Powered By Blogger

Friday, May 09, 2014

ஜூனும்...ஒரு 'ஜூம்ம்ம்ம்' வேகத்துப் பயணமும் !

நண்பர்களே,

வணக்கம். உள்ளூர் கோவில் திருவிழாவின் பெயரைச் சொல்லி கடந்த சனிக்கிழமை முதலாய் தொடர்ச்சியாய் 4 விடுமுறை நாட்கள் ; மே மாதத்துத் தகிக்கும் கத்திரி வெயிலுக்கு இடையினில் அதிசயத்திலும் அதிசயமாய் மப்பும், மந்தாரமுமான கிளைமேட் - இத்தனை போதாதா குடும்பத்தோடு 'அக்கடாவென' சின்னதொரு விடுமுறை எடுக்க ? செல்போன் ; கம்ப்யூடர் இல்லா ஓர் கற்கால உலகினில் பொழுதைக் கழித்து விட்டு - நேற்று ஆபீசுக்குத் திரும்பியான பின்னே - back to the routine ! 

நேற்றே புதிய பதிவைத் தயார் செய்ய எனக்கு ஆசை தான் - ஆனால் லார்கோவின் அட்டைப்பட பட்டி-டிங்கரிங் வேலைகள் நேரத்தை விழுங்கி விட்டதால் - ஒரு வழியாக இன்று ஆஜராக முடிந்துள்ளது ! இதோ - 2014-ன் முதல் லார்கோ வின்ச் சாகசத்தின் அட்டைப்படத்தின் first look ! ஒரிஜினல் அட்டையின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு background & வர்ணக் கலவைகளில் மாற்றம் செய்துள்ளோம் ! அட்டையின் அழகு மங்கை சற்றே அடக்க ஒடுக்கமாகவும் காட்சி தருவதை உங்களின் கழுகுக் கண்கள் நிச்சயமாய் தவற விட்டிருக்காது !




அட்டையினில் மாத்திரமின்றி, கதையிலும் ஆங்காங்கே 'காற்றோட்டமாய்' உலவிடும் லார்கோவின் தோழிகளை கொஞ்சமாய் நமது "கண்ணிய அளவுகோல்களுக்குள்" கொணர்ந்திட நிறையவே மெனக்கெட வேண்டியிருந்தது ! கதையின் ஓட்டத்திற்கோ ; கதாப்பாத்திரங்களின் இயல்புகளுக்கோ சேதாரமின்றி கையில் கத்திரி பிடிப்பது நிச்சயமாய் சுலபமாய் இருக்கவில்லை ! இதழ் வெளியான பின்பு - 'ஆஹா...இத்தனை கட்டுப்பட்டித்தனம் அவசியம் தானா ?' என்ற கேள்விகளும் - 'இன்னமும் கூட அழுத்தமாய் கத்திரியைக் கையாண்டிருக்கலாமே !' என்ற அபிப்ராயங்களும் இருக்குமென்பது நிச்சயம் ! கோடீஸ்வரக் கோமானின் கதைகளைக் கையாளும் போதெல்லாம் த்ரில் இருப்பது கதையைப் படிக்கும் தருணங்களில் மட்டுமன்றி , அதன் தயாரிப்பிலும் தான் என்பதை எப்போதோ புரிந்து கொண்டு விட்டதால் - எனது பணியின் தன்மை இன்னமும் சுவாரஸ்யமாகிறது! இதோ - உட்பக்கத்தின் ஒரு ட்ரைலரும் உங்கள் பார்வைக்கு ! ஆங்கிலத்திலும், (ஒரிஜினல் பிரெஞ்சிலும் கூட) ரத்தினச் சுருக்கமாய் கைகொடுக்கும் வசனங்கள் - மொழிபெயர்ப்பின் போது நம்மை நாக்குத் தொங்கச் செய்வதும் கூட லார்கோவின் routine ஆகிப் போய் விட்டது !  கதையின் முழுமைக்கும் ஒரு வித மெல்லிய மிடுக்கும், கதாப்பாத்திரங்களிடம் ஒரு வித திமிரும் விரவி இருக்குமாறு கதாசிரியர் வான் ஹாம்மே செய்துள்ள முயற்சிகளுக்கு கொஞ்சமேனும் நியாயம் செய்ய வேண்டுமெனில் - 'ஆஹா,தமிழாக்கம் நிறைய இடம் அடைக்கிறதே !' என்ற தலைநோவை பெரிதாகக் கருதாமல் - பேனாவை சுதந்திரமாய் நடை போட அனுமதிக்க வேண்டியாகிறது ! அந்த "சுதந்திரம்" நமது டைப்செட்டிங் பெண்மணிக்கு சிம்மசொப்பனமாய் அமைவதை தான் தவிர்க்க இயலவில்லை ! இப்போதைக்கு இத்தனை பில்டப் போதுமென்பதால் - let's move on ! 
ஜூன் இதழ்களின் அச்சுப் பணிகள் தொடரும் வாரத்தில் துவங்கிடும் என்பதால் - ரொம்பவே முன்னதாய் நமது காமிக்ஸ் காலெண்டரில் ஜூனுக்கான தேதியைக் கிழித்து விட இயலும் ! நிதானமாய் செயல்படவும் அவகாசம் இருப்பதால் அச்சில் கூடுதலாய்க் கவனம் செலுத்த முயற்சிப்போம் ! Fingers crossed ! இதோ சிக் பில் இதழின் அட்டைப்படமும் கூட - பின்னே கதைச் சுருக்கத்தோடு ! 

LMS -ன் பணிகள் இன்னொரு பக்கமாய் தனித் தண்டவாளத்தில் பயணம் செய்து வருகின்றன ! NBS -க்கு நேர்ந்தது போல அட்டைப்படங்களில் இம்முறை நமக்கு ஜாஸ்திக் குழப்பங்கள் நேரவில்லை என்றே சொல்லுவேன் முதல் முயற்சியிலேயே - முன் + பின் அட்டைகள் பிரமாதமாய் வந்திருப்பதாய்த் தோன்றியது ! வர்ணக் கலவையில் டிஜிட்டல் வேலைப்பாடுகளை மட்டும் நேர்த்தியாய்ச் செய்திட முடிந்தால் - LMS-ன் அட்டைப்படம் அமர்க்களமாய் இருக்கப் போவது உறுதி ! அப்புறம் - it's official now ! பெல்ஜிய சாக்லேட்டும், இத்தாலிய ஐஸ்க்ரீமும் தனியாய்த் தனியாய்ப் பரிமாறப்படும் ! So அளவில் எவ்வித compromise இன்றி மார்ஷல் டைகர் + லக்கி லூக் + ரின் டின் கேன் முழு வண்ணத்தில் வழக்கமான பெரிய சைசிலேயே வந்திடுவர் ! அளவு கூடுவதும், கூடுதலாய் ஒரு இதழின் அட்டைப்படம் + பைண்டிங் செலவுகளும் தலைதூக்குவதும் பட்ஜெட்டில் உதைக்காது இல்லை ! ஆனால் ஏற்கனவே நான் சொன்னது போல - இத்தகைய பிரத்யேக தருணத்தில் நம்பர்கள் நம் மனக்கண்ணில் பெரியதொரு இடத்தை ஆக்கிரமிக்கப் போவதில்லை என்பதால் the show will go on as planned ! 

இடைப்பட்ட ஜூலையில் கொஞ்சமே கொஞ்சமாய் லேசான diet இருக்க வாய்ப்பிருக்கும் பட்சத்தில் - எங்களது சுமை சற்றே குறைவாக இருக்குமென்ற ஆசை எழாது இல்லை தான் ! But நெய்வேலி புத்தகக் கண்காட்சியினர் மனது வைக்கும் பட்சத்தில் 'சூப்பர் 6-'ன் முதல் இதழான THE BOOK FAIR SPECIAL அந்த மாதத்துப் பட்டியலுக்குள் அடங்கிட வாய்ப்புகள் பிரகாசம் ! So - ஜூலையின்அட்டவணை பின்வருமாறு இருந்திடும் : 

  • விரியனின் விரோதி - ரூ.60 - சன்ஷைன் கிராபிக் நாவல் 
  • பூம்-பூம் படலம் - ரூ.60 - சன்ஷைன் லைப்ரரி 
  • "ஆத்மாக்கள் அடங்குவதில்லை !" (மேஜிக் விண்ட்) - (வண்ணத்தில் )
  • காவல் கழுகு (டெக்ஸ் வில்லர் ) - black & white (SUPER 6)

திரும்பிய பக்கமெல்லாம் மலையாய் காமிக்ஸ் குவியும் இந்தத் திடீர் அனுபவம் ஒரு திகட்டலை உருவாக்கிடக் கூடாதே என்ற சின்ன ஆதங்கமும் எனக்குள் உண்டு தான் ! 'வைச்சால் குடுமி - அடிச்சால் மொட்டை !' என்று பயணிக்கும் நமது வண்டிக்கு 2015-ல் cruise control என்றதொரு mode -ஐ அறிமுகம் செய்ய வேண்டுமா ? கொஞ்சமாய் வேகத்தை மட்டுப்படுத்திக் கொள்வது தேவலையா ?or are we doing alright ? இது பற்றிய  உங்கள் எண்ணங்களைத் தயங்காது சொல்லுங்களேன் ! ஆர்வமாய்க் காத்திருப்பேன் உங்கள் உள்ளங்களை அறிந்திட ! மலையாய்க் குவிந்து கிடக்கும் பணிகள் அழைக்கின்றன என்பதால் it's bye for now folks ! See you around soon !  


P.S : இப்போது வரை சூப்பர் 6-ன் சந்தாக்களைக் கட்டியிரா நண்பர்களுக்கு சின்னதொரு reminder !!

216 comments:

  1. நான் T K அஹ்மத் பாஷா...
    அப்பாடா ....ஒரு வழியாக புதுப்பதிவு வந்தாகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. கண்ட்ரோலே தேவை இல்லை சார்! அடித்து நொறுக்கி பட்டையைக் கிளப்புங்கள்! தமிழ் காமிக்ஸ் வானம் எண்ணற்ற நட்சத்திரங்களால் நிரம்பி ஜொலிக்கட்டும்!!! வாழ்த்துக்கள்!!!

      Delete
  2. I am second...yahooooooooooooooooooooooooo

    ReplyDelete
  3. Dear Editor sir,
    A BIG NO FOR ANY SORT OF CRUISE CONTROL. Let us ramp up the speed if possible. Our books are the huge stress busters and a million THANKS to YOU for exposing us to this world of largo s, tigers, Tex's etc........

    ReplyDelete
    Replies
    1. Mohamed Harris : Having your unconditional support & love is thanks enough !! Much appreciated !

      Delete
  4. விஜயன் சார், அடுத்த 2 மாதம்களில் எங்களுக்கு 6 புத்தகம்கள் வர உள்ளன என நினைக்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது (ஜூன், ஜூலை, மற்றும் சூப்பர்-6 முதல் இதழ்). நமது காமிக்ஸ் 30 வருடத்தை காமிக்ஸ் புத்தகம்களால் நிரப்பி வருவது மகிழ்ச்சியை தருகிறது, அதே நேரம் நமது காமிக்ஸின் (அச்சு) தரம் குறையாமல் பார்த்து கொள்ளுங்கள்.

    நமது காமிக்ஸில் சிறந்த நாயகர்களில் ஒருவரான காரிகன் கதைகளை மறுபதிப்பில் வெளி இட முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : காரிகனின் புதுக் கதைகளே சரி வர விற்பனை ஆகவில்லை என்பது தான் யதார்த்தம் ! 1990-களில் லயனில் நிறைய வெளியிட்டோம் - வெகு மிதமான வரவேற்போடு மட்டுமே !

      Delete
  5. We are traveling with correct speed in right direction . No cruise control required!

    ReplyDelete
  6. No cruise control required. காமிக்ஸ் என்றும் திகட்டலை கொடுக்காது....

    ReplyDelete
  7. Replies
    1. நோ. எனக்கு எப்பவுமே ஏழரை தான்

      Delete
  8. ஹல்லோ ஆசிரியரே...
    எங்களுக்கு எந்த திகட்டலும் இல்லை.. எந்த பிரேக்கும் தேவையில்லை...
    சொல்லப்போனால் மாதம் இருமுறை இதழ்களை வெளியிட்டாலும் போதாது..
    தொடர்ந்து வெளியிடுவதைதவிர வேறு எண்ணமே வரக்கூடாது உங்களுக்கு..ஆமாம்..

    ReplyDelete
  9. அடுத்த ஆண்டில் கறுப்பு& வெள்ளையில் முன்னாள் நாயகர்களின் இடங்களை ஈடுசெய்யும் வகையில் புதிய சுவாரசியமான அறிமுகங்களை எதிர்பார்க்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. This is what I see from the last Comment
      கறுப்பு& வெள்ளையில் முன்னாள் நாயகர்களை எதிர்பார்க்கிறோம்! :)

      Delete
    2. ஆமாம் ... கறுப்பு& வெள்ளையில் முன்னாள் நாயகர்கள் மறுபடியும் வரட்டும்

      Delete
  10. dear editor,
    2015il Sherlock Holmes irukka?

    ReplyDelete
    Replies
    1. kavinth jeev : 2014 முதலில்....! தொடரும் ஆண்டும் சரி, அதன் இதழ்களும் சரி - அப்புறமாய் !

      Delete
  11. Largo winch wrapperன் பின்னணி வர்ணங்கள் அழுத்தமாகவும், dollarகள் குவியல் யதார்தமாகவும் உள்ளன!

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : பண மலையின் மீது அமர்ந்திருக்கும் கோடீஸ்வரக் கோமானின் கதைக்குப் பின்னணியில் டாலர்கள் பொருத்தமாய் இருப்பது இயல்பு தானே !

      Delete
    2. காசு பணம் துட்டு மனி ப்ளஸ் மரணம் ஹீ ஹீ ஹீ

      Delete
  12. amazing! but no speed brake. no cruise control.no number limitation from our side. in 2015 the numbers can be increased.which child would say no to icecream while eating chocalate.; the child will finish both and go for cake. ..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவு நல்வரவு ஆகட்டும் நண்பரே.

      Delete
  13. விஜயன் சார்,
    1. சிக்-பில் அட்டை படத்தில் நமது 30 வருட லோகோ, எப்பொதும் போல் அட்டையின் bottom left corner-ல் வருமாறு செய்வது நன்றாக இருக்கும்.
    2. லார்கோ மாதிரி பக்கத்தில் வசனம்கள் ஒன்று போல் கருமை நிறத்தில் இல்லை, இது போன்றுதான் கடந்த மாத "முகமற்ற கண்கள்" கதையில் 10 பக்கம்கள் இருந்தன. இதனை சரி செய்வது நலம், என்னை பொருத்தவரை இதற்காக புத்தகம்கள் சில நாட்கள் தாமதமாக வந்தாலும் பரவாயில்லை.
    3. நமது காமிக்ஸ் சரியான வேகத்தில் செல்லுகிறது, அதனால் 2015 ஏதும் மாற்றம் தேவை இல்லை. ஆனால் மாதம் தவறாமல் (குறைந்தது) 2 புத்தகம்கள் வருவது போல் பார்த்து கொள்ளவது நலம். முக்கியமாக சிறந்த கதைகளை மிக சிறந்த அச்சு தரத்தில் வெளி இடுவது நமக்கு மேலும் பெருமை சேர்க்கும்.
    4. 2015 மறுபதிப்பு செய்ய முடியும் என்ற கதைகளை பற்றி இங்கு தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. லார்கோ அட்டை படம் அருமையாக உள்ளது.. ஆனாலும் லார்கோவின் ஒரு ஆக்சன் படத்தை அட்டையில் போட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். :-)

      Delete
    2. அடுத்த வருடம் முதல் 2 மாதத்திற்கு ஒருமுறை "கலெக்டர் ஸ்பெஷல்" வெளி இடலாம்; வருடத்திற்கு 3 வண்ணம் மற்றும் 3 கருப்பு&வெள்ளை கதைகள்.

      Delete
    3. //..அடுத்த வருடம் முதல் 2 மாதத்திற்கு ஒருமுறை "கலெக்டர் ஸ்பெஷல்" வெளி இடலாம்; வருடத்திற்கு 3 வண்ணம் மற்றும் 3 கருப்பு&வெள்ளை கதைகள்....//

      +1 இதை நான் வழிமொழிகிறேன்

      Delete
    4. Parani from Bangalore : அச்சுப் பணிகளில் தாமதம் தரத்துக்கு உத்திரவாதமும் தராது ; துரிதம் மோசமும் செய்யாது பரணி சார் ! மசிகள் காய்ந்திட மழை நாட்களில் கொஞ்சம் அவகாசம் கிட்டினால் உதவும் ; ஆனால் இப்போதுள்ள வெப்ப நாட்களுக்கு அதற்கு அவசியமே கிடையாது.

      மற்றபடிக்கு நீங்கள் இங்கே பார்க்கும் அந்த எழுத்துக்களின் லேசான மொசுமொசுப்பு - அச்சுக் குறைபாடே கிடையாது - low resolution -ல் தெரியும் வித்தியாசம் மட்டுமே.

      Delete
  14. Dear Editor,

    எங்களது கோரிக்கையை ஏற்று LMS-யை இரு இதழ்களாக, அதுவும் original அளவுகளிலேயே வெளியிடுவதற்கு மிக்க நன்றி!

    ஜூன் மாதத்தைய இரு புத்தகங்ககளின் அட்டைகளுமே அருமை

    //....திரும்பிய பக்கமெல்லாம் மலையாய் காமிக்ஸ் குவியும் இந்தத் திடீர் அனுபவம் ஒரு திகட்டலை உருவாக்கிடக் கூடாதே என்ற சின்ன ஆதங்கமும் எனக்குள் உண்டு தான் ! 'வைச்சால் குடுமி - அடிச்சால் மொட்டை !' என்று பயணிக்கும் நமது வண்டிக்கு 2015-ல் cruise control என்றதொரு mode -ஐ அறிமுகம் செய்ய வேண்டுமா ? கொஞ்சமாய் வேகத்தை மட்டுப்படுத்திக் கொள்வது தேவலையா ?or are we doing alright ? ..//

    இதை.. இதைத் தானே எதிர்பார்த்தோம்.. வேகத்தை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டாம்... நல்லாத்தான் போய்கிட்டு இருக்கு ;) :) முடிஞ்சா இன்னும் கொஞ்சம் காமிக்ஸ் கூடுதலாகக் கிடைத்தால் நல்லது

    ஒரு சில வாசகர்கள் யோசனை கூறியது போல புதிதாக ஒரு கௌபாய்/டெக்ஸ்வில்லர் -க்காக மாதமிருமுறை தனியாக காமிக்ஸ் வெளியிட இயலுமா? :)

    ReplyDelete
    Replies
    1. // எங்களது கோரிக்கையை ஏற்று LMS-யை இரு இதழ்களாக, அதுவும் original அளவுகளிலேயே வெளியிடுவதற்கு மிக்க நன்றி! //
      +1

      Delete
    2. Periyar : //ஒரு சில வாசகர்கள் யோசனை கூறியது போல புதிதாக ஒரு கௌபாய்/டெக்ஸ்வில்லர் -க்காக மாதமிருமுறை தனியாக காமிக்ஸ் வெளியிட இயலுமா? :)//

      உள்ளபடிக்கே கௌபாய்கள் தான் ஏகப்பட்ட இடங்களை ஆக்கிரமித்து வருகிறார்களே - இதில் தனியாக இட ஒதுக்கீடு தேவையா - என்ன ? :-) :-)

      Delete
    3. We need seprate path for cowboys . You should give prefrence for cowboy digest. Pls sir make our dreams come true..

      Delete
  15. Coming more books is good for us but same time i am worrying about sales of book..... if few book in stock it cost his huge... then its hard for u so make so many way to sell the books to avoid stored in godown (for me they way of selling..... subscribed, online and book fair is not enough for our comics)

    ReplyDelete
    Replies
    1. Giri : சந்தாக்கள் கூடுவதே தீர்வு !

      Delete
  16. Dear Editor,
    There should be no Cruise Control or Any control as for as the number of Books are released,
    If you feel there should be some control then it should be only for Your No's to Olden Goldies :)

    Suresh

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவு நல்வரவு ஆகட்டும் நண்பரே.

      Delete
    2. Suresh Natarajan : உரக்கப் பேசாதீர்கள் ... மறுபதிப்புக் கோரும் நண்பர்களின் பற்கள் நறநறக்கும் ஓசை எழப்போகிறது !

      Delete
  17. "கன்சிஸ்டன்ஸி என்றுமே நமது பலமாக இருந்ததில்லை"
    .என்றும்,"தாமதப்பேய் நமக்கு புதிதல்ல"என்ற பல்லவியை பல காலம் பொறுமையாக கேட்டு வந்த நமக்கு ஆண்டவனின் கருணையால் இப்போது தான் வசந்த காலம் தொடங்கியுள்ளது.நீங்களானால் பிரேக்கைப்பற்றி சிந்திக்கிறீர்கள்..
    "என்ன கொடுமை சார் இது"...

    ReplyDelete
    Replies
    1. AHMEDBASHA TK : படிக்கும் ஆர்வத்துக்கு ப்ரேக் விழாத வரைக்கும், எல்லாமே நலமே !

      Delete
    2. நம்ம ரசிகர் படை சூப்பர் சானிக் ஜெட் வேகம் கொண்டவர்கள் சாரே!!!

      Delete
  18. YOU SHOULD ERASE THE IDEAS ABOUT REDUCING THE NUMBER OF BOOKS! AS A MATTER OF FACT YOU ARE IN A POSITION TO COMPENSATE US WITH MORE NUMBER OF BOOKS FOR THE PERIOD ELAPSED BEFORE LION COME BACK SPECIAL.
    GLAD TO KNOW THE ICECREAM AND THE CHOCALATE WILL BE SERVED IN SEPARATE CONTAINERS.

    ReplyDelete
    Replies
    1. lakshmi selvam : We will make up for lost time...!

      Delete
  19. விடுமுறையில் எப்போதும் சூடான உங்கள் சிந்தனைகளை சற்றே குளிர்வித்தல் செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் சார். கத்திரி வெய்யிலுக்குதான், லார்கோ கதைக்கு அல்ல சார். வண்டியை தொடந்து இதே வேகத்தில் விடுங்கள் சார். 2015ல் தலை Tex க்கான தனியாக ஒரு சர்வீஸ் லைன் எதிர் பார்க்கிறோம் சார் .

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : 2014-ன் மீத ஆறு மாதங்களுக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு - அப்புறமாய் 2015-க்குள் தலை நுழைப்போமே ?

      Delete
    2. ஆகா பேஸாங் சார். முன்பெல்லாம் இப்படி ஏதாவது கேட்டால் உடனடியாக மறுப்பு தெரிவிப்பது உங்கள் வழக்கம் சார். ஆனால் இப்போது இப்படி பார்க்கலாம் , சிந்திக்கலாம் , முயலலாம் என்று பாசிட்டிவ் ஆக உங்களின் பதில் வருவது கண்டு நம்பிக்கை பிறந்துள்ளது சார் . ஆக நண்பர்களே 2015ல் தலை texக்கு தனி சீரியஸ் உதயம் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை எனலாம்.

      Delete
  20. 1. எங்களது கோரிக்கையை ஏற்று LMS-யை இரு இதழ்களாக, அதுவும் original அளவுகளிலேயே வெளியிடுவதற்கு மிக்க நன்றி!
    2. நாம் இப்பொழுது செல்லும் வேகம் மிக சரி
    * ஆண்டு சாந்த + சூப்பர் 6 - Perfect Combination. மாற்ற வேண்டாம்.

    ReplyDelete
  21. Dear Editor,
    It's really heartening to see you have ceded to the wishes of several, not to reduce the size of Lucky & Co. Even though the '900 Page' special may look great in your resume, the longevity of the condition of the book would have been an issue. The separation may also help in better binding, because the one thing I'm afraid of is without proper stitching the pages may come off. Since its going to be one of a kind (or 'two' of a kind books) book from our stables, I request you to ensure proper printing and binding, even if the cost shoots up, I'm sure no one would begrudge you the extra money that we would need to pay. I hope these issues will bring around a new set of readers (at least my wife!!??)

    ReplyDelete
    Replies
    1. When they are split in 2, they are just 2 ordinary books. Why call them one of a kind and deceive ourselves?

      Delete
    2. AKK : One book..or two...900 pages or 750 + 150 ...the binding process stays the same ! So please don't worry !

      Delete
    3. Dear Sir, still 750 பக்கம் என்பதும் ஒரு சாதனை தான், ஆனால் 900 பக்கம் என்ற ஆசையில் இருந்தே எங்களுக்கு, அது இல்லை என்று சொன்னதும் வரும் ஏமாற்றத்தில் வரும் அதிருப்தி இது அவ்வளவு தான். சரியாகிவிடும். Soon our mind will adopt for this new change....

      Delete
  22. LMS ஐ இரண்டு இதழ்களாகப் பிரிப்பதை நான் முழுதாக எதிர்க்கிறேன். இப்போது அதனை LMS என்று அழைக்க வேண்டிய அவசியம் என்ன? LMS-1 LMS-2 என்று எழுதுவதையும் ஒரே நேரத்தில் வெளி வருவதையும் தவிர இந்த இதழ்களுக்கு துளியளவேனும் சம்பந்தம் இல்லையே? அந்த ஒன்பது கதைகளின் ஒரே இணைப்புப் புள்ளி அவை ஒரே புத்தகத்தில் வருகின்றன என்பதாகத் தானே இருந்தது. இப்போது அதுவும் இல்லை. மாதம் நான்கு இதழ்கள் வருவது போல், செப்டெம்பரில் இரண்டு வருகிறது, சற்றே பெரியதாக. அவ்வளவு தானே? LMS என்ற நாமகரணம் எல்லாம் எதற்கு? தனித் தனியாக விலையும் போட்டு விட்டால், வாங்குபவர்கள் தனியாகவும் வாங்கலாம். LMS என்றே பேரே அர்த்தமற்றதாகிவிட்டது. இனி என்ன 900 பக்கம், 1000 பக்கம் என்ற பேச்சு?
    ஒரு வருடத்தில் வந்து குவியும் புத்தகங்களுள் சற்றே பெரிய இரண்டு புத்தகம் எனபதைத் தாண்டி LMS இன் சாதனை என்று எதுவுமே இருக்கப் போவதில்லை. என்னிடம் LMS-1 இருக்கிறது, LMS-2 இல்லை என்று கேட்டு ஒன்றை மட்டும் கூறு போட்டு விற்கும் காலம் வந்து விடும். இரத்தப்படலம் போல் இது ஒரு சரித்திரமாக நிச்சயம் இருக்கப் போவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. சார், நமக்கு வேண்டியது காமிக்ஸ் தானே, அது எத்தனையிதழ்களாய் வந்தாலென்ன...? it's time to celebrate, lets enjoy.

      Delete
    2. @Prunthaban - Your argument also seems to be valid. I had initially thought that having 2 books is a good thing because we can enjoy color books in a bigger size but you are right its not LMS anymore. what to do .... confusion, confusion, confusion :(

      Delete
    3. @ FRIENDS : 758 பக்கங்கள் கொண்டதொரு புக் ஒரு சிறப்பிதழ் தகுதியைப் பெறாதெனின் நமது அளவுகோல்களை சரி பார்க்கத் தான் வேண்டும்.

      Delete
    4. OOooh so Italy ice cream is 758 pages ? then my confusion is gone. 758 pages will definitely make it as a special issue

      Delete
    5. ///758 பக்கங்கள் கொண்டதொரு புக் ஒரு சிறப்பிதழ் தகுதியைப் பெறாதெனின் நமது அளவுகோல்களை சரி பார்க்கத் தான் வேண்டும்.////

      750 பக்கம் ஒரு சிறப்பிதழ் இல்லை என்று சொல்லவில்லை sir, கண்டிப்பாக இது சிறப்பிதழ் தான். ஆனால் 900 பக்கத்தில் ஒரு மைல் கல் என்று அறிவித்து விட்டு, திடீர் என்று அதை 750+150 என்று மாற்றியதால் தான், அதை மனது ஏற்று கொள்ளவில்லை. ஆரம்ப அறிவிப்பின் போதே 750+150 என்று வந்து இருந்தால் then கண்டிப்பாக இந்த மாற்று கருத்து வந்து இருக்காது. இந்த மாற்றம் கூட நிறையே வாசகர்களின் கோரிக்கை + வியாபாரம் காரணமாக தான் என்று உணர முடிகின்றது. இது எங்களின் ஏமாற்றத்தின் வெளிப்பாடு அவ்வளவே.....

      Delete
  23. சார், இரண்டு கதைகளின் முன் , பின் அட்டைகளும் அருமை .
    லார்கோவின் கேள்விக்கு ப்ரெடியின் பதிலாய்
    என் வாழ்கை கருப்பு வெள்ளை உலகம் லார்கோ .... ஆகையால் வண்ணங்களை ரசிக்க இயலா செல்வந்தர்களின் மீது பாச்சாதாபம் பொழிய எனக்கு முடிவதில்லை .................நச் !
    மேக்னம் spl ஒரிஜினல் சைசிலே புத்தகங்கள் தனி தனியாய் என்பதும் சந்தோசம் ! டைகரை பெரிய சைசில் பார்ப்பதும் சந்தோசமே ! ஆனால் ஆயிரம் பக்கங்கள் என்ற ஒரு சாதனை மிஸ் ஆகி விட்டதே என சிறிய வருத்தமும் உள்ளது . கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை போல ....
    காலனின் கைக்கூலி முதலில் வருமென எதிர் பார்த்தேன் ....மங்கூசை முதலில் அனுப்பி விட்டீர்களே !
    மேஜிக் விண்டின் முதல் வருகைக்காக காத்திருக்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //காலனின் கைக்கூலி முதலில் வருமென எதிர் பார்த்தேன் ....மங்கூசை முதலில் அனுப்பி விட்டீர்களே ! //

      மங்கூஸ் மண்டையனோடு தான் ஆட்டமே தொடங்குகிறது என்பதால் ரேசில் முந்திக் கொண்டுள்ளான் ! "காலனின் கைக்கூலி " செப்டெம்பரில் !

      Delete
  24. லார்கோ அட்டைப்படம் நன்றாக வந்துள்ளது! ஒரிஜினலின் plain-னான பின்னணியை கத்தைப் பணமாக மாற்றிப் பறக்க விட்டிருப்பது அட்டகாசமான கற்பனை!

    -> ஜூலை மாதத்திதழ்கள் ஓகே. ஜூனில் என்ன இதழ்களில் என்பதில் அப்படியென்ன சஸ்பென்ஸ்,

    -> LMS-ன் இரண்டு அட்டைகளையும் அலங்கரிக்கப் போவது டெக்ஸ் and டைகர் தானே...?

    -> வருடத்திற்கு B/W-ல் தலா RS.10/- ல் 5 அல்லது 6 இதழ்கள் வந்த காலங்களோன்று...?

    -> ஒரு குறிப்பிட்ட வருடத்தில் இதழ்களே வாராமல் போனதும் உண்டு?

    -> காமிக்ஸ் வெளியீடுகளை மட்டுப்படுத்தலாமா என்று கனவில் கூட கேட்காதீர்கள். தங்களை எப்போதும் பிஸியாக வைத்திருக்க வேண்டுமென்பதே எங்கள் அவா...!

    -> இப்போதுதான் வேகம் எடுத்திருக்கும் காமிக்ஸ் எனும் வண்டிக்கு அதற்குள் speed-breaker போட்டுவிடாதீர்கள்!

    -> ஹே தில் மாங்கே மோர்......(பெப்சி அல்ல.)

    ReplyDelete
    Replies
    1. MH Mohideen : //தங்களை எப்போதும் பிஸியாக வைத்திருக்க வேண்டுமென்பதே எங்கள் அவா...!//

      துளியும் அலுப்புத் தட்டாத இந்தப் பணியினில் "பிஸி" யாக இருப்பது ஒரு அற்புத அனுபவம் !

      Delete
  25. சார் காமிக்ஸ் என்றும் திகட்டாது...நீங்கள் எத்தனை இதழ் போட்டாலும் நாங்க வாங்க தயாராக இருக்கிறோம்

    ReplyDelete
  26. ராணி,இந்ரஜால்,பொன்னி, என பல காமிக்ஸ்கள் வந்து கொண்டு இருந்த போது மாதம் நிறைய புத்தகம் வந்தன ஆனால் இப்பொழுது வருவது நமது இதழ்கள் மட்டும் தான் எனவே மாதம் எத்தனை புத்தகம் வந்தாலும் அலுக்காது அப்படி உங்களுக்கு தோன்றியது என்றால் 200 விலையில் நான்கு கதைகள் வருவது போல மாதம் வெளி இடலாம்

    ReplyDelete
    Replies
    1. lion ganesh : படிக்கும் ஆர்வமும், உற்சாகமும் குன்றிடாத வரைக்கும் எங்களுக்கு எதுவுமே சிரமம் ஆகாது !

      Delete
  27. நண்பன் ஒருவன் LMS ல் வரும் மார்ஷல் டைகர் கதை ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ள கதை என்கிறான். ஒரே வில்லன்தானாம் மூன்று கதைக்கும்......???

    ReplyDelete
    Replies
    1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : டைகரின் தற்போதைய கதை பாணியே....மார்ஷலுக்கும் ! ஒரே முடிச்சில் பயணமாகும் தனித்தனி சாகசங்கள் ! இலக்கு ஒன்றே ; பயணங்கள் வெவ்வேறு !

      அதிலும், கிட்டத்தட்ட 10-12 ஆண்டுகளுக்குப் பின்பாய் வெளியான பாகம் 3-ன் சித்திரங்கள் கண்ணீர் வரச் செய்து விடும் !

      Delete
  28. >> 'ஆஹா,தமிழாக்கம் நிறைய இடம் அடைக்கிறதே !' என்ற தலைநோவை பெரிதாகக் கருதாமல் - பேனாவை சுதந்திரமாய் நடை போட அனுமதிக்க வேண்டியாகிறது

    எனக்கு என்னவோ அப்படித் தெரியவில்லையே ;-) கட்டங்களில் ஓவியர் தூரிகையை சுதந்திரமாய் நடமாடச் செய்ததால் விளைந்த "வில்லங்க" ஓவியங்களை மறைக்க வேண்டுமென்றே பத்தி பத்தியாக எழுதி நிரப்பிய மாதிரி இருக்கிறதே :P

    ReplyDelete
  29. டியர் எடிட்டர் ,

    எனது அபிமான ஹீரோ லார்கோ வின்ச் இன் "வேட்டை நகரம் வெனிஸ்" அட்டை படம் அருமையாக வந்துள்ளது. ஒரிஜினல் இன் பின் புற வண்ண சேர்க்கைகளும் அழகு சேர்கின்றன . இதுவும் இரு பாக கதை களத்தின் சேர்க்கைதானா ? இன்னும் எவ்வளவு பாகங்கள் மீதமுள்ளன சார்? புதிய பாகங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளனவா என அறிய ஆவல் ? மேலும்" என் பெயர் லார்கோ" புத்தக வெளியீடு எனக்கு கிடைக்கவில்லை . கருணை கூர்ந்து அனுப்ப முடியுமா சார்? அமுதம் பருக பருக திகட்டுமா சார்? இப்போதுதான் சரியான ரூட்டில் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது . தயவு செய்து ஸ்பீட் பிரேக் போட்டுவிடாதீர்கள் .
    "ஜூலை மாதம் நான்கு இதழ்களா ? சூப்பர் ! அதுவும் கதை தேர்வுகள் அருமை . அள்ளி பருக ஆவலாக உள்ளேன் . "சென்ற மாத இதழான " நில் கவனி சுடு " ஹாலிவுட் பட திரில் , ஆக்சன் , கௌபாய் காக்டைல் . அதுவும் டெக்ஸ் வில்லேர் டீம் இல் உள்ள ஒவ்வொருவருக்கும் , தனி தனி ஆக்சன் கொடுத்துவிட்டு , கிளைமாக்ஸ் இல் டெக்ஸ் & கார்சன் , கை தேர்ந்த எதிரிகளான மேத்தர் , ஹூடு & கோ இனரை ஒற்றைக்கு ஒற்றை நேரடி மோதலில் வதம் செய்வதும் , மேத்தர் தன்னுடைய கடைசி நிமிடங்களில் கூட தன் தோட்டா , வெள்ளி முடியாரை பதம் பார்த்தது கார்சன் கூற கேட்டு பெருமிதத்துடன் உயிர் துறப்பதும் ; எனது மெய் சிலிர்த்தது போலிருந்தது சார். 3 முறை திரும்ப திரும்ப வாசித்தும் அடங்கவில்லை .
    டெக்ஸ் & கோ இன் சூப்பர் bang bang மேளா ! தொடர்ந்து இப்படி உங்களின் கதை தேர்வுகள் என்னருமே சோடை போனதில்லை . "தோர்கல் " கதை ஒரு தொடர் கதையின், முன்கதை பிளாஷ் பேக். அவ்வளவுதான் எனக்கு தோன்றியது . ஏனெனில் 3 கழுகுகளின் காவலனை பற்றி பெரிய பில்ட் அப் கொடுத்துவிட்டு , வெறும் சிறு அம்பொன்றில் அவளது உயிரை குறைக்க வேண்டுமா சார்?

    ReplyDelete
  30. வேட்டை நகரம் வெனிஸ்" அட்டை படம் அருமையாக உள்ளது சார்

    ReplyDelete
  31. Netru . . Namathu lion office vanthirunthen . . Ungalai santhikka mudiyavillai . . . Anke eruntha lms postar suppper . . Attai padamaga poda vendiya still sir athu . . Appuram noolagam erukum eana nambi vanthen . . . Atharkaana arikrikale kaanome edi sir ? Eannachu sir antha visayam . . . ?

    ReplyDelete
  32. விஜயன் சார், உங்கள் விளக்கம்களுக்கு நன்றி.

    நீங்கள் கூறுவது போல் "low resolution" அல்லது மசிகள் காயவில்லை அல்லது font என்ற காரணம்கள் என்றால் சரி.

    மீண்டும் இதை பற்றி சொல்லவதற்கு மனிக்கவும், I feel some thing interesting here,
    குறிப்பாக இரண்டாம் வரிசையில் கடைசியில் உள்ள "சேரிட்டி" படத்தில் உள்ள வசனம்கள் மற்ற வசனம்களை விட (அச்சு) தெளிவு இல்லாமல் இருப்பதை பாருங்கள்.. அதே போல் 3 வரிசையில் கடைசியில் லார்கோ நண்பர் பேசும் வசனம்களை கவனித்து பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : லார்கோவும் சரி, சிக் பில்லும் சரி, அச்சுக்குச் செல்லவிருப்பதே அடுத்த வாரத்தில் தான் ! நீங்கள் இங்கு பார்ப்பது டைப்செட் செய்து வந்துள்ள பக்கத்தின் low resolution பைல் மாத்திரமே !

      Delete
  33. டியர் எடிட்டர்,

    புத்தகங்களின் எண்ணிக்கையை பொறுத்த வரை பிரதம அளவுகோல் liquidation of stocks தான். விற்றுத் தீர்ந்து விடும் பட்சத்தில் சீரான ஒரு எண்ணிக்கையில் பதிப்பிக்கலாம்.

    அடுத்த முக்கிய விஷயம் - predictability. இந்த தேதியில் வந்துவிடும் என்று ஒரு routine அமைந்து விட்டால் சந்தா அல்லாத வாசகர்கள் வாங்குவதற்கு பணம் தயார் செய்திட வசதியாக இருக்கும்

    (இப்போதைய விலைகள் சற்றே அதிகம் அல்லவா ? - அதாவது பத்து / இருபது என்றால் பர்சில் இருந்து எடுத்து வாங்கி விடலாம் - நூறு - இருநூறு எனும்போது மாதாமாதம் கொஞ்சம் budgeting time தேவை - எனவே predictability and periodicity - இவை சீராய் அமைந்துவிட்டால் - things will look more straightened out for you.

    Comic Lover

    ReplyDelete
    Replies
    1. Raghavan : (ஜனவரி) சென்னை புத்தக விழாவின் ஒரு 40% விற்பனையாவது சாத்தியமாகும் இன்னுமொரு புத்தக விழா எங்கேனும் உருவாகும் பட்சத்தில் - நமது சிரமங்களின் பெரும்பகுதி காணாமல் போய் விடும் ! பாக்கி குட்டிக் குட்டி book fairs உதவியோடு வண்டியை ஒட்டி விடலாம். நெய்வேலி எத்தகைய விற்பனைக் களம் என்பதைப் பார்த்திட இந்தாண்டு வாய்ப்புக் கிட்டுமாவென்று தெரியவில்லை ! ஆவலாய்க் காத்துள்ளோம் !

      Delete
  34. டியர் எடிட்டர்ஜீ!!!

    //திரும்பிய பக்கமெல்லாம் மலையாய் காமிக்ஸ் குவியும் இந்தத் திடீர் அனுபவம் ஒரு திகட்டலை உருவாக்கிடக் கூடாதே என்ற சின்ன ஆதங்கமும் எனக்குள் உண்டு தான் ! 'வைச்சால் குடுமி - அடிச்சால் மொட்டை !' என்று பயணிக்கும் நமது வண்டிக்கு 2015-ல் cruise control என்றதொரு mode -ஐ அறிமுகம் செய்ய வேண்டுமா ? கொஞ்சமாய் வேகத்தை மட்டுப்படுத்திக் கொள்வது தேவலையா ?or are we doing alright ?//

    இது உங்களுக்கே நியாயமாக படுகிறதா அய்யா...? நமது லயனுக்கு 30ஆவது ஆண்டு ஆகிறது.நியாயப்படி பார்த்தால் இதுவரை 360 புத்தகங்களை நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டும்.ஆனால்,வெளிவந்திருப்பதோ 227 புத்தகங்கள் மட்டும்தான்.அதேபோல முத்து காமிக்ஸ் வெளியீடுகள் கடந்த 41 ஆண்டில் 500 புத்தகங்களை கடந்திருக்க வேண்டும்.வெளிவந்துள்ளதோ வெறும் 329 புத்தகங்கள்.ஆகா,கிட்டதட்ட 300 இதழ்கள் சார்ட்டேஜாக வெளியிட்டுவிட்டு "குடுமி,மொட்டை" என்றெல்லாம் பேசி கடுப்படிக்காதீர்கள்.வேகத்தை மட்டுப்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை.மீறி வேகத்தை நீங்கள் மட்டுப்படுத்தினால் உங்களை எதிர்த்து "நூடுல்ஸ் & உப்புமா " போராட்டத்தை நடத்துவோம்.உஷார்.கபர்தார்.ஹிஹி!!!

    ReplyDelete
    Replies
    1. saint satan : கவலையே படாதீர்கள் ; இதே ஸ்பீடில் இன்னும் ஓரிரு ஆண்டுகள் செல்லும் பட்சத்தில் - 'கூட்டிக், கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாகி விடும் "!

      Delete
  35. 1. ஜூன், ஜூம்ம்னு ஏன் சார் இப்படி டி.ஆர் மாதிரி இறங்கிட்டீங்க? எல்லா டைட்டிலும் எதுகை மோனையோட இருக்கணும்னு அவசியமில்லையே! :-))))))))))

    2. புத்தகம் ரெண்டாக பிரிக்கப்பட்டதில் பிருந்தாபனைப்போல எனக்கும் வருத்தமே எனினும் அதில் ஒரு புத்தகம் 758 பக்கங்கள் என்பதை நீங்கள் முதலில் குறிப்பிடவில்லையே, பதிவிலேயே குறிப்பிட்டிருக்கலாம். 758 பக்கமுள்ள புத்தகமே இனி LMS என்று அழைக்கப்படட்டும். இதுவே NBSப்போல ஏறத்தாழ இருமடங்கு தடிமன் இருக்கும் என்பதில் நிச்சயம் இது சாதனை இதழ்தான். மகிழ்ச்சிதான். பக்கங்கள் குறைந்தாலும் அளவில் பெரிதாவது அதை ஈடுசெய்யும். தூக்கிப்படிப்பதை எண்ணி வருந்தும் நண்பர்களுக்கும், பைண்டிங் பிரச்சினைகள் குறையும் என்பதாலும் நிச்சயம் இதை ஏற்கலாம். ஆனால் கூட வரும் பி&ஒ ஒல்லி இதழைத்தான் எப்படி கூப்பிடுவது எனத் தெரியவில்லை. பேசாமல் இலவச இணைப்புனு போட்டுருங்க.. ஹிஹி! நம்ப மக்களுக்கு பத்து ரூபா புக்கு இலவசம்னா, 1000 ரூபாய் புக்கானும் டக்குனு யோசிக்காம வாங்கிடுவாங்க.. இதை ஜோக்காத்தான் சொல்றேன், இருந்தாலும் இது ஒர்க் அவுட் ஆவுமோ.? :-)))))))))

    3. பிரேக்கெல்லாம் தேவையில்லை. இப்பதான் ஃபோர்த் கியர் போட்டு ஒழுங்கா 45 கி,மீ ஸ்பீட்ல போறோம். 80ஐ தாண்டினா பிரேக் அடிப்பதைப் பற்றி யோசிக்கலாம். இருந்தாலும், தயாரிப்பு, ஸ்டாக் போன்ற பிரச்சினைகள் உங்கள் கையைக் கடிக்குமோ என்ற கவலை எங்களுக்கும் உண்டு. அதற்கு சந்தா அதிகரிப்பு நிச்சயம் ஒரு நல்வழியாயினும், பிடிவாதமாக ‘சந்தா ஒன்றே ஒரே தீர்வு’ என ஆணித்தரமாக முடிவு செய்துகொள்ளாமல் வாசகர்களை சென்றடைய வேறு மார்க்கங்களையும் யோசிக்கவும். ப்ளீஸ்! அட்வைஸ் செய்வதாக எண்னவேண்டாம்!

    ‘ஒரு கிரியேட்டராக என்னதான் கர்வமா ரசிச்சி ரசிச்சி உருவாக்கினாலும், ஒரு புரடியூஸரா என் படத்தை நான் தெருவில் இறங்கி கூவிக் கூவி வித்துதான் ஆகணும்’ -கமல்ஹாஸன்.

    4. ஹீரோயினுக்கு ட்ரெஸ் போட்டுவிட ஒரு தேர்ந்த காஸ்ட்யூம் படையே வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. :-)))))))

    5. சி.ஐ.டி ராபினுக்கு ஒரு வாய்ப்புத் தரவும். ஹிஹி! மறுபதிப்பில் அல்ல, ’காணாமல் போன புத்தகங்கள்’ என்ற ஆதியின் கதைக்கு ஒரு விடை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ஏப்ரல்’23ல் டெலிவர் செய்யப்பட்ட புத்ததங்கள் இன்னும் என்னை வந்தடையவில்லை. ST ஊழியர்கள் +தங்கள் அலுவலக ஊழியர்களிடம் போராடிக்கொண்டிருக்கிறேன். ஆவன செய்யவும். :-)))

    ReplyDelete
    Replies
    1. ஆதி தாமிரா : சின்ன திருத்தங்கள் - உங்களின் புரிதல்களில் :

      LMS -ன் 758 பக்க இதழானது டெக்ஸ் ; ராபின் ; டைலன் டாக் ; மர்ம மனிதன் மார்டின் ; (அறிமுக) ஜூலியா மற்றும் கிராபிக் நாவலோடு கலர் + கருப்பு-வெள்ளையின் கலவையாக இருக்கும் ! இவை அனைத்துமே LMS -ன் அளவுக்குள் பாந்தமாய்ப் பொருந்தும் சீரான சைசிலான கதைகள் என்பதால் ஆறு கதைகள் கொண்ட இந்த combo தடிமனான இத்தாலிய ஐஸ்கிரீமாக வெளியாகும். பெல்ஜிய ஆக்கங்களான மார்ஷல் டைகர் + லக்கி லூக் + ரின் டின் கேன் - 144 பக்கங்களில் - வழக்கமான பெரிய சைசில் - முழு வண்ணத்தில் வெளியாகும். நாம் இப்போது பார்த்து வரும் ரூ.120 விலையிலான (ஷெல்டன் ; லார்கோ போன்ற ) இதழ்களின் பக்க எண்ணிக்கை 104 தான் எனும் போது - இந்த 144 பக்க இதழ் # 2-ம் நிச்சயமாய் ஒல்லியாஇத் தெரியப் போவதில்லை !

      வாசகர்களைச் சென்றடைய விற்பனையாளர்கள் எனும் பூசாரிகள் மனது வைப்பதில் தான் சிக்கலே எழுகின்றது ! முன்பணம் தந்து இதழ்களைத் தருவிக்க தற்போதைய சிறு விற்பனையாள வட்டத்தைத் தாண்டியோர் தயாராகவே இல்லை ! திரும்பவும் கடன், நிலுவை ; வசூல் படலம் என்று வம்பை விலைக்கு வாங்கிக் கொள்ள நாங்களும் தயாராக இல்லை என்பதால் தான் சந்தா + நேரடி விற்பனைக்கு வாய்ப்புத் தரும் புத்தக விழாக்களை நாடி ஓட வேண்டியுள்ளது !

      ஹீரோயினுக்கு டிரஸ் போட்டு விடாவிட்டால் என் முதுகுக்கு அயோடெக்ஸ் போட வேண்டி வருமென்ற முன்ஜாக்கிரதை தான் !

      ST Courier - இன்று மாற்றுக் கூரியரில் வேறொரு செட் பிரதிகள் அனுப்புகிறோம் ; ST -ல் இதற்கான பணத்தைப் பிடித்தம் செய்து கொள்ள இயலும் ! இதற்கு மேல் அந்தப் பக்கம் குஸ்தி போட வேண்டாம் !

      Delete
    2. LMS -ன் 758 பக்க இதழானது டெக்ஸ் ; ராபின் ; டைலன் டாக் ; மர்ம மனிதன் மார்டின் ; (அறிமுக) ஜூலியா மற்றும் கிராபிக் நாவலோடு கலர் + கருப்பு-வெள்ளையின் கலவையாக இருக்கும் //

      ஓ.. தவறாகத்தான் புரிந்திருந்தேன். விளக்கத்துக்கு மிக்க நன்றி.

      ஹீரோயினுக்கு டிரஸ் போட்டு விடாவிட்டால் என் முதுகுக்கு அயோடெக்ஸ்//

      ஹாஹா! :-)))))))

      இன்று மாற்றுக் கூரியரில் வேறொரு செட் பிரதிகள் அனுப்புகிறோம்//

      மிக மிக நன்றி சார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சி. இங்கே இதை ஒரு தகவலாகத்தான் சொன்னேன் உங்களுக்கு. நீங்கள் சொல்லாவிட்டால் டார்ச்சர் பண்ணி புக்கை எப்படியாவது வாங்கிவிடலாம், அவர்களுக்கும் ஒரு பாடம் கற்பித்தால் போலிருக்கும் என்று எண்ணியிருந்தேன். :-)))))))))

      சந்தா + நேரடி விற்பனைக்கு வாய்ப்புத் தரும்// இது மட்டும்தான் இடிக்குது. அதுசரி, உக்காந்து வேடிக்கை பார்த்துட்டு, அட்வைஸ் பண்றது எங்களுக்கு ஈஸியாகத்தான் இருக்கு. வலி உங்களுக்குதானே தெரியும். இதில் நல்மாற்றங்கள் ஏற்பட்டு விற்பனை பெருகிட என் வாழ்த்துகளை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்!

      Delete
    3. மாற்றுப் புத்தகங்கள் வந்துவிட்டன சார், மிக்க நன்றி! இது நண்பர்களுக்கான‌ தகவல்!

      Delete
  36. ஜூலையின் நான்கும் ஜூன் மாதத்தின் இரண்டும் மே கடைசியிலேயே கொண்டு வந்தாலும் கூட எங்கள் காமிக்ஸ் காதல் தீரவே தீராது சார் .வேகம் பத்தாது என்றுதான் சொல்லுவோம்.

    ReplyDelete
  37. விஜயன் சார், தோர்கல் கதையை நேற்று எனது துணைவியார் படித்து விட்டார், கதை பிடித்து உள்ளது. குறைந்த பக்கம்கள் என்றதால் படித்த திருப்தி இல்லை, அதனால் 4-5 பாகம்களை ஒன்றாக இணைத்து ஒரே புத்தகமாக வெளி இட சொல்லுங்கள்; ஆசிரியர் அடுத்த வருடம் முதல் "தோர்கல் கலெக்டர் ஸ்பெஷல்" வெளி இட உள்ளார் என சொல்லி விட்டேன்.

    ReplyDelete
  38. # மலையாய் குவியும் காமிக்ஸ் திகட்டலை உருவாக்கி விடுமோ #

    ஏன் சார் ...நீங்க வேற ......எத்துனை புக் விட்டாலும் ..,எத்துனை பக்கத்தில் விட்டாலும் முதல் வேலையாக நமது காமிக்ஸ் இதழை படித்து முடித்து விட்டு அடுத்த இரண்டு நாளில் அடுத்த மாசம் எப்போ வரும்னு ஏங்கிட்டு இருக்கோம் ..நீங்க வாரம் ரெண்டு புக் விட்டாலும் எங்களுக்கு திகட்டாது சார் ...இந்த வேகமே எங்களுக்கு குறைச்சலாய் தான் தெரியும் :-)

    எனவே நோ ஸ்பீடு பிரேக் ....

    ஜூலையின் நான்கு புத்தங்களும் ஜூன் மாதமே வந்து விடுமா சார் ...வந்தால் மிக பெரிய மகிழ்ச்சி ..

    LMS இரண்டாக பிரிவதில் வருத்தமா....சந்தோசமா என்று எனக்கு சொல்ல தெரிய வில்லை சார் ...பட் அந்த 758 பக்க புத்தக அட்டைபடத்தில் எங்கள் "டெக்ஸ் " இடம் பெறா விட்டால் இங்கு ஏற்படும் கலவரம் மிக பெரியதாக இருக்கும் என்பது மட்டும் உண்மை .

    ReplyDelete
  39. ஸ்பீட் பிரேகர் வேண்டாம் ...............பறக்கும் கம்பள சர்வீஸ் தொடங்குங்கள்...........வீ வீ வீ ......போலாம் ரைட்

    ReplyDelete
    Replies
    1. பேசாமல் அண்ணன் லார்கோவிற்கு டௌசெர் போட்டு இருக்கலாம் ...........
      அண்ணிக்கு சட்டை போட்டதற்கு ''ஈரோட்டு'' சார்பாக கண்டனங்கள்......

      Delete
    2. சென்னை சார்பாகவும்தான் மந்திரியாரே!!! ஹீ ஹீ ஹீ!!!

      Delete
    3. கோவை சார்பாகவும் கண்டனத்தை ஜோள்ளிகொள்கிறோம்

      Delete
  40. அப்புறம் சார் ....சூப்பர் 6 சந்தா இன்னும் நான் கட்டவில்லை சார் .மன்னிக்க ..

    காலை 7மணிக்கு அலுவலகம் சென்று இரவு 7மணிக்கு வீடு திரும்பும் சூழ்நிலையும் வார ஒரு நாள் விடுமுறையில் கடை வேலையும் சரியாக இருப்பதால் ஈரோடு புத்தக கண்காட்சியில் அண்ணாச்சி இடம் சந்தா செலுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.

    ஆனால் அப்படியும் ஒரு குழப்பம் .ஜூலை மாத சூப்பர் 6 புத்தகம் எப்படி வாங்குவது என்றும் ஒரு வருத்தம் . :-(

    ReplyDelete
  41. எடிட்டர் சார்,

    ம்ஹூம்! 'ஓவர் டோஸ்' என்று நினைப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். இப்போது வருவதைவிட இன்னும் நான்கு மடங்கு அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் வந்தாலும் நாங்களெல்லாம் "இன்னும்... இன்னும்... தாகம்... தாகம்..." என்றுதான் அலறிக்கொண்டிருப்போமாக்கும். சீக்கிரமே வாரம் இரு (குண்டு) இதழ்களாவது வர இப்பிரபஞ்சத்தின் எல்லா சக்திகளையும் வேண்டிக் கொள்கிறேன்.

    பலரையும் பலமுறை திரும்பத் திரும்பப் படிக்க வைத்திருப்பதன் மூலம் 'நில்-கவனி-சுடு' இவ்வருடத்தில் இதுவரை வந்த இதழ்களில் நம்பர்-1 என்று நான் சொன்னால் மறுத்துப் பேச உங்களிடம் காரணங்கள் இருக்கிறதா சார்?

    லார்கோ அட்டைப்படம் பற்றியது: பரபரப்பான ஆக்ஷன் நாயகனான லார்கோ 'ஆதலினால் அதகளம் செய்வீர்' என்ற தலைப்பில் அடுப்பருகே அமர்ந்து குட்டியுடன் குளிர்காய்வது; 'வேட்டை நகரம் வெனிஸ்' என்ற தலைப்பில் LKG ஸ்டூடண்ட் மாதிரி மாறுவேடப் போட்டிக்குத் தயாராய் நிற்பது - போன்ற கோணங்கித்தனங்களால் படிக்கும்போது கிடைக்கும் பரபரப்பை அட்டைப்படங்களில் தவறவிடுகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறதே... :)

    ReplyDelete
  42. Dear Sir, கடந்த 15 நாட்களாக, எப்படா அடுத்த இதழ்கள் கிடைக்கும் என்றும் ஏக்கதோடு காத்திருக்கின்றோம். இப்போ வெளியிடும் எண்ணிக்கையே போதவில்லை so வேகதடை போடும் அளவிற்கு நாம் வேகமாக பயணிக்க வில்லை என்றே நினைக்குறேன். முடிந்தால் வேகத்தை இன்னும் அதிகரிக்கவும். Our support will be always there. Apart from usual release of books, Please try to release black & white books in the 2nd half of each month.

    ReplyDelete
  43. ///LMS ஐ இரண்டு இதழ்களாகப் பிரிப்பதை நான் முழுதாக எதிர்க்கிறேன். இப்போது அதனை LMS என்று அழைக்க வேண்டிய அவசியம் என்ன? LMS-1 LMS-2 என்று எழுதுவதையும் ஒரே நேரத்தில் வெளி வருவதையும் தவிர இந்த இதழ்களுக்கு துளியளவேனும் சம்பந்தம் இல்லையே? அந்த ஒன்பது கதைகளின் ஒரே இணைப்புப் புள்ளி அவை ஒரே புத்தகத்தில் வருகின்றன என்பதாகத் தானே இருந்தது.///
    ///இனி என்ன 900 பக்கம், 1000 பக்கம் என்ற பேச்சு?
    ஒரு வருடத்தில் வந்து குவியும் புத்தகங்களுள் சற்றே பெரிய இரண்டு புத்தகம் எனபதைத் தாண்டி LMS இன் சாதனை என்று எதுவுமே இருக்கப் போவதில்லை.///
    ///இரத்தப்படலம் போல் இது ஒரு சரித்திரமாக நிச்சயம் இருக்கப் போவதில்லை.///

    இந்த கருத்தை முழுதாக நான் ஆதரிக்கின்றேன். ஆனாலும், ஆசிரியரின் இந்த முடிவுக்கு வியாபாரம் தான் காரணமாக இருக்கும் என்று நினைக்கின்றேன் (Super6 சந்தா இன்னும் எதிர்பார்த்த இலக்கை எட்டி இருக்காது என்று நினைக்கின்றேன்.). ஆனாலும் இந்த முயற்சி வியாபாரம் + நமது ஒரு சில நண்பர்களின் கோரிக்கையும் ஒரு சேர பூர்த்தி செய்யும் என்றும் நினக்கும் போது, இந்த மாற்றத்தை மனதளவில் ஏற்க எங்களை தயார் படுத்திக்கொள்கிறோம்....உங்கள் முயற்சி எதுவாகிலும், அது முழுமையாய் வெற்றி பெற வாழ்த்துகள் sir. ஆனாலும், 1000 பக்கம் என்ற மைல் கல் வேறு ரூபத்தில், கூடிய விரைவில் எங்களை வந்தடையும் என்று நம்புகின்றேன்...

    ReplyDelete
  44. //இதோ - 2014-ன் முதல் லார்கோ வின்ச் சாகசத்தின் அட்டைப்படத்தின் first look ! //


    ஒரிஜினல் அட்டைப்படத்துக்கு நாம் செய்திருக்கும் BG ENHANCEMENT வேலை நன்றாக உள்ளது. நமது அட்டைக்கும் ஒரிஜினல் அட்டைக்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள் என்ன என்று ஒரு போட்டி(KBDF) வைத்து வெற்றி பெறுபவருக்கு ஒரிஜினல் அட்டையை எடிட் செய்யாமல் அப்படியே பரிசளிக்கலாம். :-))))!

    // அட்டையின் அழகு மங்கை சற்றே அடக்க ஒடுக்கமாகவும் காட்சி தருவதை உங்களின் கழுகுக் கண்கள் நிச்சயமாய் தவற விட்டிருக்காது !//

    //அட்டையினில் மாத்திரமின்றி, கதையிலும் ஆங்காங்கே 'காற்றோட்டமாய்' உலவிடும் லார்கோவின் தோழிகளை கொஞ்சமாய் நமது "கண்ணிய அளவுகோல்களுக்குள்" கொணர்ந்திட நிறையவே மெனக்கெட வேண்டியிருந்தது ! //

    ஒரு காலத்தில் காகித அளவுகோல்களுக்குள் LAYOUT அமைக்க நமது ஓவியரை கொண்டு படங்களை EXTEND செய்து வரைந்ததை இன்னமும் மறக்கமுடியவில்லை. வான்சுக்கு இணையாக நமது ஓவியர் ஒரு சில பதின்முன்று பாகங்களில் படங்களை EXTEND செய்தது (EX:பார்ட்:3) கொடுமையிலும் கொடுமை. THANK GOD அவ்வாறு இப்போது நடப்பதில்லை. வசன பலூன்களை கொண்டு சமாளிப்பது அருமையான யுக்தி. அதையும் மீறி ஒரு சில வேலைகளில் ஓவியங்களின் மீது கை வைக்க நேரும்போது ஒரு PROFESSIONAL ஓவியரை கொண்டு ஓவியத்தை சிதைக்காமல் சாதுர்யமாக, வித்தியாசம் தெரியாத வகையில் எடிட்/SENSOR செய்யவேண்டியது மிக முக்கியம். உதாரணத்துக்கு அந்த ட்ரைலரில் இரண்டாவது ரோவில் உள்ள முதலாவது படம். இதில் செய்யப்பட்டுள்ள சென்சார் வேலையை இன்னமும் கொஞ்சம் கலை நயத்துடன், ஓவிய நளினத்துடன் செய்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. காற்று..................... வாங்கும் மங்கை
      காற்று வாங்கும்.................. மங்கை
      காற்று வாங்கும் மங்கை.......................ஸ் ஸ் ஸ் ஸ் ஹா ..................

      Delete
  45. Sir, Usaully minimum three story (Rs.180) is released per month. But one story is missing in July count. Please dont clash super 6 with regular releases....

    ReplyDelete
  46. சார், ஆத்மாக்கள் அடங்குவதில்லை பெயரும் , விளம்பரமும் தூள் !

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் தான் .................எத்தனை கதை வந்தாலும் பத்தாது

      Delete
  47. Sir, waiting for Largo winch and chick bill.

    Also my favourite characters are Gil Jordan, Thorgal, Steel body sherlock, phantom, corrigan. thanks

    ReplyDelete
  48. காவல் கழுகு விளம்பரத்தில் டெக்ஸ் ன் புன்னகை அட்டகாசமாக உள்ளது. அட்டைப்படத்தில் இதை கொண்டுவாருங்களேன் pls

    ReplyDelete
  49. காவல் கழுகு விளம்பரத்தில் டெக்ஸ் ன் புன்னகை அட்டகாசமாக உள்ளது. அட்டைப்படத்தில் இதை கொண்டுவாருங்களேன் pls

    ReplyDelete
  50. என்னது ஸ்பீட்பிரேக்கரா சரிதான்! நாம் இன்னும் ஸ்டேட் ஹைவேஸில்தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம்

    தங்க நாற்கர சாலைகளை பயன்படுத்த துவங்கும்போது நிதானமாக செல்வது பற்றி யோசிக்கலாம்

    ReplyDelete


  51. LMS டெக்ஸ்வில்லார்,டயபாலிக் சைஸில் என்றவுடன் ஆரம்பத்தில் சின்ன ஏமாற்றத்தோடு சுவாரசியம் குறைந்து போனது உண்மை.இருப்பினும் இப்போது குண்டு புக் இல்லை, இருவேறு புத்தகம் என்பதிலும் ஒரு வகை வருத்தம் வர தான் செய்கிறது.கதைகளின் சுவை அதை களைந்து விடும் என்று காத்திருக்கலாம்.

    பர்ஸ் விடயத்தில் திகைப்பு வந்தாலும் வரலாம்.காமிக்ஸ் படிப்பதில் நிச்சயம் திகட்டல் ஏன் ஸார் வர போகிறது?

    லார்கோ அட்டை அருமை,நீண்ட காலமாக குதிரை ஓட்டும் டெக்ஸ் ,டைகர் கதைகள் எப்போ வரும் என்றதை விட லார்கோ பொறுமையை அதிகம் சோதிக்கிறார்.அவரது ஜெட் வேகத்தில் அவர் கதைகள் இலங்கை வந்திட நீங்கள் மனம் வைக்க வேண்டும்.

    ReplyDelete
  52. லக்கியின் பூம் பூம் படலம் விளம்பர போஸ்டரில் மறுபதிப்பு என்பதற்கு பதிலாக மறுதிப்பு என்று உள்ளது. இதுதான் அட்டைபடம் என்றால் உடனே திருத்தம் செய்து கொள்ளவும். லார்க்கோ அட்டைபடம் அருமை. புத்தகங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற நினைப்பே இனிமேல் தயவு செய்து உங்களுக்கு வரவேண்டாம். மேஜிக் விண்ட் வருகையை எதிர்பார்த்து மனம் பரபரக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. டைகர் பார்வை தான் உமக்கு ..................(டெக்சு பார்வை என்றால் =PROGRESSIVE LENS பார்வை ஹி ஹி ஹி )

      Delete
    2. டைகர் பார்வை தான் உமக்கு ..................

      ரெட், ஜிம்மிக்கு அடுத்து டைகருக்கு நண்பர் முகுந்தன்தான் என்பதில் சந்தேகமில்லை.

      Delete
    3. விரைவில் டைகர் கதைகள் அனைத்தும் முடிந்தது என்று எடிட்டர் அறிவிக்க போகிறார். அன்று முகுந்தன் காமிக்ஸ் வாழ்க்கையை வெறுத்து சந்நியாசம் போய்விடுவார் என்று நினைக்கிறேன்.

      Delete
    4. மறுபதிப்பு என்ற வார்த்தை தமிழில் இருக்கும் வரை சந்நியாசம் என்ற பேச்சுக்கே இடமில்லை

      Delete
  53. Sir surly we need cowboy digest for every month. Pls make it happen....

    ReplyDelete
  54. adutha pathivil LMS in cover photovai veli iduveergala?????!

    ReplyDelete
  55. விஜயன் சார், பள்ளிகூடம்கள் திறக்கும் சமயம் என்பதால் நமது ஜூன் மாத இதழ் உடன் நமது காமிக்ஸ் லோகோ/காமெடி நாயகர்களின் படம் உடன் டைம் டேபிள் மற்றும் லேபில் கொடுத்தால் நமது காமிக்ஸ்க்கு பள்ளி செல்லும் குழந்தைகள் மூலம் விளம்பரம் கிடைக்க வாய்ப்புகள் ஏராளம். முடிந்தால் முயற்சிக்கவும்.

    ReplyDelete
  56. It's good to know LMS is coming two separate books. It is easy to read. Why don't we call them LMS Part 1 -
    Taste of Italy & LMS Part 2 - Taste of Belgium.

    ReplyDelete
  57. மாஜிக் விண்ட்-ன் "ஆத்மாக்கள் அடங்குவதில்லை" தலைப்பு ஒரு மாதிரி நெருடலாகவுள்ளது?
    "துயில மறந்த உயிர்கள்" / "தூக்கம் தொலைத்த உயிர்கள்" / "தறிகெட்டு அலையும் உயிர்கள்" போன்றவற்றை யோசிக்கலாமே...?

    ReplyDelete
    Replies
    1. The Magic Wind title best suits to the story line. It's not a random title.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  58. NO, DON'T DECREASE THE BOOKS COUNT IT'S NOT TOO HIGH, MONTHLY TWO OR THREE IS ALSO NOT ENOUGH SIR. THIS IS THE CORRECT COUNT, OR YOU WILL INCREASE THE COUNT IT'S HAPPY TO US. COMICS IS NOT A SWEET???? IT'S A READING LOVE. SO IT'S NEVER BITTER. DON'T LESS THE COUNT ANY TIME.

    ReplyDelete
  59. Dear Editor,
    Last month's Bruno Brazil made me think about another William Vance spectacular, BRUCE J HAWKER...Sir, can u try to bring that to our comics? The Sea adventure has a great story arc and gorgeous artwork...would love to read in your inimitable translation...will not be possible due to money constraints..etc..etc..but one can dream...

    ReplyDelete
    Replies
    1. AKK : Bruce Hawker தொடரில் சித்திரங்களில் உள்ள வலு, கதையில் குறைவு என்பது ஏன் அபிப்ராயம். ஆங்கிலப் பதிப்புகளைப் பாருங்களேன்..!

      Delete
  60. Editor Sir,

    Thanks a lot for separating the Belgium stories from Italian stories; so that we can enjoy all the stories art in it's original size.

    My personal choice will be for individual book for a story; instead of merging various kinds of stories in a single book. I welcome more in the line of Lucky Special, Reporter Jhony Special, Tex Special, Captain Prince special, XIII collector special; instead of NBS, ANS, LMS..etc.

    There are more chances, that some stories can get easily lost in the cocktail albums. If you are introducing any new character's in the future, please release as a individual album.

    ReplyDelete
  61. அய்ய்ய்ய்யாயா நானும் வந்துட்டேன்ல.

    ReplyDelete
  62. since there are 2 books now why not include chick bill in it ..

    ReplyDelete
  63. சார் புத்தகங்கள் இரண்டாக பிரிந்து வருவதில் சந்தோசமே.

    கண்டிப்பாக குறைக்க வேண்டாம்.ஏற்கனவே மாதத்தில் பல நாட்கள் விட்டத்தை பார்த்து ஓட்ட வேண்டியுள்ளது.

    தரத்தில் குறை வராமல் மேலும் அதிகப்படுத்த முடிந்தால் சந்தோசமே.

    இரண்டாவது 144 பக்க புத்தகம் வருவதில் நண்பர்கள் பலர் வருத்தம் கொண்டுள்ளனர்..அதற்காக ஒரு சிறு யோசனை.

    நம்ம கிட் ஆர்ட்டின் கதை இல்லாததற்கு நீங்கள் புத்தகத்தின் அளவை காரணமாக கூறினீர்கள் (வசனங்கள் அதிகமாக இருந்ததால்).

    இப்போ தனிய பெரிய அளவில் தான் வர போகிறது என்பதால் கிட் ஆர்தினையும் சேர்த்தால் ஓரளவு அப்புத்தகமும் சின்ன குண்டு புத்தகம் போல் ஆகிவிடும்.

    முயற்சி செய்து பாருங்கள் சார்.

    எனது தீபாவளி மலர் இப்பொழுதே பிரிந்து விட்டது ஆகையால் பைண்டிங்கில் வேறு நல்ல முறை ஏதாவது பயன்படுத்த முடியுமா என்றும் பாருங்கள் சார்.

    ReplyDelete
  64. கிருஷ்ணா வ வெ: ....கிட் ஆர்தினையும் சேர்த்தால் ஓரளவு அப்புத்தகமும் சின்ன குண்டு புத்தகம் போல் ஆகிவிடும்.

    Good Idea...

    ReplyDelete
  65. டியர் எடிட்,

    முதலில், மேக்னம் ஸ்பெஷல் இரண்டு தனித்தொகுப்புகளாகவே வெளிவரும் என்ற அறிவிப்பிற்கு, ஒரு "பிரமாதம் சாரே" வாங்கி கொள்ளுங்கள்.

    சைஸ் சைஸாக பால்யத்தில் நாம் பார்த்த பல காமிக்ஸ் தொகுப்புகள், அக்கால காமிக்ஸ் பற்றிய பெரிய அனுபவம் இல்லா சமயங்களில், கொண்டாட்டமாக இருந்தது என்பதை ஒப்புக்கொண்டாலும், பிற்பாடு ஒரிஜினலை போலவே அதே சைஸ் மற்றும் வண்ண பரிணாமமாக வந்திருக்கலாமோ என்று எழுந்த ஆசை அளவுக்கதிமானது. பிற்பாடு XIII போன்ற தொகுப்புகளை வெளியடும் போது, அது சைஸ் வாரியாக பிரிந்திருநதது எவ்வளவு பிரம்மபிரயத்தனம் என்று நீங்களே ஒரு முறை கருத்திட்டிருப்பதும் ஞாபகம் இருக்கும்.

    நமது சமீபத்திய மறுபதிப்புகள் மூலம், "சரித்திரத்தை புரட்டி போடுவோம்" என்று ஒரு சீரான பாதையில் சென்று கொண்டிருந்த போது, மேக்னம் ஸ்பெஷல் என்ற ஒரு விடயம் அதை திரும்பவும் கதைகளை சைஸ் வாரியாக மாற்றிட எண்ணிட தோன்றி விட்டதே, என்ற வருத்தம் உங்கள் முதல் அறிவிப்பின் போது அதிகம் இருந்தது. அடிப்படையில் நீங்களும் ஒரு காமிக்ஸ் வாசகன், என்ற விடயம், தற்போது மீண்டும் இந்த அறிவிப்பின்படி ஊர்ஜிதமாகி இருப்பது, மெத்த மகிழ்ச்சி. மொத்த தொகுப்புகளில் இனி எப்போதும் தொடர்கதைகளை இணைக்க மாட்டோம் என்று ஒரு உறுதிமொழி மட்டும் கொடுத்தீர்கள் என்றால் டபுல் மஜா.

    தனி தனி தொகுப்புகள், அதுவும் ப்ரான்கோ பெல்ஜியன் தனியே .. என்னும் போது, நமது ஆதர்ச நாயகர்கரான சிக்பில் & Co வையும் இணைத்து விடுங்களேன். டெக்ஸ்-ராபின்-டைலான் என்று ஒரு பக்கம் நாயகர்கள் கூட, மறுபக்கம் லக்கிக்கு, டைகர், மற்றும் ரின்டின் கேன் மட்டும் துணைபுரிவது நியாயமன்றோ ??

    கூடவே, Super 6 சந்தாவில் இரு வாரங்கள் முன்பே இணைந்தேன்... அடுத்த இதழ் வரும் போது, மியாவி தொகுப்பையும் மறக்காமல் அனுப்பி வையுங்களேன். ஆபிஸில் போனில் தகவல் பரிமாறியும் விட்டேன். வரும்காலத்தில் Super 6 சந்தாதாரர்களுக்கு மட்டும் அளிக்கபடும் இப்படிபட்ட இலவசங்களை, உயிர்நாடியான வருடாந்திர சந்தாதாரர்களுக்கும் சேர்த்தே அனுப்பினால், அவர்களும் மனமகிழ கூடும் ஆவண செய்யுங்களேன் :)

    ReplyDelete
    Replies
    1. லார்கோ அட்டை மாற்றங்கள் அலாதி. சமீப காலமாக ஒரிஜினல் அட்டைகளை அப்படியே சற்றே நமது ரசனைக்கு மாற்றி வெளியிடுவதும், தற்போதைய அட்டை பட டிசைனான, முன்பக்க பிரதான அட்டை, பின்பக்க ஓவியர், கதாசிரியர் புகைபடம் மற்றும் கதை சுருக்கம், என்ற பாணி சிறப்பாக இருக்கிறது... இதையே தொடருங்கள்... என்ன சிக்பில் அட்டை போல ப்ளு வண்ணம் 50 சதவிகித அட்டையை ஆக்கிரமிக்காமல் இருந்தால் இன்னும் சிறப்பு.

      கூடவே, தற்போதைய இதழ்களில் இனிவரும் இதழ்கள் பகுதிகள் அதிகம் ஆக்கிரமித்து கொள்வது சற்றே குறைபாடு... அவற்றுக்கு 2,3 பக்கங்கள் மேல் (அட்டை உட்பட) மேல் போகாமல் பார்த்து கொள்ளுங்களேன்... கூடவே, அப்பங்களில் சின்ன கதை நிரப்பிகள் இடம்பெற ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது போலவும் இருக்கும்.

      சமீப கால கருப்பு வெள்ளை பக்கங்களின் தரம் பற்றி ஏற்கனவே பல முறை இங்கு கருத்து பரிமாற்றங்கள் நடந்து விட்டபடியால், அதிகம் கூற தேவையில்லை.. ஆனால் ஒடிசலான பள பள பக்கத்தை விட, சமீபத்திய நில் கவனி சுடு போல மங்கலான, ஆனால் சற்றே தடிம பக்கம் பரவாயில்லை என்று தோன்றுகிறது... விரைவில் அதையும் பளீச் வௌளைக்கு மாற்றி விட நீங்கள் முனைந்திருப்பது கைகூடட்டும் சீக்கிரமே.

      Cruise Control எண்ணத்திற்கான என் கருத்து, மாதம் 2 அல்லது 3 இதழ்கள் என்ற பாணியை (60+60+60 / 60+120) இன்னும் வாசகர்கள் மற்றும் சந்தா கூடும் வரை அதிகரிக்காமல் பார்த்து கொண்டால், புத்தகங்கள் தேங்கி போகும் நிலை ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம் என்றே தோன்றகிறது. 2011/12 க்கான இதழ்கள் இன்னும் கைவசம் இருப்பு இருப்பதும், நாம் அதிக இதழ்களை மாதா மாதம் ஏற்றி கொண்டே செல்வதும், பண நெருக்கடியை உருவாக்கி, மொத்த்திற்கும் தடங்கல் போடாமல் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். வாசகர்கள் கூட கூட, புத்தக எண்ணிக்கைகளும் அதிகரித்து கொள்ளலாம். இது எனது எண்ணம் மட்டுமே.

      கூடவே தற்போதைய புத்தக வெளியீடுகளில், முத்து லயன் மற்றும் கிராபிக் வரிசைகளுக்குள் பெரிய தனித்துவம் தென்படாதது சற்றே நெருடுகிறது. முன்பு போல முத்து கருப்பு வெள்ளை பிரதிநிதி மற்றும் லயன் கலர்புல் காம்பினேஷன் என்ற கோட்பாடுகள் தகர்ந்து விட்டபடியால், இனி த்ரில்லர், அதிரடி கதைகள் லயனுக்கு, கிளாசிக், இத்தாலி கருப்பு வெள்ளைகள் முத்துவுக்கு, கிராபிக் நாவல்கள் கிராபிக் லைப்ரரி வரிசை என்று ஒரு கோட்பாடை வகுத்து விட்டால், பிராண்டுகளுக்குள் ஒரு போட்டியை உருவாக்கி தனித்துவத்தை நிலைநாட்ட முடியும் என்று எண்ணம் செல்கிறது. சற்றே கவனியுங்களேன்... எடி ?

      Delete
    2. கடைசி பாராவை முழுமையாக ஆதரிக்கிறேன்.

      Delete
    3. நீங்கள் சொல்லும் சைஸ் விஷயம் ஒத்துக்கொள்ளக் கூடியது தான். ஆனால் முதலில் சைஸ் வேறு வேறான புத்தகங்களை ஒரே தொகுப்பில் அறிவிப்பானேன்? அறிவித்த பின் இரண்டாகக் கூறு போடுவானேன்? முதலிலேயே LMS 758 பக்கம் தான் என்றும் இன்னொரு இணைப்பும் அதே மாதம் வரும் என்றும் சொல்லியிருக்கலாம். அல்லது ஒரே சைஸ் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து 900 பக்கம் என்று செய்திருக்கலாம் என்பதே என் ஆதங்கம்.

      Delete
    4. Prunthaban : அவசியங்களுக்கும், முன்னேற்றங்களுக்கும் கூட மாற்றங்களின் பக்கமாய்த் தலை வைக்கக் கூடாதெனும் சித்தாந்தத்துக்கு நான் ரசிகனல்ல ! தவிர, உயரத்தில் ஒரு இன்ச்சும் ; அகலத்தில் ஒன்றரை இன்ச்சும் உலகத்தைத் தலைகீழாய்ப் புரட்டிப் போடப் போவதாய் நான் நிச்சயம் பார்க்கவில்லை ! (இத்தாலியக் கதைகள் வரும் சைசுக்கும், பெல்ஜியக் கதைகளின் (பெரிய) சைசுக்கும் இடையிலான வேறுபாடு இந்த 1+1.5 இன்ச் மாத்திரமே !

      Delete
    5. Rafiq Raja : //த்ரில்லர், அதிரடி கதைகள் லயனுக்கு, கிளாசிக், இத்தாலி கருப்பு வெள்ளைகள் முத்துவுக்கு, கிராபிக் நாவல்கள் கிராபிக் லைப்ரரி வரிசை என்று ஒரு கோட்பாடை வகுத்து விட்டால், பிராண்டுகளுக்குள் ஒரு போட்டியை உருவாக்கி தனித்துவத்தை நிலைநாட்ட முடியும் என்று எண்ணம் செல்கிறது.//

      சிந்திக்கச் செய்யும் அபிப்ராயங்களே ! தலைக்குள் போட்டு வைத்துக் கொள்கிறேன் !

      Delete
    6. Rafiq Raja : //தனி தனி தொகுப்புகள், அதுவும் ப்ரான்கோ பெல்ஜியன் தனியே .. என்னும் போது, நமது ஆதர்ச நாயகர்கரான சிக்பில் & Co வையும் இணைத்து விடுங்களேன்.//

      இந்தக் கேள்விக்கு பதிலளிக்கப் 10 நாட்கள் கொடுங்களேன்..!

      Delete
    7. Rafiq Raja : //மொத்த தொகுப்புகளில் இனி எப்போதும் தொடர்கதைகளை இணைக்க மாட்டோம் என்று ஒரு உறுதிமொழி மட்டும் கொடுத்தீர்கள் என்றால் டபுல் மஜா.//

      இத்தாலியப் புது வரவான மேஜிக் விண்ட் தொடரை LMS -ல் இணைக்காது அதற்கென தனி தண்டவாளம் போட்டுவிட்ட போதே நாம் உஜ்ஜாலாவுக்கு மாறி விட்டது புரிந்திருக்குமே ? :-)

      Delete
    8. டியர் எடிட்,


      பதில்களுக்கு நன்றி. தொடர் கதைகள் சமீப அறிவிப்புகளில் தனியாக வெளிவருவதை பார்த்தேன்.. ஆனாலும் நமது ஆதர்சன நாயகர்களை (அவர்கள் தொடர்கதை வகையறாக்கள் என்றாலும்) ஒரே தொகுப்பில் நுழைக்கும் நமது முன்கால பாணிக்கு திரும்ப சென்று விட கூடாதே என்ற ஆதங்கத்தில் தான் அந்த கேள்வி. உறுதிபடுத்தியதற்கு நன்றி எடிட். கூடவே சிக்பில் கதை தொடர்பான 10 நாட்கள் அறிவிப்பிற்கு காத்திருப்போம் :)

      லயன் முத்து கிராபிக் நாவல் வரிசைகள் பற்றிய பதில் கருத்து, கதைவரிசைகள் முறையாக்கபடும் என்று நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது.

      Delete
    9. //..தனி தனி தொகுப்புகள், அதுவும் ப்ரான்கோ பெல்ஜியன் தனியே .. என்னும் போது, நமது ஆதர்ச நாயகர்கரான சிக்பில் & Co வையும் இணைத்து விடுங்களேன்.//

      //..இந்தக் கேள்விக்கு பதிலளிக்கப் 10 நாட்கள் கொடுங்களேன்..! ...//

      சூப்பர் .. அப்ப கிட் ஆர்டின் & டாக் புல்-லும் LMS உறுதியாக வருகிறார்கள் :)

      Delete
  66. அட்டைபடம் இரண்டும் சூப்பர். லக்கி அட்டையில் இடம் பெற்றுள்ள நீல நிறம் ஒரு வித்தியாசமான தோற்றத்தை காட்டும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. ஆத்மாக்கள் அடங்குவதில்லை, விரியனின் விரோதி இரண்டுமே அறிமுகங்கள் என்பதால் விரைவில் படிக்கவேண்டும் என்ற ஆவலை உண்டாக்குகிறது.
    சில பத்திரிகைகள் வாரம் 2 அல்லது 3 கூட வெளியிடும் சூழ்நிலையில் நமது காமிக்ஸ் வெளியீடுகள் அதிகம் என்பது நகைப்பை உண்டாக்குகிறது. வாரம் ஒன்று என்பதுதான் சரியான நடைமுறை. அவ்வப்போது புத்தாண்டு மலர், தீபாவளி மலர், பொங்கல் மலர், கோடை மலர் என ஒன்று வருவது உத்தமம்.

    ReplyDelete
    Replies
    1. RamKumar Ram : //சில பத்திரிகைகள் வாரம் 2 அல்லது 3 கூட வெளியிடும் சூழ்நிலையில் நமது காமிக்ஸ் வெளியீடுகள் அதிகம் என்பது நகைப்பை உண்டாக்குகிறது.//

      இதர பத்திரிகைகள் ஆறு இலக்க விற்பனை எண்ணங்களைப் பார்த்திடுவதற்கும், நாம் நான்கிலக்க எண்ணிக்கைகளுக்குள் குப்பை கொட்டுவதற்கும் இமய மலை உயரத்திலான வேற்றுமை உண்டல்லவா ?

      Delete
  67. டியர் விஜயன் சார்,

    2015-ல், ஆண்டு சந்தா தனி; சில மாதங்கள் கழித்து சூப்பர் சிக்ஸ் சந்தா தனி என்று, பிரித்துப் பிரித்து அறிவிப்பதற்கு பதிலாக, இவ்வாண்டின் இறுதியிலேயே இரண்டையும் அறிவித்து விட்டால், ஒரே சமயத்தில் பணம் கட்ட வசதியாக இருக்கும். இது ஒரு சாராருக்கு சுமையாக இருக்கும் என்று நீங்கள் கருதினால், மொத்தத் தொகையை, இரண்டு தவணைகளாக பிரித்துச் செலுத்தும் வசதியை செய்து தரலாமே?

    Amazon-ல், புதிய இதழ்களை சில மாதங்களாகவே லிஸ்ட் செய்யவில்லையே, ஏன் சார்?!

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : தொடரும் ஆண்டின் சந்தாக்களை ஒட்டு மொத்தமாய் நிர்ணயம் செய்வதில் எனக்கும் சிரமங்கள் உள்ளன ; நண்பர்களில் ஒரு தரப்புக்கும் இக்கட்டு உள்ளது !

      ஒரு முழு ஆண்டின் வெளியீடுகள் எனப் பார்க்கும் போது - கிட்டத்தட்ட 45 முழுக் கதைகள் அவசியமாகின்றன ! 45 கதைகளைத் தேர்வு செய்திட நாங்கள் சுமார் 200 கதைகளை மேலோட்டமாய் மொழிபெயர்த்து ; இணைய தளத்து review -களைப் படித்து ; கிடைக்கும் ஆங்கிலப் பதிப்புகளைப் புரட்டி ; பிரெஞ்சு ; இத்தாலியக் காமிக்ஸ் பதிவர்களிடம் கொஞ்சமாய் உரையாடி - தேர்வு செய்ய வேண்டியதாகிறது ! (அத்தனை வேலை பார்த்தும் அவ்வப்போது 'சொதப்பல்ஸ் ஆப் பெல்ஜியமும் ' உட்புகுவதைத் தவிர்க்க இயலவில்லை என்பது வேறு விஷயம் !!) So ஒரே தவணையில் அனைத்தையும் நாம் finalize செய்யவிருக்கும் பட்சத்தில் எனக்குக் குறைந்த பட்சம் 2 மாதங்கள் lead time தேவை ! ஆனால் ஒவ்வொரு ஆண்டுமே இறுதி 6 மாதங்கள் தான் நமக்கு செம பிசியாக அமைந்து போவதால் தேர்வுகளைச் செய்திட அந்த குஷன் கிடைப்பதில்லை !

      தவிரவும், புதுத் தொடர்களின் உரிமைகளுக்காக வெவ்வேறு நிறுவனங்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது அனைவரிடமுமே ஒரு uniform அட்டவணை போடுவது சிரமாகிறது ! நாம் இங்குள்ள லோக்கல் புத்தக விழாக்களுக்கு ஷண்டிங் அடிப்பது போல, அவர்கள் சர்வதேசப் புத்தக விழாக்களில் கடை போடும் பார்டிக்கள் ! ஆண்டின் ஒவ்வொரு மாதமும், உலகின் ஒவ்வொரு நாட்டில் கூடரமிட்டிருப்பர் ! So நான் நொய்-நொய்யென்று அவர்களைக் குடலை உருவிக் கொண்டே இருப்பினும், சில வேளைகளில் ஒரு தீர்க்கமான picture உருவாக ஆறேழு மாதங்கள் கூட ஆகி விடுவதுண்டு ! "சூப்பர் 6-ல் " அறிவித்துள்ள மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் + தீபாவளி மலர் இதழ்களில் வரக் காத்திருக்கும் கதைகளின் உரிமைகளைப் பெற எனக்கு சென்றாண்டு ஆகஸ்ட் முதல் சமீபம் வரை அவகாசம் எடுத்துள்ளது ! So இது போன்ற சந்தர்ப்பங்களிலும் எனக்கு இரு வெவ்வேறு அட்டவணைகள் தயாரிக்கும் சுதந்திரம் அவசியமாகிறது !
      Contd..

      Delete
    2. Karthik Somalinga : Contd : நண்பர்களுக்கோ - stating the obvious ..... 'ஒட்டு மொத்தமாய் இவ்வளவா ?' என்ற மலைப்பும், சமயத்தில் இல்லத்தரசிகளிடம் வாங்கிக் கட்ட நேரிடும் டின்களின் வலிமையையும் கூடிடக் கூடும் ! ஒரு பக்கம் பார்த்தால் இரு தவணைகளாய் கட்டுவதும் ; இரு தனித் தனி payments -க்குமிடையே பெரியதொரு வேறுபாடு இல்லை தானே ?

      AMAZON -ஐப் பொறுத்த வரை அதுவொரு சோகக் கதையே ! அவர்களது நிர்வாகச் செலவுகள் ; வரிகள், பிடித்தங்கள் போக நமக்குக் கைக்குக் கிடைப்பது பட்டாணிக் கடலையும், பொறி கடலையும் மாத்திரமே ! பெரிய விலை கொண்ட பிரதிகள் தவிர நம் போன்ற ஐம்பது, அறுபது ரூபாய் வெளியீடுகளுக்கு இந்த platform ஒத்து வரப் போவதில்லை !

      Delete
    3. மிக நீண்ட விளக்கத்திற்கு நன்றி சார்! கதைத் தேர்வில் / உரிமை பெறுவதில் ஏற்படும் உங்கள் தரப்பு சிரமங்கள் புரிகிறது. ஒரு ஆண்டு முழுக்க வெளிவரப் போகும் கதைகளின் பட்டியலை, முன்கூட்டியே வெளியிட்டாக வேண்டும் என்ற (அதீத) எதிர்பார்ப்பு என்னைப் பொறுத்த வரை நிச்சயமாக இல்லை!

      ஒரு ஆண்டிற்கான இதழ்களின் 'எண்ணிக்கையை' மட்டும் முடிவு செய்து விட்டு, முழுமையான சந்தாவாக அறிவிக்கலாமே என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் அந்த யோசனையைப் பகிர்ந்தேன் (உங்களுக்கும் வருடத்தில் இரண்டு முறை சந்தாவிற்காக follow-up செய்யும் வேலை குறையும் இல்லையா?!). இருப்பினும், அப்படிச் செய்வதிலும் வேறு பல சிக்கல்கள் / வாசகர்களின் மாற்றுக் கருத்துக்கள் இருக்கும் என்பது புரிகிறது!

      Delete
    4. கதை சுருக்கம், மாதிரி பக்கங்கள், ஒரிஜினல் காமிக்ஸ் ப்ளாக் ரசிகர்களிடையே கருத்தாய்வு, என்று இத்தனை விஷயங்களிற்கு பிறகும், சொதப்பலான கதைகள் தருவது, தற்போது ஐரோப்பாவிலும் பரவியிருக்கும், ”எண்ணிக்கை அவசியம், கதை தரம் அல்ல” (Milking the Cash Cow) என்ற எண்ணப்போக்கையே பிரதானபடுத்துகிறது.

      அமெரிக்க மற்றும் மங்கா காமிக்ஸ் வழிதடம் ஐரோப்பிய கதை தொடர்களையும் விட்டு வைக்காது போல. பணம் படுத்தும் பாடு :(

      Delete
    5. ஜப்பானியர்களின் மங்கா காமிக்ஸ் எல்லைகள் விரிந்துகொண்டே போகிறது. புகிஷிமா அணு உலை விபத்தையும், அதை அரசாங்கம் மூடிமறைக்கமுயற்சிக்கும் விஷயங்களை கூட அங்கே காமிக்ஸாக மக்களிடம் கொண்டு சேர்கிறார்கள். மகளும் அதை வாங்கி படித்து அரசியலும் கற்றுகொள்கிறார்கள். சமூகபிரச்சனைகள் காமிக்ஸ்மூலமும் தெரியவைக்கமுடியும் என்ற அவர்களது ரசனை பொறாமை கொள்ள செய்கிறது.

      Delete
  68. LMS 758 பக்கம் என்பதற்கு பதிலாக 900 + பக்கங்கள், பெரிய சைஸ் புத்தகத்திற்கு சிக்பில் கதையையும் சேர்த்து, சிறிது குண்டு புத்தகமாக மாற்றி, சிறிது விலையை கூட்டிக்கொன்டால் அனைவருக்கும் மகிழ்ச்சியே..

    ReplyDelete
    Replies
    1. Srithar Chockkappa : விலையில், கதைகளில் மாற்றங்கள் செய்யக் கூடிய காலகட்டங்களைக் கடந்து விட்டோம் நண்பரே .. ! கவலை வேண்டாம் - LMS -ஐக் கையில் ஏந்தும் போது நிச்சயம் disappoint ஆகிட மாட்டீர்கள் !

      Delete
  69. Dear Editor,

    LMS கலர் இதழில் ஒரு சிக்-பில் அல்லது வேறொரு பிரான்கோ-பெல்ஜிய காமெடி கதை சேர்த்து ஆல் நியூ ஸ்பெஷல் சைஸில் வந்தாலும் கொண்டாட்டமே - விலை நிர்ணயம் ஆகிவிட்டதால் இதிலிருக்கும் சுமைகளை அறிவேன் - பிளஸ் சிக்ஸ்ல் வரும் ஒரு இதழை இணைத்து விடலாம் ! இதெல்லாம் வெறும் யோசனையே - இங்கே அமர்ந்து டைப் அடிப்பது சுலபமல்லவா :-)

    Comic Lover

    ReplyDelete
    Replies
    1. Raghavan : LMS-ல் புதிதாய் கதைகள்...விலையேற்றம் என்பன நிறைய நடைமுறை சிக்கல்களுக்குட்பட்டவை என்பதை நாம் அறிவோம். So மாற்றங்கள் இனி சாத்தியமாகாது !

      தவிர சமீபமாய் எகிறி வரும் காமிக்ஸ் பட்ஜெட்டைப் பற்றி ஒரு சென்னை வாசகர் எழுதியுள்ள கடிதத்தை சமயம் வாய்க்கும் போது இங்கு பிரசுரிக்கிறேன் ; விலைகளைக் கொஞ்சமேனும் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள் என்று ஆதங்கத்தோடு எழுதியுள்ளார் !

      Delete
  70. @ rafiq / @ comic lover... Welcome back.

    (நாங்க எல்லாம் இப்போ வந்தவுங்க, நீங்க எல்லாம் ஆதிவாசிகள்.ப்ளாக் ஆரம்பிச்சதுல இருந்து இருகவுங்க, ஓர் ப்ளாக்ஐ / காமிக்ஸ் ஐ வெற்றிகரமாக எடிட்டர் தொடர்ந்திட காரணகர்த்தாக்கள் என்று அறிந்தே இருக்கிறோம், ஆயினும் சூப்பரூவிசை ஹாப்பி அண்ணாச்சி.. this blog is gonna see a welcome change..)

    ReplyDelete
  71. டெக்ஸ், புருனோ, தோர்கல் என 3 கதைகளையும் ஒரே நாளில் படித்து முடித்தேன். தோர்கல் நன்றாக இருந்தது. டெக்ஸ் கதை சிறப்பாக இருந்தது. ஆனால் புத்தகத்தில் ஒரே சில பக்கங்கள் பிரிண்டிங் சரி இல்லாமல் இருந்தது. புருனோ சிறுவர் தங்கமலர் படித்தது போல் இருந்தது. இதுபோன்ற கதைகளை தவிர்த்தால் நன்றாக இருக்கும்.
    லயன் மேக்னம் ஸ்பெசலை தனித்தனியாக வெளியிட வேண்டாம் 900 பக்கங்கள் ஒன்றாக வெளிவந்தால் நன்றாக இருக்கும். அட்டை படங்கள் இரண்டும் அருமை.

    ReplyDelete
  72. லயன் மேக்னம் ஸ்பெஷல் ஒரே முழு இதழாக வெளிவந்தால் நன்றாக இருக்கும்!
    ஸ்பெஷல் என்றாலே ஒரு முழு இதழாகவே நாங்கள் எதிர்பார்க்கிறோம் சார்!

    ReplyDelete
    Replies
    1. WillerFan@RajaG : ஆகஸ்ட் வரைப் பொறுமை ப்ளீஸ் - நிச்சயமாய் நீங்கள் disappoint ஆகிட மாட்டீர்கள் !

      Delete
  73. சார் ...என்னால் ஈரோடு புத்தக கண் காட்சியில் தான் சூப்பர் 6 சந்தா கட்ட முடியும் போல் தோன்றுகிறது .அங்கு lms புத்தகத்தை வாங்கி மற்ற சூப்பர் 6 இதழ்களுக்கு சந்தா கட்ட வசதி உண்டா என்பதை தெரிவித்தால் மகிழ்ச்சி அடைவேன் .

    ReplyDelete
  74. Paranitharan K : பணம் வாங்க மறுப்போமா நண்பரே ?

    ReplyDelete
  75. LMS iru ithazhkalaka varuvathum nalame.siriya sizil 900 pakankal enpathu nerudlakave irunthathu.

    waiting for "LMS" cover photo!!!

    ReplyDelete
  76. ஹையா .........நான்தான் 900001 ஆவது ஆள்!!!

    ReplyDelete
  77. இத்தனை மசாலாக்களுக்குமிடையே தாங்கள் சன்ஷைன் தொகுப்பை முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கிறது. தங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    பாலா
    சக்தி லைப்ரரி - பாளையங்கோட்டை

    ReplyDelete
  78. ஒரு சிப்பாயின் சுவடுகளை போல இன்னொரு அட்டகாசமான கிராபிக் நாவல் எப்போது வெளிவரும்???

    ReplyDelete
  79. ஒரு சிப்பாயின் சுவடுகளில் போல அட்டகாசமான கிராபிக் நாவல் விளம்பரத்தை தாங்கள் வெளி இட்டால் கூட எனக்கு கண்களில் கண்ணீர் வந்து விடும் சார் ... ( தயவு செய்து ஆனந்த கண்ணீர் என்று நினைத்து நண்பர்கள் கை தட்ட வேண்டாம் ) .மீண்டும் நினைவு படுத்துவதாக நினைக்க வேண்டாம் சார் .இந்த மாதம் உங்கள் ஊர் மருத்துவர் அவர்களின் வாசகர் கடிதம் மீண்டும் படித்து விட்டீர்களா ..?

    ReplyDelete
  80. நமது இந்த வலை தளம் திருமண வீடு போல களை கட்டி பதிவு வந்த இரண்டு நாளில் 200 .,300 கமண்ட்ஸ் வந்து சிற் சில வருத்தம் ..,கொஞ்சம் கோபம் ...நிறைய சந்தோசம் என கலந்து கட்டி அடிக்கும். சந்தோசமான இடத்தில அப்படி இருந்தால் தான் அதற்க்கு அழகு .

    இப்பொழுது .....

    ஈரோடு விஜய் வெற்றிகரமாக ஒரு கருத்து ....

    கோவை ஸ்டீல் ......இரண்டு கருத்து....+பதில்

    முகுந்தன் குமார் ...ஒரு கருத்து + பதில்


    பெங்களூர் கார்த்தி ....ஒரு கருத்து + பதில்

    செந்தில் மாதேஷ் ......ஒரு கருத்து...

    ரமேஷ் ........காணவில்லை.....காண வில்லை நண்பர்களை

    இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .அதுவும் லார்கோ வரும் சமயம் .....

    ஏதோ ரபிக் ராஜா...விஸ்கி சுஸ்கி ..,ராகவன் போன்ற சீனியர்கள் கொஞ்சம் வருவதில் சந்தோசம் .

    இந்த கல்யாண வீட்டை முகம் பார்க்காமலே பலரின் மீது கோபம்...,வருத்தம்...சங்கடம் வர வைத்து ஏதோ பெற்றோர் ஆதரவை மீறி ஓடி போய் பல சுமைகளை சுமந்து திருட்டு கல்யாணம் செய்த வீடு போல ஆனதில் ஒரு பங்கு இந்த " காமிக்ஸ் " க்கும் உண்டு என்பதில் எனக்கு அதிர்ச்சி தான் .காமிக்ஸ் நண்பர்களை மட்டுமே சம்பாதித்து தரும் என்று நினைத்திருந்தேன் .போனது போகட்டும் என்று திருட்டு கல்யாணமே செய்திருந்தாலும் ஒரு வாரிசு வரும் சமயம் அனைத்து தரப்பும் மகிழ்ச்சியில் கூடுவது போல ஒரு மிக பெரிய " ஆண்டு மலர் " என்று ஒரு வாரிசு வரும் சமயம் இந்த வீட்டில் பழைய படி கணக்கு ..வழக்கு பார்க்காமல் அடுத்தவர்களை நோகடிக்காமல் உரையாற்றி மீண்டும் ..,மீண்டும் இங்கு தாலி கட்டும் வரை ( காமிக்ஸ் இருக்கும் வரை ) உடன் வந்து திருமண வீட்டை கூதுகுல படுத்தலாமே ..

    ஏதோ சின்ன பையன் சொல்றேன் ...அப்புறம் அவங்க ..அவங்க இஷ்டம் ....

    ReplyDelete
    Replies
    1. ஸ்டீல்-க்ளாவின் 'ஸ்டைலில்' பின்னூட்டமிட்டிருக்கும் போராட்டக்குழு தலைவர் அவர்களே... ;)

      Delete
    2. YES! YES1 YES1 LET BYGONES BE BYGONES. EVERYBODY IS IMPORTANT BY THE WAY HOW MANY MARRIAGES YOU HAVE ATTENDED THIS MONTH COMRADE BARANITHARAN.?.

      Delete
    3. நண்பர்கள் மட்டுமல்ல அவர்களை விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் வந்தவர்களும் மீண்டும் காணாமல் போய் விட்டார்கள். கடைசியில் நண்பர்களும் இல்லாமல் குட்டையைக் குழப்பியோரும் இல்லாமல் இந்தத் தளம் தான் கொஞ்சம் சோபை இழந்து கிடக்கிறது. :(

      Delete
    4. நண்பர்கலே அப்படி யாரையும் விரட்டி விட முடியாது ! இப்போதைய நண்பர்களின் வரவு அதிகரித்துள்ளது . ஆகவே தயக்கமுடன் இருக்கும் பிற நண்பர்களின் வரவும் அதிகரித்தால் நமது தளம் முன்பை விட அதிக உற்ச்சாகத்தை பெறும் . காத்திருப்போம் . நல்லதே நடக்கும் .

      Delete
    5. @ பரணிதரன்

      ரமேஷ் சொன்ன those who are in the fence இல் உள்ளவர்களும் இங்கு வரவேண்டும் என்பதற்காக

      நமது நண்பர்கள் கட்டுபாட்டுடன் நடந்து கொண்டு மிக அளவாக பதிவிட்டு வருகிறார்கள்

      நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் அந்த எல்லைகோட்டுக்கு அப்பால் இருந்து

      யாருமே வரக்காணோம்!... அங்கே யாரேனும் இருப்பதாகவும் தெரியவில்லை

      இன்னும் அவர்கள் வர கொஞ்சம் டைம் கொடுத்துவிட்டு அப்புறம் முழுவீச்சில் இறங்கலாம்


      அப்போது மீண்டும் இத்தளம் கல்யாண களை கட்டும்.

      Delete
  81. டியர் எடிட்டர்,

    நீங்கள் கொடுத்த டீசர் இமேஜில் சேரிட்டி "கடந்த ஒரு சில நாட்களை உங்களோடு பாரிசில் .." என்கிறார். பாரிஸில் ? இவர்கள் இருப்பது வெனிஸ் அல்லவா ?

    நிறைய புத்தகங்கள் மாதம் மாதம் வந்ததால் திகட்டுகிறதா என்ற கேள்விக்கு, நிறைய புத்தகங்கள் கொடுக்கும் போது சந்தா குறைய வாய்ப்புண்டு. மாதம் ஒரு புத்தகம் வரும்போது சந்தா தவிர வேறு நினைக்க தோன்றாது. ஆனால் நிறைய புத்தகம் வரும்போது அதில் சில பிடிக்காத கதைகள் சந்தாவில் வந்ததால் ( ஜில் ஜோர்டான், தோர்கல், ப்ருனோ) கடுப்பான சில நண்பர்கள் சந்தா வேணாம், பிடித்த புத்தகத்தை மட்டும் கடைகளில் வாங்கி கொள்கிறோம் என்று ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்களது பார்வையில் என்னிடம் பணம் இல்லை. அதனால் தேவை இல்லாத புத்தகத்தை வாங்காமல் பிடித்த புத்தகத்தை வாங்கி கொள்கிறேன் என்பதே. நாம் இன்னும் புத்தகங்களை கூட்டினால் இந்த மாதிரி வாங்குபவர்களின் சதவீதம் இன்னும் கூடுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவும்.

    நம் வாசகர்களில் நிறய பேர் நடுத்தட்டு மக்களே. எனவே இந்த ஸ்பீட் போதும், இன்னமும் கூட்ட வேண்டாம் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. OFCOURSE ONE SHOULD ALWAYS RESPECT THE AVERAGE BUYER WHO CONSTITUTE THE BACKBONES OF CONSUMER MARKET. BUT IT IS ALWAYS DIFFICULT TO SATISFY EVERY GROUP OF READERS AS TASTE DIFFERS. THE EDITOR TRIES TO INTRODUCE NEW HEROES AND UNORTHODOX STORYLINES AS HE KNONS ' CHANGE IS ETERNAL'.HE IS KEEN TO GET FEEDBACKS TO ANALYSE THE FACTS. HE IS BOUND TO SENSE THE RISKS HE IS TAKING .BUT IT ALSO HOLDS TRUE THE GREATEST RISK OF LIFE IS NOT TAKING RISK AT ALL.

      Delete
  82. 0.9 million... 0.1 million to reach million...

    ReplyDelete
  83. //இதர பத்திரிகைகள் ஆறு இலக்க விற்பனை எண்ணங்களைப் பார்த்திடுவதற்கும், நாம் நான்கிலக்க எண்ணிக்கைகளுக்குள் குப்பை கொட்டுவதற்கும் இமய மலை உயரத்திலான வேற்றுமை உண்டல்லவா ?//

    ஊருக்கு நகைகடை 4 இருக்கு, ஆனா நம்ம காமிக்ஸ் விற்கும் கடைதான் கண்ணில் தட்டுப்படவே மாட்டேன்கிறது. நீங்கள் சொல்கிற 6 இலக்க பத்திரிகைகள் இந்த வாரம் படித்ததை அடுத்த வாரம் படிக்க முடியாது. ஆனாலும் குக்கிராமங்களில் உள்ள பெட்டிக் கடைகளில்கூட கிடைக்கிறது. ஆனால் நமது காமிக்ஸ் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் அப்படிப்பட்ட ஒரு அற்புதமான இதழ் இதற்கு நாள் கிழமை தேதி என்று எதுவும் கிடையாது.
    ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள புத்தக கடைகளுக்கும் மட்டும் தொடர்ந்து 25 புத்தகங்கள் அனுப்பி வைத்தால் போதும் விரைவில் புத்தக விற்பனை உச்சத்தை தொடும் என்பதில் மாற்றுக் கருத்துமில்லை. முன்பணம் தந்தால்தானே புத்தகம் அனுப்பி வைக்க முடியும் என்ற உங்கள் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. முன்பணம் இல்லாமல் அனுப்பினால் ஆரம்பத்தில் சிறிது பண முடக்கம் வரத்தான் செய்யும். ஆனால் விற்பனை எண்ணிக்கையும், சந்தா எண்ணிக்கையும் மிக விரைவாக உயர வாய்ப்புள்ளது. விற்காத புத்தகங்களை மொத்தமாக கலெக்ட் செய்து சென்னை புத்தகத் திருவிழாவிற்கு முன்பு அனைத்தையும் அங்கே கொண்டு சென்றுவிடலாமே. எந்த புத்தகமும் தேங்காது. ஆரம்பத்தில் சிறிது பணம் வசூல் செய்ய கடினமாகத்தான் இருக்கும். இந்த பிரச்சினையை எல்லா தினசரி வார இதழ்களும் சந்தித்து கொண்டுத்தான் இருக்கிறது. ஆனால் போகப் போக சரியாகிவிடும்.
    (No Pain No Gain) ஏதோ என் மண்டையில் உதித்தது, நல்ல ஐடியாவாகத்தான் தோன்றுகிறது.
    உங்கள் எண்ணம் என்னவோ. இது குற்றச்சாட்டு அல்ல, வெறும் ஆலோசனை மட்டுமே.....

    ReplyDelete
    Replies
    1. ராம் நியாயமான வாதம். ஒரு பொருளை சரியான முறையில் சந்தைபடுத்தாமல் விற்பனை உயரவில்லை என்று சொல்வதை மனம் ஏ றுக் கொ ள மா டேன்கி து.

      Delete
    2. FRIENDS! IF ONLY YOU HAVE READ THE EDITOR'S EARLIER VERSIONS ON THIS TOPIC YOU WOULD NOT WRITE THIS. PUTTING ASIDE HIS PASSION TOWARDS COMICS HE HAS BEEN A BUSINESSMAN FOR THE PAST 30 YEARS.

      Delete
    3. Agree with Lakshmi Selvam. The editor is in this business for so many years and he has burnt his hands following the model you guys are proposing. So let him do what works for him. The only thing we can do is pay subscription and get the books.

      Delete
  84. ஒரு வழியாக 2014ன் அனைத்து புத்தகங்களும் இன்று வந்து சேர்த்து விட்டன. டெக்ஸ்ன் சாகசம் படித்து முடித்து விட்டேன். ஒவ்வொன்றாக படித்து முடிக்க வேண்டும். என் அம்மா புத்தகங்களை 6 மாதத்திற்கு ஒரு முறை எனக்கு கோவையிலிருந்து எனக்கு அனுப்பி வைப்பார். சந்தா தீரும் போது லயனிலிருந்து கடிதம் வரும். இம்முறை அது வராததால் சந்தா மீதம் இல்லாதது தெரியவில்லை. இம்மாதம் கோவை வந்த பொழுது புத்தகங்கள் வருவது நின்று விட்டதால் மறுபடி சந்தா புதுப்பித்தேன். லயன் , முத்து, sunshine , & சூப்பர் 6 அனைத்துக்கும் சந்தா கட்டி விட்டேன். இனிமேல் வருடம் ஒரு முறை மீதம் சரி பார்த்து புதுப்பித்து கொள்ள வேண்டும்.

    லயன் மற்றும் முத்துவை 30+ வருடங்களாக படித்து வருகிறேன். கோவையிலும் சென்னையிலும் புத்தக கடை முன் நின்று நமது காமிக்ஸ்கள் வந்து விட்டனவா என்று ஏங்கி நின்றது நினைவில் உண்டு. இப்பொழுது வருவற்றுள் நிறைய ஆங்கில காமிக்ஸாக படித்து விட்டாலும், நமது லயனில் தமிழில் படிப்பது ஒரு சுகம். இந்த பந்தம் மரணம் வரை தொடரும். இணைய தளத்தில் நிறைய பதிவு செய்யா விட்டாலும் தொடர்ந்து தொடர்ந்து வருகிறேன். பழைய இணைய தளத்தில் நிறைய பகிர்ந்து உள்ளேன். குறைந்த கால பயணத்தின் போது லயன் சிறப்பிதழுக்கு முன்பணம் செலுத்த முடியாத போது நண்பர் ரபிக் உதவி செய்தது நினைவுக்கு வருகிறது.

    அதிக வாசக பரப்பளவு இல்லாத காமிக்ஸ் பதிப்பகம் நடத்துவது மிகக் கடினம். XIII காமிக்ஸ் முழுமையாக வெளியிட அமெரிக்க புத்தக நிறுவனங்களே முடியாத போது நமது லயனுக்கு அது சாத்தியப்பட்டது. நமது காமிக்ஸ் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. திரு. விஜயன் அவர்களின் காமிக்ஸ் மீதான காதலே இந்த வெற்றிக்கு முதற் காரணம். வாழ்த்துக்கள்.

    அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் 2 வேண்டுகோள். 1. தொடராக வரக் கூடிய கதைகளை 4 அல்லது 5 வேறு கதைகளோடு இணைத்து வெளியிட வேண்டாம். தனித்தனியாக இருந்தால் படிப்பதற்கு எளிதாக இருக்கும். மாற்று வழி பாக்ஸ் செட். 2. நாம் தனியாக கட்டிய சந்தாவை ஆன் லைன் அக்கௌன்ட் உடன் இணைக்க முடிந்தால் மிக புண்ணியமா போகும். என் போல் வெளிநாடு வாசகர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. //அதிக வாசக பரப்பளவு இல்லாத காமிக்ஸ் பதிப்பகம் நடத்துவது மிகக் கடினம். XIII காமிக்ஸ் முழுமையாக வெளியிட அமெரிக்க புத்தக நிறுவனங்களே முடியாத போது நமது லயனுக்கு அது சாத்தியப்பட்டது. நமது காமிக்ஸ் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. திரு. விஜயன் அவர்களின் காமிக்ஸ் மீதான காதலே இந்த வெற்றிக்கு முதற் காரணம். வாழ்த்துக்கள். //

      Delete
  85. ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்டு-1 முதல் 15 வரை நடைபெறயிருப்பதாக விழா அமைப்பாளர்களால் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே...
    புத்தகத் திருவிழாவின் தொடக்க நாளான (ஆகஸ்டு-1) வெள்ளிக்கிழமையன்றோ; அல்லது, நண்பர்களின் வருகைக்குத் தோதான (ஆகஸ்டு-3) ஞாயிற்றுக்கிழமையன்றோ அழகான இரு கொழுகொழு புத்தகங்கள் 'LMS' என்ற பெயரில் நம் கைகளில் தவழ்ந்திடும் என்பதை 'கிட்டத்தட்ட' கணித்திட முடிகிறது! :)

    ReplyDelete
    Replies
    1. விஜய், அருமை! இந்த முறை உங்கள் அனைவரையும் புத்தக திருவிழாவில் சந்திக்க ஆவலாக உள்ளேன்!

      Delete
  86. ஆஹா அப்ப LMS ஆகஸ்ட் 1 ந்தேதியே கிடைக்கும் என்று தெரிகிறது. அப்படியே ஜூன் மாதம் என்ன புத்தகங்கள் வரும் என்று தெரிந்தால் மகிழ்ச்சி.

    ReplyDelete
  87. To: Editor,
    புத்தக எண்ணிக்கை தொடர்பில் ஆசிரியரும் நண்பர்களும் தொடர்ச்சியாக இங்கே பதிவிடுவதால் எனது கருத்தையும் பதிவிட எண்ணுகிறேன். புத்தக எண்ணிக்கை அதிகரிப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். ஆனால், அவ்வாறு எண்ணிக்கை அதிகரிக்கும்போது, 'இப்படியொரு புத்தகமும் வந்தது' என்றவாறு எண்ணிக்கைக்காக மட்டும் சில புத்தகங்கள் வருவதுதான் கவனித்துச் சரிசெய்யப்படவேண்டிய ஒன்றாகும்.

    உதாரணமாக, இலங்கையில் 'காலத்தின் கால் சுவடுகளில்' புத்தகம் கடைகளில் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்ததைக் காணக் கிடைத்தது. அதற்காக, அந்தக் கதை 'மோசம்' என்று நான் கூறவில்லை.

    புத்தக எண்ணிக்கை அதிகரிக்கும்போது, மாதாமாதம் காமிக்ஸ்களை வாங்குவதற்கு செலவிடும் தொகை தொடர்பாக பலரும் எண்ணத் தலைப்படுகிறார்கள். எனவே, இங்கே குறித்த சில புத்தகங்களை மட்டும் தமது பட்ஜெட்டுக்குள் தெரிவு செய்து வாங்க நினைக்கிறார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் 'காலத்தின் கால் சுவடுகளில்' போன்ற கதைகள் அவர்களால் ஒதுக்கப்படும் கதைகளாகிவிடுகின்றன.

    முன்பு 100 ரூபாவில் இரண்டு கதைகள் வந்தபோது, ஒரு கதை பிடித்தமானதாக இருந்தாலும் அந்தப் புத்தகத்தை அவர்கள் வாங்கினார்கள். எனவே, அவர்களால் ஒதுக்கப்படும் வாய்ப்புள்ள 'காலத்தின் கால்சுவடுகளில்' போன்ற கதைகளும் அவர்களைச் சென்றடைந்தன. ஆனால், இப்போது தனித்தனியாக கதைகள் வருவதால், 'தெரிவு' என்பது சாத்தியப்படுகிறது. எனவே, ஆசிரியரும் தனது கதைத் தெரிவுகளில் மேலும் மேலும் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

    புத்தக விழாக்கள், சந்தாதாரர்கள் மூலம் இத்தகைய புத்தகங்களும் வாசகர்களிடம் சென்று விடும் என்பது சாத்தியம்தான். ஆனால், கடைகளில் இத்தகைய புத்தகங்கள் வாங்கப்படுவது என்பது மிகக் குறைவான சாத்தியங்களையே கொண்டுள்ளது என்பதை ஆசிரியர் கவனத்தில் எடுப்பார் என்றே நம்புகிறேன். மறுபதிப்புகளிலும் இந்த விடயம் கவனிக்கப்படவேண்டியது அவசியம்.

    அண்மையில் அறிவிக்கப்பட்ட வுட்சிட்டி கோமாளிகளின் கதை என்று ஒன்று பலரும் இது அண்மையில் வந்தது. அனைவரிடமும் உள்ளது என்பதை தெரிவித்தபின் தவிர்க்கப்பட்டிருந்தது. அதேபோல, இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 'பூம் பூம் படலம்' கதையும் பலரிடமும் இருக்கக்கூடிய ஒன்றுதான். ஏன் இப்படியான அண்மையில் வந்த கதைகளையே மறுபடி பிரசுரிக்க ஆசிரியர் எண்ணமிடுகிறாரோ தெரியவில்லை! (ஒருவேளை டிஜிட்டல் கோப்புகளாக அவை மாற்றப்பட்டுள்ளதும், பதிப்புரிமை கைவசம் இருப்பதும் காரணமாக இருக்கலாம்).

    கதைத் தெரிவுகளில் இன்னும் இன்னும் கவனம் செலுத்துவதை உறுதிப்படுத்தினால் ஒரு மாதத்தில் 10 புத்தகம் வந்தாலும் வரவேற்க வாசகர்கள் தாயாராகவே இருப்பர்!

    ReplyDelete
  88. நண்பர்கள் அனைவரும் விடுதலின்றி சந்திக்கும் வகையில் ஆகஸ்ட் 1,2,3 ஆகிய தேதிகளில்

    ஏதேனும் ஒரு நாள் தேர்வு செய்து அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை ஈரோடு

    நண்பர்கள் செய்யவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. விஜய் ஆவன செய்யுங்களேன்

    ReplyDelete
  89. விஜயன் சார்,

    என்னை பொறுத்தவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட இன்று மாதம் தோறும் மூன்று புத்தகங்கள் (தோராயமாக) என சந்தோசமாகவே கொண்டாடி வருகிறோம்.

    கொஞ்சம் கொஞ்சமாக இந்த வேகத்தை நீங்கள் அதிகரிக்கலாம் என்பது எனது கருத்து...

    ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெள்ளிகிழமை ஈரோடு புத்தக திருவிழா தொடங்க உள்ளது (நன்றி ஈரோடு விஜய்)
    நமது புத்தக வெளியீடு பற்றிய உங்களது எண்ணங்களை தெரியபடுத்தினால் அனைவரும் அதற்கேற்றார் போல தங்களது பயண திட்டங்களை வகுத்து கொள்ள வசதி செய்யும். (முக்கியமாக train டிக்கெட்)

    Friday மாலை வெளியீடு என்றால் வெள்ளி ஆபீஸ் லீவ், வியாழன் இரவுக்கு train டிக்கெட் - புக்கிங்
    Sunday மாலை வெளியீடு என்றால் No ஆபீஸ் லீவ், வெள்ளி இரவுக்கு train டிக்கெட் - புக்கிங்

    ReplyDelete
  90. ஆகஸ்ட்டில் ஆசிரியர் வரும், புத்தகம் வெளியிடும் நாளை முன்னதாகவே தெரிவித்தால் எங்களை போல் தொலைவில் இருப்பவர்களுக்கு டிக்கெட் முன் பதிவு செய்ய வசதியாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. FERNANDES, BLUBERRYAND SENTHIL MADESH AND MANY OTHERS! ! ! IT OUGHT TO BE NICE EXPERIENCE TO MEET PEOPLE OF SAME WAVELENGTH OR ATLEAST SHARE THOUGHTS. I CAN NEVER DO THAT BEING SHY. IT HAS TAKEN MANY MONTHS FOR ME EVEN TO PUBLISH COMMENT IN THIS BLOG. . I HEARTILY WISH ALL OF YOU TO HAVE A HAPPY GATHERING

      Delete
  91. ஒரு மாதத்தில் 3 அல்லது 4 புத்தகங்கள் வருவது 1986, 87 வருடங்களை ஞாபகப்படுத்துகிறது! ஒட்டு மொத்தமாய் லயன், திகில், மினிலயன் & ஜூனியர் லயன் காமிக்ஸ் -களை வாங்கியதை ஞாபகப்படுத்துகிறது!

    ReplyDelete
    Replies
    1. IT MAY BE A PLEASNT REMINISCENCE FOR YOU FRIEND BUT NOT FOR OUR EDITOR. IT CAUSED SUCH FINANCIAL CHOAS FOR THE EDITOR HE HAD BEEN FORCED TO ABANDON THE TRIPLETS (MINI,JUNIOR,THIGIL).BY HIS OWN WORDS EVENTS OF THOSE PERIOD CAUSED NIGHTMARES WHEN DISTRIBUTORS HAD MADE HIM REALISE EACH OF THIS BOOKS COMPETE AMONG THEMSELVES TO A RESTRICTED SLOT.

      Delete