Powered By Blogger

Friday, April 04, 2014

லயனும்..நாமும்....!

நண்பர்களே,

வணக்கம். மாதங்களாய் என் சிந்தையில் மாத்திரமே உலவி வந்த லயன்  MAGNUM ஸ்பெஷல் இப்போது நம் அனைவருக்குமொரு வண்ணக் கனவாய் உருமாறி விட்டதில் எனக்கு நிஜமான சந்தோஷம் ! ஒரு முப்பது ஆண்டுப் பயணத்தை இத்தனை விமரிசையாகக் கொண்டாட சாத்தியமாகும் என்று 15 மாதங்களுக்கு முன்பு வரை நான் சத்தியமாய் நம்பி இருக்கமாட்டேன் !! மிஞ்சி மிஞ்சிப் போய் இருந்தால் ரூ.100 விலையில் ஒரு இதழோடு மங்களம் பாடி இருப்போம் ! ஆனால் NBS துவக்கி வைத்ததொரு adventure ; அதற்குக் கிட்டிய ரகளையான வரவேற்பும் ; உங்களின் nonstop உத்வேகங்களும் இந்த தைரியத்தை எனக்கு நல்கியுள்ளன ! அது மட்டுமல்லாது 'இது தான் யதார்த்தம் ; இது தான் ஒரு சமநிலை..இது தான் நமது இதழ்களுக்கான ஒரு ரெகுலர் அட்டவணை..' என்று தேங்கி நிற்க விரும்பாது - சதா காலமும் புதிதாய்..பெரிதாய் ஏதேனும் தேவை ! என்ற தேடல் உங்களுள் இருப்பது தான் எங்களை இது போன்ற சர்க்கஸ் வேலைகள் செய்யத் தூண்டும் க்ரியாஊக்கி ! So ஒரு கனவின் வரைபடம் இப்போது தயார் ; அதனை நனவாக்கும் பணிகள் துவங்கியும் விட்டன ! LMS -ன் கதைத் தேர்வுகளைப் பற்றி ; இதழின் விலை ; பக்கங்கள் பற்றி நிறையவே எழுதி விட்டதால் திரும்பவும் அதனை ஒரு பதிவின் subject ஆக்கிட நான் விரும்பவில்லை ! மாறாக - LMS -க்குள் இடம் பிடிக்கத் தவறிய வேட்பாளர்களைப் பற்றியும், கடந்த பதிவில் நீங்கள் ஆரவாரமாய் எழுப்பியுள்ள சில சிந்தனைகளுக்குப் பதில் சொல்லும் விதமாகவும் சில நாட்களது இடைவெளிக்குப் பின்பே இதனை எழுதுவதாக இருந்தேன் ; ஆனால் கடந்த பதிவு ஏகப்பட்ட "Load More " அவஸ்தைகளை உண்டு பண்ணுவதால் இப்பதிவு முந்திக் கொள்கிறது !  

LMS -ன் திட்டமிடல்களைப் பூர்த்தி செய்யும் தருணத்தின் போது - உங்களின் reactions எவ்விதம் இருக்கும் என்பதை முடிந்த வரை கணிக்க முயற்சித்தேன் ! புத்தகத்தின் அளவு நிச்சயமாய் ஒரு விஷயமாக பேசப்படும் என்பது உணர எனக்கு அதிக சிரமம் இருக்கவில்லை ! So நான் முதலில் முயற்சித்தது - இதே கதைகளின் அணிவகுப்பை பெரிய சைசில் - 450+ பக்கங்களுக்குள் அடக்கினால் எப்படி இருக்கும் என்று கண்டறியவே ! அத்தனை கதைகளின் முதல் 2 பக்கங்களையும் எடுத்து சைஸ் மாற்றி - -fresh layout ல் டைப்செட் செய்து ஒரு பிரிண்ட் எடுத்துப் பார்த்தோம் ! எடுத்தவுடனேயே நெருடிய விஷயம் - சித்திரங்களின் அளவுகள் ரொம்பவே குறைந்து போவதும் ; வசனங்களை உள்ளடக்குவது ஒரு இமாலயப் பிரயத்தனமாக இருக்கும் என்பதுமே !! டெக்ஸ் கதைகளில் ஒரிஜினலின் ஒரு பக்கத்தில் இருப்பவை 5 அல்லது 6 சித்திரங்கள் ! அளவு மாற்றத்திற்கு - பெரிய சைசுக்குள் 10 அல்லது 12 படங்களை நுழைத்தாக வேண்டுமெனும் போது - சித்திரங்களை விட வசனங்களே அதிகமாய் இருப்பதை பார்க்கவே கஷ்டமாக இருந்தது ! டைலன் டாக் கதைகளில் டயலாக் அத்தனை நீளமில்லை என்ற போது அந்த ஒரு கதைக்கு மட்டும் பெரிதாய் சிரமம் தெரியவில்லையே தவிர - பாக்கி (இத்தாலியக்) கதைகள் ஏழுமே கோனார் நோட்சுக்கு மத்தியில் படங்களை நுழைத்து விட்ட impression தான் தந்தன ! So பெரிய சைஸ் நிச்சயமாய் வேலைக்கு ஆகாது என்பது உறுதியான பின்னே அடுத்த கட்டமாய் நான் செய்தது - தற்சமயம் நாம் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ள டெக்ஸ் சைசில் - இதே 568 ஆர்ட் பேப்பர் பக்கங்கள் + 332 வெள்ளைத் தாள் பக்கங்கள் சகிதம் ஒரு dummy புக் தயாரித்ததே ! வெள்ளைத்தாளால் போடப்பட்ட அந்த மாதிரியை ஒரு வாரம் முழுவதும் என் மேஜையில் வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன்  - தலைக்குள் எவ்வித சிந்தனையும் இல்லாமல் ! ஒரு NBS  புக்கை எடுத்து கிட்டே வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டு திடீரென்று இரண்டையும் எடை போட்டும் பார்த்தேன் ! என் கையில் இருந்த dummy புக்கின் தோற்றம் ; எடை ; கனம் என்று சகலமும் massive ஆகத் தெரிவது எனக்கே ஊர்ஜிதமான பின்பு தான் 'ஒ.கே...இது தான் சைஸ் !' என்ற பச்சைக் கொடியாட்டினேன் ! 

'இத்தாலியக் கதைகள் ஒ.கே....! பெல்ஜியக் கதைகள் மூன்றும் அளவு குறைந்து வரப் போகும் அவசியம் உள்ளதே...அவை சிறிதாகும் போது  எப்படித் தோற்றம் தரும் ?' என்ற கேள்வி அடுத்து எழுந்தது எனக்குள் ! மார்ஷல் டைகர் ; லக்கி லூக் & ரின் டின் கேன் கதைகளை மட்டுமல்லாது - வுட் சிடியின் கோமாளிகளையும் சேர்த்தே ஒவ்வொரு பக்கம் டைப்செட் செய்து அளவை சின்னதாக்கிப் பிரிண்ட் போட்டுப் பார்த்தோம் !  பக்கத்திற்கு மூன்றே வரிசைகள் ; கொச கொசவென ஏகமாய் சித்திரங்கள் கிடையாது என்ற பாணியில் மார்ஷல் டைகர் கதைகளுக்கு ஓவியர் வான்சின் சித்திரங்கள் அமைந்திருந்தன ; so அவற்றை சற்றே அளவு   சிறிதாக்கினாலும் பெரியதொரு சிரமம் தோன்றவில்லை படித்திட ! ரின் டின் கேன் கதைக்கும் அதிகமாய் மெனக்கெட அவசியம் இராதென்பதை ப்ரிண்டைப் பார்த்த போது புரிந்து கொள்ள முடிந்தது !  மூன்றாவதாய் சிக் பில் கதையின் பக்கங்களை பூர்த்தி செய்து கையில் எடுத்த போது தான் பிரச்னையே ! கார்ட்டூன் கதை தான் எனினும், வசனங்கள் ஏகமாய் இருப்பதால் அளவைச் சிறிதாக்கும் போது எழுத்துக்கள் கண்ணைப் பதம் பார்க்கும் பிரச்னை பளிச் எனத் தலைதூக்கியது ! So வுட்சிடியின் கோமாளிகளை LMS -ல் இணைத்தால் அளவு குறைப்புக்கு இவர்கள் ஒத்துழைக்க  மாட்டார்கள் என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது ! 'வேறு வழியில்லை - அவர்களுக்கு இம்முறை இடம் நம் இதயத்தில் மாத்திரமே !'என்ற என் தீர்மானத்துக்கு பின்னணி இதுவே ! ஆர்ட்டின் & ஷெரிப்பின் காதலர்களே.. (அந்தப் பட்டியலில் நானும் உண்டு..!) முயற்சித்தும் முடியாது போனதால் தான் நம் ஆசாமிகள் இம்முறை வேட்பாளர்கள் பட்டியலுக்குள் தலைநுழைக்க முடியாது போனது !  லக்கி லூக்கின் "பேய் நகரம்" கதையில் டயலாக் அதிகம் என்ற  இது போன்ற சிக்கல் இல்லாததால் - பெரிய font பயன்படுத்தி டைப்செட் செய்வது சுலபமாய் இருந்தது ! So அளவை சிறிதாக்கும் போதும் கூட எழுத்துக்களின் உரு ஓவராய் சின்னதாகவில்லை என்பதால்  அதற்குமொரு 'டிக்' அடித்தேன் ! 
மார்ஷல்...!

அடுத்ததாய் நான் எதிர்பார்த்தது - விடுபட்டுப் போன ஆரம்ப நாட்களது சில ஆதர்ஷ நாயகர்களை miss செய்திடும் நண்பர்களின் வருத்தக் குரல்களை..! ஸ்பைடரில் துவங்கி...ரிப் கிர்பி..காரிகன்...மாடஸ்டி என நிறைய vintage நாயக / நாயகியரை நண்பர்களுள் சிலர் பட்டியலுக்குள் நுழைக்கக் கோருவார்கள் என்பதை புரிந்திட முடிந்தது ! ஸ்பைடரின் எஞ்சி இருக்கும் நீ --ள--மா--ன கதையினை நல்ல நாளுக்கே வெளியிட்டிட எனக்கு தைரியம் வந்திருக்காது ; இன்றைய சூழலில், நம் ரசனைகளின் மாறுதல்களுக்குப் பின்னே இந்த விட்டலாச்சார்யா சாகசத்தை நினைத்துப் பார்ப்பதே சாத்தியமற்றது என்பதால் அதனை துயில் பயிலச் சொல்லுவதில் தயக்கமிருக்கவில்லை !  ! ரிப் கிர்பி & காரிகன் கதைகளும் சமீப நாட்களில் நம்மிடையே ஸெல்ப் எடுக்கத் தவறுவதால் - அவர்களின் இடத்தில ராபினை நுழைக்க நிரம்ப சிரமம் இருக்கவில்லை ! ஆனால் மாடஸ்டியைப் பொறுத்த வரை அந்த daily strips பாணி நமது சைசுக்கு set ஆகும் என்பதால் அவரை இணைக்கும் சபலம் நிறையவே இருந்தது ! But நம் கைவசம் இருக்கும் பிரசுரிக்கப்படா மாடஸ்டி கதையின் சித்திரங்கள் - ஓவியர் நெவில் காலின்ஸின் 'கீச்சல் பாணி' என்பது தான் நெருடலாய் இருந்தது ! மிகவும் சுமாரான அந்த சித்திர பாணியை LMS -க்குள் திருஷ்டிப் பரிகாரமாய் நுழைத்திட மனம் ஒப்பவில்லை ! தவிர மகளிர் பிரதிநிதியாக புது வரவு ஜூலியா - கிட்டத்தட்ட 200 கதைகள் கொண்டதொரு வரிசையோடு தயாராய் நிற்பதால் - I chose to opt for the newcomer ! 

இவற்றைத் தவிர பாக்கி விஷயங்களில் உங்களது reactions எனது யூகங்களை அனுசரித்தே இருந்தன ! ஆனால் நான் கணிக்கத் தவறிய ஒரே விஷயம் - இந்த 1000 பக்கம் - 10 கதைகள் concept -ஐத் தான் !! ஆரம்பித்த போது 750 பக்கங்கள் என்ற வரையறைக்குள் தான் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன் ; ஆனால் சிறுகச் சிறுக அது 800..850...என்று improve ஆகி இறுதியாய் 900 பக்கங்களில் செட்டில் ஆகியுள்ளோம் ! இதற்கும் மேல் பக்கங்களை அதிகப்படுத்துவதாயின் பட்ஜெட்டும் சரி ; விலையும் சரி அதிகமாவதோடு - பணிகளின் அழுத்தமும் சட்டென்று கூடி விடும். இப்போது போட்டுள்ள ஒரு உத்தேச அட்டவணையின்படியே - எங்களது மொழிபெயர்ப்பு வேலைகள் (இத்தாலியன் --- இங்கிலீஷ் - தமிழ் ; பிரெஞ்சு - இங்கிலீஷ் - தமிழ்) பூர்த்தியாகவே மே இறுதியாகிடும் ! மொழிபெயர்ப்புகள் தயார் ஆக-ஆக டைப்செட்டிங் பணிகளும் வால் பிடித்துக் கொண்டே ரெடி ஆகிடுவது   சாத்தியமாகும் பட்சத்தில் - ஜூன் 15-க்குள் அச்சுக்குச் செல்ல நாங்கள் தயாராகிட வேண்டுமென்பது இப்போதைய மனக்கணக்கு ! அச்சுக்கு 15 நாட்கள் ; பைண்டிங்கிற்கு இன்னுமொரு 15 நாட்கள் என வைத்துப் பார்த்தால் ஜூலை 15-ல் நாங்கள் தயாராகி இருக்க வேண்டும் - சகலமும் சிக்கலின்றிச் செல்லும் பட்சத்தில். எதிர்பாரா தாமதங்களுக்கென ஒதுக்கியுள்ள பத்துப் பன்னிரண்டு நாட்கள் மாத்திரமே தற்போது நமக்கிருக்கும் cushion ! இப்போது அந்த இடைவெளிக்குள் 100 பக்க இணைப்பை நுழைத்திட நினைத்தால் - நிச்சயமாய் பெண்டு கழன்று விடும் ; அட்டவணையிலும் சொதப்பி விடும் !! எனக்கு இந்த 1000 பக்க concept மிகுந்த சுவாரஸ்யம் தந்தாலும், அதை நடைமுறைப்படுத்திடுவது நிரம்பக் கஷ்டமானதொரு பணியாகும் ! தவிர, முன்பதிவுகளுக்கு நண்பர்கள் விறுவிறுப்பாய் பணம் அனுப்பத் துவங்கி விட்ட நிலையில் - விலையில் மாற்றம் எனும் போது வீண் குழப்பங்கள் நேரிடும் !! இப்போதைக்கு அமலில் உள்ள இந்த 900 பக்க வரையறை நிலைக்கட்டுமே ! ஆனால் - ஒரு சன்னமான வாய்ப்பின் ஜன்னலை நான் திறந்து வைக்கத் தவறப் போவதில்லை ! சூப்பர் சிக்சின் சந்தாக்கள் 1000 எனும் மேஜிக் எண்ணைத் தொடும் ஒரு அதிசய தருணம் புலரும் பட்சத்தில் - குட்டிக் கரணம் அடித்தாவது விலை மாற்றம் ஏதுமின்றி - LMS -ல் 1000 பக்கங்களை உருவாக்கிடுகிறேன் ; that's a promise ! எப்படி இருப்பினும், 900 பக்கங்கள் என்று வந்தான பின்னே - 1000 என்ற மேஜிக் நம்பரை எட்டிப் பிடிப்பது just a matter of time ! நம்பிக்கை கொள்வோமே !!

சின்னதாய் சில updates கூட :

1.ஏப்ரல் 18-27 தேதிகளில் சென்னை ராயப்பேட்டா YMCA மைதானத்தில் புத்தக விழா ஒன்று நேஷனல் புக் ட்ரஸ்டின் ஆதரவோடு நடைபெறவுள்ளது ! இங்கு நமது ஸ்டால் இடம்பெறும் வாய்ப்புகள் பிரகாசமாய் உண்டு ! 

2.தொடரும் மே மாதத்து வெளியீடுகள் - LMS -ன் பணிகளின் பொருட்டு வெகு முன்பாகவே தயார் ஆகி விடும் ! ஏப்ரல் கடைசி வாரத்தினிலேயே டெக்ஸ் ; தோர்கல் & ப்ருனோ கூட்டணி உங்கள் கைகளில் இருப்பார்கள் !  !

3."லயனும், நானும் " பகுதிக்கு இனி உங்கள் பங்களிப்புகளை அனுப்பத் துவங்கலாம் ! லயன் உங்களை மகிழச் செய்த நாட்கள் ; இம்சை செய்த தருணங்கள் ; பூரிக்கச் செய்த வேளைகள்...பொறுமை இழக்கச் செய்த சந்தர்ப்பங்கள்..என எதைப் பற்றியும் தயங்காமல் எழுதி அனுப்பலாம் ! இது தவிர, வாசகர்களின் பங்களிப்பாக இன்னும் வேறென்ன இருந்திடலாம் LMS இதழில் என்பது பற்றியும் உங்கள் suggestions ப்ளீஸ் ? 

4."The லயன் MAGNUM ஸ்பெஷல்" என்ற பெயரை கம்பீரமான எழுத்துகளால் டிசைன் செய்து தர நண்பர்கள் தயாராக இருப்பின், அதனையே தொடர்ச்சியாய் விளம்பரங்களில் மட்டுமல்லாது - LMS -ன் அட்டைப்படத்திலும் பயன்படுத்திட நாங்கள் ரெடி ! Game for it folks ?

5.நமது தற்போதைய WORLDMART ஆன்லைன் விற்பனை தளத்தில் சூப்பர் சிக்சின் சந்தாக்கும் ஒரு option துவங்கிடத் தயாராய் உள்ளோம் ; ஆனால் அங்கு அமலில் உள்ள சர்வீஸ் கட்டணம் 6% அதிகம் என்பதால் - அந்த லிஸ்டிங்கில் மட்டும், அந்த வித்தியாசம் பிரதிபலிக்கும் ! 

6.அதே போல ஜனவரியில் சந்தா கட்டத் தவறிய நண்பர்கள் ஏப்ரல் முதலாய் சந்தா செலுத்த விரும்பும் பட்சத்தில் அதற்கும் கூட வாய்ப்பு ஏற்படுத்துவதில் நமக்குச் சிரமம் இல்லை ! What say folks ?

மீண்டும் சிந்திப்போம்...Take care guys !!

P.S : கடந்த பதிவில் பின்னூட்டம் # 300-க்குப் பின்பாகவே எதனையும் கவனித்துப் படிக்க இயலவில்லை ! அங்கு எனக்கு ஏதேனும் கேள்விகளை நண்பர்கள் எழுப்பி இருக்கும் பட்சத்தில் - அவற்றை இங்கு repeat செய்யுங்களேன் - ப்ளீஸ் ?!

406 comments:

 1. Replies
  1. சூப்பர் சிக்சின் சந்தாக்கள் 1000 எனும் மேஜிக் எண்ணைத் தொடும் ஒரு அதிசய தருணம் புலரும் பட்சத்தில் - குட்டிக் கரணம் அடித்தாவது விலை மாற்றம் ஏதுமின்றி - LMS -ல் 1000 பக்கங்களை உருவாக்கிடுகிறேன் ; that's a promise !
   நிச்சயமாக இலக்கை எட்டிப் பிடித்து விடுவார்கள் எங்கள் குட்டி சிங்கங்கள் சார்!!!

   Delete
 2. //////////////////////////////////////சூப்பர் சிக்சின் சந்தாக்கள் 1000 எனும் மேஜிக் எண்ணைத் தொடும் ஒரு அதிசய தருணம் புலரும் பட்சத்தில் - குட்டிக் கரணம் அடித்தாவது விலை மாற்றம் ஏதுமின்றி - LMS -ல் 1000 பக்கங்களை உருவாக்கிடுகிறேன் ; that's a promise !//////////////////////////

  நிச்சயம் சந்தா எண்ணிக்கை 1000த்தை தாண்டி செல்லும் அதில் உங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.

  ReplyDelete
 3. சென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் செலுத்தும் தாங்கள் அப்படியே மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இரண்டு ஊர்களையும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் வருடா வருடம் இங்கே கூட்டம் களை கட்டிக் கொண்டிருக்கிறது.

  ReplyDelete
 4. ஏப்ரல் இறுதியிலேயே மறுபடியும் 3 புக்கா நம்ப முடியவில்லை............ நம்ப முடியவில்லை................
  வாரம் ஒரு புத்தகம் என்ற கனவு விரைவில் நனவாகும் என்ற நம்பிக்கை மேலோங்கியுள்ளது.

  ReplyDelete
 5. // 'வேறு வழியில்லை - அவர்களுக்கு இம்முறை இடம் நம் இதயத்தில் மாத்திரமே !'என்ற என் தீர்மானத்துக்கு பின்னணி இதுவே ! ஆர்ட்டின் & ஷெரிப்பின் காதலர்களே.. //

  சார், கூடிய விரைவில் இவர்களது கூட்டணியை எதிர்பார்க்கலாமா ?

  // ஸ்பைடரின் எஞ்சி இருக்கும் நீ --ள--மா--ன கதையினை நல்ல நாளுக்கே வெளியிட்டிட எனக்கு தைரியம் வந்திருக்காது ; //

  கோவை இரும்புகரத்தார் கவனிக்க ...

  //மகளிர் பிரதிநிதியாக புது வரவு ஜூலியா - கிட்டத்தட்ட 200 கதைகள் கொண்டதொரு வரிசையோடு //

  சார், டெக்ஸ், ஜூலியா போன்றவர்களின் கதைகள் அதிகமாக இருக்கும் பொழுது லார்கோ கதைவரிசை குறைவாக உள்ளதற்கு due to a lack of success என்பது உண்மையா ?

  "Largo Winch started as a series of novels by Jean Van Hamme in the late 1970s, but stopped due to a lack of success and the huge amount of work Van Hamme had in the meantime with his comic books (e.g. Thorgal)"

  Source - http://en.wikipedia.org/wiki/Largo_Winch

  ReplyDelete
  Replies
  1. ஸ்பைடரா கொக்கா !
   நண்பரே அதனை எங்கள் ஸ்பைடரே ஆசிரியரின் கனவில் வந்து கவனித்து கொள்வார் !

   Delete
  2. //இன்றைய சூழலில், நம் ரசனைகளின் மாறுதல்களுக்குப் பின்னே இந்த விட்டலாச்சார்யா சாகசத்தை நினைத்துப் பார்ப்பதே சாத்தியமற்றது என்பதால் அதனை துயில் பயிலச் சொல்லுவதில் தயக்கமிருக்கவில்லை !//
   இதன் அர்த்தம் கொன்று விடவில்லை ; தேவை படும் போது நீண்ட கால freezing உறக்கத்திலிருந்து எழுப்பி கொள்வோம் என்பதே ! எப்போது எதிரிகளின் கொட்டம் அதிகமாகிறதோ , இப்போதைய நாயகர்களால் சமாளிக்க முடியாது எனும் நிலை வருகிறதோ அப்போது வருவார் எங்கள் வலை மன்னன் !

   Delete
  3. கனவு........... கனவு.......... பகல் கனவு............

   Delete
  4. இன்னைக்கு அர்த்த ஜாமத்திலே இதே போல எழுதுகிறேன் , அப்போதும் இது போல கூவுவீர்களா பார்க்கிறேன் !

   Delete
 6. Replies
  1. இன்னும் பிரமிப்பு அடங்கவில்லை.இதெல்லாம் நிஜம் தானா?900 பக்கங்களில் ஒரு காமிக்ஸ் புத்தகம் என்பது நான் கனவிலும் நினைத்ததில்லை.
   உண்மையிலேயே இது ஒரு சாதனையாக இருக்கப்போகிறது...
   (பிரின்டிங்கில் மிகவும் கவனம் தேவை)

   Delete
  2. பிரிண்டிங்கில் நம்பிக்கை இருக்கிறது ! பைண்டிங்கில்தான் எப்படி செய்வார்களோ என கவலை படிகிறேன் !

   Delete
  3. இப்போதைய டெக்ஸ் தீபாவளி மலர் பேப்பர் தனியாய் வருகிறது இரண்டு முறை படித்ததற்கே ! நூலால் nbs போல தைக்க வேண்டும் குண்டு புத்தகங்கள் என்றால் ! நில் , கவனி, சுடு கூட அப்படி வந்தால் நன்றாய் இருக்கும் !

   Delete
 7. // சூப்பர் சிக்சின் சந்தாக்கள் 1000 எனும் மேஜிக் எண்ணைத் தொடும் ஒரு அதிசய தருணம் புலரும் பட்சத்தில் - குட்டிக் கரணம் அடித்தாவது விலை மாற்றம் ஏதுமின்றி - LMS -ல் 1000 பக்கங்களை உருவாக்கிடுகிறேன் ; that's a promise ! //

  சார், கண்டியப்பாக நாம் இந்த மேஜிக் எண்ணைத் தொடுவோம். ஆனால் 'விலை மாற்றம் இன்றி' என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இன்னும் 100 பக்கங்கள் இதே விலையில் என்பதை விட அதற்குண்டான விலை ஏற்றத்தை அறிவிக்கலாம்.

  இது வரை சந்தா செலுத்தி உள்ள நண்பர்களுக்கு (நான் உட்பட), இந்த வித்தியாச தொகையை செலுத்துவதில் எந்த சிரமமும் இருக்காது.

  அப்படி இல்லையெனில், சூப்பர் 6 என்பதை சூப்பர் 5 என மாற்றி விடுவோம் :) ஏதேனும் ஒரு 100/150 ரூபாய் புத்தகத்தை அடுத்த வருட கோட்டாவில் சேர்த்து கொள்ளலாம்.


  "மாற்றம் ஒன்றே மாறாதது" -- யாரோ !!!


  ReplyDelete
  Replies
  1. அருமையா சொன்னீங்க ப்ளூ!

   நிச்சயமாக 1000 பக்கங்களில் LMS வெளிவந்து சரித்திரம் படைக்கும்! இது உறுதி!!

   இதற்கு வாசகர்களாகிய எங்கள் தரப்பில் செய்ய வேண்டியதைச் செய்யத் தயாராக இருக்கிறோம் எடிட்டர் சார்!

   'முதல் முறையாக 1000 பக்கங்களில் ஒரு தமிழ் காமிக்ஸ்' என்று கட்டமிடப்பட்ட வண்ண எழுத்துக்கள் LMSன் அட்டகாசமான அட்டைப்படத்தில் மிளிரப்போவது உறுதி!

   அந்த நாளுக்காகக் காத்திருக்கிறோம்...

   Delete
  2. +1
   எழுத்துக்களை தங்க நிறத்தில் ஒரு பாதியையும் சில்வர் நிறத்தில் ஒரு பாதியையும் (மேலே கீழே என ) ஜொலிக்க செய்யலாம் சார் !

   Delete
  3. // அப்படி இல்லையெனில், சூப்பர் 6 என்பதை சூப்பர் 5 என மாற்றி விடுவோம் :) ஏதேனும் ஒரு 100/150 ரூபாய் புத்தகத்தை அடுத்த வருட கோட்டாவில் சேர்த்து கொள்ளலாம் //

   @Blue - Very practical suggestion

   @Editor - Please consider this option.

   Delete
  4. So 1000 is conformed.... either way!!!! Thank u very much sir... Remaining pages will be for our Princess..... & Karigan.....

   Delete
 8. எதிர் வீட்டில்எதிரிகள் இன்று படித்து முடித்தேன்! Junior Editorன் வசனங்களில் current election scenrioவை பிரதிபலித்தது நல்ல யுக்தி! goundamani & senthil, vadivel வசனங்களில் சமீப காலமாய் comedy கதைகளில் காண முடிந்ததை avoid செய்தது நன்று!

  ReplyDelete
 9. April இறுதியில் மீண்டும் 3 books எனும்போது vivekன் dialogue மனதில் ஓடியது Positive moodல்! எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் !

  ReplyDelete
 10. For follow up!
  (comments later, :-)) )

  ReplyDelete
 11. //ஏப்ரல் கடைசி வாரத்தினிலேயே டெக்ஸ் ; தோர்கல் & ப்ருனோ கூட்டணி உங்கள் கைகளில் இருப்பார்கள்//

  டியர் விஜயன் சார்,

  இந்த மாத காமிக்ஸ் வருகின்ற 23 தேதிக்குள் கிடைக்க வழியுண்டா சார் ? ஏப்ரல் 23க்கு மேற்பட்டு நான் ஊரில் இருக்க மாட்டேன் ; அதற்கு பிறகு வரும் நிலையில், எனக்கு ஜூன் முதல் வாரத்தில் மட்டுமே கையில் கிடைக்கும். எனவே இந்த மாத காமிக்ஸ் வருகின்ற 23ம் தேதிக்குள் எங்கள் கையில் கிடைக்கும் சாத்தியம் இருக்கிறதா விஜயன் சார் ?

  ReplyDelete
 12. எடிட்டர் சார்,

  LMSன் புத்தக அளவை நிர்ணயிக்க வெள்ளைத் தாள்களால் ஒரு dummy book தயாரித்து, ஒரு வாரம் முழுக்க ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, NBSஉடன் ஒப்பிட்டுப் பார்த்து, திடீரென்று எடைபோட்டுப் பார்த்து... கைநிறைய எங்களுக்கு வழங்கவேண்டுமென்பதில் நீங்கள் காட்டும் மெனக்கெடல்கள் அபாரம் எடிட்டர் சார்! பால் என்று நினைத்து கள்ளைக் குடித்த பூனையின் நிலையை போல ஒரு போதையை உணருகிறேன் நான்!

  முழுமனதுடன், நீங்கள் முடிவு செய்திருக்கும் சைசிலேயே ஏற்றுக்கொள்ளத் தயார் ஆகிவிட்டோம்; ஆனால், 1000 பக்கங்களுடன்! ஹி ஹி!

  நானும் இன்னிக்கு வீட்டுக்குப் போனவுடன் பழைய காலேஜ் புத்தகம் ஏதாவது 1000 பக்கங்களில் கிடைத்தால் தேடி எடுத்து மேஜை மேல் வச்சு ஒரு மாதிரியாய் பார்த்துக்கிட்டே... இருக்கப்போறேன்; ஆகஸ்ட் வரைக்கும்! :)

  ReplyDelete
  Replies
  1. //நானும் இன்னிக்கு வீட்டுக்குப் போனவுடன் பழைய காலேஜ் புத்தகம் ஏதாவது 1000 பக்கங்களில் கிடைத்தால் தேடி எடுத்து மேஜை மேல் வச்சு ஒரு மாதிரியாய் பார்த்துக்கிட்டே... இருக்கப்போறேன்; ஆகஸ்ட் வரைக்கும்! :)//

   பாவம் பாஸ் !!! உங்க வீட்டுலதான் ரொம்ப confuse ஆகி போவாங்க :)

   Delete
  2. @ ப்ளூ

   // உங்க வீட்ல ரொம்ப confuse ஆகிப் போவாங்க //

   மாட்டாங்க! அதுக்கும் ஒரு வழி இருக்கு! அந்த காலேஜ் புத்தகத்தின் அட்டையில் அவங்க ஃபோட்டோவை ஒட்டி வச்சுடுவேன்! (எவ்வளவோ சமாளிச்சிட்டோம். இதைச் சமாளிக்க மாட்டோமா? ஹி ஹி)

   Delete
  3. // (எவ்வளவோ சமாளிச்சிட்டோம். இதைச் சமாளிக்க மாட்டோமா? ஹி ஹி) //

   இந்த கமெண்ட்டை Printout எடுத்து ஈரோடுக்கு அனுப்பிச்சிடுங்கப்பா... :D

   Delete
 13. டியர் விஜயன் சார்,

  வரப்புயர நீர் உயரும்
  நீர் உயர நெல் உயரும்
  நெல் உயர குடி உயரும்
  குடி உயர கோல் உயரும்
  கோல் உயர கோன் உயர்வான்

  விஜயன் சார் இந்த பாடல் தற்போது உங்களுக்குத் தான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. எனவே விலை மாற்றமின்றி செய்யும் எந்த மாற்றமும் - தமிழ் காமிக்ஸ் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்துவதாகவே அமையும். எனவே நீங்கள் அப்படி ஏதும் மாற்றம் செய்வதாக இருந்தால், அதை எண்ணிக்கையில் செய்து விடலாமே சார்.. எனவே

  சூப்பர் 5 மட்டுமே இந்த வருடத்தில் வெளியிடலாம் அல்லவா ?!

  இல்லையெனில் 900 பக்கம் மட்டுமே போதுமானது ; நிச்சயமாக எனக்கு போதுமானது :)

  ReplyDelete
 14. இந்த மாத இறுதியிலேயே இன்னும் 3 புத்தகங்களா!!!! சூப்பர்!!

  ஒரே மாதத்தில் 5 புத்தகங்கள்!!! ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 520 பக்கங்கள்!!!!!!!

  ஏப்ரல் வாழ்க! :)

  ReplyDelete
 15. டியர் எடிட்டர்ஜீ!!!

  //சூப்பர் சிக்சின் சந்தாக்கள் 1000 எனும் மேஜிக் எண்ணைத் தொடும் ஒரு அதிசய தருணம் புலரும் பட்சத்தில் - குட்டிக் கரணம் அடித்தாவது விலை மாற்றம் ஏதுமின்றி - LMS -ல் 1000 பக்கங்களை உருவாக்கிடுகிறேன்//

  கூடிய விரைவில் குட்டிக்கரணம் அடிக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும்;-)

  ReplyDelete
 16. ஆஹா.இப்போதே ஆகஸ்ட்டை எதிர்பார்க்கிறது மனம்...! அடுத்த வாரம் நேரிலேயே வந்து சந்தா கட்டிவிடுகிறேன். மாதந்தோறும் LMS போல பத்து கதைகள் அடங்கிய குண்டு புக்குகள் வரும் காமிக்ஸ் வசந்தகாலம் அதிக தொலைவில் இல்லை…!

  ReplyDelete
 17. சார் உங்கள் தேர்வுகள் , நாங்கள் சலிப்பின்றி, முக சுளிப்பின்றி படிக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் டம்மி வைத்து செய்த ஆராய்ச்சிகள் அனைத்துக்கும் நன்றிகள் ! நீங்கள் ஒதுக்கினால் காரணம் இருக்கும் என்பதை ஏற்று கொள்கிறோம் !
  நிச்சயம் ஆயிரத்தைநூறு பிரதிகளுக்கான சந்தாக்கள் மே மாதத்தின் முற்பாதியில் அடைவீர்கள் ! ஆயிரம் பக்கங்களில் நமது இதழ் மணப்பது உறுதி ! ஆனால் இங்கே சேர்க்கும் கதைகள் சிறிய சைஸ் கதைகளாய் இருத்தல் நலம் ! வசனங்களை சேர்த்து நறுக்கி விடாதீர்கள் ! உட் சிட்டி கோமாளிகள் பெரிய சைசிலே வரட்டும் !

  ReplyDelete
  Replies
  1. சார் கோடை மலர் அல்ல ...அல்ல ... கோடை மலர்கள் இம்மாதமே தயார் என்பது கூடுதல் சந்தோசம் !

   Delete
  2. மார்ஷல் என்ற எழுத்தை பார்க்கும் முன் மேஜிக் வின்ட் என்றே நினைத்தேன் ! அட்டகாசம் பண்ணி இருக்கிறார் வான்ஸ் !

   Delete
  3. //இன்றைய சூழலில், நம் ரசனைகளின் மாறுதல்களுக்குப் பின்னே இந்த விட்டலாச்சார்யா சாகசத்தை நினைத்துப் பார்ப்பதே சாத்தியமற்றது என்பதால் அதனை துயில் பயிலச் சொல்லுவதில் தயக்கமிருக்கவில்லை !//
   இதன் அர்த்தம் கொன்று விடவில்லை ; தேவை படும் போது நீண்ட கால freezing உறக்கத்திலிருந்து எழுப்பி கொள்வோம் என்பதே ! எப்போது எதிரிகளின் கொட்டம் அதிகமாகிறதோ , இப்போதைய நாயகர்களால் சமாளிக்க முடியாது எனும் நிலை வருகிறதோ அப்போது வருவார் எங்கள் வலை மன்னன் !

   ஆகவே ஸ்பைடர் ரசிகர்களே கண்ணீர் சிந்த தேவை இல்லை ! பெரிய சைசில் பல பளப்பாய் , மினு மினுப்பாய் வருவார் நம் குற்றவியல் சக்ரவர்த்தி /நீதிக்காவலன் !

   Delete
 18. கடந்த பதிவில் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி கார்சனின் கடந்த காலம் எப்போ வரும் என்பதே

  ReplyDelete
  Replies
  1. கலரில் வருமா என்பதே கேள்வி

   Delete
  2. நிச்சயம் வரும் ! வர வேண்டும் ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்.....

   Delete
  3. // நிச்சயம் வரும் ! வர வேண்டும் ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்..... //

   ஸ்டீல், நீங்க இப்படியே முக்கிக்கொண்டிருந்தால்.....

   Delete
 19. // 1000 //

  913 பக்கத்தில் வந்தால்கூட போதும், Attraction மாறாது! ஏற்கெனவே எண்ணிக்கைகள் உயர்ந்துவிட்டது. சரியான நேரத்தில், போதுமான Standards'உடன், பணியாளர்களின் ஓய்வு / உடல் நலம் கெடாமல் - இதுவரையில் அறிவிக்கப்பட்ட புத்தகங்கள் வெளிவந்தாலே போதும் 2014 ஒரு மிகப்பெரிய Success'ஆக இருக்கும்! ;)

  மேலும் மேக்னம் ஸ்பெஷலில் ஏற்கெனவே 3 கதைகள் less than usual size'ல் வெளிவருவது ஒரு குறையே. So 100 பக்கங்களை Fill செய்ய நமக்கு இருக்கும் Choice டெக்ஸ் / போனெலியின் சைஸ் கதைகள் மட்டுமே. சரிப்படுமா? :D

  ReplyDelete
  Replies
  1. //மேலும் மேக்னம் ஸ்பெஷலில் ஏற்கெனவே 3 கதைகள் less than usual size'ல் வெளிவருவது ஒரு குறையே. So 100 பக்கங்களை Fill செய்ய நமக்கு இருக்கும் Choice டெக்ஸ் / போனெலியின் சைஸ் கதைகள் மட்டுமே. சரிப்படுமா? //

   Delete
 20. Dear Edi AKA Singesi,

  namma subscription count evvalonnu i am not going to ask :-) just want to know in your opinion if 1000 subscription for super 6 is really a reachable number?

  "தவிர, முன்பதிவுகளுக்கு நண்பர்கள் விறுவிறுப்பாய் பணம் அனுப்பத் துவங்கி விட்ட நிலையில் - விலையில் மாற்றம் எனும் போது வீண் குழப்பங்கள் நேரிடும்"
  Very fair that too for people who do not track our comics on internet it will be a surprise..

  ! சூப்பர் சிக்சின் சந்தாக்கள் 1000 எனும் மேஜிக் எண்ணைத் தொடும் ஒரு அதிசய தருணம் புலரும் பட்சத்தில் - குட்டிக் கரணம் அடித்தாவது விலை மாற்றம் ஏதுமின்றி - LMS -ல் 1000 பக்கங்களை உருவாக்கிடுகிறேன் ; that's a promise !
  Really nice of you! it made me very happy to see your above promise..feels good when u get something for free!
  But திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் comment படிச்சோன்னே வெட்கமாய் போச்சு போங்க….. I totally agree with him that
  “இந்த வித்தியாச தொகையை செலுத்துவதில் எந்த சிரமமும் இருக்காது.”

  Adhilum second idea – very innovative
  “ அப்படி இல்லையெனில், சூப்பர் 6 என்பதை சூப்பர் 5 என மாற்றி விடுவோம் :) ஏதேனும் ஒரு 100/150 ரூபாய் புத்தகத்தை அடுத்த வருட கோட்டாவில் சேர்த்து கொள்ளலாம் “
  Adhai konjam improve seidhu 150 bookai 75 -> towards 1000 page magnum special and 75 -> for super sixth issue
  On the whole 1000 page special would be really special

  Font size dayavu seidhu surukkadheergal,
  கலர் புக்கே க்ளார் அடிக்குதுன்னு கம்ப்லைன் பண்ண கண்ணுபா எங்களுது
  *i*
  ---

  ReplyDelete
  Replies
  1. // Font size dayavu seidhu surukkadheergal, //

   நியாயமாகப் பார்த்தால் நாம் ஆங்கில எழுத்தை விட சிறிய சைஸில் தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தவேண்டும் - அவ்வாறு செய்வதில்லை. தற்போது வரும் சைஸே சற்று பெரியதுதான் but ok.

   மேலே உள்ள லக்கி மற்றும் சிக்பில் கதை ஆங்கில எழுத்துகள் கூட வாசிக்கக் கடினமானவைதான். காமிக்ஸ் என வரும்போது Priority சித்திரங்களை பிரதானமாகவும், உற்று நோக்குதலை இயல்பாகவும் எடுத்துக்கொள்வது அவசியமில்லையா? இரண்டு முதல் ஒன்றரை அடி இடைவெளியில் பார்க்கும்போது நம்முடைய தற்போதைய Font size சற்று பெரிதாகவே உள்ளது - why worries? ;)

   Delete
  2. @ Ramesh

   generally no issues in current font size- my point is mainly for magnum special

   magnum special book sizukku vendi namma franco belgia images small seiyyum podhu padikka kadinamaagamal parthu kollalam enbadu en karuthu


   "உற்று நோக்குதலை இயல்பாகவும் எடுத்துக்கொள்வது"
   - Y ma Y already computeriayae oru 12 hr moraichi pakkarom apprama TVya oru 30 minutes to 1 hr moraikkurom appuram newspaperai konjam moraikkurom appram wife pakkadhapodhu avalai konjam moraikkirom :-)

   relaxed namma comics padikka pona angaiyum uthu pakka sonna eppadipa eppadi

   oh maybe ivvalo visayathukku munnadiyae uthu uthu pakkuradahalae neenga uthu pakkuradhae இயல்பா eduthukka solreengalo!? :-)

   NAAATAAAMAI teerpae mathi sollunga illaena unga paerai inglishukku translate pannipuduvaen aaama

   Delete
  3. சத்யாவுக்கு காபி காபி

   // Y ma Y already computeriayae oru 12 hr moraichi pakkarom apprama TVya oru 30 minutes to 1 hr moraikkurom appuram newspaperai konjam moraikkurom appram wife pakkadhapodhu avalai konjam moraikkirom //

   ஹா ஹா ஹா! LOL.

   சென்ற பதிவில் நான் கேட்டிருந்த (1000 பக்க காமிக்ஸ் பற்றி) கேள்விக்கு பதிலளித்ததற்கு நன்றி!

   முழுக்கத் தமிழிலேயே பதிவிட முயற்சி செய்யுங்களேன் சத்யா? உங்கள் தங்கிலீஸை கஷ்டப்பட்டு பரிந்துகொள்ள நாங்கள் ஒரு 5 நிமிடம் 'முறைப்பது' மிச்சமாகுமில்லையா? ;)

   (சில/பல நண்பர்கள் தங்கலீஸ் கமெண்ட்டுகளை படிக்காமல் கடந்து சென்று விடுவார்களோ என்ற அச்சமே நான் இப்படிச் சொல்லக் காரணம்)

   Delete
  4. // NAAATAAAMAI teerpae mathi sollunga illaena unga paerai inglishukku translate pannipuduvaen aaama //

   ஹா ஹா! சத்யா, I meant they already doing their best to keep the font size bigger! நிச்சயம் நிலவொளியில் ஒரு நரபலி எழுத்து சைஸைவிட பெரிதாக இருக்க வாய்ப்பு அதிகம்.

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. Font Size பொறுத்தவரை @ரமேஷ்குமாருடைய கருத்துதான் என்னுடயதும். ஏற்கனவே நம் புத்தகத்தில் font size பெரிதாக உள்ளது. இதற்கு மேல் பெரிதாக்கினாள் படங்கள் மறைந்து விடும்.

   Delete
  7. To avoid misunderstanding, all we talk about here is "Relative Size". புத்தகத்தின் சைஸ் குறையும்போது எழுத்தின் சைஸ் ஓரளவுக்காவது proportion'ஆக குறைவது அவசியமே. ;)

   Delete
  8. //(சில/பல நண்பர்கள் தங்கலீஸ் கமெண்ட்டுகளை படிக்காமல் கடந்து சென்று விடுவார்களோ என்ற அச்சமே நான் இப்படிச் சொல்லக் காரணம்)//

   முற்றிலும் உண்மை விஜய் : நான் ஒரு உதாரணம்

   Delete
 21. டியர் விஜயன் சார்,

  சிறிய சைஸில் அச்சாகும் ஃபிரான்கோ-பெல்ஜியக் கதைகளின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க, மேக்னம் ஸ்பெஷல் வரும் வரை காத்திராமல், சோதனை முயற்சியாக ஒரு புத்தகத்தை விரைவில் வெளியிட்டுப் பார்க்கலாமே?

  //மார்ஷல் டைகர் - பக்கத்திற்கு மூன்றே வரிசைகள் - ஏகமாய் சித்திரங்கள் கிடையாது - அளவு சிறிதாக்கினாலும் படித்திட - சிரமம் தோன்றவில்லை//
  ஆனால், லக்கி லூக் & ரான்டன்ப்ளான் - நான்கு வரிசைகள் கொண்ட கதைகள் ஆயிற்றே?! வசனங்கள் குறைவாக இருந்தாலும், தமிழுக்காக பெரிதாக்கப் படும் பலூன்களால், ஏற்கனவே சிறிதாக்கப் பட்ட சித்திரங்கள் மேலும் கொஞ்சம் மறைக்கப்பட்டு விட்டும் சாத்தியம் இருக்கிறதே?!

  that said...

  பக்கத்துக்கு மூன்றே வரிசைகள் & குறைவான வசனங்கள் இருக்கும் ஃபிரான்கோ-பெல்ஜியக் கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை மட்டும் இனி சிறிய சைஸிலேயே (9" x 5¾") வெளியிட முடிந்தால் எப்படி இருக்கும்? Psychological barrier ஆன 50 ரூபாயை விட சற்று குறைவான விலை கொண்ட புத்தகங்கள் இதன் மூலம் சாத்தியாமாகும் இல்லையா?! தவிர, நாவல்கள் போன்று கைக்கு அடக்கமாக தோற்றமளிக்கும் காமிக்ஸ் புத்தகங்கள், புதிய வாசகர்களை கவரும் வாய்ப்பும் இருக்கிறது!

  என்னைப் போன்ற சந்தாதார்களுக்கு / காமிக்ஸ் பிரியர்களுக்கு விலை / பெரிய அளவு ஒரு பிரச்சினை இல்லை என்றாலும்; புதிய வாசகர்களை / பெரிய சர்குலேஷனை எட்ட முயற்சிக்கும் போது, இது போன்ற சிறிய அளவு புத்தகங்கள் சற்று பலனளிக்கக் கூடும் எ.எ.க.!

  பி.கு:
  //சூப்பர் சிக்சின் சந்தாக்கள் 1000 எனும் மேஜிக் எண்ணைத் - தொட்டால் - LMS -ல் 1000 பக்கங்களை உருவாக்கிடுகிறேன் ; that's a promise ! //
  ஒருவேளை 1500 அல்லது 2000 சந்தாக்களை தாண்டினால்?!! (புத்தகத்தின் அளவை) நினைத்துப் பார்த்தாலே பீதியாக இருக்கிறது! :D

  ReplyDelete
  Replies
  1. // ஃபிரான்கோ-பெல்ஜியக் கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை மட்டும் இனி சிறிய சைஸிலேயே (9" x 5¾") வெளியிட முடிந்தால் எப்படி இருக்கும்? Psychological barrier ஆன 50 ரூபாயை விட சற்று குறைவான விலை கொண்ட புத்தகங்கள் இதன் மூலம் சாத்தியாமாகும் இல்லையா?! தவிர, நாவல்கள் போன்று கைக்கு அடக்கமாக தோற்றமளிக்கும் காமிக்ஸ் புத்தகங்கள், புதிய வாசகர்களை கவரும் வாய்ப்பும் இருக்கிறது! //

   5¾ x 9 மாதிரி நெட்டையான Format ஃபிரான்கோ-பெல்ஜிய சைஸுக்கு பொருந்தாது. கிட்டதட்ட 1.25 Inch Space உயரம் வீணாகும்! படங்கள் சின்னதாகவே இருக்கும்.

   விலையை Double ஆக்க வேண்டுமானால் ஒருவழி உள்ளது :P I mean போகாத ஊருக்கு இதோ வழி:

   லக்கி, சிக்பில் போன்ற சில கதைகள் மட்டும் ஒரு பக்கத்தை இரண்டாக பிரித்துப்பொடும் வகையில் பேனல்கள் அமைந்திருக்கும் (மேல் 2 வரிசை, கீழ் 2 வரிசை). இப்படி ஒரு பக்கத்தை இரண்டாகப்பிரித்து படுக்கை வசத்தில் உபயோகித்தால் மிக எளிதாக 5¾ x 9 சைஸில் உட்காரும். இதிலிருக்கும் பெரிய Benifit என்னவென்றால் படங்கள் நமது பெரிய புத்தகங்களைவிட பெரிதாகவும், எழுத்து வேலைகள் பலூனை பெரிதாக்காமல் சுளுவாகவும் முடியும். Drawback, என்னவென்றால் பக்கங்கள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகமாகும்!

   மேலே குறிப்பிட்ட வழிமுறையில் 44 பக்க சிக்பில் கதையை 88 பக்க கதையாக போட்டு 1000 பக்கங்களை Achieve பண்ணமுடியலாம்! எழுத்து அளவு பிரச்சனை இல்லாமல்!

   Delete
  2. //5¾ x 9 மாதிரி நெட்டையான Format ஃபிரான்கோ-பெல்ஜிய சைஸுக்கு பொருந்தாது. கிட்டதட்ட 1.25 Inch Space உயரம் வீணாகும்! //
   சிறிய திருத்தம்! நான் பரீட்சார்த்த முயற்சிகளுக்காக குறிப்பிட விரும்பியது, வழக்கமான A4 தாளின் சரி பாதி அளவான : 5¾" x 8.5" - கிட்டத் தட்ட தீபாவளி மலர் அளவு! 5¾ x 9 என்பது மேக்னம் ஸ்பெஷல் விளம்பரத்தில் கொடுக்கப் பட்டுள்ள அளவு - அது என்ன வகையான தாள் என்று தெரியவில்லை!

   //படங்கள் சின்னதாகவே இருக்கும்.//
   Of course yes! :) ஆனால், எந்த வகையான கதைகளுக்கு / பயன்பாடுகளுக்கு என்பதை குறிப்பிட்டு இருக்கிறேன்!

   //ஒரு பக்கத்தை இரண்டாகப்பிரித்து படுக்கை வசத்தில் உபயோகித்தால் மிக எளிதாக 5¾ x 9 சைஸில் உட்காரும்//
   மேக்னம் ஸ்பெஷலுக்கு, பக்கத்தை நிரப்பும் one-off முயற்சியாக இந்த ஐடியா ஓகே தான் (பழைய இதழ்கள் சிலவற்றிலும் இது போல வந்துள்ளது).

   பொதுவாக, படுத்துக் கொண்டு கூட படித்து விடலாம்! ஆனால், படுக்கை வசத்தில் உள்ள ஒரு புத்தகத்தை வாசிப்பது அவ்வளவு சுகமான அனுபவமாய் இருப்பதில்லை! அதுவும் 1000 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தில்... :)

   Delete
  3. // படுக்கை வசத்தில் உள்ள ஒரு புத்தகத்தை வாசிப்பது அவ்வளவு சுகமான அனுபவமாய் இருப்பதில்லை! அதுவும் 1000 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தில்... :) //

   Yes, அந்த approach எழுத்துகளின் சைஸ் பிரச்சனையை தீர்க்கமட்டுமே உதவும். otherwise not a worthy compromise.

   3 வரிசை பேனல் கதைகள்கூட, அவற்றின் ஒரிஜினல் குறைந்தபட்சம் எந்த சைஸைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதோ அதைவிட 75% க்கீழ் குறைக்கப்படும்போது கஷ்டப்படுத்திவிடும். இதில் பலூன்களை பெரிதுபடுத்த அதிக Space இருப்பது மட்டுமே advantage (aka disadvantage :D )

   Delete
 22. இது 146 வது பதிவு. 150 வது பதிவிற்கு ஜூனியர் எடிட்டர் விக்ரமின் எழுத்தை எதிர் பார்க்கிறோம். நண்பர்களே என்ன சொல்கிறீர்கள்

  ReplyDelete
  Replies
  1. 150-வது பதிவை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் எதிர்பார்க்கிறேன் ;)

   Delete
  2. ஹலோ..ஹலோ..ஹலோ..இங்கே செல் டவர் இல்லை போலிருக்கே...! நான் அப்புறமா பேசுறேன்..! Bye !

   Delete
  3. சார் எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க , அங்கே விஜயை வைத்து டவர் கட்டி விடலாம் !

   Delete
  4. நானே ஒரு டவர் மாதிரி தானே இருக்கேன். ஆண்டனாவை மட்டும் வாயில் கவ்விப் பிடிச்சுக்கிட்டு எடிட்டருக்குப் பக்கத்தில் நின்னுகிட்டாப் போதும்! ;)

   Delete
  5. ஆண்டனாவைதான் முகத்தில் வைத்திருப்பாரே பூனையார் !

   Delete
  6. நல்ல ஐடியா சகோ விஜய்

   Delete
 23. எனக்கு இந்த சந்தா கணக்கு வழக்குகளை கவனிக்க நேரமில்லப்பா. போன பதிவின் ஸ்பெஷல் வெளியீடுகள் அறிவிப்புகளை பார்த்த உடன் உடனடியாக ஒரு 5000 த்தை online transfer செய்து விட்டு - நீங்க எதை எப்போது வெளியிட்டாலும் சரி எனக்கு ஒரு பிரதி அனுப்பி விடுங்கள் என்று ஈமெயில் செய்து விட்டேன். ஏதோ நம்மால் முடிந்த ஆதரவு!

  ReplyDelete
  Replies
  1. Electron Karthick & கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : நன்றிகள் !!!

   Delete
 24. எதிர் வீட்டில் எதிரிகள் ! [ காதன்களும் - மூக்கன்களும் ] - சென்ற பதிவின் தொடர்ச்சி... :)

  டியர் விஜயன் சார்,

  நான் குறிப்பிட்டது என்னவென்றால், கிட்டத்தட்ட 27 வருடங்களாக - ஒரே ட்ராக் காமெடியான லக்கி லூக் மற்றும் சிக் பில் காமிக்ஸை - நாம் இன்னும் கூட ரசித்து வருகிறோமே என்ற ஆதங்கத்தை தான். நகைச்சுவையை பொறுத்தவரை காலத்திற்கேற்ப மாற்றத்தை நாம் கண்டு களித்து வருகிறோம். உதாரணமாக ;

  * என்.எஸ்.கிருஷ்ணன்
  *நாகேஷ்
  *கவுண்டமணி - செந்தில்
  *விவேக்
  *வடிவேல்

  என்று ரசித்து வந்த நாம் தற்போது 'சந்தானத்தின் டைமிங் காமெடியில்' லயித்து நிற்கிறோம். இந்த ரசனையும் கூட எத்தனை நாள் நிலைக்கும் என்று யாருக்கும் தெரியாது (!). எனவே லக்கி லூக் மற்றும் சிக்பில் கதைகளை கூடிய மட்டும் ஸ்பெஷலாகப் போட்டு விரைவில் முடித்து விட்டால் நன்றாக இருக்கும் தானே ? அதன் பிறகு வேறு தேடலுக்கும் வழி பிறக்கும் அல்லவா ?

  ReplyDelete
  Replies
  1. சினிமா காமெடி அந்தந்த கால ட்ரென்டுக்குள் அடங்குவதால் காலப்போக்கில் மாற்றம் நிகழ்வது சகஜம். ஆனால் லக்கி, சிக்பில் மாதிரி கௌபாய் கதைக்களங்கள் சமகாலத்தை சார்ந்து இல்லாததால் தொடர்ச்சியாக Fit ஆகிறது - நீண்டகாலத்துக்கு. So இவை சீக்கிரமாக அழுகும் பொருட்களல்ல, மெதுவாக 2050'லும் சாப்பிடலாம் :D

   Delete
  2. // மெதுவாக 2050லும் சாப்பிடலாம் //

   +1

   மிஸ்டர் மரமண்டை (லக்கி, சிக்பில் உள்ளிட்ட) காமெடி கதைகளையே அதிகம் விரும்பிப் படிப்பதாக முன்பொரு முறை இங்கே கூறியதாக ஞாபகம்! தனக்குப் பிடித்தவற்றை சற்றே வேறொரு மார்க்கத்தில் (சிறப்பிதழ்களாக வெளியிட்டு சீக்கிரம் முடித்துக் கொள்ளலாமே) நைஸாகக் கேட்டிருக்கிறார் என்பது என் அபிப்ராயம்! ;)

   Delete
  3. // அதன் பிறகு வேறு தேடலுக்கும் வழி பிறக்கும் அல்லவா ? //

   ஒருவேளை தற்காத்துக்குப் பொருந்தும் கதைகள் கிடைத்தால் பரவாயில்லை - ஆனால் கிடைத்தால்தானே? Lets hope! ;)

   Off topic, சினிமா காமெடி என்பது நிலையில்லா விஷயமாக கருதப்படுவதுகூட சற்று பிழையே. காலம் கடந்து நிற்கும் கதைக்களங்களும், Trend'ஐ' சாராமல் வெற்றிபெற்ற கதைகளும் இருக்கின்றன. உதாரணத்துக்கு வேதாள உலகம் என்ற 66 ஆண்டுகள் பழைய படம் கவர்ந்த அளவுக்கு சந்தானமும் வடிவேலுவும் நெடுங்காலத்துக்குக் கவரப்போவதில்லை. காரணம் காலத்தைக் கடந்த கதைக்களம்!

   Delete
  4. @ FRIENDS : நிறைய முறை நான் ஆதங்கப்பட்டு வரும் விஷயம் - தரமான கார்ட்டூன் கதைகளின் பற்றாக்குறை பற்றியே ! ப்ளூ கோட்ஸ் கதைவரிசையும் கூட out and out நகைச்சுவைக் கதைகள் என்று சொல்வது சரியாகாது எனும் போது - எஞ்சி நிற்பவர்கள் லக்கியும் ; சிக் பில்லும் மட்டுமே ! இன்னும் YAKARI ; SMURFS ; சுஸ்கி-விஸ்கி போன்ற கதைகள் உள்ள போதிலும், அவைகளை முழுமையாய் ரசிக்க நாம் அகவைகளில் பின்னோக்கிச் செல்வது தேவையாகிடும் என்பது தான் சிக்கலே !

   Delete
  5. சார், எனக்கு ப்ளூ கோட்ஸ் அற்புதம் !
   யகாரி , சுஸ்கி விஸ்கி முயற்ச்சிக்கலாமே ...நிச்சயம் கவரும் !

   Delete
 25. சிக்பில் LMS -ல் இல்லாவிட்டால் பரவாயில்லை சார், அதுக்காக 6 -வது இதழை சிக்பில் ஸ்பெஷலா போட்டிடுங்க.

  ReplyDelete
  Replies
  1. ESS : சிக் பில் குழு ஜூனில் ஏற்கனவே உங்களை சந்திக்கக் காத்துள்ளது !

   Delete
 26. எஞ்சி நின்றவன் மனதில் நின்றான்!

  ReplyDelete
  Replies
  1. senthilwest2000@ Karumandabam Senthil : பெரியதொரு twist ; அது-இதுவென்ற சிரமங்கள் ஏதுமின்றி படிக்க சீராய்ச் சென்ற கதையல்லவா ?

   Delete
 27. எடிட்டர் சார்,

  உங்களின் making of LMS teaser அருமை. எங்களுக்கு தரமானவற்றைதான் தர வேண்டும் என்று நீங்களும் உங்கள் டீமும் கடுமையாக உழைப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

  நானும் மற்ற நண்பர்களைப் போல அந்த மேஜிக் எண் 1000 தொட வாழ்த்துகிறேன். என் பங்கிற்கு பாண்டிச்சேரியில் இருந்து குறைந்தது இரண்டு புதிய சந்தா தாரர்களை அடுத்த வாரம் நமது குழுமத்திற்கு அறிமுகப்படுத்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Radja : //என் பங்கிற்கு பாண்டிச்சேரியில் இருந்து குறைந்தது இரண்டு புதிய சந்தா தாரர்களை அடுத்த வாரம் நமது குழுமத்திற்கு அறிமுகப்படுத்துகிறேன்.//

   :-) Thanks indeed !!

   Delete
  2. Radja : And இதனை "making of LMS என்று சொல்வதை விட - "planning of LMS" என்ற சொல்வது தான் பொருத்தமாய் இருக்கும் அல்லவா ?

   Delete
 28. Dear எடிட்டர் -

  சூப்பர் 6 -ல் இன்னும் suspense ஆக அறிவிக்கப் படாமல் இருக்கும் KING ஸ்பெஷல் - ஸ்பைடர் கதை தானே? :)

  ReplyDelete
  Replies
  1. Periyar: "கிங்" யாரென்று கேட்டால் - சின்னக் குழந்தையும் சொல்லுமே !

   Delete
  2. // "கிங்" யாரென்று கேட்டால்- சின்னக் குழந்தையும் சொல்லுமே! //

   ம்ம்ம்.... ரின்-டின்-கேன்?

   Delete
  3. குற்றவியல் சக்ரவர்த்தி ஸ்பைடர் என்று உரக்க கூறிய ஆசிரியருக்கு நன்றிகள் ! சார் இப்படி பொசுக்கென்று உடைத்து விட்டீர்களே ! ஆனால் அது கடைசி கதை என்பதால் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டுமோ !

   Delete
  4. பெரியார் நீங்கள் மெய்யாலுமே பெரியார்தான் , சரியாக சிந்தித்துள்ளீர்களே ! ஆகவே பரணி, விஜெய் போன்ற சிறுவர்களே உங்களுக்கு இலவச இணைப்பாய் பெப்பே மாத்திரைகள் உண்டு !

   Delete
  5. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : நிதானம் பலப்பல பல்ப் கொள்முதல்களைத் தவிர்க்கும் !

   Delete
  6. // "கிங்" யாரென்று கேட்டால் - சின்னக் குழந்தையும் சொல்லுமே! //

   "பரட்டைத்தலை ராஜா" ஸ்பெஷல் வரவுள்ளதா சார்? ரொம்ப Thanks! :D

   Delete
  7. ஸ்டீல், எடிட்டர் பல்ப் வேண்டாம் என்று சொல்லியே உங்களுக்கு ஒரு பெரிய பல்ப் கொடுத்துட்டார் என்று நினைக்கிறேன். வாங்கின பல்ப்பை வைத்து ஒரு கடை தொடங்கிடலாம்............. நான்தான் ஏற்கனவே சொன்னேனே பகற்கனவு பலிக்காது.......
   காமிக்சை பொருத்தவரை எம்பயர் என்றால் டைகர், பிரின்சஸ் என்றால் மாடஸ்தி, கிங் என்றால் டெக்ஸ்தான்.
   அதனால் அது டெக்ஸ் ஸ்பெசலாகத்தான் இருக்கும். அப்படி இருந்தால் மன்னருக்கு வரவேற்பு பிரமாதமாக இருக்கும்.

   Delete
 29. Dear எடிட்டர்,

  கார்சனின் கடந்த காலம் (இரண்டு பாகங்களும் சேர்த்து) ஒரே புத்தகமாக வண்ணத்தில், இந்த ஆண்டிலேயே வரும் என்ற உங்கள் confirmation-க்காக காத்திருக்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. Periyar : கடந்த காலத்துக்குள் செல்லும் முன்பாக immediate எதிர்காலத்தில் மலையாய் நிற்கும் LMS -ஐ கவனிப்பது தான் முறையாக இருக்கும் ! Everything else will just have to take a backseat - at least for now !

   Delete
 30. ஏக் தம்மில் 'எஞ்சி நின்றவனின் கதை'யை படித்து முடித்த பிறகு...

  45+ வயதில் நரைமுடியுடன் நமக்கு அறிமுகமான வேய்ன் ஷெல்டனின் பின்னணி இதுவரை நாம் அறியாத ஒன்றாகவே இருந்து வந்தது. இந்த பாகத்தில் ஓரளவுக்கு அந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. இளமையான ஷெல்டன், இப்போதைய 'ப்ளே பாய்' ஷெல்டனை விட அழகுடனும், கடமை உணர்வுடனும் வந்து போகிறார். இறுகிய மனம் படைத்த ஒரு ஜென்மமாக நாம் இதுவரை அறிந்த ஒரு நபரிடம் மென்மையான பாச உணர்வுகளும் துளி கண்ணீராய் வெளிப்படும் எனும்போது ஏனோ நம் மனதும் கனத்துப் போகிறது.

  அழுத்தமான கதை களத்தால் முதலாவது பாகமும், அதிரடி ஆக்ஷன்களால் இரண்டாவது பாகமும் நிறைவாய் நிற்கிறது.

  எனக்குப் பிடித்தவை:
  * முதல் பாகம் (மேற்கூறிய காரணத்தால்)
  * தடையில்லாத வாசிப்பு அனுபவத்தைத் தரும் அழகான மொழிபெயர்ப்பு
  * வியட்நாமின் அழகிய கிராமங்கள், இந்தோனேசியாவின் வீதிகள், வேய்னின் மெல்லிய பாசம், அளவான ரொமான்ஸ், துளியூண்டு வரலாறு, நிறைய ஆக்சன், வித்தியாசமான ரசணை கொண்ட வில்லி என்று ரசித்திட நிறைய அம்சங்கள்
  * துளியும் பிசகற்ற அச்சுத் தரமும், கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணக் கலவைகளும் - குறிப்பாக கடைசி சில பக்கங்களில் வரும் கடல் சம்பந்தமான காட்சிகள் கொள்ளை அழகு!
  * "மென்மையாக நடந்து கொள்வதற்கும் உறுதியான சித்தம் வேண்டும்" , "குருதியின் சீற்றத்தை சதா காலமும் பார்த்துப் பழகிப்போன கல்நெஞ்சிற்கு நேசத்தைப் பொழிவோரிடம் நெருங்க முடியாமல் போவது தான் ஏனோ?" போன்ற டயலாக்குகள்
  * பின்புற அட்டைப்படம்

  மிகச் சிறிய குறைகள்:
  * அதிநவீன மெஷின்கன்னால் சுடப்படும் காட்சிகளிலும் கூட 'ரட்டட்டட்டட்' வார்த்தைகள் இல்லாது 'டுமீல் டூமீல்'ஐயே பயன்படுத்தியிருப்பது.
  * முன் அட்டையில் ஏதோ ஒன்று குறைவதைப் போன்ற உறுத்தல் எழவே, உள்ளே- கதையில் வேய்ன் சிரிக்கும் இடங்களையும் (மிக அளவான சிரிப்பு வேய்னுடையது), முன் அட்டையையும் ஒப்பிட்டுப்பார்த்தபோது தான்... ஒரு சில மில்லி-மீட்டர்களே அதிகமாக வரையப்பட்ட வாயின் அளவு (குறிப்பாக வலதுபக்கம்) உறுத்தலுக்குக் காரணமென்று புரிந்தது.
  * (மேற்கூறிய காரணத்தாலும், ஷார்ப்பான, வித்தியாசமான பின் அட்டையின் ஓவியத்தாலும் ) முன்-பின் அட்டைகள் இடம் மாறியிருந்தால் இந்த இதழ் இன்னும் அழகாய் அமைந்திருக்கும்.

  மொத்தத்தில், நள்ளிரவிலும் (2 மணி) விமர்சனம் எழுதத் தூண்டும்படியான ஒரு நிறைவான இதழ்!
  அழகான இதழைத் தந்த எடிட்டர் மற்றும் குழுவினருக்கு நன்றிகள் பல!

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : //மென்மையாக நடந்து கொள்வதற்கும் உறுதியான சித்தம் வேண்டும்" , "குருதியின் சீற்றத்தை சதா காலமும் பார்த்துப் பழகிப்போன கல்நெஞ்சிற்கு நேசத்தைப் பொழிவோரிடம் நெருங்க முடியாமல் போவது தான் ஏனோ?" போன்ற டயலாக்குகள்//

   எழுதும் போதே இந்த வரிகள் நன்றாக வந்திருப்பதாய் மனதுக்குத் தோன்றியது ; கவனிக்கப்படும் வேளையில் மகிழ்வைத் தருகிறது ! Thank you !

   //துளியும் பிசகற்ற அச்சுத் தரமும்//

   சமீப மாதங்களாய் நம் அச்சில் தெரியும் முன்னேற்றம் நம் பணியாளர்களிடம் நான் காட்டிய பொறுமைக்குப் பெருமை சேர்ப்பதில் நிரம்பவே சந்தோஷம் ! இந்தப் பாராட்டுக்கள் அவர்களுக்குத் தான் சென்றாக வேண்டும் !

   Delete
  2. //மென்மையாக நடந்து கொள்வதற்கும் உறுதியான சித்தம் வேண்டும்" , "குருதியின் சீற்றத்தை சதா காலமும் பார்த்துப் பழகிப்போன கல்நெஞ்சிற்கு நேசத்தைப் பொழிவோரிடம் நெருங்க முடியாமல் போவது தான் ஏனோ?" போன்ற டயலாக்குகள்//

   இந்த காலத்துக்கு அவசியமான கருத்துக்கள்!

   ஒரேவொரு குறை, முதல் அத்தியாயம் இவ்வளவு Deep'ஆக இருந்தபோதிலும் இரண்டாவது அத்யாயம் மசாலாக்களாலும், இழுபரிகளாலும் நிறைந்து விட்டது. கடைசி பக்கங்களில் வரும் ஹூரோவின் நீண்ட Explanations உண்மையில் கதையின் பலவீனமாகிவிட்டது! இது Van Hamme'ன் வழிமுறையல்ல!

   Delete
  3. Ramesh Kumar : Van Hamme என்ற மாமலையின் அடையாளமே ஸ்க்ரிப்டின் அந்த அசாத்திய பலம் தானே ? அமெரிக்காவில் ஆறு மாதமாய் கேம்ப் அடித்து புது லார்கோ கதையைத் தயார் செய்து வருகிறார் !

   Delete
  4. // அமெரிக்காவில் ஆறு மாதமாய் கேம்ப் அடித்து புது லார்கோ கதையைத் தயார் செய்து வருகிறார்! //

   Nice to hear!

   Delete
  5. அப்படியே ஷெல்டனுக்கும் ஒரு மனு போட்டு விடுங்கள் !

   Delete
 31. உங்களுடைய http://lioncomics.worldmart.in/ வெப்சைட்டிலேயே
  சூப்பர் 6 சந்தா கட்ட வசதியை செய்ய முடியுமா?

  உங்களுடைய http://lioncomics.worldmart.in/ வெப்சைட்டிலேயே
  சூப்பர் 6 சந்தா கட்ட வசதியை செய்ய முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. SalemLee : 6% அதிகமாய் இருப்பது ஒ.கே. தான் எனில் - இன்றே அதற்கு ஏற்பாடு செய்து விடுவோம் !

   Delete
  2. லயன் சூப்பர் 6 க்கு இணையதளம் மூலம் இன்று சந்தா செலுத்தியாயிற்று.


   அதே போல லயன் முத்துவிற்கும் சந்தா இணையதளம் மூலமே செலுத்துவதற்கும் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் மேலும் சந்தாதாரர்கள் கிடைப்பார்கள்.

   Delete
  3. //அதே போல லயன் முத்துவிற்கும் சந்தா இணையதளம் மூலமே செலுத்துவதற்கும் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் மேலும் சந்தாதாரர்கள் கிடைப்பார்கள்.//
   +1

   Delete
 32. @Editor,
  I have full faith that subscription will cross 1000, still consider reducing the price and pages of one of the super six issue and use that money for this extra 100 pages.

  ReplyDelete
 33. ஆயிரம் பக்கம் நிச்சயம் வேண்டும்! சூப்பர் சிக்ஸ் ஐ Famous Five ஆக மாற்றி விட்டு 1000 பக்கம் ஆக்கி விடுங்கள். ப்ளீஸ்...

  ReplyDelete
 34. @ ஆயிரம் பக்கம் கோரும் all நண்பர்களுக்கு :

  எங்களது நிலையினை தெளிவாய் சொல்லி விட்டேன் ; அடுத்த இதழில் இது பற்றி சின்னதான குறிப்பொன்றும் வெளியிட்டு விடுவோம் ! So - சூப்பர் 6-ன் சந்தா எண்ணிக்கை 1000-த்தை தொட்டு விடும் பட்சத்தில் உங்கள் கனவு நனவாகிடும்.

  அவ்விதமின்றி - அறிவிக்கப்பட்ட சூப்பர் 6 -ல் ஒரு இதழை காவு வாங்கி விட்டு - அந்தப் பணத்தில் LMS -ன் விலை + பக்கங்களை அதிகரிப்பது சரியான திட்டமிடலாய் இராது ! இணையத்துக்கு அப்பால் உள்ள நண்பர்கள் & இங்கும் மௌனமாய் உலவும் நண்பர்கள் நிச்சயம் இதற்கு தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிக்க வாய்ப்புகள் உண்டு ! தவிரவும், 'பொசுக்' கென மாற்றப்படும் தீர்மானங்கள் நம் credibility க்கு நிச்சயமாய் பெருமை சேர்க்காது !

  ஆகையால் பந்து இப்போது இருப்பது உங்களது களத்திலேயே - hope you can make the most of it guys !

  ReplyDelete
  Replies
  1. சார் , நானும் ஆயிரத்தில் ஒருவனாய் இணைந்து கொள்கிறேன் ! பணத்தை அனுப்பி விட்டேன் நெட் மூலம் !

   Delete
 35. Hi
  இலங்கையில் இருந்து
  நான் சந்தா கட்ட​ வேண்டுமாயின், நீங்கள் குறிப்பிட்ட​ அயல் நாட்டு சந்தா = 3200 INR கட்டினால் போதுமா? கட்டிவிட்டு அலுவலகத் தில் கூறினால் சரிதானே

  ReplyDelete
 36. Replies
  1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : நெய் சாதமே வைத்து விட்டு "கா.க.கா." என்றாலும், வருவது கறுநிறத்தார் தானே ?

   Delete
  2. இது வரை நீங்கள் சொன்னதிலயே மிகச்சிறப்பான சொல்லாடல்....

   Delete
  3. சார் , மைசூரில் வெள்ளை காக்கை உண்டாமே மெய்யாலுமா !

   Delete
  4. //நெய் சாதமே வைத்து விட்டு "கா.க.கா." என்றாலும், வருவது கறுநிறத்தார் தானே ?//

   செம பஞ்ச் :-))

   Delete
 37. எஞ்சி நின்றவனின் கதை அட்டகாசமான ஆக்சன் த்ரில்லெர், நேற்று இரவு 11 மணிக்கு படிக்க ஆரம்பித்து 12 மணிக்கு முடிக்கும் தருவாயில் மனைவிடம் திட்டு வாங்கி புக்கை மூட மனமே இல்லாமல் மூடி வைத்து காலையில் எழுந்து பர பரவென படித்து முடித்து இந்த பதிவை இடுகிறேன். என்னே நேர்த்தியான சித்திரங்கள் !!!!!!!!!! அற்புதமான அச்சு தரம்!!!! பர பர ஆக்சன் என கலக்கி விட்டது !!!!! Wayne நிஜமாகவே கலக்கி விட்டார் :).
  எதிர் வீட்டில் எதிரிகள் சொல்லவே தேவையில்லை சூப்பர் !!!!விக்ரம்க்கு எனது வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள், மொழிபெயர்ப்பில் உங்களை மிஞ்சிவிடுவார் போல் இருக்கிறது :) அட்டகாசம்!!!!!!!!!!!!!!
  LMS: அசாத்திய 900 பக்கங்களை நெருங்கிய உங்களால் 1000 பக்கம் சாத்தியப்படாதா? ஒரு பழைய ஹிட் கதையை மறுபதிப்பு செய்யலாமே ? மொத்தம் 1000 பக்கங்கள் என்பது ஒரு மகத்தான சாதனையாக இருக்க போவது உறுதி !!!! முயன்றுதான் பாருங்களேன் சார் ப்ளீஸ். 25 வருடங்களுக்கு முன்னால் 500 600 பக்கங்களை கொடுத்த உங்களுக்கு 1000 சாத்தியபடாதா இப்பொழுது ? ?????

  ReplyDelete
 38. விஜயன் சார்,
  1. LMS திட்டமிடல் பற்றி விவரித்தது அருமை! நமது முந்தைய அனுபவம்கள் உங்களை பல கோணம்களில் சிந்திக்க வைத்து "சிந்தனை சிற்பி" ஆக்கிவிட்டது! அதிலும் மாதிரி புத்தகம் தயார் செய்து முடிவு எடுத்தது எல்லாம் "சூப்பர்".

  2. உங்கள் அலுவலகம் நண்பர்கள் மைண்ட் வாய்ஸ்-ல் பேசியதை எப்படி இங்கு சொல்ல மறந்தீர்கள்... அதுதான் "இவரு பாஸ்-ஆ இல்ல லூஸ்-ஆ".. இங்கு குறிபிட்ட பரிசோதனை செய்த போது.

  "வெள்ளைத்தாளால் போடப்பட்ட அந்த மாதிரியை ஒரு வாரம் முழுவதும் என் மேஜையில் வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன் - தலைக்குள் எவ்வித சிந்தனையும் இல்லாமல் ! ஒரு NBS புக்கை எடுத்து கிட்டே வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டு திடீரென்று இரண்டையும் எடை போட்டும் பார்த்தேன் !"

  3. இந்த (Planning of LMS) பதிவை படித்த போதுதான் இதுவரை இந்த தளத்தில் வந்த உங்களின் ஒவ்ஒரு பதிவும் சி.சி.வ என புரிந்து கொள்ள முடிந்து கொள்ள முடித்து! எனக்கு இதுவே தொடர்ந்து கிடைத்தால் போதும்!

  4.900 பக்க புத்தகத்தை 1000 ஆக்கினாலொ அல்லது 2000 பக்கம்களில் வெளி இட்டாலோ அல்லது அனைவர்க்கும் பிடித்த ஹீரோகளை கொண்டு இன்னும் ஒரு புத்தகம் வெளி இட்டலோ எங்களின் மனது நிறைவடையாது.. மனிதனின் மனம் அப்படிபட்டது, எனவே இது போன்ற நேரம்களில் உங்களுக்கு எது சரி என படுகிறதோ அதை செய்யும்கள்.

  5. மீண்டும் ஒருமுறை கேட்டு கொள்கிறேன் புத்தகத்தின் விலை அதிகமானால் தயங்காமல் சொல்லுங்கள், தர தயாராக இருக்கிறோம்! கல்லூரி படிக்கும் காலம்களில் கல்லூரி மற்றும் வசித்து வந்த தெருவில் பல விழாகளை நடத்திய போது நம்மை சுற்றி உள்ளவர்கள் சந்தோசமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பலமுறை கையை சுட்டு கொண்ட அனுபவம் உண்டு!

  6. லைன்-நானும்:- எனக்கு எழுதுவதற்கு நண்பர்கள் போல் முடியாது எனவே எஸ்கேப் :-)

  I hope all Sivakasi people are in "Sivakasi Pongal Festival" mood, I take this opportunity to wishing you and our lion office friends to a happy "Pankuni Pongal"

  ReplyDelete
  Replies
  1. ///900 பக்க புத்தகத்தை 1000 ஆக்கினாலொ அல்லது 2000 பக்கம்களில் வெளி இட்டாலோ அல்லது அனைவர்க்கும் பிடித்த ஹீரோகளை கொண்டு இன்னும் ஒரு புத்தகம் வெளி இட்டலோ எங்களின் மனது நிறைவடையாது.. **மனிதனின் மனம் அப்படிபட்டது**, எனவே இது போன்ற நேரம்களில் உங்களுக்கு எது சரி என படுகிறதோ அதை செய்யும்கள்///.
   +1 காமிக்ஸ் வெறியார்களின் மனம் அப்படிபட்டது,
   ஆனாலும்............ மனம் விரும்பூதே 1000

   Delete
 39. விஜயன் சார், சூப்பர்-6ன் இரண்டு "6"-ல் ஒன்று நமது "ஆஸ்தான" கறுப்பு வெள்ளை நாயகர்களுக்கு எனவும் மற்றொன்று கா.க அல்லது டைகர் மறு பதிப்புக்கு என பட்சி சொல்வது உண்மையாகுமா? ஆகும்.. ஆகனும்... உங்கள் மேல் என்றும் நம்பிக்கை உடன் :-) என்னை பொறுத்தவரை நான் மிகவும் எதிர் பார்ப்பது நமது "ஆஸ்தான" கறுப்பு வெள்ளை நாயகர்களை மட்டும்தான்!!

  ReplyDelete
 40. ஹைய்யா! ஒருவழியா நான் 'மரமண்டை'யை பார்த்துப்புட்டேன்!! என்னா ஒரு பவ்யம்! என்னா ஒரு விசுவாசம்!!
  நீங்களும் பார்க்கணும்னா 'எஞ்சி நின்றவனின் கதை'யில் 85ம் பக்கத்தைப் பாருங்க!

  நீண்டதொரு சஸ்பென்ஸின் முடிவில் மரமண்டையை அடையாளம் காட்டிய எடிட்டர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! :D

  ReplyDelete
  Replies
  1. ம்ஹூம்! அவ்வளவு சீக்கிரமெல்லாம் 'அப்பாடா' போட்டுவிட முடியாது.

   " :-) " இப்படி வந்தாக்கூட பயமாத்தான் இருக்கு.

   Delete
  2. ய்யீயீயீஈஈஈக்... தொலைஞ்சேன்!

   Delete
  3. என் ஆன்மா சாந்தி (அல்லது சாந்தியை) அடைவதாக! RIP.....

   Delete
  4. சரி, தொலையட்டும்! இரு ஆன்மாக்கள் சாந்தி/சாந்தியை அடைவதாக! Rest in trouble...

   Delete
  5. :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-)

   Delete
 41. ஆயிரம் பக்க "தி லயன் மேக்னம் ஸ்பெஷல்" ஒரு "மேக்னம் ஓபஸ்" என்று புகழ் பெற வாழ்த்துகள் சார்!

  இரவு பொழுது கனவுகளை மட்டுமல்லாது தற்போது பகல் பொழுது நினைவுகளையும் முழுமையாக ஆக்கிரமிக்க துவங்கிவிட்டது இந்த மேக்னம் எனும் மந்திரச்சொல்!

  அட்டகாசமான பெயர் தேர்வு சார்!

  கதை தேர்வில் இரண்டு டிடக்டிவ், இரண்டு கௌபாய் கதைகள் என்பதற்கு பதிலாக ஒரு "மிஸ்டர் ஜெட்" போன்ற சயின்ஸ் FICTION, ஒரு FANTASY அல்லது ஒரு ADVENTURE , முழு வண்ணத்தில் எனும்படியாக இருந்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். இரண்டு டிடக்டிவ் கதைகள் டூ மச் சார் ! கேப்டன் டைகரை பொறுத்தவரை தரமான கதைகள் முடிந்துவிட்டது என ஏற்கனவே நீங்கள் அறிவித்து விட்டதால் தற்போது உள்ள இந்த கதை எவ்வளவு தூரம் நம்மை கவரும் என்பதை கோடிட்டுகாட்டினால் சற்று நாங்கள் ரிலாக்ஸ் ஆகலாம்.

  சிக்பில்லை ரொம்பவே மிஸ் செய்கிறோம் என்பதை நானும் பதிகிறேன். நமது 30 தாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் இவங்க இல்லை என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.அதிக வசனம் இல்லாத தரமான கதைகளை தேடி எடுக்கவும் ப்ளீஸ்!

  3D காமிக்ஸ் பிரிண்டிங் சாத்தியப்பட்டால் ஒரு சிறு பகுதியை இதற்கு ஒதுக்கலாம். நிச்சயம் இந்த FEATURE ஒரு SHINING STAND-OUT ஆகா நிறைய பேரை கவரும். புத்தகத்தின் கூடவே இலவசமாக ஒரு கண்ணாடி. ஒரு சில மாதங்களுக்கு முன்னால் "ஆனந்த விகடன்" இதை செய்து காண்பித்தது.

  ReplyDelete
  Replies
  1. "தி லயன் மேக்னம் ஸ்பெஷல்" புத்தகத்தின் அட்டைப்படத்தை நினைத்தால் தான் கவலையாக உள்ளது. NBS போல சொதப்பினால் போச்! PLEASE TAKE CARE !

   Delete
  2. டியர் விஸ்கி-சுஸ்கி!!!

   //"தி லயன் மேக்னம் ஸ்பெஷல்" புத்தகத்தின் அட்டைப்படத்தை நினைத்தால் தான் கவலையாக உள்ளது. NBS போல சொதப்பினால் போச்! PLEASE TAKE CARE !//

   மிகவும் அருமையாக மற்றும் அழகாக நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட NBS அட்டைப்படத்தை சொதப்பல் என்று தாங்கள் கூறுவது விந்தையாக இருக்கிறது.

   அவ்வாறு சொதப்பல் என்று தாங்கள் கருதுவதற்கு காரணமான "குறை" என்னவோ...?

   Delete
  3. டியர் சாத்தான்ஜி,
   அந்த சோகத்தை ஏன் சார் ஞாபகப்படுத்தறீங்க, டைகரின் ஒரு கையில இருந்த தீசட்டியும்(சாரி தீச்சாட்டையும் ) மத்த கையில் இருந்த முழங்கும் துப்பாக்கியும் இப்போ நினைசாலே பயமா இருக்கு.

   இன்னமும் விளக்கம் தெரிஞ்சுக்கனுமுன்ன அப்பா PUBLISH ஆனா COMMENTS பாத்தீங்கன்ன தெரிஞ்சுக்கலாம் . :)))

   Delete
 42. நண்பர்களே ஆயிரம் பக்க பொக்கிசத்திர்க்காக நேரம் கடத்தாமல், பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர், நண்பர்கள் விற்குமா என யோசிக்கும் மலைப்பை போக்க , இன்னுமொரு புத்தகம் அதே விலையில் விடலாம் எனும் மலைப்பை தர விரைந்து செலுத்துங்கள் உங்கள் சந்தா எனும் சிறு உதவி மூலம் !
  நான் அனுப்பி விட்டேன் ~!

  ReplyDelete
  Replies
  1. கடையில், புத்தக திருவிழாவில் வாங்கி கொள்ளலாம் என என்னாமல் விரைந்து செயல் படுங்கள் !

   Delete
 43. "எதிர் வீட்டில் எதிரிகள்" ஒரு நல்ல லக்கி லூக் கதை வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. நகைசுவை சிறிது குறைவு.லக்கி லூக் கதைவரிசைகளில் இந்த கதை "தி பெஸ்ட்" ராகம் இல்லை என்றாலும் yet an other lucky story என வகைப்படுத்தலாம் . அபாரமான பிரிண்டிங் தரம். மொழிபெயர்ப்பில் நமது ஆசிரியருக்கும் விக்ரமுக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. இது முதல் முயற்சி என்றால் விக்ரம் சாதித்துவிட்டார் என சொல்லலாம். congrats விக்ரம்!

  அடுத்து கைகளில் எஞ்சி இருக்கும் புத்தகம் "எஞ்சி நிற்பவனின் கதை". புத்தகத்தில் "ஓவியர், கதாசிரியர்" பெயர்கள் பின்னடயிலும் புத்தகத்தின் உள்ளேயும் மாறி மாறி வந்துள்ளன. அடுத்து வரவிருக்கும் புத்தகத்தில் சரியான பெயர்களை "திருத்தம்" போட்டு குறிப்பிடவும்.( இணையத்தின் வெளியே உள்ள வாசகர்களுக்கு) .  ReplyDelete
 44. Replies
  1. புத்தகங்களை இழந்தது நீங்களா, அவரா? ;)

   Delete
  2. டியர் விஜய்!!!

   அது பரஸ்பர இழப்பு ;-)

   Delete
  3. பழக இனிய நண்பர் ஸ்டீல் ... இன்றுதான் முதன் முதலாக சந்தித்தேன் ... போன் செய்தவுடன் பேங்க் வேலையை (!) கூட விட்டு விட்டு வண்டியை எடுத்து கொண்டு பறந்து வந்தார் ...

   முகத்தில் சிரிப்பையும் மனதில் அன்பையும் மட்டுமே வைத்து பேசிய ஒரு மீசை முளைத்த குழந்தை அவர் ..

   இருவரும் எதையும் இழக்கவில்லை ... நட்பு மட்டும் இன்னும் பலப்பட்டது :)

   Delete
  4. ஆம் நண்பரே பேங்க் வேலையே விட்டு விட்டதால் இப்போது வேறு வேலை தேடி கொண்டிருக்கிறேன் !

   Delete
 45. # 1000 என்ற எண்ணை சந்தா தொட்டு விட்டால் அதே விலையில் 1000 பக்கம் #

  வாவ் ..சூப்பர் சார் ....நீங்கள் உங்கள் வாசகர் இடம் வைத்திருக்கும் " இடம் "...... உணராத சில நண்பர்களும் இப்பொழுது அனைவரும் உணர்ந்திருப்பார்கள் ....

  உண்மையில் நான் எப்படியும் ஈரோடு புத்தக காட்சிக்கு சென்று ஆசிரியர் கையால் புத்தகம் வாங்கிவிட்டு மீதி சந்தாவை அங்கயே செலுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன் .இப்படி ஒரு " இன்ப " அணுகுண்டை போட்டு யோசிக்க வைத்து விட்டேர்களே...........கண்டிப்பாக சந்தா தபால் மூலமே அனுப்பி விடுகிறேன் சார் ..

  அப்புறம் முத்து 40 வது ஸ்பெஷல் போல இதன் அட்டைப்படத்தையும் கலக்க வையுங்கள் .

  ReplyDelete
 46. அப்புறம் போன வருடம் ஈரோடு புத்தக காட்சியில் கலந்து கொண்ட போது வந்த அனைவரும் பெரிய ..,பெரிய மனிதர்கள் ஆக இருந்ததால் அதிகம் யாரிடமும் கலக்கமால் தனித்து நின்று கவனித்து கொண்டு இருந்தேன் .ஏற்கனவே நான் " கூச்ச " சுபாவம் .எனவே இம்முறை எனக்கு துணையாக என்னை போல " சின்ன வயசு " பசங்களும் கலந்து கொண்டு எனக்கு துணை நிற்க வேண்டுகிறேன் .எனவே இங்கே கலக்கும் ..,பார்வை மட்டும் இடும் சின்ன வயசு பசங்க அனைவரும் வருகை தந்து எனது பயத்தை போக்க வேண்டுகிறேன் .

  ReplyDelete
 47. ஈரோடு புத்தகத் திருவிழாவில் எடிட்டரிடம் போராடி 'மின்னும் மரணம் மறுபதிப்பை' பெற்றுத் தந்தவர்களில் முக்கியமானவராகிய 'நடமாடும் டவர்' நண்பர் சிவ சரவண குமார் அவர்கள் இத்தளத்தில் பல மாதங்களாக ஒரு பின்னூட்டம்கூட இடாமலிருப்பது கவலையளிக்கிறது. அவருடைய மொபைல் நம்பரும் சிக்கவில்லை. நண்பர்கள் யாருக்காவது அவரைப்பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாமே, ப்ளீஸ்? ( அவரைப் பற்றிய தகவலை அவரே தெரிவித்தாலும் சந்தோசமே!)

  ReplyDelete
 48. சார் பரபரப்பாய் செல்லும் செல்டனை சர சரவென படித்து முடித்தேன் ! என்ன போடு போடுகிறார் மனிதர் ! அதுவும் அவரது ராணுவ பணி புரிந்த நாட்களை காட்டும் பர பரப்பான வண்ண கட்டங்களாகட்டும் , 96ம் பக்கம் முதல் கடைசி வரை காட்டும் கட்டங்கலாகட்டும் வண்ணங்கள் அருமை ! ஷெல்டன் தனக்கு தானே பேசி கொள்ளும் வசனங்கள் நறுக் ! புத்தகம் முழுதும் பார்த்து ரசிக்க என வரைந்திருக்கும் ஓவியங்களும் , கட்டங்களை நிறைத்திருக்கும் வசனங்களும் அருமையாக நேரத்தை அனுபவித்து திருடி செல்கின்றன ! நேரம் செல்வதே தெரியவில்லை ! ரசனையில் உயிர்த்திருத்தல் என்று இதனை கூறலாம் ! மோட்டார் சைக்கிள் என்பதற்கு பதிலாய் சைக்கிளும் , வண்டி ஓட்டும் ஷெல்டன் ஹாநெஸ்டியை ஸ்டார்ட் செய்யுமாறு கூறிய இரண்டு நெருடலும் இருந்தாலும் கதை பக்கா !

  தூள் கிளப்பி விட்டீர்கள் ஷெல்டன் , ஹாம்மேவுடன் இணைந்து ! அதுவும் கடைசியில் எங்கே ஷெல்டன் தனது நண்பரை கை விட்டு விட்டாரோ என நான் தவிக்கையில் , அதே தப்பு கணக்கை போட்டதை ஹாநேஸ்டியும் கூறும் போது கதை மாந்தரும் நம்மை போலவே சிந்திப்பதும் கூட ஹாம்மேவின் தொடர் வெற்றிக்கு மேலும் துணை செய்கிறது ! துப்பாக்கியின் விசையை இழுத்தது வேண்டுமானால் டனாடாவாக இருக்கலாம் , விசையை இழுக்க தூண்டியது ஷெல்டன் என வைரியை பலி வாங்கியது ஷேல்டனே என கூறும் இடம் நச் !
  மாடஸ்டியை மிஞ்சிடுவார் ஹாநேஸ்டி !

  ReplyDelete
  Replies
  1. கதையில் முக்கிய இடம் பிடிக்கும் கத்தியும் , அட்டையில் ஹீரோவாய் இடம் பிடிக்க காரணம் இருக்கிறதே ! பலிக்கு பலி , தொடர்ந்து நண்பர்களுக்காக வாழும் ஷெல்டன் இதிலும் !

   Delete
  2. ஸ்டீல்... ஹாமே?!!

   Delete
 49. ஈ.விஜய், ஈரோடு புத்தக திருவிழா ஆகஸ்ட் மாதம் எந்த தேதி ஆரம்பம் என தெரியுமா? ஆகஸ்ட் 24-25 தவிர வேறு நாட்கள் எனில் ஈரோடு புத்தக திருவிழாவில் நண்பர்கள் அனைவரயும் மற்றும் ஆசிரியரை சந்திக்க ஆர்வமாக உள்ளேன்!

  ReplyDelete
  Replies
  1. @ Parani from Bangalore

   இன்னும் உறுதியான தேதிகள் பற்றிய தகவல்கள் ஏதும் தெரியவில்லை எனினும் ஆகஸ்ட் 2 முதல் 13 வரை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   வாருங்கள் நண்பரே, புத்தகத் திருவிழாவை 'காமிக்ஸ் திருவிழா' ஆக்கிடுவோம்! சென்ற வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் கொண்டாட்டங்களும், குதூகலங்களும் பன்மடங்காக இருக்கும். அதற்கான காரணமும் நாம் அறியாததல்லவே! ;)

   Delete
  2. Steel, our lion LMS will be released in Erode Book Festival!

   Delete
 50. @vijay
  உங்க profile படம் மாதிரியேதான் வீட்ல ஒருத்தர் நிக்கிறாரு

  ReplyDelete
  Replies
  1. ஆனால் வித்தியாசம் உள்ளது சகோ!
   நான் போராட்டத்துல கலந்துகிட்டு அப்படி நிக்கறேன். உங்க வூட்டுக்காரர் போதையாட்டத்துல கலந்துகிட்டு அப்படி நிக்கிறார். :)

   Delete
  2. அது மட்டுமா lifco Dictionary ய கையில வச்சுகிட்டு இந்த சைஸ் இந்த சைஸுன்னு அலம்பல் வேற

   Delete
 51. //! சூப்பர் சிக்சின் சந்தாக்கள் 1000 எனும் மேஜிக் எண்ணைத் தொடும் ஒரு அதிசய தருணம் புலரும் பட்சத்தில் - குட்டிக் கரணம் அடித்தாவது விலை மாற்றம் ஏதுமின்றி - LMS -ல் 1000 பக்கங்களை உருவாக்கிடுகிறேன் ; that's a promise !//

  எங்களை திருப்தி படுத்த முயற்சிக்கும் உங்களின் அன்பிற்கு நன்றிகள் பல...Hats off sir

  ReplyDelete
 52. எடிட்டர் சார், ஒரு மைல்கல் இதழான LMS இல் நமது கருப்புகிழவி, பரட்டைத்தலை ராஜா மற்றும் விச்சு கிச்சு போன்றவர்களையும் முடிந்தவரை இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!
  1000 பக்கங்களுடன் அமர்க்களப்படுத்த LMS க்கு நாம் அனைவரும் விரைந்து செயல்பட வேண்டிய தருணம் இது நண்பர்களே!

  ReplyDelete
 53. "திகில் நகரில் டெக்ஸ்" கதையினை எப்போது வெளியிடுவீர்கள் எடிட்டர் சார்?
  "மார்ஷல் டைகர்" கதை தொடராக இல்லாத பட்சத்தில் அதை LMS இல் இணைக்கலாம், ஆனால் அப்படியிருக்கும் பட்சத்தில் வேறு கதையினை போடலாமே சார்! டைகர் கதையை ஒரே இதழாக தனியே வெளியிட்டால் நன்றாக இருக்குமே!

  ReplyDelete
 54. LMS -இன் அட்டைப்படம் வாசக நண்பர்களின் பங்களிப்பில் அற்புதமாக உருவாக ஒரு போட்டி வைக்கலாமே சார்?

  ReplyDelete
 55. இத்தனை நாட்கள் பொறுமை காத்த நான் இனி இயலாமல் இதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். ஏன் மாயாவி, .லாரன்ஸ், டேவிட் மூவரையும் கண்டுகொள்வதில்லை? Reprint please.

  ReplyDelete
 56. //Muthu Priyan//

  'என்னாது? காந்தி செத்துட்டாரா?' என்று உங்களை கலாய்க்கப்போகிறார்கள் நண்பர்கள். ஆசிரியரின் முன்னைய பதிவுகளில் உங்கள் வினாக்களுக்கான விடைகள் தாராளமாய் உள்ளன.

  ReplyDelete
 57. " இது காமிக்ஸ் மனது "

  " baraniwithcomics.blogspot.com."

  ReplyDelete
 58. டியர் நண்பர்களே,

  KIND ATTENTION :

  Mugunthan kumar4 87.1KB
  John Simon 35.6KB
  AHMEDBASHA TK 73.2KB
  Ravi Kumar 66KB
  Siva Subramanian 40.6KB
  Rummi XIII 64.3KB
  ஆதி தாமிரா 25.7KB
  மிஸ்டர் மரமண்டை 52.4KB
  Karthik Somalinga 139KB (ANI-GIF)
  Paranitharan 80KB

  ஞாயற்று கிழமை வேலைவெட்டியில்லாமல் நமது ப்ளாக் பக்கத்தை ஓபன் செய்து, சவரம் செய்யாத முகத்தை தேய்த்துகொண்டே பார்த்துக்கொண்டிருந்தால் தோன்றும் அற்புத சிந்தனை என்ன ??

  இது தான் நண்பர்களே, நான் சொல்ல வர்றது என்னன்னா உங்க PROFILE படங்கள் 512X512 எனும் RESOLUTION ல இருக்கு.இங்கே
  45X45 எனும் RESOLUTION போதுமானது. இப்படி தேவைக்கு அதிகமா RESOLUTION இருக்கறதால சில வேலை CONNECTION SLOW வாக இருக்கும் போது PAGE LOAD ஆவதற்கு சில நேரம் பிடிக்குது.

  இந்த HI RESOLUTION படங்கள் வேறு ஏதாவது கூகிள் சர்வீஸ்சுக்கு தேவை படுதா ?? அப்படி இல்லைன்னா உங்க படங்களை 45X45 எனும் RESOLUTION னுக்கு மாத்திடுங்க. SLOW CONNECTION இருக்கற நம்ம நண்பர்கள் உங்க உதவிய மறக்கவே மாட்டங்க !

  ReplyDelete
  Replies
  1. good suggestion!

   போலவே,
   மொபைலில் அடிக்கடி browse செய்து பார்க்கும் பழக்கமுடைய நண்பர்களுக்கு :
   web page ஓபன் ஆகும் நேரத்தை கணிசமாகக் குறைக்க, உங்கள் browser settingsல் 'load no image' என்ற optionஐ தேர்வு செய்யலாம். (இப்படிச் செய்தால் எந்த imageம் உங்கள் browserல் தெரியாது) இதன்மூலம் தளத்தை சற்று குறைந்த நேரத்திலேயே load செய்துவிட முடியும் என்பதோடு, data savings அடிப்படையில் உங்கள் பணமும் கொஞ்சம் மிச்சமாகும்!

   Delete
  2. @விஸ்கி-சுஸ்கி:
   //Karthik Somalinga 139KB (ANI-GIF)//
   இப்படி பேரு, இமேஜ் சைஸ் எல்லாம் போட்டு மானத்தை வாங்கறீங்களே நண்பா! :D

   ஈரோடு விஜயோட ஃப்ரொபைல் பிக்சர் சைஸ் 20 KB, இந்தப் பதிவில் அவர் நேற்றுவரை போட்ட கமெண்டுகள் மட்டும் 20! ஆக, 20 * 20KB = 400KB - அதாவது கிட்டத்தட்ட அரை MB-யை விஜய் மட்டுமே ஆக்கிரமிக்கிறார்! ;) இந்த அழகில good suggestion-ன்னு இன்னொரு கமெண்டு போட்டு, மேலும் 20KB-யை வேஸ்ட் பண்ணுகிறார்! ;) இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லியா?! ;)

   அந்தக் கடுப்பில் பின்மண்டையை வறக் வறக் என்று சொரிந்து கொண்ட போது, சரக் சரக் என்று தோன்றிய யோசனைகள் இதோ...

   பேஜ் வேகமாக லோட் ஆக பத்து வழிமுறைகள்:
   1. ஆசிரியர் அட்டைப் படங்களை / சாம்பிள் பக்கங்களைப் போடும் போது Thumbnail images மட்டும் போடலாம்! ;)
   2. "இந்த மாத வெளியீடுகளின் கட்டை விரல் சைஸ் அட்டைப் படங்கள் இதோ! மேலும் விவரங்களுக்கு புத்தகத்தை வாங்கி 'சிங்கத்தின் சிறு வலையில்' படிப்பீர்ர்ர்!!" - அப்படின்னு, பதிவை சுருக்கமாக முடிச்சுக்கலாம்! :D
   3. ஒண்ணுக்கும் அதிகமா கமெண்டு போட தனி கட்டணம் - எக்ஸ்ட்ரா கமெண்டு ஒவ்வொண்ணுக்கும் பத்து ரூபா! :D அப்புறம் பாருங்க, பேஜை க்ளிக் பண்றதுக்கு முன்னாடியே லோட் ஆகிரும்! ;) குறிப்பிட்ட இரண்டு அல்லது மூன்று வாசகர்களிடம் இருந்து மட்டும், பதிவுக்கு இரண்டாயிரம் ரூபா கலெக்ஷன் பார்க்கலாம்! :D
   4. பதிவுக்கு ஒரே ஒரு கமெண்டு போடுகிறேன் பேர்வழின்னு, கமெண்டின் உச்சபட்ச அளவான 4096 character-கள் கொண்ட நீ.....ளமான கமெண்டுகளைப் போடறவங்களுக்கு (அதாவது என்னை மாதிரி) தனி கட்டணம்! ;)
   5.
   6.
   7.
   8.
   9.
   10. பாயின்ட் நம்பர் 5-ல இருந்து 9 வரை உள்ளதைப் போல, சொல்ல வேண்டியதை எல்லாம் ப்ளாகில வந்து சொல்லிட்டு இருக்காம, மனசுக்குள்ளேயே சொல்லிக்கிட்டா டேட்டா செலவை கணிசமாக மிச்சம் பிடிக்கலாம்! :D

   சரி விஷயத்துக்கு வருவோம்!
   ஒவ்வொரு பேஜும் லோட் ஆகும் போது, ஃப்ரொபைல் பிக்சரின் thumbnail (36x36) மட்டுமே லோட் ஆகும்னு நினைக்கிறேன்! ஒருவேளை என்னோட யூகம் தவறுன்னா செக் பண்ணி சொல்லுங்க, ஃப்ரொபைல் பிக்சர் சைஸை குறைச்சுடலாம்! :D

   @Erode VIJAY:
   //இதன்மூலம் தளத்தை சற்று குறைந்த நேரத்திலேயே load செய்துவிட முடியும் என்பதோடு, data savings அடிப்படையில் உங்கள் பணமும் கொஞ்சம் மிச்சமாகும்!//
   பாயின்ட் நம்பர் 3-ஐ உங்களுக்கு டெடிகேட் பண்ணுகிறேன்... ஹி ஹி ஹி ;)

   Delete
  3. // ஈரோடு விஜயோட ஃப்ரொபைல் பிக்சர் சைஸ் 20 KB, இந்தப் பதிவில் அவர் நேற்றுவரை போட்ட கமெண்டுகள் மட்டும் 20! ஆக, 20 * 20KB = 400KB //

   பொதுவாக Images repeat ஆவதால் பிச்சனையில்லை. முதல்முறை Load ஆனபின் எத்தனை முறை Display ஆனாலும் Data cunsume ஆகாது. அதேநேரம் Profile images ஒரு 50Kb'க்கு மேல் இல்லாமலிருந்தால் நல்ல result கிடைக்கும்.

   ஒரு Thumbanil 487Kb என்பது நிச்சயமாகத் தவிற்கப்படவேண்டிய விஷயம்! :D

   Delete
  4. ஹா ஹா ஹா!

   கமெண்ட்டு போடறதுக்காக எனக்கு மாதம் 6000 ரூபாய் செலவுன்றது ரொம்ப ஓவர், கார்த்திக்!
   செலவை சமாளிக்க நான் part-time job ஏதாவது பார்க்க வேண்டியதிருக்கும் போலிருக்கே? ;)

   Delete
  5. //பொதுவாக Images repeat ஆவதால் பிச்சனையில்லை//
   உண்மை தான்!

   //ஒரு Thumbanil 487Kb என்பது நிச்சயமாகத் தவிற்கப்படவேண்டிய விஷயம்! :D//
   அப்படி யாருடையதும் இல்லை! நண்பர் முகுந்தன் குமாரின் இமேஜ் சைஸ் 87 மட்டுமே - அதற்கு முன்னே உள்ள 4 காப்பி பேஸ்ட் எர்ரர்! ;) இருப்பதிலேயே கொஞ்சம் அதிகம் என்னுடையது என நினைக்கிறேன் (139kb) - இரண்டு படங்களைக் கொண்ட GIF என்பதால் அதிகமாகி விட்டது! :D

   Delete
  6. // இப்படி பேரு, இமேஜ் சைஸ் எல்லாம் போட்டு மானத்தை வாங்கறீங்களே நண்பா! :D //

   முகுந்தன் குமார்தான் First Rank என்று நினைத்தேன். சற்று கவனித்துப்பார்த்தால் அவருடையது 87Kb தான், 487 அல்ல. மாறாக 139Kb'யுடன் முதல் பரிசைப் பெறுபவர் கார்த்திக்! :D

   Delete
  7. @Erode Vijay:
   //செலவை சமாளிக்க நான் part-time job ஏதாவது பார்க்க வேண்டியதிருக்கும் போலிருக்கே? ;)//
   நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா... பண்ணலாம் தப்பில்ல... :D

   @Ramesh Kumar:
   //மாறாக 139Kb'யுடன் முதல் பரிசைப் பெறுபவர் கார்த்திக்! :D//
   மிக்க நன்றி... மூன்றாம் பாயின்ட் மேட்டரில் மூன்றாம் பரிசு பெற்ற ரமேஷ் அவர்களே...! ;) :D

   Delete
  8. //ஒவ்வொரு பேஜும் லோட் ஆகும் போது, ஃப்ரொபைல் பிக்சரின் thumbnail (36x36) மட்டுமே லோட் ஆகும்னு நினைக்கிறேன்! ஒருவேளை என்னோட யூகம் தவறுன்னா செக் பண்ணி சொல்லுங்க/

   பொதுவாக நமது PROFILE படம் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளுக்கு உட்பட்டிருந்தால் BROWSER அதன் THUMB NAIL படத்தை மட்டுமே லோட் செய்கிறது. இங்கே அந்த நிர்ணயிக்கப்பட்ட அளவுகளை நமது படம் தாண்டினால், நமது பின்னூட்டங்களை BROWSER லோட் செய்யும்போது முழு படத்தை அதன் ORIGINAL RESOLUTION னில் DOWNLOAD செய்து பிறகு அதை DISPLAY வுக்காக AUTOMATIC க்காக RESIZE செய்துகொள்கிறது.

   மேலும் தெரிந்தவர்கள் தங்களது கருத்துக்களை பகிரலாம்.   //பொதுவாக Images repeat ஆவதால் பிச்சனையில்லை. முதல்முறை Load ஆனபின் எத்தனை முறை Display ஆனாலும் Data cunsume ஆகாது. //

   உண்மை தான். ஆனா நம்ம மக்கள் அதிகம REFRESH பட்டனை அமுக்கும் ஜாதி. ஒவ்வொரு முறையும் REFRESH அமுக்கும் போதும் புதியதாக IMAGES டவுன்லோட் ஆகும். ஒரு சில வேலைகளில் ஒரு சில BROWSER கள்,ஒரு சில செட்டிங் களுக்கு உட்பட்டு மட்டும் TEMP பில் இருந்து கடன் வாங்கும்.

   //ஒரு Thumbanil 487Kb என்பது நிச்சயமாகத் தவிற்கப்படவேண்டிய விஷயம்! :D//
   //அப்படி யாருடையதும் இல்லை! நண்பர் முகுந்தன் குமாரின் இமேஜ் சைஸ் 87 மட்டுமே - அதற்கு முன்னே உள்ள 4 காப்பி பேஸ்ட் எர்ரர்! ;) //
   அதேஅதே !


   //அதேநேரம் Profile images ஒரு 50Kb'க்கு மேல் இல்லாமலிருந்தால் நல்ல result கிடைக்கும். //

   50 KB கொஞ்சம் ஓவரா தெரியலையா உங்களுக்கு ?? பொதுவா THUMB NAIL படங்கள் 1-3 KB க்குள் வாசம் செய்பவை.அதுவே IDEAL. நமது PROFILE படங்கள் நிர்ணயிக்கப்பட்ட (அது என்ன என்று யாரவது ஆராய்ந்து பதியலாம்) அளவுக்குள் இருந்தால் அதன் THUMB NAIL 1 -3 KB மட்டுமே DOWNLOAD ஆகிறது.


   ////பொதுவாக Images repeat ஆவதால் பிச்சனையில்லை////

   டவுன்லோடை பொறுத்தவரை ஒரு முறை மட்டுமே. பழைய P2 MACHINEகளை இன்னமும் உபயோகிக்கும் நண்பர்களது ப்ரௌசெர் ஒவ்வொரு முறையும் படத்தை அதன் முழு பரிணாமத்தில்,20 பின்னூட்டங்களுக்கு இருபது முறை PROCESS செய்து இருபது RESIZE செய்வதற்குள் மூச்சு வாங்கி விடும்.

   Delete
 59. லயன் மேக்னம் ஸ்பெஷல் 1000 பக்கங்கள் வேண்டும் , பதிலாக சூப்பர் 6 ஐ சூப்பர் 5 ஆக மாற்றலாம் , அல்லது விலையை கொஞ்சம் அதிகரிக்கலாம் என்று ஆசைபடும் நண்பர்கள் " ப்ளைன் ராக் " சிறைக்கூடத்தில் மூன்று மாதங்கள் கழிக்க பரிந்துரைக்கிறேன் .

  ReplyDelete
  Replies
  1. டியர் சுந்தர மூர்த்தி !!!

   1000-பக்கத்திற்காக மூன்று மாத சிறை தண்டனை அனுபவிக்கக்கூட நம்மவர்கள் தயாராக இருப்பார்கள்.ஆனால் தயவு செய்து "ப்ளைன் ராக்" வேண்டாம்.அங்கே சிக்கன் பிரியாணி கிடைக்காது.புழல் ஓகே;-)

   Delete