Powered By Blogger

Friday, April 11, 2014

The Three 'B's...!

நண்பர்களே, 

வணக்கம். MAGNUM ஸ்பெஷல் எனும் புது வரவின் மீதான திரையினை விலக்கியாகி விட்டது ; நிறையப் பாராட்டுக்கள் ; உற்சாகக் குரல்கள் ; அபிப்ராயங்கள் ; 'இப்படி இருந்திருக்கலாமோ ...அப்படி இருந்திருக்கலாமோ  ? என்ற ரீதியிலான எண்ணச் சிதறல்கள் ; ஆர்வமான எதிர்பார்ப்புகள் என்று ஏகமாய் ரவுண்ட் கட்டியும் அடித்தாகி விட்டது ! இப்போது அன்றாடப் பணிகளைக் கவனிக்கும் வேளை புலர்ந்து விட்டதால் - அதன் பக்கமாய்க் கவனத்தைத் திருப்புவது அவசியம் அல்லவா ? இதோ இம்மாதம் வரக் காத்திருக்கும் 3 இதழ்களுள் - முதல் வெளியீட்டின் அட்டைப்படம் + teaser ! 1987-ல் நமது திகிலில் ஒரிஜினலாய் வெளிவந்த இந்த ப்ருனோ சாகசத்தை உங்களில் எத்தனை பேர் இன்னமும் நினைவில் வைத்துள்ளீர்களோ - தெரியாது ; ஆனால் என் தலைக்குள் இருந்த நினைவுகள் ரொம்பவே மங்கிப் போயிருந்தன - அன்றைய நாட்களில் நாம் பயன்படுத்திய பழுப்பு நியூஸ்ப்ரிண்டைப் போலவே ! So இதனை மீண்டுமொருமுறை படிக்கும் வாய்ப்பு கிடைத்த போது கதை மாத்திரமன்றி - அந்நாட்களது மலரும் நினைவுகளையும் ஒரு சேர சுவாசித்த உணர்வு ! அன்றைய நாட்களில் நமது பெல்ஜியக் கதைவரிசைகளின் ஜாம்பவான்களாய் நாம் பாவித்தது மூன்று 'B' களை!! தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த திகில் காமிக்ஸ் நிலைகொள்ளச் செய்ய சாத்தியமானதற்கும் , மாமூலான பிரிட்டிஷ் கதைகளைத் தாண்டிய ரசனைக்கு நம்மை இட்டுச் சென்றதற்கும் பிரதான காரணங்களாய் இந்த மூவர் கூட்டணியைச் சொல்லலாம் ! யார் அந்த "B " ஆசாமிகள் என்று இந்நேரம் நீங்களே புரிந்திருப்பீர்கள் - anyways  இதோ அவர்களது பெயர்கள் :

BERNARD PRINCE (நமக்கு கேப்டன் பிரின்ஸ்)
BOB MORANE (நமக்கு சாகச வீரர் ரோஜர்)
BRUNO BRAZIL  

ஒவ்வொரு கதையும் ஒரு மாறுபட்ட பாணியிலானது என்பதோடு - கிரெக் ; வான்ஸ் ; ஹெர்மன் என்று காமிக்ஸ் உலகின் அசுரர்களின் கைவண்ணங்கள் அதில் முழுக்க முழுக்க இருந்ததால் அவை ஆழமாய்  ஒரு முத்திரை பதித்ததில் வியப்பில்லை! இதோ அந்நாட்களில் நாம் பயன்படுத்திய "முகமற்ற கண்களின்" அட்டைப்படமும், இப்போதைய ஆக்கமும் ! அப்போதைய திகில் பாக்கெட் சைஸ் அவதாரத்தில் இருந்ததால் கதையின் உட்பக்கங்களை படுக்கை வசமாய் அமைத்திருந்ததாய் ஞாபகம் ! இந்தக் கதைக்கான அட்டைப்படத்தினையும் நமது ஓவியர் மாலையப்பனைக் கொண்டு அதே பாணியில் horizontal-ஆக வரையச் செய்திருந்தேன் ! இரண்டே ரூபாய் விலையில் வந்த இதழிது என்பதைப் பார்க்கும் போது - இன்று  மலைப்பாய் உள்ளது !! 


இன்றைய நமது அட்டைப்படமோ - ஒரிஜினலின் அட்சர சுத்தமான வார்ப்பே ! டிசைனில் துளி மாற்றமும் செய்திடாது வான்சின் ஒரிஜினலையே பயன்படுத்தியுள்ளோம் முன்னட்டைக்கு ! பின்பக்க டிசைனுமே படைப்பாளிகளின் ஆக்கமே - சமீபமாய் வெளியாகியுள்ள ப்ருனோ கதைகளின் தொகுப்பிலிருந்து நாம் கேட்டு வாங்கியது ! So இம்முறை நமது டிசைன் பிரிவிற்கு சின்னதொரு ஒய்வு ! அட்டைப்படத்தைத் தொடர்வது இதழின் உட்பக்கத்திலிருந்து ஒரு வண்ண ட்ரைலர் ! ஏதோ ஒரு யுகத்தில் மங்கலான black & white-ல் ரசித்த அதே கதையை இப்போது அழகாய் - பெரிய சைசில் ரசிக்கவிருப்பது நிச்சயம் ஒரு அழகிய அனுபவமாய் இருக்கப் போவது உறுதி ! கதையைப் பொறுத்த வரை அதன் புராதனம் ஆங்காங்கே அப்பட்டமாவது தவிர்க்க இயலா சங்கதி என்பதை நாம் அறிவோம் தானே ?!   



Moving on...வரும் ஏப்ரல் 18 முதல் 27 வரை சென்னையில் நடைபெறவிருக்கும் "சென்னைப் புத்தகக் சங்கமத்தில்" நாமும் பங்கேற்கிறோம் ! அங்கு நமது ஸ்டாலின் எண் : 118.  ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் இந்தப் புத்தக விழா சனி & ஞாயிறுகளில் காலை 11 மணி முதலும் ; வார நாட்களில் மதியம் 2 மணி முதலுமாய் செயல்படும் ! உங்களின் வருகைகளை ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருப்போம் நமது ஸ்டாலில் ! புத்தக விழாவின் இரண்டாம் நாளின் மாலைப் பொழுதில் (ஏப்ரல் 19) அடியேன் அங்கு ஆஜராகி இருப்பேன் - உங்களை சந்திக்கும் பொருட்டு ! Please do drop in folks - with your young ones as well !


சமீபமாய் எதையோ வலையில் உருட்டிக் கொண்டிருந்த போது என் கண்ணில் பட்ட சமாச்சாரம் இது ! நமது வலைமன்னர் என்றோ ஒரு சமயத்தில் பிரெஞ்சு மொழியிலும் கோலோச்சியுள்ளார் என்பதைப் பறைசாற்றும் அட்டைப்படம் இது ! SPIDERMAN என்ற பெயரோடு அங்கேயும் அதகளம் செய்திருக்கார் நம் ஆசாமி ! பாருங்களேன்...!! இது சும்மா என் கண்ணில் பட்டதொரு விஷயம் மட்டுமே தவிர - 'பட்சிகளின் ' ஹேஷ்ய ஜோஸ்யங்களுக்குப்'  பணி கொடுக்கும் விஷயமாகாது என்பதையும் சொல்லிக் கொள்ள முந்திடுகிறேன்!! 


ஆன்லைன் விற்பனையில் இன்னுமொரு புதுக் கதவு நம் பொருட்டுத் திறந்துள்ளது என்பதை அறிவிப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் ! AMAZON வலைத்தளத்தினில் நமது அனைத்து இதழ்களையும் வாங்க சாத்தியமாகும்  நாள் நெருங்கி விட்டது ! எல்லா இதழ்களையும் தருவித்து விட்டார்கள் ; என்பதால் விற்பனையை வெகு விரைவில் துவக்கிடுவார்கள் ! துவக்க ஆர்டர்கள் ஒரு மகத்தான எண்ணம் அல்ல எனினும், சிறிது சிறிதாய் நமது சிறகுகளை விரிக்கக் கிட்டும் வாய்ப்பை தவறவிடக் கூடாது என்பதில் கவனமாய் உள்ளோம் ! உலகின் ஒரு ஆன்லைன் விற்பனை ஜாம்பவானின் தோள்களில் நாம் ஏறிக் கொள்ள முடிந்திருப்பது முழுக்க முழுக்க உதவி ஆசிரியர் பிரகாஷின் தளரா முயற்சிகளாலே !! இதே போலவே FLIPKART தளத்தோடும் கைகோர்க்க முயன்று வருகிறோம் ; நம்பிக்கையோடும் காத்துள்ளோம் ! 

இந்தப் பதிவினை நிறைவு செய்யும் முன்பாக சின்னதாய் இரு நினைவூட்டல்கள் : முதலாவது - "லயனும், நானும் !" என்ற தலைப்பில் நமது 30 ஆண்டு கால காமிக்ஸ் பயணம் உங்களுக்குத் தந்துள்ள அனுபவங்களைப் பற்றி எழுதிடும் விஷயம் தொடர்பாக ! LMS இதழில் இதற்கென பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் - உங்கள் எழுத்துக்களை ஆர்வமாய் எதிர்பார்த்துக் காத்திருக்கத் துவங்கி விட்டோம் ! இரண்டாவது விஷயம் - நமது சூப்பர் 6 சந்தாவின் நினைவூட்டலே ! முதல் சுற்றிலேயே சந்தாக்களை அனுப்பிய நண்பர்கள் அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள் ; அனுப்பக் காத்திருக்கும் நண்பர்களுக்கும் நமது thanks in anticipation !விறுவிறுப்பாய் கிட்டி வரும் சந்தாக்கள் அதே துரித கதியில் தொடர்ந்தால் எங்கள் சுவாசங்கள் சற்றே இலகுவாகும் folks ! So please do chip in !! மீண்டும் சந்திப்போம் - bye till then !

134 comments:

  1. Replies
    1. super sir! we expecting your visit to chennai sir!!!

      Delete
    2. ஸ்பைடர் சென்னை வருவார் நண்பரே யாரும் கைது செய்து விடாமல் பார்த்து கொள்வது உங்கள் கடமை ; காவல் துறை நண்பரே !

      Delete
    3. வக்கீல் நண்பர்கள் பலர் உள்ளதால் அவர்கள் உதவியுடன் இனி ஸ்பைடரை நிரந்தரமாக உள்ளே வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

      Delete
    4. இந்த ஒரே ஒரு ஸ்பைடரின் வண்ண சித்திர விருந்தையாவது கடைசியாக வெளியிட்டு நம் ஆதர்ஷ நாயகனின் பிரிவு உபசார விழாவை சிறப்பாக நடத்திவிடலாம்.

      Delete
    5. AHMEDBASHA TK : நம் இதயங்களில் அவர் என்றேண்டும் குடி இருந்து விட்டுப் போகட்டுமே சார் - வழியனுப்பு விழா எதற்கு ?

      Delete
    6. \\நம் இதயங்களில் அவர் என்றேண்டும் குடி இருந்து விட்டுப் போகட்டுமே சார் - வழியனுப்பு விழா எதற்கு ?\\
      +1

      Delete
  2. // AMAZON வலைத்தளத்தினில் நமது அனைத்து இதழ்களையும் வாங்க சாத்தியமாகும் நாள் நெருங்கி விட்டது ! எல்லா இதழ்களையும் தருவித்து விட்டார்கள் ; என்பதால் விற்பனையை வெகு விரைவில் துவக்கிடுவார்கள் ! //

    Good news!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சார்! புதிய முயற்சிகள், புதிய விற்பனை தளங்கள், புதிய வரவுகள் என 2014 நமக்கு என்றும் மறக்கமுடியாத ஆண்டாக அமையவிருக்கிறது என்பது திண்ணம்!

    ReplyDelete
  4. விஜயன் சார், "முகமற்ற கண்" இதற்கு முன்னால் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை, வரும் நாட்களில் ஆர்வமுடன் எதிர் பார்க்கிறேன்! அதே போல் தோர்கல் கதையும் எனது துணைவியார் எதிர்பார்க்கிறார். மொத்ததில் நமது காமிக்ஸ்ன் அடுத்த வெளி ஈடுகளை எங்கள் குடும்பமே ஆவலுடன் வாசிக்க காத்து கொண்டு உள்ளது!

    ReplyDelete
    Replies
    1. சொல்ல மறந்த விஷயம், அட்டை படம் அருமை!

      Delete
    2. Parani from Bangalore : தோர்கல் தொடரும் வாரத்தில் தயாராகி விடுவார் ; காத்திருப்பு அதிக நாட்களுக்கில்லை என்று துணைவியாரிடம் சொல்லி வையுங்கள் !

      Delete
  5. Ippo than 3 vathu murai yaka enji nintra vanai mutithen

    ReplyDelete
  6. Replies
    1. விஜயன் சார், "LMS"-ல் மேலும் சுவை சேர்க்க சில யோசனைகள்
      1. நமது வாசகர்கள் 1-2 பக்கம்களில் சித்திர கதைகளை வரைந்து அனுப்பினால் சிறந்தவைகளை வெளி இடலாம்! நமது பழைய லைன் காமிக்ஸ்-ல் இது போன்ற வாசகர் ஸ்பாட்-லைட் வந்ததாக ஞாபகம்!
      2. வீட்டில் உள்ள குட்டீஸ் கலந்து கொள்ள எதுவாக நமது காமிக்ஸ் நாயகர்களின் ஓவியம்களை வரைந்து அனுப்ப சொல்லலாம், அவற்றில் சிறந்தவைகளை வெளி இடலாம்!
      3. நமது முதல் லயன் காமிக்ஸ் புத்தகம் வெளி இட்ட மாதம் மற்றும் தேதியில் பிறந்த நமது வாசகர்களில் புகைபடம் மற்றும் அவர்களை பற்றிய சிறிய குறிப்பு வெளி இடலாம்!

      Delete
    2. Parani from Bangalore : அனைத்துக்குமே எங்கள் தரப்பில் ஒ.கே. !! இனி பந்து உங்கள் பக்கம் தான் !!

      Delete
  7. super sir,I WAS READ YOUR COMICS RECENTLY.ALL IS BEST.BUT I MISS NBS.I LOVE LION MAGNUM.

    ReplyDelete
  8. விஜயன் சார், "முகமற்ற கண்கள்" கதைக்கு உபயோகபடுத்தி உள்ளது புதிய மொழி பெயர்ப்பா அல்லது பழையதா? பழையதாக இருந்தால் அவைகளில் எழுத்து பிழைகள் இருந்தால் அவைகளை சரி செய்து உபயோகிக்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : இன்னுமொரு 10 நாட்களில் உங்கள் வினாக்களுக்கு விடை கிட்டி விடுமே !

      Delete
    2. நன்றி சார்! இன்னும் 10 நாட்கள் அப்படினா ஏப்ரல் 23 தேதியே புத்தகம் எங்களுக்கு கிடைத்துவிடுமா? உங்கள் குழுவின் சுறுசுறுப்பு என்னை வியப்பில் ஆழ்த்துகிறது!

      Delete
  9. அமேசான் இணைய தளத்தில் நமது இதழ்கள் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான செய்தி. பிலிப்கார்ட் இணைய தளத்தை அமேசான் கையகப்படுத்த போவதாக படித்தது.

    அதே மாதிரி சந்தாவையும் இணைய தளத்தின் மூலம் செலுத்தும் வசதியையும் ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும். சேவைக்கட்டனம் பற்றி கவலை வேண்டாம். அதை செலுத்துவதற்கு தயாராக இருக்கிறோம்.

    ReplyDelete
  10. Replies
    1. விஜயன் சார், இது போன்று ஸ்பைடர் படம்களை வெளி இட்டு விட்டு இதற்கு பின்னால் "ஹேஷ்ய ஜோஸ்யங்களும்" இல்லை என்ன சொல்வது சரிஇல்லை :-) என்னை போன்ற தூங்கி கொண்டுள்ள ஸ்பைடர் ரசிகர்களை தட்டி எழுப்புவது போல் உள்ளது.

      இந்த ஸ்பைடர் கதையின் தமிழ் பெயர் என்ன? நமது காமிக்ஸில் வெளி வந்து உள்ளதா?

      இந்த முறையும் சென்னை புத்தக திருவிழாவிற்கு வர முடியாத சூழ்நிலை, புத்தக திருவிழாவில் நமது புத்தகம்கள் அனைத்தும் விற்று மேலும் பல புதிய வாசக சந்தாதாரர்கள் கிடைக்க வாழ்த்துகள்!

      Delete
    2. விண்ணில் இருந்து மண்ணுக்கு இறங்கும் வில்லன் விண்வெளிப் பிசாசு ஸ்பைடர் மற்றும் குழுவினரை தண்ணி காட்டும் கதைதான் நண்பரே "விண்வெளிப் பிசாசு" திகிலில் தொடராக வெளிவந்து பட்டையைக் கிளப்பிய தொடரிது! ஒரு கட்டத்தில் பிசாசின் அட்டஹாசம் அதிகமாக நம்ம ஆசிரியரே பொங்கி எழுந்து தொடரைக் குறுகலாக்கி நிப்பாட்டி விட்டார் என்றால் பிசாசுகளின் அட்டகாசம் எவ்வவளவு என்று பார்த்துக் கொள்ளுங்கள் (ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ கண்ணுகளா பிசாசுன்னாலே இப்படிதான் கதை முடியும் ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ எனக்கு ஒரு குறுங்கதை நம்ம மாக்னம் ஸ்பெஷல் ல கிடைக்குமா?!?!?!?!)

      Delete
    3. நன்றி நண்பரே..தொடர்கதை எனும் போது நானும் படித்ததாக ஞாபகம்!

      விஜயன் சார், அப்ப முடிந்தால் முழு கதையையும் வெளி இட வேண்டும்.

      Delete
    4. பரணி உங்கள் வேண்டு கோள் நிச்சயம் நிறைவேற வேண்டும் !
      மிக மிக மிக மிக..................................................அற்புதமான கதை அது ! அந்த பிசாசு ஜெஸ்சி ஜேம்ஸ்..... என பல வரலாற்று கொள்ளையர்களாகவும் , டைனோசர் தலையுடனும் தோன்றும் .....ஸ்பைடருக்கு அழகிய முகம் கொண்ட கதைகளுள் இதுவும் ஒன்று ! அப்போதைய கால கட்டத்தில் திகிலை தொடர்ந்து வாங்கினேன் என்றால் அதற்க்கு முக்கிய காரணமே இந்த விண்வெளி பிசாசு தொடர்தான் !
      ஜானி நான் வேறு கதைகளை கற்பனை கொண்டேன் ! இது விண்வெளி பிசாசுதாம் என பிசாசு சிரிப்புடன் எம் ஐயத்தை தீர்த்து வைத்த தங்களுக்கு நன்றி !

      Delete
    5. ஆமாம் ஸ்பைடர் கத ஆண்டுக்கு ஒன்றாவது வேண்டும்

      Delete
    6. நன்றி நண்பர்களே!
      இந்த குற்றச்சக்கரவர்த்தி இன்னும் மகுடம் அணிந்து கொண்டு தான் இருக்கிறான் என்பதற்கு இதுவே உதாரணம்.

      Delete
    7. //ஜானி நான் வேறு கதைகளை கற்பனை கொண்டேன் ! இது விண்வெளி பிசாசுதாம் என பிசாசு சிரிப்புடன் எம் ஐயத்தை தீர்த்து வைத்த தங்களுக்கு நன்றி !//

      wrong boys!

      அது Sinister Seven னில் வரும் ஒரு திருவாளர் வில்லன் "Muto the Multi-Form". சரியா சார் ? இந்த புத்தகம் "L'homme-araignée contre les monstres" என்ற பெயரில் 1971னில் பிரெஞ்சில் வெளிவந்தது.

      Delete
    8. @ FRIENDS : வரலாறு மிக முக்கியம் அமைச்சர்களே...!!! And yes...விஸ்கி-சுஸ்கி - spot on !

      Delete
    9. அதை விட முக்கியம் ச்பைடருக்கு தடையா நீங்க இருவரும் இருந்தா வரலாறு உங்கள மன்னிக்காது !

      Delete
  11. Nice to hear our comics will be available on amazon. Definitely it is a milestone in Indian comics. I hope soon other language publishers will reach our editor for releasing comics in other Indian languages..

    Amigos..

    ReplyDelete
    Replies
    1. Senthil Kumar : Our books are now officially onboard AMAZON !

      Delete
  12. //இது சும்மா என் கண்ணில் பட்டதொரு விஷயம் மட்டுமே தவிர - 'பட்சிகளின் ' ஹேஷ்ய ஜோஸ்யங்களுக்குப்' பணி கொடுக்கும் விஷயமாகாது என்பதையும் சொல்லிக் கொள்ள முந்திடுகிறேன்!! //


    இதைத்தான் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவது.

    சும்மா இருக்கிறவங்களை சொறிஞ்சிவிட்டுட்டீங்களே!

    ஆரம்பித்து வைத்துவிட்டீர்கள். நடப்பவை எல்லாம் நன்மைக்கே!

    Start music.......

    ReplyDelete
    Replies
    1. கட்டையை எடுத்து கபாலத்தில் அடித்தது போல இருக்குது ..ஸ்பைடர் மாமா வேணும்

      Delete
    2. Pushparaj R : //சும்மா இருக்கிறவங்களை சொறிஞ்சிவிட்டுட்டீங்களே!//

      அட...ஆமாம்லே ?

      Delete
  13. Amazing to know that we expanding sales wing in AMAZON and flipcart! Spider பற்றிய எண்ணங்களை deep freezeல் Captain America movieல் வருவது போல வைத்திருந்தோம். மீண்டும் விழித்தெழந்தோம். வாழ்க SPIDER! மீண்டும் வெல்வோம்!;-)

    ReplyDelete
  14. சார் முகமற்ற கண்கள் வாங்கியது நினைவில் ! படித்தது சிறிது கூட நினைவில் இல்லை ! அட்டை படம் மாலையப்பன் அவர்கள் வரைந்ததே இங்கும் உபயோக படுத்தி இருக்கலாம் ! இரண்டில் அதுவே டாப் ! பின்னட்டையும் அருமை ! கதை ஹிப்னாடிசம் பற்றி போல இருக்கிறது ! அந்த ஒரு பக்கம் அருமை ! காத்திருக்கிறேன் முகத்தில் மலர்ந்த கண்களுடன் !
    சார் புதிய விற்பனை முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் !
    ஸ்பைடரின் வரும் காலத்தில் பட்டய கிளப்ப போகும் , இந்த அட்டை படத்தில் உள்ளது போல உள்ள , கதை ஏதும் வரவில்லை என அடித்து சொல்வேன் !
    குரங்கின் முன்னே வாழைப் பழத்தை உரித்து வைத்து விட்டு , சம்மந்தம் ஏதும் இல்லாதது போல பேசுவது முறையோ ! அழஹோ ! தகுமோ !
    அந்த கதை நன்றாக இருந்தால் சீக்கிரம் வெளியிடலாமே ! அல்லது அந்த அட்டை படமாவது மறு பதிப்பில் உபயோக படுத்தலாமே என நான் யோசித்து கொண்டிருந்த போது , பட்சியானது கிங் ஸ்பெசலில் இந்த கதை இடம் பெறுவது உறுதி என கூறியது பொய்யா !

    ReplyDelete
    Replies
    1. கிங் ஸ்பெசல் மர்மம் வெளிப்பட்டு விட்டது !

      Delete
    2. இல்லை தாங்கள் வெளியிடாத அந்த ஸ்பைடர் கதையா ! ஃபிரெஞ்சில் கூட வெளியிட்டுள்ளார்கள் !

      Delete
    3. ஜானி நான் வேறு கதைகளை கற்பனை கொண்டேன் ! இது விண்வெளி பிசாசுதாம் என பிசாசு சிரிப்புடன் எம் ஐயத்தை தீர்த்து வைத்த தங்களுக்கு நன்றி !

      Delete
    4. ஆசை.... தோசை........... அப்பளம்.............வடை..........

      கிடைக்காது........... கிடைக்கவே கிடைக்காது..............

      கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு தப்பாவே வந்திருக்கும்..............

      ///////////////////கிங் ஸ்பெசல் மர்மம் வெளிப்பட்டு விட்டது !////////////////////////

      ஆம் டெக்ஸ் கதை வரப்போகிறது.

      Delete
    5. @ஸ்டீல்,
      எனக்கென்னவோ இது கொலைப்படையில் வரும் பிசாசு போல் உள்ளது. விண்வெளிபிசாசு இடுப்புக்கு கீழே மினி ஸ்கர்ட் ஒன்று அணிந்து இருக்கும் கவனித்தீர்களா?

      Delete
    6. உண்மை நண்பரே ! ஆனால் கொலைபடையில் ஓநாய் மூஞ்சி கிடையாதே ! சுஸ்கி சொல்வது போல வெளியிடாத கதையாகவும் இருக்கலாம் ! ஆனால் அட்டையில் இருப்பது உள்ளே சில சமயம் இருப்பதில்லையே !

      Delete
    7. குற்றச் சக்கரவர்த்தி & கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : யப்பா....!

      Delete
    8. சார் உங்கள ஈரோட்டுல வச்சி , ரசிக பாட்டாளங்கள தூண்டி , அங்கு உங்களை வலையில் தொங்க விட வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டு வரும் ஸ்பைடர் வெறியர்களுடன் இணைந்து ,உங்க நாக்க ஆர்ட்டினுக்கு போல தொங்க வச்சி விண்வெளி பிசாச வண்ணதுல மறு பதிப்பாகவும் , Sinister Seven புதிதாகவும் இணைத்து கிங் ஸ்பெசல நீங்க எந்த கதைகள கொண்டு பூர்த்தி செய்யலாம்னு நினைச்சீங்களோ அத மாத்தி , உங்க கண்ணீரால அத அழிச்சி ஸ்பைடர கொண்டு எழுதி நிறைவு செய்ய வைக்கலேன்னா என் பேரு ........என் பேரு .....இல்ல

      Delete
    9. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் -

      சூப்பர்.. நீங்கள் மேலே கூறியவண்ணம்,எடிட்டரை எப்படியாவது கைமா.. sorry.. convince செய்து ஸ்பைடரை KING ஸ்பெஷல்-ல் வர ஆவண செய்வீர்கள் என நம்புகிறேன்

      Delete
  15. Replies
    1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : ஊஹும் ...! சூப்பர் 6 சந்தாக்கள் இன்னும் நிறையத் தூரம் கடக்க வேண்டியுள்ளது ; அதற்கு சற்றே அவகாசம் தேவை ! So not for this book fair !

      Delete
  16. முகமற்ற கண்கள் வெளிவந்தபோது படித்திருக்கிறேன். ஆனால் இப்போது ஓவியர் மாலையப்ர் கைவண்ணத்தில் வந்த அட்டைபடம் மட்டுமே நினைவில் உள்ளது கதை நினைவில் இல்லை!

    ReplyDelete
  17. முகமற்ற கண்கள் வெளிவந்தபோது படித்திருக்கிறேன். ஆனால் இப்போது ஓவியர் மாலையப்ர் கைவண்ணத்தில் வந்த அட்டைபடம் மட்டுமே நினைவில் உள்ளது கதை நினைவில் இல்லை!

    ReplyDelete
    Replies
    1. வழக்கமா பொண்ணுங்க கிட்ட தான் மந்திரி மயங்குவார்..............
      ஆனா இந்தகதயில ஒரு பொண்ண வசியம் பண்ணி மயங்க வச்சு ............................அப்படிக்கா கத போகும்

      Delete
    2. மதியில்லா மந்திரி : மந்திரியாரின் நினைவாற்றல் எப்போதுமே இவ்விதமா ? அல்லது இக்கதையின் அழகிய யுவதி தந்த பூஸ்டா ?

      Delete
  18. Hi Vijayan Sir,

    I have ordered items via our new website and not sure why it is not allowing me to login and check the status of my order?
    And even I have emailed to our company email address? Please do the needful?

    My Order ID - -WM023lioncomics.in_111

    ReplyDelete
  19. எடிட்டர் சார்,

    முகமற்ற கண்கள் கதை ஞாபகம் இல்லை அனால் கதை வெளி வந்தபோது அதன் படங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்த ஞாபகம் மனதிற்குள் நிழலாடுகிறது.

    ஸ்பைடர் கதை மட்டும் பிரெஞ்சில் வெளிவர வில்லை, நமது இரும்புக்கை மாயாவியும் வந்துள்ளார். அந்தக் காலத்தில் அனைத்து Fleetway காமிக்ஸ்களும் பிரெஞ்சில் வந்திருக்கும் போல் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. Radja : //ஸ்பைடர் கதை மட்டும் பிரெஞ்சில் வெளிவர வில்லை, நமது இரும்புக்கை மாயாவியும் வந்துள்ளார்//

      இயன்றால் அந்த அட்டைப்படங்களையும் சேகரித்துத் தாருங்களேன் !!

      Delete
  20. "Mugamatra Kangal" Attaippadam Simply Superb Sir!
    " Vinveli Pisaasu" could be reprinted as a separate book as it was not published as a single book.

    ReplyDelete
  21. Replies
    1. என்னங்க ரஞ்சித் உங்க வயசை எல்லாம் மறைக்க மாட்டிங்களா??? ஹீ ஹீ ஹீ

      Delete
  22. ஆகா குற்றச்சக்கரவர்த்தி மிக விரைவில் நம்மை சந்திக்க வருகிறார்!! தல உங்களுக்கு கோடானகோடி நன்றிகள்..

    ReplyDelete
  23. விஜயன் சார் உதவி தேவை.
    என்னால் இந்த பணவிவகாரங்களை புரிந்து கொள்ள இயலவில்லை.நான் 125 € வை google இல் பார்த்து அது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய பணமாக காட்டியதால் அதனை அனுப்பினேன். ஆனால் அது தங்களுக்கு வந்து சேரும் போது எட்டாயிரம் ரூபா அளவிற்குதான் வந்து சேர்ந்திருக்கிறது.ஏனென்று புரியவில்லை.இதன் காரணமாக எனக்கு ஆண்டுசந்தா கிடைத்ததா ?இல்லையா? என தெரியவில்லை..தங்கள் அலுவலகத்திலிருந்து வந்த மின்னஞ்சலில் இதைப்பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

    இப்பொழுது நான் சூப்பர் 6 சந்தாவிற்கு பணம் அனுப்ப ஆசைப்படுகின்றேன். இம்முறை பாங்கை நம்பாமல் வெஸ்ரன் யூனியன் மணி டிரான்ஸ்பரை நாட வேண்டுமோ? என ஆலோசிக்கின்றேன்.ஆனால் எத்தனை EURO அனுப்புவது என ஒரே குழப்பமாக உள்ளது.3200 Rs = 40€ என google சொல்கிறது.அது தங்களிடம் வந்து சேர்கையில் எத்தனை ரூபாவாக குறையுமென்று எனக்கு தெரியாது.அதனால்,தயவு செய்து நான் அனுப்பவேண்டிய தொகையை நீங்களே EURO வில் சொல்லுங்கள் சார்.ப்ளீஸ்!

    ReplyDelete
    Replies
    1. Thank you for your email sir! it's very kind of you
      i'd send money by Western Union.
      and, if you have some time...please look at this! i think you would like it!we had made it; for you only!

      https://www.facebook.com/photo.php?fbid=239740116211521&set=a.223531041165762.1073741827.223528111166055&type=1&theater

      Delete
    2. ஓவியங்கள் அருமை! வாழ்த்துக்கள்!

      Delete
    3. மேலே உள்ள லின்க்கில் உங்களது கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஒவியம் மிகவும் அருமை!

      மாடஸ்டி ப்ளைஸி, அதிர்ஷ்ட்டக்காரர் 13, டெக்ஸ் வில்லர்.

      கேப்டன் டைகர், இரும்புக் கை மாயாவி, எடிட்டர் விஜயன் சார், ரிப்போர்ட்டர் ஜானி.

      உங்களின் இந்த வரிசைப்படுத்துலில் உங்களின் காமிக்ஸ் ஆர்வமும், அன்பும் வெளிப்பட்டுள்ளது.

      அருமையாக வரைந்துள்ளீர்கள்.

      வாழ்த்துகள்!

      தொடர்ந்து காமிக்ஸ் படிக்கவும், இதுபோல உங்களின் காமிக்ஸ் மீதான அன்பை வெளிப்படுத்தவும் இறைவன் அருள் செழிக்கட்டும்.


      அப்புறம் ......

      நீங்கள் தவறாக நினைக்கவில்லையெனில் ஒரு சின்ன ரெக்வஸ்ட்!

      அடுத்த முறை எடிட்டரை வரையும்போது அவரது தலையில் கொஞ்சமே கொஞ்சம் கேசம் அதிகமாக இருக்கும்படியாக வரைய முடியுமா? அட்லீஸ்ட் ஒவியத்திலாவது இருக்கட்டுமே?

      (அவங்கவங்க பிரச்சனை அவங்கவங்களுக்கு, ஹும்).

      Delete
    4. அருமை ! விச்வாவை வரையும் போதும் பார்த்து வரைவீர்கலாம் !

      Delete
    5. King Viswa : அட...நீங்க வேற விஸ்வா !! நண்பர் செம தாராளமாய் கேச வளத்தை வரைந்திருப்பதாய் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் !!

      Delete
    6. அனைவரதும் அன்பான பாராட்டுக்குக்கு நன்றி.

      //நீங்கள் தவறாக நினைக்கவில்லையெனில் ஒரு சின்ன ரெக்வஸ்ட்!
      அடுத்த முறை எடிட்டரை வரையும்போது அவரது தலையில் கொஞ்சமே கொஞ்சம் கேசம் அதிகமாக இருக்கும்படியாக வரைய முடியுமா? //

      தங்கள் கருத்தை நாங்கள் தவறாக எண்ணவில்லை.ஆனால்....மன்னிக்க வேண்டும்.எங்கள் எண்ணத்தில், அது மதிப்பிற்குரிய அடையாளமாக தெரிந்ததால் மாற்ற/மறைக்க விரும்பவில்லை.

      இவர்களோடு இன்னும் எங்களுக்கு பிடித்த லக்கி,கிட் ஆர்டின் ....என பலரை வரைய ஆசைப்பட்டோம்.பட்,அவங்க முகம் கார்டூன் தன்மையில் இருப்பதால் வரைய இயலாமல் போய்விட்டது.

      Delete
    7. ஹய்யா....விஜயன் சார்....நீங்க எங்க டிராயிங்கை பார்த்துட்டீங்களா....இப்போ எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? நீங்க பார்க்கவே இல்லையோன்னு தம்பி கொஞ்ச நாளா சோக ராகம் வாசிச்சுட்டிருந்தான்.

      Delete
  24. Replies
    1. ஆதி,

      நீங்க இம்மாம்பெரிய கமெண்ட் போட்டுவிட்டு போய்விடுகிறீர்கள்.

      அதை படிப்பதற்க்குள் தாவு தீர்ந்துவிடுகிறது.

      அடுத்தமுறை கொஞ்சம் சின்ன கமெண்ட் ஆக இடுங்களேன், ப்ளீஸ்?

      Delete
  25. ஆசிரியர் இந்த பதிவில் வழக்கத்துக்கு மாறாக கடு கடு என்றிருப்பதாக தெரிவது எனக்கு மட்டும் தானா ?? பதிவில் ஒரு சிறு புன்முறுவல் செய்வதற்கு ஒரு கருவேப்பில்லை அளவுக்கு கூட வாய்ப்பு தரவில்லையே ?? விடுங்க சார்,வகுப்பில் மாணாக்கர்கள் குறும்பு செய்வது சகஜம் என்பதை அறியாதவரில்லையே நீங்கள்??:-)),

    சரி மேட்டருக்கு வருவோம்!

    YMCA மைதானத்தை காமிக்ஸ் புத்தகங்களால் ஆட்சிசெய்ய வெற்றிபெற வாழ்த்துகள் சார்!

    முகமற்ற கண்கள் அட்டைப்படம் ஞாபகம் உள்ளது. கதை சுத்தம். அட்டைப்படம் ஒரிஜினல் நன்றாக உள்ளது. எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். எப்போதும் ஒரிஜினல் அட்டைப்படங்கள் தரத்தில் நன்றாக இருக்கும் போது நீங்கள் ஏன் நமது ஓவியரை வைத்து புதிதாக டிசைன் செய்வதற்கு மெனக்கெட வேண்டும்?

    இதற்கு காரணம் நமது பங்களிப்பு எனபது மொழிபெயர்ப்பையும் தாண்டி காமிக்ஸ் உருவாக்கத்தில் ஒரு சிறிதளவேணும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலா??அல்லது வேறு ஏதாவது காரணமா ??

    நிச்சயம் தரத்தில் ஒரிஜினல் ஆக்கம் நமதை விட ஒருபடி எப்போதும் மேல் என சொல்லாம். ஒரு சில வேலைகளில் நீங்களே ஒரிஜினல் அட்டைப்படம் flat கலராக உள்ளதால் மாற்றப்பட்டதாக விளக்கியுள்ளீர்கள். பட் அப்போது எனக்கு ஒரிஜினல் அட்டை flatடாக இருப்பதும் ஒரு காரணத்தில் தான் என்பதால் அதுவே பிடித்துள்ளது. சில வேலைகளில் bright வண்ணங்கள் தேவைப்படுவதால்(கடைகளில் கண்களை கவர,தனித்து தெரிய) அட்டைப்படம் மாறியுள்ளது (முன்பு இதுவே அட்டைப்படம் மாறுவதற்கு நமது முக்கிய காரணியாக இருந்தது ஞாபகம்). இவை எல்லாவற்றையும் தாண்டி மாலையப்பன் சார் ஓவியங்கள் மேல் உங்களுக்கு ஒரு passion உள்ளதா ??

    ReplyDelete
    Replies
    1. //ஆசிரியர் இந்த பதிவில் வழக்கத்துக்கு மாறாக கடு கடு என்றிருப்பதாக தெரிவது எனக்கு மட்டும் தானா ?? //
      ஆஹா அப்போ ஸ்பைடரை கேட்டு பாருங்கள் என்ற கடுப்பில்தான் இவ்வாறு கூறினாரா !
      பாப்போம் எங்க போயிடுவாரு !
      be careful நா என்ன சொன்னேன் , என்ன சொன்னேன் !

      Delete
    2. விஸ்கி-சுஸ்கி : //ஆசிரியர் இந்த பதிவில் வழக்கத்துக்கு மாறாக கடு கடு என்றிருப்பதாக தெரிவது எனக்கு மட்டும் தானா ?? //

      நிச்சயமாய்க் கடுகடுபெல்லாம் இல்லை நண்பரே..! சற்றே ஆயாசம் என்று சொல்லிடலாம் ! லார்கோவின் வேட்டை நகரம் வெனிசின் மொழிபெயர்ப்புகளுக்கிடையே இந்தப் பதிவை எழுதியதன் பிரதிபலிப்பாக இருக்கலாம் !! லார்கோவும், சல்லிவனும் W குழுமத்தின் எண்ணெய் உற்பத்திப்பிரிவு அதிகாரியோடு லஞ்ச் சாப்பிட்டுக் கொண்டே உலக பெட்ரோலிய சந்தையைப் பற்றியும் ; அதனில் நிலவும் தகிடுதத்தங்கள் பற்றியும் பேசும் ஒரு 3 பக்க sequence உள்ளது ; ஒவ்வொரு டயலாக்கும் நாக்குத் தொங்க வைக்கும் நீளமும், ஆழமும் கொண்டவை ! அவற்றை ஏக் தம்மில் கடந்தாகாவிட்டால் பணிகள் தாமதம் ஆகிவிடும் என்பதால் வரிந்து கட்டிக் கொண்டு எழுதி முடித்தேன். அந்த அயர்ச்சி இப்பதிவில் reflect ஆகி இருப்பின் apologies !!

      அது சரி - கடந்த பதிவின் இறுதிகளில் இங்கு ஏதேனும் மல்யுத்தம் அரங்கேறியதா ? பின்னூட்டங்கள் 275+ கடந்து load more தொல்லை தலையைப் பிய்க்கச் செய்த போது நான் லார்கோவுக்குள் மூழ்கி விட்டிருந்தேன் !

      Delete
    3. லார்கோ எனும் இன்ப வெள்ளம் உங்களை மூழ்கடித்த அதே கணங்கள் எங்களுக்கு வாய்க்க எஞ்சியுள்ள காலம் , இன்னும் ஒன்றை மாதங்கள் அடேங்கப்பா ! ஆனாலும் லார்கோ வழக்கம் போல பங்கு சந்தை , ஹெராயின், என ஆவலாய் ,அற்புதமாய், சுவாரஸ்ய படுத்தி சொல்லியது போல பெட்ரோல் குறித்தும் விசயங்களை சுவாரஸ்யங்களுடன் பகிர்ந்து கொள்ள வருகிறார் எனும் போது அதே ஆவல் தூண்டலாய் உங்கள் வரிகளில் !

      Delete
  26. டியர் எடிட்டர்,

    * முகமற்ற கண்கள் - அட்டைப்படம் ஒரிஜினல் தான் என்றாலும், ஏனோ கவரவில்லை. மாறாக, அந்நாட்களில் ஓவியர் மாலையப்பன் வரைந்திருக்கும் அட்டைப்படம் அழகாய், திகிலாய், நேர்த்தியாய் தெரிகிறது. குறிப்பாக, பழைய அட்டையில் கிடைக்கும் ஒருவகை திகில் உணர்வு - புதிய அட்டையில் மிஸ்ஸிங்!

    * சென்னை புத்தக சங்கமமும், அமேஜான் முயற்சியும் பெரு வெற்றியடைய எனது வாழ்த்துக்களும், வேண்டுதல்களும்!

    * ஸ்பைடரை பார்த்தவுடனேயே, ஒரு கதையாவது வண்ணத்தில் பார்த்துவிடும் ஆவல் எழுகிறது. மனிதர் என்னமாய் வில்லாய் வளைந்து அடி வாங்குகிறார் பாருங்கள்!

    * 'முகமற்ற கண்கள்' மறுபதிப்பு பின் அட்டையில் ப்ரூனோ-ப்ரேசிலைப் பற்றிய குறிப்புக்கு பதிலாக, கதைசுருக்கத்தை உங்கள் பாணியில் எழுதியிருந்தால் புத்தகத் திருவிழாவில் இப்புத்தகத்தைப் பார்வையிடும் புதியவர்களையும் வாங்கத் தூண்டும்படி இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.

    * 'நில்-கவனி-சுடு' அட்டைப்படத்தில் 'தல'யைக் காண மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. //ஸ்பைடரை பார்த்தவுடனேயே, ஒரு கதையாவது வண்ணத்தில் பார்த்துவிடும் ஆவல் எழுகிறது. மனிதர் என்னமாய் வில்லாய் வளைந்து அடி வாங்குகிறார் பாருங்கள்! //
      இதனை வன்மையாக கண்டிக்கிறேன் விஜெய் !
      அதுவும் இது வண்ணத்தில் எனில் காண கண் கோடி வேண்டும் !
      ஸ்பைடர் அந்த பிசாசை புரட்டி போடுவாரே , இது வெளி வந்து உங்கள் மனதையும் புரட்டி போட வேண்டும் !

      Delete
    2. **********முகமற்ற கண்கள் - அட்டைப்படம் ஒரிஜினல் தான் என்றாலும், ஏனோ கவரவில்லை. மாறாக, அந்நாட்களில் ஓவியர் மாலையப்பன் வரைந்திருக்கும் அட்டைப்படம் அழகாய், திகிலாய், நேர்த்தியாய் தெரிகிறது. குறிப்பாக, பழைய அட்டையில் கிடைக்கும் ஒருவகை திகில் உணர்வு - புதிய அட்டையில் மிஸ்ஸிங்!***************

      ஆமாம்

      Delete
    3. Really happy to see you post. எங்க கோவிச்சுக்கிட்டு வராம போயிடுவீங்களோன்னு நெனச்சேன். தொடரட்டும் நகைச்சுவைத் துணுக்குகள் :)

      Delete
    4. போன ரெண்டு பதிவுல கொஞ்சம் கூட இடம் இல்ல.............
      போன பதிவை இன்னும் படிக்கல............
      மந்திரி பிரச்சராதுல பிசி.......
      பாக்தாத் டெலிவிஷன் பாருங்க......

      Delete
    5. //...மனிதர் என்னமாய் வில்லாய் வளைந்து அடி வாங்குகிறார் பாருங்கள்! ..//

      இதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்


      //..ஸ்பைடர் அந்த பிசாசை புரட்டி போடுவாரே , இது வெளி வந்து உங்கள் மனதையும் புரட்டி போட வேண்டும் !..//

      சரியாகச் சொன்னீர்கள் ஸ்டீல்

      Delete
    6. என்ன செய்ய நண்பரே ஸ்பைடரை பற்றி அறிந்தும் பூனை வாலை ஆட்டி நண்டு பிடிக்க பார்க்கிறது !

      Delete
    7. Erode VIJAY : //ஸ்பைடரை பார்த்தவுடனேயே, ஒரு கதையாவது வண்ணத்தில் பார்த்துவிடும் ஆவல் எழுகிறது. மனிதர் என்னமாய் வில்லாய் வளைந்து அடி வாங்குகிறார் பாருங்கள்! //

      அந்தக் கூர்மண்டையருக்கு உள்ள தெம்பு இந்த ஏற்மண்டையனுக்கு இல்லையே !!!

      Delete
  27. Replies
    1. எதுமே சொல்லலைன்ன உங்களுக்கு ஆப்சென்ட் தான் ! மனதில் எதையும் மறைத்து வைத்து கொள்ளாமல் ஸ்பைடர் குறித்த உங்கள் எண்ணங்களை குமுருங்களேன் !

      Delete
    2. ஸ்டீல் நான் கீழே குமுறியுள்ளேன் பாருங்கள் நன்றாக இருக்கும்......

      Delete
    3. வாங்க ஈரோட்டுல வச்சு உங்களை ஸ்பைடர் ரசிகர்கள் எல்லோரையும் வச்சு குமுற வக்கிறேன் !

      Delete
  28. //ஸ்பைடரை பார்த்தவுடனேயே, ஒரு கதையாவது வண்ணத்தில் பார்த்துவிடும் ஆவல் எழுகிறது//

    +1

    ReplyDelete
  29. நானு ரெண்டு magnum ஸ்பெஷல் ஆர்டர் பண்ணீருக்கேன் .......
    ஒண்ணு FAIR COPY ....
    இன்னொன்னு ROUGH COPY
    இது எப்டி இருக்கு

    ReplyDelete
    Replies
    1. மதியில்லா மந்திரி : +101

      Delete
  30. BRUNO BRAZIL கதை அப்படியொன்றும் எதிர்பார்ப்பை தூண்டவில்லை( அதுவும் சமீபமாக முகமற்ற கண்கள் படித்ததால்... ).. மறுபதிப்பு அளவுக்கு அது ஒன்றும் worth இல்லை என்பதுதான் உண்மை... வேண்டுமானால் வண்ண சித்திரங்களுக்காக வாங்கலாம்..... ஒரு ஸ்லாட் வீணாகிவிட்டது...
    லார்கோ எப்போ sir வேட்டைக்கு கிளம்புவார்???

    ReplyDelete
    Replies
    1. லார்கோ அடுத்த மாதம் நமது போரடிக்கும் பொழுதுகளை வேட்டையாட புறப்படுவார் வெனிஸ் நகரம் நோக்கி !

      Delete
  31. அட்டைபடம் அருமை..... ஜூடி படத்தையும் புது அட்டையில் கொண்டு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
    சென்னை புத்தக திருவிழாவில் ஸ்டால் கிடைத்திருப்பது சந்தோசமான செய்தி. போன வருடம் ஈரோடு புத்தக திருவிழாவிற்கு வந்திருந்தேன். சந்தா மட்டும் செலுத்திவிட்டு சென்றுவிட்டேன். யாருடனும் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சென்னை புத்தக திருவிழாவிற்கு வரும் எண்ணத்தில் உள்ளேன் அப்பொழுதாவது யாராவது அறிமுகமாகிறார்களா என்று பார்ப்போம்.

    எடிட்டர் சார் ஸ்பைடர் படம் போட்டு வயிற்றை கலக்கி விட்டீர்கள். மனதில் ஒரு இனம் புரியாத பீதி குடிகொண்டிருந்தது. ரொம்ப பயந்து போயிருந்தேன்.
    நல்லவேளையாக சும்மாதான் போட்டேன் என்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தீர்கள். உங்களுக்கு நன்றி.... நன்றி..... நன்றி....... நன்றிகள் பல.

    கிங் ஸ்பெசலுக்கு டெக்ஸ்தான் பொருத்தமாக இருப்பார்.
    லாக்கோ, செல்டன், தோர்கல், கமான்சே, டெக்ஸ், ஜானி, லக்கி, சிக்பில், மேஜிக் விண்ட், ரின்டின் உள்பட ஏராளமான நாயகர்கள் வரிசைகட்டி நிற்கும்போது ஓய்வுபெற்று சென்ற ஒரு முதியவரை (ஸ்பைடர்) மீண்டும் உள்ளே இழுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    என்னமோ போடா முகுந்தா நம்மால முடிஞ்சது..............

    ReplyDelete
    Replies
    1. ஓய்வுபெற்று சென்ற ஒரு முதியவரை (ஸ்பைடர்)

      ....நர நர நற நற

      உங்களுக்கு கம்ப்யூட்டர் மூளை பாஸ் ........(சத்தியமா எதுவும் உள்குத்து இல்ல )

      Delete
    2. //கிங் ஸ்பெசலுக்கு டெக்ஸ்தான் பொருத்தமாக இருப்பார்.//

      // ஓய்வுபெற்று சென்ற ஒரு முதியவரை (ஸ்பைடர்)//

      டெக்ஸ் முதியவராகிவிட்டதால் தானேன்னவோ அடுத்த புத்தகத்தின் தலைப்பை "நில் கவனி சுடு" என வைத்து, தலைப்பின் மூலம் டெக்ஸ்சுக்கு ஆசிரியர் அறிவுரை வழங்கியுள்ளார் போல தெரிகிறது.

      "வயச்சாயிடுச்சு இல்ல? துப்பாக்கி வைச்சுட்டு நடுங்கீட்டே கைய கியா சுட்டுக்கபோறே! பாத்து, கவனமா குறிபாத்து நிதானமா சுடு " என்கிறார்.

      தன நிழலை விட வேகமாக சுடும் கௌபாய்ஸ் இருக்கும் ரத்த பூமியில் இன்னமும் டெக்ஸ் எவ்வளவு காலம் தள்ளபோகிறார் என்று தெரியவில்லை! : -)).

      அவரும் ஸ்பைடர் மாயாவியுடன் கைகோர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை போல தெரியுது. அதைய தான் ஆசிரியர் சிம்பாலிக்கா தலைப்பிலேயே சொல்லியிருக்கார்.

      Delete
    3. ///////////////விஸ்கி-சுஸ்கி///////////////

      இப்படி எதையும் வெளிப்படையா பேசி ஆசிரியரை சிக்கலில் மாட்ட முயற்சிக்ககூடாது.
      இந்த மாதிரி ரகசியங்கள் வெளியே தெரியும்போது அதை வெளியிட்டு சிலர் வயிற்றில் புளியை கரைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
      எதிர்வீட்டு எதிரிகள் கதையில் வரும் டிம்மன்ஸ் மற்றும் காராக்களின் குடும்பத்தினரின் வாரிசுதான் டெக்ஸ் என்பதுதான் அனைவருக்கும் தெரியுமே.

      Delete
    4. வயசானாலும் உங்க துடிப்பும் , வேகமும் அசத்துது டெக்ஸ் !

      Delete
    5. Mugunthan Kumar //என்னமோ போடா முகுந்தா நம்மால முடிஞ்சது//

      இந்த டயலாக்கை அடியேனும் கொஞ்சம் இரவல் வாங்கிக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் இந்த விவகாரத்தில் !! :-) :-)

      Delete
  32. கார்சொனின் கடந்த காலம் மறுபதிப்பு எப்போது?

    ReplyDelete
  33. //ஆசிரியர் இந்த பதிவில் வழக்கத்துக்கு மாறாக கடு கடு என்றிருப்பதாக தெரிவது எனக்கு மட்டும் தானா ?? //

    ஆசிரியரின் செல்லப்பிள்ளை ரமேஷ் குமாரை எல்லாரும் சேர்ந்து கலாய்ச்சி, வீட்டுக்கு அனுப்பியது காரணமாக இருக்குமோ?..........

    ReplyDelete
    Replies
    1. sundaramoorthy j : வளமையான கற்பனைகளுக்கு என்றுமே பஞ்சம் இருக்கப் போவதில்லையே !

      Delete
    2. //வளமையான கற்பனைகளுக்கு என்றுமே பஞ்சம் இருக்கப் போவதில்லையே ! //
      +1

      Delete
  34. கடுப்பேத்துறார் மை லார்ட்!

    Dear எடிட்டர், இது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா? ஸ்பைடர் கேட்டு கேட்டு அலுத்துபோய் இருக்கும்போது, நீங்களே ஒரு படத்தை போட்டு ஆசை காட்டுறீங்களே?

    சூப்பர் 6-ல், King ஸ்பெஷல் - ஸ்பைடர் கதையுடன் வர ஆவன செய்யவும். இல்லாவிடில் இன்னும் மிகக் கடுப்பாயிடுவேன் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். (நன்றி: ஜான் சைமன் C - இச்சொற்றொடரை இரவல் தந்ததற்கு)

    ReplyDelete
    Replies
    1. Periyar : உசுப்பேத்துவது என் நோக்கமல்ல மை லார்ட் !! நமது சிலந்தியார் பிரான்சிலும் தலை காட்டியுள்ளார் என்பதை அறிந்து கொண்ட போது - சேதியை இங்கு பகிர்வது மட்டுமே எனது நோக்கமாக இருந்தது ! ஆகையால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் !

      Delete
    2. /////////////ஸ்டீல்/////////////
      நல்ல கேட்டுக்குங்க வழக்கு விசாரணை இல்லாமலே தள்ளுபடி ஆயிடுச்சாம்............

      Delete
  35. ஸ்பைடர் கதை கண்டிப்பாக வேண்டும்

    ReplyDelete
  36. டியர் எடிட்டர் ,

    முகமற்ற கண்கள் அட்டை படம் நன்றாக வந்தாலும் ,பழைய அட்டைபடத்தில் உள்ள கலர்
    காம்பினேஷன் இதில் மிஸ்ஸிங் .கதை எனக்கு நன்றாகவே ஞாபகம் உள்ளது .சென்னை புத்தக திருவிழாஇல் அமோக விற்பனையும் பல புதிய வாசகர்களும் எமக்கு கிடைப்பது உறுதி.எடிட்டர் சார் ,எனது கணக்கில் போதிய பணம் உள்ளதா என தெரியவில்லை .சூப்பர் 6இற்கு புதிதாக தனியே சந்தா அனுப்ப வேண்டுமா என தயவு கூர்ந்து அறிய தர முடியுமா?

    ReplyDelete
  37. Thiruchelvam Prapananth : வாழ்த்துகளுக்கு நன்றிகள் !! சூப்பர் 6 -க்கு அயல்நாட்டுச் சந்தாத் தொகையாக ரூ.3200 அனுப்பிடத் தேவைப்படும்.

    ReplyDelete
  38. மே மாதத்திதழ்கள் எப்ரலிலே என்றால், பின்பு மே மாதம் வெறுமையா....? வரும் டெக்ஸ் இதழ்ளுடன் டைலனையும் இணைத்து இந்த சம்மரை இத்தாலியின் delight காம்போ ஸ்பெஷலாக்கலாமே...?

    ReplyDelete
    Replies
    1. இது கூட நல்ல ஐடியாவாக இருக்கே :-)

      Delete
  39. விஜயன் சார், ஒரு வழியாக "காலத்தின் கால் சுவடுகள்" கதையை படித்து முடித்துவிட்டேன்! கதை ரொம்ப சுமார், நமது காமிக்ஸ்-ன் இரண்டாம் இன்னிக்ஸ்ல் இதுவரை வந்த கதைகளில் மிகவும் மோசமான கதை தேர்வு என்றால் அது இந்த கதை தான்! ஓவியங்கள் சில இடம்களில் மிகவும் அருமை. மொத்தத்தில் இந்த கதைக்கு பதில் வேறு ஒரு கதையை வெளி இட்டு இருக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. கதை ரொம்ப சுமாரா.........? கதையே இல்லையே .......... கதை என்று ஒன்று இருந்தால்தான் அது சுமார் அல்லது சூப்பர் என்று சொல்ல முடியும்.

      Delete
  40. நண்பர்களே ஆசிரியரின் புதிய பதிவு :

    Sunday, 13 April 2014
    இதுவும் கடந்து போகும் !

    Posted by Vijayan at 16:27

    ReplyDelete
  41. வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் , ஆசிரியர் , மற்றும் லயன் காமிக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கும் எனது அட்வான்ஸ் “ தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”

    ReplyDelete