித்து விட்டேன், ஒரு வார்த்தையில் சொல்லனும்னா "அருமை". வண்ணத்தில் படிக்க மிக சிறந்த தொடர். என்னை பொறுத்தவரை பிரிண்டிங்தரத்தில் குறை ஒன்றும் தோன்றவில்லை. அடுத்த பாகம் எப்போது? விரைவில் வெளி இட வேண்டும்.

    குறைகள்:-கதையின் நாயகியின் பெயரை "ஆரிசியா" மற்றும் "ஆரிஸியா" என மாற்றி மாற்றி உபயோக படுத்தி உள்ளதை தவிர்த்து இருக்கலாம். பொதுவாக நமது காமிக்ஸ் கதையில் வரும் பாதிரம்களின் பெயர்களை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து பிரிண்ட் செய்வது நலம்.

    ReplyDelete
  54. Free Comics Week end from Comics Con. One can download a max of 5 Titles in this week end

    http://www.readwhere.com/fcbw2014

    ReplyDelete
  55. Tomorrow is Free comic book day, in USA. Find the closest shop and try your luck.

    http://www.freecomicbookday.com/storelocator

    ReplyDelete
  56. அப்பாடி ஒரு வழியா கார்சன் அங்கிள் (கார்சன் கோச்சுக்க மாட்டார்ல )ஆக்சன் சூப்பர் ............அதுவும் பாறை மேல் இருந்து குதிக்கும் சீன் ..............வாவ்.................
    டெக்ஸ் தொடையில் குண்டடி பட்டதும்......பத்து கதைக்கு ஒரு தடவையாவது நம்ம வில்லன்கல் கரிக்க்ட்டா குறி வைக்குறாங்கபானு நிம்மதி ஆச்சு .................

    ReplyDelete
  57. டியர் எடிட்டர்
    நீங்கள் ஆயிரம் பக்கங்கள் மொத்தமாக போட்டால் இலவச இணைப்பாக உங்கள் ஸ்டாப் ஒருவரை எங்களுடன் அனுப்பி வைக்கவும் (புத்தகத்தை கையில் வைத்திருக்க). கருப்பு வெள்ளை தனியாக, கலர் தனியாக என்று பிரித்து போட்டால் அபாரமாக இருக்கும் என்பது என்னுடைய எண்ணம். தனித்தனியாக பாக்ஸ் டைப்பில் போட்டால் 30 ஆண்டு மலர் வித்தியாசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. புது வாசகர்களையும் கவரும்.
    என்னை பொறுத்தவரை தோர்கல் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இங்கு தோர்கல் பற்றி சில மாறுபட்ட விமர்சனங்கள் வந்துள்ளது. அதைகொண்டு எந்த ஒரு முடிவும் எடுத்துவிட வேண்டாம் என்பதே என்னுடைய வேண்டுகோள்.
    என் நண்பர்களின் கருத்துபடி மேஜிக்விண்ட் ஒரு சிறந்த கதைத் தொடர் என்பது தெரிகிறது. அதை காண ஆவலுடன் உள்ளேன். மேஜிக் விண்ட்டை தமிழில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. இதேபோல் 50க்கும் மேற்பட்ட கதைத் தொடர்களை தாங்கள் அறிமுகப்படுத்த முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளீர்கள். அந்த முயற்சி மாபெரும் வெற்றி அடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
    சிக்பில் அட்டைபடம் ரொம்ப அழகு. ஆனால் இந்த கதை தொடர்ந்து வெளியாவதில் உள்ள சிக்கல்கள் குறித்து தாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்ள் மனதை நோகடிக்கச் செய்கிறது. என் மனதை லக்கியைவிட கிட்ஆர்டின் குழுவினர்தான் அதிகம் கவர்ந்துள்ளர்கள். அடுத்தமாத வெளியீடு ஒரு ரஜினி (லார்கோ) படமும், கவுண்டமணி, செந்தில் (கிட் ஆர்டின், டாக்புல்) படமும் இணைந்து வருவதை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
    இன்னும் சூப்பர் 6 சந்தா செலுத்தவில்லை விரைவில் சிவகாசிக்கு நேரில் வந்து செலுத்தும் எண்ணத்தில் உள்ளேன். காமிக்ஸ் லைப்ரேரி தொடங்குவது எந்த அளவில் உள்ளது என்பதை தெரியப்படுத்தவும். வந்தால் படிக்காத ஒருசில புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு ஏற்படும் அல்லவா?

    ReplyDelete
  58. டெக்சின் "நில் கவனி சுடு" கதையை நேற்று இரவு படித்து முடித்தவுடன் நிச்சயம் எனது கருத்தை இங்கே ஷேர் செய்யவேண்டும் என தோன்றியது.

    முதலில் ஓவியங்கள் average ரகம் என்பதால் புத்தகத்தில் அவ்வளவு ஈர்ப்பு தொடக்கத்தில் இல்லை. இங்கே நண்பர்கள் கதையா ஆஹா ஓஹோ என புகழ்ந்ததால் புத்தகத்தின் மேல் ஆர்வம் ஏற்க்கொண்டு பக்கங்களை புரட்ட ஆரம்பித்தேன்.

    தமிழ் சினிமா ஹீரோ போல் டெக்ஸ் அதிரடியாக மதுபான விடுதியினுள் புகுந்து நான்குபேரை மின்னல் வேகத்தில் போட்டுத்தள்ளுகிறார். இங்கே நாம் நோட் செய்யவேண்டிய விஷயம் என்னவென்றால் சரியான விசாரணை, ஆய்வு என எதுவும் நடத்தாமல் "அவன் தானா நீ?" என்ற ரேஞ்சுக்கு ஒரு கேள்வியை கேட்டு வைத்து, பிறகு எதிராளிக்கு அவகாசம் கூட தராமல் தனது துப்பாக்கியை உருவி BANG BANG என அனைவரையும் கொன்று விடுகிறார். மேலும் இங்கே முதலில் துப்பாக்கியை முழங்குவது டெக்ஸ். இது அவரது ஹீரோ இமேஜுக்கு ஒரு சறுக்கல்.

    பிறகு இறுதி கிளைமாக்சிலும் கதாசிரியர் மகா சொதப்பு சொதப்பியுள்ளார். இங்கேயும் டெக்ஸ் ஹீரோ இமேஜுக்கு ஒரு பெரிய DENT.

    ஜாக் காடியை பிடிப்பதற்கு முன்னாள் தனது மகனை நிறுத்திவிட்டு பின்னால் இருந்து வஞ்சகமாக சுருக்கு கயிறாய் வீசி பிடிக்கிறார். ஹீரோவாக இருப்பவர் நேருக்கு நேர் நின்று எதிரியை வீழ்த்த வேண்டாமா?

    இதற்கு பிறகு வடிவேலின் "வேண்டா அழுதுருவேன்" என்ற ரேஞ்சுக்கு டெக்ஸ்சை வைத்து காமெடி செய்துவிட்டார்கள்.

    நகர மேயரும்,செரிப்பும் சமூக விரோதிகள் என தெரிந்த பின்பு, டெக்ஸ் அவர்கள் இருப்பிடம் தேடிசென்று அவர்களின் முகரையை பெயர்த்து இழுத்து வந்திருக்க வேண்டாமா?? இது போல தானே நாம் இந்தனை நாள் படித்த டெக்ஸ் கதைகள் இருந்தன? இப்படி நடப்பது தானே அதிரடி சாகசம்?

    ஆனால் நடந்தது என்ன? காடியை பிணைய கைதியாக ஒரு விடுதியினுள் கட்டி வைத்துவிட்டு டெக்ஸ் ஒரு சிறுவனை வைத்து எதிரிகளுக்கு தூது சரணடைந்துவிடுமாறு விடுகிறார். எதிரிகள் மறு தூது விடுகிறர்கள் டெக்ஸ்சை சரணடைய சொல்லி.

    அப்போதாவது டெக்ஸ் வீறுகொண்டு எழுந்து அவர்களை தேடி சென்றிருக்க வேண்டாமா?? மாறாக விடுதியினுள் பதுங்கிக்கொல்கிறார் "நா வெளியே வர மாட்டேன் நீ வா என்னை தேடி" எனும்படியாக.அவர்கள் அப்படியே ஓடிவிட்டிருந்தால் இவர் விடுதியினுள் அமர்ந்து என்ன செய்துகொண்டிருப்பார்??

    இங்கே வில்லன்கள் வீரம் கொண்டு டெக்ஸ்சை தேடி வருகிறார்கள். முடிவில் துப்பாக்கி சண்டையுடன் கதை நிறைவு பெறுகிறது.

    ஹோ டெக்ஸ்! உங்களிடம் நிச்சயம் நான் இதை எதிர்பார்க்கவில்லை. இந்த கதையை ஆஹா ஓஹோ என நிச்சயம் பாராட்டமாட்டேன்.

    மொழிபெயர்ப்பில் ஒரு சில வசனங்கள் மட்டுமே சூட்டை கிளப்புகின்றன. கதையில் உள்ள அதிரடி பெரிதாக IMPRESS செய்யவில்லை.

    இன்னமும் சிறப்பான கதையை டெக்ஸ்சிடம் இருந்து எதிர்பார்கிறேன்.

    ReplyDelete
  59. ஆண்டவா ...நண்பர்கள் சொல்வது போல கருப்பு வெள்ளை குண்டு புக் ..,கலர் குண்டு புக் என இரண்டு வருவதும் ஓகே என்று சொல்கிறது மனது .இன்னொரு பக்கம் கோவை ஸ்டீல் நண்பர் சொல்வது போல 900 ..,1000 பக்கம் என ஒரே புத்தகமாக வருவதும் மறக்க முடியாத அனுபவம் என்பதும் உண்மை தான் என்றும் மனது சொல்கிறது .ஒரே குழப்பம்......

    எனவே ஆசிரியர் இந்த 30வது ஆண்டு மலரை சொன்னபடி 900 பக்கமாக ஒரே புத்தகமாகவும் ..,
    31 வது ஆண்டு மலரை கருப்பு வெள்ளை குண்டு .,கலர் குண்டு என இரண்டு புத்தகமாகவும் வெளி இட்டால் அனைவருக்கும் நலம் .

    ReplyDelete
  60. விஸ்கி-சுஸ்கி : நான் இன்னும் "நில் கவனி சுடு" கதையை படிக்கவில்லை. உங்கள் விமர்சனம் எனது ஆர்வத்தை குறைத்து விட்டது. "நில் கவனி சுடு" அவ்வளவு மோசமாகவா இருக்குது?

    ReplyDelete
    Replies
    1. @S.V.Venkateshwaran

      கதையில் இவ்வளவு பெரிய லாஜிகல் பிளாப் இருப்பது பெரிய நெருடலாக எனக்கு தெரிகிறது.தொடக்கத்தில் ஒரு சண்டையை ஆரம்பிப்பதற்கு ரவுடி கும்பல் தயங்கும்போதும் டெக்ஸ் அவர்களை வதம் செய்கிறார். முதலில் குண்டடி படும் ஒருவன் "இங்கே ஆரம்பிக்க வேண்டாம்" என அலறிகிகொண்டே உயிர் விடுகிறான்.

      வில்லன்கள் தான் கதையின் முடிவில் பிணைய கைதியை பிடித்துவைத்துக்கொண்டு ஹீரோக்களை தங்கள் வசம் இழுப்பார்கள். அதன் அர்த்தம் human value அறிந்தவர்கள் ஹீரோக்கள் எனும் கருத்தை படிப்பவர்கள் மனங்களில் பதிப்பதற்காக ஆசிரியர் கையாளும் வழிமுறை.

      இந்த கதையில் உல்டா. டெக்ஸ் வில்லன் ஒருவனை பிடித்து வைத்துக்கொண்டு முடிந்தால் வந்து மீட்டுச்செல் என மற்றவர்களுக்கு சவால் விடுகிறார். பொதுவாக தப்பித்து ஒடப்பார்க்கும் வில்லன்கள் தமது சகாவை மீட்பதற்காக வீரம் கொண்டு டெக்ஸ் இடம் தேடிவந்து சண்டையிடுகிறார்கள்.

      கதையமைப்பில் எங்கேயோ சறுக்கல் உள்ளது. எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் பெரும்பான்மையோர் ரசித்திருப்பதால் உங்களுக்கு பிடிப்பதற்கும் வாய்புகள் அதிகம். give it a try!

      Delete
    2. //வில்லன்கள் தான் கதையின் முடிவில் பிணைய கைதியை பிடித்துவைத்துக்கொண்டு ஹீரோக்களை தங்கள் வசம் இழுப்பார்கள். அதன் அர்த்தம் human value அறிந்தவர்கள் ஹீரோக்கள் எனும் கருத்தை படிப்பவர்கள் மனங்களில் பதிப்பதற்காக ஆசிரியர் கையாளும் வழிமுறை.//
      நண்பரே வில்லன்களிலும் நட்பு உணர்ச்சி, பாசம் கொண்டவர்கள் உண்டு . பல படங்களில், கதைகளில் பார்த்திருக்கிறோமே .
      //டெக்ஸ் வில்லன் ஒருவனை பிடித்து வைத்துக்கொண்டு முடிந்தால் வந்து மீட்டுச்செல் என மற்றவர்களுக்கு சவால் விடுகிறார். பொதுவாக தப்பித்து ஒடப்பார்க்கும் வில்லன்கள் தமது சகாவை மீட்பதற்காக வீரம் கொண்டு டெக்ஸ் இடம் தேடிவந்து சண்டையிடுகிறார்கள்.//
      அவர்கள் காண்பித்து விட்டால் .
      இந்த கதை வில்லன்கள் நாங்கள்தான் என கூறுவது போல இருக்கும் . ஆனாலும் ஒரு நாயை கூட நீதி இல்லாமல் கொள்ள மாட்டோம் என்ற வீர பாண்டிய கட்ட போம்மனின் வசனத்திற்கு இணங்க ஆதாரம் தேடி அலைகிறார்கள் . கடைசியில் கொள்கிறார்கள் .
      ssv அவர்களே நீங்கள் படிக்கும் பொது ஒரே ஒருவர் பிடிக்கவில்லை என்கிறார், பலர் சாதாரணமாய் சொல்கிறார்கள் வெகு அட்டகாசம் என்று . இந்த நிலையில் படிக்க அமரும் நீங்கள் ரசிக்கிறீர்களா என்று சொல்லுங்களேன் .

      Delete
  61. விஸ்கி &சுஸ்கி ..சார் ...தங்களின் பதிவு எல்லாம் இப்பொழுது ஆணித்தரமாகவும் ..,அழுத்தமாகவும் பதிகிறது என்பதோடு மனதை கவரவும் செய்கிறது .எனினும் எனது இரண்டு மாற்று கருத்தை தயங்காமல் தங்களிடம் சொல்ல. நினைக்கிறேன்.தவறாக நினைக்க வேண்டாம் .அதுவுமில்லாமல் இந்த வலைத்தளத்தில் வரும் ஒரே சிறுவன் நான்தான் என்பதால் இங்கு வரும் அனைத்து நண்பர்களுமே நான் ஏதாவது தவறாக எழுதி விட்டால் மன்னித்து "சின்ன பையன் " என்று விட்டு விடுங்கள் .பதிலுக்கு பதில் எழுதினால் ( திட்டி ) நான் அழுதிருவேன் .

    பழைய புத்தகங்கள் அதிக விலைக்கு விற்பது பற்றிய தங்கள் எண்ணவோட்டத்தை நான் அப்படியே ஏற்கிறேன் சார் .மேலும் பல வருடங்களுக்கு முன் நமது இதழிலில் கூட "புக் மார்கெட் "என்ற பகுதி வந்த பொழுது ஆசிரியர் அனுமதியுடன் ஒரிஜினல் விலையை விட அதிக விலைக்கு விற்க நண்பர்கள் வந்ததும் ...அதற்க்கும் புத்தகம் வாங்க போட்டி வந்ததும் திட்டம் "பணால் " ஆனதும் உண்மை .எனவே அது எனக்கு தவறாக படவில்லை .ஆனால் தாங்களும் ஆதி தாமிரா அவர்களும் அதிக விலைக்கு புத்தகம் விற்பதால் மறுபதிப்பு வேண்டும் என கோருவது தவறு என்ற நிலை பாட்டில் நான் மாறுகிறேன் .ஏற்கனவே "மாதம் ஒரு வாசகர் "என்ற பகுதியில் எனது பெரும் ஆசை ஏன் கனவு கூட நமது அனைத்து இதழ்களும் சேர்ப்பது தான் என்று கூறி இருந்தேன் .ஆனால் முத்து காமிக்ஸ் அனைத்தும் சேர்ப்பது முடியா ஒன்று என்பது புரிந்து விட்டது .லயன் .,மினி லயன் ,திகில் ஆவது சேர்க்க முடியுமா என அலைகிறேன் .அதே சமயம் நண்பர்கள் அவர்கள் புத்தங்களை அவர்கள் விருப்ப படி விலைக்கு விற்கும் போது 500 ..,1000 என்றால் கூட என்னால் வாங்க முடியாது .எனவே தான் ஆசிரியரிடம் மறுபதிப்பை நான் வேண்டுகிறேன் .இரண்டு கதைகள் 100 ரூபாய் என்று ஆசிரியர் வெளி இடும் போது இப்படியாவது புத்தகத்தை சேர்க்க முடிகிறதே என்ற சந்தோசம் வருகிறது .இது தவறு அல்லவே ...எனவே தான் ஆசிரியரிடம் அருகில் வந்த புத்தகத்தை விட நீண்ட வருடங்களுக்கு முன் வந்த இதழை மறு பதிப்பாக விட வேண்டுகிறோம் இங்கே .

    இதில் மிக பெரிய கொடுமை என்னவென்றால் அவர் வெளி இடும் மறுபதிப்பு கதைகள் அனைத்தும் என்னிடம் உள்ளதாகவே ( பயங்கர புயல் தவிர )போடுகிறார் .என் கூடவே பயணிக்கும் நண்பன் யாராவது ஆசிரியரிடம் " கோல்" மோட்டி விடுகிறானா என்றும் தெரிய வில்லை .அதுவும் ஆசிரியர் என்னிடம் இல்லாத புத்தகத்தை வருவதாக அறிவித்து விட்டு ( விண்வெளியில் ஒரு எலி போல ) பின்னர் அதை கை விட்டு விட்டதாக ஆசிரியர் அறிவிக்கும் பொழுது எனக்கு வரும் வெறி ..... (நற..நற ) அதை சொல்ல இங்கே வார்த்தைகளே இல்லை சார் ...

    ப்ளீஸ் ....எல்லோரும் புரிஞ்சுக்குங்க .... :-(

    ReplyDelete
  62. விஸ்கி & சுஸ்கி சார் ....தங்களின் "நில் கவனி சுடு " விமர்சனத்தை பற்றி .......

    ஒரு சிறந்த ஆக்சன் கதைகளிலோ ....அல்லது காமெடி கதைகளிலோ இப்படி லாஜிக் பார்க்க கூடாது என்பது எனது கருத்து .அப்படி பார்த்தால் அனைத்துமே "ட்ராகன் நகரம் " போல தான் இருக்கும் சார் ....ஒரு "பாட்ஷா " தான் ..ஒரு "ட்ராகன் நகரம் " தான் ....

    ReplyDelete